கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  இணுவை அப்பர்  
 

இணுவையூர் கா. செ. நடராசா

 


இணுவை
அப்பர்


ஆக்கியோன்:
இணுவையூர்
கா. செ. நடராசா B. A. (Spl.) M. A. O. T. T. I.st.
“அப்பரகம்” மருதனார்மடம். இணுவில்



வெளியீடுபவர்:
வைத்தியர் சு. இராமலிங்கம்
இணுவில்



பதிப்புரிமைகொண்டது.


முதல் வெளியீடு: 1979 தை ñ 14. ந உ


இந்நூலின் வருவாய் இணுவைக்கந்தன் கோயிற்பணிக்கு பயன்படுத்தப்படும்.


இணுவை அப்பர்

வெளியிடுபவர்:
திரு. சு. இராமலிங்கம் வைத்தியர்
இணுவில்

அச்சுப்பதிப்பு:
ஸ்ரீ விஜயா அச்சகம்
92, மானிப்பாய் வீதி,
யாழ்ப்பாணம்

முதல் வெளியீடு 1977

பதிப்புரிமை:
திரு. சு. இராமலிங்கம் வைத்தியர்
இணுவில்.

நன்றியுரை

இந்த நூலை எழுதி வெளியிட வேண்டும் என்ற எனது பேராவலை எனது வேண்டு கோளுக்கிணங்கி நிறைவேற்ற முன்வந்து, என்னாற் கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் தாமும் சேகரித்த பல குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்து, இலங்கை, இந்தியா, மலைநாடு, யாழ்ப்பாணம் என்பவற்றை இணைத்து, யாழ்ப்பாணத்தின் நடுநாயக மாகவுள்ள இணுவையம்பதியுடன் தொடர்புபடுத்தி, தமிழ்மொழியினதும் தமிழினதும் பண்பாடுகளை விளக்கி, வரலாற்று நூலாகச் சிறந்த உரைநடையில் யாவரும் இருப்பிடமாகிய இணுவையூரின் இயற்கை செயற்கைவளங்களையும் அவ்வூரிலும், அயலூர்களிலும், யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்த பெரியார்களையும், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் வளர்த்த வித்தகர்களையும் ஆலயங்களையும் அவற்றை உண்டாக்கிய அன்பர்களையும், தமிழன் வாழ்ந்த காலம், இடம் என்பவற்றையும், மணிக்கோவை போல மிகவும் நுணுக்கமாக எமது மனக்கண்ணிற் பதியுமாறு நிறுவிய நூலாசிரியர் திரு. கா. செ. நடராசா டீ. யு ஆசிரியர் அவர்களுக்கு முதலில் நன்றி கூற வேண்டிய கடப்பாடுடையேன்.

இந்நூலை நல்ல முறையில் வெளியிடுவதற்கு உதவிபுரிந்தவர்களாகிய ஆதாரங்களை உதவியோர் புகைப்படம், படப்பிரதிமை என்பவற்றை ஆக்கிஉதவிய ஞானம் ஸ்ரூடியோ, குவீன்ஸ்ரூடியோ ஸ்தாபனத்தாருக்கும், பொருளுதவி புரிந்த அன்பர்களுக்கும், இணுவில் கிராமப்படத்தை முதன் முதல் வரைந்து உதவிய திரு. க. கனகசபை அவர்களுக்கும், அப்படத்தை செலவுச் சுருக்கத்தில் கல்லச்சிற்போட வழிவகை செய்து உதவிய செல்வன் செ. சண்முககேஸ்வரன் அவர்களுக்கும் உரிய தாழ்களில் கல்லச்சிற் பதித்தும், ரைப் அடித்தும் உதவிய தலைமையாசிரியர் திரு. சே. சோதிப்பெருமாள் அவர்களுக்கும், பிரதானமாக ஸ்ரீ விஜயா அச்சக உரிமையாளர் சோ. வரதராஜசர்மா அவர்கள் தமது சொந்தக்கருமம் போன்று தாழ்கள் எடுக்கமுடியாத இந்தச்சமயத்தில் நல்லதாழ்களை உபயோகித்து பெரிய எழுத்துக்களிலும், ஏற்ற இடங்களில் புகைப்படப் பிரதிமைகளைப் பதித்தும் அழகான புத்தகரூபத்தில் பலரும் விரும்பக்கூடிய முறையில் அச்சிட்டு உதவியமைக்கும் முன்னுரைவழங்கிய பெரியார்கள் திரு. சு. சதாசிவம், திரு. சி. ஆறுமுகதாசர் அவர்கட்கும், இந்நூலை வெளியிடுவதற்கு உத்தரவுதந்த தருமபரிபாலன சபையாருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

இணுவில். சு. இராமலிங்கம்

1975ல் வாழ்ந்து கொண்டிருக்கும் சீவன்முத்தர்கள்.

1. யோகசுவாமியின் பரம்பரையை விளக்கி கைதடியில் தவக்குடிலில் வாழும் மார்க்கண்டு சுவாமியார் அவர்கள்.
2. கோண்டாவில் குமரகோட்டத்து கந்தையா சுவாமிகள்.

இவர் தங்கும் இடமோ ஊரோ இதுதான் என்பது கிடையாது. எங்கும் நிறைந்தவர். எவ்விடத்திலும் நிற்பார். இலங்கையில் வாழ்கின்றார் என்றே கூற வேண்டும். எங்கோ, எவ்விடத்திலோ, எவருக்கோ நிகழப்போகும் விஷயங்களை முன்கூட்டியே கூறுவார். ஆனால் கேட்கும் கேள்விகளுக்கு விடை சொல்பவரல்லர். அவர்கூறும் விஷயங்களை அன்புடன் கேட்பதேயன்றி, திருப்பிக் கேள்விகள் கேட்டாலோ அவரின் வார்த்தைகள் செவிகளால் கேட்கும் தரமன்று. தேடிப் போயும் சில இடங்களிற் சொல்லுவார். தான் விரும்பும் இடங்களில் கேட்டும் உணவுபெறுவார். மற்றவர்கள் விரும்பி அழைத்தாலும் போகமாட்டார்.

“உத்த மனத்தன் உடையானடிக்கே நினைந்துருகி
மத்த மனத்தொடு மாலிவனெனன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்தெவரும்
தத்தமனத்தன பேசவெஞ் ஞான்று கொல் சாவதுவே”
என்ற மணிவாசகப் பெருமானின் வாக்கிற் கிணங்க வாழ்கின்றார்.

அன்பர்களே!
நிறை ஞானசித்தர்கள், கல்விமான்கள், அறிவாளிகள், சகலகலை வல்லுனர்கள், சான்றோர்கள், பெருமக்கள், வாழ்ந்த இவ்விணையிலியில் இந்த இராட்சதவருடம், வைகாசிமாதம் 29ம் திகதி (12-6-75) வியாழக்கிழமை காலை 9 மணிக்குமேல் தேவர்கள் கரந்துறைபடலமும், இராட்சதர்களின் படையெடுப்பும் தொடங்கியது. இணுவில் அம்பலவாணக் கந்தன் தேவஸ்தானம் உடைக்கப்பட்டது. களவு கொள்ளை சூறையாடல்களுடன் இரத்தஆறு ஓடியது. தோட்டங்களில் பயிரழிவு, வேலைகள் ஸ்தம்பிதம், நீரிறைக்கும் யந்திரங்கள் இயக்கமின்றிக் கறைபிடித்தன. தொழில் நிலையங்கள் மூடப்பட்டன. தோட்டங்களுக்குப் போவோர் வருவோர், வாகனங்கள் எல்லாம் தடை. காங்கேசன்துறை வீதியை நடுவாக வைத்து கிழக்கு மேற்குப் பாகுபாடு, கண்ட இடங்களில் எல்லாம் அடிதடிப் பிரயோகம், இதன் காரணமாகப் பலர் அஞ்ஞாதவாசம், இப்படியாக இணுவையூர் ஒரு நவீன நவகாளிப் பட்டணமானது, “வெட்கம்”

குறுக்கு மனம் படைத்த சட்டத்தரணிகள் வழிகாட்ட, குறுநடை வழியில் உரிமையைப் பெறநின்ற முறைதவறிய பிராமணக்குருமார் தூண்ட, பண்டித மெருகுபூசப்பட்ட களுகுப்பார்வையை யுடைய அறிவாளிகள் ஏவ, நிதானமற்ற பாமர மக்கள் ஆற்றிய நகைப்புக்கிடமான செயல்களாலேயே இந்த இழிநிலை ஏற்பட்டது.

இங்குவந்து குடியேறிய குறித்த பிராமணக் குருமார் 1912 தொடக்கம் 1914ம் ஆண்டுவரை நெறிதவறிய உரிமைகோரி நாக்குவளம் குன்றப் பெற்றும், 1965இல் ஒரே இரவில் ஆலயத்தை இடித்து; தரைமட்டமாக்கி சகல திருவுருவங்களையும் வசந்த மண்டபத்தில் பூட்டிவைத்தும். 12-6-75ல் திடீர்புரட்சிமூலம் கொடியேற்ற உற்சவத்தடை செய்ததோடமையாது பூசை வழிபாடுகளைத் தடைசெய்ததுமாகிய மூன்றுவகையான கொலைபாதகச் செயல்களுக்கு ஆளாகினர்.

இப்படியான படுபாதகச் செயல்களினால், சைவ உலகும், சிவப்பிராமணகுலமும். குலபரம்பரையினரும் வெட்கித் தலைகுனியவும், பிறசமயத்தவர்கள் நம்மை எள்ளி ஏளனம் செய்யவும் கோடரிக் காம்புகளாயினர். என்னே இவர்களின் மதி!

நமது நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் இந்த நூலுக்கு இந்நிகழ்ச்சிகளால் இழிநிலை ஏற்படக்கூடாது என்ற காரணம் கருதியே இந்த விஷயமும் இதில் இடம் பெறுகின்றது.

இன்னுமோர் விசேட குறை என்னவென்றால் முருகப் பெருமான் எழுந்தருளி வீதிவலம் வருவதாகிய சிற்பக்கலைகள் நிறைந்ததும், சன்னியாசியாரால் உருவாக்கப்பட்டதுமான திருமஞ்சம் நிற்பதற்கு நிரந்தர வீடு அமைப்பதற்குத் தடையாய் இருந்துவருவதாகும். இத்தடை ஒன்றே இவர்களின் அறிவாற்றலை உலகம் உணரக்கூடியதாக வுள்ளது.

இணுவில். சு. இராமலிங்கம்.

விழிப்புண்டா?

எமது அப்பர் பிறந்த 1860ம் ஆண்டு அந்நியரான ஆங்கிலேயர் இந்நாட்டையாண்டனர். உலகின் பல பாகங்களும் ஆங்கிலக் கொடியின் கீழ் ஆளப்பட்டன. பல இன – மொழி பேசும் மக்களைக் கொண்ட பேராட்சியை ஆங்கிலேயர் நடாத்தினர். வணிகத்துடன் வந்தோர் ஆள்வோராக மாறுவதற்கு அவர்களின் சமய நிறுவனங்கள் (மிசன்) உறுதுணை புரிந்தன. சமய மாற்றமும் - அதனைத் தொடர்ந்து, அன்றைய ஆட்சியினரின் மொழியான ஆங்கிலக் கல்வியும் எமது மத்தியில் புதிய சமூக அமைப்பினை உருவாக்கியது. ஆங்கிலக் கொடி பறந்த இந்தியா, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, சுமத்திரா, யாவா, போர்னியோ ஆகிய நாடுகட்கு இலங்கைவாழ் தமிழர்கள் தொழில் நாடிச் சென்றனர். அந்நாடுகளில் உத்தியோக வாய்ப்புக்கள் இருந்தமை இந்நாட்டவர்க்கு வாய்ப்பினைக் கொடுத்தது. கட்டுப்பாடற்ற போக்குவரத்து வாய்ப்புக்கள் இந்ததனால் திரைகடல் ஓடித் திரவியந் தேடினர். அதனால் வாழ்வும் மலர்ந்தது. இந்நிலை உருவாகுவதற்கு முன் இந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் வாழ்வு முறை நிலத்தினை நம்பியதாகவே யமைந்திருந்தது.

இல்லை யென்று கூறா நிலமங்கையை நன்கு மதித்துப் போற்றியமையால் பிறருக்குப் பின்னின்று வாழாப் பெருவாழ்வுக்குரியரா யிருந்தனர். வரகு, தினை, குரக்கன் போன்ற தானிய வகைகளும் மரவள்ளி, இராசவள்ளி, சிறுகிழங்கு போன்ற கிழங்கு வகைகளும்@ பனம்பழம், பனங்கிழங்கு போன்ற பனம் பொருட்களும் மக்களின் உணவுவகையாக அமைந்திருந்தன. புகையிலைச் செய்கையால் சிறிது செலவாணியும் பெற்றனர். அன்று வாழ்ந்த மக்களின் வாழ்வு பொதுவுடமைத் தத்துவத்திற்கு விளக்கமாக அமைந்திருந்தது. கூட்டுறவை அந்நியர் இந்நாட்டுக்கு உணர்த்த முன்பே குடும்பங்களும் ஊரவர்களும் தமது வாழ்வைக் கூட்டுறவு, அடிப்படையில் அமைத்துக் கொண்டனர். கொள்வனவு கொடுப்பனவு அனைத்தும் உதவி ஒத்தாசை நோக்குடன் செய்யப்பட்டன. ஒப்புரவு கொண்ட சமுதாயமே அன்று வாழ்ந்ததெனலாம். இன்றுபணத்துக்குள்ள மதிப்பு அன்று ஒப்புரவு கொண்ட மனிதருக்கேயிருந்தது. நாணயம் என்பது நாகாத்தலாகக் கருதப்பட்டது. பொய் களவு செய்வதற்கு சமுதாய அமைப்பு இடங்கொடுக்கவில்லை. அடையா நெடுவாயில்களைக் கொண்ட மனைகளும் மடங்களும் ஊரக வாழ்வை இன்புறுத்தின. சத்திய நெறிக்குக் கட்டுப்பட்டு மக்கள் வாழ்ந்தனர். இத்தகைய வாழ்வமைப்பு அந்நியர் இந்நாட்டிற் கால்ஊன்ற வாய்ப்பளித்தது. இவ்வாய்ப்பு இந்நாட்டின் செல்வத்தை ஆங்கிலேயர் கொள்ளையடித்துச் செல்ல வழியாகவும் அமைந்தது. இந்நாட்டு மூலப்பொருட்கள் மலிந்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்பு அவை உருமாற்றம் பெற்று இந்நாட்டவர்க்கே சந்தைப் படுத்தப்பட்டன. அன்றியும் உணவு வகைகளும் இறக்குமதி செய்யப்பட்டன. இந்நிலையால் நாட்டில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களும் கால்வாய்களும் காடுகள் நிறைந்து அழிந்தொழிந்தன. கைத்தொழில்கள் சீரழிந்தன. ஒருபவுண் 13 ரூபா 60 சதப் பெறுமதி கொண்டதாகவும் உடைகள் ஒருரூபா இரண்டுரூபா கொண்டதாகவும் சந்தைப்படுத்தப்பட்டன. பட்டுடைகள் ஐந்து பத்து ரூபாவுக்கும் பெறக் கூடியதாக இருந்தது. கட்டுப்பாடற்ற போக்குவரத்துக்கள் இருந்ததனால், கலை கலாச்சார தொடர்புகளைப் பல நாட்டு மக்களுடன் இந்நாட்டுமக்கள் கொண்டிருந்தனர். ஆயின் அக்காலத்தில் அனுபவித்த உணவு உடை கேளிக்கை முதலிய சுக இன்பவாழ்வை எக்காலமுமனுபவிக்க முடியாது. 1915ம் ஆண்டு முடிந்த உலகப்போரின் தாக்கத்தினால் பிரித்தானியப் பேரரசு தன் குடியேற்ற நாடுகட்கு வேண்டாவெறுப்புடன் சுதந்திரங் கொடுத்துத் தான் கொடுத்த சுதந்திரத்துடன் கொடிய நஞ்சினையும் கலந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டது.

