கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  இன ஒடுக்கமும் விடுதலைப் போராட்டமும்  
 

இமயவரம்பன்

 

இன ஒடுக்கமும்
விடுதலைப் போராட்டமும்

ஆய்வுக் கட்டுரைகள்


இமயவரம்பன்

புதியபூமி வெளியிட்டகம்

சவுத் ஏசியன் புக்ஸ்

Enna Odukkallum Viduthalai Poattamum
Aaiyvu Katturaigal
(c) Imayavaramban
Fist Edition : June 1988
Second Edition : August Achaham, Madras
Printed at : Surya Asian Books
Published by : South Asian Books
6/1, Thayar Sahib II Lane,
Madras - 600 002.

Published and Distributed in Sri Lanka by
Tamil Publication and Distribution Network
44, 3rd Floor. C.C.S.M. Complex Colombo -11
Tp. 335844 Fax 94 - 1 – 333279


இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்
ஆய்வுக் கட்டரைகள்
(உ) இமயவரம்பன்
முதல் பதிப்பு : ஜூன் 1988
இரண்டாம் பதிப்பு : ஆகஸ்ட் 1995
அச்சு : சூர்யா அச்சகம் சென்னை – 41
வெளியீடு : புதிய ப+மி வெளியீட்டகத்துடன்
இணைந்து
சவ+த் ஏசியன் புக்ஸ்
6ஃ1, தயார் சாகிப் 2 –வது சந்து.
சென்னை – 600 002

ரூ. 30.00

சமர்ப்பணம்

இந் நூலின் முதற்பதிப்பினை வெளிக்கொணர உறுதுணையாக நின்ற காலம் னெ;ற நண்பர் கே. ஏ. சுப்பிரமணியம் நினைவுக்கு இவ் இரண்டாம் பதிப்பைச் சமர்ப்பிக்கிறேன்.


பதிப்புரை

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய விரிவான ஆய்வினை “இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்’’ என்னும் இந்நூல் மேற்கொள்கிறது. இது இரண்டாவது பதிப்பாகும். இந்நூலில் ஐந்து கட்டுரைகளும், மூன்று பின் இணைப்புகளும் இடம்பெறுகின்றன. இக் கட்டுரைகள் புதிய – ஜனநாயக கட்சியின் (இலங்கை கம்ய+னிஸ்ட் கட்சி இடது) பத்திரிகைகளான “செம்பதாகை’’ “புதியப+மி’’ ஆகியவற்றில் வெளிவந்தமையாகும். இவற்றை இமயவரம்பன் எழுதியிருந்தார். ‘இன உறவுகள் பற்றி’’ 1993 இன வன்செயல் இடம்பெறுவதற்கு சற்று முன்னரும், ‘இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்’ இன வன்செயல் இடமும் பெற்ற பின்பும் எழுதப்பட்டவையாகும். “சமாதானமும் ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். இறுதியான இரு கட்டுரைக ளும் இவ்விரண்டாம் பதிப்பு வெளிவரும் 95ஆம் ஆண்டின் நடுக்கூறிலே எழுதி இணைக்கப் பட்டவையாகும். முதல் மூன்று கட்டுரைகளுடனும் அவை தொடர்புடையாகவே அமைந்துள்ளன. இவற்றுடன் பின் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளவை: ஐ புதிய ஜனநாயக கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரஸ் (1991 மே 4ஆம் 5ஆம் திகதிகளி;ல் நிறைவேற்றப்பட்ட உடனடி வேலைத் திட்டம் ஐஐ தேசிய இனப்பிரச்சினையின் இடைக்காலத் தீர்வுக்கான குறைந்தபட்சம் பிரேரணைகளு மாகும். ஐஐஐ புதிய ஜனநாயக கட்சியின் மத்திய குழு 94 – 95 ஆண்டுகளில் வெளியிட்ட நான்கு அறிக்கைகளாகும்.

இந்நூல் முதல் பதிப்பாக வளிவந்த போது பின் இணைப்பாக சேர்க்கப்பட்டிருந்த இனப்பிரச்சி னையின் இடைக்கால அரசியல் தீர்வுக்கு இலங்கை கம்ய+னிஸ்ட் கட்சி (இடது) முன் வைக்கும் குறைந்த பட்சப் பிரேரணைகள் என்பது மேற்படி கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரசின் பின், புதிய – ஜனநாயக கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன் மேற்படி குறைந்த பட்சப் பிரேரணைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய இனப்பிரச்சினை இன்றைய சூழலில் மோசமடைந்து காணப்படுகின்றது. அதன் பல்வேறு அம்சங்கள் ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. அவற்றுக்கு இந்நூல் தனது மார்க்சிச லெனினிச நோக்கில் ஓர் சரியான பார்வையை வழங்குகின்றது என்பது எம் நம்பிக்கை. அதனை உறுதிப்படுத்துவது போன்று மிகக் குறுகிய காலத்தில் முதல் பதிப்புயாவும் விற்பனையாகிவிட்டமையால் இரண்டாவது பதிப்பின் அவசியம் உருவாகி உள்ளது. ஆதலால் வசனங்களில், எழுத்துக்களில் உள்ள பிழை திருத்தங்களுடன் மட்டும் இவ் இரண்டாவது பதிப்பு வெளிவருகின்றது. அத்துடன் நூல் ஆசிரியரின் மறுபதிப்பிற்கான முன்னுரையும் இடம்பெறுகின் றது.

எனவே வாசகர்கள் இந் நூல் பற்றிய தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் எமக்கு அறியத் தரும்படி வேண்டுகிறோம்.

இந்நூலினை புதிய வெளியீட்டகத்துடன் இணைந்து வெளியிடும் கவுத் ஏசியன் புக்ஸ் நிறுவ னத்திற்கும் அதன் இயக்குநர் தோழர் பாலாஜிக்கும் நிறுவனத்திற்கும் அதன் இயக்குநர் தோழர் பாலாஜிக்கும் எமது அன்பார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் இந் நூலினை அச்சிட்டுத் தந்த சூர்யா அச்சக உரிமையாளர் ஊழியர்கள் அனைவருக்கும் எமது வணக்கங்கள்.

புதிய ப+மி வெளியிட்டகம்.


14, 57வது ஒழுங்கை
கொழும்பு – 6
இலங்கை

மறுபதிப்புக்கு முன்னுரை

இக் கட்டுரைத் தொகுதியிற் கூறப்பட்ட கருத்துக்கள் அவை பிரசுரமாகிய சில மாதங்களுக்குள் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டன. அது பற்றி நாம் மகிழ்வதற்கில்லை. விடுதலை இயக்கங்களின் தவறு கள் பற்றியும் அரசின் போக்குப் பற்றியும் இந்தியத் தலையீடு பற்றியும் விடுக்கப்பட்ட எச்சரிக் கைகள், பிரதான அரசியற் கட்சித் தலைமைகள் பொறுப்புடன் செயற்படாததால் விரைவாகவே நிசமாகின. கடந்த பன்னிரண்டு வருட காலத்தின் போராட்டம் முழு இலங்கைக்கு துன்பத்தையே கொண்டு வந்தது. ஜனநாயக, மனித உரிமைகள் சுயநிர்ணயம் ஆகிய மூன்றையும் மறுத்து வந்த ய+.என். பி. ஆட்சியே இந்த அவலத்தின் காரணகர்த்தாவாக இருந்தது. தென்னிலங்கை எதிர்க் கட்சிகளின் பலவீனமும் தேசிய இனப்பிரச்சினையில் நியாயமான தீர்வு தேடுவதில் அவர்களது தயக்கமும் ய+.என்.பி. ஆட்சிக்கே வசதியாயின. ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்த ய+. என். பி. நாட்டை முற்றாகவே பன்னாட்டுக் கம்பனியிடம் அடகு வைக்க மும்முரமாகவே செயற்பட்டது. அந்த ஆட்சி சென்ற வருடம் முறியடிக்கப்பட்டது.

தமிழர் விடுதலை இயக்கங்களின் பிளவு பாரதூரமான தீய விளைவுகட்கு வழி வகுத்தது. இன்று பல குழுக்கள் அற்ப சலுகைகட்காக அரசாங்கத்தின் தயவை நாடி அதன் இன ஒழிப்புப் போரில் பங்கு பற்றின. சில இன்னமும் இந்தியத் தலையீட்டை நாடுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் நடக்கும் இன ஒழிப்புக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட இயலாதவாறு இந்த முரண் பாடுகள் இன்னமும் தடையாக நிற்கின்றன. வடக்கில் அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்குப்பிடித்து ஒரு விடுவிக்கப்பட்ட பிரதேசமாக யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதி உள்ளது. வடக்குக் கிழக்கில் பிற பகுதிகளிலும் அரசாங்கத்தால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு நிலைமைகள் உள்ளன. வடக்கு – கிழக்கில் போர் மூலமான விடுதலை உடனடியாகச் சாத்தியமில்லை ; அதுபோலவே, அரசாங்கம் ஒரு பயங்கர இன ஒழிப்பு நடவடிக்கை மூலமும் பெரும் இழப்புக் களுடனும் விடுதலைப் புலிகளை முறியடித்தாலும், தொடர்ந்து தனது அதிகாரத்தை நிலைநிறுத்த இயலாது என்பதும் தெளிவு. இந்தச் சூழ்நிலையில், ய+.என்.பி. ஆட்சி முறியடிக்கப்பட்ட பின்பு சமாதானத் தீர்வை வலியுறுத்திய மக்கள் முன்னணி ஆட்சிக்கு வந்தபின், குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமாரதுங்காவின் வெற்றியை அடுத்து, முழுநாட்டிலும் சமாதானத் தீர்வு பற் றிய நம்பிக்கை ஒடுங்கிளது. ஆயினும் புதிய ஆட்சி பழைய அரசின் கொள்கைகளையே சகல துறைகளிலும் தொடரும் சாடைகள் விரைவிலேயே புலனாகி விட்டன.

புதிய அரசாங்கமும் ஊசலாட்டத்தின் விளைவாக சமாதானத் தீர்வுக்கு எதிரான விஷமச் சக்திகள் பலமடைந்துள்ளன. மீண்டும் ராணுவத்தின் கை ஓங்கிவிட்டது. இன ஒழிப்பு யுத்தம் சில மாத ஓய்வின் பின் மீண்டும் தொடங்கி விட்டது. கடந்த காலத் தவறுகளின் விளைவாக வளர்க்கப்பட்ட தமிழ் - முஸ்லிம் மோதல்கள், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை போன்ற புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. வடக்குக் கிழக்கின் சிங்கள, முஸ்லிம்கள் மக்களது உரி மைகள் தொடர்பாகவும் தெற்கில் மலையக மக்களதும் முஸ்லிம், தமிழ் மற்றும் பிற சிறுபான் மையினதும் உரிமைகள் தொடர்பாகவும் மேலும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே சுயநிர்ணயம் என்பது முன்பை விட விரிவாகக் கருதப்பட்டு வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது. இதை மாக்ஸிய – லெனினிவாதிகள் மட்டுமே முறையாகச் செய்கின்றனர். ஏனெனில் அவர்கள் மட்டுமே சகல தேசிய மக்களையும் ஒன்றுபடுத்தி ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களையும் தேசங்களையும் நாடுகளையும் விடுவிக்கும் இலக்குடன் செயற்படுகிறார்கள். ய+. என். பி. ஆட்சிக் காலத்தில் அவர்களால் முன் வைக்கப்பட்ட ஜனநாயக, மனித உரிமை, சுயநிர்ண யம் என்ற சுலோகம் இன்னமும் செல்லுபடியாகிறது.

கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகள் இன்றைய அரசியல் நிலையை மிகவம் மாற்றி விட்டன. இதனைக் கருத்திற் கொண்டு சமகால அரசியல் நிலையை தொடர்பான சில கட்டுரைகள் நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. இம் முயற்சியில் முன்னிறுழைத்த புதிய ப+மி வெளியீட்டாளர்கட்கும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினருக்கும் நன்றி முதற்பதிப்புக்கு ஆதரவளித்து ஊக்குவித்த பல வாச கர்கட்கும் விமர்சகர்கட்கும் நன்றி

இமயவரம்பன்
லண்டன், 1995 ஜூலை

இன உறவுகள் பற்றி

1. இன உறவுகள் இனவாதம் இனவெறி

இலங்கையின் இன்றைய அரசியல் முக்கிய அம்சம் இன உறவுகள் தொடர்பான பிரச்சினையே நாட்டின் பயங்கரமான பொருளாதார நெருக்கடியானது கடன், தங்குதடையற்ற இறக்குமதிகள், உற்பத்திக்கு உறவில்லாத வேலைவாய்ப்புகள், அயல்நாட்டுச் சம்பாத்தியம் போன்றவற்றால் ப+சிமெழுகப்பட்டு, பெருவாரியான மக்கள் உணராதவாறு மறைக்கப்பட்டு வந்துள்ளது. நாட்டின் ஜனநாயக அரசு முறையும் உரிமைகளம் மெல்ல மெல்லச் சிதைக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ சம்பந்தாசம்பந்தம் இல்லாத நிகழ்வுகளாக, தற்செயலான நிர்ப்பந்தங்களாகவே அரசியலில் காணப்படுகின்றன இனப்பிரச்சினையின் முக்கியத்துவம் அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்ட அதே சமயம் அதன் தீர்வுக்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக அதை உக்கிரப்படுத்தும் முறையிலேயே காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. அதைச் சாட்டாக வைத்து ஆயு தப்படையினதும் பொலிஸாரினதும் அதிகாரமும் அரசாங்க ஏதேச்சாதிகாரமும் அதிகரிக் கப்பட்டுள்ளன. ஒரேயடியாக இனப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கம் பாராளுமன்ற அரசியல் கட்சிகட்கு இருக்கும் என்று நான் எதிர்பாக்கவில்லை. அது போனால் பிழைப்புக்கு வழியேது சாதி, மதம், இனம், மொழி ஆகியன எல்லாமே பிற்போக்கு அரசியல் பிழைப்புக்கு அவசியமான பண்டங்கள், எனவே, இன்றைய சூழலில் முழுமையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது என்பதும் உண்மை. ஆனால் மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளை பகைமையை முரண்பாடு நாம் கண்டிக்கத் தவறினால் அது பிறபோக்குக்கே உதவி செய்யும் சிங்களப் பேரினவாதமும் தமிழ்ப் பிரிவினைவாதமும் எந்த வகையிலும் பரந்துபட்ட மக்களின் நலன்கட்கு உகந்தவை அல்ல. ஒரு சமுதாயத்தின் வௌ;வேறு இனங்கள் மத்தியில் மற்ற இனத்தவர்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் இருப்பது அதிசயம் இல்லை. அவை காலத்துக்குக்காலம் களை யெடுக்கப்படாமல் திட்டமிட்டே வளர்க்கப்படும்போதுதான் அவை உறவுகளை அபாயகரமான முறையில் பாதிக்கின்றன. இலங்கையில் பல காலமாகப் புறக்கணிக்கப்பட்;டும் திட்டமிட்டே சீர்குறைக்கப்பட்டும் வந்துள்ளன இன உறவுகள் பற்றி, இப்போதும் காலம் கடந்துவிடவில்லை என்பதால், எழுதுவது நல்லது என்றே நினைக்கிறேன்.

இன உணர்வு பற்றி யாருவே அதிகம் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ள கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில் இன, உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வாழ்வின் வௌ;வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயல்படுகிறது. அது மொழி மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும்.

காரணத்தால் அது முற்றாக புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும் சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது இன உணர்வுகள் சற்றே ஒதுக்கி வழிவிடவே செய்வன. ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும எந்தச் சிந்தனையும் இன உணர்வுகளை மதியாமல் இருக்கமுடியாது. இன்றைய சூழ்நிலையில் இன உணர்வு என்பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுய நலனுக்காக கடப்பவர்களாக இருக்கலாம் அல்லது பரந்துபட்ட மனித இன முழுமையினது நலன் நாடுபவர்களாக இருக்கலாம். எனவே, இனஉணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதையொட்டியே இனஉணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.

மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்கட்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறு பாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட் டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, தன்னை வௌ;வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத் தன்மை ப+ண ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்;து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம் இன வெறியாகிறது.

ஒர சமுதாயம் முன்னேறிய “நாகரிக’’ சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோhக்களுக்கு எதிரான இன வெறி, தென் னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லின் ஜேர்மனியில் ஆரிய இனவெறி, ஜாரிஸ ரஷ்யாவில் பேரினவாதம் இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியவல்ல, இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஒரு இனத்தின் அனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன.

மனிதனது பலவீனங்களைச் சுரண்டும் வர்க்கங்கள் எப்போதும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன உணர்வு இன்றைய சமுதாயத்தின் தனிமனிதனுக்கு ஒரு ஆதாரமாகவே தோன்றினாலும் அது உண்மையில் அவனுடைய பலவீனம். அந்த இன உணர்வை மனிதர்களை வேற்றுமைப்படுத்தவும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுபடாமல் தடுக்கவும் பயன்படுத்துவதில் பிற ;போக்குச் சக்திகள் மிகவும் கவனம் செலுத்தி வந்துள்ளன. அறியாவையும் தெளிவீனங்களும் இன உணர்வுகளை உக்கிரப்படுத்த உதவும் சாதனங்கள் இனவாதப் பொய்களையும் அரை உண ;மைகளையும் நம்பிப் பழகிவிட்ட மனங்களுக்கு உண்மை உடனடியாகப் புலனாகாது. அதற் காக நாம் சோர்ந்துவி;ட அவசியம் இல்லை. இனவாதிகளும் இனவெறியர்களும் என்றைக்குமே மக்களை எமாற்ற முடியாது. அதற்காக, கைகளைக் கட்டிக்கொண்டு காலம் வரும்
என்று காத்திருக்கத் தேவை இல்லை. இனவாதச் சேற்றால் கலங்குண்ட மனங்களை தெளிய வைக்கும் கடமை நம்முன் உள்ளது. மற்றவர்களின் இனவாதத்தை இலகுவாக அடையாளம் காணும் நாம் நம் மத்தியிலுள்ள இனவாதத்தையும் அடையாளம் காணத் தவறக்கூடாது. இன வாதத்தை ஒழிப்பது என்பது ஒரு பல முனைப்போராட்டம். அதற்கு மற்ற இனத்தவரைப் புரிந்து கொள்ளவும் உள்ளபடியே மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

2.இனப் பகையும் சந்தேகங்களும்

கலாசார வேறுபாடுகள் (முக்கியமாக மத நம்பிக்கைகள் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்பானவை) இனங்களினதும் சிறுபான்மை இனப் பிரிவுகளினதும் தனித் தன்மையை வலியுறுத்துகின்றன. அவை இனங்கள் ஒன்றையொன்று பரஸ்பரம் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருக்க அவ சியமி;ல்லை. ஆயினும் உயர்வு தாழ்வு அடிப்படையிலான வேறுபடுத்தல்களுக்கு அவை இட மளிக்கின்றன. இரு இனங்களிடையே சினேகப+ர்வமான உறவு வளரும்போது இவ்வேறுபாடுகளே கலாசாரப் பரிமாறலுக்கும் அதன் விளைவான கலாசார விருத்திக்கும் துணை நிற்கின்றன. மொழி வேறுபாடுகளுங்கூட, முதலில் இனங்களிடையே உறவுக்குத் தடையாக நின்றாலும், சினேக உறவுகள் தோன்றியதும், தொடர்பின் விளைவாக மொழிகளின் விருத்திக்கு வழி செய்கின்றன, இத வரலாறு நமக்குப் பன்முறை கூறியுள்ள பாடம்.

இனங்களிடையே உள்ள கலாச்சார, மொழி வேறுபாடுகள் இனப்பகைமை வளர்க்கப் பயன் படுத்தப்பட்ட சூழ்நிலைகள் பல உள்ளன. இதற்கு ஆதாரமாக ஐரோப்பாவில் நிலவிய ய+த இன விரோத உணர்வுகளையும் ஆப்பிரிக்காவின் தென்முனையில் நிறவெறியையும் விட அதிகமாக எதையும் குறிப்பிடவேண்டியதில்லை.

நவீன வரலாற்றில் எப்போதும் அதிகார வர்க்கங்கள் தம் நலன்களைப் பேணி ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரித்து வைக்கவே இவ்வேறுபாடுகளைப் பயன்படுத்தியுள்ளன. எனவே, இனங்களி டையே வேறுபாடுகள் பற்றிப் பரந்துபட்ட மக்களின் நலன்களை நாடுவோரது கண்ணோட்ட மும் சுரண்டும் வர்க்கங்களின் கண்ணோட்டமும் எதிர்மாறானவை எனலாம்.

வரலாற்று அனுபவங்கள், வரலாறு விளன்னப்பட்டுள்ள விதம், சமுதாய நெருக்கடிகளின்போது தனிப்பட்டோரதம் குழுக்களினதும் குறுகிய கால நலன்கள் பாதிக்கப்படல் போன்றவை இனங்களிடையிலான முரண்பாடுகளாகத் தோன்றுகின்றன அல்லது தோற்றுவிக்கப்படுகின்றன. இவை அரசியல் நேரடியாகப் பயன்படுத்தப்படக் கூடிய சூழ்நிலையில் எவ்வித தயக்கமுமின்றிப் பிற்போக்குச் சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் நீடிப்பு இனப்பகைக்கு வழிகோலு கிறது.

இனங்களிடையிலும் இனப் பிரிவுகளிடையிலும் நல்லுறவு வளர்த்தல் ஒடுக்கப்பட்ட மக்களது நலனுக்கு அவசியமானது ஒரு இனத்தவர் மற்ற இனத்தவர்கட்குரிய குறிப்பான பிரச்சினைக ளையும் அவர்களது வாழ்க்கை முறையையும் சிந்தனைகளையும் பற்றி ஓரளவு தெளிவு பெறு வதும் பிரச்சினைகளை தம் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி மற்றவர்களது கண்ணோட்டத்திலும் காண முயல்வதும் மக்களிடையே இன அடிப்படையிலான முரண்பாடுகளில் பகைமையைக் குறைந்து சினேசு இயல்பை வலுவ+ட்ட உதவும்.

சிங்கள மக்கள் பற்றி தமிழர்கள் மத்தியில் காலங்காலமாகவே சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றன. இது போன்றே முஸ்லிம்கள் பற்றியும் மலையகத் தமிழர்கள் பற்றியும் வடக்கிலும் யாழ்ப்பாணத்தவர் பற்றி மட்டக்களப்பிலும் மலைநாட்டு;ச் சிங்களவர் பற்றி கரையோரத்திலும் ஒரு சாதியினர் பற்றி இன்னொரு சாதியினர் நடுவிலும் ஒரு சாதியினர் பற்றி இன்னொரு சாதியினர் நடுவிலும் கருத்துக்கள் நிலவுகின்றன. இவை யாவுமே தீங்கானமையுமல்ல. எல்லாமே அடிப்படை இல்லாதனவுமல்ல. ஆனால், சில நேரங்களில் ஓரிரு தனி நபர்கள் பற்றி அனுபவங்கள் ஒரு முழு இனத்துக்குமே உரியனவாக்கப்படுகின்றன. ஒரு நேரத்தில் ஒரு மனிதனது ஒரு குறிப்பிட்ட செயல் அவனது முழுமையும் குறிப்பது ஆகிவிடாது. தனி மனிதனது இயல்பு அவன் சார்ந்த முழு இனத்தினது இயல்புமாகி விடாது. பகைமுரண்பாடுகளை வளர்க்க விரும்புவோர் ஒருவனது தவறான செயலை வைத்து அவனை அவனுடைய முழு இனத்தையுமே தீயவர்களாகச் சித்தரிக்க முனைகிறார்கள். இது சிங்களவர்கள் மத்தியிலும் இனவெறியர்க்கும் பொருத்தும் தமிழர் மத்தியிலுள்ள இன வெறியர்க்கும் பொருந்தும் ; மதவெறியர்கட்கும் பொருந்தும் ; சாதி வெறியர் கட்கும் பொருந்தும் இவர்கள் ‘பகை’ இனத்தின் நல்ல பண்புகளை எல்லாம் மூடி மறைப்பதிலும் அவர்களது நியாயமான பிரச்சினைகளை எல்லாம் மறைப்பதிலும் கூடத் தம் பங்கை யாற்றவே செய்கிறார்கள்.

சிங்கள மக்களுக்குள் எத்தனையோ பேருக்கு இன்று வடக்கில் உள்ள நிலைமை பற்றிய தௌ வான அறிவு உள்ளது? பத்திரிகை படிக்காதவர்களையும் அரசியல் ஈடுபாடே இல்லாதவர்களையும் விடுவோம். படித்தவர்கள் மத்தியில் எவ்வளவு தூரம் இது பற்றிய தெளிவு உள்ளது? தவறு பெரும்பாலும், அவர்களுடையது அல்ல. சிங்களப் பத்திரிகைத் துறையில் பெரமளவும் இன வாதிகளும் பெரு முதலாளிமாருமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். போக, தமிழர்களின் தலை வர்கள் எனப்படுவோர் என்றுமே சிங்களமக்கள் மத்தியில் தமிழர்களது பிரச்சினைகளை நியாயமான முறையில் விளக்க முற்பட்டதும் இல்லை.

சிங்கள மக்கள் மத்தியில் தென்னிந்தியா பற்றிய அம்சங்கள் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. சிங்களம் மூலம் கற்பிக்கப்படும் வரலாறு இலங்கையின் சிங்கள இராச்சியங்களும் நாகரியங்களும் தென்னிந்தியப் படையெடுப்புக்களால் பாதிக்கப்பட்ட கதைகளை வலியுறுத்துகிறது. தமிழர் என்றாலே தென்னிந்தியா நினைவுக்கு வருமாறு சிங்களப் பிற்போக்கு பாராளுமன்ற அரசியல்வாதிகளும் இனவெறியர்களும் செயற்பட்டுள்ளனர். டி. எஸ். சேனநாயக்காவின் பிரஜா வுரிமைச்சட்டம் கூட இந்த அச்சத்தை ய+.என். பி. தனக்குச்சாதகமாகப் பயன்படுத்திய ஒரு சந் தர்ப்பமே ஆகும். இந்த அச்சங்கள், பல தமிழர்கட்கு அர்த்தமற்றதாகத் தென்படலாம். ஆனால், சிங்கள மக்களது நிசமான மன நிலையைக் கணிப்பில் எடுக்காது, இந்தப் பிரச்சினையை அர்த்தமற்றது என்று அசட்டை செய்வது தவறானது தமிழரசுக் கட்சி “சமஷ்டி’’ கேட்டபோது, அதைப் பிரிவினை வாதம் என்று வாதிட்ட சிங்கள இனவாதிகளைச் சிங்கள நம்பியதற்கு முக்கிய காரணம் முன் கூறிய அம்சமே எனலாம். தமிழரசுத் தலைமைம பாராளுமன்றத்திலும் ஆங்கிலம் கற்ற கூட்டத்தினர் நடுவிலும் பிரிவினை வேறு சமஷ்டி வேறு குடியியல் விரிவுரை நடத் தியதேயொழிய தங்கள் கோரிக்கைச் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த என்றுமே முடிய வில்லை. 1956 மொழிச் சட்டத்தை அடுத்து சிங்களம் படியாதே என்ற ஆணை. 1957 இல் ஸ்ரீ எதிர்ப்பு போன்ற செயல்கள், தனித்தமிழ் இயக்கம் என்பனவெல்லாம் சிங்கள மொழி மீது துவேஷ உணர்வு காரணமான செயல்களாகவே சிங்களவர்களால் காணப்பட்டன. 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது தமிழரசுக் கட்சி தபால் முத்திரை அச்சிட்ட செயல் சிங்களவர் மத்தியில் பிரிவினைவாத நடவடிக்கையாகவே விளங்கப்பட்டதில் அதிசயம் இல்லை. சிங்கள மக்களது நேர்மையான, ஆனால், அறிவு ப+ர்வமாகத் தவறான சில சந்தேகங்களைப் போக்க எந்தவித நட வடிக்கையும் இல்லாமல் ஒரு தலைப்பட்சமாகவே தமிழரசுக்கட்சி சூழ்நிலைகளில் செயற்பட ;டுள்ளது. யாழ்ப்பாணம் என்றாகவே, பெரும் அரசாங்க உத்தியோகம், அதிகார மேன்மை காட்டும் கனவான்கள் என்ற உணர்வு, அறியாமை காரணமாகச் சிங்களவர் மத்தியில் பரவியுள்ளது. (யாழ்ப்பாணத்தில் தற்போது பலருக்குச் சிங்களவர் என்றாலே பொலிஸ், இராணுவம், காடையர் நினைவு வருவது போல) யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை முறை, கடுமையான உழைப்புக்கான அவசியம், படித்த வாலிபரின் வேலையின்மை, சமுதாயப் பிரச்சினைகள், இன ஒடுக்கல், ஆயுதப் படைகளின் அடக்குமுறை, வன்செயல்கள் என்பன பற்றிச் சிங்கள மக்களுக்கு விளக்கும் அக்கறையின்றியே தமிழர் பாராளுமன்ற அரசியற் தலைமை செயற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மத்தியில் உள்ள வறுமை, லீடின்மை, படித்தோர் வேலையின்மை, காணிப் பிரச்சினை என்பன பற்றி வடக்கில் மக்களுக்கு விளக்கப்படுத்த இவர்கள் அக்கறை இல்லை. (அதைச் சொன்னால் எவன் வோட்டுப் போடுவான்?) நெற்காணிச் சட்டம் 1957 இல் கொண்டு வரப்பட்ட போது பணக்காரத் தமிழ் பெருங்காணிச் சொந்தக்காரர்கட்கும் பாதகமானது என்ற காரணத்தையிட்;டுத் தமிழரசு காங்கிரஸ் எம்.பி.மார் எல்லாரும் அதை எதிர்த்தனர் ; இதுதான் அவர்களது சமுதாயக் கண்ணோட்டம் 1957இல் சாதி பாகுபாட்டுத்தடை மசோதாவைப் பிரேரிக்க எந்த வட மாகாண எம்.பி.க்கும்) (திராணியில்லாததால் அன்றைய திருகோணமலை எம்.பியைப் பிரேரிக்கச் செய்த கொள்கை வீரர்கள் இவர்கள். சாதிப் பாகுபாடுகளையே நேராக முகம் கொடுத்துத் தீர்க்கத் தைரியம் இல்லாதம இக் கூட்டம் சிங்கள மக்களது பிரச்சினைகளைத் தமிழர்கட்கு விளக்கவும் தமிழர்களது தேவைகளைச் சிங்கள மக்களுக்குத் தெளிவுப்படுத்தவும் முனையுமா? இந்த வோட்டுப் பிச்சைக்கார்கட்கு தென்னிலங்கையின் வோட்டுப் பிச்சைக்காரர்கள் சளைத்தவர்கள் அல்ல. வடக்கில் “தமிழர்கள்’ கண்ணோட்டத்தில் (உயர், நடுத்தர வர்க்கத் தினரின் கண்ணோட்டத்தில்) பிரச்சினைகள் அணுகப்பட்டன ; பல பிரச்சினைகளில் தேசம் பரந்த பொதுவான தன்மை வேண்டுமென்றே அசட்டை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சிங்களரது தவறும் அந்த இனத்தின் இயல்பாக தமிழர் மத்தியிலும், ஒவ்வொரு தமிழரின் தவறும் ழுமு இனத்தின் இயல்பாக சிங்களவர் மத்தியிலும் நீண்ட காலமாக காட்டப்பட்டுவந்துள்ளன. இதற்கு முக்கியமாக இனவாதப் பிற்போக்கு அரசியல் வாதிகளும் பெரு முதலாளிகளுமே தூண்டுகோல்கள். இன்றைய தேசிய அரசியல் நெருக்கடியில் பிற்போக்கை முறியடிக்க வேண்டுமாயின் நாட்டின் ஒக்கப்பட்ட மக்கள் அனைவரும் இனப்பகையையும் சந்தேகங்களையும் தூண்டிச் செல்வது அவசியம். இன்றைய சூழ்நிலையில் இனப்பகை மூலம் சில நூறு காடையர்கட்கும், தன் பிரச்சினைகளை மூடி மறைக்க முனையும் அரசாங்கத்தக்கும், மூடி மறைக்க முனையும் அரசாங்கத்துக்கும், அதன் ஏகாதிபத்திய எஜமானார் கட்குமே ஆதாயம் கிட்டும்.
இன ஒடுக்கலும்
விடுதலைப் போராட்டமும்

எங்கே அடக்கு முறையும் ஒடுக்கலும் உண்டோ அங்கே கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் உண்டு. இது மனித வரலாறு கூறும் உண்மை. மனித இனத்தின் விமோசனம் மனிதரிடையே சமத்துவம் நிறுவப்படுவதன் மூலமே சாத்தியமாகும். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தவும், அடக்கி ஒடுக்கவும், சுரண்டவும் இயலுமான ஒரு சமுதாய அமைப்பினுள் ஒடுக்கப்பட்டவன் மட்டுமல்லாமல், ஒடுக்குபவனும் தன்னுடைய ஒடுக்கு முறையுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றான். எனவேதான், மனித இனத்தின் விடுதலை, வர்க்க வேறுபாடுகளற்ற சமுதாயம் உருவாக்கப்படுவதன் மூலமே சாத்தியம் என்று மார்க்ஸிய விஞ்ஞாகம் வலியுறுத்துகிறது.

இன்று உலகின் சுரண்டல் சமுதாய அமைப்புகளில் முதலாளி தொழிலாளி வர்க்க முரண்பாடே அடிப்படையானதும் மற்றச் சமுதாய முரண்பாடுகளைவிட முக்கியமான முரண்பாடாகவும் போராட் டத்தின் மூலமே தீர்க்கக்கூடிய பகை முரண்பாடாகவும் உள்ளது. ஆயினும் உலக சமு தாயங்களின் விருத்தியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளும் சமுதாயங்களின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியில் உருவான கலாசார, மொழி, மதவேறுபாடுகளும் மனித சமுதாயத்தினுள் நாம் புறக ;கணிக்க இயலாதவையே. இந்த முரண்பாடுகள் அடிப்படையில் பகைமையில்லாதவையும், ஆரோக் கியமான சூழலில் மனித இனத்தின் வளர்ச்சிக்கு மேலும் உரமூட்டத்தக்கவையுமாகலாம். அதே சமயம் சுரண்டல் சமுதாய அமைப்பில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் சுரண்டும் அதி கார வர்க்கங்கள், மனிதரிடையே உள்ள வேறுபாடுகளைக் குறுகியகால அளவில், பகை முரண ;பாடுகளாக வளர்ப்பதில் வெற்றி கண்டுள்ளன சமுதாயத்தில் பொருளாதாரத் தேக்கமும் பிற அக நெருக்கடிகளும் உருவாகி, அடிப்படையான வர்க்க முரண்பாடு கூர்மையடைந்து, அதன் விளை வாகச் சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கங்கள் அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்புள்ள சூழ்நிலைகளில், மக்கள் மத்தியிலான பிறமுரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாக வளர்ப்பதன் மூலம், போராட்டத்தைத் திசை திருப்பச் சுரண்டும் வர்க்கங்கள் தயங்குவதில்லை. இனக் குரோ தமும் தீவிர தேசியவாதமும் சாதிமத வெறிகளும் வரலாற்றில் பிற்போக்கான பணிகளையே ஆற் றியுள்ளன. எனவே, சாதி, மத, இன, மொழி, தேசிய அடிப்படைகளில் மனிதனை மனிதன் அடக்கி ஒடுக்கும் சூழ்நிலைகளில், மார்க்ஸியம் எத்தகைய நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.

ஒடுக்கலின் மூலகாரணம் வர்க்க அடிப்படையிலான முரண்பாடேயாயினும், அது சமுதா யத்திலுள்ள வேறு முரண்பாடுகளின் வடிவில் தன்னை வெளிப்படுத்தும்போது, அது வெளிப் படும் வடிவத்தை நாம் புறக்கணிக்க இயலாது. எனவே, மார்க்ஸியம் தேசிய வாதத்தை சாராம் சத்தில் பிற்போக்கானதாக கருதினாலும், கொலனித்துவ நவகொலனித்துவ சக்திகள் தேசிய வாதத்தை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாயும் அவர்களது அடக்கலுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கப்படவேண்டிய ஒன்றாயும் கொள்கிறது. அதாவது, உழைக்கும் மனிதனை எந்த அடிப்படையில் அடக்கியொடுக்க சுரண்டும் வர்க்கம் முற்படுகிறதோ , அந்த அடிப்படையில், அந்த மனிதன் விடுதலைக்காகப் போராடுவது சரியானது என்கிறது. அடக்கியொடுக்க முனையும் கொலனித்தவ தேசிய வாதம் பிற்போக்கானதாயும் ஒடுக்கலுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் தேசியவாதம் முற்போக்கானதாயும் அமைகின்றன. ஒடுக்கலுக்கு உட்படும் எந்த மக்கள் பிரிவினரும் அந்த ஒடுக்கல் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறதோ அந்த அடிப்படையில் போராடியது நியாயமானது என்பதனாலேயே சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்ற முறையில் திரண்டு போராடுவது சரியானது என்கிறோம். அதேசமயம், போராட்டமானது (ஒடுக்குவோரின்) உயர் சாதிக்கு எதிரானது அல்லது அல்ல என வலியுறுத்துகிறோம். ஏனெனில் ஒடுக்குவோரின் சாதிப்பிரிவில் உள்ள அனைவருமே சாதி ஒடுக்கலால் நன்மை பெறுவோர் அல்லர். அவர்களுட் பெரும்பாலோர் உண்மையில் பொருளாதார் சுரண்டலுக்கும் ஒடுக்கலுக்கும் உட்பட்டவர்களே. எனவே, போராட்டமானது குறிப்பிட்ட சாதிக்கு எதிரானது அல்ல. அது சாதி ஒடுக்கு முறைக்கு எதிரானது மட்டுமன்றி, நீண்ட காலத்தில் சாதி வேறு பாட்டிற்கும் சாதி முறைக்கும் எதிரானதுமாகும். இதேபோன்று, தேசிய விடுதலைப் போராட் டங்கள் கொலனித்துவ, நவ கொலனித்துவவாதிகட்கு எதிரானவையேன்றி அமெரிக்க, பிரித் தானிய, பிரஞ்சு மக்களுக்கு எதிரானது அல்ல. எப்போது ஒரு விடுதலைப் போராட்டம் இனங் குரோதத்தைத் தன் அடிப்படையாகக் கொள்ளத் தொடங்குகிறதோ அப்போதே அது பிற்போக ;கான இயல்புகளையும் தன்னுள் வளர்க்கத் தொடங்கிவிடுகிறது.

விடுதலைப் போராட்டம் என்பது அடக்கி ஒடுக்கப்படும் மக்களது உரிமைக்கான போராட்டத்தின் விருத்தியடைந்த நிலை, உரிமைகளின் வாழ்வு இன ஒடுக்கலாகவும் அடக்குமுறையாகவும் இன ஒழிப்பாகவும் மாறும்போது அதற்கெதிரான போராட்டமும் வளர்ச்சி பெற்று விடுதலைப் போராட் டமாக வடிவம் பெறுகிறது. ஆனால் விடுதலை என்பதன் அர்த்தம் யாத்தீரிகமாகத் தீர்மானிக் கப்படும் ஒன்றல்ல. விடுதலையின் நோக்கம் என்ன என்பதே விடுதலையின் வடிவத்தையும் தீர் மானிக்கிறது.

அமெரி;க்க (ய+.எஸ்) நீக்ரோ விடுதலைப் போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களிற் தொடங்கி பல்வேறு உரிமைப் போராட்டங்களுடாக வளர்ந்து இன்னும் அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி சமத்துவம் வேண்டி நிற்கும் போராட்டமாகத் தொடர்கிறது. அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியும் இன ஒடுக்கலும், அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய வல்ல சாகத தொடரும்வரை ஒழியப்போவதில்லை. நீக்ரோ மக்களதும் அவர்கள் போன்று ஒடுக்கப்பட்ட ஹிஸ்பானிக் (ஸ்பானிய மொழிபேசும் லத்தீன் அமெரிக்க) சிறுபான்மையினரும் தொடர்ந்தும் ஒடுக் கப்பட்டனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சில்லரைச் சீர்திருத்தங்கள் பிரச்சினையின் ஆணி வேரைத் தொடத் தவறிவிட்டனர். எனவே, அவர்களது இன விடுதலைப் போராட்டம் தொடர்கிறது அவர்களது நீண்ட கால கலாச்சார வரலாற்று வேறுபாடுகள் அவர்களைத் தனித் தேசிய இனங்களாக அடையாளங் காட்டினாலும் அவர்களது போராட்டம் பிரிவினைப் போராட்டமாக வடிவம் பெற இயலாத. அமெரிக்க நீக்ரோக்களை ஒரு சுதந்திர தனி நாடாக்கும் இயக்கங்களால் 60களில் முன் வைக்கப்பட்டு பெருவாரியான நீக்ரோ இனத்தவர்களால் நிராகரிக்கப்பட்டது. இன்று தென் ஆப்பிரிக்கா (அசானியா) வில் நடக்கும் விடுதலைப் போராட்டமும் முன்பு ஸிம்பாப்வேயில் நடந்ததும் உள் நாட்டில் இருந்த வெள்ளை இன வெறி அதிகாரத்திற்கு எதிரானவை வெள்ளை இன மக்களும் ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்களும் பெருமளவிற்கு ஒரே தேசத்திற்குரிய இயல்புகளை உடையவர்களல்ல. ஆயினும் அந்த நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் அங்கு வௌ;வேறு சுதந்திர நாடுகளை உருவாக்குவது தொடர்பானவையல்ல. அங்கே, விடுதலைப் போராட்டத்தின் மூல நோக்கம் நிறம், இனம், மொழி, மதம் என்ற வேறுபாடுகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் ஒடுக்க அனுமதியாத ஐக்கியமான ஒருவரை தேசத்தை உருவாக்குவதாகும்.

மூன்றாம் உலகின் பல நவகொலனித்துவ நாடுகளில் நிலப்பிரபுத்துச சமுதாயத்தினின்று விடுபட்டு முதலாளித்துவ சமுதாயமாக மாறும் வாய்ப்பு ஏற்படு முன்னமே கொலனித்துவம் குறுக்கிட்டது. இதனால் இந்த நாடுகள் பழைய சமுதாய அமைப்பின் பல கேடான அம்சங்களையும் அரை குறையான முதலாளித்தவ வளர்ச்சியையுங் கொண்ட, உண்மையான பொருளாதார சுதந்திரமற்ற நாடுகளாகவே உள்ளன. பின்தங்கிய பொருளாதார வளர்ச்சியாலும் பலமான தெமாழிலாளி வர்க ;கக் கட்சித் தலைமை ஒன்று உருவாகு முன்னமே தேசிய முதலாளித்துவ வர்க்க ஆட்சிகள் ஏற்பட்டதாலும், இந்த நாடுகளின் உள்விவகாரங்களில் நவகொலனித்துவ வாதிகளும் மேலாதிக்க வாதிகளும் குறுக்கிடக்கூடிய சூழ்நிலைகள் உருவாகின நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகட்குச் சரியாக முகங்கொடுக்க இயலாத தேசிய முதலாளித்துவம், தன் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தப் பலவாறான தந்திரோபாயங்களைக் கையாளுகிறது. ஒரு புறம் தரகு முத லாளிகளும் நவகொலனித்துவமும் ஏற்படும் நெருக்கடிகளும் மறுபுறம் உழைக்கும் மக்களது தேவைகளும் அவர்களது அரசியல் உணர்வின் வளர்ச்சியின் விளைவான போராட்டங்களும் தேசிய முதலாளித்துவத்தின் ஊசலாட்டமான சந்தர்ப்பவாத மனப்பான்மையை வெளிக்கொண்டு வருகின்றன. தன் வர்க்க அதிகாரத்தை தொடர்வதற்காகவும், பொருளாதார நெருக்கடி தன் அரசியல் நெருக்கடியாக மாறாது தவிர்க்கவும் அது தரகு முதலாளித்துவத்துடனும் நவ கொலனித்துவத்துடனும் சமரசம் செய்ய முற்பகிறது. இந்தச் சமரசம் அதிக காலம் நிலைக ;கக்கூடிய ஒன்றல்லவெனினும், உடனடியாக சூழலின் நிர்ப்பந்தத்தாலும் பலமான பாட்டாளிவர்க்க இயக்கமொன்றுடன் இணையும் சூழ்நிலை இல்லாததாலும், தேசிய முதலாளித்துவம் தயக்கத் ;துடனேயே ஏகாதிபத்திய சக்திகளிடம் சரணாகதியடைகிறது. மறுபுறம் உள்நாட்டில் பொரு ளாதார அரசியல் நெருக்கடிகளில் வளர்ச்சி ஒரு வெகுஜனப் புரட்சியாகும். அபாயத்தையும் அது உணர் கிறது. சுரண்டப்படும் மக்களை மதம், மொழி, பிரதேசம், சாதி என்று பிரித்துப் பிளவு படுத்து வதில் ஈடுபடுவதன் மூலம் தேசிய முதலாளி வர்க்கம் தன் சுரண்டும் வர்க்க இயல்பை வெளிப்படுத்திக்கொள்கிறது. இவ்வாறான செயல்கள் அதன் அரச அதிகாரத்தை சிலகாலம் நீடிக்க உதவினாலும், உண்மையில் நன்மை அடையவது தரகு முதலாளித்துவமும் கொலனித் துவமுமே. மக்களிடையே புகுத்தப்படும் பிளவுகளால் கொலனித்துவத்திற்கெதிராகப் பெற்ற வெற்றிகளும் நவகொலனித்துவத்திற்கெதிரானத் தொடரும் போராட்டத்தின் சாதனைகளும் இழக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியி;ன் அடிப்படையிலேயே நவகொலனித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளில் உள்ள தேசிய இனப் பிரச்சினையும் இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டமும் சுயநிர்ணயமும் ஆராயப்பட வேண்டும்.

மாக்ஸியம் விறைப்பான வாய்ப்பாடுகளால் ஆனதல்ல, சமுதாயத்தினதும், வரலாற்று உண் மைகளின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாகப் பிரயோகிக்கப்படாத மாக்ஸியம் பயனற்றது. பிரச்சி னைகளை அணுகும்போது அவற்றின் பல்வேறு அம்சங்களை வேறுபட்ட கோணங்களின்றும் நோக்கவும் குறுகிய காலத் தேவைகளை நீண்டகால விளைவுகளைப் பற்றிய அறிவுடனும் அவ தானத்துடனும் நிறைவு செய்யவும் தவறுவோமானால் நாம் எடுத்துக் கொண்ட பணியில் தவறு வதோடு அதற்கு எதிராகச் செயற்படவும் இடமுண்டு.

