கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கடற்கரைப் பூக்கள்  
 

கவிஞர் வாகரைவாணன்

 

கடற்கரைப் பூக்கள்

கவிஞர் வாகரைவாணன்

-----------------------------------------------------

கடற்கரைப் பூக்கள்

கவிஞர் வாகரைவாணன்

அச்சுப்பதிப்பு
புனித வளன் கத்தோலிக்க அச்சகம்,
யாழ்ப்பாணம்.

முதற்பதிப்பு : ஏப்பிரல் 1983

உரிமை : ஆசிரியருக்கு

விலை ரூபா 5 - 00

-----------------------------------------------------

அருட்குரவர் பிரான்சிஸ் யோசப் ஆ. யு. அவர்கள்
(முதல்வர் - புனித - பத்திரிசியார் கல்லு}ரி யாழ்ப்பாணம்)

வாழ்த்துகிறார்......

வாகரைவாணன் என்ற பெயரை ஈழத்திலக்கிய உலகில் அறியாதவர்களே இல்லை எனலாம். அவ்வளவிற்கு பல அரிய கவிதைகளை, நாடகங்களை, சிறுகதைகளை எழுதிப் புகழ்பெற்றவர். அவரின் கவிதைகளால் தொடுக்கப்பட்ட இக் கவிதை மலர் அவரின் கவித்துவத்திற்கு ஒரு உரைகல்லாகக் காட்சியளிக்கிறது.

“கடவுளுக்கு ஒரு கடிதம்” என்ற கவிதை புதுவகையான கடவுள் வாழ்த்தாக அமைந்து மலரைத் தொடக்கி வைக்கிறது. இக் கவிதையில் வரும் “நீ வாழும் இடமாய் நிலவுலகை மாற்று! மூவுலகம் எதற்கு?” என்ற வரிகள் ஆசிரியர் தப்பியோடும் உணர்வோடு (நுளஉயிளைஅ) கடவுள்வாழ்த்தை இயற்றாது யதார்த்த (சுநயடளைஅ) உணர்வோடு கடவுள் வாழ்த்தை வடித்துள்ளார் என்ற உண்மையை உணர்த்துகிறது.

ஆசிரியரின் யதார்த்த உணர்வை கவிதை மலரின் பல இடங்களில் நாம் தரிசிக்கக்கூடியதாக உள்ளது.

உழைக்க ஓர் கூட்டம் உறிஞ்ச ஓர் கூட்டம்
விளைக்க ஓர் கூட்டம் வெட்ட ஓர் கூட்டம்
தழைக்க ஓர் கூட்டம் தறிக்க ஓர் கூட்டம்
பிழைக்குமா தர்மம் பெருமாட்டி சொல்லு!
(சித்திரைப் பாவை)

என்ற கவிதை வரிகள் ஆசிரியரின் யதார்த்தச் சித்திரிப்பையும் மானிடத்தை பயனுற வாழவைக்கும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது.

நு}லின் பல இடங்களிலும் இலக்கியச்சுவை சொட்டுகிறது.
பரம்பொருள் தெளிக்கும்
பரிசுத்த தீர்த்தம்
மரஞ் செடி அணியும்
மணிமுத்தாரம்
(பனித்துளி)
என்ற கவிதை வரிகளைக் கற்பனை வளத்துக்கு உதாரணமாகக் காட்டலாம்.

நடையென்ன நடையோ?
நடனமிது தானோ?
இடையென்ன இடையோ?
இல்லையது மெய்யோ?
(தைப் பாவை)
என்ற வரிகளை ஆசிரியரின் மொழி நடைக்கு (ளுவலடந) உதாரணமாகப் பார்க்கலாம்.

இவ்வாறாக இந் நு}ல் முழுவதுமே தரமான இலக்கிய உணர்வையும்;. யதார்த்தச் சித்தரிப்பையும், உயர்ந்த இலட்சியங்களையும் காணக்கூடியதாக உள்ளது. ஈழத்து இலக்கியத்துக்கு பெருமைதேடித்தரும் படைப்பாக வாகரைவாணனின் இந்நு}ல் மேலும் படைத்து தமிழிலக்கியத்துக்கு பெருமையும், புதுமையும் ஊட்ட இறைவன் அருள்புரிய வாழ்த்துகிறேன்.
பிரான்சிஸ் யோசப்
புனித பத்திரிசியார் கல்லு}ரி
யாழ்ப்பாணம்.
1 - 4 - 83

-----------------------------------------------------

திரு. சி. மௌனகுரு, ஆ. யுஇ னுip.in. நுன. அவர்கள்
அளித்த
அணிந்துரை

தற்காலத் தமிழ்க் கவிதை பன்முகப்பட்ட போக்குகளையுடையது. இப்போக்குகள் அனைத்தையும் நாம் வசதி கருதி இருபெரும் மரபுகளுக்குள் அடக்கிவிடலாம். ஒன்று. பாரதிதாசன், கண்ணதாசன், கம்பதாசன் எனப்படும். தாசர்களின் அடியாக வளர்ந்து வந்த மரபு வழிக் கவிதை மரபு. இன்னொன்று, இம்மரபு வழியை நிராகரித்து அல்லது மீறி புதிய முறையில் வெளியிடும் நவீன கவிதை மரபு. பொதுவான தமிழ்க் கவிதையின் போக்கிற்கு ஈழத்து தமிழ்க் கவிதையும் விதி விலக்கன்று. ஈழத்திலும் தமிழ்க் கவிஞர்கள் மத்தியில் இத்தகைய இருசாரார்களையும் காண முடிகிறது.

மேற்குறிப்பிட்ட இரு மரபுகளுள். எம் மரபாயினும் சமூக உள்ளடக்கத்தை முதன்மைப் படுத்தும் போக்கு தற்கால ஈழத்துத் தமிழ்க் கவிதையின் பிரதான அம்சமாக இருந்து வருகிறது. ஏதோ ஒருவகையிலாவது தற்கால ஈழத்துத்தமிழ்க் கவிஞர்கள் சமகாலப் பிரச்சனைகளை தமது கவிதைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

வாகரைவாணன் அவர்கள் முன்னர் குறிப்பிட்ட இரு மரபுகளுள், ‘தாசர்’கள் வழிவரும் மரபுவழி மரபைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக உள்ளார். அவர்களின் செல்வாக்கு இவர் கவிதையில் நிறையத் தெரிகிறது. கண்ணதாசன் பற்றிய கவிதை ஒன்று கூட இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

வாகரை வாணனின் கவிதைகளை தனித்தனியாக ஆங்காங்கு படிக்கும்; சந்தர்ப்பம் கிடைத்திருப்பினும், அவரின் பல கவிதைகளையும் ஒன்றாகப் படிக்கும் சந்தர்ப்பத்தினை இக் கவிதைத் தொகுதியும் தருகிறது. இத் தொகுதியில் ஆசிரியர் பல்வேறு விடயங்களைக் குறித்தும் பாடல்களை எழுதியிருக்கிறார். இப்பாடல்களை ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கையில் அவற்றினு}டாக வெளிப்படும் பிரதான பண்பு இந்த நடைமுறை வாழ்க்கையில் அவர் கொண்ட அதிருப்தியாகும்.

இன்றைய நடைமுறை உலகு கலைஞர்கட்குத் திருப்தியளிப்பதாயில்லை. ஏற்றத் தாழ்வுகளும், ஏமாற்றுகளும், பாரபட்சமும், பண்பாடின்மையும், அநீதியும், ஆக்ரமிப்பும், நிறைந்த இவ்வுலககினை மாற்றி புதிய உலகை வேண்டும் மனோபாங்கே பல கவிஞர்களிடம் காணப்படுகிறது. வாகரைவாணனிடமும் இம் மனோபாங்கு தெரிகிறது. கடவுளுக்கு அவர் எழுதும்; கடிதமொன்றில்

“அவதாரம் எடு நீ
அழி இந்த உலகை
நவமான பூமியை
நாளையே சிருட்டி”
என ஆணையிடுகிறார்.

“ஒருவனிடம் உணவும் ஒருவனிடம் ஓடும்
இருந்தபடி இருந்தால் இரண்டுமிவை தொடரும்”
என கூறும் கவிஞர். இந்நிலை நீங்க வேண்டும் எனவும், சகலரும் சமமாக வாழும் சமத்துவ பூமி உருவாக வேண்டும் எனவும் அவாவுகிறார். சிலமரபு வழிக்கவிஞர்களைப் போல நிலா, வானம், கடல், காதல் என்ற குறுகிய கற்பனைச் சேற்றுக்குள் நின்றும் மீண்;டும், மீண்டும் அதற்குள் நீச்சலடிக்காமல் மனித குலம், மனித வாழ்வு, மனித ஒற்றுமை என்று மானிடத்தை நோக்கி வாகரைவாணனின் சிந்தனை விரிவது மகி;ழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது.

