கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  ஈழவரலாற்றுப் பரப்பில்
யாழ்ப்பாண வைபவமாலை
 
 

கலாநிதி சி. பத்மநாதன்

 பாவலர்
தெ. அ. துரையப்பாபிள்ளை
நினைவுப் பேருரை – 3ஈழவரலாற்றுப் பரப்பில்
யாழ்ப்பாண வைபவமாலை


கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள்
வரலாற்று வரிவுரையாளர்,
இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை வளாகம்.
மகாஜனக் கல்லு}ரி,
தெல்லிப்பழை
1977-06-24


ஈழவரலாற்று மரபில்
யாழ்ப்பாண வைபவமாலை

ஈழவள நாட்டிலே, அதன் வட, கிழக்குப் பகுதிகளிலே பதின்மூன்றாம் நு}ற்றாண்டிலே ஒரு தமிழ் இராச்சியமும் வன்னிகள் என்ற பல குறுநில அரசுகளும் எழுச்சி பெற்றதன் விளைவாக அவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியன பற்றிய வரலாற்று மரபுகள் எழுந்தன. அத்தகைய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நு}ல்களிலே யாழ்ப்பாண வைபவமாலை1 என்பதே பிரதானமானது. இப்பொழுது கிடைக்கின்ற உரைநடையிலுள்ள ஈழத்துத் தமிழ் நு}ல்களிலே யாழ்ப்பாண வைபவமாலை, தேசவழமை ஆகியவிரண்டுமே மிகப் பழையவை. எனவே, ஈழநாட்டுத் தமிழ்மொழி வளர்ச்சியைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாண வைபவமாலை பற்றிய அறிவு அவசியமானது. அந்நு}லின் மொழிநடை செந்தமிழ் வழக்காகும்@ அதுவும் ஈழத் தமிழர்களுக்குச் சிறப்பாகவுள்ள நடையாகும். அது எல்லோரும் எளிதிலே புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே இலகுவான நடையிலே எழுதப்பட்டுள்ளது. சமகாலத் தென்னிந்தியத் தமிழ் நு}ல்களிற் போலல்லாது அதிலே வடமொழிச் சொற்கள் மிக அரிதாகவே வருகின்றன. வசனங்களுஞ் சிறியனவாகவே அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியத் தமிழகத்திலே உரைநடையிலே செந்தமிழ் வழக்கு மருவி மணிப்பிரவாளம் வழமையாகிய போதும் ஈழநாட்டுத் தமிழகத்திலே உரைநடையிலே செந்தமிழ் வழக்கு மருவி மணிப்பிரவாளம் வழமையாகிய போதும் ஈழநாட்டுத் தமிழர்கள் செந்தமிழ் வழக்கினைத் தொடர்ச்சியாகப் பேணி வளர்த்து வந்துள்ளமைக்கு யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நு}ல்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாயுள்ளன.

மயில்வாகனப் புலவர்

மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாண வைபவமாலையை எழுதினார் என்பதை அந்நு}லின் பாயிரச் செய்யுள் மூலமாக அறியமுடிகின்றது.2 அவர் வையாபுரி ஐயரின் மரபில் வந்தவர் என்பது ஓர் ஐதிகம். யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஒல்லாந்த அதிகாரிகளின் வேண்டுதலுக்கிணங்கியே யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பெற்றது. மேக்கறு}ன் என்ற ஒல்லாந்த அதிபனின் வேண்டுகோளின் விளைவாகவே தாம் நு}லை எழுதியதாகவும் மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார். கி. பி. 1736ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திலே கொம்மாந்தராக (ஊழஅஅயனெநரச) விருந்த இயன் மக்கராவையே மயில்வாகனப் புலவர் மேக்கறு}ன் எனக் குறிப்பிட்டுள்ளார் எனச் சிலர் கருதுகின்றனர். மேலும், இக்கருத்தின் அடிப்படையிலே யாழ்ப்பாண வைபவமாலை பதினெட்டாம் நு}ற்றாண்டின் முதற்பகுதியிலே எழுதப்பட்டதென்று கொள்ளப்படுகிறது. யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிவதிலே மரபுவழியான நிருவாக முறையினை ஒல்லாந்த அதிகாரிகள் பின்பற்றியதனாலேயே யாழ்ப்பாணத் தமிழரின் வரலாறு, சமுதாய வழமைகள் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் அறிந்த கொள்ள வேண்டியிருந்தது. அத்தேவையின் காரணமாகவே யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

