கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நூற்பகுப்பாக்கம்  
 

வே. இ. பாக்கியநாதன்

 

நூற்பகுப்பாக்கம்

வே. இ. பாக்கியநாதன்

-------------------------------

நூற்பகுப்பாக்கம்
நூலகர்களுக்கான கைநூல்

வே. இ. பாக்கியநாதன்
பி. ஏ., எம். எஸ்சி. (நூலகவியல்)

அயோத்தி நூலக சேவைகள்
ஆனைக்கோட்டை

-----------------------------------

நூலகவியல் வெளியீடு : 1

நூற்பகுப்பாக்கம் : நூலகர்களுக்கான கைநூல்
BOOK CLASSIFICATION: Librarians' hand book

by:
V. E. Packianathan
B. A., M. Sc. (Lib. Sc.)

First Edition: July, 1986.
No. of Copies : 500
Publishers: Ayothy Library Services, Anaicoddai, jaffna.

Printers: aR. eS. Printers, Jaffna
Pages: (V), 21p.
Price: Rs 15/=

D. D. C. [19th Edition]: No: 025.431

--------------------------------------------------

பொருளடக்கம்

வெளியீட்டுரை i
முன்னுரை iii
அறிமுகம் iv
பிரதம வகுப்புக்கள் 1
பிரிவுகள் 1
தூயி தசாம்சப் பகுப்புமுறை 16-வது பதிப்புக்கமையச் செய்யப்பட்ட உதாரணங்கள் 14
எமது நூலகங்களில் பொதுவாகக் காணப்படும் சில நூல்களுக்கான பகுப்பிலகணங்கள் 17
பிரதேச எண்கள் 19

------------------------------------------------

நூலாசிரியரைப்பற்றி...

யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று அங்கு மூன்று வருடங்கள் வரை ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் இந்தியாவில் தனது கலைமாணிப் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பட்டதாரியாகியதும் கொழும்பு வெஸ்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த காலத்தில் "புல் பிரைட்" (Fulbright) புலமைப் பரிசில் பெற்று அத்திலாந்தா (Atlanta) சர்வகலாசாலையில் நூலகவியல் முதுகலைமாணிப் (M.S. in L.S.) பட்டம் பெற்றபின்னர் கலிபோர்ணியாவில் உள்ள சாண்டியாகோ பொதுசன நூலகத்தில் ஒரு வருடகாலம் கடமையாற்றினார். நாடு திரும்பியதும், யாழ். பொதுசன நூலகராக 1964 முதல் 1968 வரை பதவி வகித்தார். 1969-ம் ஆண்டு தொடக்கம் பலாலி கனிஷ்ட பல்கலைக்கழகக் கல்லூரியில் நூலக விரிவுரையாளராகச் சேவையாற்றி, 1971-ஆம் ஆண்டு யாழ். பல்தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மாற்றலாகி அதே பதவியிலிருந்து 1982-இல் உப அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். தற்போது தெகிவளை தொழில்நுட்பக் கல்லூரியில் உப அதிபராகப் பதவி வகிக்கின்றார்.

1964-ம் ஆண்டிலிருந்து இலங்கை நூலகச் சங்கத்தின் சிரேச்ட விரிவுரையாளராக நூற் பகுப்பாக்கம், பட்டியலாக்கம் பற்றி விரிவுரையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

----------------------------------------------

வெளியீட்டுரை

* நூல்கள் பயன்படுத்தப்பட வேண்டியவை
* ஒவ்வொரு வாசகருக்குமுரிய அவரது நூல்
* ஒவ்வொரு நூலுக்குமுரிய அதனுடைய வாசகர்
* வாசகரின் நேரம் பேணப்படல் வேண்டும்
* நூலகம் ஒரு வளர்ச்சியடைகின்ற நிறுவனமாகும்.

இவை நூலக அறிஞர் கலாநிதி எஸ். ஆர். இரங்கநாதன் அவர்களது பஞ்சசீலக் கொள்கைகளாகும். நூலகவியலின் பிரதான விதிகளான இவை பேணப்படுவதற்கு ஒழுங்கான நூற்பகுப்பு, ஒவ்வொரு நூலகத்திலும் அவசியமாகிறது. நூலகத்தில் உள்ள நூல்கள் தரம்பிரித்து அடுக்கப்படுவதால் வாசகர் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் நேரம் கணிசமாகக் குறைகின்றது. ஒரே துறையிலுள்ள நூல்கள் ஒருங்கேயும், தொடர்பான துறைகள் அருகருகேயும், தொடர்பற்ற நூல் வகுப்புக்கள் வேறுபடுத்தப்பட்டும் நூற் பகுப்புச் செய்யப்பட்ட ஒரு நூலகத்தில் வாசகருக்குரிய நூல்களை இலகுவில் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும். இவ்வகையில் ஒரு நூலகத்தில் நூற்பகுப்பாக்கம் இன்றியமையாததாகும்.

பல்வேறு நூலகங்களும் தத்தமக்குரிய ஒரு பகுப்பு முறையின் அடிப்படையில் தமது நூற் சேர்க்கைகளைப் பகுப்பாக்கம் செய்து வைத்துள்ளன. இதைத் தவறாகக் கருதமுடியாதாயினும், நூலகங்களின் பகுப்பாக்கமானது ஒரே தன்மையான சீரானதொரு ஒழுங்கில் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது பல்வேறு நூலகங்களையும் நாடும் ஒரு வாசகனது சுயமான தெடுதலுக்கு எளிதாகவிருக்கும். நூலகங்களுக்கிடையே பகுப்பாக்க நடைமுறையில் ஒற்றுமை ஏற்படவேண்டுமாயின் இத்தகைய நூற் பகுப்பாக்கக் கைநூல்கள் பரந்த அளவில் நூலகங்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவிருத்தல் வேண்டும்.

இந்நோக்கத்தினை ஓரளவு ஈடுசெய்யும் வகையில் எமது இரண்டாவது வெளியீடாக "நூற்பகுப்பாக்கம்" என்ற இந்நூல் வெளிவருகின்றது. இதனை வெளியிடுவதற்கு உறுதுணையாகவிருந்த இலங்கை நூலகச்சங்க விரிவுரையாளர் திரு. வே. இ. பாக்கியநாதன் அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். எமது முதல் வெளியீடான "முதல் உதவி"க்கு வாசகர்கள் அளித்து வரும் ஆதரவு எம்மைத் தொடர்ந்தும் வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபட வைக்கின்றது.

பொது நூலகங்கள் மட்டுமன்றிப் பாடசாலை நூலகங்களும், சனசமூக நிலைய நூலகங்களும், தனியார் நூலகங்களும் இந்த நூலின் பயனைப் பெறவேண்டும் என்பதே எமது அவா.

