கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  இளைஞன் ஏர்கையின் திருமணம்  
 

ஜௌ சூ லி

 

இளைஞன் ஏர்கையின் திருமணம்

ஜௌ சூ லி

-----------------------------------------------------

இளைஞன் ஏர்கையின் திருமணம்

(சீனக் குறுநாவல்)
ஜௌ சூ லி

தமிழில்
கே. கணேஷ்

சென்னை புக்ஸ்

-------------------------------------------------------

அறிமுகவுரை

சீன நாட்டின் வரலாற்றில் 1937 தொடங்கி 1945 வரை இடைப்பட்ட காலம் ஒரு திருப்புமுனையாகும். பல்வேறு முன்னணி நோக்கங் கொண்ட கட்சியினர்களும் ஒன்று திரண்டு ஜப்பானின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்ட காலம். 1942ல் தொடங்கி முறுக்கேறி 1946. 1949 காலகட்டத்தில் நாட்டின் விடுதலைப் போராகி, முடிவில் 1949 அக்டோபரில் மக்கள் சீனக் குடியரசு உருவாகியது.

சியாங்கை ஷேக் - ஜப்பான் ஆகிய இருமுனை எதிர்ப்புப் போராட்டத்தில் சீன மக்கள் ஈடுபட நேர்ந்தது. தொலைவில் சீனாவின் ஒரு கோடியில் யென்சூன் பகுதியில் திகழ்ந்த கம்யூனிச அரசு ஒரு ஆய்வுக் களமாகத் திகழ்ந்தது. சமதர்ம ஆட்சி முறையையும் அதனை நெறிப்படுத்த கலை இலக்கியத் துறையின் வழிவகைகளும் அப்பகுதியில் ஆய்வுக்குள்ளாயின.

சீன இலக்கியத் துறையின் ஜாமபவானான லூசுன் பழம் கன்பூசிய நெறிமுறைகளின்று விலகிப் புதுமை இலக்கியத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவரது சிறுகதைகள், சொல்லம்புகளில் நஞ்சு தோய்ந்த கட்டுரைகள் ஒரு தனி மரபையே உருவாக்கின. அவர் பரம்பரையில் குமாரோ, லாவ்ஷே, மாவ்தன், பாஜின், டில்லிங் எனப்பலர் தோன்றினர். இவர்களை நெறிப்படுத்தும் முறையில் 1942 மேத் திங்களில் தலைர் மாஒசேதுங் "யென் ஆன் கலை இலக்கிய கருத்தரங்கு உரை" அமைந்தது.

"நமது கலை இலக்கியம் எல்லாம் பரந்துபட்ட பொது மக்களுக்கு, முதன் முதலாக தொழிலாளர், விவசாயிகள் படையினருக்கு உரியவை, அவை தொழிலாளர், விவசாயிகள், படையினருக்காக சிருஷ்டிக்கப்படுகின்றன ; அவர்கள் உபயோகத்துக்கு
உரியவை.

"நமது கலை இலக்கிய ஊழியர்கள் இந்தக் கடமையை கண்டிப்பாக நிறைவேற்றி, நமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், படையினர் மத்தியில், யதார்த்தப் போராட்டங்களின் ஆழமாகச் செலுத்தும் போக்கில், மார்க்ஸிஸத்தையும் சமுதாயத்தையும் படிக்கும் போக்கில், தொழிலாளர், விவசாயிகள் படையினரின் பக்கத்துக்கு, பாட்டாளி வர்க்கத்தின் பக்கத்துக்கு நமது நிலைப்பாட்டை படிப்படியாக நகர்த்த வேண்டும். இவ்வாறு தான் உண்மையில்; தொழிலாளர், விவசாயிகள் படையினருக்குரிய கலை இலக்கியத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கக் கலை இலக்கியத்தை,
நாம் பெற முடியும்.

(தலைவர் மாஒ சேதுங் ஆமற் கோள்கள் தமிழ் மொழி பெயர்ப்புப் பதிப்பு அயல் மொழி பதிப்பகம், பீக்கிங் 1967. பக்கங்கள் 429 - 430 )

இப்பணிப்புரையின் வழியே பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் மக்களிடையே வாழ்ந்து அவர்களின் கலைவழி உணர்வூட்டியதுடன் அவர்கள் வாழ்க்கை நிலைகளையும் சித்தரிக்கும் படைப்புக்களையும் ஆக்கத் தொடங்கினர்.

இத்தகைய பணியில் முன்னோடியாகத் திகழ்ந்தார் ஜௌசூலி (1906 - 1970). சீன இலக்கியத்தில் நாட்டுப் புற வாழ்க்கையைச் சித்தரித்த முதல் எழுத்தாளர் ஆவர். அவரது பள்ளிக் காலத்திலேயே நேர்மையாகப் போராடியவாவர். அவரது மூன்றாம் வகுப்புப் படிப்பின் காலத்திலேயே பள்ளித் தலைவர் ஊழல்களை வெளிப்படுத்திய இயக்கத்தினருடன் சேர்ந்திருந்ததன் காரணமாக பள்ளியினின்று விலக்கப்பட்டர். அவர் கிராமத்துப் பள்ளி ஆசிரியராகவும் பணியாளராகவும் கடமை புரிந்தார். இவ்வனுபவங்கள் எழுத்து வடிவமுற்றன. நாட்டுப்புற மக்களது வாழ்க்கைகள், எண்ணப் போக்குகள் இவற்றை நன்கு புரிந்து அவர்களுக்கே உரிய "ஒரே ஓர் ஊரில் ஒரே ஒரு ராசாவாம்...." என்ற மரபுப் பாணியில் கதை எழுதத் தொடங்கி முற்போக்கு எண்ணங்களை அவர்களிடையே புகுத்திப் புகழ் பெற்றார்.

ஜப்பானியரை எதிர்த்துப் போரிட்ட வீரனாக இருந்த சூலி மக்களிடையே தனது கதைகள், நாடகங்கள் மூலம் ஏகாதிபத்திய எதிர்பு;புணர்வைத் தோற்றுவித்தார். அவ்வழியில் நிருவாகியாகவும் தகவல் மேற்பணியாளராகவும், பின்னர் சின்ஹ_வா வெளியீட்டு நிறுவனத்தின் தலைவராகவும் பணி புரிந்துள்ளார், 1931 தொடங்கி எழுத்துலகில் புகுந்த அவரது எழுத்துக்கள் மக்களைக் கவர்ந்தன. அவரது எளிய நடையையும் சராசரி சீனக்குடி மக்களின் உள்ளங்களை உணர்த்திய கதைப் பாங்கும் வெளி நாட்டவர்களையும் கவர்ந்தன.

"இளைஞன் எர்கையின் திருமணம்" குறுங்கதையின் கரு ஓர் உண்மை நிகழ்சியின் அடிப்படையில் தோன்றியதாகும். அப்பொழுதைய சமூகச் சூழ்ந்லையில் சூழ்ந்திருந்த ஒரு சோடிக் காதர்களின் நிகழ்விலிருந்து உதித்தது. பழமையில் ஊறியிருந்த சமூகத்தினர் காதலனைக் கொலையே செய்து விட்டனர். அந்நிகழ்வைப் புது சமூக அமைப்பின் பின்னணியில் "எல்லோரும் சந்Nhஷமாக வாழ்ந்தார்கள்." என்று முடியும் நாட்டுப் புறக் கதைகளுக்கேற்ப மகிழ்வுதரும் முடிவில் சூலி ஆக்கியுள்ளார் 1943ல் முதன் முறையாக இக்கதை வெளி வந்த பொழுது கல்வியறிவு மிகக் குறைவாக இருந்த நிலையிலு; தைஹான மாவட்டத்தில்
மட்டுமே நாற்பதாயிரம் படிவங்கள் விற்பனையாகினவாம்.

1949ல் மக்கள் சீனக்குடியரசு தோன்றிய அடுத்த ஆண்டே ஆங்கில மொழி பெயர்ப்பில் இக்கதையும் மற்றவற்றுடன் சுhலஅநள ழக டுலைர - வுளயi யனெ ழவாநச ளுவழசநள என்ற தலைப்பில் சீன மக்கள் குடியரசு வெளியிட்டது. லீ கிராமத்தின் மாற்றங்கள் (ஊhயபெநள in வாந டுi ஏடைடயபந) என்ற புதினம் அவரதே.

அக்காலத்தே சீன மொழி பெயர்ப்புகள் செய்த அமெரிக்கரான சிட்னி ஷெப்பிரோ தனது (யுn யுஅநசiஉயn in ஊhiயெ டில ளுனைநெல ளூயிசைழ வுhசைவல லநயசள in வாந Pநழிடநள சுநடிரடிடiஉ நேற றுழசடன Pசநளளஇ டீநதைiபெஇ 1979) "சீனாவில் ஓர் அமெரிக்கன்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளவை.

"ஜௌ சூலி திறன்மிக்க ஆற்றல் படைத்த சீன எழுத்தாளர்களில் ஒருவர். கோமிந்தாங் எதிரிப் படைகள் விரட்டப்பட்டு மக்களாட்சி நிறுவப்பட்ட விடுவிக்கப்பட்ட பகுதிகளின் வாழ்க்கைப் போக்கைச் சித்தரித்தார். புதிய அறிவுபூர்வமான எண்ணங்களுக்கும பிற்போக்கான நிலக்கிழார் முறையின் எண்ணங்களுக்குமிடையே தோன்றிய முரணபாட்டுப் போராட்ட நிகழ்வுகளை நகைச் சுவையுடன் வரைந்தார். சமூகச் சிக்கல்களை மக்கள் வழக்கிலுள்ள பேச்சு மொழிகளிலேயே மென்மையாகப் படாடோபமின்றி எழுதினார். அவரது சிறுகதைத் தொகுதியை மொழி பெயர்த்த பொழுது பெருமகிழ்வுற்றேன்."

மக்கள் குடி அரசின் தொடக்க ஆய்வுக் களத்தில் தோன்றிய அனுபவங்களை அக்காலகட்டத்தில் எழுதிய ஓர் ஆற்றல் மிக்க எழுத்தாளரின் படைப்பு நம் எழுத்தாளர்கட்கும் ஆய்வாளர்கட்கும் பயன் தரும் என்ற நோக்கில் தமிழாக்கித் தரப்படுகிறது.

கே.கணேஷ்
தலாத்து ஒய
கண்டி - இலங்கை
02-10-1989

-------------------------------------------------------------

பதிப்புரை

முதுபெரும் எழுத்தாளர் கே.கணேஷ் மொழிபெயர்த்த சாந்தோர் பெட்டோல்ஃபயின "எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னமைத் தாய் நாடே" கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து, அவரது தமிழாக்கத்தில் சீன இலக்கியங்கள் சிலவற்றை தொடராக தேசிய கலை இலக்கியப் பேரவை சென்னை புக்ஸ_டன் இணைந்து வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம். இரண்டாவது நூலாக ஜௌசூ லியின் "இளைஞன் எர்கையின் திருமணம்" வெளிவருகிறது.

பத்திரிகையாளராக, கவிஞராக, திறனாய்வாளராக, பேச்சாளராக, அமைப்பாளராக, ஆலோசகராக பன்முகச் செயலாற்றல் படைத்தவர் கே. கணேஷ், சென்னையில் கற்ற வேளையில் முனைப்புடன் இளைஞர் காங்கிரஸில் இயங்கி 1936 ஆம் ஆண்டில் ;;'லோக சக்தி' எனும் பத்தரிகையை வெளியிட்டவர். 1945 இல் கே. ஏ. அப்பாஸ், வெங்கடாச்சாரி, குயிலன், தி.க. சிவசங்கரன் ஆகியோருடன் இணைந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்துச் சிறந்த அமைப்பாளராகத் தம்மை இனங் காட்டினார்.

முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்த சமயம், விபுலாநந்த அடிகளை தலைவராகக் கொண்டு மார்ட்டின் விக்கிரமசிங்க, எதரிவீர சரத்சந்திர போன்ற சிங்கள இலக்கியப் பிரமுகர்களுடன் இணைந்து இலங்கையின் தமிழ் - சிங்கள எழுத்தாளர்களது ஒன்றிணைந்த ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்பினார்; அதே முனைப்புடன் செயல் புரியும் ஆர்வம் தளராத நிலையில் இன்றைய இளம் இலக்கியவாதிகளுடன் தொடர்பை விருத்திச் செய்து வருவது இவரது செயலூக்கத்துக்கு சிறந்ததொரு சான்றாகும்.

தமது பன்முக இலக்கியப் பணியின் ஓரம்சமாக அனைத்துலக மக்களது நல்ல படைப்புகளை தமிழாக்கித் தரும் பணியை இப்போது தொடர்ச்சியாகத் செய்து வருகிறார். இத்துறையில் சீன இலக்கியங்கள் அதிகம கவனஞ் செலுத்தப்படாதன. ஏற்கனவே லூசுனின் சிறுகதைகளை இரு தொகுதிகளாய் தமிழ்கூறு நல்லுலகுக்கு வழங்கியவர், இப்போது வேறு சில சீனப்படைப்பாளர்களை அறிமுகம் செய்து தர முன்வந்துள்ளார்.

இவரது மொழிபெயர்ப்புகள் யாந்திhPக hPதியில் அமைந்தனவல்ல ; மூலமொழி சார்ந்த மக்களதும், தமிழ் மக்களதும் அறநெறிகள், தார்மீகக் கோட்பாடுகள் பண்பாட்டுக் கோலங்கள், அழகியற் தாரதம்மியங்கள் ஆகியவற்றைத் தமது நுண்மாண் நுழைபுலத்தால் தேர்ந்து தெளிந்து மொழிபெயர்க்கும் ஆக்கத்தினை சுவைபடத்தரும் ஆற்றல் படைத்தவர். அதற்கென இலக்கியத் தேடலுக்கும் அப்பால் சமூக பண்பாட்டு ஆய்வுகளை நிகழ்த்திப் பெற்ற அறவொளியுடனேயே மொழி பெயர்ப்புப் பணியை மேற்கொள்பவர்.

இந்த நிதர்சன உண்மையை தொடராக வெளிவரும் சீனப்படைப்புகளும் உறுதி செய்யும். இத்தகைய பண்பின் வெளிப்பாடாக, சீன இலக்கியத் தேடலுடன் தாம் வளர்த்துக் கொண்ட சீன மக்களது வரலாற்றினைக் கட்டுரையாக எழுதும் பணியில் இவர் இப்போது ஈடுபட்டு வருகிறார் என்பதும், விரைவில் அது நூலுருவில் வெளிக் கொணரப்படும் என்பதும் இக்கிய - சமூகவியல் ஆர்வலர்கட்கு பெரு மகிழ்வைத் தரும் என நம்புகிறோம்.

தமது அரிய படைப்புகளை பேரவையூடாக வெளியிட அனுமதி வழங்கிய கே.கணேஷ் அவர்கட்கும், எம்முடன் இணைந்து இவற்றை வெளியிடும் சென்னை புக்ஸ் நிறுவனத்தினர்க்கும், இந்த வெளியீட்டில் பணிபுரியும் அனைவர்க்கும் எமது நன்றிகள்.

தேசிய கலை இலக்கியப்பேரவை
15/1 மின்சார நிலைய வீதி
யாழ்ப்பாணம்
இலங்கை.
1 - 3 - 90.

------------------------------------------------------

இளைஞன் எர்கையின் திருமணம்

1

லியு பள்ளத்தாக்கில் இரு கோள்குறி பார்ப்பவர்கள் வசித்தனர். சுற்றுப்புற ஊர்களில் அவர்கள் பெயர் பிரசித்தம். ஒருவன் இரண்டாம் கொங்மிங்; (கொங்மிங் என்பவன் சூகேலிங் என்ற கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக் காலலத்தில் வாழ்நத போர்க்கலையில் தேர்ந்த அரசியல்வாதி. அவன் எதிர்காலத்தைத் துள்ளிதமாகக் கணித்துக் கூறுவதில் வல்லுனன் என்பர்.) என்ற பட்டப்பெயர் பெற்றவன். மற்றவள் பெண்மணி. மூன்றாம் தேவதைத் தோழி என்று அழைக்கப்பட்டாள். இரண்டாம் கொங்மிங்கின் இயற்பெயர் லியு சியுடே. முன்னர் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தவன். தேவதைகள் மீது நம்பிக்கை கொண்டவன். ஏதாவது செயல்புரிவதாக இருந்தால் தேவதைகள் அனுமதி கேட்டே செய்வான். மூன்றாம் தேவதைத் தோழியோ தலையில் சிகப்புத் துணியைச் சுற்றியவாறு அமாவாசை, முழுமதி நாட்களில் தன்னை ஒரு தேவதையாக எண்ணி நடமாடுவாள். ஊரிலுள்ளவர்கள் கொங்மிங்கை "விதைப்புக்கு ஏற்ற நாள் இதுவல்ல" என்றும் மூன்றாம் தேவதைத் தோழியை "சோறு குழைந்து விடும்" என்றும் கேலி செய்வதை இவர்கள் அசட்டை செய்வார்கள். இவை குறித்து இருகுட்டிக் கதைகள் நிலவின.

ஓர் ஆண்டு பலுவக்காலம் முழுதுமே மழை பெய்யாது பொய்த்து விட்டது. ஐந்தாம் நாள் முழுமதி கழிந்த மூன்றாம் நாள் ஏதோ சிறிது தூற்றல் போட்டது. எல்லோரும் வயலுக்கு விதைப்பதற்காக விரைந்து சென்று கொண்டிருந்தனர். இரண்டாம் கொங்மின் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்து விரல்களை எண்ணியவாறு "விதைப்புக்கு ஏற்றநாள் இதுவல்ல" என்று கூறினான். ஐந்தாவது நாளோ யாளி ஓடத் திருவிழாநாள். அந்நாளில் எத்தகைய பணியையும் அவன் செய்வதில்லை. எனவே அன்றும் விதைக்கச் செல்லவில்லை. அவன் கணிப்பின்படி ஆறாவது நாள் அதிர்ஷ்ட நாள். ஆனால் அன்றோ அவன் வயல்கள் ஈரமற்றுக் காய்ந்து விட்டன. முடிவில் ஒருவாறாகத் தன் நான்கு 'மூ' பரப்பு கொண்ட நிலத்தில் விதைத்ததும் அவற்றில் பாதியளவு கூட முளைகட்கு மேற்கிளம்பிய மற்றவர்கள் களைகளைப் போக்கிக் கொண்டிருக்க இரண்டாம் கொங்மிங்கின் இரு மகன்களும் முளைக்காத பகுதிகளில் மீண்டும் விதை விதைத்துக் கொண்டிருந்தனர். பகலுணவு வேளையில் பக்கத்து இளம் வயற்காரர் இரண்டாம் கொங்மிங்கை நோக்கி வேடிக்கையாக "தாத்தா இன்று விதைப்புக்கு ஏற்ற நாள் அல்ல தானே?" என்றான். இரண்டாம் கொங்மிங் அவனை எரித்து விடுவது போல் பார்த்துச் செல்லவே முடிந்தது. அந்தத் தவறான ஜோசியக் கூற்றால் அவன் ஊரார் கேலிக்கு உள்ளாக நேர்ந்தது.

மூன்றாம் தேவதைத் தோழிக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சியாவ் சின் (இளையசின்). ஒரு நாள் அண்டை வீட்டுக்காரரான சின்வாங்கின் தந்தையார் தம் நோய் குறித்துக் குறி கேட்க மூன்றாந் தேவதைத் தோழியின் வீட்டிற்கு வந்தார். பரிமள தூப தீபங்கள் நிறைந்த மேசையின் முன் மண்டியிட்டு வணங்கி அந்தப் "பெண் தெய்வத்தின்" வாயிலிருந்து வரும் திருவாக்குகளுக்காகக் காத்திருந்தார். அப்பொழுது ஒன்பது வயது நிறைந்த சியாவ் சின் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள் அம்மாளின் மந்திர உச்சரிப்பு ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்ததில் அடுப்பில் வெந்து கொண்டிருந்த சோற்றை அடியோடு மறந்து விட்டாள். சிறிது நேரம் சென்றதும் கிழவர் சிறுநீர் கழிக்கச் சென்ற வேளையில் தியானத்தில் இருக்கும் பொழுது மௌனம் கைக்கொள்ள வேண்டியதை விடுத்துத் திடீரென சின்னை நோக்கி "சமையலைக் கவனி சோறு குழைந்து விடும்!" என்று கூறினாள். அப்பொழுது தான் திரும்பி வந்து கொண்டிருந்த கிழவரின் காதில் இச்சொற்கள் விழுந்து விட்டன. இதனை அவர் ஊரெல்லாம் பரப்பியதில் ஒருகுறையும் அவர் மேல் சொல்வதற்கில்லை. அது முதல் மூன்றாம் தேவதைத் தோழியை ஊரார் எங்கு கண்டாலும் "சோறு குழைந்து விடும்" என்று கிண்டல் செய்யத் தொடங்கினார்கள்.

2

மூன்றாம் தேவதைத் தோழியும் வள்ளிசாய் முப்பது ஆண்டுகளாய் தெய்வங்களை வழிபட்டு வருகிறாள். பதினைந்தாம் வயதில் யுஃபுவை அவள் மணந்த காலத் தொடக்கம் இத்தொழிலில் செய்படுகிறாள். அக்காலத்தே அவள் ஊரின் சிறந்த அழகியாக விளங்கினாள். யுஃபு அதிகம் பேசாத இளைஞன். வயலிலே நன்கு உழைப்பவன்.

யுஃபுவின் அன்னை சிறுவயதிலேயே இறந்து விட்டாள். எனவே, யுஃபு தன் தந்தையுடன் வயலுக்கு பணிபுரியச் செல்லும் வேளையில் மணப்பெண் தனியாகவே இருக்க நேர்ந்தது. கிராமத்து இளைஞர்கள் இவளது தனிமையைக் கண்டு இரக்கங் கொண்டு அவளுக்குத் துணையாக இருப்பதில் மகிழ்ச்சி கொண்டனர். சில நாட்களில அவளைச் சுற்றிய பெரிய கூட்டம் ஆடியும் பாடியும் அவளை மகிழ்வித்தது. யுஃபுவின் தந்தைக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லை. ஒருநாள் அவர் பொறுமை இழந்தவராய் அந்த இளைஞர் கூட்டத்தை நன்றாகத் திட்டிவிட்டார். அவர்கள் வருகை தடைப்பட்டது. ஆயினும், அவரது மருகளுக்குத் தோன்றிய ஆத்திரத்தில் ஒரு நாள் பகல் இரவு முழுதும் அடம்பிடித்தவளாய் அழுது தீர்த்தாள். தலை சீவவில்லை, முகம் கழுவ மறுத்தாள். உணவுகூட உண்ணவில்லை, கட்டிலில் படுத்தவாறே இருந்தாள். யார் வேண்டியும் அவள் அசையவில்லை. மாமனாரும் கணவனும் என்ன செய்வதென்றே புரியாது தடுமாறினார்கள். அண்டை வீட்டுக்காரப் பாட்டி ஒரு சூனியக்காரியை அழைத்து வந்தாள் அவள் தெய்வத் தொடர்பு கொண்டு இவ் இளம் பெண்ணுக்கு "மூன்றாம் தேவதைத் தோழி " செம்மையாகக் பிடித்துக் கொண்டிருப்பதாக குறி சொன்னாள். பாதிக்கப்பட்டவர்களும் "ஆமாம், அம்மா. இல்லைத் தாயே ! " என்று ஆட்கொண்டவளாக பிதற்றிக் கொண்டிருந்தாள். அது முதற் கொண்டு அவளுக்கு "மூன்றாம் தேவதைத் தோழி" என்று ஊரினர் பட்டம் சூட்டினர் அவளும் தோதாக அமாவாசை பூரணை நாட்களில் இத் தேவதையுடன் தொடர்பு கொள்வதாக கூறிக் கொண்டாள் எனவே, ஊரார்களும் இந்நாட்களில் காணிக்கைகள் செலுத்தி குறி கேட்கத் தொடங்கினர். அவளும் தான் ஒரு பக்தை எனக் காடடிக் கொண்டாள். உடல் நலம், வருவாய் குறிதது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குக் குறி சொல்லத் தொடங்கினாள்.

