கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்  
 

செம்பியன் செல்வன்

 

ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்

செம்பியன் செல்வன்

முன்னோடிகள்
கலை. இலக்கிய விமர்சகர் குழு.

ஜூலை 1973 : முதற்பதிப்பு
(C) செம்பியன் செல்வன் - பதிவு : உரிமை
ரூ. 2-00 : விலை

ELATH THAMIZH CIRUKATHAI MANIKAL
History of Ceylon Tamil Short-Story
Writtings. With Special Reference to Seven Pioneers in this Sphere and Their Commen -dable Works.

Author : 'Chempiyan Selvan'
Publisher : Munnodikal, Trincomalee, Sri Lanka
First Edition : July, 1973
Cover Design : 'Waran'
Price : Rs. 2-00
Printers : Asirvatham Press, 32, Kandy Road, Jaffna


ஆசிரியரின்
பிற
நூல்கள்:

அமைதியின் இறகுகள் - சிறுகதைக் கோவை - ரூ-2.50
மூன்று முழு நிலவுகள் - நாடகம் - ரூ-2.00

+++++++++++++++++++++

மணிவாயில்

சுவைஞ.
1966ஆம் ஆண்டளவுகளில் ‘விவேகி' இதழ்களின், அதன் ஆசிரியரான என்னால் எழுதப்பட்ட இக் கட்டுரைத் தொடரின் ஒருபகுதி இன்று நூலுருப் பெறுகின்றது.

ஈழத்தினதும, பாரதத்தினதும் இலக்கியப் புலனை அக்காலத்தில் இத்தொடர் ஈர்த்ததுடன், வல்லிக்கண்ணன், நா. பார்த்தசாரதி, சாலை இளந்திரையன் போன்றோரைப் பாராட்டவும், ஆலோசனை கூறவும் வைத்தது. இலங்கைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் சிலரும் அவ்வப்போது தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிவித்த கருத்துக்கள், இதன் முக்கியத்துவத்தை மேலும் ஆழப்படுத்தின.

ஈழச் சிறுகதை இலக்கிய முன்னோடிகளின் கால - அரசியல், பொருளாதார, சமூக வாழ்க்கைப் பின்னணியினூடாக, தொடர்பான ஈழச் சிறுகதை வளர்ச்சி இங்கே காட்டப்பட்டு;ள்ளது. உனது சுவைக்காக - அனுபவ, ஆதார ஒன்றிப்புக்காக - அவ்வவ் எழுத்தாளரின் படைப்புக்களில் மிகச் சிறந்ததெனப் பாராட்டப்பட்ட சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.

இங்கு ஒவ்வோர் எழுத்தாளரினதும் இலக்கியப் பண்புகள் அவர்கள் படைப்புக்களை - படித்ததாலும், பிற இலக்கிய விமர்சகர்களின் கருத்துக்களை அறிந்ததாலுமே வெளியிடப்பட்டு;ள்ளன. பல பண்புகளில் பிற விமர்சகர்களின் கருத்துக்களுடன் இணக்கம் பெறும் நான் முக்கியமான சில பண்புகளில் முரண்படுவது சத்திய இலக்கிய வேட்கையினாலேயே. அதுமட்டுமல்ல, ஷகர்ண ரீதி|யாக இலக்கியப் பண்புகளின் தன்மையைக் கூறிவருவதாகவும் படுகிறது.

அன்ப,
இத்தொடரின் மேலும் பல முன்னோடி எழுத்தாளர்கள் இடம்பெற இருந்தார்கள். இன்றைய அச்சுக்கூலி, காகிதத் தட்டுப்பாடு என்பவற்றால் இந்நூலில் அது சாத்தியப்படவில்லை. அவர்கள், இத் தொடரின் இரண்டாம் பாகத்தில் முதலிடம் பெறுவார்கள். என்பதனை, உமக்கும், அவ் எழுத்தாள நண்பர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அன்பன்
செம்பியன் செல்வன்
2-7-73

முன்வாயில்

முன்னோடிகள் - கலை, இலக்கிய விமர்சகர் குழு, தனது முதலாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்நூலை வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறது.

தனி ஒருவரின் படைப்பை வெளியிடாது, ஈழத்தின்பல எழுத்தாளரின் படைப்புக்களை, ஒரு ஒழுங்கில் வகைப்படுத்தி, தொகுத்து, விமர்சன அணுகலுடன் வெளியிட்டிருப்பது, முன்னோடிகளின் முக்கிய கொள்கையை முன்னிறுத்தவேயாம்.

இந்த நூல் -
ஈழத்துச் சிறுகதை வரலாறாகவும்,
ஈழத்துச் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகவும்,
ஒரு விமர்சன நூலாகவும்,
விளங்கும் பான்மைஈ
தமிழிற்குப் புதமை விருந்தாகும்.
எம் முன்னோடிகளின் முக்கியத்தவர்களில் ஒருவரான 'செம்பியன் செல்வன்' அவர்கள் இந்த முயற்சியைச் செவ்வனே செய்து நமக்குப் பெருந்துணை புரிந்துள்ளார். அவருககு எம் முன்னோடிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நூலினை வாங்கி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குச் சிறு துணைபுரியுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நல்லை அமிழ்தன்
திருமலை யோன். செல்வராசா
2-7-73 (முன்னோடியினருக்காக)


அர்ப்பணம்
என்-
அறைத் தோழனாய்
சமகால,
சகஈ எழுத்தாளனாய்
பொதுவுடமை நேசனாய், வாழ்ந்து
உலக இலக்கியத்தில் இறவாச்சிறுகதைகள்
சில, படைத்து மறைந்த,
அமரன். செ. கதிர்காமநாதனுக்கு


தமிழில்
சிறுகதை : ஒரு வாயில்

சிறுகதை ஒரு நவீன கலை வடிவம்: தமிழிற்கோ மிக மிக நவமான கலை வடிவம்

மேனாட்டவரின் ஏகாதிபத்தியப் படை எடுப்பாலும், காலனி ஆதிக்கத்தாலும் - கீழைத் தேசங்களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்களினாலும், ஆங்கிலக் கல்வியி; விருத்தியினாலும் - கீழைத்தேய இலக்கிய வடிவங்களிலும், தன்மைகளிலும் அவற்றின் போக்குகளிலும் பலத்த புத்திருப்ப மாற்றங்கள் ஏற்பட்டதுடன், புதிய புதிய இலக்கிய வகைகளும் அறிமுகமாயின.

மேனாட்டவரின் வருகையும், மதம் பரப்பும் அவாவும் இங்கு அச்சு யந்திரங்களையும், செய்தித்தாள்களையும் மக்களிடையே துரிதகதியில் பரப்பி, மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியப் பொருட்களாக மாற்றி விட்டன. இவற்றால், கவிதையின், செய்யுட்களின் முக்கியத்துவம் குறைந்து, உரைநடையின் செல்வாக்கு மிக மிக வளரலாயிற்று.

வாய்மொழியாகவும், ஏடம் எழுத்தாணியுமாக இருந்துவந்த தமிழிலக்கியம் - அச்சின் வருகையினால் புதிய உரு; புதிய கலை; புதிய நடை என மாறத் தொடங்கியது. இத்தகைய மாற்றங்களுக்கு ஆட்சியிலிருந்த அன்னியரின் அரவணைப்பும் உறுதுணையாயிற்று.


கதை எனும் கலை
மனித குலம், உலகின் எந்த ஒரு மூலையில், எப்போ அரும்பத் தொடங்கியதோ, - மக்கள் கூட்டம் கூட்டமாக என்று வாழத் தொடங்கினரோ அன்றே கதை சொல்லும், கதை கேட்கும் பழக்கங்களும் ஆரம்பமாகிவிட்டன எனலாம்.

இப்பழக்கமே நாளடைவில் கதைகளை- பெருங்கதை, நாவல் சிறுகதை என்று தோற்றுவித்தமைக்கு முயற்சிகளாகப் பரிணமித்தன எனவும் கருதலாம். இதற்குதவியாகப் பிரித்தானியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி, - அச்சு யந்திர சாதனங்களை வளர்த்து மக்களிடையே கதை கேட்கும் பழக்கத்தை கதை படிக்கும் வடிக்கமாக மாற்றியமைத்தது. இதனால் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வரலாயிற்று.


புதுக்கலையா? மரபுக்கலையா?

ஆயினும், இங்கு கதை என்பது - உருவம், உள்ளடக்கம் என்பனபற்றியவரைவிலக்கணங்கட்கு அப்பாற்பட்ட கதை அளத்தலையே குறிக்கும். எம்மொழியிலாயினும் புதிதாகத் தோன்றுகின்ற எந்தக் கலை வடிவமும் பழைய மரபை ஒட்டியோ, தழுவியோ ஏற்படுவது வழக்கம். இதனாற்றான் உண்மை புரியாத பலரும் -

'சிறுகதை தமிழிற்குப் புதியதல்ல' என வாதிடுகின்றனர். இதற்குச் சான்றாகச் சங்கப் பாடற் காட்சிகளையும், தொல்காப்பியச் சூத்திரத்தையும் (தொல் : பொருள் : செய்யுளியல்-17) விக்கிரமாதித்தன் கதை, மதனகாமராஜன் கதை, மகாபாரதக்கதை, பாகவதக்கதை, பஞ்சதந்திரக் கதை, இதோபதேசம், வேத உபநிடதக் கதைகள், கதாசாசுரம் புத்த ஜாதகக்கதைகள், இக்குணிக் கதைகள், தென்னாலிராமன் கதைகள் என்பவற்றைச் சுட்டுவர். இவ்வாறு கூறுவதானால் -


மேனாடுகளில் கூட சிறுகதையின் காலம் பின்தள்ளிப் போடப்பட்டுவிடும். அங்கும் 'விவிலிய நூற்கதைகள், நாட்டுப்புலவர் பாடிய நாடோடிக் கதைகள், ஹோமர் இதிகாசக்கதைகள், ஈசாப் கட்டுக் கதைகள், கவி சாசர் எழுதிய கந்தர்பரிக்கதைகள், மத்திய பிரெஞ்சுக் கதைகள், லாபோர்த்தேர்ண் கதைகள் போன்ற எத்தனையோ காண்கின்றன. 1'


சிறுகதை வித்து

ஆனால், நாம் இன்றிறயும்படியான கலையுருவம் படைத்த சிறுகதை பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆரம்பமானது. தற்காலத்தில் வழக்கிலிருக்கும், சிறுகதைப் பண்புகளையும் அவற்றின் போக்கினையும் அவதானிக்கும்போது - சிறுகதை ஒரு கலைவடிவமாயினும், அது விஞ்ஞான பூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நவீனகலை என்பதும், அது தமிழிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அறிமுகமானதென்பதும் புலனாகின்றது.

இன்றைய சிறுகதையின் தோற்றம் கொகோல் (1809-1852) என்ற ரூஷிய எழுத்தாளர் உக்ரேனியரின் வாழ்க்கையைப் பரிகசித்து யதார்த்தவாதமாக எழுதிய சிறுகதைகளுடன் ஆரம்பமாவதாக இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர். இவரைத் தொடர்ந்து லியோ டால்ஸ்டாய், ஐவன்துர்க்கனேவ், அன்ரன் செகோவ், மாக்ஸிம் கோர்க்கிய் போன்றவர்கள் எழுதி வந்தனர். இச்சிறுகதை இலக்கியம் ரூ~pய நாட்டில் தோன்றியதாயினும்.

இதனை நவீனப்படுத்தி, சிறுகதைக்கலை உருவம் பெறுவதற்குரிய சாத்தியக் கூறுகளையுணர்ந்து, அதற்கு விதிகளமைத்து வளம் படுத்தும் முயற்சியிலீடுபட்டு உழைத்தவர்கள் அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர்களே.

அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர்களில் முதன்மையானவர்களாக வா~pங்டன் இர்விங் (1783-1859). நதானியலட ஹோர் தோர்ண் (1804-1864), எட்கார் அலன்போ (1809-1849) ஆகிய மூவரைக் குறிப்பிடுவர். சிறுகதையானர் இலக்கியத்தில் நிலையான இடம் பெற்றது. இவர்களினால் என்பர். இவர்கள் எழுதியது புதுரகக் கதைகளாகும். சிறப்பாக 1820ல் வா~pங்டன் இர்விங் தான் வெளியிட்ட ஷஸ்கெச் புக்| என்ற நூலில் கலையம்சம் படைத்த சிறுகதைகளை எழுதியிருந்தார். 1837ல் நதானியல் ஹோர்தோர்ணும், 1830ல் எட்கார் அலன்போவும் தத்தம் தொகுப்புகளை வெளியிட்டனர்.

அமெரிக்காவில் இங்ஙனம் உற்பத்தியான சிறுகதை உலகெங்கும் பரந்தது. இங்கிலாந்தில் ஸ்டீவன்சன், கிப்ளிங், காதரைன் மான் ஸ்பீல்ட், கோப்பார்ட், பேட்ஸ் என்போரும், பிரான்சில் எமிலி ஜோலா, மாப்பசான், அனத்Nதூல் பிரான்ஸ் ஆகியோரும் இக்கலையை மேன்மேலும் ஆழமும், இலக்கியத்தரமும் மிக்கதாக வளர்த்தனர்.

சிறுகதைப் பண்பு
சிறுகதைத் தொகுப்புகளும், சிறுகதை வரலாறுபற்றி எழுந்த நூல்களும் இன்று இலட்சக்கணக்கில் வெளிவந்துள்ளன. வந்து கொண்டுமிருக்கின்றன. ஆயினும்,

சிறுகதை என்றால் என்ன? அதன் பண்பு என்ன? அதன் வரை விலக்கணங்கள் யாவை? உருவம் என்ன? - என்பது பற்றி முடிந்த முடியாத எந்தவித கருத்துக்களும் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுடன், சரியாக வரையறுத்துக் கூறமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுகதையின் மூலபிதா என்று கருதப்படும் எட்கார் அலன்போ கூட, 'அரைமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் உள்ள காலம்வரையில் படித்து முடித்து மகிழக் கூடியதாகச் சிறுகதை இருக்கவேண்டும்' - என்று கூறி வாசகனின் வாசிப்பு ஆற்றல், மனநிலைக் காலம், இன்பநுகர்ச்சி என்பனவற்றினடியாக விளக்குகிறாறேயன்றி, சிறுகதைப் பண்பினடியாக விளக்க - முடிய - முயலவில்லை எனலாம்.

'வாழ்க்கையின் சாளரம் சிறுகதை' - என்ற புதமைப்பித்தனும் - சிறுகதையின் உருவ, உள்ளடக்கப்பண்பின் ஒரு உருகப்பாணியில் கூறமுடிந்தாலும், இவ்விளக்கம் அவரவர் மனோபாவ, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பொருள் கொள்ள வாய்;ப்பளிக்கிறதேயன்றி, முடிவாகவோ, தெளிவாகவோ விளக்கத் தவறிவிட்டது என்பது தெளிவு.

பேராசிரியர் வெல்ஸ் - 'பத்தாயிரம் சொற்களுக்கு மேற்போகாமல் சற்றேறக்குறைய அரைமணி நேரத்தில் வாசித்து முடிக்கக் கூடிய தொன்றாக இருக்கவேண்டும்' - என்பது சிறுகதை வாசிப்பின் காலஅளவையும், எழுத்தாளனின் சொல்லாற்றலையும் கொண்ட கருத்தாகும்.

வாசகனின் கவனத்தை ஒரேயொரு சம்பவத்தில் ஒரு முனைப்படுத்தவேண்டும். அதன் மூலம் பாத்திரங்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்தவேண்டும்... ... ஒரேயொரு ராகத்தை எவ்வளவு விஸ்தாரமாக ஆலாபனம் செய்தாலும், அது ஒரே ராகமாகத்தானிருக்கும் 2| - என்று தி.ஜ.ரங்கநாதன் கூறுவது உள்ளடக்கம் பற்றி விளக்கினாலும், சிறுகதையினளவு, உருவம் பற்றிய நிலையில் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்று கூறலாம்.

ஆகவே, 'சிறந்த சிறுகதையின் அமைப்பே சிறுகதையின் இலக்கணம் எனலாம் 3'


தமிழில் சிறுகதை
மேனா:களில் சிறுகதையின் தோற்றம் பற்றி ஆராய்ந்த ஒரு சில அறிஞர்கள் - சமூக அமைப்பின் மகத்தான மாறுதல்களே சிறுகதைக் கலைக்கு வித்திட்டன் எனக்கூறுவர். தொழிற்புரட்சியின் யந்திரமயமான வேகமான இயக்க வாழ்வினாரும், அதனாலேற்பட்ட நிலமானிய அமைப்பின் சிதைவினால் உருவான புதிய வாழ்க்கை முறையினாலும், தனிமனித முக்கியத்துவம் அதிகரித்து இதற்கு முன்பமைந்த குடும்பக் கூட்டு வாழ்க்கை சிதைந்ததினால், தனிமனிதனின் ஒவ்வொரு அம்சங்களும், உணர்ச்சி பேதங்களும் .இலக்கியத்தின் முக்கியத்துவமடைந்தன. இதே போன்ற நிலையே ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டதனால், சிறுகதை தோன்றியது என்பர்.

இன்னும் சிலர், தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட பரபரப்பான வாழ்க்கை முறையில் - முன்பு போல் நீண்ட கதைகளைக் கேட்கவோ, படிக்கவோ ஏற்ற மன நிலையில் மக்களில்லாததால், சுருங்கிய நேரத்தில் சுவைப்பதற்கேற்ற கதைகளையே மக்கள் விரும்பியதால் தான் சிறுகதை உற்பவித்தது எனவும் கூறுவர்.

எவ்வாறு இருந்தபோதிலும், சிறுகதைக்கலை 19ஆம் நூற்றாண்டின் சமூக அமைப்பில் எழுந்த தவிர்க்கமுடியாததொன்று என்பதனையும் எவரும் மறுத்திலர்.


முதல் மூவர்
தமிழ் நாட்டில், ஆங்கிலேயரின் ஆட்சியின் பயனாக ஏற்பட்ட ஆங்கிலக் கல்வி மக்களின் மனோபாவங்களையும், இலக்கியத் தாகங்களையும் வேறுதிசையில் திருப்பின.

சமுதாயத்தின் மேல்தளத்தில் இருந்தோரே இம் மாற்றங்களினால் பாதிக்கப்பட்டனர். வாழ்க்கை நிலையிலும், கடல் கடந்த படிப்பாலும் இததன்மைமிக்கவராக விளங்கியவர் தான் - தமிழின் சிறுகதையின் தந்தை எனப் புகழப்படும்-

வரசுநேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்

இவர் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வங்காளி, இலத்தீன், கிரேக்கம், செருமானியம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளை நன்கு சுற்றிருந்ததனால், அம்மொழிகளிலெழுந்த இலக்கியங்களின் பண்புகளையும், அவற்றின் போக்குகளையும், அலை சமூகத்தில் கொண்டிருந்த தொடர்பு, செல்வாக்கு, பாதிப்புக்களை நன்கு யம் திரிபற உணர்ந்திருந்தார்.

ஆயினும், 'இவர் சிறுகதை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியது எதிபாராததொன்று 4| ஏனெனில் ஐயருக்குத் தமிழிலக்கியத்திற்குத் தொண்டாற்றும் எண்ணத்தைவிட தேபத்தியை, விடுதலையுணர்ச்சியை வளர்ப்பதே மேலோங்கி நின்றது. இதனாற்றான் இவர் பெரும்பாலும் இத்தகைய உணர்ச்சிகளை வளர்க்கும் வரலாற்றுச் சம்பவங்களையும், புராணக்கதைகளையும் தமது சிறுகதைகளின் கருப்பொருளாகக் கொண்டார். அத்துடன் மட்டுமல்லாது ஐயரவர்களுக்குத் தாம் படைப்பது சிறுகதையாக இருந்தாலும்சரி, நீண்ட கதைகளாக இருந்தாலும்சரி தன் எண்ணத்திற்கு ஏற்றதாகக் கருப்பொருள் இருக்கவேண்டும் என்பதே முக்கய நோக்கமாக இருந்தது. என்பதனை, அவரே தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘....... தமிழ் நாட்டுச் சரித்திரமனைத்தும் கற்பனைக் கதைகளாகச் செய்ய வேண்டு மென்றிருக்கின்றேன்.....

........தீரயுகம் இங்கு பிறக்க, வழிகாட்டியாக நாம் அமைந்து விடுவோம. இந்த நோக்கத்துடனேயே ‘மங்கையர்க்கரசியின் காதல்| முதலிய கதைகளை வெளிப்படுத்தியதோடு லைலி மஜ்னூன், அனார்கலி முதலிய கதைகளும் எழுதிவருகிறேன். நாளாவட்டத்தில் பெரிய சரித்திரத்தை எழுதும் நிலைமைக்கு வரும் என நினைத்தே சிறுகதைகளை எழுதிவருகிறேன்.5|

இவர் திட்டமிட்டுத் தமிழில் சிறுகதையைக் கலையாக வளர்க்கமுற்படாவிட்டாலும் கூட, இவர்பெற்ற பிறமொழி இலக்கியப் பயிற்சிகளினால், இவரின் சிறுகதைகள் உயர்தரத்தினதாக, சிறந்த கலையுணர்வை எழுப்பியமையாற்றான் புதமைப்பித்தனும், ஷஐயரவர்களின் சிறுகதைகள் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவைகள். அவர் தமது சிரு~;டிகளில் மனிதனின் மேதையை, தெய்வீகத்துயரை, வீரத்தைக் காண்pப்பதில் களித்தார். அவரின் மனம் இலட்சியத்தைச் சிரு~;டிப்பதில் இலயித்தது 6| என்றார்.

இவரின் மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில் உள்ள கதைகளுக்கு இவர் எழுதியுள்ள சூசிகை சிறுகதைமரபை மீறியதொன்றாகும். எவ்வாறு இருப்பினும் இவரின்கதைகளே தமிழில் தோன்றிய சிறுகதையின் ஆரம்பமாக இருப்பதாலும், இவரின் உரைநடையிலே வடமொழியின் காவியத்தின் காம்பீரியம் மேலெழுந்து நின்று கலையழகைக் கொடுப்பதாலும், சிறுகதையின் தந்தை இவர் எனக் குறிப்பிடுவதில் தவறில்லை என்றே படுகிறது. இதனாற்றான்.

‘இக்கதைகளுக்கு முன்பே தமிழில் கதைகள் இல்லாமலில்லை. பரமார்த்தகுரு கதை என்றநூலிலும், வீராசாமிச் செட்டியாரின் விநோதரசமஞ்சரியிலும் சுவையற்ற பலகதைகளுண்டு. சுதாசிந்தாமணி எழுதிய ஈழத்துச் சந்திரவர்ணம்பிள்ளை. அபிநவக்கதைகள் எழுதிய செல்வக்கேசவராயமுதலியார் போன்ற அறிஞர்களும் இத்துறையில் முயன்றதுண்டு. எனினும் சிறுகதை என்னும் புதிய இலக்கிய வகைக்கான உத்திகளின் ஓர்மையுடன் தமிழில் முதன் முதல் எழுந்தவை வ.வே.சு. ஐவரின் கதைகளே7| என்பர்.

இவரைத் தொடர்ந்து அ. மாதவையா, சி. சுப்பிரமணிய பாரதியார், ஸ்ரீராமாநுஜலுநாயுடு போன்றோர் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டனர். அ. மாதவையா 1924-25-ம் ஆண்டுகளில் தாம் பதிப்பித்த ஷபஞ்சாம்ருதம்| பத்திரிகையில் பல சிறுகதைகளை எழுதி வெளியிட்டுள்யளார். ஷஎன்னைமன்னித்து, மறந்துவிடு| ஏட்டுச் சுரைக்காய், முரகன், நிலவரி ஓலம், ஆரூடம் முதலிய கதைகள் குறிப்பிடத்தக்கவைகளே. இக் கதைகள் ஷகுசிகர் குட்டிக்கதைகள்| என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவரின் கதைகளில் சமூகச் சீர்கேடுகள் உணர்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், சிறுகதை உருவமும் நன்கு அமைந்துள்ளது. இதனாற்றான் புதமைப்பித்தனும், ஷதமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இவர் கதைகளுக்கு முக்கிய இடமுண்டு| எனக் கூறியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரான்சியமொழி இலக்கியங்களைத் திறம்படக்கற்றிருந்த சுப்பிரமணிய பாரதியார், கவிதையில் சிறந்ததுபோல், சிறுகதையில் சிறக்க முடியவில்லையாயினும், 1900-1920-ம் ஆண்டுகளின் சிறுகதை முக்கியத்துவரின் இவரும் ஒருவரே பாரதியார் கதைகள் (இருபாகங்கள்), பாரதியார் மொழிபெர்த்த தாகூரின் சிறுகதைகள் என்பனவே இவரின் சிறுகதைப்பணிகளாகும். தாகூரின் சிறுகதை மொழிபெயர்ப்புகள் அக்கால மக்களின் சிறு கதைப்பயிற்சிக்கும், ஈடுபாட்டிற்கும் பெருந்துணையாயின. உரை நடையில் புதியசோபையையும், கவர்ச்சியையும் கொண்டு, பாரதியார் சிறுகதைகளைச் சமூகக் கண்ணோட்டத்தில் சொந்தமாகப் படைத்தபோதிலும், சிறுகதை உருவ அமைதி சீர்குலைந்தே காணப்படுகின்றது. இதற்கு பாரதியார் இவற்றைக் கதைகளாகக் கருதினதேயன்றி - சந்திரிகையின் கதை - நவீனகலையான சிறுகதைகளாகக் கருதாமையே காரணம் என்றுபடுகிறது.

காந்தீயக் கதைகள்
|1920-ம் ஆண்டுகளில் இந்தியக்காங்கிரசின் இயக்க சக்தியாக காந்திமாறியதும். உப்புச்சத்தியாக்கிரகம் (1930) சட்டமறுப்பு இயக்கம் (1932), ஒத்துழையாமை இயக்கம் - போன்ற அரசியலியக்க உணர்ச்சித்தாக்கங்கள் மக்கள் மனதைப்பெரிதும் பாதித்தன. எனவே, நாட்டுமக்களைப் பல நிலைகளிலும் ஒற்றுமையாக்க இந்திய ஒற்றுமை, தொழிற்சங்க ஒற்றுமை, சாதிஒழிப்பு என்பன முன்னணிக்கு வரவே, எழுத்தாளர்களின் கவனமும் இவற்றின் பால் திரும்பின8| ராஜாஜி, தி.ஜ. ரங்கநாதன், ந. பிச்சமூர்த்தி, கல்கி போன்றோர் இவற்றை அடிப்படையாகக்கொண்டு சிறுகதைகள் எழுதலாயினர். 1935-ல் ராஜாஜி நடாத்திய ஷவிமோசனம்| பத்திரிகையில் ராஜாஜியும் கல்கியும் இத்தகைய கதைகளையே நிறைய எழுதினர். ஷராஜாஜி கதைகள்| தொகுப்பிலிடம் பெற்றுள்ளகதைகள் ஷவிமோசனத்தில்| வெளிவற்தவையே. இவர்கள் பிற்காலத்தில் சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர்- (தி.ஜ.ர-வின் சந்தனக்காவடி, நொண்டிக்கிளி- தொகுப்புகள், ந. பிச்சமூர்த்தியின் மோகினி, பதினெட்டாம் பெருக்கு, முள்ளும் ரோஜாவும், காவல், கல்கியின் கேதாரியின் தாயார், ராஜாஜியின் தேவானை - சிறந்த சிறுகதைகளே) ராஜாஜி நீதிக்கதைகளையும், போதனைவிளக்கச்சிறுகதைகளையும் எழுதித் தம்மை சிறு கதைத்துறையினின்றும் மாற்றிக்கொண்டது போலவே, கல்கியும் நீண்டகதைகளை எழுதி, தம்மை ஒரு நாவலாசிரியராகப் பரிணமித்துக் கொண்டார். எவ்வாறாயினும், தமிழ்மக்களை தமிழ்க் கதைகள் படிக்க வைத்த மாபெரும் தொண்டைச் செய்தவர் கல்கி எனில் மிகையாகாது. இதனாற்றான், ‘சிறுகதையின் அகலவளர்ச்சிக்குக்| காரணமானவர் கல்வி: ஆழவளர்ச்சிக்குக் காரணமானவர்கள் மணிக்கொடிக்குழுவினர் என்கின்றனர்.

‘சிறுகதை - மணிக் கொடி|
1933-ம் ஆண்டுப் பிற்பகுதியில், கே. சீனிவாசனும், வ. ராமசாமி ஐயங்காரும் தோற்றுவித்த ஷமணிக்கொடிப் பத்திரிகை| காலத்திற்குக் காலம் மறைந்தும், புத்துருக்காட்டியும், புதிய புதிய ஆசிரியர்களைக் கொண்டும் வெளிவந்து, இந்தியத் தமிழிலக்கிய வரலாற்றில் தனக்கொரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டது. 1994-ல் டி.எஸ்.சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்ட காந்தி என்ற பத்திரிகையையும், தன்னுடன் இணைத்து மணிக்கொடி வெளிவரலாயிற்று. பின்னர் இந்த மணிக்கொடியும் 1936-ல் மறைந்து 937-ல் பி.எஸ். ராமையாவையும் வ ராவையும் ஆசிரியராகக் கொண்டு சிறுகதை மணிக்கொடியாக 1939வரை வெளிவந்தது.

மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று இன்று சில எழுத்தாளர்களைக் குறிப்பிடுவது வழக்கம். இதனால் இவர்கள் தங்கள் சிறந்த படைப்புக்களை முதன் முதலாக மணிக்கொடியில்தான் வெளியிட்டார்கள். என்றோ, அதிற்றான் எழுத ஆரம்பித்தார்கள் என்றே பொருளில்லை. இவர்களில் பலர் மணிக்கொடி வரமுன்னரே, காந்தி, கலை மகள், ஊழியன் சுதந்திரச்சங்கு, ஆனந்தவிகடன் பத்திரிகைகளில் எழுதித் தமக்கொரு இடத்தை சிறுகதை இலக்கியத்தில் பிடித்துக் கொண்டவர்கள். இவர்களின் தனித்துவம் சுடர்விட்டுப் பிரகாசிக்கவும் இலக்கிய-உரு, உள்ளடக்கப் பரிசீலனை செய்யவும், மணிக்கொடி பெரிதும் பயன்பட்டதாலும். இவ் எழுத்தாளர்கள் ஒன்று கூடித்தமக்குள்ளே விவாதித்தும், குழு முறையில் செயல்பட்டும் வந்தமையினால், பிற்காலத்தில் இவர்களை மணிக்கொடி எழுத்தாளர் என வழங்கினர்.

நவீன இலக்கியச் சிறுகதையின் பரிசோதனைக்களமாக மணிக்கொடி விளங்கியது. புமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜ கோபாலன், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), பி.எஸ். ராமையப, மௌனி (எஸ். மணி). கி.ரா.ந. சிதம்பர சுப்பிரமணியம், ஆர். ~ண்முக சுந்தரம், எம்.வி.வெங்கட்ராம், சி.அ. செல்லப்பா,பி.எம். கணணன், லா.ச. ராமாமிர்தம், க.நா. சுப்பிரமணியம் என்போரை மணிக்கொடி எழுத்தாளர் எனலாம்.

இவர் எல்லாரும் ஒரே காலத்திலோ, ஒரே தரத்திலோ, ஒரே எண்ணத்திலோ எழுதியவர்களல்லர். ஒவ்வொருவரும் தத்தம் வழியே இலக்கியத்திற்கென பார்வையையும், தனித்துவத்தையும் கொண்டவர்கள். தனித்துவம் மிக்கவர்களின் சேர்க்கையாக மணிக்கொடி பத்திரிகை விளங்கியது. இவர்கள் எல்லாரும் சிறுகதைத்துறையி; ஆழ்ந்து ஈடுபட ஷஅப்போதைய பத்திரிகைகளில் பொறுப்பு ஏற்றிருந்தவர்கள் பத்திரிகைக்கு வேண்டிய அம்சங்களில் ஒன்றாக சிறுகதையைக் கருத முன்வந்ததும். மேனாடுகளில் சுமார் முக்கால் நூற்றாண்டு காலமாக வளம்பெற்றுவந்திருந்த சிறுகதை இலக்கியத்துடன் இவர்களுக்கு இருந்த பரிச்சயமும் இதற்குக் காரணம். இதோடு நம் நாட்டில் தாகூர், பிரேம் சந்த், சிறுகதைகள் தமிழுக்கு அறிமுகம் ஆனதும் சேரும். இவையோடு ஐயரின் சிறுகதை முயற்சிகள்தந்த உந்துதலும் காரணம். 9|

தமிழ்ச் சிறுகதைத்துறையில் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் பலவிதமான சோதனைகளை இவ் எழுத்தாளர்கள் நடாத்தி வந்தனர். இவர்களில் சமூகப் பார்வையில் புதமைப்பித்தனும் பால் உணர்ச்சி அடிப்படையில் கு.ப. ராஜகோபாலனும், மனக்குகை ஓவிய வார்ப்பில் மௌனியும் குறிப்பிடத்தக்கவர்கள்.

‘பாரதி வனத்தின் மூத்த பிள்ளையான| புதமைப்பித்தன் வலுவும் வேகமும் கொண்ட, இழுத்து மடக்கும் நடையில், புதப் புதச் சொல்லாட்சிகளைக் கொண்டு சமுதாயத்தின் பச்சை உண்மைகளை, ஆழமும், பரப்பும் கொண்ட சிறுகதைகளைப் படைத்தார்.

தமிழ்ச் சிறுகதைத்துறைகளில் அதிகம் வெற்றியீட்டினவரெனக் கருதப்படும் கு.ப.ரா. மென்மையான, நளினமா உத்திகள் மூலம் ஆண், பெண் இருபாலருடைய பருவ மன அதிர்வுகளை சிறுகதைகள் மூலம் வெளியிட்டார்.

‘சிறுகதையின் திருமூலர்| - என புதமைப் பித்தனாலேயே பாராட்டப்பட்ட மௌனி ‘கனமான விடயங்களை ஏற்க மறுக்கின்றன மெலிந்த சொற்களில் ‘மனப்போக்குகளின் நடப்பியல்புகளை பரிபூரணமாக சித்தரித்துள்ளார். நிகழ்ச்சிகளைச் சிக்களப் படுத்தி மனித நிலைமைகளை சிக்கனச் சொற்களிலே அகண்டாரமாகக் காட்டிவிடும் ஆற்றல் மிக்கவர். தமிழில் ஆழமான கதையம்சத்தின் துணையின்றி சாதாரண கதைகளில் ஒரு காவிய உணர்வைத்தருகிறார். சொற்களுக்கு முக்கியம் கொடுப்பவர். இவர் 10| இவரின் கதைகளைத் தமிழிலேயே படித்து, ஆங்கிலத்தி;ல் இவரின் அத்துவானவெளி என்ற கதையை பிரதக்~pணம்ஷ என்ற தலைப்பில் மொழிபெயர்ந்து வெளியிட்ட அமெரிக்க அறிஞர் அல்பர்ட் பி. பிராங்கிளின் ‘மௌனிஒரு மேதை11| என நிர்ணயிக்கிறார். அத்துடன் கேரளப் பல்கலைக்கழகத்தில் இலக்கியக் கலாநிதிப் பட்டத்திற்காக, மே. காந்தி என்ற மாணவர் மௌனிகதைகளை (மௌனி மொத்தம் இன்றுவரை இருபத்தி நான்கு கதைகளே எழுதியுள்ளார்) ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதும் மௌனியின் சிறப்பைப் புலப்படுத்தும்.12

ந. பிச்சமூர்த்தி ஆழ்ந்த அனுபவங்களை, தரிசனம் நிறைந்த தத்துவச் சரடுகளில், உவகை மிகுந்த சொற்றொடர்கள் நிறைந்த நடைகளில் சிறுகதைகளை வெளியிட்டார்.

பி.எஸ். ராமையா காந்திய அடிப்படையில், சமுதாயச் சீர்கேடுகளைச் சித்தரிக்கும் கதைகளையே பெரும்பாரும் இக்காலத்தில், எழுதினார். இவர்களுடன் ஈழத்தில் சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோரும் எழுதிவந்தனர். கலைமகள், ஈழக்கேசரி என்பன இவர்களுக்கு உதவின.

இவர்களுக்கும். இவர்களைச் சார்ந்த மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும் தாகூர், பிரேம் சந்த், அன்ரன் செகாவ், டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஜொய்ஸ், எமிலிஜோலா, மாப்பசான், டி.ஹெச்.லோறன்ஸ், எட்கார் அலன்போ, ஏர்னஸ்ட் ஹெமிங்வே, நட்காம்சன், செல்மா லாகர்லா - போன்ற மேனாட்டு இலக்கியவாணர்கள் முன்மாதிரியக விளங்கினராகத் தெரிகிறது.

எவ்வாறு இருந்தபோதிலும், மணிக்கொடி கால எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் தனித்துவத்தையும், பூரணத்துவத்தையும் தாபிக்கமுயன்று ஓரளவு வெற்றியும் பெற்றனர் - எனலாம்.

பல்முனைத் தாக்கங்கள்
இதே வேளைகளில், இத்தமிழ் எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாக பாரதத்தின் பல பாகங்களிலும், பல்லேறு மொழிகளிலும் ஏற்பட்ட இலக்கிய மாற்றங்கள், எழுச்சிகள், மறுமலர்ச்சிகள், புத்வேகம் என்பன பெருந்துணையாக நின்றன.

1936-ம் ஆண்டளவில் பிரேம்சந்த் தலைமையில் ஷஅகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்| தோன்றியது. இச்சங்கத்தின் முல்க்ராஜ் ஆனந்த, லிஜ்ஜத்ஸாஹீர், ய~;பால், கே.ஏ. அப்பாஸ் ஆகிய எழுத்தாளர்களின் புதமை இலக்கியங்கள் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியலடிப்படையில் எழுந்து தமிழ் எழுத்தாளர்களிடையே பெரும் விழிப்புணர்ச்சியையும், துடிப்பையும் எழுப்பின.

இக்கால கட்டத் தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோர். கல்லூரிகளில் படித்தவர்கள்; தேசிய உணர்ச்சி மிஞ்சியவர்கள்; பழமையின் எதிரிகள்; வாழ்வின் உண்மைகளை நேருக்கு நேர் நின்று தரிசித்து, அவற்றை விமர்சன அடி;படையில் சர்வதெச இலக்கியத்தின் தரத்திற்குக் கலையழகுடன் தமிழில் சிறுகதை எழுதவேண்டுமெனத் துடித்தவர்கள் என்பதனை அவர்களின் படைப்புக்கள் இன்றும் எடுத்துக்காட்டுகின்றன.

1934-35-ல் மஞ்சேரி ஈசுவரன் ளுர்ழுசுவு ளுவுழுசுலு என்ற மாத சஞ்சினையை நடாத்தினார். இதில் லா.ச.ரா. போனறோர் ஈசுவரனுடன் சேர்ந்து எழுதிவந்தனர். சிறுகதை வரலாற்றில் இதற்குத் தனியிடமுண்டு.

மணிக்கொடி மறைவில்
மணிக்கொடி மறைவின்பின் தோன்றிய கிராம ஊழியன், கலாமோகினி, பாரத்தேவி, சூறாவளி போன்ற பத்திரிகைகள், மணிக்கொடிப் பாதையில் முன்னேறின. இப்பத்திரிகைகளில் மணிக்கொடி எழுத்தாளர் பலரும், வல்லிக் கண்ணன், தி, ஜானகிராமன் போன்றாரும் எழுதிவந்தனர். இவர்களுடன் ஈழத்து எழுத்தாள முதல்வர்களும் எழுதிவந்தனர். இக்காலத்திற்கு முன்னரே தோன்றி இயங்கிவந்த ஈழகேசரியை விட, மறுமலர்ச்சி என்ற பத்திரிகை 1945-ல் தோன்றி ஈழத்து எழுத்தாளர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்து வந்தது. இவ்வேட்டினால் வரதர், அ.செ. முரகானந்தம், அ. ந. கந்தசாமி, சு. இராஜநாயகன், சொக்கன், வ.அ.இராசரத்தினம், சு.வே.கனக, செந்திநாதன் போன்றோர் முன்னணிக்கு வந்தனர்.

சுதந்திர இலக்கியங்கள்
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பாரத நாடு சுதந்திரம் பெற்றபின், இலக்கியப் போக்குக்கள் மாற்றமடையத் தொடங்கின. ஆட்சிப் பொறுப்பு அன்னியரின் கையிலிருந்து, சுதெசிகளின் கையில்வந்ததும், நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக உணர்வுகள் மாற்றம் பெறலாயின. ஒற்றுமையுணர்ச்சி கன்றி, பிரதேச உணர்ச்சி வலுவடையவே, தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சி ஓங்கி தனித்தமிழ் இயக்கம், திராவிட நாடுதோரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன தோன்றி - சிறுகதைபிரச்சார இலக்கியமாகியது.

இத்தகைய கதைகளை தி.மு. கழகத்தினரே எழுதினர். பெரும் போராட்டத்தின்பின், மக்களிடையே ஏற்பட்ட ஓய்வுக்குகந்த கதைகளை ஆனந்தவிகடன், கல்கி போனற பத்திரிகைகள் வெளியிடலாயின. இதேவேளையில் சமூகச்சீர்திருத்த எண்ணங்கொண்ட பொதுவுடமைக்கட்சியிலிருந்த பழைய எழுத்தாளர்களும், இவ்வணியில் புதிதாகச் சேர்ந்து கொண்ட எழுத்தாளர்களும் முற்போக்குக் கதைகளை எழுதலாயினர். 1948-ல் எம்.வி. வெங்கட் ராமனை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த ஷதேன்| தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ஆகியோரைச் சிறப்பாக அறிமுகம் செய்தது.