மயில்வாகனப்புலவர் மரபுவழியான தமிழ்க் கல்வியைக் கற்றுப் பாண்டித்தியம் பெற்றிருந்தார். புராண இதிகாசங்களிலும் பிற இலக்கியங்களிலும் புலமை பெற்றிருந்தார். ஆனால் ஐரோப்பியரின் கல்வி முறையினையும் இலக்கியப் பாரம்பரியத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை. எனவே, ஐரோப்பிய வரலாற்று நு}ல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக்களை அவர் பெற்றிருக்கவில்லை. தமிழிலும் வடமொழியிலும் தரமான வரலாற்று நு}ல்கள் இருக்கவில்லை. தமிழிலுள்ள அரசவம்சங்கள் பற்றிய வரலாற்று நு}ல்கள் நாயக்கர் காலத்தில் மட்டுமே, பிறநாட்டுச் செல்வாக்கின் பயனாக, எழுதப்பெற்றன. உலகிலே தேசிய உணர்ச்சியினைக் குறிப்பிடத்தக்களவிலே ஆதிகாலத்திலிருந்து பெற்றிருந்த கிரேக்கர், சீனர் போன்ற சமுதாயங்களே வரலாற்றுணர்வினைப் பெற்றிருந்தன. இந்துக்களின் பாரம்பரியத்திலே தேசிய உணர்வு ஊன்றியிருக்கவில்லை. வைதிக நு}ல்கள் வற்புறுத்தி வந்த வர்ணாச்சிரமமானது தேசம் என்பதற்கு எதிரிடையான போக்கினையே வளர்த்து வந்தது. எனவே வைதிகத்தின் போக்கினையே வளர்த்து வந்தது. எனவே வைதிகத்தின் செல்வாக்கினாலே கவரப்பட்டிருந்த தமிழ்ப் புலவர்களும் வரலாற்றுணர்வினைப் பெறக்கூடிய சு10ழ்நிலையிலே வாழ்ந்திருக்கவில்லை. தமிழக வரலாற்றிலே சோழப் பெருமன்னனாகிய முதலாம் இராசராசன் (985 – 1016) ஒருவன் மட்டுமே வரலாற்றுணர்வுடையவனாயிருந்தான். அவனுடைய ஆட்சியாவணங்களின் முன்னுரைகளாக அமைந்த மெய்க்கீர்த்திகள் வரலாற்று நிகழ்ச்சிகளின் கோவைகளாயிருந்தன. இராசராசன் ஏற்படுத்திய புதுமையினைத் தமிழகச் சான்றோரினாலே புரிந்து கொள்ள முடியவில்லை.

மயில்வாகனப் புலவர் அதிக பாண்டித்தியம் பெற்றிருந்தும் ஒரு தரமான வரலாற்று நு}லை எழுதக்கூடிய தகைமையினைப் பெற்றிருக்கவில்லை. தமிழிலக்கியங்களிலும், பொதுவாக இந்திய இலக்கியங்களிலும் வரலாற்றுக்கும் புராணோதிகாசங்களுக்கும் இடையிலான வேறுபாடு அவதானிக்கப்படவில்லை. வரலாற்றிற்கு அடிப்படையான கால வரையறையினையும் இந்தியப் புலவர்கள், குறிப்பாக இந்துக்கள், தெளிவான முறையிலே அறிந்திருக்கவில்லை. எனவே, ஒரு தரமான வரலாற்றிலக்கியத்திற்குத் தேவையான அம்சங்களை யாழ்ப்பாண வைபவமாலையிலே எதிர்பார்க்க முடியாது.

நு}லின் மூலாதாரங்கள்

வையாபாடல்3. கைலாயமாலை4, இராசமுறை, பரராசசேகரன் உலா என்ற நான்கு நு}ல்களையும் ஆதாரமாகக் கொண்டே தாம் யாழ்ப்பாண வைபவமாலையை எழுதியதாக மயில்வாகனப்புலவர் நு}லின் பாயிரத்திலே குறிப்பிட்டுள்ளார். இந்நான்கு நு}ல்களுட் கைலாயமாலை, வையாபாடல் ஆகிய இரண்டுமே இப்போ கிடைக்கின்றன. ஏனையவிரு நு}ல்களின் ஏட்டுப் பிரதிகள் மயில்வாகனப் புலவருக்குப் பிற்பட்ட காலத்திலே அழிந்தொழிந்துவிட்டன. செகராசசேகரன் சங்கிலி என்ற அரசனுடைய காலத்திலே (1519-1561) வாழ்ந்த வையாபுரி ஐயர் என்பவர் வையாபாடலை எழுதினார் என்பது மரபு. ஈழத் தமிழரின் வரலாற்று நு}ல்களிலே மிகப் பழையதான வையாபாடல் அடங்காப்பற்று எனப் பிற்காலத்திலே வழங்கிய வன்னிப்பகுதியிலே வன்னிப் பிரதானிகள் தங்கள் ஆட்சியை ஏற்படுத்தியமைபற்றிச் சில வரிவான குறிப்புக்களைக் கொண்டுள்ளது. சிங்கையாரியன் என வழங்கிய முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி பாண்டி நாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாண இராச்சியத்திலே ஆதிக்கம் பெற்று அங்கு நல்லு}ரிலே இராசதானியையும் கைலாயநாதர் கோயிலையும் அமைத்து இராச்சியத்திலே நிருவாக ஒழுங்குகளை ஏற்படுத்தியமை பற்றிக் கைலாயமாலை செய்யுள் வடிவிலே இலக்கிய நயம் பொருந்திய வண்ணமாக எத்துரைக்கின்றது.5 அதனை உறையூர்ச் செந்தியப்பரின் மகனாகிய முத்துராச கவிராயர் பதினேழாம் நு}ற்றாண்டிலே எழுதினார். இப்பொழுது எமக்குக் கிடைக்காத மற்றைய இரு நு}ல்களினைப் பற்றி யாழ்ப்பாண வைபவமாலையின் மூலமாகவே அறிய வேண்டியுள்ளது. ஒரு வரலாற்று நு}லின் பொருளடக்கம், இலக்கிய வடிவம் ஆகியவற்றை ஆராயுமிடத்து அதன் ஆசிரியரைப் பற்றியும் அவருக்குக் கிடைத்திருந்த மூலாதாரங்களைப் பற்றியும் அறிவது அவசியம். மயில்வாகனப் புலவருடைய புலமை, அறிவு, மனப்பாங்கு, அவரின் சமுதாயப் பாரம்பரியம் ஆகியவற்றை முன்பு கவனித்தோம். யாழ்ப்பாண வைபவமாலையின் அமைப்பினையும் தன்மையினையும் அதற்கு மூலாதாரமாக அமைந்துள்ள நு}ல்கள் பெருமளவிற்கு நிர்ணயித்துள்ளன. யாழ்ப்பாண வைபவமாலையின் குறைபாடுகள் பெரும்பாலும் அதன் மூல நு}ல்களிலிருந்து வந்துள்ளன. மயில்வானப்புலவரும் கால வரையறை பற்றித் தெளிவான விளக்கங் கொண்டிருக்காத மையினாலே வரலாற்று நிகழ்ச்சிகள் சிலவற்றின் கால வரையறையினை மாற்றியுள்ளார்.

உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி

யாழ்ப்பாண வைபவமாலை தரும் யாழ்ப்பாணத்து வரலாற்றை ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்ட காலம், ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் என இரு பிரிவுகளாக வகுத்து நோக்கலாம். ஆரியச் சக்கரவர்த்திகளிற்கு முற்பட்ட காலத்தைப் பற்றிய கதைகள் பெரும்பாலும் வரலாற்று ஆதாரமற்றவை. அவை பொதுவாகவே புனைகதைகளாகவுள்ளன. ஈழத்தமிழ் வரலாற்று நு}ல்களிலே யாழ்ப்பாண இராச்சியம் எழுச்சி பெறுவதற்கு முற்பட்ட காலத்தைப் பற்றிய வரலாற்று மரபுகள் இடம்பெறவில்லை. எனவே, பதின்மூன்றாம் நு}ற்றாண்டிற்கு முற்பட்ட ஈழத்தமிழர் வரலாற்றைப் பொறுத்த வரையிலே யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நு}ல்களிலே வரலாற்றுக் குறிப்புக்களை எதிர்பார்க்க முடியாது. ஆரியச் சக்கரவர்த்திகளிற்கு முற்பட்ட கால வளர்ச்சிகளை விளக்குவதற்கென உருவாக்கப்பட்டவையே உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதை, யாழ்ப்பாணன் கதை போன்றவை. இவ்விரு கதைகளும் மயில்வானப் புலவர் காலத்திற்கு முற்பட்டவை. அவை மூலநு}ல்களிலிருந் பெறப்பட்டவை.

கைலாயமாலை, வையாபாடல் ஆகியவற்றிலே இடம்பெற்றிருக்காத விசயராசன் கதை யாழ்ப்பாண வைபவமாலையிலே வருகின்றது6. அது சிங்களவினத்தின் தோற்றம் பற்றிச் சிங்கள வரலாற்று மரபிலுள்ள கதைகளை மயில்வாகனப்புலவர் அறிந்திருந்தார் என்பதற்குச் சான்றாயுள்ளது. விசயனைப் பற்றி மயில்வானப் புலவர் தரும் குறிப்புக்கள் மகாவம்சம் முதலிய நு}ல்களிலுள்ளவற்றிலிருந்து ஒரளவிற்கு வேறுபடுகின்றன. திருகோணமலை, மாதோட்டம், கீரிமலை, தேநுவரை ஆகியவிடங்களிலுள்ள தேவாலயங்களை விசயராசனே அமைப்பித்தான் என்ற கூற்று முற்றிலும் பொருத்தமற்றது. விசயன் கதையினையடுத்துக் குளக்கோட்டனைப் பற்றியும். முக்குவரைப்பற்றியுங் கூறப்பட்டுள்ளது7. புராதன காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்திலே மலையாள முக்குவரின் குடியேற்றங்கள் அமைந்திருத்தல் கூடுமென்ற கருத்தினை இவை ஏற்படுத்துகின்றன. குளக்கோட்டன் பற்றிய குறிப்புக்களைக் கோணேசர் கல்வெட்டின் மூலம் மயில்வாகனப் புலவர் பெற்றிருக்கவேண்டும். இலங்கையிலேற்பட்ட வன்னிக் குடியேற்றங்கள் இருவேறு கால கட்டங்களிலே – குளக்கோட்டன் காலத்திலும் பின்பு பாண்டி நாட்டால் வந்த வன்னியரின் காலத்திலும் ஏற்பட்டிருந்தன என்ற கூற்றுக் கவனிக்கற்பாலது. ஆனால் அக்கிரபோதி மகாராசனுடைய காலத்திலே குளக்கோட்டன் வாழ்ந்தான் என்று மயில்வானப் புலவர் கருதியமை முற்றிலுந் தவறானது. குளக்கோட்டன் பதின்மூன்றாம் நு}ற்றாண்டைச் சேர்ந்தவன் என்பதைப் பிற ஆதாரங்கள் மூலமாக அறியமுடிகின்றது.8

உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதையானது யாழ்ப்பாண இராச்சியத்தின் உற்பத்தியை விளக்குவதற்குச் சிங்கள இராச்சியத்தின் உற்பத்தி பற்றிய கதையைப் பயன்படுத்த மேற்கொண்ட முயற்சியின் விளைவாகும். அது விசயன் கதையிலுள்ள அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விசயன் கதையிலுள்ள சிங்கவாகு, சிங்கவல்லி ஆகியோர் தமிழ் மரபிலே உக்கிரசிங்கன் எனவும் மாருதப்புரவீகவல்லி எனவும் பெயர்மாறி வந்துள்ளனர். உக்கிரசிங்கன் கதையினை ஆதாரமாகக் கொண்டு ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்துக்குப் பல நு}ற்றாண்டுகளுக்கு முன்பிருந்து யாழ்ப்பாணத்திலே கலிங்கரின் ஆட்சி நிலவியது என்ற இராசநாயகம் போன்றவர்களுடைய வாதம் பொருத்தமற்றதாகும். உக்கிரசிங்கன் கதையிலே வரும் செங்கட நகரி என்ற நகரம் யாழ்;ப்பாணத் தலைநகராகிய சிங்கை நகரையன்றி மயில்வாகனப்புலவரின் காலத்திலே மலைநாட்டிலே சிங்கள் மன்னர்கள் அமைத்திருந்த செங்கடகலை எனும் ஊரையே குறிப்பதாகவுள்ளது. மாருதப்புரவீகவல்லி பற்றிய கதையானது மாவிட்டபுரம், கீரிமலை ஆகிய தலங்களின் வளர்ச்சியை விளக்குவதற்கென எழுந்த புனைகதையாகும். அதிலே சோழராட்சிக் காலத்து நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பற்றிய ஐதிகங்கள் கலப்புற்றிருத்தல் கூடும். மயில்வாகனப்புலவர் வையாபாடல், கைலாயமாலை ஆகியவற்றிலுள்ள உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி பற்றிய கதையைத் தொண்டைமானாறு, கீரிமலை, மாவிட்டபுரம் போன்றவற்றைப் பற்றிய ஐதிகங்களோடு சேர்த்து விரிவுபடுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணன்

இலங்கையிலெழுதப் பெற்ற பல தமிழ் நு}ல்களிலே இடம்பெற்றுள்ள மரபுவழிக் கதைகளிலே யாழ்ப்பாடி கதை பிரதானமானது. வையாபாடல், கைலாயமாலை ஆகியவிரு நு}ல்களிலும் யாழ்ப்பாடி கதை வருகின்றது. இராவண சங்காரத்தின் பின்னர் இலங்கையிலே விபீஷணன் அரசோச்சிய காலத்திலே அவனது அரண்மனைக்குச் சென்று யாழ்வாசித்து மன்னனைப் பெரிதுங் கவர்ந்த யாழ்ப்பாடி வட இலங்கையிலுள்ள மணற்றிடரைப் பரிசிலாகப் பெற்றான் என வையாபாடல் கூறுகின்றது.9 குடாநாட்டிலே பல பயன்தரு மரங்களையும் நறுஞ்சோலைகளையும் உண்டாக்கித் தமிழ்க் குடிகளை வரவழைத்து இருத்திய பின் யாழ்ப்பாடி மதுரைக்குச் சென்று குலகேது மகாராசாவிடம் தனது நாட்டை ஆட்சி புரிவதற்கு ஒரு பிள்ளையை அனுப்பி வைக்குமாறு வேண்டிப் பாண்டி நாட்டிலிருந்து விசய கூளங்கைச் சக்கரவர்த்தி என்ற இளவரசனைக் கூட்டிவந்து பட்டங் கட்டியதாகச் சொல்லப்படுகின்றது. கைலாயமாலையிலே கூளங்கைச் சக்கரவர்த்தி பற்றிய குறிப்பில்லை. ஆயினும், அந்நு}லில் யாழ்ப்பாணனின் நாடு யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது என்று கூறப்பெற்றுள்ளது.10 யாழ்ப்பாணன் கதை வரலாறன்று@ அது யாழ்ப்பாணம் என்னும் நாட்டுப் பெயரை விளக்குவதற்கு வந்த புனைகதை. பதினான்காம் நு}ற்றாண்டிலேயே இலங்கையிலிருந்த தமிழ் இராச்சியம் யாழ்ப்பாணப் பட்டினம் எனக் குறிப்பிடப்பெற்றது என்பதைச் சிங்கள நு}ல்கள் வாயிலாக அறியலாம்.11 யாழ்ப்பாணப் பட்டினம் என்பது இராச்சியத்தையும் அதன் தலைநகரையும் குறிக்கும் பெயராகவிருந்தது. தென்னிந்திய நு}ல்களிலும் அது யாழ்ப்பாணம் எனவும், யாழ்ப்பாணப் பட்டினம், யாழ்ப்பாண தேசம் எனவும் குறிப்பிடப்பெற்று வந்தது. போர்த்துக்கேயரும் பின் ஒல்லாந்தரும் அதனைக் கைப்பற்றி ஆண்டபொழுது பின் ஒல்லாந்தரும் அதனைக் கைப்பற்றி ஆண்டபொழுது வழமையான பெயரைக் கொண்டே அந்த நாட்டைக் குறிப்பிட்டு வந்தார்கள். யாழ்ப்பாடி கதையிலே வருகிற மதுரை மன்னன் குலகேது பற்றிய குறிப்பு அக்கதையிலே யாழ்ப்பாணத்து முதலாவது தமிழ் அரசன் ஆரியச்சக்கரவர்த்தி பற்றிய ஐதிகமும் கலப்புற்றுள்ளது என்பதற்குச் சான்றாகின்றது.12

