கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  தமிழன் மாட்சி  
 

தெல்லியூர் எஸ். நடராஜன்

 

தமிழன் மாட்சி

ஆசிரியர் :
தெல்லியூர் எஸ். நடராஜன்
(வீரகேசரி துணை ஆசிரியர்)

THE ELAIGNAN PUBLISHERS,
No, 2, Grandpass Road,
COLOMBO.


விலைரூபா 1.50

++++++++++++++++++++++++++++ஆசிரியர்
தெல்லியூர் எஸ். நடராஜன்அர்ப்பணம்

சுவர்க்கவாசியாம் என் அன்னை
ஸ்ரீமதி மாரிமுத்து செல்லையா
அவர்களின்
பாதகமலங்களுக்கு என்
அன்புக்காணிக்கை.

++++++++++++++++++++++++++++

இளைஞன் வெளியீடு :1

தமிழன் மாட்சி
(HISTORY OF TAMILS)
ஆசிரியர் :

தெல்லியூர். எஸ். நடராசா.
(வீரகேசரி துணை ஆசிரியர்)

இளைஞன் பிரசுராலயம்,
நிர். 2, கிரான்ட்பாஸ் வீதி,
கொழும்பு.

(பதிப்புரிமை ஆசிரியருக்கு) (விலை ரூ 1.25)முதற் பதிப்பு : 1947 - 2000 பிரதிகள்.

விலை ரூ 1.25

அழுத்தகம் :
ஸ்ரீ பார்வதி அச்சியந்திரசாலை,
288, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

++++++++++++++++++++++++++++


ஆக்கியோன் முன்னுரை

உலக மக்கள் உற்பத்திக்கு மூலஸ்தானமாக விளங்கிய எம் தமிழ் நாட்டைப்பற்றிப் பல அறிஞர்களும் கூறிப் போந்தனர். பாரதியின் வீரப் பாக்களால் உணர்ச்சியூட்டப்பெற்றோர் புதிய மலர்ச்சியுடன் தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்ய முற்பட்டனர். சுதந்திர மக்களாக - நாகரிகத்தின் சிகரமாக - விளங்கிய தமிழ் மக்கள் சரிதையினை இன்றைய உலக மாணவர்களும் பிறரும் எளிதில் கற்றறியும் பான்மையில் வெளிப்படுத்த வேண்டுமென்னும் பேரவா இதனை எழுதும்படி என்னைத் து}ண்டிற்று.

எனது சிற்றறிவிற்கு எட்டியவரையில் அறிஞர் பலரின் ஆராய்ச்சி நு}ல்கள் பலவற்றின் உதவியுடன் இந்நு}லைத் தௌ;ளிய நடையில் எழுதியிருக்கின்றேன். இன்றைய உலகம் இளைஞர்களாலேயே உய்வடையவேண்டியிருத்தலால் தமிழ் மக்கள் உயர்விற்கு இளைஞர்களின் ஐக்கியமே அத்தியாவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளேன்.

இந்நு}லை ஆராய்ந்து எழுதுங் காலத்து அடியேன்பால் அன்பு பாராட்டி ஐயங்கள்தீர அறிவுறுத்தியும், ஒப்புநோக்கியும் பேருதவி புரிந்த பல அறிஞருக்கும் தோழர்களுக்கும் அடியேன் செய்யுங் கைம்மாறு என்றென்றும் பாராட்டிப் போற்றுவதேயாகும்.

எனது அறிவுக் குறைவால் இந்நு}லின்கண் பிழைகள் நேர்ந்திருத்தல் கூடும். அவற்றினை அறிஞர்கள் எனக்குத் தெரிவிப்பார்கள் என்றும், அங்ஙனம் தெரிவிக்கப்படுபவைகளை அன்புடன் ஏற்று மறுபதிப்பில் திருத்திக் கொள்ளலாகுமென்றும் எதிர்பார்த்திருக்கிறேன்.

தமிழ் வளர்ச்சியில் ஊக்கமுடைய இளஞ்சிறார் பலர் பெருகிய இந்நாளிலே இந்நு}ல் அவருள்ளத்தே உண்மையான தமிழ் அபிமானத்தை வளர்க்க உதவுமாயின் அதுவே இதனை எழுதியதாற் பெற்ற பெரும் பயனாக மதிக்கப்படும்.

இந்நு}ல் தமிழ் மக்கள் யாவரிடத்தும் பரவி அவர்களுள்ளத்தே அபிமானத்தை யுண்டாக்கி அதனால் ‘தாம் தமிழர்’ என்பதை யுணர்ந்து பண்டைய பெருமை பெற்றுச் சுதந்திரமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் திருவருள் கூட்டுவதாக.

தெல்லிப்பழை செல்லையா. நடராசா
தை. 1947


பதிப்புரை

ஒரு நாட்டில் வாழும் மக்களது நாகரிகம் அந்நாட்டில் வழங்கும் மொழிகளில் எழுதப்படும் நு}ல்களால் நன்கு வெளிப்படும் என்பது சரித்திர உண்மை. சங்க நு}ல்களே தமிழ் அகத்தைப்பற்றிய செய்திகளை இன்று எமக்குக் கொடுக்கின்றன. சிலம்பின் கதாநாயகியான கண்ணகி சோழநாட்டில் பிறந்து, பாண்டி நாட்டிலே தனது கற்பின் பெருமை காட்டி, சேர நாட்டிலே சென்று விண்ணுலகடைந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவேந்தர்க்கும் முத்தமிழ் நாட்டிற்கும் பொதுவான நு}லாக இது விளங்குகின்றது. இந்நு}லாசிரியர் தமிழ் அகச்சிறப்பை ஆங்காங்கே எடுத்துக்காட்டியுள்ளார்.

கடலின் ஆழங் காண்பதுவும் தமிழ் நாட்டின் நாகரிக் ஆழங் காண்பதுவும் ஒன்று. ஆராய்ச்சியாளர்கள் இந்திய நாட்டைப் பற்றிய வேறுபட்ட அபிப்பிராயங்களை யுடையோராக இருந்தனர். ஞால ஆராய்ச்சி;, கல்வெட்டு ஆராய்ச்சி, அகப்பொருள் ஆராய்ச்சி முதலானவைகளின் வளர்ச்சியுடன் ஆராய்ச்சியாளர்களின் வேறுபட்ட அபிப்பிராயங்கள் மறைந்து விட்டன. இந்திய நாடு பண்டைய தமிழ் உலகின் அழியாத நிலப்பரப்பேயென்று உறுதியாக அவர்கள் கூறுகின்றனர்.

உலக மக்கட் பிறிவியின் தோற்றம் கடல்கொண்ட தமிழ் நாட்டிலேயே ஆரம்பமாயது. தமிழ்நாடு கடல்கொள்ளப்பட்ட காலத்து அங்கிருந்த மக்கள் வடக்கே சென்று உலகம் முழுவதும் பரவினர். தமிழ்மக்கள் நாகரிகமே உலக நாகரிகங்களுக்கு அடிப்படை, தமிழ்மக்கள் அங்கங்கு போக்குவரவின்றித் தங்கிய காலத்தில் அவர்கள் தாய்மொழியே பல்வேறுவகையான இந்திய மொழிகளாகத் திரிந்து நின்றன. திரிந்த மொழிகள் பின்னர் ஒன்றுடன் ஒன்று கலந்து பல்வேறுபட்டன. மொழி பல்வேறுபடவே மக்களும் பல சாகியத்தாராயினர். இதனால் உண்மைத் தமிழ்மக்கள் யார் என்பதே தெரிந்து கொள்வது அரியதாயிற்று.

பண்டைத் தமிழ் அகத்திருந்த பல்லாயிர நு}ல்கள் மறைந் தொழிந்ததால் பல விபரங்கள் எனக்குக் கிடைத்தில. இருக்கும் விபரங்களைக் கொண்டு தமிழ் மக்கள் சரித்திரத்தை இக்கால இளைஞர்கள் அறிவான் வேண்டித் தௌ;ளிய நடையில் ஆசிரியர் இந்நு}லை எழுதியுள்ளார்.

ஒரு நு}லைப் புரியாத பண்டித நடையிலும் எழுதப்படாது. அதிக சாதாரணமான ஆபாச நடையிலும் எழுதப்படாது. சாதாரண மனிதனுக்குப் புரியக்கூடிய முறையில் அவனவன் சிந்தனையைத் தட்டியெழுப்பும் உணர்ச்சி மிகுந்த முறையில் எழுதப்பட வேண்டும். எழுதப்படுபவை உணர்ச்சியை ஊட்டக்கூடியவைகளாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதியாலும் மொழியாலும் சமயத்தாலும் பல பிரிவுகள் தோன்றி விட்டன. ஒற்றுமை குன்றிவிட்டது. இவ்வொற்றுமையைப் பெருக்கித் தமிழ் நாட்டை முன்னுக்குக் கொண்டுவரும் பொறுப்பு இன்றைய இளைஞர்களிடமே இருக்கின்றது. வருங்கால உலகில் வாழ்வதற்குரிய முறைகளை வகையுடன் தேடுபவர்களே இன்பங் கருதும் இளைஞர்களாகும். இவ்விளைஞர்கள் தங்கள் கடமைகளை உணராதவகையில் அடிமையென்னும் அரக்கனும், மடிமை என்னும் தீயப்பேயும் அழிவதற்கு வழியில்லை.

உலகிலே உண்பதற்கும் உறங்குவதற்கும் இளைஞன் பிறக்க வில்லை. பண்புறும் செயல்கள் புரிந்து நாட்டின் அடிமைத் தளை அகற்றி நல்வாழ்வு பெற்று வாழவே இளைஞர் முன்வரவேண்டும். பழைய சரித்திரங்களை அலசி அலசிப் பார்த்து எழுதிய இச் சிறு நு}லில் இளைஞர்கள் தமிழ் உலக முன்னேற்றத்திற்கு அடிகோல வேண்டுமென ஆசிரியர் வற்புறுத்தியுள்ளார். வீண் கிளர்ச்சிகளும் வேற்றுமைகளும் நீங்கிச் சகோதரத்துவம், சமத்துவம் உலகில் நிலைத்து மக்கள் சுதந்திரம் பெற்று அமைதியுடன் வாழவேண்டும்.

இன்றைய உலகம் நாகரிகப் பாதையில் முன்னேறும் பொழுது தமிழன் மாத்திரம் பின்னடைவதா? ஆரம்பம் முதல் இறுதிவரை உணர்ச்சி ததும்பும் உற்சாக முறையில் தெளிந்த நடையில் ஆசிரியர் இந் நு}லை பரவி தமிழ் நாட்டின் நிலையை உயர்த்த வேண்டுமென்பதே இந் நு}லின் நோக்கம், ஆசிரியரின் நோக்கம் நிறைவேற, தமிழ் தெய்வம் திருவருள் கூட்டுவதாக,

“இளைஞன்”
உள்வண்ணம்எண் பொருள் பக்;கம்

1. நாட்டின் தோற்றமும் பழமையும் ... ... 1
2. ஆராய்ச்சியும் முத்தமிழ் நாடும் ... ... 5
3. ஐவகை நிலமும் மக்களும் ... ... 11
4. மக்களும் வாழ்க்கையும் ... ... 16
5. ஆட்சியும் பாதுகாப்பும் ... ... 20
6. செல்வ நிலையும் வாணிகமும் ... ... 28
7. முத்தமிழ்ப் பெருமை ... ... 33
8. நாட்டின் கலைச்சிறப்பு ... ... 37
9. முத்தமிழ்ச் சங்கங்கள் ... ... 41
10. கடவுட் கொள்கை ... ... 44
11. புதிய ஆராய்ச்சிகள் ... ... 49
12. தமிழ்ப் பெண்பாலார் ... ... 55
13. இன்றைய தமிழ் நாட்டின் நிலை ... ... 60
14. தமிழ் நாட்டின் உயர்வழி ... ... 64


நாட்டின் தோற்றமும் பழமையும்

“தமிழ் நாடு” என்று பண்டு முதல் அழைக்கப்பட்டு வந்த நாடு எமது நாடாகும். தமிழ் மொழி வழங்கி வந்த நாடே தமிழ் நாடு என்று வழங்கப்படுகிறது. எமது மொழி இன்ன காலத்திற்கு முன் தோன்றியது என்று திட்டமாகக் கூற முடியாது. மொழித் தோற்றம் அங்ஙனமிருப்பின் நாட்டின் தோற்றம் அதற்கும் எத்துணையோ ஆண்டுகட்கு முற்பட்டிருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடை மலை.

ஒரு நாட்டை அங்குள்ள மொழி கொண்டு அழைப்பது மரபுமுறை. அது போன்றே தமிழ் வழங்கிவந்த நாட்டை “தமிழ் நாடு” என்று அழைத்தனர். இதற்கு அனேக உதாரணங்கள் உண்டு. மொழியின் வேறுபாடுகட்கு ஏற்ப பல நாடுகள் வௌ;வேறு பெயரால் அழைக்கப்படுகின்றன. தொல்காப்பியச்சிறப்புப் பாயிரத்தில் ‘தமிழ் கூறும் நல்லுலகம்;’ என்பதனால் இவ்வுண்மை விளங்கும்;;.

உலகில் மக்கள் உற்பத்தி சம்பந்தமாக ஆராய்ச்சியாளர் பல விதமாக கூறிவந்தனர். சமீப காலத்தில் கீன் என்னும் பண்டிதர் தமது உடற் கூற்று நு}லில் ஜாவா, சுமத்திரா முதலிய தீவுகளே மக்கள் தோற்றுவாய் செய்த இடமென்று கூறுகின்றார். இப்பகுதிகள் பண்டைய தமிழ் உலகத்தின் கீழைப் பகுதிகள் என்று ஆராய்ச்சி வல்லுனர் திடமாகக் கூறுகின்றனர். இவ்விடங்களிலே தமிழர்களது சமய நிலையம் போன்றவை பல இன்றும் காணக்கிடக்கின்றன. இதனால் தமிழ்ப் பெரு நாடுதானே மக்கள் உற்பத்திக்கும் மூலஸ்தானமாகிறது. மக்கள் தோற்றத்திற்கு இருப்பிடமாக விளங்கிய தமிழ்ப் பெரு நாட்டில் வழங்கப்பட்டு வந்த மொழி ‘தமிழ்மொழி’ யென்பது செயங்கோன்தரைச் செலவு முதலிய பழந் தமிழ் நு}ல்களால் அறியக்கிடக்கின்றது.

உலகில் மனிதப் பிறவி முதன்முதலாகத் தோன்றிப் பல காலம் வரைக்கும் அவர்களிடையே மொழி கையாளப்பட்டு வரப்படவில்லை. இந் நிலவுலகில் மக்கட் கூட்டம் முதன் முதலாகத் தோன்றியது இற்றைக் கைந்நு}றாயிர மாண்டிற்கு மேல் என்பது பல அறிஞர்கள் கூற்று. இஃது எங்ஙனமிருந்த போதிலும் நாகரிக உற்பத்தி இற்றைக்கு அறுபதினாயிர மாண்டிற்கு முன்னராகவேயிருக்கு மென்றும், மொழியின் உபயோகம் கையாளப்படத் தொடங்கி சற்றேறக்குறைய முப்பதினாயிர மாண்டுகள் இருக்குமென்றும் அறிஞர்கள் துணிகின்றனர்.

உலக உற்பத்தியில் ஒன்றாக உற்பவித்த மனிதக் குழாம் தனித்து வாழத் தொடங்கியதே முதற்படியாகும். மனிதர் விலங்கினம் போன்று கானகத்தில் தனித்தனியே உணவிற்காக அலைந்து திரிந்தும், பின்னர் உணர்ச்சி ஏற்பட ஒன்று கூடி குழுவினராக வாழ்ந்தும், அப்படி வாழுங்காலையில் தம்முள் சல்லாபம் செய்ய விரும்பி சைகை மூலம் கதைத்தும், பின்னர் அதற்கு ஒசையைக் கொடுத்தும் மொழியை ஆரம்பித்து வைத்தனர். நாளடைவில் பலவித மாறுதல்களுக்கும் இலக்காகி தேறிய உருப்பெற்றுத் திகழ்ந்த அக் காலத்தில் அம்மொழியின் பெயரையே நாட்டிற்கும் இட்டு அழைத்து வந்திருப்பர். இவ்விதந்தோன்றியது தான் தமிழ்நாடு என்பதும் அறிஞர் கொள்கை.

அகில உலகின் மக்கட்பிறவித் தோற்றம் தமிழ் நாடேயென்பது இன்று மறுக்க முடியாத நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் இந்துமாக்கடலில் குமரிக்கண்டம் என்று ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது. மக்கட் பிறவியின் தோற்றம் இங்குதான் உண்டாயது. அக்கண்டம் சிறிது சிறிதாக கடலில் ஆழ்ந்த பொழுது மக்கள் வடக்கே சென்று உலகமெங்கணும் பரவி, பல பாஷைகளைப் பேசி, அப்பாஷைகளைக் கொண்டு பல சாகியத்தார்களாக மாறினர். இன்றுள்ள தமிழ்நாடு எஞ்ஞான்றும் அழியாத நிலப்பரப்பாகும். வடக்கிலும் மேற்கிலும் பரவிய மக்கள் தமிழ் மக்களே. மேலும், இக் குமரிக் கண்டத்திலிருந்து வெளிச் சென்றோரே வேற்று மொழியாளர் போன்று இமயமலைப்பகுதியால் இந்திய நாட்டில் புகுந்துள்ளனர் என்பதற் கையமின்று. இத் தமிழ் மக்கள் நாகரிகங்களே உலக நாகரிகங்களுக்கு அடிப்பைட. பல இடங்களிலும் தமிழ் மக்கள் தனித்து குழுக்குழுவாக வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியும் மாறுபாடடைந்திருக்கும். இவ்விதம் மொழி திரியவே மக்களும் பலராகப் பிரிந்தனர். இதனால் உண்மைத் தமிழர் இன்றைய உலகில் பல சாகியத்தாராக விளங்குகின்றனர்.

மிகப் பழைய மனிதர் விலங்குகள் போன்ற தனித்த முரட்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்கள் அப்பொழுது உணவாக அகப்பட்டவற்றை உண்டு மிருக வாழ்க்கையையே நடத்தி வந்துள்ளார்கள். பின்னர் உணவுக்காகவும், தம்மைப் பாதுகாக்கும் பொருட்டும் ஒன்றுகூடி சிறு சிறு மனிதக் குழாங்களாக வாழத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் இயல்பாகக் கிடைத்த கற்களை ஆயுதங்களாக உபயோகித்து உணவைத் தேடினார்கள். பின்னர் இயற்கையின் உற்பத்தியான பல உலோகங்களையும் படிப்படியாக உபயோகத்திற்குக் கொண்டு வந்தனர். ஆற்றங்கரையிலும், சம வெளிகளிலும் வீடுகளை அமைத்தார்கள். தமக்கு வேண்டிய பண்டங்களை மண்ணாலேயே செய்தனர். உணவிற்குத் தானிய உற்பத்தி செய்தார்கள். இதனால் மாரி காலத்தில் அவர்களுக்குச் சுயமாகச் சிந்திக்க அவகாசம் கிடைத்தது. அப்;பொழுது மொழியைப்பற்றிய சிந்தனை உண்டாயது. சுயமாக வழக்கில் இருந்துவந்த சைகைமுறைச் சம்பாஷணையை சித்திர எழுத்துக்களாகக் களிமண் தகடுகளில் தீட்டினார்கள். படிப்படியாக அச்சொல் மூலங்களுக்கு ஓசையைக் கொடுத்தனர். தமக்கு வேண்டிய கோயில்களை அமைத்தனர். தம்மிடத்து எஞ்சிய பொருள்களை அவற்றை வேண்டியோருக்குக் கொடுத்து அவர்களிடமிருந்து தமக்கு வேண்டியவற்றைப் பெற்றனர். இவ்விதம் பண்டமாற்று ஆரம்பமாயது. இப் பழக்கமே வாணிபமாக வளர்ந்தது. மக்கள் கலந்துறவாடும் பொழுது நாகரிகம் பரவத் தொடங்கியது. பழக்கவழக்கங்கள், கலைகள், மத உணர்ச்சிகள் முதலியன இக்கலந்துறவாடலால் மாறுபடுதல் இயல்பு. மக்கள் இடைக்காலங்களில் நல்லிடங்களைத் தேடிப்போயினர். அக்காலத்தில் அவர்கள் வாழ்ந்த நகரங்கள் இயற்கை மாறுபாட்டால் மண்ணுள் மறைந்தன. இன்றைய மக்கள் உள்ளத்தில் பண்டைய நாகரிகத்தையும், முன்னோர் வாழ்க்கையையும் அறிய வேண்டும் என்னும் அவாவால் எழுந்ததே ஆராய்ச்சி. புதைபொருள் ஆராய்ச்சியால் இயற்கை மாறுபாட்டால் கூறடைந்த நகரங்கள் பல கண்டுபிடிக்ககப்பட்டுள்ளன. இவற்றைப் பிற்கூறுவாம்.

உலக நாகரிகத்திற்கு பண்டைத் தமிழர் செய்துள்ள தொண்டுகள் மறக்க முடியாதவை. நாகரிக முன்னணியில் இன்று விளங்கும் ஐரோப்பா உரோமபேரரசிலிருந்து பிறந்ததாகும். உரோம சக்கிராதிலபத்தியம் கிரேக்கர்களிடமிருந்து அறிந்த நாகரிகத்தால் உண்டாயது. கிரேக்கர் பாரஸிக மக்களை வெற்றி கொண்டதாலேயே உன்னத நிலை அடைந்தனர். பாரஸிக மக்கள் யாரிடமிருந்து அறிந்தனர்?

பாரஸீக நாடுகளில் பண்டைத் தமிழ் மக்கள் குடியேறி தமது நாகரிகத்தைப் பரப்பியதற்கு உயர் சான்றுகள் பலவுள. இவற்றினை ஆராய்ச்சியாளர் இன்றைய உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர். ஆகவே தமிழ் மக்களே அவர்கள் என்பதில் ஐயப்பாடு தோன்ற இடமில்லை. எமது வரலாற்றுத் தொடர்பை அறிய முற்படவே ஆராய்ச்சி தொடங்குகிறது.

ஆராய்ச்சியும் முத்தமிழ்நாடும்.

உலகில் பல பிரிவுகளிலும் ஆராய்ச்சிகள் நடத்தி வந்தோர் அவ்வவ்விடங்களைப்பற்றி எழுதிய நு}ல்களை ஆராயுமிடத்து எல்லா இடங்களிலும் தமிழர் தொடர்பு காணக்கூடியதாக இருக்கின்றது. குமரிக்கண்டமே உலக மக்கள் உற்பத்தியிடத்தின் மத்திய இடம் என்றும் ஆண்டு பேசப்பட்டுவந்த தமிழ் மொழியே அவர்களது மொழியென்றும் அதனால் ஆங்கு வாழ்ந்தோர் தமிழ் மக்களே என்றும் உறுதியாக இவ்வாராய்ச்சிகளால் அறியக் கிடக்கின்றன.

தற்பொழுதுள்ள குமரிமுனைக்குத் தெற்கே அலைகொழிக்கும் இந்து சமுத்திரத்தினு}டே பெரிய நிலப்பரப்பிருந்ததென ஆங்கில பௌதிக நு}ல் வல்லார் கூறுவர். தமிழ்ப் புராண வரலாறுகளும். இலங்கையின் சரித்திரமும், தமிழ் இலக்கியங்களும் கர்ன பரம்பரைக் கதைகளும் இக்கூற்றிற்கு ஆதாரமாகின்றன. வீரமNகுந்திரபுரி என்னும் சூரபன்மன் தலைநகர் இருந்த இடமே பழைய இலங்கை யென்றும் அது மிகப் பரந்த தேசமாக இருந்ததென்றும் தெரிகிறது. இராவணன் காலத்திய இலங்கைக்கூடாக மத்திய ரேகை செல்வதாக இந்திய வான சாஸ்திரிகள் பகருகின்றனர். இந்த இராவணன் காலத்திய இலங்கையின் கீழைப் பகுதியே சுமாத்திரா ஜாவாவாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. ‘இராசவளி’ என்னும் சிங்கள நு}லில் கடல் கொள்ளப்பட்ட இரவணன் இலங்கைபற்றிக் கூறப்படுவதாகத் தெரிகிறது. “நெடியோன் குன்றமும் தெடியேள்பௌவமும்” என்னும் சிலப்பதிகார செய்யுளடிக்கு உரை கூறுமிடத்து குமரிமுனைக்குத் தெற்கே நாற்பத்தொன்பது நாடுகள் இருந்ததாக அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். செங்கோன்தரைச் செலவு என்னும் நு}லில் அடியார்க்கு நல்லாருரையில் காணப்படாத சில இடப் பெயர்கள் காணப்படுகின்றன. புற நானு}ற்றில் பஃறுளி ஆற்றைப்பற்றி சொல்லப்படுகிறது.

