கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கூட்டுறவுக்கோர் அறிமுகம்  
 

வை.சி.சிவஞானம்

 

கூட்டுறவுக்கோர்
அறிமுகம்


ஆசிரியர்:
வை.சி.சிவஞானம்
விரிவுரையாளர்,
பலாலி ஆசிரியர் கலாசாலை

மீள்பதிப்பாசிரியர்:
சி. கோணேஸ்வர்
முகாமை உசாத்துணைவர்
இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனம்

வெளியீடு
தெல்லிப்பளைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
தெல்லிப்பளை.


“INTRODUCTION OR CO-OPERATION”

PUBLISHED BY : Tellipalai MPCS Limited.
FIRST EDITION : July, 1980
Author : V.C. Sivagnanam
Lecturer
Palaly Teacher’s Training College
Printed by : Vivekanantha Printers,
Jaffna.
SECOND EDITION : January, 1999
REVISED BY : Sri Lanka Institute of Co-operative
Management.
Editor : C. Kaneshwaran
Management Consultant
COPIES : 3000
SIZE : 1/8
PRINTED BY : Unie Arts (Pvt.) Ltd.
Colombo -13
ISBN : 955-8218-00-6
PRICE : Rs. 150.00


பதிப்புரை
சீ. சிவமகாராசா.
தலைவர்,
தெல்லிப்பளை ப. நோ. கூ. சங்கம்


கூட்டுறவுக் கொள்கைகளில் ஒன்று கல்விச் சேவையாகும். இக்கொள்கையின் அடிப்படையிற் கல்விக்கென நாம் அளித்துவரும் பல்வேறு சேவைகளுள் இந்நூல் வெளியீடும் ஒன்றாகும். கூட்டுறவுக் கருத்துக்களை உறுப்பினர்கள், ஊழியர்கள், பதவிநிலை வகிப்போர், பொதுமக்கள் ஆகிய சகலருக்கும் பரந்த அளவில் அளிக்கும் பொருட்டு இப்பெரு முயற்சியில் எமது சங்கம் ஈடுபட்டுள்ளது. இப்பெரு முயற்சியில் உதித்த ஓர் உதயசூரியனே “கூட்டுறவுக்கோர் அறிமுகம்” என்னும் இந்நூல்.

இன்றைய நிலையிற் பொதுமக்கள், அங்கத்தவர்கள் மாணவர்கள் ஆகியோருக்குக் கூட்டுறவு பற்றிய அறிவு, அதன் சட்டம், விதிகள், உபவிதிகள், நோக்கங்கள் என்பன பற்றிய ஒரு வரைபடத்தை விளக்கும் நோக்கமாகவே இந்நூலை வெளியிட முன்வந்தோம். நீண்ட காலமாகவே கூட்டுறவு இயக்கம் பற்றிய போதிய கல்வி அறிவைப் பெறும் சாதனங்கள் எமது மக்களுக்குக் குறைவாக இருந்திருக்கின்றன என்ற குறைபாடு எம்மிடம் இல்லாமல் இல்லை. அதுவும் தமிழ் மொழியில் வாய்ப்புக்கள் மிகவும்குறைவு என்றே கூறலாம். இக்குறையை எங்களால் வெளியிடப்படும் நூல் முற்று முழுதாக நீக்கி விடுமென நாம் கூறாவிடினும் ஏதோ ஒரு வகையிற் சிறிதளவாவது நீக்குமென நம்புகிறோம்.

இம்முயற்சி எம்மைப்பொறுத்தவரையில் ஒரு சிறு முயற்சியே. இவ்வாறான பணியை நாம் தொடர்வதற்குக் கூட்டுறவாளர்களதும், பொது மக்களதும், அறிஞர் பெருமக்களதும் ஆதரவும், ஆசியும் அவசியமாகும். இப்பங்களிப்புக் கிடைக்கும் பட்சத்தில் இந்நூலைத் தொடர்ந்து இது போன்ற வேறு நூல்களையும் வெளியிட நாம் எண்ணியுள்ளோம்.

எமது நோக்கத்தை நாம் நிறைவேற்றுவதற்கு உரிய சந்தர்ப்பத்தில் இந்நூலை ஆக்கித்தந்த காலஞ்சென்ற கூட்டுறவாளர் திரு. வை.சி. சிவஞானம் அவர்களுக்குக் கூட்டுறவு இயக்கமும், எமது சங்கமும் பெரிதும் கடமைப்பட்டுள்ளன. அவருக்கு நீண்ட காலமாகக் கூட்டுறவுத் துறையிலுள்ள ஈடுபாடும், அவருக்கும் எமது சங்கத்துக்குமுள்ள நெருங்கிய தொடர்பும் காரணமாக அயரா முயற்சியோடு இந்நூலை அவர் 1980இல் ஆக்கித் தந்தார். மிகக் குறுகிய காலத்துள் இந்நூலை அவரால் ஆக்கப்பட்டிருப்பிம் மாணவர்கள் கூட்டுறவாளர்கள், பொது மக்கள் ஆகியோருக்கான பல பயனுள்ள தகவல்கள் இதிற் பொதிந்துள்ளன. இந்நூல் தற்பொழுது கையிருப்பில் இன்மையாலும் இந்நூலின் முக்கியத்துவம் கருதியும் பலரது வேண்டுகோளின் பெயரில் இதனை மறுபிரசுரம் செய்யமுன் வந்தோம்.

இந்நூலிலுள்ள பல விடயங்களைக் காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தேவையிருந்ததனாலும், 1980ஆம் ஆண்டுக்குப் பின்புள்ள கூட்டுறவுத் தொடர்பிலான தகவல்கள் சேர்க்கப்பட வேண்டியிருந்ததனாலும் அவசியமான திருத்தங்களைப் புதிய தகவல்களுடன் மீள் பிரசுரம் செய்யவேண்டிய தேவையை உணர்ந்ததும், திருத்தியமைக்கும் முயற்சியை ஏற்றுச் செய்யும்படி இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனத்தைச் சேர்ந்த உசாத்துணை ஆலோசகர் திரு. சி. கோணேஸ்வரன் அவர்களின் துணையை நாடினோம். அவர் இப்பாரிய பொறுப்பை முன்வந்து ஏற்று மிகவும் குறுகிய காலத்திற் சிறந்த அர்ப்பணிப்புடன் நிறைவு செய்தமை பாராட்டிற்குரியதாகும். அவரின் பங்களிப்பு இந்நூலின் பயன்பாட்டை மேலும் அதிகரித்துள்ளதென்பதை வாசகர்கள் உணர்வார்களென நம்புகின்றோம். இந்த வகையில் எமது கோரிக்கையை அவர் நிறைவேற்றத் துணைபுரிந்த இலங்கை கூட்டுறவு முகாமை நிறுவனத்தின் தலைவர் திரு. ஈ. எஸ். விக்கிரமசிங்க அவர்களுக்கும் பொது முகாமையாளர் திரு.வை. ரத்நாயக்க அவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றி உரித்தாகும்.

இந்நூலுக்கான அணிந்துரையை நல்கியதோடு வேண்டிய ஆலோசனைகளைத் தந்த வடக்கு கிழக்கு மாகாணக் கூட்டுறவு ஆணையாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அவர் இந்நூலின் சட்டம் சம்பந்தமான சில பகுதிகளை ஆக்கி உதவியதோடு ஏனைய பகுதிகளை மெருகூட்டவும் வேண்டிய ஆலோசனைகளை வழங்கியுள்ளமை இந்நூலுக்கு மேலும் சிறப்பினைத் தந்தள்ளது.

இந்நூலின் ஆரம்ப வெளியீட்டுக்கு உதவியது போலவே, இரண்டாவது பதிப்புக்கும் பல்வேறு வகையிலும் ஆலோசனைகளும், உதவிகளும் நல்கிய பொல்கொல்ல கூட்டுறவுக் கல்லூரியின் முன்னைநாள் விரிவுரையாளர் திரு. ஆர். எம். நாகலிங்கம் அவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றி உரித்தாகும்.

இந்நூலை அழகாக அச்சிடுவதற்குக் கொழும்பில் எமது சார்பில் மேற்பார்வை செய்து உதவிய முன்னை நாள் அதிபர் பண்டிதர் திரு. சி. அப்புத்துரை அவர்களுக்கும், இந்நூலை வெளியிடுவதற்குப் பல வழிகளிலும் உதவி புரிந்த ஏனையோருக்கும், மறுபதிப்பை அழகுற அச்சிட்ட கொழும்பு யுனி ஆர்ட்ஸ் அச்சக நிறுவனத்தாருக்கும் எமது இதயம் கனிந்த நன்றி உரித்தாகும்.
தெல்லிப்பளை
06.01.1998


முதற்பதிப்பின் முகவுரை
வை. சி. சிவஞானம்
விரிவுரையார்,
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி.

இங்கிலாந்தில் ஆரம்பித்த கூட்டுறவு இயக்கம் இன்று உலக இயக்கமாக மலர்ந்து விட்டது. ஆயினும் கூட்டுறவுக் கொள்கைகளை எவ்வளவு தூரம் இலங்கைக் கூட்டுறவு அமைப்புக்கள் செயற்படுத்துகின்றன என்ற வினாவுக்கு விடை காண்பதே எனது நோக்கம். அதற்காகக் கூட்டுறவுக் கொள்கைகள், அறிஞர்களி; கருத்துக்கள் ஆகியவற்றைத் தொகுத்துத் தந்து, இன்று இலங்கையில் உள்ள கூட்டுறவு அமைப்புக்களின் செயற்பாட்டு முறைகளையும் ஓரளவுக்கு எடுத்துரைத்துள்ளேன். இவற்றின் அடிப்படையில் விடை கூறும் பொறுப்பை உங்களிடம் விட்டுவிடுகின்றேன். விடை காண்பது மட்டுமல்ல கூட்டுறவுக் கொள்கைகளைப் பூரணமாகக் கடைப்பிடிக்கும் இலட்சியக் கூட்டுறவு இயக்கமாக இலங்கைக் கூட்டுறவு அமைப்பை மாற்றியமைக்க வேண்டிய பெரும் பொறுப்பும் உங்களுடையதாகும்.

கூட்டுறவு இயக்கம் உண்மை இலட்சியத்தோடு மலர்ந்திடக் கூட்டுறவுக் கல்வியை மக்களுக்குப் புகட்டவேண்டும். இலங்கையைப் பொறுத்த வரையிற் கல்விமான்களும் அறிஞர்களும் கூட்டுறவு இயக்கம் பற்றிய கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றை உருவாக்க முயற்சிப்பது மிகக் குறைவு. இலங்கை மக்கள் அறிய வேண்டிய கூட்டுறவுக் கருத்துக்கள் தகவல்களைக் கொண்ட பூரணமான ஒரு தமிழ் நூல் இல்லையென்றே கூறலாம். அக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கோடுதான் இந்நூலை உருவாக்க முயற்சித்தேன். ஆயினும் முழுமையாக இந்நூலைப் பூர்த்தி செய்யக்குறுகிய காலம் இடந்தரவில்லை. இவ்வாறான பணிகளைப் பூர்த்தி செய்யக் குறுகிய காலமும் இடந்தரவில்லை. இவ்வாறான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்று எமது தெல்லிப்பளைக் கூட்டுறவுச் சங்கமும் ஏனைய கூட்டுறவாளர்களம், அறிஞர்களும் தொடர்ந்து பணியாற்ற முன்வருதல் வேண்டும்.

இந்நூலில் எனது கருத்துக்கள் அல்லது எனது சிந்தனைகள் என்பவை மிகக் குறைவு. ஏன்@ இல்லையென்றே கூறிவிடலாம். அறிஞர்களது கருத்துக்களையும் நடைமுறையிலுள்ள கூட்டுறவு சம்பந்தமான செயற்பாடுகளையும் தேவைக்கேற்பத் தொகுத்துத் தருவதே எனது முயற்சி.

கூட்டுறவில் ஈடுபட்டுள்ளவர்களின் அறிவு விருத்திக்கும் எதிர் காலக் கூட்டுறவாளர்களை உருவாக்கும் நோக்கத்துக்கும் இந்நூல் வெளியிடப்படுவதாயினும், வணிக பாடத்தை உயர்தர பரீட்சைகளுக்காக எடுக்கும் மாணவர்களுக்கும் கூட்டுறவு ஊழியர் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களும் உதவு நூலாகவும் இது அமையும் இளைஞர்களும் மாணவர்களும் கூட்டுறவு இயக்கத்தில் ஈடுபடக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தினால்தான் எதிர்காலக் கூட்டுறவு இயக்கம் ஒளிமயமானதாக இருக்கும். அதற்கான முயற்சிகளில் கூட்டுறவு இயக்கங்கள் ஈடுபடவேண்டும்.

இந்நூல் உருவாகப் பலர் பலவகையில் உதவியுள்ளனர். எனது அருமை நண்பரும் தெல்லிப்பைளப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமாகிய திரு.சி. சிவமகாராசா அவாகள் அடிக்கடை என்னைத் தூண்டியதன் விளைவாகவே இந்நூலை எழுத முற்பட்டேன். அவர் தூண்டியதுமல்லாது தன்னிடமிருந்த கூட்டுறவுத் தகவல்களைக் கொண்ட சாதனங்களையும் தந்துவினார். அவருக்கு எனது இதயபூர்மான நன்றி.

திரு. சு.ஆ. நாகலிங்கம் பொல்கொல்ல கூட்டுறவுக் கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் அவர்களும் யாழ் கூட்டுறவுக் கல்லூரிப் பொறுப்பதிகாரி அவர்களும் பல தகவல்களையும் ஆவணங்களையும் தந்துதவினர். ஸ்ரீஇலங்கா தேசிய கூட்டுறவுச் சபை யாழ் மாவட்டக்கிளை, யாழ் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், யாழ் மாவட்ட நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், மயிலிட்டிக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் முகாமையாளர்களும் பல தகவல்களைத் தந்துவினர். தெல்லிப்பளைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொதுமுகாமையாளர், ஆளணி முகாமையாளர், கடனுதவு பகுதி முகாமையாளர் உட்படப் பல ஊழியர்கள் வேண்டிய தகவல்களைச் சேகரித்துத் தந்துள்ளனர். இறப்பர் கூட்டுறவுத் தலைமைச் சங்கம், இலங்கைக் கைத்தொழிற் கூட்டுறவுத் தலைமைச் சங்கம், இலங்கைக் கைத்தொழிற் கூட்டுறவுத் தலைமைச் சங்கம், என்பன தபால் மூலம் தமது பூரண விபரங்களை அனுப்பி வைத்தன. இவர்கள் எல்லோருக்கும் எனது இதயபூர்வமான நன்றி. இந்நூலை மிகக் குறுகிய காலத்தில் அச்சிட்ட அச்சகத்துக்கும், இந்நூலை உருவாக்கப் பல வழிகளிலும் உதவி செய்த ஏனையோருக்கும் எனது இதய பூர்வமான நன்றி.

வசாவிழான்
05.07.1980 நூல் ஆசிரியர்.


இரண்டாவது பதிப்புக்கான முகவுரை
சி. கோணேஸ்வரன்,
முகாமை உசாத்துணை ஆலோசகர்,
இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனம்.

தெல்லிப்பளைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் உபதலைவரும், மறைந்த கூட்டுறவாளருமாகிய திரு. வை. சி. சிவஞானம் அவர்களால் 1989ல் எழுதப்பட்டுத் தெல்லிப்பளை ப.நோ.கூ. சங்கத்தால் வெளியிடப்பட்ட கூட்டுறவுக்கோர் அறிமுகம் என்ற நூலினைத் தற்காலத் தேவைக்கேற்ப அவசியத் திருத்தங்களுடனும் 1980க்குப் பின்னர் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகளின் விபரங்களுடனும் திருத்தியமைப்பதற்கு உதவுமாறு மேற்படி சங்கத்தின் தலைவர் திரு.சி.சிவமகாராசா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்நற்பணியைச் செய்ய முனைந்தேன்.

இந்நூலின் பெரும்பகுதி இன்றும் பொருந்தக் கூடிய தகவல்களைக் கொண்டுள்ளதாலும், மூல நூல் ஆசிரியரின் கருத்துக்கள் சிதைவடையக் கூடாது என்பதாலும் பெருந்திருத்தங்கள் எதையும் மேற்கொள்ள யான் முயலவில்லை. ஏற்கனவே ஒரு தரமான நூலாக இது அமைந்ததினால் அனேக திருத்தங்கள் செய்யவேண்டிய அவசியமும் இருக்கவில்லை. குறுகிய காலத்துள் இந்தத் திருந்திய பதிப்பை வெளியிட வேண்டுமென்ற வெளியிட்டாளர்களின் விருப்பத்தையும் கவனத்திற்கொண்டு அவசியமான திருத்தங்களே மூலநூலில் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூட்டுறவு இயக்கத்தில் நிகழ்ந்த மாற்றங்களும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. மூல ஆசிரியர் எண்ணியது போலவே இந்நூல் ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் எனது கருத்துக்கள், சிந்தனைகளை வெளிப்படுத்துவதைத் தவிர்த்துள்ளேன்.

ழூ இலங்கைக் கூட்டுறவு இயக்கம் பற்றிய முக்கிய தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்று இல்லாத குறையை 1980களிலேயே நன்குணர்ந்து இவ்வாறான நூலைத் தயாரித்தளித்த காலஞ்சென்ற கூட்டுறவாளர் திரு.வை.சி. சிவஞானம் அவர்களுக்கும்,

ழூ இந்நூலுக்கான திருத்தங்களை மேற்கொள்ளப் பல்வேறு வகையிலும் எமக்கு உதவி வளங்கிய பொல்கொல்லக் கூட்டுறவுக் கல்லூரி முன்னாள் விரிவுரையாளரும், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடற் பகுதி முன்னாள் தலைவருமான திரு.ஆர்.எம். நாகலிங்கம் அவர்களுக்கும்.

ழூ இந்நூலை அச்சிடுவதற்கு மேற்பார்வை செய்துதவியதுடன், நூல் அமைப்புக்கு வேண்டிய ஆலோசனைகளண் வழங்கிய முன்னை நாள் தலைமை ஆசான் பண்டிதர் திரு. சி. அப்புத்துரை அவர்களுக்கும்.

ழூ இந்நூலைப் புதிய வடிவில் மெருகிட வேண்டிய ஆலோசனைகள் வழங்கியதுடன் இந்நூலுக்குப் பொருத்தமான அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தது மட்டுமன்றி இந்நூலில் உள்ள சட்டம் தொடர்பிலான விடயங்களில் வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டும், நிர்வாகச் சட்டமும் கூட்டுறவுச் சட்டமும், இயற்கை நீதிக் கோட்பாடு ஆகிய விடயங்களுக்கான பிரிவுகளைத் தாமே ஆக்கியளித்தும் உதவிய வடக்கு கிழக்கு மாகாண ஆணையாளரும் பதிவாளருமான திரு. க. சண்முகலிங்கம் அவர்களுக்கும்.

ழூ இம்மூல நூலைப் பதிப்பித்ததோடு மட்டுமன்றி அதன் திருத்திய பதிப்பை வெளியிட முன்வந்த தெல்லிப்பளைப் ப. நோ. கூட்டுறவுச் சங்கத்தினருக்கும், தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

இவ்வாறான முயற்சிகள் வெற்றியளிக்கத் தமிழ்பேசும் மாணவர்களும், கூட்டுறவாளர்களும், கூட்டுறவுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏனைய சகல தரத்தினரும், பொது மக்களும் தமது பங்களிப்பை நல்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

கொழும்பு மீள்பதிப்பாசிரியர்
01.01.1999

அணிந்துரை
க. சண்முகலிங்கம்
கூட்டுறவு அபிவிருத்தி,
ஆணையாளரும், பதிவாளரும், (வ.கி.)

கூட்டுறக்கோர் அறிமுகம் என்னும் இந்நூல் 1980ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூல் வெளி வருவதற்கு எட்டு ஆணைகளுக்கு முன்னர் இலங்கையில் கூட்டுறவுத்துறையின் அமைப்பு முறையில் முக்கியமான மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டது கிராம மட்டத்தில் செயற்பட்ட சிறு சங்கங்களையும், இரண்டாம் நிலை சங்கங்களாக விளங்கிய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடு முழுவதிலுமாக 371 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. இவ்விதம் அமைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றான தெல்லிப்பளைப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வெளியீடாக இந்நூல் வெளிவந்தது. அதன் இயக்குநர் சபை உறுப்பினராகப் பணியாற்றிவரும், அனுபவம் மிக்க கூட்டுறவாளருமாகிய திரு. வை. சி.சிவஞானம் இந்நூலினை யாத்து அளித்தார்கள். இந்நூல் வெளிவந்த சமயம் இது பல்லோரதும் பாராட்டைப் பெற்றது. இத்துறை நூல்கள் அரிதாக நிலவும் எமது நாட்டில் வை.சி.சிவஞானம் அவர்களின் நூல் பெரிய இடைவெளி ஒன்றை நிரப்புவதாகவும் அமைந்தது.

நூலின் முதற்பதிப்பு வெளிவந்து இன்று 18ஆண்டுகள் கழிந்து விட்டன. கூட்டுறவுத் துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. சட்டம், நடைமுறைகள், கருத்தியல், கோட்பாடு ஆகிய விடயங்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. இதனால் நூலினைத் தற்காலத். தேவைகளுக்கு ஏற்பத் திருத்தியமைக்கும் தேவை ஏற்பட்டது. இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனத்தின் முகாமை உசாத்துணை ஆலோசகர் திரு. சி. கோணேஸ்வரன் அவர்கள் புதிய தகவல்களைச் சேர்த்தும், திருத்தியும் இந்நூலைக் காலத்திற்குப் பொருந்தியதாக ஆக்கியுள்ளார்கள். மூலநூலின் கருத்து, சிந்தனை ஓட்டம் என்பன சிதைவடையாத முறையில் இப்பணியைத் திரு. சி. கோணேஸ்வரன் திறம்படச் செய்துள்ளார்.

இந்நூல் வெளிவந்த கால கட்டத்தில் நிலவாத புதிய நிலைமை ஒன்றை இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்தமானதாகும். மத்தியப்படுத்தப்பட்ட நிர்வாக முறை அன்று நிலவியது. இன்று கூட்டுறவுத்துறை நிர்வாகம் மாகாண மட்டத்தில் பரவலாக்கப்பட்டுள்ளது. நிருவாகப் பரவலாக்கம் காரணமாக ஒவ்வொரு பிரதேசத்தினதும் சிறப்பியல்புகள், விசேட பிரச்சினைகள் என்பன கவனிப்புக்கு உரியனவாகின்றன. இக்காரணத்தினால் கூட்டுறவுச் சங்கங்களின் அமைப்பு, நடைமுறைக் கோட்பாடுகள் ஆகியன தொடர்பாகப் புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

1972ஆம் ஆண்டிற் கூட்டுறவுத் துறையிற் கொண்டு வரப்பட்ட மாற்றங்களின் சில முக்கிய இயல்புகள் இன்று விமர்சன நோக்கிற் பார்க்கப்படும் தேவை எழுந்துள்ளது. அத்தகைய விமர்சன நோக்கு எம்மத்தியில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு எதிர்காலத்திற்கான செயல்திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் உதவும் கூட்டுறவுச் சங்கங்களின் அமைப்பில் நிலவும் முக்கிய குறைபாடுகளாவன.

1. கூட்டுறவுச் சங்கம் ஜனநாயக் கட்டுப்பாடு என்னும் கோட்பாட்டிற்கு அமையச் செயற்பட வேண்டும். பல நோக்குக் கூட்டுறவுச் சங்க அமைப்பு முறை ஜனநாயக முறைகளைத் திரிபுபடுத்தியுள்ளது.

2. கிராம மட்டத்தில் நிருவாக அதிகாரம் கொண்டதான சங்க அமைப்பு ஜனநாயகம் மலர்வதற்கான முதற்தேவை. பல கிராமங்களை உள்ளடக்கிய பெரிய பிரதேசம் ஒன்றின் பட்டினத்தை நோக்கியதாக சங்கத்தின் நிருவாக அதிகாரம் இன்று மையப்படுத்தப்பட்டுள்ளது.

3. மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை ஜனநாயகத்தை மேலும் திரிபடையச் செய்துள்ளது.

4. அங்கத்தவர்களின் பொருளாதார நடவடிக்கைகளுடன் நேரடிச் சம்பந்தமுடையதாகவும் அங்கத்தவர்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூட்டுறவுச் சங்கம் அமைதல் வேண்டும்.

‘மக்கள் நிறுவனம்;’ என்ற கருத்தியல் வலுப்பெற்ற காரணத்தால் அங்கத்தவர் பங்குபற்றல் பலவீனமடைந்துள்ளது.

மேற்குறித்த முக்கிய குறைகள் வெளிப்படையாகப் புலப்படாத ஒரு காலகட்டத்தில் திரு.வை.சி. சிவஞானம் தமது நூலை எழுதினார். அது மட்டுமன்றி அன்றிருந்த அமைப்பு முறையில் சிறப்பாக செயற்பட்ட தெல்லிப்பளைப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநராகவும் இவர் செயற்பட்டாராதலின் அமைப்பு முறையின் குறைகள் அவர் சிந்தனையில் முனைப்புப் பெற்றிருக்கவில்லை.

இலங்கையின் கூட்டுறவு இயக்கம் பற்றி ஆராய்ந்து அதன் முன்னேற்றத்திற்கு அவசியமான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்துரைக்கும் திட்டம் ஒன்றை சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ஐடுழு) வெளியிட்டுள்ளது. “ளுவசயவநபநைள யனெ யுஉவழைn Pடயளெ கழச ஊழ-ழிநசயவiஎந னுநஎநடழிஅநவெ in ளுசi டுயமெய” என்னும் தலைப்பில் 1997ம் ஆண்டு மார்கழி மாதம் இந்தத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்க அமைப்பில் இன்று நிலவும் குறைகள் பற்றி நாம் மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களும் இன்னும் பல விடயங்களும் இந்த அறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறை பற்றிய விமர்சன நோக்கு வளர்ச்சி பெறுவதற்கு ஆய்வு நூல்கள் பல தமிழில் வெளிவருதல் வேண்டும். திரு.வை.சி. சிவஞானம் அவர்களின் இந்த அரிய நூலை மீள் பதிப்புச் செய்வதில் முன்னின்று செயற்பட்ட யாவரையும் வாழ்த்துகின்றேன்.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்
உள்துறை முக வீதி,
திருகோணமலை,
29.12.1998.

குழுசுறுயுசுனு
நு.ளு. றுiஉமசயஅயளiபொநஇ
ஊhயசைஅயnஇ
ளுசi டுயமெய ஐளெவவைரவந ழக ஊழ-ழிநசயவiஎந ஆயயெபநஅநவெ.

28வா னுநஉநஅடிநசஇ 1998

வுhந ளுசi டுயமெய ஐளெவவைரவந ழக ஊழ-ழிநசயவiஎந ஆயயெபநஅநவெ hயள அயனந யசசயபெநஅநவெள in உழடடயடிழசயவழைn றiவா வுhநடடரியடடயi ஆPஊளு டுவன.இ வழ சநஎளைந வாந டிழழம “ஐவெசழனரஉவழைn ழக ஊழ-ழிநசயவழைn”இ றசவைவநn டில வாந னளைவiபெரiளாநன உழ-ழிநசயவழசஇ ஆச. ஏ.ஊ. ளுiஎயபயெயெஅ in 1980இ றாiஉh கை ய எயடரயடிடந ளழரசஉந ழக iகெழசஅயவழைn யனெ மழெறடநனபந கழச ஊழ-ழிநசயவழசள நஎநn வழனயல. வுhந டிழழம உழஅpசநாநளெiஎநடல உழஎநசள hளைவழசலஇ pசinஉipடநள யனெ ழசபயnணையவழையெட ளவலடந ழக வாந ஊழ-ழிநசயவiஎந ஆழஎநஅநவெ in னகைகநசநவெ றயலள வழ நசெiஉh வாந ஊழ-ழிநசயவiஎந ளுநஉவழச யனெ வைள அயயெபநஅநவெ pசயஉவiஉநள கழச ழஎநசயடட நஉழழெஅiஉ யனெ ளழஉயைட னநஎநடழிஅநவெ ழக வாந உழரவெல.

வுhந inவையைட சநஙரநளவ அயனந டில ஆச. ஊ. ளுiஎயஅயாயசயதயாஇ Pசநளனைநவெ ழக வாந வுhநடடயipயடடயi ஆPஊளு டுவன.இ கழச சநஎளைiபெ வாந டிழழம றயள யஉஉநிவநன டில வாந ளுடுஐஊஆ றiவா pடநயளரசநஇ ளinஉந சநஎளைழைn ழக வாளை எயடரயடிடந டிழழம றடைட னநகinவைநடல உழவெசiடிரவந வழ னநஎநடழிஅநவெ ழக வாந ஊழ-ழிநசயவiஎந ளுநஉவழச. ஆச. ஊ. முயநௌhறயசயnஇ ஆயயெபநஅநவெ ஊழளெரடவயவெ ழக வாளை ழசபயnணையவழைn. றாழ ஊழ-ழசனiயெவநன நவெசைந றழசமஇ hயள உழஅpடநவநன வாளை தழடி in ய உழஅஅநனெயடிடந அயnநெச றiவாin ய பiஎநn pநசழைன ழக வiஅந. றுந ளinஉநசநடல யிpசநஉயைவந வாந Pசநளனைநவெ யனெ வாந ளவயகக ழக வாந வுhநடடipயடடயi ஆPஊளு டுவன. pயசவiஉரடயசடல ஆச. மு. ளூயnஅரபயடiபெயஅ – ஊஊனு ரூ சுஊளு (Nஃநு) யனெ வாந ழவாநச ஊழ-ழிநசயவழசள கழச வாநசை எயடரயடிடந யளளளைவயnஉந நஒவநனெநன வழ வாந ளுடுஐஊஆ வழ ளரஉஉநளளகரடடல உழஅpடநவந வாளை வயளம.

றூடைந யிpசநஉயைவiபெ கழச வாந inவையைவiஎந வயமநn டில வாந வுhநடடipயடடயi ஆPஊளு டுவன.இ றுந யசந உநசவயin வாயவ சநஎளைநன நனவைழைn றடைட நnhயnஉந வாந மழெறடநனபந யனெ pசயஉவiஉநள ழக வாந ஊழ-ழிநசயவiஎந ஆழஎநஅநவெ in ளுசi டுயமெய in ய ளபைnகைiஉயவெ றயல.


பொருளடக்கம்
01. அறிமுகம் 01
02. கூட்டுறவுக் கொள்கைகள் 13
03. கூட்டுறவு இயக்கத்தின் ஆரம்ப கர்த்தர்கள் 53
04. கூட்டுறவுச் சட்டங்கள் 59
05. இலங்கைக் கூட்டுறவுச் சங்கச் சட்ட மூலங்கள் 69
06. கூட்டுறச் சங்கங்களுக்கிடையேயான பொதுவான செயற்பாடுகள் 94
07. கூட்டுறவுத் தொழில் அமைப்பு 147
08. கூட்டுறவுச் சங்கங்களின் வகைகள் 162
8.1 சிற்றளவு முதனிலைச் சங்கங்களின் விளக்கம் 167
8.2 பேரளவு முதனிலைச் சங்கங்களின் விளக்கம் 190
8.3 இரண்டாம் நிலைச் சங்கங்கள் (சமாசங்கள்) 216
8.4 மூன்றாம் நிலைச் சங்கங்கள் (தலைமைச் சங்கங்கள்) 220
8.5 கூட்டுறவுத் தேசிய நிறுவனம் 240
8.6 சர்வதேச நிறுவனங்கள் 254

09. கூட்டுறவு இயக்க வளர்ச்சிக்கு உதவும் அரச நிறுவனங்கள் 256
10. கூட்டுறவில் அரசின் அதிகாரப் பரவல் 266
11. அனுபந்தம் 275
இலங்கைக் கூட்டுறவு இயக்கத்தில் 1980இன் பின் ஏற்பட்ட பிரதான மாற்றங்கள்
11.1 அரசியற் பொருளாதார மாற்றம். 275
11.2 ஜனசக்தி. 276
11.3 சமுர்த்தித் திட்டம். 277
11.4 அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களின் கீழ்க் கூட்டுறவு
நிர்வாகத்தைப் பன்முகப்படுத்தல். 277
11.5 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள். 278
11.6 கூட்டுறவுச் சங்கங்களைப் புனரமைப்பதற்காக 1980களில் வெளியிடப்பட்ட
கே. டபிள்யூ. தேவநாயகம். அறிக்கை – சுருக்கம். 280
11.7 தற்பொழுது ஆய்விலுள்ள புதிய கூட்டுறவுச்சட்டங்கள். 288
11.8 சர்வதேச தொழில் அமைப்பின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட
இலங்கைக் கூட்டுறவு அபிவிருத்திக்கான உபாயத்திட்டமிடலும்,
செயற்றிட்டமிடலும். 292

12. இலங்கைக் கூட்டுறவு இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள் 296
13. இந்நூல் உருவாக உதவியவை. 301


1. அறிமுகம்
அறிவு வளர்ச்சி மனித வாழ்விற் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. மனிதன் அறிவுத்திறன் கொண்டு, இல்லாத எதையும் உலகிற் புதிதாகப்படைத்து விடவில்லை. ஆழ்ந்து சிந்தித்தால் உலகில் உள்ளவற்றையே மனிதகுலத் தேவைக்கேற்ப மாற்றியமைத்துப்புத்துருக் கொடுத்து வாழ்வைச் சிறப்படையச் செய்ய அறிவு வளர்ச்சி பயன்பட்டு வந்தது. மனிதகுல வரலாறு உணர்த்தும் உண்மை இது. கூட்டுறவு இந்த உண்மைக் கருத்துக்கு மாறுபட்டதன்று.

உயிரினத் தோற்றத்தோடு உடன் பிறந்த உலகை, அச்சம், பயம் போன்ற உணர்வுகள் இயல்புணர்வுகளாகக் கணிக்கப்படுகின்றன. அச்சம், பயம் என்பவற்றில் இருந்து மீளக் கற்றுக்கொண்ட ஒரு தற்காப்புணர்வுதான் கூடிவாழும் பண்பு. கூடி வாழும் பண்போடு உயிரினத்திடம் கூடிஉழைக்குஞ் செயலும் பிறந்து விட்டது. ஈ.எறும்பு, பறவைகள், நீர்வாழ் பிராணிகள், மிருகங்கள் முதலிய உயிரினங்களிடையே கூடிவாழ்தல், கூடி உழைத்தல் ஆகிய செயற்பாடுகள் இருந்து வந்ததை உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். உலகியல் வாழ்வில் இச்செயல்களை நாமும் கண்ணாற் காணக் கூடியதாகவுள்ளது. எனவே கூட்டுணர்வு உயிரினத்தின் தோற்றத்தோடு பிறந்ததுதான்.

மனிதகுலம் அறிவு முதிர்ச்சியடையாது, விலங்கோடு விலங்காக வாழ்ந்த காலத்திலுங்கூட அதனிடம் கூட்டுறவு உணர்வும் கூட்டுறவுச் செயல்களும் காணப்பட்டன. கூட்டுறவி; தேவையை உணர்ந்தோ உணராமலோ ஆதி மனிதன் தனது வாழ்க்கை முறையில் கூட்டுறவைக் கடைப்பிடித்து வந்துள்ளான். ஊழழிநசயவழைn (கூட்டுறவு) என்ற ஆங்கிலப் பதம் லத்தீன் வினையடிச் சொல்லில்” இருந்து பெறப்பட்டதாகும். இதன் நேர்க்கருத்து “கூடி உழைத்தல்” என்பதாகும். கூட்டு முயற்சி மூலம் கூடிய பலம் என்னும் பொருளும் கொள்ளப்படலாம். இன்று பொதுப் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடி உழைக்கும் பொருட்டுக் கூட்டுறவுச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு சட்டங்களின் கீழோ பதிவு பெற்று நிறுவனங்களைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித குலம் ஆதிகாலத்தில் வாழ்ந்த குழு வாழ்க்கை முறையே கருத்துணர்வு மிக்க கூட்டுறவுக்கு மிகப் பொருத்தமான எடுத்துக் காட்டாகும்.

குழு வாழ்க்கை முறை அறிவியல் வளர்ச்சி, அரசியல் வளர்ச்சி, பொருளாதார நாகரிக மாற்றங்கள் போன்ற காரணிகளாற் குடும்பம், கிராமம், நகரம் போன்ற வாழ்க்கை முறைகளாக மாற்றமடைந்தன. மனித வாழ்வின் தொழில் துறைகளை அறிவியல், விஞ்ஞானம், தொழில் நுட்பம், அரசியல், பொருளாதார அமைப்புப் போன்றவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி பெருமளவு மாற்றயமைத்தன. கைத்தொழிற் புரட்சியின் காரணமாகப் பேரளவு உற்பத்தி முறைகளும் பேரளவு விநியோக அமைப்பு முறைகளுந்தோன்றி வாழ்க்கை முறையிலும் தொழில்முறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. இம் மாற்றங்களின் விளைவாகத் தொழிலாளர் விவசாயிகள் வாழ்க்கையில் சகிக்க முடியாத பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்பட்டன. பேராலை உற்பத்தி முறையில் சிறுவர்களும் பெண்களுங்கூட வேலைக்கமர்த்தப்பட்டனர். மூலத்தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத, குறைந்த கூலியில், நீண்ட நேரம் சுகாதாரமற்ற சூழ்நிலையில் வேலை செய்து வேதனை நிறைந்த வாழ்க்கையையே பெரும்பாலான மக்கள் வாழ்ந்தனர். கடின உழைப்பை நீண்ட நேரம் சுகாதார வசதியற்ற சூழ்நிலையில் அளித்த தொழிலாளர்கள் தம் வாழ்க்கையில் கண்டவை இட நெருக்கடி மிகுந்த சுகாதார வசதியற்ற வாழ்விடங்கள், வறுமை, நோய்பிணி, அரைப்பட்டினி என்பவையே. இதே நேரத்தில் ஆலை அதிபர்களும் உரிமையாளர்களும் செல்வச் செழிப்பு மிக்க செருக்கு நிறைந்த உயர்ந்த ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தனர்.

சமுதாய அமைப்பிலுள்ள இக்குறைபாடுகள் அறிஞர்களைச் சிந்திக்கத் தூண்டின. 19ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த புரட்சிச் சிந்தனையாளரான கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ அமைப்பையே குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றார். சமதர்ம அமைப்பொன்றை ஏற்படுத்தப் பொதுவுடமை இலட்சியத்தை நோக்கிச் செல்லும் கருத்துக்களையும் செயற்பாட்டு முறைகளையும் வெளியிட்டார். மனிதனின் கருத்துச் சுதந்திரம், தொழிற் சுதந்திரம் போன்ற தனிமனித இயல்புகளின் வளர்ச்சிக்கு மார்க்ஸ் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலாளித்துவ அமைப்பில் உள்ள சமூக பொருளாதாரக் கேடுகள் ஒரு புறம், அக்கேடுகளை அகற்றுவதற்காகத் தோன்றிய புரட்சிகரமான பொதுவுடமைத் தத்துவத்திலுள்ள தனி மனித சுதந்திரத் தன்மைக் குறைபாடுகள் மறுபுறம், இவ்விரு புறத்திலும் உள்ள நல்ல அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உயர் இலட்சிய நோக்கே கூட்டுறவாகும்.

முதலாளித்துவ நோக்கிலிருந்தும் பொதுவுடமை நோக்கிலிருந்தும் மாறுபட்ட இலட்சிய நோக்கையுடையது கூட்டுறவு. ஒவ்வொருவரும் அனைவருக்கென்பது பொதுவுடையை, அனைவரும் ஒருவருக்கென்பது முதலாண்மை. ஒவ்வொருவரும் அனைவருக்கும், அனைவரும் ஒருவருக்கென்பது கூட்டுறவு. பிறருக்கு உதவி செய்வதன் மூலம் தனக்கு உதவி செய்யலாம் என்பதே கூட்டுறவு. உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு என்பன உற்பத்தியில் தாமளித்த சேவையின் அளவுக்கு விலையைப் பெறுதல்@ ஒரு உற்பத்திக் காரணியின் சேவைப் பெறுமதியை இன்னொரு உற்பத்திக் காரணி சுரண்டாதிருத்தல்@ அதே போன்ற உற்பத்தியாளர் நுகர்வோரையும், நுகர்வோர் உற்பத்தியாளரையும், உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் நடுவர்கள் (இடையிலுள்ள பல்வேறு வகையான வியாபாரிகள், தரகர்கள், முகவர்கள்) சுரண்டாதிருத்தல்@ மனித சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்துழைப்போடும் வாழ்ந்து தமது வாழ்வை வளம்படுத்தும் அதே நேரத்தில் மற்றவர்களைச் சுரண்டாது வாழும் நீதியான உயர்ந்த வாழ்க்கை முறை, ஆகியவற்றைக் கொண்ட இலட்சியமே கூட்டுறவு. வளமாக வாழ்வதற்கு வழிதேடுகின்ற ஒருவன் சமூகத்திலுள்ள மற்றவர்களையும் அதே வாழ்வுக்கு வழிவகுத்து வழிவிடுகின்ற உயர்ந்த இலட்சிய முறையே கூட்டுறவு. சுரண்டலுக்கெதிராகச் செயலாற்றும் அதே நேரத்தில் பலாத்காரத்தைப் பின்பற்றாது சாத்வீக முறையிலும் சமாதான முறையிலும் இலட்சியத்தை அடையும்வழி@ போட்டிப் பொருளாதார அமைப்பிலிருந்து மாறுபட்டுப் போட்டியைத் தவிர்த்துச் சுயஉதவி, பரஸ்பர உதவி@ சுயநலங் கொண்ட பொருளாதார அமைப்பு முறையாக மட்டும் கூட்டுறவு அமையவில்லை. சுயநலமற்ற ஒத்துழைப்பு மனப்பான்மையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையும், அறவழி சார்ந்த உயர் பண்புகளும் நிறைந்த வாழ்க்கை முறையை இலட்சியமாகக் கொண்ட அமைப்பு முறையே கூட்டுறவு.

கூட்டுறவைப் பல அறிஞர்கள் அறமுகஞ் செய்துள்ளனர். அவர்கள் அறிமுகப்படுத்தும் போது ஒவ்வொருவரும் தமது நோக்கு, தேவை, அறிமுகப்படுத்துங் காலம், நேரம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பல்வேறு வழிகளில் செய்தனர். கூட்டுறவை முழுமையாக அவர்கள் கூற்றுக்கள் அறிமுகஞ்செய்யாது விடினுஞ் சில அம்சங்களையாவது தெளிவுபடுத்த உதவும் வகையில் அமைந்துள்ளன. எல்லோருடைய அறிமுகங்களையும் தரமுடியாவிடினும் சில அறிஞர்களின் கருத்துரைகளையாவது தருவது நன்றி.

ழூ “மனிதகுலம் வாழ்வுத்தேவைகள் முழுவதையும் நிறைவேற்றக் கூட்டுறவுக் கொள்கைகள் காட்டும் வழியைப் பின்பற்றிப் பயன் பெற முடியும். தொடர்ந்து பின்பற்றுவது தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் நலத்தைக் கொடுக்கும். இக்கொள்கையின் வழிகாட்டல்கள் சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் சமூக அநீதிகளையும் சுரண்டலையும் ஒழித்து நீதியும் அறமுஞ் சார்ந்த பொதுநல சமுதாய அமைப்பொன்றை உருவாக்க வழிவகுக்கும்”
-றொபேர்ட் ஒவன்

ழூ “மக்கள் தங்களின் பொதுப் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும், எவ்வித கட்டாயமுமின்றித் தாமாகவே முன்வந்து மனிதர்கள் என்ற ரீதியில் சமத்துவ அடிப்படையுடன் ஜனநாயக முறையில் ஒருங்கிணைந்து இயங்கும் முறையே கூட்டுறவாகும்.”
-கல்வெர்ட்
ழூ “சீரிய பண்ணை முறை, சிறந்த வணிகள், வளமான வாழ்வு ஆகிய மூன்றையும் குறிக்கோளாகக் கொண்டதுதான் கூட்டுறவு”.
-சேர் ஹோரேஸ் பிளங்கட்

ழூ “குடியாட்சி போன்ற அமைப்பு, சுயேட்சையுடன் சேர்தல், சுயாதீனக் கட்டுப்பாடு, ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோகம், அங்கத்தவர்களிடையே அன்னியோன்யம், ஒற்றுமை, திருந்திய வளர்ச்சி ஆகிய கொள்கைகளை ஏற்றுச் சுயமரியாதையுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து உழைப்பதே கூட்டுறவு”.
-நு.ளு. போகாடஸ்

ழூ “உலகத்தைத் தழுவுந் தன்மை, குடியாட்சி முறை, சிக்கனம், நெறிமுறைமை, பிரசாரம் (கல்வி), ஐக்கியம், சுயாதீனம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளுடன் இயங்குவதே கூட்டுறவு”
-வு.று. மேர்சேஸ்.

ழூ “ஒன்று சேர்தல், உலகத்தைத் தழுவுந் தன்மை, குடியாட்சி நெறிமுறைமை, சுயேச்சை, வினைத்திறன், உத்தரவாதம், பிரசாரம் (கல்வி) ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் இயக்கமே கூட்டுறவு”.
-து.து. உவர்லி

ழூ “ஐக்கியம், சிக்கனம், குடியாட்சி, நெறிமுறைமை, சுயாதீனம் என்ற அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு அமைக்கப்படுவதே கூட்டுறவு”.
-று.P. வாற்கின்ஸ்
(அனைத்துலகக் கூட்டுறவு
இணைப்பு நிறுவனத்தலைவர் 1952)

ழூ “ஒவ்வொருவரும் தமக்காகவும் பிறருக்காகவும் தமது திறன்களையும் சாதனங்களையும் தம்முடைய நிருவாகத்தின் கீழ்க் கொண்டு வந்து அதனால் ஏற்படும் இலாபமோ நட்டமோ எதுவானாலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் முறைதான் கூட்டுறவு”. -ஹெரிக்

ழூ “கூட்டுறவு ஒரு அமைப்பு மட்டுமன்றி. மக்களின் இதயத்தில் எழுகின்ற ஊக்க உணர்வுமாகும். எனவே தொழிற்றுறையில் கடைப்பிடிக்கப்படும் ஒரு மதந்தான் கூட்டுறவு. சுயநிறைவும் சேவையுந்தான் அதன் வேதவாக்கு”.
-சேர் டார்விங்

ழூ “முதலாளித்துவ முறையில் கூட்டுறவு ஒன்றுதான் நல்ல அமைப்பு. அதை எப்பாடுபட்டாவது அப்படியே கட்டிக் காக்கவேண்டும்”.
-லெனின்

ழூ “பொதுவான பொருளாதார நோக்கினை நிறைவேற்றுதற்காக மக்கள் தாமாகவே முன்வந்து அமைக்கும் மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதிதான் கூட்டுறவு”.
-மேத்தா

ழூ “சோசலிச பொருளாதாரத் திட்டத்தை உருவாக்கும் பணியில் கூட்டுறவு இயக்கம் தலைசிறந்த பங்கு வகிக்கின்றது. நாட்டிலுள்ள சாதாரண மக்களின் நல்வாழ்வுக்காகப் பணிபுரிவதில் இந்த இயக்கத்திலுள்ள அனைவரும் சிறந்த நிருவாகத்திலும், தன்னலமற்ற சேவையிலும் முன்மாதிரியாக விளங்குவார்கள் என நம்புகின்றோம்”.
-டாக்டர் இராதாகிருஷ்ணன்

ழூ “சமூக நீதி வழங்கி, தொழிற்பிரச்சினைகளை மாற்றியமைத்து எல்லா நலன்களும் பெற வழிவகுப்பது கூட்டுறவு”.
-ஜான் ஸ்டுவர்ட்மில்

ழூ “தனி மனிதப் போட்டி என்ற நிலையிலிருந்து கூட்டுழைப்பில் தனித்துவம் என்ற நிலைக்கு மனித முயற்சியை நெறிப்படுத்துவது கூட்டுறவு”.
-தோமஸ் கார்லைல்.

ழூ “கூட்டுறவியக்கம் தனது அறவொழுக்கம் பணியில் தவறினால் பொருளாதாரப் பணியிலும் தோல்வி காணும்.”
-வோக்வே

ழூ “பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்தையும் வெளிப்படையாக்குவதே கூட்டுறவு. ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் விளம்பரந்தான் கூட்டுறவின் முதல் நிபந்தனையாகவுள்ளது.”
-நிக்கல்சன்.

ழூ “கூட்டுறவு என்பது வெறுமனே ஒரு ஒழுங்கமைப்பு மட்டுமன்றி, ஒரு மாபெரும் இலட்சியமுமாகும். அதன் பயன்பாட்டு வழிகளே பற்பல கூட்டுறவுக் கொள்கைகள்@ மனிதனிடமுள்ள மனித தத்துவத்தைக் கௌரவிக்கின்றது. அது எமது உடலுக்கும் ஆன்மாவுக்கும் ஒருங்கே உணவு ஊட்டுகின்றது.”
-கவிஞர் தாகூர்.

ழூ “வலுவிழந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை அளிப்பதே கூட்டுறவு”.
-மஹாத்மா.

பல அறிஞர்கள் பல்வேறு வகையிற் கூட்டுறவை அறிமுகஞ் செய்தாலும் “கல்வேர்ட்” அவர்களின் அறிமுகமே ஓரளவு பொருள் பொதிந்த அறிமுகமாகக் கருதப்படுகின்றது. கூட்டுறவுக் கருத்துக்களைப் பரப்பப் பிரசாரஞ் செய்வோர் நேர்முகமாகக் கருத்துக்களைக் கூறாது மறைமுகமாக மனத்திற் பதியக்கூடிய வகையிற் கூறுவதுமுண்டு. இவை மறைமுகமாகப் பயன்படுத்தும் முறைகள்.

பழமை வாழ்க்கை முறை உதாரணங்கள்:
1. விவசாயிகள் 40,50 ஆண்டுகளுக்கு முன் நிலம் பண்படுத்தல், நீரிறைத்தல், பயிரிடல், அறுவடை செய்தல் போன்ற செயல்களில் ஒருவருக்கொருவர் உதவியாகப் பணம் பெறாது உழைப்பை வழங்கித் தமக்கு உழைப்புத் தேவைப்பட்ட போது உதவியைப் பெற்றமை.

2. கிராம மக்கள் வீடு வேய்தல், வேலியடைத்தல் போன்ற கருமங்களையும் இவ்வித உதவி உழைப்புக்களைப் பெற்றே பூர்த்தி செய்தமை.

3. விவாகம், மரணம் போன்ற நிகழ்வுகளில் ஒவ்வொருவரும் தம்மாலான உழைப்பையும் ஏனைய உதவிகளையும் இலவசமாக நல்குதல்.

4. சிங்கள மக்களிடையேயும் “அத்தம்” முறையின் கீழ் நெற்பயிர்ச் செய்கை வேலைகளில் பரஸ்பர உதவியும் வழங்கியமை.

5. பிங்கம, தொவில், பலி, கம்மடு போன்ற சமயாசாரச் சடங்குகளிற் பரஸ்பர உதவியும் உழைப்பும் வழங்கியமை.

இத்தகைய கூட்டுறவு நடவடிக்கைகளின் சிறப்பு அம்சம் யாதெனில் அவ்வத்தொழில் முயற்சிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களைத் தலைமை தாங்கச் செய்தலாகும். பணப் பொருளாதார அமைப்பு முறை மாற்றங்களும், விவசாயத்துறையில் இயந்திர உபயோகமுறை அதிகரித்தமையும் இக் கூட்டுறவுச் செயற்பாடுகள் மறைந்து கொண்டு வரக்காரணங்களாயின.

வரலாற்று நிகழ்ச்சிகள்:
முடவனும் குருடனுமாக இருந்த இரு புலவர்கள் குருடன் தோளில் முடவன் ஏறியிருந்து வழிகாட்ட, குருடன் முடவனைச் சுமந்து சென்று அரசவைகள் தோறும் இருவரும் கவிதை பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த இரட்டையர் வரலாறு.

கதைகள்:
தடிக்கட்டொன்றை முறிக்க முயன்ற ஐந்து சகோதரர்கள் முடியாது போகவே அவற்றைத் தனித்தனி தடியாக எடுத்து முறித்த கதை.

கூட்டுறவு உணர்வு, செயல், கருத்து என்பன அறிவியல் ரீதியாகக், கூட்டுறவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே பழங்கால மக்களிடம் இருந்தன என்பதற்கு இவை எடுத்துக் காட்டாகவும், பரஸ்பர உதவி, ஒற்றுமை, கூடி உழைப்பதால் தனக்கும் பிறருக்கும் கிடைக்கக்கூடிய பயன் என்பன போன்ற கருத்துணர்வுகளை ஏற்படுத்தவும் பிரசாரங்களில் எடுத்தாளப்படுகின்றன.

அறிவியல் ரீதியாக 1844ஆம் ஆண்டில் கூட்டுறவின் எண்ணக் கருவிற்கு உலகில் முதன் முதல் உரு அமைக்கப்பட்டது. இலங்கையில் 1911ஆம் ஆண்டிற் சட்டம் அமைத்து 1912ல் உரு அமைக்கப்பட்டது. அன்று தொட்டு இன்றுவரை இலங்கையில் கூட்டுறவு எண்ணக்கரு பல்வேறு வகையான உருவமைப்பைப் பெற்றுப் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையோடு இணைந்து விட்டது. இலங்கையிலுள்ள சாதாரண மக்களிற் பெரும்பாலானோர் தமது வாழ்க்கையின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டுக் கூட்டுறவு அமைப்புக்களை நாடியுள்ளார்கள். கடன்பெறல், நுகர்ச்சிப் பண்டங்களைப் பெறல், விவசாயத்துக்குதவும் இயந்திரப் பொறிகளைப் பெறல், உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தல் போன்ற தேவைகள் பரந்த அளவில் பெரும்பாலான மக்களாற் கூட்டுறவு அமைப்புக்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வந்தமையைக் கடந்தகால வரலாறு காட்டும்.

புதியனவற்றுக்கும் அறியப்படாதனவற்றுக்குத்தான் அறிமுகம் வேண்டும். நீண்ட கால வரலாறும் மக்களிடம் பரந்து நெருங்கிய தொடர்பும் கொண்ட பழமை வாய்ந்த கூட்டுறவுக்கும் அறிமுகம் வேண்டுமா? இக்கேள்வி நியாயபூர்வமாகத் தோன்றினாலும் அறிமுகந் தேவை என்பதற்குக் காரணங்கள் உண்டு. மனித வாழ்வில் மிக நெருக்கமாகத் தொடர்புகொண்ட பல பொருள்களைப் பற்றிப் பல்வேறு வகையான அறிமுகங்களைப் பெறவேண்டிய நிலையிலேயே சாதாரண மக்களிற் பலர் இருக்கின்றனர். மின்சாரம் நீண்ட காலமாகும மக்களுக்கு நன்கு தெரிந்த பொருள். மனிதர்கள் தமது தேவைகள் பலவற்றிற்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆயினும் மின்சாரத்தி; பயனைப் பெறும் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அதைப்பற்றிய பூரண அறிவு இல்லை. மின்சாரத்தைப் பற்றிப் பல்வேறு வகையான அறிமுகங்களைப் பெறவேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள். பணம் எல்லோராரும் நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஒரு பொருள். அதைப் பற்றியும் பெரும்பாலான மக்கள் பூரண அறிவைப் பெற்றிருக்கவில்லை. பணத்தைப் பற்றியும் பல்வேறு வகையான அறிமுகங்கள் சாதாரண மக்களுக்குத் தேவையாக இருக்கின்றது. இவற்றைப் போலவே கூட்டுறவுக்கும் பல்வேறு வகையில் அறிமுகந் தேவையாக இருக்கின்றது. கூட்டுறவின் உயர்ந்த இலட்சியத்தை அடையவும், அதன் உச்சப் பயனை மக்கள் அடையவும் கூட்டுறவு பற்றிய பல்வேறு அறிமுகங்கள் இன்று தேவையாக இருக்கின்றன.

மனித குலத்தின் அமைதியான சுபீட்சம் நிறைந்த வாழ்வுக்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றையும் நீக்கி ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவியுடன் அறவழி சார்ந்த நடவடிக்கைகளாற் பொருளாதார சமூக கலாசாரத் துறைகளில் முன்னேற்றமடைந்த ஜனநாயக ரீதியான சமுதாயத்தை உருவாக்குவதே கூட்டுறவின் நோக்கமாக வேண்டும்.

“அடிமையாக இருக்கவும் மாட்டேன். அதே நேரத்தில் அடிமையாக்கவும் மாட்டேன்” எனக்கூறிய லிங்கனின் கூற்றுப் போல, ஒரு கூட்டுறவாளன் சுரண்டப்படாமலும் அதே நேரத்தில் மற்றவர்களைச் சுரண்டாமலும் வாழும் உயர்நோக்குத்தான் கூட்டுறவு. சுரண்டல் என்பது பொருளாதாரச் சுரண்டலை மட்டுமல்லாது உரிமை அதிகாரம் போன்ற பல்வேறு வகையான சுரண்டல்களையும் உள்ளடக்கும். சுரண்டாமலும் சுரண்டப்படாமலும் நீதி செறிந்த முறையில் அறஞ்சார்ந்த ஜனநாயக அமைப்பில் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவியுடன் வாழ்வின் சகல தேவைகளையும் நியாயமான வழிகளில் பூர்த்தி செய்கின்ற புதிய சமுதாயமொன்றை அமைப்பதே கூட்டுறவின் மூல நோக்காகும்.

இந்நோக்கை எய்தும் நிலையிலேதான் கூட்டுறவாளர்கள் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள். சில நேரங்களிற் பயணத்தின் வழிகள் பற்பல காரணங்களால் திசை திருப்பப்படுவதுமுண்டு. அந்நிலையிற் சரியான வழியைக் கண்டு பிடிப்பதுதான் ஒவ்வொரு கூட்டுறவாளனதும் முக்கிய கடமையாகும். எந்த உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அந்த இலட்சிய நோக்கின் கொள்கைகளை வரையறை செய்தல் வேண்டும். அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய பாதுகாக்குந் தன்மை கொண்ட சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். கொள்கைகளை நிறைவேற்றிச் செயற்படுத்த அமைப்புக்கள் தேவை. எனவே இலட்சியத்தை அடையக் கொள்கைகள், சட்டங்கள் அமைப்புக்கள் என்பன முக்கிய உறுப்புக்களாக அமைந்திருப்பனவாகும்.

இலட்சியம், நோக்கு என்பன ஒரு மரத்தின் மூலவேர் போன்றவை. கொள்கைகள், சட்டங்கள், அமைப்புக்கள் மரத்தின் வெளித்தோற்றங்கள். வெளித்தோற்றங்கள் காலத்திற்குந் தேவைக்குமேற்ப மாற்றங்கள் அடையுந் தன்மை கொண்டவை. ஆனால் இம் மாற்றங்கள் மூலவேரைத் தாக்கும் வண்ணம் நிகழின் மரமே அழிந்து விடும். மாற்றங்கள் செய்யும்போது மூலவேரைத் தாக்காது மிக்க அவதானத்துடன் செய்தல் வேண்டும். இலட்சியம் அல்லது நோக்கை மையமாகக் கொண்டே கொள்கைகள் உருவாக்கப்படல் வேண்டும். இலட்சியத்தைச் செயலுருவாக்கும்போது கொள்கைகள் இலட்சியத்தின் மூலத்தன்மை கெடாது சிறு மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத செயலாக அமைந்துவிடுகின்றது.

இலட்சியத்தை அடைவதற்குரிய கொள்கைகளை வகுப்பதிலும் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு. இலட்சியத்தை அல்லது நோக்கைத் தமது விருப்பு வெறுப்புக்கேற்ப வளைக்க முயல்பவர்களும் இருப்பார்கள். இக்காரணங்களால் கொள்கைகளில் கருத்து முரண்பாடுகள் தோன்றுவதுண்டு. கூட்டுறவுக் கொள்கைகளிலும் இவ்வித வேறுபாடுடையவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கலாம். அவையாவன:

1. கூட்டுறவுப் பொதுநலவாயக் குழாம்.
இவர்கள் கடும் மரபுவாதிகள், கண்டிப்பான கோட்பாட்டுப் பற்றுடையவர்களாகவும் உயர்ந்த இலட்சியவாதிகளாகவும் விளங்குகின்றனர். மனித சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் கூட்டுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க முடியும். அதனால் மனித சமுதாயம் பெருமளவு நன்மையடையும். கூட்டுறவு இயக்கமும் வளர்ச்சியடையும் என நம்புகிறார்கள். இவ்வித கருத்தையே றொபேட் ஓவனும் கொண்டிருந்தார். இவ்வித குழுவினரை கற்பனாவாதிகள் என்றும், பழமைப் பற்றுடையவர்கள் என்றும் நடைமுறைச் சாத்தயமற்ற கருத்துக்களை அதிகமாகக் கொண்டவர்கள் என்றும் வியாக்கியானம் செய்தார்கள் சிலர்.

2. திருந்திய முதலாளித்துவ கருத்துக் குழாம்
கூட்டுறவுச் சங்கங்கள் முதலாளித்துவத்தின் மிகைப்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டுச் சில நடவடிக்கைகளை எடுக்கும் இயக்கங்கள். சொந்த ஆதாயம் கட்டுக்கடங்காமல் செல்வதைத் தடுப்பதற்குக் கூட்டுறவு ஒரு ஆளுநர் போலக் கடமையாற்றுகிறது. கூட்டுறவு, முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு அளவுகோல். தனியார்துறையும் கூட்டுறவுத் துறையும் இலாபநோக்கத்தையே மையமாகக் கொண்டு செயலாற்றுகின்றன. “றொச்டேல் முன்னோடிகள்” இலாபத்தை அகற்றும் நோக்கமுடையவர்களல்லர் என்றும் எல்லோருக்கும் சந்தர்ப்பம் அளிப்பதே அவர்கள் நோக்கு என்றும் கூறுபவர்கள். இக்கருத்தினர் கூட்டுறவின் சேவைத் தன்மையைப் புறக்கணித்து விட்டனர். இலாபத்தையே தனிநோக்காகக் கொண்ட வணிக முயற்சிகளுக்கும், சேவையை நோக்கமாகக் கொண்ட வணிக முயற்சிகளுக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகளை இவர்கள் உணரத் தவறிவிட்டனர். அமெரிக்காவிலுள்ள பெரிய விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களும் கனடாவிலுள்ள சில கூட்டுறவுச் சங்கங்களும் இக்கருத்துக் குழாத்தைச் சேர்ந்தன.

3. சமூகவுடமை தழுவிய கருத்துக் குழாம்.
முதலாளித்துவ சக்திகளை ஒழிப்பதற்கு அரசுக்கு உறுதுணையாக இருப்பதே கூட்டுறவு இயக்கம். பொதுவுடமைப் பொருளாதார அமைப்பின் ஒரு கூறே கூட்டுறவு. பேரளவுத் தன்மை கொண்ட வணிக அமைப்புக்கள அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளும் சிற்றளவுத் தன்மை கொண்ட வணிக அமைப்புக்கள் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருத்தல் வேண்டுமென்ற கருத்துடையவர்கள். பொதுத்துறையின் நண்பனாகக் கூட்டுறவை இவர்கள் கருதுகின்றனர். இரண்டாவது கருத்துக் குழுவினர் முதலாளித்துவத்தின் நண்பனாகக் கூட்டுறவைக் கருதுகின்றனர். சமூகவுடமை நாடுகளிலும் வளர்ச்சியுறும் நாடுகள் சிலவற்றிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் சமூகவுடமை தழுவிய கருத்துக் குழாத்தைக் சேர்ந்தவையாகும்.

4. தனிக்கூட்டுறவுக் கருத்துக் குழாம்.
கூட்டுறவு முதலாளித்துவத்திலிருந்தும் சமூகவுடமையிலிருந்தும் வேறுபட்டது. இவ்விரு கோட்பாடுகளுக்கும் நடுவழியாக அது அமைந்திருக்கின்றது. அதனால் இரு கோட்பாடுகளையும் உடையவர்கள் அது தமது பாதையெனக் கூறிக்கொள்ள முனைகின்றனர். இவை தூய முதலாளித்துவ அமைப்பைச் சார்ந்தவையுமல்ல. தூய பொதுவுடமையைச் சார்ந்தவையுமல்ல. இவை இரண்டிலுமிருந்தும் வேறுபட்ட, கூட்டுறவுக்கே உரித்தான தனிக்கோட்பாடுகள் உண்டு. அதற்கென அமைந்த அறநெறிகளும் உண்டு. பொருளாதாரக் கூறுகளும் சமூகக் கூறுகளும் கூட்டுறவுக் கோட்பாட்டில் அடங்கியுள்ளன. சமூக, கல்வி சார்ந்த நோக்கங்களும் உண்டு. திட்டவட்டமான வணிகக் கொள்கைகள் உண்டு. அறஞ் சார்ந்த வியாபாரத் திறனையும், சீர்திருந்திய உளப்பாங்கையும் இணைக்க முயலும் புனித நோக்கே கூட்டுறவு எனலாம்.

கலாநிதி வொக்வே, கலாநிதி கோடி போன்றவர்கள் இக்கருத்துக் குழாத்தைச் சேர்ந்த சிறந்த சிந்தனையாளர்கள். வணிகக் கொள்கையைப் பொறுத்தவரை இவர்களின் சிந்தனைகள் யதார்த்தமானவை. நடைமுறைப்படுத்தக் கூடியவை. சமத்துவமும் சமூக நீதியும் நிறைந்த சமுதாய அமைப்பு என்னும் சிந்தனை ஒரு கற்பனாவாதமாகும். இத்தகைய சமுதாய அமைப்பைக் கூட்டாக உழைக்கும் மனிதர்களின் தன்னம்பிக்கை மூலமே உருவாக்கலாம் எனக் கருதுகின்றனர். இந்தப் புனிதமான உயர் இலட்சியம் விண்மீனை நோக்கிச் செல்லும் பாதை என விமர்சனஞ் செய்யப்பட்டாலும் மனித சக்தியால் முடியாத செயல் என்று ஒதுக்கிவிட வேண்டியதுமன்று.

இக்கருத்துணர்வின் வேறுபாடு காரணமாகவோ அல்லது சங்கச் செயற்பாடுகளின் புறத்தோற்றத்தைத் தவறாக மதிப்பீடு செய்த காரணத்தாலோ அல்லது வேறு நிகழ்வுகளினாலோ கூட்டுறவு நிறுவனங்களைப் பற்றி மக்களிடம் மூவகைக் கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று கூட்டுறவு நிறுவனங்கள் அரசாங்க நிறுவனங்கள் என்பது அரசின் அதிகபட்சத் தலையீடே@ இக்கருத்து மக்களிடம் உருவாதலுக்கு முக்கிய காரணம்@ முகாமைக்குழு நியமனம், நிருவாகத் தலையீடு, நிருவாகக் கட்டுப்பாடு போன்ற அரசின் தலையீட்டு அம்சங்கள் பொதுமக்களிடம் இக்கருத்தை ஏற்படுத்த உதவியாக இருந்தன. இக்கருத்து பொது மக்களுக்கும் கூட்டுறவு இயக்கத்துக்குமுள்ள தொடர்புகள் நல்லமுறையில் அமைவதற்குப் பாதகமாவுள்ளன.

இரண்டாவது கருத்து, கூட்டுறவு நிறுவனங்கள் பொது நிறுவனங்கள் என்பதாகும். இக்கருத்து கூட்டுறவு நிறுவனங்களின் செயற்பாடுகளின் பகிரங்கத் தன்மையாலும் பரந்த சேவைத் தன்மையாலும், சமுதாய நலத்திற்கும் பொது நலத்திற்கும் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்தமையாலும் ஏற்பட்டவை. கூட்டுறவு நிறுவனங்கள் தமது சுய விருப்பத்தின் பேரில் அளிக்கின்ற சேவைகளைப் பெறவும், சமுதாய நலப்பணிகளின் பயன்களை அனுபவிக்கவும் உறுப்பினரல்லாத பொதுமக்களுக்கு உரிமையுண்டு. ஆனால் கட்டுப்படுத்தும் அதிகாரம் உறுப்பினரல்லாத பொதுமக்களுக்குக் கிடையாது. இவ்விரு கருத்துக்களும் கூட்டுறவு நிறுவனம் பற்றிய போலிக் கருத்துக்களாகும்.

மூன்றாவது கருத்து கூட்டுறவு நிறுவனங்கள் உறுப்பினர்களது நிறுவனங்கள், என்பதாகும். இதுவே கூட்டுறவின் உண்மைக் கருத்தாகும். இக்கருத்தைப் பொது மக்களில் மிகச் சிலரே ஏற்றுக்கொள்வர். இக் கருத்தை ஏற்றுக்கொள்ளத் தடையாக அவர்கள் மனத்தைக் குழப்பும் பல செயல்களும் புறத்தோற்றங்களும் கூட்டுறவு இயக்கத்தில் ஏற்பட்டன. எனவே உண்மையான கூட்டுறவைப் பற்றிய தெளிவு எமக்கு ஏற்பட வேண்டுமானால் அதன் கொள்கைகள், சட்டங்கள், அமைப்புக்கள், வரலாறு போன்ற பல அம்சங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.


2. கூட்டுறவுக் கொள்கைகள்
(தத்துவங்கள்)
றொபேர்ட் ஒவன், டாக்டர் வில்லியம்கிங் போன்ற தன்னலமற்ற உயர் இலட்சியவாதிகளின் சிந்தனைகளைப்பின்பற்றி 1844ஆம் ஆண்டு றொச்டேல் நகரிலுள்ள தொழிலாளர்கள் ஒரு நுகர்வோர் கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பித்தனர். இவர்களை றொச்டேல் சமத்துவ முன்னோடிகள் என அழைத்தனர். கூட்டுறவுக் கொள்கைகளை இவர்களே முதன்முதலில் வகுத்தனர். 155 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கொள்கைகள் இன்றும் கூட்டுறவு இயக்கத்துக்கு உதவுந்தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. நுகர்ச்சிச் சங்கத்திற்காக அமைக்கப்பட்டனவாயினும் ஏனைய வகைச் சங்கங்களின் தேவைகளுக்கும் பொருந்துபவையாகவே பல கொள்கைகள் உள்ளன. காலங்களதும் தேவைகளதும் மாற்றங்களுக்கு ஏற்கச் சிறு மாற்றங்களுடன் அவை தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

றொச்டேல் சமத்துவ முன்னோடிகளின் கூட்டுறவுக் கொள்கைகள் எட்டு
1. பொதுவான தடையற்ற அங்கத்துவம்.

2. ஜனநாயக முறையில் அமைந்த நிருவாகமும் கட்டுப்பாடும்.

3. சந்தை விலைக்கே பண்டங்களையும் சேவைகளையும் விற்பனை செய்தல்.

4. உடன் பணத்துக்கே விற்பனை செய்தல்.

5. மூலதனத்துக்கு மட்டான வட்டி வழங்குதல்.

6. இலாபத்தில் அங்கத்தவர்களின் ஆதரவுக்கேற்பத் தள்ளுபடி வழங்குதல்.

7. அங்கத்தவர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்.

8. அரசியல் சமய விடயங்களில் கோஷ்டி சேராது கண்டிப்பான நடுநிலைமையைப் பின்பற்றல்.

நுகர்வோர் கூட்டுறவுச் சங்கமாக இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு இயக்கம் பின் விரிவடையத் தொடங்கியது. ஜேர்மனியில் கடனுதவு சங்கங்களாக உருவெடுத்தன. வேறு நாடுகளிலும் வௌ;வேறு தேவைகளை நிறைவேற்றும் முகமாகக் கூட்டுறவுச் சங்கங்கள் தோன்றின. கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சியின் சின்னமாக 1895ம் ஆண்டு அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனம் உருவாகியது. பல்வேறு நாடுகளிலுமுள்ள தேசிய மட்டக் கூட்டுறவு நிறுவனங்களின் இணைப்பாக இது திகழ்ந்தது. இதன்முன் பாரிய பொறுப்பும் இருந்தது. உலக ரீதியாகக் கூட்டுறவு இயக்கங்களிடையே ஒரு பொதுத் தன்மையைப் பேணவும் அவற்றின் அரசியல் பொருளாதார சமூக கலாச்சார பின்னணிகளுக்கேற்ப ஒவ்வொன்றினதும் தனித்தன்மையைப் பேணவும், வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனத்திற்கு இருந்தது. கூட்டுறவு இயக்கங்களின் பொதுத்தன்மை சிறப்புத் தன்மை என்பவற்றைப் பேணும் வகையில் ஒரு கொள்கைத் திட்டத்தை வகுப்பதற்காக 1934ஆம் ஆண்டு கொள்கை நிர்ணயத் துணைக்குழு ஒன்றை நியமித்தனர். இக்குழு கொள்கைகளை இரு பகுதிகளாகப் பிரித்தது. ஒன்று தேவையான (அடிப்படைக்) கொள்கைகள் மற்றது விருப்பத் தேர்வுக்குரிய கொள்கைகள். இக்கொள்கைகள் 1937ம் ஆண்டு அனைத்துலகக் கூட்டுறவு நிறுவனத்தாற் பிரகடனப்படுத்தப்பட்டன.

1. தேவையான (அடிப்படைக்) கொள்கைகள்
1. எல்லோருக்கும் தடையற்ற அங்கத்துவ அனுமதி
2. குடியாட்சி முறையிலமைந்த நிருவாகம்
3. மூலதனத்துக்கு மட்டான வட்டி
4. அங்கத்தவர்களின் ஆதரவுக்கேற்ப இலாபத்தில் தள்ளுபடி வழங்கல்.

2. விருப்பத் தேர்வுக்குரிய கொள்கைகள்
1. கூட்டுறவுக் கல்விக்கு வசதியளித்தல்
2. அரசியல் சமயச் சார்பின்மை.
3. உடன்பண விற்பனை.

இரண்டாவது மகாயுத்தத்துக்கு முன் வெளியிடப்பட்ட கொள்கைகளே இவை. இரண்டாவது மகாயுத்தத்தினால் உலகிற் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பலநாடுகள் சுதந்திரமடைந்தமை, உற்பத்தி விநியோகமுறை மாற்றங்கள், பொருளாதார அமைப்பு மாற்றங்கள், புதுத் தேவைகளின் பெருக்கம், வருமான உயர்வு போன்றவை முக்கிய மாற்றங்களாகும். பொருளாதார சமூக, கலாசார மாற்றங்கள் கூட்டுறவு அமைப்பிலும் தேவைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தின. இம்மாற்றங்கள் கூட்டுறவாளர்களைச் சிந்திக்கத் தூண்டின. 1963ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள போர்ணி மவுத் என்னும் நகரிற் கூடிய அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவன மகா நாட்டிற் பழைய கூட்டுறவுக் கொள்கைகள் தற்போதைய கூட்டுறவின் போக்குக்கு ஏற்றவையல்ல என்றும், அது மறுசீரமைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இத் தீர்மானத்திற்கிணங்க 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் னு.ரு. கார்வே தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவுக் கொள்கைகள் வரையுறு குழு அனைத்துலகக் கூட்டுறவு நிறுவனத்தால் நியமிக்கப்பட்டது. இக்குழு றொச்டேல் சமத்துவ முன்னணியின் கொள்கைகள், 1937ஆம் ஆண்டு அனைத்துலக கூட்டுறவு இணைப்பு நிறுவனம் பிரகடனஞ் செய்த கொள்கைகள் என்பவற்றை விரிவாக ஆராய்ந்து தேவையானவை விருப்புத் தேர்வுக்குரியவை என்ற பாகுபாட்டை நீக்கி, எவ்வளவு திட்டவட்டமாக அமைக்கமுடியுமோ அவ்வளவு திட்டவட்டமாகவும் வரையறையாகவும் கொள்கைகளை வரையறுத்து அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனத்திடம் கொடுத்தது. 1966ஆம் ஆண்டு அனைத்துலகக் கூட்டுறவு மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு ஆராய்ந்து தீர்மானிக்கப்பட்ட பின் பிரகடனப்படுத்தப்பட்டது.

1966ஆம் ஆண்டு அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனம்
பிரகடனப்படுத்திய ஆறு கொள்கைகள்.
1. தன்விருப்பார்ந்த தடையற்ற (திறந்த) உறுப்புரிமை.
2. ஜனநாயக முறையில் அமைந்த கட்டுப்பாடும் நிருவாகமும்.
3. மூலதனத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட வட்டிவீதம்.
4. இலாபம் (மேலதிகம்) அங்கத்தவரிடையே சமத்துவமாகப் பகிரப்படல்.
5. கூட்டுறவுக் கல்வி.
6. கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே ஒத்துழைப்பு.

இந்த ஆறு கொள்கைகளும் சிறந்த சிந்தனையாளர்களால் ஆராயப்பட்டு வகுக்கப்பட்டுக், கூட்டுறவில் நிறைந்த அறிவு, அனுபவம் நிறைந்தவர்கள் மத்தியிற் சமர்ப்பிக்கப்பட்டு விவாதித்துத் தீர்மானிக்கப்பட்டவை. கூட்டுறவு இயக்கத்தில் உரிமை கொண்டாடும் சகல சங்கங்களும் இந்த ஆறு கொள்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். முதல் இரண்டு கொள்கைகளும் கூட்டுறவு இயக்கத்தின் ஒழுங்கமைப்பையும்@ மூன்றாம் நான்காம் கொள்கைகள் தொழில் முயற்சியின் மேலதிக விளைவுகளைப் பயன்படுத்தலையும், இறுதி இரு கொள்கைகளும் இயக்கம் தொடர்ந்து விருத்தியுறுவதற்குரிய வழிகளையும் கொண்டவையாகும். இந்த ஆறு கொள்கைகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பிரிக்க முடியாதவாறு ஒழுங்கமைப்புப் பெற்றுள்ளன. ஒன்றையொன்று தழுவி நிற்பதோடு ஒன்றையொன்று வலியுறுத்துந் தன்மை கொண்டவை.

கூட்டுறவு இயக்கம் தனிமனித வாதத்திற்கெதிராகத் தோன்றியது. ஆனால் தனிமனித முயற்சியை நசுக்காது செம்மையான வழியில் செல்வதை ஊக்குவிக்கின்றது. முழுச் சமுதாயத்தின் நலன்களையும் தழுவி நிற்பதே கூட்டுறவு. அதன் மூலவேர் ஒருவருக்கொருவர் உதவியுந் தன்னுதவியுமேயாகும். இவற்றைக் கருத்திற் கொண்டே கூட்டுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

1. தன்விருப்பார்ந்த தடையற்ற (திறந்த) உறுப்புரிமை
உறுப்புரிமைக் கொள்கையை அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவன விதிகள் பின்வருமாறு வரையறுக்கின்றன.

கூட்டுறவுச் சங்கத்தில் தாமாகச் சேரவிரும்பி அதன் சேவைகளாற் பயன்பெறக்கூடியவர்களும், உறுப்புரிமையின் பொறுப்புக்களை ஏற்கத் தயாராய் இருப்பவதுகளும் செயற்கையான கட்டுபாடுகளின்றிச் சமூக, அரசியல், இனமத பாகுபாடுகளின்றிக் கூட்டுறவுச் சங்க உறுப்புரிமையைப் பெறக் கூடியதாய் இருத்தல் வேண்டும்.”

இக்கொள்கை இரு பகுதிகளைக் கொண்டதாய் அமைந்துள்ளதை அவதானிக்கலாம். அவையாவன:
1. தன் விருப்பார்ந்த சேர்க்கை.
2. திறந்த உறுப்புரிமை.

தன் விருப்பார்ந்த சேர்க்கை:
கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்புரிமை தன் விருப்பார்ந்ததாய் அமைதல் வேண்டும் என்பதன் பொருள் பரந்த முறையில் ஆய்வு செய்யப்படவேண்டியதாகும். ஒரு கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேருபவன் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே சேரவேண்டும். எவ்வித புற நிர்ப்பந்தங்களுமின்றி உறுப்பினராகச் சேருவதால் ஏற்படும் நன்மைகளையும் பொறுப்புக்களையும் நன்றாகச் சிந்தித்துச் சுயவிருப்ப அடிப்படையிலேயே அங்கத்தவனாகச் சேர்தல் வேண்டும். உறுப்பினராகச் சேருபவனுக்குள்ள சுதந்திரத் தன்மைகள் யாவும் கூட்டுறவுச் சங்கத்திற்குமிருத்தல் வேண்டும். உறுப்புரிமையை அங்கீகரிக்குஞ் சங்கமும் ஒருவரை உறுப்பினராக அனுமதிப்பது பற்றித் தன் விருப்பப்படியே முடிவு செய்தல் வேண்டும். உறுப்பினரை அனுமதிப்பதில் புறச்சக்திகளின் தலையீடு இருப்பது விரும்பத்தக்கதல்ல.

தனிப்பட்டவர்களின் சுதந்திரமான இசைவின் அடிப்படையிலேயே கூட்டுறவின் பொதுச் செயற்பாடுகள் தங்கியுள்ளன. கூட்டுறவு இயக்கத்தொழிற்பாடுகள் தனிப்பட்டவர்களின் சுதந்திரமான முயற்சிகளின் இணைப்பிலேயே தங்கியுள்ளன. கூட்டுறவுச் செயற்பாடுகளுக்கும் அதனோடு உறவுள்ள தனிப்பட்டவர்களின் முயற்சிகளுக்கும் சரியான முறையில் உறவுள்ள தனிப்பட்டவர்களின் முயற்சிகளுக்கும் சரியான முறையில் தொடர்புகள் இருந்தால்தான், அல்லது சரியான முறையில் இணைக்கப்பட்டால்தான் கூட்டுறவு இயக்கம் சீராகவும் செம்மையாகவும் இயங்க முடியும்.

கூட்டுறவுச் சங்கத்திற் சேருபவர்கள் எல்லோரும் அதற்கு விசுவாசமாக இருத்தல்வேண்டும். சங்கத்தின் நோக்கை அடைவதற்கு உறுப்பினர்கள் எல்லோரும் விசுவாசமாக உழைத்தல் அவசியம். இந்த விசுவாசத்திலேதான் சங்கத்தின் வெற்றி தங்கியுள்ளது. உறுப்பினர் புற நிர்ப்பந்தமின்றித் தனது சுய விருப்பத்தின் பேரிற் சேர்ந்தால்தான் சங்கத்திற்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்க முடியும். ஏற்கனவே கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்திருப்பவர்கள் விரும்பினால்தான் உறுப்புரிமை கோரும் ஒருவர் உறுப்பினராக முடியும். ஒரு புது உறுப்பினரை அனுமதிப்பது பற்றிய கருத்துக்களை வெளியிட்டுத் தீர்மானம் எடுப்பதில் கலந்துகொள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமையுண்டு. எனவே “புதிய உறுப்பிரை அனுமதித்தல் ஒரு வகைப் பொதுத் தேர்விலே தங்கியுள்ளது” என்று கல்வேர்ட் கூறியுள்ளதையும் நாம் இங்கு கருத்திற் கொள்ளல்வேண்டும்.

பொதுத் தேவையை நிறைவேற்றும் நோக்கோடு ஒன்றுகூடும் மனிதச் சேர்க்கையே ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்களாகும். பொதுத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு ஒவ்வொரு உறுப்பினரும் தம்மால் இயன்ற பங்கைக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அளிக்கவேண்டும். அவ்விதம் தமது பங்கை அளிக்கும் உறுப்பினர்கள் இயங்கும் (உழைக்கும்) உறுப்பினராவர். பொதுத்தேவை நிறைவெய்தி அல்லது பொதுத்தேவையைப் பெறமுடியாத சூழ்நிலையில் உள்ள உறுப்பினர்கள் பொதுத் தேவையை நிறைவேற்றத் தமது பங்கை அளிக்காமல் இருப்பார்கள். இவர்கள் உறங்கும் (செயற்படா) உறுப்பினர்களாவர். ஒரு உறுப்பினருக்குப் பொதுத் தேவையற்றுச் சங்கத்தில் அக்கறை குன்றும்போது தாமாகவே சங்கத்திலிருந்து விலகுவதற்கு உரிமை வேண்டும். ஒரு உறுப்பினருக்குச் சங்கம் வழங்கக் கூடிய பொதுத்தேவையோ அல்லது அவருக்குச் சங்கத்தில் உண்மையான அக்கறையோ இல்லையென்றால் அல்லது அவரால் சங்கத்தின் நோக்கங்களை அடைவதில் இடையூறுகள் இருக்குமானால் அவரது உறுப்புரிமையை முடிவுறச் செய்வதற்குச் சங்கத்திற்கு உரிமை இருத்தல் வேண்டும்.

குடியாட்சி முறையில் ஒருவரின் உறுப்புரிமையை முடிவுறச் செய்யும் போது அவருட்பட எல்லா உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்துத் தீர்மானம் எடுக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படல்வேண்டும். ஒரு உறுப்பினரின் தகமை பற்றி ஏனைய உறுப்பினர்களுக்குச் சந்தேகம் ஏற்படும்போது பொதுச் சபையின் அவர்பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி உறுப்புரிமை முடிவு பற்றிய தீர்மானம் எடுக்கச் சந்தர்ப்பமிருத்தல் வேண்டும்.

இத்தகைய ஏற்பாடுகள் இருந்தாற்றான் “ஒருவன் எல்லோருக்காகவும் எல்லோரும் ஒருவருக்காகவும் உழைத்தல்” என்ற கோட்பாடு உண்மையாகச் செயற்பட முடியும் என்று கல்வேட் கூறியுள்ளார். தாம் யார் யாருடன் சேரவேண்டும் என்று தீர்மானிப்பதற்கும் அத் தீர்மானத்தை சந்தர்ப்ப சூழ்நிலைத் தேவைகளையொட்டி மாற்றியமைப்பதற்கும் இரு சாராருக்கும் (சங்கத்திற்கும் உறுப்பினருக்கும்) சுதந்திரமான செயற்பாட்டு உரிமை வேண்டும். சுய விருப்பச் சேர்க்கை தனி மனிதர்களின் சுயாட்சி உரிமையில் தங்கியுள்ளது. ஏனெனில் பொறுப்பு வாய்ந்த சுதந்திரமான மனிதர்கள் தமது சுயாட்சி உரிமையின் பேரில் ஒன்று சேர்கின்றனர் என்ற கருதுகோளிலே தான் ஒரு கூட்டுறவு நிறுவனஞ் செயற்படுகின்றது. சுயவிருப்புச் சேர்க்கை என்ற கொள்கையின்படி ஒருவர் சுயவிருப்போடு சுயாதீனத்துடன் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து சுயவிருப்பப்படியே உறுப்பினராகத் தொடர்ந்துமிருப்பார் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். உறுப்பினரின் சுயாட்சித் தன்மையை உரிமையும் எந்த நேரத்திலும் பங்கப்படாதிருக்கின்றது. சுயாட்சித் தன்மையை ஓரளவு கட்டுப்படுத்தும் சங்கத்தின் கட்டுப்பாடுகள் உறுப்பினரால் தனது நலன் கருதீயும், ஏனைய உறுப்பினர்களின் நலன் கருதியும் பிறர் நிர்ப்பந்தமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இக் கட்டுப்பாடுகளை விமர்சிக்கவோ அவற்றை மாற்றியமைக்கவோ ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கவோ ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமையுண்டு. சங்கத்தி; ஒழுங்கும், செம்மையும், திறந்த நிருவாகத்திற்கும், செயற்பாடுகளுக்கும், இவற்றால் ஏற்படும் விளைவுகளுக்கும் தமக்கும் பங்குண்டு என்ற பொறுப்புணர்வும் சுயவிருப்புச் சேர்க்கை என்ற கொள்கையின் பாற்படும்.

சங்கம் சுதந்திரமாகவும் சுயேச்சையாகவும் இயற்குந் தன்மை கொண்டது என்பதிலும் சுயவிருப்புச் சேர்க்கை என்ற எண்ணக்கரு கலந்துள்ளது. உறுப்பினர்களை அனுமதிப்பதிலும் நீக்குவதிலும் சங்கம் தன் விருப்த்திற்கேற்ப இயங்க முடியும். வெளிச் சக்திகள் (அரசாங்க அதிகாரிகள்) இதில் தலையிடுதல் கூட்டுறவுத் தத்துவத்திற்கு முரணானது. சங்கத்தை உறுப்பினர்களே ஜனநாயக அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றனர். ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் யாவும் சுயவிருப்புச் சேர்க்கை என்னும் கோட்பாட்டுக்கு முரணானவையல்ல.

கூட்டுறவு அம்சங்களையும் தத்துவங்களையும் விரும்பித் தமது பொருளாதார நலன் கருதி ஒருவர் உறுப்பினராகச் சேருவது அவரது சுயவிருப்பத்தில் தங்கியுள்ள போதிலும் இச் சுதந்திரம் பரம்பற்ற தொன்றல்ல என்பதனை அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனத்தின் கொள்கை வரையறைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இன்றியமையாத சில காரணங்களால் இச் சுதந்திரம் ஓரளவு மட்டுப்படுத்தப்படலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள விளைபொருள் உற்பத்தியாளர்களில் 75 சதவீதத்தினராவது கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருப்பின் அல்லது கூட்டுறவுச் சங்கத்தினூடாக விளைபொருள்களை விற்பனை செய்யின் அப்பகுதியில் விளைவிக்கப்படும் விளைபொருள் முழுவதும் கூட்டுறவுச் சங்கத்தினூடாகவே விற்பனை செய்யப்படல் வேண்டுமென அரசாங்கம் நிர்ப்பந்திக்கலாம். சங்கத்திலே உறுப்பினர்களாகச் சேராத உறுப்பினர்களைப் பயன்படுத்தி எதிர்ச் சக்திகள் பெரும்பாலான உற்பத்தியாளர்களின் முன்னேற்ற முயற்சிகளுக்குத்தடை செய்யாது பாதுகாப்பதே இந் நிர்ப்பந்தத்தின் நோக்காக இருத்தல் வேண்டும்.

இலாபப் போட்டிக்கும், ஆதிக்க வெறிக்கும் பதிலாக முழுச் சமுதாயத்தினதும் நலன் கருதி ஒழுங்கமைப்புக் கொண்ட செம்மையான சேவை செய்வதே கூட்டுறவின் நோக்காகும். இந்நோக்கே ஒரு நல்ல அரசாங்கத்திற்குமுண்டு. சமூக நலன் கருதிக் கூட்டுறவு இயக்கத்தை முழுமையாக நம்பி அரசு இவ்வித நிர்ப்பந்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இவ்விதநிலை அரசுக்குத் தவிர்க்க முடியாததாக அமையலாம். இந்த அதிகாரங்கள் துஷ்பிரயோகஞ் செய்ப்படாமல் இருப்பதைக் கண்காணிக்கக் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல்வேண்டும். பொருத்தமற்ற சந்தர்ப்பங்களில் இவ்வதிகாரம் பாவிக்கப்பட்டாலும் அதிகாரம் துஷ்பிரயோகஞ் செய்யப்பட்டாலும் அரசுக்கும் கூட்டுறவு இயக்கத்திற்கும் மாசு ஏற்பட்டு விடும்.


தடையற்ற (திறந்த) உறுப்புரிமை:
உறுப்புரிமை கோரிய எல்லோருக்கும் ஒரு கூட்டுறவுச் சங்கம் உறுப்புரிமை வழங்க வேண்டும் என்பதே தடையற்ற (திறந்த) உறுப்புரிமையின் பொருள் எனப் பிழையான கருத்துப் பொதுவாகப் பரப்பப்பட்டுள்ளது. “பொதுத் தேவைகளிலிருந்து அத்தேவைகளைச் சங்கத்தின் சேவைகளாற் பூர்த்தி செய்யக் கூடீய நிலையிலிருப்பவர்கள் உறுப்புரிமையின் பொறுப்புக்களை ஏற்கத்தயாராயிருப்பின், செயற்கையான கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, சமூக, அரசியல், இன மத பேதங்களின்றிக் கூட்டுறவுச் சங்க உறுப்புரிமையைப் பெறக் கூடியதாயிருத்தல் வேண்டும்.” இதுவே அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனத்தின் கொள்கை வரையறைக்குழுவின் கருத்தாகும். பொதுத்தேவை இல்லாதவர்களும், சங்கத்தின் சேவைகளைப் பயன்படுத்த முடியாதவர்களும் சங்கத்திற் பங்குகளைப் பெறத்தயாராகவிருப்பினும் அவர்களைச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்க முடியாது என்பதையும் கொள்கை வரையறைக்குழு தெரிவித்துள்ளது.

தடையற்ற (திறந்த) உறுப்புரிமையின் எண்ணக் கருக்கள் மூன்று பகுதியைக் கொண்டவையாகும். அவையாவன:
1. உறுப்பினர்களை அனுமதிப்பதிற் செயற்கைக் கட்டுப்பாடுகள் எதுவுமிருத்தல் கூடாது.

2. உறுப்பினர்களாகச் சேரவிரும்புகிறவர்களுக்கெதிராக எவ்வித சமூக, அரசியல், இன, மத பாகுபாடுகளும் இருத்தலாகாது.

3. சங்கத்தின் சேவைகள் தேவைப்பட்டு அவற்றைப் பயன்படுத்தக் கூடியவர்கள் உறுப்புரிமையின் பொறுப்புக்களை ஏற்கத் தயாராயிருப்பின் அவர்களுக்கு உறுப்புரிமை கிடைக்கக்கூடியதாயிருத்தல் வேண்டும்.

செயற்கைக் கட்டுப்பாடுகள் என்பது நடைமுறைத் தேவைகள் எதுவுமின்றி உறுப்பினர்களின் தொகையை வரையறுத்தலைக் குறிக்கும் தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களின் உறுப்பினர் தொகையை மட்டுப்படுத்த வேண்டியநிலை ஏற்படும் என்பதையும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இவ்விதநிலை நடைமுறைத் தேவையின் பொருட்டு ஏற்படுவதாகும். உதாரணமாகத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஒன்று தனக்குக் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புக்களைப் பொறுத்து அங்கத்தவர் தொகையை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதேபோன்று வீடமைப்புச் சங்கம் ஒன்று அதற்குச் சொந்தமான காணியின் அளவுக்கேற்ப அங்கத்தவர்கள் தொகையை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இவை நடைமுறைத் தேவை அவசியத்தின் பொருட்டு மட்டுப்படுத்தப்படுவதை எவருங் குறை கூறமுடியாது.

கூட்டுறவுச் சங்கம் என்பது மனிதச் சேர்க்கை. அதனால் அங்கு சமூக, அரசியல், இன, மத வேறுபாடுகள் இருக்கக்கூடாது. இவ் வேறுபாடுகளைக்கடந்து “மனிதத்துவம்” நிலவுமிடமே கூட்டுறவாகும். கூட்டுறவு இய்கம் என்பது நடுநிலைக்களம். பல்வேறு சமூக, அரசியல், இன, மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மாறுபட்ட பல்வேறு கருத்துடையவர்களுக்கும் பொதுவான பல்வேறு பொருளாதாரத் தேவைகள் உண்டு. அப்பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு மாறுபட்டவர்கள் ஒன்று கூடிச் சமூக கலாச்சாரத் தொடர்புகளிலும் ஒன்றுபட முடியும் என்பதை நிரூபிப்பதே கூட்டுறவாகும்.

கூட்டுறவுச் சங்க உறுப்புரிமை பெறுபவர்களுக்கு வேண்டிய தகைமைகள் இரண்டு. அவை.

1. பொதுத் தேவை இருத்தல்.

2. சங்கச் சேவைகளைப் பயன்படுத்தல்.

பொதுத்தேவையும் இருந்து, அத்தேவையைச் சங்கத்தின் சேவையைக் கொண்டு பூர்த்தி செய்யக் கூடியவர்கள் சங்கத்தில் உறுப்புரிமை பெறலாம். பொதுத்தேவை இருப்பினும் அவர் ஏனைய கூட்டுறவு நோக்கங்களுக்குத் தடையாக அல்லது எதிரித் தன்மையுடையவரா என்பதும் சிந்திக்கற்காலது. ஒரு சில்லறை வியாபாரிக்குக் கடன் பெறும் பொதுத்தேவை இருக்கும். நுகர்ச்சிப் பொருள்களைப் பெறும் பொதுத் தேவைக் கூட்டுறவுக்கு எதிரானவராக இருப்பார். ஒரு நோக்குக் கூட்டுறவுச் சங்கமாயின் பிரச்சினைகள் தோன்றா. பல நோக்குச் சங்கங்களில் இவ்வித நிலையில் உள்ளவர்களின் அங்கத்துவம் பிரச்சினைக்குரியதாகும்.

பொதுத் தேவைகளிலிருந்தும் சங்கத்தின் சேவையைப் பயன்படுத்தக் கூடியவரையே உறுப்பினராக அனுமதிக்கலாம். பொதுத்தேவை இருந்தும் அவரால் சங்கத்தின் சேவையைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கலாம். அல்லது சங்கம் அவ்வுறுப்புரிமை கோரியவருக்குச் சேவையை அளிக்க முடியாத சூழ்நிலை இருக்கலாம். எவ்வித சூழ்நிலையில் சேவையைப் பயன்படுத்த முடியாதுவிடினும் உறுப்புரிமை அனுமதி மறுக்கப்படலாம்.

பொதுத் தேவையே உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் சங்கிலி. சங்கத்தின் குறிக்கோள் பொது நலனை அடைதலாகும். பொதுத் தேவை இருந்துபொது ஒப்பந்தத்திற்கமைய விரும்பும் எல்லோரையும் பொதுவாகக் கூட்டுறவுச் சங்கம் உறுப்பினராக அனுமதிக்கத் தயாராக இருத்தல் வேண்டும். போட்டிக்குப் பதிலாக ஒற்றுமை நிலவ வேண்டுமென்பதே கூட்டுறவாளர்களைக் கவர்ந்திழுக்கும் எண்ணக் கருவாகும். உதவியை நாடிவரும் புதியவர்களைக் கூட்டுறவாளர்கள் எப்போதும் மனமகிழ்வுடன் வரவேற்பர். ஜனநாயக மரபு முறை நிருவாகமும் கட்டுப்பாடும் நிலவுவதற்குத் தடையற்ற அங்கத்துவம் செம்மையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். திறந்த உறுப்புரிமை என்ற கொள்கை சீரான முறையில் செம்மையுறக் கடைப்பிடிக்கப் படின் தகமையுடையவர்களே உறுப்பினராக முடியும்.

தடையற்ற அங்கத்துவம் என்ற கோட்பாட்டின் திறந்த வாயில் வழியாகக் கூட்டுறவுச் சங்கத்திற்குள் எல்லோரும் நுழைய வாய்ப்புண்டு. பொதுத் தேவையற்றவர்களும், சேவையைப் பெற விரும்பாதவர்களும், சேவையைப் பெற முடியாதவர்களும், ஏன்! கூட்டுறவின் எதிரிகளும் இந்தத் திறந்த வாயிலை நன்கு பயன்படுத்தி உள்ளே நுழைந்து கூட்டுறவின் நோக்கை அடையவிடாது முட்டுக்கட்டை போடுவார்கள். புதிய உறுப்பினர்கள் நுழையும் போதும், நுழைந்த பின் அவர்களின் செயற்பாடுகளையும் பழைய உறுப்பினர்கள் நன்கு கண்காணித்தல்வேண்டும். எந்த நிலையில் அவர்கள் கூட்டுறவுக் கொள்கைக்கு முரண்பாடாகக் காணப்படுவாரோ அந்த நிலையில் அனுமதி மறுக்கப்படுவதையோ, அங்கத்துவத்தில் இருந்து விலக்கப்படுவதையோ உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் மேற்கொள்ள வேண்டும்.

கூட்டுறவுச் சங்கத்தில் அரசு உறுப்பினராக இருக்கலாமா என்னும் கருத்து ஆராயப்படவேண்டியது. ஆரம்பச் சங்கங்கள் தனிமனித சேர்க்கை. இரண்டாம் மூன்றாம் மட்ட சங்கங்கள் சங்கங்களின் சேர்க்கை. ஒரு கூட்டுறவுச் சங்கம் நன்கு இயங்கும் பொருட்டு அரசு அதில் பங்குகளைக் கொள்முதல் செய்யலாம் என்ற கருத்தை சிலர் கூறுவர். பங்குகளைக் கொள்வனது செய்வதன் மூலம் அரசு அதன் உறுப்பினராகி விடும். உறுப்பினர்களின் பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூட்டுறவுச் சங்கம் வழங்கும் சேவைகள் அரசுக்கும் தேவையில்லை. அரசு ஒரு தனி மனித ஆளுமை இல்லாத காரணத்தால் ஆரம்பக் கூட்டுறவுச் சங்கம் வழங்கும் சேவைகளை நேரடியாக நுகர முடியாது. அரசுக்கு பங்குகளை விற்கும் செயல் கொள்கைக்கு முரணான செயலாகும்.

அரசு ஒரு கூட்டுறவுச் சங்கத்தில் பங்குகளைக் கொள்முதல் செய்யும் போது அச்சங்கத்தின் உறுப்பினராகி விடுகின்றது. சங்கம் தனது அலுவல்களின் நிருவாகம் குறித்தும், பொதுப்படையான கூட்டுறவுக் கொள்கைகளின் செயற்பாடுகள் குறித்தும் எடுக்குந் தீர்மானங்களுக்கு அரசு கட்டுப்படல் வேண்டும். சங்க உறுப்பினர் என்ற முறையில் சங்கம் எடுத்த முடிபுகளை அரசு மீறக்கூடாது. கோட்பாட்டின் படி அரசின் உறுப்புரிமை கூட்டுறவு விடயங்களில் சங்கத்திற்கு அரசைக் கீழ்ப்படிய வைக்கின்றது. இது அரசின் ஆளுமையைப் பாதிக்கக்கூடிய விடயமாகவுள்ளது.

அரசு கூட்டுறவில் பங்குகளைக் கொள்முதல் செய்வது அரசுக்கும் நல்லதல்ல. கூட்டுறவுக்கும் நல்லதல்ல. இவ்வாறு சங்கங்களின் பங்கைக் கொள்முதல் செய்வதால் கூட்டுறவுக் கொள்கையே மாறுபட்டுவிடும். கூட்டுறவுச் சங்கங்களின் தன்மையும் மாறுபட்டுவிடும். பொதுத்துறை, அல்லது தனியார் துறை நிறுவனங்கள் போலக் காட்சியளிக்கும்.

திறந்த உறுப்புரிமை என்ற கொள்கை செம்மையாகக் கடைப்பிடிக்கப்படின், பகிரங்கத் தன்மையும் தனுதியுடையவர்கள் உறுப்பினராயிருத்தலும் உறுதிப்படுத்தப்படும். குடியாட்சிப் பாங்கான கட்டுப்பாடு என்ற கொள்கை உறுப்பினர்களே எந்த நிலையிலும் தங்கள் நலன்கள் எவை என்பதைத் தீர்மானிக்கக்கூடிய உரிமையுள்ளவர்கள் என்ற வாதத்தில் தங்கியுள்ளது. தகமையற்றவர்களும், கூட்டுறவு எதிரிகளும் உறுப்பினர்களாக அனுமதிக்கப்படின் இந்த வாதத்தின் வலு குறைந்து விடும். ஜனநாயகக் கட்டுப்பாடு என்ற கொள்கை செம்மையாகவும் சீராகவும் செயற்படுவதற்குத் திறந்த உறுப்புரிமையின் சரியான தொழிற்பாடே மூலகாரணமாக அமைதல் வேண்டும்.

2. ஜனநாயக முறையில் அமைந்த நிருவாகமும் கட்டுப்பாடும்
கூட்டுறவுச் சங்கங்கள் குடியாட்சி முறையில் அமைந்தவை. உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்ட முறையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்லது நியமிக்கப்பட்டவர்கள் இச்சங்கங்களின் அலுவல்கள் நிருவகிப்பார்கள். நிருவாகத்திற்கு இவ்வுறுப்பினர்கள் பொறுப்பானவர்கள். ஆரம்பச் சங்க உறுப்பினர்களுக்கு, ஓர் உறுப்பினருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் சமவாக்குரிமை இருப்பதுடன், அவர்களது சங்கங்களைப் பாதிக்கக்கூடிய முடிவுகளிற் கலந்து கொள்வதற்கும் அவர்களுக்குச் சமவுரிமை இருத்தல் வேண்டும். ஆரம்பச் சங்கமல்லாத சங்கங்களில் நிருவாகம் பொருத்தமான குடியாட்சியடிப்படையில் அமையவேண்டும்” என அனைத்துலகக் கூட்டுறவு நிறுவன விதிகள் கூறுகின்றன.

ஜனநாயகக் கட்டுப்பாடு என்னும் எண்ணக் கருவை ஐந்து அம்சங்களாக வகுக்கலாம். அவையாவன:
1. சங்கத்தின் தீர்மானங்களை எடுக்கும் உயர் அதிகாரம் எல்லா உறுப்பினர்களும் கலந்துகொள்ள உரிமையுள்ள பொதுச் சபைக்கே உண்டு.

2. சங்கத்தினைப் பாதிக்கவல்ல முடிவுகளை எடுக்கும்போது ஆரம்ப சங்க உறுப்பினர்கள் எல்லோரும் சம உரிமையுடையவர்கள். ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்குரிமையே உண்டு. உயர்மட்ட சங்க உறுப்பினர்களும் இந்த உரிமையை அனுபவிக்கும் அதே நேரத்தில் வாக்குரிமை விடயத்தில் ஜனநாயகத் தன்மைக்குப் பொருத்தமான வேறு முறைகளும் கையாளப்படலாம்.

3. உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் எடுத்து தீர்மானங்களுக்கு அமைவாகவே முகாமை (நிருவாகம்) சங்கத்தின் அலுவல்களைளும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டும். நிருவகித்தல் வேண்டும்.

4. உறுப்பினர்களுக்கு உடன்பாடான முறையிலேயே முகாம தெரிவுசெய்யப்படல்வேண்டும். அல்லது நியமிக்கப்படல்வேண்டும்.

5. முகாமை உறுப்பினரின் பதிலாட்கள். அதே நேரத்தில் உறுப்பினர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புமுடையவர்கள்.

உறுப்பினர்கள் எல்லோரும் கலந்து கொள்ளக்கூடிய பொதுச் சபைக்கே கூட்டுறவுச் சங்கங்களில் உயர் அதிகாரம் உள்ளது. உறுப்பினர்களின் பொதுத் தேவையைச் சேவைகள் மூலம் நிறைவேற்றுவதே ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் முதல் நோக்கமாகும். அதற்காகவே சங்கத்தாற் பொது முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தேவையும் அதை நிறைவேற்றும் அதிகாரமும் ஒரு இடத்தில் இருந்தே தோன்றுகின்றன. மனிதனே தனது எசமானனாகத் தொடர்ந்திருக்கக்கூட்டுறவு நிறுவனம் அவனது தேவைகளுக்குரிய சேவைகளை அவன் விருப்பப்படி அளிக்கும் சேவகனாகக் கடமையாற்றுகிறது. ஜனநாயகத் தத்துவங்களே கூட்டுறவின் ஜீவநாடி, இக்கருத்து அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவன மகாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசியற் ஜனநாயகத்துக்கும் கூட்டுறவு ஜனநாயகத்திற்குமிடையே மாறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அரசியற் ஜனநாயகத்தில் உள்ள அதிகாரப் பரம்பலின் சிக்கல்கள் கூட்டுறவு ஜனநாயகத்திற் கிடையாது. பெரும்பான்மை உறுப்பினர்களின் சிந்தனைகளைத் தீர்மானமாக்கிச் செயல்படுத்தக் கூட்டுறவு ஜனநாயகம் இலகுவான வழி முறைகளைக் கையாளுகின்றது. சங்கத்தின் குறிக்கோளுக்கும் உறுப்பினர்களின் பொதுத்தேவைக்கும் நேரடித் தொடர்பிருப்பதால் உறுப்பினர்கள் என்றும் விழிப்புடன் இருப்பர். கூட்டுறவு ஜனநாயகத்திலும் கருத்து வேறுபாடுகளுக்கிடமுண்டு. கருத்து வேறுபாடுகளை நன்றாக ஆராய்வதற்கும் விவாதிப்பதற்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் போதிய சந்தர்ப்பமளிக்கப்படும். இந்தக் கருத்து வேறுபாடுகள் குறிக்கோளையடையும் வழிகளைப் பற்றியதாக விருக்குமேயன்றிக் குறிக்கோளைப் பற்றியதாக இருக்காது.

ஒவ்வொரு உறுப்பினரும் சுதந்திரமான சுயாட்சித் தன்மையுடையவராக இருந்தாற்றான் உண்மையான ஜனநாயகத் தன்மை நிறைந்த கட்டுப்பாடுகள் நிலவமுடியும். இல்லாது விடின் அக்கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர் மீது சமூக பொருளாதார ஆதிக்கம் செலுத்துபவர்களின் கட்டுப்பாடே நிலவும். எனவேதான் தனியுறுப்பினரின் சுதந்திரமான சுயாட்சித் தன்மை என்ற எண்ணக்கரு ஜனநாயகக் கட்டுப்பாடு என்ற எண்ணக்கருவுடன் இணைந்து நிற்கின்றது.

கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் தீர்மானங்கள், செயற்பாடுகள், கட்டுப்பாடுகள், வெளியுலகத் தொடர்புகளுக்கு ஏற்றதாகவும், வெளியுலகம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அமைதல் வேண்டும். பொதுத்தேவைகளைத் தீர்க்கமுனையும் பொதுமுயற்சி பற்றிய தீர்மானங்கள் வெளியுலகம் ஒப்புக்கொள்ளக் கூடியதாக அமைதல் வேண்டும். பொதுசன அபிப்பிராயத்தைத் திரட்டக்கூடியதாய் இருத்தல் வேண்டும். இதற்குத் திறந்த அங்கத்துவக் கோட்பாடு உதவியாக அமைகின்றது. உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கப் பொதுசன அபிப்பிராயமும், வெளியுலக அங்கீகாரத் தன்மையும் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

கூட்டுறவுச் சங்கத் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பகிரங்கத் தன்மை கொண்டவையாக அமைதல் வேண்டும். கூட்டுறவுச் சங்கத்தில் இரகசியம், ஒளிவு மறைவு என்பவற்றிற்கே இடமிருத்தல் ஆகாது. பகிரங்கத் தன்மை கூட்டுறவு பற்றிய பொதுசன நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கு உதவியாக அமையும். சிறந்த விளம்பரமாகவும் அமையும்.

ஜனநாயக மரபுகளையும் கோட்பாடுகளையும் தன்னுள் அடக்கியதே கூட்டுறவு. ஜனநாயக தத்துவங்களையும் மரபுகளையும் கூட்டுறவுச் சங்கம் ஒன்று எந்த நிலையிலும் கடைப்பிடிக்கத் தவறுமாயின் தனது உண்மையான புனித நோக்கிலிருந்து வழுவிவிடும். கூட்டுறவுச் சங்கத்தின் பெருநோக்கு உறுப்பினர்களின் நலன்களைப் பேணுதலாகும். தமது நலன்கள் எவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்களும் உறுப்பினர்களே, எனவேதான் சங்கம் தனது உயர்நோக்கை எய்த வேண்டுமானால் உறுப்பினர்களின் தீர்மானப்படி செயற்பட வேண்டியுள்ளது.

வாக்குரிமையைப் பொறுத்த வரையில் சங்கத்தைப் பாதிக்க வல்ல முடிவுகளை எடுக்கும்போது ஜனநாயக முறைப்படி ஒவ்வொரு உறுப்பினரும் சமநிலையில் தமது வாக்குகளைப் பயன்படுத்த முடியும். கூட்டுறவுச் சங்கம் மூலதனச் சேர்க்கையல்ல@ மனிதச் சேர்க்கையே. அதுவும் பொதுப் பொருளாதாரத் தேவைகள் மனிதருக்குள் சம நிலையில் இருப்பது போன்று அதை நிறைவேற்றும் சக்தியிலும் அவர்களுக்குச் சமஉரிமை இருத்தல் வேண்டும். எனவே கூட்டுறவுச் சங்கங்களில் மூலதனம் அல்லது பங்குகளுக்கு வாக்குரிமை கிடையாது. உறுப்பினர்களுக்கே வாக்குரிமை உண்டு. றொச்டேல் சமத்துவ முன்னணியினர் “ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்குரிமை” என்ற கொள்கையை அன்று கடைப்பிடித்தனர். ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்களின் பொதுச்சபைக் கூட்டங்களில் வாக்குரிமை விடயத்தில் றொச்டேல் சமத்துவ முன்னணியினரின் விதியைத்தான் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களிடையேயுள்ள சமூக உறவுகள் சமத்துவ அடிப்படையில் அமைந்தனவென்பதையும், அதிகாரப் பரம்பல் உறுப்பினர்களிடையே சமநிலையிலிருந்து எழுகின்றன என்பதையும், பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்பவே சங்கம் செயற்படுகிறதென்பதையும் உறுப்பினர்களின் ஜனநாயகக் கட்டுப்பாடு அதிகாரத்துக்குள்ளேயே சங்கம் இருக்கின்றதென்பதையும் இவ்வாக்குரிமை விதி தன்னுளடக்கி, ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் ஒரு குடியாட்சி அமைப்பு என்பதை வெளிப்படுத்தும். முடிவுகளை எடுப்பதில் எல்லா உறுப்பினர்களும் சமத்துவமாகப் பங்குபற்றுவதென்றால் அதற்குள்ள ஒரே வழி “ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு” என்ற விதியைக் கடைப்பிடிப்பதே. இவ்விதிக்கு எவ்வித புறநடையும் ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்களில் இருக்க முடியாது.

ஆரம்பக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றின் பொதுச் சபைக் கூட்டத்திற்குப் பதிலாள் வைப்பு (பேராளர்) மூலம் வாக்குரிமையைப் பயன்படுத்த முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம். பொதுத்தேவையும், சங்க அக்கறையில் ஆர்வமும் இல்லாத ஒருவர் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று. சங்கத்தின் எதிர்ச் சக்திகளும் இம்முறையைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து சங்கத்தின் குறிக்கோளையே மாற்றியமைத்துவிடச் சந்தர்ப்பம் அளிக்கும். உறுப்பினர் ஒருவர் சங்கத் தீர்மானம் பற்றி முற்கூட்டியே செய்த முடிவு. அவர் கூட்டத்தில் கலந்து பிறரின் கருத்துக்களைக் கேட்பதால் மாற்றியமைக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே பதிலாள் வைப்பு மூலம் வாக்களிக்கும் முறை விரும்பத்தக்கதல்ல என்று வாதம் ஒரு சாராரிடமிருந்து எழுந்துள்ளது.

ஒரு உறுப்பினர் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாவிடின் சங்கத்தைப் பற்றி எடுக்கும் முடிவில் தனது பங்கைச் செலுத்தும் உரிமையை இழக்கின்றார். அந்த இழப்பைத் தவிர்ப்பதற்கு பதிலாள் வைப்பு வாக்குரிமை அவருக்குச் சாதகமாயுள்ளது. சங்கத்தின் உயர்விலும் தாழ்விலும் மற்ற ஏனைய பொறுப்புக்களிலும் ஏனைய அங்கத்தவர்களுக்குள்ள பொறுப்பும் அக்கறையும் போன்றே தனி ஒரு அங்கத்தவருக்கும் இருக்கிறது. பதிலாளை நியமிக்கும் போது பொறுப்புடனும் அக்கறையுடனும் சரியான ஆளையே அவர் நியமிக்க வேண்டும். நியமிக்கும் பதிலாள் தனது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்புக்களுக்கு இடம் அளியாது உறுப்பினர் முற்கூட்டியே தெரிவித்த முடிவுக்கு வாக்குரிமையை மட்டும் அளிக்கும் வரையறைக்குட் படுத்தலாம் என்பது பதிலாண்மை முறை வாக்குரிமையைப் பயன்படுத்தலாம் என்போரின் வாதம்.

இவ்விரு சாராரின் வாதங்களிலும் ஓரளவு நியாயத் தன்மைகள் புலுப்படுகின்றன. எனவே ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் ஜனநாயக முறையில் தமது சங்க உள்ளமைப்புக்கேற்ப இதைப்பற்றி முடிவு செய்வதே சிறந்ததாகும்.

ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்கள் அல்லாத ஏனைய சங்கங்களின் வாக்குரிமை விதி எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றிச் சிந்தித்தல் நன்று. ஏனைய கூட்டுறவுச் சங்கங்கள் எனக் கருதப்படுவது ஆரம்பச் சங்கங்களால் உருவாக்கப்படும் இரண்டாம் மட்டச் சங்கங்களும், இரண்டாம் மட்டச் சங்கங்களால் உருவாக்கப்படும் மூன்றாம் மட்டச் சங்கங்களும் அதற்கும் மேலாக நிறுவப்படும் தேசிய நிறுவனங்களுமாகும். இந்தச் சங்கங்களும் சந்தேகத்திற்கிடமில்லாத கூட்டுறவு நிறுவனங்களேயென அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனக் கொள்கை வரையறைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இவையும் ஜனநாயக அடிப்படையிலேயே நிருவாகத்தை நடத்த வேண்டும். ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்களைப் போன்று இவையும் இன்றியமையாத கூட்டுறவுக் கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் இணங்குதல் வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பு நிறுவனங்களின் உறுப்பினர்களுக்குச் சம உரிமைகளும் ஜனநாயக மரபு முறைப்பாதுகாப்புக்களும் உண்டு. ஜனநாயகக் கட்டுப்பாடு கொண்ட முகாமைக்கு இந்தச் சமத்துவ நிலையே மூலவேராகும். இந்த கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பு நிறுவனங்களிலும் “ஓர் உறுப்பினருக்கு ஒரு வாக்கு” என்ற விதியைக் கடைப்பிடிக்கலாம்.

கூட்டுறவுச் சங்க இணைப்பு நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் பருமனில் (உறுப்பினர் எண்ணிக்கை) அதிக அளவு வேறுபாடு இல்லாவிட்டால் “ஓர் உறுப்பினருக்கு ஒரு வாக்கு” என்ற விதி திருப்திகரமாக அமையும். அங்கத்துவ சங்கங்களிடையே அதிக அளவு பருமனளவில் மாறுபாடு இருக்குமாயின் அங்கத்துவ சங்கங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அளவிற்கேற்ப வாக்குப்பலத்தை அமைக்கலாம். வாக்குப்பலப் பங்கீடு செய்யும் போது பின்வரும் முறைகள் பின்பற்றப்படலாம்.

மூலமனச் செலுத்தலுக்கேற்ப வாக்குப்பலம் அமைதல் மூலதனச் செலுத்துதல் அங்கத்துவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைதல். இதுவொரு வகை வாக்குப் பலப் பங்கீடு. இன்னொருமுறை அங்கத்துவ சங்கம் பொது இணைப்பு நிறுவனத்திடம் காட்டும் அக்கறையைக் கொண்டு வாக்குப் பலத்தைப் பிரிக்கலாகும். அக்கறையை அங்கத்துவ சங்கங்கள் அதனிடமிருந்து பெறும் சேவையினளவைக் கொண்டு அறிய முடியும். “ஓர் உறுப்பினருக்கு ஒரு வாக்கு” என்ற விதியில் இருந்து மாறுபட்டதாய் வெளிப்படையாகத் தோன்றினாலும் உண்மையில் இம் முறையில் அத்தத்துவத்தின் வளர்ச்சிப்படியே என்பது உற்று நோக்கினாற் புலனாகும். மனிதத்துவத்திற்கு முழுமையாகவும் செம்மையாகவும் மதிப்பளிக்கும் வழி முறைகளே இவை.

“வாக்குப்பலப் பங்கீடு அங்கத்தவர் அடிப்படையிலிருந்து செய்யப்படும் பங்கீட்டிலிருந்து முழுவதும் வேறுபட்டதன்று. நடைமுறை நோக்கில் இத்தகைய விட்டுக்கொடுப்பு ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும் தினைத்திறனுக்கும் வழிகோலுகின்றது.” என அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனக் கொள்கை வரையறைக் குழு கட்டிக் காட்டியுள்ளது.

சமத்துவம் என்ற கொள்கையைச் செம்மையாகக் கடைப்பிடிப்பதென்றால் இரண்டாம் மட்டச் சங்கத்தில் உறுப்புரிமைச் சங்கம் ஒன்றிற்கு ஒரு வாக்குரிமை என்ற விதி செம்மையானது என்று கூறமுடியாது. 50பேரை உறுப்பினராகக் கொண்ட சங்கத்திற்கும் 5000 பேரை உறுப்பினராகக் கொண்ட சங்கத்திற்கும் ஒரு வாக்கு என்ற விதி மனிதத்துவத்திற்கும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் மதிப்பளிப்பதாக இருக்க முடியாது. உறுப்பினர்களின் தொகைக்கேற்ப வாக்குகள் அதிகரிப்பதே நியாயமாக இருக்க முடியும். உறுப்பினருக்கு ஒரு வாக்கு என்ற விதி ஆளுக்கொரு வாக்கு என்பதையே கருதும். ஆரம்ப சங்கங்கள் உயர்மட்டச் சங்கங்களில் உறுப்புரிமை பெறுவதற்கும், வாக்களிப்பதற்கும் விகிதாசார முறையே ஏற்றதென்ற வாதம் எழுப்புதலுக்கு எதிர்வாதமும் உண்டு.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை எதிர்ப்பவர்கள் சில கருத்துக்களை முன் வைக்கிறார்கள். ஆரம்பச் சங்கங்களில் உள்ள பல உறுப்பினர்கள் சங்கத்தோடு ஈடுபாடில்லாதவர்களாயும், அக்கறையில்லாதவர்களாயும், பொதுத் தேவையற்றவர்களாயும் இருப்பார்கள். உறுப்பினர் எண்ணிக்கையில் அவர்களும் அடங்குவதால் இவ் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் கூட்டுறவாளர்களின் சமத்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பது ஒன்று.

அதிக அளவு உறுப்பினர்களைக் கொண்ட பெரிய சங்கங்கள், சிற்றளவுச் சங்கங்களைத் தமது வாக்குப் பலத்தைக் கொண்டு அவற்றின் எண்ணங்கள், செயற்பாடுகள் ஆகியவற்றை நசுக்கிவிடும் என்பது மற்றக் கருத்தாகும். இக்கருத்துக்களையுமு; முற்றாகப் புறக் கணித்துவிட முடியாது. வாக்குப்பலப் பங்கீட்டு முறையிற் சங்கங்களின் பிரதிநிதித்துவத்திற்குரிய உயர் வெல்லையையும் தாழ்வெல்லையையுமு; நிர்ணயிக்கலாம். கூட்டுறவின் உயரிய நோக்கம் எந்த விடயத்திலும் ஒருவருக்குப் பாதகமாகவும், அப்பாதகத்தின் விளைவாக இன்னொருவருக்குச் சாதகமாகவும் செயல் புரியாதிருத்தலாகும். இவற்றைக் கருத்திற்கொண்டு வாக்குப்பலப் பங்கீடு அமைதல் விரும்பத்தக்கது.

முகாமை, நிருவாகம், உட்கட்டுப்பாடு என்பவற்றில் வெளியாரின் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான் தூய கூட்டுறவுக் கோட்பாடாகும். உள்துறைக் கட்டுப்பாடுகள் பற்றி அரசாங்கங்கள் அடிக்கடி விதிகள் மூலமும் சுற்று நிருபங்கள் மூலமும் கட்டுப்படுத்த முயலுகின்றன. கூட்டுறவுக் கொள்கைகளை அனுஷ்டிப்பதற்கும் அதன் புறத்தோற்றத்தைப் பாதுகாப்பதற்கும் சட்ட ஆளுமையை ஏற்படுத்துவதற்கும் சட்டமாக்குதல் ஏற்கக் கூடியது. சங்கத்தின் உள்துறைச் செயற்பாடுகளிலும் நடைமுறைகளிலும் விதிகள், சுற்று நிருபங்கள் மூலம் தலையீடு செய்தல் விரும்பத்தக்கதன்று. இத் தலையீட்டினால் எவ்வளவு நன்மை ஏற்படினும் கூட்டுறவு இயக்கத்தை வளர்க்க உதவுமெனக் கருத முடியாது. இவை எவ்வளவு உயர்ந்தவையாகம் பெறுமதி மிக்கவையாகவுமிருந்தாலும் சர்வாதிகாரத் தன்மை என்ற மேற்பூச்சுக்களாக வேண்டியுள்ளன. இக் கட்டுப்பாடுகளையே உறுப்பினர்கள் தம் சொந்த விருப்பத்தின் பேரில் சுதந்திரமாகப் பிரமாணங்களாக ஆக்கும்போது அவை ஜனநாயகத் தன்மையென்ற மேற்பூச்சுப்பெற்று மக்கள் மனதைப் கவர்கின்றன.

அரசாங்கம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதி உதவி வழங்கினால் அவ்வுதவி சரியான வழியிலும் செம்மையான முறையிலும் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதனை உறுதிப்படுத்தத் தமது பிரதிநிதிகள் முகாமையில் இடம்பெற வேண்டும் என்ற அரசின் கோரிக்கை நியாயத் தன்மை கொண்டது தான். இந்நியாயக் கோரிக்கையை அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனக் கொள்கை வரையறைக் குழு ஒப்புக்கொண்ட போதிலும் இத்தகைய அரசாங்கப் பிரதிநிதி தேவையில்லாது ஒரு நாளாவது பதவி வகிக்கக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் பொதுச்சபைத் தீர்மானங்களே அதிகாரத்தின் உச்ச வரம்பு என்பதை வலியுறுத்திய போதிலும் அரச அதிகாரிகளின் மேல் அங்கீகாரம் பெறவேண்டும். அல்லது அவர்களுக்கு ரத்துச்செய்யும் அதிகாரமிருத்தல் என்பன சுயாட்சித் தன்மைக்கும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் முரணானது. அரசாங்கம் நிதி வழங்கினாலும் உச்ச அதிகார எல்லை பொதுச்சபையிடமே இருக்கிறது.
உறுப்பினர்கள் கருத்துக்களால் உருவாக்கப்படும் தீர்மானங்களே இறுதி அதிகாரத் தன்மையுடையனவாக அமைதல் வேண்டும்.

நிருவாக நிதி விடயங்கள் சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரங்களும், முகாமையை உருவாக்குவதற்கும், கலைப்பதற்குமுள்ள அதிகாரங்களும் உபவிதிகளை அல்லது நடைமுறை விதிகளை உருவாக:குதல், மாற்றுதல், திருத்துதல் சம்பந்தமான அதிகாரங்களும் அரசாங்க அதிகாரிகளிடமிருப்பின் கூட்டுறவுக் கொள்கைகள் வெறுங்கேலிக் கூத்துக்குரியனவாகும். கூட்டுறவு இயக்கத்தை வளர்ப்பவர்கள் வழிகாட்டிகள் எவ்வளவு தூரம் ஜனநாயகக் கோட்பாடுகளைப் புரிந்து எந்த அளவிற்குக் கடைப்பிடிக்கிறார்களோ அந்த அளவுக்கே கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சியுமிருக்கும். எனவே கூட்டுறவு இயக்கம் அதற்குரிய தனித்துவத்துடன் வளர்ச்சியடைய வேண்டுமானால் நல்ல ஆலோசகனாகவும், வழிகாட்டுவோனாகவும், உதவுவோனாகவும் அரசு இருக்க வேண்டுமல்லாது நிருவாகத் தலையீடு செய்வோனாக இருத்தலாகாது.

3. மூலதனத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வட்டி வீதம்
பங்கு முதலுக்கு ஏதேனும் வட்டி கொடுக்கப்பட்டால் அதன் வீதம் கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட்டதாய் இருத்தல் வேண்டும். “ஆதாய நோக்கு ஆதிக்கம் செலுத்தும் வணிக உலகில் வழக்கமாகக் காணப்படுவதை விடச் சமத்துவமான முறையில் பொருளாதார விளைபயன் பங்கிடப்படல் வேண்டுமென்ற திடமான முடிபின் விளைவாகவே வட்டி வீதம், மேலதிகத்தின் பயன்பாடு, பங்கீடு ஆகியவை குறித்துக் கூட்டுறவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.” என அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனக் கொள்கை வரையறைக் குழு குறிப்பிட்டுள்ளது.

மூலதனத்திற்கு ஏதேனும் வழங்குவதாயின் வட்டி மட்டுமே வழங்கலாம் என்ற கொள்கை உருவாகியது மூலமனத்திற்கு வட்டியைத்தவிர வேறு ஒன்றும் வழங்க முடியாது. எனவே மூலதனத்திற்கு வாக்களிக்கும் உரிமையும் நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமையும் கிடையாது. அத்துடன் வணிக மேலதிகத்திற் பங்கு பெறும் உரிமையும் கிடையாது. வாக்களிக்கும் உரிமை மூலதனத்திற்கு அன்று உறுப்பினர்களுக்கே உண்டு. ஆனாற் பங்கு முதலைக் கொள்முதல் செய்பவர்களே உறுப்பினர்களாக முடியும். பங்கு முதல் உறுப்புரிமை இரண்டும் நெருக்கமான தொடர்பு கொண்டவை. பங்கு முதல் உறுப்பினர்களுக்கே உரியது. ஒவ்வொரு உறுப்பினரின் பங்கு முதல்கள் (மூலதனக் கூறுகள்) வௌ;வேறு தொகையைக் கொண்டதாக அமைந்திருக்கும். வேறுபட்ட பங்கு முதல்களைக் (மூலதனக் கூறுகளை) கருத்திற்கொள்ளாது உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வாக்குரிமையே வழங்கப்படும். 10ரூபா மூலதனம் செலுத்திய உறுப்பினருக்கும், 1000 ரூபா மூலதனம் செலுத்திய உறுப்பினருக்கும் வித்தியாசமின்றி ஒவ்வொரு வாக்குரிமையே வழங்கப்படும். இதில் இருந்து நாம் அறியக்கூடியது யாதெனில் உறுப்பினருக்கே வாக்குரிமை. மூலதனத்துக்கு வாக்குரிமை பெறும் அதிகாரமில்லை. ஏனைய வணிக அமைப்புக்கள் இதில் இருந்து மாறுபடுகின்றன. வியாபார மேலதிகத்திலும் பங்கு முதலுக்கு (மூலதனம்) எவ்வித உரிமையுமில்லை. வியாபார மேலதிகத்தைப் பங்கீடு செய்யும்போது மூலதனத்துக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டியதில்லை. உறுப்பினர்களின் தீர்மானப்படியே மேலதிகம் பங்கீடு செய்யப்படுகின்றது. மேலதிகப் பங்கீட்டுக் கொள்கையில் இது விரிவாக ஆராயப்படும். “மூலதனம் ஆதாயத்தை எடுத்துச் செல்லும் நிலையில் இருந்து வெறுமனே வட்டி உழைக்கும் நிலைக்குத் தாழ்த்தியதன் மூலம் கூட்டுறவு இயக்கம் ஒரு சமுதாயப் புரட்சியை உருவாக்கிவிட்டது என்று கூறினால் மிகையாகாது” என்று அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவன முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜீத் கூறியதையும் இவ்வேளையில் நாம் கருத்திலிருத்த வேண்டும்.

“பங்கு முதலுக்கு ஏதேனும் வட்டி வழங்கப்படுவதாயின்” என்று கூறப்பட்டிருப்பதால் மூலதனத்துக்கு வட்டி நிச்சயமாக வழங்க வேண்டுமென்று கூட்டுறவுக் கொள்கை எதுவுமில்லை என்று தெரிகிறது. வட்டி வழங்குவது கட்டாயத்துக்குரியதன்று. விருப்பத்திற்குரியது. அதுவும் உறுப்பினர்களின் விருப்பத்திற்குரியது. பங்கு முதலுக்கு வட்டி வழங்குவதாயின் வட்டி வீதம் வரையறுக்கப்பட்டதாயும் நியாயமானதாயுமிருத்தல் வேண்டுமெனக் கூட்டுறவுக்கொள்கை கூறுகிறது. வட்டி வீதம் சட்டத்திற்குட்பட்டதாயும் நியாயமானதாயுமிருத்தல் வேண்டும். வட்டி வீதத்தின் வரையறையும் நீதியும் எவ்வாறு கணிக்க முடியும் என்பது ஆய்வுக்குரியது. பின்வருவனவற்றை கொண்டு வரையறை செய்யலாம்.

1. சட்டம் வட்டி வீதத்தை நிர்ணயித்திருந்தால் அத்தொகை.

2. வெளிக் கடன்களுக்குச் சங்கம் வழங்கும் வட்டி வீதம்

3. உறுப்பினர்களின் தீர்மானம்.

உறுப்பினர்களைக்கொண்ட பொதுச் சபையின் தீர்மானமே முக்கியமானது. அத்தீர்மானம், சட்டம் ட்டி வீதத்தை நிர்ணயித்திருப்பின் அவ்வீதத்திற:கு மேற்படாதிருத்தல் வேண்டும். சட்டம் வட்டி வீதத்தை நிர்ணயிக்காதுவிடின், சங்கம் வெளிக்கடன்களுக்கு வழங்கும் வட்டி வீதத்துக்கு மேற்படாதிருத்தல் வேண்டும்.

கூட்டுறவுக் கொள்கைகள் வட்டி வழங்குவதை விருப்புக்குரிய தாக்கியமையால் வழங்க வேண்டும். வேண்டாம் என்று இரு வகைக் கருத்துக்களும் கூட்டுறவாளர்களிடையே நிலவுகின்றனன. கூட்டுறவு மனிதர்களின் சேர்க்கையேயன்றி மூலதனச் சேர்க்கையன்று. உறுப்புரிமையின் பல அம்சங்களுள் மூலதனக் கூறுகளின் கொள்முதலும் ஒரு அம்சம். உறுப்பினர்கள் தங்கள் பொதுத் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றும் நோக்கோடுதான் மூலதனக் கூறுகளை (பங்கு முதல்களை) கொள்முதல் செய்கிறார்களேயன்றி மூலதனத்தைக்கொண்டு அதற்கென வேறு ஏதாவது நயங்கள் பெறவேண்டுமென்ற நோக்கிலன்று. மூலதன நயத்துக்கு முக்கியத்துவமளிக்க முயன்றாற் பொதுத் தேவைகளை நிறைவேற்றுந்திறன் குறைவடையக்கூடும். மூலதனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வணிக அமைப்புக்களில் இருந்து கூட்டுறவு அமைப்புத் தனித்தன்மை பொருந்தியது என்ற கோட்பாட்டின் சக்தி குறைவடையக்கூடும். வியாபார மேலதிகங்கள் (இலாபம்) எவ்வாறு உபயோகப்படுத்தப்படவேண்டுமென்று தீர்மானிக்கும் உரிமை உறுப்பினர்களிடமே இருப்பதால், அவர்களின் விருப்பப் படியே பங்கீடு செய்யும்போது வட்டி வழங்க வேண்டிய அவசியமில்லை. வட்டி முதலாளித்துவத்தின் சுரண்டல் தன்மையின் சி;னம். சுரண்டல் தன்மையை ஒழிக்க முனையும் கூட்டுறவு, வட்டி வழங்குவது அதன் கொள்கைகளின் புனிதத் தன்மையைக் கெடுத்துவிடும். இவை போன்ற பல கருத்துக்களைப் பங்கு முதலுக்கு வட்டி வழங்க வேண்டிய அவசியமில்லை என்ற வாதத்தினர் கூறுகின்றனர்.

ஜனநாயகத் தன்மையும் நியாயத் தன்மையும் கூட்டுறவின் அடிப்படை எண்ணக் கருக்களின் முக்கியத்துவம் வாய்ந்தவை. உற்பத்திக் காரணிகளில் மூலதனமும் ஒன்று என்பதை ஜனநாயகக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்பவர்கள் மறுக்கமுடியாது. ஏனைய உற்பத்திக் காரணிகளாகிய நிலம், உழைக்கு ஆகிய இரண்டுக்கும் அவற்குரிய நியாயமான விலை கிடைப்பதைக் கூட்டுறவுக் கொள்கைகள் ஏற்றுக்கொள்கின்றன. அமைப்புக்கும் உரியவிலை இலாபம் அல்லது மேலதிகம் இருக்கக்கூடாது எனக் கூட்டுறவுக் கொள்கைகள் வரையறை செய்யவில்லை. அமைப்புக்குரிய மேலதிகம் எவ்வாறு பங்கீடு செய்யப்படலாம் என்பதையே கூட்டுறவுக் கொள்கைகள் வரையறை செய்கின்றன. எனவே ஏனைய உற்பத்திக் காரணிகள் தாம் அளித்த சேவைக்குரிய நியாயமான விலையைப் பெறும்போது மூலதனம் (பங்குமுதல்) மட்டும் தனக்குரிய நியாயமான விலையைப் பெறாதிருத்தல் பொருளியல் நியாயத் தன்மையுடைய செயல் அன்று.

கூட்டுறவு நிறுவனங்கள் தமது தொழில் முயற்சிக்களுக்காகப் பெறும் வெளிக் கடன்களுக்கு வட்டி வழங்குகின்றன. வணிக முயற்சிகளில் வெளிக் கடன்களிலும் பார்க்க மூலதனம் கூடிய நயங்கள் பெறுவதையே நோக்காகக் கொண்டு முதலீடு செய்யப்படுகின்றன. கூட்டுறவு நிறுவனங்கள் வெளிக்கடன்களுக்கு வழங்கும் நயத்தையாவது மூலதனத்துக்கு வழங்குவது நியாயத் தன்மை உடையதாகும்.

வெளிக் கடன்கள் அதிகமாகவும் உரிமையாளரின் மூலதனம் குறைவாகவும் இருக்கும்நிலை (உயர்வினைப்பு மூலதன அமைப்பு முறை) வணிக நிறுவனங்களைப் பொறுத்த வரை நன்மை அளிப்பதாகும். ஏனெனில் வெளிக்கடன்கள் பெறும் நயங்கள் முற்கூட்டியே வரையறுக்கப்பட்டவை. மூலதனம் பெறும் நயங்கள் வரையறுக்கப்படாதவை. வெளிக் கடன்கள் பெறும் நயவீதம் குறைவாகவும், மூலதனம் பெறும் நயவீதம் மிக அதிகமாகம் இருக்கும் நிலை ஏற்படும். கூட்டுறவு நிறுவனத்தின் மூலதன அமைப்பு இதற்கு நேர்மாறாக இருத்தலே விரும்பத்தக்கது. வெளிக்கடன்கள் குறைவாகவும் உரிமையாளர் மூலதனம் அதிகமாகவும் இருக்கும். (தாழ் வினைப்பு மூலதன அமைப்பு முறையே) கூட்டுறவு நிறுவனங்களில் விரும்பத்தக்கது. வெளிக்கடன்கள் அதிகமாக இருக்கும்போது தீர்மானங்கள் உள்ளக் கட்டுப்பாடுகள் போன்ற விடயங்களில் அவர்களின் தலையீடு இருக்கும். அவர்கள் தமது முதலைப் பாதுகாப்பதற்காகவும் நயங்களை அதிகரிக்கச்செய்வதற்காகவும் விதிக்கும் நிபந்தனைகள் உறுப்பினர்கள் சுயேச்சையாகச் சுதந்திரத் தன்மையுடன் எடுக்க வேண்டிய தீர்மானங்களையும் நிருவாகக் கட்டுப்பாட்டு முறைகளையும் ஓரளவு பாதிக்கவே செய்யும். இந்நிலையில் வெளியாரின் கருத்துக்கள் தீர்மானங்களிலும் செயற்பாடுகளிலும் புகுந்து விடுவதைத் தடுக்கமுடியாது. இந்நிலை மாற்றப்பட்டு உறுப்பினர்களின் சுதந்திரமான கருத்துக்கள் தீர்மானங்களிலும் செயற்பாடுகளிலும் பூரணமாகச் செறிந்திருக்க வேண்டுமானால் புறக்கட்டுப்பாடுகளின் நிர்ப்பந்தங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவேண்டும். புறக்கட்டுப்பாடு விதிப்பவர்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் நிதி அளிப்போர்@ எனவே சங்கம் நிதித் தேவைகளை வெளியாரிடமிருந்து பெறும் நிலையைத் தவிர்த்துக்கொண்டாற்றான் உறுப்பினர்களின் சுயேச்சைத் தன்மையையும், சங்கத்தின் ஜனநாயக அம்சங்களையும் சக்தியும் வலுவும் கொண்டவையாக விளங்கச் செய்ய முடியும்.

வெளியிலிருந்து நிதிச் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்க வேண்டின் அல்லது கட்டுப்படுத்திக் குறைக்க ணே;டின், நிதி முழுவதையும் அல்லது பெரும்பகுதியை உறுப்பினர்களிடமிருந்தே பெற வேண்டும். உறுப்பினராகச் சேர்வதற்குரிய இழிவெல்லைப் பங்கு முதலிலும் (மூலமனக் கூறுகள்) பார்க்க ஒரு உறுப்பினன் மேலதிகமாகப் பங்கு முதல்களைக்கொள்முதல் செய்வதற்கு ஏதாவது தூண்டுதல்கள் அல்லது நயங்கள் இருத்தல் வேண்டும். கூட்டுறவு மனிதச் சேர்க்கையின்றி மூலதனச் சேர்க்கையன்று. எனவே மூலதனத்துக்கு வட்டியைத் தவிர வேறு எவ்வித உரிமைகளும், அதாவது வாக்குரிமை, இலாபப்பங்கு போன்றவைகள் கிடையா. எனவே உறுப்பினர் ஒருவர் தன்னிடமுள்ள நிதியை இழிவெல்லையிலும் பார்க்கக்கூடுதலான பங்கு முதல்களைக் கொள்முதல் செய்ய இரு காரணங்கள் தான் கூற முடியும். ஒன்று கூட்டுறவுச் சங்கத்தில் அவருக்கு இருக்கும் அக்கறை. மற்றது வெளியில் முதலீடு செய்வதால் ஏற்படும் நயத்தை இழக்காதிருக்குந் தன்மை. சங்கத்தில் அக்கறை உள்ளோர் அனைவருக்கும் அதிக அளவு நிதியை முதலீடு செய்யும் வசதி இருக்காது. வசதியுள்ள அங்கத்தவர்கள் வெளியில் முதலீடு செய்து பெறும்நயம்முழுவதையும் இழக்காது இருக்கவும், முதலீடு செய்ய அவர்களைத் தூண்டவும் நியாயமான வட்டி வழங்குதல் வேண்டும். தொழிற் சக்தியின் விளைவாக்கத்தைக் கூட்ட மூலதனம் உதவுவதால் மூலதனம் வழங்குபவர்களுக்கு கைம்மாறு வழங்க வேண்டியதன் தேவையை உணர்ந்து றொச்டேல் சமத்துவ முன்னோடிகள் நியாயமான வட்டி வீதம் வழங்குவதை ஏற்றுக்கொண்டனர்.

கூட்டுறவுச் செயற்பாடுகளில் முக்கியமானவொன்று ஒரு அங்கத்தவருக்குப் பாதகமாகவும் இன்னொரு அங்கத்தவருக்குச் சாதகமாகவும் நடக்காதிருத்தலாகும். எனவே 10 ரூபா பங்கு முதல் செலுத்திய உறுப்பினரும் 1000 ரூபா பங்கு முதல் செலுத்திய உறுப்பினரும் மனிதர்கள் என்ற ரீதியில் எல்லா வகையிலும் சமத்துவமாகவும் சம உரிமையுடனும் நடத்தப்படல் வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இவர்களுக்கிடையே முதல் வேறுபாடு இருப்பதை நாம் மறந்துவிட முடியாது. உறுப்பினர்களின் மனித சமத்துவத்திற:குப் பங்கமில்லாத வகையில் முதல் அளிப்பதிலும் சமத்துவம் பேண வேண்டுமாயின் எல்லா உறுப்பினர்களும் சமத்துவமாக முதலிட வேண்டும். அதற்கான பொருளாதார நிலைகள் உறுப்பினர்களுக்கு வசதியளிக்காத நிலையில் மேலதிக முதலீட்டைத் தூண்ட நியாயமான வட்டி வழங்குவதே முதல் சமத்துவத்தைப் பேணும்முறை. முதலுக்கு வட்டி வழங்க வேண்டும் என்ற வாதத்தினர் இவ்வாறு பல காரணங்களைக் கூறுகின்றனர்.

4. மேலதிகத்தைச் (இலாபம்) சமமாகப் பங்கிடுதல்.
இலாபம் எவ்வாறு ஏற்படுகின்றது. ஒரு பொருளின் உண்மைப் பெறுமதியிலும் பார்க்கக் கூடுதலான பெறுமதியைக் கொள்வோனிடமிருந்து அறவிடுவதாலேயே மேலதிகம் (இலாபம்) ஏற்படுகின்றது. “வியாபாரத்தின் பயனாக ஏற்பட்ட மேலதிகம் ஒருவகை மேல் அறவீடு எனவே கருதப்படவேண்டும். அது எவரிடமிருந்து மேலதிகமாக அறவிடப்பட்டதோ அவருக்கு அம்மேலதிகம் உரியது. அவர்களுக்கே அம் மேலதிகம் திருப்பிச்செலுத்தப்படல் வேண்டும்” எனக் கல்வேர்ட் கூறியுள்ளார்.

கூட்டுறவு அமைப்பு வணிக அமைப்பிலிருந்து வேறுபட்டது. ஆதாய நோக்கையும் சுரண்டலையும் நீக்க உருவாக்கப்பட்டது. கூட்டுறவு நிறுவனங்களின் நோக்கு, சேவையே. அதுவும் அங்கத்தவர்களின் பொதுத் தேவையை நிறைவேற்றுதலே முக்கிய குறிக்கோளாகும். எனவே இலாபத் தன்மையின்றிக் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட வேண்டும் என்று சிலர் கருதக்கூடும். இலாப நோக்குக்கும் இலாபத் தன்மைக்கும் வேறுபாட்டை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இலாபநோக்கு என்பது வரம்பற்றது. கொள்பவனது பலவீனங்களைத் தமக்குச் சாதகமாக்கி எவ்வளவு மேலதிகமாகப் பெற முடியுமோ அவ்வளணவு தொகையையும் இலாபமாகப்பெற முயற்சிப்பது. இலாபத்தின் அளவினைக்கருத்திற் கொண்டே செயற்பாடுகளில் ஈடுபட முயல்வது. இலாபத்தன்மை இந்நோக்கங்களின்றியும் ஏற்படலாம். இலாப நோக்கைக்கொண்டு எழுகின்ற இலாபங்கள் மிகை இலாபங்கள் என்று கருதப்படக் கூடியவையாகும். இலாபத் தன்மை சாதாரண இலாபமாகவே இருக்கும். அமைப்பு என்ற உற்பத்திக் காரணியின் சேவைக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விலையே சாதாரண இலாபம். இந்தச் சாதாரண இலாபத்தன்மை ஒரு கூட்டுறவு நிறுவனத்திற்கு இருக்க வேண்டுமா என்பதுதான் சிந்தனைக்குரியது. இலாப நோக்கோ மிகை இலாபமோ நிச்சயமாகக் கூட்டுறவு நிறுவனத்திற்கு இருக்கக்கூடாது. ஆனால் இலாபத்தன்மை அதாவது அமைப்பின் சேவைக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான விலையாகிய சாதாரண இலாபங்கூட கூட்டுறவு நிறுவனத்துக்கு இருக்கவேண்டுமா என்பதுதான் பிரச்சினைக்குரியது.

கூட்டுறவு நிறுவனங்கள் சேவைத்தன்மையுடையன. அதே நேரத்தில் இலாபத் தன்மையுடனும் இயங்க வேண்யவை. தமது செயற்பாடுகளில் உள்ள சேவைத் தன்மையின் அளவையும் இலாபத் தன்மையின் அளவையும் அந்நிறுவனங்களே தமக்குள் நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். கூட்டுறவுச் சங்கங்கள் நிலைபெறவும், தொடர்ந்து இயங்கவும், சேவைகளை மேலும் அதிகரிக்கவும், சேவைகளின் விளைதிறனை அதிகரிக்கவும், ஏனைய அமைப்புக்களின் போட்டியை ஈடு செய்யவும் இலாபத் தன்மையைப் பேண வேண்டிய நிலையிலே கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன. சேவைத்தன்மை. இலாபத்தன்மை இரண்டும் மாறுபட்ட நோக்குடையன. காலமும், சூழ்நிலை, தேவை இவற்றைக் கருத்திற்கொண்டே உறுப்பினர்கள் இவற்றின் அளவினைத் தீர்மானித்தல் வேண்டும்.

‘ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாட்டு விளைவாக எழும் பொருளாதாரப் பயன்கள் சங்க உறுப்பினர்களுக்கே உரித்தானவை. அப்பயன்களைப்பகிர்ந்தளிக்கும்போது ஒருவருக்குச் சாதகமாகவும் இன்னொருவருக்குப் பாதகமாகவும் அமையக்கூடாது. உறுப்பினர்களின் தீர்மானத்திற்கேற்ப இப்பகிர்ந்தளிப்பு பின்வருமாறு செய்யப்படலாம்.

1. சங்கத்தின் வியாபார விருத்திக்காக ஒதுக்கீடு செய்தல்.

2. பொதுச்சேவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல்.

3. உறுப்பினர்கள் கூட்டுறவுச் சங்கத்துடன் வைத்துக்கொண்ட தொடர்புக்கு (கொடுக்கல் - வாங்கள்) ஏற்ப அவர்களுக்கிடையில் பங்கிடல்”

என அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனக் கொள்கை வரையறைக் குழுவிதிகள் கூறுகின்றன. பங்கு முதலுக்கு வரையறுத்த வட்டி வீதம், மேலதிகத்தின் சமத்துவ (கொள்ளல் கொடுத்தலுக்கேற்ப) பங்கீடு ஆகிய எண்ணக் கருக்கள் மனிதன் தனது உழைப்பின் பயன்களை அனுபவிக்க உரிமையுள்ளவன் என்பதை ஏற்றுக்கொள்வதோடு மற்றவனின் உரிமை, உழைப்பு, சொத்து, தேவை என்பவை சுரண்டப்படாது இருக்கவும் வேண்டும் என்பதை உள்ளடக்கியுள்ளன. இம் மூன்று ஒதுக்கீடுகளில் இலாபத்தை எதெதற்கு ஒதுக்க வேண்டும். எவ்வளவு ஒதுக்க வேண்டும். ஏதெதற்கு ஒதுக்கத் தேவையில்லை என்பவற்றைத் தீர்மானிக்கும் உரிமை உறுப்பினர்களுக்கேயுரியது.

மேலதிகத்தைச் சங்கத்தின் விருத்திக்காக ஒதுக்கீடு செய்தல் அவசியமானது. வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் நிதித் தேவை மிக முக்கியமானது. நிதித் தேவையை நிறைவேற்றும் மூலங்களில் ஒன்றாக மேலதிகத்தை ஒதுக்கீடு செய்வதைப் பயன்படுத்தலாம். தொடர்ந்தியங்குந் தன்மையை உறுதிப்படுத்தவும் எதிர்கால எதிர்பாராத விளைவுகளைச் சமாளிக்கவும் நிதிஅவசியம். இத் தேவைகளுக்காக மேலதிகத்திலிருந்து ஒரு பகுதி ஒதுக்கீடு செய்தல் அவசியம். இதை உறுப்பினர்கள் கருத்திற்கொண்டு மேலதிகத்தில் எவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டுமெனத் தீர்மானித்தல் வேண்டும். ஆயினும் இலங்கைக் கூட்டுறவுச் சட்டம் இத் தேவைக்காக இலாபத்தில் 25 வீதம் ஒதுக்கிய பின்னரே ஏனைய தேவைகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என விதித்துள்ளது.

பொதுச் சேவைகளுக்கு மேலதிகத்தை வழங்குதலும், உறுப்பினர்களின் விருப்பப்படியே செய்தல் வேண்டும். உறுப்பினர்களுக்குரியதான மேலதிகத்தில் எவ்வளவு தொகையைத் தமக்கும் உறுப்பினரல்லாத பிறருக்கும் நன்மை பயக்கக்கூடிய பொதுச் சேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டுமென்பதை முடிவு செய்வது உறுப்பினர்களின் சுய விருப்பத்தைப் பொறுத்ததாகும். ஒருவன் தானீட்டும் வருமானத்திலிருந்து பொதுச் சேவைகளுக்குத் தன் விருப்பப்படி கொடுப்பது போலவே கூட்டுறவுச் சங்கமும் பொதுச் சேவைக்கு மேலதிகத்திலிருந்து ஒரு தொகையை வழங்கலாம். இப் பொதுச் சேவையையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று கூட்டுறவு சம்பந்தமானது. மற்றது ஏனையோரது நலம் சம்பந்தமானது.

சங்கத்தின் உறுப்பினர்கள், முகாமை, பணியாளர்கள், உறுப்பினரல்லாத பொதுமக்கள் ஆகியோருக்குக் கூட்டுறவுக் கொள்கை, செயற்பாடு ஆகியவை பற்றிய கல்வி புகட்டல் கூட்டுறவு சம்பந்தமான பொதுச் சேவையாகும். உறுப்பினருக்கும் உறுப்பினரல்லாதோருக்கும் உதவக் கூடிய வகையில் கல்வி, சுகாதாரம், போக்கு வரத்துப் பாதை, கலாசாரத் தேவைகள் போன்றவற்றில் செலவிடப்படுவது ஏனைய பொதுச் சேவைகளைச் சாரும். ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் அனைவரும் அல்லது மிகப் பெரும்பாலோர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்புரிமை பெற்றிருப்பின் மேலதிகத்தில் பொதுச் சேவைக்கென ஒதுக்குந் தொகை அதிகரிக்க வாய்ப்புண்டு. அப்போது அதிகமாக ஒதுக்குவது நியாயத் தன்மை நிறைந்ததாகவும் இருக்கும்.

உறுப்பினர்களாகப் பெரும்பாலோர் சேராதுவிடினும் கூட்டுறவுச் சங்கம் ஈட்டும் மேலதிகத்தில் தன் விருப்பார்ந்த நிலையிலன்றி, நியாய எண்ணத்துடன் ஒரு பகுதியைப் பொதுச் சேவைக்கென ஒதுக்குவது கூட்டுறவுக்கொள்கைகளுக்கு அமையத் தவிர்க்க முடியாதது. ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் கொடுக்கல் வாங்கல்களில் உறுப்பினரும் உறுப்பினரல்லாதோரும் பங்கு கொள்ளக்கூடும். எனவே உறுப்பினரல்லாதோரின் கொடுக்கள் வாங்கல்களினாலும் மேலதிகம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அம்மேலதிகத்தில் உறுப்பினர் உரிமை கொண்டாடுவது கூட்டுறவுத் தர்மமல்ல. எனவே உறுப்பினரல்லாதோருக்குரிய மேலதிகத்தை பொதுச் சேவைகளுக்கே வழங்குவது நியாயமும் அறமுஞ் சார்ந்த செயலாகும்.

கூட்டுறவைப் பற்றி மக்களிடையே நல்லெண்ணத்தை வளர்க்வும், நன்மதிப்பைப் பெறவும், விளம்பர சாதனமாகவும் பொதுச்சேவைகளுக்கு நிதி ஒதுக்குவது அமையும். எல்லோரிடமுமிருந்து பெற்ற மேலதிகத்தை எல்லோருக்கும் பயன்படு வழிகளில் உபயோகித்தல் என்ற உயர் கொள்கையைக் கூட்டுறவுச் சங்கங்கள் முன்மாதிரியாகப் பின்பற்றிப் பொதுச் சேவைகளிற் பங்குபற்றும் சமுதாய உணர்வை மக்களிடையே எழச் செய்ய வேண்டியதும் கூட்டுறவுச் சங்கங்களின் பெருங்கடமையாகும்.

சங்கத்தின் மேலதிகத்தை (இலாபம்), உறுப்பினர்கள் சங்கத்துடன் வைத்துக்கொண்ட உறவுக் (கொடுக்கல் - வாங்கல்கள்) கேற்ப அவர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கலாம்.

“கூட்டுறவு முயற்சியால் ஏற்படக்கூடிய நட்டங்களுக்கு உறுப்பினர்களே முகங்கொடுப்பதால் ஒரு கூட்டுறவுச் சங்கம் ஈட்டும் சேமிப்பில் (ஆதாயத்தில்) நியாயப்படி பங்கு கொள்வதற்கு உறுப்பினர்களுக்கே – வேறு யாருக்குமல்ல – உரிமையுண்டு. ஆனால் தமது சொந்தக் கொடுக்கல் வாங்கல்களால் உருவாகும் சேமிப்பில் (ஆதாயம்) தான் உறுப்பினருக்குப் பங்குண்டு. சங்கம் ஒழுங்காக வழங்கும் சேவைகளைப் பயன்படுத்தும் உறுப்பினர்களல்லாதோரின் கொடுக்கல் வாங்கல்கள் மூலம் உருவாகும் வருமானம் குறித்துச் சங்கம் கொள்கை தவறாது மிகக் கண்டிப்பாக நடத்தல்வேண்டும். உறுப்புரிமை கோருவதற்கு உறுப்பினரல்லாதோரைத் தூண்டும் வகையில் அவ்வருமானம் ஒதுக்கப்படாதுவிடின், பொதுநன்மை பயக்கக்கூடிய வகையில் அது ஒதுக்கப்படல் வேண்டும். சங்க உறுப்பினர்களுக்கப்பாலுள்ள பரந்த சமுதாயத்தின் நன்மைக்காக இது ஒதுக்கப்படுதல் விரும்பத்தக்கது. எக் காரணம் கொண்டு இவ்வருமானம் உறுப்பினர்களிடையே பங்கிடப்படும் சேமிப்போடு சேர்க்கப்படலாகாது. ‘அவ்வாறு அது சேர்க்கப்படுமாயின் கூட்டுறவு இயக்கம் கண்டிப்பாக ஒதுக்கி வைத்திருக்கும் சுரண்டல் ஆதாயத்தில் உறுப்பினர்கள் பங்கு கொள்வதாக அமையும்’ என அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனக் கொள்கை வரையறைக் குழு கூறியிருக்கின்றது.

எனவே கூட்டுறவுச் சங்கத்தில் ஏற்படும் மேலதிகம் (இலாபம்) உறுப்பினர் – உறுப்பினரல்லாதார் ஆகிய இரு சாராரின் கொடுக்கல் வாங்கல்களினால் ஏற்படுகிறது. உறுப்பினர் தாம் கொடுத்த மேலதிகத்தைத் திரம்பப் பெறுவது நியாயமும் அறமுமாகும். உறுப்பினரல்லாதோர் கொடுத்த மேலதிகத்தில் அவர்களுக்கு உரிமையில்லை. இதை ஒரு சிறு உதாரணத்தால் விளக்குவோம். ஒரு கூட்டுறவுச் சங்கம் 10 நீரிறைக்கும் இயந்திரங்களை ஒவ்வெர்றும் 3000 ரூபா வீதம் கொள்முதல் செய்தது.


10 நீர் இறைக்கும் இயந்திரங்களின்
கொள்விலை (10ஓ3000) 30,000
கொள்முதல் செலவுகள் 500
விற்பனை விநியோகச் செலவுகள் 300
நிருவாக நிலைய நிதிச் செலவுகளில் இதன் பங்கு 1,200

32,000


3500 ரூபா வீதம் இயந்திரங்கள் விற்கப்பட்டன. அவற்றில் 7 இயந்திரங்கள் உறுப்பினர்களும் 3 இயந்திரங்கள் உறுப்பினரல்லா தோரும் கொள்முதல் செய்தனர். எனவே


மொத்த விற்பனைத் தொகை (10ஓ3500) 35,000
கொள்வனவும் செலவுகளும் 32,000

மேலதிகம் 3,000
10 இயந்திரங்களின் மேலதிகம் 3,000

உறுப்பினர்களிடமிருந்து அறவிட்ட மேலதிகம் 3000 ஓ 7

10

ஸ்ரீ 2100


உறுப்பினரல்லாதோரிடமிருந்து ” 3000 ஓ 3

10

ஸ்ரீ 900

உறுப்பினர்கள் எழுவரும் தம்மிடமிருந்து அறீடு செய்த மேலதிகத் தொகையை 2100 ரூபாவை ஆளுக்கு 300 ரூபா வீதம் திரும்பப் பெறுதல் நியாயமும் அறமுமாகும். உறுப்பினர்களல்லாதோரின் மேலதிக அறவீட்டில் உறுப்பினர்கள் பங்கு கோர முடியாது. எவரிடமிருந்து மேலதிகம் அறிவிடப்பட்டதோ அவர்களுக்கே அம் மேலதிகம் போய்ச் சேர வழி செய்தல் என்ற கோட்பாடே இதுவாகும். இந்த எண்ணக்கருவை நூற்றுக்கு நூறு வீதம் சரியாக அமுல் நடத்துவது சிரமமான செயல். ஒவ்வொரு பொருளின் மேலதிக அறவீடுகள் ஒவ்வொன்றையும் தனித்தனி கணக்கீடு செய்வது கடினமான செயலாகும். எனவே குறித்த காலப் பகுதியின் கொள்வனவுத் தொகைகளிலிருந்து ஒரு சாராசரி மேலதிக அறவீட்டுத் தொகையைக் கணிப்பதே செயற்படுத்தக் கூடிய முறையாகும்.

உறுப்பினர் அல்லாதவர்கிளன் மேலதிக அறவீட்டுத் தொகையை உறுப்பினர்கள் தமதாக்கிக் கொள்வது ஒருவகைச் சுரண்டல் தன்மை. இலாப நோக்கமற்ற கூட்டுறவு உறுப்பினர்கள் இம் மேலதிகத்தில் உரிமை கோருவது கூட்டுறவாளர்களின் சுயதர்மத்துக்கு மாறானது. உறுப்பினர்கள் அல்லாதாரின் மேலதிகத்தை உறுப்பினர்கள் அல்லாதாருக்கே திருப்பி வழங்குவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில் மேலதிகத்தைப் பெறும் அதே நேரத்தில் இழப்புக்கள், நட்டங்கள் போன்ற பொறுப்புக்களைத் தாங்கும் நிபந்தனைக்குக் கட்டுப்படாதவர்கள். எனவே உறுப்பினராகாமலும் பொறுப்புக்களை ஏற்காலமும் மேலதிக அறவீடுகளைப் பெறும் வாய்ப்பு இருப்பின் பொதுமக்களிடம் உறுப்பினர்களாகச் சேர்ந்து பொறுப்பேற்கும் மனப்பான்மை குறைந்துவிடும். எனவே உறுப்பினரல்லாதோரி; மேலதிக அறவீட்டுத் தொகையை மூன்று வழிகளிற் பயன்படுத்தலாம். அவையாவன:

(1) உறுப்பினரல்லாதோர் உறுப்பினராகச் சேருவதை ஊக்குவிக்கும் பொருட்டும் ஒதுக்கி வைத்தல்.

(2) உறுப்பினரல்லாத ஏனையோருக்கும் பயன்படும் பொதுச் சேவைகளுக்குப் பயன்படுத்தல்.

(3) சங்கத்தின் வளர்ச்சிக்கா ஒதுக்கி வைத்தல்.

உறுப்பினரல்லாதோர் உறுப்பினராகச் சேருவதை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் மேலதிக அறீட்டுத் தொகையை ஒதுக்கி வைத்தல் நீதியானதும் செம்மையானதுமாக இருக்கும். உறுப்பினர்களல்லாதோர் உறுப்புரிமைக்கு விண்ணப்பித்து அதற்குரிய இழிவுப் பங்கு முதலைக் கொள்முதல் செய்யின் அவர்களுக்கு மேலதிகப்பங்கு முதல் தொகையாக மேலதிக அறவீட்டுத் தொகையை மாற்றலாம். அல்லது இழிவுப் பங்குமுதல் கொள்வனவுக்கு ஒரு பகுதியாக வேண்டுமானாலும் மாற்றஞ் செய்யலாம். இவ்வித நடைமுறை சாத்தியப்படாதுவிடின் உறுப்பினரல்லாதோருக்குப் பயன் விளைவிக்கக்கூடிய பொதுச் சேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய மேலதிகத் தொகையில்லாதுவிடினும் பொதுச் சேவைகளைக் கருத்திற் கொள்ளக்கூடிய அளவுக்குச் சங்கம் வளர்ச்சியுறாத நிலையிலும் இம் மேலதிக அறவீட்டுத் தொகையைச் சங்க விருத்திக்காக ஒதுக்கீடு செய்வது தவிர்க்க முடியாத தாகின்றது.

5. கூட்டுறவுக் கல்வி:
கூட்டுறவு இயக்கத்தின் பொருளாதார ஜனநாயகக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பற்றித் தமது உறுப்பினர்களுக்கும் எல்லாக் கூட்டுறவுச் சங்கங்களும் கல்வி புகட்டுவதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்” என்று அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனக் கொள்கை வரையறைக்குழு கூறியுள்ளது.

கொள்கை வரையறைக்குழு கூட்டுறவுக் கல்விக் கொள்கைக்குப் பெருமளவு முக்கியத்துவம் அளித்துள்ளது. கூட்டுறவின் ஏனைய கொள்கைகள் செம்மையாகவும் சரியாகவும் செயலுருவாகக் கல்விக் கொள்கை சீரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும். கூட்டுறவின் உயர் இலட்சியங்களை மக்களிடையே பரவச் செய்து அதன் பயன்களை மக்கள் அடைவதற்குப் பிரசாரஞ் செய்ய வேண்டிய கடப்பாடு கூட்டுறவு இயக்கங்களையே சார்ந்தது. கூட்டுறவுக் கொள்கைகள் ஏட்டு வேதாந்தமல்ல. வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வையே உயர்த்தும் புனிhமான செயற்பாட்டுத் தன்மை கொண்ட தத்துவங்கள். வெறும் சூத்திரங்களோ வாய்ப்பாடுகளோ விதிமுறைகள் மட்டுமோ அல்லக் கூட்டுறவுக் கொள்கைகள். கடந்த காலத்தில் ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டுப் பயனடைந்த கொள்கைகள் நிகழ்காலத்திற் கடைப்பிடிக்கப்படுவன. எதிர்காலத்தில் வலுமிக்கதாகவும் அதிகப்பயன்பாடு கொண்டதாகவும் கடைபிடிக்கப்பட வேண்டியவை. கூட்டுறவின் அமரத்துவமான ஜீவத்தன்மை இக்கொள்கைகளிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் இக்கொள்கைகளை உயிரோட்ட முள்ளதாகக் காலத்திற்கமையப் புதுப்பித்துப் புது வாழ்வு அளிக்க வேண்டும். இவ்வித புது வாழ்வுத் தன்மை அளிப்பது கூட்டுறவுக் கல்வியிலேயே தங்கியுள்ளது. கூட்டுறவுக் கொள்கைகள் மனித சமுதாயத்திற்கு ஒளிமயமான தீபமாகத் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருப்பதற்கு நெய் போல உதவிக் கொண்டிருப்பது கூட்டுறவுக் கல்வியே.

அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவனக் கொள்கை வரையறைக் குழு கல்வி பெற வேண்டியவர்களை நான்கு வகையினராகப் பிரித்துள்ளது. அவர்கள் முறையே.

1. உறுப்பினர்கள் 2. பதவி வகிப்போர்
3. பணியாளர் 4. பொதுமக்கள்

என்பவர்களாகும்.

உறுப்பினர் கல்வி மிக முக்கியமானது, சாதாரண பொதுக்கல்வி பெறாத மனிதர்கள் இன்றைய சமுதாய அமைப்பில் பூரண அங்கத்துவம் வகிக்க முடியாத நிலையிலேயே இருப்பார்கள். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சாதாரண பொதுக்கல்வி பெற்றிருத்தல் அவசியம். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து றொச்டேல் சமத்துவ முன்னோடிகள் அங்கத்தவர்களின் சாதாரண கல்விக்காகப் பெரு முயற்சியும் பணமும் செலவிட்டுப் பொதுக் கல்வியை வளர்த்தனர். கூட்டுறவுக் கொள்கைகள் பற்றியும் அதன் இலட்சியம் பற்றியும் ஐயந்திரிபற்ற தெளிவான அறிவு உறுப்பினர்கள் பெற்றிருத்தல் வேண்டும். உயர் அதிகாரங் கொண்டவர்கள் உறுப்பினர்கள். சங்கத்தைப் பாதிக்கக்கூடிய தீர்மானங்களை எடுப்பதில் கலந்து தமது கருத்துக்களையும் தெரிவித்து வாக்களிப்பில் கலந்து கொள்ளவேண்டியவர்கள். ஒவ்வொரு தீர்மானமும் கூட்டுறவு இலட்சியத்திற்கும் கூட்டுறவுக் கொள்கைகளுக்கும் அமைவாக அல்லது முரண்பாடில்லாமல் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எனவே உறுப்பினர்கள் கூட்டுறவின் இலட்சியம் கொள்கைகள் பற்றிய தெளிவான அறிவு பெற்றிருத்தல் அவசியம். தாம் உறுப்புரிமை பெற்றிருக்கும் சங்கத்தின் நோக்கம், செயற்பாடுகள், பொருளாதார சமூகச் சூழல் பற்றியும் நன்குணர்ந்திருத்தல் அவசியம். பதவி வகிப்போர் காட்டும் வழிகாட்டல்களும் செயன் முறைகளும் கூட்டுறவு இலட்சியம் கொள்கைகள் என்பவற்றிற்கமைவாகவும், சங்கத்திற்கும் உறுப்பினருக்கும் நன்மை பயப்பனவாகவும் இருக்கின்றனவா என்பதை ஆய்ந்து தீர்மானிக்கக் கூடிய வகையிற் பொது அறிவும் கூட்டுறவு அறிவும் உறுப்பினர் பெற்றிருத்தல் அவசியம். பணியாளர்களைப் பதவி வகிப்போர் சரியான வழிகாட்டிக் கூட்டுறவு இலட்சியம், கொள்கைகள் என்பவற்றிலிருந்து வழுவாது திறம் படச் சங்கத்தின் செயற்பாடுகள் நிகழச் செய்கின்றார்களா என்பதை அவதானிக்கக் கூடிய அறிவு இருத்தல் அவசியம். எனவே உறுப்பினர்களின் கல்வி அறிவு மிக மிக முக்கியமானதாகும்.

பதவி வகிப்போர் என்பது முகாமையைக் குறிக்கும். உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும் அல்லது நியமிக்கப்படும் முகாமைக்குழுவையும், முகாமைக் குழுவால் நியமிக்கப்படும் முகாமைப் பணியாளர்களையும், அல்லது தொழில் நுட்பப் பணியாளர்களையும் உள்ளடக்கும். பதவி வகிப்போர் தமது பதவிக்குரிய செய்கடமைகளைக் கூட்டுறவு இலட்சியக் கொள்கைகளுக் கிணங்க ஆற்றுவதற்கு கூட்டுறக் கல்வி அவசியம். அத்துடன் சங்கத்தின் விசேட தொழிற்பாடுகள் பற்றிய தொழில் நுட்ப அறிவும், நடைமுறைச் செயல்களின் பிரச்சினைகள் பற்றிய அறிவும், பொருளாதார சமுதாயச் சூழல்கள் பற்றிய அறிவும் இருந்தாற்றான்; தீர்மானங்கள் செயற்பாடுகள் பற்றி வழிகாட்டவும், தீர்மானங்கின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யவும் முடியும். சமுதாய பொருளாதாரச் சூழல்களினாற் கூட்டுறவுச் சங்க முயற்சிகளில் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து அதற்கேற்பச் செயற்படப் பதவி வகிப்போர் தொடர் கல்விமுறையைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பதவி வகிப்போர் சிறந்த வழிகாட்டிகளாகவும் நிருவாகிகளாகவும் விளங்க முடியும்.

பணியாளர்கள் முகாமையின் வழிகாட்டலையும் அறிவுறுத்தல்களையும் சரியான முறையில் உணர்ந்து தீர்மானங்களின் வழியிலான செயற்பாடுகளின் அன்றாட நடைமுறை வேலைகளில் ஈடுபட வேண்டியவர்களாவர். நடைமுறை வேலைகளைக் கருத்துணர்வோடு செய்வதற்குக் கூட்டுறவுக் கல்வி அவர்களுக்கு அவசியம். அத்துடன் தமது தொழிற்றுறையில் வினைத்திறன் பெறவும் கூட்டுறவுக் கொள்கைகளுக்கேற்றதாக அமையவும் தொழில்நுட்பத் துறையிற் காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுவதை அறிந்து அவற்றிற் பயிற்சியும் வினைத்திறனுமடையப் பணியாளர்கள் தொடர் கல்வி முறையைப் பின்பற்றுதல் அவசியமாகும். ஒரு சங்கத்தின் பொது முயற்சியின், சேவையின் அளவும் வினைத்திறனும் நடைமுறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களின் அறிவு, திறன், ஆர்வம், தொழில் நுட்பப் பயிற்சி என்பவற்றிலேயே பெருமளவு தங்கியிருப்பதால் இவற்றின் விருத்திக்கேற்ற கல்வி, பணியாளர்களுக்கிருத்தல் அவசியம்.

ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கங்கமும் பொது மக்களுக்குக் கூட்டுறவுக் கல்வியைப் பிரசார மூலம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளது. பொதுமக்கள் உறுப்பினராகச் சேருவதைத் தூண்டுவதற்காகவும், எதிர்ச் சக்தியின் துர்ப்பிரசாரத்தை முறியடித்துப் பொது மக்களிடையே கூட்டுறவு பற்றிய உண்மைக் கருத்துக்களையும், உயர்ந்த இலட்சியத்தையும், கொள்கைகளையும் பரப்பிப் பொது மக்களின் நல்லெண்ணம், நன்மதிப்பு, ஒத்துழைப்பு மனப்பான்மை என்பவற்றை ஏற்படுத்துவதற்காகவும், கூட்டுறவுச் செயற்பாடுகளுக்குப் போதிய விளம்பரம் கொடுப்பதற்காகவும், பொது மக்களுக்குக் கூட்டுறவுக் கல்வி அளித்தல் வேண்டும். கூட்டுறவுச் சங்கங்கள் பலவிதத் தடைச்சக்திகளை எதிர்த்து முன்னேற வேண்டியுளது. அந்த முன்னேற்றம் சிறப்பாக உறுப்பினர்களுக்கும் பொதுவாக முழுச் சமுதாயத்திற்கும் நன்மை விளைவிக்கும் கூட்டுறவு இயக்கத்தின் தடைச் சக்திகள் எவை என்பதை இனங்கண்டு கொள்ளவும், தடைச் சக்திகளை எதிர்த்து முன்னேறுவதால் ஏற்படக்கூடிய உறுப்பினரின் சிறப்பு நயங்கள் எவை என்பது பற்றி அறிந்து கொள்ளவும், முழுச் சமுதாயத்துக்கும் ஏற்படக்கூடிய நயங்கள் எவை என்பதைத் தெரிந்து கொள்ளவும், பொது மக்களுக்குப் பிரசார முறைக் கல்வி அவசியமாகும். பிரசாரக் கல்வியின் அளவுக்கும் சக்திக்குமேற்பவே எதிர்காலத்திற் கூட்டுறவு இயக்கம் வளர்ச்சியும் விருத்தியுமுறும்.

6. கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே கூட்டுறவு.
“தங்கள் உறுப்பினர்களினதும் சமூகங்களினதும் நலவுரிமைகளை மிகச் சிறந்த முறையிற் பேணும் பொருட்டுச், சகல கூட்டுறவு நிறுவனங்களும் உள்@ர், தேசிய, அனைத்துலக அடிப்படையில் நடைமுறைக்குகந்த எல்லா வழிகளிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்தல் அவசியம். “கூட்டுறவாளர்களின் உலகளாவிய செயல் ஒற்றுமையை நடைமுறைச் சாதனையாக்குவது இவர்களின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும்” என அனைத்துலகக் கூட்டுறவு இணைப்பு நிறுவன விதிகள் கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே கூட்டுறவு என்பது பற்றிக் கூறுகின்றன.

“கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே கூட்டுறவு” என்னும் கொள்கையின் நோக்கம் சங்க உறுப்பினர்களதும், உறுப்பினர்கள் சார்ந்திருக்கும் சமூகங்களினதும் நலன்களை மிகச் சிறந்த முறையில் பேணுதலாகும். இந்த உயர்ந்த நோக்கத்தை அடைவதற்குரிய செயற்பாட்டு முறை, சகல கூட்டுறவு நிறுவனங்களும் உள்@ர், தேசிய, அனைத்துலக அடிப்படையில், நடைமுறைக்குகந்த எல்லா வழிகளிலும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தலால் ஆகும். விளைவு கூட்டுறவாளர்களின் உலகளாவிய செயல் ஒற்றுமையை நடைமுறைச் சாதனையாக்குதலாகும்.

கூட்டுறவு இயக்கம் எதிர்ச் சக்திகளுக்கிடையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு ஏற்படுத்திய தற்காப்பு முறையே இக்கொள்கையென விமர்சிக்கப்படக் கூடியதாக இருந்தாலும் இக் கொள்கையின் உண்மையான கருத்துணர்வு இதுவன்று. கூட்டுறவு இயக்கம் போட்டி, பொறாமை, சுரண்டல், ஆதாயம், துவேஷம் போன்ற தீயசக்திகளுக்கிடமளிக்காத அறவழி சார்ந்த புனித இயக்கம். இவ்வியக்கங்களைச் சார்ந்தவர்களிடையே இவ்வித தீயசக்திகளில்லாதிருப்பின் இயல்பாகவே ஒற்றுமை ஏற்படும். இயல்பாக எழக் கூடிய ஒற்றுமையை நிலைப்படுத்துவதே இக் கொள்கையாகும். உயர்ந்த இலட்சியப் பற்றினாலும் புனிதமான கொள்கையினாலும் இயல்பாக எழுகின்ற ஒற்றுமைப் பலம் தீய சக்திகளிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் கருவியாகவும் சில சந்தர்ப்பங்களிற் பயன்படலாம்.

கூட்டுறவு இயக்கத்துக்குப் பலம் பொருந்திய எதிர்ப்புச் சக்திகள் உண்டு. கூட்டுறவு இயக்கத்திற்கு வெளிப்படையான எதிர்ப்புச் சக்திகளும் உண்டு. மறைமுகமான எதிர்ப்புச் சக்திகளும் உண்டு. மறைமுகமான எதிர்ப்புச் சக்தியே கூட்டுறவு இயக்கத்திற்குப் பெருந் தொல்லை தரக் கூடியது. கூட்டுறவுக்கு ஆதரவுபோல் தம்மைக் காட்டித் தக்க தருணங்களிற் கூட்டுறவு இயக்கத்தை நசுக்கித் தொழிற்படுவன இந்தச் சக்திகள். இந்தச் சக்திகள் மீது மிகக் கவனமாக இருக்கவேண்டியது கூட்டுறவு இயக்கத்தின் பெரும் பொறுப்பாகும். இப்பொறுப்பைத் தனித்துச் சிறு சங்கங்கள் நிறைவேற்றுவது கடினம். சங்கங்களின் ஒன்றுபட்ட பலமே இத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும்.

இதற்கமைய உள்@ர்ச் சங்கங்கள் ஒன்றுகூடி ஒன்றுக்கொன்று உதவல் வேண்டும். உள்@ர் மட்டத்தில் மட்டுமன்றித் தேசிய மட்டத்திலும் அனைத்துலக ரீதியிலும் இவ்வித உதவிகள் பெற வாய்ப்பிருத்தல் வேண்டும் மக்களுக்குப் பணிபுரிவதற்காக உருவாகிய கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உதவியாகவும் ஒற்றுமையாகவும் இருத்தல் வேண்டும். நிதி வசதிகள் குறைந்தவர்களால் உருவாக்கப்படுவதே பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்கள். நிதித் தேவையின் பொருட்டு வெளியாரின் உதவியைப் பெற்று வெளிக் கட்டுப்பாடுகளினாற் சுயாட்சித் தன்மையும் கூட்டுறவுக்கொள்கைகளின் உயர்ந்த இலட்சியத் தன்மையும் சீரழிந்து விடாமற் பாதுகாப்பதற்காக நிதி வசதிமிக்க சங்கங்கள் குறைந்த வசதியுடைய சங்கங்களுக்கு நிதி உதவி (கடனாக) அளிக்கும் நிலை உருவாக வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே எந்த வகையிலும் போட்டி மனப்பான்மை இராமல் எல்லாச் சங்கங்களும் வளர வேண்டுமென்ற பரந்த மனப்பான்மை இருத்தல் வேண்டும். கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களிடையே “எல்லோருக்குமாக ஒருவரும் ஒருவருக்காக எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைத்தல்” என்ற இலட்சிய நோக்குக் கடைப்பிடிக்கப்படுவது போல கூட்டுறவுச் சங்கங்களும் “எல்லாம் ஒவ்வொன்றுக்காகவும் ஒவ்வொன்றும் எல்லாவற்றுக்காகவும் ஒன்று சேர்ந்து உழைக்குந் தன்மை” உருவாதல் வேண்டும். இவ்வாறு செயற்படின் மறைமுகத் தடைச் சக்திகளின் பலம் குறைந்து விடும்.

முதலாளித்துவத்தைப் பேணும் பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் கூட்டுறவு இயக்கத்திற்கு மறைமுகமாகத் தடைச் சக்திகளாக உள்ளனர். கூட்டுறவு இயக்கத்தில் ஏற்படும் நல்விளைவுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்திலும் பார்க்க அன்றாடக் கருமங்களில் ஏற்படும் சிறு தவறுகளுக்கே பெரும்பாலான பத்திரிகைகளும் சில அரசியல்வாதிகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கூட்டுறவு இயக்கம் நிலைபெறும்போது முதலாளித்துவ அம்சங்கள் மறைந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே முதலாளித்துவப் பத்திரிகைகள் எதிர்க்கின்றன. பொதுமக்களை எட்டுவதற்குக் கூட்டுறவு நிறுவனங்கள் சிறந்த சாதனமாக அமைந்திருப்பதால், தமது நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டுக் கூட்டுறவு நிறுவனங்களைத் தமக்குரிய சாதனமாக்கிக் கூட்டுறவுக் கொள்கைகளைச் சிதைக்க முயல்கின்றனர் சிலர். கூட்டுறவுத் தலைவர்கள் தமது எதிர்ச்சக்திகளாக மாறி விடுவார்களோ என்ற அச்சமும் அரசியல்வாதிகளைக் கூட்டுறவில் தலையிடச் செய்கின்றன. அரசியல்வாதிகள், கூட்டுறவு நோக்கங்களை வளர்க்க உதவுஞ் செயல்களை ஆதரிப்பது போன்று, கூட்டுறவுக் கொள்கைகளை மாற்றித் தமது நோக்கங்களைக் கூட்டுறவிற் புகுத்துவதைத் தடுப்பது கூட்டுறவு இணைப்புக்களின் தலையாய கடமையாகும்.

பெரிய வணிக நிறுவனங்கள் கூட்டுறவு இயக்கத்திற்கு வெளிப்படையான தடைச்சக்தியாகும். இந்நிறுவனங்களின் பலமும் திறனும் சந்திரமுறைத் தேர்ச்சியும் கடும் போட்டியாக அமைந்துள்ளன. இவற்றின் எதிர்ப்பை ஈடு செய்யும் சக்தியைப் பெறுவதானாற் கூட்டுறவு இயக்கங்களின் ஒன்று சேர்ந்த ஒற்றுமைப் பலத்தினாலேயே முடியும். வணிக பலத்திற்கு ஆதாரமாக ஸ்கன்டினேவிய மொத்த வியாபாரக் கூட்டுறவுச் சங்கம், சர்வதேச கூட்டுறவு எரிபொருள் கழகம் போன்ற நிறுவனங்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். கூட்டுறவு இணைப்பு நிறுவனங்கள் ஏனைய வணிக நிறுவனங்களோடு தலைநிமிர்ந்து நின்று வணிகத்தொழில் புரியும் ஆற்றல் படைத்தன.

கூட்டுறவு நிறுவனங்கள், இயல்பாகவும், கொள்கை ரீதியாகவும், தற்காப்பு முறைக்காகவும் எதிர்ச் சக்திகளின் ஊடுருவல்களைக் களைவதற்காகவும், பலம் பெறுவதற்காகவும், எதிர்ப்புச் சக்திகளின் போட்டிகளைத் தவிர்ப்பதற்காகவும், விருத்தி வளர்ச்சி என்பவற்றின் பொருட்டும் உள்@ர், தேசிய, அனைத்துலக அடிப்படையில் சாத்தியமான வழிகளில் எல்லாம் இணைதல் அவசியம். அப்போதுதான் கூட்டுறவின் புனிதமான உயர் இலட்சியங்களை விரைவில் மனித சமுதாயம் அடைய வழிபிறக்கும்.

இதுவரை 1966ஆண்டு அமைத்துலகக் கூட்டுறவு நிறுவனத்தினராற் பிரகடனப்படுத்தப்பட்டு 1995 முற்பகுதி வரை நடைமுறையில் இருந்த ஆறு கூட்டுறவுக் கொள்கைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இனி 1995இல் “மான்சிஸ்டர்” நகரில் இடம்பெற்ற அனைத்துலகக் கூட்டுறவு அமைப்பு நிறுவனம் பிரகடனப்படுத்திய, இன்று அமுலில் உள்ள, ஏழு கொள்கைகளையும் அவற்றின் பிரதான அம்சங்களையும் பார்ப்போம்.

1995ல் மான்சிஸ்டர் நகரில் இடம்பெற்ற அனைத்துலகக் கூட்டுறவு
இணைப்பு நிறுவனம் பிரகடனப்படுத்திய ஏழு கொள்கைகள்:
1995இல் மான்சிஸ்டர் நகரில் இடம்பெற்ற சர்வதேசக் கூட்டுறவு ஒன்றியத்தின் மகாநாடு. கூட்டுறவுக் கொள்கைகளின் தற்போதைய நிலைமைகளையும் அவற்றின் பெறுமதியையும் ஆராய்ந்து 21ம் நூற்றாண்டிற்கு இத்துறை முகங் கொடுக்கக் கூடியதாக ஒரு சில மாற்றங்களை முன் வைத்தது. இதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுக்கள் 1937இலும் 1966இலும் மேற்கொண்ட கொள்கைத் திருத்தத்தின் வளர்ச்சிப் போக்கை அவதானித்தன. மாறிவரும் உலகுக்கு ஏற்பக் கூட்டுறவுக் கொள்கைகள் எவ்வாறு இசைவுள்ளனவாக இருக்கவேண்டும் என்பதையும், எதிர்காலச் சவால்களுக்கு இவ் இயக்கம் எவ்வாறு முகம் கொடுக்கவேண்டும் என்பதையும், உணர்ந்து உலகின் சமூக, பொருளாதார மாற்றங்களையும் அவதானித்து நடைமுறையில் உள்ள கொள்கைகளிற் சாத்தியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என இக்குழுக்கள் பரிந்துரைத்தன. மேலும் கூட்டுறவு, உலகம் முழுவதற்கும் பொதுவானதோர் அமைப்பாகும். அது தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமாயின் அதற்கு ஏற்பச் சிறிய மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வது தவிர்க்க முடியாதது எனவும் இக்குழுக்கள் கருதின. 1840களில் மிகுந்த நெருக்கடி நிலவிய காலத்தில் ஐரோப்பாவில் 5 வகை மரபுச் சங்கங்கள் செல்வாக்குச் செலுத்தின.

றொச்டேல் முன்னோடிகளால் ஆரம்பிக்கப்பட்ட நுகர்வுச் சங்கங்களும் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களாகப் பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களும் சிறப்பாக இயங்கின. கடன் கூட்டுறவுச் சங்கங்கள் ஜேர்மனியின் வரலாற்றில் முக்கியத்துவம் செலுத்தின. டென்மார்க்கில் விவசாயச் சங்கங்கள் பெரும்செல்வாக்கைப் பெற்றன. ஐரோப்பாவின் பல பகுதிகளில் வீடமைப்பு சுகாதார சேவைச் சங்கங்கள் முன்னணி வகித்தன. இந்த ஒவ்வொரு வகை மரபுச் சங்கங்களும் பல்வேறு சமூகங்களினதும் பல்வேறு கலாசார விழுமியங்களுக்கு மத்தியிலும் தமது தனித்துவத்தைப் பேணி வந்தன. அது மட்டுமன்று@ பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் கட்டமைப்புக்களுக் கூடாகவும் பல்வேறு கலாசார வேறுபாடுகள் மத்தியிலும் அடிப்படையான கூட்டுறவுக் கொள்கைகளின் ஊடே இவை மக்களது தேவைகளை நிறைவேற்றின. பல்வகை வேறுபாடுகளையும், நோக்கங்களையும் கொண்ட சமூகங்களின் மத்தியிலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்க கொள்கைகளை இவை பிரதிபலித்து வந்துள்ளன என்பதை இங்கே அவதானிக்கலாம். 1970-1995 ஆண்டுகளில் உலகின் சந்தைப் பொருளாதாரம் பாரிய மாற்றங்களை எதிர்கொண்டது. பாரம்பரிய வர்த்தகத் தடைகளை நீங்கித் திறந்த சந்தை, வரியற்ற சந்தை, உலகளாவிய சந்தை என வர்த்தக உலகம் வளர்ந்தது. இந்நிலையில் பல்வேறு போட்டிகளுக்குக் கூட்டுறவு அமைப்புக்கள் முகம் கொடுக்க வேண்டி உள்ளன. தகவற்றுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொடர்பாடலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கமையப் புதிய கொள்கைகளை வரவேற்பது தவிர்க்க முடியாததெனக் கருதிப் பின்வரும் புதிய ஏழு கொள்கைகள் 1995ஆம் ஆண்டிற் சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1. தன் விருப்பார்ந்த தடையற்ற (திறந்த) உறுப்புரிமை.

2. ஜனநாயக முறையில் அமைந்த கட்டுப்பாடும் நிர்வாகமும்.

3. அங்கத்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு.

4. சுதந்திரமாகம் சுயமாகவும் தொழிற்படல்.

5. கல்வி, பயிற்சி, தகவல்.

6. கூட்டுறவுச் சங்கங்களிடையே ஒத்துழைப்பு.

7. சமூக மேம்பாடு.

1966இல் இருந்து 1995 முற்பகுதி வரை நடைமுறையில் இருந்த கொள்கைகளுடன் ஒப்பு நோக்கும் போது, இக்கொள்கைகளிற் பெரிய அடிப்படை மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே இருந்த ஆறு கொள்கைகள் சிலவற்றில் ஒரு சில அம்சங்கள் உட்புகுத்தப்பட்டதையும், புதிதாகச் சமூக மேம்பாடு என்ற கொள்கை சேர்க்கப்பட்டுள்ளமையுமே 1995ல் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகும். முந்திய ஆறு கொள்கைகள் பற்றி இந்நூலில் முன்னரே விளக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆறு கொள்கைகள் தொடர்பாகப் புத்தப்பட்ட பிரதான அம்சங்களையும், பதங்களையும் சமூக மேம்பாடு என்ற ஏழாவது கொள்கை பற்றியும் மேலும் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

முதலாவது கொள்கை:
தன் விருப்பார்ந்த தடையற்ற (திறந்த) உறுப்புரிமை.
இக்கொள்கை 1966ம் ஆண்டு இருந்த கொள்கையில் இருந்து எவ்வகையிலும் வேறுபடவில்லை.

இரண்டாவது கொள்கை:
ஜனநாயக முறையில் அமைந்த கட்டுப்பாடும் நிர்வாகமும்.
இதுவும் 1966ம் ஆண்டு கொள்கையில் இருந்து வேறுபடவில்லை.

மூன்றாவது கொள்கை:
அங்கத்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு.
1966ல் “மூலதனத்திற்கு மட்டான வட்டி வீதம்” என்ற கொள்கை புதிய கொள்கையில் அங்கத்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு எனத் திருத்தியமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க வேண்டும்.

அங்கத்தவர்கள் தாங்கள் வழங்கும் மூலதனத்திற்கு ஏற்ப மட்டான பிரதிபலனை அடையவேண்டும். இது ஜனநாயக முறையிலும் சமமானதாகவும் இருக்கவேண்டும். வாக்களிக்கும் உரிமை பங்கு மூலதன அடிப்படையில் அன்றி உறுப்புரிமை அடிப்படையிலே அமையும். ஆனால் பங்குமுதலைக் கொள்வனவு செய்பவர்களே உறுப்பினர்களாக முடியும். வியாபார மேலதிக இலாபத்தை பங்கீடு செய்யும்போது மூலதனத்திற்கு எதுவித முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டியதில்லை என முன்னர் கண்டோம். இந்த வகையில் இப்புதிய கொள்கையானது மூலதனத்துக்கு மட்டான வட்டி என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதுடன் இலாப மேலதிகமானது குறித்த சங்கத்தின் தொழிற்பாடுகளை மேம்படுத்தவும், அங்கத்தவர்களின் வியாபாரப் பங்களிப்புகளுக்கேற்ப அவர்களின் நலஉரிமைகளைப் பேணவும், அங்கத்தவர்களின் அனுமதியுடன் ஏனைய தேகைளுக்கு அதனைப் பயன்படுத்தவும் முடியும் என்பதை மேலும் வலியுறுத்துகின்றது. இக்கொள்கையின் அடிப்படைக் கருத்து முன்னைய மூலதனத்திற்கு மட்டான வட்டி வீதம் என்ற கொள்கையுடன் பெரிதும் முரண்படவில்லையாயினும் சொற்பிரயோகத்தில் ஒரு பொதுத்தன்மை அல்லது சமூக மேம்பாட்டுத் தன்மை நிலவுவதைக் காணலாம்.

கூட்டுறவு அமைப்புக்காக அங்கத்தவர்கள் தங்கள் மூலதனத்தை மூன்று முறைகளிற் பங்களிப்புச் செய்ய முடியும். முதலாவது முறை பங்குகளை நேரடியாகச் செலுத்துதல்@ இதற்கான வட்டியைப் பெற அவர்களுக்கு உரித்துண்டு. இரண்டாவது வகை மூலதனமானது இலாபத்திலிருந்து உழைத்த ஒதுக்கங்களாகும். இவை அங்கத்தவர்களாற் கோரப்படா. வியாபார விருத்திக்கு அல்லது தொடர்புள்ள கூட்டுறவு அமைப்புக்களுக்கு அல்லது சமூக நலன்களுக்குப் பயன்படலாம். மூன்றாவது வகை மூலதனமானது அங்கத்தவர்கள் தாங்கள் பெற உரித்துள்ள இலாப மேலதிகத்தை அதாவது கொள்வனவு மீது தள்ளுபடி போன்றவற்றின் ஒரு பகுதியை கூட்டுறவு நலன்களுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் அல்லது ஓய்வு காலம் வரை தொடர அனுமதியளிப்பதன் மூலம் திரட்டிக் கொள்ளலாம்.

நான்காவது கொள்கை:
சுதந்திரமாகவும் சுயமாகவும் தொழிற்படல்.
1966ம் ஆண்டின் 4வது கொள்கை இலாப மேலதிகத்தைச் சமமாகப் பங்கிடுதலாக இருந்தது. ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாட்டின் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரப் பயன்கள் அச் சங்க உறுப்பினருக்கே உரித்தானது. அப்பயன்கள் சங்க அங்கத்தவர் எவருக்கும் பாதகமில்லாமல் உறுப்பினர்களின் தீர்மானத்திற்கமையச் சமமாகப் பங்கிடப்படல் வேண்டுமென முன்னைய இக்கொள்கை வலியுறுத்தியது. இக்கருத்துக்கள் புதிய மூன்றாவது கொள்கையான அங்கத்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு என்ற கொள்கையுடன் இணைந்து நின்று பிரதிபலிப்பதைக் காணலாம்.

எனவே நான்காவது புதிய கொள்கை, ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் சுதந்திரமாகவும் சுயமாகவும் தொழிற்படவேண்டுமென்ற கருத்தையே வலியுறுத்துகின்றது.

உலகின் பெரும்பாலான நாடுகளின் கூட்டுறவு அமைப்புக்கள் அவ்வந்நாட்டு அரசுடன் மிக நெருங்கிய இணைப்பைக் கொண்டுள்ளன. அனேகமாக அரசாங்கங்களே கூட்டுறவு அமைப்புக்களுக்கான சட்ட நகல்களை ஆக்கி வழங்கியுள்ளன. அரசின் வரிக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, சமூகக் கொள்கைகள் கூட்டுறவுக்குச் சாதகமாகவோ அன்றிப் பாதகமாகவோ அமையவேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. ஆதலின் விரும்பியோ விரும்பாமலோ அரசுடன் ஒரு தெளிவான தொடர்பைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடு கூட்டுறவு அமைப்புக்களுக்கு உள்ளது. இந்நிலையிலும் கூட்டுறவு அமைப்புக்கள் தமது சுதந்திரமான இயக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை இக்கொள்கை வலியுறுத்துகிறது. இதன்படி இக்கொள்கையானது கூட்டாகவும், தன்னிச்சை, தன்னுதவி, பரஸ்பரம் என்பவற்றின் ஊடாகவும் அதன் அங்கத்தவர்களாற் கட்டி எழுப்பப்படுபவை. அரசுடனோ வேறு நிறுவனங்களுடனோ தமது மூலதனத் தேவையின் பொருட்டு அல்லது சமூக நலக் காரணங்களுக்காக இணைந்து செயற்பட நேர்ந்தாலும் தனித்துவம், சுதந்திரமாக இயங்கும் தன்மை என்பவற்றை நிலைநிறுத்த வேண்டும். பல சந்தர்ப்பங்களில் பல்வேறு திட்ட நடவடிக்கைகளின் கீழ் ஏனைய நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஏற்படுகின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களிலும் கூட்டுறவு தனது தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதையும் கூட்டுறவுக்கொள்கைகளை எச்சந்தர்ப்பத்திலும் கைவிடலாகாது என்பதையும் இக்கொள்கை வலியுறுத்துகிறது.

ஐந்தாவது கொள்கை:
கல்வி, பயிற்சி, தகவல்.
1966இல் இக்கொள்கை கூட்டுறவுக் கல்வி என இருந்தது. தற்பொழுது பயிற்சி, தகவல் என்ற பதங்கள் சேர்க்கப்பட்டிப்பதை அவதானிக்க வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்கள், இயக்குனர், முகாமையாளர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுக்குக் கூட்டுறவு சம்பந்தமான கல்வியை மட்டுமல்ல இவ் அமைப்புக்களை முறையாக இயக்குவதற்கான பயிற்சி வழங்குதலையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறே அவை தமது அங்கத்தவர்களுக்கும் பொது மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் கூட்டுறவின் முக்கியத்துவம் பற்றிய தகவல்களை வழங்கவேண்டும். இன்று உலகம், தகவல் உலகம் என விரிவடைந்து வருகின்றது. அதற்கேற்பக் கூட்டுறவுத் தகவல்கள் பெறப்பட்டுப் பரிமாறப்பட வேண்டும் என்பதை இக்கொள்கை வலியுறுத்திக் கூறுகின்றது.

ஆறாவது கொள்கை:
கூட்டுறவுச் சங்கங்களிடையே ஒத்துழைப்பு.
இக்கொள்கையும் முற்றிலும் 1996ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகளுக்கு ஒத்திசைவாக அமைந்திருக்கின்றது. இது சம்பந்தமாக விபரங்கள் முன்னரே விளக்கப்பட்டுள.

ஏழாவது கொள்கை:
சமூக மேம்பாடு.
இதுவே 1995இற் புதிதாகச் சேர்க்கப்பட்ட கொள்கையாகும். கூட்டுறவின் பிரதான நோக்கம் தனது அங்கத்தவர்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு உழைப்பதாகும். அத்துடன் அது சமூகத்திற்குக், குறிப்பாகச் சங்கம் இயங்கும் பரப்பின் சமூக நலன்களுக்கு உதவ வேண்டும். அங்கத்தவர்களுக்கு மட்டுமன்றி அங்கத்தவர்கள் அல்லாதோரினதும் சமூக கலாசார பொருளாதார விருத்திக்கும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளைக் கூட்டுறவுச் சங்கங்கள் தமது வேலைத் திட்டங்களுடன் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதை இக்கொள்கை வலியுறுத்துகின்றது.

கூட்டுறவு நடைமுறைகளில் இச்சமூக மேம்பாட்டுக்கொள்கை இயல்பாகவும் பாரம்பரியமாகவும் கடைப்பிடிக்கப்பட்டே வந்துள்ளது. மேலை நாடுகளில் இன்று கூட்டுறவு அமைப்புக்கள் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டு அடிப்படையிற் செயலாற்றி வருகின்றன. கூட்டுறவுக் கம்பனி அமைப்புக்கள் பெருகி வருகின்றன. இதனால் அங்கத்தவர்கள் அல்லது கூட்டாக இயங்கும் சங்கங்களுக்கு வர்த்தக நோக்கங்கள் பெருகுவதற்கான வாய்ப்பு உண்டு. இதனாற் சமூக மேம்பாடு பாதிக்கப்படும் எனக் கருதியே 1995இல் இக்கொள்கையை வேறாகப் பிரகடனப்படுத்த வேண்டி இருந்தது.

3. கூட்டுறவு இயக்கத்தின்
ஆரம்பகர்த்தாக்கள்
கூட்டுறவு இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களாகக் குறிப்பிடத்தக்கவர்கள் கூட்டுறவுத் தந்தை ரொபேட் ஓவன், வில்லியம் தொம்சன், டாக்டர் சிங் என்போராவர். இவர்களது சிந்தனைகள், பங்களிப்புக்களுக்கிடையே வேறுபாடுகள் பல காணப்படினும் கூட்டுறவுக்கு இவர்கள் அளித்த கட்டுக்கோப்பான சிந்தனைகள் இவ் இயக்கம் தோன்றிய இங்கிலாந்தில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும், இவ்வமைப்பு பல்கிப் பெருசு அடிக்கல்லாக அமைந்தன. இவ்வாறே இவர்களது சிந்தனைகளை உள்ளடக்கி ஒரு முன்னோடியான கூட்டுறவுச் சங்கத்தை அமைத்த ரொச்டேல் முன்னோடிகளும் போற்றுதற்குரியவர்களாவர்.

கூட்டுறவின் தந்தை ரொபேட் ஓவன்
பொருளியலின் தந்தை அடம் ஸ்மித், பொதுவுடமைத் தத்துவத்தின் தந்தை கார்ல்மார்க்ஸ் என்று அறிஞர்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். முதன் முதல், குறிப்பிட்ட ஒரு துறையின் கருத்துக்களை ஒழுங்குபடுத்தி அறிவியல் ரீதியாக வெளியிட்டவர்களை அத்துறையின் தநதை எனப் பாராட்டுவது அறிஞர்கள் மரபு. றோபேட்ஓவன் இந்த வகையில் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைப்படுதற்கு உரிமை பெற்றவராவர்.

இவர் இங்கிலாந்திலுள்ள நியூட்டன் நகரில் 1771ஆம் ஆண்டு மே மாதம் 14ந் திகதி பிறந்தார். இளமையில் வறுமையில் வாடித் தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் பணியாற்றினார். அவரது அயராத உழைப்பாலும் திருமணத்தின் வழியாகவும் கிளாஸ்கோ நகரிலுள்ள தொழிற்சாலைக்கு அதிபரானார். ஆலைச் சீர்கேடுகளை எண்ணிப் பார்த்துத் தானே வழிகாட்டியாகித் தமது ஆலைகளிற் சீர்திருத்தங்களைச் செய்தார்.

கைத்தொழிற் புரட்சியின் பின் ஏற்பட்ட பொருளாதார அமைப்பு முறை பற்றிய சிந்தனைகளைப் பல அறிஞர்கள் வெளியிட்டனர். பொருளியலமைப்பிற் போட்டி நிலவினாற் சமூகச் சீர்கேடுகள் மறைந்துவிடும் என்று அடம் ஸமித், ரிகார்டோ, மால்தஸ் போன்றோர் கருத்துக்களை வெளியிட்டார்கள். புரட்சியின் மூலம் உற்பத்திக் காரணிகளைக் கைப்பற்றிச் சமுதாய உடமையாக்கிச் சமுதாய நலனை இலட்சியமாகக் கொண்ட பொருளாதார அமைப்புப் பற்றிய சிந்தனைகளைக் கார்ல்மார்க்ஸ் வெளியிட்டார். கூட்டுறவின் மூலம் போட்டியைத் தவிர்த்துக் கூட்டுறவுக் கொள்கைகளின் அடிப்படையிற் சங்கங்கள், இயக்கங்கள் மூலம் பொருளாதார சமத்துலமும் அறஞ்சார்ந்த வாழ்வு நெறிகளையும் கொண்ட சமுதாயத்தை அமைக்கலாம். நாம் மற்றவர்களுக்காகவும் மற்றவர்கள் நமக்காகவும் வாழ்கின்ற உயர் இலட்சிய சமுதாயம் உருவாகும் என்ற சிந்தனையை றோபேட் ஒவன் வெளியிட்டார்.

தொழிலாளர்கள் குறைகளை நிவர்த்தி செய்தல் பற்றித் தனது கட்டுரைகளை “த இக்கொனமிஸ்ற்” (வுhந நுஉழழெஅளைவ) என்னும் பத்திரிகையில் வெளியிட்டார். 1932ம் ஆண்டு த கிறைசிஸ் (வுhந ஊசளைளை) என்னும் பத்திரிகையை ஆரம்பித்து சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் கூட்டுறவு இயக்கக் கருத்துக்களையும் வெளியிட்டார். தமக்குத் தேவையான ரொட்டிகளை ஒவ்வொருவரும் தனித்தனியே தமது வீடுகளில் தயாரிப்பதைவிடப் பல குடும்பங்களை ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் தயாரிப்பதினால் உற்பத்திச் சிக்கனமும் உழைப்புச் சிக்கனமும் ஏற்பட்டு எல்லோரும் இலாபம் அடையலாம் என்பதை விளக்கினார். தொழிலாளர்கள் பிறரது தயவை எதிர்பாராமல் தமது சொந்த முயற்சியினாலேயே முன்னேற வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார். நீங்களே உங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும். நீங்களே உங்கள் வியாபாரியாக வேண்டும். அப்போது உங்களுக்குத் தேவையான நல்ல பொருள்களைக் குறைந்த செலவிற் பெறமுடியும் என்ற கருத்தையும் வெளியிட்டார்.

தமது ஆலையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள்:
1. வேலை நேரத்தைக் குறைத்து நியாயமான வேலை நேரமாக்கியது.

2. நியாயமான கூலி (சம்பளம்) வழங்கியமை.

3. சிறுவர்களை வேலையிலிருந்து நீக்கி அவர்களுக்குக் கல்வி வசதி வழங்கியமை.

4. தொழிற்சாலையிற் சுகாதார வசதிகள் ஏற்படுத்தியமை.

5. கூலியைவிடத் தொழிலாளர்களுக்கு இலாபத்தில் ஒரு பகுதியை வழங்கியமை.

6. தொழிலாளர்கள் புரியுந் தவறுகளுக்குத் தண்டனை வழங்கும் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தியமை.
போன்றவையாகும்.


சீர்திருத்த முயற்சிகள்:
(1) இங்கிலாந்தில் தொழிலாளர் குடியிருப்புத் திட்டம்
தொழிலாளர்கள் முன்னேற அவர்களின் வீட்டுச் சூழ்நிலைகளை மாற்றவேண்டும். அதற்காகத் தொழிலாளர் குடியிருப்புத் திட்டங்களை ஏற்படுத்த முயற்சித்தார். அக்குடியிருப்புக்களில் உள்ள தொழிலாளர்கள் பொதுச்சங்கம் அமைத்து தமது பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். அங்கு உயர்வு, தாழ்வு என்ற பேதமிருக்காது. போட்டி மனப்பான்மை, இலாப வேட்கையற்ற குடியிருப்பாக அமைக்கப்படும். இதற்குரிய திட்டத்தைத் தயாரித்து அரசாங்க ஆதரவை நாடினார். அரசாங்கம் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டது. செல்வந்தர்களும் மதவாதிகளும் இத்திட்டத்தை ஏளனம் செய்தனர். பொதுமக்களும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்து அமெரிக்கா சென்றார்.

(2) அமெரிக்காவில் தொழிலாளர் குடியிருப்புத்திட்டம்:
அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத் தலைவரைச் சந்தித்து நியூஹார்மனி என்னும் இடத்தில் 30,000 ஏக்கரை வாங்கித் தொழிலாளர் குடியிருப்பை ஏற்படுத்தினார். இக்குடியிருப்பில் பண்ணைகள், சிறு தொழிற்சாலைகள், மாதாகோயில் என்பவற்றை அமைத்தார். இக்குடியிருப்புக்கள் கூட்டு உழைப்பு, கூட்டுப் பொறுப்பு என்ற தத்துவங்களின் அடிப்படையில் இயங்கத் திட்டங்கள் வகுத்தார். தொழிலாளரின் கல்வி அறிவின்மை, சுயநலம், திறமையின்மை போன்ற காரணங்களால் இக்குடியிருப்புகள் வெற்றி பெறவில்லை. எனவே றோபேட்ஓவன் இங்கிலாந்து திரும்பினார்.

(3) உழைப்புப் பத்திரத்திட்டம்:
சமுதாய அநீதிகளுக்கு மூலகாரணம் இலாப வேட்கை, இலாப வேட்கை எழுவதற்குப் பண உபயோகமே காரணம். பணத்துக்குப் பதிலாக உழைப்புப் பத்திரத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தினார். பொருள் உற்பத்தியில் உழைப்பு. நேர அளவைக் கணித்து இப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இங்கிலாந்தில் கூட்டுறவு அமை;பபை ஒத்த “தேசிய சமஉழைப்புப் பரிவர்த்தனை நிலையம்” ஒன்றை அமைத்தார். தரமில்லாத பொருள்களையும் விலைபோகாத பொருள்களையும் தொழிலாளர் கொண்டு வந்து குவித்தனர். உழைப்புப் பத்திரத்தை வாங்கவும் கள்ளச் சந்தைகள் தோன்றின. இதனால் அவரது திட்டம் வெற்றிபெற முடியவில்லை.

இம் முயற்சிகளால் றோபேட்ஓவன் திரண்ட செல்வத்தை இழந்தார். அவரது இறுதிநாள்கள் துயரமிகுந்தவை. வறுமையும் பிணியும் வாட்டும் அநாதையானார். “நான் என் காலத்தை விட முந்திய பிறந்து விட்டேன். எனது வாழ்க்கை பயனற்றதாகி விடவில்லை. முக்கியமான சில உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளேன்” என மரணப் படுக்கையில் கூறினார்.

“நல்லெண்ணத்துடன் சகலரும் ஒன்றிணைந்து பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது சர்வதேச மனித சமுதாயத்தின் அதிர்ஷ்டமாகும்” எனப் பிரித்தானியக் கூட்டுறவு இயக்கம் இந்த வாக்கியங்களை அவரது கல்லறையில் பொறித்து அவருக்கு அமரத்துவம் வழங்கியுள்ளது.

அவரது தீர்க்க தரிசன வார்த்தைகள் பொய்த்து விடவில்லை. சர்வதேச ரீதியாக அவரது கருத்துக்கள் இடம்பெற்று விட்டன. அவர் கண்ட கூட்டுறவுச் சமுதாயத்தை அமைக்கும் அணியில் 25 கோடி மக்கள் திரண்டுள்ளனர். அவரது கனவுகள் செயலுருப்பெறும் காலத்தைக் கூட்டுறவாளர்கள் அண்மித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே றோபேட்ஓவனின் இலட்சியக் கூட்டுறவுச் சமுதாயம் அதிவிரைவில் மலரும்.

ரொச்டேல் முன்னோடிகள்:
1844ஆம் ஆண்டு ரொச்டேல் நகரிலுள்ள 28 நெசவுத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நுகர்வோர் கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பித்தனர். இர்களை ரொச்டேல் சமத்துவ முன்னோடிகள் என்று அழைத்தனர். இவர்கள் அமைத்த இச்சங்கம் கூட்டுறவு அமைப்புக்கு ஒரு முன்னோடியாக இருந்தது மட்டுமன்று ஒரு புதுமையைத் தோற்றுவித்த சங்கமாகவும் திகழ்ந்தது. ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலாக இச்சங்கம் கூட்டுறவு இயக்கத்துக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. ரொச்டேல் முன்னோடிகள் தோற்றுவித்த கருத்துக்கள் அச்சங்கத்தின் விதிகளாக மாற்றம் பெற்றன. பின்னர் இவ்விதிகளே கூட்டுறவுக் கொள்கைகளாக மாற்றம் பெற்றன.

பிரித்தானியாவால் மட்டுமன்றி ஏனைய பல நாடுகளாலும் இக்கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப் படத்தக்கனவாக மாறின. அவர்கள் தோற்றுவித்த இக்கொள்கைகள் அடிப்படை அம்சங்கள் குன்றாது ஒரு சில மாற்றங்களுடன் இன்றும் நிலவி வருவதைக் காணலாம்.

வறிய ஒரு மக்கள் குழாம் எவ்வாறு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளமுடியும் என்பதற்கு இம் முன்னோடிகள் உருவாக்கிய சங்கம் எடுத்துக் காட்டாக இருந்தது. ரொச்டேல் முன்னோடிகளின் கருத்து ஒரு அமைப்புக்கு நிதி முக்கியமன்று@ அங்கத்தவர்களின் பங்களிப்பும் நேர்மையும் விடா முயற்சியுமே அவசியம் என விளங்கிற்று. இச்சங்கம் தோன்றிய காலத்தில் முதலாளித்துவ அல்லது தனியுடைமை வாதக் கொள்கை நன்கு பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நீதி, சமத்துவம் என்பது இம்முன்னோடிகளின் தாரக மந்திரமாகும். இங்கிலாந்தில் பெண் சமத்துவம் பற்றிப் பேசப்படுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னதாகவே இம் முன்னோடிகளின் சங்கத்தில் இக்கொள்கைகள் கைக்கொள்ளப்பட்டன. மூலதனம் அங்கத்தவரது வேலைக்காரனாக இருக்க வேண்டுமேயன்றி முதலாளியாக முடியாது. ஒருவர் எவ்வளவு பங்கைக் கொண்டிருந்தாலும் அவர் மேலதிக வாக்கைப் பெறமுடியாது என்பன போன்ற அவர்களது கருத்துக்கள் பிற்காலத்தில் வலிமை பெற்ற கருத்துக்களாகப் பல்வேறு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பின்வரும் விதிகள் அவர்களது சங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டவையாகும்.
1. சாதாரண விலைக்குப் பொருட்களை விற்றல்.

2. பங்குக்கு நிர்ணியிக்கப்பட்ட வட்டியை வழங்குதல்.

3. கொள்வனவுக்கேற்பத் தள்ளுபடியை வழங்குதல்.

4. ரொக்கத்துக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்தல்.

5. ஆண் பெண் இருவரும் சமமாக உரிமையைப் பெறல்.

6. ஒருவருக்கு ஒரு வாக்கு.

7. கூட்டங்களில் தொடர்ந்து பங்குபற்றுதல், உரையாடுதல், சங்க மேன்மைக்காக உழைத்தல்.

8. கணக்குகளை ஒழுங்கு முறையாக வைத்தல், கணக்காய்வு செய்தல், இறுதிக் கணக்குகளை அங்கத்தர் பார்வைக்குச் சமர்ப்பித்தல்.

இவ்விதிகளே ஒரு சில மாற்றங்களுட் ரொச்டேல் சமத்துவ முன்னோடிகளின் கூட்டுறவுக் கொள்கைகளாகப் பரிணமித்தன. இக்கொள்கை விபரங்களை இப்புத்தகத்தின் கூட்டுறவுக் கொள்கைகள் என்னும் பாடத்தின் கீழ் அவதானிக்கலாம்.

1844இல் ஆரம்பித்த இச்சங்கம் மிக விரைவில் மொத்த வியாபாரத்தை ஆரம்பித்தது. கூட்டுறவுக் காப்புறுதிக் கம்பனி ஒன்றை ஆரம்பிப்பதற்கும் இச்சங்கம் உதவியது. 1850இல் கூட்டுறவு நூல் ஆலையொன்றையும் ஆரம்பித்தது. முதலாம் மகாயுத்தத்தின் பின்னர் இச்சங்கம் கம்பனிச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டது. எனினும் அக்காலத்தில் நிலவிய பொருளாதார மந்தம் ஏனைய துறைகளைப் போலவே இச்சங்கத்தையும் பாதிக்கச் செய்தது. இதனால் 1934இல் இச்சங்கம் குலைக்கப்படலாயிற்று. எனினும் இம்முன்னோடிகளால் ஆரம்பிக்கப்பட்ட கருத்துக்களை அடியொற்றி உருவாகிய சங்கங்கள் இங்கிலாந்தில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இன்று வீறுநடை புரிகின்றன.

கல்விச் சேவைக்காக இவர்களால் ஆற்றப்பட்ட தொண்டுகள் அளப்பரியவை. கூட்டுறவுச் செய்திப் பத்திரிகை ஆரம்பித்தமை, தொழிலாளர்களுக்கான வாசிகசாலைகளை உருவாக்கியமை, முதியோர் கல்வி நிலையங்களை ஆரம்பித்தமை, 1852இல் ஏற்கனவே இருந்த கொள்கைகளுடன் கல்வியையும் ஒரு கொள்கையாகச் சேர்த்துக்கொண்டமை, அரச அதிகாரிகளின் எதிர்ப்பின் மத்தியிலும் கல்விக்கென 2½மூ - 10மூ வரை தேறிய இலாபத்தில் ஒதுக்கியமை என்பன இம்முன்னோடிகள் செய்த கல்விச் சேவைகளாகும்.

இம்முன்னோடிகளின் இறுதி அபிலாஷை தன்னுதவி, பரஸ்பர உதவியைப் பேணும் சமூகமொன்றைத் தோற்றுவிப்பதாக இருந்தது.


4. கூட்டுறவுச் சட்டங்கள்
ஜனநாயக நாடுகளிலும் சர்வாதிகார நாடுகளிலும் பொதுவுடமையைப் பேணும் நாடுகளிலும் அரசின் அதிகாரச் சின்னமாக விளங்குவன சட்டங்களே. அச்சட்டங்கள் ஒழுங்கு, நீதி, அறம், கட்டுப்பாடு, சமத்துவம், அமைதி என்பவற்றைப் பேணிக் காக்க எழுந்தனவாயினும் அரசின் இறைமைத் தன்மையை வெளிப்படுத்தும் சின்னமாகவும் விளங்குகின்றன. சட்டங்கள் இறைமையின் உச்சநிலையில் இருந்து உருவானால்தான் அவை உயர் சக்திமிக்க அதிகாரத் தன்மை கொண்டவையாக அமையும். எனவே ஜனநாயக அமைப்புள்ள நாடுகளில் மக்கள்பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய உயர் சபை (பாராளுமன்றம்)களால் ஆக்கப்படும் சட்டங்களே நாட்டின் உயர் சட்டங்களாகவும் அதிகாரத் தத்துவம் மிக்கவையாகவும் விளங்குகின்றன.

