கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்  
 

எட்ஹார் ஸ்னோ

 

ஒரு கம்யூனிஸ்டின்
உருவாக்கம்

மூலம் : எட்ஹார் ஸ்னோ

தமிழில் : எஸ். இந்திரன்

சவுத் ஏசியன் புக்ஸ்

புதியப+மி வெளயீட்டகம்

Oru Communistain Uruvakkam
Edgar Snow
Tamil Translation : S. Indran
First Published : Feb . 1994
Printed at Surya Achagam, Madras.
Publisshed in Assocoation with
Puthiya Bhoomi Veliyeetagam,
by
South Asian Books
6/1, Thayar Sahib II Lane,
Madras - 600 002.


Rs. 18.00

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்
எட்ஹர் ஸ்னோ
தமிழில் : எஸ். இந்திரன்
முதற்பதிப்பு : பிப்ரவரி 1994
அச்சு : சூர்யா அச்சகம், சென்னை – 41
வெளியீடு : புதியப+மி வெளியீட்டகத்துடன்
இணைந்து
சவுத் ஏசியன் புக்ஸ்
6ஃ1, தாயார் சாகிப் 2ஆவது சந்து,
சென்னை - 600 002.

ரூ. 18.00

இலங்கையில் கிடைக்குமிடம் :
VASANTHAM (P) LTD
S. 44, 3 rd Floor,
Central Super Market Complex
Colombo - 11


மாஓ சே துங்
நூற்றாண்டு
நினைவாக

உள்ளே

பதிப்புரை 7

முகவுரை 12

குழந்தைப்பருவம் 17

சாங் ஷாவில் வாழ்ந்த நாட்கள் 42

புரட்சிக்கு முன்னோடி 65
தேசியவாத காலகட்டம் 78

(சீன) சோவித் இயக்கம் 93

செஞ்சேனையின் வளர்ச்சி 113

மாசே துங்குடன் மேலும் சில செவ்விகள் 135

பதிப்புரை

மார்க்சீக லெனினிசத்தின் புதிய படி நிலை வளர்ச்சிக்கு சீனப் புரட்சியின் அனுபவங்களை தகுந்த களமாக அமைந்தது. அதனை வளப்படுத்தி முன்னெடுத்ததில் தோழர் மாஓசேதுங்கின் வரலாற்றைப் பாத்திரம் மகத்தானது. அவரது பங்களிப்பு தனியே சீன தேசத்திற்கு மட்டும் உரியதன்று. உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கும் சர்வதேச கம்ய+னிஸ்ட் இயக்கத்திற்கும் பெறுமதி மிக்க பொக்கிசமாக அமைந்தது. மேற்கில் தோற்றம் பெற்று ரஷியப்புரட்சியின் ஊடாக கிழக்கு உலகிற்குள் புகுந்த மார்க்சிச லெனினிசத்தைக் கையேற்றுப் பாதுகாத்து அதனைச் சீன நாட்டின் விஷேச நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகித்த வெற்றி கண்ட நடைமுறைமைகளுக்கு மூலம் “மேலைக் காற்றை கீழைக் காற்று மேவி நிற்கும்’’ நிலைக்கு உந்துவிசை கொடுத்தவர் தோழர் மா ஓ. சே துங் ஆவார். அவரது தத்துவார்த்த அரசியல் நடைமுறை வழிகாட்டல்கள் இன்றும் நமது நாடு போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மீட்சிக்கு ஒளி மிகுந்த வழிகாட்டியாக இருந்து வருகின்றன.

அத்தகைய மாமேதையின் நூற்றாண்டு நினைவு (1893 – 1993) இவ் ஆண்டாகும். டிசம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது பிறந்த தினமாகும். அவரது நூற்றாண்டு தின நினைவாகவே இந்நூல் வெளிவருகின்றது. மா ஓ சே பற்றி அவரது காலத்தில் வெளியிடப்பட்ட உலகப் புகழ்பெற்ற நூலில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதே இந்நூலாகும். எட்ஹார்ஸ்னோ என்ற முப்பது வயதுடைய அமெரிக்கப் பத்திரிகையாளர் 1937 ஆம் ஆண்டின் மா ஓ வையும் ஏனைய சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து சேகரித்த அரிய தகவல்களை ஒன்று திரட்டி “சீனாவின் மீது’’ செந்தாரகை என்னும் நூலினை எழுதி வெளியிட்டார். சீன மக்களின் நன்மதிப்பினையும் சீனக் கம்ய+னிஸ்ட் கட்சித் தலைவர்களின் நம்பிக்கையையும் பெற்ற எட்ஹார்ஸ்னோ பற்றி சில வார்த்தைகள் கூறுவது அவசியம்.

எட்ஹார்ஸ்னோ அமெரிக்கப் பத்திரிகையாளர் அவர் மா ஓ வை சந்திப்பதற்கு முன்பாக ஏழு ஆண்டுகள் வரை சீனாவில் தங்கியிருந்து சீன தேசம் பற்றிய பல விடயங்களைப் படித்து வந்தார். யென்சிங் பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகவும் கடமை புரிந்திருக்கிறார். “சிக்காக்கோ ரிபிய+ன்’’, “லண்டன் டெயிலி ஹரல்ட்’’ போன்ற பத்திரிகைகளுக்கு ஆசியப் பிரதிநிதியாகவும் கடமையாற்றியிருக்கிறார்.

இரண்டாவது உலக யுத்தத்தின்போது “சற்றடே ஈவ்னிங் போஸ்ட்’’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் யுத்த நிருபராகவும் இருந்திருக்கிறார். யுத்தத்தின் பின்னையகாலப் பகுதியில் சீனா, இந்தியா, சோவியத்ய+னியன் ஆகிய நாடுகளைப் பற்றிய தகவல்களைத் தருவதில் புலமை பெற்ற பத்திரிகையாளராகத் திகழ்ந்தார். எட்ஹார்ஸ்னோ பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் “ஆசியாவுக்கான சமர்’’, “மக்கள் எமது பக்கம்’’ “ஆரம்பத்தை நோக்கிய பயணம்’’ “இன்றைய செஞ்சீனா’’ “ஆற்றின் மறு கரை’’ ஆகிய உள்ளடங்கும். ஸ்னோவும் அவரது மனைவியும் பல ஆண்டுகள் சீனாவில் வாழ்ந்தனர். சீன மொழியை ஸ்னோ சுற்றறிந்து பல்வேறு தகவல்களை ஆதாரப+ர்வமாகப் பெற்றுக் கொண்டார்.
சீன மக்களின் போராட்டங்களை நன்கு விளங்கிக்கொண்டு அதன் தாக்கங்களையும் மட்டுமன்றி ஏற்பட்ட இருக்கும் மாற்றங்களையும் அவரால் தெளிவாக உலகிற்கு எடுத்துக் கூறமுடிந்தது.

முப்பதுகளில் சீனக் கம்ய+னிஸ்ட்டுக்களை “சிவப்பு வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்’’ என ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். இத்தகைய சூழலில் சீனக் கம்ய+னிஸ்ட் தலைமைப் பீடத்துடன் மேற்கத்திய பத்திரிகையாளர்களோ அரசியல் அவதானிகளோ தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்றைய காலகட்டத்தில் சீனாவில் இடம் பெற்றுவந்த புரட்சிகரப் போராட்டம் பற்றிய உண்மைத் தகவல்களை மேற்குலக மக்கள் பெற்றுக் கொள் முடியாது இருந்தது. இத்தகைய சூழலிலே எட்ஹார்ஸ்னோவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுக்கொண்டது. அவர் ஒரு பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுக்கொண்டது. அவர் ஒரு மனச்சாட்சி படைத்த நேர்மையான அமெரிக்கப் பத்திரிகையாளர் என்பதை வரலாறு அடையாளப்படுத்தியது.

1936 இல் சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் தலையகம் அமைந்திருந்த புரட்சிகரச் செந்தளத்திற்கு ஸ்னோ சென்றடைந்தபோது சீனக் கம்ய+னிஸ்ட் கட்சி தனது பதினைந்தாவது வயதை அடைந்திருந்தது. யப்பானியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த வடமேற்குச் செந்தளத்திற்கு சன்யெட்சென் அம்மையரின் சிபார்சுடன் ய+ன் மாதத்தில் எட்ஹார்ஸ்னோ புறப்பட்டார். கம்ய+னிஸ்டுகளுடன் ஓர் இலக்கிய முன்னணிக்கு கொள்ளையளவில் தயாராய் இருந்த காரணத்தினால் அவ்வேளை சியானில் நிலை கொண்டிருந்த மஞ்சூரியப் படையினரின் ஒத்துழைப்புடன் ஸ்னோ எல்லையைக் கடந்து கம்ய+னிஸ்ட் தலைநகரான பாஓ அன் சென்றடைந்து அங்கு தலைவர் மா ஓ சே துங்கைச் சந்தித்தார்.

எட்ஹார்ஸ்னோ நான்கு மாதங்கள் சீனக் கம்ய+னிஸ்ட்டுகளி;ன் செந்தளத்தில் தங்கியிருந்தார். அவ்வேளை தோழர் மா ஓ விடம் இருந்து பல்வேறு தகவல்களையும் கொள்கை விளக்கங்களையும் கலந்துரையாடல், போன்றவற்றின் மூலம் சேகரித்துக் கொண்டார். பல இரவுகள் கண் விழித்து மா ஓ வுடனான பேட்டியை ஸ்னோ பெற்றுக்கொண்டார். இச்சந்திப்பும் ஏனைய தலைவர்களுடனான தொடர்புகளும் ஸ்னோவிற்கு முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்தது. மா ஓ. வின் வாழ்க்கைக் குறிப்புக்களை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமது சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பாத நிலையிலும் கூட அன்றைய தேவை கருதி மாஓ தனது வாழ்க்கைக் குறிப்புகளை ஸ்னோவிடம் எடுத்துக்கூறினார். அதே போன்று ஏனைய தலைவர்கள் பற்றிய விபரங்களையும் ஸ்னோ சேகரித்துக் கொண்டார்.

1936 ஆம் ஆண்டு ஒக்டோபரில் மேற்படி செந்தளத்தில் இருந்து திரும்பிய ஸ்னோ தான் நேரடியாகப் பெற்ற தகல்களையும் விபரங்களையும் தொகுத்து 1939 பெற்ற தகவல்களையும் விபரங்களையும் தொகுத்து 1939 ய+லையில் தனித்துவும் மிக்க ஒரு நூலாக எழுதி முடித்தார் அதுவே “சீனாவின் மீது செந்தாரகை’’ என்னும் புகழ் பெற்ற ஆங்கில நூலாகும். முதல் தடவையாக சீனக் கம்ய+னிஸ்டுக்கள் பற்றியும் தலைவர் மா ஓ துங் மற்றும் தலைவர்கள் பற்றியும் தெளிவான ஒரு சித்திரத்தை இந்நூல் உலகிற்கு வழங்கியது சீனக் கம்ய+னிஸ்டுகளின் உன்னத நோக்கத்தையும் அவர்களது வீரம், தியாகம் அர்ப்பணிப்பு மிக்க வேலை முறை என்பன பற்றிய உணர்வும் உணர்ச்சியும் மிக்க பக்கங்களை இந்நூல் உலகிற்கு படம் பிடித்துக் காட்டியது. ஏகாதிபத்தியவாதிகளும் பிற்போக்கு சக்திகளும் தமது கொள்ளைத்தனமான சுரண்டலையம் அதற்கான கொடூரங்களையும் மூடி மறைத்து கம்ய+னிஸ்டுகளைப் “பயங்கரவாதிகள்’’ “பலாத்காரவாதிகள்’’ “இரத்தவெறி பிடித்தவர்கள்’’ என்று காட்டி நின்ற வேளையில் அதனை முறியடிக்கும் ஒரு நேரடிச் சாட்சியாக ஸ்னோவின் கட்டுரைகள் அமைந்தன எதிர்காலத்தில் சீனகக் கம்ய+னிஸ்ட் இயக்கத்திற்கு உலகிற்கு கிடைக்கக்கூடிய ஆதரவிற்கும் முக்கியத்துவதற்கும் இந்நூல் ஆரம்பத்துணையாகியது. இது ஒரு வரலாற்றுக் குறிப்பு என்பதால் மட்டுமன்றி சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியில் தலைவர் மா ஓ வின் தெளிவான திசை மார்க்கத்தையம் சுட்டிக்காட்டி நின்றது.

இத்தகைய முக்கியத்துவம் மிக்க “சீனாவின் மீது செந்தாரகை’’ நூலின் நான்காவது அத்தியாயமாக அமைந்துள்ள “ஒரு கம்ய+னிஸ்டின் உருவாக்கம்’’ என்ற பகுதியே தமிழாக்கம் செய்யப்பட்டு இந்நூல் உருவம் பெறுகியது கம்ய+னிசம் - கம்ய+னிஸ்டுகள் பற்றிய எதிர்நிலைப் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன இன்றைய சூழலில் இதுபோன்ற நூல்களின் தேவை மிக அவசியமானதாகும்.

இந்நூலினை மா ஓ சே அவர்களின் நூற்றாண்டு நினைவு நாட்களிலே வெளியிட்டு உதவுமாறு புதிய ஜனநாயகக் கட்சி உமது புதிய பூமி வெளியீட்டகத்தைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இதனை நூல் உருவில் கொண்டு வருகிறோம். இதில் பெரு மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

இந்நூலினை தமிழாக்கம் செய்த எஸ். இந்திரன் அவர்களுக்கும் அதற்கு உதவிய ஏனைய தோழர்களுக்கும் நாம் நன்றியுடைவர்கள். இதனை எம்முடனள் இணைந்து வெளியிடும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினருக்கும் அழகுற அச்சிட்டுத் தந்த அச்சக உரிமையாளர் ஊழியர்கள் அனைவரும் நன்றி கூறுகின்றோம்.

117, சென் அன் றூஸ் கீழைத்தெரு,
முகத்துவாரம்
கொழும்பு – 15,
இலங்கை
20 – 12 – 1993

முகவுரை

சர்வதேச கம்ய+னிச இயக்கத்தின் உன்னத் தலைவர்களாக கருதப்படும் மார்க்ஸ், ஏல்கெல்ஸ், லெனின் ஸ்ராலின் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக விளங்கிய தலைவர் மாவோ அவர்களின் நூறாவது ஜனன தினமாகிய 1993 டிசம்பர் 26ந் திகதியை நினைவு கூறுமுகமாக மாவோவி;ன் வாழ்க்கை வரலாற்றை தமிழில் உங்களுக்;குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். மாவோவைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய வெளியீடுகள் பெருமளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள போதிலும் தமிழில் அவ்வாறான வெளியீடுகள் வந்தனவா என்பது கேள்விக்குறியே. தேசியப் பத்திரிகைகள் என்று கூறிக்கொள்ளும் தமிழிப் பத்திரிகைகளில் வெளிவந்த – வெளிவரும் கட்டுரைகள், செய்திகள் பெரும்பாலானவை மாவோவின் சாதனைகளை கொச்சைப்படுத்துபவையாகவும் திரிபுபடுத்துபவையாகவும் இருக்கின்றன.

தலைவர் மாவோலை நினைவு கூறும்பொழுது அவர் சாதித்தவை எவை, அவர் எத்தகைய சூழ்நிலைகளில் இவற்றைச் சாதித்தார். அவர் சீனமக்களுக்கும், உலக மக்களுக்கும் காட்டிச்சென்ற பாதை என்ன என்பவற்றை நாம் கற்றுணர்ந்தால் மட்டுமே நமது நாட்டிலும் ஒரு சுரண்டலற்ற, இன அடக்குமுறை இனப்பாகுபாடு அற்ற சகலமக்களுக்கும் சமத்துவமான சுபீட்சமான மக்கள் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பும் பணியில் முன்னேறுவதற்கு அடித்தளம் அமைத்தவர்களாவோம்.

ஏனைய கம்ய+னிஸ்ட் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள் மார்க்சிச - லெனினிசத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும் விளங்கினார். சீனாவில் ஒரு சக்திமிகு கம்ய+னிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன் தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப் படையை உருவாக்கி, பல்வேறு கருத்;துக்களையும், கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் காட்சிகளையும் பொது எதிர்க்கெதிராக ஒருபரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டித் ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும் இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பரிய சாதனையாகும்.

ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும், தத்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில் நகரங்களை கைப்பற்றி முழுத் தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை ஏற்படுத்தியது மற்றுமொரு சாதனையாகும்.

அரைக்காலனித்துவ அரை நிலப்பிரபுத்துவ நாடொன்றில் சகல ஏகாதிபத்திய விரோத சக்திகளையும் கம்ய+னிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் ஐக்கியப்படுத்தி ஜனநாயக புரட்சியை வென்றெடுத்து அதன் அடுத்தகட்டமான சோஷலிசத்தை ஏற்படுத்த வழிவகுத்தமை விடுதலைக்காகப் போராடும் அனைத்துலக மக்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.

சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோஷலிச நாடாக்க நடவடிக்கை எடுத்தமை, சோவியத்ய+னியன் தலைமையில் உலக கம்ய+னிஸ்ட் இயக்கத்தில் உருவெடுத்த நவீன திரிபு வாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன் எடுத்தமை என்பன மூலம் மாக்சிசம் லெனினிசத்தையம், புரட்சிகர இலக்கியங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக மாலோ விளங்கினார்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் என்றும் இல்லாத இன ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு பேரினவாதப் போக்கு அதன் உச்சக்கட்டத்தை அமைந்துள்ள இவ்வேளையில் இந்த நாட்டு மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு என்ன வழியென்பதை மாவோ அவர்கள் காட்டிய பாதை மூலமே கற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் வடக்;குக் - கிழக்கிற்கு சுயாட்சி அமைப்பு வழங்குவதன் மூலமே சாத்தியமென புதிய – ஜனநாயக கட்சியும் அதன் முன்னோடியான கம்ய+னிஸ்ட் கட்சியும் 1955 இல் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளன. இனங்கள் யாவும் சமமானவை என்ற நிலைபாட்டிலேயே தீர்வு ஒன்று அமைய வேண்டும்.

சீனாவில் அரசியல் அமைப்பின் முகவுரையிலேயே சீனா பல இனங்களைக் கொண்ட ஒரு நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனங்கள் யாவும் சமமானவை என்றும் ஒரு இனம் வேறு ஓர் இனத்தை அடக்கப்படாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சிறுபான்மை இனத்தவர்கள் முழுச் சனத்தொகையில் 8.04 வீதமானவர்கள் மட்டுமே இந்த 8.04 விதத்தினருள் 55 இனங்கள் உள்ளன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாவோ அவர்கள் பெரும்பான்மை ஹான் இனத்தின் தலைவராக மட்டுமல்லாமல் சீனாவின் சகல இன மக்களின் ஒப்பற்ற தலைவராகவும், உலகின் சகல அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகவும் விளங்கினார்.

சீனாவின் யதார்த்தத்திற்;கு ஏற்வகையில் சிறுபான்மை இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப் படுத்தும் வகையில் சுயாட்சி அமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இனங்களுக்கி;டையேயான ஐக்கியத்துக்கு வழி சமைக்கப்பட்டது.

சீனாவில் சிறுபான்மை இனத்தவர்கள் சனத்தொகையில் 8.04 வீதம் மட்டுமேயென்ற போதிலும் சுயாட்சி அமைப்புக்கள் வழங்கப்பட்ட பிரதேசங்களின் நிலப்பரபானது 62மூ (அறுபத்திரண்டு வீதம்) என்பது குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு – கிழக்கு இணைந்த சுயாட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பித்தலாட்டக்காரர் சீனாவைப் பார்த்து தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்களா?

சீனாவின் சிறுபான்மை இனங்களை கிண்டல் செய்யும் அவமானம் செய்யும் முகவரிகள், இடப்பெயர்கள், குறியீடுகள் யாவும் முழுச்சீனாவிலிருந்தும் அகற்றப்பட வேண்டுமென்ற கட்டளையை சீன மத்திய அரசாங்கம் 1951 ஆம் ஆண்டிலேயே விடுத்திருந்தது. சகல அரசாங்க அமைப்புகளிலும் சகல சிறுபான்மை இனப் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். ஆகச் சிறிய சிறுபான்மை இனமான ஷெசான் (சுமார் இரண்டாயிரம் பேர்) தேசிய மக்கள் காங்கிரசில் ஒரு பிரதிநிதியைக் கொண்டிருக்கிறது.

சீனா முழுமையாக விடுதலை அடையுமுன்பே உள்மொங்கோலிய சுயாட்சிப் பிரதேசம் 1947 மே மாதம் 1ந் திகதியே நிறுவப்பட்டது. இங்கு கவனிக்கத்தக்கது சீனாவின் சிறுபான்மை இனங்கள் மாவோ தலைமையிலான சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின்பால் கொண்டிருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது. கிங்கியாங் உய்குர் சுயாட்சிப் பிரதேசம் பதினாறு (16) இலட்சம் சதுரகிலோ மீட்டர் பரப்புடையது – அதாவது சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒன்று – சனத்தொகை ஒன்றரைக் 1 (½) கோடியளவேயாகும். தீபெத் சுயாட்சிப் பிரதேசத்தின் நிலப் பரப்பு பன்னிரண்டு (12) இலட்சம் சதுர கிலோ மீட்டராகும். இது சீனாவில் நிலப்பரப்பில் எட்டில் ஒன்றாகும் அதன் சனத் தொகையோ சுமார் இரண்டு கோடியாகும் சீனாவில் ஐந்து சுயாட்சிப் பிரதேசங்கள் உள்ளன. அவற்றிற்;கு வெளியேயும் குறிப்பிட்ட ஐந்து இனங்களும் பரந்து வாழ்கிறார்கள். அங்கும்கூட இவர்களுக்கு சுயாட்சி அமைப்புகள் உள்ளன. இதுதான் சோஷலிசத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்குமிடையேயான வித்தியாசம்.

எனவே சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது மா வோ வின் வழிகாட்டலில் சீனக் கம்ய+னிஸ்ட் தலைமையில் உருவாக்கப்பட்ட சீனாவின் சுயாட்சி அமைப்புக்கான சட்டத்தை நாம் கற்றறிந்து நமது நாட்டின் சூழலுக்;கு ஏற்றவகையில் நமது நாட்டின் சூழலுக்கு ஏற்றவகையில் நமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயலுவது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஐக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

நா. சிறி. மனோகரன்
இலங்கை – சீன நட்புச் சங்கம்

குழந்தைப் பருவம்

பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக நான் ஒப்படைத்த ஐந்து அல்லது ஆறு தொகுதிக் கேள்விகளைப் பற்றி, தலைவர் மாவோ 12 இரவுகள் வரை என்னுடன் கதைத்திருக்கின்றார். ஆனால் அதில் குறிப்பிட்ட சில சம்பவங்களில் தனது சொந்தக் கடமைகள் பற்றி – அல்லது தன்னைப் பற்றி ஒருபோதும் அவர் குறிப்பிட்டதில்லை. அத்தகைய தகவல்களை அவர் எனக்குத் தருவார் என்று நான் எதிர்பார்ப்பது பயனற்றது என்று நான் நினைக்கத் தொடங்கியிருந்தேன். தனிப்பட்டவர்கள் அல்லது அவர்களின் செயற்பாடுகள் - வெகு முக்கியத்துவம் குறைந்தவை என்று அவர் வெளிப்படையாகவே கருதினார். நான் சந்தித்த ஏனைய கம்ய+னிஸ்டுக்களைப் போலவே குழுக்கள், நிறுவனங்கள் படைகள், தீர்மானங்கள், சமர்கள், தந்திரோபாயங்கள், வழிவகைகள் மேலும் பற்பல விடயங்கள் பற்றிக் கதைப்பதையே அவர் வழிமுறைமாகக் கொண்டிருந்தார். தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி அவர் ஒருபோதும் கதைத்ததில்லை.

இலக்குத் தழுவாத விடயங்களைக்கூட விரிந்துரைப்பதில் அவர் காட்டிய தயக்கமும், தனிப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவரது தோழர்களது அருஞ்சாதனைகளைப் பற்றிக் கூறுவதில் காட்;டிய தயக்கமும் தன்னடக்கம் காரணமாகவோ அல்லது என்னைப் பற்றிய பயம் அல்லது சந்தேகம் காரணமாகவோ, அல்லது இந்த மனிதர்களில் பெரும்பாலானர்களின் உயிர்கள் மீதுவிதிக்கப்பட்டிருந்த “பணய’’ விலை பற்றிய உணர்வு காரணமாகவோ ஏற்பட்டிருக்கலாம் என்று நான் சில காலமாக நினைத்தேன். இதற்கான காரணங்கள் நான் மேற்குறிப்பிட்ட விடயங்களல்ல. கம்ய+னிஸ்டுகளில் பெரும்பானவர்கள் உண்மையாகவே தங்கள் தனிப்பட்ட சாதனைகள் பற்றிய விடயங்களை ஞாபகத்தில் கொண்டிருக்கவில்லை என்பதை நான் பிற்காலத்திலேயே உணர்ந்தேன். நான் தனிப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தொகுக்கத் தொடங்கியபோது, இந்தக் கம்ய+னிஸ்டுக்கள், தங்கள் இளமையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பற்றி;ச் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள் என்ற போதிலும் செஞ்சேனையின் வீரர்களாகத் தங்களை தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை எங்கோ மறுத்துவிட்டார்கள் என்பதை நான் மீண்டும் கேள்விகள் கேட்டாலொழிய அவரைப் பற்றி ஒருவரும் ஒன்றும் அறிந்து கொள்ளமுடியாது. ஆனால் இராணுவம் சோவியத் அமைப்புகள் கட்சி ஆகியவை பற்றிய விடயங்களே அவர்களிடமிருந்து வெளிவந்தன. சமர்கள் பற்றிய திகதிகள், சூழ்நிலைகள், இதுவரை கேள்விப்பட்டிராத ஆயிரம் இடங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் பற்றி இந்த மனிதர்கள் காலவரையறையற்ற முறையில் கதைப்பார்கள். ஆனால் இந்த நிகழ்வுகள், சூட்டு முயற்சி என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுபோல் தோற்றமளிக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அந்த இடத்தில் வரலாறு படைத்திருந்தார்கள் என்பதால் அல்லது செஞ்சேனை அந்த இடத்தில் களிச்சாதனை புரிந்திருந்தது என்பதனால்தான் அவர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் - அத்தோடு ஒரு கோட்டின் முழுமையான அடிப்படை உந்துசக்தியின் பிரதிநிதிகளாக அவர்கள் சண்டையிட்டிருந்தார்கள் என்னைப் பொறுத்தமட்டில் இது ஒரு ருசிகரமான கண்டுபிடிப்பு. ஆனால் எனது தகவல் சேகரித்து வெளியிடும் பணியில் இது ஒரு சிரமமான விடயம்.

ஏனைய கேள்விகள் அனைத்துக்கும் திருப்திகரமான முறையில் பதில்கள் வழங்கப்பட்ட பின்பு ஓர் இரவில் நான் “தனிப்பட்ட வரலாறு’’ என்று தலைப்பிட்டிருந்த பட்டியலை தலைவர் மாலோ பார்த்தார். அதில் ஒரு கேள்வியைப் பார்த்துவிட்டுப் புன்முறுகல் பூத்தார். “நீங்கள் எத்தனை முறை திருமணம் செய்துள்ளீர்கள்?’’ நான் தலைவர் மாவோவிடம் “உங்களுக்கு எத்தனை மனைவிகள் உண்டு’’ என்று கேட்டதாக ஒரு வதந்தி பின்பு பரவியது. இருப்பினும் ஒரு சுய வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புக்கான விடயங்களை வழங்குவதன் அவசியத்தையிட்டு அவர் பற்றுறிதி அற்றவராக காணப்பட்டார். ஆனால் அது ஒரு வகையில் ஏனைய விடயங்கள் பற்றிய தகவல்களைக் காட்டிலும் அதிகரித்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் வாதிட்டேன், “நீங்கள் எத்தகைய மனிதர் என்று மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றார்கள். நீங்கள் கூறுவதை அவர்கள் படிக்கும் போது உங்களைப் பற்றி கூறப்படும் சில பிழையான வாந்திகளையும் உங்களால் தவி;ர்க்க முடியும்’’ என்று அவரிடம் நான் கூறினேன்.

அவர் இறந்து விட்டார் என்று கூறப்படும் பல்வேறு தகவல்களை அவருக்கு ஞாபகமூட்டினேன். அவர் ஆற்றொழுக்காக பிரஞ்சு மொழி பேசக்கூடியவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் அவர் படிப்பறிவற்ற ஒரு விவசாயி என்று கூறுகின்றனர். அரை உயிரோடு உள்ள ஒரு கசநோயாளி அவர் என்று வேறொரு அறிக்கை கூறுகின்றது. வேறு சிலர் அவர் ஒரு பைத்தியக்கார தீவிரவாதி என்று கூறுகின்றனர் என்று அவருக்கு நான் ஞாபகப்படுத்தினேன். தன்னைப் பற்றிய விடயங்களையிட்டு விவாதிப்பதில் மக்கள் ஏன் தங்கள் காலத்தை வீணாக்கவேண்டும் என்பது குறித்து ஓரளவு ஆச்சரியப்பட்டவர் போன்று அவர் காணப்பட்டார். தன்னைப் பற்றி இந்தத் தகவல்களை திருத்தப்படவேண்டும் என்று அவர் ஒத்துக்கொண்டார். பின்பு நான் எழுதிக் கொடுத்த வரிசையின்படி அந்த விடயங்களை மீண்டும் ஒருமுறை அவர் பார்த்தார்.

சரி நான் உமது கேள்விகள் அனைத்தையும் வெறுமனே ஒதுக்கி விடுகிறேன். அதற்குப் பதிலாக எனது வாழ்க்கை பற்றிய பொதுவான தோற்றத்தைத் தருகின்றேன். இது சிறிதளவு கூடுதலாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்தோடு இறுதியில் உமது அனைத்துக் கேள்விகளுக்குப் பதில்கள் வழங்கப்பட்டும் இருக்கும். தொடர்ந்து இரவுகளில் இடம் பெற்ற பேட்டிகளில் நாங்கள் ஒருவகை சூழ்ச்சிக்காரர்கள் போலவே தோற்றமளித்தோம். அந்தக் குகையினுள்ளே சிவப்புத் துணி விரிக்கப்பட்டிருந்த ஒரு மேசையில் எங்களிருவருக்குமிடையே ஒளி விடும் மெழுகுதிரிகளில் வெளிச்சத்தில் முடங்கியபடி எங்கள் கடமையில் ஈடுபட்டோம். எனக்கு நித்திரை வரும்வரை நான் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கருகிலே வ+ லியாவ் பிங் இருந்துகொண்டு மென்மையான தென் பகுதிப் பேச்சு வழக்கு மொழியில் மாவோ எனக்கு கூறியவற்றை விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார். வட பகுதிப் பேச்சு வழக்கு மொழியிலிருந்து அது விநோதமான பல வேறுபாடுகளைக்கொண்டிருந்தது. மாவோ அவரது நினைவிலிருந்த அனைத்து விடயங்களையும் கூறினார். அவர் பேசப்பேச நான் எழுதிக்கொண்டிருந்தேன். இவை மீள மொழி பெயர்க்கப்பட்டு திருத்தப்பட்டு அதன் விளைவாகத்தான் இந்த வரலாற்றுத் தொகுப்பு உருவாயிற்று. பொறுமை வாய்ந்த வ+ அவர்களின் சொற்றொடர் அமைப்பில் மேற்கொண்ட சில அவசியமான திருத்தங்களை தவிர இந்தத் தொகுப்புக்கு இலக்கிய நயம் ஊட்டும் எந்த முயற்சியியும் மேற்கொள்ளப்படவில்லை.

சியாங் தான் மாவட்டத்திலுள்ள ஷாங் ஷாங் என்ற ஊரில் நான் பிறந்தேன். ஹ}{னான் மாகாணத்திலுள்ள இந்த ஊரில் நான் 1833ஆம் ஆண்டு பிறந்தேன். எனது தந்தையார் பெயர் மாவோ ஜென் ஷெங் (மாவோஷன் ஷெங்) திருமணமாகுமுன்பு எனது தாயாரின் கன்னிப்பெயர் லென் சி மென்.

எனது தந்தையார் ஒரு ஏழை விவசாயி. அவர் இளவயதிலேயே கடுமையான கடன் தொல்லை காரணமாக இராணுவத்தில் சேர வேண்டி ஏற்பட்டது அவர் பல வருடங்கள் இராணுவ வீரனாகக் கடமை புரிந்தார். பின்பு அவர் ஊர் திரும்பினார். அங்கு நான் பிறந்தேன். கவனமாய்ச் சேமிப்பதன் மூலமும் சிறு வர்த்தகங்கள் மூலமும் ஏனைய முயற்சிகள் மூலமும் சிறிது பணத்தைச் சேர்த்தெடுத்து அவரால் தனது நிலங்களை மீள வாங்கிக் கொள்ள முடிந்தது.

நடுத்தர விவசாயிகளாக இருந்த எங்கள் குடும்பம் அப்போது 15 மு (ஒரு ஹெக்டேருக்குச்சமம்) நிலப்பரப்புள்ள காணியைக் கொண்டிருந்தது. இந்தக் காணியில் இருந்து 60 ரான் (1 ரான் என்பது 133. றத்தலுக்குச் சமம்) அரிசியை அவர்களால் உற்பத்தி செய்ய முடிந்தது. எங்கள் குடும்பத்தின் 5 உறுப்பினர்களும் 35 ரான் அரிசியை உணவாகக் கொண்டனர். அதாவது ஒருவருக்கு 7 ரான் அரிசி இதன் மூலம் வருடாந்த 25 ரான் அரிசி மேலதிகமாக மிகுந்திருந்தது. இந்த மேலதிக வருவாயை பாவித்து எனது தந்தையார் ஒரு சிறிய மூலதனத்தைச் சேர்த்தெடுத்தார். காலப்போக்கில் மேலும் 7 மு பரப்புக் கொண்ட காணியை வாங்கினார். இது எங்கள் குடும்பத்துக்கு “பணக்கார’’ விவசாயிகள் தகு நிலையைக் கொடுத்தது. அப்போது எங்களால் வருடத்துக்கு 84 ரான் அரிசியை உற்பத்தி செய்து கொள்ள முடிந்தது.

எனது அப்பா ஒரு நடுத்தர விவசாயியாக இருந்த சமயம் தானியம் போக்குவரத்து விற்பனை முயற்சிகளிலும் ஈடுபட்டார். இதன் மூலம் அவர் சிறிது பணத்தைச் சேகரித்துக் கொண்டார். அவர் “பணக்கார’’ விவசாயியாக வந்த பின்பு தனது நேரத்தில் பெரும் பகுதியை மேற்படி வியாபாரத்தில் செலவிட்டார். அவர் ஒரு முழுநேர பண்ணைத் தொழிலாளியை வேலைக்கமர்த்திக் கொண்டதோடு தனது மனைவியையும், மக்களையும் பண்ணை வேலையில் ஈடுபடுத்தினார். பண்ணைக் கடமைகளில் நான் 6 வயதாக இருக்கும்போது ஈடுபடத் தொடங்கினேன். எனது தந்தையாரின் வியாபாரத்துக்கு என்று ஒரு கடை எதுவும் இருக்கவில்லை அவர் ஏழை விவசாயிகளிடமிருந்து தானியத்தை வாங்கி நகர்ப்புற விவசாயிகளுக்கு அவற்றை விற்றார். அங்கு அவற்றுக்கு சிறிய கூடிய விலை கிடைத்தது. அரிசி மாவாக அரைக்கப்படும் மாரி காலத்தில், பண்ணை வேலைக்காக மேலும் ஒரு தொழிலாளியை அமர்த்திக்கொண்டார். ஆகவே அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் ஏழுபேருக்கு உணவு வழங்க வேண்டியிருந்தது. எனது குடும்பம் சிக்கனமாகவே உணவுப் பொருட்களைப் பயன்படுத்தியது. ஆனால் எப்பொழுதும் அவை எங்களுக்குப் போதுவான அளவுக்கு இருந்தது.

எனக்கு 8 வயதான போது நான் ஒரு உள்ளுர் ஆரம்பப் பாடசாவையில் கல்வி பயின்றேன். 13 வயது வரை அங்கேயே தொடர்ந்து கல்லி பயின்றேன். அதிகாலையிலும் இரவிலும் நான் பண்ணையில் வேலை செய்தேன். பகலில் நான் கன்ப+ஷியன் அனலெக்ற்ஸ், நான்கு புராதன இலக்கியங்கள் (ஊழஅகரஉயைn யுயெடநஉவள) ஆகியவற்றைப் படித்தேன். எனது சீன ஆசிரியர் கடுமையான கட்டுபாட்டைப் பேணும் வகுப்பைச் சேர்ந்தவர். வெகு கடுமையானவர். அவர் மாணவர்களை அடிக்கடி அடிப்பார். இதன் காரணமாக, எனக்கு வயது 10 ஆக இருக்கும் போது நான் பாடசாலையைவிட்டு ஓடிப்போனேன். வீட்டிலும் நான் அடிவாங்க வேண்டி வரும் என்பதால் நான் வீட்டிற்குத் திரும்புவதற்குப் பயப்பட்டேன். எங்கோ ஒரு சமவெளிப் பகுதியில் இருக்கும் என்று நான் நினைத்திருந்த நகரத்தை நோக்கி நான் நடந்தேன் @ நான் அவ்வாறு மூன்று நாட்கள் அலைந்து திரிந்தேன். இறுதியில் எனது குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டேன். எனது பயணத்தின் போது ஒரு சுற்றுவட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன் என்பதையும் வீட்டிலிருந்த ஒரு 8 லீ (22ஃ3 மைல்கள்) அளவுதான் எனது பயணம் முன்னேறியிருந்தது என்பதையும் பிற்பாடு அறிந்து கொண்டேன்.

நான் வீட்டுக்குத் திரும்பிய பின்பு, ஆச்சரியத்துக்குரிய வகையில் நிலைமைகள் ஓரளவு முன்னேற்றமடைந்தன. எனது தந்தையார் ஓரளவு புரிந்துணர்வோடு நடந்து கொண்ட அதே வேளை எனது ஆசிரியரும் சிறிது கட்டுப்பாடாக நடந்து கொண்டார். எனத ஆட்சேப நடவடிக்கையின் பெறுபேறு என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு வெற்றிகரமான “வேலை நிறுத்தமாக’’ அமைந்தது.

நான் சிறிதளவு கல்வியைப் பெற்றவுடனேடீய குடும்பத்தின் கணக்குப் புத்தகங்களை நான் எழுதத் தொடங்க வேண்டும் என்று எனது தந்தையார் விரும்பினார். கணித மானியைப் (யுடீயுஊருளு) பயன்படுத்துவதற்கும் நான் பழக வேண்டும் என்று அவர் விரும்பினார். இதை எனது தந்தையார் வலியுறுத்தியமையால் இந்தக் கணக்குகளை இரவில் நான் செய்யத் தொடங்கினேன். அவர் ஒரு கடுமையான வேலை வாங்குபவர், நான் சோம்பியிருப்பதை அவர் வெறுத்தார். கணக்கு வேலைகள் ஒன்றும் இல்லாவிட்டால், பண்ணைக் கடமைகளில் அவர் என்னை ஈடுபடுத்தினார். அவர் ஒரு முன்கோபக்காரர். அவர் என்னையும் எனது சகோதரனையும் அடிக்கடி அடிப்பார். அவர் எங்களுக்கு எதுவித பணத்தையும் தரமாட்டார். மிகக் குறைந்த அளவு உணவையே தருவார். ஒவ்வொரு மாதம் 15ஆம் திகதியும் தனது தொழிலாளர்களுக்கு, சலுகையாக அரிசியோடு முட்டைகளை வழங்குவார். ஆனால் ஒரு போதும் இறைச்சி கொடுக்கமாட்டார். என்னைப் பொறுத்தவரை, எனக்கு முட்டையம் தரமாட்டார்@ இறைச்சியும் தரமாட்டார்.

எனது தாயார் ஒரு கருணை நிரம்பிய பெண்மணி தாராள குணமும் இரக்க சிந்தையும் கொண்டவர். தன்னிடம் இருப்பதை பகிர்ந்துகொள்ள எப்போதும் தயாராக இருப்பார். அவர் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார். பஞ்ச காலங்களில் போது யாராவது அரிசி கேட்டு வந்தால், அவர்களுக்கு அவற்றை வழங்குவதை வழமையாகக் கொண்டிருந்தார். ஆனால் எனது தந்தையில் முன்னிலையில் அவரால் அவ்வாறு செய்ய முடியாது. அவர் தான தருமங்களை அனுமதிக்க மாட்டார். இந்த விடயத்தில், எங்கள் வீட்டில் நாங்கள் பலதடவைகள் சண்டை பிடித்திருக்கிறோம்.

எங்கள் குடும்பத்தில் இரண்டு “குழுக்கள்’’ இருந்தன. ஒரு கட்சியில் வீட்டு ஆளுநராகிய அப்பா இருந்தார். எதிர்க் குழுவில் நான், அம்மா, தம்பி சில வேளைகளில் வீட்டுத் தொழிலாளியும் இருந்தோம். இந்த எதிர்க்கட்சியின் கூட்டு முன்னணியில் கருத்து வேறுபாடு ஒன்று இருந்தது. எனது தாயார் மறைமுகமான தாக்குதலை ஆதரித்தார். உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டுவதையும் வெளிப்படையான புரட்சி. முயற்சிகளையும் கண்டித்தார். இது சீனப் பண்பாட்டு முறையில் என்று அவர் கூறுவார்.

எனக்கு 13 வயதாக இருந்த போது தந்தையாருடன் விவாதிப்பதற்கான, ஒரு வலிமைமிக்க எனது சொந்த விவாதக் கருப்பொருளை நான் கண்டுபிடித்தேன். அவரது பாணியிலேயே புராதன இலக்கிய நூலிலிருந்து நான் அவற்றை உணர்ந்திருந்தேன். என் மீதான எனது தந்தையாரின் விருப்பமான குற்றச்சாட்டுக்கள், எனது பெற்றோர் மீது நான் காட்டும் அவமரியாதை சோம்பறித்தனம் ஆகியவையாகும். இதற்குப் பதிலுரையாக புராதன இலக்கிய நூலிலிருந்து நான் சில எடுத்துக் காட்டுகளைக் கூறினேன். அதில் மூத்தவர்கள் அன்பும் பாசமும் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நான் சோம்பேறி என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலுரையாக இளையவர்களைக் காட்டிலும் முதியவர்கள் கூடுதலாக வேலைகளைச் செய்ய வே;ணடும் என்ற எடுத்துக் காட்டைக் கூறினேன். அத்தோடு எனது தந்தையார் என்னைக் காட்டிலும் 3 மடங்கு வயது கூடியவர் ஆகையால் அவர் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று கூறினேன். நான் அவரது வயதை அடையும்போது நான் அவரைக் காட்டிலும் மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுவேன் என்றும் பிரகடனம் செய்தேன்.