ஆதித்தமிழ் அகத்தில் மனு என்னும் அரசனின் மகளான ஈழம் என்பவளுக்கு குமரி என்றும் ஒரு பெயர் இருந்ததாகத் தெரிகிறது. அவள் அரசாண்ட இடத்திற்கு குமரிக்கண்டமெனப் பெயர் வந்தது. கன்னியாகவே இருந்ததால் இப்பிரதேசத்திற்கும் கன்னியா குமரிக்கண்டம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. குமரிக் கண்டத்திலே சேர, சோழ, பாண்டிய நாடுகளும் இலங்கைபோன்ற நாடுகளுமாக நாற்பத்தொன்பது தேசங்கள் இருந்தன. பிற்காலத்தில் ஏற்பட்ட ஜலப் பிரளயத்தால் பெரும் பகுதியான நிலப்பரப்பு நீர்ப்பரப்பாக மாறிவிட்டது. பழைய தமிழ் நு}ல்களும் இப்பிரளயத்தில் அழிந்தொழிந்தன. ஜலம் கொள்ளாதொழிந்த பிரதேசம் பரதகண்டமாகவும் இலங்கைத் தீவாகவும் பிரிந்தன. இந்த இடங்களிலே வாழ்ந்த தமிழ் மக்களைப் பரதர், நாகர். இயக்கர். சித்தர் எனப் பல திறப்படுத்தி அழைத்தனர்.

இலங்கையும் அன்றைய குமரிக்கண்டத்தின் நாடாதலின் அதனை ஈழம் என்னும் குமரி அரசாண்டனள். இதனால் இலங்கைக்கு ஈழம் என்னும் பெயரும் சூட்டப்பட்டது. தமிழ்த்தேசம், குமரி நாடு, குபேர நாடு, இராவணன் நாடு, நாகதீவு, இயக்கநாடு எனப் பல பெயர்களும் இலங்கைக்கு இருந்தன. அறிவிற் சிறந்த தமிழ் மக்களையே இயக்கர், நாகர் என அழைத்தனர். இலங்கையை அரசாண்ட சுகேசன் என்னும் அரசன் சந்திரஞாலம் என்னும் விமானத்தில் போக்குவரவு செய்தான். இவற்றினாலே அன்றைய தமிழ் நாட்டின் பரப்பு இன்று குறைந்துள்ளதென்பது வெள்ளிடைமலை.

பழைய தமிழ் நாட்டில் கடலில் மூழ்கிய பகுதிபோக இன்று நிலப்பரப்பாக இருக்கும் பகுதிபற்றி மேற் கூறியுள்ளோம். இங்கு ஆராய்ச்சிகள் நடத்தியதன்பயனாக கிடைக்கப்பெற்றுள்ள பல வகைச் சாதனங்களும் தமிழ் மக்களையே குறிக்கின்றன. ஆகவே தமிழ்ச் சாகியத்தாரே இங்கு வாழ்ந்துள்ளனரென்பது அங்கை நெல்லிக் கனியாகின்றது.

“குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான் கெல்லையின் இருந்த தமிழ்”

என்னும் கூற்றால் கடல்கொண்ட நாடு போக எஞ்சியிருந்த தமிழ்நாடு இன்றைய இந்தியநாடு முழுமையுமென்பது விளங்குகின்றது.

பண்டைய நாகரிக உற்பத்தி நாடுகளென்று கொண்டாடப்பெறும் பாபிலோனியா முதலிய இடங்களிலும் எகிப்து, கிரேக்கநாடு, உரோமபுரி முதலிய இடங்களிலும், மெக்ஸிக்கோ முதலிய அமெரிக்க நாடுகளிலும் சீனம் போன்ற தேசங்களிலும நடத்திய ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை உற்று நோக்குமிடத்து ஆங்குக் காணப்படுவதென்னை? பண்டைய உலகில் வாழ்ந்தோர் தமிழ்மக்களில் இருந்து பிரிந்தவர்கள் என்னும் உண்மை தெளிவாகின்றது.

கடல்கொண்ட தமிழ்நாடுபற்றி அதிகம் அறியக்கூடியதாக தமிழ் நு}ல்களில் இன்று இல்லை. பழைய தமிழ் நு}ல்கள் ஜலப்பிரளயத்தில் மறைந்தொழிந்ததால் இன்று அக்கால சரித்திரங்களை அறிய முடியவில்லை. ஜலப் பிரளயத்தின் பின் இருந்த தமிழ் நாட்டை முப்பிரிவுகளாக வகுத்திருந்தனர். இந்நாடுகளைப் பரிமேலழகர் திருக்குறள் குடிமை அத்தியாயத்தில் வரும் செய்யுளில் உள்ள பழங்குடி என்பதற்கு உரை கூறுமிடத்த விளக்குகின்றார்.

“வழங்குவதுள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற்றலைப் பிதலின்று”

இந்தத் திருக்குறளுக்கு அவர் கூறும் உரை கொண்டும் ஏனைய நு}ல்களில் கிடைக்கும் ஆதாரங்கள் கொண்டும் நோக்குமிடத்துச் சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றும் பழம் நாடுகள் ஆகின்றன. இம் முப்பிரிவுகளையும் ஆண்டோர் பழம் மக்களாதலின் அன்னார் காலம் வரையறுக்க முடியாது.

சேர, சோழ, பாண்டிய நாடுகளில் வழங்கிவந்த மொழி தமிழ் மொழியே. இம் மொழியொன்றே இத்தமிழ் நாட்டின் பெருமைக்குப் போதியதாகும். இம் மூன்று நாடுகளிலும் பாண்டி நாடே தமிழுக்குப் போதிய ஊக்கமளித்ததென நு}ல்கள் கூறா நிற்கும்.

பாண்டியநாடு சோழ தேசத்திற்குத் தென்மேற்கில் கன்னியாகுமரி வரையில் உள்ள தேசமாகும். இதனை அக்காலத்தில் ‘மாறதேசம்’ என்றும் ‘மாறன்பதி’ என்றும் வழங்கி வந்தனர். பாண்டியர் அரசியற்றினமையின் இதற்குப் பாண்டிய நாடென்னும் பெயர் உண்டாயிற்று. தென் மதுரையும், கன்னியாகுமரியின் தென்பால் விசாலித்து வளர்ந்தோங்கிய பூமிப்பரப்பும், அப்பூமிப் பிரதேசத்திற்கு நிர்ப்பாய்ச்சிய பஃறுளியாறும் பண்டோருநாட் பெருகிய கடற்பெருக்கில் மறைந்துவிட்டன. சப்த நதிகளில் ஒன்றாகும் குமரி தீர்த்தமும் இதில் அமிழ்ந்தி மறைந்தது. கடல் கொண்ட தமிழ் நாடுபற்றி சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் நாடு காண் காதையில்

“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

எனக் கூறுகின்றார். இஃது இன்றைய ஆராய்ச்சியாளர் கூறும் குமரிக்கண்டத்திற்குப் போதிய சான்றாகும்.

தென்பகுதி கடல்கொண்ட பின்னர் கபாடபுரம் இராசதானியாக ஏற்ப்பட்டது. பாண்டியமன்னர் இக்கடற் பெருக்கால் இழந்த நிலப்பகுதிக்கு ஈடாக சோழநாட்டில் இருந்தும், சேரநாட்டில் இருந்தும் சில பகுதிகளைச் சேர்த்துக்கொண்டனர். இதனை அடியார்க்கு நல்லாரின் “அங்ஙனமாய நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்து}ர்க் கூற்றமும் சேரமா நாட்டுக் குன்று}ர்க் கூற்றமும் என்னுமிவற்றினை ......” என்னுங் கூற்று தெளிவாக்குகின்றது. கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆளும் காலத்தில் அதுவும் கடற்பெருக்கில் அமிழ்ந்தி மறைய உத்தரமதுரை இராசதானியாகக் கொள்ளப்பட்டது. இந்நகரின் பண்டைச் சிறப்புகளைப் பரிபாடல், மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், கல்லாடம் முதலிய நு}ல்கள் வியந்து கூறுகின்றன.

பாண்டிய நாட்டில் வைகை ஆறு நீர் வளத்தால் சிறந்து செல்வத்தைப் பெருக்கியது. பண்டைக் காலத்தில் வைகை ஆறு மிகவும் ஆளமுடையதாகவும், வற்றாத நீர்ப் பெருக்குடையதாகவும் இருந்தது. வைகை ஆற்றைக் கடத்தற்கு குதிரைமுகப் படகும், யானைமுகப் படகும், சிங்கமுகப் படகும், ஆங்காங்கே துறைகளில் காணப்பட்டன என்று அவைகளில் மக்கள் அவரவர்கள் தகுதிக்கும் செல்வத்திற்கும் ஏற்ப படகுகளில் ஏறி ஆற்றைக் கடந்தனரென்றும் அறியப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வைகை ஆற்றைப்பற்றி ஆசிரியர் கூறுமிடத்து,

“உலகு புரந்து}ட்டும் உயர் பேர் ஒழுக்கத்தையும்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை யென்ற பொய்யாக் கலக்கொடி”

எனப் புகழ்ந்துரைக்கின்றார். பாண்டிய நாட்டில் வைகையே நீர் வளத்தினை மிகைப்படுத்தியது.

சோழகுலத்தரசர்க்குரிய தேசம் சோழம் அல்லது சோழமண்டலம் என்ற அழைக்கப்பட்டது. காவிரியாம் பொன்னி நதி பாயுநாடாதலின் இதனை ‘நீர்மலிவான்’ என்றும் ‘புனல் நாடு’ என்றும் கூறுவர். ஆதியில் இதன் தலைநகர் உறையூர். அதன் பின்னர் காவிரிம்பூம் பட்டினம் அல்லது புகார் என்னும் நகரம் தலைநகராக விளங்கியது. இத்தலத்திற்குப் பல பெயர்கள் சூட்டப் பெற்றிருந்தன. கவேரன் என்னும் மன்னனுடன் தொடர்பு கொண்டிருந்தபடியால் பொன்னி நதி காவேரி என்று அழைக்கப்பட்டு வந்தது.

‘சோழநாடு சோறுடைத்து”

என்னும் ஒளவைப் பிராட்டியார் கூற்றினால் அந்நாடு வளம் பொருந்தியிருந்ததென்பது தெளிவாகும்.

சேரநாடு என்பது இக்காலத்திய திருவனந்தபுரம், கொச்சி. மலையாளம், கோயம்புத்து}ர் முதலிய இடங்களும் சேலத்தின் ஒரு பகுதியும் ஆகும். இந்நாட்டின் தலைநகரம் வஞ்சி என்றும் பலர் புகழ்ந்து கூறியுள்ளனர். புகழ்பெற்ற சிலப்பதிகாரத்தின் தந்தையும் இச் சேரர் குலக்கொழுந்தே.

சேரநாட்டில் மலைவளமும் அம்மலையினின்றும் இழிந்த அருவியின் வளமும் நீர்நிறைந்த பெரியாறு என்னும் பெருநதியும் பொருனை என்னும் பொய்யா நதியும் விளங்கித் தோன்றின.

“மூதிர் பூம்பரப்பின் ஒருபுனல் தனித்து
மதுகரம் ஞிமிளொடு வண்டினம் பாட
நெடியோன் மார்பில் ஆரம்போன்று
பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை”

எனச் சிலப்பதிகார ஆசிரியர் கூறுவதால் இவ்வாற்றின் வளமும் சிறப்பும் ஒருவாறு அறியப்படும். திருநெல்வேலி நாட்டில் நலம் பெருக்கும் பொருனை யென்னும்பெயர் பெற்ற தம்பிரவர்ணியாறு சேரநாட்டைச் சேர்ந்தது. இவ்வாற்று வளத்தால் சேரநாட்டில் பயிர்த்தொழில் மிக மேம்பாடடைந்தது.

இந்த முத்தமிழ் நாடுகளிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் வாழ்;ந்த இடங்களை ஐத்திறப்படுத்தியிருந்தனர். இவ்வைந்து நிலங்களைப்பற்றியும் அவற்றில் வாழ்ந்த மக்களைப்பற்றியும் நாம் அறிதல் முக்கியமாகும்.

ஐவகை நிலமும் மக்களும்

தமிழ் நாட்டின் முத்தமிழ் நாட்டுப் பிரிவுகளையும் ஐவகை நிலங்களாக மக்கள் பகுத்திருந்தனர். இவ்வைவகை நிலங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் அவ்வந்நிலப் பெயர்களையே கொண்டு அழைக்கப்பட்டனர். குறிஞ்சி, முல்லை. மருதம், நெய்தல் என நான்கு நிலங்களாக நாடுகள் பகுக்கப்பட்டிருந்தன. குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் சூரியனது வெப்ப மிகுதியால் தம் இயல்பழிந்து மணல் வெளியாக மாறுவதுமுண்டு. இதனைப் பாலைநில மென்பர். இவ்வைவகை நிலத்திலும் வாழ்ந்தவர்கள், தமிழ் மக்கள், இந்நில மக்களுக்கு அவ்வந் நிலப்பெயர்களே வழங்கப்பட்டிருந்தன என நு}ல்கள் கூறும்.

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். மலை நாட்டில் வாழ்வோர் வில்லில் அம்பு பூட்டி எய்வதில் மிகுந்த வல்லமை யுடையவர்கள். மலையிடத்தே திரியும் மிருகங்களை வேட்டையாடியும், அவ்விடத்திற் கிடைக்கும் பழம், கிழங்கு, தேன் முதலியவற்றினை உண்டும் வாழ்ந்தனர். ஆடவர் வேட்டை யாடுவதற்கு வெளியே சென்ற காலத்து பெண்கள் பழவகைகளும் மூங்கிலரியும் மலை நெல்லும் சேகரித்து வைப்பார்கள்.

இக்குறிஞ்சி நிலத்தின் கண்ணே கல்வி கேள்விகளிலும் வீரத்திலும் சிறந்து விளங்கும் ஆடவனை பொருப்பன், வெற்பன், சிலம்பன் என அழைப்பர். இவனே இந்நில மக்கள் தலைவன் ஆவான். மற்றைய ஆடவர் குறவர், கானவர் எனப்படுவர். கல்வி முதலியவற்றால் சிறப்புடைய பெண்ணைக் குறத்தி, கொடிச்சி என அழைப்பர். இவள் இந் நிலத்தலைவன் மனைக்கிளத்தி ஆவள். மற்றும் பெண்கள் குறத்தியர் என அழைக்கப்படுவர்.

இந்நில மக்கள் பெரிய விவாகக் கிரியைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. காளையரும் கன்னியரும் ஒருவரையொருவர் காதலித்து மணந்து கொள்வர். சிலநாட்களின் பின் உறவினர் எல்லோரும் ஒன்றுகூடியிருந்து கொண்டாடுவதே அக்கால மணக்கிரியையாக இருந்தது. ஆடவரும் பெண்களும் - பிரதானமாகப் பெண்கள்தான் - தம்மை அலங்கரித்துக் கொள்வதில் மிக்க விருப்பமுடையவர்களாயிருந்தனர். இங்குள்ள பெண்கள் தங்கள் கூந்தலை ஐவகையாகப் பின்னி முடிவர். மணிகளைப் பொறுக்கிக் கோர்த்தும், மலர்களைப் பறித்து மலையாகத் தொடுத்தும் அணிந்து கொள்வர். தம் காதலர் வீரவேட்டையின் அறிகுறியாகக் கொணரும் புலிப்பற்களை மாலையாகக் கோர்த்துத் தாலியாக அணிவர். இவ்வழக்கே இன்றும் தமிழ் மக்களிடையே மணவினையின் பொழுது தரிக்கும் வழக்கம் நிலவுகின்றது.

மலைநாட்டு மக்களது குலதெய்வம் குமரக்கடவுள் ஆகும். இங்குள்ள மக்கள் முருகக்கடவுளை வழிபட்ட முறைபற்றித் திருமுருகாற்றுப்படையில் பழமுதிர்ச் சோலை யென்னும் பகுதியின் கீழ் அழகாகக் கூறப்பட்டுள்ளது.

குறிஞ்சி நிலத்து மக்கள் பெருகத்தொடங்கினார்கள். மலையிடத்தே கிடைக்கும் பொருள் அங்குள்ளார்களுக்குப் போதாததாயிற்று. ஆகவே அவர்கள் கீழே சென்று காடுகளில் தம் வாழ்க்கையை நடத்தினர். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமென்பர். இங்குள்ள மக்கள் தாம் வேட்டையாடுதற்கு உபயோகித்த நாய்களையும், ஆடு, மாடு, எருமை முதலியவற்றையும் வீடுகளில் வளர்த்து வந்தனர். ஆடு மாடுகளை மேய்த்து அவை கொடுக்கும் பிரயோசனங்களை நம்பியே இவர்கள் வாழ வேண்டியவர்களானார்கள். மோர், தயிர் முதலியவற்றினை மருத நிலத்தே கொண்டு சென்று விற்று அந்நிலத்தில் விளையும் நெல் முதலியவற்றைப் பெற்று வாழ்க்கையை நடத்தினர். இடையர் ஆடு மாடுகளைக் காட்டிற் கொண்டு சென்று மேய்த்து மாலைக் காலத்தே வீடு திரும்புவர்.

முல்லை நிலத்து மக்களிலே கல்வி முதலியவற்றிலே சிறந்த ஆடவனைக் குறும்பொறைநாடன் தோன்றல் என அழைத்தனர். இவனையே இந்நிலத் தலைவனாகக் கொண்டனர். கல்வி கேள்விகளில் சிறந்த பெண்ணை மனைவி, கிளத்தி என அழைப்பர். இவள் இந்நிலத் தலைவனது மனைவியாவாள். இங்குள்ள மற்றும் ஆடவர்களை இடையர், ஆயர் எனவும், மற்றும் பெண்களை இடைச்சியர், ஆய்ச்சியர் எனவும் அழைப்பர். மகளிரும் மைந்தரும் மணம் முடிந்த பின்னர் வாழ்க்கையை நடத்துவதாய கற்பு இவ்விடத்தில்தான் நிலைபெற்றது என நு}ல்கள் கூறும்.

இந்நில மக்கள் தாம் வசித்த இடங்களைப் பல பிரிவுகளாகப் பகுத்திருந்தனர். பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியமாக வாழ்ந்தன. இக் குடும்பங்களுக்குக் தலைவனாக ஒருவன் இருந்தான். இவ்வாறு முல்லை நிலத்தே முதல் அரசன் தோன்றினான். அரசனைக் கோன் என்றும் அழைப்பர். இப் பெயரே இதற்கு உதாரணமாகும். முல்லை நில மக்கள் வாசுதேவனை வழிபடுவர். இந்நிலப் பெண்கள் மாயன் புகழ்பாடிக் கைகோர்த்துக் குரவைக் கூத்தாடுவர்.

வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நில மெனப்படும். மருத நிலம் நீர்வளம் பொருந்தியது. அங்கு மருத மரங்கள் செழித்து வளரும். மக்கள் நெல், கரும்பு முதலியவற்றை விளைவித்து அவற்றின் பயன்களைப் பெறுவர். அரசர்க்குரிய் தலைநகரம் பெரும்பாலும் மருமநிலத்திலேதான் உண்டு. ஆறுகளில் இருக்கும் வெள்ளத்தை வயல்களுக்குப் பாய்ச்சிப் பயிர்களை விளைவிக்க இங்குள்ளவர்கள் கற்றிருந்தனர். இவர்கள் வெள்ளத்தை ஆண்டமையால் வெள்ளாளர் எனவும், வேளாண்மை செய்தமையால் வேளாளர் எனவும் அழைக்கப்பட்டனர். இந்நில மக்களிடையே கல்வி கேள்விகளிலே சிறந்த ஆடவனை ஊரன், மகிழ்நன் என அழைத்தனர். இவன் இந்நில மக்கள் தலைவனாவான். கல்வி கேள்விகளில் சிறந்த பெண்ணை கிளத்தி, மனைவி என அழைப்பர். இவள் இந்நிலத் தலைவன் மனைக்கிளத்தமியாவாள். இந் நிலத்தேயுள்ள மற்றைய ஆடவர்களை உழவர், கடையர் எனவும் பெண்களை உழத்தியர், கடைச்சியர் எனவும் அழைத்தனர்.
இவ்விடத்தே மக்கள் சந்தோஷமான வாழ்க்கையை நடத்தினர். ஆடல் பாடல்களும் பரத்தையர் சேரிகளும் பொழுது போக்கிற்குரிய பல இடங்களும் இங்கேயிருந்தன. இந்நில மக்களுக்கு இந்திரனே தெய்வம். இந்திரனுக்கு ஆண்டுதோறும் பெரிய கொடியேற்று விழா நடந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்படும். நெய்தல் நில மக்களுள் கல்வி கேள்விகளிற் சிறந்த ஆடவனைச் சேர்ப்பன், புலம்பன் என அழைப்பர். கல்வி கேள்விகளிற் சிறந்த பெண்ணைப் பரத்தி, நுளைச்சி என அழைப்பர். இவள் இந்நிலத் தலைவன் மனiயாளாகும். மற்றும் ஆடவரை நுளையர், பரதர், அளலர் என்றும், பெண்டிரை நுளைச்சியர், பரத்தியர், அளத்தியர் என்றும் அழைப்பர்.

நெய்தல் நிலத்து மக்கள் மீன்பிடி படகுகளில் சென்று ஆழ்ந்த கடலிடத்தே வலைவீசி மீன்களைப் பிடிப்பர். பிடித்த மீன்களைக் கரையிடத்தேயுள்ள மணலில் காயவிடுவர். பதரவரின் இளைய மகளிர் புன்னை மரங்களின் நிழலில் இருந்து உணங்கும் மீனைக் கவரவரும் புட்களை ஒட்டிக் கலைப்பர்.

கடற்கரைகளில் அரசர்களால் நிறுவப்பட்ட பண்டகசாலைகள் காணப்படும். வெளித் தேசங்களுக்கு அனுப்பப்படும் பொருள்களும் கடல் மார்க்கமாக வந்திறங்கிய பொருள்களும் அப்பண்டகசாலைகளில் தேங்கிக் கிடக்கும். கடல் மார்க்கமாக வர்த்தகப் பொருள்கள் தமிழகத்திற்கு வந்தது பற்றிப் பல நு}ல்களும் கூறுகின்றன.

“கலத்தினும் காவினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வா”

எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றதை ஆய்ந்தால் பல உண்மைகளை அறியலாகும். கடற்கரைகளில் அமைத்திருந்த பண்டகசாலைகளில் இருக்கும் பொருள்களைக் கடலிற் செல்வோர் பகுத்துணரும் பொருட்டுப் பல கொடிகள் நாட்டப்பெற்றிருந்தன.

கடலிலே செல்லும் கப்பல்கள் திசை அறிந்து செல்வதற்கு கடற்கரைகளில் வெளிச்ச வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. உப்பங் கழிகளில் விளைந்த உப்பை, உமணர்கள் வண்டி வண்டிகளாக ஏற்றிச் சென்றனர். நெய்தல் நிலத்தின்கண்ணே சிறந்த பட்டணங்கள் உண்டு. இங்கு பெரிய சைவர்கள் மாடி வீடுகளில் வாழ்வர். மயில் போன்ற சாயலும் குயில் போன்ற குரலுமுடைய ஒள்ளிய வளையல்களை அணிந்த மெல்லியல் மகளிர் கடற்கரைகளில் உலாவுவர். இக் கடல் ஓரங்களில் இருந்த பரதவரே அரேபியா, எகிப்து, மலாயா, காம்போதியம், சீனம் ஆகிய நாடுகட்குச் சென்ற பெரிய மாலுமிகளாவர். இவர்கள் வருணனையே தெய்வமாக வணங்குவர்.

குறிஞ்சி நிலத்தும் முல்லை நிலத்தும் உள்ள சில பகுதிகள் சூரிய வெப்பத்தால் தம் இயல்பழிந்து பாலை நிலமாக மாறுவதுண்டு. வேட்டை மிருகங்களைத் துரத்திச் செல்லும்மக்கள் இந்தப் பாலை வனங்களில் தங்கிவிடுதலும் வழக்கம். இவ்விடத்தில் ஜனங்கள் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவில்லை. பாலைவன வழிகளிலே கள்வர்கள் தங்கி அவ்வழியே செல்லும் மக்களைக் கொன்று அவர் பொருள்களைக் கவர்வர்.

இந்நிலத்து வாழ்ந்த மக்களுள் கல்வி கேள்வி முதலியவற்றில் சிறந்த ஆடவரை விடலை, மீளி என அழைப்பர். இவன் இந்நிலத் தலைவன் ஆவான். மற்றும் ஆடவர் எயினர், மறவர் என அழைக்கப்படுவர். கல்வியிற் சிறந்த பெண்ணை எயிற்றி யென்பர். இவள் இந்நிலத் தலைவன் மனையாளாகும். மற்றப் பெண்களை எயிற்றியர், மறத்தியர் என அழைப்பர்.