கூட்டுறவு பற்றி அரசு சட்டம் இயற்றினால், கூட்டுறவை ஒழுங்குபடுத்தல், பாதுகாத்தல், உரிமைகளை அளித்தல் என்பவற்றுடன் மட்டும் நில்லாது கட்டுப்படுத்தவும், அதற்கப்பாற்பட்ட பிற அதிகாரங்களும் தமக்குண்டு என்பதை அரசு மறைமுகமாக வெளிப்படுத்திக் கொள்கின்றது என்ற கருத்துடையோரும் இருக்கின்றனர். எனவே கூட்டுறவுக்கென விசேட சட்டங்கள் அரசால் இயற்றப்படாமல் நாட்டின் பொதுச் சட்டங்களுக்கமைவாகக் கூட்டுறவுச் சங்கங்கள் இயங்க வேண்டும். சட்டங்கள் பொதுவாக விவாதத்திற்கும், விமர்சனங்களுக்குமுட்பட்டவை, இவ்விவாதங்கள் நீண்டு செல்லுந்தன்மையுடையன. இதனால் கால தாமதங்களும், வீண் சிரமங்களும், அவசியமற்ற செலவீடுகளும் விவாதங்களும் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. எனவே சட்டங்களின்றிக் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட்டால் தான் கூட்டுறவின் புனிதத்தன்மையும் உயர் லட்சியமுங் கொண்ட சமுதாய அமைப்பு ஏற்பட வழிதோன்றும். இதற்காதாரமாகச் சில நாடுகளின் கூட்டுறவு இயக்க அமைப்பைக் காட்டுவார்கள்.

டென்மார்க்கில் கூட்டுறவுச் சங்கங்களுக்கென விசேட சட்டம் எதுவுமில்லை. நியூசிலாந்திலும் இவ்வித கூட்டுறவுச் சட்டங்களில்லை. ஆயினும் இவ்விரு நாடுகளிலும் கூட்டுறவு இயக்கம் மேம்பட்டுத்தான் விளங்குகிறது. டென்மார்க்கில் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டங்களால் உருவாக்கப்படவில்லை. கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே அல்லது அங்கத்தவர்களுக்கிடையே ஏதாவது பிணக்குகள் தோன்றினால் அவை வழக்கமாகச் சட்ட முறைப்படி அமையாத நடுவர் தீர்ப்புக்கே விடப்படுகின்றன. மிக அருமையாக இத்தகைய பிணக்குகள் நீதிமன்றங்களுக்குச் செல்வதுமுண்டு. அவற்றிற்கு வழங்கப்படும் தீர்ப்புக்கள் தீர்ப்பு வழிச் சட்டத் தொகுப்பில் இடம் பெறும். நியூசிலாந்தில் கூட்டுறவுச் சங்கங்கள் கம்பனிச் சட்டத்தின் கீழேயே பதிவு செய்யப்படுகின்றன. நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகள் அண்மைக்காலமும் வரை அம்முறையையே பின்பற்றின. சட்டத்திற்கப்பால் நின்றும் நீதி, அறம், ஒழுங்கு, சமத்துவம் என்பவற்றைப் பேணும் சக்தி கொண்டது கூட்டுறவு என்பதற்கு மேற்கூறிய நாடுகளின் கூட்டுறவு முறை எடுத்துக்காட்டாகும். இலட்சிய நோக்குடையோர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ள போதிலும் பெரும்பாலான நாடுகளிற் கூட்டுறவுச் சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன. கூட்டுறவின் வளர்ச்சித் தேவைக்கேற்ப அவை காலத்திற்குக் காலமும் மாற்றியமைக்கப்பட்டும் வந்துள்ளன.

கூட்டுறவுச் சட்டங்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றிப் பல்வேறு வகையான அபிப்பிராயங்கள் கூட்டுறவாளாகளிடையே இருக்கின்றன.

“கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுவதற்கும், அவை ஏனையவகை முயற்சிகளோடு சமமான முறையில் தொழிற்படும் உரிமையைப் பேணுவதற்கும் குறிப்பாகச் சட்டங்களியற்றப்பட வேண்டும். இத்தகைய சட்டங்கள் சங்கத்தை நிறுவுவதற்கும் பதிவதற்குமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதோடு, உபவிதிகள், உறுப்புரிமை நிபந்தனைகள், நிருவாக நடைமுறைகள், கூட்டுறவு என்னும் பதத்தினைப் பேணுதல், வெளியார் மூலம் கணக்குகளைப் பரிசோதனை செய்தல். சங்கங்களை வழிநடத்தல், சட்டங்களைச் செயற்படுத்தல், சங்கங்களைக் கலைத்தல் என்பவற்றிற்கான ஏற்பாடுகளையும் அடக்கியிருக்க வேண்டும். ஆனால் இவ்வேற்பாடுகள் கூட்டுறவாளரினதும் கூட்டுறவு நிறுவனங்களினதும் சுயாட்சித்தன்மை நிறைந்து சுதந்திரத்தை மறுப்பவையாக அமையக்கூடாது.”
-அனைத்துலகக் கூட்டுறவு நிறுவன மகாநாடு

“கூட்டுறவுச் சங்கத்தின் கடமைகள், சலுகைகள், உறுப்பினர் உரிமைகள், பொறுப்புக்கள், சொத்துக்கள், நிதிகள், கணக்குப் பரிசோதனை மேற்பார்வை, கட்டுப்படுத்தல், கலைத்தல் போன்றவற்றிற்கான சட்டங்கள் நல்லெண்ணங்கொண்ட தத்துவ அறிஞர்களின் படைப்புக்களல்ல. கூட்டுறவாளர்கள் நீண்டகாலமாகக் கடினமாக உழைத்து அனுபவ வாயிலாகப் பெற்ற படிப்பினைகளின் விளைவாகும். கூட்டுறவு இயக்கமூலம் பெறக்கூடிய பொருளாதார நன்மைகளை விட அதன் மூலம் பெறக்கூடிய அறஞ்சார்ந்த நன்மைகள் பொது அக்கறையுடைய மக்கள் ஒன்றுகூடி ஒரே சட்டத்திற்கு (கூட்டுறவுச் சங்கச் சட்டத்திற்கு)க் கீழ்ப்படிவதன் மூலமே பெற முடியும்.”

“மக்களை முன்னேற்ற, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, சுதந்திரத்தைப் பலப்படுத்த உள்ள ஒரு கருவி கூட்டுறவுச் சங்கங்கள் என்பதை உலகிலுள்ள எல்லா அரசாங்கங்களும் நன்குணர்ந்துள்ளன. எனவே மக்கள் எய்த விரும்பும் உயரிய இலட்சியங்களை அடைவதற்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உதவும் பொருட்டு அரசாங்கம் காவல் நாயாகவும், நடுவராகவும், ஒத்திசைவை ஏற்படுத்தும் நிறுவனமாகவும் இயைவு ஊக்கியாகவும் செயல்புரிய வேண்டும். வருமானத்தைத் திரட்டுவதல்ல இறுதி இலட்சியம். புறக்கணிக்கப்பட்ட பெரும்பாலான மக்களை ஒன்று திரட்டி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் உண்மையான வலுவுள்ள சக்தியாக அவர்களை ஆக்குவதே நோக்கமாக இருத்தல் வேண்டும்.”
-வால்டர்

“வௌ;வேறு நாடுகளின் கூட்டுறவுச் சட்டங்களிடையே அடிப்படை ஒற்றுமைகள் இருக்கவேண்டும். வௌ;வேறு நாடுகளின் பண்பாடுகளுக்கிடையே முக்கிய வேறுபாடுகளிருப்பது போல கூட்டுறவுச் சட்டங்களிடையேயும் முக்கிய வேறுபாடுகள் இருக்கும்.”
-கலாநிதி வல்கோ

“இறுதியில் சட்டமல்ல சட்டத்திற்குப் பின்னால் நிற்பவனே கருத்திற் கொள்ளப்படவேண்டியவன். கூட்டுறவுச் சட்டம் தேவையற்ற ஒன்றல்ல. ஆயினும் பின்வருவனவற்றுக்காகத் தேவைப்படுகின்றன.

(i) கூட்டுறவுச் சங்கங்கள் தமது கூட்டுறவுத் தன்மையைப் பேணுவதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நிபந்தனைகளை வரையறுத்தல்.

(ii) கம்பனிகளுக்கு வேண்டியது போன்ற நுட்பமான ஏற்பாடுகளின்றி சங்கங்களுக்கு ஒன்றிய சட்டத்தன்மை (சட்ட ஆளுமை)யை வழங்குதல்.

(iii) கூட்டுறவுச் சங்கங்கள் நிறுவப்படுவதனை ஊக்குவிப்பதற்கும், அவற்றின் தொழிற்பாடுகளுக்கும் உதவு முகமாகவும், கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சிறப்புரிமைகளையும் வசதிகளையும் வழங்குதல்.

(iஎ) வணிகச் சூதாடிகளும் முதலாளிகளும் இச்சிறப்புரிமைகளை அனுபவிப்பதைத் தடுப்பதற்கு முன்னேற்பாடுகள் எடுத்தல்.

(எ) கூட்டுறவுச் சங்கங்கள் பூரணமாகவும் தடையின்றியும் இயங்க வழி வகுத்தல்.

(எi) ஆசிய நாடுகள் போன்று கூட்டுறவு அபிவிருத்திக்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்குமிடத்து கூட்டுறவு இயக்கத்தை அரசு ஊக்குவிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் ஒத்திசைவு ஏற்படுத்துவதற்கும் நடுவராகவும் காவலனாகவும் கடமையாற்றுவதற்கு வழி வகுத்தல்.
-இந்திய அரசாங்க கூட்டுறவுச் சட்டக்குழு 1957

கூட்டுறவுக் கொள்கைகளைப் பொறுத்த வரையில் அரசின் பங்கைப் பற்றிய சில கருத்துரைகள் மேலே தரப்பட்டன. இவற்றைக் கொண்டு கூட்டுறவுத்துறையில் அரசின் பங்கைப் பின்வரும் வகைகளிற் பிரிக்கலாம்.

1. நடுநிலைக் கொள்கை: அரசு கூட்டுறவு இயக்கத்திற்கு எதிர்ப்போ அல்லது ஆதரவோ அளிக்காத நிலையில் இருத்தல். கூட்டுறவு இயக்கம் தனது முயற்சியாலும் செயல்களினாலும் தானே இயங்குந் தன்மையைப் பெற்று வளர்ச்சியடைதல், அமெரிக்காவிலும் ஐரோப்பாவில் சில நாடுகளிலும் அரசு இக் கொள்கையைப் பின்பற்றுகின்றது.

2. உதவிக் கொள்கை: கூட்டுறவியக்கத்தில் அதன் செயற்பாடுகளில் எவ்விதத்திலும் தலையிடாது அதற்குச் சமுதாய நலன் கருதிக் காலத்திற்குக் காலமும் அரசின் உதவி தேவைப்படும் போது மட்டும் கூட்டுறவு நிறுவனங்களாற் கோரப்படும் உதவிகளைச் செய்தல்.

3. வளர்ச்சிக் கொள்கை: தேசிய பொருளாதார சமுதாய நலன்கள் வளர்ச்சியுற கூட்டுறவு இயக்கத்தின் கொள்கைகளும் செயற்பாடுகளும் சிறந்தன என்பதை உணர்ந்து அவற்றை மக்களிடையே பரப்பவும் வளர்க்கவும் அரசு முயற்சி எடுத்தல்.

4. முகவர் கொள்கை: கூட்டுறவு இயக்கத்தின் சிறந்த கொள்கைகளையும் செயற்பாடுகளையும் நிலைக்களனாகக்கொண்டு அரசின் நோக்கங்களைச் செயற்படுத்தக் கூட்டுறவு இயக்கத்தைச் சிறந்த கருவியாகப் பயன்படுத்தல். அரசின் திட்டங்களைச் செயற்படுத்தும் அரசின் ஒரு கூறாகவே கூட்டுறவு இயக்கம் இவ்வித நிலையில் இருக்கும்.

எந்த நாட்டிலும் கூட்டுறவு இயக்கம் பொதுச் சட்டத்தினாலோ அல்லது சிறப்புச் சட்டத்தினாலோ சில ஒழுங்கு விதிகளுக்குட்பட்டேயிருக்கும். கூட்டுறவு சட்டம் என்னும் போது கூட்டுறவு நிறுவனங்கள் மீது அரசின் கட்டுப்பாடு எனச் சுருக்கமாகக் கூறலாம். ஒரு நாட்டின் கூட்டுறவுச் சட்டத்தினால் கூட்டுறவு இயக்கத்திற்கு ஏற்படும் விளைவுகளை ஆராயும் பொழுது சில முக்கிய அம்சங்களைக் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். கூட்டுறவு இயக்கத்தில் அரசுக்கிருக்கும் அக்கறையின் தன்மை, கூட்டுறவு பற்றிய சாதாரண மக்களின் அறிவு, கூட்டுறவு பற்றிய மக்களுணர்வு. அரசின் கட்டுப்பாட்டிற்கான நியாயங்கள், உறுப்பினர்களின் அறிவு, ஆற்றல், தன்மை, உறுப்பினர்களின் கூட்டுறவு மனப்பான்மை, மக்களின் இயல்பான கலாசாரப் பண்பாட்டுத் தன்மை போன்றனவே அம் முக்கிய அம்சங்களாகும். எனவே இவற்றின் தன்மைக்கேற்ப நாட்டுக்கு நாடு கூட்டுறவுச் சட்டங்களில் சில மாற்றங்கள் இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றங்கள் இருக்கமாட்டா.

கூட்டுறவு பற்றிய சட்டங்களை இயற்றும் வழிகளைப் பின்வருமாறு வகுக்கலாம். அவையாவன:

(i) வணிகச் சட்டங்களுள் கூட்டுறவுச் சட்டங்களையும் சேர்த்து தேசியசபை (பாராளுமன்றம்) சட்டமியற்றல்.

(ii) வணிக நிறுவனங்களிலிருந்து கூட்டுறவு தனித்தன்மை கொண்டதால் கூட்டுறவு பற்றிச் சிறு (சுருக்கமான) சட்டத்தைத் தேசியசபை (பாராளுமன்றம்) இயற்றல். விபரமான துணைச் சட்டத்தை இயற்றும் அதிகாரத்தைத் தேசிய சபை (பாராளுமன்றம்) பொருத்தமான நிறுவனத்திடம் அல்லது நிருவாகியிடம் ஒப்படைத்தல்.

(iii) விரிவானதும் விளக்கமானதுமான நீண்ட கூட்டுறவுச் சட்டத்தையே தேசியசபை (பாராளுமன்றம்) இயற்றுதல்.

கூட்டுறவுச் சங்கங்களும் வணிக முயற்சிகளிலீடுபடுவதால் வணிக முயற்சிகளையடக்கும் பொதுச் சட்டமே போதும் எனச் சிலர் கருதுகின்றனர். அதனை மறுப்பவர்கள் வணிக நிறுவனங்களிலிருந்து கூட்டுறவு மாறுபட்டதென்பதையும் அதன் தனித்தன்மையைத் தெரிவிக்கவும் பேணவும் முதலாளித்துவத்திலிருந்தும், வணிகப் போட்டிகளிலிருந்தும் தம்மைக் காத்துக் கொள்ளவும் அரசின் சலுகைகளைப் பெறவும் கூட்டுறவுக்குத் தனிச் சட்டம் வேண்டுமென்று கூறுவர்.

தேசிய சபையில் (பாராளுமன்றத்தில்) ஒரு சட்டம் நிறைவேறுவது சுலபமானதும் விரைவானதும் எனிதானதுமன்று. அதற்குக் காலதாமதத்தை ஏற்படுத்தும் விதி முறைகளும், மரபுமுறைகளும் உண்டு. காலதாமதத்தை நீடித்துக்கொண்டு போகக்கூடிய சூழ்நிலைகளும் உண்டு. இயற்றப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்வதென்றாலும் இத்தகைய கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். சட்டம் எவ்வளவுதான் நிறைவானதாகவும் குறைபாடற்றதாகவும் இருந்து பாரட்பசமின்றிச் செயற்படுத்தப்பட்டாலும் அது செம்மையான கூட்டுறவுச் சங்கங்கள் உருவாதலுக்கு உத்தரவாதமல். சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களும் திருத்தங்களும் விரைவிலும் இலகுவிலும் செய்யக்கூடிய நெகிழ்ச்சித்தன்மை நிறைந்த துணைச்சட்ட முறையாகிய இரண்டாவது முறையே உகந்தது எனக் கூறுவர் சிலர்.

துணைச் சட்டமுறையை எதிர்ப்போர், நிறுவனங்களதும் அதிகாரிகளதும் மாற்றங்களினால் அவர்களின் நோக்கு, விருப்பு வெறுப்பு என்பவற்றிற்கமைய விரைவில் மாற்றங்களைச் சட்டம் விதிகளில் ஏற்படுத்த முடியும். இதனால் உண்மை நோக்கு, அமைப்பு, செயற்பாடுகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு நிலையான தன்மையும் ஒழுங்குத் தன்மையும் சீர்குலைதற்கு வழிபிறக்குமெனக் கூறுவர்.

நீண்டதும் விரிவானதுமான சட்டங்கள் வரையறைக்கும் மேற்பார்வைக்கும், நிரந்தர ஒழுங்குத் தன்மைக்கும் வழிவகுப்பனவென்று அதனை ஆதரிப்போர் கூறுவர். துணைச் சட்டத்தின் நிறைகள் இதன் குறைகளென இதனை எதிர்ப்போர் கூறுவர்.

கூட்டுறவுச் சட்டத்தின் அவசியத் தன்மை:
கூட்டுறவு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக விளங்குதல், ஒன்றிய தன்மை (சட்ட ஆளுமை) யைக் கூட்டுறவுச் சங்கங்கள் பெறல், கூட்டுறவுக் கொள்கைகளைச் சிதைவுறாது பாதுகாத்தல், அரசுக்கும் கூட்டுறவுக்குமுள்ள தொடர்புகளை வரையறுத்தல், அரசு அளிக்கும் சலுகைகள் உதவிகளை வரையறு;ததல், அரசின் அதிகாரத் தன்மையை வரையறுத்தல், பொதுச் சட்டங்களுடன் உள்ள சில முரண்பாடுகளைத் தவிர்க்க விசேட ஏற்பாடுகளைச் செய்தல், கூட்டுறவு என்னும் பதத்தைப் பேணிப் பாதுகாக்கும் உரிமை பெறல், இடையறாத தொடர்ச்சி ஏற்படல், அறிவு குறைந்த சாதாரண உறுப்பினர்களின் நலன்களைப் பேணல், நிதிப் பிரயோகங்களைச் சரியான வழியில் பயன்படுத்துதல். வலுக்குறைந்த அங்கத்தவர்களின் சமத்துவத்தைப் பேணல், வீண் விரயங்களையும் துர்ப்பிரயோகங்களையும் தவிர்த்தல், மேற்பார்வ எண்பார்வை போன்ற கடமைகளைச் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்காகக் கூட்டுறவுச் சட்டங்கள் அவசியமாகின்றன.

கூட்டுறவுச் சட்டம் கூட்டுறவு அபிவிருத்திக்கு மூலகாரணம். எனவே சட்டமும் அதன் செயல்முறைகளும் கூட்டுறவின் உண்மை நோக்கங்களையும் கொள்கைகளையும் உறுப்பினருக்கிக்க உதவவேண்டும். உதவிகளும் சலுகைகளும் மட்டும் பெறும் நிறுவனந்தான் கூட்டுறவு என்ற மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அமையக் கூடாது. அரசு கூட்டுறவு இயக்கத்தை ஆட்டிப் படைப்பவர் என்ற நிலையிலிருந்து மாறி வழிகாட்டியாகவும். நலத்தைப் பேணுபவராகவும் விளங்க வேண்டும். கூட்டுறவு அபிவிருத்தி தமது பொறுப்பு. வேறுயாருமல்ல என்ற நிலைக்கு உறுப்பினர்களின் நிலை உயர உயர கூட்டுறவில் சட்டத்தின் பங்கு அரசின் கட்டுப்பாடு குறைந்து விரைவில் இல்லாது போதல் வேண்டும். இந்த நிலையில் இருந்து மாறுபட்டு அரசின் கட்டுப்பாடுகளும் சட்டத்தின் இறுக்கமும் அதிகரித்துக் கொண்டு வந்தாற் கூட்டுறவு வீழ்ச்சியடைந்து விரைவில் மறைந்துவிடும்.

எனவே கூட்டுறவுச் சட்டங்கள், உறுப்பினர்களின் சுயாட்சித் தன்மை நிறைந்த சுதந்திரத்தை நிலைநிறுத்துவனவாகவும் சங்கங்களின் தன்னாதிக்கம் நிறைந்த இறைமையைப் பேணிச் சுதந்திரமும் சுயாட்சித் தன்மையும் நிறைந்த நிறுவனங்களாக வளர்ந்து செயற்படுத்துவதற்குள்ள தடைகளை அகற்றுவனவாகவும், உண்மையான கூட்டுறவு இயக்கமாக வளர்ந்து நாட்டின் அபிவிருத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலும் அரசுடன் சரிசமமான பங்காளியாக விளங்க வழிவகுப்பதாகவும் அமைதல் வேண்டும்.

கூட்டுறவுச் சட்டத்தின் வரலாற்றுத் தன்மை:
எந்தச் சட்டமும் அச் சட்டம் தோன்றிய காலத்திலுள்ள அந்நாட்டின் பொருளாதார சமுதாய அரசியல் சூழ்நிலைகளையும் அச் சூழ்நிலைகள் பற்றி அரசு கொண்டிருந்த நோக்கையும் பிரதிபலிப்பதாக இருக்கும். இவ்விதிக்குக் கூட்டுறவுச் சட்டங்கள் விதிவிலக்கானவையல்ல. 1852ஆம் ஆண்டில் இங்கிலாந்திற் கூட்டுறவுச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் உருவாக முன்பே றொச்டேல் சமத்துவ முன்னோடிகள் 1844ல் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பித்து நடைமுறையில் இருந்து நட்புறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் பதிந்தனர். 1844ஆம் ஆண்டுக்கு முன்பே றொபேர்ட் ஒவன் கூட்டுறவு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளுக்கு அரசின் ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணங்கள் பொருளாதார விடயங்களில் இங்கிலாந்து அரசின் தலையிடாக் கொள்கைச் செல்வர்கள், வணிகர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்கள், றோபேர்ட் ஓவனுக்கும் மதவாதிகளுக்குமிருந்த கருத்து வேறுபாடுகளுமாகும். கிறிஸ்தவ சமதர்ம வாதிகளின் முயற்சியினாலே 1852ம் ஆண்டில் கூட்டுறவுச் சட்டம் உருவாகியது. அதிலும் பதிவு பெறும் உரிமை போன்ற அத்தியாவசியச் செயல்களைச் சட்டமாக்கியதே தவிர தொடர்ந்தும் கூட்டுறவில் தலையிடாக் கொள்கையையே இங்கிலாந்து பின்பற்றி வந்தது.

டென்மார்க்கில் 1850ஆம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இது பூரணமான கூட்டுறவுச் சட்டமெனக் கூறமுடியாது. இச் சங்கங்கள் பங்கு முதலைப் பெறாமலும் அங்கத்தவர்களிடம் வைப்புத் தொகை பெறாமலும் விவசாயிகளுக்கு நீண்ட காலக் கடன்களை வழங்கின. விவசாயிகளுக்கு நிலத்தைக் கொள்வனவு செய்வதற்கும் வேறு நிரந்தரத் தேவைகளுக்கும் 30,40 வருடக் கடன்களைக் கூடக் கொடுத்தன. இச் சங்கங்களை அரசே தோற்றுவித்து நடத்தியது. இச் சங்கங்கள் முழுமையான கூட்டுறவுச் சங்கங்கள் அல்ல. டென்மார்க்கின் விவசாய நிலங்கள் ஒரு சிலரின் கையிலிருந்தன. நிலச் சொந்தக்காரர்கள் பணம் இன்மையால் நிலங்களைப் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்த முடியாமல் இருந்தார்கள். விவசாயிகள் நிலமின்றித் தவித்தார்கள். இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கோடு விவசாயிகள் நிலங்களைப் பெற்று விவசாயத்தை அதிகரிக்க உதவவேண்டுமெனவும் நிலச் சொந்தக்காரர்களும் நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டுமெனவும் இருந்த சூழ்நிலையே இவ்வித சட்டத்தை உருவாக்கியது. அரசின் இத்தூண்டுகோல், டென்மார்க் மக்களை, அரசின் உதவியின்றிச் சட்டப் பாதுகாப்பின்றிப் பல கூட்டுறவுச் சங்கங்களை உண்மையான இலட்சியக் கொள்கைகளுக்கமைய உருவாக்கி வளர்க்க உதவியது. இப்போது கூட்டுறவில் அரசின் சட்டப் பங்கு மிகக் குறைவு.

அமெரிக்காவில் 1865இற் கூட்டுறவுக்கு ஆதரவான சட்டம் அரசால் உருவாக்கப்பட்டது. இந்நாடு ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து குடியேறிய மக்களைக் கொண்டது. குடியேறச் சென்றவர்கள் ஒருவர்க்கொருவர் உதவியாக வாழவேண்டுமென்ற ஒப்பந்த அடிப்படையிற் சென்றனர். ஆரம்பத்திலேயே விவசாய முயற்சிகளிலும் கால்நடை வளர்ப்பிலும் கூட்டுறவு முறைகளைப் பின்பற்றி வந்தனர். நாளடைவில் இவற்றுக்கான சங்கங்களையும் ஆரம்பித்தனர். ஏராளமாக மரங்கள் கிடைத்தமையால் மரவீடுகளையே அக்கால மக்கள் அமைத்தனர். இரவில் ஒளிக்காகப் பயன்படுத்திய நெருப்பு வீடு, கடைகள், பண்ணைகளில் அடிக்கடி தீவிபத்தை ஏற்படுத்தியது. இதனால் கிராமப்புற மக்கள் பெருந்துயரடைந்தனர். இந்நிலையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த பெஞ்சமின் பிராங்கிளின் கூட்டுறவுக் காப்புறுதித் திட்டமொன்றை முன்வைத்தார். ஆரம்பத்தில் இக்கருத்துக்கு மக்கள் தயக்கம் காட்டினாலும் நாளடைவில் ஏற்றுக்கொண்டார்கள்;. இதன் விளைவாக 1865இற் கூட்டுறவுக் காப்புறுதிச் சங்கங்கள், கால்நடைச் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள் போன்றவை சட்ட அங்கீகாரம் பெற்றன.

ஜேர்மனியில் 1867ஆம் ஆண்டு கூட்டுறவுச் சட்டம் உருவாகியது. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜேர்மனியின் கிராமங்களிலுள்ள விவசாயிகளும் நகர்ப்புறங்களிலுள்ள கைத்தொழிலாளர்களும் பசி, பட்டினி, வறுமை, நோய் என்பவற்றாற் பீடிக்கப்பட்டுக் கஷ்டப்பட்டனர். தங்கள் பணத் தேவைகளுக்காக யூதர்களிடம் கடன் வாங்கிக் கடும் வட்டியாலும் கொடுமையான அறவீட்டு முறைகளாலும் பெருந்துன்பத்துக்காளாகி இருந்தனர். இந்த அவல நிலையைப் போக்க, சூல்ஸ் என்பவரும் ரபெஸ்சன் என்பவரும் இருவகையான கடனுதவு வங்கிகளைக் (சங்கங்களை) கூட்டுறவு முறையில் ஆரம்பித்தனர். முதற் கடனுதவு சங்கம் 1850ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இச் சங்கங்களின் வளர்ச்சியும் அங்கத்தவர்கள் பெற்ற நயமும், அரசை ஆதரிக்கச் செய்தன. இக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆதரவளிக்கு முகமாக 1867இல் ஜேர்மன் அரசு கூட்டுறவுச் சட்டத்தை உருவாக்கியது. கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் வழிகாட்டியாகவும் ஜேர்மனி விளங்கியது.

19ஆம் நூற்றாண்டில் அடிக்கடி ஜப்பானுக்கும் சீனாவுக்கும் சண்டைகள் ஏற்பட்டன. இதனால் பொருள்களின் விலைகள் அதிகரித்து மக்கள் கஷ்டப்பட்டனர். விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 1879இல் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்பட்டன. பொருளாதார நிலையை உயர்த்த என்ன வழிகளைக் கையாளலாம் என அரசு தீவிரமாகச் சிந்தித்தது. ஜேர்மனியி; கூட்டுறவு இயக்கம் பற்றி ஆராய ஜப்பான் உள்நாட்டமைச்சர் அங்கு சென்று அதன் முறைகளை நன்கு ஆராய்ந்து வந்து 1900ஆம் ஆண்டில் அரசு மூலம் கூட்டுறவுச் சட்டம் ஒன்றை உருவாக்கினார்.

இந்தியாவில் 1904ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் ஆரம்பமாவதற்கு மூல காரணம் விவசாயிகளின் வறுமையே. விவசாயிகள் கடன் தொல்லையாற் பெருங்கஷ்டப்பட்டனர். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில அரசு நாட்டில் பஞ்சத்தையும் வழமையையும் போக்க எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்து அதற்கான சட்டங்களையும் உருவாக்கியது. 1883இல் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டம் 1884இல் ஏற்படுத்தப்பட்ட விவசாயிகள் சட்டம் என்பன இவற்றுள் முக்கியமான சட்டங்களாகும். இவற்றினால் ஏழை விவசாயிகளின் வாழ்க்கையில் எவ்வித மாற்மும் ஏற்படவில்லை. சென்னை அரசாங்கம் விவசாய வங்கிகளை நிறுவி விவசாயிகளுக்குக் கடனுதவி செய்ய விரும்பியது. இத்திட்டத்தினை அமுல் நடாத்த வாய்ப்பான அறிக்கை ஒன்றைத் தயாரிக்க, சேர் பிரடெரிக் நிக்கல்சன் என்பவரை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியது. கூட்டுறவு இயக்கத்pன் தன்மைகளை ஆராய்ந்த நிக்கல்சன் 1893ஆம் ஆண்டு தனது அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தார். ரபெய்சன் கடனுதவி வங்கி (சங்க) முறையே இந்தியாவுக்கு ஏற்றது என்பது அவர் அப்பிராயம். இதனடிப்படையில் 1904இல் கூட்டுறவுக் கடன் சங்கச் சட்டம் உருவாகியது.

இந்தியாவில் இக்காலத்தில் வறுமையும் ஏழ்மையும் ஒரு புறத்தில் மக்களை வாட்ட மறுபுறத்தில் சுதந்திர எழுச்சியும் இயக்கங்களும் ஏற்பட்டன. இச் சூழ்நிலையில் ஏற்பட்ட கூட்டுறவுச் சட்டங்களில் சுதந்திரம், சுயாட்சித் தன்மை என்பன கட்டுப்படுத்தப்படும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்னுள்ள கூட்டுறவுச் சட்டங்கள் எல்லாம் இத்தன்மை கொண்டனவாகவே அமைந்தன. அதனை அடியொற்றிக் கூட்டுறவுச் சட்டங்கள் இருக்கும் வரை சுயாட்சித் தன்மையும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருக்கும்.

இலங்கையிற் கூட்டுறவுச் சட்டம் 1911ஆம் ஆண்டு மே மாதத்திற் சட்டசபையால் நிறைவேற்றப்பட்டது. இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த காலமும். இக்காலத்தில் இலங்கையில் இரு வகைப் பொருளாதார அமைப்புக்கள் காணப்பட்டன. இலங்கையிற் பாரம்பரியமாக இருந்து வந்த கிராமியப் பொருளாதார முறை ஒன்று. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையையும் நகரத்தையும் சார்ந்திருந்த நவீன பொருளாதார முறை மற்ற. ஆங்கிலேயர் பெருந்தோட்டங்களை அமைக்க ஆரம்பித்ததும் கிராமப்புற மக்களிற் பலர் தமது நிலங்களை இழந்தனர். அவர்களது பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்தன. அக்கால மக்களிடம் கல்வியறிவும் குறைந்திருந்தது. ஆங்கில எழுத்து வாசனை அறிவு சுமார் 2 வீதத்தினரே பெற்றிருந்தனர். தாய் மொழியில் சுமார் 30 வீதத்தினரே எழுத்து வாசனை அறிவு பெற்றிருந்தனர். இத்தகைய கல்வி அறிவற்ற நிலையையும், பொருளாதாரத்தில் சீர்குலைவுற்ற நிலையையும் பயன்படுத்தி வட்டிக்குப் பணங் கொடுப்போரும் வியாபாரிகளும் கிராமப்புற ஏழைகளைப் படுமோசமாகச் சுரண்டினர்.


5. இலங்கைக் கூட்டுறவுச் சங்கச் சட்டமூலங்கள்
இலங்கையிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களைக் கூட்டுறவுக் கொள்கைகளுக்கமைய அமைக்கவும் ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் இன்னோரன்ன பிற செயல்களுக்கு உதவும் பொருட்டும் இயற்றப்பட்டவையே சட்ட மூலங்களாகும். சட்டங்கள் இரு வகையின.

1. பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள்.

2. துணை நிலைச் சட்டங்கள்.

பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் என்ற வகுப்புள் அமையும் இரு சட்டமூலங்கள் கூட்டுறவுத்துறை தொடர்பானவை.

அ) 1972ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கக் கூட்டுறவுச் சட்டம் - இச்சட்ட மூலத்திற்கு கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டங்கள்.

ஆ) 1972ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கக் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழச் சட்டம். இச்சட்டம் தொடர்பான 1992ஆம் ஆண்டின் 51ஆம் இலக்கத் திருத்தச் சட்டம்.

இவ்விரு சட்டங்கள் பற்றியும் இப்பகுதியில் நாம் விரிவாக ஆராய உள்ளோம்.

துணை நிலைச்சட்டங்கள் நிர்வாகத் துறையினால் ஆக்கப்படுபவை. பாராளுமன்றத்தால் ஆக்கப்படும் மூலச்சட்டவர்க்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர், அல்லது ஒரு நிர்வாக அதிகாரி, அல்லது குழு ஆக்கும் சட்டங்களே துணை நிலைச் சட்டங்களாகும். இத்துணை நிலைச்சட்டங்களை விதிகள், பிரமாணங்கள், கட்டளைகள் என்னும் மூன்று பதங்களாற் குறிப்பிடப்படும் மரபு இலங்கையில் உள்ளது. கூட்டுறவு தொடர்பான துணை நிலைச் சட்டங்கள் இரண்டு உள்ளன. அவற்றை தெரிந்திருத்தல் அவசியம்.

அ) கூட்டுறவுச் சங்க விதிகள். இவை கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் அமைச்சருக்குள்ள அதிகாரங்களின் படி ஆக்கப்பட்டவை.

ஆ) 1972ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கக் கூட்டுறவு வேலையாளர்

ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட பிரமாணங்கள்.
கூட்டுறவுச் சங்கம் ஒன்றின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பிரதான இரு சட்ட மூலங்களையும் இரு துணை நிலைச் சட்டங்களையும் பற்றிக் குறிப்பிட்டோம். இவற்றை விடச் சங்கம் ஒன்று பதிவு செய்யப்படும் பொழுது பதிவு செய்யப்படும் துணை விதிகள் சங்கத்தின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் துணை நிலைச்சட்டவாக்கங்களுள் ஒன்றாக அமைந்துள்ளமையும் கவனித்தல் வேண்டும். இத்துணைவிதிகள் கூட்டுறவுச் சங்கச் சட்டம், அதன் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் ஆகிய இரண்டிற்கும் உட்பட்டதாக அமைந்துள்ளன.

இப் பகுதியில் ஆராயப்படவிருக்கும் சட்டங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

1. கூட்டுறவுச் சங்கச் சட்டம்.

2. கூட்டுறவுச் சங்க விதிகள்.

3. கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுச் சட்டம்.

4. கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுப் பிரமாணங்கள்.

5. கூட்டுறவுச் சங்கத் துணைவிதிகள்.


கூட்டுறவுச் சங்கச் சட்டம்:
இலங்கையில் கூட்டுறவுச் சட்டம் சுமார் 70ஆண்டுகால வரலாற்றை உடையது. 1911ஆம் ஆண்டு தொடக்கம் காலத்துக்குக் காலமும் தேவைக்கு ஏற்ப மாற்றங்களையும் திருத்தங்களையும், விசேட ஏற்பாடுகளையும் தன்னகத்தே பெற்று வளர்ச்சி பெற்றுள்ளது இன்று நடைமுறையில் 1972ஆம் ஆண்டின் 5ம் இலக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் இருக்கின்றது. அத்துடன் 1970ஆம் ஆண்டின், 34, 35ஆம் இலக்கக் கூட்டுறவுச் சங்கங்களின் விசேட சட்டங்கள், 1978ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கக், கூட்டுறவுச் சங்கங்களின் விசேட ஏற்பாடுகளின் சட்டம் 1983ஆம் ஆண்டு 32ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் 1992ஆம் ஆண்டு 12ஆம் இலக்கத்திருத்தச் சட்டம், 1992ஆம் ஆண்டு 51ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1972ஆம் ஆண்டு 12ஆம் இலக்கக் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழச் சட்டம், 1989ஆம் ஆண்டு 12ஆம் இலக்க மாகாண சபைகள் இடைநேர் விளைவான ஏற்பாட்டுச் சட்டம் ஆகியனவும் நடைமுறையில் இருக்கின்றன. தேசியப் பேரவைக் கூட்டுறவுச் சட்டங்களே அதிகாரத்தின் பிறப்பிடம். அவற்றுக்கமைய அல்லது அச்சட்டங்களில் குறிப்பிடப்படாத விடயங்களின் பொருட்டே ஏனைய சட்டங்களைப் பயன்படுத்தலாம்.

இச்சட்டமே கூட்டுறவின் முக்கியமான மூலச் சட்டமாகக் கருதப்படவேண்டியது. ஏனையவை இவற்றின் வழிச் சட்டங்களாகத் துணைச்சட்டங்களாக, ஆதரவுச் சட்டங்களாகக் கருதப்பட வேண்டியவை. எனவே இச்சட்டத்துக்கு முரணான கருத்துக்கள் உடையனவாக ஏனைய சட்டங்கள் அல்லது பிரமாணங்கள் அல்லது விதிகள் அமைய முடியாது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஓரளவு கூட்டுறவுக் கொள்கைகளையுடைய மிகச் சில சங்கங்கள் தோன்றியுள்ள போதிலும் அவை பதிவு செய்யப்படவில்லை. 1904இல் இலங்கை விவசாயச் சங்கம் என ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் அங்கமாக விவசாயக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இலங்கை ஆள்பதி (தேசாதிபதி) சேர் ஹென்றி பிளேக் கடமையாற்றினார். விவசாயக் குழுவின் செயலாளராகக் கடமையாற்றிய டென்காம் அவர்கள் கட்டுரை வாயிலாகக் கூட்டுறவுக் கருத்துக்களையும் செய்திகளையும் திரட்டி வெளியிட்டார். இதன் விளைவாகத் தென் மாகாணத்தில் சில இடங்களிலும் வவுனியாவிலும் கால்நடைகள், விவசாயம் போன்றவற்றில் கூட்டுறவுக் கோட்பாட்டைப் பின்பற்றிச் சங்கங்கள் உருவாகின. தும்பறையிலும், தெலியாவிலை என்னும் இடத்திலும் கடனுதவி சங்கங்கள் நிறுவப்பட்டன.

இந்திய அரசாங்கம் கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவித்து வந்ததை இலங்கை அரசாங்க அதிகாரிகள் அறிந்தனர். இலங்கையில் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நிறுவப்பட வேண்டுமென்ற தகவுரை முதன்முதலாக 1908இல் தான் செய்யப்பட்டது. 1909இல் சேர்ஹென்றி மக்கலம் ஆள்பதியாக இருந்தபோது விவசாய வங்கிகள் பற்றிய விசாரணைக்குழு ஒன்றை நியமித்து அதற்கொரு மகஜரையும் சமர்ப்பித்தனர். அம் மகஜரில் சேர் பிரெடரிக் நிக்கல்சன் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய கூட்டுறவுக் கடனுதவு சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு இங்கு நடைமுறைப்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்பட வேண்டுமெனக் கோரப்பட்டது. விவசாய வங்கிகள் விசாரணைக் குழு 1910இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இலங்கைக் கூட்டுறவு இயக்கம் பற்றிய முக்கித்துவம் வாய்ந்த முதல் அறிக்கை இது. இவறிக்கையின் அடிப்படையில் 1911ஆம் ஆண்டு ஏப்பிரல் 12ஆந் திகதி கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான ஒரு கட்டளைச் சட்டம் சட்ட சபையில் சமர்ப்பிக்கப்பட்டு மே மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டுறவுச் சட்டம் இந்தியாவிலும் இலங்கையிலும் ஏறக்குறைய ஒரே பின்னணியில் ஆங்கிலேயராட்சிக் காலத்தில் அவர்களின் தாராளமான மனப்போக்கால் ஏற்படுத்தப்பட்டவையாகும். சில நாடுகளில் கூட்டுறவுச் சட்டங்கள் தோற்றுவதற்கிருந்த பின்னணிகள் எவை என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

1972ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம்:
“கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திக்கு ஏற்பாடு செய்வதற்கும், கூட்டுறவுச் சங்கங்களின் அமைப்புக் கட்டுப்பாடு என்பன தொடர்பான சட்டத்தினை ஒன்று திரட்டுவதற்கும் திருத்துவதற்கும் அவற்றோடு தொடர்புபட்டவையும் அவற்றின் இடைநேர் விளைவானவையுமான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானதொரு சட்டம்” என இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இச் சட்டத் தொகுப்பில் 75 சட்டங்களும் ஒவ்வொரு சட்டத்திற்கும் பல உட்பிரிவுகளும் உண்டு. இச் சட்டங்கள் பதினான்கு அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதலாவது சட்டம் பெயரைப் பற்றியதாகும். “இச் சட்டமானது தேசியப் பேரவையின் 1972ஆம் ஆண்டின் ஐந்தாம் இலக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் என எடுத்துக் காட்டப்படலாம்” எனக் கூறுகிறது. இச்சட்டம் அத்தியாயங்களுக்குள் அடக்கப்படாது தனியாக வைக்கப்பட்டுள்ளது.

1ஆம் அத்தியாயம்: பதிவு (2ஆவது சட்டம் தொடக்கம் 10 ஆவது சட்டம் வரை)

2ஆம் அத்தியாயம்: பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் உறுப்பினர்களும் அவர்களின் உரிமைகளும் பொறுப்புக்களும் (11ஆவது சட்டம் தொடக்கம் 17ஆவது சட்டம் வரை)

3ஆம் அத்தியாயம்: பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் கடமைகள் (18ஆவது சட்டம் தொடக்கம் 19ஆவது சட்டம்வரை)

4ஆம் அத்தியாயம்: பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் சிறப்புரிமைகள், (20ஆவது சட்டம் தொடக்கம் 34ஆவது சட்டம் வரை)

5ஆம் அத்தியாயம்: முத்திரை வரியிலிருந்தும் சட்டங்களிலிருந்தும் விலக்களித்தல். (35ஆவது சட்டம்)

6ஆவது அத்தியாயம்: துணை விதிகள் தொடர்பான பொது ஏற்பாடுகள் (36ஆவது சட்டம் தொடக்கம் 38ஆவது சட்டம் வரை)

7ஆம் அத்தியாயம்: பதிவு செய்யப்பட்ட ஆதனமும் நிதிகளும் (39ஆவது சட்டம் தொடக்கம் 43ஆது வரை)

8ஆம் அத்தியாயம்: கணக்காய்வு, விசாரணை, சோதனையிடல் அல்லது நுண்ணாய்வு. (44ஆவது சட்டம் தொடக்கம் 47ஆவது வரை)

9ஆம் அத்தியாயம்: பதிவு செய்யப்பட்ட சங்கமொன்றின், குழுவைக் கலைத்தல். (48ஆவது சட்டம்)

10ஆம் அத்தியாயம்: பதிவு செய்யப்பட்ட சங்கமொன்றைக்கலைத்தல் (49ஆவது சட்டம் தொடக்கம் 57ஆவது சட்டம் வரையும்)

11ஆம் அத்தியாயம்: பிணக்குகள் (59ஆவது சட்டம் தொடக்கம் 60ஆவது சட்டம் வரை)

12ஆம் அத்தியாயம்: விதிகள் (61ஆவது சட்டம்)

13ஆம் அத்தியாயம்: அரசாங்கத்திற்குப் போகுமதியான கடன்கள் (62ஆவது சட்டம்)

14ஆம் அத்தியாயம்: நானாவிதமானவை. (63ஆவது சட்டம் தொடக்கம் 75ஆவது சட்டம் வரை)

கூட்டுறவுச் சங்கங்களின் விசேட ஏற்பாடுகள் சட்டம் 1978ஆம் ஆண்டு 12ஆம் இலக்கச் சட்டம்:
இச்சட்டம் 1978ஆம் ஆண்டு யூலை மாதம் நடைமுறைக்கு வந்தது. இதுவொரு இடைக்காலச் சட்டம். அதாவது 18மாதங்களுக்கு மட்டுமென்ற பொது நிபந்தனையோடு இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு நியமிக்கப்பட்ட நெறியாளர் குழுவின் காலஎல்லை முழுக்காலம் வரைக்கும் நீடிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. குறைந்த கால எல்லைக்கும் நியமனங்கள் செய்யப்படலாம். இச்சட்டத்தின் ஏற்பாடுகளை எல்லாக் கூட்டுறவுச் சங்கங்களும் உபயோகிக்க வேண்டுமென்ற அவசியமுமில்லை.

நெறியாளர் குழுக்கள் செயலிழந்த சங்கங்கள், நெறியாளர் குழுத்தேர்தல், கிளைக்குழுத் தேர்தல் போன்றவை நடைமுறையில் இல்லாத சங்கங்கள், பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களுக்காகப் பொதுச் சபையைக் கூட்ட முடியாதிருக்கும் சங்கங்கள், தொழிற்பரப்பை மீண்டும் வரையறை செய்ய வேண்டிய சங்கங்கள் போன்றவற்றிற்கே சிறப்பாக இச்சட்டத்தின் ஏற்பாடுகள் பயன்படுத்தப்படும்.

இச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் நியமிக்கப்படும் நெறியாளர் குழுவில் மூன்று பேருக்குக் குறையாமலும் ஐந்து பேருக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். நெறியாளர் குழுவில் குறைந்தது ஒருவராவது அரச ஊழியராக இருத்தல் வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் சங்க உபவிதியின்படி நெறியாளர் குழுவிற்குத் தகமையுடையவர்களாகவுமிருத்தல் வேண்டும். இந்நெறியாளர்களுக்கு அமைச்சரின் தற்றுணிவின் படி படிகள் வழங்கப்படலாம்.

இச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் நியமிக்கப்படும் நெறியாளர் குழுவுக்கு பொதுச்சபையின் அதிகாரங்களும் உரிமைகளும் சலுகைகளும் உண்டு. இச்சட்டத்தின் கீழ் நெறியாளர் குழு நியமிக்கப்படுமாயின் அதன் பதவிக் காலத்துக்குள் சங்கத்தின் உபவிதிகளுக்கமையச் சங்க நெறியாளர் குழு அமையும் வகையில் சங்கத்தைப் புனரமைக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியது ஆணையாளரின் கடமையாகும்.

மேற்படி 1978ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் 18 மாதங்களுக்கு மட்டும் என்ற நிபந்தனையுடன் இயற்றப்பட்டுள்ள போதிலும் 1983ம் ஆண்டு 32ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் படி மேலும் 6 மாதங்களுக்கு அவ் ஏற்பாடுகளின் படி நியமனம் செய்யப்பட்ட இயக்குனர் சபை நீடித்திருக்க வகை செய்யப்பட்டது.

1983ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கக் கூட்டுறவுச் சங்கங்களின் திருத்தச் சட்டம்:
இத்திருத்தச் சட்டத்தின் படி பின்வரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன:-

(01) ஆணையாளரின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட இன்னுமொரு சங்கத்துக் கடன்களை வழங்குவதற்கும் சங்கத்துடன் தொடர்புடைய கொடுக்கல், வாங்கல் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட வியாபாரி ஒருவருடன் கடன் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக 1972ஆம் ஆண்டின் 37ஆம் இலக்கச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

(02) 43ஆம் பிரிவின் கீழ் ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட சங்கமும் தனது வருடாந்தக் கணக்குகளை நிதியாண்டு முடிவடைந்து மூன்றுமாத காலத்துள் தயாரிப்பதையும், ஒவ்வொரு நிதி வருடமும் ஆரம்பிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் சங்கத்தின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

(03) 44ஆம் பிரிவின் படி கூட்டுறவுச் சங்கங்களின் கணக்காய்வாளர்களுக்கு மேலும் சில அதிகாரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

(04) 46ஆம் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளும் ஒரு உத்தியோகத்தர் சங்கத்தின் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களைத் தமது பொறுப்பில் பெற்றுக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

(05) 47ஆம் பிரிவின் கீழ் ஒரு சங்கத்தின் நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்யும் உத்தியோகத்தர் ஒருவர் தேவையாயின் சங்கத்தின் பொதுச்சபையை அமைப்பதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டது.

(06) பிரிவு 48இன் கீழ் ஒரு சங்கத்தின் இயக்குனர் குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கும், அதற்குப் பதிலாக இடைக்கால சபையொன்றை நியமிக்கப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

(07) 48ஆம் பிரிவின் கீழ் விசாரணை அல்லது பரிசோதனை ஒன்றின் பின்னர் ஒரு சங்கத்திற் பணிபுரியும் ஒரு ஊழியர் தனது கடமைகளை ஒழுங்காக ஆற்றவில்லை என்று கண்டால் அதற்கு எதிராக எழுத்து மூலமான ஒரு விண்ணப்பத்தினைக் கோரியதன் பேரிலும், கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழச் சட்டப் பிரமாணங்களை மீறாத வகையிலும் அவ்வூழியரை இடைநிறுத்த அல்லது நிறுத்த உரிய அதிகாரம் ஆணையாளருக்கு வழங்கப்பட்டது.

(08) 12ஆம் பிரிவின் பிரகாரம் இணை அங்கத்தவர் எவரும் சங்க உபவிதிகளிற் சொல்லப்பட்ட வியாபார நடவடிக்கைகள் எதனுடனும் சம்பந்தப்படுதல் ஆகாது.

(09) 39ஆம் பிரிவின் பிரகாரம் ஒரு சங்கம் இணை அங்கத்தவரோடு கடனுக்குப் பொருள் விநியோகம் ஒன்றை மேற்கொள்ளலாம்.

(10) 42ஆம் பிரிவின் பிரகாரம் பதிவாளரின் அங்கீகாரத்துடன் ஒரு சங்கத்தின் முதலீடு, நிதியை தள்ளுபடி செய்தல்.

(11) 43ஆம் பிரிவின் 3ஆம் உட்பிரிவின் பிரகாரம் ஆணையாளரின் அங்கீகாரத்துடன் வரையறுக்கப்படாத சங்கமொன்றின் இலாபத்தைப் பங்கீடு செய்யும் ஏற்பாடு.

(12) 44ஆம் பிரிவின் பிரகாரம் சங்கங்களுடைய கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது முகாமை நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டுமெனச் சுட்டிக் காட்டுகின்றது.

(13) 47ஆம் பிரிவின் பிரகாரம் இடம் பெற்ற பரிசோதனை, நுண்ணாய்வு ஆகிய பிரிவுகள் 46ஆம் பிரிவினுள் அடக்கப்பட்டு, பிரிவு 47 நீக்கப்பட்டது.

(14) 48ஆம் பிரிவின் கீழ் ஒரு சங்கத்தினுடைய இயக்குனர் சபையைக் கலைப்பதற்கும் சங்கத்தின் நிர்வாகத்தைப் பேணுவதற்காகப் புதிய குழுவொன்றை நியமிப்பதற்கும், சங்கத்தின் பொதுச் சபைக்கு அதிகாரமுண்டு. 46றின் கீழான விசாரணையின் பின்னரே, 48ஆம் பிரிவு செயற்பட முடியும்.

(15) இதன்படி 54ஆம் உப பிரிவு “அ” வின் கீழ் ஒழிப்பாளர் ஒரு கூட்டுறவு நிதியொன்றை வைத்து வருதலுடன் அறவிடப்படும் ஏனைய ஒழிப்புடன் சம்பந்தமான நிதிகளையும் இவ்வமைப்பிலிட வேண்டும்.

(16) 54ஆம் பிரிவின் கீழ் சங்கத்துக்கு எதிரிடையான பிணக்கொன்றின் பெயரில் நடுத்தீர்ப்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.

(17) அரசாங்கத்திடமிருந்து கடன், முற்பணம், நன்கொடை ஆகியவற்றைப் பெற்ற சங்கமொன்றை ஆணையாளர் அனுமதியி;றித் தனது முதலீடுகளை, சொத்துக்களை விற்கவோ, வைப்பு நிதிகளைக் கொள்வனவு செய்யவோ இயலாது என 11வது பிரிவு (அ) வில் புதிய ஏற்பாடு ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இவ்வாறான தவறுகளை மேற்கொள்ளும் சங்கத்தின் இயக்குனர் சபையைக் கலைக்க அச்சங்கத்தின் பொதுச்சபை தவறும் பட்சத்தில் இவ்வியக்குனர் சபையைக் கலைக்க ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

(18) இவ்வாறான பொது நிதியொன்றைப் பாதுகாத்தற் பொருட்டுப் பிரிவு 60 (ஆ)வின் கீழ் கலைக்கப்பட்ட ஒரு சங்கத்துக்கு இயக்குனர் குழுவொன்றை நியமிக்கவும் அல்லது விலக்கப்பட்ட ஒரு பணியாளருக்குப் பதிலாக ஒரு ஊழியரை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

(19) 66 (ஆ)வின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவர் அல்லது இயக்குனர் சபை உறுப்பினர் தான் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து 3 மாத காலத்துக்குள் தனது சொத்துக்களின் விபரங்களை ஆணையாளருக்குப் பிரகடனப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


1992ஆம் ஆண்டின் 11ஆம் இலக்கக் கூட்டுறவுச் சங்கங்களின் திருத்தச் சட்டம்:
(01) முன்னைய சட்டங்களில் இருந்த கட்டுப்படுத்தல் என்ற சொல்லுக்குப் பதிலாக நிர்வகித்தல் என்ற பதம் பிரயோகிக்கப்பட வேண்டுமென இப்பிரிவு வலியுறுத்துகிறது.

(02) 1972ஆம் ஆண்டின் சட்டத்தில் 3ம் பிரிவில் ஆரம்ப சங்கங்களை மூன்று வகையாகவும் 2ஆம் படிச் சங்கங்களை இன்னொரு வகையாகவும் கருதி நான்கு வகைக் கூட்டுறவு சங்கங்களாக வகை;படுத்தப்பட்டிருந்தன. இப்புதிய ஏற்பாட்டின் கீழ் மூன்று வகையான ஆரம்ப சங்கங்களும் ஒரு வகுப்புக்குள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் ஆரம்ப சங்கங்ள் என்றும் (1ஆம் படி) 2ஆம் படிச் சங்கங்களென்றும் இருவகையாக வகுக்கப்பட்டுள.


பதிவு சம்பந்தமான ஏற்பாடுகள்:

(03) அ. 44ஆம் பிரிவின் பிரகாரம், பதிவு செய்யப்படக்கூடிய ஒரு சங்கத்தினுடைய ஆகக்குறைந்த அங்கத்தவர் தொகை அச்சங்கம் வழங்கும் சேவையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படவேண்டும்.

ஆ. 3 சங்கங்களுக்குக் குறையாத சங்கங்கள் ஒன்றிணைந்து இரண்டாம் படிச் சங்கம் ஒன்றை உருவாக்க முடியும்.

இ. பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உபவிதியைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

ஈ. குறித்த சங்கத்தைப் பதிவு செய்வதற்கான நபர் அல்லது நிறுவனம் சங்கத்தின் நடவடிக்கைகள் பொருளாதார ரீதியாகச் சாத்தியமானவை என்பதையும் அதன் நடைமுறைகள் சட்டத்துக்கும், விதிகளுக்கும் முரணானவையல்ல என்பதனையும் உறுதிப்படுத்தல் வேண்டும். இவற்றுக்கான ஏற்பாடுகளை உபவிதிகளிற் சேர்த்தல் வேண்டும்.

உ. குறித்த எபவிதியில் 18-35 வயதுக்கும் இடையிலான வயதினரைக் கொண்ட 2 இயக்குனர்கள் சபையில் இடம் பெறுதலை உறுதிப்படுத்தல் வேண்டும்.

ஊ. அங்கத்தவர் ஒருவர் தனது அங்கத்துவத்தைப் பூரணப்படுத்துவதற்கு ஒரு பங்கின் முழுப்பெறுமதியையும் செலுத்தி இருக்கவேண்டும்.

எ. ஒரு பதிவை மேற்கொள்வதற்குப் பதிவாளரினாற் கோரப்படும் ஏனைய விபரங்களும் இணைக்கப்படல் வேண்டும்.

(04) சட்டத்தின் பிரிவு 4இன் படி உபவிதிகளைத் திருத்துவதற்கு விண்ணப்பிக்கும் பொழுது 2 உபவிதிப் பிரதிகளையும், சாத்தியக் கூற்றறிக்கை ஒன்றையும், பொதுச் சபைக் கூட்டக் குறிப்பின் பிரதியொன்றையும் உறுதிப்படுத்திச் சமர்ப்பிக்க வேண்டும்.

(05) பிரிவு 9இன் பிரகாரம் ஒரு சங்கம் பிரிக்கப்படும் பொழுது அல்லது ஒன்றிணைக்கப்படும் பொழுது அவ்வாறு உருவாக்கப்படும் சங்கமொன்றின் பொருளாதார சாத்தியக் கூற்றறிக்கையொன்று வழங்கப்படவேண்டும்.

(06) புதிய திருத்தச் சட்டத்தின் 11ஆவது உப பிரிவின் 1(அ) வின் படி ஒரு பதியப்பட்ட சங்கமொன்றின் ஒரு குறித்த அங்கத்தவர் வைத்திருக்கக் கூடிய பங்கு சங்கத்தின் முழு பங்குத் தொகையில் 1ஃ5க்கு மேற்படலாகாது. இவ்வேற்பாடு முன்னர் விதிகளில் மட்டும் இடம் பெற்றிருந்தது.


(07) புதிய பிரிவின் 11அ, 11ஆ, 11இ, 11ஈ ஆகியவற்றின் படி:

11அ – வின்படி ஒரு பங்கினுடைய பெறுமதி 100ஃ- ரூபா ஆகவும், ஆரம்பக் கொடுப்பனவு 10ஃ- ரூபா ஆகவும் இருக்கும். ஏனைய பங்குக் கொடுப்பனவுகள் ஒரு வருடத்துக்குள் செலுத்தி முடிக்கப்பட வேண்டும்.

11ஆ – வின்படி முழுவதாக பங்குப் பணத்தைச் செலுத்திய ஒரு அங்கத்தவர் ஒரு வருடத்தின் பின்னரே வாக்களிக்கும் தகைமையுடையவராகிறார்.

11இ – இன்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது உள்@ராட்சி சபை உறுப்பினர் ஒருவர் சங்கத்தின் இயக்குனர் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படலாகாது.

11ஈ – யின்படி 2ஆம் படிச் சங்கமொன்றுக்குப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தான் பிரதிநிதித்துவம் வகிக்கும் ஆரம்பச் சங்கத்தின் நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளதாக இவ் இரண்டாம் படிச் சங்க நடவடிக்கைகள் இருப்பதை நிச்சயித்துக் கொள்ளவேண்டும்.

(08) 61ஆம் விதிப் பிரிவின் கீழ் இயக்குனர் குழுவொன்றுக்குத் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர் தகுதியின்மை பற்றிய விபரங்களை ஆக்கும் விதிகளை உருவாக்க வகை செய்யப்பட்டது.

(09) கணக்காய்வு, விசாரணை, பரிசீலனை என்பவற்றின் பின்னர் குற்றமிழைத்தவர் எனக்கருதும் ஒரு பணியாளரை 66ஆம் பிரிவின் கீழ் அந்தக் குற்றத்தினால் சங்கத்துக்கு ஏற்பட்ட நட்டத்தைக் கணித்து அதனை மீளவும் சங்கத்துக்குச் செலுத்தும்படி வலியுறுத்தும் அதிகாரம் பதிவாளருக்கு வழங்கப்பட்டது.

(10) அரசாங்கத்தினால், அரச வங்கியினால், அரச கூட்டுத்தாபனமொன்றினால் சங்கத்திற்கு வழங்கப்பட்ட முற்பணம், பொருள், கடன் என்பவற்றை பாதுகாக்கும் பொருட்டுக் குறித்த சங்கத்தின் இயக்குனர் சபைக்குப் பிரதிநிதிகளை நியமிக்கும் அதிகாரம் புதிய சட்டத்தின் பகுதி 66(அ) இன் கீழ் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவ்வாறு நியமிக்கப்படும் இயக்குனர்கள் சங்கத்தின் மொத்த இயக்குனர்களின் எண்ணிக்கையில் அரைவாசிக்கு மேற்படலாகாது.

(11) பகுதி 67இன் படி குற்றமிழைக்கப்பட்டதாக ஆணையாளரால் கருதப்படும் ஒருவர் அக்குற்றப் பணத்தைச் சங்கத்துக்குச் செலுத்தத் தவறும் பட்சத்தில் நீதிமன்றமொன்றினாற் 10 வருடங்களுக்கு மேற்படாத காலத்துக்குச் சிறைத் தண்டனைக்குட்படுத்தப்படலாம்.

(12) புதிய பிரிவு 67அ வின் கூட்டுறவுத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தான் விசாரணை செய்த ஒரு விடயம் தொடர்பில் 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கக் குற்றவியல் சட்டம் பிரிவு 17இன் கீழான ஒரு நீதிமன்ற விசாரணையைச் சங்கத்தின் சார்பாகக் கையாளக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டது.

(13) 1972ஆம் ஆண்டு 5ஆம் இலக்கச் சட்டத்தின் படி ஆணையாளர் ஒருவரால் தீர்மானிக்கப்பட்ட விடயம் அல்லது நியமனம் தொடர்பில், அவை அனைத்தும் செல்லுபடியாகக் கூடிய வகையில் பிரிவு 07இன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

(14) இச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளக்கூடிய தண்டனையாக 500-முதல் 12,000ஃ- ரூபா வரை அபராதத் தொகையை, விதிக்கவும், இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்கப்படவும் இத்திருத்தச் சட்டத்தின் கீழ் வகை செய்யப்பட்டுள்ளது.

(15) 1972 (அ) இன் கீழ் ஆணையாளரின் கீழ் இயங்கும் தகுதி பெற்ற உத்தியோகத்தர் நேர்மையாகவும், செயற்றிறனுடனும் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

(16) 75ஆம் புதிய பிரிவின் கீழ் அலுவலர் என்பது இயக்குனர்கள், முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் அல்லது வேறு வகையில் அதிகாரம் அளிக்கப்பட்ட எவரேனும் ஒரு சங்கத்துடன் தொடர்புடைய ஒருவரைக் குறிப்பதாகும்.


கூட்டுறவு விதிகள்:
தற்போது நடைமுறையிலுள்ள விதிகள் 1973ஆம் ஆண்டின் கூட்டுறவுச் சங்க விதிகளாகும். இவ்விதிகள் 1972ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 51ஆம் பிரிவின் கீழ் உள்நாட்டு வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு 1973ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதிய தேசியப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.

கூட்டுறவுச் சட்டத்தின் 61ஆம் பிரிவின் முதலாம் உபபிரிவு அமைச்சருக்கு விதிகளை ஆக்குந் தத்துவத்தையும், அவ்விதிகளின் பொதுத்தன்மையையும் கூறுகிறது. “இச் சட்டத்தின் நெறிகளையும் ஏற்பாடுகளையும் நிறைவேற்றும் அல்லது அவற்றிற்குப் பயன் கொடுக்கும் நோக்கத்துக்காக அவசியமாகக்கூடிய அத்தகைய எல்லா விதிகளையும் அமைச்சர் ஆக்கலாம்” என்பதே அச்சட்டம். இரண்டாம் உட்பிரிவு முதலாம் உட்பிரிவின் தத்துவங்களுக்குப் பங்கமின்றி 25 விடயங்கள் சம்பந்தமாக விதிகளை ஆக்க அதிகாரம் அளிக்கிறது. மூன்றாம் உட்பிரிவு விதிகள் தேசியப் பேரவையில் அங்கீகாரம் பெறப்படுமுன் பயனுடையதாகாது எனவும் அத்தகைய அங்கீகாரம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டுமெனவும் கூறுகிறது. நான்காம் உட்பிரிவு ஒவ்வொரு விதியும் முற்கூறப்பட்டபடி அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் மேல் சட்டமாக்கப்பட்டாற் போன்று செல்லுபடியுள்ளதாயும் பயனுடையதாயுமிருக்கும் என்பதைத் தெரிவிக்கின்றது.

61ஆம் பிரிவுச் சட்டத்தின் முதலாம் உட்பிரிவினால் அதிகாரமளிக்கப்பட்ட 25 விடயங்கள் சம்பந்தமாக 55 விதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தற்போதைய கூட்டுற விதிகள், சங்கத்தைப் பதிவு செய்தலுக்கு விண்ணப்பிக்கும் முறைமுதற் கொண்டு இவ்விதிகளை மீறுவதற்குரிய குற்றம் வரையுள்ள பலவிடயங்கள் சம்பந்தமான விதிகள் இதனகத்தே உண்டு.

கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுச் சட்டம்
ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் 1972ஆம் ஆண்டு 12ஆம் இலக்க கூட்டுறவு ஆணைக்குழுச் சட்டத்தின் படியும் இச்சட்டத்திற்கான 1992ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரமும் ஒழுகுதல் வேண்டும். இச்சட்டத்தின்படி மூன்று பேரைக் கொண்ட ஆணைக்குழு அமைச்சரால் நியமிக்கப்படும். இவர்களுள் ஒருவர் அமைச்சரால் தலைவராக நியமனம் பெறுவதுடன் இக்குழு மூன்று ஆண்டுகளுக்குச் செயற்பட முடியும்.

சங்கப் பணியாளரோ, தொழிற் சங்கவாதிகளோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ, கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளோ இக்குழுவில் அங்கத்தவர்களாக இருக்க முடியாது.

இவ்வாணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையிலுள்ள ஒருவரே பதவி வகிக்க வேண்டும்.

இவ்வாணைக்குழுவில் பணிபுரியும் பணியாளர்கள் அரசாங்கத்தின் மாற்றம் பெறும் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுவர்.

இந்த ஆணைக்குழுவுக்கு பின்வரும் அதிகாரங்கள் இருக்கும்.

1. பணியாளர்களை வேலைக்கமர்த்தல், வேலை கொள்ளும் முறை, விடுமுறை, பதவி உயர்வு என்பவற்றுக்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்தல்.

2. பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்கான பரீட்சை, பரீட்சை நடத்துவதற்கான குழுக்கள், பரீட்சைக் கட்டணங்களை அறவிடல் ஆகிய ஏற்பாடுகள்.

3. பதவிக்கான தகுதிகளையும், சம்பளங்களையும், பதவி நிலைகளையும் கூட்டுறவு ஆணையாளரின் ஆலோசனையுடன் நிர்ணயஞ் செய்தல்.

4. ஒரு ஊழியருக்கு எதிரான நடவடிக்கைகளின் பொருட்டு சங்கங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை ஆக்குதல்.

5. பணியாளர்கள் தொடர்பிலான ஆவணங்களை ஒழுங்கு முறையாக பேணும்படி சங்கங்களை வலியுறுத்தலும், அவற்றை வேண்டிய போது கோருதலும்.

6. விசாரணைக் குழுக்களை நியமித்தல். தீர்ப்புக்கள் செயற்படுத்தப்படுவதைக் கண்காணித்தல்.

7. பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை ஏற்பாடுகளைத் தீர்மானித்தல்.

8. கூட்டுறவு ஊழியர்களுக்குப் பொருத்தமான ஏனைய வழிமுறைகளை கலாகாலம் ஆக்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருத்தல்.

9. பணியாளர்கள் பணிபுரியும் ஒவ்வொரு சங்கமும் இச்சட்டத்தின் கீழ் வேலை கொள்வோராவர். இதன்படி சங்கமும், பணியாளர்களும் இவ்வாணைக்குழு விதிக்கும் நடைமுறைகளை ஏற்று நடத்தல் வேண்டும்.

10. ஒரு பணியாளரின் வதிவிடத்தை அடிப்படையாகக் கொண்டு நியமனஞ் செய்தலையும் வேண்டிய இடத்து வேறு மாவட்டங்களில் இருந்து ஒரு பணியாளரை நியமனம் செய்தலையும் உரிய ஒழுங்கு விதிகளின் படி மாற்றங்கள் இடம் பெறுதலையும் ஏற்பாடு செய்தல்.

11. தேவையேற்படும் போது அரசாங்க ஊழியர் ஒருவரை சங்கத் தேவையின் பொருட்டு விடுவிக்கும்படி கோரவும், விடுவிக்கவும் ஏற்பாடு செய்தல்.

12. பணியாளர் செலுத்த வேண்டிய பிணைகளை தீர்மானித்தலும், அந்நிதிகளை கண்காணிக்கவும்வேண்டிய ஏற்பாடுகள்.

13. ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சட்ட ரீதியான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை வலியுறுத்தல்.


ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கத்திற்கும் நியமனம் செய்யக்கூடிய பணியாளர்களை அங்கீகரிக்கும் பொறுப்பு இச்சட்டப்படி கூட்டுறவு ஆணையாளருக்கே உரியதாகும்.

1992ம் ஆண்டு 51ஆம் திருத்தச் சட்டத்தின்படி கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவின் கீழ் விசாரணையிலுள்ள பிணக்கொன்றை இது தொடர்பிலான ஊழியரோ, சங்கமோ தொழிற் பிணக்கு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லல் ஆகாது. அவ்வாறே ஒரு ஊழியர் தனது பிணக்கொன்றை தொழில் நீதிமன்றம் மூலம் தீர்க்க விரும்பின் அவ்வாறு செய்ய முடியும் என்பதுடன் அத்தகைய ஒரு பிணக்கொன்றை மீண்டும் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவுக்கு பாரப்படுத்தல் ஆகாது.

கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு சட்டத்தில் அல்லது பிரமாணங்களில் கூறப்படாத ஒரு விடயம் சம்பந்தமாக மேலதிக விபரங்களை கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பிரஸ்தாபிக்கப்படாத விடயங்கள் தொடர்பில் சாதாரண தொழிற் சட்ட நியதிகள் வலுவுள்ளதாகும்.


கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுப் பிரமாணங்கள்:
இப்பிரமாணங்கள், 1972ஆம் ஆண்டு 12ஆம் இலக்கக் கூட்டுறவுக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 32 (1)இன் கீழ் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரங்களின் படி அவ்வாணைக்குழுவால் தயாரிக்கப்பட்டு இச்சட்டத்தின் பிரிவு 32 (2) இன் ஏற்பாடுகளுக்கமைய உள்நாட்டு வர்த்தக அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்டு 1972ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதிய வர்த்தமானியிற் பிரசுரிக்கப்பட்டவையாகும்.

கூட்டுறவுச் சங்கவிதி 28 இப்பிரமாணங்களுக்கு வலுவூட்டுகின்றது. “ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கம் 1972ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கக் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவன்றி, எவரேனும் ஒருவரை அச் சங்கத்தின் பணியாளராக நியமித்தலாகாது” என 28ஆவது விதி கூறுகிறது.

இப்பிரமாணங்கள் இரு பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி மூன்று தனிப் பிரமாணங்களையும் எட்டு அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்ட 121 பிரமாணங்களையும் அடக்கியது. இரண்டாவது பகுதி 4 தனிப் பிரமாணங்களையும் 5 இணைப்புக்களையும் கொண்டது. முதலாம் பகுதித் தனிப் பிரமாணங்களில் முதலாவது “இப்பிரமாணங்கள் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுப் (பொதுப்) பிரமாணங்கள் என அழைக்கப்படும்” எனக் கூறுகிறது. இரண்டாவது பிரமாணம் விலக்களிக்கப்படாத சகல கூட்டுறவுச் சங்கங்களும் இப் பிரமாணங்களினாலும் ஆணைக்குழுவினால் இயற்றப்படும் விதிகளினாலும் கட்டுப்படுத்தப்பட்டவையாகவே அமைதல் வேண்டுமென்பதையும், மூன்றாம் பிரமாணம் வேலையாளருக்கு ஒரு கூட்டுறவுச் சங்கம் தனது நிதியில் இருந்து சம்பளம் அல்லது வேதனம் அளித்து வருமாயின் அத்தகைய வேலையாளரது வேலைகொள்வோனாகச் சங்கம் கருதப்பட வேண்டுமென்பதையும் கூறுகின்றன.

முதலாம் அத்தியாயம்: 4-5 வரையுள்ள பல பிரிவுகளைக் கொண்ட பிரமாணங்களை உள்ளடக்கியது. நியமனங்கள் அளித்தல், பதவி உயர்வு, மாற்றங்கள், சம்பளம், மிகையூதியங்கள், ஏனைய படிகள் வழங்கல், ஊக்குவித்தற் கொடுப்பனவுகள், வேலையாளர் சகாயநிதி வேலையாளரால் கொடுபட வேண்டிய பினை, சம்பள ஏற்றங்கள், வினைத்திறமைகாண் தடைகள், வேலையாளர் சம்பந்தப்பட்டவகையில் சங்கம் வைத்திருக்க வேண்டிய இடாப்புக்கள், பதிவேடுகள் ஆகிய விடயங்கள் பற்றி இவ்வதிகாரத்தில் பிரமாணங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் அத்தியாயம்: 53-60 வரையுள்ள பல உட்பிரிவுகளைக் கொண்ட பிரமாணங்களை அடக்கியது. வேலையாளின் சேவை நிபந்தனைகளைப் பற்றியது. வேலை நேரம், வாராந்த விடுமுறைகள், வருடாந்த விடுமுறைகள், விடுமுறை, பொதுவிடுமுறைக்ள, பிரசவ உதவிகள் ஆகிய விடயங்கள் பற்றி இவ்வதிகாரத்திற் பிரமாணங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் அத்தியாயம்: 61-72 வரையுள்ள பல உட்பிரிவுகளைக் கொண்ட பிரமாணங்களை அடக்கியது. கூட்டுறவு வேலையாளர் நடத்தையைக் கட்டுப்படுத்தும் பிரமாணங்களைக் கொண்டது. ஒவ்வொரு வேலையாளரும் கட்டாயமாகச் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும், செய்யக்கூடாத செயல்கள் பற்றியும், அவரதும், அவரைச் சார்ந்தோரினதும் இருப்புச் சொத்துக்களை வெளியிடுதல் பற்றியும் சங்க நிதியைச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடாதென்பது பற்றியும் இவ்வத்தியாயத்தில் பிரமாணங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

நான்காம் அத்தியாயம்: 73-99 வரையிலுள்ள பல உட்பிரிவுகளைக் கொண்ட பிரமாணங்களை அடக்கியது. வேலையாளரின் கெட்ட நடை பற்றிய ஒழுக்காற்று விசாரணை சம்பந்தமான பிரமாணங்களைக் கொண்டது. கெட்ட நடைத்தையுள்ள அல்லது சந்தேகிக்கும் ஊழியர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சிறு குற்றங்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை முறைகள், கடுங் குற்றங்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை முறைகள், விசாரணை நடத்தும் ஒழுங்குகள், விசாரணையில் ஆணைக்குழுவுக்குள்ள தொடர்புகள், தண்டனைகள், பொதுத் திறமையின்மைக்காக இளைப்பாற்றுதல், நீதிமன்றக் குற்றத் தீர்ப்ணபுக்குப்பின் நடைமுறை போன்ற விடயங்களில் இவ்வத்தியாயத்தின் பிரமாணங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

ஐந்தாம் அத்தியாயம்: 100-107 வரையுள்ள பிரமாணங்களை அடக்கியது. ஒழுக்காற்று விசாரணை சம்பந்தமான மேன்முறையீடுகள் பற்றிய பிரமாணங்களாகும். ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்தல் பற்றியும் மேன்முறையீட்டுக்கு ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் அதற்கு வழங்கக் கூடிய தீர்ப்புக்கள் பற்றியும் பிரமாணங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

ஆறாம் அத்தியாயம்: 108-120 வரையுள்ள பல உட்பிரிவுகளைக் கொண்ட பிரமாணங்களை அடக்கியது. இளைப்பாறல், விலகல், சேவை முடிவுறல், ஆட்குறைப்பு ஆகியவை பற்றிய பிரமாணங்கள் இவ்வதிகாரத்துள் தொகுப்பட்டுள்ளன.

ஏழாம் அத்தியாயம்: 121-123 வரையுள்ள பிரமாணங்களை அடக்கியது. இடைப் போக்கு ஏற்பாடுகள் பற்றியது.

எட்டாம் அத்தியாயம்: 124ஆவது பிரமாணத்தை அடக்கியது. சொற்களின் வரைவிலக்கணத்தைக் கூறுகின்றது.


பகுதி 2. கூட்டுறவுச் சங்கங்களிற் குறிக்கப்பட்ட பதவிகளுக்காய தகைமைகளையும் முதற் சம்பளத்தினையும் கூலி அளவுத் திட்டங்களையும், விதிக்கின்ற பிரமாணங்களாகும். முதலாவது பிரமாணம் “1972ஆம் ஆண்டின் கூட்டுறவு வேலையாள் முதற்கூலி சம்பளப் பிரமாணங்கள்” என அழைக்கப்படலாமெனவும், இரண்டாவது பிரமாணம் குறிக்கப்பட்ட தகைமைகளைப் பெற்றிராத எவரையேனும் பதவியொன்றுக்கு அல்லது தரத்துக்கு நியமிக்கக்கூடாது எனவும், குறித்த ஏதேனும் பதவிக்கு நியமனமளிக்கப்படும் வேலையாளர் ஒருவருக்கு அதற்கு நேரொத்ததாய் உள்ள சம்பளத்தினை வழங்குதல் வேண்டுமெனவும் மூன்றாம் பிரமாணம் இச் சம்பள அளவுத்திட்டங்கள் 1972ஆம் ஆண்டு ஏப்பிரல் - 1ஆந் திகதியில் இருந்து அமுலுக்கு வரவேண்டுமெனவும் நான்காம் பிரமாணம் கூட்டுறவு வேலையாளர் கட்டளைச் சட்டத்தின் 17ஆம் பிரிவுக்குள் அடங்கும் வேலையாளர்களின் பதவிக்கு எவையெனவும் கூறுகின்றன.

இணைப்பு (i) சிறு குற்றங்கள் பற்றியது. (12 சிறு குற்றங்கள் தரப்பட்டுள்ளன)

இணைப்பு (ii) கடுங்குற்றங்கள் பற்றியது. (8 கடுங்குற்றங்கள் தரப்பட்டுள்ளன.)

இணைப்பு (iii) நியமனக் கடிதத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் (8 விடயங்கள் தரப்பட்டுள்ளன).

1. (அ) படிவம் சேவைப்பதிவேடு.
2. (ஆ) படிவம் வரவு ஊதியம் பற்றிய பதிவேடு.
3. (இ) படிவக் கழிவுகள் பற்றிய பதிவேடு.

இணைப்பு (எ) குறித்த பதவிகளுக்காய தகைமைகள்@ முதற் சம்பளம், சம்பள அளவுத்திட்டங்கள். பொது முகாமையாளர் உட்பட 26 பதவிகளுக்கு (அளவுத் திறன் பல்வேறு தரங்களுமுட்பட விபரங்கள்).

கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுப் பிரமாணங்கள் வேலை கொள்வோர் என்ற வகையில் கூட்டுறவுச் சங்கங்களையும் வேலை செய்வோர் என்ற வகையில் பணியாளர்களையும் கட்டுப்படுத்தும் பிரமாணங்களாகும். இப்பிரமாணங்கள் சங்கங்களைப் பொறுத்த வரையிலும் பணியாளர்களைப் பொறுத்த வரையிலும் சில விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

கூட்டுறவுச் சங்கங்களைப் பொறுத்தவரையில் இப்பிரமாணங்களினால் ஏற்படும் சாதகமான விளைவுகள்:
(1) ஒத்த சங்கங்களுக்கிடையே பதவி, அவற்றின் தகமைகள், சம்பளங்கள், படிகள், உயர்வுகள் ஒரே சீராக இருத்தல்.

(2) ஊழியர்கள் சங்க முகாமையுடன் சம்பளங்கள் படிகள் உயர்வுகள் சம்பந்தமாக முரண்பாடு கொள்ளாதிருக்க வழி செய்தல்.

(3) பதவி உயர்வு, நியமனம் போன்ற விடயங்களிற் குறைந்த தகைமையுடைய ஊழியர்கள் முகாமையுடன் அதிருப்தி அடையாதிருக்க வழி செய்தல்.

(4) ஊழியருக்குள்ள பல சலுகைகள் எல்லாச் சங்க ஊழியர்களுக்கும் பொதுவாக அமைந்துள்ளமை.

(5) ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் பொதுவிதிகள் விதிக்கப்பட்டமை.

(6) இளைப்பாற வேண்டிய கட்டாயப் பொது வயதெல்லை விதிக்கப்பட்டமை.


ஆணைக்குழு பிரமாணங்களினாற் சங்கத்திற்கேற்பட்ட பாதகமான விளைவுகள்:
(1) கோட்பாடு ரீதியில் சங்கம் சுயாதீனமும் சுதந்திரமும் கொண்டது. அதன் தத்துவங்களில் வேறு நிறுவனங்களின் அதிகாரத் தலையீடு கோட்பாட்டுக்கு முரணானது.

(2) ஊழியர்களின் தனித்திறன்கள், வேலைச்சுமையை ஏற்குந் தன்மை, ஒழுங்கு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

(3) சங்கத்தின் நிதிநிலைக்கு ஏற்பவும், சங்கத்தின் செயற்பாடுகளின் அளவுக்கேற்பவும் சம்பளத் திட்டங்களை வகுக்க முகாமைக்கே முடியும். அதற்குரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை.

(4) பருமனளவிலும், செயற்பாடுகளிலும் வளர்ச்சியுற்ற சங்கங்கள் அவ்வத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் சேவையைப் பெறக்கூடிய வகையில் சம்பளத்திட்டங்கள் அமையவில்லை.

(5) ஒவ்வொரு பதவிக்குமுரிய கல்வித் தகைமைகளை வகுக்கும் போது எல்லா வகையான கல்வித் தகைமைகளையும் கருத்திற்கொள்ளவில்லை.

(6) வேலையாளர் நடத்தையைக் கட்டுப்படுத்தும் பிரமாணங்கள், கெட்டநடை போன்றவற்றுக்காக விதிக்கப்பட்ட பிரமாணங்கள் முழுமையாகவும் விபரமாகவும் அமையவில்லை.


ஆணைக்குழுப் பிரமாணங்களினாற் கூட்டுறவு ஊழியர்களுக்குள்ள சாதகமான விளைவுகள்:
(1) எல்லாக் கூட்டுறவுச் சங்கங்களிலுமுள்ள எந்தப் பதவி வகிப்போருக்கும் ஒரேவித சம்பள அளவுத்திட்டம் ஏற்படுத்தியமை.

(2) பதவி உயர்வுகளுக்கு முறையான திட்டம் ஏற்படுத்தியமை.

(3) வேலை நேரம், விடுமுறை, பொதுவிடுமுறை போன்றவற்றுக்கு எல்லாச் சங்கங்களுக்கும் பொதுவான ஒழுங்கு முறை ஏற்படுத்தியமை.

(4) விசாரணை நடத்தல், தண்டனை விதித்தல், இளைப்பாற்றல் போன்ற கருமங்களுக்கு ஒழுங்குமுறை ஏற்படுத்தியமை.

(5) மேலதிக நேரச் சம்பளக் கணிப்பீட்டு முறை ஏற்படுத்தியமை.

(6) ஊக்குவித்தற் கொடுப்பனவுக்கு வழி வகுத்தமை.

(7) ஆளணியைத் திரட்டுதல், நிருவகித்தல் சம்பந்தமாக முகாமை விடுந்தவறுகளை மேற்பார்வை செய்து நீதி வழங்கும் நிலையை ஏற்படுத்தியமை.

(8) ஆளணியைத் திரட்டுதல் நிருவகித்தல் போன்ற விடயங்களில் முகாமை ஒழுங்காகவும் ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டாமலும் கவனத்துடன் முகாமையை இயங்கச் செய்தமை.

(9) விசாரணை, தண்டனை போன்றவற்றில் ஊழியர் அதிருப்தியுறின் மேன்முறையீடு செய்வதற்கு வசதியளித்தமை.


கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவின் தற்போதைய நிலைமை:
13ஆவது அரசியல் அமைப்பின் திருத்தச் சட்டத்துக்கு இணங்கக் கூட்டுறவுச் சட்டத்தின் சகல நியதிச் சட்டக் கடமைகளும், மாகாண சபைகளுக்குக் கையளிக்கப்பட்டு இருப்பதாற் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவின் கடமைகளும் மாகாண மட்டத்துக்குப் பன்முகப்படுத்தப்பட்டுள.

இதன்படி மாகாணங்கள் தோறும் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், மாகாண மட்டத்திலான கடமைகளை இவை ஆற்றுகின்றன.

மத்தியிலுள்ள கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவானது தேசிய அடிப்படையிற் கூட்டுறவு வேலையாளர்களின் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் உச்ச நிலைச் சங்கங்களது கூட்டுறவுப் பணியாளர்களி; நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.


துணை (உப) விதிகள்:
கூட்டுறவுச் சட்டம் (5) (3) இல் பதிவு விண்ணப்பத்துடன் சங்கத்தின் உத்தேசிக்கப்பட்ட துணை விதிகளின் இரு படிகளையும் கொண்டிருப்பதாய் இருத்தல் வேண்டும் எனக் கூறுகின்றது. கூட்டுறவுச் சட்டம் எட்டாம் பிரிவு (1-6) உட்பிரிவுகளிலும் துணை விதி திருத்தங்கள் பற்றிக் கூறப்பட்டுள. சட்டம் துணைவிதிகளைப் பற்றி விபரமாகக் குறிப்பிடாது விடினும் துணை விதியின் தேவையை உணர்த்தியுள்ளது.

கூட்டுறவுச் சங்கவிதி 29 ஆவது கட்டாய துணைவிதிகளைப் பற்றியது. ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கம் பின்வருவனவற்றைக் குறித்துத் துணை விதிகள் வகுத்தல் வேண்டும் என இவ்விதி கூறுகிறது. (1) சங்கத்தின் பெயர் (2) சங்கத்தின் பதிவு பெற்ற முகவரி (3) சங்கம் நிறுவப்பட்ட நோக்கங்கள் (4) சங்கப் பணம் உபயோகிக்கக்கூடிய நோக்கங்கள் (5) உறுப்பினருக்காய தகுதியுடைமை, உறுப்பினரைச் சேர்ப்பதற்குரிய நிபந்தனைகளும் அவர்களைத் தெரிவு செய்யும் முறையும் (6) உறுப்பினரது உத்தரவாதத்தின் தன்மையும் அளவும் (7) உறுப்பினர் சங்கத்தை விட்டு விலகுதலும், தள்ளப்படுதலும், அன்னாருக்குக் கொடுக்க வேண்டிய தொகையேதுமிருப்பின் அது கொடுக்கப்படும் முறையும் (8) சங்கத்தின் உறுப்பினரது பங்கை அல்லது வேறு அக்கறைகளை மாற்றுதல் (9) நிதிகள் திரட்டும் முறையும் வைப்புப் பணம் மீது கொடுக்கப்படக்கூடிய ஆகக் கூடிய வட்டி வீதமும் (10) சங்கப் பொதுக் கூட்டங்கள், அவற்றைக் கூட்டும் முறையும் அவற்றின் தத்துவங்களும் (11) நிருவாக சபை உறுப்பினரையும் சங்கத்தின் ஏனைய அலுவலரையும் நியமித்தல், இடைவிலக்கல், அகற்றுதல், நிருவாக சபையினதும் ஏனைய அலுவலரினதும் தத்துவங்களும் கடமைகளும் (12) சங்க அலுவலரில் ஒருவருக்குச் சங்கத்தின் பேரில் ஆவணங்களுக்குக் கையொப்பமிட அதிகாரமளித்தல்.

நிதிகளைத் திரட்டி உறுப்பினருக்குக் கடன் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கம் பின்வரும் விடயங்களைக் குறிக்கும் துணைவிதிகள் வகுக்க வேண்டும்.

(13) உறுப்பினரின் தொழிலும் இருப்பிடமும் (14) பின்வருவன உட்பட உறுப்பினருக்குக் கடன் கொடுப்பதைப் பற்றிய நிபந்தனைகள் (அ) வட்டி வீதம் (ஆ) ஒரு உறுப்பினருக்குக் கடனாகக் கொடுக்கக் கூடிய ஆகக் கூடிய தொகை (இ) கடன் தவணையை நீடித்தலும் புதுப்பித்தலும் (ஈ) கடனின் நோக்கங்கள் (உ) கடனுக்குப் பிணை (15) பங்குகளின் அல்லது கடனின் கணக்கில் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கத் தவறுதலின் விளைவுகள் (16) இலாபப் பங்கீடு செய்தல்.

துணை (உப) விதிகள் இன்றிக் கூட்டுறவுச் சங்கம் ஒன்று பதிவு செய்யப்படமாட்டாது. இத்துணை விதிகள் ஆரம்ப அங்கத்தவர்கள் (தோற்றுவிக்கும் போது உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள்) ஆக்கி அங்கீகரித்துப் பதிவு விண்ணப்பத்துடன் இரு பிரதிகள் அனுப்படப்பட வேண்டும். சங்கத்தைப் பதிவு செய்யும்போது துணை விதிகளை அங்கீகரித்த பின்னரே பதிவு செய்யப்படும். கூட்டுறவு ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக அவரது ஒப்பமிட்ட துணை விதிப் பிரதியொன்று சங்கத்திற்கனுப்பப்படும். இத்துணை விதிகள் கூட்டுறவுச் சட்டம் கூட்டுறவு விதிகளுக்கமைவாக அவற்றோடு முரண்படாது ஆக்குதல் வேண்டும். ஆரம்பத்தில் ஆக்கப்பட்ட துணைவிதிகளில் காலத்துக்குக் காலமும் தேவைக்கேற்பத் திருத்தங்கள் செய்யச் சட்டம் விதிகள் வகை செய்துள்ளன.

உறுப்பினரைப் பொறுத்த வரை துணை (உப) விதிகள் மிக முக்கியமானவை. சங்கத்திற்கும் உறுப்பினர்களுக்குமுள்ள தொடர்பை விளக்குவது. உறுப்பினரின் உரிமைகள் கடமைகள் அதிகாரங்கள் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் போன்றன இதில் அடங்கியிருக்கின்றன. அதே போன்று உறுப்பினர்கள் சங்கத்திற்கு எவ்விடயங்களில் எவ்வாறு கட்டுப்பாடுடையவர்களாக இருத்தல் வேண்டும், சங்க நலத்துக்காகச் செய்ய வேண்டிய கருமங்கள் எவை, அவர்களின் பொறுப்பின் தன்மையும் அளவும் எத்தகையது என்பன போன்ற விடயங்களும் அடங்கியிருக்கின்றன.

எனவே துணை விதிகள் ஒவ்வொரு உறுப்பினரையும் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் போன்றது. ஒவ்வொரு உறுப்பினரும் அவ்விதிகளைக் கைச்சாத்திட்டு ஏற்றுக்கொண்டாற் போன்ற சட்டவலுவுடையது. இவ்விதிகள் தமக்குத் தெரியாதென்றோ விளக்கமில்லையென்றோ எவ்வுறுப்பினரும் கூற முடியாதபடி சட்டத் தத்துவமுடையது. எனவே ஒவ்வொரு உறுப்பினரும் துணை விதிகள் முழுவதையும் நன்றாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

சட்டம், விதிகளிலிருந்து துணைவிதிகள் மாறுபட்டவை. கூட்டுறவுச் சட்டங்களும் கூட்டுறவு விதிகளும் தேசியப் பேரவையினால் நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களும் கூட்டுறவு விதிகளும் தேசியப் பேரவையினால் நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தக் கூடிய வகையிற் பொதுவாக ஆக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவை. தேசியப் பேரவை அங்கீகரித்தவுடன் இவை பயனுள்ளவையாகக் கருதப்பட வேண்டியவை. ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் தமக்கெத் தனித் தன்மை கொண்ட துணை விதிகளை ஆக்கி அக்கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சபையில் அங்கீகாரம் பெறல்வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் பெற்றுக் கூட்டுறவு ஆணையாளரின் அங்கீகாரம் பெற்ற பின்னரே அத்துணைவிதிகள் பயனுடைய தன்மையை அடையும்.

எனவே கூட்டுறவுச் சட்டம், கூட்டுறவு விதிகள் எல்லாச் சங்கங்களுக்கும் பொதுவானவை. துணை விதிகள் ஒவ்வொரு சங்கத்திற்கும் சிறப்பானவை. ஒருவகைச் சங்கத்தைச் சேர்ந்த இரு சங்கங்களின் துணை விதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆயினும் சங்கங்களின் துணை விதிகள் பல பொதுத் தன்மைகள் இருப்பதைக் காணமுடியும். ஒரேவகையைச் சேர்ந்த சங்கங்களின் துணைவிதிகளில் பொதுத்தன்மைகள் காணப்படுவது இயல்பு. ஏனெனில் துணைவிதிகள் சட்டம், விதிகளுக்கமைய ஆக்கப்படுவதால் அவற்றின் பொதுத்தன்மை துணைவிதிகளில் தோன்றுவது இயல்பு.

மாதிரித் துணை (உப) விதிகள்:
துணை விதிகளை உருவாக்கும் அதிகாரமும் பொறுப்பும் உறுப்பினர்கடையது. சங்கம் பதிவு செய்யப்படும் போது துணைவிதிகள் இருத்தல் வேண்டும். துணைவிதிகளை ஆக்குவதற்குச் சட்ட அறிவும் விசேடமாகக் கூட்டுறவுச் சட்டம் - விதிகள் பற்றிய அறிவும் அனுபவமும் வேண்டும். கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேரவுள்ள சாதாரண மக்களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. இவற்றில் தேர்ச்சியும் அறிவும் பெற்றவர்களின் உதவியை நாடினாலும் சங்கத்திற்குப் பெரும் பணச் செலவு ஏற்படும். இவற்றைப் பொருட்படுத்தாது துணை விதிகள் தயாரிக்கப்பட்டாலும் இத்துணைவிதிகள் கூட்டுறவு சட்டம், விதிகளுக்கு முரணாகாமல் இருக்கின்றனவா என்பதைக் கூட்டுறவு ஆணையாளர் நுணுக்கமாகப் பரீசிலனை செய்ய நீண்ட காலம் எடுக்கும். எனவே காலதாமதத்தையும், பணச் செலவையும் ஏனைய கஷ்டங்களையும் நீக்கக் கூட்டுறவுத் திணைக்களம் ஒவ்வொரு வகைச் சங்கத்துக்கும் ஒவ்வொரு மாதிரித் துணை (உப) விதிகள் ஆக்கி வைத்துள்ளது. இம்மாதிரித் துணை (உப) விதிகளை அங்கத்தவர்கள் பொதுக் கூட்டத்தில் (ஆரம்பக் கூட்டம்) வாசித்து விளங்கி, அவசியமான சில திருத்தங்களை மட்டும் சேர்த்து ஆணையாளருக்கு அனுப்புவதால் சிரமங்களும் தாமதங்களும் பெருமளவு குறையும்.

நிர்வாகச் சட்டமும் கூட்டுறவுச்சட்டமும்
அரசின் அதிகாரங்களை மூன்று வகையாகப் பிரிப்பர். சட்ட ஆக்கம், நிர்வாகம், நீதி என்பனவே இம்மூன்று வகைகளாகும். இவற்றுள் நிர்வாக அதிகாரம் அரசின் நிர்வாகத்துறையாற் பிரயோகிக்கப்படுகிறது. நிர்வாக அதிகாரத்தை பிரயோகிக்கும் பொழுது பிரசைகளுக்கு ஏற்படும் தீங்குகளைப் பற்றியதே நிர்வாகச் சட்டமாகும். சுருங்கக் கூறின் பொது நிர்வாகம் பற்றிய சட்டமே நிர்வாகச் சட்டமாகும்.

கூட்டுறவுச் சட்டத்திற்கும் நிர்வாகச் சட்டத்திற்கும் என்ன தொடர்பு? கூட்டுறவுச் சங்கங்கள் அரச நிர்வாகத்தின் பகுதியாக அமைவனவா? என ஒருவர் வினவலாம். கூட்டுறவுச் சங்கங்கள் தனியார் துறைசார் நிறுவனங்களே ஆயினும் அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் பலவற்றைச் சட்டம் அரசுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. கூட்டுறவுச் சட்டத்தின் படி ஆணையாளரும் அவரது உதவியாளர்களும் பிரயோகிக்கும் அதிகாரங்கள் சட்டம் விதித்த வரம்புகளை மீறாமற் பிரயோகிக்கப்படுதலும் அவ்வதிகாரங்களின் பிரயோகம் நீதி நியாயத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்பதுமே நிர்வாகச் சட்டத்தின் நோக்கமாகும்.

இலங்கையில் நூறு ஆண்டுகளுக்கு முந்திய வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள். அக்காலத்தில் அரசின் நிர்வாக யந்திரத்தின் தொடர்பு இன்றியே சாதாரண மக்களின் வாழ்வு கழிந்தது. “கோடு, கச்சேரி ஏறுதல்” ஒருவர் தன் வாழ்நாளில் தவிர்த்துக்கொள்ள வேண்டிய தீமைகள் என்னும் கருத்து கிராம மக்களிடையேண முதுமொழி போற் பேசப்பட்டதையும் நாம் அறிவோம். இங்கிலாந்து நாட்டிலும் கூட இதே போன்ற நிலைமைதான் முன்னர் நிலவியது. சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஒழுகும் ஒரு பிரஜை. தபாற் கந்தோர் என்ற அலுவலகம் பொலிசு உத்தியோகத்தன் என்ற அரச அலுவலர் தவிர்ந்த பிற அலுவலங்களுடனோ, அலுவலர்களுடனோ தொடர்பற்றவனாக அரசின் இருப்பை உணராதவனாக இருந்தான் என ஏ.ஜே.பி. டெயிலர் என்ற வரலாற்றாசிரியர் கூறியுள்ளார்.

ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. அரசின் தலையீடு எல்லாத்துறைகளிலும் வியாபித்துள்ளது. பொதுப் பண்டங்கள் (Pரடிடiஉ பழழனள) வழங்குதல், பொதுவசதிகளைப் பெருக்குதல், ஆகியவற்றில் அரசின் பங்கு அதிகரித்து வந்துள்ளது. இதனால் அரச அதிகாரிகளுக்குப் பல்துறைகளிலும் தலையீடு செய்யவும், ஒழுங்கைப் பேணவும் அதிகாரம் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறையில் அரச அதிகாரிகளுக்கு உள்ள நிர்வாக அதிகாரத்துடன் தொடர்பு பட்டதாக அமையும் நிர்வாகச் சட்டம் கூட்டுறவுச் சட்டம் பற்றிய கல்வியுடன் தொடர்புபட்டதாகும்.

நிர்வாகச் சட்டத்தின் மையமான எண்ணக்கரு ‘அதிகார மீறல்’ (ருடவசய ஏசைநள) ஆகும். சட்டம் விதித்த எல்லைகளை மீறுதல் என்பதே இதன் பொருள். நிர்வாக அதிகாரி ஒருவர் சட்டத்தின் எல்லைக்குள் (iவெசய - ஏசைநள) செயற்படல் வேண்டும். சட்டத்தின் எல்லைகளை மீறிச் செயற்படும் போது அதிகாரம் எழுந்தமானதாக, நீதியற்ற முறையில் பிரயோகிக்கப்படுகிறது. எனவேப நீதிமன்றம் கருதும், நிர்வாக அதிகாரம் நீதியற்ற முறையிற் பிரயோகிக்கப்படுவதனால் பாதிக்கப்படும் ஒருவர் நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் பெறலாம். இதனை நிர்வாகச் செயல்கள் மீதான நீதி மீளாய்வு (துரனiஉயைட சுநஎநைற ழக யுனஅinளைவசயவiஉந யுஉவழைn) என்பர். நீதிமன்றுக்கு நிவாணரம் கேட்டு விடுக்கும் மனுக்களை விசாரணை செய்யும் நீதிமன்று எழுத்தாணைகள் (றுசவைள) என்னும் கட்டளைகளை விடுக்கும்.

இயற்கை நீதிக் கோட்பாடு
சட்டவழி அதிகாரத்தைப் பிரயோகிக்கும் ஒரு அதிகாரி இயற்கை நீதியின் படி செயற்படுதல் வேண்டும். இயற்கை நீதி என்றால் என்ன? இது பற்றி ஏதேனும் சட்டம் உளதா? என்ற ஐயம் தோன்றுதல் கூடும். இயற்கை நீதி எழுதப்படாத சட்டம் என்று கூறலாம். இயற்கை நீதி இரு அம்சங்களைக் கொண்டது.

அ) ஒரு பிணக்குடன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் கேட்டல், (hநயச டிழவா ளனைநள)

ஆ) தமது நலன்கள், அக்கறைகளோடு தொடர்புபட்ட பிணக்கொன்றில் ஒருவர் தீர்ப்பு வழங்கும் நீதிவானாக இருத்தல் ஆகாது. (ழெ ழநெ ளாழரடன டிந ய தரனபந in hளை ழறn உயளந)

இயற்கை நீதிக் கோட்பாட்டின் மேற்குறித்த இரு அம்சங்களையும் லத்தீன் மொழியில் அமைந்த இரு கூற்றுக்களால் விளங்குவர். இதனை நிர்வாகச் சட்டம் பற்றிய நூல் ஒன்றிலிருந்து ஒருவர் படித்துத் தெரிந்து கொள்ளலாம். விரிவஞ்சி இதனை விபரித்தாலை விடுத்துள்ளோம்.

கூட்டுறவுச் சட்டத்திற்கும் இயற்கை நீதிக்கும் உள்ள தொடர்பினை உதாரணம் ஒன்றின் மூலம் குறிப்பிடுவோம். கூட்டுறவுச் சங்கம் ஒன்றினைப் பதிவு கோரும் விண்ணப்பம் ஒன்றை பதிவாளராகிய கூட்டுறவு ஆணையாளருக்கு நீங்கள் அனுப்புகின்றீர்கள். சட்டத்திலும், விதிகளிலும் குறிப்பிட்ட நிபந்தனைகள் யாவற்றையும் நீங்கள் பூர்த்தி செய்துள்ளதாகவும் கருதுகிறீர்கள். இருப்பினும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. பதிவாளர் திருப்தியுறாதவிடத்து விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. சட்டத்தின் வாசகம் எவ்விதம் இருந்த போதிலும் பதிவாளர் நீதியாக நடந்து கொண்டாரா என்பதே முக்கியமானது. அவர் திருப்தியுறாதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தனவா? எவ்விதம் அம் முடிவை அவர் அடைந்தார்? போன்ற வினாக்கள் நீதி மீளாய்வின் போது எழுப்பப்படும். இயற்கை நீதி தொடர்பாக எழும் வினாக்கள் கீழ்க்கண்ட வகையில் அமையும்.

அ) சங்கத்தின் பதிவினைக்கோரும் விண்ணப்பத்தை நிராகரித்த பதிவாளர் விண்ணப்பதாரர்களுக்குத் தமது பக்க நியாயத்தை எடுத்துக் கூறும் சந்தர்ப்பத்தை வழங்கினாரா?

ஆ) குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் அவரது சொந்த நலன்கள் அக்கறைகளுக்கு மாறானதாய் இருந்ததா? அதனால் அவர் நடுநிலை நின்று பக்கச் சார்பு இன்றிச் செயற்படும் தகுதியை இழந்தாரா?

கூட்டுறவுச் சங்கத்தைப் பதிவு செய்தல், பதிவு அழித்தல், கணக்காய்வு, விசாரணை, நடுத்தீர்ப்பு, சங்கங்களை ஒன்றிணைத்தல், பிரித்தல், இயக்குநர்களை நியமித்தல், இயக்குநர்களைப் பதவியிலிருந்து நீக்குதல் முதலிய பல்வேறு அதிகாரங்கள் கூட்டுறவுச் சட்டத்தின்படி நிர்வாகத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களைப் பிரயோகித்தல் இயற்கை நீதிக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.


6 கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையேயான
பொதுவான செயற்பாடுகள்

பதிவு:
கூட்டுறவுச் சங்கம் ஒன்று உருவாகி இயங்குகிறது என்பதற்குரிய சட்ட அங்கீகாரம் அதன் பதிவாகும். பதிவாளர் ஒருவரையும் சிரேட்ட உதவிப் பதிவாளர்களையும் நியமிப்பதற்குக் கூட்டுறவுச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவு வகை செய்துள்ளது. கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக நியமிக்ப்படுபவரே பதிவாளருக்குரிய அதிகாரங்களையும் தத்துவங்களையும் பிரயோகிக்கலாமெனக் கூட்டுறவுச் சட்டத்தின் 2(3) ஆம் பிரிவு கூறுகிறது.

பதிவு செய்யக்கூடிய கூட்டுறவுச் சங்கங்கள்:
1. தனிப்பட்டவர்களின் பொருளாதார, சமூக அல்லது கலாசார அக்கறைகளைக் கூட்டுறவுக் கொள்கைகளுக்கிணங்க மேம்படுத்தலைக் குறிக்கோளாகக் கொண்ட சங்கங்கள்.

2. மேற்கூறப்பட்ட சங்கமொன்றின் தொழிற்பாட்டு முறைகளுக்கு வசதியளிக்கும் நோக்குடன் தாபிக்கப்பட்ட சங்கம்.

3. கூட்டுறவுக் கல்வியையும் பயிற்சியையும் செய்வதற்காகவும் இலங்கையிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான ஆலோசனைச் சேவைகளைச் செய்வதற்காகவும், கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்துவதற்கான வேறு சேவைகளைச் செய்வதற்காகத் தாபிக்கப்பட்டதும், பதிவு செய்யப்பட்டதுமான சங்கங்களை உறுப்பினராகக் கொண்டதுமான ஒரு சங்கம்.

4. பதிவு செய்யப்பட்ட சங்கங்களை உறுப்பினவாகக் கொண்டதும், இலங்கையில் அல்லது அதன் ஏதேனும் ஒரு பாகத்திற் சந்தைப்படுத்தல், கைத்தொழில், கமத்தொழில், கடற்றொழில் அல்லது பதிவாளரினால் அங்கீகரிக்கப்படக் கூடிய அத்தகைய வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனவாக கூட்டுறவுச் சங்கங்களின் முயற்சிகளைத் திட்டமிட்டு ஒருமுகப்படுத்தி வசதி செய்யும் நோக்கத்துக்காகத் தாபிக்கப்பட்டதுமான ஒரு சங்கம்.

பொறுப்பு வரையறையுடன் அல்லது பொறுப்பு வரையறையின்றிப் பதிவு செய்யப்படலாம். ஆயினும் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கமொன்றை உறுப்புரிமையுடைய தாக்கிக்கொண்ட சங்கமொன்றின் பொறுப்பானது வரையறுக்கப்பட்டிருத்தல் வேண்டும். (கூட்டுறவுச் சட்டம் 3) (1).

முதலாவது வகைச் சங்கங்கள் ஆரம்பநிலை (முதனிலை)ச் சங்கங்களைக் குறிக்கும். இவ்வகையிற் கடனுதவு சங்கங்கள், கூட்டுறவுப் பண்டகசாலைகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற பல்வேறு வகைப்பட்ட சங்கங்கள் அடங்கும். இரண்டாவது வகை மாவட்ட ரீதியில் அல்லது வேறு ரீதியில் இணைக்கப்பட்ட இரண்டாம் நிலைச் சங்கங்களைக் (சமாசங்கள்) குறிக்கும். கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம். தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் போன்றவை இப்பிரிவைச் சேர்ந்தவையாகும். மூன்றாவது வகையைச் சேர்ந்த சங்கம் இலங்கையில் உள்ள எல்லாக் கூட்டுறவு நிறுவனங்களையும் அங்கத்துவமாகக் கொண்ட தேசிய சங்கமாகும். இலங்கையிற் ஸ்ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபையே இத்தகைய கூட்டுறவுச் சங்கமாகும். நான்காவது வகைச் சங்கங்கள் மாவட்ட சமாசங்களாகவோ அல்லது தேசிய ரீதியிலமைந்த தலைமைச் சங்கங்களாகவோ இருக்கலாம். வரையறுக்கப்பட்ட இலங்கைக் கூட்டுறவுச் சந்தைப்படுத்தற் சங்கம் (மாக்பெட்) வரையறுக்கப்பட்ட இலங்கைக் கைத்தொழிற் கூட்டுறவுச் சங்கம். வரையறுக்கப்பட்ட இலங்கைக் கூட்டுறவு மீன் விற்பனவுச் சங்கம் போன்றவை இப்பிரிவில் அடங்குபவையாகும்.

பொறுப்பு:
சங்கத்தில் உறுப்பினரின் பொறுப்பு இருவகைப்படும். அவை –
1. வரையறையற்ற பொறுப்பு.

2. வரையறையுள்ள பொறுப்பு.

வரையறையற்ற பொறுப்பு:
சங்கத்தின் கடன்கனுக்குச் சங்கச் சொத்துகளிடமிருந்து தீர்வு செய்த பின்பும் கடன்கள் தீராது இருந்தால் சங்க உறுப்பினர்கள் தமது சொந்தச் சொத்துக்களிலிருந்து அக் கடன்களைத் தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தன்மையே வரையறையற்ற பொறுப்பாகும்.


வரையறையுள்ள பொறுப்பு:
சங்கத்தின் கடன்களுக்கு ஒவ்வொரு உறுப்பினரும் எந்த அளவுக்குப் பொறுப்பு என்பதை உறுப்பினராகச் சேரும்போதே நிர்ணயித்துக் கொள்தே வரையறையுள்ள பொறுப்பாகும். வரையறையுள்ள பொறுப்பு மூவகைப்படும் அவையாவன:
1. பங்கின் அளவுக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பு.

2. பங்கின் மதிப்பைப் போல் பன்மடங்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பு.

3. உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட பொறுப்பு.

பங்கின் அளவுக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பென்பது ஒரு உறுப்பினர் கொள்முதல் செய்த பங்கின் பெறுமதிக்கு மேல் சங்கத்தின் கடன்களுக்குப் பொறுப்பாக இருக்காத நிலையைக் குறிக்கும். ஒரு உறுப்பினர் தான் கொள்முதல் செய்யும் பங்கின் எத்தனை மடங்குக்குக் கடன்களுக்குப் பொறுப்பு எனத்துணை விதிகளில் குறிப்பிடப்பட்டிருப்பின் சங்கம் கலைக்கப்படும் போது அதன் கடன்களை இறுக்கப் பங்கைவிடக் குறிப்பிட்ட மேலதிகத் தொகையைத் தமது சொந்தப் பணத்திலிருந்து ஈடுசெய்தல் வேண்டும். இதுவே பங்கின் மதிப்பைப் போல் பன்மடங்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பாகும். சங்கம் கலைக்கப்படும்போது அதன் கடன்களைத் தீர்க்கச் சங்கப் பணம் போதாதுவிடின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆகக்கூடுதலாக எவ்வளவு பணம் தமது சொந்தப் பணத்தில் இருந்து கொண்டு வரவேண்டுமெனத் துணைவிதிகள் குறிப்பிடின் அது உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட பொறுப்பாகும்.

பதிவுக்கு விண்ணப்பித்தல்:
கூட்டுறவுச் சங்கமொன்றைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் பற்றிக் கூட்டுறவுச் சட்டம் (5) ஆம் (2) ஆம் விதிகள் கூறுகின்றன. ஒரு சங்கத்தைப் பதிவு செய்வதற்காகப் பதிவாளரால் விதிக்கப்படும் படிவத்தில் விண்ணப்பஞ் செய்யப்படுதல் வேண்டும். சங்கத்தின் ஆதி உறுப்பினர்கள் எல்லோரும் அப்படிவத்திற் கையொப்பமிடல் வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன் அனுப்பப்படவேண்டியன:
1. சங்கம் பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட ஆரம்பக் கூட்டத்தின் அறிக்கைப் பிரதி.

2. ஆரம்பக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சங்கத் துணை விதிகளின் இரு பிரதிகள்.

3. துணைவிதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி.

4. சங்கத்தின் தொழிற் பரப்பைக் காட்டும் படமும் பாதை வரைபடமும்.

5. சங்கத்தின் இயலுந் தன்மை பற்றிய பொருளாதாரக் கூற்று.

6. பங்குப்பணம், பிரவேசப் பணம் என்பன பெறப்பட்டிருப்பின் அதன் வரவு செலவு அறிக்கை.

7. குறித்த துணைவிதி கூட்டுறவுச் சட்டத்திற்கும், விதிகளுக்கும் முரண்பட்டதில்லையெனப் பெறப்பட்ட சான்றிதழ் ஒன்று.

8. சங்கத்தின் முன்னேற்ற அறிக்கை (பதிவுக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் வரையான சங்கத்தின் முன்னேற்றம்).

9. சங்கத்தின் ஆரம்ப உறுப்பினர்கள் அன்றைய தினத்தில் துணைவிதியால் தேவைப்படுத்தப்பட்டுள்ள கொடுப்பனவுகளைச் செய்துள்ளதென்பதற்கும் அதற்கான ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான சான்றிதழ்.

10. பதவி வகிப்பவர்கள் பற்றிய தகவல்கள் (பெயர், வயது, முகவரி, தொழில், கல்வித்தகைமைகள்).


விண்ணப்பத்துடன் இவற்றையும் அப்பகுதிக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் அறிக்கையையும் பதிவாளருக்கு அனுப்புதல் வேண்டும். தனியாட்களை மட்டும் உறுப்பினராகக் கொண்ட கூட்டுறவுச் சங்கத்தின் பதிவு விண்ணப்பத்தில் பத்துப் பேருக்குக் குறையாதவர்கள் கையொப்பமிடல் வேண்டும். இத்தொகையே ஆட்களை மட்டும் உறுப்பினராகக்கொண்ட கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பிப்பதற்கும் குறைந்தளவு (இழிவெல்லை) உறுப்பினர் தொகையாகும். சட்டம், விதி சங்க உறுப்பினரின் மேலெல்லையைக் கட்டுப்படுத்தவில்லை. பதிவு செய்யப்பட்ட சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கமாயின் உறுப்புரிமைச் சங்கங்கள் ஒவ்வொன்றினாலும் அதிகாரமளிக்கப்பட்ட ஒவ்வொரு ஆளும் பதிவு விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட வேண்டியவர்களின் குறைந்தளவு உறுப்பினர் (இழிவெல்லை) தொகை சட்டம், விதிகளில் குறிப்பிடப்படவில்லை. தனியாட்களையும் பதிவு செய்யப்பட்ட சங்கங்களையும் உறுப்பினர்களாகக்கொண்ட சங்கமாயின் உறுப்புரிமைச் சங்கங்களினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒவ்வொரு ஆளும் தனியாள் உறுப்பினரில் பத்துப்பேரும், தனியாள் உறுப்பினர் பத்து பேருக்குக் குறைவாயின் எல்லா உறுப்பினராலும் பதிவு விண்ணப்பத்தில் கையெப்பமிடல் வேண்டும். பதிவு விண்ணப்பத்தில் கையொப்பமிடுபவர்களையே ஆதி உறுப்பினர் என அழைப்பர்.

பதிவு செய்தலின் அத்தாட்சி:
பதிவாளர் கூட்டுறவுச் சங்கத்தைப் பதிவு செய்தலைப் பற்றிச் சட்டம் (6)ஆம் விதியும் (4) ஆம் விதியும் கூறுகின்றன. பதிவாளர் சட்டவிதி பொருளாதார இயலுந்தன்மை ஆகியவற்றில் அச்சங்கம் சம்பந்தப்பட்ட வரையில் திருப்தியுறின் சங்கத்தையும் துணைவிதிகளையும் பதிவு செய்வார். பதிவு செய்தலுக்கு முடிவான அத்தாட்சியாகப் பதிவாளரினாற் கையொப்பமிடப்பட்ட துணைவிதிகளின் பிரதியொன்றும் பதிவுக்கு அத்தாட்சியாகச் சங்கத்துக்கு அனுப்பப்படல் வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்வதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படுவதில்லை.

சட்டம், விதிகளுக்கு முரண்பட்டதெனவும், பொருளாதார இயலுந் தன்மையற்றதெனவும் பதிவாளர் கருதினால் அமைச்சருக:கு எழுத்து மூலம் மேன்முறையீடு செய்யலாம் என்ற நிபந்தனையுடன் ஒரு சங்கத்தின் பதிவை மறுக்கலாம். அவ்விதம் மறுக்கப்படும் பொழுது பதிவுகோரி விண்ணப்பித்தவருள் எவரேனும் ஒருவர், பதிவு மறுப்பு அறிவித்தல் கிடைத்த ஒரு மாதத்துக்குள் எழுத்து மூலம் அமைச்சருக்கு மேன்முறையீடு செய்யலாம். அமைச்சரின் முடிவே இறுதி முடிவாக இருத்தல் வேண்டும். உறுப்புரிமை மேன்முறையீடுபற்றி விதி (3) கூறுகிறது.


சங்கத்தின் உறுப்பினர்களை இருவகையாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. ஆதி அங்கத்தவர்கள். (பதிவு கோரும் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டவர்கள்)

2. பதிவு செய்தபின் சேர்க்கப்படும் அங்கத்தவர்கள்.


இன்னொரு வகையாகவும் பிரிக்கலாம். அவையாவன:
1. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள்.

2. தனியாட்கள்.

பதிவு செய்யப்பட்ட சங்கமொன்றின் துணைவிதிகள் விதிக்கலாகும். நிபந்தனைகளுக்கமைவாகவே அச்சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்படல் வேண்டுமென விதி (5) கூறுகிறது. ஆயினும் கூட்டுறவுச் சட்டம் (4) உறுப்பினருக்கு இருக்க வேண்டிய இரு தகமைகள் பற்றிக் கூறுகின்றது. சட்டம் விதித்த உறுப்புரிமைத் தகமைகள் எல்லா வகைக் கூட்டுறவுச் சங்கத்துக்கும் பொதுவானவை. அவற்றோடு ஒவ்வொரு வகைச் சங்கமும் தமக்குத் தேவையானதும் பொருத்தமுமான நிபந்தனைகளைத் துணை விதிகளிற் சேர்த்துக்கொள்ளலாம். கூட்டுறவுச் சட்டம் விதித்த உறுப்புரிமைத் தகமைகளை இருவகையாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. வயதுத் தகைமை. 2. வதிவிடத் தகைமை.

வயதுத் தகைமை: ஒரு கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேருபவருக்குப் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டிருத்தல் வேண்டும்.

வதிவிடத் தகைமை: சங்கத் தொழிற்பாட்டு இடப் பரப்பினுள் வதிபவராக அல்லது தொழில் புரிபவராக அல்லது அசைவற்ற ஆதனத்தை வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.

வயதுத் தகைமை, வதிவிடத் தகைமை பற்றி ஏதேனும் பிரச்சினை எழுமிடத்துப் பதிவாளரினால் தீர்மானிக்கப்படும் முடிபே இறுதியானது. சங்கங்கள், உறுப்பினராகச் சேருவதற்குப் பதிவு செய்யப்பட்டிருத்தலும் தொழிற் பரப்பினுள் இருப்பதும் முக்கியமான நிபந்தனைகளாகக் கருதப்படும்.

பதிவு செய்யப்பட்ட சங்கமொன்று வேறு ஏதேனும் பதிவு செய்யப்பட்ட சங்கத்தினைத் துணைவிதிகள் விதிக்கலாகும் நிபந்தனைகளுக்கமைவாக உறுப்பினராக அனுமதிக்கலாம் என விதி (6) கூறுகின்றது.

உறுப்புரிமை முடிவு:
உறுப்புரிமை முடிவை இரு அம்சங்களாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. விலகல். 2. விலக்கல்.

விலகல் பற்றிக் கூட்டுறவு விதி (7) கூறுவது. “பதிவு செய்யப்பட்ட சங்கமொன்றின் உறுப்பினர் எவரேனும் அச்சங்கத்துக்குக் கடனாளியாய் அல்லது தீர்க்கப்படாத கடனுக்குப் பிணையாயிராவிடின் காரியதரிசிக்கு எழுத்தில் ஒருமாத அறிவித்தல் கொடுத்துச் சங்கத்தினின்றும் விலகலாம்” என இவ்விதி கூறுகிறது.

விலக்கல் பற்றிக் கூட்டுறவு விதிகள் (8) (9) கூறுவன. “பதிவு செய்யப்பட்ட சங்கமொன்றின் துணைவிதிகள் விதிக்கலாம் நியாயத்துக்கும் அதிற் கொடுக்கப்பட்டுள்ள முறைப்படியும் எவரேனும் உறுப்பினர் சங்கத்தினின்றும் அகற்றப்படலாம்” எனக் கூட்டுறவு விதி (8) எனும் “சங்கத்தின் துணைவிதியால் விதிக்கப்பட்ட தகுதியுடைமையை இழந்த, பதிவு செய்யப்பட்ட சங்கமொன்றின் உறுப்பினர் எவரேனும், அச்சங்கத்தின் உறுப்பினராகத் தொடர்ந்திருக்க முடியாது. சங்கத்தின் நிருவாக சபை அவருடைய பெயரை உறுப்பினர் இடாப்பில் இருந்து உடனே நீக்குதவற்கு ஏற்ற நடவடிக்கை எடுத்தல் வேண்டும்” எனக் கூட்டுறவு விதி (9) கூறுகின்றது. எனவே உறுப்பினரை விலக்கல் பற்றிய விபரங்கள் துணைவிதிகளிலே விபரமாக ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே உறுப்பினர்களை விலக்கலுக்குரிய காரணங்கள், விலக்கும் முறைகள், விலக்கலுக்கு எதிரான முறையீடுகள், முறையீடுகளை முடிவு செய்தல் போன்ற விடயங்கள் பற்றித் தெளிவாகவும் விபரமாகவும் விதிகளுக்கு முரண்பாடில்லாமலும் துணைவிதிகள் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

உறுப்பினர் விலக்கல் பற்றிய காரணங்கள் எல்லாக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தக் கூடிய பொதுக் காரணங்களும் ஒவ்வொரு வகைக் கூட்டுறவுச் சங்கத்திற்கு மட்டும் பொருத்தக் கூடிய சிறப்புக் காரணங்களுமென இருக்கும். சித்த சுயாதீனமற்றவராயிருத்தல், வதிவிடத் தகமை இழத்தல், கடனிறுக்கத் தகுதியற்றவரெனத் தீர்ப்புப் பெறல், மரணம் போன்றவை பொதுக் காரணங்களாக அமையும், உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களிற் குறிப்பிட்ட உற்பத்தித் தொழிலைச் செய்யாதுவிடல், தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் வேலை செய்யக்கூடிய இயலுந் தன்மையை இழத்தல் போன்றவை சிறப்புக் காரணங்களாக அமையலாம். விலக்கும் முறைகளில் எழுத்து மூலம் காரணங்கள் கேட்டல், அல்லது விசாரணை நடத்தல் போன்றவையும், உறுப்பினர் தரம் விலக்கப்பட்டதை ஆட்சேபித்து முறையீடு செய்வதற்குரிய முறை, இறுதித் தீர்மானம் எடுக்கும்போது விலக்கப்பட்ட உறுப்பினர் கலந்துகொண்டு தனது நியாயங்களை எடுத்துக் கூறுச் சந்தர்ப்பம் அளித்தல், அல்லது எழுத்து மூலமாக அவர் கொடுத்த விளக்கங்களை வைத்துத் தீர்மானித்தல் போன்ற விடயங்கள் துணைவிதிகளில் தெளிவாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களான சிறப்புரிமைகள்:
1. “சங்கத்தைப் பதிவு செய்தலானது இடையறா வழியுரிமையுடனும் பொது இலச்சினை ஒன்றுடனும் கூடியதாகவும்,: ஆதாரம் வைத்திருக்க, ஒப்பந்தங்கள் செய்து கொள்ள, வழக்குகள் வேறு சட்ட நடவடிக்கைகள் என்பன தொடரவும், எதிர்வாதிடவுமான தத்துவத்துடன் கூடியதாகவும், அதன் அமைப்பு நோக்கத்துக்காக அவசியமான எல்லா விடயங்களையும் செய்வதற்கான தத்துவம் கொண்டதாகவும், அது பதிவு செய்யப்பட்ட பெயரில் கூட்டிணைக்கப்பட்ட ஒரு குழுவாக அதனை ஆக்குவதாதல் வேண்டும்” என (20) ஆவது கூட்டுறவுச் சட்டம் கூறுகிறது. எனவே சட்டம் தனி மனிதனுக்குள்ள உரிமை, சுதந்திரம், கடமை ஆகியவற்றை அளிக்கின்றது.

2. “கூட்டுறவு” என்னும் பதத்தை உபயோகிக்கும் உரிமை பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கே தனிச் சிறப்புரிமையாகும். கூட்டுறவுச் சட்டத்தின் 65ன் (1)ஆம், (2)ஆம் பிரிவுகள் இதைப் பற்றிக் கூறுகின்றன. ஊழ-ழிநசயவiஎந என்னும் ஆங்கிலப் பதத்தையோ “சமுபகார” எக்சத் சஹாகார” என்னும் சிங்களப் பதங்களையோ அல்லது “ஐக்கிய” “கூட்டுறவு” என்னும் தமிழ்ப் பதங்களையோ பாகமாயமைத்த மகுடப் பெயரின் கீழ் வியாபாரம் அல்லது தொழில் கொண்டு நடத்தலாகாது. 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதிக்கு முன் இச் சொற்களைப் பயன்படுத்தி வந்த நிறுவனங்களுக்கு விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடக்கும் எவருக்கும் நீதிமன்றமொன்றின் சுருக்க விசாரணையின் பின் 500 ரூபாவரை குற்றப்பணம் விதிக்கலாம். குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் தவறு தொடர்ந்து புரியப்படுமிடத்து ஒவ்வொரு நாளுக்கும் 50 ரூபா கொண்ட மேலுமொரு குற்றப் பணத்திற்கு ஆளாதல் வேண்டும்.

3. கூட்டுறவுச் சங்கங்கள் முத்திரை வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் 35ம் பிரிவு கூறுகிறது.

4. கம்பனிக் கட்டளைச் சட்டமும் தொழிற் சங்கங்களின் கட்டளைச் சட்டமும் அதன் திருத்தங்களினதும் ஏற்பாடுகள் கூட்டுறவுச் சட்டத்தின் கீழ்ப்பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு ஏற்புடையவாகா என்பதைக் கூட்டுறவுச் சட்டத்தின் 69ஆம் பிரிவு கூறுகிறது.

5. முறையாகச் சேர்க்கப்பட்ட உறுப்பினரொருவர் பராயமடையாமை அல்லது வயதுக்குறைவு என்பதைக் காட்டிச் சங்கத்தின் மீது தமக்குள்ள பொறுப்புகளிலிருந்து நீங்கிக் கொள்ள முடியாது. முதன்மையாளராகவோ பிணைகாரராகவோ சங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியாது. இதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் (13) கூறுகிறது.

6. சங்க உறுப்பினர், கடந்தகால உறுப்பினர், இறந்த உறுப்பினர் ஆகியோரின் பங்குகள் அல்லது வேறு அக்கறைகளை அச்சங்கத்தின், அவரின் வருமதிகளுக்கு அல்லது வேறு சங்கங்களுக்கு அவ்வுறுப்பினர் செலுத்த வேண்டிய தொகைக்கு அல்லது ஒரு சங்கத்தின் ஒழிப்போனுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்குப் பதிலீடு செய்யலாம் அல்லது செலுத்தலாம். இது பற்றிக் கூட்டுறவுச் சட்டம் (25) கூறுகிறது.

7. பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்க உறுப்பினரொருவரின் பங்குகள், உதவு தொகைகள், வேறு அக்கறைகள் அவ்வுறுப்பினர் வெளியில் பெற்ற கடன்களுக்காக அல்லது வேறு பொறுப்புக்களுக்காக நீதிமன்ற மூலம் நடுக்கட்டலுக்கோ விற்பனைக்கோ இலக்காகாது இருக்கக் கூட்டுறவுச் சட்டம் வகை செய்கின்றது. கூட்டுறவுச் சட்டம் (26) இது பற்றிக் கூறுகின்றது.

8. பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கமொன்று பராயமடையாதவர்களிடமிருந்து அவர்களின் நன்மைக்காக வைப்புக்களைப் பெறவும் அதன் வட்டியை அல்லது திரண்ட வைப்புத் தொகையைப் பராயமடையாதவர்களுக்கு அல்லது அவரின் பாதுகாவலருக்ணகு வழங்க, பராயமடையாதவரால் அல்லது பாதுகாவலரினால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டு அப்பொறுப்பினை அகற்றுஞ் சாதனமாக அமைய கூட்டுறவுச் சட்டத்தினை 28 (1), (2) ஆம் பிரிவுகளை வழி செய்கின்றன.

9. கடந்த கால உறுப்பினர் ஒருவர் உறுப்பினராக விளங்கிய திகதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அவரின் சொத்துக்கள் சங்கக் கடன்களுக்குப்பொறுப்பாக இருத்தல் வேண்டும். இறந்த உறுப்பினரின் சொத்துக்களும் இறந்த திகதியில் இருந்து இரு ஆண்டுகளுக்குச் சங்கக் கடன்களுக்குப் பொறுப்பாக இருத்தல் வேண்டும். கூட்டுறவுச் சட்டம் 29 (1), (2) என்பன இது பற்றிக் கூறுகின்றன.

10. சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான காணி, கட்டிடங்களைக் காணி கொள்ளற் சட்டத்தின் கீழ் கொள்வனவு செய்விக்கலாம். இது பற்றிக் கூட்டுறவுச் சட்டம் 34 (1), (2) கூறுகின்றன.

11. துணைவிதிகள் ஆக்கப்படவேண்டுமென்று ஏதேனும் விதியினால் அதிகாரமளிக்கப்பட்ட ஏதேனும் கருமத் தொடர்பில் ஆக்கப்பட்ட துணைவிதியெதுவும், வியாபாரக் கட்டுப்பாட்டை உள்ளடக்கும் ஒப்பந்தம் ஒன்றாக, அத்தகைய துணைவிதி இருக்கின்றதென்ற காரணத்தால் மட்டும் நீதிமன்றத்திற் கேள்விக்குப்படுத்தலாகாது. இது பற்றிக் கூட்டுறவுச் சட்டம் (37) கூறுகிறது.

12. உறுப்பினர் எவரேனும் துணைவிதிகளை மீறுவதற்காக அவர்கள் மீது குற்றப்பணம் விதிப்பதற்குரிய தத்துவம் பற்றிக் கூட்டுறவுச் சட்டம் 38 (அ), (ஆ) கூறுகின்றன.

13. கூட்டுறவுச் சங்கத்தின் நிதிகளைத் தகுந்தவர்களிடம் முதலீடு செய்வதற்குரிய தத்துவம். இதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் 42 (1) (2) கூறுகின்றன. கூட்டுறவு விதி 36ம் இதுபற்றிக் கூறுகிறது.

14. கூட்டுறவுச் சங்கங்களுக்காக சங்க அலுவலர்களினாற் செய்யப்படும் ஒப்பந்தங்கள், அவ்வலுவலரின் நியமனத்திலுள்ள ஏதேனும் குறைபாடு அல்லது தகுதியின்மை காரணமாகச் செல்லுபடியற்ற தாக்குவதற்கு அல்லது தவிர்ப்பதற்கு முடியாது. இதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் (13) கூறுகிறது.

15. கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர் இடாப்பு, உறுப்பினரின் சேர்வுத் தேதி, இல்லாதொழிந்த தேதி ஆகிய விபரங்கள் எதற்கும் முதற்றோற்றச் சான்றாக அமையும். இதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் (3) கூறுகிறது.

16. கூட்டுறவுச் சங்கப் புத்தகங்களிலுள்ள ஏதேனும் பதிவு, விதிகளினால் விதிக்கப்படக் கூடிய முறையில் அப்பதிவின் பிரதியொன்று சட்டமுறை நடவடிக்கையில் முன்னேற்றச் சான்றாக அமையும். சங்கம் திறந்தவராயிராத சட்டமுறை நடவடிக்கையில் நீதிமன்றம் சிறப்பான காரணங்களுக்காகப் பணித்தாலன்றி, சங்கத்தின் புத்தகங்கள் ஏதேனும் உள்ளீடுகளைக் கொணரும்படியே, எண்பிப்பதற்காகச் சாட்சி ஒருவராகத் தோன்றும்படியோ கட்டாயப்படுத்தலாகாது. இதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் 31 (1) (2) கூறுகிறன.

17. கூட்டுறவுச் சங்கம் ஒன்று அதன் நோக்கங்களுக்காக அசைவுள்ள அசைவற்ற சொத்துக்களைக் கொள்வனவு செய்ய, நன்கொடையாகப் பெற அல்லது வேறு வகையில் பெறவும், விற்க, ஈடுவைக்க அல்லது குத்தகைக்கு விடவும் உரிமையுண்டு. இதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் (33) கூறுகிறது. பொதுச் சபையின் அங்கீகாரமின்றியும் பதிவாளரிடமிருந்து முன்னர் எழுத்திற் பெறப்பட்ட அங்கீகாரமின்றியும் வியாபாரப் பொருள் இருப்புத் தவிர ரூபா 5000 அல்லது அதற்கு மேற்பட்ட பெறுமதியுடைய அசைவுள்ள அசைவற்ற சொத்தினைக் கொள்முதல் செய்தல் விற்பனை செய்தல் ஆகாது எனக் கூட்டுறவு விதிகள் 48 (1) (2) கூறுகின்றன.

18. கூட்டுறவுச் சங்கத் தொழிற்பாடுகள் சம்பந்தமாக ஏதாவது பிணக்குகள் ஏற்பட்டால் அதுபற்றிப் பதிவாளருக்கு மனுச் செய்தல் வேண்டும். அதை அவர் தீர்க்கலாம். அல்லது நடுத்தீர்ப்பாளர்களுக்கு ஆற்றுப்படுத்தலாம். இதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் 58 (1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) கூறுகின்றன.

19. கூட்டுறவுச் சங்கத்திற்கு அல்லது சங்கத்திற்கூடாக விளைபொருள்களை அதன் உறுப்பினர்கள் விற்பனை செய்தல் வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அல்லது துணைவிதிகளை மீறியமைக்காக பொருந்திய அல்லது மதிப்பிடப்பட்ட நட்டவீட்டுத் தொகையொன்றைச் செலுத்தும்படி, துணைவிதி மூலம் ஏற்பாடு செய்து அறவிடலாம். இதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் 21 (1) (2) (3) (4) (5) கூறுகின்றன.

20. குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கத்துக்குக் குறிப்பிட்ட தொழிற்பரப்பில் வசிக்கும் உறுப்பினரல்லாதோரைக் கூடக் குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கத்துக்கே கட்டாயமாக விற்பனை செய்யவேண்டுமென அமைச்சர் கட்டளையிடலாம். அதுபற்றிக் கூட்டுறவுச் சட்டம் 22 (1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11) விரிவாகக் கூறுகிறன.

21. கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் இறந்தால் விதிகளுக்கிணங்கப் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்பட்ட ஆளுக்கு அல்லது பின் உரித்தாளருக்கு அல்லது சட்டமுறைப் பிரதிநிதிக்கு அவரின் பங்கை அல்லது வேறு அக்கறையை மாற்றலாம், அல்லது விதிகள் துணைவிதிகளுக்கிணங்க அவற்றின் பெறுமதிக்குச் சமமான தொகையொன்றைக் கொடுக்கலாம். இது பற்றிக் கூட்டுறவுச் சட்டம் 27 (1), (2), (3)ம், விதி 13ம் கூறுகின்றன.

பங்குகள்:
ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் மூலதனக் கூறுகளே பங்குகள். சங்க உறுப்பினராவதற்கு ஒருவர் துணைவிதி குறித்த பெறுமதிப்பங்கை அவ்விதி கூறும் முறையிற் கொள்முதல் செய்யவேண்டும். கூட்டுறவுச் சங்கங்களின் பங்குகளின் பெறுமதிக்குச் சட்டம், விதிகள் மேலெல்லை விதிக்கவில்லை. ஆனால் உறுப்பினர் கொள்முதல் செய்யும் பங்கின் தொகைக்கு மேலெல்லை விதிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் பங்குமுதலில் 1ஃ5 பாகத்திற்கு மேற்பட்ட தொகையை ஒரு உறுப்பினர் வைத்திருத்தலாகாது என விதி (14) வரையறை செய்கிறது.

பொறுப்பு வரையறுக்கப்பட்ட சங்கமொன்றின் உறுப்பினர் ஒருவர் வேறு ஒரு உறுப்பினருக்குத் தனது பங்குகள் முழுவதையுமோ அல்லது பகுதியையோ மாற்றஞ் செய்யலாம். ஆனால் அவ்வுறுப்பினரின் பங்குகளின் மொத்தப் பெறுமதி கூட்டுறவு விதிகளினால் விதிக்கப்படக் கூடிய மேலெல்லைக்கு அமைவாக மாற்றுதல் வேண்டும். இறந்த உறுப்பினர் ஒருவரின் பின்னுரித்தாளரின் பங்குகள் விடயத்திலும் இவ்விதி கடைப்பிடிக்கப்படல் வேண்டும். மாற்றப்படும் பங்கின் பெறுமதி துணைவிதிகள் வேறுவிதம் விதித்தாலன்றி அவ்வுறுப்பினர் குறித்த பங்குக்குக் கொடுத்த தொகையாக இருத்தல் வேண்டும்.

வரையறுக்கப்படாத சங்கமாயின் உறுப்பினர் ஒருவர் ஒருவருட காலத்துக்குக் குறையாது வைத்திருந்த பங்கினைச் சங்கத்திற்கு அல்லது சங்க உறுப்பினருக்கு அல்லது உறுப்பாண்மைக்கான விண்ணப்பம் நிருவாகக் குழுவினால் ஏற்கப்பட்ட ஒருவருக்கு மட்டுமே மாற்றஞ் செய்ய முடியும். சட்டம் 17 விதி 13 (5) 14 என்பன இவைபற்றி விரிவாகக் கூறுகின்றன. கூட்டுறவுச் சங்கம் பங்குகளைக் கொள்முதல் செய்வதாயின் தமது இலாபத்தில் இருந்து பங்குமாற்று நிதியொன்றை ஏற்படுத்தி அந்நிதி மூலம் கொள்முதல் செய்தல் வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைதல், பிரிதல் சொத்துக்கள் பொறுப்புக்களை மாற்றுதல்:
(1) ஒரு பதிவுபெற்ற கூட்டுறவுச் சங்கம் தனது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் இன்னொரு கூட்டுறவுச் சங்கத்திற்கு முழுதாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றுவதற்கு,

(2) ஒரு பதிவு பெற்ற கூட்டுறவுச் சங்கம் தன்னைத்தானே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சங்கங்களாகப் பிரித்துக் கொள்வதற்கு,

(3) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பதிவு பெற்ற கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றாக இணைவதற்கு,

குறித்த விடயம் சம்பந்தமாக ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட்ட பொதுக் கூட்டத்தில் சமூகமளித்து வாக்களிக்க உரிமையுள்ள அங்கத்தவர்களில் 2ஃ3 பகுதியினரின் வாக்குகள் பெற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும்.

கூட்டுறவுச் சங்கப்பொதுக் கூட்டத்தில் தீர்மானங்கள் பற்றிய முழு விபரங்களையும் தெளிவாக வரையறுத்த 2ஃ3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படல் வேண்டும். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் சங்க அங்கத்தவர்கள் அனைவருக்கும் சங்கத்துக்குக் கடன் கொடுத்தோர் இருந்தால் அவர்களுக்கும் தீர்மானத்தை எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும். எழுத்து மூலம் அறிவித்தல் பெற்ற உறுப்பினர், கடன் கொடுத்தோர் தமது பங்கை அல்லது கடன்களை அல்லது வைப்புக்களை மீளப்பெறும் விருப்பத்தை ஒரு மாத காலத்துக்குள் தெரிவித்தல் வேண்டும். எவ்வித அறிவித்தலும் கொடுக்காதுவிடின் தீர்மானம் பற்றிய சகல நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படல் வேண்டும். இவை பற்றிக் கூட்டுறவுச் சட்டம் 9 (1) (2) (3) (4) (5) (6) கூறுகின்றன.

பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கமொன்றின் சொத்துக்கள் பொறுப்புக்கள் முழுவதும் இன்னொரு கூட்டுறவுச் சங்கத்திற்கு மாற்றப்படுமிடத்து முன்னைய சங்கத்தின் பதிவானது நீக்கஞ்செய்யப்படுவதுடன் அச்சங்கள் கலைக்கப்பட்டதாகவும் கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றாக இல்லாததாகவும் ஆக்கப்படுதல் வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான சங்கங்கள் ஒரு புதிய சங்கமாக ஒன்றிணையும் போது ஒன்றிணைக்கப்பட்ட சங்கங்களின் பதிவானது புதிய சங்கம் பதிவுசெய்யப்பட்டவுடன் பதிவழிக்கப்பட்டதாகவும், கலைக்கப்பட்டதாகவும் கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றாக இல்லாதொழிக்கப்பட்டதாகவும் வேண்டும்.

பதிவு பெற்ற கூட்டுறவுச் சங்கம் இரண்டு அல்லது அதற்கு அதிகமாகப் பிரியுமிடத்துச் சங்கத்தின் பதிவானது புதிய சங்கங்கள் பதிவு பெற்றுதும் பதிவழிக்கப்பட்டதாகவும் கலைக்கப்பட்டதாகவும் கூட்டிணைக்கப்பட்ட குழு ஒன்றாக இல்லாதொழிக்கப்பட்டதாகவும் வேண்டும். இவை பற்றி கூட்டுறவுச் சட்டம் 10 (1) (2) (3) கூறுகின்றன.

கணக்காய்வு:
ஒவ்வோராண்டிலும் ஆகக்குறைந்தது ஒருமுறையாவது பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சங்கத்தினதும் கணக்குகளைப் பதிவாளர் அல்லது அதற்கென அவரால் எழுத்திற் பொதுவாக அல்லது சிறப்பான கட்டளையினால் அதிகாரமளிக்கப்பட்ட வேறு ஆளாற் கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டுமெனக் கூட்டுறவுச் சட்டம் 44 (1) கூறுகிறது.

கணக்காய்வு செய்ய அதிகாரமுள்ளவர்கள்:
1. பதிவாளர்

2. பதிவாளரால் அதிகாரமளிக்கப்பட்ட கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் அலுவலர்.

3. பதிவாளரினால் நியமிக்கப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட கணக்காய்வாளர்.


உறுதிப்படுத்தப்பட்ட கணக்காய்வாளர் என்பது:
1. பட்டயம் பெற்ற கணக்காளர் அல்லது பட்டயம் பெற்ற கணக்காளர் நிறுவனம்.

2. பதிவாளராற் பேணி வரப்படும் கணக்காய்hளர் குழு அட்டவணையில் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ள ஒருவர் அல்லது சபை என விதி 41 (1) கூறுகிறது.


கணக்காய்வு முறை:
முன்னைய கணக்காய்வின் இறுதித் திகதியில் ஆரம்பித்துக் கணக்காய்வுக்கு உடனடி முன்னதாகவுள்ள நிதியாண்டின் கடைசித் திகதி வரை செய்யப்படல் வேண்டும். அல்லது பதிவாளர் பணிப்பதற்கமைய அவரால் குறிக்கப்படும் அத்தகைய மற்றைய திகதிவரை செய்யப்படல் வேண்டுமென விதி 41 (2) கூறுகிறது.

கணக்காய்வானது காலந்தப்பிய கடன்களினதும் (எவையேனுமிருப்பின்) சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் பெறுமதியை மதித்தலையும் சரி பிழை பார்த்தலையும் உள்ளடக்குதல் வேண்டுமெனச் சட்டம் 44 (2) கூறுகிறது.

கணக்காய்வாளர், பதிவாளராற் குறிப்பிடப்படும் முறையில் கணக்காய்வு அறிக்கையொன்றினை இரு பிரதிகளிற் சமர்ப்பித்தல்வேண்டும். அத்தகை அறிக்கையானது ஏனையவற்றுடன் பின்வரும் தகவல்கள் அடங்கிய கூற்றினையும் கொண்டிருத்தல் வேண்டும்.

(அ) அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டபடி சகல தகவல்களையும் பெற்றுள்ளாரா

(ஆ) கணக்குப் புத்தகங்கள் சரியாக வைக்கப்பட்டு வந்துள்ளனவா

(இ) கணக்குப் புத்தகங்களுடன் ஐந்தொகையும் இலாபநட்டக் கணக்கும் சகல அட்டவணைகளையும் கணக்காய்வாளர் தனது கணக்காய்வு அறிக்கையுடன் இணைத்தல் வேண்டுமென விதி 41 (5)உம் கணக்காய்வாளர் சங்கத்தின் கணக்காய்வு செய்யணப்பட்ட ஐந்தொகையுடன் கணக்காய்வுச் சான்றிதழ் ஒன்றினையுஞ் சமர்ப்பித்தல் வேண்டுமென விதி 41 (6)உம் கூறுகின்றன.

பதிவாளர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட கணக்காய்வாளருக்குள்ள அதிகாரங்கள்:
1. சங்கத்தின் கொடுக்கல் வாங்கல் பற்றி அல்லது அலுவல்களின் முகாமை பற்றி தகவல்கள் கொடுக்கக்கூடிய சங்கத்தின் கடந்த கால அல்லது தற்கால அலுவலரை, முகவரை, சேவையாளரை அல்லது உறுப்பினரை அல்லது வேலையாளைக் கட்டளையிட்டழைத்தல்.

2. கணக்காய்வு சம்பந்தமான புத்தகங்கள், பத்திரங்கள், ஆவணங்கள் அல்லது சங்கத்துக்குச் சொந்தமான பணம், பிணைகள், ஆதனங்கள் என்பவற்றை வைத்திருக்கும் கடந்தகால அல்லது நிகழ்கால அலுவலரை, உறுப்பினரை, முகவரை அல்லது வேறு எவரேனும் ஆளை அவற்றைக் காண்பிக்குமாறு கேட்கும் அதிகாரம்.

3. கணக்காய்வின் போது மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்படின் அது சம்பந்தமான கணக்குப் புத்தகங்கள் ஆவணங்களைத் தனது பாதுகாப்பில் எடுக்குந் தத்துவம்.

4. கணக்காய்வு செய்யப்படும் பொழுது புத்தகங்கள், கணக்குகள், பத்திரங்கள் பிணைகள் ஆகிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கும் அதிகாரம்.

5. சங்கத்தின் கையிருப்பைப் பரிசோதிக்கும் அதிகாரம்.

6. உறுப்பினர் அலுவலர் அல்லது வேறு எவரேனும் ஆள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும், தொழிற்பாடுகள் தொடர்பாகவும் தேவைப்படும் தகவல்களைக் கொடுத்துதவுமாறு தேவைப்படுத்துமதிகாரம்.

7. தண்டனைச் சட்டக் கோவைக் கருத்துப்படி கணக்காய்வாளர் ஒரு பகிரங்க சேவையாளராகக் கருதப்படும் அதிகாரம்.

8. கணக்காய்வு செய்யப்படும் போது சட்டம், விதி, துணைவிதிகள் என்பவற்றுக்கு முரணாகக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருந்தால் அல்லது நிதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை அனுமதியாது விடுவதுடன் அத்தகைய ஆளிடமிருந்து அல்லது அதற்கு அதிகாரமளித்தவரிடமிருந்து அறவிடும் அதிகாரம்.

9. எவரேனும் ஆளின் கவலையீனத்தால் அல்லது கெட்ட நடத்தையினால் ஏற்பட்ட குறைவை அல்லது இழப்பை அவரிடமிருந்து அறவிடுதல் வேண்டுமென்பதுடன் அவரின் வருமதியைச் சான்றுபடுத்தித் தனது முடிவை அவருக்கு அறிவிக்கும் அதிகாரம்.

இவை பற்றிக் கூட்டுறவுச் சட்டம் 44 (3) (4) (5) (6) என்பன கூறுகின்றன.

குற்றவியல் நடவடிக்கையின் நிமித்தம் தேவைப்படுமிடத்து 12 மாதங்களுக்கு மேற்படாத கால எல்லைக்குள் ஒரு விசேட கணக்காய்வினைத் தயாரிக்குமாறு கணக்காய்வாளரைப் பதிவாளர் வேண்டலாம்.

கணக்காய்வின் குறைபாடுகள் பற்றிய நடவடிக்கை:
கணக்காய்வினாற் சங்கத் தொழிற்பாடுகள் சம்பந்தமாக எவையேனும் குறைபாடுகள் வெளி;படுமாயின் பதிவாளர் அக்குறைபாடுகளைச் சங்கத்திற்கும், அச்சங்கம் வேறு ஒரு சங்கத்தின் உறுப்பினராயி; அச் சங்கத்திற்கும் அறிவிக்கலாம்.

வெளிப்படுத்தப்பட்ட குறைபாடுகளை நிவிர்த்தி செய்வதற்காகப் பதிவாளர் கட்டளையொன்றில் குறிப்பிட்ட காலத்திற்குள் அதில் விதிக்கப்படக்கூடிய அத்தகைய நடவடிக்கையை எடுக்குமாறு அக்களையினாற் சங்கத்தை அல்லது அதன் அலுவலரைப் பணிக்கலாமெனச் சட்டம் 45 (1) (2) கூறுகின்றன.

கூட்டுறவு நிதி:
ஒவ்வொரு சங்கமும் பதிவாளரால் கேட்டுக்கொள்ளப்படுமிடத்தும் அவர் தீர்மானிப்பதற்கமையவும் ஐந்து ரூபாவுக்குக் குறையாததும் வருடாந்தத் தேசிய இலாபத்தில் பத்து வீதத்துக்கு மேற்படாததுமான தொகையை வருடாந்தம் உதவு தொகையாகக் கூட்டுறவு நிதிக்குச் செலுத்துதல் வேண்டும். பதிவாளர் அந்நிதியில் வரவு வைக்கப்பட்ட தொகையைப் பின்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்.

1. கூட்டுறவுக் கல்வி விசாலிப்பும் பிரசித்தப்படுத்தலும்,

2. கூட்டுறவுச் சங்கங்களின் முகாமைத் திறமைகளை மேல் விருத்தி செய்தல்.

3. இயங்குகின்ற கூட்டுறவுச் சங்கங்களுக்கு உதவி அளித்தல்
இவை பற்றி விதி 43 (1) (2) கூறுகின்றன.


விசாரணை:
சங்கத்தின் அமைப்பு, தொழிற்பாடு, நிதிநிலைமை ஆகியன பற்றிப் பதிவாளரோ அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட வேறு ஆளோ விசாரணை செய்வதற்குக் கூட்டுறவுச் சட்டம் 46 (1) அதிகாரமளிக்கிறது.

விசாரணைக்குரிய காரணங்கள்:
1. பதிவாளரின் சொந்தப் பிரேரணை

2. நிருவாகக் குழுவின் பெரும்பான்மையினரின் விண்ணப்பம்.

3. உறுப்பினர்களின் மூன்றிலொரு பங்குக்குக் குறையாதவர்களின் விண்ணப்பம்.

விசாரணை உத்தியோகத்தருக்குள்ள அதிகாரங்கள்:
1. சங்கத்தின் எவையேனும் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி அல்லது அதன் அலுவல்களி; முகாமை பற்றி தகவல்கள் கொடுக்கக்கூடிய கடந்தகால அல்லது தற்கால அலுவலரை, முகவரை, சேவையாளரை, உறுப்பினரை அல்லது வேறு ஆளைக் கட்டளை விட்டழைக்கும் அதிகாரம்.

சங்கத்துக்குச் சொந்தமான புத்தகம், ஆவணம், பணம், பிணை ஆதனம் என்பவற்றைத் தமது உடமையில் அல்லது பாதுகாப்பில் வைத்திருக்கும், கடந்தகால அல்லது தற்கால அலுவலரை முகவரை சேவையாளரை உறுப்பினரை அல்லது வேறு ஆளை அவற்றைக் காண்பிக்குமாறு வேண்டும் அதிகாரம்.

3. அவரால் பணிக்கப்படக் கூடியவாறான கருமங்களைத் தீர்மானித்தற் பொருட்டு அவரால் குறிப்பிடக்கூடிய நேரத்திலும் இடத்திலும் உறுப்பினர்களின் பொதுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம். இப்பொதுக் கூட்டத்திற்கு விசாரணை உத்தியோகத்தரே தலைமை தாங்க வேண்டும். அவருக்கு வாக்குரிமையில்லை. ஆயினும் சமமான வாக்குகள் இடம் பெறின் அறுதியிடும் வாக்குரிமையுண்டு. இத்தகைய கூட்டத்திற்கு துணைவிதிகளில் விதிக்கப்பட்ட கூட்ட நடப்பெண், அறிவித்தலுக்கான காலமும் ஆகிய ஏற்பாடுகள் ஏற்புடையன அல்ல.

4. விசாரணையின் போது மோசடி ஒன்றைக் கண்டுபிடிக்குமிடத்து சங்கத்தின் கணக்குப் புத்தகங்களை, ஆவணங்களைத் தனது பாதுகாப்பில் எடுக்கும் அதிகாரம்.


விசாரணை முடிவு:
பதிவாளர் விசாரணையின் முடிவைச் சங்கத்திற்கும், அச் சங்கம் உறுப்பினராகவுள்ள ஏதேனும் சங்கம் இருப்பின் அச்சங்கத்திற்கும், கடன் கொடுக்க வேண்டியுள்ள வங்கிக்கும் அறிவித்தல் வேண்டும்.

பதிவாளர் அல்லது அவரால் விசாரணை செய்வதற்காக அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தண்டனைக் கோவைச் சட்டக் கருத்துக்குட்படப் பகிரங்க சேவையாளராகக் கருதப்படல் வேண்டும்.

இவை பற்றிக் கூட்டுறவுச் சட்டம் 46 (1) (2) (3) (4) (5) கூறுகின்றன.


சோதனை செய்தல் (நுண்ணாய்வு செய்தல்):
பதிவாளரினால் அல்லது அவரது எழுத்திலான அதிகாரம் பெற்ற ஒருவரினால் சங்கப் புத்தகங்களைப் பரிசோதனை செய்யவும் அலுவல்களை நுண்ணாய்வு செய்யவும் கூட்டுறவுச் சட்டம் 47 (1) வகை செய்கிறது.


காரணங்கள்:
1. பதிவாளரின் சொந்தப் பிரேரணை

2. சங்கத்துக்குக் கடன் கொடுத்தவரின் விண்ணப்பம்.

கடன் கொடுத்தவரின் விண்ணப்பத்தின் பேரில் நுண்ணாய்வு அல்லது பரிசோதனை செய்யப்படுமிடத்துப் பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவையாவன:

1. கடன் கொடுத்த ஒருவர் தமக்குக் குறிப்பிட்ட தொகைப் பணத்தைச் சங்கம் தரவேண்டுமென்றும், அத்தொகையைத் திருப்பித் தரும்படி சங்கத்திடம் கோரியதாகவும், நியாயமான கால எல்லைக்குள் சங்கம் திருப்பித் தரவில்லையெனவும் பதிவாளருக்கு நிரூபித்தல் வேண்டும்.

2. பரிசோதனை அல்லது நுண்ணாய்வு சம்பந்தமாக ஏற்படக்கூடிய பதிவாளரினால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கடன் கொடுத்தவர் கட்டுதல் வேண்டும்.

பரிசோதனை அல்லது நுண்ணாய்வு செய்பவருக்குள்ள அதிகாரங்கள்:
1. சங்கத்தின் கணக்குப் புத்தகங்கள், பத்திரங்கள், ஆவணங்களை எந்நேரத்திலும் பார்வையிடல்.

2. கையிருப்பிலுள் பணத்தைச் சோதித்தல்.

3. சங்கத்தின் ஒவ்வொரு அலுவலரும் அல்லது உறுப்பினரும் சங்கக் கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக, தொழிற்பாடு சம்பந்தமாக தேவைப்படும் தகவல்களைக் கொடுத்துதவக் கேட்டல்.

4. மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்படுமிடத்து சங்கத்தின் கணக்குப் புத்தகங்களை அல்லது ஆவணங்களைத் தனது கட்டுக்காப்பில் எடுத்தல்.

முடிவு:
இச்சோதனை பதிவாளரின் சொந்தப் பிரேரணையின் மீது நடைபெற்றதாயின் அம்முடிவுகள் சங்கத்திற்கும், சங்கத்திற்குக் கடன் கொடுத்த வங்கிக்கும் பதிவாளரால் அறிவிக்கப்படலாம். கடன் கொடுத்தவரின் விண்ணப்பத்தின் பேரில் நடைபெறின் கடன் கொடுத்தவருக்கும் சங்கத்திற்கும் அறிவிக்கப்படல் வேண்டும்.

கடன் கொடுத்த ஒருவரின் விண்ணபத்தின் பேரில் சோதனை செய்யப்படுவதால் ஏற்படும் செலவுகளை பதிவாளர்தான் தகுதியென நினைக்கும் வகையில் சங்கத்திற்கும் கடன் கொடுத்தவருக்குமிடையில் பங்கிடலாம்.

சங்கத்திற்கு அல்லது கடன் கொடுத்தவருக்கெதிராகத் தீர்க்கப்பட்ட செலவுத் தொகையாது சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள அல்லது கடன் கொடுத்தோர் வதிகின்ற இடத்தில் நியாயதிக்கமுடைய நீதவான் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மீது நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட குற்றப் பணம் போன்று அறவிடப்படலாம்.

பதிவாளரும், சோதனை செய்ய அல்லது நுண்ணாய்வு செய்யப் பதிவாhளரால் அதிகாரமளிக்கப்பட்ட ஒவ்வொரு ஆளும் தண்டனைச் சட்டக் கோவையின் கருத்துக்குட்படப் பகிரங்க சேவையாளர்களாகக் கருதப்படல் வேண்டும்.

இவை பற்றிய கூட்டுறவுச் சட்டம் 47 (1) (2) (3) (4) (5) (6) (7) கூறுகின்றன.


பிணக்குகள்:
உறுப்பினர்கள், நிருவாகக் குழுவினர், பணியாளர்கள் ஆகியோர்களுக்கிடையிலோ, அல்லது இவர்கள் இறப்பினால் உரிமையடையும் பின்னுரித்தாளர்களுக்கிடையிலோ, அல்லது இவர்களின் சட்டப் பிற நிதிகளுக்கிடையிலோ, அல்லது வேறு கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையிலோ, கருத்து வேற்றுமைகள், அபிப்பிராய பேதங்கள், கொடுக்கல் வாங்கல் தகராறுகள் ஏற்படின் இவை சம்பந்தமாக நீதிமன்றங்களுக்குச் செல்வதால் பெரும் பொருட் செலவும் காலவிரயமும் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டுக் கூட்டுறவுச் சட்டம் 58சில ஏற்பாடுகளைச்செய்துள்ளது.

கூட்டுறவுச் சங்க அலுவல் சம்பந்தமாக ஏதேனும் தகராறுகள் பிணக்குகள் ஏற்படின் பதிவாளரின் முடிவுக்காக ஆற்றுப்படுத்தல் வேண்டும். ஏதாவது தகராறுகள் சங்கத் தொடர்புடையனவா எனப் பிரச்சினை எழுமிடத்து அப்பிரச்சினையைப் பதிவாளரே முடிவு செய்வார். அவரின் முடிவே இறுதியானது. இதை நீதிமன்றத்தின் கேள்விக்கு உட்படுத்தலாகாது. பதிவாளர் பிணக்கைத் தாமே முடிவு செய்யலாம் அல்லது நடுத்தீர்ப்பாளருக்கு ஆற்றுப்படுத்தலாம்.

நடுத்தீர்ப்பாளர்களாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நியமிக்கப்படின் இரு திறத்தாராலும் ஒவ்வொருவரும் அக்குழுவின் தலைவராக ஒருவரைப் பதிவாளரும் நியமிக்கலாம். நடுத்தீர்ப்பாளராக ஒரு சட்டத்தரணியை நியமித்தலாகாது.


பதிவாளருக்கு ஆற்றுப்படுத்தும் தகராறுகளில் பதிவாளரினால் முடிவு செய்யப்பட வேண்டியவை:
1. துணைவிதிகள் பற்றிய விளக்கம் அல்லது வியாக்கியானம் பற்றிய கருத்து முரண்பாடு.

2. உறுப்புரிமை மனு மறுத்தமைக்கான முறையீடு.

3. நிருவாகக் குழுவின் தெரிவு செல்லுபடியாகுந் தன்மை பற்றிய கருத்து முரண்பாடு.

4. பொதுச்சபைக் கூட்டத்தின் செல்லுபடியாகுந் தன்மை பற்றிய கருத்து முரண்பாடு.

5. பொதுச்சபைத் தீர்மானத்தின் செல்லுபடியாகுந் தன்மை பற்றிய கருத்து முரண்பாடு.

6. உத்தியோகத்தர் தெரிவின் செல்லுபடியாகுந் தன்மை பற்றிய கருத்து முரண்பாடு போன்றவையாகும்.

நடுத்தீர்ப்புக்காகப் பதிவாளருக்கு மனுச் செய்யக் கூடிய விடயங்கள்.
1. உறுப்பினர்கள், அலுவலர் நிருவாகிகள், அல்லது இவர்கள் இறப்பின் இவர்களின் பின்னுரித்தாளர் அல்லது சட்டப்பிரதிநிதிகளால் சங்கத்திற்கு வருமதியான தொகைகள் பற்றிய தகராறுகள்.

2. மேற்குறிப்பிட்டவர்களுக்குச் சங்கத்தால் கொடுக்க வேண்டிய தொகைகள் பற்றிய தகராறுகள்.

3. சங்கத்திடமிருந்து உறுப்பினர்கள் பெற்ற கடன்களை உரிய தவணைத் திகதியில் செலுத்தாமையால் ஏற்படும் தகராறு.

4. ஒரு கூட்டுறவுச் சங்கத்திற்கும் இன்னொரு கூட்டுறவுச் சங்கத்திற்கும் கொடுக்கல் வாங்கல்கள் பற்றியோ தொழில் முறை சம்பந்தமாகவோ ஏற்படும் தகராறுகள் போன்றவையாகும்.

கூட்டுறவுச் சங்கம் நடுத்தீர்ப்புக்கு (மத்தியஸ்த தீர்ப்புக்கு) விண்ணப்பிக்கும் முறை:
ஒரு தனியார் மீது அல்லது ஒரு குழு மீது அல்லது ‘இன்னொரு கூட்டுறவுச் சங்கம் மீதுள்ள பிணக்கொன்றைத் தீர்ப்பதற்காக ஒரு கூட்டுறவுச் சங்கம் நடுத்தீர்ப்புக்காகப் பதிவாளருக்கு விண்ணப்பிக்க முடிவும். அப் பிணக்கு கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்டதாயின் முதலில் அதனை அறவிடப் போதிய அவகாசம் கொடுத்து அறிவித்தல் வேண்டும். அதாவது கேள்விப் பத்திரம் அனுப்புதல் வேண்டும். இதன் மூலம் தீர்வுகாண முடியாதவிடத்து நடுத் தீர்ப்புக்கு விண்ணப்பஞ் செய்யலாம்.

ஒரு பிணக்கைப் பற்றி நடுத்தீர்ப்புக்கு விடுவதை அச் சங்கத்தின் நிருவாக சபை அல்லது பொதுச்சபை தீர்மானித்தல் வேண்டும். தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் பின்வரும் விபரங்களுடன் பதிவாளருக்கு விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்.

விபரங்கள்:
1. பிணக்கைப் பற்றிய சுருக்கமான குறிப்பு.

2. கட்சிக்காரரின் பெயரும் விலாசமும்

3. கடன்காரருக்கு அனுப்பப்பட்ட கேள்விப் பத்திரத்தின் பிரதியும் அனுப்பிய பதிவுத் தபாலின் பற்றுச் சீட்டும்.

4. நிருவாக சபை அல்லது பொதுச் சபைத் தீர்மானத்தின் பிரதி.

5. சங்கத் தரப்பு பிரதிநிதியின் பெயரும் அவரது சம்மதக் கடிதமும்.

6. நடுத்தீர்ப்புக் கட்டணங்கள்.

பதிவாளர் விண்ணப்பத்தைப் பெற்றதும் நடுத்தீர்ப்புச் செலவை ஈடு செய்ய குறித்தவொரு தொகையை வைப்பாக இடுமாறு கேட்பார். இத்தொகை கட்டப்பட்டதும் பதிவாளர் நடுத்தீர்ப்பாளர் ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு குழுவை நியமிப்பார்.

விசாரணை:
நடுத்தீர்ப்பாளர்கள் விசாரணையை நடத்தித் தீர்ப்பு வழங்கும் காலம் மூன்றுமாத கால எல்லைக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். ஆயினும் குறித்த கால எல்லைக்குள் விசாரணையை முடிக்க முடியாது என நடுத்தீர்ப்பாளர் கருதின் அதற்குரிய காரணங்களுடன் கால நீடிப்புக்குப் பதிவாளருக்கு விண்ணப்பித்தல் வேண்டும். அத்தகைய காரணங்கள் நியாயமெனப் பதிவாளர் கருதின் கால நீடிப்பை வழங்கலாம். நடுத்தீர்ப்பாளர்களை இடைநிறுத்தவோ, நீக்கவோ புதிய நடுத்தீர்ப்பாளர்களை நியமிக்கவோ பதிவாளருக்கு அதிகாரம் உண்டு.

நடுத்தீர்ப்பாளர் பிணக்குச் சம்பந்தப்பட்ட இரு திறத்தாரையும் கட்டளை மூலம் அழைத்து இரு திறத்தாரின் சாட்சியங்களைப் பதிவு செய்து பத்திரங்கள் ஆவணங்கள் போன்ற சாதன அத்தாட்சிகளையும் பார்வையிட்டு நீதிக்கும் நியாயத்துக்கும் மனச்சாட்சிக்கும் ஏற்பத்தீர்ப்பை வழங்குதல் வேண்டும். நடுத்தீர்ப்பு விசாரணையின் போது தமக்காக வாதாடுதற்காக எப்பகுதியினராவது ஒரு நியாயவாதியைக் கொண்டு செல்ல முடியாது.

ஒரு பிணக்கினை விசாரிப்பதற்காகக் கட்டளையிட்டு அழைக்கப்படும் எத்திறத்தினராவது விசாரணைக்குப் போதிய காரணமின்றிச் சமுகமளிக்காவிடின் சமூகம் கொடுத்த திறத்தவரின் சாட்சியங்களைக் கொண்டு தீர்ப்பை வழங்க நடத்தீர்ப்பாளருக்கு அதிகாரம் உண்டு. ஆயினும் முதல் அழைப்பிலேயே இவ்விதம் செய்தல் கூடாது.

தீர்ப்பைச் சம்பந்தப்பட்ட இரு பகுதியினருக்கும் பதிவாளருக்கும் அல்லது அவராற் குறிப்பிடப்படும் அவரின் கீழுள்ள அலுவலகத்திற்கும் நடுத்தீர்ப்பாளர் அனுப்பி வைத்தல் வேண்டும். நடுத்தீர்ப்பு விசாரணைக்கு ஏற்பட்ட செலவை இரு பகுதியினரையும் அல்லது ஒரு பகுதியினரை ஏற்குமாறு கட்டளையிடலாம்.

விசாரணையின் போது நடுத்தீர்ப்பாளரினால் இன்னலுறும் ஒரு திறத்தவர் பதிவாளருக்கு முறையீடு செய்ய உரிமையுண்டு. நடுத்தீர்ப்பாளரால் வழங்கப்படும் தீர்ப்பு தமக்கு மாறானது நியாயமற்றது எனக் கருதும் எத்திறத்தவரும் தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியில் இருந்து 30 நாட்களும், தீர்ப்புத் தொகையின் பத்து வீதம் அல்லது 50 ரூபா எது கூடவோ அத்தொகையைப் பிணையாகக் கொடுத்துப் பதிவாளருக்கு மேன்முறையீடு செய்ய உரிமையுண்டு.

தீர்ப்பை நிறைவேற்றல்:
நடுத்தீர்ப்பு வழங்கப்பட்டு, அத்தீர்ப்பின் பொருட்டு ஒரு திறத்தவரிடமிருந்து இன்னொரு திறத்தவருக்குச் செல்மதியான தொகையை உரிய காலத்தில் செலுத்தாது விடின் தவணை தவறியவர் என்ற தொடர்பில் பதிவாளர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி பின்வரும் மூன்று வழிகளில் ஒன்றின் மூலம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். அவையாவன:

1. செலவுகளுடனும் வட்டியுடனும் அத்தகைய தொகையின் விபரங்களையும் தவறு புரிந்தவரின் பெயரையும் கொண்ட சான்றிதழ் ஒன்றை அரசாங்க முகவர், உதவி அரசாங்க முகவர், பிசுக்கால் அல்லது பிரதிப் பிசுக்கால் ஒருவருக்கு வழங்கலாம்.

2. செலவுகளுடன் சேர்த்து வருமதியாகவுள்ள தொகை பற்றிய விபரங்களையும், எவையேனுமிருப்பின் வட்டியையும், தவணை தப்பியவரின் பெயரையும் கொண்ட சான்றிதழொன்றைத் தவணை தப்பியவர் வதியும் அல்லது அவருக்குச் சொந்தமான அசைவுள்ள அசைவற்ற சொத்துள்ள மாவட்டத்தில் நியாயாதிக்கமுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றிற்கு வழங்கலாம்.

3. வருமதியாகவுள்ள தொகை பற்றிய விபரங்களையும், தவணை தவறியவரின் பெயரையும் கடைசியாக அறியப்பட்ட தொழிலிடத்தையும் அல்லது வதிவிடத்தையும் கொண்டுள்ள சான்றிதழொன்றை அத்தகைய இடம் அமைந்துள்ள பிரிவில் நியாயாதிக்கமுள்ள நீதவானொருவருக்கு வழங்கலாம்.

முதலாவதாகக் குறிப்பிட்டுள்ளபடி சான்றிதழ், பதிவாளர் அல்லது அவரது அதிகாரப் பிரதிநிதி வழங்கின. குறிப்பிட்ட அலுவலர் தவணை தவறியவரின் அசைவுள்ள ஆதனத்தைக் கைப்பற்றி விற்பனை செய்வதன் மூலம் அறவிடப்படுவதனைச் செய்வதற்கு அதிகாரமுடையவராகின்றார். கைப்பற்றலானது அலுவலர் உசிதமான முறை எனக்கருதும் முறையில் செய்யப்படலாம். கைப்பற்றப்பட்ட ஆதனமொவ்வொன்றும் தவணை தவறியவரின் செலவிலும் அவரினாற் செலுத்தப்படும் கட்டணத்துடனும் ஐந்து நாள்கள் வைத்திருத்தல் வேண்டும். சொல்லப்பட்ட ஐந்து நாட்களுள் தவணை தவறியவர் வருமதியாகவுள்ள தொகையையும் வட்டியையும் செலவையும் ஆதனத்தைக் கைப்பற்றி வைத்திருப்பதற்கான செலவையும் கட்டணத்தையும் செலுத்தாதுவிடின் குறிப்பிட்ட அலுவலர் சொல்லப்பட்ட ஆதனத்தைப் பகிரங்க ஏலத்தில் விற்பித்தல் வேண்டும்.

விற்பனையால் பெறப்பட்ட தொகை பின்வரும் வழக்கு முறைப்படி செலுத்தப்படல் வேண்டும். முதலாவதாக ஆதனத்தைக் கைப்பற்றுவதில் வைத்திருப்பதில் விற்பனை செய்வதில் ஏற்பட்ட செலவுகளையும் கட்டணங்களையும் கொடுத்துத் தீர்த்தல் வேண்டும். பின் இரண்டாவதாக வட்டியுடனும் செலவுகளுடனும் வருமதித் தொகைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தல் வேண்டும். மூன்றாவதாக ஏதேனும் மீதியாயிருப்பின் கைப்பற்றப்பட்ட ஆதனத்தின் சொந்தக்காரனுக்குத் திருப்பிக்கொடுத்தல் வேண்டும்.

பதிவாளரால் மாவட்ட நீதிமன்றமொன்றுக்குச் சான்றிதழ் வழங்கப்படின் தவணை தவறியவரின் அசைவுள்ள அசைவற்ற ஆதனத்தைக் கைப்பற்றி விற்பனை செய்வதற்கு அதிகாரமளித்து அவரைத் தேவைப்படுத்தும் நிறைவேற்றெழுத்தாணை ஒன்று பிசுக்காலுக்கு வழங்குமாறு நீதிமன்றம் அதன் மேல் பணித்தல் வேண்டும்.

நீதவானொருவருக்குப் பதிவாளரால் சான்றிதழ் வழங்கப்படின், நீதவான் அதன்மேல் அத்தொகையை அறவிடுவதற்காக மேலும் நடவடிக்கைகள் ஏன் எடுக்கக் கூடாதெனக் காரணங் காட்டுவதற்கு தவணை தவறியவரை அவருக்கு முன் தோன்றும்படி கட்டளை விட்டழைத்தல் வேண்டும். போதிய காரணங்காட்டத் தவறுமிடத்து தவறொன்றுக்காக நீதவானால் விதிக்கப்பட்ட குற்றப்பணமொன்றாகக் கருதப்படும். இவ்வாறு அறவிடப்படும் பணம் மாவட்ட நீதிமன்றத்தால் அல்லது நீதவானால் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரின் முடிவு அல்லது தீர்ப்புக்கிணங்க அத்தொகை கையாளப்படுதல் வேண்டும்.

தவணை தவறியவருக்குப் பதிவாளர் சான்றிதழ் ஒன்றை நேரடியாக அல்லது பதிவஞ்சலில் அல்லது தந்தி மூலம் அதுபற்றிய அறிவிப்பொன்றை வழங்குதல் வேண்டும். தவணை தவறியவருக்கு அவ்வறிவித்தல் கிடையாது விடல் நடவடிக்கைகளைச் செல்லுபடியற்றதாக்காது.

பதிவாளரின் சான்றிதழில் உள்ள ஏதேனும் கூற்றின் சரி பிழையைக் கருத்திற் கொள்வதற்குப் பரிசோதனை செய்வதற்கு அல்லது முடிவு செய்வதற்கு மாவட்ட நீதிமன்றமொன்றிற்கு அல்லது நீதவானொருவருக்கு அதிகாரமளித்தலோ தேவைப்படுத்தலோ ஆகாது.

இவைபற்றி 58 (1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) 59 (1) (2) (3) (4) (5) (6) (7) கூட்டுறவுச் சட்டங்களும் 49 (1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11) (12) (13) கூட்டுறவு விதிகளும் கூறுகின்றன.

கூட்டுறவுச் சங்கமொன்றின் குழுவைக் கலைத்தல்:
குழு என்பது நிருவாக சபை, இயக்குனர் சபை, நெறியாளர் குழு என்னும் பதங்களாலும் அழைக்கப்படும். இக்குழுவைக் கலைப்பதற்கு முன் பதிவாளரினால் மேற்கொள்ளப்பட வேண்டிய கருமங்கள் பின் வருவனவாகும்.

1. குழு தனது கடமைகளை முறையாகப் புரியவில்லை என்று கருதினால் கூட்டுறவுச் சட்டம் 46ம் பிரிவின் கீழ் ஒரு விசாரணையை மேற்கொள்ளல்.

2. கடன் கொடுத்த ஒருவரின் விண்ணபத்தின் பேரில் கூட்டுறவுச் சட்டம் 47 ஆம் பிரிவின் கீழ் சோதனையொன்றைச் செய்தல்.

இவற்றின் அறிக்கைகளைக்கொண்டு குழுவைக் கலைப்பதுதான் உசிதமெனப் பதிவாளர் கருதினாற் கலைப்பதற்கெதிரான அதன் ஆட்சேபனைகளைக் கூறக் குழுவிற்குச் சந்தர்ப்பமளித்தல். அதன் ஆட்சேபனைகளிலும் பதிவாளர் திருப்தியுறாதுவிடின் அவராற் கூட்டப்பட்ட சங்கத்தின் பொதுக் கூட்டத்தின் கருத்துக்களையும் கவனத்திற்கு எடுத்த பின்னர் அவர் உசிதமெனக் கருதின் குழுவைக் கலைக்கலாம்.

சங்கத்தினை முகாமை செய்யப் பதிவாளர் பொருத்தமான ஆளொருவரை அல்லது ஆட்களை நியமிக்கலாம். இத்தகைய கலைப்புக் கட்டளை இரண்டு ஆண்டு காலத்திற்கு மேற்படாததாயிருத்தல் வேண்டும். ஆயினும் காலத்திற்குக் காலம் பதிவாளர் தனது தற்றுணிவின் படி கட்டளையை நீடிக்கலாமெனினும் கூட்டுமொத்தக் காலமும் நான்காண்டுகளுக்கு மேற்படலாகாது. முகாமை செய்வதற்காகவும் நிருவகிப்பதற்காகவும் பதிவாளரால் நியமிக்கப்பட்டவர்களைக் காலத்திற்குக் காலமும் அகற்ற, பதிலீடு செய்ய, மேலதிக ஆட்களை நியமிக்க அதிகாரமுண்டு.

பதிவாளரினால் நியமிக்கப்பட்டவர்கள், பதிவாளரின் பொதுவான பணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கமைய, முறையாக அமைக்கப்பட்ட குழுவொன்றின் தத்துவங்கள் உரிமைகள் சிறப்புரிமைகள் எல்லாவற்றையும் உபயோகிக்கலாம். இவர்கள் சட்டத்திற்கு அல்லது துணைவிதிகளுக்கு முரணாக அவர்களால் புரியப்பட்ட செயல்களால் ஏற்படும் நட்டத்துக்குக் கூட்டாகவும் தனித்தும் பொறுப்புடையவர்கள். பதிவாளரால் நியமிக்கப்பட்ட ஆட்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய ஊதியத்தொகையை பதிவாளர் நிர்ணயிக்கலாம். ஊதியத்தொகையும் சங்கத்தின் முகாமையில் ஏற்பட்ட வேறு செலவுகள் இருப்பின் அவையும் சங்க நிதிகளிலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

பதிவாளரின் பணிப்பு பயனில்லாதொழியும் காலத்துக்குமுன் துணைவிதிகளுக்கிணங்க முறையான குழுவொன்றை ஏற்படுத்த ஒழுங்கு செய்தல் இவர்கள் கடமையாகும்.

இவ்வாறு குழுவைக் கலைக்குமுன், அச்சங்கம் ஏதாயினும் வங்கிக்கு கடன் கொடுக்க வேண்டியிருப்பின் அவ்வங்கியின் முன்னாலோசனையின் பின்னரன்றிக் கலைத்தலாகாது. அச்சங்கத்தை ஒரு கூட்டுறவு வங்கியாயி;, மக்கள் வங்கியின் முன் அங்கீகாரத்துடனன்றிக் கலைத்தலாகாது.

இவை பற்றிக் கூட்டுறவுச் சட்டம் 48 (1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) கூறுகின்றன.

கூட்டுறவுச் சங்கத்தைக் கலைத்தல்:
ஒரு கூட்டுறவுச் சங்கத்தைக் கலைப்பதற்கும் பதிவினை நீக்குவதற்கும் பதிவாளருக்கு அதிகாரமும் தத்துவமும் உண்டு. பின்வரும் காரணங்களுக்காகப் பதிவாளர் ஒரு கூட்டுறவுச் சங்கத்தினை எழுத்திலான கட்டளை மூலம் பதிவினை நீக்க அல்லது கலைக்க முடியும். அவையாவன:

1. 46ம் பிரிவின் கீழான விசாரணை ஒன்றன்பின்,,

2. 47ம் பிரிவின் கீழான கடன் கொடுத்தோர் ஒருவரின் விண்ணப்பத்தின் மீது நடாத்திய சோதனையின் பின்,

3. சங்க உறுப்பினரில் முக்காற் பங்கு உறுப்பினராற் செய்யப்பட்ட கலைப்பு விண்ணபத்தைப் பெற்றதன்பின்,

4. கூட்டுறவுச் சங்கமொன்று பதிவு செய்தவற்கு ஆகக் குறைந்தது பத்து உறுப்பினரையாவது கொண்டிருக்க வேண்டுமென்னும் நிபந்தனைக்குட்பட்ட சங்கமாயின் அச்சங்கத்தின் பத்து உறுப்பினருக்குக் குறைந்திருப்பின்,

5. கூட்டுறவுச் சங்கமொன்று பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு காலத்துக்குள் தொழிலை ஆரம்பிக்காதிருப்பின்,

6. பதிவு நீக்கப்படும் தேதிக்கு முன்னர் ஈராண்டு காலத்திற்குத் தொழிலை நடத்தாதிருப்பின்,

சங்கமும் அச்சங்கத்திற்குக் கடன் கொடுத்தவர்களும் ஆட்சேபனைகளைக் கூறச்சந்தர்ப்பமளித்த பின்னரே கலைத்தல் வேண்டும். பதிவு நீக்கஞ் செய்தல் வேண்டுமெனப் பதிவாளர் கருதுவாரானால் தமது கைப்பட ஆக்கப்பட்ட கட்டளை மூலம் பதிவினை நீக்கலாம்.

பதிவாளரின் பதிவு நீக்கல் கட்டளை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதகால எல்லைக்குள் சங்கம் அல்லது அதற்குக் கடன்கொடுத்தோர் பதிவு நீக்கல் கட்டளைக்கெதிராக அமைச்சருக்கு மேன்முறையீடு செய்யலாம். பதிவு நீக்கல் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இரு மாதங்களுக்குள் மேன்முறையீடு செய்யப்படவில்லையானால் அக்கட்டளை பயனுடையதாகும். மேன்முறையீடு செய்யப்படின் உறுதிப்படுத்தப்படும் வரை அக்கட்டளை பயனுடையதாகாது.

பதிவாளரினால் ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் மீது பதிவு நீக்கற் கட்டளை பிறப்பிக்கப்படுமிடத்து, அக்கட்டளை பயனுடையதாகும் வரை அல்லது மேன்முறையீட்டினால் அமைச்சரால் எதிர்மாறாக்கப்படும் வரை சங்கத்தின் புத்தகங்கள் ஆவணங்கள் வேறு சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருப்பதற்கும் சங்கத்தின் அலுவல்களை முகாமை செய்வதற்கும் பதிவாளர் ஓராளை அல்லது ஆட்களை நியமிக்கலாம். அவ்விதம் நியமிக்கப்பட்டதும் சங்க நிருவாகக் குழு சங்கத்தின் புத்தகங்கள், ஆவணங்கள், சொத்துக்களைப் பதிவாளரால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதுடன் அக்குழு பணிபுரியாதிருத்தலும் வேண்டும்.

ஒழிப்போர் நியமனமும் அவரின் அதிகாரங்களும்:
பதிவாளரின் பதிவு நீக்கல் கட்டளை பயனுடையதாகுமிடத்து அவர் ஒழிப்போன் ஒருவனை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நியமிக்கலாம். சங்கத்திற்களிக்கப்பட்ட சிறப்புரிமைகள் ஒழிப்போருக்கு உரித்தாக்கப்பட்டவையாகக் கருதப்படவேண்டும்.; சங்கத்தின் சொத்துக்கள் யாவும் ஒழிப்போருக்கு உரித்தாதல் வேண்டும். பதிவாளரின் கட்டுப்பாடுகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் பதிவாளரினாற் சுமத்தப்படும் எல்லைப்பாடுகளுக்கும் அமையக் கடமையாற்றுதல் வேண்டும். ஒழிப்போருக்குப் பின்வரும் அதிகாரங்களும் கடமைகளும் உண்டு. அவையாவன:

1. சங்கத்தின் உறுப்பினர்களாலும், கடந்தகால உறுப்பினர்களாலும் அல்லது இறந்த உறுப்பினர்களின் மரணச் சொத்துக்களிலிருந்தும் அதன் இருப்புச் சொத்துக்களுக்குக் கொடுபட வேண்டிய உதவு தொகைகளைத் தீர்மானித்தல்.

2. சங்கப் புத்தகங்களில் பதியப்படாத கடன் கொடுத்தோரின் கோரிக்கைகளைப் பதிவதற்கு முறையீடு செய்வதற்கும், பகிர்தலிலிருந்து தவிர்க்கப் படுவதற்காக முறையீடு செய்வதற்குமான நாளை, பிரகடன மூலம் அல்லது அறிவித்தல் மூலம் நியமித்தல்.

3. கடன் கொடுத்தவர்களுக்கிடையேயுள்ள முன்னுரிமைப் பிரச்சினைகளுக்கு முடிவு காணல்.

4. பிணக்குகள் எதனையும் நடுத்தீர்ப்புக்காக ஆற்றுப்படுத்தல்.

5. அவரது அல்லது பதவிப் பெயரால் சங்கத்தின் சார்பில் வழக்குத் தொடர்தல் அல்லதுவேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்.

6. ஒழித்துக் கட்டல் செலவுகளை யார் யார் என்ன வீதத்தில் செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.

7. கலைத்தற்காக சங்கச் சொத்துக்கள் முழுவதையும் திரட்டல்.

8. சங்கச் சொத்துக்களைக் கலைப்பின் பொருட்டு பகிர்ந்து கொடுக்கும் பணிப்பினைச் செய்தல்.

9. பதிவாளரின் முன் அங்கீகாரத்துடன் சங்கத்திற்குரிய அல்லது அதற்கெதிரான ஏதேனும் கோரிக்கைகளுக்கு இணங்குதல்.

10. கலைத்தலுக்கு அவசியமாகக் கூடிய சங்க உறுப்பினர்களின் பொதுக்கூட்டங்களைக் கூட்டல்.

11. சங்கத்தின் புத்தகங்கள், ஆவணங்கள், சொத்துக்கள் என்பவற்றை உடமையில் எடுத்தல்.

12. சங்கத்தின் சொத்துக்களை விற்பனை செய்தல்.

13. நன்மை தரக்கூடிய வகையில் கலைத்தலுக்கு அவசியமாகக் கூடிய எல்லாச் செயல்களையும் செய்தல்.

14. பகிர்தல் திட்டமொன்று பதிவாளரினால் அங்கீகரிக்கப்படுமிடத்து வசதியானதொரு முறையில் சங்கத்தின் சொத்துக்களைப் பகிருந்திட்டமொன்றை ஒழுங்கு செய்தல்.

15. கலைக்கப்படும் சங்கத்தின் உறுப்பினர் அல்லது கடந்தகால உறுப்பினர் ஒருவர் கலைக்கப்படும் சங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தொகையை, அவர் வேறு ஒரு கூட்டுறவுச் சங்க உறுப்பினராக இருந்து அச்சங்கத்தால் அவருக்குக் கொடுக்க வேண்டிய தொகைகள் இருப்பின் அத்தொகையிலிருந்து கலைக்கப்படும் சங்கத்திற்கு அவரால் வருமதியான தொகைக்கு மேற்படாத தொகையை அறவிட்டு அனுப்புமாறு அச்சங்கத்தை வேண்டுதல்.

16. ஒழித்தல் சம்பந்தமாக எத்திறத்தவரையும் சாட்சிகளையும் கட்டளைவிட்டழைப்பதற்கும், அவர்கள் வருகை தருவதை வலியுறுத்துவதற்கும், அவர்களிடமுள்ள ஆவணங்களைக் காண்பிக்குமாறு கட்டாயப் படுத்தலுக்கும் தத்துவமுடையவராயிருத்தல்.

கலைத்தலைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிவாளருக்குள்ள அதிகாரங்கள்:
ஒருகூட்டுறவுச் சங்கத்தைக் கலைப்பதற்காக ஏற்படுத்தப்படும் ஒழிப்போன் பதிவாளரின் பிரதிநிதி ஆவன். பதிவாளரினாலேயே ஒழிப்போன் நியமிக்கப்படுகின்றான். பதிவாளருக்காகவே கலைத்தல் கடமைகளைச் செய்கின்றான். பதிவாளரின் பணிப்புரைக்கும் கட்டுப்பாட்டிற்கும் அமையவே அவரது தத்துவங்களை ஒழிப்போன் உபயோகிக்க வேண்டும். ஒழிப்போன் சம்பந்தமாகப் பின்வரும் செயல்களைச் செய்யப்பதிவாளர் அதிகரமுடையவர். அவையாவன:
1. ஒழிப்போனால் ஆக்கப்பட்ட ஏதேனும் கட்டளையை அழித்தல்.

2. ஒழிப்போனால் ஆக்கப்பட்ட ஏதேனும் கட்டளையை வேறாக்கல்.

3. ஒழிப்போனால் ஆக்கப்படாத புதுக்கட்டளைகளை ஆக்குதல்.

4. ஒழிப்போனைப் பதவியிலிருந்து அகற்றுதல்.

5. சங்கத்தின் எல்லாப் புத்தகங்களையும், சொத்துக்களையும் காண்பிக்குமாறு அழைத்தல்.

6. கணக்குகளைச் சமர்ப்பிக்குமாறு வேண்டல்.

7. கணக்குகளைக் கணக்காய்வு செய்வித்தல்.

8. சங்கத்தின் சொத்துக்களைப் பகிர்வதற்கு அதிகாரமளித்தல்

9. ஒழிப்போனின் ஊழியத்திற்கான கட்டளையை ஆக்கல்.

10. ஒழிப்போனுக்கும் மூன்றாந் திறத்தவருக்குமான ஒரு பிணக்கினை, அத்திறத்தவர் நடுத்தீர்ப்பின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக எழுத்தில் கொடுப்பின், நடுத் தீர்ப்புக்கென ஆற்றுப்படுத்தலாம்.

நடுத்தீர்ப்பாளரின் முடிவு இரு திறத்தவரையும் கட்டுப்படுத்தும். அத்துடன் பதிவாளரின் கட்டளை போன்று வலியுறுத்தப்படக் கூடியதுமாகும். கலைத்தல் சம்பந்தமான ஒழிப்போன் அல்லது பதிவாளரால் ஆக்கப்பட்ட கட்டளையெதனையும் நீதிமன்றத்தின் கேள்விக்குட்படுத்தலாகாது. இக்கட்டளையானது அக் கூட்டுறவுச் சங்கம் அமைந்த இடத்திலுள்ள நீதிமன்றமொன்றின் தீர்ப்பைப் போன்று வலியுறுத்தப்படக் கூடியதுமாகும்.

கலைக்கப்பட்ட சங்கமொன்றிற்குக் கடன் கொடுத்த வங்கியானது ஒழிப்போன் அல்லது பதிவாளரால் இடப்பட்ட கட்டளைக்கெதிராகக் கட்டளையிட்ட தேதியிலிருந்து இரு மாதங்களுக்குள் அமைச்சருக்கு மேன்முறையீடு செய்ய உரிமையுண்டு. கட்டளையிட்டு இரு மாதங்;களுக்குள் அமைச்சருக்கு மேன்முறையீடு செய்யபடாவிடின் இரு மாதங்கள் முடிந்ததும் பயனுடையதாகும். அமைச்சருக்கு மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பின் அமைச்சரால் அக்கட்டளை வலியுறுத்தப்படும் வரை பயனுடையதாகாது.

கலைத்தல் முடிவடைதல்:
ஒரு பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் கலைத்தல் முடிவடைதல் என்பது அச் சங்கத்தின் பதிவினை நீக்கிச் சொத்துக்களைப் பணமாக்கி உரிய முறையில் அதன் பொறுப்புக்களைத் தீர்த்தலாகும். ஒதுக்கு நிதியுட்படச் சங்கத்தின் சகல நிதிகளும் பொறுப்புகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும்;. சொத்துக்கள் தேறிய பணம் மூலம் பின்வரும் வரிசை ஒழுங்குப்படி சங்கத்தின் பொறுப்புக்களைத் தீர்க்கப் பயன்படல் வேண்டும்.

1. கலைத்தற் செலவுகள்.

2. அரசாங்கக் கடன்கள்.

3. அரசாங்க உத்தரவாதம் பெற்ற கடன்கள்.

4. ஏனைய பொறுப்புக்கள்.

5. பங்கு மூலதனம்.

6. பங்கு மூலதனத்துக்கு, பகுதி கலைத்ததற்கு முன்னுள்ள காலப்பகுதிக்கு ஏதாவது வட்டி வழங்கப்படாதிருப்பின் சட்டம், விதிகளுக்கமைய வரையறுத்த வட்டி வீதத்தை வழங்கல்.

7. கலைத்தலுக்கு முன்னுள்ள காலத்துக்கு உறுப்பினர்களுக்குத் தள்ளுபடி வழங்க வேண்டியிருப்பின், அக் காலத்துக்குரிய தள்ளுபடி வழங்கல்.

கூட்டுறவுச் சங்கமொன்று, கலைத்தல் முடிவடைந்தபோதும், அச்சங்கத்தின் கடன் கொடுத்தவர் எவரேனும் தமக்கு வருமதியாகவுள் தொகையைக் கோராதிருக்கும் பொழுது, அல்லது பெறாதிருக்கும் பொழுது கலைத்தல் முடிவடைந்தமை பற்றி அரசாங்க வர்த்தமானியில் (கசற்) வெளியிடப்படுதல் வேண்டும். சங்கத்தின் நிதிகளுக்கெதிரான ஏதேனும் கோரிக்கை சம்பந்தமான வழக்கெதுவும் கலைத்தல் பற்றிய அறிவித்தல் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்றுமாத காலத்திற்குள் தொடரப்பட்டாலன்றிப் பின்தொடர்ந்து நடத்த முடியாது.

முன்னுரிமை வரிசைப்படி பொறுப்புக்களைத் தீர்த்தபின்னரும், கலைத்தல் அறிவித்தலின்பின் கடன் கொடுத்தோரால் தொடரப்பட்ட வழக்கின் கோரிக்கைகளைத் தீர்த்தபின்னரும், எஞ்சியிருக்கும் மிகைத் தொகையைப் பதிவாளரின் அங்கீகாரத்திற்கமையச் சங்கமானது கலைக்கப்பட்ட தேதியில் அதன் அலுவலர்களாக இருந்தவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களின் பயன்பாட்டு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படலாம்.

கலைப்பு முடிவடைந்த தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் பதிவாளரினால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக் குறிக்கோள் ஒன்றைத் தெரிந்தெடுக்கத் தவறினால், பதிவாளர் அத்தொகையை ஒரு வங்கியிலோ அல்லது ஒரு கூட்டுறவுச் சங்கத்திலோ வைப்பிலிடலாம். வைப்பிலிட்ட தொகையைக் கூட்டுறவுச் சட்டத்தின் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட மேல் மிகை நிதிக்குச் செலுத்தலாம். விதிகளிற் கூறப்பட்ட நோக்கங்களுக்காக பதிவாளரின் தற்றுணிவின்படி இந்நிதி செலவு செய்யப்படலாம். மிகை நிதிக்குச் சேரும் வட்டியைக் கூட்டுறவு நிதிக்குச் செலுத்தலாம். மேல்மிகை நிதிக் கணக்கிலுள்ள பணம் பதிவாளராற் பின்வரும் கருமங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். அவையாவன:

1. ஆரம்ப நிலைச்சங்கம் ஒன்றின் பங்குகளைக் கொள்முதல் செய்தல் மூலம் அல்லது பதிவாளர் தீர்மானிக்கும் வகையில் அச்சங்கத்துக்கு உதவல்.

2. மாவட்டத்திற் சேர்த்துள்ள மிகைநிதியை அம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கம் ஏதேனும் ஒன்று நிலையான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதன் பொருட்டு அதற்கு உதவல்.

3. ஒரு ஒழிப்போனுக்கு எதிரான குடியியல் நடவடிக்கையி; (வழக்கு) போது அவர் எதிராக வாதஞ் செய்வதற்காக உதவல்.

4. கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆலோசனைச் சேவைகளை வழங்குதற்கும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்துவதற்காக வேறு சேவைகளை வழங்குவதற்காகவும் தாபிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கூட்டுறவுச் சங்கத்திற்கு அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டதும் சந்தைப்படுத்தல், கைத்தொழில், கமத்தொழில், கடற்றொழில் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் முயற்சிகளைத் திட்டமிட்டு ஒருமுகப்படுத்தி வசதி செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு சங்கத்திற்கு உதவி அளித்தல்.

இவை பற்றிக் கூட்டுறவுச் சட்டம் 49 (1) (2) (3) (4), 50, 51, 52, (1) (2) (3), 54, 55 (1) (2) (3), 56, 57 (1) (2) (3) என்பனவும் கூட்டுறவு விதி 44ம் விரிவாகக் கூறுகின்றன.


அரசாங்கத்திற்குச் செல்மதியான கடன்கள்:
ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் அரசாங்கக் கடன்களும், அரசாங்க உத்தரவாதக் கடன்களும், அரசாங்கத்துக்குத் தீர்க்கப்பட்ட எவையேனும் செலவுகளும், வேறு ஆட்களுக்குச் செல்மதியான கடன்கள் செலுத்தப்படுவதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டிய முன்னுரிமையுடையன.

கூட்டுறவுச் சங்கமொன்றிடமிருந்து அரசாங்கத்திற்குச் செல்மதியான தொகையும் ஏனைய அறவிடக் கூடியதான தொகைகளும் முதலில் சங்கச் சொத்துக்களிலிருந்து அறவிடப்படல் வேண்டும். சங்கச் சொத்துக்கள் போதாதுவிடின் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டுறவுச் சங்க விடயத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ள அளவுக்கமைய அதன் உறுப்பினர்களிடமிருந்து அறவிடப்படலாம். பொறுப்பு வரையறுக்கப்படாத கூட்டுறவுச் சங்க விடயத்தில் அதன் உறுப்பினர்களிடமிருந்து முழுத் தொகையும் அறவிடப்படலாம். இவை பற்றிக் கூட்டுறவுச் சட்டம் 62 (1) (2) கூறுகின்றன.

பொதுச் சபை:
ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரமிக்க அமைப்பு, பொதுச் சபையாகும். பொதுச்சபையின் தீர்மானத்திற்கிணங்கவே கூட்டுறவுச் சங்கம் நடைபெறும். கூட்டுறவு விதிகள், துணை விதிகள் என்பவற்றிற்கு முரண்பாடில்லாமல் எடுக்கப்படும் தீர்மானங்கள் யாவும் பயனுடையவையாக இருக்கும்.

கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களே பொதுச் சபைக் கூட்டத்திற் கலந்து தீர்மானங்கள் எடுப்பதற்கும் வாக்களிப்பதற்கும் உரிமையுடையவர்கள். உறுப்புரிமைக்குரிய பங்குகளைக் கொள்முதல் செய்யாதவர்கள், பங்கு முதலின் தடவைப் பணம் நிலுவையில் இருப்போர், உறுப்புரிமை கோரி விண்ணப்பித்து உரிய பங்குகளைக் கொள்முதல் செய்திருப்பினும் நிர்வாகக் குழு அல்லது பொதுச் சபையால் உறுப்புரிமை அனுமதிக்கப்படாதவர்கள் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது.

பொதுச் சபைக் கூட்டத்தின் கடமைகளும் அதிகாரங்களும்:
1. வெளிக்கடன் எல்லையைத் தீர்மானித்தல், உறுப்பினரல்லாதவர்களிடமிருந்து பெறக்கூடிய கடனின் மேல் எல்லையைத் தீர்மானித்தல்.

2. உறுப்பினர்களுக்குக் கடன் வழங்குவதை நோக்கமாகக்கொண்ட கடனுதவு சங்கமாயின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அனுமதிக்கக் கூடிய கடன் தொகையை நிச்சயித்தல்.

3. நிருவாக சபையின் உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.

4. பதிவாளரின் அறிக்கை ஏதேனும் இருப்பின் அவ்வறிக்கையினையும், பதிவாளரினால் நியமிக்கப்பட்ட கணக்காய்வாளரின் கணக்குக் கூற்றினையும், அறிக்கையினையும் ஆலோசித்தல்.

இவை கூட்டுறவு விதி 17இற் கூறப்பட்டவையாகும். ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கத்தின் துணை விதிகளிலும் அச் சங்கப் பொதுச் சபையின் உரிமைகள், கடமைகள், அதிகாரங்கள் என்பன விரிவாக விதிக்கப்பட்டிருக்கும். அவை அவ்வக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஏற்புடையனவாக அமையும். “ஒவ்வொரு சங்கமும் துணைவிதிகளில் விதிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் பொதுக் கூட்டங்களைக் காலத்துக்குக் காலம் கூட்டலாம்” எனக் கூட்டுறவு விதி 17இற் கூறப்பட்டுள்ளது.

எனவே பொதுக் கூட்டத்தைப் பற்றிய விபரங்கள், கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் பற்றி விபரமாகத் துணைவிதிகள் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். பின்வரும் விடயங்கள் பற்றித் துணைவிதிகள் ஆக்கப்பட்டிருத்தல் அவசியம். அவையாவன:
1. பொதுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம்

2. பொதுக் கூட்டத்தின் நிறைவெண் (கோரம்)

3. பொதுக் கூட்ட அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டிய முறை

4. பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்கள்

5. பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குதல்

6. பொதுக் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கும் முறை

7. இவைபோன்ற ஏனைய முக்கிய விடயங்கள்

பொதுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம்:
1. கூட்டுறவு விதிகளிற் பதிவாளர் (ஆணையாளர்) அல்லது அவரின் பிரதிநிதி கூட்டுறவுச் சங்கமொன்றின் பொதுக்கூட்டத்தைக் கூட்ட அதிகாரமுள்ளவர் எனக் கூறப்பட்டுள்ளது. பதிவாளராற் கூட்டப்படும் பொதுக்கூட்டங்களுக்கு ஏனைய பொதுக் கூட்டங்களுக்கிருக்க வேண்டிய நிறைவெண்ணோ அல்லது கூட்ட அறிவித்தல் வழங்கப்பட வேண்டிய கால அவகாசமோ தேவையில்லை. பதிவாளர் அல்லது அவரின் பிரதிநிதியாற் கூட்டப்படும் பொதுக் கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கவேண்டும். ஆயினும் அவருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. ஆயினும் வாக்குகள் சமபலம் பெற்றிருக்கும்போது அறுதியிடும் வாக்கைப் பயன்படுத்தலாம்.

பதிவாளர் அல்லது அவரின் பிரதிநிதியாற் கூட்டப்படாத ஏனைய பொதுக் கூட்டங்களிலும் பதிவாளர் அல்லது அவரின் பிரதிநிதி கலந்துகொள்ளவும், கருத்துக்களைத் தெரிவிக்கவும் உரிமையுண்டு. ஆனால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.

2. ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கத்தின் துணைவிதிகளையும் விதிக்கும் அதிகாரமுள்ளவர் துணைவிதிகளிற் கூறப்பட்ட காரணங்களுக்காகத் துணைவிதிகளிற் கூறப்பட்ட முறைப்படி பொதுக் கூட்டங்களைக் கூட்டலாம். பெரும்பாலான கூட்டுறவுச் சங்கத் துணைவிதிகளிற் பொதுக்கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் காரியதரிசிக்கே வழங்கப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான கூட்டுறவுச் சங்கத் துணைவிதிகளிற் பின் வரும் காரணங்களுக்காகக் காரியதரிசி பொதுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன.

1. நிர்வாகக் குழுவின் தீர்மானம்

2. நிருவாகக் குழுவின் பெரும்பான்மையோர் எழுத்து மூலம் கேட்டல்.

3. தலைவரின் கட்டளை.

4. உறுப்பினர்களின் துணைவிதிகளில் குறிப்பிட்ட அளவு தொகையினர் எழுத்து மூலம் கேட்டல் போன்றவையாகும்.

நிறைவெண்:
பொதுவாக ஒரு சங்கத்தின் உறுப்பினர் தொகையில் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்தாற்றான் நிறைவெண்ணாகக் கருதமுடியும். பெருந்தொகையான உறுப்பினர்களைக் கொண்ட சங்கங்கள் இவ்விதியைக் கடைப்பிடிக்குமானால் நடைமுறையிற் பொதுக் கூட்டங்களை நடத்த முடியாத நிலையேற்படும். இதைத் தவிர்க்கும் நோக்கமாகப் பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்கள் நிறைவெண் பற்றி “25 உறுப்பினர் அல்லது மொத்த உறுப்பினர் தொகையில் நாலிலொரு பகுதியினர் இரண்டில் எது குறைவோ அதுவே பொதுக் கூட்டத்தின் நிறைவு எண்” எனத் துணைவிதி ஆக்கியுள்ளன. ஆனால் பதிவாளர் அல்லது அவரின் பிரதிநிதியாற் கூட்டப்படும் பொதுக்கூட்டங்களுக்கு மூன்றுபேர் நிறைவெண்ணாகக் கருதப்படுவர்.

தலைமை தாங்குதல்:
“சங்கத்தின் தலைவரே பொதுவாகப் பொதுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல் வேண்டும். அவர் சமூகமளிக்காதவிடத்து உப தலைவர் தலைமை தாங்குதல் வேண்டும். இருவரும் சமூகமளிக்காதவிடத்துச் சமுகமளித்த உறுப்பினர்களில் ஒருவர் பெரும்பான்மையோரின் தீர்மானத்தின் மூலம் தலைமை தாங்குதல் வேண்டும்” எனப் பெரும்பாலான கூட்டுறவுச் சங்கத் துணைவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஏனைய விடயங்கள் ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் தனது துணைவிதிகளில் குறிப்பிட்டது போல நடத்தல் வேண்டும்.

பொதுக் கூட்ட வகைகள்:
பொதுக் கூட்டங்களை இரு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. வருடாந்தப் பொதுக் கூட்டம்

2. விசேட பொதுக் கூட்டம்.

வருடாந்தப் பொதுக்கூட்டம்:
இக் கூட்டம் ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் அல்லது வருடத்திற்கொருமுறை கூட்டப்படவேண்டியது. ஒரு வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்கும் அடுத்த வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்குமிடையிலுள்ள காலத்தின் மேலெல்லையைத் துணைவிதிகள் வரையறுத்திருக்கும். இக்கால எல்லை பொதுவாக 15 அல்லது 18 மாதங்களாக இருக்கும். இக்கால எல்லைக்குள் வருடாந்தப் பொதுக் கூட்டத்தை நடத்த நிருவாகக் குழு கடமைப்பட்டுள்ளது.

ஒரு வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் அக் கூட்டுறவுச் சங்கத்தின் துணைவிதிகளில் குறிப்பிட்ட விடயங்கள் பெரும்பாலும் எடுத்தாளப்படும். ஆயினும் சில சிறப்புக் காரணங்களால் அவ்விடயங்களில் ஏதாவது எடுத்தாளப்படாதிருப்பின் விசேட பொதுக்கூட்டமொன்றின் மூலம் அவ்விடயம் எடுத்தாளப்படலாம். பின்வரும் விடயங்கள் பெரும்பாலும் ஒருவருடாந்தப் பொதுக் கூட்டத்தில் எடுத்தாளப்படலாம். அவையாவன:
1. கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கையையும் கணக்காய்வாளரின் அறிக்கையையும் ஆராய்தல்.

2. நிருவாகக் குழுவின் வருடாந்த அறிக்கையை ஆராய்தல்.

3. துணைவிதிகளுக்கு அமைவாக இலாபத்தைப் பங்கீடு செய்தல்.

4. நிருவாகக் குழுவுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்

5. உறுப்பினர்களின் பிரேரணைகள் போன்றனவாகும்.

இவற்றைவிடப் பொதுச் சபை ஒன்று கவனிக்க வேண்டிய ஏனைய விடயங்களையும் வருடாந்தப் பொதுக் கூட்டத்திற் கவனிக்கலாம். வெளிக்கடன் எல்லை, உறுப்பினர் கடன் எல்ல, நிலையான சொத்துக்களின் கொள்முதல் விற்பனை மாற்றம் போன்ற விடயங்களாகும். ஒரு கூட்டுறவுச் சங்கம் ஒழுங்காகவும் முறையாகவும் இயங்குகின்றதை எடுத்துக் காட்டுகின்ற முக்கிய அம்சங்களில் ஒன்று உரிய முறைப்படி வருடாந்தப் பொதுக்கூட்டத்தினை நடாத்தலாகும்.

விசேட பொதுக் கூட்டம்:
வருடாந்தப் பொதுக் கூட்டமல்லாத ஏனைய பொதுச் சபைக் கூட்டங்கள் எல்லாம் விசேட பொதுக் கூட்டங்களாகும். விசேட பொதுக் கூட்டங்கள் பொதுவாகப் பின்வரும் காரணங்களுக்காகக் கூட்டப்படலாம். அவையாவன:
1. பதிவாளர் அல்லது அவரின் பிரதிநிதி எழுத்து மூலம் கேட்டல்.

2. நிருவாகக் குழுவின் தீர்மானம்

3. தலைவரின் எழுத்து மூலமான கட்டளை

4. துணைவிதிகளில் குறிப்பிட்டுள்ள உறுப்பினர்களின் தொகைக்கு மேற்பட்டர்கள் எழுத்து மூலம் வேண்டுதல்.

விசேட பொதுக் கூட்டத்தில் எடுத்தாளப்படவிருக்கும் தீர்மானங்கள் பற்றிக்கூட்ட அறிவித்தலில் வரையறுத்துக் கூறப்பட்டிருத்தல் வேண்டும். இக் கூட்ட அறிவித்தல்கள் பொதுவாக ஏழு நாட்களுக்கு முன் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட வேண்டுமெனப் பெரும்பாலான கூட்டுறவுச் சங்கத் துணைவிதிகள் குறிப்பிடுகின்றன. ஆனாற் பதிவாளர் அல்லது அவரின் பிரதிநிதி கூட்டும் கூட்டங்களுக்கு 48 மணித்தியால அறிவித்தல் போதுமானது.

இலாபப் பங்கீடு:
ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கமும் கூட்டுறவுச் சட்டம் 44க் கிணங்க ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் கணக்காய்வு ஒன்றினைச் செய்து அக் கணக்கறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட தேசிய இலாபத்தைப் பகிர்வு செய்யலாம். தேறிய இலாபத்திலிருந்து இரு ஒதுக்கீடுகள் கட்டாயமாகக் கூட்டுறவுச் சட்டப்படி செய்யப்பட வேண்டியன. அவை: 1. ஒதுக்கு நிதி 2. கூட்டுறவு நிதி.

ஒதுக்கு நிதி: (சட்டப்படி அடக்கப் பணம்) தேறிய இலாபத்தின் 25 வீதத்திற்குக் குறையாத தொகையொன்றை இந்நிதிக்கு மாற்றுதல் வேண்டும்.

கூட்டுறவு நிதி: விதிகளினால் விதிக்கப்படக் கூடியவாறு தேறிய இலாபங்களின் அத்தகைய பகுதியை விதிகளின் கீழ்த்தாபிக்கப்பட்ட கூட்டுறவு நிதிக்கு உதவல் வேண்டும். இந்நிதிக்கு ஒவ்வொரு சங்கமும் 5 ரூபாவுக்குக் குறையாததும் தேறிய இலாபத்தில் 10 வீதத்திற்கு மேற்படாததுமான ஒரு தொகை செலுத்துதல் வேண்டும்.

இவை இரண்டுக்கும் ஒதுக்கீடு செய்தபின் எஞ்சியிருக்கும் இலாபத்தைப் பின்வரும் எல்லா அல்லது எவையேனும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். அவையாவன:

1. உறுப்பினர்களின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்திற்கு விதிகளில் விதிக்கப்பட்ட வீதத்திற்கு மேற்படாத (12மூ) பங்கு இலாபம் (வட்டி) வழங்கல்.

2. சங்கத்துடன் உறுப்பினர்கள் செய்து கொண்ட அலுவல்களின் பெறுமதிமீது, துணைவிதிகளில் விதித்த அளவிலும், விதித்த முறையிலும் அவர்களுக்குத் தள்ளுபடி வழங்கல்.

3. துணை விதிகளில் விதிக்கப்படக்கூடிய நிதிகளுக்கு உதவு தொகை வழங்கல்.

4. சங்கத்தின் ஊழியர்களுக்கு மிகையூதியம் வழங்கல்.

5. துணைவிதிகளிற் குறிப்பிடக் கூடிய வேறு கணக்கின் மீதான செலுத்துதல்.

துணைவிதிகளில் விதிக்கப்படக் கூடிய நிதிகள்:
பங்கு மாற்றுநிதி, கட்டிடநிதி, எதிர்பாராச் செலவுநிதி, பொதுச் சபையின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்படும் வேறு ஏதாவது நிதி எனப் பெரும்பாலான கூட்டுறவுச் சங்கத் துணைவிதிகளில் கூறப்பட்டிருக்கின்றது.

வரையறுக்கப்படாத கூட்டுறவுச் சங்கமொன்றின் இலாபம் பதிவாளரின் பொதுவான அல்லது சிறப்பான கட்டளையின்றிப் பகிர்வு செய்யக் கூடாது.

இலாபப் பங்கீட்டுக்குரிய கட்டுப்பாடுகள்:
1. பங்கு முதலில்லாத கூட்டுறவுச் சங்கமொன்று பணத்தின் எப்பாகத்தையேனும் உறுப்பினருக்குப் பங்கிலாபமாக அல்லது வேறு வழியில் பகிர்வு செய்ய முடியாது. இவ்விதி சிக்கன சங்கத்தைப் பாதிக்காது.

2. தேறிய இலாபம் கணக்கிடப்படுமுன் சங்கத்தின் முழு வருடச் செலவும் இலாப நட்டக் கணக்கிற் பற்று வைக்கப்பட வேண்டும்.

3. இலாபப் பகிர்வுக்குப் பதிவாளரின் முன் அனுமதி பெறப்படல் வேண்டும்.

4. கடன் கொடுத்தவருக்கு அல்லது வைப்புப் பணமிட்டவருக்குக் கொடுக்குமதியிருக்கும் வரை கூட்டுறவுச் சங்கமொன்று பங்கிலாபமாவது கொள்வனவு இலாபமாவது கொடுத்தலாகாது.

5. வங்கி ஒழிந்த ஏனைய உறுபபினரல்லாதவர்களிடமிருந்து கடன் வசதிகள் ஏற்கும் வரை ஒரு கூட்டுறவுச் சங்கம் பங்கு இலாபம் (வட்டி) கொடுக்கக் கூடாதென்று அல்லது விதித்த குறைந்த வீதத்தில் கொடுக்க வேண்டுமென்று பதிவாளர் பொது அல்லது சிறப்புக் கட்டளையிடலாம்.


இலாபப் பங்கீடு செய்யும் அதிகாரம்:
துணைவிதிகள் மூலம் இவ்வதிகாரம் பொதுச் சபைக்கே வழங்கப்பட்டுள்ளது. பொதுச் சபை கூடித் திட்டத்தைத் தயாரிப்பது காலதாமதமும் சிரமமுமான செயலாகும். எனவே நிருவாக சபை இலாபப் பகிர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துப் பொதுச் சபைக்குச்சமர்ப்பிக்கின்றது. பொதுச் சபை அதனை ஏற்கலாம். திருத்தலாம்: நிராகரிக்கலாம். புதுத் திட்டமொன்றைக் கொண்டு வந்து ஏற்கலாம். பொதுவாக நிருவாகக் குழுவின் திட்டத்தை ஏற்பதோ அல்லது திருத்தங்களுடன் ஏற்பதோதான் பெரும்பாலும் நடைமுறையிலிருந்து வருகிறது. பொதுச் சபையால் ஏற்கப்பட்ட இலாபப் பகிர்வுத் திட்டம் பதிவாளரி; அனுமதியைப் பெற்றதும் பயனுடையதாகும்.

ஊழியர் மிகையூதியம்:
தேறிய இலாபத்தில் 20 வீதம் அல்லது அவர்களின் ஒரு மாதச் சம்பளம் இரண்டில் எது குறைவோ அத்தொகையே மிகையூதியமாக வழங்கப்பட வேண்டும் எனக் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுக் கட்டளை சட்டத்தின் முதலாம் பகுதியின் 35 –வது பிரமாணம் கூறுகிறது.

கூட்டுறவு நிதி:
அமைச்சரின் பொது அல்லது சிறப்பான பணிப்புரைகளுக்கு அமைவாகப் பதிவாளரால் ஆட்சி செய்யப்படல் வேண்டும்.

பின்வரும் நோக்கங்களுக்காக இந் நிதியைப் பயன்படுத்தலாம்.
அவையாவன:
1. கூட்டுறவுச் சங்க விசாலிப்பும் பிரசித்தப்படுத்தலும்.

2. கூட்டுறவுச் சங்க முகாமைத் திறமைகளை மேல் விருத்தி செய்தல்

3. இயங்குகின்ற கூட்டுறவுச் சங்கங்களுக்கு உதவியளித்தல் இவைபற்றிக் கூட்டுறவுச் சட்டம் 43, கூட்டுறவு விதிகள் 15, 43 என்பன கூறுகின்றன.

துணைவிதித் திருத்தம்:
ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் துணைவிதிகளை ஆக்கும் அங்கீகரிக்கும் அதிகாரம் அதன் பொதுச்சபைக்கு உண்டு. அவ்வாறு பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட துணைவிதிகள் பதிவாளராற் பதிவு செய்யப்பட்ட பின்பே பயனுடையதாகும். அது போன்று துணை விதிகளின் திருத்தங்களையும் கூட்டுறவுச் சங்கப்பொதுச்சபை அங்கீகரித்துப் பதிவாளரினாற் பதிவு செய்யப்பட்ட பின்பே பயனுடையதாகும். சங்கத்தின் பெயருட்படச் சகல துணை விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்படலாம். துணைவிதிகளில் திருத்தம் கொண்டுவருஞ் சூழ்நிலைகள் பின்வருமாறு ஏற்படலாம். அவையாவன:

1. சங்க உறுப்பினர்களின் கோரிக்கை

2. நிருவாக சபையி; தீர்மானம்

3. பதிவாளரின் விதந்துரைப்பு

கூட்டுறவுச் சங்கப் பொதுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும் துணை விதித்திருத்தம் பதிவாளரின் முன் அங்கீகாரம் பெற்றதாகவோ அன்றிப் பெறாததாகவோ இருக்கலாம்.

துணைவிதித் திருத்தம் என்பதனுட் புதுத் துணைவிதிகளைச் சேர்த்தல், துணைவிதி ஒன்றிணை இல்லாதொழித்தல், துணைவிதி ஒன்றினை வேறுபடுத்தல் என்பன அடங்கும்.

துணைவிதித் திருத்தம் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட வேண்டிய முறை:

பதிவாளரின் முன்னனுமதி பெறப்படாத அல்லது விதந்துரைப்புடனில்லாத துணைவிதித் திருத்தம்:
1. வரையறுக்கப்படாத கூட்டுறவுச் சங்கங்களைப் பொறுத்த வரையில் துணைவிதித் திருத்தப் பொதுச்சபைக்கு, உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் சமூகமளித்திருத்தம் வேண்டும். சமூகமளித்தவர்களில் நாலில் மூன்று பங்கு வாக்குகளைப்பெறல் வேண்டும்.

2. வரையறுக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கமாயின், துணைவிதித்திருத்தத் தீர்மானம், சங்கத்தின் பொதுக் கூட்டத்திற்குச் சமூகமளித்து வாக்களிக்க உரிமையுள்ளவர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும். இவ்வாக்குகளை எழுத்து மூலமும் பெறலாம். எழுத்து மூலம் வாக்களிப்பதாயின் அத்தகைய உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுத் துணைவிதிகளின்படி நிறைவெண்ணுள்ள பொதுக் கூட்டத்திற் பரிசோதனைக்கப்பட்டு எண்ணப்படல் வேண்டும்.

