கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  மத்து  
 

ஏ.ஜே. கனகரத்னா

 

மத்து

ஏ.ஜே. கனகரத்னா

மித்ரா வெளியீடு

மித்ரா : 42 1 டிசம்பர் 2000
விலை: 45.00 பக்கங்கள்: 152


1956 ஆம் ஆண்டில்
இலங்கையில் நிறைவேற்றப்பட்ட
‘தனிச் சிங்களம்’
சட்டத்திற்கு இந்நூல்

படைப்பு

THE AUTHORS INTRODUCED ARE:
J.K. Galbraith
Rachel Carson
Ian Suttie
Richard Foster Jones
Milovan Dijlas
H.R.G. Greaves
Philip Rahv
Brian Inglis
R.D. MacCann
Joseph Campbell
A.M. Hocart

என்னுரை
‘இளம்பிறை’ என்னும் மாசிகையை வெளியிடத் தொடங்கியதும், அதிலே பிரசுரிப்பதற்காகக் கட்டுரைகள் சிலவற்றை எழுதித் தருமாறு பணித்தார் அத்ன நிர்வாக ஆசிரியரும் என் நண்பருமான ஜனாப் எம்.ஏ. ரஹ்மான். அவருடைய வேண்டுகோளில் ஓர் எல்லை வகுப்பும் இருந்தது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், ஏதேனும் ஒரு வகையிற் சிறந்து விளங்கும் ஒவ்வொரு துறையிலும், ஏதேனும் ஒரு வகையிற் சிறந்து விளங்கும் ஒவ்வொரு நூலினைத் தமிழ்ச் சுவைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் என்னுடைய கட்டுரைகள் அமைதல் பெரிதும் விரும்பத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார். அவருடைய விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் முகமான கட்டுரைகள் சிலவற்றை அவ்வப்போது எழுதிக்கொடுத்தேன். ‘இளம்பிறை’யில் ‘மத்து’ என்னும் தனிப் பகுதியில், என் கட்டுரைகளை அவர் பிரசுரித்து வரலானார்.

அவ்வாறு பிரசுரமான கட்டுரைகளைத் தொகுத்தும், பிரசுரமாகாத என் புதிய கட்டுரைகள் சிலவற்றைப் புகுத்தியும், என் கட்டுரைகள் அடங்கிய தொகை நூல் ஒன்றினைத் தமது ‘அரச வெளியீடு’ என்னும் பிரசுர நிறுவனத்தின் சார்பாக வெளியிட நண்பர் ரஹ்மான் பேரார்வம் காட்டினார். அவர் காட்டிய அவ்வார்வம் காரணமாகவே இந்நூல் தமிழ்ச் சுவைஞராகிய உங்களுக்குக் கிட்டும் வாய்ப்புச் சித்திப்பதாயிற்று.

இந்நூலினை வெளியிடச் சகல உதவிகளையும் ஆலோசனைகளையும் நல்கியதுடன், இந்நூலுக்கு முன்னீடு ஒன்றினையும் எஸ். பொன்னுத்துரை அவர்கள் வழங்கியுள்ளார். இத்தொகை நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை எழுதும் பொழுது என் ‘வலக் கை’யாக உதவியவர் நவாலியூர் நடேசன். இவ்விருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஆங்கிலம் அரச மொழியாகக் கொலுவிருந்த காலத்தில் கல்விப் பயிற்சி பெற்றவன் நான். எனவே தமிழை முறையாகக் கற்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டது. சிங்களச் சட்டத்தின் அநுகூலம் - பிரதிகூலம் பற்றிய விசாரணை தேவையில்லை. ஆனால், அச்சட்டம் காரணமாகத் தமிழ் அபிமானம் மீதூர்தல் பெற்றவர்களுள் நானும் ஒருவன். அந்த அபிமானமே தமிழில் எழுதுதல் வேண்டும் என்ற என் முனைப்பின் ஊக்கமாகவும் அமைந்தது. அவ்வூக்கத்தின் காரணமாக நான் தமிழிலேயே எழுதிய கட்டுரைகளிற் பெரும்பாலானவை இந்நூலிலே இடம் பெற்றுள்ளன. இந்த உண்மையின் நிலைக்களனில் நின்று. இந்நூலினைத் தாராள மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளும்படி வாசகரைத் தயவாக வேண்டுகிறேன்.
ஏ.ஜே. கனகரத்னா


முன்னீடு
‘மத்து என்னும் தங்களுடைய கன்னித் தமிழ் நூலினை யாருக்குச் சமர்ப்பணமாக்க உத்தேசிக்கிறீர்கள்?”

நண்பர் ஏ.ஜே. கனகரத்னாவுடன் இலக்கிய விடயங்கள் பலவற்றைப் பற்றிய சம்வாதத்தில் ஈடுபட்டிருக்கையில், சடுதியாகக் கிளை பிரிந்த சிந்தனை ஒன்றிலே தொற்றி, இந்த வினாவினைத் தொடுத்தேன்.

வினாவின் வேகத்திற்குப் பொருந்தக்கூடிய விரைவினை இணைக்க ஏ.ஜே. முந்தவில்லை. அஃது அவர் சுபாவம். தமது குறுந்தாடியைத் தடவி, ஒரு சிட்கை மூக்குப் பொடியினைப் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் அப்பி எடுத்துக் கொண்டு, நடுவிரலை என் திசையிலே நீட்டி, “ஏன்? 1956ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்திற்கு இதனைச் சமர்ப்பிக்கலாம் என்று நினைக்கின்றேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?” எனக்கேட்டு, மூக்குப்பொடி நுகர்வினைச் சாவகாசமாக இயற்றத் தொடங்கினார்.

நண்பர் ஏ.ஜே.யின் கலை - இலக்கியம் - சமுதாயம் ஆகியவை பற்றிய நோக்கின் கோணத்தையும், இலக்கிய வாழ்க்கையையும் ஓரளவு பரிச்சயப்படுத்தி வைத்திருப்பவன் என்ற காரணத்தினால், சிந்தனைக்கும் அது தொற்றிய உரையாடலுக்கும் இடையீடு அளிக்காது, “பொருத்தமாக இருக்கும்” என ஆமோதித்தேன். என் ஆமோதிப்புத் தூண்டுதலன்று@ சம்மதம் மட்டுமே.

ஈழத்து அரசியல் வரலாற்றிலும், இரு மொழி இனங்களின் சௌஜன்ய வாழ்க்கையிலும் அச்சட்டம்’ இச்சித்தலுக்குப் புறம்பான கறையினை ஏற்படுத்தியது என்பது வரலாறு. அந்த சோர விளைவினை மகிமைப்படுத்துவது அவருடைய நோக்கமன்று. தமிழ்ப்பாலுண்டு, தமிழுணர்வு பெற்ற எவனும் அதனை உன்னிப் பார்க்கவும் ஒப்பான். அந்தச் சட்டத்தின் நேரடி விளைவுச் சாரத்தினை அன்று, அதற்கு நேரடிச் சம்பந்தம் எதுவுமே அற்றதாக இருந்தாலுகூட, அது ஏற்படுத்திய தாக்கத்தினை – வேண்டுமானால், அது ஏற்படுத்திய மெல்லிய சலனத்தினை என்று வைத்துக்கொண்டாலுங்கூட – கௌரவித்தல் வேண்டும் என்கிற தவிப்பினை ஏ.ஜே. பல சந்தர்ப்பங்களிலே வலியுறுத்தி இருக்கின்றார்.

ஏ.ஜே.யின் இலக்கியஞ் சார்ந்த வாழ்க்கைப் பின்னணியினைச் சற்று விளங்கிக்கொண்டாற்றான். அநீதியானது என்று தோன்றக் கூடிய ஒரு சட்டத்தின் உபவிளைவு என்று கூடக் கணிக்கப்படத் தகாத ஒன்றினைக் கௌரவித்தல் வேண்டும் என்ற கட்டித்த அக்கறை அவர் உள்ளத்தில் விளைந்த சீர்த்தியைப் புரிந்து கொள்ளுதல் சாலும்.

ஆங்கில மொழியே வீட்டு மொழியாகவும் பயிலப்படும் சூழலிலே ஏ.ஜே. பிறந்தவர். லத்தீன் மொழியைத் துணைமொழியாகக் கற்றதுடன், தமிழிலே பேசுவதும் சிந்திப்பதும் அறிவின் பாமரத்தனத்திற்குச் சான்று என்று பிழைபடக் கருதும் ஆங்கிலேயர் ஆட்சியினால் தோற்றுவிக்கப்பட்ட சர்வ ஆங்கில மோகம் என்ற சூழலில், அதன் வாரிசுக் கொழுந்தாக, அவர் ஆரம்ப - இடை நிலைக் கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்திலே சிறப்புப் பட்டம் பெறுவதற்கு ஏற்ற பாடமாக, ஆங்கிலத்தையே தேர்ந்தெடுத்தார். ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியனாகப் பணிபுரிந்து, இடையில் ‘னுயடைல நேறள’ என்ற இலங்கையின் பிரபல ஆங்கிலத் தினசரியின் ஆசிரியர் குழுவிலும் சேவை செய்துள்ளார். தற்பொழுது ‘ஊழ-ழிநசயவழச’ என்ற ஆங்கில – தமிழ்ச் சஞ்சிகையின் ஆசிரியப் பணியினை மேற்கொண்டுள்ளார்.

ஆங்கில மொழியை ஜீவனோபாயக் கருவியென இலங்கையர் – விசேடமாக, யாழ்ப்பாணத் தமிழர்கள் - சத்தியமாகவே நம்பினார்கள். 1956ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிதர்சன நிலையும் அதுதான். ஆங்கிலத்திலே செலுததப்பட்ட பக்தி பூர்வமான சம்பாவனை சுயமொழிச் செழுமைக்குக் குந்தகமானது என்பதை மட்டுமல்ல, அது விதேசீயத்தின் மீது செலுத்தப்படும் காமம் என்பதையுங்கூட நம்மவர்கள் உணரவில்லை. இதனால் ‘ஆங்கிலம் கற்பதற்கும் சுவைப்பதற்கும் ஏற்றமொழியல்ல’ என்ற பிரமேயம் பெறப்படவில்லை. ஆங்கிலத்துடன் இன்னும் எத்தனை மொழிகளைப் பயில முடியுமோ அவற்றை எல்லாம் கற்று நமது அறிவினையும் பார்வையையும் அகலித்துக் கொள்ளுதல் தக்கது. ஆனால், தாய் மொழி முதன்மைச் சேவிப்பிற்கு உரியது. அதுவே சுய கௌரவத்தையும், சுதேசீயப் பற்றினையும் உறுதி செய்யும் சிங்கள மக்கள் மத்தியிலே வளர்ந்து வந்த சுயமொழிப் பற்றிற்கு ஈடு செய்யத் தக்க சுயமொழிப் பற்று ஆங்கிலம் படித்த தமிழர்கள் மத்தியில் முனைப்பாக உருவானதில்லை. மின்னாமல் முழங்காமல் விழுந்த இடியின் சடுதியில் தனிச் சிங்களச் சட்டம் தமிழர் தலையிலே விடிந்தது. அந்த விடிவில், தமிழ் மொழியினைக் கௌரவப்படுத்துவதின் மூலமே (ஆங்கில மொழியை அஞ்சலி செய்வதினாலல்ல) இந்நாட்டில் சுய கௌரவத்துடன் வாழுதல் சாத்தியம் என்ற உண்மையும் உறைத்தது. எனவே ஈழ நாட்டின் அரசியல் வரலாற்றிலே மட்டுமன்றி, தமிழ் இலக்கிய வரலாற்றிலும் மேற்படி சட்டம் திருப்பு முனை ஒன்றினை ஏற்படுத்தியது.

இந்த நிதர்சனத்தினை அழுத்துவதிலும், இந்த உண்மையைப் பூரணமாகத் தரிசித்துத் தமிழ் இலக்கியப் பணியினை இயற்றுதல் வேண்டும் என்பதை வற்புறுத்துவதிலும், ஏ.ஜே. கடந்த ஒரு தசாப்த காலமாக முன்னணிப் படையின் தலைமை வீரனாகத் திகழ்கின்றார். இதனாலும், தேசீய இலக்கியம் என்ற கோஷத்திற்கு அவரால் தெளிவான விளக்கங்களை முன் வைக்க முடிந்தது.

ஏ.ஜே. ஆங்கிலத்தில் எழுதுவதில் மிக்க ஆற்றலுடையவர் எனக் குறித்தல் பூக்கடைக்கு விளம்பரஞ் செய்தலைப் போன்று அபத்தமானது. ஆனால், அவர் தமது ஆங்கிலப் புலமையைத் தமிழைச் செழுமைப்படுத்தும் பணியிலே திசை திருப்பி உள்ளமை நமது தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் பேறாக முற்றியது. இதற்காகத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் சார்பாக அவருக்கு நன்றி கூறுவதற்கும் இச்சந்தர்ப்பத்தினை எடுத்துக் கொள்ளுகின்றேன்.

‘இலங்கையின் தற்காலச் சிறுகதைகள்’ என்ற தொடரில் ‘ழுடிளநசஎநச’ என்ற ஆங்கிலத் தினசரியின் வாரப் பதிப்பு 1961ஆம் ஆண்டில் உள்ளுர்க் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வெளியிடலாயிற்று. சிங்களத்தில் எழுதும் முன்னணின் கதைஞர்களுடைய கதைகள் ஆரம்பத்தில் இடம் பெறுவதாயிற்று. ஈழத்தின் தேசீயக் கதை வளத்திற்கு தமிழ்க் கதைஞர்களுடைய பங்களிப்பும் சிறப்பு வாய்ந்தது என்பதை நிறுவுவதைப் போல, தமிழ்க் கதைகள் சிலவற்றை ஆங்கிலப் படுத்தி, அத்தொடரிலே புகுத்தி, தமிழ்க் கதைஞரை மகிமைப் படுத்தியவரும் கனகரத்னாவே. இதனால், சிங்கள இலக்கியச் சுவைஞர்கள் மத்தியில் தமிழ்க் கதைஞர்களுடைய கௌரவம் நிலைநாட்டப்பட்டது என்பது மட்டுமல்ல@ தமிழின் கௌரவமே நிலை நிறுத்தப்படுவதாயிற்று. வேறு சில ஈழத் தமிழ்க் கதைகளை ஆங்கிலத்தில் ‘வுiஅநள ழக ஊநலடழn’இ ‘ஐடடரளவசயவநன றுநநமடல ழக ஐனெயை’ ஆகியவற்றிலும் வெளிவரச் செய்தார்.

நம் நாட்டிலுள்ள பலர், அரசியற் கட்சி சார்ந்த அநுதாபங்களை மனத்திலே இருத்திக் கொண்டு, ஒரு வகை ‘முதுகு சொறி’ தலைத் திறனாய்வுக் கலையென வேகமாக வளர்த்து வரும் இந்நாளில், நடுவு நிலைமை பிறழாது, தெளிவான இலக்கியப் பார்வையுடன், மேலைநாட்டுத் திறனாய்வு நெறியினையும், தமிழ் இலக்கியத் திறனாய்வு மரபினையும், மாறிவரும் முற்போக்கு அரசியல் இயக்கங்களின் தாக்குதற் பெறுபேறுகளையும் ஒன்றிணைக்கும் ஏ.ஜே.யின் திறனாய்வு முறைமை குளிர்வினைத் தருவதாக அமைந்துள்ளது. என்னுடைய இக் கூற்றின் உண்மையினை தரிசிப்பதற்கும் இந்நூலில் இடம் பெற்றுள்ள சில கட்டுரைகள் உதவுகின்றன.

‘மத்து’ என்னும் இந்நூலின் மூலம், அவர் தமது ஆங்கில மொழிப் புலமையைப் பிறிதொரு களத்திற்கு விரிவுபடுத்துகின்றார். 1945ஆம் ஆண்டிலே புகுத்தப்பட் இலவசக் கல்வித் திட்டத்தினால் ஆங்கிலப் பயிற்சியின் தரம் சற்றே இறங்கு முகமாக நகரத் தொடங்கியது. 1956ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டத்திற்குப் பின்னர், ஆங்கில மொழி அறிவினால் எத்தகைய பண ஆதாயமும் பெற முடியாது. (எதையும் ரூபா சதங்களிலே மதிப்பிடுவது யாழ்ப்பாணத் தமிழரின் மகத்தான பண்பு என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுவதற்கு நாம் கூச்சப்படலாகாது) என்ற விரக்தி நிலை, தரத்தின் இறங்குமுக முனைப்பிற்கு விரைவாக்கம் ஊட்டுவதாயிற்று. ஆங்கில மொழியைக் கற்று அதன் மூலம் பயனைச் சுகிக்கும் ஆர்வம் கருகிவிட்டது. ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை வெறுப்பது என்பது வேறு@ அந்த மொழி மூலம் பயனடைவது என்பது வேறு. இந்நிலையில் உலகின் அறிவு இயக்கங்களையும், கலையின் போக்குகளையும் பூரணமாகப் பிடிமானத்திற்குள் கொண்டு வருவதற்கு மொழிபெயர்ப்பு நூல்களே உதவுதல் வேண்டும். அத்தகைய தமிழாக்க நூல்கள் மலிவதற்கான அறிகுறியைக் காணோம். இந்நிலையிலே, சிறந்த ஆங்கில நூல்களை எவ்வாறு தமிழ் வாசகர்களுக்கு அளிக்கலாம் என்பது பற்றி ஞான தீட்சை தரவல்லதாக இந்நூலிலே இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன.

பிறமொழி நூல்களைத் தமிழிலே சுருக்கித் தரும் பணியினை ‘மஞ்சரி’ என்னும் தமிழகச் சஞ்சிகை இயற்றி வருகின்றது. புத்தகச் சுருக்கம் ஒன்றினைப் பிரசுரிக்கும் முறையினை ‘சுநயனநசள னுபைநளவ’ அளிக்கும் அத்தகைய பகுதியின் பாணியை ‘மஞ்சரி’ பின்பற்ற முயன்ற போதிலும், இப் பணியிலே அது குறிப்பிடத்தக்க வெற்றிதானும் பெற்று விடவில்லை என்பது என் அபிப்பிராயம். மூலத்தின் ஆத்மாவைத் தரிசிக்கப் பூரணமாக உதவாத சுருக்கத்தினால் பயனில்லை. ‘எனக்குப் பிடித்த நூல்’ என்ற வரிசையிலே சில கட்டுரைகள் ‘ஆனந்தவிகட’னின் வெளிவந்தன. அந்தக் கட்டுரைகள் நூல்களின் சாரத்தைக் கோட்டைவிட்டு விட்டு, நூல்களைப் பற்றிய சுவைஞரின் சலனங்களுக்கே முக்கியத்துவம் அளித்தன. இவை இரண்டு பாங்குகளுக்கும் மாறுபட்ட ஒரு சுவையான பாணியிலே பதினொரு நூல்களை இந்நூலிலே ஏ.ஜே. அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பாணியிலுள்ள நயத்தினையும் வாசகனின் சுயத்திற்கு விட்டு விடுதல் தர்மமானது என நான் கருதுகின்றேன்.

ஏ.ஜே. கனகரத்னா இந்நூலிலே அறிமுகப்படுத்தும் பதினொரு நூல்களும், பொருளியல் (நுஉழழெஅiஉள), உயிரின வாழ்க்கைச் சூழலியல் (நுஉழடழபல), உளவியல் (Pளலஉhழடழபல), மொழி வரலாற்றியல் (ர்ளைவழசல ழக டுயபெரயபந), ஆட்சியியல் (Pழடவைiஉள), அரசியலமைப்பிற்குரிய ஆராய்ச்சி (ஊழளெவவைரவழையெட ளவரனல), இலக்கியம் (டுவைநசயவரசந), மருத்துவம் (ஆநனiஉiநெ), திரைப்படக் கலை (குடைஅ), புராணவியல் (ஆலவாழடழபல), மானிடவியல் (யுவொசழிழடழபல) ஆகிய பதினொரு பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களாக, வகைக்கு ஒன்று வண்ணத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளன. இத்தெரிவு முறை தேர்ந்த பயன் தரும் முயற்சியாகும்.

‘அமெரிக்க முதலாளித்துவம்: எதிர் வலுக் கோட்பாடு’ என்னம் பொருளியல் நூலை எழுதியுள்ள ஜே.கே. கல்பிரயித்து ஒரு காலத்தில் இந்தியாவில் அமெரிக்கத் தூதுவராகப் பணி புரிந்துள்ளார். வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார். பொருளியலின் கருநிலைக் கோட்பாடுகள் மறைத்து வைத்திருக்கும் மெய் நிகழ்வுகளை நுணுக்கமாக ஆராய்ந்து கண்டறிவதில் வல்லவர். பொருளியலாளரிடம் சாதாரணமாகக் காணப்படாத நகைத் திறன் சார்ந்த எழுத்து நடை இவருடைய நூல்களுக்கு மேலும் கவர்ச்சி ஊட்டுகின்றது.

உயிரியலின் ஒரு கிளையான உயிரின் வாழ்க்கைச் சூழலியல் சார்ந்த ‘ஒலிக்காத இளவேனில்’ என்னும் நூலினை எழுதி, செல்வி ரசேல் கார்சன் மிகுந்த பரபரப்பினையும் வாதப் பிரதிவாதங்களையும் விஞ்ஞானிகள் மத்தியில் ஏற்படுத்தினார். டி.டி.ரி. போன்ற பூச்சி கொல்லிகளுக்கு எதிராக மிக வலிமை வாய்ந்த ஆராய்ச்சிக்குரிய கருத்தினை முன் வைத்தார். இது துவக்கி வைத்த இயக்கத்தின் பெறுபேறாக டி.டி.ரியின் உபயோகம் சுவீடிஸ் நாட்டிலே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றியுள்ள பிறிதொரு நூலின் மகுடம் ‘நம்மைச் சூழவுள்ள கடல்’ என்பதாகும்.

மருத்துவம் (ஆநனiஉiநெ), உளவியல் (Pளலஉhழடழபல), மானிடவியல் (யுவொசழிழடழபல), மனித சமுதாயத்தின் வளர்ச்சி – இயல்பு – சட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுத்துறை (ளுழஉழைடழபல) ஆகிய பல துறைகளிலும் பயிற்சி பெற்ற இயன் சட்டி, ‘அன்பினதும் வெறுப்பினதும் பிறப்பிடம்’ என்னும் நூலை 1935ஆம் ஆண்டில் வெளியிட்டு உளவியல் சம்பந்தமான கருத்துக்களிலே புதிய திருப்பத்தினை ஏற்படுத்தினார். பிராய்டுவின் உளவியல் சார்ந்த கருநிலைக் கோட்பாடுகள கிறிஸ்ரபர் காட்வெல் என்ற மார்கஸிஸவாதி கண்டித்த பொழுது ஏற்படுத்திய தாக்கத்தினைப் பார்க்கிலும், இயன் சட்டியின் தற்பண்பு வாய்ந்த கண்டனம் அதிக பலிதத்தை ஏற்படுத்தியது. பிராய்டுக்கு எதிரான சட்டியின் கருத்துக் கொத்து இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே கணிக்கப்படுகின்றது.

பதினைந்தாம் நூற்றாண்டிற்கும் பதினேழாம் நூற்றாண்டிற்கும் இடையில் ஆங்கில மொழி தனிமுதன்மை நிலைக்கு எவ்வாறு வளர்ந்தது என்பதைப் புலமை சான்ற முறையிலே, ‘ஆங்கிலம் வெற்றி வாகை சூடிய வரலாறு’ என்னும் தமது நூலிலே றிக்சட் ஃபஸ்டர் ஜோன்ஸ், ஆதார பூர்வமாக எண்பித்துள்ளார். ஆங்கில மொழியின் இவ்வரலாற்று நூலிலே அரசியல் - சமுதாய நோக்கு – பொருளியல் ஆகியன சார்ந்த காரணக் கூறுகளையும் நேர்த்தியாக இணைத்துள்ளார்.

ஆட்சியியல் துறையில் பொதுவாகவும், கம்யூனிஸ முகாமிலே குறிப்பாகவும் மிகுந்த வாதப் பிரதிவாதத்தினை ஏற்படுத்திய ‘புதிய வர்க்கம்’ என்ற நூலினை எழுதிய எம். ஜிலாஸ் ஒரு காலத்தில் டிட்டோவின் சகாவாகவும் யூகோஸ்வேரவாகியாவின் உப ஜனாதிபதியாகவும் இருந்தவர். கம்யூனிஸப் புரட்சி வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, புதிய வர்க்கத்தின் கொடுங்கோன்மைக்குத் தவிர்க்க முடியாது வழி கோலுகின்றது என்ற மையக் கருத்தினை முன் வைத்து, கருநிலைக் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரண்பட்டதாக நிலவும் மெய்யியல்புகளை வெளிப்படுத்தியதற்காக அவர் அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

லண்டன் பொருளியல் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் எச்.ஆர்.ஜி. கிறீவ்ஸ் எழுதியுள்ள ‘பிரித்தானிய யாப்பு’, அரசியலமைப்பிற்குரிய ஆராய்ச்சி நூலாக அமைந்துள்ளது. இத்துறையில் எழுதப்பட்ட அநேக நூல்கள் சட்டஞ் சார்ந்தே எழுதப்பட்டுள்ளன. ஆனால், கிறீவ்ஸ் பிரித்தானிய யாப்பு அதனை உருவாக்கிய சமுதாயத்துடன் எவ்வாறு தொடர்பு பட்டுள்ளது என்பதை விளக்குகின்றார். எனவே, மாணாக்கருக்கும் பொது வாசகர்களுக்கும் எழுதப்பட்ட வேறு நூல்களிலும் பார்க்க இந்நூல் புது வலுவுண்டாக்குகின்ற தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.

‘அமெரிக்காவில் இலக்கியம்’ என்னும் தொகை நூலிலுள்ள இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துப் புகுத்தும் பிலிப் ராவ் ‘Pயசவளையn சுநஎநைற என்ற புகழ்பெற்ற அமெரிக்கச் சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்தவர். அவருடைய இந்தத் தொகை நூல், தேசிய அநுபவம் என்ற ஆய்வு நோக்குக் கோணத்தில் அமெரிக்க இலக்கியத்தைத் தரிசிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர் பிரசுரித்துள்ள பிறிதொரு புகழ் வாய்ந்த நூலின் மகுடம் ‘படிமமும் கருத்துவமும்’ என்பதாகும்.

நவீன மருந்துகள், அவற்றின் விளைவுகள், மருந்து உற்பத்தித் தொழில் ஆகியன பற்றி ‘மருந்துகள், வைத்தியர்கள், நோய்கள்’ என்னும் நூலிலே ஆராயும் பிறையன் இங்கிளிஸ், தற்கால மருந்துகளின் உப விளைவுகள் மருந்துச் சரக்குகளின் தொழில் துறை ஆகியவற்றை புத்தாய்வு செய்துள்ள அநுபவம் வாய்ந்த பத்திரிகையாளராவர். இவை சம்பந்தமாக ‘சிறு வழக்கு மருத்துவம்’ (குசiபெந ஆநனiஉiநெ) என்னும் பிறிதொரு நூலினையும் எழுதியுள்ளார்.

‘திரைப்படம்: கோட்பாட்டுக் கொத்து’ என்ற நூலின் பதிப்பாசிரியரான ஆர்.டி.மக்கான் திரைப்படக் கலையைப் போதிப்பதிலே நிறைந்த அநுபவம் பெற்றவர். அவருடைய தொகை நூல் பல்வேறுபட்ட நோக்கு நிலைகளை, சில முரண்பட்டவையாக இருப்பினுங்கூட, பயனுடன் ஒன்றிணைப்பதினால், திரைப்படக் கலையின் தன்மை பற்றி மிகுதியான கிரகிப்பினை வாசகனாற் பெறமுடிகின்றது.

‘ஆயிரமுக வீரன்’ என்னும் புராணவியல் நூலின் ஆசிரியரான ஜோசப் கம்பெல் மிக்க கீர்த்தி பெற்றுள்ள ஹென்றிச் ஸிம்மர், ஆனந்த குமாரசாமி ஆகியோருடனும் சேர்ந்து பழகும் வாய்ப்புப் பெற்றவர். ஆர்வத்தை இழுத்து வைக்கக் கூடிய இச்சுவைமிகு நூலிலே, உலகத்தின் முக்கியமான புராணங்களுக்கிடையேயுள்ள ஒரு போக்கினைப் புத்தாய்வு செய்துள்ளார்.

‘அரசு’ என்ற நூலின் ஆசிரியரான ஏ.எம். ஹோகார்ட் இந்நூற்றாண்டிலே வாழ்ந்த மானிடவியலாளருள் தலை சிறந்தவராகக் கொண்டாடப்படுகின்றார். அவர் பத்தாண்டு காலம் இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவருடைய நிலை பேறான ஆக்கங்களுள் ஒன்றான அரசு என்னும் நூலிலே சிங்கள மக்களுடைய நம்பிக்கைகளையும் இணைத்திருப்பதை வாசிக்கும் பொழுது நமது மண்ணிலே தோன்றிய ஒரு நூலினை வாசிக்கும் நிறைவே ஏற்படுகின்றது.

ஏ.ஜே. நிரம்பவும் வாசிப்பவர். ஏராளமான ஆங்கில நூல்களையும், கடந்த ஒரு தசாப்தமாக ஏராளமான தமிழ் நூல்களையும் வாசித்துள்ளார். வாசிப்பதுதான் அவருடைய முதன்மையான பொழுதுபோக்கு என்று சொல்வதை விட அதுவே அவருடைய முதன்மையான தொழில் எனக் கூறினும் பொருந்தும். அவருடைய வாசிப்புப் பரப்பினை நோக்குமிடத்து, அவர் எழுத்திலே சாதிக்க முனைந்தவை திருப்தி தருவதாக அமையவில்லை என்பது கசப்பான உண்மை. சுய கீர்த்தி அவர் நத்தாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஈழத் தமிழின் செழுமைக்காக வேனும் தமிழின் ஆற்றலிலக்கியம் சம்பந்தமான பணிக்கு அதிக நேரத்தினை அவர் பங்கிட்டு ஒதுக்க முன்வருதல் வேண்டுமென உரிமையுடன் கேட்டுக் கொள்ளுவேன்.

பதினொரு ஆங்கில நூல்களை என்னும் தயிரைக் கடைந்த மத்தாக இந்நூல் விளங்குகின்றது. பொருத்தமான மகுடம். மத்திலே ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெயின் சுவையே இந்நூலின் சுவை.
எஸ். பொன்னுத்துரை
20-10-70

ஒரு குறிப்பு
‘மத்து’வுக்கான முன்னீடு எழுதிய பல்லாண்டுகள் கழிந்தன. மூன்று தசாப்தங்கள் ஓடி மறைந்தனவா? போர்கள், அழிவுகள், அநர்த்தங்கள். ஆனாலும், ஏ.ஜே. சமர்க்களம் விட்டு வெளியேறாது. யாழ்ப்பாண மண்ணின் பரமார்த்த உபாசகராய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவருடைய மண் பக்தி பிரமிப்புத் தருவதாகும்.

அண்மையில் ஒருவாரம் நான் லண்டனில் தங்க நேர்ந்தது. இலக்கிய அன்பர் மாலியின் வீட்டிலே பசுமையான இலக்கியச் சந்திப்புகள் சில நிகழ்ந்தன. நித்தியானந்தன், பத்மநாப ஐயர், வரதகுமார், நேமிநாதன், பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது ஏ.ஜேயின் இலக்கிய ஊழியம் மிகவும் சிலாகிக்கப்படலாயிற்று. ‘மத்து’வின் செம்பதிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதற்கு ஏற்படக் கூடிய மேலதிக செலவுகளை லண்டன் வாழ் ஏ.ஜே.யின் நண்பர்களும் அபிமானிகளும் ஏற்றுக்கொள்வதாகவும். அறிவித்தார்கள். வுயஅடை ஐகெழசஅயவழைn ஊநவெசந இணைந்து செயற்பட முன் வந்தது. அவர்களுடைய பற்றார்வமும், அக்கறையும் இன்றைய தமிழ்ச் சுவைஞரின்ஹஹ யோகமாக வாய்க்கின்றது. இந்நேரத்தில், அவருடைய ‘செங் காவலர் தலைவர்: யேசுநாதர்’ என்கிற புதிய நூலையும் வெளியிடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன். எஸ. பொ.


1. யுஅநசiஉயn ஊயிவையடளைஅ:
வுhந ஊழnஉநிவ ழக ஊழரவெநசஎயடைiபெ Pழறநச……19
2. ளுடைநவெ ளுpசiபெ……29
3. வுhந ழுசபைin ழக டுழஎந யனெ ர்யவந……37
4. வுhந வுசரைஅph ழக வாந நுபெடiளா டுயபெரயபந……52
5. வுhந நேற ஊடயளள…..66
6. வுhந டீசவைiளா ஊழளெவவைரவழைn….73
7. டுவைநசயவரசந in யுஅநசiஉய….83
8. னுசரபளஇ னுழஉவழசள யனெ னுளைநயளந….100
9. குடைஅ: யு அழவெயபந ழக வுhநழசநைள……112
10. வுhந ர்நசழ றiவா யு வுhழரளயனெ குயஉநள….130
11. முiபௌhip….140



உள்ளே….
அமெரிக்கா முதலாளித்துவம்: எதிர் வலுக் கோட்பாடு….19
ஒலிக்காத இளவேனில் 29 அன்பினதும் வெறுப்பினதும் பிறப்பிடம் 37
ஆங்கிலம் வெற்றி வாகை சூடிய வரலாறு 52 புதிய வர்க்கம் 66
பிரித்தானிய யாப்பு 73 அமெரிக்காவில் இல்கியம் 83
மருந்துகள், வைத்தியர்கள், நோய்கள் 100
திரைப் படம் – கோட்பாட்டுக் கொத்து 112
ஆயிரமுக வீரன் 130 அரசு 140


அமெரிக்க முதலாளித்துவம்:
எதிர்வலுக் கோட்பாடு
வுhந ஊழnஉநிவ ழக ஊழரவெநசஎயடைiபெ Pழறநச
டில து.மு. புயடடிசயiவா

முதலாளித்துவத்தின் ‘படைவீ’ டாக அமெரிக்கா இன்று திகழ்கின்றது@ ‘மக்கள் முதலாளித்துவம்’ அங்கு நிலவுவதாக அமெரிக்கா பெருமைப்படுகின்றது. ‘இதென்ன ஐயா நூதனம்’ என்று கேட்கிறீர்களா? வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும் நாய்க:கு எசமான் எலும்புத்துண்டுகளை எறிவது போல, தமது ஆதாயத்தில் ஒரு பங்கை முதலாளிகள் தொழிலாளருக்கு பகிர்ந்து கொடுக்கின்றார்கள். தொழிலாளருக:கு எனச் சில பங்குகள் (ளூயசநள) ஒதுக்கப்படும். இதனால், தொழிலாளர் ‘குட்டி முதலாளிகள்’ ஆகின்றனர். இந்த ஏற்பாட்டைத் தான் ‘மக்கள் முதலாளித்துவம்’ என அமெரிக்கா பறைசாற்றுகின்றது. அதாவது, முதலாளித்துவ அமைப்பைப் பேணுவதற்கு இஃதொரு ‘தந்திர’ மான ஏற்பாடு. ஆதாயத்திற் பெரும் பங்கு முதலாளிகளைச் சேருகின்றது@ ஒரு பங்கு வணிக நிலையத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக ஒதுக்கப்படுகின்றது. மிகுதியைத் தான் தொழிலாளருக்குப் பகிர்ந்து கொடுக்கின்றனர். தொழிலாளருக்கும் வெளியாட்களுக்கும் ஒதுக்கப்படும் இப்பங்குகள் மிகச் சிறிய அளவே. நூற்றுக்கணக்கான பங்குதார்கள் இருந்தாலும், நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் சிலரின் வசத்திலேயே இருக்கும். லோகநாதன் திட்டம் இந்த அடிப்படையிலே தான் வகுக்கப்பட்டுள்ளது. தாம் ‘குட்டி முதலாளிகள்’ என்ற உணர்வு நிலவும் போது, முதலாளித்துவ அமைப்பைப் பேணுவதில் எல்லோருக்கும் அக்கறை இருக்கத் தான் செய்யும். பொதுவுடைமையின் தாக்குதல் களைச் சமாளிப்பதற்காகத்தான் முதலாளித்துவம், வேறு வழியின்றி, இத்தந்திரத்தைக் கையாளுகின்றது என்பதில் ஐயமில்லை. அந்த அளவிற்காவது பொதுவுடைமையை நாம் பாராட்ட வேண்டாமா?

