கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  இடம் பெயர் ஆய்வு
காங்கேசன் கல்வி வட்டாரம்
 
 

கலாநிதி இ. பாலசுந்தரம்

 

இடம் பெயர் ஆய்வு
காங்கேசன் கல்வி வட்டாரம்
கலாநிதி இ. பாலசுந்தரம்

சிரேஷ்ட விரிவுரையாளர்.
தமிழ்ப்த்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி

பண்டிதர் சி. அப்புத்துரை மணிவிழா வெளியீடு
1988

PLACE NAMES STUDIES
-Kankesanthurai Circuit (Education)

Dr. E. Balasundaram,
Senior Lecture,
Department of Tamil,
University of Jaffna,
Thirunelvely, Sri Lanka.

Published to Commemorate the ‘Mani Vila’ of
Pandit S. Apputhurai
Principal Emeritus,
Myliddy North, Kalaimagal Maha Vidyalayam.

All rights reserved with the Author.

Published by:
Pandit Apputhurai, Mani vila Committee
& Kalai Ilakkiya – K – Kalam.

Communications to:
Salvapulavar S. Sellathurai
‘Punitha Vasam’, Paththawaththai, Ilavalai.
Printers: Chettiar Press, Jaffna.
1988-08-21


பதிப்பாளருக்கு
மணிவிழாப் பரிசு
பதிப்புக் குழு
“சகவருடம் 1232 வைகாசி மாதம் தம்பதேனிய மன்னன் பராக்கிரம வாகுவின் அவையிற் சரசோதிமாலை என்ற நூலைப் போசராசனென்ற வேதியப் புலவன் விருத்தப் பாவாற் பன்னிரு படலமாய்ச் செய்து அரங்கேற்றினான் என்றறிகிறோம்.”

-இவ்வாறு ஈழத்தின் முதற்றமிழ் நூலின் Nதூற்றத்ர்க்குச் சிங்களத் தொடர்பு, கூறப்படுகிறது.

“நல்லூர் முரமன் கோவிலைச் சிறீ சங்கபோதி புவனேக பாகு என்னும் மன்னன் கட்டினான்”.

-இவ்வாறு சைவக் கோயிலுக்குச் சிங்கள – பௌத்த மூலம் கூறப்படுகிறது.

“அக்கா. அந்தோ, முரங்கை முதலியவை சிங்கள மொழியிலிருந்து செந்தமிழுக்கு வந்த திசைச்சொற்கள்”

-இவ்வாறு தொன்மைத்தமிழ்ப்ச் சொற்களுக்குச் “சிங்கள மூலம்” கற்பிக்கப்படுகிறது.

“இலங்கை முழுவதும் தொல் பழங்காலத்தில் சிங்கள நாடாக இருந்தது. தமிழர் பிற்காலத்தில் சிங்களவரைக் குடியெழுப்பி விட்டு இங்கு வந்து குடி புகுந்தவர்கள்”

-என்ற ஆதாரமற்ற, தவறான எடுகோளின் விளைவாகவே மேற்கூறிய கருத்துக்கள் எழுந்னனை.

இந்த ஆதாரமற்ற அடிப்படையில் ஈழத்து இடப்பெயர்களுக்கு தொல் தமிழர் பதிகளுக்கு - “சிங்கள மூலம்” காண்பதில் ஆராய்ச்சியாளர்கள் பலர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

வரலாற்றுப் பெருமைமிக்க “யாழ்ப்பாணம்’ என்ற பெயரே ‘யாழ்ப்பாபட்டுனே’ என்ற சிங்களப் பெயரின் திரிபு என்றும் “நல்லூர்” என்பது அதன் தமிழாக்கமே என்றும் வண. ஞானப்பிரகாசம அடிகளார் கூறுவார். அடிகளாகும் திரு. எஸ் டபிள்யூ. குமாரசுவாமியும் இடம்பெயர்களுக்குச் “சிங்களமூல”மாகக் கூறியவற்றை யாழ்ப்பாண வைபவ கௌமுதியில் இணைத்து அவற்றுக்கு நிலைபேறு தந்தவர் ஆசுகவி கல்லடி க. வேலுப்பிள்ளை ஆவர்.

இன்று ஈழத் தமிழர் வரலாறு;றின் தொன்மையை நிலை நாட்டும் உறுதியான புதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் ஈழத்து இடம்பெயர் ஆய்வுச் செய்திகளையும் மீளாய்வு செய்ய வேண்டிய இன்றியமையாத் தேவை ஏற்பட்டுள்ளது.

ஈழத்து இடம்பெயது ஆய்வுகளில் பின்வரும் காரணிகள் அடிப்படையாகக் கொள்ளப்படவேண்டும்.

1). ஈழத்தில் மூலத்திராவிடர் தொல் குடிகளாக வாழ்ந்தமை.
2). ஈழ – தமிழகத் தொடர்பு.
3). தமிழர்கத்திலிருந்து காலத்துக்குக்காலம் நடைபெற்ற தமிழர் குடியேற்றம்.
4). தமிழ்ப், சிங்களம் ஆகியவற்றில் வட இந்திய மொழிகளின் செல்வாக்கு.
5). சிங்கள அரசரின் குறகிய கால ஆட்சிகள்.
6). சிங்கள அரசருக்கும் ஈழத்தமிழக அரசுகளுக்குமிடையே தமிழர் செல்வாக்கு.
8). ஈழத்தில் இந்திய அரசுகளின் ஆட்சி.

இக்காரணிகள் அனைத்தையும் வரலாறு;று அடிப்படையலி; ஆராய்ந்தே ஈழத்து இடம்பெயர் வரலாறு எபுதப்படவேண்டும். இவ்வகை நோக்கில் அவ்வப்போது ஆய்வுகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் நெறிப்படுத்தப்பட்ட ஆய்வாக எவரும் மேற்கொள்ளவில்லை.

இக்குறையைப் போக்கும் வகையில் ப ல்துறை ஈடுபாடு கொண்டவரான யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி இ. புhலசுந்தரம் அவர்கள் இடம்பெயர் ஆய்வில் ஈடுபட்டுவருகிறார். குpழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி இ. புhலசுந்தரம் அவர்கள் யாழ்ப்பாணத்து இடப்பெயர் ஆய்வை மேற்கொள்ளும்போது அதில் ஈழத் தமிழகம் தழுவிய முழுமை நோக்கு அமையும் வாய்ப்பு உண்டு.

1972ஆம் ஆண்டு கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு நாட்டார் வழக்கியலை மேற்கொண்ட காலம் முதல் இடம்பெயர் ஆய்விலும் அவர் நாட்டம் கொண்டார். 1982இல் சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஈழத்து இடம்பெயர் ஆய்வை மேற்கொள்ளும் பணியை அவருக்கு வழங்கிய. கள ஆய்வு, முன்னர் வெளியான இடம்பெயர் நூல்கள், கட்டுரைகள் என்பன பற்றிய ஆய்வில் கலாநிதி அவர்கள் ஈடுபட்டார்கள். இனனை; விளைவாக யாழ்ப்பாணக மாவட்ட இடப்பெயர் ஆய்வு என்ற நானூற்று இருபது பக்கங்கள் கொண்டதட்டச்சு நூல் உருவானது. நூல் 1986 இல் முற்றுப்பெற்ற போதிலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மாற்றம் காரணமாக நூல் வெளியீடு தடைப்பட்டிருக்கிறது.

முயிலிட்டி, கலைமகள் மகா வித்தியாலய அதிபராக விருந் ஓய்வு பெற்ற பண்டிதர், சைவப்புலவர் சி. அப்புத்துரை அவர்களது மணி விழாவை ஆடம்பரமின்றி, அமைதியாக ஆனால், நினைவு நிலைக்கும் வகையில் நிகழ்த்தப் பண்டிதரின் அன்பர்கள் எண்ணினர்.

காங்கேசன்துறைக் கல்வி வட்டாரக் கல்வி வரலாறு;றை விரிவாக ஆராயும் காங்கேசன் கல்வி மலரை வெளியிடுவதில் ஈடுபட்ட சிலரும் மணிவிழாக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களின் யாழ்;ப்பாண மாவட்ட இடப்பெயர்வு ஆய்வு நூலில் இடம்பெறும் காங்கேசன் கல்வி வட்டார இடப் பெயர் ஆய்வுப் பகுதியை மணி விழாப் பரிசாக வெளியீடு;டு வழங்க விரும்பினார். கலாநிதி அவர்கள் மணிவிழாக் குழவினரின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளார்கள்.

மணி விழா நாயகர் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் புகழ்பூத்த ஆசிரியர், காங்கேசன் கல்வி வட்டாரத்தில் அரும்பணியாற்றிய அதிபர் 353 மாணவர்கள் கற்ற மயிலிட்டி பேய்க் கோயில் பள்ளிக்கூடத்தை 1012 மாணவர் பயிலும் முன்னோடிக் கலைமகள் மகா வித்தியாலயமாகக் குறகிய காலத்துள் மாற்றிய செயல் வீரர்.

நூற் பதிப்புத்துறையில் பண்டிதரின் பணிகளண் பரந்து பட்டவை தமது தமக்கையார் மறைந்த போது அவர் நினைவாக மழலைச் செல்வம் (1964) என்ற குழந்தைக் கவிதைத் தொகுப்பை அன்பளிப்பாக வெளியீடு;டு, குழந்தை இலக்கிய வெளியீடு;டைப் பரவலாக்கும் ஒரு புதிய நெறியைத் தொடக்கி வைத்த முன்னோடி.

அன்னையாரின் நினைவாக மாவிட்டபுரம் முருகன் பேரில் எழுந்த இலக்கியங்களின் அறிமுகத்தொகுப்பாக மாலை முருகன் கவிப்பூங்கொத்து (1976) நூலை வெளியிட்டு பண்டிதர் அவர்கள் தமிழ் இலக்கியத்துக்கும் சமயத்துறைக்கும் அரிய அன்பளிப்பை வழங்கியவர்.

மல்லாகம் பண்டித மாணவர் கழக மாணவராக இருந்தபோது கழகக் கையெழுத்து ஏடான பண்டிதன் (1964) சிறப்பு மலராக மலரப்பணியாற்றியவர் பண்டிதர் அவர்களே. அப்போது சுன்னாகம் அ. குமார சுவாமிப் புலவரின் இலக்கண சந்திரிகை (1965) விகைப்பகுபத விளக்கம் (1965) ஆகிய நூல்களை மறுபதிப்பாக வெளியீடுவதில் கழகச் சார்பில் அவரே ஊக்கத்தோடு உழைத்தார்.

முயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாரதி (1974-1987) என்ற பெயரில் பாடசாலைச் சஞ்சிகை வெளியிடும் மரபை ஏற்படுத்தினார். வழமையான பாடசாலை விடயங்களோடு அறிவுக்கு விருந்தாகும் அரிய கட்டுரைகளும் பாரதியில் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணக வரலாற்று ஆய்வுக்குப் பெரிதும் துணைசெய்யும் தண்டிகைக் கனகராயன் பள்ளு (1985) என்ற பிரபந்தத்தை மேற்படி வித்தியாலய ஆசிரியர் அமரர் க. ஞானசுந்தரம் நினைவாக வித்தியாலயத் தமிழ்ப் மன்றம் வெளியீடு ஏற்பாடு செய்தார்.

காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத்தில் வெளியான நூல்களின் பட்டியலொன்றை அரிதில் முயன்று தொகுத்து, காங்கேசன் கல்வி மலரில் (1986) வெளியி;ட்டார். இது இலக்கிய வரலாற்று ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தொகுப்பாகும்.

தேவாரம் வேதசாரம் என்பது காசிவாசி செந்தி நாத ஐயர் எழுதிய அரிய நூல். இந்த நூலைப்பதிப்பித்து வெளியிடுவதற்கான முன்முயற்சிகளில் இப்போது மணிவிழா நாயகர் ஈடுபட்டுள்ளார். சைவத் தமிழுலகுக்குப் பதிப்பாசிரியர் என்ற வகையில் அவர் செய்யும் அரும்பெரும் பணியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.

வெளியீடு;டுத் துறையில் விடுதலறியா விருப்புக் கொண்டிருக்கும் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்களின் மணிவிழா அன்பளிப்பாக அவரது அன்பர்கள் பயனள்ள நூலொன்றை வெளியீடு முன்வந்தமை பொருத்தமானதும் பாராட்டத் தகுந்ததுமாகும்.

இந்நூல் வெளியீட்டுத்திட்டத்தை முன்மொழிந்து, நிதியும் வழற்கிய அப்புத்துரை அன்பர்கள்.

நூலை வெளியீட்டு தந்துதவிய கலாநிதி இ. புhலசுந்தரம்.

நூல்வெளியீட்டில் இணைந்து செயற்படுவதோடு பண்டிதர் அவர்களின் பணிபற்றிய கருத்தரங்கையும் நூல் வெளியீடு;டு விழாவோடு நிகழ்த்தும் கலை இலக்கியக் களத்தினர்.

இந் நூலின் அமைப்புக்கும் விழாவின் வெற்றிக்கும் அயராது உழைத்த மயிலங்கூடல் பி. நடராசா.
நூலை அழகுற அச்சிட்டு வழங்கியுள்ள செட்டியா அச்சகத்தினர்.

“மணிவிழா நடத்தப் போகிறோம்” என்று வேண்டிய அன்பர்களுக்கு என்னைப் பாராட்டவேண்டாம். தமிழ்ப்பணி ஏதாவது பயனுறச் செய்க” என்று ஆற்றுப்படுத்திய மணிவிழா நாயகர் பண்டிதர் சைவப் புலவர் சி. அப்புத்துரை.

ஆகிய அனைவர்க்கும் எமது உளம் நிறை நன்றியை உரிமையாக்குகிறோம்.

முணிவிழா நாயகரும் துணைவியாரும் குழந்தைகளும் எல்லா நலங்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ இறையருளை வேண்டுகிறோம்.
1988.08.21

பொருளடக்கம்
பக்கம்
பதிப்புரை -ஏ
முன்னுரை ஏii-ஒ

இயல் - 1 நீர் நிலைப் பெயர்கள் 1-15
இயல் - 2 நிலவியல்பு குறித்த பெயர்கள் 16-19
இயல் - 3 நிலப் பயன்பாட்டுநிலைப் பெயர்கள் 20-33
இயல் - 4 குடியிருப்புநிலைப் பெயர்கள் 34-51
இயல் - 5 ஊராட்சிநிலைப் பெயர்கள் 52-60
இயல் - 6 தாவரப் பெயர்கள் கட்டிய இடங்கள் 61-63
இயல் - 7 சிறப்புநிலைப் பெயர்கள் 64-67
முடிபுரை 68-69
ஆய்வுத்துணை நூல்கள் 70-71
இடப்பெயர் அட்டவணை -72

முன்னுரை
இ. பாலசுந்தரம்

ஆதிகால ழககள் நிலையாக ஓரிடத்திலிருந்து தொழிற்பட வேண்டிய நாகரிக நிலை ஏற்பட்டபோது நாம் வாழுமிடங்களை மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டவும். ஏனைய இடங்களிலிருந்து ஓரிடத்தைப் பிரித்துக் காட்டவும் தாம் வாழ்ந்த இடங்களுக்குப் பெயர்களைச் சூட்டலானார்கள். இயற்கைச் சூழலில் அவர்கள் அறிந்திருந்த மரப்பெயர்கள் நீர்நிலைப்பெயர்கள், நிலவியல்புப் பெயர்கள், பறவைப் பெயர்கள். வுpலங்குப் பெயர்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி இடப்பெயர்களைக் குறித்து வழங்கலாயினர். இவ்வாறு இயற்கைப் பெயர்களின் அடியாக இடங்களுக்குப் பெயர் சூட்டும் மரபு பல்லாயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும். ஆயினும் காலப் போக்கில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி என்பவற்றுக்கமைய அரசர், தலைவர், அதிகாரிகள் என்போரின் பெயர்களும், புராண இதிகாச இலக்கியப் பெயர்களும்: கடவுட் பெயர்களும் இடப்பெயர்களின் ஆக்கத்தில் இடம் பிடித்துக் கொண்டன.

வேறு ஊர்களிலிருந்து குடிபெயர்ந்து வந்து காட்டுப் பிரதேசங்களிற் குடியேறி, அவற்றைத் திருத்தி நன்செய், பன்செய் நிலமாகவோ அல்லது குடியிருப்பு இடமாகவோ மாற்றிய மக்கள், தம்பமும் பதியின் பெயரையே தாம் உருவாக்கிய புதிய ஊருக்கும் இட்டு வழங்குதல் பொதுமரபாக இருந்து வந்துள்ளது. இந்நூலிலே இடம்பெறும் சித்திரமேழி, சேத்தான்குளம் ஆகிய இடப்பெயர்கள் தமிழகத்திலும் உள்ளமை கண்டு சிந்திக்கத் தக்கதாகும்.

வரலாற்று நிகழ்வுகள், பிறநாட்டு அரசியல் தொடர்புகள், சமய நடவடிக்கைகள், அபிவிருத்தி வேலைகள் என்பனவும் இடப்பெயர் ஆக்கத்தில் நம் பெயர்களைப் பதித்துள்ளன. மேலும் தொழில் முறைகள், சாதி அமைப்புக்கள் என்பனவும் இடப்பெயராக்கத்தில் இடம் பிடித்துக்கொண்டன.

காலம் காலமாக வழங்கி வந்த இடப் பெயர், ஆட்சியாளர்களாலும் புதமை விரும்பிகளாலும் மாற்றம் பெறுதலும் உணடு. இதற்குச் சிறந்தத உதாரணமாக யாழ்ப்பாணத்துக் காரைதீவு என்ற பெயர் காரைநகர் என்;று மாற்றப்பட்டமையைக் குறிப்பிடலாம். இது போன்றே குறிப்பிட்ட ஒரு மொழியில் வழங்கும் இடப்பெயருக்கு அங்கு வந்து சேர்ந்த வேற்று மொழியினர் தம் மொழியில் அவ்விடத்திற்கு வேறு பெயரிட்டு வழங்குதலுமுண்டு. சான்றாக ஊர்காவற்றுறை கையிற்ஸ் (முயலவள) என்றும், யாழ்ப்பாணம் ஜவ்னா (துயககயெ) என்றும், பருத்தித்துறை பொயின் பெற்றோ (Pழiவெ Pநனசழ) என்றும் வழங்குவதைக் காணலாம்.

ஓரு மொழியின் இலக்கண வரம்பிற்கமைய ஆக்கம் பெற்ற இடப்பெயர்கள், காலப் போக்கில் பேச்சு வழக்கில் சிதைந்து வழங்குதலுமுண்டு. ஊர்காவல்துறை ஊறாத்துறை என மருவியபோது (சிங்கள மொழியில் ஊறா என்பது பன்றி) பன்றி ஏற்றும் துறை எனச் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் பலர் விளக்கம் கொடுத்தனர்.

ஓரு நாட்டின் வரலாற்றுண்மைகளையும் பண்பாட்டுச் செய்திகளையும் புதைபொருட் சான்றுகள், கல்வெட்டுக்கள், கட்டிட சிற்ப ஒளியங்கள் இலக்கியங்கள் எடுத்து இயம்புவன போன்று, இடப்பெயர்களும் வரலாறு;றாய்வுகளுக்கு ஆதாரமாகின்றன. இடப்பெயராய்வின் மூலம் இடங்களின் புவியியல்பு, பிறநாட்டார் தொடர்பு, அரசியல் நிகழ்வுகள், மொழி மாற்றம் முதலாம் விடயங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே ஓரிடத்தின் பெயர் விளக்கத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் அவ்விடத்தின் வரலாறு, கலாசாரம், தொழில் முறை, ழககள் நிலை என்பவற்றின் ஒரு பாகத்தை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

இடப்பெயர் விளக்கம் என்ற அடிப்படையில் பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்னனை. சில நூல்களும் வெளிவந்துள்ளன. இவற்றுள் எஸ். டபிள்யூ. குமாரசுவாமி 1918இல் வெளியீடு;ட “வடமாகாணத்துச் சில ஊர்ப் பெயர்கள்” என்ற நூல் மிகவும் அவதானமாக ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். இவ்வாசிரியர் யாழ்ப்பாணத்து இடப்பெயர் பெரும்பாலானவற்றிற்குச் சிங்கள மூலம் காண்பதில் பெரும் திருப்தி அடைந்திருக்கிறார். த. சண்முகசுந்தரம் (1984:3) அவர்கள் எழுதிய ஒரு குறிப்பிணை இவ்விடத்தில் எடுத்துக் காட்டுதல் பொருத்தமாகும்.

“ஈழத்து இடப் பெயர் ஆரம்பகால ஆராய்ச்சியாளர் பலரும் கண்டபடி எழுதினர். வுடமொழியின் திரிபு என்றனர். தேவையில்லாமல் தொன்மைக் கதைகளைப் புகுத்தி ஆக்கி ஆராய்ந்தனர், கற்பனை, ஊகம் பழமையை மறுத்தல் போன்றவை ஆராய்ச்சியில் இடம்பெற்றன. இதனால் இப்போது பெரும் இடர்பாடு தமிழுக்கு எழுந்துள்ளது”

ஐரோப்பிய நாடுகளில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இடப்பெயராய்வு வளர்ச்சியடைந்து வருகிறது. 1949இல் ருNநுளுஊழு சார்பில் அனைத்துலகப் பெயராய்வுக் குழவொன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் “இடப்பெயராய்வு” அண்மைக் காலமாக வளர்ந்து வரும் ஒரு புதிய ஆய்வுத் துறையாகும். ஈழத்தில் இடப் பெயராய்வு இன்னும் வளர்ச்சியடையவில்லை. தமிழகத்தில் இடப் பெயராய்வு துரித வளர்ச்சியடைந்து வருகிறது. இத்துறையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முன்னின்று உழகை;கின்றது. 1982இல் அந் நிறுவனத்தினரின் வேண்டு கோளின் பெயரில் யாழ்ப்பாணக மாவட்டத்தின் இடப் பெயராய்வினை மேற்கொண்டு 420 பக்கங்களில் (தட்டச்சு) ஒரு நூலிலை 1986இல் எழுதினேன். அந்நூல் வெளியீட்டுக்காக தற்போது காத்து நிற்கின்றது.

முயிலிட்டி வடக்கு கலைகள் மகாவித்தியாலய அதிபர் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் சமூகசமயத் தொண்டர்@ இலக்கிய ஆய்வாலர், நூற்பதிப்பு முயற்சிகளிர் ஈடுபாடு உடையவர். அவர்களின் மணிவிழா வெளியீடாக அவர் வாழும் “காங்கேசன் துறைக் கல்வி வட்டாரம்” பகுதியிலுள்ள ஊர்ப் பெயர்களைத் தொகுத்து விளக்கும் வகையிலான ஒரு நூலினை எழுதித் தருமாறு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி திரு. பொ. சுpவஞானசுந்தரம் அவர்களும், மணிவிழா அமைப்பாளர்களுள் ஒருவரான சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களும் கேட்டுக் கொண்டதற் கிணங்க, முன்னர் நான் எழுதி வைத்துள்ள “யாழ் மாவட்ட இடப்பெயராய்வு” என்ற நூலிலிருந்து இக்கல்வி வட்டாரத்து இடப்பெயர் விளக்கத்தினை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளேன்.

இக்கல்வி வட்டாரத்துக் கிராமங்களில் வாழும் மக்களும், அறிஞர் பெருந்தகைகளும் இந்நூலிலே மேலுஞ் சேர்க்க வேண்டிய தகவல்கள், இவ்வூர்ப் பெயர்களுடன் தொடர்புடைய நாட்டார் பாடங்கள் கதைகள், பழமொழிகள், கல்வெட்டுக்கள் என்பன கிடைப்பின் அவற்றை எனக்கு அனுப்பி வைத்தால் அவற்றை அடுத்த பதிப்பில் நன்றியுடன் சேர்த்துக் கொள்வேன். ஈழத் தமிழ்ப் மக்களின் வரலாற்றைக் கட்டி எழுப்பும் பணியில் இந்நூல் தன் பங்களிப்பை ஆற்றுகின்றது.

இயல் 1

நீர் நிலைப் பெயர்கள்

நீர் நிலைகளும் இடம்பெயர்களும்
பண்டைய நாகரிகத்தின் தொடக்க காலத்திலே நீர் நிலைப் பெயர்களே பெரிதுந் தோன்றியிருக்கவேள்டும் என எதிர்பார்த்தல் இயல்பானதே. தமிழ் நிகண்டுகள் நீர்நிலைப் பெயர்களைப் பெருகக் கூறுகின்றன. சங்க இலக்கியத்திலே நீர் நிலைப் பெயர்களாக ஆறு, ஊற்று, சுயம், கழி, கால், சிறை, துறை, படக்கை, பாழி என்பன வழங்கியுள்ளன. (கி. நாச்சிமுத்து 1983 : 133). “ நீரகம் பொருந்திய ஊரகத்திரு” என்பது ஒளவையார் வாக்கு.