பதிவாளரின் முன்னனுமதி பெற்ற அல்லது விதந்துரைப்புடன் கூடிய துணைவிதித் திருத்தம்:
துணைவிதத் திருத்தம் பற்றி ஆலோசிப்பதற்காக முறையான அறிவித்தல் கொடுக்கப்பட்ட, துணைவிதிகளின்படி நிறைவெண்ணுள்ள, ஒரு பொதுச்சபைக் கூட்டத்துக்குச் சமூகமளித்தவர்களில் நாலில் மூன்று பங்கினரின் வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்படல் வேண்டும்.

துணைவிதித் திருத்தம் பொதுச்சபையில் முறையாக நிறைவேற்றப்பட்டபின் அதன் இரு பிரதிகளைம், அது சட்டத்துக்கும் விதிகளுக்கும் அமைவாக நிறைவேற்றப்பட்டதென்பதைத் தலைவரும் காரியதரிசியும் அத்தாட்சி படுத்திக் கையொப்பமிட்ட பத்திரத்துடன் பதிவாளருக்ணகு அனுப்பி வைத்தல் வேண்டும்.

கூட்டுறவுச் சட்டத்துக்கும் விதிகளுக்கும் அமைவாக இருப்பதாகப் பதிவாளர் திருப்தியுறின் துணைவிதித் திருத்தத்தைப் பதிவு செய்து அதன் பிரதியிற் கையொப்பமிட்டுப் பதிவு செய்தமைக்கு அத்தாட்சியாகச் சங்கத்துக்கு அனுப்பி வைப்பார். பதிவு செய்த பின்னரே துணைவிதித் திருத்தம் பயனுடையதாகும். பதிவாளர் திருப்தியுறாவிடின் அமைச்சருக:கு மேன்முறையீடு செய்யலாம் என்ற நிபந்தனையுடன் துணைவிதித் திருத்தத்தைப் பதிவு செய்ய மறுக்கலாம்.

சங்கப் பெயரை மாற்றும் திருத்தம் பற்றிய கட்டுப்பாடுகள்:
1. கூட்டுறவுச் சங்கமொன்றின் பெயர் மாற்றம் பற்றிய திருத்தமானது அச்சங்கத்தின் அல்லது அதன் உறுப்பினர்களின் அல்லது கடந்த கால உறுப்பினர்களில் ஏதேனும் உரிமையை அல்லது கட்டுப்பாடுகளைப் பாதிப்பதாக இருத்தல் ஆகாது.

2. அச்ச ங்கத்தின் தீர்க்கப்படாத சட்ட நடவடிக்கையெதுவும் அதன் புதிய பெயரின் கீழ் சங்கத்தால் அதற்கு எதிராகத் தொடர்ந்தவர்களால் தொடர்ந்து நடத்தப்படலாம். இவைபற்றிக் கூட்டுறவுச் சட்டம் 8 விதி 33 என்பன கூறுகின்றன.

நிருவாக சபை:
நிருவாக சபையைப் பணிப்பாளர் சபை. இயக்குநர் சபை, நெறியாளணர் குழு, நிருவாகக்குழு எனப் பல பெயரால் அழைப்பர். உறுப்பினர்களுக்கு உச்சப்பயன் கிடைக்கக்கூடிய வகையிற் சேவைகள் அமையக் கூடிய வகையிலும் உறுப்பினர்களின் பொதுநலன்களைப் பேணும் வகையாலும் உறுப்பினர்கின் பதிலாளர்களாகச் சங்கச் செயற்பாணடகளைத்திட்டமிட்டுச் செயற்படுத்தி மேற்பார்வை செய்வதே இதன் முக்கிய கடமையாகும். நிருவாகசபைக்குப் பொதுச்சபை தனது அதிகாரங்களிற் சிலவற்றை அளிக்கிறது. பதிலாளரால் நியமிக்கப்படும் நிருவாக சபைக்குப் பதிவாளர் அதிகாரங்களை அளிக்கிறார். எனவே நிருவாக சபை பொதுச்சபைக்கும் பதிவாளருக்கும் பொறுப்பானது. நிருவாக சபை தனது செயற்பாடுகளையும் அதிகாரங்களையும் கூட்டுறவுச் சட்டம், விதி, துணைவிதிகளுக்கிணங்கவும், பொதுச் சபைத் தீர்மானங்கள், பதிவாளர், கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு என்போரின் பணிப்புரைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ள வேண்டும்.

நிருவாக சபையைப்பற்றிக் கூட்டுறவுச் சட்டம் விபரமாகக் கூறவில்லை. கூட்டுறவு விதிகள், துணைவிதிகள் என்பனவற்றிலேயே விபரமாகக் காணமுடியும்.

“ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட சங்கமும் ஒரு நிர்வாக சபையினையுடையதாயிருத்தல் வேண்டும். சங்கத்தின் துணைவிதிகளின்படி நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவோ, இடைநிறுத்தப்படவோ அகற்றப்படவோ இயலும். ஒரு பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் துணைவிதிகள் பிராந்திய அல்லது கிளை நிருவாக சபைக்கான ஏற்பாடுகளையுடையதாக இருக்குமாயின், அத்தகைய பிராந்திய அல்லது கிளை நிருவாகசபை உறுப்பினர் ஒருவர் துணைவிதிகளில் விதிக்கப்பட்ட முறைக்கமையத் தெரிவு செய்யப்படவோ இடைநிறுத்தப்படவோ அகற்றப்படவோ இயலும்.

மேற்கூறப்பட்ட ஏற்பாடுகள் எங்ஙனமாயினும் ஒரு புதிய கூட்டுறவுச் சங்கம் பதிவு செய்யப்படும் பொழுது பதிவாளர் அத்தகைய சங்கத்தின் தற்காலிக பணிப்பாளர் சபைக்கு நியமனம் செய்வதற்கும், அத்தகைய தற்காலிக பணிப்பாளர் சபையிலிருந்து அத்தகையோரை அகற்றுவதற்கும் தத்துவமுடையவராவர். பதிவாளரினால் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணிப்பாளர்அ சபை. பொதுக்கூட்ட மொன்றினதும் நிருவாகசபையொன்றினதும் தத்துவங்களையுடையதாயிருத்தல் வேண்டும். ஆயினும் பதிவாளரால் இவ்வண்ணம் நியமிக்கப்பெற்ற ஒருசபை 12 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்துக்கு இயங்க முடியாது” எனக் கூட்டுறவு விதி (19) கூறுகிறது.

நிருவாக சபை உறுப்பினர்களை அல்லது பிராந்திய அல்லது கிளை நிருவாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படும் முறை இடைநிறுத்தம் செய்யப்படும் முறை, அகற்றப்படும் முறை என்பன பற்றி ஒவ்வொரு கூட்டுறவுச்சங்கமும் துணைவிதிகளைத் தெளிவாகவும் விபரமாகவும் சந்தேகத்திற்கிடமில்லாமலும் ஆக்குதல் வேண்டும். துணைவிதிகள் விதித்தபடியே இச்செயல்கள் நடைபெற வேண்டும். ஆயினும் துணைவிதிகள் மாறாகவிருப்பினும் பதிவாளர் நிருவாக சபைக்கு ஒரு உறுப்பினரையோ ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினரையோ நியமிப்பதற்கு அதிகாரமுந் தத்துவமும் உடையவரார். அவ்வாறு நியமிக்கப்படுபவர்களிடையேயிருந்து தலைவரை அல்லது உபதலைவரை அல்லது இருவரையும் நியமிப்பதற்குப் பதிவாளர் தத்துவமுடையவராவார். பதிவாளர் இவ்வண்ணம் நியமிப்பாராயி; தெரிவு செய்யப்பட்ட தலைவர், உபதலைவர் என்போர் தம்பதவியை இழப்பர் எனக் கூட்டுறவு விதி (20) கூறுகிறது.

நிருவாக சபையின் அதிகாரம்:
பொதுச் சபைக்கெனத் துணைவிதிகளால் ஒதுக்கப்படாத சங்கச் செயற்பாடுகள் சம்பந்தமான சகல கருமங்களையும் செய்வதற்கு நிருவாக சபைக்கு அதிகாரமும் தத்துவமும் உண்டு. நிருவாகசபையின் அதிகாரங்களைப் பொதுச் சபையில் உருவாக்கப்பட்ட துணை விதிகளே வழங்குகின்றன. இவ்வதிகாரங்கள் நிருவாகசபைக்கு வழங்கப்படுகின்றதேயல்லாது எந்தவொரு தனியுறுப்பினருக:கும் வழங்கவில்லை. எனவே எந்தவொரு தனிப்பட்ட நிருவாக உறுப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் அதிகாரமில்லை. குழுவாகக் கூடும்போது மட்டுந்தான் அதிகாரம் உண்டு. சங்கச் செயற்பாடுகள் முழுவதையும் குழுஒன்று சேர்ந்து கட்டுப்படுத்துவதோ அல்லது மேற்பார்வை செய்வதோ இயலாத காரியமாகும். எனவே தனது அதிகாரங்களைத் தீர்மானத்தின் மூலம் ஒருவருக்கோ ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கோ வழங்கலாம். சில பதவி வழி உறுப்பினர்களுக்குப் (தலைவர், காரியதரிசி, உபதலைவர் போன்றவர்களுக்கு) பொதுச் சபையால் உருவாக்கப்பட்ட துணைவிதிகள் மூலம் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிருவாக சபை உறுப்பு நிலைக்காய தகுதியீனங்கள்:
1. 21 வயதுக்குட்பட்டவராய் இருத்தல்.

2. கடனிறுக்கும் இயலுந் தன்மையின்மை கோரி விண்ணப்பஞ் செய்தவர் அல்லது அவ்வாறு தீர்ப்புப் பெற்றவர்.

3. சித்த சுயாதீனமற்றர்.

4. கடந்த முன் மூன்றாண்டுகளுக்குள் ஒழுக்கச் சீர்கேடு காரணமாகக் குற்றவாளியாகக் காணப்பட்டவர் அல்லது மூன்று மாதத்திற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை பெற்றவர்.

5. அச்சங்கத்திற்கு அல்லது பதிவு செய்யப்பட்ட வேறு கூட்டுறவுச் சங்கத்திற்கு அல்லது ஒரு ஒழிப்போனுக்கு மூன்நு மாத காலத்துக்குள் கடனைத் திருப்பிக்கொடுக்கத்தவறியவர் அல்லது மேற்கூறியவருக்கு எவ்வகையிலேனும் செலுத்த வேண்டியதைச் செலுத்தத் தவறியவர்.

6. உறுப்பினர் அல்லது பணியாளர் என்ற கோதாவிலன்றி நேர்முகமாகவோ மறைமுகமாகவோ சங்கத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அல்லது சங்கம் செய்த விற்பனையில் அல்லது கொள்வனவில் அல்லது நடைமுறையிலிருக்கும் அல்லது பேச்சிலிருக்கும் ஒப்பந்தத்தில் அல்லது கொடுக்கல் வாங்கலில் கரிசனையுடையவர்கள்.

7. கடந்த முன் மூன்றாண்டுகளாக நிருவாக சபையில் கடமையாற்றுவதற்கெனத் தொடர்ச்சியாகத் தெரிவு செய்யப்பட்டவர்.

8. சங்கப் பொதுக்கூட்டம் சங்கத்துக் கெதிரிடையானதென்று எண்ணும் முயற்சியில் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டவர்.

9. துணை விதிகளின் பிரகாரம் நிருவாக சபையில் அல்லது பிராந்திய அல்லது கிளை நிருவாகசபையில் தொடர்ந்திருப்பதற்கு வேறு வகையில் தகுதியற்றவராதல்.

இவை கூட்டுறவு விதி (21) ல் கூறப்பட்டவையாகும். இவற்றை விட ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் தனது தேவைக்கும் விருப்பத்திற்குமேற்பச் சில நிபந்தனைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். வட்டிக்குப் பணம் கொடுப்பவர். தொழில் ஒப்பந்தகாரர், இச் சங்கத்தில் அல்லது இச்சங்கம் அங்கம் வகிக்கும் வேறு சங்கத்தில் பணிபுரிபவர், தனது பதவியை அல்லது வேலையைக் கடந்த முன் 5 ஆண்டுகளுக்குள் விட்டகல வேண்டிய நிலைக்குள்ளானவர், போன்ற நிபந்தனைகளைத் துணைவிதிகளிற் சேர்த்துக் கொள்ளலாம்.

நெசவுத் தொழிலாளரை அல்லது பாடசாலை மாணவர்களை உறுப்பினராகக் கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தைப் பொறுத்தவரையில், அச்சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் 21 வயதுக்கு உட்பட்டவராயினும் அச்சங்க நிருவாக சபைக்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்படத் தகுதியுடையவராவார்.

நிருவாக சபைக்கு அல்லது பிராந்திய அல்லது கிளை நிருவாக சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தான் தெரிவு செய்யப்படுவதற்குத் தகுதியற்றவரல்லவென அச்சங்கத்தின் துணைவிதிகளில் குறிப்பிட்டுள்ள முறைக்கமைய உறுதியுரை செய்தல் வேண்டும். இவ்வுறுதியுரை பொய்யானதெனக் காணப்படின், பொய்யான உறுதியுரை காணப்பெற்ற திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஏதேனும் கூட்டுறவுச் சங்கத்தில் பதவி வகிக்கத் தகுதியற்றவராவர்.

நிருவாகசபை உறுப்பினர் ஒருவர், பொதுச்சபையின்முன் அங்கீகாரம் பெறப்பட்டதும், பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்டதுமான வீதப்படி மாத்திரமே சம்பளமாவது, தகமைக் கொடையாவது, வேதனமாவது பெற்றுக்கொள்ளலாம். தான்பெற உரிமையில்லாத பணத்தைப் பெறும் நிருவாகசபை உறுப்பினர் அல்லது அலுவலரைப் பெற்ற முழுப்பணத்தையும் சங்கத்துக்குத் திருப்பிச் செலுத்துமாறு கோரலாம்.

தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபை அல்லது பிராந்திய அல்லது கிளை உறுப்பினர் தம்பதவியை இழக்குங் காரணங்கள்:
1. சங்கத்தின் உறுப்பினராயில்லா தொழிதல்

2. கடனிறுக்கும் இயலுந் தன்மையின்மை கோரி விண்ணப்பஞ் செய்தவர் அல்லது அவ்வாறு தீர்ப்புப் பெற்றவர்.

3. ஒழுக்கச் சீர்கேடு சம்பந்தமான குற்றச்சாட்டில் குற்றப்பட்டவர் அல்லது மூன்று மாதத்துக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை பெற்றவர்.

4. சித்த சுயாதீனமற்றவர்.

5. சங்கத்தின் நலத்துக்கு முரண்பாடானதெனச் சங்கப் பொதுக்கூட்டம் கருதும் வியாபாரத்தை அல்லது வேறு முயற்சியை ஆரம்பித்தல் அல்லது தொடர்பு வைத்தல்.

6. சங்கத்தின் துணைவிதிகளின் பிரகாரம் அச்சங்கத்தின் நிருவாக சபையில் அல்லது பிராந்திய அல்லது கிளை நிருவாக சபையில் உறுப்பினராகத் தொடர்ந்திருப்பதற்கு வேறு வகையில் தகுதியற்றவராதல்.

துணைவிதிகள் விதிக்கும் காரணங்களின் மாதிரிகள்:
1. பொதுச் சபைக் கூட்டம் ஒன்றினால் முறையாக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம்.

2. செயலாளருக்கு ஒருமாத அறிவித்தல் கொடுத்து எழுத்து மூலம் கொடுக்கப்பட்ட விலகல் கடிதம்.

3. போதிய நியாயமின்றித் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்குச் சமூகமளிக்காமையால் பதவியிலிருந்து விலகிவிட்டாரென நிருவாகசபை தீர்மானஞ்செய்தல்.

பதிவாளரினால் நியமிக்கப்பட்ட உறுப்பினராயின் நியமன கால எல்லை முடிவுற்றதும், பதிவாளரின் விலக்கல் கட்டளை பெற்றதும் பதவியை இழப்பர்.

நிருவாகசபையின் பணிகளைப் பற்றிக் கூட்டுறவு விதிகளிற் குறிப்பிடப்பட்டவை:
1. கூட்டுறவுச் சட்டத்தையும், கூட்டுறவு விதிகளையும், சங்கத்தின் துணைவிதிகளையும், நடைமுறைவிதிகளையும், சங்கத்தின் கருமங்கள் சம்பந்தமாகப் பதிவாளரால் வழங்கப்படும் ஏதேனும் பொதுப் பணிப்புரைகளையும் பின்பற்றல்.

2. உண்மையானதும் சரியானதுமான கணக்குகளை வைத்தல்.

3. சொத்துக்கள் - பொறுப்புக்கள் பற்றிய உண்மையான கணக்குகளை வைத்தல்.

4. சங்கத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பில் வைப்பதற்கு ஒழுங்கு செய்தல்.

5. உறுப்பினர் பதிவேட்டினைச் சரியாக வைத்து வருதல்.

6. சங்கத்தின் பொதுக் கூட்டத்தில், கணக்காய்வு செய்யப்பட்ட இலாபநட்டக் கணக்கினையும், ஐந்தொகையினையும் பதிவாளரிடமிருந்து இத்தகைய அறிக்கையினைப் பெற்றுக்கொண்ட திகதியிலிருந்து இரண்டு மாத காலத்திற்கிடையிற் சமர்ப்பித்தல்.

7. புத்தகங்களைப் பரிசீலனை செய்ய அதிகாரமுள்ளவர்களுக்கு அவற்றைப் பரிசீலனை செய்வதில் உதவி செய்தல்.

8. சங்கம் உறுப்பினர்களுக்குக் கடன் வழங்குவதாயின், கொடுக்கப்பட்ட நோக்கத்திற்குக் கடன்கள் பயன்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்தல்.

9. கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் பிரிவு 45க்குப் (கணக்குப் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள்) பதிவாளரால் அறிவிக்கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்தல்.

இவங்கைவிட ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் தனது துணை விதிகள் மூலம் நிருவாகசபையின் பணிகளையும் கடமைகளையும் விதிக்கலாம். பெரும்பாலான கூட்டுறவுச் சங்கத் துணைவிதிகளிற் காணப்படும் நிருவாக சபையின் பணிகள் கீழே தரப்படுகி;றன. அவையாவன:

1. தமக்குள்ளிருந்து சங்கத்தின் தலைவர் ஒருவரையும், உபதலைவர் ஒருவரையும் தெரிவு செய்தல்.

2. நிருவாக சபையில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு ஆட்களை ஒத்துத் தேர்ந்தெடுத்தல். இவ்வாறு தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பொதுச்சபையின் அடுத்த கூட்டம் வரை பதவி வகிப்பர்.

3. பொதுச்சபை நிர்ணயித்த மேலெல்லைக்குக் கீழ்ப்படிய, சங்கத்தின் தொழிற்பாடுகளுக்குத் தேவைப்படும் வள ஆதாரங்களை எங்கிருந்து பெறுவது என்பதனையும், அவற்றை எந்த நிபந்தனைக்கமையப் பெறவே;டு மென்பதனையும் நிர்ணயித்தல்.

4. ஆணையாளர் (பதிவாளர்) அங்கீகரித்த திட்டத்தின்படியும் அத்திட்டம் வரையறுக்கும் சம்பள விகிதம் ஒழுங்குமுறை வேலை நீக்கம் என்பவற்றிற்கமையவும், ஒரு முகாமையாளரினதும் வேறு பணிப்பாளர்களினதும் சேவைகளைப் பெறுதல்.

5. பொதுச்சபையின் முன் அனுமதியுடன் சங்கத்திற்குத் தேவைப்படும் நிலையான சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் மூலமோ அல்லது வேறு வழியிலோ சொந்தமாக்கல்.

6. பொதுச் சபையின் முன் அனுமதியுடன் சங்கத்தின் எந்த நிலையான சொத்துக்களையும் விற்பனை செய்தல்.

7. பங்குகளை ஒதுக்கிக் கொடுத்தல், பங்கு மாற்றத்திற்கு அதிகாரம் வழங்கல். சங்கத்தின் சார்பாக வேறு நிறுவனங்களில் பங்குகளை வாங்குதல்.

8. சங்கத்தின் எந்த உத்தியோகத்தர் மூலமோ அல்லது பணியாள் மூலமோ சட்ட நடவடிக்கைகளைத் தாக்கல் செய்தல், நடாத்துதல், எதிர்த்தல், சமரச இணக்கத்திற்கு வருதல், அல்லது கைவிடுதல்.

9. கடன்களை வழங்குந் திட்டங்களை வகுத்தல்.

10. சங்கத்தின் குறிக்கோள்களை எய்துவதற்கு வேண்டிய உப குழுக்களை நியமித்தல் இவை போன்றவையாகும்.

பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்களின் துணைவிதிகளில் காணப்படும் நிருவாக சபையின் கடமைகள் கீழே தரப்படுகின்றன:
1. பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களுக்கு, தேவையானபோது அச்சபையின் விசேட கூட்டங்களுக்கும் அழைப்பு விடுத்தல்.

2. நிதியாண்டு தொடங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன்பாவது சங்கத்தின் எதிராண்டு வரவு செலவுத் திட்டத்தினைப் பொதுச்சபைக் கூட்டத்திற் சமர்ப்பித்தல்.

3. புதிய முயற்சியெதையும் ஆரம்பிக்க முன் அதுபற்றிய சாத்தியக் கூற்று அறிக்கையினைப் பெற்று மதிப்பீடு செய்தல்.

4. சங்க வளர்ச்சி பற்றி முகாமையாளரிடமிருந்தும் ஏனைய பணியாளரிடமிருந்தும் அறிக்கைகளைப் பெற்று ஆராய்ந்து முகாமையாளருக்குத் தகுந்த ஆணையைப் பிறப்பித்தல்.

5. முதலையும் நிதியையும் திரட்டும் நிதிக்கொள்கையைத் தீர்மானித்தல்.

6. விற்பனைப் பொருள்களின் கொள்வனவுக் கொள்கையைத் தீர்மானித்தல்.

7. ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்திற்கமைய ஆள்பணிக்கொள்கையைத் தீர்மானித்தல்.

8. விற்பனைப் பொருள்களின் விநியோகக்கொள்கைகளைத் தீர்மானித்தல்.

9. உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் கொள்கையைத் தீர்மானித்தல்.

10. கல்வி, கலாச்சாரப் பொழுதுபோக்கு, சமூக சேவை முயற்சிகளுக்கு ஒழுங்கு செய்தல்.

11. பொதுச் சபைக்கோ அல்லது முகாமையாளருக்கோ குறிப்பாக ஒதுக்கப்படாத சங்க நோக்கத்தை எய்துவதற்கு அவசியமான அல்லது அனுகூலமான இதர கருமங்கள் யாவற்றையுஞ் செய்தல்.

இவை போன்றவை சங்கத்துணைவிதிகளில் இடம் பெற்றிருக்கும்.

ஒருபதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கம், அரசாங்கத்தின் அல்லது கூட்டுத்தாபனத்தின் முகவராகச் செயலாற்றுவதாயின் அதன் அதிகாரிகளினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அத்தகைய சேவைகளை ஆற்றுதல் நிருவாக சபையினதும் ஒவ்வொரு பணியாளரதும் கடமை.

ஒரு பதிவு செய்யப்பட்ட கடனுமவு சங்கத்தின் விடயத்தில் நிருவாக சபை உறுப்பினர்கள் சங்கத்துக்குக் கட்ட வேண்டிய மொத்தக் கடன் தொகை சங்கத்தொழிற்பாடு முதலின் 25 வீதத்திற்கு மேற்படலாகாது. ஆயினும் சங்க உறுப்பினர்களது கடன் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான நிதியை அச்சங்கம் கொண்டிருப்பதாகப் பதிவாளர் கருதினால் அச்சங்கத்துக்கு இவ்விதி பொருந்தாது.

நிருவாக சபையின் பொறுப்பு:
ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாக சபையானது உரிய ஊக்கங் காட்டத் தவறியதன் விளைவாக அல்லது கூட்டுறவுச் சட்டம் கூட்டுறவு விதி, சங்கத்தின் துணைவிதி, சங்க நடைமுறை விதி, ஆணையாளரின் ஏதேனும் பொதுப் பணிப்புரைகள் என்பனவற்றைப் பின்பற்றத் தவறியதன் விளைவாக ஏற்பட்ட ஏதேனும் நட்டம் அல்லது தண்டத்துக்கு நிர்வாக சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தும் ஒருமித்தும் பொறுப்பாளியாக வேண்டும். இவை பற்றிக் கூட்டுறவு விதிகள் 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, என்பன கூறுகின்றன.

நிர்வாகசபைக் கூட்டம்:
இக்கூட்டம் தேவையேற்படும் போதெல்லாம் கூட்டப்படுமாயினும் ஆகக் குறைந்தது மாதம் ஒரு தடவையாவது கூடுதல் வேண்டும். தலைவர், நிருவாகசபை, நிருவாகசபை உறுப்பினர்களில் பெரும் பான்மையோர், ஆணையாளர் (பதிவாளர்) என்போரின் கோரிக்கைக்கிணங்க அல்லது நிருவாகசபை உறுப்பினரிற் பெரும்பான்மையோர் எழுத்து மூலம் கோரியதற்கிணங்கச் செயலாளரால் நிருவாகசபைக் கூட்டம் கூட்டப்படும். இக்கூட்டத்துக்குத் தலைவர் அவர் சமூகமளிக்காதவிடத்து சமூகமளித்த உறுப்பினர்களில் அவர்களால் தெரிந்தெடுக்கப்படும் ஒருவர் தலைமை வகிக்கலாம்.

ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒவ்வொரு வாக்குரிமையே உண்டு. வாக்குகள் சமனாக இருக்குமிடத்து தலைவருக்கு அறுதியிடும் வாக்கொன்று மேலதிகமாக உண்டு.

நிருவாக சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அல்லது தீர்மானிக்கப்படும் எல்லா விடயங்களும் நிருவாகசபைக் கூட்ட அறிக்கைப் புத்தகத்தில் செயலாளராற் பதியப்படல் வேண்டும். கூட்ட முடிவில் தலைவரும் சமூகமளித்த நிருவாகசபை உறுப்பினர்களும் கூட்ட அறிக்கையின் கீழ்க் கையொப்பமிடல் வேண்டும். நிருவாகசபை உறுப்பினர் தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் சமூகமளித்தாலே கூட்டத்தை நடத்தலாம்.

நிருவாகசபை உறுப்பினர்களிடையே வெற்றிடங்கள் இருப்பதாலோ எந்த நிருவாகசபை உறுப்பினரின் நியமனத்திலோ அல்லது தெரிவிலோ ஏதேனும் குறைபாடுகளிருப்பதனால் நிருவாக சபையின் எந்hச் செயலோ நடவடிக்கையோ செல்லுபடியற்றதாயிவிடாது.


தலைவர்
நிருவாகசபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுவதன் மூலம், அல்லது பதிவாளரின் (ஆணையாளர்) நியமன மூலம் ஒருவர் தலைவர் ஆகலாம். இவரே சங்கத்தின் உயர் அதிகாரம் பெற்றவர். இவர் நிருவாக சபையின் பதிவாள். இவர் நிருவாக சபைக்காக நிருவாகசபையின் தீர்மானங்களுக்கிணங்கச் சங்கச் செயற்பாடுகளைக் கொண்டு நடாத்தும் பொறுப்புடையவர். சங்கச் செயற்பாடுகளிலும் நிருவாகத்திலும் எழும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காணவேண்டிய அதற்குரிய பொறுப்பும் உரிமையும் உடையவர்.

சங்கத்தின் தலைவர், புதிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்யும்வரை பதவி வகித்தல் வேண்டும். ஆயினும் எழுத்து மூலம் ஒரு மாத முன்னறிவித்தல் கொடுத்துப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.


தலைவரின் பணிகளும் கடமைகளும்:
1. சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்துக்கும் நிருவாகசபைக் கூட்டத்துக்கும் தலைமை தாங்குதல்.

2. சங்கத்தின் காசோலைகளிற் கையெழுத்திடல்.

3. சங்கம் கையொப்பமிட வேண்டிய ஆவணங்களில் சங்சகத்துக்காகக் கையொப்பமிடல்.

4. சங்கத்தின் விபரங்களை அறிய உரிமையுள்ளவர்கள் அவ்விடயங்களைக் கேட்கும்போது அறிவித்தல்.

5. பொதுச் சபையினதும் நிருவாக சபையினதும் தீர்மானங்களைத் திறமையாகச் செயற்படுத்தலை ஒழங்கு செய்தல்.

6. சங்க முகாமையாளரதும் ஏனைய பணியாளர்களதும் வேலைகளை மேற்பார்வை செய்தல்.

7. சட்டம், விதி, துணைவிதி, பொதுச்சபை நிருவாக சபைத் தீர்மானங்களுக்கிணங்கவும், அவசியமேற்படின் தனது தற்றுணிவின்படியும் முகாமையாளருக்கும் ஏனைய பணியாளர்களுக்கும் வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்குதல்.

8. இவை போன்ற ஏனைய கடமைகள்.

உபதலைவர்:
தலைவர் பதவி போன்ற நிருவாக சபையின் தெரிவிலோ அல்லது பதிவாளரின் (ஆணையாளர்) நியமனத்திலோ ஒருவர் உபதலைவர் ஆகலாம். பதவி விலகலுக்குத் தலைவருக்குக் கூறப்பட்ட காரணங்களே இவருக்குமுரியனவாகும்.

தலைவர் இல்லாதபோது பொதுச் சபை, நிருவாகசபைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பதும், தலைவர் இலங்கையில் இல்லாத காரணத்தினால் அல்லது சுகயீனங்காரணமாகத் தனது செய்கடமைகளை ஆற்ற முடியாதபோது அவரின் கடமைகளை ஆற்றுவதும் இவரின் பணிகளாகும்.

செயலாளர்:
செயலாளர், ஒரு நிருவாகசபை உறுப்பினராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கலாம். செயலாளர் ஒரு நிருவாசபை உறுப்பினராக இருப்பின் நிருவாக சபையின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும். ஆனால் அவர் ஒரு கௌரவ சேவையாளராக இருப்பதால் அவரின் கடமைகளை ஒழுங்காகச் செய்வித்தலின் காலதாமதங்களும் சிரமங்களும் தலைவருக்கும் நிருவாக சபைக்கும் ஏற்படலாம். பணியாளர் ஒருவர் செயலாளராகவிருப்பதால் நிருவாகசபையின் இரகசியங்களைப் பாதுகாப்பதில் கஷ்டங்களிருப்பினும் அவரின் கடமைகளை ஒழுங்காகவும், விரைவாகச் செய்விப்பதற்கும் கடமைகள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை மேற்பார்வை செய்வதற்கும், செய்யாதுவிடின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் நிருவாக சபைக்கும், தலைவருக்கும் இலகுவாக இருக்கும்.


செயலாளரின் கடமைகள்:
1. கூட்டங்களை கூட்டுவதற்கு அதிகாரமுள்ள ஒருவர் அல்லது பலர் கோருமிடத்துப் பொதுச்சபைக் கூட்டங்களையும் நிருவாகசபைக் கூட்டங்களையும் நடத்த அழைப்பு அனுப்பவேண்டியவர்.

2. பொதுச்சபை, நிருவாகசபைக் கூட்டங்களில் சமூகமளித்துக்கூட்ட அறிக்கையினைப் பதிவு செய்தல்.

3. இக்கூட்டத் தீர்மானங்களின் பிரதிகளை அவற்றை நிறைவேற்றும் பொறுப்புள்ளவர்களிடம் ஒப்படைத்தல்.

4. உறுப்புரிமை பெற்ற திகதி, உறுப்புரிமை இழந்த திகதி வேறும் வேண்டிய தகவல்களைக் காட்டக்கூடிய முறையில் உறுப்பினர் இடாப்பு வைத்திருத்தல்.

5. நிருவாகசபை உறுப்பினர் பெயர், எவ்வகை உறுப்பினர் (தெரிவு, நியமனம்) பதவியேற்ற திகதி, பதவி முடிவுற்ற திகதி போன்ற விபரங்களைக் கொண்ட நிருவாகசபை உறுப்பினர் இடாப்பு வைத்திருத்தல்.

6. வருடாந்தப் பொதுக்கூட்டம் முடிவுற்ற 14 நாட்களும் பதிவாளருக்கு (ஆணையாளர்) 5ல் கூறப்பட்ட விபரங்களடங்கிய நிருவாகசபை உறுப்பினர் பட்டியலொன்றை அனுப்புதல்.

7. நிருவாக சபையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிப் பதிவாளருக்கு (ஆணையாளர்) அறிவித்தல்.

8. துணைவிதி, நடைமுறைவிதி, நிருவாகசபைத் தீர்மானங்கள் சுமத்தும் ஏனைய கடமைகளைச் செய்தல்.

முகாமையாளர்:
பகுதி முகாமையாளர்களையும், கிளை முகாமையாளர்களையும் கொண்டியங்கும் பேரளவு சங்கங்களில் பொதுமுகாமையாளர் பதவியிலிருக்கும் சிற்றளவு சங்கங்களில் முகாமையாளர் பதவியே இருக்கும். இவரே சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, நிருவாக சபைக்குப் பொறுப்பானவர். சட்டம், விதி, துணைவிதிகளுக்கும் நிருவாகசபை விதிக்கும் கொள்கைக்கும் இணங்கச் சங்கத்தின் நோக்கங்களை எய்தற் பொருட்டுத் தளரா ஊக்கத்துடன் கடமையாற்ற வேண்டியவா. தொழில் முயற்சிகள் திறம்பட இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டியவா. சங்கச் சொத்துக்களின் பாதுகாப்புக்கு வேண்டிய ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டியவா. சங்கக் காசோலைக்கும் சங்கத்தின் ஏனைய ஆவணங்களுக்கும் சங்கத்துக்காகத் தலைவருடன் சேர்ந்து ஒப்பமிட வேண்டிய தத்துவம் கொண்டவர். துணை விதிகள், நடைமுறை விதிகள், பதிவாளரின் (ஆணையாளரின்) பணிப்புரைகள், நிருவாகசபைத் தீர்மானங்கள் என்பன விதிக்கும் கடமைகளை ஆற்ற வேண்டிய பொறுப்புடையவர்.

உறுப்பினர் பார்வைக்காக வைத்திருக்க வேண்டியவை.
1. உறுப்பினர் பதிவேடு.

2. கூட்டுறவுச் சட்டம்

3. கூட்டுறவு விதிகள்

4. துணை விதிகள்

என்பவற்றை எவ்வுறுப்பினரும் கட்டணமின்றி நியாயமான நேரங்களிற் பதிவு செய்யப்பட்ட விலாசத்தில் பார்வையிடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தல் வேண்டும்.

7. கூட்டுறவுத் தொழிலமைப்பு
தொழிலுக்குத் தகுந்த திட்டங்களையமைத்துப் பல்வேறிடங்களிலுள்ள உற்பத்திக் காரணிகளாகிய நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை ஒன்றுதிரட்டி அவற்றைத் தொழிலிலீடுபடுத்தி அதன் விளைவால் ஏற்படக் கூடிய எதிர்பாரா நட்டவச்சப் பொறுப்பை ஏற்பதே அமைப்பாகும். ஆதிகாலப் பொலுளியலறிஞர்கள் நிலம், உழைப்பு, மூலதனம் ஆகிய மூன்றையுமே உற்பத்திக் காரணிக்குள் அடக்கினர். உழைப்பு என்ற காரணிகளுக்குள்ளேயே அமைப்பையும் சேர்த்துக் கொண்டனர். பொருளியற்றையின் வளர்ச்சி காரணமாக உழைப்பிலிருந்து அமைப்பு வேறுபடுத்தப்பட்டது. அமைப்பின் பணிகளை நான்காக வகுக்கலாம். அவையாவன:

1. திட்டமிடல்.

2. காரணிகளை ஒன்றிணைத்தல்.

3. திட்டத்தைச் செயற்படுத்தல்.

4. விளைவுகளை ஏற்றல்.

திட்டமிடல் என்பது பல்வேறு தொழில் முயற்சிகளுள் ஒன்றைத் தெரிவு செய்து, அதற்குரிய காரணிகளின் சேர்க்கைத் தன்மையின் அளவுகளைக் கணித்து, உற்பத்தி முறைகளையும், உற்பத்தியின் அளவுகளையும் நிர்ணயித்து, விநியோக முறைகளையும் வகுத்துச் செயலாக்கத்திற்கு உதவும்வகை வழிகாட்டுதலாகும். திட்டமிடும்போது அமைப்பின் இயலுந்திறன், சூழலின் பாதிப்பு, எதிர்பாரா விளைவுகள் என்பவற்றுக்கு முக்கியத்துவமளித்தாற்றான் நிறைவுறக் கூடியதாக அமையும். எனவே திட்டமிடலின் முக்கிய அம்சங்கள் பின்வருவனவாகும்.

1. எதை உற்பத்தி செய்தல் (தெரிவு)

2. எப்படி உற்பத்தி செய்தல் (முறைகள்)

3. எவ்வளவு உற்பத்தி செய்தல்.

4. விநியோக வழிகள்.

பொருளியலமைப்புக்களைச் சுயேச்சைப் (முதலாண்மை) பொருளாதார அமைப்பு, கலப்புப் பொருளாதார அமைப்பு, திட்டமிட்ட பொதுவுடமைப்) பொருளாதார அமைப்பு என மூன்று வகையாகப் பிரிவு செய்யலாம். கூட்டுறவு அமைப்பு எனத் தனித்துப் பொருளியலறிஞர்கள் வகைப்படுத்தாதுவிடினும், கூட்டுறவு அமைப்பின் இயல்புகள் விளைவுகள் ஆகியவற்றையும், அதன் தனித்தன்மையையும் உணராமல் இல்லை. இன்று மூவகைப் பொருளியலமைப்புக்குள்ளும் கூட்டுறவுத் தொழிலமைப்புக்கள் உருவாகித் தனித்தன்மையுடன் இயங்குகின்றன. ஒரு நாட்டின் பொருளியலமைப்பு முழுவதையும் தன்னுள்ளடக்கும் பூரண நிலையைக் கூட்டுறவு அமைப்பு இன்றுவரை அடையவில்லை. ஆயினும் எந்தப்பொருளியமைப்பைச் சேர்ந்த நாடும் கூட்டுறவு அமைப்பின் சிறப்புத் தன்மைகளையும் நலன்களையும் ஏற்றுக்கொள்கின்றது.

முதலாண்மைப் பொருளியமைப்பு இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்டது. இதுவொரு விலைப்பொறிமுறையமைப்புப் பொருளாதாரம். உற்பத்தியாளரின் நிரம்பல் அளவைக் கொண்டும் நுகர்வோனின் கேள்வி அளவைக் கொண்டும் சந்தைவிலை தீர்மானிக்கப்படுகின்றது. உற்பத்திச் சக்திக்கும் வாங்குஞ் சக்திக்குமிடையேயுள்ள போட்டித் தன்மையினால் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. விற்போனுக்கும் வாங்குவோனுக்கும் சந்தையில் விலைகளை நிர்ணயிக்கச் சுதந்திரமான உரிமையுண்டு. இவ்வித பூரண போட்டி நிலையில் விற்போனுக்கும் கொள்வோனுக்கும் அதிக சாதகமோ பாதகமோ இல்லாத நியாயமான (சமநிலை விலை) சந்தைவிலை நிலவும், இவ்விலையிலேயே பண்டங்கள் பரிமாற்றல் செய்யப்படும் இப்பொருளியல் கோட்பாடு தத்துவரீதியில் நியாயமாகக் காணப்படினும் செயல் முறையில் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது.

பல்வேறு உற்பத்தி விநியோக நிறுவனங்களிடையே போட்டித் தன்மை கொண்ட அமைப்பு இது. பலங்கொண்ட தொழில் நிறுவனங்கள் பலங் குறைந்த நிறுவனங்களை விரைவில் அழித்துவிடுந் தன்மை கொண்டவை. நுகர்வோரின் விருப்பு வெறுப்புக்களை மாற்றியமைக்கத் தொழில் நிறுவனங்கள் பல்வேறு வியாபார தந்திரங்களைக் காலத்துக்கு காலமும் கையாளுகின்றன. நுகர்வோரின் பலவீனங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலா அளவினை அதிகரிப்பதற்குத் தொழில் நிறுவனங்களுக்குச் சந்தர்ப்பம் அளிப்பது@ நுகர்வோர் நலன்கள், சமூக நலன்கள், தேசிய நலன்களிலும் பார்க்க இலாப நோக்கையே முக்கியமாகக் கொள்வது. உற்பத்தித் தெரிவு, உற்பத்தி முறை, உற்பத்தி அளவு, விலைக்கொள்கை, விநியோக வழிகள் இவற்றைத் தீர்மானிக்கும் போதும் இலாப நோக்கே முக்கிய இடம் வகிப்பது.

எதை உற்பத்தி செய்வது (உற்பத்தித் தெரிவு) என்பதிலும் இலாப நோக்கே முக்கிய இடம் வகிக்கின்றது. யு.டீ என்ற இரு பொருள்களை உற்பத்தி செய்வதற்குரிய வசதிகள் ஒரு நிறுவனத்துக்கு இருக்கும்போது அந்நிறுவனம் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். அமையாவன, மூலதனத் தேவையின் அளவு, இலாப அளவு, நட்டவச்சுப் பொறுப்பின் தன்மை என்பனவாகும். தேவையின் தன்மை, நுகர்வோன் நலன், சமூக நலன் தேசிய நலன் என்பவற்றுக்கு அதிக முக்கியத்துவமளிப்பது போலக் காட்டி இலாபத்தை அதிகரிக்க முயற்சிக்கும். யு என்ற பொருள் அத்தியாவசிய தேவைத் தன்மையும் நுகர்வோனுக்கும் சமூகத்துக்கும் தேசத்திற்கும் நலன் விளைக்குந் தன்மையும் கொண்டதாக இருந்தும், இலாபம் குறைவாகவும் மூலதனத் தேவை, நட்டவச்சப் பொறுப்பு ஆகியவை அதிகமாகவும் காணப்படின் யு பொருள் தெரிவு செய்யப்படமாட்டாது. நுகர்வோர் சமூக, தேசிய நலன்களுக்குக் கேடு விளைப்பதாயினும் இலாபத்தன்மை அதிகமாகவும், மூலதனத்தேவை நட்டவச்சுப் பொறுப்புத் தன்மை குறைவாகவும் டீ என்ற பொருளுக்கிருப்பின் அப்பொருளையே தெரிவு செய்வர்.

இதேபோன்று உற்பத்திமுறைகளைத் தீர்மானிப்பதிலும் இலாப நோக்கே முக்கியமாகக் கவனத்திற்கெடுக்கப்படும். சிற்றளவு முறை, பேரளவு முறை, உழைப்பு மூலதனம் போன்ற காரணிகளின் சேர்க்கை அளவு வீதம் போன்றவற்றை நிர்ணயஞ் செய்தல் வேண்டும். மனித சக்திக்கு முக்கியத்துவம் அளித்தல், இயந்திர உபயோகத்திற்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்களையும் உற்பத்தி முறையில் தீர்மானித்தல் வேண்டும். இவற்றைத் தீர்மானிக்கும்போது இலாபத்தை முக்கிய நோக்காகக் கொண்டே தீர்மானிப்பார்கள்.

உற்பத்தியின் அளவைத் தீர்மானிப்பதில் பல அம்சங்களைக் கருத்திற் கொள்ளவேண்டும். ஏனைய அம்சங்களிலும் பார்க்க இலாபத்திற்கே முக்கியம் அளிக்கப்படும். எந்த அளவு உற்பத்தி செய்வது உச்ச இலாபத்தைக் கொடுக்குமோ அந்த அளவில் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிடும். அந்த அளவுக்கு மேல் உற்பத்தி செய்வது நுகர்வோர், சமூக தேசிய நலன்களை அதிகரிக்குமாயினும் உற்பத்தியாளர் உற்பத்தியிலீடுபடமாட்டார்கள். உதாரணம்.

உற்பத்திப் உற்பத்திச் விற்கும்
பொருள் செலவு விலை இலாபம்
1000 45000 (1000ஓ75) 75000 30000
2000 75000 (2000ஓ75) 1,50000 75000
3000 135000 (3000ஓ50) 1,50000 45000
4000 135000 (4000ஓ45) 1,60000 25000

உதாரணத்தில் தரப்பட்ட அட்டவணையின்படி 2000 பொருள்களை உற்பத்தி செய்வதே உற்பத்தியாளனுக்கு உச்ச இலாபத்தைக் கொடுக்கும். எனவே 2000 பொருளை உற்பத்தி செய்வதோடு நிறுத்திக்கொள்வான். நுகர்வோர் சமூக தேசிய நலன்களுக்கு 4000 பொருள்களை உற்பத்தி செய்வது உகந்ததாயினும் அத் தொகையை உற்பத்தி செய்யமாட்டான். இதேபோன்று விநியோக வழிகளை நிர்ணயிப்பதிலும் இலாப நோக்கே முக்கியமாகத் தொழிற்படும்.

முதலாண்மைப் பொருளாதார அமைப்பிலுள்ள நேர்மையற்ற பொருளாதார நடவடிக்கைகளையும் தவறுகளையும் அகற்றிச் சமூக தேசிய நலன்களுடன் உறுப்பினர் நலன்களும் பேணப்படுதற்குரிய வழியே கூட்டுறவுப் பொருளாதார முறையாகும். இவ் அமைப்புக்களிடையே இருக்கின்ற முக்கிய வேறுபாடுகளுள் ஒன்று உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பங்கீடு செய்யும் முறையாகும். உற்பத்திக் காரணிகளின் பயன்பாட்டுக்கமைய நிலம், உழைப்பு மூலதனம், அமைப்பு என்ற காரணிகளுக்கிடையில் முறையே வாடகை, கூலி, வட்டி இலாபம், என்ற அடிப்படையில் சமத்துவமும் நீதியும் செறிந்த முறையில் பகிர்வு செய்யப்படின் பிரச்சினைகள் தோன்றா. முதலாண்மைப் பொருளாதார அமைப்பில் வலிமையும் செல்வாக்கும் நிறைந்த உற்பத்திக் காரணி உரிமையாளர் ஏனைய காரணிகளின் உரிய வருமானத்தைத் தமதாக்கிக்கொள்ள முயல்கின்றனர். இதனாலேயே பிரச்சினைகள் தோன்றுகின்றன.

உற்பத்திக் காரணிகள் யாவற்றினவும் உரிமை ஒன்றாக இருந்தால் செல்வப் பகிர்வுப் பிரச்சினையிற் சிக்கல்களே இரா. நீதியும் சமத்துவமும் பகிர்வில் இயல்பாகவே தோன்றும். மூலதனத்தையிட்டு நிலத்தைப் பெற்று நிருவாகப் பொறுப்பையுமேற்று உற்பத்திக்காக உழைப்பவர்கள் ஒரே ஆட்களாக இருந்தால் அங்கே முதலாளி தொழிலாளி என்ற பிரச்சினை எழ நியாயமில்லை. தொழிலாளிகளே முதலாளிகளாகவும், முதலாளிகளே தொழிலாளிகளாகவும் இருப்பர்: இலாபமோ நட்டமோ அவர்களுக்கே உரியது. உற்பத்தியில் மட்டுமன்றிச் சேவைகளிலும் இந்நிலையை உருவாக்கலாம். விநியோகம் செய்பவர்களும் நுகர்வோரும் ஒரே ஆட்களாகவும், கடன் கொடுப்போரும் கடன் பெறுவோரும் ஒரே ஆட்களாகவும், இருந்து அவர்களே அவற்றை நிருவகித்து அவ் விளைவுகளை ஏற்கும் நிலை உருவாக வேண்டும். இதுவே கூட்டுறவின் இலட்சியமாகும். ஆயினும் நடைமுறையில் உற்பத்திக் காரணிகளின் சேர்க்கைக்கு வெளியிலிருந்தும் சில காரணிகளைப் பெறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது சுரண்டப்படாமலும் சுரண்டாமலும் பயன்பாட்டிற்குரிய நீதிவான விலையை அக்காரணிகளுக்கு அளிப்பதே கூட்டுறவுத் தருமமாகும்.

முதலாண்மையின் குறைபாடுகளையும் தவறுகளையும் திருத்துவதற்காகப் போராட்டமோ பலாத்காரச் செயல்களோ மேற்கொள்ள வேண்டுமெனக் கூட்டுறவு வழிகாட்டவில்லை. முதலாளித்துவப் பிடியிலிருந்து விலகிக்கொள்ளவே வழிகாட்டுகிறது. போட்டிப்பொருளாதார அமைப்பிலிருந்து கொண்டே போட்டியைத் தவிர்க்க வழிவகுக்கின்றது. ஏழை – பணக்காரன், தொழிலாளி – முதலாளி என்ற எதிர்நிலைகளை நீக்கவும், சமத்துவம், சகோதரத்துவம், சுய உதவி, பரஸ்பர உதவி பண்புகளை வளர்க்கவும் விரும்பும் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு உதவுவதே கூட்டுறவு அமைப்பாகும்.

முதலாண்மைப் பொருளாதார அமைப்பிலுள்ள கூட்டுறவுத் தொழில்துறைகள் இரு முக்கிய பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒன்று முதலாண்மைப் பொருளாதார அமைப்பிலுள்ள குறைபாடுகளையும் தவறுகளையும் நீக்கிப் புதிய பொருளாதார அமைப்பொன்றை உருவாக்க மக்களுக்கு வழிகாட்டிச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. மக்கள் கூட்டுறவு முறையில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கவும், உருவாக்கிய நிறுவனங்களுள் சேரவும் வழிவகை செய்கின்றன. இரண்டாவது, முதலாண்மை அமைப்பிலுள்ள குறைபாடுகளும் தவறுகளும் பெருகாமல் ஓரளவுக்குக் கட்டுப்படுத்துகின்றன. கூட்டுறவு நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கேற்பத் தனியார் நிறுவனங்களும் முக்கிய சில செயற்பாடுகளில் தம்மை மாற்றியமைத்துக் கொள்வதற்குரிய நிர்பந்தங்களைச் சூழலின் தாக்கங்களின் மூலம் கூட்டுறவு ஏற்படுத்துகின்றது.

பொதுவுடமைப் பொருளாதாரச் சிந்தனைகளை வெளியிட்டவர் மாபெரும் புரட்சிச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ். உற்பத்தியில் மூலதனத்துக்கு முக்கியத்துவம் அளிக்காது முதலாளித்துவ அமைப்பில் மூலதனத்தால் ஏற்படும் கேடுகளைத் தர்க்க ரீதியில் விளக்கியவர். உற்பத்தியில் உழைப்புச் சக்திக்கு மதிப்புக் கொடுத்தவர். சுரண்டல் தன்மையை அகற்ற அரிய சிந்தனைகளை வெளியிட்டவர். முதலாளித்துவ அமைப்பை அழிப்பதே அதன் கேடுகளை அகற்றும் வழியெனக் கூறியவர். அவரது பொருளாதார சிந்தனைகளைத் திட்டங்களாகச் செயற்படுத்துவம் நாடுகளே பொதுவுடமைப் பொருளாதார அமைப்பு நாடுகளாகும்.

உற்பத்திக் காரணிகளில் தனியாருக:குள்ள ஆதிக்கச் சக்தியை ஒழித்து அவற்றைப்பொதுத்துறை ஆதிக்கமாக்கல், மனித உழைப்புச் சக்திக்கு உரிய மதிப்பளித்து உரிய கூலி வழங்கல், மனித தேசிய நலத்தேவையை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்தல், இவற்றின் அடிப்படையில் நிபுணர் குழு தந்த ஆலோசனைத் திட்டத்தைக்கொண்டு எதையெதை எவ்வளவு உற்பத்தி செய்தல் என்பவற்றைத் தீர்மானித்தல், வளங்களின் உச்சம் பயன்பாட்டிற்கு உத்தரவாதமளித்தல், முதலாளித்துவ அமைப்பிலுள்ள விலைபொறிமுறை, போட்டித் தன்மை என்பன உற்பத்தியில் சக்தி வாய்ந்தவையாக இருக்காது தடுத்தல் போன்ற தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியை நிகழச் செய்தல் முறையாகும். திறமை தேவை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கூலி பகிர்ந்தளிக்கப்படும்.

இத்திட்டத்தில், பொருளியல், அம்சங்களுக்கு அளித்த முக்கியத்துவம் அறவழி சார்ந்த குடியாட்சிப் பண்புகளுக்கும் மனிதத்துவத்திற்கும் அளிக்கப்படவில்லை. சுயமுயற்சி, விருப்பத் தேர்வு, முதலாக்க ஊக்குவிப்புப் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. செல்வப் பங்கீடு அரசின் கையிலேயே அமைந்துள்ளது போன்ற குறைகளைப் பொதுவுடமைப் பொருளாதார அமைப்பின் எதிர்பாளர்கள் கூறுவார்கள். பொதுவுடமைப் பொருளாதார அமைப்பு நாடுகளிலும் கூட்டுறவுத் தொழில் அமைப்புக்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.

சோவியத் ரஷ்யாவில் 3,70,000 கூட்டுறவு நுகர்வோர் கடைகள் உண்டு இதைவிடக் கூட்டுறவு விவசாய சங்கங்கள், கூட்டுறவுப் பண்ணைகள், கூட்டுறவு உண்டிச்சாலைகள் போன்றவை கூட்டுறவுத் தொழில் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இச்சங்கங்களின் நிருவாகப் பொறுப்பு, தீர்மானிங்களை எடுக்கும் உரிமை, போன்ற யாவும் உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபைக்கே உண்டு. அத்துடன் இலாபத்தில் ஒருபகுதி ஆதார நிதிக் கணக்கிற்கு ஒதுக்கியபின் உறுப்பினர்களுக்கு இலாபமாக ஒருபகுதி ஒதுக்கப்படுகின்றது. அதன் பின்பே ஏனைய நிதிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. சில ஆரம்பச் சங்கங்களின் தலைவர் தேர்தலுக்குத் தலைமைச் சங்கங்கள் தகுதியுள்ள சிலரைத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றன. பொதுச் சபையில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அவர்களுள் ஒருரைத் தெரிவு செய்கின்றனர். ஏனைய நிருவாக உறுப்பினரை பொதுச் சபையே தெரிவு செய்கின்றது. சீனாவிலும் ஏனைய பொதுவுடமை நாடுகளிலும் கூட்டுறவுச் சங்கங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. சீனாவில் அரசின் கட்டுப்பாடுகள் அதிகம்.

பொதுவுடமை நாடுகளில் கூட்டுறவுத் தொழில் அமைப்புக்கள் பொருளியல் நன்மைகளை அதிகம் அளித்திருப்பதில் வியப்பில்லை. கருத்துக்களை வெளியிடும் உரிமை, சங்கத் தொழிற்பாடு பற்றிய முடிவெடுக்கும் உரிமை, நிருவாகப் பொறுப்பு, விளைவுகளைப் பொறுப்பேற்குந் தன்மை, சுயேச்சையான அங்கத்துவம், இலாபத்தில் உறுப்பினர்களுக்குப் பங்களித்தல் ஆகிய குடியாட்சிப் பண்புகளையும் ஜனநாயக மரபுகளையும் பாதுகாக்கும் அமைப்புக்களாகவும், மனிதத்துவத்தையும் ஒழுக்க நெறிகளையும் தன்னகத்தே அடக்கிய அமைப்பாகவும் விளங்கும் கூட்டுறவு பொதுவுடமை நாடுகளில் அளித்து வரும்பெருங் சேவை அளப்பெரியது எனக் கூறலாம்.

பொருளியல் நடவடிக்கைகளில் அரசின் தலையிடாக் கொள்கை மறைந்து விட்டது. முதலாண்மை நாடுகளிலும் பொருளியல் நடவடிக்கைகள் பலவற்றில் அரசு தலையிட வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. அரசு பொருளியல் கொள்கைகளை வரையறுத்து நாட்டின் பொருளியல் முயற்சிகளை ஒழுங்குபடுத்துங் கொள்கையிலிருந்து மாறித் தொழில் முயற்சிகளில் நேரடியாகவே ஈடுபடுகின்ற நிறுவனமாகவும் முதலாண்மைக் கொள்கையுடைய நாடுகள் மாற்றமடைந்து விட்டன. முதலாண்மைப் பொருளாதார அமைப்பிலிருந்து பல நாடுகள் இன்று கலப்புப் பொருளாதார அமைப்பு நாடுகளாக மாற்றமடைந்துவிட்டன. கலப்புப்பொருளாதார அமைப்பு நாடுகளில் உள்ள தொழில் முயற்சிகளை உரிமைத் தன்மையைக் கொண்டு மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன:

1. அரசுத்துறை

2. தனியார்துறை

3. கூட்டுறவுத்துறை

அரசு தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்குரிய காரணங்கள்:
1. நாட்டின் பாதுகாப்பு.

2. மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய சேவைகளை அளித்தல்.

3. தனியார் துறையால் முதலீடு செய்யமுடியாத பேரளவு மூலதனம் வேண்டிய தொழில்கள்.

4. நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையானவையும் தொடர்ந்து, நட்டத்தில் இயங்கி வருவனவுமாகிய தொழில்கள்.

5. தனியார் துறையின் பேரளவு இலாபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தொழில்கள்.

6. அரசுக்கு வருமானம் தரக்கூடிய தொழில்கள்.
அரசு தொழில் முயற்சிகளை மூன்று வகையாக நிருவகிக்கலாம். அவையாவன.
1. இலாகா வழி நிருவாகம்

2. ஒப்பந்த மூல நிருவாகம்

3. கூட்டுத்தாப நிருவாகம்

வருமானத்தை நோக்கமாகக் கொண்டு ஈடுபடும் முயற்சிகளில் பெரும்பாலானவை கூட்டுத்தாபன அமைப்புக்குள்ளேயே அடங்கும்.
தனியார் துறைத் தொழில் அமைப்புக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவையாவன.
1. சொந்த (தனியாள்) முயற்சி

2. பங்குடமை முயற்சி

3. கூட்டுப்பங்குத் தொகுதிக் கம்பனி முயற்சி.

சொந்த முயற்சி, பங்குடமை முயற்சி என்பன பெரும்பாலும் சிற்றளவு அமைப்புக்களாக இருக்கும். சொந்த முயற்சித் தொழில்கள் சில கூட்டுறவுத் தொழில் முயற்சிகளுக்கெதிரற்றவையாகவும் சுரண்டல் தன்மையற்றதாகவும் இருப்பின் அவற்றை வளர்க்கவும், விருத்தியாக்கவும், அதன் உரிமையாளர்களை உறுப்பினராக ஏற்கவும் கூட்டுறவு இயக்கம் உதவி அளிக்கும். விவசாயம், மீன்பிடி, குடிசைத் தொழில்கள் மிருகப் பண்ணைகள் போன்ற தொழில்களை உதாரணத்துக்குக் கூறலாம். பங்குடமை முயற்சிகளும் மேற்கூறப்பட்ட தொழில் முயற்சிகளில் ஈடுபடுமாயின் அவற்றில் சுரண்டல் தன்மையும்இல்லையாயின் அவை கூட்டுறவு அமைப்புக்கு எதரானவையல்ல. கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பனிகள் இவற்றில் இருந்து வேறுபட்டவை. அரசின் முயற்சியிலுள்ள கூட்டுத்தாபன அமைப்பு, தனியார் துறையிலுள்ள கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பனி அமைப்பு, கூட்டுறவுத்துறை அமைப்பு, ஆகியவற்றுக்கிடையே சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுகின்றன. அவற்றின் ஒற்றுமைத் தன்மைகள்; அவை ஒன்று என்ற அபிப்பிராயத்தைச் சாதாரண மக்களிடம் ஏற்படுத்தக் கூடும். எனவே அவற்றின் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பகுத்தறிதல் முக்கியமானது.

கூட்டுறவு - கூட்டுத்தாபனம் - கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பனி என்பனவற்றுக்கிடையேயுள்ள ஒற்றுமைகள்:
1. மூன்றும் சட்டத்தினால் உருவாக்கப்படுபவை.

2. மூன்றும் சட்ட ஆளுமை உடைய நிறுவனமாக அமைதல்.

3. மூன்றும் இடையறா வழியுரிமையுடன் (நீடித்த வாழ்வுடன்) இயங்குதல்.

4. மூன்றும் பணிப்பாளர் (இயக்குனர்) குழுவால் இயக்கப்படல்.

5. மூன்றினது இயக்குனர்களும் தமக்கு அதிகாரமளித்தவர்களுக்காக (மந்திரி – பொதுச்சபை) நிறுவனத்தின் கருமங்களைச் செய்தல், அவர்களுக்குப் பொறுப்பாக இருத்தல்.

6. மூன்றினர் இயக்குனர்களும் தமக்கு அதிகாரமளித்தவர்களின் தீர்மானத்துக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அமைவாகக் கருமங்களை ஆற்றல்.

7. மூன்றினது இயக்குனர் குழுவும் தெரிவு செய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட தலைவருக்கு நிறுவனத்தின் நாளாந்தக் கடமைகளை நடாத்தவும் மேற்பார்வை செய்யவும் அதிகாரமளித்தல்.

8. மூன்றினது இயக்குனர் குழுக்களும் நிரந்தரத் தன்மையுடையவையல்ல. காலத்துக்குக் காலமும் மாற்றத்துக்குட்படக்கூடியவை.

9. மூன்றினது இயக்குனர் குழுவிலும் இடம்பெற முடியாதவர்களின் தகுதியீனங்கள் வரையறை செய்யப்ட்டுள்ளன.

10. மூன்றினது இயக்குனர் குழுவும் பொதுவாகப் பணியாளர்களை நியமித்தல். மேற்பார்வை செய்தல், தண்டனை அளித்தல், விலக்கல் ஆகியவற்றைச் செய்யும் அதிகாரங்களைக் கொண்டிருத்தல்.

11. மூன்று நிறுவனங்களும் குறிப்பிட்ட காலமுடிவில் கணக்காய்வு செய்யப்பட வேண்டுமெனச் சட்டத்தாற் கட்டாயப்படுத்தப்பட்டிருத்தல்.

12. மூன்றினது கணக்குகளையும் கணக்காய்வு செய்பவர்களுக்குரிய தகுதிகளைச் சட்டம் வரையறுத்துள்ளது.

13 மூன்றினது கணக்காய்வு அறிக்கைகளும் இயக்குனர் குழுவுக்கப்பால் வெளியிடப்பட்டு ஆராயப்படவேண்டியவை.

14. மூன்று அமைப்புக்களும் சட்டம் விதித்த கணக்கேடுகளை வைத்திருத்தல் வேண்டும்.

15. மூன்று அமைப்புக்களிலும் பொதுவாகத் தனிமனிதனொருவனின் (உறுப்பினர்) நட்டச்சப் பொறுப்புக் குறைவானது வரையறுக்கப்பட்டது.

16. மூன்று அமைப்புக்களும் பேரளவு தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உடையன.

17. மூன்றினது இயக்குனர் குழுவும், சட்டமும், தமக்கு அதிகாரமளித்தவர்களும் விதித்த நிபந்தனைகளுக்கமைவாகவே நிதியைத் திரட்டவும், பிரயோகிக்கவும் முடியும்.

18. மூன்றினது இயக்குனர் குழுவும் கணக்காய்வு அறிக்கையுடன் தமது நிருவாக ஆண்டறிக்கையைத் தமக்கு அதிகாரமளித்தவர்களுக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

19. மூன்று அமைப்பிலுமுள்ள நிறுவனங்கள் அவற்றுக்குரிய சட்டங்களிற் குறிப்பிட்ட நிகழ்வுகளின்போது கூறப்பட்ட முறையில் கலைத்து, கலைப்பின் போது கையிருப்பிலுள்ள பணத்தைச் சட்டத்தில் கூறப்பட்ட ஒழுங்குமுறையை அனுசரித்துப் பொறுப்புக்களைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டும்.

கூட்டுறவு - கூட்டுத்தாபனம் என்பவற்றுக்கிடையேயுள்ள ஒற்றுமைகள்:
1. இரு அமைப்புக்களும் இலாப நோக்கின்றி இயங்குபவை.

2. இரு அமைப்புக்களும் சேவைத் தன்மைக்கும், மக்கள், சமூகம், தேசம் ஆகியவற்றின் நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பவை.

3. இரு அமைப்புக்களும் சுரண்டல் தன்மைக்கு எதிரானவை.

4. இரு அமைப்புக்களும் தனியார் துறையின் பேரளவு இலாபத் தன்மையை மட்டுப்படுத்தும் நோக்குடையன.

5. இரு அமைப்புக்களுக்கும் அரசின் உதவி, சலுகை என்பன கிடைக்கின்றன.

6. இரு அமைப்புக்களிலும் ஏற்படும் பிரச்சினைகள், பிணக்குகள் ஆகியவற்றுக்கு இறுதித் தீர்வு வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மந்திரிக்கு உண்டு.

7. இரு அமைப்புக்களுக்கும் சட்டத்தின் மூலம் சில சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

8. இரு அமைப்புக்களும் பதிவு செய்தவுடன் தொழிலை ஆரம்பிக்கலாம்.

9. இரு அமைப்புக்களும் திரட்டும் வருமானத்தில் பெரும்பகுதி சேவைத் தன்மையை அதிகரிக்கவும், பொதுச் சேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

10. இரு அமைப்புக்களும் முதற் பெறக்கூடிய நலன்களை வரையறுத்துள்ளன. முதலுக்கு அதிக அளவ முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

11. இரு அமைப்புக்களதும் உருவாக்கத்திற்குச் சட்ட முத்திரைச் செலவுகளில்லை.

கூட்டுறவு - கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பனி என்பவற்றுக்கிடையேயுள்ள ஒற்றுமைகள்:
1. இரு அமைப்புக்களும் பங்குகளைக் கொள்முதல் செய்வதன் மூலமே உரிமைத் தன்மையை அடையும் இயல்புடையன.

2. சட்டம் விதித்த கால எல்லைக்குள் ஆண்டுப் பொதுக்கூட்டத்தைக் கூட்ட வேண்டிய கடப்பாடு இயக்குனர் குழுவுக்கு உண்டு.

3. பொதுச்சபையால் (பங்குதாரர்) ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் தெரிவு செய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட இயக்குனர் குழுவிடம் நிருவாகப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகின்றது.

4. பொதுச்சபையால் தெரிவு செய்யப்பட்ட இயக்குனர் குழுவை அல்லது குறிப்பிட்ட இயக்குனரை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் நீக்கப் பொதுச் சபைக்கு உரிமையுண்டு.

5. பொதுச் சபைக்கே கணக்காய்வு அறிக்கை, வருடாந்த நிருவாக அறிக்கை என்பவற்றைப் பரிசீலனை செய்து அங்கீகரிக்கும் உரிமையுண்டு.

6. இலாபத்தைப் பங்கீடு செய்யும் உரிமை பொதுச்சபைக்கே உண்டு.

7. கூட்டத்தைக் கூட்டும் முறை, கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் கூட்டத்தைக் கூட்டுவதற்குள்ள உறுப்பினரின் இழிவு (குறைவெல்லை)த் தொகை என்பன துணைவிதி அல்லது அகவிதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

8. தீர்மானங்கள் யாவும் வாக்கெடுப்பு மூலமே நிறைவேற்றப்படும்.

9. பொதுச்சபைக்கெ விசேடமாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர ஏனைய விடயங்களில் எல்லாம் இயக்குனர் குழுவுக்கு அதிகாரம் உண்டு.

10. துணைவிதி – அகவிதி என்பவற்றில் திருத்தம் செய்வதற்கு சட்டமூல ஒழுங்குகள் உண்டு.

11. மூலதனத்தில் இருந்தோ மூலதன ஒதுக்கங்களிலிருந்தோ இலாபப் பகிர்வு செய்ய முடியாது.

வேற்றுமைகள்
கூட்டுறவுச் சங்கம் கூட்டுத்தாபனம் கூட்டுப் பங்குத்
தொகுதிக் கம்பனி
1. அங்கத்தவர்களின் நலன் அரசின் திட்டங்களை நடை பங்குதாரர்களுக்கு இலாபத்தை
களைப் பேணும் நோக்கம் முறைப் படுத்தும் நோக்கம். ஈட்டும் நோக்கம்.

2.பொதுநலன், சமுதாய நலன் சமுதாய பொது நலன்களையே இலாப நோக்கை மையமாகக்
என்பவற்றையும், கருத்திற் மையமாகக் கொண்டு செயலாற்ற கொண்டு சமுதாய பொது
கொண்டு தமது நடவடிக்கைகளை வேண்டியன. நலன்களுக்கு முக்கத்துவம்
மேற்கொள்கின்றன. அளிக்காமை.

3. கூட்டுறச்சட்டத்தால் உருவாக்கப் கூட்டுத்தாபனச் சட்டங்களுள கம்பனிச் சட்டத்தால் உருவாக்
பட்டவை. ஒன்றினால் உருவாக்கப்பட்டவை. கப்பட்டவை.

4. தங்கள் பொருளாதாரத் தேவை அரசே பெரும்பாலும் உரிமை முதலீட்டின் மூலம் வருமானந்
களை நிறைவேற்றுவதில் கஷ்டப் யாளராக இருக்கிறது. மிகச் திரட்டும் விருப்புள்ள செல்வந்
படும் வறியவர்களும் பலவீனமான சில கூட்டுத்தாபனங்களில்; தர்களே பெரும்பாலும் பங்கு
வர்களும் உறுப்பினர்களால் பெரும் மட்டும் சிலருக்குப் பங்குகள் தாரராக உள்ளனர்.
பாலும் சேருகின்றனர். வழங்கப்பட்டுள்ளது.

5. பதிவு செய்தவுடன் தொழிலை கூட்டிணைத்தற் கட்டளை வெளி பதிவு செய்து உருவாக்கற்
ஆரம்பிக்கலாம். யிடப்பட்டதும் தொழிலை பத்திரம் பெற்றாலும் வியாபாரப்
ஆரம்பிக்கலாம். பத்திரம் பெறமுன் தொழிலை
ஆரம்பிக்க முடியாது.

6. பங்கு மூலதனத்தின் மேலெல்லை மூலதனத்தின் மேல் எல்லை அமைப்பு புறவிதி மூலமம்
வரையறுக்கப்பட வில்லை. அரசால் வரையறுக்கப்படு பதிவாளரால் பதிவுசெய்து
-கின்றது. மூலதனத்தின் மேல் எல்லை
வரையறுக்கப்படுகிறது.

7. பங்குகள் சமவிலையிலே பெரும்பாலான கூட்டுத் வட்டத்துடனும் பங்குகள் வழங்
கொடுக்கப்படுகின்றன மீட்கப் தாபனங்கள் பங்குகளைக் கப்படுகின்றன. மீட்கப்படுகின்றன.
படுகின்றன. கொடுப்பதில்லை.

8. பங்குகளை விற்பனை செய்வதற்கு பங்குகள் வழங்காதபடியால் பங்கு விற்பனைக்கு ஒப்பறுதி
ஒப்பறுதி செய்யும் முறையி;ல்லை. இதற்கு அவசியமில்லை. செய்யும் ஏற்பாடுகள் உண்டு.

9. பங்கு முதல் சந்தைக்கும் கூட்டுறவுச் பங்குமுதல்கள் இருப்பின் பங்குமுதல் சந்தையில்
சங்கப் பங்குகளுக்கும் எவ்வித பங்கு முதல் சந்தையுடன் இவற்றின் பங்குகள் பெரும்பாலும்
தொடர்புமில்லை. தொடர்பு ஏற்படும். விற்பனைக்கும் கொள்முதலுக்கும்
வந்து கொண்டிருக்கும்.

10. உறுப்புரிமையை அடையும் முதலீட்டின் பாதுகாப்பும் வருமானத்தை ஈட்டும் நோக்கு
நோக்கத்திற்காகவே பங்குகள் தன்மையையும் இலாபப் -டனேயே பங்குகள் கொள்முதல்
உறுப்பினரால் கொள்முதல் செய்யப் பங்கையும் கருத்திற் செய்யப்படுகின்றன.
படுகின்றன. கொண்டு பங்குகள்
கொள்முதல் செய்யப்படு
கின்றன.

11. பங்கு முதலின் நயங்கள் வரை பங்கு முதலின் நயங்கள் பங்கு முதலின் நயங்கள்
யறுக்கப்பட்டவை. அரசின் கொள்கைக்கேற்பக் வரையறுக்கப்படாதவை.
காலத்துக் காலம் தீர்மானிக்கப்
படவேண்டியது.

12. இலாபப்பங்கீடு சட்டம், விதி, இலாபப்பங்கீடு அரசின் பங்குதாரர்களின் ஆண்டுப்
துணைவிதிகளின் நிபந்தனைக்கமை கொள்கைக்கும் மந்திரியின் கட்ட பொதுக் கூட்டத்திற்கே
வாகப் பொதுச் சபையால் ஒதுக்கீடு ளைக்கும் இணங்க இயக்குனர் இலாபப்பங்கீடு பற்றிய
செய்யப்பட வேண்டியது. குழுவால் செய்யப்படவேண்டியது. முழு அதிகாரமுண்டு.

13. தடையற்ற திறந்த அங்கத்துவக் உறுப்பினர் என்ற தன்மையே பங்குகளால் உறுப்பினர்
கொள்கையும் உறுப்பினர் செரும்பாலும் இல்லாத அமைப்பு. தொகைவரையறுக்கப்
எண்ணிக்கை வரையறுக்கப் பட்டது. திறந்த உறுப்
படாமையும் புரிமைக்கு இடமில்லாதது.

14. கூட்டுறவு மனிதர்களது இது அரசின் அமைப்பு. பங்கு முதலின் சேர்க்கை.
சேர்க்கை.

15. ஒரு உறுப்பினருக்கு எத்தனை உறுப்பினருக்கு வாக்குரிமையைப் பங்குகளுக்கே வாக்கு.
பங்குகள் இருந்தாலும் ஒரு பயன்படுத்துஞ் சந்தர்ப்பங்கள் ஒரு உறுப்பினருக்கு
வாக்குரிமையேயுண்டு. குறைவு@ இலையென்றே கூறலாம். எத்தனை பங்குகள்
உண்டோ அத்தகை
வாக்குகள் அளிக்கப்படும்;.

16. சேவையை அளிக்கும் பொறுப்புடை சேவையை அளிப்போரும் பெறு சேவையைப் பெறுவோரும்
யோரும் சேவையைப் பெறுவோரும் வோறும் வேறாக இருத்தல். அளிப்போரும் வேறாக
ஒருவராக இருத்தல். இருத்தல்.

17. உறுப்பினர்களிடம் இருந்து பெற்ற அரசுக்கே மேலதிகங்கள் உறுப்பினர்களின் கொடுக்கல்
மேலதிகத்தை (இலாபம்) உரிமையாகி நாட்டின் வாங்கல்களுக்கு முக்கியத்
அவர்களுக்கே அவர்களின் கொடுக்கல் பொது நலனுக்குப் துவமளிக்காது அவர்களின்
வாங்கல்களின் தன்மைக்கு ஏற்ப பங்குகளுக்கே மேலதிகத்தைப்
சமத்துவமாகப் பகிர்ந்தளிக்கும் ஒழுங்கு முக்கியத்துவம் அளித்தல்.
இருத்தல்.

18. உறுப்பினரல்லாதவரின் மேலதிகங்களை உறுப்பினரல்லாதார் என்ற உறுப்பினரல்லாதவரின்
உறுப்பினர் தமதாக்கிக் கொள்ளாது பாகுபாட்டுக்கே இடமில்லாது கொடுக்கல் வாங்கல்களி
வேறாக வைத்திருந்து அதற்குரிய இலாபத்தை ஒன்றாகவே -னால் ஏற்படும் மேலதி
ஏற்பாடுகளைச் செய்தல். லைத்திருந்து பயன்படுத்தல். –கத்தையும் பங்குதாரர்
தமதாக்கிக் கொள்ளல்.

19. உறுப்பினர்கள் கூட்டங்களுக்கு நேரில் பொதுச்சபைக் கூட்டங்கள் பதிலாள் வைப்பு, முறையில்
சென்றே வாக்களிக்க வேண்டும். பெரும்பாலும் நடைபெறாமை வாக்களிக்கலாம். ஒருவனுக்கு
துணைவிதிகளில் விசேடமாகக் குறிப் -யால் இப்பிரச்சினைக்கு எத்தனை பங்குகள் இருக்கின்
பிட்டிருப்பின் மட்டும் பதிலாள் வைப்பு இடமில்லை. றதோ அப்பங்குத் தொகைக்குள்
முறை பயன்படுத்தப்படலாம். எத்தனை பதிலாட்களையும்
நியமக்கலாம்.

20. சங்கத்தின் தொழில் செய்யும் இடம் தொழிற்பரப்புவரையறுக் தொழிற்பரப்புவரையறுக்கப்
வரையறுக்கப்படவேண்டும் -கப்படவேண்டியதில்லை. படவேண்டியதில்லை.
(தொழிற்பரப்பும்)

21. பதிவு செய்வதற்குக் குறைந்தது 10 உறுப்பினர் எவரும் ஏழு உறுப்பினர்கள் பதிவு
உறுப்பினர்கள் கையொப்பமிடல் கையொப்பமிட வேண்டிய விண்ணப்பத்தில் கையொப்ப
வேண்டும். தில்லை. மிடல் வேண்டும்.

22. பொதுச் சபையின் தீர்மானத்துக்கு உறுப்பினரின் பங்குகளைக் உறுப்பினரைவிலக்குதற்கு
இணங்க ஒரு உறுப்பினரை கட்டாயமாகக் கொள்முதல் உரிமையில்லை.
விலக்க கூட்டுறவுச் சங்க செய்ய உரிமையுண்டு.
நிருவாகத்துக்கு உரிமையுண்டு.

23. உறுப்பினர் ஒருவர் காரியதரிசிக்கு உறுப்பினர்கள் தமது பங்கு உறுப்பினர்கள் தமது
எழுத்து மூலம் ஒரு மாத அறிவித்தல் முதல்களை மாற்றஞ் செய்தே பங்கு முதலை மாற்றஞ்
கொடுத்து விலகலாம். விலக முடியும். செய்தே விலக முடியும்.

24. சங்கத்துக்கு எதிராகச் சங்கம் உறுப்பினர்களைத் தனித்துக் உறுப்பினர்களைக்
மேற்கொண்டிருக்குந்தொழில் கட்டுப்படுத்தாது பொதுவாக கட்டுப்படுத்த முடியாது.
முயற்சிகளை உறுப்பினர்கள் செய்யக் எல்லோரையும் கட்டுப்படுத்தலாம். இயக்குனராவதற்கு இது
கூடாது எனக் கட்டுப் படுத்தலாம். தடையாக இருக்கலாம்.


8. கூட்டுறவுச் சங்கங்களின் வகைகள்

நுகர்ச்சிச் சேவைகளை அளிப்பதற்காகப் பண்டகசாலைச் சங்கங்களாக ஆரம்பித்த கூட்டுறவு இன்று மக்களின் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் நிலைக்கு விரிவடைந்துள்ளது. காப்புறுதி, வைத்தியத் தொழில், சினிமாத் தொழில், ஏற்றுமதி இறக்குமதித் தொழில், ஆலைத்தொழில் போன்ற பல்வேறு தொழில் முயற்சிகளில் கூட்டுறவு முறை புகுந்து விட்டதை இன்று நாம் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறு பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்களை அறிவதற்குச் சுலபமான வழி சில அடிப்படைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு பிரித்தலாகும். அவ்வாறு பிரிக்கும்போது அப்பிரிவினுள் அடங்கும் சங்கங்களிடையே பல பொதுத் தன்மைகள் காணப்படும். சங்கங்களை வகைப்பிரிவு செய்யும் ஒவ்வொருவரும் தமது தேவைக்கும் நோக்கத்துக்கும் ஏற்ப வகைப்பிரிவு செய்வர். பல்வேறு வகையில் சங்கங்களை வகைப்பிரிவு செய்யலாம். அவற்றுட் சில:

1. அமைப்பு ரீதியான வகைப் பிரிவு:
1. முதனிலைச் சங்கங்கள்.

2. இரண்டாம் நிலைச் சங்கங்கள் (சமாசங்கள்).

3. மூன்றாம் நிலைச் சங்கங்கள் (தலைமைச் சங்கங்கள்).

4. தேசிய நிறுவனம்.

5. சர்வதேச நிறுவனங்கள்.


2. சட்ட ரீதியான வகைப்பிரிவு:
1. தனியாட்களின் பொருளாதார, சமூக அல்லது கலாச்சார அக்கறைகளைக் கூட்டுறவுக் கொள்கைகளுக்கிணங்க மேம்படுத்தலைக் குறிக்கோளாகக் கொண்ட சங்கங்கள்.

2. மேற்கூறப்பட்ட சங்கமொன்றின் தொழிற்பாட்டு முறைகளுக்கு வசதியளிக்கும் நோக்குடன் தாபிக்கப்பட்ட சங்கங்கள்.

3. கூட்டுறவுக் கல்விப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், சங்கங்களுக்கு வேண்டிய ஆலோசனைச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்தல், கூட்டுறவை மேம்படுத்தலுக்குத் தேவையான வேறு சேவைகளைச் செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதும், கூட்டுறவுச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டதுமான சங்கம்.

4. கூட்டுறவுச் சங்கங்களை உறுப்பினராகக் கொண்டதும், அச்சங்கங்களின் தொழில் முயற்சிகளைத் திட்டமிட்டு ஒரு முகப்படுத்தி வசதியளிக்கும் நோக்குடன் தாபிக்கப்பட்டதுமான சங்கங்கள்.


3. பொறுப்பின் தன்மை ரீதியான வகைப்பிரீவு:
1. வரையறையற்ற பொறுப்புள்ள சங்கங்கள்.

2. வரையறுத்த பொறுப்புடன் கூடிய சங்கங்கள்.
(அ) பங்குகளால் வரையறுக்கப்பட்ட சங்கங்கள்.
(ஆ) பங்குகளின் பன்மடங்கை வரையறுத்த சங்கங்கள்.
(இ) உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட சங்கங்கள்.

4. உறுப்புரிமைத் தன்மை ரீதியான வகைப்பிரிவு:
1. தனியாட்களை உறுப்பினராகக் கொண்ட சங்கங்கள்.

2. சங்கங்களை உறுப்பினராகக் கொண்ட சங்கங்கள்.

3. தனியாட்களையும் சங்கங்களையும் உறுப்பினராகக் கொண்ட சங்கங்கள்.


5. நோக்கத்தின் எண்ணிக்கையைக் கொண்ட வகைப்பிரிவு:
1. ஒரு நோக்கச் சங்கங்கள்.

2. பலநோக்கச் சங்கங்கள்.

6. வரலாற்று ரீதியான வகைப்பிரிவு:
1. கடனுதவு சங்கங்களின் காலம்.

2. நுகர்வோர் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் காலமும்.

3. விளைபொருள் உற்பத்தி விற்பசைன் சங்கங்களின் காலமும்.

4. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் காலம்.

5. மறுசீரமைப்புக் காலம்.

7. தொழிற் பிரதேச ரீதியான வகைப்பிரிவு:
1. கிராமப்புறச் சங்கங்கள்.

2. நகர்ப்புறச் சங்கங்கள் அல்லது
1. உள்@ர்ச் சங்கங்கள்.

2. மாவட்டச் சங்கங்கள்.

3. தேசிய சங்கங்கள்.

4. சர்வதேசச் சங்கங்கள்.


8 பணி ரீதியான வகைப்பிரிவு:
1. கடனுதவல்.

2. நுகர்ச்சிப் பொருள் விநியோகம்.

3. சந்தைப்படுத்தல்.

4. மூலப்பொருள் விநியோகம்.

5. தொழில் வசதி அளித்தல்.

6. ஏனைய சேவைகளை வழங்குதல்.
(அ) சுகாதாரம் (ஆ) போக்குவரத்து (இ) வீடுகட்டல்
(ஈ) காப்புறுதி (உ) ஆலோசனை போன்றவை.


9. தொழில் ரீதியான வகைப்பிரிவு:
1. விநியோகத் தொழில்.

2. சந்தைப்படுத்தும் தொழில்.

3. கடன் வழங்குந் தொழில் (வங்கித் தொழில்).

4. சிறுகைத்தொழில் உற்பத்தி.

5. ஆலைத்தொழில் உற்பத்தி.

6. பண்ணைத்தொழில்@ (அ) விவசாயம் (ஆ) மிருக வளர்ப்பு.

7. சேவைத்தொழில்.

8. ஆலோசனைச் சேவைகள் வழங்குந்தாபனம்.

9. ஏற்றுமதி இறக்குமதித் தொழில்.

இன்னும் தேவைக்கேற்ப வகைப்பிரிவு செய்யலாம். சில தொழில் முயற்சிகளில் கூட்டுறவுச் சங்கங்கள் ஈடுபட இலங்கையில் இப்போதுதான் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. காப்புறுதித் தொழில் புரியும் சங்கங்;கள் இன்றுவரை இலங்கையில் ஆரம்பிக்கப்படவில்லை. காப்புறுதிச் சங்கம் ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா தேசியப் பேரவை முயற்சி எடுக்கின்றது. காப்புறுதி முகவராகவும் இது கடமை புரிகின்றது. ஏற்றுமதி இறக்குமதித் தொழிலுக்கெனத் தனிச்சங்கங்கள் இன்றுவரை அமைக்கப்படவில்லை. சில சங்கங்கள் தமது ஏனைய தொழில் முயற்சிகளோடு மிகச் சிறு அளவில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.


முதனிலைச் சங்கங்கள்:
இது ஆரம்பநிலைச் சங்கம், தொடக்கநிலைச் சங்கம், முதலாம் படிச் சங்கம் எனப்பல பெயரால் அழைக்கப்படும். உறுப்பினரின் பொருளாதார சமூக அல்லது கலாச்சாரத் தொடர்புகளை மேம்படுத்தலைக் குறிக்கோளாகக் கொண்டவை. ஏனைய வகைச் சங்கங்கள் (இரண்டாம் படி, மூன்றாம் படி, தேசிய சங்கம்) அமைக்கப்படுவதற்கு மூலாதாரமானவை. கூட்டுறவு இயக்கத் தொடக்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை. இவற்றின் வளர்ச்சியும் விருத்தியுமே ஏனைய வகைச் சங்கங்கள் உருவாதலுக்குக் காரணமாக அமைந்தன. முதனிலைச் சங்கங்களை இருவகையாகப் பிரிக்கலாம். அவையாவன:

(1) சிற்றளவு முதனிலைச் சங்கங்கள்.

(2) பேரளவு முதனிலைச் சங்கங்கள்.

சிற்றளவு முதனிலைச் சங்கங்கள்:
இவை பெரும்பாலும் சிறிய தொழிற்பரப்பைக் கொண்டவை. அங்கத்தவர் தொகை, தொழில் முயற்சிகளின் அளவு, பருமன் என்பன சிறிய அளவிலேயே அமைந்திருக்கும். அங்கத்தவர்களுக்கும் சங்க நிருவாகத்துக்குமிடையே அதிக அளவில் நேரடித் தொடர்புகள் இருக்கும். அங்கத்தவர்களிற் பெரும்பாலோர் சங்கத் தொழிற்பாடுகளுடன் நேரடித் தொடர்பு கொள்வர்.

இச் சங்கங்களின் தொழிற்பரப்பு ஒரு கிராமத்தை அல்லது கிராமத்தின் ஒரு பகுதியைப் பெரும்பாலும் கொண்டிருக்கும். ஆயினும் சிலவகைக் கூட்டுறவுச் சங்கங்களை அமைப்பதற்குப் போதியளவு உறுப்பினர்கள் இல்லாதவிடத்துச் சிற்றளவுக் கூட்டுறவுச் சங்கங்களின் தொழிற்பரப்புச் சில சமயங்களில் உள்@ராட்சிமன்ற எல்லைகளையோ அல்லது தேர்தல் தொகுதிகளையோ அல்லது மாவட்டங்களையோ கொண்டதாக அமையலாம்.

கடனுதவு சங்கங்கள், நுகர்வோர் பண்டகசாலைச் சங்கங்கள் விளைபொருள் உற்பத்தி விற்பசைன் சங்கங்கள், சிறுகைத்தொழிற் சங்கங்கள் போன்றவை இச் சிற்றளவுச் சங்கங்களுக்கு உதாரணங்களாகும். தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கம். ஆஸ்பத்திரிச் சங்கம் என்பன தேர்தல் தொகுதி ரீதியில் அமைந்த சிற்றளவுச் சங்கத்துக்கும், பிரசுரக் கூட்டுறவுச் சங்கம் மாவட்ட ரீதியில் அமைந்த சிற்றளவுச் சங்கத்துக்கும் உதாரணங்களாகும்.

பேரளவு முதனிலைச் சங்கங்கள்:
இவை பெரும்பாலும் பெரிய தொழிற்பரப்பைக் கொண்டவை. அங்கத்தவர் தொகை கணிசமான அளவு அதிகமாக இருக்கும். தொழில் முயற்சிகளின் எண்ணிக்கை, அளவு, பருமன் என்பன அதிகமாக இருக்கும். இவை ஒரு உள்@ராட்சி மன்றத்தையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உள்@ராட்சி மன்றங்களையோ தொழிற்பரப்பாகக் கொண்டிருக்கும்.

அதிக அளவு மூலதனத்தைத் திரட்டவும், அங்கத்தவர்களுக்கு அதிக அளவு சேவைகளை அளிப்பதற்கும், தொழில் நிபுணத்துவ சேவைகளைப் பெறுவதற்கும், நிருவாகச் சிக்கனங்களைப் பெறுவத்கும், பொருளாதார இயலுந்தன்மையைப் பெறுவதற்கும், தொழில் முயற்சிகளை விரிவு படுத்தலுக்கும், நிறுவனத்தை வலுவுள்ள சக்தியாக விளங்கச் செய்வதற்கும், இவை போன்ற ஏனைய நலன்களைப் பெறுவதற்கும் பேரள முதனிலைச் சங்க அமைப்பு வகை செய்யும். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் என்பன இதற்கு உதாரணங்களாகும்.


8:1 சிற்றளவு முதனிலைச் சங்கங்கள்
சிலவற்றின் விளக்கம்

1. கடனுதவு சங்கம்:
கடனுதவு சங்கங்கள் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஜேர்மனியிலாகும். இலங்கையிலும் முதலில் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் கடனுடவு சங்கமேயாகும். இலங்கையிலுள்ள விவசாயிகள் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் தொழில் முயற்சிகளுக்கு வேண்டிய முதலைப் பெறவும் வழி செய்யுமுகமாகவே அரசாங்கம் 1911ஆம் ஆண்டில் 7ம் இலக்கத்திற் கூட்டுறவுச் சட்டம் ஒன்றை உருவாக்கியது. இச் சட்டத்தின் கீழ் 1912ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி மாத்தறைப் பகுதியிலுள்ள வெல்லபடப்பத்த என்னும் கிராமத்தில் முதன்முதலாக ஒரு கடனுதவு கூட்டுறவுச் சங்கம் உருவாகிப் பதிவு செய்யப்பட்டது. இதன்பின் இலங்கையின் பல பாகங்களிலும் பல கடனுதவு சங்கங்கள் உருவாகின.

கடனுதவு சங்கங்கள் ஆரம்பமாவதற்கு முன் விவசாயிகள் சிறு கைத்தொழில் புரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு வேண்டிய முதலை நிலச் சொந்தக்காரர், வட்டிக்குப் பணம் கொடுப்போர் வியாபாரிகளிடமே பெற்றுவந்தனர். கடன் பெறும் ஏழை மக்கள் இவர்களிடம் கடன் பெறுவதிற் பல சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கு முட்பட்டனர். இவற்றுள் முக்கியமானவை:

1. இவர்கள் தகுந்த பிணைப்பொருளின்றிக் (பொருள்கள், நகை, ஆதனம் போன்ற பிணைகள்) கடன் வழங்கமாட்டார்கள்.

2. கல்வி அறிவில்லாத சாதாரண மக்களிடமிருந்து கடும் வட்டி அறவிட்டனர்.

3. கடன் பணத்தைத் தவணை முறையிற் செலுத்துவதை ஏற்க மறுத்தனர். இதனால் ஏழை மக்கள் தமக்குச் சிறு தொகைப்பணம் வருமானத்தில் மிஞ்சிய காலங்களில் கடன் பழுவைக் குறைக்க முடியாது அத்தொகைகளையும் செலவு செய்தனர்.

4. கடன் வழங்குவோர், சிறு தொகைகளைக் கடனாக வழங்கிக்கடன் பெறுபவர்களிடமிருந்து பெற்ற பெறுமதி கூடிய பிணைப் பொருள்களைத் தமதுடமையாக்கப் பல்வேறு வகையா சூழ்ச்சி முறைகளைக் கையாண்டனர்.

இவ்வித சிக்கல்களிலிருந்து கடன்பெறும் சாதாரண மக்களை விடுவிக்க ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவன ரீதியான கடன் வழங்கும் அமைப்புத் தேவைப்பட்டது. இத்தேவையைப் பூர்த்தி செய்ய முதலில் உருவாக்கப்பட்டது. கூட்டுறவுக் கடனுதவு சங்கங்களேயாகும். இக்கடனுதவு சங்கங்களை இரு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:

1. பொறுப்பு வரையறுக்கப்படாத கடனுதவு சங்கம்.

2. பொறுப்பு வரையறுக்கப்படட்ட கடனுதவு சங்கம்.


பொறுப்பு வரையறுக்கப்படாத கடனுதவு சங்கம்.
ஜேர்மனியில் ரபெய்சனால் ஆரம்பிக்கப்பட்ட கடன் வங்கிகளை ஒத்தது. “எல்லோருக்குமாக ஒருவரும் ஒருவருக்காக எல்லோரும்” என்ற உயர் கூட்டுறவுத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

நோக்கங்கள்;:
1. உறுப்பினர்கள் பொருளாட்சி வகையில் நயமடைதலும் விருத்தியுறலும்

2. உறுப்பினர்களின் அவசிய தேவைகளுக்கு வேண்டிய பணத்தைக் கடனாக உதவ, வேண்டிய நிதிகளைத் திரட்டல்.

3. அங்கத்தவர்களிடையே சிக்கனத்தையும் சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தல்.

4. அங்கத்தவர்களிடையே சுயமுயற்சி, பரஸ்பர உதவி, ஒத்துழைப்புப் போன்ற கூட்டுறவுப் பண்புகளை வளர்க்கப் பயிற்சியளித்தல்.

5. இவற்றை விருத்தி செய்யவேண்டிய ஏனைய நடவடிக்கைகளை எடுத்தல்.

அவசியத் தேவை என்பது பெரும்பாலும் அங்கத்தவர்களின் பொருளாதாரப் பயன்தரு தேவைகளையே குறிக்கும். ஆயினும் பொருளாதாரப் பயன்பதராத சில அவசியத்தேவைகளும் இருக்கலாம்.

உறுப்பினர் தகமையிற் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொதுவான தகமைகள் இருத்தல் வேண்டும். அத்துடன் நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். வரையறுக்கப்படாத வேறு கூட்டுறவுச் சங்கத்தில் அங்கத்தவராயிருக்கக் கூடாது. பிரவேசப் பணம் சிறு தொகை செலுத்த வேண்டும். இத்தொகை சங்கத்தின் நடைமுறைச் செலவுக்குப் பயன்படுத்தப்படும் இத்தொகை 50 சதம் தொடக்கம் 2 ரூபா வரை இருக்கும் ஒரு பங்கையாவது கொள்முதல் செய்தல் வேண்டும். பங்கின் பெறுமதி 20 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை துணைவிதிகள் மூலம் வரையறுக்கப்படும்.

அங்கத்தவர்களின் பொறுப்பு வரையறுக்கப்படாதது. சங்கத்தின் வெளிக்கடன்களுக்கு அங்கத்தவர்கள் தனித்தும் ஒருமித்தும் பொறுப்பானவர்கள். எனவே ஒவ்வொரு உறுப்பினரும் சங்கச் செயற்பாடுகள் பற்றி மிகவும் கரிசனையோடு இருப்பார்கள். ஒவ்வொரு உறுப்பினரைப் பற்றியும் மற்றவர்கள் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். இதனால் இவ்வகைச் சங்கத்தின் தொழிற்பரப்புச் சிறிதாக இருக்கும்.

சங்கத்துக்கு வேண்டிய நிதிகள் பெறப்படும் வழிகள்:
1. உறுப்பினரின் பங்குமுதல்.

2. உறுப்பினரின் சேமம், வைப்புக்கள்.

3. சங்கம் திரட்டிய வருமானம்.

4. உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சேமம், வைப்புக்கள்.

5. வங்கிக் கடன்.

பொதுச்சபை:-
கூட்டுறவுச் சங்கங்களின் பொதுச் செயற்பாடுகளில் கூறப்பட்டவை விட விசேடமாகவுள்ளமை பின்வருமாறு:-
1. தலைவர், உபதலைவர், தனாதிகாரி, காரியதரிசி ஆகிய பதவி வகிப்போரைத் தெரிவு செய்தல்.

2. உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்வதை உறுதிப்படுத்தல்.

3. ஒவ்வொரு உறுப்பினர்க்கும் வழங்கக்கூடிய உச்சக் கடனெல்லையைத் தீர்மானித்தல்.

இவற்றை விட ஏனைய சங்கங்களுக்குரிய பொதுக் கடமைகளும் உண்டு.

நிருவாக சபை உறுப்பினர்கள் பதவி வகிப்போர் உட்பட ஐந்து பேருக்குக் குறையாது இருத்தல் வேண்டும். பொதுச் சபையே அதிகாரம் கொண்டது. பொதுச்சபை தனது அதிகாரங்களில் சிலவற்றை நிருவாக சபைக்கு அளிக்கலாம். சங்கத்தின் கருமங்கள் சுமுகமாகச் செயற்படுவதற்கு வேண்டிய கருமங்களை மேற்கொள்ளும்.

கடன் வழங்கல்:
ஒவ்வொரு உறுப்பினருக்குப் பொதுச் சபை விதித்த உச்சக்கடன் எல்லைக்கு ஏற்பவும், சங்கத்தின் நிதிவசதிக்கு ஏற்பவும், உறுப்பினர்களின் தேவையைக் கருத்திற்கொண்டு கடன் வழங்கப்படும். கடனுக்குப் பிணையாகப் பொருட்களோ சொத்துக்களோ பெறுவதில்லை. இரு உறுப்பினர்களின் பிணை மட்டுமே பெறப்படுகிறது. கடனுதவு சங்கங்களுக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்ட பெயர் நாணய சங்கங்களாகும். இது மிகப் பொருத்தமான பெயராகும். ஏனெனில் பொருட்களையோ சொத்துக்களையோ பிணையாகப் பெறாது உறுப்பினரின் நாணயத் தன்மையை மட்டும் நம்பிக் கடன் வழங்கப்படுகின்றது. ஒரு உறுப்பினர் பெற்ற கடன் பணம் கடன் விண்ணபத்தில் குறிக்கப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை மேற்பார்வை செய்ய வேண்டிய கடமை சங்கத்துக்கு உண்டு. இவ்விடயத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் மிகக் கவனமாக மேற்பார்வை செய்வர். ஏனெனில் ஒரு உறுப்பினர் கடன் பணத்தைத் தவறான வழியிற் செலவிட்டுத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு உட்பட்டால் அவ்விழப்பு ஏனைய உறுப்பினர்களைப் பாதிக்கச் செய்யும்.

உறுப்பினர்களைப் பொறுத்தவரையில், பொருள் அல்லது சொத்துப் பிணையின்றிக் கடன் பெறுவதோடு, நியாயமான வட்டியிம் கடன்பெறக் கூடியதாகவுள்ளது. கடன் பெறுபவர்களின் பலவீனங்களைச் சாதகமாக்கிப் பல சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கையாண்டு நீதியற்ற முறையிற் சுரண்டப்படுவதிலிருந்து மீட்கப்படுகின்றனர். கடன் பெறுபவன் தனக்கு வருமானம் கிட்டும்போதெல்லாம் அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் கடனின் வட்டிக்காகவோ அல்லது கடனின் பகுதிப் பணத்துக்காகவோ செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராத காரணங்களாற் குறித்த தவணையிற் கடன் பணத்தைச் செலுத்த வசதியற்றவர்கள் அதற்குரிய காரணங்களுடன் தவணை நீடிப்புக்கு விண்ணப்பஞ் செய்யுமிடத்துச் சங்க நிருவாகம் அக்காரணங்களை ஆராய்ந்து நியாயமெனக் காணப்படின் தவணை நீடிப்பு வழங்க வசதிசெய்யப்பட்டுள்ளது.

இலாபப் பங்கீடு
வரையறுக்கப்படாத கடனுதவு சங்கங்களின் இலாபம், பகிர்வு செய்து கொடுத்தலாகாது. ஆணையாளர் விதித்த பிரகாரம் கூட்டுறவு நிதிக்குச் செலுத்த வேண்டிய தொகையை ஒதுக்கியபின் மீதி இலாபம் முழுவதும் சங்க ஒதுக்க நிதியில் சேர்க்கப்படவேண்டும். இதனால் சங்க ஒதுக்குநிதி (அடக்குப்பணம்) அதிகரிக்கும். ஒதுக்கி நிதி சங்கத் தொழிற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். சங்க ஒதுக்குநிதி அதிகரிக்க வெளிக்கடன் எல்லைத்தொகை குறைவடையும். இதனால் இருவித நன்மைகள் உறுப்பினர்களுக்கு ஏற்படுகின்றன. அவையாவன:

1. உறுப்பினர்களின் பொறுப்பின் எல்லை குறைவடையும்.

2. சங்கம் வெளியாரிடம் கடன் பெறவேண்டிய அவசியமில்லையாயின் வட்டி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவே உறுப்பினர்களுக்குக் குறைந்த வீத வட்டியில் கடன் வழங்க முடியும்.

ஒரு கடனுதவு கூட்டுறவுச் சங்கம் பதிவு செய்யப்பட்டுப் பத்து வருடங்கள் தொழில் நடத்திய பின் வரும் வருடங்களின் இலாபத்தில் 25 வீதத்துக்குக் குறையாத தொகையொன்றை ஒதுக்கு நிதியுடன் சேர்த்தபின் ஆணையாளரின் அனுமதியுடன் 7 ½ வீதத்திற்கு மேற்படாத ஒரு தொகையை பொதுநல நிதிக்கு மாற்றமுடியும். இப்பொதுநல நிதித் தொகையை ஆணையாளரின் (பதிவுக் காரியஸ்தர்) அனுமதியுடன் ஏழைகளுக்கு உதவி செய்தல், கல்வி விருத்தி, சுகாதார (வைத்திய) உதவிகள், மதசம்பந்தமற்ற வேறு பொது நன்மை பயக்கும் விடயங்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.

ஒதுக்குநிதி உறுப்பினரிடையே பகிர்வு செய்யப்பட முடியாததுமன்றி உறுப்பினர் எவரும் எக்காலத்திலும் அதன் எப்பாகத்திலும் உரிமை கோர முடியாதது. சங்கம் கலைக்கப்படும் காலத்தில் வெளிக் கடன்களைத் தீர்க்கச் சங்கநிதி போதாதுவிடின் ஒதுக்குநிதியைப் பயன்படுத்தலாம். கலைப்பின் பின் வெளிப் பொறுப்புக்களும் பங்கு முதலும் வழங்கிய பின்னும், ஒதுக்குநிதி மீதியிருப்பின் அத்தொகை அவ்வூர்ப் பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடியதும், நிருவாக உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டு ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டதுமான ஒரு காரியத்துக்குச் செலவிடப்படல் வேண்டும்.

சில சங்கங்கள் 10 ஆண்டுகள் கழிந்த பின்னர், ஒரு உறுப்பினர் தமது பங்கு முதலைத் திருப்பி எடுத்து மீண்டும் தவணைப் பணமாகச் செலுத்துவதற்கு வசதி செய்துள்ளன. அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் மாதாந்தம் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கட்டாயமாகச் சேமிக்க வேண்டுமென உபவிதி கட்டுப்படுத்துகின்றது. இவ்விதம் சேமிக்கும் பணத்தை அங்கத்தவர் தமது அவசிய தேவைகளுக்குச் சங்கம் விதிக்கும் வட்டியுடன் திருப்பிப்பெற உரிமையுண்டு. ஆனால் அவர் மீண்டுஞ் சேமித்தல் வேண்டும்.

வரையறுக்கப்படாத பொறுப்புடைய கடனுதவு சங்கத்தில் ஒவ்வொரு உறுப்பினரையும்ட பொறுப்பு ஆபாயம் சூழ்ந்துள்ளது. இவ்வபாயத்துக்கு எதிராக


உறுப்பினர் தம்மைக் காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் சில பாதுகாப்புக்களைச் செய்யவேண்டியுள்ளன. அவையாவன:-

1. உறுப்பினர்களைச் சேர்க்கும்போது அவரின் நடத்தையை நன்றாக ஆராய்ந்து நேர்மை, ஒழுக்கம், தொழிலில் விடா முயற்சி, ஒத்துழைப்பு மனப்பான்மை உள்ளவர்களைச் சேர்த்துக்கொள்ளல்.

2. தகுதியற்ற கெட்ட நடத்தையுள்ள அங்கத்தவரைத் துணை விதியில் விதிக்கப்பட்டுள்ள முறைப்படி நீக்கம்.

3. சங்கத்தின் வெளிக் கடனெல்லையைத் தீர்மானிக்கும்போது சங்கத்தின் நிதிவளவலு, உறுப்பினர்கள் பொறுப்புக்களை ஏற்கக்கூடிய சக்தி, உறுப்பினர்களால் திருப்பிச் செலுத்தக்கூடிய சக்தி, உறுப்பினர்களின் பயன்தகு தேவை என்பனவற்றைக் கருத்திற்கொண்டு குறைந்தளவு தொகையைத் தீர்மானித்தல்.

4. உறுப்பினர்களின் உரிமை நிதி வளங்களைச் சங்கத்தில் அதிகரிக்க வகை செய்தல்.

5. சட்டப்படி அடக்கப்பணத்தை அதிகரித்தல்.

6. நிதியை உபயோகிப்பது சம்பந்தமாகப் பொறுக்கூட்டங்களில் தவறாது கலந்து தகுந்த கட்டுப்பாடுகளை விதித்தல்.

7. ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற கடன்களை விண்ணப்பத்திற் குறிப்பிட்ட பயன்தகு தொழில்களுக்குப் பயன்படுத்துகின்றார்களா என்பதை ஒவ்வொரு உறுப்பினரும் தமது கடமைபோல மேற்பார்வை செய்து, பிழையாக உபயோகிப்பவர்களிடமிருந்து சங்கம் உடனே அறவிடுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டல்.

8. கடன் தவணை தப்பிய உறுப்பினர்களிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டு அவர்கள் தரும் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாததாயின் மத்தியஸ்தத் தீர்ப்பு மூலம் அறவிட சங்கத்தைத் தூண்டல்.

9. மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை ஒரு உறுப்பினர் எடுக்கும்பொது ஏனைய உறுப்பினர்கள் ஒத்துழைப்புத் தராதுவிடின், அவ்வுறுப்பினர் தனது பொறுப்பு அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டுச் சங்கத்தில் இருந்து விலகல்.

10. சங்கத்தின் பொருளாதார இயலுந்தன்மை குன்றி வருவதாகப் பெரும்பாலான உறுப்பினர்கள் கருதுவார்களானால் சங்கத்தைக் கலைக்குமாறு ஆணையாளருக்கு விண்ணப்பித்தல்.

பொறுப்பு வரையறுக்கப்படாத கடனுதவு சங்கங்களே இலங்கையின் கூட்டுறவு வளர்ச்சிக்கு அடிப்படை. அச்சங்கத்தில் உறுப்புரிமை பெற்று இயங்கி வந்தவர்களிற் பெரும்பாலோர் கூட்டுறவின் உயர் இலட்சியக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார்கள். கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பிக்கும்போது கூட்டுறவுக் கொள்கைகள் பற்றிய கல்வியைப் பெற்றார்கள். துணை விதிகளை வாசிதது அல்லது கேட்டு நன்கு அறிந்திருந்தார்கள். ஒருவருக்காக அனைவரும்@ அனைவருக்காக ஒருவரும் வாழவேண்டும் என்ற உயர் கொள்கையின் உரு அமைப்பு, பதவி வகிப்போர் சம்பளம் பெறாது கௌரவ சேவை ஆற்றிப் பொதுநல மனப்பான்மையை விருத்தி செய்த அமைப்பு, இச்சங்கங்களேயாகும். இதன்பின் தோன்றிய பல கூட்டுறவு அமைப்புச் சங்கங்கள் இவ்வுயர் கொள்கையிலிருந்து விலகிக் கொண்டு செல்கின்றன. வரையறுக்கப்பட்ட கூட்டுறவுச் சங்க அமைப்புக்கள் உறுப்பினரின் பொருளாதார நலன்களுக்களித்த அளவு முக்கியத்துவம், கூட்டுறவுப் பண்புகள் வளர்வதற்கு அளிக்கவில்லை.

2. பொறுப்பு வரையறுத்த கடனுதவு சங்கம்:
இவ்வகைச் சங்களும் உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கும் நோக்கத்துடனேயே அமைக்கப்பட்ட. இச்சங்கத்தின் பிறப்பிடமும் ஜேர்மனியாகும். இதன் ஆரம்பகர்த்தா சூல்டெலிஸ் என்பவராகும். இவர் நகர்ப்புறங்களிலுள்ள தொழிலாளர் நலன்கருதி வரையறுக்கப்படாத கடனுதவு வங்கிகளையே ஆரம்பித்தார். நகர்ப்புறங்களிலுள்ள மக்கள் வரையறுக்காத பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இதனால் சூல்ஸ்டெலிஸ் ஆரம்பித்த கடனுதவு வங்கிகளில் சேருபவர்களின் தொகை குறைவாக இருந்தது. 1889ம் ஆண்டுச் சட்டத்தின் மூலம் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கடனுதவு வங்கியாக மாற்றமடைந்தது.