அமெரிக்காவின் முதலாளித்துவ அமைப்பைப் பற்றி கல்பிரயித்து என்னும் பொருளியல் அறிஞர், பொருளியலறிவு என்ற ‘தீட்சை’ பெறாதவர்கள்கூடப் புரியக் கூடிய வகையில், நகைச்சுவை ததும்பும் நடையில் ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அதன் பெயர் ‘அமெரிக்க முதலாளித்துவம்: எதிர்வலுக் கோட்பாடு (யுஅநசiஉயn ஊயிவையடளைஅ: வுhந ஊழnஉநிவ ழக ஊழரவெநசஎயடைiபெ Pழறநச டில து.மு. புயடடிசயiவா) என்பதாகும். இதன் ஆசிரியர் சிறிது காலத்திற்கு முன்பு இந்தியாவிலே அமெரிக்கத் தூதுவராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாளித்துவந் தோன்றி உருவம் பெற்ற காலத்திலே, ஆதம் சிமித் போன்ற பொருளியல் அறிஞர் அவ்வமைப்பினை விளக்கும் முகமாக அதன் நற்பயன்களை விவரிக்க விழைந்தனர். அவர்களுடைய கருத்துப்படி, நிறைவுப் போட்டியே (pநசகநஉவ உழஅpநவவைழைn) முதலாளித்துவத்தின் உயிர்நாடி. விற்பனையாளர் பலர் இருந்தால், அவர்களுக்கிடையே போட்டி ஏற்படும். இப்போட்டியின் பயனாக விலைகள் குறையும். ஆதலாம், இம்முறை நுகர்வோர்க்கு நன்மை பயக்கும். எம் மூதாதையரும் இவ்வுண்மையை அறிந்திருந்தனர். ‘கீரைக் கடைக்கம் எதிர்க்கடை வேண்டும்’ என்ற பழமொழி பயிலப்பட்டு வருகின்றதல்லவா? உங்கள் ஊர்ச் சந்தையை உற்று நோக்குவீர்களானால், இதன் உண்மை தெற்றனப் புலப்படும். ஒருபொருள் பல வணிகரிடமிருந்தால், விலை நிதானமாயிருக்கும். ஒருவனிடம் மட்டுமே இருந்தால், அவன் கேட்கும் விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். நிறைவுப் போட்டி நிகழுமாயின் ஆகக் குறைந்த விலையும், ஏக போக உரிமை (அழnழிழடல) கொண்டாடப்படுமாயின் ஆகக்கூடிய விலையும் நிலவும் என ஆதம் சிமித் கூறியதற்கு இவை எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன. (வுhந pசiஉந ழக அழnழிழடல ளை ரிழn நஎநசல ழஉஉயளழைn வாந hiபாநளவ றாiஉh உயn டிந பழவ… வாந pசiஉந ழக கசநந உழஅpநவவைழைn ழn வாந உழவெசயசல ளை வாந டழறநளவ றாiஉh உயn டிந வயமநn ழெவ ரிழn நஎநசல ழஉஉயளழைn iனெநநன டிரவ கழச யலெ உழளெனைநசயடிடந வiஅந வழபநவாநச) இதே போன்றுதான் வாங்குவோரைப் பொறுத்ததாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக, ‘சிகரெட்’ புகையிலை உற்பத்தியைக் குறிப்பிடலாம். இப்புகையிலையை வாங்க ஒரே ஒரு வணிக நிலையந்தானிருந்தால், அவர்கள் தீர்மானிக்கும் விலையை உற்பத்தியாளர் ஏற்கவேண்டி நேரிடும். வேறு பல நிலையங்களும் புகையிலையை வாங்க முற்பட்டால், அவர்களுக்கு இடையே போட்டி ஏற்படும், அதன் விளைவாக உற்பத்தியாளருக்குக் கூடிய பணம் கிடைக்க ஏதுவாயிருக்கும். ஆனால், நிச்சயமாக உற்பத்தியாளருக்குக் கூடப் பணம் கிடைக்கும் என அறுதியிட்டுக் கூற முடியாது. புகையிலையை வாங்கும் வணிக நிலையங்கள் ஒன்று கூடித் தமக்குள்ளே உடன்படிக்கை செய்துகொண்டால், பழைய படிவேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகத் தான் முடியும்!

தடையில்லாப் போட்டியே – நிறைவுப் போட்டியே – முதலாளித்துவ அமைப்பைச் சம நிலைப்படுத்துகின்றதென முதலாளித்துவ பொருளியலறிஞர் கருதி வந்தனர். சிமித், ரிக்கார்டோ, மில் போன்றோர் எழுதிய காலத்திலே, இஃது உண்மையாகவே இருந்தது. அக்காலச் சூழ்நிலையில், பிரித்தானியாவில் இவ்வித போட்டியே நிகழ்ந்தது. ஆனால், அவர்களுடைய கூற்று இன்றைய முதலாளித்துவ அமைப்பிற்குப் பொருந்துமா?

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அடொல்வ் பேர்லும் (யுனழடக டீநசடந), கார்டினர் மீன்சும் (புயசனiநெச ஆநயளெ) கூட்டுத்தாபனங்கள் (ஊழசிழசயவழைளெ) எவ்வாறு அமெரிக்காவின் பொருளாதார அமைப்பைத் தாக்குகின்றன என்பதை ஆராயத் தொடங்கினார்கள். மிகப் பெரிய கூட்டுத்தாபனங்கள் சில கைத்தொழிற் துறையின் பெரும் பகுதிக்குப் பொறுப்பாயிருக்கின்றன என்னும் உண்மையை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல, பொருளபிவிருத்தி அடை;நத மற்றைய நாடுகளிலும் இவ்வாறுதான் நடைபெற்றிருக்கின்றது. தொடக்கத்தில் ஒரே பொருளைத் தயாரிக்கும் பல வணிக நிலையங்களிருக்கின்றன. படிப்படியாக அவற்றின் தொகை குறைகின்றது. ஈற்றில், இவற்றிற் சில இணைக்கப்பட்டு மிகப் பெரிய கூட்டுத்தாபனங்கள் சிலவே எஞ்சியிருக்கின்றன. இந்நிலையில் நிறைவுப் போட்டி எங்கே? போட்டிக்குப் பதில் ஒன்று திரட்டல் (உழnஉநவெசயவழைn) அல்லவா நிலவுகின்றது? பலருக்குப் பதில் மிகச் சிலர்@ தடையில்லாப் போட்டிக்குப் பதில் திரட்டல்! இவைதான் இன்றைய அமெரிக்க முதலாளித்துவ முறையின் தன்மைகள் என்கிறார் கல்பிரயித்து.

இக்கூட்டுத்தாபனங்கள், முன்பு போல, கழுத்தறுக்கும் விலைப்போர்களில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு பொருதுவது தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை அவர்கள் நன்குணர்ந்திருக்கின்றார்கள். விளம்பரஞ் செய்தல், விஞ்ஞானத்தின் துணைக் கொண்டு தொழில் முறைகளைத் திருத்திக் கொள்ளுதல் - இவ்வழிகளிலேதான் இன்று போட்டி நடைபெறுகின்றதே தவிர, விலைகளைக் குறைப்பதன் மூலமன்று என கல்பிரயித்து விளக்குகின்றார். விலைப்போர், தத்தித் தத்தி நடை பயின்ற முதலாளித்துவத்தின் போர்க் கருவி@ முதிர்ந்த முதலாளித்துவ அமைப்பு அவ்வாயுதத்தைப் பெரும்பாலும் உபயோகிப்பது இல்லை.

இன்றைய முதலாளித்துவ அமைப்பு முன்னைய முறையிலிருந்து வேறுபட்டது என்பதைச் சில பொருளியலறிஞர் முதலில் உணரத் தவறிவிட்டனர். நிறைவுப் போட்டி அல்லது ஏகபோக உரிமை ஆகிய இரண்டு அளவு கோல்களே அவர்களுக்குத் தெரிந்திருந்தன. இவ்வளவுகோல்கள் வரையறுக்கப்ட்ட காலத்திற்கு ஏற்றனவாகத் தானிருந்தன. ஆனால், காலப் போக்கில், சமுதாயம் மாறிவிட்டது. இதனை உணராத இவ்வறிஞர், இவ்வளவுகோல்கள் பயனற்றவை என்பதையும் உணரத் தவறியதில் வியப்பொன்றுமில்லை. பழைய பொருளியல் கோட்பாடினை விடுத்து, நடைமுறை உலகை உன்pப்பாய்க் கவனித்த சில அறிஞர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளிலே வளர்ந்து வேடூன்றியிருந்த பொருளாதார அமைப்பு பழைய அளவுகோல்களுக்குள் அடங்காது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். நிறைவுப்போட்டி அல்லது ஏகபோக உரிமை என்ற பழைய பாகுபாட்டை, 1932 – 33 இல் வெளியான இரண்டு நூல்கள் தகர்த்தெறித்தன. ஒன்று, அமெரிக்கப் பொருளியலறிஞர் பேராசிரியர் சேம்பர்லினின் ‘ஏகபோக உரிமைப் போட்டியின் கோட்பாடு’ (வுhந வுhநழசல ழக ஆழnழிழடளைவiஉ ஊழஅpநவவைழைn). மற்றையது, பிரித்தானியாவைச் சேர்ந்த திருமதி யோன் ராபின்சனின் ‘நிறைவில்லாப் போட்டியின் பொருளியல்’ (வுhந நுஉழழெஅiஉள ழக ஐஅpநசகநஉவ ஊழஅpநவவைழைn). நிறைவுப் போட்டி, ஏகபோக உரிமை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒருநிலை உருவாகியுள்ளதை, இவர்கள் எடுத்துக்காட்டினார்கள். இதனைச் சிலருரிமை (ழடபைழிழடல) எனலாம். பேர்ல், மீன்சு போன்றோரின் பொருளியற் புள்ளிவிவர ஆராய்ச்சி, மேலே குறிப்பிட்ட பேராசிரியர்களின் புதுக் கருத்துக்கள் - இவற்றுடன் மாபெரும் பொருளியல் மந்தமும் (வுhந புசநயவ னுநிசநளளழைn) சேர்ந்து பழைய கோட்பாடுகளை வலிமை குன்றச் செய்தன. நிறைவுப் போட்டியே முதலாளித்துவத்தின் உயிர்நாடி@ அதுவே அவ்வமைப்பினைச் சமநிலைப் படுத்துகிறது என்ற கொள்கை மலையேறியது. முதலாளித்துவமே செயல்திட்பமுள்ளது என்ற கருத்தை மாபெரும் மந்தம் சுக்கு நூறாக்கியது.

அம்மந்தத்திற்குப் பின்பு, அமெரிக்கா பொருளாதார முன்னேற்றம் எய்தியபோதிலும், இது நீடிக்குமா அல்லது மீண்டும் அழிவு ஏற்படுமா என்ற அச்சம் பெரும்பான்மையான பொருளியல் அறிஞரின் மனத்தை உறுத்தியது எனக் கல்பிரயித்து குறிப்பிடுகின்றார். அமெரிக்கா செழிப்புற்றிருந்த போதும், இவ்வச்சம் பலரின் அடிமனதில் மண்டிக் கிடந்தது. சமநிலைப்படுத்தும் நிறைவுப் போட்டியாகிய பாதுகாப்பு இல்லாததினால், ஈற்றில், அழிவே ஏற்படும் எனச் சில பொருளியல் அறிஞரும், வணிகரும் கருதலாயினர். இதனை வெகு நேர்த்தியாக, நகைச்சுவையுடன் பேராசிரியர் கல்பிரயித்து குறிப்பிடுகின்றார். இயக்க நூல் அறிவின்படி, ‘டீரஅடிடநடிநந’ என்னும் வண்டு பறக்கமுடியாது@ ஆனால், அது பறக்கின்றது! பறப்பதில் வெற்றியீட்டிய போதிலும், பறத்தல் விதிகளை மீறுவதினால் அவ்வண்டு காப்பில்லாததாம். இவ்வண்டினைப் போன்றுதான் அமெரிக்காவின் மனப்போக்கும் உள்ளது எனக் கல்பிரயித்து கூறுகிறார். ஆதம் சிமித், பென்தம், ரிக்கார்டோ போன்றோர் வகுத்த விதிகளை மீறுவதனால், (குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்) அமெரிக்கா செல்வச் செழிப்புற்றிருந்த போதிலும், இச்செல்வநிலை நீடிக்க முடியாது என்று பலர் சஞ்சலப்பட்டனர்.

பழைய கோட்பாடுகளை விடுத்து உண்மையை நோக்குதல் தெளிவை ஏற்படுத்தி, அச்சத்தைப் போக்கும் எனக் கல்பிரயித்து கருதுகிறார். எதிர்வலுக் கோட்பாட்டை முதன் முதலே தெளிவாக வரையறுத்த பெருமை இவரைச் சாரும். அமெரிக்காவிற் கூட்டுத்தாபனங்களின் கை ஓங்கவே, அதனை மட்டுப்படுத்தும் எதிர் வலுவும் பிறந்தது. ‘வலுவே எதிர் வலுவைத் தோற்றுவிக்கின்றது’ என்கிறார் கல்பிரயித்து. இக்கொள்கையைச் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கலாம். முதலாளித்துவ முறை உருவாகிய காலத்திலே, முதலாளிகள் தொழிலாளரைச் சுரண்டி, மட்டற்ற ஆதாயத்தைச் சம்பாதித்தார்கள். அமெரிக்காவிலே ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன், உருக்குத் தொழிற்சாலைகளிலே தொழிலாளர் ஒரு நாளுக்குப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது@ ஒரு வாரத்தில் எழுபத்திரண்டு மணிநேர வேலை! இருவாரத்திற்கு ஒரு தடவை வேலையாட்கள் மாறியபோதும் (ளாகைவ - வரசளெ) ஒரு தொழிலாளி இருபத்திநான்கு மணி நேரந் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. இன்று இவற்றை நம்ப முடியவில்லையல்லவா? ஈற்றில், முதலாளிகளின் வலு தொழிலாளரின் எதிர் வலுவைத் தோற்றுவித்தது. தொழிலாளர் ஒன்றுபட்டுத் தொழிற் சங்கங்களை அமைத்தனர். இவ்வெதிர் வலு முதலாளிகளின் வலுவை மட்டுப்படுத்தியது. வலிமை பொருந்திய கூட்டுத்தாபனங்களுள்ள துறைகளிலேதான் சக்தி வாய்ந்த தொழிற்சங்கங்கள் தோன்றியிருக்கின்றன எனக் கல்பிரயித்து சுட்டிக் காட்டுகின்றார். வலு, எதிர் வலுவை தோற்றுவிக்கின்றது. குடியானவர் பெரும்பாலும் வலிமையற்றவர்களாய் இருப்பதனால், பயிர்த் தொழிற் துறையிற் பலம் வாய்ந்த தொழிற் சங்கங்கள் நிறுவப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவில்லை. தொழிலாளர் துறையில் மட்டுமல்ல, வேறு எத்தனையோ துறைகளிலும் எதிர்வலுத் தோன்றியிருப்பதாகக் கல்பிரயித்து கூறுகிறார். பலம் வாய்ந்த உற்பத்தியாளருக்கு எதிராகத் தோன்றிய சில்லறை வணிகரின் எதிர்வலு, உற்பத்தியாளரின் வலுவைக் கட்டுப்படுத்துகிறது@ பொறியூர்திகளைத் தயாரிப்பவர்கள் உருக்குத் தொழிற்சாலை அதிபர்களின் வலிமையை மட்டுப்படுத்தி வருகின்றனர். பயிர்த் தொழிற்றுறையில், குடியானவர்கள், விற்பனையாளர்கள் என்ற ரீதியில் வலுவற்றவர்களாய் இருந்தார்கள்@ பின் உத்தரவாத விலைத்திட்டம் போன்ற அரசாங்க உதவிடன் இவர்களுடைய எதிர்வலு வளர்க்கப்பட்டது. நிறைவுப் போட்டியல்ல. எதிர் வலுலே – எல்லாத் துறைகளிலும் வியாபித்தில்லாத போதும் - இன்றைய முதலாளித்துவ அமைப்பைச் சமநிலைப்படுத்துகிறது எனக் கல்பிரயித்து கருதுகிறார். ஆனால், பணப்பெருக்கம் (ஐகெடயவழைn) ஏற்படும் போது, நுகர்வோருக்கு எதிர்வலு பாதுகாப்பளிக்காது என்கிறார். தேவைக்கு (னநஅயனெ) கூடுதலாக தரவு (ளரிpடல) இருந்தால், எதிர்வலு கட்டுப்பாடாய் இருக்கின்றது. இத்தகையச் சூழ்நிலையிற் சம்பளத்தை உயர்த்தும் படி தொழிற்சங்கம் கோரினால், முதலாளிக் எதிர்ப்பார்கள். சம்பளத்தைக் கூட்டினால், தாம் தயாரிக்கும் பொருள்களின் விலை உயரும்@ ஆதலால், விற்பனை குறையும்@ இதன் விளைவாகத் தொழிலாளர் தொகையைக் குறைக்கவேண்டி நேரிடும் எனக் காரணம் காட்டுவார்கள். இலாபத்தைப் பிரிப்பது பற்றியே வேலை நிறுத்தம் நடைபெறும். ஆனால், தரவுக்கு மித மிஞ்சிய தேவையிருப்பின், தொழிலாளரின் கோரிக்கைகளை வழங்குவதனால் விற்பனை குறைந்துவிடும் என முதலாளிகள் அஞ்ச வேண்டியதில்லை. தொழிலாளருக்குச் சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்து, தமது பொருள்களின் விலைகளை உயர்த்துகிறார்கள். வாங்குவதற்கு எத்தனையோ பேர் முன்வருவதனால், விலையைக் கூட்டப்படாது எனச் சில்லறை வணிகர் உற்பத்தியாளர்மீது தமது எதிர்வலு ஆயுதத்தைப் பயன்படுத்தமாட்டார்கள். பண வீக்கம் நிலவும் போது, வலுவினரும் எதிர்வலுவினரும் கூட்டுச் சேருவதனால், எதிர்வலு கட்டுப்பாடாகவோ பாதுகாப்பாகவோ இல்லை.

இன்று அமெரிக்காவில் உருவாகியிருக்கும் முதலாளித்துவ அமைப்பில், எதிர்வலுத்தான் சமநிலைப்படுத்துங் கருவியாய் உள்ளதென்றும், இப் பாதுகாப்பை ஆட்சிப் பீடம் வளர்ப்பது நன்மை பயக்கும் என்றுங் கல்பிரயித்து வற்புறுத்துகிறார். இதைக் கேட்டதும், பழைய முதலாளித்துவக் கோட்பாடுகளிலே பற்றுள்ளவர்களுக்கு – அரசு ஓர் ஊர்க்காப்பாளன் போன்றது, சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவது தான் அதன் கடமை@ இயன்றளவு ஆட்சி செய்யாதிருக்கும் ஆட்சி முறையே சிறந்தது எனக் கருதுவோர்க்கு – அதிர்ச்சி ஏற்படலாம். ஆனால் முன்பிலும் பார்க்க, அமெரிக்காவிலேகூட அரசு எத்தனையோ துறைகளில் இன்று தலையிடுகின்றது. பண வீக்கம் ஏற்பட்டால், ஆட்சிப் பீடம் பொது நன்மையைக் கருதித் தலையிட நேரிடும். ஆதலால், பண வீக்கமே முதலாளித்துவத்திற்குப் புத்துருவம் கொடுக்கப்படுவதற்கு ஏதுவாயிருக்கும் எனக் கல்பிரயித்து கருதுகிறார்.

முதலாளித்துவத்தை ஒரு சமய சித்தாந்தமாகக் கொள்ளாமல், அதனை நடைமுறை விடயமாகக் கருதி, பன்முகத் தீர்ப்புக்கு (னநஉநவெசயடளைநன னநஉளைழைn) வாய்பளிக்கும் ஓர் ஏற்பாடாகக் கல்பிரயித்து நோக்குகிறார். நாம் முதலாளித்துவத்தை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், நடைமுறை உலகை மறைத்த கொள்கைத் திரைகளைக் கல்பிரயித்து நீக்கிவிட்டார். தெளிவை ஏற்படுத்தியிருக்கின்றார் என்பதை மறுக்க முடியாது.


ஒலிக்காத இளவேனில்

ளுடைநவெ ளுpசiபெ
டில சுயஉhநட ஊயசளழn

இளவேனில் கோலோச்சத் தொடங்கியதும், இயற்கை அமுதகானம் பொழிகிறது. தேனீக்களும் வண்டுகளும் முரலிக்கின்றன. கிளைகளிலுள்ள பறவைகள் பண் இசைக்கின்றன. இயற்கையே இசை மாயமாக மாறிவிட்டதோ என இந்த இணைப்பிசை மயக்குகின்றது. செவி விருந்து மட்டுமா? ஐம்புலன்களுக்கும் இயற்கை விருந்தளிக்கின்றது. மொட்டுகள் கட்டவிழ்ந்து கமழ்கின்றன. எங்கும் பசுமை, மலர்ச்சி, இன்பப் பொலிவு!

இத்தகைய இயற்கை வனப்பையும், வளத்தையும் அழித்து உருமாற்றி, உலகத்தை ஒரு மகாமசானமாக்க முடியும். அணு ஆயுதங்களையும், நீரகக் குண்டுகளையும் நான் ஈண்டு குறிப்பிடவில்லை. அவற்றின் பயங்கர அழிவுச் சக்தியை யாவரும் அறிவர். இச்சக்திகள் உலகத்தை ஒரே மூச்சில் அழிக்கக் கூடியவை. ஆனால், மனிதனின் ஆற்றல் இவற்றுடன் நின்றுவிடவில்லை. உலகத்தை மெதுவாக அழிக்கவல்ல சக்திகளையும் அவன் கண்டுபிடித்திருக்கிறான். அவைதான் பூச்சி கொல்லிகளும் (ஐளெநஉவiஉனைநள), புற்பூண்டு கொல்லிகளும் (ர்நசடிiஉனைநள). இந்தச் செயற்கை இரசாயனப் பொருள்கள் (ளுலவொநவiஉ உhநஅiஉயடள) யாவும், உண்மையில், உயிர்கொல்லிகள் (டீழைஉனநள) என்று செல்வி ரசேல் கார்சன் (ஆளைள சுயஉhநட ஊயசளழn) கருதுகின்றார். இவர் எழுதியுள்ள ஒலிக்காத இளவேனில் (ளுடைநவெ ளுpசiபெ) என்ற நூலை வாசிக்கும் பொழுது, உலகத்தின் வருங்காலம் பற்றிய அச்சந்தோன்றி, இவ்வுயிர்க்கொல்லிகளைத் தயாரிக்கும் முதலாளிகள் மீது வெறுப்பும் ஏற்படலாம். செல்வி கார்சன் போன்றோரின் கண்டனங்களையும் பொருட்கடுத்தாது, இவ்வுயிர்க் கொல்லிகள் பாதுகாப்பானவை, மனிதருக்கு ஒருவிதத் தீங்கும் விளைவிப்பனவல்ல என விஞ்ஞானிகள் சிலர் அறுதியிட்டுக் கூறியிருப்பதற்குக் காரணமில்லாமல் இல்லை. இந்த இரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் வணிக நிலையங்களிலேதான் இந்த விஞ்ஞானிகளுடைய சம்பளங்களும் - பதவிகளும் தங்கியிருக்கின்றன. செஞ்சோற்றுக் கடனைச் செலுத்துவதற்காக இவர்கள் ஏதோ விளக்கந் தருகிறார்கள். (இவ்வாறு கூலிக்கு மாரடிக்கும் விஞ்ஞானிகள் சிலர்தாம், ‘சிகரெட்’க்கும் புற்று நோய்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என நிறுவுவதற்கு இப்பொழுது அமெரிக்காவில் முயன்று வருகிறார்கள்) இவர்கள் உண்மையை நிலைநாட்டும் விஞ்ஞானிகளல்லர்@ தமது கட்சிக்காக வாதாடும் வழக்கறிஞரேயாவர்!

இளவேனில் ஒலிக்காது எவ்வாறு மௌனம் சாதிக்க வேண்டி நேர்ந்துள்ளது என்பதைச் செல்வி கார்சன் தமது நூலில் விளக்குகின்றார். இந்நூலிற்குப் புகழ்பெற்ற விஞ்ஞானியான சேர் யூலியன் ஹக்ஸ்லி (ளுசை துரடயைn ர்ரஒடநல) நூன்முகம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளையும் களைகளையும் அழிப்பதற்காக டி.டி.ரி. (னு.னு.வு) போன்ற மருந்துகளை உபயோகிக்கின்றோம். அமெரிக்காவில் வானூர்திகள் மூலம் இம் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. விளைவு? பூச்சிகளும் களைகளும் அழிவதுடன், இயற்கையின் பாடகர்களான பறவைகளும் மாய்கின்றன. இது புனைந்துரையல்ல. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இவ்வாறான நிகழ்ச்சிகள் எத்தனையோ தடவைகளில் நடந்திருக்கின்றன. இவற்றின் முழு விபரங்களையுந் தமது நூலிற் செல்வி கார்சன் தருகின்றார். பறவைகள் மட்டுமல்ல@ தேனீக்கள், விலங்குகள், மீன் இனங்கள், கோழிகள், கால்நடைகள், நாய்கள், பூனைகள் - மனிதனின் நண்பர்களெனக் கொள்ளக்கூடிய யாவும் - இறந்துள்ளன. கிணறு டெ;டப் பூதம் புறப்பட்ட கதையாகத் தான் முடிந்திருக்கின்றது. ஆனால், விந்தையிலும் விந்தையாக, கேடு விளைவிக்கும் பூச்சிகளும் வண்டுகளும் அழிந்தொழிந்து போகாமல், சிறிது காலத்தின் பின்னர் மேன்மேலும் அதிகரிதிருக்கின்றன! இப்பூச்சிகள் காலப் போக்கில் விடுபாடைப் (ஐஅஅரnவைல) பெறுகின்றன. முன்பு தெளிக்கப்பட்ட மருந்து இவற்றை அழிக்குஞ் சக்தியை இழந்து pடுகின்றது. (மலேரியாக் காய்ச்சலைப் பரப்பும் நுளம்பிற்கும் இதுதான் நடந்திருக்கின்றது) ஆதலால், அவற்றை மீண்டும் அழிக்க இன்னுஞ் சக்தி வாய்ந்த மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ஈற்றில், அம் முயற்சியும் தோல்வியடைகின்றது! நமது இயற்கை நண்பர்கள் அழிந்தொழிய, நாசகாரப் பூச்சிகளும் வண்டுகளுஞ் செழித்துப் பரம்புகின்றன. இவை யாவும் விழலுக்கு இறைத்த நீராகின்றன. ஆனால், ‘எரிகிற வீட்டிற் பிடிங்கியது ஆதாயம்’ என்ற பழ மொழிக்கிணங்க, இம்மருந்துகளைத் தயரிக்கும் வணிக நிலையங்கள் கொழுத்த ஆதாயத்தைச் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றன.

பூச்சி கொல்லிகளும் புற்பூண்டு கொல்லிகளும் மிகச் சக்தி வாய்ந்த நஞ்சுகள். அவை பூச்சி பொட்டுகளை அறவே ஒழிக்கத் தவறிய போதிலும், இயற்கைப் பாதுகாப்புகளை அழிக்கின்றன. “ஏராளமான நாசக்காரப் பூச்சிகளை முற்றிலும் அழித்தல் சாத்தியமன்று@ ஆனால், அவ்வாறான முயற்சியில் ஈடுபடும் போது, அவ்வளவு ஏராளமாக இல்லாத நன்மை பயக்கும் பூச்சிகளையும், உயிரினங்களையும் அறவே ஒழிப்பது எளிது” என, சேர் யூலியன் ஹக்ஸ்லி தமது நூன்முகத்தில் எச்சரிக்கின்றார். அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் நடந்தேறிய நிகழ்ச்சிகள் இக்கூற்றினை வலியுறுத்துகின்றன. இந்த நஞ்சுகளை உபயோகிப்பதினால், நீர் - நிலம் - உணவு - மரஞ் செடிகள் - ஏனைய உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் நாமே வலிந்து நஞ்சூட்டுகின்றோம். சில விலங்கினங்களினதும் பறவைகளினதும் இனப் பெருக்கச் சக்தி இவற்றினாற் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நிலைமை இவ்வாறு பிரதிகூலமாக இருக்கும் பொழுது, நாம் வாளாவிருத்தல் மனித குலத்திற்குச் செய்யும் துரோகமாகும். மனிதன் ஏனைய உயிரினங்களிலும் மேம்பட்டவன், அவனை இந்த நஞ்சுகள் ஒன்றுஞ் செய்ய மாட்டாதென மனப்பால் குடித்தல் பேதமையேயாகும். இந்த மருந்துகளைத் தெளிக்கும்போது, தற்செயலாக இத்துளிகள் உடம்பிற் பட்டதினால் எத்தனையோ சிறுவர்களும், வயதானவர்களும் இறந்திருக்கிறார்கள். சிலர் நீண்ட கால நோயாளராகப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்கள். (இலங்கையில், புகையிலைத் தோட்டங்களில், பொலிடோல் தெளிக்கும் பொழுது அதன் அடர்ந்த ஆவியை உட்கொண்டதினாற் சிலர் இறந்திருக்கிறார்களென்பதும் குறிப்பிடத்தக்கது.) இப்பூச்சிகொல்லிகள் மனிதனின் கல்லீரலைத் தாக்க வல்லன. இதனால், கல்லீரற் கோளாறுகள் உண்டாகின்றன. நரம்புகளும் தாக்குப்படுவதால், மனநோய்களும் உண்டாவற்கு ஏதுவாயிருக்கின்றன என்பது வல்லுநர் சிலரின் கருத்தாகும். உயிரணுக்களின் மூச்சு விடுதலைப் (சுநளிசையவழைn ழக உநடடள) பூச்சிக்கொல்லிகள் பாதிப்பதால், புற்றுநோய் உண்டாவதெனப் புற்றுநோய் வல்லுநர் சிலர் கருதுகின்றனர். தற்காலத்தில், புற்றுநோய் அதிகரித்துள்ளமைக்கு இஃதும் ஒரு காரணமென இவ்வல்லுநர் சாட்டுகின்றனர். பூச்சி பொட்டுக் கொல்லிகள் (Pநளவiஉனைநள) சந்ததியை உறுதிப்படுத்தும் நுட்ப அணுக்களைத் (புநளெந) தாக்கவல்லன. பாரம் பரியம் அழிந்து போகாமல், தலைமுறை தலைமுறையாக, ஆற்றொழுக்காகச் செல்வதற்கு இவ்வணுக்கள் இன்றியமையாதன. அவைதாம் இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் பிணைப்பன. இவை பாதிக்கப்பட்டால், பாரதூரமான மாறுதல்கள் (ஆரவயவழைளெ) ஏற்படலாம். இதன் விளைவாக, இயற்கையை மீறிய தன்மைகளும் (யுடிழெசஅயடவைநைள), ‘தலடோமைட்’ மாத்திரை ஏற்படுத்திய அங்கவீனங்களைப் போன்ற குறைபாடுகளும் ஏற்படலாம். தீயுடன் விளையாடித் தன்னைத் தானே எரித்துக்கொள்ளுங் குழந்தையைப் போன்று, நாம் சக்தி வாய்ந்த நச்சு மருந்துகளுடன் விளையாடுகின்றோம். ;தன் வினை தன்னைச் சுடும்’ என்பதற்கொப்ப நம்மை அழித்துக் கொள்வதுடன், வருங்காலச் சந்ததிகளையும் அழித்தொழிக்கும் வழியாகவே இஃது அமைந்துள்ளது. உய்யப் பிணக்கத்தில் அழிந்தொழிந்த சில உயிரினங்களைப் போன்று, மனிதனும் தன் ஆற்றலால் அழிந்துபோகலாமென விஞ்ஞானிகள் சிலர் அஞ்சுகிறார்கள். “முற் கூட்டி அறிந்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் ஆற்றலை மனித் இழந்து விட்டான். இறுதியில், அவன் பூமியையே அழிப்பான்” என அல்பர்டு சுவைட்சர் (யுடடிநசவ ளுஉhறநவைணநச) தீர்க்கதரிசனமாகக் கூறியிருக்கின்றார்.

பூச்சிபொட்டுகளைப் போன்று, மனிதனும் விடுபாட்டைப் பெறமுடியாதாவென வினவுதல் இயல்பானது. ஆம், விடுபாட்டைப் பெறமுடியும். ஆனால், அஃது இன்றோ, அடுத்த தலைமுறையிலோ பெறக்கூடிய ஒன்றன்று. எத்தனையோ தலைமுறைகள் கழிய வேண்டியிருக்கும். ஒரு நூற்றாண்டில் ஏறக்குறைய மூன்று தலைமுறைகளை மனிதன் காண்கிறான். ஆனால், பூச்சிகளோ சில நாட்களிலேயோ, வாரங்களிலேயோ பல தலை முறைகளைக் கண்டுவிடுகின்றன. அவற்றுடன் மனிதனாற் போட்டியிட முடியுமா?

இரசாயனப் பொருள்களின் உபயோகத்தை முற்றாகக் கைவிடவேண்டுமெனச் செல்வி கார்சன் கூறவில்லை. ஆனால், அவற்றின் உபயோகத்தை இயன்ற வரையிற் குறைத்துக்கொள்ளுதல் வேண்டுமென வற்புறுத்துகின்றார். இயற்கையை நுணுகி நோக்குவோமாயின், வேறு வழிகள் புலப்படும். ஒவ்வொரு பூச்சிக்கும் வேறு இயற்கைப் பகைகளுள். இவ்வியற்கைப் பகைகளின் இனப் பெருக்கத்தை விருத்திசெய்ய முயலுதல் சாலும். அமெரிக்காவின் சில பகுதிகளிலும், வேறு சில நாடுகளிலும் இம்முறை வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளது. ஆண் பூச்சிகளை ஆண்மைத் திறனற்றவையாக ஆக்குவதன் மூலம் (ஆயடந ளவநசடைணையவழைn வநஉhnஙைரந) பூச்சி பொட்டுகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் இன்னொரு முறையாகும். அமெரிக்காவைச் சேர்ந்த கலாநிதி நிப்ளிங் (னுச. முnipடiபெ) என்பவர் இந்த முறையைக் கையாண்டு, கணிசமான வெற்றியையும் பெற்றார். பூச்சிகளிலிருந்து எத்தனையோ வித நஞ்சுகளும், கவர்ச்சிப் பொருள்களும் (யவவசயஉவயவெள) விலக்குப் பொருள்களும் (சுநிநடடயவெள) சுரக்கின்றன. இவற்றின் தன்மைகளை நாம் ஆராய்ந்தறிந்தால், இவற்றைச் செயற்கையாக உற்பத்தி செய்து, பூச்சி கொல்லிகளாகப் பயன்படுத்தலாம். இம்முயற்சியிலும் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. செவிக் கெட்டா ஒலி அலைகள் (ருடவசயளழniஉ ளழரனெ) மூலம் பூச்சி பொட்டுகளைக் கொல்வது பற்றி இப்பொழுது ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நம்மைப்போன்றே பூச்சி பொட்டுகளும் நோயாற் பாதிக்கப்படுவன. இவ்வுண்மையைப் பண்டு தொட்டு அறிந்திருக்கின்றோம். அவற்றின் நோய்களைப் பற்றிய அறிவைப் பயன்படுத்திப் பூச்சி பொட்டுகளுக்கிடையே நோய்களைப் பரப்பி, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியிற் பரவிய யப்பானிய வண்டை இவ்வாறு கட்டுப்படுத்தினார்கள். நச்சு ஊனீர் (ஏசைரள) மூலமும் பூச்சி பொட்டுகளை அழிக்கலாம். கனடாவிலுள்ள காட்டுப் பகுதிகள் சிலவற்றில் இம்முறை வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளது. இவ்வாறாக, வெற்றியளிக்கக்கூடிய வேறு எத்தனையோ முறைகளிருக்க, இவற்றைப் புறக்கணித்து விட்டு, பூச்சி பொட்டுகளுடன் இயற்கையையும் நம்மையும் அழிக்க வேண்டுமா?

வாழ்க்கை சிலந்தி வலை ஒன்றிற்கு ஒப்பானது. அதன் ஓர் இழையைத் தொட்டால், அதன் அதிர்வு வலை முழுவதும் வியாபிக்கும். வாழ்க்கையின் ஒருமையை கீழைத்தேய மரபு வலியுறுத்துகின்றது. இப்பொழுது, உயிரியலாளரும் இதனை வலியுறுத்துகின்றனர். இயற்கையில் மிக நுட்பமான, நேர்த்தியான சமநிலை உண்டு. இதனைக் குலைத்தல் கேட்டையே விளைவிக்கும். விஞ்ஞானத்தின் தீவிர வளர்ச்சியினால் விஞ்ஞானிகள் சிலர் தாமே சகல வல்லவர்களென இறுமாப்புக் கொள்ளுகிறார்கள். அவர்கள் இயற்கையின் புனிதத்துவத்தைக் கனம் பண்ண மறுக்கிறார்கள். இயற்கையைத் தம் எண்ணப்படி ஆட்டிப் படைக்கலாமென்ற இறுமாப்பில் மனப்பால் குடிக்கிறார்கள். இயற்கையே மனிதனின் சௌகரியத்திற்காகவும் வசதிக்காகவுமே படைக்கப்பட்டது என்ற தவறான எண்ணம் நிலவிய காலத்திலேதான், ‘இயற்கையைக் கட்டுப்படுத்துதல், அடக்கியாளுதல்’ என்ற கொள்கை உருவாகியது. விஞ்ஞானத்தின் இக் ‘கற்கால’ த்திற்றான் புழுப்பூச்சி இயலாளரின் (நுவெழஅழடழபளைவள) கருத்துக்களுந் தொழில் முறைகளுந் தோன்றின. இப்பிற்போக்கான விஞ்ஞானத்துறை மிகப் பயங்கரமான ஆயுதங்களை உபயோகிப்பதனால், இயற்கைக்கும் மனித குலத்திற்கும் பேராபத்து ஏற்பட்டிருக்கின்றதெனச் செல்வி கார்சன் எச்சரிக்கிறார். இந்த எச்சரிக்கையை நாம் ஏற்று, ஆவன செய்யாது விடின், மனிதகுலத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்.