இந்த மூன்றாம் தேவதைத் தோழியைக் காணவரும் இளைஞர் கூட்டம் அவளது தெய்வுPகச் சொற்களைக் கேட்பதை விட அவளது தெய்வீக உடல் தோற்றத்தை காணவே திரண்டனர். அவளும் அவர்களது நோக்கத்தை உணர்ந்தவளாய் தானும் நல்ல ஆடைகள் புனைந்து, அழகாக முடிவாரிச்சீவி, பளிச்சிடும் ஆபரணங்கள் பூண்டு முகத்திற்குப் பௌடர் பூசிச்சிங்காரித்து இந்த பக்தியற்ற ஈக்கள் கூட்டத்தை மயக்க முனைவாள்.
ஆமாம், இவையெல்லாம் முப்பது ஆண்களுக்கு முன்னால் நிகழ்ந்தவை. இப்பொழுதோ அந்த ரசிகர்கள் தாடி வைத்தவர்களாயும் சிலர் வயது வந்த பெண்களுக்குதட தகப்பனாக ஆகியவர்களாகவும் மாமனார்களாகவும் ஆகி இருந்தனர். ஏதோ ஒரு சில வயது நிறைந்தும் திருமணமாகாத கட்டைகளைத் தவிர மற்றவர்கள் எவருக்குமே இவளைச் சந்திக்க நேரம் வாய்ப்பதில்லை. நாற்பத்தைந்து வயதாகியுங்கூட ஆடவரைக் கவரும் அலங்காரம் புனைவதில் ஈடுபட்டாள். பூப்பின்னிய காலணிகள், வேலைப்பாடு நிறைந்த கரையுள்ள காற்சட்டை இவற்றை உடுத்தினாள். அவளது தலையில் வழுக்கை விழுந்துள்ளதை மறைக்க கருமை நிறத்தலைல துணியால் முடி மறைத்துக் கொண்டாள். ஆயினும், பாவம் எவ்வளவு பொடி போட்டுத் தேய்த்து நிரப்பினாலும் அவளது முகச் சுருக்கங்களை அவளால் மறைக்க முடியவி;ல்லை . கழுதையின் முட்டை வடிவச் சாணத்தின் மேல் பனிப் படலம் மூடியது போல அவள் மகம் காட்சி தந்தது.

அவளது பழைய ரசகர்கள் வராது நின்று கொண்டதும், வந்து கொண்டிருக்கின்ற கிழட்டு பிரமச்சாரிகள் அவளுக்குத் திருப்தியைத் தராததாலும் அவள் ஒரு புதிய வகை இளைஞர் கூட்டத்தைக் கூட்ட முனைந்தாள். அவர்களோ முன்னையவர்களை விட எண்ணிக்கையில் கூடுதலாகவும் இருந்தனர். தவிரவும் அக்காலத்துப் பேர்வழிகள் போலல்லாது தாராள குணம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள். இந்தப் புகழேற்றத்திற்குக் காரணமும் மர்மமும் என்ன? அவளது இளம் மகள் சின்னே காரணம்.

3

மூன்றாம் தேவதைத் தோழி எல்லாமாக ஆறு குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கிறாள். அவற்றில் ஐந்தும் சிறு குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டன. உயிரோடு உலவும் ஒரே மகளுக்கு சியாவ் சின் (இளைய சின்) எனப் பெயரிடப்பட்டது.

சியர் சின் தற்பொழுது பதினெட்டு வயதை எட்டி விட்டாள், ஊரார் இவளை அவளது தாய் அந்த வயதில் இருந்ததைவிட அழகுடன் விளங்குவதாகக் கூறினார்கள். இளைஞர்களும் இவளிடம் ஏதாவது சில சொற்களைப் பரிமாறிக் கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகத் தடுமாறினார்கள். சின் ஆற்றுக்குத் துணி துவைப்பதற்காகச் செல்லும் வேளையில் பின் தொடர்வார்கள். மூலிகைகளைத் தேடி அவள் செல்லும் பொழுதும் அவ்வாறே செய்வார்கள். பகலுண்டி நேரத்தில் தங்கள் உணவு நிறைந்த தட்டைத் தூக்கிக் கொண்டு தொலைவைக் கூடக் கருதாது மூன்றாம் தேவதைத் தோழி வீட்டிற்கு வந்து அமர்ந்து அரட்டை அடிப்பார்கள். முப்பது ஆண்டுகளாக இப்பழக்கம் நிலவியது எனினும் இந்த இரண்டு ஆண்டுகளாய்த்தான் இளைஞர்கள் இச்செயலைத் தொடங்கி இருக்கின்றார்கள். தொடக்கத்தில் மூன்றாம் தேவதைத் தோழி தனக்கு இன்னும் வசீகர சக்தி இருப்பதாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தாள். இளைஞர்கள் தன்னைத்தான் சுற்றிக் கொண்டிருப்பதாக எண்ணினாள். நாளடைவில் தன்னைக் கருதி அவர்கள் வரவில்லை என்ற உண்மையை உயரத் தொடங்கினாள்.

சியாவ் சின்னோ அவள் அம்மாவைப் போல் நடந்து கொள்ள விரும்பவில்லை. மற்றவர்களுடன் குஷியாகப் பேசி மகிழ்ந்தாலும் மற்றப்படி அவர்களை வித்தியாசமாக நடக்க விடுவதில்லை. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாய் அவள் இளைஞன் எர்கை மீது அன்பு கொண்டிருந்தாள். ஒரு நாள் கோடை காலக் காலை வேளையில் இளம்ஜின்வாங் சுற்றி வந்து பல்லை இளித்தவாறு "ஒரு மாதிரி கடைசியாக நாமிருவரும் தனியாக இருக்கக் கிடைக்கிறது!" என்றான். ஆனால் சின்னோ எரிச்சலுடன், "ஜின்வாங் மரியாதையாக நடந்து கொள். நீ என்ன குழந்தையா?" எனறாள். ஜின்வாங் மேலும் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தான். "சும்மா நடிக்காதேடி! இளம் எர்கையாக இருந்திருந்தால் இன்னேரம் உருகிப் போயிருப்பாய். என்னையும் கவனித்துக் கொள்ளேன். அவனிடத்தில் மட்டும் என்னத்தைக் கண்டுவிட்டாய்?" என்று கூறியவாறு சின்னின் கையைப் பற்றி இழுத்தவாறு "சும்மா வா, வேஷம் போடாதே!" சியாவ் சின் "ஜின்வாங்" என்று உரத்துக் கூச்சலிட்டதும் அவன் பின் வாங்கிவிட்டான். அவளைக் கைவிட்டு வீட்டைவிட்டு நழுவியவாறு "கவனித்துக் கொள்கிறேன்" என்று கூறிச் சென்றான்.

4

ஊரிலுள்ள அனைவரும் ஜின் வாங்கை வெறுத்தனர். அவன் ஒன்று விட்ட சகோதரன் சிங்வாங் மட்டுமே அவனுடன் நட்பு. ஜின் வாங்கின் தந்தை ஓர் உழவர். இருப்பினும் புலிபோல் நடப்பவர். கிழவர் பல ஆண்டுகளாக ஊர்த்தலைவராக இருந்தார். மக்களுக்குக் கொடுமை புரிவதில் மன்னன். ஜின்வாங்கும் வயது வந்ததும் அப்பாவுக்கு ஏற்ற உதவியாக வந்தான். உறவினனான சிங்வாங்கும் இவர்கள் புலிப் பாய்ச்சலுக்கு ஒத்தாசையாக அமைந்தான். கிழவனுக்கு யார்மீதேனும் கைவைக்க எண்ணமிருந்தால் முன்போல் அவன் நேரே சென்று காரியம் சாதிக்க வேண்டி இருக்கவில்லை. சும்மா ஒரு வார்த்தை சொன்னாலே போதும். ஜின் வாங்கும் சேர்த்து கொண்டு திருப்பணியில் இறங்கி விடுவார்கள்.

முப்பதுகளின் தொடக்கக் காலகட்டத்தில் துரோகிகள், எதிரிகளின் ஒற்றர்கள், படையினின்று வெளியேறியவர்கள், கொள்ளைக்காரர்கள் நாடெங்கும் சுற்றித் திரிந்து சிறப்பாக நாட்டுப்புறங்களில் தெர்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இக்காலத்தில் ஜின் வாங்கின் தந்தையும் இறந்து விட்டான். எனவே வாங் இரட்டையர்கள் கொள்ளைக் கூட்டம் ஒன்றிற்கு உதவியாக கீழ்த்தரமான செயலுதவி புரிந்து கொண்டிருந்தார்கள். நாட்டுப்புறத்தில் உள்ள சிலரைப் பிடித்து வந்து சிறை செய்து பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இருவரும் கொள்ளைக்காரர்கட்கும் விவசாயிகளுக்குமிடையே பேச்சு நடத்துபவர்கள் போல் நடித்து பணம் தட்டுவார்கள். மக்கள் படை தோன்றியபின் இத்தகைய கொள்ளைக் கூட்டங்களை ஒழித்துக் கட்டியது. எனவே இருவரும் லியு பள்ளத்தாக்கிற்குத் திரும்பி விட்டனர்.

அப்பள்ளத்தாக்கு வாசிகள் இயல்பாகவே சங்கோஜிகள் கலகம் தோன்றிப் பல திங்கள் கழிந்து பலரும் மாண்ட பின்னரே ஒருசிலர் துணிந்து வந்து மற்றவர்களுக்காகப் பேசத் தொடங்கினார்கள். மற்ற பெரிய ஊர்களிலெல்லாம் ஊராட்சி மன்றங்கள், நாட்டு விடுதலைக் குழுக்கள், படை அமைப்புகள் போன்றவற்றை அமைத்திருந்தனர். ஆனால் லியு பள்ளத்தாக்கில் அப்படி ஒன்றும் இருக்கவில்லை. இங்கு ஒருவரும் ஊர்ப்பணியாளராக இருக்க விரும்பவில்லை. மாவட்ட அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஊர்த்தலைவர் மட்டுமே இருந்தார். சில காலத்திற்குப் பின் மாவட்ட அரசாங்கம் லியு பள்ளத்தாக்கிற்கு ஓர் ஊழியரை அனுப்பி ஊர்ப் பணிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கச் செய்தது. வாங்குகள் இருவரும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பாகக் கொண்டனர். ஊரர்வர்களும் இப்பதவிகளை தங்கள் ஊரில் ஏற்பதற்கு முன்வந்தார்களே என்ற நிலையில சிங்;வாங்கை உள்@ர் படைக்குழுவின் தலைவனாகவும் ஜின்வாங்கை உள்@ர் அரசாங்கப் பேராளனாகவும் ;தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜின்வாங்கின் மனைவி கூட பெண்கள் தேசிய விடுதலைக்குழுவின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்ட்டாள். மற்றப் பதவிகளுக்கு அங்கு வந்திருந்த வயதானவர்களை எண்ணிக்கையாக சேர்த்துக் கொண்டனர். ஆயினும், இளைஞன் முன்னணிக்கு தலைவனாக ஓர் இளைஞன் வேண்டுமே! எர்கையின் கவர்ச்சித் தோற்றமும், நடையும் சிங்வாங்கினை கவர்ந்ததால் அந்த நேரத்திற்கு ஏற்றாற் போல் நியமிக்கப்பட்டான். பையனின் தந்தையான இரண்டாம் கொங்மிங்கிற்கு பிடிக்காவிட்டாலும் ஜிங்வாங் போன்றவர்களை எதிர்க்கத் துணிவில்லாததால் ஒத்துக் கொள்ள நேர்ந்தது. எனவே வேட்பாளர்கள் எளிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஊர்த் தலைவர் பள்ளத்தாக்குப் பகுதியினராக இல்லாததால் உள்@ர் நிiமையை அவர் உணர்ந்திருக்கவில்லை. நாட்கள் கழிந்ததும் ஜின்வாங்கும் சுங்வாங்கும் எப்போதும் போலில்லாது அதிகாரம் செலுத்த தொடங்கினார்கள். ஊர்த்தலைவரை நன்றாக ஏமாற்ற முடிந்ததால் ஊரார்களை தங்கள் கடடளைப்படி நடக்கச் செய்தார்கள். ஊரின் ஒரு சில ஊழியர்கள் சில ஆண்டுகளில் மாற்றப்பட்டாலும் இரு வாங்குகளும் பதவியில் நன்றாய் ஒட்டிக் கொண்டார்கள். ஆனால் மக்களோ அவர்களை நஞ்சென வெறுத்தனர். எனினும் ஒருவருக்காவது அவர்களைத் எதிர்க்கும் திராணி இல்லை. இந்தச் செல்வாக்குமிக்க வாங்குகளுடன் அவர்கள் பகைத்துக் கொள்ள துணியவில்லை.