இரண்டாம் உலகப்போர் பல உயிர்களைப் பலி கொண்டதோடு உயிர்தப்பியவர்களைப் பல கொடுமைக்குள் ஆக்கியது. வேலையின்மை பஞ்சம் பசி பொருளாதார நெருக்கடி யென்பன எல்லா நாடுகளையும் வாட்டிவதைத்தன. ஒவ்வொரு நாடும் ஏற்றுமதி இறக்குமதி என்பவற்றினைக் கட்டுப்படத்தின. நாடுகட்கிடையே யிருந்தபோக்குவரவுகள் கட்டுப்பாட்டால் தடைப்பட்டன. இதனால் அறிவுப்பஞ்சமும் ஏற்பட்டது. ஆயினும் விஞ்ஞானம் புதுமையாற் கிடைத்த வானொலி போன்றவற்றால் அந்நிலையிலும் ஒரளவு கலை கலாச்சாரத் தொடர்புகள் அழிவுறாமல் இன்றும் வளர்ந்தே வருகின்றன.

தமது வாழ்வு, தமது இனம், தமது மொழி யென்பன நலமுற வேண்டுமென்று உலகிடைவாழ் மக்கள் வேணவாப் பெற்று வீறு நடைபோடுகின்றனர். ஆயின் தமது இனத்தில் இன்னுந்தான் சோர்வு நீங்கவில்லை@ பெருந்துயிலில் உறங்கிய மக்கட் கூட்டத்தினைக் கொண்டதாக வாழ்வதனையே காண்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். மாற்றப்பட வேண்டும். மாறாதவரை விடிவில்லை. மாற்றப்படாதவரை வாழ்வில்லை.

மொழியும் அம்மொழிபேசும் இனமும் விடுதலைபெற வேண்டுமாயின் தக்கார் தலைமை வேண்டும். அத்தகைய தக்கார் யார்? தகவிலர் யார்? என்று ஆராய்ந்து உணரும் தகவு வேண்டும். இத்தகவு இன்றாயின் யாவும் கனவாகிவிடும். தனிமனிதனுக்குரிய கோட்பாடே சமூகத்திற்கும் உரியது. விதியை ஆக்குபவர்களும் பின் அவ்விதியாற் கட்டுண்டு அல்லற்படுபவரும் நாமே. சிலந்தி தனைச் சுற்றி வலை பின்னுவதுபோல் நாம் எண்ணிய எண்ணங்களே நமது விதியாக அமைவுபெற்று எமது வாழ்வாக மலர்ச்சியுறுகின்றது. எண்ணுகின்ற எண்ணங்கள் அழிவு பெறுவதில்லை. அவை என்றோ ஒருநாள் வாழ்வாக மலர்ந்தே தீரும். அப்படி மலரும் வாழ்வு எப்படி அயைவேண்டுமென்று தீர்மானிப்பதற்கு யாரும் தடைகல்லாக இருக்கமுடியாது. எண்ணுக. அதை நல்லதாக எண்ணுக. அதனைச் செயற்படுத்தும் திண்மையைப் பெறுக. விரைந்து செயற்படுத்துக. அதற்காக விழித்திரு – பசித்திரு – தனித்திரு@ அன்றே நாம் விடுதலைக்குரியவராவோம். ஆன்ம விடுதலையை நோக்கி விரைந்து செல்லும் ஆன்மீகப் பொலிவு அதாவது ஆன்மநேய ஒருமைப்பாடு நமக்கு வேண்டும். அதனை எந்தச் சக்தியாலும் அழித்துவிட முடியாது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின்”


கருணை செய்வாயே


வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

படையல்

செய்யென்றார் வைத்தியனார் இராமலிங்கம்
செய்திட்டேன் வரலாறு ஆகிடவே
பொய்படாவார்த்தை என நினைத்தே கூறிட்டேன்
சான்றுபலதந்த இராமலிங்க வைத்தியனும்
ஆன்றபொருளுரைத்த கந்தசாமிச் சான்றோனும்
இந்நூலை யெழுதுதற்குப் பேருதவிசெய்திட்டார்
சான்றுபல கொண்டு சாற்றிவிட்டேன்
இதைக் காழ்ப்பின்றிப் படிப்பவர்க்கும் முன்
காழ்ப்பின்றிப் படித்தவர்க்கும் யான்
படைக்கின்றேன் மனமகிழ்ந்தே

நன்றி
அன்பன் : இணுவையூர் கா. செ. ந.
ஓதாப் பெரு நெறியே!
ஓதற் கரிய வனே!!
சாகாப் பெரு நெறியச்
சந்ததமும் யான் பெறவே
வேதப் பொருளாய்
வித்தகஞ் செய் காவலனே
வீட்டுக் குரிய பொருள்
விரைந்தளிப்பாய் யுவந்திடவே.

என்கவிதை மலர்கொண்டு
அன்னை தந்தை யாவர்க்கும்
இன்கவிதை யான்பாடத்
தண்டமிழை யெனக்கூட்டிப்
பொன் பொருளால் வாழ்வளித்த
ஆசாற் பெருமகர்க்கும்
என்கடனை யான் செலுத்த
முனைகின்றேன் இந்நூலில்.

சின்ன வயதிற் சீர்தந்த சேதுலிங்கம்
அன்புப் பெரிய தந்தை
கலையறிவால் நுண்பொருளை
விண்டுரைத்த கந்தசாமி
எனையறிய எனக் களித்தான்
வடிவேலன் அம்மானாய்
அனைவரையும் வாழ்த்துகின்றேன்
என்னாவால் இனிதுணர்ந்தே.

ஆசாற் கொருவராய் அன்பளித்த
இராசதுரை யண்ணர்க்கும்
ஏசாப் பெருநெறியை யுவந்தளித்த
நடராச ஆசாற்கும்
கணக்குவிட்ட போதினிலே
‘கனக்க’ தந்த சீவரத்தின ஆசாற்கும்
வரலாறா எனத்திகைத்த என்
வரலாறு கண்டு வந்த சரவணமுத்தற்கும்
அப்பாலும் அடிசார்ந்து கற்றுணர்ந்த
அந்தணராம் சான்றோர்க்கும்
முப்பாலும் யானுணர்ந்து
மூப்பறியாச் சான்றோனாய்
எப்போதும் வாழ முயன்றுரைத்த
அன்னை தந்தை யாவர்க்கும்
எப்போதும் யானடியேன்
என்சிந்தை கனிந்து சொல்வேன்.

வாழ்த்து
வைத்தியர் : திரு. க. இராமலிங்கம்

முந்து தமிழ் வளர்த்த மூதறிஞர் புகழ்பாடச்
சந்தம் பலதந்த நடராசனே – நண்பா
சிந்தை மலர்ந்து சிறப்புடனே புகழ்பூக்க
விந்தை பலதந்தாய் நீ.

எந்தைய ராண்ட இணுவைப் புகழ்காணச்
சிந்தை தளரான் சீர்பெறவே – விந்தைக்
கந்தன் மலர்ப்பாதம் காத்தளித்த நல்வாழ்வால்
நொந்தென்றும் வாடான் ஈண்டு.

அன்னை யிளையவந்தாய் சீனிக்குட்டி யம்மை
சொன்ன பொருள் தேர்ந்தோன் - உண்மை
கன்னற் றமிழும் கண்ணியமாம் இன்னமுதும்
சொன்னபடி பெற்றான் இன்று.

சிந்தை குளிரச் சிவநெறி கண்டுரைத்த
தந்தை செய்தொண்டோ பெரிதம்மா – எந்தாய்
கந்தன் கருணையினாற் காத்தளித்தார் செல்லையா
சிந்தை செய்வா னெந்நாளு மீண்டு.

கந்தர் மலர்ப்பாதங் காதலாற் றெழுதேத்தி
எந்தையராய் வாழ்ந்த முந்தையரை – காசெந
செந்தமிழுஞ் சிவநெறியுஞ் சேர்ந்திங்கு வாழப்
பைந்தமிழால் வாழ்ந்திட்டான் காண்.

மதிப்புரை
திரு. சு. சதாசிவம் அவர்கள் (உரையாசிரியர்)

உலகத்தின் பல பாகங்களிலும் காலத்திற்குக் காலம் பல பெரியார்கள் அவதரித்து மக்கள் வாழ்வில் என்றும் நிலைபெறக்கூடிய பற்பல செயற்கரிய அற்புதங்களைச் செய்து தம் புகழ் நிறீஇப் போந்தனர். நம் தாய் நாட்டில் இன்றும் பலர் இருந்து வருகின்றனர். நமது ஈழத்திருநாட்டிலும் அவ்வாறே. அவர்களின் வரலாறுகளை அவ்வக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் எழுதிவைத்த சாசனங்கள் மூலமும், ஆராச்சிகள் மூலமும் பிற்காலத்தவர்கள் உணர்ந்து அவர்களின் நெறிப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவ்வாறே நமது இணுவையம் பதியில்அவதரித்து, இளமையிலேயே தெய்வீக அருளைப்பெற்று, விஞ்ஞர்னத்தாலும் நாடுதற்கரிய பல அற்புதங்களை மெய்ஞானத்தின் மூலம் செய்துகாட்டி, கலை, கலாச்சாரம், இறைவழிபாடு, பிணிநீக்கம் ஆதியாம் பண்புகளை வளர்த்துப் பேரின்பமெய்திய பெரிய சன்னியாசியார் அவர்களுடைய வரலாற்றுச் சிறப்பையும் பிற்சந்ததியார் அறிந்து நெறிப்படும் வண்ணம் எழுதி வைக்க வேண்டும் என்று பல அன்பர்கள் இந்நாள்வரை அவாவுற்றிருந்தனர். அவர்களின் அவாவைப் பூர்த்திசெய்யும் பெரும் பொறுப்பினை இணுவையூர் ஆசிரியர் திரு. கா. செ. நடராசா டீ. யு. அவர்கள் ஏற்று, பல படப் பரந்து கிடந்த செயல் முறைகளைக் கோவைப்படுத்தி, சுருங்கச் சொல்லி விளங்க வைத்து அழகான தமிழில் சுவைபட எழுதி உதவியுள்ளார்கள்.

மக்கள் ஒவ்வொருவருக்கும் சன்னியாசியாருக்கும் இடையில் தனித்தனியாக நிகழ்ந்த அதிசய அற்புதங்கள் யாவற்றையும் விபரித்து எழுதுவதாயின் அவை ஏட்டில் அடங்கா ஆதலால் அவற்றைவிடுத்துப் பிரதானமான விஷயங்களையே ஆசிரியர் எடுத்துள்ளார். சந்நியாசியார் அவர்களின் உறவினனாகவும் அவருடன் கூட இருந்து அவரின் ஏவற் தொண்டுகளைச் செய்தவனாகவும் வயதில் முதிர்ந்தவனாகவும் அடியேன் இருந்தமையால் அடியேனுக்கு இந்த வரலாற்றினை வாசித்துக் காட்டினார்கள். வரலாறு உண்மையையும், ஆசிரியரின் உள்ளத் தெளிவையும் உள்ளடக்கியிருப்பது போற்றுதற்குரியது.
சு. சதாசிவம்.

மதிப்புரை
திரு. சி. ஆறுமுகதாசன் (இளைப்பாறிய ஆசிரியர்)

நமது ஊரில் எமது வாழ்க்கைக் காலத்தில் நிகழ்ந்த பல அற்புதமான, ஆனால் உண்மையான பல சம்பவங்கள் இன்றும் எமது மனக்கண்ணில் அப்படியே நிழற்படம் போலக் காட்சியளித்த வண்ணம் இருக்கின்றன. கல்விமான்கள், சமயத்தொண்டு செய்தோர், கலைவல்லுனர், பெரியார்கள் ஆகிய பலரும் மிகவும் அரிய பெரிய சாதனைகளைப் புரிந்து தமது புகழுடம்புகளை நிறுவி, தாம் இயற்கை எய்தினர். மனிதன் தெய்வநிலையடையலாம் (சீவன் முத்தன்) என்பதற்கிலக்காக வாழ்ந்துகாட்டிய பெருமதிப்புக்குரிய பெரிய சந்நியாசியார் அவர்களின் அருஞ் செயல்களும் அற்புதங்களும் நம் போன்ற வயது முதிர்ந்தவர்களே நேரிற்கண்டு அனுபவித்த பாக்கியவான்களாகும். அந்த ஆனந்த நிலையை இளையார்களும் படித்தறிந்து இன்புறவும், பின்பற்றவும் வேண்டுமென்னும் பேரவாவினால் உந்தப்பட்டு ஆசிரியர் திரு. கா. செ. நடராசா அவர்கள் வரலாற்றுடன் சம்பந்தப்படுத்தி மிகவும் சிறந்த முறையில் அப்பெரியாரின் சரிதையைச் சுருக்கமும் விளக்கமுமாக எழுதி உதவியுள்ளார்கள். அவர்களின் சேவை யாவர்க்கும் பயனளிக்கவேண்டும் என இறைவன் பாதங்களைப் பணிகின்றேன்.

இணையில் இணுவைப் பெரிய சந்யாசியாம் சுப்ரமண்யன்
இணையில் சடைமுடி வெண்ணீறுமேனி அன்பே உருவாம்
இணையில் திருமஞ்சம் ஏற்றிப்பலர் பிணிபேயகற்றி
இணையில் முருகன் இணையடிசேர்ந்தனன் ஏத்துமினே.
சி. ஆறுமுகதாசன்.

சமர்ப்பணம்

இந்நூலின் கரு இணுவையூர்ப் பெரிய சந்நியாசிரியாரின் வாழ்வின் இருந்து முகிழ்ந்தது. அவர் வாழ்வே இணுவையூரின் வாழ்வு. அதனால் இந்நூற்கு அவரின் பெயரையேயிட்டு அழைப்பது பொருத்தமென எண்ணினேன்.

நூல் ஆசிரியன் விருப்பு வெறுப்புகட்கு அப்பாற்பட்டவனாயிருக்க வேண்டும். அதிலும் வரலாற்று நூல் எழுதுபவனுக்கு மிக்க கண்ணியம் வேண்டும். வரலாற்றை எழுதும் பொழுது காழ்ப்புணர்வுக்கு இடங்கொடுக்கக்கூடாது. உள்ளத்தையுள்ளபடி விண்டுரைக்க வேண்டும். யாவருக்கும் அஞ்சக்கூடாது. பிறரின் பாராட்டுகளை விரும்பித் தன்பேனாவை அடிமையாக்கக் கூடாது. இப்பண்புகளை உளத்திற் கொண்டே என பணியினைச் செய்துள்ளேன். சான்று பலவற்றை ஆராய்ந்த பின்பே இதனை எழுதத் தொடங்கினேன். இதனைப் படிப்பவர்கள் உண்மைகளை அறியும் நோக்குடன் படிக்க வேண்டும். தமது கருத்துக்களை எமக்குத் தெரிவித்து உதவ வேண்டும்.