தேசிய இனப்பிரச்சினை, தேசிய விடுதலை இயக்கம் என்பன தொடர்பாக மாக்கஸயும் லெனி னையும் ஸ்டாலினையும் மாஓவையும் மேற்கோள் காட்டுவோர் பலர் உள்ளனர். அவர்கள் இவ ;வாறான செயலை அந்த ரங்க சுத்தியுடன் செய்கிறார்களா என்ற கேள்விக்குரிய பதில் “பெரும் பாலும் இல்லை’’ என்பதே பலர் மாக்ஸியப் பார்வையையும் ஆய்வு முறையையும் வரலாற்றுச் சூழ்நிலைகளையும் ஒதுக்கிவிட்டே மேற்கோள்களைத் தருகிறார்கள். அகராதிகளி னின்றும் வரை விலக்கணங்களினின்றும் மேற்கோள்களினின்றும் தேசிய இனப்பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தொடர்பான திட்டவட்டமான முடிவுகட்கும் தீர்வுகட்கும் வர முடியுமானால் மாக்ஸ எங்கல்ஸையும் அடுத்து மாக்ஸியச் சிந்தனையை வளர்க்க, லெனினும் ஸ்டாலினும் மாஓவும் சிரமமப்பட்டிருக்க அவசியமில்லை. தேசிய இனப் பிரச்சினையின் தீர்வில் ரஷ்யப் புரட்சியின் மார்க்கமும் சீனப்புரட்சியின் மார்க்கமும் அடிப்படையில் ஒற்றுமையானவை. ஆயினும், நடைமுறைப்படுத்தலில் மிகவும் வேறுபட்டவை. முன்னைய புரட்சி, ரஷ்யப் பிற்போக்கு ஆட்சியைத் தூக்கி எறியும் போராட்டத்தில் ரஷ்யப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ்ப்பட்ட தேசங்களையும் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களையும் இணைத்து விடுதலை செய்யும் நோக்கைக் கொண்டது. எனவே, சுயநிர்ணய உரிமை பிரிந்து செல்வதற்கான உரிமையாக வடிவம் பெற்றது. சீனப் புரட்சியியோ பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு பெரும் நாடு தன்னை அரைக் கொல னித்;துவத்தினின்றும் அந்நிய ஆக்கிரமிப்பினின்றும் அரை நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப ;பினின்றும் விடுவிக்கும் நோக்கையுடையது. அங்கு அங்கு பிரிந்து போகும் என்ற வடிவில் சுயநிர்ணயம் முன்வைக்கப்பட்டிருப்பின் அதையே கொலனித்துவமும் ஏகாதிபத்தியமும் பயன ;படுத்திச் சீனாவைத் துண்டாட வசதி ஏற்பட்டிருக்கும் சீனாவோ சோவியத்யூனியனோ ப+ரண திரு பதியான முறையில் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து விடவில்லை. இந்த நாடுகளில் தேசிய இனப் பிரச்சனையுடன் ஒப்பிடக்கூடிய அளவு சிக்கலான தேசிய இனப்பிரச்சினை இந்தியாiவிட வேறு எந்த நாட்டிலும் இல்லை. ஆயினும், முதலாளித்துவ முறையின் கீழ் சாதிக்கப் ;பட்டதைவிடப் பெரும் அளவில் இந்த நாடுகளின் தேசிய இனங்களிடையே சுமுகமான உறவு சாத்தியமாகி உள்ளது என்பது உண்மை. பிரிந்து போகும் உரிமை இல்லாத சீனாவில் சிறு பான்மைத் தேசிய இனங்கள் அனுபவிக்கும் சமத்துவம் சுதந்திரமும் சுய நிர்ணயமும் சோவியத் ய+னியனிலோ வேறெந்த உலக நாட்டிலோ இல்லை எனலாம். இதனால் சீனாவில் பெறப்பட்ட தீர்வே எல்லா உலக நாடுகட்கும் பொருத்தும் என்று வாதிப்பது அபத்தமானது. கவனிக்க அவசி யமானவை எவையெனில், நல்ல தீர்வைச் சாத்தியமாக்கிய சமுதாய அமைப்பும் அதற்கு வழிவகுத்த அரசியல் பார்வையுமே சீனாவிற்கூட தேசிய இனப்பிரச்சினை தவறாகக் கையாளப்பட்ட சில சூழ்நிலைகள் இருந்துள்ளன. கலாச சாரப் புரட்சியின்போது சில தவறுகள் இழைக்கப்பட்டன. ஆயினும் தேசிய இனங்களிடையே குரொத உணர்வின்றிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவும் தவறுகள் திருத்தப்படவும் இயலுமாயிற்று என்பது பிரச்சனைகளைக் கையாள்வதில் சரியான அரசியல் சமுதாயப் பார்வையில் முக்கியத துவத்தையே மெலம் வலியுறுத்துகிறது.

இலங்கையின் தேசிய இனப்பிர்சினை மிக அண்மைக் காலத்திலேயே சிங்களப் பேரினவாதத்தின் அதிகாரத்துக்கு எதிரான தமிழ் மக்களின் (முக்கியமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழரின்) உரிமைப் போராட்டம் என்ற நிலையினூடாக வளர்ந்து சிங்களப் பேரினவாதத் தினதும்; பிற்போக்கினதும் ஏகாதிபத்திய வாதிகளினதும் ஏகப் பிரதிநிதியான ய+. என். பி. ஆட்சியின் அடக்கு முறைக்கும் இன ஒடுக்கலுக்கும் எதிரான விடுதலைப் போராட்டம் என்ற வடிவைப் பெற்றுள்ளது. இந்த விடுதலை எவ்வடிவில் அமைய வேண்டும் என்பதில் அபிப்பிராயங் கள் வேறுபடுகின்றன. ஆயினும் சிறுபான்மை இனங்களு;ககு உரிமைகளை உத்திரவாதப்படுத்தும் சுயாட்சி ஒன்றில்லாமல் சுமூகமான தீர்வு சாத்தியமில்லை என்பது மேலும் உறுதியாகியுள்ளது. தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு, எவ்வகையில், தேசிய மட்டத்திலும் சர்வதேசிய மட்டத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக்கும் விமோசனத்துக்;கும் சாதகமாக அமையும் என்ற நோக்கி லேயே இலங்கையில் மாக்ஸிய லெனினிஸவாதிகள் இப் பிரச்சினையை அணுகி வந்துள்ளனர். அதுவே இன்றும் இனியும் சரியான பார்வையாகும்.

முதலில் தமிழ் மக்களின் விடுதலையை சிங்கள மக்களது விடுதலையினின்றும் வேறானதாகவும் ஒரு பகுதியினரின் நலன் மாற்றப் பகுதியினரின் நலனுக்கு முரணான என வலியுறுத்துமாறும் பார்வைகளை நாம் சரிவர விமர்சிக்க வேண்டும். இவ்வாறான பார்வையின் தமிழ், சிங்கள இவர்களின் பிற்போக்கு இனவாதத் தலைமைகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிசமான அளவு நீண்டகாலமாக வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றை ஒரே நாளில் திருத்துவதோ முறியடிப்பதோ
அசாத்தியம். ஆயினும் இவை சார்ந்து நிற்கும் வரலாற்று பொய்கள் முதலில் நிராகரிக்கப்பட வேண்டும். சிங்கள தமிழ், முஸ்லிம், இன மக்களின் உயர்வர்க்கத்தினரின் நலன்களைப் பேணும் முகமாக அவர்களுடைய முரண்பாடுகளைத் தீர்க்கவும் அவர்களது குறுகிய நலன்களைப் பேணவும் அரசியல் அதிகாரத்தை நீடிக்கவும் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் சரிவர அடையாளங் காணப்பட்டால் இலங்கையில் பல்வேறு இனங்களின் வசதி படைத்த வர்க்கங்களது தேவை ளையொட்டி எழுந்த மோதல்கள் எவ்வாறு வெகு ஜனங்களைப் பிரிக்கவும் பிளவு படுத்தவும் பயன்பட்டன என்பது தெளிவாகும். தங்களது பிறபோக்கு அரசியல் தவறுகளை மூடிகட்டும் நோக் கில் பிரச்சினையின் அடிப்படையான வர்க்க குணாம்சங்களை மூடிக்கட்டிய பழைய பிற்போக்குத் தமிழ் தலைமையினதம் சிங்களப் பேரினவாதத்தினதும் சிந்தனைப் போக்குகளின் தொடர்;ச்சியான ஆதிக்கத்தினின்று இலங்கையின் அரசியல் விடுவிக்கப்படவேண்டும். முக்கியமான இன ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் நேர்மையான போராட்ட சக்திகளும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராட முனைந்துள்ள தேசபக்த சிங்கள முற்போக்கு சக்திகளும் பிற்போக்கு ய+. என். பி. ஆட்சிக்கு வர்க்கத் தன்மையையும் அதற்கெதிரான போராட்டம் வெற்றி பெற அவசியமான வர்க்கப்பார்வை பற்றியும் தெளிவு பெறுவது அவசி யம். வர்க்க முரண்பாட்டை மறைத்து வெறும் இன முரண்பாடாகவே இனப் பிரச்சினையை அடையாளங்காட்டும் போக்கு முறியடிக்கப்படாதவரை “சோஷலிஸம்’’ “மனித உரிமை’’ என்று எழுப்பப்படும் கோஷங்கள் வெற்று வார்த்தைகளாகவே அமையும்.

சிங்கப் பேரினவாதம் இன்று நேற்று ஆரம்பமான ஒன்றல்ல. அதேபோன்று, தமிழர் சோனகர் மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே குறுகிய இனவாதப் போக்குகளும் புதியதாக முளைத் தவை அல்ல. சாதி, மதம், பிரதேசம் போன்ற 1948க்கும் வெகுகாலம் முன்னமே அரசியலில் தலை நீட்டி விட்டன. எவ்வாறாயினும், இவ்வேறுபாடுகள், எந்த நிலையிலும், இலங்கை ஒரு தேசம் என்ற அடிப்படையில், பிரிட்டிஷ் ஆட்சியினின்று சுதந்திரம் பெறுவதற்கு மாறான கருத்துக்களைத் தோற்றுவிக்கவில்லை. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட சிங்கள சோனக மோதல் உண்மையில் இரண்டு இனங்களையும் சேர்ந்த வியாபாரிகளிடையே உள்ள பேட்டியின் விளை வாகவே ஏற்பட்டது. இவ்வாறாhன இன அடிப்படையிலான மோதல்களை ஊக்குவித்தோர் அடிப் படையில் மோதல்களை ஊக்குவித்தோர் அடிப்படையில் வலதுசாரி அரசியல் வாதிகளாகவும் சுரண்டும் வர்க்கத்தினராயுமே இருந்தனர் என்பதை இடையிடையே நாம் நினைவுபடுத்திக் கொள் வது பயனுள்ளது.

இன்று தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரான ஒன்றாகவும் பிரிவினையைத் தவிர்ந்த வேறு தீர்வுக்கு இடமற்ற ஒன்றாகவும் காட்ட முனைவோர் சிங்கள இடதுசாரிகளின் அரசியல் சந்தர்ப்பவாத போக்கையும் வலது சாரிகளின் பச்சையான பேரின வாதத்தையும் ஒரே தராசில் இட்டுச் சமன்படுத்திக் காட்ட முனைவது மிகவும் விஷமத்தனமானது.
சிங்கள மக்களிடையே பேரினவாதம் தோன்றவும் அரசியல் ஆதிக்கம் பெறவும் காரணமான வரலாற்றுச் சூழ்நிலையை முற்றாகப் புறக்கணிப்பதும் தமிழ் மக்களிடையே குறுகிய இனவாதப் பார்வை வளர்த்த சூழ்நிலையைச் சரிவர அடையாளங்காண மறுப்பதும் அதே விஷமத்தனத்துடன் தொடர்புடையன. இப் பிரச்சினைகளின் வர்க்க அடிப்படையை மறந்து, இன, மத, மொழி, சாதி பிரதேச, கலாச்சார வேறுபாடுகள் மக்களிடையே நிரந்தரமான பிரிவுகளை ஏற்படுத்துவன என்று வலியுறுத்துவோர் பிற்போக்காளர்கள் என்பதில் நமக்குச் சந்தேகம் வேண்டியதில்லை.

தமிழ் மக்கள் இன்றைய விடுதலைப் போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட முனைப்பிற்குச் சாதகமாகக் காட்டவும் அதன் பாதையை பலவந்தமாக அத் திசையில் திருப்பவும் சமீபகால வரலாறும் சமகால அரசியலும் மட்டுமல்லாது, இலங்கையின் நீண்டகால வரலாறும் திரிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்க வேண்டியவ விஷயம். அடக்குமுறைக்கும் இன ஒடுக்கலுக்கும் உட்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்த அடக்குமுறையும் இன ஒடுக்கலுமே போது மானவை. அதற்கும் மேலாக நியாயம் காட்டும் நிர்ப்பந்ததால் வரலாற்றைத் திரிபுபடுத்தி வௌ; வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையிலான வேறுபாடுகட்கு வரலாற்றுப் பகைமை சார்ந்த ஒரு தன்மையை வழங்குவது உண்மையில், பிரச்சினைக்குத் தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தீர்வை வலியுறுத்தும் முகமாகப் பிரச்சினையை விகாரப்படுத்தும் முயற்சியாகும்.

இன்று இன ஒடுக்கலுக்கு எதிரான தமிழ் மக்களது போராட்டம் நியாயமானது மட்;டுமல்ல தவிர்க்க முடியாததும் அவசியமானதுமாகும். இன்றைய சூழலில் அதன் தீர்வு, அடக்குமுறையாளர்களான சிங்களப் பேரினவாதப் பிற்போக்கு சக்திகளின் போக்காலும் அதற்கெதிரான போராட்டத்தின் வளர்ச்சியாலும் நிருணயிக்கப்படும் சமகால இலங்கையின் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதபப்படுத்த இலங்கையிள் இன்றைய அரசியல் அமைப்பு உதவாது என்பது தெளிவு. சுதந்திர தமிழ் ஈழம் என்பது சாத்தியமான தீர்வுகளில் ஒன்றே அன்றி நம்முன் உள்ள ஒரே தீர்வோ அதிசிறந்த தீர்வோ இல்லை. இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்குச் சுய நிர்ணயத்தையும் அதே சமயம் இலங்கையில் உள் விவகாரங்களில் அயல் நாடுகள் சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளையோ வேறு எக்காரணத்தையுமோ பயன்படுத்தி குறுக் கிடாதவாறான உத்தரவாதத்தையும் வழங்க வல்ல ஒரு நியாயமான சாத்தியம். அடக்கு முறை மூலம் தமிழ் மக்களையோ மற்ற சிறுபான்மையினரையோ அடக்கி ஆள முடியாது என்ற உண்மை சகலருக்கும் பிரத்தியட்சமாகி வருகிறது. சுமுகமான தீர்வுக்கான நேர்மையான முயற்சி மேற்கொள்ளப்படும் சூழ்நிலையில் அன்றைய அரசியல் நிலைமைகைள அடிப்படையாகக் கொண்டே தீர்வின் விவகாரங்கள் தீ;மானமாகும். எவ்வாறாயினும், நிலைக்கக்கூடியதும் நியாய மானதுமான ஒரு தீர்வு முழு இலங்கையிலும் ஒரு அடிப்படையான அரசியல் மாற்றத்தின் மூலமே சாத்தியம் என்பது பற்றி நமக்குள் சந்தேகமில்லை. தீர்வு பற்றிக் கவனிக்கு முன்பு இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை பற்றிய வரலாற்றுத் தெளிவீனங்கள் பற்றிக் கவனம் செலுத்துவது பொருத்தம்.

சிங்கள, தமிழ் இனத்தவரிடையே உள்ள பகைமைக்கு வரலாற்று நிரந்தரம் காட்ட முனைவோருக்காக முதலி;ல் அண்மைக்கால அரசியலிலிருந்து ஒரு உதாரணத்தைக் காட்டிவிட்டு இலங்கையின் வரலாற்றில் இன வேறுபாடு பற்றி அவதானிப்போம். மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளரைக் குடியுரிமை அற்றோராக்கும் சட்டம் இயற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்ப் பிரதிநிதிகளில் பெருவாரியானோர் வாக்களித்தமையும் சிங் ள “இடதுசாரிகள்’ ஒரே முகமாக எதிர்த்து வாக்களித்தமையும் நமக்கு உணர்த்துவது என்ன? அரசியல் இன நலனை விட வர்க்க நலனே மேலோங்கி நிற்பது தெரிகிறது அல்லவா!

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்துவோர் எல்லாக் காலத்தும் இலங்கை ஒரே தேசமாக இருக்கவில்லை எனவும் பிரித்தானிய ஏகாதிபத்தியமே அதை ஒன்றுபடுத்தியது எனவும் கூறுவதில் உள்ள உண்மை, அந்த வாதத்தின் தொடர்ச்சியாக இலங்கை தமிழ் - சிங்கள இராச்சியங்களாகவே இருந்து வந்தது என்று காட்ட முனையும் போது இல்லாமற் போய் விடுகிறது. தேசிய அடிப்படையிலான அரசு, நிலமான்ய சமுதா த்திற்குப் பிற்பட்டது என்பதோடு இந்தியத் துணைக்கண்டத்திற்கூட, நாடுகள் மொழி, இன அடிப்படை யிலேயே அமைந்திருக்கவில்லை என்பதையும் நிளைவில் நிறுத்துவது பயனுள்ளது. சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளும் பிறசிற்றரகளும் பிற காலத்தில் பல்லவ அரசம் இணைவாரியான தேசிய ஐக்கியத்தை வலியுறுத்துவன அல்ல.

இலங்கை ஒரு சிறிய தீவு என்பதால் முழுத்தீவும் ஒரு பேரரசின் கீழ் ஆளப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. அந்த அரசு வலுவிழந்து போன நிலைகளில் சிற்றரசுகள் தோன்ற இடம் ஏற்பட்டது. இலங்கையில் இருந்த அரசு கட்கு நிரந்தரமான எல்லைகள் இருந்த அரசு கட்கு நிரந்தரமான எல்லைகள் இருந்ததாகவோ அவை ஃ மொழி அடிப்படையில் அமைந்ததாகவோ கருத அதிக ஆதாரம் வடக்கில் யாழ்ப்பாண இராச்சியம் காலத்தால் மிகவும் பிற்பட்டதும் சோழப் பேரரசுகளின் படையெடுப்பின் தொடர்ச்சியாகவே நிறுவப்பட்டதும் ஆகும். தமிழர்கள் யாழ்ப்பாண அரசின் எல்லைக்கட்கு வெளியே பெருமளவில் வாழ்ந்தனர். அதோடு யாழ்ப்பாண இராச்சியம் நிறுவப்படுமுன்னமே குடாநாட்டுக்கு வெளியே தீவின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கு உயர்ந்த தமிழ்க் கலாச்சாரமும் இருந்து வந்தன. யாழ்ப்பாண மண்ணில் அகழ்ச்தெடுக்கப்பட்ட பௌத்த மதச் சின்னங்களும் தென்னிலங்கையில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற வைசமயச் சார்புடைய புதை பொருள்களும், யாழ்ப்பாண ஊர்ப்பேர்களில் சிங்கள மொழி பாதிப்பும் சிங்கள ஊர்ப் பேர்களில் தமிழ்த் தன்மையும் மொழிஃ மதஃ இனஃ அடிப்படையிலான எல்லைகளின் அடிப் டையில் அரசுகள் அமையவில்லை என்பதையே காட்டுகின்றன. எனவே தமிழ் மக்களின் இன் றய விடுதலை போராட்டம் அழிந்து போன யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி அல்ல என்பது வலியுறுத்தப்பட வேண்டும் . இன்றைய போராட்டத்தின் நியாயமும் நெறியும் சமகால அரசியலினின்றே எழுவன.

சிங்கள – தமிழ் இன வேறுபாடு ஆரிய திராவிட வேறுபாடாகக் காண்பிக்கப்பட்;டு வந்துள்ளது. இந்த வரலாற்றுப் பொய்க்கு மகாவம்சம் பெரும் பங்களித்துள்ளது. இளவரசன் பற்றிய கதை மிகவும் தெளிவீனமானது. அவனது சொந்த நாடு இந்தியாவின் கிழக்குக் கரையில் இருந்ததா மேற்குக் கரையில் இருந்ததா என்பதே நிச்சமில்லாது உள்ளது. அப்படியே விஜயன் ஆரிய இளவரசனாக இருந்தாலும் முழுச் சிங்கள இனமும் அவனது வழித்தோன்றல்கள் என்பது அபந்தம். 1983 இன் முற்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவத்துறை பேராசிரியர் வலன்றைன் பஸ்நாயக்க தானும் வேறு சில மருத்துவத் துறை ஆய்வாளர்களும் நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகளை ஒரு ஆய்வுக் கூட்டத்தில் முன் வைத்தார் ; அதன்படி உருவத்திலும் உடலமைப்பிலும் தமிழருக்கும் சிங்களவருக்கும் உள்ள வேறுபாடுகள் எந்தவித விவர முக்கியத்துவமும் அற்றவை. நகரவாசிகளான தமிழருக்கும் சிங்களவருக்குமிடையிலான உருவ உடலமைப்பு வேறுபாடுகளும் இலங்கையின் நகர வாசிகட்கும் கிராம வாசிகட்குமிடையிலான வேறுபாடுகளுடன் ஒப்பிடுகையில் அற்பமானவையே மறுபுறம் இந்தியாவில் ஆரிய, திராவிட இனத்தவரின் சராசரியான உருவ உடலமைப்பு வேறுபாடுகள் ( அங்கு ஏற்பட்டுள்ள இனக் கலப்பையும் மீறி) புள்ளிவிவர முக்கியம் உடையன.

சிங்களவர்களிடையே ஒரு சாதிப்பிரிவினரான “சலாகம’’சாதியினர் தென் இந்தியாவிலிருந்து டச்சுக்காரரால் கொண்டு வரப்பட்டுத் தென்மேற்குக் கரைப் பகுதியில் குடியமர்த்தப்பட்டவர்களாவர். அவர்களின் குடும்ப பேர்கள் ( சிங்களத்தில் சொன்னால் இல்லப் பேர்கள்) தமிழ்ப்பேர்களே. அது மட்டுமன்றி கராவே எனப்படும் மீனவ குலத்தினர் ஆதியிற் தமிழர்களே என்ற கருத்து கலாநிதி மைக்கல் ரொபேட்ஸ் எனும் இலங்கையரால் ஆதாரங்களுடன் முன் வைக்கப்பட்டுள்ளது. மேற்குக் கரையில் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் கத்தோலிக்க மதத்தவர்களாகவே இருந்தனர். இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அவர்களும் பெரும்பாலோர் (கத்தோலிக்க திருச்சபையிலேயே அவர்களுட் பெரும்பாலோர் (கத்தோலிக்க திருச்சபையின் கட்டளை ஒன்றைத் தொடர்ந்து) சிங்களத்தைத் தம் தாய் மொழியாக்கிக் கொண்டனர். இவர் கள் மட்டுமன்றி ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலத்திற்கு முன்னம் தென்னியில் கள்ளிறக்கும் தேவைக்காக கேரளத்தினின்று வருவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இலங்கையிலேயே நிரந்தரமாகக் குடியேறிச் சிங்களப் பெண்களை மணந்து சிங்கள இனத்தவர்களாகிவிட்டனர். கரையோரப் பகுத ளில் அராபிய இனத்தவருடனான நீண்ட காலத் தொடர்பும் அதன் பின் போர்த்துக்கேய கொலனித்
துவத்தின் கீழான இனக்கலப்பும் இனத் தூய்மையை கேள்விக்கிடமாக்கி வேறுபாடுகள் எந்தவித புள்ளிவிவர முக்கியத்துவமும் அற்றவை. நகரவாதிகளான தமிழருக்கும் சிங்களருக்குமிடையிலான உருவ உடலமைப்பு வேறுபாடுகளும் இலங்கையின் நகர வாசிகட்கும் கிராம வாசிகட்குமிடையிலான வேறுபாடுகளுடன் ஒப்பிடுகையில் அற்பமானவையே மறுபுறம் இந்தியாவில் ஆரிய, திராவிட இனத்தவரின் சராசரியான உருவ உடலமைப்பு வேறுபாடுகள் (அங்கு ஏற்பட்டுள்ள இனக் கலப்பையும் மீறி) புள்ளிவிவர முக்கியம் உடையன.

சிங்களவர்களிடையே ஒரு சாதிப்பிரிவினரான “சலாகம’’ சாதியினர் தென் இந்தியாவிலி;ருந்து டச்சுக்காரரால் கொண்டு வரப்பட்டுத் தென்மேற்குக் கரைப் பகுதியில் குடியமர்த்தப்பட்டவர்களாவர். அவர்களின் குடும்பப் பேர்கள் (சிங்களத்தில் சொன்னால் இல்லப்பேர்கள்) தமிழ்ப் பேர்களே. அது மட்டுமன்றி கராவே எனப்படும் மீனவ குலத்தினர் ஆதியிற் தமி;ழர்களே என்ற கருத்து கலாநிதி மைக்கல் ரொபேட்ஸ் எனும் இலங்கையரால் பல ஆதாரங்களுடன் முன் வைக்கப்பட்டுள்ளது. மேற்குக் கரையில் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் கத்தோலிக்க மதத்தவர்களாகவே இருந்தனர். இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அவர்களுட் பெரும்பாலா னார் (கத்தோலிக்க திருச்சபையின் கட்டளை ஒன்றைத் தொடர்ந்து) சிங்களத்தைத் தம் தாய் மொழியாக்கிக் கொண்டனர். இவர்கள் மட்டுமன்றி ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலத்திற்கு முன்னம் தென்னையில் கள்ளிறங்கும் தேவைக்காக கேரளத்தினின்று வருவிக்கப்பட்ட தொழிலாளர்
கள் இலங்கையிலேயே நிரந்தரமாகக் குடியேறிச் சிங்களப் பெண்களை மணந்து சிங்கள இனத்தவர்களாவிட்டனர். கரையோரப் பகுதிகளில் அராபிய இனத்தவருடனான நீண்ட காலத் தொடர்பும் அதன் பின் போர்த்துக்கேய கொலனித்துவத்தின் கீழான இனகலப்பும் “இனத் தூய் மயை’’ கேள்விக்கிடமாக்கி விட்டன. அண்மைக் காலங்களிலும் தமிழ் சிங்கள உயர்சாதி யினர் சாதிக்கலப்பு திருமணங்களை எதிப்பதில் காட்டும் உக்கிரத்தை இனக்கலப்புத் திருமணங களில் காட்டாமை. உண்மையில் வர்க்க வேறுபாடுகள் இனவேறுபாடுகளை விட மேலோங்கி நிற்பதையே உணர்த்துகிறது.

சிங்கள – தமிழ் கலாசார வேறுபாட்டை வலியுறுத்த முனைவோர் காட்டும் ஒரு சாட்சியம் மொழி தொடர்பானது. சிங்கள மொழி ஆரியமொழி எனவும் தமிழ் திராவிட மொழி எனவும் நீண்டகால hகவே கூறப்பட்டு வந்துள்ளது. சிங்களம் ஆரியமொழி என்பதற்கான ஆதாரம் தெளிவினமானது. நவீன சிங்கள மொழியின் தோற்றுவாய் இலங்கையில் பழமை தொட்டே இருந்த ஹெல எனும் மொழி என்று கருதப்படுகிறது. அதன் ஓசைகள் வடமொழிகளின் ஓசைகளிலும் வேறுபட்டவை. பௌத்தத்தின் வருகை பாலிமொழிச் சொற்களையும் அவை சார்ந்த ஓசைகளையும் சிங்களத்திற் புகுத்தியது. இதனை அடுத்தே சமஸ்கிருதத்தின் செல்வாக்கு பெருமளவும் மஹாயான பௌத்தத் தத் தொடர்ந்து ஏற்பட்டது. சிங்களமொழியில் அன்றாட புழக்கத்தில் உள்ள பல சொற்கள் தமிழ் மூலத்தை உடையன. அது மட்டுமன்றிச் சிங்கள எழுத்து வடிவங்கள் தமிழில் வட எழுத்துக்களை எழுத அமைக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களையும் அவற்றை ஒத்து அமைந்த மலையக எழுத்துக்களையும் பெருமளவில் ஒத்தவை. சிங்கள இலக்கண நூலுக்கும் தமிழ் இலக்கண நூலுக்குமிடையிலான ஒற்றுமைகள் மட்டுமின்றி வாக்கிய அமைப்பு, சந்தி, விகாரம் போன்ற அம்சங்களில் உள்ள ஒற்றுமைகள் சிங்களத்தைத் தென்னிந்திய மொழிகட்கு மிக நெருக்கமாக வைக்கின்றன. யாவற்றிலும் முக்கியமாக ஆரிய மொழிகளில் பெயர்ச் சொற்கள் யாவற்றுக்கும் அவற்றின் ஒசைக்கமைய ஆண் பெண் (சில சமயம் அலி) என்று பால்வேறுபாடுகள் அமையும். சிங்களத்துக்கோ, தமிழ்ற்போன்று, ஆண் பெண்பால் வேறூபடு உயர்திணைப் பெயர்கட்கு மட்டுமே உள்ளது. விலங்குகளையும் சடப்பொருட்களையும் குறிக்கும் பெயர்கள் பால்வேறு பாடற்று அஃறினையாகவே கருதப்படுவன. ஆரிய சிங்கள இனம் என்ற மாயை மஹா வம்சத்தில் சரலாற்றுப் பொய்களைச் சார்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே சிங்களத்தின் “ஆரியத்’’ தன்மை அதிகம் வலியுறுத்தப்பட்டது. தனித் தமிழ் இயக்கம் போன்று சிங்களத்தைத் தூய்மைப் படுத்தும் இயக்கம் ஒன்று இந்த நூற்றாண்டில் ஏற்பட்டபோது சமஸ்கிருதச் சொற்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிங்களம் ஆரிய மொழியென்றே ஏற்றுக் கொண்டாலும் அதன் சொல் வளமும் செழுமையும் நேரடியாகவே தமிழினின்று பெருமளவு ஊட்டப் பெற்றமை என்பது மறுக்க இயலாதது.

இன்றைய சிங்கள – பௌத்த பேரினவாதம் தேரவாத பௌத்தத்தை வலியுறுத்துவதில் மிகவும் கரிசனையுடையதாயிருக்கிறது. தேரவாத (ஹீனாயான) பௌத்தமே சிங்கள மக்களிடையே எப் போதும் நினைத்து வந்தது என்ற கருத்து பல காலமாகவே இலங்கையில் மேலோங்கியுள்ளது. இலங்கையில் மஹாயான பௌத்தம் ஒரு காலத்தில் தழைத்தோங்கியிருந்தது என்பது அதில் இந்துமதத்தின் செல்வாக்கு ஒங்கியிருந்தது என்பதும் அரசியல் மோதல்களின் மூலம் தேரவாதம் வென்றது என்பதும் வரலாற்று உண்மைகள் இன்று நடைமுறையில் உள்ள பௌத்தம் உண் மையான தேரவாதம் அல்ல. தேரவாத பௌத்தம் தெய்வ வழிபாட்டை நிராகரிக்கிறது. புத்த பிக்குகளிடையேயும் மிகச் சிறுபான்மையான பௌத்தர்களிடையே தேரவாத பௌத்த நடைமுறை உள்ளது. மற்றப்படி பெரும்பாலான பௌத்தர்கள் இந்து சமயக் கடவுள் வழிபாட்டிலும் இந்து சமயத் தலங்களான கதி;ர்காமம் முனீஸ்வரம் போன்றவற்றைக் கொண்டாடுவதிலும் தேரவாதத் தினின்றும் வேறுபடுகிறார்கள். சிங்கள, தமிழ் மரபு சார்ந்த கலாச்சாரங்களிடையிலான ஒற்றுமை கள் மேனாட்டுப் பாதிப்புக்குட்பட்ட சிங்களவர்களது (அல்லது தமிழர்களது) கலாசாரத்திற்கும் அவ்வாறான பாதிப்புக்குட்படாதவர்களது கலாச்சாரத்திற்மிடையிலான ஒற்று மைகளை விட அதிகமானவை.

மொழி, சமயம், கலாசாரம் ஆகிய பல துறைகளிலும் இரண்டு இனங்கட்டுமிடையிலான ஒற்று மையை வரலாற்றில் நிரந்தரமாகவே வேறுபட்;டும் பிரித்தும் நின்ற இரு இனங்களைக் குறிக்க வில்லை. மாறாக, ஒன்றுக்கு ஒன்று ஆதாரமும் ஊட்டமும் வழங்கிய இரு சகோதர இனங்களையே குறிக்கின்றன. தென்னிந்திய பேரரசுகளின் மோதல்களின் போது சிங்கள அரசர்கள் ஒன்றையோ மற்றதையோ ஆதரித்துச் செயற்பட்ட சூழ்நிலைகளும் சிங்கள அரசர்களிடையே ஏற்பட்ட மோதல் களில் தென்னிந்திய அரசுகளின் குறிக்கீடும் தென்னிந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நிறைய உள்ளன. இது நமக்குக் கூறும் உண்மை ஒன்றே நிலமான்ய சமுதாயத்தில், நவீன தேசிய அரசு நமக்குப் பரிச்சயமாகும், அரசர்களிடையிலான மோதல்கள் இன, மொழி அடிப்படையிலன்றி ஆளும் அதிகார வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளை ஒட்டியே நேர்ந்தன. கொலனித்துவத்தின் வருகைக்குப் பின்னுங்கூட இலங்கையின் ஒரு முக்கிய இவர்களிடையிலான முரண்பாடுகள் பகைமையான தன்மையைப் பெறவில்லை. பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ் ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டிய புதிதாக உருவான முதலாளித்துவ வர்க்கங்கள் தோற்றமும், பிரித்தானிய னொலனித்துவ பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதன் சிருஷ்டியான உள்ளுர் அதிகார வர்க்கத்தின் தோற்றமுமே இலங்கையின் இனவாதத்தின் தோற்றத்துக்கும் காரணமாயின. இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் ஏற்பட்ட இவ்விருத்தி, கொலனித்துவத்தின் பிடியிளின்று மீண்ட பல்வேறு நாடுகளிலம் சுரண்டும் வர்க்கங்கள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட விளைவு களை ஒத்தது.

பொருளாதாரப் பிரச்சினைகளையும் வர்க்க முரண்பாடுகளையும் திசை திருப்புவதில் இனம், மதம், மொழி, பிரதேசம் சாதி போன்ற நாடுகளைப் பயன்படுத்துவதில் சுரண்டும் வர்க்கங்கள் தற்காலி கமான வெற்றி பெற்றன. இதன் விளைவாக நவகொலனித்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக சர்வதேச மட்டத்திலான போராட்டம் ஓரளவு பலவீனமடைந்துள்ளது.

இலங்கையின் பெரும்பான்மை இனத்தினர் மத்தியிலும் சிறுபான்மையினர் மத்தியிலும் இன உணர்வு அண்மைக் காலங்களிவ் தீவிரமாக வளர்ந்துள்ளது. எனினும் தேசிய வேறுபாடுகள் நீண்டகாலமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரவில்லை என்பதும் இலங்கையின் வரலாற்றில் அரசுகள் இன அடிப்படையிலேயே தம் எல்லைகளை அமைத்ததற்கு ஆதாரம் என்பதும் இன்று தேசிய இனங்களிடையிலான முரண்பாடுகளின் குறிப்பான தன்மை அண்மைக்கால வரலாற்றின் அடிப்படையிலேயே சரிவர ஆராயப்படமுடியும் என்பதைக் காட்டுகின்றன.

தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியம் பிரித்தானிய கொலனித்துவத்தால் வளர்க்கப்பட்ட அரசாங்க உத்தியோகத் துறையின் வளர்ச்சியும், அந்த வர்க்கங்கள் தம் பொருளாதார ஆதிக் கத்தையும் தம் வசதிகளையும் சலுகைகளையும் பேணி வளர்க்கும் தேவை காரணமாக, பதிய சமுதாய முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. ஒருபுறம், பிரித்தானிய கொலனி;ய ஆதிக்கத்தின் விளைவாத் தம் வர்க்க நலன்கள் பாதிக்கப்படுவதால் கொலனித்துவ விரோதப் போராட்ட உணர்வும் மறுபுறம், பெருகிவரும் தம் தேவைகளைச் சந்திக்கப் போவதுமான அளவில் பொரு ளாதார நிர்வாகத்துறையில் விருத்தியின்மை காரணமாகத் தம்முள்ளே போட்டியும் உருவாகின. பிரி;த்தானியரிடமிருந்து போராடி வென்ற சலுகைகளைப் பங்கிடும் போட்டியில் சமுதாய வேறுபாடு கள் பலவும் பாவிக்கப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியில் வேளாளரை ஒத்த கொய்கம சாதியினர் வியாபாரத் துறையில் அதிகம் அக்கறை காட்டவில்லை. கரையோரப் பகுதிகளில் இருந்த சாதிப்பிரிவினர் வியாபாரத்துறையில் ஈடுபட்டது மட்டுமன்றி கிறிஸ்தவ நிறுவனங்கள் ஏற்படுத்திய கல்வி வசதிகளையும் அதிக அளவில் பயன்படுத்தினர். எனவே, சாதி வேறுபாடுகளும் சாதி ஒடுக்கு முறைகளும் தொடர்வதற்கு அவசியமான பொருளாதார அஸ்திவாரம் பலவீனமடைந்தது. சாதி ஒடுக்குமுறை பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய சில சாதிப்பிரிவினரைத் தொடர்ந்து பாதித்தாலும் அது வட இலங்கையின் சாதி ஒடுக்குமுறையுடன் ஒப்பிடுகையில் விளைவாகசே வலுவிழக்க ஆரம்பித்து விட்டது. வட இலங்கையில், வேளாளர் மத்தியில் இருந்த உயர் வர்க்கத் தினர் கல்வி துறையில் ஏறத்தாழப் ப+ரண ஆதிக்கம் செலுத்தியமை அங்கே சாதி அடிப்படை யிலான ஒடுக்கம் தொடர்வதற்கு மேலும் உதவியது. சாதி வேறுபாடுகள் நீண்டகாலமாகவே தென்னிலங்கை அரசியலில் ஒரு முக்கியபங்கு வகித்தபோதும், வடக்கிலேயே அவை ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டமாக வெடித்தெழும் நிலை உண்டானது. தெற்கில் சாதிவேறுபாடுகள் ஒப்பிடத்தக்க வலிமை உள்ள சமுதாயப் பிரிவுகளிடையிலான போட்டியாக மட்டுமே அமைந்தது. பிரித்தானிய ஆட்சியுடன் கீழ் வசதி படைத்த பறங்கியர் மற்றும் கிறிஸ்தவர்கள் ஓரளவு சலுகை களை அனுபவித்தனர். ஆங்கிலக் கல்வி வசதிகளைத் தருவதில் கிறிஸ்தவ, கத்தோலிக்க பாட சாலைகள் முன்வரிசையில் நின்றதால் அந்த மதங்களைச் சேர்ற்தவர்கள் கல்வி வசதி பெற்று உயர் உத்தியோகங்களில் அமாந்து எளிதாயிற்று கிறிஸ்தவ நிறுவனங்கள் மதமாற்றத்தை முக் கிய இலக்ககாகக் கொண்ட போதிலும், காலப்போக்கில், உயர்வர்க்க பௌத்த, இந்துக் குடும்பங் களைச் சேர்ந்;தவர்களுடன் நல்லுறவைப் பேணுவதிலும் கவனம் செலுத்தினர், வடக்கில் அமெரிக்க மிஷன்களின் வருகை, கொழும்பு தவிர்ந்த மற்றைய பகுதிகளை விட அதிக அளவில் யாழ்ப பாணம் கல்வி வசதிகளைப் பெற ஏதுவாயிற்று. யாழ்குடாநாட்டின் பொருளாதாரம் ஒரு புறம் கடும் உடல் உழைப்பை வேண்டி நின்ற அதன் சீதோஷ்ண நிலையாலும் மறுபுறம் பிரித்தானியர் ஆட்சியில் அரசாங்க உழைப்பினதும் சிறு வியாபாரத்தின் கவர்ச்சியாலும் உருப்பெற்றது. யாழ்ப் பாணக்குடா நாட்டில் வீடும் குடும்பமும் இருக்க வெளிய+ரில் உழைப்பும் உத்தியோகமும் கொண்ட ஒரு மணிஓடர் (காசுக் கட்டளை) பொருளாதாரம் அங்கு உருவானது. இவ்வாறு உத்தியோகக் கவர்ச்சியாலும் வியாபார வாய்ப்புகளாலும் வெளிய+ர்களுக்குச் சென்றோரில் வசதி படைத்த பலர் கொழும்பிலும் தென்னிலங்கையின் பிற நகரங்களிலும் நிரந்தரமாகவே குடியேறினர். கணிசமான தொகையினர் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் சமுதாயச் சூழலைப் பிரிய மனமில்லாமலம் உழைப்பின் தேவையாலம், இரண்டுங்கெட்ட நிலையில், வாடகை வீடுகளில் கொழும்பில் குடியமர்ந்தனர். கொழும்பில் சொந்தமாக வீடு வாங்கியோர் கூட தம் யாழ்ப்பாண நிலபுலன்கள் மீதிருந்த பிடிப்பை விட்டுக் கொடுக்க விரும்பாமலே இருந்தனர். அண்மைக்காலம் வரை யாழ்ப்பாணத் தமிழர் அரசாங்க உத்தியோகங்களிலும் உயர் தொழில்களிலும் செலுத்திய ஆதிக்கம் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் மீது பகைமை ஏற்பட்ட இடமளிக்கவில்லை. யாழ்ப்பாணத் தமிழ் உத்தியோகத்தர்களும் வர்த்தகர்களும் உழைப்பைப் பெறும் பிரதேசத்துடன் அதிக ஓட்டுதலின்றி யாழ்ப்பாணத்தை மையமாகக் கருதி செயற்படுவாதக் கூறப்பட்ட குற்றச்சாட்டும் அதன் விளைவாக பகைமை உணர்வும் மட்டக்களப்புத் தமிழ்உயர் - நடுத்தர வர்க்கத்தினரிடம் காணப்பட்டதைக் கருத்திற் கொண்டால் முரண்பாட்டின் அடிப்படை இனப்பகை அல்ல என்பதும் எண்ணிக்கையில் விரிந்தும் தன் தேவைகளில் அதிகரித்துவரும் நடுத்தர வர்க்கமொன்றில் பொரு ளாதார தேவைகளும் அதனுள் மேன்மைக்கான போட்டியுமே இன,மத, அடிப்படையிலான முரண் பாடுகளை ஊக்குவித்தது எனபதும், விளங்கும்,பறங்கியர்கட்கும் அடுத்தபடியாக கிறிஸ்தவர்களின் பிரித்தானிய கொலனி நிர்வாகத்திலும் பிரித்தானியக் கம்பெனிகளிலும் உயர் பதவிகளைப் பெறு வதில் சலுகை காட்டப் பெற்றவர் சிங்கள பௌத்தத்தின் பிற்காலத் தலைவர்கள் பலரும் அவர்களது முன்னோரும் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தே தம் செல்வத்தையும் அதிகாரத்தையும் பெருக்கிக் கொண்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வத்திக்கான் அதி கார பீடத்திற்கு நேரடியாகக் கட்டுண்ட இலங்கையின் கத்தோலிக்க உயர் வர்க்கத்தினர் போலன்றி புரட்டஸ்தாந்த கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மத்தியிலும் இந்துக்கள் மத்தியிலும் இருந்த உயர்வர்க்கத்தினருடன் கூடுதலான நல்லுறவை வெளிப்படையாகவேனும், பேணினர். இதன் விளைவாக பௌத்தர் மத்தியில் இருந்த படித்த நடுத்தர வர்க்கத் தீவிரவாதிகள் கத்தோலிக்கத் திருச்சபை மீதும் அதன் ஆதரவின் கீழ் கத்தோலிக்க உயர்தர வர்க்க நலன்களை பேணுமாறு செயற்பட்ட கத்தோலிக்க நடவடிக்கைமீதும் நீண்டகாலமாகப் பகைமை காட்டினர். தமிழர் மத்தியில் இருந்த கத்தோலிக்கர்கள் பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கி யாராகவே இருந்தனர். இவர்களுள் வசதி படைத்தோரில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து பிற்காலத்தில் வந்து மேல் மாகாணத்தில் குடியேறியோரே எனலாம். ஆயினும், இலங்கையில் நெடுங்காலமாக பிற்போக்குவாத அரசியலையே ஆதரித்துவந்த கத்தோலிக்கத் திருச்சபை அதிகார பீடத்தின் செல்வாக்க அண்மைக் காலம்வரை, இவர்கள் மத்தியில் ஓங்கியே இருந்தது. இது, இந்து கத்தோலிக்க முரண்பாடாக வளராமைக்கு முக்கிய காரணம், தமிழ் நடுத்தர வர்க்க அரசியல் தலைமை வடக்கில் தொடர்ச்சியாக செலுத்திய ஆதிக்கமும் அவர்களது நலன்களில் கத்தோலிக்கத் திருச்சபையின் செயல்கள் குறுக்கிடாமையுமே எனலாம். ஆறுமுக நாவலர் காலத் தில் ஏற்பட்ட சைவப் புனருத்தாரணத்தின் பாதிப்பு பிற்கால அரசியல் முக்கியத்துவம் பெறத்தவறி விட்டது.

கத்தோலிக்க திருச்சபைக்குள் தேசிய இனப் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றது. 1977க்கும் பிற்பட்ட காலத்திலேயே எனலாம். மொழிப்பிரச்சினையில் ஒருவித அக்கறையுமே காட்ட திருச் சபை, பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டபோது, அதை ஒரு ஜீவமரணப் போராட்டமாகக் கருதுமளவுக்கு உக்கிரமாக முன்னின்று போராடியது இவை. பிரச்சினையில் கத்தோலிக்க திருச் சபையின் அக்கறை அதன் அதிகார பீடத்தின் வர்க்க நலன்களை ஒட்டியமைந்தமையே காட்கின்றன. தேசிய இனங்களிடையிலான முரண்பாட்டின் பாதிப்பு திருச்சபைக்குள் அண்மைக் காலங்களில் உக்கிரமடைந்தமைக்கு கீழ்மட்டக் கத்தோலிக்க குருமாருடன் தொடர்புடைய, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய கத்தோலிக்க மக்கள் வடக்கில் அரசு அடக்குமுறைக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை ஒரு முக்கிய காரணமெனலாம்.

