கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  மெய்யுள்
(உலக விடுதலை இலக்கியம்)
 
 

மு.தளையசிங்கம்

 

மெய்யுள்
(உலக விடுதலை இலக்கியம்)

மு.தளையசிங்கம்

சமுதாயம் பிரசுராலயம்
கோவை - 15

1985 - செப்டம்பர்
பதிப்புரிமை : மு. பொன்னம்பலம்


தளையசிங்கத்தின் நூல்கள்
1. ஒரு தனி வீடு ரூ. 15/=

2. புதுயுகம் பிறக்கிறது ரூ. 10/=

3. போர்ப்பறை ரூ. 25/=

4. மெய்யுள் ரூ. 15/=

5. கலைஞனின் தாகம் ரூ. 10/=

6. கல்கி புராணம் அச்சில்

7. யாத்திரை அச்சில்


விலை ரூ. 15ஃஸ்ரீ


எழுச்சியுறும் பேரறிவே
உன் தாளில் வீழும்
என் அழைப்பு இது
உனக்கே இது
சமர்ப்பணம்


மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்
இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்?

இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறதா? வாழ்க்கையில் நடைபெறுகின்றனவா? என்று கேட்கும் புதுச் சூழல் இன்று.

உனது வாழ்க்கையை எப்படிக் காண்கிறாய்?

உனது வாழ்க்கையைப் பொது வாழ்க்கையாய் மாற்ற என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற பார்வை வலுப்பெறும் யுகம் இன்று. அந்தப் பார்வையின் வலுபுதுக் கலை இலக்கியங்களைக் கோரி நிற்கிறர்.

அந்தப் புது முயற்சிகள் வாழ்க்கையாகவே மாறுகின்றன. வாழ்க்கையே கலை: வாழ்க்கையே பேர் இலக்கியம். இதை ஆற்றுப்படுத்துகிறது இன்றைய மெய்முதல்வாதப் பெருந் தத்துவம்.

இந்த மெய் முதல் வாதப் போக்கின் பிரகடனமாகவே திரு. மு. தளையசிங்கம் அவர்களின் இம் மெய்யுள் தொகுப்பு வெளிவருகிறது.

இது அவரின் மூன்றாவது நூல்.

முதலாவது 1965இல் வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது.’

இரண்டாவர் 1970இல் வெளியான ‘போர்ப்பறை’. ‘மெய்யுள் 1974இல் வெளியாகிறது.

இம் மூன்று நூல்களுக்கிடையே உள்ள முக்கியத்துவம் சுவையானது.

மூன்றுமே மெய்யை – சத்தியத்தை – அழுத்திய நூல்கள் தான்.

ஆனால், அழுத்தம் பெற்ற விதங்கள் ஒவ்வொன்றிலும் வேறாகியும், தொடர்புபட்டும் ஒரு தத்துவ முழுமையாகிப் பரிணமிக்கின்றன.

தன்னில் மட்டும் மெய்யை அழுத்திய உள்ளொதுங்கிய போக்கு ‘புதுயுகம் பிறக்கிறதின்’ கடைசிக் கதையான ‘வெளி’க்குரியதென்றால், சகலதையும் மெய்யில் அழுத்தி விரியும் தத்துவ வார்ப்பு ‘போர்பறை’ நூலுக்குரித்தாகிறது.

‘மெய்யுளோ’ சகலதின் இயக்கங்களையும், அவற்றின் இயக்க விதிகளையும் மெய்யின் பின்னணியில் வைத்து அழுத்தி காட்டுகிறது. ‘போர்ப்பறை’ விரித்த தத்துவத்தின் பிரயோகப் படுத்தலுக்கான விதிகள் இதிலே (கலைஞனின் தாகம்) போடப்படுகின்றன.

இந்தப் பார்வையில் வர்க்கவியல் என்பது அற்பமாக, குணவியலே எல்லா இயக்கங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய உண்மைப் பின்னணி என்பது விளக்கப்படுகிறது.

குணக் கலவைகளின் வார்ப்புக்கேற்ப ‘நான்’ நடத்தும் இயக்கங்களே அன்றிலிருந்து இன்றுவரை தேவ – அசுர, தர்ம – அதர்ம, நல்ல – தீய, தொழிலாளி – முதலாளி போக்குகளாக மாறி மாறிக் காலத்துக்கேற்ற கோலங்களில் தோன்றுகின்றன.

குணவியலை அறியாத வரைக்கும் தொழிலாளருக்குள் இருக்கும் முதலாளிகளையும், முதலாளிகளுக்குள் இருக்கும் தொழிலாளிகளையும் பொதுவுடமை வாதிகள் அறியப் போவதில்லை.

அதனால் தான் தொழிலாளர் புரட்சி துரைத்தனமாகத் தேங்குவதற்கும், தொழிலாளர் சர்வாதிகாரம் சோஸலிசத்தை விட்டு நகராமைக்கும் உரிய காரணங்களைப் பொதுவுடைமைவாதிகள் அறிவதில்லை.

பொதுவுடைமைப் போக்கின் இன்றைய தேக்கமே அதன் அறியாமையிலேயே ஆரம்பிக்கிறது.

‘மெய்யுளின்’ வருகை பொதுவுடைமைப் போக்கின் தேக்கத்தை உடைக்கும் அதே வேளையில், அதன் தேக்கத்துக்குரிய அடிப்படைக் கோளாறுகளான லோகாயத வர்க்க - இயக்கவியல் வரையறைகளையும் தகர்த்துவிடுகிறது.

இதன் மூலம் பொதுவுடைமைப் போக்கே விடுதலை பெறுகிறது.

விடுதலை பெறும் பொதுவுடைமைப் போக்கு, பூரண சர்வோதய எழுச்சிக்குரிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக மெய்முதல்வாதத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

மு.த. தனக்கும் தன்னைப் போன்ற சிலருக்கும் ஆத்மீகத் தீட்சை கொடுத்தவரையும், தீட்சை கொடுக்கப்பட்ட தினத்தையும் அடிக்கடி நினைவுகூறுவார்.

தீட்சை கொடுத்தவர் இருபதாம் நூற்றாண்டில் பேரவதாரமான பகவான் ஸ்ரீ நந்தகோபாலகிரி.

தீட்சை கொடுக்கப்பட்ட தினம் அரவிந்தர் தினம் கூடவே இந்தியா விடுதலை பெற்ற தினமுமாகும். (1966 - யுரபரளவ 15)

இந்திய விடுதலைப் போராட்டம் சாதாரண தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. ஞானிகளால் முன்னின்று நடத்தப்பட்ட அப்போராட்டம். “உலகின் ஆன்மீக விடுதலைக்காக இந்தியா நடத்திய முதல் புரட்சி” என்றே அரவிந்தர் அதைக் குறிக்கிறார்.

காந்தியின் வருகைக்கு முன், இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய அரவிந்தருக்குச் சிறையில் விவேகானந்தர் தோன்றி ‘பேர்மனம்’ பற்றி விளக்குகிறார்.

வெளியே சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருக்க, அதன் ஆன்மீகக் கொள்கை விளக்கம் அரவிந்தருக்கு உள்ளே நடைபெறுகிறது.

உடல், உயிர், மனம் என்று வளர்ந்துவிட்ட இன்றைய மனித பரிணாமம் பேர்மனம் ஆகிய அடுத்த கட்டத்தை எட்டி விட்டதை அரவிந்தச் சிறையை விட்டு விடுதலை பெற்று வெளியே வந்து பிரகடனப் படுத்துகிறார்.

அந்தப் பேர்மன வளர்ச்சியின் பரவலான எழுச்சிக்குச் சர்வமத ஞானமே அடிப்படை என்பதன் வலியுறுத்தலே நந்த கோபாலகிரி என்ற பேர் அவதாரமாகும். விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண அவதாரம் அருட்டிவிட்டுச் சென்ற சர்வமத ஐக்கியத்தின் முற்றிய தொடர்ச்சி.

‘சர்வ மதங்களும் சமமானவையல்ல, எல்லாம் ஒன்றே’ என்ற ஞானம், சகல மக்களினதும் இன, மத, மொழி, கலாசார ஆணவத் தடைகளை அறுப்பதோடு, அதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளை நிலை நாட்டவும், சகல மக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப் படுத்தவும் அது தானாகவே தூண்டுகிறது.

இத்தூண்டுதலின் கiலை ஒலிப்பே பாரதி கண்ட கிருதயுகம், பாரதி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவின் சீடன், அரவிந்தரோடு உறவாடியவன்.

இந்த ஆன்மீகச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு. தளையசிங்கம் திகழ்கிறார்.

அவர் நூலின் முக்கியத்துவத்தையும், இதன் அடிப்படையிலேயே நோக்கவேண்டும்.

அரவிந்தர் மனதின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி பற்றியும் பேர்மன் உச்சங்கள், அதன் கீழ் இடைத்தர உட்சுழிவுகள் பற்றியும் எழுதியுள்ள அளவுக்கு, இன்றைய இடைப்பட்ட நிலையில் பேர்மனதை நோக்கி மனித குலத்தை ஆற்றுப்படுத்துவதற்குரிய சமூக, பொருளாதார, அரசியல் தத்துவ இயக்கவியல் பற்றி எழுதுவதைத் தன் பணியாகக் கொள்ளவில்லை.

அந்தப் பணிக்குரிய தத்துவ வார்ப்பாகவே மு.த. வின் ‘போர்ப்பறையும்’, ‘மெய்யுளும்’ வெளிக்காட்டப்ப படுகின்றன.

அதனால்தான் மு.த.வின் பூரண சர்வோதயக் கோட்பாட்டை இன்றைய நியோமார்க்ஸிய, எக்லெட்டிச போக்குகளோடு ஒப்பிடும் சில மார்க்ஸிய வாதிகளின் அர்த்தமற்ற பார்வை சிரிப்புக்கிடமானதாக அமைகிறது.

மத ஸ்தாபனங்களை மத உண்மைகளாக மாறாட்டம் செய்து புறூடன், போர்ப்பாச், ஹெகல் என்று பலரின் சிந்தனைகளைத் தனது மாறாட்ட அறியாமைக்கேற்றவாறு ஒத்திசைவித்த மார்க்ஸின் தத்துவம் ஒருவேளை எக்லெட்டிசத்துக்குக் கிட்டே வந்தாலும் ‘உடல், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இனிப் பேர்மனமாக வளரப் போகிறது’ என்ற பேர்ஞான உண்மையின் அடிப்படையில் தனது தத்துவத்தை நிறுவி, அந்த உண்மையை நோக்கிச் சமூக இயக்கங்கள் அனைத்தையும் வளர்த்துக் காட்டும் பூரண சர்வோதயக் கோட்பாட்டை அப்படி நினைப்பது தத்துவம் பற்றிய அறியாமையேயாகும்.


சகலவற்றையும் மெய்யின் எழுச்சிக்குரிய பூரண சர்வோதய மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவதே மெய் முதல்வாதம்.

அந்தச் சகல மாற்றங்களும் ஆரம்பத்தில் கலை, இலக்கிய, கலாசாரப் புரட்சிகளோடேயே தொடங்குவதால், மெய்யுள் உருவம் அப்புரட்சியைத் தொடக்கி வைக்கிறது.

அப்புரட்சி எழுச்சில் மட்டும் உன்னத இலட்சியங்களையும், கலைப்பரவசத்தையும் ‘படைத்து’ விட்டு வாழ்க்கையில் அவற்றுக்கு முற்றும் மாறாக வாழும் இன்றைய கலை இலக்கிய கர்த்தாக்களின் போக்கைத் தகர்ந்துவிடுகிறது.

இத்தகர்ப்பு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத இலட்சியங்களின் கூடாரமாக, வாழ்க்கையின் போலிப் பிரதிப் பொருளாக அமைந்துள்ள கலை இலக்கியம் என்ற தனியான ஸ்தாபனத்தையும் தகர்த்துவிடுகிறது.

இதன்மூலம் கதை, கட்டுரை, கவிi என்ற இலக்கிய கர்த்தாக்களின் கற்பனைச் சிறையிலிருந்து கலை இலக்கியமே விடுதலை பெறுகிறது.

இந்த விடுதலை சகலரையும் கலைஞர் ஆக்குவதோடு அவர் புரியும் சகல தொழிலையும் கலையாக்குகிறது, இலக்கியமாக்கிறது.

இந்த நோக்கின் உன்னத சிருஷ்டியாகவே ‘கலைஞனின் தாகம்’ மெய்யுள் அமைகிறது.

இத்தரிசனத் தேவைகளின் நிகழ்வான மெய்யுள் உருவம் இன்றைய இலக்கியத்தை அழிக்கும் இலக்கியமாகவும், கலையை அழிக்கும் கலையாகவும் செயற்படும் அதேவேளையில் வாழ்க்கையையே கலையாகக் காணவைக்கும் சாதனமாகவும் அச்சாதனையின் மூலம் கலை இலக்கியத்தின் உச்ச தரிசன வெளிக்காட்டலாகவும் அமைகிறது.


அதனாற்றான் மெய்யுள் உருவம் பழைய இலக்கிய உருவங்களின் உடைப்பாகவும். அதேவேளை அவற்றின் கலப்பாகவும், அவைக்கும் அப்பாற்பட்ட மெய் - றியலிச (மெய் - சுநயடளைஅ). பிரபஞ்ச யதார்த்த வார்ப்பாகவும் அமையும்;.

இம் மெய்யுள் தொகுப்பிற் காணப்படும் ‘மெய்யுள் உள்ளும் மெய்’, ‘பூரண இலக்கியமும் அதன் தேவைகளும்’ ஆகிய இரண்டும் மெய்யுள்களைத் தவிர மற்றவை எல்லாம் 1972இன் கடைசிக் காலங்களின் எழுதப்பட்டவையாகும். ‘மெய்யுள் உள்ளும் மெய்’ 72 ஜூன் ‘மல்லிகை’யின் வெளிவந்தது. ‘பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 71 ‘சத்தியம்’ வெளிவந்தது. வர்க்கவியலும் குணவியலும், என்பது ‘கலை, தொழுகை, விடுதலை, சத்தியம்’ என்ற தலைப்பில் சிறு நூலாக எழுதப்படவிருந்த மெய்யுளின் ஆரம்பக் குறிப்பே, ‘கலைஞனின் தாகத்தின்’ கடைசிப்பகுதி (அதாவது யு-2 வின் குணங்களை ஆராயும் இடத்திலிருந்து) ஆசிரியரால் விரித்து எழுதப்படவிருந்தும் அது நிறைவேற்றப்படாததால் அதற்கு ஆசிரியர் போட்டிருந்த குறிப்புகளோடேயே அது நிறைவு பெறுகிறது.

மு.த.வின் மெய்யுள்களில் காணப்படும் நல்லசிவம் ஒரு கற்பனைப் பாத்திரமல்ல. அவரது வெளி மனதுக்கு அகத்தின் ஆன்மீக உந்துதல் தூதனுப்பிய தூய உள்ளுணர்வே நல்ல சிவம். அரவிந்தரின் வார்த்தையில் சொல்வதானால் அந்த உள்ளுணர்வை “ழுஎநச ஆiனெ” என்று அழைக்கலாம்.

அதனால், நல்லசிவம் ஆத்மீக உண்மைக்கெதிரான எந்தச் சிறுமைகளையும், தடைகளையும், மாயைகளையும் உடைக்கும் நித்திய இயக்கமாகவே திகழ்கிறான்.

அந்த நல்லசிவத்தின் குரல் உங்களுக்குள்ளேயும் கேட்கிற காலம் தொடங்கிவிட்டது. இதோ அவன் உங்களுக்குள்ளே குரல் எழுப்புகிறான்.

சத்தியச் செங்காவலர் வருகிறார்.

தயார்ப்படுங்கள், தயார்ப்படுங்கள்!

உங்கள் கட்டுக்களைக் கலைக்கத் தயார்ப்படுங்கள்!

காலங்காலமாய் கலை இலக்கியமென்றும், கட்டுரையென்றும், கட்டுக்கதை, கவிதை என்றும் எழுதியும் அவை உங்கள்.

சுயநலக் கட்டுக்களை அறுக்கவில்லை.

தூக்கத்தைப் போக்கவில்லை.

கனவுகளைக் கலைக்கவில்லை.

மாறாகக் கட்டுக்களோடு இன்னொரு கட்டு

கலை இலக்கியக் கட்டு!

இவற்றைக் கலைக்கச் செங்காவலர் வருகிறார்.

எழுதியபடியும் சொன்னபடியும் வாழாத நீங்கள் சத்தியத்துக்கெதிரான திரிபுவாதிகள்.

‘நான்’ ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள்.

உங்களை விசாரிக்கக் கலை இலக்கியச் செங்காவலர் வருகிறார்.

அவர் நடத்தும் ஆத்ம கலாசாரப் புரட்சியில் உங்கள் கலை இலக்கியக் கறுப்புச் சந்தைத்தனம் கலைப்படப் போகிறது. அந்தக் கலைப்புத்தான் இனிவரும் இலக்கியம். கலையை அழிக்கும் கலை, இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்.

தயார்ப்படுங்கள்! தயார்ப்படுங்கள்!!

மு. பொன்னம்பலம்
புங்குடுதீவு 9 - இலங்கை.


சசி
1966ன் நடுப்பகுதியிற்தான் இப்பிறப்பில் நான் ஈஸ்வரனின் முக்கிய பக்தர்களில் ஒருவரைச் சந்தித்தேன்.

அவர் தன்னுடைய பெயரைத் தளையசிங்கம் என்று எனக்கு அறிவித்தார். அவர் சொன்ன அந்தப் புதுப்பெயரை ஞாபகத்தில் வைத்திருக்க முயன்று தோல்வியுற்றபோது இந்தப் பெயரைவிட அவரது முன் ஜன்மத்தின் பெயராலேயே தொடர்ந்து அழைப்பதை நான் விரும்புகிறேன் என்று கூறினேன்.

சிறிது காலத்துக்குப் பின்னர், அவரது குருதேவர் பகவான் ஸ்ரீ நந்தகோபாலகிரி அவருக்கு விநாயகதாஸ் என்ற ஆச்சிரமப் பெயரை வழங்கினார். ஆனால், நானோ அவரை அவரது மகா சமாதியின் இறுதிவரை ‘சசி’ என்றே அழைத்து வந்தேன்.

யார் இந்தச் சசி?

இவர் வேறு யாருமல்ல, ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பெரும் பக்தராக முன்பிருந்த இராமகிருஷ்ணானந்தாவே தான். இவருக்கிருந்த அளவுகடந்த குரு பக்தியினால் குருவின் பெயரை இவருக்கு வழங்கப்பட்டது. இதைப் பற்றி விவேகாந்தரே, சசியைத் தவிர அளவு கடந்த குரு பக்தியுள்ளவர் யாருமில்லை. ஆகவே, இராமகிருஷ்ணானந்தா என்ற பெயர் இவருக்கே அதிக பொருத்தமானது என்று கூறியுள்ளார்.

“ஈஸ்வர கோஷ்டி” என்று சுருதிகளிற் கூறப்படும் தனியான பக்தர் கூட்டத்தைச் சேர்ந்தவரே சரி. அவதாரத்தோடு பிறப்புப் பிறப்பாகத் தொடர்ந்து வந்து அவரது மெய்விளக்கத்தை அழுத்த வரும் ஜீவன் முக்தர் கூட்டத்தைச் சேர்ந்தவரே அவர்.

முன்பு இதே சசி மகா சமாதியடைந்ததைக் கேள்வியுற்றபோது, புனித அன்னை சாரதா தேவியார் சோகந்தொனிக்கப் பின்வருமாறு கூறினார்: “என்னுடைய சசி போய்விட்டார். என்னுடைய முதுகெலும்பு முறிந்துவிட்டது.”

அவற்றை நான் இன்று மீட்டொலித்துப் பார்க்கும் அதேவேளையில், பின்வருவனவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்.

சசி தனது ஸ்தூவ உருவத்தை, இற்றுப்போன அணிகலன் ஒன்றை ஒதுக்கியது போல் ஒதுக்கி விட்டாலும், அவர் தொடர்ந்து ஆத்மீக உருவத்தில் வாழவே செய்கிறார். அவர் இவ்வுலகத்தில் நடமாடியபோது செய்ததைவிட அதிகப்படியான அக்கறையோடும் வேட்கையோடும் ஆத்மீக சாதகர்களையும், சமூக சேவையாளர்களையும் வழிப்படுத்துவார்.

- அன்னை
சர்வமத சங்கம்

தளைசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
-சுந்தர ராமசாமி

மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெறாதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறயுள்ளன. ‘புதுயுகம் பிறக்கிறது’ – பதினோறு சிறு கதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965. ‘போர்ப்பறை’ – கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு. முதற்பதிப்பு 1970. ‘மெய்யுள்’ கட்டுரைகள், - சம்பாஷணைகள், கவிதைகள், நாவல் ஆகியவற்றின் தொகுப்பு. தளையசிங்கத்தின் மறைவுக்குப் பின் 1974இல் வெளிவந்தது. இவை தவிர அச்சில் வந்தவையாகவும், கையெழுத்துப் பிரதிகளாகவும் வேறு எழுத்துக்களும் உள்ளன. ‘ஒரு தனி வீடு’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ ஆகிய நாவல்கள் முழுமை பெற்றவை. ‘ஒளியை நோக்கி’ என்ற நாவல் குறையாக நிற்கிறது. ‘குருக்ஷத்திரம்’, ‘எதிரிகள்’, ‘ஓமாக்கினி’ ஆகிய முயற்சிகளும் உள்ளன. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – சில அவசரக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் ஈழத்து நவீன இலக்கியத்தை விமர்சிக்கும் கட்டுரைகள் செய்திப் பத்திரிகையில் அவர் வாழ்நாளிலேயே தொடர் கட்டுரைகளாக வந்து முழுமை அடைந்துள்ளன. இன்னும் புத்தக உருவம் பெறவில்லை. ‘மல்லிகை’, ‘பூரணி’, ‘சத்தியம்’ ஆகியவற்றில் வெளிவந்து தொகுக்கப்பட்டுள்ள எழுத்துக்களும் புத்தக வடிவம் பெறவில்லை.

தளையசிங்கம் 1935இல் பிறந்தார். 1957ல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘சுதந்திரம்’ என்ற பத்திரிகையில் இவருடைய முதல் சிறுகதையான ‘தியாகம்’ வெளிவந்தது. முதல் நாவலான ‘ஒரு தனி வீடு’ 1960ல் எழுதப்பட்டது. இரத்தினபுரியின் தான் படித்து வந்த கல்லூரியிலேயே இவர் ஆசிரியரானார். விமர்சனத்தில் தீவிர ஆர்வங்கொண்டார். ‘விமர்சன விக்கிரகங்கள்’ கட்டுரைத் தொடர் ‘தினகர’னில் வந்தபோது சர்ச்சைக்கு உள்ளாயிற்று. இக்காலத்தில் முற்போக்கு, நற்போக்கு இரண்டினது குறைகளையும் எடுத்துக் காட்டும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1963ல் இவர் எழுதிய ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: சில அவசரக் குறிப்புகள்’ தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் ஒரு மைல் கல் என்று கருதப்படத்தக்கது. 1966ல் இவர் தனது குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். இக்காலத்தில் இவருடைய வேலை புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாறிற்று. புங்குடுதீவில் பல ஆத்மீகப் பயிற்சிகளை மேற்கெதண்டு ஆத்மீக வகுப்புகள் நடத்தினார். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திகான முயற்சிகளில் ஈடுபட்டார். 1970ல் ‘சத்தியம்’ பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கினார். 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராட, போலீசாரால் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். 1972ல் மெய்யுள், என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973ல் இரண்டு மாதம் நோய்வாய்பட்டு ஏப்ரல் 2ஆம் தேதி மறைந்தார்.

நான் என் கட்டுரையை தமிழக வாசகர்களின் வசதியைக் கருதி அச்சேறியுள்ள இவரது மூன்று புத்தகங்களைச் சார்ந்த எழுதியிருக்கிறேன். முதற் பகுதி தளையசிங்கத்தின் கருத்துலகம் பற்றி, அதிகமும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதிகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதி, இவருடைய சிந்தனைகளைப் பற்றி எனது எதிர்வினைகள்.


தளையசிங்கம் தனது கலைப் பார்வையை, ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என்று அழைக்கிறார். ‘பிரபஞ்ச யதார்த்தம் என்றால் என்ன? இதைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்தக் கட்டுரை. கலைப்பார்வை வாழ்க்கைப் பார்வையின் ஒருபகுதி. வாழ்க்கை பார்வையைத் தெரிந்துகொள்ளாமல் கலைப் பார்வையை முழுமையாக அறிய முடியாது. ஆகவே தளையசிங்கத்தின் வாழ்க்கைப் பார்வையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.

உலகெங்கும் மனிதன் அதிருப்தியில் ஆழ்ந்து கிடக்கிறான். அதிருப்தியின் வெளிமுகங்கள் பல. பயனற்ற பொழுது போக்குகளில் காலத்தை வீணடித்தல், போதைப் பொருட்களில் விஐந்து கிடத்தல், போலிக் கலைகள் எழுப்பும் கனவுகளில் தன்னை மறந்து நிற்றல், வாழ்க்கையில் ஆர்வமின்மை, சோம்பல், வன்முறை இவ்வாறான எதிர்மறைச் செயல்கள் ஒருபக்கம். மறுபக்கம் வௌ;வேறு தளங்களில் சமூக மாற்றத்திற்கான முயற்சிகள், போராட்டங்கள், இந்த வெளிப்பாடுகளில் பிரச்சினையின் ஆழத்தை உணர முடிகிறதா? முடியவில்லை. விஞ்ஞானப் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் கொண்டு வருகிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளியேறிக் கொண்டிக்கிறான். உலகெங்கும் வௌ;வேறு விதமான சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பினும் அங்கு அதிருப்தி மிஞ்சுகிறது. சமூக மாற்றங்கள் எவற்றைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்? மெய்யான வளர்ச்சி எது? கட்சிகள் அரசுகள், நிறுவனங்கள் ஆகியவை தம் குறிக்கோள் பற்றித் தெளிவாக இருக்கின்றனவா? சமூக பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவே கொண்டு வரும்போது மேலான வாழ்வு மகுமா? இவற்றைத் தாண்டி மற்றொரு எழுச்சிக்குரிய தளமாக இம்மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றனவா? பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. அது தான் சத்திய நிலை. இதை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டு எந்த நாட்டு அரசாங்கமும் இன்று நிருவாகத்தை நடத்தவில்லை. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியம். கடவைள ஏற்றுக்கொள்ள விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ளலாம். பௌத்தர்கள் கடவைள மறுப்பினும், கடவைள ஏற்பவர்கள் நிர்வாணத்தை ஏற்றுக்கொள்வர். நிர்வாண நிலைதான் திருப்தியை அளிக்கக் கூடியது. இந்த சத்திய நிலை முழுச் சமூகத்திலும் பரவாதவரையிலும் அதிருப்தியை தொடரும்.

சடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம். உட்புக முடியும். இன்று வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தவர். ஞானிகளிடம் தோன்றிய சத்திய எழுச்சியை எங்கும் நீக்கமற நிலையச் செய்ய வேண்டும். ஆகவே இன்றைய பிரச்சினைகளை ஆராயும்போது அவற்றை அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண பரிணாமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரையிலும் விரித்துப் பார்க்கவேண்டும். அதிருப்தியாளனே போராட முன் வருவான். அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள், ஞானிகளை விட்டவிட்டால் கலைஞர்களிடமே அதிக அளவில் தட்டுப்படவாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக்கிறான். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித குலத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிலைவேறுவதற்கு முன் சிறு சிறு கூட்டங்கள் இணைந்து பெருங்கூட்டமாக மலர வேண்டியுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர்களின் கூட்டமாகவும் இருக்கும்;.

மெய்யான மதத்திற்கும், மெய்யான விஞ்ஞானகத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை. ஒன்று உண்மைக்கு உள்ளுணர்வுகளை நாட, மற்றொன்று புற உலகைச் சார்ந்து நிற்கிறது. ஒன்று அனுபவம். மற்றொன்று ஆராய்ச்சி. சீரழிந்த மதமும் சீரழிந்த விஞ்ஞானமும், பொது ஒற்றுமைகளைக் கொண்டவை. வாழ்க்கையையும் சமூகத்தையும் துறக்கத் தூண்டிய மதத்தைக் கேலி செய்தது விஞ்ஞானம். மேற்கே அதே விஞ்ஞானம் முதலாளித்துவத்திற்கு தன் ஆத்மாவை விற்று வாழ்வை அழித்தது. நீக்ரோக்களை ஒதுக்கி வைக்கும் சமூகம் எந்த அளவு விஞ்ஞான பூர்வமானது? மனிதத் தன்மைகளை பண நாயகம் விழுங்கிக் கொண்டிருப்பது வரையிலும், உலக சர்வாதிகாரத்திற்கு கனவுகள் கண்டு கொண்டிருப்பது வரையிலும், சந்திர யாத்திரைக்கும் காசி யாத்திரைக்கும் அதிக வேற்றுமை இல்லை.

முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களும் வழி வகுக்கவேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொது உடமை அமைப்பு வழியாகத் தான் சத்திய எழுச்சிக்குரிய தளத்துக்கு செல்லவேண்டும் என்பதில்லை. முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு மு;னரே நிலவுடமை அமைப்பிலிருந்தே நேராக பொதுவுடமை அமைப்புக்குப் போக முடியுமென்றால், முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பைத் தாண்டி சத்திய எழுச்சிக்குரிய தளத்திற்குச் செல்ல முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. சமூகம் மாற மதிப்பீடுகள் மாறுகின்றன. இம்மாற்றத்தை விஞ்ஞான ரீதியாக உணர்ந்த மார்க்சீயவாதிகள், முழுமையை நோக்கி சமுதாயத்தை துரிதப்படுத்தி வளர்க்க முயன்று கொண்டிருக்கிறார்கள். சத்தியத்தைப்பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப்படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவடையும்.

இன்று நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரிய தத்துவம் மார்க்சியம் மட்டும் தான். வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளை விளக்கிக் கொள்ளவும், அந்த விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குரிய செயல்களை நிர்ணயிக்கவும் எந்தத் தத்துவம் மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அது வாழும் தத்துவமாக அமைகிறது. மற்றச் சிந்தனைகளால் முழுச் சமூகத்தையும் அரசியல், பொருளாதாரம், கலைபோன்று பிற துறைகளையும் ஸ்பரிசித்துப் பேச முடியாது. ஆகவே, இன்றைய நிலையில் கலைஞன் தனது கலையின் ஆட்சியை இன்னும் கூர்மையாகவும், வலுவாகவும் செலுத்த வேண்டும் என்றால் ஒன்று அவன் மார்க்சிய வாதியாக இருக்கவேண்டும். அல்லது மார்க்சீயத்தை வெல்லும் மற்றொரு பார்வையைத் தேடிக்கண்டுபிடிப்பவனாக இருக்கவேண்டும். மார்க்சியத்தை இன்னும் யாரும் முழுமையாக வென்று விடவில்லை. வெல்ல முயன்றவர்கள் பூரண வெற்றி பெறவுமில்லை. மார்க்சியம் தோற்கும் இடத்தில் கூட, அது கொண்டு வந்த நன்மைகளை எடுத்துச் செல்லும் விசாலப்பார்வை வேண்டும்.

மார்க்சீயத்தின் மறு பக்கத்தையும் பார்ப்போம். சரித்திரத்தின் புதிய தேவையை மார்க்சீயம் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சரித்திர வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் தத்துவப்பார்வை வளரவேண்டுமென்றால், அந்த தத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படும் சில அம்சங்களை தகர்க்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால் மார்க்சியவாதிகள் இதனை உணரமுடியாதவர்களாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை மறுப்பவர்கள் மார்க்சியத்தின் நியாயமான தன்மைகளை ஒப்புக்கொள்ள மறுப்பதுபோல், இந்த மார்க்சியவாதிகளும் தங்களது இறுக்கமான தத்துவத்தையும் மீற்க்கொண்டு புதுப் பார்வைக்குரிய கால கட்டம் வந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். சத்தியத்தின் ஒரு கால கட்ட சரித்திர வளர்ச்சிக்கு எவ்வளவுதான் ஒரு தத்துவப்பார்வை உதவினாலும், அக்கால கட்டத்தில் எவ்வளவுதான் அப்பார்வை பூரணமாக இருந்தாலும், பரிபூரணமான சத்தியத்தின் முழுப்போக்கையும் அது அடைந்து விடப் போவதில்லை.ட எல்லாத் தத்துவங்களும், தத்துவங்களையும் கடந்த ஒரு நிரந்தரமான சத்தியத்தின் அந்தந்தக் கால வெளிக்காட்டல்களை அல்லது தர்ம வளர்ச்சியை படம் பிடிக்க முயலும் தற்காலிகப் பார்வை அழுத்தங்களேதான். எனவே அந்தந்தக் காலத் தத்துவப் பார்வைகளை அந்தந்தக் காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் போதுகூட, அதே தத்துவங்களையும் மீறி சத்தியத்தில் தன்னை நிறுத்திக் கொள்பவன்தான் சார்புநிலையில் தர்ம வளர்ச்சிக்கு ஏற்றவாறு சரியாக மாறக் கூடியவனாகவும் போராடக் கூடியவனாகவும் இருக்கிறான்.

வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடமை சோஷலிசத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வரவும் இயலாது. பொதுவுடமைப் போராட்டத்தோடு அகத்Nது காணும் வேறுபாடுகளையும், முழுச் சமூகத்தையும் தாண்டினால் தான் உண்மையான சோஷலிசமும் உண்மையான ஞான எழுச்சியும், அடுத்த கட்ட மனிதப் பரிணாமமும் காணமுடியும். இனிவரும் காலத்தில் கலைத்துறைகள் மட்டுமே பரவசத்தையும், மன அமைதியையும், தெளிவையும், நிறைவையும் தந்து நோயைப் போக்கும் மருந்தாக இருக்கப் போவதில்லை. இனிமேல் எல்லாத் தொழில்களுமே கலையாகவும் யோகமாகவும் தொழுகையாகவுமிருக்குமாறு செய்யவேண்டும். ஃப்பிராயிடு கூறிய மனச் சிக்கல்களும் மார்க்ஸ் கூறிய மனப்பிறழ்வும் நீங்கிய முழுமையான மனிதனை உருவாக்க வேண்டும். இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கவேண்டும். சகல துறைகளையும் ஒன்றொடொன்று தொடர்புபடுத்தி அவற்றை முழுமை அடையச் செய்வதற்கும் சகல துறைகளையும் திட்டமிட்டு சம வேகத்தில் புதுமையை நோக்கி வளர்ப்பதற்கும் அரசியல் அதிகாரமே நேரிடையான வழியைக் காட்டுகிறது. ஜனநாயக அமைப்பு சமூக மாற்றத்திற்குப் பூரணமாக உதவாத அமைப்பாகவே இருக்கிறது. சமூகத்தின் சகல துறைகளும் பிரிவுற்று, குறியற்றுத் தாமத நடைபோட, தடுமாற்றங்களும் சிதறல்களும் தோன்றுகின்றன. மத்தியிலிருந்து அதிகாரம் குவிக்கப்படும் பொதுவுடமை அமைப்பிலோ பொருள் உற்பத்தி நிச்சய பலன்களை தரும்போதும், ஜனநாயக மனஉணர்வுகள் பலியாகி, அதிருப்தி மிஞ்சுகிறது. சமய ஞானம் மறுக்கப்படுவதால் முழுமையற்ற ஒரு பார்வையைக் கொண்டே முழுமையை எட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன. சமயமும் சமயவாதிகளும் இதுகாலம் வரையிலும் பிற்போக்கு வாதத்தின் தூண்களாக இருந்தார்கள் என்பதற்காக சமய ஞானத்தை மறுக்கத் தேவையில்லை. முற்போக்கை விரும்புகிறவர்கள் தங்களது லட்சியத்திற்காக இதைப் புரட்சிகரமாகப் பயன்படுத்தலாம். மார்க்சியவாதிகள் இதை இன்னும் உணராதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரண பொதுவுடமையை ஏற்றுக்கொள்வதால் மட்டும் சர்வாதிகாரத்தின் இறுக்கம் தளர்ந்தது. சுதந்திர மலர்ச்சி வந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஓரளவுக்காவது மத்தியில் அதிகாரம் திரட்டப்படாமல் முழுமைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள முடியாது. ஆனால் அது தேவைக்கு அதிகமான சர்வாதிகாரமாக, தனிப்பட்டவர்களின் குறைகளையும் தீர்க்க தரிசன மின்மையையும் மறைக்கும் சர்வாதிகாரமாக மாறாமல் இருப்பதற்கு சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணத்துவம் மட்டும் வழி தரப்போவதில்லை. நடைமுறைப் படுத்துபவர்களின் மன வளர்ச்சியையும் பக்குவத்தையும் பொறுத்தும் இது இருக்கும். அதனால் தான் கலைஞர்களும் எழுத்தாளர்களும் - அந்த பூரண விரிவை வெளிப்படுத்தும் பக்குவத்தை வளர்க்கக் கூடியவர்களாக இருப்பதால் - அரசியலில் அதிகமாக பங்கு பற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன் அக ஆழத்தை கண்டுபிடிக்காதவரைக்கும் முழுமையின் பூரணத்துவம் பெறப்போவதில்லை. ஆகவே சமய ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பூரணமாகப் பயன்படுத்த இன்றைய எழுத்தாளர்கள்தான் முன்வரவேண்டும்.

சமய ஞானத்திடமிருக்கும் உண்மையை சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக்கச் செய்யவேண்டும். அதற்காக முதலில் ஒவ்வொருவரும் தனது அகத்திலேயே அந்த ஞானத்தை எழுப்பவேண்டும். வர்க்க வேறுபாடுகளும் குண வேறுபாடுகளும் அங்குதான் புதைந்து கிடக்கின்றன. அவையே பிற்போக்குக் கோட்டையாகவும் இருக்கின்றன. அவற்றைக் கைப்பற்றி அங்கு புரட்சியை கொண்டு சென்று முழுமையின் மலர்ச்சியை ஏறட்படுத்தாத வரைக்கும் புறச் சூழலில் மட்டும் புரட்சியை நடத்தி பூரண இலக்கியத்தையும் சரி, முழுமையான வாழ்க்கையையும் சரி கொண்டு வரமுடியாது. எழுத்தாளர்கள் இனியேனும் இதை உணரவேண்டும். இவ்வாறு இலக்கியத்தில் ஆரம்பமாகும் இந்த ஞான அலை – பிரபஞ்ச யதார்த்தம் - முழுச் சமூகத்திலும் ‘பரவுவதே சர்வோதயம்.’

இன்றைய சமூகத்தில் காணப்படும் கலைஞர்களை – படைப்பாளிகளை – நான்கு வகையினறாகப் பிரிக்கலாம்:

1. மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளும் படைப்பாளிகள்.

2. மார்க்சியத்தை மறுத்து அதை வெல்லக் கூடிய திட்ட வட்டமான தத்துவப்பார்வை ஏதும் இன்றி – தங்கள் உள்ளுணர்வுகளின் உந்தல்களுக்கு கலையுருவம் கொடுப்பவர்கள்.

3. கட்டுப் பெட்டிகளும், போலிகளும்

4. வியாபாரிகள்.

மார்க்சியத்தை மறுப்பவர்களில் சிலர் உள்ளுணர்வுகளின் மூலம் ஆழமான கலையுருவத்தைத் தேடி போயிருக்கின்றனர். புதுமைப்பித்தன், மௌனி, சி.சு. செல்லப்பா போன்றவர்களுக்குத் திட்டவட்டமான பார்வை ஏதும் இல்லாததால் தர்ம வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் போராட முடியவில்லை. இவர்கள் மார்க்சிய சித்தாந்தத்தைத் ஏற்றுக்கொண்டவர்களைவிடவும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்றால் அச்சித்தாந்தத்தை இவாகள் ஏற்றுக்கொண்டிருந்தால் மேலும் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்பதைத் தான் காட்டுகிறர். மார்க்சியச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் பார்வை விரிவுக்கு ஏற்ப கலைத் திறமையும் அவர்களுக்கு இல்லை என்றே அர்த்தமாகிறது. நம் பின்னணியில் திறமை மிகுந்த கலைஞர்கள் பெரும்பாலும் மார்க்சியத்தால் கவரப்படுவதில்லை. இந்தியப் பண்பாட்டின் ஆழம் அதிகம். மார்க்சியத்தை விடவும் அதிகம். அதனால் இந்திய பண்பாட்டையே சார்ந்து நின்று திறமை மிகுந்த கலைஞர்கள் அதன் பழந்தோற்றத்துடனேயே திருப்தியடைந்து விடுகின்றனர்.

கட்டுப்பெட்டிகளுக்கு உதாரணமாக பண்டிதமணி கணபதிப்பிள்ளை முதல் மு.வ. வரைப் பலரைச் சொல்லலாம்;. இன்று வரையிலும் சமூகம் கண்டுபிடிக்க உண்மைகளை கட்டிக்காத்து வருகின்றனர் என்ற அளவுக்குத் தான் சமூகம் இவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு இவர்கள் அவசியமானவர்களே. போலிகளுக்கு உதாரணமாக அகிலன் முதல் நா. பார்த்தசாரதி வரை இருக்கின்றனர். போலிகளிலும் ஒத்தோட மறுப்பவர்கள் அண்ணா. மு. கருணாநிதி போன்றவர்கள். கட்டுப்பெட்டிகளும் போலிகளும் மலிந்த ஒரு சமூகத்தில் இவர்கள் புரட்சிவாதிகளாகத் தெரிவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவர்கள் காட்டும் வளர்ச்சி வெறும் மாயைதான்.

பிறந்து கொண்டிருக்கும் புது யுகத்திற்குரிய இலக்கிய வார்ப்புகள் எப்படி இருக்கும்?

இவை அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங்களைக் காட்டும் என்பதை இப்போதே நிச்சயமாகச் சொல்லி விடலாம். ஐரோப்பிய அறிவு வாதத்திற்கு முந்திய இலக்கியப் படைப்புகள் உள்ளுணர்வு செறிந்த கற்பனைக் காவியங்களாக இருப்பதுபோல் “அறிவு வாதத்திற்குப் பிந்திய படைப்புகள் ஐம்புலன்கள் சார்ந்த அறிவும் செறிந்த யதார்த்த இலக்கியங்களாக இருக்கின்றன. முந்தியவற்றில் பிரபஞ்ச உணர்வு இருந்தது. பிந்தியவற்றில் இந்த உலகத்து உணர்வும் குறிப்பாக பிரதேச, சமூக, பொருளாதார நிலைகளுக்குரிய உணர்வுகளும் அதிகமாக இருக்கின்றன. இனிவரும் படைப்புகளில் மீண்டும் பிரபஞ்ச உணர்வு தலைதூக்கும். ஆனால் அறிவு வாதத்தாலும் அதற்குரிய விஞ்ஞானத்தாலும் பெறப்பட்ட யதார்த்த உணர்வுகளும் கூடவே நிற்கும். இதனை பிரபஞ்ச யதார்த்தம்” என்று கூறலாம். விஞ்ஞானமும் ஆத்ம ஞானமும் கலந்த பேரறிவு இது.

பிறக்கப்போகும் இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும் புதிய தளத்துக்குரிய உருவ உள்ளடக்கத்தைப் பெறும். இதுதான் மெய்யுள். இது ஒரு புதிய இலக்கிய உருவம். இது ஒரு பூரண உருவமாகவும் இருப்பதினால் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும், கடந்தும் செல்லும் ஒரு உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடை என்ற வித்தயாசங்களை இது ஏற்காது. இதுகால வரையிலுமுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. ‘மெய்யுள்’ கற்பனைக் கோலங்களைத் துறந்து அவற்றின் தளங்களையும் தகர்த்துக்கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவ ரீதியான ஊடுருவல்களுக்குரிய இலக்கிய உருவமாகும். அதன் உள்ளும் புறமும் உள்ளடக்கமும் மெய்யாகவே இருக்கும். அதனால் இது இதுகால வரையுள்ள கலை இலக்கியங்களை அழிக்கும் கலை இலக்கியமாகவும் இருக்கும். அதேபோல் தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் இருக்கும். சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக மெய் வாழ்க்கை அனுபவங்களாகவும் அமையும்.

இன்றைய இலக்கியத்தைப் பார்க்கும்போது ஞான அலையின் உந்துதல்களை பெரிய அளவில் உணர்ந்து செயல்பட்டவர் பாரதி. புதுமைப்பித்தன் கதைகள் நடைமுறையிலுள்ள ஆத்மீக வீழ்ச்சியை கேலி செய்யும் முயற்சிகள்தான். புதுயுக ஞான அலைகளின் ஆரம்பம் இவரிடம் இல்லை. மார்க்சீய முற்போக்கு எழுத்தாளர்கள் இந்த அலையை உணர்ந்தாலும் அதற்குப் பிழையான அர்த்தம் கொடுத்து இடை இடையே அதைத் திருகி சாகடித்து கொன்று விடுகின்றனர். அவர்கள் காட்டும் இலக்கோடு அந்த அலை நின்றுவிடப் போவதில்லை. அத்துடன் அவர்கள் ஆதரிக்கும் சர்வாதிகாரம் இதே நேர்மாறானது. புதுமைப்பித்தனிடம் காணப்படும் கேலி உணர்ச்சியும், இயலாமை உணர்வும் இவர்களது சர்வாதிகாரத்திற்கும் பின்னால் பெருமளவு மறைந்து கிடக்கின்றன. புதுயுக ஞான அலை பிறப்பிக்கப்போகும் வீரத்திற்கும் செயல் வேகத்திற்கும் முன்னால் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் மார்க்சியத்தின் இயலாமையும் தாழ்வு உணர்ச்சிகளும் தெரியவரும்.

ஐஐ
மு. தளையசிங்கம் பெருமளவுக்கு தன்னில் இருபதாம் நூற்றாண்டிறற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் - வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர். உடல்கள் இருபதாம் நூற்றாண்டில் கிடந்த உழலஈ பிக்ரஞை முந்திய நூற்றாண்டு ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ கூறுபட்டுக்கிடக்க, பிரச்சினைகளுக்கு எதிர் வினையாக வாய்க்கு வரும் சொற்களை உதிர்க்கும் நம் ‘சிந்தனையாளர்’களின் மத்தியில் விதி விலக்காக வந்து சேர்ந்தவர் தளையசிங்கம், இருபதாம் நூற்றாண்டின் முக்கால பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது இவருடைய சிந்தனைகள் கருக்கொண்டுள்ளன என்று சொல்லலாம். ருஷ்யப் புரட்சிக்கு ஏகதேசிமாக ஐம்பது ஆண்டுகள் பிந்திய காலப்பகுதி இது. தான் பிறந்து வளர்ந்த மண்ணையும், கலாசாரத்தையும் சார்ந்தும், கடல் தாண்டிய தேசங்களைச் சார்ந்தும், இவ்வுலகின் முழுமை சார்ந்ததும், பிரபஞ்சம் சார்ந்தும் அவர் சிந்திக்க முற்பட்டார். இப்பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, சுய வாழ்வின் அனுபவ ஆய்வுகளுக்கு மேலாக உலகத் தளத்தைச் சார்ந்த – கிழக்கிலும் மேற்கிலுமான – படைப்புகளையும் அறிவுகளையும் திரட்டி தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருக்கிறார். தத்துவம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் விசேட ஈடுபாடும், விஞ்ஞானத்தில் ஆர்வமும் இவர் கொண்டிருப்பதை இவரது எழுத்து நமக்குக் காட்டுகிறது. பிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச்செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் செல்வதை உணர முடிகிறது. பிரச்சினைகள் அவற்றைப் புரிந்து கொள்வதற்கான தயாரிப்பு, ‘விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள்’, உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களை தெளிவாகக் கூறல். இவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான சாயல்களை இவரைப்போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு உள்ளனவா? இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் பாரதி, மற்றொருவர் புதுமைப்பித்தன். பாரதி தாழ்ந்து போனமைக்கு துக்கித்து மேலான ஒன்றை எழுப்ப முயன்றார். புதுமைப்பித்தன் தாழ்ந்து போனதை வெட்ட வெளிச்சமாக்கினார். இந்த வரிசையில் மூன்றாவதாக வருபவர் தளையசிங்கம். பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால் பாரதியின் சிந்தனையை, இவர் தம் காலத்துக்கு கொண்டு வந்து, இடைக்கால சரித்திரத்திற்கும் எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப்படுத்த முயன்றார் என்றே சொல்லலாம்.”

(“இலக்கு” கருத்தரங்கில் வாசித்தது).


உள் ஒளி
பக்கம்
மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள் … 7

சசி … 15

தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- சுதந்தர ராமசாமி … 17

1. பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் … 35

2. மெய்யுள் உள்ளும் மெய் … 56

3. புதுயுகமும் அதை நோக்கிய மாற்றங்களும் … 69

4. வர்க்கவியலும் குணவியலும் … 76

5. பரிணாமம் - அதன் தூக்க, கனவு,
விழிப்பு தூரிய நிலைகள் … 88

6. கலப்பு வலயம் … 95

7. மெய் முதல் வாதம் … 130

8. ஒளிபடைத்த கண்ணினாய் … 194

9. “நான்” நாகரிகத்தின் அழிவும்
“நாம்” நாகரிகத்தின் எழுச்சியும் … 196

10. வந்துவிட்டது சத்திய யுகம் விழிந்தெழுங்கள் … 199

11. அண்டை வீடுகள் … 201


மெய்யுள்

“எப்போது மனிதன் உண்மையின் - சத்தியத்தின் - அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.

வாழ்க்கை எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனை உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும். அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக?”
- மகாத்மா காந்தி

“மெய்யுள்” ஒரு புதிய இலக்கிய உருவமாகும். அது பூரண உருவமாகவும் இருப்பதால் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் ஓர் உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடை என்ற வித்தியாசங்களையும் அது மதிப்பதில்லை. இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. “மெய்யுள்” கற்பனைக் கோலங்கள் சகலவற்றையும் குலைத்துக்கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக்கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை, இலக்கிய உருவமாகும். அதன் உள்ளும் புறமும், உருவமும் உள்ளடக்கமும், மெய்யாகவே இருக்கும். அதனால் அது இதுகால வரையுள்ள கலை இலக்கியங்களை அழிக்கும் கலை, இலக்கியமாகவும் இருக்கும். அதேபோல் அது தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக மெய்வாழ்க்கை அனுபவங்களாகவும் அமையும், பூரண சர்வோதயத்துக்குரிய பிரபஞ்ச யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும்.
- மு. த.

பூரண இலக்கியம் அதன் தேவைகளும்

இன்றைய இலக்கியவளர்ச்சிக்கு என்னென்ன தேவைப்படுகின்றன?

அப்படி ஒரு கேள்வியை அடிப்படையாக வைத்து ஒரு கணக்கெடுப்பை நடத்தும்போது முதலில் தேவைப்படுவது, இலக்கியம் எதற்காகத் தேவைப்படுகிறது என்ற கேள்விக்குரிய பதில்தான்.

இலக்கியம் எதற்காகத் தேவைப்படுகிறது?

இதற்கு நாம் என்னென்ன காரணங்களைக் காட்டுகிறோமோ, அந்தந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இலக்கிய வளர்ச்சிக்குரியதாக நாம் காட்டக்கூடிய தேவைகளும் இருக்கும். அந்தக் காரணங்கள் குறுகிய எல்லைகளையுடையவையாய் இருந்தால் இலக்கியத் தேவைகளும் - அதாவது இலக்கிய வளர்ச்சிக்குரிய தேவைகளும் - குறுகியே இருக்கும். காரணங்கள் விரிந்து வேறு துறைகளையும் அணைக்கக்கூடியவையாக இருக்குமானால், தேவைகளும் விரிந்து வேறு துறைகளின் வளர்ச்சிக்குரிய தேவைகளாகவும் விசாரித்து நிற்கும்.

இலக்கியம் எதற்காகத் தேவைப்படுகிறது?

பொழுதுபோக்குக்காக என்றிருக்க முடியாது. பொழுது போக்குக்காக இருப்பவை இலக்கியமாகவும் இருக்க முடியாது. அது மட்டுமல்ல, பொழுதுபோக்கு என்பதே – அதாவர் பயனற்ற விதத்தில் நேரத்தைப் பாழடிப்பது என்பதே - இனிமேல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்திலும் ஒரு புதுயுகப் பிரவாகத்தின் தெருக்கடிக் கட்டத்திலும் இன்று மனித சரித்திரமும் பரிணாமமும் நின்று கொண்டிருக்கின்றன.

அப்படியானால், வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் மன அமைதிக்கும் ஓய்வுக்கும் ஏதாவது வேண்டாமா என்ற எதிர்க்கேள்வி எழுப்பலாம். சிலர், “பொழுதுபோக்கு வாதம்” ஆனால், அது பிழையானது. காரணம் அந்த எதிர்க்கேள்வியால் இலக்கியம், கலை ஆகியவற்றைப் பற்றிய அறியாமைதான் நிற்கிறது. தரமான இலக்கியங்களும் கலையுந்தான், உண்மையான நிரந்தரமான அமைதிக்கும் மன ஓய்வுக்கும் பரவசத்துக்கும் வழிவகுக்கும். அவை தான் அதேசமயம் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய சிந்தனைத் தெளிவையும் கொடுக்கும். அந்தச் சந்திக்கக்கூடிய ஆற்றலையும், அதனால் நிரந்தர அமைதிக்குரிய வழியையும் காட்டுபவையாக இருக்கும். தரமற்ற கதைகளும் படைப்புக்களும் மனிதனைக் கனவில் ஆழ்த்தி மயக்குமேயொழிய தெளிவோடு சேர்ந்த பரவசத்தையும் அமைதியையும் கொடுத்து, வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவமாட்டா, அதனால் சாதாரண மனிதனின் மன அமைதிக்கும் ஓய்வுக:கும் ஏதாவது தேவைப்படுகின்றன வென்றால் அவை தரமான இலக்கியமும் கலையுந்தான். பொழுதுபோக்கும் போலிகளும் கனவுகளுமல்ல.

ஆனால், கனவும் மயக்கமும் ஓரளவுக்கு மனித வாழ்க்கைக்குத் தேவையல்லவா? சாதாரண மனிதனின் உடல் நிலையையும் மனநிலையையும் சமநிலையில் வைத்திருக்க அவையும் ஓரளவுக்குத் தேவையல்லவா? அதனால் அத்தகைய வசதிகளை நீக்குவது ஆபத்தாகாதா?

அப்படியும் கேட்கலாம். அதில் மனோவியல் - வைத்திய உண்மையும் இருக்கிறது. அந்தப் பார்வையில் மனிதன் ஒருவித நோயாளியாக இருக்கிறான் என்ற உண்மையும் வெளிப்படுத்தப்படுகிறது. அது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். இங்கு நோய் என்பது மனிதனின் வளர்ச்சியின்மையைக் காட்டுகிறது. அதாவது மனிதனின் வளர்ச்சி அதன் பூரணத்துவத்தை இன்னும் தொடவில்லை என்பதைக் குறிக்கிறது. அத்தகைய பூரணமின்மையே அவனது நோயாகும்.

பூரணமின்மை என்ற அந்த நோய் எப்படிப்பட்டது என்பதைப் பின்பு பார்க்கலாம். ஆனால், இப்போதைய சரித்திரக்கட்டத்தில் மனிதன் பரவலாகத் தனது நோயை உணர வந்திருக்கிறான் என்பதும், அதை மாற்றித் தனது நிலையைப் பூரணத்துவப்படுத்தப் போராடுகிறான் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

அத்தகைய போராட்டக்கட்டத்தில் நிற்கும் இன்றைய மனிதனுக்கு அவனது நோயைக் கடத்தி நீடிக்கவைக்கும் கனவுகளும் மயக்கமும் தேவையா?