அனுபவங்களை வெளிப்படுத்தும் முறையிலே தான் கவிஞனின் ஆளுமையும், சிறப்பும் தெரிய வருகிறது. கவிதை கட்டுவது வேறு, கவிதை ஆக்குவது வேறு. நமது கவிஞர்களுட் பலர் கவிதைகட்டும் தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். கட்டும் கவிதை கால வெள்ளத்தில் அழிந்துவிடும். ஆக்கமே ஒரு கவிஞனை நிலைப்படுத்தும்: வெளிப்படுத்தும், அனுபவத்தைக் கலையாக்க, கற்பனை ஆற்றலும், மொழி ஆற்றலும், கவிதா அறிவும் அவசியம். வாகரைவாணனிடம் இத்திறமைகள் ஓரிரு கவிதைகளிற் பளிச்சிடுகின்றன. சுதந்திர வெறி, பூகம்பம், காட்டுத் தீ என பாரதியை உருவகிக்கும் ‘எட்டயபுரத்தின் இடி’ என்ற கவிதை இதற்குச் சான்று.

நமது நாட்டில் வளர்ந்து வரும் கவிஞரான வாகரைவாணன் அவர்கள் தமது அனுபவங்களைக் கவிதையாக்கும். கலையாக்கும் முயற்சியிலீடுபட வேண்டும். புதிய புதிய வடிவங்களையும் உத்திகளையும், கையாண்டு தமது அனுபவங்களை எமக்குத் தரவேண்டும். கவிதா ஆர்வமிக்க இவரின் பங்களிப்பினை ஈழத்துக் கவிதை உலகு பெறும் என்பதை இத்தொகுதி கோடிட்டுக் காட்டுகிறது.
வாணனுக்கு என்றும் எமது வாழ்த்துக்கள்

57, பிறவுண் வீதி, சி. மௌனகுரு.
யாழ்ப்பாணம்
1 - 4 - 1983

-----------------------------------------------------

என்னுரையை எழுதுகிறேன் !

இனிய நண்பர்களே ......

இலக்கிய வயலில் எழுந்து நிற்கும் எனது கவிதைப் பயிர்கள் இவை....

பயிர்கள் பசுமையானவையா எனப் பார்ப்பது உங்கள் பணி.

பார்க்கும் விழிகள் அத்தனையும் பழுதற்றவையா என்பது வேறு விஷயம்.

விமர்சனம் என்பது வேரையே அறுத்து விடுவதல்ல - வேண்டிய அளவு உரமிட்டு வளர்ப்பது - இது என் கருத்து.

தமிழிலக்கிய வளர்ச்சியில் தாகமுள்ளவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்று நம்புகிறேன்.

முழுமையான ‘மரபு வேலிக்’குள் இந்தப் பயிர்கள் முளைத் தெழவில்லை.

வேண்டும் போது வேலியை என் மன உணர்வுக் கேற்ப விலக்கி நட்டிருக்கின்றேன்.

இருந்தும் - வேலியில்லாமல் விளைந்த பயிர்கள் அல்ல இவை.

மனித வாழ்க்கையின் எல்லைக் கோடுகளே எடுத்தெறியப்பட்டுவிட்ட இந்தக்காலத்தில்.

‘இன்னுமா இலக்கியத்திற்கு வேலி’ என்ற சிலர் எரிந்து விழக்கூடும்.

கட்டுப்பாடில்லாமல் கண்டபடி உற்பத்தியாகும் புதுக் கவிதைகளுக்கே ஏதோ ஒரு விதத்தில் பலர் வேலிபோட முயற்சிப்பதை இவர்கள் புரிந்து கொண்டால் பூசலுக்கே இடமில்லை. இல்லையா?,

நண்பர்களே,

கழனியின் செழுமைக்கு என்கவிதைப் பயிர்கள் மட்டுந்தானா காரணம்?

இனிய வாழ்த்துரை - எடுப்பான அணிந்துரை - எழிலுறு முகப்புச் சித்திரம் - ஒழுங்கான அச்சமைப்பு - அத்தனையும் வளம் சேர்க்கவே செய்கின்றன.

அவற்றை அளித்தோர்க்கு என் அன்புகனிந்த நன்றி.

சரி, இவ்வளவு போதும். இனி வயலைப் பாருங்கள்.

“பூம் பொய்கை” அன்பன்
இணுவில் கிழக்கு வாகரைவாணன்
இணுவில் 1 - 3 - 1683

-----------------------------------------------------

கடவுளுக்கு ஒரு கடிதம்

எழுதுகிறேன் கடிதம்
இறைவன் உன் பேருக்கு!
முழுதும் நீ படித்து
முடிவொன்று சொல்லு!

விண்ணுலக வீட்டில்
வீற்றுள்ளாய் என்று
என்னுலக மக்கள்
இயம்புவது கேட்டு,

‘திருவாளர் கடவுளார்
தேவலோக’ மென்ற
சரியான முகவரிக்கே
தமழில் நான் எழுதுகிறேன்!

மொழி யெல்லாம் ஆய்ந்த
முதல்வன் நீ ஆமால்
களி மொழியில் இந்தக்
கடிதத்தை எழுதுகிறேன்

நாத்திகன் அல்ல நான்!
நையாண்டி செய்யவில்லை
ஆத்திகன் என்றும்
அடி பணிந்து கேட்கின்றேன்!

பூர்வீக காலத்தில்
புராணங்கள் சொல்லும்@
நேரில் நீ மனிதருடன்
நிகழ்த்திய பேச்சுக்களை!

இன்று நீ அப்படி
ஏன் செய்வதில்லை!
என்று நான் மட்டுமா
எல்லோரும் கேட்கிறார்!

அவதாரம் பற்பல
அடுத்தடுத் தெடுத்தாயாம்!
நவ உலகில் அந்த
நாடக மேனில்லை?

குரங்குகளைப் படைத்து
கொங்கு தேர் மாலை
கரங்களிலே தந்த
காரணந் தான் என்ன?

இரத்த வெறியாளர்
இரக்கமது பற்றி
உரத் துரைக் கின்றார்
உதடு தான் மானமா?

‘நீ வாழ்க’ என்று
நெஞ்சாரச் சொன்னோர்
தீ வார்த்தை யாலே
திட்டுவது மேனோ?

தலை கீழாய் உலகம்
தடம் மாறும் போது
சிலை யாக இருந்து நீ
சிந்திப்பது மேனோ?

அதர்மத்தை அழிக்கவே
அவதாரம் என்றால்
கதை யென்ன இன்று?
கண் திறவாயோ?

அக் காலம் போலவே
அவதாரம் எடுத்தால்
இக் கால மனிதர்
எள்ளளவும் நம்பார்!

பைத்தியக் காரனெனப்
பட்ட மொன் றளித்து
வைத்திய சாலைக்கு
வழி கூடச் சொல்வார்!

இதனால் தான் ‘கல்லாய்
இருக்கிறேன்’ என்று
பதில் சொல்ல வேண்டாம்
பசப்பு மொழி எதற்கு?

இன்று போல் அன்றும்
இழி குண மனிதர்
ஒன்றல்ல! கோடி
உலகிலே இருந்தார்!

சூழ்ச்சியும் வஞ்சமும்
சொர்க்கத்திற் கூட
ஆட்சி செய்ததாய்
அறிகின்றோம் நாங்கள்!

‘அன்றைய மனிதர்க்கு
அறிவென்ப தில்லை!
இன்றைய மனிதர்
என்னையும் மிஞ்சுவார்!

எனவே தான் அவரிடம்
இரக்கம் மிகக் கொண்டு
தினந் தினம் பேசி
திருவருள் செய்தேன்!’

என்று நீ கூறினும்
ஏற்கவே மாட்டேன்!
அன்றைய ஞானி போல்
ஆர் உள்ளார் இன்று?

என் சிறு மூளைக்கு
எட்;டாதோர் திட்டம்
உன்னுயர் மனத்தில்
உள்ளதால் நீ,

பேசாமல் இருக்கின்றாய்!
பெருமா! உன் மௌன
பாஷையின் அர்த்தத்தை
பாமரனும் அறிவேனோ?

ஆனதால் உனக்கு
அவசரமாய் எழுதுகிறேன்!
வானவனே எனது
வார்த்தை யினைக் கேள்!

அவதாரம் எடு நீ
அழி இந்த உலகை!
நவமான பூமியை
நாளையே சிருட்டி!

அசலான விதைகளை
அங்கங்கே து}வு!
விஷப் பயிர் எதையும்
விளைக்கவே வேண்டாம்!

நீ வாழும் இடமாய்
நிலவுலகை மாற்று!
மூவுலகம் எதற்கு,?
மொத்தமாய் நமக்கு,

பூமி இது போதும்
புரிந்து என் கருத்தை
சாமி வா இறங்கி
சகலரும் வாழ்வோம்!

வானம் ஒரு சட்டி

வான மெனும் சட்டி
வைத்தபடி இருக்கும்
தேனிலவு அப்பம்
சுடவில்லை அன்று

வறுமை எனும் இருள்
வந்த தமர்ந்த தாலோ
அருமை மிகு நிலா
அப்ப மன்றில்லை

அப்பம் சுடும் அந்த
அழகுப் பெண் உடுக்கள்
எப் பக்கம் போனார்
இல்லாமை யாலோ?

வெறுஞ் சட்டியான
விண் வெளியும் துயர
கருஞ் சட்டி யாக
காட்சி தரும் அம்மா.

வானுலகைத் தானும்
வறுமை எனும் நோய்
தான்பிடித்துக் கொண்ட
தன்மையது என்னே?

கன்னியர்க்கினிய
கச்சான் காற்றே....