தேசிய இனப்பிரச்சினை இன்றுள்ள நிலைக்கு வளர்ப்பதில் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் புகுத்தப்பட்டமை, 1970களில் தேசிய சர்வதேசிய நிலவரங்களில் ஏற்பட்ட மாற் ;;களின் துணையால், கணிசமான பங்கு வழங்கியது. எனினும் தரப்படுத்தல் பற்றி யாழ்ப ;பாணத்திலும் கொழும்பிலும் உள்ள தமிழ் மாணவர் மத்தியில் காணப்பட்ட தீவிர உணர்வு பிற் பகுதிகளில் உள்ள தமிழ் மாணவரிடையே காணப்படவில்லை. தரப்படுத்தல், மாவட்ட அடிப் படையிலான அனுமதியுடன் இணைக்கப்பட்டபோது, கிழக்கு மாகாணத்திலும் வவுனியா, மன்னால், முல்லைத்தீவு, மலையகம் ஆகிய பகுதிகளில் அது வரவேற்பை பெற்றது. அது மட்டுமன்றிக் கிளிநொச்சியைத் தனி மாவட்டமாகும் கோரிக்கையிலும் மாவட்ட அடிப்படையிலான அனுமதி முக்கிய பங்கு வகித்தது எனலாம். தரப்படுத்தலுக்கான நோக்கங்கள் தவறானவை. தரப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் கண்டனத்துக்கரியது என்பதில் நமக்கு எது விதமான தடு மாற்றமும் இல்லை. ஆயினும் கல்வி வசதி குறைந்த பகுதிகட்கும் கல்வி வசதி குறைந்த மாணவர்கட்கும் சலுகை காட்டப்பட வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. மாவட்ட அடிப்படையிலான அனுமதி உண்மையில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள உயர் நடுத்தர வர்க்கத்தினருக்குச் சாதகமாக அமைந்தது. அதன் விளாவாக கிழக்கில் உள்ள பாடசாலைகளில் பேரைப் பதிந்து கொண்டு கொழும்பிலோ யாழ்ப்பாணத்திலோ கல்வி பெற்று மாவட்ட அடிப் படையில் அனுமதிபெறும் ஊழல்;களை நாம் கண்டிருக்கிறோம். மாவட்ட அனுமதி முறை அடிப்படையான கல்விப் பிரச்சினையை அதன் வர்க்க அடிப்படையையும் தட்டிக் கழித்ததன் மூலம் இனவாத உணர்வுகள் வளர்வதை மறைமுகமாக ஊக்குவித்தது. எனினும், முக்கியமான விஷயம் யாதெனில் பல்கலைக்கழக அனுமதி தேசிய இனப்பிரச்சினையில் பகை முரண்பாடுகள் உக்கிரமடைய வகித்த பங்கு எனலாம். இது முரண்பாட்டின் வளர்ச்சியில் உயர் நடுத்தர வர்க்க நலன்கள் செலுத்தும் ஆதிக்கத்தையே காட்டுகின்றன. தமிழ்ப் பிரதேசங்களில் மாவட்ட அடிப படையிலான அனுமதி பற்றிய கருத்து முரண்பாடுகள் இவ்வர்க்க நலன்களின் முக்கியத்தையே மேலும் உணர்த்துகின்றன.

இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட முதலாவது இனக் கலவரமான சிங்கள – முஸ்லிம் மோதலின் பின்னணியில் இரு சமூகங்களையும் சேர்ந்த வியாபாரிகளிடையே இருந்த போட்டியே காரணமாக இருந்தது. இன்றுவரை இலங்கையின் இனவாத அரசியலிலும் அதன் விளைவாக ஏற்பட்ட மோதல்களிலும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் உள்ள “பாதுகாப்பின்மை உணர்வும்’’ சமுதாயத்தில் தம்மை உயர்த்திக் கொள்ளும் வெட்கையும் முக்கிய கருவியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. பல்வேறு இனக்கலவரங்களின் போதும் உதிரிப் பாட்டாளிகளெனப்படும் ஒட்டுண் ணிகளே பெரும்பாலும் காடைத்தனத்திலும் கொலை கொள்ளை தீவைப்புச் செயல்களில் ஈடு படுமாறு தூண்டப்பட்;டு இனவாதப் பிற்போக்குவாதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 1977 வரை தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியில் இன அடிப்படையிலான பகைமை வெளிப்பட்ட சூழ்நிலைகள் ஏறத்தாழ இல்லை எனலாம். இனவாத உணர்வுகள் மேலோங்கிய தொழிற் சங்கங்கள் பெரு மளவம் நடுத்தர வர்க்கங்களின் நலன் சார்ந்த தொழிற் சங்கங்களாகவே இருந்தன. 1983 கல வரத்தின்போது முன்னைய கலவரங்களின் போதிருந்ததைவிடக் குறிப்பிடத்தக்க அதிக அளவில் நடுத்தரவர்க்கத்தினரிடையே இனவாத உணர்வு இருந்தமை கவனித்தக்கது.

1970களில் இடைப்பகுதியையொட்டி பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளது அரசியல் நிலை குலையும் அவர்களது தொழிற்சங்க ஸ்தாபனங்களின் பலம் அழிந்தமையும் தொழிற்சங்க அரசியலில் தேசிய முதலாளித்துவ ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. அது மட்டுமன்றி தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டுவந்த ய+. என். பி. புதிய அதிதீவிர தேசியவாத இனவாத வேஷத்துடன் தொழிற்சங்கத் துறையில் ஆதிக்கம் செலுத்த வசதி ஏற்பட்டது. 1977 இன் பின், இனக்கலவரங்களை எதிர்த்து நிற்க இலங்கையின் தொழிற்ங்க நிறுவனங்கள் பல வீனப்பட்டமை பாராளுமன்ற இடதுசாரிகளின் சந்தர்ப்ப வாதத்தின் விளைவாகப பல தொழிற்சங்க தலைமைகள்,தேசிய மட்டத்தில் படுபிற்போக்கு சக்திகளின் கைக்கு மாறியதன் விளைவெனலாம். எனினும், இன்றுங்கூட இனவாதத்தையும் இன ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதில் இடதுசாரி இயக்க மரபுடன் நீண்ட தொடர்பு கொண்டிருந்த தொழிற்சங்கங்கள் முன்னணியில் நிற்பது கவனிக்கத் தக்கது.

ஒடுக்கப்பட்ட மக்களான விவசாயிகள், தொழிலாளிகள் மத்தியில் தொடர்ச்சியான இனப்பகை உணர்வுகள் இருந்தமைக்கு மலையகத்தில், முக்கியமாக கண்டி மாத்தளை போன்ற மாவட்டங் ளில், சிங்கள விவசாயிகட்கும் தோட்டத் தொழிலாளருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்து வந்தமை மட்டுமே குறிப்பிடலாம். இது பிரித்தானிய ஏகாதிபத்தியம் சிங்கள விவசாயிகளின் காணி களைப் பறித்து இந்தியாவிலிருலிருந்து கொண்டு வரப்பட்ட விவசாயிகளை அங்கு தோட்டத் தொழிலாளர்களாகக் குடியமர்த்தியதன் விளைவாகும். காணியற்ற சிங்கள விவசாயிகள், தோட்ட தொழிலாளர்களை, தங்கள் சிறந்த நிலங்களைப் பறித்தவர்களாகவே பார்க்க நேரிட்டது. திட்டமிட்ட முறையில், தோட்டத் தொழிலாளருக்கும் விவசாயிகட்கும் இடையே தொடர்பு வராதவாறு பிட்டிஷ கொலனித்துவ தோட்ட நிர்வாகம் கவனித்துக் கொண்டது. பின்னர், தோட்டத் தொழிலாளரின் கல்வி அறிவின்மையும் பின் தங்கிய அரசியல் உணர்வையும் பயன்படுத்தி அவர்கள் மத்தியில் பிற்போக்கான தொழிற்சங்கம் வளர்ந்தன. அவர்கள் ஓரளவு அரசியல் விழிப்புப் பெறக்கூடிய சூழ்நிலையில் பிரஜாவுரிமைச் சட்டத்தைப் புகுத்தி அவர்களை இலங்கை அரசியலில் பிரதான போக்கினின்றும் பிரிப்பதில்சிங்களப் பேரினவாத ய+. என். பி. வெற்றி கண்டது. தோட்டங்கள் தேசியமயமானதை அடுத்து 1970களில் சிங்களப் பேரினவாதிகள், சில தோட்டங்களினின்;று மலையகத் தமிழ்த் தொழிலாளரை விரட்டும் முயற்சிகளில் இறங்கினர். வரட்சி காரணமான வேலையின்மையால் தோட்டத் தொழிலாளி நகரவீதிகளில் பிச்சை கேட்கும் நிலையில் வடக்கு – கிழக்கிற்குக் குடிபெயரும் சூழ்நிலையும் ஏற்பட்டன. ஆயினும், 1977இல் மீண்டும் ய+. என். பி. ஆட்சி ஏற்படும் வரை தேசம் பரந்த முறையில் மலையகத் தொழிலாளர் மீது இனவாத வன்முறை கட்டவிழ்க்கப்படவில்லை. தேசிய முதலாளித்துவக் கட்சிகள் ஒருபுறமிருக்க, சந்தர்ப்ப வாத ஜே.வி.பி தலைமை மலையக தமிழ் மக்களுக்கு எதிரான தீவிர இனவாதப் பிரசாரத்தை சிங்கள விவசாயிகள் மத்தியில் 1969க்கும் 1971க்கும் இடையில் கட்டவிழ்ந்து விட்டது. இது ஜே. வி. பி. யின் சந்தர்ப்பவாதத்திற்கும் இலங்கையின் இடதுவாரி இயக்கத்தின் நீண்ட வரலாற்றுக் மிடையிலான வேறுபாட்டை மேலும் எடுத்துக்காட்டுகிறது. இடதுசாரி இயக்கம், ட்ரொட்ஸ்கியத் தாலும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தாலும் திசை திருப்பிப் பலவீனமடைந்த போதும், இனவாதத் தையும் இன ஒடுக்குமுறையையும் கண்டிப்பதில், இன்றும் இடதுசாரி இயக்கத்துடனும் தொழிலாளி வர்க்கப் போராட்டத்துடனும் தொடர்பு கொண்ட சக்திகளே முன்வரிசையில் நிற்பது பிரச்சினையின் வர்க்கத்தன்மையை அழுத்தமாகவும் தெளிவாகவும் காட்டுகிறது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் அண்மைக் காலத்திலேயே தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்ததையும் சிங்களப் பேரினவாதமும் சிறுபான்மையினரிடையே குறுகிய இனவாதமும் நடுத்தர வர்க்கத்தினரின் குறுகியகால நலன்களை ஆதாரமாகக் கொண்டே வளர்க்கப்பட்டன என்பதையும் கண்டோம். இன முரண்பாடுகளின் வளர்;ச்சி தேசிய முதலாளித்துவத்தின் நலன் கட்கு உதவுவதாகத் தோன்றினாலும் அது நாட்டின் இனங்களிடையே முக்கியமாக ஏகாதி பத்தியத்துக்கு எதிராக அணிதிரளக் கூடிய சக்திகளிடையே, முரண்பாடுகளை வளர்ப்பதால் இறுதி ஆராயலில், அது ஏகாதிபத்தியத்தின் நலன்களையே பாதுகாக்கின்றது. தேசிய முதலாளித்துவ
மும் பெரும்பான்மை இனத்தவரும் சிறுபான்மை இனத்தவரும் நாட்டின் பொருளாதாரம் இனப்பகை
யின் விளைவாகப் பலவீனமடைவதால், இறுதியில் தம் நலன்களை ஏகாதிபத்தியத்திற்குப் பலி யாக்கிவிடுகின்றனர். ஆயினும் தேசிய முதலாளித்துவமும் குட்டி ப+ஷ_வா வர்க்கமான நடுத்தர வர்க்கமும் தம் ஊசலாடும் மனப்பான்மை காரணமாகவும் குறுகியகால நலன்களையிட்டு நீண்ட கால நலன்களைப் பறிகொடுக்கும் தம் குறுகிய வரலாற்றுப் பார்வை காரணமாகவும் எளிதாகவே இனவாதத்துக்குப் பலியாகி விடுகின்றன.

ப+ஷ_வா ஜனநாயக அரசியலில் பொதுவாக முதலாளித்துவ வர்க்க நலன்களே பேணப்படுகின்றன. ப+ஷ_வா பாராளுமன்ற அரசியலில் சர்வ ஜன வாக்குரிமையை பேரளவில் முதன்மையானதாகக் கொள்வதால் தன் வர்க்க நலன்களைப் பேணும் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முதலாளித்துவ வர்க்கம் உபாயங்களைக் கையாள்கிறது. பாராளுமன்ற அரசியலில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மோதல் உண்மையில் முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலுள்ள முரண்பாடுகளை மட்டுமே பிரதிபலிக்கிறது. ஒரு சில சூழ்நிலைகளில் இம் முரண்பாடுகளின் சில கூரிய அம்சங்கள் வலியுறுத்தப்படும்போது, தேசிய சுயநிர்ணயம், தேசிய ஒருமை, பொருளாதார சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாராளுமன்ற அரசியல் அதிகாரத்திற்கான மோதலில் முதன்மை பெறுகின்றன. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குட்படும்போது முதலாளித்துவ சீர்திருத்தவாத் திற்கும் முதலாளித்துவ அடக்குமுறைக்குமிடையில் உள்ள முரண்பாடு கூர்மை அடைகிறது. இவ் வாறான நெருக்கடியான சூழ்நிலைகளில் கல்வி, வேலைவாய்ப்புக்கள் போதாமை, பொருளாதாரத் தேக்கம் போன்றவற்றின் அடிப்படைக் காரணங்கள் மறைக்கவும் துரிதமான சமுதாய மாற்றத்தை மறிக்கவும் இனவாதம் ஒரு வலிய ஆயுதமாகிறது. இலங்கையில் மட்டுமன்றி, மூன்றாமுகில் பல நாடுகளிலும் இனவாதம் ஒரு வகையில் இல்லாவிட்டால் இன்னொரு வகையில் பிற்போக்குச் சக்திகளாகவே ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் இனவாதப் போக்குகள் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே காணப்பட்டபோதும், இனவாதம் ஒரு வலிய அரசியல் ஆயுதமாக விருத்தியடைந்தது. இலங்கை தேசிய காங்கிரஸின் பிளவின் காலத்தை அடுத்தே எனலாம். தன்னை ஒரு தேசிய கட்சியாகக் காட்டிக் கொண்ட இனவாதச் சக்தியான ய+. என் . பி. சிறுபான்மை இனத்தினரதும் பாட்டாளி வர்க்கத்தினதும் அரசியல் வலிமையைக் குறைப்பதற்கான காரியங்களையே தம் பிரதான பணிகளாகக் கொண்டிருந்தது. கிழக்கு மாகாணத் தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றமும் மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறிக்கும் சட்டங்களும் இதற்கான முக்கிய உதாரணங்கள் அதேசமயம் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களின் பிரதான பாராளுமன்ற அரசியல் தலைமை இவற்றை எதிர்ப்பதில் அதிக அக்கறை காட்டாமையும், முக்கியமான பிரஜாவுரிமைச் சட்டத்தில் ய+. என். பி. யுடன் ஒத்துழைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கன. இப் பிரச்சினையைக் காரணங்காட்டி தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்த தமிழரசுக்கட்சி இப் பிரச்சினை 1952 பாராளுமன்றத் தேர்தலில் முதன்மைப்படுத்தியது 1952 இல் தமிழரசுக் கட்சியின் படுதோல்வி வடக்கு – கிழக்கு மாகாண அரசியலில் மலையக மக்களுடனான இன ஐக்கியம் எவ்வளவு முக்கியம் பெற்றிருந்தது என்பதையே காட்டுகிறது.

50க்கு 50, அரசாங்கத்தில் மந்திரி பதவிகளைப் பெற்றுத் தமிழர்களின் நலன்களைப் பேணுவது போன்ற தந்திரத்தில் தமிழ் மக்களின் பொருளாதார நலன்களைப் பேணலாம் என்று மக்களை நம்ப வைத்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் “கெட்டிக்கார’ அரசியல், ய+.என்.பி. களனி மாநாட்டில், சிங்களம் மட்டுமே அரசகரும மொழியாகும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டபோது ஆட்டங்கண்டது. ய+. என். பி. ய+. என். பி. யிலிருந்து பிரிந்து வந்த பண்டாரநாயக்கா அமைத்த ஸ்ரீ. ல. சு. கட்சியும் சிங்கள மொழியை இலங்கையின் அரச கரும மொழியாக்கும் கொள்கையை ஏற்றுக் கொண்டே 1956 தேர்தலில் போட்டியிட்டன. ஸ்ரீல. சு. கட்சியின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி பெருவெற்றி கண்டது. இனவெற்றியையொட்;டி வடக்கிலும் தமிழ்க் காங்கிரஸ் படுதோல்வி பெற்றது. ஸ்ரீ. ல. சு. கட்சி இலங்கையின் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது. ஏகாதிபத்திய விரோத உணர்வுகளையும் சிங்களம் படித்த நடுத்தரவ வர்க்கத்தினரிடையே ஆங்கிலம் படித்த அதிகார வர்க்கத்தினருக்கெதிராக நிலவிய உணர்வுக ளையும் அது தனக்குச் சாதகமாக்கச் செயற்பட்டது. ஸ்ரீ. ல. சு. கட்சி பாட்டாளிக் கட்சி அல்ல. எனவே, அதன் மத்தியில் குறுகிய தேசியவாதம் (அதாவது சிங்களப் பேரினவாதம்) இருப்பது இயல்பானதே. ஆயினும் அதன் ஏகாதிபத்திய விரோதத் தன்மை அதைத் தேசிய அடிப்படையில் ஒரு முற்போக்கான சக்தியாகச் செயற்பட அனுமதிக்கிறது. ய+. என். பி. யின் அரசியலோ ஏகாதிபத்தியச் சார்புடையதும் பெரு முதலாளித்துவ வர்க்க நலன்கட்காக இனவாதத்தைப் பிரயோகிக்கும் சந்தர்ப்பவாதத்தையுடையதும் ஆகும். 1956 தேர்தலில் ய+. என். பி. விரோத உணர்வுகளை வெளிப்படுத்திய தமிழரசுக் கட்சியோ, வடக்கு – கிழக்கு அரசியல் நிர்முலமாக்கப் பட்ட தமிழ்க் காங்கிரஸ் தரகு முதலாளி வர்க்கத் தன்மையினின்றும் தன்னை வேறுப்படுத்தி கொள்ளவில்லை. இதன் விளைவுகள் பிற்காலத்தில் பலவகைகளிலும் தம்மை வெளிப்படுத்தின.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாராளுமன்ற இடதுசாரிகள் வெற்றிபெத் தவறியமைக்கும் (1995 இல் பருத்தித்துறை தொகுதி ஒரு விசேட விதிவிலக்கு) அங்குள்ள அரசியல் சர்வதேச அரசியற் பார்வையோ முழு நாட்டினதும் அரசியலையும் பொருளாதாரத்தையுமே கருத்திற கொள்ளாதவிதமாக விருத்தியடைந்தமைக்கும் பாராளுமன்ற இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதத்தை மட்டுமே காரணங்காட்டுவது மிக மலிவான அரசியற் பிரசாரம் உண்மையான காரணங்கள் வடக்கினதும் கிழக்கினதும் சமூக பொருளாதார அமைப்புகளின் மீது தங்கியிருந்தன.

சிங்களப் பிரதேசங்களின் அரசியல் ஒருபுறம் பேரினவாதத்திற்கு இரையாகியபோதும், அங்கு ஏகாதிபத்திய விரோத உணர்வுகளும் சீர்திருத்தவாதமும் அரசியல் முக்கிய பங்கு வகித்தன. சிங்கள மக்களின் ஏகாதிபத்திய விரோத உணர்வையும் சமுதாய மாற்றத்திற்கான விருப் பத்தையும் சரியான முறையில் அணிதிரட்டி ஒரு புரட்சிகர சக்தியை வளர்த்தெடுக்க முடியாத ட்ரொட்ஸ்கிவாதிகளும் பாராளுமன்றவாதக் கொம்ய+னிஸ்ட்டுகளும் பேரினவாதத்தை எதிர்ப்பதில் போதிய தீவிரம் காட்டத் தவறினர். இது, அவர்களது சந்தர்ப்பவாதத் தலைமைகளை எதிர்ப்பாத்ததற்கு மாறாக, பாராளுமன்ற அரசியலில் அவர்களை மேலும் பலவீனப்படுத்தி, ஸ்ரீ.ல.சு.யின் தயவிலேயே பாராளுமன்ற ஆசனங்களை வெல்லும் அவல நிலைக்குத் தள்ளியது. இதனையொட்டி தொழிற் சங்க இயக்கத்திலும் வெகுஜன அரசியலிலும் இடதுசாரிகளின் செலவாக்கும் பலவீனமடைந்ததுடன் தொழிலாளி வர்க்கத் தலைமையிலான போராட்ட சக்திகளும் பலவீனமடைந்தன. தேசிய முதலாளித்துவக் கட்சிகள் தொழிற்சங்க துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவான போதிலும், சிங்கள மக்கள் மத்தியில் இடதுசாரிச் சிந்தனை மரபும் இடதுசாரி அரசியல் மரபும் ஒரு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்றும், பேரினவாத அரசியற் கோஷங்களாலம் ய+.என்.பியின் அடக்;கு முறையாலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழ் நிலையிலும் சிங்கள மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய விரோத உணர்வுகளும் ஜனநாயக குடியுரிமைகள் பற்றிய உணர்வுகளும் அடக்க இயலாத சக்திகளாகத் தொடர்ந்தும் செயற்படுகின்றன.

தமிழ் மக்கள் மத்தியிலான அரசியல் பரவலாகவே ஒன்றைப் பிரச்சினையை மையமாகக் கொண்ட ஒரு கட்சி அரசியலாகவே இருந்து வந்தது முக்கியமாக 1956 முதல் தமிழரசுக் கட்சி 1965 இல் ய+.என்.பி.யுடன் கூட்டுச் சேரும் வரை அதன் அரசியல் மொழிப் பிரச்சினை மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது. (அலங்காரத்திற்காக பிரசாவுரிமையும் சிங்களக் குடியேற்றமும் உச்சரிக்கப்பட்டன. சமஷ்டி என்பது அரசியல் தீர்வாகப் பிரேரிக்கப்பட்டபோதும், 1961 சத்தியாக்கிரகத்தின் பின் அது ஏறத்தாழ மறக்கப்பட்டுவிட்டது. 1965 – 1969 வரை பிரச்சினைகளே இல்லாமையும் 169இல் திடீரென்று ய+.என்.பி.யுடன் ஊடலும் பிரிவும் 1970 தேர்தலை ஒட்டியே சேர்ந்தன. 1970 இல் ஸ்ரீ.ல.சு.க கூட்டணி வெற்றியை அடுத்து தமிழரசு ய+. என். பி. உறவு மிகவும் அருவருக்கத்தக்க முறையில் விருத்தியடைந்தது.

கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில் தமிழர்களது நலன்களை மட்டுமே கருத்திற்கொண்ட கட்சிகளாகத் தம்மை பிரகடனம் செய்துகொண்ட கட்சிகளே இன்றுவரை வட – கிழக்கு மாகாணங்களின் பாராளுமன்ற அரசியல் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதோடு தம்மால் இயன்றவரை சிங்கள முற்போக்குச் சக்திகளினின்று தமிழ் மக்களைத் தனிமைப்படுத்துவதில் மிகுந்த அக்கறை செலுத்தின என்பதே. பிரித்தானிய கடற்படைத் தளத்தையும் விமானப்படைத் தளத்தையும் அகற்றுதல், நெற்காணிச் சட்டம், அந்நிய எண்ணெய்க் கம்பெனிகளை தேசியமயமாக்கல், அரச உதவிபெறும் பாடசாலைகளை அரச பொறுப்பேற்றல் போன்ற நடவடிக்கைகளைத் தமிழ் அரசியற் தலைமைகள் வேறுபாடின்றி எதிர்த்தன. முக்கிய சர்வதேச சம்பங்கள் பற்றி மௌனம் சாதித்த தமிழரசுக் கட்சி சீன - இந்திய எல்லைத் தகராற்றில் வெகு தீவிரமாக சீனாவைச் சாடியது. 1971 ஏப்ரல் கிளர்ச்சி தொடர்பாக சீனாவைச் குற்றஞ் சாட்டுவதில் தமிழரசுக் கட்சியினர் ய+.என்.பியினரையும் முந்தினர். தமிரசுக் கட்சிப் பிரசார ஏடான சுந்திரன், தமிழ்க் காங்கிரஸின் வீழ்ச்சியை அடு;த்து, தன் முழுத்தாக்குதலையும் இடதுசாரிக் கட்சிகள் மீதே பிரயோகித்தது என்றால் மிகையாகாது. சமஷ்டி கேட்டு நின்ற ஒரு கட்சி அக்கோரிக்கைக்கு ஆதரவு தரும் வாய்ப்புள்ள சக்திகளாக இடதுவாரிகள் மீது தொடுத்த தாக்குதலும் சமஷ்டி பற்றிச் சிங்கள மக்களிடையே பிரசாரம் செய்ய நடைமுறைச் சாத்தியமான முயற்சி எதுவுமே எடுக்காமையும் மிக வினோதமானது. உண்மை ஏதெனில், அவர்கள் தமிழ்ப் பிரதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்த இனப்பிரச்சினை மிகவும் பயனுள்ள சாதனமாக இருந்தது. இடதுசாரிகள் அந்த வாய்ப்பைத் தம்மிடமிருந்து பறிக்கக்கூடுமென்ற அச்சமும் இடதுசாரிகட்குத் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களிடையிலிருந்த பரவலாக செல்வாக்கும் தமிழ்தொழிலாளர் இடதுசாரிக் கட்சிகளின் தலைமையில் திரள்வது தமது வர்க்க நலன்கட்;கு ஆபத்தானது என்ற உணர்வுமே தமிழரசுக் கட்சியை இடதுசாரிகளை எதிர்க்கத் தூண்டியது. இவ்வாறான அரசியல் வடக்கில் நிலைபெறவும் நீடிக்கவும் அங்கிருந்த சமுதாய அமைப்பும் அதன்மீது அரசாங்க உத்தியோகத்திலிருந்தோரின் பெரும் செல்வாக்கும் மிகவும் உதவினஇ கல்வியையும் அரச உத்தியோகத்தையும் பார்த்திருந்தோருக்கு பேரினவாதத்தின் வளர்ச்சி ஒரு பெரு மிரட்;டலாகத் தோன்றியது இயல்பானதே. வடக்கின் பழமைவாதமும் சாதிமுறையின் பிடிப்பும் பாராளுமன்ற அரசியலில் ஒரு பயனுள்ள கருவியாகச் செயற்பட்டதுடன் சுரண்டப்படும் “உயர் சாதி’’ மக்களிடையே இடதுசாரிகளைக் கொடியவர்களாகக் காட்டவும் பயன்பட்டது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புக்களை தமிழரசுக் கட்சி பயன்படுத்திய முறையும் கவனத்திற்குரியது. சிங்களம் மட்டுமே சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தைத் தமிழரசுக் கட்சியினர் தமது வாய்ச்சொல் வீரத்திற்கு வடிகால்களாக பயன்படுத்தினார்களே ஒழிய திட்டமிட்ட முறையில் ஒழுங்குபடுத்தி நியாயத்திற்கான போராட்டமாக வளர்த்தெடுக்க ஆயத்தமாக இருக்கவில்லை.

1957இல் திருகோணமலை மாநாடும் அதற்குக் கால்நடையாகப்போன நீண்ட ஊர்வலமும் பின்னிய வாய்ப்பந்தல் 1964 இல் (சத்தியாக்கிரகத்தை அடுத்து அவர்களது செயலற்ற தன்மை வெளியிட்ட போது) முற்றாகவே பிரிந்து விழுந்தது. வாகனங்களில் ஆங்கில எழுத்துக்கட்குப் பதிலாக சிங்கள ஸ்ரீ எழுத்து புகுத்தப்பட்டதை ஒரு பெரிய பிரச்சினையபக ஒருவித முன்னேற்பாடுமின்றி ஆரம்பித்த போராட்டம் ‘சிறியை எதிர்ப்போம் ; சிறையை நிறைப்போம்’ என்ற வெற்றுக்கோஷமாக எழுந்து பிசுபிடித்துப் போன பின்பு இவர்கள் சாதித்ததெல்லாம் வடமாகாணத்திற்கு புதிய பஸ் வண்டிகளை அனுப்பப்படுவதை பல வருடங்கட்குத் தாமதித்தது மாத்திரமே. 1961 சத்தியாக்கிரகம் ஒருவிதமான கொள்கை வழிகாட்டலுமின்றி அவசர அவசரமாகத் தொடங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கச்சேரி வாசலில் பொலிஸாரில் அத்துமீறலின் விளைவாகவே சத்தியாக்கிரகம் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று வளர்ந்தது. அவசரக் காலச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் எப்படிப் போராட்டத்தை தொடர்வது என்றே தெரியாமல் முழுப்போராட்டமும் ஸ்தம்பித்தது. அத்துடன் சத்தியாக்கிரகத்தின்போது வெளியிடப்பட்ட தமிழரசுத் தபாங் தலைகளும் அஞ்சல் அட்டைகளும் இவர்கள் கேட்பது சமஷ்டியா, தனிநாடா என்றவாறான குழப்பத்திற்கே வழிகோலின. 1972இல் அரசியலமைப்புச் சட்டத்தைத் தீ மூட்டி எரித்தபோது மக்கள் இவர்கள் ஏதோ சட்டவிரோதமான போராட்டத்தில் இறங்குகிறார்கள் என்று நம்பினர். ஆனால், சட்டத்துறையினரின் ஆதிக்கத்திலிருந்து தமிழரசு அதிகாரபீடம் அரசியலமைப்பு சட்டத்தை தீ மூட்டி எரிப்பது சட்டவிரோதமாக செயலல்ல என்று நன்கு அறிந்தே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என்பதை அனேகர் உணரவில்லை. இவ்வாறு 1956 முதல் இன்று வரை,அரசியல்பத்மாத்து வேலைகளைப் போராட்டங்களாகக் காட்டுவதிலேயே தமிழரசுக் கட்சியும் அதன் வாரிசுகளாக த.ஐ.மு.யும் த.வி.கூ.யும் அக்கறைகாட்டின.

பேச்சு வார்த்தைகளால் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகளில் தமிழரசுக் கட்சியினர் குறிப்பிடத்தக்க அக்கறை காட்டினர். இதனால் 1958 இல் பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை உருவானது. இது கிழித்தெறியகப்பட முக்கிய காரணம் ய+. என். பி. யும் அதன் முக்கியஸ்தர்களுள் ஒருவரான ஜே. ஆர். ஜயவர்த்தனாவும் மேற்கொண்ட எதிர்ப்புப் பிரசாரமே. ஆயினும் சிறி எதிர்ப்புப் போராட்டமும், தமிழரசுக் கட்சியினரின் வீரமுழக்கங்களும் தமிழரசுக் கட்சி என்ற கட்சிப் பேரும் (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) சிங்கள மக்கள் மத்தியில் எழுப்பிய சந்தேகங்களும் ய+.என்.பி.யின் பிரசாரத்திற்கு உதவியதோடு (1958 இனக்கலவரத்தை முந்தி ஆரம்பித்த) தமிழ் எழுத்துகட்கு, தார்ப+சும் இயக்கத்துக்கும் வசதியான “நியாயங்களை ஏற்படுத்தின. 1958 இனக் கலவரத்தில் ய+.என்.பி.யின் குண்டர் படைகள் கணிசமான பங்கு வகுத்தபோதும் அதில் பலவாறான சிங்கள இனவெறியர்கட்கும் பங்கு இருந்தது. எனினும் இனவெறியர்களின் நடவடிக்கைகளைக் கட்டுபடுத்துவதில் அரசாங்கம் அதிக தயக்கமின்றிச் செயற்பட்டது.

1960ஆம் ஆண்டு மார்ச் தேர்தலை அடு;த்து ய+. என். பி. சிறுபான்மை அரசாங்கம் அமைத்தபோது தமிழரசுக் கட்சி அதில் பங்குபற்ற மறுத்ததால் 1960 ஜூன் தேர்தலின்போது ய+.என்.பி. மிகவும் விஷமத்தனமான இனவாதப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தமிழரசுக் கட்சிக்கும் ஸ்ரீ.ல.சு. கட்சிக்கும் இரகசிய உடன்படிக்கை இருப்பதாகவும் இலங்கையை பிரிக்கும் சதியில் இரண்டு கட்சிகளும் பங்குபற்றுவதாகவும் செய்யப்பட்ட பிரசாரத்தையும் மீறி ய+.என்.பி. படுதோல்வி கண்டது. இக்காலத்தினுள் தமிழரசுக் கட்சிக்;கும் ஸ்ரீ.ல.சு. கட்சிக்கும் இடையே உருவாகி இருந்த நல்லெண்ணம், மொழி மற்றும் தமிழ் மக்களது பிரச்சினைகட்கும் ஒரு சுமுகமான தீர்வைக் காண ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. ஆயினும் தமிழரசுக் கட்சி இவ்வாய்ப்பைத் தவறவிட்டது மட்டுமின்றி துர்ப்பிரயோகமும் செய்தது என்பதும் கவனிக்கத்தக்கது. 1961இல், ஸ்ரீ. ல. சு. க அரசாங்கத்துடனான பேச்சுவாத்தைகளில் பெருமளவாரியான அம்சங்களில் உடன்பாடு காணப்பட்டு,வேறுபாடான விஷயங்கள் பற்றி மீண்டும் கலந்தாலோசனை செய்யலாம் என்றவாறான நிலையில், ஒருவித முன்னெச்சரிக்கையுமின்றி சத்தியாக்கிரகப் போராட்டம் உக்கிரப்படுத்தப்பட்டது. ஒரு அரசியல் சூதாட்டமாக மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகத்தின் தோல்வி இவர்களது எதிர்காலப் போராட்ட வாய்ப்புகளையும் முற்றாக நசுக்கி விட்டது. 1961 முதல் 1964 வரை இவர்களது பாராளுமன்ற அரசியல் படிப்படியாக ய+. என். பி. யை நோக்கி இவர்களை நகர்த்தியது தற்செயலானதல்ல.

1950இல் தமிழ்க் காங்கிரஸின் வீழ்ச்சி ஏறத்தாழ முழுமையடைந்தது. இதை அடுத்து தமிழ்க் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த உயர்வர்க்க, வணிக பிரமுகர்கள் தமிழரசுக் கட்சியினுள் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தனர். 1960களில் இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மொழிவாரித் தொழிற்சங்கங்கள் பல. பிரபல தமிழ் வணிகர்களின் நிதி ஆதரவுடனேயே செயற்பட்டன. (அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் போன்ற சில இதற்கு விதிவிலக்கானவை என்பன இங்கு குறிப்பிடப்பட வேண்டும்) 1956இல் தமிழரசுக் கட்சி ஸ்ரீ. ல. ச. கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தேசிய மொழிப்பற்று, தேசிய முதலாளித்துவம், நடுத்தர வர்க்கத்தின் கீழ்ப்பிரிவுகளின் எதிர்பார்ப்புக்கள் ஆகிய பண்புகளைப் பிரதிபலித்த அளவில் மேலோட்டமான ஒற்றுமையைக் கொண்டிருந்தன. (ய+.என்.பி. யும் தமிழ்க் காங்கிரஸ் இவற்றுக்கு மாறானவையாயும் படுபிற்போக்குச் சக்திகளது பிரதிநிதிகளாயும் அமைந்தன) தமிழ்க் காங்கிரஸ் பலமிழந்த சூழ்நிலையும், இனவாத அரசியலின் வளர்;சியும் தமிழரசுக் கட்சியின் தன்மையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தன. முன்னை நாள் தமிழ் ய+. என். பி. தூண்களும் தமிழ்க் காங்கிரஸ் ஆதரவாளர்களான முதலாளிகளும் பிரமுகர்களும் மெல்ல மெல்லத் தமிழரசுக் கட்சியுட் செல்வாக்குடையவர்களாக மாறினார்கள். கொழும்புவாழ் தமிழ்ப் பிரமுகர்கள் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் கூடிய பங்கு வகிக்க ஆரம்பித்தனர்.

தமிழ்க் காங்கிரஸ் துரைத்தனத்தை எதிர்த்த தமிழரசுக் கட்சியில் புதிய “துரைத்தனத்தை’ உருவாகி வளர்ந்தது. இதன் ஒரு பிரதிபலிப்பாக, 1964இல் ஸ்ரீ.ல.சு.க. யிலிருந்து சீ.பி.டி. சில்வா குழுவினர் வெளியேறியதை அடுத்து பாராளுமன்றத்தில் லேக்ஹவுஸ் தேசியமயச் சட்டத்தின் வாக்கெடுப்பில் ஸ்ரீ. ல. சு. க. அரசாங்கத்தின் தோல்விக்கு தமிழரசுக் கட்சியும் பங்களித்தது. 1965 முற்பகுதியில் ஸ்ரீ.ல.சு. கட்சியை ஆட்சியில் தொடரவைக்க எடுக்கப்பட்ட முயற்சிகட்கு ஆதரவு தருவதாகப் போக்குக் காட்டிய தமிழரசுக் கட்சி இறுதி நேரத்தில் காலைவாரிவிட்டது. இதன் விளைவாகப் பாராளுமன்றத்தைக் கலைப்பதில் தாமதம் காட்டப்பட்டது. இதைத் திரித்து, ஸ்ரீ. ல. சு. கட்சி தேர்தலை நடக்கத் தயக்கம் காட்டுவதாக ய+. என். பி. பிரசாரம் செய்தது. இதுவும் இடதுசாரிக் கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகளும் ய+. என். பி. 1965 தேர்தலில் ஆட்சிக்கு வர உதவின. 1965 தேர்தலை மறைமுகமாக ய+. என். பி. யை ஆதரித்த தமிழரசுக் கட்சி, சமஷ்டி ஆட்சி வரும் வரை அரசாங்கத்தின் பதவி ஏற்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மீறி ய+. என். பி. யுடன் கூட்டரசாங்கம் அமைத்ததோடு, கொழும்புக் கனவானாக திருச்செல்வத்தை செனட்டராக்கி மந்திரிப் பதவியில் அமர்த்தினர்.

1960 – 1965 கால இடைவெளியில் தமிழரக் கட்சியின் செயலால் ஏற்பட்ட சினமும் தேர்தலில் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியியும் ஸ்ரீ. ல. சு. கட்சியை மட்டுமன்றி அதன் கூட்;டாளிகளாக பாராளுமன்ற இடதுசாரிகள் சிலரையும் 1966 இல் டட்லி – செல்வநாயகம் உடன்படிக்கை மீதான தமிழ்மொழிச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகச் செயற்படவும் 1965 இல் பாராளுமன்றத்தில் இனவாதக் கூச்சலிடவும் தூண்டின. இனவாதச் செயல்களும் உரைகளும் எவ்வகையிலும் நியாயப்படுத்தக்கன அல்ல ; ஆயினும் இவற்றுக்குத் தமிழரசுக் கட்சித் தலைமையின் செயல்கள் செலுத்திய பங்கை மறப்பது இச் சம்பவங்களின் முழுமையான பின்னணியை மறைப்பதாகும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்தே தேர்தல்களை வென்ற தமிழரசுக் கட்சி ய+. என். பியுடன் கூட்டுச் சேர்ந்தமை தமிழ் மக்களைக் கவரவில்லை. எனவே இவர்களது செல்வாக்கு தேய ஆரம்பித்தது. அடுத்த தேர்தவை முன்னிட்டு ய+. என். பி. அரசினின்று அவசர அவசரமாக விலகிய தமிழரசுக் கட்சியினர், முதல்முறையாக, 1970 தேர்தலில் தாம் பெற்ற வாக்குகளில் விகிதாசார வீழ்ச்சியைக் கண்டனர். திரு. அமிர்தலிங்கத்தின் தோல்வி தமிழரைக் கட்சித் தலைமைக்கு ஒரு சாட்டையடியாக அமைந்தது. 1970 தேர்தல் முடிவுகள் தமிழரசுக் கட்சியை விட வேறு கட்சி இல்லாத நிர்ப்பந்தத்தாலேயே தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தையும் எதிர்த்துப் போட்டியிட்ட எவரேனும் போதிய தனிப்பட்ட செல்வக்குடையவராக இருந்தபோது அவர் கணிசமான ஆதரவு பெற்றதையுமே காட்டின. இதன் பாடங்கள் தமிழரசுக் கட்சிக்குப் போராட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தின. ஆயினும் ய+. என். பி. யுடன் ஏற்றுக் கொண்ட வர்க்க ஐக்கியத்தினின்று பிரிவது தமிழரசுக் கட்சிக்கு இயலாத காரியமாகி விட்டது.

1970 இல் தரப்படுத்தல் தமிழரசுக் கட்சியினருக்கு ஒரு வரப்பிரசாதமாகியது. ஆயினும், சட்ட ரீதியான எந்தப் போராட்டத்தின் மூலமும் தீர்வுக்கு வழிகாட்ட இயலாததாலும் பாராளுமன்ற அரசியல் பலவீனத்தாலும் வேறு தந்திரோபாயங்களைத் தேடும் அவிசயமட் அவர்கட்கு ஏற்பட்டது. சட்டவிரோதமான வெகுஜனக் கிளர்ச்சிகட்குச் சாதகமான சூழ்நிலை இல்லாததோடு அதை வழி நடத்தும் வலிமையும் இல்லாததால், மாணவர் பேரவை போன்ற ஸ்தாபனங்கள் மூலம் சில்லறைக் கிளர்;ச்சிகளைத் தூண்டவும் அதன் மூலம் ஒரு புதிய அரசியல் தளத்தை நிறுவவும் அவர்கள் முற்பட்டனர். 1971 ஏப்ரல் கிளர்ச்சி, பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு 1972 இல் அரசியலமைப்புத் திட்டத்தில் தமிழ்மொழி உரிமைகள் சில மறுக்கப்பட்டமை போன்ற நிகழ்ச்சிகள் தமிழரசுக் கட்சிக்கு புதிய வாய்ப்புக்களைக் காட்டியது. “சுதந்திரன்’ ஆசிரியர்குழு, அமிர்தலிங்கம், சந்திரகாசன் போன்றோர் மறைமுகமாகத் தனிநாடு பற்றிய கருத்துக்களை ஊக்குவிக்க ஆரம்பித்தனர். இவர்களால் ஊக்குவிக்கப்பட்ட வாலிப சக்திகளோ இவர்களால் கட்டுப்படுத்த இயலாத வேகத்தில் தீவிரவாத இயக்கங்களாக வளரத் தொடங்கின.

1974 இல் தமிழர் ஐக்கிய முன்னணி உருவானபோது பிரிவினைக் கருத்தும் பகிரங்கமாகவே முன்வைக்கப்பட்டது. (இதை மேலும் ஊக்குவித்த காரணிகளில் பேசாலையில் எண்ணெய்வளம் இருக்கிறது என்ற நம்பிக்கையும் உள்ளடங்கும்) த. ஐ. மு. தமிழரசுக் கட்சியினரால் உருவாக்கப்பட்டபோது அதில் ஜீ. ஜீ பொன்னம்பலமும் தொண்டமானும் மட்டுமன்றி தேவநாயகம் போன்ற ய+. என் . பி. பிரமுகர்களும் சேர்ந்தமை அது உருவாக்கப்பட்டதன் பிற நோக்கங்களையும் புலனாகிறது. 1976இல் த. ஐ. முன்னணி த. வி. கூட்டணியாக மாறியதன் நோக்கம் 1977 இல் தெளிவாகியது. ஒரு புறம் தமிழரசுக் கட்சியினர் ஊக்குவித்ததாலும் தரப்புறம் தமிழரசுக் கட்சியினர் ஊக்குவித்ததாலும் தரப்படுத்தல், அரசாங்க வேலைவாய்ப்புக்களில் பஞ்சம் போன்ற விரக்திதரும் சூழ்நிலைகளாலும், தீர்வுக்கு வழி தெரியாததாலும் இளைஞர் மத்தியில் வளர்ந்து வந்த தீவிர இயக்கங்கள் தமிழரசுக் கட்சிக்கு ஒரு சவாலாக வளரும் ஆபத்து இருந்தது. மறுபுறம் தமிழ் மக்களுக்கு முன் சமர்ப்பிக்கக்கூடிய புதிய கொள்கைகளோ போராட்ட மார்க்கமோ இல்லாமல் அடுத்த தேர்தலில் வெல்வது அசாத்தியம் என்;று தெளிவாகிவிட்டது. அதே சமயம் ய+. என். பி. யின் துணையுடன் எப்படியாவது மாணவர்களது பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவதோடு கண் துடைப்பாக ஏதாவது சலுகைகளைப் பெறலாம் என்ற நப்பாசையும் இருந்தது. இதன் விளைவாக தேர்தலில் வெல்வதற்குப் பிரிவினைக் கொள்கையை முன்வைத்துத் த. வி. கூ. போட்டியிட்ட அதேசமயம், இரகசியமாக ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் அமிர்தலிங்கத்துக்கும் தொண்டமானுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைப் பிரசாரம், தென்னிலங்கைத் தமிழர்கள் 1977 இல் ய+. என். பி. யை ஆதரிக்குமாறு த. வி. கூட்டணியால் தூண்டப்பட்டனர். இந்த உடன்படிக்கை பற்றிய சந்தேகங்கள் நீண்டகாலமாக நிலவியபோதும், 1983 இனக்கலவரங்களின் பின்னர் தொண்டமான் அவர்களால் பாராளுமன்றத்தில் இவ் விஷயம் முதல்முறையாகப் பகிரங்கப்படுத்தப்பட்டது.

1977 தேர்தலை அடுத்து ஸ்ரீ. ல. சு. கட்சி ஆதரவாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்ட போது த. வி. கூட்டணி அதைப்பற்றி எதுவிதமான கரிசனையும் காட்;டவில்லை. ஆயினும் ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது ய+. என். பி. குண்டர்களால் வன்முறை கட்டவிழக்கப்பட்டபோது கூட்டணியின் முறைப்பாட்டுக்கு ய+. என். பி. அமைச்சர்கள் பச்சை இனவாதத்தையே பதிலாகத் தந்தனர். 1981 இல் நடந்த இனவாதச் சம்பங்களும் ய+. என். பி. யிடமிருந்து நியாயமான தீர்வு பற்றிய கூட்டணியின் பிரமைகளைக் கலைக்கவில்லை. 1982 ஜனாதிபதி தேர்தலின் போதும் இவர்கள் வடக்கில் நடுநிலை வகித்தனர். தெற்கிலிருந்த தமிழர்கள் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கே வாக்களிக்குமாறு மறைமுகமாகத் தூண்டப்பட்டனர். ய+. என். பி. யின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அனைவருக்கும் சிகரம் வைத்தாற்போல் 1983 இல் பொதுத் தேர்தலுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தின் ஆயுளை நீடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது மட்டுமே அரைமனதுடன் கூட்டணியினர் அதை எதிர்க்க முன் வந்தனர். வெள்ளம் வடிந்தபின் கட்டப்பட்ட பாதி அணைபோல அமைந்த இந்த நடவடிக்ரக கூட்டணியின் அரசியல் செல்வாக்கை மேலும் நேயச் செய்தது.