இந்தக் கேள்வியை எழுப்பும்போதுதான் “பொழுது போக்கு இலக்கியம்” என்ற பெயரில் கனவுகளுக்கும் போலி மயக்கங்களுக்குமாக வாதாடுபவர்கள் இன்றைய மனிதனின் பரிணாமக் கட்டத்தையும் சரித்திர நிலையையும் உணராதவர்களாக இருக்கிறார்கள் என்பதும், தங்களைக் காலங்கடந்த ஒரு சமூக பொருளாதார அமைப்பில் நிரந்தரமாகப் பொருத்திப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதும், அந்த அமைப்பில் வசதி படைத்த எந்த வர்க்கம் இந்த மயக்கத்தையும் கனவுகளையும் தனது தன்மைக்காகப் பயன்படுத்துகிறதோ அந்த வர்க்கத்தோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் என்பதும் தெரியவரும். அத்துடன், அந்த அமைப்பும் அதற்குரிய முக்கிய வர்க்கமுந்தான் இலக்கியத்தையும் கலையையும் மனித சரித்திரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெறுங்கனவாகவும் மயக்கப்போலியாகவும் மாற்றி வளர்த்திருக்கின்றன என்பது தெரியவரும்.

காரணம், மனிதனின் நோயைத் தீர்க்கும் - அதாவது, மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் - முக்கிய மருந்துகளில் ஒன்றாக இந்த இலக்கியமும் கலையுந்தான் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. கலையும் இலக்கியதுந்தான் சமயத் தோடு சேர்த்துக் காலங்காலமாய் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த முதலாளித்துவ அமைப்பில்தான் அவை நோயைக் கடத்தும் மயக்கப் பொருளாகவும் கனவாகவும் மாற்றப்பட்டு, வெறும் வியாபாரத்துக்குரியவையாக வளர்க்கப்பட்டு வருகின்றன. “பொழுதுபோக்கு” என்பது அந்த வியாபாரத்துக்குரிய நாகரிகமான பெயர்தான்.

இருப்பினும், பொழுதுபோக்குக்காக – அதாவது வியாபாரத்துக்காக – கலையும் சினிமாவும் இலக்கியமும் இருக்க வேண்டுமென்று கூறுபவர்கள்கூடத் தங்களை அறியாமலேயே இலக்கியத்தினதும் கலையினதும் முக்கியத்துவத்தையும் பயனையும் ஓரளவுக்கு உணர்ந்துதான் சொல்கிறார்கள். ஆனால், தங்களின் அறியாமையினாலும் வியாபார நோக்கினாலும் அதன் பெயரைத்தான் மாற்றிக் கூறுகின்றனர். அதனால் இலக்கியத்தின் அர்த்தத்தையும் மாற்றிவிடுகின்றனர்.

நோய் போக்கும் இலக்கியம் என்பதைப் பொழுது போக்கு இலக்கியம் என்கின்றனர். இலக்கியமும் கலையும் மனிதனின் நோய்போக்கு உதவுபவைதான். இலக்கியம் எனும்போதே “நோய்போக்கு” என்பது அதில் தொக்கி நிற்கிறது எனலாம். அந்த உண்மை மறக்கப்பட்டு, அதனால் தரங்கெட்டு, உருவாக்கப்படுபவைதான் “பொழுதுபோக்கு” என்ற அடைமொழியைப் பெறுகின்றன. மனிதனின் நோயைப் போக்காமல், அவனை மயக்கியும் கனவு காணவைத்தும் நோயைக் கடத்தி வளர்த்துக்கொண்டு மனிதனின் பொழுதையும் வாழ்க்கையையும் போக்குபவை, பாழடிப்பவை.

இவ்வாறு நோயைப் போக்குவதற்குப் பதிலாகப்பொழுதைப் போக்குவதற்குத்தான் இலக்கியம் இருக்கிறது என்று கருதப்படுவதே ஒன்றை மற்றதுக்கா மாறாட்டஞ் செய்யும் மனநோயாளியின் குணந்தான். இடம்மாறிப் பொருத்தப் பட்ட பற்றும் பிறழ்வும் (னiளி யஉநன யவவயஉhஅநவெ). முதலாளித்துவ அமைப்பு வளர்த்துவரும் நோய்க்குணங்களில் அது முக்கியமானது. அதனால் “பொழுதுபோக்கு இலக்கியம்” என்பது இலக்கியம் எதற்காக, எப்படி இருக்கவேண்டுமோ அதற்கு எதிராக இருப்பதுதான் என்றாகியுள்ளது. இலக்கியம் எந்த நோயை நீக்கமுயல்கிறதோ அந்த நோயை நீடிக்க வைப்பதுதான் பொழுதுபோக்கு இலக்கியமாக மாறியுள்ளது. அதாவது, பொழுதுபோக்கு இலக்கியம் என்பதை இலக்கியம் நீக்கவேண்டிய நோய்களில் ஒன்றாகிவிட்டது. அந்த நோயை நோயாக உணராத, அதையே நோய்தீர்க்கும் மருந்தாகக் காண்பது நோயின் முற்றிய நிலையைத் தான் குறிக்கிறது. அதை முறியடிக்கும் கட்டந்தான் இன்றைய மனிதனின் சரித்திரக்கட்டமாகும்.

பொழுதுபோக்கு இலக்கியம் என்பது இலக்கியத்தின் இலட்சியத்துக்கு எதிர்மாறான திரிபாக இருக்கும்போது, “கலை கலைக்காக” என்பதும், “கலை கட்சிக்கா” என்பதும் இலக்கியத்தின் இலட்சியத்தை உணர்ந்தும் அதன் வழியில் பூரணமாகச் செல்லாத இடைத் தரிப்புக்கள்தான். அழகுணர்ச்சி மட்டுந்தான் அல்லது அர்த்தங் காணமுடியாதவை மட்டுந்தான் இலக்கியத்தை உருவாக்குபவை என்று நினைத்து, விளக்கில் விழுந்த பூச்சிகள் போல் இடையில் அழிந்தார்கள் கலை கலைக்காக என்று வாதாடியவர்களில் பெரும்பாலோர். கலை கட்சிக்காக என்பவர்கள் கலையை வெறும் சித்தாந்த அறிவுவழியில் மட்டும், அந்த அறிவும் இறுதியில் சிதைந்து திருகிச்செல்லும் வழியில் மட்டும், காட்டி இலக்கியத்தை வெறும் யந்திரமுயற்சியாக நிறுத்தி விடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் காரணம் இல்லாமலில்லை. இலக்கியம் நோய் தீர்ப்பதென்றால், அந்த நோயின் முழுமையையும் உணராத வரைக்கும் அதைத் தீர்ப்பதற்குரிய பூரண வழியையும் உணரமுடியாதுதான். அந்தந்தக்காலக்கட்டத்தில், அந்தந்தச் சமூகக்கட்டத்தில் அவனவன் அந்த நோயை எவ்வாறு கண்டானோ அவ்வாறே இலக்கியமும் படைத்திருக்கிறான்.

இன்று முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்கு நோயையும் முழுமையாக உணரக்கூடிய கட்டம் வந்திருக்கிறது. அதனால் அதற்குரிய வழியையும் பூரணமாகக் காணக்கூடிய கட்டமும் வந்துவிட்டது. பூரணயோகம் என்றாரே அரவிந்தர். அதைப்போல் பூரண இலக்கியம் உருவாகும் கட்டம் இன்று வந்துள்ளது. அதற்குரிய கோட்பாட்டையே பிரபஞ்ச யதார்த்தம் என்று நான் “போர்ப்பறை”யில் குறிப்பிட்டுள்ளேன்.


2
இலக்கியத் தேவைகள் எவை என்ற கேள்வி, எதற்காக இலக்கியம் தேவை என்ற கேள்வியாக மாறியது. அதற்குரிய பதில் நோயைத் தீர்ப்பதற்கென்றால், அந்த நோய் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதை முழுமையாகக் கண்டுபிடித்தால்தான், முழுமையான வாழ்க்கையும் முழுமையான இலக்கியமும் உருவாக முடியும்.

நோய் என்ன?

மனிதர்கள் எல்லாருமே நோயாளிகள்தான் என்கிறார் பிராய்ட். ஆனால், அவர் கண்ட நோய்;க்குரிய காரணங்கள் அடிமன இயல்புகளோடேயே நின்று விடுகின்றன.

வர்க்க வேறுபாடுகளுக்குட்பட்ட சமூகத்தில் வாழும் மனிதனை ஒருவித நோயாளியாகவே மார்க்ஸ{ம் கருதுகிறார்.

சமயஞானியோ, ஞானமடையாது சம்சார வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள எல்லாரையுமே முக்குண நோய்க்குள் உட்பட்டவர்களாகவே கருதுகிறான்.

இவைதான் அவரவர் காட்டும் மனிதநோயும் அதன் காரணங்களுமென்றால், அவற்றைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டும் வழிகளும் அதே வகையில் அதே கோணங்களுக்குரியவையாகவே இருக்கின்றன.

அடிமன் இயல்புகளைக் கண்டுபிடித்துச் சீர்படுத்து வதையே நோய்க்குரிய மருந்தாகக் காண்கிறான் பிராய்ட், முரண்படட வர்க்க இயக்கங்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் போராட்டத்தையும், அது தரக்கூடிய பொதுவுடைமை மலர்ச்சியையுமே மார்க்ஸ் மனிதனின் நோய் தீர்க்கும் மருந்தாகக் காண்கிறான். இவ்விரு வழிகளையும் விஞ்ஞானம் காட்டும் வழிகளுக்குரிய முக்கிய உதாரணங்களாகக் கூறலாம். அப்படிக் கூறுவது விசயத்தை மிகவும் இலகுபடுத்திக் கூறுவதாகும். இவை இரண்டுக்குமிடைப்பட்ட, இவை இரண்டுக்கும் முரண்பட்ட எத்தனையோ விஞ்ஞானப் பார்வைகள் இருப்பினும், எல்லாம் இவ்விரு எல்லைகளையும் ஏதோ ஓர் அளவுக்காவது ஏற்றுக்கொள்ளவே செய்கின்றன. அதனால் இவற்றையே விஞ்ஞானத்துக்குரிய முக்கிய உதாரணங்களாகக் கூறலாம். (இவற்றிலிருந்து வேறுபடும் நவீன விஞ்ஞானப் பார்வையைச் சமய ஞானத்துக்குரியதாகச் சேர்த்துக்கொள்ளலாம்.)

ஆனால் இன்றைய சமயஞானி இவற்றோடு மட்டும் திருப்திப்பட முடியாது. இவ்வுலகத்தை மறுத்து, மறுவுலகத்தையும் முத்தியையுமே அழுத்திய பழையமுறைச் சமய போக்கில் விஞ்ஞானம் எவ்வாறு அதிருப்திப்பட்தை, அவ்வாறேதான் இன்றைய சமயஞானமும் மனிதனின் அக ஆழத்தையும் அதன் பிரபஞ்ச விரிவுகளையும் மறுக்கும் விஞ்ஞானத்தில் அதிருப்திப்படுகிறது.

அந்த அதிருப்தியையும் அதைத் தீர்க்கும் புதுத்திசையையும் காட்டுபவராக அரவிந்தர் நிற்கிறார்.

ஆனால், அரவிந்தரின் முயற்சிகள் தற்காலச் சமூக, பொருளாதார அரசியல் இயக்கங்களுக்குப் பூரணமாக வழிகாட்டும் வகையில், மார்க்சீயத்தையும் விஞ்ஞானத்தின் மனிதாபிமான மக்கள் நலவாதத்தையும் வென்று செல்லும் வகையில் இன்னும் விரித்து வளர்க்கப்பட்டதுமில்லை. நடைமுறைப் படுத்தப்பட்டதுமில்லை.

எனது “போர்ப்பறை”யில் அந்த முயற்சியின் ஆரம்பம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடமைச் சோஸலிஸத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வருவதும் முடியாது. பொதுவுடைமைப் போராட்டத்தோடு அகத்தே காணப்படும் குணவேறுபாடுகளையும், அதேசமயம் முழுச்சமூகமும் தாண்டினால்தான் உண்மையான சோஸலிஸமும் உண்மையான ஞான எழுச்சியும் - சர்வோதயமும் - அடுத்தகட்ட மனிதப் பரிணாமமும் வரமுடியும் என்பதே எனது கருத்தின் முக்கிய அம்சமாகும். அவற்றுக்கிணங்கவே சமூகத்தின் வாழ்க்கைத் துறைகள் ஒவ்வொன்றும் ஆற்றுப்படுத்தப்படவேண்டும். மனித பரிணாம வளர்ச்சியைச் சுழல்முறையில் அளவிடலாம். பழைய வேதங்கள் கூறிய யுகச்சுழல், ஒரு சுழல் நான்கு கட்டங்களைக் கொண்டது. கிருத, துவாபர, திரேத, கலி யுகங்கள். கலியின் முடிவோடு ஒரு சுழல் முடிந்து அடுத்த சுழல் வளர்ச்சி ஆரம்பமாகிறது எனலாம். ஆனால், அடுத்த சுழல் வளர்ச்சி முந்தியதைப்போல் ஒரே தளத்தில் இருக்காமல் வேறு ஓர் உயர்ந்த தளத்தில் அதற்குரிய தடத்தில் வளரலாம். அந்தத் தளநிலையின் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் படிப்படியாய் ஒவ்வொரு யுகத்திலும் அதிகமாக, ஈற்றில் அவற்றின் காரணமாக ஏற்படும் போராட்டமும் அழிவும் ஒரு முழுமையை ஏற்படுத்துவதுடன், பழைய சுழல் வளர்ச்சிக்கு ஒரு முடிவையும் கொண்டுவந்து புதுச்சுழலை ஆரம்பித்து வைக்கலாம். பழைய வேதங்களின் யுகப்பாகுபாட்டை இவ்வாறுதான் இன்று வியாக்கியானப்படுத்த வேண்டும். அதனால் நமது பார்வை விரிவடையவே செய்கிறது. உதாரணமாக, பரிணாமமானது சடநிலையிலிருந்து உயிர்நிலையை இவ்வுலகத்தில் தொடும்வரையுள்ள காலத்தை ஒரு சுழலாகவும், உயிர்நிலையிலிருந்து மனநிலை உருவாகும் வரையுள்ள காலத்தை அடுத்த வளர்ச்சிச் சுழலாகவும் வசதிக்காகக் கொள்ளலாம். பரிணாமத்தில் அன்னமயகோசமும் பிராணமயகோசமும் வெளிப்படுத்தப்பட்ட காலங்கள். விஞ்ஞான ரீதியாகச் சொல்லப்போனால், உலக பரிணாமத்தின் அன்னமயகோசத்தை “புநழளிhநசந” என்றும், (சடநிலையும் அதன் வலயமும்) பிராணமயகோசத்தை (உயிர்நிலையும் அதன் வலயமும்) “டீழைளாநசந”ஹ என்றும் சொல்லலாம். இன்று அவற்றுக்குரிய குணங்களாக முக்குணங்களில் தாமதகுணத்தையும் (அன்னமயகோசம்). ரஜதகுணத்தையும் (பிராணமயகோசம்) குறிப்பிடலாம். மனிதனிலும் இயற்கைச் செயல்பாட்டில் இவ்வலயங்கள் மட்டுமல்ல இவற்றுக்குரிய குணங்களும் இருக்கின்றன. இன்றைய வளர்ச்சிச்சுழல் மனதிலிருந்து பேர்மனதுக்கு தாவும் நிலையில், அந்த சுழலின் முடிவான கலியுகத்தில், நிற்கிறது. மனோமயகோர்த்துகுரிய (ழேழளாநசந) சுழல், அதற்குரிய குணமாகச் சாத்வீக குணத்தைக் குறிப்பிடலாம். இனி வருபவை சமய ஞானம் குறிப்பிடும் விஞ்ஞான ஆனந்தமய கோசங்களுக்குரிய சுழல்களாக இருக்கும். விஞ்ஞானம் இனித்தான் அந்தத் திசையில் கவனஞ் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், நவீன விஞ்ஞானம் ஏற்கனவே அதை உணரத் தொடங்கிவிட்டது என்பதை மறுக்க முடியாது. மனோவலயத்துக்கு மிக அழகாக “ழேழளாநசந” என்று பெயர் சூட்டிய ரேஹா டி சாடன் (நடihயசன னந ஊhயசனin) சமய ஞானம் ஏற்கனவே கண்டு அனுபவித்து விட்ட விஞ்ஞான மயகோசத்துக்கும் ஆனந்தமயகோசத்துக்கும், எதிர் காலத்தில் எல்லாருக்குமுரிய அனுபவமாக இருக்கப்போகும் வளர்ச்சி முயற்சிக்கும், (“ஊhசளைவழபநநௌளை”) என்று பெயர் சூட்டியுள்ளார். கிறிஸ்துவின் பேரறிவான நிலை, அரவிந்தர் கூறிய பேர்மனிதநிலை. அதை நோக்கித் தான் இன்றைய பரிணாமமும் சரித்திர வளர்ச்சியும் முழுமையடைய முயன்று கொண்டிருக்கின்றன. அந்த முழுமையில் தான் இன்றைய வளர்ச்சிச் சுழல் முடிவடைந்து அடுத்த சுழல் ஆரம்பமாக வேண்டியிருக்கிறது.

இத்தகைய சுழல் எல்லைக்குள் நடைபெறும் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிப் போராட்டத்தையும் மார்க்சீயப் பார்வையில் வர்க்கப் போராட்டமாகக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் அது பழைய இதிகாசங்கள் குறிப்பிட்ட தேவ – அசுர, ஞான – அஞ்ஞானப் போராட்டமேதான். அதேபோல் அந்தப் போராட்டத்தையும் அதன் மூலம் பெறப்படும் வளர்ச்சியையும் எகலிய மும்முனை இயக்கமாகவும் கொள்ளலாம். எனவே, மார்க்ஸோடும் எகலோடும் நின்றுவிடாமல், அவர்களது பார்வையை அரவிந்தர் புதுப்பித்த பழைய சமயஞானப் பார்வையோடும், இன்றைய விஞ்ஞர்னிகளான ஜுலியன் ஹக்ஸ்லி, ரேஹா ஆகியோரது கருத்துக்களோடும் இணைத்துப் புது அடிவானங்களைத் தொடும்வகையில் விரித்து வளர்ப்பதே இன்றைய சரித்திர, பரிணாம வளர்ச்சிச்சுழலை அதன் முடிவுக்கு அடுத்த சுழல் தளத்துக்கும் கொண்டுவரக்கூடிய முழுமையான பூரண தத்துவமாகவும் பூரண வாழ்க்கை முறையாகவும் இருக்கும். அதையே “போர்ப்பறை” மூலம் நான் தெரிவிக்க முயன்றேன். அதையே சர்வோதயப் பொதுவுடமை என்றும் அழைக்கின்றேன்.

இன்றைய மனித பரிணாமநிலையில், மனிதனின் நோய்க்கு – அவனது பூரணமின்மைக்கு – விஞ்ஞான ரீதியான விளக்கங்களும் அதைத் தீர்ப்பதற்குரிய விஞ்ஞான ரீதியான வழிகளும் இவ்விதச் சர்வோதயப் பொதுவுடமை வழியிலேயே பெறப்படவேண்டியிருக்கின்றன. இவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமானால், இன்றைய இலக்கியம் எவ்வாறு இருக்கவேண்டுமென்பதையும், அதன் வளர்ச்சிக்கு எவையெவை தேவைப்படுகின்றன. என்பவற்றையும் கணக்கெடுப்பது கஷ்டமாக இருக்காது.


3
முன்பு குறிப்பிட்டவற்றைக் கொண்டு பார்க்கும் போது இலக்கியத்தைப்பற்றியும் அதன் இலட்சியத்தைப் பற்றியும் ஒவ்வொருவனுக்கும் இருக்கவேண்டிய சீரான பார்வைதான் இன்றைய இலக்கிய வளர்ச்சிக்குரிய முக்கிய தேவையாக இருக்கிறது. இலக்கியத்தின் நோய் தீர்க்கும் இலட்சியத்தை பற்றிய உணர்வு.

ஆனால், அதுமட்டும் போதாது, இலக்கியம் மட்டுந்தான் (கலைமட்டுந்தான்) சமயமுயற்சியாக, பரவசத்தையும், மன அமைதியையும் தெளிவையும் நிறைவையும் தந்து நோயைப் போக்கும் மருந்தாக இனி இருக்கப் போவதில்லை. இனிமேல் எல்லாத் தொழில்களுமே கலையாக, யோகமாக, தொழுகையாக இருக்கப்போகின்றன@ இருக்கச்செய்ய வேண்டும்.

பிராய்ட் கூறிய மனச்சிக்கல்களும், மார்க்ஸ் கூறிய மனப்பிறழ்வும் நீங்கிய முழுமையை மனிதன் செய்யும் சகல தொழில்களாலும் பெறக்கூடிய காலக்கட்டத்தையும், சமூக பொருளாதாரக் கட்டத்தையும் நோக்கி இன்றையச் சரித்திரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மார்க்ஸ் குறிப்பிடும் பொதுவுடமையமைப்பில் தன்னிலிருந்து தன்னைப் பிரித்துக் காணும் பிறழ்வும் (யடநையெவழைn), அதற்குக் காரணமான வர்க்க வேறுபாடுகளையுடைய சமூக, பொருளாதாரச் சூழலும் இருக்கமுடியாத படியால் அந்த பொதுவுடமையமைப்பில் கலை இலக்கியம் மட்டுமல்ல எல்லாத் தொழில்களுமே பரவசத்தையும், மனஅமைதியையும் நிறைவையும் தரும் தொழில்களாக மாறிவிடும் எல்லாத் தொழில்களுமே ஆத்மீகத் தன்மை பெற்றவையாய் மாறிவிடும். அப்படித்தான் மார்க்ஸ் கருதுகிறார்.

சமயஞானியும் அதைத்தான் வேறு அழமான கோணத்திலிருந்து சொல்கிறான். அதனால் அவன் தான் மார்க்ஸ் குறிப்பிடும் அந்த நோய் தீர்ந்த மனிதனின் முழுமை நிலையின் பூரணத்துவத்தைக் காட்டுகிறான். அத்துடன் அவனைப் பொறுத்தவரையில் அந்தப் பூரண நிலையைத் தனிப்பட்ட ஒருவன் - சமூகமல்ல – எந்தக் காலகட்டத்திலும், எந்தச் சமூக, பொருளாதாரக் கட்டத்திலும் அடையக்கூடியவனாய் இருக்கிறான். எல்லாத் தொழில்களையும் ஒருவன் விரும்பினால் எந்தக் காலக்கட்டத்திலும் சரி, எந்தச் சமூகக்கட்டத்திலும் சரி பரவசத்தைத் தரும் கலையாக, நோய்தீர்க்கும் வழியாக, கர்மயோகமாக மாற்றலாம் என்று கூறுகிறான் சமயஞானி.

அதே சமயஞானி, இன்று அந்தக் கர்மயோக வாழ்க்கை தனிப்பட்ட சிலருக்குரியதாக மட்டும் இருக்காமல் முழுச் சமூகத்துக்கும் அதன் சகல துறைகளின் செயல்களுக்கும் உரியதாக மாறும் காலக்கட்டம் வந்துவிட்டது என்று கூறுகின்றான். அதையே “பூரண சர்வோதயம்”, என நான் கூறுகிறேன்.

எனவே, வாழ்க்கையின் சகல துறைகளுக்குரிய தொழில்களும் கலையாகவும் நோய்தீர்க்கும் மருந்தாகவும் மாற்றப்படலாம் என்று எல்லா மார்க்கங்களும் இன்று கருதுகின்றன அந்த நிலையே எல்லா மக்களுக்குமுரிய வாழ்க்கை முறையாக அடுத்தவரக் காத்திருக்கிறது என்றும் அவை கூறுகின்றன. அதைக் கவனிக்கும்போது இலக்கியத்தையும் கலையையும் நோய்தீர்க்கும் சமயமுயற்சியாக உயர்த்துகிறோமே என்று யாரும் ஆச்சரியப்படவும் தேவையில்லை. கேலிபண்ணவும் தேவையில்லை. ஏற்கனவே ஆங்காங்கு அடுத்த கட்டச் சமூக, பொருளாதார அமைப்புக்காகப் புரட்சிப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் கொரில்லாத் “துறவி” சகல துறைகளையும், சகல தொழில்களையும், சகல வழிகளையும் தனது இலட்சியத்துக்குரிய, தன்னை முழுமைப்படுத்துவதற்குரிய மார்க்கங்களாகவும் கலையாகவும் யோகமாகவும் கண்டுகொண்டிருக்கிறான். அது போலவே சர்வோதய எழுச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ள தீவிரவாத ஜீவதானி ஒவ்வொருவனும் (சர்வசமய ஞானி) அவ்வாறே ஒவ்வொரு கணத்துக்குரிய அலுவலையும் நோய்தீர்க்கும் மருந்தாக, யோகமாக, கலையாக மாற்றிக்கொண்டிருக்கிறான்.

எனவே, இலக்கியத்தைமட்டும் நோய்தீர்க்கும் மருந்தாக ஏற்றுக்கொண்டால் போதாது. தன்னளவில்மட்டும் அது அவ்வாறு நின்றால் போதாது. இனிமேல் எல்லாத் தொழில்களையுமே அது இலக்கியமாகவும் கலையாகவும் மாற்றப் போராட வேண்டும். சகல துறைகளுக்குமுரிய சகல தொழில்களும் சகல மக்களுக்கும் பூரண யோகமாக மாற வேண்டுமானால், சகல துறைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அத்தகைய சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, சமய மாற்றத்துக்காக இன்றைய கலையும் இலக்கியமும் தங்களை அர்ப்பணித்தாக வேண்டும்.

அதையும் இன்றைய ஒவ்வோர் எழுத்தாளனும் உணரவேண்டும். அப்போதுதான் அவனால் பூரண இலக்கியத்தைப் படைக்க முடியும். அது இரண்டாவது தேவை.

இலக்கியத்தைப்பற்றிய இத்தகைய ஒரு பார்வை முழு வாழ்க்கையையும் பற்றி ஒரு பூரண தத்துவமாகவும், பூரண சித்தாந்தமாகவும் வளர்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. அல்லது வாழ்க்கையைப் பற்றிய ஒரு பூரண சித்தாந்தமேதான் இலக்கியம், கலை ஆகியவற்றைப்பற்றி இந்தளவுக்கு ஒருவனை உணர்ந்துகொள்ளத் தூண்டும். எப்படிச் சொன்னாலும் சரிதான். எனவே, அடுத்த தேவை - மூன்றாவது தேவை, அதுவே முதலாவது தேவையாகவும் இருக்கலாம் - அத்தகைய பூரண சித்தாந்தத்தின் தேவைதான். இன்றைய எழுத்தாளன், இன்றைய காலக்கட்டத்துக்கும் சமூக, பொருளாதார, அரசியல் கட்டத்துக்குமுரிய ஒரு பூரண தத்துவத்தை, சதா தன்னைத் திருத்தி வளர்க்கும் நிரந்தரத் தத்துவத்தை, கண்டவனாகவும் இருக்கவேண்டும். ‘போர்ப்பறை’ யில் அதையே நான் குறிப்பிட்டுள்ளேன்.

அத்தகைய பூரண தத்துவத்துக்கேற்ப எழுதப்படும் இலக்கியம் அதேசமயம் விஞ்ஞானமாகவும் சமயமாகவும், அரசியல் பொருளாதாரக் கோட்பாடாகவும் சரித்திரமாகவும், உண்மையான கலையாகவும் அமையும். ஆனால், அதற்காகத் தனது தனித்தன்மையை இழக்காது. முழுமைக்குத் தன்னை அர்ப்பணிப்பதால் முழுமையின் பூரண விரிவுகளையெல்லாம் தன்னிலும் ஏற்றித் தனது தனித்தன்மையைப் பூரணமாக – முழமைக்கு உதவும் வகையில் - வளர்த்துக் கொள்ளும். உதாரணமாக, ஆர்த்தர் கிளார்க்கின் விஞ்ஞானக் கதைகளே ஓரளவுக்கு வருங்காலத்தின் விஞ்ஞானக் கோட்பாடுகளாகவும் இருக்கவில்லையா? பொதுவுடமைக்குப் பிந்திய ரஷ்யாவின் கலையும் இலக்கியமும் அதன் அரசியல் சரித்திரமாகவும்@ பொருளாதார சமூக மாற்றங்களினதும், அவற்றுக்குரிய கோட்பாடுகளின் நடைமுறை இயக்கங்களினதும் பதிவுகளாகவும் இருக்கின்றன. அவற்றைப் படிக்காமல் ரஷ்ய நாட்டின் இன்றைய சரித்திரத்தையே படிக்க முடியாது@ சமூக, பொருளாதாரத் திட்டங்களின் போக்கையே புரியமுடியாது. இவை எதிர்காலப் பூரண இலக்கியம் மற்ற துறைகளோடு எவ்வாறு பின்னிப் பிணைந்து முழுமையடையும் என்பதையும், மற்றவற்றை எவ்வாறு முழுமையடையச் செய்யும் என்பதையும் இப்போதே ஓரளவுக்காவது காட்டுகின்றன. அத்துடன் அத்தகைய பூரண இலக்கியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த ஓர் எழுத்தாளன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலுமே அதேவேளையில் அக்கறை கொண்டவனாகவும் தன் திறமைக்கும் நேரத்துக்கும் இயன்றளவு அவற்றின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருப்பான். அதனால் கலைஞனே இனிவரும் பூரண யோகியின் முன்னோடியாக அமையலாம். உதாரணம் அரவிந்தர்.


4
பூரண இலக்கிய வளர்ச்சி சமூகத்தின் சகல துறைகளின் வளர்ச்சியாகவும் பரிணமிக்கும். அதனால் இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்புடையவனாக இருக்கவேண்டும். காரணம், சகல துறைகளையும் ஒன்றோடு ஒன்றாக நெருக்கமாகத் தொடர்புபடுத்தி அவற்றை முழுமையடையச் செய்வதற்கும், சகல துறைகளையும் திட்டமிட்டுச் சம வேகத்தில் முழுமையை நோக்கிள ர்ப்பதற்கும் அரசியல் அதிகாரமே நேரடியான வழியைக்; காட்டுகிறது. அதனால் பூரண இலக்கியத்தை விரும்புபவன் பூரணமாக அரசியலில் ஈடுபாடுடையவனாகவும் அதைத் தன்பு_ரண வழியில் திருப்புபவனாகவும் இருக்கவேண்டும்.

இந்த வகையில் பார்க்கும்போது இன்றைய சனநாயக அமைப்பு. பூரணமாக உதவாத அரசியல் இமைப்பாகவே இருக்கிறது. சனநாயக நாடுகளில் தனித்தனியாய் விடுபட்டு இயங்கும் சமூகத்தின் சகல துறைகளின் பிரிவும், அந்தப் பிரிவையே பெரும்பாலும் சுதந்திரமாக் கருதும் சனநாயக அமைப்பும், மனித சரித்திரம் இன்று தவிர்;க முடியாத வகையில் கோரும் பொதுவுடமைச் சர்வோதய பூரண வாழ்க்கைக்கும் அதன் முழுமைக்கும் வேகமாக உதவுவதாகத் தெரியவில்லை. அது மிகத் தாமதமாகவே நடைபோடுகிறது. அந்தத் தாமதம் திசைகெட்ட தடுமாற்றத்துக்கும் சிதறலுக்கும் வழிவகுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. மார்க்சீயப் பொதுவுடமை நாடுகளில் சமூகத்தின் சகல துறைகளும், மத்தியிலிருந்து திட்டமிடப்பட்டு ஆற்றுப் படுத்தப்படுவதால், ஒன்றோடு ஒன்று இணைந்து முழுமையை நோக்கி வளரும் அளவுக்குச் சனநாயக அமைப்பு வளர்ச்சியைக் காட்டுவதில்லை. எல்லாச் சக்திகளும் ஒன்றாகத் திரட்டப்பட்டு, திட்டவட்டமான பூரணப்பொது இலட்சித்துக்காகத் துரிதமாக அர்ப்பணிக்கப்பட்டு ஆற்றுப் படுத்தப்படுவதே இனி மனித சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் என்பதை மார்க்சீய நாடுகள் காட்டி நிற்கின்றன. ஆனால், அதே நாடுகள் சமய ஞானத்தை மறுப்பதால் முழுமையற்ற ஒரு பார்வையைக் கொண்டே முழுமையை எட்ட முயல்கின்றன. சமயமும் சமயவாதிகளும் இதுகாலவரை பிற்போக்குவாதத்தின் தூண்களாக இருந்தார்கள் என்பதற்காகச் சமய ஞானத்தை மறுக்கத் தேவையில்லை. அதை, முற்போக்கை விரும்புபவர்கள் தங்களது இலட்சியத்துக்காகப் புரட்சிகரமாகப் பயன்படுத்தலாம். அதை மார்க்சீயவாதிகள் இன்னும் உணராதவர்களாகவே இருக்கின்றனர். அதனால் பொதுவுடம நாடுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஏற்படும் அரசியல் சர்வாதிகாரம் சில சமயங்களில் தவிர்க்க முடியாத வகையில் இலட்சியத்திலிருந்து பிறழ்ந்தும் திரிந்தும் போய்விடக்கூடிய ஆபத்தைக் காட்டுகிறது. சகல துறைகளும் முழுமையடைவதற்குப் பதிலாக அரசியல் துறையே சகல துறைகளிலும் அவற்றின் தனித் தன்மையை நசுக்கி, சர்வாதிகாரம் செய்யும் ஆபத்தும் ஏற்படுகிறது. சமூகத்தின் சகல துறைகளும் பொது இலட்சியத்தின் முழுமையை நோக்கி இணைக்கப்பட்டு ஆற்றுப்படுத்தப்படும் அதேவேளையில், ஒவ்வொரு துறையும் அந்த முழுமையின் அடிவான எல்லைகளைப் புதுத் திசையில் விரித்து அகலமாக்கி வளர்க்கக்கூடிய வகையில் சுதந்திரம் பெற்றவையாகவும் இருக்கவேண்டும். அவற்றின் கண்டுபிடிப்புகள் முன்னிலும் புதுமையாக இருக்கும்போது அவை பொது இலட்சியத்தையே, அது வரித்துக்கொண்ட தத்துவத்தையே பூரண வழியில் திருப்பக் கூடிய வகையில் இருக்கவேண்டும். ஆனால், மார்க்சீய நாடுகளில் மத்திய கண்காணிப்பு ஒருமைப்பாட்டை அழுத்தி வளர்க்குமளவுக்கு பொதுவுடமைச் சர்வோதயம் கொண்டுவரக்கூடிய சகல துறைகளின் பூரண மலர்ச்சியாகவும், முழுமையைப் பலபக்கமாக விரிக்கும் முழுமைக்கு எதிராகாத தனித்துவச் சுதந்திரமாகவும் வளர்வதாக இல்லை. அது மார்க்சீயப் பொதுவுடமை காலப்போக்கில் தான் கொண்டுவரக்கூடிய நிலையாக இருக்கும் என்று கூறுவது சரியான காரணமாகாது. அதுவரைக்கும் சர்வாதிகாரம் அவசியம் என்று கூறுவதும் உண்மையான காரணமாகாது. உண்மையான காரணம், அது வரித்துள்ள தத்துவத்தில் பூரணமின்மை இருப்பதேதான். அதனால்தான் அந்தளவுக்கு இறுக்கமான சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.

ஆனால், அதற்காகச் சமயஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணப் பொதுவுடமைத் தத்துவத்தை ஏற்றுக்கொள்வதால் மட்டும் சர்வாதிகாரத்தின் இறுக்கம் தளர்ந்து, சுதந்திர மலர்ச்சி வந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஏதோ ஒரளவுக்காவது மத்தியில் அதிகாரம் திரட்டப்படாமல் முழுமைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள முடியாதுதான். ஆனால், அது தேவைக்கதிகமான சர்வாதிகாரமா தனிப்பட்டவர்களின் குறைகளையும் தீர்க்கதரிசனமின்மையையும் மறைக்கும் சர்வாதிகாரமாக மாறாமல் இருப்பதற்குச் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணதத்துவம் மட்டும் உதவப்போவதில்லை. அதை நடைமுறைப்படுத்துபவர்களின் பூரண வளர்ச்சியையும் பக்குவத்தையும் பொறுத்ததாகவும் அது அதேசமயம் இருக்கும். அதனால்தான் கலைஞர்களும், எழுத்தாளர்களும், அந்தப் பூரண விரிவைக் காட்டக்கூடிய பக்குவத்தை வளர்க்கக் கூடியவர்களாய் இருப்பதால், அரசியலில் அதிகமாகப் பங்குபற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். லெனினின் மேதாவிலாசமும் எழுத்துவன்மையும், ட்றொட்ஸ்கியின் கலையுணர்வும் தீர்க்கதரிசனமும் ஸ்டாலினிடம் இல்லாத காரணத்தினாலேயே ஸ்டாலினிசத்தின் விளைவு அந்தளவு கொடூரமாக இருந்தது என்பதும் ஒரு காரணந்தான். அதை மறுக்க முடியாது. அதனால்தான் அரசியல் வாதிகளின் கைப்பொம்மைகளாக எழுத்தாளர்களும் கலைஞர்களும் இருக்காமல், அவர்களே அரசியல்வாதிகளாகவும் இருக்கவேண்டும். ஒரு நாட்டின் மந்திரிசபையில் குறைந்தது இரண்டொரு அரசியல்வாதிகளான கலைஞர்களும் எழுத்தாளர்களும் இனிமேல் இருந்தால்தான், பூரண முழுமைக்காக மத்தியில் ஒப்படைக்கப்படும் அதிகாரம் பயங்கரமான சர்வாதிகாரமாக மாறாமல் இருக்கும். கலைஞன் மட்டுமல்ல, பூரண சமயஞானியே அரசியலுக்குத் தலைமை தாங்கும் இறுதிக்கட்டம் ஒரு சுழல் வட்ட முழுமையின் முடிவுக்கட்டமாக இன்று வந்துள்ள. அதை ஒவ்வோர் எழுத்தாளனும் இனிமேல் உணரவேண்டும்.


5
சகல துறைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து முழுமையடையும்வேளையில், நாட்டின் சகல எழுத்தாளர்களும் ஒரு பேரவையில் அங்கம் வகித்துப் படைப்பாளிகள் இயக்கத்தையே ஆரம்பிப்பது அவசியமாகும். எந்த நாட்டில் நாடு முழுவதுக்குமுரிய ஓர் எழுத்தாளர் பேரவை இல்லாதிருக்கிறதோ, அந்த நாடு இன்னும் காலத்தை உணராது பின் தங்கிக் கிடக்கிறது என்பதுதான் அர்த்தம். தனிப்பட்ட கொள்கைகள், இன, மத, மொழி வேறுபாடுகள் ஆகியவற்றைக் கடந்து, எல்லாரும் அங்கம் வகிக்கும் ஓர் எழுத்தாளர் பேரவை அவசியம். அத்துடன் எழுத்தாளர்கள் என்று கூறும்போது கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் எழுதுபவர்களே மட்டும் கருதக்கூடாது. அத்தகைய பார்வை முழுமையான இலக்கியம் வளர்வதற்குத் தடையாகவே இருக்கும். விஞ்ஞானம், பொருளாதாரம், கலை, கல்வி, அரசியல், இலக்கியம் போன்ற சகல துறைகளிலும் திறமையும் ஆக்கமுயற்சியும் உள்ள எல்லா எழுத்தாளர்களும் பங்குபற்றும் ஒரு பேரவை இருக்கணே;டும். அது முழு நாட்டினதும் அறிவாளி வர்க்கத்தைத் தன்னுள் அடைப்பதாக அப்போது அமையும். அதனால் ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் வளர்ச்சியும் கண்டுபிடிப்பும் பிற துறைகளின் வளர்ச்சியையும் கண்டுபிடிப்பையும் தூண்டுவதாகவும், எல்லாம் முழுமையை நோக்கிய முற்போக்குக்கு வழிவகுப்பதாகவும் அமையும். இன, மத, மொழி வேறுபாடுகளுடன் துறை வேறுபாடுகளும் அதனால் நீங்கும். ஒவ்வொரு துறைக்குமுரிய புதிய கண்டுபிடிப்புக்கள் சாதாரண மக்களைத் தொடுமளவுக்கு கருத்துப் பரிமாறல், பிரசாரம், வெளியீடுஹ ஆகியவற்றை அது சீராகச் செய்வதற்கும் உதவும். அத்கைய பேரவையும் அது நடத்தும் படைப்பாளிகள் இயக்கமும் பல்வேறு வழிகளிலும் பொதுமக்களோடு தொடர்புடையதாக இயங்க வேண்டும். அரசியல்வாதிகளைக் கொண்ட நாட்டின் பாராளும்றத்துக்குச் சமமாகப் பொறுப்பும் பங்கும் தனக்கும் உண்டு எனக்கருதிச் செயல்படும் எழுத்தாளர் பேரவையே முழுச்சமூகத்தையும் முற்போக்காக முழுமையை நோக்கி வளர்க்கமுயலும் ஓர் அரசாங்கத்தின் உண்மையான மேற்சபையாக, மூதவையாக இயங்குவதாக இருக்கும்.

6
பூரண இலக்கியமும் பூரண வாழ்க்கையும் இவற்றோடு மட்டும் மலராது. ஒவ்வொருவனும் தன் அக ஆழத்தைக் கண்டுபிடிக்காதவரைக்கும் முழுமையும் பூரணத்துவமும் வரப்போவதில்லை. அதனால் சமய ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பூரணமாகப் பயன்படுத்த இனிமேல் இந்த எழுத்தாளர்கள் தான் முன்வரவேண்டும். சமய ஸ்தாபனங்கள் மிகக் குறுகிய வட்டங்களுக்குள் நிற்கின்றன. அவற்றின் குறுகிய போக்கைத் தகர்த்தெறிந்து, சர்வ சமய ஞானப்புரட்சியையும், அது கொடுத்துதவும் பொதுவுடைமை மலர்ச்சியையும் எழுத்தாளர்களும் கலைஞர்களுமே இனிமேல் கொண்டுவர வேண்டும். பழைய சமயஞானத்திடமிருக்கும் உண்மையை சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக்கச் செய்யவேண்டும். அதற்காக முதலில் ஒவ்வொருவம் தனது அகத்திலேயே அந்த ஞானத்தை எழுப்பவேண்டும். வர்க்க வேறுபாடுகளும் குணவேறுபாடுகளும் அங்குதான் பொதிந்து கிடக்கின்றன. அவையே பிற்போக்குக் கோட்டைகளாகவும், பிறப்புப் பிறப்பாய் வரும் இயல்புகளின் மறைவிடங்களாகவும் இருக்கின்றன. அவற்றைக் கைப்பற்றி, அங்கு புரட்சியைக் கொண்டுசென்று முழுமையின் மலர்ச்சியை ஏற்படுத்தாதவரைக்கும் புறச்சூழலில் மட்டும் புரட்சி நடத்திப் பூரண இலக்கியத்தையும் சரி முழுமையான வாழ்க்கையையும்சரி கொண்டுவரமுடியாது. எழுத்தாளர்கள் இனிமேல் அதையும் உணரவேண்டும்.

7
இவை பொதுப்படையான தேவைகள். பூரண இலக்கியம் மலர்வதற்கு எல்லா நாட்டுக்குமுரிய பொதுத் தேவைகள். இவற்றின் அடிப்படையிலேயே ஈழத்தின் தனித்தேவைகளை, முழு உலகின் முழுமை வளர்ச்சிக்கு முரணாகாமல், கண்டுபிடித்துத் தீர்க்கவேண்டும். அவற்றைப்பற்றிய கணக்கெடுப்பு இன்றைய ஈழத்து எழுத்தாளன் ஒவ்வொருவனுக்குரிய பொறுப்பாகும்.


மெய்யும் உள்ளும் மெய்
நல்லசிவம் தான் படித்த சஞ்சிகைச் செய்தி ஒன்றை எனக்கு காட்டினான். நானும் படித்தேன்.

‘வளர்ச்சியடைந்த விஞ்ஞானத் தொழில்நுட்ப நாகரிகங்கள் நமக்கு அண்மையிலுள்ள பால்வழி ஞாயிற்றுத் தொகுதிக் கூட்டங்களிற் சில பகுதிகளிலிருந்து நமது பூமியுடன் தொடர்புகொள்ள முயன்று கொண்டிருக்கலாமெனப் பிரசித்திபெற்ற சோவியத் - அமெரிக்க விஞ்ஞானிகளைக் கொண்ட கூட்டமொன்று முடிவுசெய்துள்ளது. பூமிக்கு அப்பாற்பட்ட அறிவுலகங்களுடன் தொடர்பு கொள்வதுபற்றிக் கூட்டப்பட்ட முதல் சோவியத் - அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டம் இதுவாகும். இம்மகாநாடு சோவியத் - அமெரிக்க நாடுகளின் தேசிய விஞ்ஞான சபைகளின் கூட்டாதரவில் சோவியத் ஆர்மீனியாவில் நடைபெற்றது. நம்மைவிட வளர்ச்சியடைந்த நாகரிகங்களிடமிருந்து பெறக்கூடிய பயன்கள் முழு மனித இனத்துக்கும் பெறும் நன்மையளிக்கும்மென்பதால், விண்வெளியிலிருந்து வரும்செய்திகளைக் கண்டுபிடித்துத் தொடர்கொள்வதற்காகச் சர்வதேச ஒத்துழைப்பு அவசியமென அங்கு கூடிய விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வலுவான ரேடியோத்தூர நோக்கிகளால் விண்வெளியை ஆராய்ந்து, அத்தகைய வெளி அறிவுலகத்துடன் தொடர்புகொள்வதற்குத் தற்போதைய நமது தொழில் நுட்ப விஞ்ஞான அறிவு வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.’

செய்தியைப் படித்துவிட்டு நான் அவனைப் பார்த்தபோது நல்லசிவம் கூறினான் -

‘இந்த செய்தி ஒன்றே ஆயிரம் சிறுகதைகள் - கவிதைகளுக்குச் சமம். சமம் என்றுகூட கூறமுடியாது. உங்களுடைய இந்தக் காலத்துச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எதுவாலும் தரமுடியாத பரவசத்தை இந்தச் சிறு செய்தி தருகிறது எனக்கு. இதைப் படிக்கப் படிக்க வரும் பரவசத்தாக்கம் மனதை ஒரு நிலையில் நிற்கவிடாது கிளறிக்கொண்டிருக்கிறது. வேலையொன்றும் செய்யமுடியாமற்கூட இருக்கிறது.’

செய்தியைத் திரும்பவும் பார்த்தவாறே நான் கேட்டேன் - ‘அப்படியென்றால், சிறுகதை, கவிதை, நவால் எல்லாவற்றையும்விட இந்தச் செய்தித்துண்டு சிறப்பான அல்லது அவற்றுக்குச் சமமான ஒரு கலைச்சிருஷ்டி என்று கூறுகிறீர்?’

அவன் சிரித்தான், சிரித்துக்கொண்டே கூறினான் -

‘கலை என்றால் என்ன? உண்மையான பரவச விடுதலையைத் தருவதுதான் கலை. உண்மையா பரவச விடுதலை மாற்றமுறாத நிரந்தர உண்மைத் தளத்தை அடிப்படையாக கொண்டது. கற்பனையை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாற்றமுறாத நிரந்தர உண்மைத்தளம் ஞானிகள் கண்ட அனுபவத் தளமாகும். உங்களுடைய இந்தக் காலத்துச் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை நான் படிப்பதில்லை@ என்னால் படிக்கமுடிவதில்லை. அவற்றைப் படித்து மகிழ்ந்த காலம் போய்விட்டது. அவையெல்லாம் வெறும் பொய்யும் கற்பனைகளுந்தான். காலத்துக்கு உதவாத கற்பனைகள். அப்படிப்பட்டவற்றை என்னால் இப்போ படிக்கமுடியாமலிருக்கின்றது. அவற்றைவிட, வியட்னாம் போர் முதல் எங்கள் யாழ்பாணத்துக் கள்ளுத் தவறணைவரை சகல சாதாரண நடைமுறை விடயங்களும் மிகச் சுவையாகவும் அக்கறையைக் கோருபவையாகவும் இருக்கின்றன. அவற்றைவிட வேறு என்ன கலை வேண்டும்? சாதாரண மனிதன் சில பத்திரிகைகளின் கடைசிப்பக்கங்களில் வரும் கடத்தல், கொலை, களவு பற்றிய விடங்களை உங்கள் கதைகள், கவிதைகளிற் காட்டாத அக்கறையோடு படிப்பதற்கும் அதுதான் ஓரளவு காரணம். அவை உண்மையானவையாக, நடைமுறை விடயங்களாக இருக்கின்றன. இப்போ என்னை ஆச்சரியப்படவைக்கும் விடயம் இதுதான். இத்தனை ஆயிரம் கதைகள், கவிதைகள், நாவல்கள் என்று தேவையற்ற, அர்த்தமற்ற இவர்கள் எழுதிக்கொண்டும் பிரசுரித்துக் கொண்டு படித்துக்கொண்டும் இருக்கிறார்களே, அதுதான் என் ஆச்சரியத்துக்குரிய விடயமாக இருக்கிறது. ஏன் எழுதுகிறார்கள்? எப்படி எழுதுகிறார்கள்? அது அவர்களுக்கே தெரிவதில்லை. சும்மா ஒரு பழக்கமாகி விட்டது.

‘நடைமுறையிலுள்ள சாதாரண விடயங்கள் தரும் ஆழமான அனுபவங்களைத் தானே சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், காட்டுகின்றன? இன்னும் அழகாகவும் கலையோடும் தருகின்றன? நடைமுறை விடயங்கள் சுவையாக இருக்கின்றனவென்றால், அவற்றை விட இன்னும் சுவையாகவும் பரவசமூட்டுபவையாகவும் இருக்கும் இலக்கியத்தையும் கலையையும் எப்படித் தேவையற்றவை என்று சொல்லலாம்?’ நான் திருப்பிக் கேட்டேன்.

நல்லசிவம் -

‘அவை உண்மையைப்போல எழுதப்பட்ட கற்பனை விடயங்கள். உண்மையல்ல. அந்த வித்தியாசம் இனிமேல் அவற்றைத் தேவையில்லாமல் ஆக்கிவிடுகிறது. இதுகாலவரை உண்மையை விளக்க அத்தகைய கற்பனைகள் உதவினதான். ஆனால், இனிமேல் உண்மையை உள்ளபடியே மனிதன் நாடி அனுபவிக்க ஆரம்பித்து விட்ட காலத்தில் அந்த யதார்த்தக் கற்பனைகள் தேவையில்லை. உதாரணமாக, ரஷ்யப் புரட்சியைப் பற்றிச் சுடச்சுட எழுதிய ஜோன் றீட்டின் ‘உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள்’ இருக்கிறதே, அதன் பரவசம் நிலையானது. என்னைப் பொறுத்தவரையில் இப்போ டோஸ்டொவ்ஸ்கியின் நாவல்கள் கூட அத்தனை பரவசம் அளிப்பதில்லை. காரணம், அது உண்மை@ இது கற்பனை என்ற உணர்வு படிக்கமுன்னே வந்து விடுகிறது. டோஸ்டொவ்ஸ்கிகூட ரஷ்யப் புரட்சிக்கு முந்திய காலவரலாற்றை அப்படியே மாற்றாமல் கொள்ளாமல் தர்ம வளர்ச்சிப் பக்கம் தன்னை நிறுத்திக் கொண்டு தன் கலையுணர்வோடு றீட் எழுதியது போல் எழுதியிருந்தால் இன்னும் எவ்வளவு அழகாகவும் சுவையாகவும் இருந்திருக்கும் என்று இப்போ நினைக்கத் தோன்றுகிறது. அப்படி உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளையே இலக்கியமாக ஒவ்வோர் எழுத்தாளனும் தன் திறமையோடும் எழுதியிருந்தால் உலகம் எவ்வளவோ முன்னேறியிருக்கும். கலையைப்பற்றிய கொள்கையும் ஒரு புதுப் பரிணாமத்தைக் காட்டும் வகையில் வளர்ச்சியடைந்திருக்கும். உண்மை நிலையில் அலுப்புத் தட்டினால் அதை மாற்ற வேண்டுமென்ற போராட்ட வேகமும் கலைஞர்களிடம் எழுந்திருக்கும். இன்றைய நம் எழுத்தாளர்கள் நம் நாட்டுப் பிரச்சினைகளை இன்றைய பூரண சர்வோதய பொதுவுடமைத் தர்மப்போக்குப் பக்கம் நின்றுகொண்டு மாற்றாமல் கொள்ளாமல் கலையோடு எழுதுவதுதான் உண்மையான கலைச்சேவையாகும். மாற்றப்படாத உண்மைதான் கலையின் உள்ளடக்கமாக இருக்கவேண்டும். எ;நதவிதக் கற்பனையும், எந்தவிதச் சிறுமாற்றமும் சேராத உள்ளடக்கம் - அதற்கேற்ற உண்மையான உருவம் - அவைதான் இன்றைய கலைக்கொள்கையாக இருக்கவேண்டும். இந்தச் செய்தித் துண்டில் காணப்படும் உண்மைதான் எனக்குப் பரவசத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, அடுத்த கோளங்ளில் பெரும் நாகரிகங்கள் காணப்படும் என்றும், அவற்றோடு தொடர்பு கொள்வது அவசியம் என்றும் நம்பும் விஞ்ஞானிகளின் உண்மையான மனநிலை. அதை வைத்து ஒரு விஞ்ஞானக் கற்பனைக் கதையாக எழுதியிருந்தால், அத்தனை பரவசம் வந்திருக்காது எனக்கு. இந்த உண்மைகளை உண்மையான போக்கில் கூறவேண்டும். அப்படியே ஒவ்வோர் எழுத்தாளனும் சங்கற்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றைப் படிப்பதே சரியானது என்று ஒவ்வொரு வாசகனும் பழகிக்கொள்ள வேண்டும். ஆனால், இன்றைய இலக்கியங்களும் கலைமுயற்சிகளும் அப்படியா இருக்கின்றன? தெரிந்தவற்றையே அவை திருப்பித் திருப்பிக் கற்பனை பூசிச் சொல்கின்றன. சிந்தனைக் கதவைத் தட்டிக் கொண்டும், செயல் தடத்தில் தட்டுப் பட்டுக் கொண்டும் இருக்கின்ற எத்தனையோ புதிய அனுபவங்களை அவை சொல்வதில்லை. அப்படிப்பட்ட புது அனுபவங்கள் இருக்கும்போது கற்பனையாகக் கலையும் இலக்கியமும் எதற்கு?’

‘அப்படியென்றால், சாதாரண சரித்திரப் புத்தகமும் ஒரு சிறந்த நாவல் அல்லது கவிதை நூலும் சரி, சமம் என்கிறீரா?’ என்றேன் நான்.

சரியுமல்ல, சமனுமல்ல’ என்றான் நல்லசிவம். ‘சாதாரண சரித்திரத்தின் தரத்துக்கு ஒரு சிறந்த நாவலால் அல்லது கவிதையால் உயரமுடியாது என்கிறேன் நான்.’

கலை, இலக்கியங்களின் உருவ – உள்ளடக்கங்கள் இன்றைய காலத்துத் தேவைகளுக்கேற்ப மாற்றப்பட வேண்டுமென்பது உண்மைதான். ஆனால், அதற்காக கலை, இலக்கியம் என்ற துறைகளே அழிக்கப்பட வேண்டுமென்ற அளவுக்கு மாற்றப்படலாமா? எனக்கு நல்ல சிவத்தின் கதை பைத்தியக்காத்தனமாகத்தான் பட்டது.

‘எப்படியென்று சொல்ல முடியுமா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டேன் நான்.

‘அதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்’ என்றான் அவன்.