என். செல்வராஜா
நிர்வாக இயக்குநர்.
அயோத்தி நூலக சேவைகள்,
ஆனைக்கோட்டை.

------------------------------------------------

முன்னுரை

எம் மத்தியிலேயுள்ள பல்வேறு தரப்பட்ட நூலகங்களினதும் தமியாரதும் நூற்சேர்க்கைகள் முறையாகப் பகுத்தல் செய்ய முடியாதிருப்பதை நம் காண்கிறோம். நூலகவியலில் பயிற்சி பெறாதவர்கள் நூலகங்களில் கடமை புரிவதனாலும், பகுத்தல் செய்வதற்கு இன்றியமையாத உதவு கருவியாக விளங்கும் பகுப்பு முறைப் பிரதிகள் இல்லாமையினாலும் இந்நிலை தோன்றலாயிற்று. இப்பொழுது சகல நாடுகளிலும் மிகப் பிரபல்யமாக விளங்கும் தூயி தசாம்ச பகுப்பு முறைப் (Dewey Decimal Classification) பதிப்புக்கள் சகலரினாலும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலை இருப்பதால், தமது நூற் சேர்க்கைகளைப் பகுத்தல் செய்ய வேண்டுமென்ற பெருவிருப்புக் கொண்டவர்கள் கூட இவ்வடிப்படைத் தொழில் முறையினைச் செய்ய முடியாதிருப்பது வேதனைக்குரியது. இதனை நிவர்த்தி செய்வது நூலகவியலில் ஈடுபாடு கொண்டோர் அனைவரினதும் பணியாகும். இதனை மனதிற் கொண்டே இச் சிறு நூலினைத் தமிழ் பேசும் மக்களுக்கு, முக்கியமாகத் தமிழ்ப் பகுதிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன். இதன் பலனை யாவரும் பெற இம்முயற்சி கைகொடுக்கும் என்பது எமது தாழ்மையான எண்ணமாகும்.

வே. இ. பாக்கியநாதன்
திருநெல்வேலி
1-7-86

-----------------------------------

அறிமுகம்

மெல்வில் தூயி (Melvil Dewey) என்ற அமெரிக்கர் 'ஆம்கேஸ்ற்' கல்லூரியின் உதவி நூலகராக நியமிக்கப்பட்ட பொழுது, பெருகி வரும் நூல்களை எவ்வாறு பகுத்தல் செய்யலாம் என்று சீரிய முறையில் சிந்திக்கத் தொடங்கினார். அவரது சிந்தனையின் விளைவாகவே இன்று உலக நாடெங்கிலும் மிகப் பிரபல்யமாக விளங்கும் தூயி தசாம்சப் பகுப்புமுறை உருவானது. காலத்தினால் இவர் செய்த உதவி ஞாலமுள்ளவரை நீடித்திருக்கும் என்று அவர் அன்று சிந்திருக்க மாட்டார். ஆனால் காலம் வென்றுவிட்டது. 42 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளிவந்த இப்பகுப்பு முறை நூற்றாண்டு காலம் கடந்து 19-வது பதிப்பாகி நிற்கிறது.

தூயி இப்பகுப்பு முறையில் உலக அறிவு முழுவதையும் பத்து வகுப்புகளில் உள்ளடக்கியுள்ளார். இதனை மென்மேலும் பத்துப் பத்தாகப் பிரிக்கக் கூடிய தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளார். இதனாலேயே தசமப்பகுப்பு முறை என அழைக்கப்படலாயிற்று. இதனது 16-வது பதிப்பு இரு தொகுதிகளைக் கொண்டதாக உள்ளது. ஒன்று வகுப்புகளினது நிரைகளை மிக விவரமாகக் கொண்டுள்ளது. மற்றையது இதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடிய முறையில் தொடர்பு அட்டவணையாக உள்ளது. 17-ம், 18-ம், 19-ம் பதிப்புகள், 16-வது பதிப்பிலும் பார்க்கப் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களைக் கொண்டு வெளிவந்திருக்கின்றன வெனினும் இதன் 16-வது பதிப்பானது இன்றும் மிகச் சிறப்புடைய பதிப்பாக விளங்கி வருகின்றது. கடைசிப் பதிப்புக்கள் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டதனால் 16-வது பதிப்பினைக் கொண்டே அனேக நூலகங்கள் தமது நூற்சேர்க்கையினைப் பகுத்தல் செய்துள்ளனர். இவற்றினைப் புதிய பதிப்புக்களுக்கமைய மாற்றியமைப்பதென்பது சுலபமான காரியமல்ல. எனவே, 16-வது பதிப்பின் இர்ண்டாவது பிரிவுகள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படுமிடங்களில் பாவனையாளர்களின் வசதிகருதி ஒரு சில பிரிவுகள் விரிவாக்கப்பட்டுள்ளன.

முக்கியமாகப் பிரதேச எண்களைப் பிரத்தியேகமாகத் தொகுத்து வழங்கியுள்ளேன். 17-வது பதிப்பிலே இடவாரிப் பட்டியல் (area tables) சிறப்பான இடத்தினை வகிக்கின்றது. ஆனால் 16-வது பதிப்பிலே இது விடப்பட்ட காரணத்தினால் வாசகர்கள், பாவனையாளர்கள் நலன்கருதி முக்கியமாகத் தேடப்படும் நாடுகளுக்குரிய எண்களைப் பிறிதோர் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வெண்களை உபயோகப்படுத்தும் பொழுது அவ்வெண்களுக்கு முன்னுள்ள கோட்டினை நீக்கிப் பிரதேச, நாட்டு எண்ணைப் பாடப் பகுப்பெண்ணுடன் சேர்க்கவும். பிரதேசரீதியாகப் பாடங்கள் எழுதியிருப்பின் இப் பகுப்பெண்ணின் மூலம் அவை தெட்டென விளங்க உதவும். உதாரணமாக, இலங்கைப் பொருளாதாரம் இலங்கை சார்பானதென்று தெரிகின்றது. ஆனால் இதற்குரிய பகுப்பெண் தொடர்பு அட்டவணையில் இல்லையெனினும் நாமாக இதனை அமைத்துக் கொள்ளலாம். பொருளியலுக்குரிய எண் 330. இலங்கைக்குரிய பிரதேச எண் 5489 ஆகும். இவற்றினை நாம் ஒன்று சேர்ப்பதன்மூலம் இலங்கைப் பொருளாதாரத்துக்குரிய பகுப்பெண்ணை மிக இலகுவாக அமைத்துக் கொள்ள முடியும் (330.5489).