தகப்பனார் தொடர்ந்து செல்வத்தைச் சேர்த்தார். அந்தச் சிறிய கிராமத்தில் அது ஒரு பெரிய பொக்கிஷமாகக் கருதப்பட்டது. அவர் தானாக மேலும் பல காணிகளை வாங்கவில்லை. ஆனால் அவர் ஏனைய மக்களுடைய காணிகளின் மீதான பல கடன் ஈடுகளைச் செலுத்தி அக்காணிகளைக் கையேற்றார். அவரது மூலதனம் 2000 அல்லது 3000 சீன டொலர்களாக உயர்ந்தது. (மாவோ சீனப் பணமான யுவான் என்ற சொல்லையே பயன்படுத்தினார். இந்தச் சொல் பெரும்பாலும் சீன டொலர் என்றே மொழி பெயர்க்கப்படுகின்றது. 1990வது ஆண்டில் சீனாவின் கிராமப் புறத்தில் 1000 யுவான் காசாகக் கையிருப்பானது ஒரு பெருந்தொகையாகக் கருதப்பட்டது.)

எனது அதிருப்தி அதிகரித்தது. எங்கள் குடும்பத்தில் எழுந்த இந்தச் சொற் போராட்டம் தொடர்ந்து விருத்தியடைந்தது. (மேலே குறிப்பிட்ட அரசியற் கலைச் சொற்களை, தனது விளக்கங்களில் மாவோ நகைச்சுவையாக பயன்படுத்தினார். இந்த நிகழ்ச்சிகளை நினைவுகூறும் போது சிரித்துக் கொண்டே கூறினார்) ஒரு நிகழ்ச்சி எனக்கு விசேடமாக நினைவிலிருக்கிறது. எனக்கு வயது 13 ஆக இருந்த போது எனது தந்தையார் பல விருந்தினர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார். அவர்கள் அங்கு இருக்கும் போது எனக்கும் தந்தையர்க்கும் இடையே ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அவர்கள் அளைவர் முன்னிலையிலும், என்னை சோம்பறி, பிரயோசனம் இல்லாதவன் என்று அப்பா ஏசினான். இது எனக்கு கோபமூட்டியது. நான் அவரை ஏசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினேன். அம்மா என்பின்னால் ஓடிவந்து என்னை வீட்டுக்கு திரும்புமாறு இணங்க வைக்க முயன்றார். நான் குளத்தின் விளிம்பிற்குச் சென்று, யாராவது என்னை நெருங்க முயன்றால் குளத்தில் குதிக்கப் போவதாக அவரை அச்சுறுத்தினேன். இந்த சூழ்நிலையில் கோரிக்கைகளும் எதிர்கோரிக்கைகளும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக விடுக்கப்பட்டன. நான் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், நிலத்தில் விழுந்து வணங்க வேண்டும் என்றும் அப்பா வலியுறுத்தினார். நான் ஒரு முழங்காலைத் தாழ்த்தி வணங்குவதாக கூறினேன். ஆனால் அப்பா என்னை அடிக்கக்கூடாது என்று உறுதி அளித்தால் தான் அவ்வாறு செய்வதாகக் கூறினேன். இதன் மூலம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு நான் வெளிப்படையான கிளர்ச்சி மூலம் எனத உரிமைகளைப் பாதுகாக்க முனையும் போது அவர் விட்டுக்கொடுத்தார். ஆனால் நான் பலவீனமாகம் கீழ்ப்படிவாகவும் நடந்தால் அவர் என்னை ஏசவும் கூடுதலாக அடிக்கவுமே செய்தார்.

இதன் பிரதிபலனாக அப்பாவின் கடுமை, இறுதியில் அவரைத் தோற்கடித்தது. நான் அவரை வெறுக்கத் தொடங்கினேன். நாங்கள் அவருக்கு எதிராக ஒரு உண்மையான ஐக்கிய முன்னணியை உருவாக்கினோம். அதேவேளை இது பெரும்பாலும் எனக்கு நன்மையாக முடிந்தது. இது என்னை எனது வேலைகளில் மிகவும் கவனமும் திறமையும் உள்ளவனாக்கியது. அவர் என்னைக் குறைகூறி தண்டிப்பதற்கு இடம்தராத வகையில் எனது கணக்குப் புத்தகங்களைக் கவனமாக எழுத வைத்தது. எனது தந்தையார் இரண்டு வருடம் பாடசாலையில் பயின்றிருந்தார். அத்துடன் கணக்குப் புத்தகங்களை எழுதுவதற்குப் போதுமான அளவுக்கு கல்வி கற்றிருந்தார். எனது தாயார் முழுமையான கல்வியறிவு இல்லாதவர். இருவருமே விவசாயக் குடும்பத்தின் “அறிவொளி’’ நான் புராதன இலக்கிய நூலைப் படித்துள்ளேன். ஆனால் அவற்றை வெறுத்தேன். பண்டைய சீன கற்பனைக் கதைகளையே நான் விரும்பிப் படித்தேன். விசேடமாக புரட்சிகள் பற்றிய கதைகளை விரும்பினேன். யோ பெய்சுவான் (யோ பெய்யின் வரலாற்றுத் தொகுப்பு) சூய் ஹ{சுவான் (தண்ணீர்விளிம்பு) பான் ராங் (ராங்குக்கு எதிரான புரட்சி) சான் குவோ (மூன்று முடியாட்சிகள்) சி ய+ சீ (மேற்குப் பகுதியில் பயணங்கள் சுவான் சாங்கின் ஓரளவு கட்டுக் கதையான 7 ஆம் நூற்றாண்டில் இடம் பெற்ற இந்தியா நோக்கிய புனிதப் பயணம்) ஆகிய நூல்களை நான் படித்தேன். வெகு இளமையிலேயே இந்தத் தடைசெய்யப்பட்ட புத்தகங்களைத் தீய புத்தகங்கள் என்று வெறுத்த எனது முதிய ஆசிரியரின் தீவிர கண்காணிப்பின் மத்தியிலும் இவற்றை நான் படித்தேன். இவற்றை நான் பாடசாலை நேரங்களிரும் படித்தேன். ஆசிரியர் என்னைக் கடந்து செல்லும் போது அவற்றை புராதன இலக்கிய நூலால் உருமறைப்புச் செய்து கொள்வேன். இது போன்றே எனது பாடசாலை நண்பர்களும் படித்தார்கள். நாங்கள் இந்தக் கதைகளை மனதில் இருத்தக்கூடிய அளவுக்குப் படித்தோம். இவற்றைப் பற்றிப் பல தடவைகள் விவாதித்தோம், மீள விவாதித்தோம். கிராமத்தில் உள்ள முதியவர்களைக் காட்டிலும், இந்த நூல்களை நாங்கள் அதிகம் படித்திருந்தோம். இந்த முதியவர்களும் இந்தக் கதைகளை விரும்பினார்கள். அத்தோடு இந்தக்கதைகளை அவர்கள் எங்களோடு பகிர்ந்து கொள்வதுமுண்டு. மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வயதில், படித்த இந்த நூல்களினால் நான் வெகுவாக ஆளுமைப் படுத்தப்பட்டேன் என்று நம்புகிறேன்.

இறுதியாக, எனக்கு வயது 13 ஆக இருக்கும் பொழுது நான் ஆரம்பப்பாடசாலையை விட்டு நீங்கினேன். கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிக்கு உதவியாக நீண்ட நேரம் எங்கள் பண்ணையில் நான் வேலை செய்யத் தொடங்கினேன். பகலில் ஒரு தொழிலாளியின் முழு அளவு வேலையையும் இரவில் தந்தையாரின் கணக்குப் புத்தகங்களை எழுதும் வேலையையும் செய்தேன். புராதன இலக்கிய நூலைத் தவிர கிடைக்கக் கூடிய அனைத்து நூல்களையும் விரும்பிப் பயின்றேன் இது எனது தந்தையாருக்குக் கவலைய+ட்டியது. அவர் புராதன இலக்கிய நூலில் நான் சிறந்த ஆளுடை பெற வேண்டும் என்று விரும்பினார். சீன நீதிமன்றம் ஒன்றில் இவர் தொடுத்திருந்த வழக்கொன்றில், இவரது எதிரி, புராதன இலக்கியத்திலிருந்து ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டைக்கூறி இந்த வழக்கில் இவரைத் தோற்கடித்தான்.

இதனால்தான் விசேடமாக நான் புராதன இலக்கியம் படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். பின்னிரவுகளில் நான் படிப்பதை எனது தந்தையார் பார்க்காமல் இருப்பதற்காக அறையில் யன்னல் கண்ணாடிகளை மூடி இருப்பதாகச் செய்து விடுவேன். இந்த வழி முறையில் ஷென்ஷ - வெய் - யென் (எச்சரிக்கை வார்த்தைகள்) என்ற நூலைப் படித்தேன். (இந்த நூல் சுங் குவாங் யிங் அவர்களால் எழுதப்பட்டது. இது பல ஜனநாயக சீர்த்திருத்தங்களை ஆதரித்தது. பாராளுமன்ற அரசு, புதிய கல்விமுறை, தொலைத் தொடர்புகள் ஆகியவற்றையும் வலியுறுத்தியது. துயரார்ந்த முறையில் முடிவற்ற, 100 நாட்கள் சீர்திருத்தம்’’ கிளர்ச்சி தடந்த 1898ஆம் ஆண்டு இந்த நூல் பிரசுரிக்கப்பட்டபோது, அமோக ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றது) இந்த நூலை நான் மிகவும் விரும்பினேன். பழைய சீர்திருத்த அறிவியலாளர்களில் ஒருவரான இந்த நூலாசிரியர், சீனாவின் பலவீனம் மேற்கத்தைய நவீன உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளாமையிலேயே தங்கியிருக்கிறது என்று கருதினார். ரயில் பாதைகள், ரெலிபோன்கள், நந்திசாதனங்கள், நீராவிக் கப்பல்கள் ஆகியவற்றை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். இத்தகைய புத்தகங்களைப் படிப்பது காலத்தைப் பாழாக்குவதாகும் என்று தந்தையார் கருதினார். நடைமுறை விடயங்களைக் கொண்டிருக்கும் “புராதன இலக்கியம் போன்ற நூல்களை நான் படிக்க வேண்டுமென்று அப்பா விரும்பினார். இது அவர் தொடுக்கும் வழக்குகளை வெல்வதற்காவது பயன்படும்.

இந்தப் பண்டைய வீர வரலாறுகளையும் சீன இலக்கியங்களையும் நான் தொடர்ந்து படித்து வந்தேன் இத்தகைய கதைகளில் விநோதமாக இருக்கும் ஒருவிடயம், ஒரு நான் எனக்குத் தெரிந்த வந்தது. நிலத்தை உழும் விவசாயிகள் எவரும் இக்கதைகளில் இடம் பெறாமையே எனது கருத்தை ஈர்த்தவிடயமாகும். கதாபாத்திரங்கள் அனைத்தும் போர் வீரங்களாகவும் அதிகாரிகளாகவும் அறிவியலாளர்களாகவுமே இருந்தனர். அவர்களில் ஒரு விவசாயி கூட்டக் கதாநாயனாக இருக்கவில்லை. இது பற்றி இரண்டு வருடங்கள் வரை நான் யோசித்தேன். பின்பு இந்தக் கதைகளின் சாரம்;;;;;;;;;;;சங்களை நான் ஆய்வு செய்தேன். அக்கதைகள் அனைத்தும் ஆயுதம் தரித்தவர்களையும் மக்களை ஆளுமை செய்யும் ஆட்சியாளர்களை இவர்கள் வயல்வேலை எதையும் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்தக் காணிகளைத் தங்கள் உடனடியாகக் கொண்டிருந்ததோடு அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டினுள்ளும் வைத்திருந்தனர். அத்தோடு இந்தக் காணிகளில் தங்களுக்காக வேலை செய்தவற்கு விவசாயிகளை வைத்துக் கொண்டவர் என்பது வெளிப்படையாகியது.

எனது தந்தையார் எனது இளமைப்பருவத்திலும் மத்திய வயதிலும் இறை நம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால் எனது தாயார் மிகுந்த ஈடுபாட்டோடு புத்தரை வணங்கினார். அவர் தனது குழந்தைகளுக்கு சமய போதனைசெய்தார். எங்கள் தந்தையார் ஒரு இறைநம்பிக்கையற்றவர் என்று அறிந்து நாங்கள் அனைவரும் நம்பிக்கையற்றவர் என்று அறிந்து நாங்கள் அனைவரும் வருந்தினோம். எனக்கு 9 வயதாக இருக்கும்போது எனது தந்தையாரின் பக்தியற்ற தன்னை குறித்து எனது தாயாரோடு தீவிரமாகக் கலந்துதுரையாடினேன். அவரை சமயத்துக்கு மாற்ற அப்போதும் பின்பும் பல முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். அவர் எங்களை ஏச மட்டுமே செய்தார் அவரது தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டு புதிய திட்டங்களை உருவாக்குவதற்காகப் பின்வாங்கினோம். ஆனால், அவர் கடவுள்களைப்பற்றி எவ்விதத அக்கறையும் காட்டவில்லை.

எனது நூல் வாசிப்பு படிப்படியாக என்னை ஆளுமைப்படுத்த ஆரம்பித்தது. இருப்பினும் நானே இறை நம்பிக்கையற்றவர்களாகத் தொடங்கியிருந்தேன். எனது தாயார் என் மிது கவலைப்படத் தொடங்கினார். இறை நம்பிக்கைக்கான தேவைகள் பற்றிய எனது அறிவீனத்தையிட்டு அவர் என்னை ஏசத் தலைப்பட்டார். ஆனால் இது பற்றி எனது தந்தையார் ஒன்றும் கூறவில்லை. பின்பு ஒரு நாள் யாரிடமோ பணம் வாங்குவதற்காக இவர் வெளியில் சென்றார். வரும் வழியில் அவர் ஒரு புலியை எதிர் நோக்கினார். இந்த எதிர் கொள்ளலில் ஆச்சரியமுற்ற புலி உடனே ஓடி மறைந்தது. எனது தந்தையார் அதைக்காட்டிலும் ஆச்சரியமுற்றார். அவர் ஆச்சரியமான வகையில் தப்பிப் பிழைத்தது பற்றி அதிகரித்த அளவிலான வெளிப்பாடுகளைக் காட்டினார். தான் கடவுளர்களுக்கு பிழை செய்து விட்டேனோ என்று எண்ணத் தொடங்கினார். அன்று தொடக்கம் அவர் புத்த சமயத்துக்கு கூடுதல் மதிப்பளிக்க தொடங்கினார். இடைக்கிடையே சாம்பிராணிக் குச்சி கொளுத்தவும் ஆரம்பித்தார். இருப்பினும் சமய நம்பிக்கையிலிருந்து எனது தலையிடவில்லை. கஷ்டங்கள் ஏற்படும்போது மட்டுந்தான் அவர் கடவுள்களை வணங்கினார்.

ஷெங் - ஷி – வெய் - யென் (எச்சரிக்கை வார்த்தைகள்) என்ற நூல், எனது கல்வியைத் தொடருவதற்கான உத்வேகத்தை என்னுள் ஏற்படுத்தியது. அத்தோடு பண்ணையில் எனது உழைப்பின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இயல்பாகவே இதை எனது தந்தையார் எதிர்த்தார். இது பற்றி நாங்கள் இருவரும் பிரச்சினைப்பட்டோம். இறுதியில் நான் வீட்டை விட்டு ஓடினேன். ஒரு வேளையற்ற சட்டமாணவனின் வீட்டிற்குச் சென்றேன். அங்கு ஆறு மாதங்கள் கல்வி கற்றேன். அதன் பின்பு ஒரு முதிய கல்விமானிடம் புராதன இலக்கிய நூலை மேலும் பயின்றேன். அத்தோடு பல சமகால கட்டுரைகளையும் சில புத்தகங்களையம் படித்தேன்.

இந்த நேரத்தில் ஹ{னானில் இடம் பெற்ற ஒரு நிகழ்ச்சி என் முழு வாழ்க்கையிலும் ஒரு செல்வாக்கை ஏற்படுத்தியது. நான் படித்த சிறிய சீனப் பாடலைக்கு வெளியே பல வியாபாரிகள் சாங்காவில் இருந்து திரும்பி வருவதை மாணவர்களாகிய நாங்கள் அவதானித்தோம். அவர்கள் அனைவரும் ஏன் திரும்பிச் சென்றார்கள் என்று நாங்கள் அவர்களைக் கேட்டோம். நகரில் ஒரு பெரிய கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினார்கள். அந்த வருடம் ஒரு கடுமையான பஞ்சம் ஏற்பட்டிருந்தது. கங்சாவில் பல்லாயிரக்கணக்கானோர் உண்ண உணவின்றி இருந்தனர். பட்டினி கிடந்தோர் உதவி கேட்டு ஒரு பிரதிநிதிக் குழுவை, குடிசார் ஆளுநருக்கு அனுப்பினர்.

“ஏன் உங்களிடம் உணவு இல்லை. நகரில் உணவு ஏராளமாக உள்ளது. என்னிடம் எப்போதும் ஏராளமாக உள்ளது’’ என்று அந்த ஆளுநர் இறுமார்ப்புடன் கூறினார். ஆளுநரின் பதில் மக்களுக்குக் கூறப்பட்டபோது அவர்கள் கடுமையாக ஆத்திரமுற்றனர். அவர்கள் பொதுக் கூட்டங்களை ஒழுங்கு செய்து ஒரு ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்கு செய்தனர். அவர்கள் ஆளுநரின் அரச பணிமனையைத் தாங்கினார்கள். அரசின் அடையாளச் சின்னமாக கொடிக்கம்பத்தை வெட்டினார்கள். ஆளுநரைத் துரத்தி அடித்தார்கள். இதனையடுத்து சாங் என்ற பெயருடைய உள்ளுர் விவகார ஆணையாளர் தனது குதிரையில் வெளியே வந்து அவர்களுக்கு உதவுமுகமாக நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று மக்களிடம் கூறினார். இந்த வாக்குறுதிகளை வழங்கியதில் ஷாங் நேர்மையாக இருந்துள்ளார் என்பது வெளிப்படை. ஆனால் சக்கரவர்த்தி இவரை வெறுத்ததோடு இந்த “மக்கள் கும்பலோடு’’ நெருங்கிய தொடர்பு வைத்திருந்தாக இவர் மீது குற்றமும் சாட்டினார். இவர் பதவி விலக்கப்பட்டார். ஒரு புதிய ஆளுநர் வந்து சேர்ந்தார்.
அவர் உடனடியாக இந்தக் கிளர்ச்சியின் தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இவர்களில் பெரும்பாலானவர்களின் தலைவர்கள் துண்டிக்கப்பட்டு அவர்களது தலைகள் எதிர்காலப் புரட்சியாளர்கட்கு எச்சரிக்கையாக கம்பங்களில் குத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. எங்களுடைய பாடசாலையில் இந்த நிகழ்ச்சி பல நாட்களாக விவாதிக்கப்பட்டது. இது என்மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்கட்கு அனுதாபம் காட்டினர். ஆனால் இது ஒரு பார்வையாளர்களின் நோக்கிலேயே அமைந்தது. தங்களுடைய சொந்த உயிரோடு, வாழ்க்கையோடு ஏதாவது தொடர்புடையதாக இந்த நிகழ்ச்சி இருக்கின்றதா? என்பதை தொடர்புடையதாக இந்த நிகழ்ச்சி இருக்கின்றதா? என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை இதையொரு புரட்சிய+ட்டும் நிகழ்ச்சியாகவே அவர்கள் ஆர்வம் காட்டினர். இந்த நிகழ்ச்சியை ஒரு போதும் மறக்கவில்லை. புரட்சியாளர்கள் “எனது குடும்பத்தைப் போலவே சாதாரண மக்கள் தான்’’ என்பதை நான் உணர்ந்தேன். அவர்களுக்கு வழங்கப்பட்;ட அநீதியால் நான் ஆழமாக ஆத்திரமுற்றேன்.

சில நாட்களுக்குப் பின்பு சாவோசான் என்ற இடத்திலே ஓர் இரகசிய சங்கமான கேலாவோ ஹ{ய் உறுப்பினர்களுக்கும் (ஹோ லுங் உறுப்பினராக இருந்த அதே சமயம்) ஒரு உள்ளுர் நில உடமையாளர்கட்குமிடையே ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அவர் இந்தச் சங்கத்தினர் மீது வழக்குத் தொடர்ந்தார் அவர் ஒரு சக்திமிக்க நிலவுடமையாளராக இருந்தபடியால் தனக்கு சாதகமாக நிலவுடமையாளராக இருந்தபடியால் தனக்கு சாதகமாக ஒரு தீர்ப்பை அங்கு இலகுவாகப் பெற்றார். கே லாவோ உறுப்பினர்கள் தோற்றுப் போயினர். ஆனால் அவர்கள் அடிபணிவதற்குப் பதிலாக அரசுக்கும் அந்த நில உடமையாளர்கட்கும் எதிராக கிளர்ச்சி செய்தனர். லிய+ஷான் என்ற ஒரு உள்ளுரிலிருந்து மலைக்கு அவர்கள் பின்வாங்கி அங்கு ஒரு கோட்டையை அமைத்தனர். அவர்கட்கு எதிராக துரும்புக்கள் அனுப்பப்பட்டனர். அவர்கட்கு எதிராக துரும்புக்கள் அனுப்பப்பட்டனர். கிளர்ச்சிக்காரர்கள், கிளர்ச்சிக்கான பதாகையை தூக்கியபோது ஒரு குழந்தையை பலி கொடுத்தாக ஒரு கதையை அந்தப் புரட்சியாளர்களின் தலைவர் “மாவரைக்கும் கல் செய்யும் பாங்’’ என்று அழைக்கப்பட்டார் புரட்சியாளர்கள் இறுதியாக அடக்கப்பட்டனர். பாங் ஓடித் தப்ப வேண்டி ஏற்பட்டது. இறுதியில் அவர் கைது செய்து தலை துண்டிக்கப்பட்டார். இருப்பினும் மாணவர்கள் கண்களில் அவர் ஒரு மாவீரனாக மிளிர்ந்தார். ஏனென்றால் இந்தப் புரட்சிக்கு அனைவரும் அனுதாபம் காட்டினர்.

அடுத்த வருடம் புதிய நெல் அறுவடை செய்யப்படாமல் இருந்தபோது மாரிகாலத்திலே கையிருப்பு முடிந்து விட்டிருந்தது. இதனால் எங்கள் மாவட்டத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏழைகள், பணக்கார விவசாயிகளிடம் உதவி கேட்டார்கள். காசு இல்லாமலேயே சோறு சாப்பிடுங்கள் என்று ஒரு இயக்கத்தை அவர்கள் தொடக்கினார்கள். இதன் பொருள் “பெரியவீட்டில் அதாவது நில உடமையாளர்களின் களஞ்சியத்தில் இருந்து உணவைப் பெறுவோம் என்பதே’’ எனது அப்பா ஒரு அரிசி வியாபாரியாக இருந்ததோடு எங்கள் மாவட்டத்தில் இருந்து நகரத்துக்கு அரிசி ஏற்றுமதி செய்பவராகவும் இருந்தார். இத்தட்டுப்பாட்டின் போது அவ்வாறே செய்து வந்தார். இவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு தொகுதி நெல் ஏழைகளால் கைப்பற்றப்பட்டது. இதனால் அவரது கோபம் எல்லை கடந்ததாயிற்று. இதற்காக அவர் மீது நான் அனுதாபப்படவில்லை. அதே வேளை கிராமத்தவர்களின் நடைமுறையையும் இந்த விடயத்தில் பிழையானது என்றும் நான் நினைத்தேன்.

ஒரு முற்போக்குத் தீவிரவாத ஆசிரியர் கற்பித்த ஒரு உள்ளுர் ஆரம்பப் பாடசாலையில் நான் இருந்தமையும் இந்தக் காலத்தில் என்மீது செல்வாக்கை ஏற்படுத்தியது. அவர் ஒரு முற்போக்குவாதியாக கருதப்பட்டமை அவர் புத்த சமயத்தோடு எதிராக இருந்தமையாலும் கடவுளர்களை அகற்ற அவர் முயன்றமையாலுமேயாகும் கடவுளர்களை பாடசாலைகளாக மாற்றும்படி அவர் மக்களைக் கோரினார். பலரால், பரவலாக விவாதிக்கப்பட்ட மனிதராக அவர் இருந்தார். அவரை நான் வியந்து பாராட்டுனேன். அத்தோடு அவரது கருத்துக்களை நானும் ஏற்றுக் கொண்டேன்.

ஏற்கனவே புரட்சிக் குணம் கொண்டிருந்த எனது இளம் மனதில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகள் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தக் காலகட்டத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு அரசியல் உணர்வை நான் பெற்றுக் கொள்ளத் தொடங்கினேன். விசேடமாக சீனா துண்டாடப்பட்டதை அறிவிக்கும் ஒரு துண்டுப் பிரசுரத்தை படித்த பின்பு இந்த உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. கீழ்க்காணும் வசனங்;களோடுதான் அந்தத் துண்டுப் பிரசுரம் தொடங்கியிருந்தது. இது என் மனதில் இன்னும் பதிந்துள்ளது. “அந்தோ! சீனா அடிமைப்படுத்தப்படப் போகின்றது’’ என்பதே அந்த வசனம். கொறியா, தாய்வான், ஆகியவற்றை யப்பான் ஆக்கிரமித்துள்ளதையும் இந்தோசீனா, பர்மா மற்றும் வேறு இடங்;களில் இருந்த சீனா, பர்மா மற்றும் வேறு இடங்களில் இருந்த சீனா ஆளுமைப் பிரதேசங்கள் இழக்கப்பட்டிருப்பதையும் இந்தப் பிரசுரம் எடுத்துக் காட்டியது. இதைப் படித்தபின்பு எனது நாட்டின் எதிர்காலம் பற்றி நான் மனம் தளர்ந்து போனேன். நாட்டைக் காப்பாற்றுவது அனைவரது கடமை என்பதை நான் உணரலானேன்.

சியா ரான் என்ற இடத்தில் இருந்த ஒரு அரிசீக் கடையில் பயிலுனர் வேலைக்கு அனுப்ப முடிவு செய்தார். இக்கடையுடன் அவருக்கு தொடர்புகள் இருந்த. ஆரம்பத்தில் இதை நான் எதிhக்கவில்லை. ஏனென்றால் இந்த வேலை ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இதே வேளை ஒரு மாறுபாடான ஒரு புதிய பாடசாலையைப் பற்றி கேள்விப்பட்டேன். அதில் சேர்வது என்று உறுதிப+ண்டேன். எனது தாயாரின் குடும்பம் வாழ்ந்த சியாங் சியாங் சீ யென் கிராமத்தில் இந்தப் பாடசாலை இருந்தது. அங்கு கல்வி பயின்ற எனது மைத்துனன் இந்தப்புதிய பாடசாலையைப் பற்றியும் எனது மைந்துணன் இந்தப்புதிய பாடசாலையைப் பற்றியும் நவீன கல்விமுறையில் ஏற்பட்டுவரும் மாற்றமான நிலைமைகளைப் பற்றியும் எனக்கு எடுத்துக் கூறினார். அங்கு புராதன இலக்கிய நூலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேற்கு நாடுகளின் புதிய அறிவு விடயங்கள் பற்றி அதிகமாக போதிக்கப்பட்டதோடு கல்வி முறைகளும் மிகுந்த முற்போக்கு தன்மை கொண்டவையாக இருந்தன. நான் மைத்துனனோடு சென்று பாடசாலையில் பெயர் பதிந்து கொண்டேன். நான் சியாங் சியாங் கிராமத்தவன் என்றே என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஏனென்றால் அந்தப் பாடசாலை சியாங் சியாங் பகுதி மக்களுக்;கு மட்டுமே கல்வி போதிக்கின்ற ஒரு பாடசாலையில் என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்தப் பாடசாலையில் எப்பகுதியினரும் கல்வி பயிலலாம் என்று தெரிந்து கொண்டபின்பு என்னை சியாங் ரான் ஊரவனாக அடையாளம் காட்டிக் கொண்டேன். எனது 5 மாதக் கல்விக்கான அனைத்துப் பொருட்களுக்கும் தங்கும் இடம் உணவு வசதிகட்கும் 1400 செம்புக் காசுகளை நான் செலுத்தினேன். எனது வருவாயைப் பெருக்கும் சக்தியை இந்த உயர்தரக் கல்வி அதிகரிக்கும் என்று எனது நண்பர்கள் எனது தந்தை யாரிடம் விவாதித்த பின்பு இறுதியாக இந்தக் கல்வியை தொடவதற்கு எனது தந்தையார் அனுமதித்தார். எனது வீட்டில் இருந்து 50 வி தூரத்திற்கு அப்பால் நான் இருப்பது இதுவே முதற் தடவை. அப்போது எனக்கு வயது 16. இந்தப் புதமிய பாடசாலையில் இயற்கை விஞ்ஞானத்தையும் மேற்கத்திய புதிய பாடற்களையும் என்னால் படிக்க முடிந்தது. இந்தக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் யப்பானில் கல்வி பயின்றவராக இருந்தமை இங்கு மற்றொரு குறிப்பிடத்தக்க விடயமாகும். அவர் தனது தலைமயிர்ப் பின்னல்களில் போலி முடிமயிர் அணிந்திருந்தார். அவரது பின்னல் செயற்கை முடிமயிர் ஆனது என்பதை இலகுவாக கூறமுடியும். அனைவரும் அவரைப் பார்த்து நகைத்ததோடு “போலி வெளிநாட்டுப் பிசாசு’’ என்று அழைத்தனர். நான் இதற்கு முன்பு இத்தனை அதிக எண்ணிக்கையான பிள்ளைகளை ஒருங்குசேரப் பார்த்ததில்லை. இவர்களில் பெரும்பாலனவர்கள் நிலவுடமையாளர்களின் ஆண் மக்கள் அவர்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார்கள். அத்தகைய பாடசாலைக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப வெகு சில விவசாயிகளாலேயே முடியும். ஏனையவர்களைக் காட்டிலும் நான் மோசமான ஆடைகளை அணிந்திருந்தேன். என்னிடம் ஒரே ஒரு ஒழுங்கான சூட் மட்டும்தான் இருந்தது. கவுண்கள் மாணவர்களால் அணியப்படுவதில்லை இதை ஆசிரியர்களே அணிந்தனர். “வெளிநாட்டுப் பிசாசுகள்’’ மட்டும்தான் அந்நிய ஆடைகளை அணிந்தனர். பணக்கார மாணவர்களில் பலர் எனது கந்தல் ஆடைக்காக என்னை வெறுத்தனர். இருப்பினும் அவர்களிடையே எனக்கு நண்பர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் எனது நல்ல தோழர்கள். அவர்களில் ஒருவர் தற்போது எழுத்தாளர். அவர் தற்போது சோவியத் ரங்கியாவில் வாழ்கிறார். அவர் பெயர் சியே – சான் (எமிசீயாவ்)

சியாங்சியாங் பகுதியை சேராதவன் என்பதிலும் நான் வெறுக்கப்பட்டேன். சியாங்சியாங் சேர்ந்தவனாகவும் அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவனாகவும் இருப்பது மிக முக்கியம் அங்கு ஒரு கீழ் மேல் மத்திய மாவட்டங்கள் இருந்தன. இவர்கள் பிராந்திய அடிப்படையில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு பகுதி இருக்கின்றது என்ற விடயத்தில் இரு பகுதியினருமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்தப் பெயரில் நான் நடுநிலை வகித்தேன். ஏனென்றால் நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன் அல்லவே. இதன் விளைவாக மூன்று பகுதியினர் என்னை வெறுத்தனர். இதனால் நான் உளரீதியாக மனவருத்தம் அடைந்தேன். ஆசிரியர்கள் என்னை விரும்பினர். விசேடமாக புராதன இலக்கியம் படிப்பித்த ஆசிரியர்கள் என்னை நேசித்தனர். ஏனென்றால் நான் இந்தத் துறையில் கட்டுரைகளை இலக்கிய நயத்தோடு எழுதினேன். ஆனால் எனது மனம் புராதன இலக்கிய நூலில் நாட்டம் கொள்ளவில்லை. எனது மைத்துணன் அனுப்பிய 2 நூல்களை நான் படித்துக் கொண்டிருந்தேன். ஒன்று காங் ய+ வெய்யின் சீர்திருத்த இயக்கம் பற்றியதாகும். மற்றது சின் - மின் சுங் - பாவோ (நவீன மக்களின் பல்வேறு விடயங்கள் தொகுப்பு) இதன் ஆசிரியரான லியாங் சீ ஷாவ் எழுதியது. (லியாங் சீ ஷாவ் மஞ்சு ஆட்சிக் காலத்தில் இறுதியில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கட்டுரையாளர். இவர் ஒரு சீர்திருத்த இயக்கத்துக்குத் தலைவராக இருந்ததன் விளைவாக நாடு கடந்து வாழ வேண்டி ஏற்பட்டது. 1911 இல் இடம்பெற்ற 1ஆவது புரட்சியில் “அறிவியற் தந்தையர்களா’’ இருவரும் காங் ய+ வெய்யும் இருந்தனர்.)

இந்தப் - புத்தகங்களை, அவற்றின் விடயங்கள் அனைத்தும் மனதில் பதியும்வரை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். காங் ய+ வெய்யையும் லியாங் சீ சால்வையும் போற்றிப் பணிந்தேன். இதற்காக எனது மைத்துனருக்கு நான் மிகுந்த நன்றியுடையவனாகின்றேன் @ அப்போது இதுவரை ஒரு சிறந்த முற்போக்குவாதி என்று கருதினேன். அவர் பின்னரோ ஒரு எதிர் புரட்சியாளராகவும் பிரவுத்துலக் குடும்ப உறுப்பினனாகவும் இருந்ததோடு 1925 – 27 இல் இடம்பெற்ற மகத்தான புரட்சிக் காலத்தில் அவர் பிற்போக்குவாதிகளோடு இணைந்து கொண்டார்.

பெரும்பாலான மாணவர்கள் “போலி வெநாட்டுப் பிசாசை’’ அவரது போலியான தலைமயிருக்காக வெறுத்தனர். ஆனால் நான் யப்பானைப் பற்றி அவர் கூறுவதை விரும்பினேன். அவர் இசையும் ஆங்கிலமும் படிப்பித்தார். அவரது யப்பானியப் பாடல் ஒன்று “மஞ்சள் கடல்சமர்’’ என்று அழைக்கப்பட்டது. அந்தப் பாடலின் சில அழகான வரிகளை நான் தற்போதும் நினைவில் வைத்துள்ளேன்.

“பாட்டுப் பாடும் சிட்டுக்குருவி, ஆட்டம் ஆடும்
வானம் பாடி
வசந்தத்தின் இனிய பசும் வயல்கள்!
செம்மை நிறத்தில் மாதுளை மலர்கள்!
பச்சை வண்ண வில்லோ மரங்கள்!
புரியுது! இது ஓர் புதிய காட்சி!’’

அப்போது யப்பானின் அழகை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ரஷ்யா மீதான அதன் வெற்றியில் யப்பானின் பெருமையையும் பலத்தையும் பற்றி இந்தப் பாடலிலிருந்து சிறிது என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. (யப்பானிய – ரஷ்யப்போர் முடிவுற்றதையடுத்து பாரிய போட்ஸ் மவுத் ஒப்பந்தம் யப்பானில் ஏற்படுத்திய பாரிய மகிழ்ச்சிப் பிரவாகத்தையும் அதையடுத்து இந்தப் பாட்டு எடுத்துக் கூறுகிறது) இன்று எங்களுக்கு தெரிகின்ற ஒரு மிருகத்தனமான யப்பான் ஒன்றும் இருக்கிறது என்ற விடயம் அப்போது எனக்குத் தெரியாது.

இந்தப் போலி வெளிநாட்டுப் பிசாசிடம் நான் கற்றவை அவ்வளவோ. இந்தக் காலகட்டத்திற்தான் நான் முதன்முதலாக பேரரசரும் ஆட்சி அதிகாரம் பெற்று பேரரசிடவாகர் (சுசி) ஆகியோர் இருவரும் இறந்து விட்டதாக கேள்விப்பட்டேன். புதிய பேரரசர் சுவான் துவ் (ப+யி) ஏற்கனவே இரண்டு வருடங்களாக நாட்டை ஆண்டு கொண்டிருந்த போதிலும் எனக்கு மேற்கூறிய விடயம் அப்போதுதான் தெரியும். நான் இன்னும் பேரரசர் ஆட்சிமுறைக்கு எதிரானவனாக மாறவில்லை. உண்மையில் நான் பேரரசரையும், பெரும்பாலான அரச அதிகாரங்களையும் நேர்மையான, நல்ல விவேகமான மனிதர்கள் என்றே கருதினேன். காவ்ய+வெய்யின் சீர்திருத்தங்களின் உதவி மட்டுமே அவர்களுக்குத் தேவை. பண்டைய சீன ஆட்சியாளர்களின் சாதனைகளினால் நான் பெரிதும் கவரப்பட்டேன். குறிப்பாக யாவோ ஷ{ன்;, சீன் ஷீ ஹ் வாங் ரீ, ஹாள் வ+ ரி ஆகியோரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்திருந்தேன்.

யாவ் ஷ{ன் ஆகியோர் ஓரளவு இதிகாசப் புகழ் படைத்த சீனாவின் முதற் பேரரசர்கள் (காலம் கி.மு. 3000 – 305) வெய் மஞ்சள் ஆறுகளின் சமவெளிகளில் சீன சமுதாயத்தை உருவாக்கியமை, வெள்ளத்தைக் கட்டுப்படுத்தியமை (ஆறுகளின் பக்கவாட்டில் கட்டப்பட்ட பாதுகாப்பு அணைகள், கால்வாய்கள் மூலம்) ஆகியவற்றுக்கான பெருமை இவர்களையே சாரும். சின் ஷீ ஹ்வாங் ரீ, சீனப் பேரரசை ஒருங்கிணைத்தமை, சீனப் பெருஞ்சுவரைக் கட்டி முடித்தமை ஆகியவற்றுக்கான பெருமையைப் பெறுகின்றார். (இவர் வாழ்ந்த காலம் கி. மு 259 – 221) ஹான் வ+ரி, ஹான் அரச வம்சத்தின் அத்திவாரங்களை உறுமிப்படுத்திய சிறப்பைப் பெற்றிருக்கின்றார். சின் அரச வம்சத்தைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இந்த அரச வம்சம் (பின்பு வந்த வறான் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்து சீனாவை 426 வருடங்கள் ஆட்சி செய்தது.

இந்தக் காலத்தில் வெளிநாட்டு வரலாறுகள் சிலவற்றையும் புவியியலையும் நான் கற்றேன். அமெரிக்க புரட்சியைப் பற்றி எடுத்துக் கூறிய ஒரு கட்டுரையைப் படித்தபோதே நான் முதன்முதலில் அமெரிக்காவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அக்கட்டுரையில் ஒரு சொற்றொடர் இவ்வாறு இருந்தது. “எட்டு வருட இடர் மிகுந்த ஒரு போரினி பின்பு வாஷிங்டன் வெற்றி பெற்று தனது நாட்டைக் கட்டி எழுப்பினார்’’ “உலகின் மாவீரர்கள்’’ என்ற புத்தகத்தில்தான் நெப்போலியன், ரஷ்யாவின் கதிரினா, மகா பீட்டர், வெலிங்டன், கிளாட்ஸ்ரோன், ரூசோ, மொன்டெஸ்க்ய+, லிங்கன் ஆகியோரைப் பற்றிப் படித்தேன்.

சாங் ஷாவில் வாழ்ந்த நாட்கள்

மா சே துங் தொடர்ந்தார் @

நான் சாங்ஷா செல்வதற்கு விருப்பம் கொள்ளத் தொடங்கினேன். மாகாணத் தலைநகரான இந்தப் பெரு நகரம் எனது ஊரிலிருந்து 120 லி தூரத்திலிருந்தது. இது ஒரு மாபெரும் நகரம் என்றும் பெருமளவிலான மக்களையும் பாடசாலைகளையும் ஆளுநரின் ஆட்சிப் பணிமனையையும் தன்னகத்தெ கொண்டுள்ளது இது ஒரு மகோன்னதமான இடம். இந்த நேரத்தில் அங்கு சென்று சியாங் சியாங் மக்களுக்கான நடுத்தரப் பாடசாலையில் சேர்ந்து கொள்ள நான் பெரு விருப்பமுடையவனாக இருந்தேன். அந்த மாரிகாலத்தில், உயர் ஆரம்பப் பாடசாலையில் உள்ள ஒரு ஆசிரியரிடம் என்னை அங்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டினேன். அதற்கு அந்த ஆசிரியர் ஒத்துக்;;;; கொண்டார். மிகுந்த உற்சாகத்தோடு சாங் ஷாவிற்கு நடந்தே சென்றேன். இந்தப் பெரிய பாடசாலையில் எனக்கு அனுமதி கிடைக்காமல் போகலாம் என்ற பயத்துடனும், அந்தப் பாடசாலையில் மாணவனாகும் வாய்ப்புக் கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாமலும் அங்கு சென்றேன். ஆச்சரியத்துக்கு உரிய வகையில் எதுவித சிரமுமின்றி நான் அப்பாடசாலையில் அனுமதிக்கப்பட்டேன். ஆனால் அரசியல் நிகழ்வுகள் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தன. அந்தப் பாடசாலையில் நான் ஆறு மாதங்கள் மட்டுமே கல்வி பயின்றேன்.