5

சியாவ் எர்கை (இளைய எர்கை) இரண்டாம் கொங்மிங்கின் இரண்டாவது மகன். எதிரிகளின் மீது நடாத்திய தாக்குதலில் இரண்டு எதிரிப்படை வீரர்களை தீர்த்துக் கட்டியிருக்கின்றான். குறி பார்த்து சுடுவதில் தீரன் என்ற விருதினையும் பெற்றிருக்கிறான். அவனது கவர்ச்சி தோற்றம் சுற்று வட்டாரத்தில் பிரசித்தம் வசந்த உற்சவ காலங்களில் நடைபெறும் காலங்களில் இவன் நடிக்கும் பொது இவன் மீது எல்லா ஊர்ப் பெண்களின் கண்ணோட்டம் விழும்.

எர்கை பள்ளி சென்றதில்லை. அவனுக்கு ஆறு வயது கிட்டியதும் தந்தை ஜோதிட அறிவைப் புகட்டி அதன் மூலம் எழுத்தறிவித்தான் ஒழிய பழம் நூல்களை கற்றக் கொடுக்கவில்லை. அவன் அழகு நிறைந்த குழந்தையாக இருந்ததால் மூத்தவர்கள் கேலி செய்து வேடிக்கை காட்டுவர். "விதைப்புக்குரிய நாள் இதுவல்ல" என்ற கேலிப் பேச்சு தோன்றி பின்னர் இரண்டாம் கோங்மிங்கை அவன் மனைவியும் மூத்த மகனும் குறைகூறினர். ஊரினர்களும் கிண்டல் செய்தனர். அப்போது எர்கைக்கு வயத பதின்மூன்று ஆயினும் ஊர்ப் பெரியவர்கள் அவன் குழந்iதாக மதித்து கேலி பேசி களித்தனர். அவர்கள் எர்கை வீட்டுக்கு வரும்போதெல்லாம் பெரியவர்களை கிண்டல் செய்யும் நோக்கி;ல் சிறுவன் எர்கையை நோக்கி "என்ன பையா இன்று விதைப்புக்கு நல்ல நாளில்லையா?" என்று கேட்டு வைப்பார்கள். இவன் வயதை ஒத்த சிறுவர்களும் சண்டை சச்சரவுகளில் அவனுடன் தமக்குத் தோல்வி கண்டால் எர்கையைப் புண்படுத்துவதற்காக அவர்களும் இங்ஙனம் கூறிக் கிண்டல் புரிவார்கள். அவர்கள் வெறுமனே 'விதைப்புக்கேற்ற நாள் இதுவல்ல' என்று கூச்சல் போடுவதொடு சரி. இந்தக் கிண்டல்கள் இளம் எர்கையை நோகச் செய்யும். திங்கள்கள் கணக்கில் அவன் அப்பக்கம் எட்டிப் பார்பதே இல்லை. எனவே தாயும் மகனும் எதிர்காலத்தில் இத்தொழிலை ஏற்கக் கூடாது என முடிவு செய்தனர்.

சிறுவன் எர்கையும் சிறுமி சின்னும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே ஆழ்ந்த நட்புடன் பழகினர். அவனும் தனது பதினேழாம் வயதில் நீண்ட பனிக்கால மாலை வேளைகளில் மூன்றாம் தேவதைத் தோழி வீட்டில் மற்ற விருந்தினர்களுடன் தங்கி இருந்ததுண்டு. சின்னின் மீது அவனுக்கு எழுந்த இயல்பான பாசத்தின் காரணமாக அவளை ஒரு நாளாவது பார்க்காவிடில் நிம்மதியிராது. ஊரிலுள்ள சிலர் இவ்விளைய சோடிககு மணமுடித்து வைக்கத் தரகு வேலை செய்யவும் இசைந்தனர். எனினும் இரண்டாம் கொங்மிங் மூன்று காரணங்களினால் இச்சம்பந்தத்தை விரும்பவில்லை. முதலாவது காரணம் எர்கையின் ஜாதகத்தில் "உலோகம்" உடைத்தாக இருந்தது. ஆனால் சின்னினதோ "தீ" யைக் கொண்டிருந்தது. எனவே, தீ உலோகத்தை உருக்கிவிடும் தன்மையுடையது. இரண்டாவது காரணம் சின் பத்தாம் திங்களில் பிறந்தவன், அது பொதுவாகவே அதிர்ஷ்டக் குறைவான மாதமாகக் கருதப்பட்டது, மூன்றாவதாக மூன்றாம் தேவதைத் தோழியின் மீதுள்ள அவப்பெயர். இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் மற்றைய பகுதியிலிருந்து அகதிகள் ஊரில் வந்திருந்தனர். அவர்களுள் லாவ் லீ என்பான் தனது எட்டு அல்லது ஒன்பது வயது நிறைந்த தன் மகளை விரும்பும் எவருக்கும் விற்க இசைந்தான். இரண்டாம் கொங்மிங்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினான். அப் பெண்ணின் கோள்களைக் கணித்து "இவ்விருவருக்கும் நல்ல பொருத்தம். திருமணம் தீர்க்கமாய் முடியக்கூடிய நிமித்தங்கள் உள்ளன. ஆயிரங்கல் தொலைவுக்கும் அப்பால் வசித்தாலும் இருவருக்கும் முடிச்சு போட்டிருக்கிறது." எனக்கூறி அச்சிறுமியைத் தன் மகனின் எதிர்காலத் துணைவியாக்குவதற்காக அழைத்துச் சென்றான்.

இரண்டாம் கொங்மிங் தன் இளைய மகனுக்குப் பொருத்தமான பெண் என அவன் எண்ணினாலும் மகனோ அதனை ஏற்கவில்லை. இது குறித்துத் தந்தையும் மகனும் பல நாட்கள் சர்சை செய்தனர். இருப்பினும் தந்தை பிடிவாதமாகவே இருந்தான். முடிவி;ல் இளைஞன் எர்கை நேராகவே "உங்களுக்குத் தேவையானால் நீங்கள் அவளை அழைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எனக்கும் அவளுக்கும் எவ்வித சம்பந்தமும் ஏற்படுவதற்கில்லை" என்று மறுத்து விட்டான். முடிவில் அந்தப் பெண் அவர்கள் வீட்டில் தங்கினாள். இருப்பினும் அவ்வீட்டில் நிலை என்ன என்பது நிர்ணயிக்கப்படவில்லை.

6

சியாங்சின் தன்னிச்சையை மறுத்ததிலிருந்து ஜின்வாங் அவள் மீது ஆத்தரங்கொண்டு பழிவாங்கக் காத்திருந்தான். ஒரு சமயம் ஊர் ஊழியர் கூட்டிய படைக்குழு கூட்டத்திற்கு எர்கைக்கு மலோரியாக் காய்ச்சல் கண்டிருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. அப்பொழுது ஜின்வாங் படைக் குழுவின் தலைவனாக இருந்த தன் உறவினனான சிங்வாங்கிடம் எர்கை ஏமாற்றுகிறான். அந்த அயோக்கியப் பயல் சின்குட்டியுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பான். அவனைப் பழிவாங்குவதற்கு இது நல் வாயப்பு" என்று கூறினான். சிங்வாங்கும் சியாவ்சின் மீது குரோதம் கொண்டிருந்ததால் அவனும் இந்தச் சதிக்கு உடன்பட்டான். தவிரவும் ஜின்வாங்கின் மனைவி பெண்கள் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவி என்ற முறையில் கூட்டம்கூட்டி சிங்கின் மீதும் நடவடிக்கை எடுக்கத் தூண்டினான். ஜின்வாங் இப்பெண் மீது கண்ணோட்டம் விட்டிருந்ததை உணர்ந்திருந்த அவன் மனைவி சின்னை நஞ்சென வெறுத்திருந்தாள். எனவே இந்த யோசனை அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தையல் பணிகளைக்கூட அப்படியே போட்டுவிட்டு இம் முயற்சியில் இறங்கினாள்.

எனவே, மறுநாள் இரண்டு கூட்டங்கள் ஊரில் நடைபெற்றன. ஒன்று எர்கை மீது படைக்குழு கொணர்ந்த குற்றச்சாட்டு. மற்றையது பெண்கள் தேசிய விடுதலை இயக்கத்தினரால் சின் மீது கொணர்ந்த முறையீடு.

தான் உண்மையி;ல் எவ்விதக் குற்றமும் புரியாததனால் இயல்பாகவே எர்கை குற்றச்சாட்டுக்களை மறுத்தான். அத்துடன் வீண் பொய்க் குற்றச்சாட்டு எனவும் கூறினான். சிங்வாங் எர்கையைக் கயிறறினால் கட்டிப் பிணைத்து கிராம அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படி தன் ஆட்களிடம் உத்தரவு கொடுத்தான். நல்லவேளை ஊர்ததலைவன் தன் தொழிலைச் சரியான வழிமுறைகளில் செய்யும் விதிகளை அறிந்திருந்தவனாகையால் சிங்வாங் செயலைக் கண்டித்தான்.

"இளைஞன் எர்கை உண்மையில் மலேரியாக் காய்சலினால் தான் பாதிக்கப்பட்டிருந்தான். அது வெறும் சாட்டல்ல. காதல் புரிவதில் எத்தகைய தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவனைக் கட்டிப் போடுவதற்கு என்ன காரணம் சொல்!"

ஆனால் சிங்வாங்கோ "அவனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணை நிச்சயித்திருக்கிறார்களே!" என்று வற்புறுத்தினான்.

"இளைஞன் எர்கை அவன் தந்தை நிச்சயித்த பெண்ணை அவன் விரும்பவி;ல்லை என்பதை ஊரார்கள் அறிவார்கள்," என்று ஊர்த்தலைவர் உடனே பதிலிறுத்தினார். "அவனுக்கு மறுக்கும் உரிமை உண்டு. தவிரவும் அந்தப் பெண்ணுக்கு என்ன பத்து வயதைக் கிட்டியிருப்பாள். இம்மாதிரி விஷயங்களை உணராத வயது. ஒருக்கால் அவளும் பெரியவளாக வளர்ந்தபின் அவளுக்குக்கூடப் பிடிக்காமற் போகலாம். எனவே எர்கைக்கு விருப்பமான பெண்ணைக் காதலிக்கும் உரிமை உண்டு. யாரும் இதற்குக் குறுக்கே நிற்க முடியாது."

சிங்வாங்கினால் ஒன்றும் கூற முடியவில்லை. எனவே எர்கை அவன் மீது பதிற்குற்றம் சாட்டினான் "தகுந்த காரணமின்றி மக்களைக் கட்டி வைப்பது சட்டத்துக்குப் புறம்பி;ல்லையா" ஊர்த் தலைவர் பாடும் பெரு; சங்கடமாகப் போய் விட்டது. இவர்கள் இருவர்களுக்குமிடையே அமைதி நிலை நாட்டப் பெரும் பாடாயிற்று. பின்னர் எர்கையை விடுதலைல செய்தார்.

சிங்வாங், கிராம அரச அலுவலகத்தினின்னு வெளியேறுவதற்கு முன்னர் சின்னும் வந்து சேர்ந்தாள். பெண்கள் தேசிய விடுதலை இயக்கத்தினர் இழுத்த வர அவள் வாயிற்படி ஏறுவதற்கு முன்னரே உரக்கக் கூறினாள்.