யாழ்ப்பாணக மாவட்டம் நீர் வளம் செறிந்த பிரதேசம் அன்றெனினும் நீர் நிலைகளாற் சூழப்பட்டுக் காணப்படுவதால் நீர்நிலைப் பெயர்கள் இங்கு பெரிதும் காணப்படு

1. “படுகரே தாங்கள் கேணிபல்வளம் படுவேட்டம்
மடுவுளகமே பண்ணைவாலியே கனையே வட்டம்
தடமொடு சுயம்பயம் பூந்தடாகமே குளமேகுட்டம்
அடைவுள் கிடங்கு குழி யவந்தையே குண்டம் பங்கம்
இலஞ்சி கோட்டகமே பொய்கையேல்லை யோடையேரி”
(சூடாமணி.5:23 – 24)

தல் சிறப்பியல்பாயிற்று. அவ்வகையில் அமைந்த பெயர்களே மேல்வருமாறு வகைப்படுத்தலாம்.
அளை குளம்
ஆரை கேணி
ஆவி கொட்டு
ஆறு துறை
ஒடை மடு
கரை மோட்டை
களப்பு வில்
கால்

இத்தகு நீர் நிலைப் பெயர்க் கூறுகளோடு முன்னொட்டு நிலையில் அடைகள், இயற்கைக் கூறுகள், ஆட்பெயர்கள் என்பன இணைந்து இடப்பெயர்கள் ஆக்கம் பெற்றுள்ளமை ஈண்டு விரிவாக விளக்கப்படுகின்றது.

“அளை” ஈற்றுப் பெயர்கள்
அனை என்பது புற்று, பொந்து, குகை எனப் பொருள் தருவதாகும். (பொருநர் – 7). வுயலில் நீர் வடிந்து ஓடும்பொருட்டு வெட்டப்படும் வடிகாலும் அளை எனப்படும். நாக வழிபாட்டினரான திராவிட ழககள் ஆதியிலே தாம் குடியேறிய இடங்களிற் காணப்பட்ட பாம்பின் உறைவிடமான புற்றைப் பயத்தின் காரணமாக அதற்கு முதன்மை அளித்து, அதனை நினைவுகள் குறியீடாகக் கொண்டு ஊர்ப் பெயர் அமைத்தனர் எனவும் கருத இடமுண்டு. “அளை” ஈற்று இடப்பெயர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று காணப்படுகின்றன. இவற்றில் அளை ஸ்ரீ வாய்க்கால் என்ற பொருளில் இரு இடப்பெயர்களும் அளை ஸ்ரீ

1. கையளை ஸ்ரீ சிறு வடிகால், கால் அளை ஸ்ரீ பெரிய வடிகால். வுpதைப்பு நடைபெறும்போது விதைப்பதற்கு எளிதான முறையில் வயற்பரப்பைச் சிறுசிறு பகுதியாக வகுப்பதற்கு அமைக்கப்படும் மிகச் சிறிய வடிகால் தட்டளை எனப்படும் (இ. பாலசுந்தரம் 1979: பக்.529)

புற்று என்ற பொருளில் ஓரிடப்பெயரும் ஆக்கம் பெற்றுள்ளன. இம் மூன்று இடங்களில் கும்பளை மட்டுமே இப்பிரதேசத்தில் அமைந்துள்ளது.

கும்பளை (வலி. வ. 62.5)
கும்பல் + அளை ஸ்ரீ கும்பளை@ கும்பி + அளை + கும்பளை@ கும்பல் + குவியல், கூட்டம்@ கும்பி ஸ்ரீ குவியல், நரகம், சேறு, யானை (தமிழகராதி: பக். 96). ஆளை ஸ்ரீ நீர் வடிந்தோடும் சிறு வாய்க்கால். ஏனவே கும்பளை என்பது சிறு வாய்க்கால்கள் நிறைந்து காணப்படும் இடம் என்பது பொருளாம். இக்கிராமம் அளவெட்டி வடக்கில் அமைந்துள்ளது. அளவெட்டி என்பது வடிகால்கள் வெட்டப்பட்ட இடம் எனப் பொருள் தருவதாகும். இவ்விரு இடங்களும் அயற் கிராமங்களாக அமைந்திருப்பதும் சொற்பொருள் அடிப்படையில் ஒத்துக் காணப்படுகின்றன.

மழைக் காலங்களிற் காணிகளிலே தேங்கி நிற்கும் மழைநீர், வடிந்தோடும் பொருட்டுப் பல அளைகள் (கால் வாய்கள்) இங்கு வெட்டப்பட்டு, அவை வழுக்கியாற்றுடன் தொடுக்கப்படுதல் வழக்கம். இக்காட்சியின் வெளிப்பாடாகவே கும்பளை, அளவெட்டி என்பன காரணப்பெயர்களாகத் தோற்றம் பெறலாயின.

“ஆரை” ஈற்றுப் பெயர்கள்
ஆரை என்பது கோட்டை மதில், அரண் எனப் பொருள்படும். யாழ், மாவட்டத்தில் “ஆரை” ஈற்றுப் பெயர்களாக அல்லாரை, கல்லாரை என்ற ஈரிடங்களுள. துமிழ்ப் நாட்டில் ஆரைக்கல் (நாமக்கல்) என்ற பழம்பதி இருந்ததாகச் சேதுப்பிள்ளை (1976:5) குறிப்பிட்டுள்ளார். நாஞ்சில் நாட்டிலுள்ள ஆரல்வாய்மொழி ஈ ஆரவாய் மொழி என்பதன் திரிபென்றாம், அது ஒரு கோட்டையைப் போன்று மூன்று புறமும் சூழ்ந்த பொதியமலைத் தொடரின் கண் அமைந்தமையால் அப்பெயர் ஏற்பட்டதென்றும் கூறப்படுகிறது. இங்கே ஆரை என்பது கோட்டை என்று பொருளில் வந்தது.

மட்டக்களப்புப் பேச்சு வழக்கில் மழை பெய்து நீர் வடிந்து ஓடும் இடம் “ஆரை” அல்லது “ஆரைப்பற்றை” எனப்படும். அத்துடன் மட்டக்களப்புக்குத் தெற்கே நான்கு மைல் தொலைவில் ஆரைப்பற்றை என்ற கிராமமும் உள்ளது.

கல்லாரை: (வலி: வ. 61.3)
ஊர் + அணி + ஊரணி. ஊரணி என்பது ஊரணியின் திரிபாகலாம். “ஊரணி நீர் நிறைந்தற்றே” என்னும் திருக்குறள்’ தொரால் அச்சொல்லின் பழமை விளங்கும். ஊருக்கு அணித்தாக உள்ள நீர்நிலை ஊரணி என்;றும் கூறுவர் (ரா.பி. சேதுப்பிள்;ளை 1976: பக்.45). தமிழகத்திலுள்ள எழும்பூர் தற்போது அக்மூர் என்று அழைக்கப்படுகிறது. எழும்பூர் தற்போது எக்மூர் என்று அழைக்கப்படுகிறது. எழும்பூர் என்பது எதிரிக்கெதிராக அணி திரண்டு எழுந்து ஊர் என்ற பொருள் தரும் என்பர். அதுபோன்றே ஊரணி என்பதும் எதிரிக்கு எதிராக அணிதிரண்டெழுந்த. ஊர் என்ற நிலையில் பெயர் ஏற்பட்டது.

1. ஊரணி ஈ “ஆரணி: ஸ்ரீ நீர்ச்சுழி, இச்சொல் சங்கத இலக்கியங்களில் ஒன்றிலுமே காணப்படவில்லை என மொனியர் வில்லியம்ஸ் சங்கத அகராதியிற் கூறினர். ஆனால் அவர் தரும் “அரண்” (பக்கம் 149) என்பது ஆழம்காணமுடியாத ஆழி, பாதாளம் செங்குத்தான மலைச்சரிவு என்ற பொருள்களைத் தருவதால் இது ஆரணி என்ற தமிழ்ச் சொல்லின் சிதைவேயாகும்”. தாவீது: 1970 பக்.13,14)

“கரை” ஈற்றுப் பெயர்கள்
நீர் நிலைகளின் கரையோரங்களை அடுத்துள்ள நிலப்பகுதி அல்லது குடியிருப்புக்கள் “கரை” என்ற ஈற்றுச் சொல் அமைந்த பெயர்களால் வழங்கப்படுகின்றன. இவ்வகையில் நான்கு இடப்பெயர்கள் யாழ். மாவட்டத்தில் காணப்படுகின்றன. அவற்றில் இரு பெயர்கள் வலிகாமம் பகுதியிலுள்ளன.

மயிலிட்டிக் கரை (மயிலிட்டித்றை) வலி. வு. 72)
மயில் + இட்டி + கரை ஸ்ரீ மயிலிட்டிக்கரை. மயிலிட்டிக்கிராமத்தின் கடற்கரையை அண்மித்த பகுதி மயிலிட்டிக்கரை என வழங்கிற்று. தற்போது இவ்விடம் மயிலிட்டித் துறையென்றே வழங்குகின்றது.

வீரமாணிக்கத்தேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை ஆகிய இரு பழங்கிராமங்களின் இணைப்பே மயிலிட்டித் துறையாகும்.

இங்கு வாழும் வழங்குடியினரின் காணித் தோம்புகள் உறுதிகள், பிறப்புப் பத்திரங்கள், ஒல்லாந்தர், ஆங்கிலேயரினால் வரையப்பட்ட இலங்கை வரைபடங்கள், கடலோரம் வீற்றிருக்கும் கண்ணகை அம்மன் (ஊஞ்சல் பாட்டு, கப்பல் பாட்டு, முன்னையள் வளவு முரகையன் ஊஞ்சல் பாட்டு என்பன இதற்கான சான்றுகளாகும்.

மதுரை சங்கரநாதபுரத்திலிருந்து வீரமாணிக்கதேவன், பெரிய நாட்டுத்தேவன், நரசிங்கதேவன் ஆகிய மூன்று சகோதரர்களும் அவர்களது படையணியுடன் இங்கு வந்தனர் என்றும், மூத்தவர்கள் இருவரும் தங்கள் பெயர்களை அக்கிராமங்களுக்குச் சூட்டினார்கள் என்றும் இவர்களும் இவர்களது படையணிகளும் இங்கு வாழத் தொடங்கிவிட்டனர் என்றும், இவ்வீர மரபினரது வருகைக்கு முன்னர் இங்கு சிறப்புடன் வாழ்ந்த குருகுலத்தவர்களுக்கும் தேவர்களுக்கும் கலப்பு ஏற்பட்டது என்றும் இவ்விரு வீரமரபினரது வழித்தோன்றல்களே இங்கு வாழும் பழங்குடியினர் என்றும் இங்குள்ள மக்கள் கருதுகின்றனர். (தகவல் எம். ராஜா யோகானந்தம் - மயிலிட்டித்துறை).
இங்குவாழும் மக்கள் படைத்தலைவர்களாகவும், படை வீரர்களாகவும் கடல் வணிகர்களாகவும் கப்பலோட்டிகளாகவும் கடலோடிகளாகவும் விவசாயிகளாகவும் கடற்றொழிலாளர்களாகவும் விளங்கினர்.

வீரமாணிக்க தேவன் என்னும் பெயர் கொண்ட படைத்தலைவரை யாழ்;ப்பாண வரலாற்றில் பல இடங்களில் காணலாம்.

இங்குள்ள மக்கள் சைவர்கள்@ கண்ணகி வழியாடுடையவர்கள். சிவவழிபாடு, விநாயக வழிபாடு, முருக வழிபாடு, காளி, ஐயனார் வழிபாடு என்பனவும் இங்கு காணப்படுகின்றன. கண்ணகி அம்மன் ஆலயம், முரகையன் ஆலயம், வரசித்தி விநாயகர் ஆலயம் என்பன இங்கு சிறந்து விளங்குகின்றன. கண்ணகி ஆலயத்தின் தேர்த் திருவிழா, கப்பல் திருவிழா, முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா, சூரசங்கார விழா என்பன சிறப்பானவைகள்.

இங்கு கத்தோலிக்கர்களும் வாழ்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கென சென். மேறிஸ் காணிக்கைமாதா என்னும் கத்தோலிக்க ஆலயத்தினை சிறப்புடன் வைத்துள்ளார்கள்.

மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையும் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமும் இப்பகுதியை அணி செய்கின்றன.

திக்கரை (வலி.தெ.மே.53.10)

இது பெரியவிளான் பகுதியிலுள்ள ஓரிடம்.
திக்கு + கரை ஸ்ரீ திக்கரை

“கால்” ஈற்றுப் பெயர்கள்
கால் ஸ்ரீ நீர்போல் நேரம் பாய்தல்@ காலம்@ கால அளவு@ பாய்தல்@ கால் ஸ்ரீ கால்வாய் ஸ்ரீ வாய்க்கால்@ வளி ஸ்ரீ காற்று@ பாதம் ஸ்ரீ பூவின்தாள்@ அடிப்பாகம்@ தேர் உருள், ஏழனுருபு எனப் பத்து வகைப்பொருள் கூறினார் தாவீது அடிகள் (1970 பக். 33.34). அகநானூற்றில் “கால் விரிபு ஸ்ரீ இடம் எலாம் விரிந்து” (151 : 5) இங்கு கால் கொண்ட இடம் என்ற பொருள் சுட்டிவந்துள்ளது. கால் என்பதற்கு வழி எனப் பொருள்கொண்டு லூயிற் (1917 : 46) ஆவரங்காலுக்கு விளக்கம் கொடுத்தமையும் நோக்கற்பாலது.

குளமங்கால் (வலி.வ.63.4)
இது தெல்லிப்பளைப் பகுதியிலுள்ள ஓரிடம். இது குளமாண்கால் என்பதன் திரிபாகும். இங்கு வெட்டுக்குளம், கட்டுக்குளம் என்ற இரு சிறு குளங்களுள. குளமண் ஸ்ரீ களிமண், களிமண் எடுப்பதற்குச் செல்லும் வழி என்ற பொருளில் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

“குளம்” ஈற்றுப் பெயர்கள்
ஈழத்து ஊர்ப் பெயர்களில் நீர்நிலைகளைச் சுட்டிய பெயர்களே எண்ணிக்கையில் மேம்பட்டுக் காணப்படுகின்றன. குளம், கேணி முதலிய நீர்நிலைப் பெயர்களை ஈற்றாகக் கொண்ட 332 இடப்பெயர்கள் வன்னிப் பகுதியிலே உள்ளன என லூயிஸ் கணக்கிட்டுள்ளார். நீர்நிலையைக் குறிப்பனவாக அமைந்த மடு, கேணி, நீராவி ஓடை, குழி, வில், தாழ்வு, மோட்டை, பள்ளம் முதலான சொற்கள் இடப்பெயர் ஈறுகளாக அமைந்து விளங்குகின்றன. நீர்நிலைகளுக்குப் பெயர் வைக்கும்போது விவசாயிகளோ அன்றி ஏனையவரோ அவற்றைச் சூழ இருந்த முக்கியமான மரங்களுக்கு முதன்மை அளித்து அம்மரப் பெயர்களோடு
1.வு.P. டுநறளைஇ 1896 P 205

ஈற்றில் நீர்நிலைப் பெயர்களையும் இணைத்து அழைக்கலாயினர். ஆவ்வாறு பெயரிடும்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு மரப்பெயரைச் சுட்டிய குளப்பெயர்கள் காணப்பட்டால் அவற்றுக்கு அடை கொடுத்து ஒன்றிலிருந்து மற்றையதை வேறுபடுத்தி வழங்கியுள்ளமையையும் கவனிக்கக்கூடியதாகவுள்ளது.

பச்சிலைப்பள்ளி, கரச்சி, பூ நகரிப் பகுதிகளிலே 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே பல குளங்கள் அமைக்கப்பட்டுப் பயிர்ச்செய்கைக்கு நீர் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் ஏற்பட்ட கலவரங்கள், மலேரியா என்பன காரணமாக இவை கைவிடப்பட்டன. பின்னர் மறுபடியும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தோடு இக்குளங்கள் புனரமைக்கப்பட்டு நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய குளங்களும் குளத்தாலமைந்த இடப் பெயர்களும் இப்பிரதேசத்தின் பழமைக்கோர் எடுத்துக் காட்டாக அமைகின்றன. காங்கேசன்துறைப் பகுதியில் குளம் ஈற்றுப் பெயராக ஒரேயொரு இடமே அமைந்துள்ளது.

சேந்தான்குளம் (வலி வ. 63.4)
சேந்தான் + குளம். இது கடற்கரை ஓரத்துக் கிராமம் இங்கு குளம் இல்லை. தமிழகத்திலுள்ள சேந்தான்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த மக்கள் இங்குவந்து குடியேறியபோது இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். சேந்தான் குளத்தின் ஒரு பகுதி சேந்தான்புலம் என்றும் வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணக வைபவமாலையில் (பக்.10) இவ்விடப்பெயர் சேந்தான் குளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை நோக்கற்பாலது.

“துறை” ஈற்றுப் பெயர்கள்
துறை ஸ்ரீ இடம், நியாயவழி, பகுதி, உபாயம், கடல்துறை கடல், ஆறு, வண்ணான் ஒலிக்குமிடம், நீர்த்துறை,சபை கூடுமிடம், பொருட்கூறு, ஒழுங்கு (தமிழ் லெக்சிக்கன் ஐஏ பக். 2005). துறை என்பது சமஸ்கிருத மூலத்திலிருந்து அல்லது சிங்கள வுயசய என்பதிலிருந்து வந்திருக்கவேண்டும். என்பர் யாழ்ப்பாண இடப்பெயர் ஆராய்ச்சியில் இடம்பெற்றுள்ளன என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டு.

யாழ்ப்பாண மாவட்டத்தின் மூன்று கரையோரங்களிலும் அமைந்துள்ள இறங்குதறைகள், துறைமுகங்கள் என்பன வர்த்தக பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பரிமாறிக்கொள்ளும் வாயில்களாக விளங்கின என்பது இவற்றின் பெயர்களைக் கவனிக்கும்போது அறியப்படுகிறது.

கப்பல்கள் இத்துறைகளிலிருந்து எங்கே புறப்பட்டுச் சென்றனவோ அந்த இடத்தின் பெயரையே இவை பொதுவாகக் கொண்டிருக்கின்றன. கொழும்புத்துறை, காயாத்துறை, சம்புத்துறை ஆகியன இவ்வகையின்வாகும். இத்துறை முகங்கள் பண்டைக்கால வணிக வரலாறு;றுடனும் பண்பாட்டு வரலாற்றுடனும் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.

காங்கேசன்துறை: (வலி. வ. பக். 33)
காங்கேயன் (ஆட்பெயர்) + துறை என்ற நிலையில் காங்கேயன்துறை என்ற இடப்பெயர் அமைந்துள்ளது. இனனை; வடக்கே பாக்குநீரிணைக் கடலும் தெற்கே மாவிட்டபுரமும் கிழக்கே மயிலிட்டியும் மேற்கே கீரிமலையும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்கு பட்டிளசபை என்ற உள்ள+ராட்சி மன்றம், ஆறு வட்டாரங்களைக் கொண்டதாக இயங்குகின்றது. இங்கு சுமார் ஏழாயிரம் மக்கள் வாழ்கின்றனர். வடகடல் மீன்பிடி வலயமாக இருப்பதால் இங்கு வாழ் மக்களிற் சிலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் வடக்கேயுள்ள துறைகளில் கப்பல்கள் வந்து பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு வாய்ப்புடைய ஒரு துறையாகவும் இவ்விடம் விளங்குகின்றது.

1) ஆ.னு. சுயபாயஎயnஇ வுயஅடை ஊரடவரசந in ஊநலடழnஇ pp.65-66.
2) 1851இல் இத்துறைமுகம் யாழ். அரசாங்க அதிபராற் புதுப்பிக்கப்பட்டது.
இதன் கடற்கரையில் அழகியதொரு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. உல்லாசப் பயணிகள் நலன் கருதிப்பல வசதிகளுடைய உல்லாசப் பயணிகள் விடுதியும் (ர்யவடிழரச ஏநைற ர்ழவநட) நகரப் பாதுகாவலர் நிலையமும் இங்கே அமைந்துள்ளன. இலங்கையில் மிகப்பெரிய சீமெந்துத் தொழிற்சாலை இங்கேயே இயங்குகின்றது. “காங்கேசன் சீமெந்து”, “லங்கா சீமெந்து” என்பன இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. இத் தொழிற்சாலைக்கு ஏற்ற மூலவளத்தைக் கொண்டதாக இப்பகுதியின் நிலவியற்கை அமைந்துள்ளது. இங்கு பேருந்து நிலையம், புகையிரத நிலையம், நடேஸ்வராக் கல்லூரி எனபனவும் அமைந்துள்ளன. மாங்கொல்லை, தையூர் முதலிய பல குறிச்சிப் பெயர்களும் இவ்வூரில் காணப்படுகின்றன.

மாருதப்புரவீகவல்லி, னனை; குதிரை முகம் நீங்கியதன் கைதாறாக மாவிட்டபுரத்தில் கோவில் கட்டுவதற்கு வேண்டிய பொருட்களைத் தந்தையாகிய சோழ மன்னனிடமிருந்து வருவித்தாள். அப்பொருட்களைக் காங்கேயன் என்பவன் கப்பலில் கொண்டு வந்து கசாத்துறை என்ற இடத்தில் இறக்கினான். காங்கேயன் இறங்கிய துஙையான தன்மையால் இத்துறை அன்று முதல் காங்கேயன்துறையாயிற்று. காங்கேயனாகிய முருகப்பெருமானது திருவுருவச்சிலை கொண்டு வரப்பட்டு இங்கே இறக்கப்பட்டமையால் இத்துறை (காங்கேயன் - முருகன்) காங்கேயன் துறை என்ற பெயரையும் பெறுவதாயிற்று என்றும் கருதப்படுகிறது.
பண்டை நாளில் காங்கேயன்துறை கசாத்துறை என வழங்கிற்று. இங்கிருந்து புத்தகயாவுக்குச் சென்றமையால் இத்துறை கயாத்துறையெனப் பெயர் பெற்றுப்பின்பு, அது கசாத்துறை என மருவிற்று என்றும் கூறப்படுகிறது. இங்கு கசாத்துறை ஆனந்தப் பிள்ளையார் கோயிலுமுண்டு. இப்பிள்ளையாரை “யாத்திரைப் பிள்ளையார்” என்றும் கூறுவர்.

1. மாவிட்டபுர இடப்பெயர் விளக்கம் பார்க்க.
2. க. வேலுப்பிள்ளை, 1918. ப. 8

தஷிணகைலாச மான்மியப்படி, சூரசங்காரம் முடிந்த பின்பு கந்தவேளும் அவர் பரிவாரங்களும் கதிர்காமம் நோக்கி வரும் வழியில் கப்பலேறி, துறையில் வந்திறங்கிய இடமே காங்கேயன் துறையாகும் எனவும் பெயர் விளக்கம் கொடுக்கப்படுகிறது. (வி.குமாரசுவாமி: பக். 26-29).

சம்பில்துறை (வலி . தெ. மே-52,10)
இதன் பழைய பெயர்கள் சம்புகோவளம், ஜம்புகோளம், சம்புக்கல், ஜம்புக்கோளப் பட்டினம், ஜம்புத்துறை என்றெல்லாம் வழங்கலாயின. கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் புத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் னனை; மகளாகிய புத்தபிக்குணி சங்கமித்தையை, வெள்ளரசின் கிளை ஒன்றுடனும் பரிவாரங்களுடனும் இலங்கைக்கு அனுப்பினான். ஆவர்கள் இந்தச் சம்புத்துறையில் வந்து இறங்கித் தரை மார்க்கமாக அநுராதபுரம் சென்றார்கள் என மகாவம்சம் (19: 35@ 22: 23@ 40: 35) கூறுகிறது. அவர்களை வரவேற்று தேவநம்பியதீஸன் வெள்ளரசின் கிளை ஒன்றைச் சம்புகோளத்தில் நாட்டினான் என்றும் அதனருகே திசைமாளுவை என்ற இடத்தில் திசமகா விகாரை என்ற புத்த பள்ளியைக் கட்டுவித்தான் என்றும், மகாவம்சம் (20:2) செப்புகின்றது. இவற்றின் அழிபாடுகள் சம்பில்துறை, திருவடிநிலைப் பகுதிகளில் இன்றுங் காணப்படுகின்றன.

சம்புத்துறை சிங்கள இலக்கியங்களில் “ஜம்புகோள” எனக் கூறப்படுகின்றது. இது சம்புகோவளம் என்ற பழைய பெயரின் மருஉ எனவும் கொள்ளலாம். இது மாதகல் துறைக்கு அண்மையிலுள்ளது. இந்த சம்புத் துறையிலிருந்தே தேவநம்பியதிசனால் அசோக மன்னனிடம் அனுப்பப்பட்ட தூதுவர்கள் மரக்கலம் ஏறிச் சென்றனர் என வரலாறு கூறுகிறது.