சங்;;;;;;;காவில் ஒரு செய்தித்தாளை முதன்முறையாகப் படித்தேன். மின் - லி – பாவோ (மக்கள் பலம்) என்ற இந்த தேசிய புரட்சிகர சஞ்சிகை மஞ்சு அரச வம்சத்துக்கு எதிராக நடைபெற்ற காண்டன் எழுச்சி பற்றியும் ஹீவாங் சிங் என்ற ஹ{னான் வாசியின் தலைமையில் 72 மாவீரர்கள் இறந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கதையால் நான் வெகுவாகப் கவரப்பட்டேன். அத்துடன் மில் - ய+ - யென், பின்பு ஒரு புகழ்பெற்ற கோமிண்டாங் தலைவரானார். இதேகாலத்தில் நான் சுன் - யாட் - சென்னைப் பற்றியும் ருங் மெங் ஹ{ய் திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். (ருங் மெங் ஹ{ய் என்பது ஒரு புரட்சிகர இரகசியக் குழு சுன்யாட் சென்னால் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுதான் கோமிண்டாங் கட்சிக்கான முன்னோடி. இதன் பெரும்பாலான உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டவர்களாக யப்பானில் வாழ்ந்தார்கள். “சீர்திருத்த அரவம்ச’’ கட்சியில் தலைவர்களான சி. காவ், காங் ய+ வெய் ஆகியோருக்கெதிராக இவர்கள் யப்பானில் இருந்து கொண்டு பேனா முறையில் கடும் யுத்தம் நடத்தினார்கள்) நாடு முதலாவது புரட்சிக்குத் தயாரான நிலையில் இருந்தது. எனக்கு ஏற்பட்ட மனக்குமுறல் காரணமாக நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதை பாடசாலைச் சுவரில் ஒட்டினேன். ஒரு அரசியற் கருத்து (நோக்கு) பற்றிய எனது முதல் வெளிப்பாடு அதுதான். ஆனால் இந்தக் கட்டுரை ஒரு குழப்பமானதாக இருந்தது. நான் அப்போதும் லியாற் சி சாவோ, காங் ய+ வெய் ஆகியோர் மீதான வியந்து போற்றுதலைக் கைவிடவில்லை. அவர்களிடையே உள்ள வித்தியாசங்களை நான் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை. ஆகவே எனது கட்டுரையில் சுன் யாட் சென் யப்பானில் இருந்து, புதிய அரசின் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும். காங் ய+ வெய் பிரதமராக்கப்பட வேண்டும், லியாங் சி சாவ் வெளிநாட்டரசாக்கப்பட வேண்டும், என்று நான் முன் மொழிந்திருந்தேன். இது ஒரு பொருத்தமற்ற கூட்டணி. காங்கும் லியாங்கும் முடியாட்சி ஆதரவாளர். சுன் யாட் சென் முடியாட்சி எதிர்பாளர்.

சிச்சுவான் - ஹான் கௌ ரயில்வே கட்டமைப்புச் சம்பந்தமான அந்நிய முதலீட்டு எதிர்ப்பு இயக்கமும் ஒரு பாராளுமன்றத்தை அமைக்குமாறு எழுந்த பொதுமக்களின் கோரிக்கையும் பரவரலான முறையில் எழுந்தது. இதற்கான பதிலாக, ஒரு ஆலோசனைக் குழு ஒன்றை மட்டுமே அமைக்க பேரரசர் ஆணையிட்டார். எனது பாடசாலை மாணவர்;;கள் மேலும் மேலும் தீவிர விவாதங்களில் ஈடுபட்டார். தங்கள் தலைமயிர்ப் பின்னலுக்கு எதிராக ஒரு புரட்சியை நடத்தியதன் மூலம் தங்களுடைய மஞ்சு எதிர்ப்பு உணர்ச்சிகளை மாணவர் வெளிக்காட்டினார்கள். ஒரு நண்பனும் நானும் எங்களுடைய பின்னல்களை வெட்டி விட்டோம். ஆனால் அவ்வாறு பின்னல்களை வெட்டுவதாக முன்பு உறுதியளித்திருந்த ஏனைய மாணவர்கள் பிற்பாடு தங்களுடைய வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறி விட்டனர், எனது நண்பனும் நானும் அவர்களை இரகசியமாகத் தாக்கி அவர்களது பின்னல்களை வலுக்கட்டாயமாக வெட்டினோம். எங்களுடைய கத்திரிக்கோலுக்கு 10க்கு மேற்பட்ட பின்னல்கள் பலியாகின.

இதன் மூலம் ஒரு குறுகிய காலத்துக்குள் “போலி வெளிநாட்டுப் பிசாசின்’’ போலிப் பின்னல்களைக் கேலி செய்வதில் இருந்து பின்னல்களைப் பொதுவாகவே ஒழிக்க வேண்டும் என்று கோருமளவிற்கு நான் முன்னேறியிருந்தேன். ஒரு அரசியல் நிந்தனை. ஒரு எண்ணக்கருத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதற்கு எத்தகைய எடுத்தக்காட்;டு இது.

சட்டக்கல்லூரி ஒன்றில் பயின்ற ஒரு நண்பனுடன் இந்தப் பின்னல் விடயத்தில் நான் பிரச்சினைப்பட்டேன். இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் எதிர் எதிர் கோட்பாடுகளை முன்வைத்தோம். உடல், தோல், மயிர், நகங்கள் ஆகியவை ஒவ்வொருவரது பெற்றோராலும் வழங்கப்பட்ட ஒரு பரம்பரைச் சொத்து. ஆகவே அவை அழிக்கப்படக்கூடாது, என்று புராதன, இலக்கிய நூலை உதாரணம் காட்டி தனது வாதத்தை வென்றெடுக்க அந்த சட்ட மாணவன் முயன்றார். ஆனால் நானும் பின்னல் எதி;ப்பாளர்களும் ஒரு எதிர்க் கோட்பாட்டை மஞ்சு எதிர்ப்பு அரசியல் அடிப்படையில் உருவாக்கி அவனை முழுமையாக வாயடைக்க வைத்தோம். வியுவான் ஹாங் தலைமையில் ஷகான் கிளர்ச்சி நடைபெற்றதும் (1911 ஆம் ஆண்டு மஞ்சு முடியாட்சியை தூக்கியெறிந்த புரட்சியின் தொடக்கம்) ஹ{னானில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசியல் சூழ்நிலை விரைவாக மாறியது. ஒருநாள் ஒரு புரட்சிவாதி நடுத்தரப் பாடசாலையில் தோன்றி பாடசாலை அதிபரின் அனுமதியுடன் ஒரு கிளர்ச்சியான சொற்பொழிவை நிகழ்த்தினார். இந்தக் கூட்டத்தில் இருந்த ஏழு அல்லது எட்டு மாணவர்கள் ஆட்சியைக் கடுமையாகத் தாக்கினார்கள். அத்தோடு குடியரசை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்கள். அனைவரும் முழுமையான கவனத்தோடு சொற்பொழிவைக் கேட்டார்கள். கிளர்ச்சியுற்றிருந்த மாணவர்கள் முன்னால் வியுவான் ஹங்கின் அதிகாரிகளில் ஒருவரான அந்தப் புரட்சிச் சொற்பொழிவாளர் உரையாற்றியபோது ஒரு சிறு ஓசையும் கேட்கவில்லை.

இந்தச் சொற்பொழிவைக் கேட்டு நான்கு அல்லத ஐந்து நாட்களுக்குப் பின்பு லி யுவான் ஹங்கின் புரட்சிகர இராணுவத்தின் சேர நான் உறுதி ப+ண்டேன். வேறு பல மாணவர்களோடு ஹன்கோவுக்குச் செல்ல நான் முடிவு செய்தேன். வகுப்புத் தோழர்களிடம் இருந்து சிறிதளவு பணத்தை நாங்கள் சேகரித்தோம். ஹன்கோவின் வீதிகள் மிகுந்த ஈரமானவை என்றும் மழைக்கால சப்பாத்துக்கள் அங்கு அவசியம் என்றும் கேள்விப்பட்டு நகரத்துக்கு வெளியே தங்கியிருந்த இராணுவத்தில் உள்ள ஒரு நண்பனிடம் சில சப்பாத்துக்கள் கடனாகப் பெறச் சென்றேன். இராணுவத்தின் கொத்தளக் காவலர்களால்; நான் தடுத்து நிறுத்தப்பட்டேன். இந்த இடம் சந்தடி மிக்கதாக இருந்தது. முதற்தடவையாகத் துருப்புகளுக்குத் துப்பாக்கிக் குண்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் தெருக்களுக்குள் பெரும் எண்ணிக்கையில் நுழைந்து கொண்டிருந்தனர்.

காண்டன் - ஹன்கோ ரயில் பாதையினூடாக புரட்சியாளர்கள் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். சண்டை அங்கு தொடங்கிவிட்டது. சாங்ஷாவின் நகர மதில்களுக்கு அப்பால் ஒரு பெரிய சமர் இடம்பெற்றுள்ளது. அதேவேளை நகரினுள்ளே ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அத்தோடு நகர வாயிற்கதவுகள் தாக்கப்பட்டு சீனத் தொழிலாளர்களால் கைப்பற்றப்பட்டன. இந்தக் கதவுகளில் ஒன்றில் வழியாக நான் நகரினுள் மீண்டும் நுழைந்தேன். பின்பு நான் ஒரு உயரமான இடத்தில் நின்று சமரை அவதானித்தேன். இறுதியாக ஆளுநரின் அரசுப் பணிமனை மீது ஹான் கொடியேற்றப்படும் வரை இருந்தேன். அதில் ஹான் என்ற எழுத்து இருந்தது. நான் பாடசாலைக்குத் திரும்பினேன். அது இராணுவக் காவலர்களினால் காவல் காக்கப்பட்டிருந்தது.

அடுத்த நாள் ஒரு இராணுவ அரசு நிறுவப்பட்டது. (டுட்டு என்பது இராணுவ ஆளுநரைக் குறிக்கும்) கீ வாவோ ஹ{ய் (மூத்த சகோதரர் சங்கம்) சங்கத்தைச் சேர்ந்த இரு பிரபல உறுப்பினர்;;கள் ஆளுநராகவும் உதவி ஆளுநராகவும் உதவி ஆளுநராகவும் சென் சோ சிங் உதவி ஆளுநராகவும் பதவியேற்றுள்ளனர். மாகாண ஆலோசனைக் குழுவின் முன்னைய கட்டிடத்தில் புதிய அரசு நிறுவப்பட்டது. இதன் தலைவராக இருந்த ரான் யென் காய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த ஆலோசனைக் குழுவும் கலைக்கப்பட்டது. புரட்சிவாதிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மஞ்சு ஆவணங்களிடையே பாராளுமன்றம் ஒன்றைத் திறக்குமாறு கோரும் ஒரு கோரிக்கைக் கடிதத்தின் பிரதிகள் காணப்பட்டன. இதன் மூலப் பிரதி சுடேலியினால் இரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அவர் தற்போது (சீன) சோவியத் அரசின் கல்வி ஆணையாளராகக் கடமையாற்றுகின்றார். தனது உறுதிப்பாட்டையும் நேர்மையையும் எடுத்துக் காட்டு முகமாக தனது கைவிரலின் முன் பகுதியை வெட்டித்தான் இக்கடிதத்தை எழுதினார். அவரது கோரிக்கைக் கடிதம் பாராளுமன்றம் திறக்கப்பட வேண்டுமென்றுகோரி, எனது விரலை வெட்டுவதுடன் நான் விடைபெறுகின்றேன். (பீக்கிங்கின் மாகாணப் பிரதிநிதிகளிடம்)

புதிய இராணுவ ஆளுநரும் உதவி இராணுவ ஆளுநரும் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. அவர்கள் கெட்ட மனிதர்கள் அல்ல. அத்தோடு அவர்களுக்குப் புரட்சிகர நோக்குகளும் இருந்தன. ஆனால் அவர்கள் ஏழைகள் அத்தோடு அடக்கப்பட்டவர்களின் நலன்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். நில உடமையாளர்களும் வர்த்தகர்களும் இவர்களோடு அதிருப்தி கொண்டிருந்தனர். சில நாட்களுக்குள் நான் ஒரு நண்பனைக் காணச்சென்றபோது வீதியிலே அவர்கள் இவரது சடலங்களைப் பார்த்தேன். ரான் யென் காய் ஹன{ன் நில உடமையாளர்கள், இராணுவத்தினரின் பிரதிநிதியாக செயற்பட்டு அவர்களுக்கெதிராக ஒரு கிளர்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான்.

தற்போது பல மாணவர்கள் இராணுவத்தில் சேர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு மாணவன் இராணுவம் நிறுவப்பட்டிருந்தது. இந்த மாணவர்களிடையே ராங்கெச்சியும் இருந்தார். (1927 இல் வாங் சிவ் வெய்யின், ஷகான் அரசினுடைய தேசியவாதிகளின் இராணுவத்தினுடைய கமாண்டராக பின்பு ராங் செங் . சி நிகழ்ந்தார். அவர் வாங்கையும் கம்ய+னிஸ்டுக்களையும் காட்டிக் கொடுத்து ஹ{னானின் விவசாயப் படுகொலையைத் தொடங்கினார். நான் மாணவர்;; இராணுவத்தை விரும்பவில்லை. இந்தக் கட்டமைப்பின் அத்திவாரம் குழப்பமானதாக இருப்பதை நான் உணர்ந்தேன். இதற்கு மாறாக, மரபுமுறை இராணுவத்தில் சேர நான் விரும்பினேன். அதன் மூலம் புரட்சியை முழுமையாக்க நினைத்தேன். சிங் பேரரசர் இன்னமும் பதவி துறக்கவலில்லை. அத்தோடு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

எனது சம்பளம் மாதத்துக்கு 7 யுவானாக இருந்தது. இருப்பினும் அது தற்போது நான் செஞ்சேனையில் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும். நான் இப்பணத்தில் உணவுக்காக மாதம் ஒன்றுக்கு 2 யுவான் செலவழித்தேன். நான் தண்ணீரையும் விலை கொடுத்தே வாங்க வேண்டியிருந்தது படைவீரர்கள் நகருக்கு வெளியிலிருந்தே தண்ணீர் எடுத்துவர வேண்டியிருந்தது நான் மாணவனாக இருந்தபடியால் தண்ணீரை அவ்வாறு கொண்டுவர முடியவில்லை. தண்ணீர் விற்போரிடம் தண்ணீரை வாங்கினேன். எனது சம்பளத்தில் மிகுதிப் பணம் செய்தித்தாள்கள் வாங்குவதில் செலவழிந்தது.

நான் செய்தித்தாள்கள் வாசிப்பதில் பற்றுள்ள வாசகனாகினேன். அப்போது புரட்சியோடு தொடப்புடைய சஞ்சிகைகளில், சியாங் சியாங் ஜி – பாவோ (சியாங் நதி தினச் செய்தி) இருந்தது. அதில் சோசலிசம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதிலிருந்த செய்திப் பந்திகளில் தான் சோசலிசம் என்ற சொல்லை நான் அறிந்துகொண்டேன். நானும் சோஷலிசத்தைப் பற்றி விவாதித்தேன். உண்மையில் சமூக சீர்திருத்தவாதம் பற்றிய விடயத்தை ஏனைய மாணவர்களுடனும் படைவீரர்களுடனும் விவாதித்தேன். சோஷலிசம் பற்றியும் அதன் கொள்கைகள் பற்றியும் சியாங் காங்ஹ{ எழுதிய சில துண்டுப் பிரசுரங்களையும் நான் படித்தேன். இந்த விடயம் குறித்து எனது வகுப்பு மாணவர்கள் பலருக்கு நான் உற்சாகத்துடன் எழுதினேன். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும்தான் எனக்கு ஆதரவாக விடையளித்தார்.

எனது குழுவில் ஒரு ஹ{னான் சுரங்கத் தொழிலாளியும் ஒரு இரும்பு வேலைத் தொழிலாளியும் இருந்தனர். அவர்களை நான் மிகவும் நேசித்தேன். ஏனையோர் வெகு சாதாரணமானவர்கள். அவர்களில் ஒருவன் கெட்டவன். மேலும் இரண்டு மாணவர்களை இராணுவத்தில் சேரத் தூண்டினேன். எனது பிளாட்டூன் கமாண்டருடனும் பெரும்பாலான படைவீரர்களுடனும் நான் நட்பு வைத்திருந்தேன். என்னால் எழுத முடியும். அத்தோடு புத்தகங்களைப் பற்றி எனக்கு சிறிது ஞாபகம் இருந்தது. எனது “மகத்தான கல்வியை’’ அவர்கள் கௌரவித்தார்கள். அவர்களுக்கு கடிதங்கள் எழுதி உதவுவதிலும் அது போன்ற வேறு பணிகளிலும் என்னால் உதவ முடிந்தது.

புரட்சியின் பெறு பேறு இன்னமும் தீர்க்கமாக முடிலு செய்யப்படாத நிலையில் இருந்தது. தலைமைத்துவம் சம்பந்தமான இன்னமும் கோமிண்டாங் கட்சிக்குள் வேறுபாடுகள் இருந்தன. அதேவேளை சிங் (பேரரசர்) தனது அதிகாரத்தை முழுமையாக கைவிட்டு விடவுமில்லை. மேலும் போர் நடப்பது சாத்தியமே என்று ஹ{னானில் கூறப்பட்டது. மஞ்சு ஆட்சியினருக்கும் யுவான் ஷ{காய்க்கும் எதிராக பல இராணுவங்கள் திரட்டப்பட்டன.

(யுவான் ஷ{ காய் மஞ்சு ஆட்சியாளர்களின் இராணுவத்தின் பிரதம தளபதியாக இருந்தவர். 1911ஆம் ஆண்டு மஞ்சு ஆட்சியாளர்களைப் பதவி இறக்க வைத்தவர்) இதில் ஹ{னான் படையின் நடவடிக்கையில் இறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது சுன் யாட் சென்னும் யுவான் ஷ{ காய்யும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். ஏற்பட இருந்த யுத்தம் இதனால் தவிர்க்கப்பட்டது. வடக்கு தெற்கும் இணைக்கப்பட்டன. நாங்கிங் அரசு கலைக்கப்பட்டது. புரட்சி முடிந்துவிட்டதாக எண்ணிய நான் இராணுவத்தில் இருந்து விலகி எனது கற்கை நெறிக்குத் திரும்பத் தீர்மானித்தேன். நான் ஆறு மாதங்கள் படைவீரனாக இருந்தேன்.

பத்திரிகைகளில் விளம்பரங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது பல பாடசாலைகள் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. புதிய மாணவர்களைக் கவர்ந்திழுக்க அவை இச்த விளம்பர முறையையே பயன்படுத்தின. பாடசாலைகளின் தராதரத்தை மதிப்பீடு செய்ய என்னிடம் எவ்வித அளவு கோலும் இருக்கவில்லை. காவல்துறைப் பாடசாலை ஒன்றின் விளம்பரம் என் கருத்தைக் கவர்ந்தது. அதில் நுழைவுத் தகுதி தேர்வை எழுதும் முன்பு சவுக்கார உற்பத்திப் பாடசாலை பற்றிய விளம்பரம் ஒன்றைப் படித்தேன். இதற்குப் போதனை எதுவும் தேவையாக இருக்கவில்லை. உணவும் தங்கு வசதியும் வழங்கப்பட்டது. ஒரு சிறு சம்பளத்துக்கு வாக்களிப்பட்டது. இது ஒரு கவர்ச்சியான எழுச்சிய+ட்டும் விளம்பரமாக இருந்தது. சவுக்கார உற்பத்தியின் பாரிய சமூக நன்மைகளை அது எடுத்துக் கூறியது. அத்தோடு அது எவ்வாறு நாட்டையும் மக்களையும் வளமுள்ளதாக்கும் என்று எடு;த்துக் கூறியது. நான் காவல்துறைப் பாடசாலை மீதான எனது கவனத்தை விட்டுவிட்டு ஒரு சவுக்கார உற்பத்தியாளனாக தீர்மானித்தேன். இதற்கு எனது பதிவுக் கட்டணமாக ஒரு டொலரைச் செலுத்தினேன். இதற்கிடையில் எனது நண்பன் ஒருவன் சட்ட மாணவனாகியிருந்தான். அவன் என்னைத் தனது பாடசாலையில் சேருமாறு வற்புறுத்தினான். இந்த சட்டப்பாடசாலை பற்றியும் கவர்ந்திருக்கும் விளம்பரம் ஒன்றை நான் படித்திருந்தேன். பல அற்புதமான விடயங்களுக்கான வாக்குறுதியை அந்த விளம்பரம் அளித்திருந்தது. அது 3 வருடங்களுக்குள் சட்டம் பற்றிய சகல விடயங்களையும் மாணவர்களுக்;கு கற்றுத்தருவதாக விளம்பரப்படுத்தி இருந்தது. அத்தோடு இந்தக் கல்விக் காலகட்டம் முடிந்து அவர்கள் உடனடியாக அரச அதிகாரிகளாக வரமுடியும் என்று உறுதியும் அளித்திருந்தது. இந்தப் பாடசாலையைப் பற்றி எனது நண்பன் தொடர்ந்து புகழ்ந்து கொண்டே இருந்தான். இந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளையெல்லாம் குறிப்பிட்டு எனது கல்விக் கட்டணத்தை அனுப்பும்படி கேட்டு இறுதியாக எனது குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதினேன். ஒரு ஜுரியாக அல்லது அரசு அதிகாரியாகத் திகழப்போகும் எனது வருங்காலத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஒளிமயமான தோற்றத்தை உருவாக்கியிருந்தேன். பின்பு சட்டப்பாடசாலையில் பதிவுக் கட்டணமாக ஒரு டொலர்; செலுத்திவிட்டு எனது பெற்றோரின் பதிலை எதிர்பாத்துக் காத்திருந்தேன்.

ஒரு வர்த்தகப் பாடசாலையில் விளம்பரம் என்ற வடிவில் விதி எனது வடிவில் மீண்டும் குறக்கிட்டது. நாடு தற்போது ஒரு பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஆகவே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய பொருளாதார நிபுணர்களே நாட்டுக்குத் தேவை என்று மற்றொரு நண்பன் எனக்கு ஆலோசனை வழங்கினான். எனது நண்பனின் ஆலோசனை மேலாதிக்கம் பெற்றது. அதன் விளைவாக, இந்த வர்த்தக நடுத்தரப் பாடசாலையில் பதிவு செய்து கொள்வதற்காக நான் மேலும் ஒரு டொலரைச் செலுத்தினேன். நான் உண்மையில் அந்தப் பாடசாலையில் சேர்த்துக் கொண்டேன். அத்தோடு கல்விகற்க அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் பட்டேன். இதனிடையே நான் தொடர்ந்து விளம்பரங்களைப் படித்துவந்தேன். ஒருநாள் ஒரு உயர்தர வர்த்தகப் பாடசாலையின் வாய்ப்பு வளம் குறித்த மற்றொரு விளம்பரத்தைப் படித்தேன். இது அரசினால் நடாத்தப்பட்டது. ஒரு பரந்துபட்ட கற்கை நெறிகளை அது வழங்கியது. அத்தோடு அதன் போதனாசிரியர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகள் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். அந்த பாடசாலையில் ஒரு வர்த்தக நிபுணனாக வருவது சிறந்தது என்று நான் தீர்மானித்தேன். இதற்கு ஒரு டொலர் செலுத்தி எனது பெயரைப் பதிந்து கொண்டு எனது தீர்மானம் பற்றி எனது தந்தையாருக்கு எழுதினேன். அவர் மகிழ்ச்சியடைந்தார். வர்த்தக ரீதியான கல்வியறவின் வாய்ப்பு வளங்களை இட்டு அவர் உடனடியாக என்னைப் பாராட்டினார். நான் இந்தப் பாடசாலையில் சேர்ந்து ஒரு மாதம் கல்வி கற்றேன்.

இந்தப் பாடசாலையில் இந்த பிரச்சினை என்னவென்றால், இங்குள்ள கற்கை நெறிகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே போதிக்கப்பட்டன. அங்கு கற்ற ஏனைய மாணவர்களைப் போலவே எனக்கும் சிறிதளவு ஆங்கிலமே தெரியும். உண்மையில், ஆங்கில எழுத்துக்களை விட அதிகமாக ஒன்றும் தெரியாது. இதில் மற்றுமொரு இடைய+று என்ன வென்றால், இப்பாடசாலையில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கள் இருக்கவில்லை. இந்த நிலைமையால் விரக்தியுற்ற நான், மாதக் கடைசியில் அந்தப் பாடசாலையை விட்டு விலகி மீண்டும் விளம்பரங்களைப் படிக்கத் தொடங்கினேன்.

முதலாவது மாகாண நடுத்தர பாடசாலையில் எனது அடுத்த முயற்சி இடம்பெற்றது. நான், டொலர் கொடுத்துப் பதிவு செய்தேன். நுழைவுத் தேர்வில் 1ம் ஆளாக வந்தேன். அது பல மாணவர்களைக் கொண்ட ஒரு பெரிய பாடசாலை. அதன் பட்டதாரிகள் எண்ணிலடங்காதவர்கள், அங்கு கற்பித்த ஒரு சீன ஆசிரியர் எனக்கு மிகவும் உதவி புரிந்தார். எனது இலக்கிய ஆர்வப்போக்கு காரணமாகவே என்னால் அவர் கவரப்பட்டார். இவர் ய+ - பி – துங் - சியென் (சாம்ராஜ்ய விமர்சனங்களின் வரலாற்றுத் தொகுப்பு) என்ற நூலை எனக்கு வாசிக்கத் தந்தார். இதில் சாம்ராஜ்ய சட்டங்களும் சி. யென் லூங் (1736ல் அரியணை ஏறிய மஞ்சு அல்லது சிங் அரச வம்சத்தின் ஒரு திறமையான 4ஆவது சக்கரவர்த்தி)கின் விமர்;சனங்களும் அடங்கியிருந்தன.

இந்தக் காலகட்டத்தில், சாங்காவில் இருந்த அரசின் படைக்கல வெடிமருந்து சாலை ஒன்று வெடித்தமு. அங்கு பெரியதொரு தீ ஏற்பட்டது. மாணவர்களாகிய எதிரிகளுக்கு இது ருசிகரமாக இருந்தது. தொன் கணக்கான ரவைகளும், வெடிகளும் வெடித்துச் சிதறின. வெடி மருந்துப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இது சீன வெடிகளைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது. இதற்கு ஒரு மாதத்திற்குப் பின்பு, ரான் யென் காய், யுவான் ஷ{காய்யால் விரட்டி அடிக்கப்பட்டார். குடியரசின் அரசியல் நிர்வாக யந்திரத்தின் கட்டுப்பாடு தற்போது யுவான் கையிலேயே இருந்தது. ரான் யென் காய்யின் இடத்துக்கு ராங் சியாங் மிங் மாற்றீடு செய்யப்பட்டார். யுவானை அரியணையில் அமர்த்த ராங் சியாங் மிங் ஒழுங்குகளைச் செய்யலானார் (மீண்டும் அரச வம்ச ஆட்சிமுறையைக் கொண்டுவர எடுக்கப்பட்ட இந்த முயற்சி விரைவாகத் தோல்வியில் முடிந்தது.

1ஆவது நடுத்தரப் பாடசாலையை நான் விரும்பவில்லை. அதன் கற்கை நெறி வரையறைக்குட்பட்டதாக இருந்தது. அதன் சட்டதிட்டங்கள் ஆட்சேபத்துக்குரியவையாக இருந்தன. ய+ - பீ – ருங் - சியென் நூலைப் படித்தபின்பு, நான் தனியாகவே கற்றுத் தெளிவது நன்மை பயக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். ஏழு மாதங்களின் பின்பு நான் பாடசாலையை விட்டு வெளியேறினேன். எனது சொந்தக் கல்விக்கான நேர சூசியை ஒழுங்கு செய்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் ஹ{னான் மாகாண நூல் நிலையத்தில் வாசிப்பதும் இதில் அடங்கும். இந்த விடயத்தில் நான் மிக ஒழுங்காகவும் மனத்திட்பத்துடனும் இருந்தேன். இவ்வாறு நான் செலவழித்த அரை வருடத்தை எனது வாழ்க்கையில் பெறுமதி மிக்க ஒன்றாக நான் கருதுகின்றேன். காலையில் நூல் நிலையம் திறக்கும்போது அங்கு நான் செல்வேன். மதிய வேளையில் எனது மதிய உணவாக இரண்;டு அரிசிப் பலகாரம் உண்ணும் நேரம்தான் எனக்கு இடைவேளை, நூல்நிலையத்தில் ஒவ்வொருநாளும் அது மூடப்படும் வரை நான் அங்கு படித்தேன்.

இந்தச் சுய கல்விக் காலகட்டத்தில் நான் பல புத்தகங்களைப் படித்தேன். உலகப் புவியியல், உலக வரலாறு ஆகியவற்றை நான் படித்தேன். அங்கு முதற் தடவையாக ஒரு உலகப் படத்தை மிகுந்த ஆர்வத்தோடு பார்த்து, அதனைப் பயின்றேன். அடம் ஸ்மித்தின் “வெல்;த் ஒப் நேஷன்ஸ்’’ டார்வினின் “ஒரிஜின் ஓப் ஸ்பெசீஸ்’’ உயிரினங்களின் தோற்றம் “ஜோன்; ஸ்டூவட் மில்லியன்’’ ஒழுக்க நெறி பற்றிய நூல் ரூசோவின் படைப்புக்கள் ஸ்பென்சரின் லொஜிக்’’, மொண்டஸ்க்ய+ எழுதிய சட்ட நூல் ஒன்று ஆகியவற்றைப் படித்தேன். நான் கவிதைகள், வீர காவியங்கள், பண்டைய கிரேக்க கதைகள் ஆகியவற்றையும், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து வேறு பல நாடுகளின் புவியியல், வரலாறு ஆகியவற்றையும் ஆழ்ந்து படித்தேன்.

சியாங் சியாங் மாவட்ட வாசிகளுக்கான விடுதியில் வசித்து வந்தேன். அங்கு பல படைவீரர்களும் இருந்தனர். இவர்கள் படையிவிலிருந்து விலகிய அல்லது படை கலைக்கப்பட்டதனால் வெளியேறிய படை வீரர்களாக இருந்தனர். அவர்களிடம் சீவனோபாயத்துக்கான தொழிலோ, பணமோ இருக்கவில்லை. இந்த விடுதியில் மாணவர்களும் படைவீரர்களும் எப்போதும் சக்கரவில் ஈடுபட்டு வந்தனர். ஒருநாள் இரவு இந்தப் பிரச்சினை அடிதடியாக உருவெடுத்தது. படைவீரர்கள், மாணவர்களைத் தாக்கி, அவர்களைக் கொல்ல முயன்றனர். நான் குளியலறைக்கு ஓடி இந்த சண்டை முடியும் வரை ஒளிந்திருந்து தப்பினேன்.

அப்போது என்னிடம் பணம் இல்லை. நான் பாடசாலை எதிலாவது சேர்ந்தால் தவிர எனக்கு ஆதரவு வழங்க எனது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். நான் தொடர்ந்து விடுதியில் தங்க முடியாமல் போனதால் தங்குவதற்கு ஒரு புதிய இடம் தேடத் தொடங்கினேன். இதனிடையே நான் எனது எதிர்காலத் தொழில் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தேன். நான் ஆசிரியத் தொழிலுக்கே அதிகம் பொருத்தமானவன் என்று தீர்மானித்துக் கொண்டேன். நான் மீண்டும் விளம்பரங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். ஹ{னான் முறைமைப் பாடசாலையில் ஒரு கவர்ச்சிகரமான விளம்பரம் தற்போது எனது கவனத்திற்கு வந்தது. அதன் வாய்ப்பு வளங்கள் பற்றி ஆர்வத்துடன் படித்தேன். போதனைக்கான கட்டணம் இல்லை. மலிவான கட்டணத்தில் உணவும் தங்குமிடமும் வழங்கப்படும் என்று இருந்தது. எனது நண்பர்களில் இருவர் என்னை இதில் சேருமாறு வற்புறுத்தினர். நுழைவுத் தேர்வுக்கான கட்டுரைகளைத் தயாரிப்பதில் எனது உதவியை அவர்கள் நாடினர். எனது நோக்கத்தை எனது குடும்பத்தவருக்கு எழுதி அவர்களது சம்மதத்தையும் பெற்றேன். எனது இரு நண்பர்களுக்காகவும், எனக்காகவும் நானே கட்டுரைகளைத் தயாரித்தேன். அனைவரும் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டோம். உண்மையில் சொல்லப்போனால் நான் மூன்றுமுறை அனுமதிக்கப்பட்டேன். எனது நண்பர்களுக்காக நான் கட்டுரை எழுதிய செயற்பாட்டை பிழையான செயல் என்று அப்போது நான் கருதவில்லை. அது வெறுமனே நட்புறவோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.

இந்த முறையைப் பாடசாலையில் நான் 5 வருடங்கள் மாணவனாக இருந்தேன். பின்பு வெளியான விளம்பங்களின் வேண்டுகோள்களைத் தவிர்த்துக் கொள்வதில் வெற்றி பெற்றேன். இறுதியாக நான் எனது பட்டத்தைப் பெற்றேன். ஹ{னான் மாகாண முதலாவது முறைமை (ஆசிரியர் பயிற்சி) பாடசாலையில் நான் பயிலும் போது இடம்பெற்ற நிகழ்வுகள் பல. அத்தோடு இந்தக் காலகட்டத்தில் எனது அரசியற் கருத்துக்கள் உருப்பெறத் தொடங்கின. சமூக செயற்பாட்டில் பெறப்படும் முதல் அனுபவங்களையும் இங்கு நான் பெற்றுக் கொண்டேன்.

புதிய பாடசாலையில் பல சட்ட நடைமுறைகள் இருந்தன. அவற்றின் சிலவே எனக்கு ஏற்புடையதாக இருந்தது. இயற்கை விஞ்ஞானக் - கற்கை நெறியைச் கட்டாயம் பயிலவேண்டும் என்பதை நான் எதிர்த்தேன். நான் சமூக விஞ்ஞானத்தை விசேட கற்கை நெறியாகப் பயில விரும்பினேன். இயற்கை விஞ்ஞானம் எனக்கு விசேடமான ஆர்வத்தைக் தூண்டவில்லை. நான் அதைப் படிக்கவுமில்லை. இந்தக் கற்கை நெறியில் நான் குறைந்த மதிப்பெண்களே பெற்றேன். கட்டாயக் கற்கை நெறியான உயிரினங்;களின் தோற்றத்தை ஓவியமாக வரையும் கற்கை நெறிகளை முற்றாக வெறுத்தேன். இதை மிக ஒரு முட்டாள்தனமான கற்கை நெறியாகக் கருதினேன். வரைவதற்கு இலகுவான, எளிமையான பொருளைப் பற்றி சிந்தித்து, அதை விரைவாக வரைந்துவிட்டு வகுப்பை விட்டு வெளியேறுவதை வழமையாகக் கொண்டிருந்தேன். அரை - சூரியன் - அரை – மலைக் குன்று ஆகியவற்றைக் கொண்ட ஒரு ஓவியத்தை வரைந்ததை என்னால் நினைவு கூற முடிகின்றது. ஒரு நேர் கோட்டை வரைந்து அதன் மீது ஒரு அரை வட்டத்தை வரைந்ததன் மூலம் அந்த தேர்வின்போது பக்கவாட்டில் அகன்ற ஒரு வட்டத்தை வரைந்து அதற்கு “முட்டை’’ என்று தலைப்பிட்டதுடன் திருப்தியடைந்தேன். ஓவியத்தில் 40 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் விஞ்ஞானக் கற்கை நெறியில் நான் பெற்ற அதிசிறப்பான மதிப்பெண்கள் ஏனைய பாடங்களில் நான் பெற்றிருந்த குறைவான மதிப்பெண்களை ஈடு செய்தன.

“பெருந்தாடி யுவான்’’ என்று மாணவர்களால் பட்டப் பெயர் சூட்டப்பட்டிருந்த ஒரு சீன ஆசிரியர் எனது படைப்புக்களை ஒரு பத்திரிகையாளரின் படைப்புப் போன்று இருப்பதாக கேலி செய்தார். நான், முன்மாதிரியானவராகக் கருதிய லியாங் சி – சால்வை அவர் இழந்ததோடு அவரை ஒரு அரை – அறிவிலி என்றும் கருதினார். நான் எனது ஹான் ய+ன் அவர்களது படைப்புகளைப் படித்தேன். அத்தோடு பழைய இலக்கியப் பாணியில் சொற்றொடர்களை எழுதும் முறையில் தேர்ச்சியுற்றேன். இதன் விளைவாக இன்னும் கூட தேர்ச்சி பெறக்கூடிய இலக்கிய பாணியிலான கட்டுரை ஒன்றை தேவை ஏற்பட்டால் என்னால் எழுத முடியும். இதற்கு நான் “பெருந்தாடி யுவானுக்கு’’ நன்றிசொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

என் மீது மிகுந்த தாகத்தை ஏற்படுத்திய ஆசிரியர் இங்கிலாந்தில் கல்வி கற்றுத் திரும்பிய யாங் - சாங் - சி ஆவார். இவருடைய வாழ்க்கையோடு எனது வாழ்வு பிற்காலத்தில் வெகு நெருங்கிய உறவைக் கொண்டிருக்கப்போகிறது அவர் நீதி நெறிப்பாடத்தைப் போதித்தார். அவர் ஒரு யதார்த்தவாதி அத்தோடு உயரிய நீதி நெறியாளர். அவர் தனது நீதி நெறிகளில் மிகுந்த பற்றுறுதி கொண்டிருந்தார். சமூகத்துக்கு பயன்படக்கூடிய நேர்மையான, நீதியான, நற்பண்பாடு உள்ள மனிதனாக வரவேண்டும் என்ற ஆசையை மாணவர்களின் மீது பதியவைக்க அவர் முயன்றார். அவரது செல்வாக்கின் கீழ் த்சை யுவான் - பெய் மொழி பெயர்த்த ஒரு நீதி நூல் நான் படித்தேன். இதன் காரணமாக ஒரு கட்டுரை எழுத ஊக்கம் பெற்றேன். இதற்கு “எண்ணத்தின் சக்தி’’ என்று தலைப்பிட்டேன். அப்பொழுது நான் ஒரு கற்பனாவாதியாக இருந்தேன். அத்தோடு எனது கட்டுரை பேராசிரியர் யாங் சாங் சீ அவர்களால் அவரது கற்பனாவாத நோக்கின் அடிப்படையில் வெகுவாகப் பாராட்டப் பட்டது. அதற்கு அவர் 100 மதிப்பெண்கள் வழங்கினார்.

ராங் என்ற பெயருடைய ஒரு ஆசிரியர் எனக்கு மின்பாவோ (மக்கள் சஞ்சிகை) சஞ்சிகையின் பழைய பிரதிகளை வழங்கினார். மிகுந்த ஆர்வத்தோடு அவற்றை நான் படித்தேன். இவற்றிலிருந்து ருங் பெங் ஹ{ய் அவர்களின் செயற்பாடுகளையும் நடவடிக்கைத் திட்டங்களையும் நான் அறிந்தேன். இரண்டு மாணவர்கள் சீனாவின் ஊடாகப் பயணம் மேற்கொண்டிருப்பதையும் அவர்கள் திபேத்தின் எல்லையிலுள்ள தட்சியன்லூ என்ற இடத்தை அடைந்துவிட்டதையும் பற்றி எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை மின் பாவோ இதழ் ஒன்றில் ஒரு நாள் நான் படித்தேன். இது எனக்கு மிகுந்த எழுச்சி ஊட்டியது. இவர்களது உதாரணத்தைப் பின்பற்ற நான் விரும்பினேன். ஆனால் என்னிடம் பணம் இருக்கவில்லை. முதலில் நான் ஹ{னானுக்குள் பயணம் மேற்கொள்ள முயலவேண்டும் என்று நான் எண்ணினேன்.

அடுத்த கோடை காலத்தின்போது நான் இந்த மாகாணத்தின் குறுக்காக கால்நடையாக எனது பயணத்தைத் தொடங்கினேன். 5 மாவட்டற்களினூடாக நடந்து சென்றேன். சியாங் ய+ என்ற மாணவரும் உடன் வந்தார். இந்த 5 மாவட்டங்களினூடாகவும் ஒரு செப்புக் காசும் செலவு செய்யாது பயணம் செய்தோம். விவசாயிகள் எங்களுக்கு உணவும் உறங்க இடமும் தந்தார்கள். நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் அன்புடன் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டோம். எனது பயண சகபாடியான சி யாவ் ப+ பின்னானில், யி பீ சியின் கீழ் நான்கிங்கில் ஒரு கோமிண்டாங் அதிகாரியாக வந்தார். அப்போது ஹ{னான் முறைமைப் பாடசாலையில் தலைவராக இருந்த யீ பி சி நான்கிங்கில் ஒரு பெரிய அதிகாரியாக வந்தார். அத்தோடு அவர், சிவாவ் ய+ வை பீங்கிங் அரச மாளிகை அருங்காட்சியகத்தின் பாதுகாவலர் பதவிக்கு நியமித்தார். சியாவ், இந்த அருங்காட்சியத்தின் பெறுமதிமிக்க அரும்பெரும் செல்வங்களை விற்றுவிட்டு அந்தப் பணத்துடன் 1934 ஆம் ஆண்டில் தலைமறைவாகிவிட்டார்.

உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரமான மனோநிலையும் சில நெருங்கிய நண்பர்;களுக்கான தேவையும் ஏற்பட்டதால் தாய்நாட்டுக்கான சேவையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை என்னோடு தொடர்பு கொள்ளும் படி சாங்கா பத்திரிகையொன்றில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டேன். “உடலிலும் உள்ள்த்திலும் உறுதி வாய்ந்த தாய்நாட்டுக்கான எவ்வித தியாகங்களையும் செய்யக்கூடிய இளைஞர்களே தேவை’’ என்று அதில் விசேடமாக குறிப்பிட்டிருந்தேன். இதற்கு எனக்கு மூன்று முழுக் கடிதங்களும் ஒரு அரைக் கடிதமும் கிடைத்தன. ஒன்று லூ – சியாங் - லவ் என்பவரிடமிருந்து வந்திருந்தது. இவர் பின்னாளில் கம்ய+னிஸ்ட் கட்சியில் சேர்ந்து பின்பு அதைக் காட்டிக்கொடுக்க இருந்தார். ஏனைய இரண்டு கடிதங்கள் இரண்டு இளைஞர்களிடம் இருந்து வந்திருந்தது. அவர்கள் பிற்காலத்தில் தீவிர பிற்போக்குவாதிகளாக மாறினர். அந்த அரைக் கடிதம் ஈடுபாடு காட்டாத லிலிசான் என்ற இளைஞரிடமிருந்து வந்திருந்தது. நான் சொல்லிய அனைத்தையும் கேட்ட வி எதுவித மறுமொழியும் கூறாமலே வெளியேறினார். அதன் பின்பு எங்கள் நட்பு வளரவில்லை. (லிலிசான் பின்பு சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் லி லி சான் கோட்பாடு வழிக்கும் பொறுப்பாக இருந்தார். இதை மாவோ கடுமையாக எதிர்த்தார்.)