"கிராமத் தலைவர் தோழரே, குற்றம் சாட்டுவதற்குச் சரியான சான்றுகள் இருக்க வேண்டும். ஒருத்தி, பெண்கள் அமைப்பின் தலைவி என்பதற்காகத் தான் விரும்பியபடி செயல்புரிய முடியுமா?"

ஜின் வாங்கின் மனைவியைக் குறித்து சின் குற்றம் சாட்டினமை பற்றி சிங்வாங் அச்சமடைந்தான். இதனால் எல்லாத் தகவலுமே அமபலமாகித் தன்னை தொல்லைக்குள் மாட்டி வைத்துவிடும் என அஞ்சினான். எனவே அவன் மெதுவாக வெளியே நடையைக் கட்டினான். ஊர்த்தலைவர் சிறிது நேரம் விசாரணை நடத்திய பின்னர் இரு பெண்களுக்குமிடையே தோன்றிய வாக்கு வாதத்தைத் தீர்க்கப் பல நேரம் கழிந்தது.

7

இந்த இரண்டு கூட்டங்களும் நடந்த பின்னர் தங்கள் உறவை மூடி மறைத்து இருப்பதி; பயனில்லை என இருவருமே கருதினார்கள். எர்கைக்கும் தான் விரும்பிய நங்கையைக் காதலிக்கும் உரிமை இருக்கறது என்பதை உணர்ந்தான். இவரும் கூடிச் சிந்தித்து அடுத்து புரிய வேண்டிய செயல் முறைகளைப் பற்றி யோசித்தனர்.

மூன்றாம் தேவதைத் தோழிக்கு கவலை தோன்றியது. சின் தன் சொந்த மகளாக இருப்பினும் இருவருக்கும் சில ஆண்டுகளாகவே ஒத்துப் போவதில்லை என்பதை உணர்ந்தாள். மூன்றாம் தேவதைத் தோழிக்கு இளைஞர்கள் மீது கண். ஆனாலல் அவர்களோ இவளைச் சட்டை செய்யாது அவளது மகள் சின் மீது கண்ணோட்டம் விட்டனர். மூன்றாம் தேவதைத தோழி இளைஞன் எர்கையைப் புதிய இனிய கனியாகக் கருதினாள். தன் மகள் காரணமாக அவனை ருசிக்க முடியாமற் போகிறதே என்ற ஆத்திம். தன் மகளுக்கு ஒரு கணவனைப் பிடித்து அனுப்பி விட்டால் தான் அனுபவிக்கலாம் என எண்ணினாள். ஆனால் தாயின் நடத்தை காரணமாக யாரும் பெண்ணெடுக்கத் தயங்கினார்கள். இந்த கூட்டத்திற்குப் பின் எர்கை தன் பெற்றோர் சம்மதமின்றி சின்னை மணக்கவிருக்கிறான் என்ற வதந்தி பரவத் தொடங்கியது. அப்படி நடந்து விட்டால் தான் நினைத்தபடி இளைஞன் எர்கையிடம் சல்லாபிக்க, முடியாதே என உணர்ந்தாள், என்ன அனியாயம்! எனவே தான் சந்தித்தவர்களிடமெல்லாம் சின்னுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கும்படி கேட்டுக் கொண்டாள்.

"பட்டாளத்திற்கு ஆள் திரட்ட அறிவித்தால் பட்டினியால் வாடுபவர்கள் தானே வலிய வந்து படையி; சேர்வார்கள்" என்பது நாட்டில் வழங்கும் மொழி.அதே போல பணக்காரத் தாரமிழந்த வூ என்பான் தான் சின்னை மணந்து கொள்வதாக முன் வந்தான். அவன் சின்னை ஊர்த்திருவிழாச் சந்தையில் கண்டிருக்கிறான். இளம் பெண்ணை மனைவியாக்க ஆசை கொண்டான். மூன்றாந் தேவதைத் தோழி இது ஒரு வரப்பிரசாதம் எனக் கருதினாள். தோழி இது ஒரு வரப்பிரசாதம் எனக் கருதினாள். கல்யாணத் தரகன் வந்த முதல் சந்திப்பின் ஓரிரண்டு நாட்களிலேயே தன் மகளுக்கு நிச்சயம் செய்து விட்டாள். தன் நெஞ்சினின்று ஒரு சுமையே நீங்கியது போல எண்ணலானாள்.

தனக்கும் எர்கைக்கும் முடிவு பண்ணிக் கொண்டதால் தன் தாய் பேச்சைக் கேட்க மறுத்தாள். நிச்சயதார்த்தப் பரிசுகள் வந்திறங்கியதும் இருவருக்கிடையே பெரும் சச்சரவே தோன்றியது. சின் நகைகள், பட்டு செட்டின் துணிகளைத் தரையில் தூக்கி எறிந்தாள். கல்யாணத் தரகன் ஓடியே போனான். அவன் சென்றதும் "இவை எனக்கு வேண்டாம் இந்தக் கண்ணராவிகளை ஏற்பவர்கள் வேண்டுமென்றால் அந்த ஆளை மணந்து கொள்ளட்டும் என்றாள்.

இவையெல்லாம் மூன்றாந் தேவதைத் தோழியை உலுக்கி விட்டன. படுக்கையில் பல மணி நேரம் படுத்திருந்தாள். பிறகு இரவு உணவு உண்ட பின் கொட்டாவி விட்டவாறு மந்திரங்களை முணுமுணுத்தாள். தேவதை தன் மீது மீண்டும் சஞ்சரிப்பதாகவும் கூறினான் முதலாவதாகத் தன் கணவன் தன் குடும்பத்தைச் சரிவர நடத்தாததற்காகச் கண்டித்ததுடன் சின்னிற்கும் திரு. வூவிற்கும் அவர்கள் பிறப்பதற்கு முன்னரே முடிச்சிருப்பதாகவும் கூறினான். "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன" என முணுமுணுத்தாள். "மேலிடத்து முடிவை யார் மீறுகின்றார்களோ அவர்கள் தங்களையே அழித்துக் கொள்வாhகள்...." அவள் கணவன் மண்டியிட்டு அமர்ந்து நடுங்கியவாறு அச்சத்துடன் தேவதையைக் கருணை காட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். ஆனால் தேவதையோ சின்னை நன்றாகப் புடைத்துப் புத்தி புகட்டும்படி கூறியது. இதனைக் கேள்விபபட்ட சின் தன் தாயின் பொய் வேஷத்தைக் கலைப்பது கடினமான செயல் என்பதை உணர்ந்தாள். அவள் தாய் உளறிக் கொட்டிக் கொண்டிருக்க அவள் வீட்டை விட்டு நகர்ந்தாள்.

ஊரின் மறு கோடியை நோக்கி சின் நடந்தாள். எர்கையும் பாதித் தொலையில் சந்தித்துக் கொண்டார்கள். இருவரும் கைகோர்த்தவாறு தனியான இடத்திற்குச் சென்று மூன்றாந் தேவதைத் தோழி விவகாரத்தை எப்படித் தீர்ப்பது என்பது குறித்துப் பேசினார்கள்.

8

சியாவ்சின் தன் தாய் வூவைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்துவதை எர்கையிடம் விரிவாக எடுத்துக் கூறினாள். தெய்வ அருள் உற்றதாக அவள் நடித்த பொழுது எவ்விதத் ஓதினாள் என்பதையும் எடுத்துக் கூறினாள்.

"அவர்களைக் குறித்து நாம் மண்டையை அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அரசாங்கக் குழுவின் மாவட்டத் தோழர்கள் எந்த ஒரு சோடியினரும் தமக்குள் இணக்கமிருந்தால் திருமணச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் மூன்றாமவர் தலையிட உரிமையில்லை எனக் கூறியுள்ளார்கள்" என்று எர்கை அவளிடம் கூறினான்.

அச்சமயம் தங்களை நோக்கிக் காலடி ஓசைகள் நெருங்கி வருவதைக் கேட்டனர். எர்கை எட்டிப் பார்த்த பொழுது நான்கைந்து பேர்வழிகள் வருவதையும் ஒருவன்.

"இருவரையும் பிடியுங்கள், விடாதீர்கள்!" என்று கூச்சலிடுவதையும் கேட்டனர்.

இது ஜின்வாங்கின் குரல் என்பதை உணர்ந்தனர். எர்கை ஆத்திரத்துடன் "யாரைப் பிடிப்பது? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்" என்று பதிலுக்கு உரத்துக் கூறினான்.

சிங்வாங்கும் வழக்கம் போல் அங்கிருந்தான். அவனும் "அவனைத் தப்பிக்க விடாதீர்கள்! அவன் என்ன தப்புச் செய்தான் என்பதை நாம் கவனிப்போம்! அவன் என்ன தப்பு செய்தான் என்பதை நாம் கவனிப்போம்! சில நாட்களாகவே இப்பயல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான்" என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.

"நீங்கள் எங்கு அழைத்துப் போகின்றீர்களோ நான் அங்கெல்லாம் வரத் தயார்" என்றான் எர்கை. "எல்லைப்புற அரசியட் நீங்கள் அழைத்துப் போனாலும் உங்களால் என் மீது எவ்வித குற்றமும் சுமத்த முடியாது. போங்கள்!"

"போவதா, ஒகோ! அப்படி நீ போக முடியாது" என்றான் சிங்வாங். "அவனை நன்றாய் கட்டுங்கள்"

எர்கை எதிர்த்து நின்றான், எனினும் அவர்கள் எண்ணிக்கையி; அதிகம்பேர் இருந்ததால் அவனைப் புடைத்துக் கட்டிப் போட்டார்கள்.

'அந்தக் குட்டியையும் விட்டு விடாதே' என்றான் சிங்வாங். "அவளையும் கட்டுங்கள்! அவள் ஒரு முறை குற்றச் சாட்டுக்கள் சாட்சிகள் மூலம் என்பிக்கப்பட வேண்டும் என்று கூறியவளல்லவா? இதோ இருவரும் ஒன்றாக இருப்பதை நாம் கண்ணால் கண்டு விட்டோம்" இருவரும் கயிற்றினால் கட்டப்பட்டார்கள்.

சுற்றுப் பக்கத்தில் இருந்தவர்கள் இன்னும் எவரும் படுக்கச் செல்லவில்லை. எனவே இரைச்சல் கேட்டதும் என்ன நடந்தது என்று பார்க்க வெளியே வந்தனர். ஒளிப்பந்தங்களின் வெளிச்சத்தில் கவனித்த பொழுது இவ்விளஞ் சோடி கயிறுகளினால் கட்டப்பட்டிருப்பதைக் கண்ணுற்று நடப்பைப் புரிந்து கொண்டார்கள். இரண்டாம் கொங்மிங்கும் வந்திருந்தான். தன் மகன் கட்டப்பட்டிருப்பதைக் கண்ணுற்று சிங்வாங் முன் மண்டியிட்டுக் கெஞ்சியவாறு,

"சிங்வாங், நம் குடும்பத்தினர்களிடையே எதுவும் பகைமை இருந்ததில்லையே எனக்காகவாவது கொஞ்சம் இரக்கம் காட்டு..."

"இவ்விஷயம் எங்கள் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டது. மேலிடத்திற்கு அவனை நாங்கள் அனுப்பி வைக்கிறோம்" என்றான் சிங்வாங்.

"அப்பா, கவலைப்படாதீர்கள் இவன் என்னை எங்கு அனுப்பி வைத்தாலும் எனக்குக் கவலையில்லை. நான் எதுவும் குற்றம் புரிந்திருந்தால் தானே பயப்பட இருக்கிறது. நான் எந்தக் குற்றமும் செய்ததில்லை. இவனுக்கும் பயப்பட என்ன இருக்கிறது என்றான் எர்கை.

"என்ன துணிச்சல் உனக்கு. கடைசி வரை இப்படி விரைப்பாய இருப்பாயா? அதையும் பார்ப்போமே" என்று சிங்வாங் படைவீரர்கள் மூவரிடம் "இவர்களை இழுத்துச் செல்லுங்கள்" என்றான்.