எமது ஊரின் வரலாற்றினை அறியவேண்டுமென்ற ஆவல் என் பிள்ளைப் பருவத்திலேயே தோன்றியது. அதனால் என் முன்னவர்களான மூதாதையர் பலரிடம் அறிந்த செய்திகளைக் காலத்திற்குக் காலம் தொகுத்துவந்தேன். இதனை வெளியிடும் வாய்ப்பு எனக்குஏற்படும் என எண்ணியிருக்க வில்லை. என் மதிப்புக்குரிய நண்பர் வைத்தியர் திரு. சு. இராமலிங்கம் அவர்களின் அன்புக் கட்டளையே இது வெளிவருவதற்கு ஏதுவாக அமைந்தது.

இந்நூலின் உள்ளே சிற்சில இடங்களிற் சிலரைப்பற்றி ஒரு முறைக்குமேல் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது நிகழ்ச்சிகளின் கோவை முறை நோக்கி அமைக்கப்பட்டது. அதனைத் தவிர்க்க இயலாது. இவ்வரலாற்றில் இடம்பெற்ற மூதாதையரிற் சிலர் என் உறவுக்குரியவர். சிலர் என் குரு பரம்பரையினர். மற்றையோர் ஊர் உறவாற் றொடர்பு கொண்டவர். இன்று வாழ்பவர்களில் இந்நூலில் இடம்பெற்றவர்களும் உளர். இவர்களிற் பலர் உறவினர்களாகவும் நெருங்கிய நண்பர்களாகவும் என் ஆசிரியர்களாகவும் உள்ளனர். ஆயின் இவர்கள் அனைவரையும் நூல் ஆசிரியன் என்ற நோக்கிற்றான் நோக்கினேன். இவ்வுண்மையினை இதனைப் படித்தவர்கள் உணர்வர்.

புகழ்நிலை பற்றி மட்டும் இதிற் கூறப்பட்டுள்ளதே! இவ்வூரில் இகழ்ச்சிக்குரிய ஒன்றும் நிகழந்திலதா? இவ்வினா என் அகச் செவியிற் கேட்கவே செய்கின்றது இகழ்ச்சியினை எடுத்துக் கூறுவதற்;கு இன்று மனிதர்கள் வேண்டியுள்ளனர். குறை காண்பதே நோக்கமாகக் கொண்டு எழுதுவதாயின் என் வாழ்நாள் முழுதும் எழுதிக் கொண்டிருந்தாலும் அதனைச் செய்துவிட முடியாது. நல்லவர்கள் பலர் வாழ்ந்த ஊரின் வரலாற்றினையும் அந்நல்லவர்கள் பற்றிய செய்தியினையும் கூறுவதால் எமது இளைய தலைமுறையினர் தாமும் அந்நிலையை அடையவேண்டும் என்ற உள்ள உந்தலுக்கு உட்படுவர். அவ்வண்ணம் உந்தப்படுவதனால் ஊரும் நாடும் நலம்பெறும். இந்நோக்கு நிறைவேறுமாயின் அதுவே எனக்குக் கிடைத் பரிசிலாகும்.

இந்நூலிற் கூறப்பட்ட செய்திகள் பல என்வாழ்நாளிற் கண்டுகேட்டு உணர்ந்தவை. மற்றுஞ் சில என் வாழ்வுடன் தொடர்பு கொண்டவை. எனவே இந்நூலில் இணுவையூரின் வரலாற்றை உணர்வதற்குத் திறவு கோலாக அமையும் என எண்ணுகின்றேன். இதோ அத்திறவு கோலை உங்கள் கையிற் றருகின்றேன்.

இத்திறவுகோல் உருவாக உதவிய அனைவர்க்கும் என் நன்றியும் வணக்கமும் என்றும் உரியது.

“வள்ளுவர் இல்லம்” இணுவையூர்
இணுவில் கா. செ. நடராசா

வரலாற்றில் இணுவையூர்

அருள்வளமும் கலைவளமும் இணைந்து இணையிலியாய் விளங்கும் பெருமைக்குரியது இணுவையூர். இவ்வூர் பண்டைப் பெருமைகொண்டது. தமிழரசர் காலத்தில் இருந்தே இவ்வூரின் வரலாற்றை அறிய முடிகின்றது. கி. பி 13-ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட வரலாற்றினை அறியமுடியவில்லை. பொதுவாக இலங்கையினதும் அதன் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தினதும் வரலாற்றில் தமிழர் வரலாறு விளக்கம் பெறவில்லை. இந்நிலையில் இணுவையூரின் வரலாற்றை அறியமுன்பு இலங்கையின் வரலாற்றையும் நோக்கியாக வேண்டியுள்ளது. இவ்வரலாற்றுப் பின்னணியிலிருந்து இணுவை வரலாற்றினை நோக்கல் சிறப்புடைத்து.

இலங்கையின் வடமேற்குப்பகுதியில் உள்ள சிலாப மாவட்டத்தில் உடப்பு என்ற ஊருக்குக் கிழக்கே பாயும் பற்றுளி ஓயா என்ற சிற்றாறும் இன்று தெதுறு ஓயா என்று அழைக்கப்படும் ஆறும் தமிழர் நாகரிகத் தொடர்புடையன. இதனை எண்பிப்பதற்குத் தக்க அகச் சான்றுகள் உண்டு. அகழ் ஆய்வு நிகழ்த்தின் புறச்சான்றுகளும் கிட்டும்.

பற்றுறி ஓயா என்பது பஃறுளியாற்றின் எஞ்சிய பகுதியென்று எண்ண இடமுண்டு. தெதுறு என்பது ததுற என்பதன் திரிபு எனக் கௌ;ளத்தகும். பற்றுறி ஓயா என்பது 1930ம் படம் - வரலாற்றுப் புவியியல் ஆகியவற்றில் பற்றுறி ஆறு என்றே குறிக்கப்பட்டுள்ளதனைக் காணலாம். ததுறு என்பது பல்லினைக் குறிக்கும் ஒயா என்பது ஆற்றினைக் குறிக்கும். தமிழ்ப் பஃறு சிங்களத்தில் தெதுறு என உருமாற்றம் அடைந்ததெனலாம். இதனை மொழியாய்வு தெளிவுறுத்தும். பஃறுளி ஆற்றின் பெயருடன் ஒருமைப்பாடுடைய தெதுறு ஓயாவின் படுக்கையினை அகழ்வாராய்வு செய்யின் தமிழர் வாழ்வின் வரலாறு விளக்கமும் தெளிவும்பெறும். ஆய்வாளர்கள் பலர் உண்மைச் செய்தியினை வெளியிடும் பல புதைபொருட்களையும் கல்வெட்டுக்களையும் அழித்து ஒழித்து விட்டனர். அழகுடைய பல புதைபொருட்களைத் தம் இல்லங்களிலமைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் பழமைமிக்க யாழ்ப்பாணத்தின் பெருமையினையோ தொன்மையினையோ நன்கு ஆராயமுடியவில்லை.

மணிமேகலையில் மணிபல்லவம் என்ற பெயர் யாழ்ப்பாணத்தினைக் குறிப்பதாகவே கொள்ளக் கிடக்கின்றது. வடமாநிலம் தென்னிந்தியப் பெருநிலப் பரப்புடன் தொடர்பு கொண்டிருந்தது. இதனை நில நூல் உண்மைப்படுத்தும். பஃறுளியாறும் பன்மலையடுக்கும் கடல்கொண்டதால் இலங்கையின் வடமாநிலம் தென்இந்திய நிலப்பரப்பிலிருந்து பிரிக்கப்பட்டது. இதனை நிலநூற் புலவரும் ஒப்புவர்.

வடபகுதியான யாழ்ப்பாணம் உண்மையில் யாழ்ப்பாடியினாற் பெயர் பெற்றதா என்பது ஆய்வுக்குரிய செய்தியாகும். யாழ்ப்பாணம் என்ற சொல்லை மலையகத் தமிழரும், சிங்கள மக்களும் “ஏள்ப்பாணம்” என உச்சரிப்பதனை இன்றும் கேட்கலாம் அறிஞர் மு. க. கருதுவது போல் ஏள்பனை நாடுதான் யாழ்;ப்பாணமாக மாறிய தெனக் கருதலாம். இதனைச் சான்றுப்படுத்தும் பெயர்களாக யாழ்ப்பாண மாநிலத்தில்@ ஏழாலை – எழுவைதீவு போன்ற இடங்கள் இன்றும் மக்கள் வாழ்விடங்களாக அமைவுற்றிருப்பதனைக் காணலாம். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊர்களில் நாக வழிபாட்டு முறையும் தேவதைகள் வழிபாட்டு முறையும் பரவலாகக் காணப்படுகின்றது. கடல்கோள்களால் அழிவுண்ட ஏழ்பனை நாட்டுக்குடிகள் - மிகுந்திருந்த தென்னிந்திய நிலப்பரபிற் சென்று குடியேறினர். பின் 13-ம் நூற்றாண்டளவில் மீண்டும் வந்து இன்றைய யாழ்ப்பாண நாட்டகத்துக் குடிகொண்டனர் எனக் கோடலே சால்புடைத்து.

நிலநூல் வல்லார்@ இமயத்தொடரிலும் பார்க்க ஆண்டால் முதிர்ந்தமலைத் தொடர்கள் தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன வென்பர். இத்தொடரில் ஒன்று இலங்கையின் கிழக்குப் பகுதியாகிய திருகோணமலைவரை பரந்துள்ளது. திருகோணமலைக்கும் தமிழகத்திற்கும் இடையில் அமைந்துள்ள யாழ்ப்பாணம்@ அழிந்த பஃறுளியாற்று நிலப்பரப்பின் கடைக் குறையென்றே கொள்ள வேண்டும். யாழ்ப்பாண மாநிலத்தின் வடகரையில் அமைந்துள்ள கீரிமலை, காங்கேசன்துறை போன்ற கடற்பரப்புகளில் உள்ள கடற்பாறைகள் அந்நிலப்பரப்பின் தொன்மைக்குச் சான்றாய் அமைந்துள்ளன. வரலாற்றுச் சான்றுகள் போதியளவு கிடைக்காத போதும், பல அகச்சான்றுகள் கொண்டு அழிந்த குமரிக் கோடும், பஃறுளியாறு நிலப்பரப்பும், ஏழ்பனை நாடான யாழ்ப்பாணமும் குமரிநாட்டு நிலப்பரப்பாகவே இருந்தன எனலாம். குமரிநாட்டின் நிலப்பரப்புடன் ஒன்றிணைந்த பகுதியே தென்னிலங்கை.

இலங்கையின் தென் - மத்திய பகுதிகளில் வாழும் சிங்கள மக்களின் பெயர்களில், உடுராவண உடு ஸ்ரீ ட எகலப் பொல (ஏலேலப்பிள்ளை) இலச்சுமணன் இராமநாயக்கா (இராமநாயகன் ஸ்ரீ சிவன்) அப்புகாமி (அப்புச்சாமி) தம்புள்ள (தம்பிப்பிள்ளை) பண்டாரநாயக்க (பண்டு நாயகன்) சேனநாயக்கா (சேனைநாயகன்) போன்ற ஆண்பாற் பெயர்களும் - இராவணா கொண்ட (இராவணனின் கொடை) வெளிமடை, வள்ளிமடம், றம்புக்கணை. அரம்புக்கணை, வாழைத்தோட்டம், கண்டி, செங்கடகல, (செங்கோடு) கம்பளை (லை) ஆரவாரம், கழனி (வயல்) மாத்தறை, பெருந்துறை, தேவேந்திரமுனை, பாணந்துறை (பானைத்துறை) குமரிநாட்டின் கடைக்குறையே இலங்கை யென்பதனை வலியுறுத்தும் சான்றுகளாகும்.

யாழ்ப்பாணத்திற் பழந் திராவிட மக்களான ஆதிக் குடிகளிடையே பூதன், சிங்கன், இடும்பன், சூரன் போன்ற ஆண்பாற் பெயர்களும்@ இயக்கி, நாகி, பூதி, பேச்சி போன்ற பெண்பாற் பெயர்களும் வழக்கில் இருந்து வந்துள்ளன. இப்பெயர்கள் உள்ள மக்கள் 1945ஆம் ஆண்டுவரை வாழ்ந்திருந்ததனை நன்கு அறியலாம். ஆயின் அவ்வழக்கு இன்று அருகிவிட்டது. மதவாச்சி – அனுராதபுரம் போன்ற இடங்களில் வாழ்ந்த சிங்களப் பழங்குடி மக்களிடையே பூதன் சிங்கோ, கந்தன் சிங்கோ போன்ற பெயர்களும் வழக்கில் இருந்தன. இப்பெயர்கள் திராவிட இன மரபின் அடிப்படைத் தொடர்பால் ஏற்பட்டன என்பதை வரலாற்றுணர்வுடையோர் மறுக்கார்.

திராவிட இன மரபின் மூதாதையராக வெண்ணப்படும் சூரன், தென்னவன் (இராவணன்) சிங்கன், இடும்பன் ஆகியோரின் இன வழித்தோன்றல்களே இலங்கைவாழ் பழங்குடிகள் என்பதனை எண்பிக்கும். இன்றைய இன மரபாராய் வாழ்பவர் குமரிநாடே (லைமூரியா) உலகின் தொன்மை சான்ற நிலப்பரப்பென்றும் அங்கு வாழ்ந்த மக்கள் தமிழர்களேயென்றும் - அவர்களே நில நடுக்கத்தால் கடல் கொண்டதால் பல்வேறு இடங்கட்கும் குடிபெயர்ந்தன ரென்றும் கொள்வர்.

மூத்த குடியினரான தமிழர் வாழ்வு இயற்கையின் சீற்றத்தால் நிலைதளர்ந்தது. அதனால் குடிபெயர்வுகள் ஏற்பட்டன. குடிபெயர்வு குடியேற்றமாகப் பரந்து தென்னமரிக்கா, கிழக்காசியா ஆகிய இடங்கள் வரையும் பரந்திருந்ததனை வழிபாட்டுச் சான்றுகள் கொண்டு உணரலாம். இலங்கையின் தொல்குடி மக்கள் இயக்கனர், நாகனர் என்பதனை வரலாற்றுப் புலவர் அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சிங்கள மக்களின் மூதாதையர்களாக எண்ணப்படும் தீசன் (சிவன் ஈசன்) மூத்த சிவன் நாகன் போன்ற பெயருடையவர்கள் இலங்கையினை ஆண்டுள்ளனர். விசயன் இலங்கைக்கு வந்தபோது வடபகுதியும் - தென்பகுதியும் வாழ்வுடைய மக்களைக் கொண்டதாகவே இருந்தன.

இயற்கையின் கூறுபாடு தென்புலமிருந்து வடபுலம் ஈர்க்கும் அமைப்பினைக் கொண்டதாகும். எனவே நீரோட்டங்களும் ஈர்ப்பாற்றலை நோக்கியே அமைவுற்றுள்ளன. இத்தகைய ஏதுக்களால் கடலின் பேரலைகள் காலத்திற்குக் காலம் நிலஅழிவினை ஏற்படுத்தக் குமரிநாட்டுப் பெரு நிலப் பரப்பு அழிந்து இன்றைய இலங்கை அதன் கடைக் குறையாயது. இதனை ஆராயின் இதுவே ஓர் தனி நூலாக அமைந்துவிடும். இதனால் இந்நூலுக்கு வேண்டியளவினை மட்டும் கொண்டேன். வாய்ப்பு வரும் போது ஓர் தனி நூலாக அமைக்க முயல்வேன்.