ஆனால் படிப்படியாக என்னைச் சுற்றி ஒரு மாணவர் குழுவை உண்டாக்கினேன். பின்பு ஒரு சங்கமாக (புதிய மக்கள் ஆய்வுச் சங்கம்) உருவெடுத்த ஒரு அணிக்கு இந்தக் குழு ஆணிவேராக அமைந்தது. இது பிற்காலத்தில் சீனாவின் பிரச்சினைகளிலும் அதன் விதியிலும் பரந்துபட்ட செல்வாக்கைக் கொண்டிருக்கப் போகின்றது. இது ஒரு கடுமையான, தீவிரமான எண்ணங்களைக் கொண்ட மனிதர்களின் ஒரு சிறிய குழு, அவர்களுக்கு சில்லறை விடயங்களைப் பற்றியெல்லாம் விவாதிக்க நேரமிருக்கவில்லை. அவர்கள் கூறியவை, செய்தவை அனைத்திலும் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும் காதலிக்கவோ வேறு காரியங்களில் ஈடுபடவோ நேரம் இருக்கவிவல்லை. காலம் மிகவும் இக்கட்டாக இருப்பதையும் அறிவைப் பெறுவது அவசரமான காரியம் என்பதையும் அறிந்திருந்தனர். அவர்கள் பெண்களைப் பற்றியோ தனிப்பட்ட விடயங்களையோ நினைத்தும் பார்க்கவில்லை. நான் பெண்கள் விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை. எனது பெற்றோர் எனக்கு 14 வயதாயிருக்கும் போது 20 வயதுப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தனர். அதனால் அந்தப் பெண்களோடு நான் ஒரு போதும் வாழவில்லை. அந்தப் பெண்ணை எனது மனைவியாக நான் கருதவில்லை. இந்த நேரத்தில் அந்தப் பெண் மீது நான் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. இந்தக் காலகட்டத்து இளைஞர்களின் வாழ்வில், வழமையாக முக்கிய பங்கு வகித்த பெண்களின் அழகுக் கவர்ச்சி பற்றி இரகசியமாக விவாதிப்பதைவிட, அன்றாட வாழ்க்கையின் சாதாரண விடயங்களைப் பற்றிக் கதைப்பதைக்கூட எனது சகபாடிகள் தவிர்த்திருந்தது நினைவில் உள்ளது. கொஞ்சம் இறைச்சி வாங்குவதைப் பற்றி அந்த இளைஞன் என்னோடு கதைத்தது மட்டுமல்லாமல், எனது முன்னிலையில், அவனது வேலைக்காரனை அழைத்து அவனுடன் இது பற்றி விவாதித்தான். இதனால் எனக்கு கவலை ஏற்பட்டது. அந்த இளைஞனை நான் சந்திக்கவேயில்லை. எனது நண்பர்;களும் நானும் பெரிய விடயங்களைப் பற்றிக் கதைக்கவே விரும்பினோம். மனிதர்களின் இயல்குள், பிரபஞ்சம், உலகம், சீனாவின் மக்கள் சமூகம் ஆகியவை பற்றியோ கதைத்தோம்.

நாங்கள் தீவிரமான உடற்பயிற்சி செய்பவர்களாகவும் மாறினோம். மாரிகால விடுமுறையின் போது, நாங்கள் வயல்களினூடாக நடந்து திரிந்தோம், மலைகளில் ஏறி இறங்கினோம். நகரச் சுற்று மதில்களில் ஏறினோம். ஆறுகள், நீரோடைகளை நீந்திக் கடந்தோம். மழை பெய்தால் எங்களுடைய மேலாடைகளைக் களைந்து விட்டு மழையில் நனைந்தோம். இதை “மழைக் குளிப்பு’’ என்று அழைத்தோம். வெயிலெறிக்கும் போதும் எங்கள் சட்டைகளைக் கழற்றிவிட்டு அதை “வெப்பக் குளிப்பு’’ என்று அழைத்தோம். வசந்த காலக் காற்று வீசும்போது இது “காற்றுக் குளிப்பு’’ என்றும் புது விளையாட்டு என்றும் கத்துவோம். பனித்துகள்கள் விழும்போதுகூட வெளியிலேயே படுத்தோம். நவம்பத் மாதத்தில்கூட குளிந்த ஆறுகளில் நீந்தினோம். “உடற்பயிற்சி’’ என்ற பெயரில் இவை அனைத்தும் நடந்தேறின. உடற் கட்டமைப்பை உறுதியாக்கிக் கொள்ள பெருமளவுக்கு இது உதவியது. இது பிற்காலத்தில், தென்சீனாவின் ஊடாக பல நடை பயணங்கள் மேற்கொள்ளவும், கியாங்ஸியிலிருந்து வடமேற்குப் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட நெடும் பயணத்தின் போதும் எனக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கப்போகின்றன.

ஏனைய நகரங்களிருலும் மாநகரங்களிலும் உள்ள பல மாகாணங்களோடும் நண்பர்களோடும் பரந்த அடிப்படையில் கடிதத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். நன்கு நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் அவசியத்தை நான் படிப்படியாக உணரலானேன். 1917ல் சில நண்பர்;களுடன் சேர்ந்து சின் - மின் சூ - ஹ{ய் அமைப்பை நிறுவ, நான் உதவினேன். இதில் 70, 80 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் பலரின் பெயர்கள் பிற்காலத்தில் சீனக் கம்ய+னிச உலகிலும் சீனப் புரட்சியின் வரலாற்றிலும் புகழ் பெற்ற பெயர்களாக இருக்கப் போகின்றன. இந்த அமைப்பில் இருந்த நன்;கு அறிமுகமான கம்ய+னிஸ்ட்களில், லோமான் (லீ வெய் - ஹான்) (இவர் தற்போது கட்சியின் அமைப்புக்குழுவில் செயலாளராக இருக்கிறார்) சி யா சீ (இவர் தற்போது இரண்டாவது முன்னணி செம்படையில் இருக்கின்றார்), ஹோ ஷ{ ஹெங் மத்திய சோவியத் (சீன) பிராந்தியத்தின் உச்ச நீதி மன்றத்தின் உயர் நீதிபதியாக ஆனவர். பின்பு இவ் ஷியாங் கேய் ஷேக்கால் 1935ல் கொல்லப்பட்டார். ஷியாங் கு – சாங் (இவர் ஒரு எழுத்தாளர், சோவியத் ரஷ்யாவில் வாழ்கிறார்) த் சை ஹோ – சென் (கம்ய+னிஸ் கட்சி மத்திய குழு உறுப்பினர் 1927 இல் ஷியாங் கேய் ஷேக்கால் கொல்லப்பட்டாh) யே லீ – யுன் (கட்சி மத்திய குழுவின் உறுப்பினராக வந்தார். பின்பு கட்சியை கோமிண்டாங்குக் “காட்டிக்’’ கொடுத்தார். அத்தோடு ஒரு முதலாளித்தவ தொழிற் சங்கத்தின் அமைப்பாளரானார்). சி யாவோ சென் (ஒரு முக்கிய கம்ய+. கட்சியை அமைப்பதற்கான மூல உடன்படிக்கையில் கையெடுத்திட்ட ஆறு பேர்களில் ஒருவர். சமீபத்தில் சுகயினமுற்று இறந்தார்) 1927ல் இடம் பெற்ற எதிர்ப் புரட்சியில் ஷின் மின், சுவே ஹ{ய் அமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் கொல்லப்பட்டனர்.

சின் - மின் - சூ - ஹ{ய் அமைப்பை ஒத்ததாக இதே கால கட்டத்தில் அமைக்கப்பட்ட மற்றொரு சங்கம் தான் “சமூக நல்வாழ்வுச் சங்கம்’’ ஆகும். இது ஹ{பேயில் அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களிலும் பலர் பின்னீடு கம்ய+னிஸ்டுகள் ஆகினார்கள். ஷியாங் கேய் ஷேக்கின், எதிர் புரட்சியின்போது கொலை செய்யப்பட்ட யுன் ரய்யிங்கும் இவர்களில் அடங்குவார். தற்போது செம்படைப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கும் லி;ன் பியாவ்வும் இதன் உறுப்பினரே தற்போது வெள்ளைத் துருப்புக்களுக்கான (செம்படையினரால் கைது செய்யப்பட்ட துரும்புக்கள்) வேலைகளுக்குப் பொறுப்பாக இருக்கும் சாங் ஹால்வும் இதன் உறுப்பினரே. ஹ{ஷே என்று ஒரு அமைப்பு பீக்கிங்கில் இருந்தது. இந்த அமைப்பின் சில உறுப்பினர்களும் பின்னாட்களில் கம்ய+னிஸ்டு;கள் ஆகினர். சீனாவின் வேறு இடங்களில், குறிப்பாக, ஷாங்காய், ஷாங்சௌ, ஹான் கௌ, ரியன்ஸிசின் பெற முயன்ற சில தீவிரவாத இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளை நிறுவினார்கள். (ரியன்ஸ்சினில் நிறுவப்பட்;ட விழிப்புணர்வ+ட்டும் சங்கத்தில் சூ என் லாய் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

ரெங் யிங் சாவோ (திருமதி சூ என் லாய்) மா சுண் 1927ல் பீக்கிங்கில் மரணதண்டனைக்குள்ளானவர்) சுன் ஷியா சிங் ஆகியோரும் இதில் உறுப்பினராக இருந்தனர்.

பெரும்பாலான சங்கங்கள் “சின் சிங்’’ நியென் (புதிய இளைஞர்) என்ற புகழ் பெற்ற இலக்கிய எழுச்சிச் சஞ்சிகையின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டவை. இதன் ஆசிரியர் சென் ரு சியு ஆவார். நான் முறைமைப் பாடசாலையில் மாணவனாக இருக்கும்போதே இந்த சஞ்சிகையை படிக்கத் தொடங்கியிருந்தேன். ஹ{ ஷி, சென் ரு சியு ஆகியோரின் படைப்புக்களை நான் வியந்து போற்றினேன். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அவை என் முன் மாதிரிகள் ஆகியிருந்தன. அவை நான் ஏற்கனவே கழிந்து விட்டிருந்த லியாங் சி. சாவ், காங் யு வெய் ஆகியோரின் படைப்புக்களை மாற்றிடு செய்தன.

இந்தக் காலகட்டத்தில் எனது சிந்தனை மிதவாதம் ஜனநாயக மறுமலர்ச்சி வாதம், சோஷலிசவாதம் ஆகியவற்றின் ஆச்சரியமான கலப்பாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டு ஜனநாயகம் கற்பனை வாதம் பழைய பாணியிலான மிதவாதம் ஆகியவை மீது ஒரு தெளிவற்ற விருப்பம் இருந்தது. அத்தோடு நான் இராணுவமயப்படுத்தல் ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு நிட்சயமாக எதிர்பாளனாக இருந்தேன்.

முறைப்பாடசாலையில் 1921 ஆண்டில் புகுந்தேன் 1981ல் நான் பட்டம் பெற்றேன்.

புரட்சிக்கு முன்னோடி

மாவோ தனது கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்தும்போது என்னுடைய கதைக்கு இதில் ஆர்வம் காட்டிய மற்றொரு ஆய்வாளரும் அங்கு இருந்தார். மாவோவின் மனைவி ஹோ த்சு சென் தான் அவர் மாவோ தன்னைப் பற்றியும் கம்ய+னிஸ்ட் இயக்கத்தைப் பற்றியும் கூறிய உண்மைகளை அவர் முன்னோரு போதும் கேட்டதில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பாவோ ஆன்னில் இருந்த மாவோவின் பல தோழர்களின் நிலையும் இதுதான். நான் ஏனைய கம்ய+னிஸ்ட் தலைவர்களின் சுயவாழ்க்கைக் குறிப்புக்களை எடுத்தபோது, அவர்களது தோழர்கள், உடனடியாகக் குழுமி நின்று, ஆர்வத்தோடு இந்த வரலாறுகளை முதற்தடவையாகக் கேட்டார்கள். வருடக்கணக்காக அவர்கள் ஒருங்கிணைந்து, யுத்தத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் அவர்கள் கம்ய+னிஸ்ட் ஆக மாறுவதற்கு முந்தைய நாட்களைப் பற்றிய விடயங்கள் பற்றி மற்றொருவருக்கும் சிறிதளவும் தெரியாது. அவர்கள் அந்தக் காலகட்டத்தை ஒரு இருண்ட காலமாகக் கருதினார்கள். ஒருவருடைய உண்மையான வாழ்க்கை ஒருவர் கம்ய+னிஸ்ட்டாக ஆகிய பின்புதான் தொடங்குகின்றது என்பது அவர்கள் கருத்து.

இது மற்றுமொரு இரவு மாவோ கால்களைக் குறுக்காகப் போட்டுக் கொண்டு தனது கடிதப் பெட்டியின் முன்பாக இருந்தார். ஒரு மெழுகுதிரியின் ஒளியில் சிகரெட்டைப் பார்த்துக்கொண்டு, அதற்கு முதல் நான் வேலை முடித்த இடத்திலிருந்து கதையை தொடங்கினார்.

சாங்சாவில் நான் முறைமைப் பாடசாலையில் படித்த வருடங்களில் மொத்தமாக 160 டொலர்கள் மட்டுமே செலவிட்டிருந்தேன். இதில் எனது பல்வேறு கல்லூரிப் பதிவுக் கட்டணங்களும் அடங்கும். இந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கை செய்;தித்தாள்களுக்கு நான் செலவிட்டிருப்பேன். ஏனென்றால் ஒழுங்கு முறையான சந்தாப்பணமாக மாதம் ஒரு டொலர் இதற்குச் செலவாகிறது. அத்தோடு நான் அடிக்கடி புத்தகசாலைகளில், புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாங்கினேன் எனது அப்பா என்னை இதற்காகக் கண்டித்தார். வீணாக காகிதத்துக்குச் செலவழிக்கப்படும் வீணான பணம் என்று அவர் கூறுவார். ஆனால் நான் செய்தித்தாள் படிக்கும் வழக்கத்தை ஒரு பழக்கமாக்கிக் கொண்டேன். 1911 இல் இருந்து 1927 வரை அதாவது நான் சிங் காங் ஷான் செல்லும்வரை ஹ{னான், ஷாங்காய் பீக்கிங் செய்தி நாளிதழ்களைப் படிக்க நான் ஒருபோதும் தவறியதில்லை.

எனது பாடசாலை இறுதி வருடத்தின்போது எனது தாயார் காலமானார். முன்பு எப்போதைக் காட்டிலும் தற்போது, வீடு திரும்பும் ஆர்வம் என்னில் பீக்கிங் செல்ல நான் முடிவு செய்தேன். ஹீனானில் பல மாணவர்கள் பிரான்சுக்குச் செல்லத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். முதலாவது உலக யுத்தத்தில் தனக்கு சார்பான சீன இளைஞர்களைத் திரட்டுவதற்காக பிரான்ஸ் பயன்படுத்திய “வேலை செய்து கொண்டு கல்வி’’ பயிலும் திட்டத்தின் கீழ் கல்வி பயிலவே அவர்கள் பிரான்ஸ் செல்ல இருந்தார்கள். சீனாவை விட்ட வெளியேறுமுன்னர் அவர்கள் பீக்கிங்கில் பிரெஞ்சுமொழி பயிலத் திட்டமிட்டனர். இந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்த நான் உதவினேன். வெளிநாட்டுக்குச் சென்ற இந்தக் குழுக்களில் ஹ{னான் முறைமைப் பாடசாலை மாணவர்கள் பலர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்காலத்தில் புகழ்பெற்ற தீவிரவாதிகள் ஆகினர். சூ டேலியும் இந்த இயக்கத்தால் கவரப்பட்டவரே. அவர் 40 வயதைக் கடந்த பின்பு ஹ{னான் முறைமைப் பாடசாலையில் தனது பேராசிரியர் பதவியைத் துறந்துவிட்டு பிரான்சுக்குச் சென்றார். இருப்பினும் 1927ஆம் ஆண்முவரை இவர் ஒரு கம்ய+னிஸ்ட்டாக ஆகவில்லை.

ஹ{னான் மாணவன் சிலருடன் நான் பீக்கிங்கிற்குச் சென்றேன். இந்த இயக்கத்தை ஒழுங்கு செய்வதற்கு நான் உதவியிருந்த போதிலும், சின் - மின் நு ஹீய் இயக்கத்தின் ஆதரவை இந்த இயக்கம் பெற்றிருந்த போதிலும், நான் ஐரோப்பா செல்லவிரும்பவில்லை. எனது நாட்டைப் பற்றியோ நான் சரியாக அறிந்து கொண்டிருக்கவில்லை என்று நான் கருதினேன். அத்தோடு எனது வாழ்க்கையை பயனுள்ள வகையில் சீனாவில் செலவழிக்க முடியும் என்றும் கருதினேன். பிரான்ஸ் செல்லவிருந்த அந்த மாணவர்கள் லீ - ஷீத் செங் என்பவரிடம் பிரெஞ்சு மொழி பயின்றார்கள். இவர் தற்போது சீன – பிரெஞ்சுப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கின்றார். நான் பிரெஞ்சு மொழி பயிலவில்லை. என்னிடம் வேறு திட்டங்கள் இருந்தன.

என்னைப் பொறுத்தவரை பீங்கிங்கில் வாழ்வது செலவு கூடிய வாழ்க்கையாக இருந்தது. எனது நண்பர்களிடம் கடன்பட்டுத்தான் நான் தலைநகருக்கு வந்தேன். நான் வந்த உடனேயே வேலை ஒன்றில் சேர்வதற்கு முயற்சி செய்யலானேன். முறைமைப் பாடசாலையில் முன்பு எனது ஆசிரியராக இருந்த யாங் - சிங் - சி அப்போது பீக்கிங் தேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆகியிருந்தார். எனக்கு ஒரு வேலை பெற்றுத்தர உதவுமாறு அவரை வேண்டினேன். பல்கலைக்கழகத்தின் நூலகப் பொறுப்பாளருக்கு, அவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவரது பெயர் லீ ரா சாவோ. அவர் பிற்காலத்தில் சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர். பின்பு அவர் சாங் த்சோ – லின் (மஞ்சூரியாவில் இராணுவ சர்வாதியாக இருந்து 1928ல் யப்பானியரால் கொல்லப்பட்டவர்) என்பவரால் கொல்லப்பட்டார். லீ ரா சாவோ எனக்கு, நூலகத் துணைப் பொறுப்பாளர் வேலையைத் தந்தார். எனக்கு சம்பளமாக ஒரு தாராளமான தொகையாக மாதம் ஒன்றுக்கு 8 டொலர் தரப்பட்டது.

எனது பணி ஒரு சிறிய பணியாக இருந்ததால் மக்கள் என்னைச் சந்திப்பதைத் தவிர்த்தனர். செய்தித்தாள்கள் படிக்க வருவோரின் பெயர்களை எழுதுவது எனது பணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் அங்கு வந்த பல பேருக்கு நான் ஒரு மனிதனாகவே படவில்லை. அங்கு படிக்க வந்தோர்களிடையே மறுமலர்ச்சி இயக்கத்தின் புகழ்பெற்ற பல தலைவர்களின் பெயர்களை என்னால் அறிய முடிந்தது. புசு நியன், லோ சியா லூன் மற்றும் பலர் அவர்களில் அடங்கியிருந்தனர். இவர்களில் நான் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டேன். அவர்களுடன் அரசியல் கலாச்சார விடயங்களில் கலந்துரையாட முயன்றேன். ஆனால் அவர்கள் ஓய்வு ஒழிச்சலற்ற சுறுசுறுப்பான மனிதர்கள் தென்பகுதி உச்சரிப்பில் பேசுகின்ற ஒரு துணை நூலகரிடம் அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.

ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தத்துவ இயல் சங்கத்தில் சேர்ந்தேன். பத்திரிகைத் துறை சங்கத்துறை சங்கத்திலும் உறுப்பினரானேன். இதன் மூலம் பல்கலைக்கழக வகுப்புக்களில் பங்கு பெற வழி சமைத்தேன்.
பத்திரிகைத் துறைச் சங்கத்தில், சென் குங் போன்ற சக மாணவர்களைச் சந்தித்தேன். அவர் தற்போது நான்சிங்கில் ஒரு உயர் அதிகாரியாக உள்ளார். அத்தோடு ரான் பிங் ஷான், (இவர் பின்பு கம்ய+னிஸ்ட் ஆகினார், அதற்கும் சிறிது பின்பு “மூன்றாவது கட்சி’’ என்று அழைக்கப்பட்ட ஒரு கட்சியில் உறுப்பினரானார்.) ஷாவ் பியாங்பிங் ஆகியோரையும் இங்கு சந்தித்தேன். இவர்களில் விசேடமாக ஷாவ் பியாங் பிங் எனக்கு மிகவும் உதவி புரிந்தார். இவர் பத்திரிகைத் துறைச் சங்கத்தில் விரிவுரையாளராக இருந்தார். அவர் ஒரு மிதவாதி. அத்தோடு ஒரு தீவிர நல்ல பண்பாளருமாவார். அவர் 1926 சாங் த்சோ லின்னால் கொல்லப்பட்டார்.

நூல் நிலையத்தில் வேலை செய்யும்போது நான் சாங் குவோ ராவோவைச் சந்தித்தேன். இவர் தற்போது (சீன) சோவியத் அரசின் உதவித் தலைவராக உள்ளார். காங் பெய் சென், (பின்பு கலிபோர்ணியாவில் குக் குளுக்ஸ் கிளான் குழுவில் சேர்ந்தவர்) து வா சி பெங் (நாங்கிங்கில் இவர் கல்வி உதவி அமைச்சராக உள்ளார்) ஆகியோரையும் இங்குதான் நான் சந்தித்தேன். இங்குதான் நான் யாங்காய் ஹ{ய்யை சந்தித்து அவள் மீது காதல் கொண்டேன். இவள் எனது முன்னால் நீதிசாஸ்திர ஆசிரியர் யாங் சாவ் சியின் மகள் ஆவார். இந்த ஆசிரியர் எனது இளமைக் காலத்தில் என் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். பிற்காலத்தில் பீக்கிங்கில் அவர் எனது உண்மையான நண்பனாக இருந்தார்.

எனது அரசியல் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்தது. எனது சிந்தனை மேலும் மேலும் தீவிரவாத உணர்வுகளைக் கொண்டதாக ஆகிவந்தது இதற்கான பின்னணியை நான் உங்களிடம் கூறியுள்ளேன். ஆனால், தற்சமயம் நான் இன்னும் குழப்ப நிலையிலேயே இருந்தேன். நாங்கள் கூறுமாப் போல் நான் ஒரு மார்க்கத்தைத் தேடிக் கொண்டிருந்தான். அராஜகவாதம் பற்றிய சில துண்டுப் பிரசுரங்களை நான் படித்தேன். இது என் மீது மிகுந்த தாகத்தை ஏற்படுத்தியது. என்னிடம் அடிக்கடி வருகை தரும் சுசுன் பெய் என்ற மாணவனுடன் இது பற்றியும் இத்தகைய சித்தாந்தம் சீனாவில் உருவாக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் பற்றியும் ஆராய்ந்தோம். அந்த நேரத்தில், அந்தக் கோட்பாட்டின் பல முன் மொழிதல்களை நான் ஆதரித்தேன்.

பீக்கிங்கில் எனது சீவிய நிலைமை வெகு மோசமாக இருந்தது. இதற்கு மாறாக இந்தப் பழைய நகரின் அழகு எனக்கு விரிவான உயிரோட்டமுள்ள ஒரு மாற்றீடாக இருந்தது. அங்கு சான் யென் சிங் (மூன்று கண்கள் கிணறு) என்ற இடத்தில் நான் தங்கியிருந்தேன். அங்கு ஒரு சிறிய அறை@ அதில் 7 பேர்களுடன் சீவித்தேன். சூட்டுப் படுக்கையில் எல்லாரும் ஏறிப்படுத்தால் எங்களுக்கு மூச்சு விடக்கூடி இடம் இருக்காது. நான் ஒரு பக்கம் திரும்பிப் படுக்கும்போது எனது இருமருங்கிலும் படுப்போரை நான் எச்சரித்துவிட்டே படுப்பேன். ஆனால் ப+ங்காக்களிலும் பழைய அரச மாளிகை மைதானத்திலும் வட பகுதிக்கு சிறிது முந்தியே வந்துவிடும் வசந்த காலத்தை அநுபவித்தேன். பெய் ஹெய் (வடக்குக் கடல் முற்காலத்தில் வெளியார் நுழைய முடியாத நகரத்திலுள்ள செயற்கை ஏரிகள்) முழுமையாகப் பனியால் மூடப்பட்டிருக்கும்போதே வெள்ளை பிளம் மலர்கள் ப+த்துக் குலுங்குவதைக் கண்டேன். பெய் ஹெய் அருகே வில்லோ மரங்களில் பனிக்கட்டித் துகள்கள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன். ராங் கவிஞன் சென் சாங் இந்தக் காட்சியை – பென் ஹெய்யின் வெள்ளி நகை அணிந்த மரங்களைப் பற்றி “பத்தாயிரம் பீச் மரங்கள் ப+த்துக் குலுங்குமாப்போல்’’ என்று வர்ணித்ததை நினைவு கூர்ந்தேன். பீங்கினள் நகரின் எண்ணிலடங்கா மரங்கள் எனக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தின.

1919ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரான்சுக்கு செல்லும் மாணவர்களுடன் ஷாங்காய்க்குச் சென்றேன். ரியன்ட்ஸ் ரின் போவதற்கு மட்டுமே என்னிடம் பயணச் சீட்டு இருந்தது. அதற்கு அப்பால் செல்வதற்கு எனக்கு வழிவகை இருக்கவில்லை. “சொர்க்கம் ஒரு பயணியைத் தாமசிக்க வைக்காது’ என்று ஒரு சீனப் பழிமொழி சொல்லுமாப்போல் பீக்கிங்கிலுள்ள ஒகஸ்டே கொம்டே பாடசாலையைச் சேர்ந்த சிறிது பணம் வைத்திருந்த ஒரு சக மாணவன் வழங்கிய 10 யுவான் நல்லதிஷ்டக் கடன் மூலம் ப+ கூ வரை செல்வதற்கு பயணச் சீட்டை என்னால் வாங்க முடிந்தது. நான்கிங் போகும் வழியில் சூ ழு வில் இறங்கி கன் ப+ஷியஸின் சமாதிக்குச் சென்றேன் கன்ப+ஷியனின் சீடர்;;;;;;;ள் கால்களைக் கழுவும் ஒரு சிறிய நீரோடையைப் பார்த்தேன். அந்த ஞானி குழந்தையாக இருந்தபோது வாழ்ந்த சிறிய நகரத்தைப் பார்த்தேன். அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்கு அருகே அவர் ஒரு புகழ்பெற்ற மரத்தை நாட்டியதாக கூறப்படுகின்றது. அந்த மரத்தையும் நான் பார்த்தேன். கன்ப+ஷியஸின் புகழ்பெற்ற சீடர்களில் ஒருவரான யென் ஹ{ள் வாழ்ந்த இடத்திலுள்ள ஒரு ஆறு அருகேயும் சென்றேன். ஷான் டுங்கிலுள்ள புனித மலையாகிய ராய் ஷான் மலையில் ஏறினேன். இங்குதான் ஜெனரால் பெங் ய+ சியாங் ஓய்வு பெற்ற பிறகு தனது நாட்டுப்பற்றுமிக்க ஓலைச் சுவடிகளை எழுதினார்.

நான் ப+ கூ வை அடைந்ததும் மீண்டும் ஒரு செப்புக் காசும் இல்லாதவனாக ஆகினேன். அத்தோடு பயணச் சீட்டும் இருக்கவில்லை. எனக்கு கடனாகத்தர ஒருவரிடமும் பணம் இருக்கவில்லை. இந்த நகரத்தை விட்டு வெளிக்கிளம்ப எனக்கு ஒரு வழியும் புரியவில்லை. இதிலும் மோசமான துக்கரமான நிகழ்ச்சியாக என்னிடம் இருந்த ஒரே ஒரு சோடி சப்பாத்தையும் ஒரு கள்ளன் திருடிக் கொண்டான். எப்படி இனி நான் என்ன செய்யப்போகிறேன். ஆனால் மீண்டும் அதே கதை “சொர்க்கம் ஒரு பயணியை தாமதிக்க விடாது’’ எனக்கு ஒரு நல்லதிஷ்டம் கிடைத்தது. ரயில்வே நிலையத்திற்கு வெளியே ஹ{னாவைச் சேர்ந்த ஒரு பழைய நண்பசைன் சந்தித்தேன். அவன் எனக்கு “அதிஷ்ட தேவதையாக அமைந்தான். அவன் எனக்கு, ஒரு சப்பாத்துச் சோடி வாங்கவும் ஷாங்காய்க்குப் பயணச்சீட்டு வாங்குவதற்கும் போதுமான பணத்தை வழங்கினான். இதன்மூலம் பாதுகாப்பாக எனது பயணத்தை நிறைவேற்றினேன். எனது புதிய சப்பாத்துக்களிலும் ஒரு கண் பார்வையை எப்போதும் வைத்துக் கொண்டேன். பிரான்சுக்கு இந்த மாணவர்களை அனுப்புவதற்காக ஒரு கணிசமான பணம் ஷாங்காயில் சேகரிக்கப்பட்டிருந்தது. நான் ஹ{னானுக்குத் திரும்புவதற்கு எனக்கு ஒரு படித்தொகை வழங்கப்பட்டது. நான் எனது நண்பர்களை நீராவிக் கப்பலில் வழியனுப்பிவிட்டு மீண்டும் சாங்சாவி;ற்குத் திரும்புவதற்குப் பயன்பட்டேன். வடபகுதிக்கு நான் மேற்கொண்ட பயணத்தில் கீழ்கண்ட உல்லாசப் பயணங்களை மேற்கொண்டமை எனது நினைவில் உள்ளது.

ருங் ரிங் ஏரியைச் சுற்றி நடந்தேன். பாவோரிங் ப+ சுற்று மதிலைச் சுற்றி நடந்தேன் பெய் ஹாய் விரிகுடாவின் பனிக்கட்டியில் நடைபயின்றேன். சான் குவாவில் (மூன்று ராச்சியங்கள்) புகழ்பெற்ற நான்கிங் மதிலைச் சுற்றியும் நடந்தேன். இறுதியாக ராய் ஷான் மலையில் ஏறினேன். கன்ப+ஸின் சமாதியைப் பார்த்தேன். அப்போது துணிகரப் பயணங்கள் ஹ{னானில் நான் மேற்கொண்ட நடைப்பயண சாதனைகளோடு சேர்க்கக்கூடிய பெறுமதி மிக்க சாதனைகளாக இவற்றை கருதினேன்.

நான் சாங்கா திரும்பியபோது அரசியலில் சங்கா திரும்பியபோது அரசியலில் மேலும் கூடுதலான நேரடிப்பணியைக் கையேற்றேன். மே 4ஆம் திகதி இயக்கத்தின் பின்பு (“இரண்டாவது புரட்சியின்’’ தொடக்கம் என்றும் நவீன சீனத் தேசியவாதத் தொடக்கம் என்றும் கருதப்பட்டது) எனது வாழ்க்கையை மாணவர் அரசியல் நடவடிக்கைகளுக்;கு அர்ப்பணித்திருந்தேன். ஹ{னான் மாணவர்களின் பத்திரிகையான, “சியாங் நிவர் நெவ்ய+’’ என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தேன். தென் சீனாவில் இருந்த மாணவர் இயக்கத்திலே இது மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. சாஞ்சாவில் வென் - ஹ{வா ஷ{ஹ{ய் (கலாச்சார புத்தக சங்கம்) சங்கத்தை உருவாக்குவதில் நான் உதவினேன். இது நவீன கலாச்சார, அரசியல் போக்குகளைப் பயிலும் ஒரு சங்கமாகும். இந்தச் சங்கமும், விசேடமாக சின் மின் சுச் ஹ{ய் சங்கமும் அச்சமயம் ஹ{னானின் ருச்சுன் ஆக இருந்த சாங் சிங் யாவ்வைக் கடுமையாக எதிர்த்தன. இந்த ஆள் ஒரு கொடுரமான பேர்வழி, சாங்கைப் பதவி விலக்கக் கோரி நாங்கள் ஒரு பொது மாணவர் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டோம். இவருக்கு எதிராக கிளர்ச்சிக்கு உதவுமாறு, அப்போது தென்மேற்குப் பகுதியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த சன் யாட் சென்னுக்கும் பீக்கிங்குக்கும் தூதுக்குழுக்களை நாங்கள் அனுப்பினோம். மாணவர்;களுடைய எதிர்ப்புப் பதிலடியாக, சாங் சிங் யாவ், சியாங் ரிவர் ரெவ்ய+ சஞ்சிகையை அடக்கினார்.

இதன் பின்பு, புதிய மக்கள் ஆய்வுச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக, நான் பீக்கிங் சென்றேன். அத்தோடு அங்கு இராணுவ எதிர்ப்பு இயக்கம் ஒன்றை ஒழுங்கு செய்வதும் எனது நோக்கமாக இருந்தது. இந்தச் சங்கம் சாங் சிங் யாவ்வுக்கு எதிரான போராட்டத்தை ஒரு பொதுவான இராணுவத்துவ எதிர்ப்புப் போராட்டமாக விரிவுபடுத்தியது. இந்தக் கடமையை முன்னெடுப்பதற்கான ஒரு செய்தி அமைப்புக்கு நான் தலைவனானேன். ஹ{னானில் இந்த இயக்கத்துக்கு சில வெற்றிகள் கிடைத்தன. சாவ் சிங் - யாவ் ரான் யென் காய்யால் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு, சாங்சாவில் ஒரு புதிய ஆட்சி நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இதே சமயத்தில் இந்தச் சங்கம் இரண்டு பிரிவுகளாகியது. ஒன்று வலது சாரி, மற்றது இடது சாரி. கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கான திட்டத்தை இடதுசாரிப் பிரிவினர் வலியுறுத்தினார்.

1919ஆம் ஆண்டு நான் ஷாங்காய்க்கு மீண்டும் சென்றேன். இங்கு நான் மீண்டும் சென் ரு சியூவை (சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் முன்னோடி அமைப்பாளர்) சந்தித்தேன். அவரை முதலில் பீக்கிங்கில் நான் பீக்கிங் தேசியப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது முதற் தடவையாக சந்தித்திருந்தேன். வேறு எவரையும் விட அதிக அளவில் அவர் என்னில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்த நாட்களில் ஹ{ஷீயையும் சந்தித்தேன். ஹ{னான் மாணவர் போராட்டத்துக்கு அவரது ஆதரவைக் கோருவதற்காக அவரைச் சந்தித்தேன். ஷாங்காயில், சென் ரி –சிய+வுடன், ஹ{னானை மீளக் கூட்டமைப்பதற்கான சபை ஒன்று பற்றிய எங்களுடைய திட்டங்களையிட்டு விவாதித்தேன். பின்பு நான் காங்கா திரும்பி அதை உருவாக்கத் தொடங்கினேன். நான் சாங்சா திரும்பி அதை உருவாக்கத் தொடங்கினேன். நான் சாங்சா திரும்பி அதை உருவாக்கத் தொடங்கினேன். நான் அங்கு ஒரு ஆசிரியர் வேலையைப் பொறுப்பேற்றுக் கொண்டு அதேவேளையில், எனது நவீன மக்கள் ஆய்வுச் சங்கத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்தேன். ஹ{னானின் சுதந்திரத்துக்கான திட்டம் ஒன்று இந்த சங்கத்திடம் அப்போது இருந்தது. இது உண்மையில் சுயாட்சியையே குறிக்கும் வடபகுதி, அரசோடு ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவும், பீக்கிங்கிடமிருந்து தொடர்பை அறுத்துக் கொண்டால் ஹ{னானை விரைவா நவீனமயப்படுத்த முடியும் என்பதாலும் எங்களுடைய குழு பிரிவினைக்காகப் போராடியது அப்போது நான் அமெரிக்காவின் மன்றோ கோட்பாட்டுக்கும் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கும் பலமான ஆதரவாளனாக இருந்தேன்.

சாங் ஹெங் ரி என்ற ஒரு இராணுவத்துவவாதியால் ரான் யென் காய் பதவியிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டான். இந்த சாவ், ஹ{னான் சுதந்திர இயக்கத்தை தனது நன்மைக்காகப் பயன்படுத்திக் கொண்டான். இதற்கு ஆதரவு தருபவன் போல் அவன் நடித்தான். “சீன ஐக்கிய சுயாட்சி மாநிலங்கள் என்ற கருத்தை முன் மொழிந்தான். ஆனால் பதவிக்கு வந்த உடனேயே ஜனநாயக இயக்கங்களை அவன் கடுமையாக அடக்கி ஒடுக்கினான். எங்கள் சங்கம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை கேரியது@ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு ஒன்றைக் கோரியது. பொதுவாக ஒரு ப+ர்ஷ{வப ஜனநாயகத்துவதற்கான கட்டமைப்பை ஏற்றுக் கொண்டிருந்தது. எங்கள் பத்திரிகையான நவீன ஹ{னாவில் இந்தக் கோரிக்கைகளை வெளிப்படையாகவே நாங்கள் முன் மொழிந்தோம். நாங்கள் மாகாணப் பாராளுமன்றத்தின் மீது ஒரு தாக்குதலுக்கு வழிவகுத்தோம். இந்த மன்றத்தில் பெரும்பாலானவர்கள் நில உடமையாளர்களாகவும் பிரபுக்களாகவும் இருந்தனர். இவர்கள் இராணுவத்துவவாதிகளால் நியமிக்கப்பட்டிருந்தனர். அர்த்தமற்ற பயனற்ற சொற்றொடர்களைக் கொண்டிருந்த கொடிகளையும் ஓலைச்சுவடிககளையும் நாங்கள் அடித்து நொறுக்குவதில் எங்கள் போராட்டம் முடிவுற்றது.

பாராளுமன்றம் மீதான தாக்குதல், ஹ{னானில் ஒரு பெரிய நிகழ்வாகக் கருதப்பட்டதோடு, ஆட்சியாளர்களைத் திகிலடைய வைத்தது. இருப்பினும் சாவ் ஹெங் ரி ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது, தான் ஆதரித்த அனைத்துக் கருத்துக்களுக்கும் மாறாக நடந்தான். விசேடமாக ஜனநாயகத்துக்கான அனைத்துக் கோரிக்கைகளையும் கொடூரமாக அடக்கி ஒடுக்கினான். ஆகவே எங்களுடைய சங்கம் போராட்டத்தை அவனுக்கு எதிராக திருப்பியது. 1920ல் இடம் பெற்ற சம்பவம் ஒன்று எனது நினைவுக்கு வருகின்றது. அந்த வருடத்தில் சின் மின் சு ஹ{ய் சங்கம் மகா ஒக்டோபர் புரட்சியின் மூன்றாவது, ஆண்டு விழாவைக் கொண்டாட ஒரு ஆர்ப்பாட்;ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்தது இது காவற்துறையால் அடக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சில ஆர்ப்பாட்டக் காரர்கள் செம்பதாதையை உயர்த்த முயன்றனர். காவற்துறை தடுத்தமையினால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 12 ஆவது ஷரத்தின்படி மக்கள் ஒழுங்கு கூட, கூட்டங்களை ஒழுங்கு செய்ய, சொற்பொழிவாற்ற உரிமை உடையவர்களாக இருக்கின்றார்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக் காட்டினார்கள். காவற்துறையினர் இதைக் கருத்திற்கெடுக்கக்வில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை கற்றுக் கொள்வதற்காகத் தாங்கள் அங்கு வரவில்லை. ஆளுநர் சாங்ஹெங் ரியின் கட்டளையை நிறைவேற்றவே வந்துள்ளதாகக் காவற்துறையினர் பதிலளித்தனர். “மக்களின் நடவடிக்கை மூலம் பெறப்படும் மக்கள் அரசியல் அதிகாரம் மட்டும்தான் உத்வேகமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் என்பதில் இந்த நேரத்திலிருந்து மேலும் மேலும் நம்பிக்கையுறுதி கொள்ளத் தொடங்கினேன்.

1920 ஆம் மாரிக்காலத்தில், நான் முதன் முறையாக அரசியல் ரீதியில் தொழிலாளர்களை ஒழுங்குப்படுத்தத் தொடங்கினேன். இந்த விடயத்தில் மாக்ஸ்சிசத்தினதும் ரஷ்ய புரட்சியினதும் வழிநடத்தலானேன். பீக்கிங்கிற்கு நான் இரண்டாவது முறை சென்றபோது, ரஷ்யாவில் இடம் பெறும் சம்பவங்களைப் பற்றி அதிகம் படித்திருந்தேன். அப்போது சீனமொழியில் கிடைக்கக் கூடியமிகக் குறைவான கம்ய+னிஸ்ட் இலக்கியங்களையும் ஆவலோடு தேடினேன். மூன்று புத்தகங்களை விசேடமாக என்மனதைக் கவர்ந்தன. அத்தோடு என் மனதில் இப் புத்தகங்கள் மார்க்ஸியம் மீதான நம்பிக்கையை உருவாக்கின. வரலாற்றின் சரியான விளக்கம் என்று ஒரு முறை இதை நான் ஏற்றுக் கொண்டபின்பு நான் அந்த நிலையில் இருந்து வழுவவில்லை. சீன மொழியில் முதன் முதல் செங் லாங் ராவ்வினால் மொழி பெயர்க்கப்பட்ட மார்க்ஸியப் புத்தகமாக “கம்ய+னிஸ்ட் அறிக்கை (ஊழஅஅரnளைவ ஆயnகைநளவழ) இதில் ஒன்றாகும். காவ்ட்ஸ்கியின் வர்க்கப் போராட்டம் “சோஷலிச வரலாறு’’ என்ற சேக்கப்பால் எழுதப்பட்ட நூல் ஏனையவையாகும். 1920ஆம் ஆண்டு கோடை காலத்தில் நான் சிந்தனையிலும் ஓரளவுக்கு செயற்பாட்டினுள் ஒரு மார்க்ஸியவாதியாகக் கருதத் தொடங்கினேன். இதே வருடத்தில் நான் யாங்காய் ஹ{ய்யை திருமணம் செய்து கொண்டேன். (யாங் காய் ஹ{ய்யுடனான தனது வாழ்க்கை பற்றி, மாவோ பின்பு அவர் கொல்லப்பட்டதைத் தவிர வேறெதும் கூறவில்லை. அவர் பீக்கிங் தேசிய பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவியாக இருந்தார். பின்பு மகா புரட்சியின்போது ஒரு இளைஞர் தலைவியானார். அத்தோடு ஒரு தீவிர பெண் கம்ய+னிஸ்ட்டும் ஆனார். ஹ{னானில் உள்ள தீவிரவாத இளைஞர்களிடையே அவர்களது திருமணம் ஒரு கொள்கைத் திருமணமாகக் கொண்டாடப்பட்டது)

தேசியவாத காலகட்டம்

மாவோ தற்போது ஒரு மார்க்ஸியவாதியாக இருந்தார். ஆனால் ஒரு கம்ய+னிஸ்ட்டாக ஆகவில்லை. ஏனென்றால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கம்ய+னிஸ்ட் கட்சி இன்னமும் சீனாவில் இருக்கவில்லை. பீக்கிங்கில் வாழ்ந்த ரஷ்யர்கள் மூலமாக, சென் ரு கிய+ அவர்களும் லி ரா சாவ் அவர்களும் கம்ய+னிஸ்ட் சர்வதேசியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 1920 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் போதுதான் கம்ய+னிஸ்ட் அகிலத்தின் உத்தியோக பிரதிநிதி கிரிகோரி வோய்ட்டின்ஸ்கி பீக்கிங் வந்து சேர்ந்தார். ரஷ்ய கம்ய+னிஸ்ட் கட்சி உறுப்பினரான யாங் மிங் சாய் அவர்களும் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்ற அவருடன் வந்திருந்தார். அவர்கள் லி ரா சாவ் அவர்களுடனும் பெரும்பாலும் லீயினுடைய மார்க்ஸிய கோட்பாடு ஆய்வுச் சங்கத்தின் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினார். அதே வருடத்தில் மூன்றாவது அகிலத்தின் டச்சுப் பிரதிநிதியும் உற்சாகமும் இணங்குவிக்கும் திறன் உடையவருமான ஜான் ஹென்ட்ரிக்கன் ன்னீவ்லியட் (சீன மொழியில் ரி சான் குவோ சி) ஷாங்காய்க்கு வந்திருந்தார். அங்குள்ள தீவிர சீனக் கம்ய+னிஸ்ட்டுகளுடன் தொடர்பு கொள்ளவே அவர் வந்திருந்தார். 1920 மே மாதத்தில் சென் அவர்கள் தான், ஒரு மத்திய கம்ய+னிஸ்ட் குழுவை ஸ்தாபித்த ஒரு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இதன் சில உறுப்பினர்கள் (பீக்கிங்கில் உள்ள லி ரா சாவ் குழு சென் அவர்களால் காண்டனில் அமைக்கப்பட்ட மற்றொரு குழு, ஷாண்டுங், ஹ{ப்பேயிலுள்ள குழுக்கள், ஹ{னானில் உள்ள மாவோவின் குழு) அடுத்த வருடம் ஷாங்காயில் இடம் பெற்ற மாநாட்டின் அமைப்பாளர்கள் ஆகினார்கள். இவர்கள் வோய்ட்றன்ஸ்கியின் உதவியுடன் முதலாவது சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் காங்கிரசைக் கூட்டினார்கள்.