இவ்விதமாக முத்தமிழ் நாட்டிலும் வாழ்ந்துவந்த ஐந்நில மக்களது வாழ்க்கை விபரம் நமக்கு அத்தியாவசியமாகும். வளம் பொருந்திய தமிழ் நாட்டில் மக்கள் செல்வம் கொழிக்கத் திகழ்ந்தார்கள். முத்தமிழ் நாடுகளும் தமிழராய தமது சொந்த நாடு என்று வாழ்ந்து வந்தார்கள். இவைகளில் வாழ்ந்து வந்த மக்களின் வீடு, வாயில், நடை உடை பாவனை, பழக்க வழக்கங்களைப் பற்றிப் பத்துப் பாட்டில் காணலாம். தமிழகம் முழுவதும் வாழ்ந்த தமிழ் மக்கள் வாழ்க்கையைநோக்கல் எமக்கு அவசியம்.

மக்களும், வாழ்க்கையும்

பண்டைக் காலத்து வாழ்ந்து வந்த எம் முன்னோர் வாழ்க்கைபற்றி அறிய எம் உள்ளங்கள் கொந்தளிப்பது இயற்கை. பண்டை மக்கள் தமது வாழ்க்கைக்கு வகுத்த முறைகள் இன்றும் நின்று நிலவி வருகின்றன. நாகரிக உலகில் இருந்துவரும் இன்றைய வீட்டு அமைப்பு முறைகள் பண்டைத் தமிழ் மக்கள் காட்டிய வழியையே பின்பற்றியுள்ளன வென்பதை மறுக்க முடியாது. அந் நாட்களில் காற்றோட்டம் மிக்க தெருக்களை அமைத்து நகர அமைப்பில் தமக்கிருந்த பண்பட்ட அறிவை உலகுக்குக் காட்டினர். சுட்ட செங்கற்களையும், உலர்ந்த செங்கட்டிகளையும் வீடுகள் அமைப்பதற்குப் பயன்படுத்தயுள்ளனர். சில பகுதிகளில் பெருங் கற்பாறைகளை மலையையே புரட்டி விடுவது போன்று து}ண்கள் அமைத்து வீடுகள் கட்டினர். சில இடங்களில் மலைகளையே குடைந்து கட்டிடங்கள் அமைத்தனர். வீட்டுச் சுவர்கள், சாளரங்கள். வாயிற் படிகள் முதலியன ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்தன. அக்காலத்திய கொத்தர்கள் கட்டிட நிர்மாணத்திலே சிறந்தவர்கள் என்பதற்கு இன்றும் நிலவும் பாரிய வேலைப்பாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. அக்காலத்தில் அணி அணியாகவே வீடுகள் அமைக்கப்பட்டன. மாடி வீடுகள், பல வகைப்பட்ட பாரிய கட்டிடங்கள் தமிழ் நாட்டில் மிளிர்ந்தன.

இரண்டிற்கு மேற்பட்ட அடுக்கு மாடங்களைக் கொண்ட மாளிகைகள் பல்கிக் கிடந்தன. பெரிய கட்டிடங்களிற் பாரிய கூடங்கள், அகன்று நீண்ட தாழ்வாரங்கள், அகன்ற முற்றங்கள், சிறிய பெரிய வாயில்கள் முதலியன விசேட அமைப்புக்களாகும். படுக்கை அறைகள், நீராடும் அறைகள். மலங் கழிக்கும் ஒதுக்கிடங்கள் முதலியன நன்மாதிரி அமைக்கப்பெற்றிருந்தன. இவ்விதம் மக்கள் வீடுகளும் கட்டிடங்களும் திகழ்ந்தன. சித்திர வேலைப்பாடுகள் மல்கிக் கிடந்தன. அரசன் அரண்மனையோ கூறத் தரமன்று. அரண்மனை அமைப்புகள் பண்டைத் தமிழ் மன்னர்களின் சிறப்புக்களையே பன்மடங்கு பெருக்குவனவாக இருக்கின்றன. வீடுகள், பொதுக் கட்டிடங்கள், அரண்மனைகள், ஆலயங்கள் முதலியன மக்களின் நாகரிக முதிர்ச்சியை இன்னும் நமக்கு அறிவுறுத்துகின்றன.

நீர் மொள்ளக் கிணறுகள் பல வீட்டிற்கு ஒவ்வொன்றாக அமைக்கப்பட்டிருந்தன. அழகிய செய் குளங்கள் மக்கள் நீராட அமைக்கப்பட்டிருந்தன. பண்டை மக்கள் செயற்கைக் குளங்களையும், நவீன நீர்வீழ்ச்சி சாதனங்களையும் அக்காலத்தில் அமைத்திருந்தனர் என்பதற்கு அத்தாட்சிகள் கூறவேண்டிய அவசியமின்று. இவைகள் கண்கூடாகவுள்ளன. அக்காலத்தில் நீர் வசதிகள் தக்க சிறந்த முறையில் மக்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டு மக்கள் தம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர். களிமண்ணாலும் மரத்தாலும், செம்பாலும், வெண்கலத்தாலும், மற்றும் உலோகங்களாலும் தமக்கு வேண்டிய பொருள்களைச் சேகரித்திருந்தனர். நன் முறையிற் செய்யப்பட்ட மட்பாண்டங்களே மக்கள் உபயோகத்தில் இருந்தன. பொன் வெள்ளிகளினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் செல்வர்களது மாளிகைகளிலே பல்கிக் கிடந்தன. அப்பாத்திரங்களின்மீது அழகிய ஓவீயங்களும் சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. இன்றும் எம் இல்லங்களிலும் இத்தகைய பண்டை மக்களின் வீட்டுப் பொருள்களைப் போன்றவைகளைக் காணலாகும். வீடுகளிலும் பலவகைச் சிலைகளைச் செய்து வைப்பதுடன் எங்கு நோக்கினும் சிற்பக்கலையும், ஓவியமும் மிளிரும்படி செய்து வைத்தனர். பலவகை எந்திர சாதனங்களும் அன்னார் உபயோகத்தில் இருந்து வந்திருக்கின்றன. பீங்கான்கள் கூட அக்கால தமிழ் மக்களிடையே கையாளப்பட்டு வந்த பாத்திரங்களாக விளங்கின என்பதற்க ஆதாரங்கள் இருக்கின்றன. வீடுகளில் பல்வேறு வகைப்பட்ட விளக்குகள் உபயோகத்தில் இருந்திருக்கின்றன. விஷேட தினங்களுக்குப் புதுவித விளக்குகள் பாவிக்கப்பட்டன.

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் பல இருந்தன. இன்றும் இருக்கின்றன. ஆனால் பண்டு எம் மக்களிடையே பரவியிருந்த விளையாட்டுப் பொருள்கள் இன்றையவற்றிலும் பன்மடங்கு சிறப்புடையன என்பதை மறுக்க முடியாது.

தமிழ் மக்கள் பொன்னாலும் மணியாலும் செய்த ஆபரணங்களைப் பூண்டனர். அக்காலத்தில் தமிழ் நாட்டில் செல்வம் கொழிந்தது. முத்துக்களும் பவளங்களும் இன்னும் பல கடல்படு திரவியங்களும் பொன்னும் மணியும் நகரங்களில் குவிந்து கிடந்தன. மக்களின் அணிகலன்களும் அளப்பரியன. சிலப்பதிகார ஆசிரியர் மாதவி பூண்ட அணிகலன்களைப்பற்றி அழகாக எடுத்துக் கூறுகின்றார். இதனால் தமிழ்நாட்டு அணிகலன்கள் தெளிவாகின்றன.

அக்காலத்திய யுத்தவீரர் ஈட்டிகள், உடைவாள்கள், கத்திகள் வேல்கள், அம்புகள் முதலியவற்றை உலோகங்களாற் செய்திருந்தனர். அக்காலத்தில் உலோகங்களாற் செய்யப்பட்ட ஆயுதங்கள், வீட்டுப்பொருள்கள், அணிகலன்கள் முதலியன தமிழ் நாட்டில் பல்கிக் கிடந்தனவென்பதில் ஐயமின்று.

அக்காலத்து மக்கள் இல்வாழ்க்கையைப் பெரிதும் விரும்பியிருந்தனர். இல்வாழ்க்கையில் வருவாய்க்கு ஏற்ப செலவையே தமிழ் மக்கள் செய்து வந்தனர். தமது செல்வத்தைத் தேடுவதற்கு அவர்கள் பல தொழிலையும் செய்து வந்தார்கள். இடங்களுக்கு ஏற்பப் பல தொழில்களையும் மக்கள் கையாண்டு வந்தனர். விவசாயம் மக்களால் கையாளப்பட்டது. விளைந்த தானியங்களைத் தாமும் உண்டு மிகுதியை அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். தமிழ் மக்களின் உணவு வகைகளையோ அல்லது உடை முறைகளையோ அன்றி வாழ்க்கையிற் கையாண்ட பண்பாகுபாடுகளையோ கூறின் விரியும்.

இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறங்களும் நிலைத்திருந்ததாகத் தெரிகின்றது. இல்லறத்தை மேற்கொண்டோர்கள் பலவகைத் தானதருமங்களையும் முறையின் வண்ணம் செய்து வந்தனர். இல்லறத்தில் நல்லறங்கள் செய்வதற்குக் கணவனும் மனைவியும், கண்ணிரண்டும் ஒருபொருளையே காணுதல்போல, மனமொத்து நடத்துவதே முறை என்பது சிலப்பதிகாரத்தால் விளங்குகிறது. கண்ணகி தன் கணவனைப் பிரி;ந்த பின்னர் இல்லறத்தின் நல்லறங்களை இயற்றும் பெருமையைத் தான் இழந்ததாக கூறுகின்றனள். இதனால் கணவனும் மனைவியும் ஒத்தே இல்லற தருமத்தை நடத்தவேண்டு மென்பது பண்டைய மக்கள் கொள்கையெனத் தெளிவாகின்றது.

இல்லற வாழ்க்கையில் கணவன் இறப்பின் அவர் வாழ்க்கைத் துணையான மாதும் உயிர்துறக்கும் வழக்கம் தமிழ் மக்களிடையே இருந்து வந்தது. பாண்டிய அரசன் உயிர் துறந்ததும் அன்னவன் மனைவியும் உடன் உயிர் துறந்தனள் என்று தலையாய கற்பின் தன்மையை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு காதலனுடன் உயிர்துறவாத மாதர்கள் கைம்மை நோன்பாகிய விரதங்களை அனுட்டிக்கவேண்டும். இவ்வழக்கு தமிழ் நாட்டில் இன்றும் இடையிடையே காணக்கூடியதாக இருக்கின்றது.

இல்வாழ்க்கையைத் துன்பமென்றறிந்த ஆண்களும் பெண்களும் துறவறத்தை மேற்கொண்டு வாழ்ந்தனர். பெண்கள் துறவறத்தை மேற்கொள்ளும் வழக்கம் அந்நாளில் இருந்தது. சிலப்பதிகாரத்தில் கவந்தி, மாதவி, மணிமேகலை இவர்களின் துறவு இதற்கு உதாரணமாகும். ஆக்கலும் அழித்தலும் துறவறத்தை மேற்கொண்டிருந்தாரிடம் விளங்கியதென நு}ல்கள் கூறும்.

ஒரு சமுதாயத்தின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது முயற்சி;. முயற்சி மூலம் தொழில், தொழில்களைச் செய்வதால் தமக்கும் மற்றையோருக்கும் உதவி செய்து கொள்ளுதல். இப்படியே பரஸ்பர உதவி ஒத்தாசைகளுடன் வாழ்ந்து வந்தனர். தமிழ் மக்கள் . தமிழர்கள் வாழ்க்கையில் கல்வி, முயற்சி, தொழில், வாணிபம், ஒற்றுமை, கடவுட் கொள்கை முதலியவை விசேட அம்ஸங்களாகும். அவர்களது நகர அமைப்புகளும் ஆட்சி முறைகளும் அவர்கள் வாழ்க்கையில் அத்தியாவசியமான வைகளாகும். அக்கால அரசர்கள் நடத்திய போர்த்திறன் இன்றைய தமிழன் உள்ளத்தில் இல்லை. அக்காலத் தமிழ் மக்களின் வீரம் மறைந்துவிட்டது. பெரும்பாலான தமிழ் மக்கள் உணர்ச்சி அற்றவர்களாக இருக்கிறார்கள். அன்று உலகின் உன்னத வணிகர்களாக கடல் கடந்து வர்த்தகம் செய்த மக்கள் இன்று அடிமைகளாக கடல் கடந்து வர்த்தகம் செய்த மக்கள் இன்று அடிமைகளாக வளாவிருக்கிறார்கள். அவர்கள் மொழி உருக் குன்றியும் குன்றலாமலும் இருக்கின்றது. மறுமலர்ச்சி இயக்கத்தினரும், பண்டைக் கொள்கையினரும் தம்முட் பொருதுகின்றனர். அடிமைத் தளையை அகற்ற ஆற்றலற்றவர்கள் தம்முட் பொருது பயன் உண்டா? என்ன? மக்கள் உன்னத வாழ்க்கையும் இன்றைய தமிழர் நிலையும் என்ன? மக்கள் உன்னத வாழ்க்கைக்கும், நாட்டின் சிறப்பிற்கும் அரசாட்சியே இன்றியமையாதது.

ஆட்சியும் பாதுகாப்பும்

நாட்டின் உன்னத நிலைக்கு அதனை வழிநடத்தும் அரசாட்சியே இன்றியமையாதது. இடையனற்ற ஆட்டு மந்தை எங்ஙனமுருக்கப்படும்? நாட்டிற்கு அரசன் தான் வழிகாட்டி. அவனே அந் நாட்டிற்குப் பாதுகாவலன். மக்களை ஆட்சி செய்து நீதி, ஒழுக்கம், ஒற்றுமை முதலியவற்றை நிலை நாட்டுபவனும் அவனே. நகரம் சிறந்த முறையில் அமைக்கப்படவேண்டும். அப்பொழுது தான் மக்கள் சிறப்புடன் வாழ முடியும். அரசன் தனது ஆட்சியை சிறப்பாக நடத்தச் சிறந்த நகர அமைப்பு இன்றியமையாதது.

மக்கள் அறிவு முதிரமுதிர ஆற்றோரங்களில் நகரங்களை அமைத்தனர். மரக்கலங்களின் போக்குவரத்து கருதியே முதலில் நகரங்கள் ஆற்றோரங்களில் அமைக்கப்பட்டன. பண்டை நாளில் வாணிபத்தில் புகழ்பெற்ற தமிழ் மக்கள் தமது செல்வங்களை அந்நிய நாடுகளில் இருந்து சேகரிப்பதற்காகவே இம்முறையைக் கையாண்டனர் என்பது தெளிவாகின்றது. ஆற்றின் கரைகளிலேயுள்ள பரந்த வெளிகளிலேயே நகரங்கள் நிருமாணிக்கப்பட்டன. நகரங்களின் வீதிகளின் அமைப்பு அந்நகரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவனவாகும். காற்று வசதிகள் நோக்கியே வீதிகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டன. வீதிகள் மருங்கிலே வானை அளாவும் மாடமாளிகைகள் விளங்கின. வீதிகளின் கரையோரங்களில் கால்வாய் அமைப்புகள் சிறந்த முறையில் இருந்தன. இக்கால்வாய்கள் மூலம் சாக்கடை நீரும், மறை காலத்தில் வெள்ளமும் கழிக்கப்;படும். பெரும்பாலும் கால்வாய்கள் மேற்பாகம் மூடப்பெற்றிருக்கும். பண்டைத்தமிழ்மக்களிடையே நிலவி வந்த கட்டிட நிர்மாண வேலைகளை ஒரு தனி அம்ஸமாகும். கட்டிட நிர்மாணம் ஒரு பரந்த சாஸ்திரமihகும். நகரம் கோட்டங்களாகவோ அன்றி பகுதிகளாகவோ பிரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட நகரங்களில் இருந்துதான் மன்னர் தம் பிரஜைகள்மீது ஆட்சி செலுத்தி வந்தனர். நாகரிகத்தில் மிகுத்துள்ள மேலை நாடுகளிலும் காணற்கரிய சுகாதார முறைகளை அக்காலத் தமிழ் மக்கள் அனுஷ்டித்தனர்;. ஒழுங்கு முறையும் கட்டுப்பாடுகளும் மக்களாகவே வகுத்துக் கொண்டவைகளாகும். பூம்பொழில்கள் ஒவ்வொரு நகரங்களிலும் பல இருந்தன. பண்டைத் தமிழ்நாட்டு நகரங்களின் அமைப்பே தனிச் சிறப்புப் பொருந்தியவைகளாகும். நீண்ட அழகிய தெருக்களும், உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன. நாடுகளில் சுகாதார முறைகளை அனுட்டித்து வந்தது மாத்திரமன்றி, நகரங்களின் பல பாகங்களிலும் காவற் கூடங்கள் இருந்தன என்பதும் அவற்றைக் கொண்டு நகரத்தைப் பாதுகாத்த முறைகளும் தெளிவாக நு}ல்களில் காணப்படுகி;ன்றன.

நாட்டிற்கு வேண்டிய கல்வி, தொழில், நலனோம்பல் முதலிய பொது விஷயங்களில் மக்களை வழிபடுத்தவும் பகைவர், கள்வர் முதலியோரிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இன்னும் இவைபோன்ற பிறவற்றைச் செய்வதற்கும் நல்ல அரசையே அக்கால மக்கள் அமைத்திருந்தனர். அன்றைய தமிழ் மக்கள் இவற்றை உணர்ந்து அதன்வழி நடந்திருத்தலினாலேயே தமிழ் நாகரிகமும் அரசியல் ஆதிக்கமும் உயர்ந்த நிலையில் இருந்தது எனலாம். குடிமக்களுக்காகவே அரசாட்சியென்பதை பண்டை மன்னர்கள் காட்டி நடந்துள்ளனர். இன்றைய உலகத்தில் இருப்பது போன்று அதிகார ஆட்சியின் சுரண்டலுக்காக குடிமக்கள் வாழவேண்டுமென்ற கொள்கை அவர்களிடையே நிலவவில்லை. ஆட்சியைச் செவ்வனே நடாத்துவதற்கு உதவியாக ஐம்பெருங்குழு எண்பேராயம் மிகவும் துணைபுரிந்துள்ளன. இவைகள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்களேயாகும். குடிமக்களின் சார்பான கருத்துக்களை இம்மன்றங்களிலுள்ளோர் அரசர்க்கு எடுத்துக்யுகூறுவர். அரசரும் அன்னாரின் அறிவுரைவழியே நடப்பர். நல்லமைச்சர், படைத்தலைவர், காவற்றலைவர். து}துவர், தற்றர் முதலியோரெல்லாம் இப்பாகுபாடுகளில் உள்ளோராகும். நீதிக்கு மாறான எக்காரியங்களையும் நிறைவேற விடாது தடுக்க மன்னன் முயற்சியெடுத்துக் கொள்வான். மன்னன் பிறழும் நேரத்தில் மதி மந்திரிகள் பக்கத்துணையாக நின்று உயர்வழி காட்டுவர்.

பழைய காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டுவந்த அரசர்கள் நீதியைக் கண்ணுங் கருத்துமாகப் போற்றினார்கள் என்பது சிலப்பதிகாரத்தில் இனிது விளங்குகின்றது. அரசர்கள் குடிகளின் நலத்தையே நலம்போற் பேணி வந்தனர்.

சோழ நாட்டு மன்னரின் நீதியான ஆட்சியை சிலப்பதிகார ஆசிரியர் கண்ணகி வாயலாகக் கூறுகின்றார்.

“வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட
தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர் புகார் என்பதியே”

சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் மனுநீதி கண்ட சோழனைப்பற்றிக் கூறுமிடத்து,

“ஒருமைந்தன் தன் குலத்துக்குள்ளான் என்பதும் உணரான்
தரமந்தன் வழிசசெல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் தேராழி உற ஊர்ந்தான மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளிதோ தான்”

என்று தெரிவிக்கின்றார். இன்னும் சிபிச் சக்கரவர்த்தியின் நீதியை சிலப்பதிகார ஆசிரியர், பின்வருமாறு கூறுகின்றார்.

“குருநடைப் புறவின் நெடுந்துயர் தீர
வெரிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்து உடம்பிட்டோன் அறந்தரு கோனும்
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ”

பாண்டி நாட்டை ஆண்டுவந்த மன்னர்கள் நீதியின் பொருட்டு அரிய செயல்கள் பல புரிந்துள்ளனர். பொற்கைப் பாண்டியன் சரிதையை மதுரைமா தெய்வம் கண்ணகிக்கு கூறுவதாக ஆசிரியர் வர்ணிக்குமிடத்தில்,

“நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத்தடக்கை அமரர் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளிவனை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக் குடிப்பிறந் தோர்க்கு இழுக்கம் இன்மை”

என்று பாண்டியன் செங்கோண்மையைப் பாராட்டுகின்றார். தட்டானின் சொல்லைக்கேட்டு கோவலனை ‘கள்வன்’ எனக் கொலை செய்த பாண்டியன் கண்ணகியால் உண்மை அறிந்தான். தன் நீதி பிழைத்தது என மயங்கிச் சிங்காசனத்திருந்து வீழ்ந்து மாண்டான். அதனைச் சிலப்பதிகார ஆசிரியர்.

“மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் - வையைக்கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகை தன் சொற்செவியின்
உண்டளவே தோற்றான் உயிர்”

என்று அழகிய வெண்பாவாற் கூறுகின்றார். நீதி தோற்ற பாண்டியன் நீதிக்காக உயிர் கொடுத்தான் எனக் கேள்வியுற்ற சேரமன்னன் பாண்டியனின் நீதியைப் புகழ்ந்துரைத்தான். சிலப்பதிகார ஆசிரியர் அதனைச் சேர மன்னன் வாயிலாகக் கூறுகின்;றார்.

“எம்மோரென்ன வேந்தர்க்கு இற்றெனச்
செம்மையின் இகழ்ந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்ப்பதிப் பெயர்ந்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது”

இறுதியில் சேரன் செங்குட்டுவனுக்கு கண்ணகித் தெய்வம் காட்சி கொடுத்தபொழுது,

“தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன் கோயில்
நல்விருந்தாயினன், நானவன் தன்மகன்”

என்று கூறியருளியதால் பாண்டியன் நீதி தவறிய மன்னன் அல்லன் என்பது தெளிவாகின்றது.

சேரமன்னர்களும் நீதி வழுவாது ஒழுக்க நெறியுடன் மக்களை ஆட்சி செய்து வந்தனர். பண்டை நு}ல்கள் இவர்கள் ஆட்சி முறையினை உலகிற்கு எடுத்துக் காட்டா நிற்கின்றன.

அக்கால அரசர் எக்கருமத்தைச் செய்யினும் அறிவால் மிக்க அமைச்சர்களையும் மற்றும் அறிவாளர்களையும் கலந்தே செய்வர். பண்டைய அரச சபைகளில் காலக் கணிதர்களும், து}துவரும், சேனைத்தலைவர்களும், ஒற்றர்களும் இருப்பார்கள் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இன்றைய உலகில் இருப்பது போன்று பண்டைத் தமிழ் உலகில் இருப்பது போன்மறு பண்டைத் தமிழ் உலகில் ஒற்றர்படை ஒவ்வொரு நாட்டினரிடமும் இருந்தது என்பது நு}ல்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது. சிந்தாமணிச் செய்யுளொன்று பழைய அரசர்கள் எவ்விதம் ஒற்றர்கள் மூலம் விஷயங்களைக் கிரகித்தார்கள் எனக் காட்டுகின்றது.

“ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலும்
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூதரோ
கொற்றம் கொள்குறிக் கொற்றவர்க் கென்பவே”

சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள மூன்று கொள்கைகளிலும்; முதன்மையாக அரச நீதியையே எடுத்துக் கூறுகின்றார் ஆசிரியர். அரசியலில் இருந்து வழுவும் மன்னர்களை அறக்கடவுள் தண்டிப்பாரென்று கூறப்படுகிறது. சோழ நாட்டில் பாவைமன்றமென ஒன்று இருந்ததாகவும் அந்நாட்டு மன்னர் நீதி தவறி நடந்தால் அல்லது மக்கள் நீதி தவறினால் உடனே அப்பாவை மன்றத்திலுள்ள பாவையின் இரு கண்களாலும் கண்ணீர் வடியும் எனக் கூறுப்படுகிறது. இதனை,

“அரசகோல் கோடினும் அறங்கூற வையத்து
உரைநு}ல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நலிலாது நவைநீர் உகுத்து
பாவை நின்றழும் பாவை மன்றமும்”

என சிலப்பதிகார ஆசிரியர் எடுத்துக் கூறுகின்றார். பண்டைத் தமிழகத்தில் நீதியொழுக்கம் தலை சிறந்து இருந்ததென்பது வெள்ளிடை மலையாகக் காணக்கிடக்கின்றது.

நாட்டை வளம்படுத்தி, மக்கள் நிலையையுயர்த்தி, கல்வி தொழில் முதலியவற்றில் மக்களை ஊக்கமும் உணர்ச்சியும் கொள்ளச் செய்தலே மன்னனின் முக்கிய கடமையாகும்.