‘காரணம் இதுதான், சரித்திரத்தில் உண்மை இயன்றளவு மறைக்கப்படாது இருக்கிறது. கதைகளிலும் கவிதைகளிலும் அப்படி இருப்பதில்லை. உண்மை போல இருக்கலாம்…… ஆனால், அவை அப்படியே உண்மையாக எங்கும் நடந்திருக்காது. அதை எழுதுபவனின் கற்பனையில் தவிர அது பெரும் வித்தியாசத்தைத் தருகிறது. அந்த வித்தியாசம் இருக்கும் வரைக்கும் இனிமேல், அதாவது எதிர்காலத்தில் கலை, இலக்கியம் என்பதில் எந்தவிதப் பிரயோசனமுமில்லை. அவற்றை எதிர்கால மனவளர்ச்சி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

நான் -

‘ஐயா, அப்படிக் கற்பனை கலந்து இரு;பதுதானே கலை, இலக்கியத்தின் உண்மையான தன்மையாகும்? இது காலவரை மனித வரலாற்றில் அப்படித்தானே அவை இருந்தன? சரித்திரத்தை விரும்புபவர்கள் வெறும் சரித்திரத்தைப் படிக்கட்டும். ஆனால், கலை, இலக்கியத்தை விரும்பும் நுண்ணுணர்வுள்ள பண்பட்ட மனங்கள் இருக்கின்றனவே, அவற்றுக்குச் சரித்திரத்தையும் பத்திரிகைச் செய்திகளையும் கொடுக்க முடியுமா? அத்துடன் கலை, இலக்கியம் இல்லாவிட்டால் மனித கலாசாரத்தின் நிலையை நினைத்துப் பாரும். மனிதனுக்கும் மிருகத்துக்கும் அல்லது மனிதனுக்கும் யந்திரத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.’

‘இதுகாலவரை இருந்தது இருக்கட்டுமையா, இனி மேல் இருக்கத்தேவையில்லை’ என்றான் நல்லசிவம். ‘இனி மேல் நுண்ணுணர்வுள்ள பண்பட்ட மனம் என்பது கற்பனையில் கலையையும் அழகையும் பரவசத்தையும் காணாமல், சாதாரண நடைமுறை உண்மையில் தான் கலையையும் பரவசத்தையும் காணும். நான் சொல்வது உமக:கு இன்னும் விளங்கவில்லை. சரி, இதுகாலவரை மிருகத்திலிருந்தும் யந்திரத்திலிருந்தும் வித்தியாசப்பட்டிருந்த மனிதனுக்கு எந்தவகையில் கலை, இலக்கியம் உதவிற்று? எந்த வகையில் அவனை அப்படி வித்தியாசப்பட அவை வளர்த்தன? அதாவது, இதுகாலவரை கலை, இலக்கியங்களின் தொழில் அல்லது பயன் எப்படிப்பட்டதாக இருந்தது என்று சொல்லும் பார்ப்பம்?’

அதைச் சொல்லுவது சற்றுக் கஷ்டமாகத்தான் இருந்தது. காரணம், நான் சொல்பவை நல்லசிவத்தின் வாதத்துக்கே உதவக்கூடும் என்ற ஓர் உணர்வு என்னை அருட்டத் தொடங்கியது.

‘இதுகாலவரை…’ நான் இழுத்துக்கொண்டு ஆரம்பித்தேன். ‘இதுகாலவரை கலை, இலக்கியங்கள் தான் மனிதனது சாதாரண நடைமுறை வாழ்க்கை வெறும் யந்திரப் போக்காகவும் மிருகப் போக்காகவும் மாறாமல், அதன் ஆழமான அனுபவ உண்மைகளை வெளிக்காட்டியும் இலக்கியப் போக்கில் எப்படி வாழவேண்டுமென்று எடுத்துக்காட்டியும் வழிப்படுத்தியும் ஆற்றுப்படுத்தியும் வந்திருக்கின்றன. மனிதனது சிந்தனையை வளர்த்திருக்கின்றன. வாழ்க்கையிற் பரவசத்தையும் சந்தோசத்தையும் புகுத்தியிருக்கின்றன. சொல்லப்போனால், அவனது பண்பாட்டின் முக்கிய அத்திவாரமாகவும் இருந்திருக்கின்றன.’

நல்லசிவம்.

‘சிந்தனையையும் பண்பாட்டையும் தந்தவை பெரும்பாலும் அந்தந்தக் காலத்துத் தொழில் முறைகளும் தத்துவங்களும் சமயங்களுந்தான். அவற்றின் நிழலில்தான் கலை, இலக்கியம் வளர்ந்துள்ளன. அவை இல்லாத இடங்களிலும் காலங்களிலுந்தான் கலை, இலக்கியங்கள் தனியாக வாழ்க்கைக்கு வழிகாட்ட உதவியுள்ளன. ஆனூல் அப்போதுங்கூட அவை தத்துவங்களுக்கும் சமயங்களுக்கும் முன்னோடிகளாகவே செயற்பட்டுள்ளன. பின்பு, அதே தத்துவங்களினதும் சமயங்களினதும் நிழல்தான் அவை வளரும் சூழலாகியுள்ளன. தத்துவங்களும் சமயங்களும் காட்டிய வாழ்க்கையின் இலட்சியப் போக்கைத்தான் கலை, இலக்கியம் எடுத்துக்காட்டியுள்ளன. அந்த வகையில் கலை, இலக்கியம் பரவசத்தையும் சந்தோசத்தையும் பண்பாட்டையுமு; வாழ்க்கைக்குள் புகுத்தியிருக்கின்றனவென்றால், அந்தச் சந்தோசமும் பண்பாடும் அந்தந்தக் காலத்துத் தொழில் முறையாலும் தத்துவத்தாலும் சமயத்தாலும் தரக்கூடியதாய் இருந்த பண்பாடும் பரவசமுந்தான். குறிப்பாகச் சமயங்கள் தான் மனிதன் இதுவரை கண்ட பரவச எல்லைகளைக் காட்டியுள்ளன. அந்த எல்லைகளைச் சாதாரண மக்களுக்கும் எடுத்துக்காட்டும் வகையில் கலை, இலக்கியம் இதுவரை செயற்பட முயன்றன என்பது உண்மைதான். ஆனால், அதேசமயம் அவை வாழ்க்கைக்குரிய இலட்சியப் படமாகவும், சாதாரண மக்களின் சமயத்துக்குரிய பிரதிப்பொருளாகவும் இருந்தனவேயொழிய உண்மையான சமயமாகவும் இருக்கவில்லை. உண்மையான வாழ்க்கையாகவும் இருக்கவில்லை. இந்த இரண்டுங் கெட்டநிலை மனித் மிருகமாக வீழாமலும், தேவனாக வளராமலும் இருந்த இரண்டுங்கலந்த நிலைக்குப் பொருந்தியிருக்கலாம். ஆனால், இனிமேல் பொருந்தாது. இனி மனிதன் தேவனாகிறான். பேர் மனிதனாகிறான். சாதாரண நடைமுறை வாழ்க்கையே கலையாகவும் தொழுகையாகவும் மாறவேண்டிய வேளையில், வாழ்க்கையுமல்ல சமயமுமற்று இரண்டுங்கெட்ட நிலைக்குரிய தனியான கலை, இலக்கியம் என்ற போலிப் பிரிவு இருக்க முடியாது.”

‘எனக்கு விளங்கவில்லை.’

‘சாதாரண தொழிலே பரவசத்தைத் தரும் கலையாகவும் தொழுகையாகவும் மாறவேண்டும். அப்படி மாறவேண்டிய வேளையில் அவற்றுக்குப் பதிலான ஒரு போலிப் பிரதிப் பொருளாக, மதுபானமாக, தனிப்பட்டகலை, இலக்கியம் என்ற பிரிவு எதற்கு? அதாவது, நான் சொல்வது இதுதான் -

‘கலை, இலக்கியம் சிருஷ்டிப்பவன் தான் செய்யும் தொழிலையே, தன் வாழ்க்கையையே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றினால்என்ன? ஏதும் எழுதவேண்டுமென்றால் நடைமுறையிலிருந்கும் சமகாலச் சரித்திரவிடங்களையும், தன் சொந்த உண்மையான அனுபவங்களையும். அப்படியே ஏதும் மாற்றாமல் கலையாக எழுதினால் என்ன? ஓர் அணுவின் இயக்கநிகழ்ச்சியே அத்தனை கலையோடு நடைபெறும்போது தனியாகக் கற்பனை கலந்து நடக்காதவற்றை ‘யதார்த்தமா’ எழுதவேண்டுமா? இனிமேல் உண்மையாக நடப்பவற்றைக் கலையோடு எழுதுவதுதான் இலக்கியம். அதேபோல் ஒவ்வோர் நிமிட வாழ்க்கையையும் தொழிலையும் கலையாக்குவதுதான் கலை, இலக்கியக்காரனின் வேலை. ஒவ்வோர் எழுத்தாளம் இப்படி ஒரு சங்கற்பத்தை எடுத்துக் கொண்டு வாழ்கிறான் என்று வைத்து கொள்ளும். அதேபோல், அவன் வாழும் நாட்டிலுள்ள மக்களினதும் தனிப்பட்டவர்களினதும் நல்ல சேவையையும் அதன் வரலாற்றையும் அவற்றுக்கு உதவும் ஆராய்ச்சிகளையுமே கலையாகவும் இலக்கியமாகவும் ஒவ்வோர் எழுத்தாளனும் படைத்து வெளியிடுகிறான் என்று வைத்துக்கொள்ளும். ஒரு பத்து வருடங்களுள் ஒரு பெரும் சிந்தனைப் புரட்சியும், கலாசார, அரசியல், பொருளாதார, சமூகப் புரட்சியும் தோன்றிவிடும். உண்மைப்படி வாழ்வும், உண்மைப்படி சிந்திக்கவும் ஒவ்வொருவரும் முயலும் யுகம் ஒன்று தோன்றிவிடும். வாழ்க்கையே கலையாகவும் தொழுகையாகவும் மாறிப் பரவசமளிக்கும் யுகம். அப்படியென்றால், ஏன் அந்த மாற்றத்தைக் கொண்டுவரக்கூடாது?’

‘இது வெறும் இலட்சியக் கற்பனையாக இருக்க முடியாதா?’ என்றேன் நான் சந்தேகத்துடன். ‘நுட்பமான தர்க்க நியாயந்தான். ஆனால், நடைமுறையில் வராத கற்பனை, அப்படித்தான் எனக்குப் படுகிறது.’

‘காலங்காலமாய் கற்பனையில் ஈடுபட்டிருக்கும் கலை, இலக்கியக்காரர்களுக்கு எல்லாமே கற்பனையாகத்தான் படும். நல்லசிவம் சிரித்துக்கொண்டு சொன்னான். ‘ஆனால், மனித இனம் இனிமேல் கலை, இலக்கியக்காரர்களிடமிருந்து கற்பனையை எதிர்பார்க்கப் போவதில்லை. வாழ்க்கையையே கலை, இலக்கியமாக்கும் பெரும் பணியையே எதிர்பார்க்கிறது. அதற்கு முதற்படியாக இப்போதிருக்கும் கலை, இலக்கிய முறையையே முற்றாக அழிக்க வேண்டும். ஆமாம்: முற்றாக அழிக்க வேண்டும். அதை அழிப்பதற்கு அதே கலை, இலக்கியத்தையே பயன்படுத்த வேண்டும். மாற்றத்துக்கு முந்திய இடைப்பருவம் அதுதான். கலையை அழிக்கும் கலை, இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்.’

நான் பதில் கூறாமல் பேசாமல் இருந்தேன்.

‘என்ன உனக்கு இதில் நம்பிக்கையில்லையா?’ என்றான் நல்லசிவம்.

நான் சிரித்தேன். அவன் தொடர்ந்தான்.

‘நீ நம்பினாலென்ன, நம்பாவிட்டாலென்ன உண்மையை மறைத்துவிட முடியாது. நம்பமுடியாத பல விடயங்கள் இனிமேல் நடக்கப்போகின்றன. பார் இந்தச் செய்தியை, முந்தி இந்த விஞ்ஞானிகளே இதை நம்பினார்களா? இல்லை. ஆனால், இன்று நம்பினதோடு அதற்குரிய ஆராய்ச்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இந்த விஞ்ஞானிகள் கூட எவ்வளவு குழந்தைப் பிள்ளைத் தனமாகச் சிந்திக்கிறார்கள். அடுத்த ஞாயிற்றுத் தொகுதிகளிலிருந்து தொடர்புகளை எதிர்பார்க்கும் இந்த விஞ்ஞானிகள், அவச்சிருப்பவற்றையும் வளர்ச்சியடைந்த விஞ்ஞானத் தொழில் நுட்ப நாகரிகங்களாகத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஏன், அதைவிட வேறு விதமாக இருக்க முடியாதா? வேறு தளங்களில், வேறு சிந்தனை நிலைகளில் வாழும் அதி உன்னத இனங்களாக இருக்க முடியாதா? நிச்சயமாக அப்படி எத்தனையோ இருக்கின்றன. ஆனால், இவர்களால் தான் அவற்றைச் சிந்தித்துப் பார்க்க முடியாமல் இருக்கின்றது. சடத்தள உலகங்கள் மட்டுமல்ல, சூக்குமத்தள உலகங்கள், ஆத்மீகத்தள உலகங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றைப்பற்றியெல்லாம் எப்பொது விஞ்ஞானம் அக்கறைப்படுமோ தெரியாது. இருந்தாலும் இந்தளவுக்கு முன்னேறியுள்ளார்களே, அதுவே பெரும் பரவசத்தையூட்டுகிறது. அத்தனை பெருந்தள உலகங்களோடும் தொடர்புகொண்டது போன்ற பரவசம் எனக்கு ஏற்பட்டது.’

‘உண்மையாகவே நீ சொல்வதில் உனக்கு நம்பிக்கையிருக்கிறதா?’ என்று வேடிக்கையாகக் கேட்டேன் நான்.

‘நம்பிக்கையா?’ அவன் திருப்பிக் கேட்டுவிட்டுச் சிரித்தான். ‘இது வெறும் நம்பிக்கையல்ல. நிச்சயமான ஆதாரங்கள் இருக்கின்றன. அடுத்த உலகங்களிலிருந்து எத்தனையோ தடவை அவர்கள் வந்துவிட்டுப் போயுள்ளார்கள். நிச்சயமாக ஆதாரங்கள் தாராளமாக இருக்கின்றன.’

‘எவர்கள் வந்தார்கள்?’

‘அடுத்தவுலகக்காரர்கள்.’

‘எப்போது வந்தார்கள்? எங்கு வந்தார்கள்?’

மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு (தோன்றுவதற்கு முன்புங்கூட வந்திருக்கலாம்) இன்றைய விஞ்ஞானயுகத்தின் கற்காலம்வரை அவர்கள் வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். தனித்தனியாய் வந்துள்ளார்கள். கூட்டங் கூட்டமாய் வந்துள்ளார்கள். அவர்களது வருகையால் மனித நாகரிக வளர்ச்சியிலும், சிந்தனை வளர்ச்சியிலும், வாழ்க்கை முறையிலும் அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வட இந்தியாவில், இஸ்ரேலில், அரேபியாவில் அவர்கள் புகுத்திய புது இயக்கங்கள்தான் இன்று வரை மனிதனை மனிதனாக வளர்த்து வரும் உலக பண்பாட்டு இரகசியங்களாக இருக்கின்றது. ஆனால், இந்த விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதுபோல் விண்வெளிக் கப்பல்களிவும், பறக:கும் தட்டுகளிலும், ரேடியோச் செய்திகளிலுந் தான் அவர்களின் வருகை தெரிவிக்கப்படும் என்ற கட்டாயமில்லை. அவர்களின் உள்நுழைவு மிக மிக நுட்பமானது. உண்மையில் உள்நுழைவு. அதாவது ‘இன்பில்ட்ரேஷன்’ என்பது அவர்களிடமிருந்துதான் தெரிந்துகொள்ளப்படவேண்டிய கலையாகும். அத்தனை நுட்பமாக அவர்கள் நுழைந்திருக்கிறார்கள். உட்புகுந்து முழு நாகரிகங்களையே மாற்றி வளர்த்துள்ளார்கள்.’

‘நீ எதைச் சொல்கிறாய்?’ என்றேன் ஆச்சரியத்தோடு.

‘நீ எதை நினைக்கிறாய்?’ என்று திருப்பிக் கேட்டான் அவன். கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் அவனே சொன்னான்.

‘வேறு யாருமல்ல, எல்லாருக்கும் தெரிந்த நமது சமய ஞானிகள்தான் அவர்கள். அவர்களிற் பெரும்பாலானோர் அடுத்த உலகிலிருந்து இங்கு வேண்டுமென்றே திட்டமிட்ட மனிதரைப் போலவே பிறந்து, வளர்ந்து, உட்புகுந்த புரட்சிக்காரர்கள்தான். தனித் தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் வந்திருக்கிறார்கள். இப்போதும் நம்முடனே இருந்து கொண்டுமிருப்பார்கள்.’

எல்லாருக்கும் தெரிந்ததைத்தான் அவன் சொன்னான். ஆனால், அவன் அதைச் சொன்விதம் சுவையாக இருந்தது. அவன் தொடர்ந்தான். –

நம்ப முடியாதவைகள்தான் இனி நடக்கப்போகின்றன. உண்மையைவிட ஆச்சரியமானதும் அற்புதமானதும் வேறொன்றுமில்லை. முன்பு அங்குமிங்கும் வந்தவர்கள் இனி ஒன்றாகி வருகிற காலம். அங்குமிங்கும் சிறு நடந்த புரட்சிகள் முழுமையடைந்து பெருந்தள வாழ்க்கை பிறக்கிற காலம். அதற்குரிய பெரும்படை உட்புகும் காலம். கலை, இலக்கியமும் இனிச்சாகிற காலம். முழு வாழ்க்கையே கலையாகவும் தொழுகையாகவும் பெரும் பரவசத் தொழிலாகவும் வளரும் போது போலியான ஒரு கலை, இலக்கியம் என்ற தனிப் பிரிவு எதற்கு?

அதைச் சொல்லிவிட்டு நல்லசிவம் வழக்கம்போலச் சிரித்தான்.

எனக்கோ வேதனையாக இருந்தது. நானே சாவது போலிருந்தது. ஆனால், அதேவேளை அந்த வேதனைக்குள்ளேயும் ஒருவித விடுதலை உணர்வு ஓடிப் பரவுவதை என்னால் உணர முடிந்தது.


புதுயுகமும் அதை நோக்கிய மாற்றங்களும்

தற்காலம் ஒரு புதுயுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது: மற்றது பிறக்கத் துடிக்கிறது: பிறந்து கொண்டிருக்கிறது.

இன்று இது பெரும்பாலாரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தாகும். ஆனால், பிறந்து கொண்டிருக்கும் புது யுகத்தின் தன்மைகளைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பவர்கள் மிகச்சிலரே தான்.

பிறந்து கொண்டிருக்கும் புதுயுகத்தைப் பொருள் முதல் வாத அடிப்படையில் பார்த்து சடம், உயிர், மனம் ஆகிய முத்தளங்களுக்குள்ளேயே முழுவதையும் காணமுயல்பவர்கள்தான் பெரும்பாலான இன்றைய புரட்சிக்காரர்களாய் இருக்கின்றனர். மார்க்ஸீயவாதிகளை இவர்களுக்கு உதாரணமாய்க் காட்டலாம்.

சடம், உயிர், மனம் ஆகிய தளங்களுக்கு அப்பாலும் உண்மை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்பவர்கள்கூட, புதுயுகமாற்றத்தை அந்த முத்தளங்களுக்குள்ளேயே காணமுயல்கின்றனர். பெரும்பாலான சமயவாதிகளும் காந்தியவாதிகளும் இந்த ரகத்தினரேதான்.

பிறந்து கொண்டிருக்கும் புதுயுகம் சடம், உயிர், மனம் ஆகிய முத்தளங்களுக்கும் அவற்றிற்குரிய தாமத, ரஜத, சாத்வீக முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு தளத்துக்கும், குணத்துக்குமுரிய வாழ்க்கை முறையைக் கோருகிறது என்பதைப் புரிந்து கொள்பவர்கள் தான் பிறந்து கொண்டிருக்கும் புதுயுகத்துக்கு உண்மையான உருவம் கொடுப்பவர்களாய் இருப்பர்.

மார்க்ஸீய சித்தாந்தம் புதுயுகத்துக்குரிய பெருந்தத்துவமல்ல. அப்படி அதை மாறாட்டஞ் செய்பவர்கள் சரித்திர வளர்ச்சியைப் பற்றியும், அது காட்டும் சான்றுகளைப் பற்றியும் சீராகத் தெரிந்து கொள்ளாதவர்ளேதான்.

மார்க்ஸிய சித்தாந்தம் பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளில் ஆரம்பமான விஞ்ஞான ரீதியான லோகாயுத அறிவுவாதத்தின் இறுதிக்கோலமேதான். இதைப் போர்ப்பறை “யில்” புதிய வார்ப்புகள்” என்ற கட்டுரையில் விரிவாக நான் விளக்க முயன்றுள்ளேன். அந்த வகையில் பார்க்கும் போது இன்றைய மார்க்ஸீயவாதம் காலங்காலமாகச் சமயஞானத்;துக்குப் போட்டியாக வளணாந்து வந்துள்ள லோகாயத வாதத்தின் இன்றைய இறுதிக் கோலம் என்றுதான் சொல்லவேண்டும். அதனால் உமல், உயிர், மனம் ஆகிய முத்தளங்களுக்கு அப்பால் செல்ல முயலும் புதுயுகத்தின் பிறப்புக்கு மார்க்ஸீய சித்தாந்தம் வழிவகுக்கப்போவதில்லை. இதுகாலவரை மனவளர்ச்சியடைந்ள்ள மனித இனத்தின் ஒரு பகுதுpயினர் முழு உண்மையாக நம்பிய லோகாயத வாழ்க்கை முறையை அதன் விஞ்ஞான ரீதியான சீரான கோணத்தில் வளர்த்துக் காட்டியுள்ள ஒரு சிந்தாந்தமே தான் மார்க்ஸீயவாதம். அந்த வகையில் புதுயுகப் பிறப்புக்குரிய சிந்தாந்தமாயிருக்காமல் பழைய யுகவாழ்க்கையின், செத்துக் கொண்டிருக்கும் யுக வாழ்க்கையின் முடிவுக்குரிய இலக்கணமும் சிந்தாந்தமுமாகவே மார்க்ஸீயவாதம் இருக்கிறது.

ஆனால், அந்த முடிவைக்கூட அதனால் தனியாகவே கொண்டுவர முடியாது.

காரணம், மனத் தளத்தில் இதுவரை ஒன்றோடொன்று போட்டியாகவும், அந்தப் போட்டி மூலமே ஒன்றுக்கொன்று உதவியும் பக்கபலமாகவும், வளர்ந்துவந்துள்ள இருபெரும் பார்வைப் போக்குகளுள் ஒன்றான லோகாயத வாதத்தின் இறுதிக் கோலமாக அது இருக்கிறதேயொழிய, மனத்தளத்தின் அடுத்த முக்கிய பார்வைப் போக்கான சமய சித்தாந்தப் பார்வையின் முடிவாகவும் அது இல்லை.

மார்க்ஸீய சித்தாந்தத்துக்கு விளக்கந்தர முயல்பவர்கள் மனத்தளத்துக்குரிய இந்த இரண்டு போக்குகளான லோகாயதவாதப் பார்வையும் (ஆயவநசயைடளைவ ழரவடழழம), சமயவாதப் பார்வையும் (ஆநவயிhலளiஉயட ழரவடழழம) இன்னும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் வேறுபட்டதாகவுமே காண்கின்றனர்: விளக்கின்றனர்.

அந்நிலையில், செத்துக் கொண்டிருக்கும் பழைய யுக வாழ்க்கை மனத்தளத்தையே அதன் இறுதி வளர்ச்சித் தளமாகக் கொண்டிருக்கும் வாழ்க்கையென்றால், அதன் சாவுக்குக்கூட மார்க்ஸீய சித்தாந்தத்தால் பூரணமாக இலக்கணம் வகுத்து வழிகாட்ட முடியாதிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

பழைய வாழ்க்கையின் முடிவைக் காட்டும் சித்தாந்தம், இதுவரை கண்ட பரிணாமத்தின் இறுதித்தளமாயுள்ள மனத்தளத்தின் இருபெரும் போக்குகளான லோகாயதப் போக்கையும் சமயப்போக்கையும் ஒரே வாக்கில் இணைக்கும் சித்தாந்தமாகவே இருக்கவேண்டும்.

இங்கு குறிப்பிடப்படும் யுகமாற்றம் என்பது சாதாரண சிறுகாலக் கட்ட மாற்றங்களைக் குறிப்பிடவில்லை. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்த பழைய யுகமாற்றங்களை ஒத்த ஒரு பெருங் காலமாற்றமே இங்கு குறிக்கப்படுகிறது. சாதாரண வரலாற்று மாற்றங்களுமல்ல.

மனித பரிணாம வளர்ச்சியில் இன்று ஒரு புதுப் பரிமாணம் ஏற்படப் போகிறது.

சடவுலகம் தோன்றி உயிர் தோன்றும் வரைக்கும் ஒரு காலப் பிரிவு பல கோடி வருடங்களைக் கொண்டதாக இருந்தது. அது சடத்தளம் உருவாகிய காலம். அது முழுமையடையும்போது உயிர் தோன்றுகிறது. ஆனால், உயிர் இனங்களின் வளர்ச்சியோடு சடத்தளத்திலும் திரும்பவும் வளர்ச்சி ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு தள வளர்ச்சியையும் ஒரு சுழல் வளர்ச்சியாகக் கொள்ளவேண்டும். சடத்தளச்சுழல் முழுமையடையும்போது உயிர்த்தளச் சுழல் தொடங்குகிறது. அந்த உயிர்த்தள வளர்ச்சி திரும்பவும் சடத்தளத்திலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு சுழலாக இருக்கிறது. உயிர்த்தள வளர்ச்சி மனத்தள வளர்ச்சியில் முழுமையடைகிறது. ஆனால், மனத்தள வளர்ச்சி என்பது முந்திய சடத்தளத்திலும், பிந்திய உயிர்த்தளத்திலும் திரும்பவும் ஒரு புது வளர்ச்சியைப் புகுத்திய சுழல் வளர்ச்சியாகவே இருக்கிறது. மனத்தளம் வளர்ச்சியடைந்துள்ள மனிதனின், சடமும் உயிரும் ஒரு புதுப் பரிமாணங்களைக் காட்டும் பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது. அடுமட்டுமல்ல, அப்படிப்பட்ட ஒரு புது வளர்ச்சியைக் காட்டும் மனிதன், தனது புறச் சூழலிலுள்ள சடத்தளத்தையும் உயிர் தளத்தையும் புதுப்போக்கில் மாற்றியுள்ளான். இன்றைய நாகரிக வளர்ச்சி, மனிதின் மன வளர்ச்சியானது புறச்சூழலுக்குரிய சடத்தளத்திலும் உயிர்த்தளத்திலும் மனத் தளத்திலும் ஏற்படுத்தியுள்ள பலகோண மாற்றங்களைக் காட்டுகிறது.

சடத்தளத்துக்குரிய குணந்தான் தாமத குணம். வேகமற்ற மந்தக் குணம்.

உயிர்த் தளத்துக்குரிய குணந்தான் ரஜத குணம். இச் செயல் வெளிப்படையாகத் தெரியும் குணம். அதனால் வளர்ச்சிமாற்றங்களும் துரிதமாகத் தூண்டப்படும் குணம்.

மனத்தளத்துக்குரிய குணந்தான் சாத்வீக குணம். உயிரின் இச்சைகளுக்குரிய வேகம் அறிவாலும், சீரிய சிந்தனையாலும் கட்டுப்படுத்தப்ட்டு அமைதி காணும் குணம். சீரிய செயலைத் தூண்டும் குணம்.

மனிதன் உடல், உயிர், மனம் ஆகிய மூன்று தளங்களுக்குமுரியவனாக இன்று இருக்கிறான். அதனால் அந்த மூன்று தளங்களுக்குரிய குணங்களும் அவனிடம் காணப்படுகின்றன.

இன்று மனத்தளம் முழுமையடைந்து மனதையும் கடந்த புதுத் தளம் மனித வளர்ச்சியில் வெளிப்படப் போகிறது. மனித இனமே உயிரினங்களின் உச்சப் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. அந்த இனத்திடமே அடுத்த தளம் வெளிப்படப் போகிறது.

மனதையும் கடந்த புதுத் தளம் புதிதாக உருவாக்கப் பட வேண்டிய ஒரு தளமல்ல. கடவுலகப் பார்வைக்குப் புலனாகாவிட்டாலும் ஏற்கனவே அது இருக்கிறது. அதற்கும் அப்பாற்பட்ட தளங்களும் இருக்கின்றன. இனி வரும் வளர்ச்சியில்தான் சகல மக்களும் அவற்றைக் கண்டு அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

இனி வரும் தளம் பேரறிவுத் தளமாகும். மனத்தளத்துக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான மயகோசத்துக்குரிய பேரறிவு. அது வெளிப்படும்போது அதன் மூலம் திரும்பவும் உடல், உயிர், மனம் ஆகிய தளங்கள் புது வளர்ச்சிக்குள்ளாகும் ஒரு சுழல் ஆரம்பமாகும். அந்தச் சுழல் வளர்ச்சிக்குரிய யுகத்தில் உடலுடன், உயிருடன், மனதுடன் அவற்றைத் தனது பேராட்சிக்குட்படுத்தும் பேரறிவு (விஞ்ஞானமயகோசம்) எல்லாவற்றிலும் பேராட்சி நடத்தும், அதாவது, புறச்சூழலும் அதற்கேற்றவாறு நிச்சயமாக மாற்றப்படும்.

பழைய யுகம் செத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கும், புதிய யுகம் பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது என்பதற்குரிய உண்மையான அர்த்தம் இதுதான்.

உடல், உயிர், மனம் ஆகிய மூன்று நிலைகளுக்கும் அவற்றுக்குரிய தாமத, ரஜத, சாத்வீக முக்குணங்களுக்கும் உரிய சுழல் முடிவடைந்து, அந்த மூன்று நிலைகளையும் முக்குணங்களையும் தனது பேராட்சிக்குட்படுத்தும் வெளிப்படையான பேரறிவின் ஆட்சிக்குரிய யுகச் சுழல் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது. நான்காவது நிலைக்கும் நான்காவது குணத்துக்குமுரிய யுகச் சுழல்.

பேரறிவுத் தளம்.

பேரறிவுக்குரிய, முக்குணங்களைக் கடந்த சத்திய குணம்.

மனத்தளத்தின் வளர்ச்சியும் அதன் சாத்வீக குணத்தின் எழுச்சியும் ஏற்பட்ட காலத்திலிருந்தே மனதனின் நாகரீக வளர்ச்சியும் சமயங்களின் எழுச்சியும் தோன்றின எனலாம்.

நாடோடிக் கூட்டங்களாய் வேட்டையாடித் திரிந்த பழைய கற்காலக் கட்டத்திலிருந்து நதிக்கரைகளில் நிலையாகக் குடியேறி விவசாயம் மேற்கொண்ட காலம் வரையுள்ள இடைப்பகுதியில்தான் மனிதன் பூரணமாகத் தன்னை வெளியுலக வாழ்க்கையில் மிருக நிலையிலிருந்து விடுவித்துக் கொண்டான். அந்த இடைப்பட்ட காலப்பகுதியில்தான் மனிதனுக்குரிய உண்மையான மனத்தளம் என்பது உருவாகிற்று. அந்தக் காலப்பகுதியில்தான் மனிதனுக்கும் அவனது மனத்தளத்துக்கு முரிய விசேஷ குணமான சாத்வீக குணமும் எழுச்சி பெற்றது.

ஆயுதங்களின் உதவியையும் பொருட்களின் பயனையும் உணர வந்த மனம், இன்றைய பொருள் அடிப்படையாகக் கொண்ட நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்டது. அதே மனத்தளத்தின் முதிர்ந்த குணமான எழுச்சியுற்ற சாத்வீக குணம் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை மனிதனிடம் வளர்த்தது.

அதனால் இந்த மனத்தள – சாத்வீக குண மனித நாகரிகத்தினதும் வாழ்க்கையினதும் பெரும் பார்வைப் போக்குகளாக இரண்டு போக்குகள் வளர்ச்சியடைந்துள்ளன.

முதலாவது பொருள் முதல்வாதம்.

இரண்டாவது, சமயத்தை ஏற்றுக்கொள்ளும் கருத்து முதல்வாதம்.

இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாக வளர்ந்து வந்திருந்தாலும், ஒன்றுக்கொன்று பக்கபலமாக நின்று உதவியுந்தான் வந்துள்ளன.

இன்று செத்துக் கொண்டிருக்கும் யுகம் மனத்தளத்துக்கு உரிய யுகமென்றால், மனத்தளத்துக்குரிய இந்த இரண்டு சித்தாந்hப் போக்குகளும் மாற்றமுற்றுத்தான் ஆகவேண்டும். அது மட்டுமல்ல, பிறக்கவிருக்கும் பேரறிவுப் பெருந்தளத்திலிருந்தும் அதற்குரிய பெருந்தத்துவப் போக்கிலிருந்தும் பார்க்கும்போது இந்த இரண்டு சித்தாந்தப் போக்குகளும் ஒரே தளத்துக்குரிய இரு சகோதரப் போக்குகளேதான்.

இன்று இந்த இரண்டையும் ஒன்றையொன்று எதிர்த்த போக்குகளாகப் பார்ப்போர் காலத்தை உணராதவர்களாகவே இருப்பர். பிறக்கவிருக்கும் பெருந்தத்துவத்துக்கு உருவங்கொடுக்க விரும்புவோர் முதலில் இந்த இரண்டும் ஒன்றையொன்று தழுவி முழுமை அடையும் கோலத்தைக் காணவேண்டும். அந்த முழுமையிலேயே அவற்றின் அழிவுக்கு அடுத்த பேரறிவுத் தளத்துக்குரிய பெருந்தத்துவத்தின் பிறப்புக்கும் வித்திருப்பதையும் கண்டு, அதைப் புத்திபூர்வமாகச் சிந்தனையாலும் செயலாலும் வளர்க்க வேண்டும்.


வர்க்கவியலும் குணவியலும்
- ஒரு பரிணாம வரலாற்றுக் கண்ணோட்டம்
“மெய்யுள்” உருவம் ஓர் எழுத்தாளனின் வித்துவச் செருக்கு, ஆணவம் தன்னை நிறுவுவதற்காகக் கண்டு பிடித்துள்ள பம்மாத்தல்ல. இன்று பல எழுத்தாளர்கள் மிகமிகச் செயற்கையாக உருவாக்கும் கற்பனாவாதக் கோலங்களில் இருந்து மெய்யுள் முற்றாக மாறுபட்டது. மெய்யுள் ஓர் எழுத்தாளனின் ஆணவ அறுப்பு முயற்சியின் உருவமாகும். இன்றைய தத்துவ வளர்ச்சியின் தவிர்க்க முடியாத இலக்கிய வெளிப்பாடாகும். அந்தத் தத்துவ வளர்ச்சி இன்றைய சித்தனை, செயல் சரித்திர வளர்ச்சியின் தவிர்க்க முடியாத குரலாகும். இன்றைய வரலாறு தனிப்பட்ட மனிதனதும், முழு மனித இனத்தினதும் அறிவுத் தளத்துக்குரிய தனிப்பட்ட ஆணவத்தையும் கூட்டு ஆணவத்தையும் அறுத்து, மனிதனைப் பேரறிவுத் தளத்துக்குள் இறக்கும் நிலையை எட்டியுள்ளது. மனிதனைப் பரவலாகப் பரம்பொருளான சத்தியத்தின் நேரடித் தரிசனத்திற்குத் தயார்ப்படுத்துகிறது. அதற்குரிய பெருந்தத்துவம் அறிவுத்தளத்திற்குரிய சகல சிறு தத்துவங்களினதும் சமயங்களினதும் கூட்டு ஆணவத்தைக் குலைக்கும் தரிசன விளக்கமாக இருக்கிறது. அந்தப் பெரும் தத்துவத்திற்குரிய இலக்கியம் அதேவேளையில் இலக்கிதத்தையே அழிக்கும் இலக்கியமாக மாற்ப்பட்டு, இது வரையில் இருந்த இலக்கியத்தின் கற்பனைக் கோலங்களை எல்லாம் குலைக்கும் கூட்டுத்தியானமாக வளர வேண்டியிருக்கிறது. (அது ஒரு பெரும் சத்திய இலக்கிய வளர்ச்சியைத் தோற்றுவிக்கும்.) அதனால் அதை எழுதும் எழுத்தாளனும் தனது ஆணவத்தை அறுத்து “நானை”க் கடந்தவனாகவே பேரறிவின் நேரடி இயக்கத்தைத் தன்மூலம் வெளிக்காட்ட விட்டுக்கொடுப்பவனாகவே இருப்பான்@ இருக்கவேண்டும். அந்த வகையில் புதிய மெய்யுளுக்குரிய உருவம், உள்ளடக்கம், மொழி நடையெல்லாம் கற்பனை அறுப்புக்கம் ஒழிப்புக்குமுரிய சாதனமாகவும் சாதனையாகவுமே நிற்கும். (‘போர்ப்பறை’ யில் “கலைபற்றிய ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு”). எனவே, மெய்யுள் இன்றைய தவிர்க்க முடியாத யுவெi இலக்கியம். யுவெi இலக்கியம் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

எனவே, இவற்றை விளக்க இன்றைய பெருந்தத்துவத்தின் சில வெளிக்கோடுகளையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.

பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற பாகுபாடு இன்று விஞ்ஞான ரீதியாகத் தன்னை நிறுவ முடியாத குருட்டுப் பார்வையாகி விட்டது. சடம், உயிர், நினைவு (எண்ணம்) என்பவை வௌ;வேறு தளத்தோற்றங்களாக இருப்பினும், அடிப்படயில் அத்வைதக் கலப்பையே காட்டுகின்றன என்பதை விஞ்ஞானம் இன்று மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டுள்ளது. சடத்தை ஆராயும்போது, சடமானது சடத்தின் உருவத்தைக் கடந்த சக்தி ஒளி அலையாகவும் அவற்றிக்கு அப்பாற்பட்டதாகவும் மாறுகிறது. அப்படியென்றால், சடத்தை அல்லது பொருளை முதலாக எப்படிக் கணிப்பது? உண்மையில் சடம் (பொருள்) என்பது நிலையான ஓர் அடித்தளமல்ல.

இன்றைய மனித நினைவு நிலையின் உச்ச வளர்ச்சி (பரிணாமம்) சடத்தைக் கடப்பதோடு மட்டும் நிற்காது முழுச் சடத்தையும் கரைத்து, அதன் நிலையான நிரந்தர அடித்தளத்தில் நிறுவலாம் என்றும், அந்த நிலையான சடத்தின் அடித்தளம் மிகப் பிரமாண்டமான பேர்ஞான (சாதாரண நினைவு நிலையைக் கடந்த) தளமாக இருக்கும் என்ற கோட்பாட்டை விஞ்ஞானம் இன்று மிகத் துணிச்சலாக முன் வைக்க வந்துள்ளது. (ஆர்தர் சி. கிளார்க்கின் 2001 ஓடிசி)

இந்த நிலையில் பொருளை முதலாகக் கொள்வது எப்படி? இன்றைய சாதாரண மனிதன் அறிந்த கருத்தை அல்லது அறிவு நிலையை அல்லது நனவு நிலையை முதலாகக் கொள்வது எப்படி?

இரண்டும் பிழையே. பிழை என்பதைவிட இரண்டும் பாதிப் பாதி விளக்கங்கள் என்று சொல்வதே சரி. இரண்டையும் இணைத்த அதே சமயம் இரண்டையும் கடந்த புதிய பார்வை தேவைப்படுகிறது. அதுவே மெய்முதல்வாதம்.

அந்தப் புதிய பார்வையைப் பழைய சமயங்கள் ஏற்கனவே முன் வைத்துவிட்டன.

பிரம்மமே சக்தி. சக்தியே பிரம்மம்.

முழுப் பிரபஞ்ச சக்தியும் அதன் உருவ வெளிப்பாடுகளும் அடிப்படையில் மாற்றமற்ற பிரம்மமே (எல்லையற்ற நித்திய பேர்ஞான நிலையே) என்று வேதாந்தம் கூறுகின்றது.

சடத்திற்கும் உயிருக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்டதாகவும், அவற்றை இணைப்பதாகவும் நிற்கும் அந்த நித்திய பேர்ஞான விடுதலை நிலையை அனுபவித்தவாறே, அதில் நின்றவாறே, அந்த அனுபூதி மகான்கள் கூறியுள்ளனர். அவர்கள் மாபெரும் விஞ்ஞானிகள்.

அந்த நிலையை இன்றைய விஞ்ஞானிகள் இன்னும் அனுபவிக்கவில்லை. அந்த நிலையை அளக்கும் கருவிகளோ மனப்பக்குவமோ அவர்களிடம் இல்லை. இருப்பினும், அந்த நிலையை யூகிக்கும் கட்டத்திற்கு அவர்கள் வந்துவிட்டனர். அந்த யூகத்தை எதிர்காலத்திற்குரிய கோட்பாடாகவும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தனிப்பட்ட சமய ஸ்தாபனங்களையும் அவற்றின் தவறான பழக்கங்களையும் ஒதுக்குவது வேறு. அவற்றுக்குக் காரணமாயிருந்த சடத்தையும் நினைவையும் தாண்டிய பேர்ஞான நிலையை ஒதுக்குவது வேறு. பின்னதை ஒதுக்க முடியாது. அது நிரந்தரமானது. மார்க்ஸ் அதையுமே அபின் என்று ஒதுக்கிவிட முயன்றார். ஆனால், இன்றைய விஞ்ஞானம் அந்த அடித்தளப் பேர்ஞான விடுதலை நிலையை நோக்கியே அடியெடுத்து வைக்க முயல்கிறது.

மனித சமூகத்தின் வளர்ச்சியை அறிய ஆதிப்பொதுவுடமை நிலையிலிருந்து சரித்திரத்தை ஆராய்ந்தால் போதாது என்றும், அதன்மூலம் பெறப்படும் உண்மைகள் இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும் இன்றைய விஞ்ஞானி உணரத் தலைப்பட்டுள்ளான். மனித சமூகத்தின் ஆரம்ப நிலைக்கும் முந்திய உயிரின பரிணாமத்தின் வரலாற்றிற்குரிய இயக்கவியல் என்ன? அதற்கும் முந்திய சடநிலை வளர்ச்சிக்குரிய இயக்கவியல் என்ன? சடத்துக்கும் முந்திய நிலையின் இயக்கவியல் என்ன?

இன்றைய சமூகவியல் ஆராய்ச்சி, மார்க்ஸ{ம் ஏங்கல்சும் கருதியதுபோல் வெறும் பொருளியல் அரசியல் ஆராய்ச்சி மட்டுமல்ல. அது அடிப்படையில் உயிரியல், பௌதிகவியல் ஆராய்ச்சியாகவும் அதற்கு அப்பாற்பட்ட ஆன்மீக விசாரமாகவும் உருமாற வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. மார்க்சையும் ஏங்கல்சையும் விட ……….. போன்றவர்கள் இன்றைய தேடலுக்கு உருவங் கொடுப்பவர்களாவர். அந்தத் தேடல் திரும்பவும் பழைய நான்கு முக்கிய சமயங்களினதும் அடிப்படையை உணரும் விஞ்ஞான – ஆன்மீகத் தேடலாகவே இருக்கமுடியும். ஒருவகையில், மார்க்சீய பொதுவுடமையும் அதற்குரிய அகவிடுதலையும் ஆன்மீக விடுதலையேதான். ஆனால், உற்பத்திச் சாதனங்களையும் அதற்குரிய உறவு முறைகளையும் மாற்றுதலால் மட்டும் அந்த அகவிடுதலை வரப்போவதில்லை. அப்படி வரலாம் என்று நினைப்பது சடம், உயிர் மனத் தளங்களுக்குள்ளேயே அவற்றிற்கு அப்பாற்பட்ட விடுதலையைக் காணலாம் என்று கனவு காண்பதாகும். அது இன்றைய விஞ்ஞானத்துக்கே முரணானது. சடத்தின் தளமே நிலையற்று வழுவிக்கொண்டோடும் போது, நிரந்தர அகவிடுதலையை வெறும் உற்பத்திச் சாதன – உறவு முறையால் மட்டும் எப்படி நிரந்தரமாக நிறுவலாம்?

எனவே, புதிய பெருந்தத்துவம் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற பாகுபாடுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பொருளைம் நினைவையும் கடந்த சத்தியம் அல்லது உண்மை நிலை சத்தாகவும் சித்தாகவும் இருக்கிற படியால் பாகுபாட்டுக்கு இடம் இல்லை. புதிய தத்துவம் அடிப்படையில் ஆன்மீகத் தத்துவமாகவே இருக்கும். அதனால் இதுவரை நிலவிய சமயங்களினதும் அடிப்படை ஒருமை நிலைநாட்டப்படும். சகலதும் சத்தியமே என்ற அடிப்படை உண்மை சகல வேலைகளிலும், சகல சமூக இயக்கங்களிலும் தெரியவரும்.

அடிப்படைச் சத்திய அத்வைத நிலையைச் சகலதிலும் தெரிய வைப்பதே புதிய பெருந்தத்துவத்தின் நோக்காக இருக்கும். சகலதிலும் எழுச்சியடைவது சத்தியமே. அந்த எழுச்சியையே “சர்வோதயம்” என்பது குறிக்கின்றது.

ஆனால், இந்தத் தத்துவத்தின் பூரணமான உருவம் இனிமேல்தான் வரவேண்டியுள்ளது. மனித சமூகத்துக்குரிய வரலாற்றை சடம், உயிர், மனம் முதலிய தளங்களின் தோற்றங்களின் வரலாற்றோடு இணைத்துப் பார்க்கவும், ஒவ்வொரு கட்டத்திலும் வரலாற்று இயக்கம் எவ்வாறு இருந்தது என்பதனையும், இனிமேல் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதையும் ஆன்மீக – விஞ்ஞான ரீதியாக விளக்க வேண்டியுள்ளது. சகல கோட்பாடுகளையும் மதிப்பீடுகளையும் தகர்த்துக்கொண்டு எழும் ஒரு பிரமாண்டமான சிந்தனை – செயல் எழுச்சிக்குரிய ஒரு தத்துவ உருவமாக அது அமையப் போகிறது.

குறிப்பாக வர்க்கவியல் என்பது அற்பமான விடயமாகிவிடும். இனிமேல் குணவியல்தான் முக்கியத்துவம் பெறும், குணங்களைப்பற்றிக் கூறிய சமயங்கள் எவற்றின் அடிப்படையில் அவை வந்தன என்று கூறவில்லை. உண்மையில் அவை பரிணாமக் கட்டங்களுக்குரிய குணங்களாகும். சடநிலைவெளிப்பாட்டின் குணமே தாமத குணமாகும். (சடத்துக்குரிய மந்தம் - அசைவின்மைப் பண்பு). உயிர்நிலை வெளிப்பாட்டின் குணடீம ரஜதகுணமாகும் (உயிருக்குரிய வேகம், அசைவுப் பண்பு), மனநிலை வெளிப்பாட்டின் குணமே சாத்வீக குணமாகும். (மனதுக்குரிய பண்புகளான அறிவு, அன்பு, பண்பாடு இவற்றைக் குறிப்பது). மனித வரலாறு இந்தக் குணங்களைக் கடக்கும் பரிணாமத்தின் வரலாறாகும். குணங்களுக்குட்பட்ட உருவங்களிலும், தளங்களிலும் குணங்களைக் கடந்த சத்தியத்தை வெளிப்படுத்த முயலும் வரலாறாகும். குணங்களைக் கடக்கும் அம்முயற்சி சமூகமளவில் நடக்கும்போது படிப்படியாக சமூக எழுச்சியையும் அதற்குரிய போராட்டங்களையும் காட்டுகிறது.

பழைய இந்து மரபின் சாதிப் பிரிவுக்கள் எந்த அடிப்படையில் நிறுவப்பட்டன என்பதற்குரிய பூரண விளக்கங்கள் இதுவரை காட்டப்பட்டதில்லை. ஆனால், உண்மையில்பழைய நான்கு வர்ணங்களும் சமூகத்தின் அளவில் மனிதன் இலகுவாகக் குணங்களைக் கடந்து வளர்வதற்கு வகுக்கப்பட்ட பிரிவுகள்தான். தனிப்பட்ட மனிதன் தன்னளவில் குணங்களைக் கடந்து வாழ்வதற்கு நான்கு ஆச்சிரமங்கள் இருந்தன. பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம். அதேபோல் சமூகமளவில் பரிணாம முன்னேற்றத்திற்காக வகுக்கப்பட்ட பிரிவுகள்தான் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்களாகும்.

முழு உயிரினங்களினதும் வளர்ச்சியை விஞ்ஞான ரீதியாகக் கணக்கெடுத்து, அந்தக் கணக்கெடுப்புக்கு ஏற்ப மனித பரிணாமத்தைச் சத்திய உச்சத்தை நோக்கித் துரிதப்படுத்தி வளர்ப்பதற்காக, உருவாக்கப்பட்டவையே அந்த ஆச்சிரம – வர்ணப்பாகுபாடுகளாகும். மறுபிறப்புக் கொள்கையோடு அவை பொருத்தப்பட்டு, “தத்துவம் ஆசி” என்ற இலட்சிய நிலையைச் சதா முன்வைத்து சமூக இயக்கமே பிரமிக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறது.

உயிரினம் தனது பரிணாமப் பிரயாணத்தில் நனவு நிலைக்குரிய மனத்தளத்தில் ஏறியபோது மனித நாகரீக வளர்ச்சியும் ஆரம்பமாகிறது எனலாம். பழைய கல்லாயுத காலம் முதல் நதிக்கரை நாகரீக எழுச்சிவரை மனித இனம் அந்த மனத்தளத்துக்கு ஏற நடத்திய தயாரிப்புக் காலமே மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட கலப்புநிலை. அந்தக் கலப்பு நிலைக்குரிய மனநிலையை உண்மையான மனித மனநிலையாக – உண்மையான மனத்தளத்துக்குரிய நிலையாகக் - கொள்ளாமல் மிருக – மனித மாற்றுவலயத்துக்குரிய ஆதி மனநிலையாகவே கொள்ளவேண்டும்.

அதற்குப்பின் வந்த எழுச்சியில் மனித அறிவுநிலை உண்மையான மனித மனத்தளத்துக்கு ஏறியபோது நான்கு முக்கிய வர்க்க வித்தியாசங்களைக் காட்டிற்று.

முதலாவது, மனம் மனத்தளத்திலேயே லயித்த நிலை. மனமானது தன்நினைவின் தளத்திலேயே அதாவது அறிவிலேயே அதிகம் வாழ்ந்தநிலை. அதனால் அது உண்மையான மனத்தளத்திற்குரிய சாத்வீக குணத்தில் வாழ்ந்தநிலை. அன்பு, அறிவு, அகிம்சை மேலிட்ட நிலை. மனத்தளத்துக்கும் அப்பாற்பட்ட பேரறிவுத் தளத்தின் எல்லைகளையும் தொட்டும் ஊடுருவியும் பாய்ந்த நிலை. பேரறிவுக்கசிவும் மெல்ல மெல்ல உட்புகுந்தநிலை.

அந்த நிலைக்குரிய குணம் சாத்வீக குணமென்றால், அந்தக் குணத்துக்குரியதாகச் சமூகத்தில் தெரிந்த வர்க்கமே பிராமண வர்ணமாகும். மனித மனம் மனத்தளத்தில் வாழ்ந்தவாறு அதற்கப்பாற்பட்ட பேரறிவுத் தளத்துள்ளும் ஊடுருவ முயன்ற போக்கை வெளிப்படுத்திய வர்க்கம்.

மனித மனம் மனத்தளத்தில் லயித்து அதற்குரிய சாத்வீக குணத்தில் நிற்காமல் உயிர்த் தளத்துக்குரிய ரஜத குணத்துக்குட்பட்டு நின்ற நிலை இரண்டாவது. உயிர்த்தளத்தின் வேகம், கோபம், ஆசை ஆகிய ரஜத குணப்பண்புகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த மனித மனநிலையைப் பிரதிபலித்த வர்க்கமே வர்ணமாகும். அது இரண்டாவது வர்க்கம்.

மூன்றாவதாக, மனித மனமானது உண்மையான மனத்தளத்துக்குரிய (மன வளர்ச்சியற்ற உயிர்களுக்குரிய) ரஜத குணத்திலும் லயிக்காது, உயிரினதுக்கு முந்திய சடத்திற்குரிய குணமான தாமதகுணத்தில் நின்றபோது அது மந்தப் போக்காகவும் சடமான பொருட்களில் உள்ள ஆசையாகவுமே வெளிப்பட்டது.

சமூகத்தில் அதை வெளிப்படுத்திய வர்க்கமே வைசியவர்க்கமாகும்.

மிருக – மனித மாற்று வலயமான ஆதிக் கலப்பு நிலையில் இருந்து (கல்லாயுத காலம் முதல் நதிக்கரை நாகரீகம் வரை) உண்மையான மனத் தளத்துக்கு எழச்சியுற்ற மனித குலம் இந்த மூன்று மனப்போக்குகளுடன் இன்னுமொன்றைக் காட்டிற்று.

மனத் தளத்துக்கு மனிதகுலம் எழுச்சியுற்ற காலத்துக்குப் பின்பும் ஆதி – மிருக மனித மாற்று வலயத்துக்குரிய இடைத்தளத்தில் நிற்கும் மிருக – மனித கலப்புப் போக்கு. மனித மனமானது சாத்வீக, ரஜத, தாமத குணங்களில் லயிக்காது அவற்றுக்கும் கீழ்ப்பட்ட ஆதி இடைத்தள இயல்பைக் காட்டும் நிலை. அந்த மிருக – மனித இடையறிவுக்குரிய சமூக வர்க்கமே சூத்திர வர்க்கமாகும்.

பழைய பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர சமூக வர்ணங்களின் அர்த்தங்கள் இவைதான். இவை உண்மையில் பிறப்பை அடிப்படையாகக் கொண்டவையல்ல. இவை குணங்களை அடிப்படையாகக் கொண்டவை. உடலை அடிப்படையாகக் கொண்டவையல்ல. மனத்தளங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

குணமும் நினைவுகளும் நிலையானவையல்ல. மாறுபடக்கூடியவை. சடம், உயிர். மனம் ஆகிய பெருந்தளங்களே மாறிக்கொண்டிருக்கும் பெருந்தளப் போக்குகளாக இருக்கும் போது மனத்தளத்தின் நினைவுகளும், அவை வெளிப்படுத்தும் குணச்சாயல்களும் எப்படி மாற்றமுறாமல் இருக்கும்?

அவை மாறுபவை, அதுமட்டுமல்ல, புத்திபூர்வமாக மாற்றப்பட வேண்டியவை. அவற்றைக் கடந்து மாற்றமற்ற சத்திய நிலையை அடையவேண்டும் என்பதே அந்த வர்ணங்களை வகுத்த சமூக மரபின் நோக்கமாகும்.

ஒரு மனிதன் தனது ஒரு பிறப்பிலேயே வர்ணங்களைக் கடக்க வழிவகைகள் இருந்தன. அவை பிரமச்சாரிய, கிரகஸ்த, வனப்பிரஸ்த, சந்நியாச ஆச்சிரமங்களாகும். சந்நியாசி குணங்களைத் தாண்டியவன். அதனால் சகல வர்ணங்களினதும் வழிபாட்டிற்குரியவன். மனத்தளத்தையும் தாண்டிப் பேரறிவுக்குள் நிற்பவன்.

பிறப்பால் கட்டுப்படுத்தப்படாத இந்த வர்ணாசிரம வழிவகைகள் பிராமண, சத்திரிய வர்க்கங்களுக்குமட்டுமே உரியவை என்றும் குற்றஞ் சாட்டப்படலாம். ஆனால் மறுபிறப்பு, கர்மமுயற்சி என்ற கொள்கைகளின் அடிப்படையிற் பார்க்கும் போது, சத்திய விடுதலைக்குரிய குணப்பக்குவத்தைக் கொண்டவன் அதற்குரிய சரியான வர்ணத்திலேயே பிறப்பான் என்பதையும் மறுக்க முடியாது.

இருப்பினும், சூத்திரன் ஒருவனுக்குக்கூட உண்மையான விடுதலையை விரும்பி, வர்ணக் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பி ஓடி சந்நியாசியாக வாழும் துணிவும் தேடலும் இருந்திருந்தால் அவனுங்கூட சகல வர்ணங்களினதும் மரியாதையையும் ஆதரவையும் பெற்றுத்தான் இருப்பான்.