பண்டைக் காலத்தில் சம்புகோளம், மாந்தை என்ற இரு துறைமுகங்களும் மிக்க கீர்த்தி வாய்ந்திருந்தன. வங்காளத்திலுள்ள தாம்பலிப்தி என்னும் துறைமுகத்திறகும் சம்புகோளத்திற்கும் கடல் வணிகத் தொடர்பு இருந்துவந்தது. பௌத்தம் இங்கு வரமுன்பே வடபாலுள்ள யம்புகோளப் பட்டினம், வடமேற்கிலுள்ள மாதோட்டம், கிழக்கேயுள்ள கோணேஸ்வரப்பகுதி ஆகியவை நாகரீக வளர்ச்சியில் முன்னின்ற துறைமுகங்கள் என்பதை விஜயன், பண்டுகாபயன் கதைகள் எடுத்தியம்புகின்றன (க. சிற்றம்பலம்@1984:111)

தேநவம்பியதீசன் காலத்திற்குப் பின்பு (கி.மு.3ஆம் நூற்றாண்டு) சம்புகோளத் துறைமுகம் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. அதனால் அதன் செல்வாக்குக் குறைவதாயிற்று (பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை: 1962:90)

திருவடிநிலை என்ற இடப்பெயரோடு இராமர் கதையைத் தொடர்புபடுத்திக் கூறும் வாய்மொழிக் கதை ஒன்றும் வழக்கிலுள்ளது. சீதைக்கு அந்திமக் கிரியை செய்வதற்காக இராமர் இங்கு வந்தார் என்றும், அதன் பொருட்டுக் கடலிலே நீர் எடுக்க இராமர் ஓர் அடி எடுத்து வைத்தவுடனே கடலிலே மூழ்கி உயிர் நீத்தார் என்றும், இராமபிரானது திருவடி பதிந்த இடமே திருவடி நிலை எனப்பெயர் பெற்று வழங்குகின்றது என்றும் கூறப்படுகிறது. திருவடி நிலைக்கு அண்மையில் பொன்னாலை வரதராசப்பெருமாள் கோயில் அமைந்திருப்பதும் ஈண்டு நோக்கற்பாலது.

“வில்” ஈற்றுப் பெயர்கள்
வில் என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருட்கள் கூறப்படுகின்றன. வில் ஸ்ரீ விற்றல் (குறள் - 220)@ அம்பு எய்தற்குரிய கருவியான வில் (தொல். போருள்: 938)@ வில் விணை நாண் (இலக்கண விளக்கப் பாட்டியல் - 608), உரை ப. 514.)@ வானவில் (நெடுநல் 104@ ஒளி (சிவகசிந்தாமணி, பக் 2959). வில்மாடல் ஸ்ரீ விற்போல் வளைந்த கட்டடப் பகுதி@ வில்யாழ் (பெரும்பாணாற்றுப்படை: 182), வில்லரணம் (முல்லைப்பாடு 42) முதலான தொடர்களும் வழக்கிலுள்ளன (த.லெ.6:3708). இலங்கைத் தமிழரின் பேச்சு வழக்கில் வில் என்பது பெரிய குளத்தையும் நீர்த் தேக்கத்தையும் குறித்து வழங்கக் காணலாம். இந்த “வில்” என்ற சொல்லே சிங்களத்தில் “வில்” என்ற சொல்லாகக் குளத்தைக் குறிக்கிறது. வுளைந்த இடத்தை, வளைந்த நீர் தேங்கி நிற்குமிடத்தைக் காரணப்பெயராக “வில்” என்பது தமிழில் குறித்து வழங்கிற்று. இவ்வாறிருக்க, யாழ்ப்பாண இடப்பெயர் பற்றிய தம் கட்டுரையில் எஸ்.சபாரத்தின முதலியார் தமிழில் ஊர்ப்பெயர் விகுதியாக “வில்” என முடிவுறும்போது எவ்வித அர்த்தமும் இல்லை: என்று கூறினார். இது தமிழில் அவருக்குள்ள நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுகின்றதென்று கருதினார் போலும். அவருக்கு முன்பு யாழ்ப்பாண இடப்பெயர் பற்றி எழுதிய ஹோர்ஸ்பரோ என்பவரும் அவரைப்போன்றே தமிழில் இடப்பெயர் இறுதியாகவரும் “வில்” என்பதற்கு எவ்வித பொருளும் இல்லை எனத் துணிந்து எழுதினார். 2 அப்போதிருந்த தமிழறிஞர்கள் இவரது தமிiறியாத் னனை;மையினைச் சுட்டிக்காட்டாமை புதமையே அக்கட்டுரையாளர் இத்தாவில், இணுவில், உடுவில், கெருடாவில், கொக்குவில் கோண்டாவில், நுணாவில், மட்டுவில், மந்துவில், மல்வில், மிருகவில் முகவில் ஆகிய பன்னிரு ஊர்ப் பெயர்களைத் தந்து இவை யாவும் சிங்களப் பெயர்களின் சிதைவாகத் தமிழில் வழங்கின என்றார்3. ஆயினும் அப்போதிருந்த தமிழறிஞர் இதனை மறுக்கத் துணியாதபோது ஜே.பி. லூயிஸ் என்ற ஆங்கில அறிஞர் அக்கருத்தை மறுத்து, இதனைத் துணிந்து ஆராயவேண்டும் என்றும், இதுபோன்ற பெயர்கள் மன்னார் மாவட்டத்தி “வில்”, “வில்லு” என்ற ஈற்றையுடையனவாக உள்ளன என்றும் கூறினார். 4 ஆனால் அதேயாண்டில் இடப்பெயர்பற்றி எழுதிய சுவாமி ஞானப்பிரகாசம் 1916 இல்
1. “வுhந ளரககiஒ “ஏடை” hயள ழெ அநயniபெ in வுயஅடை யள pயசவ ழக ய ஏடைடயபந யெஅநஇ றாடைந ள ளுinhயடய வை hயள யn யிpசழிசயைவந அநயniபெ’ – ளுயடியசயவயெ ஆரனயடயைச 1917 p: 170.
2. டீ. ர்ழசளடிரசபா 1616 ப. 55.
3. மேலது பார்க்க
4. து.P. டுநறளை: 1917. p.171.

ஹோர்ஸ்பரோ குறிப்பிட்ட 12 “வில்” ஈற்றுப் பெயர்களுடன் மேலும் பின்வரும் 12 பெயர்களைக் குறிப்பிட்டார். கண்டுவில், காவில், கூவில், கொணாவில், களுவில், தளுவில், துலாவில், நந்தாவில், நீவில், பண்டாவில், யாவில், வேவில் என்பன அவை. ஞானப்பிரகாசரும் ஹோர்ஸ்பரோ கருத்தை அவ்வாறே ஏற்று இப்பெயர்கள் யாவும் சிங்களப் பெயரின் சிதைவென்றார். 1 இதனைச் சாதகமாகக் கொண்ட ஹோர்ஸ்பரோ 1917 இல் பின்வருமாறு கூறியதில் வியப்பில்லை.

“குச. புயெnயிசயமயளயச யஉஉநிவள அல யசவiஉடந யள pடயஉiபெ டிநலழனெ னழரடிவ வாந கயஉவ ழக ளுinhயடநளந ழஉஉரியவழைn ழக வாந துயககயெ Pநnnளெரடய யவெநஉநனநவெ வழ வாந வுயஅடை pநசழைன” 2

இக்கூற்றிலிருந்து சுவாமி ஞானப்பிரகாசர் உட்பட சகல அறிஞர்களும் இடப்பெயர் ஆராய்ச்சியை வேறு நோக்கத்துடன் நடாத்தியிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.

மேலே எடுத்துக் காட்டியவற்றால் “வில்” என்பது தமிழ்ச்சொல் என்பதும், அது வில் போன்றமைந்து குளங்களைச் சுட்டவும் பயன்பட்டது என்பதும், குளங்களைச் சுட்டிய “வில்” ஈற்றுப் பெயர்கள் குளங்களுள்ள இடங்களையும் இருமடி ஆகபெயராய்க் குறித்து நின்றதும் புலனாகின்றன. இக்கருத்துக்களை மேலும் சான்றுபடுத்துவதாகக் கலாநிதி இரகுபதி அவர்கள் வுற்று (1983) அமைவதால், தம் மதம் நிறுவுதல் என்னும் உத்திக்கமைய அவர் கருத்தை ஈண்டுத் தருதல் பொருத்தமானது.
“யுழெவாநச கநயவரசந ழக வாந ளரசகயஉந றயவநச ழக வாந Pநnniளெரடய ளை வாந “எடை” வலிந ழக Pழனௌ. ளுழஅந ழக வாநளந Pழனௌ யசந குழசஅநன யெவரசயடடல டில வாந கழசஅயவழைn ழக ளாயடடழற pவைள றாநசந உநசவயin யசநயள ழக டiஅநளவழநெ டிநன னளைளழடஎந in வாந றயவநச … … … வுhந யnஉநைவெள hயன ய ளலளவநஅ ழக சயளiபெ ய hயடக – உசைஉடந டிரனெ (வாயவ சநனெநசநன வாந வநசஅ ‘எடை’இ கழச வாந pழனௌ.) யனெ னரசiபெ னசழரபாவ வiஅநள யவ டநயளவ அரனனல றயவநச உழரடன டிந ளநநn pசநளநசஎநன டில வாளை hயடக உசைஉடந டிரனெ. வுhளை உழரடன டிந ழடிளநசஎநன in ளுழரவா ஐனெயை யனெ in ளுசi டுயமெய நளிநஉயைடடல in வாந யசனை Pடயiளெ. ஐn வாந pநniளெரடய வாநளந inரெஅடிநசயடிடந ‘எடை’ pழனௌ டயவநச டிநஉயஅந ரெஉடநதi கழச வாந ளநவவடநஅநவெளஇ யனெ வாந யெஅந ழக வாந ‘எடை’ டிநஉயஅந வாந யெஅந ழக வாந ஏடைடயபந”.1

கூவில் (வலி. வ. 63. 1)
கீரிமலையில் அண்மையிலுள்ள சிறு கிராமம் கூவில், கூந்தல்பணை நிறைந்தவிடம் என்ற அடிப்படையில் இப்பெயர் வழங்கிற்றோ எனவும் ஆராயலாம். இங்கு பழைய அண்ணன்மார், புதிய அண்ணன்மார் கோயில்களுமுள்ளன. கொக்குவில், கோண்டாவில், பருத்தித்துறை ஆகிய இடங்களிலும் கூவில் என்ற பெயரில் குறிச்சிகளுள்ளன.

கெல்லாவில் (வலி. தெ. மே. 33.2).
இது மாதகல் பகுதியிலுள்ள ஓரி;டம். கல்லாவில் , கெல்லாவில் எனத்திரிந்துள்ளது. அகரம் எகரமாகத் திரிதல் பேச்சு வழக்கில் பொதுவானதே. கல்லுதல் ஸ்ரீ தோண்டுதல். தோண்டப்படாத குளம் அல்லது குளத்தின் அணைக்கட்டை அதன் நீர் தோண்டாத துளைத்து உடைக்காத – குளம் என்ற பொருளில் கல்லாவில் என்ற பெயர் தோற்றம் பெற்றிருக்கலாம்.

மக்குவில் (வலி. தெ.மே.53.2)
இது பெரியவிளான் கிராம சேவகர் பிரிவிலுள்ள ஓரிடம். இங்கு குளமில்லை. ஆனால் இப்பிரதேசத்தின் ஒரு மூலையில் இவ்விடம் இருப்பதாலும் (மூலை ஸ்ரீ வில்) இது மக்கிக் கற்களுள்ள பகுதியாதலாலும் (மக்கு + வில்) , மக்குவில் என்ற பெயர் ஏற்படுவதாயிற்று. இவ்வூரில் யூதா தேயு ஆலயம் (ளவ. துரனநள ஊhரசஉh) ஒன்றுள்ளது இங்கு புலி வளைந்தாள் என்ற குறிச்சிப் பெயரும் வழக்கிலுள்ளது.

1. கு.சுயபரியவால இ 1983இ p. 438.

இயல் 2

நிலவியல்பு குறித்த பெயர்கள்

நிலவியற்; கூறுகளும் இடப்பெயர்களும்
நிலவியல்பு – நிலத்தோற்றம் – நில அமைப்பு என்ற அடிப்படைகளிலும் இடப்பெயர்கள் தோற்றம் பெற்றுள்ளன. இவ்வகையில் யாழ்ப்பாணக மாவட்டத்தில் 19 வகையான நிலக் கூற்றுப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றை முறையே பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

கட்டு கிரி செம்பாடு பள்ளம் முனை
கல் குடா தரை பிட்டி மூலை
கலட்டி குண்டு திடல் மணல் வளை
காடு குழி தீவு மலை

நிலப்பயன்பாடு குறித்த பெயர்கள் தனியாக ஆராயப்படுவதால் அத்தகு பெயர்கள் பற்றி ஐந்தாம் இயலிலே தனித்து ஆராயப்பட்டுள்ளமை காண்க.

கட்டுவன் (வலி. வ. 69.1)
வலிகாமம் வடக்கு, மயிலிட்டி தெற்குக் கிராமசேவகர் பிரிவிலுள்ள கட்டுவன் என்ற கிராமத்தின் பெயர் கட்டுவன், குட்டுவன், கட்டுவனூர் என்ற வழங்குகின்றது. பண்டைய தமிழகத்தைச் சேர்ந்த குட்டநாட்டு மக்கள் இங்கு வந்து குடியேறியபடியால் “குட்டுவனூர்” என்ற பெயர் வந்ததென்பர். குட்டுவனூர் , “குட்டுவன்” ஆயிற்று என்ப. இவ்வூர் பற்றி த. சண்முகசுந்தரம் வருமாறு கூறுகின்றார்.

“ இங்கு மலையில்லை. வற்றாத பேராறு எதுவும் இல்லை மாரியில் மட்டும் நீர் தேங்கி ஓடும். இந்நீரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முந்தையோர் தேக்கி வைத்தனர். தமது நிலப்பரப்புக்கு ஏற்பக் கல்லணை, மண்ணணை என்பவற்றை அமைத்தனர். மேட்டுப் பூமியாகிய கட்டுவன் ஊரிலே தோன்றுவது வழுக்கை ஆறு. இங்கு அணை ஒன்றைக் கட்டினர். ஆகவே “அணைகட்டுவன் ஊர்” என்ற பெயர் எழுந்தது. 1

சேரன் செங்குட்டுவன் , குட்டுவன் , குட்டுவனூர் என்பதிலிருந்தே கட்டுவன் தோன்றிற்றென்றும் கூறுவர். இதனைக் குமாரசுவாமி (1917:68) சிங்களப் பெயரெனக் கொண்டு கட்டு ஸ்ரீ முள்: வன் + கரடு , முட்காடு என்ற பொருளில் தோன்றியதே கட்டுவன் என்ற பெயரெனக் கூறுவர். சேரர் தொடர்பாற் குட்டுவனூரிலிருந்து வந்தேறிய குடிகளிட்ட தம்மூர்ப் பழம் பெயரே காலகதியிற் குட்டுவனூர் , கட்டுவன் என்றாயிற்று எனக் கோடலே பொருத்தம். குநற்தொகையிற் “குட்டுவன் மாந்தை” என்ற தொடர் வருகின்றது. குட்டுவன் என்னுஞ் சொல் சேரனின் பெயர்களில் ஒன்று.3

“கலட்டி” ஈற்றுப் பெயர்கள்
கலடு , கலட்டி ஸ்ரீ கலட்டித்தரை. குற்கள் நிறைந்த தரைப்பகுதியுடைய பகுதியை “கலட்டி” என்ப. யாழ். மாவட்டத்திற் கலட்டி என்ற பெயருடைய ஐந்து கிராமங்களும் அனேக குறிச்சிப் பெயர்களும் காணப்படுகின்றன. மட்டக்களப்பு வழக்கில் வயற்காணிகளில் வளம் குறைந்த வயல் நிலம் கலட்டி எனப்படும்.

1) த. சண்முகசுந்தரம் 1984, ப.4
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை

2) த. சண்முகசுந்தரம் 1984, ப.4
3) பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, 1962 ப. 92.

கொல்லன்கலட்டி (வலி.வ.64.2).
கொல் , கொல்லன். (“மரங் கொல் தச்சர்” – சிலம்பு 5.29). மரங்களை வெட்டி வீழ்த்துவொரையும் கொல்லர் என்று பதம் சுட்டிற்று.1

கொல்லன் 2 கலட்டி என்பதில் வரும் கொல்லன் என்பது இரும்புக் கொல்லன் (டீடயஉம ளுஅiவா) என்ற நிலையில் தொழில் காரணமாக இந்த இடப்பெயர் தோற்றம் பெற்றது. இக்கிராமம் தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ளது. நிற்க, கொல்லை + கலட்டி. இங்கு பல்வகைப் பயிர்த் தோட்டங்கள் காணப்படுவதால் இதனைக் கருதப்பொருளடியாகப் பிறந்த இடப்பெயரெனக் கொள்வதே பொருத்தம்.

“மலை” ஈற்றுப்பெயர்கள்
யாழ்ப்பாணக மாவட்டத்தில் மலையே இல்லை. இருப்பினும் மலை ஈற்றுப்பெயர்களாகக் கம்பர்மலை, கீரிமலை, சுதமலை என்ற மூன்று இடங்களுள்ளன. எனவே இப்பெயர்கள் கற்பனை அடிப்படையிலோ அல்லது வேறு சொற்களின் திரிபாகவோ தோன்றியிருக்க வேண்டும்.

கீரிமலை (வலி. வ. 64.அ. 4)
காங்கேயன் துறையிலிருந்து மேற்கே இரண்டு மைல் தொலைவிற் கடற்கரையோரமாகப் புனித நீரூற்றுத் தலமாகக் கீரிமலை அமைந்துள்ளது. இங்கு முன்னர் காடு இருந்ததென்றும் இற்கு கீரிப்பிள்ளைகள் அதிகம் காணப்பட்டன என்றும் அதனால் இவ்விடத்திற்குக் கீரிமலை என்ற பெயரேற்பட்ட தென்றும் கூறப்படுகிறது.

1. “சொல்” றயள நஅpடழலநன in வாந ளநளெந ழக கநடடiபெ ழச உரவவiபெ னழறn வசநநள. ஐக றந அநனயைவந கழச hயடக யn hழரச ழn யடட வாநளந கயஉவழசள றந ளாயடட டிந ழடிடபைநன வழ யனஅவை வாயவ “முடைடiபெ” ழச “கநடடiபெ” வசநநள றயள in வாந யபந ழக pசiஅவைiஎந அயn வாந கசைளவ ளவயபந ழக ‘வடைடபெ’ ழச யபசiஉரடவரசந’. ர்நnஉந றந pயளளஇ pயiடெநளளடல கழச ரளஇ ழெவ கழச வாந வசநந உழnஉநசநெஉ கசழஅ ‘மழட’ + முடைட வழ ‘மழட” + வடைட” + ர்.ளு. னுயயஎடைனரஇ 1972 p.35
2. கொல்லர் ஸ்ரீ அரண்மனைக் காவலர், மரத்தச்சர், தாவிது.1970:36

கீரிமலை நீரூற்றை ஈழத்துக் குற்றாலம் என்பது. ஆனால் இது மலையருவியன்று. நிலத்து நீரூற்றாம். ஆடி அமாவாசைத் தினத்தன்று பல்லாயிரக் கணக்கானோர் இதில் தீர்த்தமாட வந்து சேர்வ வழக்கம். இந்நீரூற்றுப் பற்றிய ஒரு பாடல் வருமாறு:
மண்ணின் சுகமெல்லாம் வாயமெ வானவர்சேர்
விண்ணின் சுகமெல்லாம் விளையுமால் - தண்ண}றல்
சிற்றூற்றுங் கீழே சிறந்தோட மேற்படுக்கப்
பெற்றோர்க்கென றென்றென்றும் பேசு.1

கி.மு.543 இல் இலங்கை அரசைத் தாபித்த விஜயன் என்பவன். துனது இராச்சிய பாதுகாவலுக்காய் இலங்கையின் பழைய ஆலயங்களைப் புதுப்பித்தான். அவ்வகையிற் திருக்கோணேசர் கோயில், திருக்கேதீஸ்வரன் கோயில், கீரிமலைச் சாரலின் பழுபட்டுக்கிடந்த திருத்தம் பலேசுவரம், திருத்தம்பலேசுவரி கோயி, குதிரை ஆண்டவர் கோயில் முதலியவற்றைத் திருத்தி இந்தியப் பூசகர்களை வரவழைத்து ஆங்குக் குடியமர்த்தினான் என்றும் கூறப்படுகின்றது 2 இக்கிராமத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டுத் திகழ்ந்தமையால் இதற்குக் “கோயிற்கடவை” என்ற பெயரும் ஏற்படுவதாயிற்று.3

நாகுலம் என்னும் இதன் பழைய நாமம் நகுலம் என மருவிப் பின்னர் தமிழிற் கீரிமலை என்றாயிற்று என்கிறார் இராசநாயகம் (1926 : 3). ஆனால் குமாரசாமி (1918:131) கிரி தமிழ்ப்ச் சொல்லும் சேர்ந்து கீரிமலை ஆயிற்று என்றார்.

1. சு.க. நவநீதகிருஷ்ண பாரதியார், ஸ்ரீ லங்கா, பெப்ரவரி 1955. ப. 18
2. க. வேலுப்பிள்ளை: 1918 ப.4
3. மேலது ப. 5


இயல்: 3

நிலப் பயன்பாட்டுநிலைப் பெயர்கள்
பண்டைக்கால மக்கள் நிலையாக ஓரிடத்திற் குடியிருக்க முற்பட்டபோது காடழித்து, மனை அமைத்துத் தம் சூழலில் வளம் பெருக்கி வாழத் தொடங்கினர். வளமான சுற்றாடல்களிலேயே வாழவும் தலைப்பட்டனர். உணவு உற்பத்தியின் பயனாகக் களனிகளும் தோட்டங்களும் சூட்டப்பட்டன. நிலப் பயன்பாட்டு நோக்கில் வயல்களும் தோட்ட நிலங்களும் முதன்மைபெற்றநன. அவற்றின் பயனாக மொழியிற் புதுப்புதுச் சொற்களும் பெருகலாயின.

ஈழத்திற் பொதுவாக கமம், வயல், வட்டை, வெளி என்ற பெயர்ச் சொற்கள் வயல் நிலத்தைச் சுட்டுவனவாக அமைந்துள்ளன. இவற்றில் கமம் என்பது காமம் என நீண்டொலித்து வழங்கக் காணலாம். குண்டி என்பது வயற் பெயரைச் சுட்டும் பெயர்க்கூறாகவே வழங்கப்படுகின்றது. கொல்லை, தோட்டம், தோப்பு என்பன பயிர்த் தோட்டங்களுடன் தொடர்புடைய பெயர்ச் சொற்களாகும். இவற்றைவிட வத்தை என்ற சொல்லும் தோட்டம். குடியிருப்பிடம் என்ற பொருளிலும் வழங்கப்பெற்றுள்ளமை நூலில் விளக்கப்பட்டுள்ளது. வெட்டி எ;ற சொல்லும் நிலப் பயன்பாட்டடிப்படையில் இடப்பெயர்க் கூறாக அமைந்துள்ளது.

இப்பெயர்க்கூறுகள் அனைத்தையும் தமிழகத்து இடப்பெயர்க் கூறுகளுடன் ஒப்பிட்டு ஆராயும்போது ஈழத்திற்குரிய ஒப்பிட்டு ஆராயும்போது ஈழத்திற்குரிய தனித்துவமான பெயர்க் கூறுகள் எவை என்பதை அறிய வாய்ப்புண்டு.

“காமம்” ஈற்றுப்பெயர்கள்
காமம் + நகரம் அல்லது கிராமம் என்பர் வின்ஸ்லோ. வுடமொழி “க்ராம” என்ற சொல்லிலிருந்தே காமம் என்ற சொல் தோன்றியுள்ளது. சிங்கள மொழியில் “கம” “கமுவ” என்ற ஈறுபெறும் இடப்பெயர்களுள. இப்பெயர்களும் வடமொழிக் “க்ராம”: என்பதிலிருந்தே ஆக்கம் பெற்றுள்ளன. எனவே, தமிழில் வரும் காமம், சிங்களத்தில் வரும் கமகமுவ ஆகிய மூன்று சொற்களும் ஒரே வடமொழிச் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றவை என்பது தெளிவு.

இலங்கை பல பாகங்களிலும் “காமம்” ஈற்று இடப்பெயர்கள் காணப்படுகின்றன. யாழ். மாவட்டத்தில் கொடிகாமம், தம்பகாமம், வலிகாமம், வீமன்காமம் என்பனவும் முல்லைத்தீவிற் பனங்காமம், கிழக்கு மாகாணத்தில் இறக்காமம், இலங்கையின் தென்கோடியில் கதிர்காமம் முதலிய பல இடங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

ஹோர்ஸ்பரோ என்பவர் (ர்ழசளடிரசபந 1916 : 54) “காமம்”, “கம”, “கமுவ” என்ற சொற்கள் ஒரே மூலத்திலிருந்து தோற்றம்பெற்ற சொற்கள் என்பதை ஏற்றுக்கொண்ட பின்னர் அதே கட்டுரையின் (பக். 55) மறுபக்கத்தில் “காமம்” என்பது சிங்களக் “கம” என்பதன் தமிழ்ப் வடிவம் என்கிறார். ஆசிரியரே முன்பின் முரணாகக் கூறுவதில் இருந்து அவரே தம்மோடுதாம் முரண்படுதலைக் காணலாம். (1)

1. ழேற புசயஅயஅ ளை கசழஅ வாந ளுயளெமசவைஇ பசயஅய கசழஅ றாiஉh வாந ளுinhயடநளந றழசன பயஅந ளை னநஎiஎநன. ளுழ வாயவ டிழவா சுயஅயஅ யனெ புயஅய உயஅந கசழஅ யவெசநசசை உழஅஅழn ளவழஉம …….
ஐ யஅ hழறநஎநசஇ ழக ழிநnழைn வாயவ றாநசந முயஅயஅ ள கழரனெ in pடளஉந யெஅந ழக வாந துயககயெ Pநnniளெரடய. ஐவ ளை ய வுயஅடைணநன கசழஅ ழக புயஅயஇ டிநஉயரளந வாந வுயஅடை றழசன முயஅயஅ ளை ழெவ ரளநன டில வாந வுயஅடைள ழக வாந pநnniளெரடய’ ர்ழசளடிரசபந 1916: 54-55

சுவாமி ஞானப்பிரகாசம் (1917:167-169)இ குமாரசுவாமி (1917:26) முதலியோர் கொடிகாமம், தம்பலகாமம், வலிகாமம், வீமன்காமம் என்பனவற்றுடன் குறிச்சிப் பெயர்களாம் இளகாமம், தேகாமம் என்பனவும் சிங்களப் பெயர்களே என்றனர். ஆயினும் இவர்களது ஒருபக்க வாதங்கள் ஆழ்ந்த ஆய்வுக் குரியனவாகவே காணப்படுகின்றன.