இதை 1937 இல் நினைவுகூரும்போது வயதில் இளமையாக இருந்த சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்ததோடு உலகத்திலேயே ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பலம்மிக்க கம்ய+னிஸ்ட் நீங்கலாக தனக்கென்று சொந்த இராணுவத்தைக் கொண்டிருந்த ஒரே ஒரு கம்ய+னிஸ்ட் கட்சியும் சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியாகத்தான் இருந்தது.

மற்றொரு இரவு மாவோ தனது கதையை தொடர்ந்தார் :-

1921 மே மாதம் கம்ய+னிஸ்ட் கட்சியின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் ஷாங்காய் சென்றேன். இதன் அங்குரார்ப்பணத்தில் முன்னோடிக் கடமைகள் சென் ரு சியு அவர்களாலும் லி ரா சாவ் அவர்களாலும் செய்யப்பட்டன. இந்த இருவருமே சீனாவின் மிகச் சிறந்த புத்தி ஜீவித் தலைவர்களுள் இருவராக இருந்தார்கள். லி ரா சாவ்வின் கீழ், பீக்கிங் தேசியப் பல்கலைக்கழகத்தின் உதவி நூலகராக நான் விரைவாக மார்க்ஸியத்தை நோக்கி விருத்தியடைந்தேன். இந்தப் பாதையை நோக்கிய எனது ஆர்வத்திற்கு சென் ரு சியு அவர்களும் ஊன்றுகோலாக இருந்தார். ஷாங்காய்க்கான எமது இரண்டாவது பயணத்தின்போது நான் படித்திருந்த மார்க்ஸியப் புத்தகங்களைப் பற்றி சென்னுடன் நான் கலந்துரையாடியிருந்தேன். நம்பிக்கை பற்றிய சென்னின் சொந்த விளக்கங்கள் எனது வாழ்க்கையின் மிகவும் தீர்க்கமான அந்தக் காலகட்டத்தில் என்னில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

ஷாங்காயில் இடம்பெற்ற அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டத்திலே (கட்சியின் முதலாவது தேசியக் காங்கிரஸ்) என்னைவிட மற்றுமொரு ஹ{னான்வாசியே இருந்தார். (மாவோவின் பழைய நண்பரான ஹோஷ் ஹெங். இவர் 1935ல் கோமிண்டாங்கினால் கொல்லப்பட்டார்) அதில் பங்கு பற்றிய ஏனையோர் பின்வருமாறு @ சாங் குவோ ராவ் (தற்போது செஞ்சீன இராணுவத்தின் இராணுவ கவுன்சில் உதவித் தலைவர்) பாவ்ஹ{ய்ஷெங், சூ ப+ ஷாய் ஆகியோராவர். எல்லாமாக எங்களில் 12 பேர் இருந்தோம். ஷாங்காயில் (தேர்ந்தெடுக்கப்பட்ட) கட்சியின் மத்தியக் குழுவில் இருந்தோர் விபரம் பின்வருமாறு @ சென் ரு சிய+, சாங் குவோ ராவ், சென் குங் போ ஷி செங் ரூங் (தற்போது நான்கிங்கில் ஒரு அதிகாரி) சுன் யுவான் லு, லி ஹான் சுன், (1972 ல் வு ஹானில் கட்சியின் முதலாவது மாகாணக் கிளை அமைக்கப்பட்டது. அதில் நானும் ஒரு உறுப்பினரானேன். ஏனைய மாகாணங்களிலும் நகரங்களிலும் ஸ்தாபனங்கள் நிறுவப்பட்டன. ஹிப்பே உறுப்பினர்களில் ருங் பி வ+. (தற்போது பாவோ அன்னில் உள்ள கம்ய+னிஸ்ட் கட்சிப் பாடசாலையின் அதிபர்) சு பாய் ஹாவ், ஷி யங்; (1923ல் மரண தண்டனைக்களானர்) ஆகியோர் இருந்தனர். கட்சியின் ஷென்சி கிளையில் காவோ சுங் ய+ (காவ் காங்) மேலும் பல மாணவர் தலைவர்களும் இருந்தனர். கட்சியின் பீக்கிங் கிளையில் வீ ரா ராவோ (1927ல் ஏனைய 19 கம்ய+னிஸ்ட் உறுப்பினர்;களோடு மரண தண்டனைக்குள்ளானார் ரெங் சுங் சியா, 1934ல் சியாங் கேய் ஷேக்கால் கொல்லப்பட்டர்) லோ சுங் லன், லிய+ சென் - ஜிங் (தற்போது ஒரு ட்ராட்ஸ்கியவாதி) வேறுபலர் இருந்தனர். காண்டன் கிளையில் லின் போ – சு, (லின் சு ஹான்) தற்போது சீன சோவியத் அரசில் நிதி ஆணையாளராக உள்ளார். பெங் பாய் (1929 ல் மரணதண்டனைக்குள்ளானார்.) ஆகியோர் இருந்தனர். வாங் சுன் - மெய் மற்றும் ரெங் என் - மிங் ஆகியோர் ஷாண்டுங் கட்சிக் கிளை ஸ்தாபன உறுப்பினர்களில் அடங்குவர்.

இதனிடையே, பிரான்சில், அங்கிருந்த தொழிலாளர் மாணவர்களால் ஒரு சீனக் கம்ய+னிஸ்ட் கட்சி தொடக்கப்ட்ட அதே வேளையில் இந்தக் கட்சியும் ஸ்தாபிக்கப்பட்டது. கட்சி ஸ்தாபகர்களில் (கம்ய+னிஸ்ட் இளைஞர் சங்கம் சூ என் - லாய், லி – லி – சான், சியாங் சிங்;;; - வ+ த்சாய ஹோ சென்னின் மனைவியார்) லோ சென், லோ மான் (லீ வெய் - ஹான்) த்சாய் ஹோ சென் ஆகியோர் அடங்குவர். ஜெர்மனியிலும் ஒரு சீனக் (கம்ய+னிட்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் சிறிது காலம் பிந்தியே தொடக்கப்பட்டது. காவ் ய+ - ஹான், சூ டே (தற்போது செஞ்சீன இராணுவத்தின் தலைமைக் கமாண்டர்) சாங் ஷெற் - பு (தற்போது சின்குவா பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர்) ஆகியோர் இதன் உறுப்பினர்களாவார். பாயும் ஏனையோருமாவர். யப்பானில் சூ யு - ஹாய் உறுப்பினராக இருந்தார்.

நான் செயலாளராக இருந்த ஹ{னான் கம்ய+னிஸ்ட் கிளை, 1922 மெ மாதம் அளவில் ஏற்கனவே சுரங்கத் தொழிலாளர், ரயில்வே ஊழியர்கள் மாநகரசபை வேலையாட்கள், அச்சக ஊழியர்கள், அரச நாணயம் அச்சிடும் தொழிலாளர்கள் ஆகியோரிடையே 20க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களை உருவாக்கியிருந்தனர். அந்த வருடம் குளிர்காலத்தில் ஒரு உத்வேகமான தொழிலாளர் இயக்கம் உருவாகியது. அந்த நேரத்தில் கம்ய+னிஸ்ட் கட்சியின் செயற்பாடுகள் பிரதானமாக மாணவர்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் தான் கூடுதலாக நடாத்தப்பட்டன விவசாயிகளிடையே மிகக் குறைவான அளவிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான பெரிய சுரங்கங்களும், கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் ஸ்தாபனமயப்படுத்தப்பட்டனர். மாணவர், தொழிலாளர் ஆகிய இருதரப்பு முனைகளிலும் ஏராளமான போராட்டங்கள் இடம்பெற்றன. 1922 குளிர்காலத்தில் ஹ{னானின் ஆளுநரான சாவோ ஹெங் - ரி, ஹ{வாங்அய், பாங் யுவான் - சிங் என்ற இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார். இதன் விளைவாக அவருக்கெதிராக பரவலான கிளர்ச்சி ஏற்பட்டது. கொலை செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களில் ஒருவரான ஹ{வாங் அய் ஒரு வலதுசாரி தொழிற்சங்கத்தின் தலைவராவார். இந்தக் தொழிற்சங்கம், கைத்தொழிற் பாடசாலை

மாகாண கோமிண்டாங் கட்சியிலும் மாவோ ஒரு முன்னணி உறுப்பினராக இருந்தார் அடோல்ப் ஜோபேயுடன் சுன்;;;;;;;;;;;;;;யாட் சென் ஏற்படுத்திக் கொண்ட இரு கட்சிக் கூட்டணி ஒப்பந்தத்தின் பின்பு சுன் யாட் சென் கோமின் டாங் கட்சியினுள் கம்ய+னிஸ்ட் எதிர்ப்புச் சக்திகளை ரகசியமாக அகற்றத் தொடங்கினார். கட்சியை ஹ{னானில் மறு சீரமைப்பதற்கு, சுன் யாட் சென் தனது பழைய சகபாடி, லின்த்சு ஹான், மா சே துங், சியாசி ஆகியோருக்கு அதிகாரம் அளித்தார். 1923 ஜனவரி சாரிகளை ஒரு தீவிரவாதக் கருவியாக அவர்கள் மாற்றியிருந்தார். மாணவர்களிடையே தனத தனத்தைக் கொண்டிருந்தது. அத்தோடு அது எங்களுக்கு எதிரானதாகவும் இருந்தது. ஆனால் இந்த விடயத்திலும் வேறு பல போராட்டங்களிலும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்கினோம்.

தொழிங் சங்கங்களில் அராஜவாதிகளும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அப்போது இந்தத் தொழிற் சங்கங்கள் அனைத்தும், அனைத்து ஹ{னான் தொழிலாளர் பிரதிநிதிகள் சபை என்ற அமைப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அவர்களுடன் நாங்கள் சமரச உடன்பாடு கொண்டிருந்தோம். அத்தோடு பேச்சு வார்த்தை மூலமாக அவர்கள் எடுக்கவிருந்த அவசரமான, பயனற்ற நடவடிக்கைகள் பலவற்றைத் தடுத்து நிறுத்தினோம். சாங் ஹெங் - ரிக்கு எதிரான இயக்கத்தை ஒழுங்கு செய்து உதவ நான் ஷாங்காய்க்கு அனுப்பப்பட்டேன். 1922 குளிர் காலத்தில் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் கூட்டம், ஷாங்காயில் கூட்டப்பட்டது. அதில் கலந்துகொள்ள நான் விரும்பினேன். இருப்பினும் அந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாமற் போய்விட்டது. நான் ஹ{னானுக்குத் திரும்பி தொழிற் சங்கங்கட்கிடையேயான எனது வேலையில் தீவிரமாக ஈடுபட்டேன். அந்த வருடம் வசந்த காலத்தில், மேம்பாடான ஊதியத்திற்காகவும், மேம்பாடான தொழிற் கௌரவத்திற்காகவும், தொழிற்சாலைகளை அங்கீகரிக்க வேண்டுமென்றும் பல வேலைநிறுத்தங்கள் இடம்பெற்றன. அவற்றில் பெரும்பாலானவை வெற்றி பெற்றன. மே 1 ஆம் திகதி ஹ{னானில் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டது. சீனாவில் தொழிலாளர் இயக்கத்தின் முன்னெப்போதும் இல்லாம பலத்துக்கு இந்த சாதனை கட்டியம் கூறியது.

1923, மே மாதம், கம்ய+னிஸ்ட் கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் காண்டனில் நடைபெற்றது. கோமிண்டாங் கட்சியுடன் சேருவது, அதனுடன் ஒத்துழைப்பது அத்தோடு, வடபகுதி இராணுவாதிகளுக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்ற வரலாற்றுப் புகழ்மிக்க தீர்மானம் இங்குதான் எடுக்கப்பட்டது. நான் ஷாங்பாய் சென்று கட்சியின் மத்திய (1924) நான் காண்டனுக்குச் சென்று கோமிண்டாங் கட்சியின் முதலாவது தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

மார்ச் மாதத்தில், நான் ஷாங்காய் திரும்பி கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்றுக் குழு (மத்தியகுழு)விலும் ஷாங்காயிலுள்ள கோமிண்டாங் கட்சியின் நிறைவேற்றுக்குழு (மத்திய நிறைவேற்றுக்குழு)விலும் எனது கடமையை ஒருங்கிணைந்த முறையில் செய்தேன். இந்தக் குழுவின் அப்போதைய ஏனைய உறுப்பினர்களில் வாங் சிங் - வெய் (பின்னாளில் நான்கிங்கில் பிரதமர்) ஹ{ஜ ஹான் மின் ஆகியோர் அடங்குவார். கம்ய+னிஸ்ட் கட்சி, கோமிண்டாங் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியில் மேற்குறிப்பிட்டவர்களின் இணைந்து நான் செயற்பட்டேன். (கம்ய+னிஸ்ட் கட்சியும் தேசியவாதக் கட்சியினரும் 1925ல் 1ஆவது ஷாங்காய் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தை உருவாக்கினார்கள். இதன் விளைவாக மே 30 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது. அந்நிய நாட்டில் பிராந்தியங்களை ஏற்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவருமாறும் ஷாங்காய் சர்வதேசக் குடியிருப்பின் ஆளுமையை சீனாவுக்குத் திருப்பித் தருமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானியக் குடியிருப்பு காவற்துறையினர் துப்பாக்கியால் சுட்டு, பலரைக் கொன்றனர். பிரித்தானியப் பொருட்களைப் பகிஷ்கரிக்கும் நடைமுறைக்கு இது வழிகோலியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னணி அமைப்பாளர்கள் லிய+ஷா – சீ, சென் - யுன் ஆகியோராவர்) அந்த வருடத்தில் வம்போவா இராணுவ பயிற்சிக் கல்லூரி திறக்கப்பட்டது. காலில் அதன் ஆலோசகரானார். ரஷ்யாவில் இருந்து சோவியத் ஆலோசகர்கள் வந்து சேர்ந்தனர் கம்ய+னிஸ்ட் கட்சி கோமிண்டாங் கட்சிக் கூட்டிணைப்பு ஒப்பந்தம் ஒரு நாடு தழுவிய புரட்சிகர இயக்கமாக வளர்ச்சியடைய தொடங்கியது. அடுத்த குளிர்காலத்தின் போது ஓய்வுக்காக நான் ஹ{னான் திரும்பினேன். நான் ஷாங்காயில் சுகவீனமுற்றேன் ஆனால் நான் ஹ{னானில் இருக்கும் போது அந்த மாகாணத்தின் மாபெரும் விவசாய இயக்கத்தின் மையத் தளத்தை நான் ஒழுங்குபடுத்தினேன்.

முன்பு விவசாயிகளிடையே, வர்க்கப் போராட்டத்தின் பரிமாணத்தை நான் முழுமையாக உணர்த்திருக்கவில்லை. ஆனால் மே 30 நிகழ்ச்சிக்குப் பின்பு (1925) அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற ஒரு பாரிய அரசியல் நடவடிக்கை அலையின்போது, ஹ{னானிய விவசாயிகள் மிகுந்த தீவிரவாதிகளாக மாறினர். நான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எனது வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கிராமிய அமைப்புருவாக்கும் இயக்கத்தைத் தொடக்கினேன். சில மாதங்களுக்குள்ளாகவே இருபது மேற்பட்ட விவசாய சங்கங்களை நாங்கள் நிறுவினோம். அத்தோடு நிலப்பிரபுக்களின் கோபத்தைக் கிளறி விட்டோம். அவர்கள் என்னைக் கைது செய்யுமாறு கோரினார்கள். என்னைத் தேடி சாங் ஹெங் - ரி துரும்புக்களை அனுப்பினார், நான் காண்டனுக்குத் தப்பியோடினேன். சரியாக அந்த நேரத்தில் வரம்போவா இராணுவப் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் யுவான் இராணுவத்துவவாதி யாங் சீ மிங்கையும், குவாங்கி இராணுவத்துவாதி லு த்சுங் - வாய்யையும் தோற்கடித்திருந்தனர். அந்த டாங் கம்ய+னிஸ்ட் கட்சிகளிடையேயான ஐக்கியம் மீளவும் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, 1926 ஆம் வருட வசந்த காலத்தின்போது நான் ஷாங்காய்க்குச் சென்றேன். அந்த வருடம் மே மாத்தில் ஷியாங் கேய் ஷேக்கின் தலைமையில் கோமிண்டாங் கட்சியின் இரண்டாவது முழு மாநாடு நடைபெற்றது. (இந்தக் கூட்டத்தில் மாவோ கலந்து கொண்டார். இக் கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழுவின் மாற்று உறுப்பினராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்) ஷாங்காயில், கம்ய+னிஸ்ட் கட்சியின் விவசாப்பிரிவில் நான் பணிப்பாளராகக் கடமையாற்றினேன். அங்கிருந்த ஹ{னானுக்கு அனுப்பட்டேன். கோமிண்டர்ங், கம்ய+னிஸ்ட் கட்சிகள் இரண்டுக்கும் விவசாயிகள் பரிசோதகராகக் கடமையாற்றவே அங்கு அனுப்பப்பட்டேன். இதற்கிடையில் கம்ய+னிஸ்ட் கட்சி கோமின்டாங் கட்சி ஆகியவற்றின் கூட்டு முன்னணி தலைமையில், 1926ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், வரலாற்றுப்புகழ்பெற்ற வடக்கு நோக்கிய படைநடப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஹ{னானில், நான் விவசாயிகள் அமைப்புக்களையும் அரசியல் நிலைமைகளையும் 5 சி யென் பகுதிகளில் (காங்சா, லி லிற், சியாங் ரான், ஹ{ங் ஷான், சியாங் சியாங்) பரிசோதித்து எனது அறிக்கையை ஹ{னானில் விவசாயிகள் இயக்க மீதான ஒரு ஆய்வறிக்கை கட்சி மத்திய குழுவுக்குச் சமர்ப்பித்தேன். இதில் விவசாய இயக்கம் பற்றிய கோட்பாட்டின் ஒரு புதிய வழியை உருவாக்குமாறு கோரியிருந்தேன். அடுத்த வசந்த காலத்தில் முற்பகுதியில் நான் வுகானைச் சென்றடைந்தபோது, மாகாணங்களுக்கிடையிலான விவசாயிகள் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் நான் கலந்து கொண்டு எனது ஆய்வுக் கட்டுரையின் பரிந்துரைகளை பற்றிக் கலந்துந்துரையாடினேன். ஒரு பரந்த அடிப்படையிலான காணிப் பங்கீடு பற்றி இதில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பெங் பாய், பாங் சி மின் மற்றும் ஜோல்க், வோலன் என்ற இரண்டு ரஷ்யக் கம்ய+னிஸ்ட்டுக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டர். கம்ய+னிஸ்ட் கட்சியின் 5 – வது காங்கிரசில் எனது முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான ஒரு தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டது. ஆனால் கட்சியின் மத்திய குழு இதனை நிராகரித்தது.

1927 மே மாதத்தில் கட்சியின் 5ஆவது காங்கிரஸ் மாநாடு, வுகானில் கூட்டப்பட்ட பொழுதும் கூட கம்ய+னிஸ்ட் கட்சி சென் ரு சிய+வின் ஆதிக்கத்தினுள்ளேயே இருந்தது. ஷியாங் கேய் ஷேக் ஏற்கனவே எதிர்ப் புரட்சியைத் தொடங்கியிலுருந்ததோடு, ஷாங்காயிலும் நான்கிய்கிலும் கம்ய+னிஸ்டுக்கள் மீதான தனது தாக்குதலையும் ஆரம்பித்திருந்தேன். அனைத்து எதிர்ப்புகளுக்கும் மத்தியில், அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு, வுகான் கோமிண்டாங் கட்சிக் கிளைக்கு சலுகைகளை வழங்கியதோடு, அவர்கள் மீது பொறுமையைக் கடைப்பிடிக்கும், கொள்கையை அவர் பின்பற்றினார். அத்தோடு அவர் ஒரு வலதுசாரி, சந்தர்ப்பவாத குட்டி ப+ர்ஷவாக் கொள்கையைக் கடைப்பிடித்தார். கட்சியின் கொள்கை மீது அப்போது நான் மிகுந்த அதிருப்தி கொண்டிருந்தேன். விசேடமாக விவசாயிகள் இயக்கத்தின் மீதான கட்சியின் கொள்கைகளையிட்டு அதிருப்தி அடைந்திருந்தேன். விவசாய இயக்கத்தை மேலும் முழுமையாக ஸ்தாபன மயப்படுத்தி, நிலப்பிரபுக்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்திற்கு, அவர்களை ஆயுதமயப்படுத்தி, நிலப்பிரபுக்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்திற்கு ஆயுதபாணிகளாயிருந்தால் (சீன) சோவியத் அரசுகள் மேலும் அதிகரித்த அளவிலான சக்தி வாய்ந்த அபிவிருத்தியை நாடு முழுவதிலும் முன்பே அடைந்திருக்கும் என்று நான் தற்போது கருதுகின்றேன்.

ஆனால் சென் ரு சியு கடுமையாக இதற்கு மாறுபட்டார். (ஸ்டாலினும் அவ்வாறே மாறுபட்டிருந்தார். 5 ஆவது காங்கிரசின் இறுதிக் கூட்டத்தின் கூட்டத்தில் மாவோ இருக்கவில்லை. “மக்களின் எதிர்களான பெரும் நிலப்பிரபுக்களிடமிருந்தே காணி பறிமுதல் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்ற தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இது ஸ்டாலினின் பணிப்புரை அடிப்படையிலேயே நிகழ்ந்தது.) புரட்சியில் விவசாயிகளின் பங்களிப்பைப் பற்றி சென் விளங்கிக் கொள்ளவில்லை. இந்தப் பங்களிப்பின் சாத்தியக் கூறுகள். வாய்ப்பு வளங்கள் பற்றி அவர் வெகுவாகக் குறைந்தே மதிப்பிட்டார். ஆகவே மாபெரும் புரட்சிக்கு சிறிது முன்னதாக இடம் பெற 5வது காங்கிரஸ், ஒரு போதுமான அளவினதான காணிச் சீர்திருத்த திட்டத்தை நிறைவேற்றத் தவறவிட்டது. விவசாயப் போராட்டத்தை விரைவாகத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற எனது எண்ணக் கருத்துக்கள் (மகா நாட்டில்) விவாதிக்கப்படக்கூடஇல்லை. சென் ரு – சியுவாலேயே ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்த மத்தியகுழு, அவற்றை ஆய்வுக்கு எடுப்பதற்குக்கூட மறுத்துவிட்டது. நிலப்பிரபு என்பவர், 500 மௌ (33 ஹெக்டேயர் அளவு பரப்பு) காணிக்குமேல் வைத்திருக்கும் ஒரு விவசாயியே என்று வரையறை செய்ததன் முழுமையாகப் போதுமானதாக விருத்தி செய்வதற்கு முழுமையாகப் போதுமானதாக இல்லாத நடைமுறைப்படுத்த முடியாத ஒரு அடிப்படை இதுவாகும். அத்தோடு சீனாவின் காணி ரீதியான பொருளாதாரத்தின் விசேட குணவியல்புகளை சிறிதளவும் கருத்துக் கொடுக்காத ஒரு அடிப்படை இதுவாகும். இருப்பினும் காங்கிரசைத் தொடர்ந்து, அனைத்து சீன விவசாயிகள் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராக நான் பொறுப்பேற்றேன். 1927ஆம் ஆண்டு வசந்த காலம் அளவில், ஹ{பே, கியாங்கி, ப+கியன், விசேடமாக ஹ{னான் ஆகிய பகுதிகளிலிருந்த விவசாய சங்கங்கள் (கம்ய+னிஸ்ட் கட்சி இவற்றின் மீது ஒரு ஆர்வமற்ற போக்கைக் கொண்டிருந்தபோதும்) திடுக்கிட வைக்கும் அளவுக்குத் தீவிரவாதப் போக்குடையவை ஆகியன. இது கோமின்டாங் கட்சியையும் நிச்சயமாக எச்சரிக்கை கொள்ள வைத்தது. உயர் அதிகாரிகளும் இராணுவ கமாண்டர்களும் விவசாயிகள் சங்கத்தை ஒரு, சோம்பேறி நாடோடிக் கூட்டம் என்று வர்ணித்ததோடு, அதன் நடவடிக்கைகளும் கோரிக்கைகளும் மிதமிஞ்சியவை என்றும் குற்றஞ்சாட்டினர். அத்தோடு அது அடக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். சென் ரு சியு ஹ{னானில் இருந்து பின்வாங்கி, அங்கு இடம்பெறும் சில நிகழ்வுகளுக்கு நானே பொறுப்பாளர் என்று கூறினர். அத்தோடு எனது எண்ணக் கருத்துக்களை அவர் கடுமையாக எதிர்த்தார். (எல்லாப் பெரிய காணிகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்னும் ஹ{னான் விவசாயிகள் சங்கத்தின் முன்மொழிவுகளை மாவோ ஆதரித்தார். அல்லது அவரே பெரம்பாலும் உருவாக்கினார்)

ஏப்ரல் மாதமளவில் ஷாங்காய், நான்கிற் ஆகிய இடங்களில், எதிர்ப் புரட்சி இயக்கம் தொடங்கி விட்டது. ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட தொழிலாளர் படுகொலை சியாங் கேய் ஷேக் தலைமையில் இடம்பெற்றது. இதே நடவடிக்கைகள் காண்டனிலும் மேற்கொள்ளப்பட்டன. சு – கோ – சியாங் எழுச்சி, மே 21 ம் திகதி ஹ{னானில் இடம் பெற்றது. பிற்போக்குவாதிகளால் ஏராளமான விவசாயிகளும் தொழிலாளர்களும் கொலை செய்யப்பட்டனர். இதற்கு சிறிது பிற்பாடு, கோமிண்டாங் இடது சாரிப்பிரிவு, கம்ய+னிஸ்ட் கட்சியிலுடனான ஒப்பந்தத்தை வுகானில் வைத்து தள்ளுபடி செய்தது. அத்தோடு கம்ய+னிஸ்ட்டுகளை கோமிண்டாங் கட்சியிலிருந்து “வெளியேற்றியது’’ அரசிலிருந்து கம்ய+னிஸ்டுக்கள் நீக்கப்பட்டமையால் விரைவில் அரசாங்கமே இல்லாதொழிந்தது.

தற்போது பல கம்ய+னிஸ்ட் தலைவர்களை, நாட்டை விட்டு வெளியேறும்படி கட்சி உத்தரவிட்டது. ரஷ்யா, ஷாங்காய், அல்லது பாதுகாப்பான இடங்களுக்;குச் செல்லும்படி உத்தவிடப்பட்டது. சிச்சுவானுக்குச் செல்லும்படி எனக்கு உத்தரவு கிடைத்தது. இதற்குப் பதிலாக என்னை மாகாணக் குழுவில் செயலாளனாக என்னை ஹ{னானுக்கு அனுப்பும்படி சென் ரூ - சியுவை இசைய வைத்தேன். ஆனால் பத்து நாட்களின் பின்பு, வுகானில் தலைவராக இருந்த ராங் ஷெங் சீக்கு எதிராக ஒரு எழுச்சியை நான் ஒழுங்கு செய்வதாகக் குற்றம் கூறி என்னை உடனடியாகத் திருப்புமாறு அவர் கட்டளையிட்டார். தற்போது கட்சியின் செயல் முறைகள் பெரும் குழப்பமாக இருந்தன. சென் ரூ சிய+வின் தலைமையை, ஏறத்தாழ ஒவ்வொருவரும் எதிர்த்தார்கள். அத்தோடு அவரது சந்தப்பவாத வழிமுறையையும் எதிர்த்தார்கள். வுகானில் இது சம்பந்தப்பட்ட குழுக்;களின் வீழ்ச்சி மிக விரைவாக அவரது வீழ்ச்சிக்கு வழிகோலியது.

(சீன) சோவியத் இயக்கம்

வெகுவாக பிரச்சினைக்குரியதாக இருந்த 1927 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து மா சே துங் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நான் நிகழ்த்தினேன். இது பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு போதுமான விடயம் என்று நான் இதைக் கருதினேன். இது அவரது சுயசரிதையின் பகுதி அல்ல. ஆனால் அவர் இது பற்றி ஒரு தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பாக இதை எனக்குச் சொன்னபோது, ஒவ்வொரு சீனக் கம்ய+னிஸ்ட்டின் வாழ்க்கையிலும் இது ஒரு திருப்புமுனை அனுபவம் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

1927இல் கம்ய+னிஸ்ட் கட்சியின் தோல்விக்;கும் வுகான் கூட்டரசாங்கம் தோற்கடிக்கப்பட்டமைக்கும் நான்கிங் சர்வாதிகாரத்தின் வெற்றிக்கும் யார் பொறுப்பாளி என்று மாவோ கருதுகின்றார், என்று நான் அவரிடம் கேட்டேன். சென் ரு சியு மீதுதான் கூடுதலான பிழையைமாவோ சுமத்தினார். அவரது ஊசலாட்டமான சந்தர்ப்பவாதம் கட்சியின் தீர்க்கமான தலைமைத்துவத்தை இல்லாதொழித்;து மேலதிகமான சமரச முயற்சிகள் பேரழிவை ஏற்படுத்தும் என்ற ஒரு சூழ்நிலையில் கட்சியின் நேரடியான சொந்த மார்க்கத்தையும் இல்லாமலாக்கியது.

சென்னுக்கும் அடுத்தபடியாக இந்தத் தோல்விக்கு பொறுப்பாளியாக மாவோ கருதிய மற்றொரு மனிதர், மிக்ஹெயில் மார்க்கோவிச் பொறொடின் என்ற தலைமை ரஷ்ய அரசியல் ஆலோசகர் ஆவார். சோவியத் நாட்டின் அரசியற் தலைமைக் குழுவுக்கு இவர் நேரடியான பொறுப்பாளி ஆவார். 1926இல் தீவிரமான காணிமீர் விநியோகத்தை ஆதரித்த இவர் 1927 இல் தனது நெறி பிறழ்தலுக்கு எதுவித யதார்த்தப+ர்வமான காரணத்தையும் காட்டாமல் கடுமையாக அந்தச் செயல்முறை வரைவை எதிர்த்ததன் மூலம், அவர் தனது நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டிருந்தார். சென் ரு சியுவுக்கு சிறிது வலதுசாரித் தோற்றத்தில் பொறொடின் இருந்தார் என்றும் இந்த ப+ர்ஷ{வாவைத் திருப்திப்படுத்த தன்னால் முடிந்தது. அனைத்தையும் செய்ய அவர் தயாராகவும் இருந்தார் என்றும் மாவோ கூறினார். தொழிலாளர்களிடமிருந்து ஆயுதங்களைக் களையுமாறு கூறுவதற்குக் கூட அவர் தயாராக இருந்தார். இநுதியாக இந்த உத்தரவையும் அவர் வழக்கவே செய்தார். கம்ய+னிஸ்ட் அகிலத்தின் சென் பொறொடின் ஆகிய இருவருக்கும் சிறிது இடதுசாரியாக இந்தியப் பிரதிநிதியான எம். என். றோய் நின்றார். ஆம், அவர் வெறுமனே அசையாது நின்றார். அவரால் பேச முடியும். அவர் அதிகமாகவே பேசினார். விடயத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறை ஒன்றையும் வழங்காமலேயே பேசினார். இலக்கு நோக்கிய பாதையிலே றோய் ஒரு முட்டாளராக இருந்தார் பொறொடின் ஒரு பெரும் பிழை செய்தவராக இருந்தார். தான் செய்வதை உணராமலேயே சென் ஒரு காட்டிக் கொடுப்பவராகச் செயற்பட்டார்.

சென் உண்மையிலேயே தொழிலாளர்களைக் கண்டு பயப்பட்டார். விசேடமாக ஆயுதம் தரித்த விவசாயிகளைக் கண்டு அஞ்சினார். ஆயுத எழுச்சியின் யதார்த்தம் அவரை எதிர் கொண்டபோது அவர் முழுமையாகத் தன்உணர்வுகளை இழந்தார். என்ன நடக்கின்றது? என்பதை அவரால் தொடர்ந்து விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதோடு அவரது குட்டி பூர்ஷ{வா உணர்வுகள் அவரைக் காட்டிக் கொடுத்து பயத்தையும் தோல்வி மனப்பான்மையும் அவர் மீது திணித்தன.

சென் அப்போது சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் முழுமையான சர்வாதிகாரியாக இருந்ததோடு, முக்கியமான முடிவுகளை மத்திய குழுவுடன் ஆலோசனை கலக்காமல், தானே எடுத்தார். இவ்வாறு மாவோ உறுதிப்படுத்தினார். கம்ய+னிஸ்ட் அகிலத்தின் கட்டளைகளைக் கூட கட்சியின் ஏனைய தலைவர்களுக்கு அவர் காட்டவில்லை. அல்லது அதுபற்றி எங்களுடன் கலந்தாலோசிக்கக்கூடவில்லை. இறுதியில், கோமிண்டாங்குடன் எங்கள் உறவை முறித்துக் கொள்ளும்படி நிர்ப்பந்தித்தது றோய் அவர்கள் தான். கம்ய+னிஸ்ட் அகிலம் பொறொடினுக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தது. அதன்படி நிலப்பிரபுக்களின் காணிகளை ஒரு வரையறுக்கப்பட்ட அளவில் பறிமுதல் செய்யத் தொடங்கும்படி கூறப்பட்டிருந்தது. இதன் பிரதி ஒன்றை கையகப்படுத்திய றோய், உடனடியாக வாங் சிங் வெய்யிடம் அதைக் காட்டினார். வுகானில் அப்போதிருந்த இடதுசாரி கோமிண்டாங் அரசுக்கு வாங் சிங் வெய் தலைவராக இருந்தார். இந்தத் திடீர் மாற்றத்தின் பெறுபேறு அனைவரும் அறிந்த ஒன்றே வுகான் ஆட்சியாளர்களால் கம்ய+னிஸ்டுக்கள், திய யுத்தப் பிரபுக்களின் ஆதரவை இழந்ததால் இந்த ஆட்சியும் செயழிழந்தது. இந்த யுத்தப் பிரபுக்கள் தற்போது ஷி யாங் கேய் சேக்குடன் சமரசம் செய்து கொள்வதன் மூலம் தங்களுக்குப் பாதுகாப்பைத் தேடிக் கொண்டிருந்தனர். பொறொடினும் ஏனைய கம்ய+னிஸ்ட் அகிலப் பிரதிநிதிகளும் ரஷ்யாவுக்குத் தப்பியோடினார்.
ரஷ்யாவில் எதிர்ப்பு முறியடிக்கப்படுவதையும் ட்ராட்ஸ்கியின் “நிரந்தரப் புரட்சி’’ செல்வாக்கிழக்கப்படுவதையும் ஸ்டாலின் ஒரு நாட்டின் சோஷலிசத்தை சிரத்தையோடு கட்டமைக்கப் புறப்பட்டதையும் இந்தக் கம்ய+னிஸ்ட் அகிலப் பிரதிநிதிகள் கண்ணுற்றார்கள்.

கோமிண்டாங்குடன் உறவு முறிவதற்கு முன்பு, தொழிலாளர், விவசாயிகளிடையே கம்ய+னிஸ்ட் இராணுவங்களை உருவாக்கி, காணிப் பறிமுதல் விடயத்தில் மேலும் தீவிரமான கொள்கையைக் கம்ய+னிஸ்ட் கட்சி செயற்படுத்தியிருந்தாலும் கூட, 1927ஆம் ஆண்டில் எதிர்ப்புரட்சியைத் தோற்கடித்திருக்க முடியுமென்று மாவோ நினைக்கவில்லை. ஆனால் (சீன) சோவியத் அரசுகள், தென் பகுதியில் பாரிய தொடக்கம் ஒன்றைக் கண்டிக்கும். அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கக் கூடிய களப் பிரதேசங்களிலிருந்து அதன் பின்பு அவை ஒருபோதும் அழிக்கப்பட்டிருக்க முடியாது.

மாவோ தனது வரலாற்றைக் கூறிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது சோவியத்துக்களின் தொடக்கம் பற்றிய விடயத்துக்கு வந்துவிட்டார். புரட்சியின் பேரழிவுச் சிதைவில் இருந்து உருவாகிய இந்த சோவியத்துகள், தோலிவியிலிருந்து வெற்றியைக் கட்டமைக்கப் போராடின் அவர் தொடர்ந்தார்.

1927 ஓகஸ்ட் 27ஆம் திவுதி ஹோ லுங், யேரிங் ஆகியோர் தலைமையிலும் சூடேயின் ஆதரவுடனும் 20வது இராணுவம், வரலாற்றைப் புகழ்மிக்க நான்சாங் எழுச்சியைத்; தலைமை தாங்கியது. சீனச் செஞ்சேனையாக உருவெடுக்கப்போகும் ஒரு இராணுவத்துக்கு இதன் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பின்பு ஓகஸ்ட் 7ஆம் திகதி கம்ய+னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, ஒரு விசேட கூட்டத்தில் சென் ரு சிய+வை செயலாளர் பதவியிலிருந்து அகற்றியது. 1924 இல் காண்டனில் இடம் பெற்ற கட்சியின் 3ஆவது மாநாட்டில் இருந்து நான் கட்சியின் அரசியற் தலைமைக் குழுவில் உறுப்பினராக இருந்து வந்தேன். இந்தப் பதவி இறக்கும் முடிவில், நான் தீவிரமாக பங்கேற்றேன் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய 10 உறுப்பினர்களில் கீழ்க்கண்டோரும் இருந்தனர். த்சை ஹோ – சென், பெங் பாய், சாங் குவோ ராவோ, சூசிய+ - பாய் ஆகியோரே அவர்களாவர் (இக் கூட்டத்தில் சென் ரு சிய+, அவரது வலதுசாரிப் போக்குக்காக குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்டு அரசியற் தமைமைக் குழுவிலிருந்தும் அகற்றப்பட்டார். சூ சிய+ பாய் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்) கட்சியால் இங்கு ஒரு புதிய வழிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு கோமிண்டாங்குடனான ஒத்துழைப்பு பற்றிய விடயம். தற்போதைக்கு முற்றாக கைவிடப்பட்டது. கோமிண்டாங், தற்போது கேடுகெட்ட முறையில் ஏகாதிபத்தியத்தின் கருவியாகிவிட்டதாலும் ஜனநாயகப் புரட்சிக்கான பொறுப்பை அதனால் நிறைவேற்ற முடியாதென்பதாலும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி அதிகாரத்துக்கான நீண்ட வெளிப்படையான போராட்;டம் தற்போது ஆரம்பமாகியது.

“இலையுதிர்கால அறுவடை எழுச்சி’’ என்று பிற்காலத்தில் புகழ்பெற்ற ஒரு இயக்கத்தை மேற்கொள்வதற்காக நான் ஷாங்சாவுக்கு அனுப்பப்பட்டேன் அங்கு எனது செயல்முறைவரைவு 5 அம்சங்களைச் செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

1. மாகாணக் கட்சிக் கிளையின் தொடர்பை கோமிண்டாங்கிலிருந்து முற்றாக அகற்றுவது.

2. ஒரு விவசாயி – ஒரு தொழிலாளி புரட்சிகர இராணுவத்தை உருவாக்கியது.

3. சிறிய, நடுத்தர, பெரிய நிலப்பிரபுக்களிடமிருந்து சொத்துப் பறிமுதல்.

4. கோமிண்டாங்கின் தொடர்பின்றி சுதந்திரமான கம்ய+னிஸ்டு அதிகாரத்தை ஹ{னானில்
அமைத்தல்

5. சோவியத்துக்களை அமைத்தல்

மேலே குறிப்பிட்ட 5வது அம்சம் கம்ய+ஸ்டு – அகிலத்தால் எதிர்க்கப்பட்;டது. நீண்டகாலத்துக்குப் பின்பு கூட இந்த விடயத்தை அது ஒரு நடைமுறைக்கப்பாற்பட்ட சுலோகமாகத்தான் கருதியது.