1950-ன் பின் ஏற்பட்ட, மனிதன், சாந்தி, சரஸ்வதி, தாமரை போன்ற பொதுவுடமைச் சார்புள்ள பத்திரிகை மூலம், - விந்தன், கு. அழசிரிசாமி, சுந்தர. ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற நல்ல பல சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றினர். இதே போன்றே இலங்கையிலும், முற்போக்கு எண்ணம் கொண்ட பாட்டாளி, பாரதி முதலிய தீவிர ஏடுகள் தோன்றி கே. ராமநாதன், கே. கணே~;, எம்.பி. பாரதி போன்ற எழுத்தாளர்களை நல்கின.

1948 - 2 - 4ல் இலங்கை சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட இலவசக் கல்வித்திட்டத்தினாலும், 1956-ல் ஏற்பட்ட சமூகப் புரட்சியினாலும், இலங்கைத் தமிழரிடையே தேசிய உணர்ச்சி பிறந்ததுடன், வர்க்க உணர்வுகள் தீர்க்கமடைந்தன. தேசிய விழிப்பும், வர்க்கப் போராட்டங்களும் சுதந்திரத்தின் பின் மக்களிடையே பெரியதொரு சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தவே, இலக்கியமும் அவ்வழியே திசைதிரும்பிற்று. நாட்டின் பிரச்சினைகளை இலக்கியங்கள் முன்னிறுத்த வேண்டும் என்ற துடிப்பில் தேசிய இலக்கியக் கொள்கை தீவிரமடைந்தது. இப்பின்னணியை நன்குணர்ந்தவரான, க. கைலாசபதி 1957-ல் தினகரன் ஆசிரியராக விளங்கியபோது இவ் எழுச்சியைத் தூண்டிவளர்த்தார். புதியதொரு எழுத்தாளபரம்பரையையும் தோற்றுவித்தார். இக்காலகட்டத்தில் எஸ். பொன்னுத்துரை, கே. டானியல், செ. கணேசலிங்கன், என்,கே. ரகுநாதன், காவலூர் ராசதுரை, டொமினிக் ஜீவா போன்றவர்கள் தரமான சிறுகதைகளைப் படைத்தனர். இதே போன்று, இக்காலகட்டத்தில் தென்னி;ந்தியாவில் எழுதத் தொடங்கிய ஆர். சூடாமணி கி. ராஜநாராயணன், கிரு~;ணன் நம்பி போன்றோரும் தரமான சிறுகதைகளைப் படைக்கத் தொடங்கி, இன்றும் நல்ல சிறுகதைகளை எழுதி வருகின்றனர்.

பல்கலைக் கழக எழுத்தாளர்
ஷ190 தொடக்கம் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி தாய் மொழிமூலம் போதிக்கப்படலாயிற்று. சிறப்பாகக்கலைத்துறைப் பாடங்கள் தமிழிலும், சிங்களத்திலும் கற்பிக்கப்படவே, பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பிறமொழிச் சிறுகதைகளையும், அவற்றின் ஆய்வுகளையும் படித்ததோடமையாது தாமும் எழுத ஆரம்பித்தனர். மலையாளம், ரு~pய, வங்காள நவீன எழுத்துக்களுடன், தமிழகச் சிற்சில நவீனத்துவப் போக்குகளும் இவர்களுக்கு ஊக்கியாக அமைந்தன. இவர்களில் செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், துருவன், குந்தலை, மு. பொன்னம்பலம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் 13|

இப் பல்கலைக்கழக எழுத்தாளர்களுக்கு - இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனையின் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்படும் ஆண்டுச் சஞ்சிகையான இளங்கதிர், மாணவர் சங்க ஆண்டுச் சஞ்சிகையாக மும்மொழிகளில் வெளியாகும். ளுவுருனுநுNவுளு ஊழுருNஊஐடு ஆயுபுயுணுஐNநு - என்பன பெருமளவிற்குதவின.


பல்கலை வெளியீடு
இவை மட்டுமன்றி, இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதன் முதலாக பல்கலைக்கழக எழுத்தாளர்களிள் சிறுகதைகளை வெளியிடும் தனியார்தாபனம் ஒன்றை ஷபல்கலைவெளியீடு| என்ற பெயரில், அப்போது பட்டதாரி மாணவர்களாக பயின்றுகொண்டிருந்த செங்கைஆழியான், க.நவசோதி, செம்பியன்செல்வன் ஆகியோர் அமைத்து, தங்கள் பயிற்சிக் காலங்களில் ஆண்டொன்றிற்கு ஒரு சிறுகதைக் கோவையாக மூன்று தொகுதிகளை வெளியிட்டமை ஈழத்து இலக்கிய வரலாற்று முக்கியத்தும் பெற்ற சம்பவங்களே. ஷசெங்கை ஆழியான் - நவசோதி, தொகுத்த ஷகதைப்பூங்கா| ஷசெம்பியன்செல்வன்| தொகுத்த ஷவிண்ணும் மண்ணும்| கலா பரமேஸ்வரன் தொகுத்த ஷகாலத்தின் குரல்கள்| இமையவன் தொகுத்த ஷயுகம்| என்பன பல்கலை வெளியீடுகளே. ஈழத்துப் பெரிய பதிப்பகங்களோ - தாபனங்களோ - துணிந்து முதலிட்டுச் செய்ய முடியாத ஒரு தொண்டை பல்கலைக்கழக மாணவர் ஒரு சிலர் மட்டுமே - (பல்கலை வெளியீடு தாபகர்களும், பின் இரு நூல்களின் அதன் தொகுப்பாசிரியர்கள் இருவரும்) மூலதனமிட்டுச் செய்தார்கள் என்றால் அதற்கு அவர்களின் இலக்கிய ஆhவமும், நிகழ்கால வாழ்வின் சத்திய தரிசனமுமே காரணங்கள் எனலாம். இவ்வாறு இவர்கள் எழுந்தமையால் தான், இப் பல்கலை, வெளியீட்டில் எழுதியவர்களில் பலர் இன்று ஈழத்தின் புதிய யுகத்தின் பூபாளராக எழுத்தாளர்களாக விளங்க முடிகின்றது என்பதும் விமர்சன உண்மையாகும்.

மூன்று நிகழ்ச்சிகள்
1960ஆம் ஆண்டைத் தொடர்ந்து, தென்னகத்திலிருந்து ஈழம் வந்த முக்கிய எழுத்தாளர்கள தெரிவித்த கருத்துக்கள், ஈழத்து எழுத்தாளரின் தன்மான உணர்ச்சியையும், இலக்கிய ஆற்றலையும் கிளர்ந்தெரியச் செய்தன. 1960-ல் இலங்கைவந்த - ஷகங்கை| (தற்போது சத்யகங்கை) ஆசிரியர் பகீரதன். ஷஈழம் - இலக்கிய வளர்ச்சியில் தமிழகத்தினைவிட இருபத்தைந்து வருடங்கள் பின் தங்கியுள்ளது| - என்ற அறியாமை நிரம்பிய கருத்தை வெளியிட்டதும், அதன்பின் 1961-ல் ஈழம் வந்த இன்றைய தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி ஷதரத்தின் அடிப்படையில் தமிழகப் பத்திரிகைகளில் ஈழத்து எழுத்தாளர் இடம் கேட்பது நல்லது| - என்று தெரிவித்த ஆணவமான ஆலொசனையும், 1966 அளவில் வந்துபோன கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் ஷஈழத்து எழுத்துகளுக்கு அடிக்குறிப்புத் தேவை| - என்ற பாமரத்தனமாக கருத்தும் ஈழத்திலே பெரிய இலக்கியச் சூறாவளியைக் கிளப்பிவிட்டது.

புத்துணர்ச்சியையும், எழுச்சியையும் இதனால் பெற்ற ஈழத்து எழுத்தாளர் - உண்மை இலக்கியம் எது? எங்கேயிருக்கிறது அது? - என்பதனை தென்னகத்தாருக்குப் புலப்படுத்தும் வண்ணம் எழுதத் தொடங்கியதும் இக்காலகட்டத்தில் தான். இந்தப் பரபரப்பான சூழலில் - தனது இலக்கியப் பத்திரிகையான ஷசரஸ்வதி|க்கு சந்தா திரட்டவும், ஆதரவு தேடவும் ஈழத்திற்கு வந்திருந்த வ. விஜய பாஸ்கரன் ஈழத்தின் இலக்கியப் போக்கை நன்குணர்ந்து, ஷஈழத்து இலக்கியமே சரியான தடம்பிடித்துச் செல்கிறது| என்று கூறியதோடமையாது, தனது சரஸ்வதியி; ஈழத்துப் படைப்புகளுக்கு முக்கிய இடம் கொடுத்தும், ஈழத்து எழுத்தாளர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்திலிட்டும் கௌரவித்தார்.

ஈழ - மலையகம்
தன்க்கொருவாழ்க்கைமுறை, மொழிவழக்கு, பொருளாதார அமைப்பு எனக்கொண்டு, ஒரு நூற்றாண்டுக்குமேலாக மனிதத்துவமில்லா நிலையில் வஞ்சிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழ்ந்த மலையகத்திலும், பற்பல எழுத்தாளர்கள், ஒடுக்கப்பட்டும் வாழ்ந்த மலையகத்திலும், பற்பல எழுத்தாளர்கள் அவ்வப்போது இனம்; காட்டி வந்தாலும், ஷசிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை ஆகிய இலக்கியத் துறைகளில் மலையக எழுத்தாளர்கள் 1950-ம் ஆண்டிற்குப் பின்னர் காலடி எடுத்துவைத்தனர். என்றாலும் மலையகம் என்ற பிராந்திய பிரக்ஞையோடும், ஒருவகை உத்வேகத்துடனும் எழுதத் தொடங்கியது 1960-ம் ஆண்டுக்குப் பின்னரேயாகும்.|

என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தையோசப், சாரல் நாடன், திருச்செந்தூரன், நூரளை சண்முகநாதன், மாத்தளை சோமு, மல்லிகை சி. குமார், பூரணி என்போர் தரமான மலையகச் சிறுகதைகளைப் படைத்துள்ளனர். மலையகத்தில் அவ்வப்போது தோன்றிய சிற்றேடுகளும் இவர்களின் ஆக்க முயற்சிக்கு பெரும் துணைபுரிந்தன. மலைமுரசு, சாரல், செய்தி - பத்திரிகைகளின் தொண்டு குறிப்பிடத்தக்கது. வீரகேசரித்தாபனம் வெளியிட்ட ஷகதைக்கனிகள்| சிறுகதைத் தொகுப்பு மலைநாட்டைச் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தியது.

முந்தாய்ப்பு
தற்காலத்தில், தமிழகத்திலும் ஈழத்திலும் புதிய எண்ணங்களும், புதிய பார்வைகளும் கொண்ட புதிய புதிய எழுத்தாளர்கள் தோன்றிவருகிறார்கள். பலபுதியவர்கள் பழையவர்களைக்காட்டிலும் ஆழமானசிந்தனைகளிலும், அவற்றின் கலாபூர்வமான வெளியீடுகளிலும் சிறந்துவிளஙகுகின்றனர். புதிய தலைமுறையினர் மாக்ஸிய லெகிகிசதத்துவார்த்த அடிப்படைகளில் தங்கள் படைப்புக்களை வெளிக்கொணரமுனைகின்றனர்.

தமிழகத்தில் - நீலபத்மனாதன், அசோகமித்திரன், ஆ. மாதவன், பூமணி, சர்ணன், கே. ராமசாமி, ஆதவன், ந. முத்துச்சாமி, சா. கந்தசாமி, அம்பை, ஆர். ராசேந்திரச்சோழன், ராமகிரு~;ணன், நா. சேதுராமன் போன்றோரும் ஈழத்தில் எஸ். பொன்னுத்துரை, டானியல், செ. யோகநாதனட, டொமினிக் ஜீவா, தெணியான், குப்பிளான், ஐ. சண்முகம், சாந்தன், நல்லை, க. பேரன், செங்கை ஆழியான், கே.வி. நடராஜன், மு. பொன்னம்பலம் செம்பியன் செல்வன் போன்றோரும் - தரமான சிறுகதைகளைப்படைப்பதில் பெரிதும் பாடுபட்டுவருகின்றனர்.


1.பி கோதண்டராமன் - சிறுகதை இலக்கியம்
2.புதியசிறுகதை - தி.ஐ.ர - வானொலி - 7-4-59
3.டாக்டர் மு.வ.- இலக்கிய மரபு
4.சாலை, இளந்திரையன் - முன்னோடிகள்
5.வெ. சாமிநாதசர்மா - நான்கண்டநால்வர்-ப. 148
6.புதுமைப்பித்தன் கட்டுரைகள் - ப. 39
7.8, கா. சிவத்தம்பி - தமிழில் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்
8.சி.க. செல்லப்பா - தமிழ்ச் சிறுகதை - எழுத்து- ஜனவரி - 1969
9.தருமு சிவராமு. - மௌனிகதைகள் - முன்னுரை
10.யுடுனுநுசுவு. டீ. குசுயுNமுடுஐN - ருNஐஏநுசுளுஐவுலு ழுகு சுழுழுர்நுளுவுநுசு வெளியீடும் யுனுயுஆ - பத்திரிகையில் மௌனியின் ஷபிரதக்~pணம்| கதை அறிமுகத்தில்
11.தேன்மழை - 1972- மௌனிபேட்டி
12.ஈழத்தில் தமிழ்ச்சிறுகதை வளர்ச்சி.... அம்பலத்தான். 1972


1.வைத்தியலிங்கம்

இலக்கிய அலை

ஷஷ1930ஆம் வருடத்திற்குப் பின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் இலக்கிய அலையாக ஒருபுது வேகம் இலக்கியத்தில் ஏற்பட்டது. அதேபோன்று ஈழத்திலும் டொனமூர் அரசியற்றிட்டத்தையொட்டி ஒரு இலக்கிய அலை தோன்றாவிடினும், படித்த மத்தியதர வர்க்கத்தினரிடையே ஒரு இலக்கிய விழிப்பு ஏற்பட்டது. அரசியற்றிட்ட அமைப்பிலே மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசியல் நோக்கத்திற்காக, பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் ஆரம்பிக்கப்பட்டன.| ஷ2 ஆயினும் குடியேற்ற நாட்டாட்சி இலங்கையின் அரசியல், பொருளியல் வாழ்க்கையை நன்கு பிடித்திருந்தமையால் ஆங்கில மொழி மூலம் மேனாட்டு நாகரிகம் பரவிக் கொண்டே வந்தது. யாழ்ப்பாணத்தில் இம்மாற்றம் மற்றத் தமிழ்ப் பகுதியாம் மட்டக்களப்பிலும் பார்க்க வேகமாகப் பரவிற்று. இந்த ஆங்கிலக் கல்வியுடன் புனைகதையும் ஈழத்தில் பரவலாயிற்று.

ஷ3 1930ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதை ஈழத்தில் உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படலாயிற்று. இந்த உருவப் பிரக்ஞையானது ஆங்கிலக் கல்வியினாலும், தென்னிந்திய இலக்கியச் செல்வாக்குகளினாலும் அமையலாயின.| இதற்குச் சாதகமாக, இந்தியத் தமிழிலக்கியத்தில் 1930இல் ஏற்பட்ட மணிக்கொடி எழுத்தாளர்கள் விளங்கினர்.

ஆகவே, கடலால் பிரிக்கப்பட்டுள்ள போதிலும் தேசிய உணர்விலும், இலக்கிய அபிமானத்திலும் ஈழமும் இந்தியாவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன. இதனால் ஒரு நாட்டில் எழும் எண்ண எழுச்சிகளும், அரசியற் பிரச்சினைகளும் மற்ற நாட்டைப் பெரிதும் பாதிக்கலாயின. அத்தகைய பாதிப்பு இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இலங்கையில் ஆழமாக ஏற்படலாயிற்று.

1930இல் தமிழிலக்கியத்தில் பெரும் விளைவை ஏற்படுத்திய மணிக்கொடிப் பிரிவினரால் சிறுகதைத் துறை இலக்கிய அந்தஸ்துப் பெற்றது. மணிக்கொடிப் பிரிவினர் மேல்நாட்டு மொழிகளில் உன்னத நிலைபெற்று விளங்கிய சிறுகதைத் துறையை தமிழில் கொணர்ந்து இலக்கிய அந்தஸ்து ஏற்ற எடுத்துக் கொண்ட முயற்சியும், அதன் பலாபலன்களும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களைப் பெரிதும் கவரலாயின.

எனவே, ஈழத்து எழுத்தாளர்களும் சிறுகதையின் பண்பையும், பயனையும் பற்றிப் பெரிதும் அறிய முற்பட்டதுடன், தாமும் இத்துறையிலாழ்ந்து ஈடுபடலாயினர். இதற்குச் சாதகமாக அரசியல் நோக்குக்காக தாபிக்கப்பட்ட ஈழத்துப் பத்திரிகைகள் விளங்கினாலும், தென்னிந்தியப் பத்திரிகைகளே இவர்களுக்கு அதிகம் கைகொடுத்தது. இதனால் - ஈழத்திலும், இந்தியாவிலும் ஏற்பட்ட இலக்கிய அலை ஒத்த காலத்தில் தோன்றியது எனலாம். இத்தகைய ஒத்த தன்மை காணப்பட, சந்தர்ப்பம் மட்டுமல்லாமல் இந்நாட்டு எழுத்தாளர்களின் இலக்கிய மனவுணர்வுகளில் காணப்பட்ட நெருங்கிய ஒற்றுமையே முக்கியக் காரணம் எனலாம்.


பிதாமகர்
ஈழத்தின் நவீன இலக்கியப் பிதாமகர்களில் ஒருவராக இன்று கணிக்கப்படும்: திரு. சி. வைத்தியலிங்கம் சிறுகதைத் துறையில் காலடி பதித்தது இக்காலத்தில் தான் எனலாம். இவர் ஆங்கில மொழிப் பயிற்சிமிக்கவராதலால், சிறுகதை பற்றியும், அதன் தன்மைபற்றியும் நன்குதெரிந்திருந்ததுடன், தன்னளவிலும், சிறுகதைபற்றிச் சிலகொள்கைகளைக் கொண்டிருந்தார் என்பது அவர் கூற்றாலேயே புலனாகின்றது.

ஷசிறுகதை மேல்நாட்டு இலக்கியத் தினுசுகளில் ஒன்று கதைப்போக்கும் சுருக்கமாக இருக்கும். பாத்திரங்களும் இரண்டு அல்லது மூன்று, ஓர் ஓவியன் சித்திரக் கோல் கொண்டு எழுதும் ஒரு வளைவினால் அல்லது கோட்டால் படத்தில் கொண்டு வரும் பாவமும் உருவமும்........ அவ்வளவு சக்தி சிறுகதை ஆசிரியனுக்கு இருக்கவேண்டும்.|

இதிலிருந்து சிறுகதைபற்றி இவரின் அபிப்பிராயம் தௌ;ளத் தெளிவாகப் புலனாகின்றது. ஆயினும் இவர் சிறுகதையில் மட்டுமல்லாமல் பிற இலக்கிய வடிவங்களிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தார். அத்தகைய பிற துறை, பிற மொழி விருப்புகளினடியிலேயே இவரது எழுத்துக்கள் பிறந்ததாகையால், இவரது இலக்கிய உணர்வு, இரசனை பற்றித் தெரிந்திருந்தால் தான் அவரை நன்கு அறியமுடியும்.


இலக்கிய அரும்பு
இவரின் இலக்கியத் தாகம் இளவயதிலேயே தோன்றிவிட்டது எனலாம். இத்தகைய இலக்கிய ஊட்டல் அவர் சிறுவனாக இருக்கும் போதே - ஏழாலை என்னும் சின்னஞ் சிறு கிராமத்திலே நடமாடித்திரிந்துவிட்டது. இதனைப் பற்றி அவரே ஓரிடத்தில பின்வருமாறு கூறியுள்ளார்.

ஷ4 யாழ்ப்பாணப் பகுதிகளில் ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலே மழை, அடைமழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கும். கிராமவாசிகளுக்கு பொழுது போகாமல் இரவு நேரங்கள் நீண்டு கொண்டே போகும் இப்படியான இரவு நேரங்களில் எங்கள் வீட்டு விறாந்தையிலே சில கமக்காரர் கூடிவிடுவார்கள். என் தந்தை ஒரு சாய்மான நாற்காலியில் இருந்துகொண்டு ஏதோ ஒரு நாவலை உரக்க வாசிப்பார். நானும் மற்றவர்களுடன் சேர்ந்து கேட்டுக்கொண்N;ட வருவேன்.|

இக்கூற்று ஒரு காலகட்டத்தின் இலக்கிய நிலையையும் காட்டி நிற்பதுடன், சி. வைத்தியலிங்கத்தின் இலக்கிய உணர்வின் முளை எப்போது அரும்பியது என்பதனை நன்கு காட்டுகின்றது.

பாரதி பரம்பரை
இவரின் இளமைப் பருவத்து இலக்கியதாகத்திற்கு கிடைத்த இலக்கிய உணவு இவ்வாறாகவே அமைய, இவர்க்கு 1930ஆம் ஆண்டளவில் கொழும்பு நகரின் அழைப்புக் கிட்டியது. இதன் பின்தான் இவரின் இலக்கியச் சிந்தனைகளும், செயல்களும் ஒரு திடமான பாதையில் செல்லத் தொடங்கின எனலாம். கொழும்பில் இருக்கும் விவேகானந்த சபையின் வாசிகசாலை இவருக்குத் தென்னிந்திய எழுத்தாளர்களை சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைத்தது. அங்கு கிடைக்கப்பெற்ற திரிவேணி, கலைமகள், கலாநிலையம், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவிகடன், மணிக்கொடி பத்திரிகைகள் இவரிடையே இலக்கிய விழிப்பை ஏற்படுத்தின.

இந்தியாவில் தம்மை பாரதி பரம்பரை எனக்கொண்ட கு.ப.ரா.புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, த.நா. குமாரஸ்வாமி, க. நா. சுப்பிரமணியம், சிதம்பரசுப்பிரமணியம் முதலியோர் இவர் கவனத்தை மிகவும் கவர்ந்தனர். சிறப்பாக கு.ப. ராஜகோபாலனிடம் இவருக்கு ஒரு ஆத்மீக உறவே ஏற்பட்டுவிட்டது. இவர்கள் அனைவரும் ஆங்கில அறிந்த தமிழ் எழுத்தாளர்கள். இவர்கள் பண்பும், பணியும் இவரின் இதயத்து உணர்ச்சிகள கிளறிவிடலாயின.


எந்தையும் தாயும்
இதேவேளையில் இவருக்கு இன்னொரு இலக்கியத் தாக்கமும் ஏற்பட்டது. சுவாமி வேதசாலம் (மறை மலை அடிகள்) அவர்களின் தமிழ்ச் சாகுந்தலை மொழிபெயர்ப்பைப் படித்த போது, அதனை அதன் மூல மொழியிலேயே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு எழுந்தது. இந்த ஆர்வம் நாளடைவில் பிரேமையாகிவிட்டது. இதனால் இவரே வடமொழியான சமஸ்கிருத பாi~யை வலிந்து கற்கலானார். அதனைக் கற்கக் கற்க அவன் நயங்களில் ஆழ்ந்தும் போனார். தமிழ் மொழி வளம் பெற வேண்டுமானால் வடமொழிக் கலப்பு அவசியம் என்ற எண்ணமும் அவருக்கு எழுந்தது.

ஷ5 காளிதாசனின் சாகுந்தலமும், குமார சம்பவமும், மேக சந்தேகமும் என்னைக் கவர்ந்தது போல் வேறொரு நூலில் இன்று வரை என்னைக் கவரவில்லை.

எனக்கோ சமஸ்கிருத பாi~யை நினைக்கும் போதெல்லாம் ஹிமாசல பர்வதத்தின் பனிதோய்ந்த கொடு முடிகளின் தூய்மையும், காம்பீரியமும், தான் நினைவுக்கு வருகிறது. அதன் பரப்பையும், ஆழத்தையும் ஒப்பரிய சௌந்தரியத்தையும் கண்டு தலைவணங்கச் செய்கிறது. தமிழ் என் தாய் என்றால் சமஸ்கிருதம் என் தந்தை எனக் கருதுபவன் நான்.

தமிழில் சிறுகதைகள், நாவல்கள் எழுதவோ, கவிதைகள், கீர்த்தனங்கள் புனையவோ விரும்புபவர்கள் சமஸ்கிருத பாi~யிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பது நல்லது. அதன் உறவினால் சொல்வளம் பெருகி வளர்கிறது. உயர்ந்த கற்பனைகள் உதயமாகின்றன. புதிய உவமைகளைச் சிரு~;டிப்பதற்கும் உதவி செய்கின்றது.

ஆகவே, இவரது இலக்கிய வளர்ச்சிக்குப் பசளையாக ஆங்கில மொழியுடன் சமஸ்கிருத மொழியும் உதவின என்றே கூறல்வேண்டும்.

இலக்கிய வட்டம்
இவரின் இலக்கிய ஆர்வத்தையும், இலக்கிய அறிவையும் ஒரு சிறந்த பாதையில் செம்மையாக நடாத்திச் செல்ல 1930ஆம் ஆண்டளவில் கொம்பில் எழுத்தாள நண்பர்கள் கூடி இயங்கிய இலக்கிய வட்டம் பெருமளவில் உதவியது எனலாம். இந்த இலக்

1,8 கலாநிதி க. கைலாசபதி-ஈழநாட்டுச் சிறுகiயாசிரியர் இளங்கதிர் 1961-62

2,3,9 கா. சிவத்தம்பி எம்.ஏ- இலங்கையில் தமிழ்ச் சிறுகதை - தினகரன் 18-9-67

கிய வட்டத்தில் திரு. வ. கந்தையா, சோ. சிவபாதசுந்தரம், சோ. நடராசன் திருநீலகண்டன், இலங்கையர்கோன் குல சபாநாதன், ஆ.குருசுவாமி - ஆகியோர் அங்கம் வகித்தனர். இவர்கள் அனைவரும் மேனாட்டிலக்கியப் பயிற்சி மிக்க தமிழ் ஆhவலர்கள். ஆகவே, இவ்வட்டத்தில் மேனாட்டு இலக்கியங்களும், தமிழ் இலக்கியங்களும் வாசிக்கப்பட்டு நன்கு விவாதிக்கப்பட்டன. இத்தகைய விமர்சன விவாதங்கள் இலக்கிய அறிவின் தரத்தை மேம்படுத்தின. நல்ல இலக்கியம் எது? நசிவு இலக்கியம் எது? எழுத்தாளன் எதனைப்படைக்கவேண்டும்? உலகின் உன்னத இலக்கியங்கள் எப்படி, என்ன பொருள் பற்றி எவ்வாறு அமைந்துள்ளன? - என்ற கேள்விகட்கு சிறந்த விமையளித்தன. இதனால் உள்ளத் தெளிவும் உணர்ச்சிப் பெருக்கும் இவரிடம் இயல்பாகவே எழலாயின. அதேவேளையில்தான் வாழ்ந்த கிராமம், அதன் மக்கள், சமுதாய ஏற்ற இறக்கங்கள், அவர்கள் தம் பிரச்சினை என்பனவெல்லாம் அவர் மனக் கடலில் அலைகளாக எழுந்தன.

கலைநோக்கு
உலகின் உயர்ந்த இலக்கியங்கள் அனைத்தும் வாழ்வினடியாக எழுந்திருத்தலையும், அதனால் இலக்கியமும் மக்களின் வாழ்வும் உயர் நிலை பெற்றிருப்பதையும் இவரால் நன்கு அவதானிக்கமுடிந்தது. அத்துடன் உலக இலக்கியங்களில் பிரதேச முக்கியத்தும் காணப்படுதலும், அதேவேளையில் அந்தப் பிரதேச உணர்வை மீறி தேசிய, சர்வதேசிய உறவுகள் மலர்வதையும் அறியலானார். அத்துடன் ஒவ்வொரு படைப்பாளியும் தன்னையும், தன்னைச் சூழ்ந்திருப்பதினின்றும் விடுபட்டு வாழ முடியாது என்பதனையும் நன்குணரலானார். எனவே, இவரது படைப்புக்கள் இலங்கை வாழ் மக்களின் பின்னணியிலே எழலாயின. இவரின் படைப்புக்களை ஈழகேசரி வெளியிட்டு முதலில் ஆதவளிக்கலாயிற்று. இவ்வாதரவில் இவர் எழுத்து வளம்பெறலாயிற்று.

கிராமத்தின் அழைப்பு
ஷ6 நகர வாழ்க்கையுடன் நான் என்றுமே ஒன்றியதில்லை. கிராமத்தின் அழைப்புக்குரல் எப்பொழுதும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.| என்று கூறும் சி. வைத்தியலிங்கம் அவர்களின் வாழ்வும், பிழைப்பும் பொழும்பு போன்ற மாநகரங்களிலே நடந்துகொண்டிருந்தாலும், அவரின் உள்ளத்திலே கிராமத்தின் ஜீவநாதமே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. தான் வாழ்ந்த வாழ்க்கை-இளவயது நினைவுகளை அவரால் மறக்கவே முடியவில்லை. அத்துடன் ஒரு உண்மைக் கலைஞனின் மனம் செயற்கைப் பூச்சுக்கள் நிறைந்த நகரங்களை விட, உண்மையும் தெளிவும் மிக்க இனிய கிராமங்களையே நாடும். அவனுக்கு கிராமங்கள் ஜீவதாது ஏந்தி நிற்கும் புத்தம்புது மலராகவே விளங்கும். இம் மக்களின் வாழ்வும், வளமும் அவனுக்குக் காவியமாகவே விரியும். அதுவும் கிராமத்தில் பிறந்த ஒரு உணர்ச்சிப் பிறவியைப் பற்றி வேறு சொல்ல வேண்டியதில்லை.

ஷ7 கிராமச் சூழ்நிலையில் வளர்ந்தவன் நான். கள்ளங்கபடமில்லாத கிராமவாசிகளுடன் ஒன்றி வாழ்ந்திருந்தவன். தோட்டந்துரவுகளிலும், வயல் வெளிகளிலும் வெய்யிலிலும் மழையினிலும், இரவிலும் பகலிலும் அவர்களுடன் சேர்ந்து உழைத்திருக்கின்றேன். அங்கு அசையும் காற்றும். வீசும் நிலவும், ஊறம் நீரும் என்னை இன்பலாகிரியில் ஆழ்த்திவிடுகிறது| என்கிறார்.


எண்ணமும் எழுத்தும்
ஷ8 தத்துவ விசாரமும், வட மொழி இலக்கியப்பற்று, கவியின்பம் ஆகியவற்றில் பற்றுங்கொண்ட| சி. வைத்தியலிங்கம் அவர்களின் படைப்பிலே இவையே ஆழமாக வேரூன்றிக் காணப்படுகின்றன. இதற்கு இவர் மிகப் பற்றுக்கொண்ட எழுத்துலக முன்னோடிகளே காரணங்களாக விளங்குகின்றனர். இவர் பற்றுக்கொண்ட பாரதி பரம்பரையினரும், வடமொழி இலக்கிய மேதைகளும், தாகூர், கல்ஸ்வேதி, துர்க்கனேவ் போன்றோரின் பாதிப்பு இவரிடையே மிகவும் காணப்படுகிறது.

சமுதாயம் பற்றிய இலக்கியக் கண்ணோட்டம் தாகூர், தூக்கனேவ் போன்றோரால் ஏற்பட்டிருக்கலாம் என்பதனை இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன. இவரது படைப்புக்களின் ஏழை மக்களின் வாழ்க்கைத் தாக்கங்களும், அவர்களின் மனவுணர்வுகளுமே பெரிதும் சித்தரிக்கப்படுகின்றன. இச்சித்தரிப்புக்கள் வாசிப்போரிடையே ஒரு சமூக சித்திரமாக விளங்குவதுமட்டுமன்றி, அவ்வாழ்க்கை முறை பற்றிய அனுதாபத்தையும், அனுதாபத்தை மீறிய ஒரு ஜீலத் துடிப்பையும் ஏற்படுத்திவிடுகின்றன.

இவரின் கதைகள் சமுதாய வாழ்வினடியாக மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புகொண்டு விளங்குகின்றன. ஆனால் அவர் தம் வாழ்க்கைப் பிரச்சினைகளை அவை தொடவில்லை என்றே கூறல்வேண்டும். ஆயினும், அதேவேளையில் நாகரிக முதிர்ச்சி என்பதனை அறியாத கிராமமக்களின் வாழ்க்கையில் வாசகருக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்திவிடுகின்றார். இவ்வாறு இவர் கதைகள் விளங்கக் காரணம் இவரும் ஒரு கிராமத்தை - ஏழாலை - சார்ந்தவர் என்பதுடன், அதன்மீது இளமை முதலே மாறாத பற்றுக்கொண்டமையையும் கூறலாம்.

இவரின் நீண்ட கால இலக்கிய முயற்சிகளின் அறுவடை எண்ணிக்கையளவில் மிகச் சொற்பமாகும. ஏறக்குறைய இருபத்தைந்து சிறு கதைகளையே படைத்துள்ளார் எனலாம்.இக்கமைகள் எல்லாவற்றிலும் - ஷஎன் காதலி| என்ற தமிழ்க்கன்னி பற்றிய உருவக் கதை தவிர்ந்த - நடமாடும் பாத்திரங்கள் ஈழ மண்ணிலேயே ஜனித்தவர்கள். அவர்கள் உணர்வுகள், எண்ணச் சுழிப்புக்கள், மன ஏக்கங்கள் எல்லாமே ஈழத்தின் சொத்துக்கள், சமூக நசிவுகளைக் கண்டு ஏங்கும் இதயமிவருக்குண்டாயினும், அவை வலிந்து வற்புறுத்தப்படாமல், பாத்திர மனவுணர்வுகளின் மூலமாகச் சித்திரிக்கும் பண்பு இவர் கதைகளுக்குண்டு. இதனல்தான் இவரது கதைகளிலே சம்பவங்களிலும் பார்க்க சம்பவங்களினடியாகத் தோன்றும் உணர்வு நிலையே முக்கியமாக இடம் பெறும்| எனச் சில விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இலக்கிய அறுவடை
பாற்கஞ்சி (ஆனந்தவிகடன்), மூன்றாம்பிறை (அல்லையன்ஸ் கதைக் கோவை), தியாகம், களனிகங்கைக் கரையில் பார்வதி, ஏன் சிரித்தார், அழியாப்பொருள், பைத்தியக்காரி, புல்லு மலையில், நந்தகுமாரன், பூதத்தம்பி கோட்டை, நெடுவழி, விதவையின் இருதயம், இப்படிப்பல நாள், மின்னி மறைந்த வாழ்வு (கலைமகள்), கங்காகீதம் (கிராமஊழியன்), பொன்னி, டிங்கிரி மெனிக்கா, பிச்சைக்காரர், உள்ளப்பெருக்கு, என் காதலி (ஈழகேசரி) - போன்ற கதைகளை இவர் தனது எழுத்துலக வாழ்வில் எழுதியுள்ளார்.

நந்தகுமரனும், தியாகமும், பூத்தம்பி கோட்டையும், வரலாற்றுக் கதைகள், ஷதியாகம்| துட்டகைமுனுவன் மகன் சாலி வேடுவப் பெண் அசோகமாலவைக் காதலிப்பதைக் கூறுவது. ஷநந்தகுமாரன்|-பு தர் தன்தம்பி நந்தகுமாரனையும் துறவியாக்குவதைக் கூறுவது.

இத்தகைய வரலாற்றுக் கதைகளை எழுதுவர் அக்காலத்தில் ஈழத்திலிருந்து எழுத்தாளர்களின் தவிர்க்க முடியாத செயலாக இருந்தது. ஒருவேளை ஈழுத்து எழுத்துக்கு அதிக இடம் கொடுத்த கலைமகளை வைத்து எழுதியதாலிருக்கலாம்.

இவரின் ஏன் சிரித்தார், புல்லுமலையில், களனிகங்கைக்கரையில், பார்வதி, அழியாப் பொருள், பைத்தியக்காரி, உள்ளப் பெருக்கு - ஆகிய கதைகள் ஆண் - பெண் உறவு பற்றியவை. இவை மனோதர்மத்துடன் கூடிய ஆண் பெண் மன அசைவுகளின் ஓட்டத்தை நளின பாவத்தில் சித்திரிக்கின்றன. இத்தகைய சித்தரிப்பு இவருக்குக் கைவந்ததுமட்டுமல்லாமல், இவரது ஆக்க உயர்வுக்கும் காரணமாக அமைகின்றது. இச்சிறப்பு இவருக்கு கு.ப. ரா-ன் பாதிப்பால் - ஆத்மீக உறவால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் ஆயினும் - இவருடைய களனிகங்கைக் கரையில், பார்வதி முதலிய கதைகளின் பாத்திரப் பெயர்களிலும், சம்பவச் சித்தரிப்புகளிலும் எங்கள் கதைகளின் சாயல் பரவிக்கிடப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மனவுணர்வுக் கதைகளில் அழியாப் பொருள், உள்ளப் பெருக்கு - இரண்டும் உன்னதமானவை. தன் மச்சாளின் இனிய நினைவுகளையே காவிய வாழ்க்கையாகக் கருதிய இளைஞன் ஒருவன், அவள் கன்னியாகவே இறந்த பின்பும், தன் மணவாழ்வையே வெறுத்து, அவள் நினைவையே ஆதார கருதியாகக் கொண்டு வாழ்க்கை நடாத்தியதைக் கூறுவது.

ஷஉள்ளப் பெருக்கு| - தன் தந்தையின் குடி வெறியால் தாய் படும் கொடுமையைக் கண்ணுற்று, ஆடவர் குலத்தையே வெறுத்த ஒரு பெண்ணின் மன நெகிழ்வைக் காட்டுவது. இவ்விரண்டு கதைகளும் கு.ப.ரா-வின் எழுத்தினடிப்படையில் எழுந்த - வாசகர்கள் படிக்கவேண்டிய கதைகள்.

பாற்கஞ்சி, நெடுவழி இரண்டும் கிராமத்தில் அவலக் குரலைச் சித்தரிப்பதாயினும், பாற்கஞ்சியில் ஈழத்தின் வடபாகக் கிராமமும் நெடுவழியில் தென்னிலங்கைக் கிராமமும் சித்தரிக்கப்படுகின்றது. இரண்டுமே இவருக்குப் புகழைக் கொடுக்கக்கூடிய கதைகள்.

நெடுவழியில் - கிராமப்பெண் முத்துமெனிக்கா தன் கணவனுடன் கொண்ட ஊடல் காரணமாக அவன் அவளைவிட்டு நெடுங்காலம் பிரிந்துபோய் விடுகிறான். எதிர்பராத விதமாக தன் இளமையின் கோரப்படியில் சிக்கிய முத்துமெனிக்கா தன் கற்பை இழந்து, ஒரு குழந்தைக்குத் தாயாகியும் விடுகிறாள். மீண்டு வந்த கணவன் அவளை வீட்டைவிட்டு துரத்தி விடுகிறான். இக்கதையில் ஆசிரியர் சமூகத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் மிகச் சிறப்பானவை.

ஷகங்காகீதம்| - புத்த பிக்கு ஒருவர் மேல் ஒருத்திகொள்ளும் ஒருதலைக் காமமும்: அது ஏற்படுத்தும் சிக்கல்களையும் கூறுகிறது.

ஷமின்னி மறைந்த வாழ்க்கை - குழந்தையற்ற தம்பதிகள் அநாதையாகக் கிடைத்த குழந்தையை வளர்த்து, பின் அதனை இழந்து வருத்தப்படும்போது, அங்கேயே வேலைக்காரியாக இருந்தவள் இழந்த குழந்தை தன்னுடையதே எனக்கூறிக்கண்ணிரை வரவழைப்பது.

4,5,6,7, எழுத்துலகில் நான் சி. வைத்தியலிங்கம் - கலைச்செல்வி ஆண்டுமலர் - 1959

காலமும் கருத்தும்
இவர் கதைகளின் களத்தையும், கருத்தையும் அவதானிக்குமிடத்து இவர் கிராம வாழ்க்கைக்கு முக்கியம் கொடுத்தாலும் - அதாவது பிரதேசங்களைச் சித்தரிப்பதன் மூலம் ஒரு தேசிய உணர்வுக் கலைஞராகவே மின்னுகிறார். ஈழத்தின் தமிழ் வரலாற்றுக் கதைகளுடன், சிங்கள வரலாற்றுக் கதைகளையும் எழுதியுள்ளார். அதே போல தமிழ் - சிங்கள வரலாற்றுக் கதைகளையும் எழுதியுள்ளார். அதேபேல தமிழ் - சிங்கள கிராமங்களையும் எழுதியுள்ளார். ஆகவே களத்தில் தேசிய உணர்வுபடர்ந்திருப்பது போலவே, கருத்துக்களிலும் உலக மக்கள் எல்லோரினதும் ஒத்த மனவுணர்வுகளையே காட்டியுள்ளார்.

இக்களங்களின் இயற்கைத் தோற்றங்களைத் தமது கதைகட்கு பக்கத் துணையாகக் கையாளுவதில் இவர் சமத்தர் இத்தகைய முயற்சியினால் இவர் படைப்பு இயற்கையோடு இயைந்ததாக மாறிவிடுகின்றது. இத்தகைய வர்ணனை நிலைகளில் இவருக்கு இவரின் வடமொழி இலக்கியப் பயிற்சி உறுதுணையாக அமைந்துவிடுகின்றது. வடமொழி கலந்து இவரது தமிழ் உரை நடை இறுக்கமான ஒரு சோபையைப் பெற்று மிளிர்வதுடன், அவர் கூறவந்த உணர்வுகளையும் முழமையாக வெளிக்கொணர்ந்து விடுவதுடன் காவிய அழகையும் பெற்றுவிடுகின்றது.