அன்பினதும் வெறுப்பினதும்
பிறப்பிடம்

வுhந ழுசபin டுழஎந யனெ ர்யவந
டில ஐயn ளுரவவடந

உளவியல் என்றதும் அறிஞர் பிராயிடுவின் (குசநரன) பெயரே யாவர்க்கும் நினைவுக்கு வரும். உளவியலை விஞ்ஞான அடிப்படையில் அமைத்த பெருமை அவரையே சாரும். அவருடைய கருத்துக்களே பெரும்பாலும் ஆதிக்கஞ் செலுத்துகின்றன. அவருடைய கொள்கைகளைப் பலர் இன்றும் உச்சிமேற் கொண்டு போற்றுகிறார்க்ள. அவ்வாறே நானும் பிராயிடுவின் கருத்துக்களை வேதவாக்காகக் கருதியதுண்டு. கிறித்தோப்பர் காட்வெல்லின் (ஊhசைளவழிhநச ஊயரனறநடட) ‘இறந்து கொண்டிருக்கும் பண்பாடுபற்றிய ஆராய்ச்சிகள்’ (ளுவரனநைள in ய னுலiபெ ஊரடவரசந) என்னும் நூலைப் படித்த பின், என் குருட்டுப் பற்று ஆட்டங் காணத் தொடங்கியது. இந்நூலாசிரியர் ஒரு மார்க்கீயவாதியாவார். ‘இறந்துகொண்டிருக்கும் பண்பாடுபற்றிய ஆராய்ச்சிகள்’ என அவர் குறிப்பிடுவது நடுத்தர வகுப்பாரின் பண்பாட்டையுஞ் சமூக அமைப்பையுமேயாம். இப்பண்பாடுஞ் சமூக அமைப்புந் தனிமனித வாதத்தையும், தனியார் சொத்துரிமைக் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டவை. தனியாட்களின் உரிமையை வற்புறுத்தி, நிலமானிய முறையை அழித்து, நடுத்தர வகுப்பினர் ஆதிக்கம் பெற்றனர். ஆனால் மேல் வகுப்பாரிடமும் நிலக் கிழார்க்களிடமிருந்து தாம் பறித்த உரிமைகளைத் தொழிலாளருடன் பகிர்ந்து கொள்ள நடுத்தர வகுப்பினர் விரும்பவில்லை. எத்தனையோ போராட்டங்களுக்குப் பின், 1832இல் பிரித்தானியாவிலே நடுத்தர வகுப்பினர், வாக்குரிமையைப் பெற்றனர். ஆனால் இதே வகுப்பினர், தொழிலாளருக்கும் வாக்குரிமை வழங்கப்படுவதை விரும்பாது, அதற்கு இடையூறு செய்தனர். (இலங்கையிலும், ஆங்கிலங் கற்ற நடுத்தர வகுப்பார் சர்வசன வாக்குரிமையை எதிர்த்தார்கள் அல்லவா தாம் பெற்ற நன்மைகளை ஏனையோக்கும் பகிர்ந்தளிப்பதை நடுத்தர வகுப்பார் விரும்புவதில்லைபோலும்!) எவ்வளவுதான் முயன்றாலும், இறுதியிலே தொழிலாளர் வெல்லுவர். உளுத்துப்போன நடுத்தர வகுப்பாரின் சமூக அமைப்பும் பண்பாடும் அழிந்தொழிந்து போகும் எனக் காட்வெல் திடமாக நம்பினார். வரலாற்றின் போக்கை உணராத சிலர், பழைய தனியார் சொத்துரிமைக் கோட்பாட்டையுந் தனி மனித வாதத்தையுங் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர் என அவர் குற்றஞ் சாட்டுகிறார். அவ்வாறு காட்வெலாற் சாடப்படுபவர்களுள் பிராயிடுவும் ஒருவர். விஞ்ஞானியான பிராயிடுவுக்கும் தனி மனித வாதத்திற்கும் எவ்வகையிலே தொடர்பிருக்க முடியும் - முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவது போலல்லவா இருக்கின்றது – என நாம் ஐயறலாம். விஞ்ஞானியோ, எழுத்தாளனோ, வரலாற்றாசிரியனோ, தத்துவ ஞானியோ வெறுங் கர்மயோகியுமல்லன்@ சூனியத்தில் வாழ்பவனுமல்லன். அவர்கள் வளருஞ் சூழல், அவர்ளுடைய காலப் பின்னணி ஆகியன அவர்களை ஓரளவுக் காயினும் உருவாக்குகின்றன. இத்தாக்கம் அவர்களுடைய கோட்பாடுகளிலும் ஆராய்ச்சிகளிலும், அவர்கள் அறிந்தோ அறியாமலோ, பிரதிபலிக்கப்படுகின்றது. முழுமையான உண்மையை அறிய மனிதன் அவாவுறுகிறான். ஆனால், ஒவ்வொருவனும் தன் கோணத்திலிருந்துதான் இவ்வுண்மையை நோக்கலாம். இதனைத் தவிர்க்க முடியாத நியதியுமெனலாம். இத்தொடர்பில், ‘ரசோமொன்’ (சுயளாழஅழn) என்ற சிறந்த யப்பானியத் திரைப்படந்தான் நினைவிற்கு வருகின்றது. கணவனும் மனைவியுங் காட்டினூடாகச் செல்கின்றனர். அச்சமயம், இவளது அழகைக் கண்டு மயங்கும் கொள்ளைக்காரன் கணவனைத் தாக்கிக் கொன்றுவிட்டு அவளைக் கற்பழிக்கிறான். படந் தொடங்குவதற்கு முன்பே இவையாவுங் நடந்தேறி விட்டன. கதையை நகர்த்துவதற்கு மீட்கும் உத்தி (குடயளா – டியஉம வநஉhnஙைரந) கையாளப்படுகின்றது. இறந்த கணவனின் ஆவி, மனைவி, கொள்ளைக்காரன், வாட் சண்டையையும் கொலையையும் ஒளித்து நின்று பார்த்த மரம்பெட்டி ஒருவன் ஆகிய நால்வரும் நடந்தவற்றைத் தனித்தனியே வருணிக்கின்றனர். ஈற்றில் உண்மை எதுவென அறியாது தவிக்கின்றோம். ஒவ்வொருவருந் தத்தம் இயல்புக்கு ஏற்பத் தத்தம் கோணத்திலிருந்தே எல்லாவற்றையும் நோக்குகின்றனர் என்னும் கருத்துந் தெளிவாகின்றது. எமது குறைபாடுகளையுங் குற்றங்களையும் மூடிமறைப்பதற்கு, எமது மதிப்பிற்கு இழுக் கேற்படாதிருக்கும் பொருட்டு, நாம் நடந்த எல்லாவற்றையும் வெளிப்படுத்தா திருக்கலாம். அல்லது, எம்மை அறியாமலே, உண்மையை நாம் திரிக்கலாம்.

பிராயிடுவை உருவாக்கிய சூழல் நடுத்தர வகுப்பாரின் பண்பாடேயாகும். தனியார் சொத்துரிமைக் கோட்பாடு அவ்வமைப்பின் உயிர்நாடி எனலாம்.

இத் தனி மனிதவாதம் பிராயிடுவின் கருத்துக்களில் விரவியிருக்கின்றது என்கின்றார் காட்வெல்.

“பிராயிடு நடுத்தர வகுப்பினர், இவ்வர்க்கச் சார்பு, உளவியலைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பாதிக்கின்றது. நடுத்தர வகுப்புப் பண்பாடு இரண்டு அடிப்படைகளிலெ தங்கியிருக்கின்றது. ஒன்று: மனிதன் தன்னறிவுச் (ஊழளெஉழைரளநௌள) சமூகப் படைப்பென்பதை மறந்து, அது விதையிலிருந்து வளருஞ் செடியைப் போன்று தானாகவே உருவாகின்றது என்ற எண்ணம். இரண்டு: மனிதன் சுதந்திரமாகச் செயலாற்றுவதற்கு அவனுடைய இயல்புணர்ச்சிகள் (iளெவinஉவள) சமூகக் கட்டுப்பாடுகளின்றி வெளிப்படல் வேண்டும் என்ற கருத்து, பண்பாடு, சமூக அமைப்புப் போன்றவற்றின் தாக்கத்திலிருந்து எவ்வளவிற்கு விடுபடுகின்றானோ அவ்வளவிற்கு மனிதன் சுதந்திரமுடையவனாவான் என்பதும் நடுத்தர வகுப்புப் பண்பாட்டின் அம்சமாகும். அப்படியாயின், தன்னறிவற்ற விலங்குகளல்லவா உண்மையாகச் சுதந்திரப் பிராணிகள்? மேற்கூறப்பட்ட அடித் தளத்திற்றான் நாகரிகமென்பது மனிதனின் சுதந்திரமான இயல்புணர்ச்சிகளை நசுக்குதல் என்ற பிராயிடுவின் கருத்து எழுப்பப்படுகின்றது. ஆனால், இங்குகூட ஒரு முரண்பாடு உண்டு. இன்னொரு கோணத்திலிருந்து நோக்கி, தன்னறிவுக்கும் நாகரிகத்திற்கும் இடர்விளைவிக்கும் பேய் கள்தாம் இயல்புணர்ச்சிகள் என்கிறார் பிராயிடு. இம் முரண்பாட்டைத் தீர்க்க முடியாது திக்கு முக்காடுகின்றார். அவருடைய நிலைக் களனிலிருந்து இது தீர்க்க முடியாததே! ஒருவித கட்டுப்பாடுமற்ற நிலைதான் சுதந்திரம் என எண்ணுதல் தவறாகும். அப்படியாயின் விலங்குகளின் நிலைதான் எமக்கு, இலட்சியமாக அமையமுடியும். மனிதன் விலங்குகளிலும் மேம்பட்டவனென்றால் அதற்குக் காரணம் அவன் சமூகக் கட்டுப்பாடுகள் மூலஞ் சுதந்திரமெய்தியமையே ஆகும். சுதந்திரம் என்பது ஒவ்வொருவனும் ஒருவிதக் கட்டுப்பாடுமின்றித் தான் விரும்பியதைச் செய்வதே என்ற எண்ணத்தின் அடிப்படையிலே தான் நடுத்தர வகுப்பு நாகரிகம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், தகப்பன் வகுப்பு நாகரிகம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், தகப்பன் மூலம் ஒவ்வொருவனும் மற்றவர்களுடன் தன்னை இனங்கண்டு கொள்வதனாற்றான் (hந யவவசiடிரவநள வாந ழசபயnணையவழைn ழக ளழஉநைவல வழ வாந னைநவெகைiஉயவழைn ழக யடட iனெiஎனைரயடள றiவா நயஉh ழவாநச வாசழரபா வாந கயவாநசஇ வாரள நஒpடயiniபெ டிழவா ளழஉயைட உழாநளழைn யனெ டநயனநசளாip) சமூகம் அமைக்கப்படுகின்றது என்கிறார் பிராயிடு. இப்படித்தான் சமூக இணைப்பிற்குந் தலைமைக்கும் விளக்கங் கொடுக்கின்றார். இட்லர் தோன்றுவதற்கு முன்பே, நாட்டுரிமைச் சர்வாதிகாரத்தின் (கயஉளைஅ) உரிமைப் பத்திரத்தை பிராயிடு வரைந்துவிட்டார். ‘பாசிச’ தத்துவத்திற்கு பிராயிடு ஆதரவாளரானார். வேடிக்கை என்னவெனில், அதே தத்துவம் அவரை நிராகரித்து, அவருடைய நூல்களையும் எரித்தது! இயல் புணர்ச்சித் திரிபுகளைக் (iளெவinஉவiஎந னளைவழசவழைளெ) குணப்படுத்த முயலும் பிராயிடு, ‘நாசிக்’ கொள்கைக்கு வழிவகுப்பதால், அவரை ‘பாசிச’த்தின் நண்பனுங் கூட்டாளியுமெனக் கூறுதல் மிகையாகாது. தனிமனித வாதம் இன்னொரு வகையில் பிராயிடுவின் கருத்துக்களைக் கோணச் செய்கின்றது. பிராயிடு, மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை மறக்கின்றார். சூழலே மனிதனை – அவனுடைய உணர்வுகளை உருவாக்குகின்றது என்பதை மறந்து, மனிதனைச் சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, அவனுடைய மனவியல்புகளையும், மனப்படி முறைகளையும் (அநவெயட pசழஉநளளநள) ஆராய்கின்றார். இவையாவும் வெறுஞ் சூனியத்தில் நிகழ்கின்றன எனப் பிராயிடு கருதுகின்றார் போலும். சமூகத் தொடர்புகளே தன்னறிவைக் கட்டுப்படுத்துவதனால், சமூக வாழ்வியல் (ளுழஉழைடழபல) தான் உளவியலின் அடிப்படையாகும். பிராயிடுவும், மற்றும் உளவியலாளர் பலரும் இதனை உணரவில்லை.”

காட்வெல் மார்க்கீயவாதி. இதன் காரணமாக, அவருடைய கண்டனங்களைச் சிலர் புறக்கணிக்கலாம். ஆனால், இயன் சட்டி (ஐயn ளுரவவநை) எழுதிய ‘அன்பினதும் வெறுப்பினதும் பிறப்பிடம்’ என்னும் நூலை (வுhந ழுசபைiளெ ழக டுழஎந யனெ ர்யவந டில ஐயn ளுரவவநை) படிக்கும் பொழுது பிராயிடுவைப் பற்றிய எமது ஐயங்கள் மேலோங்குகின்றன.

சட்டி இஸ்கொத்துலாந்தில் 1889இலே பிறந்தார். 1914ஆம் ஆண்டில் மருத்துவராகச் சித்தி எய்திய இவர், முதலாவது உலகப் போரில், பிரான்சு, இந்தியா போன்ற இடங்களிற் கடமையாற்றினார். பின்னர், உளநோய் மருத்துவராகச் சிறப்புப் பயிற்சி பெற்று, இலண்டனிலுள்ள மருத்துவமனையொன்றிற் கடமையாற்றத் தொடங்கினார். ‘அன்பினதும் வெறுப்பினதும் பிறப்பிடம்’ என்னும் இவரது நூல் 1935இல் வெளிவந்தது. அவப் பேறாக, முதல் முறையாக நூல் வெளிவந்த அன்றே சட்டி இறந்தார். உளவியலைத் தவிர, சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளிலும் இவருக்கு ஈடுபாடிருந்தது. தமது விரிவான அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி, புதுக் கோணத்திலிருந்து பிராயிடுவின் கருத்துக்களைச் சட்டி விமர்சித்தார். “அவர் புதுச் சிந்தனையாளர். இந்நூலில் அவர் பல முக்கியமான கருத்துக்களை விரித்துரைக்கின்றார். அவை உளநோய்களைத் தீர்க்கின்ற மருத்துவக் கலையின் கோட்பாட்டடிப்படையையே மாற்றி அமைக்கின்றன. அவரின் கருத்துக்கள் பல இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன” என சி.ஏ.மேஸ் (ஊ.யு. ஆயஉந) தன் முன்னுரையிற் குறிப்பிடுகின்றார்.

பிராயிடு, அட்லர் போன்றோர் மனிதனை அவன் உருவாகிய சூழலிலும் பண்பாட்டிலுமிருந்து பிரித்து நோக்குவதனால், ‘மனித இயற்கை’, ‘இயல்புணர்ச்சிகள்’ என அவை குறிப்பிடுபவை உண்மையிற் சில பண்பாடுகளினால் உருவாக்கப்பட்ட தன்மைகள் என்பதை அவதானிக்கத் தவறி விட்டனர் என்கிறார் சட்டி. ஜமனிதன் மிகச் சிக்கலான பிறவியாக இருப்பதினால், ‘இயல் புணர்ச்சிகள்’ என்ற பேச்சுக்கே இன்று இடமில்லை என்கின்றனர் அல்போட் (யுடடிழசவ), கோகன் (ஊழாநn), கன்திரிப் (புரவெசip) போன்ற உளவியலாளர். சிலர் பாலுணர்ச்சி போன்ற தூண்டு கைகளைக் (iஅpரடளநள) கட்டுப்படுத்த முடியாது இடர்ப்படுகின்றனர். அவர்கள் முதிர்ச்சி பெறாததே இதற்கான காரணமென்பது இவர்களுடைய கருத்தாகும்.ஸ

பண்டைய கிரேக்க மக்களிடையே ஒரு கதை பயிலப்பட்டு வந்தது. ஈடிப்பஸ் (ழுநனipரள) என்பான் தன் தகப்பனைக் கொன்று, தன் தாயையே மணந்தானாம். இக்கதையைத் தழுவி சொவொக்கிலிஸ் (ளுழிhழஉடநள) என்ற சிறந்த கிரேக்க நாடக ஆசிரியர் ஒரு புகழ் பெற்ற நாடகத்தை இயற்றினார். எம்மை அறியாமலேயே நாம் தாய்மீது காமுற்று, தகப்பனைப் பொறாமையின் நிமித்தம் வெறுக்கின்றோமென பிராயிடு கருதினார். இதற்கு ஈடிப்பஸ் உணர்ச்சிச் சிக்கல் (ழுநனipரள ஊழஅpடநஒ) எனப் பெயரிட்டார். இது மனிதனின் அடிப்படையா இயல்பென்றுங் கருதினார். ஆண்பிள்ளைகள் தாய்மீது காமுற, பெண் பிள்ளைகள் தகப்பன் மீது காமுறுவர்@ மானிடனைப் பற்றிய அடிப்படை உண்மையிது என பிராயிடு வற்புறுத்தினார். ஈடிப்பஸ் உணர்ச்சிச் சிக்கல் குறிப்பிட்ட குடும்ப அமைப்பினாலும், குழந்தை வளர்ப்பு முறையினாலும், பண்பாட்டினாலும் உருவாக்கப்பட்ட ஒன்றேயாகும். ஆதலால், அஃது எங்கும் பொருந்தும் மாறா உண்மையெனக் கொள்ள முடியாதென சட்டி விளக்குகிறார். இதைப் பின்பு பிராயிடுவே ஒருவாறு உணர்ந்தார். ஆதலாற்றான், “ஈடிப்பஸ் உணர்ச்சிச் சிக்கலே மனக் கோளாறின் (நேரசழளளை) முளை என்ற கூற்று அனைத்துலகத்துக்கும் பொருந்தும் என்ற எண்ணத்தைக் கைவிடல் வேண்டும்” என பிராயிடு பின்னர் குறிப்பிட்டார்.

பரந்துபட்ட மானிடவியல் அறிவு இருந்தாற்றான், வௌ;வேறு பண்பாடுகளை ஒப்பிட்டு அவை உருவாக்குந் தன்மைகளை உணரலாம். ‘மனித இயற்கை’, ‘இயல்புணர்ச்சிகள்’ என்று கூற முன்னர், இவ்வாறு ஒப்பிட்டுணர்தல் இன்றியமையாத தென சட்டி வற்புறுத்துகின்றார். வௌ;வேறு பண்பாடுகளை ஒப்பிட்டு ஆராயுமிடத்து, ஈடிப்பஸ் உணர்ச்சி;ச் சிக்கலையும் பார்க்க அடிப்படையான உண்மைகள் புலனாகும். பெண்களின் பிள்ளைப் பேற்றுச் சக்தி, பாலூட்டுஞ் சக்தி - இவற்றைப் பற்றி ஆண்கள் பொறாமைப்படுகின்றார்கள். இப்பொறாமை எத்தனையோ பண்பாடுகளிற் பிரதிபலிக்கப்படுகின்றதென, எடுத்துக் காட்டுகள் மூலஞ் சட்டி எண்பிக்கிறார். சில இடங்களில் ஆண்கள் தமக்கும் மாதவிடாய் நிகழ்கின்றதெனக் காட்டுவதற்கு ஆண்குறியிலே கீறி இரத்தம் ஓடவிடுவார்களாம். இந்தச் சடங்கு நடைபெறும் போது, பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லையாம். ஜபெண்கள் அனுமதிக்கப்பட்டால், குட்டு வெளிப்பட்டுத் தாம் கேலிக்காளாவார்கள் என ஆண்கள் அஞ்சுதல் இயல்பானதே!ஸ மேற்கு ஐரோப்பாவிலே, மனைவி பிள்ளைப் பெறும்போது, கணவனும் பிள்ளைப் பெறுவதான ஒரு சடங்கு நிகழ்த்தப்படுவதுண்டாம். இப்போலிப் பிரசவம் மனைவியின் பிரசவ வேதனையைக் குறைப்பதற்காக கையாளப்படும் ஒரு யுக்தி எனப் பலர் விளக்கங் கொடுக்கின்றனர். ஆனால், பிள்ளையைப் பெறுவதிலே தாயுடன் தனக்கும் பங்குண்டு என நிலைநாட்ட விழையும் ஆணின் உள்ளக் கிடக்கையை இதிற் காணலாம் என சட்டி கருதுகின்றார். பெண்கள் ஆண்குறியைப் பற்றிப் பொறாமைப்படுகின்றனரென பிராயிடு சுட்டிக் காட்டினார். ஆனால், மேலே கூறப்பட்ட ஆண்பொறாமைகள் இதனையும் பார்க்க அடிப்படையானவை என சட்டி கருதுகின்றார். எத்தனையோ பண்பாடுகளில், அங்கு வழங்கும் கதைகளில், இது பிரதிபலிக்கப்படுவதாக விளக்குகிறார். குலத் தலைவர் பண்பாடு கூட (Pயவசயைசஉhயட ஊரடவரசந) இப்பொறாமையின் பிரதிபலிப்பு என்கிறார். வேறு சில முக்கிய பொறாமைகளும் இருக்கின்றன. தன்மீது தாய் கொண்டுள்ள அன்பு குறையும் என அஞ்சுவதினால், மூத்த பிள்ளை இளையபிள்ளை மீது பொறாமைப்படுகின்றது. ஜகெயின் (ஊயin), சின்டரெல்லா (ஊiனெநசநடடய) ஆகிய கதைகளை இத்தொடர்பில் நோக்குக. இது நமது குடும்பங்களிலேயே கண்கூடு.ஸ இப்பிரச்சினையைத் தீர்க்க. அவுஸ்திரேலிய பழங்குடி ஒன்று விசித்திரமான முறையைக் கையாண்டது. ஒவ்வொரு இரண்டாம் பிள்ளையையுந் தாய்கொன்று, சமைத்து, தானும் மூத்தபிள்ளையும் உண்டனர். தகப்பனும் பிள்ளை மீது பொறாமைப்படலாம். தாய் பிள்ளை மீது தனது அன்பைச் சொரிவதனால், தகப்பன் பொறாமையடையலாம். இக்கோணத்திலிருந்து ஈடிப்பஸ் கதையைச் சட்டி நோக்குகிறார். ஈடிப்பஸ் பிறக்கு முன்பு, அவனுடைய தகப்பனாகிய அரசன் லேயஸ் (முiபெ டுயரைள) டெல்பி (னுநடிhi)யிலிருந்த தெய்வீக அறிவரிடம் (ழுசயஉடந) எதிர்காலக் குறி உரை கேட்கின்றார். பிறக்க விருக்கும் மகன் தகப்பனைக் கொன்று தாயை மணப்பான் எனப் பதில் கிடைத்தது. இதைத் தவிர்ப்பதற்காக, மகன் பிறந்ததும் அவனைக் கொல்லும்படி லேயஸ் ஆணையிட்hன். ஆனால், குழந்தைமீது இரக்கங் கொண்ட பணியாள் அவ்வாறு செய்யாது அண்டை நாட்டிலுள்ள ஒருவனிடங் குழந்தையைக் கொடுக்க, ஈடிப்பஸ் அந்நாட்டு அரசனின் வளர்ப்புப் பிள்ளையாக வளருகின்றான். பின்னர், ஈடிப்பஸ் சொந்த நாட்டிற்குச் சென்று, தன் தகப்பனென்று அறியாது லேயசைக் கொன்று, தன் தாயென அறியாது யோகஸ்டாவை (துழஉயளவய) மணஞ் செய்கிறான். கிரேக்கரிடையே வழங்கிய கதையின் சுருக்கம் இதுதான். தன் மகன் மீது கொண்ட பொறாமைதான் லேயசின் ஆணைக்குக் காரணமெனச் சட்டி இக்கதைக்குப் புது விளக்கங் கொடுக்கிறார்.

மனநோயுற்றவர்களின் வரலாறுகளைக் கொண்டு கோட்பாடுகளை வரையறுப்பதிலும் பார்க்க, பல பண்பாடுகளை ஒப்பிட்டு அவ்வாறு செய்தல் பயனுடைத்து எனச் சட்டி வற்புறுத்துகின்றார். அப்படிச் செய்வதினால் சொந்த விருப்பு வெறுப்புக்களின் தாக்கத்தையும் இயன்றளவு குறைத்துக் கொள்ளலாமென நம்புகிறார். பொதுவாக, பிராயிடு தாய் வழி மரபுப் பண்பாடுகளை (ஆயவசயைசஉhயட உரடவரசநள) புறக்கணிப்பதாகவும் அவர் மீது சட்டி குற்றஞ் சுமத்துகின்றார்.

மனிதனை இயக்குகின்ற உட்கோள்கள் (அழவiஎநள) எவை? பிராயிடுவின் கருத்துப்படி, அவை இரண்டாகும். ஒன்று: உணர்ச்சிகளை வெளியேற்றுதல் (நஎயஉரயவழைn ழச னநவநளெழைniபெ) இரண்டு: புலன் நுகர்ச்சி (ளநளெழசல பசயவகைiஉயவழைn). அடக்கிய உணர்ச்சிகளை வெளியேற்றுவதற்குப் போக்கிடம் (ழரவடநவ) இல்லாதவிடத்து, உணர்ச்சி மிகுதியினால் (வநவெழைn) மனக்கவலை (யnஒநைவல) தோன்றும். வாழ்வென்பது ஒரு குறிப்பிட்ட முறையிற் சாவை நாடுதலே என பிராயிடு கருதினார். தூண்டுகைகளினால் ஏற்படக்கூடிய பயங்கர விளைவுகளை நினைந்து அஞ்சுதலே சமூக வாழ்வைக் கட்டுப்படுத்துகின்றது என்றார். மனிதன், சக்திகள் பல நிறைந்த பொட்டலம், இச்சக்திகளை விரயஞ் செய்ய அவாவுறுகிறான். ஆனால், அச்சந் தடுக்கின்றது. இக்கருத்துக்களை சட்டி ஏற்க மறுக்கிறார். உணர்ச்சி வெளியீடு (நஒpசநளளழைn) வெளியிட வேண்டுமென்ற நோக்கத்திற்காகவல்ல, மற்றவர்களின் எதிர்வினையைப் (சநளிழளெந) பொறுத்ததாகவே நடைபெறுகின்றதென சட்டி கருதுகிறார். இதனைப் பெறாதவிடத்து மனக் கவலையும் சீற்றமும் ஏற்படுகின்றன. மனிதன் வெடிமருந்தைப் போன்று சும்மா வெடித்துச் சிதறுவதில்லை. அவனுடைய மனக் கொந்தளிப்புக்குஞ் சீற்றத்திற்கும் காரணமில்லாமலில்லை. கலவியின்பத்திற் கூட ஒருவர் மற்றவரின் எதிர்வினையை வேண்டி நிற்கின்றார். தாய்மையின் நிறைவென்பது பால் வேதனையை குறைப்பது மட்டுமன்று. அதிலும் மேம்பட்டது. அன்பென்பது உணர்ச்சி வெளியீட்டையும் எதிர்வினையையும் வேண்டி நிற்குந் தலையான, தன் நிலையான தேவை என்பதை பிராயிடு மறுப்பதினால், இசைவைப் பெறாதவிடத்து ஏற்படுங் கொந்தளிப்பிற்கும், சீற்றத்திற்கும் அவர் விளக்கங் கொடுக்கவில்லை. மனிதன் இயல்பாகவே அழிவை விரும்புகின்றவன்@ இத் தலையான, தன் நிலையான அழிவியல் புணர்ச்சி உந்துகிறது என பிராயிடு நம்பினார். ஆனால், பிராயிடுவின் சீடர்களிடையே இதைப் பற்றிக் குறிப்பிடத்தக்க கருத்து வேற்றுமை நிலவுகின்றது. தம்மைப் பாதிக்காத வகையிலே தம் உணர்ச்சிகளை வெளியிடும் தனி ஆட்களின் தொகுப்புத்தான் மனித இனம்@ அவர்கள் தம்மையும் மற்றவர்களையும் அழிக்க வேண்டுமென்பதற்காகவே அழிக்கிறார்கள்@ - இதுவே பிராயிடு அளிக்கும் மானிட தரிசனமென்கிறார் சட்டி. மேற் கூறியவற்றிலிருந்து பிராயிடுவின் சோர்வு மனப்பான்மை (pநளளiஅளைஅ) நன்கு புலனாகும். அன்பு, பாலுணர்ச்சியையன்று, சமூகத்தைச் சார்ந்தது. அது பிறப்புறுப்புக்களின் வேட்கையிலிருந்தல்ல (பநnவையட யிpநவவைந) தற்காப்பு இயல்புணர்ச்சிகளிலிருந்து தோன்றுகிறது என சட்டி வற்புறுத்துகிறார். அன்பையோ பொது நலப் பண்பையோ (யடவசரளைஅ) பாலுணர்ச்சியிலிருந்து பிராயிடுவாற் பெயர்த்தெடுத்துத்தர முடியவில்லை. வெறுப்பு தன்நிலையான, தவிர்க்க முடியாத, தலையாய இயல்புணர்ச்சி அன்று என்பதைப் பிராயிடு உணரவில்லை. மற்றவர்களின் இசைவைப் பெற விரும்பும் நேர் நிலையான (pழளவைiஎந), தலையாய உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதைப் பிராயிடு ஏற்க மறுக்கிறார்.

தொடக்கத்திலிருந்து, பிள்ளை தாயின் பாதுகாப்பில் வளருகின்றது. தாய்தான் பிள்ளைக்கு உணவூட்டுப் பாதுகாப்பளிக்கின்றாள். இருவருக்குமிடையே உள்ள தொடர்பு பாலுணர்ச்சியைச் சார்ந்ததன்று. இந்நெருங்கிய தொடர்புதான் அன்பின் பிறப்பிடம் என்கிறார் சட்டி. தாய் அன்பு பொழிய மறுத்தால், பிள்ளையிடம் வெறுப்பும் அச்சமுந் தோன்றும். வெறுப்பு, மனிதனின் அடிப்படையான அழிவியல்புணர்ச்சியின் விளைவே எனக் கருதிய பிராயிடு. போர் தவிர்க்க முடியாதது@ மேலும், அஃது உயிரியல் ரீதியாகப் பயனுடைத்து எனத் திருவாய் மலர்ந்தது வியப்பன்று. இத்தகைய பிறழ்வு மிகு கருத்தை அறிவுடையான் எவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அன்பும் வெறுப்பும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள்.

தகப்பன் விதை அடித்துவிடக் கூடும் என்ற அச்சத்தினாலே (ஊயளவசயவழைn ஊழஅpடநஒ) தூண்டுகை அடக்கம் (சநிசநளளழைn) ஏற்படுகின்றதெனப் பிராயிடு கருதினார். தாயின் அன்பு தேவைப்படுவதனாற்றான் இவ்வாறு நடைபெறுகின்றது என்பது சட்டியின் கருத்தாகும். பாலுணர்ச்சியைச் சார்ந்த பொறாமையும் (விதையும் அச்சம் இதனை வலியுறுத்துகின்றது), ஆண்குறிமீது பெண்களுக்கு ஏற்படும் பொறாமையும் சமூகம் வளர்ச்சியடைவதற்கு மிக முக்கியம் எனப் பிராயிடு விளக்கினார். தாயும் பிள்ளைகளும் அடங்கிய குழுவே சமூகத்திற்குக் கருவாய் அமைந்திருக்க வேண்டுமெனச் சட்டி கருதுகின்றார். அன்புதான் சமூக வாழ்வின் ஊற்று என்கிறார். அவப்பேறாக, இன்று அன்பு ‘தீட்டு’ப் பொருளாகக் கருதப்படுகின்றது. அறிவியற்றுறையின் வளர்ச்சிக்கு பற்றற்ற நோக்கு (னநவயஉhநன ழரவடழழம) இன்றியமையாதது. இது விஞ்ஞான ஊழியாகையால், இத் ‘தீட்டு’ மனப்பான்மையும் வளர்த்துள்ளது.

சமயம் வெறும் மூடநம்பிக்கை எனப் பிராயிடு நினைத்தார். சமயம் ஒரு நோயல்ல, அது மனநோயைத் தீர்க்கவல்லது என்கிறார் சட்டி. கலை, இலக்கியம், பண்பாடு போன்றவை பாலுணர்ச்சித் தூண்டுகைகளைப் புடமிடுவதற்கு (ளரடிடiஅயவந) உதவுகின்றன என்னுங் கொள்கையைச் சட்டி ஏற்கவில்லை. முன்பு தாய்க்கும் பிள்ளைக்குமிடையே இருந்த அன்புப் பிணைப்பு வகித்த இடத்தை அவைந நிரப்புகின்றன என்பது சட்டியின் கட்சி. முன்பு தாய் வகித்த இடத்தைப் பின்பு சமூகச் சூழல் நிரப்புகின்றது.

பிராயிடுவின் கோட்பாடுகளே ஒருவகை நோயெனச் சட்டி அவற்றைச்சாடுகிறார். அவற்றிற் கோட்பாட்டு ரிதியாக அன்பிற்கு இடமில்லாதபோதும், பிராயிடுவும் அவரது சீடர்களும் மனநோயுற்றவர்களைக் குணப்படுத்த முயலும் போது, அவர்களுடன் அன்புத் தொடர்புகள்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பிராயிடு குலத் தலைவர் பண்பாட்டிலே (Pயவசயைசஉhயட உரடவரசந) வளர்ந்தவர். இப்பின்னணியை அவருடைய கருத்துக்களில் ஆதிக்கஞ் செலுத்தியது. சொந்த வாழ்க்கையிலேற்பட்ட அனுபவங்கள் அவருடைய உட்கோட்டங்களுக்குக் காலாகவிருந்தன.

1908 – ஆம் ஆண்டளவிலிருந்து கோலோச்சத் தொடங்கிய பிராயிடுவின் கொள்கைகள் இன்று பெரும்பாலும் வலியிழந்து விட்டன. எமது இயல்புணர்ச்சிகள்மீது சமூகம் விதிக்கும் தடைகளே மனக் கோளாறுகளுக்குக் காரணம் என்ற கருத்து, இன்று பெரும்பாலும் ஏற்கப்படுவதில்லை. இயல்புணர்ச்சிகளைத் தடையின்றிச் செயற்படவிடுவதே சிறந்த வழி என்பதை வின்னிகொட் (றுinniஉழவவ), பெயபெயன் (குயசைடியin), கன்திரிப் போன்றோர் மறுக்கின்றனர். ஆனால் பிராயிடுவின் கருத்துக்கள் தனிமனித வாதத்தில் நம்பிக்கை வைத்திருந்த வணிக சமுதாயத்திற்கு மிகவும் வசதியாகவிருந்தன என்பது சொல்லாமலே விளங்கும். மனிதனின் உள்ளாந்த இயல்புகள் (Pழவநவெயைடவைநைள) மலர்வதற்குச் சமூகம் இன்றியமையாதது. சமூகக் கட்டுப்பாடுகளல்ல. குழந்தைப் பருவத்தில் அன்பின்மையே மனக்கோளாறுகளுக்குப் பின்பு வழிகோலுகின்றது எனத் தற்கால உளவியலாளர் பலர் இயம்புகின்றனர். ‘முதற் கோணல் முற்றங் கோணல்’ என்ற பழமொழி. உளவியல் ரீதியாக எத்துணை பொருத்தமானது!

உளவியற்றுறையில் மீண்டும் பகுத்தறிவைப் புகுத்தத் தான் முயலுவதாகச் சட்டி கூறுகிறார். அவருடைய நூல் சிந்தனையைத் தூண்டிப் பெரு விருந்தளிக்கின்றது.


புதிய வர்க்கம்
பொதுவுடைமை அமைப்பினைப்
பற்றிய பகுப்பாராய்ச்சி

வுhந நேற ஊடயளள
டில ஆடைழஎயn னுதடையள

இன்றைய உலகு இருபெரும் பாசறைகளாகப் பிரிந்திருக்கின்றது. முதலாளித்துவ அமைப்பிலே நம்பிக்கையுள்ள நாடுகள் அமெரிக்காவின் தலைமையிலே ஒரு கூறாகவும், பொதுவுடைமைப் பற்றுள்ள நாடுகள் ரூஷியாவினதும், சீனாவினதும் தலைமையில் மறு கூறாகவும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் வளர்ச்சியடைந்து வரும் சில ஆசிய ஆபிரிக்க நாடுகள் நடுநிலைமை வகிக்க முனைகின்றன. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, இந்நாடுகள் கூட மறைமுகமாக பக்கஞ் சாரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.

நாடுகள் இவ்வாறு பிரிந்துள்ள போது ஒரு சாரார் மற்றவர்களைத் தாக்குவதும் கண்டிப்பதும் இயல்பே. எதிரிகளுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளும் பிளவுகளும் ஏற்படும் போது மற்றவர் அதனைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வது உலக வழக்கு. இவ்வாறுதான் பொதுவுடைமையைத் தாக்கி ரூஷிய நாட்டைச் சேர்ந்த யாராவது நூலை வெளியிட்டால் அமெரிக்காவும் அதனைச் சார்ந்த நாடுகளும் ஆரவாரிக்கின்றன. அது மட்டுமல்ல, அத்தகைய நூல்களை அமெரிக்கா போன்ற நாடுகள் வெளியிடுவதற்கும் முனைந்து நிற்கின்றன. இதற்கமையவே ஸ்டாலின் மகளின் வாழ்க்கை வரலாற்றினை அமெரிக்க வெளியீட்டு நிலையமொன்று விரைவில் வெளியிடவிடுக்கின்றது.

ஜிலாசின் ‘புதிய வர்க்கம்’ என்னும் நூலை அமெரிக்க வெளியீட்டு நிலையம் ஒன்றே வெளியிட்டது. மார்க்கம் எங்கல்சும் வெளியிட்ட பொதுவுடைமைப் பிரகடனத்திற்கு இந்நூல் எதிர்ப்பிரகடனம் என வெளியீட்டாளர் இதனை வர்ணித்தனர். பொதுவுடைமையினை இந்நூல் சுக்கு நூறாக்குகின்றது என்றெல்லாம் வெளியீட்டாளர் கூறினர். இவ்வர்ணனையில் எத்துணை உண்மையிருக்கின்றதென்பதைப் பின்பு ஆராய்வோம்.