“மன்னுயிர்த்தே மலர்தலையுகம்”

என்னும் கூற்றுப்படி நாட்டிற்கு மன்னன் முக்கியமானவனாகின்றான். அக்கால மன்னர்கள் தமிழ்ச் சங்கங்களை அமைத்து கல்வியை ஆதரித்து வந்தனர். மன்னர் அவைகளில் புலவ சிகாமணிகள் நிறைந்திருந்தனர். அரிய பெரிய நு}ல்கள் பல அக்காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்டன. அக்காலத் தமிழ் மக்கள் அறிஞர்களையும் புலவர்களையும் ஆதரித்ததினாலேயே அரிய நு}ல்கள் பல்கிப் பெருகின. மக்களுக்காக அநேக பூங்காக்கள் ஆங்காங்கு அமைக்கப்பெற்றிருந்தன. மாலை நேரங்களை உல்லாசமாக மக்கள் கழிக்க களியாட்ட சாலைகள் இடையிடையே இலங்கின.

மக்களைப்போர் என்னும் அரக்கனிடமிருந்து காப்பாற்ற அன்றைய மக்கள் கையாண்ட முறைகள் விசித்திரமானவைகளாகும். அந்நிய நாட்டவரின் படையெழுச்சிகளிலிருந்தும், பகையரசர்களின் கலகங்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க அரசர்கள் பெரிதும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். அக்காலத்தில் நடந்த போருக்குரிய காரணங்கள் மிகமிக விசித்திரமானவைகளாக இருக்கும். இன்றைய காலத்தைப் போன்று வர்த்தக நோக்குக் கருதி யுத்தம் செய்யவோ அன்றி ஒருநாட்டை இன்னொரு நாட்டுடன் து}ண்டி விடவோ மக்கள் முயற்சிக்கவில்லை.

அக்கால அரசர்கள் நல்ல வீரர்களாகவும் யூகசாலிகளாகவும் இருந்தார்கள். போர்க்கலைகளை உரிய முறைப்படி பயின்றிருந்தனர். தமது குடிமக்களைப் பகைவர் அடக்கு முறைகளில் இருந்து காப்பாற்றுவதற்கு அன்னார் பல வழிவகைகளைக் கையாண்டனர். அவர்கள் கையாண்ட போர்க் கருவிகள் மிகப்பல. நகரத்தின் வெளிப்புறம் இருந்து கோட்டையி;ன உள்ளிடம் வரையில் பலத்த காவல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இயற்கையே பலவிடங்களில் தக்க அரண்களாக உதவின. செயற்கைக் கோட்டைகள் ஒவ்வொரு நாட்டிலும் பல இருக்கும். கோட்டைகளின் அமைப்புகள் பகைவரைத் திண்டாட வைக்குந் தன்மையனவாக விளங்கின. கோட்டைச் சுவர்களின் உச்சியில் பலவகை எந்திரப்பொறிகளும் வைக்கப்பட்டிருக்கும். சிலப்பதிகாரம் புறநானு}று போன்ற நு}ல்களில்; அக்கால ஆயுதங்கள் பற்றியும் கோட்டை அரண்கள் பற்றியும் காணலாகும். போர்முறைகளுக்காக இங்ஙனம் வசதிகள் செய்யப்பட்ட போதிலும் அறத்தினின்றும் அரசர்கள் வழுவமாட்டார்கள்.

“அறநெறி முதற்றே அரசன் கொற்றம்”

என்பது இதனை விளக்கம். பகை நேரினும் அப்பகையை நட்பாக்க முயல்வதேயன்றி அதனைப் பகைமையாக சாதிக்கமாட்டார்கள். பகையரசர்களைத் தோழர்களாகச் செய்து கொள்ளவே பெரிதும் முயல்வார்கள். அப்படிப் போர் நிகழினும் அறநெறி பிசகமாட்டார்கள். தமிழனுக்குக் கருணை யெண்ணமானது அவர்கள் தாயிடம் பால் ஊட்டும் பொழுதே உட்புகுந்த அரிய குணமாகும். தமிழன் உள்ளத்தில் கருணை வெள்ளமே ஊற்றெடுக்கும்.

போருக்குரிய காரணங்கள் பலவாக இருக்கும். அக்காலத்தில் ஒரு அரசன் பிறிதொரு அரசனின் மகளைக் கேட்டவிடத்து அவன் கொடுக்க மறுப்பின் இத்தகைய போர்கள் நடப்பது சகஜம். இங்ஙனம் பெண் மறுத்துக் கூறுதலை “மகண் மறுத்து மொழிதல்” என்று இலக்கியங்கள் கூறும். பாலை நிலத்து மறக்குடித் தலைவர்கள் பெரும்பாலும் முல்லை நிலத்து நிரைகளைக் கவர்ந்து வந்து கள்ளுக்கு விலையாகக் கொடுப்பர். ஒரு அரசன் வேற்று அரசனுடன் போர்புரிய முற்படின் முதலில் நிமித்;தம் பார்த்து தெய்வம் வணங்கியே செல்வான். எதிரி அரசனின் ஆநிரைகளையே அரசன் படைகள் முதலில் வரும். சில சமயம் கவரப்பட்ட ஆநிரைகளைச் சொந்த அரசன் மீட்டுச் செல்வதுமுண்டு. மக்கள் மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்த காலத்தில் இப்படிப் போர்முறை நடந்திருக்கலாம். அக்காலத்தில் வெட்சிப் பூச்சூடல், கரந்தைப் பூவணிதல், வாகைசூடல் முதலியன போர்க்குரிய சின்னங்களாகும்.; சில சின்னங்கள் போருக்கு ஆயத்தம் என்பதைக் குறிக்கும். சில போரைக் குறிக்கும். இன்னும் சில வெற்றியைக் குறிக்கும். இத்தகைய போர்களில் சிறந்த தொண்டாற்றும் வீரர்களுக்கு ஏனாதி, காவிதி போன்ற பட்டங்கள் வழங்கப்படுவதுடன் பரிசுகளும் அளிக்கப்படும். இவற்றைப் பெரும்பாணாற்றுப்;படை, சிலப்பதிகாரம் முதலியவற்றில் காணலாகும்.

இப்படி நடக்கும் யுத்தங்களில் தீரங்காட்டி உயிர்விடும் வீரர்களுக்கு வீரக்கல் நாட்டுதல் மரபு. இம்முறை இன்னும் இருந்து வருகிறது. இதனை ‘வீரக்கல் நாட்டல்’ என்று கூறுவர்.

“பட்டார் பெயரும் ஆற்றலுமெழுதி
நட்ட கல்ல மூது}ர் நத்தமும்”
சேரமான் பெருமான்
என்று கூறிப் போந்தனர். இன்னும் சிலப்பதிகாரத்திலும் கல்நாட்டும் வழக்கம் பற்றிப் பரக்கக்காணலாகும்.

தமிழர்கள் கடற் சண்டைகளிலும் சிறந்து விளங்கினர். அந்நிய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றியும் கொண்டனர். வர்த்தக காலங்களில் மரக்கலங்களைக் கொள்ளையடிக்க வரும் கடற் கொள்ளைக்காரருடன் எதிர்த்துத் தங்களைப் பாதுகாப்பதற்கு தனவணிகர் பாரிய கடற்படைகளை வைத்திருந்தனர். இவைபற்றி புறநானு}று, மணிமேகலை முதலியவற்றில் காணலாகும். தமிழ்நாட்டு மன்னர்கள் கடற்போர் புரிந்தனர் என்பதற்குப் பல ஆதாரங்களுண்டு.

ஒரு அரசன் பிறிதொரு அரசனுக்கிருக்கும் பெருமையையும் புகழையும் கண்டு பொறாமை மேலீட்டால் யுத்தம் செய்தலும் உண்டு. மண்ணாசை கொண்டும் மன்னர்கள் யுத்தம் செய்வார்கள். திறை கொடுக்க மறுக்கும் சிற்றரசர்களுக்கும் மன்னர்களுக்கும் யுத்தம் நடப்பதும் வழக்கம். இப்படிப்பட்ட ஆபத்துக் காலங்களிலும் அரசினை தளம்பாது பாதுகாத்தலே மன்னன் கடமை.

அரசினை நடத்துவதற்குப் பணம் வேண்டும்;. அப்பணம் முழுவதும் வரிமூலம் மக்களிடமிருந்தே பெற்று நகரங்களை நன்முறையில் மன்னர்கள் ஆண்டு வந்தனர். அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கும், தமிழ் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கும் சங்க வரிகள் விதிக்கப்பட்டன. சிற்றரசர்கள் திறைப்பணங்கள் கொடுப்பார்கள். குடிமக்கள் தாம் நாட்டில் இருந்து அடையும் ஊதியத்தில் இருந்து தமது வரிப் பணங்களைச் செலுத்துவார்கள். இவ்விதம் வரும் வருமானமே நாட்டிற்கு உதவியது. பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகழாம் முதலிய நு}ல்களில் இவை காணப்படுகின்றன. அரசன் நல்ல ஆட்சியைச் செலுத்துவதற்கு சான்றோர் உறுதணையாக இருப்பர். இச்சான்றோர் அரசர்க்கு வேண்டும் போதெல்லாம் அறிவுறுத்தி தேசத்தை நன்னிலையில் விளங்க வைப்பார்கள்.

பண்டைக்காலத் தமிழ் மக்கள் நல்லாட்சியில் நலம்பெற வாழ்ந்தனர். இன்றைய உலகில் கொடுங்கோனாட்சியோ அன்றி அதர்ம அடக்க முறைகளோ அல்லது சுதந்திரப் பறிப்போ அக்காலத்தில் இல்லை. மக்களுக்காகவே அரசு இருந்தது. அன்றைய தமிழ் மக்கள் உலகிற்கு வழிகாட்டிகளாக விளங்கினர். அன்னார் செல்வம் வாணிபத்தில் மிகவுந் தங்கியிருந்தது. நாட்டிற்கு நலனைக் கொடுப்பது வாணிபமே. இன்றைய உலகிலும் ஒவ்வொரு நாட்டையும் செல்வத்தில் திகழச் செய்வது வாணிபம் என்பதை மறுக்க முடியாது.

செல்வ நிலையும் வாணிகமும்

இன்றைய உலகில் ஆதிக்க நாடுகள் தம்முட் பொருதுவதன் காரணத்தை ஆராய்கின் வாணிகத்தின் சிறப்பு தெற்றென விளங்கும். பண்டைத் தமிழ் மக்களுக்கு இப்பெருமை தெரிந்தே இருந்தது. அக்காலத் தமிழ் மக்கள் வணிகத்துறையில் மிக முன்னேற்றமடைந்திருந்தனர். நாட்டிற்கு மக்கள் செய்யும் உதவியில் வணிகர் செய்யும் உதவி முக்கியமானதாகும். நாட்டில் ஒரு இடத்தில் உண்டாகும் விளை பொருள்களை அப்பொருள் விளையாத மற்றோரிடத்திற்கு அனுப்பி, அங்குள்ள மக்களுக்கு அப்பபொருள்களை உதவி நாடு முழுமையும் வளமுண்டாக்கும் செயல் அவர்களைச் சார்ந்ததாகும். வணிகரைத் “தாழ்விலாச் செல்வர்” என்று திருவள்ளுவர் குறிக்கின்றார். சிறந்த நகரங்களில் இவர்கள் அரசர்களுக்கு அடுத்தபடியாக செல்வத்தில் சிறந்து விளங்கினார்கள். ஆரம்பத்தில் உலக மக்களுக்கு உதவியாகவே வாணிகம் நடைபெற்று வந்தது. பொருள் ஈட்டும் எண்ணம் அப்பொழுது அவர்களுக்கு உண்டாகவில்லை. நாடு முழுவதும் மக்கள் நலனுடன் வாழ வேண்டிய பண்டமாற்று முறையையே அக்கால வணிகர் பின்பற்றினர். வணிகர்களின் உண்மை உள்ளங்களையும் அவர்கள் நேர்மையையும் பட்டினப்பாலை யென்னும் நு}ல் அழகாக எடுத்துக் கூறுகிறது.

தரை வழியாகவும் கடல் வழியாகவும் அயல் நாடுகளோடு வாணிகம் செய்து வந்தனர் என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் காணும் உதாரணம் பலவாகும்.

“கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வா”

வாழ்ந்து வந்தார்கள் எனக் கூறப்படுவதால் கடல் மூலம் வாணிகம் பண்டு நடைபெற்றதென்பது வெள்ளிடை மலையாகின்றது.

வாணிகத்தில் சிறந்த மார்க்கமான கடல் வாணிகத்திலும் தமிழ் மக்கள் சிறந்து விளங்கினர். மேல் நாட்டினர் பலரும் இவர்களுடன் வியாபாரத் தொடர்புடையோராக இருந்திருக்கின்றனர். தமிழர் கடற் பிரயாணத்தில் நன்கு பயின்றிருந்தார்கள் என்பதற்கு அநேக உதாரணங்கள் இருக்கின்றன.

இந்து சமுத்;திரத்தில் தமிழர்களது மரக்கலங்களே பெரும்பாhலும் ஓடிக்கொண்டிருந்தன. நமது நாட்டிலேயே கடற்கரை நகரங்கள் வாணிப நோக்கமாகவே அமைக்கப்பட்டிருந்தன. ஈழம், காழகம், கடாரம், சீனம், அரபு, ஜவனம், எகிப்து முதலிய நாடுகளுடன் எம் முன்னோர் வாணிபத்தொடர்பு மாத்திரமன்றி கலைத்தொடர்புங் கொண்டிருந்தனர். இவ்வரலாறுகள் பழந்தமிழ் நு}ல்களில் மலிந்து கிடக்கின்றன. கநற்தொகை நு}ல்களில் தமிழ்நாட்டு குறிஞ்சி நிலங்கள் பற்றிக் கூறுமிடத்து ஆங்கு வைடூரியங்கள் அகப்படுவதாகக் குறிக்கப்பட்டுள்ளன. அத்தகைய வைடூரியங்கள் இங்கிருந்து மொஸப்பாத்தேமியா போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சான்றுகள் இன்றும் உள்ளன.

வாணிகத்தின் பொருட்டு பலநாட்டு மக்களும் தமிழ் நாட்டில் குடியேறி வாழ்ந்து வந்தார்கள். இதனை இளங்கோவடிகள்,

“கலந்தரு திருவில் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீ வரைப்பும்”

என்று கூறிப் போந்தார். இவ்வாறு வாழ்;ந்த அந்நியநாட்டு மக்கள் மரக்கலங்களுக்கு உதவியாக துறைமுகங்கள் தோறும் கலங்கரை விளக்கங்கள் அமைத்தனர். அவ்வத் துறைகளில் சேமித்து வைக்கப்பட்ட சரக்கு வகைகளைப் பகுத்து உணர்த்துவதற்குச் சிறுகொடிகள் ஆங்காங்கு நாட்டப்பெற்றிருந்தன எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பட்டினப்பாலை யென்னும் நு}லில் தமிழ் நாட்டில் இருந்த வாணிபப் பொருள்கள் பற்றிப் பரக்கக் காணப்படுகின்றன. ஓரிடத்தில்

“நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலில் வந்த கருங் கரி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத் து}க்கமும்”

எனக் கூறப்படுதலைக் காண்க.

கிறீஸ்துவிற்கு முன்னர் பல நு}ற்றாண்டுகளாக மேற்கு ஆசியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் கப்பல் மூலம் வியாபாரம் நடந்ததற்குப் பல சான்றுகள் உள்ளன. கி. மு. 4000 ஆண்டு வரையில் அமைக்கப்பட்ட சாலடியாரின் நகரமாகிய ஊர் என்னுமிடத்தின் அழிபாடுகளில், மலையாளக் கரைகளில் மாத்திரம் காணப்படும் தேக்கமரத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. தமிழர்கள் அதற்கும் பல நு}ற்றாண்டுகள் முன்னதாகவே வியாபாரத் துறையில் நன்கு பயின்றிருந்தார்கள் என்பது இதனால் விளங்கும்.

ஆடை வகைகளும் அவற்றிற்குரிய பலவகைச் சாதனங்களும் இந்நாட்டில் இருந்து பிறநாடுகட்குச் சென்றிருக்கின்றன. ஐரோப்பியாவிற்கு மஸ்லின் போன்ற பட்டு உடைவகைகள் ஊராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனவென்று நு}ல்கள் குறிக்கின்றன. கிரேக்க நாட்டினரும் உரோம மக்களும் தமிழ்நாட்டு உடைகளையும் அணிகலன்களையும் அதிக விலை கொடுத்து வாங்கியதாகப் பல நு}ல்களிலும் கூறப்படுகிறது. அந்நிய நாட்டு நாணய வகைகள் புதைபொருள் ஆராய்ச்சியாளரால் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கி. மு. 1700இல் எகிப்து சென்ற ஜோசேப்பின் வரலாறு அக்கால எகிப்து, சீரியா முதலிய நாடுகளுடன் இந்தியாவின் வியாபாரத் தொடர்புகளைக் குறிக்கின்றது.

கி. மு. 17ம் நு}ற்றாண்டில் இந்தியாவிற்கும் மேற்கேயுள்ள நாடுகளிற்கும் வியாபாரத்தொடர்பு இருந்ததென்பதை எகிப்திய சித்திர எழுத்து நு}ல்களில் காணக் கிடக்கின்றது. கி. மு. 1462இல் முடிவெய்திய எகிப்திய 18ம் பரம்பரையிலுள்ள அரசரின் பிணங்கள் இந்திய மஸ்லின் துணிகளாற் சுற்றப்பட்டிருந்தன. ‘ஓபிர்’ என்பது தென்னிந்தியாவின் ‘உவரி;’ என்னும் துறைமுகம் எனக் கருதப்படுகிறது. கி. மு. 1000 ஆண்டளவில் சாலமன் என்னும் யூத அரசன் சந்தனக்கட்டைகள், குரங்குகள். மயில்கள் முதலியவற்றை ஒபிரினின்றும் பெற்றான். மேல் நாட்டிற்குச் சென்ற தமிழ் நாட்டுப் பொருள்கள் தங்களுடன் தங்களுக்குரிய தமிழ்ப் பெயரையுங் கொண்டு சென்றன. இந்தியாவினின்றும் பொன், பட்டு, முத்து வாசனைத் திரவயங்கள் ஆகிய பண்டங்கள் கிரேக்க நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டன. ஹோமர் என்னும் கிரேக்க கிவ இந்தியாவிலிருந்து கிடைக்கும் பொருள்களைப் பற்றிக் கூறியுள்ளார். முற்காலத்தில் தங்கம் இங்கிருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதியாகியதற்குப் போதிய சான்றுகள் உண்டு.

மயிற்றோகை, அரிசி, தந்தம் முதலியனவும் பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. தமிழ் மக்கள் கடல் வாணிபத் துறையில் சிறந்திருந்தார்கள் என்பது தொல்காப்பிய நு}லில் காணப்படும் சூத்திரங்களால் அறியலாகும். மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியவற்றிலும் பார்க்கக் காணலாகும்.

தமிழகத்திலே கப்பல்களைச் செய்வதற்கென ஒரு சாரார் இருந்துள்ளனரென்று நு}ல்கள் தெரிவிக்கின்றன. கப்பலைக் குறிக்கும் பல பெயர்கள் தமிழ் நு}ல்களில் காணப்படுகின்றன. கடலைக் குறிக்கும் பல பதங்களும் காணப்படுகின்றன. புணை, பரிசல், கட்டு மரம், தோணி. திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலியன கடலில் உபயோகப்படுத்தப்பட்ட பல வகைக் கப்பல்களையும் குறிப்பனவாகும்.

தொண்டி, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் என்னும் துறைமுக நகரங்களின் சரித்திரங்கள் விரிவாகக் கிடைத்துள்ளன. அவற்றில் பிறநாட்டு வாணிபத்தைப் பற்றிக் காணப்படுகின்றன. கி. மு. 8ம் நு}ற்றாண்டில் நடந்த வியாபாரத்தைப் பற்றிய ஆதாரங்கள் தெளிவாகக் கிடைத்துள்ளன. பாபிலோனியாவில் தைகிரஸ், யூபிரதஸ் நதிகள் சந்திக்குமிடத்திற்குச் சமீபத்தில் தமிழர்கள் குடியேறியிருந்தார்கள். ஆங்கு கிருட்டின பலதேவ வழிபாடுகள் இருந்தனவென்றும் அறியப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் செய்த கௌடலியர் வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது தமிழ் நாடேயென்ற கூறியுள்ளார். கி. மு. 20ம் ஆண்டில் பாண்டிய அரசனொருவன் அகஸ்தஸ்சீஸர் என்ற உரோம சக்கரவர்த்திக்குத் து}து அனுப்பினான். கிரேக்க போர் வீரர்கள் பாண்டியரின் கோட்டை வாயில்களைக் காவல் புரிந்தனர். இவ்வாறு அநேக வரலாறுகள் நு}ல்களில் காணப்படுகின்றன.

கிறிஸ்துவிற்குப் பல நு}ற்றாண்டுகட்கு முன்னர் இந்திய வியாபாரிகள் பர்மா வழியாகவும் அதன் தென்கரை வழியாகவும் சென்று காம்போதியா நாட்டில் வியாபாரத் தொடர்பை ஏற்படுத்தினர். கடல் தரை என்னும் இரு வழிகளாலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போக்குவரவு இருந்தது. கிறீஸ்து பிறப்பதற்கு முன்பும் தமிழர் பலதீவுகளுடனும் வியாபாரத் தொடர்பு உடையோராக இருந்துள்ளனர். பாலியென்னுந் தீவில் தமிழர் நாகரிகச் சின்னங்கள் காணப்படுகின்றன. ஜாவா, சுமத்திரா முதலிய தீவுப் பகுதிகளில் தமிழர்களது சமய நிலையங்கள் போன்றவை இன்றும் சிறப்புடன் விளங்குவதைக் காணலாம். இந்தோசீனம் போன்ற இடங்களில் தமிழர்களது சிற்ப வேலைகள் மிளிரும் கட்டிடங்கள் காணப்படுகின்றன.

உள்நாட்டு வாணிபமே ஆரம்பத்தில் நடந்து வந்துள்ளது. மக்கள் தம் வியாபாரப் பொருள்களை எருதுகளிலும் கழுதைகளிலும் ஏற்றிச் சென்று அப் பொருள்களை வேண்டுவோருக்குக் கொடுத்து அன்னாரிடமிருந்து தமக்கத் தேவையான பொருள்களைப் பெறுவர். பெரும்பாணாற்றில் இதுபற்றிக் காணலாகும். பழைய தமிழ் மக்கள் வாணிபத்திற்கு வேண்டிய சகல குணநலன்களும் அமையப்பெற்று விளங்கினர். தமிழ் நாட்டின் கடை வீதிகளின் சிறப்பே தனிச் சிறப்பாகும். பண்டைக் காவியங்களும் பிற நு}ல்களும் அச்சிறப்புக்களை நவில்கின்றன.

தமிழ் நாட்டு வாணிகர்கள் தமது வர்க்கத்துடனேயே தமது காலம் முழுவதையும் கழிக்கவில்லை. பொது மக்கள் சேவையையும் தமது நோக்காகக் கொண்டிருந்தனர். இவர்கள் தமது அரசர்களுக்கு பல வகைகளிலும் உதவி புரிந்துள்ளனர். முற்கால வாணிகர் சிறந்த அறிஞர்களாகவும் விளங்கினர். அன்னாரிடையே விளங்கிய மொழி தமிழாகும். அத் தனிமொழியின் சிறப்பை அவர்கள் உணர்ந்திருந்தனர். மொழிப் பெருமையே அவர்க்குப் போதியதாகும்.

முத்தமிழ்ப் பெருமை

தமிழ் மக்கள் வழங்கிவந்த மொழியை தமிழ் மொழியென்றே அழைப்பர். இம்மொழி இனிமையானது என்று எல்லோரும் கூறுவர். ‘இன் தமிழ்’, ‘தீந்தமிழ்’, ‘தேமதுரத்தமிழ்’ என்று பலரும் பலவாறு கூறுவர். பலவறிஞர்களும் தேர்ந்தெடுத்து எழுதிய மொழி இத்தகைய தித்திப்புத்தன்மை கொண்டது. பல மொழிகளையும் கற்றுணர்ந்த வரகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழ் மொழிபற்றிப்பாடியுள்ள பாட்டைப் பாருங்கள்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்
பாமரராய். விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திருத்தல் நன்றோ சொல்வீர்?
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”

மேற்போந்த பாரதியாரின் பாட்டில் இரு இடங்களில் தமிழ் மொழியின் இனிமைபற்றிக் கூறப்பட்டுள்ளது. இவற்றினால் தமிழின் இனிமை புலப்படும்.

அறிஞர் கூடி ஆராய்தலே மொழிக்கு அழகாகும். தமிழ் மொழிக்கு சங்கமிருந்தது போன்று வேறு எம்மொழிக்கும் சங்கம் இருந்ததுமில்லை. இதனாலேயே தமிழ் மொழியை ‘சங்கத்தமிழ்’ எனச் சிறப்பாக அழைப்பர். அக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட நு}ல்களைச் சங்க நு}ல்கள் என்பர். தமிழ் மொழி தெய்வத் தன்மை வாய்ந்ததென்பதற்குப் பல சான்றுகள் உண்டு. திருஞான சம்பந்தர் கூற்று இதற்குதாரணமாகும்.