அவர்களில் ஒரு படைவீரன் "எங்கு கொண்டு செல்வது? கிராமத்து அரசுக்கா?" என்று கேட்டான்.

"அங்கு அழைத்துச் செல்வதில் பலனில்லை" என்றான் சிங்வாங் "போனமுறை, அந்த ஊர்த்தலைவன் விடுதலை செய்துவிடவில்லையா? இம்முறை மாவட்டப் படைக்குழுவிடம் விசாரணைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்றான். இவ்வாறு சின்னும் எர்கையும் மாவட்டப் படைக்குழுவினரிடம் இழுத்துச் செல்லப்பட்டனர்.

9

இவ்விளஞ் சோடிக்காகப் பரிந்து பேச ஊரில் எவருக்கும் தென்பு இருக்கவில்லை. வாங்குகள் இருவரும் தலைமறைந்த பின்னரே கொங்மிங்கை வீட்டுக்குத் திரும்பிப் போகும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.

தலையை ஆட்டியவாறே கிழவன் "ஐயோ, இத்தகைய கேடுகாலம் நமக்கு வரும் என்று அப்பொழுதே எதிர்பார்த்தேன்! முந்தா நாள் காலை நான் வயல் வேலைக்குப் போகும் வழியில் ஓர் இளம் பெண் ஒப்பாரி வைத்துக் கொண்டு கழுதைமேல் சவாரி செய்து குன்றின் மேல் செ;வதைக் கண்ணுற்றேன். அது ஒரு துர் நிமித்தம் என்பதனை உணர்ந்தேன். இன்று காலை எங்கள் வீட்டுக் கூரையின் மேல் அமர்ந்த காக்கை பத்துப் பதினைந்து முறை கரைந்தது. ஜய அவரவர் விதியினின்று ஒருவர் கூட தப்பித்துக் கொள்ள முடியாது!"

இவ்வாறு உளறிய பின்னர் ஏதோ அhத்தமற்ற மந்திரங்களை பக்கத்திலுள்ளவர்கள் சகிக்காதவாறு முணுமுணுத்தான். அவனைச் சமாதானப்படுத்த அவர்கள் முயன்றபின் பிரிந்தார்கள்.

வீட்டிலிருந்த வளர்ப்புச் சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் தூங்கவே இல்லை. இரண்டாம் கொங்மிங் தலையைச் சொரிந்தவாறு மூன்று நாணயங்களை வைத்துக் குறி பார்த்தான். முகத்தில் பீதியுடன் கூறினான்.

"ஐயோ, எல்லாமே கெட்டதாகத்தான் அமைகிறது. இளைஞர் முன்னணியின் தலைவனாக எர்கை தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதே அதை ஏற்காதே என்று தலையிலடித்துக் கொண்டேன்."

அவன் மனைவி கையைப் பிசைந்தவாறு தரையைக் காலால் உதைத்து அழுதுகொண்டே

"ஓ ஆண்டவனே, இந்த மாதிரி இடுக்கியில் மாட்டிக் கொள்வான் என்று யார் கண்டார்கள்?" என்றாள்.

அவர்கள் மூத்த மகன் தாகெய் அவர்களுக்கு ஆறுதல் கூற முயன்றான். "வீணாய் ஏன் அலட்டிக் கொள்கிர்கள்? நடந்தது என்னமோ நடந்து விட்டது! இது என்ன கொலைக் குற்றமா? எர்கை மீது ஒன்றும் பெரிய குற்றம் சுமத்த முடியாது. மாவட்டக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதால் நான் அங்கு ஓர் ஓட்டம் போய் அவன் வழக்கு எந்த மட்டில் இருக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறியவாறு விளக்கைப் பற்றவைத்து விட்டு சென்றான்.

தாகெய் சென்றதும் கொங்மிங் தான் அடைத்த ஜோசியத்தை மீண்டும் கணித்தான். திடீரென தூரத்தே ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. அது நெருங்கி நெருங்கி வந்தது. சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. அந்தப் பெண் யார் என்று அவன் அடையாளங்கண்டு கொள்வதற்கு முன்னால் வந்தவள் அவனை இறுக்கிப் பிடித்தவாறு அழத் தொடங்கினாள்.

"லியுசூடே என் மகளை என்னிடம் அனுப்பு. உன் மகள் அவளை எங்கு ஒளித்து வைத்திருக்கிறான்? என்னிடம் அனுப்பு..."

இவ்வேளையில் கொங்மிங்கின் மனைவியும் ஆத்திரத்துடன் இருந்தாள். உள் நுழைந்தவள் மூன்றாந் தேவதைத் தோழி என உணர்ந்ததும் கட்டிலிலிருந்து குதித்து இறங்கினாள். தன் ஆத்திரத்தைத் தீர்க்க இவளுக்காகக் காத்திருந்தவள் போல் சின்னின் தாயை இறுக்கிப் பிடித்தவாறு கூச்சலிட்டாள்.

"நல்ல நேரம் பார்த்து வந்தாய். 'உன்னைத் தேடிப் பொகும் சிரமம் இல்லாது போயிற்று. நீயும் உன் மகளும் சேர்ந்து என் மகனை வலைக்குள் போட்டுவிட்டதன்னில் இங்கு நேரே வர என்ன துணிச்சல்', வா, மாவட்ட அரசிடம் போய் வழக்கைத் தீர்ப்போம்"

இரு பெண்களும் கை கலந்தனர். இரண்டாம் குங்மிங்கும் இராசிச் சக்கரம் போடுவதை விடுத்து இவர்களை விலக்கினான். கொங்மிங்ன் மனைவி தன்னைப் பழிவாங்கத் துணிந்திருக்கிறாள் என்பதை உணர்ந்த மூன்றாம் தேவதைத் தோழியும் முற்றும் பயந்தே போனாள். தப்பிக்க சந்தர்ப்பம் வந்ததும் வீட்டை விட்டு ஓடி விட்டாள். கொங்மிங்கின் மனைவி அவளைத் துரத்திச் சென்றாள். ஆயினும் அவள் கணவன் அவளைத் தடுத்து இழுத்து வந்தான். மூன்றாந் தேவதைத் தோழி ஓடி மறைந்துங் கூட இவள் வசவு பாடுவதை விடவில்லை.

10

இரவு முழுவதும் இரண்டாம் கொங்மிங்கிற்கும் தூக்கமே கொள்ளவில்லை. அடிக்கடி புரண்டவாறு 'தாகெய் இன்னும் ஏன் திரும்பி வரவில்லை? ஏன் அவன் இன்னும் வரவில்லை" என்று புலம்பிக் கொண்டிருந்தான். விடிவதற்கு முன்பே மாவட்ட அரசாங்கத்தினரிடம் சென்றான். பாதித் தொலைவில் தாகெயும் மூன்று படை வீரர்களும் திரும்பி வந்து கொண்டிருப்பதைக் கண்ணுற்றான். அவர்களுடன் மாவட்ட அரசின் துணையாளரும் ஒரு சேவகனும் இருந்தனர். தொலைவிலிருந்தே தன் மகன் தகெயை நோக்கி உரக்கக் கூறினான்.

"தாகெய் என்ன நடந்தது? எதுவும் விபாPதம் இல்லையே?"

"ஒன்றும் அப்படிக்கில்லை. கவலைப் படாதீர்கள்!"

மாவட்ட அரசின் துணையாளரும் மூன்று படை வீரர்களும் ஒன்று சேர்ந்தனர். தகெய் தன் தந்தையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். பின்னர்

"உங்களையும் மூன்றாம் தேவதைத் தோழியையும் மாவட்ட அரசினர் அழைத்து வரும்படிக் கட்டளையிட்டிருக்கிறார்கள். விரைவாய்ச் சென்று காண்பது நல்லது ஒன்றும் பயப்படுவதற்கில்லை! எர்கையும் சின்னும் வந்து சேர்ந்தவுடனேயே விடுதலை செய்யப்பட்டார்கள். சிங்வாங்கும், ஜின்வாங்கும் எத்தகைய கெட்டவர்கள் என்பதை சிறிது காலமாகவே அரசு அறிந்திருந்தது. எனவே அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது. நமமுடன் வந்துள்ள துணை அதிகாரி ஊரி; அவர்கள் புரிந்த அடாத செயல்களை விசாரித்துத் தகவல் சேர்த்து வருகிறார். சென்ற இரவு நான் மாவட்ட அரசாங்கத்திடம் சென்ற வேளை இரு வாங்குகளையும் குறுக்கு விசாரணை செய்து முடித்திருந்தார்கள். மாவட்ட அரசும் எர்கையும் சின்னும் மணந்து கொள்வதற்கு அனுமதி தந்துள்ளது."

அவர்கள் சட்டத்தை மீறவில்லை என்பதெல்லாம் சரியே. ஆனால் அவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடியாது! அவர்களுக்கு ஜாதகப் பொருத்தமி;ல்லை! என்னை ஏன் அழைத்திருக்கிறார்கள் என்பதை அறிவாயா?

"தெரியவில்லையே" என்றான் தகெய் "அப்படி ஒன்றும் பாரதூராக இருக்காது. உடனே போங்கள். நான் வீட்டிற்குச் சென்று அம்hவிடம் தகவல் கூறுகிறேன்"

சேவகன் இரண்டாம் கொங்மிங்கை நோக்கி "உன்னை அழைத்திருப்பதைத் தெரிந்து கொண்டாயல்லவா. நீ அங்கு செல். நான் மூன்றாந் தேவதைத் தோழியிடம் அறிவிக்கிறேன்" என்று கூறி தகெயுடன் சென்றான்.

மாவட்ட அரசு அலுவலகத்தில் இரண்டாம் கொங்மிங் சென்றதும் எர்கையும் சின்னும் ஒரு நீண்ட இருக்கையில் ஒன்று சேர அமர்ந்திருப்பதைக் கண்டான். ஆத்திரத்துடன் எர்கையைச் சுட்டிக் காட்டியவாறு சத்தம் போட்டான்.

"வம்புகாரப் பயலே உன்னைத் தான் விடுதலை செய்து விட்டார்களே, உடனே வீட்டிற்குப் போக வேண்டியது தானே! நான் உன்னால் பயந்து சாகிறேன்! அயோக்கியப் பயலே!"

மாவட்டத் தலைவர் "உனக்கென்ன வந்து விட்டது. இது என்ன ஆள்களைத் திட்டிக் கொட்டும் இடமா இது?" என்று கேட்டார்.

இரண்டாம் கொங்மிங்கோ அங்குள்ள நிலைமை உணர்ந்து வாளாதிருந்தான். பின்னர் மாவட்டத் தலைவர் கேள்வி கேட்கத் தொடங்கினார் "லியு சியுடே என்பது நீர் தானே?"
"ஆம்"
"உன் மகன் எர்கைக்கு ஒரு சிறு பெண்ணைத் தெரிந்தெடுத்திருக்கிறாயா?"
"ஆம்."
"அவளுக்கு வயது என்ன?"
"தற்போது அவளுக்கும் பன்னிரண்டாகிறது."

"ஒரு பெண் பதினைந்து வயதாவதற்கு முன் மணம் நிச்சயிக்க முடியாது. அவளை அவர்கள் பெற்றோர்களிடம் அனுப்பி விடு! எர்கை சின்னை மணமுடிக்கப் போகிறான்."

இந்தப் பெண்ணிற்குத் தந்தை மட்டுமே இருக்கின்றான். அவனும் ஓர் அகதி. இப்பொழுது அவன் எங்கிருக்கின்றானோ தெரியவில்லை" என்று பதில் கூறினான் இரண்டாம் கொங்மிங். "அவளை அனுப்ப வேறு இடமில்லை. பதிரனைந்து வயது வரை திருமணம் முடிக்கக் கூடாது என்பது அரசுக் கட்டளையாக இருக்கலாம். ஆனால் கிராமப் பகுதிகளி; பெண்கள் ஏழு எட்டு வயதாக இருக்கும் பொழுதே மணம் முடிக்கப் படுகிறார்கள். மதிப்பிற்குரியவரே கொஞ்சம் கருணை காட்டுங்கள். மேலும் கருணை காட்டுங்கள்...."