செப்டெம்பர் அளவில் ஒரு பரந்த – அடிப்படையிலான ஒரு எழுச்சியை ஒழுங்கு செய்வதில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தோம். விவசாயி – தொழிலாளி இராணுவத்தின் முதலாவது படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுவிட்டன. படைவீரர்கள் மூன்று பிரதான மூலகங்களிலிருந்து பெறப்பட்டன. விவசாயிகள், ஹன்யாங் சுரங்கத் தொழிலாளர்கள், கோமிண்டாங்கில் கிளர்ச்சி செய்யும் துருப்புக்கள் ஆகியவையே அந்த மூலகங்கள், புரட்சியின் ஆரம்பகால “இராணுவப்படை, முதலாவது விவசாயிகள் - தொழிலாளர்கள் “இராணுவத்தின் முதலாவது டிவிசன்’’ என்று அழைக்கப்பட்டது. முதலாவது ரெஜிமென்ட், ஹன்யாங் (பிங் ஷான்) சுரங்கத் தொழிலாளர்களிடையே இருந்து உருவாக்கப்பட்டது. (சுரங்கத் தொழிலாளர்கள் மாவோ, லிய+ ஷா சி, சென்யுள் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டது. விவசாயிகள், யத்துக்கள், மக்கள் குழுக்கள் ஆகியவற்றை அமைப்பதில் மத்திய குழுவின் ஆகியவற்றை அமைப்பதில் மத்திய குழுவின் கட்டுப்பாட்டு அப்பால், மாவோ தன்னிச்சையாகவே செயற்பட்டார். இதற்காக மாவோ கடுமையாகக் கண்டிக்கப்பட்டார். 1927 நவம்பரில் வலதுசாரிப் போக்குக்காக மாவோ அரசியற் தலைமைக்குழுவிலிருந்து அகற்றப்பட்டார். 1928 ஜுன் மாத்தில் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்) பிங் சியாங், லியு யாங்@ லி லிங், ஹ{னானில் உள்ள மேலும் இரண்டு சி யென் பகுதியிலிருந்த விவசாயிகள் காவற்படையிலிருந்து இரண்டாவது இராணுவப்படை அமைக்கப்பட்டது. ஹ{னான் மாகாணச் செயற்குழுவின் அனுமதியோடு இந்த இராணுவம் அமைக்கப்பட்;டது. ஆனால் ஹ{னான் குழுவின் பொதுப்படையான திட்டமும் எங்கள் இராணுவமும் கட்சியின் மத்திய குழுவால் எதிர்க்கப்பட்டது. கட்சியின் மத்திய குழு தீவிர எதிர்ப்புக்குப் பதிரலாக, பொறுத்திருந்து பார்க்;கும் கொள்கையை கைக் கொண்டிருந்தாற்போல் தோன்றியது.

நான் இராணுவத்தை உருவாக்கிக் கொண்டிருந்த போது ஹன்யாங் சுரங்கத் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளின் காவற்படையினருக்கும் (அவர்கள் வாழும் இடங்களுக்கிடையே) இடையே சென்று வந்தேன் கோமிண்டாங்குக்காக வேலை செய்வோரால் (மின்ருவான்) நான் கைது செய்யப்பட்டேன். கோமிண்டாங் பயங்கரவாதம் அப்போது மிக மோசமாக இருந்தது. சந்தேகிக்கப்பட்ட பல கம்ய+னிஸ்டுக்கள் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த மின் ருவான்களின் தலைமையத்துக்குத் என்னை அழைத்துச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டது. அங்கு நான் சுட்டுக் கொல்லப்படுவதாக எடுத்துச் செல்லப்பட இருந்தேன். ஒரு தோழரிடமிருந்து பல பத்து டொலர் பணத்தாள்களை ஒரு தோழரிடம் கடனாக வாங்கி எனது பாதுகாவலர்களுக்கு கைய+ட்டு வழங்கி, தப்பித்துக்கொள்ள நான் முயன்றேன். சாதாரண துருப்புக்கள் கூலிக்காக படையில் சேர்த்தவர்கள் நான் கொல்லப்படுவதைப் பார்ப்பதில் விசேட அக்கறை எதுவும் இல்லாத அவர்கள், என்னை விடுதலை செய்ய ஒத்துக்கொண்டார்கள். சப்பால்ட்டான் பதவியிலிருந்த அந்தப் பொறுப்பதிகாரி இதற்கு அனுமதி மறுத்து விட்டான். ஆகவே தப்பிச்செல்ல முயற்சிக்க நான் முடிவு செய்தேன். இந்த மின் ருவான் தலைமையத்திற்கு 200 யார் தூரம் செல்லும் வரை அவ்வாறு தப்பிச் செல்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் ஏதும் கிடைக்கவில்லை.

ஓர் நீர்த்தடாகம் இருந்த இடத்துக்கு உயரமான பகுதியை நான் அடைந்தேன். அதைச் சுற்றி உயரமான புல் வளர்ந்திருந்தது. சூரியன் மறையும் வரை அங்கேயே ஒழிந்திருந்தேன். சூரியன் மறையும் வரை அங்கேயே ஒழிந்திருந்தேன். துருப்புக்கள் என்னைத் தேடி வந்தனர்.
அத்தோடு என்னைத் தேடுமாறு சில விவசாயிகளையும் தூண்டினர். பல தடவைகள் அவர்கள் எனக்கு அருகில் வந்தனர். ஓரிரு தடவைகள் அவர்கள் நான் தொடக்கக்கூடிய அளவுக்கு எனக்கருகே வந்தனர். நான் மீளக்கைது செய்யப்படுவேன் என்று 5 அல்லது 6 தடவைகளுக்கு மேல் நம்பிக்கையிழந்துவிட்ட போதிலும் எப்படியோ நான் அவர்களின் பார்வையிலிருந்து தப்பிவிட்டேன். இறுதியில் மாலைப் பொழுதுதானபோது தேடுதலை அவர்கள் கைவிட்டனர். உடனடியாக மலைகளுடாக இரவிரவாக நான் எனது பயணத்தை தொடர்ந்தேன். எனது கால்களில் சப்பாத்துக்கள் இருக்கவில்லை. அதனால் எனது கால்களில் கடுமையான உராய்வுகள் ஏற்பட்டன. வீதியில் நான் ஒரு விவசாயியைச் சந்தித்தேன். அவர் என்னுடன் நட்புறவாகி எனக்குப் புகலிடம் அளித்து பின்பு அடுத்த மாவட்டத்துக்குச் செல்ல எனக்கு வழியையும் காட்டினார். என்னிடம் 7 டொலர் பணம் இருந்தது. இந்தப் பணத்தை சில சப்பாத்துக்கள், ஒரு குடை, உணவு ஆகியவற்றை வாங்குவதற்கும் பயன்படுத்தினேன் இறுதியாக நான் பாதுகாப்பாக விவசாயிகள் காவற்படையினரைச் சென்றடைந்தபோது என்னிடம் 2 செப்புக் காசுகள் மட்;டுமே மிகுதியாக இருந்தன.

புதிய இராணுவ டிவிசன் உருவாக்கப்பட்டதும் நான் போர் முனைக் குழுவின் கட்சித் தலைவராக ஆனேன். வுகானில் ஒரு படைக் கொந்தளத்தின் கமாண்டராக இருந்த யு ஷா ரூ முதலாவது இராணுவதின் கமாண்டரானார். இருப்பினும் யு பெரும்பாலும் தனத படைவீரர்களின் போக்கின்படியே தனது நிலைப்பாட்டை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். சிறிது காலத்தின் பின்பு அவர் படையைக் கைவிட்டு கோமிண்டாங்கில் சேர்ந்துகொண்டார் தற்போது இவர் நான்கி;ங்கில் ஷியாங் கேய் ஷேக்குக்காக வேலை செய்கின்றர்.

விவசாயிகள் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய அந்தச் சிறிய இராணுவம் ஹ{னால் ஊடாக தெற்கு நோக்கி நகர்ந்தது. அந்தப்படை ஆயிரக்கணக்கான கோமிண்டாங் துருப்புக்கள் ஊடாக ஊடறுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அந்தப் பாதையில் பல சமர்களை மேற்கொள்ள வேண்டியும் இருந்தது. இந்தச் சண்டையில் பல பின்னடைவுகளும் ஏற்பட்டன. இந்தப் படையினரிடையே ஒழுக்கக்கட்டுப்பாடு மோசமாக இருந்தது. அத்தோடு அரசியற் பயிற்சி நெறி வெகுவாகத் தாழ்ந்த மட்டத்தில் இருந்தது. படையினரிடையே தடுமாற்ற மனப்பான்மையுள்ள அதிகாரிகளும் போர் வீரர்களும் இருந்தனர். படையைவிட்டு விலகியோடும் பல படைவீரர்களும் அவர்களிடையே இருந்தனர். ய+ சா ரூ படையைவிட்டு ஓடியதும், நிங்ரூவுக்கு இராணுவம் சென்றபோது அது மீளமைப்புச் செய்யப்பட்டது. மிகுந்திருந்த ஒரு ரெஜிமெண்ட்டின் துருப்புகளுக்கு சென்ஹாவோ கமாண்டர் ஆக்கப்பட்டார். அவரும் பிற்காலத்தில் இயக்கத்தைக் காட்டிக் கொடுப்பவராக மாறினார். ஆனால் முதலாவது குழுவில் இருந்த பெரும்பாலானோர், இறுதிவரைக்கும் விசுவாசமாக இருந்தனர். அவர்கள் தற்போதும் செஞ்சேனையில் தொடர்ந்து இருக்கிறார்கள். முதலாவது இராணுவ பிரிவின் அரசியல் கமிசாரானலோ இயங்கும் யாங் லி சான் ஆகியோர் அவர்களில் அடங்வர். இந்தச் சிறிய படை இறுதியாக சிங்காங்ஷான் மலைப் பிரதேசத்துக்கு ஏறியபோது இந்தப்படையில் 1000 பேர் மட்டுமே இருந்தனர்.

கட்சியின் இலையுதிர்கால அறுவடை எழுச்சித் திட்டம் கட்சியின் மத்திய குழுவால் அங்கீகரிக்கப்படாமையாலும் முதலாவது இராணுவம் மிகக் கடுமையான இழப்புக்களைச் சந்திருந்தமையாலும் இந்த நடவடிக்கைகளைப் பற்றிய நகரவாசிகளின் போக்கு காரணமாகவும் இந்த எழுச்சி தோல்வியிலேயே முடிவடையும் போலத் தோன்றியது. மத்தியக்குழு தற்போது நிச்சயமாக என்னைக் கடுமையாகக் கண்டித்தது. (மாவோ மத்திய குழுவால் மூன்று தடவை கடுமையாகக் கண்டிக்கப்பட்டார். அத்தோடு மூன்று தடவை கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்) நான் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அத்தோடு கட்சியின் (பொது) போர்முனைக் குழுவிலிருந்தும் நீக்கப்பட்டேன். ஹ{னான் மாகாணக்குழுவும் எங்களைத் தாக்கியது. அத்தோடு அது எங்களை “துப்பாக்கி இயக்கம்’’ என்றும் அழைத்தது. இருப்பினும், சிங் காங் ஷானில் நாங்கள் எங்கள் இராணுவத்தை தொடர்ந்து வைத்திருந்தோம், அத்தோடு நாங்கள் தான் சரியான வழியைப் பின்பற்றுகிறோம் என்று உறுதியாக இருந்தொம். பின்பு இடம்பெற்ற நிகழ்ச்சிகள் எங்களுடைய வழி சரியானதே என்பதை நிரூபித்திருக்கின்றன. புதிதாக படையில் சேர்வோர் படையில் இணைப்பட்டனர். இந்த டிவிஷன் மீண்டும் முழுமையான படைவீரர் எண்ணிக்கையைக் கொண்டிருந்தது அந்த டிவிசனின் கமாண்டராக நான் பொறுப்பேற்றேன்.

1927 ஆம் ஆண்டு மாரி காலத்திலிருந்து 1928 இலையுதிர் காலம்வரை முதலாவது டிவிசன், சிங்காங்சானிலுள்ள தளத்தை தனது கைவசம் கொண்டிருந்தது. 1927ஆம் ஆண்டு நவம்பரில், ஹ{னான் எல்லையில் த்சாலினில் (சாலிங்) முதலாவது சோவியத் நிறுவப்பட்டது. அத்தோடு முதலாவது சோவியத் அரசும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் தலைவர் ரு சுங் பின் ஆவார்.
இதனையடுத்து நாங்கள் ஒரு ஜனநாயகத்திட்டத்தை முன்னெடுத்தோம். இது ஒரு மெதுவான ஆனால் தொடர்ச்சியான அபிவிருத்தியைக் கொண்டிருந்தது. இது எங்கள் கட்சியிலிருந்த தீவிரவாதிகளின் குற்றச் சாட்டுக்களை, சிங் சாங் சான் பிரிவின் மீது கொண்டு வந்தது. அவர்கள் நிலப்பிரபுக்களி;ன் மனோ திடத்தைக் குலைப்பதற்காக திடீர்தாக்குதல், தீவைப்பு, நிலப்பிரபுக்களைக் கொல்லுதல் ஆகிய பயங்கரவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரினார். முதலாவது இராணுவத்தின் போர்முனைக்குழு இத்தகைய தந்திரோபாயங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. இதன் விளைவாக இவர்கள் தீவிரவாதிகளால் “சீர்திருத்தவாதிகள்’’ என்று பட்டம் சூட்டப்பட்டனர். மேலும் தீவிரமான ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தாமைக்காக, இவர்களால் நான் கடுமையாகச் சாடப்பட்டேன்.

சிங் காங் சானுக்கு அருகிலிருந்த இரண்டு முன்னாள் கொள்ளைக்காரர்கள் இருவர் 1927 ஆம் ஆண்டு மாரி காலத்தில் சீனச் செஞ்சேனையில் சேர்ந்தனர். இவர்களின் பெயர் வாங் த்சே, யுவான் வென் த்சை என்பதாகும். இது படையின் பலத்தை 3 ரெஜிமெண்ட்டுகளளாக உயர்த்தியது வாங், யுவான் ஆகிய இருவரும் ரெஜிமெண்ட் கமாண்டர்களாக நியமிக்கப்பட்டனர். அத்தோடு நான் ஒரு இராணுவக் கமாண்டராக நியமிக்கப்பட்டடேன். இந்த இரண்டு முன்னாள் கொள்ளைக்காரர்களும், தேசியவாதப் புரட்சியோடு தங்கள் படைகளை அவர்களுடன் இணைத்திருந்த போதிலும் தற்போது அவர்கள் எதிர்புரட்சிக்கு, பிற்போக்கு வாதத்துக்கு எதிராக சண்டைபிடிக்க்த் தயாராக இருந்தனர். நான் சிங் காங் சானில் இருந்த வரைக்கும் அவர்கள் விசுவாசமான கம்ய+னிஸ்ட்டாக இருந்தார்கள். அத்தோடு கட்சியின் கட்டளைகளை அவர்கள் செயற்படுத்தினார்கள். பின்னீடு அவர்கள் சிங் காங் சானியல் தனிமையில் விடப்பட்டபோது அவர்கள் சிங் காங் சாளில் தனிமையில் விடப்பட்டபோது அவர்கள் தங்கள் கொள்ளைக்காரப் பழக்க வழக்கங்களுக்கு மீள ஆட்பட்டார்கள் இதனைத் தொடர்ந்து, நன்கு ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட, சோவியத் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட தற்போது எங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய நிலையிலிருந்த விவசாயிகளால் இவர்;கள் கொலை செய்யப்பட்டார்கள்.

1928 மே மாதத்தில் சூடே, சிங் காங் சான் வந்து சேர்ந்தார். அத்தோடு எங்கள் படைகள் ஒருங்கிணைப்பட்டன. நாங்கள் ஒருங்கிணைந்து (முதலாவது பிங் மாநாட்டில் இங்கு மாசேதுங்கும் சூ டேயும், மாவோலின் பியா, சென் யீ, சியாவ் கீ, ஹோ சாங் சுங் ரான் சென் லின், சாங் வென் பிங், சியா சீ ஆகியோருடன் இணைந்து, கம்ய+னிஸ்ட் அகிலத்தின் ஆதரவு பெற்ற அரசியல் மத்திய குழுத் தலைவர் லி லி சான் மேற்கொண்ட நெருக்குதல் அனைத்துக்கும் எதிராகத் தாக்குப் பிடித்தனர். அதன் பின்னீடு மாஸ்கோவில் கல்வி கற்றுத் திரும்பிய 28 “போல்ஷ்விக்குகளும்’’ (மாணவர்கள்) எதிராகவும் தாக்குப்பிடித்தனர்) ஆறு சியென் பகுதிகளில் ஒரு சோவியத் வலையத்தை நிறுவத் திட்டமிட்டோம். இது ஹ{னான், சியாங் சீ குவாண்டுங் எல்லை மாவட்டங்களில் படிப்படியாக கம்ய+னிஸ்ட் சக்தியை உறுதிப்படுவதாக இருந்தது. இவைகளை ஆதாரத் தளமாகக் கொண்டு களப்பிராந்தியத்தை பாரிய பகுதிகளில் விரிவாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மூலோபாயம், கட்சியின் பரிந்துரைகளுக்கு எதிரானவையாக இருந்தன கட்சி, விரைவாக விரிவுபடுத்தலுக்கான பாரிய அடிப்படையிலான கருத்துக்களைக் கொண்டிருந்தது. இராணுவத்தினுள்ளேயே நானும் சூடேயும் இரு விதப் போக்குகளுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. முதலாவதாக ஹ{னானின் தலைநகரான சாங்சாவை நோக்கி முன்னேற வேண்டுமென்ற ஆசை, உடனடியாக இதை ஒரு அதிதீவிர நடவடிக்கை என்று நாங்கள் கருதினோம். இரண்டாவதாக குவாங்குங் எல்லைக்குத் தெற்காக பின்வாங்கும் விருப்பம் இருந்தது. இதை நாங்கள் பின் வாங்கும் தத்துவம் (சரணடையும் தத்துவம்) என்று கருதினோம். அப்போது நாங்கள், எங்களுடைய பிரதான பணிகளாகக் கருதிய கடமைகள் இரண்டாக இருந்தன. காணிகளைப் பிரிப்பது சோவியத்துக்களை உருவாக்குவது இவையே இந்த இரண்டு பணிகள். இந்த நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்காக நாங்கள் பாட்டாளி மக்களை ஆயுத பாணியாக்க விரும்;;;;பினோம். எங்களுடைய கொள்கை சுதந்திர வர்த்தகத்தை அனுமதித்தது (கோமிண்டாங் பகுதிகளுடன்) கைப்பற்றப்பட்ட துருப்புகளுடன் தாரளமாக நடந்து கொள்வது பொதுவாக ஜனநாயக மிதவாதத்துக்கு விருப்பம் தெரிவித்தது.

1928 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் சிங்காங்சானில் ஒரு பிரதிநிதிகள் கூட்டத்திற்கு (இரண்டாவது மாவோபிங் மாநாடு) அழைப்பு விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிங்காங்சானின் வடக்கேயுள்ள சோவியத் மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிக் குழுக்கள் கலந்து கொண்டன. சோவியத் மாவட்டங்களில் இருந்த கட்சி உறுப்பினர்களிடையே மேலே குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக மாறுபாடான கருத்துக்கள் தற்போதும் நிலவிவந்தன. இந்தக் கூட்டத்தில் அந்த விடயங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் முழுமையாக எழுப்பப்பட்டன. ஒரு சிறு அளவிலான பகுதியினர், இந்த அடிப்படை மீதான எங்கள் எதிர்காலம் மிக ஒடுக்கமாக, வரையறுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். ஆனால் பெரும்பான்மையானோர் இந்தக் கொள்கைத் திட்டத்தில் நம்பிக்கை தெரிவித்தனர். ஆகவே சோவியத் இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்று பிரகடனப்படுத்தும் தீர்மானம் பரிந்துரை செய்யப்பட்டபோது அது இலகுவாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் கட்சியின் மத்திய குழு இந்த இயக்கத்துக்கு அப்போதும் தனது ஒப்புதலை வழங்கவில்லை. மாஸ்கோவில் இடம்பெற்ற சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியின் ஆறாவது, காங்கிரசின் நடவடிக்கை அறிக்கை சிங்காங்சானுக்கு 1928 ஆம் ஆண்டு குளிர்காலத்தின்போது கிடைக்கும்வரை இதற்கு ஒப்பதல் கிடைக்கவில்லை.

அந்தக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய பாதையை நானும் சூடேயும் முழுமையாக ஒத்துக்கொண்டோம். அந்த நேரத்தில் இருந்து கட்சித் தலைவர்களிடையேயும், விவசாய மாவட்டங்களின் சோவியத் இயக்கத்தினரிடையேயும் இருந்த வேறுபாடுகள் மறைந்துபோயின. கட்சி ஒற்றுமை மீள நிறுவப்பட்டது.

ஆறாவது காங்கிரசின் தீர்மானங்கள் 1925 – 27 ன் புரட்சி நான் சாங் காண்டன் இலையுதிர்கால அறுவடைக் கிளர்ச்சி ஆகியவை பற்றி விளக்;கம் அளித்திருந்தது. விவசாய இயக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனுமதி வழங்கங்கலோடு அந்தக் காங்கிரஸின் தீர்மானங்கள் அளிக்கும் அனுமதி வழங்களோடு அந்தக் காங்கிரசின் தீர்மானங்கள் முடிவு பெற்றன. இதே காலத்தில் சீனாவின் வேறு பகுதிகளில் செஞ்சேனைகள் உருவாக்கலாயின. 1927 குளிர்காலத்தில் ஹ{ப்பே மாகாணத்தின் மேற்கு, கிழக்கு மாகாணங்களில் கிளர்ச்சி எழுந்தன. புதிய சோவியத் மாவட்டங்களின் உருவாக்கத்துக்கு இவை அடித்தளம் அமைந்தன. மேற்குப் பகுதியில் ஹோ லூங்கும் கிழக்கில் ஹாய்துக்கும் தங்கள் சொந்த விவசாயி தொழிலாளி இராணுவங்களை அமைக்கத் தொடங்கினர். இதில் பின்னவருடைய நடவடிக்கை வலையம், ஓய+வான் சோவியத்தின் மையப்படுத்தியாகியது. இதற்கு சு சி யாங் சியென்னும் சாங் குவோராவ்வும் பின்பு சென்றனர். பிய+கின்னுக்கு அருகே கியாங்கின் வடகிழக்கு எல்லைபுறத்தே 1927 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் பாங் சி மின், சியாவ் சி பிங் ஆகியோரும் ஒரு இயக்கத்தை தொடங்கினர். இந்த இயக்கத்தின் பகுதியில் பின்பு ஒரு பலம் வாய்ந்த சோவித்தளம் ஒன்று உருவாகியது. காண்டின் கிளர்ச்சி தோல்வியடைந்த பின்பு ஹாய்லு பெருகுக்கு விசுவாசமான துருப்புக்களில் ஒரு பகுதியினரை பெங்பாய் தலைமை வகித்துச் சென்று அங்கு ஒரு சோவியத்தை அமைத்தார். அது ஒரு தீவிரவாதக் கொள்கை காரணமாக அமைத்தார். அது ஒரு தீவிரவாதக் கொள்கை காரணமாக விரைவில் அழிந்து போயிற்று. இருப்பினும் இந்த மாவட்டத்தில் இருந்து கு – ரா – சென்னின் தலைமையில் ஒரு பகுதி இராணுவம் வெளியே வந்தது. அது என்னுடனும் சூடேயுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியது. பின்னீடு இந்தப் படைப்பிரிவு பதினோராவது செஞ்சேனையின் பிரதான படைப்பாகியது.

1928 வசந்தகாலத்தன்போது கியாங்சியில் சிங்குவோ துங்கு பகுதிகளில் போராளிகள் தீவிரமாக இயக்கத் தொடங்கினர். இவர்கள் லி வெங் லுங், லி ஷாவ் த்சு ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டனர். இந்த இயக்கம் கியான் பகுதியைச் சுற்றி தனது தளத்தைக் கொண்டிருந்தது. இந்தப் போராளிகள் பின்னீடு மூன்றாவது இராணுவத்தின் பிரதான படைப்பிரிவாக மாறினர். அதே வேளை இந்த மாவட்டமுமே மத்திய சோவியத் அரசாங்கத்தின் தளமாக மாறியது மேற்கு பியுகியென்னில் சாங்ரிங் செங், ரெங் த்சு ஹ{ய் ஆகியோரால் சோவியத்துக்கள் உருவாக்கப்பட்டன. இதில் இவர்களோடு இணைந்து செயலாற்றிய ஹ{பெய்டே பின்னாளில் ஒரு சமூக ஜனநாயகவாதியாக மாறினார்.

சிங் காங்சானில் “போராட்டம் (எதிர்) அதி தீவிரவாதம் காலகட்டத்தின்போது, இந்த மலையக மீளக் கைப்பற்ற சியாங் கேய் ஷேக்கின் (வெள்ளை, துரும்புக்கள் இது தடவை எடுத்த முயற்சிகளை முதலாவது இராணுவம் முறியடித்தது. நாங்கள் உருவாக்கிக்கொண்டிருந்த ஒரு நகரும் இராணுவத்துக்கு சிங் காங்சான் ஒரு அருமையான தளமாக இருந்தது. அதில் நல்ல இயற்கையான பாதுகாப்பு நிலைகள் இருந்தன. அதில் நல்ல இயற்கையான பாதுகாப்பு நிலைகள் இருந்தன. அத்தோடு ஒரு சிறிய இராணுவத்தை வைத்துப் பாராமரிப்பதற்குப் போதுமான உணவு தானியங்களை அந்தப் பகுதி உற்பத்தி செய்தது. அது ஒரு 500லி சுற்றுவட்டப் பரப்பைக் கொண்டிருந்தது. அதன் விட்டம் 80 லி யாக இருந்தது. உள்ளுரின் இந்த இடம் வேறு விதமாக அழைக்கப்பட்டது. அதற்கு ராசியாவ் வ+ கின் (பெரிய சிறிய 5 கிணறுகள்) உண்மையான சிங் காங் சான் அருகிலுள்ள ஒரு மலையின் பெயராகும். அங்கு பல காலமாக யாரும் சீவிக்கவில்லை. அந்த மலையின் சரிவிலே இருந்த 5 பிரதான கிணறுகளாலேயே அதற்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. அவற்றின் பெயர்கள் ரா சியாவ் ஷாங்;; ஹியா சுங் என்பனவாகும். (பெரியது, சிறியது, உயர்ந்தது, தாழ்ந்தது, மத்தியிலுள்ளது) இந்த மலையிலுள்ள 5 கிராமங்கள் இந்த 5 கிணறுகளின் பெயராலேயே அழைக்ககப்பட்டன.

எங்களுடைய இராணுவத்தின் படைப்பிரிவுகள் சிங்சாங்சானில் இணைந்த பின்பு அங்கு ஒரு மீள் ஒழுங்கமைத்தல் இடம்பெற்றது. அதிலிருந்து புகழ்பெற்ற நான்காவது செஞ்சேனை உருவாக்கப்பட்டது. இதற்கு சூடெ கமாண்டராக நியமிக்கப்பட்டார். நான் அரசியல் சமிசாராக நியமிக்கப்பட்டேன். கிளர்ச்சிகளுக்கும் ஹோசியனின் இராணுவத்தில் ஏற்பட்ட கலகங்களுக்கும் பின்பு மேலும் துருப்புக்கள் 1928 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் சிங்காங் சானுக்கு வந்து சேர்ந்தனர். இவர்பகளிலிருந்து பெப் ரே ஹ{வாயின் தலைமையில் 5 ஆவது செஞ்சேனை உருவாகியது. பெங்குடன் கூட நெடும் பயணத்தின்போது குவெய்சோ மாகாணத்தின் சுன்யீ என்ற இடத்தில் பின்பு கொல்லப்பட்ட டெம் பிங், 1931 இல் குவாங்சியில் கொல்லப்பட்ட குவாங் குவா நு மற்றும் ரியன் யுவான் ஆகியோரும் இருந்தனர்.

பெரும் எண்ணிக்கையிலான துரும்புகளின் வருகையை அடுத்து மலையில் நிலைமை மோசமாக இருந்தது. துருப்புக்களிடம் குளிர்கால உடைகள் இருக்கவில்லை. உணவுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவியது. மாதக் கணக்காக நாங்கள் வெள்ளரி, கக்கரிப் பழவகைகளுடேனே வாழ்க்கையைக் கழித்தோம். துருப்புக்கள் தங்களுடைய சொந்த சுலோகம் ஒன்றைச் சத்தமிட்டுச் சொல்வார்கள். “முதலாளித்துவம் ஒழிக! தண்ணீர் விடாய்;ப் பழங்களை உண்ணுங்கள் என்பது தான் சுலோகம் அவர்களைப் பொறுத்தவரை நிலப்பிரபுக்களின் தண்ணீர் விடாய்;;;;;ப் பழங்கள் தான் முதலதாளித்துவம் சிங் சாங் சானில் பெங் ரே ஹ{வாயை விட்டுவிட்டு, கோமிண்டாங் துருப்புக்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த முற்றுகையை சூ டே உடைத்தார். 1929 ஆம் ஆண்டில் யுத்தகளமாக இருந்த மலையில் எங்களுடைய தற்காலிகத் தரிப்பிடம் முடிவுக்கு வந்தது.

தற்போது 4வது இராணுவம் சியாங்சிக்கு தென்புறமாக ஒரு போரியக்கத்தை தொடங்கியது, அது விரைவில் வெற்றிகரமான வளர்ச்சியடைந்து நாங்கள் ருங்குவில் ஒரு சோவியத்தை அமைத்தோம். அத்தோடு அங்கே உள்ளுர் செஞ்சேனைத் துருப்புக்களை சந்தித்து அவர்களோடு இணைந்தோம். படைகளை பிரிவுகளாக அணி நிலைப்படுத்தி யுங் ரிங் ஷாங் கெங், லுங் யென் ஆகிய பகுதிகளுள் தொடர்ந்து முன்னேறினோம். அந்த மாவட்டங்கள் அனைத்திலும் சோவியத்துக்களை அமைத்தோம். செஞ்சேனை வருவதற்கு முன்பு, தீவிரவாத மக்கள் இயக்கங்கள் அங்கே இருந்தமை, எங்களுடைய வெற்றியை உறுதிப்படுத்தியது அத்தோடு சோவியத் அதிகாரத்தை ஒரு உறுதியான அடிப்படையில் விரைவாக உறுதிப்படுத்தவும் உதவியது. விவசாய வெகுஜன இயக்கங்கள் வாயிலாகவும் போராளிகள் வாயிலாகவும் செஞ்சேனையின் செல்வாக்கு தற்போது மேலும் பல சியன்களில் விரிந்து பரந்தது. ஆனால் அந்த இடத்தில் வெகு காலத்;துக்குப் பின்புவரை கம்ய+னிஸ்ட்டுகள் அதிகாரத்தை முழுதாக நிறுவிக் கொள்ளவில்லை.

செஞ்சேனையில் நிலமைகள் அரசியல் ரீதியாகவும் பொருள் பண்டரீதியாகவும் முன்னேற்றம் அடையத் தொடங்கின. ஆனால் தற்போதும் பல பிழையான போக்குகள் காணப்பட்டன. எடுத்துக்காட்டாக ஒரு முனைவாதம் ஒரு பலஹீனமான இருந்தது. இது ஒழுக்கக் கட்டுப்பாடின்மை ஜனநாயகம் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் கட்டமைப்பில் தளர்ச்சியான தன்மை ஆகியவற்றில் இந்தப் பலஹீனம் பிரதிபலித்தது, எதிர்த்துப்போராட வேண்டிய மற்றும் ஒரு போக்காக “அலையும் திரியும் தன்மை’’ இருந்தது. அரசு இயக்கத்தின் மீதும் மாற்றங்கள் புதிய அநுபவங்கள் நிகழ்வுகள் மீதும் பாசமற்ற தன்மை இவர்களிடம் காணப்பட்டது “இராணுவத்தின்’’ சில எச்ச கொச்சங்;களும்கூட அங்கு காணப்பட்டன. சில கமாண்டர்கள் துருப்புக்களை கேவலமாக நடத்தவும் அடிக்கவும் செய்தனர். தனிப்பட்ட முறையில் தாங்கள் வெறுப்பவர்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். விருப்பமானோர்க்கு சலுகைகள் வழங்கினர்.

1929 டிசம்பரில் மேற்கு பியுகியானில் இடம்பெற்ற 4ஆவது செஞ்சேனை 9வது கட்சி மாநாடு கூட்டப்பட்ட பின்பு இந்தப் பலஹீனங்கள் சீர்செய்யப்பட்டன. அபிவிருத்திக்கான கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டன பல தப்பபிப்பிராயங்கள் சீர்செய்யப்பட்டன. புதிய திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது செஞ்சேனையின் ஒரு உயர்தரமான கோட்பாட்டுத் தலைமைத்துவத்திற்கான அடித்தளத்தை அமைத்தது. இதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட போக்குகள் மிக மோசமாக இருந்தன. இந்த நிலைமை கட்சியிலிருந்த ஒரு ட்ராட்ஸ்கீய வாதப் பிரிவினாலும் இராணுவத் தலைமைத்துவத்தாலும், இந்த இயக்கத்தின் வலுவை குறைந்து மதிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. இவர்களுக்கு எதிராக ஒரு உத்வேகமான போராட்டம் தற்போது தொடங்கப்பட்டது. அவர்களில் பலர் கட்சிப் பதவியிலிருந்தும் இராணுவக் கட்டளைத் தலைமைகளிலிருந்தும் இராணுவக் கட்டளைத் தலைமைகளிலிருந்தும் அகற்றப்பட்டனர். இவர்களில் லுயூ என் - காங் என்ற இராணுவக் கமாண்டார் தனித்துவம் வாய்ந்தவர். எதிரியுடனான சமர்களின்போது கஷ்டமான சூழ்நிலைகட்குள் இட்டுச் சென்று செஞ்சேனையை அழிக்க முயன்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறான பல தோல்வியில் முடிவடைந்த சண்டைகளின் பின்பு இவர்களுடைய திட்டங்கள் மிகத் தெளிவாக தெரிந்தன. எங்கள் திட்டங்கள் மிகத் தெளிவாக தெரிந்தன. எங்கள் திட்டங்களையும் நாங்கள் முன்னெடுத்த அனைத்து விடயங்களையும் இவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். இவர்களது பிழைகளை அனுபவங்கள் எடுத்துக் காட்டியிருந்ததால், பொறுப்பான பதவிகளில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டனர். பிய+கியான் மாநட்டிற்குப் பின்பு இவர்கள் தங்கள் செல்வாக்கை இழந்தனர்.

கியாங்சியில் சோவியத் அதிகாரத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை இந்த மாநாடு தயராக்கியது. அடுத்த வருடத்தில் பல அற்புதமான வெற்றிகள் கிடைத்தன. கியாற்சியில் கிட்டத்தட்ட முழுத் தென்பகுதியும் செஞ்சேனையிடம் வீழ்ச்சியடைந்தது. மத்திய சோவியத் பிராந்தியத்திற்கான தளம் உருவாக்கப்பட்டது.

சோவியத்துக்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி ஆராய்வதற்காக தென் கியாங்சியில் 1930 பெப்ரவரி 7ம் திகதி ஒரு முக்கிய உள்ளுர் கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் உள்ளுர் கட்சிப் பிரதிநிதிகள் இராணுவ அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் காணிக் கொள்கை விரிவான முறையில் ஆராயப்பட்டது. காணிகளின் மீள் விநியோகத்திற்கு எதிரானவர்களால் தலைமை தாங்கப்பட்ட “சந்தர்ப்பவாதத்திற்கு’’ எதிரான போராட்டம் வெற்றி கொள்ளப்பட்டது. காணிமீள் விநியோகத்தை நடைமுறைப்படுத்துவது என்றும் சோவியத் அரசுகளை அமைப்பதை விரைவுபடுத்துவது என்றும் உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவரை செஞ்சேனை உள்ளுர் மாவட்ட சோவியத்துக்களையே அமைத்திருந்தது இந்த மகாநாட்டில் கியாங்சி மாகாண சோவியத் அரசை நிறுவுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்திற்கு விவசாயிகள் மகிழ்ச்சியான உற்சாகமான ஒத்துழைப்புக்களை நல்கினர். இந்த உதவி வரப்போகும் மாதங்களில் கோமிண்டாங் படைகளை நிர்முலமாக்கும் போரியக்கங்களைத் தோற்கடிக்க பெருமளவில் உதவியது.

செஞ் சேனையின் வளர்ச்சி

தனது வாழ்க்கை வரலாறு என்ற பகுப்பாய்விலிருந்து மாசேதுங் வெளியேறி, ஒரு பாரிய இயக்கத்தில், தனது கடமை என்ற ஓரளவு தெளிவற்ற, இயல்பான விருப்புடைய மாற்றத்தினுள் மாசேதுங் மாற்றமுற்றார். மேலாதிக்கமான கடமையில் அவர் இருந்தபோதிலும் அவரை ஒரு தனித்துவமான மனிதர் என்ற அடிப்படையில் எங்களால் உணர முடியவில்லை அவரது வரலாற்று விளக்கம் தற்போது “நான்’’ என்ற அடிப்படையில் அல்லாது “நாங்கள்’’ என்ற அடிப்படையிலேயே இருந்தது. அந்த “நாங்கள்’’ என்ற தோற்ற வெளிப்பாடு செஞ்சேனையையே குறித்தது. இது தற்போது ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை அனுபவம் அனுபவம் என்ற இலக்கற தாக்கமாக இருக்கவில்லை. வரலாற்றின் தொகுபொருள் என்ற கூட்டிணைந்த மானிட விதியின் ஒரு பார்வையாளன் தொகுப்பு வழங்கிய இலக்கு நோக்கிய வரலாற்றுப் பதிவாகவே இருந்தது.

அவரது வாழ்க்கை வரலாறு அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நான் அவரிடம் விசாரிப்பது மேலும் மேலும் அத்தியாவசியமாகியது அந்த நேரத்தில் என்ன பதவி வகித்தார், இந்த, அல்லது அந்த சூழ்நிலைகள் பற்றிய அவரது கருத்து என்னவாக இருந்தது? இந்த வரலாற்று விளக்கத்தின் இறுதி அத்தியாயத்தில், எனது கேள்விகள் பொதுவாக, அவரைப் பற்றிய சில குறிப்புக்களை வெளிப்படுத்தவே செய்தன.

படிப்படியாக, வெகுஜகங்களுடனான செஞ்சேனையின் பணி முன்னேற்றமடைந்தது ஒழுக்கக் கட்டுப்பாடு வலுவடைந்தது – நிறுவனக் கட்டமைப்பில் ஒரு புதிய தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்தது. புரட்சிக்கு ஆதரவு வழங்க அனைத்து இடங்களிலும் உள்ள விவசாயிகள் தொண்டர்களாகச் சேரத் தொடங்கினர். சிங்காங்சான் காலத்திலிருந்தே தங்கள் போராளிகள்மீது செஞ்சேனை மூன்று சாதாரணச் சட்டங்களைத் திணித்திருந்தது அவைகளாவன கட்டளைக்கு உடனடியாகக் கீழ்ப்படிதல், ஏழை விவசாயிகளிடமிருந்து எவ்வித பொருளையும் பறிமுதல் செய்யக்கூடாது, நிலப்பிரபுக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, அவற்றை விநியோகம் செய்வதற்காக அரசாங்கத்திடம் உடனடியாக, நேரடியாக ஒப்படைத்தல் 1928ஆம் ஆண்டு மாநாட்டுக்குப் (மாவோ பிங் மகாநாடு) பின்பு விவசாயிகளின் ஆதரவைப் பெறுவதற்காகத் தீவிர அழுத்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலே குறிப்பிட்டுள்ள மூன்று சட்;டங்களுடன் மேலும் எட்டு விதிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.


1. ஒரு வீட்டைவிட்டு வெளியேறும்போது அதன் கதவுகளை மீளவும் அங்கேயே வைத்துவிடுங்கள் (இந்த விதி வெளிப்படையாகத் தோற்றமளிக்குமளவுக்கு ஒரு சாதாரணமான விடயமல்ல@ ஒரு சீன வீட்டின் மரக்கதவுகளை இலகுவாக கழற்றி எடுக்கப்படக்கூடியவை. அவை பெரும்பாலும் இரவு வேளைகளில் கழற்றப்பட்டு மர அடிப்பாளங்களு மேல் வைக்கப்பட்டு தற்காலிகப்படுக்கைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன)

2. நீர் படுத்ததிருந்த வைக்கோல் பாயை சுற்றி மடித்து திருப்பவும் உரியாளர்களிடம்
கையளியுங்கள்.

3. மக்களிடம் கௌரவமாகவும் அடக்கமாகவும் நடந்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த
நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

4. கடடனாக வாங்கிய அனைத்துப் பொருட்களையும் மீளளியுங்கள்.

5. சேதமடைந்த பொருட்களுக்குப் பதிலாக மாற்றீடு செய்யுங்கள்.

6. விவசாயிகளுடனான அனைத்துக் கொடுக்கல் வாங்களிலும் நேர்மையைக் கடைப்பிடிங்கள்

7. கொள்முதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் விலையைப் பணமாகச்
செலுத்துங்கள்.

8. சுகாதாரப் பேணுங்கள், பொதுமக்களின் வீடுகளிலிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தில்
மலகூடங்களைக் கட்டுங்கள்.

இதில் கடைசி இரண்டு விதிகள் லின்பியாவினால் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்த எட்டு விதிகளும் மேலும் மேலும் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தப்பட்டன. இது தற்போதும் கூட ஒரு செஞ்சேனை வீரனின் விதியாக உள்ளது@ இது அவனால் மனப்பாடம் செய்யப்பட்டு அடிக்கடி சொல்லப்படுகிறது. (இவை செஞ்சேனைப் பாடல்களாக ஒவ்வொரு நாளும் பாடப்படுகின்றன.) மற்றும் மூன்று கடமைகள், அதன் ஆரம்பநோக்கங்களாக செஞ்சேனைக்குப் பயிற்றப்பட்டன முதலாவதாக, உயிர் போகும்வரை எதிரியை எதிர்த்துப் போராடுவது, இரண்டாவதாக, வெகுஜனங்களை ஆயுதமயப்படுத்துவது, மூன்றாவதாக, போராட்டத்துக்கு ஆதரவு வழங்க பணத்தைச் சேகரிப்பது.