இவற்றினை நன்கு புரிந்து, பகுப்பாளர்கள் தங்களது நூற்சேர்க்கைகளைப் பகுத்தல் செய்ய உதவுவதற்காக பல்வேறு வகுப்புக்களிலிருந்தும் தகுந்த உதாரணங்களைத் தேர்ந்தெடுத்து நூல்களுக்குரிய பகுப்பெண்களை எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் எனக் காட்டப்பட்டுள்ளன. நூலக அறிவு இல்லாதவர்கள் கூட இவற்றினை கற்றுணர்ந்து தம்மிடம் உள்ள நூற்சேர்க்கைக்குரிய பகுப்பெண்களை வழங்கலாம். நுண்ணிய பகுப்பாக்கம் செய்யாது பொருள்வாரியாக நூல்களை ஒருங்கு கொண்டு வந்தாலே ஒரு நூலகர் வாசகர்களுக்குத் திருப்தியான சேவையினைச் செய்யலாம். செய்யவேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் செய்ய முடியாதது எதுவுமில்லை.

----------------------------------------

பிரதம வகுப்புக்கள் Main Classes

000 பொது Generel Works
100 தத்துவம் Philosophy
200 சமயம் Religion
300 சமூக விஞ்ஞானங்கள் Social Sciences
400 மொழி Language
500 தூய விஞ்ஞானம் Pure Science
600 தொழில்நுட்பம் Technology
700 நுண் கலைகள் The Arts
800 இலக்கியம் Literature
900 புவியியல், வரலாறு, வாழ்க்கைச் சரித்திரம் Geography, History, Travel, and Biography.

பிரிவுகள் - Divisions

000 பொது General Works

010 நூல் விவரப் பட்டியல் Bibliographies
020 நூலகவியல் Library Science
030 கலைக்களஞ்சியம் (பொது) General Encyclopaedia
040 கட்டுரைத் தொகுப்பு (பொது) General Collected Essays
050 பருவ வெளியீடுகள் (பொது) General Periodicals
060 பொதுக் கழகங்கள் general Societies
070 பத்திரிகைக் கலை newspaper Journalism
080 தொகுப்புப் பணி Collected Works
090 கையெழுத்துப் பிரதிகளும், கிடைத்தற்கரிய நூல்களும் Manuscripts and Rare Books

100 தத்துவம் Philosophy

110 மனநூல் அடிப்படைத் தத்துவம் Meta Physics
120 பிற மனநூற் கொள்கைகள் Other Meta phisical Theories
130 உளவியற்றுறைகள் Branches of Psycology
133.6 கைரேகை சாஸ்திரம் Palmistry
140 தத்துவார்த்தத் துறைகள் Philosophical Topics
150 பொது உளவியல் General Psycology
160 அளவையியல் Logic
170 ஒழுக்கவியல் Ethics
180 தொன்மை, இடைக்காலத் தத்துவம் Ancient and Medieval Philosophy
181.4 இந்தியத் தத்துவம் Indian Philosophy
181.48 சைவசித்தாந்தத் தத்துவம் Saiva Sidhanta Philosophy
190 தற்கால மேலைத்தேசத் தத்துவம் Modern Western Philosophy.

200 சமயம் Religion

210 இயற்கைக் கொள்கை விளக்கம் Natural Theology
220 விவிலிய நூல் Bible
230 கொள்கை வழி இறைமையியல் Doctrinal Theology
240 பக்திவழி இறைமையியல் Devotional and Practical Theology
250 மதகாரிய இறைமையியல் Pastoral Theology
260 கிறிஸ்துவக் கோயில் Christian Church
270 கிறிஸ்துவக் கோயில் வரலாறு Christian Church History
280 கோயில்களும் சமய உட்பிரிவுகளும் Churches and Sects
290 ஏனைய சமயங்கள் Other Religions
291 ஒப்பியல், புராண ஆய்வுத்துறைகள் Comparative Religions and Mythology
294.1 வேத சமயம் Vedic Religion
294.2 பௌத்த காலத்துக்கு முன்னைய பிராமணீயம் Pre Buddhism
294.3 பௌத்தம் Buddhism
294.4 சமணம் Sainism
294.5 இந்து சமயம் Buddhism
294.551 சைவ சமயம் Saivism
294.552 பிரமோசமாசம் Brahmo Samj
294.553 சீக்கியம் Sikhism
295 பார்சி சமயம் Parseeism
296 யூத சமயம் Judaism
297 இஸ்லாம் Islam
297.89 பகாய் Bahai
299 இடமளிக்கப்படாத பிற சமயங்கள் Religions not otherwise provided for

300 சமூக விஞ்ஞானங்கள் Social Sciences

310 புள்ளிவிபரவியல் Statistics
320 அரசறிவியல் Political Science
330 பொருளியல் Economics
340 சட்டம் Law
342 அரசியலமைப்புச் சட்டம் Constitutional Law
350 பொது நிர்வாகம் Public Administration
352 உள்ளூராட்சி Local Governent
360 சமூகநலன் Social Welfare
370 கல்வி Education
380 பொதுச் சேவைகளும் சாதனங்களும் Public Services and Utilities
390 மரபுகள், நாட்டாரிலக்கியம் Customs and Folk Lore
398.2 நாட்டாரிலக்கியம், விடுகதை, பழமொழி Folk literature, Riddles and Proverbs

400 மொழி Language

410 ஒப்பிலக்கண மொழியியல் Comparative Linguistics
420 ஆங்கில மொழி English Language
430 ஜெர்மன் மொழி German Language
440 பிரெஞ்சு மொழி French Language
450 இத்தாலிய மொழி Italian Language
460 ஸ்பானிய மொழி Spanish Language
470 இலத்தின் மொழி Latin Language
480 கிரேக்க மொழி Greek Language
490 பிற மொழிகள் Other Languages
491 பிற இந்தோ - ஐரோப்பிய மொழிகள் Other Indo European Languages
491.1 இந்திய மொழிகள் Indic Languages
491.2 சமஸ்கிருதம் Sanskrit
491.3701 பாளி மொழி Pali
491.41 சிந்தி மொழி Sindhi
491.42 பஞ்சாபி மொழி Punjabi
491.43 இந்தி மொழி Hindi
491.44 வங்காள மொழி Bengali
491.45 ஒரியா மொழி Oriya
491.46 மராத்தி மொழி Marathi
491.48 சிங்கள மொழி Sinhalese
491.5 இந்து, ஆரிய மொழிகள் Iranian
492 செமிட்டிக் மொழிகள் Semetic Languages
492.1 ஆசிய மொழிகள் Asiatic Languages
492.4 யூத மொழிகள் Hebrew Languages
492.7 அராபிய மொழிகள் Arabic Languages
492.8 எதியோப்பிய மொழி Ethiopic Language
494 துருக்கிய மொழிகள் Turki Languages
494.8 திராவிட மொழிகள் Dravidian Languages
494.811 தமிழ் மொழி Tamil Language
494.812 மலையாளம் Malayalam
494.813 தெலுங்கு Telugu
494.814 கன்னடம் Kannada
495.1 சீன மொழி Chinese Language
495.4 திபெத்திய மொழி Tibetan
495.6 யப்பானிய மொழி Japanese
495.7 கொரிய மொழி Korean
495.8 பர்மிய மொழி Burmese
495.91 சியம் Siamese
496 ஆபிரிக்க மொழிகள் African Languages

சகல மொழிகளிலும் ஒரே தன்மையான கருத்தைக் கொண்டு வரக்கூடிய எண்களைக் குறிப்பிட்டு, அவை எவற்றைக் குறிப்பிடுகின்றன எனச் சுட்டிக்காட்டி, அதனை ஆங்கில வகுப்பில் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் பின்வருமாறு அமைந்துள்ளது.