இந்நூலின் ஆசிரியர் ஜிலாஸ் யார்? ஒரு காலத்திலே யூகோஸ்லாவியாவின் உப ஜனாதிபதியாய் இருந்தவர் ஜிலாஸ். ஆனால், அவருக்கும் ஜனாதிபதி டிட்டோவிற்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதின் விளைவாக 1955ல் ஜிலாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு முடிந்ததும், அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வுச் சம்பளம் நிறுத்தப்பட்டது. அவரும் குடும்பத்தினரும் பல வழிகளிலே துன்புறுத்தப்பட்டனர். இரகசியப் போலிசார் இவர்களை எங்குந் தொடர்ந்து சென்றனர். இவரையும் மனைவியையும் தாக்குவதற்குப் பலர் எத்தனித்தனர். கணவனையும் மனைவியையும் பிரிப்பதற்குக் கூடத் தந்திரங்கள் சில கையாளப்பட்டன. ஒருநாள் ஜிலாசின் மனைவி தெருவால் சென்று கொண்டிருந்த பொழுது, கூச்சலிட்ட படி ஒரு பெண் அவர் முன்பு வந்து நின்றாள். தான் ஜலாசின் வைப்பாட்டி என்றும், ஜிலாசிற்கு அவரது மனைவி மணவிலக்கு கொடுக்கவேண்டும் என்றும் இப்பெண் வற்புறுத்தினாள். போலிசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். பின்பு, இது சம்பந்தமாக வழக்கு நடந்தது. ஜிலாசைச் சந்தித்தவர்களை போலிசார் குறுக்கு விசாரணை செய்ததுடன், அவரை இனிமேல் சந்திக்கக் கூடாதென்றும் ஆணையிட்டனர். சிலரை வேவு பார்க்கும்படியும் போலிசார் தூண்டினர். அவருடைய உறவினர் சிலர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டனர். ஈற்றிலே ஹங்கேரியில் சோவியத் படைகள் தலையிட்டபோது, அச்செயலைக் கண்டிக் காததையிட்டு யூகோஸ்லாவிய அரசாங்கம் மீது ஜிலாஸ் கணை தொடுத்தார். இதன் பயனாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. பின்பும் ஒரு முறை சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.

சுரண்டலை ஒழித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைந்தெறிந்து, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதே மார்க்சீயவாதிகளின் இலட்சியமாகும். பொதுவுடைமை நாடுகளிலே, வர்க்கபேதமற்ற சமுதாயம் உருவாக்குவதற்குப் பதில், புதிய வர்க்கம் அங்கு வேரூன்றியுள்ளது என்பதே ஜிலாஸ் வற்புறுத்தும் முக்கிய கருத்தாகும். இதனை ஆராயுமுன்பு ஜிலாசின் நூலில் பொதிந்துள்ள மற்றும் பிரதான கருத்துக்களை எடுத்துரைப்பது நன்மை பயக்கும்.

புரட்சிவாதிகளுக்குச் சாதகமாக முடிவுற்ற முதற் புரட்சி பொதுவுடைமைப் புரட்சியே எனக் குறிப்பிடும் ஜிலாஸ், பொதுவுடைமைவாதிகள் தமது கொள்கைகளைச் செயற்படுத்த முடியாதிருப்பதால் அவர்களுடைய செயல்களுக்கும் சித்தாந்தத்திற்குமிடையே எப்பொழுதும் முரண்பாடு இருக்கும் எனசுட்டிக் காட்டுகின்றார். இவ்வுண்மையைப் பொதுவுடைமைவாதிகள் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள முடியாததால், தாம் சமூகவுடைமையை உருவாக்குவதாகக் கூறிக்கொண்டு, மக்களை முன்பு எப்போதாது வரலாறு கண்டறியாத வகையில், சுரண்டுகின்றனர். அரசே பொருளாதார அமைப்பு மீது ஆதிக்கஞ் செலுத்தினால், பொதுவுடைமை அமைப்பினை அரசு முதலாளித்துவம் எனக்கூற முடியும் என்றும், ஆனால் இன்று பொதுவுடைமை நாடுகளிலே அரசு புதிய வர்க்கத்தின் கருவியாக இருப்பதனால் அக்கூற்று பொருந்தாதென்றும் ஜிலாஸ் விளக்குகின்றார். ஆதலால், பொதுவுடைமை நாடுகளிலே அரசு முதலாளித்துவம் உருவாகக் கூடிய அறிகுறிகள் தென்பட்டால் அவை வரவேற்க வேண்டிய முற்போக்கான அம்சம் என அவர் கருதுகின்றார். இப்பொழுது புதிய வர்க்கம் கொடுங்கோலோச் சுகின்ற போதிலும், அதன் அழிவுக்கான அம்சங்கள் அதிலேயே அடங்கியுள்ளதாக ஜிலாஸ் கருதுகின்றார். பொருளாதாரத்தைத் தொழில் மயமாக்க வேண்டிய நிர்ப்பந்தமே பொதுவுடைமையை இன்றியமையாத தாக்கியது. அதே சமயம் இத்தொழில் மயம் பொதுவுடைமை ஆட்சி முறையை தேவையற்றதாய் ஆக்குகின்றது என்பது ஜிலாசின் கட்சியாகும். புதிய வர்க்கத்தினரிடையே பிளவுகள் தோன்றி, பின்பு வௌ;வேறு பொதுவுடைமை நாடுகளுக்கிடையே வேற்றுமைகள் தலையெடுத்து, ஈற்றிலே, பொதுவுடைமையி; சர்வாதிகாரம் தகர்த்தெறியப்படுமென அவர் குறிப்பிடுகின்றார்.

அவரது கருத்துப்படி கூட்டுத்தலைமையும், தேசியப் பொதுவுடைம வாதமும் பொதுவுடைமை சீர் குலைகின்றது என்பதற்கான அறிகுறிகளாம். வர்க்க பேதமற்ற சமுதாயம் என்ற இலட்சியத்திற்கும் தமது வர்க்க ஆதிக்கத்திற்குமிடையேயுள்ள முரண்பாட்டை புது வர்க்கத்திற்கு சிலர் உணர முற்படுவது பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் துரிதப் படுத்தும். இக் கட்டத்தில் படை வீரர் சர்வாதிகாரம் ஏற்பட்டால் அது முன்னேற்றமானது என ஜிலாஸ் கருதுகின்றார்.

மேற்கூறப்பட்டவைகளே ஜிலாசின் முக்கிய கருத்துக்களாகும். மார்க்ஸ், கெகலை அடிதலை மாற்றினார் என்று கூறுது வழக்கம். இதே கைங்கரியத்தைத்தான் ஜிலாஸ் மார்க்சுக்கு செய்திருக்கின்றார். பொதுவுடைமைப் புரட்சி, வர்க்கபேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக புதிய வர்க்கத்தின் கொடுங்கோன்மக்கு தவிர்க்க முடியாது வழிகோலுகின்றது என்பது ஜிலாசின் வாதம். இவரது துணிபு மார்க்ஸ் வரையறுத்த மையக் கருத்தை தலைகீழாக்குகின்றது. எவ்வாறு மேற்கு நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஏகபோக முதலாளித்துவமும், ஏகாதி பத்தியமும் இன்றியமையாதனவாகினவோ அவ்வாறே மிகப் பின்தங்கிய கிழக்கு நாட்டின் விருத்தியிலே பொதுவுடைமைவாதிகளின் கொடுங்கோன்மையும், சுரண்டலும் தவிர்க்க முடியாதவை என ஜிலாஸ் கூறினார். மார்க்சீய வாதத்தை மறுப்பதற்கு, ஜிலாஸ் மார்க்சீய தர்க்க முறைகளைக் கையாண்டிருப்பது குறிக்கற்பாலது. இயந்திரத்தின் இயக்கத்தைப் போன்று வரலாற்று நிகழ்ச்சிகள் கட்டவிழ்கின்றன என்ற தவறான எண்ணத்தின் சாயலை ஜிலாசிடமும் நாம் அவதானிக்கலாம். ஆனால், வேடிக்கை என்னவெனில் இக்குற்றச்சாட்டையே ஜிலாஸ் பொதுவுடைமை வாதிகள் மீது சுமத்துகின்றார். தமது சொந்த அனுபவங்களைப் பொது நியதியாக்கி, அவை வரலாற்றின் மாற்ற முடியாப் போக்கென பறை சாற்றுபவர்களின் ஜிலாசும் ஒருவர். பின் தங்கிய நாட்டைத் தொழில் மயமாக்குவதற்குப் பொதுவுடைமைப் புரட்சி இன்றியமையாதது என்று ஜிலாஸ் கூறும் போது அவர் யூகோஸ்லாவியா, ரூஷியா, சீனா போன்ற நாடுகளிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளையே கருத்திற் கொள்கின்றார். இப் பின்தங்கிய நாடுகளிலே பொதுவுடைமைக் கட்சியின் புரட்சிக்குப் பின்பே பொருளாதாரம் பெருமளவிலே தொழில் மயமாக்கப்பட்டது. இதைப் பொது நியதியாகக் கொண்டு எல்லா நாடுகளிலும் இவ்வாறுதான் நடை பெறல் வேண்டுமெனக் கொள்ளலாகாது. இந்தியாவிலே பொதுவுடைமைப் புரட்சி நிகழாத போதிலும் அங்கு பொருளாதார தொழில் மயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்றுதான் அவருடைய ஏனைய கூற்றுக்களும், புரட்சிகரக் கட்சியிடம் கட்டாயமாகக் கெட்டியான கோட்பாடிருக்கும், பொதுவுடைமைவாதிகள் அதிகாரத்திற்கு வந்ததும் அவர்கள் சீரழிந்து விடுவார்கள் என்ற கூற்றுகள் சொந்த அனுபவங்களைப் பொது நியதியாக்க விழைவனவே. பொதுவுடைமை நாடுகளின் ஆட்சியாளர் சர்வாதிகாரிகளாக விளங்குகின்றனர் எனக் கூறும் ஜிலாஸ், மேற்கத்திய நாடுகள் இவற்றிற்கு எதிர் முரணாய்த் திகழ்கின்றன என்றும் கருதுகின்றார். மேற்கத்திய நாடுகளில் நிலவும் நாடாளுமன்றக் குடியாட்சி முறை பொதுவுடைமை நாடுகளிலும் வேரூன்ற வேண்டும் என்பதே ஜிலாசின் வேணவா.

பொதுவுடைமைப் புரட்சி வர்க்க பேதங்களை ஒழிப்பதற்குப் பதில் புதிய வர்க்கத்தை உருவாக்கியிருக்கின்றதென்பதே ஜிலாசின் மையக் கருத்து. வர்க்கம் என்ற பதத்தினை மார்க்சின் வரையறைக்கேற்பவே கையாள்வதாக ஜிலாஸ் கூறுகின்றார்.

இப் புதிய வர்க்கத்தின் ஆதிக்கத்திலும் கட்டுப்பாட்டிலுமே நாட்டுமயமாக்கப்பட்ட சொத்துக்கள் யாவும் உள எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறெல்லாம் உறுதியாகக் கூறிவிட்டு முன்னுக்குப்பின் முரணான முறையிலே ஜிலாஸ் பின்பு எழுதுகின்றார். திறமையுள்ள எவர்க்கும் இப்புதிய வர்க்கத்தில் இடமுண்டு என அவர் ஒப்புக்கொள்கிறார். பின்பு இப்புதிய வர்க்கம் பொருளாதார அடிப்படையில் எழுந்த வகுப்பன்று என்பதையும் ஒப்புக்கொள்கின்றார். புதிய வர்க்கம் என்ற பதம் ஒரு உருவகமேயன்றி வேறொன்றுமில்லை. ஆனால் இதை ஜிலாஸ் வெளிப்படையாக ஏற்றிருந்தால் அவருடைய நூல் வலு விழந்திருக்கும். ஆனால், ஜிலாஸ் கையாண்ட உருவகம் மிக நுட்பமான ஓர் உண்மையை உணர்த்துகின்றது. வர்க்க பேதங்களைக் களைந்தெறிவதுதான் புரட்சியின் நோக்கம். ஆனால், புரட்சி வெற்றி பெற்றதும் ஆட்சி பீடத்தில் அமர்பவர்களில் சிலர், பழைய ஆளும் வர்க்கத்தினரின் போக்கையே படைப்பிடிக்கின்றனர். இவர்களைப் புதிய வர்க்கத்தினர் என்று கூறுவதைவிட பழைய ஆளும் வர்க்கத்தினரின் மிச்சில்கள் என்று சொல்வதே பொருந்தும். இத்தகைய போக்கு இன்னும் ஆட்சியாளரை விட்டகலவில்லை என்பதே உண்மை.

இவ்வுளப்பாங்கை மாற்றியமைப்பதே சீன கலாசார புரட்சியின் நோக்கங்களில் ஒன்றாகும்.

மேற்கூறியவற்றிலிருந்து ஜிலாசின் நூல் மார்க்சீய வாதத்தினை சுக்கு நூறாக்குகின்றது என்ற கூற்று ஆதாரமற்றது என்பது விளங்கும். ஆனால், ஜிலாஸ் சுட்டிக்காட்டும் சில கசப்பான உண்மைகளைப் பொதுவுடைமை வாதிகள் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். அப்படிச் செய்ய மறுப்பின் அது மூட பக்தியின்பாற்படும் என்பது வெளிப்படை.


பிரித்தானிய யாப்பு

வுhந டீசவைiளா ஊழளெவவைரவழைn
டில ர்.சு.பு. புசநயஎநள

பிரித்தானிய யாப்பினை விசாரணை செய்யும் அநேக நூல்களை அதனைச் சட்டக் கண் கொண்டே நோக்குகின்றன. இதனால், பிரித்தானிய யாப்பு சூனியத்திலே இருக்கின்றதோ என்ற மயக்கம் சிலருக்கு ஏற்படலாம். ஆனால் அரசமைப்புக்கள் (பிரித்தானிய யாப்பு உட்பட) அந்தரத் தாமரைகள் அன்று@ அவை அந்தந்தச் சமூக அமைப்புக்களின் பிரதிபிம்பங்கள் என்றும், அந்தச் சமூக அமைப்புக்களின் பின்னணியிலேதான் அவற்றினைச் செவ்வனே புரிந்து கொள்ளுதல் சாலும் என்றும் ….. கீறிவ்ஸ் பிரித்தானிய யாப்பு என்றும் நூலில் வற்புறுத்துகின்றார்.

இவருடைய நோக்கும், பிரித்தானிய யாப்பினை அவர் அணுகும் முறையும் அவரது நூலிற்குத் தனித்துவ முத்திரையைப் பதிக்கின்றன. இவர் கூறும் கருத்துக்கள் புதியனவல்ல. பேராசிரியர் லஸ்கி போன்றவர்கள் இக்கருத்துக்களை எத்தனையோ தடவைகளில் எடுத்துரைத்திருக்கின்றனர். ஆனால், மாணவர்களுக்கும், பொது வாசகர்க்களுக்கும் எழுதப்படும் ஆட்சியியல் நூல்கள் வழக்கமாக அரசமைப்புக்களை அவற்றைத் தோற்றுவித்த சமூகப் பின்னணியுடன் தொடர்புபடுத்துவதில்லை. இந்த வகையிலே கிறீவ்ஸ்ன் நூல் சாதாரண ஆட்சியியல் நூல்களிலிருந்து வேறுபட்டதாகவும் குறிப்பிடத்தக்கதாகவும் அமைந்துள்ளது.

பிரித்தானிய யாப்பென்றால் மரபுகளுக்கும் சட்டங்களுக்கும் ஏற்ப இயங்கும் நிறுவனங்களின் தொகுப்பு மட்டுமன்று, அது சமூகத்தின் அரசியற்தோற்றம் என கிறீவ்ஸ் வலியுறுத்துகின்றார். ஆதலால், பிரித்தானிய யாப்பினைப் புரிவது என்றால் சமூகத்தின் இயல்புகளை நன்கு தெரிந்திருத்தல் வேண்டுமென அவர் சுட்டிக் காட்டுகின்றார். சொத்து யார் யார் கையிலே இருக்கின்றது. தேசீய வருமானம் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. உற்பத்திச் சாதனங்கள் யார் வசம் இருக்கின்றன - இவை போன்ற விடயங்களை நன்கு தெரிந்திருந்தாற்றான் பிரித்தானிய யாப்பினைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் கிறிவ்ஸ் கூறுகின்றார். ஏனெனில் இவைதான் சமுதாயத்திலே உண்மையான அதிகாரத்தினை வரையறுக்கின்றன என அவர் இயம்புகின்றார். மேலும், மக்களின் அறிவுத் தேவைகளும், அக ரீதியான தேவைகளும் எவையென்றும், அவை எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்றும் அறிதல் இன்றியமையாதது என்கிறார். ஏனெனில், அவை தீர்க்கப்படும் முறை அதிகாரம் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதையும் அரசியல் நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கின்றது.

பிரித்தானிய யாப்பினை அதன் சமூகப் பின்னணியிலே நோக்கும் கிறீவ்ஸ் அவ்வரசமைப்பு உயர் நடுத்தர வகுப்பிற்கு பெரும்பாலும் ஒரு முகமூடியே என்கிறார். இந்த வகுப்பின் ஆதிக்கமே பிரித்தானிய அரசமைப்பிற்கு ஒருவகை இணைப்பைக் கொடுக்கின்றது எனச் சுட்டிக் காட்டுகின்றார். தொழிற் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்ததின் விளைவாக ஓரளவிற்குச் சமூக ஏற்றத் தாழ்வுகள் குறைந்துள்ள போதிலும், பாராளுமன்றத்தினதும், அமைச்சரவையின் வர்க்க அடிப்படையை இக்கட்சி மாற்றியுள்ள போதிலும், இன்றும் உயர், நடுத்தர வகுப்பே சமூகத்தில் ஆதிக்கம் பெற்றிருக்கிறது என்கிறார். இவ்வர்க்கமே ஆட்சித்துறையிலும், நீதித் துறையிலும், நிருவாகத் துறையிலும், திருச் சபையிலும், படைத்துறையிலும் உள்ள முக்கிய பதவிகளை வகிக்கின்றது. அந்த வர்க்கமே பத்திரிகைத் துறையையும், வணிகத் துறையையும், தொழிற் துறையையும் கட்டுப்படுத்துகின்றது. அதுவே அரசியல், சமூக அமைப்புக்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துகின்றது. பொருளாதார வல்லமை உள்ளவர்களுக்குத் தான் அரசியல் அதிகாரம் உண்டு. இவ்வர்க்கமே உயர் குடியினரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இவ்வர்க்கம் உயர்குடிகளுடன் தொடர்பு கொண்டு இருப்பதுடன், தனக்குச் சற்றுக் கீழே இருக்கும் வர்க்கத்தினரிடமிருந்தும் ஆள்சேர்க்கின்றது. பிரித்தானிய யாப்பு திருப்தியாய் இயங்குவதற்கு இவ்வர்க்கத்தின் பலமே கால் என கிறீவ்ஸ் விளக்குகின்றார்.

இனி ஆசிரியர் ஆட்சி நிறுவனங்களைப் பற்றிக் கூறுபவற்றைத் தனித் தனியே பார்ப்போம்.

பிரித்தானிய ஆட்சி முறையை பாராளுமன்ற முறை எனக் கூறுவது வழக்கம். ஆனால், இப்படிக் கூறுவது தவறான அர்த்தத்தைக் கொடுக்க வல்லது என கிறீவ்ஸ் சுட்டிக் காட்டுகின்றார். பாராளுமன்ற முறை எனும்பொழுது, பொது மக்கள் சபையே வழக்கமாக அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துதென்றும், அமைச்சரவை அதற்குப் பொறுப்பாளி என்றும் கருதுவதற்கு இடமுண்டு. ஆனால், இன்றைய நிலையில் இது பொருத்தமற்றது என ஆசிரியர் விளக்குகின்றார். முன்பொருகாலத்திலே சாதாரண பாராளுமன்ற உறுப்பினருக்கு அதிக செல்வாக்கு இருந்தது உண்மைதான். பாமஸ்ரன், கிளாட்ஸ்ரன், டிஸ்ரேலி போன்ற பெருந் தலைவர்களையே பொது மக்கள் சபை கவிழ்த்த தென்றால் அப்பொழுது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்த செல்வாக்கு நன்கு புலனாகும். ஆனால், 1885ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்றத்தின் பலம் குன்றி, அமைச்சரiயினதும் வாக்காளரினதும் கை ஓங்கியிருக்கின்றது. பாராளுமன்றமல்ல, பொது மக்களே ஓர் அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டும் என்ற கொள்கை இப்பொழுது வேரூன்றிவிட்டது. சாதாரண பாராளுமன்ற உறுப்பினரின் செல்வாக்கு குன்றியதற்குப் பல காரணங்கள் உள. தேர்தல் தொகுதிகளின் அளவும், கட்சியமைப்பு கெட்டியாக்கப் பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், வேறு ஏதுக்களும் உள. 19ஆம் நூற்றாண்டிலே பாராளுமன்ற உறுப்பினருக்கு சமூகத்திலே தனிப்பட்ட செல்வாக்கிருந்தது. அப்பொழுது அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாததால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வந்தராய் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இதனால் அவர்களுக்குச் சமூகத்தில் மதிப்பும் உண்டு. ஆனால், இன்றோ பாராளுமன்ற உறுப்பினர்க்கு சமுதாயத்தில் தனிப்பட்ட மதிப்பு இருக்கின்றது எனத் துணயவியலாது. மேலும், சட்டாமாக்கதல் இப்பொழுது பெருகியிருப்பதனால், விவாத நேரத்தினைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. இதுவும் இயல்பாகச் சாதாரண பாராளுமன்ற உறுப்பினரின் செல்வாக்கை மட்டுப்படுத்த உதவியிருக்கின்றது. இத்துடன் தனிப்பட்ட உறுப்பினர்களாற் கொண்டுவரப்படும் முறிகள் சட்டமாவதற்கு அதிக வாய்ப்புக்கள் இல்லை. இப்பொழுது தனிப்பட்ட அங்கத்தவரல்ல. அமைச்சரவையே பெரும்பாலும் சட்டங்களை ஆக்குவதற்கு முனைகின்றது. இவை யாவும் சாதாரண உறுப்பினரின் செல்வாக்கினைக் குன்றச் செய்வதற்கு வழி வகுத்திருக்கின்றன.

இவற்றைத் தவிர பாராளுமன்ற உறுப்பினர்களாவதற்குக் கூடிய வாய்ப்பு பெரும்பாலும் நடுத்தர வகுப்பினர்களாவற்குக் கூடிய வாய்ப்பு பெரும்பாலும் நடுத்தர வகுப்பினருக்கே நடைமுறையில் உண்டு. வணிகத் துறையிலும், தொழிற்றுறையிலும் வேலை பார்க்கும் பணியாளர் அரசியலில் ஈடுபடமுடியாதென அவர்களது முதலாளிமார் கட்டுப்பாடு விதிப்பதினாலும், இத்தகைய கட்டுப்பாடுகளை உள்@ராட்சி மன்றங்களும், அரசாங்கமும், பல்கலைக்கழகங்களும் மேற்கொள்வதனாலும், திறமைமிக்க எத்தனையோ பேருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றுவதற்கு வாய்ப்புச் சித்திப்பதில்லை. இதுவும் உறுப்பினர்களின் செல்வாக்குக் குன்றுவதற்கு ஓர் காரணம் எனலாம்.

19ஆம் நூற்றாண்டிலே பொதுமக்கள் சபையில் அங்கத்துவம் வகித்தவர்கள் ஏறக்குறைய ஒரே வர்க்கத்தினராய் இருந்ததினால் அவர்களிடையே பெரும்பாலும் கருத்து ஒற்றுமை நிலவியது. ஆனால், இன்றோ சமுதாயத்திலே நிலவும் வர்க்கப் போராட்டம் பொது மக்கள் சபையின் செல்வாக்கினைக் குன்றச் செய்துள்ளது. உறுப்பினர்களுக்கிடையே நிலவும் வர்க்க பேதங்கள் பொதுமக்கள் சபை ஒரு சீராய் இல்லாததற்குக் காரணம் என்கிறார் கிறீவ்ஸ்.

பிரபுக்கள் சபையை அடியோடு மாற்ற வேண்டும் என ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கூறப்பட்டு வந்த போதிலும், அஃது இன்னும் உயிர்த்திருக்கிறது. அது மட்டுமல்ல, அண்மையில் நடந்தது போல, தொழிற்கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும்போது பிரபுக்கள் சபை அதற்கு தொல்லை கொடுக்கவும் வல்லது. பிரபுக்கள் சபையின் வரலாற்றிணை நுணுகி ஆராய்பவர், அது செல்வந்தரின் நலவுரிமைகளைப் பேணுவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்து வந்துள்ளது. என்பதனை அவதானிக்கத் தவறமாட்டார் என கிறீவ்ஸ் கூறுகின்றார். எடுத்துக்காட்டாக ஐரிஸ் சுய ஆட்சி பிரச்சினையைக் குறிப்பிடுகின்றார். பிரபுக்கள் சபையிலே ஐரிஸ் நிலக் கிழார்கள் செல்வாக்குப் பெற்றிருந்தமையால் அயர்லாந்திற்குச் சுய ஆட்சி வழங்குவதைப் பிரபுக்கள் சபை எதிர்த்தது. இதனால் ஏற்பட்ட இரத்தக் களரிக்கு இச்சபையே பொறுப்பாளி என கிறிவ்ஸ் கூறுகின்றார். பிரபுக்கள் சபை என்ற ஒன்று இல்லாதிருந்தால் சுய ஆட்சி வழங்கப்பட்ட ஆண்டிற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கொடுக்கப்பட்டிருக்கமென அவர் சுட்டிக் காட்டுகின்றார். நிலக்கிழார்கள் பிரபுக்கள் சபையிலே செல்வாக்குப் பெற்றிருந்தமையால் நிலபுலங்களைப் பற்றிய சட்டங்களிலே அதிக அக்கறை காட்டியமை வியப்பன்று. தமது நலவுரிமைகள் பாதிக்கப்படா வண்ணம் எச்சரிக்கையாய் இருந்தனர். இதற்கு எடுத்துக் காட்டாக பிரபுக்கள் சபை 1907ஆம் ஆண்டிலும், 1908ஆம் ஆண்டிலும் நிலப் பெறுமதி மதிப்பீட்டு முறிகளை நிராகரித்தமையைக் குறிப்பிடலாம். இதன் விளைவாக அரசைச் சேர்ந்திருக்க வேண்டிய அதிக வருமானம் நிலக்கிழார்களின் கைகளிலே சிக்கியது. பிரபுக்களுக்குச் சம்பளம் வழங்கப்படாத போதிலும், அவர்களது இத்தகைய நடவடிக்கைகளினால் சமதாயம் அதிக நாட்டமடைந்தது என கீறிவ்ஸ் உறைப்பாகக் கூறுகிறார். நில புலங்களைப் பற்றி மட்டுமல்ல, தொழில் அதிபர்களினதும் நலவுரிமைகளைப் பேணுவதிலும் பிரபுக்கள் சபை முனைந்திருக்கின்றது. தொழிற்கட்சி நிலக்கரிச் சுரங்க முறியினை சமர்ப்பித்தபோது பிரபுக்கள் சபை அதைத் தாமதித்து வைத்ததுடன், நிலக்கரிச் சுரங்க சொந்தக்காரர்களாகிய சில பிரபுக்களின் தூண்டுதலின் பேரில் முக்கிய திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்தியது. ஒரே கட்சியும் (பழைமைக் கட்சி), ஒரே வர்க்கமும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் ஒழிய. மற்றும்படி பிரபுக்கள் சபை நிலைத்திருப்பதற்கு நியாயம் இல்லை என கிறீவ்ஸ் கூறுகின்றார்.

படைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதும் அங்கும் வர்க்க பேதங்கள் நிலவுவதாக கிறீவ்ஸ் கூறுகின்றார். அநேகமாக உயர் பதவிகள் வகிப்பவர்கள் மேல் வர்க்கத்தினர் என்றும், சாதாரண போர் வீரர் கீழ் வகுப்பார் என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். இதனால் பொதுவாக பிரித்தானிய படைகள் பழமையைப் பேணும் மனப்பான்மை கொண்டவை என அவர் குறிப்பிடுகின்றார். பழைய சமூக அமைப்பினைப் பேணிப் பாதுகாப்பதற்குப் பிரித்தானிய படைகள் சிறந்த கருவி என அவர் மேலும் கூறுகின்றார். ஆனால், சமூக அமைப்பிலே அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரவல்ல ஒரு முற்போக்கான அரசாங்கம் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது, அதற்கு கீழ்ப்படிந்து பிரித்தானிய படைகள் நடக்குமா என்பது ஐயத்திற்குரியது என கிறீவ்ஸ் அபிப்பிராயப்படுகின்றார். சாதாரண காலங்களிலே பிரித்தானியப் படைகள் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்துவந்துள்ள போதிலும், அயர்லாந்து சுய ஆட்சிப் பிரச்சினை தோன்றிய பொழுது பிரித்தானியப் படை, குறிப்பாக உயர் அதிகாரிகள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக நடக்க எத்தனித்தமை ஈண்டு குறிக்கற்பாலது.

நீதிபதிகள், அதுவும் பிரித்தானிய நீதிபதிகள், பக்கம் சாராது நேர்மையாக நடப்பவர்கள் எனப் பொதுவாக நம்பப்படுகின்றது. அவர்களது நேர்மையில் நாம் நம்பிக்கை வைத்திருந்தாலும், அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தமது வர்க்கத்தினைப் பிரதிபலிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அமெரிக்காவின் உச்ச மன்றத்தின் வரலாற்றினை நாம் அவதானிப்போமாயின் இவ்வுண்மை புலப்படும். அங்கு கடமையாற்றும் நீதியரசர்கள் பொதுவாக இரு குழுக்களாகப் பிரிந்திருப்பர். ஒரு குழு முற்போக்கான சட்டங்களை ஆதரிப்போராயும், ஏனையவர்கள் பழைமையைப் பேணும் மனப்பான்மை கொண்டோராயும் விளங்குவர். இத்தகைய வர்க்கச் சார்பு பிரித்தானிய நீதிபதிகளிடமும் நிலவுகின்றதெனக் கிறீவ்ஸ் கூறுகின்றார். இதற்குக் காரணம் நீதிபதிகள் பொதுவாக உயர் வகுப்பைச் சேர்ந்தவராக இருப்பதே. தொழிலாள வர்க்கத்தின் நிலையினை உயர்த்தும் பொருட்டு பாராளுமன்றம் பல சட்டங்களை இயற்றிய பொழுதிலும், அச்சட்டங்கள் முதலாளிகளின் நலவுரிமைகளை நியாயமற்ற முறையில் பாதிக்கின்றன எனக் கருதிய சில நீதிபதிகள் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணாகத் தீர்ப்புக்கள் அளித்தனர் என கிறீவ்ஸ் சுட்டிக் காட்டுகின்றார்.

பிரித்தானியாவின் கல்வியமைப்பும் சமுதாயத்திலே நிலவும் வர்க்க ஏற்றத் தாழ்வுகளை மேலும் வலியுறுத்துகின்றன என கிறீவ்ஸ் அபிப்பிராயப்படுகின்றார். இத்தகைய வர்க்கபேதம் பிரித்தானியாவின் கல்விமுறை முழுவதிலும் ஊடுருவியிருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். தனிப்பட்ட பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களிலிருந்துதான் தொழிற்றுறையிலும், வணிகத்துறையிலும், அரசாங்கத் துறையிலும் உயர் பதவிகளை வகிப்பவர்கள் பொதுவாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். செல்வத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பே இயற்கையானதென மாணவர்களை ஏற்றுக் கொள்ளும்படி இக்கல்வியமைப்பு தூண்டுகிறது. இதனால், இக்கல்வியமைப்பு எவ்வாறு பிரித்தானிய அரசியலைப் பாதிக்கின்றது என்பதனை மேலும் விளக்க வேண்டியதில்லை.

குடியாட்சியிலே பொதுசன அபிப்பிராயம் மிக முக்கியமான ஓர் இடத்தினை வகிக்கின்றது எனக் கூறுவது வழக்கம். இதை ஓரளவிற்காயிம் ஏற்றுக் கொள்ளலாம். இந்தப் பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பத்திரிகைகள் மிக முக்கிய பங்கெடுக்கின்றன என்பதில் ஐயமில்லை. பிரித்தானிய பத்திரிகைத்துறையைப் பொறுத்தவரையில் மிகப் பிரபலமான பத்திரிகைகள் ஒரு சிலரின் கைவசமிருப்பது கண்கூடு. செல்வந்தரின் ஆதிக்கத்தில் பெரும்பாலான பத்திரிகைகள் இருப்பதனால் அவை பிற்போக்கானவையாகவோ அல்லது பழைமைப் பேணுபவையாகவோ இருப்பதில் வியப்பில்லையென கிறீவ்ஸ் கூறுகின்றார். இப்பத்திரிகைகளிலிருந்தே மக்கள் பெரும்பாலும் செய்திகளைப் பெறவேண்டியிருப்பதனால் அவை எவ்வாறு மக்களின் அபிப்பிராயங்களை உருவாக்க வல்லன என்பதை விரித்துரைக்க வேண்டியதில்லை. பெரும் பத்திரிகைகளுக்கு இத்தகைய செல்வாக்கு இருப்பதனால் அவர்களுடைய உறவை அரசாங்கங்கள் நாடுவதில் வியப்பில்லை. அமைச்சர்கள் பத்திரிகைச் சொந்தக்காரர்களுடன் உறவாட, நிருவாகிகள் பத்திரிகையாளருடன் தொடர்பு கொள்ள, இதன் விளைவாக முக்கிய சமயங்களிலே பெரும்பாலான பத்திரிகைகளில் வரும் செய்திகளும் தலையங்கங்களும் ஒத்தவையாக இருக்கின்றன என கிறீவ்ஸ் சுட்டிக் காட்டுகின்றார். பத்திரிகைச் சொந்தக்காரர்களுக்குச் சாதகமான ஓர் அரசாங்கம் ஆளுகையில் அதற்குப் பத்திரிகைகள் பக்கபலமாய் நிற்கும். ஆனால், முற்போக்கான அரசாங்கம் கோலோச்சுகையிலே அதற்கு எதிராகப் பொதுசன அபிப்பிராயத்தை திரட்டுவதற்கும் இப்பத்திரிகைகள் தயங்கமாட்டா.

இவ்வாறு கிறீவ்ஸ் ஒவ்வொரு துறையினையும் நுணுகி ஆராய்ந்து சமூக அமைப்பிற்கும் அதற்கும் உள்ள தொடர்பினை விளக்குகின்றார். விரிவு அஞ்சி நான் சில பகுதிகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். அவரது நூலிலிருந்து பிரித்தானிய யாப்பு என்னும் உடலை இயக்கும் உயிரை நன்கு உணர முடிகின்றது.


அமெரிக்காவில் இலக்கியம்

டுவைநசயவரசந in யுஅநசiஉய
டில Phடைip சுயாஎ:
யுn யுவொழடழபல ழக
டுவைநசயசல ஊசவைiஉளைஅ
ளுநடநஉவநன யனெ ஐவெசழனரஉநன
டில Phடைip சுயாஎ

சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலே தேசிய இலக்கியப் பிரச்சினை தோன்றியமை பலருக்கு நினைவிருக்கலாம். அப்புயல் ஓய்ந்த பின்பு அதனைப் பற்றி ஈண்டு குறிப்பிடுதல் செத்த பாம்பை அடித்தது போல் சிலருக்குப் படலாம். ஆனாலும், அவ்வாறு குறிப்பிடுவதற்குக் காரணமுண்டு. பிரச்சினை தோன்றிய காலத்தில் வாதப் பிரதிவாதங்களுக் கிடையில் அமெரிக்க தேசிய இலக்கியப் பிரச்சினை ஒப்புவமையாகச் சுட்டிக் காட்டப்பட்டது. அமெரிக்க ஒப்புவமையைச் சற்று விரிவாக ஆராய்தலே இக் கட்டுரையின் நோக்கமாகும். அவ்வாறு செய்வது ஈழத்துத் தேசிய இலக்கியப் பிரச்சினையை விரிவான வரலாற்றுப் பின்னணியில் நோக்குவதற்கு உதவும்.

இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஒரே மொழியினாற் பிரிக்கப்பட்ட நாடுகளெனக் காலஞ் சென்ற பேணாட் ஷா அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் ஒருமுறை குறிப்பிட்டார். இக்கூற்று நகைச்சுவை ததும்பியதாய் இருப்பினும், அதில் ஆழமான உண்மையும் மண்டிக் கிடப்பதை அவதரிக்கலாம். ஒவ்வொரு நாட்டு இலக்கியத்திற்குந் தனித்துவம் உண்டென்பதை இன்று பொதுவாக எல்லோரும் ஏற்பர். ஆனால், எவ்வாறு ஈழத்திலே தேசிய இலக்கியப் பிரச்சினை தோன்றியபொழுது தேசிய இலக்கியம் என்ற ஒன்று இல்லை எனச் சிலர் வாதிட முனைந்தனரோ அதேபோன்று அமெரிக்காவிலும் ஆங்கில இலக்கியம் ஒன்றுதான் இருக்கின்றது எனச் சில அமெரிக்க எழுத்தாளர்களும், திறனாய்வாளரும் வற்புறுத்தினர். அமெரிக்காவிலே தேசிய இலக்கியப் பிரச்சினை எத்தகைய உருவெடுத்தது என்பதனை நோக்குவதற்கு முன்பு அன்றைய அமெரிக்க இலக்கிய நிலையினைச் சற்று ஆராய்வது பயனுடைத்து, இதனை ஆராய்வதற்கும் அமெரிக்காவிலே தேசிய இலக்கியப் பிரச்சினை எத்தகைய வடிவம் எடுத்தது என்பதை உய்த்துணர்வதற்கும் அமெரிக்காவில் இலக்கியம் என்னுஞ் சிறந்த தொகுப்பு நூல் பெரிதும் உதவுகின்றது. இதன் தொகுப்பாசிரியர் பிலிப் ராவ் என்பவராவர். இத்தொகுப்பிலே அடங்கியுள்ள கட்டுரைகள் தேசிய அநுபவத்தின் பின்னணியிலே அமெரிக்க இலக்கியத்தை நோக்குவது குறிக்கற்பாலது.

1835ஆம் ஆண்டிலே ரொக்வேவில் (வுழஉஙரநஎடைடந) என்னும் பிராஞ்சுக்காரர் அமெரிக்க இலக்கிய நிலையைப் பின் வருமாறு வருணித்தார்.