வாக்குறுதியளித்தபடி சமாதான முறையில் தமிழ் ஈழத்தைப் பெற எதுவும் செய்யாமையாலும் அதிகாரமற்ற மாவட்ட சபைக்குமேல் எதையுமே சாதிக்க முடியாமையாலும் மக்கள் இவர்கள் மீதும் நம்பிக்கை இழந்தனர். (துரையப்பாவின் கொலை உட்பட) தமக்கு லாபகரமான அரசியல் வன்முறைகட்கு மறைமுக ஆதரவு தந்த இவர்களால் வாலிப இயக்கங்களின் தீவர வாத வன்முறை வரையறையற்று வளர்வதை நிறுத்தமுடியவில்லை. 1977க்குப் பின், முக்கியமாக 1981 ஆம் ஆண்டில் வடக்கில் நடந்த ராணுவ அட்;;டகாசத்தைத் தொடர்ந்து, தீவிரவாதத வாலிப இயக்கங்கள் கூட்டணிக்கு மாற்றுச் சக்திகளாக தம்மை வளர்த்துக் கொண்டன 1982 இல் தீவிரவாதிகளுக்கு அஞ்சியே இவர்கள் செயற்படும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது. இதே கால கட்ட்ததில் கூட்டணித் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் கூட்டணியினின்று பிரிந்தோர் த. ஈ. வி. முன்னணியாக அமைந்தமை கூட்டணித் தலைமையை மேலும் பலவீனப்படுத்தியது. 1983 இனவாத வன்முறைச் சம்பவங்களை அடுத்த காலம் கூட்டணியின் கையாலாகாத்தனத்தைத் தோலுரித்துக் காட்டியது. கூட்டணியினர் பேரளவில் மட்டுமே மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகப் பவனி வந்தனர்.

தொகுத்துச் சொல்வதானால் தமிழரசுக் கட்சியும் அதன் வாரிசான கூட்டணியும் இலங்கையின் வரலாற்றில் பிற்போக்குச் சக்திகளையே ஆதரித்து வந்துள்ளன. தமிழ் மக்களை இலங்கையின் தேசிய அரசியலிலிருந்து தனிமைப்படுத்துவதில் தமிழ்த் தலைமை வகித்த பங்கு சிங்களப் பேரினவாதத்தின் நோக்கங்கட்கு மிகவம் வசதியாகவே அமைந்தது. வடக்கில் மட்டுமன்றி தேசிய ரீதியாகவும் இடதுசாரிகள் மீது தொடர்ச்சியாக இவர்கள் காட்டிய பகைமையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் படுபிற் போக்கின் பிரதிநிதியான ய+. என். பி. க்கு ஆதரவாகவே செயற்பட்டமையும் தென்னிலங்கையில் உள்ள ஏகாதிபத்திய விரோத முற்போக்குச் சக்தியை பேரினவாத ஒடுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் நேச சக்திகளாக வென்றெடுக்கும் வாய்ப்புக்களை இவர்கட்கு இல்லாது ஒழித்து விட்டது. தமிழாக்ளது பாராளுமன்றத் தலைமை சுரண்டும் வர்க்க நலன்களையே பிரதானமாகச் சார்ந்து நின்றதால், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களின் நியாயமான போராட்டங்களைத் தலைமை தாங்கிநெறிப்படுத்தும் வலிமையை என்றோ இழந்துவிட்டது.

தமிழ்ப் பிரதேசங்களின் பாராளுமன்ற அரசியல் தலைமையின் நடவடிக்கைகளை வர்க்க அடிப்படையில் ஆராய்வதன் மூலமே அதன் தவறுகளைய நம்மாற் தெளிவாக இனங் காண முடியும். சிங்களப் பேரினவாதம் வளர்வதைச் சாத்தியமாக்கிய அரசியல் சூழ்நிலை, இடதுசாரி இயக்கத்தின் பிரச்சினைகள், பிற சிறுபான்மையினத்தவர்களது நிலை பலவற்றை சரிவர ஆராய்வதன் மூலமே இன்றைய நிலையைச் சரிவர அறியவும் இதனின்று மீள்வதற்கான ஒருமார்க்கத்தையும் கண்டறிய முடியும்.

இலங்கையின் அரசியல் இனவாதம் பற்றிப் பேசும்போது புத்தபிக்குமாரை சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் சின்னமாக அடையாளங்காட்டுவது படித்த நடுத்தரவ வர்க்கத் தமிழர்கட்கு மிகவும் பழக்கமான ஒன்று. சிங்கள மக்களிடையே புத்த பிக்குமாரின் அரசியல் செல்வாக்கு வளர்ந்தமைக்கான சமுதாயக் காரணங்களை ஆராயாமல் பௌத்த மதபீடங்களை சிங்கள இனவாதத்தின் ஊற்று மூலமாக அடையாளங் காண்பது மிகவும் தவறானது. இன்று கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள சிங்கள இனவாதம் பௌத்த பீடங்களின் சிங்கள பௌத்த தீவிரவாதத்திற்கு எவ்வகையிலும் சளைத்தல்ல என்பதை நினைவிற்கொண்டால், இம்மதபீடங்கள் ஆளும் வர்க்க நலன்களைப் பிரதிபலிப்பதால் இனவாதச் சேற்றில் உழல்கின்றனவேயன்றி பௌத்த மதபீடங்களின் இனவாத நலன்களைப் பேணும் தேவைக்காக ஆளும் வர்க்கம் செயற்படவில்லை என்பதை உணரலாம்.

இலங்கையில் நீண்ட கால வரலாற்றில் பௌத்தம் சகல துறைகளிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. பழைய கல்வி முறையின்கீழ் பௌத்த குருமார் மதபோதகர்களாக மட்டுமன்றி ஆசிரியர்களாகவும் செயற்பட்டு வந்தனர். மருத்துவர்களாகவும் சமூக சேவகர்களாகவும்கூட அவர்கள் பெரும் பணியாற்றியுள்ளனர். தென்னிந்தியாவில் நாயன்மார் காலத்தின்பின் சமணமும் பௌத்தமும் வலுவிழந்து ஒழிந்தன. வடஇந்தியாவிலும் பௌத்தம் மிகவும் ஒடுங்கிய நிலையில் அயல் நாடுகளில் பௌத்தம் தழைத்தோங்கியது. சீனாவிலும் ஜப்பானிலும் தேரவாத பௌத்தம் பரவவில்லை. மாறாக, மகாயான பௌத்தம் அந்தந்த நாடுகளின் பழைய மதங்களுடன் இணைந்து புதிய வடிவங்களில் நிலைபெற்றது.

இடைக் காலத்தில் பௌத்தத்தில் தேரவாத மகாயான பௌத்தப் பிரிவுகளிடையே பல நாடுகளில் ஏற்பட்ட மோதல்கள் பாரிய அரசியல் மோதல்களே. இலங்கையில் தேரவாதத பௌத்தம் வெற்றியீட்டியது. இன்று, பர்மாவிலும் தாய்லாந்திலும் இலங்கையிலும் தேரவாத பௌத்தமே செல்வாக்குடன் விளங்குகிறது. தேரவாத பௌத்தத்தின் வளர்ச்சிக்கு இலங்கை வழங்கிய பங்குபற்றி இலங்கையின் பௌத்த பீடங்கள் பெருமைகொள்வது நியாயமானதே. சிங்கள மொழியின் அன்றைய வளர்ச்சி பௌத்த மத்தின் விருத்தியை ஒட்டியே பெரிதும் அமைந்திருந்தது என்றால் தவறில்லை. (சைவ சித்தாத்தத்துக்கும் தமிழுக்கும் இருந்த நெருக்கம் இலங்கையில் சிங்களத்துக்கும் பௌத்தத்திற்கும் இருந்தது எனலாம்)

இலங்கையில் அரசுகளிடையே முரண்பாடுகளைத் தீர்ப்பத்தில் தென் இந்தியத் தலையீடு நீண்ட காலமாகப் பெரும் பங்கு வகித்தது சில சமயங்களில் தென்னிந்திய அரசு ஒன்று ஒரு சிங்கள அரசையும் வேறொரு தென்னிந்திய அரசு இன்னொன்றையும் ஆதரிர்h நிலைகளும் சிங்கள அரசர்களது அழைப்பின் பேரிலேயே தலையீடுகள் நேர்ந்ததையும் நாம் அறியலாம். வேறு சமயங்களில் (சோழப் பேரரசு போன்ற மேலாதிக்க அரசுகளின் காலத்தில்) யாரும் அழையாமலே படையெடுப்புக்கள் நேர்ந்துள்ளன. தேரவாத பௌத்த குருமாரின் பார்வையில் தென்னிந்தியப் படையெடுப்புக்கள் தமது செல்வாக்குக்குப் பாதகமானவையாகவே தோன்றியதில் அதிசயம் இல்லை.

இலங்கையில் பிற்கால வரலாற்றில் சிங்களமும் தேரவாத பௌத்தமும் நெருங்கிய உறவு கொண்டதுபோல் சைவமும் தமிழும் வடபகுதகளில் நெருக்கங்கொண்டன. சிங்கள மன்னர்களது நீண்டகாலத் தென்னிந்தியத் தொடர்புகள் உட்பட இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமிடையே இருந்த பல்வேறு தொடர்புகளாலும் சிங்கள மொழியும் பௌத்தமும் தமிழினின்றும் இந்துமத்தினின்றும் ஊட்டம் பெற்றன. இலங்கையின் பௌத்தம் மதம் சாதாரண மக்களிடையே தூய தேரவாதத்தைத் தொடர இயலாது போனதோடு இந்து சமயச் சடங்குகளும் வழிபாடுகளும் அவர்களது நடைமுறையில் பகுதியாகிவிட்ட போதிலும் தென்னிந்தியப் படைப்புயெடுப்புக்களால் பௌத்தத்திற்கும் சிங்களக் கலாசாரத்திற்கும் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய அச்சங்கள் மகாவம்சம் போன்ற நூல்கள் மூலமாகப் பேணப்பட்டு வருகின்றன. வட இலங்கையில் உள்ள தமிழர்களை ஆக்கிரமிப்பாளர்களான (அந்நிய) தென்னிந்திய தமிழர்களின் ஒரு பகுதியாக (பரதெமல) காணும் போக்கும் இந்த அச்சத்தாலே ஊக்குவிக்கப்பட்டது. இந்த வகையில், தென்னிந்தியா, பற்றிய வரலாற்று அச்சங்களும் அங்குள்ள “திராவிட’’ இனத்தோரின் பெருந்தொகையும் சிங்கள மக்களிடையே ஒரு சிறுபான்மையினருக்குரிய மனோபாவத்தை வளர்க்க உதவின. இந்த அச்சங்கள் சரியானவையா நியாயமானவையா என்று வாதிப்பதில் பயனில்லை. ஆயினும் இந்த அச்சங்கள், பெருமளவும் அறியாமை காரணமாக, தொடர்ந்து வந்துள்ளன. இவற்றை தீர்ப்பதற்கான வாய்ப்புக்களை ஆளும் வர்க்கத்தினர் பயன்படுத்தாமைக்குக் காரணங்களை விவரிக்க அவசியமில்லை.

போர்த்துக்கேயரின் வருகையையடுத்து யாழ்ப்பாண இராச்சியம் தென் இலங்கையின் கோட்டே அரசும் விழுந்த பின்னர், கண்டி இராச்சியம் மட்டுமே முக்கியமான சுதந்திர அரசாக விளங்கியது. பிரிட்டிஷ் முதாலாளித்துவம் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி அங்குள்ள நிலங்களை கோப்பிச் செய்கைக்குப் பயன்படுத்த முற்பட்டபோது, சிங்கள விவசாயிகளை அங்கு உழைப்பில் ஈடுபடுத்துவது இயலாமற் போனதால், தென்னிந்தியாவிலிருந்து பலவந்தமாக தமிழ் ஏழை விவசாயிகளைக் கொண்டு வந்தது. பெருந்தொகையான தமிழ்த்தோட்டத் தொழிலாளர் வருகை மலையகத்தில் தென்னிந்தியர் வருகை பற்றிய புதிய அம்சங்களை வளர்த்தன. தமிழ்த் தொழிலாளர்களையும் சிங்கள விவசாயிகளையும் பிரித்து வைத்ததன் மூலம் தமக்கெதிராக அவர்கள் ஐக்கியப்பட்டுக் கிளர்ந்தெழும் வாய்ப்பை பிரித்தானிய நிர்வாகத்தால் தவிர்க்க முடிந்தது. தமிழர் பற்றிய அச்சம் ஒரு புறமிருக்க சிங்களப் பிரதேசங்களில் புதிதாக உருவாகி வளர்ந்த சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தினருக்:கும் பிரித்தானிய நிர்வாகத்திற்கும் (அதன் தயவில் வளர்ந்த) ஆங்கிலம் படித்த, கிறிஸ்தவ உயர் வர்க்கத்தினருக்கும்) மத்தியில் முரண்பாடுகள் வளரத் தொடங்கின. இதுவே பின்னர் தேசிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தோற்றுவாயாக இருந்தர போதும், இதன் தோற்றத்திற்கான சூழலும் வர்க்கச் சார்ப்பும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக அமைந்தது. சிங்கள பௌத்தம் வெறுமனே ஒரு பேரினவாதப் போக்கவே தோன்றி வளர்ந்தது என்ற பார்வை அரைகுறையானதும் தவறானதும் ஆகும். ஒரு புறம் தேசிய பொருளாதார, அரசியல் சுதந்திரத்திற்குப் பங்களித்த அளவில் அது வகித்த முற்போக்கான பங்கு முதலாளி வர்க்கச் செல்வாக்கினால் பேரினவாதப் போக்குடன் சேர்ந்தே வளர்ந்தது.

ஒரு தேசிய இயக்கத்தின் தலைமை நாட்டின் முன்னேறிய புரட்சிகர வர்க்கமான தொழிலாளி வர்க்கத்திடம் அமைவதன் மூலமே பேரினவாதப் பிற்போக்குத் தன்மையுடன் வளர்வதைத் தடுப்பது சாத்தியமாகும். இந்தியத் துணைக் கண்டத்தின் தேசிய இயக்கத்தில் தேசிய முதலாளித்துவத்தின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. இதன் பின் விளைவுகளை இந்து – முஸ்லிம் கலவரங்கள் முதலாக இன்றைய இனவாதப் ப+சல்கள் வரை காட்டுகின்றன. இலங்கையில் இடதுசாரி இயக்கம் தேசிய சுதந்திரத்திற்கான இயக்கத்தின் வளர்ச்சியை ஒட்டியே விருத்தியடைந்தது. கொலனித்துவ நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தை இடதுசாரி இயக்கத் தலைமையின் கீழ் வழி நடத்தும் வாய்ப்பு ஏற்படாத போதிலும் தேசிய அரசியலில் ஒரு முக்கியமான சக்தியாக வளரும் வாய்ப்புகள் இடதுசாரிகட்கு இருந்தன. ஆயினும், முதலில் ட்ரொட்சிவாதப் போக்குகள் ஏற்படுத்திய பிளவுகளும் பின்னர் கம்ய+னிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட அதி தீவிரப் போக்கும், இறுதியாக, பாராளுமன்ற அரசியலையே பிரதான போராட்ட மார்க்கமாகக் கருதும் போக்குக்கு வழிவிட்டன. பாராளுமன்ற அரசியலின் தேவைகள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தேவைகளை மூழ்கடிக்கத் தொடங்கின. ஆரம்பத்தில் ஒரு தந்திரோபாயமாக உபயோகிக்கப்பட்ட பாராளுமன்ற அரசியல்மேடை, பாராளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட குறிப்பிடத்தக்க வெற்றிகளால், ஈற்றில் அவர்களது பிரதான அரசியற் களமாகிறது. இதன் விளைவாகப் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புரட்சியும் புரட்சிகர சோஷலிஸ இலட்சியமும் பாராளுமன்ற அரசியலாகவும், சீர்திருத்தவாதமாகவும் உருமாறி பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள் இலட்சியப் பிடிப்பற்ற தேர்தல் உபாயங்களாகி வலுவிலந்தன. அதே சமயம் இந்தத் தந்திரோபாயங்கள் தேர்தலில் இவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தர தவறின. இவர்களது அரசியல் சீரழிவு காரணமாக முற்போக்குச் சக்திகள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்பட்டது. உறுதியான கொள்கைப் பிடிப்புடைய ஒரு பகுதியினர் புரட்சிகர மாக்ஸிஸ வெனிஸிஸ இயக்கங்களாகத் தொடர்ந்தனர். சிலர் தீவிரவாதப் போக்குகளில் ஈடுபட்டுச் சந்தர்ப்பவாதத்திற்குப் பலியாயினர். பெரும்பாலானோர் இடதுசாரி அரசியலினின்று காலப் போக்கில் ஒதுக்கி வெறும் பார்வையாளர்களாயினர்.

பாராளுமன்ற இடதுசாரிகளின் அரசியல் சீரழிவு அவர்களை என்ன விலை கொடுத்து விலை கொடுத்தும் பாராளுமன்றப் பதவி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளியது. 1956 இல் பிலிப் குணவர்த்தனவின் புரட்விpகர லங்கா சமசமாஜக் சட்சியும் 1964இல் லங்கா சமசமாஜக் கட்சியும் ஸ்ரீ. ல. சு. கட்சியும் கூட்டரசாங்கம் அமைத்தன. பாராளுமன்றவாத கம்ய+னிஸ்ட் தலைமை 1969 இல் இதே விதமான முடிவுக்கு வந்து 1970 ம் ஆண்டு (ல. ச. ச. கட்சியுட்பட) ஸ்ரீ . ல. சு. கட்சி தலைமையில் கூட்டரசாங்கம் உருவானது. இச் சூழ்நிலையில் இவர்களைச் சார்ந்து நின்ற வெகுஜன ஸ்தாபனங்கள் மிகவும் பலவீனமடைந்துவிட்டன. அவற்றின் தலைமைகள் சுயநலத்திற்காகவும் பதவிகட்காகவும் செயற்படும் நபர்களின் சுடாரமாகின. 1976 இல் ஸ்ரீ . ல. சு. கட்சியுடனான முரண்பாடுகள் காரணமாக இவர்கள் பிரித்த போது இவர்களது ஸ்தாபன வலிமை முற்றாகவே சிதைந்து 1977 தேர்தலில் ஒரு இடத்தையேனும் பிடிக்க இயலாது போயிற்று. இடதுசாரி இயக்கத்தின் சீர்குலைவில் பாராளுமன்ற அரசியல் மார்க்கம் வகித்த பங்கு அதிமுக்கியமானது. புரட்சிகர சக்திகளை அணிதிரட்டி பலமான ஒரு இடதுசாரி இயக்கமாகத் தொடர்வதற்கான வாய்ப்பை கம்ய+னிஸ்ட் கட்சியின் மாக்ஸிஸ லெனினிஸ சக்திகள் தம் தலைமையின் தவறுகள் காரணமாக இழக்க நேர்ந்தது. மறுபுறம் ட்ரொட்சிஸ சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்த சக்திகள் பெரும்பாலும் தனிநபர்வாதக் குட்டிப+ஷ_வா சிந்தனையாளர்களாகவே இருந்தன். இக் குழப்பமான சூழ்நிலையில் ஜே.வி.பி. உருவானது. ஒரு புறம் புரட்சிகரகோஷங்களும் மறுபுறம் பச்சையான அரசியல் சந்தர்ப்பவாதமும் அதன் அடையாளங்களாயின. ஜே. வி. பி. தலைமைக்கும் அதை நம்பி வந்த இளைஞர்கட்குமிடையில் பெரும் வேறுபாடு உண்டு என்பதை அங்கீகரிக்கும் அதே சமயம் சரியான மாக்ஸிஸ ஆய்வுமுறை அற்றதும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளாததும் வாலிபர்களை ஒரு புரட்சிகர “வர்க்கமாக’’க் கருதுவதுமான ஒரு ஸ்தாபனம் எவ்வளவு மோசமான தவறுகளைச் செய்யக்கூடும் என்பதற்கு ஜே.வி.பி ஒரு எடுத்துக்காட்டு என்பதை இங்கு வலியுறுத்த வேண்டும்.

1982 ஜனாதிபதி தேர்தலில் தேசிய இனப்பிரச்சினையில் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபாடான கருத்துக்களை ஜே. வி. பி. யால் மலையகத் தமிழர்கட்கு விரோதமான இனவாதம் மலையகத்தில் உள்ள சிங்கள விவசாயப் பகுதிகளில் பயன்படுத்தபட்டதை மறவாதவர்கட்கு இது புதியதல்ல. பாராளுமன்ற இடதுசாரிகள் பாராளுமன்ற அரசியலில் சிக்குண்டு சீர்திருத்தவாதிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் சீரழிந்தனர் என்றால் ஜே.வி.வி. ஆரம்பத்திலிருந்து தீவிர புரட்சிகர கோஷங்களை மட்டுமே முழங்கும் ஒரு சந்தர்ப்பவாத போலி இடதுசாரி இயக்கமாக இருந்து வந்தது. இன்றும்கூட (பழைய) சீர்திருத்தவாத இடதுசாதிகள், பொதுவாகச் சொன்னால் பேரினவாதத்தை எதிர்க்கத் திராணியற்ற சந்தர்ப்பவாதத் தவறுகளைத் செய்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் ஜே.வி.பி தலைமையைப் போன்று, பேரினவாதத்திற்கு துணை போனார்கள் என்று சொல்வது தவறானது. அவர்களது அடிப்படையான தவறு செயல் மார்க்கம் தொடர்பானது ; அவர்களது தவறான பாதை நடைமுறைக்கு வழி வகுத்தது.

பாராளுமன்றவாத இடதுசாரித் தலைமையை நாம் விமர்சிக்கும் போது பாட்டாளி வர்க்கத் தலைமைக்கும், பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கும் அவர்கள் இழைத்த தவறுகளை அடிப்படையாக வைத்தே நாம் அவர்களை விமர்சிக்கின்றோம். அத் தவறுகளின் விளைவாகவே அவர்களால் தேசிய இனப்பிரச்சினையில் சரியான முறையில் செயல்பட முடியவில்லை என்று கருதுகிறோம். தமிழ் இனவாத அரசியல்வாதிகள் அவர்களையும் சிங்களப் பேரினவாதத்தின் ஒரு அம்சமாகக் காட்ட முனைவதை நாம் ஏற்பதற்கில்லை.

ய+. என். பி . யின் பேரினவாத்திற்கும் ஸ்ரீ. ல. சு. கட்சியின் பேரினவாதத்திற்கும் உள்ள ஒற்றுமை இரண்டு கட்சிகளும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள வரலாற்றுத் தொடர்புடைய அச்சங்களையும் அதன் காரணமாகவும் 1947 ஐ அடுத்து இலங்கை அரசியல் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவும் வளர்ந்துள்ள இன உணர்வையும் நிராகரிக்கத் தயங்குவதும் வசதி ஏற்படும்போது பேரினவாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதும் எனலாம். ஆயினும் இரண்டு கட்சிகளதும் வர்க்க அடிப்படை இரண்டு கட்சிகளதும் பேரினவாதத்திற்குமிடையில் முக்கியமான வேறுபாட்டைப் புகுத்துகிறது. தேசிய இனப்பிரச்சினையை வெறும் தமிழ் - சிங்களப் பிரச்சினையாகப் பார்ப்போர் இதை அடையாளங் காணத் தவறுவது இயல்பானதே.

ஸ்ரீ. ல. சு. கட்சியின் வர்க்க அடிப்படை,தேசிய முதலாளித்துவம், அதன் அரசியற் தேவைகட்காக அது சிங்களப் புத்திஜீவிகளையும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரையும் திருப்தி செய்யவேண்டியிருந்தது. பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் கிடைக்காததும், மறுக்கப்பட்டதுமான வாய்ப்புக்களையும் வசதிகளையும் இந்த வர்க்கங்கள் சுதந்திரத்தின் பின்பு பெற விரும்பின. ஆங்கிலத்தினதும் மேலைநாட்டுக் கலாசாரத்தினதும் ஆதிக்கமும் அவற்றின் மூலம் ஆங்கிலம் படித்த உயர்தர நடுத்தர வர்க்கம் தம் மீது செலுத்திய ஆளுமையும் அவர்களது வெறுப்புக்குரியனவாக இருந்தன. தமிழ் உயர்தர நடுத்தர வர்க்கத்தினரும் கிறிஸ்தவ உயர் நடுத்தர வர்க்கத்தினரும் அரசாங்க தனியார் துறை உத்தியோகங்களில் செலுத்தி ஆதிக்கம் மட்டுமன்றித் தமது வசதிகளையும் நலன்களையும் தொடர்ந்தும் பேணும் ஆவலும் இந்தப் பிரிவினரைப் பெரும்பாலும் ய+. என். பி. சார்புடையவர்களாகவே வைத்திருந்தது. சிங்களம் அரச கரும மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை, ஆங்கிலத்தின் ஆதிக்கத்தையும் ஆங்கிலத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் முறியடிக்கும் நோக்கங்காரணமாக, முற்போக்கானதாகவே கருதப்பட வேண்டும். ஆயினும் சிறுபான்மை இமைகளில் 25 வீதத்தினர் பயன்படுத்தும் மொழியைப் பற்றிய ஒரு விதமான நிலைப்பாடுமற்று ‘சிங்களம் மட்டுமே’ என்ற கோஷம் முன்வைக்கப்பட்டபோது தமிழ் பேசுவோரிடையே தமிழ் மொழியின் அந்தஸ்து பற்றி நியாயமான அச்சங்கள் எழுந்தன. ஆயினும் தமிழ்த் தலைவர்களால் தமிழுக்கும் சம அந்தஸ்து என்ற பதில் ஏட்டிக்குப் போட்டியாக முன் வைக்கப்பட்டதே ஒழிய ஒரு தெளிவான நிர்வாக மொழிக் கொள்கையாக முன்வைக்கப்படவில்லை. இதற்கான காரணம் தமிழ்த் தலைமை உண்மையில் சிங்களம் அரசகரும மொழியாக வருவதைவிட ஆங்கிலம் அரசகரும மொழி அந்தஸ்தை இழப்பதைப்பற்றியே அதிகம் கவலையுடையோராக இருந்தனர்.

சிங்களத்தை அரசகரும மொழியாக்குவதை ஒரு தேர்த்ல் கோஷமாக ய+.என்.பி யும் (ஸ்ரீ ல.சு.கட்சித் தலைமையிலான) மக்கள் ஐக்கிய முன்னணியும் முன்வைத்தன. ஆயினும் இதைவிட முக்கியமான பிரச்சினைகளே தேர்தலின் முடிவைத் தீர்மானித்தன. 1953 ஆம் வருட ஹர்த்தால் நினைவுகளை மக்கள் மறக்கவில்லை. ஹர்த்தாலின் வெற்றிகளை இடதுசாரிக் கட்சித் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தத் தவறியதாலும் பாராளுமன்றப் பதவிப் போட்டி இடது ஐக்கியத்தையும் புரட்சிகர இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதைவிட முக்கியமானதாக இருந்தாலும் இடதுசாரிகள் அணிதிரட்டத் தவறிய மக்கள் சக்தியை பாராளுமன்ற அரசியல் தேவைகட்காக ளு று சு னு பண்டார நாயக்காவின் தலைமை அணிதிரட்டியது தமிழ் அரசியல் தலைமையோ மொழிப் பிரச்சினையை விட வேறெதிலும் அக்கறை செலுத்த மறுத்தது. அதே சமயம் ஸ்ரீ.ல.சு கட்சியும் கூட்டுச் சேர்ந்த தீவிர சிங்களப் பேரினவாதிகளான கே.எம்.பி ராஜரத்ன, ஆர்.ஜி. சேனநாயக்க போன்றோருக்கும் பண்டார நாயக்காவின் தலைமைக்கும் முரண்பாடுகள் அதிகரித்தன. ம.ஐ. முன்னணி அரசியலிருந்து தீவிர சிங்களப் பேரினவாதிகள் விலக நேர்ந்தமை ஸ்ரீ.ல.சு.கட்சி வெறும் சிங்கள இனவாதக் கட்சியல்ல என்பதையே தெளிவுபடுத்தியது.

ஸ்ரீ.ல.சு. கட்சியின் முற்போக்கான நடவடிக்கைகள் யாவும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்ட இடதுசாரிகளின் வெகுஜன பலத்தை ஸ்ரீ.ல.சு. கட்சிக்கு மாற்றவே உதவின. பாராளுமன்ற இடதுசாரிகள் உண்மையான புரட்சிகர இயக்கத்தை வளர்க்க இயலாமலும் விரும்பாமலும் மேலும் பாராளுமன்ற அரசியலில் மூழ்கினர். மறுபுறம், ய+. என். பி தன் அப்பட்டமான கொலனித்துவ சார்பு வடிவத்தை மாற்றி ஒரு ‘வெகுஜன’ வேஷம் போடும் முயற்சிகளில் இறங்கியது. 1956க்கும் 1960க்குமிடையில் ய+. என். பி தீவிரமான சிங்களப் பேரினவாத சக்தியாகவே இயங்கியது. இம் மாற்றம் 1977க்குப்பின், ஒருபுறம் சிங்கள பௌத்த கலாச்சாரத்தின் பாதுகாவலனாகப் பவனிவந்து மறுபுறம் நாட்டின் பொருளாதாரத்தை நலகொலனித்துவ எஜமானர்கட்கு அடமானம் வைக்கும் நிலையில் முழுமை பெற்றது.

ஸ்ரீ. ல. சு. கட்சியில் இருந்த இனவாத சக்திகள் பற்றி நமக்குள் ஐயங்கள் இல்லை. ஆயினும் 1958க்குப்பின் ஸ்ரீ.ல.சு.கட்சி அரசு அதிகாரத்தில் இருந்த காலத்தில் இனக் கலவரங்களைத் தூண்டும் முயற்சிகள் தலையெடுக்கு முன்பே தயவோ இன்றித் தடுத்து நிறுத்தப்பட்டதை 1977இல் பின் நடந்தவற்றுடன் ஒப்பிடுவது பயனுள்ளது. இன்று ஸ்ரீ.ல.சு. கட்சி பேரினவாதத்தின் பிரதிநிதியாகத் தன்னைப் பிரகடனம் செய்துள்ளமை 1977க்குப் பின், முக்கியமாக பாராளுமன்ற ஜனநாயகம் முதலாகப் பல்வேறு ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் முறையில் ய+. என். பி. ஆட்சி செயற்பட்டதுடன் விளைவு என்றால் மிகையாகாது. ஸ்ரீ. ல. சு. கட்சியின் இன்றைய சிங்கள பௌத்த பேரினவாதம் அரசியல் விரக்தியின் வெளிப்பாடு. பேரினவாத அரசியல் மூலம் அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் ஸ்ரீ. ல. சு. கட்சியின் எண்ணம் வெறுங் கனவாகவே முடியும். ஏனெனில் இன்றுள்ள நிலையில், ய+. என். பி யின் அதிகார பீடத்தினர் இழப்பதற்கு நிறைய இருக்கிறது. ஒரு புரட்சிகர மாற்றத்தின் மூலமே ய+. என். பி. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரலாமே ஒழிய ய+. என். பியின் சர்வாதிகாரம் ஈற்றில் ஒரு ராணுவ வர்வதிகாரமாகும் நிலையை மாற்ற வேறு மார்க்கம் இல்லை.

இன்று ய+. என். பி. அரசு இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு ஒன்றைத் தேட உடன்பட்;டுள்ளதற்கான காரணம் ய+. என். பி அரசின் மனம் மாறியதல்ல. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்ந்து விட்ட ராணுவ வன்முறை இன்று ய+. என். பி. அரசுக்குப் பாதகமான நிலையையே தேசிய மட்டத்திலும் சர்வதேசிய மட்டத்திலும் உருவாக்கியுள்ளது. வாழும் உரிமைக்காகப் போராடும் மக்களை இராணுவ ய+. என். பி. அரசு இன்னும் உணரவில்லை.

சிங்களர் மத்தியில் நீண்டகாலமாக இந்தியாபற்றி, முக்கியமாக தென்னிந்தியாபற்றி இருந்துவரும் அச்சங்களே சிங்களப் பேரினவாதம் வளர மிகவும் பயன்பட்டுள்ளன! திராவிட இயக்கங்களுடன் தமது அனுதாபங்கள் பற்றிப் பல தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் அதிக ஒளிவு மறைவு இருந்ததில்லை. அண்மைக்கால அரசியலில் இந்திய அரசினதும் தமிழக அரசியற் கட்சிகளினதும் ப+ரண தயவில் தமி;ழ் அரசியல் இயக்கங்கள் இயங்குவதைச் சிங்களப் பேரினவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும் நாம் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கான தேசபக்த சக்திகள் கடந்த காலத்தில் இடதுசாரி இயக்கங்களில் ஏற்பட்ட தவறுகளாலும் பிளவுகளாலும், தேசியரீதியான இனவாத அரசியலில் எழுச்சியாலும் பலவீனமடைந்துள்ளனர். சிதறுண்டுள்ள சிங்கள தேசபக்த முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டும் பணி எளிதானதல்ல – ஆயினும் வாத்தியமானதும் அவசியமானும் ஆகும்.

தமிழ் மக்களது விடுதலைக்கான போராட்டம் சுயாதீனமானதாகவும் அயல்நாடுகளின் தலையீட்டை நிராகரிப்பதாகவும் சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும் அதே சமயம் சிங்கள மக்களுடன் நட்புறவுடையதாகவும் அமைவது சிங்கள முற்போக்க சக்திகளின் கரத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதமாகவும் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியாகவம் ய+.என்.பி. அரசு சித்தரித்து வருகிறது. இதைப் பொய்ப்பிப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தின் பலமான பிரசார இயக்கத்திற்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றன. இறுதியில், சிங்கள முற்போக்குச் சக்திகள் இன்றைய இடைய+களை மீறி வெற்றி பெறுவது உறுதி. அவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது மூலம் தமிழ் மக்களது விடுதலை இயக்கம் தன்னையும் சிங்கள முற்போக்கு சக்திகளையும் பலவீனப்படுத்திக்கொள்ளும் என்பதை நாம் நினைவிற்கொள்ளல் முக்கியமானது.

தமிழ் மக்களின் இன்றைய விடுதலைப் போராட்டத்தைத் தமிழரசுக் கட்சியின் “போராட்டங்களின்;’’ வரலாற்றுத் தொடர்;ச்சியாகவே பல்வேறு இயக்கங்;களும் காண முற்படுகின்றன. இதில் சிறிது நியாயம் இருந்தாலும் கவனிக்க வேண்டிய அடிப்படையான வேறுபாடுகளும் உள்ளன. இன்றைய போராட்டத்தின் நியாயமான வரவேற்கத்தக்க அம்சங்கள் சில தமிழரசுக் கட்சியின் போராட்டங்களின் (பிரகடனம் செய்யப்பட்ட) சரியான நோக்கங்களுடன் ஒற்றுமை உடையன. அதே சமயம் இன்றைய இயக்கங்களின் ஆய்வுமுறை செயற்பாடு, போராட்டமுறை ஆகியவற்றில் உள்ள பல தவறுகள் தமிழரசுக் கட்சியின் அணுகுமுறையோடு மட்டுமன்றி அதற்கு முக்கிய தலைமைகளின் அணுகுமுறையோடு நெருங்கிய தொடர்புடையவை. பலரும் இன்றைய போராட்டத்திற்கும் தமிழரக் கட்சியின் போராட்டங்கட்கும் உள்ள பிரதான வேறுபாடு ஆயுதப் போராட்டம் தொடர்பானது என்றே வலியுறுத்துகின்றனர். தமிரசுக் கட்சியும், பின்னர், கூட்டணியும் சாத்வீகப் போராட்டத்தைப் பகிரங்கமாக வலியுறுத்தியபோதும் இன்றைய தீவிர இயக்கங்களின் பெருவாரியானவற்றின் தோற்றுவாய் தமிழரசுக் கட்சியே மாணவர் பேரவை போன்ற ஸ்தாபனங்களில் வன்முறையையும், சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததையும் வடக்கின் முதலாவது முக்கிய அரசியல் படுகொலைக்கு மறைமுகமான அங்கீகாரம் (தந்ததையும் கவனித்தால்) தமிழரசுக் கட்சியோ கூட்டணியோ வன்முறையை முற்றாகவே விரும்பவி;லை என்பது பொருந்தாது. 1977க்குப் பின் ய+. என். பி கூட்டணி நேச உறவுக்கு வன்முறை குந்தகமாக இருந்த அளவில் அவர்கள் வன்முறையே வெறுத்தது உண்மை. எனவே, பிரதான வேறுபாடு போராட்டமுறை தொடர்பானது அல்ல. மாறாகப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை தொடர்பானதாகும்.

வட – கீழ் மாகாணத் தமிழ் மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்ட அரசியல், தமிழ் மொழி உணர்வை மூலாதாரமாகக் கொண்டிருந்தபோதிலும் அது பேண முனைந்த வர்க்க நலன்கள் தமிழ் முதலாளி வர்க்கத்தினரதும் உத்தியோகத் துறையில் உயர் பதவி வகிக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தினரதும் நலன்கனே. அரசாங்க கல்வி தனியார் துறை இடைப்பட்ட ஊழியர்களின் தொகையும் வடக்கின் பொருளாதாரத்தில் அவர்களது முக்கியத்துவமும், பாராளுமன்ற அரசியலின் நிர்ப்பந்தம் காரணமாக, தமிழரசுக் கட்சியின் அரசியலில் அவர்களது நலன்களுக்கும் குறிப்பிடத்தக்க இடமளித்து, ஆயினும், 1965இல் ய+. என். பி.யுடன் கூட்டுச் சேர்ந்த பின்பு உயர் வர்க்க நலன்களே தமிழரசுக் கட்சியில் ப+ரண ஆதிக்கம் செலுத்தின.

1957இல் திருமலை மாநாடு போர்ப் பிரகடமாக இருந்தது. “திருமலை தலைநகர்’’ போன்ற வெற்றுக் கோஷங்கள் மேலும் தொடர்ந்தன. 1961இல் சக்தியாக் கிரகத்தின் முடிவில் இவர்களால் எந்தப் போராட்டத்தையும் வழி நடத்த முடியாது என்ற தீர்க்கமான முடிவுக்கு மக்கள் தள்ளப்பட்ட பின்பு தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. 1965இல் ய+. என். பியுடனான உறவு பரந்துபட்ட மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி மீது அவநம்பிக்கை வளரவே வழிவகுத்தது. 1970இல், முதற்தடவையாக, தமிழரசுக் கட்சி முன்பு வெற்றிபெற்ற தொகுதிகளில் மண் கல்வியதோடு பெற்ற வாக்கு விகிதாசாரமும் குயைத் தொடங்கியது. 1970இல் தரப்படுத்தலும் 1972இல் புதிய அரசியலமைப்புச் சட்டமும் தமிழரசுக் கட்சிக்குப் புதிய ஊட்டமளித்தன. தமிழரசுக் கட்சி தன் பாராளுமன்ற அரசியல் சரிவைத் தடுத்து நிறுத்தவே 1974 இல் தமிழர் ஐக்கிய முன்னணியையும் (1977 தேர்தலை முன்னிட்டு) 1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உருவாக்க முற்பட்டது. ஆயினும் குறுகியகால அரசியல் நலன்கட்காக ஊக்குவித்த வாலிப சக்திகளும் தீவிரவாதமும் 1977இற்கு முன்பே தமிழரசுக் கட்சியாலும் கூட்டணியாலும் கட்டுப்படுத்த இயலாத சக்திகளாக வளர்ந்து விட்டன. 1977 இனவாத வன்முறையும் கூட்டணி அதைக் கையாண்ட விதமுமம் அதைத் தொடர்ந்து ய+. என். பி ஆட்சியுடன் இனப்பிரச்சினைத் தொடர்பாக மேற்கொண்ட சமரசத் தீர்வு முயற்சிகளின் தோல்வியும் அதன் கையாலாகத் தனத்தை மேலும் அம்பலப்படுத்தின. 1983 வன்முறைச் சம்பங்களின் பின் கூட்டணித் தலைமையின் தகுதிபற்றி மக்களுக்கு எதுவிதமான நம்பிக்கையுமே இல்லாது போய்விட்டது. 1983 இனவாத வன்முறைக்கு முன்னர் எழுந்தமான முறையில் செயற்பட்ட தீவிரவாத சக்திகள் அரசாங்களத்தின் அத்துமீறல்களால் துரிதமான வளர்ச்சி பெற்றவர். மக்களுக்கு அரசாங்கத்தின்மீது இருந்த நியாயமான பகைமை உணர்வும் ஆயுதப்படைகளின் கொடுஞ் செயல்களின் விளைவான வெறுப்பும் கூட்டணித் தலைமை மீதான நம்பிக்கையீனமும் ஆயுதப் படையினரதும் பொலிசாரினதும் அடக்குமுறைக்கு ஆளாகிய இளைஞர்கள் பலரது மனக்கொதிப்பும் வன்முறைப் போராட்டத்தை விட வேறுவழி இல்லை என்ற நிலையை உறுதிப்படுத்தின. வட – கீழ் மாகாணங்களின் தமிழ் மக்கள் அனைவரும் அரசின் அடக்குமுறைக்கும் ராணுவ பயங்கர வாதத்துக்கும் உட்பட்ட சூழ்நிலையில் அரசாங்கத்திற்கும் ஆயுதப்படைகட்குமெதிரான போராட்டம் முழுத் தமிழ் மக்களதும் மன உணர்வைப் பிரதிபலித்தது என்பதில் தவறில்லை. இந்த வகையிலேயே இன்றைய போராட்டம் தமிழரசுக் கட்சியின் போராட்டங்களின்று முக்கியமாக வேறுபடுகிறது.

தமிழரசுக் கட்சியும் இன்றைய பாராளுமன்றத் தமிழ்த் தலைமைகளும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தின் போது காட்டிய தயக்கமும் 1974இல் மலையகத்தில் வரட்சியாலும் சில தோட்ட நிர்வாகங்களின் பச்சை இனவாதத்தாலும் அகதிகளாக வடக்கே குடிபெயர்ந்தபோது அவர்கள் பெற்ற “வரவேற்பும்’ வடக்கிலும் கிழக்கிலும் எவ்வகையான “இன ஐக்கிய’ உணர்வு கட்டியெழுப்பட்டிருந்தது என்பதை உணர்த்தப் போதுமானவை (மலையக மக்களை வடக்கிலும் கிழக்கிலும் குடியமர்த்துவதில் சில சமூக சேவை நிறுவனங்களின் பணி பாராட்டத்தக்க விதி விலக்காகவே இருந்தது) இவை எல்லாம் தற்செயலானவை அல்ல. வடக்கின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய உயர் நடுத்தர வர்க்கத்தின் பழமை பேணும் நோக்கும் குறுகிய சமுதாயப் பார்வையும் கொலனித்துகால மனோபாவமும் அங்கு ஊக்குவித்து வளர்த்த அரசியல் சமுதாயச் சூழ்நிலையின் விளைவுகளினின்று வடபிரதேசம் இன்னமும் ப+ரணமாக விடுபடவில்லை. 1977க்குப் பின்னும் இந்தவிதமான குறுகிய அரசியற் பார்வை தொடர்ந்தது. 1983 இனக் கலவரம் ஏற்பட்ட சூழ்நிலையில் ஒருபுறம் கூட்டணியின் இயலாமை புலனானதோடு மறுபுறம் வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட வாலிபர்களையும் அவர்களது இயக்கங்களையும் கட்டுப்படுத்த இயலாத நிலையில் கூட்டணி செயலிழந்து விட்டது. கூட்டணியுடன் பல்வேறு காரணங்களால் முரண்பட்ட ஒர பகுதியினர் தமிழ் ஈழ விடுதலை முன்னணியென்ற பேரில் செயங்பட்டதும் கூட்டணியின் தலைமையின் பலவீனத்தை மேலும் தெளிவுபடுத்தியது. பாராளுமன்ற அரசியற் தலைமையின் செயலற்ற தன்மை சமாதான வழியில் தமிழ் ஈழம் பெறுவது பற்றிய பிரகடத்தின் லங்கலோட்டுத்தனம், மாவட்ட சபை என்ற பேரில் அரசாங்கத்தின் அரசியல் மோசடி, பேச்சு வார்த்தைகள் மூலம் தேசிய சிறுபான்மை இனத்தினரின் நிலையை மேலும் பலவீனப்படுத்தும் செயல்களில் கூட்டணியின் பங்களிப்பு போன்றவை சாத்தியமானதற்கு ஒரு முக்கிய காரணம் கூட்டணித் தலைமை சிங்கள அரசியல் சக்திகளில் மிகவும் பிற்போக்கானதாகிய ய+. என். பி. யுடனான உறவை 1970க்குப் பின்னர் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டமையே ஆகும். இந்த வர்க்க உறவில் வளர்ந்த அரசியலிலிருந்து விடுபடுவதற்கு வேறு ஒரு வர்க்கப் பார்வையும் அரசியலும் தலைமையும் மட்டுமே வழிகாட்ட முடியும்.