எனவே, தனிப்பட்டவனின் விடுதலைக்குச் சதா நேரமும் வழி இருந்தது. பிறப்பும் அதற்குரிய உடலும் ஒரு தடையல்ல. ஆனால், தனிப்பட்டவனைப்போல் முழுச் சமூகமும் வளரவேண்டியிருந்தது. முழுச் சமூகத்தையும் ஒரு தனி மனிதனாக எடுத்தால், அந்தச் சமூகம் தாண்ட வே;ணடிய பிரமச்சாரிய, கிரகஸ்த, வனப்பிரஸ்த, சந்நியாச நிலைகளே சூத்திர, வைசிய, சத்திரிய, பிராமண வர்ணங்களாகும். முழுச் சமூகத்தையுமு; பிராமண நிலைக்கு உயர்த்துவதும் பேரறிவுக்குத் திசை திருப்புவதுமே பிராமண வர்க்கத்துக்குரிய தர்மமாகும்.

தனி மனிதனைப்போல் முழுச் சமூகமும் அவ்வாறு வளரவே செய்தது@ செய்கிறது.

பிராமண உச்சத்தை நோக்கிச் சத்திரிய வர்க்கம் எழுச்சியுற்றது. சமூகத்தினதும் தனி மனிதனதும் வளர்ச்சிக:குத் திசை காட்டவும், மனத் தளத்துக்கும் அப்பாற்பட்ட பேரறிவுத் தளத்துக்கு வழிகாட்டவும் பிராமண வர்க்கத்தைப்போல் சத்திரிய வர்க்கமும் உரிமை பெற்றது. அந்த எழுச்சி சத்திரிய வர்ணத்துக்குக் கீpழ்ப்பட்ட வர்ணங்களின் வளர்ச்சியையும் துரிதப்படுத்தியது. வர்ணப் பிரிவுகளின் எல்லைகளிலும் முதல் தகர்ப்பை ஏற்படுத்திற்கு. (புத்தர் – மோஸஸ் காலத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்)

அதுபோல் அடுத்ததாக வைசிய குலம் பிராமண நிலைக்கு எழுச்சியுற்றது. ஒரு காலத்தில் பிராமண வர்க்கமும் பின்பு பிராமண – சத்திரிய குலங்களும் சமூகத்தில் பெற்றிருந்த அதிகாரத்தையும் தகுதியையும் வைசியரும் பெற்றுக்கொண்டனர். அவர்களின் எழுச்சி சூத்திரரின் எழுச்சியையும் துரிதப்படுத்துகிறது. அதேபோல், முந்திய வர்க்கங்களின் எல்லைகளை இன்னும் தளர்த்திக் கலக்க வைத்தது. (கிறிஸ்து முதல் முகம்மது ஊடாக ராமகிருஷ்ணர் வரையுள்ள காலம்.)

இன்று சூத்திரர் எழுச்சியடைந்துவிட்ட காலமாகும். இராமகிருஷ்ணருக்குப் பிந்திய இந்த இருபதாம் நூற்றாண்டு, மனித வரலாறு சமூகத்தின் சகலரும் பிராமணராகிய வரலாற்றையே குறிக்கிறது எனலாம். வர்ண எல்லைகள் முற்றாகக் கலந்து கரைந்துவிட்டன. சகலரதும் மனமும் மனத் தளத்திலேயே லயிக்கவும், அதன் சாத்விக குணத்திலேயே நிற்கவும், அதற்குரிய அறிவு வீச்சைக் காட்டவும் ஆரம்பித்துள்ள காலம், பேரறிவுத் தளமான அடுத்த பெருந்தளத் தாக்கத்தின் அருட்டலைச் சகலரும் ஏதோ ஒரு வகையில் உணரத் தொடங்கியுள்ள காலம்.

மனித குலம் முழுவதும் மனத் தளத்தில் ஏறி, அதற்குரிய உண்மையான சாத்வீக குணத்திலேயே (அறிவு, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடைமை) பெரம்போக்காக லயிக்கத் தொடங்கி விட்டதென்றால், மனத்தளத்துக்கு அடுத்த பெருந்தளமான பேரறிவுத் தளத்துக்குப் பரிணாமம் ஏறத் தொடங்கும் காலமும் வந்துவிட்டது என்ற முடிவு தர்க்கரீதியானது.

அதை உணரும்போதே அதற்குரிய தயாரிப்பும் தொடங்கிவிடுகிறது.

அந்த உணர்வையும் தயாரிப்பையும் ஆரம்பித்துவைக்கிறது சர்வமத சங்க – பூரண சர்வோதய இயக்க ஸ்தாபகரான பகவான் ஸ்ரீலஸ்ரீ நந்தகோபாலகிரியின் காலம்.

உடல் - மனத் தளங்களுக்கு இடைப்பட்ட மிருக – மனித மாற்று வலயமான இடைத்தளக் கலப்புக் காலம் ஆதிமனித காலமாக இருந்தது. உயிர்த் தளத்துக்குரிய கலியுகம் முடிந்து, மனத் தளத்துக்குரிய சத்திய யுகம் ஆரம்பித்த மாற்று வலயக்காலம் வரலாற்றில் கல்லாயுதம் முதல் நதிக்கரை நாகரீகம் வரை நீடித்த காலம்.

அந்தக் கலப்புக் காலத்தைப்போல் புதிய தளத்துக் குரிய புதிய சூழலில் மனத்தள – பேரறிவுத்தள மாற்று வலயக் கலப்புக் காலம் இப்போ ஆரம்பித்துள்ளது. மனத்தளத்துக்குரிய கலியுகம் முடிந்து பேரறிவுக்குரிய சத்திய யுகம் ஆரம்பிக்கும் மாற்று வலயக் காலம். மனித – பெரு மனிதக் கலப்பு, மனித – தேவக் கலப்பு, அறிவு – பேரறிவுக் கலப்பு.

இது அடுத்த பெருந்தள எழுச்சிவரை நீடிக்கும். ஆனால், முன்பைப்போல் இது நீண்ட காலமாக இருக்காது. மனித அறிவு மூலம் பரிணாமப் போக்கானது தன்னையே புத்தி பூர்வமாக உணர்ந்துகொண்டு, பேரறிவுக்குத் தன்னை அர்ப்பணித்துச் சரணாகதியடைந்து நடக்கும் தயாரிப்பானது மிக மிகச் சுருக்கமாகவே இருக்கும்.

அந்தத் தயாரிப்புக்குரிய தத்துவமே சர்வதம – சர்வோதயமாகும் அல்லது பூரண சர்வோதயமாகும். அடுத்த பெருந்தளத்துக்குரிய எழுச்சி சகல துறைகளிலும் அதன் மூலமே ஆற்றுப்படுத்தப்படும்.

பரிணாமம் -
அதன் தூக்க, கனவு,
விழிப்பு, தூரிய நிலைகள்
திரியில் நெருப்பேறுகிற காலம். மனதை அமுக்கிய தாமதப் பாறை பிளவுபட்டுச் சிதறுகிற காலம். அந்தப் பாறையில் ஒட்டி வாழ்ந்த ரஜத, சாத்வீக, குணங்கள் தகர்ந்தெறிபடுகிற காலம்.

அது வந்துவிட்டது.

கற்பாறையைப் பிளக்கத் திரியில் நெருப்பேற்றி விட்டுத் தொழிலாளி கத்துவான்.

“கல்பொறே…..!”

பாறைவெடி!

பறை வெடிக்கப்போகிறது. தயாராகுங்கள் என்ற கூப்பாடு. மனதை அமுக்கியுள்ள முக்குணங்களைத் தகர்த்தெறிவதற்குக் காலங்காலமாக வந்த சமய ஞானிகளும் இவ்வாறுதான் எச்சரித்து வந்துள்ளனர். காலங்காலமாய்த் திரியில் நெருப்பேறி வந்துள்ளது. இன்று பாறை வெடிக்கப்போகிறது.

அந்த எச்சரிக்கைக் குரல்களுள் இன்று ஒன்றுமட்டும் அதிக வலுப்பெற்றுக் கேட்கிறது. அது யேசுவின் குரல் -

தேவராச்சியம் அண்மித்துவிட்டது, தயாராகுங்கள்!

உண்மையில் தேவராச்சியம் என்ற ஒன்று ஏற்படுமா? தேவராச்சியம் என்றால் எது?

அதை யேசு தெளிவாகச் சொன்னதில்லை. ஆனால், அதற்காக அது விளங்காமல் போனதுமில்லை. தேவராச்சியம் என்பது ஞானராச்சியமேதான். அது அன்றும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. என்றும் இருக்கும்.

ஆனால், இன்னும் அது எல்லாருக்கும் உரியதாக, பொது ராச்சியமாக, ஞானப் பொதுவுடமையாக வரவில்லை. இனித்தான் வரவேண்டும். இதுவரை தனிப்பட்ட சிலர் அனுபவித்த ஞான அனுபவம் இனிமேல்தான் சகலருக்குமுரியதாக வரவேண்டியிருக்கிறது. அவ்வாறு சகலருக்குமுரியதாக வளரும் சர்வோதயக் கட்டத்தைத்தான் தேவராச்சியம் இங்கு நிறுவப்படும் கட்டமாகக் கூறலாம். யேசுவின் கூற்றின் உண்மையான அர்த்தம் அதுதான்.

யேசுவின் காலத்தவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம்பியது இன்று நடைமுறையில் வரப்போகிறது. அவர்கள் கண்ட கனவு நனவாகும் கட்டம் இன்று வந்து கொண்டிருக்கின்றது.

அல்லது அப்படிக் கூறுவதுதான் கனவோ? எப்படி இதை நம்புவது? அப்படியும் சில கேள்விகள் இங்கு எழலாம்

ஆனால், உண்மையில் இனித்தான் கனவு அழியும் காலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை விழிப்புநிலை என்றும், விஞ்ஞானநிலை என்றும், நாம் பெருமிதப்பட்டுக் கூறிவந்த காலந்தான் உண்மையில் தூக்கக் கனவுக்காலம். கூடிப்போனால் கனவு – விழிப்பு ஆகிய மூன்று நிலைகளைத் தாண்டிய உண்மையான பேர்விழிப்பாக, ஞானவிழிப்பாக, இல்லை. இனிமேல்தான் கனவு அழிந்து உண்மையான பேர்விழிப்பு வரப்போகிறது.

தூக்கம், கனவு, விழிப்பு, தூரிய என்று நான்கு நிலைகள் இருப்பதாக வேதசாஸ்திரங்கள் கூறுகின்றன. தாமதம், ரஜஸ், சாத்வீகம் ஆகிய முக்குணங்களுக்கு உட்பட்ட சாதாரண மனிதன் தூக்கம், கனவு, விழிப்பு ஆகிய மூன்று நிலைகளுக்கு அப்பாற்போக முடியாதவனாகவே வாழ்கிறான் என்றும், ஞானிமட்டுந்தான் அவற்றையும் கடந்த தூரிய என்ற சத்திய ஞானநிலைக்குரியவனாக வாழ்கிறான் என்றும் சாத்திரங்கள் கூறுகின்றன.

என்றும் இருப்பதும், எல்லாமாக இருப்பதும் – இருப்பு – பேரறிவு – ஆனந்தம் என்ற சத் - சித் - ஆனந்த பிரம்மமே தான். அதை உணர்ந்த ஞானவிழிப்பு நிலைதான் தூரியநிலையாகும். அதை உணர்ந்து அதுவாகவே இருக்கும்நிலை.

தனிப்பட்ட ஞானிகள் அந்தத் தூரிய நிலையை ஏற்கனவே தொட்டுவிட்டனர். உபநிடத ரிஷிகள், புத்தர், யேசு, முகம்மது ஆகியோரும் அவர்களைப் பின்பற்றிய ஞானிகளும் ஏற்கனவே அந்தத் தூரிய நிலையை அனுபவித்துவிட்டனர். ஆனால், மனித இனம் முழுதும் பரவலாக அதை இன்னும் தொட்டதில்லை. இனித்தான் அதைத் தொடக்கூடிய கட்டம் வருகிறது. அதைத் தவிர்க்க முடியாது.

1. உலகத்தின் பரிணாம வளர்ச்சியில் சடநிலையாய் இருந்த காலத்தையும் கட்டத்தையும் தூக்கம் எனலாம். தாமத குணத்தின் ஆட்சிக்காலம். சடராச்சியம்.

2. உயிரினம் வளர்ச்சியுற்ற கட்டத்தை உலக வளர்ச்சியின் கனவுக்காலம் எனலாம். ரஜத குணத்தின் ஆட்சிக்காலம். மிருகராச்சியம்.

3. மனித மனம் தோன்றிய காலத்தில்தான் உயிரினத்திற்கு விழிப்பத் தோன்றிற்று எனலாம். சாத்வீக குணத்தின் ஆட்சிக்காலம், சமயம் முதல் விஞ்ஞானம் வரை வளர்ந்த காலம். மனித ராச்சியம்.

4. இனிமேல் பரிணாமப்போக்கில், அதாவது மனதையும் அதன் சாத்வீக குணத்தையும் தொட்டுவிட்ட மனித இனத்தின் பரிணாமத்தில், தூரியநிலை வளர்ச்சியுறும் கட்டம் வந்துவிட்டது. மனதையும் கடந்த ஞானவிழிப்பான தூரியநிலை முக்குணங்களையும் கடந்த சத்திய நிலையாகும். உடலோடும், மனதோடும், உயிரோடும் மனிதன் இனிமேல் சத்தியஞான உணர்வையும் தனது சகஸநிலையாக மாற்றிக்கொள்ளப்போகிறான். அதன் ஆட்சியே தேவராச்சியம் மனதின் பரிணாமக்சுழலுக்குரிய கலியுகம் முடிந்தபின் மனதையும் தாண்டிய சுழலுக்குரிய சத்தியயுகம் பிறக்கப்போகிறது. அதுவே கிறிஸ்து குறிப்பிட்ட தேவராச்சியமாகும்.

இது கனவுமல்ல கற்பனையுமல்ல. தர்க்கரீதியான பரிணாம வளர்ச்சி பற்றிய விஞ்ஞான வியாக்கியானமாகும். இந்த நிலையை இன்றைய உயிரியல் விஞ்ஞானியான ஜுலியன் ஹக்ஸ்லி மனித நிலையைத் தாண்டிய நிலை என்கிறார் (வுசயளொர அயnளைஅ). கிறிஸ்தவ விஞ்ஞானியான ரேஹா (வுநiடாயசன) மனிதன் கிறிஸ்துவாகும் நிலை என்கிறார் (ஊhசளைவழபநநௌளை). காந்தி ராமராச்சியம் என்கிறார். ஆனால், அதைத் தன்னளவிற் பூரணமாக அனுபவித்து. அதற்குரிய விஞ்ஞான ரீதியான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் பிரமிக்கவைக்கும் கலைச்செறிவோடு போட்டுள்ளவர் இதுவரை அரவிந்தர் ஒருவரேதான். இன்று மார்க்ஸை ஏற்றிப்போற்றுவதுபோல் அரவிந்தரை. மார்க்ஸைவிட்ப் பன்மடங்கு பெரிதாக, ஏற்றிப்போற்றி இயக்கம் நடத்தும் காலம் வந்துகொண்டிருக்கிறது. இந்தப் புதிய பரிணாம நிலையை அரவிந்தர் பேர்மனிதப் பிறப்பு என்றும், பேரறிவின் இறக்கம் என்றும் கூறுகிறார்.

அது அண்மித்துவிட்டது@ தயாராகுங்கள்!

அதைத் தவிர்க்க முடியாது. தடுக்க முடியாது, தாமதப் படுத்தவும் முடியாது. பேரறிவின் பாய்ச்சலை யார் தடுக்கலாம்? யார் எதிர்க்கலாம்? அதனிடம் மனித இனம் பூரணமாகத் தன்னை அர்ப்பணித்துச் சரணாகதியடைவதே சரியான செயலாகும்.

எப்படிச் சரணாகதியடைவது? எப்படித் தயார்ப்படுத்துவது?

யார் சரணாகதியடைவது? யார் தயார்ப்படுத்துவது?

யார் இதை முதலில் உண்மையாக உணர்கிறார்களோ அவர்கள்தான் தயாராக வேண்டும். எந்த இனம், எந்தச் சமயம், எந்த மொழிக்கூட்டம் இதை உணர்கிறதோ அந்த இனம், அந்தச் சமயம், அந்த மொழிக் கூட்டந்தர் தயாராக வேண்டும்.

இதுவரை தனிப்பட்ட ஞானிகள் செய்ததை இனிமேல் ஒரு முழு இனமே, ஒரு முழு நாடே செய்ய வேண்டும். அப்போதுதான் முழு மனித குலத்தையும் அடுத்த பரிணாமக் கட்டத்துக்குள் இறக்குவதற்கு வேகமாக வழி பிறக்கும்.

யார் தயார்ப்படுகிறார்களோ, யார் மற்றவர்களையும் தயார்ப்படுத்துகிறார்களோ அவர்கள் மனித குலத்துக்கே தலைமை தாங்குபவர்களாக மாறிவிடுவர். அவர்கள் மனிதரில் தேவர்களாகின்றனர். அவர்களது மொழி தெய்வமொழியாகிறது. அவர்களது சமயம் சமய முக்தியைப் பெறுகிறது.

தேவராச்சியத்தை நிலைநாட்டுபவர்கள் தேவர்களாகத் தானே வேண்டும்? அவர்களது மொழி தேவமொழியாகத் தானே வேண்டும்? அவர்களது சமயம் முக்திபெற்ற சமயமாகத்தானே வேண்டும்? யார் இதைச் செய்யப் போகிறார்கள்? யார் இந்தப் பெரும் பதவியை அடையப்போகிறார்கள்?

எவர் அடுத்த வளர்ச்சிக் கட்டத்தின் தேவையை உணர்ந்து அதற்குரிய வழியையும் கண்டு பிடிக்கிறார்களோ அவர்கள் இதைச் செய்யத்தான் போகிறார்கள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தேவராச்சியம் அண்மித்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்த அறிவித்தலை நம்பியவர்கள், ஊசித்துவாரத்தால் ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரனால் சுவர்க்கத்துக்குள் நுழைய முடியாது என்ற உண்மையை, இவ்வுலகத்தில் நிறுவப்படவேண்டிய தேவராச்சியத்துக்குரிய பொதுவுடமை வழியை, இதுவரை நம்பியதில்லை. அதனால் இரண்டும் பூரணமாக வென்றதில்லை. ஆமாம்@ ஞானப்பொதுவுடமையும் பொருளாதாரப் பொதுவுடமையும் ஒன்றையொன்றை தழுவிவர வேண்டும். அப்போதுதான் இரண்டும் வெற்றியடையும் தழுவிவர வேண்டும். அப்போதுதான் இரண்டும் வெற்றியடையும். இல்லாவிட்டால் ஞானப்பொதுவுடமை கீழிறங்குவதற்குரிய சரியான தளம் கிடையாது. பொருளாதாரப் பொதுவுடம சீராக வளர்ச்சியடைவதற்குரிய சரியான தலைமை கிடையாது. அதனால் இரண்டும் தோல்வியடையவே செய்யும்.

இன்று தீவிர வழியையும் கண்டு, இறைவனையும் நம்புபவர்கள் எவர்களோ அவர்கள்தான் நிச்சயமாக இங்கு தேவராச்சியத்தை நிறுவக்கூடியவர்கள். அவர்கள்தான் உண்மையான பொதுவுடமையையும் ஸ்தாபிப்பவர்களாக இருப்பர். வர்க்கங்களைத் தாண்டிய பொருளாதாரப் பொதுவுடமையுடன், குணங்களைத் தாண்டிய பேர்மனித ஞானப் பொதுவுடமையரசு! பூரண சர்வோதய அரசு!


நான்கு மதங்களும் வளர்ந்துள்ள இலங்கையில் இந்தப் போராட்டத்துக்குரிய நல்ல சூழல் நிலவுகிறது. அந்த நிலையில் இலங்கையில் நிலவும் எல்லா வகை அதிருப்தியையும் போராட்டத்தையும் இப்பேர் மனிதப் பிறப்புக்குரிய பெரும் போராட்டமாக ஏன் மாற்றி வளர்க்கக்கூடாது.

“தொடங்குவது எங்கு?” “எது செய்யப்படவேண்டும்?” என்று லெனின் எழுதிய நிலையிலிருந்து இப்போது வரை வந்துள்ள வளர்ச்சி “முடிவது எங்கு?” (அதற்கு) “எது செய்யப்பட வேண்டும்?” என்ற புதுக் கேள்விகளை எழுப்பும் ஒரு சூழலுக்கும், சரித்திர கால கட்டத்துக்கும் வந்துவிட்டதாகவே நாம் கருதுகிறோம்.
மு.த. “சத்தியம்”


கலப்பு வலயம்
‘மல்லிகை’ இதழில் திரு. மு.பொ, எழுதிய கவிதை நாடகம் - இருதளப் பார்வை’ என்னும் கட்டுரையைப் படித்துவிட்டுப் பிரபல முற்போக்குக் கவிஞரும் விமர்சகருமான அன்பர் ஒருவர் பின்வருமாறு மு. பொவுக்கு (நேரடியாக) ஒரு கடிதம்; எழுதியிருந்தார்:-

அன்புக்குரிய மு.பொ.,

உங்கள் மல்லிகைக் கட்டுரை கண்டேன், சில கருத்துக்கள் எனக்கும் உடன்பாடே.

இரண்டாவது தளத்தில் நின்று நீங்கள் சொல்லியிருப்பன சில எனக்கு அப்பாற்பட்டவை@ சிலவற்றில் எனக்குச் சந்தேகம் உண்டு@ சிலவற்றில் நம்பிக்கை இல்லை.

குறிப்பாக, அன்னமயளகோசம், பிராணமயகோசம், விஞ்ஞானமயகோசம், முக்குணம், பேர்ஞானம் - இவையெல்லாம் வெறும் பெயர்களாகவே எனக்கு ஒலிக்கின்றன. பௌதீகப் புலப்பாடுகளிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கருத்துக் கட்டுகளை நிர்மாணித்து அவற்றைக் கையாண்டு வாதிக்கும்போதும், சிந்திக்கும்போதும், கற்பனை செய்யும்போதும், இல்லாத வெறுமைகளின் பிரதேசத்தில் இறங்கி அலையநேரும் அபாயம் உண்டு. இதனை நான் அநுபவத்திலே கண்டிருக்கிறேன்.

1965-இல் எனக்கு ளுஉhணைழிhசநnயை என்ற மனநோய் உண்டாயிற்று. மனப்பிளவு எனப்படும் அந்த நிலையில், அறிவிலும் ஆற்றலிலும் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக ஒரு பிரமை எனக்கு இருந்தது. அந்தச் சமயத்தில், பேர்ஞான நிலையை எய்திவிட்டவனாகவே என்னைப் பாவித்துக்கொண்டேன். சிவபெருமானும், யோகர் சுவாமியும், எட்மன்ட் சமரக்கொடியும், திரு ஞானசம்பந்தரும், ஷேக்ஸ்பியரும் நானே என நம்பினேன். றேடியோவும் வுயடயஎளைழைn உம், றொக்கெற்றுகளும் மிகவும் பிற்போக்கான கருவிகள் என்று நினைத்தேன். தியானிப்பினால் மட்டுமே தொலைவில் நடப்பவற்றைக் கண்டேன். கேட்டேன் இப்பிரபஞ்சத்தின் நிழல் போல - இதன் பிரதியாக இன்னொரு பிரபஞ்சம் இருந்தது@ அதற்குள் நான் நுழைந்து விட்டேன்@ அல்லாமலும், ஒரு பெண்ணின் உடம்பினுள் நுழைந்ததோடு அப்பெண்ணின் உயிரையே என் உடலினுள் நுழைய விட்டேன். புகைவண்டிப் பெட்டியின் ஓரப்பலகையை உற்றுப் பார்ப்பதனால், அங்கு வேண்டிய உருவங்கள் பிறந்து வளருமாறு செய்தேன். தீப்பொறிப் பத்திரிகைப்பிரதியொன்றை விலைக்கு வாங்கி, அதைப் பல்வேறு விதங்களில் மடித்தும் விரித்தும் திருப்பியும் பார்த்தபோது அதே பத்திரிகையில், ‘சுதந்திரன்’, ‘நாவேந்தன்’, ‘நக்கீரன்’ முதலான பல பத்திரிகைகளையும் கண்டேன். அவற்றிலிருந்து செய்திகளை வாசித்து மற்றவர்களுக்குக் கூறினேன்.

இன்னும் செல்லுவேன்! உழுத்தம் மாவினாற் செய்த உருண்டை ஒன்றினுள் என சுக்கிலத்தை அடைத்துக் கடலுள் வீசினால், ஈழத்தினைக் காப்பாற்நும் போர் வீரர்கள் கடலிலே பிறந்து வளர்வார்கள் என்று நினைத்தேன். எங்கள் வீட்டிலுள்ள தூண் ஒன்றைச் சுற்றி வருவதனால் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் நானே நடத்தினேன். அப்போது ஆனையிறவைக் கடந்து யாழ்ப்பாணத்துள் நுழைந்த எல்லோரும் பழம் பிறவி ஒழிந்து புப்து பிறவி எடுத்தவர்கள் ஆயினர்@ யாழ்ப்பாணத்திற் புதிய சத்திய யுகம் ஒன்று உதயமாகி விட்டது.

இன்னும் பல அற்புதக் காட்சிகளை அந்த இரண்டு வாரங்களுள்ளும் நான் கண்டேன். நிதரிசனமாக – எந்த ஐயப்பாட்டுக்கும் இடமில்லாமல் நான் கண்டேன்.

மனநோய் மாறியபோது, ஓர் உண்மை என்னுள் உறுதியாயிற்று. பௌதீக மெய்மைகளிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று உருவாக்கப்பட்ட கருத்துக் கட்டுகளை மிகுந்த சந்தேகத்துடன் பார்த்தல் வேண்டும் என்பதே அந்த உண்மை, விஞ்ஞானத்தின் அணுகுமுறைகளும், பொருள் முதல்வாதப் பார்வைகளும் இந்த நோக்குடன் மிகநெருங்கிப் போவதை நான் உணர்கிறேன். அதனால் இவற்றில் இருந்த பற்று வளர்ந்தது.

ஆனால், விஞ்ஞானம் என்றதும் பழைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் யாந்திரிக மொடலைச் சொல்வதாக நினைக்க வேண்டாம். தடைமுடைகளையும் பொருட்படுத்தாத உண்மையான சுயாதீனமுன்ன விஞ்ஞானத்தையே இங்கு குறிப்பிடுகிறேன்.

என்றாலும், திரு. மு.த. வேதாந்தம், பௌத்தம், சர்வமதம், விஞ்ஞானம் முதலான சகலவற்றையும் பூரணமாகக் கிரகித்து விட்டதாகக் கருதுவது வெறும் பிரமை என்பதில் எனக்கு ஐயமில்லை. புதிய விஞ்ஞானம் ஆன்மீகமானது என்று அவர் நம்பி எழும்போது அது அரைவேக்காட்டுத் தகவல்களிலிருந்து பெறப்பட்ட அவசர முடிபே ஆகும். வாதங்கள் நுட்பமாக உள்ளன. ஆனால், அனுபவ அடிப்பட () ஆகிய தரவுகள் குறைபாடுடையவை. அதனால்……

திரு. மு.த. அவர்களின் பிரமைகளுட் பெரும் பகுதி தங்களுக்கும் உண்டு. அதனாலேதான் அவற்றை இங்கு குறிப்பிட நேரிட்டது.

இப்படியெல்லாம் நான் எழுதுவது, உங்கள் அபிப்பிராயங்களை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையினால் அல்ல. என் நிலையைத் தெளிவாக்கும் பொருட்டே ஆகும்……

வணக்கம்,
அன்பு ……………….

அந்த அன்பரின் இக்கடிதத்திற்கு மு.பொ.பின் வருமாறு பதில் எழுதி அனுப்பினார்:-

அன்புள்ள…………………
தங்கள் கடிதம் கிடைத்தது. தங்களின் அனுபவத்தைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அந்தளவுக்காவது நாம் கூறவிரும்பும் மனித பரிணாமத்தின் தன்மையைப்பற்றி அனுபவரீதியில் நீங்கள் உணர்ந்திருப்பது விஷயத்தை விளக்குவதற்குப் பெரிதும் உதவியாய் இருக்கிறது.

மனிதனின் மனம் சாதாரண அனுபவ எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விரிவுகளையும் காட்டக்கூடியதாய் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். ஆனால், அதை விளங்கிக்கொள்ளும் விதமும், அதை வழிப்படுத்தும் முறையுந்தான் உங்களுக்கு தெரியாததாக இருக்கிறது.

ளுஉhணைழிhசநnயை. அல்லது ளுpடவை Pநசளழயெடவைல என்பது இவ்விடயங்களைப்பற்றி விளங்கிக்கொள்ளத பொருள் முதல்வாத விஞ்ஞானக் கருத்துகளுக்கு உரிய ஒரு வார்த்தைப் பிரயோகம் என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும். பிளவுபட்ட மனம் என்பதைவிட, நான் கட்டுரையில் கூறியவிதத்தில், இரு மனத்தளங்களின் கலப்பு என்று சிந்தித்துப் பார்த்தால் அதன் முற்போக்கான வளர்ச்சி மாற்றத்துக்குரிய தன்மையைங் காணலாம். அந்தத் தன்மையை வடிவாகப் பயன்படுத்துவதற்கு அவைபற்றிச் சீராகத் தெரிந்த சமயஞானங்களுக்குரிய யோகமுறையை நாடவேண்டும் ஒழிய, திரும்பவும் பொருள்முதல்வாத பௌதிக விஞ்ஞானத்திடம் சரண்புகுவது புத்திசாலித்தனமல்ல. மேற்கத்தைய விஞ்ஞானம் மனித இனத்துக்குக் கொடுத்து வலுவான அறிவுத்தளம் அவசியமேதான். ஆனால், அதையே இறுதி நிலையாக நினைத்து விடக்கூடாது. அந்த அறிவுத் தளத்தை அடிப்படையாக வைத்து அடுத்த எல்லைகளுக்குப் போக முயல் வேண்டுமேயொழிய அடுத்த எல்லைகளை மறுக்கக்கூடாது.

அதுவும் அநுபவ ரீதியாக அந்த எல்லைகளை ஏதோ ஒரு விதத்தில் கண்டபின்பும், அவற்றைப் பற்றி அதே வலுவான அறிவோடு ஆராய்ந்து பார்க்க முயலவேண்டும். பேய் பிசாசுகளைக் கண்டு வெருள்வதுபோல் அவற்றைக் கண்டு பயந்து ஒதுங்குவது விஞ்ஞானமுமாகாது அறிவுவாதமுமாகாது. அது பரிணாமத்துக்கு உதவுவதாகவும் இருக்காது. நீரில் இருந்து தரைக்கு ஏறிய உயிரினம்வெருண்டு தடுமாறித் திரும்பவும் நீருக்குள் அமுங்கித் திருப்தி காணும். தேக்கத்தை ஒத்ததாகவே தங்களின் அநுபவத்துக்குத் தாங்கள் கண்ட முடிவு இருக்கிறது. பைத்தியம், ளுஉhணைழ-phசநnயை என்ற சொற்றொடர்கள் அதை நியாயமாக்குபவையாகத் தெரிந்தாலும், அதே சொற்றொடர்களே பரிணாமத்துக்கு எதிரான பூச்சாண்டி வெருட்டல்களாகவும் உள்ளன. அந்த வெருட்டலிடம் தாங்கள் தஞ்சம் புகுந்தவர் போலவே காணப்படுகிறீர்கள். பிளவுபட்ட அல்லது கலப்பு மனநிலையத்தாண்ட முடியாத நிரந்தர மனக்குழப்பங்களைக் காட்டும் பைத்தியங்கள் கூட பரிணாம வளர்ச்சியில் எதிர்பார்க்க வேண்டிய டிசநயமள வகையேதான்.

உங்கள் சிறு அனுபவமே அடுத்த மனத்தள எல்லைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டிய வேளையில், நீங்களோ அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டே மாபெரும் அவதாரங்களான புத்தர், யேசு, முகம்மது, ராமகிருஷ்ணர் போன்றோரினதும், ஆன்மீக மேதாவிகளான விவேகானந்தர், அரவிந்தர், ரமணர் ஆகியோரினதும் அனுபவங்களை எல்லாம் பொய்க்கதைகளும், பூச்சாண்டிக்கதைகளும் ஒன்று ஒதுக்கி விடுபவர்கள் போல் எழுதுகிறீர்கள். இதை விஞ்ஞானமாகவும் அறிவு வாதமாகவும் நீங்கள் எடுத்துக்கொண்டாலும், நாங்கள் எடுத்துக்கொள்ளத் தயாராய் இல்லை.

ஒரு தத்துவஞானி உலகத்தின் சகல விஷயங்களையும் கற்றுத் தெரிந்தவனாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தனது சிந்தனைக்கு அவன் உருவம் கொடுக்க முயலும்போது அதையொத்த வேறு கருத்துக்களைக் கொண்ட, வேறு துறைகளுக்குரிய சிந்தனைவாதிகளின் கூற்றுக்களைப் பக்கபலமாகக் காட்டலாம். இருப்பினும், எதிர்காலச் சரித்திர வளர்ச்சிதான் அவனது பார்வையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். மு.த.வின் கருத்துக்களும் அவ்வாறேதான். அவரது கருத்துக்களின் முதிர்ச்சிக் கோலத்தையும் முழுமைக் கோலத்தையும் இனிவரும் நூல்களில்தான் பார்க்க வேண்டும். ஆனால், இப்போதைக்குப் “போர்ப்பறை”யே போதுமானதாக இருக்கின்றது. அவற்றைத் தர்க்கரீதி யாகவும் அறிவுரீதியாகவும் வெல்லக் கூடிய வேறு கருத்துக்களைக் காட்டாத வரைக்கும், அர்த்தங் காணப்படாத சிறு அனுபவங்கள் மூலம் மறுத்து விட முடியாது. குறை கூறுபவர்கள் தங்கள் நிலையைத் தர்க்கரீதியாகம், தத்துவரீதியாகவும் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் குறை கூறுபவர்கள்தான் அரை வேக்காட்டு நம்பிக்கைகளின் அர்த்தமற்ற சலப்புக்களாக இருப்பர்.

இனி அனுபவங்களுக்கு வரலாம். நீங்கள் குறிப்பிடும் அனுபவங்களுக்குச் சமமான அனுபவங்களை மேற்கிலுள்ள பலர் மெஸ்களின், எல். எஸ். டி. போன்ற மருந்துகள் மூலம் பரவலாகக் காணத் தலைப்பட்டுள்ளனர். ஹக்ஸ்லி, கொலின் வில்சன், சாத்தர் போன்ற எழுத்தாளர்கள் அந்த அனுபவங்களை முற்போக்காகவே பயன்படுத்தினர். பரவலான இந்த அனுபவங்களே புதிய நுஅpசைiஉயட நஎனைநnஉந ஆகவும் அமைகிறது. இன்று விஞ்ஞானத்தின் எல்லைகளே புதிய தளத்துக்கேற்ற வகையில் விரிக்கப்படவேண்டியுள்ளன என்ற வலுவான கருத்து மேற்கில் வளர்வதற்கும் இந்த அனுபவங்களே காரணமாக அமைகின்றன. Pயசய Pளலஉhழடழபலஇ வுசயளெஉநனெநவெயட ஆநனவையவழnஇ நு. ளு. P.இ வுசயளொரஅயnளைஅ போன்ற துறைகள் விஞ்ஞானத்தின் புதிய எல்லை விரிவுகளாகும்.

நீங்கள் கூறும் ஒத்த அனுபவங்களைக் காட்டும் …. பலவற்றை நாம் வாசித்தும் இருக்கிறோம்@ நேரில் பழகும் பலரிடம் அதனைக் கண்டும் இருக்கிறோம். அத்துடன், சீரான முறையில் அந்த அப்பாற்பட்ட மனத்தளங்களுக்குள் நாமும் புகுந்து பார்த்துமிருக்கிறோம். அவற்றில் வளர்ச்சியடைந்து, அந்த அனுபவங்களையே சகசமாகப் பெறும் நிலையை அடைவதே நமது இலட்சியமாகவும் இருக்கிறது. இவை பிரமைகள் அல்ல. மு.த. மட்டுமல்ல, நானும் இன்னும் வேறு பலரும் (எழுத்தாளர் உட்பட) இவற்றில் தீவிரமான பயிற்சிபெற்று வருகிறோம். தாங்களும் இதில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், விஞ்ஞான ரீதியான பரிசோதனைக்காவது சர்வமத சங்கத்துக்குப் பொறுப்பாகவுள்ள …..ஐச் சந்திப்பது அவசியம் என்று கருதுகிறோம். அவர் புங்குடுதீவிலேயே இருக்கிறார். யாழ்ப்பாணம் வரும்போது தயவுசெய்து புங்குடு தீவுக்கும் வந்துபோங்கள். எதிர்பார்ப்போம்.

அன்புடன்
மு.பொ,

அதற்குப்பின் அந்த நண்பர் மௌனமாகிவிட்டார்.

அந்தக் கடிதத்திற்கு திரும்பி எந்தப் பதிலும் வரவில்லை.

அந்த இரண்டும் கடிதங்களையும் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

படித்தபின் நல்லசிவத்திடம் அபிப்பிராயம் கேட்டேன்.

“எதைப் பற்றிய அபிப்பிராயம்?” அவன் திருப்பிக் கேட்டான். “இந்தக் கடிதங்களைப் பற்றியா? அல்லது அந்த நண்பரைப் பற்றியா? அல்லது அவருடைய இலக்கிய முயற்சிகளைப் பற்றியோ? அல்லது நமது புதிய தத்துவம் பற்றியா?”

“எல்லாவற்றையும் பற்றித்தான்” என்றேன் நான். நல்லசிவம் ஆரம்பித்தான்.

“பதில் வராததின் அர்த்தம் என்னவாக இருக்கலாம் தெரியுமா?”

“என்னவாக இருக்கலாம்?”

“ஒன்று, அவர் இன்னும் யோசிக்கலாம் யோசித்துத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வராத வரைக்கும் இதுகளைப் பற்றி இனி அவசரப்பட்டு எதுவும் எழுதக்கூடாது என்று யோசிக்கலாம். அப்படியே எழுதாமல் விட்டிருக்கலாம். அப்படியென்றால், அவர் ஒருவேளை எதிர்காலத்தில் எம் பக்கமும் சேரலாம். பேரறிவின் எழுச்சிக்காக வாழவும் செய்யலாம்.”

“இரண்டாவது?”

“இரண்டும், சுத்தப் பனியன்கள் அல்லது பைத்தியகாரக் கற்பனாவாதக்காரங்கள் என்று நினைத்து நம்மிடமிருந்து மெல்ல ஒதுங்க முயலலாம். அப்படியென்றால், அவருக்குத் தான் பனி பிடித்திருக்கிறது என்பது அர்த்தம். பேரறிவு ஏறிய தத்துவ விளக்கங்களுக்கும் மனத்தின் கற்பனாவாதத்துக்கும் வித்தியாசம் காணமுடியாத பனி கடைசியில் நம்மிடமிருந்து ஒதுங்கவும், நம்மை ஒதுக்கவும் நினைத்துப் புதிய எழுச்சியால் முற்றாகத் தாமே ஒதுக்கப்படலாம்.”

“அல்லது?”

“அல்லது நமது விளக்கங்களின் “நுட்பமான” தன்மையை அவர் உணர்ந்தும் அதை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம். ஏற்றுக்கொண்டால் எத்தனையோவற்றை இழக்கவேண்டும் என்ற பயம் இருக்கலாம். உதாரணமாகக் கவிதை, சிறுகதை, நாவல் என்ற தற்கால இலக்கிய உருவங்கள் செத்துவிட்டன என்ற நமது கருத்து கவிதைக்காரர்களுக்கும் கதைக்காரர்களுக்கும் பெரும் வேதனை தரும் கருத்தாகவே இருக்கும். தம்மை ஏற்கனவே சமுதாயத்தில் நிறுவிவிட்ட கவிஞராக அல்லது கதாசிரியராக நினைத்துக்கொள்பவர்கள் அந்த இடத்தை, அந்த அந்தஸ்தை இலகுவில் இழக்க விரும்பமாட்டார்கள். அதனால் அவர்கள் எதிர்க்காலம், மூர்க்கத்தனமாக எதிர்க்கலாம். முதலில் நசிந்து நசிந்து இரகசியமாகவும், பின்பு சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெளிப்படையாகப் பலாத்காரமாகவும் எதிர்க்க முயலலாம். நமது நண்பரும் அந்தரகமாக இருக்கலாம். அவர் உண்மையில் எந்த ரகம் என்பதை இனிமேல்தான் பார்க்கவேண்டும்.”

“ஒருவேளை அவர் சொல்வதுதான் சரியாக இருந்துவிட்டால்?” நான் வேண்டுமென்றே தர்க்கத்துக்காகக் கேட்டேன்.

“அதற்குரிய சரித்திர கட்டம் போய்விட்டது” என்றான் நல்லசிவம்.

“எதற்குரிய சரித்திர கட்டம்?”

“அவர்களுக்குச் சரியாகத் தெரிந்த சரித்திர கட்டம்.”

“எப்படி?”

“எப்படியா?” நல்லசிவம் விளக்கத் தொடங்கினான். “இவர்கள் எல்லாரும் அடிப்படையில் பொருள் முதல்வாதக்காரர்கள்தான் வெறும் சிற்றின்பவாதிகள். சடம், பொருள், உடல், உயிர், மனம் ஆகிய தளங்களிடையே நிலையாக நின்றுவிடலாம். என்று கற்பனை செய்த பொருள்முதல்வாதிகள். இவர்களுடைய காலம் முடிந்து விட்டது. அதனால் அந்த நண்பரின் வாதம் இனிமேல் சரியாக இருக்க முடியாது.”

“அப்படியென்றால், கருத்துமுதல்வாதமா இனிமேல் சரிவரும்?” நான் திருப்பிக்கேட்டேன்.

“அது பிழையான ஒரு சொற்பிரயோகம். கருத்து முதல்வாதம் என்றால் என்ன?”

அவன் என்னைத் திருப்பிக் கேட்டான். திருப்பிக்கேட்டு விட்டுப் பதிலுக்குக் காத்திராமல் தானே தொடர்ந்து விளக்கத் தொடங்கினான்.

“கருத்துமுதல்வாதம் என்றால், சாதாரண மனிதனுக்கு இன்று உரித்தாகவுள்ள சிந்தனை நிலையையே எல்லாவற்றுக்கும் முதலாக அல்லது காரணமாகக் கொள்ளும் வாதமா? அப்படியென்றால், பொருள்முதல்வாதம்போல் அதுவும் பிழைதான். அதாவது பிழையென்றில்லாவிட்டாலும் அவை இரண்டும் சிறுசிறு விதமளவுதான் சரியாகும். அதைவிட்டு கருத்துமுதல்வாதம் என்றால் சமயங்கள் கூறும் மாற்றமற்ற அடித்தளச் சத்தியத்தை முதலாகக் கொள்ளும் வாதமா? அப்படியென்றால், அதை விளக்குவதற்குக் கருத்துமுதல்வாதம் என்று சொற்றொடர் போதாது.”

“அப்போ சரியானது எது?”

“சரியானது பொருளுமல்ல, கருத்துமல்ல. சரியானது அவை இரண்டுக்கும் அப்பாற்பட்டது. சரியான, நிலையான நிலை மனிதன் காணும் பொருளுக்கும் அப்பாற்பட்டது. மனிதன் காணும் சிந்தனை அல்லது கருத்துக்கும் அப்பாற்பட்டது. இரண்டுக்கும் அப்பாற்பட்ட அதுதான் அதே சமயம் இரண்டுக்கும் காரணமாகவும் இருக்கிறது. அதுவே இரண்டையும் இணைப்பதாகவும் இருக்கிறது. அதைத்தான் சமயங்கள், சத்தியம் என்றன. அது பரம்பொருளாகவும், அதே சமயம் பேர்ஞானமாகவும் இருக்கிறது. சத்தும், சித்தும் அதுவே தான். அதை அடிப்படையாகக் கொண்டு இன்றைய காலத்துக்குரியதாக வரும் தத்துவமே பூர்ண சர்வோதய தத்துவமாகும். சகலவற்றிலும் அந்தச் சத்தியம் வெளிப்படையாக எழுகின்ற இன்றைய காலத்துக்குரிய தத்துவம் அதுதான்.”

“அதற்குரிய ஆதாரங்கள் என்ன?” என்றேன் நான்.

“ஆதாரங்களா? அவற்றைக் கேட்டு விளங்கக்கூடிய பொறுமை இருக்கிறதா? ஆதாரங்கள் காட்டும் வழியைத் தடைசெய்யாத முடிவு எப்படி வருகிறதோ, அப்படி எடுப்பதே விஞ்ஞானப் போக்காகும் என்று திறந்த மனத்தோடு ஆராயும் பக்குவம் இருக்கிறதா? இருந்தால் கேட்டுக்கொள்@ நான் சொல்கிறேன்” என்று விளக்கத் தொடங்கினான் நல்லசிவம்.

“சடம், உயிர், நினைவு அல்லது எண்ணம் (மனம்) என்பவை வௌ;வேறு தளத் தோற்றங்களாக இருப்பினும், அடிப்படையில் அவை இரண்டற்ற அத்வைதத் தன்மையையே காட்டுகின்றன என்பதை இருபதாம் நூற்றாண்டு இன்றைய விஞ்ஞானம் மறுக்க முடியாதவாறு ஒப்புக்கொள்கிறது என்பதை முதலில் நீர் விளங்கிக் கொள்ளவேண்டும்.”

“அப்படியென்றால் அர்த்தம் என்ன?

“அதாவது, பொருள் அல்லது சடம் என்று நீ காண்பவை, நினைப்பவை எல்லாம் அடிப்படையில் () சக்தியாகவும் இருக்கின்றன. பொருள் என்பது உருப்பெற்ற சக்தியாகும். உயிர், நினைவு என்பவைகளும் அந்த வகையில் சக்தியின் வௌ;வேறு நிலைகளேதான். அந்த வகையில் அடிப்படையில் எல்லாம் இரண்டற்ற, ஒருமையான அத்வைதத் தன்மையையே காட்டுகின்றன. சடத்திலிருந்து உயிர் எழுச்சியற்ற விதத்தை விளக்க முடியாமல் இருக்கலாம் இன்றைய விஞ்ஞானம். ஆனால், அதற்காக அவை இரண்டும் அடிப்படையில் முற்றாக மாறுபட்டவை என்று அது நம்புவதில்லை. அடிப்படையில் அவை ஒரு போக்கின் இரண்டு வௌ;வேறு நிலைகளைக் காட்டுகின்றன என்றுதான் விஞ்ஞானம் இன்று கூறுகின்றது.”

“சரி, அப்படியென்றால், அதன் முக்கியத்துவம் என்ன?” – நான் கேட்டேன்.

நல்லசிவம் தொடர்ந்தான்.

“முக்கியத்துவம் சுவையானது. சடத்தை, அதாவது நீ பொருள் என்று கூறும் சடத்தை ஆராயும் போது அது, அப்பொருளுக்குரிய உருவமானது நம் புலன்களுக்குத் தெரியாத சக்திப் போக்காகவும், ஒளித்துகள் அணுக்களின் அலையாகவும் இருக்கிறது. அத்துடன் அவற்றுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்றாகவும் இவை இருக்கலாம் என்று நம்பவேண்டியிருக்கிறது. அப்படியென்றால், நீ காணும் சடநிலை அல்லது அந்தப் பொருள் நிலை உண்மையான, நிரந்தரமான அடித்தள நிலையல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொள்கிறாயா?”

“சரி ஒப்புக்கொள்கிறேன்.”

“ஒப்புக்கொண்டால், நிலையான நிரந்தர அடித்தளமாகாத அந்தப் பொருளை அல்லது சடத்தை எப்படி எல்லாவற்றுக்கும் முதலாவதாக அல்லது காரணமாகக் கொள்ளலாம்?”

ஆமாம், அப்படி எடுத்துக்கொள்ள முடியாதுதான்.”

“அப்படியென்றால், பொருளை முதலாகக் கொள்ளும் பொருள்முதல்வாதம் என்பது உண்மையான நிரந்தர அடித்தளமற்ற வாதந்தான். விளங்குகிறதா?”

“அதாவது…?” நான் இழுத்தேன்.

“அதாவது, பொருள் என்பது உண்மையான ஒரு நிலையான உருவமாக அல்லது அடித்தளமாக இல்லை. அதனால், பொருள்முதல்வாதமும் நிலையான அடித்தளமற்ற வாதமாகும். அதாவது, பொருள்முதல்வாதம் என்று சொல்வதைவிட, சக்திமுதல்வாதமாக அல்லது ஒளிமுதல்வாதமாகக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.”

“ஓ, இப்போ விளங்குகிறது. அருமையாகவும் இருக்கிறது. ஆனால், அதேசமயம் சக்தியையும் சரி, ஒளியையும் சரி ஒருவித பொருள்நிலையாகவும் கொள்ளலாந்தானே?” – நான் கூறினேன்.

“கொள்ளலாந்தான்” என்று ஒப்புக்கொண்டான் நல்லசிவம். “கொள்ளலாந்தான். ஆனால், அதேமாதிரி சக்திமுதல்வாதமாகவும் ஒளிமுதல்வாதமாகவும் கருத்து அல்லது நினைவுமுதல்வாதமாகவும் கொள்வது சரியானதாகவே இருக்கும்.”

“ஆமாம், சரிதான்.”

“சரியென்று நீ கூறும்போது முந்திய சமயங்களின் கொள்கைகளுக்குக் கிட்டே வருகிறாய். சகலதையும் அடித்தள உண்மையான சத்தியத்தின் சக்தி என்று சில சமயங்கள் கூறுகின்றன. வாக்கிலிருந்து (சத்தியத்தளத்துக்குரிய நாதத்திலிருந்து) உருவம் எழுந்தபோது முதல் முதலாக வந்த “பொருள்” அல்லது உருவம் என்பது ஒளிநிலைதான் என்றும் சமயங்கள் கூறியுள்ளன. அதேபோல் கருத்து முதல்வாதம் என்பதுகூடப் பிழையாக, வெறும் நினைவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்போது கூட பொருள் முதல்வாதம் என்பதைவிட அதிகம் பொருந்துவதாக அல்லது எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவுவதாக இருக்கிறது.”

“அப்போ இதில் எது சரி?” என்று நான் கேட்டேன். “சக்திமுதல்வாதமா? ஒளிமுதல்வாதமா? பொருள்முதல் வாதமா? கருத்துமுதல்வாதமா?”

“எதுவும் பூரணமாகச் சரியல்ல. மாற்றமற்ற நிலையான அடித்தள உண்மைநிலை எதுவோ, அதை முதலாகக் கொள்ளும்போதுதான் பூரணமான தத்துவம் வரும். அதற்குமுன் இவற்றில் எது அந்த அடித்தள நிலையை நோக்கி ஆராய்வதற்கு அல்லது முன்னேறுவதற்கு உதவலாம் என்று தீர்மானிப்பதே சரியானது.”

“எது அதிகமாக உதவுகிறது?” நான் கேட்டேன்.

“எது அதிகமாக உதவாமல் இருக்கிறது என்று கேட்பதுதான் அதற்குரிய சரியான வழியாகும்” என்றான் நல்லசிவம்.

“ஆமாம், அதுவும் சரிதான்@ எது அதிகமாகத் தடையாக நிற்கிறது?”

“அதிக தடையாக நிற்பது பொருள்முதல்வாதம் என்ற கோட்பாடுதான். பொருள் அல்லது சடம் என்பதற்குரிய புலன்கள் காட்டும் உருவநிலையோடு மனித மனம் பழக்க தோசத்தால் விடுபடாது ஒட்டிக்கொண்டு நிற்கிறது. அந்தச் சடத்தின் அல்லது பொருளின் உருவத்தைத்தான் மனம் நிலையான ஒரு தளமாக நினைத்துக்கொண்டிருக்கிறது. சடத்தின் உருவம் என்பது உருவம் காட்டாத நிலையற்ற போக்குகளாக அதாவது மாற்றங்களாக (சக்தி – ஒளி மாற்றங்களாக) இருக்கிறது என்ற விடயத்துக்கு மனம் பழக்கப்படவேண்டுமானால், பொருளின் உருவத்தோடு ஒட்டி நிற்கும் அதன் பழக்கதோசத்தை அறுக்கவேண்டும். பொருள் முதல்வாதம் என்பதை முற்றாகப் பழக்கத்திலிருந்து ஒழிப்பது அதற்கு அவசியமாகும். அதற்குப்பின் மனம் திடீரென்று ஒருபெரும் தளையிலிருந்து, பற்றிலிருந்து, கட்டிலிருந்து விடுதலையடையும்.”

“ஆமாம், விடுதலையடையும். ஆனால், அதேசமயம் அது மாற்றமற்ற அடித்தள நிலையைக் கண்டுவிடாது.”

“கண்டுவிடாது, ஆனால், கண்டுவிடவேண்டும் என்ற அவதி அதிகரிக்கும். ஆராய்ச்சி வேகம் பெறும். அதாவது பரிணாமம் துரிதமடையும்.”

“அப்போ இப்போதைக்கு ஒளிமுதல்வாதம், சக்தி முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்பவை பொருள்முதல் வாதம் என்பதைவிட மனத்தின் விடுதலைக்கும் புதிய விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் அதிகம் உதவும் என்கிறீர்?” – நான் கேட்டேன்.

“ஆம்@ அதிகம் உதவும் அந்த அத்தகைய விஞ்ஞான ஆராய்ச்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதாவது, அதன் மூலம் ஏற்கனவே பொருள்முதல்வாதம் என்பது வழக்கொழியத் தொடங்கிவிட்டது என்பது அர்த்தமாகிறது. சரிதானே?”

“ஆம்@ சரிதான்” – நான் ஒப்புக்கொண்டேன்.

“சரி@ இனி அடுத்த கட்டம்” – நல்லசிவம் தொடர்ந்தான். “ஒளியின், சக்தியின், பொருளின், உயிரின், கருத்தின் அடித்தள உண்மையை நோக்கிய விஞ்ஞானத்தின் புதிய அத்வைத ஆராய்ச்சி தொடங்கும்போது சகல பார்வைகளும் ஓரிடத்தில் கலந்து, சகலத்தையும் கடந்த அடித்தள உண்மையை நோக்கி ஆராய்ச்சி தொடங்குகின்றது என்பது தான் அர்த்தம்.”

“எனக்கு விளங்கவில்லை” – என்றேன் நான்.

“இப்போ கருத்துமுதல்வாதம், பொருள் முதல்வாதம், உயிர்முதல்வாதம், நினைவுமுதல்வாதம் என்று எப்படிக்கூறினாலும் அவை எல்லாம் அடிப்படையீல் ஒன்று தான் என்ற பார்வைக் கலப்பு நிலைக்கு வந்திருக்கிறோம். காரணம், எல்லா நிலைகளும் இரண்டற்ற, ஒருமையான அத்வைதத் தன்மையைக் காட்டுகின்றன. அதேபோல் அவை எதுவும் நிரந்தரமான அடித்தளங்களல்ல என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியுமுள்ளது. அதனால் அவை எல்லாம் ஒன்றாகக்கலந்து, அடித்தள உண்மையை நோக்கி ஆராய வேண்டியவையாய் உள்ளன. சரிதானே?”

“சரி@ விளங்குகிறது” – நான் ஆமோதித்தேன்.

“சரி இனி அடுத்தகட்டம். இந்தப் புதிய விஞ்ஞான அத்வைத ஆராய்ச்சி தொடங்கும்போது. பழைய மெய்ஞான அத்வைத ஆராய்ச்சிக்கு அது கிட்டே வருகிறது. பிரம்மமே சக்தி, சக்தியே பிரம்மம்@ நிர்வாண சம்போதியெ சம்சாரம். சம்சாரமே நிர்வாண சம்போதி என்ற மெய்ஞான அத்வைத நிலையை நாம் அண்மிக்கின்றோம்.

“எப்படி?”

“எப்படியா? சரி சொல்கிறேன். விஞ்ஞானம் இப்போது கண்டுபிடித்துள்ள ஒளி, சக்தி, உயிர், பொருள், நினைவு ஆகிய சகல நிலைகளும் மாற்றமுறும் நிலையற்ற போக்குகள் என்று சொல்கிறதுதானே?”

“ஆம்@ சொல்கிறது.”