இதன்பின் நகர்ப்புறத்தில் உள்ள சிறு கைத்தொழிலாளர்கள், ஏனையோர் அதிக அளவில் இக்கடனுதவு வங்கியில் அங்கத்துவம் பெற்றனர். இவ்வங்கிகளை நகர வங்கிகள் என்றும் அழைத்தனர். தொழிற்பரப்பு விரிவானதாயும், உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தமையால் உறுப்பினர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு இல்லாமல் இருந்தது. இவ்வங்கிகள் நிதித்துறை, கணக்குத் துறை, பொதுத்துறை என மூன்று பிரிவுகளைக் கொண்டு அவை சிறந்த அலுவலரால் நிருவகிக்கப்பட்டன. நிருவாக முறை உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்சபையே ஜனநாயக முறையில் நிருவாக உறுப்பினர்களைத் தெரிவு செய்தது.

இதற்கு வேண்டிய நிதி உறுப்பினரின் பிரவேசக் கட்டணம், பங்குமுதல், உழைத்த வருமானத்தில் ஏற்படுத்திய ஒதுக்கு நிதி, உறுப்பினர், உறுப்பினரல்லாதோரிடம் பெற்ற வைப்புக்கள் போன்றவையாகும். உறுப்பினர் பங்குமுதலைத் தவணை முறையில் செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் பங்குமுதல் முழுவதையும் செலுத்திய பின்பே பங்குமுதலுக:கு இலாப ஈவு (வட்டி) பெறும் உரிமை பெற்றனர்.

இலங்கையிலும் இவ்வித வரையறுக்கப்பட்ட கடனுதவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கத்தவர்களின் பொறுப்பு, பங்குமுதலால் வரையறுக்கப்பட்டது. ஒரு உறுப்பினர் பெறும் கடனுக்கு, அவரும் பிணை (சொத்து – ஆள்)யும் மட்டுமே பொறுப்பு ஏற்கின்றன. கடன் வழங்கும் நிபந்தனைகள் வரையறுக்கப்படாத கடனுதவு சங்கங்களிலும் பார்க்கக் கடினமானவையாக இருக்கும். இலங்கையிலும் இவ்வித சங்கங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே ஆரம்பிக்கப்பட்டன. வரையறுக்கப்படாத ஐக்கிய நாணய சங்கங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இவை அதிக அளவு வளரவில்லை என்றே கூற வேண்டும். 1958ம் ஆண்டு முடிவில் வரையறுக்கப்படாத கடனுதவு சங்கங்கள் 3680வரை இருந்தன. வரையறுக்கப்பட்ட கடனுதவு சங்கங்கள் 163 ஆக இருந்தன.

சுமார் 45 ஆண்டு காலத்தில் 168 வரையறுக்கப்பட்ட கடனுதவு சங்கங்கள் உருவாகியதிலிருந்து அது இலங்கையில் வளர்ச்சியுறவில்லையென்பதை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. அதே நேரத்தில் வரையறுக்கப்படாத கடனுதவு சங்கங்கள் 3680 உருவாகியதிலிருந்து வரையறுக்கப்படாத அமைப்பையே இலங்கை மக்கள் பெருமளவில் விரும்பினர் என்பதை அறியமுடிகிறது. தற்போது இவ்வெண்ணிக்கை 8300க்கு மேல் உள்ளமை கவனிக்கப்பாலது.


இரு கடனுதவு சங்கங்களுக்குமிடையேயுள்ள வேறுபாடுகள்:

பொறுப்பு பொறுப்பு
வரையறுக்கப்படாதது வரையறுக்கப்பட்டது
1. ஒவ்வொரு உறுப்பினரும் சங்கக் கடன் உறுப்பினர் ஒருவர் வழங்கிய பங்கு
களைத் தீர்க்க தமது சொத்துக்களிலிருந்து முதலுக்கு மேல் சங்கக் கடன்களுக்குப்
ஈடுசெய்யும் பொறுப்பையுடையவர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை.

2. தொழிற்பரப்புச் சிறியது. தொழிற்பரப்புப் பெரிதாக இருக்கும்.

3. உறுப்பினர்களுக்கிடையில் நெருங்கிய உறுப்பினர்களுக்கு இடையே நெருங்கிய
தொடர்பும் அறிமுகமும் இருக்கும். தொடர்பு அறிமுகம் இருக்குமென நிச்சயமாகக்
கூறமுடியாது.

4. பங்குகளின் விலை குறைவானது. பங்குகளின் விலை உயர்வானது.

5. உறுப்பினர்களின் நேர்மைத் தன்மையைப் உறுப்பினர்களின் பங்குமுதல், அவர்களின் பிணை
பிணையாகக் கொண்டு கடன் வழங்கப்படுவது. யின் தன்மை, என்பவற்றை அடிப்படையாகக்
கொண்டு கடன் வழங்கப்படுவது.

6. உறுப்பினர்கள் கடனை உரிய தேவைக்குப் பெருந்தொகையான உறுப்பினர்கள் இருப்பதால்
பயன்படுத்துகிறார்களா என்பது நிருவாகத்தால் மேற்பார்வை செய்வது கடினம். எனவே கடன்
மேற்பார்வை செய்யப்படும். மேற்பார்வை செய்யப்படுவதில்லை.

7. உறுப்பினர்களுக்கு இலாபப் பகிர்வு செய்யப்படுவ இலாபப் பகிர்வு, பங்கு முதலுக்கு வட்டி
தில்லை. பங்கு முதலுக்கு வட்டி வழங்கப்படுவதில்லை என்பன கொடுக்கப்படலாம்.

8. நிருவாகக் கருமங்கள் யாவும் கௌரவ சேவையாக சம்பளம் பெறும் பணியாளர்கள் நிருவாகக்
உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டவாகள் கருமங்களிற் பலவற்றைச் செய்வார்கள்.
செய்தல் வேண்டும்.

9. பொருளாதார நலன்கள் மட்டுமன்றி உறுப்பினர்களின் பொருளாதார நலன்களைக் கவனிப்பதன்றிப்
ஒழுக்கம், நேர்மை, ஒத்துழைப்பு முதலிய பண்புகளை பண்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
வளர்க்க வாய்ப்புண்டு. அளிக்கப்படவில்லை. இது இயலுந்
தன்மையுமற்றது.

10. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் பழைய புதிய உறுப்பினர்கள் இலகுவாகச்
உறுப்பினர்கள் பொதுக் கூட்டத்தில் பரிசீலனை சேர்க்கப்படுவார்கள். பழைய உறுப்பினர்கள்
செய்வார்கள். கவனமாகப் பரிசீலனை செய்யவேண்டிய
அவசியமில்லை.


3. நுகர்வோர் கூட்டுறவுப் பண்டகசாலைச் சங்கம்:
இலங்கையில் 1927ம் ஆண்டளவில் பசறைப் பகுதியிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முதன்முதலாக ஒரு கூட்டுறவுச் சங்கம் அமைக்கப்பட்டது. 1942ம் ஆண்டு வரையில் இலங்கையிற் பண்டகசாலைச் சங்கங்களின் வளர்ச்சி குறைவாகவே இருந்தது. இக்கால எல்லைக்குள் இலங்கை முழுவதிலும் 52 சங்கங்களே உருவாகியிருந்தன. இவற்றுள் 38 சங்கங்கள் பெருந்தோட்டங்களில் உள்ளவையாகும்.

1942ம் ஆண்டளவில் இரண்டாவது மகாயுத்தத்தைத் தொடர்ந்து இலங்கையின் நுகர்ச்சிப் பொருள்களிற் பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டது. கிடைக்கின்ற குறைந்தளவு பொருள்களை மக்கள் எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு ஏற்றவழி கூட்டுறவுப் பண்டக சாலைகளே என்பதை அரசு உணர்ந்து கூட்டுறவுப் பண்டகசாலைகளை அமைப்பதற்குப் பிரசாரஞ் செய்து முயற்சிகளை எடுப்பதற்குக் கூட்டுறவு அதிகாரிகளைத் தூண்டியது. இதன் பலனாக 1946ம் ஆண்டில் 4034 பண்டகசாலைகள் பதியப்பட்டிருந்தன.

நோக்கங்கள்
அங்கத்தவர்களின் பொருளாதார நிலையை விருத்தியாக்குதலும் விசேடமாகப் பின்வருவனவற்றைச் செய்தலும்.

1. பொது உபயோகத்திலுள்ள நல்ல தரமான சரியான அளவை அல்லது நிறையுள்ள பொருள்களை வாங்கி அங்கத்தவர்களுக்கு வழங்குதல்.

2. சிக்கனம், சுயஉதவி, கூட்டுறவு என்பனவற்றை அங்கத்தவரிடையே வளர்த்தல், கூட்டுறவுக் கொள்கைகளைப் பரப்புதல், திருந்திய வியாபார முறைகளினால் அங்கத்தவர்களின் பொருளாதார நிலையை விருத்தியாக்குதல்.

3. மேற்குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாகிய வேறெதையுஞ் செய்தல்.

உறுப்பினராகச் சேர்வதற்கு முன் கூறப்பட்டவை பொதுவான தகமைகளாகும். ஒரு உறுப்பினரின் இறப்பினால் உரிமையடையும் உறுப்பினர் 18 வயதுக்குட்பட்டவராக இருப்பினும் சேர்த்துக் கொள்ளப்படுவர். உறுப்பினராகச் சேருவதற்கு ஒரு பங்கையாவது கொள்முதல் செய்தல் வேண்டும். ஒரு பங்கின் பெறுமதி 10 ரூபாவாகும். இத்தொகையைத் தவணைகளிற் கட்டுவதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பங்கின் முழுப்பெறுமதியையும் செலுத்தமுன் பங்கு இலாபமோ, தள்ளுபடியோ பெற முடியாது. இவை ஏதாவது ஒதுக்கப்படின் அவை பங்கு முதலுடன் சேர்க்கப்படல் வேண்டும். ஒருவர் இச் சங்கத்தில் சேருவதாயின் பங்கு முதலைக் கொள்முதல் செய்து சங்கத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நிருவாகசபை அங்கத்துவ விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆயினும் இறுதி முடிவு செய்யும் அதிகாரம் பொதுச்சபைக்கே உண்டு. நிருவாக சபையில் ஏற்றுக்கொள்ப்பட்டுப் பொதுச் சபையின் அங்கீகாரம் பெறும்வரை ஒரு உறுப்பினர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர மற்ற எல்லா உரிமைகளையும் உடையராவர்.

சங்கத்துக்கு வேண்டிய தொழிற்படு முதல் பின்வரும் வழிகளிற் பெறப்படும். அவையாவன:
1. உறுப்பினரின் பங்கு முதல்.

2. சேமப் பணங்கள்.

3. வடடிக் கடன்கள்.

4. சம்பாதித்த வருமானம்.

பொதுச் சபை அதிகாரங்களும் கடமைகளும் பொதுவான செயற்பாடுகளில் குறிக்கப்பட்டனவேயாகும். நிருவாக சபையைத் தெரிவு செய்வதும் அக்கடமைகளில் ஒன்றாகும். இந்நிருவாக சபையில் 9 பேர் இருத்தல் வேண்டும். இவர்கள் சுழல்மாற்று முறையில் தெரிவு செய்யப்படுவர். 9பேரைத் தெரிவு செய்தபின் ஒவ்வொரு வருட முடிவிலும் 1ஃ3 பங்கினர் விலக வேண்டும். இதில் இரு வருடத்துக்கும் யார் யார் விலகவேண்டுமென்பதைத் திருவுளச் சீட்டு முறை மூலம் தெரிவுசெய்து முதலாவது நிருவாக சபைக் கூட்ட அறிக்கையிற் பதிவு செய்து கொள்வர். முதலாம் வருட முடிவில் குறிக்கப்பட்டவர்கள் விலக அந்த இடத்துக்குப் புதியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். பொதுச்சபை விரும்பினால் விலகியவர்களை மீண்டும் தெரிவு செய்யலாம். இம்முறையில் புதிய நிருவாக சபை உறுப்பினர் தெரிவு செய்யலாம். இம்முறையில் புதிய நிருவாக சபை உறுப்பினர் தெரிவுசெய்யலாம். இம்முறையில் புதிய நிருவாக சபை உறுப்பினர் தெரிவு செய்யப்படின் அனுபவம் நிறைந்த நிருவாக உறுப்பினரிடமிருந்து செயல்முறைகளை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். பொதுச்சபை விரும்பினால் முழு நிருவாக சபை உறுப்பினரையும் விலக்கி விட்டுப் புதிதாக 9 நிருவாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வற்கும் உரிமையுண்டு.

சங்கத் தலைவரையும், சங்க உபதலைவர் அல்லது உபதலைவர்களையும் தனாதிகாரியையும் நிருவாக உறுப்பினர்களினின்றும் தெரிவு செய்யலாம். இப்பதவி வகிப்போர், அடுத்துவரும் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்படும். நிருவாக சபையின் முதற் கூட்டம் வரை, அல்லது நிருவாக சபை உறுப்பினர் பதவியை இழக்கும் வரை, அல்லது நிருவாக சபையால் அப்பதவியில் இருந்து நீக்கப்படும்வரை கடமையாற்றுதல் வேண்டும். சங்க உத்தியோகத்தராகத் தான்செய்யும் கடமையெதற்கும் நிருவாக சபை உறுப்பினர் எவரும் கூலியாவது உபகாரப் பணமாவது பெறலாகாது.

காரியதரிசி:
காரியதரிசி நிருவாகசபை உறுப்பினர்களிடையே இருந்து தெரிவு செய்யப்படலாம். அல்லது நிருவாக சபைக்கு வெளியே ஒருவரைக் காரியதரிசியாக நியமிக்கலாம். நிருவாக சபை உறுப்பினரிலிருந்து தெரிவு செய்யப்பட்ட காரியதரிசி நிருவாக சபை உறுப்பினரின் அதிகாரங்கள் கடமைகளுடன் காரியதரிசியின் கடமைகளையும் ஆற்றுதல் வேண்டும். இவர் ஆற்றும் பணிகளுக்கு வேதனமோ, சம்பளமோ பெறமுடியாது. வெளியிலிருந்து நியமிக்கப்படும் காரியதரிசி நிருவாக சபை, பொதுச்சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு அறிக்கைகளைப் பதிவு செய்யவேண்டும். ஆனால் வாக்குரிமை இல்லை. வேதனம் அல்லது சம்பளம் பெறலாம்;.

தனாதிகாரி:
நிருவாக சபை உறுப்பினரிலிருந்து தெரிவு செய்யப்படும் ஒருவரே தனாதிகாரியாகக் கடமையாற்ற வேண்டும். இவர் வங்கியிலிருந்தும், உறுப்பினரிடமிருந்தும், பிறரிடமிருந்தும் சங்கத்திற்கு வரும் சகல பணத்தையும் தன் பொறுப்பில் ஏற்று நிருவாக சபையின் தீர்மானத்திற்கேற்பச் செலவு செய்தல் வேண்டும். மாதத்திற்கொரு முறையாவது கணக்குகளை முடித்துச் சரியென்பதற்கு அத்தாட்சியாகத் தனது கையொப்பமிடல் வேண்டும். தலைவர், நிருவாக சபை, கூட்டுறவுத்துறை உத்தியோகத்தர் கேட்கும் நேரத்தில் கையிருப்புப் பணத்தைக் காட்டக்கடமைப்பட்டவர் துணை விதிகளில் விதிக்கப்பட்ட தொகைக்கு மேற் கையிருப்பில் வைத்திருத்தலாகாது. மேற்பட்ட பணத்தைப் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியொன்றிலிடல் வேண்டும். அப்பணத்தை மீட்பதற்கு தiலைர் அல்லது உபதலைவர், தனாதிகாரி அல்லது காரியதரிசி ஆகிய இருவர் கையெழுத்திட்டு மீட்டல் வேண்டும்.

வரையறுக்கப்பட்ட பெரும்பாலான சங்கங்களில் நிதிப் பொறுப்புக்கள் பிணைப்பணஞ் செலுத்திய பணியாளராகிய முகாமையாளரிடமே ஒப்படைக்கப்படுகின்றது. பண்டகசாலைச் சங்கங்கள் போன்ற சிலவற்றில் மாத்திரம் கௌரவப் பணியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வித செயல் கூட்டுறவுக் கொள்கைகள் சிறந்த முறையில் செயற்படுவதற்கு ஏற்ற வழியாகும். உறுப்பினர்களின் நம்பிக்கைத் தன்மை, நேர்மைத் தன்மை, பொறுப்பை ஏற்றுத் திறம்படச்செயல் புரியுந்தன்மை, ஒருவர் அனைவருக்காகவும் உழைக்குந்தன்மை என்பனவற்றை எடுத்துக் காட்டுவதாக இச்செயல் இருக்கின்றது.

முகாமையாளர்:
நிருவாக சபை, சங்கத் தொழில்களை நடத்துவதற்காகக் காரியதரிசி, முகாமையாளர், தேவைப்படும் வேறு பணியாளர்களை நியமிக்கலாம். நடைமுறை விதி நிருவாக சபைத்தீர்மானங்கள் அளித்த அதிகாரத்துக்குட்பட சங்கத் தொழிலை திறம்படக் கொண்டு நடாத்தும் பொறுப்புடையவர். தினசரி தொழில் மூலம் கிடைக்கும் பணத்தைச் சிட்டைகளின்படி தனாதிகாரியிடம் ஒப்படைத்தல் இவரது கடமையாகும். நிருவாக சபை விதிக்கும் காசுப்பிணை ஆதனப்பிணை என்பவற்றை இவர் செலுத்தல் வேண்டும். ஏனைய பணியாளர்களின் வேலையை மேற்பார்வை செய்து அவர்களிடம் உரிய வேலையைப் பெறுவதும் இவரது கடமையாகும்.

நுகர்வோர் பண்டகசாலைகளின் நோக்கம் உறுப்பினர்களுக்கு நியாயமான விலையில் தரமான பொருள்களைச் சரியான அளவு நிறைகளில் கிடைக்கச் செய்தலாகும். இக்கருத்து இப்போதுதான் புதிதாகத் தோன்றியதல்ல. சங்க காலச் செய்யுள் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

“…………………………………
நடுவு நின்ற நன்னெஞ்சி னோர்
வடு அஞ்சி வாய மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்ள தூஉம் மிகைகொ ளாது
கொடுப்ப தூஉம் குறைகொ டாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டித் துவன் றிருக்கை”

இவ்வித பண்புகளை ஒரு வியாபார நிறுவனத்திற்கு இருத்தல் வேண்டுமெனச் சங்க காலத் தமிழன் உணர்ந்தான். அன்று அவன் வகுத்த வியாபார இலக்கணத்துக்கு இலக்கியமாகத் திகழ்பவை இன்றுள்ள கூட்டுறவுப் பண்டகசாலைச் சங்கங்களேயாகும்.

கூட்டுறவுச் சங்கங்கள் பொருள்களைச் சந்தை விலைக்கு அல்லது அதிலும் குறைவான விலைக்கு விற்க வேண்டும் என்று பொதுவாகக் கூறப்படுகின்றது. றொச்டேல் சமத்துவ முன்னோடிகள் தமது சங்கத்திற் சந்தை விலைக்கே பொருள்களை விற்பனை செய்து வருட முடிவில் கொள்வனவுக்கேற்ற ஆதாயத்தைத் திருப்பி உறுப்பினர்களுக்கு வழங்கினர். சந்தை விலையிலும் குறைவான விலையில் சங்கம் பொருள்களை விற்பனை செய்யின் அக்குறைந்த விலையில் பொருள்களை, வியாபாரிகள் வேறு ஆட்கள் மூலம் கொள்முதல் செய்வித்து தமதுரிமையாக்கிச் சங்கத்தில் அப்பொருளின் இருப்பு இல்லை என்றவுடன் பன்மடங்கு விலையை உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டுவார்கள். ஆகவே சந்தை விலையில் விற்றுப்பின் அங்கத்தவர்களுக்கு ஆதரவுக்கேற்ற ஆதாயத்தை வழங்குவதே சிறந்த முறை என்பர். ஆயினும் தட்டுப்பாடான சில பொருள்களின் சந்தைவிலை மிக உயர்வாக இருக்கும்போது அவற்றை உறுப்பினர்களுக்கு நியாயமான விலையில் வழங்க வேண்டியது கூட்டுறவுப் பண்டகசாலைகளின் கடமையாகும். இவ்வித சூழ்நிலையில் அங்கத்தவர்களின் தேவைகளை ஆராய்ந:து பங்கீட்டுத் திட்டமொன்றைத் தயாரித்து அதனடிப்படையில் வழங்கலாம்.

றொச்டேல் சமத்துவ முன்னோடிகள் வகுத்த வியாபாரக் கொள்கைகளில் முக்கியமான இன்னொன்று உடன் காசுக்கு விற்பனை செய்வதாகும். சிக்கனத்தை அடிப்படையாக வைத்தே இக்கொள்கை வகுக்கப்பட்டதாகும். அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய உடன் நுகர் பண்டங்களைப் பொறுத்த வரையில் இக்கொள்கை சரியானது. உயர்விலை கொண்டதும் நெடுங்காலப் பயனையுடையதும் வருமானத்தை ஈட்டக் கூடியதுமான பொருள்களைத் தகுந்த உத்தரவாதத்துடன் தவணை முறையில் பணம் பெறும் ஒழுங்கில் விற்பனை செய்வதே தற்கால வியாபார முறைகளுக்கு ஏற்றதாக அமையும். தையல் இயந்திரம் நீரிறைக்கும் இயந்திரம் போன்றவற்றைத் தவணை முறையிற் பணஞ் செலுத்திக் கொள்வனவு செய்ய வசதியளிப்பின் உறுப்பினரின் பொருளாதாரநிலை உயரவும் வழிபிறக்கும். வளர்ச்சியுற்ற சங்கங்கள் கட்டுப்பாடுகளுக்கமையக் கடன் விற்பனையுடன் மேற்கொள்கின்றன.

1946ம் ஆண்டில் 4034 பண்டகசாலைச் சங்கங்கள் இருந்தன. இதன்பின் பண்டகசாலைகளின் தொகைகள் குறைந்து கொண்டே வந்துள்ளன. 1976ம் ஆண்டு தட்டுப்பாடு நீங்கியதும் அங்கத்தவர்களின் ஆதரவின்மையால் பல பண்டகசாலைச் சங்கங்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாக மாற்றமடைந்தன. அல்லது அதனோடு இணைந்தன. குறுகிய காலத்தில் பரந்த அளவிற் கூட்டுறவுக் கொள்கைகளைச் செயல் முறையில் மக்களிடையே பரப்பியவை பண்டகசாலைச் சங்கங்களேயாகும். இன்றும் சில தோட்டப் பகுதிகளிலும் அரசுசார் அலுவலகங்களிலும் இவ்வகைச் சங்கங்கள் செயலாற்றி வருகின்றன.

4. விளைபொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்கள்.
இரண்டாவது மகாயுத்தம் முடிந்தபின் இலங்கை அரசு உணவுப் பொருள்களிலும் உப உணவுப் பொருள்களிலும் ஓரளவு தன்னிறைவு காணவேண்டுமென்ற கொள்கையைக் கடைப்பிடித்தது. இவ்வித நிலையை உருவாக்கக் கூட்டுறவே சிறந்த வழியெனக் கருதி விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களைக் கிராமங்கள் தோறும் ஆரம்பிக்க 1947ம் ஆண்டளவில் முயற்சி எடுக்கப்பட்டது. நெல், வெங்காயம், மிளகாய் சிறுதானியங்கள் போன்ற இறக்குமதிப் பொருள்களுக்கு உத்தரவாத விலைத்திட்டம் வகுத்துக்கொள்முதல் செய்து ஊக்கமளிக்கப்பட்டது. நிலம் திருத்தல், இயந்திரங்கள் கொள்வனவு செய்தல், கிணறு அமைத்தல் ஆகியவற்றுக்கு அங்கத்தவர்களுக்கும், பண்டகசாலைகள், கட்டடங்கள் அமைப்பதற்குச் சங்கங்களுக்கும் 2 ½ வீத வட்டியில் நீண்டகாலத் தவணைக் கடன்களை சமத்தொழில் சேவை இலாகா வழங்கியது.

அரசாங்கத் தூண்டுதலின்றியே சில விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் ஆரம்பித்து நடைபெற்ற வந்துள்ளன. யாழ்ப்பாணம் மலையாள புகையிலை ஐக்கிய வியாபாரச் சங்கம் 1934ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. குருநாகல் பகுதியில் 1934ம் ஆண்டளவில் தெங்குப்பொருள் உற்பத்தி விற்பனைச் சங்கம் ஆரம்பமானது. 1951ம் ஆண்டில் இவ்வித சங்கங்கள் 37 இலங்கையில் பதிவு செய்யப் பெற்றன. இறப்பர் உற்பத்தி விற்பனைச் சங்கங்கள், நெல் கொள்வனவுச் சங்கங்கள், சிகரட் புகையிலைச் சங்கங்கள் (இவை சிறிது காலத்தில் மூடப்பட்டன) சிற்றிறனெல்லாப் புல்லெண்ணெய்ச் சங்கம் போன்றனவும் ஆரம்பிக்கப்பட்டன.

வடமாகாணத்தில் நெல், வெங்காயம், மிளகாய் போன்ற பொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நோக்கங்கொண்ட விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் உருவாகின. வடமாகாணத்திலுள்ள விளைபொருள் உற்பத்தி விற்பனவுச் சங்கங்கள் ஒன்று சேர்ந்து 1940ம் ஆண்டளவில் வடபகுதி விளைபொருள் உற்பத்தியாளர் சமாசம் ஒன்றை நிறுவினர். இச்சமாசம் உறுப்பினர்களின் விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவதிலும், உறுப்பினர்களுக்குத் தேவையான இயந்திர வகைகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் பேருதவி செய்தது. 1971ம் ஆண்டில் சங்கங்களின் மறுசீரமைப்பின் போது, அகில இலங்கைச் சந்தைப்படுத்தற் சமாசத்துடன் (மாக்பெட்) இணைக்கப்பட்டுவிட்டது.

விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களின் நோக்கங்கள்:
அங்கத்தவர்களின் பொருளாதார நிலையை விருத்தி செய்தலும், விசேடமாகப் பின்வரும் முறைகளில் விவசாய வளர்ச்சிக்கும், கால் நடைவளர்ப்பு விருத்திக்கும், வினைபொருள் விற்பனைக்கும் ஒழுங்கு செய்தலுமாகும்.

1. கூடிய அளவு நிலத்தைப் பயிரிடல்.

2. விஞ்ஞான ரீதியானதும் சிக்கனமானதுமான பயிர்ச்செய்கை முறைகளைக் கையாளுதல்.

3. திருந்திய முறையில் அமைக்கப்பட்ட விவசாயக் கருவிகளைப் பயன்படுத்தல்.

4. நல்ல விதைகளை உபயோகித்தல்.

5. திருந்திய கால்நடை வளர்த்தலைக் கையாளுதல்.

6. விளைபொருள்களை சேகரித்து வைப்பதற்கும் ஏற்றிச் செல்வதற்கும் ஒழுங்கு செய்தல்.

7. விளைபொருள்களை ஒன்று சேர்த்தல், தரப்படுத்தல், பதனிடல், தொகுத்தல், ஏற்றிச் செல்லல், சங்கத்தின் மூலம் விற்பனை செய்தல்.

8. சங்கத் தொழில் விருத்திக்கேற்ற கட்டிடங்களை அமைத்தலும், இயந்திரங்களை நிறுவுதலும்

9. விதைகள், கால்நடைகள், கருவிகள், பசளைகள் திருந்திய முறையில் பயிர் செய்ய வேண்டிய ஏனைய உபகரணங்கள் ஆகியவற்றை அங்கத்தவர்களுக்கு வழங்கல்.

10. விளைபொருள்களைப் பிணையாகக் கொண்டு அங்கத்தவர்களின் தொழில் முயற்சிகளுக்கு முற்பணம் வழங்கல்.

11. நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகள் வழங்கல்.

12. விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் புதிய பரிசோதனைகள் செய்து உறுப்பினர்களுக்கு வழிகாட்டல்.

13. சிக்கனம், சுயஉதவி, பரஸ்பர உதவி ஆகியவற்றை அங்கத்தவர்களில் வளர்க்க வல்லவேறெதையும் செய்தல்.

அங்கத்துவம் பெறுவதற்குப் பொது நிபந்தனைகளுடன், மேலதிகமாக உண்மையான விவசாயியாக இருத்தல் வேண்டும், என்னும் நிபந்தனையையும் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும். இறந்த உறுப்பினரின் பின்னுரித்தாளியாயின் 18 வயதுக்குக் குறைந்தவரும் அங்கத்தவராக இருக்கலாம். அங்கத்தவர் ஒவ்வொருவரும் ஒரு முழுப் பங்கினையாவது கொள்முதல் செய்தல் வேண்டும். பங்குப் பணம் முழுவதையும் ஒரே தடவையில் கட்டலாம். அல்லது பத்து ரூபா வீதம் பத்து வருடத் தவணையில் கட்டலாம். பங்கின் முழுப்பெறுமதியைக் கட்டும் வரை பங்கு இலாபமோ தள்ளுபடியோ பெறமுடியாது. இவை ஏதாவது இருப்பின் பங்கு முதலுடன் சேர்க்கப்படவேண்டும்.

உறுப்புரிமை கோரி விண்ணப்பம் செய்பவர்களது விண்ணப்பங்களை நிருவாக சபை பரிசீலனை செய்து பொதுச் சபையின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கும். பொதுச் சபையின் அங்கீகாரத்தைப் பெறமுன் பொதுக்கூட்டங்களிற் கலந்துகொள்ள முடியாது. ஏனைய உரிமைகளைப் பெறமுடியும். உறுப்பினர்களோடு விளைபொருள் விற்பனை ஒப்பந்தங்கள் செய்யவும் ஒப்பந்தத்தை மீறும் உறுப்பினர்களுக்குத் தண்டம் விதிக்கவோ அல்லது நட்டஈடு பெறவோ துணை விதிகளின்படி அதிகாரம் இருக்கும்.

பொதுச் சபையால் ஒன்பது நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்களும் வருடந்தோறும் சுழல் மாற்று முறையில் மூன்றுபேர் பதவி விலக அவ்விடங்களுக்கு வருடாந்தக் கூட்டத்தில் புதியவர்களையோ, அவர்களையோ தெரிவு செய்வார்கள். நிருவாகசபை தமக்குள் ஒரு தலைவரையும் உபதலைவர்களையும் தெரிவு செய்யும். காரியதரிசி நிருவாக உறுப்பினரில் இருந்து தெரீவு செய்யப்படலாம். அல்லது வெளியிலிருந்து பணியளராக ஒருவரை நியமிக்கலாம். நிருவாக சபை, சங்கத் தொழில் முயற்சிகள் சரியான முறையில் நடைபெறுவதற்காக ஒரு முகாமையாளரையும் ஏனைய பணியாளர்களையும் நியமிக்கலாம். பொதுச் செயற்பாடுகளிற் குறிக்கப்பட்ட விடயங்கள் இச் சங்கத்திற்கும் பொருந்தும்.

1941ம் ஆண்டில் 71 விளை பொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களே இருந்தன. 1946ல் 160 ஆக உயர்ந்து 1958ல் கிட்டத்தட்ட 2000 சங்கங்களாக வளர்ச்சியடைந்தன. பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அமைப்பு முறை அறிமுகப்படுத்தியதும் பல சங்கங்கள் பல நோக்குக் கூட்டுறவுச் சங்களாக மாற்றடைந்தன. மாற்றமடையாது விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களாகத் தொடர்ந்து இயங்கியவை 1976ம் ஆண்டு மக்கள் வங்கிக் கணக்கீட்டின்படி 754ஆகும். இச் சங்கங்கள் நெல், எள், சோளம், குரக்கன், கருகு, மிளகு, மஞ்சள், பயறு, வெங்காயம், புளி, மிளகாய், இறுங்கு, காய்கறி வகைகளைப் பெருமளவில் பயிரிடவும் சந்தைப்படுத்தவும் உதவியுள்ளன. இலங்கை பேர்ற விவசாய நாடுகள் பொருளாதாரப் பலமடைய விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களின் வளர்ச்சியும் விருத்தியும். அவற்றின் திறன் மிக்க சேவையும் அதிகளவில் பயன்படும்.

5. தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்கள்:
மரவரியிலிருந்த சீவல் தொழிலைக் கூட்டுறவுத் தொழில் முறையாகக் கலாநிதி N.ஆ. பெரேரா அவர்கள் நிதிமந்திரியாக இருந்த காலத்தில் மாற்றயமைத்தார். இச்சங்கத்தின் தொழிற்பரப்பு பெரிதாக அமைந்தாலும் அமைப்புச் சிற்றளவு முறையிலேயே அமைந்தது. சீவல் தொழில் புரிபவர்கள் சிறு தொகையினராகப் பரந்து இருத்தலே தொழிற்பரப்புப் பெரிதாக அமைவதற்குக் காரணமாகும்.

நோக்கங்கள்:
கூட்டுறவுக் கொள்கைகளுக்கமைய உறுப்பினர்களின் பொருளாதார சமுதாய நலன்களை விருத்தி செய்வதும், சிக்கனப் பரஸ்பர உதவி – சுயஉதவி ஆகியவற்றின் உணர்ச்சியையும் பயிற்சியையும் உறுப்பினரில் வளர்ப்பதும் சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும். இந்நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பின்வருஞ் செயற்பாடுகளைச் சங்கம் செய்யும் அவையாவன:
1. சிக்கன சேமிப்புத் திட்டங்களை நடைமுறைக்குக்கொண்டு வரல்.

2. கள்ளு, கருப்பநீர் சீவுவதற்காக உறுப்பினர்களுக்கு மரங்களை ஒழுங்கு செய்தலும் ஒதுக்குதலும்.

3. கள்ளுச் சீவுவதற்குத் தேவையான உபகரணங்களை உறுப்பினர்களுக்கு வழங்கல்.

4. உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படும் கள்ளினைப் பெற்று அதன் மொத்த விற்பனைக்கும் சில்லறை விற்பனைக்கும் ஒழுங்கு செய்தல்.

5. உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படும் கருப்ப நீரைப் பெற்றுப் பனங்கட்டி, சீனி முதலியன தயாரித்தல்.

6. நிதிகளைத் திரட்டி உறுப்பினர்களுக்குக் கடன் - முற்பணம் என்பவற்றை வழங்கல்.

7. கள்ளைச் சேகரித்து நவீன முறையிற் பதப்படுத்திச் சந்தைப்படுத்தல். (போத்தலில் அடைத்தல் போன்றவை)

8. சீவல் தொழிலில் திருந்திய முறைகளில் உறுப்பினர்களுக்குப் பயிற்சியளித்தல்.

9. உறுப்பினர்களுக்கு வேலையாளர் நட்டவீட்டுத் திட்டத்தினை உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டுவரல்.

10. ஆணையாளரின் முன் அனுமதியுடன் காணி, கட்டிடங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றைச் சொந்தமாக்கல், கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல்.

11. இந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வேண்டிய அல்லது அனுகூலமான வேறெதையும் செய்தல்.

அங்கத்தும்:
சங்கத் தொழிற்பரப்பினுள் சீவல் தொழிலில் ஈடுபட்டவராயிருத்தல் வேண்டும் என்பதே சிறப்புத் தகமையாகும். ஏனையவை எல்லாச் சங்கங்களுக்கும் பொதுவாகவமைந்த பொதுத் தகமைகளேயாகும். ஒரு பங்கின் பெறுமதி 50 ரூபாவாகும். இப்பங்குப் பணத்தின் பெறுமதி முழுவதையும் ஒரே தடவையில் கட்டலாம் அல்லது 50 ரூபா வீதம் பத்து மாதத் தவணையில் செலுத்தலாம். ஒருவர் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்கும்போது ஒரு பங்கின் முழுத்தொகையையும் அல்லது தவணை வீதம் செலுத்துவதாயின் முதல் தவணைப் பணமாகிய 5 ரூபாவும் பிரவேசப் பணமாகிய ஒரு ரூபாவும் செலுத்துதல் வேண்டும். இவ்வாறு சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களை நிருவாக சபை அடுத்துவரும் பொதுக்கூட்டத்திற் சமர்ப்பிக்க வேண்டும். பொதுச் சபை அங்கத்தவராகச் சேர்க்கப்பட்டமையை அங்கீகரிக்கலாம். தகுதியற்றவர் நற்குணமில்லாதவர் என்ற காரணத்தால் நிராகரிக்கலாம்.

அங்கத்தவர்களின் பொறுப்புச் சங்கக் கடன்களுக்கு அவ்வுறுப்பினர் கையொப்பமிட்ட பங்குகளின் தோற்ற மதிப்பின் 5 மடங்கு வரை வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருவர் 50 ரூபா பங்கைக் கொள்முதல் செய்து 5 தவணையில் 25 ரூபாவைச் செலுத்தியிருப்பினும் சங்கத்தைக் கலைக்கும்போது சங்கக் கடன்களைத் தீர்க்கச் சங்கத்திற் பணமில்லையாயின் தனது சொந்தப் பணத்திலிருந்து 225 ரூபா வரை கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார். இன்னொருவர் 5 பங்குகளை 250 ரூபாவுக்குக் கொள்முதல் செய்து கையொப்பமிட்டிருப்பின், மேலும் 1000 ரூபா வரை தனது சொந்தப் பணத்திலிரந்து சங்கக் கடன்களுக்காகக் கொடுக்கக்கடமைப்பட்டுள்ளார். ஒரு உறுப்பினர் அங்கத்துவத்தை இழந்த பின்னும் இரு ஆண்டுகளுக்கு அவரின் பொறுப்பு வலிவுடையதாகும். ஆயினும் அவர் அங்கத்துவத்தை இழந்த திகதியிலுள்ள கடன்களுக்கு மட்டும் அவரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

பொதுச் சபைக்கும், பொதுவாக ஏனைய சங்கங்களுக்கு அமைந்த கடமைகளும் அதிகாரங்களும் உண்டு. நிருவாக சபையால் இடைவிலக்கல் செய்யப்பட்ட உறுப்பினரின் நிலையை ஆராய்ந்து அவரை விலக்கல் அல்லது இடைவிலக்கலை ரத்துச்செய்தல் ஆகிய பொறுப்பு பொதுச் சபைக்கே உண்டு. இடைவிலக்கல் செய்யப்பட்ட உறுப்பினர் இப்பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கருத்துக்களைத் தெரிவிக்கவும், வாக்களிக்கவும் உரிமை வழங்கப்படல் வேண்டும். விசாரணை நடாத்துவதற்கும் வேறு விசேட வேலைகளைச் செய்வதற்கும் விசேட சிற்சபைகளை நிறுவுதலும் பொதுச் சபையின் கடமைகளில் ஒன்றாக இச் சங்கத் துணைவிதிகளில் குறிக்கப்பட்டுள்ளது.

நிருவாக சபை:
பொதுச் சபை உறுப்பினர்களிலிருந்து 9 பேர் பொதுச் சபையால் தெரிவு செய்யப்படுவர். இவர்களுடன் ஆணையாளர் மூன்றுக்கு மேற்படாதவர்களை நியமனஞ்செய்யலாம். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சுழல் மாற்று முறையில் ஒவ்வோராண்டும் மூன்று பேர் விலகல் வேண்டும். அப்பதவிகளுக்குப் புதியவர்களோ அல்லது அவர்களோ திரும்பவும் தெரிவு செய்யப்படலாம். ஆயினும் தெரிவு செய்யப்பட்ட நிருவாக உறுப்பினர் மூன்று ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றியிருப்பின் ஓராண்டு காலத்துக்காவது மீண்டும் தெரிவு செய்யப்படலாகாது. தனித்தோ கூட்டாகவோ தமது பதவிக்காலமும் முடியுமுன் விலகியவர்கள் அவ்வாறு விலகிய திகதியிலிருந்து ஓராண்டுக்குள் மீண்டும் தெரிவு செய்யப்படத் தகுதியற்றவராவர்.

ஆணையாளரால் நியமனம் பெற்றவர்கள் நியமன காலமும் முடியும்வரை நிருவாக சபை உறுப்புரிமை மட்டுமன்றிப் பொதுச்சபை உறுப்புரிமையையும் பெறுவர். இவர் பிரவேசப் பணமோ பங்குப் பணமோ கட்டவேண்டியதில்லை. மூன்றுமாத பங்கு முதல் தவணைப் பணம் நிலுவையிலிருக்கும் உறுப்பினர்கள் பொதுச் சபையில் கலந்துகொள்ள முடியாது. அங்கத்துவ முடிவு என்பதில் “தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்குச் சீவல் தொழிலில் போதிய காரணங்களின்றி ஈடுபடாதிருத்தல்” என்பது மட்டும் இச் சங்கத்திற்குரிய சிறப்புக் காரணமாகும். ஏனைய காரணங்கள் மற்றச் சங்கங்களுக்குரிய பொதுக் காரணங்களாகும்.

உறுப்பினர்களுடன் சங்கம் உற்பத்தி விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் வேண்டும். உறுப்பினர்கள் தாம் உற்பத்தி செய்யும் கள்ளினை சங்கத்துக்கன்றி வேறு எவருக்கும் விற்பனை செய்யக்கூடாது. கள்ளு உற்பத்தியிலும் விற்பனையிலும் தொழில் பரப்புக்குள் சங்கமே அத்தொழிலை நடாத்துவதற்குத் தனியுரிமை பெற்றுள்ளது. இதற்காகப் பெருந்தொகைப்பணத்தை அரசுக்கு வரியாகச் செருத்துகிறது. சங்கத் தொழிற் பரப்பில் உற்பத்தியாக்கப்படும். கள்ளு முழுவதும் சங்கத்திற்கே வந்து சேர்ந்து சங்கமே ஏகபோக விற்பனையாளராகத் திகழ்கின்றது. உறுப்பினரோ அல்லது உறுப்பினரல்லாதவரோ கள்ளை விற்பனை செய்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையின் மீது வழக்குத் தொடரச் சங்கத்திற்கும் மது பரிபாலனை இலாகாவிற்கும் உரிமையுண்டு.

இச்சங்கங்கள் 73, 74ம் ஆண்டுகளில் கள்ளு மட்டுமன்றி கருப்பநீரைச் சேகரித்துப் பனங்கட்டி செய்யும் தொழிற்சாலைகளையும் நிறுவி நடாத்தி வந்தன. 77ம் ஆண்டில் சீனியின் விலை குறைந்தமையால் பனங்கட்டிக் கேள்வியின் தன்மை குறைந்த இத்தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலையில் இருந்தன. சீனியின் விலை இப்போது அதிகரித்துள்ளமையால் இச்சங்கங்கள் பனங்கட்டித் தொழிற்சாலைகளை மீண்டும் புதுப்பித்து நடாத்தினாற் பொருளாதார இயலுந்தன்மையுடன் இயங்கலாம்.

இச் சங்கத்தால் ஏற்பட்ட விளைவுகள்:
1. சீவல் தொழிலாளரின் தொழில் பாதுகாப்பு ஏற்பட்டமை.

2. உற்பத்தி செய்யும் கள்ளு முழுவதையும் விற்பனை செய்ய வசதி ஏற்பட்டமை.

3. சீவல் தொழிலாளர் கடன், முற்பணம் பெற வசதி ஏற்பட்டமை.

4. தொழில் செய்யும்போது ஏற்படும் அபாயங்களுக்கெதிராக நட்டஈடு பெறும் வசதி பெற்றமை.

5. கள்ளு உற்பத்தி – விற்பனைத்துறையில் தனியுரிமை பெற்றமை.

6. திருந்திய முறைகளைப் பின்பற்ற வசதியேற்பட்டமை.

7. கள்ளு உற்பத்தி செய்வோர் கடன் விற்பனை செய்வதால் ஏற்படும் இழப்புக்களில் இருந்து நீங்கியமை.

8. சீவல் தொழிலாளர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வழி வகுத்தமை.

9. போத்தலில் அடைத்தல், நீண்ட காலத்துக்குப் பதப்படுத்தி வைத்திருத்தல் போன்ற புதிய முறைகளைக் கையாள வழிவகுத்தமை.

10. விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு மேலும் உச்சப் பயன்களை எய்துவதற்குச் சாத்தியக் கூறுகள் மேற்கொள்ளுதல்.

இவற்றைவிடப் பல சமூக நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. வயது வராதவர்கள், இளைஞர்கள் போன்றோர் இரகசியமாகக் கள் அருந்துஞ் செயலைத் தடுக்க உதவியமை, பல இடங்களில் தனிப்பட்டவர்கள் விற்பனை செய்வதால் அவர்களுக்கிடையே எழும்போட்டி பொறாமைகளால் ஏற்படும் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்தமை போன்றவற்றைக் கூறலாம்.

6. பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள்:
மாணவப் பருவத்தில் உருவாகும் இலட்சியம், கொள்கை, பண்புகள் வாழ்வு முழுவதும் நிலைத்து நிற்கக் கூடியன. எனவே பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்களில் பொருளாதார நலன்களிலும் பார்க்க அறஞ் சார்ந்த கூட்டுறவுக் கொள்கைகள் பற்றிய தெளிவான சிந்தனையும் செயல்முறைப் பயிற்சியும் பெறக் கூடியதாகவும் இச்சங்கங்கள் அமைந்திருத்தல் விரும்பத்தக்கது. ஒத்துழைப்பு, சுயஉதவி, பரஸ்பர உதவி, சிக்கனம் என்பனவற்றின் பொருளை அறிந்து அவற்றைக் கடைப்பிடிக்கும் மனப்பாங்கை ஏற்படுத்த வேண்டும். எதிர்காலக் கூட்டுறவாளர்களை உருவாக்கக் கூடிய பயிற்சிக் களங்ளாகப் பாடசாலைக் கூட்டுறச் சங்கம் அமைதல் வேண்டும்.

இச் சங்கத்தால் நிறைவேற்றக்கூடிய கடமைகள்:
1. பாடசாலைப் புத்தகங்கள், கொப்பிகள், உபகரணங்களை விநியோகித்தல்.

2. கூட்டுறவு முறையில் விவசாயம் செய்தல்.

3. கூட்டுறவு முறையில் சிறு கைத்தொழிற் பொருள்களை உற்பத்தி செய்தல்.

4. சிற்றுண்டிச்சாலைகளை நடாத்தல்.

5. கூட்டுச் சேமிப்புக்களை ஏற்படுத்தல்.

6. விடுதிச்சாலை மாணவர்கள் கூட்டுறவு முறையில் விடுதிச் சேவைகளை நடாத்துதல்.

7. சேமிப்புத்திட்டங்களிற் சேர்தல்.

8. இவைபோன்ற பிற செயல்களைச் செய்தல்.


அங்கத்துவம்:
6ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களும் கல்லூரியில் தொழில் புரியும் ஆசிரியர்கள் ஏனைய ஊழியர்ளும் ஒரு ரூபா பங்கு முதலைக் கொள்முதல் செய்வதன் மூலம் உறுப்பினராகலாம். இவர்களைக் கொண்டதே பொதுச் சபையாக இருக்கும்.

நிருவாக சபை:
15 பேரைக் கொண்ட நிருவாக சபை ஒன்று இருக்கும். இதில் 10 மாணவர்களைப் பொதுச்சபை தெரிவு செய்யும். இவர்களுக்கு வயதுத்தகமை இல்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் (பாடசாலை அபிவிருத்திச் சபை) இருந்து மூவரும் ஆசிரியர்களிலிருந்து இருவரும் ஆணையாளரால் நியமிக்கப்படுவர்.

இச்சங்கங்களுக்குக் கணக்காய்வு நிதி, கூட்டுறவு நிதிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. இவை பதிவு செய்யப்பட்டவையென்றும் அங்கீகரிக்கப்பட்டவையென்றும் இருவகையில் உள்ளன.


8:ஐஐ பேரளவு முதனிலைச் சங்கங்கள்
சிலவற்றின் விளக்கம்
பேரளவுச் சங்கங்கள் சிற்றளவுச் சங்க அமைப்பிலும் வேறுபட்டவை. பரந்த தொழிற்பரப்பு அங்கத்தவர் அதிகரிப்பு, சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, சேவைகளின் அளவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நிருவாகத்தையும் சேவை அதிகரிப்புக்களையும் இலகுவாக்கும் பொருட்டுப் பல சிறு தொகுதிகளாகப் (கிளைகளாக) பிரித்த அமைப்பைக் கொண்டது. கிளைகளாகப் பிரித்த அமைப்பைக் கொண்ட சங்கங்களே பேரளவு முதனிலைச் சங்கங்கள் என அழைக்கப்படுகின்றன.

1. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள்:
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆரம்பத்தில் சிற்றளவு அமைப்பு முறையிலேயே ஆரம்பிக்கப்பட்டன. 1957ஆம் ஆண்டிற் கூட்டுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த கௌரவ மந்திரி பிலிப் குணவர்த்தனாவின் திட்டத்துக்கமையவே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாகின. கடன் பெறல், நுகர்ச்சிப் பொருட்களைப் பெறல், விவசாயத்துக்கு வேண்டிய விதைகள், பசளைகள், கிருமிநாசினி வகைகளைப் பெறல், உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்தல் போற் பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதற்காக, மக்கள் பல்வேறு சங்கங்களை அமைப்பதிலுள்ள சிரமங்களை நீக்கவும், பல்வேறு நிறுவனங்களை நாடிச் சென்று தமது தேவைகளை நிறைவேற்றுவதிலுள்ள சிக்கல்களை அகற்றுவதற்காகவும் அமைக்கப்பட்டதே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்.

ஒரு கிராமத்திலுள்ள மக்கள் தங்களுக்கு வேண்டிய பல்வேறு தேவைகளையும் இச்சங்கத்தின் மூலம் பூர்த்தியாக்க வகை செய்யும் வகையில் இதன்விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல பண்டகசதலைச் சங்கங்களும் பல விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாக மாற்றியமைக்கப்பட்டன. இதில் அங்கத்துவம் பெறுபவர்கள் ஒரு பங்கையாவது கொள்முதல் செய்தல்வேண்டும். ஒரு பங்கின் விலை ஐம்பது ரூபா. இதைத் தவணை துறையில் செலுத்துவதற்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. நிருhகசபை உறுப்பினர்கள் 9 பேர் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவர். இவர்கள் சுழல்மாற்று முறையில் தெரிவு செய்யப்பட்டுப்பதவி, வகிப்பர். இச்சங்கங்கள் உறுப்பினர்களுக்கு குறுங்காலக் கடன், மத்திய காலக்கடன், நீண்டகாலக் கடன் என்பனவற்றை வழங்கின. ஏனைய கருமங்கள் யாவும் பொதுச் செயற்பாடுகளிற் குறிக்கப்பட்டவை போலவே இருந்தன.

மறுசீரமைப்பு:
இலங்கையில் உள்ள கூட்டுறவு அமைப்புக்களைத் திருத்தியமைக்கும் நோக்குடன் 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டாக்டர் அலெக்சாண்டர் பிரேசர் லெயிட்லோ அவர்கள் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை அரசு நியமித்தது. இக்குழுவில் திரு. ஆர். எஸ். டீமெல், திரு. ரி.டி.பாணபொக்கே, திரு. எஸ்.எஸ். புரி, திரு. கே. ஆழ்வாப்பிள்ளை ஆகியோர் உறுப்பினராகக் கடமையாற்றினர். இக்குழுவானது கூட்டுறவு இயக்கங்களின் செயற்பாடுகளை நன்கு ஆராய்ந்து அமைப்பிலுள்ள குறைபாடுகள், வளர்ச்சிக்குத் தடையாக இருந்த காரணிகள், சீரமைப்புச்செய்ய வேண்டிய முறைகள் போன்ற ஆலோசனைகளை அறிக்கை மூலம் 1969ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில் சமர்ப்பித்த ஆலோசனைகளுக்கிணங்க 1971ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்கள் மறுசீரமைக்கப்பட்டன. மறுசீரமைப்புக்கு முன் இலங்கை முழுவதிலும் சிறுசிறு சங்கங்களாக 4000க்கு மேற்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இருந்தன.

இவற்றில் பல இயங்காதிருந்தன. பல தொடர்ந்து நட்டத்தில் இயங்கிக்கலைக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தன. மிகச் சிறிய அளவு சங்கங்களே மிகச் சொற்ப இலாபத்துடன் இயங்கிக் கொண்டிருந்தன. மறுசீரமைப்பின்போது ஒரு உள்@ராட்சி மன்றப் பிரதேசத்தை ஒரு தொழிற்பரப்புப் பிரதேசமாகக் கொண்டு, அது சிறிதாக இருப்பின் இரண்டு மூன்று உள்@ராட்சி மன்றப் பிரதேசங்களைத் தொழிற்பரப்புப் பிரதேசமாகக் கொண்டு இலங்கை முழுவதிலும் சுமார் 310 பேரளவுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாகச் சீரமைக்கப்பட்டன.

மறுசீரமைப்பின் நோக்கங்கள்:
1. சங்கங்களைப் பரந்த அளவில் அதிக அளவு அங்கத்தவர்களைக் கொண்டதாக அமைத்துப் பொருளாதாரப் பலமிக்கதாக உருவாக்கல்.

2. நிபுணத்துவ சேவைகளைச் சங்கம் பெறக்கூடியதாக உருவாக்கல்.

3. பொருளாதார இயலுந்தன்மை கொண்ட நிறுவனங்களாக மாற்றியமைத்தல்.

4. உறுப்பினர்களின் அதிக அளவு சேவைகளைப் பூர்த்தி செய்ய வாய்ப்பளித்தல்.

5. சிறந்த ஊழியர்களைப் பெறவும் அவர்களுக்குத் தகுந்த சம்பளம், வேலை உத்தரவாதம் போன்றவற்றை ஏற்படுத்தவும் வசதி அளித்தல்.

6. கிராமியப் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கச் செய்தல்.

7. சிறந்த நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்க வசதி செய்தல்.

8. உறுப்பினர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல்.

9. உறுப்பினர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல்.

10. உறுப்பினர்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் வசதிகளையேற்படுத்தல்.

11. குடிசைத் தொழில், கைப்பணிப் பொருள்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய உறுப்பினர்களுக்கு ஊக்கமளித்தல்.

12. உறுப்பினர்களுக்குத் தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகளை வழங்கல்.

13. உறுப்பினர்களிடையே வங்கிப் பழக்கத்தை ஏற்படுத்தல்.

14. கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படாதிருக்கும் மூலவளங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்திப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தல்.

15. உறுப்பினர்களின் கலாச்சாரத் தேவைகளை நிறைவேற்றல் போன்றவையாகும்.

மறுசீரமைப்பு மூலம் பேரளவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டதும், அத்தொழிற் பிரதேசத்திலுள்ள சிறிய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும், பண்டகசாலைச் சங்கங்களும், விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களும் பேரளவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கததுடன் அவற்றின் சொத்துக்களும் பொறுப்புக்களும் இணைக்கப்பட்டு அவற்றின் பதிவு அழிக்கப்பட்டது.

இலங்கையில் ஆரம்ப கூட்டுறவுச் சங்கங்களும் அதன் அங்கத்தவர் தொகையும்
1995 – 1997

சங்க வகை 1995 ஃ 1996 1996 ஃ 1997
சங்க எண்ணிக்கை அங்கத்தவர்கள்
(ஆயிரத்தில்) சங்க எண்ணிக்கை அங்கத்தவர்கள்
(ஆயிரத்தில்)
01. பலநோக்கு கூ. சங்கங்கள் 300 2916.1 300 3117.8
02. சிக்கன் கடனுதவி 8035 789 8363 876.1
03. தேயிலை, இறப்பர், தென்னை 109 13.5 117 21.3
04. பால் உற்பத்தியாளர் 265 58.2 265 58.7
05. மிருக வளர்ப்பு 37 5.4 31 8.7

06. வேறு விவசாயம் 218 21.7 252 26.7
07. புடவை 25 31.6 34 30.5

08. மீன்பிடி 740 6.9 621 75.6

09. சிறு கைத்தொழில் 241 38.8 249 39.7
10. பாடசாலை 1345 267.6 1047 238.8

11. வைத்தியசாலை 5 14.9 5
12. தொழிலாளர்
23 5.9 20 0.9
13. மாவட்ட இளைஞர் சேவை 17 438.8 25 439.0
14. வேறு
902 44.3 954 52.1
15. மொத்தம்
12262 4712.8 12283 4992.4


மறுசீரமைக்கப்பட்டபின்

பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அமைப்பு

இயக்குனர் தலைவர்



பொதுச்சபை பொதுமுகாமையாளர் மேற்பார்வை
100 பிரதிநிதிகள்

எண்பார்வை

பகுதி முகாமையாளர்கள்

1 2 3 4 5 6 7 8 9






பணியாளர்கள்


தலைமைக் கந்தோர்







கிளைக்குழுக்கள் (பல) ஆலோசனை – மேற்பார்வை




கிளைகள் (பல)



பணியாளர்கள்


கிளைப்பொதுச் சபைகள் (பல)





உறுப்பினர்கள்

சேவை
மக்கள்


பகுதி முகாமையாளர்கள்: 1. நிதிமுகாமையாளர் (கணக்காளர்) 2. ஆளணி முகாமையாளர்
3. கடன் முகாமையாளர் 4. கைத்தொழில் முகாமையாளர்
5. நுகர்ச்சி முகாமையாளர் 6 – 9 தேவையான வேறு பகுதி
முகாமையாளர்


அமைப்பு முறை விளக்கம்:
மக்கள் தங்கள் சகல தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக அவர்களாற் கூட்டுறவுச் சட்டம் விதிகளுக்கமைய அமைக்கப்படுவதே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமாகும். சங்கம் பரந்த தொழிற்பரப்பையுடைமையால் கிளைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்திலுள்ள கிளைகளின் மூலமாகவே உறுப்பினராகச் சேரமுடியும். ஒரு கிளையிற் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டதே அக்கிளையின் பொதுச் சபையாகும். ஒரு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிளைப் பொதுச் சபைகள் இருக்கும். ஒவ்வொரு கிளை உறுப்பினர்களும் தமக்குள் இருந்து ஒன்பது பேரைக் கொண்ட கிளைக் குழுவைக் கிளைக் கருமங்களைக் கவனிப்பதற்காக நியமிப்பர். அவர்கள் தமக்குளிருந்த தலைவர், உபதலைவர், காரியதரிசி என்பவர்களைத் தெரிவு செய்வர். சங்கப் பொதுச் சபைக்குத் தமது கிளையின் பிரதிநிதிகளையும் தெரிவு செய்வர்.

கிளைகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் 100 பேரைக் கொண்டதே சங்கப் பொதுச் சபையாகும். சங்கப்பொதுச்சபை சங்கத்தின் செயற்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு இயக்குனர் சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும். பொதுச் சபையால் தெரிவு செய்யப்பட்டவர்களும் ஆணையாளர் நியமிப்பின் அவர்களையும் கொண்டதே இயக்குநர் சபையாகும். இயக்குநர் சபை சங்கத்தின் நாளாந்த கருமங்களை மேற்பார்வை செய்வதற்காக ஒரு தலைவரையும் தலைவர் இல்லாத வேளைகளில் கருமமாற்றுவதற்காக ஒரு உபதலைவரையும் தெரிவு செய்வர். அத்துடன் சங்கக் கருமங்களையும் தொழில்களையும் நடாத்துவதற்கு ஒரு பொது முகாமையாளர், வேண்டிய பகுதி முகாமையாளர்கள், ஏனைய பணியாளர்கள், கிளைகளுக்கு வேண்டிய முகாமையாளர்கள் போன்றோரை இயக்குனர் சபை நியமிக்கும். கிளை முகாமையாளர்களும் கிளைப் பணியாளர்களும் அக்கிளை உறுப்பினர்களுக்குச் சங்கம் ஆற்றவேண்டிய சேவைகளை ஆற்றுவர். கிளை உறுப்பினர்களுக்கு சரியான முறையில் கிளைப் பணியாளர்கள் சேவையாற்றுகிறார்களா என்பதைக் கிளைக்குழு மேற்பார்வை செய்யும். அத்துடன் வேண்டிய ஆலோசனைகளையும் கிளைப் பணியாளர்களுக்கு வழங்கும். சங்கக் கருமங்கள் யாவும் கூட்டுறவுச் சட்டம் விதிகளுக்கமைவாக நடைபெறுகின்றதா என்பதை கூட்டுறவுத் திணைக்கள ஊழியர்கள் மேற்பார்வை செய்து ஆலோசனை வழங்குவர்.


நோக்கங்கள்:
கூட்டுறவுக் கொள்கைகளுக்கமைய உறுப்பினர்களின் பொருளாதார, சமூக, கலாச்சார நலன்களுக்கு ஊக்கமளித்தல், உறுப்பினர்களிடையே சிக்கனம், ஒருவருக்கொருவர் உதவி, தன்னுதவி ஆகியவற்றை உற்சாகப்படுத்தல் என்பனவே முக்கிய நோக்கங்களாகும். இந்நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டுத் துணைவிதிகளுக்கமையப் பின்வரும் அதிகாரங்கள் இருக்கும். அவையாவன:

1. சிக்கன சேமிப்புத் திட்டங்களைக் கையாளுதல்.

2. உறுப்பினர்களின் குடும்ப, விவசாய, கைத்தொழில் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.

3. எல்லா வகையான பொருள்களிலும் மொத்த சில்லறை வியாபாரத்தினை நடாத்தல்.

4. நிதிகளைத் திரட்டல், உறுப்பினர்களுக்குக் கடன்களையும் முற்பணங்களையும் வழங்கல், வேறு கூட்டுறவுச்சங்கங்களில் முதலீடு செய்தல்.

5. விளைபொருள், கால்நடைவளர்ப்பினால் பெறப்படும் பொருள்கள், குடிசைக் கைத்தொழில் பொருள்கள் ஆகியவற்றைக் களஞ்சியப்படுத்தல், பதனிடுதல், சந்தைப்படுத்தல்.

6. உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் பொருட்டு ஒப்பந்தத்தில் அல்லது வேறு வகையில் வேலைகளை மேற்கொள்ளல்.

7. வேறு எவ்விதமான வியாபாரத்தையோ அல்லது முயற்சிகளையோ மேற்கொள்ளுதல் அல்லது ஈடுபடல்.

8. கூட்டுறவு ஆக்க ஆணையாளரின் முன் அனுமதியுடன் காணி, கட்டடம், இயந்திரங்கள் ஆகியவற்றைச் சொந்தமாக்கல், வாங்குதல், விற்றல்.

9. தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான அல்லது உதவத்தக்க அனைத்தையும் செய்தல்.


தொழிற்பரப்பு:
சங்கத்தின் தொழிற்பரப்பு துணைவிதிகளில் குறிப்பிட்டபடி ஒரு உள்@ராட்சி மன்றப் பிரதேசமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உள்@ராட்சி மன்றப் பிரதேசங்களாகவோ அமைந்திருக்கும். ஆனால் ஆணையாளரின் முன் அனுமதியுடன் அவரால் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கமைவாக வேறு எந்தத் தொழிற்பரப்பிலும் சங்கம் செயற்படலாம். ஆணையாரின் தீர்மானப்படி குறிக்கப்படும் கால எல்லையில் அந்த மேலதிக தொழிற்பரப்பும் சங்கத் தொழிற்பரப்புக்குட்பட்டதாகக் கருதப்படும்.

உறுப்புரிமை:
பொதுச் செயற்பாடுகளிற் குறிப்பிட்ட வயதுத்தகமை, வதிவிடத்தகமையுள்ளவர்கள் சங்க அங்கத்துவ விண்ணப்பப் பத்திரங்களின் இரு பிரதிகளைப் பெற்று அவற்றை நிரப்பிக் கையொப்பமிட்டுக் கிளைமுகாமையாளரிடம் கொடுத்து ஒரு முழுப் பங்கின் பெறுமதியையாவது கொள்முதல் செய்தவுடன் அவர் உறுப்பினராக அனுமதிக்கப்படல் வேண்டும். கிளை முகாமையாளர் உறுப்புரிமை கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை அடுத்துவரும் கிளைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உறுப்புரிமைக்குத் தகமையற்ற விண்ணப்பங்களை நிராகரிக்கக் கிளைக்குழுவுக்கு அதிகாரமுண்டு. கிளைக்குழுவினால் உறுப்புரிமை நிராகரிக்கப்பட்ட எவரும் அக்குழுவின் முடிவை எதிர்த்து இயக்குநர் சபைக்கு மனுச் செய்யலாம். இயக்குநர் சபை கிளைக் குழுவின் முடிவை உறுதிப்படுத்தவோ மாற்றவோ அதிகாரமுண்டு. ஒரு கிளைக்குக் கிளைக்குழுவைத் தெரிவு செய்யும் வரை அக்கிளையின் உறுப்புரிமை விண்ணப்பங்களை இயக்குனர் சபை ஆலோசனைக்கு எடுத்து முடிவு செய்யும்.

உறுப்புரிமை கோரி விண்ணப்பித்தவரின் விண்ணபத்தை கிளைக்குழு நிராகரித்து, இயக்குநர் சபையும் நிராகரிப்பின் அவர் பதிவாளருக்கு மேன்முறையீடு செய்யலாம். பதிவாளரின் (ஆணையாளர்) தீர்ப்பே முடிவானது. (கூட்டுறவுச் சட்டம் 60 இதைப்பற்றிக் கூறுகிறது).

உறுப்புரிமை கோரி விண்ணபித்து ஒரு பங்கின் முழுப் பெறுமதியையாவது கொள்முதல் செய்த ஒருவர் கிளைக்குழுவினால் அவரின் விண்ணப்பம் ஏற்கப்படும் வரை கிளை உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ளவோ, அல்லது வாக்குரிமையைப் பயன்படுத்தவோ, அல்லது கிளைக்குழுவுக்குச் சங்கப்பொதுச் சபைக்கு இயக்குனர் சபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கோ, உரிமையற்றவர் என்ற நிபந்தனைக்குட்பட, எல்லா உறுப்பினர்களுக்கும் துணைவிதிகள் கூட்டுறவுச் சட்டம் என்பவற்றில் குறிப்பிட்டுள்ள உரிமைகளும், பொறுப்புக்களும், கடமைகளும் இருக்கும். ஒரு உறுப்பினர் சங்கத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகளில் உறுப்புரிமை வகிக்க முடியாது. உறுப்புரிமை முடிவுறப்பொதுச் செயற்பாடுகளில் குறிப்பிட்டவையே.


உறுப்பினர்களை நீக்குதல்:
எந்த உறுப்பினராவது துணைவிதிகளை மீறினால் அவரை நீக்குமாறு இயக்குநர் சபைக்கு ஏன் அறிவிக்கக் கூடாதென ஏழுநாட்களுக்குள் காரணங்காட்டுமாறு அவரைக் கேட்பதற்குக் கிளைக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. கிளைக்குழுவின் கருத்துப்படி போதிய காரணங்கள் காட்டப்படாதுவிடினும், அவர் விளக்கங் கொடுத்திருந்தால் அவ் விளக்கம் திருப்தியற்றது என்பது பற்றியும் அறிக்கை ஒன்று இயக்குநர் சபைக்குக் கிளைக்குழுவால் அனுப்பப்படல் வேண்டும். இயக்குனர் சபை தேவைப்படும் விசாரணையை நடத்திய பின்பு அடுத்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஆராய்வதற்கு விடல் வேண்டும். பொதுச் சபையின் கூட்டத்திற்குச் சமூகமளித்து வாக்களிப்பதற்கு உரிமையுள்ள பிரதிநிதிகளின் மொத்தத் தொகையின் 2ஃ3 பங்கு பெரும்பான்மை வாக்குகளால் அவ்வுறுப்பினரை நீக்குவதற்குப் பொதுச் சபைக்கு அதிகாரம் உண்டு.

உறுப்பினர்களின் உத்தரவாதம்:
சங்கத்தின் கடன்களுக்கு ஓர் உறுப்பினரின் உத்தரவாதம் அவர் கொள்முதல் செய்த பங்குகளால் மட்டும் வரையறுக்கப்பட்டிருக்கும். ஓர் உறுப்பினரின் உறுப்புரிமை முடிவுறுங்கால் அச்சமயம் அச்சங்கத்துக்கிருந்த கடனுக்கு அவரது உத்தரவாதம் அவருடைய உறுப்புரிமை முடிவுற்ற திகதியிலிருந்து இரண்டு வருடத்திற்குச் செல்லுபடியாகும். இறந்த ஓர் உறுப்பினரின் சொத்துக்கள், அவர் இறந்த திகதியில் சங்கம் பெற்ற கடன்களுக்காக அவர் இறந்த திகதியிலிருந்து இரண்டு வருட காலத்திற்கு உத்தரவாதமாயிருக்கும்.

பங்குகள்:
ஒரு பங்கின் பெறுமதி ஒரு ரூபாவாகும். சங்கத்தின் பங்குகளின் தொகைக்கு மேலெல்லை விதிக்கப்படவில்லை. உறுப்பினர் பெறவிரும்பும். கடனுக்குக் குறிப்பிட்ட தொகைப் பங்குகளை வைத்திருக்க வேண்டுமென இயக்குநர் சபை காலத்திற்குக் காலமும் விதிக்கலாகும் நிபந்தனைக்குட்பட ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு முழுப் பங்கினையாவது வைத்திருத்தல் வேண்டும். ஒவ்வெரரு பங்கின் பெறுமதியும் அது வழங்கப்பட்டதும் முழுவதாகச் செலுத்தப்படல் வேண்டும். தனி உறுப்பினர் வைத்திருக்கக் கூடிய பங்கின் மேலெல்லை சங்கப் பங்கு முதலில் 1ஃ5 க்கு மேற்படலாகாது.

பங்குகளைத் திருப்பியெடுக்க இயலாது. ஆயினும் உறுப்புரிமை முடிவுற்றவர்களுக்குச் சங்கத்துக்கு உறுப்பினரல்லாதவர்களிடம் பெற்ற வைப்புக்கள் கடன்கள் இல்லாதுவிடின் அவர் வைத்திருந்த பங்குகளின் வைப்புப் பெறுமதிக்கு மேற்படாத தொகையினை வழங்கலாம். வேறு ஒரு உறுப்பினருக்கோ அல்லது உறுப்புரிமைக்கு விண்ணப்பஞ் செய்துள்ள தகுதியுள்ள ஒருவருக்கோ இயக்குனர் சபையி; அனுமதியுடன் ஒருவர் பங்குகளை மாற்றஞ் செய்யலாம்.

கிளைக் குழுக்கள்:
சங்கத்தின் ஒவ்வொரு கிளைக்கும் அக்கிளையின் உறுப்பினர் பதிவேட்டிற் பெயர் பதியப்பட்ட உறுப்பினர்கள் தமக்குளிருந்து ஒன்பது பேரைத் தமது கிளைக்குழுவிற்கு ஆண்டுதோறும் தெரிவு செய்தல் வேண்டும். ஆண்டுதோறும் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்பது ஆரம்பகாலத் துணைவிதிகளில் விதிக்கப்பட்டிருந்தது. இப்போது இத்துணைவிதியை இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளுக்கொருமுறை எனப் பல சங்கங்கள் திருத்திக்கொண்டன.

ஆணையாளரால் ஆக்கப்பட்டு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும் விதிகளுக்கமையக் கிளைக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும். தற்போதுள்ள விதிகளின்படி கிளைக்குழுத் தேர்தல்களை நடாத்துவதற்குத் தேர்தல் அதிகாரிகளையும், உதவி அதிகாரிகளையும் ஆணையாளர் நியமித்துக் கிளைக்குழுக்களின் தேர்தல் திகதிகளையும் அறிவிப்பார். குறிக்கப்பட்ட தேர்தல் நாளன்று நியமனப் பத்திரங்களைப் பெறுவதற்குக் குறிக்கப்பட்ட நேர அளவு கொடுக்கப்பட்டிருக்கும். அந்நேரத்துக்குள் ஒருவரைப் பிரேரிப்பவர் அல்லது அனுமதிப்பவர் இரு பிரதிகளில் நியமனப் பத்திரங்களைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தல் வேண்டும். நியமனப் பத்திரம் கொடுக்கப்படும் நேரம் முடிந்ததும் நியமணப் பத்திரத்தின் ஒரு பிரதி பகிரங்கமாக ஓட்டப்படும். நியமனப் பத்திரங்களைப் பற்றிய ஏதாவது ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றைத் தெரிவிப்பதற்குச்சிறிது கால அளவு அளிக்கப்படும்.

இக்கிளை குழுக்களை தேர்ந்தெடுப்பதில் திருத்தி அமைக்கப்பட்ட மாதிரி உபவிதியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கிளைப் பொதுச் சபையைக் கூட்டி அதிலிருந்தே 9 கிளை நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும், கிளைக்குழுவில் அங்கத்தவர்களாக வருபவர்கள் குறைந்த பட்சம் ஒரு குறித்த தொகையை ரொக்கக் கொள்வனவாக அக்கிளையிற் கொள்வனவு செய்திருக்க வேண்டும் எனவும் திருத்தம் மேற்கொள்ள்பட்டிருந்தது. இத்திருத்தம் பல சங்கங்களின் உப விதிகளில் சேர்க்கப்படாததால் தொடர்ந்தும் பழைய முறையே நடைமுறையில் இருந்து வருகிறது.

கிளைக்குழுவின் கடமைகள்:
1. அக்கிளை உறுப்பினர்களின் நலவுரிமைகளைப் பேணும் பொருட்டு விழிப்புக் குழுவாயிருத்தல்.

2. கிளையோடு தாம் கொண்டுள்ள தொடர்புகளைப் பற்றி உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தால் அவற்றினைப் பெற்று விசாரணை செய்து தேவையேற்படின் கிளைமுகாமையாளர், பொது முகாமையாளர் அல்லது நெறியாளர் குழுவுக்கு அறிவித்தல்.

3. கிளை முகாமையாளரின் வேலையை மேற்பார்வை செய்தல்.

4. தேவை ஏற்படும்போது கிளை முகாமையாளருக்கு, பொது முகாமையாளருக்கு அல்லது நெறியாளர் குழுவுக்கு ஆலோசனைகள் வழங்கல்.

5. சங்கத்தின் நிருவாகிகளால் தமது கவனத்துக்கு விடப்படும் உறுப்பினர் கடன் விண்ணப்பம் பற்றி அந்நிருவாகிகளுக்குத் தகவல்கள் கொடுத்தல். கடன் விண்ணப்பங்கள் பற்றித் தகவுரை செய்தல்.

6. கிளை உறுப்பினர்களிடமிருந்து கடன்களை அறவிடுவதற்கும் நெறியாளர்கள் குழுவினால் உதவி கோரப்படும். வேறு எவ்விடயத்திலும் நெறியாளர் குழுவிற்கு ஆலோசனை வழங்கி உதவி செய்தல்.

7. இயக்குனர் சபையால் அல்லது சங்கத்தின் பொது முகாமையாளரினால் கிளைக் குழுவுக்குக் குறிப்பாக விடப்படும் எல்லா விடயங்களைப் பற்றிய கருத்துக்களையும் தகவுரைகளையும் வெளியிடல்.

8. உறுப்பினர் கல்விக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தல்.

9. இயக்குனர் சபையினால் தமக்குப் பொறுப்பளிக்கப்படும் வேறு எந்தக் கடமைகளையும் நிறைவேற்றுதல்.

10. உறுப்பினர் அனுமதியை ஆராய்தல்.

11. துணைவிதிகளை மீறும் உறுப்பினர்களைப் பற்றி இயக்குனர் சபைக்கு அறிவித்தல்.

12. சங்கத்தின் பொதுச்சபைக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல்.

13. தமக்குள்ளிருந்து தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோரைத்தெரிவு செய்தல்.


கிளைக்குழுக் கூட்டங்கள் தேவையேற்படும் போதும், குறைந்தது மாதம் ஒருமுறையாவது கூடுதல் வேண்டும். கிளைக்குழுத் தலைவர், கிளைக்குழு உறுப்பினரில் பெரும்பான்மையோர், சங்கத் தலைவர், ஆணையாளர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்டவர் அழைக்கும் போதெல்லாம் செயலாளராற் கூட்டப்படவேண்டும்.

ஒவ்வொரு கிளைக்குழச் செயலாளரும் அக்கிளைக் குழுவின் கடிதத் தொடர்புகளைக் கவனிப்பதோடு கிளைக்குழு, கிளைப்பொதுச்சபைக் கூட்டங்களு;குச் சமூகமளித்து அக்கூட்டங்களின் அறிக்கைகளை உரிய ஏடுகளிற் பதிந்து அவ்வறிக்கைகளின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை இயக்குனர் சபைக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்;.

ஒவ்வொரு கிளைக் குழுவிலும் ஏற்படும் வெற்றிடங்களுக்கு அக்கிளையின் உறுப்பினர் பதிவேட்டில் உள்ளவர்களை ஒத்துத் தேர்ந்தெடுப்பதற்கு ஒவ்வொரு கிளைக்குழுவுக்கும் அதிகாரம் உண்டு. கிளைக்குழுவின் உறுப்பினரிடையே ஏதாவது வெற்றிடம் இருப்பதினால் அல்லது அக்கிளைக்குழுவுக்கு எந்த உறுப்பினரையாவது தெரிவு செய்ததில் அல்லது நியமித்தலில் குறைபாடு இருப்பதினால், அக்காரணத்தின் நிமித்தம் அக்கிளைக் குழுவின் எந்தச் செயலோ நடவடிக்கையோ செல்லுபடியற்றதாகி விடாது.

ஒரு சங்கத்தின் சேவைகள் சகல அங்கத்தவர்களுக்கும் அதிக அளவிற் பயன்படுவதற்கு ஒவ்வொரு கிளைக்குழுவும் சங்கத்துக்குப் பூரண ஒத்துழைப்பையும் தகுந்த ஆலோசனைகளையும் வேண்டிய உதவிகளையும் காலத்துக:குக் காலமும் செய்தல் வேண்டும். கிளைக்குழுக்களின் செயற்பாட்டுத் திறனிலேயே அக்கிளைகளின் வளர்ச்சி தங்கியுளது.


பொதுச்சபை:
இயக்குநர் சபை உறுப்பினர்களையும் கிளைகளால் தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபை உறுப்பினர்களையும் கொண்ட ஒரு பொதுச் சபை சங்கத்திற்கு இருக்கும். கிளைகளால் தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபைப் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வாக்குரிமையுண்டு.

வருடாந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்குக் குறைந்தது ஆறு வாரங்களுக்கு முன்னர் கிளைச் செயலாளருக்கு, ஒவ்வொரு கிளையும் நியமிக்க உரிமை பெற்றுள்ள பிரதிநிதிகளின் தொகையை சங்கச் செயலாளர் அறிவித்தல் வேண்டும். பின்வரும் வாய்ப்பாட்டிற்கேற்ப முழு எண்ணுக்குக் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிளையினதும் பிரதிநிதிகள் தொகை நிர்ணயிக்கப்படும்.


வாய்ப்பாடு:
கிளையின் உறுப்பினர் தொகை ஓ 100 ஸ்ரீ பிரதிநிதிகளின் தொகை
சங்க மொத்த உறுப்பினர் தொகை

தொகையை நிர்ணயிக்கும்போது பின்வரும் நிபந்தனைகள் பின்பற்றப்படல் வேண்டும் அவையாவன –

1. ஒவ்வொரு கிளையும் ஆகக் குறைந்தது ஒரு பிரதிநிதியையாவது அனுப்ப உரிமை பெற்றிருக்கும்.

2. ஒன்பது பிரதிநிதிகளுக்கு மேல் அனுப்புவதற்கு எந்தக் கிளைக்கும் உரிமை இல்லை.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் ஒரு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இருந்து அடுத்த வருடாந்தப் பொதுக்கூட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட திகதிக்கு முதல் நாள் வரை அக்கிளையின் பிரதிநிதியாகக் கடமையாற்றுவர். இத்தகைய ஒவ்வொரு பிரதிநிதிக்கும் கிளைக்குழுத் தலைவரும் கிளைச் செயலாளரும் கையொப்பமிட்ட அதிகாரக் கடிதம் ஒன்று வழங்கப்படல் வேண்டும்p. இவ்வதிகாரக் கடிதத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி சங்கச் செயலாளருக்கு அனுப்புதல் வேண்டும்.

பொதுக்கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்படல் வேண்டும். ஒரு வருடாந்தப் பொதுக் கூட்டத்துக்கும் அடுத்த வருடாந்தப் பொதக் கூட்டத்திற்குமிடையில் 15 மாத காலத்துக்கு மேற்படலாகாது. பொதுக் கூட்டங்களைக் கூட்டுவதற்குரிய காரணங்கள் பொதுச் செயற்பாடுகளிற் கூறப்பட்டவையோடு சிறப்பாகக் கிளைக்குழுக்களில் 1ஃ3 க்குக் குறையாதவை அல்லது பொதுச்சபைப் பிரதிநிதிகளில் 1ஃ3 க்குக் குறையாதவர்கள் எழுத்துமூலம் வேண்டும்போது செயலாளரால் கூட்டப்பட வேண்டும் என்பது அமையும். பொதுச்சபை சம்பந்தமான ஏனைய விடயங்கள் பொதுச்செயற்பாடுகளிற் கூறியதைப் போன்றதேயாகும்.

இயக்குனர் சபை:
சங்கத்துக்கு ஒரு இயக்குனர் சபை இருத்தல் வேண்டும். இச்சபையில் 15 உறுப்பினர்களுக்கு மேல் இருத்தலாகாது. இவர்களில் 5 பேரைத் தெரிவு செய்வதற்குப் பொதுச்சபைக்கு உரிமை உண்டு. எஞ்சியவர்களை ஆணையாளர் நியமிப்பர் என ஆரம்பகாலத் துணைவிதிகளில் விதிக்கப்பட்டிருந்தது. இப்போது பொதுச் சபையால் தெரிவு செய்யப்பட்ட ஏழு இயக்குனர்களைக் கொண்ட சபை இருக்குமென உபவிதி திருத்தப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் பொதுச் செயற்பாடுகளில் நிருவாகசபைக்குக் கூறப்பட்டவை இச்சங்க இயக்குனர் சபைக்கும் பொருந்தும்.

கிராமிய வங்கி:
உறுப்பினர்களின் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் வங்கியின் உதவியுடன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் வங்கிகளே கிராமிய வங்கிகளாகும். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குக் கிராமிய வங்கியைச்செயற்படுத்த மக்கள் வங்கி பலவகையான உதவிகளைச் செய்கின்றன. அவையாவன:

1. வங்கித் தொழில் பற்றி ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல் (நகை அடைவ பிடித்தல், தொழிற்பயிற்சி போன்றவை)

2. கிராமிய வங்கிக்குத் தேவையான தளபாட உபகரணங்களை வழங்கி அதன் பெறுமதிப் பணத்தை தவணை முறையில் மீளப் பெறல்.

3. பொதுச்சபை அங்கீகரித்த வெல்லைக்கு அமைவாக வங்கித் தொழிலுக்குத் தேவையான நிதி வசதிகளைக் காலத்துக்குக் காலம் வழங்கல்.

4. தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கல்.

5. கணக்கு வைத்தல் முறைபற்றி வழிகாட்டல்.

6. உறுப்பினர் பெறும் கடன்கள் உரிய தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை மேற்பார்வை செய்தல்.

7. கிராமிய வங்கியிலுள்ள மேலதிக நிதியை வைப்புகளாகப் பெற்று உரிய வட்டி வழங்கல்.

8. வேண்டிய ஆலோசனைகளை வழங்கல்.

9. தொழில் முறைகளையும், கணக்கு முறைகளையும் காலத்துக்குக் காலமும் பரிசோதனை செய்தல்.

உறுப்பினர்களுக்கு அளிக்கும் சேவைகள்:
1. உறுப்பினர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்று அதற்கு நியாயமான வட்டி வழங்கல்.

2. உறுப்பினர்களின் கடன் தேகைளைப் பூர்த்தி செய்தல்.


வைப்புக்களைப் பெறல்:
கிராமிய வங்கி உறுப்பினர்களிடமிருந்தும் உறுப்பினர்களல்லாதவர்களிடமிருந்தும் வைப்புக்களைப் பெறலாம். இவ் வைப்புக்கள் வைக்கப்படும் முறையைக் கொண்டு நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. சேமிப்பு வைப்பு.
2. நிலையான வைப்பு.
3. முதலீட்டுச் சேமிப்பு வைப்பு.
4. கூட்டுறுப்பினர் சேமிப்புக் கணக்கு.

கடன் வழங்கல்:
கிராமிய வங்கிகளின் நோக்கம் ஏனைய வணிக வங்கிகளின் நோக்கத்தில் இருந்து வேறுபட்டது. வைப்புக்களைப் பெற்றுக் கடன்களை வழங்குவதன் மூலம் இலாபம் திரட்டும் வணிக வங்கிகளைப் போலல்லாது உறுப்பினர்களின் பொருளாதார மேம்பர்ட்டுக்கும் வருமான உயர்வுக்கும் தேவையான கடன்களை வழங்குவதே கிராமிய வங்கிகளின் முக்கிய நோக்கமாகும். இந்நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே சேமிப்புக்களை ஊக்குவித்து வைப்புக்களைத்திரட்டுகின்றது. கடன்திட்டம் உற்பத்திக்கும் வியாபாரத்திக்கும் ஏனைய தொழில் முயற்சிகளுக்கும் இடவசதி ஏற்படுத்தல் போன்றவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளர். அத்துடன் உறுப்பினரின் அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்ந்து நிதி உபயோகத் தன்மையை மேற்பார்வையும் செய்கிறது.

கடன் வகைகள்:
1. விவசாயக் கடன்.

2. அடைவுக் கடன்.

3. வைப்புக்கு எதிரான கடன்.

4. விரிவாக்கக் கடன்.


1. விவசாயக் கடன்:
அரசாங்கக் கொள்கை திட்டம், உத்தரவாதம் என்பவற்றுக்கமைய மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கும் குறுங்காலக்கடன்களாகும்.

கடன் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள்:
1. பயிர் வகை.

2. பயிர் செய்யும் இடப்பரப்பு.

3. பங்குகளின் தொகை.

4. உறுப்பினர்களுக்கு அனுமதிக்கப்பட்ட உச்சக் கடனெல்லை.

அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பயிர்ச் செய்கைகளுக்கே இக்கடன் வழங்கப்படுகின்றது. நெல், வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற பயிர்ச் செய்கைகளுக்காக இவை வழங்கப்படுகின்றது. குறிப்பிட்ட சில பயிர் வகைகளுக்கு ஆறுமாதக் கடன்களும் சிலவற்றுக்கு ஒன்பது மாதத் தவணைக் கடனும் வழங்கப்படுகிறது. தவணைக் காலத்துக்குள் பணஞ்செலுத்தப்படின் குறைந்த வீத வட்டியும். தவணை தப்பின் கூடுதல் வீத வட்டியும் அறவிடப்படும். இரு உறுப்பினரின் பிணையுடன் கடன் வழங்கப்படுகிறது. தவணைமுறையிலும் வட்டி, பகுதிப் பணம் செலுத்த வசதியுண்டு.

2. அடைவுக் கடன்:
உறுப்பினர்களுக்கும் உறுப்பினரல்லாதவர்களுக்கும் இக்கடன் வழங்கப்படுகின்றது. நகைகளைப் பிணையாகப் பெற்று இக்கடன் வழங்கப்படுகிறது. ஒருவருடகாலத் தவணைக் கடனாகும். வட்டி மாதக் கணக்கிலன்றி நாட்கணக்கில் கணக்கிடப்படுகின்றது. உறுப்பினர்களுக்கு விவசாயத் தேவைகளுக்குக் கடன் வழங்கும் போது நகைகளின் பெறுமதிக்கு அளிக்கப்படும் கடன்தொகை அதிகரிக்கப்படும்.

3. வைப்புக்கு எதிரான கடன்:
முதலீட்டுச் சேமிப்பு வைப்பு, நிலையான சேமிப்புக் கணக்குள்ளவர்கள் அக்கணக்குக்கு எதிராகக் கடன்பெற வசதி செய்யப்பட்டுள்ளது. பெறுங் கடனையுந் தவணை மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

விரிவாக்கக் கடன்:
பல்வேறு தேவைகளுக்கு வழங்கப்படும் கடன் திட்டமே விரிவாக்கக்கடன் திட்டமாகும். இத்திட்டத்தினடிப்படையில் நீண்ட காலக்கடன்கள், இடைக்காலக் கடன்கள் குறுங்காலக்கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன்களின் தன்மைக்கேற்பச் சொத்துப்பிணை, ஆட்பிணை என்பவற்றின் அடிப்படையிற் கடன் வழங்கப்படும்.

கடன் நோக்கம் தவணைக் காலம்
1. உற்பத்தி 5 வருடம்
2. கட்டம் (திருத்தம், விஸ்தரிப்பு) 5 வருடம்
3. சிறு வியாபாரத் தொழில் முயற்சி 5 வருடம்
4. பாற்பண்ணை 5 வருடம்
5. கடன் மீளல் (அடைவ - ஈடு) 5 வருடம்
6. கோழிப்பண்ணை 3 வருடம்
7. மின்னிணைப்பு 1 வருடம்
8. நுகர்ச்சிக் கடன் 1 வருடம்
9. கைமாற்றுக் கடன் 1 வருடம்
10. அவசரகாலக் கடன் 1 வருடம்


இக்கடன் தொகைகளும் தவணைக் கால எல்லையும் இயக்குநர் குழு மக்கள் வங்கியின் ஆலோசனைக்கிணங்க காலத்துக்குக் காலம் மாற்றப்படலாம்.


கடன் மனுச் செய்யும் போது உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டிய
ஏனைய தகமைகள்:
1. கிராமிய வங்கியில் சேமிப்புக் கணக்குடையவராக இருத்தல்.

2. கடன் மனுச் செய்யும் உறுப்பினர், அவரின் பிணைகாரர் ஆகியோரின் பொருளாதாரக் கூற்றுக்கள் (படிவம் 1126) கிளைக்குழுவாற் பரிசீலனை செய்யப்பட்டுச் சங்கத்தில் இருத்தல் வேண்டும்.

3. கடன் மனுச் செய்யும் உறுப்பினர், அவரின் பிணைகாரர் ஆகியோருக்கு வழங்கக் கூடிய தனிக்கடனெல்லை (உச்சக் கடன் எல்லை) படிவம் (1) கிளைக்குழுவால் சிபாரிசு செய்யப்பட்டுச் சங்கத்தில் இருத்தல் வேண்டும்.

பொருளாதாரக் கூற்று:
இக்கூற்றில் உறுப்பினரின் பொருளாதார வரலாறு அடங்கியிருக்கும். உறுப்பினரின் முக்கிய தொழில், உபதொழில் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானங்கள், குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை, அவர்களின் தொழில்கள், வருமானங்கள், சொத்துக்கள் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானங்கள் மூலம் குடும்பத்தின் மொத்தச் செலவுகளின் பாகுபாடு, தேறிய வருமானம், கடன்கள் போன்ற விபரங்கள் இப்படிவத்தில் இருக்கும். மேற்கூறப்பட்டவற்றில் மாற்றங்கள் ஏற்படும் போது புதிதாகப் பொருளாதாரக் கூற்று ஒன்றைச் சங்கத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டியது உறுப்பினரின் கடமையாகும்.

உறுப்பினர் தனிக் கடனெல்லை:
கடன் பெற விரும்பும் உறுப்பினர் தாம் பெறவிரும்பும் சகல கடன்களதும் உச்ச அளவைக் கோரித் தனிக்கடன் எல்லை விண்ணப்படிவத்திற் (படிவம் 1) சங்கத்திற்கு விண்ணப்பித்தல் வேண்டும். அவர் உறுப்புரிமை வகிக்கும் கிளைக்குழு அவரின் விண்ணப்பத்தையும், அவராற் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதாரரக் கூற்றையும், அவரின் நடத்தைகளையும், அவரின் பொருளாதார இயலுந் திறனையும் கருத்திற்கொண்டு அவர் விண்ணப்பித்த தனிக்கடனெல்லையை அல்லது அதற்குக் குறைவான தொகையைத் தனிக்கடனெல்லையாகச் சிபாரிசு செய்யும். இதுவே அவ்வுறுப்பினரின் அங்கீகரிக்கப்பட்ட தனிக்கடனெல்லையாகும். இத்தொகைக்கு மேற்பட்ட தொகையை அவ்வுறுப்பினர் சங்கத்திலிருந்து கடனாகப் பெறமுடியாது.

கடன் பிணை:
உறுப்பினர் இருவரின் பிணையைக் கொண்டு அல்லது சொத்துப் பிணையைக் கொண்டு கிராமிய வங்கி கடன் வழங்கும். உறுப்பினர் இருவரின் பிணையைக்கொண்டு கூடுதலாக எடுக்கக்கூடிய கடன் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அவரின் பங்குப் பணத்தின் பத்து மடங்குக்கு மேற்படலாகாது. குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட கடன்கள் யாவும் சொத்துப் பிணையின் மீதே வழங்கப்படல் வேண்டும். சொத்தின் பெறுமதி வழங்கப்படும் கடனிலும் இருமடங்குக்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும்.

கடன் வழங்கல்:
பொருளாதாரக் கூற்று, தனிக்கடனெல்லைப் படிவங்கள் கொடுக்கப்பட்ட உறுப்பினர் கடனுக்கு விண்ணப்பித்தால், அக்கடன் விண்ணப்பத்தையும், தொழில் முயற்சிக்குரிய கடனாயின் தொழில் முயற்சித் திட்டத்தையும் ஆராய்ந்து கிளைக்குழு சிபாரிசு செய்து இயக்குநர் சபை அங்கீகரித்த பின், கடன் உடன்படிக்கை, பிணை உடன்படிக்கை என்பவற்றை நிறைவேற்றிக் கடன் வழங்கப்படும். கடன் பொருள்களாக வழங்கச் சங்கம் போதிய முயற்சி எடுக்கும். அத்துடன் திட்டத்தைப் பகுதி பகுதியாக நிறைவேற்றும் பொருட்டுப் பகுதி பகுதியாகக் கடன் வழங்க்பபடும். நீண்டகாலக் கடன்கள், இடைக்காலக் கடன்கள் என்பவற்றைத் தவணை முறையில் அறவிடுவதற்கு ஒழுங்கு செய்யும். கடன் குறித்த நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை மக்கள் வங்கிப் பிரதிநிதியும், சங்கமும் மேற்பார்வை செய்யும். குறித்த நோக்கத்திற்குப் பயன்படுத்தாதுவிடின் உடன் அறவிட நடவடிக்கை எடுக்கப்படும்.

விரிவாக்கப்பட்ட திட்டங்கள் பலவற்றின் நோக்கம் வெளிப்படையாகவே தெரிகின்றன. இங்கு இரு கடன்களின் நோக்கம் பற்றியே சிறிது விளக்க வேண்டியுள்ளது. அவையாவன:
1. கைமாற்றுக் கடன்.

2. அவசரகாலக் கடன்கள்.

கைமாற்றுக்கடன்:
கிராமப்புறங்களிற் சிறுவருமாம் பெறுந்தொழிலை நடத்துபவர்கள் அதிக வட்டிக்குப் பணம் பெற்று நடாத்துவதாற் பொருளாதார நிலையில் உயர முடியாதவர்களாக இருந்தார்கள். சிறிய அளவிலான கமத்தொழில், சிறுகைத்தொழில். சிறு வியாபாரம் செய்யும் ஏழை மக்கள் தங்களது தொழில்களை இலாபகரமான முறையிற் செய்வதற்கு வேண்டிய முதலைச் சுலபமாகவும் விரைவாகவும் இலகுவான வட்டி வீதத்துடனும் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே கைமாற்றுக் கடனாகும். கிராமிய வங்கியின் ஏனைய கடன் நிபந்தனைகள் இதற்கும் பொருந்தும். இரு உறுப்பினர் பிணையுடன் இக்கடனைப் பெறலாம். கடன் ஒப்பந்தத்தில் நாளாந்தம் வாராந்தம், மாதாந்தம், மூன்று மாதம், ஆறு மாதம் அல்லது ஒரு வருடத் தவணையில் திருப்பிச் செலுத்துவதாகக் குறிக்கப்படல் வேண்டும். தவணைக்கு முதலையும் வட்டியையும் திருப்பிச் செலுத்தியபின் மீண்டும் தொழில் முயற்சிக்காக இக் கடனைப் பெறலாம்.

அவசரக்காலக் கடன்கள்:
கிராமிய வங்கியில் சேமிப்புக் கணக்குள்ளவர்கள் மிகுந்த அவசரத் தேவையின் பொருட்டு இக்கடனைப் பெறுவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. கடும் நோய், மரணவீடு போன்ற உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இக் கடனைப் பெறுவதற்கு கிராமிய வங்கிக்குச் செல்லாது தமது கிளையிலேயே பெறுவதற்குரிய ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

வணிக வங்கியிலிருந்து மக்களுக்குச் சேவையளிப்பதில் கிராமிய வங்கிகளுக்குள்ள சிறப்பம்சங்கள்.
1. மக்களுக்கு அண்மையில் இருத்தல்.

2. மக்களுக்கு வசதியான வேலைநேரங்களை அமைத்தல்.

3. கணக்கை ஆரம்பிக்கும் நடைமுறைகள் இலகுவாக இருத்தல்.

4. பணத்தை மீட்பதில் சிரமங்கள் குறைவு.

5. உறுப்பினர்களின் கொடுக்கல் வாங்கல்களுக்கு முத்திரை வரி விலக்கு.

6. தமது கிளைக@டாகச் சேமிப்பு வைப்புக்களைச் செலுத்துவதற்கு வசதி.

7. உடன் தேவைகளுக்குக் குறிக்கப்பட்ட சிறு தொகையைத் தமது சேமிப்பில் இருந்து எடுப்பதற்குக் கிராமிய வங்கிக்குச் செல்லாது தமது கிளைகளிலேயே மீட்பதற்குரிய வசதி.

மக்கள் வங்கி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதென்றே கூறவேண்டும். வளர்ச்சிப்போக்கைப் பின்வரும் அட்டவணை காட்டும்.


கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் பற்றிய தரவுகள்

விபரம் தொகை
1993 1994 1995 1996 1998
1. கிராமிய வங்கிகள் இணைந்துள்ள ப.நோ.கூ.
சங்கங்கள் 292 300 298 298 298

2. கிராமிய வங்கிகள் இணைந்துள்ள
கிராமிய வங்கிச் சமாசம் 6 6 6 6 6

3. மொத்தக் கிராமிய வங்கிக் கிளைகள்
(1 – 2க்குக் கீழ்) 1152 1175 1216 1251 1293

4. திரட்டிய மொத்த மேலதிகம் (ரூ.ப.ல.) 128.9 642.8 793.3 971.3 1160.3

5. மொத்தச் சொத்தின் பெறுமதி (ரூ.ப.ல.) 6249.6 6641 8202 9404 10610



கூட்டுறவுக் கிராமிய வங்கித் தரவுகள் (மாகாணங்கள்)

மாகாணம் வங்கிக் வைப்புக் வைப்புப் வழங்கப்பட்ட அடகு
கிளைகள் கணக்குகளின் பெறுமதி கடன் முற்பணம்
தொகை ஆயிரம் ரூ.ப.ல. ரூ.ப.ல. ரூ.ப.ல.

இலங்கை 1293 4415 8522.1 2542.0 1940.7

மேல் 337 1112 2617.4 643.5 856.3

மத்தி 169 594 907.1 277.5 283.2

தென் 214 773 1664.5 486.2 294.5

வடகிழக்கு 61 110 200.6 - -

வடமேல் 214 873 1571.5 643.7 171.3

வடமத்தி 59 231 234.7 69.2 56.9

ஊவா 90 214 322.9 130.5 97.9

சப்ரகமுவ 149 508 1003.4 291.5 180.6


2. கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள்:
சிறு சங்கங்களாக இருந்த கடற்றொழிலாளர் சங்கங்கள் புனரமைப்பின் போது பேரளவுச் சங்கங்களாக மாற்றியமைக்கப்பட்டன.

நோக்கங்கள்
1. கூட்டுறவுக் கொள்கைகளுக்கமையத் தனது உறுப்பினர்களின் பொருளாதார, சமூக, கலாச்சார நலன்களை முன்னேற்றல்.

2. தமது உறுப்பிர்களின் மத்தியிற் சிக்கனம், பரஸ்பர உதவி, சுய உதவி போன்றவற்றுக்கான உற்சாகத்தையும் பழக்கத்தையும் ஊக்குவித்தல்.

நோக்கங்களை அடையச் சங்கங்களுக்குரிய அதிகாரங்கள்.
1. மீன்பிடிக் கருவிகள், மீன்பிடிச் சாதனங்கள், மீன்பிடி உபகரணங்கள், உள்ளிணை, வெளியிணை, கடலக இயந்திரங்கள், இவற்றின் உதிரிப்பாகங்கள், மீன்பிடிக் கலங்கள் ஆகியவற்றைச் சங்கத்தின் பாவனைக்காகக் கொள்முதல் செய்தல் அல்லது வாடகைக்குப் பெறல்.

2. மேற்கூறப்பட்டவற்றை உறுப்பினர்களுக்கு விற்றல், அல்லது வாடகைக்கு விடல்.

3. மேற்குறிப்பிட்ட பொருள்களைச் சங்கத்துக்குச்சொந்தமாக வைத்திருத்தல், இயக்குதல், பராமரித்தல்.

4. ஆணையாளரின் அங்கீகாரத்தோடு சங்கத்துக்குத் தேவைப்படும் சொத்துக்களைக் கொள்வனவு மூலமோ வேறு வகையிலோ பெறல்.

5. உறுப்பினர்களதும் சங்கத்தினதும் மீன், பதனிடப்பட்ட மீன், மீனிலிருந்து பெறப்படும் பொருள்கள் மற்றும் நீர்வாழ் பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்தல், தரப்படுத்தல், பதனிடல், ஒன்றாக்கல், ஏற்றி இறக்கல், விற்றல், ஏற்றுமதி செய்தல்.

6. சங்கத்திடம் விற்பனைக்காக உறுப்பினர்களால் ஒப்படைக்கப்பட்ட மேற்கூறப்பட்ட பொருள்களைப் பிணைவைத்து முற்பணம் (கடன் வழங்கல்)

7. மீன்பிடிக் கலங்கள், மீன்பிடிச் சாதனங்கள், மீன்பிடி உபகரணங்கள், வெளியிணைக் கடலக இயந்திரங்கள், அவற்றின் உதிரிப் பாகங்கள், வெளியிணை இயந்திரங்களால் இயக்கப்படும் தெப்பம், வள்ளம், ஓரஸ், தும்புக் கண்ணாடி வள்ளம் போன்றவற்றைக் கொள்வனவு செய்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கல்.

8. மீன்பிடிக் கலங்களை அமைப்பதனைப் பொறுப்பேற்றல், மீன்பிடிக் கலங்கள், உள்ளிணை, வெளியிணை இயந்திரங்கள் ஆகியவற்றைப் பழுதுபார்த்தல்.

9. மீன்பிடிக்கும் சிறந்த முறைகளை உறுப்பினர்களுக்குக் கற்பித்தலும் நிபுணத்துவ அறிவுரை வழங்கலும்.

10. உறுப்பினர்கள் ஊழியர்களது நன்மைக்காக ஆணையாளரின் அனுமதியுடன் நிதியை உண்டாக்குதலும் செயற்படுத்தலும்.

11. மீன் பிடித்தலுக்காக இடம் பெயர்தலை மேற்கொள்ளலும் மேற்கொள்ளும் உறுப்பினர்களுக்கு உதவுதலும்.

12. உறுப்பினர்களுக்கு வீட்டு வசதி, சுகாதார வசதி போன்றவற்றை ஏற்படுத்தல்.

13. ஆணையாளரின் முன்னனுமதியுடன் இந்நோக்கங்களை அடைவதற்கு வேண்டிய எல்லா முயற்சிகளையும் தொழில்களையும் மேற்கொள்ளுதல்.

அமைப்பு:
இதுவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் அமைப்பைப் போன்றது. கிளைப்பொதுச்சபை, கிளைக்குழு, சங்கப் பொதுச்சபை, இயக்குநர் சபை என்ற படிமுறையான அமைப்பைக் கொண்டது. இவை ஒவ்வொன்றுக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களிற் கூறப்பட்ட அதிகாரங்கள், பொறுப்புக்கள், கடமைகள் உண்டு.

அங்கத்துவத் தகமை:
ஏனைய சங்கங்களுக்குப் பொதுவாக விதிக்கப்பட்ட வயது, வதிவிடத்தகமைகளுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவராயும் நல்லொழுக்கமுள்ளவராயும் இருத்தல் வேண்டும். இறந்த உறுப்பினரின் பின்னுரித்தாளர் 18 வயதுக்குக் குறைவாக இருப்பினும் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம். சங்கத் தொழிற் பரப்பினுள் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்புரிமை பெறுவதற்குச் சங்கத் துணைவிதிகள் இடமளித்துள்ளன. மீன், பேணிய மீன், மீன் பிடிச் சாதனங்கள், மீன்பிடிக் கருவிகள், கலங்கள், உதிரிப்பாகங்கள் போன்றவற்றை வியாபாரஞ் செய்பவர்கள் உறுப்பினராகச் சேர முடியாது. வேறொரு கடற்றொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவரும் சேர முடியாது.

பங்குகள்:
ஆரம்பத்தில் ஒரு பங்கின் பெறுமதி 500 ரூபாவாக இருந்தது. இப்பணம் 25 ரூபா வீதம் 20 மாதத் தவணைகளில் செலுத்த வசதி செய்யப்பட்டது. அண்மையில் துணைவிதித் திருத்தத்தின் மூலம் ஒரு பங்கின் பெறுமதி குறைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களாகச் சேருபவர்கள் ஆகக் குறைந்தது ஒரு பங்கினையாவது கொள்முதல் செய்தல் வேண்டும்.

அங்கத்தவர் பொறுப்பின் உத்தரவாதம்:
சங்கத்தின் கடன்களுக்கு உறுப்பினர் ஒருவரின் பொறுப்பு அவரின் பங்குகளின் ஐந்து மடங்காக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பினர் இச்சங்கத்தில் இருந்து விலகும் திகதியிலுள்ள சங்கக்கடன்களுக்கு அத்தேதியிலிருந்து தொடர்ந்து இரண்டடு ஆண்டுகளுக்கு அவர் பொறுப்பாயிருத்தல் வேண்டும். ஒரு உறுப்பினர் இறந்தால் அத்தேதியிலுள்ள சங்கக் கடன்களுக்கு அவரின் சொத்துக்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பொறுப்பாயிருத்தல் வேண்டும்.

கிளைக்குழு:
சங்கத்தின் ஒவ்வொரு கிளையும் தமது உறுப்பினர் பதிவேட்டிலுள்ள உறுப்பினர்களிலிருந்து ஏழு பேர் கொண்ட கிளைக்குழுவொன்றைத் தெரிவு செய்யும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைக்குழுக்களின் அதிகாரங்கள் - பொறுப்புக்கள் - கடமைகள் பொதுவாக இவற்றுக்குமுண்டு. பொதுச்சபைக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல் இவற்றின் கடமைகளில் ஒன்று. கிளை உறுப்பினர் பதிவேட்டிலுள்ள ஒவ்வொரு பத்து உறுப்பினருக:கும் ஒரு பொதுச் சபைப் பிரதிநிதி வீதம் தெரிவு செய்யலாம். எந்தக் கிளைக்குழுவும் ஒன்பது பிரதிநிதிகளுக்குமேல் தெரிவு செய்யக்கூடாது.

இயக்குநர் சபை:
ஒன்பது பேருக்கு மேற்படாத இயக்குநர் சபை இருக்கும். இதில் 3 பேர் பொதுச் சபையால் தெரிவு செய்யப்படுவர். 6 அங்கத்தவர்களுக்கு மேற்படாதவர்கள் ஆணையாளரால் நியமிக்கப்படுவர். இது ஆரம்பத்தில் இருந்த துணைவிதி. இப்போது பொதுச் சபையால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் தொகை ஐந்தாகத் திருத்தஞ் செய்யப்பட்டுள்ளது. ஏனைய அதிகாரங்கள் - பொறுப்புக்கள் - கடமைகள் என்பன பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குள்ளவை போன்றன.

ஏனைய விடயங்கள் சங்கப் பொதுச் செயற்பாடுகளில் குறிப்பிட்டனவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் குறிப்பிட்டனவும் இதற்குப் பொருந்தும்.

3. புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்:
சிறு சங்கங்களாக இருந்த நெசவுக் கூட்டுறவுச் சங்கங்கள் புரனமைப்பின் போது பேரளவு சங்கங்களாக மாற்றியமைக்கப்பட்டன. முன்பு இருந்த சிறு சங்கங்கள் பெரிய சங்கத்தின் கிளைகளாக மாற்றியமைக்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டம் முழுவதற்கும் ஒரு சங்கமே அமைக்கப்பட்டது.

கூட்டுறவுக் கொள்கைகளுக்கமைய உறுப்பினரின் பொருளாதார சமூக கலாச்சாரங்களை மேம்படுத்தலே முக்கிய நோக்கம். உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு மூலப்பொருள்களைப் பெற்றுக்கொடுத்தல், உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தல், மின்தறி மூலம் உற்பத்தி செய்தல், நெசவுக்குதவும் ஏனைய தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபடும்.

உறுப்புரிமை பொதுத் தகமைகளுடன் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களாயிருத்தல் வேண்டும். நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் 18 வயதுக்குக் குறைந்தவர்களாயினும் துணைவிதி அனுமதிப்பின் சேர்க்கப்படுவர். அப்பகுதியிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும் அங்கத்துவம் பெறத் துணைவிதிகள் அனுமதிக்கின்றன. ஒரு அங்கத்தவர் ஒரு முழுப் பங்கினையாவது கொள்முதல் செய்தல் வேண்டும்.

இயக்குநர் சபை உறுப்பினரில் 5 பேர் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவர். இரண்டுக்கு மேற்படாதவர்களை ஆணையாளர் நியமிப்பர். ஏனைய விடயங்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பொதுச்செயற்பாடுகளில் கூறப்பட்டவை போன்றதேயாகும்.