வலிகாமம்:
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் 111 சதுர மைல் பரப்புடைய பரந்த பகுதி வலிகாமம் எனப் பெயர்பெறும். இதன், வடக்கு, மேற்குப் பகுதிகளிற் பாக்குத்தொடு கடலும், தெற்கே யாழ்ப்பாணக் கடனீரேரியும், கிழக்கே தொண்டைமானாற்றுக் கடனீரேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. கடலேரிகளாலும் பாக்கு நீரிணையாலும் கூழப்பட்ட வலிகாமம் பகுதி நிர்வாக அடிப்படையில் வலிகாமம் வடக்கு, வலி. கிழக்கு, வலி. தெற்கு, வலி மேற்கு, யாழ்ப்பாணம் என ஐந்து உப அரசாங்க அதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குடியடர்த்தியான பகுதிகளில் இதுவும் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வல்,வலிமை+கமம்,கலிகாமம் எனப் புணர்ந்துள்ளது. இப்பிரதேசம் முழுவதும் செம்மண் கொண்ட செம்பாட்டு நிலப் பகுதியாகவும் செம்மண்ஓம் செங்களியும் கொண்ட ஒரு திட்டிப் பிரதேசமாகவும் அமைந்துள்ளது. எனவே பெரும்பாடுபட்டு உழைத்துக் கமம் செய்யவேண்டிய நிலையில் அமைந்த வலியகமம் , வலிகாமம் ஆயிற்று. “வலிகாமம் என்பது ஐயத்திற்கிடமின்றி அது சிங்களப் பெயரென்றும் றுடைபையஅய (ளுயனெல ஏடைடயபந) என்பதன் திரிபென்றும் அதனை வழி, வலி, வளி எனத் தமிழில் பொருள்காணல் பொருளற்றது” என்றும் ஹோர்ஸ்பரோ (ர்ழசளடிரசபா 1918: p.55) கூறினார். இக்கருத்தே குமாரசுவாமியிடமும்(1918: 26) காணப்படுகிறது. வலிகாமம் என்பதற்கு அதன் நில அமைப்பே முதற் காரணியாகிறது. வலி + மணல் என்ற சிங்களப் பொருள் கொளின் இப்பகுதியில் பெரும்பாலும் செம்பாட்டுத் தரையே காணப்படுகிறது. மணல் தரையைச் செம்பாட்டுத் தரையாக்க முடியாது@ செம்பாட்டுத் தரை மணல் தரையாகவும் மாறாது. அன்றியும் மணல் தரையின் அடியில் சுண்ணக்கல் முருகைக் கற்களே அமையும்.

ஆனால் செம்மண் தரையின் சுண்ணக்கல் (வெள்ளைக் கல்) பாறையே அமைந்திருக்கும். வலிகாமம் பெரும்பாகம் சுண்ணக்கற் பாறைகளையே கொண்டுள்ளது. எனவே வலிகாமம் என்பது வலிகமத்தின் திரிபாகிய தமிழ்ப் பெயரே என்பது தேற்றம். வல்,வலிஸ்ரீசனை, வெற்றி என்ற பொருள்களும் கூறப்படுகிறது (தாவீது:2970 – 85). மேம் தமிழர் தம் தாயகமாம் தமிழகத்திலும் வலிகாமம், வலிவலம், வல்லம், வல்லன்சேரி, வல்லப்பாக்கம், வலம்புரம் முதலான இடப்பெயர்கள் வல்,வலிமை என்ற அடிச்சொல்லிலிருந்து தோற்றம் பெற்றிருத்தல் எனம் கருத்தை வலிதாக்குகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு மணற்றி, மணற்றிடர் என்ற தூய தமிழ்ப் பெயர்கள் முன்னர் வழங்கியமை யாழ்ப்பாணக வைபவமாலை, வைஉh பாடல் முதலிய நூல்களால் அறியப்படுகின்றது. மதுரை மன்னன் வரகுணபாண்டியன் இந்த “மணற்றியை” வென்ற செய்தி கூறுவதாய் அமைந்த “மன்னோரழிய மணற்றி வென்றான்” என்ற பாடல் ஒன்று இறையனார் அகப்பொருளில் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே மணற்றி – மணற்றிடர் - மணலூர் வலிகாமம் என்பன ஒரேயிடம் சுட்டும் தமிழ்ப்ப் பெயர்கள் என்பது புலனாகின்றது.

வீமன்காமம்:
வீமன் + கமம் - வீமன்காமம் ஆயிற்று. இப்பெயர் வீமன் என்பவருக்குரிய கமநிலப் பகுதியைச் சுட்டி, பின்பு அவ்வூர் முழுவதையும் இப்பெயர் குறிப்பதாயிற்று. பாரதக் கதையில் வரும் வீமனையும் இங்கு தொடர்புபடுத்திக் கூறும் வழக்கமுண்டு. இது சிங்களப் பெயர் எனக் கூறும் குமாரசுவாமி வருமாறு விளக்கம் கொடுத்துள்ளார்.(1918:26-27) “சிங்களவருடைய நம்பொத்த என்னும் நூலிலே நுவலப்பட்ட “பீவ் கழுவிகாரய” என்பது இவ்வீமன் காமத்திலேயுள்ள தென்பதற்கு அக்குறிச்சியிலேயுள்ள “புத்தர் கோயில்” எனப் பெயரிய காணியும் அக்காணியின் கண்ணே காணப்படும் அழிந்துபோன ஒரு கட்டடத்தின் அத்திபாரக் குறிகளுமே சிறந்த அத்தாட்சியாம். “மீவன் கமு” நம்மவர் நாவிலே வீமன்காமமெனச் சிதைவுற்றது வினோதமன்று”. இவர்தம் கூற்றும் வினோதமாகவே இருக்கிறது.

ஈழத்திலே தமிழர் வாழும் பாரம்பரியப் பிரதேசங்களில் பாரதம் இதிகாசந் தழுவிய நாட்டுக் கூத்துக்கள் பெரிதும் இடம்பெற்றுள்ளன. அக்கூத்துக்களிற் சிறந்தோருக்குக் கதாபாத்திரப் பெயர்களும் வழங்கலாயின உ+ம்: “தருமர்மார்க்கண்டு”, “அருச்சுணன் குமாரன்”, “வீமன் அருணாசலம்”, “நீலன்மணியன்”, “சீதை வேலன்” என்ற தொடக்கத்தக்கனவாகிய பழைய பெயர்கள் இன்று கிராமங்களிலே வழக்கிலுள்ளன. எனவே “வீமன்” என்ற கூத்துக் கலைஞன் ஒருவன் வாழ்ந்த இடமே “வீமன்காமம்” எனக் கூறுவதில் எந்தத் தப்பும் இல்லை@ எந்த வீணோதமுமில்லை. இதனோடு தொடர்புடைய வகையில் டாக்டர் கரு. நாகராசன் கூறும் கருத்தும் (1985:104) ஈண்டு நோக்கற்பாலது:

“கூத்துக் கலைகளில் வல்ல கூத்தர்களுக்குப் பரிசாக
சில ஊர்களை மன்னர்கள் வழங்கியிருத்தல்வேண்
டும். அப்படிப்பட்ட ஊர்கள் “கூத்தவாக்கம்” என்று
குறிப்பிடப்படுகின்றன”.

பஞ்சபாண்டவர்களின் பாரதப் போரை நினைவுபடுத்தும் வகையில் இ;றும் இலங்கையில் பல இடப்பெயர்கள் வழக்கிலுள்ளன. உதாரணமாக பாண்டிருப்பு, மணிபல்லவம், வீமன்காமம், நகுலேஸ்வரம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

குமாரசுவாமிக்கு 1 முன்பே ஹோர்ஸ்பரோ என்பவர் (ர்நசளடிரசபா: 1916: ப.55) வீமன்காமம் தனிச் சிங்களப் பெயர் என்றார். அவரே வவுனியா மாவட்டத்திலுள்ள மாமடு என்ற கிராமத்தின் அயற் கிராமமாகிய “வீமன்கல்லு” என்ற இடத்தைக் குறிப்பிட்டு, இதுவும் சிங்களப் பெயரென்றும். இவர்கள் நோக்கம் தமிழ்ப் பெயர்களுக்குச் சிங்கள மூலம் கற்பிப்பதாகவே காணப்படுகிறது.

மேலும் சில குறிச்சிப் பெயர்களாக இங்கு அம்பட்டியவத்தை, திப்பியகடவை, கிறியவத்தை, சின்னம்பத்தை, முள்ளாத்தனை, பரியாரி கடவை என்பன காணப்படுகின்றன. சுயகயநட என்ற கிறிஸ்தவர் வாழ்ந்த இடத்தில் காரணமாக சுயகயநட , றப்பி என வழக்குப் பெறுவதாயிற்றுப் போலும். இங்கு கேணியடி வைரவர் கோயிலும் அமைந்துள்ளது. முள்ளாந்தனையில் மாரியம்மன் கோயிலுள்ளது. பண்டைநாள் முதலாக வைத்திய பரம்பரையினர் வாழ்ந்த இடம் பரியாரி கடவை என்ற காரணப் பெயர் பெறுவதாயிற்று.

வீமன் என்ற தலைமகன் ஒருவன் விரும்பி வந்து தங்கி வாழ்ந்த இடம் என்ற அடிப்படையில் (வீமன் + காமம்) வீமன்காமம் என்ற பெயர் தோன்றியிருக்கலாம் என்றுஞ் சிலர் கதுவர். 2 இனனை; அயலேயுள்ள மயிலப் பையில் “கூத்திவளவு” என்ற குறிச்சிப் பெயர் வழக்கில் இருப்பதும், பண்டை நாளில் இங்கு பாரதக் கதையோடு தொடர்புடைய கூத்துக்கள் ஆடப்பட்டமையும் “வீமன்

1. “வுhந யெஅந ளை ளிநடவ ஆiniஎயபெயஅர in ய னகைகநசநவெ நனவைழைளெ ழக வாந யேஅ Pழவவய. டீரவ தரனபiபெ கசழஅ வாந யெஅந வீமன்காமம் றாiஉh ளை உடநயசடல ய ளுinhயடநளந வநசஅ in வுயஅடை பசயடி. ஐ வாiமெ “ஆiniஎயபெயஅர” ளை வாந அநசந உழசசநஉவ ழக வாந ளுinhயடநளந யெஅந. ஆiஎயn நயளடைல வரசளெ iவெழ ஏiஅயn யஉஉழசனiபெ: வழ ய டழற ழக Phழநெவiஉ உhயபெந மழெறn வழ வாந வுயஅடை பசயஅஅயசயைளெ யள அநவயவாநளளை (போலி: சிவிறி , விசிறி). ஐவ ளை யடளழ ழெவநறழசவால வாயவ வாந கசழஅ வீமன்காமம் (ளு.று.ஊழழஅயசயளறயஅல 1918:160).
2. தகவல்: திரு. தெல்லியூர் செ. நடராசா.

நாடகம்” அல்லது “வீமன்” என்ற கதாபாத்திரம் முதன்மை பெற்ற நிலையும் வீமன்காமம் என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாம்.

வீமன்காமத்தில் மாந்தப்பாய், தலப்பாய், மல மண்டலப்பாய் ஆகிய குறிச்சிப் பெயர்களுமுள.

கொல்லை ஃ சோலை – முதன்மைப் பெயர்கள்
ஒல்லை , கொல்லை. ஒல்லையூர் நாடு பற்றிச் சங்க இலக்கியங்களிற் காணலாம்.1 ஒல்லை , ஓலை எனவும் திரிந்துள்ளது. அளவெட்டிக் கிராமத்திலுள்ள அளவோலை, கள்ளியோலை முதலான குறிச்சிப் பெயர்கள் இவ்வகையினவாகும். சோலை , என்பது அம்மன் தோலை எனப் பெயர் பெற்று வழங்குகின்றது.

அழகொல்லை (வலி.வ.62.1)
இது அளவெட்டிக் கிராம சேவகர் பிரிவிலிடம்பெறும் ஓரிடம், அழகு + கொல்லை , அழகொல்லையாயிற்று. அழகிய தோட்டத்தையுடைய இடம் என்பது இதன் பொருளாம்.

கோல்லை2 ஸ்ரீ முல்லை நிலம் புன்செய் நிலம், தரிசு, புழைக்கடை, தோட்டம் (த.லெ.2: பக்.1157). கொல்லை என்பது இலங்கை வழக்கில் சோலை என்பதையும் சுட்டும் கொல்லைப்புறம் எனும்போது, வீட்டின் பின்பக்கம் சோலை என்ற பொருளில் வருவதாகும். தமிழகத்திலும் கொல்லை
1) “ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன்
மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே”
(புறம் 242)
2) கொல்லை – சோலை (“மீனேறும் கொடிமுல்லை விடுகொல்லைக்
கடிமுல்லை …………” மதுரைக் கலம்பகம் - 5). “கொல்லை இரும்புனம்” (அகம்: 89:17) ஸ்ரீ கொல்லையினையுடைய பெரிய காடுகள் என்ற வழக்குகளும் காண்க.
யீற்றுப் பெயர்கள் காணப்படுகின்றன. ஞானப்பிரகாசர் இது சிங்களச் சொல்லென்பார் (1917). அழகொல்லை என்ற யாழ் மாவட்ட இடப் பெயருடன் சுவாமி ஞானப்பிரகாசர் களவொல்லை, விம்றாக்கொல்லை என்ற இரு ஊர்ப் பெயர்களையும் ஒப்பிட்டுக் காட்டுவர்.

செட்டிச்சோலை (வலி.வ.62.3)
அழகொல்லைக்கு அயலிலே அமைந்துள்ள இன்னோரிடம் செட்டிச்சோலை. இவ்விரு இடங்களும் அருகருகே அமைந்து கந்தரோடைக்கு அண்மையிற் காணப்படுவதாற் பண்டைநாளிற் கந்தரோடை இராசதானி நிலவிய போது இப்பகுதி அரச பூற்காப் பகுதியாக இருந்திருக்குமோ என்ற ஐயந் தோன்றுகிறது.

“வத்தை ஈற்றுப் பெயர்கள்”
ஈழத்தின் பலபாகங்களிலும் “வத்தை” ஈற்றுப்பெயர்கள் மிகவும் பரந்த காணப்படுகின்றன. சிங்களத்தில் இதை “வத்த” என எழுதுவர். சோல்லின் புறவழவத்தையும் அதன் ஒலியமைப்பையும் கருத்திற் கொண்டு “வத்தை” என்ற சொல் சிங்கள மூலச்சொல் எனப் பலர் வாதிடுவர். ஈழத்தில் இற்றைவரை இடப்பெயர் ஆய்வில் ஈடுபட்ட அனைவரும் “வத்தை” ஈற்று இடப்பெயர் அனைவரும் “வத்தை” ஈற்று இடப்பெயர் அனைத்தும் சிங்களப் பெயர் என்றே எழுதிர். குறிப்பாக சுவாமி ஞானப்பிரகாசர் (1919) குமாரசுவாமி (1917:1918) ஹோர்ஸ்பரோ (1916) முதலியோரை இவ்வரிசையிற் குறிப்பிடலாம்;. சுவாமி ஞானப்பிரகாசர் (1919:75) இதனைச் சிங்களச் சொல் எனக் கூறியது மட்டுமன்றி ஏயவவயட என்பது போர்த்துக்கீசச் சொல் எனவும் அதன் பொருள் டியடநஇ டிழயவ என்றும் கூறினார்.

இவர்கள் காலத்தில் பண்டைத் தமிழர் தம் நாகரிக வரலாறும். அவர்தம் மொழி வளமும், இன்றுள்ள அளவுக்கு வெளிப்படவில்லை. “வத்தை” என்பது தூய தமிழ்ப் பெயர் என்பதில் ஐயமே இல்லை. இதனைச் சொற் பிறப்பியல், சொற்பொருள், மக்கட் பண்பாடு, வாழ்வியல் அடிப்படையிலும் நிறுவலாம்.. வத்தை என்பதற்குத் தமிழில் நீரிற் செல்லும் கட்டுமரம், மக்கட் குடியிருப்பிடம் என்ற இரு பொருள்கள் உள. இனனை; அடிச்சொல், சொல்லாக்க நிலை, பொருள் நிலை என்பனபற்றியும் அறிதல் அவசியமாகின்றது.

1) வறு , வற்று , வத்து , வத்தை. ஈரலிப்புத் தன்மை காய்ந்து வற்றியமரத்துண்டுகள், நீர்ப்பரப்பைக் கடக்கும் கருவியாகப் பயன்பட்டபோது
2) வறு , வற்றல் , வற்று , வத்து + ஐ + வத்தை. புண்டை நாளில் நிலையான மக்கட் குடியிருப்புகள் நீர் நிலைகள் அண்மித்த ஈரலிப்பான பிரதேசங்களுக்கு அருகிலேயே அமையலாயின. ஈரலிப்பான பகுதியியல் அவர்கள் விவசாயத்தை மேற்கொண்டனர். குடியிருப்புக்குரிய குடிசை, வீடு முதலியவற்றைத் தண்ணீர் பரவாததும், என்றும் காய்ந்ததாக, வற்றலாக இருப்பதுமான மேட்டுப் பகுதிகளில் அமைத்துக் கொண்டனர். எனவே அவர் தம் குடியிருப்புப் பகுதி பெரு வெள்ளம் ஏற்பட்டபோதும் வற்றும் பகுதியாக இருந்தபடியால் அது காலப்போக்கில் “வற்றை” எனப்பட்டு “வத்தை” யாகியதில் வியப்பில்லை.
3) நீர்ப் பரப்பைக் கடக்கப் பயன்பட்ட வத்தைகள் மலிந்த நிலப்பரப்புப் பாகம் இருமடி ஆகபெயராய் “வத்தை” என்று சுட்டி வழக்குப் பெற்றதென்றும் கொள்க.

இது தொடர்பாக வித்துவான் நா. சிவபாதசுந்தரனாருடன் உரையாடியபோது, இப்பழந்தமிழ்ச் சொல் நாகர் மூலம் சிங்கள மொழியில் இடம்பெறலாயிற்று என்றார். அவர்தம் கருத்தை மொழியியலாளர் ஆயின் மேலும் உண்மைகள் பிறக்க வழி ஏற்படலாம்.

“வத்தை” என்ற ஈறு தனிக் கிராமத்திற்கு மட்டுமன்றி. ஊரின் உப பிரிவுகளிலமைந்த தோட்டங்களுக்கும். சிறு குறிச்சிகளுக்கும் பெயராக வழங்குகிறது. சுவாமி ஞானப்பிரகாசர் “வத்தை” பற்றிக் குறிப்பிடும் போது இனனை; பொதுவான உச்சரிப்பு “வத்தை” அல்ல “வெட்டை” என்றும் கூறினார்.

வயல் , வட்டை , வெட்டை , வத்தை:
யாழ்ப்பாணத்து ஊர்ப் பெயர்களில் வத்தை என்ற ஈற்றுப் பெயராகப் பத்து ஊர்கள் உள.

தமிழில் ஊர்ப் பெயர்களின் ஈறாக வரும் வயல், வெளி, புலம், கமம் முதலியன விவசாயத்துடன் தொடர்புடையனவாகக் கணப்படுகின்றன. தமிழகத்து ஊர்ப்பெயர்களின் முழுப் பட்டியலையும் ஈண்டு ஒப்பு நோக்குதல் அவசியமாகின்றது.3 வயல் என்பதை மட்டக்களப்புத் தமிழில் “வட்டை” என்றே வழங்குவர். வுயற் பெயர்களைக் கூறும் போது கோமாரி வட்டை, கரைவாகு வட்டை, சரளம்பை வட்டை என்றே வழங்குவர். வுயற் பெயர்களைக் கூறும் போது கோமாரி வட்டை, கரைவாகு வட்டை, சரளம்பை வட்டை என்றே வழங்குவர். வட்டை , வெட்டை எனத் திரிந்து ஒலிப்பதுமுண்டு. வட்டை என்பதை ஆங்கிலத்தில் ஏயவவயi என்றெழுதினர். இதனைச் சிங்களத்தில் “வத்தை” என உச்சரித்தனர். சிங்களத்தில் வத்தைக்குத் தோட்டம் என்பது பொருள். ஏனவே, தமிழிலுள்ள “வத்தை” என்ற ஈற்று ஊர்ப் பெயர்கள் “பண்டு வட்டை” என்ற ஈற்றுப் பெயராகவே அமைந்திருந்து, அவை பின்பு “வத்தை:” என மாறிற்று எனக் கூறினன் பொருந்துமோ என்பதை அறிஞர்கள் விடுவாம்.

1) யுள வழ Niஉhநாலைய ஏயவவநi வாந உழஅஅழn Pசழழெரnஉயைவழைn.
ஐ டிநடநைஎந ளை றiவா வாந யககiஒ “ ஏநனனயi” யனெ ழெவ “ஏயவவநi” (புயெnயிசயமயளயச: 1917: 47).
2) தமிழகத்து ஊர்ப்பெயர்ப்பட்டியல் முழுவதுங் கிடைக்குமாயின் இதனுடன் ஒப்பிட்டு ஆராயும்போது பயனள்ள கருத்துக்கள் வெளிவரலாம்.
மேலும் “வட்டை” என்பது வயலை மட்டுமன்றி, குடியிருப்புக்களையும், மட்டக்களப்பு மாநிலத்தில் சுட்டி நிற்கின்றது.

வட்டம் , வத்தை.
பண்டை நிலையில் மக்கட் குடியிருப்பு வட்டதாக அமைந்திருந்தது. குடிசைகளும் வட்டமாகவே காணப்பட்டன. அவர்கள் வாழ்ந்த இடமும் வட்டம் எனப்பட்டது. காலப் போக்கில் வட்டம் , வத்தை என மாற்றம் பெற்றிருக்கலாம். இக்கருத்தைச் சான்றுபடுத்தும் வகையிலான சுவாமி ஞானப்பிரகாசம் கூற்று பொருத்தம் நோக்கி ஈண்டுத் தரப்படுகிறது.

“ நம் இலங்கையில் இருந்த பழந்தமிழர்களே சிங்களத்தை ஆக்கிக்கொண்டு
களத்தை ஆக்கிக் கொண்டு தாங்களும் சிங்களர் ஆனார்கள். முந்திய தமிழ்ப்ச் சிங்களவர் வைத்த ஊர்ப்பெயர், காணிப் பெயர்களையே நாம் இன்றைக்கும் வழங்கிக் கொண்டு அவற்றைச் சிங்களப் பெயர்கள் என்கிறோம். ஓரு உதாரணம் மாத்திரம் எத்தனையோ காணிப்பெயர்களின் ஈற்றில் “வத்தை” என வருகிறதன்றோ? வத்தை எனும் சொலர், இன்றைக்கும் தஞ்சாவூர் முதலிய சில இடங்களில் வழங்குகின்ற வட்டம் என்பதே. வட்டம் ஸ்ரீ தோட்டம். இக்காலத்து வளவு (வளைவு, அடைப்பு) அன்பதும் வட்டமும் பெயரளவில் ஒன்றுதான். வத்தையின் வேலியை சிங்களர் “வய்ற்ற” என்றார்கள். வட்டம் , வட்ட, வய்ற்ற , வத்த, வத்தை எனச் சொல் திரிந்து வந்ததைக் காண்க. இவ்வாறே பழந்தமிழ்ப் வட்டம் தமிழ்ப் சிங்களத்தில் வத்தையாகி வந்தது”.
(ஞானப்பிரகாசம்: 1973.34)

யாழ் மாவட்டத்தில் யானை இறவுக்கு வடபாலுள்ள இடங்களிலேயே வத்தை ஈற்றுப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றிற் கிராம Nசுவகர் பிரிவில் உப பகுதிகளாகக் குறிப்பிடப்பட்ட பெயர்கள் வருமாறு:

கலியாவத்தை (வலி.மே.ப.31.1)
கொற்றாவத்தை (வடம.தெ.மே.127.2)
சித்தவத்தை (வலி.தெ.ப.32.7)
நலியாவத்தை (வலி.மே.ப.31.3)
பத்தாவத்தை (வலி.வ.63.2)
மாவத்தை (வலி.வ.65.6)
வட்டாவத்தை (வடம வ.கி.140.6)
வட்டுவத்தை (வடம.வ.கி.140.6)
வட்டுவத்தை (வடம.தெ.மே.ப.33.4)
வாதரவத்தை1 (வலி.கி.78.2)


“வெட்டி” ஈற்றுப்பெயர்கள்
தென்னிந்தியச் சாசனங்களில் “வெட்டிக்குடி” பற்றிய செய்திகள் வருகின்றன. கோயிலுக்கு நெய் கொடுக்கும் நிலந்தக்காரர் என அவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.2 மேலும் “வெட்டி” என்பது கோயில் வரிகளில் ஒன்றாகவும் காணப்படுகிறது.டீ “முகவெட்டி” என்ற பெயரில் சோழப் பெருமன்னர் கால அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். புதுக்கோட்டை இரகுநாதராயத் தொண்டைமானின் ஆறு மனைவிமாரில் ஒருத்தி “காடுவெட்டியாரின் மகள் வீரத்தாயி” என்பவளாவள்.4 இங்கு வரும் “காடுவெட்டி” என்ற தொடரும் ஒப்பிட்டு ஆராயப்படவேண்டியதாகும். புல்லவ அரசர் பட்டப் பெயராகவும் இது இருந்தமை குறிப்பிடத்தக்கது (த.லெ.சப்ளிமென்ட்).