அமெரிக்க வாசகர்களுக்குத் தேவையான பெரும்பாலான நூல்களை இங்கிலாந்தே வழங்குகின்றது. முக்கியமான ஆங்கில நூல்கள் அமெரிக்காவிலே மறு பிரசுரஞ் செய்யப்படுகின்றன. பிரித்தானியாவின் இலக்கிய மேதாவிலாசம் அமெரிக்காவின் சந்து பொந்துகளில் ஊடுருவி ஒளிபாய்ச்சுகின்றது. மேலும், அமெரிக்காவிலே சுயமாக ஆங்கிலத்திலே எழுதப்படும் நூல்கள்கூட உள்ளடக்கத்திலும் உருவத்திலும் பிரித்தானிய நூல்களின் நகல்களாகவே அமைகின்றன. அமெரிக்கா குடியாட்சி நாடாக இருந்தபொழுதிலும், அதன் எழுத்தாளர்கள் உயர்குடி ஆட்சி நாடாகிய இங்கிலாந்தின் இலக்கியத்தினையே பின்பற்றுகின்றார்கள். அவர்கள் பயன்படுத்தும் வர்ணங்கள் அந்நியமானவைகளாய் இருப்பதனால், அவர்களுடைய படைப்புக்கள் அவர்களின் சொந்த நாட்டினைச் செவ்வனே பிரதிபலிப்பனவாய் இல்லை. இதனால், அவை மக்களால் அநேகமாகப் பாராட்டப் படுவதில்லை. அமெரிக்க எழுத்தாளரை இங்கிலாந்து அங்கீகரித்த பின்புதான் அமெரிக்க மக்கள் அவர்களை ஒப்புக்கொள்கின்றனர். நிலைமையை உற்று நோக்குமிடத்து அமெரிக்காவிலே இப்பொழுது உண்மையான இலக்கியம் இல்லை என்றே கூறல் வேண்டும். பத்திரிகையாளர்தான் உண்மையான அமெரிக்க எழுத்தாளர். அவர்கள் பெரும் படிப்பாளிகளாய் இல்லாதபோதிலும் அவர்கள் தம் நாட்டு மொழியினைப் பேசுகின்றனர். மற்றையவர்கள் வெறும் அந்நியர்கள். அமெரிக்கா தனக்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்த இலக்கியத்தினை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவ்விலக்கியம் இன்றைய இலக்கியத்திலிருந்து வேறுபடுவது திண்ணம்.

கூப்பர் என்னும் அமெரிக்க எழுத்தாளர் 1828ஆம் ஆண்டிலே அமெரிக்காவிலே நிலவிய இலக்கிய நிலையினைப் பின்வருமாறு விளக்குகின்றார்.

அமெரிக்காவிலே எழுத்தாளனுக்கு முன்பு ‘அச்சகன்’ தோன்றினான். முதலில் பிரித்தானிய நூல்களை மறுபிரசுரஞ் செய்தலே இவ்வச்சகங்களின் தொழிலாய் அமைந்தது. பின்பு பஞ்சாங்கங்கள், தோத்திர நூல்கள், சமய ஆய்வுக் கட்டுரைகள், பிரசங்கங்கள், அரசியற் கட்டுரைகள், கலை மெருகற்ற கவிதைகள் போன்றன வெளியிடப்பட்டன. இவை யாவும் அமெரிக்கச் சுதந்திரப் போருக்கு முற்பட்டவை. எழுத்தாளர்களைப் பொறுத்த வரையில், வெளியிடப்படும் நூல்களின் தொகையோடு ஒப்பிடும்போடு மிகச் சிலரே அமெரிக்க நாட்டவர். உயிர் வாழ்வதற்காக மூளையை உபயோகிக்க வேண்டியநிலை இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும். தனக்கே சொந்தமான நிலையங்களையும், தனக்கே உரித்தான கொள்கைகளையும் கொண்டிருந்த போதிலும், தனது இலக்கியத்திற்காக அந்நிய தேசத்தினை நம்பியிருக்கும் முதல் நாடு அமெரிக்காவே. ஒரே மொழியைப் பேசி வருவதினாலும், நீண்ட காலமாகத் தாய் நாட்டிலிருந்து நூல்களை இறக்குமதி செய்து வருவதினாலும், சுதந்திரம் இந்நிலையினை உடனடியாக மாற்ற முடியவில்லை. அமெரிக்க இலக்கியம் தனது சொந்த நாட்டுச் சந்தகளிலே பிரித்தானியாவின் இலக்கியத்துடன் சமமாகப் போட்டிபோட வேண்டுமாயின் அதற்குப் பண ரீதியான ஆதரவு இன்றியமையாதது. அமெரிக்க நூல்களக்குச் சட்டப் பாதுகாப்பு இல்லாதவிடத்து தேசிய இலக்கியம் தோன்றுவது தடைப்படும். ஏனெனில், பணம் கொடுக்காமலேயே பிரித்தானிய நூல்களை மறுபிரசுரஞ் செய்யக்கூடிய வாய்ப்பிருக்கும் வரை அமெரிக்க வெளியீட்டாளர் பணம் கொடுத்து அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியிடப் போவதில்லை. நூற்றுக்கணக்கான பிரித்தானிய நூல்களை மறுபிரசுரஞ் செய்யும் ஓர் அமெரிக்க வெளியீட்டாளர், தான் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புக்களைத் துணிந்து வெளியிடமாட்டார் என என்னிடம் கூறினார். இதற்குக் காரணம் இருநாட்டு எழுத்தாளர்களுக்கிடையேயும் இருக்கக்கூடிய இலக்கிய ஏற்றத் தாழ்வன்று. இலக்கியப் பிரசுரத் தொழிலே ஒருவகை வணிகச் சூதாட்டமாய் இருக்கும் போது ஒரு படைப்பாளிக்குப் பணம் கொடுத்து நூலை வெளியிடுதல் இடர்மிக்க ஒன்றாகும். இதுவே எமது வெளியீட்டாளரின் தயக்கத்திற்குக் காரணமாகும்.

சுயமான அமெரிக்க இலக்கியத்தினையிட்டு எழுந்த வாதப் பிரதிவாதங்களை நோக்கு முன்பு, அமெரிக்கா கற்பனைக்கு வளமூட்டி இலக்கியம் தோன்றுவதற்குத் தக்க நிலைக்களனாய் விளங்க வல்லதா என்ற கருத்துப் போராட்டத்தினைச் சற்று ஆராய்தல் சாலவும் பொருத்தமானது.

19ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த அமெரிக்க எழுத்தாளர்கள் பலர் – திறமை மிக்கவர்களும் மட்டமானவர்களும் உட்பட – தமது நாடு கற்பனைக்கு வளமூட்ட வல்லதல்ல என்றும், இலக்கியஞ் செழித்தோங்குவதற்கு நிலைக்களனாய் அமையவில்லை என்றும் அங்கலாய்த்தனா. எழுத்தாளனின் கற்பனைக்கு வேண்டிய மூலப் பொருள்கள் அமெரிக்காவிலே இல்லை எனக் கூப்பர் சுட்டிக் காட்டினார். இதே குற்றச்சாட்டை ஹோதோனும் (ர்யறவாழசநெ) ஹென்றி ஜேம்சும் (ர்நசெல துயஅநள) சுமத்தினர். இலக்கியத்திற்கு இன்றியமையாத, அமெரிக்காவிலே இல்லாத ஆக்கக் கூறுகள் எவை என்பதை ஜேம்ஸ் பின்வருமாறு வரிசைப்படுத்தினார்: ஐரோப்பாவிலே இருப்பது போன்ற அரசு இல்லை@ மன்னன் இல்லை@ அரசவை இல்லை: உயர் குடிகள் இல்லை@ திருச்சபை இல்லை@ அரண்மனைகள் இல்லை@ ஆசனக் கோவில்கள் இல்லை@ புகழ் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லை@ பொருட்காட்சிச் சாலைகள் இல்லை@ இலக்கியம் இல்லை.

இவ்வாதத்திலேயுள்ள வழுவினை பிலிப் ராவ் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஐரோப்பிய இலக்கியத்தினை அமெரிக்காவிலே எழுத முடியவில்லையே என்பதுதான் இவர்களது அங்கலாய்ப்பின் உட்கருத்தென அவர் குறிப்பிடுகின்றார். மேலும், இலக்கியத்தின் ஆக்கக் கூறுகள் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டவை@ மாறாதவை என நினைப்பது தவறு என்கிறார். இலக்கியத்திற்கும், உயர் நாகரிகத்திற்குமிடையே நெருங்கிய பிணைப்புண்டு என்ற கற்பிதமும் தவறு என்கிறார் ராவ். தனது கட்சிக்கு ஆதாரமாக 19 ஆம் நூற்றாண்டிலே ரஷ்யா மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தபோதிலும் புஷ்கின், கொகோல் போன்றள மாபெரும் எழுத்தாளர் அங்கு தோன்றியமையைச் சுட்டிக் காட்டுகின்றார். ஆக்கக் கூறுகள் இல்லாமல் அல்ல, இருந்த ஆக்கக் கூறுகளைச் செவ்வனே கையாளவல்ல எழுத்தாளர் இன்மையே உண்மையான நிலை என அவர் மேலும் விளக்குகிறார்.

இலக்கியத்திற்கு இன்றியமையாத ஆக்கக் கூறுகள் அமெரிக்காவிலே இல்லை என்ற குற்றச் சாட்டினை எல்லோரும் ஆதரிக்கவில்லை. விற்மன், எமர்சன் போன்றோர்கள் இதை மறுத்துரைத்தனர். அமெரிக்காவே மாபெரும் காவியம் என விற்மன் கூறினார். அமெரிக்காவிலே நிகழ்பவை பெருங்காப்பிய நிகழ்ச்சிகளுக்கு நிகரானவை என்றும், அவற்றைக் கையாளக் கூடிய மேதை இன்னும் அமெரிக்காவிலே தோன்றவில்லை என்றும் 1842இல் எமர்சன் அங்கலாய்த்தார். அமெரிக்காவிலேயுள்ள ஆக்கக் கூறுகளை வரிசைப்படுத்துகையில் அவர் அமெரிக்காவின் அரசியலையும், அதன் மீன்பிடித்தொழிலையும், நீக்கிரோ மக்களையும், சிவப்பந்தியரையும், தென் மாகாணத்திலே இருந்த பருத்திப் பண்ணைகளையும் குறிப்பிடுகின்றார். அமெரிக்கா தன் கண்முன்னே ஒரு கவிதையாகத் தோன்றுவதாகவும், தனது நாடு வெகு விரைவிலே பாடல் பெறுவது திண்ணம் என்றும் கூறுகின்றார். எழுத்தாளன் கையாளக்கூடிய ஆக்கக் கூறுகளை எமர்சன் திறமையாக வரிசைப்படுத்திய பொழுதிலும், இவ்வாக்கக் கூறுகளை நாட்டுப்பற்று ஊடுருவவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளது தவறென ராவ் சுட்டிக் காட்டுகின்றார். தேசிய உணர்விலே கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்துவதிற்றான் ஒரு நாட்டின் இலக்கியப் பெருமை தங்கியிருக்கிறது எனக் குறிப்பிடும் ராவ், நாட்டுப் பற்றையே இலக்கியம் புலப்படுத்துதல் வேண்டும் எனக் கோருது கற்பனையூற்றுக் கண்களை அடைத்துவிடும் என் எச்சரிக்கின்றார்.

உண்மையான அமெரிக்க இலக்கியம் உருவாக்கப்படல் வேண்டும் என ‘இளம் அமெரிக்கக் குழு’ வாதிட்டது. இதற்குத் தலைமை தாங்கியவர்கள் டைக்கிங் (னுரலஉமinஉம), மத்தியூஸ் (ஆயவாநறள) போன்றவர்கள். இலக்கியத்தைப் பொறுத்த வரையில் அமெரிக்கா குடியேற்ற நாடு என்ற இழிநிலையிலே உள்ளதென டைக்கிங் இடித்துரைத்தார். இதிலிருந்து விடுதலை பெறுவதின் அவசியத்தினை வலியுறுத்திய அவர், தனது தேசிய இலக்கியக் கோட்பாட்டினைப் பின்வருமாறு விளக்கினார்.

தேசிய இலக்கியம் என்னும்போது அமெரிக்க எழுத்தாளர்களையே முதலிற் கருத்திற் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்கத் தொனிப் பொருள்களை நியாயமான அளவிற்கு இலக்கியத்தில் கையாளுதல் வேண்டும். கண்ணாடி போன்று இலக்கியம் ஒரு நாட்டினைப் பிரதிபலித்தல் வேண்டும். வேற்று நாட்டு இலக்கியங்களுக்கிடையே வேறுபாடுகள் இருப்பதை எந்த அறிஞனும் மறுக்கமாட்டான். ஒவ்வொரு நாட்டு இலக்கியமும் தனித்தன்மை வாய்ந்த தனாற்றான் கிரேக்க நாட்டு இலக்கியத்திற்கும், ரோமாபுரியின் இலக்கியத்திற்கும், ஸ்பானிய நாட்டு இலக்கியத்திற்கும், ஜெர்மனிய நாட்டு இலக்கியத்திற்கும், பிராஞ்சு நாட்டு இலக்கியத்திற்கும், பிரித்தானிய நாட்டு இலக்கியத்திற்குமிடையேயுள்ள வேறுபாடுகளை உய்த்துணர முடிகின்றது. தேசிய இலக்கியம் உருவாக வேண்டும் எனக் குறுகிய நோக்கத்தோடு நாம் வாதிடவில்லை. நூல்களை எரிப்பதோ, ஆசிரியர்களை நாடு கடத்துவதோ எமது நோக்கமல்ல. சிந்தனைப் பேரரசைச் சுருங்கச் செய்வது எமது நோக்கமன்று. எமது எல்லைப் பரப்பையும் அப்பேரரசுடன் இணைப்பதே எமது குறிக்கோள். ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கேதே போன்ற உந்நத படைப்பாளிகள் உண்மையான தேசிய உணர்வோடு தான் எழுதினார்கள். ஆனாலும், அவர்கள் தமது நாட்டிற்கோ, காலத்திற்கோ உரித்தான தொனிப் பொருள்களை மட்டுமே கையாண்டார்கள் என்பதற்கில்லை. மனித குலத்திற்குப் பொதுவானவற்றை அமெரிக்க எழுத்தாளன் தாராளமாகக் கையாளலாம். ஆனால் அமெரிக்கர் என்ற முறையிலே எமது நாட்டிற்கும் நாட்டவர்க்கும் உரித்தானவற்றில் எமது எழுத்தாளர் தனிக்கவனம் செலுத்துதல் வேண்டும். இலக்கியத்திலே கையாளக் கூடிய தொனிப் பொருள்கள் எமது நாட்டிலே இல்லையா? இங்கிலாந்திலே உள்ளது போன்று இங்கும் உணர்ச்சி வேறுபாடுகள் நிலவவில்லையா? இன்ன பொருள்களைத்தான் கையாளுதல் வேண்டும் என எழுத்தாளர்களுக்கு நாம் ஆணையிடப் போவதில்லை. மனித குலத்தினதும், இயற்கையினதும் முழுப் பரப்புகளையும் அவர்களுக்கு விட்டுவிடுகின்றோம். ஆனால், தமது தாய் நாட்டிற்கு அவர்கள் ஊறு விளைவித்தலாகாது. எமது எழுத்தாளர்கள் அந்நிய உருப்படிவங்களுக்கு அடிமைப்படுவதையே நாம் எதிர்க்கிறோம். தொனிப் பொருள்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அவற்றைக் கையாள்வதிலும் அவர்க்ள பிரித்தானியராகவோ ஜெர்மனியராகவோ இருக்கின்றனரேயன்றி அமெரிக்கராக அல்லர்.

இதற்குப் பதிலிறுப்பதுபோல லோயல் என்பவர் கிண்டலாகப் பின்வருமாறு எழுதினார்: அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததும், சுயமான இலக்கியம் இன்றி ஒரு நாடு இருக்க முடியாதென உடனடியாகத் தீர்மானிக்கப்பட்டது. எமக்கு இலக்கியம் இல்லையாம்! ஷேக்ஸ்பியர் எமக்குச் சொந்தமில்லையா! ஆனால், இந்தப் பொது முதுசொம் எமக்குத் திருப்தி தரவில்லை. பிரிவினைக்கிடமில்லாததினால், எமக்கென்றே நாடகமும், காப்பியமும் வேண்டும் போலும், அதுவும் தேசிய இலக்கியமாய் இருத்தல் வேண்டுமாம். எமது சொத்தாய் இருத்தல் வேண்டுமாம். அயலவரோடு போட்டி போடுவதற்காகக் குதிரை வண்டி வைத்திருப்பதப் போன்று எமக்கும் ஓர் இலக்கியம் வேண்டுமாம். புது மொழி ஒன்றிலே வேண்டுமெனக்கூடச்சிலர் வற்புறுத்தினர். ஒரு குறிப்பிட்ட நாளிலே கட்டுரைகளைச் சமர்ப்பிக்குமாறு ஆசிரியர் மாணாக்கர்களுக்கு ஆணையிடுவது போன்று தேசிய இலக்கியத்தினை உருவாக்குமாறு சில விமர்சகர்கள் எம்மைப் பணிக்கின்றனர். மனிதர் என்ற முறையிலே எல்லா நாட்டு மகா கவிஞர்களும் விட்டுச் சென்ற முதுசொத்தில் எமக்கும் பங்குண்டு. ஆதலால், சிந்தனைகளின் ஓட்டத்திற்குத் தடை போடுவதை நாம் எமது திறனாய்விலே அநுமதிக்கலாகாது. இலக்கியத்தில் தேசியம் என்பது குறுகிய மாகாணப்பற்றும், படுகோமாளித் தனமுமேயன்றி வேறொன்றுமல்ல.

இவ்வாறெல்லாம் கண்டித்த லோயல் தேசிய இலக்கியவாதிகளின் கோரிக்கையிலே ஒரளவு அடிப்படை உண்மை உண்டு என்பதையும் ஒப்புக்கொள்கின்றார். அமெரிக்காவின் சமூக, அரசியல், இல்லற வாழ்க்கையினை இலக்கியம் செவ்வனே பிரதிபலிக்க வேண்டுமென அவர் வற்புறுத்துகின்றார். அமெரிக்காவிற்கே உரித்தான தொனிப் பொருளைக் கையாளும் போதும் அதற்கு அந்நிய உடை அணிவிப்பதே அமெரிக்க எழுத்தாளரின் தவறு எனச் சுட்டிக் காட்டும் லோயஸ், இதற்கு மாறாகப் பழைய மாபெரும் எழுத்தாளர் அந்நிய தொனிப் பொருள்களைக் கையாண்ட பொழுதிலும், அவற்றிற்குத் தத்தமது நாட்டு உடைகளை அணிந்தமையைக் குறிப்பிடுகின்றார். எழுத்தாளர் தமது கண்களையும், காதுகளையும் உபயோகித்தல் வேண்டும் என்பதே தேசிய இலக்கியக் கோரிக்கையில் மண்டிக் கிடக்கும் உண்மையென அவர் மேலும் மொழிகின்றார்.

தேசிய இலக்கியத்தினைப் பற்றிய சொற்போர் 19ஆம் நூற்றாண்டுடன் ஓய்ந்துவிட்டதென எண்ணலாகாது. இந்நூற்நாண்டின் முற்பகுதியிலேகூட இக்கருத்து மோதுதல் நடைபெற்றது. பிரித்தானிய இலக்கியத்திற்கும், அமெரிக்க இலக்கியத்திற்கும் இடையே வேறுபாடுகள் உள என்பதை உயர் மதிப்பான (புநவெநநட) எழுத்தாளர்களும், விமர்சகர்களும் ஒப்பவில்லை. கொப்பூழ்க் கொடியை அறுப்பதை இவர்கள் தொடர்ந்து எதிர்த்ததற்குக் காரணம் இருநாட்டு இலக்கியங்களுக்கும் இடையே முனைப்பான வேற்றுமைகள் இருக்கின்றன என்பதை அறிய அஞ்சியமையே என ராவ் விளக்குகின்றார். 1900ஆம் ஆண்டிலே அமெரிக்க இலக்கிய வரலாறு என்னும் நூலினை வெளியிட்ட பேராசிரியர் வென்டல் இத்தகைய உயர் மதிப்பான விமர்சகர்களுள் ஒருவர். அவரது நூலிலே மெல்வில், விற்மன் போன்ற சிறந்த அமெரிக்க எழுத்தாளர் புறக்கணிக்கப்பட்டனர். 1920 இலே கூடப் பல்கலைக்கழக வட்டாரங்களிலே அமெரிக்க எழுத்தாளர் புறக்கணிக்கப்பட்டதுடன் தக்கறே, டெனிசன் போன்ற பிரித்தானிய எழுத்தாளரே எழுத்தாள மன்னராகப் போற்றப்பட்டனர். பொதுவாக அமெரிக்க எழுத்தாளர் ‘தீண்டத் தகாதவர்’ என்ற கருத்து இவ்வட்டாரங்களில் நிலவிற்று.

ஒரு நாட்டினை நிலைக்களனாய் வைத்து அங்கு நிகழும் நிகழ்ச்சிகளையும், வாழும் பாத்திரங்களையும், அவர்களது பேச்சையும், அவர்களது நடையுடை பாவனைகளையும் இலக்கியத்தில் கையாளுதல் மட்டுமே தேசிய இலக்கியம் ஆகாது. ஒரு நாட்டின் இலக்கியம் தனி முத்திரை பெற்றிருத்தல் வேண்டும். இவ்வுண்மையினை வலியுறுத்ம் ராவ், ஜெர்மனியப் படைப்ணபு மனம் தத்துவ விசாரணைகளில் தோய்ந்திருப்பதாகவும், பிரெஞ்சு மனம் கோட்பாடுகளாற் சிறைப்படுத்தப்படாது அறிவுத் திறனின் பேரார்வத்தினால் உந்தப்பட்டதென்றும், ருஷ்யப் படைப்பு மனம் வாழ்க்கைத் தகவுகளை உருவாக்குவதில் பேரார்வம் கொண்டுள்ளதெனவும் விளக்குகின்றார். ஓர் அடிப்படைத் தொனிப் பொருளும், மூலக் கோட்பாடுமே ஒரு நாட்டின் இலக்கியத்திற்குத் தனி முத்திரையைப் பொறித்து அதை, தேசிய இலக்கியமாக்குகின்றது என்பது அவரின் வாதம். இதனை அடித்தளமாய் வைத்து அமெரிக்க இலக்கியத்தின் தனித்துவத்தை எவ்வாறு வௌ;வேறு விமர்சகர்கள் வரையறுக்கின்றார்கள் என்பதை இனி நோக்குவோம்.

தனிமையிலிருந்து சமுதாய உறுப்பான மாறுவதையும், கரவின்மையிலிருந்து அநுபவத்தை எய்தும் நிலையினையும், ஐரோப்பிய நூல்கள் கோடிட்டுக் காட்டுவதாக றிச்சேட் சேஸ் என்பவர் குறிப்பிடுகின்றார். கரவின்மையைப் புறக்கணிக்காவிட்டாலும் சமூக அநுபவத்தின் மூலம் அதனைத் தாண்டுவதே தனியாளின் தவிர்க்க முடியாத பணி என்பதனை ஐரோப்பிய நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டினார்கள். சமூகம் மாசுபட்டுவிட்ட போதிலும், அது தனியாளை மீட்கவல்ல சக்தி என்ற தொனி அவர்களது படைப்புக்களிலே ஒலிக்கின்றது. ஆனால், அமெரிக்க இலக்கிய மரபோ இதற்கு முற்றிலும் மாறானது என சேஸ் விளக்குகின்றார். சமூகத்தின் பிடியிலிருந்து தப்பி, காட்டிலும், கடலிலும், ஆற்றிலும் தன்னிறைவு எய்துமாறு வாலிபனை இப்படைப்புகள் அழைக்கின்றன. கரவின்மையும் சுதந்திரமும் நிறைந்த நிலையினைப் பற்றிய கனவாக அமையும் இந்நூல்களை நாட்டுப்புற வாழ்க்கையை (Pயளவழசயட) விதந்தேத்தும் வகைத்தன. இத்தகைய நூல்களிலே பெண்கள், ஆண்களின் வாழ்க்கைக் கடுமைகளைத் தாங்க முடியாத அப்ஸரசுகளாகவோ அல்லது ஆண்களின் சுதந்திரத்தை அழித்தொழித்து அவர்களைச் சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு அடிமைப்படுத்தும் அரக்கிகளாகவோ வருணிக்கப்படுகின்றனர் என மேலும் சேஸ் குறிப்பிடுகின்றார். ஆனாலும், உயர் தனி அமெரிக்க நூல்களிலே சமூகம் தற்காலிகமாக உதறித் தள்ளப்பட்ட போதிலும் அது முற்றாகப் புறக்கணிக்கப்படவில்லை. என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். இவர்களது நூல்களிலே சமூகம் உருவாக்கிய சம்பிரதாயங்களின் நிழல் படியத்தான் செய்கிறது என்கிறார்.

அமெரிக்க இலக்கியத்தை விளக்க விழையும் எச்.பி. பாக்ஸ் என்பவரும் ஏறக்குறைய இதே முடிவிற்கு வருகின்றார். சமூகத்தின் அமுக்கத்திலிருந்து விடுபட்டு ஓட விழைவதையே அமெரிக்க இலக்கியம் (உயர் இலக்கியமும், ஜனரஞ்சக இலக்கியமும்) கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிடுகின்றார். ஜனரஞ்சக இலக்கியத்திலிருந்து இதற்கு ஆதாரமாகப் பல உதாரணங்களை எடுத்துக் காட்டும் அவர், நவீன அமெரிக்க துப்பறியும் நாவல்களும் இதே அமைப்பைக் கொண்டவை என்கிறார். ஊழல் நிறைந்த சமுதாயத்திலே தனிப்பட்ட துப்பறிபவர் நீதிக்கும் அறத்திற்குமாகத் தனித்து நின்று போராடுவதே இத்தகைய நூல்களின் வாய்ப்பாடாகும். வேற்று நாட்டு, குறிப்பாக பிரித்தானிய ஜனரஞ்சக இலக்கியம் இம்முறையிலே அமையாதது ஈண்டு நோக்கற்காலது என பாக்ஸ் சுட்டிக் காட்டுகின்றார். தனி மனிதனின் நேர்மைக்கும், வாய்மைக்கும் சமூகம் பகைவன் என்ற எண்ணம் ஜனரஞ்சக இலக்கியத்தில் மட்டுமன்று, உயர் அமெரிக்க இலக்கியத்திலும் நிலவுவதாக அவர் குறிப்பிடுகின்றார். எடுத்துக் காட்டாக மொபி டிக்கையும் (ஆழடில னுiஉம) ஹக்கிபெரில் வின்னையும் (ர்ரஉமடநடிநசசல) சுட்டுகின்றார். இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்க நாவலாசிரியர்களிலும் இப்போக்கு நிலவுவதாகக் கூறுகிறார். மங்கலரமான திருமணத்திலே முடிவுறும் காதலையும் அமெரிக்க நாவல்களிலே காண்பது அரிது என்கிறார். இப்பண்பும் அமெரிக்க நாவலாசிரியனை ஐரோப்பிய நாவலாசிரியனிலிருந்து வேறுபடுத்துகின்றது என்கிறார். திருமணம் என்ற பொறி மூலம் நாகரிகம் தனிமனிதனைப் பணியச் செய்து, அவனைச் சீரழிக்கின்றது எனப் பழைய எல்லைப்புற வீரர் கருதினர். இதே கருத்தோட்டத்தை இன்றைய அமெரிக்க நாவலாசிரியர்களினது படைப்புக்களிலும் அவதானிக்கலாம் என்கிறார் பாக்ஸ். தனது வரையறை தெற்கு எழுத்தாளர்களுக்குப் பொருந்தாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ஆனால், புற நடையாக ஃவோக்னரின் ‘கரடி’ என்ற நீண்ட கதையும் பாக்ஸின் வாய்பாட்டிற்குள் அடங்கும் என ராவ் சுட்டிக் காட்டுகின்றார். தான் மரபுரிமையாகப் பெற்ற பூமியை இக்கதையிலே வரும் முக்கிய பாத்திரமான மக்கசிலின் என்பவர் கைவிடுகின்றார். காட்டைத்திருத்தி கழனியாக்கியதின் நோக்கம் கொள்ளையடித்தலே என்று அவர் உணரத் தலைப்பட்டதும் இவ்வாறு செய்தார். நாகரிகம் என்பது நற்குணங்களையும், கரவின்மையையும் இழத்தலே என்றும், இக்குற்றத்திற்காகத் தகுத்த பரிகாரம் செய்யப்படல் வேண்டும் என்று அவர் எண்ணினார்.

பிலிப் ராவ் அமெரிக்க இலக்கியத்தின் தனித்துவத்தை வேறு கோணத்திலிருந்து வரையறுக்கின்றார். கடுந் தூய்மைவாதத்தின் (Pரசவையnளைஅ) விளைவாகப் பழைய அமெரிக்க எழுத்தாளர் அநுபவத்தை நேர் நின்று பார்க்க முடியாதவர்களாய் அதனுடன் ‘கண்ணாமூச்சி’ விளையாடினர் என அவர் குறிப்பிடுகின்றார். விற்மன், ஜேம்ஸ் போன்றவர்களின் காலம் தொடக்கம் அநுபவத்திலே தோய்ந்து, அதில் ஊறித் திளைப்பதையே தனது தலையாய பணியாய் அமெரிக்க இலக்கியம் வரித்துக் கொண்டது என அவர் விளக்குகின்றார். இதன் விளைவாக தத்துவ அலசல்களையோ, வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த மதிப்பீடுகளையோ அமெரிக்க இலக்கியத்தில் காண்பது அரிது என்கிறார். ஜேம்ஸினுடைய கதைகளிலே வரும் பாத்திரங்கள் பண்பட்ட உள்ளம் உடையவர்களாயும், நுண்மாண் நுழைபுலன் உள்ளவர்களாயும் விளங்கிய போதிலும், அவர்கள் வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளை கிரகித்துக் கொள்பவர்களாய் இலரென ராவ் சுட்டிக் காட்டுகின்றார். இதுவே அமெரிக்க நாவலுக்கும் ஐரோப்பிய நாவலுக்குமிடையேயுள்ள அடிப்படை வேற்றுமை என்கிறார். பின்னையதில் வாழ்க்கையின் உள்ளாந்ததகவும் மானிடனின் தலைவிதியுமே நாவலாசிரியர்களைக் கவரும் தொனிப் பொருள்களாய் விளங்குகின்றன. இயன்ற அளவிலே அநுபவத்தை சிந்தனையாக மாற்றுவதன் மூலமே மிகச் செம்மையாக வாழலாம் என மால்றோ ஒரு சமயம் குறிப்பிட்டார். இஃது அமெரிக்கக் கலைஞனுக்கு முற்றிலும் மாறான போக்காகும். அநுபவத்திலே திளைத்திருக்கும் அமெரிக்கக் கலைஞன் அஃது எங்கு அவனை இட்டுச் செல்கின்றதோ, அங்கே செல்கிறான் என ராவ் கூறுகின்றார். இதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்க இடது சாரிப் படைப்புக்களைச் சுட்டிக் காட்டுகின்றார். மல்றோ, சிலொனி போன்ற ஐரோப்பிய இடதுசாரி எழுத்தாளர்கள் அரசியற் கோட்பாடுகளையும், இலட்சியங்களையும் ஆழமாகத் தமது எழுத்துக்களிலே ஆராய்ந்தனரென்றும், அமெரிக்க இடதுசாரி எழுத்தாளர்களோ சித்தாந்தத்தில் புலன் செலுத்தாது, வர்க்கப் போராட்டத்தை வெறும் அநுபவமாகவே கருதலாயினர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். வெறும் அநுபவத்தையே இலக்கியத் தொனிப் பொருளாகக் கையாளும் போக்கு வலுவிழந்து வருவதாகவும், சர்வதேசப் பாதிப்புக்களே இனி அமெரிக்க இலக்கியத்தின் போக்கை நிர்ணயிக்கும் எனவும் அவர் கூறுகின்றார். பழைய பண்பாட்டிலேயிருந்து பெயர்ந்து, புதிய நாட்டிலே குடிபுகுந்தவர்கள் தமது புதிய சூழலை அவதானித்து அதனை இலக்கியத்தில் கையாளத் தொடங்கினர். இஃதே அமெரிக்க எழுத்தாளர் அநுபவத்தில் ஊறித் திளைக்க விழைந்தமையின் உட்கருத்து என்கிறார். அந்தக் கணக்கெடுப்பு முடிந்துவிட்டதனால் பழைய இலக்கியத் தடத்தில் செல்வதில் இனிப் பயனில்லை எனக் கருதுகின்றனர்.

தெற்கைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். தமது நாட்டை வடக்கு கைப்பற்றியதன் விளைவாக மரபு வழி வந்த வாழ்க்கை சீரழிந்து தமது நாடு குலைந்தமையே இவ்வெழுத்தாளர்களைக் கவர்ந்திருக்கும் தொனிப்பொருள். இவர்களது படைப்புக்களின் அடிநாதம் தெற்கு மக்களின் கூட்டுக் கற்பனையின் பிரதிபலிப்பே. இது சிலருக்கு வெறும் ஒப்பாரியாகப்படலாம். ஆனால், ஃவோக்னர் போன்ற தலை சிறந்த தெற்கத்திய எழுத்தாளரின் படைப்புக்களிலே சீரழிந்த தாய்நாடு இன்றைய உலகின் உருவகமாகக் காட்சியளிக்கிறது. முதலாளித்துவ சுரண்டலும் மேலோங்கி மரபுகள் எல்லாம் சீர்குலைந்த இன்றைய உலகையே இத்தகைய எழுத்தாளர் தமது தாய் நாட்டின் சீரழிவிற் காண்கின்றனர். ஆதலால், இவர்களது படைப்புக்களை வெறும் குறுகிய பிரதேச இலக்கியம் என நாம் புறக்கணித்தலாகாது. மேலும், இவர்களது தலை சிறந்த படைப்புக்கள் மிகச் சிக்கலானவை என்பது ஈண்டு குறிக்கற்பாலது. இவர்களது தலைசிறந்த படைப்புக்கள் வெறும் ஒப்பாரியாக அமையாமல், தெற்குப் பண்பாட்டிலுள்ள குறைநிறைகளை ஆழமாக ஆராய்வனவாக விளங்குகின்றன. இதற்கு ஃவோக்னரின் நூல்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இக்கட்டுரையிலே அமெரிக்காவின் தேசிய இலக்கியப் பிரச்சினைக்கும், ஈழத்தின் தேசிய இலக்கியப் பிரச்சினைக்குமிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காண நான் விழையவில்லை. அதை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றேன். ஒன்றை மட்டும் சுட்ட விரும்புகின்றேன். அமெரிக்க இலக்கியத்திற்குத் தனித் தன்மைகள் இருப்பது போன்று, ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்குத் தனித்தன்மைகள் இல்லை என்பதே உண்மை. வருங்காலத்திலே ஈழத்து இலக்கியம் தனித்தன்மைகள் வாய்ந்ததாய் விளங்குமோ என்பதும் ஐயம். இது வரையிலும் இருநாட்டு இலக்கியங்களுக்கு மிடையேயுள்ள வேற்றுமைகள் புறம்போக்கானவையே. உள்ளியல்பிலே வேற்றுமைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க இலக்கியம் அதற்கே உரித்தான தொனியைப் பெற்றிருப்பதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள. மதச் சுதந்திரத்தை விரும்பி ஆங்கிலேயர் சிலர் அமெரிக்காவில் குடியேறியதுடன், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வௌ;வேறு இனத்தவர் அங்கு சென்றனர். இந்தப் பண்பாட்டுக் கலப்பின் விளைவாகவும், புதிய இயற்கைச் சூழலின் பாதிப்பினாலும் தனித்தன்மை வாய்ந்த அமெரிக்க இலக்கியம் உருவாகுதல் தவிர்க்க முடியாத தாயிற்று. அமெரிக்கனாய் இருப்பது மிகச் சிக்கல் வாய்ந்த தலைவிதி என ஹென்றி ஜேம்ஸ் கூறியமை ஈண்டு நோக்கற்பாலது.

ஈழத்தைப் பொறுத்தமட்டில் இத்தகைய காரணிகள் இல்லாததினாலும், தென்னிந்தியர்க்கும் எமக்குமிடையே சில வேறுபாடுகள் இருந்த போதிலும், எம்மிடையே பொதுப் பண்புகளே மேலோங்கி இருப்பதனாலும், இருநாட்டு இலக்கியங்களுக்கிடையேயும் புறம்போக்கான வேறுபாடுகளைத் தவிர அடிப்படையான உள்ளார்ந்த அக வேற்றுமைகளை எதிர்பார்க்க முடியவில்லை.


மருந்துகள், வைத்தியர்கள்
நோய்கள்

னுசரபளஇ னுழஉவழசள யனெ னுளைநயளந
டில டீசயைn ஐபெடளை

சாதாரண தலையிடிக்கும், காய்ச்சலுக்கும் மேற்கு நாட்டிலே தயாரிக்கப்பட்ட குளிசைகளை நாடுவது இன்று இங்கு பெருவழக்காயிற்று. தடிமன் காய்ச்சலுடன் வைத்தியரிடஞ் சென்றால் சக்தி வாய்ந்த நவீன மருந்துகளையே () அவரும் கொடுப்பார். வானொலியிலும், படத்திரைகளிலும், பத்திரிகைகளிலும் நவீன மருந்துகளைப் பற்றி ஓயாது விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவையின்றி நாம் உயிர் வாழமுடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. மருத்துவத்துறையைப் பொறுத்தமட்டில் நாம் இன்னும் குடியேற்ற நாட்டு நிலையிலேயே இருக்கின்றோம். நாட்டு வைத்தியமுறைகளை வளர்ப்பதற்கு அரசாங்கம் ஒரு சில முயற்சிகளைக் கையாண்டுள்ள போதிலும், அவை அதிகம் வெற்றியளிக்கவில்லை. மக்களுட் பலர் மேற்கத்திய வைத்தியமுறைகளையே பெரிதும் விரும்புகிறார்கள், இதனால், நாட்டு வைத்தியம் உயிர் வாழ்கின்றதே ஒழிய செழித்தோங்க வில்லை.