1. எழுத்தும் பேச்சும்
2. சொல்லிக்கணம்
3. அகராதியும் சொற்களஞ்சியக்கலையும்
4. ஒலியியல்
5. இலக்கணம்
6. யாப்பிலக்கணம்
7. கல்வெட்டுக்கள், தொல்லெழுத்துக்கலை
8. மொழிப்பயிற்சிக்கான பாடநூல்கள்

இவ்வெண்களை எம்மொழியுடன் சேர்ப்பினும் அவ்வெண்கள் கருதும் விடயம் புலனாகும்.

உதாரணம் :- (1) 494.811 - தமிழ் மொழி
5 - இலக்கணம்
494.8115 - தமிழ் இலக்கணம்
[494.811+5]

(2) 491.48 - சிங்கள மொழி
8 - பாடநூல்
491.488 - சிங்கள மொழி கற்பதற்கான பாடநூல்

500 தூய விஞ்ஞானம் Pure Science

510 கணிதம் Mathematics
520 வானியல் Astronomy
530 பௌதிகவியல் Physics
540 இரசாயனவியல் Chemistry
550 மண்ணியல், பூகற்ப சாஸ்திரம், புவிச்சரிதவியல் Earth Science
560 புதைபடிவ ஆய்வு Pal-ontology
570 மானிடவியல், உயிரியல் Anthropology, Biology
580 தாவரவியல் Botany
590 விலங்கியல் Zoology

600 தொழில் நுட்பம் Technology

610 மருத்துவ இயல் Medical Science
620 பொறியியல், எந்திரவியல் Engineering
630 விவசாயம் Agriculture
640 மனைப்பொருளியல், இல்லப் பொருளியல் Home Economics
650 வியாபாரமும், வியாபார முறைகளும். வணிகம் Business and Business Methods and Commerce
660 வேதியியல், இரசாயனத் தொழில்நுட்பம் Chemical Technology
670 ஆக்கத்தொழில், உற்பத்தித் தொழில்கள் Manufactures
680 வேறு உற்பத்தித் தொழில்கள் Other Manufactures
690 கட்டிட நிர்மாணம் Building Construction

700 கலைகள் The Arts

710 இயற்கை. நிலக்காட்சிக்கலை Lanscape and civic art
720 கட்டிடக்கலை Architecture
730 சிற்பக்கலை Sculpture
740 வரைதல், அலங்கரித்தல் Drawing and decorative arts
750 ஓவியக்கலை Painting
760 அச்சும் அச்சுத் தொழிலும் Prints and print making
770 புகைப்படக்கலை, நிழற்படக்கலை Photography
780 இசை, சங்கீதம் Music
790 பொழுதுபோக்கு Recreation
791 பொதுப் பொழுதுபோக்கு Public Entertainment
793 உள்ளக விளையாட்டுக்கள், வினோதங்கள் Indoor games and amusements
796 உடற்பயிற்சி, வெளிப்புற விளையாடுக்கள் Athletic and Out Door Sports and Games

800 இலக்கியம் Literature

810 அமெரிக்க இலக்கியம் American Literature
820 ஆங்கில இலக்கியம் English Literature
830 ஜேர்மனிய இலக்கியம் German Literature
840 பிரெஞ்சு இலக்கியம் French Literature
850 இத்தாலிய இலக்கியம் Italian Literature
860 ஸ்பானிய இலக்கியம் Spansh Literature
870 லத்தின் இலக்கியம் Latin Literature
880 கிரேக்க இலக்கியம் Greek Literature
890 ஏனைய இலக்கியங்கள் Other Literatures
894.8 திராவிட இலக்கியம் Dravidian Literature
894.811 தமிழ் இலக்கியம் Tamil Literature
894.812 மலையாள இலக்கியம் Malayalam Literature
894.813 தெலுங்கு இலக்கியம் Telugu Literature
894.814 கன்னட இலக்கியம் Kannada Literature
895.1 சீன இலக்கியம் Chinese Literature
895.4 திபெத்திய இலக்கியம் Tibetan Literature
895.56 யப்பானிய இலக்கியம் Japanese Literature
895.7 கொரிய இலக்கியம் Korean Literature
895.8 பர்மிய இலக்கியம் Burmese Literature
895.91 சீய இலக்கியம் Siamese Literature
896 ஆபிரிக்க இலக்கியம் African Literature
899 ஏனைய இலக்கியங்கள் Other Literatures

இலக்கியத்துக்கே உரிய தனியான உருவ வகுப்புக்கள் (Form Classes) சகல இலக்கியங்களுக்கும் பொதுவாக அமைகின்றன. இங்கு ஒன்றிலிருந்து எட்டு வரையுள்ள எண்கள் பின்வரும் உருவங்களைக் காட்டுகின்றன.

1. கவிதை Poetry
2. நாடகம் Drama
3. கற்பனைக் கதை Fiction
4. கட்டுரை Essay
5. சொற்பொழிவு, நாவன்மை Oratory
6. கடிதங்கள் Letters
7. அங்கதம், நகைச்சுவை Satire and Humour
8. பல பொருட்கலவை, நானாவிதம் Miscellaneous

இவற்றை எந்த நாட்டு இலக்கியத்துடனும் அவற்றின் உருவப் பிரிவின் தன்மையைப் பொறுத்துச் சேர்த்து, அவ்விலக்கியத்தின் உருவங்களை வெளிக்காட்டலாம்.