தமிழ் மக்களது செந்தமிழ் உலகிற்கு எத்துணைப் பயன்தரவல்லது என்பதுபற்றி திருவாளர் பா. வே. மாணிக்கநாயக்கரவர்கள் தம் நுண்ணிய ஆராய்ச்சியால் காட்டியுள்ளார். அக்காலத்தில் எம் தமிழ் மொழி முப்பிரிவாக்கப்பட்டிருந்தது. அதனை முத்தமிழ் எனச் சிறப்பாக அழைத்து வந்தனர். இயற்பகுதியே இலக்கிய மென ஏனைய மொழிகளுள் வளங்கவும் இசைக்கொரு பிரிவும், கூத்திற்குப் பிறிதொரு பகுதியுஞ் சேர்த்து மூன்றாக நமது மொழி வழங்கிய பான்மை உள்ளம் ,மொழி, உடல் என்னும் இம் மூன்றையும் நன்கு காட்டும் மூன்று கண்ணாடி போன்று முத்தமிழ் நிலவியதென்பதை உறுதிப்படுத்துகின்றது.
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றும் சேர்ந்து முத்தமிழ் எனப்படும். பொதுவாக மக்கள் பேசுவதும் எழுதுவதும் இயற்றமிழ். அதனை இசையுடன் அதற்கேற்ற ஒலியுடன் பாடும்போது அதனை இசைத்தமிழ் என்பர். இயல் இசை என்னும் இவ்விரண்டுடனும் நடிப்புச்சேருமானால் அந் நடிப்பிற்கேற்ற மொழிகளோடு கூடிய தமிழ் நாடகத் தமிழ் எனப்படும். இயல்பாக மக்கள் பேசிக்கொள்ளும் பேச்சுகளைவிட இசையோடு பாடுவதற்கு ஏற்ற மொழிகளும், குறிப்புடன் நடிப்பதற்கு ஏற்ற தொடர்களும் எல்லா மக்களுக்கும் அளவுகடந்த இன்பத்தைக் கொடுக்கும். இன்பத் தமிழ் மொழியில்தான் இத்தகைய முப்பாகுபாடு உண்டேயன்றி வேறு எம்மொழிக்கும் இச் சிறப்பு இன்று.

இயல்பாக மக்கள் தம்முள் ஒரு பொருளை இன்னொருவருக்கு விளங்க வைக்கும் பொழுது சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் நடத்தும் சாதாரண இயல்பான தமிழ் நடையை இயற்றமிழ் என்பர். இயல்பாக செய்யுளிலும் அவ்விதம் கூறலாம். பொதுவாக இலக்கண வரம்பிற்குட்படப் பேசுவதையும் எழுதுவதையும் இத்தமிழ்ப் பாகுபாட்டினுள் சேர்த்துக்கொள்ளலாம். இயல்பாக உண்டாகும் இத் தமிழ் சர்வ சாதாரணமானது. இத் தமிழை சிறிது இசையுடன் படிக்கப் புகுங்கால் அது இசைத் தமிழ் என்னும் பெயரைப் பெறுகின்றது. இயற்றமிழை வளர்த்தற்காக சங்கங்களில் இயற்றமிழ்ப் பிரிவு ஒன்று இருந்துள்ளது.

இயற்றமிழை அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். திருக்குறளில் இல்லறம், துறவறம் என்று அறத்தை இரண்டு பகுதிகளாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. அரச நீதி, சட்டசபை, நீதிமன்றக் கொள்கைகள், பொருளாதாரம், சாஸ்திரம் என்ற இக்கால தேசப் படிப்புக்களைக் கொண்ட அடிப்படையான கருத்துக்கள் திருக்குறட் ‘பொருட்பாலில்’ அடங்கியுள்ளன. அரசத்தன்மை, அமைச்சன் தன்மை, பகைவரை எதிர்த்தல், அரசர்க்கு வேண்டிய பொருள்கள் என்பன பற்றி ‘அரசியலில்’ தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ‘இன்பப்பால்’ மனத்திற்கு இதந் தருகின்ற நு}லைப்பற்றிக் கூறுகின்றது. ‘வீட்டு நு}ல்கள்’ மேலுலக இன்பத்தைப்பற்றிக் கூறுகின்றன. இயற்றமிழின் பெருமை அளப்பரியது.

இசை மிகவும் இனிமையானது. இசைத் தமிழிற்கெனத் தனி இலக்கண வரம்புகூட அமைக்கப்பட்டுள்ளது. இசையென்பது பாடல்;. பாலராக இருக்கும் பருவத்தில் ஊசல் வரிகளைக் கேட்டானந்திக்கின்றோம். பாலியர் பருவத்தில் கந்து, கவரி முதலான பாட்டினங்களைக் கேட்டானந்திக்கிறோம். பெரியவர்களாகி மணவினைப்பொழுது மங்கலப் பாக்களைக் கேட்டுச் சந்தோஷமடைகின்றோம். இவ்விதம் ஒவ்வொரு தகுதியையும் நிலையையும் அடையும் பொழுதும் இசையையே கேட்டானந்திக்கிறோம். இசைத் தமிழ் பரந்த சமுத்திரம் போன்ற எங்ஙணும் அகன்ற பரந்துள்ளது.

இயற்றமிழிலும் பார்க்க இசைத்தமிழை மேன்மையாகக் கொண்டாடுவர். பண்டைய நு}லகள் பலவற்றிலும் இசைத்தமிழின் சிறப்பைக் கண்டு நுகரலாம். பண்டைக் காலத்தில் இசைக் கருவிகள் பல்கிக் கிடந்தன. இசைக் கருவிகளையே முத்திறப்படுத்தியிருந்தனர் முன்னோர். சிலப்பதிகாரம் போன்ற நு}ல்களில் இவைகளைக் காணலாகும். அக்காலத்தில் பாணர் என்று ஒரு சாராரும் இசையில் வல்லுனராக இருந்திருக்கின்றனர். அவர்களை இசைவாணர் என்றும் அழைப்பர். பெருங்கதை போன்ற நு}ல்களில் இசையின் சிறப்பைக் காணலாகும். சோழ நாட்டிலே இசைக்கிருந்த சிறந்த பாகுபாட்டை விவரிக்கும்பொழுது,

“குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவன்றிசைத்து வழித்திறம் காட்டும்
அரும் பெறல் மரபில் பெரும் பாணிருக்கையும்
அமைந்து விளங்கின”

என்று சிலப்பதிகாரத்தில் அதன் ஆசிரியர் கூறியுள்ளார். இன்னும் அந்நு}லின் ஆசிரியர் இசைக்கருவியை மாதவி இயக்கியதை

“மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படா”
என வர்ணிக்கின்றார். பண்டைச் சங்க நு}ல்களில் இசைக்கலை பற்றியும் அக்கால மக்களில் இசை வல்லுனரைப் பற்றியும் பரக்கக் காணலாகும்.

இயல் இசை இரண்டிலும் மேம்பாடாகக் கூறப்படுவது நாடகத் தமிழ் ஆகும். நாடகத் தமிழில் முத்தமிழும் பொதிந்திருக்கும். இயல்பாகவுள்ளதை இசையுடன் பாடி அதனை ஆடி நடித்தாலே நாடகமாகும். ஒழுங்கான முறையில் ஒரு விஷயத்தை நடித்துக் காட்டலையே நாடகம் என்று கூறுவர். கருத்துக்களை நடித்தல், கதைகளை நடித்தல் என்று நாடகத்தில் இரு பகுதிகள் அமையும். நாடகத்தில் நடிப்புத்தான் உயிர். அக்காலத்தில் நாடக அரங்கங்கள் பல இடங்களிலும் இருந்தன. பெண்களும் ஆண்களும் அவ்வவ்விடங்களில் நாடகமாடுவர். எப்பொருளை எடுப்பினும் ஆங்கு நடிப்புக் கலையைக் காணலாம். வீரம், அச்சம், இழிவு, வியப்பு, இன்பம், துன்பம், நகை, நடுவு நிலைமை, வெகுளி முதலிய ஒன்பது சுவைகள் நடிப்பில் உண்டு. நாடகத்தின் நோக்கமும் பல்வேறுவகைகளாகவிருக்கும். தமிழ் நாட்டில் நாடகத்தை நடிப்பதற்கென்றே தனிப்பட்ட சாகியத்தார் இருந்துள்ளனர். பண்டைக் காலத்தில் நாடகக் கலை மிகவும் உயர்நிலையில் இருந்ததற்குப் பல நு}ல்களும் சான்றுகள் பகரும். இயல். இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் இயல்புகளையும் எடுத்துக்காட்டச் சிலப்பதிகாரம் ஒன்றே போதமானது. தமிழின் முப்பகுதிகளையும் முக்கலைகளாகப் பாதுகாத்தல் இன்றியமையாததுவாகும்;. நாட்டின் செல்வம் கலைகளே.

நாட்டின் கலைச் சிறப்;பு

ஒரு நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானது கலைகளேயாகும். கலைகளே உயிரறிவின் செய்கை. கலைகளாகிய உயிர் உடம்பில் ஊசலாடும் பொழுதுதான் நாடாய உடம்பு நலனுடன் வாழ முடியும். கலைஞர்களும் தொழிலாயர்களுந்தான் நாட்டினைச் செல்வம் கொழிக்கச் செய்ய வல்லவர்கள்;. தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் ஐந்நிலப் பிரிவுகளைக் கொண்டே மக்கள் வகுக்கப்பட்;டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட கலைவளர்ச்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுதான் இன்றைய சாதிப் பிரிவினை. தனித்தனி இடங்கள் ஒவ்வொரு சாகியத்தாருக்கும் வகுக்கப்பட்டிருந்தது. கலைகளின் உணர்ச்சி தமிழ் மக்கள் இதயத்தில் ஊறியிருந்தன.

அறிவினால் அறியும் கலைகளை அறிவுக்கலைகள் என்றும், அறிவினால் அறிந்து உடம்பு முயற்சியினால் தொழில்கள் செய்துகொள்ளத்தக்கவற்றை உடம்புக் கலைகள் என்றும் பிரிப்பர். உணர்வுக் கலை, பொருட் கலை எனப்படுவனவும் அவைகளே. பொருட்கலையை மெய்யுணர்வுக் கலை, இன்பவுணர்வுக் கலை என்றும் பகுப்பர். கலைகளை இன்னும் நுணுகி ஆராயப்புகின் இன்னும் பல பிரிவுகளாகப் பகுக்க முடியும்.

பண்டைக்காலத்தல் மெய்யுணர்வுக் கலையுள் சமய தத்துவ சாஸ்திரங்களை அடக்கியும், இன்பவுணர்வுக் கலைக்குள் ஓவியம், சிற்பம் போன்றவற்றை அடக்கியும், வான நு}ல், கோள் நு}ல் போன்றவற்றையும், அரசியற் கலை, நாடகக் கலை போன்ற பல கலைகளையும் கையாண்டுள்ளனர் என்றும் நு}ல்கள் கூறுகின்றன. தமிழ் உலகம் கலைவளர்ச்சியில் தனக்கு ஈடிணையற்று விளங்கிய வகைகளை அன்று தமிழ் மக்கள் கையாண்டிருந்தனர் என்பது வெளிப்படையாகும். பண்டு தொட்டுப் பின்வருவனவற்றை முற்கூட்டியுரைக்கும் ‘பஞ்சாங்கம்’ போன்ற சாஸ்திர நு}ல்களை நாகரிகம் பழுத்த நவ உலகில் காண முடியுமா? அதற்கு ஈடு இணையுள்ள சாஸ்திர நு}ல்களை அந்நிய பாஷையில் காட்ட முடியுமா?

உலகின் உன்னத மெய்யுணர்ச்சிக் கலைகளைத் தமிழ் மக்கள் அளித்துள்ளனர். சைவசமயத்தின் ஒவ்வொரு தத்துவங்களையும் படிப்படியாகப் பிரித்து நோக்கின் அதன் உண்மையை அறியலாயும். கல்வியறிவற்ற பாமரன் முதல் கல்வியில் மேம்பட்டுள்ள பெரியோர் ஈறாக உள்ளாரது அறிவிற்கெட்டும் வகையில் சைவம் வகுக்கப்பட்டுள்ளது. உலக உற்பத்திக்கு இடமாக இருந்த கடல் கொண்ட தமிழ்; நாட்டில் இருந்து உலகம் முழுவதும் பரவிய மக்கள் பல சாகியத்தாராக மாறி வேற்ற மொழிகளைப் பேசிப் புறச் சமயங்களைக் கைக்கொண்டனர். எச் சமயத்தினை ஆழ்ந்து நோக்கினும் சைவத்தின் தொடர்பைக் காணலாகும். புத்த மதமோ, கிறிஸ்தவ மதமோ, இஸ்லாமிய மதமோ போதிக்கும் சகல தத்துவங்களும் சைவத்தில் பொதிந்து கிடக்கின்றன. எச் சமயத்தை நோக்கினும் தமிழ் மக்களது சமய நிலையையே கடைப்பிடித்துள்ளதைக் காணலாகும். அக்காலத்தில் சமயக்கலை உன்னத நிலையில் இருந்ததென்பதற்கு இன்றைய தமிழ் உலகில் பல சான்றுகளைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

சமய தத்துவார்த்தங்களுடன் சிற்பம், சித்திரம், ஓவியம் முதலியன இடம்பெறுகின்றன. ஆலயங்களைச் சிருஷ்டித்த தமிழன் இக் கலைகளையும் உலகறியச் செய்துள்ளான். தமிழ் நாட்டில் காலத்திற்குக் காலம் இவ்வகைக் கலைகளில் நடந்த மாற்றங்களை இன்றும் நாம் காணலாம். பண்டைய தமிழ் சிற்பாசாரிகளுக்கு ஈடாக இன்று உலகத்தின் எப் பகுதிகளிலும் காண முடியாது.

உலக மக்களுக்கு வானநு}ல், கோள் நு}ல் முதலியவைப்பற்றி வழிகாட்டி விட்டவர் தமிழ் மக்கள்தான் என்பதை மறுக்கமுடியாது. வீடு அமைப்புகள் இராசிகளின் நிலை கொண்டே கணிக்கப்பட்டு வந்தன. சமீப காலங்களில் சிந்து வெளியில் புதைபொருள் ஆராய்ச்சியாளர் நடத்திய சோதனையின்பின் அங்கு வாழ்ந்தோர் தமிழ் மக்களேயென்றும், அவர்கள் வான நு}ல் முதலியவற்றில் சிறந்து விளங்கினர் என்றும் கூறப்படுகிறது. அங்கு வசித்த மக்கள் நாகரிகம் கி. மு. 5610 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்று ஹொஸ் பாதிரியார் தமது நு}ல்களிற் கூறியுள்ளார்.

அக்காலத் தமிழ் மக்களிடையே கணித சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம், தனுர் சாஸ்திரம், அர்த்தசாஸ்திரம், பரத சாஸ்திரம் முதலிய நு}ல்களும், யுத்த நு}லகள், நீதி ஒழுக்க நு}ல்கள், சட்ட நு}ல்கள், வாழ்க்கை விளக்க நு}ல்கள் முதலியனவும் பல்கிக் கிடந்தன. மக்கள் ஒவ்வொரு வழியிலும் சிறந்து விளங்கினார்கள். இவற்றினைப் பண்டைய சங்க நு}ல்கள் அழகாக எழுத்துக் காட்டுகின்றன.

மருத்துவக் கலை மிகவும் உன்னத ஸ்தானத்தில் இருந்துள்ளது. ஆயுள்வேத மருத்துவக்கலை தமிழ் மக்களாலேயே ஆரம்பிக்கப்பட்டதென்று திட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு 25000 வருடங்களுக்கு முன்பிருந்தவராகக் கருதப்படும் விசுவாமித்திரர் “வியாதியைக் குணப்படுத்தும் பாக்கியத்தை விட வேறு சிறந்த பேறு எதுவுமில்லை” என்று கூறியுள்ளார். கி;. மு. 600 வருடங்களுக்கு முன்னரே தமிழ் நாட்டில் சத்திர சிகிச்சை உன்னத நிலையில் இருந்தது. பண்டைக் காலத்தில் சத்திர சிகிச்சை செய்வதற்கு சம்மோகினி என்னும் மயக்க மருந்தை உபயோகித்தனர். இஃது ஒரு பகற்காலம் வரைக்கும் அபாயம் செய்யாது என்றும் கூறப்படுகிறது. வேண்டியபோது சஞ்சீவினி என்னும் மருந்தினைப் பிரயோகித்தல் சம்மோகினி என்னும் மயக்க மருந்தின் அதிகாரம் முழுமையும் நீங்கி அறிவுதயமாகும். இக்காலம் “குளோர பாரம்” என மேலை நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது அபாயத்தை விளைவிக்கும். ஆனால் தமிழ் நாட்டு சம்மோகினி மருந்து அவ்விதமன்று. சஞ்சீவினி மருந்திற்கு ஈடாக மேலை நாட்டினரிடம் ஒருவித மருந்தும் இல்லை. சத்திர வைத்திய உபயோகத்திற்காகத் தமிழ் நாட்டில் 420 வகைக் கருவிகள் கையாளப்பட்டனவென்று நு}ல்கள் கூறும்.

மேல்நாட்டினர் பலர் கிரேக்க நாடே மருத்துவக் கலைக்கு உற்பத்தி ஸ்தானம் என்று கூறிவந்த போதிலும் அதன் உண்மை அறிவான் வேண்டி உழைத்த அறிஞர் பலருண்டு. ஓயிஸ் (றுளைந)இ ராயில் (சுழலடந)இ மாக்டனல் (ஆயஉனழயெடட)இ கோல்ப் ரூக் (ஊழடந டிசழழம)இ கன்னிங்காம் (ஊரnniபொயஅ) முதலியோர் “இவ்வுலகில் வைத்தியம் முதன் முதல் இந்தியாவிலேயே பிறந்தது கிரேக்கர்களும், அராபியர்களும், சீனர்களும் இந்தியாவல் இருந்து இந்தச் சாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டனர். பின்னரே மறு நாடுகளும் இதனைக் கற்றுக்கொண்டன” என்று தங்கள் புத்தகங்களில் நிரூபித்துள்ளனர். ஆகவே தமிழ்ப் பெருநாடு மக்கள் உற்பத்திக்கு மாத்திரமன்றி அவர்களை ஆரோக்கிய மக்களாக வாழச் செய்யும் வைத்திய கலைக்கும் மூலஸ்தானமாக இருந்திருக்கின்ற தென்பது வெள்ளிடை மலையாகும்.

இவற்றினை விட இன்றைய உலகில் மிளிரும் நவீன சயன்ஸ் முறைகளை அக்காலத்தில் தமிழ் மக்கள் தம்முள் வழங்கி வந்துள்ளனர். இக் காலம் விஞ்ஞான சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டுள்ள மூலப்பொருள்களை அக் காலத்தல் தமிழ் மக்கள் ஐந்து பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விட்டனர். இப்படியே ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராயப்புகின் உண்மை புலப்படும். பண்டைக்காலம் முதல் தமிழ் மக்களிடையே வழங்கி வரப்பட்ட இசைக் கருவிகள் சாஸ்திர முறைப்படியே செய்யப்பட்டுள்ளன. போர்க் கருவிகளைப் பார்த்தால் ஆங்கும் அப்படியே, தானாக இயங்கும் பலவகைப் பொறிகளைப் பண்டைப் போர்களில் மக்கள் உபயோகித்து வந்துள்ளனர். இவைகளெல்லாம் ‘சயன்ஸ்’ என்று கூறுப்படும் சாஸ்திர முறைக்குள் அடங்கியவைகளேயாகும். ‘இச் சயன்ஸ் முறைகள் அக்காலத்தில் இல்லை. நவீன நாகரிக சாதியினர்தான் கண்டுபிடித்துள்ளனர்’ என வாய்ப்பறை சாற்றுவோருமுண்டு. பண்டு மேலைநாட்டு நாகரிக வாசிகள் மிருக வாழ்க்கை நடத்திய காலத்தில் தமிழ் மக்கள் உன்னத நிலையில் இருந்துள்ளனர் என்பதையும் இச் சயன்ஸ் முறைகள் அக்காலத் தமிழரிடையே இருந்ததென்பதையும் இன்றைய மேலை நாட்டினரே ஏற்றுக்கொள்கின்றனர். வேறு என்ன வேண்டும்?

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் அக்கால நிகழ்ச்சிகளையும் ஆராய்ந்து பார்க்கின் உண்மை வெளிப்படாமற் போகாது. தமிழ் மொழியில் அகத்துடனும் புறத்துடனும் சம்பந்தமான நு}ல்கள் பல இருக்கின்றன. இவைகளை நாம் அறிய விரும்பின் தமிழை வளர்த்த முச் சங்கங்கள்பற்றி அறிய வேண்டும்;. முச் சங்கங்களை நிறுவி அதன் வழி வளர்த்த செந்தமிழ் குன்றாப் புகழுடைத்து.

முத்தமிழ்ச் சங்கங்கள்

தமிழ் மொழியினையும் அதன் கலைகளையும் வளர்க்க வேண்டி தமிழ் மக்கள் சங்கங்களை நிறுவினர். அரசர்களும் மக்களும் புலவசிகாமணிகளை ஆதரித்தனர். அப்படி ஆக்கப்பட்ட சங்கங்களில் பிரதானமானவை ‘முச் சங்கங்கள்’ என்ற சிறப்புப் பொருந்திய மூன்று சங்கங்களாகும்.

முதற் சங்கம் இருந்த இடம் கடல் கொள்;ளப்பட்ட மதுரையாகும். இத் தலைச் சங்கத்தில் அகத்தியனாரும், முப்புரங்களையும் எரித்த சிவனும், மலையினைப் பிளந்து மக்களைக் காத்தருள் சுரந்த முருகக் கடவுளும், முரஞ்சியூரைச் சேர்ந்த முடி நாகரும், குபேரனும் இன்னும் பல புலவ சிகாமணிகளும் இருந்து அதனைச் சிறப்பித்தனர் என்று கூறுவர். இச் சங்கத்திருந்தோர் ஐந்நு}ற்று நாற்பத்தொன்பதின்மர். இவர்களாற் பாடப் பெற்றன எத்தனையோ பரிபாடல்களும். முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையுமென இத் தொடக்கத்தினவாகும். இவர்கள் நாலாயிரத்து நானு}ற்று நாற்பத் தொன்பதியாண்டு சங்கமிருந்தார்களென்றும், இவர்கள் அகத்தியததையே முதன் நு}லாகக் கொண்டிருந்தன ரென்றும் கூறுவர். முதற் சங்க காலத்தில் சங்கம் நிறுவப்பெற்றிரந்த மதுரைமா நகரம் கடலால் மூழ்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்ச்சங்கம் கபாடபுரத்திற்கு மாற்றப் பட்டது என நு}ல்கள் கூறும்.

கபாடபுரத்தை ஸ்தானமாகக்கொண்ட ஆரம்பிக்கப்பட்டது இரண்டாவது தமிழ்ச் சங்கமே யென்று கூறுவர் அறிஞர். இச்சங்கத்தில் அகத்தியனாரும், தொல்காப்பியரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்@ர்க் காப்பியனும், சிறு பாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக் கோமனும், கீரந்தையும் என இத் தொடர்பினரே இருந்தனரென்று அறியப்படுகிறது. இச் சங்கத்தில் ஐம்பத்தொன்பதின்மர் இருந்தனரென்றும் அவருள்ளிட்டுப் பாடினோர் மூவாயிரத் தெழுநு}றுவர் என்றும் கூறுவர். இக்கால புலவ மணிகளால் கலியும், குருகும், வெண்டாளியும், இசை நுணுக்கமும், பூத புராணமும் இன்னும் பலவும் பாடப்பெற்றன. வெண்டோர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பது பாண்டியர் இச் சங்கத்தை நன்னிலையில் வைத்துக் காப்பாற்றினர். இச்சங்கம் மூவாயிரத்து எழுநு}று வருடம் இருந்தது. இக் காலத்திய நு}ல் நிலையத்தில் எண்ணாயிரத்து நு}ற்று நாற்பத்தொன்பது புத்தகங்கள் இருந்தன வென்று கூறப்படுகிறது. தென்குமரியாறும். அதன் தெற்கிலுள்ள நாடுகளும் கடல்வாய்ப் பட்டபொழுது அந் நு}ல்களும் மறைந்திருக்க வேண்டும்.