வீட்டைவிட்டு கணவனால் நள்ளிரவில் துரத்தப்பட்ட முத்துமெனிக்காவின் நிலையை வர்ணிக்கிறார்.
ஷ.... அவள் நடக்கத் தொடங்கினாள். மெல்லிய குளிர் காற்று வீசத் தொடங்கியது. ஒரு முச்சந்தி குறக்கே வந்தது. அதன் மத்தியிலே ஒரு பிரமாண்டமான வெள்ளரச மரம். அதன் நிழலில் நி~;டை கூடும் நிலையில் ஒரு புத்த விக்கிரகம் யாரோ வழிப்போக்கர்கள் ஏற்றிப் போன ஒரு மெழுகுவர்த்தி எரிந்து அவியும் தறுவாயில் இருந்தது.|

இலக்கிய நெஞ்சம்
இவரின் படைப்புக்கள் இவ்விதம் வாழ்வும் வளமும் பெறக் காரணம் அவருக்கு இயல்பாக இருந்த இலக்கிய நெஞ்சமாகும். அவரது இலக்கிய நெஞ்சமே ஷஎன் காதலி| என்ற உருவகச் சிறுகதையாகவும் பரிணமித்துள்ளது. அக்கறையில் அவரின் இலக்கியத்துணைவர்களையும், தனது வெற்றியின் இரகஸ்யத்தாயும் கூறுகிறாரென்றேபடுகிறது.

ஷஎன்னைச் சுற்றி என் பக்தர்கள் ஒவ்வொரு ~ணமும் கூடிக்கொண்டே வருகிறார்கள். என் உதவிக்கு காளிதாசன் வருவான். பலபூதி வருவான். கம்பன் என்றுமிருப்பான். புரந்தரதாஸ் இருக்கின்றார். துளசிதாசரும், தாகூரும் இருக்கிறார்கள். என்னைப் போ~pத்து காதலித்து வளர்த்த அகத்தியன் முதல் பாரதி ஈறாக உள்ள என் இரத்த பந்துக்களின் ஆத்ம சக்தி இருக்கின்றது.

பாற் கஞ்சி
சி. வைத்தியலிங்கம்
ஷஷராமு, என் ராசவன்னா குழச்சுடுவாய், எங்கே நான்கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற் கஞ்சி....||

ஷஷசும்மாப்போம்மா. நாளைக்கு நளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன், கூழ் குடிக்க மாட்டேம்மா.||

ஷஷஇன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே||

ஷஷகூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா. முடியாதுன்னா முடியாது|| என்று சொல்லி அழத்தொடங்கினான்.

ஷஷஅப்பா பசியோட காத்துண்டிருப்பாரடா, வயல்லே கூழ் கொண்டு போகணும் என்ன பாடுபட்டும் நாளைக்குக் கஞ்சி தந்துடுறனே. ஷஷஆம்.... என் கண்ணோல்லியோ?||

ஷஷநிச்சயமாய்ச் சொல்றாயம்மா? நாளைக்கு பாற்கஞ்சி தருவாயா?...||

சட்டென்று பக்கத்திலிருந்து சிறுவர்கள் தம்பளப் பூச்சி பிடித்து விளையாடும் சப்தம் கேட்டது. அவதி அவதியாய்ப் பத்து வாய் கூழ் குடித்தான் ராமு. எல்லாவற்றையும் மறந்து விளையாட ஓடினான்.

அந்தக் கிராமத்தில் முருகேசனுடைய வயல் துண்டு நன்றாய்விளையும் நிலங்களில் ஒன்று: அதற்குப் பக்கத்திலே குளம் குளத்தைச் சுற்றிப் பிரமாண்டமான மருத மரங்கள். தூரத்திலே அம்பிகையின் கோயிற் கோபுரம். இவை எல்லாவற்றையும் சுற்றி வேலிபோட்டாற்போல் தூங்கிக்கிடந்தன குடிமனைகள்.

மார்கழி கழிந்துவிட்டது. இப்பொழுது மேகத்திலே புகார் ஓடவதில்லை. ஞான அருள் பெற்ற நாள் வெண்ணிறம் பெற்று வந்தது... ஆம் தைமாதம் பிறந்து துரிதமாய் நடந்துகொண்டிருந்தது.

மாரிகாலம் முழுவதும் ஓய்ந்து தூங்கிக்கிடந்த ஜீவராசிகள் பாட்டுடன் வேலை தொடங்கிவிட்டன. முருகேசனும் வயலிலே வேலை செய்துகொண்டிருந்தான். பனியிலே ஒடுங்கிக் கிடந்த நரம்புகளிலே சூரிய ஒளி வெள்ளம் பாயவே, அவன் தேகத்தில் ஒரு சுறுசுறுப்பு உண்டானது. வலிந்து இறுகியிருந்த நரம்புகள் விண்போல் தெறித்தன. எழுந்து நின்று கண்களைச் சுழற்றித் தன் வயலைப் பார்த்தான். நெற்கதிர்கள் பால்வற்றி, பசுமையும், மஞ்சளும் கலந்து செங்காயமாக மாறிக்கொண்டிருந்தன. ஷஷஇன்னும் பதினைந்து நாட்களில்...|| என்று அவனை அறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது.

முருகேசன் மனத்திலே ஒரு பூரிப்பு, ஓர் ஆறதல், ஒரு மன அமைதி. அவன் ஒரு வரு~மாய்ப் பாடுபட்டது வீண் போகவில்லையல்லவா? ஆனால் இவற்றுக்கிடையில் காரணமில்லாமல் ஷஷசிலவேளை ஏதேனும்... யார் கண்டார்கள்?|| என்ற இன்பமும் துன்பமும் கலந்து ஒரு மன ஏக்கம்...!

முருகேசனுக்கு வயலை விட்டுப்போகமனம் வரவில்லை. பொழுது உச்சிக்கு வந்துவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. என்றாலும் பயிருக்குள் நுழைந்து ஒவ்வொரு கதிராகத் தன் கைகளால் அணைத்து தன் குழந்தைகள் போலத் தழுவிக்கொண்டிருந்தான்.

கண்ணை மின்னிக் கொண்டிருந்த அந்த வெயிலிலே காமாட்சி கூழுடன் அப்பொழுதுதான் வந்தாள். கூழ் குடித்துக் கொண்டிருக்கும்பொழுது முருகேசன் அவளைப் பார்த்து, ஷஷபோனவருசந்தான் மழை இல்லாமல் எல்லாம் சப்பையும், சாவியுமாய்ப் போயிருத்து. காமு, அதோ பார் இந்த வருசம் கடவுள் தண் திறந்திருக்கிறார். கருப்பன் செட்டி கடனைத் தீர்த்துப்புடலாம். நமக்கு ஒரு வருடத்துக்குச் சோத்துக்குக் குறைவு வராது. எங்க ராமனுக்கு ஒரு சோடி காப்பு வாங்கணும்....||

ஷஷஎனக்கு ஒட்டியாணம்||

ஷஷஏன், ஒரு கூறைச் சேலையும் நன்னாயிருக்குமே||

ஷஷஆமாங்க, எனக்குத்தான் கூறைச் சேலை, அப்படின்னா ஒங்களுக்கு ஒரு சரிகை போட்ட தலப்பா வேணுமே||

ஷஷஅச்சா, திரும்பவும் புது மாப்பிள்ளை பொம்புளையாட்டம் ரெண்டு பேரும்.... ஓ... ஒரே சோக்குத்தான்|| என்று சொல்லி அவளைப் பார்த்து இளித்தான்.

காமாட்சி வெட்கத்தினால் தன் சீலைத் தலைப்பால் முகத்தை அரை குறையாய் மூடிக்கொண்டு ஷஷஅதெல்லாம் இருக்கட்டும்.... எப்போ அறுவடைக்கு நாள் வைக்கப்போறீங்கஷஷ என்றாள்.

ஷஷஇன்னிக்கு சனிக்கிழமை, சனியோடு சனி எட்டு மற்றச் சனி பதினைந்து ஆம் நல்ல நாள். அதே சனிக்கிழமை வைத்திடுவமே||

ஷஷதாயே, இதுக்கிடையில் ஒரு விக்கினமும் வந்திடப்படாது|| என்று மனதில் சொல்லிக்கொண்டாள் காமாட்சி.

ஒரு பெருநாளை எதிர்பார்ப்பது போல் காமாட்சியும், முருகேசனும் அறுவடை நாளை எதிர் நோக்கி இருந்தார்கள். காமாட்சி தன் வீட்டிலுள்ள களஞ்சிய அறையைக் கோலமிட்டு மெழுகி வைத்திருந்தாள். ல~;மி உறையப்போகும் அந்த அறைக்கு ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றி வந்தாள். மணையாகக் கிடந்த அரிவாள்களைக் கொல்லன் பட்டடையிற் கொண்டுபோய்த் தேய்த்து வந்தான் முருகேசன். கதிர்ப்பாய்களை வெய்யிலிலே உலர்த்தி, பொத்தல்களைப் பனை ஓலை போட்டு இழைத்து வைத்தான். ஐந்தாறு நாட்களுக்கு முன்னரே அயல் வீட்டுக் கந்தையனிடமும் கோவிந்தனிடமும் ஷஷஅறுவடை, வந்திடவேணும் அண்ணமாரே|| என்று பலமுறை சொல்லிவந்தான். இருவருடைய மனதிலும் ஓர் ஆவல் துடித்து நின்று இவற்றை எல்லாம் செய்து வந்தது.

அறுவடை நாளுக்கு முதல் நாள் அன்று வெள்ளிக்கிழமை பகல் தேய்ந்து மறைய இன்னும் மூன்று நாழிகைதான் இருந்தது. நிஜகளங்கமாய் இருந்த வானத்திலே திடீரென்று ஒரு கருமுகிற் கூட்டம் கூடியது. வரவரக் கறுத்துத் தென் திசை இருண்டு வந்தணது. அந்த மேகங்கள் ஒன்று கூடி அவனுக்கு எதிராக சதி செய்வதாக முருகேசன் நினைத்தான். அந்தக் கருவானம் போல் அவன் மனதிலும் இருள் குடிகொண்டது. காமாட்சி அவள் மனதிற்குள் அம்பிகைக்கு நூறு வாளி தண்ணீரில் அபிN~கஞ் செய்வதாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான். சிறு நேரத்தில் ஒரு காற்று அடித்தது. கூடியிருந்த முகிற் கூட்டம் கலைந்து சிறிது சிறிதாய் வானம் வெளுத்துக் கொண்டு வரவே, முன் போல் ஆகாயம் தெளிவுடன் விளங்கிற்று. தன்னுடைய பிரார்;த்தனை அம்பிகைக்குக் கேட்டுவிட்டதென்று காமாட்சி நினைத்தாள்.

முருகேசன் படுக்கப்போக முன் அன்றைக்கு பத்தாவது முறை கந்தையனுக்கும், கோவிந்தனுக்கும் காலையில் அறுவடையைப் பற்றி நினைப்பூட்டிவிட்டு வந்து படுத்துக்கொண்டான். அவன் நித்திரைக்குப் போனபொழுது நேரமாகிவிட்டது. அவன் படுக்கையிலேயே புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். நித்திரை அவனுக்கு எப்படி வரும்? அவனுடைய மனம் விழிப்பிற்கும், தூக்கத்திற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தது. ஆயிரஞ் சிந்தனைகள் பிசாசுகளைப் போல் வந்து அவன் மனதிலே ஓடிக்கொண்டிருந்தன.

அவன் வயலிலே நெல் அறுத்துக்கொண்டிருக்கிறான். பக்கத்திலே கோவிந்தனும், கந்தையனும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அறுத்துவைத்ததைக் காமாட்சியும் பொன்னியும், சின்னம்மாவும் கட்டுக்கட்டாய் அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள், கிளிகளையும், காக்கைகளையும் துரத்திக்கொண்டு திரிகிறான் ராமு. அப்பொழுது காமாட்சி: ஷஷபள்ளத்து பள்ளன் எங்கேடி போய்யிட்டான்|| என்று பள்ளு பாடத் தொடங்கினாள்.


அதற்கு பொன்னி ஷஷபள்ளன் பள்ளம் பார்த்து பயிர் செய்யப் போயிட்டான்!|| என்று சொல்ல காமு, ஷஷகொடுத்துங் கொண்டு கொடுவாளுங்கொண்டு...|| என்று இரண்டாம் அடியைத் தொடங்கினாள்.

அதற்குப் பொன்னி ஷஷகோழி கூவலும், மண்வெட்டிகொண்டு|| என்று சொல்ல, இருவரும் சேர்ந்து ஷஷபள்ளம் பார்த்துப் பயிர் செய்யப் போயிட்டான்!|| என்று முடித்தார்கள்.

உடனே காமு, ஷஷஆளுங் கூழழை அரிவாளுங்கூழை|| என்று சொன்னதும் முருகேசன் ஷஷயாரடி கூழை!|| என்று அரைத் தூக்கத்திலிருந்து கத்திக்கொண்டு எழுந்திருந்தான்.

முருகேசன் - ஆள் கூழை. பாவம், தன்னையே அவள் கேலி செய்வதாக நினைத்து அப்படிக் கோபித்துக்கொண்டான். இப்பொழுது நித்திரை வெறிமுறிந்ததும். தான் செய்ததை நினைக்க அவனுக்கு வெட்கமாயிருந்தது. தனக்குள்ளே சிரித்துக்கொண்டு திரும்பவும் படுத்துக்கொண்டான். அந்தக் கனவுதான் எவ்வளவு அழகான கனவு அதன் மீதியையும் காணவேண்டும் என்று அவனுக்கு ஆவலாயிருந்தது. ஆனால் நித்திரை எப்படி வரப்போகிறது? கனவுதான் மீண்டும் காணப்போகிறானா? தன் கற்பனையிலே மீதியைச் சிரு~;டித்துப் பார்த்து அவன் மகிழ்ந்து கொண்டிருந்தான்.

பாட்டுடன் அறுவடை சென்று கொண்டிருக்கிறது. வயலிலே நின்று நெல் மூட்டைகளை வண்டியிலே போடுகிறான். வண்டிவ வீட்டு வாசலிலே வந்து நிற்கிறது. அவனுடைய களஞ்சியம் நிறைந்து பரிபூரணமாய் விட்டது. ராமன் வயிறு நிறையப் பாற்கஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறான். காமு ஒட்டியாணத்துடன் வந்து அவனை.....

அப்பொழுது வீட்டுக்கூரைக்கு மேலிருந்து ஒரு சேவல் கூவிற்று. முருகேசனுடைய கற்பனை அறுந்துவிட்டது. அக்கிராமத்திலுள்ள சேவல்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாகக் கூவிக்கொண்டு ந்தன. அவன் வீட்டுக்கு முன்னால் கட்டியிருந்த ஆட்டுக்குட்டி ஷஷமேய் மேய்|| என்று கத்தத் தொடங்கியது. எங்கிருந்தோ கள்ளத்தனமாய் உள்ளே நுழைந்த மெல்லிய காற்று அவன் மேல்படவே மீண்டும் குளிர்ந்தது. முருகேசன் பரபரவென்று எழுந்திருந்தான். வாசலை அடைந்து வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

அவன் படுக்கைக்கு போனபொழுது வானத்திலே பூத்திருந்த நட்சத்திரங்கள் ஒன்றையும் காணவில்லை வானம் கறுத்துக் கனத்து எதிலோ தொங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றிற்று. வீட்டு முற்றத்திலே வந்து நின்றான். ஒரு மழைத்துளி அவன் தலைமேல் விழுந்தது. கையை நீட்டினான். இன்னும் ஒரு துளி! மற்றக் கையையும் நீட்டினான். இரு துளிகள் வீழ்ந்தன. அவன் தலையிலே வானமே இடிந்துவிழும் போல் இருந்தது.

உக்கிப்போய்த் தன் வீட்டுத் திண்ணையிலே அவன் குந்திக் கொண்டான். பொலுபொலுவென்று மழை தொடங்கியது. இடி இடித்தது. மின்னி மழை சோனாவாரியாய்க் கொட்டிக்கொண்டிருந்தது. காலை ஏழு மணியாகியும் மழை விடவேயில்லை. ராமு ஓடி வந்து தந்தைக்கு பக்கத்திலே குளிர் காய்ந்து கொண்டிருந்தான். காமாட்சி இடிந்து போய் நின்றாள். மழையுடன் காற்றும் கலந்து, ஷஹோ| வென்று இரைந்துகொண்டிருந்தது.

‘’அம்மா இன்னைக்கு பாற்கஞ்சி தாரதாய்ச் சொன்னியே பொய்யாம்மா சொன்னாய்?|| என்று தாயைப் பார்த்துக்கேட்டான் ராமு.

காமாட்சிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வயிறு பற்றி எரிந்தது. ஷபச்சைக் குழந்தையை எத்தனை நாட்களாய் ஏமாற்றிவிட்டாள்? மழையையும் பாராமல் பக்கத்து வீட்டிற்கு ஓடினாள். காற்படி அரிசி கடனாய் வாங்கிக்கொண்டு வந்தாள்.

முருகேசன் ஒன்றும் பேசாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தான். அவனுடைய பார்வை வயல் வெளியை ஊடுருவிச் சென்று எங்கேயோ லயித்துப் போயிருந்தது.

ஷஷவெள்ள வாய்க்காலிலே தண்ணீர் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது குளம் நிறைந்து தண்ணீர் பெருக்கெடுத்து விடும். என்னுடைய நெற் பயிர்கள் கீழே விழுந்து உருக்குலைந்துவிட்டன. நெற் கதிர்கள் உதிர்ந்து வெள்ளத்துடன் அள்ளுண்டு போய்க்கொண்டிருக்கின்றன.....|| என்று அவன் எண்ணி ஏங்கினான்.

காமாட்சி களஞ்சிய அறைக்குப் போனால். அது வெறுமனே கிடந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை விம்மி கொண்டு வந்தது. அங்கே நிற்கத் தாங்காமல் வெளியே வற்தாள். ராமு. ஷஷநாளைக்கும் தாரியாம்மா பாற்கஞ்சி|| என்று கெஞ்சிக் கேட்டான். அவன் கஞ்சி குடித்த கோப்பை அவளுக்கு முன்னே காலியாகக்கிடந்தது.

அநேகநாள் பழக்கத்தினாலே ஷநாளைக்....| என்று மட்டுமே அவளால் சொல்லமுடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை முருகேசன் வயிற்றிலே நெருப்பை அள்ளிக்கொட்டியது.


2 ‘இலங்கையர்கோன்|
புத்திலக்கியம்

‘தமிழ் இப்பொழுதுதான் நவீன இலக்கியத்தில் மேலோங்கி நிற்கும் மற்றப் பாஷைகளை நோக்கி விழித்தெழுந்து கொண்டிருக்கிறது’? என 1948ஆம் ஆண்டிலேயே எழுதிய இலங்கையர் கோன், அத்தகைய நவீன இலக்கிய போக்கு ஈழத்து இலக்கியத்திலும் தோன்றி ஆழமாக வேரூன்ற வேண்டுமென மனப்பூர்வமாக ஆசைப்பட்டவர். பண்டைய இலக்கிய வகைகளுக்குப் புத்துயிரளிப்பதால் மட்டும் தமிழ் மறுமலர்ச்சியடைந்துவிடாது. புதிதாக மேலை நாட்டிலக்கியங்களில் தோன்றி வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்கள் தமிழிலும் உருப்பெறுவதினாலேயே தமிழிலக்கியம் மலர்ச்சியடைய முடியும் முன்னேறமுடியும் எனத் திடமாக நம்பியவர்.

ஆங்கில மோகம்
‘என்னுடைய இளம் வயதிலேயே எனக்கு ஆங்கில இலக்கியத்தில் ஆசை ஏற்பட்டது.| எனக் கூறும் இலங்கையர்கோனிடமிருந்து இத்தகைய கருத்து வெளியானது இயல்பே. நவீன இலக்கிய வளர்ச்சியை நன்கறிந்த நிலையில், தமிழிலக்கியத்தை நோக்கும்போது தமிழிலக்கியம் புதிய புதிய இலக்கிய உருவங்களைக் கொளளாது வெறுமையாகக் காட்சியளித்தது. அத்துடன் மிக வேகமாக முன்னேறிவரும் சமுதாய அமைப்பிற்கும், பரபரப்பின் ஆளமைக்குட்பட்ட மனிதனின் மனநிலைக்கும் இத்தகைய புதிய இலக்கிய வடிவங்களே கலாரசனை அளிக்க முடியும் என்பதனை, மேனாட்டில் இத்தகைய புதிய இலக்கிய வடிவங்கள் பெற்றுவரும் செல்வாக்கினையும், அவை ஏற்படுத்திவரும் மாறுதல்களையும் கவனிக்கும்போது அறிந்து கொண்டார்.

கலை மலர்கள்
1930ஆம் ஆண்டின் பின் நாட்டின் முக்கிய வகுப்பினராக விளங்கிய மத்தியதர வகுப்பினரில், படித்தவர்கள் நாட்டின் சமூக, பொருளாதார அரசியல் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டனர். இதன் காரணத்தினால் நம் மொழி, நம் நாடு, நம் பண்பாடு என்ற தேசிய உணர்ச்சிகளால் உந்தப்பட்டு அவற்றின் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

மக்களின் இந்த மனமாற்றத்தை நன்கு புரிந்துகொண்டு, அக்காலத்தில் இயங்கிய ஆங்கில, தமிழ்த் தினசரிகளும் தம்பாதையைமாற்றியமைத்துக் கொண்டன. இத்தினசரிகளிலெல்லாம் நம்நாட்டு கலை, பண்பாடு பற்றிய விடயங்கள் இடம்பெறலாயின. இதுமட்டுமல்லாமல் தமிழர்களின் மனவுணர்வுகள் தனித்துவம் மிக்க கட்டுரைகளாகவோ, கதைகளாகவோ வெளிவந்து நாட்டை விருத்தி செய்யவேண்டும் என்ற நோக்கில் ஈழகேசரி போன்ற புதிய பத்திரிகைகளும் தோன்றலாயின. இப்பத்திரிகை ஈழத்து எழுத்தையும், எழுத்தாளனையும் மிகப் போற்றி வந்தது.

இத்தகைய கலை மலர்ச்சி உணர்வு ஈழத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் இக்காலத்தில் ஏற்பட்டிருந்தது. ஏன்? மேனாட்டு .இலக்கியப் பயிற்சிமிக்க பாரதநாட்டின் ஒவ்வொரு மொழியினரும் இத்தகைய கலையுணர்ச்சி வேகத்தைப் பெற்றிருந்தனர். இதனால் மேனாட்டு இலக்கியப் பயிற்சிமிக்க, ஆக்க ஆற்றல் மிக்கவர்கள் புதிய எழுத்தாளர்களாகப் பரிணமிக்கலாயினர். தமிழிலக்கியத்தின் நெருங்கிய தொடர்பு கொண்ட தென்னிந்திய எழுத்தாளர்கள், தம் மேனாட்டு இலக்கியப் பயிற்சியினால், சிறுகதை, நாவல் போன்ற புதிய இலக்கிய உருவங்களைத் தமிழில் கொணர்வதற்கேற்ற முயற்சிகளிலும், பரிசோதனைகளிலும் ஈடுபட்டனர். இத்தகைய முயற்சிகள் மணிக்கொடி, கலைமகள், கிராம ஊழியன், பாரததேவி போன்ற பத்திரிகைகளில் நடந்துவந்தன. இப் பத்திரிகைகளின் செல்வாக்கும் பாதிப்பும் ஈழத்து இலக்கிய இரசிகர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தின.

ஆசையின் ஆக்கம்
இப்பரபரப்பினால் ஆங்கில இலக்கியத்தில் மோகித்துக் கிடந்த இலங்கையர் கோனின் கவனம் தமிழிலக்கியத்தின் பாற்றிரும்பியது. ஆங்கிலம் கற்றவர்கள் படைக்கும் புதிய தமிழிலக்கிய முயற்சிகள் இவருக்கு ஆக்கபூர்வமான துணிவினையும், ஒரு ஆசையையும் ஏற்படுத்திற்று. ஏனெனில் அக்காலப் பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளில் பெரும்பாலானவை நிறைவான படைப்புக்களாக இல்லாது சத்திர சிகிச்சையில் பிறந்த எட்டுமாதக் குழந்தைகளாகவே காணப்பட்டன. ஆகவே, இம்முயற்சிகள் நவீன இலக்கிய இரசிகரை எழுதத்தூண்டும் துணிவையும், ஆற்றலையும் கொடுத்தது. ஆகவே-

இவரது எழுத்து சமூகத் தாக்கங்களினால் உணர்ச்சியலை உத்தப்பெற்ற ஒரு கலைஞனின் துடிப்பாக உருவாகாமல், எழுத விரும்பிய கனவு கண்ட இன்பக் கலைஞனின் ஆசையில் வெளிப்பாடாகவே அமைந்தது எனலாம். இதனை இலங்கையர்கோனே 1958ஆம் ஆண்டு மார்கழிக் கலைச் செல்வியில் இப்படிக் குறிப்பிடுகின்றார். ஷஷ...... என்னுடைய இளம் வயதிலே எத்தனையோ கனவுகள் கண்டேன். அவற்றுள் சிறுகதை எழுதவேண்டும் என்பது ஒன்று|

கன்னிப் பூ
இவரின் கன்னிப் படைப்பான ஷமரியா மதலேனா| கலைமகளில் வெளிவந்தபோது இவரின் வயது பதினெட்டு. மனித வாழ்க்கை பற்றிக் கவலைப்படாத, அனுபவ அறிவு என்பதே சிறிதும் ஏற்படாத, வாழ்க்கையைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாத ஒரு இளவயதிலே தம்முடைய முதற் கதையை இவர் எழுதினார்.

விபசாரம் செய்து கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட மரியா மதலேனாவைத் தண்டிக்க வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி ஏசு ஷயார் தம் வாழ்வில் தவறுகள் எதுவும் செய்யவில்லையோ அவர்களே இவளின் மீது முதற்கல்லை எறியக்கடவர்| என்ற கட்டளைக் கதையே மரியாமதலேனா ஆகும்.

இக் கதையொன்றினைக் கொண்டே இலங்கையர் கோனின் ஆரம்ப கால எழுத்துத்துறை, அவரின் எண்ணங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். 'வுநநn யபந' என்று ஆங்கிலத்தில் கூறப்படும் பருவம் மிகவும் துடிப்பான, உலகையே மாற்றியமைத்துவிட புரட்சியை விரும்பும் பருவம். இப் பருவத்தில் சமுதாயக் குறைபாடுகள் ஒவ்வொன்றும் மாபெரும் பூதமாகத் தோன்றும். அக்குறைபாடுகளை உடனடியாக நீக்கிவிடவேண்டும் என்ற துடிப்பான எண்ணம் எழும் அப்பருவத்திற்கு அக்குறைக்கும் தனக்குமிடையில் மாறிவரும் சமுதாய விளைவுகள் தென்படமாட்டா. அதேபோலத் தனது முற்போக்கான எண்ணத்தை, நாலு பேர் அறியப் பறை சாற்றும் ஆவலும் எழும். ஆகவேதான் இலங்கையர்கோனின் முதற்கதை சமுதாயப் பிரச்சினையாக உள்ள விபச்சாரம் பற்றியதாக அமைந்தது எனலாம்.

ஆயினும், இக்கதை கலைமகளில் பிரசுரமானதைக் கொண்டு அவதானிக்குமிடத்து இலங்கையர்கோனுக்கு கதையை விட, கதையின் பிரசுரமே முக்கியமாக அமைந்தது எனலாம். ஏனெனில் அக்காலத்தில் பெரும்பாலும் கலைமகள் சிறுகதைகளாக வங்க, மராட்டிய கதைகளை மொழிபெயர்த்ததுடன், பிற நாடுகளிலும், பெரியார் வாழ்விலும் நிகழ்ந்த சம்பவங்களைச் சிறுகதைகள் என்ற நினைப்பில் வெளியிட்டு வந்தது. இதனால் இந்த வரலாற்றுச் சம்பவங்களையொட்டி எழுந்த சிறுகதைகள் சிறுகதை இலக்கணத்தை மீறி (அப்படியொரு வரையறை இலக்கணம் இல்லாவிட்டாலும், கூறுகின்ற பொருளில் உணர்ச்சியில் ஒரு தன்மை மட்டுமே உணர்த்தப்படவேண்டும் என்ற விதி எல்லா எழுத்தாளராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும்) நாவல் சுருக்கங்களாகவே விளங்கின. இவரின் மரியா மதலேனா ஏசவின் கட்டளையைக் கேட்டுவிட்டு தலைகுனிந்து செல்கின்ற கூட்டத்துடன் முடிய வேண்டியகதை அதன் பின்னரும் ஓடி ஏசு சிலுவையில் அறையப்பட்டு, கல்லறையில் சமாதி வைத்த பின்னர், அவர் உயிர்த்தெழுகின்றதுவரை சென்றுமுடிகின்றது. இதனால் சிறு கதைபற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த இலங்கையர்கோன் கூட பத்திரிகையின் தேவைக்கு முதல் கதையிலேயே பலியாகிவிட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் குறிப்பு இலக்கிய விமர்சகர்களால் அவதானிக்கப்பட வேண்டியதொன்று. அதாவது சிறுகதையின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை பத்திரிகைத் தேவைகளால் சிறுகதை பாதிக்கப்பட்டு வருவதினாற்றான். சிறுகதை இன்றுவரை சவலைக் குழந்தையாகவே இருந்து வருகின்றது எனத் திட்டமாகக் கூறலாம்.

மும்மொழி
இவ்வாறு கலைமகளிலேயே தனது எழுத்துக்குப் பிள்ளையார் சுழியிட்ட இலங்கையர் கோன் அப்போது முறையாகத் தமிழ் கற்றிருக்கவில்லை. இதற்கு அக்காலத்தில் ஈழத்தில் இருந்த ஆங்கிலக் கல்வியே காரணமாகும். ஆகவேதான் தமிழ் எழுத்தாளரானதின் பின் முறையாகத் தமிழ் கற்க விரும்பிக் கற்றதுடன் சமஸ்கிருதம், இலத்தீன் மொழிகளையும் கற்றுணர்ந்தார். இந்த மும்மொழிப் பயிற்சியினால் இவரின் அறிவுவிருத்தியடைந்தது எனலாம்.

பிற பத்திரிகைகள்
கலைமகளில் எழுத ஆரம்பித்த இலங்கையர் கோன் பின்னர் நவீன இலக்கியப் பரிசோதனைக் களங்களாக அமைந்த சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி, பாரததேவி முதலிய பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். இப்பத்திரிகைகளில் அக்காலத்து முக்கிய எழுத்தாளர்களான கு.ப.ரா.ந. பிச்சமூர்த்தி, பி. எஸ். ராமையா, வல்லிக்கண்ணன் போன்றோரும் எழுதி வந்தனர். இவர்கள் ஆசைக்காக எழுதாமல், புதிய கலை வடிவங்களைத் தமிழில் சிறப்பாகக் கொணர்ந்து சேர்க்கவேண்டுமென்ற துடிப்பான முனைப்பில் செயற்பட்டமையால், அவர்கள் எழுத்துக்களில் மேனாட்டு இலக்கியவகை, கீழை நாட்டு பண்பாட்டிற்கியைந்த வகையில் பொருளமைதி, உருவ அமைதி என்பன சிறப்பாக அமையலாயிற்று. இவர்களின் இந்தவெற்றிப் பரிசோதனைகள் இலங்கையர் கோனை மிகவும் பாதித்தன. இதனால் இலங்கையர் கோனின் எழுத்து ஆசை பொறுப்பான இலக்கிய சேவையாக மாறத் தொடங்கியது.

கு.ப.ரா.செல்வாக்கு
இக்காலத்தில் கு.ப.ரா.ராஜகோபாலன் மனித வாழ்க்கையினடியாக எழும் ஆண் பெண் உறவுப் பிரச்சினைகளையும், உணர்ச்சிகளையும் கீழை நாட்டு மக்கள் வாழ்வினின்றும் புத்தம் புதிய படைப்புகளாக வெளியிட்டார். அவர் வெளியிட்ட முறைகளும், பொருட்களும் இளம் உள்ளத்தவரான இலங்கையர் கோனைப் பெரிதும் கவர்ந்தன. அத்துடன் கு.ப.ரா. அவர்கள் தன்னுடைய கதைக்கு ஏற்ற உயர்ந்த ஓர் உரைநடையைக் கையாண்டார். இவ் உரைநடைக்கு கு.ப.ரா.வின் வடமொழியிலக்கியப் பயிற்சி உதவியது. இதனால் உணர்வுக் குறிப்பாற்றல் கொண்ட, மென்மையான, அதேவேளையில் காம்பீரியம் நிறைந்த உரை நடையைக் கையாண்டார். இந்த உரை நடையினால் கவரப்பட்ட வ.ரா. ஷமிருதுவான பாi~யில் கம்பீரமான உணர்ச்சியை வர்ணிப்பதில் கு.ப. ராஜகோபாலன் தனிப்பட்ட கலைஞன்| எனக் கூறினார்.

இவ்வாறு இக்காலத்தில் செல்வாக்கு மிகப்பெற்று விளங்கிய கு.ப. ராவின் எழுத்து நடையும், அவர் பெரும்பாலும் எழுதிய உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல் போன்ற பொருளமைதியும் இலங்கையர் கோனைக் கவர்ந்தது. இதன் பின்னர் ஆங்கிலம் கற்று, தமிழ் கற்று இலங்கையர் கோன் வடமொழியையும் கற்கலாயினார் என்றால் அவர் எந்தளவிற்கு கு.ப.ராவினால் கவரப்பட்டிருந்தார் என்பது புலனாகின்றது.

உருவ அமைதி
உருவ அமைதிகள் இலங்கையர் கோனுக்குச் சிறப்பாகப் புலப்பட்ட காலமும் இதுவெனக் கூறலாம். புதமைப்பித்தன், கு.ப.ரா. மௌனி போன்றோர் எழுத்தில் அக்காலத்திலேயே சிறுகதையின் உருவ அமைதி சிறப்பாக அமைந்திருந்தது. புதமைப்பித்தனின் கடவும், கந்தசாமிப்பிள்ளையும், அகலியை சாபவிமோசனம், சாமியாரும் குழந்தையும் சீடையும், குபா.ராவின் விடியுமா?, அர்ச்சனைரூபா-மௌனியின் எங்கிருந்தோ வந்தான். பிரபஞ்ச கானம், மணக்கோலம் போன்றன உருவ அமைப்பில் சிறப்பாக விளங்கின. இக் கதைகளின் பாதிப்பு இலங்கையர் கோனின் எழுத்துக்களைப் பெரிதும் தாக்கலாயி. இவற்றை நாம் இலங்கையர் கோனின் கதைகளைப்பற்றி ஆராயும்போது அவதானிக்கமுடியும்.

இலங்கையர் கோனின் கதைகள்
இலங்கையர் கோனின் கதைகளை ஆராயும் இன்றைய விமர்சகர்களுக்கு அவரது கதைகளைத் தேடிப்பெறும் சிரமம் இல்லை. ஈழத்துச் சிறுகதையின் மூலவர்களின் இலங்கையர் கோனின் கதைகளே இன்று ஒரு தொகுப்பாக ஷவெள்ளிப் பாதசரம்| என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதில் இவரின் பதினைந்து கதைகள் வெளியாகியுள்ளது. இதில் இவரின் பதினைந்து கதைகள் வெளியாகியுள்ளன. இலங்கையர் கோன் 1938ஆம் ஆண்டிலேயே எழுத ஆரம்பித்துவிட்டாலும் 1938 - 1948ஆம் ஆண்டிற்குமிடையில் பதினைந்து சிறுகதைகளே எழுதியுள்ளார். இதன் பின்னர் சிறுகதையுலகிலிருந்து நாடக உலகில் பிரவேசித்து சிறந்த தொண்டாற்றினார். ஆயினும் 1950ஆம் பின் ஐந்து சிறுகதைகள் வரையில்தான் எழுதியிருப்பார். இலங்கையர் கோனின் சிறுகதைகள் எல்லாம் முப்பதுக்குள் இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆயினும் குறகிய எண்ணிக்கையினுள்ளேயே ஈழத்துச் சிறுகதையுலகில் தமக்கென ஒரு தனியான இடம் பிடித்துக்கொண்டவர் இவர்.

இலங்கையர் கோன் இருவகைப்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் எனலாம். புராண, இதிகாசங்களில் வரும் உன்னத சம்பவங்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் கொண்டு எழுதியுள்ளதை ஒன்றாகவும், சமூகக் கதைகளை இன்னொன்றாகவும் கருதலாம்.

வரலாற்றுச் சிறு கதைகள்
இலங்கையர் கோன் மரியா மதலேனா, கடற்கோட்டை அனுலா, சிகிரியா, மணப்பரிசு, யாழ்பாடி முதலிய ஈழ வரலாற்றுக் கதைகளை கலைமகளிலும், மேனகை என்ற புராண வரலாற்றுக் கதையை மறுமலர்ச்சியிலும் எழுதியுள்ளார். இலங்கையர் கோன் இத்தகைய வரலாற்றுச் சிறு கதைகளை எழுதியுள்ள போதிலும் இக்கதைகளிலெல்லாவற்றிலும் - மேனகை தவிர்ந்த - சிறுகதை மரபை மீறியஒரு உணர்வு தென்படுவதைக் காணலாம். மேலும் இவரெழுதிய இச் சிறுகதைகள் ஈழத்து வரலாற்றில் மட்டுமல்லாமல், மக்களின் அன்றாட வாழ்விலே நெருங்கி இடம்பெற்ற பழங்கதைகளாக, அக்காலத்தில் ஈழத்து மக்களிடையே நிலவிய கதைகளாகும். இதனால் இக்கதைகள் ஒரு வரலாற்று ஆராய்ச்சி உணர்வோடு எழுதப்படாதவை. யாழ்ப்பாடி, சிகிரியா, கடற்கோட்டை போன்ற கதைகள் செவிவழியாக கேட்டதைப் பிரதிபலிக்கும் கதைகளாகும். அத்துடன் அனுலா என்ற கதை நிலாமுற்றத்தில் நித்திரை செய்யும் மகனுக்குத் தந்தை கதை சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதனால் வரலாற்றுக் கதைகளுக்கு இருக்கவேண்டிய துடிப்பான கம்பீரமான உரைநடையில்லாமற் போவதுடன் சுவையான சம்பவங்களும் உணர்ச்சியற்ற நிலையில் பழங்கஞ்சியாக வாசகர்களுக்கு பரிமாறப்பட்டு விடுகின்றது.

ஷமணப் பரிசு| - மன்னன் ஜெயசேனன் அரண்மனைத் தாதி நந்தாவதி மீது காதல் கொள்வதும், அவள் சீலானந்தன் என்ற போர் வீரன் மேல் காதல் கொள்வதும், அவள் சீலானந்தன் என்ற போர் வீரன் மேல் காதல் கொண்டிருப்பதை அறிந்த மன்னன் சீலானந்தனை சோழர் மீது எடுத்துச் செல்லும் படையுடன் அனுப்பி, பின் அவன் போரிலிறந்ததாக அறிகிறான். அதன் பின்னர் வேலியற்ற மலர்க்கொடியான நந்தாவதியிடம் தன் காதலைத் தெரிவிக்க, அவளும் சம்மதித்து திருமணம் நடக்க ஏற்பாடாகிறது. நந்தாவதிக்கு மணப்பரிசு கொடுக்க பொற்கொல்லரைத் தேடிச் சென்ற மன்னன் அங்கு காயமுற்ற நிலையில் சீலானந்தனைக் காணுகிறான். பின்னர் அவனையே நந்தாவதிக்கு மணப்பரிசாக அளித்துவிடுகிறான்? - இக் கதை நாவலுக்குரிய விரிவினையும், நாடகப் பண்பினையும் பெற்றிருப்பதை வாசகர்கள் நன்குணர்வார்கள், ஆகவே, கதை தேடிய கலைமகளுக்கு ஏற்ற கதையாக இது இருந்ததே தவிர சிறுகதையாக இது இருக்க வில்லை. வரலாற்றுச் சிறுகதையால் இவர் வெற்றியைவிட தோல்வியையே தழுவுகிறார்.

ஷமேனகை| ஒன்நே அவர் எழுதிய புராண இதிகாச சம்பவக் கதையால் சிறுகதைப் பண்பு மிக்கதாக விளங்குகின்றது எனலாம். இக்கதை அளவோடு நிறுத்தப்பட்டுள்ளதுடன், உணர்வு நிலையிலேயே முழக்கதையையும் சொல்லி, அந்த உணர்வின் முடிவிலேயே அக்கதையின் உயிர்நாடியான ஷகுழந்தை நிராகரிப்பும், நடந்து விடுவதால், வாசகர் மனதைப் பிணைப்பதிலும், சிறுகதைப் பண்பினை உணர்த்துவதிலும் வெற்றியைப் பெற்றுவிடுகின்றது|

சமூகக் கதைகள்
இலங்கையர் கோன் சமூகக் கதைகளாக வெள்ளிப் பாதசரம், துறவியின் துறவு, ஒருநாள், தாய், ஓரிரவு, சக்கரவாகம், துறவியின் துறவு, சதிர்க்காரி, என் தமக்கை, கடற்கரைக் கிழிஞ்சல் (ஈழகேசரி), முதற் சம்பளம், வஞ்சம், (பாரததேவி), பாரதத்தாய், நாடோடி (கலைமகள்), அனாதை, தாழை மர நிழலிலே, தந்தி வந்தது, (தினகரன்) மச்சாள், மனிதக்குரங்கு (வீரகேசரி) - முதலிய கதைகளை எழுதியுள்ளார்.