கச்சான் நீ வந்தாய்
கன்னியருக் கெல்லாம்
மச்சான் நீ வந்தாய்
மகிழ்ந்து நீ அதனால்
உச்சி மரமேறி
உசுப்பி விளையாடி
பச்சைக் காயெல்லாம்
பறித் n;தறி கின்றாயே!

பார்க்கு மிடமெல்லாம்
பசிய இலை குழைகள்
பூக்களுடனே பறித்துப்
போடுகின்றாய் குரங்காய்!
நீக்கமற எங்கும்
நிறைந்திருக்கும் காற்றே
ஊக்க முனக் களிக்கும்
உதட்டழகி யாரோ?

சின்னஞ் சிறு பிள்ளை
செய்வது போல் நீயும்
மண் ணெல்லாம் வாரி
மனம் போல இறைக்கிறாய்
கண் ணெலாம் து}சு
கசக்கி நாம் நிற்க
விண் ணெல்லாம் ஏறி
விளையாடு கின்றாய்!

குள மெல்லாம் நீயே
குதித்தாட, தண்ணீர்
அள வின்றி வழிந்து
அநியாய மாகும்
வள மெல்லாம் மங்கும்
வயல் நில மெல்லாம்
சுழன்றாடு கின்றாய்
சுக மில்லாக் காற்றே!

பாரதிக்கு நு}ற்றாண்டாம்

பாரதிக்கு நு}ற்றாண்டாம்
பட்டி மன்றம்@ கவியரங்கு
ஊரறியக் கொண்டாடி
உள்ளமது மகிழ்கின்றார்.

பத்திரிகை யாவு மவன்
படத்தோடு கட்டுரைகள்
முத்திரைக் கதைகளென....
முழுப் பக்கச் செய்திகள்.

செத்தபின் சிலை வைத்து
சிறப்புரை யாற்றுவதில்
வித்தகர் நாம் எனில்
வேடிக்கைக் கதையாமோ?

‘இது என்ன கவிதை’ யென
இழித்துரைத்த நாட்டினிலே
‘புது யுகக் கவிஞன்’ எனப்
போற்றுவதும் நம்மவரே.

பசி யாலே வாடி அவன்
பரிதவித்த காலத்தில்;
கசிந்துதவா மனத்தினரே
கவிஞன் புகழ் பாடுகின்றார்.

கவிஞனவன் வாடுங்கால்
கடுகளவும் உதவாதோர்
செவி இனிக்க இப்போது
செப்புவதில் பயனென்ன?

கிண்ணமும் ஏந்துவான்@
கீதையும் பாடுவான்!

கிண்ணமும் ஏந்துவான்
கீதையும் பாடுவான்
எண்ணமாங் கடலிலே
எப்போதும் நீந்துவான்
வண்ணமாம் பூக்களில்
வண்டென மாந்துவான்
கண்ண தாசனெனும்
கவிக் குலத் திலகமே!

வெள்ளித் திரை இவன்
விலாசத்தைப் பெற்றதால்
நள்ளிரா வாகினும்
நடுப் பகல் ஆனது
பள்ளிச் சிறார் முதல்
படு கிழம் வரையுமே
துள்ளியே ஓடுவார்
தோய்ந்திசை பருகவே

கவிதைக்கு இவனொரு
கம்பனே! சந்தத்தை
செவி தனில் பருகியோர்
செப்புவர் உண்மையே
புவி தனில் தன் பெயர்
பொறித் திவன் வாழ்ந்தது
தவி சினில் அமர்ந்ததோர்
தார் மன்னன் ஒப்புமே

அனு பவம் வாழ்க்கையில்
ஆயிரம் கற்றதால்
தின மிவன் பேச்சிலே
தெறித்தது தத்துவம்
பிண மென உடலினைப்
பேசியே பின்னதை
மண மென மொய்த்தவன்
மனிதரில் தனி ரகம்!

எப் பாட்டுப் பாடினும்
இவன் மனத் திருப்தியை
ஒப்பாரிப் பாடலே
உண்மையில் தந்தது
அப் பாடலாலேயே
அழிவிலாப் புகழ் தனை
எப் போதும் பெற்றனன்
இதை யுல கறியுமே!

சூறாவளியே நீ சுகம் தானா?

நீறாக எங்கள்
நில மெல்லாம் செய்த
சூறாவளியே நீ
சுகம் தானா சொல்

பூத்த காய் மரங்கள்
பூமியிலே சாய
கூத்தாடிச் சென்ற
கொடியோனே சுகமா?

சோலை யெனத் திகழ்ந்த
சொர்க்க புரி தன்னை
பாலை யெனச் செய்த
பாவி நீ சுகமா?

கிழக்கிலங்கை மக்கள்
கேவியழ, வாழ்க்கை
விளக்கு தனை அணைத்த
கூற்றுவனே சுகமா?

வீடெல்லாம் சிதைத்து
வீதி வரை எம்மை
ஓட நீ விட்டாய்....
ஊழி நீ சுகமா?

கூரை தனைப் பிய்த்து
குப்பையென எறிந்தாய்
ஊரை நீ அடித்து
உன் பசி தணிந்தாய்

ஏழை பணக்காரன்
எனும் பேத மின்றி
கூழ் உண்ண வைத்து
குலம் ஒன்றா செய்தாய்?

கொள்கை யிது பொய்த்த
கொடுமை தனைச் சொல்வேன்
அள்ளி நீ தந்த
அவ்வளவும் இங்கே,

வாரித் தாமெடுத்து
வளம் பெற்றார் சிலரே
பாரி நீ தானாம்
பாராட்டிச் சொல்வார்.

சூறாவளியே நீ
சொல் இது நியாயமா?
ஆறாகக் கண்ணீர்.....
அபலைகள் கேட்கிறார்.

குறிப்பு : 1978-ம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 23-ம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய சூறாவளியை நினைவு கூர்ந்து எழுதிய கவிதை.

அன்னை நாடு

‘வறுமை’ எனும் தொட்டிலிலே
வளர்த்தி நமை
‘அருமை’ யாக ஆட்டி விடும்
அன்னை நாடு!

தாலாட்டுப் பாடுகின்றாள்
தம்பி, கேள்!
பாலு}ட்ட வழியில்லை
பசி வயிறு.

மூடும் நம் விழி திறந்து
முற்றுணர்ந்தால்
ஆடுகின்ற தொட்டிலது
அறுந்து விழும்.

சுதந்திரம் நாம் பெற்றோமாம்!
சொல்லு கின்றார்!
சதந்தானும் மதிப்பில்லா
சரக்கிது வே!

முப்ப தாண்டு காலமாய்
முடிந்த தென்ன?
ஒப்புக்குத் தானும் சொல்ல
ஒன்று மில்லை!

வேலை யின்றி இளைஞரெல்லாம்
வெளி நாட்டில்
சாலை யிலே அலைவது நம்
சாதனையே!

உத்தியோகம் பார்ப்பதற்கு
உள் நாட்டில்
பத்திருந்தும் பயனில்லை
படிப்பெதற்கு?

குரங்கின் கை மாலையென
கோணங்கி
அரசியல் வாதியால் நாடு
அழிகின்றதே

கட்சி அரசியல் வாதியின்
கச்சேரி கேட்டே
பிச்சைக் கார நாடானோம்
பெருமை தான்!

இன வெறியால் இந்நாடு
இடுகாடே
பிணக் குவியல் இங்கே ஓர்
பிரமிட்டே

கட்சியினை வளர்க்க இது
கை கொடுக்கும்
பச்சை ரத்தம் இவர்களுக்கு
பாற் கடலே!

ஏழை என ஒரு வர்க்கம்
இந் நாட்டில்
வாழை யடி வாழையென
வளர வைக்கும்

சேவை யொன்றே நம்மவர்கள்
செய்கின்றார்
தேவை புது ஆட்சி முறை
சிந்திப்பீர்!

பணக்காரர் மீது நமக்கு
பகையில்லை
தனக் கென்ற நினைவை அவர்
தகர்த்தாலே

விருட்சங்களுக்கும் வியர்க்கும்

வெய்யிற் காலம்
வியர்க்கும் மதனால்
விருட்சங்களும்
பையக் களையும்
பர்ணச் சேலை
பாவை போலே

வசந்தம் வந்து
வருடும் போது
வாஞ்சை யோடு
இசைந்து தரும்
இலையா மாடை
இல்லை யேனும்

ஆடை புதிதாய்
அணிந்த பின்பு
அழகுப் பூக்கள்
சூடும் மரங்கள்
து}ங்கும் மொட்டு
தோடு போலே

தாக முண்டு
தருக்களுக்கும்
தண்ணீர் அள்ளி
மேகம் போல
மேலே வார்த்தால்
மெல்ல அடங்கும்!

எட்டய புரத்தின் இடி!

முறுக்கு மீசை@ முண்டாசுக் கட்டு
முகத்தில் ஒளி
சுறுக்கு நடை@ சொல் மந்திரம்
சுதந்திர வெறி!

எட்டய புரத்தின் இடியவன்
இருள் வானில்
வெட்டிச் சிரிக்கும் மின்னலே
விடி வெள்ளி!

பழமைக் குப்பையைப் பற்ற வைத்தோன்
பாரதத்தை
புலமைக் கவியால் புரட்டி எடுத்தோன்
பூகம்பம்!

கவி மழை பொழிந்த பெரும்
கார் மேகம்
புவி யதன் வளத்தால் போஷித்த
பொற் கதிர்!