கபாடபுரமும் கடல் கொள்ளப்பட்டு மறைய, தமிழ்ச் சங்கமும் இடமாற்றம் பெற்றது. கடைச் சங்கமென இச் சங்க காலத்தை அழைப்பர். ஏனெனில் இச் சங்கத்தின் பின்னர் இவை போன்ற சிறந்த சங்கங்கள் தமிழ் நாட்டில் தோன்றவில்லை. தமிழ் மக்கள் அடிமைத் தளையால் பூட்டப்பெற்றபோது தமிழ்ச் சங்கம் எங்ஙனம் நிறுவப்பெறும்? தமிழ் மக்களிடையே சுயநலமும், ஒற்றுமையின்மையுமே அவர்களை அடிமைகளாக்கி அந்நிய மிலேச்சரின் ஆளுமைக்கு அவர்களை உட்படுத்தி விட்டது. இச் சுயநலம் மறைந்து எல்லோரும் ஒன்று எனத் திரண்டு அடிமைத்தளையைக் களைந்தெறிந்த அன்றே தமிழி; அன்னையின் உதடுகளில் புன்னகை அரும்பும்.

கடைச் சங்கம் எனப்படும் மூன்றாவது தமிழ்ச்சங்கம் உத்தரமதுரையில் ஸ்தாபிக்கப்பட்டதெனக் கூறுவர். இச் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தோர் சிறு மோதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார். பெருங் குன்று}ர்க் கிழார், இளந் திரு மாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயர் மகன் நக்கீரனார் என்னும் இத் தொடக்கத்தினராகும். இவர்களுள்ளிட்டு நானு}ற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினார்கள். இவர்களாற் பாடப்பெற்றன நெடுந்தொகை நானு}று, நற்றிணை நானு}று, புறநானு}று, ஐங்குறு நு}று, பதிற்றுப்பத்து, நு}ற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என இத் தொடக்கத்தினவாகும். இவர்கள் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்து எண்ணு}ற்று ஐம்பது ஆண்டுகளென்றும் அவர்களைச் சங்கமரீயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெழுவழுதியீறாக நாற்பத்தொன்பதிமர் என்றும் கூறுவர். இக்கால நு}ல்களில் அழிந்து பட்டவை போக எஞ்சியவை பத்துப்பாட்டு. எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருந்தேவனார் பாரதம், இறையனார் அகப்பொருள் முதலியனவாகும்.

கடைச் சங்கங் குலைந்தபின் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பேராதரவில்லாதிருந்தும், செந்தமிழ்ச் செல்வியின் சிறப்பு குன்றாமல் நிலவி வந்தது. வல சமய வித்துவான்களும் மொழி வளர்ச்சியில் சிறிது ஊக்கம் காட்டி வந்தனர். புத்த வைஷ்ணவ வித்துவான்களால் பலருக்கும் பிரயோசனப்படக்கூடிய பொது நு}ல்கள் இயற்றப்படவில்லை. சமண சமயத்தினர் தமிழ் மொழி வளர்ச்சியில் அதிக ஊக்கம் காட்டினர். நிகண்டு, நன்னு}ல், காரிகை, நம்பியகப்பொருள் ஆதிய நு}ல்களும், சிந்தாமணி முதலிய பெருங் காப்பியங்களும் சமணர்களாலேயே இயற்றப்பட்டனவாகும். அப்பால் பல கலை ஞான நு}ல்களும் புராண காவியங்களும், நைடதம், பாரதம், இராமாயணம், இரகுவமிசம் ஆகிய இதிகாசங்களும் தோன்றின. பல புலவ சிகாமணிகளும் இடையிடையே தோன்றிப் பிரகாசித்தனர். இடையே அந்நியர் படையெழுச்சியால் தமிழ் வளர்ச்சி குன்றிய காலத்திலும் அதனை வளர்ச்சியடையச் செய்வதற்கும் பலர் முயற்சி செய்துள்ளனர். சமீப காலத்தில் மதுரையம்பதியிலே ஸ்ரீ பாண்டித்துரைத் தேவர் நான்காவது தமிழ்ச் சங்கத்தை ஸ்தாபித்தார். இன்றும் இச்சங்கத்தினரால் “செந்தமிழ்” என்னும் பத்திரிகை நடத்தப் பட்டு வரப்படுகிறது. பல அறிஞர்கள் இச் சங்கத்தில் இருந்து தமிழ்த் தொண்டு புரிந்து வருகிறார்கள்.

முச் சங்க காலத்திலும் அதன் பின்னரும் இயற்றப்பெற்ற நு}ல்களில் அநேகம் இன்று காணக் கிடைத்தில. இடையிடையே தமிழ்த்தாயின் தவப் புதல்வர்கள் தோன்றி மறைந்த நு}ல்களைத் தேடித்தேடி மக்கட் குதவுகின்றனர். சிந்திப்போர்க்கும் கற்போர்க்கும் செந்தேன்போனினிமையுடைய எந் தமிழ் மொழி நு}ல்களைத் தேடி அழியவிடாது பாதுகாக்கப் பலரும் முன்வரல் வேண்டும்.

பண்டைய தமிழ் நு}ல்கள் பலவும் கடவுள் வணக்கத்தை அகத்தே கொண்டேயிருப்பதைக் காணலாம். தமிழ் மக்கள் ‘உலகத்தில் மனிதனுக்கு மேலான ஒருவர் இருக்கிறார்’ என்னும் உணர்ச்சியைப் பண்டு தொட்டே கொண்டிருந்தனர் என்பது இவற்றால் தெரிகின்றது. இதனால் தமிழ் மக்களின் சமயநிலை எமக்க அத்தியாவசியமாகின்றது.

கடவுட் கொள்கை

உலக மக்கள் வாழ்க்கையை ஆராயப்புகின் அவர்கள் எவ்விதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றனர் என்பது தெரியலாகும். சிலர் செல்வத்தையே தமது நோக்கமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். சிலர் ஆழ்ந்த தமது உணர்ச்சியினால் நல்ல தமது அறிவுத் தெளிவின்மீது நோக்கைக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். பண்டைக் காலத்தில் தமிழ்மக்கள் தமது ஆழ்ந்த நல்ல அறிவுத் தெளிவையே நோக்கமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தியுள்ளனர். அவர்கள் உள்ளத்தில் அறிவின் உணர்ச்சி எவ்விதம் உதித்தது?

இருளில் மயங்கி வழி தெரியாது இருக்கும் மக்கள் காலை கதிரோன் உதயமானதும் புத்தொளி பெற்று வழி தெரிந்து நடக்கின்றார்கள். அதுபோன்று ஐவகை நிலங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் மற்றமற்ற இடங்களைப் பார்த்து வியப்படைந்தனர். அவர்கள் எதையும் உற்றுப் பார்ப்பதில் மிகவும் கருத்துடையோராக இருக்கிறார்கள். சூரியன் உதயமானதும் உலகத்தில் ஜீவகளை தென்படுகிறதைக் கண்டு மக்கள் ஆச்சர்யம் கொண்டனர். ஒரு சூரியனால் உலகமே நடக்கின்றது என்ற வியப்பே அவர்களிடம் காணப்பட்டது. ‘பல உயிரற்ற பொருள்களும் இருந்த இடங்களிலேயே அசைவின்றி இருக்கின்றன. ஆனால் உயிரற்ற சூரியன் அசைந்து உலகையே ஜீவனுடன் திகழச் செய்கின்றது. இதனை நடத்த உண்மையில் யாரோ ஒரு சூத்திரதாரி இருக்கவேண்டும்? என்று எண்ணினர். இயக்கும் உயிர்ப் பொருளையே “இயவுள்” அல்லது ‘கடவுள்’ என்று கொண்டனர். இம் முடிபே தமிழ் மக்களுக்கு ஒருவித கடவுட் கொள்கையைக் காட்டியது.

பண்டைத் தமிழரின் ஆராய்ச்சியில் உயிர்கள், உலகம், கடவுள் என மூன்று பொருள்கள் இருந்தன. தொல்காப்பியத்தில் இவைபற்றிக் காணலாகும். உயிரின்மூலம் உலகத்தையும் கடவுளையும் துய்க்கலாம். பண்டைத் தமிழ்மக்கள் ‘தெளிந்த வுணர்வுடையதே கடவுள்’ எனக் கருதி வந்துளர். அவ்வுணர்வை அடையவேண்டியே அக்காலம் முதல் மக்கள் கடவுளை வழிபட்டு வந்துள்ளனர்.

உலகத்துயிர்களெல்லாம் ஆணும், பெண்ணுமாகவேயிருக்கின்றன. இதைக்கொண்டு கடவுளும் ஆண் பெண் வடிவங்களைக் கொண்டுள்ளவராதல் வேண்டுமென்ற பண்டைத் தமிழர் கொண்டனர். இறைவன் ஓரு பக்கம் ஆணாகவும், மறு பக்கம் பெண்ணாகவும் விளங்குவதாக ஐங்குநுறு}று என்னும் சங்க நு}லில் கூறப்படுகிறது.

தரையில் இருந்து மக்கள் அதிய பயனைப் பெறுவதாலும், தரையும் மனங் கோணாது மக்களுக்கு உவந்து கொடுப்பதாலும் முற்கால மக்கள் தரையை ஒரு பெண் தெய்வமாக மதித்து வணங்கி வந்தனர். இதனைத் ‘தரைப் பெண் வணக்கம்’ அல்லது ‘பூமாதேவி வணக்கம்’ என்பர். இன்னும் பூமாதேவியை பெற்ற தாய் என்றும் மக்கள் அழைத்து வந்திருக்கின்றனர். இதிலிருந்து பிறந்ததே ‘சக்தி’ வணக்கமும் என்று அறிஞர் கூறுகின்றனர். பண்டைநாளில் நரபலியிடும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. இச் சார்பு மக்களைக் ‘கபாலிகர்’ என அழைப்பர். ஆலயங்களில் தேவதைகளைப் பிரீதி செய்யும் பொருட்டு விலங்குகளைப் பலியிடும் வழக்கம் இன்றும் நிலவுகின்றதை நாம் காண்கின்றோம். இவ் வழக்கத்தை அன்று கடவைள வணங்காத மக்களுக்கெனவே முன்னோர் ஏற்படுத்தியிருத்தல் வேண்டுமென்றும் அப் பழக்கம் இன்றும் எல்லோரிடையேயும் நிலவிவிட்டதென்றும் கூறுகிறார்கள். எப்பொழுது இப் பலிப் பழக்கம் ஒழியுமோ அன்றே தமிழ் மக்களுக்கு விமோசன மேற்படும்.

சிவலிங்க வணக்கமும் மக்களிடையே பரவியிருந்திருக்கிறது. சிவனையே எல்லாத் தெய்வங்களுக்கும் முதல்வர் என மக்கள் கருதி வழிபட்டு வந்துளர். முல்லை நில மக்கள் கண்ணனைத் தெய்வமாக வழிபட்டனர் என்பதற்கு தொல்காப்பியத்தில் வரும் ‘மாயோன் மேய காடுறை யுலகமும்” என்பதால் அறியப்படுகிறது. தெய்வங்களுக்குப் பல கரங்களையும் சிரங்களையும் அமைத்து ஒவ்வொரு பெயரால் அழைத்து வணங்கி வந்தனர். நந்தி வழிபாடும் மக்களிடையே இருந்துள்ளது. விலங்கினங்கள், பறவைகள், ஊர்வன முதலியனவற்றைத் தெய்வங்களாக எண்ணி வணங்கி வந்துளர். இன்றும் மாடு முதலியவற்றையும், கெருடன் முதலியவற்றையும் நாகம் முதலியவற்றையும் தெய்வங்களாக வணங்குகின்றனர்.

பண்டும் இன்றும் தமிழ் மக்கள் தங்கள் தெய்வங்களின்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆபத்துக் காலங்களிலெல்லாம் கடவைள வேண்டிக் கொள்வர். நம்பிக்கையின் பலமும், ‘கடவுள் இருக்கிறார். அவர் நம்மைக் காப்பாற்றுவார்” என்ற அச்சமின்மையுமே ஆபத்துக் காலங்களில் அவர்களைத் தப்ப வைக்கின்றது. இதனால் கடவுள் பக்தி இன்னும் அதிகப்படுகின்றதேயொழியக் குறையமாட்டாது. கடவுளை வேண்டி நேர்ந்தோர் தமது ஆபத்து நீங்கியதும் தமது நேர்த்திக்கடனைச் செய்து முடிப்பர். விக்கிரகங்களை உற்சவ காலங்களில் ஊர்வலம் கொண்டு வருவார்கள். விழாக் காலங்களில் பலவகைப் பொருள்களும் கடவுளுக்குப் படைக்கப்படும். தமிழ் மக்களின் சமயம் சைவமேயாகும். அவர்கள் சமயம் எப்போ ஆரம்பித்தது எனக் காலவரையறுத்துக் கூறு முடியாது எனப் பல அறிஞர்களும் கூறிப் போந்துளர்.

தமிழ் நாட்டில் பல சமயங்கள் இருந்த காலத்திலும் அவற்றைத் தமிழ் மக்கள் ஒறுக்க நினைக்காது சமயப் பொறுமையையே கையாண்டனர் என்பதற்குப் போதிய சான்றுகள் உள. பண்டை நு}ல்கள் பலவும் சமயங்களையுந் தழுவியே பெரிதும் எழுதப்பட்டுள்ளன. வேறுபட்ட மதங்கள் மாத்திரமன்றி வேறுபட்ட தெய்வங்களும் மக்களது வணக்கத்தில் இருந்துள்ளன. அக்காலத்தில் அரசரும் தம் மதத்தை மாத்திரம் நிலைநாட்ட வேண்டுமென்னும் எண்ணமின்றி சகல மதத்தினரும் ஆதரவளித்துப் பாதுகாத்து வந்தனர்.

அக்கால மக்களிடையே ஆரம்பித்து வைக்கப்பட்ட மரபுப் பெயர்கள் யாவும் தொழிலடியாகப் பிறந்தனவேயன்றி வேறில்லை. இன்றைய உலகில் பணமும் ஆதிக்கமும் படைத்தோர் தாம் தமிழ்ச் சாதியத்தார் என்பதை மறந்து மரபு பேதங்களை எடுத்துக் காட்டி ஒரு சார்பு மக்களை ஒதுக்குகின்றனர். உலகிற் பிறந்த சாதி இரண்டேயன்றி வேறில்லை. இன்றைய ஜாதி மரபுகள் ஜீவ னோபாயத்திற்காக மேற்கொண்ட தொழிலடியாகப் பிறந்தவையே. ஜாதிக் கொள்கைகள் வேரூன்றியிருக்கும் இந்நாளையில் மனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் கொள்கைகளை நிலைநாட்டுவது எங்ஙனம்?

சமயக் கொள்கைகளைப் புதிய உருவில் ஆக்க முற்பட்டோர் இந்த ஜாதிப் பிரிவுகளையும் சமயத்துடன் தொடர்வுபடுத்தி விட்டனர். இந்த ஜாதிக் குழப்பங்கள் நீங்கி எல்லோரும் ஒரே மதம், ஒரே ஜாதி என்ற கொள்கை என்று நிலவுமோ அன்று தமிழன் தன் அடிமைத் தளையிலிருந்து நீங்கிச் சுதந்திரமடைவான்.

தமிழ் மக்கள் தம்முள் இறந்தாரை உரிய ஈமச் சடங்குகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் சுடுகாட்டிற்கெடுத்தேகி அங்கு தகனம் செய்வர். இம் முறை இன்றும் சைவமக்களிடையே நிலவி வருவதைக் காணலாகும். அக்காலத்தில் மனைவி கணவனுடன் இறக்கும் வழக்கமும் ஒரு சாரரிடையே நிலவி வந்துள்ளது. நற்றிணை, கநற்தொகை, மணிமேகலை முதலியவற்றில் இவற்றைப் பற்றிக் காணலாகும். தமிழ் மக்களின் சமயக் கோட்பாட்டில் மறுலவுக வாழ்க்கையைப் பற்றிய திடமான உணர்ச்சியிலிருந்து வந்துளது. இன்றும் இத்திட வுணர்ச்சி இருக்கின்றதை நாம் காணலாகும்.

பழைய காலத்தில் தமிழ் நாட்டில் சைவமதக் கோவில்கள் திகழ்ந்தன. இன்றும் அவைகளே நாட்டின் கண்கள்போல இலங்கா நிற்கின்றன. கடல் கொண்ட குமரிக் கண்டத்திலே இத்தகைய பெருங் கோவில்கள் பல இருந்தனவென்று கூறப்படுகின்றது. தமிழ் மக்கள் தமது நாட்கருமங்களில் கடவுள் வழிபாட்டையும் ஒன்றாகக் கொண்டிருந்தனர். தமிழ் நாட்டின் மக்களிடையே சைவத்தின் கிளைகள் பல தோன்றிப் பரவின. வைஷ்ணவம், புத்தம், ஆருகதம், சமணம் முதலியன சைவத்தின் பல தரத்தினங்களைக் கொண்டனவாகக் காணப்படுதலை நுணுகி ஆராய்வோர் எடுத்துக் காட்டுகின்றனர். சைவத்தின் தத்துவங்களை மக்களுக்கு ஏற்ப போதிக்கின்றன இம் மதங்கள். அக்காலத்தில் தமிழ் மக்கள், ஒரு ஆறானது பல இடங்களிலும் ஊற்றெடுத்துப் பல சிறு கிளைகளாகப் பரந்து பாய்ந்து இடையிடையே தம்முட் கலந்து ஈற்றில் ஒன்றாகி ஒரு கடலுட் பாய்வதுபோல் உலகத்திலும் பல சமயங்கள் பல வழிகளிலும் மக்களை அழைத்துச் சென்று ஈற்றில் ஒரு இடத்திற்கே அவர்களைக் காட்டிவிடுவதாகும். என்ற உயர்ந்த கொள்கையைத் தம்முள் கொண்டிருந்தனர். இதனாலேயே அவர்கள் இடையிடையே தோன்றிய பல சமயங்களையும் பரவ விடாது தடுக்க முயற்சியெடுக்கவில்லை. இன்றும் சைவம் தழைத்தோங்குவதற்கு இதுவே முதற் காரணமாகும். உலகில் ஏனைய மதங்கள் தம்மை நிலைநாட்டவேண்டி இரத்தம் சொரிந்த போதிலும் இத் தமிழர் சமயமான சைவம் தானாகவே பரவியது. மறு சமயங்களில் இரத்தக் கறை உண்டு. இதனை மறுக்கமுடியாது. எங்கள் தமிழர் மதம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. இதற்குச் சான்றுகள் பலவுண்டு. ஆராய்ச்சியின் பயனாக ஆங்காங்கு தமிழர்களின் சமய நிலையங்கள் வெளிப்பட்டுள்ளன. இச் சமயநிலைகொண்டு தமிழ் மக்கள் குமரிக்கண்டம் முதல் உலகம் முழுவதும் பரவியிருந்தனர் என்பது வெளிப்படையாகத் துலங்கா நிற்கின்றது. தமிழ் மக்களின் உயிர்நிலை போன்றது அவர்கள் சமயநிலை, ஆராய்ச்சியே இதற்குச் சான்று பகரும்.

புதிய ஆராய்ச்சிகள்

ஒவ்வொருவருக்கும் தமக்கு முற்பட்டவர்களின் வாழ்க்கை பற்றி அறிய அவாவுண்டாதல் இயற்கை. இந்த அவா காரணமாக உதயமாவதே ஆராய்ச்சி. சில காலங்களுக்கு முற்பட்டவர்களே தமது சரித்திரங்களை எழுதி வைத்திருந்தனர். பெரும்பாலும் அக் குறிப்புகள் சரித்திரத்தில் சம்பந்தப்படாத விஷயங்களையே கொண்டிருக்கும். இவை எங்ஙனமிருந்தபோதிலும் பண்டையோர் வாழ்க்கையை அறிவதற்கு மனிதன் எடுத்த முயற்சிகள் பல. அவற்றுள் புதை பொருள் ஆராய்ச்சியே முக்கியமானதாகும். பழைய காலந்தொட்டு இயற்கையின் கூறு பாட்டால் மறைந்த மண்டலங்களை அகழ்ந்து பரிசோதித்தலையே சரித்திரமெழுதுவோர் மேலாகக் கொள்கின்றனர்.

பழைய வரலாறுகள் ஒழுங்காகக் கிடைக்கப் பெறாதுவிடினும் புதையுண்ட மண்டலங்களில் உள்ள கற்சிலைகள். சமாதிகள், கட்டிடங்கள் முதலியவற்றைக் கொண்டும் ஆங்காங்குள்ள மண்டை ஓடுகள், என்புகள் முதலியவற்றைக் கொண்டும் பழைய மக்கள் வரலாறுகளை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. பல மண்டிலங்கள் இயற்கையின் மாறுபாட்டால் மாற்றமடையும் பொழுது அவை மண் மேடாதலும் இயல்பு. அப்படி மண்மேடிட்ட இடங்களைத் தோண்டிப் பார்த்து, அவ்வவ்விடங்களில் காணப்பெறும் பல திறப்பட்ட பொருள்கையும் ஆராய்ந்து அவற்றைப் பற்றிய உண்மைச் செய்திகளையும், அவற்றை உபயோகித்த மக்களைப் பற்றிய செய்திகளையும் அறியும் முயற்சியே புதை பொருள் ஆராய்ச்சியாகும். இதற்குப் பக்கபலமாக உதவுபவை உடற் கூற்று நு}ல்களும், நில நு}ல்களுமாகும்.

பண்டை நு}ல்களைப் படிக்குந்தோறும் புதையுண்ட அல்லது கடல் கொண்ட நகரங்களைப்பற்றி அறிகின்றோம். அக்கால மக்களின் வாழ்க்கைபற்றி அறிய அவாவுண்டாதல் இயல்பேயன்றோ இந்த அவாவினாலே உந்தப்பட்ட பல அறிஞர்கள் புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களாலேயே பண்டைய சரித்திரம் எமக்குக் கிடைத்திருக்கிறது. இன்றும் கிடைத்து வருகிறது. இன்னும் எமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பலப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இன்று நடக்கும் புதை பொருள் ஆராய்ச்சியேயாகும்.

புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆற்றோரங்களையும், குகையடிவாரங்களையும், சமவெளிகளையும், மண்மேடுகளையும் ஆராய்ந்து வந்துள்ளனர். இன்றும் ஆராய்ந்து வருகிறார்கள். அவ்வப்பொழுது தாம் தமது ஆராய்ச்சியின் பயனாக கண்டறிந்தனவற்றை உலகில் மற்றையோரும் அறியும் வண்ணம் நு}ல்களாக வெளியிடுகின்றனர். இந் நு}ல்கள் எம் பண்டையோரைப் பற்றிய சரித்திரங்களை எமக்குக் கூறுகின்றன. இதுவே ஆராய்ச்சியால் நாம் அடைந்த அடையும் பயன்களாகும்.

அந்நிய நாடுகளில் இருந்து தமிழ்;நாடு போந்த யாத்திரீகர்கள் முதலானோர் எம் நாடுபற்றிக் கூறியுள்ளவை கொண்டு பல புதிய விஷயங்களை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றன. பண்டை நு}ல்களும் நமக்க ஊக்கமூட்டுபவைகளாகக் காணப்படுகின்றன. அவாவும் அதிகமாக ஆராய்ச்சி குழுக்கள் தோன்றுகின்றன. இவ்விதம் தேன்றிய ஆராய்ச்சிக் குழுக்களே எமக்குப் பலவற்றையும் உதவியுள்ளன.

இந்திய ஆராய்ச்சிக் குழுவிற்குத் தலைவராக இருந்த ஸர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் ( ளுசை யுடடநஒநனெநச ஊரதெniபொயஅ) என்பவரின் உழைப்பின் பயனாக நாளந்தா, தbசீலம். பாடலீபுரம், கௌசாம்பி, அமராவதி முதலிய பண்டைய நகரங்கள் பற்றி நாம் அறிந்தோம். அவரின் உழைப்பினாலேயே மறைந்த இந் நகரங்கள் பற்றி மக்கள் அறிந்தனர். ஸர். ஜோன் மார்ஷல் (ளுசை துழாn ஆயசளாயட) என்பவரின் தலைமையில் நடந்த ஆராய்ச்சியின் பயனாக இந்து நாகரிகம் எமக்குத் தெரிய வந்தது. கி. மு. 5610-ம் ஆண்டிற்கு முற்பட்டதென்று கூறப்பட்ட நாகரிகத்தையுடைய ஹரப்பா, மொகொஞ்சோ-தாரோ முதலிய இடங்கள் பற்றி நாம் அறியக்கூடியதாக ஆராய்ச்சியாளர்க்ள பல நு}ல்களை வெளியிட்டுள்ளனர். ஈண்டு வாழ்ந்த மக்கள் தமிழர்களே யென்பது அங்கை நெல்லிக்கனியாகும். அறிஞர் என். ஜி. மஜும்தார் ‘சான்ஹ{தாரோ’ என்ற இடத்தைக் கண்டு பிடித்தார். அவர் மேலும் ஆராய்ச்சி செய்ததின் பயனாக லொஹெஞ்சோ-தாரோ என்ற இடத்தையும் கண்டு பிடித்தார். அறிஞர் வாட்ஸ் என்பவர் சக்பூ10ர் பானிஸியால் என்ற இடத்தைக் கண்டு பிடித்தார். இத்தகைய ஆராய்ச்சிகளால் எமது முன்னோர் நாகரிக வாழ்க்கையை நாம் அறிய முடிந்தது.