"சட்டப்படி செய்து கொள்ளப்படாத ஒப்பந்தங்களை சம்மந்தப்பட்ட ஒரு கட்சியினர் இணங்காவிட்டால் ரத்துச் செய்து விடலாம்" என்று மாவட்டத் தலைவர் கூறினார்.

"ஆனால் இந்த விஷயத்திலோ இரு பகுதியினரும ஒப்புதல் அளித்திக்கிறார்கள்" என்றான் கொங்மிங்.

மாவட்டத் தலைவர் எர்கையை நோக்கி "எர்காய், இதில் உனக்குச் சம்மதமா?" எனக் கேட்டார்.

"இல்லை" என எர்கை கூறினான்.

இரண்டாம் கொங்மிங் அடக்க முடியாக் கோபத்துடன் தன் களை நோக்கி பயமுறுத்தும் பாணியில் "ஓகோ, ஐயா தான் தீர்மானிக்கிறாரோ?" என்றான்.

மாவட்டத் தலைவர் கூறினார், "யார் மணம் செய்து கொள்ளப் போகிறவர்கள். நீரா, உனது மகனா? தாத்தா நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்நாட்களில் திருமணங்கள் திருமணம் முடிப்பவர்கள் இரு கட்சியினர் சம்மதத்துடன் தான் நடைபெறுகிறது. உங்களால் இதைத் தீர்மானிக்க முடியாது! நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்ணுக்கு வீடு வாசல் இல்லை என்றால் அவளை நீங்கள் நீங்கள் உங்கள் சொந்த மகளாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்!"

"அதில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. ஆனர் மேன்மை தங்கியவரே, அன்பு கூர்ந்து கருணை காட்டுங்கள். யுஃபுவின் மகளை அவன் மணக்க அனுமதிக்காதீர்கள்."

"இதோ பாருங்கள். அவற்றில் தலையிட உமக்கு உரிமையி;ல்லை."

"அன்பு கூர்ந்து கருணை காட்டுங்கள். மேலும் கருணை காட்டுங்கள். அவர்களுக்கு ஜாதகப் பொருத்தமில்லை. அவர்கள் மணம் புரிந்தால் வாழ்க்கை முழுதும் மகிழ்ச்சி இன்றி வாழ நேரும்." பின் கன் பக்கம் திரும்பி "எர்கை, சுத்த மடையனாக இருக்கிறாயே. உனது எதிர்கால வாழ்க்கைக்கே உலை வைத்துக் கொள்கிறாயே" என்றான்.

"தாத்தா, நீங்கள் தான் முட்டாள்தனமாய் நடந்து கொள்வதை நிறத்த வேண்டும். பத்தொன்பது வயதுப் பையனை பன்னிரண்டு வயதுப் பெண்ணைக் கட்டி வைக்க முனைந்தால் நீங்கள் தான் வாழ்க்கை முழுதும் வருந்த வேண்டி நேரிடும். உங்கள் நன்மைகருதி தான் கூறுகின்றேன். உங்கள் மகனும் சின்னும் கணவன் மனைவியாக விரும்பி விட்டார்கள் என்றால் உங்களுக்கு விருப்பமிருந்தாலும் இல்லாவிடினும் நடந்தேறும். அந்தச் சிறுமிக்கு இல்லாவிடினும் நடந்தேறும். அந்தச் சிறுமிக்கு வேறு போக்கிடமில்லாவிடில் உங்கள் மகளாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டாம் கொங்மிங் கொஞ்சுவதற்கு முன் செயலகத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டான்.

11

மூன்றாந் தேவதைத் தோழி இரண்டாம் கொங்மிங்கின் வீட்டை நாடிச் சென்ற இரண்டு சாரணங்கருதி. முதாவதாகத தான் வம்புக்கிழுத்தால் எப்படி பிறரை அச்சுறுத்த முடியும் என்பதைக் காட்டவும், இரண்டாவதாகத் தன் மகளின் போக்கினால் தனக்கேற்பட்ட ஏமாற்றத்தை மாற்றவுமே. சின் னைதானதில் அவளுக்கு நன்றாய் வேண்டும் என்று உள்@றத் திருப்தியே. எனவே கொங்மிங்கின் மனைவியிடம் சண்டையிட்ட பின்னர் நிம்மதியாக வீடு திரும்பி கட்டிலில் படுத்து நன்றாகத் தூங்கி மறுநாள் நேரங் கழித்தே எழுந்தாள். அவள் கணவன் யுஃபுவோ உண்மையில் தங்கள் மகள் குறித்து கவலையுற்றிருந்தான். மனைவியின் அனுமதியின்றி எதுவும் அவனால் செயல்பட முடியாததனாலும் அவளைத் தூக்கத்தினின்று எழுப்பத துணிவு இ;லாததனாலும் தானே காலை உணவுகளைத் தயாரிக்கத் தொடங்கினாள். காலை உணவு தயாராக இருக்கையில் மூன்றாந் தேவதைத் தோழி எழுந்து முகங்கழுவி தலைவாரிக் கொண்டிருந்தாள்.

"நம் சின்னிற்கு என்ன நடக்கிறது என்று நீ போய்ப் பார்க்கவி;;;ல்லையா?" என்று தயக்கத்துடன் யுஃபு கேட்டான்.

"எதற்காக தன் காரியத்தைத் தன்னால் சாதித்துக் கொள்ள முடியும் என்ற தலைக்கர்வம் பிடித்திருக்கிறாளே'

யுஃபுவுக்கு அதற்கு மேல் பேசத் தைரியமில்லை. பகலுணவைக் கணப்பில் வைத்து மூன்றாம் தேவதைத் தோழி குளித்து முழுகி வரும்வரைக் காத்திருந்தான்.

அவள் பாதி உணவு உட்கொண்டிருக்கும் நேரம் அரசு சேவகன் அழைப்பை விடுத்தான். அதற்கு சம்மதித்தவளாய் சாவதானாகப் பேசினாள். என் மகள் வளர்ந்த பிறகு அவளை நான் கட்டுப்படுத்தவே முடியாதிருக்கிறது. ஆமாம் நான் மாவட்டத் தலைவரை அவளுக்கு நல்ல பாடம் படிப்பிக்கும் படிக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்."

மூன்றாம் தேவதைத் தோழி தன் காலை உணவை முடித்து புதிய உடையை உடுத்தி, புதிய தலையணி கட்டி பூவேலை செய்த காலணிகளையும் பூக்கரை போட்ட காற்சட்டையை அணியலானாள். மீண்டும் ஒருமுறை முகத்திற்குப் பௌடரை அப்பியபின் தலைக்கு வெள்ளிக் குத்தூசிகளையும் வளைசீப்பையும் அணிந்தாள். பின்னர் யுஃபுவிடம் லாயத்திலிருந்து கழுதையைக் கொணரும்படிக் கூறினாள். பின்னர் இருவரும் மாவட்ட அரசாங்க அலுவலகம் சென்றனர். அவள் கழுதைமேல் சவாரி செய்ய அவனோ கழுதையை அதட்டி ஓட்டிப் பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தான்.

அவர்கள் அங்கு போய்ச் சேர்ந்ததும் மாவட்டத் தலைவரின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். உடனே அவள் அவர் முன் கீழே விழுந்து மண்டியிட்டு வணங்கியவாறு கூறினாள்.

"மேன்மை தங்கிய மாவட்டத் தலைவர் அவர்களே! நீங்கள் எத்தகைய முடிவை எடுத்தாலு; எனக்குச் சாதகமாகவே இருக்கும்" என்றாள்.

அச்சமயம் மாவட்டத் தலைவர் மேசையில் குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். தனக்கு முன்னால் தலையெல்லாம் வெள்ளி ஆபரணங்கள் பூண்டு மண்டியிட்டிருக்கும் பெண்ணைக் கண்டதும் சில நாட்களுக்கு முன்னர் தன் மாமியார் மீது புகார் செய்த இளம்பெண் என நினைத்தவராய்.

"உங்கள் மாமியாரின் ஆலோசகரான பெரியவர் இருக்கிறாரே அவரிடம் முறையிடலாமே" எனக் கூறினார்.

ஒன்றும் புரியாமல் அவள் விழித்தவாறு தலையைத் தூக்கி அவரை நோக்கினாள். தன் முன் ஒரு நடுத்தர வயதுள்ள பெண் முகம் முழுவதும் பௌடரை அப்பி நிற்பதைக் கண்ணுற்றுத் தான் புரிந்த தவறை உணர்ந்தார். பக்கத்திலிருந்த சேவகனும் உடன் "இவர் சின்னின் தாய்" என்று கூறினான்.

மாவட்டத் தலைவர் மீண்டும் ஒரு முறை கவனித்தபின் "நீ தான் சின்னின் தாயாரா? எழுந்திரு, இங்கு வந்து உன் மந்திர தந்திரங்களை அவிழ்த்து விடாதே. உன்னைப்பற்றிய எல்லாமே எனக்குத் தெரியும், எழுந்திரு" என்றார்.

அவள் எழுந்தாள்.

"உன் வயது என்ன?"

"நாற்பத்தைந்து" என்று பதிலளித்தாள்.

"உன்னையே நன்றாக அந்தக் கண்ணாடியில் நோக்கிய பின் உன்னைப் பார்த்தால் நாற்பத்தைந்து வயதுள்ள கௌரவமான பெண்போல் இருக்கிறாயா? என்பதை அறிந்து எனக்குச் சொல்!"

அச்சமயம் கதவின் வழியாக எட்டிப் பார்த்த பத்து வயதுச் சிறுமி இதைக் கேட்டுக் கொல்லென்று சிரித்து விட்டாள். உடன் சேவகன் அச்சிறுமியை வெளியி;ல் சென்று விளையாடும்படி விரட்டினான்.

"தெய்வங்களை அழைக்க உனக்குத் தெரியுமல்லவா?" என்று மாவட்டத் தலைவர் தெரிவித்தார்.

அவள் பதில் சொல்லத் துணியவில்லை. எனவே அவர் மற்றொரு கேள்வியைக் கேட்டார்.

"நீ உன் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை தேடி வைத்திருக்கிறாய் அல்லவா?"
"ஆம், அப்படித்தான்."
"அவரிடமிருந்து எவ்வளவு பணம் நீ பெற்றாய்?"
"மூவாயிரத்து ஐந்நூறு டாலர்கள்."
" வேறு என்ன?"
"சில அணிகலன்களும் துணிமணிகளும்."
"உன் மகளிடம் இது குறித்துக் கலந்தாலோசித்தாயா?"
"இல்லை"
"உன் மகளுக்கு இதில் சம்மதமா?"
"எனக்குத் தெரியாது"

"அவளை நான் அழைக்கிறேன் அவளிடமே நீ நேரே கேட்டுத் தெரிந்து கொள்" என்று கூறி சேவகனிடம் சின்னை அழைத்து வரும்படிக் கூறினார்.
வெளியிற்போய் விளையாடும்படி பணிக்கப்பட்ட அந்த பத்து வயதுச் சிறுமி, ஒரு மத்திய வயதுடைய ஒரு பெண் மாவட்ட அரச அலுவலகத்திற்கு வந்திருந்ததாகவும் அவளுக்கு வயதாகி இருந்தும் கூட முகமெல்லாம் பௌடரை அப்பிப் பூசிக் கொண்டிருப்பதாகவும் சகிக்க முடியாத பூவேலை மிக்க காலணிகளைத் தான் நாற்பத்தைந்து வயதையும் கடந்தவள் என்பதை மறந்து அணிந்து கொண்டிருந்ததாகவும செய்தியை பரப்பி விட்டாள். இத்தகைய ஒருத்தியை வேடிக்கை பார்க்க சுற்று வட்டாரத்திலுள்ள எல்லாப் பெண்மணிகளும் மாவட்ட அரசாங்கச் செயலகத்தில் கூடி விட்டனர். தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு.

"ஆமாம் நாற்பத்தைந்து வயதானவள் தான். பார்த்தால் தெரிகிறதே!"