முதலாம் ஆரியச்சக்கரவர்த்தி

பதின்மூன்றாம் நு}ற்றாண்டிலே வட இலங்கையிலிருந்த இராச்சியமானது பாண்டியப் பேரரசுடன் இணைக்கப்பட்டிருந்தது. மாறவர்மன் குலசேகரனது ஆட்சியிலே சேனாதிபதிகளாகவும் அமைச்சர்களாகவும் கடமை புரிந்த ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன் யாழ்ப்பாணத்திலே ஆட்சியதிகாரம் பெற்றான்.13 பாண்டியப் பேரரசு நிலைகுலைந்தபொழுது யாழ்ப்பாணத்திலிருந்த ஆரியச்சக்கரவர்த்தி முடிசு10டி மன்னனாகியதோடு யாழ்ப்பாணத்தை ஒரு சுதந்திர இராச்சியமாகவும் பிரகடனப்படுத்தினான். அவனுடைய முன்னோர்கள் தென்பாண்டி நாட்டுச் செவ்விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி நல்லு}ரிலே வாழ்ந்திருந்தனர். அவர்கள் சக்கரவர்த்தி என்ற சாமந்தருக்குரிய விருதினைப் பெற்றிருந்த பிராமணர். எனவே ஆரியச்சக்கரவர்த்தி என்ற தனிச் சிறப்பான பட்டத்தையும் பெற்றிருந்தனர்.14 யாழ்ப்பாண மன்னரைப் பொறுத்தவரையில் ஆரியச்சக்கரர்த்தி என்பது தனியொரு மன்னனின் இயற்பெயராகவன்றிக் குலப்பெயராகவே வழங்கி வந்தது. ஆரியச்சக்கரவர்த்திகள் சிங்கை நகரிலிருந்து யாழ்ப்பாணத்தை ஆண்டதனாற் சிங்கையாரியர் என்ற விருதினையும் பெற்றிருந்தனர்.15 முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியினைக் கைலாயமாலை சிங்கையாரியன் எனக் குறிப்பிடுகின்றது.

சிங்கையாரியன் மதுரை நகரிலிருந்து பாண்டிய மன்னனால் அனுப்பிவைக்கப்பட்ட இளவரசன் எனக் கைலாயமாலை குறிப்பிட்டுள்ளது.16 யாழ்ப்பாணன் காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வந்து ஆட்சியதிகாரம் பெற்ற கூளங்கைச் சக்கரவர்த்தி மதுரையிலிருந்த குலகேது மன்னனால் அனுப்பி வைக்கப்பெற்றான் என்று வையாபாடல் குறிப்பிடுவதாற் சிங்கையாரியனே கூளங்கைச் சக்கரவர்த்தி என்று யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் கருதினார். எனவே, இரு நு}ல்களும் குறிப்பிடும் நிகழ்ச்சிகளை ஒரே மன்னன் காலத்தனவாகக் கொண்டு யாழ்ப்பாண வைபவமாலையிலே எழுதியுள்ளார். சி;ங்கையாரியனைப் பற்றி அவர் எழுதியுள்ளமை பெரும்பாலும் கைலாயமாலையின் சுருக்கமாகவே காணப்படுகின்றது. வையாபாடலில் வரும் வன்னியர்களைப் பற்றிய விபரங்களை அவர் நு}லிலே சேர்த்துக் கொள்ளத் தவறிவிட்டார். முதலாம் ஆரியச்சக்கரவர்த்தியின் ஆட்சியில் ஏற்பட்ட அரசியல் வளர்ச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியும் அறிவும் வரிவு பெறுவதற்கு வையாபாடல் பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சி அவசியமானதாகும்.

சிங்கையாரியன் யாழ்ப்பாணத்திலே வந்து அதிகாரம் பெற்றிருந்தபொழுது நல்லு}ரிலே இராசதானியையும் அரண்களையும் அமைத்ததோடு கைலாயநாதர் கோயிலையும் பிற தேவாலயங்களையும் எழுப்பியிருந்தான். அவனுடைய ஆட்சியிலே அவனுக்கு ஆதரவாகவிருந்த, பாண்டி நாட்டால் வந்த, பிரதானிகள் நிருவாகத்திலே உயர் பதவிகளைப் பெற்றார்கள். யாழ்ப்பாண தேசத்திற்கும் அடங்காப்பற்று வன்னிக்கும் சிறப்பாகவுள்ள நிருவாக அமைப்புச் சீரான முறையிலே ஏற்படுத்தப்பட்டது. மயில்வானப்புலவர் இவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றபொழுதும் ஆரியச்சக்கரவர்த்திகளின் பூர்வீக வரலாறு பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிச் செகராசசேகரமாலை, த~ணகைலாச புராணம் போன்றவற்றிலுள்ள வரலாற்றுக் குறிப்புகளையேனும் மயில்வாகனப்புலவர் அறிந்திருத்தற்குச் சான்றில்லை. முதலாம் ஆரியச்சக்கரவர்த்தியாகிய சிங்கையாரியன் கைலாய மாலையிலே செயவீரன் என்று குறிப்பிடப்பெற்றிருந்தும் செயவீரனே அவனுடைய இயற்பெயராகவிருத்தல் வேண்டும் என்பதை அவர் உணரவில்லை. அதனாற் போலும் அவனை விசயவாகு எனச் சொல்வார்கள் என்றுங் கூறியுள்ளார்.