1929ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் லீ வென் லுங், லீ ஷாங் த்து ஆகியோரின் தலைமையிலான போராளிகள்; மூன்றாவது செஞ்சேனையாக மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர். இது வாங்குங் - லுவால் தலைமை தாங்கப்பட்டது. சென் யீ இதன் அரசியல் கமிசராக இருந்தார். இதே காலகட்டத்தில் சூ பெய் ரேயின் மின் துவானில் ஒரு பகுதி படைக்கலம் செய்து செஞ்சேனையுடன் சேர்ந்து கொண்டது. லோ பிங் ஹிய் என்ற கோமிண்டாங் கமாண்டரால் இவர்கள் கம்ய+னிஸ்ட் முகாமுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கோமிண்டாங்குடன் மனம் வெறுத்து செஞ்சேனையுடன் சேர விரும்பினார். இவர் தற்போது இரண்டாவது முன்னணி இராணுவத்தின் 32வது செஞ்சேனைப் பிரிவுக்குக் கமாண்டராக உள்ளார். பிய+கியென் போராளிகளிலிருந்தும் முறைமை செம்படைத் துரும்புகளிலிருந்தும் 20வது செஞ்சேனை உருவாக்கப்பட்டது. இதற்கு வ+தங் ஹாவ் கமாண்டர் ரான் சென் லின் அரசியல் கமிசார். பின்பு ஒரு சமரில் வ+ கொல்லக்கட்ட அவரிடத்துக்கு லோ பிங் ஹிய் நியமிக்கப்பட்டார்.

இந்த நேரத்தில்தான் முதலாவது இராணுவ பிரிவு ஒழுங்குபடுத்தப்பட்டது. இதற்கு சூடே கமாண்டராக நியமனம் பெற்றார். நான் அரசியல் கமிசராக நியமிக்கப்பட்டேன். இந்த இராணுவ பிரிவுவின் பியாவினால் தலைமை தாங்கப்பட்ட 3வது 4வது இராணுவங்களும் லோ பிங் ஹிய்யின் தலைமையிலான 12வது இராணுவமும் அடங்கும் கட்சித் தலைமை ஒரு முன்னணிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு நான் தலைவனாக இருந்தேன் முதலாவது இராணுவ பிரிவில் ஏற்கனவே 10,000 வீரர்களுக்கு மேல் இருந்தார்கள். அப்போது இந்த இராணுவ பிரிவு 10 டிவிசன்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரதான படையை விட பல உள்ளுர் மற்றும் தனிப்பட்ட ரெஜிமண்ட்டுகளும் இருந்தன. அத்தோடு செங்காவலர்கள், போராளிகள் ஆகியோலும் இருந்தனர்.

செஞ்சேனையில் தந்திரோபாயங்கள், அந்த இயக்கத்தின் அரசியல் அடிப்படைகளை விட, அதன் வெற்றிகரமான இராணுவ அபிவிருத்தியையும் விளக்குவதாக இருந்தன. சிங்காஞ்சானில் 4 சுலோகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. செஞ்சேனையின் வளர்ச்சிப் பயணத்துக்கு ஊன்றுகோலாக அமைந்த போராளிகள் யுத்த முறைகளை விளக்குபவை இந்த சுலோகங்கள் அமைந்திருந்தன.

1. எதிரி முன்னேறும்போது நாங்கள் பின் வாங்குவோம்!

2. எதிரி தனது முன்னேற்றத்தை நிறுத்தி அவ்விடத்தே முகாமிடுகின்றபோது அவனுக்குத்
தொல்லை கொடுக்கின்றோம்.

3. எதிரி ஒரு சமரைத் தடுத்துக் கொள்ள முயன்றால் நாம் அவன் மீது தாக்குதலை
மேற்கொள்கிறோம்.

4. எதிரி பின்வாங்கத் தொடங்கினால் நாம் அவனைப் பின் தொடர்பின்றோம்.

இந்த சுலோகங்கள் ஆரம்பத்தில் பல அனுபவம் வாய்ந்த இராணுவத்தினால் எதிர்ப்புக்குள்ளானது. இவற்றில் முன்மொழியப்பட்டுள்ளன தத்திரோபாய முறைகளை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பல அனுபவங்களை இந்தத் தந்திரோபாயங்களிலிருந்து பொதுவாக செஞ்சேனை மாறுபடும் போதெல்லாம் அது தோல்வியே தழுவியது எங்கள் படைகள் சிறியவை@ எங்களுடைய படையைப்போல் 10 முதல் 20 முறை எதிரிகளின் படை எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எங்களுடைய மூலவளங்களும் சண்டைத் தளபாடங்களும் வெகு குறைவானதாக இருந்தன. படை நகர்தல் கெரில்லா யுத்த முறை ஆகியவற்றைத் திறமையுடன் இணைக்கும் தந்திரோபாயத்தின் மூலம்தான் கோதிண்டாங்குக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் வெற்றி பெறுவதில் நாங்கள் நம்பிக்கை வைக்கமுடியும். ஏனென்றால் அவர்கள் பெருமளவு கெல்வனமுள்ள, மேலாதிக்கமுள்ள தளங்களிலிருந்து கொண்டு எங்களுடன் மோதினார்கள்.

செஞ்சேனையின் ஒரு மிகமுக்கியத்துவம் வாய்ந்த, ஒரு தனிப்பட்ட தந்திரோபாயமாக முன்பு இருந்ததும், தற்போதும் இருப்பதுமான தந்திரோபாயந்தான்@ ஒரு தாக்குதலில் அதன் பிரதானபடைகளை ஒருங்குவித்துத் தாக்குவதும் பின்பு விரைவாக அப்படைகளைப் பிரித்து வௌ;வேறாக்கி விடுவதுமாகும். இது, ஒரு நிலையினின்று நகராமற் போரிடும் போர்முறையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியது. அத்தோடு எதிரியின் இயங்கு படைகளை அவர்கள் நகர்வில் இருக்கும்போதே எதிர் கொள்ள அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்களை அதன் மூலம் அழிக்கவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றது. இந்தத் தந்திரோபாயத்தின் அடிப்படையில்தான் செஞ்சேனையின் நகர்திறனும், விரைவாக, வலிமையான “சிறுதாக்குதல்’’ நடைமுறையும் அபிவிருத்தி செய்யப்பட்டன.

பொதுப்படையான, சோவியத் அரசும் பிராந்தியங்களை விரிவாக்குவதில், செஞ்சேனை, ஒரு அலை போன்ற ஆளுமையான அபிவிருத்தியையே ஆதரித்து. கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களை ஆழமாக உறுதிப்படுத்தாமல் “குதித்தல்’’ “பாய்தல்’’ வகையிலான அபிவிருத்தியை அது ஆதரிக்கவில்லை. ஏற்கனவே இந்தக் கொள்கை நடைமுறைச் சாத்தியமானதொன்றாகும். இது பவ வருடங்களாக இராணுவ அரசியல் அனுபவங்களின் கூட்டிணைப்பின் மூலம் வளர்ச்சியடைந்த ஒரு விடயமாகும் இந்தத் தந்திரோபாயங்கள் லி.லி.சான் அவர்களால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. அவர் அனைத்து ஆயுதங்களும் செஞ்சேனையின் கைகளில் குவிக்கப்பட வேண்டுமென்றும் அனைத்துப் போராளிக் குழுக்களையும் செஞ்சேனையில் உள்ளீடு செய்துகொள்ள வேண்டும் என்றும் முன்மொழிந்தார் கைப்பற்றபட்ட இடங்களை உறுதிப்படுத்திக் கொள்வதைவிட தாக்குதல்களையே விரும்பி நின்றார். பின்புலத்தைப் பாதுகாத்துக் கொள்ளாமல் முன்னேறுவதையே ஆதரித்தார். கிளர்ச்சிகளையும் தீவிரவாதத்தையும் இணைத்ததான பெரிய நகரங்களின் மீதான கிளர்ச்சிய+ட்டும் தாக்குல்களை அவர் ஆதரித்தார். லி.லி. சானின் செயல்முறைப்போக்குகளே அப்போது கட்சியில் மேலாதிக்கத்தைக் கொண்டிருந்தன. சோவியத் அரசுப் பகுதிகளுக்கு வெளியேதான் இந்த ஆதிக்கம் - ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, செஞ்சேனையில் இந்தச் செயல்முறைப் போக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதைத் தூண்டுமளவுக்கு போதுமான செல்வாக்கை அது கொண்டிருந்தது. இது செஞ்சேனையின் தளத் தலைமைப் பீடத்தின் தீர்ப்புக்கு மாறாக இருந்தது. இதன் ஒரு விளைவு சாங்சாமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். மற்றையது நான் சாங் நோக்கி மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றப் படை நகர்வாகும். ஆனால் இந்தத் துணிகரப் செயல்களின்போது போராளிக் குழுக்களை படை நடவடிக்கைகளில் ஈடுபடாமற் செய்வதற்கும் பின்புலங்களின் பாதுகாப்பைத் தளர்த்துவதற்குச் செஞ்சேனை மறுத்துவிட்டது.

1929 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின்போது செஞ்சேனை வடகியாங்கினை நோக்கி நகர்ந்தது. வழி நெடுகத் தாக்குதலை மேற்கொண்டும் பல நகர்களைக் கைப்பற்றிக் கொண்டும் கோமிண்டாங் இராணுவங்களின் மீது எண்ணிலடங்காத தோல்விகளை ஏற்படுத்திக் கொண்டும் செஞ்சேனை நகர்ந்தது. நான்சாங் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய தொலையில் இருக்கும்போது முதலாவது இராணுவப் பிரிவு, மேற்குப்பக்கமாத் திரும்பி சாங்சாலை நோக்கி முன்னேறியது. இந்த படைநகர்வின் போது பெங்ரே - ஹ{வாயின் படையணிகள் வழியில் இணைந்து கொண்டன. பெங்கின் படைகள் ஏற்கனவே சாங்காவைக் கைப்பற்றியிருந்தன. ஆனால் பாரிய எண்ணிக்கையைக் கொண்டிருந்த எதிரித்துருப்புக்களால் சுற்றி வளைக்கப்படாமல் இருப்பதாக அவை அங்கிருந்து வெளியே இருந்தன. பெங் 1929 ஏப்ரலில் கிங்காங்சானை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. அவர் தெற்கு கியாங்கியில் பல போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் விளைவாக அவரது துருப்புக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து. 1930 ஏப்ரலில், ஜுய் சின்னல் அவர், சூடேயுடனும் செஞ்சேனையின் பிரதான படைககளுடனும் சேர்ந்து கொண்டார். இங்கு ஒரு மாநாட்டின் பின்பு, பெங்கின் மூன்றாவது இராணுவம் கியாங்கிஹ{னான் எல்லையில் போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும் சூடேயும் நானும் பிய+கியென்னுக்கு நகர்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதத்தில் தான் முதலாவது இராணுவ பிரிவும் மூன்றாவது இராணுவப் பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு முதலாவது முன்னணி இராணுவமாக்கப்பட்டன. இதற்கு சூடே தலைமைக் கமாண்டராக நியமிக்கப்பட்டார். நான் அரசியல் கமிசராக நியமிக்கப்பட்டேன். இந்தத் தலைமையின் கீழ் நாங்கள் சாங்காவின் சுற்றுமதில்களு;ககு வெளியே வந்து சேர்ந்தோம்.

இதே நேரத்தில், சீனத் தொழிலாளர் விவசாயிகள் புரட்சிகரக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதற்குத் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஹ{னானில் செஞ்சேனையின் செல்வாக்கு மிகப்பரவலாக இருந்தது. இதே அளவுக்கு கியாங்சியிலும் இருந்தது. ஹ{னான் விவசாயிகளிடையே எனது பெயர் பிரபலமாக இருந்தது. உயிரோடோ அல்லது பிணமாகவோ என்னையும், சூடேயையும்; ஏனைய கம்ய+னிஸ்டுக்களையும் பிடிப்பதற்கு மிகப் பெரிய பணயப் பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சியாங்ரானில் எனது காணிகள் கோமிண்டாங்கினால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. (இந்த காணியில் பெறப்பட்ட குத்தகையைத்தான் ஹ{னானில் விவசாயிகள் இயக்;க வளர்ச்சிக்கு மாவோ முன்பு பயன்படுத்தியிருந்தார்.) எனது மனைவி எனது சகோதரி, அத்துடன் எனது இரு சகோதரர்கள் மா. சே. மின், மாசேரான் ஆகியோரின் மனைவிமார், எனது சொந்த மகன்மார் ஆகியோர் யுத்தபிரபு ஆளுநரான ஹோசியென்னால் கைது செய்யப்பட்டனர். எனது மனைவியான காய் ஹ{ய்யும் எனது சகோதரியான சேஹிங்கும் கொல்லப்பட்டார். ஏனையோர் பின்பு விடுதலை செய்யப்பட்டனர். செஞ்சேனையின் கௌரவம் எனது சொந்தக் கிராமமான சியாங்ரானுக்கும் எட்டியிருந்தது. இதுபற்றி நான் ஒரு கதையைக் கேள்விப்பட்டிருந்தேன். நான் விரைவில் எனது கிராமத்துக்குத் திரும்பிவருவேன் என்று உள்ளுர் விவசாயிகள் நம்பினார்கள். ஒரு நாள் ஒரு விமானம் பறந்து சென்றபோது அதில் செல்வது நானானத்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். எனது பழைய பண்ணையைப் பார்வையிட நான் பரிசோதிப்பேன் என்று அப்படி ஏதம் நடந்திருந்தால் நான் நிச்சயமாக சியாங்கேய ஷேக்கிடம் நஷ்டஈடு கேட்பேன் என்றும் எனது காணியில் அப்போது கமம் செய்து கொண்டிருந்த விவசாயியை அவர்கள் எச்சரித்திருந்தார்கள்.

சாங்கா மீதான இரண்டாவது தாக்குதல் ஒரு தோல்வியில் முடிவடைந்தது. பெருமளவிலான உதவிப் படைகள் எதிரியால் நகருக்குள் அனுப்பப்பட்டிருந்ததோடு நகரத்தில் ஏராளமான படைவீரர்களும் இருந்தனர். இதைவிட, செப்டம்பர் மாதத்தில் புதிய துருப்புகள், செஞ்சேனையைத் தாக்குவதற்காக ஹ{னானுக்குள் குவிந்து கொண்டிருந்தனர். இந்த முற்றுகையின்போது ஒரே ஒரு முக்கிய சமர் மட்டுமே இடம்பெற்றது இச்சமரில் செஞ்சேனை, எதிர்த் துருப்புக்களின் இரண்டு பிரிக்கேட்டுகளை நிர்மூலமாக்கியது. இதன் மூலம் சாங்சாவைக் கைப்பற்ற முடியவில்லை சில வாரங்களின் பின்பு நாங்கள் சியாங்சிக்குப் பின் வாங்கினோம்.

இந்த தோல்வி லி லி சானின் செயல்முறைப் போக்கை அழிந்திருந்தது. இது லி.லி – சான் கோரிக்கை விடுத்தி;ருந்ததும் வுகான் மீது மேற்கொள்ளப்படவிருந்ததும் பேரழிவைத் தந்;திருக்கக்கூடியதுமான ஒரு தாக்குதலிலிருந்து செஞ்சேனையைக் காப்பாற்றியது. அப்போது செஞ்சேனையின் பிரதான கடமைகளாக கீழ்வரும் பணிகள் இருந்தன@ புதிய துருப்புக்களைப் படையில், சேர்த்தல், புதிய கிராமப் பகுதிகளை சோவியத் ஆட்சிக்குள் கொண்டுவருதல், இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஏற்கனவே செஞ்சேனையிடம் வீழ்ச்சியடைந்திருந்த பகுதிகளில் முழுமையான சோவியத் அதிகாரத்தை உறுதிப்படுத்தல் என்பனவையே அப்பணிகளாகும். இத்தகைய திட்டத்துக்கு, சாங்சா மீதான தாக்குதல்கள் போன்றவை தேவையற்ற நடவடிக்கைளாக இருந்தன. இவற்றில் வெறுமனே துணிகரத் தன்மை மட்டுமே அடங்கியிருந்தன. சாங்சாலை முதன்முறை கைப்பற்றிய நடவடிக்கை, ஒரு தற்காலிக நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், - (நகரைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், அங்கு சோவியத் அதிகாரத்தை நிறுவுதல் என்ற நோக்கத்தோடு முயற்சியை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால்) இதனால் பெறப்பட்ட எதிர்விளைவுகள் தேசிய புரட்சிகர இயக்கத்துக்குப் பேருதவி செய்திருக்கும். இந்தப் பிழை மூலோபாய, தந்திரோபாய ரீதியான ரீதியான பிழையாக இருந்தது சாங்காவின் பின்புலத்தின் சோவியத் அதிகாரத்தை தற்போதும் உறுதிப்படுத்தாத நிலையில், அதை ஒரு தளமாகக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்;ட முயற்சி ஒரு மூலோபாய, தந்திரோபாய, ரீதியான தவறாகும்.

மாவோவின் கதையை சிறிது நிறுத்திவிட்டு லி – லி – சானைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இவர், ஹ{னான் பகுதியைச் சேர்ந்தவர். அத்தோடு பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்றுத் திரும்பியவராவார். கம்ய+னிஸ்ட் கட்சி தனது தலைமறைவுத் தலைமையகத்தைக் கொண்டிருந்த ஷாங்காய், ஹன்கோ ஆகிய இரு இடங்களிலும் இவர் செயற்பட்டார். 1930 ஆம் ஆண்டுக்குப் பின்னரே கட்சியின் மத்திய குழு சோவியத் மாவட்டங்களிலும் மாற்றப்பட்டார். 1930 இல் இவர் அரசியற் செயற்குழுவிலிருந்து விலக்கப்பட்டு மொஸ்கோவுக்கு அனுப்பப்பட்டார். சென் ரூ - சியூ வைப் போலவே லி – லி – சானும் கிராமிய சோவியத்துக்களில் நம்பிக்கை கொள்ளவில்லை. சாங்கா, வுகான் நான் சாங் ஆகிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பெரிய தலைநகரங்களில் பெரிய முனைப்புள்ள தந்திரோபாயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பிரபுத்துவாதிகளின் மனோதிடத்தைச் சிதைப்பதற்காக, கிராமங்களில் “பயங்கரவாத நடவடிக்கைகள்’’ மேற்கொள்ள அவர் விரும்பினார். எதிரியை அவனது தளங்களிலேயே ஸ்தம்பிக்க வைக்க, தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், கிளர்ச்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதான ஒரு “பாரிய வலிந்து தாக்குதலை’’ மேற்கொள்ள அவர் விரும்பினார். அத்துடன் சோவியத் ய+னியனின் ஆதரவோடு வெளி மங்கோலியா, மஞ்சூரியாப் பகுதிகளிலிருந்து வடபகுதிகளில் “பக்கவாட்டுத் தாக்குதல்களை’’ மேற்கொள்ளவும் விரும்பினார்.

கதை தொடர்கின்றது@

ஆனால் அந்த நேரத்தில் செஞ்சேனையில் இராணுவ பலத்தையும் தேசிய அரசியல் அரங்கில்; புரட்சிகர அம்சங்களின் தாக்கத்தையும் லி – லி – சான் மிகைப்படுத்தி மதிக்கப்பட்டிருந்தார். புரட்சி வெற்றக்கம்பத்தை நெருங்கிக் கொண்டிருதாகவும் விரைவில் அது முழு நாட்டின் மீதும் அதிகாரத்தைக் கொண்டுவரும் என்று அவர் நம்பினார். அப்போது, பெங் யு – கியாங்குக்கும் சியாங் கேய் - ஷேக்குக்கும் இடையே இடம் பெற்றுக்கொண்டிருந்த நீண்ட, தளர்வடைந்து கொண்டிருந்த உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக மேற்கூறப்பட்ட நம்பிக்கை வலுவ+ட்டப்பட்டது. இந்த யுத்தம் லி – லி – சானின் பார்வையில் மிகவும் சாதகமான ஒன்றாகத் தெரிந்தது. ஆனால், செஞ்சேகையின் பார்வையில் எதிரி உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததும் சோவியத்துக்கு எதிராக ஒரு பாரிய தாக்குதலுக்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தான். அத்தோடு எதிரிக்கெதிரான துணிகரத் தாக்குதல்களை மேற்கொள்ளுவதற்கு அல்லது பேராபத்தான இராணுவ கிளர்ச்சிக்கு உகந்த காலமாக இருக்கவில்லை. இந்த மதிப்பீடு முழுமையாகச் சரியானதொன்றாக இருந்தது.

ஹ{னானில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்குப் பின்பும் கியாங்கிக்கு செஞ்சேனை திரும்பியபின்பு விசேடமாக சியாங்;;;;;;;;; கைப்பற்றப்ட்ட பின்பும் இராணுவத்தில் லி – லி – சானியவாதம்’’ தோற்கடிக்கப்பட்டது. தனிப்பட்ட அளவில் லிபிழை விட்டிருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்ட வகையில் கட்சியில் அவர் தனது செல்வாக்கை இழந்தார். இறுதியாக “லி – லி – சானியவாதம்’’ நிச்சயமாகப் புதைக்கப்படும். முன்பு இடரார்ந்த காலகட்டம் ஒன்று இருக்கவே செய்தது. 3 வது பிரிவின் ஒரு பகுதியினர் “லி’’ யின் பாதையைப் பின்பற்ற விரும்பியதோடு இராணுவத்தின் ஏனைய பிரிவுகளிலிருந்து 3வது பிரிவை பிரிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இந்தப் போக்கை பெங் ரெ ஹ{வாய் மிகக்கடுமையாக எதிர்த்ததோடு, தன் கீழுள்ள, படைகளின் ஐக்கியத்தைப் பேணுவதிலும் கட்சித் தலைமைப் பீடத்தின் மீதான அவர்களின் விசுவாசத்தை தொடர்ந்து பாரமழிப்பதிலும் அவர் வெற்றி பெற்றார். ஆனால் லியுரே – சாவ்வினால் தலைமை தாங்கப்பட்ட 20வது ராணுவம் வெளிப்படையாகவே தலைவரைக் கைது கைது செய்தது. அது கியாங்கி சோவியத்தின் தலைவரைக் கைது செய்தது. அது பல இராணுவ அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் கைது செய்ததோடு லி லி சான் வழியைப் பின்பற்றி எங்களை அரசியல் ரீதியாகத் தாக்கியது. இந்த நிகழ்வு பு – ரியென்னில் இடம்பெற்றதனால் இது “புரியென் சம்பவம்’’ என்று அழைக்கப்பட்டது. சோவியத் மாவட்டங்களில் மையமாக இருந்த கியான்னுக்கு அருகே புரியென் இருந்தால் இந்த நிகழ்ச்சி ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இது இந்தப் போராட்டத்தின் பெறுபேற்றில்தான் புரட்சியின் கதி தங்கியிருப்பதாக பலருக்கு எண்ணத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்தக் கிளர்ச்சி விரைவாக அடக்கப்பட்டது. மூன்றாவது இராணுவத்தின் விசுவாசம் செம்படையினரதும், கட்சியினரதும் பொதுவான ஒருமைப்பாடு, விவசாயிகளின் ஆதரவு ஆகியவை காரணமாகவே இவ்வாறு அடக்கப்பட்டது. லி யு ரே சாங் கைது செய்யப்பட்டார். ஏனைய கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் அகற்றப்பட்டு படையிலிருந்து விலக்கப்பட்டார். “லி லி சான்வாதம்’’ நிச்சயமாக அடக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக சோவியத் இயக்கப் பின்னீடு பல வெற்றிகளைப் பெற்றது. ஆனால் கியாங்கியிலுள்ள சோவியத்துகளின் புரட்சிகர வல்லாண்மையை இட்டு நான்கிங் அரசாங்கம் முழுமையான விழித்தெழிந்தது. 1930 ஆம் ஆண்டின் இறுதியில் அது தனது முதலாவது முழு அழிவுப் போரியக்கத்தை செஞ்சேனைக்கு எதிராகத் தொடங்கியது. ஒரு லட்சம் துருப்புகளுக்கு மேல் எண்ணிக்கை கொண்ட எதிர்ப்படைகள் கம்ய+னிஸ்ட் பிராந்தியங்களை சுற்றி வளைத்தன. லு ரி பிங் தலைமையில் ஐந்து பாதைகளில் அவை ஊடறுத்து முன்னேறின. இவர்களுக்கெதிராக செஞ்சேனையால் 40,000 வீரர்களையே திரட்ட முடிந்தது. பல மாபெரும் வெற்றிகளைப் பெற்றோம். “விரைவாக’’ ஒருங்குவித்தல் விரைவாகக் கலைந்து செல்லுதல். யுத்த தந்திரோபாயத்தைப் பின் பற்றி அவர்களது ஒவ்வொரு படைப்பிரிவையும் தனித்தனியாக எங்கள் பிரதான படையின் மூலம் தாங்கினோம். சோவியத் பிராந்தியர்களுக்குள் எதிர்ப்படையை ஆழமாக நுழைய அனுமதித்து திடீரென்;று ஒருங்குவிக்கப்பட்ட தாக்குதல்களை அவர்கள் மீது நடத்தினோம். தனித்து நிற்கும் கோமிண்டாங் படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினோம் இதன் மூலம் படை நகர்த்தலுக்கான நிலைகளைப் பெற்றோம். இது தற்காலிகமாக அவர்களைச் சுற்றிவளைக்க எங்களுக்கு உதவியது. இதன் மூலம் துரும்பு எண்ணிக்கையில் பெரும் மேலாதிக்கம் கொண்டிருந்த எதிரியின் மூலோபாய ரீதியான வாய்ப்பு வளத்தை தலைகீழாக மாற்றினோம்.

1931 ஜனவரி அளவில் இந்த முதலாவது போரியக்கம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இந்தப் போரியக்கம் தொடங்குவதற்கு முன்பு செஞ்சேனை மூன்று அம்சங்களில் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இந்த வெற்றியை அது பெறுவது சாத்தியமாயிருக்காது என்று நான் நம்புகின்றேன். அவையாவன.
1. வது 3வது இராணுவ பிரிவுகளை ஒரு மத்திய ஆணை கீழ் ஒழுங்கு திரட்டி
உறுதிப்படுத்தியமை

2. லி லி சான் போக்கை அகற்றியது.

3. போஷ்விக் எதிர்ப்புப் பிரிவு (லியு ரே சான்) மற்றும் செஞ்சேனை சோவியத்
மாவட்டங்களிலிருந்த ஏனைய தீவிர எதிர்ப் புரட்சியாளர்கள் மீது கட்சி பெற்ற
வெற்றி.

நான்கு மாத இடைவெளிக்குப் பின்பு நான்கிங் அரசு இரண்டாவது போரியக்கத்தைத் தொடங்கியது. ஹோயிங் சின் இதன் பிரதம தளபதியாக இருந்தார். இவர் அப்போது யுத்த அமைச்சராகவும் இருந்தார். அவரது படையில் 2,00,000 பேருக்கு மேல் இருந்தார். அவர்கள் கம்ய+னிஸ்ட் பிராந்தியங்களிலுள்ள ஏழு மார்;க்;கங்களில் முன்னேறினர். அந்தச் சூழ்நிலை செஞ்சேனைக்கு மிகவும் இடரார்ந்த ஒரு காலகட்டமாகக் கருதப்பட்டது. சோவியத் அதிகாரத்துக்குட்பட்ட பிராந்தியங்கள் மிகச் சிறியனவாக இருந்தன. மூலவளங்கள் ஒரு வரையறைக்குட்பட்ட அளவிலேயே இருந்தன. யுத்த தளவாடங்கள் குறைவாகவே இருந்தன. எதிரியின் பலம் எல்லா அம்சங்களிலும் செஞ்சேனையில் பலத்தைவிட வெகு அதிகமாக இருந்தது. இந்த வலிந்து தாக்;குதலை எதிர்கொள்ள நேர்ந்தபோது செஞ்சேனை இதுவரை அதற்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த அதே யுத்த தளவாடங்கள் குறைவாகவே இருந்தன. எதிரியின் பலம் எல்லா அம்சங்களிலும் செஞ்சேனை இதுவரை அதற்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த அதே யுத்த தந்திரோபாயங்களையே தற்போதும் கைக்கொண்டது. கம்ய+னிஸ்ட் பிராந்தியங்களுக்குள் எதிரியின் படை வரிசைகளை நன்கு ஊடுருவ அனுமதித்துவிட்டு எங்களுடைய பிரதான படையணிகள் எதிரியின் இரண்டாவது மார்க்கத்தில் நுழைந்த படைகளைத் திடீரென்று தாக்கின. அதில் பல ரெஜிமெண்டுகளைத் தோற்கடித்ததோடு எதிரியின் வலிந்து தாக்குதல் திறனையும் நிர்மூலமாக்கின. இதையடுத்து உடனடியாக நாங்கள் எதிரியின் மூன்றாவது மார்க்கத்தைத் தாக்கினோம். பின்பு 6வது 7வது மார்க்கத்தையும் தாக்கி ஒவ்வொன்றாகத் தோற்கடித்தோம். 4வது மார்க்கத்தில் வந்த எதிர்ப்படையணிகள் சமரில் ஈடுபடாமலேயே பின்வாங்கின. 5வது மார்க்கத்தில் வந்த படையினரில் பாதிப்பேர் அழிக்கப்பட்டனர். 14 நாட்களுக்குள் செஞ்சேனை 6 சமர்களைப் பிடித்திருந்தது. எட்டு நாட்கள் படை நகர்த்தல் அணி நடைகளை மேற்கொண்டிருந்தது. இதன் மூலம் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றிருந்தது. ஏனைய 6 மார்க்கங்களும் ஒன்றில் சிதறிப்போன அல்லது பின்வாங்கிய நிலையில் சியாங் குவாங் நாய் மற்றும் தசை ரிங் கை ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட முதலாம் மார்க்க இராணுவம் கடுமையான சண்டை எதுவும் பிடிக்காமலேயே பின்வாங்கியது.

ஒரு மாதத்தின் பின்பு 300,000 படை வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தின் தலைமையை சியாங் கேய் ஷேக் பொறுப்பேற்று “கம்ய+னிஸ்ட் கொள்ளைக்காரர்களின் இறுதி நிர்மூலம்’’ என்ற கோஷத்துடன் போரியக்கதைத் தொடங்கினார். அவரது திறமைமிக்க கமாண்டர்களான சென் மிங் ஷ{, ஹோ யிங் சின், சூ ஷாங் லியாங் ஆகியோரால் உதவப்பட்டார். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரதான முன்னேற மார்க்கத்துக்குத் தலைமை தாங்கினர். கம்ய+னிஸ்ட் பிராந்தியங்களை ஒருபுயல் போன்ற தாக்குதலில் கைப்பற்றுவதன் மூலம் அழிக்க அவர் திடசித்தம் ப+ண்டிருந்தார்’ சோவியத் பிராந்தியத்தின் மையப் பகுதியினுள் நாளொன்றுக்கு 80 லி தூரம் தனது படைகளை நகர்த்துவதன் மூலம் தனது போரியக்கத்தை அவர் ஆரம்பித்தார். எத்தகைய சூழ்நிலைகளில் செஞ்சேனை மிக திறனுடன் சண்டையிடுமோ அத்தகைய சூழ்நிலையொன்றை இந்தப் படை நகர்வு ஏற்படுத்தியிருந்தது. சியாங்கின் யுத்த தந்திரோபாயங்களிலுள்ள மோசமான தவறை படையாக 30,000 வீரர்களை மட்டுமே கொண்டிருந்த எங்கள் இராணுவம் அற்புதமான படை நகர்த்தல்களின் மூலம் 5 நாட்களில் எதிரிகள் 5 வௌ;வேறு படையணி வரிசைகளை தாக்கியது முதலாவது சண்டையில் பல எதிர்த் துருப்புக்களையும் ஏராளமான துப்பாக்கிகள், வெடிப் பொருட்கள், போர்த் தளவாடங்களை செஞ்சேனை கைப்பற்றியது. செப்படம்பர் மாதத்தின்போது 3வது போரியக்கமும் தோல்விய ஒப்புக் கொள்ளப்பட்டதோடு ஒக்டோபர் மாதத்தில் சியாங் கேய் ஷாக் தனது படைகளைப் பின்வாங்கிக் கொண்டார்.

செஞ்சேனை தற்போது ஒப்பீட்டளவில் அமைதியும் வளர்ச்சியும் நிறைந்த ஒரு காலகட்டத்தினுள் பிரவேசித்தது. படை விரிவாக்கம் வெகு விரைவானதாக இருந்தது. 1931 டிசம்பரில் 11இல் முதலாவது சோவியத் காங்கிரசுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அத்தோடு மத்திய சோவியத் அரசும் நிறுவப்படப்டது. அதற்கு நான் தலைவனானேன். செஞ்சேனையின் பிரதம கமாண்டராக சூடே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே மாதத்தில் மாபெரும் நிங்கு கிளர்ச்சி ஏற்பட்டது. 20000க்கும் மேற்பட்ட கோமிண்டாங்கின் 28ஆவது மார்க்க இராணுவம் கிளர்ச்சி செய்து செஞ்சேனையுடன் இணைந்து கொண்டது. இந்த இராணுவம் ருங்; சென் ராங் மற்றும் சால் போ ஷெங் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டது. கியாங்சியில் நடந்த சமர் ஒன்றில் சாவ் பின்பு கொல்லப்பட்டார். ஆனால் ருங்கின்னும் கூட 5ஆவது செஞ்சேனை இராணுவத்தின் கமாண்டராக உள்ளார். நிங்கு கிளர்ச்சியின் மூலம் பெறப்பட்ட துருப்புக்களைக் கொண்டு 4ஆவது இராணுவப் பிரிவு உருவாக்கப்பட்டது.

தற்போது செஞ்சேனை தனது சொந்த வலிந்து தாக்குதல்களைத் தொடங்கியது. புகியென்னில் உள்ள சாங்கௌவில் 1932 ஆம் ஆண்டு அது ஒர பெரிய சமரில் ஈடுபட்டது. அதன் மூலம் அந்த நகரைக் கைப்பற்றியது தென்பகுதியில் அது சென் சிடாங் என்ற நகரைத் தாக்கியது. அத்தோடு சியாங் கேய் ஷேக்கின் போர்முனையில் அது லோ அன், லி சுவான், சி யென் நிங் ராய் நிங் ஆகிய இடங்களைப் புயல் வேகத்தில் தாக்கியது. கான்சௌ நகரையும் அது தாக்கியது. ஆனால் அது அங்கு நிலை கொள்ளவில்லை. 1932 ஒக்டோபர் மாதத்திலிருந்து வடமேற்கு திசை நோக்கிய நெடும்பயணம் தொடங்கும் வரை நான் எனது நேரத்தை, சோவியத் அரசுகளின் பணியிலேயே முழுமையாகச் செலவழிந்தேன். இராணுவத் தலைமையை சூடேயிடமும் ஏனையோரிடமும் கையளித்தேன்.

1933 ஏப்ரலில் நான்சிங் அரசின் நாலாவது போரியக்கம் தொடங்கியது. அதன் நிர்மூலமாக்கும் போரியக்கங்களில் பெரும்பாலும் இதுவே அதற்குப் பேரழிவை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்தக் கால கட்டத்தின் முதலாவது சமரில் எதிரியின் இரண்டு டிவிசன்களிலிருந்து ஆயுதங்கள் களையபட்டதோடு இரண்டு டிவிசன்ஸ் கமாண்டர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். 59ஆவது டிவிசன் அரைப்பகுதி அழிக்கப்பட்டது. 52ஆவது டிவிசன் முழுமையாக அழிக்கப்பட்டது. லோ அன் சியலுள்ள ரா லுங் பிங், சியாவ் ஹ{ய் ஆகிய இடங்களில் இடம் பெற்ற ஒரு சமரில் மட்டும் 13,000 துருப்புக்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். அப்போது சியாங் கேய் ஷேக்கின் மிகச் சிறந்த படைப்பாளியாக இருந்த கோமிண்டாங்கின் 11ஆவது டிவிசன்;;;;; அடு;த்து நிர்மூலமாக்கப்பட்டது. அதன் படை வீரர்களிடமிருந்து முழுமையாக ஆயுதங்கள் களையப்பட்டன. அதன் கமாண்டர் படுகாயமுற்றார். இந்தச் சண்டைகள் தீர்க்கமான தீர்ப்பு முனைகளாக இருந்தன. அதன் பின்பு விரைவாக 4ஆவது போரியக்கம் முடிவுக்கு வந்தது. இந்தச் சமயத்தில் சியாங் கேய் ஷேக் தனது தளக் கமாண்டரான சென் செங்குக்கு எழுதிய கடிதத்தில், இந்தத் தோல்வியைத் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட “மிகப்பெரும் அவமானமாகக்’’ கருதுவதாகத் தெரிவித்திருந்தார். சென் செங் இந்தப் போரியக்கத்தைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. கம்ய+னிஸ்ட்டுகளோடு சண்டையிடுவது “ஒரு வாழ் நாள் முழுவதுமான பணி’’ என்றும் ஒரு “ஆயுள் தண்டனை’’ என்றும் பொது மக்களிடம் அவர் கூறியிருந்தார். இது பற்றிக் கேள்விப்பட்;;ட சியாங் கே ஷேக் சென் செங்கைப் படைத் தலைவர் பதவியிலிருந்து நீங்கினான்.

தனது 5ஆவதும் இறுதியுமான போரியக்கத்துக்கு சியாங் கே ஷே 10 லட்சம் துருப்புக்களை அணி திரட்டினான். அத்தோடு புதிய யுத்த மூலோபாயங்;;;;களையும் யுத்த தந்திரோபாயங்களையும் கைக்கொண்டான். ஏற்கனவே 4 – ஆவது போரியக்கத்திலேயே தனது ஜெர்மன் ஆலோசகர்களின் ஆலோசனையின் கீழ் தற்காலிகப் பாதுகாப்பு அரண், பாதுகாப்பு அரண் போர் நடைமுறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தான். இந்த 5 ஆவது போரியக்கத்தில் அந்தப் போர் நடைமுறைகளின் மீது தனது முழு நம்பிக்கையின் மீது தனது முழு நம்பிக்கையையும் பதித்திருந்தான்.

இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இரு தவறுகளைச் செய்தோம். முதலாவதாக 1933 ஆம் ஆண்டில் புகியென் புரட்சியின் போது திசை ரிங் காயின் இராணுவத்துடன் நாங்கள் ஐக்கியப்படத் தவறியமையாகும். இரண்டாவது எங்களுடைய முந்திய யுத்த தந்திரோபாயமான நகர்வும் போர்முறையைக் கைவிட்டு பிழைபோன யுத்த மூலோபாயமாகிய பாதுகாப்பு போர்முனையைக் கைக்கொண்டதாகும். மிகவும் மேலாதிக்கம் (துருப்பு எண்ணிக்கையில்) நான்சிங் படைகளுடன் மோதுவதற்கு நகரப் போர்முறையைத் (நிலைகளில் நின்று பாதுகாப்பு போரிடுதல்) தேர்ந்தெடுத்தமையாகும். இந்தப் போர்முறையில் செஞ்சேனை தொழில் நுட்ப ரீதியாகவோ, ஆத்மார்த்த ரீதியாகவோ உயர்திறமை கொண்டதல்ல.

இந்தத் தவறுகளின் விளைவாகவும் அத்தோடு சியாங்கின் போரியக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய யுத்த மூலோபாயங்கள் யுத்த தந்திரோபாயங்கள் காரணமாகவும், கோமிண்டாங்படைடகளின் தொழில்நுட்பத்திறன், துருப்பு எண்ணிக்கை ஆகியவற்றில் இருந்த மிகப்பெரும் மேலாதிக்;;;கம் காரணமாகவும் 1934ஆம் ஆண்டில் செஞ்சேனை, கியாங்சியில் இருந்த அதன் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளத் தீர்மானித்தது. சூழ்நிலை விரைவாக, பாதகமான நிலைக்கு மாற்றிக் கொண்டிருந்தது. இரண்டாவதாக, வடமேற்குத் திசைக்கு பிரதான நடவடிக்கைக் களத்தை நகர்த்துவதற்கான தீர்மானத்தை தேசிய அரசியல் சூழ்நிலையும் தூண்டியது. மஞ்சூரியா ஷாங்ஹாய் ஆகிய இடங்களின் மீது யப்பான் படையெடுத்தமையை அடுத்து 1932 ஆம் ஆண்டு பெப்ரவரியில் சோவியத் அரசு யப்பான் மீது முறையான போர்ப்பிரகடனத்தை அறிவித்தது. கோமிண்டாங் துருப்புச் சோவியத் அரசு யப்பான் மீது முறையான போர்ப்பிரகடனத்தை அறிவித்தது. கோமிண்டாங் துருப்புச் சோவியத் சீனாவைச் சுற்றி வளைத்துள்ள நிலையில் இந்தப் போர் பிரகடனம் விளைதிறனுள்ள வகையில் செயற்படுத்த முடியாத ஒன்றாகையால், இந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து, யப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சீனாவிலுள்ள அனைத்து ஆயுதப்படைகளும் ஒன்றிணைந்து ஒரு ஐக்கிய முன்னிணியை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அறிவிக்கையை கட்சி விடுத்தது. 1933 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்த கோமிண்டாங் இராணுவத்துடனும் சோவியத் அரசு அரசு ஒத்துழைக்கும் என்றும் அதற்கான அடிப்படை நிபந்தனைகளையும் சோவியத் அரசு அறிவித்தது. உள்நாட்டு யுத்தத்தை நிறுத்துதல், செஞ்சேனை மீதும் வெகு ஜனங்களுக்கு ஜனநாயக உரிமைகளையும் குடியுரிமைச் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்துதல் யப்பானிய எதிர்ப்பு யுத்தத்துக்கான மக்களை ஆயுதமயப்படுத்துதல் இவையே அந்த அடிப்படை நிபந்தனைகளாகும்.

5ஆவது நிர்மூலமாக்கும் போரியக்கம் 1933ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கியது 1934 ஜனவரியில் 2ஆவது சோவியத்துக்களின் அகில சீன காங்கிரஸ், சோவியத் தலைநகரான ஜுய்சின்னில் கூட்டப்பட்டது. புரட்சியின் சாதனைகள் பற்றிய கணிப்பீடு ஒன்று அங்கே இடம்பெற்றது. இங்கு நான் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டேன் இங்கு தற்போதும் பதவியிலுள்ள மத்திய சோவியத் அரசு உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து நெடும்பயணத்துக்கான ப+ர்வாங்க வேலைகள் ஆரம்பமாகின. சியாங் கேய் ஷேக் தனத கடைசிப் போரியக்கத்தைத் தொடங்கி சரியான ஒரு வருடத்தின் பின்பு, இந்த நெரும்பயணம் ஆரம்பமாகியது. இந்த ஒரு வருடத்தில் ஏறத்தாழ, தொடர்ச்சியான சண்டைகளும் போராட்டங்களும் இரு தரப்பிலும் ஏராளமான இழப்புகளும் ஏற்பட்டன.