“அதே சமயம் அவை எல்லாம் இரண்டற்ற ஒருமையான அத்வைத தன்மையை அடிப்படையில் காட்டுகின்றன என்றும் ஒப்புக்கொள்கிறதுதானே?”

“ஆம்@ ஒப்புக்கொள்கிறது.”

“ஒப்புக்கொண்டவாறே அவற்றுக்குரிய மாற்றமற்ற ஓர் அடித்தள உண்மை நிலையை, நிரந்தர சத்திய நிலையைத் தேடுகிறது.”

“ஆம்@ தேடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.”

“அப்படித் தேடும்போது அந்த மாற்றமற்ற அடித்தள சத்திய நிலையும், மாற்றமுறும் அதன்மேல்தள நிலைகளும் அடிப்படையில் இரண்டற்ற ஒருமையான அத்வைதத் தன்மையை உடையனவாகவே இருக்கவேண்டும் என்பதையும் நம்பவேண்டியுள்ளர். அதாவது, அடித்தளச் சத்திய நிலையை மேல் தளத்தின் சகல நிலைகளும் என்ற அத்வைத நம்பிக்கை, கோட்பாடு, இப்போ விளங்குகிறதா?”

“விளங்கிறது.”

“விஞ்ஞானத்தின் இந்த அத்வைதக் கோட்பாட்டைத் தான் ஏற்கனவே சமய மெய்ஞானம் நிரூபித்து வலியுறுத்தியுள்ளது. சத்தியமே (பிரம்மமே) சக்தி@ சத்தியே சத்தியம் (பிரம்மம்)@ சம்சாரமே நிர்வாண சம்போதி@ நிர்வாண சம்போதியே சம்சாரம்.”

“அப்படியென்றால், இன்று விஞ்ஞானம் முன்வைக்கும் நம்பிக்கையை அல்லது கோட்பாட்டை ஏற்கனவே சமய ஞானம் நிரூபித்துள்ளது.”

“ஆம், அதனால் இன்று விஞ்ஞானம் மெய்ஞானமாகும் காலகட்டம் வந்துள்ளது. இந்து சமயத்தின் பரப்பிரம்மம், புத்த சமயத்தின் நிர்வாண சம்போதி, இஸ்லாத்தின் அல்லாஹ், கிறிஸ்தவ சமயத்தின் புனித ஆவி அத்தனையும் ஒரே அடிதளச் சத்தியத்தின் பெயர்கள்தான், சமய மெய்ஞானத்தின் அந்தச் சத்தியத்தை நோக்கி ஆராயும் விஞ்ஞானம் இன்று வந்துள்ளது. விஞ்ஞானம், மெய்ஞானம் - இரண்டும் இன்று அத்துவிதமாகிவிட்டன.”

நான் சிரித்தேன். நல்லசிவத்தின் விளக்கம் மிகவும் சுவையாக இருந்தது.

“விடயம் இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைக்கவேண்டாம்.”

நான் சிரி;பதை அவதானித்த நல்லசிவம் மிக அவசரமாகக் குறுக்கிட்டான். “இனித்தான் மிகப் பிரமாண்டமான விடயங்கள் ஆரம்பமாகப் போகின்றன. அதை உணர்ந்தால் நான் இன்றைய காலகட்டத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.”

“என்ன விடயங்கள்?” – நான் கேட்டேன். கேட்டவாறே அடுத்த கட்டத்துக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

முதலில் இன்றையக் காலகட்டத்தின் முக்கியத்துவத்தை மனதுக்கு உணர்த்தி, மனத்தின் பழக்கதோசங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக நமது மொழியில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, பொருள் முதல் வாதம் என்பது இன்றையச் சிந்தனைக்குப் பொருந்தாததைப்போல் விஞ்ஞானம் என்ற சொல்லும் பொருந்தாது’ அதுவெறும் சட, உயிர்த்தள ஆராய்ச்சியை மட்டும் குறிப்பதாக நம்மை நினைக்கவைக்கிறது. அது பழைய பழக்கத்தோசம்@ இன்று சத்தியத் தளத்தை நாடும் விஞ்ஞானத்தை விஞ்ஞான – மெய்ஞானம் என்று கூறவேண்டும். அல்லது வெறுமனே மெய்ஞானம் என்று சொன்னாலும் பரவாயில்லை. அதேபோல் பௌதிக (மெய்) ஞானம், உயிரியல் (மெய்) ஞானம், அரசியல் (மெய்) ஞானம், சமூக (மெய்) ஞானம், பொருள் (மெய்) ஞானம் என்று சகல துறைகளிலும் புதிய சிந்தனைக்குரிய அர்த்தப்பிரயோகம் வரவேண்டும். மனம் அப்போதுதான் புதிய விடுதலையை உணரக்கூடியதாயிருக்கும்.”

நல்லசிவத்தின் விளக்கத்துக்குரிய வித்தியாசங்களை விளங்கிக்கொண்டாலும், அந்த விளக்கங்களில் வேறு ஓர் ஆபத்தும் இருப்பதை என்னால் உணரமுடிந்தது.

“அது சரியாக இருக்கலாம்” – நான் எதிர்க் கேள்வியை எழுப்பினேன். “ஆனால், மனம் அதே சமயம் திரும்பவும் பழைய சமய மூட நம்பிக்கைகளுக்குள் விழுந்துவிட அவை உதவாதா? சமயங்களின் தேக்கத்துக்கே திரும்பவும் நாம் போவதாகத் தெரியவில்லையா?”

அது மிக அருமையான கேள்வி” நல்லசிவம் ஒப்புக்கொண்டான். “ஆனால், அதில் அதேசமயம் பழைய மனத்தின் செல்வாக்கும் நிற்கிறது.”

“எப்படி?”

“இதற்குப் பதிலளிக்க முயல்கையில் நாம் பரிணாமவளர்ச்சியின் இயக்கங்களை ஆராய வெளிக்கிடுகிறோம்” நல்லசிவம் தொடர்ந்தான். “பரிணாம வளர்ச்சி என்றால் உலகில், பிரபஞ்சத்தில் சடம், உயிர், மனம் ஆகிய தளங்களின் படிப்படியான எழுச்சியையும், அவற்றுக்குரிய வளர்ச்சி மாற்றங்களையும் குறிப்பிடுகிறேன். மனித மனம் வளர்ச்சி அடைந்தபின், அதாவது பரிணாமக் கட்டமானது மனத்தளத்துக்கு ஏறியபின் கண்டுபிடிக்கப்பட்ட அதிஉன்னத உண்மைதான் சமயங்கள் வெளிப்படுத்திய அத்வைதக் கருத்தாகும். அந்தக் கருத்துக்குரிய அடித்தள நிலையான பிரம்மம், நிர்வாண சம்போதி நிலை, புனித ஆவி, அல்லாஹ் என்ற மாற்ற மற்ற சக்திய நிலைதான் இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடிக்க முயலும் இலட்சிய நிலையாக இருக்கிறது. சரிதானே?”

“ஆம்@ சரி.”

“அப்படியென்றால், தேங்கிக் கிடந்த சமயங்கள் காரணத்தோடேயே, அவசியத்தின் பேரிலேயே தேங்கிக் கிடந்திருக்கின்றன.”

“என்ன காரணம்? என்ன அவசியம்?”

“அவை கூறிய அதி உன்னத உண்மையைச் சகல மனித மனநிலைகளும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும் வரைக்கும் அவை தேங்கிக் கிடப்பது பரிணாம வளர்ச்சிக்கு அவசியம். அதுதான் காரணம். சகலரும் அந்த உன்னத நிலையை உணர்வதற்குமுன் அடுத்த வளர்ச்சிக் கட்டத்துக்குப் போவது ஆபத்தானது மட்டுமல்ல, அவசியமாற்றதுமாகும். சரிதானே?”

“சரி.”

“அதனால் சமயங்கள் வெளிப்படுத்திய உன்னத உண்மையை, மனித மனத்துக்குரிய சகல பார்வைகளும் பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய காலகட்டம் வரும்வரைக்கும் சமயங்கள் தேங்கிக் கிடந்தன. அந்தத் தேக்க காலத்தில் முன்பு தாமதப்பட்டிருந்த பல்வேறு மனநிலைகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து, சமயஞானத்தைப் பரவலாக உணரும் பக்குவத்துக்கு வந்துள்ள, விஞ்ஞானம் அதற்கு உதவியுள்ளது.”

“எப்படி?”

“சமயங்கள் சகலதுக்குமுரிய அடித்தள நிலையான சத்தியத்தை முதலாகக்கொண்டு சகலதையும் விளக்கின. விஞ்ஞானம் அந்த அடித்தளச் சத்திய நிலையை ஏற்றுக்கொள்ளாது, மேல்தளத்திலிரந்து ஆரம்பித்துப் படிப்படியாக அந்த மாற்றமுறாத அடித்தளச் சத்தியத்தைத் தேடும் கட்டத்துக்கு வந்துள்ளது. அதாவது, ஒரே சத்தியத்தை இரண்டு கோணங்களிலிருந்தும் மனிதமனம் ஆராய்ந்திருக்கிறது. சமயங்களின் அடித்தளப் பார்வையிலிருந்தும், விஞ்ஞானத்தின் மேல்தளப்பார்வையிலிருந்தும் ஆராய்ந்து ஒரே முடிவுக்கு வந்துள்ளன. அதனால் சகல பார்வைகளும் ஒரே சமத்தளத்துக்கு உயர்த்தப்பட்டுக் கலப்புப் பெற்றுள்ளன. இன்று முன்பு சமயஞானம் கூறிய உண்மையை ஏற்றுக்கொள்ளாத அத்தனை மனநிலைகளும், அவற்றுக்குரிய பார்வைகளும் இன்று சமயஞானத்தைச் சமமாக அண்மித்துக் கலக்கின்றன. அந்தக் கலப்புக்கு விஞ்ஞான ஆராய்ச்சி உதவியுள்ளது.”

“அதை இன்னும் தெளிவாக விளக்கினால் நல்லது” என்றேன் நான்.

“அதாவது, அடித்தளச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாது பொருளில் நின்ற மனநிலை, உயிரில் நின்ற மனநிலை, ஒளியில் நின்ற மனநிலை, சக்தியில் நின்ற மனநிலை, கருத்தில் நின்ற மனநிலை – அத்தனை மனநிலைகளுக்குமுரிய பார்வைப் போக்குகளும் விஞ்ஞான ஆராய்ச்சியால் அத்துவிதத்தன்மைபெற்றுக் கலப்படைந்து, சமயங்கள் கூறிய அடித்தளச் சத்தியத்தைத் தேடும் பக்குவத்தைப் பெற்றுள்ளன. விளங்கிறதா?”

“ஓ, இப்போ விளங்கிறது@ விளங்கிறது.”

“அந்தப் பக்குவத்தை விஞ்ஞான ஆராய்ச்சி கொண்டு வந்துள்ளது. அந்தப் பக்குவம் சகல மனநிலைகளுக்கும் ஏற்படும் வரையும் சமயங்கள் தேங்கிக்கிடந்த.”

“ஓ, அருமையான விளக்கம்.”

“இன்னும் தெளிவாக்க வேண்டுமானால் இப்படிக் கூறலாம். ஒரு கட்டிடத்தை எடுக்கலாம். அதன் கீழ்த்தளம் முடிந்துவிட்டது. அது சடத்தளம். அதன் அடுத்த மாடியும் முடிந்துவிட்டது அது உயிர்த்தளம். அடுத்த மாடி ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவது தட்டு. அது மனத்தளம். அந்த மனத்தள மாடியின் உச்ச எல்லையைக் காட்டும் நான்கு பக்கத் தூண்கள் தான் நான்கு சமயங்கள் கூறிய பிரம்மம், நிர்வாண சம்போதி, புனித ஆவி, அல்லாஹ் என்ற உண்மையாகும். ஒரே உண்மை என்ற உயரத்தைத் தொட்ட நான்கு தூண்கள். அந்த நான்கு தூண்களும் எழுப்பப்பட்டபின் அந்தத் தூண்களுக்குச் சமமாகச் சகல பக்கச் சுவர்களும் உயர்த்தப்பட்டன. அதாவது சகல மனநிலைகளும் உயர்த்தப்பட்டன. அதனால் தூண்கள் தேங்கிக் கிடந்தன என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அது தவறு. மூன்றாவது மாடி முடிந்து நான்காவது மாடி எழுப்பப்படவேண்டுமானால், மூன்றாவது கட்டிடத்துக்குரிய தூண்களுக்குச் சமமாகச் சகல சுவர்களும் எழுப்பப்படவேண்டும். இப்போது தான் மூன்றாவது மாடிக்குரிய சகல சுவர்களும் அதன் தூண்களின் உச்சத்தைத் தொடுமளவுக்கும், அவற்றோடு ஒன்றாக இணையுமளவுக்கும் வந்துள்ளன. மனத்தள மாடியில் சகல பக்கச் சமயத் தூண்களும், இடைப்பட்ட மனநிலைச் சுவர்களும் ஒன்றாகக் கலக்கும் கட்டம் இப்போது வந்து விட்டது. இனித்தான் அடுத்த மாடிக்குரிய தளமும் அதற்குரிய தூண்களும் எழும்பப்போகின்றன.”

“சமயங்கள் கூறிய சத்தியத்தை ஏற்றுக்கொண்ட அத்வைதப் பார்வைக்குச் சமமாகப் பொருள் முதல் வாதம், சக்தி முதல்வாதம், சிந்தனை முதல்வாதம் ஆகிய சகல பார்வைக் கோணங்களும் வளர்ந்துள்ளன. அப்படித்தானே?”

“ஆனால், இனிமேல் வரப்போகும் புதிய தளமும் புதிய தூண்களும் பழைய சமயத் தூண்களல்ல. மாறாகப் பழைய சமயங்களையும் கடந்த நான்காவது மாடிக்குரிய தரிசனத் தூண்கள். அவற்றை விஞ்ஞான – மெய்ஞானத் தூண்கள் என்று கூறலாம். அல்லது ஆன்மீகத் தூண்கள் எனலாம். எனவே, திரும்பவும் பழைய தேக்கத்துக்கு நாம் போகவில்லை. ஏற்கெனவே சமய ஞானம்போட்ட உச்ச எல்லையைப் பரவலாகத் தொட்டு வளர்ச்சியடைந்து கொண்டே, புதிய தளத்துக்குரிய புதியசமயத் தரிசனத்தளத்துக்கும் அதன் தூண்களுக்கும் போகிறோம். பேரறிவுத் தளம், இனிவரப்போகும் சமயமானது அப்பேரறிவுத் தளத்துக்குரிய பெருந்தள ஆன்மீகம் அல்லது சத்தியஞானம். விளங்கிறதா?”

“இன்றைய மனித வளர்ச்சி மனவளர்ச்சி அந்தச் சத்திய தளத்துக்குத் தாவும் கலப்புக் கட்டத்தில் - அல்லது சம நிலையில் நிற்கிறது. அப்பாத்தானே?” நான் கேட்டேன்.

“ஓ, இப்போ நீ என்னுடைய வார்த்தைகளில் பேசுகிறாய். இப்போ எனக்கும் உனக்கும் ஒரு கலப்பு அல்லது சமநிலை உண்டாகியுள்ளது. அப்படித்தானே?” நல்லசிவம் சிரித்துக்கொண்டே கேட்டான்.

நானும் சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டேன். “எனக்கும் உனக்குமிடையே ஒரு கலப்பு@ அறிவுப் பேரறிவுக் கலப்பு@ விஞ்ஞான மெய்ஞானக் கலப்பு.”

“ஆமாம்@ அந்தக் கலப்பு சகல மனநிலைகளுக்குமுரிய கலப்பாகும். அதை மறந்துவிடக்கூடாது. பொருள் முதல்வாதம், ஒளிமுதல்வாதம், சக்திமுதல்வாதம், கருத்துமுதல் வாதம் ஆகிய சகல பார்வைக் கோணங்களும் அத்வைதமாகக் கலந்து, அவற்றுக்கும் அப்பாற்பட்ட அடித்தள சத்திய எழுச்சியைக் கோரும் கலப்பாகும். அந்தக் கலப்புக்கும், அது சகலதிலும் கோரும் சத்திய எழுச்சிக்கும், அந்த எழுச்சி சகலதிலும் தரக்கூடிய விடுதலைக்குமுரிய தத்துவமேதான் பூரண சர்வோதயப் பெருந்தத்துவமாகும். இப்போதைக்கு அந்தளவுக்கு விளங்கிக்கொண்டால் போதும்@ மற்றவற்றைப் பின்பு ஆராய்வோம்.”

அத்துடன் நல்லசிவம் தன் விளக்கத்தை முடித்துக் கொண்டான்.

அதற்குமேல் அப்போதைக்கு என்னாலும் போக முடியவில்லை.


சிறுசுழல் 1
திரும்பவும் அவன் கதைக்கத் தொடங்கியபோது நான் எழுப்பவேண்டிய கேள்வியை அவனே எழுப்பிக் கொண்டு ஆரம்பித்தான்.

“மாற்றமுறும் மேல்தளங்களின் சகல நிலைகளையும் அதாவது ஒளி, சக்தி, பொருள், உயிர், சிந்தனை ஆகிய சகல நிலைகளையும் அத்துவிதமாக ஏற்றுக்கொள்ளும் விஞ்ஞானம். அவற்றுக்குரிய அடித்தளமான மாற்றமற்ற சக்தியம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அல்லது அதைக் கண்டுபிடிக்கத் துணியாவிட்டால் என்ன செய்வது?”

அப்போதுதான் எனக்கும் அது ஞாபகத்துக்கு வந்தது. ஞாபகத்துக்கு வந்த பிறகுதான் அது ஒரு முக்கிய பிரச்சினை என்பதையும் என்னால் உணர முடிந்தது.

“ஆமாம்” என்று நானும் ஒத்துக்கொண்டேன். “எல்லாவற்றையும் மாற்றமுறும் நிலைகளாகவே அது தீர்க்கமாகவே முடிவு கட்டிவிட்டால்?”

‘இனிமேல் அப்படி முடிவுகட்ட முடியாது” என்று ஆணித்தரமாக அடித்துக் கூறினான் நல்லசிவம்.

“அதற்குரிய சரித்திர காலகட்டம் முடிந்துவிட்டது” நல்லசிவம் தொடர்ந்தான். “இனிமேல் அந்த அரைகுறை முடிவுகள் எல்லாம் முற்றாக ஒதுக்கப்படும் கட்டம் வந்து விட்டது. மு.பொ.வுக்கு முன்பு கடிதம் எழுதிய நண்பர் நம்மை எதிர்த்தால் எப்படிப் புது எழுச்சியால் ஒதுக்கப்படுவாரோ, அப்படி இந்த விஞ்ஞானமும் அதன் அரைகுறை இடைத்தரிப்புகளும் இனிமேல் செல்லாதவையாகிவிடும்.”

“எப்படி?”

“அப்படிப்பட்ட நிலையைப் புதிய பூரண சர்வோதயப் பார்வையும் அதற்குரிய இயக்கமும் உருவாக்கிவிடும்.”

“எப்படி உருவாக்கும்?”

“புதிய சிந்தனைக் கலப்பையும் அது கோரும் சத்திய எழுச்சியையும் உன்னைப் போன்றவர்கள் உணரும் போதே, நீங்கள் உங்கள் செயல்களையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்வீர்கள். அது மற்றவர்களையும் பாதிக்கும். சமூகத்தையும் பாதிக்கும். புதிய மாற்றம் இயக்க பூர்வமாக நடத்தப்படும்போது மிக வேகமாக மாற்றம் வரும். உதாரணமாக, இலக்கியத்துறையில் நீ புதிய சிந்தனைக்கேற்ற விதத்தில் “மெய்யுள்” உருவங்களைப் புகுத்தும்போது பழைய உருவங்கள், உள்ளடக்கங்கள் எப்படி வழக்கொழியத் தொடங்குமோ அப்படியே பழைய விஞ்ஞானமும் இனி வழக்கொழியும். பொருள்முதல்வாதம் என்ற சொற்றொடரைப்போல் விஞ்ஞானம் என்ற சொற்றொடரும் ஒதுக்கப்படவிருக்கும்போது விஞ்ஞானிகள் என்பவர்கள் எப்படி எதிர்த்து நிற்பது? மெய்ஞானிகள் பரவலாகப் பல துறைகளிலும் எழுவர். அதன் பின்பு சகல துறைகளிலும் சத்தியத்தை எழுப்பும் முயற்சிகளே நடைபெறும்.”

“அப்படி நடக்காவிட்டால்?”

“நடக்காமல் இருக்க முடியாது. காரணம், சகலதையும் சகலதுக்கும் பின்னாலுள்ள பேரறிவே செய்விக்கிறது. அதைத் தடுக்கவும் வலு சிற்றறிவுக்கு இல்லை. விளங்கிறதா?

“விளங்கிறது.”

“சரி@ அதை விளங்கிக்கொண்டே பிறகு, சும்மா தர்க்கத்துக்காக அதற்கு எதிராக விவாதிப்போமா?” – நல்ல சிவம் கேட்டான்.

“எப்படி”

“மாற்றமற்ற அடித்தளச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல், சகலதையும் மாற்றமுறும் நிலைகளாகவே விஞ்ஞானமும் எடுத்துக்கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம்.”

“சரி.”

“அப்படி வைத்துக்கொண்டால், அந்த மாற்றமுறும் நிலைகளில் எதை முக்கிய நிலையாக விஞ்ஞானம் இனி எடுத்துக்கொள்ளும்? ஒளி நிலையா? சக்தி நிலையா? உயிர் நிலையா? பொருள் நிலையா? சிந்தனை நிலையா?”

“எதை?”

“சிந்தனை நிலையைத்தான்.”

“ஏன்”

“பரிணாமப் போக்கின் கடைசி வளர்ச்சி சிந்தனை வளர்ச்சியாக இருப்பதால் அடுத்த கட்ட வளர்ச்சியும் அதை அடிப்படையாகக் கொண்டே வரவேண்டியிருக்கிறது. அத்துடன், சிந்தனை வளர்ச்சி வந்து பரிணாமப் போக்கும் புத்தி பூர்வமாக உணரப்பட்டபின், பரிணாமமே தன்னைப் பற்றிப் புத்திபூர்வமாக உணர்ந்திருக்கிறது என்று விஞ்ஞானி சொல்கிறான். எனவே, இனிமேல் சிந்தனைப் போக்கை எப்படி வளர்ப்பது என்பதான் முக்கிய பிரச்சினையாக இருக்கும்? அத்துடன், சிந்தனை என்பது சடம், சக்தி ஆகியவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபாடாக அத்துவித நிலையாக இருக்கிறதென்றால், அவற்றுள்ளிருந்ர் எழுச்சியடைந்த சிந்தனையை, மனத்தை ஆராய்வதுதான் சடம், உயிர், ஒளி, சக்தி ஆகிய இவற்றின் உட்தன்மையைக் கண்டு பிடிக்கவும் உதவும். எனவே, எல்லா வகையிலும் சிந்தனை வளர்ச்சிக்கே இனிமேல் விஞ்ஞானம் முதலிடம் கொடுக்கும்.”

“அதன்மூலம் என்ன வந்துவிடப் போகிறது?” – நான் கேட்டேன்.

“அதன்மூலம் விஞ்ஞானத்திற்கே ஆபத்து வந்து விட்டது.”

“எப்படி?”

“சிந்தனை நிலையை மற்ற நிலையில் இருந்து அடிப்படையில் வேறுபடாத அத்துவிதத் தன்மையுடையதாக விஞ்ஞானம் எடுத்துக்கொள்கிறதுதானே?”

“ஆம்@ எடுத்துக்கொள்கிறது.”

“அப்படி எடுத்துக்கொண்டால், எதிர்காலச் சிந்தனை வளர்ச்சி அதிலிருந்து அடிப்படையில் வேறுபடாத மற்றை நிலைகளையெல்லாம் உறிஞ்சிவிடும் அல்லது கரைத்துவிடும் பிரமாண்டமான ஏக சிந்தனை வளர்ச்சியாக ஏன் மாறமாட்டாது?” ஏன் மாற்றப்படமுடியாது?”

“எனக்கு விளங்கவில்லை.”

“எதிர்காலத்தில் சிந்தனையென்பது சடம், சத்தி, ஒளி என்பவற்றையெல்லாம் முற்றாகக் கரத்து, அவற்றையெல்லாம் உருவம் கடந்த ஒரே ஒரு ஏக சிந்தனை நிலையாக ஏன் மாற்றமுடியாது? சடம் இல்லை@ உருவம் இல்லை@ உயிர் இல்லை@ பல்வேறு மாறுபட்ட நினைவுகள் இல்லை. ஒரே ஓர் ஏகநிலையும் பொருளுமாக உருவமற்ற சிந்தனை நிலையே எல்லாம் ஆக, எங்குமாக ஏன் நிற்க முடியாது? அந்த ஏக சிந்தனைநிலை தனக்குப்பிடித்தமான வேறு சிந்தனைகளையும் செயல்களையும் உருவங்களையும் ஏன் கொண்டுவரமாட்டாது?”

“ஓ, இது வெறும் கருத்து. அதாவது கற்பனை” என்ற ஒதுக்கிக்கட்ட முயன்றேன் நான்.

“வேறு கல்லாக இருக்கவேண்டும் என்றா சொல்கிறாய்?” என்று திருப்பியடித்தான் நல்லசிவம். “கல்லும் கற்பனையும் எல்லாம் கரைந்து, கரைக்கப்பட்டு ஏக நினைவுநிலை மட்டும் எங்கும் பரவி நிற்கும் கட்டம் எதிர்காலச் சிந்தனை வளர்ச்சிக்கு முடியுமா? முடியாதா? அதுதான் கேள்வி.”

“முடியலாம். ஆனால் எந்தக் காலத்தில்?”

“எந்தக் காலத்தில் என்பதல்ல பிரச்சினை. பிரபஞ்சம் எல்லையற்றது. கால வேறுபாடுகள் உன்னை மையமாக வைத்தவை. எனவே, அந்தப் பிரச்சினை வேண்டாம். இப்போ முடியுமா? முடியாதா? என்பதுதான் முக்கியம்.”

“முடியும்” நான் ஒப்புக்கொண்டேன்.

“ஆம்@ முடியும். அதையும் ஏற்கனவே இன்றைய விஞ்ஞானம் ஒரு கோட்பாடாக வைத்துவிட்டது.”

“எங்கு?”

“உங்கள் நாட்டு யுசவாரச ஊடயசமன் 2001 ளுpயஉந ழுனலளளநல அந்தக் கோட்பாட்டின் அல்லது தத்துவத்தின் கதைதான்.”

நான் யோசித்தேன். நல்லசிவம் சொல்வது சரியாகவேயிருந்தது.

“ஆம்@ அது உண்மைதான். ஆனால், அதனால் இப்போ என்ன வந்துவிட்டது?” – யோசித்தவாறே கேட்டேன்.

“அந்தக் கோட்பாடு தவிர்க்க முடியாதது. அதைப் போலவே அது பிறப்பிக்கும் வேறு கருத்துக்களும் தவிர்க்க முடியாதவை.”

“எவை எவை?”

“கோடி சூரியன்களும் கோள்களும் உள்ள எல்லையற்ற இப்பிரபஞ்சத்தில் ஏற்கனவே அப்படியொரு நிலை, ஏக சிந்தனை நிலை எங்காவது ஓர் இடத்தில் வளர்ந்திருக்காதா?”

“இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம்.”

‘ஆம்@ இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆகவேண்டும். சரி, அடுத்த கேள்வி@ எல்லை காணாத இப்பிரபஞ்சத்தின் தோற்றம் எப்போது ஏற்பட்டது என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. அப்படித்தானே?”

“ஆம்.”

“அதன் தோற்றம் அநாதியானது என்றால் பிழையில்லை.”

“ஆம்.”

“அப்படியென்றால், எங்காவது ஓர் இடத்தில் (அல்லது பல இடங்களில்) வளர்ந்திருக்கக்கூடிய அந்த ஏக சிந்தனை நிலையின் தோற்றமும் எப்போதோ ஏற்பட்டிருக்கலாம்.”

“இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம்.”

“ஆம்@ இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆகவேண்டும். அப்படியென்றால், அந்த ஏகசிந்தனை நிலையின் தோற்றமும் அநாதியானதே என்பதே பொருத்தம்.”

“இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம்.”

“ஆம்@ இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆகவேண்டும். இனி அடுத்த கேள்வி:- அந்த ஏக சிந்தனை நிலை ஏதோ ஒரு தனி இடத்தில் வளர்ச்சியுற்றுப் பரவியிருந்தாலும் அது சகல பிரபஞ்ச இயக்கங்களையும் கட்டுப்படுத்தவும். ஆற்றுப்படுத்தவும் கூடிய வல்லமை வாய்ந்ததாகவும் இருக்கலாம். நானும் நீயும் கூட அந்த ஏகசிந்தனை நிலையின் கட்டுப்பாட்டுக்குட்பட்டவர்களாகவே நம்மை அறியாமலேயே வாழ்ந்து கொண்டு இருக்கலாந்தானே? ஒருவேளை இன்று வரையும் அத்தனை உருவங்களும், தோற்றங்களும், செயல்களும், சிந்தனைகளும் அதனாலேயே உருவாக்கப்பட்டனவாயும் இருக்கலாம்.”

“இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம்.”

“ஆம்@ அப்படிச் சொல்வதுதான் சரியான விஞ்ஞானியின் பதில். இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆகவேண்டும். அப்படியென்றால், எங்கோ ஒரு தெய்வகோளத்திலிருந்து சர்வ வல்லமை பொருந்திய இறைவன் எல்லாவற்றையும் செய்வித்துக் கொண்டிருக்கிறான் என்ற பழைய சமயங்களின் வளர்ச்சியுறாத துவைதப் பார்வைக்கும், புதிய விஞ்ஞானத்தின் கோட்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?”

நல்லசிவத்தின் கேள்வித்தொடர்கள் எழுக்கிய அதிர்வுகள் என் மனதில் பல கோண எல்லைகளையும் உடைத்துக்கொண்டு எல்லையற்று விரிந்து கொண்டிருந்தன. ஒருவித விடுதலைப் பரவசம் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. என்னால் அவனது கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை.

“வித்தியாசம் இல்லை@ விளங்கிறதா?” நல்லசிவம் என் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தான். “புதிய விஞ்ஞானத்தின் அத்வைத கோட்பாட்டைத்தான் வளர்ச்சியடைந்த சமயஞானத்தின் அத்வைதப் பார்வை பிரம்மமே சக்தி, சக்தியே பிரம்மம் என்று ஏற்கனவே கண்டுபிடித்து நிரூபித்தும் விட்டது.”-

“புதிய அத்வைத சிந்தனைமூலம் எங்கோ ஓரிடத்தில் வளர்ச்சியடைந்திருக்கக் கூடிய ஏகசிந்தனை நிலையை மறுக்க முடியாது இருக்கும் விஞ்ஞானம் தவிர்க்கமுடியாத வகையில் இந்தப் பழைய அத்வைத சமய ஞானத்தைக் காலப்போக்கில் ஏற்றுத்தான் ஆகவேண்டும். எப்படிப்பார்த்தாலும் விஞ்ஞானம் இனிமேல் சமய ஞானத்தால் விழுங்கப்படவே போகிறது. எப்போது அத்வைதப் பார்வையை விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டதோ, அப்போதே அதன் காலம் முடியத் தொடங்கிவிட்டது.

“விஞ்ஞான அறிவு அந்தளவு உச்சத்திற்கு வளர்ந்தபின் அது அடுத்தகட்டப் பேரறிவின் பேர்ஞான ஈர்ப்புக்குள்விழுந்து கரைவது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. இனிமேல் அந்தக் கரைவினதும் கலப்பினதும் காலம், விஞ்ஞானம் என்ற சொல்லே வழக்கொழியும் காலம்.”

நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். என் நினைவுகள் பிரபஞ்சத்தின் பெரும் பெரும் வெளிகளில் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தன. சனிக்கோளத்தின் சந்திரனுக்கப்பால் அந்தக் காட்சிகள் தெரிந்தன. ஆர்தர் கிளார்க்கின் ….. காட்சிகள்! பரிணாமம் வளர்ச்சியுற்று ஏக விஞ்ஞான சிந்தனையானது உருவங்களைக் கடந்து. எண்ணற்ற சூரியன்களையும் கோளங்களையும் கரைத்தும் உருவாக்கியும் தனது பெரும் லீலையை நடத்திக்கொண்டிருந்தது. இருப்பினும், அது இன்னும் தன்னைப் பிரபஞ்சம் எங்கும் வியாபித்த, சகலவற்றிலும் ஊடுருவிய ஏக சிந்தனையாக வளர்க்காமலே இருந்தது. அந்த வகையில் ஆர்தர் கிளார்க்கின் பேரறிவு உருவத்துக்குட்பட்டதாகவும், எல்லைக்குட்பட்டதாகவுமே இருந்தது.

நல்லசிவத்தின் விளக்கங்களைக் கேட்டபின் எனக்கு அந்த விஞ்ஞானக் கதைகள் எல்லாம் வெறும் அற்பங்களாகவே தெரிந்தன.

அந்தளவுக்கு ஏக சிந்தனையை வளர்க்க முடியுமானால் ஏன் இன்னும், அதற்கப்பாலும் போகமுடியாது?

நமது விஞ்ஞானிகள் தமது மனங்களின் பழக்க தோஷங்களால் கட்டுப்பட்டவர்களாகவே தெரிந்தார்கள். அதனால், அந்த ஏகசிந்தனை வளர்ச்சியை அதன் பூரண எல்லைவரை விடுவிக்க முடியாதவர்களாகவே தெரிந்தனர்.

ஏகசிந்தனை வளர்ச்சியின் பூரண எல்லை எது?

எல்லையற்று எங்கும் வியாபித்து, எல்லாவற்றிலும் ஊடுருவி, எல்லாவற்றையும் உருவாக்கியும் கரைத்தும் நர்த்தனம் செய்யும் நிலைதான் அதன் எல்லையற்ற எல்லையாக இருக்கமுடியும்.

அது இனிமேல்தான் வரவேண்டுமென்று இல்லை. ஏற்கனவே அது வந்துவிட்டு இருக்கலாம். பிரபஞ்சத்தின் தோற்றம் அநாதியானதுபோல் அதன் தோற்றமும் அநாமியாக இருக்கலாம். அது இன்று நாம் காணும் பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கலாம். பிரபஞ்சமும் அதுவும் பிரிக்க முடியாத அத்வைதப் பொருளாக ஆதியாய், அநாதியாய் என்றுமேயிருக்கலாம்.

விஞ்ஞானம் அதை மறுக்கமுடியாது. இருக்கலாம்@ இல்லாமல் இருக்கலாம் என்று மட்டும் சொல்லலாம்.

ஆனால், சனிக்கோளத்திற்கப்பால் கண்ணுக்குப் புலப்படாத விண்வெளி மூலையில் ஏகசிந்தனையானது உருவத்தைக் கடந்த புதிய லீலையில் இறங்கிவிட்டு இருப்பதாக விஞ்ஞானம் கற்பனை பண்ண முடியுமானால், இந்த எங்கும் வியாபித்த சத்தியம் பற்றிய சமய ஞானக்கருத்து அதைவிட விஞ்ஞானமாகவும் உண்மையான பிரபஞ்ச யதார்த்தமாகவும் தெரியவில்லையா?

அடுத்த கோளங்களிலிருந்து வளர்ச்சியடைந்து விஞ்ஞானிகள் இங்கு வருவார்கள் அல்லது செய்தி அனுப்புவார்கள் என்று கருதி, அதற்குரிய கருவிகளோடு பூமியில் விஞ்ஞானிகள் இனிமேல் காலம் காலமாகத் தவமியற்றவும் கூடத் தயாராய் இருக்கிறார்கள். அந்த நிலையில் அடுத்த உலகப் பேரறிவு உனது அகத்திற்குள்ளும் இருக்கிறது. அதை முதலில் அடைவதற்குத் தவமியற்றவும் என்று சொல்லும் சமயஞானம் விஞ்ஞானத்தையும் கடந்த விஞ்ஞானமாகத் தெரியவில்லையா?

“எதிர்காலச்சிந்தனை வளர்ச்சி ஏகசிந்தனை நிலை வளர்ச்சியாக மாறி எல்லாவற்றையும் ஆக்கி அழித்து லீலை நடத்த முடியும் என்று ஏற்றுக்கொள்ள முடியுமானால், ஏற்கனவே அந்த நிலை வந்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது.”

நான் என்பாட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

“இருப்பவையெல்லாம் அதன் படைப்பேதான் என்பதையும் மறுக்க முடியாது. இருப்பவையெல்லாம் அதன் படைப்பேதான் என்றால், இருப்பவற்றுக்கும் அதுக்கும் அடிப்படையில் இரண்டற்ற ஒருமையான அத்துவிதத்தன்மை இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அத்துடன், இனிமேல் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் என்றும் விஞ்ஞானம் பதிலளிக்க முடியாது.”

“காரணம்?” - இப்போ நல்லசிவம் கேட்டான்.

“காரணம்” – நான் கூறினேன். “காரணம், அப்படித்தான் அது இருக்கிறது என்று அதைப்பற்றி ஆராய்ந்த மெய்ஞானிகள் ஏற்கனவே கூறியுள்ளனர். அவர்களின் ஆதாரங்களை ஆராயாமல் எதையும் இனி விஞ்ஞானத்தால் மறுக்கவும் முடியாது.”

“சரியான முடிவு” என்று என்னைப் பாராட்டினான் நல்லசிவம்.

“சரியான முடிவு. நீ அந்த முடிவை எடுக்கும் வரைக்கும்தான் நானும் காத்திருந்தேன். இனிமேல் சமூகத்தின் சகல சிந்தனைகளையும் செயல்களையும் அந்த வழியில் ஆற்றுப் படுத்துவதுதான் நமது வேலை, எந்த விதக் கற்பனைகளுக்கும் இனி இடமில்லை. விஞ்ஞானம் அதையும் இனி மறுத்தால்ண, அதைவிடப் பிழையான கற்பனாவாதம் வேறு ஒன்றும் இருக்கமுடியாது.”

“சகல கற்பனைகளையும் நாம் இனி அழிப்போம்” என்று சபதமெடுத்தேன் நான்.

“அழிப்பது அவசியம்தான். ஆனால், நாம் அழிப்பதற்காக் மட்டும் வரவில்லை. நமது அடிப்படை வேலை ஆக்கவேலைதான்.

நமது பாதை இனி மெய்முதல்வாதம். அடித்தள சத்தியமும் மேல்தளமற்ற நிலைகளும் அடிப்படையில் ஒரே மெய்நிலையே என்பதே மெய்முதல்வாதம்.”

என்னிடம் அவன் எழுப்பிய பரவச அலைகள் என்னை முற்றாக ஆட்கொள்ளத் தொடங்கியது. அவனை நான் இறுக அணைத்துக்கொண்டேன்.


விடுதலை என்ற இலட்சியத்துக்குரிய வழிகளும்
விடுதலை பயப்பதாக இருக்க வேண்டும்.

ஈழத்தமிழரும்
உலக விடுதலை இலக்கியமும் இயக்கமும்

மெய்முதல்வாதம்
இன்று உலகின் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் காணமுடியாத அளவுக்கு ஈழத்துத் தமிழ் இலக்கியப்போக்கு ஒரு துரித வளர்ச்சியையும் பாய்ச்சலையும் காட்டுகிறது. முழு உலக இலக்கிய வளர்ச்சிக்கும் இன்று ஈழத்தமிழ் இலக்கியப் போக்கே தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது. அதுவே முழு உலகத்துக்குமுரிய விடுதலை இலக்கியமாக இருக்கிறது.

இது உண்மை, ஆனால், பலருக்கு இதை நம்புவது கஷ்டமாக இருக்கும். எப்படி நம்புவது? எல்லா வெளித் தோற்றங்களும் இந்த உண்மையை மறைக்கும் திரைகளாக இருக்கும்போது எப்படி நம்புவது?

தமிழ் இனத்தையும் அதன் மொழியையும் பிரதி பலிப்பதாகக் கூறும் ஈழத்துப் பெரும்பான்மைத் தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் தனித்தனியாகவும் கூட்டாகவும் இன்றைய உலகப்போக்குக்குத் தடையாகவே எதிர்நீச்சல் அடித்துக்கொண்டிருக்கின்றன. கனவுகள், கற்பனைகள், பொய்கள் எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு உலக சமூகத்தின் யதார்த்தப் போக்கைக் காண முயலும் அரசியல் விழிப்பு அடுத்த நாடுகளில் எழுச்சியுற்றுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நம் கட்சிகளோ அண்டைத் “தாய்த் தமிழ்நாடு” வளர்ந்து வரும் சினிமா – பிஸ்னஸ் - அரசியல் கனவுகளில், கற்பனைகளில், பொய்களில் தம் கொள்கைகளையும் கொடிகளையும் நிறுவியவாறே போராட முயல்கின்றன.

அந்த நிலையில் உலகத்துக்குத் தலைமை தாங்கும் இலக்கியப்போக்கை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் எவ்வாறு எதிர்பாhக்கலாம்?

ஈழத்துத் தமிழரின் கல்வித்தரம் மிக உயர்வானது. ஆனால், அந்தக் கல்வியோ வயிற்றை வளர்க்கும் உத்தியோகக் கல்வியாக மட்டும் இருக்கிறது. “டொக்டர்”, “என்ஜினியர்”, “புறொக்டர்” என்ற பெயர்களில் படித்த யந்திரங்களாக வாழும் போக்குத்தான் பெரும்பாலான ஈழத்துத் தமிழர்களின் இலட்சிய வாழ்க்கைப் போக்காக இருக்கிறது. மனதை வளர்க்கும் கல்வியையும், சிந்தனையை வளர்க்கும் வாழ்க்கைப் போக்கையும் அவர்களால் இன்னும் நாடமுடியவில்லை.

அந்த நிலையில் எவ்வாறு உலக இலக்கியத் தலைமையை ஈழத்துத் தமிழ் இலக்கியத்திடம் எதிர்பார்க்கலாம்.

நெற்றியில் விபூதிப் பூச்சு, வாயில், அன்பே சிவம் என்ற பேச்சு, போதாததற்குக் கோயில்கள், கோபுரங்கள், தேர்கள், திருவிழாக்கள் வேறு. மார்கழி விரத காலங்களில் கோலம் போட்ட வீட்டு முற்றங்களின் அழகுபோல் நம் சைவத் தமிழர்களின் தோற்றமும், அவர்கள் வாழும் சமூகத்தின் சம்பிரதாயங்களும் அழகாகத்தான் இருக்கின்றன. ஆனால், அத்தனையும் எத்தனை கோரமான ஏமாற்றுப் பூச்சிக் கோலங்கள். அத்தனை வெளிப்பூச்சுகளி; மறைவிலும் உலகத்தின் பழம் பெரும் பிற்போக்குப் பலாத்காரமும் ஆக்கிரமிப்பும் சுரண்டலும் இன்னும் மரியாதையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன நிறத்தைச் சொல்லி, மொழியைச் சொல்லி, இனத்தை சொல்லி, வர்க்கத்தைச் சொல்லி, கட்சியைச் சொல்லி நடத்தப்படும் பலாத்கார ஆக்கிரமிப்பும் சுரண்டல்களும் மனிதக் குறைகளின் வெளிப்பாடுகள் என மன்னிக்கப்படக் கூடியவை. ஆனால், சமயத்தைச் சொல்லி நடத்தப்படும் பலாத்கார ஆக்கிரமிப்பும் சுரண்டலும் இறைவனையே குற்றங்களுக்குரியவனாக ஆக்கிவிடுகின்றன. மனிதனையல்ல அந்தக் கெட்டித் தனமான காரியத்தைப் பெரும்பாலான இந்துக்கள் நீண்ட காலமாகச் செய்து வருகின்றனர். அவர்களில் முன்னுக்கு நிற்பவர்கள் நம் யாழ்ப்பாணத்துச் சைவர்கள். தம் சொந்தக் குறைகளையும், கூட்டு ஆசைகளையும், ஆணவத்தையும், அறியாமையையும் இறைவனிலும் சமயத்திலும் ஏற்றிவிட்டுத் தம்மளவில் ஒன்றும் அறியாத நிரபராதிகள்போல், பண்பட்ட சாத்வீகவாதிகள்போல் நடித்துக்கொள:ளும் நமது ஈழத்துச் சைவர்களைப் போன்ற வேடதாரிகளை உலகின் வேறு எங்கும் காணமுடியாது என்றுகூடச் சொல்லலாம். சாதிப்பாகுபாடு என்ற பெயரில் அவர்கள் காலங்காலமாக நடத்திவரும் பலாத்கார ஆக்கிரமிப்பும் சுரண்டலும் உலகில் காணப்படும் வேறு எல்லாவகையான ஆக்கிரமிப்புகளையும் சுரண்டல்களையும் விடக் கோரமானவை, காட்டுமிராண்டித்தனத்தின் கோரத்தை அதன் நிர்வாணக் கோலத்தில் வெளியெ தெரியவிடாமல், அதன் மேல் பூச்சுச் சாத்வீக வேடம் மறைத்துவிடுகிறது மறைத்துவிடுவதோடு அதன் கோரத்தையும் நோவையும் உணரவிடாது, அங்கு வாழும் பல நல்ல மனிதர்களின் உணர்வுகளையுங்கூட மழுங்கடித்து விடுகிறது. அதனால் எந்தவிதக்குற்ற உணர்வும் முரண்பாட்டுணர்வுறின்றி அவர்களாலும் “அன்பே சிவம்” என்றும், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்றும் ஒத்துப்பாட முடிகிறது. சாதிப்பிரச்சினையின் கோரத்தைப் புட்டுக்காட்ட முயல்பவர்களை, ஏதோ தன்பாட்டில் சாகப் போகும் ஒன்றுக்கு உயிரூட்ட முயல்பவர்களாகவும், தேவையற்ற சின்னப் பிரச்சினைகளைச் சின்னத்தனமாக, தமிழர்களைக் காட்டிக்கொடுக்கும் துரோகத்தனமாகக் கிளறிவிட முயல்பவர்களாகவும் குற்றஞ்சாட்டி ஒதுக்கிவிட அவர்களால் முடிகிறது. சில சமயம் அந்த வெளிவேடக் கலாசாரத்தின் இல்லாத கற்பையும் தூய்மையையும் இருப்பதாக நிரூபிப்பதற்கும், இல்லாத அந்த மாயையைப் பாதுகாப்பதற்கும் அவர்களால் கலையாட்டம் போடவும் முடிகிறது.

இதுதான் ஈழத்தமிழ்ச் சமூகம். குறிப்பாக யாழ்ப்பாணத்துச் சைவத் தமிழ்ச் சமூகம். இதனிடம் முழு உலகுக்குமே தலைமை தாங்கும் இலக்கியப் போக்கை எப்படி எதிர்பார்க்கலாம்?

தமிழ் என்ற பெயரிலும், பண்பாடு என்ற பெயரிலும் தென்னிந்தியாவிலிருந்து வியாபாரத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட தமிழ்ச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், திரைப்படங்கள் என்ற நோய்க் கிருமிகள் ஈழத்துத் தமிழ்ப் பொதுமக்களின் கலை, இலக்கிய ரசனையை அரித்துவிட்டு அதனிடத்தில் கனவுகள், கற்பனைகள், வரலாற்றுப் பொய்க்ள என்ற புற்றுக்களை எழுப்பியுள்ளன. அந்தப் புற்று நோயை எதிர்ப்பதிலேயே தரமான ஈழத்துத் தமிழ் எழுத்தாளன் தன் முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டியவனாய் இருக்கிறான். அந்த நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இன்று ஒருவாறு வெற்றியைக் கண்டுள்ள அவன், அது விட்டுள்ள இடத்தில் உயிருள்ள கலை, இலக்கியக் கலங்களை எழுப்புவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறான். அதில் அவன் பூரணமாக வெற்றி கண்டவனாக இல்லை.

அந்த நிலையில் அவனால் எப்படி முழு உலகத்துக்கும் வழிகாட்ட முடியும்?

ஒருவகையில் அந்தச் சந்தேகங்கள் நியாயமானவையே. ஆனால், அவற்றுக்குக் காரணமாகவுள்ள முரண்பாடுகள் தான் நம்பிக்கையையும் எழுப்புகின்றன. எந்தெந்தக் காரணங்கள், எந்தெந்தச் சமூக, அரசியல், கலாசார, சமய யதார்த்த நிலைகள் உலகப் போக்குகள் எதிரான முரண்பாடுகளாகத் தெரிகின்றனவோ, அவையே தான் புதிய சிந்தனை எழுச்சிக்கும், அது தரக்கூடிய தலைமைக்கும் காரணமாகவும் இருக்கின்றன.

உலகின் மிகமிகப் பிற்போக்கான அரசியல், சமூக, கலாசார, சமயச் சூழலில்தான் உலக வரலாற்றின் அடுத்த கட்ட எழுச்சிக்குரிய சிந்தனையும் செயலும் பிறக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால், வேறு காரணிகளும் கூடிக் காணப்பட்டால், அதைவிட அருமையான வேறு சூழல் இருக்கவும் முடியாது.

அந்த வேறு காரணிகள் எவை?

முதலாவதாக, இன்றைய ஈழத் தமிழர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒருவகையில் அதிருப்திப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அநியாயத்தையும் அதர்மத்தையும் எதிர்த்து, அரசியல் துறையில் போராடவேண்டியவர்களாகவே தம்மைக் கருதிக்கொள்கின்றனர்.

அந்த அதிருப்தியும், போராட்ட உணர்வும் வரலாற்றின் அடுத்த கட்ட எழுச்சிக்கு மிகமிக அவசியமாகத் தேவைப்படும் மனச்சூழல் ஆகும். அதிருப்தியும் தேடலும் அவற்றுக்குரிய போராட்ட உணர்வும் இல்லாத ஒரு சூழலில் புதிய எழுச்சி பிறப்பது இயலாத காரியமாகும்.

அத்துடன் அரசியல் துறையில் அதிருப்தியுற்ற காரணத்தினால் போராட்டத்தின் அவசியத்தை உணரும் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் அதே போராட்டத்தின் மூலம் தன் வெளிவேடச் சமூக, கலாசார அமைப்பைக் காப்பற்றவும், அதற்கு எதிராக ஓர் அடிப்படைப் போராட்டத்தின் அவசியத்தை மறைக்கவும் திசை திருப்பவும் முயல்கிறது என்பதை உணர்ந்து, அந்த மேல்தளப் போராட்டத்தை முழுமைப்படுத்த முயல்பவர்களும் அதே அமைப்பில் இருக்கின்றனர்.

ஈழுத்துத் தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலோனார் அந்த ரகத்தினராகவே இருக்கின்றனர். வெளிவேட அமைப்பு நடத்தும் வெளிவேடப் போராட்டத்தையும், அதற்குக் காரணமாகவுள்ள அரசியல்துறை அதிருப்தியையும், அதே வெளிவேட அமைப்பின் சகல அம்சங்களையும் தகர்த்தெறியும் முழுப் போராட்டமாக மாற்ற வேண்டுமென்பதையும், அந்த மாற்றத்தின் மூலமே அந்தப் போராட்டத்தை முழு உலகத்துக்கும் வழிகாட்டும் போராட்டமாக வளர்க்கவேண்டுமென்பதையும் ஒத்து உணர்ந்தவர்களாக அவர்கள் இருக்கின்றனர். உதாரணமாகத் தென்னிந்தியாவிலிருந்து கட்டற்றமுறையில் இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற சஞ்சிகைகளைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுத்த முயற்சிக்குரிய அர்த்தம் வெறும் இலக்கியத் துறையோடு நின்றுவிடுவதில்லை. அம்முயற்சியை ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, சமயத்துறைகளுக்குரிய கனவுகளையும், பொய்களையும் வெளிவேடப் பூச்சுகளையும் அழிக்க உதவும் ஒரு பெரும் போக்கின் சிறு அம்சமாகவே பார்க்கவேண்டும்;. அப்படியே தான் அவர்கள் பார்க்கின்றனர். அது அவர்களின் இலக்கியப் போராட்டம் மட்டுமல்ல. அதுவே சாதிக் கொடுமைக்கும், அரசியல் ஏமாற்றங்களுக்கும், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிரான ஆரம்பப் போராட்டமாகவும் இருக்கிறது. எழுச்சியுற்றுக் கொண்டிருக்கும் உலக சமூகத்தின் முற்போக்குச் சக்திகளோடு ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தையும் பிணைக்கும் ஓர் பேர் முயற்சியின் “போர்க்கோலம்.”

அதை உணரும்போது, உலக இலக்கிய வளர்ச்சிக்கு நம் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வாறு தலைமை தாங்கலாம் என்று முன்பு எழுந்த சந்தேகங்கள் மெல்ல மெல்லக் கரையத் தொடங்கிவிடும்.

ஆனால், முற்றாகக் கரைந்துவிடா, அவற்றை முற்றாகக் கரைப்பதற்கு வேறு ஆதாரங்களும் வேண்டும்.

உலகத்தின் பழம்பெரும் பலாத்கார ஆக்கிரமிப்பையும் சுரண்டலையும் தன் வெளிவேடச் சாத்வீகப் பூச்சுக்களால் மறைத்துக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம், அதேவேளையில் உலகத்தின் ஒரு பழம்பெரும் சமூகமாகவும், பழம்பெரும் இலக்கிய, கலாசார, சமய வரலாற்றைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதனால் இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு வழிகாட்டக்கூடிய அனுபவ முதிர்ச்சியும், அந்த அனுபவம் இட்டுச் சென்று தொட்டுக் காட்டிய ஞானப்படுக்கையும் அதனிடம் இல்லாமலில்லை. அந்த அனுபவ முதிர்ச்சியையும், அது தொட்ட ஞான ஊற்றையுமே இன்று நம் தமிழ்ச் சமூகம் தன் சாத்வீக வெளிப்பூச்சுக்களாக மாற்றியுள்ளது. அந்த அனுபவமும் ஞானமும் எந்த அக்கிரமங்களையும் அறியாமையையும் பலாத்காரத்தையும் எதிர்த்தனவோ, அவற்றையே தன் உள்ளடக்கமாகவும் அந்தரங்க வாழ்க்கைப் பண்புகளாகவும் மாற்றி, இன்றைய தமிழ்ச் சமூகம் மாறாட்டம் செய்கிறது. முருகனின் கோயிலுக்குள் சூரன் கொலுவேறிய கதை. கண்ணகியின் கற்பை வெறும் வாயளவிற் பேசிக்கொள்ளும் வெறிவேட வியாபார விபச்சார வாழ்க்கை. இருந்தாலும் கண்ணகியும் சரி, முருகனும் சரி நம் பழம்பெரும் தமிழ், சமூகத்துக்கு அந்நியமானவர்களல்லர். அவர்களில்தான் நம் கலாசாரத்தின் அடித்தளம் தங்கியுள்ளது.

அந்த வகையில் பார்க்கும்போதுதான் நாம் சந்திக்கும் முரண்பாடுகளின் உண்மையான தன்மை தெரிய வரும். தம் பின்தங்கிய நிலையிலிருந்து எழுச்சியுறப் போராடிக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்கச் சமூகங்களைப்போல் நம் ஈழுத்துத் தமிழ்ச் சமூகம் பொருளாதார வறுமையோடு கலாசார, சமய வறுமையையும் காட்டும் ஒரு சமூகமல்ல, தன் முரண்பாடுகளிலிருந்து விடுதலை பெற முயன்றுகொண்டிருக்கும் நம் ஈழத்துத்தமிழ்ச் சமூகம், அமெரிக்கச் சமூகத்தைப்போல் அண்மைக்கால வரலாற்றையும் அனுபவத்தையும் கொண்டுள்ள ஒரு புதுச் சமூகமுமல்ல. அடியில் இன்ம் ஞான உயிர்த்துடிப்புடன் வாழும் உலகத்தின் மிகப் பெரும் பழமை வாய்ந்த கலாசாரத்தைக் கொண்ட சமூகங்களில் நமது சமூகமும் ஒன்று.