கூட்டணியினின்று கிளைத்த பல விடுதலை இயக்கங்கள் பொதுவாகவே கூட்டணியின் சமுதாயப் பார்வையினின்றும் வேறுபட்ட ஒன்றை விருத்தி செய்ய இயலாது போனமைக்கு அவர்களது வர்க்க நிலைப்பாடு கூட்டணியினதினின்றும் உண்மையில் அதிகம் வேறுபட்டதல்ல என்பதே காரணம். ஆரம்பத்தில் சோஷலிஸம், மார்ஸியம் என்றவாறான கோஷங்கள், இருந்துவரும் சமுதாய அமைப்பில் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை இழந்த காரணத்தாலும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளாலும் போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்த இளைஞர்களைக் கவர மிகவும் பயன்பட்டன. ஆயினும் இந்த இளைஞர்களை அவர்கள் இன்னும் தெளிவாக அறியாத மாக்ஸிஸ சோஷலிஸ சிந்தனையின் அடிப்படையில், பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் அணி திரட்டும் தகுதி இந்த இயக்கத் தலைமைகட்கு இருக்கவில்லை. இந்தத் தலைமைகள் இந்திய அரசின் ஆதரவு, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசின் ஆதரவு, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தயவு போன்றவற்றை அடிப்படையாக வைத்துச் செயற்பட ஆரம்பித்த பின்பு இவர்களுக்கு ‘அன்னமிட்ட கைகள்’ இவர்களை ஆட்டி வைக்கும் முற்பட்டன. சோஷலிஸ தமிழ் ஈழம் கோஷத்தில் சோஷலிஸம் ஒரு அலங்கார வார்த்தையாகவும் தமிழ் ஈழம் என்பது விடுதலையின் நோக்கை நிறைவு செய்யும் ஒரு மார்க்கமாக மட்டும் அல்லது நோக்கமாகவும் அமைந்தது. இதன் விளைவாக, சிங்களப் பேரினவாதத்திற்கும் சிங்கள மக்களுக்கும் இடையே வேறுபாடு காண இயலாத போக்கு விருத்திபெற்று சில இயக்கங்களுள் சிங்கள விரோத தமிழ் இனவெறியாக வளர்ச்சி கண்டது. இதன் பாதிப்புக்களே முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளை மதிக்க இயலாது அவர்களையும் பகைக்கும் செயல்கட்கும் காரணமாயின. அனுராதபுரப் படுகொலையுட்பட, அப்பாவிச் சிங்கள மக்கள் மீது தாக்குதல் தொடுத்தும் செயல்களும் அவற்றைக் கண்டிக்க தயக்கம் பிற இயக்கங்களின் செயலின்மையும் பழைய தலைமையின் குறுகிய இனப்பார்வையே, மேலும் குரூரமாக, இன்றும் பல இயக்க தலைமைகளை வழிநடத்துவதை உணர்த்துகின்றன.

கிழக்கு மாகாணத்தின் குறிப்பான பிரச்சினைகள் பற்றிய தெளிவின்மையும் அங்குள்ள முஸ்லிம் மக்களின் நிலை பற்றிய அசட்டையும் அங்கு பல தவறுகள் தொடர்ந்தும் நிகழக் காரணமாகியுள்ள மேலும் இயக்கங்களிடையிலான படுகொலைகள் இயக்கத் தலைமைகளில் உள்ள தனி நபர்வாதம், அதிகாலவெறி ஆகியவற்றையே பிரதிபலிக்கிறது. இவை மட்டுமன்றி இயக்கங்களினின்று விலகுவோர் ‘சந்தேகத்துக்குரிய’ உறுப்பினர்கள், “துரோகிகள்’, சமூக விரோதிகள்’ என முத்திரை குத்தக் கூடிய எவருமே சித்திரவதைக்கும் கொலைக்கும் ஆளாக்கப்படுவதும் விடுதலை இயக்கங்களில் முக்கியமான சிலவற்றில் மக்கள் ஆதரவை விட ஆயுத பலமே பெரிதாகக் கருதப்படுவதையும் அரசியல் ராணுவ அதிகாரத்தைவிட வேறு பற்றியும் அக்கறையற்ற சிறு குழுக்களின் ஆதிக்கத்தையுமே சுட்டிப் காட்டுகின்றன.

இன்றுவரை விடுதலை இயக்கங்களாற் பெறப்பட்ட பல வெற்றிகளில் ஆயுத பலத்தின் பங்கு முக்கியமானது. போராட்டங்களில் பொதுமக்கள் பார்வையாளர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆயினும் அவர்களது ஆதரவின்றி வெற்றிகள் தொடர இடமில்லை. அதைப் பெருவாரியான இயக்கங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இன்னமும் தாங்களே விடுதலை பெற்றுத் தருவோம் என்ற பாங்கிலேயே அரசியல் வேலைகளையும் பிரசாரத்தையும் நடத்துகின்றதோடு மக்கள் எந்த நிலையிலும் தங்களை ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்ற முறையிலேயே செயற்படுகின்றனர். அதன் விளைவாகத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கம் வெகுஜன இயக்கமாக வளராது மறிக்ககப்படுவது ஒருபுறமிருக்க இதுவரை பல்வேறு இயக்கங்களுக்கும் அவர்களது நடவடிக்கைகட்கும் இருந்துவந்த வெகுஜன ஆதரவு பலவீனமடையத் தொடங்கியுள்ளது. இவற்றுக்கு ஒரு முக்கிய காரணம் இயக்கத் தலைமைகள் மக்களை விட அயல்நாடுகளையும் ஆயுதங்களையும் பண பலத்தையும் உயர்வாகக் கருதிப் பழகிவிட்டமையே. இத் தவறு நிகழ்வதற்கான அடிப்படைக் காரணம் ஒரு சரியான பாட்டாளி வர்க்கப் பார்வை இல்லாமையே.

ஜே. வி. பி. தலைமை தன்மை நாடிவந்த நல்ல வாலிபச் சக்திகளைத் தவறான வழியில் நடத்தி 1971இல் நடத்திய போராட்டத்தின் மூலமும் 1977க்குப் பின் ய+. என். பி யுடனான தேச உறவின் மூலமும் பிற சந்தர்ப்பவாத வேலைகள் மூலமும் பிற்போக்குக் சக்தியையே பலப்படுத்தியது. சிங்கள மக்களுக்கு ஜே. வி. பி. யை நிராகரிக்கும் வாய்ப்பாவது இருந்தது. அரசாங்கத்தினதும் ராணுவத்தினதும் அடக்குமுறை தமிழ் மக்களுக்கு அத்தகைய ஒரு வாய்ப்பை மறுத்துவிட்டது. எனவே தவறான செயல்களும் ராணுவாதப் போக்கும் மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் திமிர்த்தனமான போக்கும் திருத்தப்படும் வாய்ப்பு பல இயக்கங்கட்கு இல்லை. இதனால் மக்கள் போராட்டத்திற்குப் பதிலாக அந்நிய உதவியுடனான ராணுவப் போராட்டமே மேலும் வளர்க்கப்படுகிறது. இவ்விடுதலை இயக்கங்கள் மக்களிடமிருந்து அந்நியமாவது மேலும் முழுமையடையவே இது வழிவகுக்;கும். என்றாவது இத்தகைய இயக்கங்கள் அதிகாரத்திற்கு வருமானால் மக்கள் இன்று அனுபவிக்கும் சில உரிமைகளையும் இழக்கவே வழி ஏற்படும்.

கூட்டணி அரசியலில் வாரிசுகளான இயக்கங்களுள் வளர்ந்த ஒரு குறிப்பிட்ட வர்க்கச் சார்பான அரசியலின் வளர்ச்சி என்று நாம் அடையாளங்காட்டி அவற்றை விமர்சிப்பது இலகுவாகிறது. தம் இயக்கங்களை வியாபாரப் போக்கில், வெறுமனே ஆள் பலத்தை வளர்க்கும் நோக்குடன் நேரத்திற்குத் தக்கவிதமாக அரசியலில் கோஷங்களை முன் வைக்கும் சில (மாஜி) மாக்ஸிஸவாதிகளையும், நவமாக்ஸிஸம் போன்ற பேர்ப்பலகைகளின் கீழ் கடை விரித்துச் செங்கொடியை எதிர்க்கக் செங்கொடியை உயர்த்தும் நபர்கள் பற்றியும் நாம் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம்.

தமிழ்மக்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது இலங்கையின் ஒவ்வொரு புரட்சிவாதியினதும் முற் போக்குவாதியினதும் தேசபக்தனதும் கடமை. ஆனால் விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட வடிவிலேயே இருக்க முடியும் என்று வரையறைப்படுத்தி அதற்கு புறம்பானவற்றை எதிர்ப்பதும் தீர்வுகளை முன்வைப்போரை எதிரிகளாகக் காட்டுவதும் இன விடுதலைக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமான காரியங்களே. குறுகிய கால நன்மையை நாடி, முக்கியமாக தமிழ் தேசியவாத இயக்கங்கட்குப் போட்டியாகத் தம் இயக்கங்களை வளர்ப்பதற்காக, இவர்கள் முன்வைக்கும் தீர்வுகளையே தாமும் முன்வைக்கும் “மாக்ஸிஸவாதிகள்’’ சந்தர்ப்பவாதிகளாவர். இந்தச் சந்தர்ப்பவாதம் பாட்டாளி வர்க்க உணர்வு, சர்வதேசியம் உலகு பரந்த அளவில் ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைப் போராட்டம் பற்றிய விஷயங்களில் உண்மையான ஈடுபாடின்மை காரணமானது.

இன்று முக்கிய இயக்கங்களில் உள்ள நல்ல சக்திகள் தலைமைகளின் பல ஊழல்கள்களையும் தவறுகளையும் அடையாளங் காண்கின்றன. ஆயினும் அத் தவறுகளை அடிப்படையான ஒரு அரசியற் பார்வைக்கும், ஒரு குறிப்பிட்ட வர்க்க நிலைப்பாட்டுக்குமுரியன என்பதை அடையாளங் காணத் தவறி விடுகின்றன. எனவே, இவர்களாற் புதிதாக அமைக்கப்படும் இயக்கங்கள் பழைய தவறுகளின் இடத்தில் புதிய தவறுகளைச் செய்யும் வாய்ப்பே ஏற்படுகிறது. இனி, விடுதலைப் பிரச்சினையை ஒரு வர்க்கப் பிரச்சினையாக, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் இனத்தின் விடுதலையை பிற தேசிய சிறுபான்மையினரின் விடுதலையுடனும் பெரும்பான்மை இன மக்களின் விடுதலையுடனும் தொடர்புடையதாக சகல ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றுபடுத்துவதாக, பார்க்க அவர்கள் முன் வர வேண்டும். இதன் அடிப்படையில் ஐக்கியப்படுத்தக்கூடிய சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்தி ஒடுக்குமுறையாளர்களையும் அவர்களது ஏகாதிபத்திய எஜமானவர்களையும் முறியடிக்கும் பாதையில் விடுதலைச் சக்திகள் இணைவதன் மூலமே இன விடுதலையை வென்றெடுக்கவும் அதை இன்னொரு அடக்குமுறையாளனிடம் பறிகொடுக்காமலும் பேண இயலும். மக்களளே வரலாற்றின் பிரதான உந்துசக்தி. எனவே அவர்கட்காக யாரும் அவர்களது வரலாற்றை உருவாக்க இயலாது, மக்கள் சக்தியை இறுதி வெற்றிக்காக அணி திரட்டும் பணியைத் தன்னடக்கமும் மக்கள் மீது பூரண நம்பிக்கையும் இல்லாத எந்த இயக்கத்தாலும் நிறைவேற்ற இயலாது.

இன விடுதலைக்கான இன்றைய போராட்டம் பரந்துபட்ட மக்களின் நியாயமான போராட்டம். அதன் வெற்றி வெகுஜனங்களின் பங்கு பற்றலிலேயே தங்கியுள்ளது. வெகுஜனங்களை வெறும் ஆதரவாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் வைக்கும் முயற்சிகளும் பிற இயக்கங்களை ஒதுக்கவும் நசுக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளும் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கட்கே உதவ முடியும். இதுபோன்றே தங்களது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துமாறான தீர்வு அல்லாத எதையும் எதிர்க்கவும் முற்படும் போக்கும் கண்டனத்துக்குரியது. விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு மக்களை ஐக்கியப்படுத்துவதும் இயக்கங்களிடையே அதிக ஒத்துழைப்பும் அவசியம். பாட்டாளி வர்க்க சிந்தனையின் வழிகாட்டலின் கீழேயே இது சாத்தியமாகியுள்ளது என்பது சமகால வரலாறு கூறும் பாடம். எனவே வலிய மாக்ஸிய லெனினிஸ கட்சி ஸ்தாபனத்தை கட்டியெழுப்புவதும் விடுதலைப் போராட்டத்தில் அதன் வழிகாட்டும் பங்கு உச்சப்படுத்தப்படுவதும் மிகவம் அவசியமாகிறது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை வெறும் தமிழ் - சிங்கள இனப்பிரச்சினையாகக் காண்பதன் அபாயம் பற்றியும் குறுகியகாலத் தீர்வுக்கும் நீண்டகாலத் தீர்வுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும் நாம் கவனஞ் செலுத்தத் தவறுவோமானால் நாம் தேடும் தீர்வுகளே மேலும் பெரிய பிரச்சினைகட்கு வழிகோல இடமுண்டு.

தமிழ்பேசும் மக்கள் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்களையும் மலையக தமிழர்களையும் சோனகர்களையும் ஒரு இனத்தினராகக் கருதலாமெனினும், சோனகர் மத்தியில் தமது இஸ்லாமிய மரபு பற்றியும் கலாச்சாரத் தனித்துவம் பற்றியும் உள்ள ஆழமான உணர்வுகளைத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் சரிவர உணராத காரணத்தால், தமிழ் மக்களது நியாயமான போராட்டங்கட்கு சோனக மக்களது ப+ரண ஆதரவைப்பெற இயலாது போய் விட்டது. அதுமட்டுமன்றித் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் தந்திரங்கள் சோனகர் மத்தியிலான சந்தர்ப்பவாதிகளும் ஊழல்காரர்களும் அரசியலில் முன்வரிசைக்கு வரவே உதவின. சோனகர்களையும் மலையகத் தமிழர்களையும் தமது வர்க்க நலன்கட்காகப் பயன்படுத்திய தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மத்தியிலான சாதி ஒடுக்கலை எவ்வாறு அசட்டை செய்தனவோ அவ்வாறே தமிழ்ப் பேசும் மக்களின் மூன்று பிரதான பிரிவுகளிடையிலான பொதுவான வேறுபாடுகளையும் கணிப்பில் எடுக்காது போயின. அதோடல்லாமல், மலையகத் தமிழர்களதும் சோனகர்களதும் அரசியல் பற்றி, பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் அக்கறை காட்டத் தவறின. இதன் விளைவாக, வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் பற்றி மலையகத் தமிழர் மத்தியிலும் சோனகர் மத்தியிலும் நீண்;டகாலமாக இருந்துவந்த சந்தேகங்களையும் அச்சங்களையும் அகற்ற முடியாது போயிற்று. அண்மைக் காலங்களில் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகச் சகல தமிழ் பேசும் மக்களும் ஒன்றுபட்டுப் போராடுவதற்கான வாய்ப்பும் தேவையும் ஏற்பட்ட போதிலும் பழைய தேசியவாதத் தலைமையின் தவறான பார்வையையே பல விடுதலை இயக்கங்களும் கொண்டிருந்தால் ஐக்கியப்படக்கூடிய சக்திகள் ஐக்கியப்படாது போகவும் சிநேகமான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக நேர்ந்தது. இதனைப் பேரினவாத ய+. என். பி. அடக்குமுறை அரசாங்கமும் அதன் தயவில் சிறுபான்மை இன அரசியல் எடுபிடிகளும் தமக்கு வசதியாகப் பயன்படுத்தியுள்ளனர்.

வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழீழம் என்ற கருத்தை முன்வைக்கும்போது கூட அதற்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்ற விதமான அக்கறையே காட்டப்படவில்லை. இந்தத் தமிழீழத் தீர்வில் மலையக மக்களின் நிலைபற்றியோ அவர்களது அபிப்பிராயங்கள் பற்றியோ ஆழமான அக்கறை காட்டப்படவில்லை. தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களிடமிருந்து பேரினவாத அரசாங்கம் தனிமைப்படுத்துவதற்கு மட்டுமல்லாது, ஒடுக்கப்பட்ட பிற சிறுபான்மையினத்தவர்களிடமிருந்து வட – கிழக்கு மாகாணத் தமிழர்களைத் தனிமைப்படுத்தவும் இக்குறுகிய தமிழ்த் தேசியவாதம் உதவியுள்ளது.

சர்வதேசிய ரீதியாக, அயல்நாடுகளின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீட்டு இன்றைய பேரினவாத அரசின் இன ஒடுக்கல் வழிகோலியுள்ளது. இந்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழ் மக்களையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தையும் தம் அரசியற் சூதாட்டத்தில் பகடைக் காய்களாகவே கருதிவந்துள்ளனர். தன்னை ஒரு பிராந்திய வல்லரசாகக் காணும் இந்திய முதலாளித்துவ அரசு இலங்கையில் ஒரு உறுதியான அணிசேராத சுயாதீனமான ஆட்சி நிலவுவதை என்றுமே விரும்பவில்லை. 1977க்குப் பின் ய+. என். பி. இலங்கையின் சுயாதீனத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தாரைவார்க்க முனைந்தது. திருகோணமலைத் துறைமுக வசதிகளை அமெரிக்காவுக்குக் குத்தகைக்கு விடும் திட்டம் இந்தியக் குறுக்கீட்டால் முறியடிக்கப்பட்டது. 1983இன் திட்டமிட்ட இனவாத வன்செயல்கள் இந்தியா நேரடியாகவே இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் வசதியை உருவாக்கின. ய+. என். பி. ஆட்சியின் திமிர்த்தனமான போக்கு, ஒருபுறம் மேலைநாடுகளின் நிபந்தனையற்ற ஆதரவை நம்பியும் மறுபுறம் பாராளுமன்றத்தில் இருந்த 80மூ பெரும்பான்மையை நம்பியுமே வளர்ச்சி பெற்றது. தெற்கில் அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையீனத்தாலும், அவற்றின் தலைமைகளின் சந்தர்ப்பவாதத்தாலும், வெகுஜன ஸ்தாபனங்கள் பலவீனமடைந்தமையாலும் தட்டிக் கேட்பாரின்றித் தொடர்;ந்தன. வடக்கில் 1977 வன்முறைக்குப் பின்னர் இராணுவ அடக்குமுறை படிப்படியாக அதிகரிக்கப்பட்டதன் விளைவாக அரசாங்கம் எதிர்பார்த்ததற்கு மாறாக மக்களின் எதிர்ப்புணர்வு மேலும் கூர்மையடைந்தது.

பரந்துபட்ட தமிழ் வெகுஜனங்கள் எந்த நிலையிலும் அயல்நாடுகளின் ஆதரவை நம்பிச் செயற்படவில்லை. 1983 சம்பவங்களின்போது ய+. என். பி. ஆட்சியின் நடத்தையே இந்தியத் தலையீட்டுக்கு வசதியை ஏற்படுத்தியது. தன் பிரதேச எல்லைக்கட்குள் மொழிவழி, மதவழி, இனவழி தேசியவாதம் எதையுமே சகிக்க மறப்பதும் அயல்நாடுகளை ஆக்கிரமிப்பின் மூலம் தன்னுடன் இழணக்கத் தயங்காததுமான இந்திய அரசு, இலங்கையின் தமிழ் தேசியவாதத்தின் பிரிவினைப் போராட்டத்துக்கு உற்சாகமூட்டுவதன் நோக்கத்தைப் பல விடுதலை இயக்கத் தலைமைகள் விளங்கிக்கொள்ளத் தவறின. ஒருபுறம் தமிழ்நாட்டு வெகுஜனங்களது ஆதரவுக்கும் அனுபவத்துக்கும் மறுபுறம் இரண்டு தி. மு. கழங்களதும் அரசியல்வாதிகளது அரவணைப்புக்குமிடையிலான வேறுபாட்டை உணரத் தவறிய இயக்கங்கள் தங்களைத் தென்னிந்தியாவின் இருபெரும் ஊழல் அரசியல் ஸ்தாபனங்களுடன் இணைத்துக் கொள்ளப் போட்டியிட்டன.

இந்திய அரசாங்க இலங்கையின் இனப்பிரச்சினையில் சுமூகமான தீர்வுக்கு உதவுவதை யாரும் கண்டிக்கப்பதற்கில்லை. ஆனால் இந்தியா நடுநிலை நண்பன் என்ற நிலைப்பாட்டை மீறித் தன் பிராந்திய அரசியலின் தேவைகட்கேற்பத் தீர்வுகளை வலியுறுத்துவதும் தன்னுடைய எண்ணங்கட்கு இசையாத இயக்கங்களை நெருக்கலுக்குட்படுத்துவதும் ஒரு இயக்கத்தை இன்னொன்றுக்;கு எதிராக ஏதுவதும் வெறுத்தற்குரியன. இந்தியா மட்டுமன்றி, இருபெரு வல்லரசுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கையிற் தலையிடும் சூழ்நிலை உருவாகி வளர்ந்து. அரசாங்கத் தரப்பில் மொஸாட், தனிப்பட்ட பிரிட்டிஷ் கூலிப்படைகள் ஆகியன செயற்படுவுதன் நீண்டகால விளைவுகள் மிகவும் தீயவை. சில அயல்நாடுகளின் தயவில் அரச அடக்குமுறையும் வேறு அயல்நாடுகளின் தயவில் அதற்கெதிரான தமிழ்மக்களது போராட்டமும் தொடரும் நிலைபற்றி நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இலக்கு முழு இலங்கையினதும் தேசிய இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதோ இலங்கையின் தேசிய சுயநிர்ணயத்தை பறிகொடுப்பதோ அல்ல. ஆயினும் இந்த அபாயங்கள் இன்று அதிகரித்துள்ளன. எனவே நாம் தேடும் தீர்வு, நீண்டகாலத் தீர்வாயினும், குறுகிய காலத் தீர்வாயினும் இவற்றைக் கணிப்பிடுலெப்படுது அவசியம். எவராலும் நம் தேசிய இனப்பிரச்சினைக்கு முன் வைக்கப்படும் குறுகிய காலத் தீர்வும் நீண்டகாலத் தீர்வும் சில அடிப்படை நெறிகளால் ஆளப்படுவன. இந்த நெறிகள் அவற்றை முன்வைப்போரின் வர்க்கப் பார்வையால் தீர்மானிக்கப்படுகின்றன. நாம் முன்வைக்கும் தீர்வு பரந்துபட்ட வெகு ஜனங்களது நலன்களையும், உலகின் சகல ஒடுக்கப்பட்ட மக்களது போராட்ட நலன்களையும் சார்ந்ததும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் போன்று எந்த அடிப்படையிலும் ஒடுக்குமுறையை இல்லாது ஒழிப்பதற்குத் தன் பங்களிப்பைத் தருவதுமாகும். நமது விடுதலைப் போராட்டத்தை இலங்கையின் பிற ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டத்துடன் மட்டுமன்றி உலகின் சகல ஒடுக்கப்பட்ட மக்களதும் போராட்டங்களுடன் இணைந்து நோக்கும் பார்வை மூலமே முழுமையானதும் நிலைக்கக் கூடியதுமான விடுதலையை வென்றெடுக்க முடியும்.

அந்நியத் தலையீடின்றி இன்றைய உலகச் சூழலில் தமிழீழப் பிரிவினை சாத்தியமில்லை என்ற கருத்தைத் தமிழ் மக்கள் பரவலாகவே ஏற்றுக் கொள்கிறனர். பல விடுதலை இயக்கங்களும் த.வி. கூட்டணியும் பிரிவினை பற்றி எழுப்பபும் கோஷங்களுக்கும் பின்னால் அயல்நாட்டினரின் தயவிலே தங்களுக்கு உடன்பாடான தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்பே உள்ளது. அது சுதந்திர தமிழ் ஈழம் என்று நம்புவோரும் உள்ளனர். வடக்கும் கிழக்கும் இணைந்த சுயாச்சி என்று எதிர்பார்ப்போரும் உள்ளனர். ஆயினும் தெளிவான நீண்டகாலப் பார்வையுடன் தீர்வுகளை அணுகி ஆராயும் போக்கு சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடமும் இல்லை ; கூட்டணி உட்பட, பெரிவாரியான இயக்கங்களின் தலைமைகளிடமும் இல்லை. அரசியல் அதிகாரத்திற்கான போட்டோ போட்டியில் நாட்டினதும் மக்களினதும் நீண்டகால நலன்பற்றிய அக்கறை அள்ளுண்டு போய் விட்டது. இந்திய அரசாங்கத்தின் நெருக்குதலும் இயக்கத் தலைமைகளிடையிலான இழுபறியும் பேச்சு வார்த்தைகளின் போக்கை நிர்ணயிக்கும் நிலை மிகவும் வருந்தத்தக்கது. “விடுதலை சமன் பிரிவினை’’ என்ற வரட்டுச் சூத்திரத்திற்குப் பலியானவர்கள் தமிழ் தேசியவாதிகள் மட்டுமல்ல ; தம்மை மாக்ஸிஸவாதிகள் என்றும் இடதுசாரிகள் என்றும் கூறிக்கொள்ளும் விடுதலை இயக்கங்கள் சிலவும் இதேவிதமான தவறுகளைச் செய்துள்ளன. அந்நிய வல்லரது ஒன்றின் ஆதரவில் வெல்லப்படும் எந்த விடுதலையும் உண்மையான விடுதலையாக மலர முடியாது. இலங்கையைச் சர்வதேச வல்லரசுப் போட்டிக்கான களமாக்குவது விடுதலையின் ப+ரண நிராகரிப்பேயாகும். தமிழீழப் பிரிவினையில்லாத வேறு தீர்வுச் சாத்தியமற்ற நிலை ஏற்படாது என்று நாம் ஆரூடங்கூற முற்படவில்லை. ஆயினும் இன்றைய நிலையில் அதனைச் சாத்தியமாக்கும் வழி முறைகளும் அதன் பின் விளைவுகளும் தவிர்த்ததற்குரியன என்பதே எமது எண்ணம், இன்று, தமிழ் மக்களைப் போர்மூலம் அடக்கியாள முடியாத நிலைமை ய+. என். பி. அரசாங்கத்திற் பலரும் உணர்த்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் வேண்டும் சமாதானத் தீர்வு தமிழர்கள் பற்றிய அக்கறையின் விளைவான ஒன்றல்ல. மாறாக தம் வர்க்க நலன் சார்ந்தது. ஆயினும் அது விருபத்தக்க ஒரு மாற்றம். அரசாங்கத்தின் மத்தியில் ஒரு இராணுவ சர்வாதிகாரப் போக்கும் உள்ளது. அது வளர்வதற்கான வாய்ப்புக்கள் எவ்வகையிலும் குறைந்து விடவில்லை. வடக்குக் கிழக்கு நிலைமைகளைக் காரணங்காட்டியும் தென்பகுதியில் உள்ள “கலாசாரங்கள்’’ வடக்கின் “பயங்கரவாதிகளுடன்’’ தொடர்புகொண்டு இயங்குகிறார்கள் என்றவிதமான கதைகளைச் சோடித்தும் ராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு ஆரம்ப வேலைகள் தொடங்கி விட்டன. இந்தச் சூழ் நிலையில் பேச்சுவார்த்தைகள் மூலமான ஒரு இடைக்காலத் தீர்வு, ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதைத் தடுக்கவும் தமிழ் மக்கள் மீதான இன ஒழிப்பு – ராணுவ வன்முறையை நிறுத்தவும் சிங்கள தேசபக்த – முற்போக்கு – ஜனநாயக சக்திகளும் ய+. என். பி வலதுசாரிப் பிற்போக்குப் பாராளுமன்ற சர்வதிகார ஆட்சிக்கு எதிரான வெகுஜனப் போராட்ட அணியைக் கட்டியெழுப்பவும், வாய்ப்பையும் அவகாசத்தையும் தரக்கூடும். இடையறாது இறுதிவரையிலான ஆயுதப் போராட்டம் என்ற கருத்தை முன் வைப்போர் இன்று விடுதலைப் போராட்டம் எத்திசையில் போகிறது என்பதைப் பற்றிச் சிந்திப்பது பயனுள்ளது.

இடைக்காலத் தீர்வு முழுமையான தீர்வல்ல. இலங்கையில் வெகுஜனப் புரட்சி மூலம் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான மக்களாட்சி உருவாகும் வரை தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான நல்ல தீர்வு ஏற்படாது என்பது பற்றி நமக்கு ஐயமில்லை. ஆயஜனும் நாம் தேடும் தீர்வு இன்றைய கொடிய இன ஒடுக்குமுறையைச் சாத்தியமாக்கிய பிரச்சினைகளையும் கருத்திற்கொண்டே பெறப்படவேண்டும் இந்த வகையில் இலங்கைக் கம்ய+னிஸ்ட் கட்சி (இடது) தன் முதலாவது தேசிய மாநாட்டில் முன் வைத்த வேலைத்திட்டம் கவனத்திற்குரியது அவ்வாறே இன்றைய சூழலில் காணப்பட வேண்டிய இடைக்காலத் தீர்வு எத்தகைய அம்சங்கள் பற்றிய தெளிவான உத்தரவாதங்களைக் கொண்டிருப்பது அவசியம் என்பதற்கு கட்சியின் மத்தியகமிட்டி 11 – 12 – 86 வெளியிட்டிருந்த விரிவான அறிக்கையும் வேண்டுகோளும் சிற்நத எடுத்துக் காட்டாகும்.

சமாதானமும் ஒப்பந்தமும்

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் இனம் சம்பந்தமான தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் 1957 – 1987க்கு இடையிலான 30 ஆண்டு காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களைப் பற்றிய ஒரு சிறிய மீள் ஆய்வே இந்தக் கட்டுரை, இது இப் பிரச்சனையை மாக்ஸிஸ, லெனினிஸ நோக்கிலிருந்து ஆராய்ந்து இன்றைய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான எதிர்கால வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிடுகின்றது.

இது இலங்கை கம்ய+னிஸ்ட் கட்சி (இடது) யினது ஆங்கில செய்தித் தாளில் (1987 நவம் .3) இமயவரம்பன் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

சிங்கள பேரினவாதத்தின் தோற்றம் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையின் மிக முக்கியமான அம்சமாக திகழ்கிறது. ஒரு நாட்டின் தேசிய சுதந்திரம், இறைமை, ஆதிபத்திய கௌரவம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் விதத்தில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சகல தேசிய இனங்களினதும், உலகின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களதும் தேசங்களிலும் நலன்களுக்கு இசைவானதாகும். நட்புறவு, பரஸ்பரம் புரிந்து கொள்ளல் என்பவற்றின் அடிப்படையில் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் நீண்டகாத் தீர்வுக்கு ஒரு முயற்போக்கான, தேசாபிமான அணுகுமுறை இன்றியமையாதது அதுவும் தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ்தான் சாத்தியமாகும். இதுகாலவரை பல்வேறு தேசிய இனங்களின் தலைவர்கள் இதற்கு ஒரு சமாதானமான, நீண்டகாலத் தீர்வைக் காணத் தவறியதும் பல்வேறு தேசிய இன மக்களுக்கிடையில் நல்லுறவு மென்மேலும் மோசமாகியதும், அத்தலைமையின் வர்க்க இயல்புடனும் ஆதிக்கம் nலுத்தும் சுரண்டல் வர்க்கங்களின் நலன்களை மேலும் வளர்ப்பதற்காக தேசிய இனங்களுக்கிடையில் நிலவிய வேறுபாடுகளைப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைப் பிளவுபடுத்தும் அதன் சந்தர்ப்ப வாதத்துடனும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. தேசிய முதலாளி வர்க்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்டகாலத் தீர்வு காணும் திறமையற்றது என்பதில் எமக்;கு எவ்வித பிரமையும் கிடையாது. அதே வேளையில் முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலில் அதன் முக்கியத்துவத்தை நாம் அசட்டை செய்யவோ, அதன் தலைமையில் குறுகியகாலத் தீர்வு காண எடுக்கும் முயற்சிகளை நிராகரிக்கவோ முடியாது. தேசிய இனப்பிரச்சினைக்கு தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரத்தினால் ஒரு நீண்ட காலத் தீர்வு காண முடியுமே அன்றி, அதற்கு வேறவழி கிடையாது. ஆனால் தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் பல்வே இனங்கள் மத்தியில் நட்புறவையும் அமைதியையும் வளர்க்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஊக்கமளிப்பதும், பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும். இந்த உணர்வில்தான், மாக்ஸிய – லெனினிஸாவாதிகள் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளின் சாத்தியப்பாடு பற்றித் தமது சொந்தக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், இனப்பிரச்சினையின் தீர்வுக்கான கடந்த கால முயற்சிகளும் நிபந்தனையுடன்கூடிய தமது ஆதரவை வழங்கி வந்து உள்ளவர். இந்தக் கட்டுரை கடந்த அண்மைக் காலங்களில் தேசிய இனப்பிரச்சினையின் அதாவது – சிங்கள – தமிழ் தேசிய இனங்கள் சம்பந்தமான மிக முக்கியமான அம்சங்களின் தீர்வுக்கான பல்வேறு ஒப்பற்தங்களையும் சுருக்கங்களையும் விமர்சன ரீதியிலும் மீளாய்வு செய்கிறது.

சிங்களப் பேரினவாதம் தேசிய சுதந்திரத்திற்கு முன்னதாகவே தோன்றிவிட்டது. அதன் முதலாவது முக்கியமான வெளிப்பாடு இந் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த சிங்கள – முஸ்லிம் மோதலில் காணப்பட்டது. நாடு தேசிய சுதந்திரத்தை நோக்கிச் சென்ற காலத்திலேயே குறுகிய தேசியவாதம் தேசிய அரசியலில் ஒரு பாத்திரத்தை வகிக்கத் தொடங்கிவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியானது ஒரு புறம் ஏகாதிபத்தினத்தினதும் கடைந்தெடுத்த பிற்போக்கு வாதத்தினதம் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியது ; மறுபுறம் பல்வேறு தேசிய இனங்களின், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சுதந்திரத்தை தொடர்ந்து ஐக்கிய தேசியகட்சி அரசாங்கம் மிகவும் அபகீர்த்தி வாய்ந்த இரண்டு நடவடிக்கைகளை எடுத்தது. ஒன்று பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட முறையில் சிங்களவர்களைக் குடியேற்றியது. மற்றது இந்திய வம்சாவழி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குறுமையைப் பறித்தது. அதே சமயம் தமிழ் தலைமையானது இந்தப் பிரச்சினைகள் பற்றி அவ்வளவு அக்கறை காட்டவில்லை. பிரஜா உரிமைச் சட்டத்தில் தமிழ் காங்கிரஸ் மேற்கொண்ட நிலைப்பாட்டை ஒட்டி அதிலிருந்து வெளியேறிய ஒரு சில அதிருப்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கு தமிழர்களின் எதிர்கால அரசியலில் இச் சட்டத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியே பிரதானமாக கவனத்தில் எடுத்தது. தமிழ் காங்கிரஸிலும் பார்க்க தமிழரசுக் கட்சி ஜனரஞ்சகமான இயல்புடையது. அது தேசிய முதலாளித்துவ வர்க்க இயல்பும் முன்னாள் பிரித்தானிய எஜமானர்களுக்கு ஒரு விசுவாச உணர்வும் உடையதாக இருந்த போதிலும், ஓரளவு பெரும்பான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப் படுத்துவதுபோல் நடித்தது. ஆனால் யதார்த்தத்தில் அது நடுத்தர வர்க்கங்களின், பிரதானமாக அரசாங்க சேவையிலும் உத்தியோகங்களிலும் இருந்தவர்களின், மனக்குறைகளை எதிரொலித்தது. சிங்களத்தை ஒரே ஒரு ஆட்சி மொழியாகப் பிரகடனம் செய்வதற்கு இட்டு;ச் சென்ற அரசகரும மொழிப் பிரச்சினை தமிழரசுக் கட்;சியின் தேர்தல் வெற்றிக்கு வழிகோலியது. இருந்தும் தமிழ் மக்களின் துரதிஷ்டம் என்னவென்றால், தமிழரசுக் கட்சியின் வர்க்க விசுவாங்கள், தமிழ் மக்கள் நாட்டின் முற்போக்கு சக்திகள், அரசியல் நிகழ்ச்சிகளின் பிரதான ஓட்டம் என்பவற்றிலிருந்து தனிமைப்படவும், அவர்களுடைய பிரதிநிதிகள் இறுதியில் தெற்கிலுள்ள பிற்போக்கு சக்திகளுடனும் அவர்களது ஏகாதிபத்திய எஜமான்களுடனும் கூட்டுச் சேரவும் உத்தரவாதம் அளித்தது.

இருந்தும் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகவும் வெளப்படையான தமிழ் தேசிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட முதலாவது அரசியல் கட்சியாகவும் திகழ்ந்தது. அவர்களது வேண்டுகோள்கள் உணர்ச்சிகரமானவையாகவும் மேலும் பார தூரமான சமூக அரசியல் பிரச்சினைகளிலும் பார்க்க மொழிப் பிரச்சினையை உயர்த்திக் காட்டுவனவாகவும் இருந்தன. அக் கட்சி அரசியல் அரங்கேறிய சந்தர்ப்பம் இவ்வாறிருந்த போதிலும், தமிழ் நலன்களுக்கு சிங்கள இனவெறியால் ஏற்படும் அச்சுறுத்தலை உண்மையாகச் சமாளிக்கக்கூடிய வரிசைக்கிரமமான பல கோரிக்கைகளையுடைய ஒரே ஒரு நம்பகமான தமிழ் தேசிய கட்சி போல தோன்றிய போதிலும், தமிழ் மக்களின் குறைபாடுகள் சம்பந்தமான சகல பேச்சு வார்த்தைகளும் தமிழரசுக் கட்சியின் நாலு பிரதான கோரிக்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. தமிழரசுக் கட்சி அதன் லட்சியங்களை அடைவதற்கு வேலை செய்த வழி. சில பிரச்சினைகளில் அது சமரசத்துக்கு வந்த முறை, மேலும் முக்கியமாக ஏனையவற்றை விட அது கைகழுவிவிட்டவிதம், தேசிய இனப்பிரச்சினையின் இந்த அம்சத்தை கையாளும் பல்வேறு முயற்சிகளில் சகல வகையான சிங்களப் பேரினவாதிகளும் நடந்து கொண்ட மாதிரி ஆகிய அனைத்தும் தமிழ் மக்களின் நியாயமான மனத்தாங்கல்களை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு அடுத்தடுத்துச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் பின்னணியில் சுருக்கமாக என்றாலும் இங்கு ஆராயப்படுகின்றன.

தமிழரசுக் கட்சியின் நாலு பிரதான கோரிக்கைகளும் பின்வருமாறு :

1.சிங்களம், தமிழ் இரண்டையும் அரசகரும மொழிகள் ஆக்குவது

2. சுதந்திரம் பெற்றபோது பிரஜைகளாயிருந்த இந்திய வம்சாவழித் தமிழர் அனைவரும் பிரஜாவுரிமை வழங்கியது.

3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றத்தை உடனடியாக நிறுத்துவது

4. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கிய ஒரு சமஷ்டி அரசுடன் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஸ்தாபிப்பது.

1956 தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சி அதன் கோரிக்கைகளுக்காக வெகுஜன இயக்கம் ஒன்றைத் தொடங்குவதாக அச்சுறுத்தியது. இதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசின் பிரதான எஸ்.டபிள்ய+.ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்:கும் தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்துக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இது பண்டாரநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தம் என்ற (பண்டா – செல்வா) உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. பாராளுமன்றத்தில் அரசகரும மொழிச் சட்டம் அங்கீகரிக்கப்படும் சமயத்தில்கூட தமிழின் நியாயமான உபயோகத்தை உத்தரவாதம் செய்;யும் சட்டம் ஒன்று வெகு விரைவில் நிறைவேற்றப்படும் என்று பண்டாரநாயக்கா உறுதியளித்தது இங்கு நமது கவனத்துக்கு உரியதாகும். பண்டாரநாயக்கா அரசியல் பரவலாக்க்த்தில் நம்பிக்கையுடையவர். சுதந்திரத்துக்கு வெகுகாலத்துக்கு முன்னே இத்தீவுக்கு ஒரு சமஷ்டி ஆட்சி முறை வேண்டும் என வாதாடிய முதல்வர் என்பதும் மனம் கொள்ளப்பட வேண்டும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் மிகப்பிரதானமான இயல்பு யாதெனில், வட மாகாணத்துக்கு ஒன்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒன்றுமாக பிரதேச சபைகளை அமைப்பதற்கு தேர்தலால் நிறுவப்படும். கல்வி, சமூகசேவை நலம் முதல் விவசாய, தொழில்துறை அபிவிருத்தி வரை பல நடவடிக்கைகளுக்கான விசேஷ அதிகாரங்களை அவை கொண்டிருக்கும். பிரதேச சபைகள் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தின் எதிர்கால குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் விதியும் கொண்டு வரப்பட்டது. வரிசூழல், கடன்பெறல் சம்பந்தமான அதிகாரங்களும் அச் சபைகளுக்கு இருக்கும் வகையில் சட்டமும், கொண்டுவரப்படும். மொழி விஷயத்தில் தமிழை ஒரு சிறுபான்மை இனத்தின் மொழியாக அங்கீகரிக்கவும், அரசகரும மொழிச் சட்டத்தை ஊறுபடுத்தாத வகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தில் தமிழை உபயோகிக்கவும் வசதி; செய்யப்படும். மேற்கூறிய அம்சங்கள் தமிழரசுக் கட்சியின் அடிப்பi;க் கோரிக்கைகளை பெருமளிவில் ப+ர்த்தி செய்ததோடு இரு மாகாணங்களிலுமுள்ள தமிழ் - முஸ்லிம் மக்களின் மொழி உரிமை, பிரதேச உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு திருப்திகரமான அடிப்படையையும் வழங்கியது. எவ்வித உடன்பாடும் ஏற்படாத, தமிழரசுக் கட்சி அத்துணை அக்கறை செலுத்தாத ஒரு பிரச்சினை பிரஜாவுரிமைச் சட்டம் என்பதும், இந்தப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே தமிழரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது என்பதும் இங்கு வேடிக்கையான ஒன்றாகும். இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் மொழி, கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழரசுக் கட்சி எள்ளத்தனை அக்கறையும் எடுத்தது கிடையாது நாட்டில் மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்தப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டின் தேவையில் குறைந்தபட்ச கவனம் கூட அது காட்;டவில்லை. இந்த மக்களின் எண்ணிக்கையையும் தேசிய பொருளாதாரத்தில் அவர்கள் வகிக்கும் முக்கியமான பாத்திரத்தையும், அதன் சொந்த அரசியல் நலன்களுக்காக அரடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு ஒரு நெம்பு கோலாக பயன்படுத்துவதிலேயே அது ப+ரண கவனம் வந்துள்ளது. தோட்டத் தொழிலாளர் பற்றிய தமிழரசுக் கட்சியின் இந்த கபடமான அணுகுமுறை அதன் தேர்தல் அரசியலுக்கு மிக லாபகரமானதாக இருந்ததோடு, சாதிப்பிரிவால் புரையோடிய தமிழ் சுமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்கள் தோட்டத் தொழிலாளர் மீது காட்டும் அலட்சிய மனோபாவத்தையும் அப்பட்டமாக பிரதிபலித்தது.

இந்த பண்டா – செல்வா ஒப்பந்தம் பிற்போக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கள்ளக் கூட்டுடன் சிங்கள இன வெறியர்கள் தொடுத்த நச்சுத்தனமான தமிழர் - எதிர்ப்பு இயக்கத்தின் காரணமாக கைவிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை கைவிடும்படி கோரும் அபகீர்த்தி மிக்க கண்டி யாத்திரிரையில் ஜே. வி. ஜயவர்க்கனா ஒரு பிரதான பாத்திரத்தை வகித்தார். தெற்கே இருந்த இடதுசாரி, மற்றும் முற்போக்கு சக்திகள் இவ் ஒப்பந்தத்தைத் கிழித்தெறியும் சிங்கள இன வெறியர்களின் முயற்சிகளுக்கு எதிராக அரசாங்கத்தின் கரங்களைப் பலப்படுத்த தம்மால் இயன்ற அனைத்தையும் செய்த அதே வேளையில் அ. அமிர்தலிங்கம் உட்பட தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அவசரமாக சிறீ – எதிர்ப்பு இயக்கத்தை கட்சிக்குள் நிலவிய இணக்கமற்ற சிந்தனையை அம்பலப்படுத்தியது மாத்திரமல்ல. அரசியல் சூழ்நிலைக்கு பொருத்தாத அதன் உணர்வோட்;டத்தையும் புட்டுக் காட்டியது. இந்த சிறீ - எதிர்ப்பு இயக்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பகைமையைத் தூண்டிவிடும் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்த சி;ங்கள இன வெறியர்களின் கரங்களைப் பலப்படுத்தியது. அடுத்த சில மாதங்களில் இவ் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. சுதந்திரத்திற்கு பிந்திய முதலாவது வகுப்புவாத வன்முறைப் பேரலை கொந்தளித்தெழுந்தது.

தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்துக்கான சட்டம் (தமிழ் மொழி விசேஷ ஏற்பாட்டு விதிகள் சட்டம்) 1958 ஆகஸ்ட்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதன் பிரகாரம் தமிழ் மொழி தமிழ் மாணவர்களின் பாடசாலை. பல்கலைக்கழக கல்விக்கான போதனா மொழியாக இருக்கும் ; தமிழில் பயின்ற மாணவர்கள் அரசாங்க சேவைக்கான பரீட்சைகளுக்கு தமிழ் மொழியில் தோற்றலாம் ; அவர்கள் தெரிவு செய்யப்பட்டால் சிங்கள மொழியில் குறைந்தபட்ச தகைமை பெறுவதற்குக் கால அவகாசம் வழங்கப்படும் என்பன போன்ற உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட்டன. அரசாங்க அலுவலர்கள் உத்தியோக தோரணையில் சி;ங்களத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது தவிர, தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அரசாங்கத்துடனான சகல தொடர்புகளையும் தமிழ் மொழியில் வைத்துக் கொள்ளவும் இச் சட்டம் வசதி அளித்தது அன்றியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதேச அரச நிறுவனங்கள் தமது விவகாரங்களைத் தமிழில் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அரசியல் விமர்சகர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத இன்னொரு உடன்படிக்கையும் தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கத்துக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டது. அரச சேவையில் பிரதான பதவிகளை வகித்து வந்த சிங்கள இனவெறி விஷமக்காரர்கள் 1958 தமிழ் மொழி விசேஷ விதிகள் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் மொழி உரிமைகளுக்கு குழி பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் இந்த சாம் பி.சி. பெர்னான்டோ செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி நன்கொடை பெறும் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரிப்பதை எதிர்ப்பதற்கு கத்தோலிக்க மதபீடங்களிடன் கூட்டுச் சேரும்வரை தமிழரசுக் கட்சிக்கும் சிரிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் சுமுகமாகவே இருந்தன. ஏகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் அரசாங்களத்தின் இந் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதிருந்த போது, தமிழரசுக் கட்சி இப் பிரச்சியில் அதிகப்படியான அக்கறை செலுத்தியது கவனித்தக்கதாகும். (1959இல் கொண்டு வரப்பட்டு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதோடு காலாவதியாகிப்போன) நீதிமன்ற மொழி மசோதாவை. தமிழ்மொழி உபயோகத்துக்கு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல் மீண்டும் கொண்டு வருதன் மூலம் இருதரப்பு உறவுகளையும் மோசமாக்குவதற்கு அரசாங்கமும் அதன் பங்களிப்பை வழங்கியது. இந்த விவகாரங்கள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டிருக்கலாம். கம்ய+னிஸ்ட் கட்சியானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை ஒரு நீதிமன்றப் பதிவு மொழி ஆக்க வசதி செய்ய வேண்டுமென அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரசாரம் செய்தது. ஆனால், அரசாங்கத்திலிருந்த சிங்கள இனவெறித் தீவிரவாதிகள், அரசாங்கத்துடன் தமது பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்ட தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரக இயக்கம் ஒன்றை தொடுப்பதாக விடுத்த அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, கம்ய+னிஸ்ட் இந்த முயற்சிகளை முறியடிக்கப்படும் வெற்றி கண்டார்கள். 2 – 1 – 1961 இல் தமிழரசுக் கட்சி அரைகுறை வெற்றியுடன் ஹர்த்தால் ஒன்றை நடத்தியது. அதைத்தொடர்ந்து 20 - 2 1961 இல் ஒரு சக்தியாக்கிர இயக்கத்தையும் தொடுத்தது. யாழ்ப்பாண கச்சேரி ( அரசாங்க அதிபரின் காரியாலயம்) வாயிலில் மறியல் போராட்டமும் இடம் பெற்றது. ஆனால், இத்தகைய இயக்கத்துக்கு காரணியாக இருந்த பிரச்சினை நீதிமன்ற மொழி சம்பந்தமானதாக இருந்த போதிலும், நீதிமன்றத்துக்கு வெளியே எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ் இயக்கத்தில் பங்கு பற்றியோர் மீது பொலிசார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தனர். இதை எதிர்த்து இடதுசாரி அரசியல் கட்சிகள் பலத்த ஆட்சேபனைகளைத் தெரிவித்து, குடிமக்க்ள்மீது தேவையற்;ற வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிய போதிலும், அரசாங்கம் பொலிஸாரின் நடத்தையை நியாயப்படுத்த பிரயத்தனம் செய்தது இதன் விளைவாக இயக்கமானது மேலும் பலம் பெற்று வளர்ந்தது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச அலுவல்கள் நடைபெறபது தடைப்பட்டன. இவ்விஷயம் பற்றி தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் முன் முயற்சி எடுத்ததது. நீதி அமைச்சர் சாம் பி.சி. பெர்னாண்டோவுக்கும் தமிழரசுக் கட்சி தலைவர்களுக்குமிடையில் சம்பாஷணைகள் நடைபெற்றன சாம் பி. சி. பெர்னாண்டோ – செல்வநாயகம் ஒப்பந்தம் என்று ஜனரஞ்சகமாக அழைக்கப்படும் 5 – 4 – 61 சம்பாஷனைகளின் அறிக்கையில் நீதி அமைச்சரும் தமிழரசுக் கட்சி தலைவர்களும் கைச்சாத்திடனர். தமிழரசுக் கட்சியின் ஐந்து கோரிக்கைகளட் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் சாராம்சமும், அவை பற்றி அரசாங்கமும் தமிழரசுக் கட்சி பிரதிநிதிகளும் எடுத்த நிலைப்பாடுகளும் பின்வருமாறு :

1. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழி

(அ) அரசாங்கம் பொது மக்களுடனான சகல தொடர்புகளையும் தமிழில் நடத்த விருப்பம் தெரிவித்தது.

ஆனால் உத்தியோக ரீதியான எல்லா பதிவேடுகளையும் சிங்களத்தில் வைக்க வேண்டுமென்று வற்புறுத்தியது. உத்தியோக தஸ்தாவேஜூகள் தமிழிலும் பேணப்பட வேண்டுமென்று தமிழரசுக் கட்சி தலைவர் விரும்பினர். தஸ்தாவேஜூகள் சிங்களத்தில் இருக்கும் அதே வேளையில் தமிழில் அதிகாரப+ர்வமான மொழி பெயர்ப்புகள் இருப்பதை அரசாங்கம் விரும்பியது. இதற்கு தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உடன்படவில்லை.

(ஆ) பாராளுமன்றத்தில் சிங்களத்தில் அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு மாசோதாவும் தமிழிலும் உத்தியோக ப+ர்வமாக அங்கீகரிக்கப்படவேண்டுமென தமிழரசுக் கட்சி விருப்பம் தெரிவித்தது. அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு மசோதாவுக்கும் உத்தியோக ப+ர்வமான மொழி பெயர்ப்புக்களை வழங்க அரசாங்கம் விரும்பியது. தமிரசுக் கட்சி உடன்படவில்லை.

(இ) தமிழ்மொழி விசேஷ விதிகள் சட்ட வரம்புக்குள் தமிழரசுக் கட்சி தலைவர்கள் முன்வைக்கும் எந்த பிரச்சினையையும் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உடன்படவில்லை.

2. நீதி மன்ற மொழி பற்றி :

சகல பதிவேடுகளும் சிங்களத்தில் பேணப்பட வேண்டும் என்று முன்னர் அடம்பிடித்த அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவை சிங்களத்திலும் தமிழிலும் வைக்கப்படுவதற்கு உடன்பட்டது. தமிழரசுக் கட்சி தலைவர்கள் இதை நிராகரித்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதிவேடுகள் தமிழில் மாத்திரம் வைக்கப்பட வேண்டுமென விரும்பியதோடு, உயர்நீதிமன்றம் உட்பட மேல் நீதி மன்றங்களில் மேல் முறையீடுகளை தமிழில் விசாரணை செய்வதற்கு விசேஷ நீதவான்கள் நியமிக்கப்படவேண்டுமென வலியுறுத்தினர்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களின் உரிமைகள் பற்றி :

தமிழ்பேசும் மக்களிடமிருந்து வரும் கடிதங்களுக்குரிய எந்தப் பதிலுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றை வழங்குமாறு 1960 டிசம்பரிலேயே சகல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். முத்திரைகள் காசுக்கட்டுரைகள், வருமானவரி, சுங்கத் துறைப்படிவங்கள் அனைத்தும் சிங்களத்திலும் தமிழிலும் அச்சடிக்கப்படவும், நாட்டின் சகல பாகங்களிலும் அவை விநியோகிக்கப்படவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழரசுக் கட்சி தலைவர்கள் இது பற்றி மௌனம் சாதித்தனர்.

4. 1956க்கு முன்னர் அரசாங்க சேவையில் சேர்ந்த ஆனால் 1 – 1 – 1961 முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சிங்களத்தில் தேர்ச்சி பெறத் தவறிய தமிழ் அரரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளுக்கு நஷ்ட ஈட்டுடன் இளைப்பாறும் உரிமை பற்றி :

பத்து ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த எந்த நபருக்கும் அவர்கள் சேவைக்காலத்துடன் ஐந்து வருடங்களைச் சேர்ந்து, உரிய உரிமைகளுடன் அவர்கள் ஓய்யு பெறுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழரசுக் கட்சி இது பற்றி யாதொன்;றும் கூறவில்லை.

5. பிரதேச சபைகள் பற்றி

இவ் விஷயம் பற்றிய கலந்தாலோசனையைச் சிறிது காலம் ஒத்தி வைக்குமாதறு அமைச்சர் வேண்டிக் கொண்டார். தமிழரசுக் கட்சி தலைவர்கள் இவ் வேண்டுகோளை புறக்கணித்து விட்டனர்.

சிங்களம் மட்டுமே ஒரே ஒரு அரகரும மொழி என்ற அந்தஸ்துக்கு ஊறு விளைவிக்காமல் நிர்வாக, சட்ட விவகாரங்களில் மொழியின் அந்தஸ்து சம்பந்தமாக பிரதான சலுகைகள் வழங்க அரசாங்கம் விரும்புகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு யாதெனில் தமிழ் மொழியின் அந்தஸ்து சம்பந்தமான சம்பிரதாயங்களே அன்றி தமிழ் மொழியின் உண்மையான அந்தஸ்து பற்றியதல்ல.

தமிழரசுக்கட்சி பேச்சுவார்த்தைகள் முடிவுற்று ஒரு வாரம் கூட கழிவதற்கு முன்னே அரசின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. வடக்கு, கிழக்கில் சமாந்தர நிர்வாகம் ஒன்றை நிறுவுவதன் மூலம் அதன் இயக்கத்தை தீவிரமாக்குவதற்கு ஏற்ற திட்டங்கள் அனைத்தும் வகுக்கப்பட்டு விட்டன என்று பிரகனடம் செய்தது. யதார்த்தத்தில் 14 – 4 – 61 அவர்கள் போட்டித் தபால் சேவை ஒன்றை ஆரம்பித்தனர். அதற்குப் பதிலாக அரசாங்கம் அவசரக்கால நிலையைப் பிரகனடனம் செய்து சத்தியாக்கிரக இயக்கத் தலைவர்களை தடுப்புக் காவலில் வைத்தது. இயக்கமும் தமிழரசுக் கட்சியின் பங்கலோட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி இரண்டு தினங்களில் தகர்ந்து விழுந்தது. அதற்கு பிந்திய ஆண்டுகளில் ஸ்ரீ. ல. சு. கட்சி அரசுக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் மனோபாவம் வைரமேறியது. அதன் தலைமை ஏகாதிபத்திய நலன்களு;கு வெளிப்படையாக ஆதரவளித்து, ஐக்கிய தேசிய கட்சியுடன் அதன் தொடர்புகளைப் பலப்படுத்தியது. இவ்வாறு தமிழரசுக் கட்சி 1965 – 1969 ஐக்கிய தேசிய கட்சிதலைமையிலான கூட்டரசாங்கத்தில் பங்குதாரராகச் சேர்ந்து கொண்டது.

சிங்கள இனவெறியை பின்னணியாகக் கொண்டு பார்த்தால் தமிழரசுக் கட்சியின் நடத்தை நியாயமற்றது மாத்திரமல்ல. யதார்த்த விரோதமானதுமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ப+ர்த்தி செய்ய அரசாங்கமானது பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்த தருணத்தில், போராட்டம் ஒன்றைத் தொடுத்த தமிழரக் கட்சியின் நோக்கங்கள் பற்றி இடதுசாரிகள் பரதூரமான சந்தேகங்களை வெளியிட்டார்கள். இப்படி செய்வதன் மூலம் மஷ்டியானது சிங்கள இனத்தின் பந்தோபஸ்தை அச்சுறுத்தக் கூடிய ஒரு சுதந்திர தமிழ் நாட்டுக்கு வழிகோலும் என்று நீண்டகாலமாக தீவிர பிரசாரம் செய்து வந்த சிங்கள பேரினவாதிகளின் சுரங்களை மாத்திரமே தமிழரசுக் கட்சி பலப்படுத்தியது. அக் கட்சியை விமர்சனம் செய்து வந்தபோதிலும், தேசிய சிறுபான்மை இனம் என்ற ரீதியில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நின்ற இடதுசாரிகள் மீதும் தமிழரசுக் கட்சி மென்மேலும் பகைமையான நிலைப்பாட்டை மேற்கொண்டது.

இக்கால கட்டத்தில் இடதுசாரி இயக்கத்துக்குள் ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதே. சோஷலிசத்துக்கான சமாதான பாதை பற்றி சர்வதேச கம்ய+னிஸ்ட் இயக்கத்துக்குள் கட்சிக்குள்ளும் அதன் பிரதிபலிப்பை தோற்றுவித்தது. கம்ய+னிஸ்ட் கட்சியை இன்னொரு முதலாளித்துவ பாராளுமன்றக் கட்சியாக மாற்ற விரும்பிய சந்தர்ப்பவாதிகள் சோவியத் ய+னியனால் தீவிரமாக உற்சாகப்படுத்தப்பட்டனர். சோஷலிசத்துக்கான புரட்சிகர பாதையில் உறுதியான நம்பிக்கையுடைய மார்க்ஸிஸ லெனினிஸவாதிகளால் இது முழுமூச்சுடன் எதிர்க்கப்பட்டது. இதன் விளைவாக கம்ய+னிஸ்ட் கட்சியில் பிளவு உண்டாகியது. சோவியத் ய+னியன் ஆதரவுபெற்ற திரிபுவாதிகள் சந்தர்ப்பவாத பாராளுமன்ற அரசியலில் ஆழமாக மூழ்கினர். கட்சியில் இருந்த மாற்றங்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரச்சினையிலும் கோட்பாடு ரீதியான புரட்சிகர நிலைப்பாட்டில் அழுத்தமாக நின்றனர்.

ட்றொட்ஸ்கியவாத லங்க சமசமாஜ கட்சியிலும் பிளவு ஏற்பட்டு அதன் பெரும்பகுதி பாராளுமன்ற மார்க்கத்தைப் பின்பற்ற மரபு சார்ந்த ட்றொட்ஸ்கிய வாதிகள் அரசியல் அரங்கின் விளிம்பிற்குத் (வைதீக ட்றொட்ஸ்கியவாதிகள் அரசியல் நடவடிக்கையின் ஓரத்துக்குத்) தள்ளப்பட்டனர். பாராளுமன்ற கம்ய+னிஸ்ட் கட்சியும் சமசமாஜ கட்சியும் பாராளுமன்ற ஆசனங்கள் பற்றிய கனவில் மென்மேலும் அமிழ்ந்தன. ஸ்ரீ. ல. சு. க. வின் ஆதரவின்றி தமது இருக்கின்ற ஆசனங்ளைக்கூட காப்பாற்ற இயலாதென எண்ணிய அவர்கள் ஸ்ரீ. ல. சு. கவுடன் மென்மேலும் நெருக்கமாக இணைந்தனர். சம சமாஜ கட்சி 1964 இல் ஸ்ரீ. ல. சு. க. அரசாங்கத்தில் சேர்ந்தே அதே வேளையில் கம்ய+னிஸ்ட் கட்சி 1970 வரை காத்திருந்தது.

தமிழரசுக் கட்சியும் சமசமாஜ கட்சியின் அதிருப்தியாளர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய ஸ்ரீ. ல. சு. க. பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் கடைக் கோடி வலதுசாரிகள் பிடியிலிருந்து பத்திரிகைத் துறையை விடுதலை செய்யும் நோக்கத்துடன் லேக் ஹவுஸ் (டுயமந ர்ழரளந) தேசியமயமாக்கும் மசோதாவில் ஸ்ரீ. ல. சு. க. அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கை கோர்த்து நின்றார்கள். 1965 தேர்தலுக்கு முன் தமிழரசுக் கட்சி தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஓர் இரகசிய உடன்படிக்கையை செய்து, பின்னர் ஐ.தே.க. தலைமையிலான கூட்டரசாங்களத்தில் பங்குதாரர் ஆனார்கள் 24 – 5 – 1965 டட்லி – கசல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான அவ் உடன்படிக்கையின் சாராம்சம் பின்வருமாறு.

1. தமிழ்மொழி விசேஷ விதிகள் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழை நிர்வாக, பதிவேட்டு மொழியாக்குவதற்கு விதிகள் வகுப்பது.

2. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதி நிர்வாகத்தை தமிழில் நடத்தவும் பதிவேடுகளை தமிழில் வைக்கவும் வசதியாக நீதிமன்ற மொழிச் சட்டத்தில் திருத்தல்கள் செய்வது.

3. மாவட்ட சபைகள் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பது. (இச் சபைகளின் அதிகார வரம்புகள் பற்றி பின்னர் பேச்சுவாத்த்தைகள் நடத்துவதற்காக விடப்பட்டது.)

4. சட்டத்தின் பிரசாரம் நாட்டின் எல்லா பிரஜைகளுக்கும் நிலப்பங்கீடு கிடைப்பதற்கு வசதியாக நிலச் சட்டம் திருத்தப்பட வேண்டும். இருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பின்வரும் முன்னுரிமைகள் கவனிக்கப்பட வேண்டும் என அனுமதிக்கப்பட்டது.

அ) இம் மாகாணத்திலுள்ள காணிகளை முதலாவதாக அம் மாவட்டத்தில் உள்ள நிலமற்றவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

ஆ. இரண்டாவதாக அவை இம் மாகாணங்களில் வசதியும் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இ) மூன்றாவதாக இலங்கையின் இதர பிரஜைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். இவ் விஷயத்தில் தீவின் இதர பகுதிகளில் வாழும் தமிழ் பிரஜைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்த டட்லி – செல்வா ஒப்பந்தம் அமுல் நடத்தப்படவில்லை. இருந்தும் பொதுத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் இருக்கும் வரை தமிழரசுக் கட்சி கூட்டரசாங்கத்தில் ஒரு பங்குதாரராக இருந்து வந்தது. தமிழ்மொழியின் அந்தஸ்து சம்பந்தப்பட்ட சட்டத்தைக் கொண்டுவரும் அரசின் முயற்சியை ஸ்ரீ. ல. சு. க. தீவிரமாக எதிர்த்தது. இதற்காக ஒரு காரணம் ஸ்ரீ. ல. சு. க மீது தமிழரசுக் கட்சி தலைமை காட்டி வந்தபடி பகைமை உணர்வே ஆகும். அவர்கள் தமிழ் - எதிர்பு சுலோகங்களை கோஷித்து, சிங்கள இனவெறு உணர்ச்சிக்கு முறையீடு செய்தார்கள். மேலும் வெட்கக்கேடானது என்னவென்றால் பாராளுமன்றத்தில் அவர்களுடன் இருந்த கம்ய+னிஸ்ட், சமசமாஜ சகபாடிகள் தமது ஸ்ரீ. ல. சு. க நண்பர்களை கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காதேயாகும். சிங்கள இனவெறி உணர்ச்சி தூபமிடாதது அக் கட்சிகளுக்கு மதிப்பைக் கொடுப்பதாக இருந்த போதிலும் இப் பிரச்சினையில் அவர்கள் செயலற்றிருந்ததற்கு – லெனினிஸவாதிகள் ஐ. தே. க. – த. அ. க. நேச அணியின் பிற்போக்கான இயல்பை கண்டித்து இனவெறி மார்க்கத்தையும் பாராளுமன்ற இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதத்தையும் கண்டித்து வந்தார்கள்.

தமிழரசுக் கட்சி ஐ. தே. க. வுடன் கூட்டரசாங்கத்தில் பங்கு பற்றியமை தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது முதல் அதன் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னறிவித்தலாக விளங்கியது.

1. தமிழரசுக் கட்சி சிங்களத்தை அரசகரும மொழியாக சாராம்சத்தில் அங்கீகரித்து விட்டது.

2. தமிழரசுக் கட்சி இந்திய வம்சாவழி தமிழர்களின் பிரஜா உரிமைக்கான அதன் கோரிக்கைக்கு முழுக்குப் போட்டது மாத்திரமல்ல. காணி அபிவிருத்தி திட்டங்களில் நில உடமைக்கான அவர்களது உரிமையையும் காற்றிலே வீசி விட்டது.

3. தமிழரசுக் கட்சி பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் கீழ் பிரேரிக்கப்பட்ட பிரதேச சபைகளிலும் பார்க்க குறைந்த அதிகாரங்களையுடைய மாவட்டச் சபைகளை ஏற்றுக் கொள்ள விரும்பியதோடு, சாராம்சத்தில் சமஷ்டி அரசுக்கான அதன் கோரிக்கையையும் கை கழுவி விட்டது.

4. தமிழரசுக் கட்சி ஐ. தே. க. வுடன் ஒரு நிரந்தரமான கூட்டணியையும் உருவாக்கிக் கொண்டு விட்டது.

த. அ. க. அதன் லட்சியங்களை நிறைவேற்றத் தவறியமை, ஒரு நம்பகமான அரசியல் வேலைத் திட்டம் இல்லாமை இரண்டும் பராளுமன்ற அரசியலி;ல் அதைப் பலவீனப்படுத்தி விட்டன. குறிப்பிடத்தக்க ஒரே ஒரு தமிழ் தேசியக் கட்சி என்ற வகையில் 1970ஆம் ஆண்டு தேர்தலில் த. க. வெற்றி ஈட்டிய போதிலும் 1952 இன் பின் முதல் தடவையாக அதன் ஒட்டு மொத்த வாக்கு வீதம் உண்மையில் வீழ்ச்சி அடைந்தது.

1970இல் சு.க. தலைமையிலான ஐக்கிய முன்னணி ஏகப் பெரும்பான்மையான வெற்றி ஈட்டியதால் த. அ. க. பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டது. த. அ. க. அந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை தாக்க ஐ. தே. க. வுடன் கூட்டுச் சேர்வதற்கான காரணங்களை கண்டுபிடிப்பதற்கு அதிக காலம் செல்லவில்லை.

1970இல் தரப்படுத்தல் முறையை புகுத்துவதன் மூலம் பல்கலைக்கழ பிரவேசப் பிரச்சினையைத் தவறாகக் கையாண்டமை, சிறீலங்காமை ஒரு குடியரசாகப் பிரகடனம் செய்யும் 1972 புதிய அரசியல் யாப்பில் தேசிய சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்புகளை வழங்காமை ஆகியவை ஐக்கிய முன்னணி அரசைச் சாடுவதற்கு த. அ. க. க்கு போதிய அஸ்திரங்களைக் கொடுத்தன. ஐக்கிய முன்னணியில் இருந்த சிங்கள இனவெறியர்களைப் பொறுத்தவரையில், அவர்களும் அரசுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் பகைமையை வளர்ப்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தினர். 1971இல் வெடித்தெழுந்த ஜனதா விமுக்தி பெரமுனவின் கிளர்ச்சிவ வங்காள தேச விடுதலையில் இந்தியாவின் தலையீடு இவற்றால் உற்சாகம் பெற்ற த. அ. க. மேலும் தீவிரமான நிலைப்பாட்டை மேற்கொள்ளத் தொடங்கியது. இன்னும் 1977 பொதுத் தேர்தலை எதிர்பாத்து, ஐ. தே. க. வின் ஆசீர்வாதத்துடன் த. அ. க. பலவீனமான தமிழ் காங்கிரஸ_டனும் இதர சக்திகளுடனும் சேர்ந்து தமிழர் ஐக்கி;ய விடுதலை முன்னணியாக உருவெடுத்தது.

மார்க்;;;;;;;;;ஸிஸ – லெனினிஸவாதிகள் எப்பொழுதும் தமிழ் மக்களின் நியாயமான குறைபாடுகளை அங்கீகரித்து வந்ததோடு, ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்கவில்லை. ஒரு தனி நாட்டுக்கான கோரிக்கை நாட்டின் எந்த தேசிய இனத்தின் நலன்களுக்கு இசைவானதல்ல என்றும் அது அந்நியத் தலையீட்டுக்கு வழிகோலும் என்றும் அவர்கள் கருதிவந்தார்கள். த. அ. க. ஒரு புறம் தமிழர் லட்சியத்தில் துரோகிகள் எனக் கருதப்படுவோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறு இளம் தீவிரவாதிகளை தூண்டி வந்த அதே வேளையில், மறுபுறம், ஸ்ரீ. ல. சு. க. அரசைக் கவிழ்க்க ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசியச் சதிகளில் ஈடுபட்டு வந்தது. 1977 தேர்தலுக்கு முன் ஐ. தே. க. , த. அ.க., இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய முத்தரப்புத் தலைவர்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் உண்மையான உள்ளடக்கமானது ஒருவரும் அறியாத பரமரகசியம் ஆகும். ஆனால் ஐ.தே. க. அரசாங்கம் பல்கலைக்கழக பிரவேசப் பிரச்சினையை பிரவேச எண்ணிக்கையை ஓரளவு அதிகரிப்பதன் மூலம் சமாளித்தது. இந் நடவடிக்கை ஒரு தற்காலிக அவகாசத்தை அளித்தது. ஆனால், நீண்டகால நோக்கில் கல்வியின் தரம், எதிர்கால வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் பரததூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியது. உண்மையில் எவ்வித அதிகாரங்களும் அற்ற மாவட்ட சபைகளை நிறுவவும் ஐ. தே. க அரசாங்கம் முயன்றது. இது த. ஐ. வி. மு. யின் கணிசமான பகுதியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தவே அவர்கள் இறுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறி, தமிழ் ஈழ விடுதலை முன்னணியை நிறுவினர். 1977 தமிழருக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து தீவிரமாக இளைஞர் இயக்கமானது மேலும் பலம் பெற்று வளரத் தொடங்கியது. அக் காலத்தில் பிரதமராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா யதார்த்தத்தில் தமிழர்கள் மீது யுத்தம் ஒன்று பிரகடனம் செய்தார். 1979, 1981ஆம் ஆண்டுளில் தமிழர் - எதிர்ப்பு வன்முறைகள் அடுத்தடுத்து இடம்பெற்றன. குறிப்பாக 1983 இனக் கலவரத்தின் விளைவாக ஒரு தனித் தமிழ்நாடு கோரும் தீவிரவாத இயக்கங்கள் மேலும் வளர்;ச்சியடைந்தன. இந்தச் சம்பவங்களை, நிறைவேற்றும் அதிகாரமுடைய ஜனாதிபதி அமைப்பு முறையைப் புகுத்துவது, பாராளுமன்ற தேர்தல்களை நடத்தாமல் 1983க்கு பின்னும் அரசாங்கத்தின் கால எல்லையை நீடிப்பது, அதன் அரசியல் எதிர்களை அச்சுறுத்த சாத்தியமான சகல வழிகளையும் பயன்படுத்துவது, ஆகியவற்றின் மூலம் ஐ.தே.க. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைக்கு குழிபறித்துள்ள சூழ்நிலையில் வைத்து நாம் நோக்க வேண்டும்.

1983 இனக்கலவரமானது ஸ்ரீலங்காவின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கான முதலாவது உண்மையான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியது உண்மையான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியது. ஐ.தே.க. அரசாங்கத்தின் மனோபாவம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலை இயக்கங்கள் நசுக்க ராணுவத் தீர்வுக்கான அதன் முஸ்திபு இரண்டும் விடுதலை இயக்கங்கள் மீது மேலும் கூடுதலான செல்வாக்கை வகிக்கும் சாத்தியப்பாட்டை இந்தியாவுக்கு அளி;த்தன. விடுதலை போராட்டங்களும், ஐ.தே.க. அரசின் இன ஒழிப்புக் கொள்கையும் பற்றிய மார்க்சிஸ – லெனினிஸ வாதிகளின் கருத்துக்கள் மிக மிகத் தெளிவானவை. இலங்கை கம்ய+னிஸ்ட் கட்சி (இடது) மேற்கொண்ட நிலைப்பாட்டின் மூலம் இவை தெளிவதக்கபட்;டுள்ளன. கம்ய+னிஸ்ட் கட்சி (இடது) தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுவது நீதியானதும் சரியானதும் மட்டுமல்ல தேவையானதும் கூட என்று பிரகடனம் செய்துள்ளது. போராட்டம் என்பது தேசிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு மார்க்கம் என்பதை அங்கீகரிக்கும் அதேசமயம், பிரித்து செல்வதற்கான கோரிக்கையானது எந்த ஒரு தேசிய இனத்தின் நலனுக்குமோ, அல்லது நாடு முழுமைக்குமோ உகந்தல்ல என அது கருதுகின்றது. அந்நியத் தலையீட்டின் அபாயம் பற்றி தீவிரவாதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அது அடிக்கடி எச்சரிக்கை தந்துள்ளது. இந்தியா அதன் பிராந்திய நலன்களைவ விஸ்தரிக்க இந்நிலைமையைப் பயன்படுத்தாதவரை ஒரு சமாதான தீர்வைக் காண்பதற்கு ஒரு நடு நிலையான நேச அயல்நாடு என்ற வகையில் அதன் பாத்திரத்தை இடது கம்ய+னிஸ்ட் கட்சி வரவேற்கின்றது. இருக்கின்ற அரசியல் கட்டுக் கோப்புக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாமும் தமிழர்கள் சம்பந்தமான பிரச்சினைகளின் தீர்வுக்கான பல ஆலோசனைகளையும், இந்த ஆலோசனைகளை அழுல் நடத்துவதற்கான சூழ்நிலையைப் பெறுவதற்கு எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகளையும் அது முன் வைத்துள்ளது. (தேசிய இனப்பிரச்சினையில் ஓர் இடைக்காலத் தீர்வுக்கான இலங்கை கம்ய+னிட் கட்சி (இடது) மத்திய கமிட்டியின் குழறந்த பட்சப் பிரேரணைகளைப் பார்க்கவும்).

இந்திய தலையீடு பற்றிய க..க (இடது)வின் அச்சங்கள் நல்ல ஆதாரங்களை உடையவை. வெளிநாட்டு கொள்கையும் பாதுகாப்பும் சம்பந்தமான விஷங்களில் இலங்கை அரசிடமிருந்து இந்தியா பெற்றுள்ள சலுகைகளால் இவை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு இதைத் தீர்ப்பதில் அதன் பாத்திரம் ஆகியவற்றின் பின்னணியில் 29 – 7 – 1987 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் தார்ப்பரியங்கள் பற்றி நாம் இங்கு பரீசீலனை செய்வோமாக.

இன்றைய ஒப்பந்தம் இலங்கையில் தேசிய பிரச்சினை சம்பந்தமான விவகாரங்களில் இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையில் செய்யப்பட்ட முதலாவது ஒப்பந்தம் அல்ல. பிரஜா உரிமை சட்டத்தால் “நாடற்றவர்’’ ஆக்கப்பட்ட இந்திய வம்சாவழி தமிழர்களின் பிரச்சினையில் தலையிடுவதற்கு இந்தியா எப்பொழுதும் தயக்கம் காட்டியுள்ளது. ஜவஹர்லால் நேரு அது சிறிலங்கா (அப்பொழுது சிலோன்) வின் ஓர் உள் நாட்டுப் பிரச்சினை என அடிக்கடி கூறிவந்தார். 1963ம் சிரிமா பண்டார நாயக்காவுக்கும் லால்பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் கைசாத்தான ஓர் உடன்படிக்கையில் பிரசாரம் “நாடற்ற’’ மக்களின் ஒரு பெரும் பகுதியை இந்தியா ஏற்றுக் கொள்ளும்: எஞ்சிய சிறுபகுதிக்கு சிறீலங்கா குடியுரிமை வழங்கப்படும். இவ் உடன்படிக்கை சிறீலங்கா பிரஜைகளாக விரும்பிய இந்திய வம்சா வழி தமிழர்களில் ஏகப் பெரும்பான்மையோரில் விருப்பங்களுக்கு விரோதமானது. வரையறையான எண்ணிக்கை பற்றி அங்கு ஓர் இறுதி உடன்பாடும் இல்லை. இந்தியாவுக்கான தமிழர்களின் “குடி அகல்வு’’ தந்தை வேகத்திலேயே நடைபெற்று வந்துள்ளது. 1974ல் சிரிமா பண்டாரநாயக்காவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளில் எத்தனை பேர் இந்தியக் குடியுரிமையை பெறுவர். எத்தனை பேருக்கு இலங்கை உரிமை வழங்கப்படும் என்று வரையறுப்பதில் ஓர் உடன்பாடு காணப்பட்டது. இது இலங்கையில் வடமேற்கில் இருநாடுகளி;ன் ஆதிபத்திய கடல் எல்லைகளை வரையறுக்கப்பதாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தங்கள் நத்தை வேகத்திலேயே நடைமுறைபடுத்தப்பட்டன. நல்ல எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன் இந்தியா சென்ற தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்ததிலும் பார்க்க கூடுதலான தொல்லைகளையே அனுபவித்தனர். மார்க்ஸிஸ – லெனினிஸ வாதிகள் “நாடற்றவர்’’ பிரச்சினைக்கு முடிவ காணும் அரசியல் முயற்சிகளை வரவேற்ற அதே வேளையில், சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பு வெறுப்புகளை ஒப்பந்தம் பிரதிபலிக்கத் தவறியதற்கு கண்டனம் தெரிவித்தனர் ; இந்தியாவுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களின் நல்வாழ்வு பற்றியும் தமது கவலையை தெரிவித்தனர். அவர்களது அச்சங்கள் நியாயமானவை என நிரூபிக்கப்பட்டன. இந்தியாவின் மாகாண மத்திய அரசாங்கங்களினால் (இந்திய குடியுரிமை பெறும்) மக்கள் நடத்தப்படும் முறை இந்திய ஆளும் வர்க்கங்களின் கபடமான சுரண்டும் வர்க்க இயல்பை அம்பலப்படுத்துகின்றன. 1983 முதல் வடக்கு, கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு சென்ற அகதிகள், போற்றத்தகும் முறையில் இல்லாவிட்டாலும், ஓரளவு நன்றாக நடத்தப்படுகின்றனர். தீவிரவாத இயக்கங்கள் ஆரம்பத்தில் விசேஷ உபசரிப்புக்களைப் பெற்றனர். படச்சேர்ப்பு, படைப்பயிற்p வசதிகளையும் அனுபவித்தனர். பல இயக்கங்கள், ஒரு சுதந்திரமான தமிழ் அரசுக்கான தமது போராட்டத்தில் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதை அறிந்து கொள்ள நீண்ட நாட்கள் பிடித்தன். ஸ்தாபனங்களின் போட்டிச் சண்டைகளை இந்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் தமது நலன்களின் விருத்திக்கு பயன்படுத்தி விளைநிலமாக்கின. இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அதேசமயம், இலங்கை அரசின் மீது அதன் சித்தத்தை திணிப்பதற்கு ஒரு பலமான நிலை ஏற்படும்வரை, நீதியான ஒரு தீர்வுக்கு வர இலங்கை அரசாங்கத்தின் விருப்பமின்மையும் ஒரு தனிநாடு என்ற பிரச்சினையில் முன்னணி தீவிரவாத ஸ்தாபனமான தமிழீழ விடுதலைப் புலிகளின் சாந்தி செய்ய முடியாத நிலைப்பாட்டையும் சாதகமாகப் பயன்படுத்தி அதன் நேரடித் தலையீட்டைத் தாமதப்படுத்தியது. யுத்தத்தினால் சலிப்படைந்து சமாதானத்துக்காக ஏங்கி நிற்கும் ஒரு மக்கள் கூட்டம், போட்டி இயக்கங்களுக்கிடையில் இடைவிடாத மோதல்களின் விளைவாக இளைஞர்கள் மத்தியில் நிலவிய தார்மீகப் பலவீனம்; இத்தகைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் விரைந்த இராணுவ வெற்றிக்கான நடவடிக்கையில் இறங்கியது. இருந்தும் அதன் விளைவு ஒரு நகர நிலையேயாகும். இந்திய அரசாங்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தமிழ்நாட்டில் உள்ள அதன் அரசியல் ஆதரவாளர்கள் (எம். ஜி. இராமச்சந்திரனின் மாகாண அரசாங்கம்) மீதும் நிர்ப்பந்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் விடுததலைப் புலிகள் மீது அதன் சமாதானத் திட்டத்தை திணித்தது.

இவ் ஒப்பந்தமானது மாகாண சபைகள் நிறுவுவது பற்றியும் அதன் அதிகாரங்கள் பற்றியும் கணிசமான அளவு விபரமாகக்கூறும் அதே வேளையில், சிறிலங்காவின் உள் விவகாரங்களில் தலையிடும் இந்தியாவின் உரிமை உட்பட சில முக்கியமான விஷங்களில் தெளிவற்றதாகவே இருக்கின்றது.

மாகாண சபைகள் நிறுவப்படும் போது கிழக்கு மாகாண மக்களின் அபிலாஷைகள் கணக்கில் எடுக்கப்பட்ட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கும் இலங்கை கம்ய+னிஸ்ட் கட்சி (இடது)யின் பிரேரணைகள் சரியானவை. இரண்டும் மாகாணங்களும் ஒன்றிணைய வேண்டுமா அல்லது இரு மாகாணங்களுக்கும் இரண்டும் தனித்தனி மாகாண சபைகள் இருக்கவேண்டுமா என்பது யாத்தீக ரீதியில் தீர்மானிக்கப்படக்கூடிய விஷயங்கள் அல்ல. மாகாண சபைகள் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருக்க விரும்பும் மக்களை ஒன்று சேர்க்கும் அதே வேளையில் விரும்பாத மக்களுக்கு வெளியே இருக்க வாய்ப்பு அளிக்கவேண்டும். அது சாத்தியமாகாவிட்டால், ஒரே மாகாண சபையின் கீழ் வரும் பரப்புக்களுக்குள் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். அதே போல சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிராந்தியங்களில் வாழும் இதர தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் விதிகள் இயற்றப்பட வேண்டும். கடந்த காலத்தில் போல, இப்பொழுதும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் பிரச்சினைகள் முற்றுமுழுதாக கவனிக்கப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தில் இன்றுள்ள இனவிகிதாசாரத்தைப் பொறுத்தவரையில், பிரேரிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பானது தீர்க்கக்கூடிய பிரச்சினைகளைவிடக் கூடுதலான பிரச்சினைகளை தோற்றுவிக்கும்போல் தோன்றுகின்றது. இந்த வாக்கெடுப்பு நிகழும் வரையான கால கட்டத்தில் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நிகழாது என்பதை உத்தரவாதம் செய்யும் விதிமுறைகள் ஒன்றும் இல்லை. ஆயுதப் படைகள், ஊர்க்காவல் படைகள், இதர அரசியல் குண்டர்கள் முதலியோரால் தமது வீடு வாசல்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீளக்குடியேற்றப்படும் கடப்பாடும் காணப்படவில்லை.
அரசியல் தடுப்புக் காவலிலுள்ளவர்களுக்கான மன்னிப்புப் பற்றிய கோட்பாடு ஒரு தேசிய பின்னணியில் வைத்து நோக்கப்படவேண்டும். இவ் ஒப்பந்தம் பொது மன்னிப்புப் பற்றி வாயலம்பியபோதிலும், தடுப்புக் காவலிலுள்ள சிங்களவர்களுக்கு இதைப் பிரயோகிப்பது சம்பந்தமான எதிர்தரப்பு அரசியல் கட்சிகளால் பாரதூரமான சந்தேகங்கள் பல கிளப்பப்பட்டுள்ளன.

இந்த உடன்படிக்கை தீவிரசாதிகளில் ஆயுத ஒப்படைப்பு பற்றி பேசும் அதே வேளையில் இலங்கை அரசாங்கத்தின் ஊர்க்காவல் படைகளையும் இதர உபாராணுவ சக்திகளையும் நிராயுதபாணிகளாக்குவது பற்றி ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. ஆயுதப்படைகளினதும் இதர உபராணுவ சக்திகளினதும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது பற்றியோ அல்லது அத்துமீறிய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது பற்றியோ இதில் யாதொன்றும் காணப்படவில்லை.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் வடக்கிலும் கிழக்கிலும் நிகழும் ஆயுத மோதல்களு;ககு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டது. இது எவ்விதத்திலும் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு ஆகாது. மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தீர்வு, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்யத்தவறிய ஒன்று என்ற வகையில், இந்த புதிய பிரச்சினைகள் பலவற்றுக்;கும் ஊற்றுமூலம் ஆகலாம். இந்த பிரேரணைகளை அழுல்படுத்துவதற்கு இந்திய படைகளை சார்ந்திருப்பதும், இலங்கை மண்ணில் காலவரையின்றி அதன் துருப்புக்களை வைத்திருப்பதற்கும் இந்திய அரசாங்கம் உவமை பெற்றிருப்பதும் பெரிதும் விரும்பத்தகாத விஷயங்களாகும். வெளிவிவகார, பாதுகாப்பு கொள்கை சம்பந்தமான விஷங்களில் இந்த ஒப்பந்தம் தேசிய சுதந்திரத்தை விலைபேசியுள்ளது. இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் இந்த ஒப்பந்தம் தீர்க்கப்போவதாகக் கூறும் பிரச்சினையுடன் எள்ளத்தனையும் சம்பந்தப்படாத ஒன்றாகும். இந்தியாவிடம் குறிப்பிடாமல் அல்லது தெரிவிக்காமல் இன்னொரு ராணுவ உதவியை நாடக்கூடாது. இன்னொரு நாட்டின் அல்லது வேவு நோக்கங்களுக்கு பாவிக்க எந்த துறைமுகத்தையும் அல்லது எவ்வித ஒளிபரப்பு வசதியையும் வழங்கக்கூடாது. ஆனால் இலங்கை பற்றி இந்தியாவுக்கு எவ்வித கடப்பாடும் கிடையாது எனப் பொருள்படும் ஒப்பந்தத்தில் வரும் சரத்து நாடுகளின் சமத்துவம் பற்றிய கோட்பாட்டை இங்கு தூக்கிவீசி எறிந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ராணுவ முற்றுகையின் கீழ் அவதிப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்களுக்கு இந்த ஒப்பந்தம் மூச்சுவிட அவகாசம் கொடுத்துள்ளதை மாக்ஸிஸ – லெனிஸவாதிகள் வரவேற்கின்றனர். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒரே பிரதேச நிர்வாகத்தின் கீழ் வாழும் உரிமையை இலங்கை அரசு அங்கீகரித்துள்ளதையும் அவர்கள் வரவேற்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு தேசிய இனங்களின் உண்மையான தேவைகளை இந்த உடன்படிக்கை ப+ர்த்தி செய்யுமா என்பதை அவர்கள் பலமாக சந்தேகிக்கின்றனர். “எல்லாம் அல்லது ஒன்றுமில்லை’’ என்ற அடிப்படையில் வடமாகாணத்துடன் இணைந்து ஒரு முழுமையான அலகாக கிழக்கு மாகாணத்தை கருதுவது, வாக்கெடுப்பின் பெறுபேற்றால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளிலும் பார்க்க கூடுதலான பிரச்சினைகளை தோற்றுவிப்பது திண்ணம்.

ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடும் உரிமையை எந்த மார்க்ஸிஸ – லெனினிஸவாதியும் வரவேற்க முடியாது. இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில், தேசிய சுகந்திரத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்கான ஒரே ஒரு யதார்த்தனமான வழிமுறை என்னவென்றால், தேசபக்த சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த ஒப்பந்தத்தின் சாதகமான அம்சங்களின் அடிப்படையில், இங்கு இந்திய இராணுவத்தின் பிரசன்னம் தேவையற்றது என்று கூறக்கூடிய நிலைமைகளை சிருஷ்டிப்பதே ஆகும். அரசியல் ரீதியில் பங்கலோட்டைந்தவர்கள் தான் தேசிய இனப்பிரச்சினையில் ஒரு சமாதான தீர்வுக்கு இட்டுச் செல்லும் சாதனமான சகல நடவடிக்கைகளையும் எதி;ர்க்கும் அதே வேளையில், இந்திய ராணுவத்தின் பிரசன்னத்;துக்கு தமது எதிர்ப்பை பிரகடனம் செய்வார்கள்.

நமக்கு இலங்கை இந்திய அரசாங்கங்கள் செய்து கொள்ளும் ஓர் உடன்படிக்கை மூலம் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது பற்றிய எவ்வித பிரமையும் கிடையாது. சாத்தியமான அளவு விகாலமான ஜனநாயக உரிமைகள் இல்லாத விடத்து தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதும், தேசிய சுதந்திரத்தையும் இறைமையையும் பேணிக்காப்பதும் அசாத்தியம். இந்த நாட்டின் சகல தேசிய இனங்களின் மக்களையும் ஐக்கியப்படுத்துவதற்கும், ஜனநாயக, மனித உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இந்தப் போராட்டத்தில் ஒன்று சேர்வது தேசாபிமான மிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தினதும் தட்டிக் கழிக்க முடியாத கடமையாகும்.
விடுதலைப் போராட்டமும்
ஜனநாயக மனித உரிமைகளும்

இன்று இலங்கையில் நடக்கும், யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று முன்னைய ய+. என். பி. அரசாங்கம் கூறியது. இதை மக்கள் முன்னணி மறுத்தது. அதன் அடிப்படையிலேயே பேச்சு வார்த்தை மூலமான தீர்வு என்று பிரசாரம் செய்து தேர்தலிலும் வெற்றி பெற்றது. சந்திரிகா குமாரதுங்கவுடைய வெற்றி சமாதானத் தீர்வுக்கான வெற்றியாகவும் மனித உரிமைகளதும் ஜனநாயக உரிமைகளதும் மீட்புக்கான வெற்றியாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளது வெற்றியாகவும் மக்களாற் கணிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகாவுடைய வெற்றியையொத்த ஒன்றை எவருமே இதுவரை இலங்கையின் எந்தத் தேர்தலிலும் பெற்றதில்லை. அவரால் கைவிடப்பட்டது போல விரைவாக மக்கள் இதுவரை எவராலும் கைவிடப்படவில்லை. இன்று நாட்டின் பொருளாதார சுயாதிபத்தியம், கருத்துச் சுதந்திரம் நடமாடும் சுதந்திரம் என்பன ய+. என். பி. அரசின் கடைசிக் காலத்தின் நிலைக்கு அல்லது அதற்குக் கீழ் இறங்கிவிட்டன. புதிய ஜனாதிபதி பதவியேற்ற சில மாதங்களுள் இந்த அரசு சிங்களப் பேரினவாதத்திற்கும் இராணுவத்துக்கும் பணிந்து உலக வங்கிக்கும் சர்வதேச நாணயநிதிக்கும் தலை சாய்ந்துத் தொழிலாளர்களது உரிமைகளை மறுப்பதிலும் தேசிய இனப் பிரச்சினையைத் தட்டிக் கழிப்பதிலும் முன்னைய ஆட்சியின் தரத்திற்கு இறங்கி விட்;டது. “விடுதலைப் புலிகளை முறியடித்த பிறகு பேச்சு வார்த்தைகள்’ என்ற சந்திரிகாவின் புதிய போக்கு, பேரினவாதத் தீர்வொன்றைத் தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சியின் வெளிப்பாடேயொழியவேறல்ல.

கடந்த எட்டு வருடங்களாகவே விடுதலைப் புலிகளைக் காரணங்காட்டித் தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வைத் தட்டிக் கழிக்கவும் அரசாங்கத்தின் இன ஒழிப்பு யுத்தத்தை நியாயப்படுத்தவும் அரசாங்கத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் 1970களின் இறுதியில் கொண்டுவரப்பட்ட போதும், இன ஒடுக்கலை விட அதற்கெதிரான நியாயமான கிளர்ச்சிகள் கொடியவாகக் காட்டப்பட்டன. இதைவிட முக்கியமாக தமிழ்த் தேசிய விடுதலை, போராட்டம் என்ற ஒரு காலத்தில் முழங்கிய சிலரும் இன்று ஜனநாயகம், மனித ஊரிமைகள் என்ற பேரில் விடுதலைப் புலிகளை எதிர்க்கும் போக்கில் அரசாங்கத்தின் கொடுமைகளை மூடிக்கட்டுவதற்கு உதவியாக இருக்கிறார்கள். எனவேதான், நாம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதற்கும் விடுதலைப் போராட்டத்தை நிராகரிக்கப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக் கொள்வது அவசியமாகிறது. விடுதலைப் புலிகளின் தவறுகளைக் கண்டிப்போரது நிலைப்பாடுகளை வேறுபடுத்தி அடையாளங் காண்பது அவசியமாகிறது.