8:ஐஐஐ இரண்டாம் நிலைச் சங்கங்கள் (சமாசங்கள்)
கூட்டுறவுச் சங்கங்களை உறுப்பினராகக் கொண்டனவும் அச் சங்கங்களின் தொழில் முயற்சிகளைத் திட்டமிட்டு ஒருமுகப்படுத்தி உதவிகள் அளித்து விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படுவனவும் ஆகிய சங்கங்களே இரண்டாம் நிலைச் சங்கங்களாகும். மறுசீரமைப்பின் பின் இவ்வகைச் சங்கங்களிற் பல பேரளவு முதனிலைச் சங்கங்களாக மாற்றியமைக்கப்பட்டன. சில தலைமைச் சங்கங்களுடன் இணைக்கப்பட்டன.

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்கள், புடவை நெசவாளர் சமாசங்கள் போன்றவை பேரளவு முதனிலைச் சங்கங்களாக மாற்றியமைக்கப்பட்டன. வடபகுதி விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களின் சமாசம் இலங்கை நுகர்ச்சியாளர் சமாசத்துடன் (மாக்பெட்) இணைக்கப்பட்டது.

1. வடமாகாணக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்:

நோக்கம்:
அங்கத்துவச் சங்கங்கள், அங்கத்துவச் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோரின் கடற்றொழில் முயற்சிகளுக்குத் தகுந்த திட்டங்களிட்டு ஒருமுகப்படுத்தி ஆலோசனை வழங்கி விருத்தியுறச் செய்வதே இதன் நோக்கம் இந்நோக்கங்களை எய்தும் பொருட்டுக் கீழ்க்காணும் செயற்பாடுகளைச் சமாசம் மேற்கொள்ளும், அவையாவன:-

1. உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வேண்டிய மூலவளங்களைத் தேடல், ஒதுக்கீடு செய்தல்.

2. கடற்றொழிலுக்கு வேண்டிய சாதனங்கள், கருவிகள், கலங்கள் போன்றவற்றை விநியோகஞ் செய்தல்.

3. மீன்பிடித் தொழிலுக்கு வேண்டிய விஞ்ஞான தொழில் நுட்ப ஆலோசனையைப் பெற்று உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வழங்கல்.

4. மீன், பதனிடப்பட்ட மீன் ஏனைய நீர்வாழ் பொருள்கள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தும் வசதிகளைச் செய்து கொடுத்தல்.

5. உறுப்புரிமைச் சங்கங்களிடமிருந்து நீர்வாழ் பொருள்களைச் சேர்த்தல், பதனிடல், பண்டகசாலையிடல், போக்குவரத்து வசதிசெய்தல் ஆகியவற்றுக்கு உதவல்.

6. கடற்றொழிலில் ஆராய்ச்சி செய்து புதிய முறையில் தொழில் நடாத்துவதற்கு உதவல்.

7. ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல்.

8. ஊழியர்களுக்குச் சேமலாப நிதித் திட்டங்களை உருவாக்கல்.

9. புதிய சங்கங்களை உருவாக்கல்.

10. அங்கத்துவச் சங்கங்களைச் சுதந்திரமான முறையிற் பரிசோதனை செய்து முன்னேற்றத்திற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கல்.

11. நோக்கங்களை எய்துவதற்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்தல்.

அங்கத்துவம்:- வடமாகாணத்திலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்கள் யாவும் அங்கத்துவம் பெறலாம். தொழிற்பரப்பு வடமாகாணம் பங்கொன்றின் பெறுமதி 500 ரூபா. இதனை 100 ரூபா வீதம் தவணை முறையில் செலுத்த வசதியளிக்கப்பட்டுள்ளது.

பொதுச்சபை அங்கத்துவ சங்கங்களின் பிரதிநிதிகளைக்கொண்டதாகும். சுமார் 40 சங்கங்கள் உறுப்புரிமை பெற்றுள்ளன. ஒவ்வொரு அங்கத்துவ சங்கமும் தமது 300 உறுப்பினர்களுக்கொரு பொதுச் சபைபிரதிநிதி வீதம் அனுப்பலாம். ஆனால் ஒரு சங்கம் அனுப்பக் கூடிய ஆகக் கூடிய பிரதிநிதிகள் மூன்றாகும்.

இயக்குனர் சபைக்குப்பொதுச் சபை 5 பேரைத் தெரிவு செய்யலாம். ஒரு உறுப்புரிமைச் சங்கத்தில் இருந்து ஒரு இயக்குனருக:கு மேல் தெரிவு செய்யக்கூடாது. ஆணையாளர் இரண்டுக்கு மேற்படாத இயக்குனர்களை நியமிக்கலாம். ஏனைய விடயங்கள் சங்கப்பொதுச் செயற்பாடுகளில் குறிக்கப்பட்டவை போன்றதாகும்.

மேற்கொள்ளும் தொழிற்பாடுகள்:
1. உறுப்புரிமைச் சங்கங்களுக்குச் சுழியோடும் சாதனங்கள் விநியோகித்தல்.

2. குங்கிலியம் விநியோகித்தல்.

3. கணக்குப் படிவங்கள் விநியோகித்தல்.

4. மீன்பிடி உபகரணங்கள் விநியோகித்தல்.

5. வலைகளை விநியோகித்தல்.

6. கடலட்டைச் சட்டி விநியோகம்;.

7. கடலட்டை ஏற்றுமதிக்கு உறுப்புரிமைச் சங்கங்களுக்கு உதவல்.

8. சங்குகள் ஏற்றுவதற்கு உறுப்புரிமைச் சங்கங்களுக்கு உதவல்.

9. இறால், கருவாடு என்பவற்றில் மொத்த வியாபாரஞ் செய்ய உதவல்

10. மீன்தூள் தொழிற்சாலை நடாத்தல்.

11. ஐஸ்கட்டித் தொழிற்சாழைல நடாத்தல். (ஆரம்ப வேலைகள் நடைபெறுகின்றன.)

இச்சமாசம் உறுப்புரிமைச் சங்கங்களைக்கொண்டு 1979ம் ஆண்டிற் சுமார் 2064அந்தர் கடலட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் 29888 சங்குகளை ஏற்றுமதி செய்தற்கும் ஒழுங்குகள் அமைத்துக்கொடுத்தன. சங்கு, கடலட்டை ஏற்றுமதித் தொழிலில் தரகுக் கூலியாக 1977ம் ஆண்டு 95145 ரூபா 96 சதமும் 1978ம் ஆண்டு 2,86,757 ரூபா 57 சதமும் இச் சமாசம் பெற்றிருந்தது. 1980ம் ஆண்டு மே மாதமளவில் மீன்தூள் அரைக்குந் தொழிற்சாலையை ஆரம்பித்தது. ஐஸ்கட்டித் தொழிற்சாலையை ஆரம்பித்துச் செவ்வனே இயங்கியது.

1980க்குப் பின் நாட்டில் நிலவிய சூழ்நிலையை அடுத்து இவற்றின் செயற்பாடுகள் பெரும்பாலும் பாதிப்படைந்துள்ளன. இச்சமாசத்தின் முன்னைய அனுபவங்களை அவதானிக்கும் போது இவ்வகை மீன்பிடிச் சங்கங்களும், சமாசங்களும் நல்ல சேவையை ஆற்ற முடியும்.

தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்:
உறுப்புரிமைச் சங்கங்களின் தொழில் முயற்சிகளுக்குத் தகுந்த திட்டங்களை வகுத்து ஒருமுகப்படுத்தி விருத்தியுறுவதற்கு வேண்டிய முயற்சிகளை எடுத்தலாகும். இந்நோக்கங்களை எய்தற் பொருட்டுக் கீழ்க்காணும் செயற்பாடுகளை மேற்கொள்ளும்.

1. பனம் பொருள், தெங்குப் பொருள் உற்பத்தி சம்பந்தமான தொழிற்நுட்ப ஆலோசனைகளை உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வழங்கல்.

2. பனம் பொருள், தெங்குப் பொருள் உற்பத்தி சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.

3. பனம் பொருள், தெங்குப் பொருள் உற்பத்தி சம்பந்தமான பிரச்சாரங்களை மேற்கொள்ளல்.

4. உற்பத்தி செய்யப்பட்ட உறுப்புரிமைச் சங்கங்களின் பொருள்களைச் சேர்த்தல், தரப்படுத்தல், பண்டகசாலையிடல், போக்குவரத்து வசதி செய்தல்.

5. தெங்கு, பனம் பொருள்களின் மூலப்பொருள்களைக் கொண்டு புதிய தொழில்களை ஆரம்பிக்க உறுப்புரிமைச் சங்கங்களைத் தூண்டல்.

6. உறுப்புரிமைச் சங்கங்கள் ஒன்று திரட்டிய மூலப்பொருள்களைக் கொண்டு புதிய முயற்சிகளை ஆரம்பித்தல்.

7. புதிய சங்கங்களை உருவாக்க முயற்சிகளை எடுத்தல்.

8. ஊழியர்களுக்கு வேண்டிய பயிற்சி ஒழுங்குகளை எடுத்தல்.

9. உறுப்புரிமைச் சங்க அங்கத்தவர்கள் தொழில் முயற்சிலீடுபடும் போது ஏற்படும் விபத்து நட்டஈட்டுத் திட்டங்களை மேற்கொள்ளல்.

வடபகுதியிலுள்ள தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் இதில் உறுப்புரிமை பெற முடியும். ஒரு பங்கின் விலை 1000 ரூபா. இதை இரு தவணையில் செலுத்த வசதியளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பொறுப்பு பங்குகளால் வரையறுக்கப்பட்டது.

உறுப்புரிமைச் சங்கங்களின் பிரதிநிதிகளைக்கொண்டதே இதன் பொதுச் சபையாகும். உறுப்புரிமைச் சங்கங்கள் ஒவ்வொன்றும் தமது 200 உறுப்பினர்களுக்கு ஒரு பொதுச் சபைப் பிரதிநிதியைத் தெரிவு செய்து அனுப்பலாம். எந்தச் சங்கமும் மூன்று பொதுச் சபைப் பிரதிநிதிகளுக்கு மேல் அனுப்ப முடியாது. பொதுச் சபையால் ஏழு பேர் கொண்ட இயக்குனர் சபை தெரிவு செய்யப்படும். ஒரு உறுப்புரிமைச் சங்கத்திலிருந்து ஒரு இயக்குநருக்கு மேல்தெரிவு செய்யக்கூடாது.

செயற்பாட்டுத் திட்டங்கள்
1. உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வேண்டிய கணக்குப் படிவங்களை விநியோகஞ் செய்தல்.

2. போத்தலில் கள்ளடைக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கல்.

3. உறுப்புரிமைச் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு விபத்து நலச் சேவைத்திட்டமொன்றை உருவாக்கல்.

4. தும்புத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கல்.

இரண்டாவது தொடக்கம் நான்காவது வரையுள்ள திட்டங்களைச் செயற்படுத்த வேண்டிய முயற்சிகளைச் சமாசம் மேற்கொண்டு வெற்றி கண்டது.

8:ஐஏ மூன்றாம் நிலைச் சங்கங்கள்
(தலைமைச் சங்கங்கள்)
இவை அகில இலங்கை ரீதியில் கூட்டுறவுச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட சங்கங்களாகும். இவை உறுப்புரிமைச் சங்கங்களின் தொழில் முயற்சிகளைத் திட்டமிட்டு ஒழுங்கமைத்து ஒருமுகப்படுத்தி முன்னேற உதவலும், அவற்றுக்கு வேண்டிய உதவிகளையும் சேவைகளையும் ஆற்றுவதோடு உறுப்புரிமைச் சங்கங்கள் பின்பற்றக் கூடிய முறையில் தமது செயற்பாடுகளையும் ஒழுங்கு முறைகளையும் நிருவாகத்தையும் செயற்படுத்துவனவாகவும் இருக்கும். இலங்கையில் இவ்வித தலைமைச் சங்கங்கள் பன்னிரண்டு உண்டு. அவையாவன –

பெயர் அங்கத்தவர் தொகை பணியாளர்

1. இலங்கை இறப்பக் கூட்டுறவுத்
தலைமைச் சங்கம் (சம்மேளனம்) 77 21

2. வஃப இலங்கைக் கூட்டுறவுக்
கைத்தொழில் தலைமைச் சங்கம் (சம்மேளனம்) 175 155

3. வஃப இலங்கைக் கூட்டுறவுச் சந்தைப் படுத்தல்
தலைமைச் சங்கம் (மாக்பெட்) 307 205

4. வஃப இலங்கை தெங்கு உற்பத்தியாளர்
கூட்டுறவுத் தலைமைச் சங்கம் (சம்மேளனம்) 8 24

5. வஃப இலங்கை தேசிய இளைஞர் சேவை
கூட்டுறவுத் தலைமைக் கூட்டுறவுச் சங்கம் 25 12

6. வஃப இலங்கைச் சிக்கன கடனுதவு
கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் (சனச) 30 89

7. வஃப இலங்கை மீன்பிடிக் கூட்டுறவுச்
சங்கங்களுக்கான சம்மேளனம் 182 12

8. வஃப நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின்
சம்மேளனம் 211 42

9. வஃப இலங்கைக் கூட்டுறவுப் புடவை கைத்தொழில்
சம்மேளனம் 29 6

10. வஃப இலங்கை கோழி வளர்ப்போர்
கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் 20 9

11. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின்
சம்மேளனம் 08 10

12. இலங்கைக் கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின்
சம்மேளனம் 13 -

13. வஃப இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை 35 134


1. இலங்கை இறப்பர்க் கூட்டுறவுத் தலைமைச் சங்கம்.
நோக்கங்கள்:
1. சிறு இறப்பர்த் தோட்ட உரிமையாளர்கள் உற்பத்தி செய்யும் இறப்பரைச் சிறந்த தரத்தில் உற்பத்தி செய்ய உதவல்.

2. நவீன முறைகளைக் கையாண்டு சிறந்தரத்திலான இறப்பரை வளர்த்தல்.

3. கைத்தொழில்களுக்காக நவீனமுறைகளில் இறப்பரை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒழுங்குகளை அளித்தல்.

4. இறப்பரைக் கொண்டு உற்பத்தி செய்யும் தொழில்களை ஆரம்பித்தல்.

5. உற்பத்தி செய்யும் இறப்பருக்கான உச்சப்பயனைக் கூட்டுறவுச் சங்கங்கள் பெற்றுக் கொள்வதற்குக் கூட்டுறவுக் கொள்கைகளுக்கேற்ப நடவடிக்கைகளை எடுத்தல்.

6. உறுப்புரிமைச் சங்கங்களின் ஆலோசனைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளித்தல்.

7. கூட்டுறவுக் கொள்கைகளையும் இயக்கத்தையும் வலுப்படுத்த வேண்டிய கருமங்களை மேற்கொள்ளல்.


இந்நோக்கங்களை எய்தும் பொருட்டுக் கீழ்க்காணும் அதிகாரங்களையுடையதாயிருக்கும். அவையாவன:
1. சிக்கன சேமிப்புப் பற்றிய செயற்றிட்டமொன்றை ஆக்கிக் கொள்ளல்.

2. இறப்பர் உற்பத்திக்கு அல்லது கைத்தொழிலுக்குத் தேவையான பொருள்களை உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வழங்கல்.

3. நிதிகளை ஏற்படுத்தி உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வேண்டிய முற்பணங்களை வழங்கல்.

4. ஒவ்வொரு உறுப்புரிமைச் சங்கமும் உற்பத்தி செய்யும் இறப்பர் பொருள்களை ஒன்று சேர்த்தல், பண்டகசாலையிடல், தரப்படுத்தல், கட்டுதல், போக்குவரத்து வசதி செய்தல், இந்நாட்டில் சந்தைப்படுத்தல், ஏற்றுமதி செய்தல் இதனுடன் தொடர்புள்ள ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

5. மேற்படி செயல்களில் நவீன விஞ்ஞான முறைகளை உறுப்புரிமைச் சங்கங்கள் பின்பற்றுவதற்கு வாய்ப்பளித்தல்.

6. இந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான காணி, கட்டடங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை ஆணையாளரின் முன்னனுமதியுடன் காலத்துக்குக் காலம் கொள்வனவு செய்தல் அல்லது வேறு வகையில் உடமையாக்கல் விற்பனை செய்தல்.

7. ஊழியர்களைப் பயிற்றுவித்தல். அவர்களுக்கு சேமலாப நிதித் திட்டங்களை ஏற்படுத்தல்.

8. உறுப்புரிமைச் சங்கங்கள் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தல்.

9. நிபுணர்களின் ஆலோசனைகள் சிபார்சுகளைச் சங்கத்திற்குப் பெறல், உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வழங்கல்.

10. நவீன விஞ்ஞான முறைகளைக் கையாள்வதற்கும் உயர்ரக இறப்பரைப் பயிரிட்டு வளர்ப்பதற்கும் உறுப்புரிமைச் சங்கங்களுக்கு உதவல்.

11. உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வேண்டிய கடன்களை வழங்கல்.

12. இறப்பரை வளர்ப்பதற்காக உறுப்புரிமைச் சங்கங்களுக்குக் காணிகளைப் பெற்றுக் கொடுத்தல்.

13. உயர்ரக இறப்பரை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை அமைத்தலும் உறுப்புரிமைச் சங்கங்கள் அமைக்க உதவலும்.

14. இறப்பர் உற்பத்தியிலும் தொழில் முறைகளிலும் வேண்டிய பரிசோதனைகளை மேற்கொள்ளல்.


உறுப்புரிமை:
இறப்பர் உற்பத்தி செய்பவர்களும் கூட்டுறவுச் சங்கங்களும், பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் உறுப்புரிமை பெறலாம். ஆணையாளராற் பெயர் குறித்து இயக்குநராக நியமிக்கப்படுபவர் நியமன காலம் வரைக்கும் உறுப்பினராகக் கருதப்படுவர். இவர் பொதுச் சபைக் கூட்டங்களிற் கலந்து கொள்ளவும், கருத்துத் தெரிவிக்கவும் வாக்களிக்கவும் உரிமையுடையவர். இவ்வாறு நியமனம் பெறுபவர் அரசாங்க அதிகாரியாயின் வாக்களிக்கும் உரிமையில்லை.

ஒரு பங்கின் பெறுமதி 200 ரூபாவாகும். உறுப்புரிமை கோரி விண்ணப்பிக்கும் சங்கம் தமது விண்ணப்பத்துடன் ஒரு பங்கின் பெறுமதி 200 ரூபாவும் பிரவேசப் பணம் 10 ரூபாவும் அனுப்புதல் வேண்டும். உறுப்புரிமைச் சங்கமொன்று குறைந்தது 5 பங்குகளையாவது கொள்முதல் செய்தல் வேண்டும். இப்பங்குகளைத் தவணை முறையில் கொள்வனவு செய்யலாம்;.

அங்கத்துவ விண்ணப்பங்களை இயக்குநர் சபை அடுத்துவரும் பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பொதுச்சபை விண்ணப்பங்களை ஏற்று உறுப்புரிமை வழங்கலாம். அல்லது நிராகரிக்கலாம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படின் பங்குப்பணம் திருப்பி வழங்கப்படும்.

பொறுப்பின் எல்லை உறுப்புரிமைச் சங்கங்கள் பெற்ற பங்கின் பெறுமதியின் ஐந்து மடங்குக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. உறுப்புரிமையிலிருந்து விலகிய திகதியிலுள்ள சங்கக் கடன்களக்குத் தொடர்ந்து வரும் ஈராண்டுகளுக்கு விலகும் சங்கம் பொறுப்புடையதாக இருக்கும்.

சங்கத்தின் தொழிற்பரப்பு இலங்கை முழுவதையும் அடக்கியதாக இருக்கும். உறுப்புரிமை பின்வருங் காரணங்களால் முடிவுறும். அவையாவன:
1. உறுப்புரிமைச் சங்கத்தின் பதிவழிக்கப்படல்.

2. சங்கப் பொதுச்சபையால் நீக்கப்படல்.

3. குறைந்தபட்சம் ஒரு பங்கேனும் உரிமையில்லாது போதல்.

4. சங்கத்துக்கு உறுப்புரிமைச் சங்கம் கடன் கொடுக்குமதியில்லையாயின் மூன்றுமாத அறிவித்தல் எழுத்து மூலம் கொடுத்து விலகல்.


இயக்குநர் சபை:
சங்கக் கருமங்களை நடாத்துவதற்காக ஒன்பது உறுப்பினர்களுக்கு மேற்படாத ஒரு இயக்குநர் சபை இருத்தல் வேண்டும். பொதுச்சபை இயக்குனர் சபையைத் தெரிவு செய்கையில், மூன்று பேருக்குக் குறையாதவர்கள் இறப்பர் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கப்பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும். மூன்று பேருக்கு மேற்படாதவர்களை ஆணையாளர் நியமனஞ் செய்யலாம்.

பொதுச்சபையால் தெரிவு செய்யப்பட்ட இயக்குநர்களை அடுத்த பொதுக்கூட்டத் தேதி வரை கடமையாற்றுவர். அடுத்தபொதுக்கூட்டத்தில் இவர்களின் பதவி முடிவுறும். பொதுச்சபையில் புதியவர்களையோ அல்லது பதவி முடிவுற்றவர்களையோ தெரிவுசெய்யலாம். ஆயினும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் ஓராண்டு காலத்திற்காவது மீண்டும் தெரிவு செய்யப்படலாகாது. ஆணையாளரால் நியமிக்கப்பட்டவர்கள் அவரின் நியமன காலம் முடியும் வரைக்கும் கடமையாற்றுவர். இயக்குநர் சபை தமக்குள் தலைவர், உபதலைவர், காரியதரிசி என்பவர்களைத் தெரிவு செய்யும். ஆயினும் ஆணையாளர் விரும்பின இயக்குனர் சபைக்குள்ளிருந்து இப்பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கலாம். ஏனையவை பொதுச் செயற்பாடுகளிலும் ஏனைய சங்கங்களிலும் குறிக்கப்பட்டதைப் போன்றதேயாகும்.

பொது விபரங்கள் சில:
இத்தலைமைச் சங்கத்தில் 77 சங்கங்கள் உறுப்புரிமை பெற்றுள்ளன. இவற்றுள் 59 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களும், 18 இறப்பர் உற்பத்தியாளர் சங்கங்களும் அடங்கும். இச்சங்கம் 1967ல் பதியப்பட்டது. இதன் பங்கு மூலதனம் 2.7.97இல் ரூபா 377.479ஆகும். மொத்த ஒதுக்குகள் 1,053,481 ரூபாவாகும்.

2. இலங்கைக் கைத்தொழில் தலைமைக் கூட்டுறவுச் சங்கம் (சியஸ்ரா):
கைத்தொழில் விருத்தியின் பொருட்டு 1974ஆம் ஆண்டளவில் இச்சங்கம் பதியப்பட்டது. 1960ஆம் ஆண்டளில் பதிவு பெற்ற இலங்கைக் கைத்தொழில் யூனியனின் மறுசீரமைப்பே இச் சங்கமாகும். இச்சங்கம் பழைய கைத்தொழில் யூனியன் நடாத்தி வந்த மஹரகமவிலுள்ள நாவி;ன தொழிற்சாலை (இறப்பர் தும்புத் தொழிற்சாலை) உதுகொடவிலுள்ள இறப்பர் பால் தொழிற்சாலை, மாதம்பையிலுள்ள தும்பு பதனிடும் தொழிற்சாலை ஆகிய மூன்று தொழிற்சாலைகளையும் பொறுப்பேற்றது.

நோக்கங்கள்:
1. கூட்டுறவுக் கொள்கைகளுக்கமையவும், தேசிய அபிவிருத்தித் திட்டத்துக்கமையவும் இலங்கையிற் கூட்டுறவுக் கைத்தொழிற்சாலைகளை அமைத்து வளர்ச்சியுறச் செய்தல்.

2. கூட்டுறவுக் கைத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியின் பொருட்டு அங்கத்துவ, கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சட்ட, தொழில்நுட்ப, முகாமைத்துவ, மற்றும் தேவைப்படுந்துறைகளில் ஆலோசனை வழங்கல்.

3. உறுப்புரிமைச் சங்கங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி அவற்றின் வளர்ச்சிக்கு வசதிகளைச் செய்துகொடுத்தல்.

4. இலங்கையில் கூட்டுறவுக் கைத்தொழிற்சாலைகள் சம்பந்தமாகவும் சார்பாகவும் அபிப்பிராயங்களை வெளியிடல்.

5. கூட்டுறவுக் கைத்தொழிற்சாலைகளின் பொருட்டுச் செயற்படும் உள்நாட்டு வெளிநாட்டு, நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளல்.


இந்நோக்கங்களை அடையும் பொருட்டுப் பின்வரும் அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும். அவையாவன:
1. மேற்குறிப்பிட்ட நோக்கங்களை அடையும் பொருட்டு சங்கம் சுயேச்சையாக அல்லது உறுப்புரிமைச் சங்கங்களுடன் இணைந்து தொழிற்சாலைகளை நிறுவ முடியுமோ என்றும், அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் அல்லது பரீட்சார்த்தத் திட்டங்களின் மூலம் அல்லது பெருப்பித்தல் மூலம் விஸ்தரிக்க முடியுமோ என்றும் தீர்மானித்தல்.

2. புதிய கைத்தொழில் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு அல்லது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விஸ்தரிப்பதற்குத் தேவையான நிதியைப் பெறல்.

3. தொழிற்சாலைகள் அமைப்பதற்குத் தேவையான நிலம், கட்டிடத்தைக் கொள்வனவு செய்தல். குத்தகைக்குப் பெறல், சேவையாளரை நியமித்தல், இயந்திர சாதனங்களைக் கொள்முதல் செய்தல், வாடகைக்குப் பெறல், இறக்குமதி செய்தல்.

4. உறுப்புரிமைச் சங்கங்களின் கைத்தொழிற்பாட்டு முயற்சிகள் உச்சப்பயனைப் பெறத்தக்க முறையில் உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கல்.

5. தனது உற்பத்திப் பொருள்களையும் உறுப்புரிமைச் சங்கங்களின் உற்பத்திப் பொருள்களையும் சந்தைப்படுத்தல், விளம்பரப்படுத்தல், பண்டகசாலையிடல் விநியோக வழிகளை மேற்கொள்ளல்.

6. உறுப்புரிமைச் சங்கங்களுக்குத் தொழில் நுட்ப ஆலோசனை வழங்கல். முகாமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் பயிற்சியளித்தல்.

7. உள்@ர் மூலப் பொருள்களைச் சேகரித்துத் தேவையான உறுப்புரிமைச் சங்கங்களுக்கு விநியோகித்தல், தேவையேற்படும் மூலப்பொருள்களை இறக்குமதி செய்து விநியோகித்தல்.

8. இச் சங்கத்திற்கும் உறுப்புரிமைச் சங்கங்களுக்கும் இந் நோக்கங்களை நிறைவேற்றுதற்குத் தேவையான தொழில்நுட்ப, முகாமைத்துவ அபிவிருத்தி சம்பந்தமான எல்லா முயற்சிகளைம் மேற்கொள்ளல்.

அங்கத்துவம்:
பதிவு விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட உறுப்புரிமைச் சங்கங்களும் பதிவழிக்கப்பட்ட அகில இலங்கைக் கைத்தொழில் யூனியனின் உறுப்பினர்களும் இச் சங்கத்தின் துணைவிதி 6 (2)க்கு அமைவாகச் சேர்க்கப்படுபவர்களுமே இதன் உறுப்பினர்களாவர்.

துணைவிதி 6 (2) இன்படி பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் யாவும் உறுப்புரிமை கோரி இரு பிரதிகளில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இயக்குனர் சபையாற் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்க அல்லது நிராகரிக்க முடியும். நிராகரிக்கப்பட்ட உறுப்புரிமைச் சங்கம் பொதுச்சபைக்கு மேன்முறையீடு செய்ய உரிமையுண்டு பொதுச்சபையின் தீர்ப்பே முடிவானது.

ஒரு பங்கின் பெறுமதி 500 ரூபாவாகும். ஒரு உறுப்புரிமைச் சங்கம் ஒரு பங்கினையாவது கொள்முதல் செய்தல் வேண்டும். இப்பங்கின் பெறுமதியைத் தவணை முறையில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது 100 ரூபாவைச் செலுத்தி பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை 50 ரூபா வீதம் மீதிப்பணத்தைச் செலுத்த வேண்டும். சங்கக் கடன்களுக்கு உறுப்புரிமச் சங்கங்களின் பொறுப்பு அவர்கள் கொள்முதல் செய்த பங்கின் ஐந்து மடங்கிற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் தொழிற்பரப்பு இலங்கை முழுவதாகும்.

பொதுச்சபை:
உறுப்புரிமைச் சங்கங்களின் பிரதிநிதிகளையும் இயக்குநர் சபை உறுப்பினர்களையும் கொண்டதே இச் சங்கத்தின் பொதுச்சபையாகும். ஆணையாளரால் நியமிக்கப்பட்ட இயக்குனர்கள் பொதுச்சபைக் கூட்டத்திற் கலந்து கொள்ளவும் கருத்துத் தெரிவிக்கவும் உரிமையுடையர். ஆனால் வாக்களிக்க உரிமையில்லை. பொதுச் செயற்பாடுகளிலும், ஏனைய சங்கப் பொதுச் சபைகளுக்குக் கூறப்பட்ட அதிகாரங்கள் - கடமைகள் - பொறுப்புக்கள் இப்பொதுச் சபைக்கும் பொருந்தும்.

இயக்குநர் சபை:
பொதுச் சபையாற் தமக்குள்ளிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒன்பதுக்கு மேற்படாத உறுப்பினர்களையும், ஆணையாளரால் நியமிக்கப்பட்ட மூன்றுக்கு மேற்படாத உறுப்பினர்களையுங் கொண்டதே இயக்குனர் சபையாகும். கைத்தொழில்துறை, சந்தைப்படுத்தல் துறை, நீதித்துறை, முகாமைத்துறை என்பவற்றில் ஏதாவது சிறப்புத் தேர்ச்சியுடையவர்களை ஆணையாளர் நியமித்தல் வேண்டும். தெரிவு செய்யப்பட்ட இயக்குனர்கள் அடுத்த வருடாந்தப் பொதுக் கூட்டம் வரை கடமையாற்றலாம். அடுத்த வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் அவர்கள் பதவி முடிவுறும். பின்பு தெரிவு செய்யப்படும் போது புதியவர்களோ அல்லது அவர்களோ தெரிவு செய்யப்படலாம். ஆயினும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் ஓராண்டுக்காவது மீண்டும் தெரிவுசெய்யப்படலாகாது. ஏனையவை பொதுச் செயற்பாடுகளிலும் ஏனைய சங்கங்களிலும் குறிப்பிட்டது போன்றவையேயாகும்.

பொது விபரங்கள்:
இத்தலைமைச் சங்கத்தில் 145 கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்புரிமை பெற்றுள்ளன. இதனுடைய பங்கு மூலதன விபரம் கலைக்கப்பட்ட கைத்தொழில் சமாச பங்கு மூலதனம் 3,19,000 ரூபா. உறுப்புரிமைச் சங்கங்களின் பங்கு மூலதனம் 2,33,650 ரூபா. மொத்தம் 5,52,650 ரூபா.

1996இல் இத்தலைமைச் சங்கம் தனது வியாபார நடவடிக்கைகள் மூலம் 45.8 மில்லியன் ரூபாக்களை விற்பனையாகக் கொண்டு 7 மில்லியன்களைத் தேறிய இலாபமாகப் பெற்றது.

1996இல் இத்தலைமைச் சங்கம் 1.4 மில்லியன்கள் பெறுமதியான உற்பத்தியை ஏற்றுமதி செய்தது. மேலும் இவ்வாண்டில் 2.4 ரூபாய் பெறுமதியான புதிய இயந்திராதிகளைக் கொள்வனவு செய்துள்ளது.

1996இல் மேற்படி தலைமைச் சங்கத்தின் தொழிற்சாலைகளில் நடைபெற்ற உற்பத்தி விபரங்கள் பின்வருமாறு:-

1996 சியஸ்ரா தொழிற்சாலை உற்பத்தி விபரங்கள்

உற்பத்திப் பொருள் உற்பத்தியளவு பெறுமதி ரூ.
நாவின்னை தொழிற்சாலை
(மெத்தை உற்பத்தி) 162943 ச. அடி 32,860,399

உந்துகொட தொழிற்சாலை
(தும்பு கலந்த இறப்பர் – உற்பத்தி 190816 கிலோ 10,445,749

மாதம்பை தொழிற்சாலை
(கயிறு உற்பத்தி) 21365 கிலோ 144,815


3. இலங்கைச் சந்தைப்படுத்தல் தலைமைக் கூட்டுறவுச் சங்கம் (மாக்பெட்)
கூட்டுறவு மறுசீரமைப்பின் பயனாக 1.3.73இல் இச் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இலங்கைக் கூட்டுறவாளர் நுகர்ச்சி யூனியன், இலங்கை விளைபொருள் உற்பத்தி விற்பனை யூனியன், வடபகுதி விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்கின் சமாசம் மூன்றும் இதனுடன் இணைக்கப்பட்டன. இதன் தொழிற் பரப்பு இலங்கை முழுவதையும் அடக்கியது.

நோக்கங்கள்:
1. உற்பத்திச் சங்கங்களின் உற்பத்திப் பொருள்களை நுகர்ச்சிச் சங்கங்களினூடாக விநியோகஞ் செய்வதன் மூலம் உற்பத்தியாளரையும் நுகர்ச்சியாளரையும் இணைத்து உற்பத்திச் சங்கங்களின் தலைமைச் சங்கமாகவும் நுகர்ச்சிச் சங்கங்களின் விநியோகச் சங்கமாகவும் விளங்குதல்.

2. உத்தரவாத விலைத்திட்டத்திற்கு அமையாத பொருள்களை அங்கத்துவ சங்கங்களிடம் கொள்வனவு செய்து சந்தைப்படுத்துவதில் தமது திறனை நிலைநாட்டல்.

3. சந்தைப்படுத்தல், விநியோகித்தல் சம்பந்தமாக உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வேண்டிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தல்.

4. பழுதடையக்கூடிய பொருள்களைப் பாதுகாக்கும் பண்டகசாலைகள் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை அமைத்தல். உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வழங்கல்.

5. உற்பத்திக்குத் தேவையான தொழிற்நுட்ப ஆலோசனைகளை உறுப்புரிமைச் சங்கங்களுக்கு வழங்கல்.

6. நுகர்ச்சியாளர்களுக்குத் தேவையானதும், உள்@ரில் உற்பத்தி செய்யப்படாததுமான பொருள்களை இறக்குமதி செய்து விநியோகித்தல்.

7. உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து உறுப்புரிமைச் சங்களுக்கு விநியோகித்தல்.

8. உறுப்புரிமைச் சங்கங்களுக்குத் தொழில் முயற்சிக்கு வேண்டிய முற்பணங்களை வழங்கல்.

9. இந்நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு வேண்டிய காணி கட்டிடங்கள் இயந்திரங்கள் போன்றவற்றைக் கொள்வனவு செய்தல். குத்தகைக்கு எடுத்தல், வாடகைக்கு எடுத்தல்.

10. சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றக்கூடிய அவசியமான வேறு எல்லாக் கருமங்களையுஞ் செய்தல்.

அங்கத்துவம்:
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களும் கைத்தொழில் கூட்டுறவுச் சங்கங்களும் உறுப்புரிமை பெறலாம். ஒரு பங்கின் பெறுமதி 2000 ரூபாவாகும். இவ்வுறுப்புரிமைச் சங்கங்கள் ஒவ்வொன்றினதும் பொதுச் சபைப் பிரதிநிதிகளைக் கொண்டதே பொதுச் சபையாகும்.

மத்திய குழு:
ஒவ்வொரு கூட்டுறவு ஆக்க உதவியாணையாளர் பிரிவுக்கும் ஒவ்வொருவராக 26 மாவட்டத்துக்கும் 26 பேரைப் பிரதிநிதிகளில் இருந்து பொதுச்சபை தெரிவுசெய்யும், ஆணையாளர் 2 பேரை மத்திய குழுவுக்கு நியமிக்கலாம். அவர்கள் சங்கத் தொழில் முயற்சிகளில் ஏதாவதொன்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராக இருப்பர்.

நெறியாளர் குழு:
நெறியாளர் குழு 11 பேர்களைக் கொண்டதாகும். மத்திய குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிலிருந்து 9 பேர் தெரிவு செய்யப்படுவர். ஆணையாளர் 2 பேருக்கு மேற்படாத உறுப்பினர்களை நியமனஞ் செய்வர். மத்திய குழுவில் இருந்து தெரிவுசெய்யப்படும் நெறியாளர்கள் மாகாண ரீதியில் தெரிவு செய்யப்படுவர்.

ஆலோசனைக் குழு:
சேவைகளை விரைவாகவும், இலகுவாகவும் செயற்படுத்துவதற்காகவும் தொழிற்பாடுகளின் உச்சப் பயனைப் பெறுவதற்காகவும் வேண்டிய ஆலோசனைகளைப் பெறுவதற்காக இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டுறவு ஆக்க உதவி ஆணையாளர் பிரிவுக்கும் ஒவ்வொரு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருக்கும். இக்குழுவில் அப்பகுதியிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளர்கள் அங்கம் வகிப்பர். இக்குழுக்கள் தலைமைச் சங்கத்துக்கு வேண்டிய புள்ளி விபரங்களைத் திரட்டிக்கொடுத்தல், தொழில் முயற்சிகள் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கல், சந்தைப்படுத்தும் முயற்சியில் வேண்டிய உதவிகளைச் செய்தல் ஆகிய பணிகளைப் புரியும்.

ஏனைய விடயங்கள் பொதுச் செயற்பாடுகளிலும் ஏனைய சங்கங்களிலும் நடவடிக்கைகளிலும் குறிக்கப்பட்டவை போலவேயிருக்கும்.

இத்தலைமைச் சங்கத்தின் பொது விபரங்கள் சில:
இச் சங்கத்தின் பங்கு முதல் 30-10-79ஆம் திகதியன்று 6,50,275 ரூபாவாகும். ஒதுக்கீடுகள் சுமார் 58,79,000 ரூபாவாகும். 1979ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் வரை சுமார் 6,0000,000 ரூபா உத்தேச இலாபமாக அடைந்துள்ளது.

சில்லறை வியாபார நிலையங்கள் கொழும்பில் பன்னிரண்டும் யாழ்ப்பாணத்தில் ஒன்றும் நடக்கின்றன. பாலுணவுப் பொருள்கள், தகரமீன், பம்பாய் வெங்காயம் போன்ற பல பொருள்களை இறக்குமதி செய்து அங்கத்துவ சங்கங்கள் மூலமும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமும் விநியோகிக்கிறது. சோவியத் ரஷ்யாவிலுள்ள கூட்டுறவு நிறுவனமான “சென்றோ சோயுஸ்” கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருள்களின் விபரங்கள் பெறப்பட்டு இவற்றைத் தருவிக்கும் உரையாடல்கள் நடைபெறுகின்றன.

இரண்டு விவசாய சேவை நிலையங்கள் இரண்டை இச்சங்கம் நடாத்துகின்றது. இவற்றுள் ஒன்று யாழ்ப்பாணத்தில் பரந்த அளவில் செயற்பாடுகளைக் கொண்டதாக இருக்கின்றது. உறுப்புரிமை; சங்களிடமிருந்து விவசாயப் பொருள்களான செத்தல் மிளகாய், காய்கறி வகை, பழவகை போன்ற பொருள்களையும் மீன் கருவாடு போன்றவற்றையும் கொள்வனவு செய்து சந்தைப்படுத்துகின்றது.

விவசாயிகளுக்குத் தேவையான உரப்பசளை வகைகள், விதைகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், கிருமிநாசினிகள் சிறிய டிராக்டர்கள், தெளி கருவிகள் போன்றவற்றை விநியோகிக்கும் சேவையையும் செய்கின்றது.

விவசாய இயந்திரங்கள், உபகரணங்களைத் திருத்தும் நிறுவனமொன்றையும் எரிபொருள் நிரப்பு நிலைங்களையும் நடாத்துகின்றது. போக்குவரத்துச் சேவைகளை நடாத்துவதற்காகப் பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களை வைத்திருக்கின்றது. காய்கறிகளைச் சேகரிப்பதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் 5 மத்திய நிறுவனங்களையும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களையும் பயன்படுத்துகின்றது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியமற்ற ஏற்றுமதிப் பொருள்களான வெற்றிலை, கயிறு, தும்புப் பொருள்கள் போன்றவற்றை உறுப்புரிமைச் சங்கங்கள் மூலம் ஏற்றுமதி செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கின்றது.

இத்துடன் இணைந்திருந்த நுகர்ச்சிச் செயற்பாடுகள் 1991இல் ஆரம்பிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவுச் சங்க சம்மேளனச் செயற்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இச்சங்கம் தற்பொழுது விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் சம்மேளனமாகவே இருந்து வருகிறது.

இச் சம்மேளனம் ஜப்பானிய உதவி வழங்கும் நிறுவனத்துடன் சேர்ந்து தரமான இஞ்சி உற்பத்தியை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு ஊக்குவித்தல்களை அளிப்பதோடு உற்பத்தி செய்யப்பட்ட இஞ்சியைக்கொள்வனவு செய்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனைவிட ஏப்ரல் 1998 கொழும்பு சவுண்டஸ் பிளேஸ் என்னும் இடத்திற் சுபக்மார்க்கட் ஒன்றையும் நிறுவியுள்ளது. இதில் இலங்கையின் ஒவ்வொரு மாகாணக் கூட்டுறவு அமைப்புக்கும் ஒரு விற்பனைச்சாலையை வழங்கி உள்@ர் உற்பத்திகளை அவை இலகுவாகச் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தெங்கு உற்பத்தியாளர் தலைமைச் சங்கம்:
இதன் நோக்கங்களாவன தெங்கு உற்பத்தி செய்வோருக்கு அவர்கள் அங்கம் வகிக்கும் ஆரம்பச் சங்கங்களினூடாகத் தெங்கு உற்பத்திக்கான உள்ளீடுகள், உதவிகள், ஆலோசனைகள் வழங்குவதோடு, தெங்கு உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதுமாகும்.

இத்தலைமைச் சங்கம் 1942ஆம் ஆண்டு ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது 8 ஆரம்பச் சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. அவை தூணகஹ, மாத்தறை, கம்மல்பத்து, நாத்தாண்டிய, சந்தலங்கா, மினுவாங்கொட, விஜயகடுபெத்த, குருணாகல ஆகிய இடங்களில் இயங்குகின்றன. இத்தலைமைச் சங்கத்தில் 5 நெறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இத்தலைமைச் சங்கத்தின் கீழ் இயங்கும் முதனிலைச் சங்கங்கள் தேங்காய் எண்ணெய், கொப்பரா உற்பத்தி, கயிறு மற்றும் தும்புப் பொருட்கள் உற்பத்தி போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றன. இவ்வாரம்பச் சங்கங்களில் இருந்து பெற்ற உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் இத்தலைமைச் சங்கம் பிரதான பங்கு வகிக்கின்றது.

இக்கடமைகளைப் புரிவதற்காகத் தலைமைச் சங்கத்தின் மூலம் ஆரம்பச் சங்கங்களுக்கு முற்பணம், மற்றும் கடனுதவி வசதிகள் செய்யப்படுகின்றன. கொள்வனவு செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை உள்@ரிலும், வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்துவதில் இச்சங்கம் பிரதான இடத்தை வகிக்கின்றது. தேங்காய் எண்ணெய் கொப்பராப் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கான தரகராகவும் இத்தலைமைச் சங்கம் செயற்படுகிறது.

இத்தலைமைச் சங்கம் மேற்காண் தொழில்களுடன் கொழும்பில் 3 நுகர்ச்சிச் சேவை நிலையங்களையும், ஏஜன்ஸி தபால் நிலையம், தங்கு விடுதி என்பவற்றையும் கொண்டுள்ளது.

இச்சங்கத்தின் பங்கு மூலதனம் 25,000ஃ- ரூபாவாகும். ஒதுக்கங்கள் 4 இலட்சத்தையும், நிரந்தரச் சொத்துக்களாக 3 மில்லியன்களையும் கொண்டுள்ளது. இச்சங்கம் 1996 ஃ 1997 நிதியாண்டில் 1.47 மில்லியன் ரூபாவை தேறிய இலாபமாகப் பெற்றுள்ளது.

இத்தலைமைச் சங்கத்தின் மூலம் ஒரு மாதத்தில் 20,000 கிலோ வரையிலான சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

05. இலங்கை தேசிய இளைஞர் சேவைக் கூட்டுறவுச் சங்க சம்மேளனம்:
இத்தலைமைச் சங்கம் நாடு ப+ராகவும் உள்ள 25 மாவட்ட இளைஞர் கூட்டுறவு சங்கங்களின் தலைமைச் சங்கமாக இருப்பதுடன் தேசிய இளைஞர் சேவை நிலையத்துடன் இணைந்து செயற்படுகிறது.

இத்தலைமைச் சங்கத்தின் நோக்கம் இலங்கையிலுள்ள இளைஞர்களின் பொருளாதார, சமூக, கலாச்சார விருத்தியைப் பேணுவதாகும். 1996இல் இத்தலைமைச் சங்கம் 735,000 மில்லியன் ரூபாவை மாவட்டச் சங்கங்களுக்குச் சுயமுயற்சிக் கடனாக அளித்துள்ளது. மேலும் 5.8 மில்லியன் ரூபாவை 279 அங்கத்தவர்களுக்கு கடனாக அளித்துள்ளது.

1996இல் இதனுடைய தேறிய இலாபம் ரூபா 2.05 இலட்சமாகும். இத்தலைமைச் சங்கம் தாம் வருமானமாகப்பெற்ற 7.8 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கு நிதியில் வைப்பாக இட்டுள்ளது.

“நெஸ்கோ” என அழைக்கப்படும் இச்சங்கத்தின் 1997 புள்ளி விபரங்களின் படி மாவட்ட மட்டங்களில் உள்ள சங்கங்களின் அங்கத்தவர் தொகை 440000 ஆகும்.

6. இலங்கைச் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் தலைமைச் சங்கம் - சனச:
நாடு பூராகவும் அமைந்துள்ள 8363 சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களதும் மாவட்ட சிக்கன கடனுதவு சமாசங்களதும் தலைமைச் சங்கமாக இது இயங்கி வருகிறது.

இச்சங்கத்தின் நோக்கங்கள் கூட்டுறவுக் கொள்கைகளுக்கேற்ப அங்கத்தவர்களின் பொருளாதார, சமூக, கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அங்கத்தவர்களிடையே சிக்கனம், அன்னியோன்னிய உதவி ஆகியவற்றை விருத்தி செய்வதுமாகும். இந்நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டு இச்சங்கம் பின்வரும் அதிகாரங்களை உடையதாக இருக்கும்.

- அங்கத்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒதுக்கு நிதிகளை வைத்து வருதல்.
- அங்கத்தவர்கிளன் சேமிப்புப் பழக்கத்தை விருத்தி செய்தல்
- சிக்கனம், சேமிப்பு ஆகியவற்றை விருத்தி செய்வது சம்பந்தமான நடவடிக்கைகள்.
- அன்னியோன்னியம், சுய உதவி ஆகிய நற்பழக்கங்களை விருத்தி செய்தல்.
- வருமானம் ஈட்டக்கூடிய தொழில் துறைகளை அறிமுகம் செய்தல்.

இவை கிராமிய அடிப்படையில் ஆரம்ப சங்கங்களாகவும் ஆரம்ப சங்கங்கள் ஒன்றிணைந்து மாவட்ட சமாசங்களாகவும் இயக்குகின்றன. இவ்வாறு நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட சமாசங்கள் ஒன்றிணைந்து சனச சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட சமாசமும் 5-20 ஆரம்ப சங்கங்களை ஒன்றிணைத்து கோட்டங்களாக இயங்குகின்றது.

சனச பொதுச்சபையே இவ்வமைப்பின் பிரதான அதிகார சபையாகும். இதன் இயக்குநர் சபையில் மாவட்ட சமாசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஏழு பேரும், மாகாண ரீதியிலிருந்து தெரிவுசெய்யப்படும் 9 பேரும் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்படும் ஒருவரும் இடம் பெறுகின்றனர். இவ்வமைப்பில் எட்டு இலட்சம் வரையில் அங்கத்தவர்கள் உள்ளனர். இவ்வங்கத்தினர்களில் 50மூத்தினர் பெண்களாவர்.

இவ்வமைப்புக் கூட்டுறவு, கல்விக்கும் பெரும் பங்காற்றி வருகிறது. சனச கல்விவளாகம் ஒன்று கேகாலை மாவட்டத்தில் இயங்கி வருகின்றது.

சனசவின் தூரநோக்கு (ஏளைழைn) “கூட்டுறவு கொள்கைகளினூடே புதிய சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவோம்” என்பதாகும்.

சிககூ அமைப்பின் முன்னேற்றம் 1998

சம்மேளனம்
01


மாவட்ட சமாசம் சிறிய இரண்டாந்தரச்
27 சமாசங்கள் 05


பிரதேச (மாவட்ட சமாசங்களின் கிளை)



கொத்தணி (ஆரம்ப சங்கங்களின் மொத்தம்)



ஆரம்பச் சங்கங்கள்
8363


7. இலங்கை மீன்பிடிக் கூட்டுறவாளர் சங்கங்களின் சம்மேளனம்:
இது நாடு பூராகவும் பரந்துள்ள 182 கிராம சேவகர்கள் மட்டத்திலுள்ள மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களதும், மாவட்ட மீன்பிடிக் கூட்டுறவுச் சமாசங்களதும், சமஸ்த லங்கா மீன்பிடி கூட்டுறவுச் சமாசத்தினதும் தலைமைச் சங்கமாக இயங்கி வருகிறது.

இத்தலைமைச் சங்கத்து அடிப்படை நோக்கம் தனது ஆரம்பச் சங்கங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி, கடனுதவி மீன்பிடிப்பதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை நியாயமான விலைவில் கிடைக்கச் செய்வதாகும்.

திக்வலையில் மீன்பிடி உபகரணங்களை விற்பதற்கான விற்பனை நிலையமொன்றையும், நாரகன்பிட்டித் தேசிய சந்தையில் ஒரு மீன்பிடி விற்பனை நிலையத்தையும் நடத்தி வருகிறது. இந்த 2 நிலையங்களினூடாகவும் 1996இல் 1 மில்லியன் ரூபாவை விற்பனையாகப் பெற்றது.

இந்நிலையம் மீன்பிடிக் கைத்தொழில்களுடன் தொடர்புடைய முகாமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது.

8. நுகர்வோர் கூட்டுறவுத் தலைமைச் சங்கம் (சம்மேளனம்) “கோப்பெட்”:
1991 வரை “மாக்பெட்” நிறுவனம் செய்து வந்த நுகர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் நடடிக்கையில் நுகர்ச்சி நடவடிக்கைகளைத் தனியாகப் பிரித்து நுகர்வோர் கூட்டுறவுத் தலைமைச் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் பதிவுத் திகதி 15.09. 1989. தற்போது நாடு முழுவதிலுமுள்ள 227 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் இதில் அங்கத்துவம் பெற்று உள்ளன.

இதன் நோக்கங்கள் வருமாறு:-
- இலங்கையின் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்களின்
வியாபாரத்தை விருத்தி செய்தல்.

- இலங்கையின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் விற்பனையை விருத்தி செய்யும்போதும்
அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும் அங்கத்தவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தல்.

- நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்களின் பேச்சாளராகச் செயற்படுதலும், ஆரம்ப சங்கங்களுக்கு வேண்டிய
ஆலோசனைகளை வழங்குதலும்.

- சர்வதேச மட்டத்தில் உள்ள நுகர்ச்சிக் கூட்டுறவு அமைப்புக்களுடன் சேர்ந்து நுகர்ச்சி
நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தலும் விருத்திசெய்தலும்.

- கூட்டுறவு நுகர்ச்சிச் சேவையை மக்களின் மனங்கவர்ந்த சேவையாக மாற்றுவதற்கான திட்டங்களை
வகுத்தல்.

சீனி, பருப்பு, அரிசி, சீமெந்து ஆகியவற்றை இது பிரதானமாக இறக்குமதி செய்கிறது. இதன் 1996ஆம் வருட விற்பனைகள் 370.1 மில்லியனாகும். இது தனது விற்பனை நிலையங்களைப் பதுளை, மாத்தறை, பொலநறுவை, கண்டி ஆகிய இடங்களில் நிறுவியுள்ளது. கூட்டுறவு அமைப்புக்களையும், தனியார் துறையினர்களையும் சேர்த்து ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் உப்பு உற்பத்திக் கம்பனியில் இச் சம்மேளனம் 5 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. இதன்படி புத்தளத்தில் உற்பத்தி செய்யும் உப்பை விநியோகிக்கும் முகவராகவும் செயற்படுகிறது.

இதன் பங்கு மூலதனம் 5,465,580ஃ- ரூபா. 1994இல் இதன் நிலையான சொத்துக்கள் 2027520 ரூபாக்களாகும். முதலீடுகள் ரூபா 37,042,936 ஆகும். ஒதுக்குகள் ரூபா 11,938,411 ஆகும்.

9. இலங்கைக் கூட்டுறவுப் புடவைக் கைத்தொழிற் தலைமைச் சங்கம் (சம்மேளனம்):
நாடு பூராகவும் உள்ள 39 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இதன் பிரதான நோக்கம் நெசவுக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆரம்பச் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு நியாயமான விலையில் மூலப் பொருட்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் கொடுப்பதாகும்.

இதன்படி இச்சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட புடவைகளை சந்தைப்படுத்துவதிலும் அங்கத்துவச் சங்கங்களுக்கான நூல் மற்றும் துணிகளை விநியோகிப்பதிலும் இச்சங்கம் பிரதான பங்கை வகித்து வருகிறது. 1996இல் இதனுடைய விற்பனை ரூபா 7.72 மில்லியன்களாகும். இவ்வாண்டில் தேறிய இலாபம் ரூபா 0.97 மில்லியனாகும்.

10. இலங்கை கோழி வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைமைச் சங்கம்:
இச்சங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கருத்திட்டமொன்றின் கீழ் 1988ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 22 அங்கத்துச் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

இவற்றுள் குளியாப்பிட்டி, களுத்துறை, கலாவத்த, கேகாலை, பன்;னல ஆகிய இடங்களிலுள்ள சங்கங்கள் நன்கு தொழில் புரிகின்றன.

கால்நடைத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இக்கருத்திட்டம் 1991ல் முடிவுக்கு வந்ததும் இச்சங்கங்கள் சுயமாக இயங்கி வருகின்றன.

11. இலங்கை பால் உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைமைச் சங்கம்:
இதுவரை இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட பால் உற்பத்திச் சங்கங்களும், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பால் கொள்வனவு நிலையங்களும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை நேரடியாகக் கொள்வனவு செய்து பாரிய அளவிற் பாற் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு விநியோகிப்பதையே தொழிலாகக் கொண்டு வந்துள்ளன.

இலங்கையிலுள்ள 265பால் உற்பத்தியாளர் சங்கங்களில் 68700 பேர் அங்கத்தவர்களாக உள்ளனர். இலங்கையின் வருடாந்த மொத்தப் பால் உற்பத்திப் பெறுமதி ரூபா 331 மில்லியன்களாகும். இவற்றுள் 120 மில்லியன் ரூபா பெறுமதியான பால் வருடாந்தம் உற்பத்தி நடவடிக்கைகளுக்கெனச் சேகரிக்கப்படுகின்றன. இவற்றுள் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமான பால் சேகரிப்பின் பெறுமதி வருடாந்தம் ரூபா 39 மில்லியன்களாகும்.

கூட்டுறவு முறையில் கணிசமான பால் உற்பத்திக் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டாலும்
அவற்றின் பேச்சாளராக, கடமை புரிவதற்கோ, அவற்றின் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கோ
தலைமைச் சங்கமொன்று இல்லாது இருந்த குறையை நீக்கும்பொருட்டு 05.05.97 இல்
இலங்கையில் பால் உற்பத்தியாளர் தலைமைச் சங்கம் (சம்மேளனம்) நிறுவப்பட்டது.

இதில் மாவட்ட பால் உற்பத்திச் சமாசங்கள் ஐந்தும் தனியாகப் பதிவு செய்யப்பட்ட பால்
உற்பத்திச் சங்கங்கள் மூன்றும் ஐந்தும் ஆக எட்டு அங்கத்துவச் சங்கங்கள் அங்கம்
வகிக்கின்றன. ஒரு பங்கின் பெறுமதி ரூபா 5,000ஃ- ஆகும்.

இச்சம்மேளனத்தின் நெறியாளர்களாக ஆணையாளரால் நியமிக்கப்பட்ட 02 பேரும் அங்கத்தவர் சங்கங்களிடம் இருந்து தெரிவு செய்யப்பட்ட 05 பேருமாக 7 பேர் உள்ளனர். இச்சங்கத்தின் நோக்கங்களாவன:-

- பாலுக்கான பொருத்தமான விலையை பால் உற்பத்தியாளர்களுக்குப் பெற்றுக்கொடுத்தல்.

- பால் உற்பத்திக்கான தொழிற்நுட்ப ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுத்தல்.

- நல்லின கால் நடைகளைப் பெற்றுக்கொடுத்தலும், கால் நடைத் தீனி வசதிகளைப்
பெற்றுக்கொடுத்தலும்

- நல்லின கால் நடைகளைப் பெற்றுக் கொடுத்தலும், கால் நடைத் தீனி வசதிகளைப்பெற்றுக்
கொடுத்தலும்

- தரமான பாலை உற்பத்தி செய்து இலங்கை மக்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்துதல்.

- தேசிய பால் உற்பத்தியை அதிகரித்தல்.

இதன் தலைமையகம் கொழும்பு றிப்போலி கூட்டுறவுச் சங்க அங்காடியில் அமைந்துள்ளது.

12. இலங்கைக் கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சம்மேளனம்:
இலங்கை கிராமிய பொருளாதாரத்தில் கூட்டுறவு கிராமிய வங்கிகள் ஆற்ற வேண்டிய பங்கை மனதிற் கொண்டு 1997.12.15இல் இலங்கைக் கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் சம்மேளனம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்மேளனம் பின்வரும் அதிகாரங்களையும், நோக்கங்களையும் கொண்டதாக அமையும்.

(01) இச்சம்மேளனத்தின் முதலீட்டை விருத்தி செய்வதற்கான பல்வேறு வைப்புக்களையும், நிதிகளையும் பெற்றுக் கொள்ளுதல்.

(02) அங்கத்தவர் முதலீட்டை பாதுகாப்பதற்கும், வினைத் திறன் மிக்க வகையில் அதனை முதலிடுவதற்குமான வசதிகளைச் செய்து கொடுத்தல்.

(03) அங்கத்தவர்களுக்கிடையிலும், அங்கத்துவச் சங்கங்களுக்கிடையிலும் நல்ல புரிந்துணர்வையும், தொடர்பினையும் விருத்தி செய்தல்.

(04) தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நிதிப் பரிமாற்றம் சம்பந்தமான வளங்களை விருத்தி செய்தல்.

(05) கிராமிய வங்கிகளின் செயலாற்றறலை விருத்தி செய்வதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் அவைகளுக்கான விசேட ஆலோசனைகளைச் செய்வதற்குமான ஏற்பாடுகளை விருத்தி செய்தல்.

(06) கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் பிரதான பேச்சாளராக இருப்பதுடன் கூட்டுறவு வர்த்தகத்திற்கான பிரதான தேசிய நிதி வழங்கும் நிறுவனமாகச் செயலாற்றல்.

(07) கூட்டுறவுக் கொள்கைகளுக்கமைய அங்கத்தவர்களின் அபிலாசைகளைப் பூர்த்திச் செய்வதற்கான கடப்பாடுகளை செய்வதுடன், கூட்டுறவு அமைப்புக்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டு தேசிய வங்கியொன்றை உருவாக்குதல்.

(08) கூட்டுறவு இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளின் தேவைக்கேற்ப ஆய்வு, கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்தலும், அவ்வாறான கடமைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உதவிகளை அளித்தலும்.

(09) இச்சம்மேளனத்தின் தேவைகளுக்கான சொத்துக்களைக் கொள்ளலும், விற்றலும்.

(10) அங்கத்துவச் சங்கங்களுக்கு நிதி நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை அறிமுகம் செய்தல்.

(11) அங்கத்துவச் சங்கங்களின் முகவராகவும், தொடர்பாளராகவும் செயற்படல்.

(12) அரசுடனும், ஏனைய நிறுவனங்களுடனும் அங்கத்துவச் சங்கங்கள் விருத்திக்கான தொடர்புடையப் பேணுதல்.

(13) சம்மேளனத்தின் நோக்கத்தை அடைவதற்கான விசேட ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்.

ழூ பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் மாவட்டச் சங்கங்களும், மாகாண சங்கங்களும் அங்கத்துவச் சங்கங்களாக இடம்பெறலாம்.

ழூ அங்கத்துவ நுழைவுப் பணமாக ரூபா 5,000ஃ- உம், பங்குப் பணமாக ரூபா 100ஃ- ஐ கொண்ட 2500 (ரூபா 2,500,00ஃ-) பங்குகளையும் அங்கத்துவச் சங்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.

ழூ இதன் இயக்குனர் சபை 9 அங்கத்தவர்களைக் கொண்டதாக இருக்கும். மாகாணங்களைப் பிரதிபலிக்கும் அடிப்படையில் 7 பேருடன், தேசிய கூட்டுறவுச் சபையின் தலைவரும் மத்திய அரசின் ஆணையாளர் அலுவலகத்தில் வங்கி சம்பந்தப்பட்ட விடயங்களை கவனிக்கும் சிரேஷ்ட ஆணையாளரும் உத்தியோகபூர்வ அங்கத்தவராக இருப்பர்.

ழூ 1998 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இச்சம்மேளனத்தினைச் செயற்றிறன் உள்ள அமைப்பாக உருவாக்க திட்டங்கள் தீட்டப்பட்டன. இச்சம்மேளனத்தின் செயற்பாடுகளையும் விருத்தியையும் எதிர்காலத்திற் தான் அவதானிக்க முடியும்.

8:ஏ கூட்டுறவுத் தேசிய நிறுவனம்

ஸ்ரீ லங்கா தேசியக் கூட்டுறவுச் சபை:
இது கூட்டுறவுச் சங்கங்களின் மறுசீரமைப்பின் பயனாக 26.07.1972ம் தேதி பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன் இயங்கிய இலங்கைக் கூட்டுறவுச் சம்மேளனம், வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபை ஏனைய பகுதிகளின் ஐக்கிய மேற்பார்வைச் சபைகள் யாவும் பதிவு நீக்கப்பட்டு இதனுடன் இணைக்கப்பட்டன. கூட்டுறவுச் சங்கங்களின் கொள்கைகளைப் பேணும் உயர் நிறுவனமாகவும் தேசிய ரீதியான கூட்டுறவு உயர் நிறுவனமாகவும் இது விளங்குகின்றது. அத்துடன் சர்வதேசக் கூட்டுறவு இணைப்பில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டு சர்வதேசக் கூட்டுறவு இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதையும் தொழிற்பரப்பாகக் கொண்டுள்ளதோடு பதிவு செய்யப்பட்ட எந்தக் கூட்டுறவுச் சங்கமும் இதில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உறுப்புரிமையைப் பெறுவதற்கு ஒரு பங்கினையாவது கொள்முதல் செய்தல் வேண்டும். ஒரு பங்கின் பெறுமதி 50 ரூபாவாகும்.

நோக்கங்கள்
1. இலங்கையில் கூட்டுறவு இயக்கத்தை அபிவிருத்தி செய்தல்.

2. இலங்கையில் கூட்டுறவு இயக்கத்தை விரிவுபடுத்தி விருத்தி செய்து பலப்படுத்துவதற்கு மக்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அவர்களு:ககு வழிகாட்டியாக இருந்து உதவியளித்தல்.

3. இலங்கையில் கூட்டுறவு இயக்கத்தை விரிவுபடுத்தல்.

4. இலங்கையிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களின் சார்பாக அவற்றின் நோக்கங்கள் கருத்துக்கள் என்பவற்றை வெளிப்படுத்தல்.

இந்நோக்கங்களை அடையும் பொருட்டுப் பின்வருஞ் செயற்பாடுகளை மேற்கொள்ளல். அவையாவன:
1. கூட்டுறவுக் கல்வியையும், பயிற்சி நெறிகளையும் அமைத்தல். அங்கத்தவர் மத்தியிற் கூட்டுறவு நடைமுறைகளைப் பிரபலப்படுத்தல்.

2. கூட்டுறவு உறவுகளை அபிவிருத்தி செய்யவும் மூட்டுறவு இயக்கத்தின் நடைமுறைகளை இணைப்பதற்கும் உதவல்.

3. கூட்டுறவு இயக்கத்தோடு தொடர்புடைய ஆராய்ச்சிகளை நடத்துதலில், அமைத்தலில் இணைந்துதவல்.

4. கூட்டுறவோடும் அதனோடு சம்பந்தப்பட்ட பாடங்களிலும் தொடர்பான கட்புல, செவிப்புல சாதனங்களை, இலக்கியங்களைத் தயாரித்தல், பிரசுரப்படுத்தல், ஒழுங்கு செய்தல்.

5. கூட்டுறவு நடவடிக்கை, கூட்டுறவு சம்பந்தமான புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்கள் ஆகியனவற்றைப் பிரசுரித்தல்.

6. கூட்டுறவு இயக்கத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய சாதனமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் விதத்தில் சஞ்சிகைகள் பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்கள், சினிமா, வானொலி ஆகியவற்றின் மூலம் கூட்டுறவின் சாதனைகளைப் பற்றி விளம்பரஞ் செய்தல்.

7. ஒரு நூலகத்தையும் தகவல் நிலையத்தையும் நடத்தல்.

8. இலங்கையிற் கூட்டுறவு இயக்கத்தைச் சாரும் கொள்கைகளை வகுக்க உதவும் விதத்திற் கூட்டுறவுப் பிரச்சினைகளைக் கலந்துரையாடலிலும் கூட்டுறவு அபிப்பிராயங்களைத் தெரிவித்தலிலும், ஒரு மத்திய உறுப்பாகத்தொழிற்படல்.

9. இலங்கைக் கூட்டுறவு இயக்கத்தின் தேசிய, சர்வதேச அரங்கின் சீரிய பிரதிநிதியாகத் தொழிற்படல், கூட்டுறவுக் கொள்கை சம்பந்தமான அபிப்பிராயங்களைத் தெரிவித்தல்.

10. கூட்டுறவுக் கருத்தரங்குகள், கூட்டங்கள் தேசிய உடன்படிக்கைகள், மகாநாடுகள் ஆகியவற்றை அமைத்தல், இயக்குதல், நடத்தல்.

11. புதிய கூட்டுறவுச் சங்கங்களை அமைத்தலில் உதவுதல்.

12. கூட்டுறவை வளர்த்தலுக்காக நிதி, பொதுநிதி அல்லது விசேட நிதி திரட்டி, அப்படித் திரட்டப்பட்ட நிதியைப் பாவித்தல்.

13. காணியை வாங்குதல், வைத்திருத்தல், விற்றல், மாற்றுதல், அடைமானம் வைத்தல், வாடகைக்குக் கொடுத்தல், குத்தகைக்குக் கொடுத்தல், கட்டிடங்களை அமைத்தல், உடைத்தல், பழுது பார்த்தல் மாற்றுதல் அல்லது அக்கட்டிடங்களை நிர்வகித்தல்.

14. உறுப்புரிமைச் சங்கங்களுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாகப் பொதுவான அல்லது குறிப்பான வழிகாட்டல் அல்லது கூட்டுறவுச் சபையின் அல்லது ஏதாவது ஒரு உறுப்புரிமைச் சபையின் குறிக்கோள்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

15. கூட்டுறவுச் சபையின் குறிக்கோள்களை அடைவதற்குச் சாதகமானதும், அவசியமானதும், விரைவுபடுத்துவதுமான காரியங்களைத் தேவைப்படும் போதே செய்தல்.

நிருவாக அமைப்பு:
1. மாவட்டப் பொதுச்சபை.

2. மாவட்டக்குழு.

3. பொதுச் சபை.

4. மதியுரைக் குழு.

5. இயக்குநர் சபை.

மாவட்டப் பொதுச் சபை:
ஒவ்வொரு கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் பிரிவுக்கொன்றாக 26 மாவட்டக்கிளைகள் உண்டு. அப்பிரதேசத்தில் உள்ள உறுப்புரிமைச் சங்கங்களைக் கொண்டதே அம்மாவட்டப்பொதுச் சபையாகும். ஒவ்வொரு மாவட்டக்கிளையும் வருடாந்தப் பொதுக் கூட்டத்தையும் விசேட பொதுக் கூட்டங்களையும் நடாத்தும். மாவட்ட வருமாந்தப் பொதுச் சபைக்கூட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய விடயங்கள்.

1. மாவட்டக் குழுவுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.

2. மாவட்டக் குழுவின் செயற்பாடுகள் பற்றிய வருடாந்த அறிக்கையை ஆராய்தல்.

3. மாவட்டத்திற் கூட்டுறவு இயக்கத்தை வளர்ப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் வேண்டிய திட்டங்களை ஆராய்தல்.

4. உறுப்புரிமைச் சங்கங்களால் அனுப்பப்படும் பிரேரணைகளை ஆராய்தல்.

மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏழுபேரைப் பின்வரும் முறைப்படி மாவட்டப் பொதுச்சபை தெரிவு செய்தல் வேண்டும்.

1. நான்கு உறுப்பினர்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்தல் வேண்டும்.

2. கைத்தொழில் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

3. விவசாய, பாற்பண்ணை, கடற்றொழிற் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

4. ஏனைய சங்கங்களிலிருந்து ஒரு பிரதிநிதி தெரிவுசெய்யப்படல் வேண்டும்.


மாவட்டக் குழு:
மாவட்ட பொது சபையால் தெரிவு செய்யப்பட்ட ஏழு உறுப்பினர்களையும் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட மூன்றுக்கு மேற்படாத உறுப்பினர்களையும் கொண்டதே மாவட்டக் குழுவாகும். ஆணையாளரால் நியமிக்கப்படுபவர்கள்ட சமூக, கலாசாரக் கல்வித் துறையில் தேர்ச்சியும் ஈடுபாடுமுள்ளவர்களாக இருப்பர். ஒவ்nhரு மாவட்டக்கிளைக்கும் ஒவ்வொரு கிளைக் காரியாலயம் உண்டு. மாவட்டக் கருமங்களைச் செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டக் கிளைக் காரியாலயத்துக்கும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், கல்வி உதவியாளரும் வேறு பணியாளர்களும் நியமிக்கப்படுவர். அத்துடன் ஒவ்வொரு மாவட்டக் கிளையினது மேற்பார்வையுடன் கூட்டுறவு ஊழியர் பயிற்சிக்கான பாடசாலையொன்றும் நடாத்தப்படும். இதற்கான உதவிகளை ஸ்ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபை வழங்கும்.

மாவட்டக் குழுக்களின் கடமைகள்:
1. இயக்குனர் சபையால் ஒழுங்குபடுத்தப்பட்ட அங்கத்துவக் கல்வி, பணியாளர் பயிற்சி, கருத்தரங்குகள் போன்றவற்றைச் செயற்படுத்த உதவல்.

2. இளைஞர்களைக் கூட்டுறவு இயக்கத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு வேண்டிய முயற்சிகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளல்.

3. கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் கலை கலாச்சார நிகழ்வுகளையும் சமூக நலத்திட்டங்களையும் செயற்படுத்த ஊக்கமளித்தல்.

4. இயக்குனர் சபையால் திட்டமிடப்பட்ட புதுவகைக் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவதற்கு வேண்டிய முயற்சிகளை எடுத்தல்.

5. மாவட்டத்திலுள்ள கூட்டுறவு நிறுவனங்களைப் பற்றிய தகவுரை வழங்கல்.

6. உறுப்புரிமைச் சங்கங்களோடும் அரசாங்க இலாகாக்களோடும் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தல்.

7. தகவல் நிலையமொன்றையும் கூட்டுறவு நூல் நிலையமொன்றையும் நடாத்துதல்.

8. இயக்குனர் சபையால் திட்டமிடப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட கூட்டுறவுக் கருத்தரங்குகள், கூட்டங்கள் கலந்துரையாடல்கள், மகாநாடுகளை நடத்தல், நடத்த உதவல்.

9. இயக்குனர் சபையால் விடப்படும் சகல நோக்கங்கள், கருமங்கள் பற்றிய தகவுரைகளைச் செய்தல்.

10. வலுவிழந்த அல்லது குறைந்த தரமுள்ள கூட்டுறவுச் சங்கங்களை நன்னிலைப்படுத்துவதற்குரிய தேவையான நடவடிக்கைகளைம் முயற்சிகளையும் எடுத்தல்.

பொதுச்சபை:
உறுப்புரிமைச் சங்கங்களின் பிரதிநிதிகளையும், தெரிவு செய்யப்பட்ட மாவட்டக்குழு உறுப்பினர்களையும், இயக்குனர் சபை உறுப்பினர்களையும் கொண்டதே பொதுச் சபையாகும். இதுவே உயர் அதிகாரங்கொண்டதாகும். ஏனைய சங்கங்களுக்குக் கூறப்பட்ட அதிகாரங்களும் கடமைகளும் இப்பொதுச் சபைக்கும் உண்டு. விசேடமாகத் தலைவரையும் உபதலைவரையும் தெரிவு செய்யும் அதிகாரம் இச்சபையின் பொதுச் சபைக்கே உண்டு.

மதியுரைக் குழு:
ஒவ்வொரு மாவட்டக் குழுவின் தலைவர்களையுங்கொண்டதே மதியுரைக் குழுவாகும். மதியுரைக் குழுவின் கூட்டம் மூன்று மாதத்துக்கொருமுறை நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்டக் குழுத் தலைவர்கள் கலந்துகொள்ள முடியாவிடின் உபதலைவர் அல்லது குழு உறுப்பினர்களிற் குழுவால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் கலந்துகொள்ளலாம்.

இயக்குநர் சபையால் தயாரிக்கப்படும் கூட்டுறவு அபிவிருத்தி, கல்வி, பயிற்சித்திட்டங்களை மதிப்பீடு செய்தல், ஆலோசனை வழங்கல், உதவல், கூட்டுறவு இயக்கங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்குரிய ஆலோசனை, மதிப்பீடு உதவிகளை வழங்கல், தேசிய அபிவிருத்தியி;ற கூட்டுறவு இயக்கத்தின் செயற்பாடுகளை ஏற்படுத்துவதற்குரிய ஆலோசனைகளை வழங்கல், கூட்டுறவுச் சபை கூட்டுறவு அபிவிருத்தியின் பொருட்டு எடுக்க வேண்டிய செயல்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கல்.

இயக்குனர் சபை:
இயக்குநர் சபை 12 உறுப்பினர்களுக்கு மேற்படாது அமைந்திருக்கும். இதில் பொதுச்சபை பிரதிநிதிகளில் இருந்து மாகாணத்துக் கொருவர் வீதம் பொதுச் சபை தெரிவு செய்யும். தலைமைச் சங்கப் பிரதிநிதிகளிலிருந்து மூன்று பேரை ஆணையாளர் நியமிப்பார்.

கூட்டுறவுக் கொள்கைகள், கூட்டுறவு இயக்கம் பற்றிய அபிப்பிராயங்களை வெளியிடல், பொதுச்சபைத் தீர்மானங்களை நிறைவேற்றல், மாவட்டக் குழுக்கள், ஏனைய உப குழுக்கள் ஆகியவற்றின் அறிக்கைகளை ஆராய்ந்து கூட்டுறவு அபிவிருத்திக்குரிய நடவடிக்கைகள் எடுத்தல் போன்ற கடமைகளுடன் ஏனைய சங்கங்களின் நிருவாக சபை அல்லது இயக்குனர் சபை ஆகியவற்றுக்குரிய அதிகாரங்கள், பொறுப்புக்கள், கடமைகள் இதற்குமுண்டு.

நிருவாகம்:
இலங்கை முழுவதையும் தொழிற்பரப்பாகக்கொண்டமையால் கொழும்பில் இதன் தலைமைக் காரியாலயமும் 26 மாவட்டங்களிலும் 26 மாவட்டக்காரியலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்புக் காரியாலயம் இயக்குநர் சபையினதும் தலைவரதும் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலும் மாட்டக் காரியாலயங்கள் மாவட்டக் குழுக்களினதும் தலைவரதும் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலும் இயங்குகின்றன.

தலைமைக் காரியாலய நிருவாகம்:
சபையின் கருமங்களை இலகுவாக்குவதற்காகவும், விரைவாக்குவதற்காகவும் தலைமைக் காரியாலயம் ஐந்து பிரிவுகளாக இயங்குகின்றது. அவையாவன:
1. நிருவாகப் பிரிவு

2. கல்வி விஸ்தரிப்புப் பிரிவு

3. பிரசுர விற்பனைப் பிரிவு

4. கட்டிடக் கலைஞர் பிரிவு

5. வடக்குக் கிழக்கு மாகாணப் பிரிவு

சபையின் கருமங்களைக் கவனிப்பதற்காகப் பொதுச் செயலாளர் ஒருவரும் உதவிச்செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பதவி நிலை உத்தியோகத்தரும் மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி விஸ்தரிப்புப் பிரிவுக்குக் கல்வி உத்தியோகத்தர்களும் வாசிகசாலைப் பொறுப்பாளரும், பிரசுர விற்பனைப் பகுதிக்குப் பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் உதவிப் பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பான இப்பதவிகளை விட ஒவ்வொரு பிரிவுக்குந் தேவையான வேறு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டக் காரியலயங்கள்:
பதவி நிலை உத்தியோகத்தர் அல்லது மாவட்டச் செயலாளர், கல்வி உதவியாளர் என்பவர்களுட் வேண்டிய வேறு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுக் கருமங்கள் ஆற்றப்படுகின்றன.

முக்கிய செயற்பாடுகள்:

கல்வி:
பணியாளர் பயிற்சி:- கூட்டுறவுப் பயிற்சிப் பாடசாலைகளை 26 மாவட்டங்களிலும் நிறுவிப் பணியாளர்களுக்குப் பயிற்சியளித்துப் பரீட்சை நடாத்தித் தராதரப் பத்திரங்கள் வழங்குகின்றது. கண்டி, காலி, யாழ்ப்பாணம் ஆகிய கூட்டுறவுப் பயிற்சிப் பாடசாலைகளில் உயர்தர, சாதாரண பயிற்சி வகுப்புக்களையும் நடாத்துகின்றது. ஏழு கூட்டுறவுப் பயிற்சிப் பாடசாலைகள் தமிழ்மொழி மூலமும் ஏனையவை சிங்கள மொழி மூலமும் பயிற்சியளிக்கின்றன. பயிற்சியில் வந்து கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு வசதியளிக்கும் பொருட்டுச் சாதாரண பயிற்சி தபால் மூலமும் கற்பிக்கப்படுகின்றது.

முகாமைத் தரத்திலுள்ள பணியாளர்களுக்கும் ஏனைய பணியாளர்களுக்கும் உதவுமுகமாகக் கருத்தரங்குகள், குறுங்காலப் பயிற்சி வகுப்புக்கள் என்பவற்றைக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவுக் கலாசாலை, மாட்டக்குழு என்பவற்றின் உதவியுடன் நடாத்துகின்றது. இயக்குநர்கள், கிளைக்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், கடனுதவு சங்கங்கள், கைத்தொழிற் சங்கங்கள், மகளிர் பாவனையாளர்கள் ஆகியோர்க்குத் தனித்தனி பயிற்சி வகுப்புக்களும் கருத்தரங்குகளும் நடத்தி வருகின்றது.

தலைமைக் காரியாலயம் உட்பட மாவட்டக் காரியாலயங்கள் தோறும் நூல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை விருத்தி செய்யும் நோக்கோடு கூடுதலான அளவு புத்தகங்கள் நூல் நிலையங்களுக்கு வழங்கும் முயற்சிகளை எடுக்கின்றது.

பிரச்சாரம்:
“சமுபகாரய” என்னும் சிங்களப் பத்திரிகையொன்றைத் தலைமை அலுவலகம் வெளியிடுகின்றது. இதன் தரத்தை உயர்த்துவதற்குரிய முயற்சிகளைக் காலத்துக்குக் காலம் எடுத்து வருகிறது.

“ஐக்கிய தீபம்” என்னும் தமிழ்ப் பத்திரிகையை யாழ்ப்பாண மாவட்டக்கிளை வெளியிட்டு வருகின்றது. கூட்டுறவு சம்பந்தமான நூல்களையும் வெளியிட்டு வருகின்றது. கூட்டுறவு நாட்குறிப்பேடுகளை வருடந்தோறும் வெளியிடுகின்றது.

சினிமாக் காட்சி காட்டும் இயந்திரமும் மோட்டார் வாகனமும் உண்டு. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் கூட்டுறவு சம்பந்தமான திரைப்படச் சுருள்களைப் பெற்று மாவட்டக்குழுக்களின் வேண்டுதலுக்கிணங்கத் திட்டமிடப்பட்டுப் பொதுமக்களுக்கு சினிமாக் காட்சிகள் காட்டப்படுகின்றன.

கூட்டுறவுத் தின விழாக்களை மாட்டக் குழுக்கள் மூலமும் உறுப்புரிமைச் சங்கங்கள் மூலமும் சிறப்பாக நடைபெறச் செய்து, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள், பிரசாரங்கள் போட்டிகள் மூலம் பொதுமக்களிடையே கூட்டுறவு, பற்றிய கருத்துக்களையும் உணர்வையும் ஏற்படுத்துகின்றது.

கூட்டுறவுச் சங்கங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல்:
கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பொதூன பிரச்சினைகளையும், சிலவகைச் சங்கங்களுக்குள்ள சிறப்பான பிரச்சினைகளைம் ஆராய்ந்து பிரச்சினைக்குரிய நிறுவனங்கள், இலாகாக்கள், கூட்டுத்தாபனங்கள் அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்ற நடவடிக்கைகளைக் காலத்துக்குக் காலம் எடுத்து வருகிறது. இவை சம்பந்தமாக 1979ல் பின்வரும் விடயங்களில் தீர்வு காணப்பட்டன.

1. சங்கங்களிடமிருந்து நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்முதல் செய்யும் வெற்றுச் சாக்குப் பைகளில் விலை அதிகரிப்புச் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தை நடத்தி விலை அதிகரிக்கப்பட்டது.

2. சங்கங்கள் நெல் கொண்டு செல்வதற்காக வழங்கப்படும் கட்டணத்தை உயர்த்த வழிவகுத்தமை.

3. சங்கங்களின் தேர்தலை நடத்தும் போது சமூகமளிக்கின்ற கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்களின் பிரயாணச் செலவைத் திணைக்களமே ஏற்கச் செய்தமை.

4. உள்@ர் புடவை வகைகள் ‘சலுசலா’ மூலம் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுத்தமை.


நடவடிக்கை எடுக்கப்படும் பிரச்சினைகள்:
1. கூட்டுறவுச் சங்கங்களின் தேறிய இலாபத்தில் 35 வீதம் வருமான வரியாக அறவிடப்படும் பிரச்சினை.

2. புகையிலைக் கூட்டுத்தாபனத்தின் முகவர் பதவிகளைப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் பெறுதல்.

3. சீமெந்துக் கூட்டுத்தாபனம், மட்பாண்டக் கூட்டுத்தாபனம், பசளைக் கூட்டுத்தாபனம், கட்டிடப் பொருட் கூட்டுத்தாபனம், பொற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்றவற்றில் சங்கங்கள் பொருள் பெறுவதிலுள்ள பிரச்சினைகள்.

4. பருத்தி நூல் வகைகளின் சுங்கத் தீர்வைகளைக் குறைத்தல் போன்றவை –

புதிய வகைச் சங்கங்களை உருவாக்கும் முயற்சிகள்:
1. கூட்டுறவு வங்கிகள்: இவை மக்கள் வங்கிகளோடு இணைக்கப்பட்டு விட்டன. மக்கள் வங்கியே கூட்டுறவுச் சங்கங்களுக்கான வங்கியாக இப்போது இருக்கின்றது. கூட்டுறவுச் சங்கங்களுக்கென ஒரு வங்கி இருக்க வேண்டுமென்ற அபிப்பிராயம் பொதுவாகக் கூட்டுறவுச் சங்கங்களிடையே நிலவுவதால் அவை பற்றிய கருத்துக்களைத் திரட்டிக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் அபிப்பிராயங்களும் பெறப்பட்டுக் கூட்டுறவு அமைச்சரிடம் ஒப்படைத்திருக்கிறது.

2. காப்புறுதிக் கூட்டுறவுச் சங்கம்:- இவ்வகைச் சங்கம் அமைப்பதற்குரிய தகவல்களைத் திரட்டிக் கூட்டுறவுத் திணைக்களத்தினதும் கூட்டுறவு அமைச்சரதும் அங்கீகாரத்தைக் கோரியுள்ளது.

3. இந்திய யாத்திரிகர் கூட்டுறவுச் சங்கம்:- இந்தியா செல்லும் யாத்திரிகர்களது வசதிகளை அதிகரிக்கும் பொருட்டுச் சங்கம் ஒன்றினை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக இந்தியாவிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றது.

சர்வதேசத் தொடர்புகள்
ஸ்ரீ லங்கா தேசியக் கூட்டுறவச் சபை சர்வதேசக் கூட்டுறவு இணைப்பில் அங்கத்துவம் பெறுவதன் மூலம் கூட்டுறவுத்தேசிய நிறுவனங்களுடனும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது. சர்வதேசத் தொடர்பினால் இலங்கைக் கூட்டுறவு இயக்கத்துக்குப் பின்வரும் வசதிகளும் உதவிகளும் கிடைக்கின்றன. அவையாவன.
1. தொழில் வசதிகள்.

2. புலமைப் பரிசில்கள்

3. ஆலோசனைகள்

4. கல்விப் பிரசுர விடயங்களில் ஒத்துழைப்பு

5. யூனெஸ்கோ, சர்வதேசத் தொழில் நிறுவனம் என்பவற்றுடன் இணைந்து செயலாற்றல், அவற்றின் உதவிகளைப் பெறல்.

6. உறுப்புரிமைச் சங்கங்களுக்கு, வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

7. ஏனைய தொடர்புகள்.

புலமைப் பரிசில்கள்:
கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள், பணிப்பாளர்கள், உறுப்பினர்கள், கூட்டுறவுத் திணைக்கள ஊழியர்கள், கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் எனப் பல்வேறு வகைப்பட்டோருக்கும் கூட்டுறவு இயக்கம் வளர்ச்சி பெற்ற நாடுகளின் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து பயிற்சி வகுப்புக்களுக்கும், கருத்தரங்குகளுக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் புலமைப்பரிசில்களை ஸ்ரீ லங்கா தேசியக் கூட்டுறவுச்சபை பெற்று உரியவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றது. சோவியத் ரஷ்யா, யப்பான், மலேசியா, மேற்கு ஜேர்மனி, இங்கிலாந்து, இந்தியா, ஈராக், இஸ்ரவேல், சுவீடன், நெதர்லாந்து போன்ற நாட்டின் தேசிய கூட்டுறவு நிறுவனங்களும் யூனெஸ்கோ, சர்வதேசத் தொழில் நிறுவனம் போன்றவைகளும் புலமைப் பரிசில்கள் வழங்குகின்றன.

1979ஆம் ஆண்டிற் பெற்ற ஏனைய உதவிகள்:
1. நெதர்லாந்து தேசிய கூட்டுறவு நிறுவனத்தின் உதவியோடு சிறு விவசாயிகள் பற்றிய ஆய்வொன்றினை நடாத்தல்.

2. சர்வதேசக் கூட்டுறவு இணைப்பின் 1979ஆம் ஆண்டு நன்னீர்க் கொள்வனவுத் திட்டத்தின்கீழ் வரட்சியான பகுதிகளிற் கிணஞகளைத் தோண்ட உதவல்.

3. சுவீடன் தேச “சீடா” நிறுவன உதவியுடன் கூட்டுறவு ஆசிரிய பயிற்சித்திட்டம், கூட்டுறவு மகளிர் பாவனையாளர் கல்வித்திட்டம் என்பன செயற்படுத்தப்படுகின்றன.

கூட்டுறவு ஆசிரியர் பயிற்சித் திட்டம்:
சுவீடன் கூட்டுறவு ‘சீடா’ நிறுவனத்தின் நிதியுதவியுடனும், நிபுணர்களின் உதவியுடனும் இச்சபையால் நடாத்தப்படுகின்றது. வெளிநாட்டு நிபுணர்கள் உட்பட 13 நிபுணர்கள் இத்திட்டத்திற் கடமையாற்றுகின்றனர்.

ஆரம்ப வருடச் செலவுகளுக்கெனச் சுவீடன் தேசக் கூட்டுறவு ‘சீடா’ நிறுவனம் 3,83,564 ரூபாவை வழங்கியுள்ளது. ஸ்ரீ லங்கா தேசியக் கூட்டுறவுச் சபை 72,685 ரூபாவை வழங்கியுள்ளது.

கூட்டுறவுக் கல்வியை புதிய கல்வி முறைகளுடன் இணைத்துப் பயனுள்ள கல்வி முறையாகச் செயற்படுத்துவதற்குரியவர்களைத் தோற்றுவிப்பதே இக்கல்வியின்நோக்கம். கற்பித்தல் முறைகளில் கட்புல, செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்தல், புதிய கல்வி முறைகளைப் புகுத்தல், கூட்டுறவு பற்றிய சரியான கருத்துணர்வுகளைக் கூட்டுறவின் தொடர்புள்ள சகலருக்கும், ஏற்படுத்தல் போன்றவையே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

பொல்கொல்லைக் கூட்டுறவுக் கலாசாலையுட்பட, கண்டி, கொழும்பு, குருநாகல், காலி, கம்பஹா, யாழ்ப்பாணம் ஆகிய கூட்டுறவுப் பாடசாலைகளில் இத்திட்டத்தை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன.

ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கு ஆறு பொதுப் பாடத்திட்டங்களும் விசேட பாடத்திட்டங்களும் வகுக்கப்பட்டன. இத்திட்டத்தின் நிபுணர்கள் பல்வேறு கூட்டுறவுப் பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து அவற்றினை விருத்திசெய்வதற்கான சிபாரிசுகளைச் செய்தனர்.

கூட்டுறவு மகளிர் பாவனையாளர் திட்ட உத்தியோகத்தர்களுக்குக் கட்புல, செவிப்புல பாடத்திட்டங்கள் மூலம் போதிக்க வேண்டிய முறைகளைப் பற்றிய பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. காலி, கொழும்பு, யாழ்ப்பாண மாவட்டங்களின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களைப் பயிற்றுவிப்பது தொடர்பான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூட்டுறவு இலங்கையில் ஆரம்பித்த காலந்தொட்டு இத்திட்டம் ஆரம்பிக்கும் வரை கூட்டுறவு ஆசிரிய பயிற்சி பெறாதவர்களால் அவர்கள் எண்ணப்படி கல்வி புகட்டப்பட்டது. திட்டமிடப்பட்டுப் பயிற்சி பெற்றவர்களால் அளிக்கப்படுங் கல்வி கூட்டுறவு இயக்கத்தை வளர்க்க உதவி செய்யும்.

கூட்டுறவு மகளிர் பாவனையாளர் தகவற் கல்வித்திட்டம்:
இத் திட்டத்தைச் சுவீடன் சர்வதேச அபிவிருத்தி அதிகார சபை (சீடா) சுவீடன் கூட்டுறவு நிலையம், சுவீடன் பாவனையாளர் வட்டங்களின் சமாசம் என்பவற்றின் உதவியுடன் சர்வதேசக் கூட்டுறவு இணைப்புத் தென்கிழக்காசிய வலயக் காரியாலயத்தின் ஆலோசனையுடன் ஸ்ரீலங்கா தேசிய கூட்டுறவு சபை நடத்துகின்றது.

திட்டத்துக்கு வேண்டிய நிதியிற் சுவீடன் தேசக் கூட்டுறவு நிறுவனங்கள் 15,00,000 ரூபாவையும் ஸ்ரீ லங்கா தேசிய கூட்டுறவுச் சபை 10,00,000 ரூபாவையும் வழங்கின. சுவீடன் கூட்டுறவு நிறுவனங்கள் பின்வரும் உதவிகளையும் வழங்கின. அவையாவன.

1. சர்வதேச நிபுணர்களின் சேவை.

2. கட்புல, செவிப்புல சாதனங்கள்.

3. மேலதிக விளக்கத்துக்குத் தேவையான கருவிகள்.

4. பிரதி பண்ணல் இயந்திரம் (டுப்பிளிக்கேற்றிங்).

5. டீசல் மோட்டார் வாகனம்.

6. இத்திட்டத்தில் ஈடுபடும் ஸ்ரீ லங்கா தேசியக் கூட்டுறவுச் சபை ஊழியரின் வேதனத்தில் 25 வீதமும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் இத்திட்டத்திலீடுபடுகின்ற ஊழியர்களின் வேதனத்;தையும் சுவீடன் தேசத்துக் கூட்டுறவு நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன.

நோக்கங்கள்:
1. பாவனையாளர்களுக்கான தகவல்கள், போஷாக்கு என்பனவற்றின் முக்கியத்துவம் பற்றிப் பாவனையாளர்களுக்கு விசேடமான இல்லத்தரசிகளுக்கு உணர்த்தல்.

2. உணவு வகைகளின் தரம் பற்றிய விடயத்திற் கவனஞ் செலுத்துதல்.

3. பாவனையாளர்களைப் பாதுகாப்பதிற் கூட்டுறவு எந்த வகையில் ஒத்துழைக்க முடியுமென்பதைப் பற்றி எடுத்துக் காட்டல்.

இந்நோக்கங்களை அடையும் பொருட்டுப் பின்வருவனவற்றைச் செய்தல்.
1. சுகநலம், போஷாக்கு, குடும்பப் பொருளாதாரம் என்பவற்றில் அறிவினைப் பெறவசதி செய்தல். பாவனையாளர்களுக்கான பொதுப்பொருளாதார அறிவை ஏற்படுத்தல்.

2. அடிப்படைப் போஷாக்குடன் கூடிய உணவு வகைகளைத்திரட்டல் அவற்றைப் பிரபல்யப்படுத்தல்.

3. பாவனையாளர்களுக்குக் கல்வியூட்டுவதற்கான, உணவு தயார்படுத்தும் மாதிரி, சமையலறை, ஆய்வுகூடம் என்பவற்றை நடத்துதல் தொடர்பான சாத்தியக்கூறுகளைத் தேடுதல்.

4. பாவனைப் பொருள்கள், பாவனையாளர்களுக்கான சேவை என்பவை பற்றித் தேடுதல் புரிதல். அவற்றின் பலாபலன்களைப் பிரபல்யப்படுத்தல்.

5. பாவனையாளர் கல்வி, வேலைத்திட்டத்திற் பயன்படுத்திக் கொள்வதற்கான தகவல்களைப் பிரசுரங்களாக வெளியிடல்.

6. பாவனையாளர் கல்வி அங்கத்தவர் தொடர்பு வேலைத்திட்டங்களில் இல்லத்தரசிகளின் ஆர்வத்தினை அதிகரித்தல்.

7. கூட்டுறவுப் பாவனையாளர் விடயங்களை ஊக்குவித்தல் தொடர்பாகப் பங்கு கொள்ளுதல்.

இத்திட்டம் 1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்தில் உள்ள 5 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவு செய்யப்பட்டு அமுல் நடத்தப்பட்டது. 1980ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலுமுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் 10 தெரிவு செய்யப்படடு இத்திட்டம் அமுல் நடத்தப்பட்டது. 1980ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட சங்கங்களில் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமும் ஒன்றாகும். இத்திட்டங்களை அமுல் நடத்த இரண்டு ஆண்டுகளுக்குச் சுவீடன் நாட்டுக் கூட்டுறவு நிறுவனங்கள் உதவி அளித்தன. பின்பு ஸ்ரீ இலங்கா தேசியக் கூட்டுறவுச் சபையின் ஆதரவுடன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ந்து இத்திட்டத்தினைச் செயற்படுத்தும், பொறுப்பை ஏற்றுக்கொண்டன.

தெரிவு செய்யப்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளைகள் தோறும் கூட்டுறவு மகளிர் பாவனையாளர் தகவற் கிளைக் குழுக்களை அமைத்து மேற்படி நோக்கங்கள் செயற்படுத்தப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

8:ஏஐ சர்வதேச நிறுவனங்கள்
சர்வதேசக் கூட்டுறவு இணைப்பு நிறுவனம்:
கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சியின் சின்னமே சர்வதேசக் கூட்டுறவு இணைப்பு நிறுவனமாகும். கூட்டுறவு இயக்கம் பரவியிருந்த நாடுகள் ஒன்று சேர்ந்து 1895ம் ஆண்டு இந்நிறுவனத்தை உருவாக்கின. காலத்துக்குக்காலம் கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கேற்ப இந்நிறுவனமும் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. இதன் தலைமை அலுவலகம் இங்கிலாந்தில் உண்டு. இதன் செயற்பாடுகள் அதிகரிக்க அவற்றை இலகுவாக்கவும் விரிவாக்கவும் பரந்த அளவிற் செயற்படுத்தவும் நான்கு பிராந்திய அலுவலகங்களை இது ஆரம்பித்தது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளிற் செயற்பாடுகளைக் கவனிக்கும் பொருட்டுப் புதுடில்லியில் (இந்தியா) ஒரு பிராந்திய அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளின் செயற்பாடுகளைக் கவனிப்பதற்காகத் தன்சனியாவில் (வுயணெயnயை) பிராந்திய அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் சுமார் 101 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்நாடுகளில் உள்ள கூட்டுறவுத் தேசிய நிறுவனங்களின் ஒரு பிரதிநிதி இந்நிறுவனத்தின் பொதுச்சபையில் அங்கம் வகிப்பார். இப்பிரதிநிதிகள் சுமார் 25 கோடி கூட்டுறவாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கம் வகிக்கின்றார்கள். இப்பிரதிநிதிகள் காலத்துக்குக் காலம் கூட்டுறவு இயக்கம் சம்பந்தமான கருத்துக்களைப் பரிமாறவும், கூட்டுறவு இயக்கத்தை உலக ரீதியாக அபிவிருத்தி செய்வதற்குரிய திட்டங்களைத் தயாரித்துச் செயற்படுத்தவும் பல்வேறு இடங்களிற் கூடுவார்கள்.

நோக்கங்கள்:
1. கூட்டுறவுக் கொள்கைகளை அதன் இலட்சியத்தில் இருந்து மாறாத வகையிலும், கால மாற்றங்களின் தேவைகளை அனுசரித்தும், பல்வேறு நாடுகளின் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரப் பண்பாடுகளுக்கு முக்கியத்துவமளித்தும் பொதுக் கொள்கைகளை உருவாக்கிச் சர்வதேச ரீதியான அங்கீகாரத்தைப் பெறல்.

2. அங்கத்துவ நாடுகளிலுள்ள கூட்டுறவு இயக்கம் சம்பந்தமான புள்ளி விபரங்களையும் தகவல்களையும் காலந்தோறும் சேகரித்தல்.

3. அங்கத்துவ நாடுகளுக்குத் தேவைப்படும் கூட்டுறவு இயக்கச் செயற்பாடுகளுக்குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளைக் காலத்துக்குக் காலம் வழங்கல்.

4. கூட்டுறவுக் கல்வி, பிரசாரம், கருத்தரங்கு என்பவற்றுக்குரிய தகுந்த திட்டங்களைக் காலத்துக்குக் காலம் தயாரித்துச் செயற்படுத்தல்.

5. உறுப்புரிமை நாடுகளுக்கிடையே தொடர்புகளை வலுமிக்கதாக ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகளை எடுத்தல்.

6. வளர்ச்சியுற்ற நாடுகளின் கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார உதவியுடன் வளர்ச்சியுற்று வரும் நாடுகளிற் கூட்டுறவு இயக்க அபிவிருத்திக்குரிய திட்டங்களைத் தயாரித்துச் செயற்படுத்தல்;.

9. கூட்டுறவு இயக்க வளர்ச்சிக்கு உதவும் அரச நிறுவனங்கள்
கூட்டுறவு அமைப்பாக இல்லாதுவிடினும் கூட்டுறவு இயக்கத்தை வளர்ப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றின் செயற்றிடங்களை நிறைவேற்றுவதற்கும் பல்வேறு வகையில் உதவும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அவற்றுட் சிலவற்றைப் பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன.

இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனம்:
இலங்கைக் கூட்டுறவு அமைப்பை ஆராய்ந்த லெயிட்லோ ஆணைக்குழு கூட்டுறவுக்கான புனரமைப்பை 1969இற் சிபாரிசு செய்த பொழுது இலங்கைக் கூட்டுறவு முகாமையை விருத்தி செய்வதற்கான ஒரு நிறுவனம் உருவாக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றிப் பரிந்துரைத்தது.

இச் சிபாரிசின் பேரில் இலங்கை அரசின் வேண்டுகோளுடன் சுவீடன் தேசக் கூட்டுறவு ஒன்றியம், சர்வதேச தொழில் நிறுவனம் ஆகியவற்றின் நன்கொடையுடன் இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைத் தேசிய கூட்டுறவுச் சபை, சர்வதேச கூட்டுறவு இணைப்பு நிறுவனம், கூட்டுறவுத் திணைக்களம் ஆகியனவும் இதன் தோற்றத்துக்குத் தமது ஆதரவை நல்கின. 1973ஆம் ஆண்டு தேசிய வர்த்தகக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சின் கீழ் இந்நிறுவனம் கூட்டுறவு முகாமைச் சேவை நிலையம் என்ற பெயருடன் இயங்கியது. 1983ல் 37ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இந்நிறுவனம் பொதுக் கூட்டுத்தாபனங்களுள் ஒன்றாக மாற்றப்பட்டதுடன் இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனம் எனவும் பெயரிடப்பட்டது. அத்துடன் கூட்டுறவு அலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது.

இதன் நோக்கம் இலங்கையிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களின் முகாமைத்திறன்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் அந் நிறுவனங்களினூடாக அதன் உறுப்பினர்கள் உச்சப் பயனைப் பெற உதவுவதாகும். இந்நோக்கத்தை அடையும் பொருட்டுப் பின்வரும் செயற்பாடுகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

1. கூட்டுறவு நிறுவனங்களில் முகாமைச் சீர்திருத்தத்தை ஏற்படுத்தல்.

2. கூட்டுறவு நிறுவனங்களிலுள்ள முகாமைத் தன்மைகளை ஆராய்ந்து திருத்தங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கல்.

3. புதிய முகாமைத் திட்டங்களைத் தயாரித்து வெளிப்படுத்தல்.

4. சிறந்த முகாமைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல். நடைமுறைப்படுத்தலுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கல்.

5. முகாமைச் சேவைகளை வழங்கல்.

6. முகாமைத்துறை பற்றிய பிரசுரங்களை வெளியிடல்.

7. முகாமைக் கல்விக்கு ஏற்பாடு செய்தல்.

8.முகாமை மட்டத்திலுள்ள ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஒழுங்குகளைச் செய்தல்.

9. கூட்டுறவு நிறுவனங்களில் முகாமைத் திறனை வளர்க்கக் கூடிய ஏனைய கருமங்களை மேற்கொள்ளல்.

பணிப்பாளர் சபை பரந்த அனுபவமுள்ளவர்களையும் கூட்டுறவுத் துறையில் அனுபவமுள்ளவர்களையும் ஏனைய நிறுவன நடவடிக்கைகளுடன் இந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை இணைக்கக் கூடியவர்களையும் கூட்டுறவு இயக்கத்தைப் பண்படுத்தக் கூடியவர்களையும் கொண்டுள்ளது. பணிப்பாளர் சபை ஏழு உறுப்பினர்களைக் கொண்டது.

இதன் தலைவர் அமைச்சரால் நியமிக்கப்படுவர். பணிப்பாளர் சபையில் கூட்டுறவு ஆணையாளர் இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையின் தலைவர் ஆகியோர் உத்தியோகபூர்வ அங்கத்தவர்களாக இருப்பர். ஏனைய அங்கத்தவர்கள் நாட்டின் பல்வேறு துறைகளிலும் அனுபவம், உள்ளவர்களையும், கூட்டுறவுத் துறையில் அனுபவம் உள்ளவர்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் தெரிவுசெய்வார்.

இதுவரை நிறைவேற்றிய செயல்கள்:
1. கியூ (வரிசை) முறையை ஒழிக்குந் திட்டம்.

2. விநியோக முறையில் திருத்தங்கள் செய்தமை.

3. முகாமை சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள்.

4. முகாமை சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புக்கள்.

5. முகாமை சம்பந்தப்பட்ட துண்டுப் பிரசுரங்கள்.

6. விற்பனைச் சிட்டையில் சீர்திருத்தத்திட்டம்.

7. பின்வருவனவற்றில் நூல்கள் வெளியிட்டமை:
(அ) வரவு செலவுக் கட்டுப்பாடு.
(ஆ) ஊக்க நிதிக் கொடுப்பனவு.
(இ) பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமை அபிவிருத்தி.
(ஈ) ஜனசவியவும் கூட்டுறவும்.
(உ) கூட்டுறவுச் சங்கங்களிற் கூட்டங்கள்.
(ஊ) இலங்கைக் கூட்டுறவுத் துறையில் மனிதவள ஆய்வு.
(எ) பல்வேறு வகைத் தொழில்களுக்கான திட்ட அறிக்கைகள்.
(ஏ) பல்வேறு சங்கங்களுக்கான முகாமை விருத்தி அறிக்கைகள்.

இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனத்தின் அமைப்பு.

தலைவரும் ஃ நெறியாளர்களும்
7 உறுப்பினர்கள்

பொது முகாமையாளர்




செயலாளர் முகாமையாளர் சிரேஷ்ட முகாமை
நிர்வாகம்ஃநிதிஉதவி உசாத்துணைவர்கள்
.க
முகாமை
உசாத்துணைவர்கள் ண முகாமையாளர்
னி தகவல் ஃ வெளியீட்டுப்
பகுதி
கணக்காளர் உதவி முகாமை ப்
உசாத்துணைவர்கள் ப
கு வெளியீட்டு நூலகப்
உதவி பயிற்சி தி உத்தி பொறுப்
கணக்காளர் உசாத்துணைவர்கள் யோகத்தர் பாளர்




உதவியாளர்கள் உதவியாளர்கள் உதவியாளர்கள்

2. கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு:
கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. 1972ம் ஆண்டு 12ம் இலக்கக் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுக் கட்டணச் சட்டத்தின் கீழ் இதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இக்குழுவுக்குத் தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், உறுப்பினர்கள் ஆகியோரை அமைச்சு நியமிக்கும். கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர் நியமனம், பதவி உயர்வு, சம்பளம், லீவு, ஒழுக்காற்று விசாரணை, தண்டனை போன்ற விடயங்களை ஒழுங்கு படுத்தல், மேற்பார்வை செய்தல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் ஆகிய கடமைகளைச் செய்கின்றது. இதன் பிரமாணங்களின் விபரங்கள் பற்றி இலங்கைக் கூட்டுறவுச் சட்ட மூலங்கள் என்னும் அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது பிரிவின் படி இதன் செயற்பாடுகள் தற்பொழுது மாகாண மட்டத்துக்குப் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் மாகாண மட்டத்தில் இவ்வாணைக்குழு இயங்குவதுடன், மாகாண மட்டத்தில் இயங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் நலன்களையும் அவர்கள் சம்பந்தமான பிணக்குகளையும் கவனித்து வருகிறது. கொழும்பிலுள்ள கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு கூட்டுறவு ஊழியர்கள் தொடர்பிலான கொள்கை வகுத்தல் கடமைகளையும் தலைமைச் சங்கங்களிற் (சம்மேளனங்கள்) பணியாற்றும் கூட்டுறவு ஊழியர்களின் நலன்களையும், அவர்கள் சம்பந்தமான பிணக்குகளையும் கவனித்து வருகிறது.

3. உணவுத் திணைக்களம்:
இதுவும் உணவுக் கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்குகின்றது. இரண்டாம் மகாயுத்த காலந் தொடக்கம் அரிசி, மா, சீனி ஆகிய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதில் தனியுரிமை பெற்றிருந்தது. இப்போது தனியாருக்கும் இப்பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ஆயினும் இன்னும் இப்பொருள்களில் நாட்டில் பற்றாக்குறை ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டுப் போதிய அளவு பொருள்களை இறக்குமதி செய்து பண்டகசாலைகளிற் சேமித்துக் காலத்துக்குக் காலம் விநியோகிக்கின்றது.

நுகர்ச்சிச் சேவைகளை அளிக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேவையான அளவு இப்பொருள்களைக் காலத்துக்குக் காலம் வழங்குகின்றது. இவ்வுணவுப் பொருள்களைக் குறுங்காலக் கடன் அடிப்படையில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்குங்களுக்கு வழங்குகின்றது. அத்துடன் உணவு முத்திரைகளைச் சேகரிக்கும் அதிகாரத்தையும், அவற்றைக் கொண்டு உணவுப் பொருள்களின் கடன்களைத் தீர்க்கும் ஒழுங்குகளையும் ஏற்படுத்தியிருந்தது. உத்தரவு பெற்ற உணவுப்பொருள் வியாபாரிகளுக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இப்பொருள்களைக் குறுங்காலக் கடனாகப் பெற்று உணவு முத்திரைகளுக்கு விற்பனை அல்லது அம்முத்திரைகளைக் கொண்டு கடனைத் தீர்ப்பதற்கும் வசதி செய்திருந்தது.

4. கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்:
விவசாயப் பகுதித் தலைவரே கூட்டுறவுச் சங்கங்களின் பதிவையும், மேற்பார்வையையும் 1930ஆம் ஆண்டுவரை செய்து வந்தார். விவசாயப் பகுதித் தலைவர் பல பொறுப்புகளுக்கு மத்தியிற் கூட்டுறவு சம்பந்தமான வேலைகளையும் கவனித்தமையாற் கூட்டுறவு இயக்கம் போதிய அளவு வளர்ச்சி அடையவில்லை. எனவே 1930ஆம் ஆண்டில் விவசாயப் பகுதியில் இருந்து கூட்டுறவுத் துறை தனியாக்கப்பட்டுப் புதியதொரு இலாகா உருவாக்கப்பட்டது. கூட்டுறவுப் பதிவாளர் (ஆணையாளர்) ஒருவர் தனியாக நியமிக்கப்பட்டுக் கூட்டுறவு இயக்கத்தை வளர்க்கும் பொறுப்புக்களும் அதிகாரங்களும் சட்டமூலம் அவருக்கு அளிக்கப்பட்டன. கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கேற்பக் காலத்துக்குக் காலம் கூட்டுறவு இலாகாவும் விருத்தியும் வளர்ச்சியும் அடைந்தன.

கூட்டுறவுப் பதிவாளரின் (ஆணையாளர்) கீழ்ப் பல்வேறு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 26 மாவட்டங்களிலும் கூட்டுறவு இலாகாவின் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுக் கூட்டுறவு இயக்கம் வளர்ச்சியடைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.


பின்வரும் முக்கிய கடமைகளைக் கூட்டுறவு இலாகா இப்போது ஆற்றி வருகின்றது. அவையாவன:
1. கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.

2. கூட்டுறவுச் சங்கங்களை மேற்பார்வை செய்தல்.

3. கணக்காய்வு செய்தல்.

4. சங்கங்களைப் பரிசோதனை செய்தல்.

5. சங்கங்களில் விசாரணை செய்தல்.

6. நிருவாகத்துக்கு வழிகாட்டல்.

7. நிருவாகத்துக்கு ஆலோசனைகள் வழங்கல்.

8. கூட்டுறவுக் கல்வி, பிரச்சாரத்துக்கு உதவல்.

9. கூட்டுறவு ஊழியர் பயிற்சிக்கு உதவல்.

10. கூட்டுறவுச் சட்டம் விதி, துணைவிதிகள் பற்றி விளக்கம் கொடுத்தல்.

11. கூட்டுறவில் அரசின் கொள்கைகளைச் செயற்படுத்த நடவடிக்கைகள் எடுத்தல்.

12. கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திக்கும் ஒழுங்குக்கும் தேவையான ஏனைய கருமங்களை மேற்கொள்ளல்.

5. கூட்டுறவுக் கல்லூரி:
1940ஆம் ஆண்டுக்குப் பின் கூட்டுறவு இயக்கத்தில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி கூட்டுறவு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கiயை அதிகரிக்கச் செய்தது. கூட்டுறவு உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகவும் திறமையாகவும் செயலாற்ற அவர்களுக்குத் தகுந்த கல்வியும் பயிற்சியும் அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்த கூட்டுறவு இலாகா 1943ஆம் ஆண்டிற் கண்டி மாவட்டத்திலுள்ள பொல்கொல்லை என்னுமிடத்திற் கூட்டுறவுக் கல்லூரியொன்றை ஆரம்பித்தது. இதற்குப் பொறுப்பாக உதவி ஆணையாளர் ஒருவரையும் நியமித்தது. ஆரம்பத்திற் கூட்டுறவுச் சங்க ஊழியருக்கும் கூட்டுறவுப் பரிசோதகர்கள், உப பரிசோதகர்கள் ஆகியோருக்குப் பயிற்சியளித்தது. நூல்நிலைய வசதிகளும், விடுதி வசதிகளும் இங்குண்டு. தற்போது கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கான சாதாரண உயர்தரப் பரீட்சைகளையும் நடாத்துகின்றது. பயிற்சி வகுப்புக்களையும் கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கான கூட்டுறவுப் பயிற்சியாளர்களுக்குத்தேவையான நூல்களையும் காலத்துக்குக் காலம் வெளியிடுகின்றது. இலங்கையிற் கூட்டுறவுக் கல்விப் பயிற்சியின் தலைமை நிறுவனமாக விளங்குகின்றது. பொதுவாகக் கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கும் சிறப்பாகக் கூட்டுறவுக் கல்வியின் விருத்திக்கும் தேசிய ரீதியில் தன்னாலான பங்கை அளிக்கின்றது.

6. கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் (ஊ.று.நு.):
கூட்டுறவு நுகர்வோர் சங்கங்களின் வளர்ச்சி காரணமாக அவற்றின் தொழிற்பாடுகளுக்கு உதவும் நோக்கோடு கூட்டுறவுப் பண்டகசாலைச் சமாசங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவை கூட்டுறவு நுகர்வோர் சங்கங்களுக்கு வேண்டிய பொருள்களைக் கொள்முதல் செய்து கொடுத்து உதவின. இச் சாமசங்களுக்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்து கொடுப்பதற்கு ஒரு நிறுவனம் தேவையென உணர்ந்த கூட்டுறவு இலாகா 1943ம் ஆண்டு இந் நிறுவனத்தை ஆரம்பத்தது.

மனித வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான உணவு, உடை போன்ற பொருள்களை இறக்குமதி செய்து கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகஞ் செய்வதே இதனுடைய முக்கிய நோக்கமாக விளங்கியது. ஆரம்ப காலத்தில் நாடு முழுவதும் சுமார் 38 விநியோக நிறுவனங்களை ஆரம்பித்துத் தனது தொழிலை மேற்கொண்டது. இந்நிறுவனத்தின் தொழில் முயற்சிகள் அதிகரித்தமையால், அவற்றை விரைவில் நிறைவேற்றுவதும், அவற்றால் எழும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காண்பதும் இலாகா வழி நிருவாகத்தால் இயலாத காரியம் என்பதை அரசு உணர்ந்து இதனை ஒரு வியாபார நிறுவனமாக மாற்றியமைக்க வேண்டுமெனத் தீர்மானித்தது.

1949ஆம் ஆண்டில் 47ஆம் இலக்கக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் பிரகாரம் இதுவொரு வியாபாரக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. பழைய நிறுவனத்தின் சொத்துக்களிற் சுமார் 50 வீதம் நன்கொடையாகவும், மீதிச் சொத்துக்கள் 30 வருடகாலத் தவணைக் கடனில் 1 ½ வீத வட்டியுடன் கட்டித் தீர்க்கும் ஒழுங்குடனும் இந்நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

ஆரம்பத்திற் பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டாலும் கூட்டுத்தாபனமாக மாற்றமடைந்ததும் அதன் நோக்கங்களும் விரிவுபடுத்தப்பட்டன. அவையாவன-

1. இறக்குமதி, ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடல்.

2. மொத்த வியாபாரத்தை மேற்கொள்ளல்.

3. நாட்டின் பலபாகங்களிலும் விற்பனை நிலையங்களை நிறுவிச் சில்லறை வியாபாரத்தினை மேற்கொள்ளல்.

4. உள்@ர் உற்பத்தித் தொழில்களுக்கு முக்கியமாக விவசாய, கைத்தொழில் உற்பத்திகளுக்கு ஆதரவு அளித்தல்.

இக்கூட்டுத்தாபனத்தை நிருவகிப்பதற்காக ஒரு தலைவரையும் இயக்குநர் சபை உறுப்பினர்களையும் மந்திரியவர்கள் நியமிப்பார்கள். இவ்வியக்குநர் சபை ஏழு பேருக்கு மேற்படாமலும் ஐந்து பேருக்குக் குறையாமலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். இதில் மூன்று உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா தேசியக் கூட்டுறவுச் சபையின் ஆலோசனைக்கிணங்க நியமிக்கப்படுவர்.

இதன் தொழிற்பாடுகள் அதிகரித்தமையால் இது பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இதன் தொழிற்பாடுகள் நிகழ்கின்றன. ஆயினும் இதற்கு ஒப்படைக்கப்பட்ட தொமிற்பாடுகளைப் பூரணமாகவும் திருப்திகரமாகவும் நிறைவேற்றுவதில் தாமதங்களும் நடைமுறைக் கஷ்டங்களும் இருந்தமையாற் சில தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதற்கெனக் குறிப்பிட்ட சில நிறுவனங்களை அரசு கூட்டுத்தாபன அமைப்பில் உருவாக்கியது. அவையாவன:

1. சலுசலா.

2. ஸ்ரீ லங்கா வர்த்தகக் கூட்டுத்தாபனம்.

சலுசலா புடைவைகளை இறக்குமதி செய்த விநியோகிப்பதிலும், உள்@ர் உற்பத்திப் புடைவைகளைக் கொள்முதல் செய்து சந்தைப்படுத்துவதிலும் பொறுப்புடையதாக விளங்குகின்றது. இறக்குமதி செய்யப்பட்ட புடைவைகளிற் பெரும்பகுதியைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கூடாகவே விநியோகஞ்செய்கின்றது. எனவே இதுவும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு உதவும் நிறுவனமாகவே விளங்குகின்றது. ஸ்ரீ இலங்கா வர்த்தகக் கூட்டுத்தாபனத்துக்கு மோட்டார் வாகனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் போன்ற குறிப்பிட்ட சில பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

7. மக்கள் வங்கி:
கூட்டுறவுச் சமஷ்டி வங்கி, கூட்டுறவு மாகாண, மாவட்ட வங்கிகளின் குறைபாடுகளைக் கொண்ட அறிக்கையொன்றை 1954ஆம் ஆண்டு மத்திய வங்கி ஆ@னர் நிதிமந்திரிக்கும், கூட்டுறவுத்துறைக்குப் பொறுப்பாக இருந்த மந்திரிக்கும் கொடுத்தார். முக்கியமாக இவ்வறிக்கையிற் கூட்டுறவு வங்கிகளின் நிதிப் பற்றாக்குறையினால் அவை தமது வங்கிச் சேவைகளைத் திறம்பட நடாத்த முடியவில்லை என்பதும், போதிய நிதிவசதிகளைப் பெறக்கூடிய முறையில் இவ்வங்கிகள் மறுசீரமைக்கப்பட வேண்டுமென்பதும் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வறிக்கையின் அடிப்படையிற் போதிய நிதிவசதிகளைப் பெறக்கூடியதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிற் பங்கு கொள்ளக்கூடியதும், நாட்டின் பல பாகங்களிலும் கிளைகளைக் கொண்டதுமான கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை நிறுவ மந்திரியவர்கள் விரும்பினார். ஆயினும் அத்திட்டம் காலதாமதமாகியது. இக்காலகட்டத்தில் வங்கிகளின் சேவைத் தன்மையைப் பற்றி அரசு ஆராய்ந்தது. இந்நாட்டில் இருந்த வணிகவங்கிகளில் “இலங்கை வங்கி” யைத் தவிர ஏனைய வங்கிகள் யாவும் வெளிநாட்டு வங்கிகளாக இருந்தன. இலங்கை வங்கியும் வியாபாரத் தொழில் முயற்சிகளுக்குக் குறுங்காலக் கடன்களை வழங்கி இலாபமீட்டும் நோக்குடன் இயங்கியதேயன்றி நாட்டின் உற்பத்தித்துறை வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவக்கூடிய முறையில் அக்காலகட்டத்தில் இயங்கவில்லை.

கூட்டுறவுத்துறைக்கென மட்டும் வரையறுக்கப்பட்ட தனிக்கூற்று வங்கி முறை கூட்டுறவு இயக்கத்தின் தேவைகைளப் பூரணமாகப் பூர்த்தி செய்யக்கூடிய முறையில் இயங்க முடியாது எனக் கருதப்பட்டது. கூட்டுறவு இயக்கத்துக்கெனச் சேவையாற்ற விசேடத்துவம் பெற்ற, ஆனால் அதேவேளையில் மேற்படி இயக்கத்துக்குப் போதிய அளவு நிதி வழங்கவும், அத்தகைய கடன் வசதிகளை அளிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தாங்கிக் கொள்வதற்குப் பலம் வாய்ந்ததுமான ஒருவங்கி தேவையென அரசு கருதியது. கூட்டுறவுத்துறைக்கு முக்கியத்துவமளிக்கும் அதே நேரத்தில் ஏனைய வணிக முயற்சிகளையும் கொண்ட வங்கியொன்றை ஆரம்பிக்க முயற்சிகள் எடுத்தது.

கூட்டுறவுச் சமஷ்டி வங்கியை 1961ஆம் ஆண்டு மக்கள் வங்கியாக அரசு மாற்றியமைத்தது. அதன் பங்குகளைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விற்பனை செய்தது. இதே வேளையில் கூட்டுறவு மாகாண வங்கிகள் இயங்கிக்கொண்டிருந்தன. அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தது. படிப்படியாக கூட்டுறவு மாகாண வங்கிகளைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இதன் அனுமதித்த மூலதனம் 60 கோடி ரூபாவாகும். இது பங்கொன்று 50 ரூபா வீதம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பங்குகளில் 50 வீதத்தை அரசுக்காகத் திறைசேரிக் காரியதரிசி கொள்முதல் செய்துள்ளார். மீதிப் பங்குகள் கூட்டுறவுச் சங்கத்துக்கு விற்பனை செய்யப்படும். கூட்டுறவுச் சங்கங்கள் விரும்பினால் திறைசேரிக் காரியதரிசி கொள்முதல் செய்த பங்குகளை விலைகொடுத்து வாங்க முடியும். இதன் மூலதனத்தை அதிகரிப்பதாயின் பாராளுமன்றச் சட்டத்தின் மூலமே அதிகரிக்க முடியும். 1961ஆம் ஆண்டு கூட்டுறவுச் சமஷ்டி வங்கியின் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் இது ஏற்றுக்கொண்டது. கூட்டுறவு மாகாண வங்கிகளின் சொத்துக்களும் பொறுப்புக்களும் அவை இணைக்கப்படும் போது மக்கள் வங்கியால் பொறுப்பேற்கப்பட்டன. 1970ஆம் ஆண்டுடன் சகல கூட்டுறவு மாகாண வங்கிகளும் மக்கள் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

முக்கிய நோக்கங்கள்:
1. கூட்டுறவு இயக்கத்தை இலங்கையில் வளர்ப்பதற்குரிய சகல உதவிகளையுஞ் செய்தல்.

2. வங்கிப் பழக்கத்தைக் கிராம மக்களிடையே பரவச் செய்தல்.

3. விவசாயத்துறை, கைத்தொழில் துறையில் ஈடுபட்டவர்களுக்கு வேண்டிய நிதிவசதிகளை இலகுவான முறையிற் பெற உதவல்.

கூட்டுறவுச் சங்கங்களுக்குச் செய்யும் சேவைகள்:

1. கூட்டுறவுச் சங்கத்திற்குச் செய்யும் சேவைகள்:
1. கூட்டுறவுச் சங்கங்களின் வைப்புக்களைப் பெறல்.

2. தேவையான குறுங்கால, இடைக்கால, நீண்டகாலக் கடன்களை வழங்கல்.

3. பிற நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு உத்தரவாதமளித்தல்.

4. பெறுமதியான ஆவணங்கள், சொத்துக்களுக்குப் பாதுகாப்புச் சேவையளித்தல்.

5. கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிகர்த்தாவாகக் கடமையாற்றல்.

2. கிராமிய வங்கிச் சேவைகள்:
கிராமிய வங்கியைப் பற்றிய பகுதியில் தரப்பட்டுள்ளது.

3. ஏனைய சேவைகள்:
1. ஆலோசனைச் சேவைகளை வழங்கல்.

2. கடன் மேற்பார்வைக்கு உதவல்.

3. தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கல்.

4. சாத்தியக் கூற்று அறிக்கைகளை மதிப்பீடு செய்தல்.

மக்கள் வங்கியின் 50 வீதத்துக்கதிகமான பங்குகளைப் பெற்ற போதும் அதன் நிருவாகப் பொறுப்புக்களிற் கூட்டுறவுச் சங்கங்களுக்குரிய பங்கு அளிக்கப்படவில்லை. நிருவாகப் பொறுப்பில் அரசால் நியமிக்கப்படும் பணிப்பாளர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கின்றது.

இதன் நிருவாகப் பொறுப்பு எட்டுப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரையே தலைவராக அமைச்சர் நியமிப்பார். அபிவிருத்தித் திட்டமிடல், நிருவாகம், பரிசோதனை, வெளிநாட்டு விடயற்கள், உள்நாட்டுக் கடன், இயக்கம், சேவை, கூட்டுறவு அபிவிருத்தி, கடன் அறவிடல், ஆளணிப் பகுதி என்னும் பகுதிகளாகப் பிரித்துச் சேவைகளைத் திறம்பட ஆற்றுகின்றது. இலங்கை முழுவதும் 16 பிராந்தியத் தலைமைக் காரியாலயங்களையும் 400க்கு மேற்பட்ட கிளைகளையும் கொண்டு மக்களுக்கு இவ்வங்கி சேவையாற்றுகின்றது.

8. ஏனைய நிறுவனங்கள்:
விற்பனைத் திணைக்களம்: கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உறுப்பிர்களிடமிருந்து விளைபொருள்களை (காய்கறி, பழவகை, வெங்காயம், மிளகாய்) கொள்முதல் செய்து உதவுகிறது.

நெற் சந்தைப்படுத்துஞ் சபை: கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உத்தரவாத விலைத்திட்டத்தின் கீழ் நெல்லைக் கொள்வனவு செய்கின்றது.

உற்பத்தியில் ஈடுபடுகின்ற ஏனைய கூட்டுத்தாபனங்களும் பொருள் விநியோகத்தில் கூட்டுறவுச் சங்கங்களை முகவர்களாக நியமிக்கின்றன. அல்லது பொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்குகின்றன.


10. கூட்டுறவில் அரசின் அதிகாரப் பரவல்

(மாகாண அதிகாரப் பரவலாக்கலுக்கு முன்னைய நிலை)
அதிகாரப் பரவல் அமைப்பு:
பாராளுமன்றம்

மந்திரி

நிரந்தரச்செயலாளர்

உதவிச் செயலாளர்
(கூட்டுறவு இணைப்பு உத்தியோகத்தர்)


கூட்டுறவு வேலையாளர் கூட்டுறவு முகாமைச் கூட்டுறவு அபிவிருத்தித்
ஆணைக்குழு சேவைகள் நிலையம் திணைக்களம்


கூட்டுறவு ஆணையாளர்
(பதிவாளர்)

பிரதி ஆணையாளர்கள்



சிரேஷ்ட உதவி ஆணையாளர்கள்




பிரதான காரியாலய உதவி ஆணையாளர்கள்



அதிபர்
பிராந்தியக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களக் காரியாலய கூட்டுறவுக் கல்லூரி
1 உதவி ஆணையாளர்கள் 26 (உதவி ஆணையாளர்)



1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3



1 2 1 2 1 2 1 2 1 2

1. அபிவிருத்திக் 2. கணக்காய்வு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள்
கூட்டுறவுப் கூட்டுறவுப் பிரதி உதவி ஆணையாளர்கள்
பரிசோதகர்கள் பரிசோதகர்கள் கணக்காய்வு உதவி ஆணையாளர்கள்


கூட்டுறவில் அரசின் அதிகாரப் பரவல்
(மாகாண அதிகாரப் பரவலின் பின் உள்ள தற்போதைய நிலை)

பாராளுமன்றம்

அமைச்சர்


நிரந்தரச் செயலாளர்

உதவிச் செயலாளர்

கூட்டுறவு வேலையாளர் இலங்கைக் கூட்டுறவு கூட்டுறவு அபிவிருத்தித்
ஆணைக்குழு முகாமை நிறுவனம் திணைக்களம்


கூட்டுறவு ஆணையாளரும்ஃபதிவாளரும் கூட்டுறவு ஆணையாளரும்ஃபதிவாளரும்
மாகாணங்கள் (8) - கொழும்பு பிரதி ஆணையாளர்கள்


உதவி ஆணையாளர் உதவி ஆணையாளர் உதவி ஆணையாளர்
பிரதம அலுவலகம் பிரதம பிரதம அலுவலகம்

சிரேஷ்ட அதிபர் கூ.பொல்
ஆணையாளர் கூ. கல்லூரி


ஆணையாளர் நிர்வாகம்
நுகர்ச்சி
1 2 1 2 1 2 1 2 சந்தை
கிராமிய வங்கிஃசட்டம்
புள்ளிவிபரம்
அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் கணக்காளர்
உ. ஆணை சட்டம்
கணக்காய்வு உதவி ஆணையாளர்கள் உ. ஆணையாளர்
கைத்தொழில்
1 கூட்டுறவுப் பரிசோதகர் அபிவிருத்தி உ. ஆணையாளர்
விவசாயம்
2 கூட்டுறவுப் பரிசோதகர் கணக்காய்வு உ. ஆணையாளர்
மீன்பிடிஃகூ.நிதி


அமைப்பு முறை விளக்கம்:

பாராளுமன்றம்:

ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரத்தின் பிறப்பிடம் பாராளுமன்றமேயாகும். சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் அதிகாரங்களை உருவாக்கி அவற்றைச் செயற்படுத்துவதற்காக உரியவர்களுக்கு அவ்வதிகார தத்துவங்கள் சிலவற்றை வழங்குகின்றது. சில அதிகாரங்களைத் தானே வைத்துக்கொள்ளுகின்றது. அதிகார தத்துவங்களைச் சட்டத்தின் மூலம் அல்லது சட்டத்திற் கூறப்பட்ட வழிமுறைகளின் மூலம் வழங்குகின்றது.

கூட்டுறவுத்துறையைப் பொறுத்தமட்டிற் சட்டத்தின் மூலம் மந்திரிக்கும் ஆணையாளருக்கும் (பதிவாளர்) அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்களுக்கும் சில அதிகார தத்துவங்கள் வழங்கப்பட்டுள்ளன. சில அதிகார தத்துவங்களைத் தானே வைத்திருக்கின்றது.

பாராளுமன்றத்தின் அதிகாரங்கள்:
1. கூட்டுறவுத்துறை சம்பந்தமான சட்டங்களை உருவாக்குதல்.

2. கூட்டுறவுத்துறை சம்பந்தமான சட்டங்களில் திருத்தங்கள் மாற்றங்களை ஏற்படுத்தல்.

3. விசேட ஏற்பாடுகள் சட்டங்களை உருவாக்கல்.

4. ஆணைக்குழுக்கள், விசாரணைக் குழுக்கள் ஆகியவற்றை நியமித்தல்.

5. அவற்pன் அறிக்கைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியவற்றைத் தீர்மானித்தல்.

6. மந்திரி உருவாக்கும் விதிகளை ஆராய்ச்து அங்கீகரிப்பதனை முடிவு செய்தல்.

7. இலங்கையில் அல்லது அதன் எப்பாகத்திலும் உற்பத்தி செய்யப்படும் விளைபொருள்களை அங்கத்தவர், அங்கத்தவரல்லாதோர் அப்பிரதேசத்திலமைந்த கூட்டுறவுச் சங்கத்துக்கே விற்பனை செய்யவேண்டுமென அமைச்சராற் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை ஆராய்ந்து அங்கீகரித்தல் அல்லது மறுத்தல்.

8. சட்டத்தின் மூலம் எந்த ஒரு அதிகாரிக்காவது ஒதுக்கப்படாத கருமங்கள் யாவற்றையும் செய்யும் அதிகாரம்.

மந்திரி:
மந்திரியானவர் தமக்குள்ள அதிகாரங்களையும் தத்துவங்களையும் தானே பயன்படுத்தலாம். அல்லது செயலாளர் பிரதிச் செயலாளர் உதவிச் செயலாளர் போன்றோருக்குத் தத்துவமளித்து அவர்கள் மூலம் பயன்படுத்தலாம்.

அதிகாரங்கள்:
1. பாராளுமன்றச் சட்டங்களை நிறைவேற்றுதல்.

2. சட்டத்துக்கமைய ஆணைக்குழுக்களை நியமித்தல்.

3. ஆணைக்குழுக்களுக்குரிய பிரமாணங்களைச் சட்டத்துக்கமைய ஆக்கி வெளியிடல்.

4. சட்டத்துக்கமைய வேண்டிய விதிகளை உருவாக்குதல்.

5. ஆணையாளராற் பதிவு மறுக்கப்பட்ட சங்கம் சம்பந்தமாகச் செய்யப்படும் மேன்முறையீடுகளை ஆராய்ந்து இறுதி முடிவு செய்தல்.

6. சில சந்தர்ப்பங்களில், இலங்கையில் அல்லது இலங்கையின் எப்பாகத்திலும் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருள்களைப் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கத்துக்கே சங்கத்தின் உறுப்பினர், உறுப்பினரல்லாதோர் யாவரும் கட்டாயமாக விற்பனை செய்தல் வேண்டுமெனக் கட்டளையிட்டு வெளிப்படுத்தல்.

7. மேற்படி கட்டளையை நீக்கி விடல்.

8. ஆணையாளராற் (பதிவாளர்) சங்கமொன்றைக் கலைப்பதற்குக் கட்டளையிட்ட தேதியிலிருந்து இருமாதகால எல்லைக்குள் உறுப்பினர் அல்லது கடன் கொடுத்தவர் ஒருவரோ பலரோ கலைத்தற் கட்டளைக்கெதிராகச் செய்யும் மேன்முறையீடுகளை ஆராய்ந்து இறுதி முடிவு செய்தல்.

9. பதிவழிக்கப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கமொன்றின் கடன் கொடுப்போராயுள்ள வங்கியொன்று, ஒழிப்போனால் அல்லது பதிவாளரினால் இடப்படும் ஏதேனும் கட்டளைக்கெதிராக அக்கட்டளையிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாத கால எல்லைக்குட் செய்யப்படும் மேன்முறையீடுகளை ஆராய்ந்து இறுதி முடிவு செய்தல்.

10. சட்டத்திலுள்ள எதனையும் பொருட்படுத்தாது அமைச்சர் ஒவ்வொரு விடயத்திலும் சிறப்புக் கட்டளை மூலமும் அவர் சுமத்தக் கூடிய நிபந்தனைகளுக்கமையவும் பதிவு பற்றி இச் சட்டத்தின் தேவைப்பாடுகள் எவற்றிலிருந்தும் ஏதேனும் சங்கத்துக்கு விலக்களித்தல்.

11. சட்டத்தின் ஏற்பாடுகள் எவற்றிலிருந்தும் ஏதேனும் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கத்துக்கு அல்லது கூட்டுறவுச் சங்க வகுப்புக்களுக்குப் பொதூன அல்லது சிறப்பான கட்டளைகள் மூலம் விலக்களித்தல்.

12. சட்டத்திற் செய்யப்பட்ட திரிபுகளுடன் கூடிய ஏற்பாடுகள் ஏதேனும் சங்கத்துக்கு அல்லது சங்க வகுப்புக்களுக்கு ஏற்புடையனவாதல் வேண்டுமெனப் பணித்தல்.

13. சட்டத்தின் கீழ் அல்லது விதிகளின் கீழ்ப் பதிவாளருக்குள்ள தத்துவங்கள் எல்லாவற்றையும், அல்லது அவற்றுள் எவற்றையும் பொதுவான அல்லது சிறப்பான கட்டளையினாற் பிரதி, சிரேஷ்ட உதவி அல்லது உதவி ஆணையாளருக்கு அளித்தல்.

14. பதிவாளரால் மறுக்கப்பட்ட சங்கத்தின் துணைவிதித் திருத்தம் பற்றிய மேன்முறையீடுகளை ஆராய்ந்து இறுதி முடிவெடுத்தல்.


கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் (பதிவாளர்)
இலங்கைக் கூட்டுறவுச் சட்டம் பதிவாளர் ஒருவரையும் (ஆணையாளர்) அவசியமாகக் கூடிய எண்ணிக்கையரான பிரதி, சிரேஷ்ட உதவி, உதவிப் பதிவாளர்களையும் (ஆணையாளர்கள் நியமிக்க வகை செய்துள்ளது.

பிரதி ஆணையாளர்கள் ஆணையாளரின் பல்வேறு பொறுப்புக்களையும் பகுதிகளாகப்பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாக ஒவ்வொரு பிரதி ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். நிருவாகம், நுகர்ச்சி விடயங்கள், விவசாயம், கைத்தொழில், எண்பார்வை போன்ற விடயங்களைக் கொண்ட பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்.

ஆணையாளரின் அல்லது பிரதி ஆணையாளரின் செயல்களுக்கு உதவ அல்லது அவரின் பொறுப்புக்கள் சிலவற்றை ஏற்க சிரேஷ்ட உதவி ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கும் ஒவ்வொரு துறை பொறுப்பாக ஒப்படைக்கப்படலாம்.

ஆணையாளர், பிரதி ஆணையாளர், சிரேஷ்ட உதியாணையாளர்கள் என்போருக்கு உதவியாகவும், அவாகளின் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்வதற்குமாகப் பிரதான காரியாலய உதவி ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

நாடு முழுவதிலுமுள்ள கூட்டுறவு விடயங்களை இலகுவாகவும் விரைவாகவும் செயற்படுத்த அமைக்கப்பட்ட பிராந்தியக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களக் காரியாலயங்களுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உதவி ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பொதுவாகப் பிராந்தியக் காரியாலயங்களுக்கு அபிவிருத்தி, பிரதி, எண்பார்வை என உதவி ஆணையாளர்கள் நியமிக்கப்படலாம்.

பிராந்தியக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களக் காரியாலய உதவி ஆணையாளர்கள் அப்பிரதேசத்துக்கு ஆணையாளரின் பிரதிநிதியாக விளங்குவர். ஆணையாளர் அளிக்கப்பட்ட அதிகாரங்களுக்குட்படத் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்காகக் கூட்டுறவுப் பரிசோதகர்கள், கூட்டுறவு உப பரிசோதகர்கள் முதலானோரை நியமிப்பர். இவர்கள் உதவி ஆணையாளரின் பிரதிநிதிகளாகக் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சென்று தமது கடமைகளை ஆற்றுவர். பிரதி, சிரேஷ்;ட உதவி, உதவி ஆணையாளர்களுக்கு இருவகையில் அதிகாரங்களும் தத்துவங்களும் கிடைக்கலாம். அவையாவன:-

1. ஆணையாளர் தமது பிரதிநிதி என்ற வகையில் தமது அதிகாரங்கள் தத்துவங்களிற் சிலவற்றை இவர்களுக்கு அளிக்கலாம்.

2. மந்திரியின் பொதுவான அல்லது சிறப்பான கட்டளையொன்றினால் முழுவதையுமோ அல்லது அவற்றிற் சிலவற்றையோ இவர்களுக்கு அளிக்கலாம்.


ஆணையாளர் (பதிவாளர்) அதிகாரங்கள்:
1. கூட்டுறவுச் சங்கப் பதிவு விண்ணப்பத்தை ஏற்றுப் பதிவு செய்தல்.

2. கூட்டுறவுச் சங்கப் பதிவு விண்ணப்பத்தை மந்திரிக்கு மேன்முறையீடு செய்யலாம் என்ற நிபந்தனையுடன் பதிலை நிராகரித்தல்.

3. துணைவிதிகள், துணைவிதி திருத்தங்கள் என்பவற்றை அங்கீகரித்தல் அல்லது மறுத்தல்.

4. சங்க உறுப்புரிமை மறுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் மேன்முறையீட்டை ஆராய்ந்து இறுதித் தீர்ப்பளித்தல்.

5. உறுப்புரிமை கோரும் அங்கத்தவரின் வயதுத் தகமை வதிவிடத் தகமை என்பவற்றில் பிரச்சினை ஏற்படும்போது இறுதித் தீர்ப்பு அளித்தல்.

6. பொதுக் கூட்டத்தை ஆணையாளர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்டவர் அழைத்தல்.

7. எந்தப் பொதுக் கூட்டத்திலும் ஆணையாளர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்டவர் கலந்து கொள்ளல்.

8. நிருவாக சபை, இயக்குனர் சபை, கிளைக்குழு, கிளைப்பொதுச் சபை என்பவற்றை அழைத்தல்.

9. மேற்கூறப்பட்டவற்றில் கலந்துகொள்ளல்.

10. புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கத்துக்கு ஒரு தற்காலிக பணிப்பாளர் சபைக்கு உறுப்பினர்களை நியமித்தல்.

11. நியமித்த உறுப்பினர்களை நீக்குதல்.

12. துணைவிதிகள் மாறாக இருப்பினும் எந்தவொரு கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாக சபைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை நியமித்தல்.

13. எந்தவொரு சங்கத்துக்கும் தலைவர் அல்லது உபதலைவர் அல்லது இருவரையும் நியமித்தல்.

14. குறிப்பிட்ட காலத்துக்குரிய சங்கக் கணக்குகளின் விபரங்களை (பரீட்சை மீதி வியாபார இலாப நட்டக் கணக்கு, ஐந்தொகை) குறிப்பிட்ட திகதிக்கு முன் சமர்ப்பிக்கும்படி கட்டளையிடல்.

15. அவ்விதம் சமர்ப்பிக்காதுவிடின் தானே ஆட்களை நியமித்துக் கணக்குகளைத் தயாரிக்கச் செய்தல், அதற்குரிய செலவினங்களைச் சங்கத்தில் இருந்து அறவிடல்.

16. தகுதியற்ற நிருவாக உறுப்பினர், அலுவலர் ஆகியோரை அப்பதவியில் இருந்து நீங்கும்படி கட்டளையிடல்.

17. நிருவாக சபை (இயக்குநர் சபை)யைக் கலைத்தல்.

18. நிலையான சொத்துக் கொள்முதலுக்கு அங்கீகாரம் அளித்தல்.

19. இலாபப் பங்கீட்டுக்கு அங்கீகாரம் அளித்தல்.

20. கலைக்கப்பட்ட சங்க அலுவலர்களை இயங்கும் சங்கங்களில் வெற்றிடம் உள்ள பதவிகளில் நியமிக்குமாறு கட்டளையிடல்.

21. வருடமொரு முறையாவது சங்கத்தின் கணக்கினை ஆய்வு செய்தல். பதிவாளர் அல்லது எழுத்து மூலமான பொது அல்லது சிறப்புக் கட்டளை பெற்றவர் கணக்காய்வினைச் செய்வர்.

22. அமைப்பு, தொழிற்பாடு, நிதிநிலை பற்றிப் பதிவாளர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்டவர் விசாரணை செய்தல்.

23. பதிவாளர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்டவர் புத்தகங்களைப் பரிசோதனை செய்து நுண்ணாய்வு செய்தல்.

24. நுண்ணாய்வு விசாரணையின் போது மோசடிகள் கண்டுபிடிக்கப்படுமிடத்து சங்கத்துக்குரிய ஆவணங்கள், புத்தகங்கள் சொத்துக்கள் போன்றவற்றைத் தமது அல்லது தம்மால் அதிகாரமளிக்கப்பட்டவாறு பாதுகாப்பில் வைத்திருத்தல்.

25. விசாரணை, நுண்ணாய்வுகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு உரியவர்களைப் பணித்தல்.

26. சங்கத்தைக் கலைத்தல்.

27. சங்கத்தைக் கலைப்பதற்கு ஒழிப்போன் அல்லது ஒழிப்போர்களை நியமித்தல்.

28. ஒழிப்போர்களை விலக்கல், மாற்றல்.

29. ஒழிப்போனாற் கஷ்டமுறும் எத்திறத்தவரது கோரிக்கைகளையும் விசாரணை செய்து முடிவு செய்தல்.

30. சங்கப் பிணக்குகள் சம்பந்தமான முறையீடுகளை ஏற்று விசாரணை செய்து தானே முடிவு செய்தல்.

31. சங்கப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு மத்தியஸ்தர்களை நியமித்தல், விலக்கல், மாற்றல்.

32. மத்தியஸ்தர்களால் துன்புறுவோரின் முறையீடுகள் சம்பந்தமாக இறுதி முடிவு செய்தல்.

33. பிணக்குகள் சங்கத் தொடர்புடையதா இல்லையா என்னும் பிரச்சினை எழும்போது அதற்கு இறுதித் தீர்வு அளித்தல்.

34. சங்க உறுப்பினர், ஊழியர் சங்கத்தில் உரிமை உடையவராக இருக்கின்றாரா இல்லையா என்னும் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணல்.


11. அனுபந்தம்

இலங்கைக் கூட்டுறவு இயக்கத்தில் 1980இன் பின்னர் ஏற்பட்ட பிரதான நிகழ்வுகள்:
1980க்குப் பின்னர் இடம் பெற்ற மாற்றங்கள் பல பொருத்தமான பாடங்களிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு சேர்ப்பதற்குப் பொருந்தாத ஏனைய மாற்றங்களைத் தொகுத்துக் கூறுவதே இவ்வனுபந்தத்தின் நோக்கமாகும்.


11.1 அரசியற் பொருளாதார மாற்றம்:
1977இற் பதவியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி அரசு காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்திற் பாரிய மாற்றங்கள் உட்புகுத்தப்பட்டன. இதுவரை பல்வேறு கட்டுப்பாடுகளின் மத்தியிலும் வளர்ச்சியுற்ற இலங்கையின் பொருளாதாரம் இச்சந்தர்ப்பத்தில் திறந்த பொருளாதார அமைப்பாக மாற்றப்பட்டது. இதனடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டுக்குப் போதிய ஆதரவு அளிக்கப்பட்டதுடன் உள்@ர்ப் பொருளாதாரத்தில் தனியார் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனாற் பொருட்களை இறக்குமதி செய்தல் தாராளமயமாக்கப்பட்டதுடன் அதுவரை காலம் தட்டுப்பாடாக இருந்த பல பொருள்கள் சந்தையில் இலகுவாகக் கிடைக்க வழி ஏற்பட்டது. தொழில்கள் பெரும்பாலும் போட்டி அடிப்படையில் வளர்ச்சி பெற்றன. பொருட்களுக்கான விலையானாலும் விலைப் பொறி முறை அடிப்படையிற் சந்தையினது கேள்வி நிரம்பலினால் நிர்ணயிக்கப்பட்டது. இச்சூழ் நிலையானது இதுவரை காலமும் தட்டுப்பாடான பொருட்களை விநியோகித்து வந்த சங்கங்களின் விற்பனையிற் பெரிய வீழ்ச்சியைத் தோற்றுவித்தது. கூட்டுறவுச் சங்கங்களும் புதிய பொருளாதார நடைமுறைகளுக்கு இணங்கப் போட்டி வியாபாரத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டன. எனினும் போட்டி வியாபாரத்தில் ஈடுபடுமளவுக்கு அவற்றின் செயற்றிறன் போதியதாக இன்மையினாற் பல்வேறு வகையான பொருளாதார, தொழில்நுட்ப உதவிகள் இவற்றுக்குத் தேவைப்பட்டன. இவ்வாறான உதவியற்ற சூழ்நிலை தொடர்ந்தும் உதவிகள் இவற்றுக்குத் தேவைப்பட்டன. இவ்வாறான உதவிற்ற சூழ்நிலை தொடர்ந்தும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஏற்பாட்டாற் கூட்டுறவுச் சங்கங்கள் தமது முக்கியத்துவத்தை இழந்து விடும் சூழல் ஏற்படுமென அரசாங்கம் உணர்ந்தது.

எனவே, அரசாங்கம் பாவனையாளர்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி அரசாங்கத்திட்டங்களைத் தொடர்ந்தும் நடத்தக் கூடிய ஒரு பிரதான இயந்திரமாகக் கூட்டுறவு இயக்கத்தை வைத்திருக்கு வேண்டிய தேவையை உணர்ந்து பின்வரும் திட்டங்களை ஆரம்பித்தது:

- திறைசேரி மூலம் கூட்டுறவு நிதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

- நவீன முகாமைத்துவக் கொள்கைகளைக் கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

- பழைய பங்கீட்டு முறைக்குப் பதிலாக ஜனசக்தி, சமூர்த்தி போன்ற திட்டங்கள் நடைமுறைக்கிடப்பட்ட போது கூட்டுறவு அமைப்புக்களுக்கு முக்கியத்துவம் செலுத்தப்பட்டது.

- நாடு பூராகவும் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் மாதாந்தப் பெறுபேறுகளைத் திரட்டுவதற்கும், அவற்றைக் கணனி முறையிற் பதிவு செய்வதற்கும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


11.2 ஜனசக்தி:
1991ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 25வது பிரிவின் கீழ் திறைசேரியினால் ஆரம்பிக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் பிரகாரம் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1. மனித வளத்தை உயர் அளவில் பயன்படுத்துவது@

2. சமூக, பொருளாதாரத்தை மேன் நிலைப்படுத்துவது@

3. வறியர் வாழ்க்கையை வளப்படுத்துவது@

என்பவற்றை நோக்கமாகக் கொண்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் செயற்படுத்தப்பட்டபோதும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களே இதிற் கணிசமான பங்களிப்பை நல்கின. இத்திட்டத்தின் மூலம் சமூகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1000ஃ- பெறுமதியான உணவுப் பொருட் பங்கீடும் அவர்கள் எதிர்காலத்தில் சுயமாகச்செயற்படுவதற்கு வசதியாகச் சேமிப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு குடும்பமும் ரூபா 458ஃ-ஐ கூட்டுறவுக் கிராமிய வங்கிகளில் வைப்பாக இடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு சேமிக்கப்பட்ட தொகை எதிர்காலத்தில் அவர்கள் சிறிய தொழிலொன்றை ஆரம்பிப்பதற்கு முதலீடாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

11.3 சமுர்த்தித் திட்டம்:
1995ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தித் திட்டமானது அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் முன்னோடியாக விளங்கி வறுமைக் கோட்டு எல்லைக்கு கீழ் உள்ள மக்களின் வறுமையை அகற்றி அவர்களி; பொருளாதார நிலையை மேம்படுத்த உதவி வருகிறது.

இத்திட்டத்தின் நோக்கம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அதிகரித்த தொழில் வாய்ப்புக்களை, வருமான அதிகரிப்புக்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். இதன் மூலம் நாட்டின் சமூக, பொருளாதார உட்கட்டமைப்பை மாற்றியமைத்தலுமாகும். இத்திட்டத்தின் கீழ் நாட்டின் 18 மாவட்டங்களில் 15 இலட்சம் குடும்பங்கள் பணவுதவி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளையில் முதல் 4 சுற்று ஜனசவிய திட்டங்களின் கீழ் பயன்பெற்ற 3,82,000 குடும்பங்கள் தொடர்ந்தும் ஜனசவிய வட்டியாக மாதமொன்றுக்கு 250 ரூபா பெறுவதுடன், உலர் உணவு உதவிகளையும் பெற்றுக்கொள்கின்றனர். இதன்படி மொத்தமாக 19 இலட்சம் குடும்பங்கள் அல்லது குறைந்த வருமானம் பெறும் மக்களில் 50 சத வீதமானோர் இச்சமூகநலத் திட்டங்களினாற் பயனடைகின்றனர்.

இச்சமுர்த்தி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதிற் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கணிசமான இடத்தை வகிக்கின்றன. சமுர்த்தி வங்கிகள் அமைக்கப்படாத இடங்களிற் சேமிப்பை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளிலும், இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கும் பொருள் விநியோக நடவடிக்கைகளிலும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கணிசமான பங்களிப்பை நல்கி வருகின்றன.

11.4 அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களின் கீழ்க் கூட்டுறவு
நிர்வாகத்தைப் பன்முகப்படுத்தல்:
1983ஆம் ஆண்டு அரசியற் சூழ்நிலைகளையடுத்து இலங்கை - இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் படி மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனைகளுக்குட்பட அரசியல் அமைப்பின் 13 ஆம் சரத்துத் திருத்தச் சட்டம்கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் மத்தியில் இருந்த அதிகாரங்கள் பல மாகாணங்களுக்குப் பன்முகப்படுத்தப்பட்டன. இவ்வாறு பன்முகப்படுத்தப்பட்ட அதிகாரங்களுட் கூட்டுறவு தொடர்பிலான அதிகாரங்களும் அடங்கும். இதன்படி கூட்டுறவுச் செயற்பாடுகள் அனைத்தையும் மாகாண சபைகளினால் மேற்கொள்ள முடியும்;. மாகாண சபைகளின் கீழ் இயங்கும் கூட்டுறவு அமைச்சின் கீழ் மாகாண கூட்டுறவுத் திணைக்களங்கள் செயற்படுகின்றன. இவை தமது மாகாண எல்லைக்குட்பட்ட சங்கங்களை நிர்வகிப்பதற்குப் பொறுப்பாக இருந்து வருகின்றன.

மாகாண ரீதியில் அமைக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சு பொதுக் கூட்டுறவுச் சட்டத்துக்கு முரண்படாத வகையில் அவ்வவ் மாகாணத்துக்குப் பொருத்தமான சட்ட சாசனங்களை அல்லது பிரதிக்ஞையை () உருவாக்க முடியும். இதுவரை ஊவா, மத்திய, மேல் மாகாணங்களில் இவ்வாறான கூட்டுறவுச் சட்ட சாசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளரும் தேசிய ரீதியிற் கூட்டுறவுக் கொள்கைகளை வகுக்கும் விடயங்களுக்கும் உச்சநிலைச் சங்கங்களது மேற்பார்i, கணக்காய்வுக் கடமைகளைச் செய்வதற்கும், பொறுப்பாக இருந்து வருகின்றார். இவ்வாறே மாவட்ட கூட்டுறவுச் சபைகளும் அவ்வவ் மாவட்டங்களுக்குப் பொறுப்பான பொருளாதார, நிர்வாக வேலைகளைச் சுயமாகத் தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரங்களை உடையனவாக உள்ளன.

இவ்வாறான மாற்றங்களை அடியொட்டி பொல்கொல்லைக் கூட்டுறவுக் கல்லூரியில் இயங்கி வந்த தமிழ்ப் பிரிவு திருகோணமலையில் இயங்கும் மாகாணக் கூட்டுறவுத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கத் தொடங்கியது. 1989ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய இம்மாகாண கூட்டுறவுக் கல்லூரி வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள திணைக்கள உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியை வழங்குவதுடன் அப்பகுதிச் சங்கங்களுக்கான பயிற்சித்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. பொல்கொல்லையில் இயங்கும் கூட்டுறவுக் கல்லூரி தேசிய மட்டத்திலான கூட்டுறவுக் கல்லூரியாகத் தொடர்ந்தும் இயங்கி வருகிறது.

11.5 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் அமைப்பில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்:
1971ஆம் ஆண்டு, பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மறுசீரமைப்பில் இருந்து 1988ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ 27 வருடங்களாகத் தற்பொழுதுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முறையே நடைமுறையில் இருந்து வருகிறது. இவற்றின் வளர்ச்சிப் போக்கை அவதானிக்கும்போது அளவு ரீதியிலும், அங்கத்தவர் எண்ணிக்கை, பணியாளர் தொகை, வாகனங்களின் எண்ணிக்கை, சொத்துக்களின் பெறுமதி என்பவற்றில் இலங்கையின் கிராமிய மட்டத்தில் பிரதான ஒரு பொருளாதார, சமூக நிறுவனமாக இவை இயங்கி வருவதை அவதானிக்க முடியும். இருந்தும் இவ்வளவு நீண்ட காலத்துள் இவற்றின் வளர்ச்சிப் போக்கை நுணுக்கமாக அவதானித்து ஏனைய தனியார் துறைகளுடன் ஒப்பிடும் பொழுது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சி மிக மந்தகதியில் இருப்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியுமு;. இவ்வமைப்பிற் காணப்படுகின்ற பிரதான குறைகளைப் பின்வருமாறு அவதானிக்க முடியும்:

- பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கும் அங்கத்தவர்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பின்மை.

- இச்சங்கத்தின் கிளைப் பொதுச்சபை, கிளை நிர்வாக சபை ஆகியன எதுவித அதிகாரமும் அற்ற குழுக்களாகவே செயற்படுகின்றன. நடைமுறையில் உள்ள கிளைத் தேர்தல் முறை கூட்டுறவின் அடிப்படைக்கொள்கைகளில் ஒன்றான ஜனநாயகக் கட்டுப்பாட்டைப் பேணுவதாகத் தெரியவில்லை.

- நெறியாளர் குழு போதிய அதிகாரத்துடன் செயற்பட முடியாமல் உள்ளதுடன் அவை பொதுச் சபை, மற்றும் அரசாங்க அறிவுறுத்தல்களுக்கு அமையச் செயற்பட வேண்டி இருப்பதாற், போட்டி வியாபாரத்திற்கு உகந்த வகையில் விரைவான தீர்மானங்களை எடுக்க முடியாதுள்ளன.

- தமது வியாபாரப் போக்கிலும் பார்க்கக் கூடுதலான பணியாளர்களைக் கொண்டிருக்கும் இச்சங்கங்கள் தமது பணியாளர்களுக்கு முறையான மனித வள அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதனாற் பணியாளர் செயற்றிறன், உற்பத்தித் திறன், உணர்வு ஆகியன குறைந்த மட்டத்திலேயே உள்ளன. பணியாளர் திறன் குறைந்த மட்டத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கான நிலையான செலவு அதிகரித்துச் செல்லுகின்ற நிலை இச்சங்கங்கள் பலவற்றைத் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்க வழி வகுத்துள்ளன.

- சந்தையில் நுகர்வோர் விருப்பங்கள், பாவனையாளர்களின் தேர்வு முறைகள் மிக வேகமாக மாற்றமுற்று வருகின்றன. திறந்த பொருளாதாரக் கொள்கையினூடே போட்டி வியாபாரம் பல உத்திகளை அடிப்படையாகக்கொண்டு வளர்ந்து வருகிறது. இவற்றுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிற் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின்செயற்பாடுகள் அதிகரிக்கவில்லை.

- பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கடந்த 27 வருடங்களுக்கு மேலாகப் பிரதானமாக நுகர்ச்சி வியாபாரத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளன. இந்நுகர்ச்சி வியாபாரமும் ரொக்க வியாபாரமாக அன்றி அரசாங்கப் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடாகவே இருந்து வந்துள்ளது. இதனால் அரசாங்கத்தின் நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையங்களாகவும், வியாபாரத்திற் புதுமையை நாடாத அமைப்புக்களாகவும், உருவாக்கும் இயல்பை ஏற்படுத்தாத அமைப்புக்களாகவுமே இருந்து வந்துள்ளன.

- அங்கத்தவர்களுக்கு எவ்வித பிரதி இலாபமும் கிடைக்காத காரணத்தினால் அங்கத்தவர்கள் சங்க நடவடிக்கைளிற் பங்களிப்பது குறைந்து கொண்டே செல்கிறது.

இத்தகைய குறைபாடுகளாற் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் தேவையெனப் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள கே. டபிள்யூ. தேவநாயகம் அறிக்கையின் சுருக்கக் கருத்துக்கள், சர்வதேசத் தொழில் ஒன்றியத்தின் உபாயத்திட்டமிடல் அறிக்கையிற் கூறப்பட்ட கருத்துக்கள் என்பவற்றை அவதானிக்கும்போது ப. நோ. கூ. சங்கங்களில் எத்தகைய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை அறியலாம்.

11.6 கூட்டுறவுச் சங்கங்களைப் புனரமைப்பதற்கா 1980களில்
வெளியிடப்பட்ட கே. டபிள்யூ. தேவநாயகம் அறிக்கை
உணவு, கூட்டுறவு அமைச்சரினால் 1978.02.23 இற் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டுறவாளருமான கே. டபிள்யூ. தேவநாயகம் அவர்களைத் தலைவராகக் கொண்ட 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டு தனது அறிக்கையை வெளியிட்டது.

- 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற புனரமைப்பின் பின்னர் சங்கங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் அல்லது மறுசீரமைப்பினால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்பவற்றுடன் விவசாயம், மீன்பிடி ஆகிய துறைகளிற் கூட்டுறவு இயக்கம் ஆற்றக் கூடிய பணிகளை ஆய்தல்.

- தற்பொழுது அமைந்திருக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுடைய அமைப்பு முறைகள் எவை? முகாமை அடிப்படையில் இவை சிறப்பாக இயங்க முடியுமா? என்பதையும், கூட்டுறவுத் திணைக்களம் தனது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் செயற்றிறன் வாய்ந்த அமைப்பாகச் செயற்படுத்துவதற்கான ஒழுங்கு முறைகளையும் ஆராய்தல்.

- 1971ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகள், உபவிதிகளிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் ஏற்படுத்தப்பட வேண்டுமா? என்பது பற்றி ஆராய்தல்.

- கூட்டுறவு அமைப்புக்கள் மூலம் விவசாய உற்பத்தி, சந்தைப்படுத்தல், கடன் வழங்கல், கிராமிய சேமிப்பினைப் பன்முகப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளைப் பலமுள்ளதாக ஆக்குவதற்கான ஏற்பாடுகளை ஆராய்தல்.

- 46 – 1 இன் கீழ் கூட்டுறவுச் சங்கங்களில் மேற்கொள்ளப்படும் விசாரணையைச் சட்ட வலுவுள்ளதாக ஆக்க இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களில் இடம் பெறும் மோசடிகளைத் தவிர்க்கக்கூடிய ஏற்பாடுகளை ஆராய்தல்.

-- கூட்டுறவுச் சங்கங்களுக்கான உசாத்துணைச் சேவை மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மேலும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கான சிபாரிசுகளை ஆராய்தல்.

- இவற்றை விட இலங்கைக் கூட்டுறவு அமைப்பிற் காணப்படுகின்ற ஏனைய குறைபாடுகளையும் ஆராய்ந்து பயனுள்ள ஒரு கூட்டுறவு மறுசீராக்கலை மேற்கொள்தற்கான சிபாரிசுகளைச் செய்தல்.

இதன்படி இந்தக் குழுவினாற் பின்வரும் சிபாரிசுகள் செய்யப்பட்டன: இச்சிபாரிசுகளைக்கொண்ட அறிக்கை அந்நாள் உணவு, கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.பீ. ஹேரத் அவர்களிடம் கையளிக்கப்பட்டு இந்தக் குழுவுக்கும், அமைச்சுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பெயரில் இந்தக் குழுச் செய்த சிபாரிசுகளில் பின்வருவன கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாட்டுக்காகத் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட வேண்டுமென்றும் சில சிபாரிசுகள் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டன.

11.6.1 சங்க அங்கத்துவம்:
இக்குழுவின் சிபாரிசின்படி தற்பொழுதுள்ள ஒவ்வொரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர் தொகையும் மிக கூடுதலாக உள்ளது. ஆனால் அங்கத்தவர் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ளது. இதற்கான காரணம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே பொதுச்சபையில் அங்கம் வகிக்கின்றமையாகும். ஆதலின் குடும்பத்துக்கு ஒரு அங்கத்துவம் என்ற முறை பொருத்தமானது என்று சிபாரிசு செய்தது. இதனால் அங்கத்தவர் ஒரு கூட்டத்துக்கு சமூகமளிக்காத விடத்து அவர் சார்பில் ஒரு பின்னுரித்தாளர் இக்கூட்டத்துக்குச்செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இக்குழுவின் சிபாரிசுப்படி சங்கத்தின் எல்லைப் பரப்பு தற்பொழுதிருக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் எல்லைகளைவிடக் குறைவானதாகும். ஒரு சில கிளைகளை மட்டுமே கொண்டு அமைந்திருந்தால் அங்கத்தவர் தொகை குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி 1000 பேருக்குக் குறையாத அங்கத்தவர்களுக்கு ஒரு சங்கம் என்ற வகையில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படலாம். இதனால் ஆகக்கூடியது ஒரு பொதுச்சபைக்கு 750 பேர் வரையில் சமூகமளிக்க வாய்ப்பு ஏற்படும். இது உண்மையான ஜனநாயகத் தன்மையைப் பிரதிபலிக்கும் எனவும், இச்சிபாரிசு மேற்கொண்டு ஆராயப்பட வேண்டுமெனவும் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. இம்முறை ஜப்பானிய மிகச் சிறப்பாக இயங்கி வருவது பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது.


11.6.2 நியமனம் செய்யும் நெறியாளர்கள்:
1978ஆம் ஆண்டின் 12ஆம் இலக்கச் சட்டத்தின்படி நியமனம் பெறும் நெறியாளர்கள் தோன்ற வழி ஏற்பட்டது. இம்முறையை இக்குழு எதிர்த்தது. இயக்குனர் சபையில் 7 அங்கத்தவர் போதுமானது எனவும் சிபாரிசு செய்தது. இதன்படி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல்கள் இடம்பெறலாம் எனவும் விரும்பினால் ஆணையாளர் இன்னுமொரு வருடத்தை நீடிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

11.6.3 மாதிரி உபவிதியொன்றை அமைத்தல்:
அங்கத்தவர்களின் பங்களிப்பை மேம்படுத்திக் கூடிய வகையில் ஒரு மாதிரி உபவிதியொன்றை அமைக்க வேண்டுமென ஏற்றுக்கொள்ளப்பட்டது.

11.6.4 அங்கத்தவர்களுக்கான சேவையை உறுதிப்படுத்தல்:
தற்பொழுது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அங்கத்தவர் அல்லாதோருக்கான சேவையில் மட்டுமே கூடுதற் கவனம் செலுத்துவதாகவும் இது சங்கங்களின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கம் எனவும் எடுத்துக் கூறப்பட்டது. உ-ம்: சங்கத்தினால் அமைக்கப்படும் எரிபொருள் நிலையம், மற்றும் சேவை நிலையங்கள், அங்கத்தவர் அல்லாதோருக்கே பெருமளவு சேவை செய்கின்றன என்றும் இதனால் அங்கத்தவர்களுக்கான சேவை புறக்கணிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது.

11.6.5 சங்கம் ஒவ்வொன்றும் முகவராகச் செயற்படல்:
சங்கங்கள் அங்கத்தவர்களது முகவராகச் செயற்பட வேண்டுமேயன்றி ஏனைய அமைப்புக்களின் முகவராகவும் சேவையாளராகவும் கடமையாற்றும் பாங்கு அகற்றப்பட வேண்டும்.

11.6.6 தேசிய மட்டத்திலான மதியுரைக் குழுவொன்றை அமைத்தல்:
அமைச்சருக்கு ஆலோசனை செய்யக்கூடிய வகையிற் கூட்டுறவுச் சங்கங்களுக்கான மதியுரைக் குழுவொன்று உருவாக்கப்பட வேண்டுமென இக்குழு சிபாரிசு செய்தது. தற்பொழுது கூட்டுறவுத் திணைக்களத்திற் கூட்டுறவுத் தொடர்பிலான செயற்றிறன் வாய்ந்த உத்தியோகத்தர்கள் குறைவாக இருப்பதனாற் கூட்டுறவுத் தொடர்பிலான நிலையான தீர்மானமொன்றை எடுப்பதற்கு 15 பேரைக் கொண்ட மதியுரைக் குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும். இக்குழு தேசிய ரீதியிலான கூட்டுறவுக் கொள்கைகளை வகுத்தல் வேண்டும். இம்முறை இந்தியாவின் குஜ்ராத் மாநிலத்தில் வெற்றியடைந்து இருப்பதாகக் குழு சுட்டிக் காட்டியது.

11.6.7 கூட்டுறவுச் சட்டங்களைத் திருத்தியமைத்தல்:
1972ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கக் கூட்டுறவுச் சட்டத்தின் 42,44,47,48,49,58,59,61,70,72 ஆகிய பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் எனவும் இதற்கான பூர்வாங்கச் சட்டமூலம் அமைச்சினால் தயாரிக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சிபாரிசு செய்யப்பட்ட பொழுது தற்பொழுதுள்ள கூட்டுறவுச் சட்டவிதி, உபவிதி ஆகியவற்றிற் கூட்டுறவுக் கொள்கைகளுக்கு முரண்பாடான பல விடயங்கள் இடம்பெற்று இருப்பதாகவும் எனவே, கூட்டுறவுக் கொள்கைகளுக்கு அனுகூலமாக இச்சட்டங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டுமெனவும் எடுத்துக் கூறப்பட்டது.

11.6.8 1970ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கக் கூட்டுறவுச்
சட்டத்தின் பிரதான ஏற்பாடுகளை இரத்துச் செய்தல்.
புதிய சட்டங்களை அமைப்பதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளும்போது இதிற் கூறப்படும் விடயங்கள் அற்றுப் போகும் என இணங்கிக் கொள்ளப்பட்டது.

11.6.9 கூட்டுறவுத் திணைக்களத்தை தனித்துவமான திணைக்களமாக மாற்றுதல்:
இதுபற்றிக்குழு சிபாரிசு செய்த பொழுது கூட்டுறவுத் திணைக்களத்திற் பல்வேறு திணைக்களங்களையும் சார்ந்த உயர்தர உத்தியோகத்தர்கள் இலங்கை நிர்வாக சேவையில் தெரிவு செய்யப்பட்டு அமர்த்தப்படுவதாற் கூட்டுறவு சம்பந்தமான நடைமுறைகளிற் பரிச்சயமற்றவர்களாக இருக்கின்றனர் எனவும் அவர்கள் வேறு திணைக்களத்துக்கு மாற்றப்படுவதால் நீண்ட காலத்துக்கு அவர்களின் சேவைப் பங்களிப்பைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் ஆகவே இத்திணைக்களம் தனித்துவமான திணைக்களமாக அமைதல் வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியது. இதனால் ஏற்படும் சாதக, பாதக நிலைமைகள் பற்றி அமைச்சு மட்டத்திற் கலந்துரையாடப்பட்டது.

11.6.10 கூட்டுறவுக் கணக்காய்வுகளுக்கு எனத் தனியான திணைக்களம் அமைத்தல்:
திணைக்களக் கணக்காய்வு வேலைகள் மேற்பார்வை வேலைகளில் இருந்து பிரிக்கப்படுவதுடன் கணக்காய்வு உத்தியோகத்தர்களைக் கொண்ட கூட்டுறவுக் கணக்காய்வுத் திணைக்களமொன்று உருவாக்கப்பட வேண்டும். இத் திணைக்கள கூட்டுறவுத் திணைக்களத்துடன் தொடர்பில்லாத தனியான திணைக்களமாக இயங்க வழி செய்யப்பட வேண்டும்.

இத்திணைக்களத்துக்குக் கூட்டுறவுத் திணைக்களக் கணக்காய்வாளர் நாயகம் தலைமை தாங்க வேண்டும். இவர் ஒரு பட்டயக் கணக்காளராகவும், கணக்காய்வு வேலைகளில் 10 வருடங்களுக்குக் குறையாத பரிச்சயம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும் என இக்குழு சிபாரிசு செய்தது. இத்திணைக்கள உத்தியோகத்தர்கள் கணக்காய்வு நடவடிக்கைகளிற் போதிய அறிவுள்ளவராகவும், கூட்டுறவு நடவடிக்கைகளிற் பரிச்சயமுள்ளவராகவும் இருக்கவேண்டும். இந்நடைமுறைகள் தாய்லாந்தில் வெற்றிகரமாக இயங்குவதை இக்குழு சுட்டிக் காட்டியது.

11.6.11 கூட்டுறவு வங்கிகளை உருவாக்குதல்.
1961ஆம் ஆண்டின் 129 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் பிரகாரம் இலங்கைக் கூட்டுறவுத் துறைக்கும் கிராமிய, பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்குமென அரசினால் ஒரு வணிக வங்கி நிறுவப்பட வேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டது. இவ்வங்கியுடன் நடைமுறையில் இருந்த கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டன. இதன் கீழ் 9 மாகாணக் கூட்டுறவு வங்கிகளும், 17 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டன. ஆரம்பத்தில் 50மூ வீதப் பங்குகளைக் கூட்டுறவு கொண்டுள்ளதுடன், அதன் இயக்குனர் சபையில் 3 கூட்டுறவுப் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். அத்துடன் கூட்டுறவு ஆணையாளர் உத்தியோகபூர்வ அங்கத்தவராக இந்நெறியாளர் குழுவில் அங்கம் வகிப்பார். ஆரம்பத்தில் இதில் கிராமிய விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சிடம் இருந்து 2 இயக்குநர்களும் நிதியமைச்சில் இருந்து 01 அங்கத்தவரும் அங்கம் வகித்தனர். 1978ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க மக்கள் வங்கியின் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் படி நிதி அமைச்சுக்குப் பாரப்படுத்தப்பட்டதன் பின்னர் இவ்வங்கியின் செயற்பாடுகளி;ற பெருமளவு மாற்றம் ஏற்பட்டன. ஆகவே முற்றிலும் வணிக வங்கியாக அமைந்துள்ள மக்கள் வங்கிக்குப் பதிலாக மீண்டும் கூட்டுறவு வங்கிகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தைக் குழு பரிந்துரைத்தது.

11.6.12 இலங்கைக் கூட்டுறவு முகாமைச் சேவை நிலையம்:
இக்குழுவின் சிபாரிசு பிரகாரம் இந்நிலையம் கூட்டுறவு உசாத்துணைச் சேவைக்கு ஒரு மத்திய நிலையமாக இயங்குவதுடன் தேசிய கூட்டுறவுச் சபையின் அங்கமாகவும் இயங்க வேண்டுமெனச் சிபாரீசு செய்தது. இது பற்றி ஆராய்ந்த அமைச்சர் இதன் செயற்பாடுகளைக் கூட்டுறவு அமைச்சின் கீழ்க் கொண்டு வந்ததுடன் தொடர்ந்தும் கூட்டுத்தாபனமாக இயங்க இணக்கம் காணப்பட்டது.

11.6.13 தோட்டப் பகுதிகளிற் சுதந்திரமான கூட்டுறவுச் சங்கங்கள்:
தோட்டப் பகுதிகளில் இயங்கும் சங்கங்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய வகையில் சுதந்திரமாக இயங்க வழி அமைக்கப்பட வேண்டுமெனவும் ஏற்கனவே உள்ள தோட்டக் கூட்டுறவுச் சங்கங்களின் உபவிதிகளுக்கு அமைய இயங்க அனுமதிக்க வேண்டுமெனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

11.6.14 கூட்டுறவுச் சந்தைப்படுத்தும் சம்மேளனம்:
1970ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட இச்சம்மேளனத்துடன் முன்னைய நுகர்ச்சியாளர் சம்மேளனமும், விவசாய உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் சொத்துக்களும், பொறுப்புக்களும் இச்சட்டத்தின் கீழ் மேற்படி சம்மேளத்துக்குப் பாரமளிக்கப்பட்டன.

இதனுடைய செயல் முறை, வெறுமனே மொத்த அடிப்படையில் சங்கங்களுக்குப் பொருட்களை விநியோகிப்பதாக இருந்ததால் இதன் செயற்பாடுகள் தேவையற்றவை என இக்குழு சிபாரிசு செய்தது.

11.6.15 தேசிய கூட்டுறவுச் சபையின் செயற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கென அகில இலங்கை ரீதியிற்
கூட்டுறவுச் சங்கங்களின் மகாநாட்டைச் கூட்டுதல்:
1972ஆம் ஆண்டு அங்கம் வகிக்கின்றன. 1976ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கச் சட்டத்தின்படி இலங்கைக் கூட்டுறவுச் சம்மேளனமும், மாவட்டச் சங்கங்கனும் வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சம்மேளனமும் தேசிய கூட்டுறவுச் சபையுடன் இணைக்கப்பட்டன. இதன்படி வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒரு இரவினுள் இலங்கை பூராகவும் இருந்த 8,000 கூட்டுறவுச் சங்கங்கள் முன்னர் 9 சங்கங்களே அங்கம் வகித்த தேசிய கூட்டுறவுச் சபையுடன் இணைக்கப்பட்டன. இதனால் திறமையுடனும், தனித்துவமாகவும் செயற்பட்ட சங்கங்கள் பல தமது தனித்துவத்தை இழந்தமை மட்டுமன்றிச் சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்துடன் தமக்கிருந்த அங்கத்துவத் தகுதியையும் இழந்தன. வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சம்மேளனம் இலங்கைக் கூட்டுறவுச் சபை உருவாக முன்னே ஆரம்பிக்கப்பட்டதுடன் நல்ல வளர்ச்சியும் பெற்றிருந்தது.

இவ்வாறு இச்சங்கங்கள் சட்டரீதியாக ஒன்றிணைக்கப்பட்டமையை இக்குழு கண்டித்தது. இவ்வங்கத்துவச் சங்கங்கள் தமது விருப்பப்படியே ஒன்றிணைக்கப்பட வேண்டுமென இக்குழு சிபாரிசு செய்தது. மேலும் மாவட்டக் கூட்டுறவுச் சமாசங்கள் சுயமாகத் தமது கடமைகளை ஆற்றும் திறனுள்ளனவாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் இம்மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் எவ்வாறு தங்கள் மாவட்டத்திலுள்ள சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்றும் இக்குழு பரிந்துரை செய்தது.

இவ்விடம் அமைச்சருடனான சந்திப்பின்போது ஆராயப்பட்டு இது சம்பந்தமாகச் சங்கங்களின் அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டுத் தேசிய அளவில் ஒரு மகாநாட்டைக் கூட்ட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

11.6.16 ஒரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் 1000 வீட்டுடமை அங்கத்தவர்களுக்கு மேற்படலாகாது
எனவும் அங்கத்தவர் என்பது வீட்டுடமை அங்கத்தவராக இருத்தல் வேண்டுமெனவும் சிபாரிசு
செய்யப்பட்டது.
இந்தப் பரிந்துரை மேலும் ஆலோசனைக்கு விடப்பட வேண்டுமென்பதையும், தற்போதைய சங்க அமைப்பில் அங்கத்தவர் தொகை மிக அதிகமாக இருப்பதையும் இந்த முறை மாற்றப்பட்டுச் சிறிய அலகுகளைக் கொண்ட சங்கங்கள் உருவாகுவது பற்றிப் பொருளாதார நிதி ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

11.6.17 கூட்டுறவுக் காப்புறுதிச் சங்கங்களை உருவாக்குதல்:
இச்சிபாரிசு தொடர்பில் தொடர்ந்தும் பொருளாதார நிதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

11.6.18 கூட்டுறவுக் கொள்கைகளைக் கருத்திற் கொண்டு கூட்டுறவுச் சங்கங்கள் தமது
தனித்துவத்தைப் பேணக்கூடிய வகையிற் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவை
உருவாக்குதல்:
கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவின் சட்டமும் பிரமாணங்களும் கூட்டுறவுச் சங்கங்கள் தமது சுயாதீனத்தை வெளிப்படுத்துவதைத் தடை செய்வதாக இப்புனரமைப்புக் குழு கருதியது.

கூட்டுறவுச் சங்கங்கள் ஒரு சுயாதீனக் குழுவாக இருப்பதால் அவை சங்கத்தின் தேவைக்கு ஏற்ப ஆளணிக் கொள்கைகளைக் கையாளும் அதிகாரம் உடையனவாக இருத்தல் வேண்டும். கூட்டுறவு அமைப்புக்கள் பொரளாதாரத் துறையில் தனியார் துறையினர் அனுபவிக்கும் வசதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும். அதற்கு இவ்வாறான சட்டங்கள் பெரிதும் பாதகமாக அமையும் எனக் இக்குழு கண்டித்தது.

இவ்வாறான செயற்பாடுகள் அரசியற் செல்வாக்குக்கு மேலும் வழிவகுப்பதாக அமையுமெனவும் சங்கங்கள் தமது தனித்துவமான பணியாளர் தொடர்பிலும் தீர்மானத்தை எடுப்பதிற் பல்வேறு சக்திகள் தமது செல்வாக்கைச் செலுத்தும் சாத்தியம் உள்ளது என இக்குழு சுட்டிக்காட்டியது. சில சந்தர்ப்பங்களிற் கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு உள்@ராட்சி மன்றச் சேவையாளர் குழுவுக்குச் சமாந்தரமான சேவையைச் செய்வதாக எடுத்துக் கூறப்பட்டது. இதனை இக்குழு பிரஸ்தாபிக்கும் பொழுது உள்@ராட்சி மன்றங்கள் அரச அமைப்புக்களாகும். ஆனாற் கூட்டுறவு ஒரு தனித்துவமான அமைப்பாகும். உள்@ராட்சி மன்றங்கள் வியாபாரங்களில் ஈடுபவதில்லை. எனவே சங்கங்களின் ஊழியர்கள் விடயத்தில் அரசாங்கப் பொறிமுறை நடவடிக்கைகள் அர்த்தமற்றவை என இக்குழு சுட்டிக் காட்டியது.

11.6.19 பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்களை மீள உருவாக்கல்:
அச்சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

11.6.20 கூட்டுறவுச் சங்கங்களில் மத்தியஸ்த விசாரணை:
தற்பொழுது இருக்கும் கூட்டுறவுச் சங்கங்களில் மத்தியஸ்த விசாரணை மேலும் பயனுள்ளதாக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்ட சங்கங்களுக்கு விரைவான தீர்வுகள் அமைய வழி வகுக்கப்படவேண்டும். கூட்டுறவு மத்தியஸ்த விசாரணை மிகப் பலமுள்ளதாக அமைந்தாற் கூட்டுறவுச் சங்கங்களிற் காணப்படும் பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமெனக் குழு சுட்டிக் காட்டியது.

11.7 தற்பொழுது ஆய்விலுள்ள புதிய கூட்டுறவுச் சட்டம்:
இதுவரை காலக் கூட்டுறவுச் சட்டங்களை ஆராய்ந்து சட்டத்திற் காணப்படும் குறைபாடுகளைத் தற்காலத் தேவைக்கேற்ப மாற்றியமைத்தல் தொடர்பில் சிபாரிசுகளை மேற்கொள்ளும்படி ஐ.நா. சபையின் உலகத் தொழிலாளர் அமைப்பின் உசாத்துணைவர் திரு. ஆர்.பி.ராஜகுரு அவர்கள் 1995இற் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் சமர்பித்த முக்கியமான திருத்த வரைவுகள் பல்வேறு கூட்டுறவாளர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு இப்பகுதியிற் சுருக்கமாகத் தரப்படுகிறது.

இலங்கைக் கூட்டுறவுச் சங்கச் சட்டம் 75 ஆண்டுகள் பழைமையானவை. 1911இல் ஆரம்பித்த முதலாவது கூட்டுறவுச் சட்டத்தைத் தொடர்ந்து இதுவரை திருத்தச் சட்ட மூலமும், இறுதிச் சட்ட மூலமும் என 15 சட்ட மூலங்கள் வெளியாகியுள்ளன. இலங்கையிலுள்ள கூட்டுறவு; சங்கங்களிற் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் பிரதான பங்கை வகித்து வருகின்றன. இவை அரசாங்கத்தின் பங்குப் பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளதாற் பல்வேறு அரசாங்கச் சட்ட திட்டங்களைப் பேண வேண்டியுளது. இச்சங்கங்கள் தொடர்பிற் கூட்டுறவு ஆணையாளர் கொண்டுள்ள அதிகாரம் அளவற்றதாக உள்ளது. இதனால் தேவையற்ற கட்டுப்பாடுகள் அற்ற புதிய கூட்டுறவு அமைப்பொன்றை உருவாக்குவதற்கான பொறுப்பை ஆணையாளர் சங்க நிர்வாகிகளிடமும் அங்கத்தவர்களிடமும் வழங்க வேண்டிய பொறுப்புள்ளது. எனவே புதிய சட்டமானது பின்வரும் தேவைகளை அடைவதாக இருத்தல் வேண்டும்:
அ. கூட்டுறவுச் சங்கங்களில் அங்கத்தவர்களின் பங்களிப்பை மேம்படுத்தல்.

ஆ. கூட்டுறவுக் கொள்கைகள் அனைத்தும் முகாமை நடவடிக்கைகளின்போது பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தல்.

இ. ஆணையாளர் அதிகாரங்கள் குறைத்துச் சங்கங்கள் சுயமாக இயங்க வழிவகுக்கும் ஏதுக்களை ஆராய்தல்.

இதன்படி சட்டத் திருத்தங்கள் சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுப் பின்வரும் திருத்தங்கள் சிபாரிசு செய்யப்பட்டன.
01. ஆணையாளரின் பிரதான கடமைகளில் ஒன்றாகச் சங்கங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம் பெறலாம்.

02. கூட்டுறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் கூட்டுறவுக் கொள்கைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

03. ஆணையாளரின் அதிகாரம் என்ற விடயத்தின் கீழ்ப் பிரதம ஆணையாளர் மாகாண ஆணையாளருக்குரிய அதிகாரங்கள் வகுக்கப்படும்.

04. சங்கங்களைப் பதிவு செய்யும்போது ஒரு சங்கம் கடந்த 6 மாதங்கள் ஒழுங்காகச் செயற்பட்டதற்கான சான்றுகளை வழங்குதல் வேண்டும். அவ்வாறு செயற்பட வேண்டிய கால எல்லையை மேலும் 12 மாதங்களாக நீடிப்பதற்கு ஆணையாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

05. ஒரு சங்கத்தைப் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் ஒரு விண்ணப்பத்தில் குறைந்தது 20 அங்கத்தவர்களாவது கையொப்பமிடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

06. கட்டாய உபவிதிகளாகச் சேர்க்கப்பட வேண்டிய சில விடயங்கள் இச்சட்டத்தில் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

07. ஒரு சங்கம் கொள்வனவு செய்யும் நிலையான சொத்துக்களின் பெறுமதி ரூபா 20,000ஃ-த்திற்கு மேற்படின் ஆணையாளரின் அனுமதி பெற வேண்டுமெனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

08. கணக்காய்வு நடவடிக்கைகளுக்காகக் கணக்காய்வு மேற்கொள்ளக் கூடியவர்களின் தகுதிப்பட்டியலொன்றை ஆணையாளர் வெளியிட வேண்டுமெனவும், அப்பட்டியலில் இருந்து சங்கம் தாமே தமக்கான கணக்காளரைத் தெரிவு செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் எடுத்துக் கூறப்பட்டது.
8.1 எனினும் காலந்தப்பிய கணக்காய்வொன்றினைச் செய்யும் அதிகாரம் தொடர்ந்தும் ஆணையாளர்
வசம் இருக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டது. தனியார் கணக்காய்வுக்
குழுவொன்றினால் தமது கணக்காய்வு மேற்கொள்ள வேண்டுமெனச் சங்கம் தீர்மானித்தால்
இக்கோரிக்கையை ஆணையாளருக்கு சங்கம் சமர்ப்பிக்கலாம்.

09. தற்பொழுது நடைமுறையிலுள்ள 48 (1) பிரிவின்படி ஒரு இயக்குநர் சபையைக் கலைக்கும் அதிகாரம் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வதிகாரம் நீக்கப்பட்டுப் பொதுச்சபை இவ்வாறான பணிகளைச் செய்ய அனுமதிக்கும் ஏற்பாடுகள், எதிர்பார்க்கப்படும் புதிய சட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளது.

10. 1983ஆம் ஆண்டு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 66 (அ) வின் பிரகாரம் ஒரு இயக்குனர் சபையை நியமிக்கும் அதிகாரம் ஆணையாளருக்கு வழங்கப்பட்டது. இது எதிர்ப்பார்க்கப்படும், புதிய சட்டத்தின்படி நீக்கப்படுகிறது.

11. எவ்வாறாயினும் அரச நிதியைப் பிரயோகிக்கும் கூட்டுறவுச் சங்கங்களைப் பொறுத்தவரையில் அவற்றைக் கலைக்கும் அதிகாரம், வழிப்படுத்தும் அதிகாரம் என்பன ஆணையாளருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது. இவ்வதிகாரங்களின்படி கணக்காய்வு அறிக்கைகள், விசாரணை, மற்றும் நுண்ஆய்வு அறிக்கையின் பின்னர் ஆணையாளர் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறான சங்கங்களின் இயக்குனர் சபையொன்றை நியமிப்பதற்கும் இதன் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. பொதுச் சபைக்கே கூடுதல் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற கருத்து மேலும் வலியுறுத்தப்படும் அதேவேளை அச்சங்கத்தின் பெரும்பாலான பொதுச் சபைப் பிரதிநிதிகள் மேற்படி சங்கம் ஆணையாளரால் மேற்பார்வை செய்யப்பட வேண்டுமெனக் கருதின் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஆணையாளருக்கு வழங்கப்படுகிறது.

13. தற்பொழுது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்று ஏற்பாடுகள் இடம்பெற வேண்டுமென இப்புதிய சட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் தற்பொழுது கூட்டுறவுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் எதிர்காலத்தில் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினால் நடத்தப்பட ஏற்பாடு செய்ய வேண்டுமெனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

14. தற்போதைய சட்ட இலக்கம் பிரிவு 33 இன் பிரகாரம் நிலையான சொத்துக்களைக் கொள்வனவு செய்தல், விற்றல் போன்றவற்றில் ஆணையாளரின் அனுமதி பெற வேண்டிய ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

15. தற்பொழுதுள்ள நடைமுறையின்படி ஒரு அங்கத்தவர் சங்கத்திற் சேர்ந்தவுடன் வாக்களிக்கும் தகுதியை வழங்காது ஒரு வருடத்தி;ன பின்னே பெறுவர். இவ்வாறே ஒரு அங்கத்தவர் தான் சேர்ந்து இரண்டு வருடங்களின் பின்னே இயக்குனர் சபை உறுப்பினராக முடியும்.

16. ஒரு அங்கத்தவருடைய தகுதி பற்றித் தற்பொழுது விதிகள், உபவிதிகளிற் கூறப்பட்ட விடயங்களைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

17. ஒரு இயக்குனர் சபை அங்கத்தவருக்குக் கூட்டுறவு முகாமை, கணக்கு வைப்புக்க தொடர்பிலான பயிற்சி அளிக்கும் ஏற்பாடுகள் சங்கங்களின் உபவிதிகளில் இடம்பெற வேண்டுமெனப் புதிய சட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

18. விதிகளும், உபவிதிகளும் கூட்டுறவுக் கொள்கைகளை வலியுறுத்தும் ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வகைக் கூட்டுறவுச் சங்கங்களினதும் விசேட தன்மையினைப் பிரதிபலிப்பதாக இவை அமைதல் வேண்டும்.

19. கூட்டுறவுக் கம்பனிகளை ஆக்குவதற்கான ஏற்பாடுகள்
ழூ இதன் கீழ்ப் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டுறவுக் கம்பனிச் சட்டத்தின் கீழ்க் கம்பனி ஒன்றை உருவாக்குதல்.
அல்லது

ழூ பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைந்து கம்பனிச் சட்டத்தின் கீழ்க் கம்பனி ஒன்றை உருவாக்குதல்.
அல்லது

ழூ கூட்டுறவுச் சங்கங்களும், தனியார் நிறுவனங்களும் ஒன்றிணைந்து கம்பனிச் சட்டத்தின் கீழ்ப் பொதுக் கம்பனி ஒன்றைப் பதிவு செய்தல்.

என்பன தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறான விடயங்களை எதிர்பார்க்கும் இச்சட்டத்தில் உள்ளடக்குவதற்கும் கலந்துரையாடல்கள் இடம் பெறுகின்றன.

11. 8 சர்வதேசத் தொழில் அமைப்பின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட இலங்கைக் கூட்டுறவு
அபிவிருத்திக்கான உபாயத் திட்டமிடலும் செயற்றிட்டமிடலும்.
இலங்கைக் கூட்டுறவு அமைப்புக்களின் நடவடிக்கைகளைப் பகுப்பாய்வு செய்து, இத்துறையை மேலும் விருத்தி செய்யக்கூடிய செயல் திட்டங்களை உள்ளடக்கியதாக ஒரு உபாயத்திட்டம் வரையப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் சுருக்கம் மட்டுமே கீழ் தரப்படுகின்றது.

- இவ்வாய்வு சர்வதேசத் தொழில் அமைப்பின் நிபுணர் எஜ்வி; மொகிஸன் என்பவராலும் சர்வதேசத் தொழில் அமைப்பின் தேசிய மட்ட உசாத்துணைவர் ஆர்.பீ.; ராஜகுரு அவர்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- இவ்வாய்வின் கீழ்க் கூட்டுறவு அமைப்பின் வரலாறு. தற்பொழுது அது செயற்படும் விதம் என்பன சம்பந்தமான தகவல்கள் பெறப்பட்டுப், பகுப்பாய்வு செய்யப்பட்டது. இப்பகுப்பாய்வின் பயனாக இலங்கைக் கூட்டுறவுத்துறையின்பால் அங்கத்தவர்களின் பங்களிப்பை ஈர்க்கக்கூடியதுமான பின்வரும் 07 உபாய முறைகள் இனங் காணப்பட்டன.

(01) கொள்கைகளை விரு;தி செய்தலும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான சட்ட வரன் முறைகளும்

(02) கூட்டுறவு அமைப்புக்களை விருத்தி செய்வதற்கான உதவி வழங்கும் சேவையை விருத்தி செய்தல்.

(03) பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குப் புத்துயிர் அளித்தல்.

(04) புத்துயிர் அளிக்கப்பட்ட விநியோகம், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டுறவுச் சங்கங்களை
உருவாக்குதல்.

(05) பயன்தரும் வீடமைப்புக் கூட்டுறவுச் சங்கங்களை விருத்தி செய்தல்.

(06) கூட்டுறவு அமைப்புக்களைச் சக்தி மிக்கதாக்குதல்.

(07) சமூக, விருத்தியும் வறுமை ஒழிப்பும்.

11.8.1 கொள்கைகளை விருத்தி செய்தலும், கூட்டுறவுச் சங்கங்களுக்கான சட்டவரன் முறைகளும்:
இக்கொள்கையின் படி கூட்டுறவு அமைப்புக்கள் மக்களாற் கவரப்படக்கூடிய வியாபார நிறுவனங்களாக அமைவதற்கு ஏற்ற கொள்கைகளை உடைய கூட்டுறவுச் சட்டம் உருவாக்கப்படும். இதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு தற்காலிக கொள்கை மற்றும் சட்ட வரன் முறைக் குழுவொன்று அமைக்கப்படும்.


11.8.2 கூட்டுறவு அமைப்புக்களை விருத்தி செய்வதற்கான உதவி
வழங்கும் நிறுவனங்களின் சேவையை விருத்தி செய்தல்:
இவ்விடயத்தின் கீழ் கூட்டுறவுச் சங்கங்களுக்காக உதவுவதற்கான நிறுவனங்கள் பயிற்சி, ஆலோசனை, கல்வி, பொதுத்தகவல்கள் என்பவற்றை மேலும் சிறந்த முறையில் ஆற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

கூட்டுறவுச் சங்கங்களின் நடவடிக்கைகளுக்கான பதிவு, பரிசீலனை, கணக்காய்வு, நடுத்தீர்ப்பு, பதிவழிப்பு என்னும் சட்ட நடவடிக்கைகளுடன் முரண்பாடாத வகையில் உதவிச் சேவை நிறுவனங்களின் செயற்பாடுகள் புத்துயிர் அளிக்கப்படும். இதன்படி பின்வரும் உபாய முறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன:

2.1 மாவட்டக் கூட்டுறவுச் சபைகள், ஆரம்பச் சங்கங்களின் நாளாந்தத் தேவைகளைச் செவ்வனே ஆற்றக்கூடிய வகையில் உள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

2.2 கூட்டுறவுப் பிராந்தியக் கல்லூரிகளும், தேசிய கூட்டுறவுச் சபையும், இம்மாவட்ட கூட்டுறவுக் கல்லூரிகள் வழங்கும் பயிற்சியைச் சிறப்பாக ஆற்றுவதற்கு ஒத்துழைப்பதோடு அங்கத்தவர் கல்வி விருத்திக்கான ஏற்பாடுகளைச் சிறந்த முறையில் ஊக்குவித்தல்.

2.3 தேசிய ரீதியில் இயங்கி வரும் இலங்கைக் கூட்டுறவுக் கல்லூரி, பொல்கொல்லை, இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனம் ஆகியவற்றின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டு இவற்றின் சேவைகள் ஒரு குடையின் கீழ் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படல்.

11.8.3 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குப் புத்தூக்கமளித்தல்:
இலங்கையில் தற்பொழுதுள்ள 303 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் 2.9 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட பிரதான கூட்டுறவு அமைப்புக்களாக இயங்கி வருகின்றன. இவற்றின் பிரதான குறைபாடுகளெனப் பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன:

3.1 உண்மையான பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாகவன்றி வெறுமனே நுகர்வுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களாக இவை இயங்கி வருகின்றமை.

3.2 ஜனநாயகத் தன்மையற்றதும், அங்கத்தவர் பங்களிப்பு இன்மையும்,

3.3 பாரிய திரவத் தனமைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளல்.

3.4 அதிகரித்த அரசின் தலையீடு.

3.5 பாரிய எல்லைப் பரப்பு.

- இப்பிரதான பிரச்சினையை நீக்கும் வகையில் பரீட்சார்த்த ரீதியில் ஒரு சில பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை கிராமிய, நகர மட்டத்தில் தெரிவு செய்து, அவற்றை சிறிய அலகுகளாக இயங்கச் செய்து, இச்சிறிய அலகுகளை ஒன்று சேர்த்துப் பாரிய அளவிலான ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ளல்.

- இதனை நடைமுறைப்படுத்தக்கூடியவாறு ஒவ்வொரு அமைப்புக்குமெனப் பொருத்தமான உபாய முறைகளை அமைத்துக்கொள்ளல்.

11.8.4 புத்துயிர் அளிக்கப்பட்ட விநியோக, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தற் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குதல்.
மீன் பிடி, புடவை நெசவாளர், பால் உற்பத்தி, தெங்கு உற்பத்தி, இறப்பர் உற்பத்தி ஆகிய விசேட சங்கங்களின் செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படாமல் இருந்து வருகின்றன. இவ்வொருங்கிணைப்பை மாவட்ட தேசிய அடிப்படையில் இயங்கச் செய்வதற்குத் தேவையான பயிற்சி, தொழில் நுட்ப உதவி ஆகியவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

- ஒவ்வொரு அமைப்புக்குமான தேசிய மட்ட சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு வலுவூட்டல்.

11.8.5 பயன்தரும் வீடமைப்புக் கூட்டுறவுச் சங்கங்களை விருத்தி செய்தல்:
- தோட்டப் பகுதியில் இயங்கும் ஏறத்தாழ 480 வீடமைப்புக் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டினை ஊக்குவித்தல்.

- இச்சங்கங்களின் அங்கத்தவர் பங்களிபபை ஊக்குவித்தல்.

- ஒரு புவியியல் எல்லைப் பரப்பிலுள்ள சங்கங்களைப்பரீட்சார்த்தமாகத் தெரிவு செய்து அவற்றுக்குப் புத்துயிர் அளித்தல்.

- இவற்றுக்கெனத் தேசிய கூட்டுறவு வீடமைப்புச் சம்மேளனமொன்றை உருவாக்குதல்.

- இச்சங்களுக்கான அங்கத்தவர் பயிற்சி, விரிவாக்கல் உத்தியோகத்தவர்களுக்கான பயிற்சி என்பவற்றை பயன் தரும் வகையில் ஊக்குவித்தல்.

11.8.6 கூட்டுறவு அமைப்புக்களைச் சக்தி மிக்கவையாக்குதல்:
- தேசிய கூட்டுறவுச் சபை நடவடிக்கைகள் மாவட்ட ரீதியிற் பன்முகப்படுத்தப்பட்டதனால் ஏற்பட்டுள்ள இடைவெளியைப் பொருத்தமான ஜனநாயக முறையில் தீர்த்து வைத்தல்.

- ஏனைய சம்மேளனங்களையும், தேசிய கூட்டுறவுச் சபையின் செயற்பாடுகளுடன் பயன்தரு வகையில் இணைத்தல்.

- இலங்கைக் கூட்டுறவு அமைப்புக்களின் ஒரு பலமுள்ள பேச்சாளராகத் தேசிய கூட்டுறவுச்சபை இருப்பதை உறுதிப்படுத்தல்.

- அதற்கான பயன்தரு செயல் அமர்வுகளையும், செயற்றிட்டங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடத்துதல்.

- மாவட்ட தேசிய கூட்டுறவுச் சபைகள், ஆரம்ப சங்கங்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து வைக்கும் மையங்களாகத் தொழிற்படத் தூண்டும்.

11.8.7 சமூக விருத்தியும், வறுமை ஒழிப்பும்:
- அங்கத்துவர்களுக்கும், சங்கங்களுக்குமிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தச் சமூக சேவைத்திட்டங்களை உருவாக்குதல்.

- 7வது கூட்டுறவுக் கொள்கையான சமூக விருத்தி சம்பந்தமான விடயங்களுக்கு உதவுதல் என்ற கொள்கையை வறுமை ஒழிப்பு மற்றும் பின்தங்கியுள்ள வகுப்பினருக்கான சமூகத்தேவைகளை நிறைவேற்றுவதினூடாகச் செயற்படுத்தல்.

- வறிய, வளம் குறைந்த குழுக்களை இனங்கண்டு கூட்டுறவுத் துறையின் ஊடாக உதவி அளித்தல்.

மேற்படி 07 உபாயத் திட்டங்களும் பின்வரும் முறையில் நடைமுறைக்கிடப்படும்:
- இத்திட்டங்களை நடைமுறைக்கிடுவதற்காகத் தேசிய கூட்டுறவுச் செயற்படுதற் குழுவொன்று நிறுவப்படும்.

- இக்குழு மாகாண, தேசிய ரீதியில் அரசினதும் கூட்டுறவு அமைப்புக்களதும் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இத்திட்டத்தை நடைமுறைக்கிடும்.

- இந்தக் கூட்டுறவுச் செயற்குழு 06 மாதங்களுக்கு ஒரு தடவை கூடித் திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து, மாற்றங்களைப் பரிந்துரைக்கும்.

- இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகள் கூட்டுறவு உதவி வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும்.

- இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காகச் சர்வதேசத்தொழில் தாபனமும், ஏனைய நிறுவனங்களும் நிதி உதவி வழங்கும்.


12. இலங்கைக் கூட்டுறவு இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள்

ஆண்டு நிகழ்வுகள்
1906 கூட்டுறவு அம்சங்கள் பொருந்திய ஓர் அமைப்புத் தும்பறையில் உள்ள தெல்தெனியாவில்
ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இலங்கையின் முதலாவது கூட்டுறவு அமைப்பிலான சங்கம் என
அழைக்கப்படுகிறது.

இலங்கையின் கூட்டுறவு அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது ஹென்றி மக்கலம் அவர்கள்
தேசாதிபதியாக இருந்த காலமாகும்.

1909 இலங்கையிலுள்ள விவசாயிகளின் நிலையை ஆராய்வதற்காக விவசாய வங்கிக்
குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவாற் கடன் உதவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட
வேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டது.

1911 கூட்டுறவுக் கட்டளைச் சட்டம் (கடனுதவு சங்கங்கள், அமைப்பதற்கு) இயற்றப்பட்டமை.

1912 முதலாவது கடனுதவு சங்கம் வெல்லப்படபத்து என்னும் கிராமத்திற் பதிவு செய்யப்பட்டமை.

1913 விவசாய இலாகாப் பணிப்பாளர் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்யும் பதிவாளராக
நியமனம் பெற்றமை.

1913 இலங்கையின் முதலாவது கூட்டுறவுச் சங்கம் மாத்தறை வெல்லபடபத்து கடனுதவு
சங்கமெனப் பெயரிடப்பட்டமை.

1916 உள்@ர்க் கடனும் அபிவிருத்தி நிதியும் உருவாக்கல் பற்றிய 1916ஆம் ஆண்டு 220ஆம்
இலக்கக் கூட்டுறவுக் கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டமை.

1920 முதன் முதலாகக் கூட்டுறவுப் பரிசோதகர் நியமனம் பெற்று இந்தியாவில் பயிற்சி பெற்றமை.

1921 கடனுதவு சங்கங்கள் மட்டுமல்லாது ஏனையவகைச் சங்கங்களும், மேல் நிலைச்
சங்கங்களும் பதிவு செய்வதற்கு ஏற்ற வகையிற் கூட்டுறவுக் கடனுதவு சங்கங்கள்
கட்டளைச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டமை.

1924 கொழும்பிற் கூட்டுறவு மாகாணச் சமரசம் பதிவு செய்யப்பட்டமை. ஆகவே முதலாவது பதிவு
செய்யப்பட்ட மேல் நிலைச் சங்கமாகும்.

1926 கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளராக டபிள்யூ. கே.எச். கெம்பல் அவாகள்
பதவி ஏற்றமை.

1927 1. முதலாவது கூட்டுறவுப் பண்டகசாலைச் சங்கம் தோட்டத் தொழிலாளரிடையே (பசறைத்
தோட்டம்) ஆரம்பித்துப் பதிவு செய்யப்பட்டமை.

2. இலங்கையின் முதலாவது பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் யாழ்ப்பாணம்
அளவெட்டியிலுள்ள அருணோதயக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டமை.

1929 1. கொழும்பு மாவட்டக் கூட்டுறவுச் சமாசம் பதிவுசெய்யப்பட்டமை. இதுவே இலங்கையில்
அமைக்கப்பட்ட முதலாவது உச்சநிலைச் சங்கமாகும்.

2. முதலாவது கூட்டுறவு மாகாண வங்கி யாழ்;பபாணத்தில் அமைக்கப்பட்டுப் பதிவு
செய்யப்பட்டமை.

3. கூட்டுறவுச் சங்கங்களைப் பரிசோதனை செய்வதற்காகக் கௌரவப் பரிசோதகர்கள்
நியமிக்கப்பட்டமை.

1930 விவசாய இலாகாவில் இருந்து தனியாகக் கூட்டுறவு இலாகா பிரிக்கப்ட்டுத் தனியாக இயங்க
ஆரம்பித்தமை.

1931 இலங்கையில் முதலாவது பால் உற்பத்தியாளர் சங்கம் பொமிரிய என்னும் இடத்தில்
ஆரம்பிக்கப்பட்டது.

1933 இலங்கையின் முதலாவது படகு உரிமையாளர் கூட்டுறவுச் சங்கம் யாழ்ப்பாணத்தில்
ஆரம்பிக்கப்பட்டமை.

1934 யாழ்ப்பாணம் மலையாள புகையிலை விற்பனவுச் சங்கம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுப்
பதிவு செய்யப்பட்டமை.

1935 திரு. டபிள்யூ.கே.எச். கெம்பல் அவர்கள் பதிவாளர் பதவியிலிருந்து நீங்கல். திரு. எச்.
கல்வேட் அவர்கள் ஒரு வருடத்துக்குப் பதிவாளராக நியமனம் பெற்றமை.

1936 கூட்டுறவுச் சங்கங்களின் கட்டளைச் சட்டங்களை ஒன்றிணைப்பதற்கான திருத்தம்
செய்யப்பட்டமை. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டுப் பதிவு
செய்யப்பட்டமை.

1937 வடமாகாண கூட்டுறவு மேற்பார்வைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டமை.

1938 கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதவிக்கு முதல் தடவையாக இலங்கையர் ஒருவர்
நியமிக்கப்பட்டமை. (ஜே.டி.சொய்சா அவர்கள்)

1942 1. இரண்டாவது மகாயுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருள் தட்டுப்பாட்டின் காரணமாகக்
கிடைக்கும் பொருட்களை எல்லா மக்களுக்கும் இலகுவாகக் கிடைக்கச் செய்யும் பொருட்டு
அரசு கூட்டுறவுப் பண்டகசாலைகளை அமைக்கும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு பல
கூட்டுறவுப் பண்டகசாலைகள் பதிவு செய்யப்பட்டமை.

2. தென்னை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் அமைக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டமை.

3. வடபகுதி விவசாய விளைபொருள் உற்பத்தி விற்பனையாளர் சமாசம் ஆரம்பித்துப் பதிவு
செய்யப்பட்டமை.

1943 1. கூட்டுறவுக் கல்லூரி பொல்கொல்லையில் ஆரம்பிக்கப்பட்டமை.

2. கூட்டுறவுக் கல்லூரி விற்பனை நிறுவனம், கூட்டுறவு இலாகாவால் ஆரம்பிக்கப்பட்டமை.

3. கூட்டுறவுப் பண்டகசாலைகளின் சமாசங்கள் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டமை.

1945 1. கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் ஒன்று நிறுவப்பட்டமை.

2. ஐக்கிய தீபம் என்னும் தமிழ் கூட்டுறவுச் சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டமை.

1947 விவசாய விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்களை உருவாக்கும் முயற்சியிலீடுபட்டு
இச்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டமை.

கூட்டுறவு அலுவல்களுக்கான அமைச்சு உருவாக்கப்பட்டு இதன் அமைச்சராகக் கௌரவ ஏ.
ரத்நாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டமை.

1949 1. கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திணைக்களமும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்
திணைக்களமும் ஒன்றிணைக்கப்பட்டமை.

2. கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனம் கூட்டுத்தாபன அமைப்பு முறைக்கு
மாற்றியமைக்கப்பட்டமை.

3. கூட்டுறவுச் சமஷ்டி வங்கியொன்றும் உருவாக்கப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டமை.

1949 21ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்களின் திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டமை.

1950 கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் 6000 பேர் கலந்து கொண்ட அகில இலங்கை மகாநாடு
கொழும்பில் நடைபெற்றமை.

1951 1. இலங்கை மீன் விற்பனவுச் சங்கம் உருவாக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டமை.

2. யாழ்ப்பாணக் கூட்டுறவுக் கல்லூரி தாபிக்கப்பட்டமை.

1952 17ஆம் இலக்கக் கூட்டுறவுச் சங்கங்களின் விசேட ஏற்பாடுகள் சட்டம் கொண்டு
வரப்பட்டமை.

1953 பெண்களும் கூட்டுறவுப் பரிசோதகர் பதவிக்கு அமர்த்தப்பட்டமை.

1954 சிறிய அளவிலான தேயிலைத் தோட்ட உரிமையாளர் கூட்டுறவுச் சங்கம் காலியில் உள்ள
ஹங்கபடபத்துவையில் ஆரம்பிக்கப்பட்டமை.

1955 இலங்கைக் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் உருவாக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டமை.

இலங்கையின் முதலாது கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலை மொறகொல்லையில்
ஆரம்பிக்கப்பட்டமை.

1956 கூட்டுறவுத் திணைக்களத்தில் வெளிப்புறக்கல்வி விஸ்தரிப்புப் பகுதி நிறுவப்பட்டமை.

1957 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுப் பதிவு
செய்யப்பட்டமை.

1958 24ஆம் இலக்க விசேட சட்டம் கொண்டு வரப்பட்டமை.

1961 மக்கள் வங்கி உருவாக்கப்பட்டமை.

1962 இலங்கை விவசாய உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்டுப் பதிவு
செய்யப்பட்டமை.

1964 இலங்கைக் கூட்டுறவுக் கைத்தொழிற் சங்கமொன்று உருவாக்கப்பட்டுப்
பதிவுசெய்யப்பட்டமை.

1966 இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டமை.

1967 இலங்கையின் இறப்பர்ச் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டமை.

1968 இலங்கையின் கூட்டுறவு இயக்கம் சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்காக லெயிட்லோ
தலைமையிலான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டமை.

1969 இலங்கையின் முதலாவது மரண சகாய கூட்டுறவுச் சங்கம் காலி மாவட்டத்தில்
ஆரம்பிக்கப்பட்டமை.

1970 கூட்டுறவுச் சங்கங்களுக்கான 35ஆம் இலக்க திருத்தச் சட்டம்கொண்டு வரப்பட்டமை.

லெயிட்லோ ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்களின்
புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டமை.

1971 தேசிய வீடமைப்பு அபிவிருத்திச் சங்கமொன்று உருவாக்கப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டமை.

1972 இலங்கைக் கூட்டுறவுச் சம்மேளனம் புனரமைக்கப்பட்டுச் ஸ்ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபை
உருவாக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டமை.

1972 கூட்டுறவுச் சேவையாளர் ஆணைக்குழு அமைக்கப்பட்டமை.

1972 கூட்டுறவுச் சங்கங்களுக்கான 5ஆம் இலக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டமை. இதில் இதற்கு
முன்னிருந்த திருத்தச் சட்ட மூலங்கள் பல உள்ளடக்கப்படும், அகற்றப்பட்டும் முழுமையான
சட்ட வடிவமாக அமைந்தமை.

1973 கூட்டுறவு முகாமைச் சேவை நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டமை.

1976 1. கூட்டுறவு வியாபார நிலையங்களை நவீனமயப்படுத்தியமை, ஊக்குவிப்பு.

2. கொடுப்பனவு முறை கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தியமை.

1978 கூட்டுறவு முயற்சி பற்றி ஆராய்ந்து சிபாரிசு செய்வதற்காகக் கூட்டுறவுப் புனரமைப்புக் குழு
(தேவநாயகம் குழு) நியமிக்கப்பட்டமை. உணவுப் பங்கீட்டுப் புத்தக முறை ஒழிக்கப்பட்டு
உணவு முத்திரைத் திட்டம் அமுலாக்கப்பட்டு உணவு முத்திரைகளுக்கும் பொருள் வழங்கும்
நிறுவனமாகப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நியமிக்கப்பட்டமை.

1983 32ஆம் இலக்கக் கூட்டுறவுத் திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டமை.

1983 37ஆம் இலக்கச் சட்டத்தின்படி கூட்டுறவு முகாமைச் சேவை நிலையம் இலங்கை கூட்டுறவு
முகாமை நிறுவனம் என உருவாக்கப்பட்டமை.

1991 1991.05.06ல் 40000 கூட்டுறவு ஊழியர்கள் அடங்கிய, ஜனாதிபதி கலந்து கொண்ட மகாநாடு
ஒன்று நடைபெற்றமை.

1991 11ஆம் இலக்கத் திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டமை.

1991 ஜனசவிய திட்டத்தின் கீழ்க் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டம்
ஆரம்பிக்கப்பட்டமை.

1994 1994.04.26இல் 3ஆவது ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு ஒன்றியத்தின் மகாநாடு
இடம்பெற்றமை.

1995 சமுர்த்தித் திட்டத்தின் மூலம் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக வறுமை ஒழிப்புத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டமை.

இந்நூல் உருவாக உதவியவை
(1) நூல்கள்
1. ஊழ-ழிநசயவழைn –
திரு. வீ. வீரசிங்கம்

1. கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு
திரு. அ. அருளம்பலம்.

2. கூட்டுறவு உத்தியோகத்தர் தராதரப் பத்திரம்
பொல்கொல்லைக் கூட்டுறவு வெளியீடு.

3. கூட்டுறவுக் கொள்கைகள்
திரு. P.நு. வீரமன்

4. இலங்கைக் கூட்டுறவு இயக்கம்
திரு. பு. குருகுலசூரியா

5. ஆரடவi – Pரசிழளந ஊழழிநசயவiஎந ளுழஉநைவநைள in ளுழரவா – நுயளவ யுளயை.
(தென்கிழக்காசியாவில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள்)
திரு. து.ஆ. சுயயெ

6. கூட்டுறவு. திரு. அ. குழந்தை

7. இந்தியக் கூட்டுறவுச் சட்டங்கள்.

8. பல வணிக பொருளியல் நூல்கள்.


(ஐஐ) சட்ட மூலங்கள்
1. கூட்டுறவுச் சட்டங்கள்

2. கூட்டுறவுத் திருத்தச் சட்டங்கள்

3. 1973ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள்

4. பலவகைச் சங்கங்களின் துணை விதிகள்

5. நீதிமன்றத் தீர்ப்புக்கள்

6. கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழச் சட்டம்

7. கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுப் பிரமாணங்கள்

8. அரசியல் யாப்பில் 13ஆம் திருத்தச் சட்ட மூலம்

9. இலங்கைக் கூட்டுறவு முகாமை நிறுவனச் சட்டம்

10. ஜனசவிய சட்ட மூலங்கள்

11. மாகாண சபைகளுக்கான கூட்டுறவுச் சட்ட ஏற்பாடுகள்

12. சமூர்த்திச் சட்ட மூலங்கள்


(ஐஐஐ) பத்திரிகை – சஞ்சிகைகள்
1. ஐக்கிய தீபம் 2. பொருளியல் நோக்கு
3. கூட்டுறவுப் பத்திரிகை (ஆங்கிலம் 4. சமூப காரயா (சிங்களம்)

(ஐஏ) ஏனையவை
1. பல்வேறு சங்கங்களின் கணக்காய்வு அறிக்கைகள்

2. பல்வேறு சங்கங்களின் வருடாந்த அறிக்கைகள்

3. கூட்டுறவு ஆணையாளர், கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு சுற்று நிருபங்கள்.

4. லெயிட்லோ ஆணைக்குழு அறிக்கை – 1969

5. கூட்டுறவு இயக்கம் சம்பந்தமான தேவநாயகம் சிபாரிசு அறிக்கை – 1978.

6. இலங்கைக் கூட்டுறவு அமைப்புக்களுக்கான உபாயத்திட்டமிடற் சர்வதேசத் தொழிலாளர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட அறிக்கை.

7. கூட்டுறவு சம்பந்தமான அறிவு – பொல்கொல்லை கூட்டுறவுக் கல்லூரி வெளியீடு.

8. கூட்டுறவுப் பணியாளர்களுக்கான சட்ட ரீதியான கைநூல் – பொல்கொல்லை வெளியீடு.

9. கூட்டுறவு அறிஞர்களுடனான நேர்முகம்.

சர்வதேசக் கூட்டுறவு இணைப்பு நிறுவனம்
1995இல் பிரகடனப்படுத்திய

ஏழு கூட்டுறவுக் கொள்கைகள்

ழூ தன் விருப்பார்ந்த தடையற்ற (திறந்த) உறுப்புரிமை.

ழூ ஜனநாயக முறையில் அமைந்த கட்டுப்பாடும், நிர்வாகமும்.

ழூ அங்கத்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு.

ழூ சுதந்திரமாகவும், சுயமாகவும் தொழிற்படல்.

ழூ கல்வி, பயிற்சி, தகவல்.

ழூ கூட்டுறவுச் சங்கங்களிடையே ஒத்துழைப்பு.

ழூ சமூக மேம்பாடு.

தெல்லிப்பளைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
தெல்லிப்பளை.