உதாரணம் :- (1) 800 - இலக்கியம்
820 - ஆங்கில இலக்கியம்
1 - கவிதை
821 - ஆங்கிலக்கவிதை
[820+1]

(2) 894.811 - தமிழ் இலக்கியம்
3 - கற்பனைக்கதை, நாவல்
894.8113 - தமிழ் நாவல்

[பெரும்பான்மையான பொது நூலகங்களில் இலக்கியப்பகுதியில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றிற்கு பகுப்பிலக்கணம் இடப்படுவதில்லை. அவற்றை "க" என்ற குறியீட்டுடன் (கற்பனை) ஆக்கியோனின் முதல் மூன்றெழுத்துக்களையும் இணைத்துப் பகுப்பிடுகின்றனர். சங்க இலக்கியங்கள் மேற்குறிப்பிட்ட பகுப்பாக்கம் செய்யப்படுவதுண்டு.]

900 புவியியல், பிரயாணம், வாழ்க்கைச் சரிதம், வரலாறு Geography, Travel, Biography, History

910 புவியியல், பிரயாணம் Geography, Travel
914-919 பிரதேசப் புவியியல், பிரயாணம்
915 ஆசிய புவியியல், பிரயாணம் Asian Geography, Travel
915.4 இந்தியப் புவியியல், பிரயாணம் Indian Geography, Travel
915.489 இலங்கைப் புவியியல், பிரயாணம் Ceylon Geography, Travel
920 வாழ்க்கை வரலாறு Biography
930 பண்டைக்கால வரலாறு Ancient History
940 ஐரோப்பிய வரலாறு European History
950 ஆசிய வரலாறு Asian History
954 இந்திய வரலாறு Indian History
954.89 இலங்கை வரலாறு Ceylon History
960 ஆபிரிக்க வரலாறு African History
970 வட அமெரிக்க வரலாறு North American History
980 தென் அமெரிக்க வரலாறு South American History
990 பசுபிக் சமுத்திரத் தீவுகள் Pacific Ocean Islands

பாடங்கள் யாவும் ஓர் அளவு கோலின் படி, இன்ன தன்மையில் இன்ன உருவத்தில் எழுதப்பட வேண்டும் என்ற நியதி இல்லாமையால் அவை என்னென்ன பாடங்களில், எத்தன்மைகளில் எழுதப்பட்டுள்ளன என்பதை நூலகர்கள் சுலபமாகப் பிரித்து அவற்றை அவ்வப்பாடங்களின் உட்பிரிவுகளுடன் ஒழுங்கு முறையில் அமைத்து வைப்பதற்கும் வாசகர்களின் நேரத்தைப் பேணிக் குறைந்த நேரத்தில் சிறந்த சேவையை ஆற்றுவதற்கும் தூயி, 01 - 09 வரையிலுள்ள எண்களைத் தன்மைப் பிரிவுகளாக (Form Divisions) அமைத்துள்ளார். இவை சகல வகுப்புகளுடனும் சேர்ந்து, அவை எத்தன்மைகளினை உள்ளடக்கியிருக்கின்றதோ அக்கருத்துக்களைப் புலப்படுத்த உதவுகின்றது.

தன்மைப் பிரிவுகள் Form Divisions

01. தத்துவம், கொள்கைகள் Philosophy, Theory
02. கையேடுகள், சாராம்சம் Hand Books and Abstracts
03. அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் Dictionaries and Encyclopedias
04. கட்டுரை, விரிவுரை Essays and Lectures
05. சஞ்சிகைகள் Periodicals
06. அமைப்புக்களும் சங்கங்களும் Organisations and Societies
07. கல்வி ஆய்வு, போதனா முறை Study and Teaching
08. சேர்க்கை Collection and Polygraphy
09. வரலாறு, பிரதேச வாரியான கணிப்புக்கள், ஆராய்ச்சிகள் History and local treatment

இவற்றை எந்த வகுப்புடன் சேர்த்தாலும் தன்மைப்பிரிவு எதைப் புலப்படுத்துகிறதோ அக்கருத்தை வெளிக்காட்டும்.

உதாரணம்:-
(1) 894.811 - தமிழ் இலக்கியம்
09 - ஆராய்ச்சி
894.81109 - தமிழ் இலக்கிய ஆராய்ச்சி
[894.811+09]

(2) 20 - நூலகவியல்
05 - சஞ்சிகை
020.5 - நூலகவியலுக்கான சஞ்சிகை
[இங்கு 020 இறுதியில் வரும் "பூஜ்யம்", 05 இன் சேர்க்கை காரணமாக பெறுமதி இழக்கினறது. எனவே நூலகவியல் சஞ்சிகையின் பகுப்பிலக்கம் 020.5 என வரும்.]

இப்படியாக ஒவ்வொரு வகுப்பையும் மேன்மேலும் பத்துப்பிரிவாகத் தேவையான அளவுக்கு விரிவாக்கக் கூடிய முறையில் பாவிக்கப்படும் குறியீடுகள் எளிதில் நினைவில் நிற்கக் கூடியதாகவும், சுலபமானதாகவும், எத்தருணத்திலும், எவ்வகைப் பாவிப்பிலும் ஒரே விதமான கருத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது நூலக விதிமுறையாகும். அதற்கமைய தூயி, தசாம்சப் பகுப்பு முறையில் பல்வேறு விதமான ஒருமைப் பாடுகளைப் புகுத்தியுள்ளார். முன்பு கூறிய தன்மைப் பிரிவுகளையும் (Form Divisions) இலக்கியத்தில் வரும் உருவப் பிரிவுகளையும் (Form Classes) மொழியில் வரும் தன்மைகளையும் விட மேலும் மனதில் தடுமாற்றத்தைக் கொடுக்க முடியாத விதத்தில் சில உத்திகளையும் கையாண்டுள்ளார். மொழியையும் இலக்கியத்தையும் நாம் ஆராய்ந்தால் இவை தெட்டெனப் புலப்படும்.

420 ஆங்கில மொழி 820 ஆங்கில இலக்கியம்
430 ஜேர்மன் மொழி 830 ஜேர்மன் இலக்கியம்
440 பிரெஞ்சு மொழி 840 பிரெஞ்சு இலக்கியம்
450 இத்தாலிய மொழி 850 இத்தாலிய இலக்கியம்
460 ஸ்பானிய மொழி 860 ஸ்பானிய இலக்கியம்
470 இலத்தீன் மொழி 870 இலத்தீன் இலக்கியம்
480 கிரேக்க மொழி 880 கிரேக்க இலக்கியம்
490 பிற மொழிகள் 890 பிற இலக்கியங்கள்

இவற்றை நாம் அவதானிக்கும் போது, மொழி, இலக்கிய எண்கள் மத்தியில் வரும் 2, 3, 4, 5, 6, 7, 8 ஆகிய எண்கள் முறையே ஆங்கில, ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிய, இலத்தின், கிரேக்க நாடுகளைக் குறிப்பனவாகவும் 9 பிற நாடுகளைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளதைக் காணலாம். ஆகவே இடையில் வரும் எண்ணைக் கொண்டு எந்த நாட்டு மொழி, இலக்கியம் என்பதனை எளிதில் கண்டுபிடிக்கலாம். இது தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும் பொருந்தும்.