தமிழ்த் தேசியவாத அரசியல் விமர்சனங்களைச் சகிக்கும் மனப்பக்குவம் நெடுங்காலமாகவே இருந்ததில்லை. மொழிப் பிரச்சினை என்ற பேரில் ஏறத்தாழ இருப்பது வருடமாகத் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது பேரில் அரசியல் நடத்திப் பாராளுமன்ற ஆசனங்களில் அமரும் வாய்ப்பு இருந்தவரை, தமிழரசுக்கட்சிக்கு மக்களது அன்றாடப் பிரச்சினைகள் பற்றிய கவலை அதிகம் இருந்ததில்லை. சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களது ஐக்கியத்திற்கு எதிரான சதி என்று திரித்துக்கூறும் ஆற்றல் அவர்களிடம் இருந்தது. ஏகாதிபத்திய நலன்கட்காகப் பாராளுமன்றத்தில் கையுயர்த்திய காலத்தில் பிரித்தானியக் கடற்படையும் அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகளும் தேசிய மயமாக்கப்படுவது தமிழர்களது நலனுக்குப் பாதகமானது என்று அவர்களாற் கூற முடிந்தது. நெற்காணி;ச் சீர்திருத்தத்தையும் தமிழர் விரோத நடவடிக்கை என்று காட்ட அவர்கட்கு இயலுமாயிற்று. அவர்களது மோசடிகளை விமர்சித்தவர்கள் இன எதிரிகளாகவும் துரோகிகளாகவும் காட்டப்பட்டனர். தமிழ்த் தேசியவாத அரசியல், வன்முறை அரசியலாக அன்று மாறாமல் இருந்ததற்கான தமிழ்த்தேசியவாதம் தமிழரசுக்கட்சி மூலம் வசதி படைத்த தமிழர்களதும் முதலாளிகளதும் நலன்களைப் பேண உதவியது தான். இந்த அரசியல் ஆட்டங்காணத் தொடங்கியபோது, தமிழ்த் தேசியவாதத்தின் சாத்வீகத் தலைவர்களது ஆசிகளுடன் அரசியற் கொலைகள’ நடைபெற்றன. கொலை செய்யப்பட்ட த. வி. கூட்டணித் தலைவர் அமர்தலிங்கம் சில கொலைகளைக் கண்டிக்கத் தவறியதோடு மறைகமாக அங்கீகரித்து இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ் மக்களது உரிமைக்கான போராட்டம் இன விடுதலைக்கான ஒரு ஆயுதமேந்திய போராட்டமாக மாறிய சூழலில், சிங்களப் பேரினவாத ய+. என். பி. ஆட்;சியுடன் சமரசம் பேசித் தமிழ் மக்களை ஏமாற்றும் வாய்ப்பு பழைய தலைவர்கட்கு இல்லாமற் போயிற்று. இந்த நிலையிற்சூடத், தமிழரசுக் கட்சியின் வாரிசான தமிழர் விடுதலைக் கூட்டணி இந்திய அரசின் அனுசரணையுடன் அதிகாரத்தைத் தக்கவைக்கும் முயற்சிகளில் இறங்கியதே யொழிய ஒரு வெனுஜன இயக்கமாகத் தன்னை மாற்ற ஆயத்தமாக இருக்கவில்லை. மக்கள் போராட்டம் என்ற கண்ணோட்டத்திற்கு மாறாக ஆற்றல்மிக்க ஒரு தலைமையின் போராட்டம் என்ற கண்ணோட்டம் பல விடுதலை இயக்கங்களிடமும் காணப்பட்டதென்றால் அதில் தமிழ்த் தேசியவாத அரசியல் மரப்பின் பங்கு குறிப்பிடத்தக்கது. மறுபுறம், விடுதலை இயக்கங்களின் வளர்ச்சியில் இந்திய அரசின் நிறுவனங்களது குறுக்கீட்டின் பங்கும் முக்கியமானத. இன்று சில முக்கிய முன்னால் விடுதலை இயக்கங்களும் அவற்றிலிருந்து கிளைத்த கூலிப்படைகளும் அரசாங்கத்தின் இன ஒழிப்புப் போர் முயற்சிகளில் உடந்தையாக நிற்பது, அவர்களது மக்கள் யுத்தக் கோட்பாட்டை எதிர்ப்பதின் விளைவானதே எனலாம்.

இன்று வடக்கில் நடக்கும் யுத்தத்தின் தன்மை பற்றிய ஒரு தெளிவான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அதன் இரு தரப்பினரதும் செயல்களையும் நிலைப்பாடுகளையும் நாம் விமர்சிக்க வேண்டும். ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற கோட்பாடுகளை ஒரு யுத்தச் சூழலில் எவ்வாறு கையாளுவது என்ற கேள்வி நம் முன் உள்ளது. ஒருவர் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை ஏற்பதும் ஏற்காததும் தேசிய இனப்பிரச்சினைபற்றி அவரது மதிப்பீடு சார்ந்த ஒன்றாக இருக்கலாம். விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை ஏற்கும் எவரும் அவர்களை விமர்சிக்கக் கூடாது என்ற கருத்த நியாயமற்றது. அது போலவே, எவரும் விடுதலைப் புலிகளது அரசியலை நிராகரிப்பதால் அவர்களை முற்றாகவே நிராகரிக்கும் கண்ணோட்டமும் நியாயமற்றது. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் யதார்த்தமான சூழ்நிலையை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். அரச பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான போராட்டம் உருவாக்கும் பயங்கரவாதத்தையும் ஒரே விதமாகக் கணிப்பதன் ஆபத்தை நாம் உணர வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை முன்வைப்பதில் அரசாங்கத்தின் பொறுப்பு அதிகமானது என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இதன் பின்னணியிலேயே விடுதலைப் புலிகளது ஜனநாயக, மனித உரிமை மீறல்களையும் அரசாங்கத்தின் மீறல்களையும் நாம் ஒப்பிட வேண்டியுள்ளது. வன்முறை அரசியல், அரசியற்கொலைகள், தற்கொலைப் படைகள், பால வயதுப் போராளிகள் போன்றவற்றையும் அவை நிகழும் சூழலுக்கு அப்பால் வைத்து மதிப்பிடும் மனிதாபிமானிகள் அவற்றை சாத்தியமாக்கியது மட்டுமன்றி அவசியமாக்கியதுமான ஒரு தேசிய அரசியல் நெருக்கடியையும் அதன் காரணகர்த்தாக்களையும் மறந்து விடுகின்றனர்.

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் அமைதியையே வேண்டுகின்றனர். தென்னிலங்கையிலும் போருக்கு எதிரான உணர்வுகளே மேலோங்கியுள்ளன சிங்களப் பேரினவாத அரியல் பலவீனமடைந்துள்ளது. நியாயமான முறையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கமான முறையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதை முழு இலங்கையிலும் உள்ள மக்கள் விரும்புகின்றனர். ஆயினும் போர் மீண்டும் தொடர்கிறது. 1986ல் வடக்கிற்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மறித்து விடுதலைப் போராட்டத்தை நசுக்க எடுக்கப்பட்ட முயற்சியின் பின்பு நிலைமைகளை மிகவும் மாறிவிட்டன. 1987இல் இந்தியப் படைகளின் வருகையை வரவேற்ற அதே உற்சாகத்துடன் 1994ல் சந்திரிகா குமாரதுங்காவின் வெற்றியை யாழ்ப்பாண மக்கள் கொண்டாடினர். ஆயினும், அன்று போலவே, இன்றும் அந்த மகிழ்ச்சியின் இடத்தில் ஏமாற்றமும் கோபமும் குடிகொண்டுள்ள. பொருளாதாரத் தடைகள் மூலம் வடக்கில் உள்ள மக்களைப் பணிய வைக்கும் முயற்சி விடுதலைப்புலிகளைப் பலப்படுத்திள்ளதே ஒழியப் பலவீனப்படுத்தவில்லை என்பதை இலங்கையின் அரசாங்கங்கள் ஒப்புக்கொள்ள ஆயத்தமாக இல்லை. விடுதலைப் புலிகளை அழிக்கிறதாகக் கூறிக்கொண்டு வீடுகளையும் கோவில்களையும் மருத்துவ மனைகளையும் தாக்குகிற செயல் இன்னமும் நடக்கிறது. அப்பாவி மக்கள் இன்னமும் சொல்லப்படுகின்றனர். தமிழ் மக்களிற் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தும் அகதிகளாகவும் வாழ்கின்றனர். இந்திய – பாகிஸ்தான் பிரிவின்போது நடந்ததைவிட விகிதாசாரமான அளவில் பெரிய புலம்பெயர்வு வடக்கில் - கிழக்கில் நடந்துள்ளது. அது இன்னமும் தொடர்கிறது. கிழக்கின் பல கிராமங்கள் ஆளின்றிக் கிடக்கின்றன. இத்தனைக்கு நடுவில் ராணுவ உதவியுடன் சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. இவ்வாறு அரசாங்கத்தின் இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டத்தை இனங்களிடையிலான போராக்கும் முயற்சியில் விஷமிகள் சிலர் மும்முரமாக உள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பெரும்பான்மைத் தமிழ்ப் பிரதேசமாக இல்லாதவாறு மாற்றும் குடியேற்ற முயற்சி நெடுங்காலமாகவே நடந்தாலும், வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் ஒரு தொடர்ச்சியான தமிழ்ப் பிரதேசம் இல்லாது துண்டாடும் விஷமத்தனம் 1977க்குப் பின்பும், அதைவிட முக்கியமாக, 1983 வன்முறையை அடுத்த இன ஒழிப்புப் போர்களிலும் வெளிப்பட்டது.

இன்றைய யுத்த நிலவரத்தின் காரணகர்த்தாக்கள் சிங்களப் பேரினவாதிகளே தமிழத் தேசியவாதத்தின் தவறுகளையும் அதன் வர்க்க நலன்களையும் நாம் மறுப்பதில்லை. ஆயினும் இலங்கை ஒரு பல்லின நாடு என்பதை நிராகரிக்கும் முறையில் சிங்கள பௌத்த தேசிய வாதத்தை வலியுறுத்தி ஒரு இன ஒழிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் 1977இல் பதவிக்கு வந்த ஏகாதிபத்திய அடிவருடிகளான ய+. என். பி. ஆட்சியினரே. இதைப் பலர் மறந்து விடுகின்றனர். சிங்களத் தேசியவாதக் கட்சியான ஸ்ரீ. ல. சு. கட்சியும் இடதுசாரி வேடம்ப+ண்ட ஜே. வி. பியை எதிர்ப்பதற்குப் பேரினவாதத்தைப் பயன்படுத்திய அளவுக்கு ய+. என். பியை முறியடிக்கும் ஒரு ஆயுதமாகத் தேசிய இனங்களில் நியாயமான உரிமைகளுக்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை. இன்று பாராளுமன்ற இடதுசாரிகளும் ம. மு. அரசாங்கத்தின் யுத்த மார்க்கத்தின் முன்பு செய்வதறியாது தடுமாறுகின்றார்கள். இந்த நிலையில், தென்னிலங்கையில் ஒரு பாரிய அரசியல் மாற்றம் ஏற்படாதவரை, தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய வாதத்தின் பின்னாலேயே அணி திரளும் சூழ்நிலையை மாற்ற முடியாது.

வடக்குக் கிழக்கு மாகாணத்தில் கணிசமான பகுதி ராணுவத்தால் முற்றுகையிடப்படும் ஒரு பகுதி நாட்டின் மிகுதியினின்று தனிமைப்படுத்தபட்டும் பெரும்பாலான மக்கள் ராணுவக் கெடுபிடிகட்குள்ளாக்கப்பட்டும் உள்ள இந்த நிலையில், மக்களுக்காகப் போராடுகின்ற சக்திகளாக இன்று விடுதலைப் புலிகளே தென்படுகின்றனர். அவர்களுடைய கடந்த காலத் தவறுகளையும் மீறி, அவர்களது போராட்டத்துடன் உடன்பாடு இல்லாதவர்களும் கூட அவர்களையே தமிழ் மக்களது பிரதான பிரதிநிதிகளாகக் கருதுகின்றனர். அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு வந்தனர் என்பது பற்றிய வாதப்;பிரதிவாதங்கள் எவ்வாறிருப்பினும் மற்றயை தேசியவாத இயக்கங்களை விட உறுதியாகச் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒழிப்பு யுத்தத்தையும் இந்திய, அமைதி காக்கும்’ படையின் ஒடுக்குமுறையையும் எதிர்த்து நின்ற ஒரு சக்தியாக அவர்கள் காணப்படுகின்றனர். பெரும்பான்மையான தமிழ் மக்கள் போரை விரும்பவில்லை. ஆயினும் போர் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் முன் உள்ள தெரிவுகள் அதிகமில்லை.

விடுதலைப் புலிகளின் தவறுகளை விமர்சித்து அதன்மூலம் விடுதலைப் போராட்டத்தையே நிராகிக்க முயல்கிறவர்களது குற்றச்சாட்டுக்கள் பல மேலோட்டமாக நியாயமானவையாகத் தெரியலாம். ஆயினும் இவற்றை ஒட்டு மொத்தமாக நிலவரங்கள் அடிப்படையில் மதிப்பிடுவது பொருத்தமானது.

விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்ப்பது பற்றியும் அவ்வாறு சேர்ப்பது வற்புறுத்தலின் பேரிலேயே நிகழ்வதாகவம் இது குழந்தைகளது உரிமை மீறல் எனவும் சில மனிதாபிமானக் குரல்கள் எழுகின்றன. தற்கொலைப் படைகள் அநாகரிகமானவை என்ற கண்டனமும் எழுந்துள்ளது. இவை வழமையான சூழ்நிலைகளில் எவருமே விரும்பாத விஷயங்கள் என்பது உண்மை. ஆயினும், என்றுமே ஒடுக்குமுறையாளர்கள் முன்வைக்:கும் விதிகளின்படி ஒடுக்கப்பட்டவர்கள் போராடி வென்றதில்லை. ஒடுக்குமுறையாளர்களின் நியாயமற்றபோர் முறைகளின் விளைவாகவே ஒடுக்கப்பட்டோரின் போர் முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன. உகண்டாவில் மில்ற்றன் ஒபோட்டேயின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட படைகளில் சிறுவர்கள் இருந்தார்கள். காம்போஜத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளிடமிருந்து மீட்ட படையிலும் மிகவும் இள வயதினர் இருந்தார்கள். தற்கொலைப் படைகள் இரண்டாம் உலகப் போரிலும் பயன்பட்;டுள்ளன. சமகாலமுள்ள எதிராளிகள் முற்கூட்டியே தீர்மானித்த விதிகட்கமைய ஆகும் விளையாட்டல்ல, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், முக்கியமானது ஏதெனில், விடுதலைப் போராட்டம் மக்களைச் சார்ந்துள்ளதா இல்லையா என்பதே வடக்கில் தற்கொலைப்படைகளும் இளம்பிராயத்துப் படையினரும் இருப்பதற்கான காரணம் என்ன? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? இவற்றை நாம் கவனித்தால் விமர்சனங்களின் தன்மை சிறிது மாறும். ஏனெனில் தமிழ் மக்கள் முன் உள்ள தெரிவுகள் அகதி வாழ்வும் அடிமைத்தனமுமாக மட்டுமே இருக்க முடியாது.

மறுபுறம், குறுகிய தேசியவாதச் சிந்தனையின் விளைவாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை கிழக்கில் நடக்கும் தமிழ் முஸ்லிம் மோதல்கள், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் போன்றன விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவன. மாற்று இயக்கங்கள் மீதான தடைகள் இயக்கங்களிடையே இருந்து வந்த உறவுகளின் தன்மையால் ஏற்பட்டவையாயினும் விடுதலைப் போராட்டமென்பது பரந்துபட்ட ஐக்கியத்தின் அடிப்படையில் அதிக வலிமை பெறுகிறது. மாற்றுக் கருத்துக்கட்காக எவரும் சிறையிடப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் கொல்லப்படுவதும் மிகவும் கண்டிக்கத் தக்கது. ஆயினும் முக்கியமான மாற்று இயக்கங்களாக இருந்தற்றின் வரலாற்றைக் கவனித்தால் அவர்களது நடத்தையிலும் மேற்குறிப்பி;ட்டவறான குற்றங்கள் இருந்து வந்துள்ளன. இத் தவறுகள் ஒரு விடுதலைப் போராட்டம் ஒரு பரந்துபட்ட இயக்கமாகி பரந்துபட்;ட ஜனநாயகத்தன்மை பெறும் போதுமட்டுமே களையப்பட முடியும். ஆயினும் இவை விமர்சிக்கப்பட்டுத் திருத்தப்படுவது விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்த உதவும்.

சமாதான முயற்சிகளை என்றும் விடுதலைப் புலிகள் விரும்பவில்லை என்பது சிலரது கருத்து. அவர்களது இலக்கு தனிநாடு என்பதால் எவ்வாறாயினும் எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தாயினும் அதை அடைய விரும்புகின்றார்கள் என்று கூறுவோர் உள்ளனர். மறுபுறம் அவர்களை வெறும் கொலைகாரர்களாகவே சித்தரிப்பவர்களும் உள்ளனர். விடுதலைப் புலிகள் சமாதானத்தை விரும்புகின்றார்களோ இல்லையா என்பதை, இலங்கை அரசாங்கம் ஒரு நியாயமான தீர்வை அல்லது தீர்வுக்கான அடிப்படையை முன் வைக்காமல், எவரும் அறிவது கடினம், வடக்குக் கிழக்கு இணைப்பு, சுயநிர்ணயம், பிரதேச சுயாட்சி, தமிழரது பாரம்பரியப் பிரதேசங்கள் என்பன விளங்கிக் கொள்ளக் கடினமான விஷயங்கள் அல்ல, இவ் விஷயங்கள் தொடர்பாக அரசாங்கம் தெளிவான ஒரு நிலைப்பாட்டை முன் வைத்த பின்பு , தீர்வின் விவரங்களைப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க இடமுண்டு. விடுதலைப் புலிகள் ஏற்கக் கூடியது பிரிவினை மட்டுமே என்றால், அதை நிரூபிக்கப் பிரிவினை அல்லாத ஒரு நியாயமான தீர்வை முன் வைக்கும் பொறுப்பு அரசாங்கத்தினது.

தென்னிலங்கையில் ஜே. வி. பி. பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்க நேரிட்ட காரணம் ய+. என். பி. அரசின் அடக்குமுறையும் ஆயுதப்படைகளின் பயங்கரவாதமுமே. மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இயங்க முடியாத நிலையில் எதிர்கட்சிகள் இருந்தபோது ஜே.வி.பி. மட்டுமே ஒரு எதிர்ப்பு இயக்கமாக மக்களுக்கு தெரிந்தது. ஜே.வி.பி.யின் அரசியலின் அடிப்படையான தவறுகள் பின்னர் அதன் பெரும் அழிவுக்குக் காரணமாயின. ஆயினும் ஜே.வி.பியை வெறுமனே பயங்கரவாத இயக்கம் என்று நிராகரிப்பது 1980களின் யதார்த்தத்தை மறுப்பதாகும். தேசிய இனப் பிரச்சினை மட்டும் அல்லாது இலங்கையின் பொதுவான சகல பிரச்சினைகளின் தீர்விலும் இன்றைய நவகொலனித்துவ முறையும் அதன் காவலாட்டகளாகச் செயற்படும் அரசயந்திரமும் ஆட்சியாளர்களும் தடைக் கற்களாகவே இருந்து வந்துள்ளனர். முழு இலங்கையிலும் 1977க்குப் பிறகு ஏற்பட்ட ஜனநாயக மறுப்பில் விளைவாகப் போராடி கொல்லப்பட்ட தொழிற்சங்க உரிமைகள் போன்றன இழக்கப்பட்டன. தேர்தல்கள் கேலிக் கூத்துக்களாயின மக்கள் படிப்படியாகத் தமது அரசியற் சுதந்திரத்தை இழந்து வந்தனர். இந்த ஜனநாயக மறுப்பின் துணையுடன் பேரினவாதமும் இன ஒடுக்கலும் மட்டுமன்றி அரச பயங்கரவாதமும் கட்டியெழுப்பப்பட்டன. ஏகாதிபத்தியச் சுரண்டல் தடையின்றி வளர்கிற அதேவேளை மக்களது அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் போன்றவை மேலும் மேலும் மறுக்கப்படுகின்றன. இந்த விதமான ஜனநாயக, மனித உரிமை மறுப்புக்கள் காரணமாகவே ய+. என். பி. ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டனர். ஆயினும் இன்று ம. மு. ஆட்சியாளர்கள், முக்கியமாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அதே விதமான மக்கள் விரோத நடவடிக்கைகட்கு உடன்பாடாக நடக்கத் தொடங்கி விட்டனர். படுகொலைகட்குக் காரணமான காவற்படையினர் தண்டனைகளிலிருந்து தப்பும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ய+. என். பி. உருவாக்கிய அரச பயங்கரவாத இயந்திரம் ம. மு. அரசாங்கத்தால் அழிக்கப்படும் என எதிர்பார்த்தவர்கள் அதே இயந்திரம் புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்கு அவசியமாவதைக் காண்கிறார்கள்.

வடக்குக் கிழக்கில் இன ஒடுக்கலை நடத்திக் கொண்டு தெற்கில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பேணுவது சிரமம், தெற்கில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் வலிவு படுத்தப்படாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான நியாயமான சமாதானத் தீர்வு வருவதும் கடினம். இந்தப் போர்ச் சூழல் தொடரும் வரை முழு இலங்கையிலும் ஜனநாயக மனித உரிமைகளைப் பேணுவது ஏறத்தாழ அசாத்தியம். அந்தளவில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் ஓய இடமில்லை. அந்தப் போராட்டமும் தெற்கில் ய+. என். பியை முறியடிக்க முன்னின்ற வெகுஜனங்களது ஜனநாயக, மனித உரிமைகட்கான போராட்;டங்களும் ம. மு. ஆட்சியின் போக்கை மாற்ற உதவுமாயின அது வரவேற்கத்தக்கது. அல்லாத பட்சத்தில் சகல தேசிய இனத்தவர்களதும் ஜனநாயக, மனித உரிமைகட்கும், சுயநிர்ணத்துக்:குமான போராட்டம் இந்த ஆட்சிக்கு எதிராகத் திரும்ப வேண்டிய நிலை உருவாகிவிடும்.

இதேவேளை, வடக்குக் கிழக்கின் விடுதலைப் போராட்டம் வெகுஜனப் பண்புடையதாகவம் ஒடுக்கப்பட்ட மக்களது நலன் சார்ந்ததாகவும் ஜனநாயகத் தன்மையுடையதாகவும் மாறும் தேவை உருவாகி வருகிறது. அரசாங்கத்தின் கூலிப்படைகளாகத் தங்களை மாற்றிக்கொண்ட சக்திகள் தமது தவறுகளைத் திருத்தி அரசாங்கத்தின் இன ஒழிப்பில் பங்குபற்றாது விலக வேண்டும். பேரின அரசியலுக்கு எதிராக அணிதிரட்டப்படக்கூடிய சகல சக்திகளும் ஒன்றுபடுத்தப்பட வேண்டும். இங்கு விடுதலைப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரதும் பங்கு முக்கியமானது.

இனவிடுதலையும் சமாதானமும்

இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் கற்றிய கட்டுரை எழுதப்பட்டு எட்டு ஆண்டுகட்கு மேல் நகர்ந்து விட்டன. இக்கால இடைவெளிக்குள் இலங்கையின் வடக்கு – கிழக்கிலும் தெற்கிலும் பாரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. உலக அரசியல் நிலவரமும் மிகவும் மாறுதலுக்கு ஆளாகியுள்ளது இன்று அமெரிக்க (ய+. எஸ்) உலகின் ஒரே பெருவல்லரசாக உள்ளது. ஐ. நா. சபை அதன் கைப்பிடிக்;குள் திணறுகிறது. உலகமெங்கும், தனது ஆணைக்குட்பட்ட அமைதியை நிலை நாட்ட முடியும் என்று அதன் அகம்பாவம், முதலில் செல்லுபடியாகும் போலத் தெரிந்தாலும், அமெரிக்கா இயலாமையை ஸொமாலியாவிலும் பொஸ்னியாவிலும் கண்கூடாகவே அறிய முடிந்துள்ளது. அமெரிக்காவின் தரகு மூலம் சாத்தியமான இஸ்ரேல், பலஸ்தீன விடுதலை இயக்கச் சமாதான உடன்படிக்கை தள்ளாடுகிறது. அமெரிக்காவின் ஆட்சியுடன் பதவி ஏற்ற காம்போஜ ஊழல் ஆட்சி காம்போஜ விடுதலைப் படைகளைப் பணிய வைக்க இயலாது தடுமாறுகிறது. இத்தகைய உலகச் சூழலில் இலங்கையின் இன ஒடுக்கலுக்கெதிரான விடுதலைப் போராட்டம் ஒரு அமைதியான நியாயமான தீர்வுடன் முடிவுபெறும் என்ற நம்பிக்கை உருவானது. அது உருவான குறுகிய காலத்திலேயே சிதைவாகி விட்டது. இந்த நிலையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வியை சகலதேசிய இனங்களிடையிலும் உள்ள முற்போக்குவாதிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு முன் 1987 இந்திய - இலங்கை உடன்படிக்கையை அடுத்த வரலாற்றுக் காலகட்டத்தைச் சுருக்கமாக நோக்குவோம்.

1987ல் இந்திய ஸ்ரீ இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தானபோது தமிழ் மக்கள் மனதில் மிகுந்த நம்பிக்கையும் சிங்கள மக்களிடையே பல வேறு விதமான ஐயங்களும் இருந்தன. பாராளுமன்ற இடதுசாரிகளான லங்கா சமசமாஜகட்சி சோவியச் சார்பு கம்ய+னிஸ்ட் கட்சிகளும் நவசமசமாஜக் கட்சியும் விஜயகுமாரணத்துங்காவின் தலைமையில் அன்று சந்திரிகா குமாரணதுங்க இணைந்திருந்த ஸ்ரீலங்கா மக்கள் கட்சியும் உட்பட்ட பல இடதுசாரிக் கட்சிகள் இந்த உடன்படிக்கையை ஆதரித்தன. இந்த உடன்படிக்கை தரும் தீர்வு அடிப்படையில் ஏற்புடையதாயினம் இந்தியத் தலையீடு பற்றியும் இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் நோக்கங்கள் பற்றியும் எச்சரிக்கை விடுத்த சிலருள் புதிய ஜனநாயகக் கட்சி உள்ளடங்கும் சிங்கள மக்கள் மத்தியில் ய+. என். பி. சர்வாதிகாரத்திற்கு எதிராக இருந்த கோபத்தையும் உடன்படிக்கை பற்றிய ஐயங்களையும் பயன்படுத்தி ஜே. வி. பி குரூரமான சிங்களப் பேரினவாத அரசியலில் இறங்கியது. பலவீனமான நிலையில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடன்படிக்கையில் மறைக்கப்பட்டிருந்த இந்திய மேலாதிக்க நோக்கங்களை அடையாளங் காட்டியதோடு நில்லாமல், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாகக் கூறி எதிர்ப்பு இயக்கத்தில் இறங்கியது. இதன் விளைவாக, ஜே. வி. பியுடன் அதற்குக் குறுகிய காலத்துக்கு ஒரு உறவு ஏற்பட்டாலும் அது நினைக்கவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் தீவிரவாதிகளது கை. ஸ்ரீ. ல. சு. கட்சிக்குள் மீண்டும் வலுவடையத் தொடங்கியது.

இந்திய அரசின் தயவிலேயே தமது அரசியல் பிழைப்பை நடத்தி வந்த சில முன்வரிசைத் தமிழ் விடுதலை இயக்கத் தலைவர்கள் இந்த உடன்படிக்கையை ஆதரிப்பதில் வியப்பில்லை. ஏனெனில் இந்திய அரசாங்கம் இந்த உடன்படிக்கை மூலம் இலங்கையின் அரசியல் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே முற்பட்டது. தன் நோக்கங்களை நிறைவேற்ற இந்தத் தலைவர்களது பதவி ஆசைகளை அது பயன்படுத்த விரும்பியது. விடுதலைப் புலிகள் மற்ற முன்வரிசை இயக்கங்களை விடக் குறைந்தளவிலேயே இந்திய தயவிற் தங்கி இருந்தார்கள். தமிழக தேசியவாதத அரசியற் கட்சிகள் தமது சந்தர்ப்பவாத நோக்கங்கட்காக இலங்கையின் தமிழர் விடுதலை இயக்கங்களுடன் தமது உறவுகளைப் பேணிக் கொண்டனர். தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரனுக்கு விடுதலைப் புலிகளுடன் இருந்த நல்லுறவைப் பயன்படுத்தி இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு இணங்குமாறு நிர்ப்பந்தித்தது. இவ்வாறான நெடுக்குவாரங்களின் மத்தியிலேயே விடுதலைப் புலிகள் இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று உடன்படிக்கைக்குச் சம்மதித்தனர்.

இந்திய அரசாங்கத்தினால் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் இந்தத் தீர்வின்படி வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அங்கு கூடுதலான அதிகாரங்களுடனான ஒரு மாகாண ஆட்சி நிறுவப்படுமென உறுதி வழங்கப்பட்டது. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் போராளி இயக்கங்கள் தமது ஆயுதங்களைக் கையளிக்க வேண்டுமெனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையினுட்பட்ட தீர்வை நிறைவேற்றுவதற்கு இந்தியாவின் உத்தரவாதமாக இந்திய அமைதி காக்கும் படையொன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலைகொள்ளும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அரச படைகளின் முகாம்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எங்கும் பரவலாக இருக்கையில் விடுதலை இயக்கங்கள் மட்டும் நிராயுதபாணிகளாவது, அரசின் மீது விடுதலை இயக்கங்கட்கு நம்பிக்கை உள்ளபோது மட்டுமே ஏற்கக்கூடிய ஒன்று. மறுபுறம் கிழக்கு மாகாணத்திலும் வடக்கின் சில பகுதிகளிலும் ஏற்பட்ட திட்டமிட்ட குடியேற்றத்தின் விளைவாகச் சிங்கள மக்கள் கணிசமான அளவில் அங்கு வாழ்கின்றனர். இவர்களிற் கணிசமான தொகையின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் எனலாம். முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்து வாழும் பிரதேசங்களில், முஸ்லிம் மக்களிடையே நமது தனித்துவம் தொடர்பாகவும் அவர்களது அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும் நீண்ட காலமாகவே வன்மையான அரசியல் உணர்வுகள் இருந்து வந்துள்ளன. வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற தீர்வு மிகவும் மேலோட்டமான ஒன்றாக இருந்ததால், இப் பிர்சினைகள் பற்றிய ஆழமான கவனம் காட்டப்படவில்லை.

இந்திய அரசாங்கமும் அதன் அமைதி காக்கும் படையும் இலங்கை அரசாங்கத்தைத் திருப்தி செய்வதையே தமது நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றன என்ற ஐயத்தை வலுவ+ட்டும் முறையிலேயே பல சம்பவங்கள் நிகழ்ந்தன. உண்மையான அதிகாரம் எதுவுமற்ற ஒரு வடக்கு – கிழக்கு மாகாண சபை நிறுவப்பட்டது. அதற்கான தேர்தலில் விடுதலைப் புலிகள் பங்கு பற்ற மறுத்தனர். தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்படக் கூடிய சூழ்நிலை 1977ம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் இருக்கவில்லை. எனவே இத் தேர்தல்களின் மூலம் தாம் ஏமாற்றப்படலாம் என்ற ஐயம் அவர்களிடம் இருந்திருந்தால் அது ஏற்கக் கூடிய ஒன்றே. தாமே பிரதான போராட்ட சக்தி என்ற அடிப்படையில் வடக்கு – கிழக்கில் தமக்கே மிகப் பெரும்பான்மையான அதிகாரத்தைக் கொண்டதான ஒரு தற்காலிக ஆட்சியை அவர்கள் வேண்டினர். இதற்கு இந்திய அரசாங்கத்தினால் உடன்பட முடியவில்லை. இந்திய அரசாங்கத்தின் அன்றைய தேவை விடுதலைப் புலிகளை அதிகாரத்தில் அமர்த்துவதாக இருந்திருக்கவும் முடியாது. எனவே வடக்குக் கிழக்கு மாகாணத் தேர்தலில் மிகக் குறைவான மக்களது பங்குபற்றுதலுடன் ஈ. பி. ஆர். எல். எப். எனப்படும் இந்திய சார்பான ஒரு இயக்கத்தின் தலைமையிலான அணி பதவிக்கு வந்தது.

மக்கள் மத்தியில் தமது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள இயலாதவர்களாகிப் போய்விட்ட மாகாண ஆட்சியாளர்கள் மேலும் மேலும் இந்திய அமைதி காக்கும் படையின் ஆதரவின் மீது தங்கியிருக்க நேர்ந்தது. அதேவேளை, இந்திய அமைதிகாக்கும் படைக்கும் விடுதலைப் புலிகட்குமிடையிலான முரண்பாடுகள் வளர்ந்தன. கடலில் வைத்துக் கைப்பற்றப்பட்ட விடுதலைப் போராளிகளை இந்தியப் படையினர், விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை மீறி, இலங்கை அரசாங்கத்திடம் கையளித்ததையடுத்து அவர்கள் சயனைட் அருந்தினர். அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகட்கும் போர் மூண்டது. இதே காலத்தில் இந்தியப் படைகள் இலங்கை மண்ணில் நிலைகொண்டதைச் சிங்கள மக்கள் விரும்பாமையால், தெற்கில் அரசாங்க விரோத உணர்வுகள் வலுத்தன. இதைப் பயன்படுத்திய ஜே.வி.பி. இந்திய விரோத, சிங்களப் பேரினவாத அடிப்படையில் தென்னிலங்கையில் ஒரு எதிர்ப்பியக்கத்தை ஆரம்பித்தது, இவ்வாறு இந்திய படைகள் இலங்கை மண்ணில் அடி வைத்துச் சில மாதங்கட்குள்ளாகவே முழு நாட்டிலும் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகள் பரவி வளர்ந்தன.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான அதிகாரங்களை வழங்க ய+. என். பி. அரசாங்கம் ஆயத்தமாக இருக்கவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகளை அழிக்கவும் விரும்பியது. இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளை முறியடிக்கும் முயற்சியில் மேலும் மேலும் தமிழ் மக்களைப் பகைத்துக் கொண்டன. இந்திய - இலங்கை உடன்படிக்கையின் வெளிவெளியான நோக்கத்தை வலியுறுத்தி அதிகாரப் பரவலாக்கத்தைச் செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைத் தூண்டும் நோக்கம் இந்திய ஆட்சியாளர்கட்கு இல்லை. எனவே தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட உடன்படிக்கை பிள்iயார் பிடிக்கப் போய்க் குரங்காக முடிந்த மாதிரி, இருந்த பிரச்சினையை மேலுஞ் சிக்கலாக்கி விட்டது.

இலங்கையின் தேசிய இனப் பிர்சினையை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இலங்கை ராணுவத்திற்கே இல்லை. இந்த நிலையில் இந்திய ராணுவத்திடம் அதிகம் எதிர் பார்த்திருக்க முடியாது அவர்களுடைய பங்கு பற்றுதலுடன் கிழக்கு இலங்கையில் தமிழ் விடுதலை இயக்கங்கள் சில முஸ்லிம்களுடன் மோதலில் ஈடுபட்டன. இச் சூழலில் தமிழ் மக்களது விடுதலைக்கு எதிராக முஸ்லிம்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சிகளில் சிங்களப் பேரினவாத ய+. என். பி. இறங்கியது. இந்தியாவில் இருந்தபோதே விடுதலை இயக்கங்களிடையில் இருந்து வந்த முரண்பாடுகள் இந்திய அரசாங்கத்தின் கருவிகளான “றோ’’ உளவு நிறுவனம் போன்றவற்றால் இயக்கங்களைத் தம் கைக்குள் வைத்திருக்கப் பயன்படுத்தப்பட்டன. இலங்கையில் இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகட்கும் மோதல் ஏற்பட்டபோது, இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் செயல்களில் சில இயக்கங்கள் இறங்கின. இவ்வாறு, தமிழர் விடுதலைக்காக இயக்கங்கள் தமக்கிடையே மோதிக் கொண்டன. இது பிற் காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களைக் கொல்லும் கூலிப்படைகளது உருவாக்கத்துக்கும் வழி வகுத்தது.

தென்னிலங்கையில் ய+. என். பி. யின் செல்வாக்கு மழுங்கிய அதே சமயம், ஜே. வி.பி.யின் வன்முறைப் போராட்டமும் வலுப்பெற்றது. அதைவிட மோசமான அடக்குமுறையை ய+.என்.பி. அரசாங்கம் கட்டவிழ்த்தது. இச் சூழலில் இந்திய - இலங்கை உடன்படிக்கை ய+. என். பிக்கும் ஒரு சுமையாகி விட்டது. எனவே, 1977 முதல் அதிகாரத்திலிருந்த ஜே.ஆர். வர்த்தன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதில்லை என்று முடிவு செய்தார். 1988 முடிவில் நடந்த தேர்தலில் இந்திய - இலங்கை உடன்படிக்கையின் எதிர்ப்பாளராகக் கருதப்பட்ட பிரேமதாசவை வேட்பாளராக ய+. என். பி. நிறுவியது. தனது தேர்தல் ஏமாற்று வேலைகள் மூலம் தென்னிலங்கையில் ஜே. வி. பி. வன்முறை காரணமாக அரசாங்க எதிர்ப்பு வாக்காளர்கள் பங்குபற்ற முடியாத சூழ்நிலையாலும் ய+. என். பி. மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசவுக்கும் இந்தியப் படைகளை அகற்றும் பொதுநோக்கம் இருந்தது. இது பிரேமதாஸ இந்தியப் பகைமை உணர்வுடையவர் என்பதனால்லாமல் தென்னிலங்கையில் உள்ள மக்களது உணர்வுகளை அவர் அறிந்திருந்தார் என்பதனாலெனலாம். ஜே.வி.பி.யை முறியடிக்கும் அவரது திட்டத்தில் இது ஒரு அம்சம். எனவே, இந்தியப் படைகளை அகற்றுவதில் விடுதலைப் புலிகளது போராட்டமும் அவருக்கு ஏற்புடையாக இருந்தது. இக் கால கட்டத்தில் விடுதலைப் புலிகட்கும் ய+. என். பி. ஆட்சிக்கும் இடையே சில பேச்சுவார்த்தைகளும் நடந்தன. விடுதலைப் புலிகட்கு ஆயுத உதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் விருப்பங்கள் எவ்வாறிருப்பினும் மக்கள் விரோதப் படையாகக் காணப்பட்ட இந்திய அமைதி காக்;கும் படை தனது 50,000 – 1,00,000 வரையிலான படை பலத்தைக் கொண்டு விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது பெரும் இழப்புக்களைச் சந்தித்தது. மக்களுடைய ஆதரவின்றி நடத்தப்படும் போர்களும் ஆக்கிரமிப்பு யுத்தங்களும் முடிவில் தோல்வியையே தழுவும் என்ற வரலாறு உண்மை மறுபடி திரூபணமானது.

இந்தியப் படைகள் வீரட்டப்பட்ட பின்பு (அதிகார ப+ர்வமாக, பிரேமதாஸவின் வேண்டுகோளுக்கமைய இந்திய அரசாங்கத்தால் மீளப்பெறப்பட்ட பின்பு) பிரேமதாசவின் கவனம் ஜே.வி.பி.யை நசுக்குவதில் மேலும் மும்முரம் பெற்றது. 1988 – 89ல் குறைந்தபட்சம் 50,000 சிங்கள இளைஞர்கள் ய+. என்.பி கொலைக்காரப் படைகளாலும் பொலிஸாராலும் ராணுவத்தாலும் வதைத்துக் கொல்லப்பட்டனர். ஜே.வி.பியும் கணிசமான அளவு கொலைகட்டுப் பொறுப்பேற்றாக வேண்டும் என்றாலும், அரசாங்கமே இக் கொலைகளின் பிரதான கருவியாகவும் பெரும் காரணமாகவும் இருந்து என்பது முக்கியமானது. தென்னிலங்கையில் அரசாங்கத்தின் கை மீண்டும் வலுவடையத் தொடங்கிய பிறகு, அதற்கு விடுதலைப் புலிகளுடனிருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. சிறு சம்பவங்களைக் காரணமாகக் கொண்டு தொடங்கிய மோதல்கள் விரைவிலேயே ப+ரணமான யுத்தமாக வெடித்தன.

இத்தனைக்கு நடுவிலும் பிரேமதாச சமாதானப் பேச்சுவார்த்தைகள், பிரிவினை தவிர்ந்த தீர்வு என்பன பற்றிப் பேசியும் விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தும் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைத் தேடுவது பற்றிப் பேசி வந்தார். மலையகத்தின் வலதுசாரித் தலைவர் தொண்டமான் பிரேமதாசவுக்கும் விடுதலைப் புலிகட்கும் நடுவே இணக்கம் காண முயற்சிகள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலம் தீர்வு வராது என்பதும் அது காலத்தைக் கடத்தும் ஒரு கருவி என்பதும் வெகு விரைவிலேயே தெளிவாகி விட்டது. எனவே, போர் தொடர்;ந்தது.

1993 மே தினத்தன்று பிரேமதாச குண்டு வெடிப்பில் இறந்த பின்பு அதிகாரத்துக்கு வந்த விஜேதுங்க தேசிய, இனப்பிரச்சினை என்று ஒன்று இருப்பதாகவே கருதவில்லை. அவரளவில், அவர் இருந்தது. பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே. 1992ல் பிரேமதாசவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வந்த ய+. என். பி. யினர் சிலர் பிரிந்து போய் ஒரு கட்சி அமைத்ததும் அதன் தலைவரான வலித் அத்துலத் முதலி சில வாரங்கள் முன்னரே துவக்குச் சூட்டில் இறந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், பிரேமதாசவின் மரணம் தென்னிலங்கையில் அரசாங்க விரோத ஜனநாயக சக்திகட்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது எனலாம். ய+. என். பி. யின் சர்வாதிகாரத்தைப் பெயர்க்கும் முயற்சிகள் கூடுதலான வேகம் பெற்றன. 1993 பிற்பகுதியில் நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் இரண்டு மாகாணங்களில் முதற் தடவையாக எதிர்க்கட்சிகள் அரசாங்கக் கட்சியை விட அதிக வாக்குகளைப் பெற்றன. இது தென்னிலங்கையில் ஒரு ஜனநாயகமானதும் நலன் சார்ந்ததும் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைத் தருவதுமான ஆட்சி விரைவில் வரலாம் எனற நம்பிக்கையை வலுப்படுத்தியது.

1988ல் விஜய குமாரணதுங்கவின் படுகொலையையடுத்த லண்டனில் வந்த சந்திரிகா குமாரணதுங்க, விஜயவைப் போலவே தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு பற்றி ஓரளவு அக்கறையுடன் பேசி வந்தவர். விஜய, குமாரணதுங்கவின் சாவையடுத்து அவரது ஸ்ரீ. ல. மக்கள் கட்சியின் தலைமையை ஒஸ்லி அபேகுணசேகர ஆளுங்கட்சியின் அனுசரணையுடன் பறித்துக் கொண்டார். 1992ல் இலங்கை திரும்பிய சந்திரிகா திரும்பவும், ஸ்ரீ. ல. சு. கட்சியில் இணைந்து தலைமைப் பதவியை அடைந்து விட்டார். அதன் விளைவாக, அவரது சகோதரர் அனுர பண்டாரநாயக்க ய+. என். பி. அரசாங்கத்தில் இணைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சந்திரிகா 1994 நடுப் பகுதியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ. ல. சு. கட்சி தலைமையிலான மக்கள் முன்னணியின் வெற்றிக்கு அளித்த பங்கு பெரியது. இத் தேர்தலில் வடக்கில் நடந்த தேர்தல் என்ற அபத்தத்தைத் தவிர்த்தால், நாடு முழுவதும் ய+. என். பிக்கு எதிரான உணர்வுகள் தெளிவாகவே புலனாகின. சிறுபான்மைத் தேசிய இனத்தவர்கள் பெருமளவில் மக்கள் முன்னணி ஆதரித்தனர். இதன் அடிப்படையிலேயே, வருட இறுதியில் நடந்த ஜனாதிபதி தேர்தல் சந்திரிகா அமோக வெற்றி ஈட்டினார். அவரது தேர்தல் பிரசாரத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு, யுத்தநிறுத்தம் என்பன முக்கிய இடம் பெற்றிருந்தன. அதற்கும்மேலாக, சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு, பத்திரிகைச் சுதந்திரம் என்பன பற்றிய உத்திரவாதங்களும் தேர்தலில் உறுதியளிக்கப்பட்டன.

புதிய ஜனாதிபதியாக சந்திரிகா ஆட்சிக்கு வந்த சில வாரங்கட்குள்ளாகவே அவரது வாக்குறுதிகள் காற்றிற் பறக்கும் சாடைகள், தெரிந்தன எந்தச் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களது தொழிற்சங்க உரிமைகட்கான போராட்டம் முன்னைய அரசின் சரிவுக்குப் பங்களித்ததோ, அதே தொழிலாளர்கள்து உரிமைப் போராட்டம், ம. மு. அரசினால் தன் எதிரிகளது சதி என்று திரித்துக் கூறப்பட்டது. ய+. என். பி. ஆட்சியின் போது அதற்கு நிதி உதவி செய்து நிறையச் சம்பாதித்த நிறுவனங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னமேயே சந்திரிகாவின் தேர்தலுக்கு நிதி வழங்க தொடங்கி விட்டன. ஜனாதிபதியின் பல நியமனங்கள் மக்கள் மனதில் ஐயங்களை எழுப்பின. அயல் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட ஒரு தமிழரும் ஜனாதிபதியின் அந்தரங்கச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணும் சுரண்டும் தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளாக இருந்தது அரசின் சில இடதுசாரிகளை அதிர வைத்தது. புதிய ஜனாதிபதியின் மீது விமர்சனங்களை முன்வைத்த பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். சர்வதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்டுவேன் என்ற வீர முழக்கம் மெல்ல மங்கியது. புதிய அரசின் பொருளாதாரக் கொள்கை உலகவங்கிக்கும் சர்வதேச நாணய நிதிக்கும் அரசின் விசுவாசத்தை வெளிப்படுத்தியது. எனவே புதிய ஆட்சியும் மேலை முதலாளித்துவ ஆட்சியாளர்களால் மிகவும் விரும்பப்பட்டனர். இதற்குப் பிரதியாக, முன்பு ய+. என். பி. ஆட்சியின் கீழ் நிறுவப்பட இருந்த அமெரிக்காவின் குரல் வானொலி நிலையத்தை மூடுவதற்காக மக்கள் நடத்திய போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது.