கு.ப.ரா.வின் எழுத்தின் தாக்கத்தால் இலங்கையர் கோன் பெற்ற பாதிப்பை, - வெள்ளிப் பாதசரம், மச்சாள், சக்கரவாகம் மனிதக்குரங்கு போன்ற கதைகளில் காணலாம். ஆயினும் தம்பதிகளிடையே எழும் பிணக்கும், இறுதியில் ஆண்மை நெகிழ்ந்து, பெண்மைக்குப் புகலிடம் கொடுப்பதும் நளினமாக மென்மையான நடையில் உயிர்த்துடிப்புடன் விளங்குவது வெள்ளிப்பாதசரம், இக்கதை கு.ப.ராவின் ஷபுரியும் கதை| என்ற கதையின் தன்மையில் இலங்குகின்றது. ஷமச்சாள்| கிராமத்துப் பையனின் மன ஏக்கத்தினூடாக நகர மனப்பான்மை பெற்று வரும் கிராம வாழ்வின் பிறழ்வினை சிறப்பாகக் காட்டப்படுவது. இக்கதை சிறுகதையமைதியாலும், பொருளமைதியாலும் இலங்கையர் கோனுக்கு வெற்றியீட்டிக்கொடுத்து கதை எனக் கூறலாம். சிறப்பாக இலங்கையர் கோன் தனது எழுத்துக்களிலே ஈழத்துப் பாத்திரங்களை நடமாடவிட்டார். அவர்களது தொழிலை, பண்பாட்டை, மொழியை உலவவிட்டார். இதனாலேயே இவரது சிறுகதைகள் ஈழத்து இலக்கியப் பின்னணியில் துரவ நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கின்றன எனலாம்.

நாடகப் பண்பு
இவரின் சிறுகதைகள் பெரும்பாலும் மனவுணர்ச்சிகளையும், சம்பவங்களையும் உறையாடல் மூலம் நகர்த்திச் செல்வதாக அமைந்திருப்பதால், இவற்றில் நாடகப் பண்பு மிகுந்திருப்பதைக் காணலாம். இவரின் கதைகளில் சம்பவங்கள் நிறைந்திருக்கும். உரையாடல்கள் கதைகளுக்கேற்ப மண்டிக் கிடக்கும். இவ்விரு தன்மைகளிலும் இவரின் சிறுகதைகள் நாடகப்பண்பினை இயல்பாகவே பெற்று விடுகின்றன. சமூகக் கதைகளில் பேச்சுத் தமிழையும், வரலாற்று, புராணக் கதைகளில் இலக்கியத் தமிழையும் இவர் கையாண்டிருப்பதால் இவரின் சிறுகதைகள் சிறந்த நாடகங்களாக மாற்றக் கூடியதாக விளங்குகின்றன. ஏன்? அவரின் மணப் பரிசு என்ற சிறுகதையை கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி அவர்கள் முழு நேர நாடகமாக மாற்றி மாணவர்களைக் கொண்டு நடிப்பித்து கலைக்கழக பரிசிலையும் பெற்றுள்ளார் என்பதிலிருந்தே இவ்வுண்மையை நன்கறிய முடியும். ஆகவே, இவரின் கற்பனைச் செறிவும, தகுந்த சொற் பிரயோகமுமே இவரை சிறுகதையுலகிலிருந்து பிற்காலத்தில் நாடக உலகிற்கு வழி நடத்தியது எனலாம்.

முடிவுரை
இலங்கையர் கோனின் எழுத்துக்கள் ஈழத்துச் சிறுகதை உலகிற்கு முன்மாதிரியாகவும், அதேவேளையில் சிறுகதை வளர்ச்சியில் வித்தாகவும் விளங்கிவருவதை எவருமே மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

வஞ்சம்
ஷஇலங்கையர்கோன்|
ஷஷநீரில் பால் கலப்பது போல, கழியும் இரவின் மையிருளில் உதயத்தின் வெண்மை பரவிக்கொண்டிருந்தது. நிலத்தில் சிதறிக் கிடக்கும் இலைகளின்மேல் பலாமரங்கள் சொரியும் பனித்துளிகளின் ஏகதாள சப்தம் அவ் வைகறையின் நிசப்தத்திற்குப் பங்கம் விளைவித்தது. அப்பனித்துளிகளின் குளிர்ந்த ஸ்பரிசம்பட்ட மாத்திரத்தே, அருங் கோடையின் காய்ச்சலினால் உலர்ந்து முறுகிப் போய் இருந்த நிலம் ஒரு அற்புதமான மண் வாசனையைக் கக்கியது.

பலா மரத்தின் கிளை ஒன்றில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த புள்ளடியன் உறக்கம் கலைந்து, தன் வலப்புறச் சிறகிற்குள் புதைந்து கிடந்த தன் தலையை வெளியே இழுத்து சுற்றும் முற்றும் பார்த்தது. ஷஎன்ன, இரவின் கரும் போர்வ அகன்று விட்டதா? சரிதான், இந்தப் பனிக்குளிரில் நேரம் போவதே தெரியவில்லை...|

அந்த வைகறைப் பொழுது உயிர்த்த ஜீவசக்தி புள்ளடியனுடைய வக்கரித்த நரம்புகளிலும் பாய்ந்தது. அதற்கு உயிர் வாழ்வதில் ஒரு புது ஆசையையும் ஊக்கத்தையும் கொடுத்தது. உயிர் வாழ்வதே பெரிய இன்பம்! தினமும் வைகறையில் கண்விழித்து எப்பொழுதும் தன் உடலில் இன்னும் ஜீவன் குமறிக்கொண்டிருக்கிறது என்ற உணர்ச்சியே புள்ளடியனுக்கு புளகாங்கிதம் உண்டாக்கிற்று.

வாழ்க்கையில் என்ன குறை? எதற்காக ஏங்கி அழவேண்டும்? வாழ்க்கையின் கோர உருவம் புள்ளடியன் கண்களில் இதுவரை படவில்லை. அந்த கோர உருவத்திற்கு ஒரு உறுத்தும் வி~க் கொடுக்கு இருக்கிறதென்பது புள்ளடியனுக்கு இதுவரை தெரியாது.

ஏன் தெரியப் போகிறது? அதன் ஐந்து வருட வாழ்வுபூராவிலும் அது கவலைப்பட்டதில்லை. ஆசைகள் நிராசை ஆகவில்லை. வேண்டியதெல்லாம் வேண்டியபடியே கிடைத்து வந்தது. உண்பதற்கு சுறுசுறுப்பான நெல், கிளறுவதற்கு உயரமான குப்பைமேடு, சுகிப்பதற்கு நல்ல அழகான தடித்த பேடைகள்....!

புள்ளடியன் தன் இறகுகளை பட பட என்று அடித்து, தலையை உயரத் தூக்கி, பல நாளைய அனுபவத்தால் விளைந்த ஒரு அலட்சியத்தோடு, தன் பரம்பரைப் பல்லவியைப் பாடியது ஷஷகொக்கரக்கோ...ஓ...ஓ!.||

திடீரென்று அந்த வட்டாரமே சிலிர்த்துக்கனைத்துக்கொண்டு எழுந்தது போன்ற உரு பரபரப்புக் காணப்பட்டது. பனையோலைக் ஷஷகடகங்களை|| தலைமேல் சுமந்துகொண்டு பனங்காய் பொறுக்கப்போகும் சிறுவர் சிறுமியர்; கலபபை சகிதமாக உழவு மாடுகளை ஓட்டிக்கொண்டு வயலிற்குச் செல்லும் குடியானவன்; அழுக்கு மூட்டைகளைத் தோளில் சுமந்து கொண்டு குளக்கரை செல்லும் வண்ணான்.

பொழுது நன்றாக புலந்துவிட்டது. புள்ளடியனும் மற்றக் கோழிகளும் மரங்களை விட்டு இறங்கின.

அந்த வளவில் புள்ளடியன் ஒரு தனிநாயகன் மாதிரி. மகாராஜாக்களைப் போல புள்ளடியனுக்கு மோகமும் எல்லையற்று இருந்தது. பெண்பித்து மகாராஜாக்களுக்கு இருப்பது போலவே புள்ளடியனுக்கும் ஒரு பட்ட மகி~p இருந்தாள் - தூய வெள்ளை நிறம் பொருந்திய தடித்த ஒரு பேடை.

இந்தப் பேடையிடத்தில் புள்ளடியனுக்கு ஒரு தனிப்பிரேமை ஒரு தனி அருள, முட்டையிட்டு அடையாககும் நேரம் தவிர, மற்றப்படி இரண்டும் சதா ஒருமித்தே இருக்கும். புள்ளடியனுக்கு ஐந்து வயதாகிறது. முன்னிருந்த துடிதுடிப்பு இப்பொழுது இ;ல்லைத்தான். வீர்யமும் தளர்ந்துபோய் விட்டது. ஆனால் வெள்ளைப் பேடை மேலிருந்த மோகம் மட்டும் சிறிதும குறையவில்லை. அன்னியன் ஒருவனுடைய பார்வை பேடையின் மேல் விழுந்தால் - விழுந்துதான் பார்க்கட்டுமே!

அன்று காலையில்தான் அடுத்த வளவிற்கு ஒரு புதச் சேவல் வந்திருந்தது.

அதன் நிறமும் வெள்ளை. பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருந்தது. கழுத்தடியில் விரிந்து சடைத்த இறகுகள், பூம்பத்தல் போல் அகன்று பரந்த வால், தலையிலும் தாடையிலும் தெறித்துக் கொண்டிருந்த சூடுகள்! அதன் நடையிலே ஒரு ராஜகம்பீரம் தொனித்தது.

அதன் இளமை இப்பொழுதுதான் பூரண மலர்ச்சி பெற்றிருந்தது. அந்தப் பூரண மலர்ச்சி அதற்கு வேதனையை கொடுத்து அதன் கனவுகளையும் நினைவுகளையும் தேக்கிக் கொண்டு நின்ற ஆசை, பேடைக் குலம் முழுவதையுமே சுட்டெரித்து பஸ்மமாக்கி விடுவது போல் இருந்தது.

அன்று வந்ததும் வராததுமாக அது வேலியில் உள்ள துவாரத்தின் வழியாக மறுபுறம் எட்டிப் பார்த்தது. புள்ளடியனுடன் குப்பை கிளறிக் கொண்டிருந்த வெள்ளைப் பேடையைக் கண்டுவிட்டது.

இரண்டு நாளாகப் பட்டினி கிடந்தவன் அறுசுவை உண்டியைக் கண்டது போல் இருந்தது. அதற்கு, பேடையின் வாசனை என்பதே அறியாமல் ஒரு பகலும் இரவும் கோழிக்கார சாயபுலின் கூடைக்குள் அடைபட்டுக் கிடந்த பிறகு இந்த மனோகரமான காட்சி! ஆ! அதன் நரம்புகள் ஒவ்வொன்றும் விண்பூட்டி இழுப்பது போல் தெறிந்தன.

மறு கணம் வேலியைத் தாண்டி மறுபக்கத்தில் குதித்தது. அப்பொழுதுதான் வெள்ளைப் பேடை தனியாக இல்லை என்பது அதன் கண்களில் பட்டது. பேடையை அணுகிவிடவேண்டுமென்ற ஆசை தடைபட்டு அவ்விடத்திலேயே ஒரு ஏக்கப் பார்வையோடு நின்றுவிட்டது.

இந்த சச்சரவைக் கேட்ட வெள்ளைப் பேடும் குப்பை கிளறும் வேலையை நிறுத்திவிட்டு தலைநிமிர்ந்து பார்த்தது. கோழிக்குலத்தின் மன்மதன் போல் நின்றிருந்த புதச்சேவல் அவளுடைய மனதில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. யார் இது? புது ஆசாமி ஆனால் அதன் அழகு என்ன நிறம், என்ன கம்பீரம் எங்கிருந்து, எப்பொழுது, ஏன் வந்தான்?

அவள் இதுவரை புள்ளடியனுடைய தனி ஆட்சிக்கு உட்பட்டிருந்ததிற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அந்த வட்டாரத்தில் புள்ளடியனைத் தவிர வேறு சேவல் கிடையாது. ஷஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை| புள்ளடியன் மூப்படைந்து பலம் குன்றி இருந்தாலும் சேவல் சேவல்தான்!

ஆனால் இன்று அவளுடைய கனவுகளை வடித்து பிழிந்து எடுத்த ரூபம் போல் நின்றிருந்த புதுச் சேவலைக் கண்டதும் அவளுக்கு உண்மையாகவே தலை கிறுக்கிவிட்டது.

பேடையின் கவனம் கலைந்ததைக் கண்ட புள்ளடியன் தலை ஷநிமிர்ந்து பார்த்தது.!| ஆகா, அப்படியா சங்கதி

பேட்டையைக் கண்டிப்பதுபோல, புள்ளடியனும் ஒரு தரம் கொக்கரித்தது. அதன் அர்த்தம் புரிந்துகொண்ட பேடை, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து மறுபடி குப்பை கிளறும் வேலையி; ஈடுபட்டது.

இப்பொழுது ஆகக்கூடிய காரியம் ஒன்றுமில்லையென்று புதச் சேவலுக்கு பட்டுவிட்டது. ஷஷஇன்று மத்தியானம் எப்படியும் - || என்று நினைத்து வேறுபக்கமாகத் திரும்பி நடந்தது.

மத்தியான வெயில் யுகாந்த காலாக்கினி போல் எரிந்து கொண்டிருந்தது. தொலைவில் கானலின் என்ற மிதிப்பு மர ஏணிகள் காற்றில் சற்றே அசைந்தன.

கோழிகள் எல்லாம் உருமாதுள மரத்தின் கீழ் தம் இறகுகளை கோதிக்கொண்டு படுத்திருந்தன. அந்த உக்கிரமான வெயில் அவற்றின் பரபரப்பை அடக்கிவிட்டது.

புள்ளடியனுக்கு பலத்த யோசனை. ஷஷஅட இவன் எங்கிருந்து வந்தான்? யாரைத் தேடி?||

மயிர்ப்புழு ஒன்று மாதுளமரத்தின் கிளையொன்றில் இருந்து கொடி விட்டு, புள்ளடியனின் தலைக்கு மேலாக இறங்கிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட புள்ளடியன் லபக் என்று அதை தன் அலகுகளில் கௌவிக்கொண்டது. கிட்ட வந்ததை விட்டுவிட்டால்...

மறுபடியும் அந்த புதுச் சேவலைப்பற்றிய யோசனை. ஷஷகாத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போவதா? ஆனால் எங்கே வெள்ளைப் பேடை?|| புள்ளடியன் சுற்றுமுற்றும் பார்த்தது. அதைக் காணவில்லை. உடனே புள்ளடியனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. தூ! என்ன பெண்குலம் இப்படியுமா?

புள்ளடியன் வயதடைந்து உதவாக்கரையாகப் போய்விட்டது உண்மைதான். ஆனால் அதற்காக இப்படி நாட்டாற்றில் கைவிட்டு நேற்று முளைத்த அற்பனோடு-! போகிறாள். எப்படியும்
ஆனால்-
புள்ளடியன் விரைவாக எழுந்து குப்பை மேட்டை நோக்கி ஓட்டம் பிடித்தது. வெள்ளைப் பேடும் புதச் சேவலும் ஒன்றாக நின்று குப்பை கிளறின. அவை இரண்டினதும் போக்கிலும் ஒரு உல்லாசம், ஒரு திருப்தி, ஒரு ஆனந்தம் காணப்பட்டது? அவள் போகிறாள் எப்படியும். ஆனால் புள்ளடியனுடைய அவமதிக்கப்பட்ட ஆண்மை காப்பாற்றப்படவேண்டாமா? அதுவும் குல கோத்திரம் இல்லாத பதரினால்......

கணப் பொழுதில் மங்கல நிறமாக இருந்த புள்ளடியனுடைய சூடுகள் ஏத்தம் ஏறி செக்கச் செவேல் என்று சிவந்து விட்டது. அதன் கழுத்தில் இருந்த ரோமங்கள் குத்திட்டு நின்றன. சிறகுகளைப் பலமாக அடித்துக் கொண்டு ஒரு பயங்கரமான கொக்கரிப்போடு புதச் சேவலை நோக்கிப் பாய்ந்தது. புதச்சேவலும் தயாராகவே நின்றது.

புள்ளடியன் விட்டுக் கொடுக்கவல்லை. ஷஷஉயிர் போனால் போகட்டும்.||

திடீரென்று புள்ளடியனுக்கு உலகம் எல்லாம் இருண்டு போனது போல் காணப்பட்டது. ஒன்றும் தெரியவில்லை தன் கழுத்திலும் முகத்திலும் வேகமாக விழும் கூர்மையான கொத்துகள் தான் அதற்குத் தெரிந்தது-

மறுகணம் அதை யாரோ கைகளால் தூக்கி எடுப்பது போல் இருந்தது. தன் எஜமானனான கமக்காரரின் கைகள்தான்! எஜமானுடைய குரல் இரக்கத்தினால் குழைந்து இருந்தது.

ஷஷஅட சீ! இந்த கிழட்டு வயதிலும் கூட உனக்கு பொம்பிளை ஆசை விடவில்லையே. வீணாகச் சண்டை பிடிச்சு உன் கண்களைக் கெடுத்து விட்டாயே. நீ தான் என்ன செய்வாய், பாவம்! அவள் கொழுத்த குமரி - தூ!||


ஈழத்துச் சிறுகதைமணிகள்
3 ஷசம்பந்தன்|

சிறுகதை மூலர்
ஷசிறுகதை உலகம் எல்லை சொல்ல முடியாதளவிற்கு வளர்ந்துவிட்டது. வளர்ந்து கொண்டிருக்கிறது| 1 எனக் கூறும் க. தி. சம்பந்தன் அவர்கள் ஈழத்துச் சிறுகதை மூலர்களில் முக்கியமானவர். ஈழத்துச் சிறுகதைகளில் உருவமும், உள்ளடக்கமும், அழகாகவும், ஆழமாகவும் அமைவதற்கு சம்பந்தன் அவர்களின் ஆரம்பகால சிறுகதைகள் வழிபோலின எனலாம். இவரின் கதைகளில் எக்காலத்திற்கும் பொருந்துவதான மனிதன் அடிப்படைப் பண்புகள் அழகிய உருவில் எழுந்திருப்பதால், இவரின் இலக்கியப்பாதை செம்மையானதாகவும், தனித்துவமாகதாகவும் அக்காலத்திலேயே விளங்கியமை குறிப்பிடத்தக்கது. இதனாற்றான், ஆரம்பகாலச் சிறுகதை எழுத்தாளர்களான சி. வைத்தியலிங்கம், ஷஇலங்கையர்கோன்| போன்றவர்களிலிருந்து இவரைப் பிரித்து ஆராயவேண்டியுளது. மனித உணர்வுகளையும், மன அசைவுகளையும் மனோதத்துவ அறவியற்றுறையில் அணுகி, அவற்றின் சிறப்புக்களைக் கலையாக்கிய பெருமை இவருக்குண்டு. அத்துடன் இவரைப்போல அக்கால எழுத்தாளர்கள் மனவலைகளிடையே தமது இலக்கிய யாத்திரைகளை ஒரு பலமாகக் கொண்டு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு தனித்துவம் மிக்க சம்பந்தன் அவர்கள், தற்போது சிறுகதையுலகைவிட்டு விலகி-ஏன் கதை உலகினின்றும் விலகி-கவிதை உலகில் பிரவேசித்திருப்பதால், தற்போதைய வாசகர்கள் இவரை நன்கறிந்திலர். அத்துடன் இவரின் சிறுகதைகள் ஒரு கோவையாகவேனும் தொகுக்கப்பட்டு வெளிவராமையால், இவரைப்பற்றிய இலக்கிய எடைபோடுதலில் ஈழத்து இலக்கிய விமர்சகர்கள் பெரிதும் இடர்ப்படுகின்றர். இந்த அவல நிலையை உணர்ந்து, செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் ஆகியோர் மிக முனைந்து இவரின் சிறுகதைகள் ஐந்தினைத் தேடிப் பெற்று. 1967ஆம் ஆண்டு விவேகி ஷசம்பந்தர் சிறுகதை மலர்| ஒன்றினை வெளியிட்டனராயினும், அம்முயற்சி பூரணமாகச் சம்பந்தரைப் புரிந்து கொள்ளப் போதுமானதன்று. அறிந்து கொள்ள மட்டுமே பயன்பட்டிருக்கும்.

இக்காலத்தில் இவர் தொடர்ந்து எழுதாமையால், இவரின் எழுத்தையோ, அதன் வளர்ச்சிப் போக்கையோ நம்மால் அளவிடமுடியாதவாறு உளது. இதுபற்றிச் ஷசம்பந்தன்| கூறுவது வியப்பாகவும், அதேவேளையில் சிந்திக்க வைப்பதாகவும் உளது.

ஷஎழுத்துலகு நானறிந்த வரையில் மிக ஆழமானது. எல்லையற்ற உயரமும், விசாலமுமுடையது. என்னால் அதன் தன்மைகளைக் கட்டுப்படுத்தி நிதானிக்க முடியவில்லை2|

இலக்கியக் கொள்கை
சம்பந்தன் அவர்களுக்கு இலக்கியம் பற்றி அன்றும், இன்றும் ஒரே கொள்கையே உறுதியாக நிலவி வருவதை அன்றைய எழுத்துக்களாலும், இன்றைய கவிதை, கட்டுரை முயற்சிகளாலும் நன்கு தெரியவருகின்றது. இலக்கியத்தின் பண்பும் பயனும் பற்றி மிக உயர்வாகக் கருதி வருகின்றாராதலின் இலக்கியத்தின் பண்பினைப்பற்றி நன்பு தெரியாமல் எழுதுகின்றவர்கள் மேல் அவர் மனம் கசப்படைகின்றது.

ஷசமுதாயத்தின் உயிர் நிலையைக் காப்பாற்றி வளர்த்த - வளர்க்கின்ற, வளர்க்கும் கலையே இலக்கியம். வாழ வேண்டும் என்பது சமுதாயத்திற்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவிற்கு சமுதாயத்தை வாழ்விக்கும் இலக்கியம் அவசியமாகும்3.| எனக் கருதும் இவர், இத்தகைய பொறுப்பு வாய்ந்த இலக்கியத்தைப் படைப்பவர்கள் மிகவும் தெளிந்த மனமுடையோராகவும், சான்றோர்களாகவும் அறிவு மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதனை வற்புறுத்திக் கூறுகிறார். ஷசமுதாயத்தின் காப்பாளர்களான சான்றோர்களே இலக்கியஞ் செய்தவர்கள். மதிப்பற்ற அவர்கள் பணி கேவலம் பொழுது போக்காக அமைவதில்லை4| என்ற இவரின் கருத்து - கலை கலைக்காகவா (யுசவ கழச யசவள ளயமந) அன்றி வாழ்க்கைக்காகவா?- என்ற பிரச்சினைக்கு விளக்கமாக அமைவதுடன், இவரின் கதைகள் எத்தகைய நோக்கில் அணுகவேண்டும் என்பதற்கு ஒரு விளக்கவுரையாகவும் அமைகின்றது.

முதற் பூ
இவரின் முதற்படைப்பான ஷதாராபாய்| 1938ஆம் ஆண்டில் ஷகலைமகள்| பத்திரிகையில் வெளியாகியது. இக்கதை பாரதநாட்டின் இந்து முஸ்லீம் இனக்கலவரத்தை அடிப்படையாகக்கொண்டு, இரு உள்ளங்களின் மனப்போராட்டத்தைச் சித்தரிப்பது. இந்தக் கதையே இவரின் இலக்கியப்பயணம் ஒரு புதிய பாதையில் தொடங்குகிறது என்பதனைக் காட்டி நிற்கிறது, இந்த எழுத்தைத் தொடர்ந்துவெளியான கதைகளில் காலதேசவர்த்தமானங்களைக் கடந்த சர்வதேசியச் சூழலில், வாழ்விற்கு அத்தியாவசியமான பொதுமானிடப் பண்புகள் அழகிய உருவகங்களாக, வெளிவருதலைக் காணலாம். இது இவரின் கதைகளில் குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும்.

இலக்கியத் தூண்டுகோல்
வாழ்க்கைத் தாக்கங்களின் தூண்டுதல்களாலோ, அன்றி சமூக முன்னேற்ற விளைவு கருதியோ இவர் பேனாவை எடுக்கவில்லை. இளமையிலேயே தமிழிலக்கியங்களிலும், வடமொழி இலக்கியங்களிலும் இவருக்கிருந்த ஈடுபாடு இவரை ஒரு இரசனை மிக்க வாசகனாக்கியது. அந்த வாசக இரசனை நிலையை தாமும்- தாம் வாசித்தவை போன்ற நயமிக்க படைப்புக்களை எழுதவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விட்டனவாயினும், அதனைச் சுடர்விட்டெரியச் செய்த சம்பவம் ஈழத்து இலக்கியப் பிரியர்களுக்கு மிக்க மகிழ்வூட்டுவதாகும். ஆனந்த விகடன் பத்திரிகை அக்காலத்தில் தன் பத்திரிகையில் வெளியான ஷஆனந்த மடம்| என்ற நாவலுக்கான விமர்சனப் பொடடி ஒன்றை நடாத்தியது. அப்போட்டியில் பங்குபற்றி, தல் பரிசைப் பெற்று ஈழத்தின் இலக்கிய உணர்வைத் தமிழகத்திற்கும் கொடிபரப்பினார் பண்டிதர் பொ. கிரு~;ணபிள்ளை அவர்கள். இவர் பெற்ற இப்பரிசு நேரடியான இலக்கியத் தாக்கத்தை ஈழத்து எழுத்தாளர்களிடையே எழுப்பிவிட்டது. பண்டிதர் பொ. கிரு~;ணபிள்ளை பெற்ற பரிசால் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் அடைந்த ஷசம்பந்தன்ஷ எழுதுவதில் தனி அக்கறைகாட்டலாயினார். அத்துடன் இவரின் சிறந்த நண்பர்களாக காலஞ்சென்ற இலங்கையர்கோன், திரு. சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், பண்டிதர் பொ. கிரு~;ணபிள்ளை ஆகியோர் அமையவே, இவரின் எழுத்து இலக்கியச் சிறப்புக்களையும் மேன்மையையும் அடையலாயிற்று.

ஆயினும், இவரால் தன் எழுத்துப் பிறக்கும் விதம்பற்றி எதுவும் கூறமுடியவில்லை. ஷகதை எழுத என்னைத் தூண்டியது எதுவென்று என்னால் கூறமுடியவில்லை... ஆனால் கற்பனை வரும்போது எழுத ஆசை வரும் 5| என்கிறார். இவரது கற்பனையைச் சாதாரண மூன்றாந்தர எழுத்தாளனின் கற்பனையுடன் ஒப்பிடமுடியாது. ஏனெனில் இவரின் கதைகளைப் படிக்கும்போது சுத்தமனத்துடன் கூடிய ஆத்ம பலத்தின் தவமே அது எனக் கண்டு கொள்ளலாம்.

ஆயினும், இவரின் கதைகளில் சூழல் உலகப் பொதுமையை உணர்த்த கதாபாத்திரங்களின் பெயர்களோ பாரதப்பண்பினை உணர்த்துகின்ன. இதற்கு எந்தவித விசேட அர்த்தமும் கூறமுடியாது. இக்கதைகள் பெரும்பாலான கலைமகள், கிராம ஊழியன் என்ற தென்னிந்தியப் பத்திரிகைகளின் பிரசுரங்களுக்கென எழுதியதாலிருக்கலாம்.


கதைச் சிற்பங்கள்
1938ஆம் ஆண்டளவில் எழுதவாரம்பித்த இவர், இன்றுவரை ஏறக்குறைய இருபது கதைகள் வரையெ எழுதியுள்ளார். இவரின் கதைகள் கலைமகள், கிராமஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகிய பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.

தாராபாய், வீதி, புத்தரின் கண்கள், கூண்டுக்கிளி, தூமகேது, மகால~;மி, மனித வாழ்க்கை சபலம், மனிதன், சலனம், மதம், துறவு - ஆகிய கதைகள் ஷகலைமகளி|லும் அவள், இரண்டு ஊர்வலங்கள், ஆகியன ஷமறுமலர்ச்சி| இதழ்களிலும், அவன் கிராம ஊழியனிலும், கலாN~த்திரம் - ஈழகேசரி ஆண்டு மலரிலும் வெளியாகியுள்ளன.

கலைமகளில் வெளியான - விதி என்ற கதை அல்லையன்ஸ் கம்பனியார் வெளியிட்ட ஷகதைக்கோவை|யில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உணர்ச்சிக் கதைகள்
இவரின் கதைகள் பெரும்பாலும் சமூக்கதைகளே. ஷபுத்தரின் கண்கள்| ஒன்றுமட்டும் ஈழவரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரீ சங்கபோதி மன்னன் கண்ணிழந்த கதையை; கூறுவது. தாராபாய் - இந்து முஸ்லீம் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டவகையில் அதுவும் வரலாற்றுக் கதையாகக் கதையாகக் கொணடாடப்படவேண்டியதுதான். இத்தகைய ஈழவரலாற்றுக் கதைகளை எழுதுவது. 1938ஆம் ஆண்டளவுகளில் ஈழத்து எழுத்தார்களிடையே பெருவழக்காக இருந்தது. ஆயினும், இவர் ஒரே கதையுடன் தனது ஈழவரலாற்றுச் சிறுகதை முயற்சிகளை நிறுத்திக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய கதைகள் அனைத்திலும் மனித மனங்களின் சலனங்கள், சபலங்கள், எண்ண உணர்வுகள், ஏக்கச் சுழிப்புகள் என்பன வட்டமிடுகின்றன. நீர்க்குமிழிகளாய் பெருகிப் பெருகி உடைந்து வழிகின்றன. அவற்றில் அpவின், அநித்தியத்தின் - உயிரின், உண்மைப் பொருளின் உயிர்ப்பொருட்கள் குமிழ்த்து எழுகின்றன. உண்மையின் உயிர்நாடிகள் நாற்சுவையும் பயப்பக்காவியமாக மலகின்றன. சிறுகதைகளிலே காவியச் சுவையையும், கனத்தையும் கொண்டுவந்த பெருமை இவருக்குரியது. சிறுகதைதானே எனப்பொழுதுபோக்காகவோ, படித்துவிட்டு விட்டெறியவோ முடியாத கதைகள் - இவருடையவை.

இவரின் கதைகள் பல - பல்வகையான ஏக்கங்களைச் சித்தரிப்பவை. ஆனால் இவ் ஏக்கங்களுக்கு இவர் தீர்வுகாணும் முறையே இவரை உயர்ந்த இடத்தில் வைத்தெண்ணச் செய்கின்றது. மனித மனத்தின் ஏக்கங்கள், நிறைவேறாத ஆசைகள் யாவும் முதலிலே பலவீனப்பட்டு அங்கலாய்த்தாலும். அவையாவும் தத்துவ நெறியில், சத்திய வழியில் சென்று அமைதி காண்கின்றன. மனித உணர்ச்சிகளைப் புனிதமாகப் போற்றி அவற்றிற்கும் ஒரு புனிதமான இடத்தைக் கொடுப்பவை இவரின் கதைகள், மானிட வாழ்வில் பலவீன உணர்ச்சிகள் தாமே அதிகம். ஆதலால் பலவீனத்தின் பரிதான முடிவுகளைக் காட்டுதலே உண்மையான இலக்கியத்தின் பண்பு எனக் கருதுபவர்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றார். என்னதான் பலவீனமாக இருந்தாலும் - அறிவுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஏற்படும் போராட்டத்தில் அறிவே வெற்றி பெறும் - பெறவேண்டும் என்ற அவாவினை இவரது கதைகளில் காணமுடியும்.

மேலும், மனதில் மேற்தளத்தில் நிகழும் உணர்ச்சிகளை மட்டுமல்லாமல், அடிமனதில் ஆழ்ந்து உறங்கிக் கிடந்து, அவ்வப்போது எழும் அதிர்ச்சிகளால் உள்ளோட்டமாகத் தொழிற்படும் மனவலைகளின் பாதிப்புக்களையும் இவரது கதைகள் சித்தரிக்கின்றன. இவரின் காலகட்ட எழுத்தாளர்களில் இத்தகைய படைப்புக்களை வெளியிட்டவர் இவர் ஒருவரே என்பது அவதானிக்கத்தக்கது.

இவரின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவார்த்த உருவகங்களாகவே பிரதிபலிக்கின்றன. மானிடவாழ்வும், பிரபஞ்ச பூத இயக்கங்களும், அவற்றிடையே நிகழும் தொடர்புகளும், தொடர்பின்மை போன்ற மயக்கங்களும் இவரின் கதைகளிலே கதாபாத்திரங்கள் மூலம் அலசப்படும். இவ் அலசலில் எழும் மனவோட்டங்களிலே தத்துவ விசாரம் ஒரு நெறியாக வகுக்கப்பட்டிருக்கும். அந்த நெறியினூடே தனி மனிதனின் செயலற்ற தன்மையும், பிரபஞ்ச வாழ்வில் அவன் ஒரு அங்கமேயெரிய, அவனை பிரபஞ்சம் என எண்ணும் போலி மயக்க நீக்கவுணர்வும் அழகுறச் சித்தரிக்கப்பட்டிருக்கும். பொதுவில் எல்லாக்கதைகளும் கூறும் பொருள் இதுதான்.

பூரணத்துவம்தான் வாழ்க்கை. பூரணத்துவம் அற்ற எதுவும் வாழ்க்கையல்ல. பூரணத்துவத்தைப் பெற முயலுகின்ற போராட்டமே யதார்த்தம். ஆனால் அந்த யதார்த்தம்தான் வாழ்க்கையல்ல. போராட்டத்தின் பயனுள்ள முடிவே வாழ்க்கை.


சிறுகதை உருவம்
இவரின் சிறுகதைகள் யாவும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோட்டிற்குள் வரையறை செய்யப்பட்டது போன்று, அழகாகவும் ஆழமாகவும் அமைந்துள்ளன. இந்த எல்லைப்பண்பு இவரின் கதைகளில் மிகச் சிறப்பாக விளங்கி, சிறுகதையின் அளவிற்கும், உருவிற்கும் ஒரு அர்த்தமான படிமத்தன்மையை விளக்குகின்றன. சமூகக் கதைகளிலாயினும், வரலாற்றுக் கதைகளிலாயினும் இவர் இந்த முறையைக் கையாளத் தவறவில்லை.

பல சம்பவங்களையோ, சிறுகதையின் செட்டான, இறுக்கமான உருவங்களை இவர் சிதைக்காமை குறிப்பிடக்கூடியதொன்று. ஒரு உணர்ச்சியையோ, சம்பவத்தையோ சித்தரிக்கும் முறையில் - பனித்துளியில் தென்படும் வானம் போன்ற கனத்தையும், உருவத்தையும் வெளிப்படுத்திவிடுகின்றார். சிறுகதையின் உருவம் பற்றிய இலக்கணம் இன்னும் வரையறை செய்யப்படாதபோதிலும் (ஒரு காலத்திலும் முடியாதவொன்று) படித்து முடித்ததும் சிறுகதை உருவம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற மனவுணர்வினை இவரின் சிறுகதை உருவங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. ஆயினும், இவர் உருவத்தைத் திட்டமிட்டு எழுதுவதில்லை. எழுதி வரும் போதே அதன் உருவமும் வளர்ந்துவிடும் 6. என்கிறார்.


உரிப்பொருள்
இலக்கியத்தில் சூழல் முக்கியத்துவத்தை விட, உரிப்பொருள் முக்கியத்துவமே இருக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் இவர் எழுதியிருக்கிறார். உரிப்பொருள் என்ற சொல்லப்படுகின்ற நற்பண்பு, ஒழுக்கம் என்பனவே இலக்கியத்தில் சித்தரிக்கப்படவேண்டும். அதன் மூலம் பண்பாடு, வாய்மை முதலிய நல்லொழுக்ங்களை வாசகர் மனதில் ஏற்படுத்தவேண்டும் - என்ற அவாவின் துடிப்பினையே இவரின் எழுத்துக்கள் வெளியிடுகின்றன.

இவரின் இலக்கிய நண்பர்களான இலங்கையர் கோன். சி. வைத்தியலிங்கம் போன்றோர் யதார்த்த ரீதியாக கதைகளை எழுதியிருக்க இவர் அப்படி எழுதாததுடன், அது பற்றிய தனது கருத்தை வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார். ஷயதார்த்தச் சித்தரிப்பால் நமது மனம் தூய்மையடைவதற்குப் பதிலாக, மேலும் மோசமடைகின்றது. யதார்த்தம் என்பது பைத்தியக்காரத்தனம். இத்தகைய யதார்த்தப் பண்பில் எழும் தேசிய இலக்கியங்கள் - சர்வதேசிய இலக்கியங்கட்கு ஒவ்வாதது - தேவையில்லாதது 7ஷ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மரபு
இவர் பண்டைய, குரு சீட முறையைப் பொன்று கல்வி கற்றதினாலும், பண்டைய, தமிழ், வடமொழி இலக்கியங்களை ஆழ்ந்து படித்து வந்தமையாலும், மரபு ரீதியாக இலக்கியம் எழுதுவதையே விரும்புகிறார். மரபுவழி எழும் இலக்கியமே நீடித்து மக்கட்கு பயன் தரும் என்ற நம்பிக்கையை இவரின் எழுத்துக்களில் காணமுடிகிறது. எந்தவொரு கதையிலும் மரபுக் கொள்கையை, உருவத்திலாயினும் உள்ளடக்கத்திலாயினும் இவர் மீறவில்லை என்பதனை ஒவ்வொரு கதைகளும் உணர்த்தி நிற்கின்றன. ஷமரபு என்பது ஒழுக்க நெறி: சான்றோர் வகுத்த பாதை8| என்று கூறும் போது, இலக்கியம் என்பது சான்றோர் வகுத்த தோட்டத்தில் முகிழ்க்கும் புத்தம் புதிய பூசனைக்குரிய மலர் எனப் போற்றுகிறார் என்பது புலனாகின்றது.

உரைநடை
உரைநடையிலும் இவரது கொள்கையைக் காணமுடிகிறது. இவரது உரை நடை எளிமையும், அழகும் நிறைந்தவை. காவியச் சுவை கொண்டவை. கற்பனை வளமிக்கவை. ஒவ்வொரு சொற்களும் தேவை கருதி பொருத்தமான இடங்களில் அழகாகக் கோவை செய்யப்பட்டுள்ளன. இவரின் உடை நடையே மனதில் என்னவென்று புரியாத, ஒரு வித மனக் கிளர்ச்சியை எழுப்பிவிடுகின்றன. எல்லாவற்றிறகும் மேலாக இலக்கணவழுவற்றவை என்பது குறிபபிடத்தக்கது. காரணம் இவர் முறையாகத் தமிழ் கற்ற தமிழ் ஆசிரியர் என்பதால் இருக்கலாம்.

ஷசிரமமின்றி வசனமெழுதுகின்ற ஆற்றல், - நாவலர் பெருமானுடைய நூல்களாலும், பழைய உரையாசிரியர்களின் வசனங்களில் பழகி இருந்ததாலும் எனக்கு ஒருவாறு வந்துள்ளது. வசனங்கள், பிரயோகிக்கும் சொற்கள் சம்பந்தமாக என்னை நாளே திருப்திப்படுத்துவது என்னளவில் எப்போதும் பெரிய பிரச்சினையாக இருந்தது - இருக்கிறது. எழுதி முடித்ததைப் பிறகு பல தடவை திருப்பித்திருப்பி எழுதுவேன் 9| - என்பதிலிருந்து இவரின் உரைநடைக்குரிய சிறப்பின் காரணத்தை நன்கறியலாம்.

அத்துடன், இவரின் உரைநடையிலே அதிகமாக இல்லாவிடினும், வடமொழிப் பிரயோகத்தையும் காணமுடிகின்றது. இதற்கு இவரின் வடமொழிப் பயிற்சி காரணமாயினும், அக்கால ஏனைய எழுத்தாளரைவிட, இவரின் எழுத்துக்களில் வடமொழிச்சொற்கள் ஓரளவு குறைவாகவே காணப்படுகின்றன. எழுத்தில் புனிதமான கொள்கையைக் கடைப்பிடிக்கும் இவர் இதற்கும் பதில் வைத்திருக்கிறார். ஷவடமொழியோ, தென்மொழியோ உணர்ச்சிகளைப் புலப்படுத்தும்போது ஒதுங்கி நிற்கக்கூடாது. 10|

தனித்துவம்
சிலர், இவரின் கதைகள் சிலவற்றைப் படித்துவிட்டு லா.ச. ராமாமிர்தம், மௌனி போன்றோரின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர். அதனாற்றான் அவர்களைப்போல் எழுதுகின்றார் என்ற தவறான கருத்துக்கு வந்துவிடுகின்றனர். இது முற்றிலும் தவறானது என்பதுடன், உண்மைக்கும் மாறானது என்பதனைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

மணிக்கொடிப் பத்திரிகையில் மௌனியின் எழுத்துக்கள் பிரசுரமாவதற்கு முன்னரே, ஏன் லா.ச. ராமாமிர்தம் எழுத ஆரம்பிக்கு முன்னரே, ஈழநாட்டுச் சம்பந்தன் தமது முறையிலே கதைகளை எழுத ஆரம்பித்துவிட்டார் என்பதுடன், அதிகமான கதைகளை அப்போதுதான் எழுதினார் என்பதனை நன்கு கவனிக்கவேண்டும். அதாவது - லா.ச. ரா. மௌனி ஆகியோருக்குக் காலத்தின் முற்பட்டவர் சம்பந்தன் என்பதிலிருந்து இவரின் தனித்துவப் பெருமையும், சிறப்பும் வெளியாகின்றது. இவர் எழுத ஆரம்பித்த காலத்திலேயே - உயர்ந்த சிறந்த இலக்கியப் படைப்புகள் எத்தகையதாக இருக்கும், இருக்கவேண்டும் என்பதனை நன்கு புரிந்திருந்தார் என்றே கருதவேண்டியுள்ளது.