தென்புலமிருந்து வடபுலம் பெயர்ந்த தமிழ்க் குடிகள் மீண்டும் தென்புலம் நோக்கிக் குடிபெயர்ந்த வரலாறே இலங்கையின் வரலாறு. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் இருந்து தான் யாழ்;ப்பாண மாநிலத்தில் அமைந்த ஊர்களின் வரலாற்றினை நோக்கவேண்டும். வரலாற்று நோக்கில் நாம் பார்க்கும்போது குடா நாட்டின் ஊர்களின் வரலாறு 13-ம் நூற்றாண்டிலிருந்தே ஆராயவேண்டி யுள்ளது.

யாழ்ப்பாடி தமிழர்களைத் தொண்டைநாடு - சோழநாடு – பாண்டி நாடு போன்ற இடங்களில் இருந்து அழைத்துவந்து யாழ்ப்பாணத்திற் குடியமர்த்தினார். அப்படி வந்து குடியமர்ந்தவர்களில் திருக்கோவலூரிலிருந்து வந்த பேராயிரவர் என்ற பெருங்குடி வேளாண் பெருமகனும் ஒருவர். இவர் தலைமையிற் காலி;கராயர் கருணாகரர் – பரராசசேகரப்பிள்ளை – செகராசசேகரப்பிள்ளை ஆகியோரும் வந்தனர். இவர்கள் அனைவரும் இன்று இணுவில் என்றழைக்கப்படும் இணையிலியிற் குடியமர்ந்தனர். இன்றும் அவர் பரம்பரையினர் ஊரின் தொன்மையையும் தங்குடியின் தொன்மையையும் விளக்கி நிற்கின்றனர்.

தமிழரசரின் ஆட்சிக் காலத்தில் தலைமைப் பேரூர்களாக விளங்கிய பன்னிரு ஊர்களில் ஒன்றாய் விளங்கிய பெருமை இணையிலியாகிய இணுவிலுக்குண்டு. பேராயிரவனின்பின் காலிங்கராயன்தலைமைப் பொறுப்பேற்று ஒர் சிற்றரசன் போல் ஆட்சி செய்தான். காலிங்கராயனின் மகன் கையிலாயநாதன் ஆளுகையுடன் பேராற்றல் கொண்டு செயற்பட்டதால் ஊர்மக்கள் அன்னாரை வணக்கத்திற்குரியவராகப் போற்றிப் பாராட்டினர். அவர் “இளந்தாரி” என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவர் சித்தர்கள் பரம்பரையை நினைவுறுத்தும் வகையில் தமது வாழ்வினை யமைத்துக்கொண்டார். உடலைநீக்காமலே இயற்கைப்பேறு எய்தியவர் எனப் பராட்டி வணங்கப்படுபவர். இவரின் குடும்பம் வாழ்ந்த வளவும் இவரினால் வெட்டப்பட்ட கிணறும் இன்றும் உள்ளன. பண்டிதர் இ. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று அங்கு வீடு அமைத்து வாழ்வதனையும் காணலாம். இளந்தாரி என்ற பெருமகனின் பெயரால் இணுவில் கிழக்கில் ஓர் ஆலயம் அமைந்துள்ளதனையும் அவர் வழிவந்தோர் அங்கு வழிபாட்டினைச் செய்வதனையும் இன்றுங் காணலாம்.

இணுவில் தெற்கில் பரராசசேகரப்பி;ள்ளை என்ற வேளாண் பெருமகனால் ஓர் வினாயகராலயம் அமைக்கப்பட்டது. அது பரராசசேகரப் பிள்ளையார் கோயில் (மடத்துவாசல்) என அழைக்கப்படுகின்றது. இணுவில் மேற்கில் அவர் உடன்பிறந்த சகோதரரான செகராசசேகரப்பிள்ளையினால் கட்டப்பட்ட வினாயகர் ஆலயம் உண்டு. அது செகராசசேகரப் பிள்ளையார் கோயில் (பருத்தியடைப்பு) என அழைக்கப்படுகின்றது. இணுவில் கிழக்கில் உரும்பராயின் எல்லையிற் கருணாகரர் என்ற வேளாண் பெருமகனாற் கட்டப்பட்ட வினாயகர் ஆலயம் உண்டு. இவ்வாலயம் கருணாகரப் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகின்றது. பரராசசேகரரும், செராசசேகரரும் - கருணாகரரும் ஆட்சியில் அமர்ந்த அரசமரபினர்க்கு அவையில் அமர்ந்து அறிவுரை சொல்லும் தகமை வாய்ந்த பெருமக்களாவர். இவர் பரம்பரையினர் இன்று இணுவிலில் வாழ்கின்றனர். கருணாகரப் பிள்ளையார் கோயில் கருணாகர ஐயரால் தோற்றுவிக்கப்பட்டதென்றும் அவர் பரம்பரையால் கட்டப்பட்டதென்றும் கூறுவதும் எழுதுவதும் வரலாற்றில் சேறு பூசுவதாகும். பூசகர்களாகக் கோயில்களைப் பேணிப் பார்ப்பதற்கு வந்தவர்களும் (பார்ப்பார்கள்) அக்கோயில்களுக்குப் பண்டுக்காவலராக வந்த பூத்தொடுத்து பூசைக்குப் பணிபுரிந்த பண்டாரங்களும் கோயிற் பணிசெய்யும் பணியாளராக இருந்தனரேயன்றிக் கோயில்களைக் கட்டுவித்த வள்ளல்களாக இருந்ததில்லை. இதனை வரலாறு உணர்த்தும்.

கருணாகரப் பிள்ளையார் கோயில் கருணாகரத் தொண்டைமானின் ஆட்சிக்குத் துணையாகவிருந்த கருணாகரர் என்ற வேளாண் பெருமகனாற் கட்டப்பட்டது. பண்டைத் தமிழரில் ஆளுங்கணத்தோராய் இருந்தோர்@ மன்னர் பெயர்களைத் தம் பெயர்முன் இட்டு வழங்கும் உரிமை பெற்றிந்தனர். இதனைக் கல்வெட்டுச் சான்றுகள் உண்மைப்படுத்தும். கருணாகரப் பிள்ளையார் கோயிலில் உள்ள கல்வெட்டுச் சிதைக்கப்பட்ட நிலையிலேயே கல்வெட்டாய்வாளரான கலாநிதி சு. இந்திரபாலா அவர்களால் ஆராயப்பட்டது. அவர் அதனைப்பற்றிக் கூறும்போது கோயிலைக் கட்டியவரின் பெயரோ ஆண்டோ தெரியவில்லை யெனக் குறிப்பிட்டுள்ளார். அதனை மறந்த சிலர் அக்கோயில் கருணாகர ஐயரால் கட்டப்பட்டதென்ற தம் பற்றார்வ உரைக்குக் கருத்தேட முயல்கின்ற விந்தையினையுங் காண்கின்றோம். கருணாகரப் பிள்ளையார் கோயிலைக் கட்டுவித்தவரும் அதற்காக நிலத்தினை அறக்கொடை கொடுத்தவரும் கருணாகரர் என்ற வேளாண் பெருமகனே. இவர் பரம்பரையினர் இன்றும் இணுவிலில் வாழ்கின்றனர். இதனைத் தெளியவேண்டுமாயின் பழைய ஆவணங்களை (தோம்புறுதி) ஆராய வேண்டும். இதனை ஓர் தனி மனிதன் செய்ய இயலாது. வரலாற்று மன்றுகள் இதற்கு முனையில் பல உண்மைகள் வெளிவரும்.

கருணாகரத் தொண்டைமான் இணுவிலில் வாழ்ந்து உரும்பராயிலே கருணாகரப் பிள்ளையார் கோயில் அமைப்பித்தான் என்று முதலியார் இராசநாயகம் மரபுக்கதைகளின் அடிப்படையிலே கூறியுள்ளார் எனக் கலாநிதி க. இந்திரபாலா அவர்கள் கூறியதனை நாம் மறக்கவியலாது. அதனை விடுத்து@ வரலாற்றினைத் திரித்துக்கூற முயல்வது கற்றறிந்தார் செய்கும் அழகான செயலாகக் கொள்ள வியலாது. செய்திகூறும் ஏடுகளிலும், மலர் வெளியீடுகளிலும் வெளியிடுவதனால் அவையனைத்தும் வரலாறாக அமைந்துவிடா என்பதனை யுணர வேண்டும்.

கல்வெட்டுகள் உடைக்கப்படுவதும் - அவற்றினை மறைப்பதும் தமிழ் விரோதிகள் செய்யும் செயலாக எண்ண வேண்டியிருக்க, அதனைத் தமிழர்களே குறுகிய பற்றார்வத்தால் சுயநலநோக்கால் செய்கின்ற கொடுமையினைக் காண்கின்றோம். அந்தோ தமிழினமே உன்நிலையிதுவோ என்றுஅலற வேண்டியுள்ளது. பாரதி கூறியது போல் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என உள்ளம் வெதும்பவேண்டியுள்ளது. ஊர் வரலாறுகள். கோயில் வரலாறுகள் உண்மைநோக்குடன் ஆராயப்பட்டால் எமது இனத்தின் வரலாற்றில் பல உண்மைகளைக் காணக்கூடியதாக விருக்கும்.

இணையிலி எனப் பெயர்பெற்ற இணுவில் சைவத்தின் உறைவிடம் என அயலூரவர்கள் கூறுவதனைக் கேட்டுள்ளோம். அதனை யான் நினைவுபடுத்தலாமேயன்றி என் கூற்றாகக் கொண்டால் என் குஞ்சானபடியால் பொன்குஞ்சாகும் என்பதாகிவிடும். இவ்வூரில் பேராலயங்களும் சிற்றாலயங்களும் அழகுற அமைந்துள்ளன. மக்கள் வாழ்வினுக்கு அருட்பொலிவினை ஊட்டுகின்றன. சித்தர்கள் - ஞானிகள் - இன்கலைவல்ல புலவர்கள் சூழ அருட்பொலிவும் கலைப் பொழிவுங் கொண்ட வாழ்வுபெற்ற இணுவில் பேராயிரவன் ஆண்ட பேரூராய் விளங்கியது. குடாநாட்டின் உள்ளமாகச் செம்மைபூண்ட மண்வளத்தினையும் சுண்ணச் சத்துக்கொண்ட நீர்வளத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் துணை உணவுப்பொருட் செய்கைக்குச் சிறந்த இடமாக அமைந்துள்ளது.

மொழி இனப் பற்றும் அறநெறிப் பற்றும் இவ்வூரவரிடம் இருந்ததனால் வயிற்றுக் கஞ்சிக்காக மதம் மாறி – மதங் கொண்ட நிலையினைக் காணவியலாது. மொழி விடுதலை - இன விடுதலை யென்பவற்றிற்காகச் செய்த முதல் முழக்கம் இணுவிலிலிருந்தே கேட்டது என்று பெருமைப்படும் உரிமையும் இணுவிலுக்குண்டு. இன்றைய மாறுபட்ட உறவு நிலைகளால் அந்நிலையிற் சிறிது தளர்ச்சி யேற்பட்டதனையுங் காணலாம். இந்நிலையிலிருந்து எழுச்சிபெறும் ஆற்றல் இம்மண்ணுக்குண்டு. காலம் அதனை உணர்த்தியேயாகும்.

இணுவையூர் யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் பெருந்தெருவில்@ யாழ்நகரிலிருந்து நான்காவது கல் எல்லையில் தொடங்கி மருதனார்மடம் சந்திவரை ‘பெரிய மதவடி’ என ஊர்மக்களால் அழைக்கப்படும் இடம்வரை பரந்து பெருவீதிக்குக் கிழக்கே இராமநாதன் கல்லூரி உள்ளடங்க ஒன்றரைக்கல் தொலைவுவரை கிழக்கு நோக்கிச் சென்று வடகிழக்கு எல்லையாகக் கல்லாக் கட்டுவன் என்ற ஊர்ப்பகுதியையும் கிழக்கெல்லையாக உரும்பராயையுங் கொண்டு தென்கிழக்கெல்லையாகக் கருணாகரப் பிள்ளையார் கோயில் மூலவர் இருக்கும் இடம் உட்பட மேற்கு வீதியையும் உள்ளடக்கிக் காரைக்கால் வரையும் வளைவுடையதாக வந்து காரைக்காலின் வடக்குவீதி யுட்பட அமைவுற்றுத் தெற்கெல்லையாகக் கோண்டாவிலையும் - தென்மேற்கு எல்லையாகத் தாவடியையும் மேற்கெல்லையாகச் சுதுமலையையும் - வடமேற்கு எல்லையாக உடுவிலையும் - வடக்கெல்லையாக சுண்ணாகத்தினையுங் கொண்டு அமைவுபெற்றுள்ளது. இணுவையூரின் நிலப்பரப்பு ஏறக்குறைய 650 ஏக்கர் கொண்டதாகும். இவ்வூரின் அமைப்பினை ஓங்கார ஒலியினை யுணர்த்திநிற்கும். “ஓ” என்ற வரிவடிவிற்கும் ஒப்பிட்டு நோக்கினால் ஓரளவு புரியும் என எண்ணுகின்றேன்.

இணுவைய+ர் அப்பர் 2
(சமயமும் வாழ்வும்)

குலநலமும் - குடிநலமும் வாய்க்கப்பெற்ற தொல்குடி வேளாண் மரபில் இணுவையூர் அப்பர் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றினார். இவரைப் பெரிய சன்னியாசிரியார் என்று ஊர்மக்கள் அழைப்பர் 1860ஆம் ஆண்டளவில் கந்தர் – தெய்வானை என்ற பெருமக்கட்குத் தவக் கொழுந்தாய்க் கருவிலே திருவுடையவராகப் பிறந்தார்.

காலிங்கராயன் மகன் கைலாயநாதன் என்ற இளந்தாரி இணுவிலின் சமய வாழ்விற்கு வித்திட்ட சித்தர் பரம்பரையினராவர். இச் சித்தர் பரம்பரை இணுவிலில் பெரிய சன்னியாசியார் மூலம் விளக்கமுறுகின்றது. பெரிய சன்னியாசியாரின் பிறப்பும் வாழ்வும் திருவுடன் இயைபு பெற்றது. அருட்செல்வம் நிறைந்தது. வேலாயுதர் – காசிநாதர் ஆகிய இரு ஆண்களும் - ஆனந்தியார் என்ற ஒரு பெண்ணும் இவர் சகோதரராவர். இவர் குடும்பம் உழுதுண்டு வாழும் வாழ்வினைக் கொண்டது. குடும்பச் சொத்தாகிய ஆநிரைகளை மேற்பார்வை செய்து பேணுவதே அடிகளாரின் பணியாக இருந்தது. அடிகட்குப் பாடசாலைக் கல்விபெறும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆயின் அருள்ஞான வள்ளலான இறைவனின் திருநோக்குக் குட்பட்டதனால் அவர் அறிவு மெய்ப் பொருள் உணர்வில் திளைத்தது. அதனால் அன்னாரின் பெருமையினைப் பொதுமக்களும் உணரத் தொடங்கினர்.