1) புத்தூர் கிழக்குப் பகுதியில் வாதரவத்தை அமைந்துள்ளது. வாதுரு – காற்று: வாதுமை ஒருவகை மரம்: பண்டை நாளில் (வாமை) வாதுர மரத்தினால் வள்ளம் (வத்தை) கட்டி, தொண்டைமானாற்றினூடாக உப்பேற்றிச் சென்றதாகவும் அதனாலேயே இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
2) ளு.ஐ.ஐ. ஏழட. ஏ. P. 151.
3) ளு.ஐ.ஐ. ஏழட.எடைட: P.217:
4) சுpரஞ்சீவி (பதிப்பு), புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு, சென்னை:- 1980, ப. 47.

கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் (கி.பி. 1249) இருந்த கோயிற் கணக்குகளை கவனிக்கும் தணிக்கை அதிகாரிகள் “உடையபெருமாள்” என்றும், “காடுவெட்டிகள்” என்றும் பெயர் பெற்றிருந்தனர். 1 இவர்களது ஈற்றுப் பெயராகவுள்ள “வெட்டி என்ற சொல் கரவெட்டி, அளவெட்டி என்ற ஊர்ப் பெயர்களுடன் காணப்படுவதும் சோழர்கால நிர்வாகத்தை நினைவூட்டுவதாகவும் அமைகின்றது.

ஆளவெட்டி (வலி.வ: 62.2)
குந்தரோடைக்கு வடக்கே அளவெட்டி அமைந்துள்ளது. அள + வெட்டி ஸ்ரீ அளவெட்டி. அள் ஸ்ரீ செறிவு, கூர்மை. அள் , அள்ளல் ஸ்ரீசேற்றின் குழம்பு. அளறுஸ்ரீ நீர், சேறு, மணலச் சாந்து 2: அளறு + வெளி , அளவெட்டி. வெடி , வெளி3. வெடி, வெட்டி. வெடி என்பதிலுள்ள ஈற்று மெய் இரட்டித்து வெட்டியாயிற்று. 4அளவெட்டி வழுக்கை யாற்றைச் சார்ந்து பசுமையான ஈரலிப்புப் பிரதேசமாகக் காணப்படுவதால், இது அளறு + வெடி அல்லது அளறு + வெளியாக இருந்து அளவெட்டியாயிற்று என்க.

இதன் குறிச்சிப் பெயர்களாகக் கிணற்றை அடியாகக் கொண்டு உடையா கிணற்றடி, தென்னா கிணற்றடி, பெரிய கிணற்றடி என்பனவும், தொழிலடிப்படையில் கொல்லர் தோட்டம், தச்சம் புரம், வண்ணாவளவு, தட்டாகடவை, அம்பட்டா வத்தை என்பனவும் அமைந்துள்ளன. மேலும் மாவிளிதிட்டி, இராசமுதலியார் வளவு, விஷபிட்டி, தம்மளை.

1) நா. வெங்கடேசன், வரலாறு;றில் வில்லியனூர், சென்னை. 19179.
2) பாட்டுந் தொகையும். 1956, ப. 34: சூடாமணி நிகண்டு – ப.165.
3) சொற்பொருள் விளக்கம் என்னும் அகராதி, 1960.ப. 283.
4) வேளிநாடு என அழைக்கப்பட்ட பகுதியின் அரசன் வெளி அரசன் , வெடி அரசன் எனப் பெயர் பெற்றிருத்தலும் ஈண்டு நோக்கற்பாலது.
சீனன் கலட்டி, சாத்தா கலட்டி, கூத்தஞ் சீமா, வாரி சீமா, (சீமா ஸ்ரீ எல்லை: சீமா ஸ்ரீ சீர்மையான நிலம்) அதிரன் புலம், மாபுரம். இறால்மடம், தில்லையிட்டி, மார்ட்டி, தேரிட்டி என்பனவும் காணப்படுகின்றன. மரப்பெயரடியாக முல்லைக்கட்டை, நாவல்கட்டை, வெள்ளியம்பத்தை (வெள்ளி ஸ்ரீ விளாமரம்), சந்திப்புமால் என்பனவும் குறிச்சிப் பெயர்களாகக் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் காலத்தில் பகலில் ஊhகாவல் செய்யும் படையினர் இரவில் சந்தித்த இடமே சந்திப்புமால் ஆகும்.

இயல் 4
குடியிருப்பு நிலைப் பெயர்கள்
இடப்பெயர்களிலே மக்கட் குடியிருப்புகளையும், அவர்கள் நடமாடும் பகுதிகளையும் சுட்டும் பெயர்கள் தனித்துவம் வாய்ந்தவை. மக்கள் குடிமனை அமைத்து வாழ்ந்து வரும் பகுதிகள் மொழி, பண்பாட்டு விடயங்களே அகத்தே கொண்ட பழமை மிக்க பெயர்களைப் பெற்றுள்ளன. இப்பெயர்கள் அவர்தம் பண்டைச் சிறப்பை, வரலாறு;றை நிகழ்வுகளை, சமய நடவடிக்கைகளை எடுத்தியம்புவனவாகும். யாழ் மாவட்டத்தில் அமைந்த இத்தகு பெயர்க் கூறுகளை வருமாறு வரிசைப்படுத்தலாம்.

அகம் குடியிருப்பு பண்ணை புலம்
ஆலை குறிச்சி பள்ளி பை
இட்டி கடல் பளை மடம்
ஊர் சேரி பாய் வாய்

தேன்னிந்தியாவிலே தமிழர் வாழும் குடியிருப்புப்பகுதிகளிலேயுள்ள இடப்பெயர் ஈறுகளுக்கும் இங்குள்ள இடப்பெயர் ஈறுகளுக்குமிடையே சில ஒற்றுமைகள் காணப்படினும், வேறுபட்ட னனை;மைகள் இருப்பதையும் இப்பெயர்கள் சுட்டுகின்றன. இது இரு இடத்து மக்களது மொழி, சூழல், அவதானிப்பு, கலாசாரப்போக்கு ஆகியவற்றின் தனித்துவத்தைச் சுட்டுவதாக அமைகின்றது. இவ்வகையிலான ஒப்பீட்டு ஆய்வு இத்துறையில் மேற்கொள்ளப்படுதலும் அவசியமாகின்றது.

“அகம்” ஈற்றுப்பெயர்கள்
அகம் பழந்தமிழ்ச் சொல்லாகும். அகம் ஸ்ரீ இடம், வீடு, உள்ளிடம், மனம், மார்பு, மலை, ஆசௌசம், பாவம், மாசு, தானியம், நான், பூமி, விலாசம், ஆகாயம், ஆழம், ஒருவகை மரம், பாம்பு, ஏழாம் வேற்றுமை உருபு (தமிழகராதி : பக்.2) இத்தகு பொருள் கொண்ட “அகம்” என்ற சொல், இடப்பெயர் ஈறாகத் தமிழகத்தில் (ஏடகம், கல்லகம், கையகம், திருஏரகம், மருதகம்) மட்டுமன்றி யாழ் மாவட்டத்தி;லும் (கரம்பகம், கல்லாகம், சுன்னாகம், பண்ணாகம், மல்லாகம்) காணப்படுகின்றது. இச்சொல் முதலில் வீட்டுக்கு அமைந்து, அப்பால் வீடுகளையுடைய ஊரைக் குறித்ததுபோலும் என்கிறார் ரா.பி.சேதுப்பிள்ளை (1979:57). இவ்வாறு அறிவு பூர்வமான விளக்கங்களைக் கொண்டமைந்த “அகம்” ஈற்று இடப்பெயர்கள் யாவும் சிங்களப் பெயர்களின் திரிபு எனக் குமாரசுவாமி (1918:27@ 1928:158), ஹோர்ஸ்பரோ (1916:58) முதலியோர் எழுதலாயினர். அன்னார் கருத்து இவ்விடப் பெயர்களின் சொற்பிறப்பியல் அடிப்படையிலும், சொற்பொருளடிப்படையிலும் பொருந்துவதன்று.

மல்லாகம் (வலி.வ.61.4)
இது யாழ்;ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ளது. மல்லர் + அகம் ஸ்ரீ மல்லரகம் , மல்லாகம். முல்லர்கள் குடியிருந்த இடம் என்பது இதன் பொருள். மல்லர் + கமம் ஸ்ரீ மல்லாகம் எனக் கொள்ளின் மல்லர் கமம் செய்த இடம் எனப் பொருள் தொனிக்கும். மல்லாகம் தோட்டக் காணிகள் செறிந்த செம்பாட்டு நிலப் பகுதியாகும். இங்கு ஆங்கிலேயர் காலம் முதலாக மாவட்ட நீதி மன்றம் இன்று இயங்கி வருகிறது. இங்குள்ள சோழியங்கட்டை என்ற குறிச்சிப் பெயர் சோழர் காலத் தொடர்பைக் காட்டுகின்றது.

“ஆலை” ஈற்றுப் பெயர்கள்
ஆலை ஸ்ரீ நீர் இறைக்கும் பொறி. நீர் வழிந்தோடும் சிறு வாய்க்கால், மழைநீர் வழிந்தோடும் பள்ளமான நிலம், ஆலயம் என்ற பொருள் நிலையில் இடப்பெயர் ஈறாக அமைந்த 13 இடங்கள் யாழ்ப்பாணக மாவட்டத்திலுள்ளன. இம்மாவட்டத்திற்கு வெளியே பேசாலை. வுங்காலை, கேகாலை, தங்காலை என்ற இடங்களுமுள. “ஆலை” ஈற்று இடப்பெயர்கள் பற்றி எழுதிய சுவாமி ஞானப்பிரகாசரும் (1917:168). குமாரசுவாமியும் (1918:52) இவ்விடப் பெயர்கள் யாவும் சிங்களச் சொல் என்றனர், ஆனால் ஜே.பி. லெவிஸ் (து.P.டுநறளை 1917:170) இவை தமிழ்ப்ப் பெயர்கள் என்பதில் ஐயமில்லை என்றெழுதினார்.

ஆலை ஸ்ரீ ஆலமரம் எனவும் பொருள் கொள்ளலாம். ஆலம் என்பது தமிழில் விசாலம், அகலம், ஆலமரம் ( டீயலெயnஇ குiஉரளடிநபெயடநnளை) எனவும் பொருள் தரும். கன்னடத்திலும் “ஆலெ” என்பது ஆலமரத்தைச் சுட்டி வழங்குகிறது. மலையாளத்திலும் “ஆலம்” என்பது இதன் பொருளில் வழங்குகிற. கன்னடம், குடகு, கொண்டி மொழிகளில் வரும் “ஆலெ”, “ஆல்”, “ஆலீ” என்பனவற்றை உற்று நோக்கினால் தமிழ்த் தொடர்ச் சொற்களில் வரும் “ஆலை” இதையே குறிக்குமெனக் கொள்ளப் போதிய இடமுண்டு. 1 துன்னாலை, ஏழாலை முதலிய இடங்களில் ஆலமரம் முன்னர் செறிந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இக்கருத்தைச் சான்றுபடுத்தும் வகையில் தாவீது அடிகள் வருமாறு கூறினார்.
“இவ்வூர்ப் பெயர்களை மாந்தர் எங்ஙனம் உச்சரிக்கின்றனர் எனக்
கவனியுமின்@ புன்னாலெ, சரசாலெ, வங்காலெ என்றல்லவா உச்சரிக்
கின்றனர். இந்த “ஆலெ” என்பதற்கும் ஆலமரத்தைக் குறிக்கும்.

1) தாவீது அடிகள், “ஊரும் பெயரும்”, சில்லாலை சமூகசேவா (வெளியூர்) சங்க வெள்ளிவிழா மலர், கொழும்பு. 1971,56.

கன்னட “ஆலெ” என்பதற்கும் எவ்வித வேறுபாடுமின்றி@ ஆனதினாலே தமிழிலும் இச்சொல் இக்கருத்தில் மாந்தரின்; சாமான்ய வழக்கில் வழங்கப்பட்டதெனக் கொள்வதே சால்புடைத்தெனக் கொள்மி;ன்”.1

மேற்காட்டிய சான்றுகளால் சுவாமி ஞானப்பிரகாசர், குமாரசுவாமி முதலியோர் கூறியவாறு இது சிங்களச் சொல் அல்ல என்பதும், இஃது திராவிடச் சொல் என்பதும் நிறுவப்படுகின்றன.

துளு நாட்டிலும் “ஆல” என்ற ஈற்றுப் பெயர்கள் வழக்கிலுள்ளன. இதுபற்றி ஆராய்ந்த இரகுபதி கெம்துர் என்பவர் “ஆல” என்ற துளுநாட்டு இடப்பெயர் ஈறு தண்ணீர் என்ற பொருளடிப்படையில் பெயர்த் தோற்றம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். 2 கர்நாடக மாவட்டத்து “ஆல” ஈற்றுப் பெயருக்குத் (hயடய , ஏயடய ஸ்ரீ யடய) தரிசுநிலம் (குயடடழற டுயனெ) என்ற பொருளுங் கூறப்பட்டுள்ளது.3

ஆலை என்பதற்குப் பொறிகள் பொருத்தப்பட்ட சாலை என்றபொருள் நிலையில் இவ்விடப்பெயர்கள் தோற்றம் பெற்றுள்ளனவா என ஆராய்தல் பொருத்தமானதாகும். இவ்வகையில் மரவேலை செய்யப்பட்ட இடம் அரியாலை எனவும், பொன்னகை செய்யப்பட்ட இடங்கள் பொன்னாலை, பொன்னாலைக்கட்டுவன், பன்னாலை எனவும், துன்னர் ஆலை

1) மேலது பக்.57.
2) “யுடய”இ வுhளை அரளவ ழெவ டிந வயமநn யள ய அழளவ உழஅஅழn hலனசழலெஅ i.ந: ய1 (றயவநசஇ சiஎநச நவஉ) pசநஎயடைiபெ in யடட வாந அயin னுசயஎனையைn டயபெரயபநள …” (சுயபாரியவi முநஅவரச: “யு கநற iவெநசநளவiபெ pடயஉந – யெஅநள ழக வுரடர யேனர”, ளுவரனநைள in ஐனெயைn Pடயஉந யேஅநள-1இ ஆலளழசநஇ 1980.p.50.
3) டீ.டீ. சுயதயிரசழாவை: “ சுநசபழையெட குநயவரசநள in யேஅiபெ Pடயஉந- யேஅநள in முயசயெவயமய”. ளுவரனநைள in ஐனெயைn Pடயஉந யேஅநள – 1இ1980: p.65.

குள் இருந்த இடம் அல்லது நுண்ணிய தொழில் மேற் கொள்ளப்பட்ட இடம் துன்னாலை அல்லது நுண்ணாலை என்றும், தனிநபருக்குரிய ஆலைகள் ஆட்பெயர் பெற்றுச் சரசாலை, தம்பாலை எனவும், ஆலைகளின் இயல்பு நோக்கி இளவாலை, ஏழாலை, சில்லாலை எனவும் பெயர் பெற்றன எனப் பொதுப்படக்கூறலாம். ஆயினும் இப்பெயர்கள் பற்றித் தனித்தனியாக ஆராயும்போது வௌ;வேறு பொருள் மூலங்களும் காரணங்களும் இவற்றுக்கு அடிப்படையாக அமையும் தன்மையும் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன.

இளவாலை (வலி.தெ.மே.53.1)
இப்பெயர்க்காரணி முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. இவ்வூர் வளம்மிக்க இடமாகவும் வாழைத் தோட்டங்களுள்ள பகுதியாகவும் அமைந்துள்ள. வாழை இனங்களில் “இலைவாழை” என்ற ஓரினமுண்டு. இந்த இடத்தில் “இலைவாழை” நன்கு செழித்தோங்கியமையாற் பொருளாகு பெயராய் “இலைவாழை” என்ற பெயர் இவ்விடத்திற்கு ஏற்பட்டு, காலப்போக்கில் இலைவாழை , இளவாலை என ளகர , ழகர , லகர மாற்றங்களுக்குட்பட்டு இன்று இளவாலை எனப் பெயர் வழங்குகின்றது.

இளவாலை வடக்கு (சித்திரமேழி) – பன்னாலை வீதியில் ஆனைவிழுந்தான் என்ற இடமும், ஆங்கொரு பிள்ளையார் கோயிலும் உள்ளன. இவை கீரிமலை, சேந்தான் குளம் கிராமங்களை அயலாகக் கொண்டன. இப்பிரதேசங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பற்றியும் மாருதப் பிரவீகவல்லி கதை பற்றியும் பெரிதும் பேசப்படுவதால் சோழ அரசியான மாருதப்பிரவீகவல்லியின் யானை விழுந்து இறந்த இடமே ஆணைவிழுந்தான் என்ற இடம் எனக் கருதப்படுகிறது. “அன்னம்மாள்” ( ளுவ. யுnநெ’ள ஊhரசஉh) புனித தேவாலயம் பழம் பெருமையுடன் இங்கு விளங்குகின்றது. வணக்கத்திற்குரிய எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் இவ்வூரிற் கடமையாற்றும்போது இலங்கையின் முதல் தமிழ்ப் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இயவாலையில்1 மெய்கண்டான் மகா வித்தியாலயம், என்றியரசர் கல்லூரி, திருக்குடும்பக் கன்னியர் மடம் முதலிய பாடசாலைகள் அமைந்துள்ளன.

பன்னாலை (வலி.வ.64.4)
இது தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்த ஓரிடமாகும். புன்னல் + ஆலை ஸ்ரீ பன்னாலை ஆயிற்று. பன்னல் ஸ்ரீ பருத்திச்செடி, பருத்திப்பஞ்சு, நெருக்கம், கொல்லுதல், பஞ்செஃகுதல் (தமிழகராதி:211). ஏனவே இங்கு பஞ்செஃகும் (பஞ்சு பறித்தல்) ஆலைகள் இருந்தபடியாற் காரணப்பெயராகப் பன்னாலை என்ற பெயர் தோன்றுவதாயிற்று.

சொற்பிறப்பியல் அடிப்படையில் இதற்கு வேறுவிளக்கம் கொடுக்கக்கூடியதாயுள்ளது. பண்ணாலை என்பதே பன்னாலை என வழங்கிற்றெனலாம். இதன் அயற் கிராமம் அம்பளை, அம்பணை ஈ அம்பண்;ணை. புண்ணை ஸ்ரீ என்பது மருதநிலம். நீர்நிலை, தோட்டம் முதலியவற்றைச் சுட்டுஞ் சொல். ஏனவே (பண்ணை + ஆல் + ஐ ஸ்ரீ) பன்னாலை என்பது வயல் அல்லது தோட்டத்திற்குப் பக்கமாய் அமைந்த குடியிருப்பிடத்தைச் சுட்டும் பெயராகும். பண்ணாலை , பன்னாலை ஆயிற்று, இங்கு சேர் கனகசபை வித்தியாலயம் உள்ளது.

“இட்டி’, “சிட்டி” ஈற்றுப் பெயர்கள்:
யாழ் மாவட்டத்தின் சில இடப்பெயர்கள் “இட்டி”, “சிட்டி” என்ற விகுதி பெற்றமைந்துள்ளன. இடு , இட்டி ஆயிற்று. இடு ஸ்ரீ தங்குதல்@ இட்டி தங்கி வாழும் ஸ்ரீ இடம் என்ற பொருளில் வந்தது.

1) ஏழூர் , என்பதே இளவாலை என மருவிற்று என்ற சந்தேகமும் தோன்றியுள்ளது. இளவாலையூர் இராஜரெத்தினம் னனை;னை “ஏழுர் இராசரெத்தினம்” (மெய்கண்டான் மகா வித்தியாலய தாபகர்) என அழைத்தமை சிந்திக்கத் தக்கது.

“மயிலிட்டி, பேர்சிட்டி, குரும்பசிட்டி, தம்பசிட்டி, களைசிட்டி, விழிசிட்டி”.

மேற்காட்டிய பெயர்கள் மாற்றம் பெற்று அல்லது உருத்திருந்து சிங்களத்திலிருந்து தமிழுக்கு வந்னனை என்கிறார் குமாரசுவாமி (1918 : 158) ஆனால் “இடு” (தங்கியிரு) என்ற வினையடித்திரிபின் பி;ன்னொட்டுத் தமிழ்ப் பெயர்களை இவை என்பதில் ஐயமில்லை.

குரம்பசிட்டி (வலி. வ. 70.2)
குறும்பர் + இட்டி ஸ்ரீ குறும்பரிட்டி , குரம்பரிட்டி , குரம்பசிட்டி என மருவிவந்துள்ளது. குறும்பர்கள் வந்து பாளையம் அமைத்து வாழ்ந்த இடம் என்பது இதன் பொருள். தோம்புகளிலும் பழைய உறுதிகளிலும் குரும்ப சிட்டி என்றே வழங்குகின்றது. சான்றாக எஸ்.ஆர்.முத்துக்குமாரு என்பவரின் காணி உறுதியை நோக்கியபோது (எஸ்.ஆர்.இல.எச். 114ஃ170:15-02-1927) அக்காணிப்பெயரும் குரும்பசிட்டி என்றே குறிக்கப்பட்டுள்ளது. குரும்பசிட்டி என்ற ஒரு குறிப்பிட்ட காணிப் பெயரே காலப்போக்கில் ஊர்ப்பெயராகவும் வழங்குவதாயிற்று என்ற கருத்துமுண்டு தமிழகத்தில் செட்நாட்டில் 13-5-1909 இல் சோழவந்தானூர் மகாவித்துவான் அரசன் சண்முகனார் தலைமையில் ஒரு சன்மார்க்க சபை ஆரம்பிக்கப்பட்டது. அதேபோன்று குரும்பசிட்டியிலும் சன்மார்க்க சபை 1934இல் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கே பொன். பரமானந்தா மகா வித்தியாலயம் உண்டு.

ஐதயிட்டி (வலி. 72.4)
இது காங்கேசன்துறைப் பகுதியில் மயிலிட்டிக் கிராம சேவகர் பிரிவிலிடம்பெறும் ஓரிடம். இதனைத் தையிட்டியூர் என்றும் கூறுவர். தையிட்டி, போயிட்டி, மயிலிட்டி ஆகிய இம்மூன்று பெயரும் ஒரே னனை;மைத்தனவாக இருப்பதோடு மட்டுமன்றி. ஓரே பகுதியில், ஒரே எல்லைக் கோட்டிடங்களிலும் அமைந்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர்களை முறையே தை + ஈட்டி, போர் + ஈட்டி, மயில் + ஈட்டி எனப் பிரித்துப் பொருள் கூறுவாருமுளர். பண்டைநாளில் பல்வேறு வகைத்தான ஈட்டி ஆயுதங்களைத் தடுத்த காவற்படையினர் தங்கியிருந்த இடங்களே இவ்வாறு மருவிற்று என்பர். அவ்வகையில் தைக்கும் + ஈட்டி , தையீட்டி , தையிட்டி ஆயிற்று என்க. இதுபற்றி யாழ்ப்பாண வைபவ கௌமுதி வருமாறு விளக்கம் கூறுகின்றது.

“மிகுபண்டைக் காலந் தொடங்கி இவ்விடம் எழுந்தருளியிருக்கும் கணேஜ தெய்வத்திற்கு விழாக் கொண்டாடி வந்தமை பற்றி தெய்வ + இட்டி + ஊர் , தையி;டடியூரென மருவி வழற்கப்பெற்று வருகின்றது. அன்றியும் சிங்களப் பெயர்கள் யாழ்ப்பாணத்திற் சிலவிடயங்களுக்கு அமையப் பெற்றிருக்கிறமையால், இப்பெயரும் அப்படி யாருமோவென்று சொல்லினும் தெய்யோ + ஹிற்றிய , தையிட்டி எனக் “கணேஜ“ தெய்வமிருக்குமிடமெனப் பொருள்படத் தமிழில் மருவி வழங்கிற்றெனக் கொள்ளினுமமையும்” (க. வேலுப்பிள்ளை ஸ்ரீ 1918:205) இத்தகு பொருந்தா விளக்கங்களும் வலிந்து கூறப்பட்டமையும் நோக்கற்பாலது.

போயிட்டி: (வலி. தெ.டே.53.6)
இது பெரியவிளான் கிராமசேவகர் பிரிவிலுள்ள ஓரிடமாகும். போர் + ஈட்டி ஸ்ரீ போரீட்டி , போயிட்டி என்ற நிலையில் இப்பெயர் ஏற்பட்டதெனக் கருதப்படுகிறது. கீரிமலை – மாவிட்டபுரம் வீதியில் சீமெந்துத் தொழிற்சாலையின் மேற்பாலிலும் இப்பெயருள்ள குறிச்சிகளுள்ளன.