படலை தாண்டவும் பயந்த பெண்ணை
பாய்ந் தெழும்
கடலைத் தாண்டவும் கற்றுக் கொடுத்த
கவி ஏறு!

ஒருவனுக் குணவில்லையேல் உலகத்தை
ஒரு போதுள்
கருவறுப் போம் எனக் கர்ச்சித்த
காட்டுத் தீ!

அறிவே தெய்வமென அறைந்தோன்
அறியாமைச்
சிறை தனை உடைத்தெறிந்த
சிங்கம்!

கடற்கரைப் பூக்கள்

கடலோரம், புன்னைக்
காடு@ செந்தாழை
மடல் மீது தண்ணீர்
மணி பட்டு உருளும்

உருளும் மணி கண்டு
ஓடி வரும் மீன்கள்
திரளும், பின் திகைக்கும்
தின்ன இரை இல்லை!

குண்டு குண்டாக
குரும்பட்டி மாலை
கொண்ட இளந் தென்னை
குளிர் கழுத்தொளிரும்!

ஓலை தனைக் குழலாய்
ஊதும்! இசை வெள்ளம்
சோலை அது இன்பச்
சொர்க்க புரியாகும்!

ஓலை தனைக் கையாய்
உருமாற்றி வானில்
கோல முறு சித்திரக்
கோடிட்டும் காட்டும்;@

அலை எனும் சிவிகையில்
அமர்ந்து வரும் காற்று
நிலம் மீது இறங்கி
நின்று நடை பழகும்!

நடை பழகும் போது
நானு}று தடவை
தடக்கி விழும், அதனால்
தவழ்ந்து வரும் அம்மா!

கடலோரம், இந்தக்
காட்சி சூழ்நிலையில்
படகோட்டி வாழும்
பரதன் கதை சொல்வோம்!

இளைஞன், அவன் ஏழை
இரவு பகலாக
உழைக்கும் ஒரு ஜீவன்
ஓய்வில்லா இயந்திரம்

ஓய்வின்றி உழைத்தும்
ஒரு பயனும் இல்லை
வாய் நிறைய உண்ணும்
வழியறியா வர்க்கம்!

வர்க்க மிது நாட்டி;ல்
வாழும் வரை இங்கே
சொர்க்க மென ஒன்றைச்
சொல்லுவதே துரோகம்!

உழைத்துழைத் துடம்பு
ஓடாதல், தலையின்
எழுத்து எனச் சொன்னால்
எவனும் அதை ஏற்கான்!

பரதன் அவன் வீடு
பறவையதன் கூடே
உறவு என அங்கே
ஒருத்தி அவன் உயிரே!

ஆண்டொன்று இன்னும்
ஆகவில்லை, அந்தக்
கூண்டுக் கிளி தன்னைக்
கொண்டு வந்தவனும்!

பண்பு மிகு மங்கை
பாச மெலாம் தனது
அன்பனிடம் கொட்டி
ஆனந்தம் காண்பாள்!

காதற் கிளி அவளைக்
கண்ணினது மணியாய்ப்
பாது காத்திருப்பான்
பழுதில்லாச் செல்வம்!

கணவனவன் செய்யும்
காரியங்கட் கெல்லாம்
துணைவியவள் என்றும்
தோள் கொடுத்து நிற்பாள்!

கூவும் ஒரு சேவல்
குரல் கேட்கும் போதே
பூவையவள் விழிப்பாள்
புனல் அள்ளி வருவாள்!

சின்னஞ் சிறு பானையில்
‘தேத்தண்ணி’ வைத்து
அன்னமவள் தருவாள்
அவனுக்கது அமுதே!

குளிர்ந்தந்தப் போதில்
குடித்து, சவளோடு
எழுந்து அவன் செல்வான்
எழுவான் கரைநோக்கி!

நிலந் தெளியா நேரம்
நீலக் கடல் அலையில்
கலந் தள்ளிச் செல்;வான்
கணப் போதுக் குள்ளே!

போர்க் குதிரை போல
புரளும் அலை தன்னை
மூர்க்க முடன் எதிர்த்து
முதுகின் மீதேறுவான்!

ஆர்க்கும் அலைக் குதிரை
அடங்கி மெதுவாகக்
து}க்கியவன் செல்லும்
துணிந்து மனம் வெல்லும்!

நாளெல்லாம் அந்த
நாராயணன் போல
சூழும் அலை மீது
சுகம் காண்பான் பரதன்!

கடமை தனை முடித்து,
கதிரவனும் கடலில்
உடம்பு தனைக் கழுவ
ஓடி வரும் வரையும்

பாம்பு அணை போல
படகு அதில் அமர்ந்து
கூம்பும் வயிற்றோடு
கொண்டு வலை எறிவான்!

வலை எறியும் கைகள்
வலியெடுத்தும், இருளில்
நிலம் மறையும் போதே
நினைவில் வரும் வீடு!

வீடு தனை நோக்கி
விரைந்து வரும் படகு
கூடு அவன் நெஞ்சில்
குருவி இளம் மனைவி!

மனைவியவள் நினைவு
மல்லிகைப் பூப்போல
மன மெல்லாம் கமழும்
மயக்கத்தில் மிதப்பான்!

து}ர வரும் போதே
தோகையவள் முகத்தைப்
பார்வையுளே அடக்கிப்
பரவசத்தில் ஆழ்வான்!

‘ஓரா’ மீன் போல
உடல் கையில் வழுக்கும்
தீராதோர் வெறியில்
தின்ன அவன் தவிப்பான்!

தண்ணீரில் நின்று
தானாடும் மீனின்
சின்ன வால் போல
சேயிழையாள் இடுப்பு!

‘பாரை’மீன் போல
பருத்த இளந் தொடை
“சூரன்” மீன் போல
சுவை நல்ல சுவையே!

‘கயல்’ மீனைப் போல
கண்ணிரண்டு, அதிலே
மயல் கொண்ட பரதன்
மனை எண்ணித் துடிப்பான்!

‘வெள்ளுறால்’ போல
விரலெல்லாம், இரவுப்
பள்ளியிலே சுவைத்த
பழக்கம்! அவன் பதைப்பான்!

கணவன் தனைப் பார்த்து
காதலியாள் வீட்டு
மணல் வெளியில் இருப்பாள்
மலர் மாலை போல!

குப்பி விளக்கொன்ற
குடிசையிலே எரியும்
கப்பு மிருள் ஒட்டும்
கை விளக் கதுவே!

அரிசி ஒரு சுண்டும்
அவள் வீட்டில் இல்லை
புருஷன் பசி போக்க
போய் எங்கோ வாங்கி,

ஆக்கி வைத்த சோறும்
ஆறிப்போம்1 நினைத்தால்
நாக்கில் நீர் ஊறும்
நறுமணக் குழம்பு!

உண்ண ஆள் இன்றி
ஒரு பக்கம் கிடக்கும்
தண்ணீரைத் தானும்
தையல் தொடவில்லை!

இந்நேரம் வானில்
இடி இடிக்கும், அதிர்ந்து
பொன் மயிலாள் தனது
புலனடங்கிப் போவாள்!

இடியோசை யோடு
எங்கும் மழை ஓசை!
படீரென மின்னல்
பல்லிளித்துக் காட்டும்!

புயலாகக் காற்றுப்
புகுந் தெங்கும் வீசும்
அயல் வீட்டுத் தென்னை
அடியோடு சாயும்!

எதிர் பாரா திந்த
இயற்கை யதன் கூத்தால்
அதிர்ந் தந்த மங்கை
அனல்; மெழுகாவாள்!

குடிசை தனில் இருட்டுக்
கோலோச்சும், விளக்கு
முடிந்திருக்கும்;, அவளும்
மூலைக்குள் இருப்பாள்!

கூடு தனில் கொடுகும்
குருவியினைப் போல
பேடு அவள் இருப்பாள்
பிரியன் அவன் நினைவே!

தொடர்ந்து மழை பெய்யும்!
தோகை அவள் நெஞ்சம்
கடவுளவன் வேண்டும்!
கை குவிந்திருக்கும்!

நடுச் சாமப் போதும்
நகர்ந்தும் அவன் இல்லை!
உடலெல்லாம் வேர்த்து
உணர் விழந்து போவாள்!

கரை தனிலே எறிந்த
‘கலவா’ மீன்; போல.....
சிற கொடிந்து போன
சிறு பறவை போல......

துடி துடித் திருப்பாள்
துணை தன்னை எண்ணி!
விடியும் வரை மங்கை
விழி மூட வில்லை!

காலையது வெளுக்கும்.....
காதலனைத் தேடி
நீல விழி சிவக்க
நேரிழையாள் பறப்பாள்!

கடலோர மாக,
கன்னி அவள் துணைவன்
உடல் மட்டும் கிடக்கும்
உயிர்க் குருவி துடிக்கும்!

பறவை யின மெல்லாம்
பாவை துயர் பார்த்து
இறகடித்துப் புலம்பும்
எழு கதிரோன் தானும்,

அழுது முகம் சிவப்பான்!
அலை கடலும் குமுறும்!
முழுதும் கதை கேட்டு
முகம் வாடும் அல்லி!

கடலோரம், அந்தக்
காட்சி சூழ் நிலையில்
சடலங்கள் இரண்டு.....
சனம் கூடி அழுமே!

ஓ... ஓ... மனிதர்களே!