கங்கை நதிக் கரைகளை ஆராய்ந்து பார்த்தபொழுது பல மண்டிலங்கள் இருந்தது தெரிய வந்தன. பண்டை நகரங்களான வட மதுரை, கௌசாம்பி, பிரயாகை, வாரணாசி முதலியன இந் நதிக்கரையிலேயே இருந்தனவென்று ஆராய்ச்சியினால் பிறந்துளது. இவ்வாறே நருமதை நதிப்படுக்கை, கோதாவரி, கிருஷ்ணை. காவிரி, தாமிரபரணி, பேரியாறு முதலியவற்றின் கரைகள் ஆதியன ஆராய்ச்சிக்குட்பட்டு அரிய பெரிய விஷயங்கள் இன்று வெளிப்பட்டுள்ளன. பீகார் மண்டில ஆராய்ச்சியால் பாடலிபுரம் பிறந்தது. நடு மண்டில ஆராய்ச்சி, ஒரிஸ்ஸா ஆராய்ச்சி, டெக்கான் ஆராய்ச்சி சென்னை மண்டில ஆராய்ச்சி முதலியவற்றினாலும் புதையுண்ட பண்டை நாகரிகம் வெளிப்பட்டுள்ளது.

பழைய கற்காலம் முதல் உலோக காலம் வரையிற் தொடர்ச்சியாக உள்ள ஆயுதங்கள் முதலிய சின்னங்கள் இந்தியா முழுமையும் காணப்படுகின்றன. கற்காலத்திற்கும் உலோக காலத்திற்கும் குறைந்தது இருபதினாயிரம் வருடங்கள் சென்றிருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர் கூறுவர். இதனால் இருபதினாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மக்கள் இங்கு வாழ்ந்திருந்தனர் என்று வெளியாகின்றது.

சிந்து வெளியை ஆராய்ச்சி செய்ததன் பயனாக வெளித்தோன்றிய மகன்யோதாரோவில் கிடைத்துள்ள முத்திரைகளில் இன்று நாம் வழங்கும் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. இறுவன், தாண்டவன், யாழ், வேல், நாய், காலாள். எண்ணாள், கலக்க, நண்டு, உழவன், கோயில், குட்டை முதலிய சொற்கள் அங்குள்ள கற் சிலைகளிலும் முத்திரைகளிலும்; காணப்படுகின்றன. இந்தியா முழுமையும் தமிழ் மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பது முடிவாகும்.

சிந்து நதிதீரத்தில் இருந்த தமிழ் மக்கள் பாபிலோனியாவில் சென்று சுமேரியர் என்னும் பெயரோடு குடியேறினர் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். டாக்டர் ஹோவ் என்னும் சரித்திராசிரியர் தமது ஆராய்ச்சி நு}லில் கூறுவதனை நோக்குவோம்.

“சுமேரியரின் உடற்கூறு முதலியன அவர்கள் இந்திய மக்களின் இனத்தைச் சார்ந்தவர்கள் எனக் காட்டுகின்றன. இன்றைய இந்திய மக்களின் முகவெட்டு பல்லாயிரமாண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வடிவை ஒத்திருக்கின்றது. இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் தமிழ்மக்கள் சென்று ‘யூபிறதீஸ்’, ‘தைகிரஸ்’ நதிகளின் பள்ளத்தாக்குகளில் குடியேறிச் சுமேரிய மக்களாயினர். இந்தியாவிலே அக்காலம் நாகரிகம் மேலோங்கி இருந்ததால் அங்கு வந்து குடியேறிய மக்களான தமிழர் சுமேரியர் எனப் பின்னர் அழைக்கப்பட்டோர் எழுதும் முறையை நன்கு அறிந்திருந்தனர்”

பரஸீகத்தில் நடந்த ஆராய்ச்சிகளின் பயனாக ஆண்டுத் தமிழ்த் தொடர்பு இருந்ததென்பதற்குரிய சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. பாரஸீகத்தின் பெரும்பகுதி பாலை வனமாக இருந்தபோதிலும் ஆங்கு அழகிய மலைக் காட்சிகளும், நகரங்களும் இருக்கின்றன. பழைய சின்னங்களின் ஆராய்ச்சி விளைவால் ஆண்டு வாழ்ந்த மக்கள் தமிழ் மக்களே யென்பது அறிஞர் துணிபு. இவைபற்றிப் பல நு}ல்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

அரேபியாவில் பல பகுதிகளையும் ஆராய்ச்சி செய்து வந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆங்காங்கு கண்டு பிடிக்கப்பட்ட பழைய சரித்திர வரலாறுகள் பற்றி உலகுக்கு அறிவித்துள்ளனர். உர் (ருச) நகர ஆராய்ச்சியின் பயனாக கி. மு. 4300 ஆண்டுகட்கு முற்பட்டதென்று கூறப்படும். சுமேரியர்களது நாகரிகம் தெரிய வந்தது. இங்கு திங்கட்கடவுள் வணக்கமும் நிலமகள் வணக்கமும் பரவியிருந்ததற்குச் சான்றாக பல கோவில்கள் காணப்படுகின்றன. கதிரவன் கோவில்களும் காணப்படுகின்றன. நிலமகள் கோவிலில் செம்பினாலான எருதும் பறவையும் கண்டு பிடிக்கப்பட்டன. இவையே சுமேரியர் கி. மு. 4300 ஆண்டிற்கு முன் நாகரிகச் சிறப்புடன் வாழ்;ந்தனர் என்பதைக் காட்டுகின்றன. பிற்கால ஆராய்ச்சிகளின் பயனாக தமிழ் நாட்டுடன் உர் நகர வியாபாரத் தொடர்புகள் பற்றி நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

இரு ஆற்று ஓரங்களில் உள்ள பண்டை நாகரிக உலகம் எனப்படும் மொசெப்பொத்தேமியா ஆராய்ச்சிக் குட்பட்ட போது ஆங்கு தமிழ் மக்கள் சமய நிலையங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மொசெப்பொத்தேமியாவிற்குக் கிழக்கேயுள்ள ஏலம் எனப்பட்ட இடத்திலும் ஆராய்ச்சி நடந்தது. சுசா எனப்பட்ட இதன் தலைநகரம் கண்டுபிடிக்கப்பட்டது. அசீரியர் காலத்தின் பின்னர் ஏலம் பாரஸீக நாட்டுள் அமுங்கிவிட்டது. இங்கும் தமிழர் கோயில் வணக்கம் காணப்படுகிறதாக அறிஞர் கூறியுள்ளனர். பாலஸ்தீனத்தில் ஆராய்ச்சி நடந்தபொழுது பல நகரங்கள் வெளிப்பட்டுள்ளன. பல தமிழர் நாகரிக சின்னங்கள், பண்டைத் தமிழ் நாட்டு அணிகலன்கள் முதலியன இங்கு காணப்படுகின்றன.

எகிப்து தேசத்தில் ஆராய்ச்சி நடந்தபொழுது ஆங்கும் காணப்படுவது என்னை? பண்டை எகிப்திய அரசர்கள் கல்லறைகளிலும் கோயில்களிலும் தமிழ் நாட்டு முறைகளைக் கையாப்பட்டிருத்தலைக் காணலாம். பழைய தமிழ் மக்கள் அணிகலன்கள், உடைகள் முதலியன இருத்தலையும் அறிஞர் எடுத்துக் காட்டுகின்றனர். கி. மு. 4000 ஆண்டுகட்கு முற்பட்ட பிரமிட் கோபுரங்களை ஆக்குவித்த எகிப்தியர் தமிழருடன் தொடர்பு கொண்டிருந்தனர் எனப் பல அறிஞர்களும் கூறாநிற்கின்றனர். பிற்கால ஆராய்ச்சிகளின் பயனாக எகிப்தியரும் தமிழ் மக்களே என்ற அறிஞர்கள் துணிகின்றனர். அவற்றிற்குப் போதிய ஆதாரங்களும் கிடைத்துள்ளன. எகிப்து நாட்டிலேயுள்ள தௌல் பஃறி என்னும் ஊரின்கண் உள்ள அஹதாட் அரசியின் கோயிற் சுவரிற் பொறிக்கப்பட்டிருக்கும் ஓவிய எழுத்துக் கல்வெட்டுகளில் இவ் வெகிப்தியா தென்கடலகத்திருந்த பாண்டிய தேசத்தில் இருந்து வந்து நீலாற்றின் கரைகளில் குடியேறினார்கள் என்று கூறப்படுகிறது. எகிப்திய நாகரிகம் மிகவும் பூர்வீகமானது. இந்த நாகரீகத்திற்கு முற்பட்டது அசுரேய நாட்டின் நாகரிகமாகும். அசுர் என்னும் பட்டணத்தைத் தலைநகராகக் கொண்ட வாழ்ந்தவர்களே அசுரேயர். இந்த அசுரேய நாகரிகம் பாபிலோனிய நாகரிகத்திற்க மிகவும் பிந்தியது. பாபிலோனிய நாகரிகம் சுமேரியர் வழி வந்தது. இச் சுமேரிய மக்கள் தமிழ் நாட்டில் இருந்து பாபிலோனியா சென்று குடியேறியவர்கள். இவையெல்லாம் ஆராய்ச்சியாளர்களால் நன்கு ஆராய்ந்து நாட்டப்பட்ட உண்மைகளாகும்.

மத்தித்தரைக் கடலிலுள்ள மால்ட்டா என்னும் தீவில் ஆராய்ச்சி நடத்தியவிடத்து லிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஆங்கும் தமிழர் நாகரிகச் சின்னங்களே மலிந்து கிடக்கின்றன என்று ஆராய்ச்சி நு}ல்கள் நவிலுகின்றன. வட ஆபிரிக்காவிலே காதேஜ் என்னும் உன்னத ராஜ்யத்தை ஸ்தாபித்த வர்த்தக மக்களான பொனீஹியரும் தமிழ் நாட்டினரே யென்று கூறப்படுகின்றது. இப் பொனீஹியர் பாலஸ்தீனத்திற்கு மேற்கேயுள்ள அராபிய நாடுகளில் வாழ்ந்தனர்என்று சரித்திங்களால் அறியக் கிடக்கின்றது. மத்தித்தரைக் கடலில் பொனீஹிய மக்களின் வாணிபக் கப்பல்களே பெரும்பாலும் ஓடிக்கொண்டிருந்தன. இவர்கள் கணிதத் துறையில் வல்லுனராக இருந்தனர் என்று தெரிகிறது.

வட அமெரிக்காவில் றொக்கீஸ் மலைப் பிரதேசத்தில் ஆராய்ச்சி நடத்தியவர்கள் லிங்கங்களைக் கண்டு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு நிலத்தில்p மறைந்த பண்டைய ஆலயங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க மக்களும் தமிழ் நாட்டில் இருந்து சென்று குடியேறியவர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றனர் அமெரிக்காவில் கொலறடோ என்னும் மாகாணத்திலுள்ள “கனயன்” ஆற்றோரப் பீடபூமியில் சிவனின் ஆலயம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் வயது குறைந்தது ஒரு இலட்சமாவது இருக்குமென ஆராய்;ச்சியாளர் கூறுகின்றனர். நாகரிக ஸ்தானங்களில் ஒன்றான மெக்ஸிக்கோ நாட்டிலே தமிர் நாகரிக சின்னங்கள் ஆராய்ச்சிகளின் பயனாக வெளிப்பட்டுள்ளன.

பிரிட்டனில் உரோமருக்கு முன் குடியேறியிருந்தவர்களிடையேயுள்ள அறிவாளிகளை “திராவிட்” என அழைத்தனர் என்று கூறப்படுகிறது. இது தமிழ் மக்கள் ஆங்கும் குடியேறியிருந்தனர் என்பதைக் குறிக்கின்றது.

இவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்து பண்டைய தமிழ் மக்களி;ன் சிறப்புக்களை அறிந்தும், தமிழ் மக்கள் இன்னும் அடிமைகளாக இருக்கின்றனர் என்றால் அதனைவிட அவமானம் வேறும் வேண்டுமா? இன்றைய தமிழ் நாட்டின் நிலைமை சீர்திருத்தப்பட வேண்டுமா? தமிழ் நாட்டின் சீர்திருத்தத்திற்கு ஒவ்வொரு ஆணும்பெண்ணும் தத்தம் பங்குகளை உரிய முறைப்படி நிறைவேற்ற வேண்டும். இன்று பெண்மையை அடிமையாக வீட்டினுள் வைத்திருப்பதாலேயே ஆண் அந்நியருக்கு அடிமையானான். பண்டைக்காலத்தில் பெண்மையும் ஆண்மைக்குச் சமமாக உலகில் பிரகாசித்ததால் தமிழ்நாடே உலகில் சிறந்து விளங்கியது. இன்றுள்ள பெண்களின் அடிமை நிலைமையை அறிய விரும்பின் அன்னாரின் பண்டைய வீர வாழ்க்கையை நாம் அறிதல் முக்கியம். பெண் தெய்வத்தின் உயர்வே தமிழனிற்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்

தமிழ் நாட்டு பெண்பாலார்

ஒரு நாட்டின் சிறந்த நாகரிக நிலையின் உயர்வை அந் நாட்டு மக்களுடைய அறிவு, ஆற்றல், செல்வநிலை முதலியவற்றால் உணரலாகும். இம் மூன்றிற்கும் உரிய தெய்வங்களாக நாம் கலைமகள், பராசக்தி, திருமகள் என்னுந் தெயவங்களை வழிபடுகின்றோம். ஒரு நாட்டிற்க ஆடவர் எங்ஙனம் பெருமைக்குக் காரணராய் இருக்கின்றார்களோ அங்ஙனமே பெண்டிரும் நாட்டிற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

உலக மக்கள் யாவருள்ளும் பெண்டிர்க்குச் சகல உரிமைகளையுந் தந்துதவியவர்கள் தமிழரே. ஆடவர்க்கிருந்த சகல உரிமைகளையும் பெண்களும் அனுபவித்து வந்தனர். தமிழ்ப் பெண்டிர் அறைக்குள் பூட்டி வைக்கப்படாது வெளியுலகில் செல்வச் சுயேச்சை பெற்றிருந்தனர். ஆடவர், மகளிர் இருவருக்கும் அறிவு பொதுவாகும். பண்டைநாளில் அவர்களுக்குரிய உரிமைகள் இருபாலருக்கும் இருந்தன. இப்பொழுது எமக்குக் கிடைக்கும் சங்க நு}ற்கள் மூலம் பண்டைய பெண்களின் புலமையை அறியக்கூடியதாக இருக்கின்றது. தமிழ் நாட்டில் சுமார் ஐம்பது பெண்மணிகள் இயற்றிய செய்யுட்கள் எமக்கு இன்று கிடைத்துள்ளன. இன்னும் தமிழ்ச் சங்க நு}ல்களை நன்கு ஆராய்வோமாயின் ஆன்ற கேள்வியும்; அகன்ற கல்வியும் வாய்க்கப்பெற்ற பெண்மணிகள் அக்காலத்துத் திகழ்ந்தார்கள் என்பது தெரியவரும்.

பண்டைத் தமிழ் நாட்டில் காக்கை பாடினியர், சிறுகாக்கை பாடினியர், ஒளவையார், நச்சென்னையார், வெள்ளி வீதியார், வெண்ணிக்குயத்தியார், குறமகள் இளவெயினி, குறமகள் குறியெயினி, நன்னாகையார், பூங்கண்ணாத்திரையார், பொன்மணியார், பாரி மகளிர், ஆதிமந்தியார், பூத பாண்டியன், மனைவி பெருங் கோப் பெண்டு, ஆண்டாள், காரைக்காலம்மையார், காஞ்சிபுர அம்மைச்சி, குண்டலகேசி, நீலகேசி, விசையை, மசாத்தியார், மங்கையர்க்கரசி, இசைஞானியார், தடாதகைப் பிராட்டியர் ஆகிய பெண்மணிகள் தமிழ்த் தொண்டு புரிந்து மேன்மையடைந்தோராகும்.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்மணிகளாகும். இசைஞானியார், மங்கையர்க்கரசியார், காரைக்காலம்மையார் என்ற பெரும்புகழ் படைத்த இம் மெல்லியலார் மூவரும் நன்கு கற்றறிந்தவர்கள் எனக் கொள்ள இடமுண்டு. ஆழ்வார் பன்னிருவருள் ஆண்டாள் பெண்மணியே. அவர் பாடிய இன்னிசைப் பாடல்களை ஆராயுமிடத்து அன்னார் அக்காலத்திய தமிழ் நு}ல்களைக் குற்றமறக் கற்றவர்கள் என்பது தெற்றென விளங்கும். காரைக்காலம்மையாருடைய பாசுரங்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றாகிய பதினொராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளது.

இலக்கிய நு}ல்களைக் காட்டிலும் இலக்கண நு}ல்களைக் கற்றல் கடினமாகும். காக்கை பாடினியார், சிறு காக்கை பாடினியார் என்ற இரு பெண்களும் செய்யுனைப் பற்றிய இலக்கண நு}லை ஆக்கியுள்ளனர். புறநானு}ற்றில் பொன் முடியார் என்பவர் தாய் முதலியோர் கடமையைப் பற்றிப் பாடியுள்ளார்.

ஒளவையாரைப் பற்றிய பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அவருடைய பெருமை அளவற்றது. அவரது பெயரை வைத்துக்கொண்டு பெருமை பெற்றோர் பிற்காலத்தில் பலர் இருந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. குறமகள் குறியெயினி, குறமகள் இளவெயினி, வெண்ணிக் குயத்தியார் ஆகியோர் குயவர் குலத்துதித்த பெண்மணிகளாகும்.

கரிகாற் சோழனது மகளான ஆதிமந்தியார் பல அரிய செய்யுட்களைப்பாடியுள்ளார். பூதபாண்டியன் மனைவி பெருங் கோப்பெண்டு தன் கணவன் இறந்த காலத்து தீய்ப் பாயந்து உயிர் துறந்தனள். அக்காலையில் அவளைத் தடுத்தோரைக் கனன்று பாடிய செய்யுள் புறநானு}ற்றில் காணப்படுகின்றது. அரச குடும்பத்துப் பெண்மணிகளும் தமிழ்ப் பயிற்சியுடையோரா யிருந்திருக்கின்றனர்.

தமிழ்ப்பெண்கள் வாதப்போர் நடத்தியதாகவும் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. குண்டலகேசி யென்னும் பெண் அறிஞருடன் வாதப்போர் புரிந்தாளென நு}ல்கள் கூறுகின்றன. குண்டலகேசி யென்னும் பெயரிய காப்பிய மொன்றும் தமிழில் உள்ளது. சிற்சில நு}லாசிரியர்கள் அவ்வந் நு}ல்களில் வரும் பெண்மணிகளின் சிறப்புக்களை எடுத்துக் கூறுகின்றனர். ஜைன நு}லில் வரும் நீலகேசியும், சீவக சிந்தாமணியில் வரும் விசயையும், பெருங்கதையில் வரும் வாசவதத்தையும், மானணீகையும், குண்டலகேசியில் வரும் பத்திரையும் சிறந்தவர்கள் என்று அவ்வந் நு}ல்களால் அறியக்கூடியதாக இருக்கின்றது.

பெண்கள் சங்கீதப் பயிற்சியுடையோராக இருந்தனர். குறிஞ்சி நிலப் பெண்கள் தினைப்புனங் காக்குங் காலையில் அழகான பாட்டுக்களை இன்னிசையுடன் பாடுவர். வீரப் பெண்கள் தம் கணவர் போர்க்களத்திற் புண்பட்டபோது அப் புண்ணினால் உண்டாகும் வருத்தத்தை மாற்ற சங்கீதத்தைக் கைக்கொள்வார்கள். சங்கீதத்திற்கு அதிதேவதை மாதங்கி யென்னும் பெண் தெய்வமே. பெண்கள் வைத்தியம், சோதிடம், சித்திரம், சிற்பம் முதலியவற்றில் சிறந்து விளங்கினார்கள். எவ்வகையான துன்பத்தையும் பொறுக்கும் ஆற்றலே சிறந்தது. பெண்களிடம் இக் குணப் பண்பு சிறப்பாக அமைந்துள்ளது. பெண்களின் வீரத்திற்கும் கற்பிற்கும் கண்ணகியை எடுத்துக்கொள்ளலாம். புறநானு}ற்றில் வீரக்குடிப் பெண்களைப்பற்றிக் கூறப்படும் செய்யுட்களைக் காணலாம்.

பெண்கள் வாளேந்திப் போர்புரியும் திறனும், தேர் செலுத்தும் ஆற்றலும் பெற்றிருந்தனர் எனப் பல நு}ல்களாலும் நாம் அறிகின்றோம். மதுரையைத் தலைநகராகக் கொண்டு தமிழ் உலகை அரசாண்ட தடாதகைப் பிராட்டியா இமயம் வரை போர் புரிந்து வென்றது போன்று வீரமும் ஆற்றலும் பெற்று விளங்கிய அரச மகளிர் பலருண்டு. பெண்பாலார் தம் தேகம் வன்மைபெற பல வித விளையாட்டுக்களையும் விளையாடுவர். இன்று மேலை நாட்டுப் பெண்கள் பந்தாடும் வழக்கம் பண்டைத் தமிழ் நாட்டிலேயே முதலில் ஆரம்பமாயது. பெண்கள் பாடிக்கொண்டு பந்தாடுவர். சாழல், தௌ;ளோணம், தோணோக்கம், கோலாட்டம், கும்மியடித்தல் முதலியனவற்றை விளையாடுவர்.

பண்டைநாளில் பல உரிமைகளையும் பெற்றிருந்த தமிழ்ப் பெண்கள் இன்று என்ன நிலையில் இருக்கின்றனர் என்பதைப் பார்ப்போம். கூண்டில் அடைபட்ட பறவைகள் போன்று தம் சுதந்திரத்தையும் உரிமைகளையும் இழந்து கிணற்றுத் தவளைகள் போல வெளியுலகம் இத்தகையதென அறியாது வாழ்ந்து வருகின்றனர். “அங்குச் செல்லப்படாது@ இங்குச் செல்லப்படாது” எனத் தடுக்கப்பட்டும், ஆடவர் கூறியாங்குக் கூறுவதற்கும் விரும்பியாங்கு செய்வதற்கும் பழக்கப்பட்டும் வருகின்றனர்.

இன்றுள்ள தமிழ்ப் பெண்கள் ஆடுவர்களின் கட்டுப்பாடுகளால் தம் குழந்தைகளைப் பாதுகாக்கும் முறைகளை மறந்து, சுதாதார விதிகளைக் கைகடக்க விட்டு அறியாமை என்னும் சாகரத்துள் மூழ்கியுள்ளனர். பெண்கள் கல்வித் துறையில் இன்று பின்னடைந்திருத்தல் ஆடவர் குற்றமே. பெண்களுக்கும் கல்வி அவசியம் என்பது இக்காலத்தில் உள்ள ஒரு சிலருக்குத்தான் விளங்கியுள்ளது. ‘கண்ணுடைய ரென்போர் கற்றோர்” என்னம் கூற்றினால் கல்லாதவர்களுக்கு ஞானமென்னும் கண்ணில்லை யென்பது புலப்படுகின்றது. இத்தகைய ஞானக் கண்ணற்ற குருட்டுப் பெண்ணுடன் ஒரு ஆடவன் எங்ஙனம் வாழ்க்கையை நடத்த முடியும்? ‘இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றில்லை’ என இல்லாளுக்கு அத்துணைப் பெருமையைக் கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட பெண்ணிற்கு எத்துணை அறிவு இருக்க வேண்டும்? வாழ்க்கைக் துணைவியாக விளங்கும் விளங்க இருக்கும் பெண்கள் கல்வி கற்றே ஆகவேண்டும். பெண் சமூகம் முன்னேற வேண்டுமாயின் பெண்கள் கல்வி கற்றே தீரவேண்டும். பெண்களுக்கு அவர்கள் ஜீவியத்துடன் சம்பந்தமான துறையில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.

பெண்களது பெருமை ஆடவர்களது பெருமையுடன் சேர்ந்தே விளங்குகின்றது. சங்கீதத்தில் சுருதி எத்தகையதோ அத்தகையதே வாழ்க்கையிற் பெண்ணின் நிலையும். சுருதியில்லாமற் சங்கீதம் நடைபெற மாட்டாது. ஆனால் சங்கீதத்தில் வாத்தியகோஷங்களும் வாய்ப்பாட்டும் வெளிப்படையாகத் தோன்றி எல்லோராலும் போற்றப்படுகின்றன. சுருதியோ அவ்வளவு பெருமைக்கும் ஆதாரமாகி நிற்கும். அதுபோலவே பிறர் புகழுக்குப் பெண்கள் அஸ்திவாரமாக இருக்கின்றனர்.