இலக்கியக் கோயில்
இன்று, இவர் சிறுகதை உலகிலிருந்து விலகியிருந்தாலும் இவரின் இலக்கியப்பணி ஈழத்துச் சிறுகதை உலகிற்கு நம்பிக்கையூட்டும் - நம்பிக்கையூட்டியதொன்றாகவே இருந்து வருகின்றது. மக்கள் மனதில் நல்லெண்ணத்தை வளர்ப்பதே இலக்கியத்தின் பணி எனக் கூறும் இவர்-- பிரச்சார நோக்கில் எழும் இலக்கியங்களையும், இலக்கியத்தில் புரட்சி என்றெழும் முயற்சிகளையும் மனமார வெறுக்கின்றார்.

இலக்கியத்திலும் புரட்சியாம். அஃதாவது சத்தியத்தில் புரட்சி இலக்கியம் சத்திய நெறிப்படுத்வது, சத்தியமாகிய பண்புகள் பிரதிட்டை செய்யப்பட்ட கோயில். அதில் புரட்சி முடியாது. முடிந்தால் அது இலக்கியமல்ல: வேறு ஏதொ ஒன்று 11| - இதன் மூலமே, சம்பந்தன் அவர்களின் எழுத்துக்களின் தன்மையை எளிதில் உணர்ந்து கொள்ளமுடிகிறது.

1 செம்பியன் செல்வனின் ஷஅமைதியின் இறகுகள்| - சிறுகதைத் தொகுதியின் கருத்துரையில்

2,5,6,9 எழுத்துலகில் நான் - சம்பந்தன் - கலைச்செல்வி - ஆண்டு மலர் - 1959

3,4,8,11 இலக்கியம் - சம்பந்தன் - விவேகி - பொங்கல் மலர் - 1967

7,10 ஷசெம்பியன் செல்வன் - சம்பந்தன்| பேட்டி - 1967

துறவிலும் பற்று உண்டாகிறது. அதை மாற்றுவது எத்தனை அரிய செயல்!

துறவு
ஷசம்பந்தன்|
அவர் நிமிர்ந்திருந்தார். அவருக்குப் பின்புறமாகச் சற்று விலகி அந்தப் பாலசந்நியாசி உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் நின்ற ஆலமரம் வானத்த மறைப்பது போல எங்கும் பரந்து வளர்ந்து கடந்தது. சற்றுத் தொலைவில், அவர்களுக்கு எதிரில் நெருப்பு ஒரு மனித உடலைக் கழுவித் துடைத்து உண்டுகொண்டிருந்தது. அப்படி எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஒளி வெகுதூரம் வரைக்கும் இருளைத் துரத்தி விரட்டியது. பிரமாண்டமான அந்த ஆலின் விழுதுகளின் நிழலும் அடிமரத்தின் நிழலும் பூதாகரமாக எதிர்த்திசையில் படுத்துக்கிடந்தன.

இரண்டொரு நடை கணட பெரியவரின் கம்பீரமான முகமும், அடர்ந்த கறுத்த ரோமங்கள் பிரகாசிக்கும் இளைவரின் ஒளி நிறைந்த முகமும் தெளிவாகத் தெரிந்தன. பெரியர் கண்களைப் பாதி மூடியபடி இருந்தார். மற்றவரோ அகல விழித்தபடி எதையோ கவனித்துக்கொண்டிருந்தார்.

எங்கும் மனிதனால் பெரிதும் அஞ்சி வெறுக்கப்படுகிற, கடைசியில் அவனுக்கு அடைக்கலம் தந்து ஆறதல் செய்கிற, இடம் அது வேறு வகையில் - அளவில் - நிலையில் இன்பதுன்பங்களை மாறி மாறி அநுபவித்த தசை நரம்பு எலும்பு முதலிய எல்லாமே துகளாகி அந்த மண்ணின் உருவை ஏற்றுக்கொண்டு தாமும் அதுவாகி ஐக்கியமாகிவிட்டன.

ஒரு காலத்தில் யாரே இரண்டு பகையரசர்களின் படைகள் ஒன்றோடு ஒன்று மோதி நிர்மூலமான இடமும் அதுதானாம். அகால வேளைகளில் குதிரைகள் ஓடுகிற கனைக்கிற சத்தங்கள், யானைகள் பிளிறுகிற பேரொலிகள், வெட்டு குத்து கொல்லு என்ற இரக்கமற்ற குரல்கள், வேதன தோய்ந்த மரண தாகததில் எழுகிற சோகமயமான ஓலங்கள் எல்லாம் கலந்து கேட்கும் என்று சொல்லுகிறார்கள்.

அது மயானம்; இடுகாடும் சேர்ந்த மயானம். பேய்கள் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழும் இடம். எங்கே திரும்பினாலும் நிர்மானு~யத்தின் சுவடுகள் தெரிந்தன.

பெரியவர் கண்களைத் திறந்து உற்றுப் பார்த்தார். எதிரில் அந்த உடல் கருகிச் சுரண்டு வெழத்து எரிந்து கொண்டிருந்தது. தீக்கொழுந்து எழுந்தும் அடங்கியும் வளைந்து நெளிந்தும் வேறு வேறு திசைகளில் குதித்தும் காற்றுடன் சேர்ந்து தானும் விளையாடியது.

திடீரென்று மேலே உறங்கிக் கிடந்த பறவைகளின் அவலக்குரல்கள் எழுந்தன. கூகை உன்று, எங்கிருந்தோ வந்து கொத்தியும் கிழித்தும் அவற்றைக் கொன்று தள்ளியது. அபாயத்தை எதிர்பார்த்திராத அந்த ஏழைப் பறவைகள் செயலற்று உவ்வொன்றாக கீழே விழுந்தன. யமனாகி வந்த கூகை அங்கிருந்து பறந்து சென்ற பிறகும், nகு நேரம் வரைக்கும் அந்தப் பறவைகளின் துன்பக் குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.

நடுநிசி ஆகிவிட்டது. அதுவரை ஓங்கி எரிந்த நெருப்பு மெல்ல மெல்ல அடங்கித் தழலுருவாயிற்று. மறுபடியும் சப்த நாடிகளையும் ஒடுங்கச் செய்யும் அந்தப் பேயமைதி சுற்றிலும் இருள் இருளை விழுங்கி அதையே உமிழ ஆரம்பித்தது.

பெரியவர் திரும்பிப் பின்னால் உட்கார்ந்திருந்த இளந்துறியின் முகத்தைப் பார்த்தார். அவருக்கே அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த வைராக்கிய புரு~னின் குழந்தை முகம் எதிரில் கிடந்த தழல் போல என்றும் இல்லாத ஒளியுடன் விளங்கியது.

ஷஷகுழந்தாய்!|| என்று அவர் தம்மை மறந்து கூப்பிட்டார்.

இளையவர் எழுந்து முன்னால் வந்தார். பெரியவர் கேட்டார். ஷஷஇங்கே எதைக் காண்கிறாய்.||

சிறிது தாமதித்தே பதில் வந்தது! ஷஷகால ருத்திரனது நர்த்தனத்தையே காண்கிறேன் சுவாமி.||

கேட்டவர் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு ஷஷஇனிப் புறப்படுவோம்|| என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். குற்றுயிராய்க் கிடந்த ஏதொ ஒரு பறவையைச் சர்ப்பம் ஒன்று சிரமப்பட்டு விழுங்கியபடியே நகர்ந்து வழி விட்டது.
2

கிழக்கிலிருந்து வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்றார்கள். பெரியவர் முன்னாகவே நடந்தார். எங்கும் வளர்ந்து கிடந்த நாணல்கள் அவர்களின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு மீண்டன. பாதையோ வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. இளையவர் அடிக்கடி வானத்தைப் பார்த்துக்கொண்டே நடந்தார். அது நிர்மலமாகி ஞானிகளின் மனம்போலத் தெளிந்திருந்தது. கொஞ்சத் தூரம் சென்றதும் பெரியவர் திரும்பி நின்று. ஷஷஅப்பனே, உனக்குத் தூக்கம் வரவில்லையா?|| என்று கேட்டார்.

ஷஷஇப்பொழுது இல்லை, சுவாமி.||

ஷஷபசி?||

ஷஷஅதுவும் இல்லை||

மறுபடியும் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். இரண்டு நாழிகைத் தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை அகன்ற ஒரு சாலையில் போய் முடிந்தது. அந்தச் சாலையின் ஓரங்களில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. இடையிடையே மாளிகைகள் போன்ற வீடுகளுந் தெரிந்தன.

அவர்கள் நிற்காமலே தொடர்ந்து நடந்தார்கள். ஷஇது எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்? என்ற விசாரம் அவர்களைத் தொடவில்லை. மேலும் சில நாழிகைத்தூரம் நடந்து சென்றார்கள். திடீரென்று பெரியவர் வழியை விட்டு இறங்கி ஒரு வீட்டின் முன்புறத்திலே மரம் ஒன்றைச் சுற்றிக் கட்டியிருந்த மேடையை அடைந்து படுத்துக் கொண்டார். மற்றவரும் அவரைத் தொடர்ந்து சென்று அவரது காலடியில் சரிந்தார்.

புலருவதன் முன் இளையவர் எழுந்து உட்கார்ந்தார். மிகச் சமீபமாக யாரோ ஒரு பெண் நிற்பதைக் கண்டதும் அவர் நன்றாக ஊன்றிப் பார்த்தார். வகறையின் மங்கிய ஒளியிலே அவளது தோற்றம் யாரோ ஒரு அணங்கு நிற்பது போல இருந்தது. பிரபஞ்சத்தின் எந்த விசாரமுமே அணுகாத அவரது உள்ளத்தில் அது பெரிய ஆச்சரியத்தையே உண்டுபண்ணியது. அதனால் அவர் அவளையே பார்த்தபடி உட்கார்த்திருந்தார். கம்பீரமான அவரது தோற்றமும் பால் வடியும் முகமும் அவளையும் தன்னை மறந்த நிலையில் நிற்கச் செய்தன.

அந்தச் சமயத்திலேதான் பெரியவர் கண்களைத் திறந்தார். இந்த எதிர்பாராத காட்சி அவரை அதிரும்படி செய்யாவிட்டாலும் சிந்திக்கத் துஸண்டியர். சிறிது நேரம்வரை அவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தவர். ஷஷஅப்பனே, இவள் யார்?|| என்று கேட்டார். இளையவர் பதில் சொல்லவி;ல்லை. ஆனால் அவள் திரும்பி நின்று பேசினாள். ஷஷசுவாமி, தாங்கள் வரப் பெற்றதனால் பெரிய பாக்கியசாலி ஆனவள் இவள்.||

அவர் மௌனமாக இருந்தபடி அவளை உற்றுப் பார்த்தார். அப்போதும் அவளே தொடர்ந்து பேசினார்: ஷஷசுவாமி, ஏதோ புண்ணிய வசத்தால்தான் இங்கே தங்கி இந்த இடத்தைப் புனிதமாக்கிவிட்டீர்கள். கொஞ்சம் எழுந்து உள்ளே வருகிறீர்களா?||

அவள் நிலத்தில் விழுந்த வணங்கினாள். பெரியவர் கையை மேலே தூக்கி உயர்த்தி ஆசீர்வதித்தார். மற்றவரோ சும்மா இருந்தபடியே இருந்தார். அப்பொழுது அவள் கண்கள் இருவரையும் மாறிமாறி மன்றாடின.

அவள் யாசித்ததை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. உடனே எழுந்து அந்த வீட்டை நோக்கி நடந்தார். அவர்கள் உள்ளே நுழையும் முன்பே அவள் ஓடிச் சென்று ஆசனங்களை இழுத்து விட்டு ஷஷஉட்காருங்கள்|| என்று வணங்கி நின்றாள். இருந்தவர். மற்றவரையும் உட்காரும்படி சமிக்ஞை செய்துவிட்டு எல்லாப் பக்கங்களையும் ஒருமுறை பார்த்தார். திதென்று அவரது முகத்தில் சொல்லமுடியாத ஒருவித வெறுப்பின் நிழல் படிந்தது.

அவள் இதை உணர்ந்ததும் மிகுந்த பணிவுடன் பேச ஆரம்பித்தாள். ஷஷசுவாமி பாவிகளுக்கு ஒரு நாளும் விமோசனம் கிடைக்காதா?||

இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவர் கருணை நிறைந்த கண்களால் அவளைப் பார்த்து. ஷஷநீயும் உட்கார்.|| என்று ஓர் ஆசனத்தைக் காண்பித்தார். அவள் உட்கார விரும்பவில்லை. மேலும் ஒரு புறமாக ஒதுங்கி நின்றாள்.

பெரியவர் பேசினார்: ஷஷதவறு செய்தவர் தாமாகவே அதை உணர்ந்து பச்சாத்தாபப்படுவதே மிகச் சிறந்த பிராயச்சித்தமாகும்.

ஷஷசுவாமி, என்னைப் போன்றவர்களுக்கும் இந்த விதி பொருந்துமா?||

இப்பொழுது தெளிவான குரலில் அவர் பதில் கேட்டது. ஷஷகுழந்தாய், உனக்குத்தான் இது முற்றும் பொருந்தும். வாழ்க்கை எல்லோருக்கும் எப்பொழுதுமே நிதானமான பாதையில் செல்வதில்லை. மனச் சந்தர்ப்பவசத்தால் பல தடவைகளில் குழியில் தள்ளிவிடுகிறது. குந்தை நடக்கப் பழகும் போது எத்தனை தடவை விழுந்து விழுந்து எழும்புகிறான் என்பதை நீ அறியாயா?||

ஷஷமறுபடியும் எழுந்திருக்க முடியாதபடி விழுந்து விட்டால்-?|| பெருமூச்சின் நடுவே அவள் இப்படிக் கேட்டாள்.

அவர் ஒரு மாதிரி சிரித்தபடியே பதில் சொன்னார்: ஷஷகுழந்தையின் மானிடத்தாய் அல்லவே லோகநாயகி.||

அவள் ஓடி வந்து அவர் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டாள. மற்றவரோ எல்லாவற்றையும் கவனித்த படியே பினனால் உட்கார்ந்திருந்தார்.

பிறகு அவள் பெரியவரையே பார்த்து, ஷஷசுவாமி, ஒரு பொழுதுக்காவது இங்கே தங்கிச் செல்லவேண்டும்|| என்று வேண்டிக்கொண்டு உள்ளே போனாள். அப்பொழுது அவர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார். ஷஷஅப்பனே, எழுந்திரு: போகவேண்டும்||

ஒருவர் பின் ஒருவராக அவர்கள் வெளியே சென்றார்கள். அவள் ஓடி வந்து பார்த்தபோது அந்தத் தெருவையே கடந்து அவர்கள் மறைந்து விட்டார்கள்.
3

எதிர்பாராத வகையில் பெரியவர் வேகமாக நடந்தார். அவரது மனம் நிலை கொள்ளாமல் தடுமாறியது. அந்த நிலையிலும் ஷஏன் இது?| என்று தமக்குள்ளே கேட்டுப் பார்த்தார். காரணம் தெரியவில்லை.

ஷஅங்கே நுழைந்தாயே, அதனால்தான்|

இது அவர் உள்ளத்தின் ஒரு கோணத்திலிருந்து எழுந்த குரல்.

ஷபாவத்தின் பயங்கர அந்தகாரம் சூழ்ந்த இந்த உலகத்தில் அவள அப்படி ஓர் ஆகாத பண்டமா?| உள்ளேயிருந்து மற்றொரு குரல் இப்படிக் கேட்டது. பி;ன்னால் தொடர்ந்து வரும் மற்றவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவர் மறுபடியும் முன் போலவே நடக்க ஆரம்பித்தார். இப்படிச் சிக்கலான மனநிலை அவரை முன்னும் சில சமயங்களில் கலங்கச் செய்ததுண்டு. அப்போதெல்லாம் அதனதற்கு உரிய காரணங்களை நன்றாகத் தெரிந்துகொண்டிருந்hர். இன்று அது முடியவில்லை. விரும்பி முயன்றும் அது வெளிவர மறுத்தது.

அவர் முகத்தில் லேசாக வேர்வை அரும்பியது. தமக்குள் பேசிக்கொண்டே நடந்தார். ஷஇந்த உலகத்திலிருந்து விடுபட்ட வாழ்வில் எத்தனையோ வரு~ங்கள் கழிந்துவிட்டன. நித்திரை, உணவு என்ற இன்றியமையாதவற்றையே கட்டுப்படுத்தி மனத்தை மடக்கி வழி நடத்தினேன். எத்தனை சோதனைகளைச் செய்து பார்த்தாயிற்று! எல்லாவற்றையும் சித்தி லேசாகக் கிட்டியது. இன்றே இது பெரிய புதிராகவே இருக்கிறது. அடி மனத்தில் - எங்கோ ஒரு மூலையில் - என் சக்திக்கு எட்டாத ஆழத்தில் ஏதோ ஒன்று அழுகிக் கிடக்கிறது.

ஒரு பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். இளையவரது முகம் வழக்கம்போலவே பிரகாசத்துடன் விளங்கியது.

ஷஷகுழந்தாய்!||

அந்தக் குரலில் அன்பு அமுதாகி, கடலாகிப் பொங்கி வழிந்தது.

ஷஷசுவாமி!|| என்று உடனே பதிலுக்குக் குரல் கொடுத்தார் மற்றவர்.

ஷஷகளைப்படைந்தாயோ என்று பார்த்னே;: அவ்வளவுதான்||

மறுபடியும் அவர்கள் ஒருவர்பின் ஒருவராக நடந்தார்கள். அவர்களுக்கு நடுவில் மௌனம் நிலைததிருந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் தெருவின் ஓரத்தில் நின்ற ஒரு மரத்தின் நிழலில் அவர் போய் உட்கார்ந்தார். இளையவரும் அவரைத் தொடர்ந்து சென்று ஒரு பக்கத்தில் ஒதுங்கினார்.

பெரியவருடைய மனத்தில் மற்றவரைப் பற்றிய நினைவுகள் திடீரென்று முளைத்தன. உடனே அவர் கேட்டார்: ஷஷகுழந்தாய், நீ என்னை அடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா.?||

ஷஷஆம்|| என்று தலையை அசைத்தான் இளையவர்.

ஷஷஇதுவம் ஒரு வகையில் நம்மைப் பாதிக்கக் கூடிய பந்தந்தானே? இதை நீ உணரவில்லையா?||

மற்றவர் பதிலின்றி மௌனத்தில் மூழ்கியிருந்தார்.

ஷஷஉனக்குப் பக்குவ நிலை கைவந்து விட்டது. இனியும் நீ என் இறக்கைகளுக்குள் உறங்க வேண்டியதில்லை.||

இளையவர் பிறகும் பேச்சின்றியே இருந்தார். சிறிது பொறுத்து மறுபடியும் பெரியவரே பேசினார்.

ஷஷஅப்பனே, இனி நீயும் நானும் பிரிந்து விடவே வேண்டும்: அல்லது இரண்டு பேருமே பெரிய ந~;டத்தை அடைவோம்.||

இளையவர் எழுந்து கூப்பிய கரங்களுடன் அவர் பக்கமாகச் சென்று விழுந்து வணங்கினார்.

ஷஷகுழந்தாய், உன்னை ஆண்டவன் ஆசீர்வதிப்பானாக!||

அவர் கண்களை மூடியபடி எழுந்து நின்றார். அவருடைய குரல் கரகரத்தது. மற்றவர் குனிந்து அவருடைய பாதங்களைத் தொட்டுப் பலமுறை கண்களில் ஒற்றிக்கொண்டு தெருவில் இறங்கினார்.
4

தெருவில் இறங்கிய இளையவர் ஒருமுறை கூடத் திரும்பிப் பாராமலே நடந்துகொண்டிருந்தார். அவரது நடையில் எது இல்லாவிட்டாலும் நிதானம் இருந்தது. எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட தெளிவு இருந்தது.

அந்த உருவம் கண்களை விட்டு மறையும் வரையும் நின்றபடியே பார்த்துக்கொண்டு நின்ற பெரியவர் தாய்போல மாறி, ஷஷஐயோ வெயில் கடுமையாக எரிக்கிறதே!|| என்று அங்கலாய்த்தார். பிறகு தாமும் தொடர்ந்து போக எண்ணியவர் போல அந்தத் திசையில் வேகமாக நடந்தார். சிறிது தூரம் சென்றதும் ஏனொ மறுபடியும் திரும்பி வந்து அந்த மரத்தின் கீழ் உட்கார்த்தார்.

இளையவர் இருந்த இடம் சூனியமாகிக் கிடந்தது. ஆனால் மண்ணில் அவர் காலடிகள் நன்றாகத் தெரியும்படி பதிந்திருந்தன. அந்த அடையாளங்கள் ஏதொ அருமையான பொக்கி~ங்கள் போல அவருக்கு இருந்தன. nகு நேரம் வரையில் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஏதொ ஆறதல் இருப்பது போலப்பட்டது. நடுவில், ஷஇனி ஒருபோதும் சந்திக்க மாட்டேனா?| என்ற கேள்வி எழுந்ததும், தடுமாறி எழுந்து நின்று அவர் போன திசையைப் பார்த்தார். பிறகு அங்கும் இங்குமாக நடக்க ஆரம்பித்தார். அப்போதெல்லாம் அந்த அடையாளங்கள் அழிந்துவிடாதபடி விலகி விலகியே நடக்க வேண்டுமென்று அவருக்குத் தோற்றியது.

ஷஇந்தப் பாசம் இவ்வளவு தூரம் என்னைப் பாதித்துவிட்டதே| என்ற ஏக்கமும்; அவருக்கு அடிக்கடி உண்டாயிற்று.

ஷஅன்றைக்கே, அவன் வந்தபோது, ஷஷஇது வேண்டாம் ஸ்ரீ மறுபடியும் கட்டப்படாதே|| என்று எச்சரித்த என் அந்தராத்மாவின் குரலை நான் கௌரவிக்கவில்லை. ஷஷசுவாமி, எனக்கு வழி காட்டுங்கள்|| என்று வந்தவனை எப்படித்தான் போ என்று தள்ளமுடியும்? வா என்று ஏற்றுக்கொண்டேன். அவன் நிழலாகி வளர்ந்தான். இந்த நிலையிலும் அவனைப் பார்த்து மனம் களித்தேன். ஆனால் இன்று?|

அவர் நீண்ட ஒரு பெருமூச்சுடன் கிளம்பி வந்தவழியால் நடந்தார். இப்பொழுது அவரது நடையில் வேகம் இல்லை. நிதானமும் இருக்கவில்லை. தகித்துக்கொண்டிருந்த வெயில்கூட அவரை அவசரப்படுத்தவில்லை. மெல்ல மெல்ல ஊhந்து சென்றார். பாரம் ஏறிய மனநிலையை அவரது முகம் எடுத்துக்காட்டியது.

வழியில் ஜனங்கள் போனார்கள்: வந்தார்கள். அவர்களுக்குள் அவனும் இருக்கலாம் என்பதுபோல அவர் கண்கள் எல்லோரையும் ஆராய்ந்தன. ஷஇனி வேண்டாம்| என்று சில சமயங்களில் கண்களை மூடிக்கொண்டும் நடந்தார்.

வர வர அவருக்கு நடப்பதே பெரிய சிரமமாக இருந்தது. ஆயினும் நிற்காமலே சென்றார். அந்தச் சமயத்திலேயே, காலையிலே தாம் எந்த வீட்டிலிருந்து கிளம்பி ஓடினாரோ, அந்த வீட்டின் எதிரில் வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டார். நடப்பதை நிறுத்திவிட்டு அந்த மரத்தின் அடியில் இருந்து மேடையைப் பார்த்தார். எதிரில், ஷஷசுவாமி, வாருங்கள்|| என்று வேண்டியவாறே அவள் ஓடி வந்தாள். அவர் இப்பொழுது அசையவில்லை. கண்களை அகல விழித்து அவளையே பார்த்துக்கொண்டு நின்றார். பிறகு தாமாகவே இறங்கி உள்ளே சென்றார்.

மற்றவரைப் பிரிந்ததனால் உண்டாகிய தாகம் மெல்ல மெல்லத் தணிவதுபோல அவருக்குப்பட்டது. அப்பொழுது அவள் பேசினாள்: ஷஷசுவாமி. எப்படியும் ஒரு நாளைக்கு உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், அது இன்றைக்கே சித்தியாகும் என்று எண்ணவே இல்லை. நான் பெரிய பாக்கியம் செய்தவள்.||

ஷஷஅம்மா இது ஜன்ம ஜன்மாந்தரங்களின் தொடர்பாகவும் இருக்கலாம் அல்லவா? உன்னுடைய இடத்தில் எப்படியே எனக்கும் ஆறதல் உண்டாகிறது.||

அவர் உள்ளே புகந்து ஓர் ஆசனத்தில் உட்கார்ந்தார்.

ஷஷசுவாமி, மறுபடியும் போய்விட மாட்டீர்களே?||

அவள் உண்மையாகத்தான் இப்படிக் கேட்டாள்.

ஷஷபோ என்று தள்ளினாலும் முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறேன்.

காலில் விழுந்து வணங்கியவள் எழுந்து உள்ளே சென்றாள். அவர் அதற்குள் அதிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார். பிறகு அவர், கண்களைத் திறந்தபோது முற்றும் எதிர்பாராத தோற்றத்தில் அவள் எதிரில் நின்றாள.

ஷஷஅம்மா, இது என்ன கோலம்?||

அவர் ஆச்சரியத்தோடு இப்படிக் கேட்டார்.

அவள் இதற்குப் பதில் சொல்லாமலே தன் கருத்தைச் சொன்னாள்: ஷஷசுவாமி இவையெல்லாம் இனித்தங்களைச் சேர்ந்தவையே விருப்பம் எதுவோ அப்படிச் செய்யுங்கள்.||

அவர் அதிர்ந்து போய், சோர்வடைந்த கண்களை உயர்த்தி, அவளைப் பார்த்தார்.

அதற்குள் அவள் வெளியே இறங்கி நடந்துகொண்டிருந்தாள்.


4 ஷவரதர்|
மறுமலர்ச்சி
ஷஈழத்திலே 1930ஆம் ஆண்டிற்குப் பின்னர் தோன்றிய அரசியற் சூழ்நிலையின் மறைமுகமாக உபவிளை பொருட்களாகத் தோன்றிய இவ் எழுத்துக்கள் ஈழத்தைப் பிரதிபலிக்காமல், மெல்ல மெல்ல பொதுவான மன நிலைகளைப் பிரதிபலிக்கலாயின. இந்த நிலையில் பத்துப் பதினைந்து வருடங்கள் கழிந்தன. இக்காலப் பகுதியிலே இலங்கையர் கோன் முதலியோர் பெரும் எழுத்தாளராகப் பரிணமித்ததைக் கவனித்த சில இளைஞர்கள் ஈழத்திலேயே ஒரு மணிககொடிக் குழவை உண்டாக்கக் கனவு கண்டனர் 1|

இவ் இளைஞர்களில் முக்கியமானவர்களாக தி.ச. வரதராசன் (வரதர்), அ.செ. முரகானந்தம், நாவற்குழியூர் நடராசன், ச. பஞ்சாட்சர சர்மா, அ.ந. கந்தசாமி ஆகியோர் விளங்கினர்.

1942ஆம் ஆண்டில், இலக்கிய ஆர்வத்தால் ஒன்று சேர்ந்த இந்த இளைஞர்கள், யாழ்;ப்பாணம் செம்மா தெருவில் அப்போது வசித்து வந்த குப்புசாமி ஆசாரியார் என்பவரின் இல்லத்தில் அடிக்கடி சந்தித்து இலக்கியம் சம்பந்தமாக உரையாடி வந்தனர். இந்த இலக்கியச் சந்திப்பே பிற்காலத்தில் - ஈழத்து இலக்கிய வரலாற்றில் - மறுமலர்ச்சிச் சங்கம் என்று சிறப்பித்துக் கூறப்படும் சங்கமாகியது.

இங்கு கூடிய இளைஞர்கள் அனைவரும் ஒத்த மனோபாவமோ, சிந்தனையோ கொண்டவர்களல்லர். ஆனால், இலக்கிய இரசனையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்தவர்கள். இவர்களின் உரையாடல்கள் பெரும்பாலும், தமிழகத்திலிருந்து அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஆனந்த விகடன், கலைமகள், சந்திரோதயம் ஆகிய சஞ்சிகைகளில் வெளியாகும சிறுகதை, நாவல், கவிதைகள் என்பன பற்றியனவாகவே விளங்கினர். பத்திரிகைகளினால் இலக்கிய ஆhவம் பெற்ற இவர்களின் உரையாடல்களில் இரசிக, வியப்புணர்ச்சி நிறைந்திருந்தனவேயன்றி, விஞ்ஞான பூர்வமான, ஆழமான இலக்கிய அணுகல்களாக ஆரம்பத்தில் இருக்வில்லை. இவர்கள் மறுமலர்ச்சிச் சங்க ஆரம்பகாலத்தில் நடாத்திய மறுமலர்ச்சி என்னும் கையெழுத்து ஏட்டிலும் இத்தன்மையையே அவதாகிக முடிகின்றது. கதை படித்துக் கதை எழுத விரும்பியதையே இவை சுட்டுகின்றன. ஆனால் - , மறுமலர்ச்சிப் பத்திரிகை அச்சுருவம் ஏற்ற காலத்தில் தான் இவ்விளைஞர்களிடையே ஈழத்திற்கென ஒரு இலக்கிய மரபு உண்டு, என்ற எண்ணம் தோன்றி வலுப்பெற்றது எனலாம்.

மறுமலர்ச்சி -பத்திரிகை 1945ஆம் ஆண்டில் அச்சுவாகனம் ஏறி 1948ஆம் ஆண்டுவரை வெளிவந்தது. அது மாத இதழாக பதிவு செய்யப்பட்டிருந்த பொழுதிம் 1948ஆம் ஆண்டுவரை 24 இதழ்களே வெளிவர முடிந்தது. இப்பத்திரிகையின் உயிர் நாடியாக - அ.செ. முரகானந்தத்தை இணையாசிரியராகக் கொண்டு - விளங்கியவர் தி. ச. வரதராசன் என்னும் ஷவரதர்| ஆகும்.

முதல் கனி
இவரின் இலக்கிய ஆhவத்தை மறுமலர்ச்சிச் சங்க இலக்கிய அன்பர்களின் சந்திப்பும், ஈழத்துப் பத்திரிகைகளும் மிகவும் தூண்டி வளர்த்தன. இதில் ஈழகேசரியின் தாண்டு மிகப் பாரியது. இவர் காலத்தில் ஈழகேசரி தனது வழக்கமான பத்திரிகையுடன், கல்வி அனுபந்தம் என்னும் ஒரு இணைப்பையும் தனியே வெளியிட்டு வந்தது. இக் கல்வி அனுபந்தத்தில் பெரும்பாலும் மாணவர்களே எழுதி வந்தனர். இக் கல்வி அனுபந்தத்தில் முதற் கட்டுரையை 1940ஆம் ஆண்டு எழுதியதன் மூலம் எழுத்துலகில் இவர் காலடி வைத்தார். ஆனால் 1941ஆம் ஆண்டில் பெரியோர்கள் எழுதும் ஷஈழகேசரி|யிலேயே முதல் கதையையும் வெளியிட்டார்.

முதறகதை - சாதாரண காதற் கதையாகவே போய்விட்டது. அக்கால வாலிப உணர்வுகளும், பிற பத்திரிகைகளின் செல்வாக்குமே இதற்குக் காரணம் எனலாம். ஆரம்ப காலத்தில் வரதரின் இலக்கிய நெஞ்சைப் பவர்ந்திருந்தவர் ஷகல்கி| அவர்களாகும். ஆகவே, வாழ்க்கையனுபவமற்ற, வெறும் இலக்கிய உணர்வே மேலோங்கப்பெற்ற ஓர் இளைஞனின் வெளிப்பாடாகவே அக்கதை விளங்கிற்று. இதனைத் தொடர்ந்து இவரது படைப்புகள் - வீரகேசரியின் தினப் பதிப்பு, வாரப் பதிப்புகளிலும் வெளிவரலாயின. இவர் காலத்தில் வீரகேசரி தினமும் சிறுகதை ஒவ்வொன்றை வெளியிட்டு வருவதன் மூலம் புதிய எழுத்தாளர்களை உருவாக்கி வந்த சூழ்நிலை, மறுமலர்ச்சி எழுத்தாளர் பலருக்குத் துண புரிவதாயிற்று. 1945ஆம் ஆண்டுவரை வரதர் ஏராளமான கதைகளை பல்வேறு பத்திரிகைகளில் எழுதிவந்தாலும் - பிற்காலத்தில் அவர் மனதிற்கு அக்காலக் கதைகள் மன நிறைவை அளிக்கவில்லை என்பதனை அவரது ஷகயமை மயக்கம்| சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய ஷஎன் எண்ணம்| மூலம் அறியக்கிடக்கிறது. இவரின் ஆரம்பகால எழுத்துப் பற்றி ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற தனது நூலில் இரசிகமணி, கனக. செந்திநாதன், ஷஷவாலிப உந்துதல்களுடன், காதலின் பலவகைக் கோலத்தையும், காமத்தையும் வைத்துச் சிறுகதைகளைப் படைத்துத் தமது எழுத்தினால் வரதர் வாசகர்களை மயங்கச் செய்தார்||? என்று கூறுகிறார்.

மறுமலர்ச்சிப் பத்திரிகையை அச்சில் வெளியிட முனைந்தபோது வரதர் அவர்கள் திடமான இலக்கிய கொள்கையைக் கொண்டிருந்தார் என்பதனை - ஷமறுமலர்ச்சி| முதல் இதழில் எழுதிய தலையங்கம் புலப்படுத்துகின்றது. ஷஷபழைய தமிழ் இலக்கியங்கள் தமிழ் நாட்டின் உயிருக்குயிரான பொக்கி~ங்கள் என்றே நாம் கருதுகிறோம்;. அவற்றை அத்திவாரமாகக்கொண்டே இலக்கியங்களைச் சிருட்டிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். புதி கருத்துக்கள், இனிய கற்பனைகள், ஆழமான தத்துவங்கள், இவை எல்லாம் இனிய, எளிய நடையிலே புதிய வசன இலக்கியங்களிலே சிருட்டிக்கப்படவேண்டுமென எண்ணுகிறோம்.|| பழமையில் கால் ஊன்றிப் புதமையை அணுகும் ஆவலாக இவரது படைப்புக்கள் மாறப்போவதை இக்குறிப்புக்கள் உணர்த்துகின்றன. இதனால் மறுமலர்ச்சிப் பத்திரிகைகளில் பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை வித்துவான் நே;தனார் போன்றோர் கூட எழுத ஏதவாயிற்று.

உரைநடை
இவர்கள் பத்திரிகையை ஆரம்பிக்கும்போது அதனை எத்தகைய உரைநடையில் நடாத்த வேண்டும் என்பதுபற்றி திடமாக எண்ணியிருந்தனர். இக்காலத்தில் புத்திலக்கியங்கள் தோன்றிக் கொண்டிருந்தாலும், பண்டிதர்களின் செல்வாக்கும், அவர்களது கொடுந்தமிழ் ஆக்கிரமிப்பும், அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் மக்களுக்குப் புரியக்கூடிய சாதாரணத் தமிழில் தமது பத்திரிகை நடாத்துவதன் மூலம் இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தலாம் என எண்ணினார். ஷகடுமையான ஷ விளங்காத - பதவுரைபார்த்துப் படிக்க வேண்டிய சொற்களை அடுக்கி விடுவதனால் மாத்திரம் அது இலக்கியம் ஆகிவிடாது. இன்று தமிழ்மொழி மறுமலர்ச்சியடைந்து வளர்ந்து வருகிறது. பிற்போக்காளர் வெறும் கூச்சல் இடுவதினால் இதைத்தடை செய்து விடமுடியாது| - என்று மறு மலர்ச்சியில் எழுதியதை அவதானிக்கும்போது - பலகாலமாக சர்வாதிகாரம் நடாத்திவந்த பண்டித எழுத்து;களுடன் இவை பலமாகப் போராட வேண்டியிருந்தமை புலனாகின்றது. ஆகவே, - பத்திரிகாசிரியர் ஷவரதர்| - முன்பிருந்த எழுத்தாளர் வரதரிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, சமூகத்தையும், அதன் பல்வேறு தாக்கங்களையும் பொறுப்புடன் அவதாகிக்கும் ஒரு இலட்சியவாதியாக மாறுவது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் எழுத்திலும் மாற்றங்கள் ஏற்படலாயின. இந்த மாற்ற முக்கியத்துவத்தை அவரே உணர்ந்திருந்தார் என்பதனை மறுமலர்ச்சிப் பத்திரிகையி; வருகக்குப் பின்னர் தாம் எழுதிய கதைகளையே தேர்ந்தெடுத்து கயமை மயக்கம் என்ற தொகுதியை வெளியிட்டுள்ளமை புலப்படுத்துகின்றது.

கயமை மயக்கம்
மறுமலர்ச்சிக் காலத்தில் ஏராளமாக எழுதியவர்களில் வரதர் முக்கியமானவர். இவர் சொல்லின் செல்வன், செந்தாரகை போன்ற பிற புனை பெயர்களில எழுதியிருந்தாலும், வரதர் என்ற பெயரே இலக்கிய உலகிற்கு நன்கு தெரிந்ததொன்றாகும். வரதரின் பல கதைகள் இன்றைய வாசகர்களுக்கு கிடைத்திலது. அத்துடன் அவை பிரசுரமான காலம், பத்திரிகைகள், தலைப்புகள் என்பனவற்றைக் கூட சரியாக அறியமுடியாமலிருக்கின்றது. வரதருக்கு தம் படைப்புகளிலேயே குறைகாணும் மனப்பான்மை இருந்ததினாலும், தமது படைப்புகளில் அவருக்கே திருப்தியின்மை ஏற்பட்டதினாலும் தமது படைப்புகள் பலவற்றைப்பற்றி அக்கறைகாட்டாது இருந்து விட்டார். கலைஞர்கள் அனைவருக்குமே ஏற்படும் பொதுவான பலவீனம் இது என்பதனை அவர் அறியத் தவறியது ஈழத்து இலக்கிய ஆராய்வாளர்களுக்கு பெரிய இழப்பேயாகும். ஆயினும், இயன்ற வரை தனது படைப்புகள் பன்னிரண்டைத் தேடிப்பிடித்து ஷகயமை மயக்கம்| என்னும் கோவையாக வெளியிட்டுள்ளமையால், மறுமலர்ச்சி எழுத்தாளரின் தன்மை, போக்கு என்பனவற்றை அறியமுடிவதுடன், வரதரையும் இனம் காண முடிகிறது.

இலக்கியப் பார்வை
ஷஇலக்கியம் என்று சொல்வதற்கு இரண்டு தகுதிகள் இருக்கவேண்டும். முதலாவது அதில் ஒரு இலக்கு இருக்கவேண்டும். அந்த இலக்கு மனிதனுடைய அகத்தயோ, புறத்தையோ உயர்த்துவதாக அமையவேண்டும். மற்றது அதைச் சொல்லும் விதம், நடை கட்டுக்கோப்பு ஆகியவற்றில் சுவை இருக்கவேண்டும், என்று கருதும் வரதரின் கதைகளிலே இவ் இரு தன்மைகளும் பளிச்சிடுவதைக் காணலாம்.

மனித சமுதாயத்தை நலிவடையச் செய்யும் பத்தாம் பசலிக் கொள்கைகள், வேள்வி, திருவிழா போன்ற பயனற்ற ஆரவார வழிபாடுகள் போன்றவற்றிற்கு எதிராக எழுந்த கணைகளாகவும், மனித குலத்தைச் சிந்திக்க வைப்பனவாகவும் இவர் எழுத்துக்கள் அமைந்தன. அதேவேளையில் அவை வெறும் பிரச்சாரமாகாது, கலைப்படைப்புகளாகவும் விளங்குகின்றன. இவ்வாறமை-வரதர் இலக்கியம் பற்றிக்கொண்டிருந்த அடிப்படைக் கருத்துக்களே காரணம் எனலாம்.

ஷவரதர்| கதைகள்
வரதர் தமது கதைகள் பன்னிரண்டைத் தொகுத்து ஷகயமை மயக்கம்| என்னும் சிறுகதைத் தொகுதியாக வெளியிட்டுள்ளார். இக்கதைகள் அவருக்கு ஓரளவு மன நிறைவையளித்தவையாதலாலும், அவரின் பிறகதைகள் இன்று கிடைத்திலமையாலும், இத்தொகுதி மூலமே அவரை அணுகவேண்டியுள்ளர். அவரது கதைத் தொகுதியிலே ஷமாதுளம்பழம்| முதலாக ஷவாத்தியார் அழுதார்| ஈறாக உள்ள கதைகளில் மூன்று பிரபல எழுத்தாளர்களின் போக்கைத் தரிசிக்கக் கூடியதாக உள்ளது. இக் கதைகளின் கால கட்டங்களை அவதானிக்கும்போதும் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருப்பதையும் காணலாம். அவற்றை மறுமலர்ச்சிக் காலம், ஷஆனந்தன்| பத்திரிகைக் காலம் - பிற்பட்ட காலம் என வரதரின் இலக்கிய யாத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கலாம்.