உலகைச் சுற்றி
ஓடும் கண்ணில்@
கலகந் தவிர
காட்சியில்லை!

கலகந் தோன்ற
காரணம் என்ன?
சிலரது நெஞ்சின்
சின்ன ஆசைகள்!

ஆசையாலே
அலையும் மனிதன்
வேசையாக
விளையாடுகின்றான்!

சுயநலமென்றும்
சும்மா இராது
நயத்தினைத் தேடி
நாயாய்த் திரியும்!

பதவி ஆசை
படுத்தும் பாடு
உதவி யோனின்
உயிரும் போகும்!

ஆட்சிக் கட்டில்
அடிக்கடி மாறும்
காட்சி எல்லாம்
கண்ணராவி!

துப்பாக்கி யாலே
துவக்க விழா
அப்பாவி இரத்தம்
அபிசேக நீர்!

நாடுகள் தோறும்
நாடகம் இதுவே
ஆடுகள் எல்லாம்
அர்ப்பண மாமே!

மார்பில் பாயும்
வளர்த்த கடாக்கள்
ஊர்கள் தோறும்
ஒரு நு}று!

பூட்டோ, சதாத்
போன்றோரின்
ஏட்டைக் கிழித்து
எறிந்தவன் யார்?

எரிமலை மீது
இருப்பதற்காக
உருவிய வாளை
உயர்த்திய மனிதன்!

உருவிய வாளால்
உயர்ந்த மனிதன்
இரவில் கண்ணின்
இமையை மூடான்!

அவனது நாட்கள்
அதிக மில்லை
எவனோ ஒருவன்
எண்ணி விடுவான்!

ஈரான் நாட்டில்
இது தான் இன்று!
போரே அங்கு
பொழுது போக்கு!

கத்தி யில்லாமல்
கட்டி யாளும்
புத்தி சாலிகளும்
பூமியில் உண்டு!

ஜனநாயகம் என்னும்
ஜாதிக் காரர்
தினமும் ஆடுவது
தேர்தல் கூத்து!

கூத்துக்குப் பெயரே
குடியாட்சி
பார்த்துச் சலித்த
பகல் வேஷங்கள்!

மன்னன் ஆட்சி
மடிந்த பின்னால்
மண்ணை ஆள்வது
மக்கள் என்றார்!

மண்ணை ஆள்வது
மக்கள் தானா?
தன்னை வளர்க்கும்
தலைவர்கள் அல்லோ?

பாமரர் உழைப்பு
பசளையால் வளர்ந்த
பூ மரம் இவர்கள்
புரிந்து கொள்க!

கட்சி என்னும்
கடையைத் திறந்து
குச்சி வீட்டிலும்
கொடியேற்றுவார்!

இதனால் தானோ
இந்த உலகில்
இதயம் கல்லாய்
இறுகிப் போனது!

மனிதத் தன்மை
மரித்துப் போனது
புனிதங் கெட்ட
பூமி இது!

இந்த மனிதர்
இறந்த பின்னால்
எந்த உலகும்
ஏக மாட்டார்!

‘நரக லோகிலும்
நமக்கிட மில்லை
அரனே சொல்லி
அனுப்பி விட்டான்!’

இப்படிச் சொல்லி
இவர்கள் அழுது
ஒப்பாரி வைப்பர்
ஒ... ஓ... மனிதர்களே!

கடவுளே......!

என் கவிதை ஏடுகளை
எரித்தோரின்
கண் கெட்டுப் போகட்டும்
கடவுளே!

இடியே நீ எங்கே?
இரக்கமா?
படீரென் றவர்களைப்
பதம் பார்!

ஆணவப் பேயவர்
அழியவே
வானமே இடிந்து நீ
வருகவே!

மண்ணே நீ அந்த
மாக்களை
உன் பெரு வயிற்றில்
உறங்கவை!

வெறியாட்டம் ஆடிய
விலங்குகளை
குறி வைத்து தாக்கு
குன்றுகளே!

புயலே நீ வெறியரை
போய் அள்ளு!
கயவர் தம் உயிர்களை
கவர்ந்து வா!

கடலே நீ அந்த
காதகரை
உடனே நீ விழுங்கி
ஓலம் தணி!

குறிப்பு: 1981-ம் ஆண்டு மேமாதம் 31-ல் யாழ்நகரில் ஏற்பட்ட வன் செயலின் போது எனது கவிதை ஏடுகள் சிலவும எரியுண்டது எண்ணி எழுதிய கவிதை.

பொங்கலாம் பொங்கல்

அரிசி யதன் விலை அந்த
ஆகாயம் தொடும் போது
உருசி யான பொங்கலினை
உண்ணுகின்ற வாயெதுவோ?

சர்க்கரைக்கே வழியில்லை
சம்பளமும் ஒருகேடா?
அக்கரைக்குப் போனால் தான்
ஆசையது நிறைவேறும்!

வயிறினிக்க உண்பதற்கு
வாழைப்பழம், கற்கண்டு
பயறிட்ட பொங்கலினை
படைக்கும் நாள் எந்நாளோ?

தேங்காயின் விலையென்ன?
தேவாமிர்தம் ஆனதது
வாங்கிடவே மனமஞ்சும்
வந்த வழி கால் செல்லும்

அடுப்பெரிக்கும் விறகிற்கும்
ஆயிரமாய்ப் பணம் வேண்டும்
அடுத்த கதை இனி எதற்கு?
ஆசைத் தீ அணைத்திடுவீர்!

தைப்பொங்கல் கொண்டாட
தக்க நேரம் இதுவாமோ?
பையிலுள்ள காசு தனைப்
பத்திரமாய் வைத்திருப்பீர்!

சோசலிச சுகம்

சோசலிசம் என்று
சொன்னாலே போதும்
சுகமாக இருக்கும்
சொர்க்கம் அது தானே!

வேஷ மதில் இல்லை
வேறு பாடில்லை
வெயர்வை மிகச் சிந்தும்
வேலை தான் உண்டு!

தேச நலன் பெரிது
தெய்வம் அதுவாகும்
தேவையில்லா ஆசை
தீயிட்டுப் பொசுக்கும்!

வாச மிகு சோலை
வாழ்வு தனை நல்கும்
வசந்தம் எனும் இன்பம்;;
வந்துறவு கொள்ளும்!

முட்டை, பால் உண்டு
முகம் பள பளக்கும்
முதலாளி என்னும்
முதலைகளே இல்லை!

எட்டடுக்கு வீடு
எட்டி அதைப் பார்க்கும்
ஏழை எனும் ஜாதி
என்றும் அங்கில்லை

பட்டினியே இல்லை
பஞ்சம் எனும் சொல்லைப்
படித்தவரே இல்லை
பார்த்தவரும் இல்லை

கட்டி ஒரு வீட்டை
காக்கும ஒரு நாய்க்கும்
கௌரவமே உண்டு
கதை யளக்க வில்லை.

சமத்துவமாம் புதிய
சாம்ராஜ்ஜியம் அதிலே
சகலருமே பிரசை
சரியாசனம் எங்கும்!

அமர்த்து மொரு தலைவன்
அனைவருக்கும் தோழன்
ஆளும் ஒரு எண்ணம்
அவனிடமே இல்லை

சுமத்து மொரு சுமையைச்
சுமக்கும் அவன் தன்னைச்
சுற்றி வர மக்கள்
தோள் கொடுக்க நிற்பார்

தமக்கு என வாழும்
தலைவன் அவன் இல்லை
தன்னுடைமை என்றால்
தான் வாழும் நாடே

உரிமை எனும் உணவே
உயிர் வாழச் செய்யும்
உண்டு அதை வாழ்வோர்
உலகில் அவர் மட்டும்!

எருமை யல்ல மக்கள்
எல்லோரும் அறிஞர்
எள்ளளவு தானும்
எல்லாம் அறிவாரே!

பெருமை அவர் வாழ்க்கை
பெற்றவர்கள் தங்கள்
பிள்ளைகளை நம்பிப்
பிழைப்பதுவே இல்லை.

அருமை அவர் வாழ்க்;கை
அறிவொன்றே தெய்வம்
அதைப் போற்றும் பள்ளி
அவர் செல்லும் கோயில்!

சீதனமாம் வியாதி
சிறிதளவும் இல்லை
செல்வம், பொருள் அல்ல
சேர்ப்பதற்கு உள்ளம்

காத லெனும் வானில்
கை கோத்துப் பறப்பார்
கனிந்ததுமே சேர்ந்து
கல்யாணம் செய்வார்.

சாதி மதச் சடங்கு
சம்பிரதாயம் இல்லை
சாஸ்திரமே யின்றி
தாம்பத்தியம் மலரும்

வேதம் அவர் வாழ்வில்
விரிந்த நல்லன்பு
விளக் கெரியும் போது
வேறென்ன துன்பம்?

தைப்பாவை

பனிப் போர்வை களைந்து
பகற் போர்வை அணிந்து
கனிப்பார்வை வீசி
கால் மெல்ல வைத்து
வனப் பெல்லாம் மேனி
வழிந்தோட, எந்தன்
மனப் பூவே! தையே!
வாராயோ பாவாய்!

கூனப் பிறை நுதலில்
குங்குமமே கொஞ்ச
கானக் கருங் கூந்தல்
கால் தொட்டு ஆட
வானப் பெண் போல
வந்தால் நீ பாவாய்
காணப் பல் கோடி
கண் வேண்டும் அல்லோ?