அத்தகைய ஒரு சமூகத்தின் உயிர்த்துடிப்பை, அதன் உண்மையா மரபுத் துடிப்பைத் தொடும் எழுத்தாளர்கள் இன்று ஈழத் தமிழ்ச் சமூகத்திற் காணப்படுகின்றனர். அவர்கள் தம் சொந்தச் சமூகப் பிரச்சினைகளுக்கும், முழு உலகப் பிரச்சினைகளுக்கும் வழி காணும் துணிவைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். சமகால ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை அறிந்தவர்கள் அந்தப் பழந்தமிழ் மரபின் உயிர்துடிப்பையும் அது காட்டும் ஞானத் துணிவையும் புதிய தரிசன வழியையும் நிச்சயமாககக் காண்பர்.

ஈழத்தமிழர்களின் வெளிவேடப் “போராட்டப்” பூச்சுக்குள்ளிருந்து இன்னொரு பெரும் போராட்டத்திற்குரிய “போர்க்கோலம்” எழுவதையும், அந்தப் போர்க்கோலத்தையும் அடித்தளச் சத்தியத்தில் நிறுவி, உலக பரிணாம வளர்ச்சியின் அடுத்த தளத்துக்கு உயர்த்தும் இன்னோர் எழுச்சியின் “போர்ப்பறை” அதற்குள் கேட்பதையும் இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை அறிந்தவர்கள் கண்டிருப்பார்கள். கேட்டிருப்பார்கள்.

அவற்றைக் கண்டவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் இன்றைய உலக இலக்கிய வளர்ச்சிக்கு ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வாறு தலைமை தாங்கலாம் என்ற சந்தேகம் இருக்க முடியாது.


சுழல் : ஒன்று
தளம் : சமூகம்

“போராட்டம்”
“போர்க்கோலம்”
“போர்ப்பறை”

வளர்ச்சி மாற்றத்தைக் கோரி ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் எழும் மூன்று குரல்கள் அவை. அவை ஏறக்குறைய ஒரே அர்த்தத்தோடு வந்தாலும் மூன்றும், மூன்று வௌ;வேறான தளங்களிலிருந்து வருகின்றன.

“போராட்டம்” – மேல்தளத்தின் குரல்.

“போர்க்கோலம்” – இடைத்தளத்தின் குரல்.

“போர்ப்பறை” – அடித்தளத்தின் குரல்

மேல்தளம் வெறும் வெளிப்பூச்சுக்களுக்கும், போலியான தமாத சாத்வீக ஆசாரங்களுக்குமுரிய தளமாகும். ஈழத்தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையினர் உண்மைகள் என்று நம்பி மாறாட்டம் செய்யும் பூச்சுக்களுக்கும் ஆசாரங்களுக்குமுரிய தளமாகும். அந்தத் தளத்தில் வாழும் பெரும்பான்மை ஈழத்தமிழரைப் பிரதிபதிக்கும் தமிழ்க் கூட்டணிக் கட்சிகளின் போராட்டமும் வெறும் மொழியுரிமையோடு நின்றுவிடும் “தூய” அரசியல் போராட்டமாகவும், தமிழ்ச் சமூகத்தின் மேற்பூச்சுக்களைக் கிழித்துக்கொண்டு கிழே செல்லாத ஆசாரப் போராட்டமுமாகவே இதுவரை தடுமாறி வருகிறது. அதன் உண்மையான அடித்தள வேர்களை இன்னும் உணராமல் இருக்கிறது.

“போர்க்கோலம்” என்பது மார்க்சீய முற்போக்கு எழுத்தாளரான செ. கணேசலிங்கனின் நாவல் ஒன்றின் பெயர். நமது தமிழ்ச் சமூகத்தின் மேல் பூச்சுகளுக்குப் பின்னாலுள்ள சாதிக்கொடுமைகளையும், பிற்போக்குப் பலாத்காரச் சுரண்டலையும் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து எழும் மார்க்சீயப் போராட்டத்தை அழுத்துகிறது அது. மேல் பூச்சு மொழிப்போராட்டத்தை இன்னும் கீழே ஆழமாக இறக்கி, சாதிக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தோடும் உலக நிலமானிய _ முதலாளித்துவ அமைப்புகுக்கு எதிரான பொதுவுடமைப் போராட்டத்தோடும் பிணைத்துப் பார்க்கத் தூண்டும் மார்க்சீய கோணத்தின் போர்க்கோலம்.

“போர்ப்பறை” மு. தளையசிங்கத்தின் நூலொன்றின் பெயர், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துசமயம் ஆகிய நான்கு சமயங்களும் வெளிப்படுத்தும் ஒரே உண்மையான சத்தியம், சகலதிலும் எழுச்சியுறும் பூரணர் சர்வோதய மலர்ச்சிக்குக் கட்டியங்கூறும் புதுயுகத் தர்மப் பறை அது. முழு மனிதகுலமும் உடல், உயிர், மனம் ஆகிய தளங்களைத் தாண்டிப் பேரறிவுக்குள் காலடி வைக்கும் பரிணாமப் பெரும் போராட்டத்துக்கு உதவும் வகையிலும் அதன்மூலம் உதவி பெறும் வகையிலும், சகல சிறு போராட்டங்களும் அதனோடு ஒன்றாகப் பிணைக்கப்பட்டு உருமாற்றப்படவேண்டுமென்று அதைகூவும் அடித்தள ஆத்மாவின் ஞானக்குரல்.

மூன்றும் வௌ;வேறான தளங்களிலிருந்து எழுபவை. மூன்றையும் எல்லாரும் ஒருங்கே கேட்காவிட்டாலும் மூன்றில் ஏதாவது ஒன்றையாவது ஈழத்துத் தமிழர் எல்லோரும் பெரும்பாலும் இன்று கேட்பவர்களாகவே இருக்கின்றனர்.

வளர்ச்சி மாற்றத்தைக் கோரும் மூன்று பார்வைக் கோணங்களும் மூன்று வௌ;வேறான மனத்தளங்களுக்குரிய நிலைகளாக இருந்தாலும், அவை மூன்றும் வௌ;வேறான சமூகங்களுக்கு உரியவையல்ல. அதாவது, சிங்களச் சமூகம், தமிழர் சமூகம், பறங்கியர் சமூகம், போன்ற மூன்று வௌ;வேறான சமூகங்களுக்கு உரியவையல்ல. அதைக் கவனிப்பது அவசியம். மூன்று வௌ;வேறான மனத்தள நிலைகளும் ஒரே இனத்தில், ஒரே சமூகத்தின், ஒரே கூட்டுமனதின் வௌ;வேறான தளங்களிலேயே காணப்படுகின்றன.

அதனால் ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் கூட்டுமனம் எல்லா நிலைகளிலும் ஏதோ ஓர் அளவில், ஏதோ ஓர் அர்த்தத்தில் இன்று “போர்” என்ற ஒன்றுக்குத் தயார்ப்படுத்துவதாகவே இருக்கிறது. அதன் கூட்டுமனத்தின் மேல்தளத்தில், இடைத்தளத்தில், அடித்தளத்தில் எங்கும் ஏதோ வகையில் “போர்” என்ற ஒன்று உருப்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதனால் பெரும்பாலும் அக்கூட்டு மனத்துக்குரிய ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு தனிப்பட்ட தமிழனும் ஏதோ ஓர் அளவில் அதை ஆமோதிப்பவனாகவும் இருக்கிறான்.

இதைவிட உலக சரித்திர வளர்ச்சிக்கு ஓர் நல்ல சூழல் இருக்கமுடியாது. ஒரு முழுச் சமூகமும், ஒரு முழு இனமும் ஒரு தனிமனிதனைப்போல் ஏதோ ஒரு வகையில் அதிருப்திப்பட்டு, நடைமுறையில் இருக்கிற சமூக நிலையில் மாற்றங்காண விழைந்துகொண்டிருக்கிறது. அத்துடன் அதன் கூட்டுமனத்தின் இடைத்தள இயக்கமும் அடித்தள இயக்கமும் இன்னும் மேல் தளத்தின் பெரும்பான்மைப் பலத்தை பெறாதிருந்த போதிலும் அவையே சமூக, இன, மொழி, சமயப் பிரிவுகளைக் கடந்து, சர்வ தேசமெங்கும் வாழும் சகல மக்களினமும் இயக்கங்களாக வளரக்கூடியவையாக இருக்கின்றன. காரணம், இன, மொழி வித்தியாசங்கள் மேல் தளத்துக்குமட்டும் உரியவையாக இருக்கும்போது அடித்தளச் சத்தியநிலை உலக மக்கள் சகலருக்கும் உரியதாக இருக்கிறது. ஏற்கனவே அத்தகைய சர்வதேசத் தொடர்புகளும் தெரியவந்துள்ளது.

அதேபோல் மேல்தள மனநிலை மெல்ல மெல்ல அதற்குக் கீழுள்ள இடைத்தள இயக்கத்தாலும், இடைத்தள இயக்கம் அதற்கும் கீழுள்ள அடித்தள இயக்கத்தாலும் மெல்ல மெல்ல ஊடுருவப்பட்டு ஒன்றோடு ஒன்று எல்லைகளற்றுக் கலந்து உருமாறும் பூரணப் போக்குக்குரிய அறிகுறிகளும், அதற்குரிய கருத்துச் சர்ச்சைகளும், உட்போராட்டங்களும் ஆரம்பத்திலிருந்தே வெளியே தெரியவந்துள்ளன.

உண்மையில் இந்த மூன்று மனநிலைகளும் அடிப்படையில் வௌ;வேறானவையல்ல. சரித்திர வளர்ச்சியின் சத்திய வெளிக்காட்டல் என்ற ஏக காரணத்தால் தூண்டப்படும் சிந்தனை – செயல் சூழல் மாற்றத்தை ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன் மூன்று மனத்தள நிலைகளுக்கு ஏற்றவாறு மூன்றுவிதமாகப் புரிந்து கொண்டுள்ளது. அவ்வளவுதான். அவை மூன்றும் வௌ;வேறாகத் தெரியினும், அடிப்படையில் அவை ஒரே பெரும்போக்காகவே இருக்கின்றன. காரணம், சரித்திர வளர்ச்சி தற்செயலாக நடைபெறுவதில்லை. சரித்திர வளர்ச்சிக்குப் பின்னால் சகலதையும் நடத்துவிக்கும் சத்தியப் பேரறிவு நிற்கிறது. அந்த ஏக காரணமான சத்தியப் பேரறிவு சரித்திர வளர்ச்சியையும், மனிதப் பரிணாமத்தையும் இன்று ஒரு புதிய பெருந்தளத்துக்கு உயர்த்திக்கொண்டிருக்கிறது. அதற்குரிய மாற்றங்கள் இன்று ஈழத்தில் மட்டுமல்ல, முழு உலகமெங்கும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த உலகளாவிய மாற்றங்களைத்தான் ஈழத் தமிழ்ச் சமூகமும், குறிப்பாக அதன் இலக்கிய வளர்ச்சிப் போக்கும் வெளிப்படுத்துகின்றன.

ஈழத்தைப் பொறுத்தவரையில் அந்த மாற்றங்களைக் குறிப்பதற்கு வசதிக்காக ஒரு குறிப்பிட்ட ஆண்டைத் தெரிவு செய்ய வேண்டுமானால். 1956 ஐயெ தெரிவு செய்யவேண்டும். சர்வதேச ரீதியிலும் அந்த ஆண்டு முக்கிய பெரும் மாற்றங்களைக் குறிப்பதாக இருக்கிறது.


2
1956ம் ஆண்டு ஈழத்தின் சமகாலச் சரித்திரத்தில் ஒரு முக்கிய ஆண்டாகும். பண்டார நாயக்கா குறிப்பிட்ட மாற்றுவலயக் காலக்கட்டம் இலங்கையில் ஆரம்பித்த ஆண்டு அது@ சிங்களப் பொதுமக்கள் தமது விடுதலையை ஓரளவுக்குப் பரவலாக உணரவந்த காலம் அது. தனிச் சிங்களச் சட்டம் தோன்றிய காலம்.

ஈழத் தமிழ் மக்களிடையேயும் அதன் பாதிப்பு இன மொழி எதிர் விழிப்பாகவும் அவற்றுக்குரிய அரசியல் எதிர் விழிப்பாகவும் இருந்தன. அரசியலில் தமிழரசுக் கட்சி வலுவடைந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்திலும் அந்த விழிப்புணர்வு தெரியவந்தது.

1956-ஐ ஒட்டிய காலத்திலேயே ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களிடையே மார்க்சீய முற்போக்கு இயக்கம் உருவாகி வலுவடைந்தது.

அதே காலத்தில் உலகத்தில் பலவிடங்களிலும் ஏற்பட்ட பலவித மாற்றங்களுள் முக்கியமானவையாக இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.

ஒன்று ஹங்கேரிய போலிஸ் புரட்சி.

இரண்டு, எகிப்து நாட்டால் சூயஸ் கால்வாய் தேசிய மயமாக்கப்பட்ட சம்பவமும் அதைத் தொடர்ந்து எகிப்து மீது பிரித்தானியா நடத்திய விமானத் தாக்குதலும் ஆக்கிரமிப்பும்.

பல்வேறு வகைப்பட்ட இத்தகைய நிகழ்ச்சிகள் அடிப்படையில் சில ஒற்றுமையைக் காட்டுகின்றன. அந்த ஒற்றுமையை இனங்காண்பதற்கு ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையையே உதாரணமாக எடுக்கலாம்.

1956க்குப் பின்பு ஏற்பட்ட தமிழுணர்வும் இலக்கிய விழிப்பும் படிப்படியாக மூன்று இலக்கியப் போக்குகளைக் காட்டத் தொடங்கின.

ஒன்று, மரபுவாதமும், தன்னை உணராது அதனோடு ஒட்டிக்கொண்ட “நற்போக்கு” இலக்கியப் பார்வையும்.

இரண்டு, மார்க்சீய முற்போக்கு இலக்கியப் பார்வை.

மூன்று, அவை இரண்டிலும் அதிருப்தியுற்று அவற்றுள் அடங்காது வெளியே நின்ற மூன்றாம் பக்கப் பார்வை. காலப் போக்கில் அதுவே 1970லிருந்து பூரண சர்வோதயப் பார்வையாக வளர்ந்துள்ளது.

இவை மூன்று போக்குகளும் 1956க்குப் பின்பு உலகில் வலுப்பெற்றும், வலுவிழந்தும் காணப்படும் மூன்று சர்வதேச அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார சிந்தனைப் போக்குகளை ஒத்திருக்கின்றன.

ஒன்று, முதலாளித்துவ ஏகாதிபத்தியம், சூயஸ் நெருக்கடியும் எகிப்துமீது விமானத் தாக்குதல் நடத்திய பிரித்தானியாவின் போக்கும் சர்வதேச முதலாளித்துவ ஏகாதிபத்தியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைக் காட்டுகின்றன@ அதன் ஸ்தம்பிதத்தைக் காட்டுகின்றன.

இரண்டு, சோஸலிஸ ஏகாதிபத்தியம், ஹங்கேரி, போலிஷ் புரட்சிகள் சர்வதேச சோஸலிஸ ஏகாதிபத்தியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையைக் காட்டுகின்றன. அதன் ஸ்தம்பிதத்தைக் காட்டுகின்றன.

மூன்று, இவை இரண்டிலும் அதிருப்தியுற்று அவற்றுள் அடங்காது வெளியே நின்ற ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளைக் கொண்ட மூன்றாம் உலகமும் அதன் நடுநிலை வழியும். முதலாளித்துவத்துக்குள்ளும் மார்க்சீய சோஸலிஸத்துக்குள்ளும் அடங்காத மூன்றாம் வழியின் பூரண அர்த்தத்தை இன்னும் மூன்றாம் உலகம் காணவில்லை என்பது உண்மைதான். ஆனால், சர்வதேச ரீதியில் அப்படி ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இன்று காணப்படும் இளம் பரம்பரையினரின் அதிருப்தியானது அந்த மூன்றாம் பக்கத்துக்குரிய புதுவழித் தேடல் முதலாளித்துவ நாடுகளுக்குள்ளும் சோஸலிஸ நாடுகளுக்குள்ளும் ஊடுருவி வருவதைக் காட்டுவதாகவே இருக்கிறது.

1956க்குப் பின்பு ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தனது கலை, இலக்கியத் துறைகளில் தீவிரமாக வெளிக்காட்டிய மூன்று சிந்தனைப் போக்குகளும் அதே காலத்தில் சர்வதேச சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரத் துறைகளில் வெளிப்படுத்தப்பட்ட மூன்று பெரும் சர்வதேசப் போக்குகளை ஏறக்குறைய ஒத்திருந்தன. அதாவது ஈழத்து ஆசார மரபுவாதமும் அதனோடு இணைந்த நற்போக்கு இலக்கியப் பார்வையும் சர்வதேச முதலாளித்துவப் போக்கையும் அதற்கு உதவும் சமய ஆசாரத்தையும் ஒத்திருந்தன. ஈழத்து மார்க்சீய முற்போக்கு இலக்கியப் பார்வை சர்வதேச சோஸலிஸப் போக்கை ஒத்திருந்ததுடன், நேரடியாகவே அதிலிருந்து தனதும் பலத்தைப் பெறுவதாகவும் இருந்தது. அதே போல் ஈழத்து மூன்றாம் பக்க இலக்கியப் பார்வை சர்வதேச அரங்கில் காணப்படும் மூன்றாம் உலகத்தின் நடுநிலைக் கொள்கையையும் சகல நாடுகளிலுமுள்ள இளம் பரம்பரையினரின் புதுவழித் தேடலையும் ஒத்திருப்பதுடன் காலப்போக்கில் அவற்றுக்கு தத்துவார்த்த ரீதியாக அர்த்தம் கொடுத்து ஆற்றுப்படுத்துவதாகவும் வளர்ந்துள்ளது.

இம்மூன்று போக்குகளையும் தத்துவார்த்த ரீதியில் சொல்லவேண்டுமானால், இப்படித்தான் சொல்லவேண்டும் -

ஒன்று, கருத்துமுதல்வாதம்.

இரண்டு, பொருள்முதல்வாதம்.

மூன்று, இரண்டிலும் அடங்காது, இரண்டையும் அணைத்தும் கடந்தும் திருத்தியும் நிற்கும் புதுச் சித்தாந்தம். அதை மெய்முதல்வாதம் எனலாம்.


சுழல் : இரண்டு
தளம் : சத்தியம்

கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?
கடவைள அல்லது இலட்சியரீதியான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலக வாழ்க்கைக்கு விளக்கங் காணும் போக்கைக் கருத்துமுதல்வாதம் எனலாம். சடத்தையும் பொருளையும் அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாதப் பார்வைக்கு இது எதிர்மாறானதாகக் கருதப்படுகிறது.

கருத்துமுதல்வாதம், கடவைள ஏற்றுக்கொள்ளாத சிந்தனைப் பார்வையாக இருக்கும்போது நடைமுறை வாழ்க்கைக்கு அதிகம் உதவாத இலட்சிய சித்தாந்தங்களாகவும், கற்பனா வாதங்களாகவும் நின்றுவிடுகிறது. கடவைள ஏற்றுக்கொள்ளும்போது பெரும்பாலும் எல்லாச் சமயங்களும் வளர்த்துள்ள ஆசார மரபாகவே நிற்கிறது.

சகல சமயங்களினதும் அடிப்படையான ஞானப்பார்வை அதாவது ஆத்ம மரபு, இதற்குள் அடங்காது.

இதுதான் கருத்துமுதல்வாதத்தின் அர்த்தமாகும். இன்று அது இவ்வாறுதான் விளங்கிக்கொள்ளப்படுகிறது. இவ்வுலக வாழ்க்கையை அதிகம் ஆமோதிக்காத போக்கு, சமூக பொருளாதார – அரசியல் வளர்ச்சி மாற்றங்களுக்கு விட்டுக்கொடுக்காமை, நடைமுறை அமைப்பைப் பாதுகாத்தல், விசாரணையற்ற பக்தி, கட்டுப்பெட்டித்தனம் ஆகியவற்றை இந்தப் பார்வையின் முக்கிய பண்புகளாகக் கூறலாம்.

பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் வளர்த்திருந்த ஆசார மரபு இந்த வகையானதாகவே இருந்தது. அதனால் தான் அதே காலத்தில் அதற்கு எதிரான அறிவுவாதமாக விஞ்ஞானம் வளர்ச்சியடைந்தது. அந்த விஞ்ஞான அறிவுவாதத்தின் ஒரு போக்கு பொருள் முதல்வாதமான இன்றைய மார்க்சிய சோஸலிஸப் பார்வையாக வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்த போக்கு, கருத்தை அழுத்தும் இலட்சியரீதியான பல சிறு சித்தாந்தங்களாகவும் சமய ஆசாரப் பூச்சுக்களோடு வளர்ந்துள்ள இன்றைய முதலாளித்துவ ஏகாதிபத்தியப் போக்காகவும் உருமாறியுள்ளர். முதலாளித்துவத்தின் முற்றிய சர்வாதிகாரமான பாஸிஸத்தில் தவிர வேறு நிலைகளில் மேற்கத்தைய முதலாளித்துவம் சமய ஆசாரத்தை மறுத்ததில்லை.

மொத்தத்தில் கருத்துமுதல்வாதம் என்பது சமயத்தின் பெயரிலும் கருத்தின் பெயரிலும் வெறும் சமய ஆசார மரபாகவும் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாகவும் இருப்பதால் உண்மையில் அது ஆன்மீகப் பூச்சுக்களுக்குள் வாழும் பச்சையான பொருளாசையாகவே இருக்கிறது. அல்லது அதிகமாகப் பொருளாசைக்கே விட்டுக்கொடுக்கிறது, அதனால் உண்மையான சமயஞானம், அதாவது ஆத்மமரபு எவையெவற்றை இலட்சியங்களாகக் கொண்டுள்ளதோ அவற்றுக்கு அது தடையாகவே நிற்கிறது. அன்பு, சமத்துவம் விடுதலை என்பவை உண்மையான சமயஞானத்தின் பண்புகளாகும். ஆத்மமரபு அவற்றையே சமூகத்துக்குரிய இலட்சியங்களாக முன்வைக்கிறது. அவற்றை ஏற்றுக்கொள்வது போல் கருத்துமுதல்வாதம் நடித்துக்கொண்டாலும் உண்மையில் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் அவற்றுக்குத் தடையாகவே இருக்கிறது.

அன்பு, சமத்துவம், விடுதலை என்பவை ஏக சத்தியத்துக்குரிய தவிர்க்கமுடியாத பண்புகளாகும். காரணம், சகலருக்கும் சகலதுக்கும் உரிய அடித்தளச் சத்திய நிலையான ஆத்மநிலை எல்லாவற்றுக்குரிய இரண்டற்ற ஒன்றாக, அத்வைத நிலையாக நிற்கிறது. அதனால் அடிப்படையில் எல்லாரும் ஒரே ஆத்ம சுயமாக இருக்கும்போது சமத்துவம், அன்பு என்பவை அதன் சுய பண்புகளாக இருக்கின்றன. அவற்றையும் அவற்றுக்குரிய சுயத்தையும் அனுபவிப்பதே உண்மையான விடுதலையாக இருக்கிறது.

எல்லாச் சமயங்களுக்குமுரிய ஆத்மமரபு. அந்தப் பண்புகளையே சமூகத்தி; இலட்சியங்களாக முன்வைக்கிறது. உபநிடதங்களின் மகாவாக்கியங்கள் அந்த ஆத்மமரபின் உண்மையான அர்த்தத்தை விளக்குகின்றன.

அதுவே நீ. (சத்தியநிலையான பிரம்மமே நீ)

அகம் பிரம்மம்.

சர்வமும் பிரம்மம் (சத்தியநிலை)

இந்தச் சத்தியநிலையை அனுபவிக்கும்போதே உண்மையான விடுதலை ஏற்படும். அந்த விடுதலைமூலமே உண்மையான சமத்துவத்தையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தலாம். இன, மொழி, சாதி, சமய, வர்க்க, நிற வேறுபாடுகள் சகலவற்றையும் அவற்றுக்குரிய சுரண்டலையும் பலாத்காரத்தையும் அப்போதுதான் வேரோடுகளையலாம். ஆனால், அந்த விடுதலையைப் பெறுவதற்கு வெளியுலகப் பொருட்களின் பற்றுக்களிலிருந்தும் உடல், உயிர், மனத்தளங்களின் கட்டுக்களிலிரந்தும் விடுபடவேண்டும். சத்திய விடுதலை என்பது அதுவேதான்.

சகல மதங்களுக்குமுரிய ஆத்மமரபு வெளிப்படுத்தும் இலட்சிய விடுதலை இதுதான். ஆனால், அந்த விடுதலையானது மனித வாழ்க்கையைப் புதிய பெருந்தளமான பேரறிவுப் பொதுவுடமையிலிருந்து இவ்வுலகத்திலேயெ அனுபவிக்க வழிகாட்டும். அடுத்த உலகத்துக்குரிய விடுதலையல்ல. அதுவும் உண்டு. அது வேறு விடயம்.

ஆனால், இந்த இலட்சியத்தை முன்வைத்துள்ள சர்வசமய ஆத்மமரபு அதற்குரிய பக்குவம் சகலரிடமும் வரும்வரைக்கும் காத்திருக்கவும் தயாராய் இருந்தது. நதிக்கரை நாகரிகம் முதலாகப் பழைய வேத – உபநிடத காலம் ஊடாக இன்றுவரை அது காத்திருக்கவே செய்கிறது. இதுவே மனித மனத்தள வளர்ச்சிக்குரிய சுழலாகும். அந்தந்தக் காலங்களில் அந்தந்த இடங்களில் நடைமுறையிலிருந்த சமூக பொருளாதார கலாசார அரசியல் அமைப்புகளை மாற்றியமைத்த சமய எழுச்சிகள் எல்லாம் இந்த விடுதலைக் குரிய வகையில் மனிதனைத் தயார்ப்படுத்தவே முயன்றன. இந்த விடுதலை பரவலாக எல்லோருக்கும் உரியதாக வரும்போது மனித குலத்தின் பரிணாமப்போக்கு பேரறிவுக்குள் இறங்குவதாக முடியும். ஆனால், அதற்கு முன் சகல மனத்தளங்களும் அதற்குத் தயார்ப்படுத்தப்பட வேண்டும்.

இந்த விடுதலைக்குத் தடையாக இருந்த முக்கிய சக்திகள் பொருளாசையும் அதனோடு சம்பந்தப்பட்ட சிற்றின்ப ஆசைகளுமே. அந்த ஆசைகள்தான் கருத்து முதல்வாதத்துக்குரிய சமய ஆசாரமாகவும் முதலாளித்துவமாகவும் இன்று நிற்கின்றன. ஆனால் அவை வெளிப்படையாக ஆத்ம மரபு கூறும் விடுதலையை மறுக்காதவை. அதனால் அடித்தள ஆத்ம மரபுக்கும் மேல்தள ஆசார மரபுக்கும் தொடர்பும் கலப்பும் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இன்னும் இருக்கவே செய்கின்றன. அத்துடன் மேல் தள ஆசார மரபும் முதலாளித்துவமும் இன்று சர்வதேசமெங்கும் ஸ்தம்பித நிலையில் பலமிழந்து கொண்டிருக்கின்றன. அப்படியானால் ஆத்ம விடுதலைக்குப் பதிலாகப் பொருள் தேடுவதில் அக்கறை காட்டிய மனித குலத்தின் பொருளாசை இன்று பரவலாக ஸ்தம்பிதமடைந்து வலுவிழந்து வருகிறது என்பது அர்த்தமாகும்.

அந்த தேக்கமும் அதனோடு கூடிய வலுவிழப்பும் சீர்குலைவும் வரும்வரையுமே உண்மையான சமய ஞானத்துக்குரிய ஆத்மமரபு அதன் பரவலான விடுதலைப் போராட்டத்துக்குக் காத்துக் கொண்டிருந்தது. அந்த விடுதலைக் காலம் இன்று வந்து விட்டது.

அந்த ஆத்ம மரபின் புதுத்தள எழுச்சியைத்தான் இன்று மெய் முதல்வாதம் பிரதிபலிக்கிறது. பூரண சர்வோதயம் என்பது புதுயுகத்துக்குரிய மெய்முதல்வாதப் பெருந்தத்துவமாகும். கருத்தும் பொருளும் அடிப்படையில் ஏக ஆத்மாவான சத்தியமாக இருக்கும்போது (பௌத்த சமயம் விளக்கிய நிர்வாண விடுதலைக்குரிய சம்போதி ஞான நிலையாக இருக்கும்போது) கருத்தை வேறாகவும் பொருளை வேறாகவும் கருதுவது தவறாகும். முதலில் கருத்து வந்ததா அல்லது பொருள் வந்ததா என்ற தர்க்கமும் பிழையானதாகும். கருத்தும் பொருளும் அடிப்படையில் கருத்துக்கும் பொருளுக்கும் காரணமாகவுள்ள சத்தியமாக, மெய்யாக நிற்கின்றன.

பிரம்மமே சக்தி, சக்தியே பிரம்மம். நிர்வாணமே சம்சாரம், சம்சாரமே நிர்வாணம். அடித்தளச் சத்திய நிலை உண்மையான சத்தாகவும் (உண்மைப்பொருள்), உண்மையான சித்தாகவும் (பேர்ஞானம்), உண்மையான ஆனந்தமாகவும் (விடுதலைப்பரவசம்) இருக்கிறது.

இதுதான் பழைய ஆத்ம மரபின் தீர்ப்பாகும்.

இந்த உண்மையை வெளிப்படுத்தும் மெய் முதல் வாதமானது, கருத்து முதல்வாதம் பொருள் முதல்வாதம் என்ற பாகுபாடுகளை நீக்கி, எல்லாவற்றையும் திருத்தி முழுமைப் படுத்திப் பூரணப்போக்காக மாற்றிப் பரவலான விடுதலைப் போராட்டத்துக்கு இன்று மனிதகுலத்தைத் தயார்ப்படுத்த எழுந்து கொண்டிருக்கிறது.

பொருள் - உடல், உயிர், மனம் ஆகிய தளங்களிலிருந்து அடுத்த பேரறிவுத் தளத்துக்கு எழுச்சியுறும் விடுதலைப்போராட்டத்தை அதுவே கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது.

இதற்குப் பொருள் முதல்வாதமான மார்க்சீய சித்தாந்தம் எந்தளவுக்கு உதவுகிறது?

பொருள்முதல்வாதமான மார்க்சீய சித்தாந்தம் சமய ஆசாரத்தையும் நிலமானிய – முதலாளித்துவத்தையும் பிரதிபலிக்கும் கருத்துமுதல்வாதத்துக்கு முரணாக எழுந்த போக்கேயொழிய, அடித்தள ஆத்மமரபுக்கு முரணானதல்ல. அதை முதலில் அவதானிக்க வேண்டும். உண்மையில் ஆத்மமரபை அது அறிந்திருக்கவில்லை. அன்பு, சமத்துவம், விடுதலை என்பவற்றை வெறும் அர்த்தமற்ற சுலோகங்களாக ஆக்கிவிட்டு, பொருளாசைக்கு இடம் விட்டுவந்த சமய ஆசார மரபைத் தான் அது உண்மையாக அறிந்திருந்தது. அதனால் அதற்கு எதிராகவும், அதோடு கூடிய நிலமானியண – முதலாளித்துவப் போக்குக்கு எதிராகவும் உண்மையான அன்பு விடுதலை, சமத்துவம் ஆகியவற்றுக்காக அது பொருள் மூலமே போராட முயல்கிறது. உற்பத்திச் சக்திகள், உற்பத்தி முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக வரலாற்றை ஆராயும் மார்க்சீய சித்தாந்தம் உற்பத்திப் பெருக்கம், தேவைக்கேற்ற பங்கீடு ஆகியவை நிலவும் பொருளாதாரப் பொதுவுடமை அமைப்பிலேயே ஒவ்வொரு தனிமனிதனும் உண்மையான அக விடுதலையையும் சமத்துவத்தையும் அனுபவிப்பான் என்று கருதுகிறது.

அந்த வகையில் பார்க்கும்போது மார்க்சீய பொருள் முதல்வாதம் பொருள் - உடல், உயிர், மனத்தளங்களுக்குள்ளேயே நின்றுகொண்டு அவற்றுக்குள்ளேயே ஒரு சமய ஞானத்தையும் பொதுவுடமைக்குரிய ஆன்மீக விடுதலையையும் உருவாக்கிவிட முயல்கிறது. அது நடைமுறையில் வெல்லக்கூடிய ஒன்றல்ல என்பது ஆத்மமரபின் அனுபவமாகும். இருப்பினும் பொருளை அழுத்துவதாகத் தெரியினும் அடிப்படையில் அக விடுதலையை நாடுவதாகவே மார்க்சீய பொருள்முதல்வாதம் செயல்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

அதனால் ஆத்மமரபை வெளிப்படையாக மறுக்க முடியாத கருத்துமுதல் வாதத்தைப்போல் பொருள்முதல்வாதமும் ஆத்ம மரபுடன் அடிப்படையில் கலக்கக்கூடியதாகவே இருக்கிறது.

அத்துடன் அக விடுதலைக்காக எங்கும் பொருள்முதல்வாத மார்க்சீய சித்தாந்தமும் 1956க்குப் பின் சர்வதேச அரங்கில் நெருக்கடிக்குள்ளாகி ஸ்தம்பிதமடைந்து சீர்குலைந்து வருகிறது. அதன் காரணமாக அதைவிட வேகமான விடுதலைக்கு உதவக்கூடிய வகையில் மேலோர் போக்கு வளருமானால், அதனுள் அது விழுங்கப்படக்கூடியதாகவும் இருக்கிறது.

கருத்துமுதல்வாத முதலாளித்துவமும் இன்று தேங்கிச் சீர்குலையத் தொடங்கியுள்ளது. பொருள்முதல்வாத மார்க்சீயமும் இன்று தேங்கிச் சீர்குலையத் தொடங்கியுள்ளது. இருபெரும் போக்குகளும் மெய்முதல்வாதம் என்ற மூன்றாம் போக்கால் விழுங்கப்பட்டுப் பூரணபோக்காக வளரும் சூழலே இன்று சர்வதேசமெங்கும் வலுப்பெற்று வருகிறது.

சமயஞானம் இதுகாலவரை எந்தப் பக்குவத்தைப் பரவலாக எல்லாரிடமும் எதிர்பார்த்துக் காத்திருந்ததோ அந்தப் பக்குவத்தை மனிதகுலத்தின் கூட்டு மனம் தனது சகல தளங்களிலும் வெளிப்படுத்தும் கலப்புக் கட்டம் இன்று எழுச்சியடைந்து வருகிறது. பொருள் - உடல், உயிர், மனம் ஆகியவற்றோடு அவற்றுக்கு அப்பாற்பட்ட பேரறிவும் அதற்குரிய விடுதலையும் சகலருக்குமுரிய சகஸ நிலையாக வளரும் பூரண சர்வோதய மலர்ச்சிக்குரிய பொதுவுடமை – பாரதிபாடிய கிருதயுகம் - இன்று பிறந்து கொண்டிருக்கிறது.


சுழல் : மூன்று
தளம் : உலகம்

இந்த விளக்கங்களை ஆதாரங்களோடு நிரூபிப்பதும் அவசியம். அதன்பின்பே ஈழத்தமிழர்களின் விடுதலை இலக்கியத்தையும் இயக்கத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளவும் அவற்றின் சர்வதேச முக்கியத்துவத்தையும் உணர முடியும்.

1956க்குப் பிறகு சர்வதேச முதலாளித்துவமும் சர்வதேச மார்க்சீய சோஸலிஸமும் சரி நெருக்கடிக்குள்ளாகி ஸ்தம்பிதமடைந்து வருகின்றன என்பது உண்மைதானா? அதற்குரிய ஆதாரங்கள் எவை?

வியட்நாம் யுத்தம் அதைச் சந்தேகத்துக்கிடமின்ற நிரூபிக்கிறது. வருடக்கணக்காக நடைபெற்றுவரும் அந்த யுத்தமே சர்வதேச முதலாளித்துவத்தினதும் சர்வதேச மார்க்சீய சோஸலிஸத்தினதும் பலப்பரீட்சைக்குரிய தளமாக இருந்து வருகிறது. இருசாராரிலும் எவரும் பூரணமான வெற்றியை காணமுடியாதல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சமாதானம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இன்றைய சர்வதேச சூழலில் முதலாளித்துவமும் சரி சோஸலிஸமும் சரி நேரடிப் போராட்டத்தில் ஈடுபடமுடியாது என்பதையும், அப்படி ஈடுபட்டால் எந்த ஒரு பக்கமும் பூரணமாகத் தனித்து வெல்ல முடியாது என்பதையும் அது நிரூபிக்கிறது.

இந்த யுத்தத்தில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுங்கூட அதனால் வெல்லமுடியவில்லை என்பது எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவுதூரம் கொரியா யுத்தத்தில் போல் சீனா அதில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதும் முக்கியமானதாகும். சீனாவும் ரஷ்யாவும் அதில் நேரடியாகத் தம் படைகளை இறக்கி ஈடுபட்டால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதின என்பது அதன்மூலம் புலனாகிறது.

இது ஒரு ஸ்தம்பித நிலையையே உடனிருந்து வாழும் நிலையாகக் கூறிக்கொண்டு அமெரிக்காவும், சோஸலிஸ நாடுகளும் இன்று சமாதான ஒப்பந்தஞ் செய்துகொள்கின்றன. சீனாவுக்கு நிக்ஸன் பயணம் செய்தபின் சீனாவும் இந்த உடனிருந்து வாழும் நிலைக்காகவே உண்மையில் இதுகால வரை ஏற்கிக்கொண்டிருந்தது என்பது தெரியவருகிறது. உண்மையில் 1949க்குப் பின் சீனா அதைத்தான் விரும்பி வந்திருக்கிறது. ஆனால், அமெரிக்கா அதற்கு விட்டுக்கொடுக்காமல் வெருட்ட முயன்றதால் சீனாவும் தன் பங்குக்கு “கடுதாசிப் புலி” என்று புலூடா விட்டுவந்தது. அது வெறும் புறுடாத்தான் என்பது கொரியா யுத்தத்தில் நேரடியாக இறங்கியதுபோல் வியட்நாமில் அது இறங்கத் தயாராக இருக்கவில்லை என்பதாலும், போமோசாவைக் கைப்பற்ற முயலாமல் இருந்ததாலும் ஹொங்கொங்கைத் தொடர்ந்து விட்டுவைப்பதாலும் தெரியவருகிறது.

எனவே, ரஷ்யாவும் சரி, சீனாவும் சரி முதலாளித்துவ நாடுகளுடன் உடனிருந்து வாழும் சமாதானத்தை இன்றைய தேவைக்குரிய தந்திரமாக ஏற்றுக்கொள்கின்றன. அதன் மூலம் அதற்குரிய ஸ்தம்பிதத்தையும் நேரடியாகப் போர் தொடுக்கமுடியாத தமது பலவீனத்தையும் ஒப்புக்கொள்கின்றன.

ஆனால், சமாதான ஸ்தம்பிதம் என்பது மார்க்சீய சோஸலிஸ வியாக்கியானப்படி அடுத்த கட்டத்துக்குரிய தயாரிப்பாகவே இருக்கமுடியும். அந்தத் தயாரிப்பு எப்படிப் பட்டதாக இருக்கும் என்று அவை எதிர் பார்க்கின்றன?

1. உற்பத்திப் பெருக்கம் சோஸலிஸ நாடுகளில் வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப நாடுகளின் தரத்துக்குச் சமமாகவும், மேலாகவும் வந்து பொதுவுடமைக் கட்டம் மலரும் வாய்ப:பு அதிகரிக்கும்.

2. அந்தப் பொதுவுடமைக் கட்டத்தின் மலர்ச்சிக்குரிய உற்பத்திப் பெருக்கத்தாலும் அது அளிக்கும் வசதிகளாலும் உள்நாட்டு அடக்குமுறை தளர்த்தப்படுவதுடன் வெளியுலக மக்களுக்கும் வழிகாட்டப்படும். முதலாளித்துவ நாட்டுத் தொழிலாளிகளும் மூன்றாம் உலக நாடுகளும் சோஸலிஸ வழியிலும் சோஸலிஸ நாடுகளின் தலைமையிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு போராடத் தலைப்படுவர்.

3. சமாதானம் ஏற்படுவதால் முதலாளித்துவ நா:களில் உட்சண்டைகளுக்கு இடமளிக்கப்படும். அதன் காரணமாக முதலாளித்துவத்தின் சீரழிவு வலுவடையும். அப்போது அது தோற்கடிக்கப் படக்கூடியதாக பலவீனப்படும்.

4. மூன்றாம் உலகநாடுகள் வரவர அதிகமாக சோஸலிஸ நாடுகள் பக்கம் கூட்டுச்சேரும். அதன்மூலம் உலகில் சோஸலிஸ முற்போக்குச் சக்திகள் பலமடையும்.

இவைதான் மார்க்சீய வியாக்கியானத்தின் எதிர்பார்ப்பாகும். ஆனால் இவை நடைபெறும் என்று நிச்சயமில்லை. நிச்சயமில்லை என்பதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மையில் இந்தச் சமாதான ஸ்தம்பித நிலை என்பது மார்க்சீய பொருள்முதல்வாதத்தினதும் சமய ஆசார முதலாளித்துவத்தினதும் ஸ்தம்பித நிலையே தான். இனிமேல் வரும் நிகழ்ச்சிகள் அவை நினைப்பது போல் நடக்கப்போவதில்லை. மாறாக அவற்றை அழிப்பவையாகவே அமையும். அதன்மூலம் முதலாளித்துவ நாடுகளும் சோஸலிஸ நாடுகளும் புதிய முறையில், பூரண வழியில் உருமாற்றப்படும்.

முதலாவதாகச் சமாதான காலத்தில் உற்பத்திப் பெருக்கம் அதிகரித்து சோஸலிஸ நாடுகளில் பொதுவுடமை விடுதலை மலர்ந்து மற்ற நாடுகளுக்கு வழிகாட்டவும், தலைமை தாங்கவும் கூடிய தொழில்நுட்பப் பொதுவுடமைக் கலாசாரச் சூழல் மலரும் என்பது ஏற்கனவே இன்றைய சரித்திர வளர்ச்சியால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

முதலாளித்துவத் தொழில்நுட்ப நாடுகளைச் சோஸலிஸ நாடுகள் உற்பத்திப் பெருக்கத்தில் வென்று விடுதலைக்கு வழிகாட்டுமுன், முதலாளித்துவத் தொழில்நுட்ப நாடுகளின் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாகப் புதுயுக விடுதலைக்குரிய போராட்டமும், அதற்குரிய புதுப்பாம்பரையும் ஏற்கனவே அதே முதலாளித்துவத் தொழில்நுட்ப நாடுகளிலேயே தோன்றிவிட்டன. அவற்றையே சோஸலிஸ நாடுகளும் பின்பற்ற வேண்டிய நிலை வரவர வளர்ந்து வருகிறது.

காரணம், சீரழிய வேண்டிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்துவரும் புதிய ஆன்மீக விடுதலை நாட்டம் சோஸலிஸ நாடுகளைப் பின்பற்றுவதாக அமையாமல், சோஸலிஸ நாடுகளையும் சீர்படுத்தும் நாட்டமாகவே இருக்கிறது.

தொழில்நுட்ப முதலாளித்துவ நாடுகளில் வெறும் சமய ஆதாரப் பூச்சுக்களாகவும் ஜனநாயகச் சுலோகங்களாகவும் மட்டும் நிற்கும் “அன்பு”, “சுதந்திரம்”, “விடுதலை”, “சமத்துவம்”, “சகோதரத்துவம்” என்பவை உண்மையில் நடைமுறைக்குரிய அனுபவ உண்மைகளாகவும் இருக்கவேண்டுமென்று புதுப்பரம்பரை போராடத் தொடங்கியிருப்பதுபோலவே சோஸலிஸ நாடுகளிலும், புது விழிப்பு அருட்டத் தொடங்கியுள்ளது. 1956ல் ஏற்பட்ட ஹங்கேரிய, போலிஷ் புரட்சிகளின் அர்த்தங்கள் அவைதான், ரஷ்யாவின் இன்றைய தலைசிறந்த நாவலாசிரியன் சொல்லொன்ஸ்டைன் அதற்குத்தான் குரல் கொடுக்கிறார்.


“சோஸலிஸம் என்பது,

குற்றஞ் செய்யாமலே வீட்டில் ஒருநாள் போலிஸ்காரனை எதிர்பார்த்துப் பயந்திருப்பதல்ல,

நோயாளியைப் பராமரிக்கும் தாதிகளை விட உளவாளிகள் அதிகமாகவுள்ள இடமல்ல,

ஆஸ்பத்திரிகளைவிடச் சிறைச்சாலைகளில் அதிகமானோர் காணப்படுவதல்ல,

பொய் சொல்லவும், களவு செய்யவும் கற்பிக்கப்படுதல்ல,

சுயமாகச் சிந்திக்காமல் இருப்பதே சுகமாக வாழ்வதற்குரிய வழியாக இருப்பதல்ல.

சகல துறைகளிலும் சகலருக்கும் ஒரே அபிப்பிராயமே உரியதாக இருப்பதல்ல.”

என்று பேயின் தத்துவாசிரியன் டுநணணநம முழடயமழறளமi கூறும் போது மார்க்சீய சித்தாந்தத்தின் முக்கிய அம்சமான “தொழிலாளர் சர்வாதிகாரம்” என்பது உண்மையில் பொதுவுடமையின் “விடுதலை” என்ற இலட்சியத்துக்கு வழி வகுக்காது என்பது புலப்படுகிறது.

விடுதலை என்ற இலட்சியத்துக்குரிய வழிமுறைகளும் விடுதலை பயப்பதாக இருக்கவேண்டுமென்ற மெய்முதல்வாதத்துக்குரிய புதுப்பரம்பரையின் குரலாகவே இது கேட்கிறது.

எனவே, இவை உடனிருந்து வாழும் சமாதானத்தால் மார்க்சீய சோஸலிஸமே, முதலாளித்துவ நாடுகளால் (அங்குள்ள புதுப்பரம்பரையால்) ஆற்றுப்படுத்தப்படவிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

அதேபோல் உடனிருந்துவாழும் சமாதானம் முதலாளித்தவத் தொழில்நுட்ப நாடுகளில் உள்வட்டச் சீரழிவைக் கொண்டுவருமென்பது உண்மையானால், அதைவிட ஆபத்து சீன – சோவியத் நாடுகளின் எல்லைகளில் காணப்படுகிறது என்பதும் உண்மையேதான். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள உள்வட்டப் போட்டியே ஓர் உலக மகாயுத்தமாக மாறிவிடுமோ என்ற பயமும் இன்று காணப்படுகிறது. சகல சோஸலிஸ நாடுகளும் தமக்குரிய ஒரு பொதுச் சமஷ்டியை உருவாக்கவேண்டிய நேரத்தில், ஒவ்வொன்றும் தத்தம் எல்லைகளில் படைகளைக் குவித்துப் பயமுறுத்தி வருவது அவற்றுக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கும் அடிப்படையில் வித்தியாசமில்லை என்பதைக் குறிக்கவில்வையா? புதிய மெய் முதல்வாதத்தின் அவசியத்தை உணர்த்த வில்லையா?

அந்த அவசியத்தைத்தான் மூன்றாம் உலக நாடுகள் இன்று உணர்ந்து வருகின்றன. மூன்றாம் உலக நாடுகள் படிப்படியாக மார்க்சீய சோஸலிஸத்தை நாடும் என்று எதிர்பார்ப்பதும் பிழையான கணிப்பாகவே இருக்கிறது என்பது அதன் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இதை வலியுறுத்தும் வேறு சில ஆதாரங்களும் உண்டு. மூன்றாம் உலகத்தின் “நடுநிலை” வழி என்பதன் உண்மையான அர்த்தம் நேருகால இந்தியாவுக்குரிய காந்திய மரபிலிருந்தே வருகிறது. அதாவது, காந்தி காட்டிய ஆத்மமரபு. அந்த மரபு இந்தியாவுக்குரிய ஒரு விசேட மரபாகும். அசோகனின் ஆட்சியிலும், அக்பரின் ஆட்சியிலும் நின்ற அதே ஆத்மமரபு. அந்த மரபுதான் இன்றைய “நடுநிலை”க்குப் பின்னாலும் நிற்கிறது.

மூன்றாம் உலகம் என இன்று அழைக்கப்படும் அபிவிருத்தியடையும் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமரிக்க நாடுகள் மார்க்சீய சோஸலிஸ வழியையும் விட்டு முதலாளித்துவ ஜனநாயக வழியையும் விட்டு ஜனநாயக சோஸலிஸ வழியிலான நடுநிலைக் கலப்பு வழியில் முன்னேற முயல்வதும் குறிப்பிடத்தக்கது.

மார்க்சீய வியாக்கியானப்படி இந்தப் பாராளுமன்ற வழி இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த முதலாளித்துவ கைத்தொழில் நாடுகளுக்கே பொருத்தமாயிருக்கும். அப்படி அவரே ஒப்புக்கொண்டும் இருக்கிறார். ஆனால் இன்றோ அதே பாராளுமன்ற வழியை முதலாளித்துவ நாடுகளையும், சோஸலிஸ நாடுகளையும் விட வளர்ச்சியடையாத மூன்றாம் உலகத்துப் பின் தங்கிய நாடுகளான இலங்கை, இந்தியா, சிலி போன்றவையே (இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளைவிட) தீவிரமாகக் கடைப்பிடித்து வருகின்றன. இது மார்க்சீய வியாக்கியானங்களிலிருந்து அதிக தூரம் விலகிச் செல்வதையே காட்டுகிறது.

மார்க்ஸின் கருத்துப்படி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் வரவேண்டிய பொதுவுடமைப் புரட்சி முதலாளித்துவம் வளர்ச்சியடையாத ரஷ்யாவிலும், சீனாவிலுமே நிறுவப்பட்டது.

லெனினட உருவாக்கிய கட்சியும், அதன் தலைமைத் தகுதிக்காக அவர் காட்டும் காரணங்களும் சிந்தனையையே அதிகமாக அழுத்துகின்றன.

அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளைவிட அபிவிருத்தியடையாத மூன்றாம் உலகத்து நிலமானிய அழைப்பு நாடுகளே சோஸலிஸ நாடுகள் உருவாகிய பின்பும் உலகப் பொதுவுடமைப் புரட்சிக்குரிய புதுப் பிராந்தியங்களாக சோஸலிஸ வாதிகளால் இன்று நம்பப்படுகின்றன. இவை எல்லாம் பொருளாதாரக் காரணிகளைப் பெரிதாக அழுத்திய மார்க்சீயத்துக்கு முரண்பாடுவதாகத் தெரிந்தாலும் மார்க்சீயத்தைத் திருத்துவதாகவே இருக்கிறது.

ஆனால், இந்த மூன்றாம் உலகம் பொருள் முதல்வாதத்தைக் கருத்துமுதல்வாதமாக மாற்றுவமாக நின்றுவிடாமல் இரண்டையும் அடித்தள ஆத்மமரபுக்குரிய மெய்முதல்வாதத்தோடு இணைந்து ஆழமாக்கி முழுமைப்படுத்தவும் முயல்கிறது. அதாவது, மூன்றாம் உலக நாடுகள் முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகத்தையும், மார்க்சீய சோஸலிஸத்தையும் இணைப்பதோடு நின்றுவிடாமல் அவற்றைச் சமயஞானத்தின் ஆத்மமரபோடும் இணைக்க முயல்கின்றன.

மார்க்சியத்தின் கருத்துப்படி அபிவிருத்தி குன்றிய மூன்றாம் உலக நாடுகள், பொதுவுடமை விடுதலையை அனுபவிப்பதற்கு நீண்டகால தொழிலாளர் சர்வாதிகாரத்துக்குட்பட்ட அடக்குமுறை கைத்தொழில் வளர்ச்சிக்குள்ளாக்கப்பட வேண்டும் அந்த அடக்குமுறைக்குப் பின்பே விடுதலை வரலாம். ஆனால் அதை விரும்பாத இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அடக்குமுறையில்லாமலே விடுதலையையும், பொதுவுடமையையும் பொருளாதார அபிவிருத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட முடியும் என்றும் அதற்கு அந்த நாடுகளின் சமய கலாச்சாரத்துக்குரிய அடித்தள ஆத்ம மரபு உதவுமென்றும் இப்போ புதிய தத்துவம் போடப்பட்டு வருகிறது. சர்வோதயம் என்பது அதுவேதான்.

அப்படியானால் இங்கிலாந்தின் முதலாளித்துவ பாராளுமன்ற வளர்ச்சியின் காரணமாகப் பாராளுமன்ற வளர்ச்சியின் காரணமாகப் பாராளுமன்ற முறைப்படி சோஸலிஸம் அங்கு வரலாம் என்று மார்க்ஸால் ஏற்றுக்டிகாள்ளப்பட்டதுபோல் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் ஆத்மமரபு காரணமாக அந்தமரபுக்குரிய வகையில் விடுதலையும் பொதுவுடமையும் அபிவிருத்தியோடு இரண்டறக் கலந்து, அடக்குமுறை எதுமில்லாது புதியமுறையில், சர்வோதய வழியில் வரலாம் என்று ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளும்போது பொருளாதாரக் காரணிகளும் சிந்தனையும் ஒருங்கே அடித்தள மெய்யிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

பொருள்முதல்வாதமும், கருத்துமுதல்வாதமும் மெய் முதல்வாதமாகப் பூரணமடைகின்றன.

அந்தப் பூரணப்போக்கின்படி மார்க்சீய வியாக்கியானங்களும் மாற்றப்படுகின்றன.

முதலாளித்துவ நாடுகளும், சோஸலிஸ நாடுகளும் இன்றைய இருபெரும் வர்க்கங்களாகும். ஆனால், வர்க்கங்கள் என்பவை குணங்களையே பிரதிபலிப்பவை. அந்தக் குணங்களின் வெளிப்பாடுதான் கருத்துமுதல்வாதமும், பொருள் முதல்வாதமும். அந்தக் குணங்களுக்குரிய சர்வதேசப் போராட்டம் இன்று இரண்டும் ஒன்றாகிய உடனிருந்து வாழும் சமாதானக் கலப்பு நிலையில் ஸ்தம்பித்து நிற்கிறது.

அந்த ஸ்தம்பித்த கலப்பிலிருந்து பொதுவுடமை விடுதலையை எழுப்புவதற்குரிய சாதனமாகத் தொழிலாளர் வர்க்கத்தை எதிர்பார்க்கக்கூடாது. முதலாளித்துவத்துடன் உடனிருந்து வாழமுயலும் தொழிலாளர் குணக் கலப்புக்குள்ளாகியவர்களேயொழிய குணங்களைத் தாண்டுவதாய் இல்லை. பொதுவுடமை விடுதலை என்பதோ குணங்களைக் கடந்த பேரறிவு, ஆத்ம விடுதலையாகவே இருக்கும். அதனால் குணங்களைக் கடந்த பூரணர்களின் கூட்டமே புதிய ஸ்தம்பித்த கலப்பு நிலையை விளக்கவும் அடுத்த எழுச்சிக்கு வழிவகுக்கவும் ஆற்றலுள்ளவர்களாக இருப்பர்.

அத்தகைய கூட்டத்தின் ஓரளவு புத்திபூர்வமான வளர்ச்சி அரும்பலை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இந்தியச் சர்வோதய இயக்கம் ஓரளவு காட்டி வருகிறது. ஆனால், அதில்கூட அதன் பூரண வலு இல்லை. அதன் பூரண வலுவையும் உருவ உள்ளடக்க முழுமயையும் இன்று இலங்கையிலுள்ள சர்வதமதசங்கமும் அதன் அங்கத்தவர்களான ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் சிலருமே காட்டி வருகின்றனர்.

அவர்களின் பூரணப் போக்கின் வலுவைத்தான் இன்றைய மூன்றாம் உலகு என்ற பிரிவிலும் அதன் நடுநிலை என்ற கொள்கையிலும் நாம் காணவேண்டும்.

இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேறிய பங்களாதேஷ் சுதந்திரப் போரின் வெற்றியில் இதே போக்கின் வெற்றியையே பார்க்கவேண்டும்.

முதலாளித்துவ நாடுகளிலும் சோஸலிஸ நாடுகளிலும் ஒருங்கே தெரியும் இன்றைய புதுப் பரம்பரையின் விழிப்புப் போராட்டமுங்கூட இப்புதிய விடுதலை இயக்கத்தின் முதல் அலையேயாகும்.