"அவள் உடுத்தியுள்ள காற்சட்டைகளைப் பாருங்களேன்"

"காலணிகளுக்குப் பூவேலைகள் வேறே"

மாவட்ட அரச அலுவலகத்திற்குள்ளாகவே தன்னைப் பற்றிய கேளிச் சொற்களை மூன்றாம் தேவதைத் தோழி தன் காதுகளால் கேட்க நேர்ந்தது. இதற்கு முன்னெ;லாம் அவள் வெட்கமுற்றதில்லை. இன்றோ அவளுக்குத் தாழ முடியவில்லை. முகமெல்லாம் அசடு வழிந்தது முத்து முத்தாக வியர்வைகள் சொட்டின. அப்பொழுது சின் சேவகனால் அழைத்து வரப்பட்டாள். அவனும் எல்லோரும் கேட்கும்படியாக உரத்த குரலில் கூறினான்.

"நீங்களெல்லாம் எதற்காக உற்றுப் பார்க்கின்றீர்கள்? அவளும் ஒரு மனிதப் பிறவிதானே? இவளைப் போல் ஒருத்தியை நீங்கள் இதற்கு முன் பார்த்ததில்லையா? அன்பு கூர்ந்து வழிவிட்டு நில்லுங்கள்!"

கூடியிருந்த பெண்மணிகள் கொல்லென்று சிரித்தார்கள்.

அப்புறம் மாவட்டத் தலைவர் மூன்றாந் தேவதத் தோழியை நோக்கி

இதோ உன் மகள் இங்கு வந்து விட்டாள். அவளுக்கு விருப்பமா இல்லையா என்பதை நீயே நேரில் கேட்டுக்கொள்.

ஆனால் மூன்றாம் தெவதைத் தோழிக்கு மன்றத்தில் நின்ற மக்களின் கிண்டல் மொழிகளில் தான் கவனம் சென்றது. "நாற்பத்தைந்து வயது. பூப்போட்ட காலணி....." இவற்றால் அவளுக்கு வெட்கம் தோன்றவே முகத்தின் வியர்வையை அடிக்கடி துடைக்க நேர்ந்தது. ஒரு வார்த்தை கூடப் பேச மனம் வரவில்லை. மன்றத்தில் நின்ற மக்களும் பேச்சை மாற்றிக் கொண்டார்கள்.

"ஆம், இவள் தான் அவள் மகள். ஆனால் தாய் தன்னை நன்றாக அலங்காரம் செய்து கொள்ளும் கலையில் தேர்ந்திருக்கிறாள். இவள் தேவதைகளையும் வருவிப்பாளாமே!"

மூன்றாந் தேவதைத் தோழியைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அறிந்திருந்த ஒருத்தி "சோறு குழைந்து விடும்" கதையை அவிழ்ந்து விட்டாள். இவையெல்லாவற்றையும் காதிற் கேட்க இவள் அங்கிருந்த சுவரின் மீது தன் தலையை மொட்டி மாண்டு போனால் தேவலை என்று எண்ணத் தொடங்கினாள்.

"உன்னால் உன் மகளிடம் கேள்வி கேட்க முடியாவிட்டால், நானே உங்கள் சார்பில் கேட்கிறேன்!" என்று மாவட்டத் தலைவர் சத்தம் போட்டார். பின்னர் சின்னை நோக்கியவாறு "சின், உன் அம்மா உனக்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் மாப்பிள்ளையை நீ மணந்து கொள்ள விரும்புகிறாயா?" எனக் கேட்டார்.

"கண்டிப்பாய் முடியாது."

மாவட்டத் தலைவர் மீண்டும் மூன்றாம் தேவதைத் தோழியை நோக்கியவாறு "இதைக் கேட்டுக் கொண்டாயா?" எனக் கூறி தற்பொழுது இளவயதினர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் சட்டத்தினால் உரிமை உண்டு. மூன்றாம் தேவதைத் தோழி தான் வூவிடம் பெற்ற பொருள்களைத் திருப்பித் தந்து விட வேண்டும். தவிரவும் சின் எர்கையை மணந்து கொள்ள விட வேண்டும். அவர் கூறியபடி தான் நடகக இசைவதாக ஒப்புதல் தந்தாள்.

12

ஊரவர்கள் ஜினவாங்கும் சின்வாங்கும் மாவட்ட அரசாங்கத்தினால் கைது செய்யப் பட்டதையும், அவர்கள் அட்டூழியங்களை விசாரிக்க ஒரு துணையாளர் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கேள்வியுற்றதும் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அன்று மாலை ஊரிலுள்ள கோவிலில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. கிராமத் தலைவர் காரணத்தை விளக்கி வாங்குகள் புரிந்த சட்ட விரோதச் செயல்களை முன் வந்து சாட்சியமளிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். ஒருவர் கூட நிரம்ப நேரமாய் முன் வரவில்லை. தற்செயலாக வாங்குங்கள் மீது குற்றங்கள் ஒப்புவிக்கப்படாது விடுதலையடைந்து விட்டால் பழி தீர்த்து விடுவார்களே என்ற அச்சம். ஒரு பயந்தாங் கொள்ளிக் கிராமத்தான். "சகித்துக் கொண்டால் சமாதானம்" என்று எல்லோரிடமும் கிசுகிசுத்தான். கடைசியாக வாங்குகளால் துன்புறத்தப்பட்டிருந்த ஓர் இளைஞன் துணிந்து வாக்கு மூலம் தர முன் வந்தான். "இவ்வளவு நாள் பொறுமையுடன் நான் சகித்துக் கொண்டிருந்தது போதாதா? எவ்வளவு பொறுமையைக் கடைப்பிடித்தேனோ அவ்வளவிற்குத் துன்பப்படத்தான் நேர்ந்தது! நீங்களெல்லாம் பேசாவிட்டால் போகிறது, நான் சொல்கிறேன்"

ஜின்வாங் எங்ஙனம் கொள்ளைக்காரர்களை அழைத்து வந்து தன்னைக் கடத்திச் சென்றதையும் மற்றும் வாங்குகள் இருவரும் புரிந்த கொடுமைகளையும் எடுத்துக் கூறினான். பின்னர் அவன் "இத்துடன் நான் நிறுத்திக் கொள்கின்றேன். மற்றவர்கள் தொடரட்டும்!" என்றான்.

இவன் பிள்ளையார் சுழிபோட்டதும் மற்ற பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்தார்கள். வாங்குகள் எங்ஙனம் கையூட்டு பெற்றார்கள். மக்களில் சிலர் தாங்களே தற்கொலை செய்து கொள்ளும்படியான நிலையை உருவாக்கினார்கள், சொத்துக்களைச் சூறையாடியமை, பெண்களைச் சோரம் செய்தது, வாங்குகள் அரசின் படைவீரர்களைத் தங்கள் வீட்டுத் தேவைகளுக்கு விறகு முதலியவற்றைக் கொணர நிர்ப்பந்தித்தது, உழவர்களைத் தங்கள் வயல்களில் கூலி கொடுக்காது வேலை வாங்கியது, வரிகளை வசூலித்துக் கையாடல் செய்தமை. படைவீரர்களைக் கொண்டு அப்பாவிகளைக் கட்டி வைத்துத் துன்புறுத்தியமை இப்படியாகப் பொழுது சாயும் வரை குற்றச்சாட்டுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏறத்தாழ அறுபதுக்கு மேல் கொணரப்பட்டன.

இக் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அரசு வாங்குகளை அரசின் நியாய மன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பியது அவர்கள் குற்றங்களை நன்கு ஆய்ந்த பின்னர் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்படு செய்ய வைத்ததுடன் பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது.

இப்பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் மக்கள் துணிச்சல் அடைந்தனர். ஊர்க்குழுவினர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பழைய அனுபவங்களைக் கருத்திற் கொண்டு வாக்களிப்பதில் அக்கறை காட்டினார்கள். இம்முறை ஜின்வாங்கின் மனைவி பெண்கள் தேசிய விடுதலை அணியின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவளும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் தானும் முற்போக்கான கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டாள்.

இந்த இரண்டு மந்திரவாதிகளும் மாறிவிட்டார்கள். விசாரணை மண்டபத்தில் தன்னைக் குறித்த கேலிச் சொற்களைக் கேட்டபொழுது மூன்றாம் தேவதைத் தோழி தனக்கு உள்ளத்தில் எவ்வளவு வேதனை தந்தது என்பதை உணரத் தொடங்கினாள். வீடு திரும்பியதும் தன்னை நன்றாகக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். இத்தனை நாட்களாகத் தான் எங்ஙனம் பித்துக்குளி போல் உடுத்தியிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். மகள் ஒருத்தி மண முடிக்கும் பருவத்தில் இருக்க தான் அலங்கரித்துத் திரிவது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்ந்தாள். அன்று தொடங்கித் தன் வயதுக்கு ஒத்த உடைகளை அணியத் தொடங்கினாள். முப்பது ஆண்டுகளாகத் தேவதை வருவிப்பதாகக் கூறி நடத்திய தூபதீப மேடைகளை அகற்றி விட்டாள்.

இரண்டாம் கொங்மிங் மாவட்ட அரசு அலுவலகத்தினின்று திரும்பியதும் எர்கைக்கும் சின்னுக்கும் இடையேயுள்ள ஜாதகப் பொருத்தமின்மை குறித்து உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். அவன் பேச்சைக் சகிக்காது அவன் மனைவி கூட ஆத்திரங் கொள்ளத் தொடங்கினாள்.

"போதுமே உங்கள் மூட ஜோசியம். எர்கைக்கு இரண்டு பெரிய கண்டங்கள் என்று குறி சொன்னீர்களே? அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று என்ன என்னவோ பலன் சொன்னீர்கள். எதுவும் உருப்படியாக நடந்ததா? இனி மேற்கொண்டு நீங்கள் இவற்றை மூட்டை கட்டி வைப்பது மரியாதை. சின் நல்லவளாகத் தென்படுகிறாள். அவளைப் பெற எர்கை அதிர்ஷ்டம் செய்திருக்கிறான். இவர்கள் கல்யாணத்திற்கும் ஜாதகத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? "விதைப்புக்கேற்ற நாள் இதுவல்ல" ஜோசியத்தை நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்". தன் மனைவியே தன்னைக் கேலி செய்யத் தொடங்கியதும் மற்றவர்களிடம் அது தொடங்கி தன் ஆற்றலைக் காட்டத் தொடங்கவில்லை.

எனவே எர்கையும் சின்னும் மாவட்ட அரசின் செயலகத்தினின்று திரும்பி வந்ததும் தங்களின் பெற்றோர்களிடை ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்தார்கள். அண்டை அயலார் உதவியுடன் தங்கள் திருமணத்தற்கு அவர்களுக்கு ஒப்புதலைப் பெறுவது கடினமாக இருக்கவில்லை. புதுமணத் தம்பதிகள் மகிழ்வுடன் வாழ்ந்தனர். கிராமத்து முன்மாதிரித் தம்பதிகளாக விளங்கினர்.

இருவரும் சில சமயங்களில் தங்களுக்கிடையே தங்கள் பெற்றோர்களைப்; பற்றி கேலிப் பேசிக் கொள்வதும் உண்டு. எர்கை சின்னின் தாய் "திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது" என்று கூறியதையும் சின் எப்படி கொங்மிங மாவட்ட தலைவரிடம் "கருணை காட்டுங்கள்" "அவர்களுக்கு ஜாதகப் பொருத்தமில்லை" என்று கூறியதையும் சொல்லிக் காட்டுவார்கள் இவ் இள வட்டங்களின் பேச்சை ஒட்டுக் கேட்டிருந்த ஊர்த் துக்கிரிகள், இவர்கள் கூறிய இந்த வசனங்களையும் பரப்பத் தொடங்கினார்கள். எனவே மூன்றாந் தேவதைத் தோழிக்கு "திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்றும் இரண்டாம் கொங்மிங்க்கு "அவர்களுக்கு ஜாதகப் பொருத்தமில்லை என்றும் மேற்nஅகாதண்டும் இரண்டு பட்டப் பெயர்களை அவர்கள் பெற்றனர்.