நடை யென்ன நடையோ?
நடன மிது தானோ?
இடை யென்ன இடையோ?
இல்;லை யது மெய்யோ?
படை யென்ன படையோ?
பயம், நாணம். பயிர்ப்பு
கொடை யாகப் பெற்ற
கோமகளே வாராய்!

கால் என்ன காலோ?
கடைந் தெடுத்த தேக்கோ?
தோள் என்ன தோளோ?
துவளும் இளங் கழையோ?
தாள் என்ன தாளோ?
தாமரைப் பூத் தானோ?
ஏழ் உலகும் வியக்கும்
எழிலணங்கே வாராய்!

மருத நிலம் ஆளும்
மகாராணி பாவாய்
அரிதுனது வருகை
அதனால் தான் ஆசை
பெரிது கடல் போல
பெண்ணணங்கே எழுந்து
துரித முடன் வாராய்
து}வி மலர் நின்றோம்!

கை வளைகள் கொஞ்ச
காற் சிலம்பு அஞ்ச
மை விழிகள் இரண்டும்
மகர மெனத்துள்ள
மெய் யெல்லாம் தங்கம்
மினு மினுக்க எங்கள்
தை மகளே! பாவாய்!
தத்தை யென வாராய்!

கம்பனவன் செய்த
கவி நீயே! வணங்கும்
அம்மிகையே! தாயே!
அடிதொட்டு நின்றோம்
நம்பி உனை வாழும்
நாடெல்லாம் உய்ய
தும்பி எனப் பறந்து
தோகை நீ வாராய்!

கோயில் நீ! நிமிர்ந்த
கோபுரங்களோடு
தாயே நீவந்தால்
தரணி சரணடையும்!
வாயெல்லாம் பவளம்
வந்து}றும் அமுதம்
தேய்வில்லா நிலவே
தேரேறி வருவாய்!

ஏரெல்லாம் சிறக்க
எருது வால் முறுக்க
போரெல்லாம் குவிய
பொருளெல்லாம் மலிய
ஊரெல்லாம் துள்ள
உழவர் மனம் அள்ள
சீரெல்லாம் பெற்ற
சீமாட்டி வாராய்!

வந்தால் நீ போதும்
வழி ஒன்று பிறக்கும்
நொந்தோம் நாம் இங்கு
நோய் தீர்ப்பார் இல்லை
எந்தாய் நீ அல்லோ
இரங்காயோ உள்ளம்
சந்தோஷம் இல்லாச்
சமுதாயம் தாயே!

மழை காலம் எங்கள்
மனையெல்லாம் பஞ்சம்
விளையாடும் காலம்
விளைவில்லாப் பயிர்கள்
உழையாத மக்கள்
உறக்கம் தான் வாழ்க்கை
குழையாடும் பெண்ணே
குறை தீர்க்க வாராய்!

பீடை மிகு காலம்
பெரும் செல்வம் தானும்
ஓடி விடுங் காலம்
ஒரு சதமும் கையில்
நாடி வராக் காலம்
நங்கை நீவந்தால்
கோடி கை செல்வம்
கொட்டாதோ வீட்டில்!

குளிரேறி உணர்ச்சி
குன்றி விடும் காலம்
தளிர் மரங்கள், காடு
தாம் அசையாக்காலம்
ஒளி எங்கோ ஓடி
ஒளிந்து கொள்ளும் காலம்
வழி ஒன்று காட்ட
வாராயோ பாவாய்!

உன் வரவு பார்த்து
ஊரெல்லாம் மக்கள்
கண் கொள்ளா வண்ணம்
கலை அழகு செய்தார்
பொன் சருகை வேலை
புதுப் பட்டுத் தோரணம்
பண் பாடும் கிளியே
பார்க்க நீ வாராய்!

செங்கரும்பு, வாழை
செவ்விள நீர்க் குலைகள்
மங்கையரின் முகம் போல்
மலர்ந்த நறும் பூக்கள்
கொங்கை தனைப் போல
கும்பம் பல வரிசை
எங்கெங்கும் வைத்தார்
எழிற் கோலம் பாராய்!

புதுப் பானை, அரிசி
பொங்கல் மனையெல்லாம்
மதுப் பானைபோல
மக்கள் தமை இணைக்கும்
பொதுப் பானை இதுவே
போற்றும் நற் பண்பு
கதுப் பெல்லாம் இனிக்கும்
கன்னி நீ மகிழ்வாய்!

பால், பழம், வறுத்த
பயறு நல் சர்க்கரை
நால் வகைச் சுவைகள்
நறு மணப் பொங்கல்
வேல் விழி யாளே!
விருந்துண்ண அழைத்தோம்!
ஆல் இலை அங்கம்
அசைய நீ வாராய்!

பழந்தமிழர் தந்த
பண்பாடு கலைகள்
வளந் தரவே எங்கள்
வருங் காலத் தமிழர்
நலம் பெறவே உன்னை
நாடி வரவேற்றோம்
இளந் தென்றல் காற்றே
எழுந்து நீ வாராய்

இந்த மனிதர்கள்
இப்படித்தான்

வாடிச் சுருங்கிய
கத்தரிக்காயையும்
வாங்குவார்

நாடிச் சென்று
நாற்ற மீனையும்
கொள்ளுவார்

ஆடி மயக்கும்
நடிகையர் படமும்
அள்ளுவார்

கூடி இருந்து
கள்ளும் குடித்து
குலவுவார்

கோடிப் பணமும்
கொண்டு சூதில்
கொட்டுவார்

ஈடில்லாத
அறிவு நு}லை
இந்த மனிதர்

தேடி அடையார்
தெருவிற் காணிணும்
தீண்ட மாட்டார்.

சித்திரைப்பாவை

சீராளும் பாவாய் சித்திரையே செல்வி!
ஏராளும் உழவர் இதயங்கள் போற்றும்
ஊராளும் பெண்ணே! ஒளியெல்லாம் அள்ளி
வாராயோ நீயும் வசந்தத்தைக் கூட்டி!

மாந்தளிர் மேனி மணிமஞ்சட் கட்டி
சாந்தாக அரைத்த சந்தனக் குழம்பு
பூந்தாது அவிழா புன்னை மலரழகு
நீந்தி வருந் தங்க நிலவினது கோலம்

தாங்கி நீ வாராய் தமிழணங்கே வாராய்
தீங்கனிக் காட்டில் சென்றடுங் காற்றே!
பூங்காலை தோன்றும் பொற்கதிர் போல
மாங்கனிக் கன்னம் மதுக் கோப்பையாக

வலது கா லெடுத்து வைத்து நீ வாராய்
மலர்ப் பாதம் நோகும் மண்பட்டால் சிவக்கும்
தலை வாழை இலை போல் தளத ளென்றிருக்கும்
குலையாத இளமை குலுங்காது வாராய்!

தென்னங்கள், நல்ல திராட்சை மதுரசம்
உண்ணுந் தேன், உந்தன் உதடெல்லாம் ஏந்தி
வன்னங் கொள் பாவாய் வாராயோ நீயும்
பொன்னங்கம் போதும் போதை தலைக்கேற!

முழு மலர்க் கண்கள் மோர்க்குடத் தனங்கள்
மெழுகு போற் கைகள் மேளங்கள் இரண்டு
வழுவழுப்பான வாழைப் பூந் தொடை
பொழுதந்தி வானம் போடு மோர் சித்திரம்

நெல்லுறைக்குள்ளே நிறைந்தரிசி போல
பல்லழகி பாவாய் பதினெட்டு வயதுச்
சொல்லழகி நீயே சுக போக மெல்லாம்
அள்ளி நீ வாராய் ஆரணங்கே வாராய்

தொங்குமோர் கொடியில் தொட்டில் தனைப்பின்னி
தங்க மலர் மகிழ தலாட்டும் மங்கை
பக்குனியாள் அவளின் பக்கம் வந்து தித்த
தங்கை நீ வாராய் தமக்கை உனை அழைத்தாள்!

இளவேனிற் பெண்ணே இடை துவள வாராய்
முழுகாத பெண் போல் முக மெல்லாம் மலர்ச்சி
அழகணிகள் பூண்ட அரம்பை போல் தோற்றம்
எழுந்து நீ வாராய் இகமுன்னை வணங்கும்!

எழுந்து நீ வாராய் ஏந்திழையே வாராய்
எழிலான உலகை எழுப்ப நீ வாராய்
பழங்காலம் போலப் பைந்தமிழர் வாழ்வு
வளங்காண வாராய் வாழ்த்த நீ வாராய்!

நீ வரும் வழியில் நிலவுக் கால் பந்தல்
பூவரசன் நட்டான் புகார்த்திரை எடுத்தான்
பூமகளும் வந்தாள் பூவாடை விரித்தாள்
மாமங்கை எழுந்தாள் மங்கலங்கள் இட்டாள்!