494.811 தமிழ் மொழி 894.811 தமிழ் இலக்கியம்

இதுபோல நாடுகளைக் குறிக்கவும், ஒரே விதமான எண்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுப் பிரிவில் இவை பரவலாக உள்ளதைக் காணலாம். 4 - ஐரோப்பாக் கண்டத்தையும் 5 - ஆசியாக் கண்டத்தையும் 6 - ஆபிரிக்காக் கண்டத்தையும் 7 - வட அமெரிக்காக் கண்டத்தையும் 8 - தென் அமெரிக்காக் கண்டத்தையும் 9 - பிற கண்டங்களின் வரற்றையும் குறிக்கின்றன.

புவியியற் பிரிவுகள் - Geographical Divisions

4 ஐரோப்பா Europe
5 ஆசியா Asia
6 ஆபிரிக்கா Africa
7 வட அமெரிக்கா North America
8 தென் அமெரிக்கா South America
9 பிற கண்டங்கள் Other Continents

இவற்றைப் புவியியலுடனும் சம்பந்தப் படுத்தலாம்.

914 - ஐரோப்பிய புவியியல் - Geography of Europe
915 - ஆசியப் புவியியல் - Geography of Asia
916 - ஆபிரிக்கப் புவியியல் - Geography of Africa
917 - வட அமெரிக்கப் புவியியல் - Geography of North America
918 - தென் அமெரிக்கப் புவியியல் - Geography of South America
919 - பிற கண்டப் புவியியல் - Geography of other Continents

இதே போன்று நாடுகளுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எப்பொழுதும் எங்கு பாவிப்பினும் ஒரே கருத்தைக் கொடுக்கின்றன.

900 வரலாறு
940 ஐரோப்பிய வரலாறு
942 இங்கிலாந்து வரலாறு

இங்குள்ள 2 - ஆங்கில நாட்டைக் குறிக்கின்றது. ஆங்கில மொழி, இலக்கியம் என்பவற்றில் வரும் எண்கள் திரும்பவும் இங்கு பாவிக்கப்படும் பொழுது அவ்வெண் எதனைக் குறித்ததோ அதனையே இங்கு குறிப்பிடுவதைக் காணலாம்.

உதாரணம்:-
943 ஜேர்மனிய வரலாறு
944 பிரெஞ்சு வரலாறு
945 இத்தாலிய வரலாறு
946 ஸ்பெயின் வரலாறு
947 ருஷ்ய வரலாறு
948 ஸ்கன்டினேவிய வரலாறு

இவற்றின் இறுதியில் வரும் 43, 44, 45, 46, 47, 48 ஆகியன நாடுகளைக் குறிப்பனவாக உள்ளன.

தூயி தசாம்சப் பகுப்பிலுள்ள பிரதம வகுப்புக்களுக்குப் பாவிக்கப்பட்ட 1 - 8 வரையிலான எண்களை வாழ்க்கை வரலாற்றின் 920 இல் பிரயோகித்துள்ளார்.

921 தத்துவ ஞானிகளின் வாழ்க்கை வரலாறு
922 சமய குரவர்களின் வாழ்க்கை வரலாறு
923 சமூகவியலில் உள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு
924 மொழியியலில் உள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு
925 விஞ்ஞானத்திலுள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு
926 தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு
927 கலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறு
928 இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்களின் வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாற்றை இங்கு தனி வகுப்பாக ஒதுக்கி அதில் சம்பந்தப்பட்டவர்களின் நாமதேயங்களின் கீழ் அவர்களது வாழ்க்கைச் சரிதம் பதியப்படினும் எந்தெந்தப் பாடங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனரோ அவற்றின் கீழும் பதியலாம் என்ற நெகிழ்ச்சி (Flexibility) இங்குள்ளதைக் குறிப்பிட வேண்டும். இதற்கு மாற்றுவழியாக 9? - என்று அவர்களின் பெயர்களின் கீழ்ப்பதியவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணம்:-
1. ஜவகர்லால் நேருவின் வாழ்க்கைச் சரிதம்
92/நேரு
2. ஜோன் கென்னடியின் சுயசரிதை
92/கென்ன

இவ்வகுப்புக்களின் இறுதியில் வரும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 என்ற எண்கள் பிரதம வகுப்புக்களைக் காட்டுவது வாழ்க்கைச் சரித்திரத்திற்கு மட்டுமன்றி தூயி தசாம்ச பகுப்பு முறைக்குள்ள மற்றொரு போற்றத்தக்க சிறப்பம்சமாகும். உதாரணமாக, இலங்கை வரலாற்றுக்குரிய எண் 954.89 என்பதாகும். இலங்கைப் புவியியலுக்குப் பாவிக்கும் பொழுது இது 915.489 என மாறுகின்றது. 5489 என்ற இலங்கையைக் குறிக்கும் எண் மாறுபடாதிருப்பதைக் காணலாம்.

--------------------

தூயி தசாம்ச பகுப்புமுறை 16-வது பதிப்புக்கமையச் செய்யப்பட்ட உதாரணங்கள்

1. நூலகவியல் - சஞ்சிகை

000 - பொது
020 - நூலகவியல்
05 - சஞ்சிகைகள்
020.5 - நூலகவியல் சஞ்சிகை

2. ஈழநாடு - தமிழ் நாளிதழ்

000 பொது
070 பத்திரிகைக்கலை
071-79 குறிப்பிடப்பட்ட நாடுகளிலுள்ள பத்திரிகைகள்
079.5 ஆசியப் பத்திரிகைகள்
079.54 இந்தியப் பத்திரிகைகள்
079.548 தென் இந்தியப் பத்திரிகைகள்
074.5489 இலங்கைப் பத்திரிகைகள்

3. சம்பூர்ண கைரேகை சாஸ்திரம்

100 தத்துவம்
130 உளவியல் துறைகள்
133 தெய்வீகமான,மாயமந்திரங்கள் சார்ந்த அறிவியல்
133.6 கைரேகை சாஸ்திரம்

4. திருக்கேதிச்சரம்

200 சமயம்
290 பிற சமயங்கள்
294.5 இந்து சமயம்
294.557 இந்துசமய வழிபாட்டிடங்கள்
294.557 திருக்கேதிச்சரம்