அருட்சக்தி
திருவருளால் உணவும் நீரும் கிடைத்தல்

இணுவிலின் கிழக்காக அமைந்துள்ள காரைக்கால் வெளியிலே சுப்பிரமணியர் மாடுகளை மேயவிடுவது வழக்கம். ஒருநாள் காலை உணவின்றியே மாடுகளுடன் காரைக்கால் சென்றார். அவற்றினை “மேயவிட்டு” ஓர் மரநிழலில் தங்கினார். வெய்யில் வருத்தமும் - பசி வருத்தமும் - நீர் வேட்கையும் அடிகளாரை வருத்தின. அதனாற் களைப்புற்ற அடிகள் மரநிழலிலே ஆழ்ந்து உறங்கத் தொடங்கினார். தாயாரால் அனுப்பப்படும் உணவும் வரவில்லை. இந்நேரத்திற்றான் அருள்வடிவினளான அன்னை பராசக்தி@ தாயார் வடிவுடன் வந்து உண்ண உணவினைக் கொடுத்தார். நீர் வேண்டுமென்று கேட்ட பொழுது அயலிலுள்ள கற்குவியலினுள்ளே நீருண்டென உலக மாதாவாகிய அன்னை கூற அவ்வண்ணமே சென்று நீர்பெற்று உணவருந்தினார். உணவுண்டபின் உணவுக் கலங்களைக் கொடுப்பதற்;குத் தாயாரைத் தேடியபொழுது அவரைக் காணாமல் திகைத்தார். மாலை வீடு திரும்பிய அடிகளார் தாயார் தம்மிடம் சொல்லாது வந்ததேன் என்று வினவிய பொழுது தாம் அன்று வரவில்லையென்று அச்செயல் அகிலாண்டநாயகியாகிய அன்னையின் அருள்விளையாட்டென்று கூறி இன்புற்றார். இவர்கள் தம் குல தெய்வமாக அன்னை பராசக்தியைத் தம்மில்லிலிருந்தே வழிபாடியற்றி வந்தனர். இவ்வழிபாடு பண்டு தொட்டு அன்னாரின் குடும்பத்தவரால் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. இன்று அவர் பரம்பரையினர் இணுவில் மஞ்சத்தடிக்கு வடபால் அமைந்துள்ள அரசோலைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் - அதன் வடபால் உள்ள வளவில் அவ்வழிபாட்டினை நிகழ்த்துகின்றனர்.

தமிழர் வாழ்வில் அருள் நிகழ்ச்சிகள் பண்டு தொட்டே இடம்பெற்று வந்ததனைச் சமய குரவர்கள் - சித்தர்கள் - ஞானிகள் ஆகியோரின் வாழ்வினைக் கொண்டு நாம் தெரிந்து கொள்ளலாம். இறைவனருளால் நீரும் - உணவும் பெற்ற வரலாறு தமிழில் நிறையவுண்டு. சண்டேசுரன் - திருமூலர் – ஆனாயனார் ஆகியோர் ஆநிரைகளை மேய்த்து அருள்பெற்ற பரம்பரையினர். அவ்;வருட் பரம்பரையில் வந்தவரே இணுவையூர் பெரிய சன்னியாசியார்.

அருள் வெளிப்பாடு.

ஒருநாள் தமது தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சல் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது இடையில் இறைப்பை நிறுத்தி மழை பெய்யுமெனக் கூறி அவ்விடத்தினைவிட்டகன்றார். இந்தப் பைத்தியத்தினையேன் “இறைப்புக்குச் சேர்த்தோம் எனக்கூறி இறைப்பை வேறொருவரின் உதவியுடன் தொடர்ந்து செய்தனர். அவ்வேளையில் நல்ல மழை பெய்தது. அதனைக்கண்டு கூட்டிறைப்பாளர் வியப்பெய்தினர். இன்னொருநாள் பின்னிரவு நேரம் தோட்டத்திற்கு நீர் இறைக்க இவரிடம் சென்றனர். (“துலா” இறைப்பும் பின்னிரவிலேயே ஆரம்பமாவது அன்றைய வழக்கம்) இப்போது போக வேண்டாம் விடிந்தபின் இறைக்கலாமெனக் கூறிவிட்டார். காலையிற் சென்றபோது கிணற்றின் கட்டில் நாகம் ஒன்று இருப்பதனைக் கண்டனர். அதனை அடிப்பதில்லையென்று கூறி நீர் இறைக்கும் “பட்டை”யில் ஏறச்செய்து வெளியே செல்லவிட்டார். அன்னார் பின் நிகழும் நிகழ்ச்சிகளை முன்கூறும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார். மக்களின் உடற் பிணிகளையும் தீர்க்கும் அருட் குரவராகத் திகழ்ந்தார். அடிகளாரின் கூற்றுக்கள் மந்திரங்களாகப் போற்றப்பட்டன. மறை மொழிகளாகப் பாராட்டப்பட்டன. பெரிய சன்னியாசியாரிடம் தவப் பெருமை மேலோங்கியிருந்தது. இவரின் வாழ்வு சித்தர்களை நினைவூட்டும் பண்பினைக் கொண்டது. தமது அருள் நோக்கத்தால் தீரா வினைகளைத் தீர்த்தார். அன்றய பிரித்தானியர் ஆட்சியில் - ஆங்கில நீதிபதிகளாலும் நன்கு மதிக்கப் பெற்றார்.

இவரின் திருத்தொண்டர்களில் ஒருவன் சன்னியாசி கந்தர். இவருக்கு ஐந்து பெண்கள் அடுத்துப் பிறந்தனர். ஆறாவது கற்பம் ஏற்பட்டபொழுது இம்முறையும் பெண்பிறந்தால் என்ன செய்வதென ஏக்குற்று அவர் மனைவியார் அகால வேளையில் சாக்காட்டினை நோக்கி விரைந்தார். கற்பமுற்றோர் அகால வேளையிற் செல்வதில்லை. தீய காற்றுக்களாலும் - ஆவிகளாலும் தீங்கு ஏற்படும் என்ற எண்ணம் இந்துக்களின் உள்ளத்திற் பண்டுதொட்டு இருந்து வருகின்றது. அவ்வெண்ணத்தின் வெளியீடே – சன்னியாசி கந்தர் துணைவியாரையும் உந்தியது. ஆயின் அவரை அவர் உறவினர் தேடிக் கண்டுபிடித்துப் பெரிய சன்னியாசியார் அருள்நோக்கால் அன்னாரின் அச்சத்தை நீக்கி இம்முறை ஆண்குழந்தையே பிறக்குமென அருளினார். பிள்ளைக்குப் பெயராக வடிவேலன் என்ற திருப்பொலியும் பெயரைச் சூட்டும்படி பணித்தார். அவ்வடிவேலன் கந்தர் மடம் வேதாந்த பரம்பரையைச் சேர்ந்த மகாவேத சுவாமிகளின் மாணவரானார். இன்று இணுவையூரின் திருஞானசம்பந்தராகத் துறவி வடிவேலராக உருத்திரபுரம் மகாதேவ ஆச்சிரமத் தலைவராகப் பணிபுரிகின்றார். இவர் ஆளுமைப் பொலிவுகொண்டவர். உள்ளத்தினை யீர்க்கும் அருட்பொலிவும் - தத்துவ ஞான அறிவும் ஒருங்கமையப் பெற்றவர். அனுபூதிச் செல்வராக நம்மிடையே வாழ்பவர். வேதாந்த சித்தாந்த அறிவு நிறைந்தவர். இவரிடம் வேதாந்தமும் சித்தாந்தமும் கற்று தமிழ் உணர்வு பெற்றவர்கள் அநேகர். இவரின் பணியினால் இணுவிலின் இளம் பரம்பரையினரிற் பலர் புகழ்கொண்ட வாழ்வு பெற்றனர். இணுவில் மண்ணுக்கு அறிவுநீர் ஊற்றியன்புப் பயிர் நாட்டியவர். எம்மத்தியில் தக்காராயிருந்து வருபவர். அருள் எச்சம் ஈன்று புறந்தரும் வாழ்வினை மேற்கொண்டு வாழ்பவர். இத்தகைய பெருமகனாருடன் பல அடியவர்களும் ஞானிகளும் உறவு பூண்டிருந்தனர். அவர்களுள் நயினாதீவுச் சுவாமிகள் என வழங்கும் முத்துக்குமாரசுவாமிகளும் ஒருவர் பக்தியும் ஞானமுங் கலந்த பெருமைபெறும் இணுவைப் பரமானந்தவல்லி ஆலயக் குடிலில் தவயோகஞ் செய்தவர். அவரின் தொடர்பும் இணுவைச் சமய வாழ்வுக்குப் புத்துயிர் அளித்த தெனலாம்.

பெரிய சன்னியாசியாரின் தொண்டர்களாகக் கோண்டாவிலில் தாவடி போன்ற அயலூர்களில் வாழ்ந்த பெருமக்களும் தொடர்பு கொண்டு வாழ்ந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர் தேவாரச் சின்னப்பர். இவர் பண்ணிசையுடன் தேவாரங்களை ஓதியும் - தம்மையண்டி வந்தோர்க்கு பண்ணிசையைப் பயிற்றியும் வந்ததால் இச்சிறப்புப் பெயரினைப் பெற்றார். இவரை விசர்ச் சின்னப்பர் எனவும் அழைத்தனர். சின்னப்பர் அருள் விசரராக விருந்ததே இதற்குரிய ஏதுவாக இருந்தது. இவ்வடியவர் பூமரங்கள் வில்வமரங்களைக் கண்டால் அதன்மேல் ஏறிப் பூக்களையும் இலைகளையும் ஆய்ந்து சொரிவார்.

ஆடுமாடும் அம்பலத்திலாடு மாடும்
ஓமென்று நின்று
ஆடுமாடும் அம்பலத்தனாக நின்று
ஆடுமாடும் அது
ஓடுகின்ற போதினிலே ஆடுமாடும்
உள்வெளியிற் போடப்போட
ஆடுமாடும் அம்பலத்தனாக நின்று
போடப்போட உண்டு நின்று
ஆடுமாடும் என்னில் ஆடுமாடும்
நானும் ஆடுமாடும்.
எனப் பாடுவார் ஓ.

அம்பலவாணர் சுவாமிகள் இவரின் உறவினர். இவர் புராண இதிகாசங்கட்குப் பயன் சொல்லுவதில் வல்லவர். சமயச் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் சிறந்தவர். இவரின் மற்றொரு உறவினர் பொன்னம்பலஞ் சுவாமியார் இறைவன் கோவனாண்டிவடிவுடன் தோன்றிச் சுவாமி அத்வைதானந்தா அவர்களைப் பொன்னப்ப சுவாமிகளிடம் ஒப்படைத்து மறைந்தார். பொன்னப்ப சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள முருகன் தலங்களை வணங்கும்படி வழிகாட்டிப் புகைவண்டிச் சீட்டு எடுத்து யாழ்ப்பாணத்திற்கு வடிவேற் சுவாமிகளிடம் அனுப்பி வைத்தார். (1936ஆம் ஆண்டு) இத்தகைய திருக்கூட்டத் தொடர்புக்கு வித்திட்ட தேவாரச் சின்னப்பரை வைது அடித்தான் ஒரு குடிவெறியன். கந்தசாமி கோவிலை அடைந்த சின்னப்பர் “அம்பலவாணா அவன் என்னை அடிக்கவில்லை. உன்னையே அடித்தான்” என்றார். குடிவெறியன் வயிறும் - கையும் வீங்கி இறந்தான் என்பர். பெரிய சன்னியாசியாரின் வாழ்வு பரந்துபட்டது. பலதுறைகளிலும் அவரின் அருளாட்சி நடைபெற்றது. கோயிற் றிருப்பணி - இலவச வைத்தியப்பணி – வினை தீர்க்கும் அருட்பணி போன்றவற்றுடன் இயல் - இசை நாடகங்களான முத்தமிழையும் வளர்த்தார். நாட்டுக் கூத்துக் காவியப் படிப்பு என்பவற்றின் மூலம் முத்தமிழுக்கும் இணுவையில் புத்துயிரளித்தார். அன்னார் வாழ்ந்த மஞ்சத்தடி அருணகிரிநாதர் கந்தசாமி கோயில் - ஒருகாலத்தில் புராணங்களில் கூறப்பட்ட கைலயங்கிரி போன்றிருந்த தென்பர். பரமசிவனைச் சேவிக்கும் நந்தியும் தும்புரு நாரதரும் மற்றுங் கலைப்பணி புரியும் தேவகணங்களும் போன்ற@ அருட்குரவர் இணுவையூர் அப்பர் பெரிய சன்னியாசியாரை சூழ்ந்து, அருட்பணிபுரியும் தொண்டர்களும் கலைஞர்களும் இருப்பர். இராம நாடகம் - கோவலன் கதை – வள்ளி திருமணம் - அரிச்சந்திரா – மயிலிராவணன் கதை – சாவித்திரி சத்தியவான் கதை போன்ற நாட்டுக் கூத்துக்களை இயக்கியதன் மூலமும்@ பெரிய புராணம் - கந்தப் புராணம் - திருவிளையாடற் புராணம் என்பவற்றை ஓதுவித்ததின் மூலமும் மக்கள் வாழ்விற் புத்துணர்வினை யூட்டினார். வாழும் வகையினைத் தானே வாழ்ந்து காட்டினார். அடிகளாரின் காலத்திலேயே யின்று பலராலும் போற்றப்படும் கூட்டுவழிபாட்டியக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இன்று கூட்டுப்பிரார்த்தனை யென்று பல விளம்பரங்கட்கி;டையே நிகழ்த்தப்படும் வழிபாட்டினைத் தன் தவக்குடியிலிருந்து அமைதியுடன் நடத்தினார். இவர் தவஞ்செய்த தவக்குடிலுக்கு மேற்கில் தமது நேரான மேற்பார்வையிலே காட்டுக் கம்பு கொண்டு குடில் ஒன்று அமைப்பித்தார். அக் குடிலின் நடுவில் ஆறு அடி ஆழத்தில் நான்கு சதுரஅடி கொண்ட கிடங்கொன்றினை அகழ்வித்தார். அதனைப்பற்றி யடிகளாரின் மெய்யன்பர் ஒருவர் வினவிய பொழுது ஒர் மனிதன் இருக்கப் போதுமானதென நவின்றார்.

நவில்தொறும் நயந்தாரும் அன்னார் வாழ்வு தவவாழ்வாகவே முகிழ்ந்தது. அம் முகிழ்வு மலர்ந்து மணம் பரப்பியபோது@ இணுவை அருள் மணக்கும் தவக்குடிலாக விளங்கியது. யோகியர் தூங்காமற் தூங்கிச் சுகம் பெறுவர். இச்சுகம் பெற்ற யோக நித்திரை அடிகளாரின் வாழ்வோடு இணைந்திருந்தது. இவர் முன்னிலையில் அருட் பாக்களை – பக்திப் பாடல்களை இசைப்போர் அவர் நித்திரையென வெண்ணிச் சோர்வடைந்து நிறுத்தும்பொழுது ஓம் என்னும் ஓங்காரத் தொனி மூலம் அவர்களை இயக்குவார். அடிகளார் உணவிலும் நாவுக்கு அடிமையாகவில்லை. ஒரு நேர உணவாக நீர்கலந்த உணவுவகைகளை யுட்கொள்வார். அன்னார் பசித்திருந்தார் – விழித்திருந்தார் – தனித்திருந்தார். இவர் தவயோகஞ் செய்த இடங்கள்@ காரைக்காற் சுடலை – மஞ்சத்தடி கந்தசுவாமி கோயில் - அம்பலவாணக் கந்தசுவாமி கோயில் என்பனவாகும். இவர் 1917 ஆம் ஆண்டு திருவோண நாளில் பல்வகை உணவுப் பண்டங்களை யாக்குவித்துப் படைத்தார். அதனை யுண்பதற்கு எவருக்கும் உரித்தளிக்கவில்லை. அன்றே யோகநிலையில் இருந்தபடி இறைநிலையடைந்தார். இறைநிலை எய்தியபொழுது அன்னருக்கு 57ஆம் ஆண்டு நிறைவுபெற்றிருந்தது. அவ்விடம் இன்று மஞ்சத்தடிக் கந்தசுவாமி கோயிலாக வுருப்பெற்றுள்ளது. அடிகளாரின் சமாதி நிலையினைக்காண மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து கூடினர்.