மயிலிட்டி : (வலி.வ.23.6)
காங்கேசன்துறைக்குக் கிழக்கே கடற்கரை ஓரமாக மயிலிட்டிக் கிராமம் அமைந்துள்ளது. இவ்விடப்பெயரை மயில் + ஈட்டி எனப் பிரித்துப் பொருள் கூறுவாருமுளர். மயில் வடிவான சின்னம் பொறிக்கப்பட்ட ஈட்டிப்படையினர் தங்கியிருந்த இடம், பின்னாளில் மயிலிட்டி எனப் பெயர்பெற்றதென்பர். ஆனால் மயிலாப்பூர் (மயிலை) வாசிகள் வந்து தங்கியிருந்த இடம் (இடு , இட்டி) என்ற பொருளில் மயிலை + இட்டி , மயிலிட்டி ஆயிற்று எனக் கொள்வதே பொருந்தும்.

தண்டிகைக் கனகராயன் பள்ளிலே.
“மயிலையம் புயம்பொருந்து வயலுந் தண்பணைக் காமர்
மயிலையம்பதி வாழக் கூவாய் குயிலே” (65)

என இக்கிராமம் “மயிலையம்பதி” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் மயிலாப்பூரிலிருந்து (மயிலை) வரவழைக்கப்பட்ட அரசிறை உத்தியோகத்தர் நரசிங்கதேவர் தங்கியிருந்த இடம் (மயிலை + இட்டி) மயிலிட்டி என வழங்கிற்று என்கிறார் வ. குமாரசுவாமி (1932.26)

இங்கு பழமை வாய்ந்த கண்ணகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்தவிடம் “தேவியாகொல்லை” எனப்படும். கோயிலின் முன் அமைந்துள்ள குளம் “தேவகுளம்” என்று ஒல்லாந்தரின் தோம்புகளிற் குறிப்பிடப்பட்டிருப்பினும் இங்குள்ளோர் இதனைத் “தொண்டைமான் குளம்” என்றே வழங்குகின்றனது. 1 தொண்டை நாட்டிலிருந்து குடிபெயர்ந்தோர் மயிலிட்டியிற் குடியேறினர் என்கிறார் இராசநாயகம் (1926:239-248).

ஒல்லாந்தர் காலத்தில் மயிலிட்டியிற் பெரிய தேவாலயம் இருந்தமை பற்றிய செய்திகள் பால்தேயஸ் (Phடைடipரள டீயடனரைள 1672) குறிப்புக்களில் அறியப்படுகின்றன. அத்தேவாலயம் அழிந்து மண்மேடாகக் காணப்படுகின்றது. அதன் அருகே புதிய தேவாலயம் இப்போது அமைந்

1) திருமதி இ. துர்மராசன் “வடமயிலைக் கலைமகள் வரலாற்றுப் பின்னணி” “பாரதி” சிறப்பு மலர், மயிலிட்டி வடக்கு கலைமகள் மகாவித்தியாலயம், காங்கேசன்துறை. 1983.32

துள்ளது. ஒல்லாந்தர் காலம் முதல் நிலவிய பாடசாலை மரபு இங்குள்ளது. கலைமகள் வித்தியாலயம் இங்கே அமைந்துள்ளது. மயிலிட்டியில் வீரமாணிக்க தேவன்துறை பெரிய நாட்டுத் தேவன்துறை, நரசிங்க தேவன்துறை முதலிய இடப்பெயர்களுமுள்ளன.

முயிலிட்டியார்களர் குலதெய்வம் பூதராயர் என்பர். இப்பெயரி;;ன் உற்பத்தியை ஆராயுமிடத்து, இது “போத்தரையர்” என்பதன் திரிபாகக் காணப்படுகிறது. போர்த்தரை என்பது பல்லவ மன்னரின் பரிபாலன் நாமம் இந்தியாவில் பல்லவரின் கீழ் இராசகாரியஞ் செய்தவர்” களி;;ன் சந்ததியார் அவ்வரசரைத் தெய்வமாக்கிக் கோயில் அமைத்து வணங்குவராயினர் என்னும் கொள்கை வழுவாகாது.

மயிலிட்டியில் “பள்ளந்தரை” என்று ஓர் இடம் உண்டு இது பழைய உறுதிகள், தோம்புப் பதிவு, காணிப் பதிவுப் புத்தகங்களிற் “பள்ளற்திரை” எனக் காணப்படுகிறது. இது பல்லவ திரையர் ஒருவர்க்கு உரிய உறைவிடம் ஆயினமையின் “பல்லந்திரை” என்றழைக்கப்பட்டு, இது “பள்ளந்திரை” ஆகிப் பின் “பள்ளந்தரை” ஆக மாறினமை அறியக்கிடக்கின்றது. (குமாரசுவாமி:1932:39).

இப்பள்ளந்தரையில் முன்னாளில் உயர்குடி மண்டலாதிபதிகள், பிரபுக்கள் முதலியோர் வாழ்ந்தனர் என்றும், அவர்கள் மரபினோர் இருபாலை, கோப்பாய், தெல்லிப்பளை, மாவிட்டபுரம், கந்தரோடை, இளவாலைப் பகுதிகளிற் சிறந்து விளங்கினர் என்றும் மேலும் அடுயப்படுகிறது. மயிலிட்டியின் வடபாலுள்ள சங்குவத்தை, மயிலியோடை, தோரணப்புலம் முதலிய குறிச்சிப் பெயர்களும் இவ்வகையில் ஆராயப்படவேண்டியனவாகும்.

வுpழிசிட்டி: (வலி.வ.68.4)
இது தெல்லிப்பழை தென்மேற்கில் அமைந்துள்ளது. விழி + சிட்டி ஈ விழி + தீட்டி. இப்பெயர் முன்பு விழி தீட்டி என இருந்து, மருவி விழிசிட்டி ஆக மாறிற்று என்பர். இது தொடர்பாக நாட்டார் கதை ஒன்றும் வழங்குகின்றது. முன்னொரு காலத்தில் இவ்விடத்தில் வாழ்ந்த ஒரு மூதாட்டி ஒருவர்க்கு கண்பார்வை குறைந்து போயிற்று. அவர் சில காலமாக வைரவப் பெருமானை மெய்யன்போடு வணங்கி வந்தார். வைரவர் திருவருளால் அவருக்கு கண்பார்வை மீண்டும் கிடைப்பதாயிற்று. அதனால் அவர் வழிபட்ட அருள்மிகு வைரவப் பெருமானுக்கு “விழிதீட்டி ஞானவைரவர்” என்ற பெயரும் சூட்டப்பட்டது. காலகதியில் கோயிலைச் சூழ்ந்து ஊர்ப் பகுதி முழுவதும் விழிதீட்டி என வழங்கப்படலாயிற்று.

விழிசிட்டி ஞானவைரவசுவாமி பேரில் எழுந்த ஊஞ்சற் பாவில் விழிதீட்டி என்றே குறிக்கப்படுகின்றமை காண்க.

“:வையமகிழ் விழிதீட்டிப் பதியில் வாழும்
வளர்ஞான வயிரவரே ஆடீர் ஊஞ்சல்”.
(தகவல் விழிசிட்டி க. உமாமகேஸ்வரன்)

“கூடல்” ஈற்றுப் பெயர்கள்
கூடல் என்பது மதுரை மாநகரைக் குறித்து வருவது எனச் சங்க இலக்கியங்களாலும், பாண்டியச் செப்பேடுகளாலும், வேள்விக்குடிச் சாசனங்களாலும் அறியப்பகின்றது. இறையனார் அகப்பொருளுரையிற் பாண்டியன் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த செய்தி விரிவாகக் கூறப்படுகின்றது. சங்கம் ஸ்ரீ கூடல், கூடல் பழந்தமிழ்ப்ச் சொல்லாம். மேலும் இரு நதிகள் சேருமிடம் கூடல் என்றும் மூன்று நதிகள் சேருமிடம் முக்கூடல் எனன்றும் பெயர் பெறும் (சேதுப்பிள்ளை : 1976:43)

மயிலன் கூடல்: (வலி.வ. 643)
இது தெல்லிப்பளை தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு மூன்றரை மைல் தொலைவில் மாரீசன் கூடல் என்ற இடம் காணப்படுகின்றது, இராமாயணத்தில் இடம்பெறும் மயிலாக்கன் கதை, மாரீசன் கதை இரண்டையும் இவ்விடப் பெயர்களுடன் தொடர்புபடுத்திக் கூறும் நாட்டார் வழக்குக் கதைகளும் இங்கு காணப்படுகின்றன. மயில் + தங்கு + கூடல் ஸ்ரீ மயிலன் கூடல் எனப்புணர்ந்தது என்றும் கூறுவர். மாவிட்டபுரத்துக் கோயில் மயில்கள் தங்குமிடம் என்றும். பண்டைய நாளில் காடுகள் செறிந்து காணப்பட்ட நிலையில் மயிற் கூட்டங்கள் இங்கு காணப்பட்டதாகவும் கதைகள் வழங்குகின்றன. (தகவல் மயிலன் கூடலூர் ப. நடராசன்)

மார்சன்கூடல் (வலி.தெ.மே.133:3)
இது மாதகலுக்கு அண்மையில் இளவாலைப் பகுதியில் அமைந்துள்ளது. மாரீசன் + கூடல் என்ற நிலையில் இராமாயணக் கதாபாத்திரத் தொடர்பு காட்டப்படுகிறது. மா ஸ்ரீ காடு, காவல் தெய்வம், மழைத் தெய்வம். மாரியம்மன் கோயிலுள்ள இடம் மாரீசம் எனப்படும். இங்கு பனங்கூடல் செறிந்து காணப்படுகின்றது. தோட்டப் பயிர்ச் செய்கை நடைபெறுகிறது. இங்குள்ள கந்தசுவாமி கோயில் மிகப் பழையதும் பிரபல்யம் பெற்றமாகும். குhவடியாட்டம் இங்கு சிறப்பாக இடம்பெற்று வருகிறது. பழைய குடியேற்றம் இங்கே இடம்பெற்று பின் இங்கிருந்து ஏனைய இடங்களுக்குக் குடிகள் பரந்தன எனவும் கருதப்படுகிறது. மாதகல், சேந்தான்குளம் என்பன இதன் அயற் கிராமங்கள். இங்கு போர்த்துக்கேயர் காலத்துக் “கைத்தார் கோயில்” ஒன்றுமுள்ளது. இத்தேவாலயத்தில் திருவிழாக் காலத்தில் “பாஸ் நாடகம்”, பொம்மைக் கூத்துக்கள் என்பன பரம்பரை பரம்பரையாக நிகழ்த்தப்பட்டு வந்தள்ளன.

“பண்ணை” ஈற்றுப் பெயர்கள்
பனை , பண்ணை. புண்ணை ஸ்ரீ வயல், (எழினலம் பயக்கும் மன்றலம் பணைசூழ் மருத வேலி …….” பண்டார மும்மணிக்கோவை: 29:24-455). பணை – பெருமை, மரக்கொம்பு, மூங்கில், மருத நிலம், வயல், நீர்நிலை, குதிரை, யானைகள் தங்குமிடம், விலங்கு துயிலிடம், முரசு (த.லெ.4:8 460), பண்ணை , பணை ஈற்றுப்பெயராக ஓரிடமே இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அம்பணை: (வலி.வ.65.1)
அம்பண்ணை என்பதே இடைக்குறையாய் அம்பணையாயிற்று. இது அளவெட்டியின் வடபாலமைந்த வயற் பிரதேசம். படப்பை நிலம் பண்படுத்தப்பட்டபோது பண்ணையெனப் பெயர்பெற்றது. அம்ஸ்ரீஅழகு. புண்படுத்தியதால் அப்பண்ண நிலம் அழகு பொருந்தப் பெற்று அம்பணை என வழங்குவதாயிற்று. அம்பணைக் கல்வி வலயத்தின் தலைமைப் பாடசாலை மகாஜனக் கல்லூரி ஆகும்.

“பனை” ஈற்றுப் பெயர்கள்
பனை ஸ்ரீ குடியிருப்பு, மக்கள் வாழும் பகுதி, மாவட்டம் மாகாணம் (னுயஎடனைர: 1972:53). புள்ளி, பளை இரண்டும் ஒரு பொருட்களவிகள். புள்ளி ஸ்ரீ நகரம், இடம், இடைச்சேரி, சிற்றூர், நித்திலை, தேவர் கோயில், மக்கட் படுக்கை, முனிவர்வாசம், விலங்கின் படுக்கையிடம், வீடு, சாலை (தமிழகராதி யக் 210). யுhழ்மாவட்டத்தில் இவ்வீறுகள் கொண்டவையாக தெல்லிப்பளை, பளை, புலொப்பளை, வரத்துப்பளை, விடத்தற்பளை ஆகிய இடங்கள் அமைந்துள்ளன.

இவ்விடம் பெயர்கள் பற்றி எழுதிய குமாரசுவாமி (1918 : 46) “பொல ஸ்ரீ பூமி எனப்பொருள்படும். சிங்களச் சொல்லை எம்மவர் “பளை” எனச் சிதைத்தே வழங்குவர்” எனத் துணிந்து எழுதியுள்ளார். சுவாமி ஞானப்பிரகாசம் (1917 : 167) ஹோர்ஸ்பரோ (1917 : 172) முதலியோரும் “பளை” என்பதைச் சிங்களம் என்றே எழுதினர் சபாரத்தின முதலியார் (1917 : 170) பாழி என்ற சொல்லை பளையுடன் தொடர்புபடுத்தி இரண்டும் தூய தமிழ்ப்ச் சொல் என்று நிறுவியது பொருத்தமானதே.

புள் + ஐ ஸ்ரீ பளை@ பள் + இ ஸ்ரீ பள்ளி. இவை இரண்டும் ஒரே தமிழ் அடிச்சொல்லினின்றும் பிறந்தவை. சங்க இலக்கியத்தில் அகத்தியன்பள்ளி, காட்டுப்பள்ளி, நனிப்பள்ளி முதலாம் தமிழ்ப்பெயர்களிடம் பெற்றுள்ளன. தென்னிந்தியாவிற் “பாளையம்” என்று ஈறுபெற்று இடப்பெயர்கள் பரவலாகக் காணப்படுகின்றன. பள்ளம் என்ற ஈறுபெற்ற பெயர்கள் இரு நாடுகளிலும் வழக்கிலுள்ளன. அதுவும் “பள்” என்ற அடிச் சொல்லினின்றே தோன்றியதாகும். வுற்றாப்பளை, பட்டிப்பளை முதலாகப் பளை ஈற்றுப் பெயர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன.

தெல்லிப்பளை (வலி.வ.65.9)
தெல்லி + பளை ஸ்ரீ தெல்லிப்பளை. இனனை; அயறட கிராமத்திற் பளை எனப்பெரிய இடம் உண்டு. எனவே இரண்டு இடங்களையும் வேறுபடுத்தும் பொருட்டு அடைமொழி பெற்றது. தெல்லி எடின்ற தலைவனொருவனின் ஆணைக்குட்பட்ட பளை ஸ்ரீ தெல்லிப்பளை ஆயிற்று. தெல்லிப்பளையிலே தெல்லிவளவு, தெல்லியம்பற்றை என்ற பெயருடைய காணிகளுமுள. இப்பெயர் டில்லி (னுiடாi) என்ற நகரிலிருந்து மருவியிருக்க முடியுமா எனச் சந்தேகம் கொள்கிறார் ஜே.பி.லெவிஸ் (1917 : 171). ஆனால் அத்தகைய சந்தேகத்திற்கு ஆதாரமெதுவுங் காணப்படவில்லை.

“நம்பொத்த” என்ற சிங்கள நூலில் தெல்லிப்பளை. “தெலிப்பொல” வெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலிபொல – என்பதிலுள்ள “தெலி” என்பதற்குச் சிங்களத்திற் பொருளில்லை. பொல என்பதும் தமிழ்ப்ப்புலம் என்பதன் சிதைவெனக் கொள்ளலாம். (புலம் , பொல)

இப்பெயரைச் சிலர் தெல்லிப்பளை, தெல்லிப்பள்ளி, தல்லிப்பள்ளி என்றும் குறிப்பிட்டு அவற்றிற்குக் கதையும் புனைந்தனர். மாவிட்டபுரத்தின் அயற்கிராமமே தெல்லிப்பளை, மாருதப்பிரவீகவல்லி தனது குதிரை முகம் நீங்கி, இளமையும் வனப்பும் பொருந்தப்பெற்று இவ்விடத்திலே தங்கியிருந்தாள் என்றும், அதன் காரணமாகவே இவ்வூருக்குத் தல்லிப்பளை எனப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். தல்லி ஸ்ரீ தாய். துல்லி வடுகநாட்டு வழக்கு (உவின்ஸ்லோ அகராதி -). இப்பகுதியின் இரு இடங்கள் “பளை” எனப்படுவதால் இதனைத் தாய்ப்பளை (பெரிய பளை) எனக் குறிப்பதற்காகத் தல்லிப்பளை , “தெல்லிப்பளை” என்றனர் எனவும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

தெல்லிப்பளைக் கிராமத்திற் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பேதுருப்புலவர், கிளாலி கத்தோலிக்கத் தேவாலயத்தின் மீது பாடிய “சந்தியோகுமையோர் அம்மாளை” (கி.பி. 1947) என்ற நூலிலே தெல்லிப்பளை பற்றி மேல் வருமாறு குறிப்பிடுகின்றார்.

“இலங்காபுரியிருக்கும் யாழ்;ப்பாண ராச்சியத்தில்
துலங்கு மென்னால் பதிக்கும் துங்கமுடிமேலுயந்த
வல்லிக்கிராமத்தில் வளர்ந்த திருநகராம்
தெல்லிக்கிராமமெனும் சீர் சிறந்தபேரூரில் …………

13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவை சின்ன குட்டிப்புலவர், பாடிய “தண்டிகைக் கனகராயன்” பள்ளில், “தெல்லிப்பழை” என்றே இப்பகுதி குறிப்பிடப்படுகின்றது. சைமன் காசிச்செட்டி (1834 : 211) தில்லிப்பள்ளி என்று குறிப்பிட்டுள்ளார். இப்பழம்பதியினைத் தெல்லியம்பதி, தெல்லிநகர் என்றும் வழங்குவர்.அ.சதாசிவம் பிள்ளை தமது பாவலர் சரித்திர தீபகத்திலே. இவ்வூரிலே பிறந்து திருச்செல்வர் காவியம் இயற்றிய அருளப்ப நாவலரைத் “தெல்லிநகர் அருளப்பர்” என்றே குறிப்பிட்டார். தெல்லிப்பளையிலுள்ள சோடங்கள் பெரியாவுடை, வேள்வை, சாத்தனாவத்தை முதலிய குறிச்சிப் பெயர்கள் வரலாறு;றுப் பழமையைத் தொடுத்து நிற்கின்றன.

பண்டை நாளிலே தொண்டை மண்டலத்துக் காரைக் காட்டு வேளாளர் பலர் இங்கு வந்து குடியேறி வாழ்ந்துள்ளனர் என அறியப்படுகிறது.

பளை : (வலி.வ.6 ப. 174.5)
இப்பெயர் கொண்டதாக மாவிட்டபுரத்திலும் தென்மராட்சிப் பகுதியிலும் இரு இடங்கள் அமைந்துள்ளன. தென்மராட்சியிலுள்ள பளை பண்டைய வரலாறு;றுத் தளமாகக் கருதப்படுகிறது. மாவிட்டபுரப் பகுதியிலுள்ள பனை என்ற கிராமமும் பழமை மிக்கதாகும். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் கட்டங்கள் அமைந்த ஒரு பகுதி “மாவிட்டபுரம் இறை” என்றும் மற்றுமொரு பகுதி “பளை இறை” என்றும் உறுதிகளிற் காணப்படுகின்றன. காங்கேசன் துறைமுகத்திலிருந்து 400 யார் தூரத்திலுள்ள காணிகள் “பழை இறை” என வழங்குகின்றன. இக்கிராமத்தின் வடபகுதியில் நெய்தலும், கிழக்கில் மருதமும் பொருந்தியுள்ளன. மேற்கு எல்லையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும்: கிழக்கெல்லையில் ஞானவைரவர் கோயிலும் அமைந்துள்ளன. இக்கிராமத்திலேயே காங்கேசன் சீமெந்துத் தொழிற்சாலையும் இயற்குகின்றது.

பண்டிதர் மகாலிங்கசிவம், நவகீதக் கிருஷ்ணபாரதியார் என்போராலும் இக்கிராமத்தின் புகழ் மேலோங்கிற்று.

“புலம்” ஈற்றுப் பெயர்கள்.
புல் + அம் ஸ்ரீ புலம்: பொலமி ஸ்ரீ (கொலமி), பொல ஸ்ரீ (கன்னடம்) (தாவீது 1970:69)

“தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்னனை பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”.

(தொல் - பொருள் - 641) என்ற சூத்திரமும் ஈண்டு நோக்கற்பாலது. புல் + இலை + வைப்பு ஸ்ரீ புல்லிலை வைப்பு ஸ்ரீ குடிபோய்ப் பாழ்ந்த ஊர்கள்@ இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர். அகநாறூற்றில் புலம் ஸ்ரீ என்பது நிலம் என்ற பொருளிர் 29 முறை வந்துள்ளது. புலம் என்பதற்கு வயல், இடம், திக்கு, மேட்டு நிலம் என்ற பொருள்களுமுள (த.லெ.5:2784). புலம்பு ஸ்ரீ நெய்தல் நிலம்@ புலம்பன் - நெய்தல் நிலத்தலைவன் (அகம்:10:4)

புலம் ஸ்ரீ முல்லை நிலத்தைக் குறித்தது. புல் , புலம்; ஈ புலம்பு ஸ்ரீ நெய்தல் நிலத்தைச் சுட்டிற்று. புலம்பு ஸ்ரீ தனிமை என்ற பொருளில் (அகம், தொல்) நூற்சான்று காட்டி பெயராக ஸ்ரீ தனிமை, வினைவாக ஸ்ரீ தனிமையுறு காட்டி. பெயராக ஸ்ரீ தனிமை, வினையாக ஸ்ரீ தனிமையுறு என்று பொருள் தந்தார் தாவீது (1970:70) காலப்போக்கில் புலம்பு ஸ்ரீ வருந்து, வருத்தம் என்ற பொருளும் சேர்ந்தது. அனநாநூற்றிலே நிலத்தைச் சுட்டும் புலம் என்பதிலிருந்தே புல்லி – (ஊடல்) என்ற பதமும் வந்தது. புல் + அர் ஸ்ரீ புலர் ஸ்ரீ விடியல் (மனம்) விரிதல் @ புலரி ஸ்ரீ விடியல் (தாவீது 1970 : 72) விடியற் காலத்தில் உழவன் செல்லிடம் புலம் ஆதலால் அது காரணப் பெயராகவும் அமையலாம். மேலும் “வெள்ளம் உவரோடு உவரிக் கடற்புலவு மாற்றும் …” (முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்ப் - செய் 3) என்ற பாடல் வரியாலும் )புலவு , புலம்) உவர் நிலம் சார்ந்த நிலப் பகுதி என்ற பொருளுந் தொனிந்தது. மேலும் முல்லை நிலம் இருவகைப்படுமெனவும், அவை முறையே மரம் நிறைநிலம், புல்நிறை நிலம் எனப்பமுமெனவும், முன்னது புறவு எனவும் பின்னது புதவு எனவும் படும். இப்புதவே புலம் எனப்பட்டதாகும் என்ற விளக்கங்களும் நோக்கப்பாலன (நா. சிவபாதசுந்தரனார் புறப்பொருள் வெண்பா மாலை ஆராய்ச்சி – 1972: பக்.147 – 50).

தையிட்டிபுலம் (வலி. வ. 64.5)
இது தையிட்டிக் கிராமத்தின் ஒரு பகுதியாகும். இது காங்கேசன்துறைப் பகுதியில் மயிலிட்டிக் கிராம சேவகர் பிரிவில் இடம் பெறுகின்றது. இதனைத் தையிட்டி ஊர் என்றும் கூறுவர்.1 தையிட்டிப்புலம் என்ற ஒரு குறிச்சி விழிசிட்டி, கொல்லற்கலட்டிக் கிராமங்களின் எல்லைகளிலும் அமைந்துள்ளது.

“பை” ஈற்றுப் பெயர்கள்
பை ஸ்ரீ கொள்கலம். ஐப என்பதற்கு ஆங்கிலத்தில்” Pழஉமநவ என்பது பொருள். Pழஉமநவ ஸ்ரீ சிற்றிடத்தையும் குறிக்கும். “பை” ஈற்றுப்பெயர்கள் பொதுவாகக் கொள்ளிடம் என்ற பொருளிலேயே வந்துள்ளன.

குமாரசுவாமி (1918 : 158) சிங்கள “ Pந” “பே” ஈற்று இடப்பெயர்கள் “Pயல” ஸ்ரீ பாய் என மருவி, அது பின்னர் பை எனத் திரிந்தது எனக் கூறி, மாதம்பை ஈ ஆயனயஅpநஇ மயிலப்பை ஈ ஆயலடைடயிநஇ பலுப்பை ஈ Pயடரிந, அற்பை ஈ ர்யடிந என்னும் உதாரணங்களையும் காட்டியுள்ளார். சுவாமி ஞானப்பிரகாசரும் (1917 : 168) இதே கருத்துடையவராவர். இப்பெயர்கள் சிங்கள இடப்பெயர்களின் ஈறான “பே” என்பதன் திரிபன்று@ தமிழ்ப் “பை” ஈற்றுப்பெயர் என்பதே பொருந்துவதாம்.