5. இந்திய நாடோடிக் கதைகள்

300 சமூகவியல்
398 பாமரர் மரபு
398.2 பாமரர் மரபுகளும் கதைகளும்
398.21 நாடோடிக் கதைகள்
954 இந்தியா
398.210954 இந்திய நாடோடிக் கதைகள்
(இங்கு 0 இணைப்பின் நிமித்தம் இடப்பட்டுள்ளது)

6. செந்தமிழ் இலக்கணம்

400 மொழி
490 பிற மொழிகள்
494.8 திராவிட மொழிகள்
494.811 தமிழ் மொழி
.5 இலக்கணம்
494.8115 தமிழ் இலக்கணம்

7. விலங்கியல் அகராதி

500 தூய விஞ்ஞானம்
590 விலங்கியல்
03 அகராதி
590.3 விலங்கியல் அகராதி
(உதாரணம் 1க்கான குறிப்பைப் பார்க்க)

8. இந்தியச் சிற்பங்கள்

700 நுண்கலைகள்
730 சிற்பம்
730.9 சிற்பவரலாறு
.54 இந்தியா
730.954 இந்தியசிற்ப வரலாறு

9. காளிதாசரின் சாகுந்தலை நாடகம்

800 இலக்கியம்
890 பிற இலக்கியங்கள்
891.2 சமஸ்கிருத இலக்கியம்
.2 நாடகம்
891.22 சமஸ்கிருத நாடகம்
(காளிதாசரின் சாகுந்தலம் - மூலநூல் சமஸ்கிருத மொழியாகையால் சமஸ்கிருத இலக்கத்துக்குரிய பகுப்பிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது.)

10. இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு

900 புவியியல், வரலாறு
920 வாழ்க்கை வரலாறு
923 சமுகவியலாளர்களது வாழ்க்கை வரலாறு
923.2 அரசியலில் உள்ளவர்களது வாழ்க்கை வரலாறு
923.25 ஆசிய நாட்டவர்கள்
923.254 இந்திய அரசியலாளர்

11. இரண்டாவது உலக மகா யுத்தம் (1939-1945)

900 புவியியல், வரலாறு
940 ஐரோப்பிய வரலாறு
940.5 20-ம் நூற்றாண்டு. 1918-
940.53 உலக மகா யுத்தம் II (1939-1945)

--------------------------------------------

எமது நூலகங்களில் பொதுவாகக் காணப்படும்
சில நூல்களுக்கான பகுப்பிலக்கங்கள்
(16ம் பதிப்புக்கமைய)

1. பொது அறிவு வினாவிடை 001
2. ஆங்கில கலைக்க்ளஞ்சியம் 032
3. தமிழ் கலைக்க்ளஞ்சியம் 039.94811
4. தமிழ் சஞ்சிகைகள் 059.94811
(பொதுச் சஞ்சிகைகள் மட்டும்)
5. குழந்தை உளவியல் 136.7
6. நீதி நூல்கள், அறிவுரைகள் போன்ற ஒழுக்கவியல் சார்ந்த நூல்கள் 177
7. சிவஞான போத ஆராய்ச்சிகள், சைவ சித்தாந்தம் தொடர்பான நூல்கள் 181.48
8. இந்து சமய ஆலயங்கள் 294.557
9. குடும்பக் கட்டுப்பாடு 301.32
10. தேசிய திட்டமிடல் 309.23
11. தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட நூல்கள் 320.51
12. இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பானவை 328.5489
13. ஹன்சார்ட் (Hansard) 328.548904
14. காந்தியக் கொள்கை நூல்கள் 320.55
(காந்தியின் சுயசரிதம் 923.254)
15. இலங்கையின் பொருளாதார நிலைமை 330.95489
16. கூட்டுறவு இயக்கம் 334
17. பொது நிதிக்கொள்கை வரிவிதிப்பு தொடர்பான நூல்கள் 336
18. வரவு செலவுத்திட்டங்கள் 336.395
19. ராணுவம் 335
20. அகதிகள் நிவாரணம் 361.5
21. பொலிஸ் சேவை 364.1
22. சிறைச்சாலைகள் 365
23. காப்புறுதி 368
24. இளைஞர் நிறுவனங்கள், கிராம அபிவிருத்தி நிறுவனங்கள் 369.4
25. கல்வி உளவியல் 370.15
26. நாடோடிக்கதைகள் 398.21
27. ஆங்கிலம் கற்பதற்கான நூல்கள் 428
28. ஆங்கில வாசிப்பு நூல்கள் 428.6
29. யோகாசனப் பயிற்சிகள், யோகக்கலை 613.7
30. ஆயுர்வேத வைத்தியம், இயற்கை வைத்தியம் 615
31. விண் வெளிப்பயணம் 629.1388
32. மரக்கறித் தோட்டம் 635
33. பண்ணை வளர்ப்பு 636
34. சமையற்கலை 641.5
35. வியாபார நிர்வாகம் 658.85
36. இந்திய சிற்பக்கலை 730.954
37. இசைக்கல்லூரிகள் 780.72
38. இசை நிகழ்ச்சிகள் 780.73
39. சங்கீதம் 784
40. மந்திரவித்தை 793.8
41. சங்க இலக்கியங்கள், பாரதியார் கவிதைகள் 894.8111
42. தமிழ் நாவல்கள் 894.8113
[விரும்பினால், பகுப்பிலக்கம் இடாமல் "க" என்று குறிப்பிடலாம்]
43. அட்லாஸ், தேசப்படங்கள் 912
44. அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் 920
[விபரம் 12-ம் பக்கத்தில் காண்க]
45. மகாத்மா காந்தியின் சத்தியசோதனை 923.254
46. தொல் பொருளியல் 930.1
47. தென்னிந்திய வரலாறு 954.8
48. இலங்கை வரலாறு 954.89
49. " 1505 வரையிலான வரலாறு 954.891
50. " போர்த்துக்கீசர் காலம் (1505-1658) 954.892
51. " டச்சுக்காரர் காலம் (1658-1795) 954.893
52. " பிரித்தானியர் காலம் (1795-1948) 954.894
53. " சுதந்திர இலங்கை (1948- ) 954.895
54. இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாறு 954.8901

--------------------

பிரதேச எண்கள் Area Numbers

பாடங்கள் தனித்தனியாக எழுதப்படுவதுடன் நாடுகள் சம்பந்தமாகவும் எழுதப்படுகின்றன. பிரதேச ரீதியாக எழுதப்படும் பாடங்களை விளக்குவதற்காகப் பிரதேச எண்கள் தூயுயினால் கொடுக்கப்பட்டுள்ளன. இவை சகல பாடங்களுக்கும் பொருந்துவனவாக அமைதுள்ளன. பிரதேச ரீதியாகப் பாவிக்கப்பட்ட பாடத்துக்குரிய எண்ணினை பகுக்கும் போது பாடத்துடன் சரித்திரப் பிரிவில் வரும் பிரதேச எண்ணையும், பிரதேச எண்ணைக் கணிக்கும் ஒவ்வொரு தடவையும் பார்க்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு நாம் அனேக சந்தர்ப்பங்களில் பாவிக்கக் கூடிய நாட்டு எண்களுக்குரிய எண்களை இங்கு கொடுத்துள்ளோம். இவற்றினை நேரடியாகப் பாவிக்க முடியும். எண்ணுக்கு முன்பாகவுள்ள - அடையாளத்தினை நீக்கி இவ்வெண்களைப் பாடத்துடன் சேர்க்க அப்பிரதேசப்பாடம் வருவதைக் காணலாம்.