வாழை, கமுகு, வளர் செங்கரும்பு
தாழை, புன்னை, தாமரைப் பூக்கள்
பாளை, குருத்து, பருவ இள நீர்
வேளை வரவே விரிந்த நன் மலர்கள்,

செந்நெல், சோழம் செழும் பயிர்த்தானியம்
மண்ணிழல் து}வும் மாமர இலைகள்,
பொன் விளை நிலத்தின் புதுப்புதுப் பொருட்கள்
பன்னீர் தெளித்த பசும் புற் பாய்கள்

கொண்டு குவித்தனர் கோபுரம் போல!
மண்டபம் எங்கணும் மங்கல ஆட்சி!
பண்டையக் காவிரிப் பட்டினந் தன்னை
கண்டனம் என்று கூடினர் மக்கள்!

பூவை பின்னழகோ பூரண கும்பங்கள்?
து}வ செய் மலர்கள் து}பங்கள், தீபங்கள்!
கோவை செங்கனியோ குங்குமம்? சந்தனம்...
தேவர்கோன் மயங்கும் திருவிழாக்கோலம்!

கலைமகள் வந்தனள்@ கண்ணசை செய்தனள்
அலையெழுந்தாடினள்@ அருவிப் பெண்பாடினள்
கலகல வென்றுமே காற்றொலி செய்திடும்
மலர் எனும் யாழினில் மது வண்ட மீட்டிடும்!

குயிலினம் பாடின@ கூவிடும் புறாக்களே
ஒயிலாரக் தத்தைகள் ஒசிந்துமே நடந்தன
மயிலினம் வந்தன@ மணிநடம் செய்தன
இயல், இசை, நாடகம் எழிலுற நடந்ததே!

தென்றல் உராய்ந்து தேய்ந்த இடைமாதர்
மன்ற மிருந்தார், மாலை போலானார்,
கொன்றை மலரும் கொங்கைத் தேன் குடங்கள்
நின்றபடி நிற்கும் நெஞ்சங்களீர்க்கும்

இடையே இல்லை@ இதழ்கள் பவளம்
குடையோ கண்கள்? கொழிக்கும் அழகு
தொடைகள் பட்டு தோற்றம் அபூர்வம்
நடைகள் பின்னும் நளினப் பெண்கள்!

ஆண்மைக் குலங்கள்: ஆண்கள் கூட்டம்
காணுந் தோற்றம் களிறுகள் போல
மானம், ஞானம் மனதில் வீரம்
பூணும் வர்க்கம் புருஷ லட்சணம்!

வழுக்கும் மேனி@ வளரும் பயிர்கள்
அழுக்குப்; புரளும்; ஆசை முகங்கள்
ஒழுக்கும் வாய்கள் ஒள்ளுப்பம் கைகள்
கொழுந்துக் கால்கள் குளிர்ந்த பாதம்!

துரு துரு பார்வை தும்பைப் பூக்கள்
பருவப் பிஞ்சு பளிங்குக் கன்னம்
கரும்புப் பேச்சு கதலி இதழ்கள்
விரும்பும் வயது விளையாட் டெண்ணம்

நடந்து திரிவர் நாற்புற மெங்கும்
இடங்கள், சூழல் எல்லாம் மறந்து
கிடந்து புரள்வர் கேட்பார் இல்லை
குடும்ப விளக்காம் குழந்தைச் செல்வம்!

வரவேற்பெங்கும் வாழ்த்தொலி முழக்கம்!
திரண்டனர் மக்கள் திரைகடல் போல
மருண்டது உலகம் மயங்கினர் தேவர்
புரண்டன மாலை பூவையின் மார்பில்!

தேவி நீ வந்தாய் திருமகளே வந்தாய்
ஆவி நீ வந்தாய் அமுதே நீ வந்தாய்
ஓவியம் வந்தாய் ஒய்யாரி வந்தாய்
தாவி நான் குதிப்பேன் தணலையும் விழுங்குவேன்!

வேண்டுகோள் தாயே விழாவினில் வைத்தேன்
து}ண்டுகோல் இல்லை துணிந்து நான் வந்தேன்
ஆண்டருள் செய்க, அம்மை நீ கேட்பாய்
து}ண்டினிற் புழுப் போல் துடிக்குமென் நெஞ்;சம்!

எல்லார்க்கும் பொதுவாய் எல்லாம் நீ வைப்பாய்
செல்வர்கள் என்றோர் சிறுகும்பல் வேண்டாம்
கள்ளர்கள் பெருகக் காரணம் என்ன?
உள்ளதைச் சொல்வேன் உணர்ந்திட வேண்டும்!

உழைக்க ஓர் கூட்டம் உறிஞ்ச ஓர் கூட்டம்
விளைக்க ஓர் கூட்டம் வெட்ட ஓர் கூட்டம்
தழைக்க ஓர் கூட்டம் தறிக்க ஓர் கூட்டம்
பிழைக்குமா தர்மம் பெருமாட்டி சொல்லு!

மலையினைத் தகர்த்து மடுவிலே போடு
நிலத்தினைச் சமனாய் நீ செய்ய வேண்டும்
மலைக்க நீ வேண்டாம் மனங் கொள் நடக்கும்!
நிலமையில் மாற்றம் நிச்சயம் வேண்டும்!

கடவுளவன் பேரில் கட்சியதன் பேரில்
நடைமுறை சாத்திரம் நாட்டினதன் பேரில்
தடையின்றிச் சொத்து தான் சேர்த்து வாழும்
கொடியவர் அறவே கொலைவாள் எடு நீ!

வறிஞர், செல்வர் வார்த்தைகளிரண்டும்
அறிஞர் செய்த அகராதியிருந்து
எறிந்திட வேண்டும் இகழ்ந்திட வேண்டும்
தெரிந்தவர் உடனே மறந்திட வேண்டும்

பதவியில் உள்ளோர்@ பணத்தாசை மிக்கோர்
புதியதோர் முறையில் பொருளீட்டுகின்றார்
அதையும் நான் சொல்வேன் அதுதான் ‘லஞ்சம்’
இதையும் நீ இன்றே ஒழித்திட வேண்டும்.

‘பந்தங்கள்’ வாங்கும் பாவிகள் கையைப்
பந்தங்கள் கொளுத்திப் பற்ற வைப்போம்
சிந்தையில் இரக்கம் சிறிதுமே வேண்டாம்
தந்தை தாய் ஏனும் தண்டனை தருவாய்!

இன்னுமோர் செய்தி இயம்புவேன் நானே
சொன்ன தோடி தையும் சேர்த்துக் கொள் தாயே
மின்னிடும் போலி மிக மிக அதிகம்
என்னதான் செய்வோம் இதையும் நாம் போக்க!

மேனி தனை மட்டும் மிக நன்கு மினுக்கி
பாணிதனை மேற்கைப் பார்த்திரவல் வாங்கி
ராணிபோல் பெண்ணும் ராஜாபோல் ஆணும்
நாணின்றித் திரிவதோ நாகரிகம் இங்கே?

வாய்தனில் ‘சிகரெட்’ வார்த்தைகளோ ‘இங்கிலிஷ்’
தாய் தந்தை இருவரும் தற்குறிகள் என்பார்
கோயிலிலே இருப்பது குத்துக்கல் தானாம்
நாய் மக்கள் வாழ்க்கை நகரத்தில் கண்டேன்!

கற்பென்பதிங்கு காய் கறி போல!
பற்றுந் தீயாம் பசிப் பிணியாலே
விற்பனைக் கடையில் வியாபாரம் அதிகம்
குற்ற மார் பக்கம் கூறு நீ தாயே!

திருந்துமோ உலகம்? தீய இந் நோய்க்கு
மருந் தெது தாயே மாறுவ தென்றோ?
வரும் பொருள் உயர்வால் மாறிப் போம் என்றால்
பெரும் பொருள் பெற்றோர் போக்கென்ன சொல்லு?

பணம் மீது புரள்வார் பாலள்ளி;க் குளிப்பார்
தினம் ஒரு வாழ்க்கை திரு விழா நடக்கும்
மண மில்லாப் பூக்கள் மரங்களிலே கள்ளி
இனமிது காக்க எதற்கிங்கே வேலி?

பண்பாட்டை என்றோ பாடையிலே ஏற்றி
மண் மேட்டில் எரித்த மா பெரும் ‘புனிதர்’
பெண் பேட்டைத்தேடிப் பின்வாசல் திறக்கும்
பொன் கோட்டைக்காரர் பூழியிலே வீழ்ந்தார்!

இரவெல்லாம் இவர்கள் இறைவனுக்கு மேலே!
உறவெல்லாம் இவர்கள் உடுத்துளியும் உடையே!
கர வெல்லாம் என்றோ கைவந்த பாடம்
தர மெல்லாம் இல்லை தத்துவமே வேறு!

காலையது மலர்ந்தால் கனவான்கள் வேஷம்
மாலை மரியாதை மனிதர்களிலே தெய்வம்
பாலை வனந் தன்னைப் பசுஞ் சோலை யென்று
சாலையிலே நின்று சத்தியமும் செய்வார்!

மாடி மனை வாழ்வோர் மர்மங்கள் சொன்னேன்
மூடியுள திரையை முற்றாகக் கிழித்தேன்
கோடி எனச் சொத்து கொண்டவரும் கெட்டார்
வாடி உடல் ஏழை வழுக்குவதும் கண்டாய்!

ஒருவனிடம் உணவும் ஒருவனிடம் ஓடும்
இருந்தபடி இருந்தால் இரண்டுமிவை தொடரும்
வருவாயில் சமத்துவம் வரும்போதே நாட்டில்
திருடெல்லாம் ஒழியும் திருடர்களும் தோன்றார்!