மேற்கத்திய மருத்துவ முறை அதிக வெற்றியீட்டிருப்பதனாற்றர் மக்களும், வைத்தியர்களும் அதனைப் பெரிதும் ஆதரிக்கின்றனர் என்றும், இதன் விளைவாக நாட்டு வைத்திய முறைகள் செல்வாக்கிழப்பது தவிர்க்க முடியாததும் இயல்பானதும் என்றும் பலர் சமாதானங் கூறலாம். மேற்கத்திய மருத்துவம் நோயைக் குணப்படுத்துகின்றதா அன்றிநோயின் அறிகுறிகளை ஒழிக்கின்றதா என்பதனைத் தெளிவுபடுத்திக் கொண்டால் இவ்வெற்றியின் இரகசியத்தைப் புரிந்துகொள்ளுதல் சாலும்.

மருந்துகள், வைத்தியர்கள், நோய்கள் என்ற நூலிலே பிறையன் இங்கிளிஸ் (டீசயைn ஐபெடளை) என்பவர் மேற்கு நாடுகளிலே நவீன மருந்துகள் பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும், மருந்து உற்பத்தித் தொழில் பற்றியும் ஆராய்ந்துள்ளார். அவர் கண்ட முடிவுகள் மேலே குறிப்பிட்ட வினாவிற்கு ஓரளவு விடையாகவும் அமைந்துள்ளது. இந்நூலிற்கு முன்பதாக அவர் ‘சிறு வழக்கு மருத்துவம்’ (குசiபெந ஆநனiஉiநெ) என்ற நூலினை எழுதினார். பிரித்தானியாவிலே இலவச உடல் நலசேவை தேசிய அடிப்படையில் இயங்கி வருகின்ற பொழுதிலும், துளையீட்டு மருத்துவ முறை (யுஉரிரnஉவரசந) வன்மப்பிடி மருத்துவ முறை (ழுளவநழிhயவால) போன்ற சிறு வழக்கு மருத்துவ முறைகள் ஏன் அங்கு செழித் தோங்கி வளர்கின்றன என்பதனை அந்நூலிலே அவர் ஆராயத் தலைப்பட்டார். மருத்துவர்கள் கட்டுப்பாடற்ற முறையிலே நவீன மருந்துகளைக் கையாளுவதனாற்றான் பல நோயாளிகள் துளையீட்டு மருத்துவர் போன்றவர்களை நாடுகின்றனர் என்றும், இந் நவீன மருந்துகள் ஓரளவு நன்மையளித்த போதிலும், பல தீமைகளை விளைவிக்கின்றன என்றும் அவர் அந்நூலிலே விளக்கியுள்ளார்.

மருந்துகள், வைத்தியர்கள், நோய்கள் என்ற நூலின் அறிமுகத்தில், ஆசிரியர் இந்நூலினை எழுதத் தூண்டிய சூழ்நிலையை விளக்குகின்றார். இருபதாம் நூற்றாண்டின் ஐந்தாம் தசாப்தத்தின் நடுப்பகுதியில் ரெற்றாசைக்கிளி; என்னும் மருந்து பிரித்தானியாவில் அறிமுகமாயிற்று. அப்பொழுது ஆயிரம் மாத்திரைகளின் விலை 90 பவுணாய் இருந்தது. 1960இல் ஆயிரம் மாத்திரைகளின் விலை 60 பவுணாய்க் குறைந்தது. ஆனால் 1961இல் ஒரு புதிய வணிகக் கம்பெனி இதே மாத்திரைகளில் ஆயிரத்தை 6 பவுண் 10 சிலிங்கிற்கு விற்கத் தலைப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியதுடன், ஒரு வழக்கிற்கும் வழிகோலியது. அப்பொழுது ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த பழைமைக் கட்சியின் உடல் நலஅமைச்சர், இலவச உடல் நலத்திட்டச் செலவுகளை குறைக்கும் பொருட்டு இப்புதிய கம்பெனியிடமிருந்தே அம்மாத்திரைகளை வாங்கு மாறு ஆணையிட்டார். இதனை எதிர்த்து இம்மாத்திரைக்கென தனிக் காப்புரிமை பெற்றிருந்த கம்பெனி வழக்குத் தொடுத்தது. ஆனாலும், அதனால் வெற்றியீட்ட முடியவில்லை. மலைக்கும் மடுவிற்குமிடையே உள்ள ஏற்றத் தாழ்வினைப் போன்ற இவ்விலை வித்தியாசத்தினை துருவி ஆராய இந்நூலாசிரியர் முற்பட்டார். அவரது முயற்சிக்கு அமெரிக்க மூதவை உபகுழு ஒன்றினால் வெளியிடப்பட்ட அறிக்கை (இது கெவோவர் அறிக்கை என வழங்கும்) பெரிதும் உதவிற்று. பிரித்தானிய மருந்து ஆக்கத் தொழில், நடைமுறையிலே அமெரிக்கக் கம்பெனிகளின் ஆதிக்கத்திலே இருப்பதனால் கெவோவர் அறிக்கை பிரித்தானிய மருந்து ஆக்கத் தொழிலுக்கும் பொருந்தும் என நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

புதிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு நீண்ட கால ஆராய்ச்சி தேவைப்படகின்றதென்றும், இதற்குப் பணத்தை வாரி இறைக்க வேண்டியிருக்கின்ற தென்றும், இதனாற்றான் மருந்துகளின் விலை அதிகமாயிருக்கின்ற தென்றும், இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு தனிக்காப்புரிமை முறையே பெருந் தூண்டுகோலாய் அமைகின்றதென்றும் மருந்து ஆக்கத்தில் ஈடுபடும் கம்பெனிகள் வாதாடுகின்றன. இக்கூற்றுகளை விரிவாக ஆராயும் பிறையன் இங்கிளிஸ் அவற்றினை ஆதார பூர்வமாக மறுத்துரைக்கின்றார்.

மருந்து ஆக்கத்தொழிலின் வெற்றிக்கு தனிக்காப்பு உரிமை முறை இன்றியமையாதது எனப் பெரும் கம்பெனிகள் வாதாடுவது இயல்பே. அதன் மூலம் அதிக ஆதாயத்தினை அவர்கள் பெறுவதனால் அதனைக் கைவிட அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் தனிக்காப்புரிமை முறையினாலே சமுதாயத்திற்கு நன்மை உண்டா என்பது நோக்கற்பாலதே. தனிக்காப்புரிமை முறை புதிய ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்ற வாதம் பொருந்தாததென இங்கிளிஸ் சுட்டிக் காட்டுகின்றார். இதை ஆராய்ந்த கெவோவர் அறிக்கை தனிக்காப்புரிமை முறை இல்லாத நாடுகளிலேயே கூடுதலாகப் புது மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுகின்றது. அவர்களுடைய கணிப்பின்படி, தனிக்காப்புரிமை முறையுள்ள நாடுகளிலே புதிதாகத் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்திற்கும் அத்தகைய காப்புரிமை முறையில்லாத நாடுகளிலே பத்துப் புது மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆதலால், நடைமுறையிலே தனிக்காப்புரிமை முறை புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தயாரிப்புகளுக்கும் முட்டுக்கட்டையாய் இருப்பது கண்கூடு என்கிறார் இந்நூலாசிரியர். இதனை விளக்குகையில் சட்டவிதிகள் இந்நடைமுறைக்கு அநுசரணையாய் இருக்கின்றதெனக் குறிப்பிடுகின்றார். காப்புரிமைச் சட்டத்தின்படி தனிக்காப்புரிமையைப் பெறும் கம்பெனி அம்மருந்தைத் தயாரிக்கும் முறையினை வெளியிடல் வேண்டும். இது போட்டியிடும் மற்ற கம்பெனிகளுக்கு வாய்ப்பளிக்கின்றது. அத் தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு அந்த மருந்தின் அணுத்திரண்ம அமைப்பினைச் (ஆழடநஉரடயச ளுவசரஉவரசந) சற்று மாற்றித் தமது மருந்து புதிய தயாரிப்பு எனக் காப்புரிமை பெற்று விடுகின்றன. ஆதலால், தனிக்காப்புரிமை முறை புதிய ஆராய்ச்சிகளையும் கண்டு பிடிப்புகளையும் தூண்டுவதற்குப் பதில் பெரும்பாலும் உருத்திரிபுகளுக்கே வழி கோலியுள்ளது. புதிய மருந்துகள் எனப் பறைசாற்றப்படுபவை பல, உண்மையிலே இத்தகைய உருத்திரிபுகளே. இத்தனிக்காப்புரிமை முறை, மருந்து ஆக்கவிருத்திக்குத் தடையாய் இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இரண்டாம் உலகப் போர் காலத்திலே, அமெரிக்காவிலே பென்சிலின் தயாரிப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் வரலாற்றினை இங்கிளிஸ் விரித்துரைக்கின்றார். போர் வீரர்களின் உயிரைக் காக்க வல்ல பென்சிலினை பெரிய அளவிலே தயாரிப்பதில் கம்பெனிகளை ஈடுபடச் செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் முனைந்து அதற்கெனப் பிரித்தானிய ஆராய்ச்சியாளரின் உதவியினையும் பெற்றுக் கொடுத்தது. ஆனால், அரசாங்கத்தின் முயற்சிகள் பலிக்கவில்லை. காரணம் பென்சிலினைத் தயாரிக்கும் வழி முறைகளிலே தனிக்காப்புரிமையைப் பெற கம்பெனிகள் தமக்குள்ளே போட்டி போட்டமையே. ஒத்துழைப்பிற்குப் பதில் வழி முறைகளை அம்பலமாக்காது தமக்குள்ளே இரகசியமாக வைத்திருப்பதிலே அவை கண்ணும் கருத்துமாக இருந்தன. இதனால் எத்தனை உயிர்கள் மாண்டனவோ? இந்த இழி நிலை நீடித்திருக்கும். ஆனால், நற்பேறாக விவசாயப் பகுதியினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பென்சிலினை பெருமளவிலே தயாரிக்கக்கூடிய எளிய முறையினைக் கண்டுபிடித்தனர். வழக்கமாக கண்டுபிடிப்பாளருக்கு பயனீட்டாளர் பணம் செலுத்த வேண்டும் என்ற நியதி உண்டு. ஆனால் இவ்விடயத்திலே அந்த நிர்ப்பந்தம் இல்லாததனால் பென்சிலினைத் தயாரிப்பதற்கு எல்லாக் கம்பெனிகளும் முந்திக்கொண்டன. இவைகளுக்குள்ளே ஏற்பட்ட போட்டியின் விளைவாக விலையும் குறைந்தது.

தனிக்காப்புரிமை முறை இல்லாத விடத்து மருந்து விலைகளும் குறைவாக இருக்கின்றன என கெவோவர் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. தனிக் காப்புரிமை முறை ஆராய்ச்சியைத் தூண்டி ஈற்றிலே விலை குறைப்பிற்கும் வழிகோலும் என கம்பெனிகளுக்கு ‘வக்காலத்து வாங்குபவர்கள்’ கூறுவதுண்டு. ஆனால், உண்மையோ வேறு. தனிக்காப்புரிமை முறை உள்ள நாடுகளிலும் பார்க்க அம்முறை இல்லாத நாடுகளிலே மருந்துகளின் சராசரி விலைகள் குறைவாகவே இருக்கின்றன என கெவோவர் அறிக்கை கூறுகின்றது. அவர்களுடைய புள்ளி விபரங்களின் படி இச்சராசரி விலை வித்தியாசம் 255 வீதத்திலிருந்து 18 வீதம் வரை நிலவிற்று.

தனிக்காப்புரிமை முறை உண்மையான அடிப்படை ஆராய்ச்சிக்கு வழி கோலவில்லை என்றும், விலை குறைப்பிற்கு ஏதுவாயில்லை என்றும் மேலே கண்டோம். கண்டுபிடிப்பாளருக்கும் அது உண்மையான பாதுகாப்பு அளிப்பதாக இல்லை. தனிக் காப்புரிமைச் சட்டங்கள் கம்பெனிகளின் ஆதிக்கத்தினைப் பலப்படுத்தி அவர்களின் கையை ஓங்கச்செய்ததுடன் தனிக்கண்டு பிடிப்பாளருக்கும் இடர் விளைவிக்கின்றது. இவர் தனது கண்டுபிடிப்பின் முழுப்பயனையும் அநுபவிப்பதில்லை. கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொள்வது போல இவருடைய கண்டுபிடிப்பின் முழுப்பயனையும் கம்பெனிகளே நுகர்கின்றன. கெவோவர் குழுவின் ஆராய்ச்சியின்படி தனிக்காப்புரிமை பெரும்பாலும் கம்பெனிகளின் பெயரிலே இருக்குமேயன்றி கண்டுபிடிப்பாளரின் பெயரில் அன்று. ஆதலால், தனிக்காப்புரிமை முறை கம்பெனிகளின் பெயரிலே இருக்குமேயன்றி கண்டுபிடிப்பாளரின் பெயரில் அன்று. ஆதலால், தனிக்காப்புரிமை முறை கம்பெனிகளுக்குப் பெரும் ஆதாயத்தினைப் பெற்றுக் கொடுக்கின்றதே ஒழிய சமுதாயத்திற்கோ, வேறு யாருக்குமோ நன்மை பயப்பதில்லை. அமெரிக்காவிலே ஆண்டிற்கு 200 கோடி டொலர் பெறுமதியான மருந்து ஆக்கத் தொழில் நடைபெறுகின்றது. இதில் 90 வீதம் 22 கம்பெனிகளின் கைப் பிடிக்குள் இருக்கின்றது. இவைகள் ஏனைய தொழில்களில் ஈடுபடும் கம்பெனிகளிலும் இரு மடங்கிற்கு மேலாக இலாபம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது. சுருங்கச் சொல்லின் நோயாளிகளின் துயரம் இவர்களின் ஆதாயம்.

கோட்பாட்டின்படி முதலாளித்துவ அமைப்பிலே தடையற்ற போட்டிகள் நிகழ்வதால் விலைகள் குறையும். அதனால் நுகர்வோர் பயன் பெறுவர். ஆனால், நடைமுறையோ இதற்கு முரணாக உள்ளது. இன்றைய முதலாளித்துவ அமைப்பிலே பெரிய கம்பெனிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்குவது போன்று இவைகளும் சிறு கம்பெனிகளைத் தம்மோடு இணைத்துப் பலம் பொருந்திய தாபனங்களாய் விளங்குகின்றன. இக்கம்பெனிகள் ‘கழுத்தறுக்கும்’ விலைப் போரிலே பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. மாறாக விளம்பரம் மூலமும், தமது தயாரிப்புகளுக்கு விசேட முத்திரையை ஏற்றுவதன் மூலமும் தமக்குள்ளே போட்டிபோடுகின்றன. மாடுகளுக்குக் குறிசுடுவது போன்று தமது தயாரிப்புகளுக்கும் ‘குறிசுட்டு’, விளம்பரம் மூலம் மக்கள் மத்தியிலே அக்குறிகளுக்குத் தனிக் கவர்ச்சியினை ஏற்படுத்துகின்றனர். இவ்வுத்தியின் வெற்றியினை, நம் அன்றாட வாழ்விலே அவதானிக்கலாம். குறிப்பிட்ட வகைப் பால்மா இன்றேல் குழந்தைகளின் பாடு பெரும்பாடாகி விடும் எனப் பெற்றோரை நம்பப் பண்ணும் அளவிற்கு நவீன முதலாளித்துவத்தின் விளம்பரக்கலை வளர்ந்து விட்டது. இதே உத்தியைத்தான் மருந்து ஆக்கத் தொழிலில் ஈடுபடும் கம்பெனிகளும் கடைபிடிக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக இங்கிளிஸ் ஒரு சுவையான நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார். கம்பெனிகளுக்கிடையே உண்மையான போட்டி நடைபெறுகின்றதா எனக் கண்காணிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் வணிகக்குழு ஒன்றினை நியமித்துள்ளது. போட்டியைக் கட்டுப்படுத்தி நுகர்வோரை ‘கறப்பத’ற்காக கம்பெனிகள் இணைவதைத் தடுப்பதே இக்குழுவின் பணி. இக்குழுவினைச் சேர்ந்த ஓர் ஊழியரின் கணவர் ஒரு தடவை வைத்தியரிடம் செல்ல நேரிட்டது. தொண்டை அரிப்பிற்கு மருந்து கேட்கவே வைத்தியரும் அதற்கென ஒரு மருந்தினைக் குறித்துக் கொடுத்தார். இவர் மருந்துக் கடைக்குச் சென்று அதனை வாங்க விழைந்த போது அதன் விலையைக் கேட்டு திடுக்குற்றார். உடனே வைத்தியருடன் தொடர்பு கொண்டார். அவரும் அதன் விலையைக் கேட்டு அதிசயப்பட்டு வேறு இரு மருந்துகளைத் தகவுரை செய்தார். ஆனால் வேடிக்கை என்னவெனில், அம் மருந்துகளும் அதே விலைதான்! அவற்றைத் தயாரித்தவை வௌ;வேறு கம்பெனிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியிலே பணத்தைப் பெருவாரியாகச் செலவழிக்க வேண்டியிருப்பதனால் பெரும் ஆதாயம் இன்றியமையாதது என சில கம்பெனிகள் எடுத்துரைக்கின்றன. உண்மையான அடிப்படை ஆராய்ச்சியினை கம்பெனிகள் பெரும்பாலும் மேற்கொள்வதில்லை என்றும், அவை நடாத்தும் ஆராய்ச்சிகள் சமூகத்திற்கோ, நோயாளிகளுக்கோ நன்மை பயப்பதைவிட கம்பெனிகளின் ஆதாயத்திற்கே வழிகோலுகின்றன என்றும் ஆசிரியர் இடித்துரைக்கின்றார். ஆராய்ச்சியிலும் பார்க்க விளம்பரத்திலேயே கம்பெனிகள் கூடுதலாகச் செலவழிக்கின்றன என அவர் சுட்டிக் காட்டுகின்றார். இதற்கு ஆதரமாக கெவோவர் அறிக்கையின் புள்ளி விபரங்களைத் தருகின்றார். இருபத்திரண்டு அமெரிக்க கம்பெனிகளின் கணக்கறிக்கைகளின் படி ஒரேயொரு கம்பெனிதான் விளம்பரத்திற்குச் செலவழித்த தொகையில் அரைவாசியினை ஆராய்ச்சிக்குச் செலவிட்டது. மூன்று கம்பெனிகள், விற்பனையால் ஈட்டிய பணதொகையில் பத்து வீதத்தினை ஆராய்ச்சியில் செலவிட, ஏழு கம்பெனிகள் (முன் வரிசைக் கம்பெனிகள் உட்பட) ஐந்து வீதத்திற்குக் குறைவாகவே ஆராய்ச்சியில் செலவிட்டன. மிகுதியான பதினொரு கம்பெனிகளும் ஆராய்ச்சியில் செலவிட்ட தொகையிலும் பார்க்க ஐந்து தொடக்கம் பத்து மடங்காக விளம்பரத்திலே செலவிடடன. ஆராய்ச்சியிலும் பார்க்க விளம்பரத்திலே கம்பெனிகள் பணத்தை வரி இறைத்தன என்பதே கெவோவர் அறிக்கையின் துணிபு.

தமது மருந்துகளை விளம்பரப்படுத்தும் போது கம்பெனிகள் கையாளும் உத்திகளை விபரிக்க ஆசிரியர் தவறவில்லை. ஒரு தடவை ஒரு கம்பெனி தான் தயார் செய்த மருந்தினை விளம்பரப்படுத்திய போது பல வைத்தியர்கள் அளித்த சான்றிதழ்களையும் பாராட்டுகளையும் வெளியிட்டது. இந்தச் சான்றிதழ்களைப் பற்றி ஐயுற்ற ஒருவர். விளம்பரத்திலே குறிக்கப்பட்ட வைத்தியர்களின் விலாசங்களுடன் தொடர்பு கொள்ள விழைந்தார். அவரது கண்டுபிடிப்பு, அப்பெயர்களைத் தாங்கிய வைத்தியர்கள் இல்லை என்பதே! இத்தகைய திருகுதாளங்களால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை மூடி மறைப்பதில் அல்லது அதிகம் விளம்பர்படுத்தாததில் வியப்பில்லை. அப்படிச் செய்யின், அது தற்கொலைக்கு ஒப்பாகும்.

நவீன மருந்துகளால் ஏற்படும் பாதக விளைவுகள் பற்றி மேல் நாட்டிலே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆதாயமே கம்பெனிகளின் முக்கிய குறிக்கோளாய் இருப்பதனால், பாதக விளைவுகள் பற்றி அத்துணை அக்கறை கொள்ளாது தமது தயாரிப்புகளை விற்க அவை முந்துகின்றன. இப்போக்கிற்கு ‘தலிடோமைட்’ மாத்திரை நல்ல எடுத்துக்காட்டாகும். பரிசோதனைக்கும் போதிய அவகாசம் கொடுக்காது. அதனைத் தயாரித்த கம்பெனி அதனை விற்கமுனைந்தது. கர்ப்பிணிகளுக்கு அதனை வைத்தியர்கள் கொடுத்தனர். விளைவு – அத்தாய்மார் சிலர் ஈன்றெடுத்த குழந்தைகள் அங்கவீனர்களாகப் பிறந்தனர். அதே போன்று புதிது புதிதாகத் தயாரிக்கப்படும் எத்தனையோ மருந்துகள் பாதக விளைவுகளுக்கு வழி கோலுவதுடன், நோய்க்கிருமிகளுக்கு எதிர்ப்புச் சத்திகளையும் ஊட்டுகின்றன. இதனால் இம்மருந்துகள் பயனற்றுப்போய் விடுகின்றன. வரையறையின்றி இத்தகைய மருந்துகளைப் பயன்படுத்துவதனால், இம்மருந்துகள் இன்றி வாழ முடியாத நிலை சிலருக்கு ஏற்பட்டிருக்கின்றது என அவர் கூறுகின்றனர். இத்துடன் இம்மருந்துகளைப் பரிசோதிக்கும் முயற்சியிலே மனிதர்களும், மிருகங்களும் விணே இம்சிக்கப்படுவதாக மேலும் சுட்டுகின்றார்.

வைத்தியர்கள் கற்றறிந்தவர்கள்@ ஆதலால் அவர்களை எளிதிலே ஏமாற்ற முடியாதென சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மை நிலை வேறு என ஆசிரியர் விளக்குகின்றார். இன்று மருந்து ஆக்கம் பல்கிப் பெருகியுள்ளது. இந்நிலையில் வைத்தியர்கள் செய்வதறியாது திணறுகின்றனர். கம்பெனிகள் வெளியிடும் பிரசுரங்களே அவர்களுக்குத் தஞ்சம். தாம் தயாரிக்கும் மருந்துகளுக்கு எதிரான செய்திகளை கம்பெனிகள் விரித்துரைக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம். மேலும், சில வைத்தியர்கள் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கம்பெனிகளிடமிருந்து சலுகைகளையும் நன்மைகளையும் பெறுகின்றனர் என்பதையும் மறுத்தலாகாது. இந்நிலையிலே வைத்தியர்கள் சமுதாயத்தினை கம்பெனிகளின் ‘திருவிளையாடல்க’ளிலிருந்து பாதுகாப்பார் என முழுக்க முழுக்க எண்ணுவது தவறு.

நோய்களின் அடிப்படைக் காரணங்களை ஆராய்வதை விடுத்து. அறிகுறிகளைக் குணப்படுத்தும், அல்லது ஒழிக்கும் மருந்துகளைத் தயாரிப்பதிலே கம்பெனிகள் பெரும்பாலும் புலன் செலுத்தியிருக்கின்றன என ஆசிரியர் வற்புறுத்துகின்றார். இதற்கு எடுத்துக்காட்டாக இன்சுலினைக் குறிப்பிடுகின்றார். முதன் முதல் அது தயாரிக்கப்பட்டபோது, அஃது நீரிழிவுக்கு எமன் என பறைசாற்றப்பட்டது. ஆனால் அக்கூற்று இன்று பொய்பிக்கப்பட்டு விட்டது. கணையக் கோளாறுதான் நீழிவுக்கு அடிப்படைக் காரணம் என்ற நம்பிக்கை தவிடு பொடியாகவே, இன்சுலின் நோயின் அடிப்படைக் காரணத்தை அல்ல, அறிகுறியையே குணப்படுத்துகின்றது என்பது புலனாயிற்று. இவ்வாறுதான் பல நவீன மருந்துகள் வெறும் அறிகுறிகளையே குணப்படுத்துகின்றன. இதனால் பாரதூரமான விளைவுகளும் ஏற்படலாம் என ஆசிரியர் எச்சரிக்கின்றார்.

சமுதாயத்தினைப் பாதுகாக்க வேண்டுமாயின் மருந்தாக்கத் தொழிலை நாட்டுரிமை ஆக்குவதை விட வேறு வழியில்லை. இதனை வற்புறுத்த ஆசிரியர் ஏனோ தவறிவிட்டார். கம்பெனிகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றினை அரசு கண்காணித்தல் நன்மை பயக்கும் என்ற தோரணையிலே ஆசிரியர் தனது நூலுக்கு முத்தாய்ப்பு வைக்கின்றார். சமூகத்தின் நலனை அல்ல, தமது சொந்த ஆதாயத்தினையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகள் வசம் மருந்தாக்கத் தொழிலை இனிமேலும் விடுவது மடமையிலும் மடமை, சமூக நன்மைக்கும் சொந்த ஆதாயத்திற்குமிடையே எப்போதும் முரண்பாடு இருந்தே தீரும். அது தவிர்க்க முடியாத நியதி. புலி பசித்தாலும் புல்லைத்தின்னுமா?


திரைப்படம்: கோட்பாட்டுக்
கொத்து

குடைஅ:
யு ஆழவெயபந ழக வுhநழசநைள
டில சு.னு. ஆயஉபுயnn

ஆயகலைகள் அறுபத்தி நான்கில் திரைப்படக்கலை இடம்பெறாத போதும் அதுவும் ஒரு கலை என்பதில் இன்று ஐயுறவு இருத்தல் முடியாது. ஆனால், ஆரம்பத்தில் சினிமாவையோ புகைப் படங்களையோ கலை என்று ஏற்றுக்கொள்ளப்பலர் மறுத்தனர். உலகத்தின் தோற்றத்தையும், இயக்கத்தையும் பதிய வல்ல வெறும் கருவிகள் என்றே இவை கருதப்பட்டன. இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. முதன் முதலில் படம் எடுத்தவர்கள் லூமியர், எடிசன் போன்ற விஞ்ஞானிகளாவர். அவர்கள் தம்மைக் கலைஞர்கள் என்று பறை சாற்றிக் கொள்ளவில்லை. அக்காலத்தில் வாழ்ந்த அழகுக்கலை வல்லுநர் படம்பிடித்தல் வெறும் இயந்திரமயமானது என்றும், அதற்கும் கலைப்படைப்பிற்குமிடையே எதுவித உறவும் இல்லை என்றுங் கருதலாயினர். திரைப்படம் அக்கால விஞ்ஞானிகளைக் கவர்ந்ததோடு சந்தைகளில் குழுமியிருந்த மக்களுக்கு வேடிக்கையாகவும் அமைந்தது. ஆனால், அக்காலத்தின் கலாரசிகர்களை இஃது ஈர்க்கவில்லை. எத்தனையோ பரிசோதனைகளுக்குப் பின்புதான் சினிமா ஒரு கலையாக மலர்ந்தது@ கலாரசிகர்களின் நெஞ்சங்களையுந் தொட்டது.

திரைப்படக்கலையின் தன்மைகளை ஆராயும் எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. திரைப்படம் - கோட்பாட்டுக் கொத்து என்னும் தொகுப்பு நூல் திரைப்படக் கலையின் தனித் தன்மைகளையும், அதற்கும் வேறு கலைகளுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் பல்வேறு கோணங்களில் நின்று ஆராய்கின்றது. கட்டுரை ஆசிரியர்கள் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவிப்பது உண்மையே ஆயினும், இது தவிர்க்க முடியாதது. கலையைப் பற்றிய கோட்பாட்டினை அறுதியாக வரையறுக்க முடியாது. மேலும், கருத்து மோதல்கள் நுண்ணறிவைத் தூண்டி, தெளிவையும் பிறப்பிக்கின்றன. ஆதலால், இத்தகைய தொகுப்பு நூலினை வாசிப்பது திரைப்படங்களை மிக நுட்பமாக நோக்குவதற்குப் பெரிதும் உதவும்.

திரைப்படக் கலையின் தனித்தன்மைகளை உய்த்து உணர்வதற்கு சேர் ஹெபர்ட் றீட்டின் கடடுரை பெரிதும் உதவுகிறது. கலை, இலக்கிய விமர்சகரான இவ்வாசிரியர் இக்கட்டுரையினை 1932ஆம் ஆண்டிலே எழுதிய போதிலும் இன்றும் அது பொருந்துவதாகவே விளங்குகின்றது. திரைப்படம் கலையா என்று நிர்ணயிப்பதற்கு தேர்ந்தெடுத்தல் நடைபெறுகின்றதா இல்லையா என்ற வினாவிற்கு விடை கண்டால் போதும் என அவர் குறிப்பிடுகின்றார். தேர்ந்தெடுத்தல் என்பது சில அளவு கோல்களின் அடிப்படையிலே நடைபெறுகின்றது. இந்த அளவு கோல்களுக்கு இயைய உணர்ச்சி வெளிப்பாட்டை நிகழ்த்துதலையே அவர் கலை என்கிறார். திரைப்படங்களில் இவ்வாறு தேர்ந்தெடுத்தல் நிகழ்வதால் அது சந்தேகமின்றி கலைதான் என அவர் வற்புறுத்துகின்றார்.

ஒவ்வொரு கலைக்கும் சிறப்பியல்புண்டு. திரைப்படம் கட்புலனை அடிப்படையாகக் கொண்ட கலை. ‘அசையும் படங்கள்,’ அதாவது, படம் + அசைவு: இதுதான் திரைப்படத்திற்கு செம்மையான, முழுமையான வரையறை என றீட் குறிப்பிடுகின்றார். கனோடோ என்ற இத்தாலியர், சினிமா வெளியை அடிப்படையாகக் கொண்ட கலைகளினதும் (ஓவியம், சிற்பம், கட்டிடம், நடனம்) காலத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளினதும் (இசை, நாடகம், இலக்கியம்) இணைப்பு என்றார். இக்கூற்றை மேற்கோள்காட்டிச் சிலர் திரைப்படக்கலைகளுக்குத் தனித்துவம் இல்லை என நிறுவ விழைகின்றனர். ஆனால், சினிமா மேற்கூறிய கலைகளின் வெறுங் கூட்டுச் சேர்க்கை அன்று. அதற்கென்று சிறப்பியல்புகள் சில இருக்கின்றன. அவை சினிமாவை ஏனைய கலைகளிலிருந்தும் வேறுபடுத்துகின்றன.

சிற்பம் எவ்வாறு வெளியே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றதோ, இசை எவ்வாறு காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றதோ, அதேபோன்று திரைப்படம் வெளிகாலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. வெளிகாலத் தொடர் என அதனை றீட் குறிப்பிட்டுள்ளார். திரைப்படத்தில் நாம் தரிசிக்கும் வெளி – காலத்தொடர். யதார்த்த உலகத்தின் வெளி – காலத் தொடரை ஒத்ததாகக் காட்சியளித்த போதிலும், அஃது உண்மை அன்று. ஏனைய கலைகளைப் போன்று சினிமாவும் ‘மாயை’யே.

ஓவியன் எவ்வாறு தூரிகையினதும் வண்ணக் குழம்புகளினதும் துணை கொண்டு ஓவியத்தைத் தீட்டுகின்றானோ, சிற்பி எவ்வாறு உளியைக் கொண்டு சிற்பத்தைச் செதுக்குகின்றானோ அதே போன்று திரைப்பட நெறியாளன் படம் பிடிக்குங் கருவியைக் கொண்டு, ஒளி என்னும் ‘உளி’யினால் பொருள்களைச் செதுக்கி, அவற்றில் மறைந்திருக்கும் உண்மையை புலப்படுத்துகின்றான் என றீட் மேலும் கூறுகின்றார். இறைவனின் திருவுருவத்தைக் கல்லிலோ, மரத்திலோ, உலோகங்களிலோ செதுக்கும் சிற்பி அவற்றிலே மறைந்திருக்கும் அவனது வடிவத்தையே புலப்படுத்துகின்றான் என்ற கீழைத் தேச மரபினை ஈண்டு நோக்குதல் தகும். ஒளிதான் நெறியாளனின் ஊடகம்: அவனது கலைத் தெய்வம் என றீட் வற்புறுத்துகின்றார்.

திரைப்படம் கலையா என்பதை நிர்ணயிப்பதற்கு தேர்ந்தெடுத்தல் நடைபெறுகின்றதா என்பதையே அளவு கோலாக றீட் பயன்படுத்தியதை மேலே கண்டோம். ஆனால், தேர்ந்தெடுத்தல் என்ற பதம் முற்றிலும் பொருத்தமன்று என றீட் மேலும் விளக்குகின்றார். அச்சொல் அசைவற்ற தன்மையைச் சுட்டுகின்ற தென்றும், அசையும் தன்மை, எளிதில் உருமாறும் தன்மையே திரைப்படக் கலையின் சிறப்பியல்பு என றீட் வற்புறுத்துகின்றார். இவ்வியல்பினாலேயே திரைப்படங்கள் கலை என்ற நிலைக்கு உயருகின்றன எனக் குறிப்பிடுகின்றார். மூவகையிலே இவ்வியக்கம் நடைபெறுகின்றது. படப்பிடிப்புக் கருவியின் அசைவு, ஒளியின் அசைவு, படம் பிடிக்கப்படும் பொருளின் அசைவு, இம்மூவகை அசைவுகளின் சேர்க்கையினால் எண்ணற்ற உருவங்கள் பிறக்கலாம். ஒளியின் அசைவே திரைப்படத்தின் தனிச்சிறப்பு என்கிறார் அவா. ஆதலால், ‘தூய’ வடிவப் படம் ஒளியினாலும், இருளினாலும் ஆக்கப்பெற்ற படைப்பாகும். இத்தகைய படங்கள் ‘தூய’ உருவவாதிகளையே திருப்தியுறச் செய்யும் என அவர் கூறுகின்றார். திரைப்பட ஒட்டிணைப்பின் முக்கியத்துவத்தினை அவர் உணர்ந்த போதிலும் (கலை ரீதியாக அதுவே படத்தயாரிப்பில் மிக முக்கியமான கட்டம் எனக் குறிப்பிடுகின்றார்) ஒட்டிணைப்பினால் ஏற்படக்கூடிய அசைவினைச் சுட்டத் தவறிவிட்டார்

இயக்கம் அல்லது அசைவே திரைப்படக் கலையின் தனி இயல்பாக இருப்பதனால், அது தடைப்படாது பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் றீட், சாதாரணப் பேசும் படத்திலே பேச்சு, இயக்கத்தின் தொடரைக் குலைக்கின்றது எனக் குறிப்பிடுகின்றார். இதன் உண்மையைப் பெரும்பாலான தமிழ்த்திரைப் படங்களில் காணலாம். இத்தகையண படங்களிலே தோன்றும் கதாபாத்திரங்கள் ‘சொல்மாரி’ பொழிவார்கள். நாடகத்தின் பாணியைப் பின்பற்றியதாக இஃது அமைகின்றது. இதனால் நாடகத்திற்கும், திரைப்படத்திற்குமுள்ள வேறுபாடுகள் சிதைவுறுவதுடன் சினிமாவின் சிறப்பியல்பான இயக்கம் தடைப்படுகின்றது. இதனாற்றான் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் படம் பிடிக்கப்பட்ட நாடகங்களாகக் காட்சியளிக்கின்றன. இதே குற்றச்சாட்டை. சிலவ்கொ வொர்க் காபிச் என்பவர் அமெரிக்க திரைப்படங்கள் மீதும், ஏனைய நாட்டுத் திரைப்படங்கள்மீதும் சுமத்துகின்றார். பெரும்பாலான படங்கள் படம் பிடிக்கப்பட்ட நாடகங்கள் என்பதே அவரது வாதம். இவற்றிலே படம் பிடிக்கும் கருவியும், ஏனைய கருவிகளும் வெறும் பதிவு இயந்திரங்களாகவே பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, படைப்பாற்றலுடன் அவை கையாளப்படுவதில்லை என அவர் மேலும் விளக்குகிறார். இத்தகைய படைப்பாற்றலுக்கு மிகச் சில திரைப்படங்களே எடுத்துக் காட்டுகள் என அவர் கூறுகின்றார். அவற்றிலும் ஒரு சில கூறுகளே ஏனைய கலைகளின் சாதனைகளுடன் ஒப்பிடக்கூடியவை என்கிறார். ஏறக்குறைய இதே கருத்தை ஹான்ஸ் றிஸ்டர் என்பவரும் எதிரொலிக்கிறார். நாடகங்களினதும், நடிகர்களினதும் சாதனைகளையும் நாவல்களையும், இயற்கையையும் பதிவு செய்பவையாகவே திரைப்படங்கள் இருக்கின்றன என அவர் குறிப்பிடுகின்றார். இதனால் பெரும்பாலான படங்களுக்கு சுயமான உருவம் இல்லை என்கிறார். ஆனால், இருவகைப் படங்கள் சுய உருவத்தைப் பெறுவதில் வெற்றியீட்டியிருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார். அவையாவன: புனையா மெய்விளக்கத் திரைப்படம் ()@ பரிசோதனைப் படம். முதல் வகைப் படத்திலே இயற்கையே (மனிதன் உட்பட) படத்தின் கருப்பொருள். இயற்கைக் கூறுகளைத் தேர்ந்தெடுத்து, அகற்ற வேண்டியவற்றை அகற்றி, அவற்றினை ஒத்திசைப்பதினால் சுய ரூபமுள்ள திரைப்பட வடிவம் உருவாகின்றது என அவர் விளக்குகின்றார். இவ்வடிவம் நாடக, இலக்கிய மரபுகளினால் கட்டுண்டதல்ல. படப்பிடிப்புக் கருவியைப் படியெடுக்கும் வெறும் கருவி என்ற நிலையிலிருந்து விடுவித்த பெருமை பரிசோதனைப் படங்களையே சாரும். இத்தகைய படங்களுக்குத் தூண்டு கோலாக இருந்தவர்கள் நவீன ஐரோப்பிய ஒவியர்களாவர். ஓவியம் கட்புலனை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால் திரைப்படங்களும் கட்புலனை அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதில் வியப்பில்லை, நாடகக் கொட்டகையிலே அமர்ந்திருக்கும் குருடனும், திரைப்படத்தினைப் பார்க்கும் செவிடனும் இரசிக்கக்கூடிய வகையிலே முறையே நாடகமும் திரைப்படமும் அமைந்திருத்தல் வேண்டும் என றீனி கிளேயர் செப்பியமை ஈண்டு நோக்கற்பாலது.