சமாதிக் கட்டிடங்கட்டும் பணியினை இணுவை இசை வேளாளர் பாரம்பரையில் வந்த தவில் வித்தகர் திரு. விசுவலிங்கம் அவர்கள் செய்தார். இவர் பெரிய சன்னியாசியாரிடம் கொண்ட அருளுறவே இசையுலகில் அவர் பரம்பரை புகழ்பூக்க ஏதுவாக அமைந்ததெனலாம். கருணாகரத் தொண்டமான் அவையில் ஆளுங்கணத்தராய் வாழ்ந்த பரம்பரையில் வந்த வயிரவராயர் (வயிரவித் தாத்தா) முயற்சியால் அடிகளாரின் நிழற்படமும் எடுக்கப்பட்டது.

அப்பர் பெரிய சன்னியாசியாராற் றொடங்கப்பட்ட சமயப் பணியும் - கோயிற்பணியும் பின்வந்தவர்களாற் போற்றிப் பாதுகாக்கப்பட்டது. கூட்டு வழிபாட்டியக்கத்தினைச் சோதிடப் பேராசானும் சைவவித்தாந்தச் செம்மலுமான இணுவை நாவுக்கரசர் சேதுலிங்கச் சட்டம்பியார் செய்து வந்தார். தவத்திரு வடிவேற் சுவாமிகள் சமயச் சொற்பொழிவுகளை இசையமைதியுடன் செய்து வந்தார். இவ்வகைக் காட்சிகளைக் கண்டு இன்புற்றவர்கள் இன்றும் இணுவிலில் வாழ்கின்றனர். இப்பணியினை யின்றும் தொடர்ந்து ஆற்றிவருபவர்@ சித்தாந்தப் பரம்பரையில் தன்னை யிணைத்துக்கொண்ட தியாகர் சுவாமிகளாவர். உண்மையில் ஈழநாட்டில் கூட்டு வழிபாட்டியக்கத்தினைத் தோற்றுவித்து வளர்த்தவர்கள் மேற்குறித்த பெரியார்களே. இப் பெரியார்களின் தொடர்பாற்றான் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்டு – உரும்பராயில் வாழ்வினை யமைத்துக் கொண்ட – காலஞ்சென்ற பெரியார் திருவிளங்கம் கூட்டு வழிபாட்டியக்தக்தினை இலங்கை வானொலிமூலம் பரப்பிப் புகழ்கொண்டார். இப்புகழுக்கு அடிநாதமாக அமைந்தது இணுவைப் பெரியார்களின் தொடர்பே. இவ்வுண்மையினை அவருடன் நெருங்கிய உறவு கொண்டவர்களை வினவித் தெளிந்துகொள்ளலாம். இத்தகைய உண்மைகளை இந்நூலில் வெளியிட இறைவன் எனக்களித்த வாய்ப்புக்கு என்னால் யாதுசெய்யவுள்ளது.

இணுவையூர் அப்பரான பெரிய சன்னியாசியார் செய்த பணியில் மணிமந்திர வைத்தியத் தினையும் - அருளாட்சியினையும் அவரது சகோதரர் வேலாயுதரும் - வேலாயுதர் மகன் ஆறுமுகமும் செய்துவந்தனர். அப்பணியினை அவர்கள் பரம்பரைத் தொடர்பு கொண்ட திரு. அம்பலவாணர் காரைக்காலில் இருந்து செய்து வருகின்றார். பெரிய சன்னியாசியாரின் வாழ்வே இணுவையின் வாழ்வு என எண்ணும் வண்ணம் அன்னாரின் உயிராற்றல் மிக்க வீறு கொண்டு விளங்கியது. அதனாற் பலர் அவர்பால் ஈர்க்கப் பட்டனர். அவருள் என் தாய்வழிப் பாட்டனாரான முருகர் – கந்தர் அலுப்பர் குறிப்பிடத்தக்கவர். இவர் வேளாண்குடிவந்த பெருமகன் கடையிற்சுவாமி – பொன்னப் சுவாமி – யோகர் சுவாமி ஆகிய பெருமக்களுடன் ஆத்மீக உறவுபூண்டவர். இணுவிலின் வடக்கே அமைந்துள்ள பூவோடைச் சுடலை இவரினால் உருவாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதற்காகப் பெருமை மிகு பொன். இராமநாதன் அவர்கள் அரசின் சார்பில் நன்கொடைப்பணம் பெற்றுக்கொடுக்க முன்வந்தபொழுது அதனை வேண்டாமென மறுத்துரைத்துத் தங் குடும்பச் செம்மையினையும் பேணிக்கொண்டார். பூவோடைச் சுடலை நிலமும் - அதனைச் சூழவமைந்த நிலப்பிரப்பில் ஒரு பகுதியும் அன்னாரின் மூதாதையர் சொத்தாகும். அதற்குரிய ஆவணங்களும் உண்டு. அவர் பரம்பரையில் வந்தோர் அவற்றிற்கு உரித்துடையவராக விருந்தும் அதனைப் பாராட்டுவதில்லை. இதனைப் பயன்படுத்திப் பொய்ச்சான்றபகரும் ஆவணங்களையும் எல்லைகளையும் உருவாக்கித் தமதாக்கிக் கொண்ட விந்தையினையுங் காண்கின்றோம்.

மயிலர் வயிரவநாதர் என்ற வேளாண் பெருமகனும் அடிகளாருடன் தொடர்புபூண்ட திருத் தொண்டர்களில் ஒருவர். அன்னார் எறிபத்தன் போன்றவர். இத்தகைய பல தொண்டர்கள் இணுவையின் அருள் வாழ்வுக்கு ஆக்கமனித்தனர். “அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கு மடியேன் எனச் சுந்தரர் பாடியது போன்று பெரிய சன்னியாசியார் காலத்தில் வாழ்ந்த – பட்டியல் வகுப்பு முறையில் இடம்பெறாத இணுவையூர்த் தொண்டர்கள் அனைவர்க்கும் என் வணக்கம் என்று கூறியமைவதே எனக்கியன்றது.

இணுவையின் வாழ்வுக்குப் பெரிய சன்னியாசியார்போல் பணி செய்தவர்கள் முன்னும் வந்ததில்லை – பின்னும் வந்ததில்லை. அடிகளார் வாழ்வு தவத்தில் மகிழ்ந்தது. அம் முகிழ்வு மணம் பரப்பியபோது அம் மனத்தால் ஈர்க்கப் பட்டுவந்த சான்றோரும் கலைஞர்களும் இணுவை மண்ணைத் திருத்தலமாகக் கொண்டனர். அதனாற்; சைவமுந் தமிழும் இணுவையில் மலர்ச்சி பெற்றன.

அடிகளால் இணுவிற் கந்தசுவாமி கோயில் பெரும் புகழுஞ் சிறப்பும் பெற்றது. ஈழத்திரு நாட்டில் உள்ள முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக இணுவிற் கந்தசுவாமி கோயில் இடம் பெற்றுள்ளது. மாவிட்டபுரம் - செல்வச்சன்னிதி – கந்தவனக்கடவை - இணுவில் - நல்லூர் – கதிர்காமம் என்பன ஈழநாட்டின் ஆறுபடை வீடுகளாகும். இக் கருத்தினை முதலியார் குல சபாநாதன் தமது கட்டுரைமூலம் வலியுறுத்தியுள்ளார். இணுவிற் கந்தசுவாமி கோயிலுக்குப்பலர் அற நன்கொடை கொடுத்துள்ளனர். இறைவனின் வண்ணத் திருமேனிகளைச் சிற்பச் சிறப்புடன் அமைத்து கோயிலில் இடம்பெறச் செய்தனர். புதிய வாகனங்களும் ஏழு கட்டுத் தேர்களும் உருவாக்கப்பட்டன. கோயில் சிற்ப முறைக்கமைய உருவாக்கப் பட்டது. அதற்குரிய பொருட்கள் முட்டின்றிக் கிடைக்க வழிவகுக்கப்பட்டது. அடிகளாரின் காலத்தில்@ மக்கள் திருவருள் வழிபாட்டிற்காக வந்து கூடினர். தேர்த் திருவிழாவின் போது கந்தசுவாமி கோயிலிருந்து இணுவில் காரைக்;காற் சிவன் கோயிலுக்குத் திருவுலாக்கள் நடைபெற்றன. திருநீராடற் காலங்களில் (தீர்த்தம்) மூன்று தேர்களில் திருவுருவங்களை வைத்துக் காரைக்காற் சிவன்கோயிலுக்கு வீதியுலாச் செய்துவந்தனர். அக்காலத்தில் இணுவையே திருக்கோயிலாக மாறிவிடும் என எமது முதியவர் பலர் நவின்றதைக் கேட்டுள்ளேன். திருவுலா நடைபெறுவதற்காகச் சன்னாசியாரால் கந்தசுவாமி கோயிலுக்கும் - காரைக்காற் சிவன் கோயிலுக்கும் மிடையே முப்பத்தாறடிப் பெருவீதி திறக்கப்பட்டது. இவ்வீதி ஒன்றரைக்கல் தொலைவுடையதாகும். விழாக் காலங்களில் இருப்புப் பாதையினைக் கடந்து செல்வதற்குரிய வசதியினை யன்றைய பிரித்தானிய அரசாங்கஞ் செய்து கொடுத்தது.

கந்தசுவாமி கோயிலின் வடபால் மிகப் பெருமையும் கொண்ட ஞான வையிரவர் கோயிலும் திருநீர்க் கிணறும் அமைத்துள்ளன. இக்கோயில் அடிகளாரின் தாய்வழி மரபினர்க் குரியதாக விருந்ததனால் தாய்வழி மரபினர்க் குரியதாக விருந்ததனால் அதி;ல் அன்னார் மிக்க ஈடுபாடு கொண்டார். இக் கோயில் கொண்ட இறைவன் அடிகளாரின் குலதெய்வமாவர். அடிகளின் தாய்மாமனாரான மணியகாரன் ஆறுமுகமே கோயில் முகாமையாளராக விருந்தார். குழந்தைவேலாயதரி;ன் மகன்@ அருணாசலம் அருணாசலத்தின் மகன்@ சுப்பிரமணியம். இவரின் மகனே ஆறுமுகம். அருணாசலத்தின் பெரு முயற்சியினாலேயே இக்கோயில் தோற்று விக்கப்பட்டது. இவர் தமது தந்தையார் குழந்தையர் வேலாயுதர் பேரிலும் கந்தன் கண்ணிபேரிலும் உள்ள நொச்சியொல்லைமிதியன் என்ற தனது காணியிற் கோயிலைக் கட்டினார். இக்கோயிலைக் காத்து வந்தவர்@ இவர் பரம்பரையினரே. இவர்கள் கோயிலுக்கு அறநன்கொடைகள் கொடுத்தும் - கோயிலின் பேரால் அறநன்கொடைகளை யேற்றும் கோயிலை அருளாட்சி செய்து வந்தனர். இக் கோயிலின் வரலாற்றில் - அருளாட்சியில் இடையிடையே கருமேகங்கள் சூழ்ந்ததுண்டு, ஆயின் அவை நிலைத்ததில்லை.

மணியகாரன் ஆறுமுகத்தார் தங்காலத்திற் றொடங்கப்பட்ட கோயிற்றிருப்பணி வேலைகள் முடிவுறாதது கண்டு மிக்க கவலை கொண்டார். முருகன் கனவிற்றோன்றிக் கோமேசு முதலியாரெனப் பெயர் வழங்கப்பட்ட ஆறுமுக முதலியாரிடஞ் சென்றால் யாவும் நிறைவுபெறுமெனக் கூறினார். அவ்வண்ணமே மணியகாரர் ஆறுமுகம் அவரிடஞ் சென்று நிகழ்ந்தவற்றைக் கூறித் தமது வேண்டுகோளையும் விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட முதலியாரும் அவர் உடன் பிறந்த சகோதரரும் திருப்பணி வேலைகளைச் செய்து நிறைவு கண்டனர்.

குறித்த மணியகாரன் திரு. சு. ஆறுமுகம் அவர்கள் தமக்குப் பின் தமது மூத்த மகளின் கணவராகிய திரு. இ. அம்பலவாணரை றஸ்தியாக நியமித்து 31 – 10 – 1876இல் றஸ்தி நியமன உறுதி எழுதிக் கொடுத்தார். அம்பலவாணரும் தரும நன்கொடை கொடுத்தும் ஏற்றும் இருக்கிறார். அவர் தமது மூத்த மகனாகிய அ. கதிரித்தம்பி அவர்களை றஸ்தியாக நியமித்து1 – 4 – 1896 இல் றஸ்தி உறுதி எழுதிக் கொடுத்தார். திரு. அ கதிரித்தம்பி அவர்கள் தனது சகோதரர் அ. சுப்பிரமணியம் அவர்களை றஸ்தியாக நியமித்து 10-6-1912 இல் றஸ்தி உறுதி எழுதிக் கொடுத்தார். குறித்த அ. சுப்பிரமணியம் பூசகர்களுக்குச் சாதகமாகத் தீர்ந்தது. அ. கதிரித்தம்பியின் மகனே சந்ததி உரிமையாளராய் தற்போது தெரிவுசெய்யப்பெற்று கடமைபுரிந்து வரும் திரு. க. அம்பலவாணர் அவர்கள் ஆகும். திரு. அ. சுப்பிரமணியத்தின் மகனே தற்போது றஸ்தி தலைவராக இருந்து திருப்பணி வேலைகளை கருமமே கண்ணாய் நிறைவேறச் செய்துவரும் திரு. சு. இராமலிங்கம் அவர்களாகும். முன்பு கோயிலைக்கட்டி வைத்தவர்களுடைய சந்ததியில் வந்தவர்களே திரும்பவும் அக்கோயிலை முன்னின்று உருவாக்க வேண்டும் என்பது இறைவனின் திருவுளக் கருத்துப் போலும். தற்போதைய றஸ்தி சபையின் நிர்வாகத்தில் ஆலயம் சகல சிறப்புக்களுடனும் மேலோங்கி வருவது குறிப்பிடத் தக்கது.