மயிலப்பை ழூவலி. வ. 68.1)
மாவிட்டபுரத்திலிருந்து கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே மயிலப்பை. தமிழகத்து மயிலாப்பூரின் சழதைவே மயிலப்பை எனவும் கருதப்படுகிறது. இங்கிருந்து பழைய கண்ணகி அம்மன் கோயில் ஒன்று, 1910 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. மீண்டும் கண்ணகிக்கு 1970 இல் புதிய சிலை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வூரினர் தாம் மயிலாப்பூர் வாசிகள் என்பர். அருகிலுள்ள மாவிட்டபுரத்தின் மயில்கள் வந்து தங்குமிடம் இதுவாதலால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். மயில் அப்பன் (மயில்) தங்குமிடம் மயிலப்பை என்றாயிற்று.

1) இந்நூலில் தையிட்டி - இடப் பெயர் விளக்கம் பார்க்க.

இயல் 5

ஊராட்சி நிலைப் பெயர்கள்

மக்கள் குறிப்பிட்ட பகுதிகளிலே குடியேறி நிலையான குடிகமனை அமைத்து வளமாக வாi;ந்து, தமக்கென ஆட்சி ஒழுங்குகளை மேற்கொண்டு வாழும்போது கிராமம் - நகரமாகி நகரிகங்களும் தோன்றுவதாயின. பண்பாட்டு வளர்ச்சிப் போக்கில் ஆட்சி குறைகளும் அரசுகளும் வளர்ச்சி பெறலாயின. பல்வேறுபட்ட பண்பாட்டு வளர்ச்சியினாற் குடியிருப்பிடங்களும் புதப்புதுப் பெயர்களைக் கொண்டனவாக அமையலாயின. ஆட்சியாளர்களின் கொண்டனவாக அமையலாயின. ஆட்சியாளர்களின் பெயர்கள், அதிகாரிகளின் குடியிருப்புஈ நிர்வாகக் கடமைகள், படைகளின் தரிப்பிடங்கள் என்ற அடிப்படையில் ஊராட்சி நிலை சுட்டும் இடப்பெயர்களும் தோற்றம் பெறலாயின. இவ்வகையில் யாழ். மாவட்டத்திலுள்ள ஊராட்சி நிலை சுட்டும் இடப்டிபயர்க் கூகளை வருமாறு வகைப்படுத்தலாம்.

ஆட்சி திசை பற்று
கடவை தகர் புரம்
கோட்டை நாடு வேலி
தரிப்பு

இவற்றுள் காங்கேசன் கல்வி வட்டாரத்திற் கடவை, புரம் ஆகிய ஈற்று இடப்பெயர்களே இ;டம் பெற்றுள்ளன.

"கடவை” ஈற்றுப் பெயர்கள்

கட , கடவு , கடவை ஸ்ரீ கடப்பு@ கட , கடத்தல். கடவை ஸ்ரீ கடந்து செல்லுமிடம். எந்த இடத்தைக் கடந்து சென்றார்களோ அந்த இடத்திற்குக் கடவை என்ற பெயர் ஏற்படுவதாயிற்று. வீதிகள் பொதுவாகப் பல்வேறு இடங்களையும் கடந்து செல்லுதல் இயல்பே. ஆயினும் குறிப்பிட்ட ஓர் இடத்தைக் கடக்கும் போது சில முக்கிய அம்சங்களாக வரி அறவிடம், கோயில் வழிபாடு, அச்சந்தீர்தல், ஆறதல் பெறுதல் முதலானவை நிகழும்போது அந்நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கடவை எனப்பெயர் அவ்விடத்திற்கு ஏற்படுதல் இயல்பாயிற்று, கடவை ஈற்றுப் பெயர்களட ஈழத்தின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. யாழ். மாவட்டத்தில் 11 இடங்கள் “கடவை” ஈற்றுப் பெயர் பெற்றுள்ளன. எனினும் காங்கேசன் பகுதியில் இரு இடங்களே இவ்வீறு பெற்று வழங்குகின்றன.

பெருமாள் கடவை (வலி. வ. 62.அ.9)
கந்தரோடைப் பகுதியில் அளவெட்டியில் பெருமாள் கடவையுள்ளது. பெருமாள் ஸ்ரீ விஷ்ணு. பண்டை நாளில் இங்கு பெருமாள் கோயில் இருந்திருக்க வேண்டும் வடக்கு நோக்கில் கந்தரோடைப் பெரும்வீதி இக்கோயில் இருந்த இடத்தைக் கடந்தபோது இவ்விடம் கோயிற் பெயராற் பெருமாள் கடவை எனப் பெயர் பெற்றது.

கந்தரோடையில் 1958இல் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிறக் கர்ணேலியன் முத்திரையிலே விஷ்ணுபூதிய (விஷ்ணுவினுடைய) என்ற வாசகம் காணப்படுகின்றது. ஆந்திர நபட்டிலுள்ள நாகார்ஜுனகொண்டாவிலே கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டளவிலே நிலவிய வளர்ச்சியுற்ற தென்பிராமி லிபியில் இம்முத்திரை எழுதப்பட்டுள்ளது. இந்த முத்திரையும் இங்கு பெருமாள் வழிபாடு இருந்தமைக்குச் சான்றாகின்றர். கந்தரோடை இராச்சியத்தின் வடக்குக் காவலுராகப் பெருமாள்கடவை இருந்திருக்கலாம்.

வேர்க்குத்திக் கடவை (வலி. தெ.மே. 53. 11)
.இக்கிராமம் தற்போது சென்ஜேம்ஸ் என வழங்குகிறது. சென்ஜோ தேவாலயத்தின் மகிமையால் இப்பெயர் ஏற்பட்டது. வேர் + குத்தி + கடவை ஸ்ரீ வேர்குடத்திக்கடவை. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இப்பெயர் தோன்றியிருக்கலாம். பிடவைகளுக்குச் சாயமூட்டுத் தொழிலை யாழ்ப்பாணத்தில் நடத்தியவர்கள் ஒல்லாந்தர். ஒருவகைச் சாயச்செடிகளை வளர்த்து அவற்றின் வேர்கள குத்திப் பிடுங்கிக் கொடுப்போர் “வேர்க்கொத்தியர்” எனப் படுவர். அந்த வேர்களைப் பெற்றுப் பயன்படுத்திச் சாயங் காய்ச்சுவோர் “சேணியர்” (சாயக்காரர்) எனப் பெயர் பெறுவர். வேர்குத்தியர் வேர்களைத் தேர்ந்து விடுங்கிக் கொடுப்பது அவர்கள் கடவை. எனவே தொழிரடிப்படையில் (வேர்க்கொத்தி) , வேர்குத்திக் கடவை என்ற பெயர் தோற்றம் பெற்றது தெளிவு. கல்வியில் சிறந்து விளங்கும் இக் கிராமத்தினர் பின்பு இதனை சென்ஜேம்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மரபுவழியாகச் சிலைகளுக்குச் சாயமூட்டுந் தொழில் நடைபெற்று வந்தது. அதற்குரிய மூலப்பொருளாகச் சாயவேர் பெறப்பட்டது. அம்மரங்கள் சில இடங்களிற் இயங்கையானவே வளர்ந்தன. அவற்றைப் பதப்படுத்துவோர் சாயக்காரர் எனப்பட்டனர். போத்துக்கேயர் காலத்திலும் சிஙப்பாக டச்சுக்காரர் காலத்திலும் மக்களுக்குப் பெரிதும் வருவயைத்

1. சி. பொன்னம்பலம், “கந்தரோடைத் தொல்பொருட்களும் யான் பெற்ற அனுபவங்களும்” பூர்வகலா, யாழ். தொல்பொருளியற் சஞ்சிகை, 1973:2.

தரும் தொழிலாக இது வளர்ந்திருந்தது. சாயமூட்டப்பட்ட பிடவைகள் டச்சுக்காரர் காலத்தில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

"புரம்” ஈற்றுப் பெயர்கள்
புரம் என்பதற்கு பின்வரும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. புரம் ஸ்ரீ ஊர், நகரம், இராசதானி, கோயில், மேன்மாடம், வீடு, சரீரம், தோல். (த.லெ.5: பக்.2. 70). புரம் என்பது ஊர் , பூர் , புரம் என மாற்றம் பெற்று வந்தது என்கிறார் தாவீது அடிகள் 1 ஆயினும் புரம் என்பது வடசொல் என்பதும் அது மிகப் பழங்காலம் முதலாகத் தமிழிற் கலந்துவிட்டது என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கனவே.

புரம் என்ற ஈற்றுப்பெயருடைய கிராமங்களும் நகரங்களும் தமிழகத்திலே தொன்மைக் காலம் முதலாக இருந்துள்ளன. இதுபற்றிய கரு. நாகராசனின் கருத்து (1985 : 95) ஈண்டு நோக்கத் தக்கது.

“புரம் என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லாக நெடுநாள வழக்கிலுள்ளது. அந்தப்புரம், சந்தைப்புரம் போன்ற வழக்குகளையும் காண முடிகிறது. கபாட புரத்தில் இரண்டாம் தமிழ்வ் சங்கம் இருந்ததாகவும், அது கடலுள் மறைந்து விட்டதாகவும் அறிஞர் கூறுவர். அவ்வூர்ப் பெயரை நோக்கினால் புரம் என்ற பொதுக்


1)” வுhந வுயஅiணா கழசவகைiஉயவழைn வழ வாந ளுயளெமசவைழை 'Pரசந' ழச கழசவ ளை தரளவ ய ளாழசவ ளநஅயவெiஉ ளவநி: ழெற றந மழெற வாந ழசபைin ழக வாந ளுயளெமசவை 'pரசய' ஈ- 'Pரச' (கழசவ)இ றாiஉh நுபெடiளா வசயளெகழசஅ iவெழ “Pழசந” யள ய ளுiபெயிரசந: ஊiஎடைணையவழைnஇ ளை யளளழஉயைவநன சiபாவடல றiவா உவைல டகைநச: யனெ நெயசடல யடட வாந றழசனள கழச உவைநைள யசந ளரஅநசழ – னுசயஎனையைn ழுசபைin (னுயஎiனைர – 1972: P 50)

கூறினர் தொன்மையும், அப்பெயரில் பல ஊர்கள் முன்னர் தமிழ் நாட்டில்
இருந்திருக்க வேண்டும் என்று உண்மையும் புலப்படும்”.

சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கும் என்றும், அது போன்றே 'புரம்” என்னும் சொல்லும் சிறந்த ஊhகளைக் குறிப்பிதாகும். என்னும் ரா.பி. சேதுப்பிள்ளை (1976: 46) குறிப்பிட்டுள்ளார். “புரம்” என்பதற்குச் சமனான “புரி” என்பதும் தமிழ் நாட்டில் அநேக இடங்களில் ஈறாகவும் அமைந்துள்ளது. இவ்வகையில் ஈழத்தில் இரத்தினபுரி என்ற பெயரைத் தவிர “புரி” ஈற்று இடப் பெயர்கள் வழக்குப் பெறாமை குறிப்பிடத்தக்கதாகும். புரம் - புரம் - நகரம் என்பன ஒரே பொருள் தரினும், நகரம் சற்று வேறுபட்டு வழங்குவதையும் கவனிக்கலாம். திவாகர நிகண்டிலே புரம் என்பதற்கு இராசதானி என்ற பொருள் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து இடப்பெயர்கள் “புரம்” என்ற ஈறு பெற்றமைந்துள்ளன. இப்பெயர்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

தெய்வஞ் சார்ந்தவை
உமையாள்புரம், உருத்திரபுரம், கணேசபுரம், கனகபுரம், கனகாம்பிகைபுரம், காஞ்சிபுரம், குமரபுரம், வல்லிபுரம்.

வரலாறு சார்ந்தவை கழிபுரம், தொல்புரம்.

தனிமனிதப் பெயர் பெற்றவை:
இராமநாதபுரம், ஸ்கந்தபுரம்.

நிகழ்வு குறிப்பன: தர்மபுரம், மாவிட்டபுரம், வசந்தபுரம்.

மேலே குறிப்பிட்ட இடங்களிற் “புரம்” என்பது நகர் என்ற பொருளில் எந்த இடப் பெயரிலாவது அமையவில்லை. மாவிட்டபுரம், வல்லிபுரம், சுழிபுரம் என்பன தவிர்ந்தவை யாவும் புதக் குடியிருப்பக்களைச் சுட்டும் புதப்பெயர்களாகவே உள்ளன.

சனத்தொகைப் பெருக்கம், சேரிஒழிப்பு, புதிய குடியேற்றத் திட்டங்கள், தனிநபர் சார்ந்த அரசியல் புகழாரம், சான்றோரைக் கௌரவித்தல் என்ற அடிப்படையிற் புதிய இடங்களுக்குப் பெயர்சூட்டும்போது “புரம்”, “நகர்” என்ங ஈற்றுப் பெயர்களை பெரிதும் கையாளப்படுகின்றன. எனவே “புரம்” என்ற ஈற்றுப்பெயர்களிற், பழமை சுட்டும் எண்ணிக்கையிலும் விட, புதமையைக் குறிப்பிடுவதே பெருந்தொகையின என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகத்துப் பெயர்கள் சான்று படுத்துகின்றன.

மாவிட்டபுரம் (வலி.வ.66.4)
காங்கேசன்துறைக்கு அண்மையிலுள்ள இடம் இதுவாகும். மா + விட்ட + புரம் ஸ்ரீ மாவிட்டபுரம் ஸ்ரீ குதிரைமுகம் விடுபட்ட நகர் என்பது இதன் பொருள். மாருதப்பிரவீகவல்லி என்னும் சோழ அரசகுமாரியின் கதையோடு இவ்விடப் பெயர் இணைந்து தோற்றம் பெற்றுள்ளது. இந்த அரசகுமாரியுடன் தொடர்புபடுத்தப்பட்ட கதை, மக்களின் மரபுக் கதையாக வழங்கி யாழ்ப்பாண வைபவமாலையிலும் (பக். 15 – 22) இடம்பெற்றுள்ளது. இவ்விடப்பெயரை விளங்கிக்கொள்ள இக்கதை அவசியமாதலின் அதன் சுரக்கம் ஈண்டுத் தரப்படுகிறது.

சோழமண்டலாதிபதியாகிய திசையுக்கிரசிங்க சோழனின் அரிய பத்திரியாகிய மாருதப்பிரவீகவல்லி யென்னும் கன்னி தனக்குற்ற குன்ம நோயால் மிகவருந்தி, வைத்தியரின் ஓளடதப் பிரயோகத்தில் ஆரொக்கியமடையாமை கண்டு கீரிமலைவ் வாரலில் ஓடம் நன்னீர் அருவிளிக் விசேடத்தைக் கேள்வியுற்றுத் தன்பாரிவாரத்துடன் ஆங்கு சென்று பாளைய மிட்டுப் பல நாட்களாய் வாசம்பண்ணி, அக்கீரமலையில் வசித்த நகுலமுனிவரின் ஆசி பெற்று, அவ்விட மகிமைகளைக் குறித்துக் கேள்விப்பட்டு அச்சிற்றாற்றில் ஸ்நானஞ் செய்து வந்தனள். சிலகாலத்தால் அவளுடைய குன்ம நோய் நீங்கிக் குதிரைமுகமும் மாறிற்று என்றும், அக்காரணத்தார் அவ்விடத்திற்கு மாவிட்டபுரம் எனப் பெயர் வந்த தென்றும் பழங்கதையாகச் சொல்லப்படுகின்றது

இவ்வரசி கட்டுவித்த கோயிலே மாவிட்டபுரத்துக் கந்தசுவாமி கோயிலாகும் என்பது அக்கோயிற் பட்டயம் கூறுஞ் செய்தி. மேலும் இவ்வரசி செவிலித்தாய், பணிப்பெண்கள், போர்வீரர் சகிதம் வந்து தங்கியிருந்த இடம் “குமாரத்திப் பள்ளம்” என இன்றும் இங்கே வழங்குகின்றது. “வல்லிக் கிணற்றடி” என்ற ஓரிடமும் இங்குண்டு. இது முன்பு “மாருதப்பிரவீகவல்லிக் கிணற்றடி” என ஆயிற்று என்பர்.

கி.பி. 9ஆம் நூற்றாண்டினன் எனக் கருதப்படும் உக்கிரசிங்கன் என்னும் ஈழத்தமிழ் மன்னன் மாவிட்டபுரத்தில் அழகிய தோற்றத்துடன் கூடியவளான மாருதப்பிரவீகவல்லியைக் கண்டு காதலுற்றுத் திருமணம் செய்து கொண்டான் என்பது மரபு. இந்த உக்கிரசிங்கனே தொண்டைமான் உப்பு வணிகம் செய்வதற்கு வாய்ப்பாக கால்வாய் வெட்டத் துணைநின்றவன் என யாழ்ப்பாண வைபவமாலை (பக். 21) செப்புகிறது. இவ்விடம் முன்பு “கோயிற்கடவை” என வழங்கிற்று. மாருதப்பிரவீகவல்லியே தனக்குக் குதிரை முகம் நீங்கிய இடம் என்ற காரணத்தால் :”கோயிற்கடவை” என்னும் இடத்திற்கு மாவிட்டபுரம் எனப் பெயர் சூட்டினாள் எனவும கூறப்படுகிறது. (யாழ்ப்பாண வைபவமாலை பக்.19)

மகாவிட்டன் என்ற பெயருடனும் இவ்விடப்பெயர் தொடர்புபடுத்தப்படுகிறது. மகாவிட்டன் என்ற தளபதி மாருதப்பிரவீகவல்லியோடு வந்து பின்னர் மாவிட்டபுரத்திலே வசித்தன் என்றும் கூறப்படுகிறது. (மகாவிட்டன்புரம் , மாவிட்டபுரம்). இப்பெயரை பரவை வழக்கிலுளள மாவிட்டபுரம் எனக்கூறி அது மஹாவிட்டப்புரம் என்ற சிங்களச் சொல்லின் திரிபென்பாரும் உளர் (குமாரசுவாமி 1918. 132)

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு மேற்கே சிறிது தூரத்தில் “வளவர்கோன் பள்ளம்” என்ற ஓரிடம் இருக்கிறது. பத்தாமத் நூற்றாண்டில் 4ஆம் மகிந்தன் அநுராதபுரத்திலிருந்து அரசாண்டிருக்கும்போது 2ஆம் பராந்தன சோழன் இலங்கைமீது படையெடுத்து வர யாழ்க்குடா நாட்டில் இரு படைகளும் மோதின. அப்போது சோழருடைய படைத் தளபதி இறந்தான். அவன் இறந்த இடமே “வளவர்கோன் பள்ளம்” எனப்படுகிறது. இவ்வாறாக மாவிட்டபுரத்துடன் சோழர் தொடர்பு கற்பிப்பதாகக் கதைகளும் செய்திகம் வழங்குகின்றன.

இவ்விடத்திற்கும் கர்நாடகத்துக்கும் தொடர்பு இநருத்தல் அறியப்படுகிறது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் “கண்ணடிய தெரு” என்னுமோரிடமுண்டு. கர்நாடக தேசத்தவர் இங்கு வந்து குடியேறியபடியால் எழுந்த பெயரே ஈற்றில் “கண்ணடியார் தெரு' என மருவி வழங்கலாயிற்று எனலாம்.

இங்கு சில காரணிப் பெயர்கள் “மத்தேசு பங்கு” “இயவாத்தை வளவு” என வழங்குகின்றன. இவை பிற்காலத்தில் இங்கு கத்தோலிக்க மதம் பரவியபோது அதன் செல்வாக்காலேற்பட்ட கத்தோலிக்கப் பெயர்களாகும்.

மாவிட்டபுரக் கந்தசுவாமி கோயிலின் தெற்குப் பக்கமாக தச்சு கடவை என்ற குறிச்சிப் பெயரும், மேற்குப் பக்கமாக “தச்சன் காடு” என்ற குறிச்சிப் பெயரும், குளாவத்தை (சோழர்வத்தை) என்ற குறிச்சியும் காணப்படுகின்றன. வீணியவரை என்ற குறிச்சிப் பெயரையுடயதாக ஓர் அம்மன் கோயிலுமுண்டு.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இக்கிராமம் “மாவல்லிபுரம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது. கி.பி. 1824 இல் ஆங்கிலேயர் நடாத்திய குடிசனத் தொகை மதிப்பீட்டின்படி மாவல்லிபுரத்தில் - 767 மக்கள் வாழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை காண்க.

வசந்தபுரம்: (வலி.வ.63:7)
இவ்விடம் கீரிமலைப் பகுதியில் அமைந்துள்ளது. மாருதப்பிரவீகவல்லி குதிரை முகம் நீங்கப்பெற்ற செய்தி மாவிட்டபுரம் இடப்பெயரில் விளக்கப்பட்டது. அச்சோழ அரசகுமாரி குன்மநோயகன்று புதப்பொலிவுடன் கீரிமலைப் பகுதியில் இறைவழிபாடியற்றி வாழ்ந்து வரும்போது உக்கிரசிங்கன் என்ற ஈழத் தமிழ் மன்னன் அவளைக் கண்டு காதலுற்றுத் திருமணஞ் செய்து வசந்த காலத்தை இன்பமாகக் களித்த இடம் என்ற நிலையில் இவ்விடத்திற்கு “வசந்தபுரம்” என்ற காரணப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என ஊகிக்கவேண்டியுள்ளது. இதுபற்றிய செய்திகள் யாழ்ப்பாண வைபவமாலையிலும் கூறப்படுகின்றன. (பக்.21.22).


இயல் 6

தாவரப் பெயர்கள் சுட்டிய இடங்கள்
இயற்கைநிலைப் பெயர்களே காலத்தால் முற்பட்ட இடப்பெயர்கள் என்பதும் அப்பெயர்களுள்ளும் பொதுக்கூறு, சிறப்புக்கூறு இணையாது ஒரே சொல்லாக அமைந்த பெயர்களே (1) முதலில் தோற்றம்பெற்றிருக்கவேண்டும் என்பதும் இடப்பெயர் ஆய்வாளர்களாற் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன (பகவதி: 1984:289). இப்பின்னணியில், பல்வகை இயற்கைப் பெயர்களிலும் தாவரப்பெயர் சுட்டும் இடப்பெயர்களே காலத்தால் முற்பட்டது என்பதைப் பேராசிரியர் ச.வே. சுப்பிரமணியம் (1984) நிறுவிள்ளார்.

பண்டைக்கால மக்கள் நிலத்தோற்றம், நீர்நிலைகள் என்பவற்றின் அடிப்படையில் இ;டப்பெயர்களைச் சுட்டிய நிலையினின்றும் வளர்ச்சியடைந்தபோது அச்சூழலில் நிலையாகக் காணப்பட்ட தாவரங்களையும் அடையாளமாகக் கொண்டு இடப்பெயர்களைக் குறிக்கும் மரபை ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வகையில் மரங்கள், செடி, கொடிகள், புல், பூண்டுகள் என்பனவற்றின் பெயர்களை இனங்கண்டு இடங்களைச் சுட்டப் பயன்படுத்தலாயினர். தாவரங்களின்

1)கிராஞ்சி, கிழாலி, குப்பிழான், கைதடி, சளம்பன், சண்டில், முள்ளி முதலான இடப்பெயர்களை இவ்வகையிற் குறிப்பிடலாம்.

தோற்றம், அவற்றின் பயன்பாடு, அவ வளருமிடம், அவற்றின் தொகுதி, அவற்றில் வாழும் பறவைகள், விலங்குகள் என்பன பெயரடைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

தாவரப் பெயர்கள் சுட்டும் இடப்பெயர்கள் அவை குறிப்பிட்ட இடங்களின் இயற்கை நிலை, பயிர்வளம், மக்கள் வாழ்க்கை நெறி என்பவற்றைப் புலப்படுத்துவனவாகவுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்திலே தாரவப் பெயர்களாக அமைந்த இடப்பெயர்களை மரம், செடி, கொடி, புல் என்பவற்றினடியாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

பனையுடன் தொடர்புடைய பெயர்கள்

கருகம்பானை: (வலி.வ. 64.1)
கீரிமலைக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் கருகம்பானை என்ற இடம் அமைந்துள்ளது. கருமை + அம் + பனை ஸ்ரீ கருமையம்பனை , கருகம்பனை , கருகம்பானை என இடப்பெயர் மருவி வந்துள்ளது. இவ்விடத்தில் சில பனைகளின் குரத்தும் ஓலைகளும் கருமை நிறமாக இருந்தபடியால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றமை இப்பெயர்த் தோற்றத்தின் தொடர்ச்சியைக் காட்டுகிறது.

இப்பெயரை கரு + கம்பு + ஆனை எனப் பிரித்து கம்புப் பயிர்ச் செய்கை இங்கு நிகழ்ந்தமை நோக்கி இப்பெயர் பெற்றது என்றும், ஆலை என்பதன் மருஉ “ஆனை” என்றும், அது இருப்பிடத்தைச் சுட்டும் விகுதி என்றும் விளக்கம் கூறுவாரும் உளர் (தகவல் புலவர் நா. சிவபாதசுந்தரனார்.)