மார்க்சீய சித்தாந்தச் சுயவுணர்வுள்ள தொழிலாள வர்க்கத்தின் புரட்சிக்குரிய தலைமை இடத்தை இன்று மூன்றாம் உலகமும் புதுப்பரம்பரையும் அவற்றை புத்திபூர்வமாக விளங்கிக்கொண்ட பூரணர் கூட்டமும் எடுத்துக்கொள்கின்றனர் என்றால், அந்த மூன்றாம் பண்புகளும் ஒருமித்துக் காணப்படும் இலங்கையின் பங்கு உலகின் மிக முக்கியமாகிறது.


சுழல் : நான்கு
தளம் : தேசம்

1
மூன்றாம் உலகத்து முக்கிய நாடுகளில் இலங்கையும் ஒன்று.

புதுப்பரம்பரையின் புரட்சி ஒன்றும் இங்கு நடத்திருக்கிறது.

அடக்குமுறையில்லாத வகையில் ஆரம்பத்திலிருந்தே விடுதலையைக் காட்டலாம் என்ற தெம்பைத்தரும் ஆத்ம மரபு இலங்கையில் இருக்கிறது. பிறநாடுகளை விட இங்கு நான்கு முக்கிய சமயங்களும் இணைந்து வளர்கின்றன.

அத்துடன் மூன்றாம் உலகத்தின் ஆத்மீக – அரசியல் பலமுள்ள நாடான இந்தியாவும் அதற்கருகிலேயே இருக்கிறது. அங்கிருந்து எழுந்த காந்தீய மரபும் அதன் தத்துவார்த்த இயக்கமான சர்வோதயமும் இலங்கையில் வேரூன்றத் தொடங்கியிருப்பதுடன் அதன் சிறுவட்டத் துறைக்குரிய இயக்கவேலை சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டுப் பரிசைப் பெற்று வளர்வதாகவும் இருக்கிறது.

இலங்கை கருணையின் உருவமும், ஞானத்தின் ஒளியுமான புத்தர் பகவானின் புனித கொள்கைகளால் ஆரம்ப காலத்திலிருந்தே வளம்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

இலங்கையிலேயே அதே புத்தரின் வழியில் வந்த இந்த இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சத்திய அவதாரமான ஸ்ரீலஸ்ரீ நந்தகோபாலகிரி இலைமறை கனியாய் இருந்து அடுத்த யுகத்தின் எழுச்சிக்குரிய பேரியக்கமான சர்வமத சங்கத்தை நிறுவிவிட்டு மறைந்திருக்கிறது. அது இருக்கும் போது ஒலித்துவிட்டுச் சென்ற சில மகா வாக்கியங்கள் கீழே தரப்படுகின்றன.

“புத்த சமயத்தவர் சரண்புகும் போதிஞான நிலையும், கிறிஸ்தவர் வணங்கும் பரிசுத்த ஆவியும்,
இஸ்லாமியர் வணங்கும் அல்லாஹ்வும், இந்துக்கள் வணங்கும் பரப்பிரம்மமும் பெயரற்ற உருவமற்ற
ஒரே நிலையைக் குறிக்கிறது.

அன்பு அமைதியும் உன்னிடமிருந்தால், சுயநோக்கின்றிச் சமூக முன்னேற்றத்துக்காக நீ சேவை
செய்தால் எந்தச் சமயத்தைச் சேர்ந்திருக்காவிட்டாலும் நீயும் ஓர் உண்மையான சமயவாதியே.

ஒவ்வொரு பேரியக்கமும் ஆரம்பத்தில் சிறியதாகவே தெரிகிறது. சிந்திக்கத் தெரிந்த எவனும் இதை
அறிவான்.

காலங்களும் நிலையும் இயற்கையும் மாறும் போது உண்மையாகவே நாமும் நம் கொள்கைகளும்
மாறியாக வேண்டும். இல்லையெனில் நாம் அந்தச் சூழ்நிலையில் சீவிப்பது கஷ்டம். இதைத்தான்
யுகமாற்றம் என்கிறோம்.

திருப்பணி என்ற பேரில் இன்னும் நாம் மூலைக்கு மூலை கோவில்களைக் கட்டி எழுப்புவது சரியா?
அவற்றுக்குச் செலவிடும் பணத்தைக்கொண்டு ஆயிரம் ஏழைகள் வாழ வழி வகுப்பது இன்று நாம்
செய்யும் அதி உன்னத திருப்பணி ஆகாதா? உண்மையான இறை வழிபாட்டுக்குக் காசு
வேண்டுமா?

கிருதயுகத்தில் கோவில்களோ, திருவிழாக்களோ, காணிக்கைகளோ இருக்கப்போவதில்லை.
எல்லாரும் சமவெளியில் ஒன்றி மானசீகமாக இறைவனைப் பிரார்த்திப்பார்கள் (தமக்குரிய சத்திய
நிலையை அவர்களே தரிசிப்பர்.)

இந்தப் பிராமணரும், குருமாரும் மக்களைச் சுரண்டி வாழும் முதலாளிமார்கள் வளர்ந்து வரும்
பெருச்சாளிகள்தான். இத்தகைய பத்தாம் பசலிகளை நாம் தொந்தி கொழுக்க வைப்பது – அதுவும்
கண்ணீர் விட்டு வேர்வை சிந்தித் தேடிய பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்து – தொந்தி
கொழுக்க வைப்பது நியாயமா? இதைத் திருப்பணி என்று சொல்லலாமா?

சர்வ மதங்களை ஒன்றாக இணைத்தும், ஆசார மரபைக் கிழித்து ஆத்ம மரபை அழுத்தியும் கருத்துமுதல்வாதத்தையும், பொருள்முதல்வாதத்தையும் பூரண மெய்முதல்வாதத்தின் சத்தியத்தில் முழுமைப் படுத்தியும், உண்மையான பொருள்முதல் வாதப் பொதுநல சேவைகளையும் சத்தியத்தின் ஒரே ஆன்மீகவாதி என்று நிரூபித்தும் வளர்ச்சி மாற்றத்தி; அவசியத்தை அழுத்தி புதுயுக மாற்றத்திற்கு வழிகாட்டியும் சென்றுள்ள அந்த மாபெரும் சத்திய அவதாரத்தின் பூரண சர்வோதயக் குரலை இன்றுதான் ஸ்ரீ லங்கா சர்வதேச நாடுகளிடமும் முன்வைக்கிறது.

அந்தப் புதுயுக தர்மத்துக்கேற்ப ஆரம்பத்திலிருந்தே அடக்கு முறையற்று விடுதலையையும் பொதுவுடமையையும் தம்மளவில் அனுபவிக்கவும் சமூகத்திடம் பரப்பவும் பயின்று வரும் பூரண வீரர்களும் அதே ஸ்ரீலங்காவில்தான் இன்று காணப்படுகின்றனர்.

அதனால் சகல விதத்திலும் இன்று ஸ்ரீலங்காவே சர்வதேசங்களுக்குமுரிய சத்திய எழுச்சிக்குமுரிய மூலஸ்தானமாக விளங்குகிறது.

அந்த முக்கியத்துவத்தை, இன்று ஸ்ரீலங்காவில் அதன் பிள்ளைகளில் ஒரு பகுதியினரான தமிழ் மக்களில் ஒரு சிறுவட்டம் அதிகமாக உணர்ந்ததாகக் காணப்படுகிறது.

அதை அவர்களது இலக்கியப் போக்குகள் பிரதிபலிக்கின்றன.

சரித்திர வளர்ச்சியின் சத்திய வெளிக்காட்டலுக்குரிய உண்மையான எதிர்காலத்திசை எந்தப்பக்கம் இருக்கிறது என்பதை 1956 முதல் 1972 வரையுள்ள ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நிச்சயமாகக் காட்டவே செய்கிறது.

இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மரபுப் போக்கை முதலில் ஆராயலாம்.

ஆறுமுகநாவலர் முதல் பண்டிதமணி கணபதிப் பிள்ளையூடாக ஈழகேசரிப்பரம்பரைக்குரிய கனகசெந்திநாதன் வரை வளர்த்த மரபுப் போக்கு 1956க்குப்பின் வந்த மொழியுணர்ச்சி நிறைந்த அரசியல் சூழலில் புதிய வலுப் பெற்றதோடு பலபுதுப் பண்டிதர்களையும் ஆற்றல் இலக்கிய எழுத்தாளர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டது.

“மரபு”, “மத்தாப்பு”க்குரிய வண்ணங்கள் பல வகைப்பட்டவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, இலங்கையர்கோன் சம்பந்தன், வைத்தியலிங்கம், கனகசெந்திநாதன், மகாகவி, நீலவாணன், ரகுமான், எஸ். பொன்னுத்துரை, கு.ஓ.ஊ. நடராஜா, சிற்பி, யாழ் இலக்கிய வட்ட எழுத்தாளர் போன்றவர்கள் எல்லாரும் இந்த மரபு மத்தாப்பின் பல்வகைப்பட்ட வர்ணங்கள்தான்.

கலைச்செல்வி, இளம்பிறை போன்ற சஞ்சிகைகளும், அரசு பதிப்பகம் போன்ற ஸ்தாபனங்களும், யாழ் இலக்கிய வட்டம் போன்றசங்கங்களும், ‘நற்போக்கு இலக்கியம்’, “தேசீய இலக்கியம்” என்ற சித்தாந்தமற்ற சுலோகங்களும் இந்த மரபை நியாயப்படுத்த எழுந்த சித்தாந்தமற்ற சஞ்சிகைகளும், ஸ்தாபனங்களும் சுலோகங்களுந்தான்.

இந்த மரபின் சாதனைகள் பலவுண்டு. ஆறுமுகநாவலர் தொட்டு எஸ். பொன்னுத்துரை வரையுள்ள அந்த இலக்கியச் சாதனைகளைப் பலரும் அறிவர். ஆனால், சாதனைகளைவிட அதன்பலவீனங்கள் பெரியவை. அதைப்பலரும் அறிவதில்லை.

இந்த மரபின் ஆரம்பமே பலவந்தமாகக் குறுக்கப்பட்ட ஒரு கட்டுப்பெட்டிப்பார்வையோடுதான் தொடங்கியது. சங்க காலம் முதல் திருவள்ளுவர், திருமூலர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சேக்கிழார், தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஊடாக இன்றுவரை வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தினதும் கலாசாரத்தினதும் அடிநாத வேதப்பெரும் மரபைப்பலவந்தமாகவும், கட்டுப்பெட்டித்தனமாகவும் குறுக்கிப் பிதுக்கியெடுத்த ஞானமற்ற பண்டிதப் போக்குத்தான் இது.

அதன் வித்துக்கள் சைவசித்தாந்தம் என்ற சித்தாந்தம் வகுக்கப்பட்ட காலத்திலேயே தூவப்பட்டுவிட்டனவென்றாலும் அப்போது அவை அடிநாத ஞான அனுபவத்தை விளக்க எழுந்த சித்தாந்த முயற்சிகளாகவே இருந்தன. அடிநாதஞான அனுபவமற்ற சித்தாந்தப் பண்டிதத் தனத்தை அதன் மேல் திணிக்கும் மேல்தள கட்டுப்பெட்டித்தனமாகக் குறுகிவிடவில்லை. அடித்தள ஞான மரபுக்கும் மேல்தள ஆசார மரபுக்கும் அதுவரை தொடர்பு இருக்கவே செய்தது. அந்தத் தொடர்பு இருக்கும்வரை அடிநாத ஞான அனுபவ வளர்ச்சிக்கேற்ப மேல்தள சமூக ஆசாரங்களும் மாற்றி வளர்க்கப்படக்கூடியவையாய் இருந்தன. அப்பர், சம்பந்தர் ஆகிய அனுபூதிமான்கள் தம்கால அரசியல் சித்தாந்த நிலைகளையே மாற்றியமைக்கக்கூடியவர்களாய் இருந்தனர்.

அதுதான் உண்மையான தமிழ்க் கலாசாரத்தின் அடிநாத ஞான மரபு.

அது ஆறுமுகநாவலர் காலத்தில்தான் அறுபட்டது. அடிநாத ஞான மரபிற்கும் மேல்தள சமய, சமூக ஆசார மரபுக்கும் தொடர்பற்றுபோனதுமல்லாமல் அந்தத் தொடர்பு தேவையில்லையென்ற விதத்தில் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. அடிநாத ஞான அருள் மரபை மருள் மரபாகத்திரிபு படுத்திக்காட்டி, மேல்த்தள ஆசார மரபே தன்னை ஞானமரபாக நடித்துக்கொண்டது.

அந்த மரபு நடிப்பில் ஆறுமுகநாவலர் பெருங்பங்கெடுத்துக்கொண்டார். இராமலிங்க சுவாமிகளின் ஞானப்பாடல்கள் திருமூலர் முதல் தாயுமானவர் வரை வளர்ந்து வந்து அடிநாத வேதஞான மரபை வளர்ப்பவையாகவும் தமிழ்க் கலாசாரத்தையும், இலக்கியத்தையும் உலகப்பெருங் கலாசாரத்துக்குத் தலைமை தாங்கச் செய்பவையாகவும் இருந்த போதுங்கூட அவை “மருட்பாக்களாக”, மருட்போக்காக மாறாட்டம் செய்யப்பட்டன. அந்த மாறாட்டத்தின் மூலமே மேல்தள ஆசார மரபு தன்னை அடிநாத ஞான மரபாக, வெளிப்படையாக உத்தியோக ரீதியாக நிறுவிக்கொண்டது.

“அதுவே நீ”

“அகம் பிரம்மம்”

“சர்வமும் பிரம்மமே”

என்ற முப்பெரும் மகாவாக்கியங்கள் அடிநாதஞான மரபின் அனுபவமாக இருக்கும்போது, அதில் தன்னைத் திணித்து “அது” வைத் தன் “நான்” னால் மறைத்த பண்டிதர் சித்தாந்தந்தான்.

“பசு, பதி, பாசம்”

என்ற மூன்று சுருக்கங்களை அடிநாத அனுபவ மரபாக மாறாட்டம் செய்தது. ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்ற மகா வாக்கியங்களின் ஞான அனுபவ அத்துவிதம் ‘பசு’வும், ‘பதி’யும் ஒன்றாக முடியாத சித்தாந்தப் பண்டித அத்துவிதமாக மாறாட்டம் செய்யப்பட்டது. அந்த மாறாட்டத்தில் ‘பசு’வுக்கும் ‘பதி’க்கும் உண்மையான வேதாந்த அத்துவிதக் கலப்பு இல்லாமல் போனதுபோல், அடிநாத ஞான அனுப மரபுக்கும் மேல்த்தளச் சமூக, சமய ஆசாரத்துக்கும் தொடர்பும் கலப்பும் இல்லாமல் போய்விட்டன.

திரும்பவும் அந்த மேல்த்தள மரபு நடிப்பையும் மாறாட்டத்தையும் உடைக்க முயன்றவர்கள் இருவர். ஒருவர் பாரதியார், மற்றவர் ரமணர்.

ஆனால், அதற்குள் மேல்தள ஆசார மரபு தன்னை வலுவாக நிறுவிக்கொண்டுவிட்டது. பாரதியாரை அது வாயளவில் மட்டும் ஏற்றுக்கொண்டது. அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரின் இருபதாம் நூற்றாண்டின் உருவமாக அவரை அந்தப் பண்டிதச் சித்தாந்தத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்துவிதத்தின் முழு உருபவமாகவும் வாழ்ந்துகாட்டிய ரமணரையோ அது முற்றாக இருட்டடிப்புச் செய்து விட்டது.

இவைதான் இந்த மரபின் பெரும் பலவீனங்களாகும். எது பலத்தின் மூலக்காரணமாகவும் அடித்தளமாகவும் இருக்கிறதோ அதையே புறக்கணித்தும் மறைத்தும் தன்னையே அதுவாகக் காட்டியும் நடிக்கும் ஒரு போக்குக்குரிய பலவீனங்கள் என்று சொல்வதைவிட, அந்தப் போக்கையே “பலவீனம்”, “போலி” என்பவற்றின் முழு உருவங்களாகக் காண்பதே சரியாக இருக்கும்.

ஆறுமுகநாவலர் முதல் பண்டிதமணி கணபதிப்பிள்ளையூடாக கனகசெந்திநாதன் எஸ். பொன்னுத்துரை, யாழ் இலக்கிய வட்ட எழுத்தாளர்கள்வரை வளர்ந்து காணப்படும் இன்றைய தமிழ் இலக்கியப்போக்கு தன்னைச் சைவசித்தாந்த மரபாகவும், தமிழ் மரபாகவும், நற்போக்காகவும் நடித்துக்கொண்டாலும் உண்மையில் அது தமிழ் மரபுக்கு எதிரான நபுஞ்சகப் போக்கும் பொய்ப் போக்குமேதான். வெறும் உள்ளுழுத்த மேல் பூச்சு ஆசார வளர்ச்சியேதான்.

இப்படிக் கூறுவது பலருக்குக் கோபத்தை மூட்டலாம். ஆனால், உண்மையான தமிழ்க் கலாசாரத்தினதும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் ஞானிகளினது அனுபவத்தினதும் அடிநாத வேத மரபையும் அதற்குரிய ஆத்ம சக்தியையும் தரிசித்தவர்களுக்கு இந்த மேல்த்தள பண்டிதக் கட்டுப்பெட்டித்தன ஆசார மரபு வெறும் மேல்பூச்சு மாயையாகவே தெரியும்.

விசித்திரமென்னவென்றால், மாயாவாதத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் நம் சித்தாந்தப் பண்டிதர்கள் உண்மையில் மாயையான மரபொன்றையே உருவாக்கியுள்ளனர். அடித்தளச் சத்தியத்தோடு தொடர பற்ற வேரறுத்த ஆசார மாயை.

இந்த வேரறுத்த மேல்தள ஆசாரம் எழுப்பும் சித்தாந்தங்களெல்லாம் உண்மையான சித்தாந்தத்துக்கு எதிரான சித்தாந்தங்களாகவே இருக்கும். அது எழுப்பும் தத்துவமெல்லாம் உண்மையான அடிநாதத் தத்துவத்துக்கு எதிரானதாகவே இருக்கும். அப்படிக்கூமச் சித்தாந்தம் எழுப்பப்பட முடியாதபோது, அது வெறும் சுலோகங்களோடு மட்டும் திருப்திப்பட்டுக்கொள்ளும். “நற்போக்கு”, “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”, “ஜனநாயகம்”, “சுதந்திரம்”, “சமத்துவம்”, “அன்பு” என்பவை வெறும் சுலோகங்கள். ஆனால், எதனடிப்படையில் கடமையைச் செய்து. எதன் அடிப்படையில் நற்போக்கைத் தீர்மானிப்பது என்ற ஆழமான விளக்கமும், அந்த விளக்கத்துக்குரிய தர்க்க ரீதியான தத்துவமும் அதன்படி வாழப்படும் ஆழமான வாழ்க்கை ‘முறையும் இருக்கமாட்டா, அந்த நிலையில் “சுதந்திரம்”, “ஜனநாயகம்”, “அன்பு”, “கடமை, கண்ணியம்”, “நற்போக்கு” என்பவை வெறும் சுலோகப் பூச்சுக்களாக வெளியெ திரைபோட, அகத்தேயும் சமூகத்துக்குள்ளேயும் கட்டுப்பாடற்ற ஆசைகளும் அவற்றின் பலாத்கார ஆக்கிரமிப்புமே அன்பும் இரக்கமுமற்ற ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும்.

உண்மையான சமய வளர்ச்சி பண்பாட்டு வளர்ச்சியும் இதுகாலவரை என்னென்ன அசுர சக்திகளை எதிர்த்து என்னென்ன ஒழுக்க இலட்சியங்களை முன் வைத்தனவோ அதே இலட்சியங்கள் அவற்றின் எதிரிகளான அதே அசுர சக்திகளின் முகமூடிகளாகவும் மேற்போர்வைகளாகவும் புகலிடங்களாகவும் மாற்றப்பட்டு விடுகின்றன.

முருகன் கோயில் அதே பெயரில் சூரனின் கோட்டையாகி விடுகிறது. அடிநாத மரபின் பெயர் அதே மரபை அழிக்கும் ஆசார நடிப்பு மரபாகி விடுகிறது. சமயமும் பண்பாடும் சமயத்துக்கும் பண்பாட்டுக்கும் எதிரிகளாகி விடுகின்றன. கருத்துமுதல்வாதம் கருத்தின் பெயரிலும் கடவுளின் பெயரிலும் கருத்துக்கும் கடவுளுக்கும் எதிரான ஆசைகளினதும் ஆணவத்தினதும் பொருள்வாதமாகி விடுகிறது.

இந்தப் பச்சைப் பொருளாசைக்காரர்களான போலிச் சமய – மரபு வாதிகள் சமூக மாற்றத்தை ஒருபோதும் விரும்புவதில்லை. அது அவரவர் வைத்திருக்கும் தேட்டத்தையும் அதற்குரிய அதிகாரத்தையும் முற்றாக அழித்துவிடும் என்ற பயத்தால் சமதர்மத்தை நோக்கிய எல்லாவகைச் சமூக மாற்றத்துக்கும் எதிராகவே இருப்பர். சகல வகையான பாகுபாடுகளையும் நிரந்தரமாக்கவே தர்க்க நியாயங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பர்.

சமதர்மத்தை நோக்கியும் சகலரும் பெருமனிதப் பிரம்மஞானிகளாகும் இலட்சியத்தை நோக்கியும் துரிதமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மனதின் சிந்தனைக்குரிய குணத்தின் அடிப்படையில் வடிக்கப்பட்ட வேதகால வர்ணாசிரமமுறை பிறப்பையும் தொழிலையும் அடிப்படையாகக் கொண்ட நிரந்தரச் சாதிப்பாகுபாடுகளாக மாற்றப்படும்.; செயலுக்குரிய சிந்தனையும், அதற்குரிய அர்த்தத்தையும் அழுத்திய “கர்மம்” என்ற கோட்பாடு சிந்தனையற்ற செயலாகவும் மாற்றத்துக்கெதிரான “விதி” யாகவும் மாற்றப்படும். அதேபோல் மொழி, இனம், நிறம் போன்ற எல்லாவகையான புறப்பொருட்களும், காட்சிகளும் அகக்கருத்துக்கும் ஆத்மாவுக்கும் எதிரான ஆதாரங்களாக ஆக்கப்பட்டுவிடும்.

சமயக் கருத்துமுதல்வாதமும் அதன் அடிநாத மரபும் வெறும் வெளிவேஷ ஆசார மரபாகிப் படிப்படியாகப் பச்சையான பொருள் வாதமாகவும் அதன் பலாத்கார ஆக்கிரமிப்புச் சர்வாதிகாரமாகவும் வளரும் போக்கு இதுதான்.

அந்த நிலையில் உண்மையான அன்பையும் அதற்குரிய அகப்புறப் பண்பாட்டையும், சமூக சமத்துவத்தையும், சுதந்திரத்தையும் தேடும் அறிவு ஜீவிகளும் ஆன்ம ஜீவிகளும் அதாவது சகல உண்மை விரும்பிகளும் இத்தகைய ‘மரபு’க்கும், சமயத்துக்கும், அதன் கடவுளுக்கும், கலாசாரத்துக்கும் எதிரானவர்களாகவே தம்மைப் பிரகடனப் படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகின்றனர். அவர்கள் தம்மைச் சமயத்துக்கெதிரான பொருள்முதல்வாதிகளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும் உண்மையில் அவர்களது பொருள்முதல்வாதம் அன்பையும், சமத்துவத்தையும், விடுதலையையும் அவற்றை நோக்கிய அக – புற வளர்ச்சியை விரும்பும் விஞ்ஞான ரீதியான இலட்சிய வாதமாகவே இருக்கிறது. அந்தவகையில் அவாகளது பொருள்முதல்வாதமே அந்தச் சூழலுக்குரிய உண்மையான கருத்து முதல்வாதமாகவும், ஆன்மீக வாதமாகவும் அடிப்படையில் செயல்படுகிறது.

ஒருவகையில் இத்தகைய எதிர்மாற்றங்கள் வெளிப்படையாகத் தெரியாத ஒரு கருத்துக் கலப்பையும் ஏற்படுத்துகிறது. சமயப் பொருள்முதல்வாதம் தனது வெளிப்பூச்சு இலட்சியமாக எதைக் காட்டுகிறதோ அதையே தனது உள்ளடக்கமாகக் கொண்டு சமயத்தை எதிர்க்கும் சமதர்மப் பொருள்முதல்வாதம் வேறுவகையில் விஞ்ஞான ரீதியாக நடைமுறைப் படுத்த முயல்கிறது.

இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருப்பினும், ஒரு வகையில் வேறு ஓர் ஆழக்கோணத்திலிருந்து இரண்டும் திருத்தப்பட்டு இணைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படக்கூடியவையாகவும் இருக்கின்றன. அந்தப் பண்புதான் மூன்றாம் பக்கத்துப் பார்வையை அவசியமாக்குகிறது.

இத்தகைய எதிர்மாற்றங்களும், அவற்றால் ஏற்படும் கலப்பும், கலப்புக்குரிய போராட்டங்களும், சமய கலாசாரத்தை ஏற்றுக்கொண்டுள்ள சகல சமூகங்களும் சந்தித்துத்தான் இருக்கின்றன.

அவையே 15ம், 16ம் நூற்றாண்டுகளுக்குப் பின்பு வந்த இருபெரும் சர்வதேசப் போக்குகளாகவும் மாறியுள்ளன. ஒன்று, சமயத்தை மறுக்காமல் சமயப் பூச்சுக்களையே தன் இலட்சியப் பூச்சுக்களாக கொண்டு பச்சையான பொரள் வாதமாகச் செயற்படும் மேற்கத்தைய முதலாளித்துவ ஏகாதிபத்தியப் போக்கு. இரண்டு, சமயத்தை மறுத்துக்கொண்டே பழைய சமயங்களின் ஆன்மீக அடிப்படை இலட்சியங்களான அன்பு, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றைத் தனது இலட்சியமாகக் கொண்டு செயல்படும் பொருள்முதல்வாத சர்வதேச சோஸலிஸ ஏகாதிபத்தியப் போக்கு.

இந்த இரு பெரும் சர்வதேசப் போக்குகளின் தன்மைகளை அறியும்போது நமது இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மரபுவாத – நற்போக்கு எப்படிச் சர்வதேச ஏகாதிபத்திய முதலாளித்துவப் போக்குடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். ஆறுமுகநாவலர் காலந்தொட்டு இறுக்கமடைந்து வந்துள்ள நமது வெளிப்பூச்சு ஆசார மரபு இன்றைய மேற்கத்தைய முதலாளித்துவ ஏகாதிபத்திய மரபோடு முரண்பட்டதாக ஆரம்பத்திற் காட்டிக்கொண்டாலும் அடிப்படையில் இரண்டும் ஒரே பெரும் மேல்பூச்சு மரபின் இரு வண்ணங்களாகவே இருக்கின்றன.

ஆரம்பகால முரண்பாடுகள் - கிறிஸ்தவ கால முரண்பாடுகள் - மழுங்கிய பின் இன்று அவற்றின் அடிப்படை ஒருமை தெரிகிறது. அதை ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் அரசியற்போக்கு அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. அதாவது காந்தீயத்தை அரசியலில் புகுத்துவதாக நடிக்கும் போக்கு.

உண்மையான காந்தீயப் போக்கோ அடிநாத ஆன்மீக ஞான மரபைத் திரும்பவும் மேல்தளச் சமூக ஆசாரங்களோடும், இயக்கங்களோடும் தொடர்பு கொள்ளச் செய்து அந்த மேல்தளச் சகல துறைகளையும் முற்றாகச் சத்திய வெளிப்பாட்டுக்கேற்ற வகையில் மாற்றியமைக்க முயன்ற போக்காகும். காந்தி மகானோ மூன்றாம் பக்கத்தின் எழுச்சியைப் பிரதிபலித்த இராமகிருஷ்ணரின் வழிவந்த முன்னோடிகளான விவேகானந்தர், ரமணர், அரவிந்தர், பாரதி ஆகியோரின் தொடர்வரிசைக்குரிய ஒருவர். அவரர் அரசியல் போராட்டம் சமூக மேல்பூச்சு ஆசாரங்களையும், மூடக்கொள்கைகளையும் கிழித்துக்கொண்டு அடித்தளம் வரை செல்ல முயன்ற சர்வதேசங்களுக்குமுரிய ஆன்ம விடுதலைப் போராட்டமாகும்.

அப்படிப்பட்ட மகானின் பெயரைச் சொல்லிக்கொண்டு சமூகத்தில் சாதிக் கொடுமைகளையும், வர்க்கச் சுரண்டலையும் மறைத்திருக்கும் மேல்பூச்சு ஆசாரங்களைக் கிழிக்காமலும், அவை எழுப்பும் கனவுகளைக் குலைக்காமலும் போராட்டம் நடத்தலாம் என்று நினைப்பது காந்தியின் பெயரால் உண்மையான காந்தீயத்தையே சாகடிக்கும் அரசியல் ஆசாரப் பூச்சொன்றை வளர்ப்பதாகவே இருக்கும்.

அதைத்தான் தமிழர் கூட்டணியினர் செய்கின்றனர். அந்தவகையில் அவர்களது அரசியல் ஆசாரமும் ஆறுமுக நாவலர் காலந்தொட்டு வளர்ந்துவந்துள்ள நமது கலை, இலக்கிய, சமய, மரபுவாத – நற்போக்கும் ஒன்றையொன்று தழுவியவையேதான். ஆன்மீகத்தின் பெயரில் பச்சையாக நடைபெறும் பொருள்வாதப் போக்கேதான். பொருள்வாதப் போக்கு சமூக மாற்றங்களை விரும்புவதில்லை. அப்படியென்றால், இன்று அந்த மேல்தளப் போக்கும் போராடத் தொடங்கியிருக்கிறதென்றால் அது தன் நிலையான அந்தஸ்தாகக் கருதிக் கொண்ட உத்தியோக – வியாபார உரிமைகளுக்குத் தனிச் சிங்கள மொழிச்சட்டத்தால் வந்த ஆபத்தே தான் காரணமாகும். உண்மையான சமூக மாற்றத்துக்காக அது போராடவில்லை. ஆசாரங்களுக்குப் பின்னாலுள்ள ஆக்கிரமிப்புகளையும், பலாத்காரங்களையும் எதிர்த்து அது போராடவில்லை.

காந்தியின் காந்தீயத்துக்கும் தமிழர் கூட்டணியினரின் காந்தீயத்துக்குமுள்ள வேறுபாடு அதுதான். வேதகாலம் முதல் பாரதியார் ஊடாக வளர்ந்துவரும் தமிழ்க் கலாசாரத்தின் ஞானமரபுக்கும், ஆறுமுகநாவலர் முதல் வளர்ந்து வரும் மேல்பூச்சு பண்டித ஆசாரமரபுக்கும் உள்ள வேறுபாடும் அதுவேதான்.

அதுதான் அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்திய “ஜனநாயகம்”, “சுதந்திரம்” சொற்றொடர்களும், ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபுவாதத்தின் நற்போக்கு “தேசிய இலக்கியம்” என்ற சொற்றொடர்களும், தமிழர் கூட்டணியினரின் - தி.மு.க. செல்வாக்குள்ள – “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்பவையும் உண்மையான, ஆழமான தத்துவப் பின்னணி சேராத அர்த்தமற்ற வெளிப்பூச்சு சுலோகங்களாக நிற்கின்றன.

காரணம் அவை மூன்றும் ஒன்றேதான்.

மேற்கத்தைய முதலாளித்துவப் போக்கும், ஈழத்து இலக்கியத்தின் மரபுவாத நற்போக்கும், ஈழத் தமிழர் கூட்டணியின் காந்தீய ஆசாரப் போராட்டமும் ஒரே மேல்பூச்சு “மரபு”, “மத்தாப்பு” புஸ்வாணங்களேதான்.

1956க்குப்பின் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வலுவடையத் தொடங்கிய இப்போக்கு வெகுசீக்கிரமே அந்த வலுவடையத் தொடங்கிய இப்போக்கு வெகுசீக்கிரமே அந்த வலுவை இழக்கவும் தொடங்கியது. அந்த வலுவிழப்பு 1956க்குப்பின் தெரியவரும் சர்வதேச முதலாளித்துவ ஏகாதிபத்தியப் போக்கின் நெருக்கடியோடும் தேய்வோடும் ஒத்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.

அந்த வலுவிழப்பினதும் தேய்வினதும் காரணங்களாக அடுத்த போக்குகள் உள்நுழைகின்றன. அதுதான்.

மார்க்சீயப் போக்கும் மூன்றாம் பக்கப் பார்வையும்.

2
இந்த ஆசார மரபுவாதத்துக்கும் அதன் முதலாளித்துவப் போக்குக்கும் எதிராக 1956க்குப் பின் ஈழத்தில் மார்க்சீய முற்போக்கு இலக்கிய இயக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது.

வழி வழி ஆசார மரபுவாதம் சமூகத்தின் ஊழல்களையும் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாமல் அவற்றைப் பூசி மெழுகுவதையும், அவற்றுக்கு எதிரான போராட்டங்களைத் திசை திருப்புவதையும் கண்ட சீர்திருத்தவாதிகள் வேறு வழியின்றி மார்க்சீய நாஸ்திகப் பொருள் முதல்வாதப் பக்கம் திரும்பினர். அது தமிழ்க் கலாசாரத்தின் அடிநாத ஞானமரபுக்கு முரண்பட்டதாகத் தெரியினும், உண்மையில் அதுவே மேல்தளச்சமய ஆசாரப் பூச்சு மரபை விட அதற்கு அண்மித்ததாக இருக்கிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பழைய சங்கப் பாடல் முதல் இராமலிங்க சுவாமிகளின் சர்வ சமய சன்மார்க்க சமரசத்தின் சர்வதேசப் போக்குக் கூடாக “இடிபட்ட சுவர்போல கலி விழுந்தான் கிருதயுகம் எழுகமாதோ” என்று ரஷ்ஷியப் புரட்சியைப் பற்றிய பாரதிபாடல்வரை ஊடுருவி நிற்கும் தமிழன் கண்ட சர்வதேச சத்திய ஒருமைக்குப் புதிய உருவங்கொடுக்க விரும்பிய இன்றைய சீர்திருத்தவாதிகளால் மேல்தள ஆசாரமரபோடு திருப்திப்பட்டிருக்க முடியாது. அந்தளவுக்கு அவர்களுக்குப் பார்வையும் கலையுணர்வு ஆத்ம உந்தலும் மழுங்கிக்கிடக்கவில்லை. அதேசமயம் அவர்ளிற் பலர் அடித்தள ஞானமாபோடு மேல்தள ஆசாரமரபையும் ஒன்றாக நினைத்து மாறாட்டம் செய்துகொண்டாலும், மாறாட்டம் செய்யாத வேளைகளிலுங் கூட அடித்தள ஞான மரபிலிருந்து புதுயுகச் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் தத்துவமொன்றைக் கண்டுபிடிக்க முடியாத தரிசனமின்மையாலும் அவர்களுக்குச் சோஸலிஸ சமதர்மத்தை இலட்சிய நோக்காக கொண்ட மார்க்சீய சித்தாந்தமே சரியான புதுமார்க்கமாகத் தெரிந்தது. அத்துடன் சாதிக்கொடுமைகளிலிருந்து தப்பமுயன்ற பெரும்பாலான ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்கு அந்தக் கொடுமைகளையும் அதையொத்த வேறு கொடுமைகளையும் நியாயப்படுத்துவதாகத் தெரிந்த சமயங்களிடமிருந்து எந்தவித சமூக தர்மத்தையும் எதிர்பார்க்க முடியாது என்ற எண்ணம் எழுந்ததிலும் தப்பொன்றுமில்லை. சாதிப் பிரிவுகள், வர்க்கப் பிரிவுகள் என்ற பாகுபாடுகளும் அவற்றுக்குரிய மறைமுகப் பலாத்கார ஆக்கிரமிப்பும் சுரண்டலும் அவற்றை மறைக்கும் ஆசார வெளிப்பூச்சுகளும் இல்லாத உண்மையான அன்பும், சகோதரத்துவமும், சமத்துவமும், சமதர்மமும் உள்ள ஒரு சமூக அமைப்பை விரும்பி அவர்கள் மார்க்சீய அரசியல் கட்சிகளில் சேர்ந்தனர் அல்லது அவற்றுக்கு அனுதாபிகளாக இருந்தனர். அவர்களுடைய இயக்கந்தான் ஈழத்தமிழர் இலக்கியத்துறையில் 1956க்குப் பின் வளர்ச்சியடையத் தொடங்கிய “முற்போக்கு” எழுத்தாளர் இயக்கமாகும். அது ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இன்றைய மூன்று பெரும் சர்வதேசப் போக்குகளில் இரண்டாவது போக்குக்குரிய ஈழத்து இலக்கிய வெளிக்காட்டலாக இருக்கிறது.

அந்தவகையில் அது மேல்தள முதலாளித்துவப் பண்டித ஆசார மரபைவிட அடித்தள ஆன்மீக ஞான மரபுக்குக் கிட்டே இருக்கிறது. அடித்தள ஆன்மீக மரபுக்கும் மேல்தள ஆசார மரபுக்கும் இடைப்பட்டு நிற்கிறது.

ஈழத்தமிழ் இலக்கியத்துறையில் 1956க்குப் பின் வலுவடையத் தொடங்கிய அப்போக்கு இந்த 72க்குள் பழைய மேலோட்ட ஆசார மரபு வாதத்தைவிடக் குறிப்பிடப்படக்கூடிய பல சாதனைகள் ஆற்றியுள்ளது. ஜீவாவின் “தண்ணிரும் கண்ணீரும்” முதலாக செ. கணேசலிங்கனின் நாவல்கள், யோ. பெனடிக் பாலனின் ‘சொந்தக்காரன்’, நீர்வை பொன்னையனின் ‘உதயம்’, க. கைலாசபதியின் சில விமர்சனங்கள், காவலூர் ராசதுரையின் ‘வீடு யாருக்கு’, டானியலின் ‘பஞ்சமர்’ வரையுள்ள பல்வேறு ஆக்கங்களைப் படிப்போர் அந்த உண்மையை உணர்வர்.

ஆனால், இவர்களை ஆற்றலில்லாது வெறும் அர்த்தமற்ற சுலோகங்களை முன் வைத்தவர்கள் என்றும், இவர்களின் “சோஸலிஸ யதார்த்தம்” என்ற கோட்பாடு காலத்துக் கொவ்வாதது எனக்கூறி அதற்குப் பதிலாக “தேசிய இலக்கியம்” என்ற “கோட்பாட்டை முன்வைத்தவர்களும் இருக்கின்றனர். எஸ். பொன்னுத்துரை அவர்களில் முக்கியமானவர், அதன் காரணமாக ஏற்பட்ட கருத்து முரண்பாடு எஸ். பொ. வை. முற்போக்கு அணியிலிருந்து வெளியே அகற்றியது. அந்த விசயத்தில் இருசாராரும் தவறிழைத்தவர்களாகவே இருக்கின்றனர். அவரையொத்த ஒருவரை ஆரம்பத்தில் முற்போக்கு இயக்கம் இழக்க முன்வந்திருக்கக் கூடாது. அந்தத் தீவிரம் கூடாது என்பதை 64க்குப் பிறகு தான் அரசியல் துறையில் உணர்ந்து சமரசம் செய்ய முன்வந்த இடதுசாரிகள் பலர் அதை உணர்ந்தவர்களாய் இல்லை. அதேபோல் வெளியேற்றப்பட்ட பின்பு எஸ். பொன்னுத்துரையும் தன்னளவிலாவது மார்க்சீய முற்போக்கு இலக்கியப் போக்குக்கு வளமளித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்யாததோடு அதற்கு நேர்மாறான ஆசார மரபோடு தான் சமரசம் செய்துள்ளார். அதனால் அவரது ‘வீ’ என்ற சிறுகதைத் தொகுதி அவரது “தேசிய இலக்கியம்” என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தும் சில தரமான சிறுகதைகளைக் கொண்டதாக அமைந்திருந்தாலும் அவர் காணும் தேசியமும் நற்போக்கும் முதலாளித்துவ மேல்தள ஆசார மரபுக்குரிய தேசிய – நற்போக்காகவே இருக்கிறது. அதனால் தான் மேல்தள பண்டித ஆசாரமரபு இன்று அவரைத்தன் எதிர்ப்புரட்சிக்குரிய முன்னணி வீரராகப் பயன்படுத்தி வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் கிளர்ச்’சிகளை ஒடுக்கு வதற்கும், நசுக்குவதற்கும், உயர்சாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்தே உடல் ஆற்றலுக்கு சில கையாட்களைப் பயன்படுத்துவதுண்டு. எழுத்தாற்றல் உள்ள எஸ். பொ. மேல்தள ஆசார மரபால் இன்று அப்படியே பயன்படுத்தப்பட்டு வருகிறார். தனது தத்துவ பார்வையின்மையை மறைக்க மரபின் பெயரில் இவர் வார்த்தைகளால் சிலம்பாட்டமும், வாணவேடிக்கைகளும் காட்டுவதுண்டு. அருளற்ற இன்றைய கோயில் திருவிழாக்களின் ஆசார மரபுக்குரிய சிலம்பாட்டமும், வாணவேடிக்கைகளும் போலவே அவையும் இன்று தோற்று வருகின்றன.

மேல்தள வெளிவேட ஆசார மரபு ஈழத்து இலக்கியத்துறையில் எஸ். பொன்னுத்துரை மூலம் வைத்ததடைகளையும் உடைத்துக்கொண்டு (தனக்குள்ளே அது பீக்கிங், மொஸ்கவ் என்று பிரிந்துள்ள போதும்) இன்று முற்போக்கு இயக்கம் வளரவே செய்துள்ளது.

முற்போக்குவாதிகள் ‘சோஸலிஸ யதார்த்தம்’, ‘பிரதேச இலக்கியம்’ என்பன போன்ற சுலோகங்களை முன்வைத்தாலும் அவை ஆசார மரபுக்குரிய ‘நற்போக்கு’, “தேசியம்”, “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” போன்ற தத்துவ ஆழமும் அர்த்தமுமற்ற சுலோகங்களல்ல. அவற்றுக்குப் பின்னால் மார்க்சீய சித்தாந்தமும் அதற்குரிய வியாக்கியானங்களும் இயக்கமும் இருப்பதால் மெல்லமெல்ல முற்போக்கு எழுத்தாளர்கள் சுலோகங்களின் தத்துவ அர்த்தங்களை விளக்கிக்கொண்டு, அவற்றுக்கேற்ற வகையில் சீராக எழுதுவதில் வெற்றி கொள்ளவும் செய்தனர்.

இவர்களது இலக்கியம் தரமுடையதாகக் கொள்ளப்படுவதற்குரிய மதிப்பீடு என்ன?

சுருங்கச் சொன்னால், மேல் பூச்சு ஆசார மரபு எப்படி இருக்கிற பிரதேச, சர்வதேச சமூக அமைப்பையும், மனித வாழ்க்கை முறையையும் மாற்றியமைக்காமல் இருக்கிற அமைப்புக்குள்ளேயே கலை இலக்கிய இன்பத்தை அனுபவிக்க முயல்கிறதோ, அப்படிப்பட்ட போக்குக்கு எதிராக மனித சரித்திரத்தை முற்போக்காக வளர்க்கக்கூடியதாய் இவர்களது சிருஷ்டிகள் உள்ளன. அதாவது, இலக்கியம் ரசனைக்கு மட்டும் உரியதல்ல. அது விடுதலைக்கும் செயலுக்கும் உரியது. அந்த விடுதலை தனி மனித விடுதலையாக மட்டும் நின்றுவிடாமல் முழுச் சமூகத்தின் விடுதலைக்கும் வழிகாட்டுவதாக இருக்கவேண்டும். இவையே முற்போக்கு எழுத்தாளர்களின் அளவுகோல்கள் எனலாம்.


அதனால் அவர்களது படைப்புக்கு இன்றைய ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் ஆசாரப் பூச்சுகளுக்கிடையே உள்ள சாதிக் கொடுமைகளையும், வர்க்கச் சுரண்டலையும் பச்சையாகக் கிழித்துக்காட்டுவதோடு உலகமெங்கும் காணப்படும் அதேவகைப் பலாத்கார ஆக்கிரமிப்பையும் சுரண்டலையும் அவற்றோடு தொடர்புபடுத்தியும் காட்டுகின்றன. அவற்றைக் காட்டுவதன் மூலம் அவற்றிலிருந்து விடுதலைபெறும் மார்க்கத்தையும் தம் கோணத்திலிருந்து வெளிப்படுத்த முயல்கின்றன.

ஆனால், அவர்களின் முயற்சிக்கு ஏற்றவாறு அவர்களது விமர்சகர்கள் தீவிரமாக வழிகாட்டி விமர்சிக்க முடியாமல் இருக்கிறார்கள். அது பெருங் குறைபாடாகும். அதோடு முற்போக்கு விமர்சகர்களிலும் எழுத்தாளர்களிலும் சிலர் பழைய ஆசாரவாதிகளுக்குச் சமமான புதிய பண்டிதச் சாதிப்போக்கை வெளிக்காட்டுபவர்களாக இருப்பதும், பழைய முதலாளிகளையும்விட தீவிரமாகப் பணஞ் சம்பாதிக்கும் கறுப்புச் சந்தைக்காரர்களாக இருப்பதும் புதுப் பரம்பரையினரைக் கவரமுடியாத அம்சங்களாக நிற்கின்றன. அது மார்க்சீய சோஸலிஸம் என்ற பெயரிற் புதிய துரைத்தனச் சாதிக்காரரிடமும் புதிய முதலாளிச் சுரண்டல்காரரிடமும் அதிகாரத்தை ஒப்படைப்பதாக இருக்காதா என்ற சந்தேகங்களைப் புதுப் பரம்பரையினரிடம் எழுப்புவதாகத் தெரிகிறது.

சோஸலிஸ நாடுகளில் 1956க்குப் பின் தீவிரமடைந்து வரும் புது விழிப்புக்கு இது சமமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. தொழிலாளர்களின் சர்வாதிகாரம் என்ற பெயரில் உளவாளிகள், சிறைச்சாலைகள் ஆகியனவற்றை அதிகமாகக் கொண்ட ஆட்சிக்குப் பதிலாகப் பொருளுற்பத்தியும் விடுதலையும் ஒருங்கே கிடைக்க வேண்டும்@ இல்லாவிட்டால் தொழில் நுட்ப சோஸலிஸ நாடுகளின் துரைத்தனக்காரரின் கொடுமைகளுக்கும் வித்தியாசமில்லை என்ற புதிய சிந்தனை விழிப்பை ஒத்திருக்கிறது. அதாவது முடிவுமட்டுமல்ல வழியுங்கூடத் தூய்மையாக இருக்க வேண்டுமென்ற ஆன்மீக விசாரத்துக்குரிய சிந்தனை.

ஈழத்து இளம் எழுத்தாளர்களும் சர்வதேசப் புதுப் பரம்பரையினரைப் போல் ஆசார மரபில் அதிருப்திப்படுபவர்கள் போலவே இன்று மார்க்சீய முற்போக்கிலும் அதிருப்திப்படுபவர்களாக இருக்கின்றனர்.

அத்துடன் மார்க்சீய தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் அவர்களது சிருஷ்டிகளின் தரம் அதிகரித்து வருவதாக இருந்தும் இன்னும் ஈழத்துத் தமிழ் மக்களின் பெரும்பான்மையினரைத் தொட்டுத் திசை திருப்ப முடியாதவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். காரணம், அவர்களது மார்க்சீய சித்தாந்தம் தமிழ்ப் பொதுமக்களிடம் ஊடுருவக்கூடிய அரசியல் பொருளாதாரச் சூழல் இன்னும் பிறக்கவில்லை என்பதல்ல அர்த்தம். மக்களோடு அவர்களாற் பழக முடியாமல் இருக்கிறது என்பதும், தமிழ்க் கலாசார அடித்தளம் அவர்களது சித்தாந்தம் மக்களோடு கலக்கக்கூடிய வகையில் இடமளிக்கவில்லை என்பதுமே முக்கிய காரணங்களாகும். அதனால் தாமாகவே தம் பகுதிகளிற் சரித்திரத்தை வளர்க்க உதவுவதை விடத் தென்னிலங்கையில் ஏற்படும் சரித்திர மாற்றங்களுக்காக அவர்கள் காத்திருப்பவர்களாகவே இருக்கின்றனர்.

அந்த வகையில் ஆசார மரபுவாதிகள் எவ்வாறு ஆத்ம மரபை வளர்க்க முடியாமல் ஸ்தம்பித்துக் கிடக்கிறார்களோ, அவ்வாறே புதிய புரட்சி மரபை ஓர் எல்லைக்கு அப்பால் வளர்க்க முடியாமல் முற்போக்கு எழுத்தாளர்களும் ஸ்தம்பித்துக் கிடக்கின்றனர். இரு சாரரினது ஸ்தம்பிதமும் சர்வதேச முதலாளித்துவ சோஸலிஸ சக்திகளின் ஸ்தம்பிதத்தையே ஒத்திருக்கிறது.


3
1956க்குப் பின் ஈழத்து இலக்கியத்தில் முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் வலுவடையத் தொடங்கிய காலத்தில், அதன் சர்வதேசப் பெரும்போக்கான சோஸலிஸ ஏகாதிபத்திய முற்போக்கு தனக்குள்ளேயே ஒரு நெருக்கடிக் கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தது. ஸ்டாலினிஸக் கொடுமைகள் அம்பலப்படுத்தப்பட்ட 22-ம் கட்சி மாநாட்டிலிருந்து ஹங்கெரி, போலிஷ் புரட்சி வரையுள்ள பல நிகழ்ச்சிகளை அதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

மேற்கத்தைய முதலாளித்துவப் போக்குக்குள்ளும், சோஸலிஸ ஏகாதிபத்தியப் போக்குக்குள்ளும் அடைபட்டு விடாத ஒரு மூன்றாம் பார்வை அவசியமென்பதை இவை சர்வதேச ரீதியில் அழுத்துபவையாக அமைந்தன. இரண்டுக்குள்ளும் அடங்காது வெளியே நின்ற மூன்றாம் உலகத்தின் நடுநிலைக் கொள்கையை சுயஸ், அல்ஜீரிய, வியட்னாம் நெருக்கடிகள் எவ்வாறு வலியுறுத்தினவோ, அவ்வாறே ஹங்கேரிய, போலிஷ் புரட்சிகள் வலியுறுத்தின.

மூன்றாம் நாடுகளின் நடுநிலைக் கொள்கை வெறும் பொருளாதார அரசியல் காரணங்களால் உருவாக்கப்பட்டதாகவே முதலாளித்துவ நாடுகளும் சோஸலிஸ நாடுகளும் நினைத்துக்கொள்கின்றன. ஆனால், அது அடிப்படையில் அப்படிப்பட்டதல்ல. இந்த நடுநிலைக் கொள்கைக்கு நேரு கால இந்தியா தலைமை தாங்கியது. காந்தி காட்டிய இந்திய ஆத்ம மரபின் உந்துதலின் காரணமாக நேருவின் இந்தியா, நேருவே புத்தி பூர்வமாக உணராத அளவுக்கு உலக நாடுகளிடையே ஒரு புதுப் பாதையை முன்வைத்துக்கொண்டிருந்தது. அந்தப் புதுப் பாதையின் அவசியத்தை சுயஸ், அல்ஜீரியப் பிரச்சினைகள் மட்டுமல்ல, ஹங்கேரிய, போலிஷ் பிரச்சினைகள்கூட அழுத்துபவையாகவே இருந்தன.

அவற்றின் காரணமாக மூன்றாம் உலகத்தால் முழுக்க முழுக்க முதலாளித்துவப் பக்கமும் சாரமுடியவில்லை@ முழுக்க முழுக்க சோஸலிஸ பக்கமும் சாரமுடியவில்லை. ஒரு தனிப்பெருவட்டமாகவே அது இயங்கி வருகிறது.

இந்த மூன்றாம் உலக நடுநிலைக் கொள்கைகளுக்குரிய தத்துவம் இன்னும் சர்வதேச ரீதியாக வெளிப்படுத்தப் படவில்லை. ஆனால், இதுவரையுள்ள இரண்டு பெரும் சர்வதேசப் போக்குகளுக்குரிய சித்தாந்தப் பார்வையால் இதை அடைந்து விட முடியாது என்பதை இன்று உலகமெங்கும் காணப்படும் இளம் பரம்பரையின் போராட்டங்கள் நிரூபித்து வருகின்றன. காந்தி கால இந்தியா காட்டிய சில உண்மைகளுக்கும், நேரு கால இந்தியா கடைப்பிடித்த நடுநிலைக் கொள்கைகளுக்கும், இந்திரா கால பங்களாதேஷ் போருக்கும், இன்றைய ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மூன்றாம் உலக நாடுகளின் நடுநிலைக் கொள்கைகளுக்கும், அகில உலகமெங்கும், (குறிப்பாக அமெரிக்காவிலும்) காணப்படும் புதிய பரம்பரையின் புரட்சிகரப் போக்குகளுக்கும் மானசீகமான தொடர்புகள் பல இருக்கின்றன என்பதை உணர்பவர்கள். இன்றைய இளம் பரம்பரையின் “மூன்றாம் பக்கப் பார்வையை” ஓரளவுக்காவது உணர்ந்து கொள்வதோடு எதிர்கால மெய்முதல்வாதமான பூரண சர்வோதயத்தின் முக்கியத்துவத்தையும் இவற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடியவர்களாய் இருப்பர்.

இன்றைய ஈழத்து எழுத்தாளர்களிற் சிலர் அப்படிப்பட்டவர்களாய் உள்ளனர். அப்படிப்பட்ட போக்கை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் பார்க்கும் போது மு. தளையசிங்கத்தின் எழுத்துக்கள் பற்றிய ஆய்வும் சிறிது அவசியமாகிறது.

1956ஐ ஒட்டிய காலத்திலேயே எழுத்துத் துறைக்குள் அவரும் பிரவேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 60லிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் உக்கிரமடையத் தொடங்கிய முற்போக்கு – எதிர்முற்போக்கு வாதப் பிரதிவாதங்களில் அவரும் ஈடுபடத் தொடங்கியபோது ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்குரிய மூன்றாம் பக்கப் பார்வை முன்வைக்கப்படலாயிற்று. அத்தகைய சர்ச்சைகள் தினகரனில் இடம்பெற்றபோது “மூன்றாம் பக்கம்” என்று மகுடமிட்டே அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. கலைச்செல்வியில் வெளியான ‘முற்போக்கு இலக்கியம்’ என்ற கட்டுரையில் முற்போக்கு இயக்கத்தின் குறைகளைச் சாடியபோதுங் கூட, எதிர்முற்போக்குக்கு எதிராகவும் அது இருந்தது. ஆனால், உண்மையான மூன்றாம் பக்கத்தின் தரமான கருத்துக்கள் 63 – 64ல் எழுதப்பட்ட அவரது “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – அவசரக் குறிப்புகள்” என்ற தொடரில்தான் வெளிவரத் தொடங்கின. மரபுவாத நற்போக்கையும், மார்க்சீய முற்போக்கையும் மூன்றாம் கோணத்திலிருந்து திருத்தி இணைத்துப் பூரணப்படுத்துவது என்ற இன்றைய கருத்தின் ஆரம்ப வித்துக்கள் அதில் தான் முதன்முதலாக முன்வைக்கப்பட்டன. அத்துடன் முற்போக்கு இளம் எழுத்தாளர்கள் எஸ்.பொன்த்துரையின் வார்த்தை மாயையில் சிக்கிக் கிடந்த கோலத்தையும் (“குட்டி” யோ.பெனடிக் பாலன்) வாழ்க்கையை மறுக்கும் போக்கில் உடல் நிலையாமை பற்றிய வார்த்தைகளைச் சோஸலிஸ யதார்த்த நடை எனநம்பி ஏமாறிய விதத்தையும் புட்டுக்காட்டிப் புதுப்பரம்பரையினரை உண்மையான முற்போக்குப் பாதையில் போகத்தூண்டிய முதற்கட்டுரையாகவும் அது அமைந்தது. மரபுவாதிகளின் இயலாத் தனத்தை வெளிப்படுத்தியதுபோல் முற்போக்கு விமர்சகர்களின் நழுவல், நிழல் விமர்சனங்களையும் மார்க்சீயப் பார்வையைப் பூரணமாக அவர்கள் அறிந்திருக்காததையும் வெளிப்படுத்திய கட்டுரைத் தொடரும் அதுவாகவே அமைந்தது.