தொடக்கத்திலே மௌனப்படங்களே தயாரிக்கப்பட்டன. இப்படங்களிற் சில உந்நத கலைப்படைப்புக்களாம். திரைப்படங்களில் ஒலி கையாளப்பட்டதும், இது திரைப்படக் கரையின் தூய்மையை ஊறுபடுத்தும் என மௌனப்படப் பிரியர்கள் கருதலாயினர். இவர்கள் அஞ்சியமைக்கு ஓரளவு காரணம் இருந்ததும் உண்மை. ஆனாலும், ஒலி, சினிமாவின் தனித்துவத்தைக் களங்கப்படுத்திவிட்டது என்ற கருத்து முற்றிலும் ஏற்புடைத்தன்று. சிறந்த திரைப்படங்களிலே, திரையிலே நாம் காணும் உருவத்திற்கு ஒலி உறுதுணையாக நின்று, அதனுடன் இரண்டறக் கலந்து, சிறப்பிக்கின்றது என்பதை நாம் மறக்கலாகாது. றீனி கிளேயர் என்ற பிரெஞ்சு நெறியாளர் மௌனப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கி, பின்பு பேசும் படங்களையும் தயாரித்தார். ஆதலால், அவர் இப்பொருள் பற்றிக் கூறுவது சிந்தனைக்குரியது. பேசும் படம், ஒலிப்படம் என அவர் இருவகைப்படுத்துகின்றார். முழுக்க முழுக்க பேச்சாக அமையும் படத்தினை அவர் அதிகம் விரும்பவில்லை. ஆனால் ஒலிப்படத்திலோ, ஒலி திரைப்பட வீச்சிற்குப் (ளூழவ) பதிலாகப் பயன்படுத்தப்படுவதினால் நுண்ணிய கலைப்பாதிப்பு ஏற்படுகின்றது என அவர் சுட்டிக் காட்டுகின்றார். இதனைச் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகின்றார். காதலியோடு கோபித்துக்கொண்டு காதலன் வெளியேறி காரிலே சென்று விடுகின்றான். அவன் செல்வதைக் காட்டாமல், காதலியின் துயரந் தோய்ந்த முகம் மட்டுமே திரையிலே தெரிய, கதவு வேகமாக அடித்து மூடப்படும் ஒலியும், கார் ஓடுஞ் சத்தமும் எம் செவிகளை எட்டுகின்றன. இத்தகைய உத்தி நுணுக்கங்களால் ஒலி எவ்வாறு திரைப்படங்களுக்கு மெருகேற்றுகின்றது என்பதனை நாம் ஊகிக்கலாம்.

திரைப்படக்கலை வளர்ச்சியடைந்து வருங் கலையாகும். ஆதலால், மௌனப்படங்களையே நிரந்தர அளவு கோல்களாகக் கொள்வது பொருந்தாது என கெவின் லம்பேர்ட் கூறுகின்றார். மௌனப் படங்களுக்கும், பேசும் படங்களுக்குமுள்ள வேறுபாடுகளை ஆராயுமிடத்து, மௌனப் படத்தினைக் கவிதைக்கு ஒப்பிடுகிறார். மௌனப் படத்தில் உருவம் மட்டுமே தெரிகின்றபடியால் அங்கே கவிதைக்குரிய கலைச் செறிவு உண்டு. ஆனால், பேசும் படத்திலே கண்கள் திரையிலே உள்ள உருவத்தினை பார்க்க, காதுகள் பேச்சினையும், ஒலியினையும் கேட்கின்றன. இவற்றால் மௌனப் படத்திலே உள்ள செறிவு அற்றுப் போய்விடுகின்றது. ஆனாலும், வேறு வழிகளிலே பேசும் படங்கள் மேன்மை பெற்றுள்ளன என அவர் சுட்டிக் காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக பாத்திர வார்ப்புகளை நயத்தோடு சித்திரிக்க முடிகின்றது. மேலும், பேசும் படம் கதை அம்சத்தினை கூடுதலாக வற்புறுத்துகின்றது. இத்தகைய மேன்மைகளால் பேசும் படங்கள் சில சமயங்களிலே கவிதா உணர்ச்சிகளை ஊட்டவல்லன. செறிவு – கவிதையிலே நாம் காணும் செறிவு – பேசும் படங்களிலே இல்லை எனக் குறிப்பிடுகிறார்.

திரைப்படங்கள் வெளி – காலத்தொடர் என்பதனை மேலே கண்டோம். ஆனால், திரைப்படங்களிலே நாம் தரிசிக்கும் வெளி – காலத் தொடர் யதார்த்த வெளி – காலத்தொடரிலிருந்து வேறுபட்டது என்பதனை மறத்தல் ஆகாது. இதனைப்புகழ் பெற்ற ருஷ்ய நெறியாளர் புடோவ்கின் நன்கு தெளிவாக்குகின்றார். ஒட்டிணைப்பே திரைப்படக் கலையின் அடிப்படை என வற்புறுத்தும் அவர், இயற்கை நிகழ்ச்சிக்கும் அதன் திரைத் தோற்றத்திற்குமிடையே வேற்றுமை உண்டென்றும், அவ் வேற்றுமையே திரைப்படத்தினை கலையாக்குகின்ற தென்றுங் குறிப்பிடுகின்றார். திரைப்பட நெறியாளர் கையாளும் பொருள் யதார்த்த வெளியிலும் காலத்திலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்ல. அவை படம் பிடிக்கப்பட்ட ‘செலலோயிட்’ துண்டுகளே. இத்துண்டுகளை நெறியாளர் தான் விரும்பியவாறு ஒட்டிணைப்பு செய்ததினால் திரைப்படத்திற்கே உரிய காலத்தொடர் தோன்றுகின்றது. அதே போன்று வௌ;வேறு இடங்களிலே படம் பிடிக்கப்பட்ட கூறுகளை ஒட்டிணைப்பதன் மூலம் திரைப்படத்திற்கே உரிய வெளித்தொடர் உருவாகின்றதென புடோவ்கின் வற்புறுத்துகின்றார். ஏறக்குறைய இதே கருத்தைத் தான் கலாநிதி ஆணல்ட் கௌசர் வெளியிடுகின்றார். மேடை நாடகங்களே திரப்படங்களுக்கு, உருவத்தைப் பொறுத்த வரை ஒத்தவை என்றும், ஆனால் திரைப்படங்களிலே வெளியும் காலமும் கலந்திருப்பது போன்று மேடை நாடகங்களில் நிகழ்வதில்லை என்றுங் குறிப்பிடுகின்றார். ஏனைய கலைகளுக்கும் திரைப்படக் கலைக்கும் இடையேயுள்ள அடிப்படையான வேற்றுமையாதெனில் திரைப்படங்களிலே வெளி-கால எல்லைகள் நெகிழத்தக்கவையாக இருப்பதே. திரைப்படங்களிலே வெளி, காலத்தன்மையை பெற, காலம் வெளியின் தன்மையைப் பெறுகின்றதென அவர் வற்புறுத்துகின்றார். நவீன திரைப்படங்களிலே காலம் எவ்வாறு கையாளப்படுகின்றதோ அதே போன்று தான் நவீன மேற்கத்திய இலக்கியத்திலும், குறிப்பாக நாவலி;, காலம் வரிசை கிரமமாய்க் கையாளப்படாது திடீரெனத் துண்டிக்கப்பட்டதாய், தொடர்ச்சியாய் இராததாய் காட்சியளிக்கின்றதென கலாநிதி கௌசர் நுட்பமாய் சுட்டிக் காட்டுகின்றார். எலியட் போன்ற கவிஞர்களின் கவிதா உத்திகளும் நவீன திரைப்பட ஒட்டிணைப்பிற்கு ஒத்தன என்பது ஈண்டு குறிக்கற்பாலது.

திரைப்படக் கலை கூட்டுக்கலை என்பதனை கலாநிதி கௌசர் வற்புறுத்துகின்றார். இத்தன்மைக்கும் திரைப்படக்கலை ஒன்றில் மட்டும்தான் சோவியத் ஒன்றியம் திறமை எய்தியிருப்பதற்கும் தொடர்புண்டு என அவர் குறிப்பிடுகின்றார். மேலும், இயந்திரமே திரைப்படக்கலையின் அடிப்படையாக இருப்பதனால், உலகத்திலே மிக இயந்திரமயமான நாடுகளாகிய அமெரிக்காவும் ருஷ்யாவும் திரைப்பட கலையின் வளர்ச்சியில் அதி முக்கிய பங்கு வகித்தமை வியப்பன்று என விளக்குகின்றார்.

திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மக்கள் ஆயிரக் கணக்கிலே செல்கின்றனரே, இவர்கள் திரைப்படங்களை நாடுவதேன்? இவர்களின் மனோநிலை, உளப்பாங்கு என்ன? இத்தகைய பிரச்சினைகளை கியூகோ மோர்கொவ்வர் என்னும் ஜெர்மனிய உளவியலாளர் தனது கட்டுரையிலே ஆராய்கின்றார். அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ள முனைவதே மக்களை திரைப்படங்களைப் பார்க்கத் தூண்டுகின்றது என அவர் கூறுகின்றார். அவருடைய கருத்துப்படி சினிமா மனநோய்க்கு பாண்டுஞ் செய்கின்றது. திரைப்படங்களைப் பார்ப்பதாலே இலட்சக் கணக்கான மகக்ள் கவலைகளை மறந்து வாழ்க்கையை சமாளிக்கின்றார்கள். நவீன நாகரிகத்தில் வாழ்க்கை வெறுமை தட்டிவிட்டதனால் திரைப்படங்கள் இதனை ஈடுசெய்ய உதவுகின்றன என அவர் கருதுகின்றார். ஒருவன் சினிமாக் கொட்டகைக்குள் புகுந்ததும் அவனது மனோநில மாற்றம் அடைகின்றதென அவர் சுட்டிக்காட்டுகின்றார். அகநிலை ரீதியாக நோக்கும் இடத்து ஒருவன் பொழுது போக்கிற்காக சினிமாவிற்குச் செல்லலாம். அதனால், அவன் திரைப்படங்களின் பொருளாதார சமூகப் பின்னணி போன்றவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாதிருக்கலாம். இவற்றைவிட புறநிலைக் காரணிகளும் கூட்டுச்சேருகின்றன என அவர் குறிப்பிடுகின்றார். ஒருவர் சினிமாக்கொட்டகைக்குள் சென்றதும் அவன் வெளி உலகிலிருந்து விடுபடுகின்றான். வெளிஉலகத்தின் ஒலிகளும், காட்சிகளும் அவனைப் பாதிப்பதில்லை. இருள் சூழ்ந்த மண்டபத்திலே அமர்ந்திருக்கையில் அவனது கால உணர்வு மாறுகின்றது. காலம் ஆமை வேகத்தில் நகர்வதாக அவனுக்குப் படுகின்றது. இதேபோன்று வெளியின் தன்மையை அவன் உணரும் முறையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. பொருள்களின் உருவங்கள் தெளிவாகப் புலப்படாததினால் அவனது கற்பனை தன் போக்கிலே செல்வதற்கு அதிக வாய்ப்புண்டு. இதனால் விழிப்பு மனத்திற்கும், அடிமனத்திற்குமிடையே உள்ள தடைகள் அகல்கின்றன. ஆதலால் திரைப்பட அனுபவத்திலே அடிமனத்தின் பங்கினை புறக்கணித்தல் ஆகாது என்று அவர் கூறுகின்றார்.

சினிமாக் கொட்டகையில் வெளிச்சம் அணைந்ததும் அங்கு அமர்ந்திருப்பவர்களின் உளப் பாங்கு மாற்றம் அடைகின்றது. இருளினால் கால – வெளி உணர்வுகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக அங்கு குழுமியிருப்பவர்களிடையே சலிப்புணர்ச்சி ஏற்படுவதுடன், அவர்களுடைய கற்பனையும் துரிதமாகச் செயற்படத் தொடங்குகிறது. கால உணர்வில் ஏற்படும் மாற்றத்தினால் பார்ப்பவர்களின் மனம் உச்ச வேகத்தில் அமைந்த நிகழ்ச்சிகளை நாடுகின்றது. நிகழ்ச்சிகள் உண்மையில் நிகழும் வேகத்திலே திரையிலே காட்டப்படுவதை நாம் பொதுவாக வெறுக்கிறோம். திரைப்படத்தின் லயம் வாழ்க்கையின் லயத்திலிருந்து வேறுபடாவிட்டால் அநேகமாகப் பலஐக்குச் சலிப்புத் தட்டும். ஆனால், புற நடையாக, சில திரைப்படக் காட்சிகள் குறியீட்டு நோக்கங்களுக்காகவோ உயிர்த்துடிப்பைக் கருதியோ வாழ்க்கைலயத்திலேயே அமையலாம். இதனாற்றான் போலும் பெரும்பாலான திரைப்படங்ளிலே பரபரப்பூட்டும் நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கின்றன. ஒரு திரைப்படம் சலிப்பையூட்டுவதென்றால் அவ்வுணர்ச்சி உருவாவதற்குப் பெரும்பாலும் திரைப்படம் அல்ல, பார்ப்பவரின் மனோநிலை மாற்றமே அதற்கு அடிப்படையாகும் எனக் கட்டுரையாசிரியர் வற்புறுத்துகின்றார்.

துயின்று கொண்டிருப்பவரின் நிலைக்கும், திரைப்படத்தைப் பார்ப்பவரி; நிலைக்கும் இடையே உளவியல் ரீதியான ஒற்றுமை உண்டென கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இரு நிலைகளிலும், யதார்த்தத்திலிருந்து விலகிய தன்னிச்சையான உயிர்ப்பற்ற தன்மையும், நித்திரைக்கும் படத்தைப் பார்ப்பதற்கும் முன்னோடியான இருளும் தேவைப்படுகின்றன. ஆதலால், திரைப்படங்கள் கனவுகளின் தொழிற் கூடங்கள் என ஏரன்பேர்க் என்னும் ருஷ்ய நாவலாசிரியர் குறிப்பிட்டமை பொருந்தும் எனக் கட்டுரை ஆசிரியர் கூறுகின்றார். நாம் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது நாமே நமது கனவுகளை உருவாக்குகின்றோம். ஆனால் திரைப்படங்களிலோ இக்கனவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு எமக்களிக்கப்படுகின்றன.

நாம் திரைப்படங்களைப் பார்க்கும் பொழுது எமது நிறைவேறா ஆசாபாசங்களும், பகற் கனவுகளும் தாண்டவ மாடுகின்றன என மோர்கொவ்வர் சுட்டிக்காட்டுகின்றார். திரைப்படம் ஒன்றினை இருவர் ஒரே விதத்தில் அனுபவிப்பதில்லை என்றும், இதனாற்றான் திரைப்பட விமர்சனங்கள் முரண்படுகின்றனர் என்றும் அவர் விளக்குகின்றார். வௌ;வேறு ஆட்களின் அடிமனத்திலே உள்ள வேற்றுமைகளே இதற்குக் காரணம் என்கிறார். எண்ணற்ற மக்களின் மூலக் கூறுகளை திரைப்படங்களே வழங்குகின்றன என்பது கட்டுரை ஆசிரியரின் வாதமாகும். இந்நிலையிலே அன்றாட யதார்த்தத்திற்கும் தனிப்பட்டவரின் கனவிற்குமிடையே சினிமா இடைநிலை வகிக்கின்றதென அவர் குறிப்பிடுகின்றார். மேலும் படமாளிகைகளிலே அமர்ந்திருப்பவர் ஒருவரையொருவர் தெரியாத நிலையில் உள்ளனர் என்பதையும் கட்டுரையாசிரியர் வற்புறுத்துகிறார். இம்மறைவு நிலையினால் நாடகக்கலையிலே உருவாவது போன்ற ‘சமூகம்’ உருவாக முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார். இத்தன்மைகளே ‘சினிமா நிலை’யின் முக்கிய கூறுகள் என அவர் விரித்துரைக்கின்றார். கட்டுரையாசிரியர் கூறியவற்றில் பல உண்மைகள் பொதிந்திருந்த போதிலும் அவை முற்றும் பொருந்துவன என நாம் கொள்ளவேண்டியதில்லை. அவர் சுட்டிக் காட்டும் பண்புகள் எல்லாத் திரைப்படங்களுக்கும், எல்லாத் திரைப்படச் சுவைஞர்களுக்கும் பொருந்தா என்பது வெள்ளிடைமலை. எல்லாத் திரைப்படங்களும் வெறும் பொழுது போக்குப் படங்களுமல்ல, திரைப்படங்களைப் பார்ப்பவர் எல்லோரும் வாழ்க்கையிலே இருந்து தப்பித்துக் கொள்ள விழைபவர்களுமல்லர்.

திரைப்படத்திற்கும் துயிலுக்குமிடையே ஒருவகை ஒற்றுமை இருக்கிறதென மேலே கண்டோம். திரைப்படத்தின் பாணி கனவின் பாணி என சுசன லஞ்சர் விளக்குகிறார். இதனால் கனவுகளைத் திரைப்படங்கள் பிரதி பண்ணுகின்றன என்றோ படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவை பகற் கனவுகளை ஊட்டுகின்றன என்றோ கொள்ள வேண்டிய தில்லை என அவர் சுட்டிக் காட்டுகின்றார். கனவு காண்பவர் எப்பொழுதும் கனவு நிகழ்ச்சிகளின் மத்தியிலேதான் இருக்கின்றார். அதாவது, அந்நிகழ்ச்சிகளிலிருந்து கனவு காண்பவர் சரிசம தொலைவிலேயே இருப்பார். கனவிலே இடங்கள் மாறலாம், பல ஆட்கள் தோன்றி, பேசி, செயலாற்றி மறையலாம். ஆனால், கனவு காண்பவர் இந்நிகழ்ச்சிகளின் மத்தியிலே தான் இருக்கின்றார். அவரை இக்கனவுச் சம்பவங்கள் யாவும் நேரடியாகப் பாதிக்கின்றன. கனவிலே, நிகழ் காலத்திலே தான் நிகழ்ச்சிகள் யாவும் நடைபெறுகின்றன. அதேபோன்று தான் திரைப்படங்களிலும் கனவுகளின் நிகழ்கால நேரடிப்பாதிப்பு நிகழ்கின்றதென லஞ்சர் விளக்குகின்றார். ஆதலாற்றான் கனவுப் பாணிக்கும் திரைப்படப் பாணிக்கும் ஒற்றுமை உண்டு என அவர் சுட்டுகின்றார். இப்பணி ஒரு புதிய கவித்துவ பாணி என மேலும் அவர் வற்புறுத்துகின்றார். கனவு காண்பவருக்கு ஒத்ததாகவே நிழற்படக் கருவி இருக்கின்றது. ஆனால், ஒரு வேறுபாடு உண்டு. கனவு காண்பவர் கனவிலே அமிழ்ந்திருக்கின்றார். நிழற்படக் கருவியோ படத்திற்கு வெளியிலே உள்ளது. அது மனக் கண்ணுக்கு ஒப்பாகும். மேலும், திரைப்படத்தின் அமைப்பு கனவின் அமைப்பு போன்றதல்ல. திரைப்படம் கவிதை போன்ற இசைவினையுடைய உறுப்பமைதி வாய்ந்த ஒரு படைப்பாகும்.

சடப்பொருள்களைப் பதிவு செய்து அவற்றினை வெளிப்படுத்துதலே திரைப்படத்தின் முக்கிய தன்மை என்பது சீப் றீட் கிறக்கவறின் வாதமாகும். புலன்களுக்கு உட்பட்ட உலகமே திரைப்படத்தின் உலகம். ஊடகத்தின் தன்மையை மறந்து இயற்கையை, புறஉலகைப் புறக்கணித்தால் திரைப்படத்தின் தன்மை சிதைந்து விடும் என்கிறார். இயற்கையை ஊடுருவி ஆராய்வதே திரைப்படக்கலையின் உண்மையான பணி என மேலும் அவர் விளக்குகிறார். சாதாரண நாடகப்பாணியிலே அமைந்த திரைப்படங்களும் சில நவீன ‘கலை’ப் படங்களும் ஊடகத்தில் இயல்பை புறக்கணிப்பதினால் அவை உண்மையில் திரைபடங்கள் அல்ல என அவர் வலியுறுத்துகின்றார். திரைபடங்கள் செப்பஞ் செய்யப்பட்டவையாக இராது. வாழ்க்கையின் ஒழுங்கற்ற தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அவர் கூறுகின்றார். சடப்பொருட் என்னும் காட்டினூடே திரைப்படக் கலைஞன் புகுந்து ஆராய்கின்றான். அவன் எந்நேரமும் அக்காட்டினிலே வழி தவறலாம் என்று அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

கிறக்கவறின் கருத்துக்கள் குறுகியவையாக சிலருக்குப் படலாம். புறத்தை அவர் வற்புறுத்துவதனால் அகத்தை ஒதுக்கிவிடுகின்றார் என சிலர் நினைக்கலாம். ஆனால் அவா அகத்தைப் புறக்கணிக்கவில்லை. திரைப்படக்கலைஞன் சடப்பொருட்களைத் தனது நிழற்படக் கருவி மூலம் ஊடுருவி அக உலகைத் தோற்றுவிக்கின்றான் என அவர் விளக்குகின்றார். ஏனைய கலைகள் ஓர் எண்ணத்துடன் தொடங்கி அதனைச் சடப் பொருள்கள் மீது திணிக்கின்றன என்றும், ஆனால் திரைப்படNமுh சடப்பொருள்களுடன் தொடங்கி எண்ணங்களையும், உணர்வுகளையும் தோற்றுவிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். அவருடைய கருத்துப்படி திரைப்படத்திலே சடம் அகநிலையை நோக்கித் துழாவிச் செல்கின்றது.

நவீன மேற்கத்திய ஓவியத்திலே மனித உருவம் மறைந்து விட்டது என்றும், அவ்வுருவம் வரிகள் மூலமும், கோடுகள் மூலமும் கன சதுரங்கள் மூலமுமே குறிக்கப்படுகின்றன என்றும் பார்க்கர் ரைலர் கூறுகின்றார். இதனால் பண்டைய நாள் தொட்டு உருவாக்கப்பட்டு வந்த மனித உருவத்தினை நவீன ஓவியம் சிதைத்து விட்டது என அவர் சுட்டிக்காட்டுகிறார். இப்போக்கிற்கு திரைப்படங்கள் மாற்று மருந்தாக அமைக்கின்றன என அவர் வற்புறுத்துகின்றார். திரைப்படங்கள் கண்ணாடி போன்று மனிதனையும், அவன் இயங்கும், உலகையும் பிரதிபலிப்பதனால் நவீன ஓவியத்திலே சிதைந்து போன மனித உருவத்தினை மீண்டும் மீட்க முடிகின்றது என்று அவர் விளக்குகின்றார்.

அச்சுக் கலை தோன்றியதும் முக பாவங்கள் மூலமும் கருத்துக்களை ஊகிக்கும் வழக்ம் வழக்கொழிந்து விட்டது என்றும் அதனால் மனித முகங்கள் ‘படிக்க’ முடியாதவை ஆகிவிட்டன என்றும், பேலாபலாஸ் கருத்துத் தெரிவிக்கின்றார். ஆனால் திரைப்படங்கள் மூலம் முகபாவங்களையும், அவை சுட்டும் அக அநுபவங்களையும் ஊகிக்க முடியும் என்றும், இதனால் மனிதன் மீண்டும் கண்ணுக்குப் புலனாகிவிட்டான் என்றும் அவர் வற்புறுத்துகின்றார். இன்றைய நாகரீகத்திலே சொல்லே கோலோச்சுகின்றது. இதனால் விஞ்ஞானத் துறை, சிந்தனைத் துறை போன்றவற்றிலே துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முன்னேற்றத்தை மறுக்கவோ, அழிக்கவோ அவர் விரும்பவில்லை. ஆனால் இப்போக்கினால் சில துறைகளிலே இழப்பு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக் காட்டுகின்றார். உடல் மூலம், அதன் அசைவுகள் மூலம், சைகை மூலம் உணர்ச்சிகளையும், பொதுவாக சொல்லிலே வடிக்க முடியாத அக அநுபவங்களையும் வெளிப்படுத்தும் வழக்கம் அச்சுக் கலை தோன்றியதுடன் மறைந்து விட்டதனால் மாபெரும் இழப்பு ஏற்பட்டு விட்டது என்றும், இதனால் மனித இயல்பே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும், ஆனால் திரைப்படம் மூலம் இவ்விழப்பினை ஈடுசெய்து, மனிதன் தன்னை மீண்டும் இனங்கண்டு கொள்வதற்கு வழி பிறந்து விட்டதாக அவர் விளக்குகிறார்.

ஏனைய கலைகள் போன்று திரைப்படக் கலையிலும் உருவ – உள்ளடக்கப் போராட்டம் நடந்துகொண்டே வருகின்றனது. இன்றைய ‘கலை’த் திரைப்படங்கள் பெரும் பாலானவை உருவத்திலேதான் கவனஞ்செலுத்துவதாக போளின் கீல் என்பவர் அவற்றினைச் சாடுகிறார். உத்தி, நுட்பங்கள் மூலம் கால உணர்வுடன் ‘விளையாடி’ தம் படைப்புகள் உந்நத கலைப்படைப்புகள் என நிறுவச் சில நெறியாளர் விழைவதாகவும், அவர்களுக்கு பக்கபலமாக சில விமர்சகர்கள் நிற்பதாகவும் அவர் கூறுகின்றார். இவ்வித படங்களிலே எதுவித பொருளும் இல்லை என்பதே அவரதுவாதம். இக்கருத்தின்மையை மூடி மறைப்பதற்காகத் தான் நவீன் உத்திகள் பயன்படுகின்றன என அவர் கூறுகின்றார். திரையிலே தோன்றும் உருவங்கள் வடிவியல் உருவங்களாக பெரும்பாலும் இருப்பதில்லை என்றும், அவை மக்களின் அல்லது இடங்களின் அல்லது நிகழ்ச்சிகளின் உருவங்களாக இருப்பதனால் அவற்றிலே பொருள் தொக்கி நிற்பது தவிர்க்க முடியாது என்றும் வற்புறுத்துகிறார்.

இத்தொகுப்பிலேயுள்ள சில கட்டுரைகளை மட்டும் தான் நான் இங்கு கோடிகாட்டியிருக்கிறேன். இடம் இன்மையால் பல கட்டுரைகளைக் குறிப்பிட முடியவில்லை. பல கோணங்களிலே இருந்து இத்தொகுப்பு நூல் திரைப்படக்கலையினை ஆராய்வதினால் வாசகனுக்கு மிக்க பயன் நல்கும் ஒன்றாய் விளக்குகின்றது.


ஆயிரமுக வீரன்

வுhந ர்நசழ றiவா ய
வுhழரளயனெ கயஉநள
டில துழளநிh ஊயஅpநடட

இன்று பகுத்தறிவு ஊழி, விஞ்ஞானம் கோலோச்சும் இக்காலத்திலே புராணங்கள் தமது கவர்ச்சியை இழந்தமை வியப்பன்று. மனிதன் சந்திரனிலே நடமாடியதற்குப் பின்னது. கல்லாதவர்களைத் தவிர யார்தான் சிவபெருமான் பிறையைத் தனது செஞ்சடையிலே சூட்டினார் என நம்புவார்கள்? மனிதன் தனது நுண்மதியாலே விண்மதியை வென்றிருக்கும்போது, ‘பித்தா பிறை சூடி’ என்ற தேவாரத்தைப் பாடும் அடியார்களுக்கு அல்லாது மற்றவர்களுக்கு அஃது உண்மையாகத் தென்படமாட்டாது.

புராணங்களை வெற்றுரைகள் எனப் பெரும்பாலோர் இன்று புறக்கணிக்கின்றார்கள். மனித குலம் தனது குழந்தைப் பருவத்திலே இத்தகைய கட்டுக்கதை உருவாக்கித் தனது பொழுதைப் போக்கிக் கொண்டது என்பதே இவர்களது கணிப்பு. உலகைப் பற்றியும், மனித இயற்கையைப் பற்றியும் சில உண்மைகளைப் புராணங்கள் சுற்றி வளைத்துத் தவறான முறையிலே உருவகிக்கின்றன என வேறு சிலர் கருதுகின்றனர். விஞ்ஞானத்தினாலேதான் இவ்வுண்மைகளை நுட்பமாக வரையறுத்துக் கூறமுடியும் என்பது இவர்களது எண்ணம். புராணங்கள் வழக்கொழிந்து வலுவிழந்ததுடன், பயனற்றவையாகிவிட்டன என்றே இருசாராரும் கருதுகின்றார்கள்.

புராணத்துறை செல்வாக்கிழந்ததற்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சியே – அது உருவாக்கிய மனப்பான்மையே – முக்கிய காரணம் எனலாம். புராணத்திற்கு விஞ்ஞானி வரியாக இருக்கலாம். ஆனால், புராணத்துணையின்றி; கலையோ, இலக்கியமோ செழித்தோங்க முடியாது. புராணங்களே கலைக்கு அடித்தளம் என அமெரிக்கக் கவிஞர் ஒருவர் கூறியமை ஈண்டு நோக்கற்பாலது. இதே கருத்தினை மெக்சிகோ கவிஞர் ஒருவரும் அழுத்தியிருக்கின்றார். புராணம் இன்றேல் கலையும் பண்பாடும் உயிர் வாழ்தல் முடியாதென அவர் கூறியிருக்கின்றார்.

நவீன மேற்கத்திய இலக்கியத்திலே குறியீட்டுப் போக்கு தலைதூக்கியதின் விளைவாக, ஆதி கால மனிதன் கையாண்ட குறியீடுகள் பற்றி குறிப்பாக அவர்களிடம் வழங்கிய புராண இதிகாசங்கள் பற்றி ஆராய்வதற்குச் சில உளவியலாளரும் மனித இயல் நூலாரும் விழைந்தனர். இவ்வாராய்ச்சிகளின் பயனாக ஆதிகால மனிதரிடம் வஙை;கிய புராணங்களும் குறியீடுகளும் ஒருவகை உண்மையைப் புலப்படுத்துகின்றன என்பது தெளிவாயிற்று. மனித மனம், ஒளியை எதிரடித்துக் காட்டுகின்ற கண்ணாடியைப் போன்று, உலகை உயிர்ப்பற்ற தன்மையிலே பிரதிபிம்பம் செய்வதில்லை@ பதிலாக, நாம் உணரும் மெய்ம்மையின் வடிவத்தினை அது பாதிக்கின்றது என காண்ட் என்னும் தத்துவஞானி கருதினார். இவ்வடிப்படையிலே நோக்குமிடத்து, ஆதிகால மனிதனின் குறியீடுகளின் முக்கியத்துவம் சொல்லாமலே விளங்கும். புராணங்கள், நுண் பொருள் ஆய்வின் முதற்கட்டம், பொது எண்ணங்களின் முதல் கருத்துருவம் என லஞ்சர் மொழிந்தமை ஈண்டு குறிக்கற்பாலது. புராணச் சார்பான உருவாக்கத்திலிருந்துதான் மொழி தோன்றி இருக்கவேண்டும் என ஏர்டர் என்னும் அறிஞர் கூறுகின்றார். புராணத்தின் ஆற்றல் வாய்ந்த தன்மையைக் கவிதை பேணுகின்றதென அவர் மேலும் கருதுகின்றார்.

புராணம் ஒருவகைக் கவிதைக் கூற்று என விக்கோ என்னும் மற்றோர் அறிஞர் கருதுகின்றார். இக் கூற்றுகளைத் தொகுத்து நோக்குமிடத்து, புராணவியல் ஆராய்வு தனிச்சிறப்பு வாய்ந்ததென்பது தெற்றெனப் புலப்படும். மனிதன் குறியீடுகளை ஆக்க வல்ல விலங்கென்றால், புராணங்களின் உட்கருத்தை, அவற்றின் உள்ளியல்பை உய்த்துணருவது எமது தலையாய பணியாகும்.

மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, சடங்கு முறைகளுக்கும், புராணங்களுக்கும், கவிதைக்குமிடையே நெருங்கிய பிணைப்புகள் நிலவி வந்திருக்கின்றன. இவற்றின் தோற்றத்திலிருந்துதான் மனிதன் ஏனைய விலங்கினங்களிலிருந்து வேறுபடுகிறான். இவற்றின் அரவணைப்பிலேதான் ஆதிமனிதன் வளர்ந்து முன்னேறினான். இவ்வுண்;மையை உணர்ந்த நவீன மேற்கத்திய இலக்கியத் திறனாய்வாளர் புராணங்களுக்கும் இலக்கியத்திற்குமிடையே உள்ள தொடர்பு திறனாய்வுக்கு ஒரு புதிய திறவுகோலாய் அமையும் எனக் கருதலாயினர். புராணங்களின் மூலம் கற்பனையின் செயல் ஒழுங்குகளை ஆராயலாம் என எண்ணினர். யுங் போன்ற உளநிலைப் பகுப்பாய்வாளரின் முயற்சிகளும் இவர்களுக்கு ஊக்கமளித்தன.

யுங்கின் கோட்பாட்டின்படி சில படிவங்கள் ஆதியிலிருந்தே ஓர் இனத்தின் அடி மனத்திலே தோன்றிக் காலங்காலமாக வெளிப்படுத்தப்பட்டு வருவதனால், அவை அவ்வினத்தின் குருதியுடன் ஒன்றித்து விடுகின்றன. சில அடிப்படையான பாத்திரங்களும், நிலைமைகளும் இவ்வாறு பாமரர் இலக்கியந் தொடக்கம் சான்றோர் இலக்கியம் வரை விரவியிருக்கின்றன. இத்தகைய ஆதி படிவங்களை நாகரிக மனிதனைக் கூடக் கவரவல்லன.

புராணங்கள் வாயிலாக இலக்கியத்தை அணுகுவதில் ஆபத்தில்லாமலுமில்லை! தரமான இலக்கியமும் தரமற்ற இலக்கியமும் ஆதி படிவங்களைக் கையாளலாம். ஆதலால் இவ்வம்சத்திலிருந்து மட்டும் நாம் இலக்கியங்களின் ஏற்றத் தாழ்வினைக் கணிக்கமுடியாது.

கம்பெல்லின் நூலினை அணுக முன்பு, கவிதை, புராணம், மெய்ம்மை என்ற தலைப்பிலே பிலிப் வீல் ரைட் என்னும் அமெரிக்கத் திறனாய்வாளர் வெளியிட்ட சில கருத்துக்களை இங்கு சுட்டுதல் பொருத்தமாயிருக்கும்.

புராணங்கள் சமுதாய மனத்தின் வெளிப்பாடு, கூடி வாழ்தலின் விளைபயன் என்பதே அவரது வாதமாகும். பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட அறிவெல்லை கடந்த சக்திகளை உணர்த்துதலே புராணங்களின் சாரம் என அவர் மேலும் விளக்குகின்றார்.

கூட்டு வாழ்க்கையின் பயனாகத் தோன்றிய உணர்வு நிலையிலிருந்துதான் தனி மனத்தின் விழிப்பு நிலை உருவாகியது என அவர் விளக்குகின்றார். ஆதலால் தனி மனம் கூட்டு மனத்திலிருந்து தன்னை முற்றாகப் பிரித்துக் கொள்ளும் பொழுது, அது வரண்டு விடுகின்றதென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வுண்மையை எலியட், யேட்சு, ஜொய்சு போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து நாம் அவதானிக்கலாம். தமது எழுத்துக்களுக்கு வளமூட்டுவதற்காக இவர்கள் பழைய புராணங்களைக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் புராணங்கள் சமுதாயப் படைப்பு. இத்தகைய பின்னணி இன்று இல்லாதவிடத்து, இவர்களது முயற்சிகள் முற்றிலும் வெற்றி பெறாதது வியப்பன்று. புராண நோக்கு இன்று சிதைந்து போய்விட்டதே இன்றைய இலக்கியத்தின் வரட்சிக்கு முக்கிய காரணமென அவர் கருதுகின்றார். மேலும், பண்டைய இலக்கியத்திலும், ஈஸ்கிலஸ், செகற்பிரியர் போன்றோரின் படைப்புக்களிலும் எவ்வாறு புராணங்கள் கலைக்கு வளமூட்டுகின்றன என்பதையும் அவர் விளக்குகின்றார்.

புராண மனப்பாங்கை விஞ்ஞான ரீதியாக ஆராய முடியாது என்பதே அவரது திடமான நம்பிக்கை. ஒரு குறிப்பிட்ட புராணம் எங்கு தோன்றியது. எவ்வாறு பரவியது போன்றவற்றை விஞ்ஞான அடிப்படையிலே ஆராய்ந்தறியலாம். ஆனால் விஞ்ஞான நோக்கும் புராண நோக்கும் இருதுருவங்களாய் இருப்பதனால் விஞ்ஞானத்தின் துணைகொண்டு புராணத்தின் இதயத்தைத் தொட்டுணர முடியாது என அவர் கருதுகிறார்.