தமிழ் உலகம் இன்று அடிமைத் தளையில் அகப்பட்டு அல்லற்படுவதற் கெல்லாம் மூலகாரணம் ஆடவர்கள் பெண்களை அடிமைப்படுத்திச் சிறுமை செய்ததே. பெண்களுக்கு பண்டை உலகில் இருந்த சமத்துவ உரிமைகளை வளங்கி, கொடியும் கொழு கொம்பும் போல பெண்களும் ஆணும் சேர்ந்து வாழ்தலே தமிழ் உலகை உய்விக்கும். தமிழ் உலகின் இன்றைய நிலையை ஆராய்ந்தறியவேண்டிய கஷ்டம் இல்லை. ஏன்? தமிழ்நாடு இன்றுள்;ள நிலைமை வெளிப்படையாகவே தெரிகின்றதே. பின்னர் ஆராய்ச்சி ஏன்? இன்றைய தமிழ் நாட்டின் நிலைமையை அறிந்து உயர்வழிக்க வகை தேடவேண்டும். அதுவே தமிழ் மகன் கடமை. இன்றைய தமிழ் நாட்டின் நிலைமையே வருங்காலத்திற்கும் ஊன்றுகோலாகும்.

இன்றைய தமிழ் நாட்டின் நிலை

பண்டைய உலகில் குமரிக்கண்டமெனப் புகழ்பெற்ற தமிழ்நாடு இயற்கைத் தேவனின் மாறுபாட்டால் ஒடுக்கப்பட்டுத் தமிழ்ச் சங்க காலத்தில் முத்தமிழ் நாடுகளாக விளங்கியது. அந்நாடுகள் இன்ற பின்னரும் ஒடுக்கப்பட்டு விட்டன. தமிழ் மக்கள் இன்று அடிமைகளாக வாழ்கின்றனர். அவர்கள் சுதந்திர உணர்ச்சி குன்றி வி;ட்டது. சுயநலமே பெரும்பாலானோர் போக்காக இருக்கிறது. பரந்திருந்த தமிழ்நாடு அந்நியர் அடக்கு முறைகளினால் சிதறிச் சீரழிந்து விட்டது.

மக்கள் வாழ்க்கையை நோக்கினால் அங்கும் ஏமாற்றமே பிரதிபலிக்கின்றது. பண்டைத் தமழன் பக்தி, சத்தியம், தியாகம் முதலியவற்றையே கடைப்பிடித்து வந்தான். தமிழன் உள்ளத்தில் தாயதின்பாலொடு சுரந்து}றிய கருணை இன்று மறைந்து விட்டது. சத்தியத்தின் போக்கே விசித்திரமாக இன்னதென்று கூறமுடியாத நிலையில் இருக்கிறது. சிறிதுகாலம் மறைந்த தியாகவுணர்ச்சியே இன்று தலைகாட்டுகிறது. சிற்சில இடங்களில் இவைகள் இருப்பினும் பரந்த தமிழ் நாட்டில் வாழும் சகலருக்கும் ஏன் தியாகவுணர்ச்சி யில்லையென்று ஆராயப் புகுந்தால் ஆங்கு சுயநலமே பெரிதாகக் காணப்படுகிறது. சுதந்திர மக்களாக தம்மை ஆண்டு வந்த தமிழ் மக்கள் இன்று அடிமைகளாகத் தளை பூட்டப்பட்டு விட்டனர். அந்நியர் ஆதிக்கத்தில் மோகங்கொண்டு அவர்கள் ஆட்டும் பொம்மைகள் போல உணர்ச்சியற்று இன்று வாழ்கின்றார்கள். வீரம் பொலிந்து விளங்கிய தமிழ் உலகத்தில் இன்று பேடித் தன்மையும் தம்முள் சச்சரவுமே காணப்படுகின்றன.

பண்டிருந்த ஒழுக்க முறைகள் இன்று மறைந்து விட்டன. நாட்டின் நலமே பெரிதென கொண்டு சுயநலமற்றோராக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் இன்று எவ்விதம் வாழ்கின்றனர்? ஒழுக்க முறைகள் எங்ஙனம் இருக்கின்றன? ‘கற்பெனப்படுவது பெண்களுக்கே@ ஆண்களுக் கன்று’ எனக் கூறி ஆண்பாலார் செய்யும் பாவச் செயல்கள் எத்தனை? மனதை தம் பண்டைய ஒழுக்க வழிகளில் கட்டுப்படுத்த முடியாத மாதர்கள் தம் மனம் போன வழிகளில் அலைகின்றனர். எல்லாம் எதனால்? தமிழனின் ஒழுக்கம் மறைந்ததே காரணம்.

வாணிகத் துறையில் வளம் பெற்ற தமிழ்நாடு இன்றைய உலகில் எந்நிலையில் இருக்கின்றதென ஆராய்கின், அங்கும் ஏமாற்றமே அடையவேண்டும். உலகப் போக்கிற்கு ஏற்ப தமிழ் மக்களும் இத் துறையில் முன்னேறிச் செல்கின்றனரா? செல்வம் கொழித்த தமிழ் நாட்டில் இன்றும் பண்டைய நிலை இருக்கிறதா? கப்பலோட்டிய தமிழன் இன்றுள்ள நிலைமைக்கும் அடிமைத் தளைதானே காரணம். இன்றைய நவீன முனறகளைப் பண்டு கையாண்ட தமிழன் இன்று அடிமையாக இருக்கின்றான். உலகிலுள்ள பல நாடுகளும் பண்டைய தமிழனின் போர்முறைகளைக் கற்று காலத்திற்கேற்ப மாற்றி வைத்துள்ளனர். எல்லா நாகரிகத்திற்கும் அடிப்படை தமிழர் வாழ்க்கையே. வீண் தர்க்கங்கள் புரிவதிலும் வானளாவிப் பேசுவதிலும் தமிழ் மக்கள் சளைக்கமாட்டார்கள். அத் திறனைச் செய்கையிலும் காட்டினால் நாடு சீர்திருந்திவிடுமா? அடிமைத்தளை அகன்று பட்டம் பதவிகள் மறைந்து விடுமா? என்ன!

தமிழ்நாட்டில் நிலப் பிரிவுகளைக் கொண்டே மக்கள் அழைக்கப்பட்டு வந்தனர். பின்னர் மக்கள் அவரவர் செய்யுந் தொழிலை நோக்கிப் பல பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தனர். இன்று அவ்வப் பெயர்களே அவ்வச் சமூகங்களுக்கு நிலைத்துவிட்டது. இதனால் சாதிப் பிரிவினை காட்டவா பண்டைத் தமிழர் எமக்குக் கற்பித்தனர்? ஒருவன் தனது ஜீவனங்கருதி என்ன தொழிலையும் செய்யலாம். அதைக் கொண்டு சாதிப் பிரிவினை வகுத்தல் தமிழ் மகன் கொள்கையல்ல. சாதியென்ற போர்வையை அகற்றிய பின்னரே சமூகம் முன்னேறும். இன்று எங்கு நோக்கினும் வைதீகக்கொள்கை, சாதிப் பிரிவினை, சமயபேதம், சுயநலம் என்பனவே தாண்டவம் புரிகின்றன. பண்டைத் தமிழன் சமய பேதம் காட்டினானா? சமய பேதம் காட்டியிருப்பின் இன்று தமிழ் நாட்டில் இத்துணை பிற் மதாசாரங்கள் பரவ முடியுமா?

“நாகரிகம்! நாகரிகம்!!” என்று அலறிக் கொண்டு மேனாட்டு வழிகளையே பின்பற்ற இன்றைய தமிழன் அவாவுகிறான். அப்படியே நடக்கிறான். இதனால்தானே தமிழன் என்றும் அடிமையாக இருக்கின்றான். தமிழ் நாட்டில் அன்று இருந்ததைவிடவா இன்று மேலை நாட்டினர் எம்மிடையே பரப்புகின்றனர்? பண்டைத் தமிழர் வாழ்க்கைக்கும், இன்றுள்ளோர் வாழக்கைக்கும் மலைக்கும் மடுவிற்குமுள்ள பேதமன்றோ காணப்படுகின்றது. முற்போக்கு ஒரு நாட்டிற்கு அவசியந்தான். மறு நாட்டினருடன் ஒத்து முன்னேற்றமடைய வேண்டாமென்று யார் எதிர்ப்பது? முன்னேற்றமடையும் பொழுது பண்டைத் தமிழனின் பழைய வாழ்க்கையைப் புது மெருகு கொடுத்து நடந்தால் அதன்முன் மேனாட்டு நாகரிகம் தலைநிமிர்ந்து நிற்குமா?

தமிழ் நாட்டில் தேன் சொரிந்த அமுதத்த தமிழ் மொழியின் சிறப்பு இன்று எங்கே? இன்றைய தமிழ் மக்கள் பலர் மேனாட்டு நாகரிகங்களைப் தழுவியதால்தம் தாய்ப்பாஷையை மறந்துவிடுகின்றனர். தமிழ் வளர்ச்சிக் கூட்டங்களில் பிரசங்கமாரி பொழியும் பொழுது எம் மொழியில் பேசுகின்றனர்? தமிழ் மொழியில்தானா அன்றி அந்நிய மொழியிலா? “நாம் தமிழர்” என்று தலைநிமிர்ந்து கூறுவதற்கு அநேகருக்கு அவமானமாக விருக்கிறது. தலைநிமிர்ந்து உலகப் போக்கை எதிர்த்துத் தன் தனிச் சுதந்திரத்தை நிலைநாட்ட மாட்டாத தமிழன் உலகில் வாழ்ந்தென்ன பயன் உண்டு!

சங்க காலங்களில் எழுதப்பட்ட நு}ல்கள் இக் காலத்திற்கு ஏற்றனவாக இல்லையென்றும், அதனாலேயேதாம் அந்நிய மொழிகளைக் கற்கிறோமென்றும் பலர் கூறுகின்றனர். தமிழ் மொழியைச் சரியாக உரிய முறைப்படி படித்தவர் இங்ஙனம் கூற முன்வரமாட்டார்கள். இன்றைய உலகிலுள்ள பல நு}ல்களும் தமிழனிடம் அன்று இருந்தன. இதனை மேனாட்டு அறிஞர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றனர். உலக நாகரிகத்திற்கு உற்பத்தியே தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ் நாட்டில் பிறந்த தமிழ் மொழியில் இன்றைய நு}ல்;கள் இல்லையென்று கூறுவது எதை ஒக்கும்! பண்டைய தமிழ்க் கலாசாரத்தினை முற்றும் ஆராயப்புகின் இன்றைய சகல கலைகளையும் நாம் காணலாம்;. அரசியல் வேண்டுமா! பொருளாதாரக் கொள்கைகள் பற்றி அறிய வேண்டுமா! சங்கீத நு}ல்கள் வேண்டுமா! சமய நு}ல்கள் வேண்டுமா! வைத்திய நு}ல்கள் வேண்டுமா! போர்க்கலை பற்றி வேண்டுமா! நாகரிக வாழ்க்கை பற்றி வேண்டுமா! எதுபற்றி வேண்டும்?

தமிழ் மக்கள் பலர் பணம், பட்டம், பதவி முதலியவற்றிற்காகத் தங்கள் சமயத்தில் இருந்து அந்நிய மதங்களைத் தழுவும் பொழுதே அடிமைகளாக மாறிவிட்டனர். எதற்கு அடிமைகள்? பட்டம், பணம், பதவி ஆகிய சுயநலப் பேறுகளுக்கு அடிமைகள். சைவ சமயத்தில் என்ன குறையைக் கண்டு பிற மதங்களைத் தமிழர் தழுவுகின்றனர்? உலகம் முழுவதும் பரவியுள்ள சகல மததத்துவங்களும் சைவ சமயத்தில் நாம் காணக்கூடியதாக இருக்கி;ன்றன. சைவ சமயம் தோன்றிய காலம் எப்பொழுதென வரையறுத்துக் கூற முடியாது. ஒருவராலும் இதுவரை அதன் காலஎல்லையை வரையறுத்துக் கூற முடியவே முடியவில்லை. அத்துணைப் பழைமை வாய்ந்தது சைவம். உலகின் ஏனைய சமயங்களின் உற்பத்திகாலம் இன்னதுதான் என்று வரையறுத்துக் கூறமுடியும். சைவ சமயத்தின் கொள்கைகளே புதுமெருகுடன் மறு சமயங்களாகப் பிரகாசிக்கின்றனவேயன்றி வேறில்லை. காலத்திற்கேற்ப மலர்ச்சி வேண்டுமாயின் ஆக்கிக்கொள்ள இடமுண்டு. முன்னும் எம் முன்னோரே தமக்கு எற்றவாறு இவற்றை ஆக்கிக் கொண்டனர். இன்று நாமும் எமக்கு ஏற்றவாறு செய்துகொள்ள முடியும். இன்றைய தமிழ்நாடு சாதி சமய பேதங்கொண்டு பிளப்புண்டுள்ளது. இப் பிளவை இன்னும் பெருக்கிக் கொள்ளவே சுயநலவாதிகள் முற்பட்டுள்ளனர். உலகம் முழுவதுமம் பரந்துள்ள தமிழ் மக்களுள் சாதி சமயப் பிரிவினை ஏன்? பிரிவினையை விட்டு ஒன்றுகூடி அடிமை வாழ்வை அகற்ற வேண்டுவது அவசியம். ஐக்கியமே உயர்விற்கு வழி. சுதந்திர தாகம் இன்று உள்ளத்தை ஆட்கொண்டு எம்மை நடத்த முன்வருகிறது. சுதந்திரத்தை அடைந்து அடிமை வாழ்;வை நீக்கி வாழ உயர் வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழ் நாட்டின் உயர்வழி

தமிழ் வள்ளல்காள்!

உங்கள் மூதாதையர்கள் பல துறைகளிலும் எள்ளத்துணையும் வழுச் சிறிதுமின்றி வல்லுநராய் விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் இன்னும் வேண்டுமா? நீங்கள் அவர்கள் பாற் றோன்றிய வழித்தோன்றல்களன்றோ!

மேலைத்தேசங்கள் காடடர்ந்து ஆங்கு வதிந்தோர் கொம்பரிலுலாவி, மந்திப் பருவம் நீங்கி, ஈஞ்சு தொழுது வாழ்ந்த அக்காலத்து எவ்விலக்கணமும் முற்றுற வைத்துப் பல்லிலக்கியங்களையும் இத்துணைக் காலமும் தகர்த்திட முடியா தமைத்தனரன்றோ உம் மூதாதையர்கள்! தந்தை மகற்காற்றும் உதவி வேறு யாவும் உளதோ?

இத்துணை மகிமையையும் உமக்களித்த தந்தையர்க்கு “இவன் தந்தை என்னோற்றான்” என்னும் மிகிமையைக் கரவாதளித்தலன்றோ உம் கடன். அங்ஙனமின்றி கேவலம்! நீசச் சாதியார் பண்டைய எம் நாகரிகங்களைக் கைக்கொண்டு தற்கால சாஸ்திர வகைகளால் உம்மை ஒருபுற மொதுக்கியும் ஆதிக்க பலத்தால் மறுபுறம் நசுக்கவும் அடிமை வாழ்வு வாழ்தல் உம்மனோர்க் கழகா?

கன்னியாகுமரி முதல் இமயம் வரை இன்று விளங்கும் இந்திய நாடு யாருடையது? குமரி முனைக்கும் இமயத்திற்கும் இடையேயுள்ள நாடு கடவுளால் எமக்குக் கொடுக்கப்பட்டது. அங்கு அந்நியர் ஆட்சியில் நமக்கு நன்மை பயப்பதாக இருந்தாலும் நாம் அந்த அடிமை வாழ்வை விரும்பலாமா? என்னுடைய சொந்த வீட்டிற்கு - தாய் நாட்டிற்கு - அந்நியன் அதிகாரியாக இருக்க நாம் அடிமையென்று கூறுவது சுதந்திரமல்ல. எனது வீட்டிற்கு - தேசத்திற்கு நான் தான் அதிகாரி’ என்று கூறுவது தான் சுயராஜ்ய பேரிகையாகும். எங்கள் முன்னோர்கள் ஆண்ட முத்தமிழ் நாடு முழுவதும் எமக்கே சொந்தமாகும். சத்தியம், பொறுமை, அன்பு இவற்றால் நல்ல வழியில் நாம் செல்லவேண்டும். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடப்படாது. விடுதலையை விரைவில் அடைந்தே தீரவேண்டும். பாரதநாட தமிழ் மகனின் சொத்து, அங்கு அவன் சுதந்திரமாக வாழ ஏன் அவனுக்கு உரிமையில்லை?

“இமயந் தொட்டுக் குமரி மட்டும்
இசை பரந்த மக்கள் நாம்
இனியும் அந்தப் பெருமை கொள்ள
ஏற்ற யாவும் செங்கு வோம்”

என்று நாமக்கல் கவிஞர் ஊக்கம் கொடுத்தும் ஏன் வாழா விருக்கிறீர்கள்? பாரதியின் சுதந்திரப்பாக்கள்கூட தமிழ்மகனுக்கு உணர்ச்சி யூட்டவில்லை யென்றால் வேறு என்னதான் தமிழனை விழிப்படையச் செய்யும்? உலகிலே எவனொருவனுக்கு எண்ணஉரிமை, எழுத உரிமை இருக்கென்று பாத்தியம் கொண்டாடிக் கொண்ட அதே நேரத்தில் அவ்வுரிமைகளை மற்றவனுக்கு வழங்க மறுகின்றானோ அன்றே நாம் அதனை எதிர்க்க வேண்டும். ஜாதியையும் மதத்தையும் நாம் கொள்ளப்படாது. அவற்றை வீட்டுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் யாவரும் சமம் என்ற கொள்கையுடன் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரிட வேண்டும். சுதந்திரம் பெற்ற பின்னர் பண்டைத் தமிழனின் புகழுக்கு ஏற்ப எம் வாழ்க்கையையும் நாம் மேன்மையடையச் செய்தல் வேண்டும். எம் மொழியும் உலகில் உன்னத நிலையை மீட்டும் பெற வழி தேடவேண்டும். பண்ட மேலை நாடுகளிலும் பார்க்க எங்ஙனம் எங்கள் மூதாதையர் மேன்மையுடன் விளங்கினரோ அதிலும் மேன்மையுடன் விளங்குதலே எமது கடன். பொன் போன்ற நேரத்தை வீணே கழித்து இன்னலுறாத இன்றே அதுவும் இப்பொழுதே சுதந்திரமடைந்து உலகில் உன்னத ஸ்தானத்தை அடைய எழுங்கள். உங்களுக்குள் ஐக்கியம் அவசியம், ஐக்கியமிருப்பின் சுதந்திரம் அடைவது சுலபம்.

இன்றைய உலகில் ஒவ்வொரு தமிழனும் தன்னால் தன் பரிசனத்திற்கும், தன் சமூகத்திற்கும், தன்னாட்டிற்கும் பயன்பட வாழ வேண்டும். இன்று பலர் தம் நிலையை எண்ணி எண்ணி மனம் கொதித்தெழுகின்றனர். அநேகர் வாழாவிருக்கும்பொழுது ஒரு சிலரால் என்செய்ய முடியும்? நீர்மேற் குமிழிபோல் நிலையிலா இம் மாயவாழ்வு எத்துணைக் காலம் நீடிக்கும்? அக்கால எல்லைக்குள் மகத்தான தியாகமே உலகில் முன்னிற்க வேண்டும். இன்றைய உலகில் உள்ள இளைஞர்களாலேயே வருங்காலம் உயர்வடைய முடியும்.

இளந் தமிழ்ச் சிங்கங்காள்!

ஒன்றுபடுங்கள். ஒற்றுமையாக நாட்டின் சுதந்திர கீதத்தைப் பொழியுங்கள். முன்னேற்றப் பாதையில் நடவுங்கள். உங்களாலேயே நாட்டிற்கு விமோசனம். உங்கள் நாடே உங்கள் பொக்கிஷம். சாதி, சமய, மொழிப் பிரிவினை உமக்கு வேண்டாம். “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று பாரதி அறைந்த மொழிகளையே உயிராக்கி கொள்ளுங்கள். உங்கள் சுதந்திரத்தைப் பெற்று உங்கள் மொழியைப் பேணுங்கள்.

“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்”

எனப் பாரதி கூறுந் தொண்டை ஆற்றுவது உங்கள் கடமை.

“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்குங் காணோம்”

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுத காதினிலே”

என்று பாரதியார் தமிழ்மொழிப்பற்றிக் கூறியவற்றை உணருங்கள். உணர்ந்தால் உங்களுக்குள் ஒற்றுமைமயுணர்ச்சியும், சுதந்திரப் பற்றும், மொழி ஆர்வமும் உண்டாகும்.

பண்டைத் தமிழனது உள்ளத்துதித்தது கருணை வெள்ளம். அதனை மறக்கப்படாது, சுதந்திரத்தை அடைந்து தமிழர் தலை நிமிர்ந்து நிற்பதற்கு வெற்றி வேண்டும். ஆனால்,

“வெற்றி என்பது கொலையல்ல
வெற்றியும் அதனால் நிலையல்ல”

என்னும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கரின் வாக்கை ஓர்ந்துணருங்கள்.

இளைஞர்களே!

‘நாம் அடிமைகள் அல்ல’ என்று கூறும் ஆண்மைதான் சுதந்திரம். கருணையைப் பின்பற்றியே உங்கள் கடமையைச் செய்யுங்கள்

“தமிழ் நாட்டின் சரித்திரத்தை மனதில் வைத்து
தாராளத் தமிழர்களின் தன்மை கற்று
அமிழ்தான தமிழ்மொழியில் அடங்கியுள்ள
அகிலத்தின் நல்லறிவு அனைத்துங்கொண்டு
நமதாகும் மிகச்சிறந்த நாகரிகம்
நானிலத்திற் கிப்போது நன்மைகாட்ட
எமதாகும் மிகப்பெரிய கடமையென்று
எண்ணியெண்ணித் தீர்மானம் பண்ணவேண்டும்”

என்னும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கரின் கூற்று இளைஞர்களாய உங்கள் மனதில் நன்கு பதிய வேண்டும். “நாம் தமிழர். இனியும் அடிமைகளாக இருக்கப்போவதில்லை” எனத் தலை நிமிர்ந்து செல்லவேண்டும். அச்சம் விட்டதுதான் சுதந்திரம். அஞ்சாநெஞ்சமே சுயராஜ்யம். வெறும் கோஷங்களாலோ, எழுத்துக்களாலோ சுயராமஜ்யத்தை அடைய முடியாது. உங்கள் மனம், வாக்கு, காயம் மூன்றும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். மனதில் நல்லதை நினைத்து வாயால் நல்லதை நவின்று தேகத்தால் தேசத்திற்குப் பயன்படும் செய்கைகளைச் செய்வதே இளைஞர்களின் கடமை. தமிழ்ச் சமூகம் முன்னேறி பண்டைய உச்சநிலையை அடைய, இளைஞர்களே! சுதந்திர கீதத்தைப் பொழியுங்கள். உயரிய வழியில் நடவுங்கள். உங்கள் அடிமைத் தளை அகலும். தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ்மொழி மூன்றும் விமோசன மடையும்.


பிழை திருத்தம்

பக்கம் வரி பிழை திருத்தம்
5 22 தெடியேள் தொடியோள்
6 29 இருந்ததமிழ் இருந்தமிழ்
7 17 பிதலின்று பிரிதலின்று
8 28 ஆளமுடைய ஆழமுடைய
9 29 ஒரு புனல் தனித்து ஒழுகு புனல் ஒளித்து
9 30 ஞிமிளொடு ஞிமிறொடு
12 7 வழக்கம் வழக்கமாக
13 20 கிளத்தி கிழத்தி
13 21 கிளத்தியாவாள் கிழத்தியாவாள்
13 35 அளலர் அளவர்
19 12 கவிந்தி கவுந்தி
21 27 தற்றர் ஒற்றர்
22 17 கோனும் கோலும்
22 25 ஒளிவனை ஒளிவளை
23 13 தன் மகன் தன் மகள்
34 2 வளங்கவும் வழங்கவும்
38 31 ஹொஸ் ஹெரஸ்
47 13 உணர்ச்சியிலிருந்து உணர்ச்சியிருந்து
55 23 நச்சென்னையார் நச்சௌ;ளையார்.


“ஆர்வமுள்ள இவ்விளந் தமிழர் தமிழகத்தின் பழமையையும் செழுமையையும் குறித்து அறிஞர் கூறிய முடிபுகள் சிலவற்றைத் தொகுத்துத் தமிழன் மாட்சி என்னும் இக் கட்டுரையை வரைகின்றார்.

இவ் வெளியீடு தமிழ் மாணவர்க்குப் பயன்தரு நீர்மையதாகும் என்பது எனது உள்ளக்கிடக்கை”

பல்கலைக்கழகம்
கொழும்பு விபுலானந்தர்
10-2-47
படம் உபயம்: திரு இராஜ அரியரத்தினம்
விற்பனை உரிமை :
ஸ்ரீலங்கா புத்தகசாலை,
வண்ணார்பண்ணை, ::யாழ்ப்பாணம்.
இளைஞன்
இளைஞர்களின் தலைசிறந்த ஒரு
- வாரவெளியீடு -
இளைஞன் பிரசுராலயம்
நிர். 2. கிரான்ட்பாஸ் வீதி
கொழும்பு
ஸ்ரீ பார்வதி அச்சகம்
ஆஸ்பத்திரி வீதி
யாழ்ப்பாணம்.