1935 ஜனவரியில் செஞ்சேனையின் பிரதான படைகள் சூவெய்ச்சோவிலுள்ள சுன்யீயை அடைந்தன. (இந்த கட்டத்தில் சுனயியில் இடம்பெற்ற மத்திய குழுவின் மிக முக்கியமான கூட்டத்தைப் பற்றி மாவோ எதுவும் குறிப்பிடவில்லை. இதில்தான் மாவோ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்) அடுத்த நான்கு மாதங்களில் செஞ்சேனை தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. மிக உத்வேகமான சண்டைகளும் சமர்களும் அப்போது இடம் பெற்றன. மிக மிக மோசமான கஷ்டங்களினூடாக, சீனாவின் நீண்ட ஆழமான, அபாயகரமான நதிகளினூடாக அதன் உயரமான இடர்மிகுந்த மலைக் கணவாய்களின் ஊடாக, பயங்கரவாத மலைவாழ் பழங்குடியினரின் பிரதேசங்;களைக் கடந்து, வெறுமையான புல்வெளிகள், குளிர், வெப்பம், காற்று, பனி, புயல் இவற்றை பாராது, சீனாவின் கோமிண்டாங் இராணுவத்தின் அரைவாசித் துருப்புக்களைப் பின் தொடரப்பட்ட நிலையில் செஞ்சேனை தொடர்நது சென்றது. குவாங்டுங், ஹ{னான், குவாங்கி, குவெய்சௌ, யுவான், சிகாங், சிசுவான், கான்சு, ஷென்சி ஆகிய மாகாணங்களில் இருந்த உள்ளுர் துருப்புக்களுடன் சண்டையிட்டுக் கொண்டே அப்பகுதிகளைக் கடந்து 1935 ஒக்டோபரில் வடஷென்சியை செஞ்சேனை, இறுதியாகச் சென்றடைந்துத. சீனாவின் மாபெரும் வடமேற்குப் பிரதேசத்தில் அதன் தளத்தை விரிவுபடுத்தியது.

செஞ்சேனையின் இந்த வெற்றிகரமான பயணம் அத்தோடு அதன் பிரதான படைகள் தற்போதும் முழுமையாக உள்ள நிலையில் கான்சுவையும் ஷென்சியையும் வெற்றிகரமாக வந்தடைந்தமை ஆகியவற்றுக்கு கம்ய+னிஸ்ட் கட்சியின் சரியான தலைமைத்துவமே முதலாவது காரணமாகும். இரண்டாவது காரணம் @ எங்கள் சோவியத் மக்களுடைய ஆரம்பநிலை, (கட்சி) ஊழியர்களின் மிகுதிதிறமை, தைரியம், உறுதிப்பாடு, மனித சக்தியிலும் மேம்பட்டதான எதையும் தாங்கும் சக்தி, அவர்களது புரட்சிகர ஆர்வம் ஆகியவையாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அன்றும், இன்றும், என்றும் மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளுக்கு விசுவாசமாகவே இருந்தது இருக்கிறது, இருந்து வரும். அத்தோடு சந்தப்பவாதப் போக்குகளுக்கு எதிராக அது தொடர்ந்து போராடும், அதன் இறுதி வெற்றியில் அது நிச்சயமான நம்பிக்கை கொண்டிருப்பதற்கும் அதனை யாராலும் வெல்ல முடியாமலிருப்பதற்குமான ஒரு விளக்கம் அதனுடைய இந்த உறுதிப்பாட்டில்தான் தங்கியிருக்கிறது.

மாசேதுங்குடன்
மேலும் சில செவ்விகள்

நூலில் இட ஒதுக்கீடு வரையறை காரணமாக 1936 ஆம் ஆண்டில் மாசேங்குடனான எனது செல்வியின் மூலப்பிரதிகள், “சீனாமீது செந்தாரகை’’ யில் முழுமையாக இடம் பெறவில்லை. கீழே இடம்பெறும் பகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் கருத்தைக் கவர்வனவாக அமையலாம்.

பாவ் அன் 1936 ஜுலை 23

கம்ய+னிஸ்ட அகிலம், சீனா
வெளி மங்கோலியா பற்றி : -

ஸ்னோ :

நடைமுறைச் சாத்தியத்தில் சீனப்புரட்சி வெற்றிபெறும் பட்சத்தில், சோவியத் சீனாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் நட்புறவு மூன்றாவது அகிலம், அல்லது இது போன்ற ஒரு நிறுவனத்தின் கட்டுக்கோப்பிலுள்ள பேணப்படுமா? அல்லது பெரும்பாலும், ஒருவகையான அரசுகளுக்கிடையிலான உண்மையான இணைப்பு ஒன்று ஏற்படுமா? மாஸ்கோவிலுள்ள தற்போதைய அரசுடன் வெளி மங்கோலியா கொண்டிருக்கும் உறவுடன் ஒப்பிடக்கூடியதாக சீன சோவியத் அரசின் உறவு அமையுமா?

மாவோ :

இது வெறுமனே ஒரு தெளிவற்ற தற்காலிகக் கேள்வியென்றே நான் ஊகிக்கின்றேன். நான் உங்களுக்குக் கூறியது போன்று, செஞ்சேனை தற்போது அதிகாரத் தலைமையைக் கைப்பற்ற முயன்று கொண்டிருக்கவில்லை. மாறாக, யப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு ஐக்கிய சீனாவை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றது.

உலகிலுள்ள அனைத்துப் புரட்சிகர மக்களின் நன்மைக்காக, உலகப் பாட்டாளி மக்களின் முன்னணித் தலைமை, அதன் கூட்டு அனுபவத்தை ஒருங்கு சேர்க்கும் பணியையே மூன்றாவது அகிலம் செய்து வருகின்றது. இது ஒரு நிர்வாக ஸ்தாபனம் அல்ல. ஆலோசனைத் தகைமையைவிட அதனிடம் வேறு அரசியல் அதிகாரம் எதுவும் இல்லை. கட்டமைக்கில் இது இரண்டாம் அகிலத்தைவிட அதிகம் மாறுபட்டதல்ல. ஆனால் ஒரு நாட்டின் அதன் அமைச்சரவை சோஷல் டெமோகிரட்ஸ் கட்சியினரால் அமைக்கப்படும்போது, எப்படி அங்கு இரண்டாவது அகிலம்தான் சர்வாதிகாரம் செலுத்துகின்றது என்று சொல்லப்படமாட்;டார்களோ, அதேபோன்று கம்ய+னிஸ்ட் கட்சியின் உள்ள நாடுகளில் மூன்றாவது அகிலம் சர்வாதிகாரம் செலுத்துகின்றது என்ற சொல்லவது முட்டாள் தனமானதாகும்.

சோவியத் நாடுகளின் ஒன்றியத்தில் (ரு.ளு.ளு.சு) கம்ய+னிஸ்ட் கட்சி அதிகாரத்திலுள்ளது. இருப்பினும் அங்கு கூட மூன்றாவது அகிலம் ஆட்சி செலுத்தவில்லை என்பதோடு அந்த நாட்டு மக்கள் மீது அது எதுவித நேரடி அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. இதேபோன்று, கம்ய+னிஸ் அகிலத்தில் சீனக் கம்ய+னிஸ்ட் கட்சி ஒரு உறுப்பினராக இருந்தபோதிலும் சோவியத் சீனா, மாஸ்கோவினாலோ கம்ய+னிஸ அகிலத்தினாலோ ஆளப்படுகின்றது என்று கூறுவதிலும் எதுவித பொருளும் இல்லை. விடுதலை பெற்ற சீனாவை அடைவதற்காக நாம் சண்டை பிடிப்பது நிச்சயமாக அதை மாஸ்கோவிடம் கையளிக்கப்பதற்காக அல்ல.

சீனக் கம்ய+னிஸ்ட் கட்சியே சீனாவிலுள்ள ஒரே ஒரு கட்சியாகும். அது வெற்றி பெற்றதும் அது முழு நாட்டுக்காகவும் குரல் எழுப்ப வேண்டும். அது ரஷ்ய மக்களுக்காகக் குரல் எழுப்ப முடியாது. அல்லது மூன்றாவது அகிலத்தின் சார்hபில் நாட்டை ஆளமுடியாது. ஆனால் சீன வெகுஜனங்;;களின் நலனுக்காகவே ஆட்சி செய்ய முடியும். சீன வெகுஜனங்களின் நலன்கள், ரஷ்ய வெகு ஜனங்களின் நலன்களோடு ஒத்துப்போவதாக விடயங்களில் மட்டும்தான் மாஸ்கோவின் “விருப்பத்திற்குக் கீழ்ப்படிவதாக’’ அதைக் கூறமுடியும். ரஷ்யாவிலுள்ள அவர்களது ஜனநாயக அதிகாரத்தைப் பெற்ற பின்பு, சமூகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அடிமைத்தளைகளை அறுத்த பின்புதான் இந்த பொதுவான நலன்களின் அடிப்படை பரந்த அளவில் விரிவாக்கப்பட முடியும்.

பலநாடுகளில் சோவியத் அரசுகள் நிறுவப்பட்ட பின்பு ஒரு சோவியத் சர்வதேச ஒன்றியம் பற்றிய பிரச்சினை எழும். இந்தப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படப் போகிறது என்பது சுவாரஸ்யமாக இருக்கும். அதற்காக சூத்திரவிதிமுறையை இப்போது என்னால் கூற முடியாது. இது முன்பதாகவே தீர்க்கப்படக்கூடிய அல்லது தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல. இன்றைய உலகில் பல்வேறு நாடுகளுக்கும் மக்களுக்குமிடையே அதிகரித்துவரும் நெருங்கிய பொருளாதார கலாசாரத் தொடர்புகள் காரணமாக, அத்தகைய ஒரு ஐக்கியம், சுயமான அடிப்படையில் ஏற்படக் கூடியதாயின் வெகுவாக விருப்பத்தக்கதாகும்.

இருப்பினும், தெளிவான முறையில் கூறுவதானால் “சுயமான அடிப்படை’’ என்ற அம்சம் மிக முக்கியமான ஒரு அம்சமாகும். இத்தகைய ஒரு உலகம் ஐக்கியம், அந்தந்த நாட்டின் மக்களுடைய விருப்பதற்கு இசைவாகவும் அதனுடைய சுயாதிபத்தியம் உறுதியாக இருக்கக்கூடிய நிலையில் இந்த ஐக்கியத்தினுள் அவை நுழையவும் வெளியேறவும் கூடியதாக இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக அமைய முடியும். நி;ச்சயமாக “மாஸ்கோ’’ வின் கட்டளை அதிகாரத்தின் கீழ் இது அவ்வாறு அமைய முடியாது. எந்த ஒரு கம்ய+னிஸ்ட்டும் இவ்வாறு தவிர வேறெந்த வகையிலும் சிந்திக்கவில்லை. மாஸ்கோவிடம் “உலக மேலாதிக்க’’ சிந்தனை இருப்பதாகக் கூறும் மாயை பாசிஸவாதிகளிளதும் எதிர்ப் புரட்சியாளர்களினதும் ஒரு கண்டுபிடிப்பேயாகும்.

வெளி மங்கோலியாவுக்கும் சோவியத் ய+னியனுக்குமிடையே உள்ள உறவு முன்பும் தற்போதும் முழுமையான சமத்துவக் கொள்கை அடிப்படையிலேயே எப்போதும் இருந்து வருகிறது. சீனாவில் மக்கள் புரட்சி வெற்றி பெற்றதும் வெளி மங்கோலியா தனது சுயவிருப்பத்தின் பேரில் சீன சம்மேளனத்தின் ஒரு பகுதியாக, தானாகவே ஆகிவிடும்@ இதைப்போலவே முகம்மதியர்களும், திபேத்திய மக்களும் சீன சம்மேளத்துடன் இணைந்து சுயாட்சியுடைய குடியரசுகளாக அமைத்துவிடும். சோமிண்டாங் ஆட்சியினரால் மேற்கொள்ளப்படும். தேசிய சிறுபான்மையினத்தவர் மீதான சரிசனமற்ற நடைமுறைக்கு சீனனர்களின் திட்டத்தில் எதுவித இடமும் இருக்காது. அத்தோடு எந்த ஜனநாயகக் குடியரசின் திட்டத்தினுள் இதற்கு இடமளிக்கப்படமாட்டார்.

திறவுகோலாக சீனா

ஸ்னோ :

சீனாவில் ஒரு கம்ய+னிஸ்ட் இயக்கத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட, ஏனைய ஆசிய நாடுகளிலும் அரைவாசி காலனித்துவ நாடுகளான கொரியா இந்தோசீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகியவற்றிலும் விரைவாக புரட்சி ஏற்படும் என்று நீங்கள் நம்புகின்றீகளா, சீனா, தற்போது உலகப் புரட்சிக்கான “திறவுகோல்’’ என்று நீங்கள் கருதுகிறீர்களா?

மாவோ

உலக நிலைமையில் சீனப்புரட்சி ஒரு முக்கியமான காரணிதான். சீனப்புரட்சி முழுமையான அதிகாரத்தைப் பெற்றதும் பல காலணித்துவ நாடுகளின் வெகுஜனங்கள் சீனாவின் உதாரணத்தைப் பின்பற்றுவார்கள். இதே போன்ற தங்கள் சொந்த வெற்றியையும் அவர்கள் பெறுவார்கள். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்களுடைய உடனடியான) இலக்கு அல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். நாங்கள் உள்நாட்டு யுத்தத்தை நிறுத்த விரும்புகின்றோம். கோமிண்டாங்குடனும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து ஒரு மக்கள் ஜனநாயக அரசை நிறுவ விரும்புகின்றோம். அத்துடன் யப்பானுக்கெதிராக எங்கள் சுதந்திரப் போராட்டத்தை நடாத்த விரும்புகின்றோம்.

காணிப் பங்கீடு பற்றி

பால் அன் 1936 ஜுலை 19

ஸ்னோ :

யப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தின் பின்பு புரட்சியின் தலையாய உள்நாட்டுக் கடமை எது?

மாவோ :

ப+ர்ஷ்வா – ஜனநாயக குணாம்சத்தைக் கொண்ட சீனப்புரட்சி காணிப்பிரச்சினையை மீளச்சரிசெய்தல்

(காணிச் சீர்த்திருத்தம்) என்று கடமையையே முதலாவது கடமையாகக் கொண்டுள்ளது. சீனாவில் இன்று காணிப்பங்கீடு நிலைமை பற்றிய விபரங்களைப் பார்க்கும்போது கிராமிய (காணிச்) சீர்த்திருத்தத்தின் அவசர அவசியத்தைப் பற்றி ஓரளவு விளங்கிக் கொள்ளலாம். தேசியக் புரட்சியின்போது கோமின் டாங்கின் விவசாயிகள் குழுவின் செயலாளனாக நான் இருந்தேன். 21 மாகாணங்களிலும் புள்ளி விபர மதிப்பீட்டுக்குப் பொறுப்பாகவும் நான் இருந்தேன்.

எங்களுடைய ஆய்வு ஆச்சரியப்படத்தக்கதான சரி சமனற்ற நிலைமை எடுத்துக்காட்டியது. கிராமிய மக்கட் தொகையில் 70 விழுக்காட்டினர் ஏழை விவசாயிகளாகவும் குத்தகைக்கும் கமம் செய்பவர்களாகவும் மீள் குத்தகைக்;குக் கமம் செய்பவர்களாகவும் விவசாயத்;;; தொழிலாளிகளாகவும் உள்ளனர். ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் தங்கள் சொந்த நிலத்தில் தாங்களே உழுது பயன்படுத்தும் நடுத்தர விவசாயிகளாக உள்ளனர். கொள்ளை வட்டி வாங்குவோரும் நிலப்பிரபுக்களும் மக்கட் தொகையில் 10 விழுக்காட்டினராவர். இந்தக் கூட்டத்தில் பணக்கார விவசாயிகளும் இராணுவவாதிகளும், வரி சேகரிப்போர் போன்ற ஊரை கொள்ளையடிப்போரும் அடங்குவர்.

பணக்கார விவசாயிகள், நிலப்பிரபுக்கள், கொள்ளை வட்டி வாங்குவோரை உள்ளடக்கிய 10 விழுக்காடு மக்கட் தொகையினனர் விவசாய காணிpகளில் 70 விழுக்காடு காணிகளை தம்வசம் சொந்தமாக வைத்துள்ளனர். 12இல் இருந்து 15 விழுக்காடு காணிகளில் மத்தியதர விவசாயிகள் வசம் உள்ளன. மக்கட் தொகையில் 70 விழுக்காட்டினரான ஏழை விவசாயிகள், குத்தகை, மீள் குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வசம் 10 முதல் 15 விழுக்காடு விவசாயக் காணிகளே உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள், மேலே குறிப்பிட்ட 10 விழுக்காட்டினரான நிலப்பரப்புக்கள், சீனக் கொள்ளை லாபமடிப்போர் ஆகிய இரண்டு அடக்குமுறையாளர்களினாலேயே பிரதானமாக சீனப்புரட்சி உருவாகியது. ஆகவே ஜனநாயகம், காணிச் சீர்திருத்தம் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர் ஆகிய எங்களுடைய புதிய கோரிக்கைகளில் நாம் (நாட்டின்) மக்கட் தொகையில் 10 விழுக்காட்டுக்கும் குறைந்;தவர்களிடையே எதிர்க்கப்படுகிறோம் என்று நாம் கூறிக்கொள்ள முடியும். உண்மையில் இவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடும் மட்டுமே இருக்கும். ஏனென்றால்
கம்ய+னிஸ்ட்’’ எதிர்ப்பு ஒப்பந்தம்;’’ என்ற கூட்டுத் திட்டத்தின் கீழ் தங்கள் சொந்த மக்களையே அடிமைப்படுத்துவதற்காக, யப்பானுடன் இணைய இந்த எண்ணிக்கைக்குக் கூடுதலான சீனர்கள் காட்டிக் கொடுப்பவர்களாக மாறமாட்டார்கள்.

ஸ்னோ :

ஐக்கிய முன்னணியின் நலனைக் கருத்திற் கொண்டு சோவியத் நடைமுறைத் திட்டங்களிலுள்ள ஏனைய விடயங்களை ஒத்திவைத்திருப்பதுபோல காணி மீள் பங்கீட்டையும் தாமதப்படுத்துவது சாத்தியப்படாதா?

மாவோ :

நிலப்பிரபுக்களின் பெருந்தோட்டங்களைப் பறிமுதல் செய்யாது, விவசாய சமூகத்தின் பிரதான ஜனநாயக கோரிக்கைகளும் நிறைவேற்றாது தேசிய விடுதலைக்கான வெற்றிகரமான புரட்சிகரப் போராட்;டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு பரந்துபட்ட வெகுஜன அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவது இயலாத காரியம். தேசியக் குறிக்கோளுக்கான விவசாயிகளின் ஆதரவை வென்றெடுப்பதற்கு காணி பிரச்சினை மீதான அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவது அத்தியாவசியமானதாகும்.

ஸ்னோ :

எழுத்தறிவின்மை பற்றிய கொள்கை சம்பந்தமாக ஒரு சுருக்கமான அறிக்கை தருவீர்களா?

கல்வி லத்தீன் எழுத்திலான சீனமொழி

மாவோ :

எழுத்தறிவின்மைப் பிரச்சினையைப் பொறுத்தவரை வெகு ஜனங்களின் பொருளாதார கலாச்சாரத் தராதரத்தை உயர்த்த உண்மையிலேயே விரும்பும் ஒரு மக்கள் அரசுக்கு இது ஒரு கடினமான கடமையல்ல.

கியார்சியில் எழுத்தறிவின்மையை அகற்றுவதற்கான எங்கள் சங்கம், கல்வி ஆணையாளரின் தலைமையில் ஆச்சரிப்படத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. இது ஒவ்வொரு கிராமத்திலும் இளம் மாணவர்கள் இளம் கம்ய+னிஸ்டுகள் கொண்ட குழுக்களை அமைத்து அந்தக் கிராமங்களிலுள்ள கொண்ட குழுக்களை அமைத்து அந்தக் கிராமங்களிலுள்ள ஒவ்வொருவருக்கும் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்துள்ளது. இந்த வெகுஜனக் கல்வி நிலையங்கள்; நூற்றுக்கணக்கில் விவசாயிகளால் நிறுவப்பட்டு உற்சாகம் மிக்க கம்ய+னிஸ்ட் இளைஞர்கள் கல்வி போதிக்கப்படுகின்றது. அந்த இளைஞர்கள் எவ்வித வருவாயையும் இலவசமாக அந்தப் பணிக்கு மனமுவந்து அளிக்கின்றனர். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குப் பின்பு கியான்சி சோவியத் மாகாணத்திலுள்ள விவசாயிகளுக்கு பல நூறு சீன எழுத்துக்கள் தெரிந்திருக்கும். அதன் மூலம் அவர்கள் சாதாரண நூல்களையும், சொற்பொழிவுகளையும், எங்கள் செய்தித்தாள்களையும் ஏனைய பிரசுரங்களையும் படிக்க முடியும்.

இது பற்றிய புள்ளிவிபரங்கள் “நெடும் பயணத்தின்’’ போது தொலைந்துவிட்டன. ஆனால் இரண்டாவது அனைத்து சோவியத் காங்கிரசின் முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட எனது அறிக்கையில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய முழு விபரங்களும் உள்ளன. மக்கள் வெகுஜனக் கல்வி இயக்கம் சோவியத்துகளால் பேணப்பட்ட முறைமையான பாடசாலைகள் ஆகிய இருபகுதிகளிலும் ஏற்பட்ட முன்னேற்றம் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளது.

ஷென்சி, கான்சு ஆகிய இடங்களிலும் எழுத்தறிவின்மையை அகற்றுவதற்கான ஒரு சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மாகாணங்களின் கலாசாரத் தராதரம் முன்பு கியாங்சியை விட வெகு குறைவாக இருந்தது. அத்தோடு கல்வித்துறையில் பெரும் பணிகள் இங்கு இன்னும் எங்களை எதிர்நோக்கியுள்ள எழுத்தறிவின்மையை ஒழித்துக்கட்டுவதை விரைவுபடுத்துமுகமாக இங்கு நாங்கள் சின் வென் த்சு (லத்தீன் எழுத்துக்களிலான சீன மொழி) வைப் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றோம். தற்போது இந்த முறை எங்கள் கட்சிப் பாடசாலை கம்ய+னிஸ்ட் இராணுவம் பாடசாலை, செஞ்சேனை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன “ளுட்சைனா டெய்லி நிய+ஸ்’’ நாளிதழின் விசேட பகுதி ஒன்றிலும் இது பயன்படுகின்றது. எழுத்தறிவின்மையை அகற்றுவதில் லத்தீன் எழுத்துக்களின் பயன்பாடு ஒரு நல்ல கருவியாக உதவுகின்றது. சீன எழுத்துக்கள் கற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமான எழுத்துக்கள் ஆதலால் ஆரம்ப நிலை எழுத்துகள் அல்லது இலகுவான போதனை கொண்ட ஒரு சிறந்த நடைமுறையின் மூலமாகக் கூட ஒரு உண்மையான விளை திறன்மிக்க சொல்வளத்தை மக்களிடம் ஏற்படுத்தமுடியவில்லை. தற்போதோ அல்லது பிற்காலத்திலோ வெகு ஜனங்கள் முழு மையாகப் பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு சமூகச் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமானால் நாங்கள் சீன எழுத்துக்களை முழுமையாகக் கைவிடவேண்டியிருக்கும் என்று நம்புகின்றோம். நாங்கள் இப்போது லத்தீன் எழுத்துக்களைப் பரவலாகப் பயன்படுத்துகின்றோம். இதை நாங்கள் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கும் கடைப்பிடிப்போமானால் எழுத்தறிவின்மைப் பிரச்சினை பெருமளவுக்கு அகற்றப்பட்டுவிடும்.

கீழே வருபவை 1939 ஆம் ஆண்டுச் செல்வியில் கூறப்பட்டவற்றிலிருந்து எழுதப்பட்ட பகுதிகள். இவை சீனாவுக்கு வெளியே ஒரு போதும் பிரசுரிக்கப்படவில்லை.

நாங்கள் ஒருபோதும் “சீர்திருத்தவாதிகள்’’ அல்லர்

ஸ்னோ :

சீனக் கம்ய+னிஸ்ட் கட்சி, வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்தும் தனது பிரசாரத்தைக் கைவிட்டு விட்டது. சோவியத்துக்களையும் கைவிட்டுவிட்டது. கோமிண்டாங் கட்சியினதும் கோமிண்டாங் அரசினதும் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. சான் மின் சு ஐ (டாக்டர் சுன் யாட் சென்னின் மக்கள் பற்றிய 3 கொள்கைகள்) ஐ ஏற்றுக்கொண்டுவிட்டது முதலாளித்துவ வாதிகளினதும் நிலப்பிரபுக்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை நிறுத்தி விட்டது கோமிண்டாங் பகுதிகளில் ஸ்தாபனப் பணிகளையும் பிரச்சார வேலைகளையும் (வெளிப் படையாகச்) செய்வதை நிறுத்திவிட்டது. சீனக் கம்ய+னிஸ்ட்டுகள் தற்போது சமூகப் புரட்சியாளர்கள் அல்ல. வெறுமனே சீர்திருத்தவாதிகள் நடைமுறைகளிலும் இலட்சியங்களிலும் அவர்கள் ப+ர்ஷ்வாக்கள் தான் என்பது பெரும்பாலான மக்கள் தற்போது கருதுகின்றனர். இது பற்றித் தங்கள் கருத்து என்ன?

நாங்கள் எப்போதுமே சமூகப் புரட்சியாளர்கள் தான். நாங்கள் ஒருபோதும் சீர்திருத்தவாதிகள் அல்லர். நாங்கள் ஒருபோதும் சீர்திருத்தவாதிகள் அல்லர். சீனப்புட்சியின் கோட்பாட்டில் இரண்டு பிரதான இலக்குகள் உள்ளன. முதலாவது இலக்கு, ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சிக்கான பணிகளை நிறைவேற்றுவதையும் ஒரு அம்சமாகக் கொண்டுள்ளது. இரண்டாவது சமூகப்புரட்சி. இரண்டாவது அம்சம் கட்;டாயம் சாதிக்கப்படவேண்டும். முழுமையாகச் சாதிக்கப்படவேண்டும். தற்போது புரட்சி, தனது இலக்குகளில் தேசிய, ஜனநாயக அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின்பு அது சமூகப் புரட்சியாக மாற்றப்படும். சீனப் புரட்சிக் கோட்பாட்டின் சமூகப் புரட்சிகர அம்சம் தற்போதுள்ள “உருவாவது’’ என்ற நிலையிலிருந்த “நிலைபெறுவது’’ என்ற நிலைக்கு மாற்றமடையும் - தற்போதைய கட்டத்தில் எங்கள் பணிகள் தோல்வியில் முடிவடைந்தால் சமூகப் புரட்சிக்கான விரைவான வாய்ப்புக்கள் இல்லாது போய்விடும்.

முறியடிப்புத் தாக்குதலுக்கான தயார் நிலை

ஸ்னோ :

“நீண்டகால இழுத்தடிப்போர்’’ என்ற உங்களுடைய கோட்பாட்டின்படி தற்போது சீனர்களின் எதிர்ப்பு நிலை எந்தக் கட்டத்தில் உள்ளது. இந்தக் கட்டம் முட்டுக்கட்டை நிலையை அடைந்து விட்டதா?

மாவோ :

ஆம் போர் ஒரு முட்டைக்கட்டை நிலையில்தான் உள்ளது. ஆனால் இதில் சில தகைமைகள் உள்ளன. புதிய சர்வதேச முறையின் சூழ்நிலையின் கீழ் யப்பானியரின் நிலைமை வெகு சிரமமானதாக ஆகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதே வேளை சீனா அவர்களுடன் சமாதானத்தைக் கோரமாட்டாது என்ற நிலைமையில், போர் ஒரு முட்டைக்கட்டை நிலையில்தான் உள்ளது. (எங்களைப் பொறுத்த வரை) இதன் பொருள் முறியடிப்புத் தாக்குதலுக்குத் தயாராகவேண்டும் என்பதேயாகும்.
ராஜி – சோவியத் ஒப்பந்தம் பற்றி :-

ஸ்னோ :

சோவியத் - ஜெர்மன் ஒப்பந்தம் கைச்சாத்தானது பற்றிய உங்கள் கருத்துக்களைப் படித்தேன். ஐரோப்பிய யுத்தத்தினுள் சோவியத் ஒன்றியம் இழுக்கப்படுவற்கான சாத்தியக்கூறு இல்லை நீங்கள் கருதுகின்றாற் போல தெரிகின்றது. நாஜி ஜெர்மனி வெற்றியை நெருக்கமாப் போலத் தோன்றினாலும்கூட, தான் தாக்கப்படாதவரை சோவியத் ஒன்றியம் தொடர்ந்து நடுநிலை வகிக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
மாவோ.

சோவியத் ஒன்றியம் இந்த யுத்தத்தில் பங்கேற்காது ஏனென்றால் இரு பகுதியினருமே ஏகாதிபத்தியவாதிகள். இது வெறுமனே கொள்ளையர்களின் யுத்தம். இருபகுதியிலும் நியாயம் நீதி இல்லை. இருபகுதியினரும் வலுச் சமநிலையைத் தங்கள் பக்கம் பெற்றுக்கொள்ளப் போராடுகின்றனர். இருபகுதியினருமே பிழையானவர்கள். இத்தகைய யுத்தத்தில் சோவியத் ஒன்றியம் ஈடுபடாது அது நடுநிலையே வகிக்கும், தற்போதைய ஐரோப்பிய யுத்தத்தின் முடிவைப் பொறுத்தவரை வெற்றிபெற்ற வல்லரசால் (அது ஜெர்மனியாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி) தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் பற்றிப் பயப்படமாட்டாது. எப்போதாவது சோவியத் ஒன்றியம் தாக்கப்பட்டால் அதற்கும் பல்வேறு நாடுகளினதும் ஆதரவு இருக்கும். அத்தோடு, காலனித்துவ அரைக் காலனித்துவ நாடுகளின் தேசிய சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைக்கும்.

ஹிட்லருடனான சோவியத் பொருளாதார
ஒத்துழைப்புப் பற்றி :-

நான் முன்னதாகவே, மாவோ பார்வையிடுவதற்காக எழுதப்பட்ட கேள்விகளின் நீண்ட பட்டியல் ஒன்றைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டத்தில் இந்தப் பட்டியலுக்கு அப்பாற்பட்ட ஒரு கேள்;;;வியைக் கேட்டேன். பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியநாடுகளைப் போன்றே ஜெர்மனியும் ஒரு ஏகாதிபத்திய நாடொன்;றால், ரஷ்யாவில் பாரிய அளவு சேமிப்பாக உள்ள எண்ணெய் ஏனைய யுத்த மூலகங்களை ஜெர்மனிக்கு கொடுத்து உதவும் அளவுக்கு ஜெர்மனியின் ஏகாதிபத்திய துணிகர நடவடிக்கைகளில் ஏன் சோவியத் ஒன்றியம் பங்கு பற்றவேண்டும் என்று கேட்டேன். சாக்காலினில் யப்பானுக்கு எண்ணெய் வயல்களை, ரஷ்யா ஏன் தொடர்ந்து குத்தகைக்கு விட வேண்டும் அல்லது யப்பானுக்கு மீன் பிடிக்கும் உரிமைகளை வழங்கவேண்டும்? மீன்பிடி உரிமை யப்பானுக்கு ஒரு பெரிய சொத்தாக இருப்பதோடு அது பெருமளவு மீன்களை ஏற்றுமதி செய்து அதன் மூலம் அந்நிய நாடுகளில் முதலீடுகளைச் செய்து அந்தப் பணத்தை வெடிமருந்துப் பொருட்களை வாங்கப் பயன்படுத்துகின்றது. அதன்மூலம் அதைக் காலனித்துவ நாடான சீனாவின் தேசிய விடுதலை இயக்கத்துக்கு எதிராக ஒரு கொள்ளைக் கார ஏகாதிபத்திய யுத்தத்தை அது நடத்துகின்றது.

இது மிகவும் சிக்கலான ஒரு கேள்வி என்று மாவோ பதிலளித்தார். இந்தக் கொள்கையின் முடிவை ஒருவர் காணும்வரை இதற்குப் பதிலளிக்க முடியாது என்றார். எந்த அடிப்படையின் கீழ் சோவியத் ஒன்றியம் யப்பானுக்கு எண்ணெய் விற்பனை செய்கின்றது. என்பது தனக்குத் தெளிவாகவில்லை என்று அவர் கூறினார். ஜெர்மனிக்கோ யுத்த தளவாடங்கள் எதனையும் விற்பனை செய்யவில்லை. சாதாரண வர்க்கத்தைப் பேணுவது அந்த நாட்டை யுத்தத்தின் பங்காளியாக ஆக்கவில்லை.

தற்போதைய நவீன யுத்தத்தில், ஒரு சண்டையிடும் நாட்டுக்கு – அதன் டாங்கிகளுக்கும் விமானங்;;களுக்கும் எரிபொருள் விற்பதற்கும் டாங்;;கிகளையும் விமானங்களையுமே நேரடியாக விற்பதற்கும் இடையில் ஏதும் வித்தியாசம் இருக்கின்றதா என்ற நான் கேட்டேன். யுத்தத்துக்கான மூலப் பொருட்களை அமெரிக்க யப்பானுக்கு பத்தியப் படையெடுப்புக்கு அமெரிக்காவும் ஒரு பங்காளியாகக் கூறப்படுகின்றது. இதே வகையான யுத்த மூலப்பொருட்களை யப்பானுக்கும் ஜெர்மனிக்கும் வழங்கும் சோவியத் ஒன்றியம் @ ஐரோப்பாவில் ஜெர்மனியின் ஏகாதிபத்திய யுத்தத்திலும், ஆசியாவில் யப்பானின் யுத்தத்திலும் பங்காளியல்ல என்று எப்படிக் கூறமுடியும்.

யுத்த மூலப் பொருட்கள் வர்க்கத்திற்கும், யுத்த தளவாடங்கள் வர்க்கத்துக்;குமிடையே அதிக வேற்றுமை இல்லை என்று மாவோ ஒத்துக் கொண்டார். இதில் கருத்துக்கெடுக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இப்போது கேள்விக்குரியதாக உள்ள இந்த நாடு உண்மையிலேயே விடுதலைக்கான புரட்சிகர யுத்தங்களுக்கு ஆதரவு தருகின்றதா? ஒன்றியம் யார் பக்கம் நிற்கின்றது என்பது கேள்விக்கிடமில்லாத தெளிவான விடயமே. 1925 – 27 ஆம் ஆண்டுகளுக்கு இடையே சீனாவில் இடம் பெற்ற புரட்சிகரப் போர்களுக்கு வினைத்திறனுள்ள உதவிகளை சோவியத் ஒன்றியம் செய்தது. ஸ்பெயினுக்கும் சீனாவுக்கும் அது தற்போது உதவுகின்றது. சோவியத் ஒன்றியம் எப்போதும் நியாயமான புரட்சிகரப் போர்களின் பக்கமே சார்ந்திருக்கும். ஆனால் ஏகாதிபத்திய யுத்தங்களில் யார் பக்கமும் சேராது. அத்தோடு சண்டையிடும் எந்தப் பகுதியினருடனும் அது வழமையான வர்த்தகத்தைப் பேணும்.

போலந்துப் பிரச்சினை பற்றி :-

மாவோ :

போலந்து மீதான நாஜிப் படையெடுப்பு சோவியத் ஒன்றியத்துக்கு இந்தப் பிரச்சினையை ஏற்படுத்தியது. நாஜி அடக்கு முறைக்கு முழுப்போலந்து மக்களையும் இரைவாக விடுவதா அல்லது கிழக்குப் போலந்;தில் உள்ள தேசிய சிறுபான்மையினரை விடுவிப்பதா என்பதே அந்தப் பிரச்சினை. இரண்டாவது செயற்பாடு நடைமுறையை சோவியத் ஒன்றியம் தேர்ந்தெடுத்தது.

கிழக்குப் போலந்தில் 80 லட்சம் பைலோ – ரஷ்யர்கள், 30 லட்சம் உக்ரோனியர்கள் வாழும் பாரிய பிரதேசம் உள்ளது. இந்தப் பிராந்தியம், பிரெஸ்ட் - விட்டோங்ஸ்க் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதற்கு சன்மானமாக இணைய நாடாக சோவியத் சோஷலிசக் குடியரசுகளிலிருந்து வலிந்து பிடுங்கியெடுக்கப்பட்டது. அத்தோடு இது பிற்போக்குவாத போலந்து அரசின் மேலாதிக்கத்தின் கீழ் வந்துள்ளது. இன்று பலவீனமாகவோ இணையநாடாகவோ இல்லாத சோவியத் ஒன்றியம் தனது சொந்தப் பிராந்தியத்தை மீள எடுத்துக் கொண்டு அவர்களை சுதந்திரம் பெற வைத்துள்ளது.

தனது சக தலைவர்களை மாவோ புகழ்கின்றார் :

பாவோ அன் 1936 ஜுலை 25

“நெடும் பயணம்’’ பற்றிய தனது விபரக் குறிப்புகளுக்கு ஒருவகை முடிவுரையாக இந்தப் பயணத்தின் வெற்றிகரமான நிறைவேற்றத்திற்கு கட்சியின் “சரியான தலைமைத்துவம்’’ தான் காரணம் என்று மாவோ கூறுகின்றார். அத்தோடு 18 தோழர்களை தனியாகப் பெயர் குறிப்பிட்டு காட்டுகின்றார். இந்தவிடயம் அவரது பிரதான விபரக்குறிப்புக்கு சிறிது வரலாற்றைத் தொடர்புடைய அக்கறைக்குரிய விடயமாக இருப்பதால் அதை இங்கு தருகின்றேன். இந்தப் பெயர்களை எந்த வரிசையில் மாவோ தந்தார் என்பது அவ்வளவு அக்கறைக்கு உரிய விடயம் அல்ல. ஆனால் அந்தப் பட்டியலில் இடம்பெற்ற பெயர்களை உடையவர்;;களை எதிர்த்து மாவோ சமீபத்தில் போராடினார். என்பதும் அதேபோன்று இப் பட்டியலில் இடம் பெற்றோரை எதிர்த்து மீண்டும் போராடுவார் என்பதும் அத்துடன் அவர்கள் பெயர் இப்பட்டியலில் இருந்து அகற்றப்படும் என்ற உண்மைதான் கருத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.

மாவோ :

கட்சியின், தோற்கடிக்கப்பட முடியாத தன்மைக்கான மற்றொரு காரணம் மனித வளங்களின் புரட்விகர கட்சி ஊழியர்களின் சாதாரணமான திறமை, தைரியம், விசுவாசம் ஆகியவை ஆகும். தோழர்கள் சூடே, வாங்மிங் லோ பு, சூ என் லாய், போகு, வாங் சியா சியாங், பெங் ரே ஹி வாய, லோ மான், டெங் பா சியாங் யிங், சு ஹாய்துங், சென் யுன், லின் பியாவ், சாங் குவோ ராவ், சியா கே அத்தோடு புரட்சிக்காக உயிரை அளித்த மேலும் பல தலைசிறந்த தோழர்களாகியோர் இதில் அடங்குவார். இவர்கள் அனைவரும் ஒரு இலட்சியத்துக்காக ஒருவருக்கே பணிபுரிந்து செஞ்சேனையையும் சோவியத் இயக்கத்தையும் உருவாக்கி உள்ளனர். இவர்களும் இனிவர இருப்பவர்களும் எங்களை இறுதி வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள்.

வரலாற்று ஏடுகளில் எழுதப்பட்ட சீன நாட்டின் 3000 ஆண்டு வரலாற்றில் மாவோவின் சாதனைகளில் தொகுப்பு பெரும்பாலும் ஒரு தனித்துவம் கெண்டதாகும். ஏனையோர் விவசாயிகளின் முதுகிNலு குதிரை சவாரி செய்து பதவிக்கு வந்துவிட்டு அவர்களைச் சகதியிலே கை கழுவிச் சென்றிருக்கின்றனர். மாவோ அவர்களை நிரந்தரமாகத் தலைநிமிர்ந்து நிற்கவைக்க முனைந்தார். அவர் ஒரு சிந்தனைவாதி போர்வீரர், அரசியல்வாதி, கோட்பாட்டாளர். கவிஞர், வித்வத் கர்வம் உள்ளவர். புரட்சியை அழிப்பவர் - உருவாக்குபவர் மனித குலத்தின் 4 இல் ஒரு பங்கினரைப் புழுங்கி எடுத்து ஏழ்மையில் உழன்ற அந்த விவசாயிகளை ஒரு பலம்மிக்க நவீன இராணுவமாக்கி நீண்டகாலமாகப் பிளவுபட்டுக் கிடந்த ஒரு சாம்ராச்சியத்தை உருவாக்;கிய ஒரு இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர். மாவோ செல்லுபடியாகக் கூடிய சீனத் தேவைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் ஏற்றதாக ஒரு சிந்தனைப் போக்கை உருவாக்கி வழங்கியவர் அவர். பல லட்சக்கணக்கானோருக்கு விஞ்ஞான தொழில்நுட்ப பயிற்சியையும் வெகுஜனங்களுக்கு எழுத்தறிவையும் கொண்டு வந்தவர் அவர். நவீனத்துவமான பொருளாதாரத்துக்கு அத்திவாரமிட்டார் அவர். உலகத்தை ஆட்டக்கூடிய அணுசக்தியை சீனர்களின் கைகளுக்குக் கொண்டு வந்தவர். அசர் சீனாவில் சுய கௌரவத்தை மீட்டுத் தந்தவர். அவர், சீனாவின் மீதான பயத்தினாலோ அல்லது பரிவிரக்கத்தினாலோ சீனாவுக்கு உலக மரியாதையைப் பெற்றுத்தந்தவர் அவர். உலகத்தின் மிக ஏழ்மையான மிக ஒடுக்கப்பட்ட மக்களை புரட்சி செய்யத்துணிய வைக்குமளவுக்கு சுய நம்பிக்கையை ஏற்படுத்தியவர் அவர். அவரது வெற்றிகரமான வழிமுறையை மாற்ற முயன்றறவர்களுக்கு விட்டுக் கொடுக்க மாவோ மறுத்;;ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

1970 டிசம்பரில் மாவோவுடன் பீக்கிங்கில் உள்ள அவர் வீட்டில் இந்த நூலாசிரியர் அவருடன் 5 மணித்தியாலங்;;கள் உரையாடினார். மாவோ நல்ல உடல் நிலையில் அப்போது இருந்தார். ஆனால் புரட்சியின் பெறுபேறுகள் பற்றி அவர் தற்போதும் “திருப்தியடைந்தராகக் காணப்படவில்லை.