ஷமறுமலர்ச்சி|க் காலத்தில் வரதர் எழுதிய பெரும்பாலான கதைகளில் வி.ஸ. காண்டேகரின் போக்கை அவதானிக்க முடிகிறது. ஆரம்பத்தில் ஷகல்கி|யி; எழுத்தில் இலக்கிய இன்பம் நுகர்ந்து கொண்டிருந்த வரதருக்கு காண்டேகரின் எழுத்து புதுமையானதாகவும், புதிய சுவையுடையதாகவும் விளங்கியது. காண்டேகரின் கருத்து நயம், பாத்திர அமைப்பு, கதைகளிடையே கிளைவிடும் உருவகக் கதைகள், கதை கூறும் விதம், புதிய சமுதாயப் பார்வை - என்பனவெல்லாம் வரதரை மிகவும் கவர்ந்தன. காண்டேகரின் கதைகளில் வரும் புத்துலகப் பெண்கள், ஆடவர்களின் இலட்சிய வேட்கை, விடுதலைத் தாகம் என்பன வரதரின் சிந்தையை நிறைத்தன. இதனால் கவரப்பட்ட வரதரும், ஷவென்றுவிட்டாயடி ரத்தினா!| போன்ற படைப்புகளை காண்டேகரின் போக்கிலேயே மறுமலர்ச்சியில் எழுதி வெளியிட்டார். பின்பு |ஆனந்தன்| பத்திரிகை நடாத்திய போது எழுதிய ஷகயமை மயக்கம்| என்ற கதைகலும் இத்தன்மையைக் காணலாம். காண்டேகரின் கதைகளில் பாத்திரங்களே தங்கள் மன உணர்வுகளை ஏக்கங்களை தங்கள் வாயினால் வெளியிடுகின்ற. இத்தன்மையைப் பின்பந்நுவதால் - பலவகையான மனவுணர்வுகளைச் சுலபமாகக் காட்டமுடியும் என வரதர் எண்ணியிருக்கவேண்டும். இவ்வாறு வரதரிடம் காண்டேகரின் செல்வாக்குத் தோன்றக் காரணம் அக்கால கலைமகள் பத்திரிகையாகும். அப்போது இப்பத்திரிகையில் எழுத்தாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. -யினால் வி.ஸ காண்டேகரின் மராட்டியப் படைப்புக்கள் ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டு வந்ததால், இதன் பாதிப்புக்கு வரதர் ஆளாகநேர்ந்தது.

வேள்விப் பலி, வாத்தியார் அழுதார், மாதுளம்பழம், உள்ளும் புறமும் - முதலிய கதைகளைப் படிக்கும்போது - புதுமைப்பித்தனின் பாதிப்பையும் அவதானின் முடிகிறது. இக்கதைகள் யாவும் சமூகச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டுவனவாகவும், அதே வேளையில் தேசியப் பண்பு மிக்கவனவாகவும் விளங்குகின்றன. ஆயினும் இக்கதைகள் புதுமைப்பித்தனின் தீவிரமான போக்கிலிருந்து மாறுபட்டது. புதமைப்பித்தனின் எழுத்து தீவிரமானது: உக்கிரமானது: பிரச்சினைகளை அடித்துப் பேசுவது: பிரச்சினைகளுக்கு மறுபக்கம் இல்லை (அல்லது இருக்கின்ற உணர்வை மரத்துவிடச் செய்வது) என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது - படிப்பவர்களை மன வேதiனையினூடே சிந்திக்க வைப்பது. ஆனால் - இவரது எழுத்தோ மாறானது.

அமைதியான - சாந்தமான பார்வையிலேயே சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நலிவுகளைக் காட்டுபவை. அந்த மோனம் - அமைதி - ஆழ்கடலின் ஆழம் போன்றது. இதனாற்றான் இக்கதைகள் ஆசிரிகரின் செயலற்ற மன அழுகையைக் காட்டுகின்றனவோ என்ற ஐயத்தையும் வாசகரிடையே எழுப்பி விடுகின்றது. எப்படியானாலும், அந்த உணர்ச்சி வெளிப்பாடு கத்தியும், இரத்தமும் ஏற்படுத்த முடியாத ஒலு நற்பலனை - மனப் புரட்சியை - சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது எனக் கூறலாம். இக்கதைகளின் அடிச் சரடாக காந்திய வாதம் ஊடுருவி நிற்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவே;டும். இக்கதைகள் பெரும்பாலும் இலங்கை சுதந்திரமடைந்த பின் தோன்றிய ஷஆனந்தன்| பத்திரிகையில் வெளிவந்தவையாகும்.

உள்ளுறவு, ஒரு கணம், வெளி - ஆகய கதைகள் கு.ப.ராஜகோபாலனை நினைவூட்டுவதாக உள்ளன. இக்கதைகளில் தாம்பத்திய உறவும், அங்கு எழும் ஊடலும், மனைவியை ஊரக்கு அனுப்பிவிட்டு அடுத்த வீட்டுக் கன்னிமேல் சலனம் கொள்ளும் எழுத்தாளனின் மனப்போக்கும் சித்தரிக்கப்படுகின்றன. இக்கதைகளின் ஷகரு|வும் கதை சொல்லும் முறையும் அப்படியே கு.ப.ரா. - உளவியல் அடிப்படையில் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு நளினமான முறையில் தீர்வு காணும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அத்துடன் சமூகப் பொதுப்பணியில் ஆணுடன் பெண் சரி நிகர் சமானமாகப் பங்குகொண்டிருநத காலமாதலால். - அப்புதிய சூழ்நிலையால் எழும் புதிய விவகாரங்களும் ஆராயப்படவேண்டிய அம்சமாயிற்று. இந்த நிலையில் கு.ப. ராவின் முக்கியத்துவத்தை இவர் உணரத் தலைப்பட்டார். அத்துடன், கலானுபவமான மெல்லிய இனிய உணர்வுகள் அத்தகைய கதைகளில் இழையோடுவதும் வாசகர்களைக் கவரக்கூடியதாயிற்று.

இக்கதைகளுக்கேற்ற இனிய, எளிய நடையைக் கு.ப.ரா. கையாண்டதும், வரதருக்கு அவரின் மேல் அதிக மதிப்புக்கொள்ள வைத்தது. இதனாற்றான் ஷஷநான் அறிந்த மட்டில் அமரர் கு.ப.ரா. அவர்கள் எழுதிய சிறுகதைகள்தான் சிறுகதை இலக்கணத்திற்கு இலக்கியமாக நிற்கின்றன. 3|| என்று கூறுகிறார்.

அகமும் புறமும்
வரதரின் பெரும்பாலான கதைகள் அகம் பற்றியனவாகவே இருக்கின்றன. அவர் புறம்பற்றிக் கதை எழுதும் போதும், அவை அகவாழ்வுட் நேராகவோ, மறைமுகமாகவோ நெருங்கிய தொடர்புள்ளனவாகவே விளங்குகின்றன. ஷவீரம்| - என்ற தலைபபில் அவர் புதிய கோணத்தில் வீரத்தை ஆராய்ந்த பொழுதும், அதன் முழுஐம அகத்தில் போய் அடங்குவதைக் காணமுடிகிறது. அகம், மனம் என்பன உயர்வடைவதன் மூலமே புறவாழ்வு முன்னேற்றம் அடையும் என நம்புகிறார். அதுவே முற்போக்கு எனவும் எண்ணுகிறார். ஷபொருளாதாரம், பொதுவுடமை, தீண்டாமை முதலிய சமூகக் குறைபாடுகள் என்பன போன்ற கருத்துக்களை வைத்து எழுதப்படுபவையே முற்போக்குச் சிறுகதைகள் என்று கருதப்படுமானால் அது தவறு. மனிதனுடைய மனத்தை - அகவாழ்வைப் பண்படுகின்ற கருத்துக்கள்தான் மேற்கூறிய புறவாழ்க்கைப் பிரச்சினையை விட முக்கியமானவையாக நான் கருதுகிறேன்.4| - என்று வரதர் கூறுகிறார். வரதர் இவ்வாறு கூறினாலும் ஷவாத்தியார் அழுதார்| என்ற கதை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதனையும், மாதுளம் பழம், பிள்ளையார் கொடுத்தார் என்பன பொதுவுடமையை நிலை நிறுத்துவதென்பதனையும் எவரும் மறுத்திலர்.

தேசியப்பண்பு
வரதர் தனது எழுத்துக்கு முன் மாதிரியாக பல தென்னக எழுத்தாளர்களைக் கொண்டிருந்தபோதிலும், அவர் எழுத்து முற்றிலும் ஈழ மண்ணிற்கே உரியதொன்றாகும். ஈழத்தவர் தம் வாழ்க்கைப பிரச்சினை என்பனவற்றை ஈழத்து மக்களின் வழங்கு மொழியிலே எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஷமூர்த்தி மாஸ்டர்| என்னும் பாத்திரம் வரதரின் கதைகளிலே அடிக்கடி இடம்பெறுவதொன்றாயினும், அப்பாத்திரம் வரதரின் மன உருவமாக இருந்தாலும், யாழ்ப்பாணத்து மண்ணின் பிரதிநிதியாகவே காட்சி தருகிறது. ஏன் மாதுளம்பழத்தில் வரும் கிழவி, கயமை மயக்கத்தில் வரும் செல்லத் துரை உபாத்தியாயர், டொக்டர் சுந்தரமூர்த்தி- எல்லாருமே ஈழத்து மனிதர்கள்தான்.

தனி மரபு
இவ்வாறு தனித்துவம் மிக்கதாக ஈழத்து சிறுகதைகள் பலவற்றைப் படைத்தளித்த வரதர், மறுமலர்ச்சிக் காலத்தின் பின்னரும் பல பத்திரிகைகளைத் தொடக்கி ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தினார். அப்பத்திரிகைகள் சொற்பாயுள்களைக் கொண்டிருந்த போதிலும், அவை ஏற்படுத்திய விளைவுகள் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடக் கூடியவை. வரதர் மறுமலர்ச்சி, ஆனந்தன், புதினம் ஆகிய பத்திரிகைகள நடாத்தியது மட்டுமல்லாமல், கவிதைக்காக ஷதேன் மொழி| என்ற மாத இதழையும் நடாத்தியமை குறி;ப்பிடத்தக்கது. இவ்வாறு மறுமலர்ச்சிப் பத்திரிகையில் மட்டுமல்லாது, தொடர்ந்தும் ஈழத்து இலக்கிய பிரக்ஞையை வளர்த்து, தனி இலக்கிய மரபை ஏற்படுத்தியதில் ஷவரதரின் தொண்டு மிகப் பெரியதாகும்.

1.ஈழநாட்டு சிறுகதையாசிரியர் - ‘அம்பலத்தான் - இளங்கதிர் 1962ஃ63

2,3,4 கயமை மயக்கம் - என் எண்ணம் - வரதர்


கற்பு
‘வரதர்|

மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.

‘’மாஸ்டர், நீங்கள் ‘கலைச் செல்வி’யைத் தொடர்ந்து படித்து, வருகிறீர்களா?’’ - என்று கேட்டார் ஐயர்.

‘’ஓமோம். ஆரம்பத்திலிருந்தே ‘பார்த்து’ வருகிறேன். ஆனால், எல்லா விஷயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன் என்ன விசேஷம்?’’

‘’கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே சிறு சிறுகதை…’’

‘’யார் எழுதியது?’’

‘’எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது.”
“சொல்லுங்கள். நினைவு வருகிறதா பார்க்கலாம்?”

“மூன்றாம் வருஷம் இலங்கையில் பெரு வெள்ளம் ஏற்பட்டதல்லவா? அந்தச் சூழ்நிலையை வைத்துக்கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக் கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது. சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு ‘மேல் வீடு’ம் இருக்கின்றது. அங்கே அவன் தனியாக இருக்கிறான். வேள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் - அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள்; பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான். அவள் இசையவில்லை அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடந்து விடத் துணிந்து விட்டான். ஆவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்… இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்?”

“என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த ‘கருத்து’த்தான். குதையை அமைத்த முறையிலும், வசன நடையின் துடிப்பிலும்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை. படித்தால்தான் அதைப் பற்றிச் சொல்லலாம்.”

“நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை. மாஸ்டர். புராண காலத்திலிருந்து, படித்ததாகச் சொன்னீர்களே. அந்தக் கருத்தைப் பற்றித்தான் உங்கள் அப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.”

“எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப் பற்றியா?”

“ஓமோம். அதையே தான்”

“ ஒரு பெண்ணின் முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அதில்தானே இருக்கிறது. மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை?”

ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, “நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?” என்று கேட்டார்.

மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லி விட்டரா? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்?

ஒரு நிமிஷநேரம் மௌனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்து விட்டவர் போல கணபதி ஐயரே மீண்டும் மௌனத்தைக் கலைத்தார்.

“மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உங்களுக்குச் சொல்லலாம். சொல்வதான் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்ட பிறகு ‘கற்பு” பிரச்சினையைப் பற்றிப் பேசுவோம்.

போன வருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர் கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களில் இருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர் கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சினை செய்விப்பது வழக்கம்.

சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடி வந்து விட்டார்கள். நான் பூசையை விட்டு விட்டு எப்படிப் போக முடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டும் என்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக் கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிடமாட்டார்க்ள. எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி அவள் எங்களோடு நன்கு பழகியவள் - கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள் - “நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். இன்றிரவோ, நாளையோ இந்தப் பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இ.ப்போதே புறப்பட்டு பொலிஸ் ஸ்டேசனுக்குப் போய்விடுங்கள் பிறகு பொலிஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்” - என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட பிறகு “அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்” மனதுக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டுபோகக் கூடிய பொருள்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும், - நூலில் கட்டிய தாலி ஒன்றைத் தவிர - எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகிவிட்டது. பேபிநோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தான். “ஐயா, ஐயா சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறாங்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளிந்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் ‘நேற்றே ஊருக்குப் போய்விட்டா” என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆப்து: உங்களுக்கும் ஆபத்து” கவனம் ஐயா”- என்று சொல்லிவிட்டு பேபிநோனா ஓடி மறைந்து விட்டாள்.

சில்வாவை எனக்குத் தெரியும். ஆள் ஒருமாதிரி ‘ஐயா ஐயா, என்று நாய் மாதிரிக் குழைந்து ஐமபது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கி இருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும, சிரிப்பும் நன்றாக இருக்கவில்லை என்று அவள சொல்வதுண்டு.

இப்போது அவன் வருகிறானென்றால்

எனக்கு ஒரு கணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்திலை பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களன் மேல்விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பின் எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர, அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள்மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, “என்ன சில்வா, இந்தப் பக்கம்?” என்று சிரிக்க முயன்றேன்.

“சும்மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக்குக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான வந்தேன்” என்றான.

“முருகனை விட்டு நான் எங்கே தான் போக முடியும்?” என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.

“எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவேண்டும்.” என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்து மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.

“அது சரி யா, எங்கே அம்மாவைக் காணவில்லை.”

நான் திரும்பித் திரும்பி மனதிற்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்பிவித்தேன். “அவ நேற்றே ஊரக்குப் போய்விட்டாவே.”

‘பளீர்’ என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறிற்று. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான். மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

“தமிழ்ப்பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையில் கூட உன் பெண்டாட்டியைப் பார்த்தேனே!”

மற்றவன் கேட்டான்: “சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டுபோய் ஒளித்து வைத்திருக்கிறாய்?” - எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்து விட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்க மாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி; அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

“என்னடா பேசாமல் நிற்கிறாய்?”

குத்து! அடி! உதை!

குத்து! அடி! உதை!

குத்து! அடி! உதை!

நான் இயக்கமின்றிக் கீழே விழுந்து விட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டு போர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்.

“அவள் இருக்கிற இடத்தை நீ சொல்லமாட்டாய்? கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டு போய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்திச் சுடுவான்கள். உனக்கு அது தான் சரி! வாடா!” என்று சொல்லி இழுத்தார்க்ள. என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக்கொண்டு நடு வீட்டுக்கு வந்து விட்டார்கள். மேலே என் மனைவி… அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்து விட்டார்கள்.

“நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்ற கூச்சலோடு என் மனைவி பரணியிலிருந்து குதித்தாள்.

“அவரை விட்டு விடுங்கள்!” என்று அலறிக்கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.

பிறகு

என்னை ஒரு மேசையின் காலோடு பின் கட்டாகக் கட்டினார்கள். அவளை - என் மனைவியை குசினிப் பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலஙல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நான் தான் இரத்தம் கொதித்து மூளைகலங்கி, வெறி பிடித்து, மயங்கி விட்டேனோ?

மறுபடி எனக்கு நினைவு வரும் பொழுது அதே மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடிமீது வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல் கண்களைத் திறந்து பார்த்தேன்.

என் மனைவி.

மானம் அழிந்த என் மனைவி …..

எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன ‘கருத்து’ என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலை வைத்துப் படுத்திருக்கிறேனே… என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்து விடவேண்டுமென்று மனம் உன்னிற்று.

என் முகத்திலே ஒரு செட்டுக் கண்ணீர். இன்னொன்று, இன்னொன்று, என் முகம் அவள் கண்ணீரால் நனைய, மனமும் சிந்திக்கத் தொடங்கியது.

மூன்று விஷப்பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறுஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யாரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடையவேண்டுமா? மனம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால் பிரசவத்திற்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம்…

என் மனதில் எழுந்த அருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்படவேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலிஸ் வந்தது பேபிநோனா தான் அந்த உதவியைச் செய்தானென்று பின்னால் தெரிந்து கொண்டேன். என்னவோ கஷ்டங்களெல்லாம் பட்டு, அகதி முகாமில் கிடந்துழன்றி எப்படியோ இங்கு வந்து சேர்ந்தோம்.

“இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்த விடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்து விட வேண்டுமா…? அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிடவேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறியவள்? அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றபட்படவள் பத்தினித் தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியாக பேதையா?... சொல்லுங்கள் மாஸ்டர்…!”

கணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டினால் பொருமினார்.

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் வரம்பரை பரம்பரையாக இரத்தத்தில ஊறிப்போன பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டு விடுகிறோம். நான் கூட எவ்வளவு முட்டள்தனமாக அபிப்பிராயம் சொல்லிவிட்டேன். ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசுகின்ற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான பகுத்தறிவு வாதியை இன்றைக்குக் கண்டு பிடித்து விட்N;டன்” - என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மாகாந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவதுபோலத் தோன்றிற்று மூர்த்தி மாஸ்டருக்கு.


அ.செ. முருகானந்தம்
‘எவ்வளவோ எழுதிக் குவித்தேன். ஆயினும் எனக்கு பூரணதிருப்திதரக்கூடிய எதையும் இன்னும் நான சிருட்டித்து விடவில்லை’ - என உயர்வான கலைஞர்களுக்கே இயல்பாக ஏற்படும் மனக்குறையை, நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், - நாவல, நாடகம், கட்டுரை, வரலாறு, விமர்சனம், மொழிபெயர்ப்பு, செய்திக் கடிதம் என எழுதி, எழுத்தாலேயே முப்பதினாயிரம் ரூபாவரை சம்பாதித்துள்ள ஈழத்து எழுத்தாளர் ஒருவர் கூறினார். அவர் தான் -

அழகு, செல்வ, முருகானந்தம்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகிலே பீடுநடைபோட்டுவரும் அ.செ.மு. அதிக விளம்பரம் பெற்றவரல்லர். அவரது இயல்பான அமைதியான போக்கினாலும், அவரது படைப்புக்களில் எதுவுமே முறையாக நூலுருவம் பெற்று வெளிவராததாலும், தனது இலக்கியச் செல்வாக்குப் பெற்ற ‘அ.செ.மு.’ பெயரை அடிக்கடி மறந்துவிட்டு, பீஸ்மன், யாழ்ப்பாடி, யாழ்தேவி, முருகு, நீலாம்பரி, காங்கேயன், கதிரவன், மயிப்புறவம், சோபனா, இளவேனில், பூராடன், தனுசு, மேகலை, சத்தரிக்குறளி, போர்வீரன், வள்ளிகாந்தன் முதலிய புனைபெயர்களில் எழுதுவதாலும், இவரைச் சரியான முறையில் இனம் காணமுடியாதவாறு இன்றைய வாசகர்கள் இடர்ப்படுகின்றனர். ‘புகையில் தெறிந்த முகம்’ - என்ற இவரது புகழ்வாய்ந்த நீண்ட சிறுகதை நூல்கூட (அதைக் குறுநாவல் எனச்சிலர் கணிக்கின்றனர்) ஒரு பத்திரிகையில் தொடராக வெளிவந்தபோது ‘ஓஃவ் பிறின்ற்’ ஆக எடுத்துத் தொகுத்த தொன்றாகும்.

சிறுகதை மன்னன்
‘இது புகையுண்ட ஓவியமல்ல, யாழ்ப்பாணத்தின் உண்மைச் சித்திரம்’ (ஆனந்தவிகடன்), ‘கதை விறுவிறுப்பாக நல்லமுறையில் எழுதப்பட்டிருக்கிறது. புதிது புதிதாக வெளிவரும் வதைத் தொகுதியில் இதுவும் வரவேற்கத்தக்கதே’ -, (தினமணி), ‘கதையை ஆசிரியர் நல்ல தமிழ் நடையில் எழுதியுள்ளார். கதையைத் தொடங்கி வளர்த்து முடித்திருக்கும் முறை அழகாக உள்ளது. படிக்க நல்ல சிறுகதை’ (சுதேசமித்திரன்) - என தமிழகத்துப் பத்திரிகைகளாலும் ஈழத்துப் பத்திரிகைகளாலும், சிறுகதையுலகில் பெயர் வாங்கியவர் அ.செ.மு. அவர்கள். இவரது ‘மனிதமாடு’ என்னும் கதை முன்பு அல்லையன்ஸ் கொம்பனியார் வெளியிட்ட ‘கதைக்கோவை’யில் இடம் பெற்ற சிறப்பும் இவருக்குண்டு.

இலக்கியப் பின்னணி

1920ஆம் ஆண்டளவுகளில் தமிழிலக்கியம் என்பது பெரிய புராண வசனங்களிலும், இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களிலுமே அடங்கியிருந்தன. புதிதாக எழும் நவீன இலக்கியவகைகளிலே பரிச்சயமின்மையுடன். அவற்றை இலக்கிய வடிவங்களாக ஏற்காத மனநிலை நிறைந்த காலம். கதை என்றால் அதற்கு ஒரு தலை, வால் நீண்ட வரலாற்றுக் காலம் - என்பனவற்றையும், வீர, தீர, சூர, அதி பராக்கிரமச் செயல்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் எனக் கருதப்பட்டு, அத்தகைய நூல்களையே ‘வாசிப்பு’ நடாத்தி இரசித்த காலம்.

படித்த மத்தியதர வகுப்பினர்கூட சேக்ஸ்பியருக்கும், ஷெல்லி’க்குமிடையே முடங்கி பரீட்சை எழுதி பட்டம் பதவி பெற்ற மமதையில் - ‘தமிழா தமிழில் இலக்கியமா?’ -எனப் போலி வியப்பை ஏந்தி நின்ற காலத்திலேதான், அ. செ. மு.-வின் இலக்கியப் பயிற்சி ஆரம்பமாகியது.

தேசியக் கலைஞன்
ஒரு கலைஞன் உருவாகின்ற சூழலின் தன்மைகளுக்கமையவே, அவனின் ஆத்மபலமும், இலக்கிய நேசிப்பும் அமைகின்றன. சீர்கேடான, தமிழின் மறுமலர்ச்சிக்குப் பொருத்தமற்ற சூழலில் அச்சூழலின் தாக்கத்தையும் முறியடித்துக்கொண்டு அவனது மொழிவழி இலககிய வேட்கை சீறி எழும்போது, அவனது பணியில் த்ம சுத்தியே பளீரிடும். அத்தகைய கலைஞன் நிச்சயம் வாசகரையோ, தன்னினத்தையோ ஏமாற்றவோ, தவறான பாதைக்கு இட்டுச் செல்லவோ மாட்டான். அவனது எழுத்தில் தன் நாடு, தன் மொழி, தன் இனம் என்கின்ற தேசிய நேசிப்பே மிஞ்சி நிற்கும். இததகைய நேசிப்பு மிகுந்த ஒரு தேசியக் கலைஞன் தான் அ.செ.மு.

அமபுலிப் பருவம்
இவரது இலக்கியக்களமாக அமைந்தது இவரது வீடேயாகும். இவரது குடும்பமே ஒரு கலைக்குடும்பம்தான். அக்காலங்களில் இவரது வீட்டு முன்றலில் பழையபுராண, இதிகாசக் கதைகளும் - ஆனந்த விகடன், ஈழகேசரி போன்ற அக்காலச் சஞ்சிகைகளும் ‘வாசிப்பு’ முறைமூலம் படிக்கட்டு வந்தன. (வாசிப்பு) என்பது ஒருவர் மையமாக அமர்ந்து நூலைக் கையிலெடுத்து உரத்த குரலில் சப்தமிட்டுப் படிப்பார். மற்றவர்கள் அவரைச்சூழ அமர்ந்திருந்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பர். இதற்கு இன்னுமொரு காரணம் அக்காலத்தில் மத்தியதர வகுப்பினரின் பெரும்பான்மையோர் எழுத்தறிவு அற்றிருந்தமையேயாகும். இவரது தாய் மாமனார்கள் இலக்கியம் என்ற உணர்வில்லாமலே, உற்சாகமாக மனதுக்குகந்த பொழுதுபோக்கு என்ற நிலையில் மேற்படி நூல்களை உரத்துப் படித்துவர அதனைச் செவிமடுத்திருக்கும் சிறுவன் ‘அ.செ.மு’ -வின் குழந்தை உள்ளம் கற்பனாலோகத்தில். அந்தந்தப் பாத்திரங்களாக மாறி சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இதுவே, பிற்காலத்தில் பல்வகைப் பாத்திரங்களின் குணாதிசயங்களைச் சித்தரித்த இவருக்கு உதவியது எனலாம்.

அன்னை மொழி
பாடசாலை மாணவனாக இருந்த காலத்திலேயே, தன் மனதிலே அவ்வப்போது எழும் சிந்தனைகளை சிறு சிறு துண்டுக்காகிதங்களில் எழுதிப் பொறுப்பற்ற முறையில் போட்டுவிடும் பழக்கம் அ.செ.மு.விடம் இருந்தது. இந்தத் துணுக்குகளை எல்லாம் இவரது தாயார் வீடு பெருக்கும்போது கண்டெடுத்துப் படித்துப் பார்த்துவிட்டு வியந்து நிற்பதுடன் மட்டுமல்லாமல் ‘இவற்றையெல்லாம் கண்டபடி போடாதே. நன்றாக எழுதுகிறாய். இவற்றைப் பத்திரப்படுத்திவை, மிக உயர்ந்தவை’ - எனக் கூறி உற்சாகப்படுத்துவார். இதனால் அ.செ.மு. பெற்ற ஊக்கமும் உற்சாகமும் அளப்பரியது. அன்னையின் மொழிகள் இவரது இலக்கியம் என்னும் மல்லிகைச் செடிக்கு வார்த்த நன்னீராகி, மலர்களைப் பூத்துச் சொரிய வைத்தது. இதனால், இவர் பாடசாலையில், இலக்கிய வகுப்புக் கட்டுரைகளிலும் உயர்ந்த புள்ளிகளைப் பெறவே, ஆசிரியர்களின் பாராட்டும் இவரை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதாயிற்று.

இலக்கிய கேசரி
‘ஈழகேசரி கல்வி அனுபந்தம்’- என்ற ஒரு புதுப் பகுதி 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் மாணவ இளம் எழுத்தாளர்களைத் தோற்றுவிப்பதற்காக தமிழ்ப் பத்திரிகை உலகிலே முதன் முதலாக இளைஞர் சங்கம் ஒன்றை நடாத்தி வருட மகாநாடு ஒன்றையும், கல்வி விசேட மலர் ஒன்றையும் வெளியிட்டது. இந்த இளைஞர் சங்கத்தில் பல பாடசாலைகளில் படித்த மாணவர்கள் உற்சாகத்தோடு சேர்ந்தார்கள். போட்டிகளிற் பங்குபற்றினார்கள். 125, 154, 181 - ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மூன்று ஆரம்ப எழுத்தாளர்கள் அடிக்கடி பரிசைத் தட்டிச் சென்றனர். அப்போது ஈழகேசரி ஆசிரியராக இருந்த திரு. சோ. சிவபாத சுந்தரம் அவர்கள் இந்த மாணவ எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி வந்தனர். அவரின் இலக்குத் தவறவில்லை. 125ஆம் எண்ணில் முளைவிட்டுக்கொண்டிருந்தவர் தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரி மாணவர்தான் இன்று புகழ்வீசி நிழல் பரப்பிக் குளிர்மை தரும் கதை மன்னனாகத் திகழும் அ.செ.முருகானந்தன் அவர்கள்’ - என ‘ஈழத்துப் பேனா மன்னர்கள்’ வரிசையில் 1955ஆம் ஆண்டு ‘கரவைக் கவிகந்தப்பனார்’ எழுதிச் செல்கின்றார்.

பத்திரிகைப் பணி
1938ஆம் ஆண்டில் ‘ஈழகேசரி கல்வி அனுபந்’ தத்தில் எழுத ஆரம்பித்த அ.செ.மு. 1941ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஈழகேசரி வாரப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவரானார். இதே ஆண்டு இதே மாதத்தில்தான் தென்னகத்துப் பிரபல பத்திரிகையான ஆனந்த விகடனில் இருந்து விலகிய ‘கல்கி’யின் பத்திரிகையான கல்கியின் முதலிதழ் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்க வரலாற்றாச் சம்பவமாகும். இக்காலத்தில்தான் அ.செ.மு. அவர்கள் ஸ்ரீ ராமானுஜம், வெறுப்பும் வெற்றியும், எச்சில் இலை, காப்பிரி, பரிசு, மனிதமாடு, வண்டிற் சவாரி கிழவி, விடியுமா? - முதலிய கதைகளை எழுதினார்.

இக்காலவேளையில் தன்னோடொத்த பல இலக்கிய எழுத்தாள நண்பர்களின் நட்பும் ஏற்பட்டது. இந்த நண்பர்களிடையே நேரடித் தொடர்பும் கடிதத் தொடர்பும் நிலவிவந்தன. இவருக்கும், இன்றைய பிரபல எழுத்தாளர்களில் ஒருவருமான ‘வரதர்’ அவர்களுக்கும் ஏற்பட்ட கடிதத் தொடர்பே ஈழத்தின் மணிக்கொடிக்காலம் என இலக்கிய வரலாற்றில் பேசப்படும் ‘மறுமலர்ச்சி’ச் சங்கமும், பத்திரிகையும் தோன்றக் காலாயிற்று.

‘மறுமலர்ச்சி’ச் சங்கமும், பத்திரிகையும் ஈழத்து இலக்கியம் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்திற்று. நல்ல பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. இதனால் அப்போது தென்னகத்தில் சிறந்த இலக்கியத் தொண்டாற்றி வந்த, ‘கிராம ஊழியன்’, ‘கிராம மோஹினி’ முதலிய பத்திரிகைகளில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பும் சரியாசனம் பெற்றன. இரு நாட்டு எழுத்தாளர்களிடையேயும் மரியாதை நிறைந்த நட்பு ஏற்பட்டது. கிராம ஊழியன் ஒருமுறை விசேட மலர் ஒன்றினை வெளியிட்டபோது முதல் விடயமாக ஈழத்து எழுத்தாளரான சோ. சிவபாதசுந்தரத்தின் கட்டுரையைப் பிரசுரத்தது. ‘ஒரு மந்திரியின் ஆசியுரையைப் பிரசுரிக்காமல், ஈழத்தவர் ஒருவரின் விடயத்தை முதலாவதாகப் பிரசுரித்தது. ஆச்சரியமான விடயம்’ - என அப்போது இன்னொரு பத்திரிகை மதிப்புரையில் எழுதிப் பொறாமைப்பட்டது. அது மட்டுமல்லாமல் மறுமலர்ச்சிச் சங்கம் கு.ப.ரா. வின் மறைவின் பின் அவரது குடும்ப நலனுக்காக நிதி திரட்டி நூற்றியொரு ரூபாய்களையும் அனுப்பிவைத்தது. இக்காலங்களி; இச்சஙகத்தின் தலைவராகக் கடையாற்றியவர். அ.செ.மு. அவர்களாகும்.

சக்கரதாரி
ஈழகேசரி பத்திரிகையில் கடமையாற்றிய பின்னர், மறுமலர்ச்சிப் பத்திரிகையில் வரதருடன் கூடிப்பணிபுரிந்தார். இதன் பின்னர் திருகோணமலை சென்று இன்னொரு பிரபல எழுத்தாளரான தாளையடி சபாரத்தினத்தின் துணையுடன் ‘எரிமலை’ என்னும் மாத சஞ்சிகையை வெளியிட்டு நட்டமடைந்தார். அடுத்த கொழும்பு நகர் சென்று ‘சுதந்திரன்’, ‘வீரகேசரி’ ஆகிய பத்திரிகையில் பணிபுரிந்துவிட்டு, மீண்டும் யாழ்நகர் வந்து காங்கேசன் துறையில் அமைதியாக வாழ்ந்து வந்தார். ஆனால், ஈழநாட்டில் பணிபுரியும் .இலக்கிய அன்பரான சு. சபாரத்தினம் (சசி பாரதி) அவர்களின் பெருமுயற்சியால் ‘ஈழநாடு’ வாரப் பதிப்பில் பணிபுரிந்து வருகிறார்.

எழுத்தின் நோக்கம்
அ.செ.மு.அவர்கள் எழுத்துலகில் கால்வைக்கும்போது எழுத்தின் நோக்கம் பற்றி ஒரு திடமான கரு;ததைக் கொண்டிருந்தது மட்டுமன்றி, தற்கால உலகத்துக்கு வேண்டியது எது? என்பதனையும் நன்குணர்ந்திருந்தார். நச்சு இலக்கியம் எது? நசிவு இலக்கியம் எது? என்ற வேறுபாட்டினையும் தௌ;ளத் தெளியத் தெரிந்திருந்தார்.

‘தமிழில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் அநேக கதைகளைப் பார்த்தால் தமிழ் நாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் காதலர்கள். அவர்கள் காதலித்து ஏமாற்றமும், துயருமடைந்து இறந்து போவதைத் தவிர வேறு தொழில்கள் அவர்களுக்கில்லை.

தமிழிர் லட்சியக் கதைகள், - சீர்திருத்தக் கதைகள் மிகவும் குறைவு. அத்தியாவசியமாக வேண்டப்படுவதும் அவை தான்.’- என அவர் ‘தமிழில் கதை இலக்கியம்’ என்று அப்போதே எழுதினார்.

நூறு கதைகள்
அ.செ.மு.-அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நூற்றிற்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இக்கதைகளிடையே காலவித்தியாசம் முப்பது வருடங்களாக இருந்த போதிலும், எழுத்தின் தன்மையிலும், கொள்கையிலும், தரத்திடையேயும் அதிக வேறுபாடில்லை. இவரது புகழ் பெற்ற சிறுகதைகளாக ‘ஈழகேசரி’யிரும் ‘மறுமலர்ச்சி’யிலும் எழுதிய காப்பிரி, ஏழை அழுத கண்ணீர், வண்டிச்சவாரி, மனித மாடு, முதலிய கதைகளையே வாசகர் அறிந்துள்ளனர். ஆனால் அவற்றைவிட, தாம் சமீபத்தில் எழுதிய கதைகளே தரத்தில் உயர்ந்தன எனக் கருதுகின்றார்.

இவரின் கதைகள் இலட்சிய அடிப்படையில் அமைந்தாலும், அவற்றின் கதாபாத்திரங்களோ, குணாதிசயங்களோ போலித்தனமாக விளங்காமல், மனிதாபிமானத்தின் உயிர் நாடியை உணர்த்துவதாக விளங்குவதால் - நல்ல நோக்கும், கலையம்சமும் நிறைந்தனவாக விளங்குகின்றன.

இவரின் கதைகள் அனைத்தும் உயர்வான யதார்த்தச் சித்திரங்களேயாகும். இந்த யதார்த்தச் சூழல் தான் வாழும் கிராமத்துடன் மட்டும் நின்றுவிடாது. திருகோணமலை, மலைநாடு, கொழும்பு என ஈழம் முழுவதும் பரவிய தேசியக் கண்ணோட்டமாக விளங்குகின்றது. இதனால் இக்கதைகள் பல்வகை மனிதர்களையும், வேறுபட்ட வாழ்வுச் சிக்கல்களையும் கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலைப் படைப்புகளாக மிளிர்கின்றன. ஏன்? இந்தத் தேசியம் - உலகப் பொதுமையான சர்வதேசியமாகவும் மாறிவிடுகின்ற வளர்ச்சிப் பாதையையும் காணமுடிகின்றது. ‘காப்பீரி’ என்ற கதையில் இந்த உண்மை சிறப்பாக வெளிப்படுகின்றது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது இலங்கைக்கு வந்த நீகுரோவின் அன்னைப் பாசம், நாடு, மொழி, மதம், இனம் என்பனவற்றிற்கு அப்பாற்பட்டு வெளிப்படுவதை காணலாம்.

‘வண்டிச்சவாரி’ என்னும் கதை யாழ்ப்பாணப் பண்பாட்டினை அழகாகச் சித்தரித்தது. பெரும்பாராட்டைப் பெறவே, அதனை விரித்து-, வண்டிற்சவாரி, திருவிழா, மழை, புகையிலைத் தோட்டம், தேர்தல் - என்பனவற்றையெல்லாம் இணைத்து தனது புகழ் பெற்ற ‘புகையில் தெரிந்த முகம்’ - என்ற நீண்ட சிறுகதையை எழுதினார். இச் சிறுகதையைப் படித்த பின்னர் தான் - யாழ்ப்பாணக் கமக்காரனின் புகையிலைத் Nதூட்டம் எப்படிப் பிற்காலக் கதைகளிலும் சித்தரிப்பது ஒரு எழுத்தாள நாகரிகமாக மாறியது என்பது புலனாகியது. இக் காலத்தில் மீனவர் வாழ்க்கையைச் சித்தரிப்பதுபோல், இவர்கால எழுத்தாளர்கள் ஆளுக்கு ஒன்றாகவென்றாலும் ‘புகையிலைத் தோட்டக் கதைகளைப்’ படைத்துள்ளனர்.

இவர் எந்தக் கதையை, எப்படிப்பட்ட சூழலிலும் எழுதினாலும், அவற்றின் ஒரு சமுதாயப் போராட்டம், பணிகலந்தே கிடக்கின்றன. ஆனால் அந்தப் போராட்டம் வெளிப்படையாக நிற்காது ஒவ்வொரு கதையினுள்யும் ஜீவநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கும். இந்தப் பணி ஒன்றினை முன்வைத்தே தனது இலக்கிய யாத்திரையை இவர் நடாத்துகின்றார் எனலாம். ‘எழுத்தாளனும் போர்வீரன்தான். அவனது வாழ்வும் பணியும் இரண்டுமே போரும், வீரமும் தான்’ எனக் கூறும் இவர் தனது பேனாவால் ஈழம் முழுவதையும் தரிசித்தார் எனக் கூறலாம்.

கதை உருவம்
சிறுகதை என்னும் கலைவடிவம் இவரது படைப்புகளில் சிறப்பாக அமைந்துள்ளது. சிறுகதைக்கு முடிந்த முடிபான இலக்கணம் இல்லாவிட்டாலும், இவைதான் நல்ல சிறுகதைகளுக்கு அடையாளம் என்ற மனநிறைவை ஏற்படுத்தும் பெற்றியன. இவர் சிறுகதைகளை சிறுகதைகளாகவே எழுதினார். இவர் காலத்திய ஏனைய பெரிய எழுத்தாளர்கள் கூட பல சமயங்களில் சிறுகதைமரபை மீறி எழுதியுள்ளனர். ஆனால், இவரது ‘புகையில் தெரிந்த முகம்’ - என்ற நீண்ட கதைகூட இந்த எல்லையை மீறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனாற்றான் இவரை ‘தமிழ்நாட்டு எட்கார் அவன் போ’ என அழைக்கின்றனர்.

நேற்றும், இன்றும்
இவரது படைப்புகள் புதுமையை நேசித்தாலும், பழமையை முற்றாக நிராகரிக்கவில்லை. ‘பழமையை அத்திவாரமாகக் கொண்டு புதுமையை எழுப்ப வேண்டும். பழமையைக் கரைத்துக் குடித்த பண்டிதர்கள் பழமையிலுள்ள அழுக்குகளைப் புதிய முறையில் - புதிய மெருகு பூசி எல்லாரும் அறியக் கூடிய முறையில் எடுத்துக்காட்ட வேண்டும்’- என்ற எண்ணத்தில் இவரின் படைப்புகள் எழுந்துள்ளன.

உயிர் நடை
இவரின் உரைநடை தான் எடுத்துக்கொண்ட விடயத்தோடு நெருங்கி நேராக உறவாடும் பெற்றியது. சிக்கலற்றது. இலகுவானது. ஆடம்பரமான கருத்தையும், கருவையும் விழுங்கிவிடும் சொற்களைக் காணலரிது. ஏன் இவரின் படைப்புகளில் உவமை, உருவகங்கள் கூடக் காணமுடியாது. ஈழகேசரிக் கதைகளில் கிராமியச் சொற்கள் அதிகம் இடம் பெற்றன. ஆனால், தற்கால ஈழநாட்டுக் கதைகளில் அவையும் அருகி முற்றாக இல்லாதொழிந்துவிட்டன. நல்ல தூய, தமிழ் நடையில் இவருக்கு இயல்பாக எத்தகைய உணர்ச்சியனுபவங்களையும் வெளிப்படுத்தும் ஆற்றல் இருப்பதால்தான் இவரை ‘சரளநடை எழுத்தாளன்’ - எனவும் அழைக்கின்றனர்.