உதாரணம்:-
ஐக்கிய அமெரிக்க நாட்டுப் பிரயாணம்.
பாடம் - பிரயாணம் (910)
நாடு - ஐக்கிய அமெரிக்கா (-73)
பகுப்பெண் 917.3
(910+73 இணைவில் "பூச்சியம்" பெறுமதியற்றுப் போகின்றது)

அங்கோலா 673
அசாம் 5416
அந்தமான்-நிக்கோபார் 5488
அயர்லாந்து 415
அராஇயக் குடாநாடு 53
அல்பேட்டா 7123
அல்பேனியா 4965
அல்ஜீரியா 65
அவுஸ்திரியா 436
அவுஸ்திரேலியா 94
ஆப்கனிஸ்தான் 581
ஆர்ஞென்டைனா 82
இங்கிலாந்து 42
இத்தாலி 45
இந்தோனேசியா 91
இலங்கை 5489
இஸ்ரேல் 5694
ஈராக் 567
ஈரான் (பேர்சியா) 55
உகண்டா 6761
உத்தரப்பிரதேசம் 5425
எகிப்து 62
எதியோப்பியா 63
ஏடன் 533
ஐ. அமெரிக்க நாடுகள் 73
ஐஸ்லாந்து 491
ஒரிஸ்சா 5413
ஒன்ராறியோ 713
ஓமான் 535
கம்போடியா 596
கராச்சி 5471
கலிபோர்னியா 794
கனடா 71
கானா 667
கியூபா 729
கிறீன்லாந்து 982
கிறீஸ் 495
கினியா 665
குவாட்டார் 5383
குவிபெக் 714
குவைத் 5387
கெய்ரோ 6216
கென்யா 6762
கொரியா 519
கொலம்பியா-பனாமா 86
கோவா 54799
சவூதி அரேபியா 58
சிங்கப்பூர் 5952
சிட்னி 944
சியாரலியோன் 664
சிலி 83
சிரியா 5691
சீக்கிம் 5427
சீசெல்ஸ் 696
சீனா 51
சுமத்திரா 921
சுவீடன் 485
சுவிற்சலாந்து 494
சூடான் 624
சூயெஸ் கால்வாய் 6215
செக்கோசெலவேக்கியா 437
சைபிரஸ் 5645
சைபீரியா - ருஷ்யா 57
சோ. யூ. (ரஷ்யா) 47
டெக்சாஸ் 764
டெல்லி (டில்லி) 5456
டென்மார்க் 489
டோக்கியோ 52135
தாய்லாந்து 593
திபெத்து 515
திருவாங்கூர்-கொச்சின் 5483
துருக்கி 561
தெகிரான் 552
தென்கொரியா 5195
தைவான் (போர்மோசா) 5149
நிக்கரகுவா 7285
நியூசிலாந்து 93
நியூபவுண்லாந்து 718
நியூ யோர்க் 747
நேபாளம் 5426
நைஜீரியா 669
நோர்வே 481
பகாமாஸ் 7296
பஞ்சாப் 545
பப்பாநியூகினியா 95
பம்பாய் 5479
பல்கேரியா 4977
பர்மா 591
பாகிஸ்தான் 547
பாரிஸ் 4436
பாரெயின் பிலிப்பைன்ஸ் 5385
பிரான்ஸ் 44914
பிரிட்டிஷ் கயானா 881
பிரிட்டிஷ் கொலம்பியா 711
பிரேசில் 81
பின்லாந்து 471
பிஜித்தீவுகள் 9611
பீகார் 5412
பீரு 85
புளோரிடா 759
பூட்டான் 5419
பெல்ஜியம் 493
பொலிவியா 84
பொலினிசீயா 96
பென்சில்வேனியா 748
பேர்லின் 4311
போக்கலந்துத்தீவுகள் 9711
போட்டோரிக்கோ 7295
போபால் 5434
போலந்து 438
போர்த்துக்கல் 469
போர்னியோ 911
மசசூசட்ஸ் 744
மடகஸ்கர் 691
மத்தியப்பிரதேசம் 5433
மதுரை 5482
மலாயா 595
மேற்கிந்தியதீவுகள் 729
மெக்சிக்கோ 72
மைசூர் 5487
மொங்கோலியா 517
மொரோக்கோ 64
மொஸ்கோ 4731
மோல்டா 4585
யப்பான் 52
யாவா 9212
யூகோசிலேவியா 497
யோர்தான் 5695
ராஜஸ்தான் 5442
ருமேனியா 498
லாவோஸ் 594
லிபியா 612
லெபனான் 5692
வங்காளம் 5414
வடகொரியா 5193
வாஷிங்டன் 753
வியட்நாம் 597
வெனிசூலா 87
ஹங்கேரி 4391
ஹவாய்த்தீவுகள் 969
ஹவானா 72912
ஹைதராபாத் 549
ஹொலண்ட் 492
ஹொங்ஹோங் 5125
ஸ்கண்டினேவியா 48
ஸ்கொட்லாந்து 41
ஸ்பெயின் 46
ஜம்முகாஷ்மீர் 546
ஜமெயிக்கா 7292
ஜிப்ரோல்டார் 4689
ஜேர்மனி 43

+++++++++++

எமது வெளியீடுகள்

நூலகவியல் காலாண்டு சஞ்சிகை
பதிப்பாசிரியர் என். செல்வராஜா
தனிப்பிரதி ரூபா 7-50
ஆண்டு சந்தா ரூபா 30-00

முதல் உதவி
ஆசிரியர் வைத்திய கலாநிதி ந. சிவராஜா
104 பக்க விலை ரூபா 20-00

பிரதிகள் கிடைக்குமிடம்:

அயோத்தி நூலக சேவைகள்
ஆனைக்கோட்டை.

ஸ்ரீலங்கா புத்தகசலை
K.K.S. வீதி, யாழ்ப்பாணம்.

பூபாலசிங்கம் புத்தகசாலை
பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.

---
ஆர் எஸ் அச்சகம், யாழ்ப்பாணம்

--------