சிங்கையாரியர் வம்சாவலியும் இராசமுறையும்

முதலாம் சிங்கையாரியன் காலத்தையடுத்து 1450ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த அரசரின் வரிசையை யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் மேல்வருமாறு அமைத்துள்ளார்:

குலசேகர சிங்கையாரியன்
குலோத்துங்க சிங்கையாரியன்
விக்கிரம சிங்கையாரியன்
வரோதய சிங்கையாரியன்
மார்த்தாண்ட சிங்கையாரியன்
குணபூசண் சிங்கையாரியன்
வீரோதய சிங்கையாரியன்
செயவீர சிங்கையாரியன்
குணவீர சிங்கையாரியன்
கனகசு10ரிய சிங்கையாரியன்

இப்பத்து மன்னர்களைப் பற்றியும் மிகச் சுருக்கமாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சியின் முடிபிலே அவனது மகனே அட்சியுரிமை பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண்மை, கல்வி முதலியவற்றின் வளர்ச்சிக்கு இவர்கள் ஆற்றிய சேவைகளைப் பற்றியும் பிற அரசர்களுடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய தகவல்களை இராசமுறை என்கின்ற நு}லிலிருந்தே மயில்வாகனப்புலவர் பெற்றிருக்க வேண்டும். இராசமுறையினைக் குறித்துப்படி வழுவாதுற்ற சம்பவங்கள் தீட்டும் நு}ல்கள் என மயில்வாகனப்புலவர் வர்ணிப்பதால் இராசமுறை ஒரு வரலாற்று நு}லாகவே அமைந்திருத்தல் வேண்டும். அந்நு}ல் கிடைக்கப் பெறாதமை யாழ்ப்பாண வரலாற்றாராய்ச்சியைப் பொறுத்தவரையிலே பெருந் துரதிட்டவசமாகும். சிங்கையாரிய மன்னர்களின் ஆட்சிகளைப் பற்றிக் கூறுமிடத்து மயில்வானப்புலவர் எந்தவிதமான காலவரையறையினையும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு மன்னனதும் ஆட்சி எத்தனை யாண்டுகள் நிலைபெற்றது. எக்கால கட்டத்திலே அமைந்திருந்தது என்பன பற்றி எதுவிதமான குறிப்புக்களும் கிடைக்கவில்லை. இராசமுறையிலிருந்த வரலாற்றுக் குறிப்புகளை மயில்வாகனப்புலவர் மிகவுஞ் சுருக்கமாகவே தமது நு}லிலே தந்துள்ளார்.

சிங்கையாரிய மன்னரின் வம்சாவளியானது யாழ்ப்பாண வைபவமாலையிலே நிலைமாறி வந்துள்ளது எனக் கொள்ள வேண்டியுள்ளது. முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியினைக் கைலாயமாலை செயவீரன் எனக் குறிப்பிடுகிறது. இதனை உணராதமையினாலும். அவனை விசய கூளங்கைக் சக்கரவர்த்தியெனத் தான் நாமஞ் சு10ட்டியுள்ளதாலும் செயவீரசிங்கையாரியனை ஒன்பதாவது மன்னனாக அவர் உருவாக்கியுள்ளார். செயவீரசிங்கையாரியன் முத்துச்சலாபத்தைக் குறித்து புவனேகபாகுவுடன் புரிந்த போர் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை தரும் குறிப்புக்கள் பதின்மூன்றாம் நு}ற்றாண்டின் பிற்பகுதியிலே ஆரியச் சக்கரவர்த்தி நடாத்தியுள்ள போரின் விபரங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. எனவே முதலாவது சிங்கையாரியனின் காலத்து நிகழ்ச்சிகளைப் பிற்பட்ட காலத்துக்குரியனவாக மயில்வாகனப் புலவர் கொண்டுள்ளார் எனக் கருதவிடமுண்டு. அது போலவே வரோதய சிங்கையாரியன், விரோதய சிங்கையாரியன் என்போர் பற்றிய விபரங்களும் கலப்புற்றுள்ளன போலத் தோன்றுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றை நோக்குமிடத்து யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றை வரிவாகவுந் தெளிவாகவும், வரன்முறை அடிப்படையிலும் யாழ்ப்பாண வைபவமாலையிலிருந்து அறிந்துகொள்ள முடியாது.