மேலே குறித்த முதலியார் கோயிலைக் கட்டுவித்தாரென்ற இச்செய்தியினை மூதாதையார் கூறக்கேட்டுள்ளேன். இக்கோயிலுக்குச் சங்கு வேலி என்ற ஊரகத் தமைந்த வேலில் வயல், ஆறு பரப்பும். நாரைக்கை வயல் நான்கு பரப்பும் திரு. ஆறுமுகமுதலியார் அவர்களால் அற நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது. இவர் பரம்பரையினர் இன்றும் தாவடியில் வாழ்கின்றனர். தேனா நெல்லை – பாப்பா தோட்டம் என்ற ஆவணப் பெயர் கொண்ட நிலத்தில் இருபத்தொரு பரப்பு வட்டுக்கோட்டை வினாயகர் வாரியார் பரம்பரையில் வந்தவர்களால் கோயிலுக்கு அறநன்கொடையாக விடப்பட்டது. இவ்வினாயகர் வாரியார் பரம்பரையில் வந்தவர்களே, உடையார் வேலாயுதர் – காசிநாதர் – உடையார் சிதம்பரநாதர் பரம்பரையினர். இப்பரம்பரம்பரையின் ஒரேகிளைமரபைச் சேர்ந்தவர் வட்டுக்கோட்டை மானாமுதலியார். இம்முதலியார் பரம்பரையினர் தான் ஏரம்பர், அவர் மகன் தம்பிராசா – ஏரம்பரின் சகோதரர் இளையதம்பி ஆகியோர். இன்றும் இப்பரம்பரையினர் இணுவிலில் வாழ்கின்றனர். வினாயகர் வாரியாரால் அறநன்கொடையாகக் கந்தசுவாமி கோயிலுக்கு விடப்பட்ட நிலத்தில் பன்னிரண்டுபரப்பு மட்டுமே மிகுந்துள்ள மிகுதி நிலம் சீனி ஐயர் என்பவரால் ஆட்சிப்படுத்தப்பட்டது. புதிய ஆவணப் பட்டோலை யொன்று உருவாக்கப்பட்ட அதன் துணைகொண்டு வைத்தியர் நாகலிங்கத்திற்கு ஈடுவைக்கப்பட்டது. பின் அவர் வழித்தோன்றலான வைத்தியர் முத்துலிங்கம் அவர்களால் அறுதியுறுதி முடிக்கப்பட்டு விற்கப்பட்டது. இத்தகைய நிலங்களின் ஆவணங்கள் மீளாய்வு செய்யப்படவேண்டும். இதனைச் செய்தால் பல அறநன்கொடைகள் ஊர்ச்சொத்தாகு மென்பதில் ஐயமில்லை. தக்கார் முயலவேண்டும். திருவருள் அதற்கு வழிகாட்டும்.

பல அறநன்கொடைகளைக் கோயிலின் சார்பில் ஏற்றுக்கொண்ட மணியகாரன் ஆறுமுகத்தார் 1852 ஆம் ஆண்டில் கோயிற்குடமுழுக்கினை நிறைவேற்றினார். கப்பணையென்ற ஆவணப் பெயர்கொண்ட காணியில் நான்கு பரப்பு அறநன்கொடையாகக் கொடுத்தார். இன்று காரைக்கால் எனப் பெயர் வழங்கும் சிவன் கோயிலை அடுத்த சில தோட்டக் காணிகளும் இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அறநன்கொடைகளாக கொடுக்கப்பட்டவை என்பதனை ஆவணங்கள் கொண்டுதெளியலாம். அன்னாரும் அவர் வழிவந்தோரும் கோயிலுக்குச் செய்த பணிகள் எண்ணிலடங்கா. திரு. அருணாசலம் அவர்கள் அருட்திறனால் ஆளப்பட்டதனால் அருளுரைகள் பல வழங்கினர். அவை எழுதாக் கிளவிகளாக அமைந்தன. இவருக்குரிய நொச்சியொல்லை மிதியன் என்ற காணியில் இருபத்தி நான்கு பரப்பு வெற்றிலைத் தோட்டமிருந்தது. அதன் வருவாயே குடும்பத்தினைப் பேண உதவியது. இப்பெரியவர் ஒருநாள் தோட்டத்தில் கண்படை கொண்டவேளையில், இறைவன் கனவிற்றோன்றிக் காஞ்சியில் இருந்து வந்துள்ளேன் எனக்கூறி@ இருக்க இடம் வேண்டுமென்றும் - தான் இருக்கு மிடத்தினை நொச்சித்தளிர் கொண்டு காணலாமென்றும் - அவ்விடத்தில் ஓர் இல்லமைத்து வழிபாடு செய்தாற் பெரும் பயன் அடைவாய் என்றும் அருளினார். இச் செய்தியினை முன்னவர் பலர் கூறியுள்ளனர்.

பெரியவர் கட்டறுக்குங் கந்தன் கூறிய படியே அடையாளத்தினைக் கண்டு@ கனவிற் கேட்ட அருள் உரையின்படி செய்து பயன் கொண்டார். அவ்விடமே இன்றைய இணுவிற் கந்தசுவாமி கோயில். இக்கோயில் தோன்ற முன்பே அவ்விடம் வழிபாட்டிடமாக அமைந்திருந்தது என்ற செய்தியினையும் ஊர்ப் பெரியவர்கள் கூறுவர். இவ்வாலயத்தில் அருந்தரு மரமாக நொச்சியிடம் பெற்றது. இணுவிற் கந்தனை நொச்சியம்பதியானென்றும் - காஞ்சியம்பதியானென்றும் - அம்பலவாணக் கந்தன் என்றும் ஊர்மக்கள் போற்றிப் பரவுவர். விளாத்தியடி வயிரவர் என்ற ஞான வயிரவர்@ தான் காசியில் இருந்து வந்ததாகவும் பிள்ளைக்கறியேற்ற வடிவினனெனவும் திரு. கு. வே அருணாசலம் அவர்களின் அருளுணர்வுக்குத் தெரிவித்தார். இக் கோயில் மிகப்பழமையானது. கோயில் கொண்ட இறைவனை@ சாந்தியடியான் - கிராமத்தான் - விளாத்தியடியான் எனப் பல பெயர் கொண்டழைப்பர். இக்கோயிலின் நேர்வாசலில் திருநீர் நிலையொன்றுளது. தீரா வினைகளைத் தீர்க்கும் பேராற்றல் வாய்ந்தது. எந்தவிதமான உயிரினங்களும் அந்நீர்நிலையில் வாழ்வதில்லை. இரவுபகல் என்று பாராது அடியார்கள் நாள்தோறும் நீராடுவதனை இங்கு காணலாம். அதன் பயனை அனுபவித்து வருபவர்கள் இன்றும் பலருளர். அவர் தம் வாழ்விற் பெற்ற அனுபவங்களும் - உயர்வுகளும் எண்ணிலங்கா. அதனை எழுத்தில் வடிக்கவோ சொல்லால் விளக்கவோ இயலாது.

“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”

என்ற திருமறைக்கு விளக்கமாக – வாழ்வினை யமைத்துக் கொண்டவர் இவ்வுண்மையினை உணர்வர். கந்தன் வடிவிலும் - ஞான வயிரவர் வடிவிலும் உள்ளவன் தான் ஒருவனே என்பதைத் தடுமாறும் உள்ளங்கொண்ட அடியவர்க்கு நிகழ்ச்சிகளும் பலவுண்டு. வேண்டியவர்கள் வேண்டியபடி பெற்றுப் பெருவாழ்வு வாழ்வதனையும் இன்றும் காணக் கூடியதாகவுள்ளது. இவ்வுண்மைகளை நூலறிவுகொண்டு உணரவியலாது. அருளுணர்வே வாழ்வினை உருவாக்க வல்லது. நல்வாழ்வென்பது உடல் உணர்வற்ற – சூழ்நிலை மறந்து – அதீத நிலையில் அமைதியுறும் போது கிடைப்பது. அவ்வின்பம் சொல்லுக்கடங்கிய தன்று. இத்தகைய இன்பஞ் சுரக்குமிடமே ஞானவயிரவர் கோயில்.

அருட்பெருமையும் (மூர்த்தி) கோயிற் சிறப்பும் (தலம்) திருநீர்ப்பெருமையும் (தீர்த்தம்) ஒருங்கேயமையப்பெற்ற இணுவையூர்க் கந்தன் ஞான வயிரவனாகத் தோன்றிப் பேரின்பம் நல்கும் திறத்தினை விளக்குமாற்றல் அவனருளாற்றான் இயலும் இதனையுணர்ந்து உறுதிப்படுத்தியவரே இணுவையூர் அப்பர். இவர் வழிநின்ற இணுவையின் ஞானக்குழந்தை தவத்திரு வடிவேற் சுவாமிகள். இவர் இணுவிற் கந்தசுவாமி கோயிலுக்குப் பாதுகாப்பும் - வழிபாட்டுரிமையும் கிடைக்க அரும்பாடு பட்டவர் – விடுதலை முழக்கஞ் செய்தவர். வேத பரம்பரையில் வந்த வடிவேற் சுவாமிகளும் - சைவ சித்தாந்தப் பரம்பரையில் வந்த செம்மல் மாணிக்கச் சட்டம்பியாரும் கூட்டுத்தலைமையேற்று இணுவை மக்கள் வாழ்விற் புதிய திருப்பதத்தினை ஏற்படுத்தினர். இத்திருப்பத்திற்கு எல்லைக்கல்லாக அமைந்தவர் வைத்தியர் திரு. சு. இராமலிங்கம். சித்த வைத்தியத்திலும் அறிவாற்றலிலுஞ் சிறந்தவர். வேதாந்த வடிவேலரையுஞ் சித்தாந்த மாணிக்கரையும் தம் துணையாகக் கொண்டு இணுவையூரின் வாழ்வுக்குப் புதியவழிசமைத்தார். அன்னாரின் அயராத உழைப்பே ஊரவர்க்கும் மூதாதையர்க்கும் பெரும் புகழைக் கொடுத்தது. உயர்ந்தோர் – தாழ்ந்தோர் என்ற வேறுபாடு இன்றி வழிபடும் உரிமையினை அனைவர்க்கும் கிடைத்தது. இப்பணிக்கு உதவியாக இணுவையூர் இளைஞர் முன்னணியினர் செய்த தொண்டு அளப்பரியது. 1914 ஆம் ஆண்டில் இணுவை வரலாற்றில் - கோயில் அருளாட்சியில் ஏற்பட்ட இழுக்கு மறைந்தது. இவ்வுண்மையினை நம்மவரிற் சிலர் உணர மறுப்பது வேதனைக்குரியது.

வைத்தியர் திரு. சு. இராமலிங்கம் பரம்பரையில் வந்தவரே மணிமந்திர வைத்தியர் திரு. க. அம்பலவாணர். இவர்களின் கூட்டுத்தலைமையில் நெறிப்படுத்தப்படும் கோயில் அருளாட்சியினைக் குலைக்க சிலர் முனைகின்றனர். அந்த வகையில் இவர்கள் சி;க்கிவிடக்கூடாது.

பெரிய சன்னியாசியார் காலத்தில் வாழ்ந்த அந்தணர் பெருமகன் மாக்கண்டேயர். சமய வாழ்வில் சிறப்பிடம் பெறுபவர். இவர் அந்தணர் பிதாமகர் எனக் கருதப்படும் நடராசையர் பரம்பரையினர். நடராசையர் பரம்பரை செந்தமிழும் ஆரியமும் கற்றுத் துறைபோகிய சான்றோரைக் கொண்டது. நடராசையர் கொடிய நஞ்சினை நீக்கும் ஆற்றல் கொண்டவர் இவரின் மாணவரே பாம்பு நஞ்சினைப் போக்கும் வைத்தியம்புரிந்த திரு. இராமுப்பிள்ளை. இத்தகைய பரம்பரையிற் றோன்றியவரே மார்க்கண்டேயர். ஆத்மீக வாழ்வால் வேளாண்குல திலகர் இணுவையூர் அப்பருடன் அருளுறவு பூண்டவர். அப்பா சன்னியாசியார் வடபகுதியில் பக்தியையுந் தொண்டையும் வளர்த்தவர். மாக்கண்டர் தென்பகுதியில் பத்தியையும் ஞானத்தையும் வளர்த்தார். இவ்விருவரும் இணுவையின் ஆத்மீக ஒருமைப்பாட்டிற்குப் பாதுகாப்பளித்தனர். தம் வாழ்விலும் ஒன்றிணைந்தனர்.

மார்க்கண்டர் காலிச் சிவன் கோயிற் றலைக் குருவாக விருந்து அருள்வாழ்வு வாழ்ந்தவர். அக்கோயில் அன்று நகரத்தார் (செட்டிமார்) மேற்பார்வையில் இருந்தது. அவர் காலி சிவன் கோயில் தலைமைக் குருவாக இருந்த போது மழைவளங்கரந்து கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அவ்வேளையில் நகரத்தார் வேண்டுதலை யேற்றுத் தன்தவவலியால் மழைபொழியச் செய்தார். பெரிய சன்னியாசியார் இறைநிலையடைந்த செய்திகேட்டு அவர் சமாதிக்கு வந்து “என்னை விட்டுப் பிரிந்தனையோ? இத்தினத்தில் யானும் உன்னை வந்தடைவேன்” எனக் கூறிச் சென்றார். பின் கதிர்காமஞ் சென்று அப்பர் இறைநிலை யடைந்த திருவோணத் தினத்தில் திருவீதி வலம் வந்து முருகன் திருவாசலில் தானும் இறைநிலை யடைந்தார். மார்க்கண்டு என்ற வணிகப் பெருமகன் அன்னாரின் திருவுடலை மாணிக்க கங்கைக் கரையில் அடக்கஞ் செய்தார். புங்குடுதீவில் ஐயர் அவர்களால் அமைக்கப்பட்ட சிவன் கோயில் இன்றும் நல்லநிலையிற் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவ்வந்தணப் பெரியார் பரம்பரையில் வந்தவரே கலைச்செல்வர் – வரகவி ந. வீரமணி ஐயர். அந்தணப் பெரியார் மார்க்கண்டர் இறைநிலையடைந்த செய்தியினை அறிந்த நகரத்தார் அவருக்கு விழாவெடுத்து மரியாதை செய்தனர். ஆண்டுதோறும் திருவோணத்தில் பெருஞ்சோற்று விழாவெடுத்தனர். இணுவையில் இன்றும் திருவோணத் தினத்தில் பெருஞ் சோற்று விழா நடைபெற்று வருகின்றது.

இணுவையூரின் சமய வாழ்வில் சண்முகஞ் சுவாமியாரையும் - சுப்பராயரையும் நாம் இழந்து நிற்கின்றோம். ஆயின் அவர்களின் வேதபரம்பரை பொலியவே செய்கின்றது. அப்பரம்பரையில் இன்று எம்மத்தியில் சதாசிவச் சட்டம்பியார் – செல்லையாச் சுவாமிகள் - வடிவேற் சுவாமிகள் ஆகிய பெருமக்கள் வாழ்ந்து வருகின்றனர். சித்தாந்தப் பரம்பரையில் வந்த சேதுலிங்கச் சட்டம்பியார் உழவாரப்பணி செய்த திருநாவுக்கரசரை நினைவூட்டியவர். அவரும் இன்று எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இவர் சமய வாழ்வில் தன்னையே இழந்தவர். நற்பணி செய்வதே அவரின் இயல்பு. கூட்டு வழிபாட்டியக்கத்தின் தந்தை. இவர்களோடு ஒப்பவைத்து எண்ணத்தகும் பெருமைக்குரியவர் சைவச்சான்றோர் திரு. சி. ஆறுமுகதாசர். சைவசமயத்தின் விளக்கமாக அன்னாரின் வாழ்வு அமைந்துள்ளது. பழுத்த ஞானப் பழமாக உள்ளும்புறமும் கனிந்த இன் சுவையமுதாக இணுவையின் வாழ்வுக்கு உயிரூட்டி நி;ற்கின்றார். இன்று எம்மூரில் வாழ்வோடிருக்கும் பெரும் மகனாகத் திகழ்கின்றார். இத்தகைய சான்றோரைக்கொண்ட இணுவை@ வேதபரம்பரையையுஞ் - சித்தாந்த பரம்பரையையும் ஒன்றிணைத்துப் புதிய அருட் பரம்பரையை உருவாக்குகின்றது. இவ்வாக்கம் ஈழம்வாழ் மக்கட்குச் சிறந்த தலைமையை உருவாக்க வேண்டும். திருவருள் அதனைக் கூட்டும்.