சிக்கல்களிலே சிலவே சேயிழையே சொன்னேன்
அக்கறையோ, அன்றி அதைத்தீர்க்கும் வழியோ
மக்களாள் அரசிடம் மண்ணளவும் இல்லை!
துக்கத்தைப் போக்கத் துணை செய்க தாயே!

புதியதோர் உலகம் பூமியிலே செய்வாய்
முதியதாம் கொள்கை முதுகெலும் புடைப்பாய்
விதியெனச் சொல்லி வீழ்ந்தவர்க ளெல்லாம்
நதி எனப் பாய்ந்து நலம் பெறச் செய்வாய்

பனிப் போரும் பிணிப் போரும்

பிணிப்போர் செய்;து
பிணமாகும் ஏழைகள்
பெருகி வரும்போது

பனிப்போர் நடத்தி
படைத்திறம் காட்டும்
பாசிஸ நாடுகள்

இனிப்போர் இல்லை
என்ற ஓர் நிலைமை
இவை ளால் இல்லை

அணுப்போர் போதும்
அவ்வளவும் சாம்பல்
அறிவார்கள் மக்கள்!

பணந் தன்னை அழித்து
படை தன்னைப் பெருக்கி
பயம் நெஞ்சில் மூட்டும்

குண முள்ள தலைவர்
கோலோச்சும் வரையும்
கொடுமையிது தொடரும்!

இன மிங்கே வாழும்
என்று ஆர் சொன்னார்?
ஈரமது நிறைந்த

மனமுள்ள தலைவர்
மண்ணாள வில்லை
மயானம் தான் எல்லாம்!

மனித மேகங்கள்

உழைப்பெனும் மழையை
ஊருக் களிக்கும் மேகங்கள்
ஒளி தரும் வாழ்க்கை

தழைப்பதை முற்றாய்
தகித்திடும் வறுமை
தாங்கா தழுவதிலும்

மழைப் புயல் என்றால்
மறுப்பவரில்லை
மண்ணின் ஏழைகள்

தேர்

தேர் ஒன்று பட்டு
சேலைதனைக் கட்டி
தெருவிலே ஊரும்

ஊர் ஒன்றுபட்டு
ஓடோடிச் செல்லும்
உற்று அதைக் காண

பார் என்று சொல்லும்
பளபளப் பில்லை
பண்பாடு என்னும்

சீர் ஒன்றே பெற்ற
செந்தமிழ் வண்ணம்
சீறடிகள் பின்னும்

கொடி ஒன்று கால்கள்
கொண்டு நடை பயிலும்
கோலமது காண

அடி பட்டு மக்கள்
அலையாக மோதும்
அதிசயமே என்று

முடி என்ற பேரில்
முகில் நின்று ஆடும்
முழு நிலவு முகம்

வடி வென்ன வென்றே
வாயூறிச் சொல்வார்
வந்தவர்கள் எல்லாம்

கண் என்ற குளத்தில்
கயல் துள்ளிப் பாயும்
கண்டவர்கள் எல்லாம்

‘விண்’ ணென்று அங்கே
விரைவார்கள் என்ன
விந்தையிது என்றே

முன்னின்று தொழுது
முழங்காலில் வீழ்வார்
மோட்சமே நீ தான்

பெண்ணென்று யாரும்
பேசிடவே இல்லை
பேரழகுத் தெய்வம்

கூட்டுச் சேராக் கொள்கையாம்

கூட்டுச் சேராக்
கொள்கை யெனும்
குடை பிடித்தாலும்

ஆட்டிப் படைக்கும்
அணு வல்லரசின்
அடிமை தான்!

பீரங்கி போல
வெடிக்கு மந்த
பிடல் கஸ்ரோ

யாரங்க மென
யாவரும் அறிவார்
ஜாலம் எதற்கு?

அமெரிக் காவின்
அணியில் தானே
அழகு சிங்கை

எமது நாடாம்
இலங்கைத் தீவு
எந்தக் கூட்டில்!

இந்திரா காந்தியின்
இதயம் இருப்பது
எந்தப் பக்கம்?

தந்தை நேரு
தழுவி மகிழ்ந்த
தரணியில் தானே!

அணி யில்லாத
நாடு எதுவும்
அவனியில் இல்லை

பிணி யிதனாலே
பிறந்த தன்றோ
பேரழிவு?

பனித்துளி

வானெனும் குளத்தில்
வளர் நிலா இறங்கி
தானாடி மகிழும்@
தண்ணீரது சிந்தி,

நில மெல்லாம வீழும்
நித்திலம் போல்! அதனை
பல கற்ற மனிதர்
‘பனி’ என்று சொல்வார்

பசும் புல் ஈனும்
பால் போல் முட்டை
விசும்பதன் பரிதி
விடியலிற் குடிக்கும்

பரம் பொருள் தெளிக்கும்
பரிசுத்த தீர்த்தம்
மரஞ் செடி அணியும்
மணி முத்தாரம்

இளந் தளிர்கள்

இன மரத்தின்
இளந் தளிர்கள்
எதிர் காலம்
நன வாக்கும்
நட்சத்திரங்கள்
நம் தலைவர்கள்

உள்ளஞ் சிவந்த
உணர்ச்சிப் பூக்கள்
உதய காலங்கள்
பள்ளம், மேடு
பதை மீதும்
பாயும் புரவிகள்

புலரும் காலைப்
பூபாளங்கள்
புது மலர்கள்
உலரும் வாழ்வில்
ஊறும் சுனைகள்
உத்தானங்கள்

தியாக வேள்வியில்
தினம் குளிக்கும்
திருவுருவங்கள்
நியாயம் வழங்கும்
நீதிபதிகள்
நெஞ்சின் சாட்சிகள்

வசந்த கால
வான் குயில்கள்
வாழ்த்துப் பாடல்கள்
கசந்த பொருளும்
கற்கண்டாக்கும்
காளைப் பருவங்கள்

உயரப் பறக்கும்
உந்து கணைகள்
உயிர் நாடிகள்
அயர்வே யில்லாத
ஆண் தகைகள்
அணுக் குண்டுகள்

இரவில் உதித்த சூரியன்

யேசு எனும் இளம் பரிதிட
எழுந்து வரும் இரவில்
வீசு மதன் ஒளி கண்டு
விரைந்தோடும் இருளே
மாசு மறு அற்றதொரு
மங்கா ஒளி விளக்கு
து}சு மிகு பூமியினைத்
துடைத்தழகு செய்யும்!

து}ய மனத் தாமரைகள்
தோழன் இவன் கண்டு
வாயி தழ்கள் திறந்தபடி
வரவேற்று மகிழும்
ஆயன் இவன் தானென்று
ஆடு, மாடெல்லாம்
நேய முகம் காட்டி மிக
நெருங்கி உறவாடும்!

அன்னியரின் ஆட்சியிலே
அடிமைகளாய் இருந்த
தன்னினமாம் யூதர்களைத்
தற்காத்து நிற்க
அண்ணலவன் தேவமகன்
அவதாரம் செய்தான்
நண்ணியவன் பாதமலர்
நாம் போற்றி நிற்போம்!

பெமை மிகு மன்னர் குலப்
பிள்ளையவன் ஏனும்
வறுமையிலே உருளுமொரு
வர்க்கத்தின் தலைவன்
உரிமை யெனக்;;;;;;;;;;;;;; கொண்டாட
ஓருயிரும் இல்லா
சிறுமையவன் பிறப்பு இதைச்
சிந்தை தனிற் கொள்வீர்!

-----------------------------------------------------

இவர்கள்; எழுதுகிறார்கள்......

இலங்கை நண்பர் கவிஞர் வாகரைவாணன் அவர்களின் கவிதைகளைக் காணும் அரிய வாய்ப்பைப் பெற்ற நான் பல்வேறு பொருள்களைப் பற்றிச் சிறந்த முறையில் இனிய கவிதை புனையும் இளங்கவிஞர் வாகரைவாணன் ஆவார். சிந்தனை ஓட்டத்தின் சுமை கவிதையை நசுக்கி விடாமல் எளிய முறையில் சொற்களை அமைத்து பாப்புனையும் ஆற்றலைக் கவிஞர் பெற்றிருக்கிறார். காரிகை இலக்கணங்களை நம்பாமல் காதுகளிற் படும் இனிய ஓசையின்பத்தையே பெரிதும் நம்புகிறார் கவிஞர். தடைபடாத இழுமென் ஓசையை இவர் கவிதையில் நிரம்பக் காண்கிறோம்.
(“சுட்டபொன்” அணிந்துரையில்)
இரா. குமரவேலன் ஆ. யு.ஆ. டுவைவ.
தமிழ்ப் பேராசிரியர்,
பச்சையப்பன் கல்லு}ரி.
சென்னை.

அவலங்கள் அதிகமிருந்தால் கவிதை சுவையாக இருக்கும் என்பதற்கு, நண்பர் வாகரைவாணனின்; கவிதை சான்று.
கவியரசு கண்ணதாசன்.
‘பயணம்’ அணிந்துரையில்

கவிஞர் வாகரைவாணனிடம் கவித்துவமும், அழகியல் உணர்வும் நிரம்பிக் காணப்படுகின்றன.
எஸ். ஏ. ஜீவா
‘தமிழ்ப்பாவை’ விமர்சனத்தில்
(தினகரன் 29-6-80)

-------