முற்றுப்புள்ளி
இவரது கதைகளைக் கொண்டு பத்துக் கதைக்கோவைகள் வரை போடலாம். அனால், ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லை. இவை வெளிவரும்போது தரமான சிறுகதைக் கோவைகள் நமது இலக்கியத்தில் இடம் பெறக்கூடும். அ.செ.மு.வின் கதைகளை வெளியிட எழுத்தாளர் மன்றங்களோ, பதிப்பகங்களோ முன்வரவேண்டும்.

காளிமுத்துவின்
பிரஜாஉரிமை
‘அ.செ.மு’
இலங்கையின் சமூக பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத சேவைகள் புரிந்துவிட்டதாக அப்படி ஒன்றும் பிரமாதப்படுத்தவில்லை. அதனால் இலங்கையின் கௌரவப் பிரஜையாக அரசாங்கம் அவனை ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியாகத்தான் இலங்கை மண்ணில் அவன் வாழ்ந்தான்.

காளிமுத்துவின் குடும்பம் ஒரு தலைமுறையல்ல, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மலைநாட்டை வாழவைத்தது. அந்த மூதாதைகளின் வியர்வையில் செழித்து வளர்ந்துதான் இன்று ராஜகிரித் தோட்டம் கம்பீரத்தோற்றங்கொண்டு குளு குளுவென்று நிற்கிறது. ஏன், உண்மையைச் சொன்னாலென்ன, மலைநாடு இன்றைக்கெல்லாம் மலைபோல நிமிர்ந்து நிற்பது இந்தியப்பாட்டாளிகளின் உழைப்பின்மீதுதான்.

பிரிட்டிஷ்காரன் இலங்கையில் கோப்பிச்செடி பயிரிட்டு அதில் தோல்வி கண்டு மறுபடி அதற்குப் பதில் தேயிலை பயிரிடத் தொடங்கிய காலத்திலேயே காளிமுத்துவின் முற்சந்ததிகள் தோட்டத் தொழிலாளிகளாக இலங்கையில் குடியேறினார்கள்.

இலங்கைப் பிரஜாவுரிமைபற்றிய பேச்சு ஊரில் அடிபட்ட போது ராஜகிரித் தோட்டத்தை இலங்கை அரசாங்கம் எடுத்துக் கொள்ளப் போகிறதென்றும் இலங்கைப் பிரஜைகளாயுள்ளவர்களை மட்டுமே அது வேலைக்கமர்த்துமென்றும், பிரஜாவுரிமை பெறாத இந்தியர்களை இந்தியாவுக்கே அனுப்பிவிடப்போகிறதென்றும், ஆகவே தோட்டத் தொழிலாளர்கள் ஆகவேண்டிய அத்தாட்சிகள் காட்டி தங்களை இலங்கைப் pபரஜைகளாகப் பதிவு செய்துகொள்ள வேண்டுமென்றும் காளிமுத்துவுக்குத் தகவல் கிடைத்தது.

தேர்தலுக்கு நிற்பதற்கோ அல்லது வேறு ஏதாவது அரசியல் கூத்தடிப்பதற்கோ அவன் பிரஜாவுரிமைக்கு ஆசைப்படவில்லை. அவன் கவலைப்பட்டதெல்லாம் வருங்காலச் சந்ததிகளாக விளங்கவிருக்கும் அவனது பிள்ளை குட்டிகள் எண்ணித்தான்.

காளிமுத்துவுக்கு ஒரு மனைவியும் ஒரு தாயும் மூன்று பிள்ளைகளுமுண்டு. குளுகுளுவென்ற மலைச்சுவாத்தியத்திலே முனசிங்காவுக்கும் அப்புஹாமிக்கும் பிறந்த குழந்தைகளைப் போலக் குவா குவா என்று கத்திக்கொண்டுதான் அவைகளும் பிறந்தன. உடலின் வலுவைப்பிழிந்து உழைத்த இத்தனை காலத்திலும் காளிமுத்துவுக்கு மிஞ்சிய தோட்டம், சம்பாத்தியம் இதுதான் - ஐந்து ஜீவன்கள் கொண்டதொரு பெரிய குடும்பம்.

இந்தக் குடும்ப பளுவோடும் தளர்வடைந்த கைகளோடும் இனிமேல் இந்தியாக் கரைக்குப்போய் அவனால் என்ன செய்ய முடியும்? பிள்ளைகுட்டிகளின் வருங்காலத்துக்குத்தான் அங்கு எந்த வழியை அவன் வகுப்பது?
ஆகவே, பிரஜாவுரிமை பெறுவதற்கான மார்க்கத்தை காளிமுத்து தேடத் தொடங்கினான். இதற்காக அங்குமிங்கும் போய் வந்துகொண்டிருந்தபோது அவனுக்கு எத்தனையோ சிந்தனைகளும் ஆசைகளும் உண்டாயின. தேயிலைக் காட்டுக்குள்ளே உரிமையற்ற அனாமதேயமாக அவனது பிரேதம் புதைக்கப்படுவதை நினைத்தாலும் அவனது மனம் சற்றே வேதனைப் படத்தான் செய்தது. இத்தகை காலமாக வாழையடி வாழையாய் வாழ்ந்து பாடுபட்டபின் சாகும் பொழுதாவர் வாயில்லாப் பூச்சியாகச் சாகாமல் வாக்குரிமை பெற்றுச்சாகக் கூடாதா? என்று ஒரு ஆசை அவன் மனத்தில் ஒரு மூலையில் இல்லாமல் போகவில்லை. ஆனால், அதை அவன் வெளியே சொல்லுவானா? ஒரு தோட்டத் தொழிலாளியின் ஆசைக்குப் பெறுமதி-?

காளிமுத்து படி ஏறிய இடங்களில் பிரஜாவுரிமை கிடைப்பதற்குப் போதிய அத்தாட்சிகள் காட்ட வேணுமென்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘’அங்கே அவரைப் போய்க் காணு; இங்கே இந்தத் துரையைக் கண்டு பேசு” என்று அங்குமிங்குமாய் பலதடவை அவனை அலைக்கழித்தார்கள். இலங்கை வரும் இந்தியர்கள் இப்படியான நிலைமைகளில் அபூர்வமான சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்ள மண்டபம் கேம்பிலேயே பழகிக்கொண்டு விடுகிறார்களாதலால் காளிமுத்து பொறுமையோடு அங்குமிங்கும் போய் அவரையும் இவரையும் பதினாறு தடவைக்கு மேல் பார்த்தான். பார்த்துப் பயனென்ன?

“அத்தாட்சி வேண்டும்; பிறப்புப் பத்திரங்கள் காட்ட வேண்டும்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். வெள்ளைக்காரத் தோட்ட சூப்ரண்டன் ஆட்சியிலே அவன் அத்தாட்சிக்கு எங்கு போவான்? பிறப்புப் பத்திரங்களுக்குத்தான் எங்கு போவான்?

“ஐயா, எனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கு கருப்பையா என்று பெயர் வச்சிருக்கோம்: எழுதிக்கொள்ளுங்கோ, எஜமான்” என்று தோட்ட சூப்ரண்டன் கந்தோரில் போய் ஆசையோடு சொல்லும்போதே, அங்கிருக்கும் யாழ்ப்பாணத்துக் கிளார்க்துடை “என்னடா ‘அது, கருப்பு ஐயா? அப்போடா ஐயாவானே? சின்னகாளிமுத்து என்று சொல்லடா” என்று அதட்டி ‘சி.கா’ மட்டும் போட்டு விஷயத்தை முடித்துவிடுவான். இந்த நிர்வாக லட்சணத்தில் அங்கே பிறப்புப் பத்திரங ;களா இருக்கும். ஆனால் பதிவு உத்தியோகத்தர்கள் என்னமோ பிறப்புப்பத்திரங்களைக் கேட்கத்தான் கேட்டார்கள். அத்தாட்சி கொண்டுவா என்று கூச்சல் போடத்தான் போட்டார்கள்.

“கைப்பூணுக்கு கண்ணாடியிலா அத்தாட்சி காட்ட வேணும் ஐயா? அதோ பாருங்கள், எங்கள் கைபட்டு எங்களது சொந்த வியர்வையும் இரத்தமும் பாய்ச்சி சந்ததி சந்ததியாக நாங்கள் பண்படுத்தி வந்த தோட்டங்களை!” என்று சொன்னால் அது செவியில் ஏறமாட்டார்.

‘அதற்கு அத்தாட்சி……?’

காளிமுத்து சோர்வடைந்தான்.

கடல் கடந்த இந்தியர்pன் உழைப்பைத்தான் அரசாங்கம் காட்டில் எறிந்த நிலவைப் போல இம்மாதிரி ஒதுக்கிவிடுகிறதென்றால், அவரின் பகலுமிரவும் வெயிலும் மழையும் காடும் மயலயம் பார்க்காமல் பாடுகட்டதெல்லாம்தான் தண்ணீர்pல் கரைத்த புளிபோலப் போய்விடுகிறதென்றால், அந்த துர்ப்பாக்கியசாலிகள் பிறப்பு, இறப்பு இல்லாத அசேதனப் பொருள்களாகவும் ஆகிவிட்டார்கள் என்று காளிமுத்துவின் நெஞ்சம் கலங்கியது.

“வாருங்கள், அத்தாட்சி காட்டுகிறேன்” என்று வாக்குப் பதிவு உத்தியோகஸ்தர்களை காளிமுத்து ஒரு தினம் வீட்டின் பின்பக்கமாய் தேயிலைக் காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றான்.

தழைத்து வளர்ந்த அரசங்கன்று ஒன்று அங்கே நின்றது. அதைச் சுற்றிவர உத்தியோகஸ்தர்களை நிற்கும்படி கேட்டுக்கொண்டு காளிமுத்து கையோடு எடுத்துச் சென்ற கோடரியைக் கொண்டு அதை வெட்டத் தொடங்கினான்.

காளிமுத்து உணர்ச்சி வசப்பட்டிருந்தானென்பது அவனுடைய ஒவ்வொரு காரியங்களிலும் தென்பட்ட பதட்டத்திலிருந்து தெரிந்தது. உத்தியோகஸ்தர்களுக்கு கோடரியையும், காளிமுத்துவின் பதட்டத்தையும் பார்க்க கொஞ்சம் யோசனைதான். என்றாலும், பேசாமல் நின்றார்கள்.

அரசங்கன்றை அடி மரத்தோடு வெட்டி வீழ்த்திவிட்டு மண்ணுக்குக் கீழே புதையுண்டிருந்த மரத்தின் வேர்ப்பாகத்தை அவன் கிளப்பத் தொடங்கினான்.

பதிவு உத்தியோகஸ்தர்களுக்கு இதெல்லாம் விசித்திரமாகத் தோன்றிற்று. ஆனாலும் முடிவு என்ன வென்பதை அறியும் ஆவலில் பேசாமல் நின்றார்கள். பிறப்புப் பத்திரங்கை ஒரு சமயம் மண்ணுக்குள்ளே புதைத்து வைத்திருக்கிறானோ, பைத்தியக்காரன் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

அரசமரத்தின் அடிப்பாகமும் வெளியே கொண்டுவரப்பட்டாயிற்று. நிலத்தில் மூன்றுமுழு ஆழத்துக்குமேலே காளிமுத்து கிடங்கு தோண்டி விட்டான். மேலும் தோண்டிக் கொண்டே போனான். பதிவு உத்தியோகத்தர்கள் சற்றே பொறுமை இழந்தார்க்ள. ‘யாருக்கப்பா குழிதோண்டுகிறாய்’ என்று கிண்டல் பண்ணினார்கள்.

“இன்னும் சற்று நேரம் பொறுத்திருங்கள், துரைமார்களே” என்று காளிமுத்து கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். கிடங்கு இப்பொழுது அவன் கழுத்தை மழைத்தது.

மண்வெட்டியில் ஏதோ ஒரு கடினமான பொருள் தட்டுப்படவே காளிமுத்து பரபரப்பாகவே குனிந்து மண்ணைக்கிளறி அதை எடுத்தான். அது ஒரு கல்லு. “இது என்ன சனியன் இதுக்குள்ளே” என்று வெறுப்போடு தலையைக் கழட்டி மேலே வீசினான். அது மேலே நின்ற உத்தியோகத்தர் ஒருவரர் தலையில் வொடக்கென்று விழுந்தது. “ஏ வெளியே ஆட்கள் நிற்பது தெரியவில்லையா” என்று ஒரு அதட்டல்.

காளிமுத்து மேலும் கிடங்காகத் தோண்டினான். இப்பொழுது மண்ணுக்குள்ளே இன்னொன்று பளிச்சிட்டது. புழுப்போல சுருண்டு போய்க் கிடந்த அதை அவன் எடுத்துக் குலைத்தான். அதைப்பார்த்தபோது அவன் கண்கள் கலங்கின. அது ஒரு வெள்ளி இருப்புக்கொடி. கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடிக்குள்ளே அதை பத்திரமாகச் சொருகி வைத்தான்.

குழி இப்பொழுது அவன் தலையை மறைத்தது. உத்தியோகஸ்தர்களுக்கு நின்று கால் சோர்ந்து போயிற்று. சற்றே பின்பக்கதாக விலகி வெட்டிவிழுத்திய அரசங்கன்றுக் கிளைகளின் மீது உட்கார்ந்தார்கள்.

இருந்தாற்போலிருந்து காளிமுத்து துள்ளிக் குதித்தான். “இதோ அத்தாட்சி கிடைத்துவிட்டது. நான் இலங்கையின் பிரஜை. அதங்கு இதைவிட இன்னும் என்ன அத்தாட்சி கேட்கிறீர்கள்?” என்று எங்கோ கிணற்றுள் இருந்து வருவது போல அவனது குரல் கேட்டது. அதைக் தொடர்ந்தாற்போல மண் பிடித்த பொருளொன்று வெளியே உத்தியோகஸ்தர் முன்பாக வந்து விழுந்தது.

அவர்கள் ஆவலோடு ஓடிப்போய் அதை எடுத்துப் பார்த்தார்க்.

அது ஒரு மனித பிரேதத்தின் கை எலும்பு.

“ஐயா துரைமார்களே, அது என் பாட்டனாரின் கை எலும்பு. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னே அவர் இங்கு புதைக்கப்பட்டவர் என்னை இலங்கைப் பிரஜையாக்க உங்களுக்கு இந்த அத்தாட்சி போதவில்லையென்றால் - என்னை இந்தக் குழியிலே வைத்து உங்கள் கையினாலேயே மண் தள்ளிவிட்டு புதையுங்கள்” - என்று காளிமுத்து மறுபடியும் சத்தம் வைத்தான்.

காளிமுத்துவின் பாட்டனின் கை எலும்பை உத்தியோகஸ்தர்கள் கையிலெடுத்தபோது அவர்களுக்கு ரோமம் புல்லரித்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

“பாவம், அவனுக்குப் பைத்தியதான் பிடித்திருக்கிறது” என்று அவர்களில் ஒருவன் சொல்லிக்கொண்டு வெளியேறினான். மாட்டுக்குப் பின் வால் போல சக உத்தியோகஸ்தர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

வெட்டி வீழ்த்திய அரசமரத்தின் இலைகள் அப்போது வீசிய மலைக்காற்றுக்குச் சலசலக்கவில்லை. அவை வாழப்போய்விட்டன.

தாழையடி சபாரத்தினம்
1940ஆம் ஆண்டில் ஆனந்தவிகடன் பத்திரிகையை விட்டு விலகிய ரா. கிருஷ்ணமூர்த்தி - ‘கல்கி’ என்ற தனது புதிய வாரப் பத்திரிகையை ஆரம்பிக்கவே ஈழத்து இலக்கிய இரசிகர்களின் மனப்பத்திரிகையை ஆரம்பிக்கவே ஈழத்து இலக்கிய இரசிகர்களின் மனப்போக்கில் புதிய மாற்றங்கள் ஆழமாக வேரிடத் தொடங்கின. மணிக்கொடிப் பத்தரிகை எவ்விதம் ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிகளில் இலக்கியப்பயிற்சி மிக்கவர்களைக் கவர்;ந்ததோ, அதேபோல ‘கல்கி’யின் எழுத்தில் ஈழத்துத் தமிழாசிரியக் கூட்டம் மோகித்துக் கிடந்தன. இவர்களின் இந்தமோகம் ‘கல்கி’ப் பத்திரிகையை வீட்டின் அடுப்படிவரை பரவச் செய்தது. இதனால் முன:பு ஒவ்வொரு வியாழக்கிழமையும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகைக்காக காத்திருந்த இரசிகர்கள் கல்கி-க்கும் காத்திருப்பது வழக்கமாகிவிட்டது.

‘கல்கி ஏற்படுத்திய இலக்கியத் தாகமும், அதன் இரசனையும் உண்மையிலக்கியத்திற்காகப் பாடுபட்ட ‘மணிக்கொடி’ காரரைப் பதைக்க வைத்ததுடன், அவர்களுடைய இலக்கியப் போராட்டத்தை அர்த்தமும், ஆழமுமுள்ளதாக்கியது. புதுமைப்பித்தனுக்கும் - கல்கிக்கும் நிகழ்ந்த இலக்கியச் சர்ச்சைன, பாரதி பற்றி கல்கிக்கும் -வராவுக்கும் நடந்த சொற்போர் - கல்கியின் வர்த்த ரீதியான இலக்கியச் சந்தையை தெளிவாக எடுத்துக் காட்டியதுடன், ஈழத்தில் எவ்வாறு ஒரு மணிக்கொடிப் பரம்பரையினர் எழுந்தனரோ, அதேபோலவே ‘கல்கி’ப் பரபம்ரை எழுத்தாளரும் தோன்ற வித்திட்டது இவர்களில் முக்கியமானவர்தான் தாளையடி. சபாரத்தினம் அவர்களாகும். இதுமட்டுமன்றி 1940ஆம் ஆண்டில் ஈழத்தில் வெளிவந்த தினசரிகளின் இலக்கியப் பக்கங்களை அவதானிக்கும்போது - ‘கல்கி’-யின் ஆதிக்கம் எவ்வளவு பலமாக ஈழத்தைப் பாதித்திருந்தது என்பது புலனாகும்.

ஈழத்துத் தமிழ் மக்கள் பெரும்பாலும் அக்காலங்களில் பழைய புராண, இதிகாச வீர தீரச் செயல்கள் நிறைந்த வீரசிங்கன் கதை பவள காந்தன், கற்பக மலர் போன்ற நீண்டகதைகளையே இரசிதர்து வந்தனர். யாழ்ப்பாணத்தின் பிரதான “தொழிற்கூடமான சுருட்டுக் கொட்டில்”களில் நிகழ்ந்த வாசிப்புக்களினாலும், கோயில்களில் நடக்கும் புராண வாசிப்புக்களினாலும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த இரசிக மனோபவத்திற்கு ‘கல்கி’யின் நீண்டகதை இலக்கியங்கள் ஏற்றனவாக இருந்தன. அதுமட்டுமன்றி, கல்கியும் தான் எதை எழுதினாலும் அது வியாபாரக் கவர்ச்சியுடன் கூடிய பத்திரிகைத் தனத்தையும் மறக்கவில்லை. அவரிடம் இந்தப் பத்திரிகைத்தனம் ஆரம்பத்திலேயே ஏற்பட்டதற்கு, அவர் ஆனந்தவிகடன் எஸ்.எஸ். வாசனிடம் பெற்ற அனுபவப்பயிற்சியே காரணம். இதனால் இலக்கிய விமர்சகர்கள் விரும்பாவிட்டாலும் கூட ‘கல்கிக்கதை மரபு’ என்ற ஒரு புதுக்கிளை இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியச் செடியில் கிளை விட்டது என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

1940ஆம் ஆண்டில் தனது பதினேழாவது வயதில் எழுத ஆரமபித்து, 1967ஆம் ஆண்டு தனது நாற்பத்தினான்காவது வயதில் காலமாகும்வரை நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும், பல நாடகங்களையும், சிலநாவல் குறுநாவல்களையும் ஈழத்து தமிழிலக்கிய வுலகிற்கு அளித்துச் சென்ற அமரர் தாளையடி சபாரத்தினத்தின் படைப்புக்களை நோக்கும்போது- ‘கல்கி’யின் பாதிப்பு இவரைப் பாதித்த அளவிற்கு ஈழத்தின் எற்தவொரு எழுத்தாளனையும் பாதித்திருக்கவில்லை - என்றே கூறல்வேண்டும். இதனாற்றான் கல்கியை எடையிட்டது போல் - அன்றைய மணிக்கொடி எழுத்தாளர் கல்கியின் எழுத்தைப்பற்றிக் கருதியதுபோல் இவரின் இலக்கியத் தன்மையை இன்றைய ஈழத்து விமர்சகர்கள் சந்தேகிக்கிறார்கள்.. எப்படியிருந்தபோதிலும் எண்ணிறந்த கதைகளை எழுதியவர் - நல்ல நோக்கத்துடன் எழுதியவர் கலாபூர்வமாக எழுதியவர் என்ற அடிப்படையில் நோக்கும்போது அவரும் ஈழத்துச் சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்கவராகின்றார்.

முதல் காலடி
அமரர் தாளையடி சபாரத்தினம் அவர்களின் இலக்கிய யாத்திரையே ஒரு புனிதமான, உயர்ந்த காவியமாகும். இன்று தமிழக அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் சிவந்தி. பா. ஆதித்தனார் (தினத்தந்தி) அவர்கள் ஆரம்பித்தில் தனது கைகளினாலேயே வைக்கோலை அரைத்துக் காகிதம் செய்து வெளியிட்ட ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் ‘ஊமைப் பெண்’ என்ற கதையை எழுதி இலக்கியவுலகில் காலடி பதித்த இவர் தொடர்ந்து எழுதியதுடன் பல பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணி புரிந்திருக்கின்றார்.

1943ஆம் ஆண்டு ஈழத்துச் சிறுகதைமணிகளில் ஒருவரான அ.செ. முருகானந்தத்துடன் இணைந்து திருகோணமலையில் எரிமலை என்னும் பத்திரிகையை நடாத்தியதுடன் மட்டுமல்லாது, பிற்காலங்களில் வீரகேசரி - ஞாயிறு இதழிலும், வரதரின் புதினம் பத்திரிகையிலும் கடமையாற்றி எத்தனையோ எழுத்தாளர்களை முன்னணிக்கும் கொண்டுவந்துள்ளார்.

புது வாழ்வு
எண்ணிறந்த கதைகள் பலவற்றைப் பிற்காலங்களில் தாளையடி அவர்கள் எழுதிப் புகழ் பெற்றாலும், அவரைச் சரியான முறையில் இலக்கியவுலகிற்கும், இரசிகருலகிற்கும் அறிமுகம் செய்து புகழின் உச்சியில் ஏற்றி வைத்தபெருமை அவருடைய ‘புதுவாழ்வு’ என்ற சிறுகதைக்கே உரியதாகும். ‘புதுவாழ்வு’ என்னும் இச் சிறுகதை 1947ஆம் ஆண்டு கல்கி - பத்திரிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசினைப் பெறவே - ஈழத்து இரசிகர்களிடையே - யார் இந்த சபாரத்தினம்? எங்குளது தாளையடி? - என்ற பரபரப்பான ஆர்வம்மிக்க, வினாக்களை எழுப்பிவிட்து. இதற்குப் பரிசு மட்டும் காரணமன்று, அக்கதை முற்றிலும் கல்கியின் பாணியிலேயே அமைந்திருநதது காரணமாகும். எனவே, ஈழத்து இரசிகர்கள் தாளையடியை நோக்கிப் படை எடுக்கலாயின. இதனைப் பற்றி தாளையடி அவர்களே ஒருமுறை நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். அப்போது தாளையடி சபாரத்தினத்தைப் பார்க்க மாட்டுவண்டில் கட்டிக்கொண்டு ஏராளமான இரசிகர்கள் தினசரி திருசெல்வேலியிலுள்ள தாளையடிக்குப் படை எடுக்கலாயினர்’ புதுவாழ்வு ஏற்படுத்திய உற்சாகம் இவரை அதிகம் எழுதவைக்கவே தென்னகத்துப் பத்திரிகைகளிலும், கல்கிப் பாணிக் கதை விரும்பிய ஈழத்துத் தினசரிகளின் இலக்கியப் பக்கங்களிலும் இவரது கதைகள் இடம்பெறலாயின.

கலையின் அடித்தளம்
‘… மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதனைத் தள்ளிவிட்டு மனிதன் எப்படிவாழவேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கதைபுனைய வேண்டுமென்பதே என் அவா 1, எனக்கொண்ட வேட்கையின் விளைவாகவே தமது கதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய எந்தக் கதையை நோக்கினாலும் இந்தத் தத்துவ உண்மை புலப்படுவதைக் காணலாம். ஆயினும், இவரின் கதைகள் போதனைகளல்ல. கற்பனைகளுமல்ல. இரண்டும் தழுவிய சமுதாயச் சித்திரமே இச்சித்திரங்கள் .இன்றைய விமர்சகர்களின் பார்வையில் படாமற் செல்வதற்குக் காரணம் இச் சித்திரங்களில் வரைகோடுகள் ஆழமாக விழாமற் போனதாலாகும். ஒவ்வொரு கதையும் ஏதோவொரு வகையில் சமுதாயத்தின் நாடியைத் தொட்டுக் கொண்டே நிற்கின்றன.

ஆரம்ப காலச் சிறுகதைகளிலிருந்து இறுதியாக 1967ஆம் ஆண்டுகளில் தினகரனில் எழுதிய ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்ற கதைவரை இவரின் தெளிந்த உள்ளத்தைக் காணலாம். மக்களின் நல்வாழ்வு கருதி எழுதிய இவரது எழுத்துக்கள், மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று நிலைகளிலும் மக்கள் தூய்மையுடையவர்களாகவும், தூய்மையாக்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்கவேண்டிய அவசியத்தை வெளியிடுகின்றன. இதனாற்றான் இவர் சமுதாயத்தை சித்தரிக்கும் போதும், கெட்டனவற்றிற்கு அதிக அழுத்தம் கொடுக்காது நல்லனவற்றிற்கு முக்கியத்துவமளிக்கின்றார். கெட்டனவற்றிற்கு முக்கியத்துவமளித்தால்! அவை சமுதாயத்திலிருந்து ஒழிவதற்குப் பதிலாக அதுவே மிகுதியாக மக்களிடம் பரவிவிடும. எனவே வாழ்வின் உந்நதமான பாகங்களே காட்டப்படவேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு எழுதினார் எனத் தெரிகிறது.

‘… நான் செய்ய விரும்பாததை மற்றவர்கள் செய்யவேண்டுமென்று வலியுறுத்தும் வகையில் கதைபுனைய நான் விரும்புவதில்லை. வாழ்க்கையி;ல் நல்லதும் நிகழ்கிறது கெட்டதும் நிகழ்கிறது. இரண்டையும் அடிப்படைக் கருத்தாகக் கொண்டு கதை புனையும் எழுத்தாளனுக்கு தன் கற்பனைமூலம் கதைக்கு மெருகூட்ட உரிமையுண்டு. அதனைப் பயன்படுத்தி வாழ்வின் அதி உன்னத பாகங்கள, அவன் திறந்துகாட்டவேண்டும் என்பது என் அபிப்பிராயம். வாழ்வின் அழுகிய பாகத்தை - அது சமுதாயம் முழுவதையுமே பற்றிக்கொள்ளமுன்வெட்டி அகற்றிவிடவேண்டும் என்ற கருத்துக் கொண்டு பெரும்பாலும் என் கதைகளை எழுதி வந்தேன்…2| கதையின் பொருளுக்காக நான் தேடி அழையவில்லை. மனிதனின் தினசரி வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்களைப்பற்றி நாம் கேள்விப்படுகிறொம். சாதாரண மனிதன் அவற்றைப்பற்றி மறுபடி சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால், ஒரு எழுத்தாளன் மறுபடி சிந்திக்கிறான். தன் சிந்தனையில் சினைப்பட்ட கருவுக்கு அவன் கற்பனை உருவம் கொடுக்கிறான். …3”
-ஆகவே, இவரது படைப்புக்களை நோக்க முன்னரே இவரது எண்ணம் நமக்குப் புலனாகிவிடுகிறது. ஆயினும் சமுதாயத்திலிருந்து தமக்குத் தேவையான கதைக்கருக்களை அவர் எடுத்தாண்டு, அவற்றையொட்டி வெளியிட்ட நயமான, செறிவான கற்பனையின் ஆற்றலினடியாகவே, அவரின் படைப்புக்களை எடை போடமுடியும். நோக்குப் பெரிதாக இருக்கலாம். ஆனால், அவற்றின், செயலாக்கத்திறன் எத்தகையது என்பதில்லையே ஓர் கலைஞன் தெரிவு செய்யப்படுகிறான். இவரது படைப்புகள் பலவற்றைப் பார்க்கும்போது தம் எண்ணத்திற்கு தாமே தோற்காத பெரும் பணியைச் செய்திருக்கிறார் என்றே கூறல் வேண்டும்.

இவர் எழுதிய பல் திறப்பட்ட எண்ணிறந்த கதைகளைப் படிக்கும்போது உலகத்தையே கண் முன் தரிசிக்கிறோம். எத்தனை மனிதர்கள். எத்தனை உணர்ச்சிகள், சம்பவங்கள் மனிதகுல நேசிப்புக்கள் … தனது செவிகளையும், விழிகளையும் கூர்மையாக்கி, இதயத்தையும் திறந்துவைத்துக்கொண்டு, மனிதகுலத்தை ஆழ்ந்த அனுதாபத்துடன் நோக்கும் கலைஞனால்தான் இத்தகைய படைப்புக்களை, தரம் குன்றாமல் படைக்க முடியும் என எண்ணத் தோன்றுகிறது.

கதை வளம்
இவர் தமது கதைகளைச் சொல்ல அதிகம் சிரமப்படுவதில்லை. இவரின் படை;ப்புக்கள் பெரும்பாலும் ஒருவர் கதை சொல்வதுபோல் (யேசசயவழச) அமைந்திருக்கும். இத்தகைய கதையைப் பின்னால் இவரது பல சிறுகதை ஒரு நாவலின் முழுமையையோ, குறுநாவலின் பரந்த பார்வையோ கொண்டியங்குகின்றன. இத்தகைய மயக்கத்தினை இவருக்குப் புகழீட்டி அளித்த புதுவாழ்வு, யப்பானியன் படம், தெருக்கீதம் போன்ற கதைகளில் காணமுடியும்.

இவரின் ஆரம்பகாலக் கதைகளில் எப்படி கல்வி மரபு பேணப்பட்டதோ அதேபோலவே, இந்தியப் பிரச்சினைகளும் தத்துவங்களும் கரு ரீதியாகக் கையாளப்பட்டன. காந்திய தத்துவமும், சுதந்திரப் போராட்ட உணர்வும் அக்காலக் கதைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. ‘சக்கிலியன்’, ‘கழிப்பு’ போன்ற கதைகள் இதனை நிரூபணம் செய்கின்றன. கழிப்பு என்னும் கதை, கலாபூர்வமாக நிறைவளிக:கும் கதை.

உருவக் கதைகளாக - குயிலின் அலறல், தாயும் சேயும் போன்ற கதைகளே எழுதி சிறப்பான வெற்றியும் கண்டுள்ளனர். காண்டேகரின் கதைகள்போல உருவக் கதையையும், சமூகக் கதையையும் இணைத்து சிறுகதைகள் எழுதியுள்ளார். இதனைக் குயிலின் அலறல் என்ற கதை புலப்படுத்தும். தாயும் சேயும் என்ற உருவக் கதை சாதாரண குயில் - காகக்கதையாயினும் - இறுதியில் காகம் சொல்லும் ஒரு பதில் அக்கதையை மிகவும் உயர்த்திவிடுகிறது. குயில் குஞ்சைத் துரத்திவிட்டு தாய்மை உணர்வால் சஞ்சலப்படும் காகம் ‘நானும் காகம் என்று வாழவேண்டுமல்லவா?, என்று கேட்பது மிகச் சிறப்பாக, தேசிய உணர்வின் வெளிப்பாடாக ஒலிக்கிறது.

குருவின் சதி, துரோணர், ஏகலைவன் கதையைப் புதியபாணியில் எழுதியுள்ளார். அழகான கதை ஈழத்துச் சிறுகதைகள் முதலாவது தொகுதியால் இடம்பெற்ற சிறப்பும் அதறகுண்டு.

இவரின் கதைகளில் குருவின் சதி, ஆலமரம், புதுவாழ்வு, தெருக்கீதம், ஆயா, சக்கிலியன், குயிலின் அலறல், கழிப்பு - என்பன சிறப்பானவையாகவுள்ளது.

இவர் சொந்தப் பெயரில் மட்டுமல்லாமல் மீனா, அசோகன் போன்ற புனைப்பெயர்களிலும் நிறைய எழுதியுள்ளார்.

கதை வடிவம்
சிறுகதை உருவை சிறப்பாக வெளியிட்டுக் கதையமைத்தவர்களில் இவரும் ஒருவராகவர். படிப்படியாக வளர்ந்து செல்லும் கதை உச்சநிலையடைந்து ஒரு புதிய திருப்பத்துடன் திழுர் என முடிந்து விடுகின்றது. வாசகனை ஒரு அற்புதமான உணர்ச்சியலையில் தத்தளிக்க வைத்து, திடீரென அவனே எதிர்பார்க்காத ஒருமுடிவினில் தள்ளிவிடுவதில் இவரின் ஆற்றல் மிகப் பெரியது. இவரின் கதை முடிவுகள் மேனாட்டு எழுத்தாளன் ஓ ஹென்றியை நினைவூட்டினாலும், அப்போது தமிழிற்குப் புதிதாக இருந்தது. இவரது கதையின் முடிவு ஓஹென்றியினுடையதைப் போலிருந்தாலும், நியாயபூர்வமாகவும் தவிர்க்கமுடியாததாகவும் அமைந்து விடுகின்றன. இத்தகைய திடீர் முடிவுகள் வாசகர் மத்தியில் பல சிந்தனையலைகளை அதிர்த்து விடுவனவாகவும் இருக்கின்றன. இதனால் இவரது எழுத்து தரத்தில் உயர்வதுடன் அவரது பணியின் புலனாகவும் மாறிவிடுகின்றது. இதனாற் போலும் தாளையடி ‘ஒரு சிறுகதையின் உச்சநிலையைக் குறிப்பது அதன் முடிவுதான்4’ - என்று கூறினார்.

மொழிநடை
இவரின் எழுத்தின் இன்nhருசிறப்பு எளிமையான அழகு. எளிமையான அழகிலேயே வாசகனைக் கவரக்கூடிய அசாதாரண காம்பீரியமும் கலந்திருக்கும். கதையின் கருத்தையே கபளீகரம் செய்துவிடவல்ல கனமான சொற்களோ சொறொடர்களோ இருக்க மாட்டா. அநாவசியமான ஆடம்பரமானவார்த்தை ஜாலங்களோ, வர்ணனை மிதப்புக்களோ தென்படாத கதையும் கதையோடு தொடர்புடைய உணர்ச்சிச் செறிவுமே இறுக்கமாகப் புலப்படும். இந்தத் தன்மையே இவருக்கு ‘கல்கி’ பரிசை வாங்கியும கொடுத்தது எனலாம். கல்கியை மனதில் வைத்து எழுதினதால் என்னவோ, இவர் தமது எழுத்தில் தென் இந்தியச் சொற்களையும், உரையாடல்களில் தென்னிந்தியச் சொற்றொடர்களையும் கலந்து எழுதியுள்ளார்.

அமர முடிவு
நூற்றுக்கணக்கான கதைகளை எழுதிய இவரின் படைப்புக்கள் சரியான முறையில் திறனாய்வு செய்யப்பட்டாலன்றி இவரைச் சரியான பல வாசகர்கள் இனம் காணமுடியாதவாறு இருக்கும்.

ஆலமரம்
தாளையடி சபாரத்தினம்
அவளுடைய மூதாதைகள் ‘அவளுக்கு’ என்று வைத்துவிட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை - யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துக்கள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய் தான் அவளுரடய பந்து: உயிருக்குயிரான காவலாளியுங் கூட.

காலையில் எழுந்தவுடன் தென்னம்பாளையிலும் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டுவந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும். அந்த உடைந்த நட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாளை வாத்சல்யத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாதலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.

தெருத் தெருவாக அலைவாள், மூலை முடுக்கெல்லாம் போவாள். யாராவது இரங்கி ஏதாவது உணவு கொடுத்தால், அதைப் பத்திரமாக உண்ணாமல் வைத்துககொள்வாள். ‘ஏன் சாப்பிடாமல கொண்டு போகிறாய்?’ என்று யாராவது கேட்டால் ‘ நடக்கமுடியாத ஒரு கிழவனுக்குக் கொண்டு போகிறேன்’ என்று கூறுவாள். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு ஏங்கியிருக்கும் அந்த நாயின் அருமை அவளுக்கல்லவோ தெரியும். ஆலமரத் தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கந்தல்களையும் மற்றப் பொருட்களையும் பாதுகாத்துக்கொண்டிருக்கும் காவலாளி அல்லவா அது.

சுமார் இரண்டு மூன்று மணிக்குத் தன் இருப்பிடம் நோக்கி விரைநது செல்வாள். அவளுக்கு மு;னால் அவளுடைய உள்ளம் பறந்துகொண்டிருக்கும். தூரத்தில் வரும்பொழுதெ கரிய முகில் கூட்டத்தைப் போல ஆலமிலைகளின் கூட்டம் காட்சியளிக்கும். அவளுடைய உருவங் கண்ணிற்பட்டதும் தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்தோடும் பசுக் கன்றைப்போல் அந்த நாய் ஓடிச் சென்று அவளைச் சுற்றிச் சுற்றி வாலைக் குழைக்கும். அவளும் அன்போடு அதைத் தடிக் கொடுப்பாள்.

ஆலமரத்தின் கீழே உட்கார்ந்ததும் அவளுடைய களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். கொண்டுவந்ததை நாயோடு பகிர்ந்து உண்பால். சிறிது நேரம் சென்றபின் பக்கத்திலுள்ள நீரோடைக்குச் சென்று குளிப்பாள். சுமார் ஆறு, ஏழு மணியளவில் அரிசி இருந்தாற் சோறாக்குவாள். இதற்கிடையில் அவளுடைய நண்பர்கள் - காகங்கள், குயில்கள் முதலியன - கா, கூ என்று ஆரவாரித்துத் தாங்கள் வந்திருப்பதை அவளுக்குத் தெரிவிப்பார்கள். எல்லோருமுறங்கிய பின் அவளும் அந்த வேரில் தன் தலையைச் சாய்ப்பாள். அந்த ஆலம்வேர் தான் அவளுடைய தலையணை. அவளுடைய குருட்டுத் தாத்தா உறங்கியதும் அதே வேரில் தலைவைத்துத்தான், சீமேந்தால் மெழுகப்பட்ட சுவரைப்போல அந்தவேர் அழுத்தமாக இருந்தது.

அன்று அவள் அதே வேரில்தான் தலைவைத்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள். அந்த நாயும் அவளின் காலடியில் தூங்கிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பயங்கரமான கனவு கண்டு துடித்து எழுந்தாள் வாய் என்னவோ கூறி உளறியது. மரத்தைச் சுற்றி ஒருமுறை வந்தாள். அப்பொழுது அவளுக்குத் திருப்தி உண்டாகவில்லை. நன்றாக ஒருமுறை அண்ணாந்து பார்த்தாள். மரம் மரமாகத்தானிருந்தது. அது முறிந்து வீழ்ந்து விடவில்லை. கண்டது வெறும் கனவாக இருந்தாலும், அவளுடைய உள்ளத்தில் சகிக்கமுடியாத வேதனை குடிகொண்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கினாள். ஆனால் அடக்கமுடியவில்லை. அருகே கவலை தேங்கிய முகத்தோடு நின்ற நாயை அருகிலிழுத்து அணைத்துக்கொண்டாள். அதுவும் தன்னுடைய நாவால் அவளுடைய கரத்தை நக்கியது. இரவுமுழுவதுந் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

பொழுது புலுர்ந்ததும் வழக்கம்போல் சட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். அவளுடைய மனம் சஞ்சலப்பட்டது. தான் கண்ட பயங்கரமான கனவை ஒருமுறை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை உண்மையில் அப்படி நடந்தால்… நினைக்கவே அவளுடல் நடுங்கியது. கால்கள் செல்ல மறுத்தன. எத்தனை நாட்களுக்குப் போகாமலிருக்கமுடியும்? ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன? அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன? மனக்கலக்கத்தோடு புறப்பட்டாள். மரத்திலிருந்து இரண்டு மூன்று பனித்துளிகள் அவள்மேல் வீழ்ந்தன. பரிதாபத்தோடு அண்ணாந்து பார்த்தாள். மறுபடியும் பனித்துளிகள் வீழ்ந்தன. அவள் அதைக் கேவலம் பனித்துளிகளாக நினைக்கவில்லை. “நிராதரவாக என்னை விட்டுப் போகிறாயா?” என்று அந்த ஆலமரங் கதறிப் பெருக்குங் கண்ணீர்தான் அத்துளிகள் என்று நினைத்தாள். அவள் கண்களும் நீரைச் சொரிந்தன.

அவள் பிச்சைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் மனம் மட்டும் நிம்மதியாயில்லை. வழக்கத்திற்கு விரோதமாகப் பன்னிரண்டு மணிக்கே இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். எல்லோருங் கூட்டங் கூட்டமாக நின்று எதையோபற்றி ஆனந்தத்தோடு பேசிக்கொண்டு நின்றார்கள். அதை என்னவென்றறிய அவளுக்குமாசைதான். ஆனால் அவர்களிடம் சென்று அறியக்கூடிய தகுதி அவளுக்கு இல்லை. அவ்வழியால் வந்த ஒரு சிறுமியிடம் விசாரித்தபொழுது ‘எங்கள் கிராமத்திற்கு றெயில் பாதைபோடப் போகிறார்களாம். இன்னுமிரண்டு, மாசத்துள் ரெயில் ஓட ஆரம்பித்துவிடும்’ என்று அப்பா சொன்னார் என்றாள். சிறுமி:

றெயில் வந்தாலென்ன, ஆகாயக்கப்பல் வந்தாலென்ன? பிச்சைக்காரியாகிய அவளுக்கு இரண்டுஞ்சரிதானே? இருப்பிடத்தை நோக்க pஅவள் விரைவாக நடந்தாள்.