இத்தனைக்கும் நடுவே தேசிய இனப் பிரச்சினையை இந்த அரசு சுமூகமாகத் தீர்வுக்கும் என்ற நப்பாசை மட்டுமே பலரிடம் எஞ்சியிலுந்தது. சந்திரிகா பதவியேற்ற காலத்தையொட்டிச் சமாதானம் பற்றிய புதிய அரசு நிறைய பேசியது. முன்னைய அரசாங்கம் விதித்த பொருளாதாரத் தடைகளை நீக்கி யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு அடிப்படையான தேவைகளை வழங்குவதாக கூறியது. சந்திரிகா, தேர்தலுக்கு முன்னம், விடுதலைப் புலிகள் கோராமலே சில ராணுவ முகாம்களைப் பின் நகர்த்தப் போவதாகவும் கூறினார் என்பது முக்கியமானது. அதேவேளை, விடுதலைப் புலிகளும் அரசாங்கத்தின் வேண்டுகோளின்றியே யுத்த நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தார். புதிய ஜனாதிபதியின் அரசாங்கத்தின் சார்பில் தூதுக் குழுக்கள் யாழ்ப்பாணம் போய் வந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் வௌ;வேறு நபர்களே உறுப்பினராய் இருந்ததும் எத் தருணத்தில் அரசின் முக்கிய பிரமுகர் எவரேனும் பங்கு பற்றாதலும் விடுதலைப் புலிகளிடையே நியாயமான ஐயங்களை எழுப்பின. அனைத்தினும் முக்கியமாக, இது வரையும் இந்த அரசாங்கம் சமாதானத் தீர்வுக்கான அடிப்படையான ஒரு திட்டத்தை முன்வைக்கத் தவறி விட்டது. இச் சூழலிலேயே விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தைக் கைவிட்டு மறுபடியும் போரில் இறங்கினர். இது சரியா தவறா என்பதைப் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. ஆயினும் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறவிட்;டது என்பதையோ இதுவரை வடக்குக் கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்பன பற்றி எதுவுமே தெளிவாக முன் வைக்கவில்லை என்பதையோ எவரும் மறுக்க முடியாது.

தேசிய இனப்பிரச்சினைக்;குரிய தீர்வு தட்டிகழிக்கப்பட்டு வரும்; அதேவேளை, சந்திரிகா இந்தியாவின் ஆட்சியாளர்களுடனும் மேலை நாடுகளுடனும் தனது புதிய நெருக்கத்தை இறுக்கமாக்கிக் கொண்டுள்ளர். யுத்த மூலமான தீர்வு பற்றிய பிரகடனம் வெளிவருமுன்னமே, இந்தியாவில் சந்திரிகா அளித்த செவ்விகள், அவர் போகிற திசையைத் தெளிவாக்கிவிட்டன. இன்று அவரது ஆட்சி, அதற்கு முன்னைய ய+. என். பி. ஆட்சியைப் போன்று, ராணுவத்தின் ஆதரவை மிகவும் நாடி நிற்கிறது. கடந்த காலங்களிற் போன்று கொழும்பில் வாழும் தமிழர்கள் முக்கியமாக அகதிகளாக வந்து விடுதிகளில் தங்கியிருப்போர், பொலிஸாரால் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். இந்த அரசாங்கமும் இனவாத அரசியலுக்குப் பணிந்து போகும் அடையாளங்கள் தோன்றிவிட்டன. எனவே தமிழ் மக்க்ள் முன்னுள்ள உடனடியான தெரிவுகள் குறுகி வருகின்றன.

இதுவரை காலமும் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த விடுதலைப் போராட்டம் தனி நாட்டை இலக்காகக் கொண்டதாகவே கூறப்பட்டாலம் சுயநிர்ணயத்துடன்கூடிய ஒரு ஐக்கிய இலங்கையை விடுதலைப் போராளிகள் முற்றாக நிராகரிக்கவில்லை. அதற்கான சம்மதம் முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது சாடையாகத் தெரிவிக்கப்பட்டது அது பற்றிய எதிர்ப்பார்ப்புக்கள் புதிய ஆட்சி பதவி ஏற்றபோது அதிகரித்தன. இன்றைய சூழலில், தென்னிலங்கையில் ஒரு அடிப்படையான மாற்றம் ஏற்படாத வரை வடக்கு – கிழக்கில் உள்ள நிலைமை மேலும் மோசமாவதுடன் போராட்டம் பிரிவினையை நோக்கியே செல்வது தவிர்க்க முடியாது போய்விடும். இதற்கான பொறுப்பும் சிங்களப் பேரினவாதிகளது கையிலும் அதன் ராணுவத்தின் கையிலும் இன்றைய அரசின் கையிலுமே பெரம்பாலும் உள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழித்து வந்துள்ளது. விடுதலைப் புலிகளைத் தவிர்த்துச் சமாதானத் தீர்வைக் கொண்டு வருவது என்ற பேச்சின் மூலமும் அரசாங்கம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளலாமேயொழிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவோ நியாயமான தீர்வை ஏற்படுத்தவோ முடியாது. சுயநிர்ணயம், பாரம்பரியப் பிரதேசங்களின் அடிப்படையிலான சுயாட்சி என்ற அடிப்படைகளை அரசாங்கம் நிராகரித்து எச்தவிதமான தீர்வைக் கொண்டுவர முயன்றாலும் அது தோல்வியிலேயே முடியும்.

முதலில் இளைஞர்கள், பின்பு பெண்கள், இன்று சிறுவர்கள் ஆயுதம் ஏந்துவது பற்றி விடுதலைப் புலிகளைக் கண்டிக்கிறார்கள் உண்மையில் அந்த நிலைமையை உருவாக்கியவர்களை முதலிற் கண்டிப்பது நியாயமானது, விடுதலைப் புலிகளைக் காரணங்காட்டி, தமிழ் மக்களது நியாயமான தேசிய இன உரிமைகளை மறுக்கும் முயற்சிகள் அன்று போல் இன்றும் இனியும் இலங்கையின் சகல மக்களது உரிமைகளையும் மறுக்கும் நிலைமைக்கே செய்வன. தெற்கில் மீண்டும் விழிப்படைந்துள்ள முற்போக்குச் சக்திகள் ம. மு. அரசாங்கத்தின் தவறுகளை விமர்சித்துத் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணவும் ஏகாதிபத்திய விரோத முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் மீண்டும் தலை தூக்கியுள்ள கொலைகார ஆயுதப்படைகளது அதிகாரத்தை முறியடிக்கவும் ஜனநாயக உரிமைகளை மீட்கவும் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

பின்னிணைப்பு

புதிய – ஜனநாயக கட்சிகள்

முக்கியமான அறிக்கைகள்

பின் இணைப்பாகின்றன.

1. உடனடி வேலைத் திட்டம் - 1991

2. இனப்பிரச்சினைக்கான
குறைந்த பட்ச பிரேரணைகள்

3. அறிக்கைகள் நான்கு

உடனடி வேலைத் திட்டம்

1991 ம் ஆண்டு மே, மாதம் 4ம் 5ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற புதிய ஜனநாயக கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட பதினைந்து அம்சங்களை உள்ளடக்கிய உடனடி Nவைத் திட்டம்.

1. தற்போதைய ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத ய+. என். பி பெருமுதலாளித்துவ – பேரினவாத – பாகிஸ்ட்;அரசை எதிர்த்து நிற்கக்கூடிய சகல அரசியல் கட்சிகளையும் ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய பொதுமுன்னணி ஒன்றிணை உறுதியான பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பி அதன் தலைமையில் மக்களை அணிதிரட்டி சக்தி மிக்க வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பது இப்பொழுது வேலைத் திட்டத்தின் பிரதான அம்சம் தேசிய ஜன நாயகத்தையும் - சுயநிர்ணய உரிமையையும் வென்றெடுத்து நிலைநாட்டுவதாக அமைய வேண்டும்.

2. சக்திமிக்க வெகுஜனப் போராட்டங்களின் மூலம் ஆளும் அரங்கிலிருந்து அகற்றப்படும் ய+. என். பி. அரசாங்கத்தின் இடத்தை நீதியானதும் நியாயமானதுமான சுதந்திர பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் ஜனநாயக அரசாங்கத்தினால் நிறைவு செய்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்தல்.

3. ஜனநாயகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் ஓர் தேசிய நிர்ணய சபை மூலமாக இன்றைய அரசியலமைப்புக்குப் பதிலான புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ளல் வேண்;டும். அவ்வரசியமைப்பானது தற்போதைய நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து மக்கள் பிரதிநிதிகள் அதிஉயர் அதிகாரத்தை வழங்கக் கூடியவகையில் அமைவதுடன், மக்கள் நலன், தேச நலன், தேசிய இனங்களுக்கிடையிலான இணக்கநலன் அடிப்படையில் சகல மக்களுக்கும் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், அப்படை மனித உரிமைகளையும் உத்தரவாதம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

4. தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசியல்அமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம், மாணவர்களை ஒடுக்கும் நோக்கிலான பல்கலைக்கழகச் சட்டங்கள் போன்ற அனைத்து அடக்;குமுறைச் சட்டங்களையும் உடன் அகற்ற வேண்டும். அத்துடன் சகல வகை சார்ந்த துணைப் படைகளும் - விவேஷப் படைகளும் கலைக்கப்பட்டு ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கு மீறிய அதிகாரங்கள் அனைத்தும் இல்லாது ஒழிக்கப்படல் வேண்டும். அதேவேளை சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள், இராணுவ முகாம்கள், விசாரணைக் கூடங்கள் அனைத்திலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தல் வேண்டும்.

5. 1977ஆம் ஆண்டுக்குப் பின் இடம்பெற்று வந்த ஜனநாயக – தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளையும் அடிப்படை மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவ் விசாரணையில் முழு நாட்டிலும் ஏற்கனவே கொல்லப்பட்டும், காணாமற்போயுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய நஷ்டஈடும், புனர்வாழ்வும் வழங்கப்பட வேண்டும். அதேவேளை குற்றவாளிகள் எத்தரத்தை உடையவர்களாக இருப்பினும் அவர்ககள் தண்டிக்கப்படல் வேண்டும்.

6. தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான ஓர் இடைக் காலத் தீர்வு முத்தரப்புப் பேச்சுவார்த்தை அடிப்படையில் காண்பதற்கு சகல நடவடிக்கைகளும் தாமதமின்றி முன்னெடுக்கப்படல் வேண்டும். இத் தீர்வானது சுயநிர்மாண உரிமை அடிப்படையில் ப+ரண அதிகாரம் கொண்ட வடக்கு – கிழக்கு இணைந்த பிரதேசத்திற்கான பிரதேச சுயாட்சியாகவும் முஸ்லிம் மக்கள், அந்நிய வம்சாவளி மக்கள் ஆகியோருக்கான சுயாட்சி உள்ளமைப்புக்காகவும் கொண்டிருப்பதுடன் இவை அரசியலமைப்பு வாயிலாக உறுதியையும் உத்தரவாதத்தையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் வடக்கு – கிழக்கில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவந்த கோர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர், உடைமைகள், இருப்பிடம், தொழில் இழப்புக்களைப் பெற்ற அனைத்து மக்களுக்கும் ப+ரண நஷ்டஈடும் - தகுந்த புனர்வாழ்வையும் குறுகிய கால எல்லைக்குள் வழங்கி அவர்களை இளல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வது.

7. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, அதற்கேற்ற சம்பள உயர்வை வழங்கி தொழிலாளர்கள், ஊழியர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களினதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திப் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வது.

8. திட்டமிட்ட பாரிய கைத்தொழில் விவசாய அபிவிருத்திக்கு உரிய அடிப்படைகளை உருவாக்கி முன்னெடுக்கும் அதேவேளை விவசாய, சிறுகைத்தொழில் உற்பத்திகளுக்கு ஊக்கமும் முதன்மையும் கொடுத்து விவசாயிகளுக்கும் சிறு கைத்தொழிலாளர்களுக்கும் உரிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும். தொழில், விவசாய அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் சகல பிரதேசங்களுக்கிடையிலும் சமத்துவ அடிப்படையில் வழங்கப்படல் வேண்டும். இதன்மூலம் வெளிநாடுகளுக்கு தமது மனிதவளம் செய்யப்படுவது ஆகக் குறைந்த மட்டத்துக்கு வருவதுடன் திட்ட தேசிய பொருளதார வளர்ச்சியானது துரிதகதியில் விருத்திபெற பலம்பெற உரிய நடவடிக்கைகளை ஏற்படுத்தியது.
9. ஏற்றுமதி இறக்குமதி உட்பட அந்நிய பல்தேசிய நிறுவனங்களின் தாரள சுரண்டலுக்கும், திட்டமிட்ட தேசிய பொருளதார வளர்ச்சியைச் சிதறடித்து நமது நாட்டைத் தமது சந்தையாக வைத்திருக்கும் அவர்களின் திறந்த பொருளாதாரக் கதவு கொள்கைக்குத் தகுந்த கட்டுப்பாடு விதித்து தமது தேசிய பொருளாதாரத்தை ஸ்திரமாக்கி முன்னெடுப்பது, விவசாய உற்பத்திகளும் சிறுகைத்தொழில் முயற்சிகளும் கொள்வனவு, விற்பனை யாவும் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றின் ஊடாக செயற்படுவது . இதற்கென ஒரு திட்டமிட்ட தேசிய செயற்படுவது இதற்கென ஒரு திட்டமிட்ட தேசிய பொருளதாரக் கொள்கையை வகுத்துக் கொள்வது.

10. தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசிய வாழ்வில் அரசாங்க, தனியார் துறையினரைவிட தனி ஒரு பிரிவினராக நடத்தப்படும் தற்போதைய முறையை ஒழித்து ; அவர்களது பிரஜாவுரிமை, வாக்குரிமை ; என்பவற்றை நடைமுறையில் ப+ரணப்படுத்தி ; நிலம் வழங்கப்படுவதில் காட்டப்படும் திட்டமிட்ட பாகுபாட்டை ஒழித்து ; மற்றும் வசிப்பிடம், சுகாதாரம், கல்வி வாய்ப்புக்களை மிகுந்த அக்கறையுடன் விரிவுபடுத்தி விருத்தி செய்தல்.

11. நாட்டின் மொத்த எண்ணிக்கையில் அரைப்பங்கினராக விளங்கும் பெண்கள் சகல துறைகளிலும் இரண்டாந்தர அடிப்படையிலான பாகுபாடுகளுக்கும் ஒடுக்கல்களுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்து பெண்களின் நிலலுரிமைகளுக்;கும் சமத்துவ நிலைக்கும் உறுதியான செயற்பாட்டினை முன்னெடுப்பது.

12. விஞ்ஞான தொழில் நுட்பக் கல்வியை மாவட்டங்கள் தோறும் விருத்தி செய்து அவற்றை தொழில் விவசாய விருத்தியுடன் இணைந்து தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது, அத்துடன் சமூகநல விருத்திக்குப் பங்காற்றக்கூடியதும்; சமூக உணர்வையும் மனிதநேயப் பண்புகளை வளர்க்கக் கூடியதுமான திட்டமிட்ட தேசிய கல்விக் கொள்கை ஒன்றிணை இனவர்க்க, மத, மொழி, சாதி, பால், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வகுத்து முன்னெடுத்தல், சகல இன மக்களினதும் கலாசார விழுமியங்களின் நல்லம்சங்கள் அனைத்தையும் பாதுகாத்து புதிய சூழலில் கலாசாரக் கொள்கை ஒன்றிணை வகுத்து முன்னெடுப்பதுடன் நச்சுத்தனம் கொண்ட லிதேசிய கலாசார ஊடுருவல்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்துவது.

13. எண்பதுகளில் இருந்து தனியார் மயமாக்கல் கொள்கை அடிப்படையில் அரசாங்க, கூட்டுத் தாபன கூட்டுறவுத் துறைகளில் இருந்து வெளிநாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளிடம் கையளித்த சகல துறை நிறுவனங்களும், நிலங்களும் மீளக் கையேற்கப்பட்டு அவை தகுந்த முறையில் இயங்க வழிவகை செய்யப்படவேண்டும். அதே வழியில் கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய துறைகளில் புகுத்தப்பட்ட தனியார் லாபநோக்குடைய நடைமுறை ஒழிக்கப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நடைமுறைக் கொள்கை பின்பற்றப்படல் வேண்டும்.


14. இன்றைய சமூகநிலை (சாதி, இன, பிரதேச, வர்க்கம்) காரணமாக நாட்டின் எப்பகுதியிலேனும் காணப்படும் பின்தங்கிய மக்கள் பிரிவினர் உரிய முறையில் இனங்காணப்பட்டு அவர்களது சமூக, பொருளாதார, கல்வியை மேம்பாட்டிற்கான உமனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

15. தற்போதைய ய+. என். பி. அரசு பின்பற்றிவரும் முற்றிலும் மேற்குலகு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது கைவிடப்பட்டு உறுதியாக நடுநிலைக் கொள்கை பின்பற்றப்படல் வேண்டும். அதேவேளை உலக மேலாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் பிராந்திய மேலாதிக்க நோக்கத்திற்கு எதிராகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். உலகின் அடக்கி ஒடுக்கப்படும் மக்களுடனும் அவர்களின் விடுதலைப் போராட்டங்களுடன் மிக நெருக்கமாக ஐயப்படுவதுடன் இந்திய உப கண்டத்தின் மக்களுடனும் அவர்களது சமூக நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டங்களுடனும் எமது ஒருமைப்பாட்டை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். அதே வேளை மூன்றாம் உலக நாடுகளின் ஐக்கியத்திற்கும் அவர்களை தமது தேசிய சுதந்திரம் தேசிய பொருளதார வளர்ச்சி என்பவற்றுக்காக முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளுக்கும் போராட்டங்களு;ககும் எமது வெளியுறவுக் கொள்கையானது பக்கபலமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும்.

பின் இணைப்பு – 2

புதிய – ஜனநாயக கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரஸ் விவாதித்து எடுத்துக் கொண்ட முடிவின் அடிப்படையில் இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் இடைக்காலத் தீர்வுக்கு மத்திய குழுவினால் முன் வைக்கப்பட்ட குறைந்த பட்ச பிரேரணைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1. தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்:டு அப் பிரதேசத்தில் முழு அதிகாரங்களும் கொண்ட ப+ரண பிரதேச சுயாட்சி அமைப்பு முறையும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளும் உருவாக்கப்படுதல் வேண்டும்.

2. இவ்வாறு உருவாக்கப்பபடும் அமைப்பு முறையினை வடக்கு – கிழக்கு பிரதேச சுயாட்சி பிரதேசம் எனப் பெயரிடப்படுதல் வேண்டும். அதன் எல்லைகள் ஏற்கனவே இருந்து வரும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் எல்லைகளாக இருத்தல் வேண்டும்.

3. இப்பிரதேச சுயாட்சி உள்ளமைப்பினதும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளினதும் அதிகாரங்களும், செயற்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும். அதேவேளை மத்திய அரசின் அதிகாரங்கள், கடப்பாடுகள், செயற்பாடுகள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்படுவதுடன் மேற்குறித்த அரசியல் யாப்பு ரீதியான உத்தரவாதத்தைப் பெறுதல் வேண்டும்.

4. வடக்கு – கிழக்கு பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களின் செறிவுக்கு ஏற்றவிதமாக மாவட்டங்களை இணைத்தோ, அன்றித் தனித்தனியாகவோ கொண்ட ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ பலமான சுயாட்சி உள்ளமைப்புக்களை உருவாக்குதல் வேண்டும். இவ்வமைப்புக்கள் வாயிலாக முஸ்லிம் மக்கள் தமது பொருளதார, நீர்நில வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் ப+ரண உரிமைகளைப் பெற்றிருக்க வகை செய்யப்படுதல் வேண்டும். அதேவேளை அவர்களில் மத – கலாசார அம்சங்களுக்கு உரிய இடத்தினை வழங்கி அவர்களது தனித்துவத்தை ஏற்று மதித்து செயல்படும் விதமாக இச் சுயாட்சி உள்ளமைப்பில் அதிகாரங்களும், செயற்பாடுகளும் வரையறுக்கப்படுதல் வேண்டும்.

5) முஸ்லிம் மக்களின் சுயாட்சி உள்ளமைப்பின் அதிகாரங்களிலும், செயற்பாடுகளிலும் மத்திய அரசோ அன்றி வடக்கு கிழக்கு பிரதேரச சுயாட்சி நிர்வாகமோ தலையீட்டையும் குறிக்கீட்டையும் கொண்டிருக்காதவாறு இவ்வமைப்பின் அதிகாரங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும்.

6) வடக்கு – கிழக்கு பிரதேச சுயாட்சி பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் ப+ர்த்திசெய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பு வலுவானதாக அமைக்கப்படுதல் வேண்டும். அதேபோன்று இப்பிரதேச சுயாட்சி அமைப்புக்கு வெளியே வாழ்ந்துவரும் தமிழபேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க்கூடிய விதமான உள்ளமைப்புக்கள் ஏனைய பிரதேசங்களில் நிறுவப்படுதல் வேண்டும்.

7) நிலமின்மையாலும் பொருளதார, கல்வி, தொழில் போன்றவற்றினால் பின்தங்கிய வகையில் இன்றும் பல பகுதிகளில் பின்தங்கிய சமுதாயப் பிரிவினராக வாழ்ந்து வரும் “தாழ்த்தப்பட்ட மக்களின்’’ சமூக முன்னேற்றத்திற்கான வசதிகளும் சலுகைகளும் ஏற்றவிதமாக உத்தரவாதப்படுத்தி பிரதேச சுயாட்சி அமைப்பில் வழங்கப்படல் வேண்டும்.

8) வடக்கு – கிழக்கு பிரதேச சுயாட்சி அமைப்பின் கீழ் அப் பிரதேசத்தின் விவசாயம், கைத்தொழில் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சுயமான பொருளாதார விருத்திக்குத் தடைகள், தலையீடுகள் ஏற்படுத்தப்படுவது நிர்வாக – சட்ட ரீதியாக தடுப்பதற்கு உத்தரவாதம் வழங்கப்படுதல் வேண்டும்.

9) இப் பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் நிலப்பகிர்வை மேற்கொள்வதற்கும், நீர்ப்பாசனத்தை ஒழுங்குப்படுத்தவும், குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் பிரதேச சுயாட்சி அமைப்பிற்கு ப+ரண அதிகாரமும் வழங்கப்படல் வேண்டும். 1977 ஆம் ஆண்டுக்குப்பின் வடக்கு – கிழக்கில் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் யாவும் அகற்றப்படல் வேண்டும். அதேவேளை, மத்திய அரசு ஏற்படுத்த விரும்பும் குடியேற்றத் திட்டத்தை பிரதேச சுயாட்சி அமைப்பு ஏற்கவும் அல்லது நிராகரிக்கவும் ப+ரண உரிமை இருக்க வேண்டும்.

10) வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் நிதி, நீதி நிர்வாகம் மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கலாசார துறைகள் அனைத்தும் அரசியல் அமைப்பிற்கு அமைய சுதந்திரமான வழிகளில் அப்பிரதேச மக்களின் தேவைக்கேற்றவாறு முன்னெடுக்கப்படுவதற்கும் வளர்க்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.

11) வடக்கு – கிழக்குப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் உள்ளுர் பாதுகாப்பிற்கான பொறுப்பினை மேற்படி பிரதேச சுயாட்சி நிர்வாகத்திடம் இருப்பதற்கு அனுமதிக்கப்படுதல் வேண்டும். மேலம், அந்நிய அச்சுறுத்தல் - ஆக்கிரமிப்புக்கான சூழல் இல்லாத நிலையில் இராணுவத் தளங்கள் வைத்திருப்பது அல்லது விஸ்தரிப்பது பற்றிய முடிவை பிரதேச சுயாட்சி நிர்வாகத்துடன் கலந்து பேசி முடிவினைக் கொள்ளல் வேண்டும்.

12) தேசிய மட்டத்திலும், பிரதேச சுயாட்சி மட்டத்திலும் இனம், மொழி, சாதி, மதம், பால் போன்றவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான உறுதிமிக்க நடவடிக்கைகளை அடிப்படை மனித உரிமை, ஜனநாயக உரிமை, தொழிற்சங்க உரிமை என்பவற்றின் வழிநின்று வரையறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

13) மலையகத்தில் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இந்திய வம்சாவழி மக்கள் தமது இனத்தனித்துவங்களையும், தன்னடைளாளங்களையும் பேணிப் பாதுகாத்து விருத்தி செய்யும் வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புக்கள் அப்பிரதேசத்தில் உருவாக்கப்படுதல் வேண்டும்.

14) மலைய மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பானது அவர்கள் செறிவாக வாழ்ந்துவரும் மத்திய, ஊவா,சப்பிரகமுவா மாகாணங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படுதல் வேண்டும். அதேவேளை, இச்சுயாட்சி அமைப்பிற்கு வெளியே வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கக்கூடிய வகையில் சுயாட்சி உள்ளமைப்புகளில் உரிமைகள் வரையறுக்கப்படுதல் வேண்டும்.

15) மலையகத்தில் மலைய மக்களுக்கான வலுவுள்ள சுயாட்சி உள்ளமைப்புக்களாலும் அவர்கள் நீண்ட காலம் போராடிப் பெற்றுவந்ததும் - வெறும் பெயரளவிலானதாக இருந்து வருவதுமான பிரசாவுரிமை வாக்குரிமை உட்பட பெற்றுக்கொள்ள வேண்டிய ஏனைய அடிப்படை உரிமைகளையும் ப+ரணப்படுத்த முடியும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, வீடமைப்பு சுகாதாரம், மற்றும் மொழிகலாசாரத் துறைகளிலான வளர்ச்சிக்கு முழுமையாக வாய்ப்புக்கள் வழங்கப்பட முடியும்.

10 – 12 – 1991 மத்தியகுழு,
கொழும்பு புதிய ஜனநாயக கட்சி


பின் இணைப்பு -3

புதிய ஜனநாயக கட்சி

மத்தியகுழு அறிக்கை -1

கடந்த பதினேழு வருடகால ஐக்கிய தேசியக் கட்சியின் தேச விரோத, மக்கள் விரோத, தேசிய இன விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு மாற்று சக்தியாக, பொதுத் தேர்தல் அரங்கின் முன்னெழுந்து நிற்பது பொதுசன முன்னணியேயாகும். ஆதலால் தேசிய பொருளாதாரத்தையும் தெசிய ஜனநாயகத்தையும் மீட்டெடுத்து நிலைநிறுத்துவதற்கும், தேசிய இனப்பிரச்னைக்கு நியாயமான அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதற்கும் ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு வாய்ப்பாக சகல தரப்பு மக்களும் பொதுஜன முன்னணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வது அவசியமாகும்.

மேற்கண்டவாறு புதிய – ஜனநாயக கட்சியின் மத்திய குழு பொதுத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் நாட்டில் சுபீட்சத்தையும் மக்களுக்கு நல்வாழ்வையும் ஏற்படுத்தி ஓர் நீதியான சமுதாயத்தை கட்டிகெழுப்புவதற்றுத் தம்மை அர்ப்பணித்துள்ளதாகக் கூறிக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால், கடந்த பதினேழு வருடங்களாகத் தனிக்கட்சி, தனிநபர் சர்வாதிகாரப் பாதையில் ஆட்சி நடத்தியதன் மூலம் தேசிய பொருளதாரம் முற்றாச் சிதைக்கப்பட்டு அந்நிய பல் தேசிய நிறுவனங்களுக்கு நாடு இரையாக்கப்பட்டது. ஏகாதிபத்திய சக்திகளின் விருப்புக்கு இசைவாக பெரும் தோட்டத் தொழில் துறை உட்பட அரச கூட்டுத்தாபன பொதுத் துறைகள் தனியார் மயத்துக்கு உள்ளாக்கப்பட்டன. பொருளாதாரத்துறைகள் மட்டுமன்றி கல்வி கலாசார சமுகத் துறைகள் அனைத்தும் முற்றாகவே சீiழிக்கப்பட்ட அரசியல் தொழிற்சங்கத் துறைகளில் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதச் சட்டங்கள் கொண்;டு வரப்பட்டு ஜனநாயக மனித உரிமைகள் யாவும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. அரசியல் கொலைகள், பரவலான பழிவாங்கல்கள்,ஆட்கடத்தல் போன்றன பல்லாயிரக்கணக்கில் இடம்பெற்றன. இவை யாவற்றையும் மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத் தமிழ் பேசும் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறை திட்டமிட்ட வகையில் ஏவப்படடது. அது இன கொடூர யுத்த வடிவினதாக வளர்க்கப்பட்டது.

இவ்வாறு நாட்டையும் மக்களது அன்றாட வாழ்வையும் கடந்த பதினேழு வருடங்களாக நாசத்திற்கும் அழிவிற்கும் உள்ளாக்கி வந்த ஒரு கேடு கெட்ட ஆட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மக்களது விருப்பு மேலோங்கியுள்ளதொரு சூழலிலேயே பாராளுமன்றத்திற்கான பத்ததாவது பொதுத் தேர்தல் இடம்பெறுகின்றது. எனவே இத் தேர்தலில் புதிய – ஜனநாயக கட்சி தனது ஐக்கிய தேசிய கட்சி விரோத – ஏகாதிபத்திய விரோத நிலைப்பாட்டிற்கிணங்க பொதுஜன முன்னணிக்கு தனது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி நிற்கின்றது அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக விரோதமாகவும் போலித்தனமாகவும் ராணுவத் தில்லுமுல்லுகளுடனும் நடத்த முற்பட்டிருக்கும் தேர்தலை கட்சி வன்மையாகக் கண்டித்து நிராகரிக்கின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஓர் முற்போக்கான ஜனநாயக மாற்று சக்தியாக தன்னை வெளிர்hடுத்தி நிற்கும் பொதுஜன சக்தியாக தன்னை வெளிப்படுத்தி நிற்கும் பொதுஜன முன்னணி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன் வைத்துள்ளவற்றை மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தனது ஆட்சியின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது கட்சியின் வற்புறுத்தலாகும். குறிப்பாக இன்று நாட்டின் யுத்த சுவாலையாக எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காணப்படும் என்றும், அதற்குரிய திடமான திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் பொதுஜன முன்னணி உறுதியளித்துள்ளது. கடந்த காலத் தவறுகளின் பட்டறிவாகத் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான வழிகளில் அரசியல் தீர்வு காணப்படுவதற்கு இன்றைய சூழலில் பொது சன முன்னணிக்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் வழங்க வேண்டும். மேற்கூறயவாறு எதிர்காலத்தில் பொதுஜன முன்னணி தனது ஆட்சியில் மக்கள் சார்பாகவும், தொழிலாள வர்க்க நலன்கள் சார்பாகவும் அதே போன்று தேசிய இனங்களு;ககு நீதியான வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது. அவ்வாறான நிலை ஆட்சியதிகாரத்தைப் பெற்ற பின் மறுக்கப்படுமானால் தொழிலாள வர்க்கமும் அனைத்து மக்களும், தேசிய இனங்களும் தமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடத் தயாராகுவதைத் தவீர வேறு மார்க்கம் இல்லை என்ற முன்னெச்சரிக்கையும் புதிய – ஜனநாயக கட்சி சுட்டிக் காட்டுகிறது.

சி. கா. செந்தில்வேல் இ. தம்பையா
nhபதுச் செயலாளர் தேசிய அமைப்பாளர்


ஓகஸ்ட் 1994
கொழும்பு

புதிய – ஜனநாயக கட்சி

மத்தியக்குழு அறிக்கை – 2

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களும் இனமத மொழி பேதமின்றி அளித்துள்ள தீர்ப்பு இலங்கையின் இனவாதம் கலந்த அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பு முனைக்கு வழி சமைத்துள்ளது. அதேவேளை அதிகாரமமதையும், ஊழல் மோசடியும், அடக்குமுறையும், பேரினவாத வெற்றியும் கொண்ட பதினேழு வருடகால ஐ.தே. கட்சியின் ஆட்சிக்கு பலத்த அடியையும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் எத்தகைய எதேச்சதிகார ஒடுக்கு முறையாலும் மக்களை நீண்ட காலத்திற்கு அடக்கியாள முடியாது என்ற மறக்க முடியாத பாடத்தையும் இத் தேர்தலின் மூலம் மக்கள் புகட்டியுள்ளார்கள். மேலும் இத் தேர்தலின் மூலம் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பானது கடந்த காலத்தில் கொடூர அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடிய அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு வெற்றியையும் நிம்மதியையும் அளித்துள்ளதுடன் புதிய நம்பிக்கைகளையும் வழங்கியுள்ளது. எனவே புதிய ஜனாதிபதிப் பதவியை அனைத்து மக்களினதும் அமோக ஆதரவுடன் பொறுப்பேற்கும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்காவும் பொதுசன ஐக்கிய முன்னணியும் ஆக்கப+ர்வமான வழிகளில் சகல இன மக்களினதும் அபிலாஷைகளைத் தக்கபடி முன்னெடுத்துச் செல்வார்கள் எனப் புதிய – ஜனநாயக கட்சி ப+ரணமாக நம்புகின்றது.

தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை மக்கள் தீர்ப்பின் மூலம் பெற்றுக் கொண்ட போதிலும் அந்த நாசகார ஜனாதிபதி முறையினை ஒழித்துக் கட்டுவதற்கு திருப்பதி சந்திரிகா குமாரணதுங்க மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதற்குப் பதிலாகப் புதிய அரசியல் திட்டம் ஒன்றிணைக் கொண்டு வந்து சகல இன மக்களினதும் உரிமைகளுக்கு போதிய உத்தரவாதம் வழங்கவும் அவர் முன் வந்திருக்கிறார். இதனை மக்களுடன் இணைந்து எமது கட்சி மன பஸ்ரீர்வமாக வரவேற்கின்றது.

இதேவேளை இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வுக்கென புலிகள் இயக்கத்துடன் தொடங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட பேச்சு வார்த்தையினை தாமதமின்றி மீனவும் தொடங்குதல் வேண்டும் அப் பேச்சு வார்த்தையினை பயன்உள்ள விதத்தில் முன்னெடுப்பதற்கு இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுத்திட்ட யோசனைகளை காலம் கடத்தாது முன் வைப்பதும் அவசியமாகும். சமாதானத்திற்காக ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பாதையில் தொடர்ந்தும் முன்செல்லுதல் வேண்டும். அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினையில் தீர்வுக்கு வழி சமைத்து சமாதானத்தையும் அயல்பு வாழ்க்கையினையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றுவிக்க முடியும். இப்பாரிய பணியினை சகல தடைகளையும் மீறி புதிய ஜனாதிபதியும் பொதுசன முன்னணியும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே எமது புதிய ஜனநாயகக் கட்சி வேண்டுகின்றது.

சி. கா. செந்தில்நாதன்
பொதுச் செயலாளர்
12 – 11 – 1994
கொழும்பு

புதிய – ஜனநாயக கட்சி
மத்தியகுழு அறிக்கை – 3

உள்நாட்டுப் பேரினவாத பிற்போக்கு சந்ததிகளுக்கும்,வெளிநாட்டு இராணுவத் தலையீட்டினைக் கொண்டு வர விரும்பும் சக்திகளுக்கும் அடிப்பணிந்து செல்லும் போக்கினை அரசும், ஜனாதிபதியும் தவிர்த்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சிதறடிக்காத வகையில் நிதானமாகச் செயல்பட வேண்டும். அதற்குரிய ஒரே வழி முறிவடைந்த நிலையில் காணப்படும் பேச்சு வார்த்தையினையும், சமாதான முயற்சிகளையும் தாமதமின்றி முன்னெடுக்க முன் வரவேண்டும். இதனை விட மாற்று வழி கிடையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

கடந்த பத்தொன்பதாம் திகதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்தும் மோதல் தவிர்ப்பு உடன்பாட்டிலிருந்தும் விலகிக் கொண்டதுடன் தாக்குதல்களும் இடம்பெற்றன. அதேவேளை அரசு பதில் நடவடிக்கைகளையும் எடுத்தது. இவை அனைத்தும் சமாதானத்தை, இயல்பு வாழ்க்கையை அரசியல் தீர்வின் ஊடாக எதிர்பார்த்த மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும் கலலையையும் ஏற்படுத்தியுள்ளத. இத்தகைய துர்ரதிஷ்ட நிலை தோன்றுவதற்கு தனியே விடுதலைப் புலிகள் மட்டுதான் காரணம் எனக் கூறிவிட முடியாது. இவற்றுக்குரிய பெரும் பகுதி பொறுப்பினை சமாதான ஆணைபெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கமும் ஜனாதிபதியுமே ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

ஏனெனில் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்று சமாதான முயற்சிகளில் ஒருவித அசமந்தப் போக்கும், இழுத்தடித்துச் செல்லும் பேச்சு வார்த்தையில் காட்டப்பட்டதை ஆர்வமும் அக்கறையும் படிப்படியாகக் குறைந்து தாழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. ஓரிரு சலுகைகளையும், அரைகுறை செயல்முறைகளையும் செய்து தமிழ் மக்களை வெறுமனே திருப்திப்படுத்த அரசாங்கம் முயன்றதே தவிர அடிப்படைப் பிரச்சினைகளுக்குரிய பரிகாரம் தே முற்படவில்லை. அந்நிய முதலீடுகளையும், அந்நிய ஆலோனைகளையும் வரவேற்று செவி மடுப்பதில் காட்டப்பட்டளவு ஆர்வமும் அக்கறையும் உள்நாட்டு இனப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மனம் திறந்த நிலையில் பேசி பேச்சு வார்த்தையில் ஒரு வளர்ச்சிப் போக்கினை கடைப்பிடிக்க அரசு தவறிவிட்டது. குறிப்பாக புலிகளுடன் முடிவுக்கு பின் அரசாங்கம் எடுத்த பதில் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. பொருளாதாரத் தடையும் அதனுடன் தொடர்புடைய கெடுபிடிகளும், மீன் பிடித்தடையுடன் கிளாலிப் பாதைக்கு விதிக்கப்பட்ட தடையும் தமிழ் மக்களை விசனத்திற்கு உள்ளாக்கி தொடர்ந்து கஷ்டமுறச் செய்துள்ளன. கிழக்கில் தொடரப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளும் ஜனநாயக – மனித உரிமை மீறல்களும் ; வடக்கில் தரை, கடல், ஆகாய தாக்குதல்களும் பழைய ஆட்சியின் ராணுவத் தீர்வு நடவடிக்கைகளையே நினைவுபடுத்துகின்றன. தலை நகரில் மீண்டும் வரைமுறையற்ற கைது நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இவையாவும் முன்னைய ஆட்சியில் உள்ளுர உறைந்து காணப்பட்ட இராணுவ நலன்களும் அவை சார்ந்த நடைமுறைகளம் மேலோங்கி வருவதையே எடுத்துக் காட்டுகின்றன. இது சமாதானத்தையும் அரசியல் தீர்வையும் மக்கள் முன் வலியுறுத்தி சமாதானத்திற்கான ஆணைபெற்ற ஒரு அரசாங்கம் இராணுவ நிர்ப்பந்தங்களுக்கும், ஆந்நிய ஆலோசனைகளுக்கும் தன்னைப் பலியாக்கிக்கொண்டு விட்டதா என்னும் பலத்த சந்தேகத்தை மக்கள் முன் கிளப்பியுள்ளது. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு இராணுவ நடவடிக்கைகளைக் கையாள்வதையும் அந்நிய இராணுவத் தலையீட்டுக்கு வழி வகுப்பதையும் உள்நோக்கமாக நிதானமான அரசியல் விவேகத்துடன் அரசு செயல்பட முன்வருதல் வேண்டும். அல்லாதுவிடின் பழைய ஆட்சியின் பாதையில் சென்று தமிழ் மக்களை அழிவுக்கு உள்ளாக்குவதுடன் முழு நாட்டையும் நாசத்திற்குள் கொண்டு செல்வதாகவே அமைந்துவிடும். ஆதலால் அரசாங்கமும் ஜனாதிபதியும் கௌரவப் பிரச்சினைக்கு மேலால் தமக்கு முன்னே உள்ள பாரிய பொறுப்பினை உணர்ந்து சகல முன் முயற்சிகளையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தையினை ஆரம்பித்து அரசியல் தீர்வு நோக்கிய பாதையில் முன்செல்ல வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது.

சி. கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
6 – 5 – 1995
கொழும்பு

புதிய ஜனநாயகக் கட்சி
மத்தியக்குழு அறிக்கை – 4

பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரணதுங்கவும் இந்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக இன்று அரசாங்கம் வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ் இராணுவ நடவடிக்கைகளால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் முடியாது ; நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும் முடியாது.

இராணுவ நடவடிக்கைகளாலன்றி சமாதான வழியில் அரசியல் தீர்வு காணபதற்காகவே மக்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியை அமோகமாக வெற்றியடைய செய்தனர். இந்த மக்கள் ஆணைக்கு எதிராக வடக்கு கிழக்கில் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது முழுநாட்டு மக்களையும் அப்பட்டமாக ஏமாற்றும் செயலாகும்.

வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கு பேரழிவே ஏற்பட்டு வருகிறது. யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி முழுநாட்டு மக்களுக்கும் அழிவே மிஞ்சும், தற்போதைய இராணுவ நடவடிக்கைகளாலும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தேடுதல் கைது போன்ற துன்புறுத்தல்ளாலும் தமிழ் மக்கள் மேன்மேலும் விரக்திக்கும் வெறுப்புக்குமே தள்ளப்படுவார்கள்.

இராணுவ நடவடிக்கைகளிலும் அதனை நியாயப்படுத்தும் பிரசாரங்களாலும் நாட்டில் இனவாதம் மேலும் வளரவும் இனவன்முறைகள் அதிகரிக்கவுமே துணைபுரிய முடியும். மலையகத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடத்தப்படும் தேடுதல்களாலும் கைதுகளாலும் அப்பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கையைக் குலைப்ப முடியுமேயன்றி அமைதியை ஏற்படுத்த முடியாது. வடக்கு கிழக்கில் மிக வேகமாக வழிகளில் இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. இதனால் ஜனாதிபதியும், அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளில் அக்கறை கொண்டுள்ள சக்திகளின் பிடிக்குள் அகப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த பிடியிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டும். யுத்தத்தினால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்பதை உணர்ந்த பின்பும் அதனை மீண்டும் நாடிச் செல்ல முற்படுவது பாரிய பின் விளைவுகளுக்கு இட்டுச் செல்லவே உதவக் கூடியதாகும்.

எனவே அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் நின்றுபோன பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் அழிவை தடுப்பதற்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டு இரு தரப்பினரும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து முன்னெடுக்க வேண்டும்.

வெளிநாட்டு அபிப்பிராயங்கள் சாதகமாக இருப்பதாகக் கூறிக்கொண்டு நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது அழிவை ஏற்படுத்தும் இராணுவ நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது. சமாதான வழியில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற நாட்டு மக்களின் அனைவரினதும் விருப்பத்தை அரசாங்கமும் ஜனாதிபதியும் தங்களது வாக்குறுதிக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்.

இ. தம்பையா
தேசிய அமைப்பாளர்
கொழும்;பு
28 – 06 – 1995

புதிய ப+மி வெளியீடுகள்
இலங்கையிலும் இந்தியாவிலும்

விற்பனையாகின்றன


1. இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் - இமயவரம்பன்

2. தேசிய ஜனநாயகமும் சுயநிர்ணய உரிமையும் - இமயவரம்பன்

3. தேசிய நிர்ணய உரிமையில் முஸ்லிம்கள் - இமயவரம்பன

4. ழுn யேவழையெட சுநடயவழைளெ in ளுசi டுயமெய – ஐஅயலயஎயசயஅடியn

5. கம்ய+னிஸ்ட் இயக்கத்தில் தேரிர் சண்முகதாசன் - வெகுஜனன் - இமயவரம்பன

6. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள் - சி. கா. செந்திவேல்.

7. புதிய – ஜனநாயகமும் போராட்ட மார்க்கமும் - சி. கா. செந்திவேல்

8. மலைய மக்களும் எதிர்காலமும் புதிய ஜனநாயகக் கட்சி, மலையக பிரதேச மாநாட்டறிக்கை

9. சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும் - வெகுஜனன் - இராவணா

10. மாக்ஸியம் சில கேள்விகள் - இமயவரம்பன்

11. தேசியம் அன்றும் இன்றும் - இமயவரம்பன்

12. மலையக மக்கள் என்போர் யார்? - இ. தம்பையா

மற்றும்

1. தோழர் மணியம் நினைவாக - நினைவுக் குழு வெளியீடு

2. சு. வே. சீனிவாசம் நினைவுச்சுவடுகள் - நினைவுக் குழு வெளியீடு

3. மனிதரும் சமூக வாழ்வும் - சி. கா. செந்திவேல்
- தாயக இல்ல வெளியீடு


இந் நூலில் மூன்று கட்டுரைகளும், பின் இணைப்புகளும் இடம் பெறுகின்றன. இக் கட்டுரைகள் செம்பதாகை, புதியபூமி ஆகியவற்றில் வெளிவந்துள்ளவையாகும்.

1983 – வன்செயல் இடம்பெறுவதற்கு சற்று முன்னதாக “இன உறவுகள் பற்றி’ என்ற ஆய்வும், வன்செயலின் பின் “இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்’’ என்ற ஆய்வும் எழுதப்பட்டவையாகும். “சமாதானமும் ஒப்பந்தமும்’’ இலங்கை - இந்திய சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

அன்றுபோல் இன்றும் மாக்ஸிய வெனினிய வாதிகள் மட்டுமே தேசிய இன மக்களதும் நலன் சார்ந்த தீர்வுகளை நாடுகின்றார்கள். அவர்களே துணிந்து அக் கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறார்கள். இந்த வழிகாட்டலின்றி இலங்கையின் எந்தத் தேசிய இனத்தினதும் விடுதலைக்கு மார்க்கம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே விடுதலைப் போராட்டத்தின் சுலோகம் “ இனநாயகம் - மனித உரிமை, தேசிய சுயநிர்ணயம்;;’’ ஆகும். சகல முற்போக்கு போராட்ட சக்திகளையும் ஐக்கியப்படுத்திந் சமாதானத்துக்காவும் சமத்துவத்துக்காகவும் சுதந்திரமாகவும் சுபீட்சத்திற்காகவும் முன் நடத்த வல்ல மந்திர வார்த்தை.