கம்பெல்லின் நூல் புராணங்களின் தோற்றம் பற்றிய நூலன்று. அதனை புராணங்கள் பற்றிய ஒப்பியல் ஆராய்வு எனலாம். அவரே கூறுகின்றார்: ‘புராணங்களுக்கிடையே மட்டு மன்று. அவைகளுக்கு ஞானிகள் கொடுத்த விளக்கங்களுக்கு மிடையேயும் முக்கியமான ஒப்புமைகள் உண்டு என்பதை எண்பிப்பதே இந்நூலின் நோக்கமாகும்.’ புராணங்கள் போற்றும் வீரர்கள் நாட்டுக்கு நாடு வௌ;வேறு உடைகளை அணிந்திருக்கலாம்@ ஆனால் அடிப்படையில் அவர்களெல்லாரும் ஒருவனே@ இவ்வீரன் ஆயிரமுகத்தான் என நூலாசிரியர் எடுத்துரைக்கின்றார். இவ்வாதத்தினை நிலைநாட்டுவதற்கு பல்வேறு நாட்டுப்புராணங்களை ஆசிரியர் ஆராய்ந்து அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டுகின்றார். இவ்வாறு செய்தல் வௌ;வேறு நாட்டு மரபுகளுக்கிடையே உள்ள வேற்றுமைகளை மறுப்பதாகும் என்ற குற்றச்சாட்டை ஆசிரியர் முறியடிக்கவும் தவறவில்லை. உடல் உறுப்பு அமைப்பியலிலே எவ்வாறு வௌ;வேறு இனத்தவர்களுக்கிடையே உள்ள உடற்கூறு வேற்றுமைகள் பொருட்படுத்தப்படுவதில்லையோ, அதேபோன்று தனது நூலிலே புராண ஒற்றுமைகளே ஆராயப்படுகின்றன என அவர் விளக்குகின்றார். வேற்றுமைகள் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், பொதுவாக நம்பப்படுவதற்கு மாறாக இவ்வேற்றுமைகள் அத்துணை பாரதூரமானவையன்று எனக் கூறுகின்றார். சத்தியம் ஒன்றே@ அதனை ஞானிகள் பல்வேறு பட பேசுவர் என்ற வேதவாக்கை அவர் நமக்கு நினைவுறுத்துகின்றார்.

புராணத் துறையைப் பல்வேறு கோணங்களிலிருந்து நோக்கலாம் என ஆசிரியர் விளக்குகின்றார். இயற்கையை விளக்குவதற்கு ஆதி மனிதன் முனைந்த பொழுது, அத்தடுமாற்ற முயற்சியின் விளைவாக எழுந்தவையே புராணங்கள் என விரேசர் கருதுகின்றார். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் கவித்துவப் புனைவே புராணங்களென்றும், அவற்றைப் பின்னர் மக்கள் தவறாகப் புரிந்துகொண்டனர் என்றும் மல்லர் போன்ற அறிஞர் கூறுகின்றனர். ஒருவனை அவன் வாழும் மக்கள் கூடத்தினருடன் இணைக்கும் பொருட்டு எழுந்த அறிவுறுத்தல் - உருவகக் கதைக் களஞ்சியமே புராணங்கள் என துர்கீம் போன்றோர் விளக்குகின்றனர். யுங்கின் கருத்துப்படி. மனித மனத்தின் ஆழத்திலே ஒளிந்திருக்கும் மூலப்படிவ தூண்டுகைகளைக் கோடிட்டுக் காட்டும் மக்கள் கூட்டத்தின் கனவே புராணங்களாகும். கலாயோகி ஆனந்த குமார சாமியோ, மனிதனின் மிக ஆழமான மறைபொருள் நுண் அறிவிற்கு புராணங்களே மரபு வழி வந்த ஊடகம் எனக் கருதுகின்றார். புராணங்கள் கடவுளின் திருவெளிப்பாடு எனத் திருச்சபை கருதுகின்றது. இவை யாவும் ஒவ்வோர் கோணநோக்கு@ யாவற்றிலும் உண்மை இருக்கின்றது எனக் கம்பெல் சுட்டிக்காட்டுகின்றார். புராணங்களின் தன்மையை ஆராயாது விடுத்து அவை இவ்வாறு மனிதனுக்கு பயன்பட்டிருக்கின்றன. பயன்படக்கூடும் என நோக்குவோமாயின், அவை தனி ஆளினதும், இனத்தினதும், காலத்தினதும் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்க வல்லன என்பதை அவதானிக்கலாம் என ஆசிரியர் விளக்குகின்றார்.

மனிதனின் முழுமையான உருவத்தை ஒருவனால் முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஒவ்வொருவனிலும் இம் முழுமையின் ஒரு பகுதியையோ அன்றேல் உருத்திரிபையோதான் காணமுடியும். ஆதலால், சமுதாயத்திற்றான் மனித முழுமை அடங்கியிருக்கின்றது, தனி ஆள் அதன் உறுப்பே எனக் கம்பெல் வற்புறுத்துகிறார். ஒருவன் தன்னைச் சமுதாயத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முனைவது, தனது வாழ்க்கையின் பிறப்பிடத்துட் உள்ள தொடர்புகளை துண்டிப்பதற்கு ஒப்பாகும். தனி ஆளின் வாழ்க்கையில் ஏற்படும் திரும்பு கட்டங்கள் (ஊசளைளை; திருமனம் போன்றவை), சடங்குகள், புராணங்கள் மூலம் தனி ஆளைக் குறிக்காத, தனி முறைச் சார்பற்ற பொதுவான உருவங்களாக மாறுகின்றன. இத்திரும்பு கட்டங்களில், விழிப்பு மனத்திலும், அடிமனத்திலும் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகின்றது. புதிய வாழ்க்கைக் கட்டத்தின் வாயிலுக்குள்ளே நுழைய, புராணங்களும் சடங்குகளும் உதவுகின்றன என ஆசிரியர் விளக்குகின்றார். இத்தகைய வாழ்க்கை முதிர்ச்சிக்கு முன்பு வழிகோலிய புராணங்கள் இன்று வலுவிழந்து விட்டதனாற்றான் போலும், மனக்கோளாறுகள் இன்று பெருகிவிட்டன எனக் கம்பெல் கூறுகின்றார்.

புராணங்கள் இயம்பும் உண்மைகளை அறிவதற்கு நவீன உளநிலைப் பகுபாய்வு பெரிதும் உதவுகின்றதெனக் கம்பெல் கருதுகின்றார். உளநிலைப் பகுப்பாய்வின்போது மனநோயாளிகள் வெளிப்படுத்திய கனவுகளும் புராணங்களும் ஒத்திருக்கின்றன என அவர் விளக்குகின்றார். இதற்குரிய சான்றுகளையுந் தருகின்றார். ஆனால், கனவுகளும் புராணங்களும் ஒத்திருந்தபோதிலும், அவற்றின் பிறப்பிடம் ஒன்றாய் இருந்த போதிலும், அவற்றிற்கிடையே வேற்றுமையும் உண்டு எனக் கம்பெல் சுட்டிக் காட்டுகின்றார். கனவுகள் நித்திரையின் போது இயல்பாக எழுகின்றன@ புராணங்களுக்கு விழிப்பு மனம் வடிவம் கொடுக்கின்றது. புராணங்கள் மரபு வழி வந்த ஞானத்தை ஊட்டுகின்றனவென்றும், அவை என்றும் மாறாத சில ஆன்மீகக் கொள்கைகளை வரையறுக்கின்றனவென்றும் அவர் குறிப்பிடுகின்றார். புராணங்கள் இயம்பும் உண்மையின் சாரம் இதுதான் என அவர் மேலும் விளக்குகின்றார். உலகத்திலே கண்ணுக்குப் புலனாகும் யாவும், எங்கும் பரவியுள்ள சக்தியிலிருந்து எழுகின்றன. பின்பு மடிந்து அதனுடன் சங்கமித்து விடுகின்றன.

வௌ;வேறு நாட்டுப் புராணங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை ஆதாரபூர்வமாக நிறுவி விட்டு, கம்பெல் அவற்றின் அடிப்படையை விளக்க விழைகின்றார். அவரின் கருத்துப்படி, புராணங்களைத் தொகுத்துப் பார்க்குங்கால், அவற்றின் மையக் கருவை - மூல அலகை - மூன்று பகுதிகளாக வரையறுக்கலாம். அவை வருமாறு துறவு, மறைவின் புகுமுகம், மீளல், சாதாரண உலக விவகாரங்களிலிருந்து பிரிந்து செல்வதைத் ‘துறவு’ என்றும், சாதாரண காரணங்களுக்குள் அடக்க முடியாத ஒன்றிலே புகுந்து தீட்சை பெறுதலை ‘மறைவின் புகுமுகம்’ என்றும் விளங்கிக்கொள்ளுதல் பொருந்தும். உலகிலுள்ள பெரிய மதங்களை நிறுவிய பெரியார்களுடைய வாழ்க்கையிலும் - ஏசுநாதர், புத்தபகவான் ஆகியோருடைய வாழ்க்கை வரலாறுகளைக் குறிப்பாக எடுத்துக்கொண்டாலுங்கூட - இம்மூன்று அம்சங்களும் ஒரு கட்டத்தில் மிக நேர்த்தியாகப் பொருந்துதை நாம் தெளிவாக விளக்குவதற்கு கம்பெல் ஏராளமான எடுத்து காட்டுகளைத் தந்துள்ளார்.

விஞ்ஞானம் புராணங்களைப் பொய்ப்பித்துவிட்டது. இதனைக் கம்பெல் ஒப்புக் கொள்ளுகின்றார். ஆனால் அவற்றிலே பொதிந்திருக்கும் அடிப்படை உண்மைகள் சிலவற்றை நாம் மறத்தலாகாது. மனிதனை அவனது சூழலுடன் மனோரீதியாக இணைப்பதற்கு ஆதியிலிருந்து புராணங்கள் உதவியிருக்கின்றன. பிளவுபட்டிருக்கும் இன்றைய மனிதனை ஒன்றாக இணைப்பதற்கும் நான் என்ற முனைப்பினை ஒழிக்கவும் அது வழிகாட்டும்.

கருத்தைக் கவரும் கம்பெலின் நூல் வாசகனுக்கு பெருவிருந்தாய் அமைந்துள்ளது என்பது சொல்லாமலே விளங்கும்.


அரசு

முiபௌhip
டில யு.ஆ. ர்ழஉயசவ

இத் தொடரிலே ஏ.எம். ஹொகார்ட் () என்னும் ஆங்கிலேயரின் நூலைத் தேர்ந்தெடுத்ததற்கு இருகாரணிகள் உள. இந்நூற்றாண்டிலே வாழ்ந்த மானிட இயலாளரிலே ஹொகார்ட் தலைசிறந்தவர் என்பது ஒரு காரணி. மற்றையது, அவர் பத்து ஆண்டுகளாக இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஆணையாளராகக் கடமை ஆற்றியது. இங்கு அவர் கடமை ஆற்றிய காலத்திலே இலங்கையின் வரலாற்றைப் பற்றியும், சிங்களவரின் ஐதீகங்கள் பற்றியும் பல அருமையான கட்டுரைகளை வரைந்தார். அத்துடன் ‘அரசு’ என்னும் முக்கிய நூலையும் யாத்தார். ஆழ்ந்த மானிட இயல் அறிவைப் பெற்ற இவரின் நூலை அறிமுகஞ் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

‘ஈற்றிலே ஐந்து அரசர்களே உலகத்திலே எஞ்சியிருப்பார்க்ள – கடுதாசிக் கூட்டத்திலே உள்ள நால்வரும், பிரித்தானிய மன்னரும்’ எனக் காலஞ்சென்ற எகிப்திய மன்னர் பாரூக் வேடிக்கையாகவும், அதே சமயம் தீர்க்கதரிசனமாகவும், ஒரு தடவை மொழிந்தார். இன்று முடியாட்சியல்ல. குடியாட்சியே பெரும்பாலும் நிலவுகிறது. ஆனால், நிலைமை முன்பு இதற்கு நேர்மாறாக இருந்ததை மறப்பதற்கில்லை.

அரசர்களின் தெய்வத் தன்மையில் நம்பிக்கையே ஆதிச்சமயம் என்று திட்டவட்டமாய்க் கூற முடியாவிடினும், அதுவே வரலாற்றறிவுக்கு எட்டியவரை முதல் நிலவிய மதம் என ஹொகார்ட் கருதுகிறார். தெய்வங்களையும் அவற்றின் உலகப் பிரதிநிதிகளாகிய அரசர்களையும் மனிதன் வணங்கினான் என்பது மினப் பழமையான ஆவணங்கள் மூலம் அறியக் கிடக்கின்றது. தெய்வ வழிபாடோ அல்லது அரச வழிபாடோ காலத்தால் முந்தியது என்பதை ஐயந்திரிபறக் கூற முடியாது. அரசர்களின்றித் தெய்வங்களோ அல்லது தெய்வங்களின்றி அரசர்களோ இருந்ததில்லைப் போலும். தெய்வங்களின் பிரதி நிதிகளாகிய அரசர் ஆட்சி புரிகின்றனர். எகிப்து, சுமேரியா, கிரேக்க நாடு, உரோமாபுரி, ஜெர்மனி, வேதகால இந்தியா, இலங்கை, யப்பான், பீஜித்தீவுகள், வட அமெரிக்கா – எங்குமே தெய்வீக அரசுக் கொள்கை நிலவியது எனலாம். இக்கொள்கை ஒரு பொதுப் பிறப்பிடத்தில் தோன்றி, பின்பு மற்ற நாடுகளுக்குப் பரவியதா அல்லது தனித் தனியே வௌ;வேறு இடங்களில் உருவாகியதா? இக்கொள்கை முதலில் ஓரிடத்தில் உருவாகிப் பின்பு வேறு நாடுகளுக்குப் பரவியிருக்க வேண்டும் எ ஹொகார்ட் ஊகித்தார். அரசன் ஒரு சூரியத்தெய்வம் என்னும் நம்பிக்கை எகிப்து, இந்தியா, தகிட்டி, பேரு போன்ற இடங்களில் வேரூன்றியிருந்ததினால், இந்த அம்சம் தெய்வீக அரசுக் கோட்பாட்டின் தொடக்கத்திலேயே அடங்கியிருக்கவேண்டும் என அவர் கருதுகிறார். முதன் முதலில் வணங்கப்பட்ட கடவுளர் வானுலகத்தில் உள்ளவராகவும், குறிப்பாக ஞாயிறுடன் அல்லது வான ஒளியுடன் தொடர்புள்ளவராயும் கருதப்பட்டனர். இந்தோ – ஐரொப்பிய தாய் மொழியில் தெய்வத்தன்மையைப் புலப்படுத்துவதற்கு கையாளப்படும் வேர்ச் சொல் ‘ஒளிர்தல்’ எனப் பொருள்படும். மங்கோலிய மொழியில் வானத்திற்கும் தெய்வத்திற்கும் ஒரே சொல்லே வழங்குகிறது. (வானவர் என்னும் தமிழ்ச் சொல்லை ஒப்புநோக்குக.) அரசன் ஒரு சூரிய தெய்வமாகக் கருதப்பட்டதனாற்றான் எகிப்தியர் தமது அரசனுக்கு வணக்கம் செலுத்தும் போது தங்கள் முகங்களுக்கு முன்னால் கைகளைப் பிடித்தார்கள். அச்செயலின் உட்கருத்து அரசனுடைய சூரியப் பிரகாசத்தினால் கண் கூசாதவாறு பார்த்துக்கொள்வதே. சிங்களக் கல்வெட்டுக்களையும் இதற்கு மேற்கோள் காட்டலாம். “கிழக்கு மலை மேலே உதிக்கும் ஞாயிறு எவ்வாறு இருளைக் கலைக்கின்றதோ அவ்வாறே அவர் (அரசன்) தனது பகைவரை விரட்டியடித்தார்.” சூரிய வம்சத்தைத் தவிர சந்திர வம்சத்தில் வந்த அரச பரம்பரையைப் பற்றியும் இந்தியாவில் கேள்விப்படுகிறோம். இரு அரச மரபுகளுக்கிடையும் நெருங்கிய தொடர்புண்டு. மேற்கூறியவற்றிலிருந்து தெய்வீக அரசுக் கொள்கை தனது கவர்ச்சியினால் மனித மனத்தை ஆட்கொண்டது என்பது புலனாகும். கிரேக்க நாடும் உரோமாபுரியும் வாலிபத்தின் மிடுக்குடன் இக்கொள்கையை உதறித்தள்ளிய போதிலும், கிழடுதட்டிய காலத்திலே மீண்டும் அதனைக் கடைப்பிடித்தன. தான் சேயசின் மகன் என அலெக்ஸ்சான்டர் சக்கரவர்த்தி கூறியபோது அவர் ஒரு பண்டைக் காலத்து நம்பிக்கையை மீட்டார். அந் நம்பிக்கையின் படி, அரசனின் தலைப்பிள்ளை உண்மையில் ஒரு தெய்வத்தின் மகன்@ அத் தெய்வம் ராணியோடு புணர்வதற்காக மனித ரூபம் எடுத்திருக்கும். எகிப்திய இந்நம்பிக்கை மிகப் பழைய காலத்திலே நிலவியது. உடம்பெடுத்த கடவுளே அரசன் என்கிற கொள்கைக்கும் அரசன் தெய்வத்தின் பிரதிநிதி என்பதற்குமிடையே உள்ள வேறுபாடு மிக நுட்பமானது. அரசனுக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பை பண்டைக் காலத்து மக்கள் உயர்வு நவிற்சியற்ற நேருண்மையான முறையிலே நோக்கினர். பிற்காலத்தவர் இத்தொடர்பை மறை மெய்ம்மை சார்ந்ததாகக் கருதினர். இது அறிவுடன் முரண்படாமல் உணர்ச்சிகளைத் திருப்திப் படுத்தியது.

போரே அரசரின் விளையாட்டாகவும் அதிக வெற்றி ஈட்டுவதே அவர்களின் உயர்ந்த குறிக்கோளாகவும் இருந்து வந்தது. இறைவன் தமது அரசருக்கு வெற்றியளி;பாராக என மக்கள் வேண்டிக் கொண்டனர். மொங்கோலியாவில் ‘அரசன்’ என்னும் சொல் ‘வெற்றியீட்டியவன்’ எனப் பொருள்படும். இந்தியா இந்த அம்சத்தை மிகவும் அழுத்தினர். “வெற்றியீட்டுவாயாக” என்றே தமது அரசரை வரவேற்றனர். வெற்றி எனப் பொருள்படும் ‘ஜய’, ‘விஜய’ போன்ற நாமங்களை சிங்கள அரசர் தமக்குச் சூட்டிக்கொண்டனர். அகிம்சையில் நம்பிக்கையுள்ளவர்கள் வெற்றியைப் பற்றிச் சதா பேசுவது முரண்பாடாகத் தோன்றலாம். ‘வெற்றி’ என்னும் போது எதைக் குறிக்கின்றனர்? இந்திய மரபிலே அமைதியான வெற்றிக்கு இடமுண்டு. வாள் இன்றி, ஒழுக்க சீலத்தினால் கடல் சூழ்ந்த உலகத்தை ஒரு வேந்தன் கைப்பற்றலாம்.

அரசு கட்டில் ஏற முன்பு, அரசன் உண்மையான அல்லது உண்மைபோல தோற்றக்கூடிய வெற்றியீட்டவேண்டும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டான். வேதங்களில் அரசன் இந்திரன்@ இந்திரன்தான் சூரியன். அவன் தோற்கடிக்கும் பசாசுகள் இருளின் சின்னங்கள். நாடு செழிப்படைவதற்கு சூரியன் இருளை விரட்டியடிக்க வேண்டும். சூரிய – தெய்வம் என்ற முறையில்தான் அரசன் வெற்றியீட்டுகிறான்@ அரசனின் வெற்றி உண்மையில் ஞாயிற்றின் வெற்றி@ ஜயசூரிய, விஜயசூரிய, விக்கிரமசூரிய என்ற பெயர்களை ஈண்டு நோக்குக. பண்டைக்காலத்திலே ‘ஜய’ (அதாவது வெற்றி) சூரியனின் நாமங்களுள் ஒன்றாகவிருந்தது. (இன்றுகூட கிழக்கே உதிக்கும் சூரியனுக்கும் மாஓவின் சிந்தனைக்கும் சீனக் கவிதை முடிச்சுப் போட்டிருப்பது இப்பழைய மரபினைத்தானே மறைமுகமாக வலியுறுத்துகின்றது?)

எப்படி அரசன் ஒரு தெய்வப் பிறவியாக இருந்தானோ அதேபோன்று பிசாசுகளும் உடலெடுத்து பூமியில் உலாவினர் எனப் பண்டைக் காலத்தில் கொள்ளப்பட்டது. இந்தியாவிலே நான்காம் வருணத்தினரும், அன்னியரும் பேய்களாகவே கருதப்பட்டனர். பேய்களைத் தோற்கடிப்பதற்கு வழி அவர்களுடைய சார்பாளராக உலகத்திலே உலாவுபவர்களை வெல்லுவதே. சமயச்சார்பான போர், சமயச்சார்பற்ற போர் எனப் பண்டைக் காலத்தவர் வேறுபடுத்தவில்லை. இந்த வேறுபாடு தற்காலத்திற்குரியது. அரசனின் பகைவரே இறைவனின் பகைவர் என்னும் கொள்கையின் போர்வையிலே யுத்தத்தில் ஆர்வமுற்ற சில அரசரும் மக்களும் போரில் குதிப்பதற்கு ஏதுவாகயிருந்தது.

நாட்டின் செழிப்பும் மக்களின் நலனும் அரசனின் செங்கோலில் தங்கியிருக்கின்றது என்ற நம்பிக்கை எங்கும் ஒரு காலத்தில் பரவியிருந்தது. பண்டைய இந்திய இலக்கியங்கள் இதனை மிகவும் அழுத்தின. தமிழ் இலக்கியமே இதற்குச் சான்று பகரும். தன் கைகளாலே வேலை செய்யாது, இயற்கைச் சூழலை சூரியனைப் போன்று தூரத்திலிருந்து கொண்டே பாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒருவரை புதுக்கக் கண்டு பிடித்ததை வரலாற்றிலே அதிமுக்கியத்தும் வாய்ந்த நிகழ்ச்சியாகும் என் ஹோகார்ட் கருதுகிறார். அக்கண்டு பிடிப்பே ஆட்சியின் தோற்றுவாய் எனக் கூறுகிறார்.

அரசன் செங்கோலோச்சினாற்றான் நாடு செழிப்புறும், பருவ மழை பெய்யும், பயிர் வளரும் என்ற நம்பிக்கை எவ்வாறு மக்கள் மனத்தைக் கவர்ந்தது? அனுபவத்தை செம்மையாக புரியாததினாற்றான் இவ்வித கொள்கைகள் தோன்றியிருக்க வேண்டும் என மேலெழுந்தவாரியாக நோக்கின் கருத இடமுண்டு. இதனை ஹோகார்ட் மறுத்துரைக்கின்றார். அரசாட்சியின் விளைவுகளை அவதானிப்பதற்கு, முதலில் அரசன் ஒருவன் இருத்தல் வேண்டும். நீதியும், சமயப் பாதுகாப்பும், ஒழுக்கத்தின் பாதுகாப்பும் அரசனிடம் ஒப்படைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இந்நம்பிக்கை மக்களின் அவதானிப்பிலிருந்து எழுந்தது எனக் கூறுவதை விட, அதனை ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட சித்தாந்தத்திலிருந்து உய்த்துணர்ந்தனர் எனக் கொள்வதே பொருத்தம் என்று அவர் கருதுகின்றார். அரசன் ஒரு தெய்வம்@ குறிப்பாக சூரிய தெய்வம். இதிலிருந்து அவரின் திருவிளையாடற் சக்தி பெறப்படும்@ இச்சக்திக்கும் நீதி வழுவாமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு@ பின்னதில்தான் இச் சக்தி தங்கியிருக்கிறது.

ஞாயிற்றின் தன்மையிலிருந்து அரச நீதியை வருவிக்கலாமா என்பதை ஹோகார்டுடன் நாமும் சற்று ஆராய்வோம். ஞாயிறு, திங்கள் போன்றவற்றினதும் பருவ காலங்களினதும் மாறுபடாத தன்மைக்கும் ஒழுக்க நெறி அமைதிக்குமிடையேயுள்ள ஒப்புவமையை இந்தியர் நன் குணர்ந்திருந்தனர். இயற்கை அமைதிக்கும் ஒழுக்க அமைதிக்கும் வேதங்களில் ஒரே சொல்லே வழங்கியது. வருண என்னும் தேவரே இரு அமைதிகளையும் தாங்கியவராதலால் ‘சட்டத்தின் தலைவர்’ என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. வருண ஓர் அரச தெய்வம்@ இன்றும் பூதானில் ‘சட்டத்தின் தலைவன்’ என்று அரசனுக்குப் பட்டப்பெயர் உண்டு. ஞாயிற்றுக்கும், சட்டத்துக்கும் அமைதிக்குமிடையே உள்ள தொடர்பை சதப்பத பிராமண குறிப்பிடுகின்றது. புத்த நெறியிலே பேசப்படும் ஒழுக்க நெறியின் சக்கரம் ஞாயிற்றின் குறியீடாகும். ஞாயிறே ஒழுக்க நெறியையும் அமைதியையும் தாங்குபவன் என்னும் கொள்கை நிலவியதனாற்றான் சிங்களவரிடையே இன்றும் விமலதர்மசூரிய (மாசற்ற ஒழுக்க நெறியின் ஞாயிறு) போன்ற பெயர்கள் வழக்கிலிருக்கின்றன என ஹோகார்ட் கூறுகிறார். எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் இக் கொள்கைகள் ஒரு காலத்தில் நிலவியிருந்தன என்பதற்குச் சான்றுகள் உள.

ஞாயிறே எல்லாவற்றின் மேலும் அமைதியைச் சுமத்துவதனால் அஃது ஒழுக்க நெறி எனக் கொள்ளப்பட்டது. ஆனால் ஞாயிறுகூட ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டதனால், சட்டம் ஞாயிற்றிலிருந்து வேறுபட்டதென்று அதே சமயம் கருதப்பட்டது. அரசன் ஞாயிறாக இருந்ததனால், அரச நீதி தவிர்க்க முடியாததாயிற்று. அவர் ஞாயிறாக இருந்ததனால் உலகத்திலே ஓர் ஒழுங்கு முறையை நிலைநாட்டி அதனைச் செழிப்புறச் செய்தார். காலந்தவறி மழை பெய்தால் அழிவே ஏற்படும். அதேபோன்று அரசன் நெறி தவறினால் இடையூறுகள் ஏற்படும். குடிமக்களுடன் சட்டத்தை மீறுவது இயற்கையை மீறுவதற்குச் சமமாகக் கருதப்பட்டது. விண்மீன் நிறைந்த வானமும் மக்கள் உள்ளத்திலே குடியிருந்த ஒழுக்க நெறியும் தன்னகத்தே மதிப்பச்சத்தை உண்டு பண்ணியது எனத் தத்துவஞானி காண்ட் கூறும் போதும், ‘மாற்ற முடியாத சட்டத்தின் படை’ என ஆங்கிலக் கவி மெரடித் கோள்களைண விழிக்கும்போதும், இருவரும் மிகப் பழமையான கொள்கைகளையே பிரதிபலிக்கின்றனர் என ஹோகார்ட் சுட்டிக் காட்டுகின்றார். பொருள் சிதைந்து மறைந்த போதிலும் அதன் நறுமணம் இன்றும் கமழ்கின்றது. வான அமைதிக்கும் ஒழுக்க நெறிக்கும் இடையே உள்ள ஒப்புவமை இப்பொழுது கவிஞர்களின் அழகுக் கற்பனையாகச் சுருங்கிவிட்டது. ஆனால் இவ்வொப்புவமையை முதலிற் கண்டு பிடித்த பண்டைக் காலத்து சிந்தனையாளர் வெறும் அழகை நாட வில்லை@ வான நிலையினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அவர்கள் அவாவினர் என ஹோகார்ட் கருதுகிறார். இம் முயற்சியில் ஓரளவு வெற்றியுங் கண்டார். இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்துவதில் அல்ல. தங்களைக் கட்டுப்படுத்தியதனால் ஒற்றுமையாக இயற்கையின் தாக்குதல்களை அவர்களால் சமாளிக்க முடிந்தது.

ஒலிகள் தான் மொழியின் அடிப்படை, இவ்வொலிக் கூட்டங்களிற் சில நிலைத்திருக்கின்றன@ சில திரிகின்றன@ சில மறைகின்றன. காலப்போக்கில் நிகழும் இம் மாற்றங்களினால் இவ்வொலிக் கூட்டங்களை இனங்கண்டு கொள்ள முடியாதவாறு ஆகின்றது. இவ்வொலிக் கூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றைத் துருவி ஆராய்ததின் பயனாக, மொழிக் குடும்பங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டுபிடிப்பதில் மொழி நூலார் வெற்றியீட்டினர். இவ்வுத்தியைக் கையாண்டு முடிசூட்டு விழாவை ஆராய்ந்தால், வௌ;வேறு நாடுகளில் வழக்கிலிந்த முடிசூட்டு விழாச் சடங்குகள் ஒரே பிறப்பிடத்திலிருந்து தோன்றியமை புலப்படும் என ஹொகார்ட் கூறுகிறார். சில நாடுகளிலே இச்சடங்குகளில் வேறுபாடுகள் இருந்த போதிலும், பல்வேறு நாடுகளில் வழக்கிலிருந்த முறைகளில் அடிப்படை ஒற்றுமை இருந்த தென்பதை ஹொகார்ட் எண்பிக்கிறார். ஈஜியன் கடலுக்கும் கங்கை நதிக்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து தான் ஆதியில் இம் மூலச் சடங்கு தோன்றியிருக்க வேண்டும் என அவர் ஊகிக்கிறார்.

திருமணத்தின் போது, மணமகனும், மணமகளும் அரசருக்குரிய நிலையில் வைத்துக்கொண்டாடப் படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கௌரவிக்கப்படுவது ஏன்? திருமணச் சடங்குகள் அரச வம்சத்தினாலும் மேல் வகுப்பாரினாலும் அனுட்டிக்கப்பட்டு கீழ்வகுப்பாராலும் பின்பற்றப்பட்டதென்பது தானா இதன் விளக்கம்? அரசனின் திருமணத்திற்கும் அவருடைய முடிசூட்டு விழாவிற்கும் தொடர்பு உண்டு என ஹோகார்ட் கருதுகிறார். விஜயனின் வரலாற்றை ஈண்டு நோக்கிக் கொள்க. அரச வம்ச பெண் ஒருத்தியை மதுரையிலிருந்து வரவழைத்து, பின்பு ஆசாரப்படி முடிசூட்டுவிழா நடைபெறுகின்றது. பண்டைக்காலத்து இந்தியாவில் அரசியில்லாமல் மன்னன் முடிசூடிக்கொள்ள முடியவில்லை என்பது இதிலிருந்து புலனாகின்றது. சதப்பத பிராணத்தில் இது வெளிப்படையாகக் கூறப்படுகிறது. “மனைவி அவரின் பாதி. ஆதலால் அவர் மணமாகாவிட்டால் முழுமையடையாதவர்@ பிறப்பெடுக்காதவர். ஆனால் (மனைவியை) மணந்தால், பிறப்பெடுக்கிறார். முழுமையடைகிறார்.” ஆதலால் திருமணமும் முடிசூட்டு விழாவும் பொருந்துவதில் வியப்பொன்றுமில்லை.

அரசியின்றி ஒருவன் அரசனாக முடியாது. அரசி ராஜ பரம்பரையில் பிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்பது பண்டைக் காலத்து நியதி போலும். திருமணம், முடிசூட்டு விழாவின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம். அரசன் தெய்வமாகவும், வானமாகவும், ஆன்மா அல்லது உயிராகவும், அரசி இறைவியாகவும், பூமியாகவும், உடம்பாகவும் இந்திய மரபிலே கருதப்பட்டனர். முடிசூட்டு விழாவிலே இடம்பெற்ற திருமணச் சடங்குகள் பின்பு மூலத்திலிருந்து பிரிக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக எளிதாக்கப்பட்டது என n ஹாகார்ட் கருதுகிறார். சாதாரண திருமணத்தில் இதே கோட்பாடும் (ஆண் - வானம், பெண் - பூமி), முடிசூட்டு விழாச் சடங்குகளில் சிலவும் மண்டிக் கிடப்பது இதற்குச் சான்றாகும்.

பண்டைக் காலத்தில், புரோகிதனுக்கும் அரசனுக்கும் முள்ள வேறுபாட்டை ஐயந்திரிபறக் கூறுவது மிக்க கடினம் என்கிறார் ஹொகார்ட்.

இம்மயக்கத்தின் விளையாக, மதகுரு – அரசன் என்ற பதத்தை உண்டாக்கியிருக்கின்றனர் வரலாற்றாசிரியர், இந்தச் சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ள. அரசனோ புரோகிதனோ எனத் திட்டவட்டமாய் வரையறுத்துக் கூறமுடியாதவிடத்து இப்பதத்தினை அவர்கள் கையாளுகின்றனர். பண்டைக் காலத்திலும், பின்தங்கிய சமுதாயங்களிலும்தான் இத்தகைய மதகுரு – அரசர் காணப்படுகின்றன. தற்பொழுது இருவருக்குமிடையே திட்டவட்டமான வேறுபாடு உண்டு. ஒரு பேரினத்திலிருந்து அரசனும் புரோகிதனும் கிளைத்திருக்கவேண்டும் என ஹொகார்ட் கதுகிறார். பண்டைக் காலத்து இந்தியாவிலே, அரசரைப் போன்று, மத குருமாரும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவர்களாக இருந்தனர். இருவரும் ஒரே வகைத்தான ஆசாரம் மூலம் திருநிலை வாணராக்கப்பட்டனர். ஆனால் விளைவுகள் வேறுபட்டன. அரசன் இந்திரனானான், மதகுரு பிரகஸ்பதியானான். அரசன் யாகத்தின் புரவலர், யாகத்தை ஒப்புக் கொடுத்தவர் மதகுரு. பின்னர், சாஷ்த்திரிய குலத்திலும் மேம்பட்டது பிராமணர்குலம்@ செல்வாக்குப் பெருகி அவர்களது கை ஓங்கியது. பிராமணன் தெய்வங்களின் தெய்வம் என்றார் மனு. புத்த சமய நூல்களின் போக்கு வேறு. சக்கரவர்த்தியாவதுதான் அரசன் அடையக்கூடிய உயர்ந்த மதிப்பு. ஆன்மிகத் துறையில், புத்தராவது தான் இலட்சியம். சித்தார்த்தன் புத்தராக மாறிய வரலாற்றை ஆராய்ந்தால் ஞானியாவது துறவியாக மாறிய அரசன் என்ற பண்டைக் காலத்து இந்திய நம்பிக்கை புலனாகும்.

வரலாற்றின் விடிவிலேயே அரசனுக்கும் புரோகிதனுக்குமிடையே வேறுபாடு தெளிவாகத் தொடங்கி விட்டது என ஹொகார்ட் குறிப்பிடுகிறார்.

முடிசூட்டு விழா பூரணத்துவமான சடங்காகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், இதிலும் விரிவான ஒரு சடங்கின் பகுதியே இஃது என்பது ஹொகார்ட்டின் காட்சி.

யாகத்தின் மூலம் உலகத்தை பிராமணன் படைக்கிறான் என்ற கொள்கை இந்தியாவிலே நிலவியது. உலகத்தைப் படைப்பதற்குக் கையாளப்பட வேண்டிய சடங்குகளை சதப்பத பிராமணம் விரிவாக எடுத்துரைக்கின்றது. இப்படைப்பின் மூலம் பிரபஞ்சத்தின்மீது அதிகாரம் பெறலாம் என்ற நம்பிக்கை நிலவியது. ஹொகார்ட்டின் கருத்துப்படி, முடிசூட்டு விழாவின் நோக்கம் உலகத்தின்மீது அதிகாரம் பெற்று அதனைச் செழிப்புறச் செய்வதே.

படைப்பைப்பற்றிய புராணங்கள் வரலாற்று ஆவணங்களே என ஹொகார்ட் கொள்கிறார். பிரபஞ்சத்திற்கு எழுச்சி கொடுத்து அதற்கு உரம் ஏற்றுகின்ற முறைகளை அவை சுட்டுகின்றன என்கிறார். பிரபஞ்ச மேட்டைக் குவித்தல். தெய்வீக விருட்சத்தை நாட்டுதல், பகைவரைத் தோற்கடித்தல், அரசன் அரசியை வினைமுறைகளுடன் பணியமர்த்துதல் - இவையாவையும் உள்ளடக்கியதொன்றுதான் ஆதிப்படைப்புச் சடங்கு என அவர் குறிப்பிடுகிறார். இந்தப் புராணங்கள் வரலாற்று உண்மைகளை உள்ளடக்கியன. அவற்றை வெறுங் கட்டுக் கதைகளென ஒதுக்கலாகாது என்பதே அவரது துணிவு.

இந்நூலை வாசிப்பவர்கள் ஹொகார்ட்டின் ஆழ்ந்த, பரந்த அறிவையும், நுண்மான் நுழைபுலத்தையும், மேலெழுந்த வாரியாக தொடர்பற்றவை எனத் தோன்றுபவற்றுக்கு இடையேயுள்ள உள்ளார்ந்த தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆற்றலையும் மெச்சாதிருக்க முடியாது.


பாரதியார் அறைகூவலை ஏற்று….
எட்டுத் திக்கும் சென்று
கலை ஞானங்களைத் தொகுத்துத்
தரும் முயற்சி ‘மத்து’.

பொருளியல்,
உளவியல், மொழி வரலாற்றியல்,
உயிரின வாழ்க்கைச் சூழலியல்,
ஆட்சியியல், அரசியலமைப்பியல்,
இலக்கியம், மருத்துவம், புராணவியல்,
திரைப்படக் கலை, மானிடவியல்

ஆகிய பதினொரு துறைசார்ந்த
மணியான ஆங்கில நூல்களின்
ஊடாகச் சஞ்சரிக்கும்
இனிய அநுபவத்தினை
‘மத்து’ தருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்,
யஉயனநஅiஉள என்று பேர் பண்ணப்பட்டவர்கள்
எல்லாருமே ஊயசநநசளைவள களாக
இருந்த அவலச் சூழலில்
யு.து. ஒரு அளைகவை ஆக இருந்தார்.
ஆனால், அவரே பல்கலைக்கழகத்தின்
வறண்ட வெம்மையில்
எங்களுக்குக் குளிர்தரும்
நிழலாக இருந்திருக்கிறார்.

- மு. நித்தியானந்தன்.