பதினாலாம், பதினைந்தாம் நு}ற்றாண்டுகளிலே யாழ்ப்பாண இராச்சியம் பெற்றிருந்த சீரிய நிலையினை மயில்வாகனப் புலவரே நன்கு அறிந்திருக்கவில்லை. 1344ஆம் ஆண்டிலே இலங்கைக்கு வந்திருந்த இவுன் பற்றுற்றா (ஐடிர டீயவவரவய) என்ற அராபிய அறிஞர் ஆரியச் சக்கரவர்த்தியின் அரண்மனையிலே சில நாட்களாகத் தங்கியிருந்தார். அவர் எழுதிய குறிப்பிலிருந்து ஆரியச் சக்கரவர்த்தி கடற்படை வலிமை கொண்டவனாகவும் சர்வதேச வாணிக நிலைகளைப் பற்றிய அறிவுடையவனாகவும், பாரசீக மொழியிலே பயிற்சியுடையவனாகவும் விளங்கினான் என்பதை அறிய முடிகிறது. பாண்டிநாட்டுக் கரையோரத்திலே பிரயாணஞ் செய்கின்ற பொழுது தான் ஆரியச் சக்கரவர்த்தியின் நு}று வர்த்தகக் கப்பல்களைக் கண்டதாகவும் அவை யெமென் நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் இவுன் பற்றுற்றா கூறியுள்ளார். மேலும், ஆரியச் சக்கரவர்த்தி ‘பட்டாள’ நகரிலே (புத்தளம்) தங்கியிருந்து முத்துக்குளிப்பை நடாத்திய பொழுது கடலோரத்திலே கறுவா மலைகளைப் போலக் குவிக்கப் பெற்றிருந்ததென்றும் மலையாளத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வந்தவணிகர் புடவை முதலிய பொருட்களை ஆரியச் சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டு அவனிடமிருந்து கறுவாவைப் பெற்றுச் சென்றதாகவும் இவுன் பற்றுற்றா எழுதியுள்ளார். பதினாலாம் நு}ற்றாண்டிலே மன்னார்க் கடலிலுள்ள முத்துக்குளிப்பினாலே ஆரியச் சக்கரவர்த்திக்கு மிகுந் வருமானங் கிடைத்தது. அதன் பயனாக அவன் பலம் மிகுந்த இராணுவத்தையும், கடற்படையினையும் வைத்திருக்க முடிந்தது. எனவே சில காலத்திற்கு இலங்கை முழுவதிலும் மேலாதிக்கஞ் செலுத்த முடிந்தது. பதினாலாம் நு}ற்றாண்டின் நடுப்பகுதியிலுள்ள அரசியல் நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகையிலே இலங்கையிலுள்ள மூவேந்தர்களிலும் செல்வ வளத்திலும், படை பலத்திலும் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தியே முதன்மை பெற்றிருந்தான் எனவும் அதனால் அவன் மலைநாட்டிலும், கீழ்நாட்டிலும், ஒன்பது துறைமுகங்களிலுந் திறை பெற்றான் என்று ராஜாவலிய என்ற சிங்கள வரலாற்று நு}ல் குறிப்பிடுகின்றது. வரோதய சிங்கையாரியனைக் குறித்து ‘விடைக் கொடியுஞ் சேதுவும் கண்டிகள் ஒன்பதும் பொறித்து மிகைத்த கோவும்’ என்று செகராசசேகரமாலை புகழ்ந்துரைப்பதால் அவனது ஆட்சியில் ஆரியச்சக்கரவர்த்தியின் மேலாதிக்கம் தென்னிலங்கையிலேற்பட்டது எனக் கொள்ளலாம். இத்தகைய வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிய தெளிவான குறிப்புக்கள் மயில்;வாகனப் புலவருக்குக் கிடைத்த மரபுகளிலே இடம்பெற்றிருக்கவில்லை.

செண்பகப் பெருமாள்

கி.பி. 1450 இல் கோட்டையரசனாகிய ஆறாம் பராகிரமவாகுவின் வளர்ப்பு மகனும், சேனாதிபதியுமாகிய செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து வந்து கனகசு10ரிய சிங்கையாரியனைத் தோற்கடித்து விட்டுப் பின்பு நல்லு}ரிலிருந்து பராக்கிரமவாகுவின் பிரதிநிதியாகப் பதினேழு வருடங்களாக ஆட்சி புரிந்தான். அவன் முடிதரித்து மன்னருக்குரிய சீர்வரிசைகளோடு ஆண்டானென்பதைக் கட்டியம் வாயிலாகவும், சிங்கள நு}ல்கள் வாயிலாகவும் அறிகின்றோம். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண நகரைச் சீரமைத்ததோடு நல்லு}ர்க் கந்தசுவாமி கோவிலையுங் கட்டுவித்தான். 1467ஆம் ஆண்டளவில் செண்பகப் பெருமாள் கோட்டைக்குச் சென்று முடிசு10டியபோது கனகசு10ரிய சிங்கையாரியன் தமிழகத்து அரசரின் துணையுடன் யாழ்ப்பாணத்திலே மீண்டும் அதிகாரம் பெற்றான். செண்பகப் பெருமாளை விசயவாகுவெனத் தவறுதலாக மயில்வாகனப்புலவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அவனுடைய ஆட்சியினைப் பற்றி அவர் நன்கறிந்திருக்கவில்லை.

கி. பி. 1467 – 1619 ஆகிய காலப் பகுதியிலே ஆட்சி புரிந்த அரசர்களைப் பற்றி மயில்வாகனப் புலவர் எழுதியுள்ள வரலாறு மிகவுஞ் சுருக்கமானது@ அத்துடன் பெரும்பாலும் ஆதாரமற்றது. அக்கால யாழ்ப்பாண வரலாறு பற்றி மயில்வாகனப் புலவர் எழுதியவற்றுக்குப் பொதுசன வழக்கிலுள்ள கதைகளே ஆதாரமாயிருந்தன. போத்துக்கேயரது ஆவணங்கள், நு}ல்கள் ஆகியவற்றிலிருந்தும் ஒல்லாந்த அதிகாரிகள் எழுதிவைத்த அறிக்கைகளிலிருந்தும் ஒரளவு விரிவாக யாழ்ப்பாண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சான்றாதாரங்கள்