1965-ல் வெளிவந்த இவரது “புதுயுகம் பிறக்கிறது” சிறுகதைத் தொகுதி இதை இன்னும் வேறு கோணங்களில் வளர்த்துக் காட்டியது. யந்திர நாகரிக வளர்ச்சியைக் காட்டும் உலக சமுதாயத்தின் “வீழ்ச்சி” யிலிருந்து விடுதலைபெற மனிதன் எடுக்கும் பல்வேறுவகைப் புரட்சிகளை அது படம் பிடிக்கிறது. உண்மையான விடுதலை ஆத்மீகம் மூலமே கிட்டும் என்பதை வலியுறுத்தியபோதும் அது மேல்தள ஆசார மரபுக்கு எதிரானதாகவே இருக்கிறது என்பதை அவர் அக் கதைத்தொகுதியின் பிற்குறிப்பாக “கதைத்தொகுதி முழுவதும் ஓர் யுவெi மரபு, யுவெi உருவம் யுவெi அமைப்புத்தொனி அடிநாதமாகப் பின்னால் நின்றால் ஆச்சரியப்படத் தேவையில்லை” என்று எழுதியதில் அறியலாம்.

1970ல் இவரது “போர்ப்பறை” வெளிவந்ததோடு ஈழத்து இலக்கியத்தின் மூன்றாம் பக்கம், அடித்தள ஞான மரபுக்குரிய பூரண சர்வோதயப் பார்வையாகப் பரிணமித்தது. அத்தோடு இன்று ஒரு தனிவட்டமாக நிற்கும் மூன்றாம் உலக நாடுகளும் உலகமெங்குமுள்ள இளம் பரம்பரையும் தெளிவுப்படுத்த முயலும் போக்கை இப்பார்வையே ஆற்றுப்படுத்தக் கூடியதாய் நிற்கிறது.

சர்வோதயம் என்றால் என்ன?

சகல மக்களினது எழுச்சியையும் சகல துறைகளினது வளர்ச்சியையுமே குறிக்கிறது.

சகலரினம், சகலதினதும் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் சாதி, சமய, இன, வர்க்க, நிற, மொழி வேறுபாடுகள் தடைகளாக இருக்கின்றன. அதனால் அத்தகைய சகல தடைகளையும் கடந்த ஒரு சமதர்ம சமுதாய எழுச்சியையும் சர்வோதயம் குறிக்கிறது.

இத்தகைய தடைகளையும், குறைபாடுகளையும் கருத்து முதல்வாதம் எனப்படும் மேல்தள சமய ஆசாரமும் முதலாளித்துவப் போக்கும் பூசி மறைத்துக்கொண்டு “அன்பு” என்றும், “சுதந்திரம்” என்றும், “ஜனநாயகம்” என்றும் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்றும் போலிச்சுலோகங்களை எழுப்பி மனித சிந்தனையை அவற்றிலிருந்து வேறுபக்கம் திசை திருப்பி ஏமாற்றப் பார்க்கிறது. அந்தச் சமூகக் குறைபாடுகளையும், பாகுபாடுகளையும் அடிப்படையாக வைத்தே அவை தம்மை வளர்க்க முயல்கின்றன.

இடைத்தள மார்க்சீய சோஸலிஸப் போக்கோ இச் சமூகப் பாகுபாடுகளையும், குறைபாடுகளையும் அவற்றை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் மறைமுகப் பலாத்கார ஆக்கிரமிப்பையும் சுரண்டலையும் நிலமானிய முதலாளித்துவ சமூக – பொருளாதார அமைப்புகளுக்குரிய பண்பாகவே காண்கிறது. அவற்றை நீக்குவதற்கு அந்த அமைப்புகளையே மாற்றி அமைக்கவேண்டும் என்று கருதுகிறது. அதாவது உற்பத்திச் சக்திகள், அவற்றின் உறவு முறைகள், அவற்றின் அடிப்படையில் வளரும் வர்க்க வேறுபாடுகள் ஆகிய பொருளாதார அடிப்படைகளிலேயே இக்குறைபாடுகளும் பாகுபாடுகளும் தங்கியுள்ளன என்றும், அவற்றை அகற்றுவதற்கு அரசியல் போராட்டத்தையே ஒரே ஒரு வழியாக நம்பியும் அதற்கேற்பவே போராட்டங்களையும், புரட்சிகளையும் நடத்தி வருகிறது. இவற்றின்மூலம் ஒவ்வொருவனது தேவைகளுக்கும் ஏற்றவகையில் சகல பொருள் வசதிகளையும் வர்க்கச் சுரண்டலற்று அளிக்கும் பொதுவுடமைச் சமதர்ம அமைப்பு ஏற்படுமென்றும் அந்த அமைப்பில் பொருளாதாரத் தேவைகளிலிருந்தும் அவற்றால் ஏற்படும் கட்டாய உற்பத்தியிலிருந்தும் மனித சமூகம் விடுதலை அடைந்து தன் சுயத்தை அடைகிறதென்றும் அது நம்புகிறது.

இது தான் மார்க்சீயப் பார்வையின் முடிவென்றால், அந்த முடிவும் சர்வோதய முடிவாகத்தானே இருக்கிறது? எவ்வித பாகுபாடுமற்ற சகலரும் விடுதலை எழுச்சியுற்று, சகல துறைகளும் சமமாக வளர்ச்சியடையும் முடிவு சர்வோதயந்தானே?

அப்படித்தான் தெரிந்தாலும் வித்தியாசம் இல்லாமல் இல்லை.

மார்க்சீயவாதப் பொதுவுடமையின் “ஆன்மீக விடுதலை” பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது.

பொதுவுடமைச் சமதர்ம அமைப்பில் பொருளாதாரத் தேவைகளிலிருந்தும் அவற்றால் ஏற்படும் கட்டாய உற்பத்தியிலிருந்தும் விடுதலை பெறும் மனிதன், சமயங்கள் கூறும் புண்ணிய உலகங்களின் சொர்க்க வாழ்க்கையை அனுபவிப்பவனாக மாறுகிறான். ஆனால், புண்ணிய லோக வாழ்க்கை போக வாழ்க்கையாக இருக்கலாமேயொழிய ஞான வாழ்க்கையாக இருக்கமுடியாது என்றும், அதே சமயங்கள் அழுத்தந் திருத்தமாகக் கூறுகின்றன. பொருளாதார வசதிகள் அகவிடுதலையை அல்லது ஆன்மீக முழுமையைத் தரவல்லன எனக் கூறுவது ஒருவித பொருளாதாரச் சமயத்தில் நம்பிக்கை வைக்கும்படி கூறுவதாக இல்லையா?

ஆனால், அந்த நம்பிக்கை நிறைவேறும் என்ற ஆதாரங்கள் தெரிவதாக இல்லை. ஏற்கனவே தேவைகதிகமாகப் பொருளாதார வசதிகளை அனுபவித்தாளும் வர்க்கங்கள் நிலமானிய – முதலாளித்துவ அமைப்புக்குரிய ஆளும் வர்க்கங்கள், அக விடுதலையை, ஆன்மீக முழுமையைக் காட்டுபவையாக இருந்தனவா? சுரண்டலற்ற பொருளாதாரப் பொதுவுடமைச் சொர்க்கம் எந்தக் காலத்தில் வரும்? வந்தாலும் அது முழுமையான ஆன்மீக விடுதலையைத் தரும் என்ற நிச்சயம் என்ன?

நிச்சயமில்லாத ஒன்றில் நம்பிக்கை வைக்கவேண்டுமென்பது சமயங்களின் பக்தி மார்க்கத்தைவிட மோசமான பக்திமார்க்கமல்லவா?

அந்தக் கேள்விகள் எழும்போது தான் அடிப்படை வித்தியாசங்களும் அடிப்படை உண்மைகளும் தெரியவரும்.

கருத்துமுதல்வாத ஆசார மரபும் மார்க்சீய சோஸலிஸப் போக்கும் ஒன்றுக்கொன்று எதிர்ப் போக்குடையவையாகத் தெரியினும், அடிப்படையில் அவை இரண்டுக்குமிடையே முரண்பாடுகள் இல்லை.

ஒன்று, ஆன்மீகத்தை வாயளவில் ஏற்றுக்கொண்டு பொருளை நாடுகிறது.

மற்றது, பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடுகிறது.

இந்த மறைமுக உண்மைகளை வெளிப்படுத்தி, அந்த உண்மைகளின் முழு அடி ஆழத்தைக் காட்டி, அந்த அடிஆழத்தளத்தில் வைத்து அவை இரண்டையும் ஒருங்கே திருத்தி, இணைத்து முழுமைப்படுத்தும் போக்குத்தான் மூன்றாம் போக்காகும். அதுவே சர்வோதய மெய்முதல்வாதப் போக்காகும்.

மேல்தள சமய ஆசார கருத்துமுதல்வாத ஆன்மீகத்துக்கும், இடைத்தள மார்க்சீய பொருள்முதல்வாத ஆன்மீகத்துக்கும் பொதுவான அடித்தளமாக இருப்பது சர்வசமய அடித்தளமான சத்தியமாகும். அந்தச் சத்தியமே இரண்டு போக்குக்குமுரிய மெய்யாகு.

அதனால் சர்வோதயம் என்பது சகலரிடத்திலும் சகல துறைகளிலும் ஏற்படும் எழுச்சியும் வளர்ச்சியும் என்றால், அந்த எழுச்சியும் வளர்ச்சியும் சத்திய வளர்ச்சியாகவும் இருக்கும்.

இந்த மெய்முதல் போக்குக்குரிய சர்வோதய எழுச்சி இராமகிருஷ்ணர், காலத்திலிருந்து வளர்ச்சியடையத் தொடங்கியது. அவர் வழியில் விவேகானந்தர், அரவிந்தர், காந்தி, ரமணர் ஆகியோர் அதை வளர்த்தனர். அதன் பூரண, கோலத்தை ஈழத்தில் வாழ்ந்து மறைந்த அடித்தளச் சத்தியத்தின் பேரவதாரமான ஸ்ரீலஸ்ரீ நந்தகோபாலகிரி நிறுவிய சர்வமத சங்கம் இன்று வெளிக்காட்டியும் வளர்த்தும் வருகிறது.

சர்வோதயம் என்ற பெயறிற் சிரம தானத்தோடும் சமூக சேவைகளோடும் திருப்திப்பட்டுக்கொண்டு திரும்பவும் மேல் தள ஆசார மரபின் பூச்சுக்குப் பலியாகும் வேறுசில இந்திய - இலங்கை முயற்சிகளிலிருந்தும் இது தனியாகவும், ஆழமாகவும் இருப்பதால், ‘பூரண சர்வோதயம்’ என்று இதைக் கூறவேண்டியுள்ளது.

பூரண சர்வோதய எழுச்சி சகலரிடத்திலும்;, சகல துறைகளிலும் சத்திய எழுச்சியை ஏற்படுத்த இருப்பதால், பழைய துறைகளும் அவற்றின் உருவங்களும் புதிய எழுச்சிக்கேற்றவாறு, அந்தப் புதிய எழுச்சியைக் கொள்வனவு செய்யக்கூடிய, மெய்ப் பாத்திரங்களாக, மெய் ஊடகங்களாக, மெய்யுள்களாகவும் மாற்றப்பட வேண்டியுள்ளன.

இலக்கத்தியல் அதற்குரிய பிரகடனமாக மு.த.வின் “மெய்யும் உள்ளும் மெய்” விளங்குகிறது.

சத்திய உருமாற்றங்கள் மேல்தள, அடித்தள, இடைத்தளக் கலப்புகளாலும், கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்ற பார்வைக் கோணங்கள் மெய்முதல்வாதத்தில் பூரணத்துவம் பெறும் இணைவினாலும் ஏற்படவேண்டியுள்ளன. அதனால் பூரண சத்திய எழுச்சிக்கு முன் அதன் வருகைக்குத் தயார்ப்படுத்தும் கலப்புப் போக்கும், அந்தப் போக்குக்குரிய கலப்புக் காலக்கட்டமும், கலப்புச் சிந்தனை நிலையும் ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகும். “கலப்புவலயம்” என்ற மெய்யுள் இதை விளக்கும்.

இந்த உருவ உள்ளடக்க மாற்றங்கள் இன்றைய காலகட்டத்தின் தேவையாலும் அது கோரும் தத்துவ வீச்சாலும் உந்தப்பட்டு உருவாக்கப்படுபவையாக இருப்பதால், அதை உருவாக்குபவர்களும் அதற்குரிய உதாரண புருஷர்களாக வாழ வேண்டியவர்களாயும், புதிய பேரறிவு வாழ்க்கையைத் தம்மளவில் அனுபவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். சர்வமத சங்கத்தைச் சேர்ந்த சகல அங்கத்தவர்களும் அவ்வாறே வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர்.


இதுவரை குறிப்பிட்டவற்றிலிருந்து குறிப்பாக ஓர் உண்மையை அறிந்து கொள்வது அவசியமாகும். அதாவது, இன்றைய உலகப் பிரச்சினைகள் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளாக மட்டும் நின்றுவிடாமல் அடிப்படையில் உயிரினத்தின், குறிப்பாக மனித குலத்தின் பரிணாமப் பிரச்சினைகளாக இருக்கின்றன என்பதுதான் அது.

பொருள் உற்பத்திக்குள்ளும் உடல், உயிர், மனத்தளங்களுக்குள்ளும் அமைந்த வாழ்க்கை அடுத்த தளமான சத்தியப் பேரறிவுக்குள் இறங்க முயல்கிறது. சமயத்தை ஏற்றுக்கொள்ளும் மேல்தள ஆசார மருபும் சமயத்தை மறுக்கும் பொருள்முதல்வாதமும் “ஆன்மீக” அடிப்படையிற் கலக்கும் இன்றைய காலகட்டம் சகல மக்களும் ஞானிகளாகும் பரிணாமப் போக்கும் பரவலாக வந்துவிட்டது என்பதையே குறிக்கின்றது.

அதை நிரூபிக்க உலகெங்கும் இன்று காணப்படும் இளம் பரம்பரையினரின் அதிருப்தியையும் புதிய தேடலுமே போதுமாக இருக்கின்றன. மாணவர்களினதும் இளம் பரம்பரையினரதும் போராட்டங்கள் வெறும் பரம்பரை வித்தியாசத்தால் உருவாகுவதல்ல. புதிய சிந்தனை எழிச்சியின் முன்னணி அலைகளாக இளம் பரம்பரையினர் இருக்கின்றனர் என்பதே முக்கிய காரணமாகும். இலங்கையிலுள்ள மார்க்சீயக் கட்சிகளில் ஒன்றான டு.ளு.ளு.Pயின் இளம் வட்டத்தினர் இலங்கையில் தோன்றியுள்ள தீவிரவாதிகளான புதுப் பரம்பரையினரை விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடைப்பட்ட ஓர் உபவர்க்கமாகக் காணவேண்டிய நிலைக்குள் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதே பழைய தத்துவங்களின், குறிப்பாக மார்க்சீயத்தின், போதாத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. புரட்சிகரமான இப்புதிய உபவர்க்கம் பிரான்சில் மார்க்சீய தத்துவத்தையே தலைகீழாக்கும் வகையில் “பொருளாதாரப் பண்டங்கள்தான் மக்களின் அபின்” என்ற புதிய சுலோகங்களை முன்வைத்து வருகிறது. இலங்கையில் “முதுபெரும் மார்க்சீயக் கட்சிகளையும் முதலாளித்துவக் கட்சிகளையும் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபடமுயல்கிறது. அமெரிக்காவில் “மலர் மக்கள்”, “கிப்பீஸ்” என்ற நாமங்களில் எல்லாப் பலாத்காரங்களையுமே – முதலாளித்துவ – சோஸலிஸ பலாத்காரங்கள் – எதிர்ப்பதாக வளர்ந்து வருகிறது. சீனாவில் மார்க்சீய புதிய கலாசாரப் புரட்சிக்குரிய செங்காவலராகத் திசை திருப்பப்பட்டு வருகிறது. பங்களாதேஷில் சுதந்திரக் கொரில்லாக்களாகப் போரிட்டது. பிலிப்பைன்ஸில் ஆயுதம் ஏந்திய கொரில்லாக்களாக மார்க்கோஸ் ஆட்சியை எதிர்த்து வருகிறது. தமிழ் நாட்டில் அ.தி.மு.க. அனுதாபிகளாக கருணாநிதியின் தமிழ் நாட்டு வெளி ஆசார நவபாஸிஸ ஆட்சியை எதிர்த்து வருகிறது.

பரவலாகப் பேரறிவுத் தளத்துக்கு ஏறும் மனித பரிணாமத்தின் முதல் அலை இவ்வாறு பலவிடங்களிலுமுள்ள கலை, கலாசார, பொருளாதார வரையறுப்புக்கும், தரைத்தோற்றத்துக்கும் ஏற்றவாறு சிதைப்பட்டு, திசை திருப்பப்பட்டும், தடம் புரண்டும், அணிதிரண்டும் உள் நுழைந்து கொண்டிருக்கிறது.

அந்த உள் நுழைவைக் கண்டு அசௌகரியப்படும் மேல் தள ஆசாரப் போக்கு என்ன செய்வதென்று தெரியாது அங்கலாய்க்கிறது. ஆபத்து என உணரும் போது சிறைகளுக்குள் அடைத்துவிட முயல்கிறது.

மார்க்சீயப் பொருள்முதல்வாதப் போக்கு “தீவிர இடது சாரித்தனம்”, “கொள்கைக் குழப்பம்” என்று கேலி செய்து ஒதுக்கிவிடப் பார்க்கிறது. ஆபத்து வரும் போது பச்சையாக அதற்குத் துரோகம் இழைக்கிறது@ முடியுமானால் சுட்டுத்தள்ளிவிடவும் முயல்கிறது.

ஆனால், உள் நுழையும் புதிய அலையோ சுட்டுத்தள்ளுபவர்களையும் சிறையிலடைப்பவர்களையும் தம்கட்டுகளிலிருந்து விடுவிக்கவும் சிறை மீட்கவுமே உள்நுழைகிறது. அதை இனங் காணக்கூடிய தரிசன விளக்கம் இரு சாராரிடமும் இல்லை.

ஈழத்துத் தமிழ் இளம் எழுத்தாளர்கள் சிலர் உள்நுழையும் அந்த அலையை எல்லாச் சமூகங்களுக்குமுரிய, எல்லாக் கலாசாரங்களுக்குமுரிய, எல்லா மக்களுக்குமுரிய, எல்லா உயிரினங்களுக்கும், எல்லாச் சடத் தோற்றங்களுக்குமுரிய அடித்தள மெய்நிலையான சத்திய அலையாக, எழுச்சியுறும் பேர்ஞான விடுதலை அலையாக இனங் கண்டவர்களாக வரவேற்கின்றனர்.

உள்நுழையும் அப்பேர்ஞானப் பேர்அலையைத் தமக்குள் நுழைய விட்டு@ தம் உடல், உயிர், மனத்தளங்களின் சகல மூலை முடுக்குகளுக்குள்ளும் பாயவிட்டுத் தம் செயலையும் சிந்தனையையும் அதன் ஆணைக்குள் அடக்கி, தம்மில் அதுவை ஏற்றி அப்பூரண மெய்அலை எழுப்பும் பூரணர்களாக அவர்கள் தான் வாழ முயல்கின்றனர்.

இவர்கள்தான் மூன்றாம் உலகம் முழு உலகத்துக்கும் வழி காட்டவும், புதுப் பரம்பரையினரையும் பழம் பரம்பரையினரையும் ஆற்றுப்படுத்தவும், அடித்தள ஞானம் இடைத்தள, மேல்தள எல்லைகளுக்குள் நுழையவும், “போர்ப்பறை”யின் அடிநாதம் “போர்க்கோலம்”, “போராட்டம்” ஆகியவற்றுக்குள் கேட்கவும் செய்யக்கூடிய முன்னோடிகளாகவும் இருப்பர்.

“இதுகாலவரை ஒரு சில தனிப்பட்ட ஞானிகள் மட்டும் சத்திய எழுச்சி பெற்ற ஞானிகளாய் அங்குமிங்குமாய் இருந்தனர்@ இனி ஒரு முழுச் சமூகமுமே ஞான சமூகமாக வேண்டும். ஒரு முழு இனமுமே ஞான இனமாக வேண்டும். ஒரு முழு நாடுமே ஞான நாடாக வேண்டும். முழு உலகமுமே ஞான பூமியாக வேண்டும்.
- மு.த. (சுயாட்சி – போர்ப்பறை)

ஒளி படைத்த கண்ணினாய்

கற்பனையில், கனவில், தூக்கத்தில் –
எதிலும் உன்னால் அதேசமயம்
விழித்திருக்க முடிகிறதா?
அப்படியென்றால், நீ சத்தியத்தைத்
தரிசிக்கின்றாய், நீ துறவி,
கற்பனையை, கனவை, தூக்கத்தைத் துறந்த துறவி.
நீயே புதுயுகத்தைச் சிருஷ்டிக்கும் போர்வீரன்!

தூக்கத்திலும் விழித்திருக்கும் உனக்கே,
கற்பனையிலும் நிசத்தைக் காணும் உனக்கே
எல்லைகள் எதிலுமே இல்லை.
அதனால் நீயே
வர்க்கங்களைக் களைபவன்
சாதிகளை அழிப்பவன்
குணங்களை வெல்பவன்
தனியுடமைகளை மாற்றுபவன்
நீயே புதுயுகத்தைச் சிருஷ்டிக்கும் போர்வீரன்!

கற்பனையில் நிசத்தையும்
தூக்கத்தில் விழிப்பையும்
தன்னுள் அதுவையும்
காணும் நீயே
சகலதிலும் சத்தியத்தை எழுப்பும் பெருமனிதன் ஆவாய்.
பொய்யை அழிக்கும் போர்வீரன் நீயே!

நிசத்தில் பொய்யைக் காண்பவன் மனிதன்
நித்திய சத்தியத்தில் பேதங்கள் –
சமயம், அரசியல்,
கலை, இலக்கியம், பொருளாதாரம்,
சமூகம், விஞ்ஞானம்,
தத்துவம், சரித்திரம்
அத்தனை பிரிவுகளும் அவனுக்கே.

அவனுக்கே விழிப்பும் கனவும் தூக்கமும் துயரும்
நிசத்தில் கற்பனையும்
வாழ்க்கையில் போலிக் கலையும்
பொதுவுடமையில் தனியுடமையும்
அவன் காணும் அற்பங்கள்.
அந்த மனிதனை மாற்றும் பேர்மனிதன் நீ,
உன் போர்ப்பறை கேட்கிறது
உன் அணியில் “நாம்” சேர்ந்தேன்
இப்போ என்னில் “நான்” இல்லை.


“நான்” நாகரிகத்தின் அழிவும்
“நாம்” நாகரிகத்தின் எழுச்சியும்

சகல நிலைகளிலும் சகல வேலைகளிலும்
சத்தியத்தில் நிலைத்திருக்கும் சரணாகதி@
நான் கட்டிய கோட்டைகள், நான் வைத்த காவல்கள்,
நான் எடுத்த பாதுகாப்புகள் அத்தனையும் கைவிடப்படல்@

நான் ஒளிக்க இடமில்லை@

கற்பனையில், கனவில், நித்திரையில் – அத்தனையிலும்
நித்திய சத்திய உணர்வு உள்நுழைகிறது.
அத்தனையும் நான் வளர்த்த தளங்கள்.
உடலில், உயிரில், மனதில் – அத்தனையிலும்
உள்ளம் ஊடுருவுகிறது. அத்தனையும் நான் வாழும்
குணக் கோட்டைகள்@

அரசியல், சமயம், விஞ்ஞானம், இலக்கியம்
தத்துவம், சரித்திரம், கலை, காட்சி, பொருளாதாரம்
சமூகம் - நான் நிறுவிய அத்தனை வரம்புகளையும்
சத்தியப் பிரவாகம் தகர்க்கிறது@
சகலதிலும் நான் சரணாகதி.

நான் வளர்த்த கலாசாரம் கரைகிறது,
நான் வளர்த்த நாகரிகம் அழிகிறது,
நான் வளர்த்த தத்துவங்கள் சிதைகின்றன@
நான் வளர்த்த சகலதுமே நானை வளர்த்தவையே –
அதனால் நாளை வளர்த்தவை சிதைய

நானும் அழிகின் (றேன்@) றது@
பால் இச்சை, பண ஆசை, ஆளுமைப் போட்டி
அத்தனை சிற்றின்பப் படுக்கைகளும் அதனோடு
அழிகின்றன.

என்னைக் கைப்பற்றும் சத்தியம்
என்னைத் தானாக்கிறது.
என் கலாசாரத்தின் அழிவில் அதன் கலாசாரம்
எழுகிறது@ என் நாகரிகத்தின் அழிவில் அதன்
நாகரிகம் எழுகிறது@ என் தத்துவத்தின் சிதைவில்
அதன் தக்துவம் எழுகிறது@
‘நான்’ அழிகின்றன@ நாம் எழுகின்றேன்.

அங்கு கற்பனையில்லை கனவில்லை@
நித்திரையில்லை, விழிப்பில்லை – அத்தனையும் பேர்விழிப்பே@

அங்கு உடலில்லை, உயிரில்லை, மனமில்லை
அத்தனையும் சத்திய உருவங்களே@

அங்கு குணமில்லை@ சாதியில்லை@ வர்க்கமில்லை
சகலதும் எல்லையற்ற சத்திய ஓட்டமே@
அங்கு அரசியல் இல்லை, இலக்கியம் இல்லை, சமயம் இல்லை

சரித்திரமில்லை, தத்துவமில்லை, விஞ்ஞானமில்லை –
அத்தனையும் சத்திய மெய்யுள்களே@
அங்கு பிறப்பில்லை, இறப்பில்லை, துயரில்லை, தவிப்பில்லை
பேரறிவும் பேரானந்தமுமான நித்திய இருப்பே
என்றும் இருக்கிறது@

பரவலாக இதுவரை மனித சரித்திரத்தில்
எப்போதும் நடக்காத புரட்சி இது. உண்மையில்
இது புரட்சியல்ல. இதுகாலவரை சகலதிலும்
நான் நடத்திய போர்களால் வந்த புரட்சியல்ல இது.

போராட்டமற்று நான் நடத்திய சரணாகதியால்
வரும் பேர் எழுச்சி இது
உடல் உயிர் மனத்தளங்களில் அறியாமைக்கு
எதிராக ‘நான்’ அறிவு நடத்தியவையே
போராட்டங்களும் புரட்சிகளுமாகும், அவை
ஒன்றுக்கு எதிராக மற்றது நடத்தும் போரும்
புரட்சியுமாகும்.

இது, ஒன்று தன்னை மற்றதிடம் தானாகவே
அர்ப்பணித்து தன்னை அதுவாக்குவது.
‘நான்’ அறிவு. ‘நாம் இருக்கின்றேன்’
பேரறிவிடம் தானாகவே சரணாகதியடைந்து
தன்னைப் பலியிட்டு தான் அதுவாக எழுச்சியுறுவது
அந்த எழுச்சி சகலதிலுமுள்ள சத்தியத்தின்
எழுச்சி, பூரண சர்வோதயப் பேர்மனிதப்
பிறப்பு.


வந்துவிட்டது சத்திய யுகம்
விழித்தெழுங்கள்

சத்தியயுக எழுச்சிக்காய்த் தயார்ப்படுங்கள்
பேர்மனிதப் பாதையிலே புறப்படுங்கள்

கணக்கெடுங்கள் –
நீங்கள் செய்பவை சரியா?
பேசுபவை உண்மையா?
வாழுவது வாழ்க்கையா?
கணக்கெடுங்கள்!

வந்துவிட்டது சத்தியயுகம்,
விழித்தெழுங்கள்!

விழித்தெழுங்கள்! கணக்கெடுங்கள்!

கிணற்றடியில்
தாழ்த்தப்பட்டவர் தவமிருப்பது சரியா?
கோயில்களில்,
திருக்குலத்தாரைத் தள்ளிவைத்தல் முறையா?
தெருவடியில்,
மனித இறைவன் பிச்சையெடுக்க
கோயில்களில் கல்லுக்கடவுளுக்கு
கற்பூரம் சாம்பிராணி, பிரசாதம் படையல்
பூசை திருவிழா, மின்சாரம் வாத்தியம்
தேரோட்டம் சப்பறம், ஆலவட்டம் அலங்காரம் –
ஐயோ இவை அடுக்குமா?

கணக்கெடுங்கள்!
வந்துவிட்டது சத்தியயுகம்,
விழித்தெழுங்கள், கணக்கெடுங்கள்!
காலடியில்
காணி, கடல் காத்திருக்க
போதாப்படிப்போடு
உத்தியோகத்துக்காய்ப் பார்த்திருப்பது புத்தியா?
தேசிய உணர்வின்றி
பொதுவுடமைப் போக்கின்றி
சிங்களவரைச் சுரண்டிக்கொண்டு தமிழுரிமை கேட்பது தர்மமா?

இரும்புப் பெட்டியில் பதுக்கிவைப்பது நியாயமா?
வீட்டை மறைக்க வேலிகட்டுவது தேவையா?
சீதனத்துக்காய்ச் சாவதுதான் உழைப்பா?
காசுத்தாளுக்குத் தாலிகட்டுவதா கல்யாணம்?
கணக்கெடுங்கள்!
கணக்கெடுங்கள் தகர்த்திடுங்கள்
தகர்த்திடுங்கள் தயார்ப்படுங்கள்!

தனியுடமை தனிப்போக்கு
தனிமதங்கள் ஸ்தாபனங்கள்
தனிச்சிங்களம் தனித்தமிழ்
தாழ்த்தப்பட்டோர் உயர்குலத்தோர்
முதலாளி தொழிலாளி
சிங்களவர் தமிழர்கள் –
தகர்த்திடுங்கள் இந்தத் தடைகளை
தகர்த்திடுங்கள், புறப்படுங்கள்!
பொதுவுடமை, பொதுச்சொத்து
முழுச்சமயம் முழுஞானம்
புறப்படுங்கள் இப்புதுவழியில்!

சத்தியயுக எழுச்சிக்காய் தயார்ப்படுங்கள்,
பேர்மனிதப் பாதையிலே புறப்படுங்கள்!


அறிவும் அனுபவமும் இதுவரை காட்டாத புதுப் பிராந்தியங்களுக்குள் நாம் புகப்போகிறோம். சந்திர மண்டலத்தில் மனிதன் வெளிப்படையாகக் கால்வைக்கும் அதே காலத்தில், ஒவ்வொருவனும் தனக்குள்ளே அக்கினி மண்டலத்தையும் துளைத்துச் சென்று சிரசிலுள்ள சந்திர மண்டல சகஸ்ராரத்திலும் அடிவைக்கும் காலம் ஆரம்பிக்கிறது.
(போர்ப்பாறை – புதியவார்ப்புகள்)

அண்டை வீடுகள்
அடுத்த அறையில் இன்னும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இரவு பன்னிரண்டு மணிகூட ஆகியிருக்காது போல் இருந்தது.

விநாயகதாஸ் சிந்தித்தவாறே படுக்கையில் கிடந்தான்.

அடுத்த அறையில் காளிதாசன் இன்னும் நித்திரை கொள்ளாமல் வாசித்துக் கொண்டோ அல்லது எழுதிக் கொண்டோ இருக்கவேண்டும். அவனிடம் போய் அந்தக்கணமே எல்லாவற்றையும் சொல்லலாமா என்று யோசித்தான் விநாயகதாஸ். ஆனால், அடுத்த கணம் அது பைத்தியகாரத்தனமாக்கப்பட்டது. அத்தனை பிரமாதப்படுத்த அது அந்தளவு பெரிய அனுபவமல்ல. சங்கத்திற் சேர்ந்திருந்த அவனது சகாக்கள் சிலரினது அனுபவங்களுக:கு முன்னால் அது மிக மிக அற்பமான விடயம். ஏதோ ஓர் அளவில் காளிதாசனும் விநாயகதாஸ{ம் கூட அந்த வகையான அனுபவங்களை ஏற்கனவே அறிந்திருந்தனர். இருந்ததாலும் விநாயகதாஸைப் பொறுத்தவரையில் அன்றுதான் ஆரம்ப முதல் முடிவுவரை புத்திபூர்வமாகச் சுயவுணர்வுடன் நடைபெற்ற அத்தகைய ஓர் அனுபவம் கிட்டியிருந்தது. அது மிக அற்பமான விடயமாகவிருந்தாலுங்கூட அந்த வகையிற் பார்க்கும்போது அது அவனைப் பொறுத்தவரையில் சந்திரனில் முதன்முதலாகக் கால் வைத்த ஆம்ஸ்ட்ரோங்கின் அனுபவத்தைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பட்டது.

சகல மக்களுக்கும் பழக்கமான சடவுலகத்துக்கும் அதற்குரிய புலனுணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட அனுபவத் தளங்களும் வாழ்க்கை நிலைகளும் உண்மையாகவே இருக்கின்றனதானா?

இருக்கின்றன என்றுதான் காலங்காலமாய்ச் சமயங்கள் கூறி வருகின்றன. அனுபூதிமான்கள் என்பவர்கள் அந்தத் தளங்களுக்கும் வாழ்க்கை நிலைகளுக்குமுரிய விஞ்ஞானிகள் தான்.

விநாயகதாஸ் அவற்றைக் கருத்தளவில் அதுவரை ஏற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால், அனுபவரீதியில் அன்று போல் எதையும் அத்தனை அழுத்தத்தோடும் சுயவுணர்வோடும் கண்டதில்லை.

ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்பே ஆத்மீகத்தேட்டத்தை விரும்பி, அதற்குரிய குருவையும் சந்தித்த காலத்தில் அந்தப் பிரச்சினைகளும் அவனது சிந்தனைக்குரிய விருந்துகளாக முன்வைக்கப்பட்டதுண்டு. ஆனால், அப்போது அவற்றை அவன் அந்தளவு பெரிதாக எடுத்துக்கொண்ட தில்லை. ஆணித்தரமாக நம்பியதுமில்லை. அதனால் அவற்றில் அவன் அதிகம் கவனஞ் செலுத்தியதும் இல்லை.

ஆத்மீக முக்தி என்பதுதான் அவனுக்குரிய முக்கிய விடயமாகப்பட்டது அப்போது. ஆனால், அவனுக்குத்தியானப் பயிற்சி அளித்த அவனது குரு ஆத்மீக விளக்கங்களுடன் வேறுபல விபரங்களையும் இடைத்தளங்களின் எண்ணற்ற கோலங்களையும் பட்டும் படாமலும் பலவகைகளிற் காட்டவே முயன்றார்.

ஆத்மநிலை என்ற இலட்சிய நிலையையும் தியானத்தின் மூலம் அந்த நிலையை அடையலாம் என்ற கொள்கையையும், அதற்காகக் குரு என்ற ஒரு வழிகாட்டியையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்த விநாயகதாஸ{க்கு அவையல்லாத அடுத்த விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது அப்போது. அவை வெறும் கற்பனைகளாகவே அவனுக்குப் பட்டன. உண்மையாகவே அவை இருந்தன என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைகளிற்கூட அவை அவனுக்கு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரிந்ததில்லை. மாறாக ஆபத்தான ஏமாற்றங்களுக்குரிய மருட்சித் தளங்களாகவே அவற்றை எடுத்துக்கொண்டான். அதனால் அவனது அக்கறையை அந்த விடயங்கள் அதிகம் ஈர்த்ததில்லை.

குருவை அவன் சந்தித்த ஆரம்பகாலத்தில் அவன் வாசிப்பதற்காக அவர் கொடுத்த நூல்களில் சூக்கும் உலகங்களைப் பற்றிய விளக்கங்களைக் கொண்ட நூல்களும் இருந்தன. குறிப்பாக “லொப்சாங்றம்பா” எழுதிய பல நூல்கள் முக்கியமானவை.

ஆத்மீக அனுபவத்தை உடனடியாகப் பெற்றுவிடவேண்டுமென்று துடித்த அன்றைய ஆரம்பகாலத்து அரை வேக்காட்டு அவதியில் அந்தவகை நூல்களையெல்லாம் அவன் மனம் விரும்பிப் படிக்க முயன்றதில்லை. அதேபோல் குருவும் “அன்னையும்” சூக்கும் ஆன்மீக உலக அனுபவங்களைப் பற்றிக் கதைத்த வேளைகளிலெல்லாம் அவற்றைப் பொய்ப் புழுகுகளைக் கேட்டிருப்பது போல் வேடிக்கையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு “புதிய விஞ்ஞானக் கற்பனைகள்” அல்லது “சமயக் கற்பனைகள்” என்ற தலைப்புக்களில் தனது நாட்குறிப்பிற் குறித்து வைக்கவும் அவன் முயன்றதுண்டு.

அவற்றில் பரிசோதனை செய்து பார்க்க அவன் முயன்ற தில்லை. அந்த முயற்சி பின்புதான் வந்தது.

மேற்கத்தைய மனோவியல் கொள்கைகளிலும், சமூக பொருளாதாரச் சித்தாந்தங்களிலும் அவனுக்கிருந்த பற்றுக்கள் மெல்ல மெல்ல இற்று விழத் தொடங்கிய பின்புதான் அப்புதுவகைப் பரிசோதனைகளின் அவசியத்தையும் அவன் உணரவந்தான்.

ஆத்மீகத் தேட்டம் என்பது ஆத்மாவோடும் சடவுலக வாழ்க்கையோடும் மட்டும் தொடர்பு கொண்டதாக இருக்காமல், அவற்றுக்கு இடைப்பட்ட சகல மனநிலைகளுக்குள்ளும் ஊடுருவிப்பரவும் ஓர் பூரணத் தேட்டம் என்பதை அதற்குப் பின்புதர் அவனால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன் இன்றைய மனித பரிணாமக்கட்டம் அத்தகைய விடயங்களைப் பற்றிய அறிவையும் அவசியமாக்குகிறது என்றும், அவனது குரு அதையும் அழுத்த முயன்ற அவதாரமே தான் என்றும் மெல்ல மெல்லத்தான் அவனுக்குத்தெரிய வந்தது.

ஆனால், அந்தப் பக்குவம் வருவதற்குமுன் ஏறக்குறைய ஏழு வருடங்களாகி விட்டன. ஆத்மீக முதிர்ச்சிக்கு ஏறக்குறைய இடையறாத பன்னிரண்டு வருட காலப் பயிற்சி அவசியமென்றால், அதில் பாதிக்காலம் முடிந்த பின்புதான் அவனுக்கு அந்த இடைத்தள அனுபவங்களையும் அதே ஆத்மீகத் தேட்டத்துக்குரிய வகையில் பயன்படுத்தும் பக்குவம் கைவரத் தொடங்கியது. அதற்குள் அவனது குருவும் சடவுலகக் கட்புலனுக்குத்தெரியாத தளத்துக்குச் சென்று விட்டார்.

அதுவரை கட்புலனுக்குத் தெரியாத தளங்களைப் பற்றி விநாயதாஸ_க்கிருந்த அனுபவங்கள் “அசாதாரணக் கனவுகள்” “தியான நித்திரைக் காட்சிகள்” “சிறு சூக்குமப் போக்குவரத்துக்கள்” என்ற வகையிலேயே இருந்தன. அவையெல்லாம் அடுத்த தளங்களுக்குரிய அனுபவங்கள் என்ற புத்தி பூர்வமான உணர்வு அவற்றை அனுபவிக்கும் போதே அதிகம் இருந்ததில்லை. எப்போதாவது இடைக்கிடைவரும் மெல்லிய சுயவுணர்வுக் குறுக்கீடுகள் அதிக நேரம் நிலைத்திருக்காது, அமிழ்ந்துவிடும். விழித்துக் கொண்டபின்பு தான் அவற்றின் நினைவுகள் திரும்பவும் புத்திபூர்வமாக விரியும்.

அவைதான் அன்றுவரை அந்தத் தளங்களைப்பற்றி அவனுக்கிருந்த அனுபவங்கள்.

ஆனால் அதே சமயம் அவற்றைப் பற்றிய அறிவு விளக்கங்களை முன்பைவிட இப்போ அவன் அதிக ஆவலோடு கேட்டும் வாசித்தும் தெரிந்து வைத்திருந்தான். தெரிந்தவற்றைத் தனது வசதிக்காகவும் எதிர்கால ஆராய்ச்சிக்காகவும் வகைப்படுத்தியும் வைத்திருந்தான்.

முழுப் பிரபஞ்சத்திலும் காணப்படும் எண்ணற்ற உலகங்களை நான்கு அல்லது ஐந்து வகையாக வசதிக்காகப் பிரிக்கலாம் என்று விநாயகதாஸ் நம்பினான்.

1. மனித கண்ணுக்குப் புலப்படக்கூடிய சடவுலகங்கள், இவை கோளங்களாக அமைந்தவை.

2. தட்டையான சூக்கும உலகங்கள், எண்ணற்ற தரவித்தியாசங்களைக் கொண்ட இவை மனித கட்புலனுக்குத் தெரியாதவை. இவை பலவகைப்பட்ட மன வளர்ச்சியைக்காட்டும் சூக்கும உயிரினங்கள் வாழும் தளங்களாக இருக்கின்றன. சூக்கும உயிர்களால் சூக்கும உலகங்களையும் சடவுலகங்களையும் பார்க்க முடியும். ஆன்மீக உலகங்களைப் பார்க்க முடியாது.

3. ஆன்மீக உலகங்கள், முக்தி அல்லது விடுதலைக்குரிய ஆனந்தத்தையும் ஞானத்தையும் அனுபவிக்கும் நித்தியவுலகங்கள்@ என்றும் அழியாதவை, ஆன்மீகவுலகங்களில் இருப்போருக்கு சடவுலகங்களையும் பார்க்கும் சக்தி உண்டு.

4. சட - சூக்கும – ஆன்மீக உலகங்களற்ற வெறும் விண்வெளி.

5. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி எல்லாவற்றுக்கும் அப்பால் பட்டதாகவும் எல்லாமே தானாகவும் இருக்கும் நாமரூபங்களைக் கடந்த பேரானந்தப் பரம் பொருளான எல்லையற்ற ஏகப்பேரறிவு. இப்பேரறிவு ஆன்மீக உலகங்களில் அங்குள்ளோரின் வழிபாட்டிற்குரிய சில நித்திய திருஉருவங்களாகவும் காட்சியளிக்கும். அதேபோல் சடவுலகமான நமது பூமியில் அவதாரங்களாகவும் உருவெடுக்கும். எல்லாவேளைகளிலும் எல்லா வடிவங்களிலும் “அது” தன்னை கட்டுப்படுத்தாத எல்லையற்ற ஏகப்பேரறிவாகவேயிருக்கும்.

6. இந்தப் பல்வேறு வகைப்பட்ட நிலைகளெல்லாம் பூமியில் வாழும் மனிதனுக்கு அடையக்கூடியவையாகவே இருக்கின்றன. அவனது சடஉடலுக்கு உள்ளும் புறமுமாக அடுத்த சூக்கும – ஆன்மீக உருவங்களும் பேரறிவு நிலையும் காணப்படுகின்றன. மனதை அவற்றின் திசையில் விரித்து வளர்த்து ஆன்மீக பேரறிவு நிலையை அனுபவிப்பதே அவனது விடுதலையும் நித்தியஞான ஆனந்த நிலையாகவும் இருக்கும்.

7. பூமியில் நடைபெறும் மனித வாழ்க்கைக்குரிய அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலை, இலக்கியம் போன்ற சகல துறைகளும் இந்தத் திசைகளில் முற்றாகத் திருத்தி வளர்க்கப்படவேண்டும். மனித பரிணாமம் இந்தத் திசைகளையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

அயல் உலக விடயங்களைப்பற்றி விநாயகதாஸ் சேகரித்து வைத்திருந்த கருத்துக்களில் சுருக்கமானவைகள் இவை. இவையேதான், படுக்கையில் கிடந்தவாறே அன்றைய அனுபவத்தை மீட்டிப் பார்க்க முயன்று கொண்டிருந்த விநாயக தாஸின் சிந்தனைப் படுக்கையாகவும் இருந்தன.

இவற்றின் பின்னணியில்தான் அன்றைய அவனது அனுபவத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.


2
வெளி விருத்தையில் வாசலுக்கருகில் போடப்பட்டிருந்த நான்கு சாய்வு நாற்காலிகளில் வடக்கு மூலைப்பக்கமாக இருந்த ஒன்றில் விநாயகதாஸ் உட்கார்ந்திருந்தான்.

மங்கலான இருள். ஆனால், அதே சமயம் பார்வைக்குப் பொருட்களும் உருவங்களும் தெரியாமல் இல்லை.

உட்கார்ந்திருந்த அந்த வேளையில்தான் திடீரென்று அந்த உணர்வு விநாயதாஸ{க்கு ஏற்பட்டது. தான் சூக்கும – ஆன்மீக உடலில் உட்கார்ந்திருந்தான் என்ற புத்திபூர்வமான சுயவுணர்வு.

அந்த உணர்வு வந்தவுடன் ஒருவித தடுமாற்றமும் அவசரமும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கின. உடலுக்குச் சடுதியாகத் திரும்பிவிடலாம் என்ற பயத்தோடு புதியவுலகில் நிற்கிறோம் என்ற மெல்லிய திகிலும் கலந்திருந்தன.

விண்வெளிக்கப்பலில் இருந்து வெளிப்பட்டு
விண்ணில் மிதப்பது, சந்திரக் கலத்தில் இருந்து வெளிப்பட்டு சந்திரத்தரையில் நடப்பது
போன்ற நிலைகளில் விண்வெளி வீரர்களுக்கு அதே உணர்வு இருக்கலாம்.

சந்திரக் கலத்தை சடவுடலாகவும் அதில் இருந்து இறங்கிச் சந்திரத்தரையில் நடக்கும்
வீரனைச் சூக்கும உடலாகவும் நினைத்துப் பார்த்தால், இரு உடல்களுக்கும் உள்ள
தொடர்பையும் உணர்வையும் உணரலாம். ஆபத்து வரும் வேளைகளில் உடனே
சந்திரகலத்துக்குத் திருப்பிவிடத் தயாராகவிருக்கும் விண்வெளி வீரனைப் போலே சூக்கும
உடலும் சதாநேரமும் சடவுலகுக்குத் திரும்பிவிடும் தயார்நிலையில் இருக்கும்.
சடஉடலுடன் அது ஓர் வெள்ளிமயமான கொடியால் இணைக்கப்பட்டிருக்கும். அது
விரும்பியமாதிரி நீண்டு கொடுக்கும். அது அறும்போதே மரணம் ஏற்படுகிறது.


விநாயகதாஸ_க்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனுக்கு இருந்த அப்போதைய அவதியில் அவனது உருவம் எப்படி இருந்தது. என்ன மாதிரி அவன் உடுத்திருந்தான் என்பவற்றை அவனால் அவதானிக்க முடியவில்லை.

அடுத்தமுறை அவற்றை நிச்சமாக அவதானிக்க வேண்டும் என்று அதை மீட்டிப் பார்க்கும்போது
நிச்சயப்படுத்திக் கொண்டான் விநாயகதாஸ். ஆனால், அதே தீர்மானத்தை ஏற்கனவே பல
தடவைகள் எடுத்திருந்தான் என்பதும் அவனுக்கு நினைவில் இருந்தது. அந்தளவு சுயவுணர்வு
பெரும்பாலும் சடவுலக வாழ்க்கையில்கூட இருப்பதில்லை. ஆடை மாற்றும்போதும், கண்ணாடிக்கு
முன்னால்நிற்கும் போதும் மனிதன் தன் தோற்றத்தையும் ஆடையையும் நினைக்கிற அளவுக்கு
மற்ற நேரங்களில் நினைப்பதில்லை. அவை பற்றிய உணர்வு அதிகம் இருப்பதும் இல்லை.
அதேபோல் சூக்கும நிலையிலும் வழமையான “நான்” என்ற உணர்வு இருக்குமளவுக்கு அதன்
அம்சங்களை அறிந்த சுயவுணர்வு இருப்பதில்லை. அந்தச் சுயவுணர்வின் வளர்ச்சியே பக்குவ
வளர்ச்சியாக இருக்கும்.

சிறிது நேர தடுமாற்றத்துக்குப் பின் வாசலால் இறங்கி வெளியே செல்லமுயன்றான் விநாயகதாஸ். அந்த வேளையில் அவனுக்குப் பழக்கமான காளிதாசனின் குரலை ஒத்த ஓர் குரல் எங்கிருந்து வந்ததென்று தெரியாமல் எங்கும் மெல்லப் பரவி வந்து கேட்டது.

“வெளிக்கம் தெரிகிறதா? வெளிச்சம் தெரிகிறதா?”
ஆனால், யாரையும் காணவில்லை. வெளிச்சம் எதுவும் வந்ததாகவும் தெரியவில்லை. அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றபோது திடீரென்று ஒரு யோசனை ஏற்பட்டது விநாயதாஸ_க்கு.

“காளிதாசனின் அறைக்குப் போய் பார்த்தால் என்ன?”

அடுத்த கணம் அந்த அறையை நோக்கி அவன் நகரத் தொடங்கினான். மிதப்பதற்கும் நடப்பதற்கும் இடைப்பட்ட இலகு இயக்கம்.

காளிதாசன் நித்திரையாகி இருக்கலாம். அல்லது விழிப்பாக இருக்கலாம். அதை
விநாயகதாஸால் அவதானிக்க முடிகிறதா என்று சோதிக்கலாம். நித்திரை ஆகி அவனும்
சூக்கும – ஆன்மீக உடலில் உலாவிக்கொண்டிருந்தால் சில விடயங்களைக் கதைக்கவிட்டு
விழித்தெழுந்து அவை ஞாபகம் இருக்கிறதா என்று அவனைக் கேட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே
அத்தகைய சோதனைகளை விநாயகதாஸ் செய்து பார்த்திருக்கிறான். ஆனால், பூரண
ஒருமைப்பாடு இன்னும் கண்டதில்லை.

காளிதாசனின் அறையை நோக்கி நகர்ந்த வேளையில் வேறு ஓர் பக்கம் அவன் இழுபட்டதை விநாயகதாஸால் உணர முடிந்தது. சுயமான விருப்பத்துக்கு எதிராகவரும் ஈர்ப்பு, குருவாகிய “அது”வின் அழைப்பாக இருக்கலாம் என்று ஏற்கனவே விநாயகதாஸ் தெரிந்திருந்தபடியால் அந்த ஈர்ப்புக்கு அவன் தன்னை விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்ததுடன் “அது”வையே இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி தியானிக்கவும் தொடங்கினான்.

அடுத்த கணம் மிக வேகமாக எங்கோ ஒரு திசையில் பறந்து செல்வதை அவனால் உணர முடிந்தது.

சூக்கும – ஆன்மீக உலகங்களில் உடல் வலுவால் இயக்கம் ஏற்படாமல் மனோவலுவிலேயே ஏற்படுகின்றது. விரும்பிய இடத்திற்கு மனோவலுமூலம் மிக வேகமாகச் செல்லலாம்.

போரும் வழியில் பழைய குரலைவிட தொனி கூடிய ஒரு புதுக்குரலில் பாடல் ஒன்று கேட்டது. அந்தப் பாடல் மூலம் பலவித அறிவுரைகள் அவனுக்கு வழங்கப்பட்டன.

அந்த அறிவுரைகளைக் கேட்டு முடிந்தபோது “அது” வைத் தரிசித்த திருப்தியும் விநாயகதாஸிடம் குடிகொள்ளத் தொடங்கியது. திருப்தியோடு அவன் திரும்பிவிட விரும்பினான். ஆனால் அதேசமயம் இன்னும் சடவுடலுக்குரிய விழிப்பு நிலைக்கு வருவதற்கு அவகாசம் இருந்தது என்ற உணர்வு ஏற்பட்டதால் தொடர்ந்து “அது”வை இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தித் துரிதமாக நடந்தான்.

இறுதியாக “அது” திருவுருவோடு இருந்த ஓர் இடத்தை அண்மித்துவிட்ட உணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது. அப்படியே அவ்வேளையில் கட்டிடங்கள், அறைகள் எல்லாம் காட்சியாய் இருக்க ஓர் இடத்தில் “அது” முன்பு அவன் சடவுலகில் சந்தித்த கோலத்தில் தரிசனம் தந்தது.

விநாயகதாஸ் ஓடிப்போய் “அது”வின் பதாங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு எழுந்தான். “அது” வின் ஆணையும் கிடைத்தது.

அதை ஏற்றுக்கொண்ட விநாயகதாஸ் திருப்தியோடு அங்கிருந்து அகலத் தொடங்கினான். அடுத்த கணம் சடவுலக வீட்டில் உள்ள தனது படுக்கையில் கிடந்தவாறே திடீரென்று விழித்துக்கொண்டதை அவனால் உணர முடிந்தது.

வேகமாகத் திரும்பி வந்த உடலுக்குள் நுழையும் அதிர்ச்சி சடுதியான விழிப்பை ஏற்படுத்தும்.

அறைச்சுவரின் கூரைப்பக்கத்து நீக்கில் வழியாக அடுத்த அறைக்கு இருந்து வெளிச்சம் வந்ததை அவதானித்தபோது அங்கு காளிதாசன் இன்னும் தூங்காமல் இருந்தான் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது.


3
படுக்கையை விட்டெழுந்து தண்ணீர் அருந்துவதற்காகக் குசினுக்குச் சென்றிருந்தான் விநாயகதாஸ். காளிதாசனின் அறையின் வாசல் திரைக்குள்ளால் மெல்லியதாக ஒளிக்கீற்றுகள் வந்துகொண்டிருந்தன.

திரையை நீக்கி உள்ளே நோக்கியபோது காளிதாசன் வாசித்துக்கொண்டிருந்தான். மணி இரவு பதினென்றரை.

பேசாமல் தலையசைத்துவிட்டுச் சென்று தண்ணீர் குடித்து விட்டு, பின் படுக்கைக்குத் திரும்பியபோது பல பிரச்சினைகளுக்கு இன்னும் தெளிவு காண வேண்டியிருந்தது என்பதை விநாயகதாஸால் உணர முடிந்தது.

“வெளிச்சம் தெரிகிறதா?” என்ற குரல் காளிதாசனின் அறைக்குள் இருந்து வந்த வெளிச்சத்தைக் குறித்ததா? அதனால்தானா அவனது குரலை ஒத்த குரலாகக் கேட்டது? அது யாருடைய குரல்? “அது” வை நோக்கி அவன் விரைந்துபோது வந்த பாடலின் குரல் யாருடையது? எல்லாமே “அது”வின் வெளிக்காட்டல்கள் தானா? “அது” வை அவன் தரிசித்த இடம் எது? “அது” எந்த ஆன்மீக உலகம்?

எந்தளவுக்கு அவற்றுக்குள் அவனது கற்பனைகள் புகுந்திருந்தன? எந்தளவுக்கு அவை அந்த அனுபவத்தின் முழுமைக்கு எதிரான தடைகளாக இருந்தன?

எதிர்கால ஆராய்ச்சிகளுக்குரிய திசைகளைக் குறித்துக் கொள்ளும் ஒரு விஞ்ஞானியைப்போல் அவற்றை மனதில் பதித்தவாறு, அன்றைய அனுபவத்தினால் எழுந்த சந்தோசத்தின் அலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிம்மதியாக நித்திரை கொள்ள முயன்றான் விநாயகதாஸ்.


நூலாசிரியர் பற்றி…
“இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான சாயல்களை இவரைப்போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு உள்ளனவா? இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் பாரதி மற்றொவர் புதுமைப்பித்தன். பாரதி தாழ்ந்து போனமைக்கு துக்கித்து மேலான ஒன்றை எழுப்ப முயன்றார். புதுமைப்பித்தன் தாழ்ந்து போனதை வெட்ட வெளிச்சமாக்கினார். அந்த வரிசையில் மூன்றாவதாக வருபவர் தளையசிங்கம்.

பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால் பாரதியின் சிந்தனையை, இவர் தம் காலத்திற்கு கொண்டு வந்து, இடைக்கால சரித்திரத்திற்கும் எதிர்வினை தந்து, இடைவெளிகளை அடைந்து முழுமைப்படுத்த முயன்றார் என்று சொல்லலாம்.
- சுந்தர ராமசாமி