‘இதென்னடா சனியன்! வேலை செய்ய விடமாட்டேனென்கிறதே என்றானொருவன். ஆங்கில உடையில் நின்ற எஞ்சினியரின் கைத்துப்பாக்கி டுமீல்!, என்ற சத்தத்தோடு வெடித்தது. இவ்வளவு நேரமும் மரத்தைச் சுற்றிச் சுற்றித் தன் எஜமானியின் பொருட்களுக்காகப் போராடிய அந்த நாய் மண்ணிற் சாய்ந்தது.

சுமார் கால் மைல் தூரத்தில் வரும்பொழுதே தென்படும் ஆலமரம் இன்று வெகு சமீபத்தில் வந்தும் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆலமரம் இருந்த இடம் ஒரேவெளியாக இருந்தது. இரவு கண்டகனவு அவள் ஞாபகத்திற்கு வந்தது. கையிலிருந்தசட்டி ‘தடா’லென்று வீழ்ந்தது. மரத்தடியை நோக்கி ஓடினாள். அவளுடைய சாமான்கள் ஒரு பக்கத்தில் எறியப்பட்டுக் கிடந்தன. இன்னொரு பக்கத்தில் அவளுடைய நாய் உயிரற்றுக் கிடந்தது. மறுபக்கம் திரும்பினாள். மாறி மாறி விழும் கோடரிக் கொத்தைத் தாங்க மாட்டாடல் தவிக்கும் மரத்திலிருந்து உதிரம் பெருகுவது போலிருந்தது அதிலிருந்து வடிந்தபால். ‘ஐயோ’ என்றலறிக்கொண்டு ஓடிப்போய் வீழ்ந்தாள். திடீரென்று ஒரு கோடரிக் கொத்து அவளுடைய தலையில் வீழ்ந்தது. எல்லோருந் திகைத்துபபோய் நின்றார்கள். வெண்ணிரத்தமும் செவ்விரத்தமும் கலந்து அடிமரத்தைக் கழுவிக்கொண்டன.

அ. ந. கந்தசாமி
இலக்pய மின்னல்
இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் - சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலாம் இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது1, - என்று தனது முதற்படைப்பான ‘சிந்தனையும் மின்னொளியும்’ என்ற கவிதை தனது பதினேழாவது வயதில் பிறந்ததையும், அது பின்னர் ஈழகேசரிப் பத்திரிகையில் வெளிவந்ததையும் நினைவுகொண்ட அமரர் அ.ந. கந்தசாமி அவர்களின் இலட்சியக் கொள்கை வெறி, எழுத்தின் ஆரம்காலம் தொட்டு, அவரின் அந்தியகாலமான 14-2-68 வரை மாறவோ, மறையவோ இல்லை.

பல் கலைஞன்
ஈழத்தமிழிலக்கிய உலகின் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு மற்றையோரால் மறுக்கவோ மறைக்கவோ முடியாதளவிற்கு சிறந்த தொண்டாற்றினார்.

நவீன் தமிழ்க்கலை வடிவங்களாக உருவகித்த சிறுகதை, நாவல், விமர்சனம், மொழி பெயர்ப்பு என்பனவற்றுடன் நாடகம், கவிதை ஆகிய துறைகளையும் - புத்தாற்றல் நிரம்பிய ஆக்ரோஷ வேகத்துடன் சமூகச்சீர்கேடுகளைக் கெல்லி எறியவும், ‘புதியதோர் உலகு’ அமைக்கவும் ஏற்றகருவிகளாக்கினார்.

இதே போன்றே, அவர் அதிகம் ஈடுபட்டு, பெரும் புகழீட்டிக் கொண்ட பேச்சுக்கலை, பத்திரிகைத்துற என்பனவற்றையும், சமூக நலன் கருதி அமையும் சிறந்த வெளியீட்டுச் சாதனமாக்கிக்கொண்டார்.

இதனால், இவர் எந்தக் கலையை - எந்தத் துறையை எப்போது எதைக் கொண்டாலும் சமூக நல்ன் கருதிச் - சிறப்பாகத் தொழிலாள வர்க்கத்தின் நலன் கருதி செயல்பட்ட காரணத்தால். இவரின் படைப்புக்கள் இயல்பாகவே - அவர் எடுத்துக்கொண்ட ‘களத்தி’ன் தன்மையினால், ஓர், ஆழத்தையும், அகண்ட பரப்பையும் பெற்றுவிடுகின்றன. வாசகரிடையேயும் இலக்கிய விமர்சகர்களிடையேயும் இவரின் படைப்புக்கள் ஒரு கௌரவ நிலையை அடைவதற்கு இதுவும் முக்கிய ஒரு காரணம் எனலாம்.

ஆகவே, இவரைப்பற்றிய உண்மையான மதிப்பீடு பல்துறைகளையும் தழுவியதாகவிருந்தாலன்றி முழுமையடையாதாயினும், இங்குள்ள தேவை, வசதி, அளவுகருதி சிறுகதையில் அவரின் பணியையே மதிப்பிட வாய்ப்பு ஏற்படுகின்றது.

கிராமமும், நகரமும்
“சமுதாயச் சூழ்நிலைகளேய மனிதவுணர்வுகளை நிர்ணயிக்கின்றன’ என்ற கார்ல் மாக்ஸின் சிந்தாந்தம் இவரின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.

ஈழத்தின் வடபாகத்திலுள்ள அளவெட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் - யாழ்ப்பாண நகரிலுள்ள ஆங்கிலக் கல்லூரி ஒன்றிற்கு அக்காலப் புகையிரத வண்டியில், (1940) நாடோறும் சென்று திரும்பிக்கொணடிருக்கையில் புதிய புதிய அனுபவங்களினாலும், எண்ணச் சிந்தனைகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டான். புரிந்தும் புரியாத - புத்வேகம் ஊட்டக்கூடிய கிளர்ச்சி பெறக்கூடிய உணர்வுகளை அக்கிராமத்து இளைஞனுக்கு நகர அனுபவங்கள் ஏற்படுத்தி வந்தன. நகரத்திற்கும், கிராமத்திற்குமிடையேயுள்ள வாழ்க்கை முறை வேறுபாடுகள் அனுபவிப்புக்கள், துன்ப துயரங்கள், இன்பக் களியாட்டங்கள், உழைப்பும், உழைப்பின் பயனும் வேறாகிச் சென்றடைதல், முதலாளித்துவக் சுரண்டல்கள், சாதி சமய வேறுபாடுகள் - என்பன பற்றி அவனது இயல்பான மன எண்ணங்களும், நகரக் கல்லூரியின் ஆங்கிலக் கல்வித் திறவுகோலினால் ஏற்பட்ட உலகக் கதவுகளின் திறக்கைகளின் ஒளி வெள்ளமும் அவனை வியப்பிலும், அதிர்ச்சியிலும், துயரத்திலுமாழ்த்தின. அதனாலேற்பட்ட இதயத் துடிப்புகளே அவனை ஓர் எழுத்தாளனாக்கின.

பத்திரிகைத் தொண்டுகள்
அ.ந. கந்தசாமி சுமார் நாற்பது சிறுகதைகள் வரையே எழுதியிருப்பார் என அவரின் நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறியவருகின்றது. அவை யாவும் ஆங்காங்கே அவர் பணியாற்றிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவரது சிறுகதைகள் இன்றுவரை தொகுப்பாக வெளிவராதிருப்பது விந்தையான வேதனையே, அவரால் உற்சாகப் படுத்தப்பட்டும் உயர்த்தப்பட்டும் உருவாக்கப்பட்ட இலக்கியவாணர்கள் எத்தனையோ பேர் இன்று ஈழத்தமிழிலக்கிய உலகில் மட்டுமல்லாது சமூக நிலையிலும் உயர்நிலை பெற்று விளங்குகின்றனர். அவர்களோ அன்றிப் பிற பதிப்பங்களோ, அ.ந. கந்தசாமியின் படைப்புக்களை நூலுருவில் கொணர முயலவேண்டும். அவர் தன் ஆயுட்காலம் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாவது இவ்விடயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டும்.

இவர் - காலத்திற்குக் காலம் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி வந்தபோது எழுதப்பட்டவையே இச்சிறுகதைகள். எனவே இக்கதைகளில் அவர் பணியாற்றி வந்த பத்திரிகைகளின் அவ்வக்கால இலக்கிய, சமூக, அரசியற் போக்குகளை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன் அவற்றை மீறிய அ.ந.க-வின் தனித்துவத்தையும் காணக்கூடியதாகவுள்ளது.

1946ஆம் ஆண்டளவில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையான ‘தேசாபிமானி’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி, பின்னர் முறையே சுதந்திரன், வீரகேசரி, ஸ்ரீலங்கா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்களிலும் கடமையாற்றினார். இப்பத்திரிகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையின: கொள்கையளவில் முரண்பாடு கொண்டவை நோக்குகளும் போக்குகளும் வௌ;வேறானவை. இத்தகைய பத்திரிகைகளில் இவர் கடமையாற்றத்துணிந்த திறம்- காரணம் - என்பன விமர்சன ஆராய்வுக்குரியன (தனித்து ஆராயப்படவேண்டியதும் கூட). எவ்வாறு இருந்தாலும் இவர் தாம் பணிபுரிந்த அந்தப் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தபோதிலும், தனது கொள்கைப் போக்கை - பொதுவுடமைச் சேவையை - கைவிட்டிலர். ஒவ்வொரு பத்திரிகைகளிலும் அவர் பணியாற்றியபோது ஒரு பரபரப்பு தென்பட்டது. தேசாபிமானி - மூலம் நாட்டின் சீர்கேடு, பொருளாதாரச் சீர்கேடு, சுரண்டல், சாதி ஒழிப்பு என்பனவற்றை ஒழிக்கப்பாடுபட்டார். சுதந்திரன் மூலம் நாட்டின் கலை, கலாச்சாரம், இலக்கியம் என்பனவற்றை வளர்க்க முன்றார். பத்திரிகைகள் ஏதுவாக இருந்தாலும் அப்பத்திரிகை வாயிலாக நம் கொள்கைகளுக்கு முரசம் கட்டினார். இதனாற்றான். எப்பொழுதுமே தம்முள் ஒன்றுடன் ஒன்று வக்கரித்துக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், தமிழரசுக் கட்சியிலும் இவரால் பணியாற்ற முடிந்தது போலும். அப்போது தினப்பத்திரிகையாக மூவாயிரம் பிரதிகளே விற்பனையர்கிக்கொண்டிருந்த சுதந்திரன் பத்திரிகையை, இவர் பொறுப்பேற்ற ஆண்டிலேயே பத்தாயிரம் பிரதிகளாக உயர்த்தினார். இவ்வுயர்வுக்கு இவரின் எழுத்தே காரணம் எனலாம் இன்று சுதந்திரன் பத்திரிகையில், பிரபலமாக அடிபடும் ‘குயுக்தியார்’ பதிலை முதன் முதலாகத் தாபித்தவர் இவரே! பிரான்சிய எழுத்தாளரான ‘எமிலி ஜோலா’வின் ‘நாநா’- என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டதும், இவரின் சிறந்த சிறுகதைகள் வெளிவந்ததும் இக்காலத்தில்தான். நாநாவின் மொழிபெயர்ப்பு - தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பெரும் பரபரப்பை ஊட்டியதுடன், ஈழத்தின் நாவல் போக்கின் சிந்தனையில் பலத்த திருப்பத்தை ஏற்படுத்திற்று.

இதே போலவே, வீரகேசரியில் பணிபுரிந்தபோது, இவரின் கடமை, எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது. செயல் முறையிலும் தீவிரமடைந்தது. வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர். ஆகவே, இந்த உண்மைகளை முன்னிறுத்தியே இவரின் படைப்புகளை ஆராய்தல் பொருத்தமுடையதாகும்.

சிறுகதைச் சிற்பங்கள்
சிதறிக்கிடக்கும் இவரின் சிறுகதைகள் எல்லாவற்றையுமே நாம் சிறந்தனவெனக் கூறிவிட முடியாது. எந்தவொரு எழுத்தாளனின் எல்லாக் கதைகளுமே இலக்கிய ரீதியில் வெற்றிபெற்று விட முடியாது. ஏன் புதுமைப்பித்தனின் கதைகளில்கூட சுமார் பதினைந்தே வெற்றிபெறும் என க. நா. சுப்பிரமணியம் கூறுவதும் இங்கு கவனிக்கற் பாலது. இவரின் கதைகள் பத்திரிகைகளின் தேவைகளுக்காக அவ்வப்போது எழுதப்பட்டவையாகும். எனவே, சிலவற்றின் கலைத்துவமோ, பூரணத்துவமோ நிறைந்திருப்பதாகக் கூறமுடியாது. அதுமட்டுமல்ல அ.ந.க-வே தாம் எழுதியவற்றுள் சிறந்தவை என சுமார் பதினைந்து கதைகளைக் குறித்துப் போயுள்ளார். எனவே, அக்கதைகளை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றின், சிறுகதைப் பண்புகளையும், தன்மைகளையும் ஆராய்வதே இம்முயற்சியாகும். அவர் தமது சிறுகதைகளை ஆரம்ப காலங்களிலேயே எழுதினார். பிற்காலங்களில் அவர் கவனம் நாடகம், நாவல், கவிதை, கட்டுரை எனத் திரும்பி விட்டது.

இரத்த உறவு (மறுமலர்ச்சி), நாயிலும் படையர் (வீரகேசரி), காளிமுத்து இலங்கை வந்த கதை (தேசாபிமானி) பாதாள மோகினி, நள்ளிரவு, ஐந்தாவது சந்திப்பு (சுதந்திரன்), பரிசு, குருட்டுவாழ்க்கை, உலகப்பிரவேசம், ஸ்ரீதனம், பிக்பொக்கட், சாகும் உரிமை, கொலைகாரன், உதவிவந்தது, வழிகாட்டி ஆகிய கதைகளை அ.ந.க. தனது நல்ல கதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தஉறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், - ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய ‘நாயிலும் கடையர்’ - மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று.

இவரின் கதைகளில் நாம் புன்னகையைக் காணவில்லை. எங்கும் ஏக்கமும், போராட்டமும் வறுமையும் சமுதாயத்தின் சீர்கேடுமே கருவாக அமைந்துள்ளன. ‘இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும் துயரமும், அழுமையும் ஏத்தமும் கண்ணீரும் கம்பலையுமாக நாம் வாழும் உலகம் இருக்கின்றது. ஏழ்மைக்கும் செல்வத்திற்கும் நடக்கும்போரும், அடிமைக்கும் ஆண்டானுக்கும் நடக்கும் போரும் இன்று உலகைக் கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகி விட்டது2, எனவே, வாழ்வின் உயிர் நாடியான சமூகப்பிரச்சினையான இவற்றைப் பொருளாகக் கொண்டு இவரின் கதைகள் எழுந்தன. சமூக ஆராய்வின்போது எழும் முடிவுகள் - தத்துவஞானிக்குத் தத்துவங்களாகவும், எழுத்தாளனுக்கு கதைகளாகவும் வெளியாகின்றன. உண்மையில் சிறந்த எழுத்துக்கள் வாழ்வின் நடப்பியல்பில் பிறப்பன அல்ல. அவ்வியல்புகளின் ஆராய்வின் முடிவிலேயே பிறக்கின்றன என்பதற்கு இவரின் கதைகள் சிறந்த உதாரணங்களாகும்.

கலாபூர்வ, சித்தாந்தங்கள்
இவரின் பேச்சுக்கள், எழுத்துக்கள், சமூகத் தொடர்புகள், இயக்கத்தொண்டுகள் என்பனவற்றைக் கவனிக்கையில் இவர் மாக்ஸீயச் சித்தாந்தங்களினால் வசீகரிக்கப்பட்ட, ஒரு சமூகப்புரட்சித் தொண்டனாகவே தரிசனம் தருகின்றார். ஆயினும் இவரின் படைப்புக்களில் இச்சித்தாந்தங்கள் கலாபூர்வமாக வெளிவருவதிலிருந்தே இவர் சமுதாய சோசலிச இலக்கிய - மக்கள் எழுத்தாளராகின்றார்;. இதுவே, இவரை ஏனைய மாச்ஸீயச் சித்தாந்தகாரரிலிருந்து வேறுபடுத்துவதுடன், தனித்துவம் மிக்கவராகவும் காட்டுகின்றது. சித்தாந்தக்காரர் எழுத்தாளராவதற்கும், எழுத்தாளர் சித்தாந்த அபிமானியாக மாறுவதற்குமுள்ள நுணுக்கமான வேறுபாட்டின் எல்லைக் கோடாக இவர் விளங்கினார் என்பதனை இவரின் சிறுகதைகள் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. இவரை நிதர்சன உலகின் புத்துஜீவியான இலக்கியகாரர் எனவும் குறிப்பிடுவது பொருந்தும். ஏனெனில் தம்மை வசீகரித்த - நாட்டின் தவிர்க்கமுடியாத, எல்லாhராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய வீடிவெள்ளிச் சித்தாந்தமான - மாக்ஸீயக் கொள்கைகளை அவர்தம் படைப்புக்களில் கையாளுகையில் சித்தாந்தங்கள் வாழ்வின் நடப்பியல் உண்மைகளாக மாறிவிடுகின்றனவேயன்றி, சித்தாந்தத் தூல உடல்களாக நிற்கவில்லை. பி சித்தாந்தக் கலைஞர்களின் படைப்புக்களில் கலையை மீறி சித்தாந்தங்கள் போதனைபுரிவதுபோலோ, கலைக்கொள்கைக்காரரின் வெறும் அலங்கார உயிரற்ற கலைவடிவங்களைப் போலவே, இல்லாததால், இவரின் படைப்புக்கள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றாகிவிட்டது. இவரது படைப்புக்களை அவதானிக்கையில் - உருவமா, உள்ளடக்கமா? என்பன போன்ற பிரச்சினைகள் எழாதிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.

இலக்கியத் தொனி
அ.ந. கந்தசாமி அவர்களிடம் இலக்கியம் பற்றித் தெளிவான பார்வையிருந்தது. உறுதியிருந்தது என்பதனை இவர் கதைகள் புலப்படுத்துகின்றன. இலக்கியம் என்பது பொழுதுபோக்குச் சாதனமல்ல. அதுவே சமூகப் புரடசியின் உன்னத கருவி. அக்கருவியினால் மக்கள் கூட்டம் இனம் காட்டப்படவேண்டும். அவர்கள் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வரவேண்டும் - உண்மை வளர்சசிபெறவேண்டும் என்ற அவாவினால் எழுதினார் என்பதனையே அவர் கதைகளின் பொதுப் பண்பாகக் கூறலாம். அதே வேளையில் இவரின் சிந்தனை நாட்டை மீறிய சர்வதேசியப் பண்பின் அடியொட்டி விரிவடைவதையும் காணலாம். இவர் சிறுகதைகள் மூலம் மனிதனை விமர்சித்தார். அவர் விமர்சனத்தில் சோகம் கூட அனல் எறியும் ஆத்மீக வெளிப்பாடாக அமைந்துள்ளதைக் காணலாம். இவர் இலக்கியத்தை மட்டுமலலாது உலக இயக்கம் பற்றிய சிந்தனையிலும், ஆழ்ந்து ஈடுபட்டு அதில் உலக மனிதன என்ற ரீதியில் குலத்தில் ஈழத்தவனின் பண்பும் பணியும் பற்றி ஆழமான கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதனை.

உலகில் ஒரு பொருளும் தன்னந்தனியே ஏகாந்தமான சூழ்நிலையில் தொடர்பின்றி இயங்குவதில்லை. எப்பொருளையும் சூழ்நிலைகளே ஆட்சி செய்கின்றன3, ஆகவே மனஜதன் ஒரு சமூகப் பிராணி அவனின் தனித்துவம் பண்புகள், விருப்பு வெறுப்புகள் முக்கியமல்ல. சமூக நிலையில் அவன் விருப்பு வெறுப்பு பங்கின் நிலை என்பனவற்றையே விமர்சித்தார். சூழ்நிலைகள் என்று கூறும்பொழுது அந்hக் காலங்களின், பிரதேசங்களுட்பட்ட அரசியல், பொருளாதார, சமூக நிலைகளையே குறித்தார். அதுமட்டுமன்றி, தன்கதைகளிலே மனிதனை விமர்சித்ததுடன் மட்டுமன்றி, மக்களின் கடமைகளையும், இனிச்செய்ய வேண்டியதென்ன? என்பதனையும் குறியீடாகவும். தம் கதைகளில் வெளியிட்டார். உண்மையான எழுத்தாளனின் உயர்ந்த பணிகளில் இதுவே முக்கியமானதாகும். பிரசசினைகளைக் காடடுவது மட்டும் போதாது, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளை காட்டுவதே உந்நத கலைஞனின் நோக்கம் என்பதனை இவர் கதைகள் புலப்படுத்துகின்றன. ‘மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவளுக்குச் சமுதாயப் பொறுப்பொன்றுண்டு: வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும் புலனாகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு, வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தில் புன்னகை தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் முல்லை மலர் போல் அவனுக்கு இன்பமூட்டும்.

கட்டறுத்த புரோமத்தியஸ்
இவரின் எழுத்துக்கள், மானிடவர்க்கத்தின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும். சாதி சமய வேறுபாடுகள், ஆண்டான் அடிமை அமைப்பு, சாதி வித்தியாசங்கள், வர்க்க வேறுபாடுகள் போன்ற கைவிலங்குகளை அறுத்தெறிந்து சுதந்திரமானதும், சகோதரத்துவமானதும், சமத்துவமானதுமான சகவாழ்வினை வேண்டி நின்றதனாலேயே கலாநிதி க. கைலாசபதி அவர்கள் ‘கட்டறுத்த புரோமத்தியஸ் என்று கருதப்படும் வகையில் முற்போக்கை முழுமூச்சாகத் தழுவிக்கொண்டவரும் முற்போக்கு இலககிய அணியின் மூத்த பிள்ளைகளுள் ஒருவருமான அ.ந. கந்தசாமி 5’ என்று குறிப்பிடுவதும் கருத்தில் கொள்ளத்தக்கது. (ஷெல்லி எழுதிய Pசுழுஆநுவுர்நுருளு ருNடீழுருNனு -என்ற காவியத்தில், நெருப்பின் கடவுளான ணுநுருளு இடமிருந்து நெருப்பைப் பறித்து, மானிடர்க்கு வழங்கிய குற்றத்திற்காக புரோமத்தியஸ் பாறைகளில் கட்டபட்டு கழுகுகளினால் துன்புறுத்தப்பட்ட கதையே இதுவாகும். புNருhமத்தியஸ் இன்று மனித புத்தியின் சின்னமாகக் கொள்ளப்படுபவன்) இவ் அடைமொழி சற்று எல்லை மீறியதாயினும், சில உண்மைகளைப் புலப்படுத்தவே செய்கின்றன. அ.ந.க-வின் சிந்தனைகள் இலக்கியத்திற்குப் புதியதல்லவாயினும், நம் நாடடிற்கு - அதுவும் தமிழிலக்கியத்திற்கு அந்நியமானவையாகவோ, அதிக பரிச்சமற்றனவாகவோ, அல்லது இவற்றைப் பொருளாகக்கொண்டு எழுதுபவற்றை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமற்றவர்களாக மக்கள் இருந்த வேளையில் இவற்றைத் தமிழில் எழுதினார். அரசியலும் கலந்து எழுதினார். அரசியலறிவு சாதாரண மக்களிடையே வளர்ச்சிபெறாத அக்காலத்தில் (ஏன் இன்று கூட அரசியலறிவு மக்களிடையே வளர்ந்துள்ளதாக கூற முடியுமா?) அரசியற் கலந்த ஆக்கங்களை வெளியிட்டார். இவர் தமது எழுத்தால் வாழ்க்கையை விமர்சித்து அதன் மூலம் வஞ்சிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டவும் முனைந்தார். சமுதாயத்திற்குப் பயனள்ளதாக சுரண்டலும், அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும், புதிய சமதர்ம சமுதாயத்தை அமைக்கவும் பாடுபட்டார்.

உள்ளத்தின் உரைநடை
இவரின் படைப்புக்களின் வெற்றிகளுக்கு இவரின் உரை நடையும் முக்கிய காரணம் எனலாம். எளிய வாக்கியங்களாக கருத்துக்களை வெளியிட்டார். அக் கருத்துக்களை உவமை, உருவகச் சொல்லாட்சிகளினால் அழகுபடுத்தியும், கம்பீரத் தொனியேற்றியும், எல்லாருக்கும் புரியும்வண்ணம் மக்கள் முன் வைத்தார். இப் பண்பு சிறுகதைகளில் மட்டுமல்லாது, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், கொள்கை விளக்கக் கட்டுரைகளிலும் எல்லாரையும் வசீகரிக்கும் வண்ணம் அழகழகான, ஆழமான, எளிய உவமை உருவங்களை அமைத்து எழுதுவார். சாதாரணமாக ஒரு சிறு கட்டுரையிற் கூட குறைந்தது பத்தோ பதினைந்து உவமை உருவங்களைக் காணலாம். உதாரணமாக - தேசிய இலக்கியம் என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதிச் செல்கிறார்.

‘… சமுதாயம் கலையின் கருத்துக்களை தன்னகத்தே சூல் கொண்ட மேகம் நீரைத் தாங்கி நிற்பதுபோல் தாங்கி நிற்கிறது. எழுத்தாளனின் மேதாவிலாசம் நிறைந்த உள்ளம் கூதற் காற்றுப் போல் மேகத்தில் வீசுகிறது. அதன் பயனாக இலக்கியம் என்னும் நீர் பொழிய ஆரம்பிக்கிறது.6’

தேசிய இலக்கியம்
1960ஆம் ஆண்டளவில் ஈழத்தில் எழுந்த தேசிய இலக்கியக் குரலுக்கு பெரும் ஆதரவு அளித்தவர் இவர். அதுபற்றி அவர் கொண்டிருந்த கருத்து அவரின் இலக்கியங்களில் வெளியாகின. தேசிய இலக்கியம் என்றால் ஏதோ தமிழகத்திலிருந்து, ஈழத்தமிழனைப் பிரிக்கும் முயற்சி என மருளும் மக்களும், அரசியற் தலைவர்களும் இருக்கின்றார்கள். ‘ஒவ்வொரு சமுதாயமும் தனக்கென்ற சில பண்புகளையும், விருப்பு வெறுப்புகளையும் தேவைகளையும் பழக்க வழக்கங்களையும் கனவுகளையும் கொண்டு விளங்குகின்றது 7’ ….ஈழத்தமிழர்களிடையே வாழும் எழுத்தாளன் ஈழத்தமிழனையும், அவனது மொழியையும் பாரம்பரியங்களையும், பண்புகளையும் தானறிவான். அவனிடம் ஜாதி வேற்றுமைகளுண்டு. ஆனால் அவனிடத்தே சக்கிலி, படையாட்சி என்ற தென்னிந்திய ஜாதிகள் கிடையாது. நாயுடுவும், செட்டியும், நாடாரும், தேவரும் இலங்கையில்லை. இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் உளர். ஆனால் நளவர் என்ற நமது தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெயரைச் சொன்னால் தமிழகம் என்னவென்று ஆச்சரியமடையும். இங்குள்ள சாதிப் போர் பிராமணனுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்குமல்ல. வேளாளனும் நளவனும் சாதிப்போரில் சிக்குகின்றனர் 8’

தேசிய இலக்கியத்திற்கு யதார்த்தம், மண்வாசைன என்ற இலக்கிய அம்சங்கள் மிகமிக அவசியம் எனக் கருதினார். அத்துடன் மட்டுமல்லாது, புற வாழ்வில் என்னவித சீர்திருத்தங்கள் அறிவியக்கங்களை மேற்கொண்டாலும், அகவாழ்வில் பூரணத்துவம் பெறாதளவில் மனித வாழ்வு செம்மையுறாது என்ற கருத்துக் கொண்டவர் இவர். இவரின் எழுத்துக்களில் காணப்படும் இன்னொரு அம்சம் பாலுணர்ச்சி ஆகும். பாலுறவு விவகாரங்களை மனோதத்துவ அடிப்படையில் ஆராயும் பண்பினை இவரின் கதைகள் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற சாதனைகள்
சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் இவர் வெற்றியீட்டினார். எதிர்காலச் சித்தன் பாட்டு, துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் எ;னபன சிறந்தவை. ‘கடவுள் - என்சோரநாயகன்ஸ என்ற கவிதையைக் கேட்ட, தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை தோன்றும்’ என்றார்.

இவருடைய ‘மதமாற்றம்’ எ;ற நாடகத்தைப் பற்றி பேராசிரியர். க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிட்டார். ‘இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது’

பாரதியார் வரலாற்றை ஆராய்ந்து - பாரதியார் கூறிய யாழ்;ப்பாணத்துச் சாமாயர் - அல்வாயூர் அருளம்பல தேசிகர் எனநிலை நாட்டினார்.

1,2,4. நான் ஏன் எழுதுகிறேன் - புதுமையிலக்கியம் - நவம்பர்-1961

3 கட்டுப்பாடுகள் அவசியமா - அ.ந.க. மறுமலர்ச்சி ஆண்டு இதழ்

5 அம்பலத்தான் - ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி - 1972 கலாச்சார பேரவை

6,7,8 - தேசிய இலக்கியம் - 4-3-2 - மரகதம் ஒக்டோபர் 1961


இரத்த உறவு
அ.ந.கந்தசாமி
மாலைவேளையிலே வெள்ளிப் பனிமலையின் உச்சியிலே அகிலலோக நாயகனான பரமேஸ்வரன் பராசக்தியோடு வழக்கம்போல் உலாவிக் கொண்டிருந்தபோது அகிலாண்ட நாயகி சிவபிரானிடம் பொழுது போகவில்லை என்று கூறி ஒரு இனிய கதை சொல்லும்படி இரந்து கேட்டாள்.

பார்வதி கதை சொல்லும்படி கேட்பது இது முதல்தடவையல்ல, வருடத்தின் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களிலும் ஏதாவது கதை சொல்லியேயாக வேண்டியிருந்தது. கதை என்றால் உலக மாதாவுக்கு உயிர். பலயுகங்களுக்கு முன்னர் .இக்கதை சொல்லும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தபோது உமாபதிக்கும் கதை கட்டிச் சொல்வது சிருஷ்டியைப்போல ஒரு இன்பமான பொழுது போக்காகவே இருந்து வந்தது. ஆனால் இப்பொழுதோ அவருக்கு அது ஒரு நீங்காத தொல்லையாகவே மாறிவிட்டது. தினம் தினம் ஒரு புதியகதையைச் சிருஷ்டிப்பதென்றால் எந்தக் கதாசிரியருக்கும் இலகுவான காரியமா என்ன?

இன்று பரமசிவம் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டார். “ஒவ்வொருநாளும் தான் கதை சொல்லுகிறேனே இன்று வேறுவிதமாக நேரததைப் போக்கலாம் வா” என்று சிவபிரான் கூற, மீனாட்சியும் இரட்டிப்பு சந்தோஷம் அடைந்தவளாய் அவ்வாறே ஆகட்டும் என்று குதூகலத்துடன் புறப்பட்டாள்.

கட்புலனுக்குத் தோன்றாத சூக்கும் நிலையில் மலைமகளும் பரமசிவனும் கொழும்பு நகரிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் கட்டில்களுக்குச் சமீபமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். தமது ஒலியிலா மொழியிலே அவர்கள் பின்வருமாறு பேசிக்கொண்டார்கள். “ஐயோ! பாவம், இந்த மனுஷனுக்கு என்ன நோயோ?” என்றாள் உலகம்மை.
“தெருவிலே தனது மோட்டாரில் வந்து கொண்டிருந்தபோது ஒருபெரிய லொறியிலே மோதி இவனுக்குக் கை எலும்புகள் துறிந்துபோய் விட்டன. சரியான காயம். அதுதான் சத்திர சிகிச்சை செய்துபடுக்க வைத்திருக்கிறார்கள்.’ என்று பதிலளித்தார் சங்கரர்.

பார்வதி நோயாளியை மேலும் கவனித்தபோது ஒரு கண்ணாடிக் குழாயிலிருந்து சிவப்பு நிறமான திராவகமொன்று நோயாளியின் உடலின ஊசி மூலம் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும், ஒரு தாதி பக்கத்திலிருந்து அதனைக் கவனித்துக்கொண்டிருப்பதையும் கண்டு ஆச்சரியடைந்தாள்.

“நாதா, இது என்ன திராவகம?” என்று அடக்கவொண்ணாத ஆர்வத்தோடு வினாவினாள் பார்வதி.

நடராஜர் புன்னகை பூத்தவராய்” அவசரப்படாதே உமா அதை அப்புறம் சொல்லுகிறேன். இப்பொழுது என்னுடன் இன்னோர் காட்சியைப பார்க்க வா” என்று பார்வதியை அங்கிருந்து வேறு புறமாக அழைத்துச் சென்றார்.

கொம்பனித் தெருவிலுள்ள ஒரு முடுக்கிலே குழந்தைகள் ஏகக் கும்மாளமடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த முடுக்கில் ஒரு சிறு வீட்டின் வாசலில் ஒரு அழகிய பெண் நின்று கொண்டு, வீட்டை நோக்கி வந்துகொண்டிருக்கும் தன் கணவனை வைத்து கண் வாங்காது பரிவோடு பார்த்துக்கொண்டிருந்தடிள்.

அவன் களைத்து விறுவிறுத்துப்போயிருந்தான். அவன் முகத்தில் வெயர்வை அருவிபோல விந்துகொண்டிருந்தது.

அவன் மனைவி அவனை அன்போது வரவேற்பதைக் கண்ட பார்வதி, பரமேஸ்வரனின் காதில் பார்த்தீர்களா? ஏழைப்பெண்ணாயிருந்தும் தன் பார்த்தாவிடம் எவ்வளவு அன்பும் ஆதரவும் காட்டுகிறாள்?” என்று திருப்தியுடன் குறிப்பிட்டாள். உண்மையான அன்பில் இணைந்து வாழும் தம்பதிகளைக் காணும்போது கடவுளர் கூட மகிழ்ச்சியில் திளைத்து விடுவார்கள்.

வீடு வந்த இளைஞர் தன் மனைவிடம் “இந்தா சுபைதா, பத்து ரூபா இருக்கிறது. அரிசி, காய்கறிவாங்கிப் பிள்ளைகளுக்குச் சமைத்துக் கொடு. நான் இதோ போய்க் குளித்துவிட்டு வந்து விடுகிறேன்” என்று கிளம்பினான். சுபைதா முகத்தில் குதூகலம் தாணடவமாடியது. “பணம் ஏது? வேலை கிடைத்ததா?” ஆர்வத்Nதூடு கேட்டாள் அவள்.

இளைஞன் “வேலை கிடைக்கவில்லை, சுபைதா. கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. செலவுக்கு இருக்கட்டுமே என்று என் இரத்தத்தை விற்று இந்தப் பத்து ரூபாவை வாங்கிவந்தேன்” எ;னறு ஒரு விரக்தியோடு குறிப்பிட்டான் அவன்.

“இரத்தத்தை விற்பதா? எனக்கொன்றும் விளங்கவில்லையே” என்று திகிலுடன் வினவினாள் சுபைதா.

அவன் இலேசாகப் புன்னகை புரிந்தான். “இந்த விசயம் எனக்கும் தெரியாது சுபைதா. இன்று காலை ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ஆஸ்பத்திரியிலுள்ள நோயாளிகளுக்கு இரத்தம் வேண்டுமென்றும் அதற்குப் பதிலாக ரூபா பத்து கொடுக்கப்படுமென்றும் போட்டிருந்தார்க்ள. சரிதான் என்று நானும் ஜமால்தீனும் போனோம. எங்கள் உடம்பில் ஊசிப்போட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் முக்காற் போத்தல் இரத்தம் எடுத்து விட்டார்கள். பதிலுக்கு ரூபா பத்தும், பால் கோப்பியும் கொடுத்தார்கள்” என்றான் சிரித்துக்கொண்டு.

சுபைதா அவன் பாதி சொல்லி வரும்போதே “ஐயோ!” என்று அலறிவிட்டாள். “உங்கள் உடம்போ வாடிப்போயிருக்கிறது. இந்த நிலையிலே இருக்கற இரத்தத்தையும் கொடுத்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று மனமிடிந்து குறிப்பிட்டாள். சிறிது செல்லமீண்டும் அவள் “இதெல்லாம் எதற்காகச் செய்கறீர்கள். எனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் தானே?” - என்று சொல்லி அவனது மெலிந்த தோளைக் கட்டிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் அவனது தோளில் விழுந்து நெஞ்சிலும்பட்டன.

“அழாதே சுபைதா, எப்பவுமே இப்படி இருக்காது. அல்லா அருள் புரிவார்” - என்று கூறி அவளது கண்களைத் துடைத்துpட்டான் அவன். ஆனால் அதே நேரத்தில் தனது கண்களில் கண்ணீர் துளிர்ப்பதை அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

பார்வதி “ஐயோ பாவம்” என்று இரங்கினாள். பரமசிவன் “அவன் நம்பிக்கை வீண்போகாது” - என்று அங்கிருந்து கிளம்பினார். உமையவளும் அவரைப் பின் தொடர்ந்தாள்.

மீண்டும் ஆஸ்பத்திரிக் காட்சி, லோகநாயகனும் உலக மாதாவும் பழைய நோயாளியிடம் மீண்டார்கள்.

“ஆமாம், நீங்கள் அந்தச் சிவந்த திராவகத்தைப் பற்றி எனக்குச் சொல்லவில்லைத்தானே! நான் உங்களுடன் கோபம்” என்று பரமசிவனிடம் பார்வதி கோபித்துக் கொண்டாள்.

“கோபம் வேண்டாம், அம்மணி சொல்லிவிடுகிறேன். அந்த முஸ்லீம் இளைஞனின் இரத்தம்தான் அது. இந்த நோயாளியின் உடலிலிருந்து ஏராளமான இரத்தம் வெளியேறி உடல் பலவீனம் பட்டுப் போனதால் அந்த இரத்தத்தை இவன் உடலில் செலுத்தினார்கள். அவ்வளவுதான்” என்று விளக்கினார் பரமசிவன்.

இப்போது நோயாளிக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்டிருந்ததால் பக்கத்தில் உடகார்ந்திருந்த தன் உறவினரொவருவருடன் பேசிக்கொண்டிருந்தான்.

“அந்தத் துலுக்கப் பயலின் லொறி வந்து மோதி என்னை இப்படி ஆக்கிவிட்டது” என்று வெறுப்புமன் பேசினான் அவன்.

“வேலாயுதம்! உடம்பை அலட்டிக்கொள்ளாதே, படு” என்று கூறினார் பக்கத்திலிருந்து அவன் அண்ணா.

பார்வதிக்கு நோயாளியின் பேச்சுப் பிடிக்கவில்லை.

“துலுக்குப் பயல் என்று ஏளனமாகப் பேசுகிறானே, ஒரு துலுக்கப் பயல்தானே இவனுக்கு இரத்தம் கொடுத்தான்” என்றாள் அவள்.

பரமசிவன் விஷமப் புன்னகை புரிந்தார். “ஆமாம் பார்வதி, இந்துவான இவனது உடம்பில் முஸ்லீம்களின் இரத்தம் ஓடுவது விசித்திரமாயில்லையா? என்றார் பலமாகச் சிரித்துக்கொண்டு.

“உஷ் சிரிக்காதீர்கள்! யாராவது கேட்டுவிடப் போகிறார்கள் என்று எச்சரித்தாள் உமாதேவி. சிரிப்பின் உற்சாகத்தில் சங்கரர் தம்மை மறந்து ஒலியை உண்டாக்கி விடுவாரோ என்று லோகமாதாவுக்கு உள்ள+ரப்பயம்.

“தேவமொழிமட்டுமல்ல. தேவர்களின் சிரிப்பும் மானிடர்களுக்குக் கேட்பதில்லை” என்று விளக்கினார் சிவபிரான்.

பரமசிவனும் பார்வதியும் வான வீதி வழியே கைலையங்கிரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ‘ஏயர்சிலோன்’ ஆகாயவிமானம் ஏக இரைச்சலோடு வந்தது. இருவருக்கும் ஒரு புறமாக ஒதுங்கிச் சென்றார்கள்.

விமானத்தின் இரைச்சல் அடங்கியதும் “கடவுளே, சிவபெருமானே! கைலாசபதி! என்னைக் காப்பாற்று! என் நோவைப் போக்கு” என்று நோயாளி வேலாயுதம் முனகுவது கேட்டது.

“அல்லாஹ{த் ஆலா! ஆண்டவனே! எத்தனை நாளைக்குத் தான் இந்தத் தரித்திர வாழ்வு! எங்களுக்கு நல்வாழ்வு அருளமாட்டாயா” என்று கொம்பனித்தெரு முடுக்கிலிருந்து இப்ராஹீமும் சுபைதாவும் தொழுது கொண்டிருப்பது அதைத் தொடர்ந்து கேட்டது.

பரமசிவனின் மலர்க் கண்களில் கருணை வெள்ளம் ஊற்றெடுத்தது. தன் வலது கரத்தை உயர்த்தி “உங்கள் மனோபீஷ்டங்கள் நிறைவேறட்டும்” என்று ஆசி வழங்கி விட்டு வான வீதியிலே நடந்தார் அவர். பராசக்தியின் உள்ளம் பூரித்தது.