1. யாழ்ப்பாண வைபவமாலை (யா. வை) குல. சபாநாதன் பதிப்பு, கொழும்பு, 1953.
2. யா. வை. பக்கங்கள் 1 – 2.
3. வையாபாடல் (வை. பா), யே. டபிள்யூ. அருட்பிரகாசம் பதி;ப்பு. 1921.
4. கைலாயமாலை (கை. மா), செ. வே. ஐம்புலிங்கம்பிள்ளை பதிப்பு, சென்னை, 1921.
5. சி.பத்மநாதன் ஈழத் தமிழ் வரலாற்று நு}ல்கள், பாகம் ஐ. பேராதனை, 1971, பக்கங்கள், 1 – 6.
6. யா. வை, பக்கங்கள் 2 – 8.
7. மேலது, பக்கங்கள் 9 – 10.
8. சி. பத்மநாதன், வன்னியர், பேராதனை, 1970, பக்கம், 41.
9. வை. பா. செய்யுட்கள் 8 – 19.
10. கை. மா. பக்கம் 4.
11. யாழ்ப்பாணப் பட்டினம் என்பதைச் சிங்கள நு}ல்கள் யாப்பா பட்டுன என்று குறிப்பிடுகின்றன. 14ஆம் நு}ற்றாண்டைச் சேர்ந்த குருநாகல விஸ்தரய என்னும் நு}லிலே யாப்பா பட்டுன பற்றிய குறிப்பொன்றுள்ளது. அதற்குப் பிந்திய காலத்துக் கோகில சந்தேஸய, ராஜாவலிய முதலிய நு}ல்களும் யாழ்;ப்பாண இராச்சியத்தையும் அதன் தலைநகரையும் யாப்பா பட்டுன என்றே குறிப்பிடுகின்றன.
12. குலகேது, குலசேகர என்ற சொற்கள் ஒரே பொருளைக் கொண்டனவாகையால் குலசேகரன் என்ற மன்னனையே மரபுவழிக் கதைகள் குலகேது, என்று குறிப்பிடுகின்றன எனக் கருதலாம். பாண்டிய அரசனாகிய மாறவர்மன் குலசேகரனுடைய ஆட்சிக் காலத்திலேயே (1368 – 1410) யாழ்;ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளின் குல முதல்வன் ஈழநாட்டிற்கு வந்தமை கவனித்தற்பாலது.
13. கி.பி. 1284ஆம் ஆண்டளவிலே ஆரியச்சக்கரவர்த்திகளுள் ஒருவன் இலங்கைமீது படையெடுத்து வந்தான். அதனைப் பற்றிச் சு10ளவம்சம் மேல்வருமாறு வர்ணிக்கின்றது:

“பாண்டிய அரசினை ஆண்ட ஐந்து சகோதரரும் தமிழருட் சிறந்தவனான ஆரியச்சக்கரவர்த்தி என வழங்கிய பேரமைச்சனைப் பெரும்படையுடன் அனுப்பினார்கள். ஈழம் வந்ததும் நாட்டின் நாற்புறங்களையும் அழித்துச் சுபகிரி (யாப்பகூவ) என்னும் பலம்மிக்க கோட்டையினுள் நுழைந்து (புத்தரின்) புனித தந்தத்தையும், அங்குள்ள ஏனைய செல்வங்கள் அனைத்தையுங் கவர்ந்து கொண்டு (ஆரியச்சக்கரவர்த்தி) பாண்டி நாட்டுக்குச் சென்றான்@ அங்கு பாண்டிய மன்னர் குலமெனும் தாமரையை மலர்விக்கின்ற கதிரவனை யொத்த குலசேகர மன்னவனுக்கு அவற்றைக் கொடுத்தான்.
சூளவம்சம், 90 : 43 – 47.

14. ளு. Pயவாஅயயெவாயnஇ வுhந முiபெனழஅ ழக துயககயெஇ வுhந ஊநலடழn ஐளெவவைரவந ழக வுயஅடை ளுவரனநைளஇ Pரடிடiஉயவழைn ழே. 1இ Pநசயனநnலையஇ 1974இ pp. 11 – 13.
15. சிங்கை நகரிலிருந்து ஆட்சிபுரியும் ஆரியச்சக்கரவர்த்தியைச் சுருக்கமாகச் சிங்கையாரியன் எனக் குறிப்பிடும் வழக்கம் எற்பட்டிருந்தது. கம்பளைக் கண்மையிலே கோட்டகமை விகாரையிலே கண்டெடுக்கப்பெற்ற யாழ்ப்பாண மன்னனின் வெற்றியினைக் கூறும் கல்வெட்டிலும் சிங்கையாரியன் என்ற விருது குறிப்பிடப்பெற்றுள்ளது. த~pண கைலாச புராணம் ஆரியச்சக்கரவர்த்தியைச் சிங்கையாதிபன் சேதுகாவலன் என வர்ணிக்கின்றது. கனகசு10ரிய சிங்கையாரியன் வரையுள்ள அரசர்கள் அனைவரையும் சிங்கையாரியர் என யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுவதும் கவனித்தற்பாலது.
16. ‘செல்வமதுரைச் செழிய சேகரன் செய்மாதவங்கள்
மல்சுவியன் மகவாய் வந்தபிரான் - கல்விநிறை
தென்ன நிகரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனாகுஞ் சிங்கையாரியமால்”
கை. மா. பக்கம், 5.

செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம் - 252|6|77