முள்ளானை (வலி.தெ.மே.40.4)
முள் , முள்ளி + ஆனை ஸ்ரீ முள்ளானை. ஆனை விகுதிச் சொல், முள் , முளிதல் ஸ்ரீ காய்தல், உலர்தல், உலர்ந்த இடம். முட்களைக் காயவைத்து எரித்து நிலத்தை வளமாக்கிக் குடியிருப்பாக்கிய இடமே முள்ளானை எனப் பெயர் பெற்றது. இங்கே மச்சு வீதி அமைந்துள்ளது. டச்சுக்காரர் காலத்தில் இங்கு “மஞ்சள்” உற்பத்தி பெரிதும் இடம் பெற்றிருற்தது. சித்திரமேழி மக்களுக்கும் முள்ளானை மக்களுக்குமிடையே சமூக உறவுகள் காணப்படுகின்றன.

"விளான்” முதன்மைப் பெயர்கள்
விளர் ஸ்ரீ வெண்மை, இளமை, கொப்பு@ விளர்தல் ஸ்ரீ வெளுத்தல்@ விளவு ஸ்ரீ விளா மரம், நிலப்பிளப்பு (தமிழகராதி (281). விளா ஸ்ரீ ஒருவகைச் செடி. இது சிறு விளா பெரு விளா என இரு வகைப்படும்.

இப் பின்னணியில் விளா , விளான் என்ற சொல் முதன்மை பெற்றதாக சிறு விளான் (வலி.தெ.மே.53.8) பெரு விளான் (வலி. தெ.மே.53.5), வயாவிளான் ழூவலி.வ.71.5) என்ங மூன்று இடங்கள் உள்ளன. பெரியவிளானில் பழமை வாய்ந்த “வடசேரியம்பதி விக்கினேஸ்வரர்” கோயில் அமைந்துள்ளது. இதன் வெளி வீதி முக்கோண அமைப்பு உடையதாகும். அதனால் “முக்கோணப் பிள்ளையார்” என்ற பெயரும் வழங்குகின்றது. இப்பகுதியில் வாழ் விவசாயிகள் தமக்கு ஏற்படும் எலித் தொல்லைகளைப் போக்க நேர்த்தி வைத்து வழிபட்டுப் பலன் பெறுவது வழக்கம். அதனால் “எலிப்பிள்ளையார்” என்ற சிறப்புப் பெயரும் இக்கோயிற் பிள்ளையாருக்கு உரியதாயிற்று. இங்கு சென்ற் ஜுவானியர் கோயில், அந்தோனியார் கோயில் என்பனவும் உள்ளன.

பெரிய விளான் என்ற இடத்தின் அயலிலே சிறு விளான் என்ற இடம் உள்ளது. சிறு விளான், பெரிய விளான் ஆகிய பகுதிகளில் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலங்களில் மஞ்சள், இஞ்சிப பயிர்ச்செய்கை பெரிதும் இடம் பெற்றதாகக் கூறப்படுகின்றது. அதனால் “மஞ்சள் தோட்ட விளளான்” என்ற பழைய பெயரும் வழங்கி வருகின்றது. பெரிய விளானில் குறிச்சிப் பெயர்களாகக் கொட்டைக்களம், சோபனை, அம்பன், பிளாவை, வடசேரி என்பன வழக்கில் உள்ளன.

இயல் 7
சிறப்புநிலைப் பெயர்கள்

இதுவரை வகுத்துக்காட்டிய இடப்பெயர்கள் இயற்கை நிலை, செயற்கைநிலப் பெயர்க் கூறுகளின் அடியாகத் தோற்றம் பெற்றுள்ளமை அறியப்பட்டது. ஆயினும் இவ்வகையில் வகைப்படுத்தவியலாத சில சிறப்புநிலைப் பெயர்களும் காணப்படுகின்றன. அவற்றை சிறப்புப் பெயர்கள் சிறப்பு விகுதிப் பெயர்கள் என வகுத்து அவற்றுக்கு விளக்கங்கொடுக்கலாம்.

சித்திரமேழி (வலி.மே.30.அ.4)
இக்கிராமம் மாதகல் துறைக்குத் தென்கிழக்காகவும் சேந்தான்குளத்திற்கு மேற்காகவும் அமைந்துள்ளது. சித்திரமேழியிற் பசுமையான புற்றரைகளும், வயல் வெளிகளும் காணப்படுகின்றன. பசுமாடுகள் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. தயிர், நெய் முதலியவற்றை வீட்டுத் தொழிலாகச் செய்து விற்பனை செய்கிறார்கள். வலிகாமம் மேற்குப் பகுதியிற் பால், தயிர், நெய் என்பவற்றுக்குப் பெயர்பெற்ற இடமாக சித்திரமேழி விளங்குகிறது.

சித்திரம் + மேழி ஸ்ரீ அழகிய வேலைப்பாடுடைய கலப்பை என்ற பொருளில், சித்திரமேழி என்பது இருமடி ஆகு பெயராய் மக்களையும் இடத்தையும் சுட்டிற்று. டி.சி. ஸேர்கார் (னு.ஊ.ளுசைஉயச) என்பவர் சித்திரமேழி என்பது விவசாயக்குழு வேளாளர்களின் விவசாயக் கூட்டு நஜறுவனம், விவசாயக் குழவின் சின்னம், விவசாய நிலத்தின் எல்லைகளில் நாட்டப்படும் சின்னம் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் எனக் குறிப்பிட்டுள்ளார். (1)

தமிழகத்துச் சித்திரமேழி மக்கள் இங்குவந்து குடியேறியபோது தம் தாய்நாட்டுப் பெயரை இங்குஞ்'சூட்டலானார்கள் எனக் கொள்வதில் தவறில்லை. ஜடாவர்மன் ஸ்ரீபல்லவ பாண்டியனது ஆட்சியாண்டிற் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டின் சில வரிகள் வருமாறு:
“உத்தம நீதி உயர் பெருங் கீர்த்தி
முத்தமிழ் மாலை முழுமையும் நிறைந்த
சித்திரமேழிப் பெரிய நாடோமும்”
(ளு.ஐ.ஐ. ஏழட.ஓஏ (ஐஏ)

இதில் “சித்திரமேழிப் பெயரி நாட்டார்” என்ற தொடர் வரக் காணலாம். இச்சிரமேழிப் பெரிய நாட்டினரே இங்கும்p வந்து குடியேறியிருக்கலாம். இவர்களைப் பற்றி இரா. நாகசாமி (1973 : 166 – 169) வருமாறு கூறுகிறார்.

"சித்திரமேழிப் பெரிய நாட்டவர்” என்போர் உழவையே தங்கள் தொழிலாகக் கெண்டு தமிழகத்தில் வாழ்ந்த ஒரு குடிமக்களாவர். இவர்கள் பர ஆண்டுகளாகத் தமிழகத்தில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்திருக்கிறார்கள். கலப்பையையே தங்களது கொடிகளாகக் கொண்டிருந்தனர். இத்தகு செய்திகள் யாவும் சோழ காலத்துக் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன”.

1. “ஊhவசயஅநடi யடளழ ளிநடவ ளுவைவசயஅநடi யn ழசபயnளையவழைn ழக வாந யபசiஉரடவரசயடளைவள் யபசiஉரடவரசயட ஊழசிழசயவழைn ழக வாந ஏநடடயடயள் வாந pடழரபா றாiஉh றயள வாந நஅடிடநஅ ழக வாந ழசபயnளையவழைnஇ வாந டிழரனெயசல ளுவழநெ றiவா வாந சநிசநளநவெயவழைn ழக வாந pடழரபா நஅடிடநஅ Pடயவெநன வழ அயசம வாந டiஅவைள ழக வாநசை டயனெ”.
னு.ஊ. ளுசைஉயசஇ ஐனெயைn நுpபைசயிhiஉயட புடழளளயசல. னுநடாiஇ ஆழவடையட டீயயௌனையளஇ 1966:P75.


மேலும் பிரான்மலை என்ற இடத்திலுள்ள ஒருகல்வெட்டு சித்திரமேழியினரைப் பற்றிப் பலசெய்திகளைத் தருகின்றது. (நாகசாமி – 1973: 188 – 189)இ யாழ் மாவட்டத்திற் பிரான்பற்று, சித்திரமேழி என்ற இரு இடங்களும் ஒரே பகுதியில் அமைந்த அண்மைக் கிராதங்கள் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. எனவே சித்திரமேழிப் பெரிய நாட்டவரே இங்கு வந்து குடியேறினர் என்ற ஊகம் மேலும் வலுப்பெறுகிறது.

மாதகல் (வலி. வ. தெ. மே. 52.5)

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமேற்கு முனையில் அமைந்துள்ள கடற்கரையோரக் கிராமமே மாதகல், மாது + ஏகல் ஸ்ரீ மாதகல் எனப் புணர்ந்தது என்பர். இந்த மாது யார் என்பதில் பல்வேறு பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. தேவநம்பிய தீசன் காலத்தில் இலங்கைக்கு வெள்ளரசுக் கிளையுடன் வந்திறங்கிய சங்கமித்தை ஜம்புகோளத்தில் இறங்கினான் என்றும், அதுலே சம்பில்துறை என்ற இடம் என்பதும், மாதகல்துறை இதற்கு அண்மையில் அமைந்துள்ளது என்பதும் ஈண்டு நோக்கத்தக்கன. கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடயதாகவும் மாதகல் இடப்பெயர் விளக்கம் கூறப்படுகிறது. மேலும் மணிமேகலை, மாருதப்பிரவீகவல்லி என்போர் வந்திறங்கிய இடமாகவும் இது கருதப்படுகிறது. மாது + கல் ஸ்ரீ மாதகல். மாது ஸ்ரீ உமாதேவி@ கல் ஸ்ரீ உருவச்சிலை. உமாதேவியின் உருவச்சிலையை வைத்து வழிபட்ட இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டதென்பர்.

யாழ்ப்பாணத்து இறுதித் தமிழ் மன்னன் சங்கிலி இறந்த பின்பு அவனது மூத்த சகோதரன் பரநிருபசிங்கனும், அவன் மகன் பரராசசிங்கனும் பறங்கிக்காரருக்குச் சேவகம் செய்தனர். (யாழ்ப்பாண வைபவமாலை: 80) இந்தப் பரராசசிங்கனின் மகள் வதவல்லிக்கு வேளாள குலத்திலே திருமணம் செய்து மாதகலில் குடியமர்த்தப்பட்டமையும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.

சிறப்பு விகுதிப் பெயர்கள்
'அணை', 'அனை' விகுதிப் பெயர்கள்
அணை ஸ்ரீ சேர்தல், சேர்ந்த – பொருந்திய இடம் என்ற பொருளில் 'அணை' ஈற்று இடப்பெயர் அமைகிறது. 'அனை' ஈற்றுப்பெயர்களும் 'அணை' ஈறாக இருந்து பின்பு 'அனை' என மருவின என்றே கொள்ள வேண்டியுள்ளது.

இக்கீரனை: (வலி.வ.61.3)
இது மல்லாகம் பகுதியிலுள்ள ஓரிடம், இப்பெயர் விளக்கம் ஆராயப்படவேண்டியுள்ளது.

மாத்தனை (வலி. வ. 65.5)
இது தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ளது. மகர ஸ்தானம் என்ற பொருளில் இப்போது மகாத்தனை என எழுதி வருகின்றனர். 1 புலோலிப் பகுதியிலும இப்பெயர் கொண்ட ஓரிடமுள்ளமை நோக்கற்பாலது.

"ஆலி” விகுதிப் பெயர்கள்
ஆலி, ஆலி ஸ்ரீ (கன்னடம், மலயாளம்) மழைத்துளி. காற்று: ஆலி , ஆலித்தல் ஸ்ரீ ஒலித்தல் (த.லெ.1.247) ஆலி ஸ்ரீ ஒலித்தல் என்ற பொருள் நிலையிலேயே முதன்மை பெறுகின்றது. ஆலி ஈற்றுப்பெயர்களாக யாழ்மாவட்டத்தில் அராலி, கிளாலி, நவாலி, பலாலி என்ற இடங்கள் காணப்படுகின்றன. இவற்றில் காங்கேசன் கல்வி வட்டாரத்தில் பலாலி என்ற இடம் மட்டுமே அமைந்துள்ளது.

பலாலி (வலி. வ. 83 1. 5)
பல் + ஆலி , பலாலி. யாழ்பபாண மாவட்டத்தில் விமான நிலையம் இங்கு அமைந்துள்ளது. இதன் அயற் கிராமம் மயிலிட்டியாகும். மயில்கள் பலவாகக் கூடிநின்று ஆலிக்குமிடம் பலாலி என்பாருமுளர். பலாலி என்பது மயில்களுக்காகி பின் இடத்தைச் சுட்டியதால் இது இரு மடியாகுபெயராகும்.

1) தகவல்: த. சண்முகசுந்தரம் - தெல்லிப்பளை.

முடிவுரை
இந்நூலிற் காங்கேசன் கல்வி வட்டாரத்திலுள்ள இடப்பெயர்கள் - வரலாறு, மொழிமரபு, பண்பாடு, நாட்டார் வழக்கியல் என்பனவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளன. இவற்றை நீர், நிலம், நிலப்பயன்பாடு, குடியிருப்பு, ஊராட்சி, தாவரம், சிறப்புநிலை என வகுத்து, இடப்பெயர்க் கூறுகளோடு இணைத்து பெயராக்கம் பெற்றுள்ளமை விளக்க்பபட்டுள்ளது. ஒவ்வொர் ஊரிலும் வழங்கும் குறிச்சிப் பெயர்கள், அவை வழங்கும் இடங்களின் முழமையான தகவல்களை அறிந்துகொள்ளப் பெரிதும் துணையாக அமைவதால் இயன்றவரை குறிச்சிப் பெயர்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. இன்னும் சேகரிக்கப்படவேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிச்சிப் பெயர்கள் உள என்பதையும் குறிப்பிடுதல் சாலும்.

பண்டைக்காலம் முதலாக வழங்கிவந்த பழைய இடப்பெயர்களின் தோற்றக் காரணம், பெயர் விளக்கம் என்பன காலப்போக்கில் மறைந்துபோக, அவற்றுக்குப் பிற்காலத்தோர் புதிய காரணகாரியத் தொடர்பான விளக்கங்களும் கதைகளும் புனைந்துரைக்கலாயினர். இவை வரலாற்றாசிரியர்களுக்கும் பண்பாட்டாய்வாளர்களுக்கும் பல்வேறுபட்ட சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். ஈழத்திலே தமிழர் தாயகத்தில் சில சிங்கள இடப்பெயர்கம் சிங்களப் பிரதேசங்களில் தமிழ் இடப்பெயர்களும் காணப்படுகின்றன. எனவே இவற்றை முழமையாக அறிந்துகொள்வதற்குத் தொல்லியற் சான்றுகள், கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள், பிறநாட்டார் குறிப்புகள், நாட்டா வழக்கியற் சான்றுகள் யாவும் இடப்பெயர் ஆய்வாளரின் கவனத்திற்கு உரியனவாகின்றன.

மேலை நாடுகளில் இடப்பெயராய்வு மொழியியல் ஆய்வாளரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்துள்ளது. மொழியியல ஆய்வு ஈழத்து இடப்பெயர் ஆய்வில் மேற்கொள்ளப்பட வேண்டியதும் அவசியமாகின்றது. சொற்பிறப்பியல், மொழி மாற்றம், மொழிக் குடம்பம் முதலான அடிப்படைகளில் மொழிப் பிரச்சினைக்குரிய இடப்பெயர்களை அணுகும் போது அவை தூய தமிழ்ப் பெயர்கள் என்பது புலனாகின்றது.

இடப்பெயர் ஆய்வின் மூலம் தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே எத்தகு உறவுகள் பண்டைக் காலம் முதலாக இருந்து வந்தன என்பதும், தமிழகத்தின் எப்பாகத்திலுள்ள மக்கள் இங்கு வந்து குடியேறித், தம் நாட்டு இடப் பெயர்களைத் தாம் குடியேறிய இடங்களுக்கு இட்டு வழங்கினர் என்பதும் அறியப்படுகின்றன.

இப் பகுதியிலுள்ள சில இடப் பெயர்கள் பண்டைய போர்க் கருவிகளுடன் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. மாதகல், மாவிட்டபுரம் முதலான இடப்பெயர்கள் இந்நாட்டின் சமய வரலாந்றுச் செய்திகளைத் தருகின்றன. எனவே, இடப்பெயராய்வின் மூலம் வரலாறு, சமயம், மொழிமரபு பல்வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த விடயங்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.

இத்தகைய ஆய்வுகள் ஈழத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் ஈழத் தமிழ் மக்கள் தாயகம் பற்றிய முழமையான விளக்கம் வெளிவரும்.

ஆய்வு துணை நூல்கள்
1. தமிழ்

கணபதிப்பிள்ளை, க. ஈழத்து வாழ்வும் வளமும். சென்னை, பாரிநிலையம் 1962

குமாரசுவாமி, எஸ். டபிள்யூ. வடமாகாணத்துச் சில ஊhப் பெயர்கள் யாழ்ப்பாணம்.
1918. (யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்ற நூலின் பின்னிணைப்பாக இந்நூல் வெளிவந்தது).

குமாரசுவாமி வ. (பதிப்பு) தண்டிகைக் கனகராயன் பள்ளு, யாழ்ப்பாணம் 1932.

சண்முகசுந்தரம், த. நாட்டார் இலக்கியத்தில் மழை இரங்கிப் பாடல்கள்,
தெல்லிப்பளை. 1984

சிற்றம்பலம், சி.க. “ஈழமும் இந்துமதமும்” சிந்தனை
தொகுதி 2 இதழ் 1, 1984, பக். 108, 141

சேதுப்பிள்ளை ரா.பி. தமிழகம் ஊரம் பேரும், (5ம் பதிப்பு) சென்னை, பழனியப்பா
பிரதர்ஸ். 1976

ஞானப்பிரகாசர், சுவாமி. எஸ். யாழ்ப்பாண வைபவ விமர்சனம், அச்சுவேலி. 1928

தாவீது அடிகளட. ஹ.சி.. லீலா கதை அன்றேல் சொற்பிறப்பு ஒப்பியல் தமிழகராதி,
(முதற்பாகம்) யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் அச்சகம். 1970

நாகராசன், இரா. யாவரும் கேளிர். சென்னை, வாசகர் வட்டம். 1973

நாகராசன், கரு.. செங்கை மாவட்ட ஊhப் பெயர்கள், சென்னை உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம். 1985

நாச்சிமுத்து, கி.. தமிழ் இடப்பெயர் ஆய்வு, நாகர் கோவில் கோவிதம் பதிப்பகம்
1983

பகவதி. கே. இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள், தொகுதி 2, சென்னை. உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம் 1984

பாலசுந்தரம் இ. ஈழத்து நாட்டார் பாடல்கள் - ஆய்வும் மதிப்பீடும். சென்னை, தமிழ்ப்
பதிப்பகம். 1979.

வேலுப்பிள்ளை. க. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, யாழ்ப்பாணம் 1918


நுNபுடுஐளுர்
ஊயளநை ஊhநவவலஇ ளுiஅழn – வுhந ஊநலடழn புயணயவவநநசஇ ஊழடழஅடிழ – 1834

ஊழழஅயசயளறயஅல. ளு.று. - “Pடயஉந யெஅநள in துயககயெ நனெiபெ in pயல”
ஊ.யு.டு.சு. 2இ (3) – துயn. 1918: 157-162

னுயஎiனைர. சுநஎ. குச. ர்.ளு. - வுhந வாசநந in ழநெ யனெ நவiஅழடழபiஉயட யனெ உழஅpயசயவiஎந டநஒiஉழn. 2னெ எழட.
துயககயெ. யுளநநசஎயவாயஅ Pசநளள 1972.

புயெnயிசயபயளயச. சுநஎ. ளு. - “ஊநலடழn ழுசபைiயெடடல ய டயனெ ழக னுசயஎனையைn”.
வுயஅடை ஊரடவரசநஇ 1 (1). 1952: 25-27

ர்ழசளடிரசபாஇ டீ. - “ ளுinhயடநளந Pடயஉந யெஅநள in வாந துயககயெ Pநniளெரடய”
ஊ.யு.டு.சு.இ 2இ (1) துயn. 1916: 54-58: 2 (3) துயnஇ 1917: 172-174

டுநறளை. துழாn Pநnலெ - “ளுinhயடநளந Pடயஉந யேஅநள in வாந துயககயெ Pநniளெரடய”
ஊ.யு.டு.சு. 2. (3) துரடல 1917. 44-46இ 48.

-”Pடயஉந யேஅநள in ஏயnni” து சு யு ளு ஊ டீ 14இ (47). 1896: 203-222

சுயபாயஎயn. ஆ.னு. - வுயஅடை ஊரடவரசந in ஊநலடழn: ய புநநெசயட iவெசழனரஉவழைnஇ ஊழடழஅடிழஇ
முயடயnடையலயஅ (1971)

சுயபரியவாலஇ P. - “நுயசடல ளநவவடநஅநவெள in துயககயெ யனெ யுசஉhநயடழபiஉயட ளுநசஎநல”
(Ph.னு. வுhளளை)இ ருniஎநசஉவைல ழக துயககயெ. 1983.

ளுயடியசயவயெ ஆரனயடலையசஇ “ளுinhயடநளந Pடயஉந யேஅநள in வாந துயககயெ Pநniளெரடய”
ஊ யு டு சு 2இ (3) 1917.

ளுரடிசயஅயnயைஅஇ ளு.ஏ. - “வுhந Pடயஉந யேஅநள in நுயசடல வுயஅடை டுவைநசயவரசந” ஐனெயைn உழகெநசநnஉந ழக
வுயஅடை Pடயஉந யெஅநள ளுழஉநைவல ழக ஐனெயைஇ ஆலளழசந 1984.

இடப்பெயர் அட்டவணை

அம்பனை பன்னாலை
அளவெட்டி பெருமாள் கடவை
அழகொல்;லை போயிட்டி
இக்கீரானை மக்குவில்
இனவாலை மயிலப்பை
ஊரணி மயிலன்கூடல்
கட்டுவன் மயிலிட்டி
கருகம்பனை மயிலிட்டிக்கரை
கல்லாரை மல்லாகம்
காங்கேசன் துறை மாரீசன்கூடல்
கீரிமiலை மாத்தனை
குட்டியாபுலம் மாதகல்
கும்பளை மாவிட்டபுரம்
குரம்பசிட்டி முள்ளானை
குளமங்கால் திக்கரை
கெல்லாவில் தையிட்டி
கொல்லன் கலட்டி தையிட்டிப்புலம்
கோயிற் கடவை தெல்லிப்பளை
சம்பில் துறை வசந்தபுரம்
சித்திரமேழி வலிகாமம்
செட்டிச்சோலை விழிசிட்டி
சேந்தான்குளம் வீமன்காமம்
பத்தாவத்தை வேர்க்குத்திக்கடவை
பளை

பொற்குவை தந்தோர்
தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் 2000 00
திரு. சு. செல்லத்துரை - இளவாலை 501 00
திரு. க. சபாநாதன் வீமன் காமம் தெல்லிப்பளை 501 00
திரு. வ. சிதம்பரநாதன் மயிலங்கூடல் 500 00
திரு. வை. கணேசமூத்தி தெல்லிப்பளை 500 00
டாக்டர் தி. இராசேந்திரா காங்கேசன்துறை 500 00
திரு. பி. யோசேப்பு மயிலங்கூடல் 300 00
திரு. பொ. சிவஞானசுந்தரம் யாழ்ப்பாணம் 250 00
திரு. ந. தனபாலன் கருகம்பனை 250 00
திரு. க. குட்டித்தம்பி மயிலங்கூடல் 250 00
திரு. சி. நவரத்தினம் மயிலங்கூடல் 250 00
திருமதி ஆ. வேதநாயகி 250 00
திரு. சா. தருமலிங்கம் 250 00
திரு. மு. ஆரளையா மல்லாகம் 250 00
திரு. க. க. வேலாயுதபிள்ளை தெல்லிப்பளை 200 00
திரு பொ. சிறீகுமார் மயிலங்கூடல் 200 00
திருமதி. கோகிலாமகேந்திரன் விழிசிட்டி 200 00
திரு. க. இராசநாயகம் கருகம்பானை 200 00
திரு. பொ.இராசேந்திரன் இளவாலை 150 00
திரு. ந. சுப்பிரமணியன் தெல்லிப்பளை 100 00
திரு. பி. நடராசன் மயிலங்கூடல் 100 00
திரு. மு. சிவராசரத்தினம் இளவாலை 100 00
திரு. வ. நாகராச சிறுவிளான் 100 00
திரு.பூ. பாக்கியநாதர் மயிலங்கூடல் 100 00
திரு. க. திருநாவுக்கரசு பன்னாலை 100 00
திரு. சொ. நவரத்தினம் பொற்கலந்தம்பை 100 00
திரு ஏ. ரி பொன்னுத்துர குரம்பசிட்டி 100 00
திரு மு. நடராசா கருகம்பானை 50 00
திரு வே. குமாரவேல் கருகம்பானை 50 00
செல்வி. சாந்தி சுப்பிரமணியம் இளவாலை 50 00
திரு. ம. பார்வதி நாதசிவம் மயிலங்கூடல் 50 00
திரு. இ. சந்திரலிங்கம் மயிலிட்டி 50 00
திரு சி. துரைராசா " 50 00
திரு. நா. இராசரத்தினம் " 50 00