கோயில் நிறைந்த இணுவை 3

“திருக்கோயில் இல்லாத திருவிலூரும்” என்பது அப்பர் தேவாரம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது மூதுரை. தமிழர் வாழ்வில் திருக்கோயில்களே சிறந்த செல்வமாக மதிக்கப்பட்டன. அத்தகைய கோயில் நிறைந்தது இணுவை. அவற்றில் முன் எழுதிய கட்டுரைகளில் இடம்பெறாதனவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

காரைக்காற் சிவன் கோயில்

இக்கோயில் இணுவிலுக்குக் கிழக்கில் இணுவில் - கோண்டாவில் - உரும்பராய் ஆகிய மூன்று ஊர்களும் சந்திக்கும் இடத்தில் அழகுற அமைந்துள்ளது. இக்கோயிலை அமைத்தவரும் பெரிய சன்னியாசியாரே. மஞ்சத்திருப்பணி தொடங்கிய காலத்திலேயே காரைக்காற் சிவன்கோயிலின் திருப்பணியும் தொடங்கப்பட்டது. அடிகள் தமது குலதெய்வமான மாரியம்மனுக்கு முதலில் கோயில் அமைத்தார். அதனைச்சூழ நன்மரங்களை நாட்டினார். பல மரங்கள் தறி;க்கப்பட்ட போதும் - காரைக்கால் சோலையும் - சுனையும் தோட்டமும் சூழ்ந்த புனித இடமாகவே யிருக்கின்றது. இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகட்குமுன் ஆத்மீக நிலையினை விரும்பியவர்க்குத் தனித்திருக்கும் தவக்குடிலாக – விளங்கியதனை அவ்வனுபவத்தினைப் பெற்றதனை எண்ணுந் தோறும் உள்ள நிறைவு ஏற்படுகிறது. ஊர்பேர் தெரியாத பல தவயோகியார் நடமாடிய இடமே காரைக்காற் சிவன்கோயில். அவர்கள் உள்ளத்தில் எழுந்த ஆன்மீகச் சிந்தனைகள் அலையலையாக பரவியுள்ளதனை – அப்பரவலால் ஏற்பட்ட அருளாட்சியினை இன்றுங் காணலாம். காரைக்கால் சிவன் கோயிலின் சூழலில் ஐந்துவகைத் தெய்வமரங்கள் நிற்கின்றன பஞ்சவடி நிலையெனவும் பஞ்சவடிதீரம் எனவும் அழைக்கப்படும் பெருமைக்குரியதாகத் திகழ்கின்றது. தனித்திருப்பதற்கும் - விழித்திருப்பதற்கும் - பசித்திருப்பதற்கும் ஏற்ற இடமாக காரைக்கால் அமைந்துள்ளது. சிந்தனைத் தெளிவுடன், சீரியநெறி சொல்வோர்க்கு – மனச் செம்மையையும் - உயிர்நிறைவையும் கொடுக்கும் புனித இடமெனப் பல பெரியோர்கள் கூறக்கேட்டுள்ளேன். இத்தகைய பெருமைசான்ற திருத்தலத்தில் ஏழுக்கு மேற்பட்ட நீர்நிலைகளும் கேணியொன்றும் - திருக்குளமொன்றும் பெரிய சன்னியாசிரியாராக அமைக்கப்பட்டன. சிவனுக்கும் வையிரவருக்கும் ஆலயம் அமைத்தார். இவ்வாலயங்கட்குப் பண்டிகை வேலை செய்யப்படவில்லை. நான்குமூலைகட்கும் சர்ப்பங்கள் வைக்கப்பட்டன. நடுவிலே பன்னிரண்டடி செப்புத்தம்பமும் அதன்மேல் செப்பில் சதுரப்பெட்டியும்; அதன்மேல் தேங்காய் வடிவமும் அமைக்கப்பட்டன. மூலமூர்த்தியாக இலிங்கம் அமைக்கப்பட்டது. இது பஞ்சலிங்கம் எனப் பெயர்பெறும். இச்சிவலிங்கம் ஐந்தடி உயரம் கொண்டது.

முன்பக்கம் சதாசிவமூர்த்தி அமைதிகொண்ட வடிவில் (தியானம்) அமைந்துள்ளார். மறுபக்கத்தில் சனகர் – சந்தனர் – சனாதனர் – சனற்குமாரர் ஆகிய நால்வர்க்கும் - ஆசானாயமர்ந்து அருளுரை வழங்கிய வடிவில் இறைவன் காட்சி யளிக்கின்றார். அடுத்த பக்கம் அன்னமும் பன்றியும் அடிமுடி தேடிய வடிவுடன் அமைந்துள்ளது. இன்னொரு பக்கம் ஆவுடையாரும் இலிங்கமுமாக அமைவு பெற்றுள்ளது. இம்மூல இலி;ங்கத்தின் முன் மையில் வைக்கப்பட்டது. கொடித்தம்பம் அமைந்த மண்டபத்தில் நந்தி இடம்பெற்றது. கந்தசுவாமி கோயிலின் பழைய கொடித்தம்பம் காரைக்காலிலேயே நிறுவப்பட்டது. பின் இது மஞ்சத்தடிக் கந்தசுவாமி கோயிலில் நிறுவப் பட்டது. இக்கொடித்தம்பம் கோண்டாவிலில் வாழ்ந்த சுவாமிநாதர் மூத்ததம்பியால் அறக் கொடையாகக் கொடுக்கப்பட்டது. இதனைப் பராமரிப்பவர் வேலாயுதர் அருணாசலம் என எழுதப்பட்டிருக்கிறது. வணக்கத்திற்குரிய மற்றைய தெய்வங்கள் கருங்கல்லிற் சிலைவடிவிலும் - ஒவிய வடிவிலும் செய்து வைக்கப்பட்டன. வாகனங்களும் தேர்களும் செய்து வைக்கப்பட்டன. கோயிற் திருவிழாவின் போது ஐந்து தேர்கள் இழுக்கப்பட்டன. இவை யாவும் அப்பர் பெரிய சன்னியாசியாரின் அருளாட்சியிலேயே நடைபெற்றன. பன்னிரண்டடித் தம்பத்தின் மேல் அமைக்கப்பட்ட செப்புப்பெட்டி ஏன் அமைக்கப்பட்டது என அடிகளாரை வினவியபோதுதான் கந்தசுவாமி கோயிலிலிருந்து பேசும்போது காரைக்காலிற் கேட்கவேண்டுமெனக் கூறினார்.

பெரிய சன்னியாசியார் சமாதிநிலையடைந்த பின் காரைக்காற் கோயில் அதன்பின் வந்தோரால் நடாத்த முடியாது போகவே பூசைமட்டும் சிறிது காலம் நடைபெற்றது. பின் எதுவும் நடைபெறாது தடைப்பட்டதனால் காடுமண்டியது, சுடலையும் அதன் சூழலிலே நடந்ததனால் அச்சம் தரும் சூழ்நிலை உருவாகியது. காரைக்காலிலிருந்த கோயிற் பொருட்கள் மஞ்சத்தடிக் கந்தசுவாமி கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டன. இக்காலத்தில் இணுவை காசிநாதர் செல்லத்துரை காரைக்காற் சிவன்கோயில்வாசலில் ஓர் விளக்குத் துணை நிறுவினார். இவர் இரவு நேரத்தில் தேங்காய்நெய் விளக்கினை இட்டுவரும் பணியினையுஞ் செய்துவந்தார். கோண்டாவில் குமார தோட்டத்தினைச் சேர்ந்த தம்பாபிள்ளை ஆண்டுதோறும் வையிரவருக்குப் பொங்கல் பூசை செய்து வந்தார். இவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சிறு பையன் ஒருவன் தன்னை அழைத்து வந்ததாகவும் பின் அப்பையன் காரைக்கால் வையிரவர் கோயிலுக்குச் சென்று மறைந்ததாகவும் கூறிய செய்தியினையும் பலர் கூறக் கேட்டுள்ளேன்.

காரைக்காற் சிவன்கோயில் சிதைவடைந்திருந்த காலத்தில்@ அருள்முனிவர் யோகசுவாமிகளும், நல்லருளாளர் நயினாதீவுச் சுவாமிகளும், கொக்குவில் வைத்தியர் – ஞானபண்டிதர் நடராசானாரும் தாங்கிச் சென்ற பெரியவர்களுள் முக்கியமானவர்கள். இவர்களின் ஆத்மீகசிந்தனையினால் காரைக்கால் மீண்டும் உயர்நிலையடைந்தது. இவை யாவற்றிற்கும் வழிவகுத்தவர் இணுவை ஞானக்குழந்தை வடிவேற் சுவாமிகளாவர். இவருடன் அருளுறவு பூண்டவர் – சித்தர் நயினாதீவுச் சுவாமிகள். இவ்விருவரும் காரைக்கால் சென்று ஆன்மநேய ஒருமைப்பாட்டினைப் பெற்று வந்தனர். 1937ஆம் ஆண்டளவில் சித்திரை நிறைநிலாத் தினத்தன்று காரைக்காற் கோயிலில் கூழ் உணவு சமைக்கப்பட்டது. இதனைச் சித்தர் நயினாதீவுச் சுவாமிகளும் தவத்திரு வடிவேற்சுவாமிகளும் செயற்படுத்தினர். இவர்களுடன் ஆசிரியர்களான திரு. குழந்தை வேல். திரு. சிற்றம்பலம், திரு. வேலாயுதபிள்ளை ஆகியோரும் பங்கு கொண்டனர். இதனைச் செய்வதற்கு அயலில் தோட்டஞ் செய்த கார்த்திகேசு நவரத்தினம் என்ற முதியவர் உதவினார். தொண்டர் பணிமூலம் (சிரமதானம்) கோயில் சிர்திருத்தியமைக்கப்பட்டது. குழந்தைவேல் ஆசிரியரின் பெண்வழி மாமனாரான திரு. கந்தையா அவர்கள் கோப்பாய் பஞ்சாட்சரக் குருக்களை அழைத்து வந்து குடமுழுக்கினைச் செய்து வைத்தார். சித்தர் நயினாதீவுச் சுவாமிகள் ஒருமுறை காரைக்காலில் அமைந்திருந்த நெல்லி மரத்தினைச் சுற்றிவந்து இவ்விடம் சித்தவைத்தியத் திற்குரியதென்றும். இதன் வடக்கில் ஆச்சிரமம் ஒன்று உருவாகும் என்றும் முன்னுணர்வாற் கூறினார். அவர் கூற்றின்படி இன்றுஅவ்விடம் ஈழநாட்டில் புகழ்மணக்கும் திருத்தலமாக விளங்குவதனைக் காணலாம். சித்தர் நயினாதீவுச் சுவாமிகள் அவ்விடத்தில் ஊஞ்சல் கட்டியாடி வறண்டவூரின் செழிப்புக்கு மழைவேண்டிப் பாடினார். அவ்வண்ணமே மழையும் பெய்தது. ஊரும் நலம்பெற்றது. இச்சித்தரின் தலைமையில் கூடிய திருக்கூட்டத்தின் அருட்பணியால் கோயில் சீர்பெற்றது. சித்தரின் வாழ்த்தும் ஞானக்குழந்தை வடிவேலரின் அன்புறவும் கொண்ட ஆசிரியர்களான பண்டிதர் க. கார்த்திகேயன் (சரவணமுத்து) மு. வேலாயுதபி;ள்ளை, க. சிற்றம்பலம், த. கந்தையா, வைத்தியர் சு. இராமலிங்கம், கோண்டாவில் இ. செல்லப்பா, வ. செல்லப்பா ஆகியோர் அருட்பணி செய்தனர். ஞானபண்டிதர் நடராசனார் இக்கோயிலின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்த செயல்கள் பலவுண்டு. அருளாளரான இவர் எமது நாட்டிற்றோன்றிய ஞானபரம்பரையைச் சேர்ந்தவர். கொழும்பாண்டவரது ஞானக்குழந்தை இவர் இறைவனின் பேராட்சித் திறனைக் காரைக்காலில் ஒளிவடிவிற் கண்டார். அன்று தொடக்கம் தம்மிடம் செல்லும் நோயாளரைக் காரைக்கால் சென்று வழிபடும்படி அனுப்புவார். அவரின் தொடர்பினாலே இணுவையூர் சித்தர் – செல்லர் – கோண்டாவில் செல்லப்பர் ஆகியோர் காரைக்காலின் ஆக்கத்திற்கு அருட்பணி பல செய்தனர். அவர் வழிவந்தோர் இன்றும் அதனைச் செய்துவருகின்றனர்.

காட்சித் தெளிவுகொண்ட முனிவர் நடராசனார். கன்னத்தில் அடையாளமுடைய ஒருவரே காரைக்காற் சிவன்கோயிலின் அருளாட்சியினை நடாத்துவார் எனத் தன்முன்னுணர்வாற் கூறியிருந்தார். அவர் கூற்றுப்படியே இணுவிற் கந்தசுவாமி கோயி; காரைக்காற் சிவன்கோயில் ஆகியவற்றின் முதல்வர் பரம்பரையில் வந்த திரு. அ. க. அம்பலவாணர் இன்று மணிமந்திர வைத்தியஞ் செய்வதனையும் காரைக்காற்சிவன் கோயிலின் தலைமை நிர்வாகியாகவிருந்து அதனை வழிநடாத்துவதனையும் - இணுவிற் கந்தசுவாமி கோயிலின் ஆட்சிக்குழு (சந்ததி) உறுப்பினராக இருப்பதனையும் காண்கின்றோம்.

அருள்பொலியும் காரைக்காலில் பல அடியவர்கள் பணிசெய்து பயன்பெற்றனர். இன்றும் அவ்வழி நின்று பலர் பயன் பெறுகின்றனர். காரைக்காற் கோயிற் பூசையை வீரசைவர் திரு. அம்பலமும் அம்மரைபைச் சேர்ந்தவரும் வேதாந்த மகாதேவசுவாமிகளின் ஞானபரம்பரைக் குரியவருமான அல்லபாப்பிரபுவும் இவரின் இனமரபினரான சோ. பரமசுவாமியும் நடாத்தினர். அதன்பின் அப்பரம்பரையைச் செய்து வருகின்றார். காரைக்காற்சிவன் ஆலயத்தின் அயலிலே முனிவர் நடராசனாரின் சமாதியமைக்கப்பட்டுள்ளது. காரைக்காற் கோயிலும் திருத்தியமைக்கப்பட்டு அதன் அண்மையில் அமைந்த சுடலையுந் திருத்தியமைக்கப்பட்டு யாவும் நல்லமுறையில் நடைபெறுவதற்கு அங்கு அருளாளர் பலர்நடமாடியமையே ஏதுவாக அமைந்த தெனலாம். அவ்வருளாளரின் ஞானப் பேராட்சிக்குட்பட்ட பெரியவர்களின் தலைமையில் இளையோர் பலர் ஒன்றுகூடிப் பல ஆக்கப்பணிகளைச் செய்து வருவதனை இன்றுங் காணலாம்.

சிவகாமியம்மன் கோயில்

முதலர் என்ற வேளாண் பெருமகனால் வணக்கப்பட்ட இறைவி சிவகாமியம்மை அன்னாரின் குடும்பத்தவர்க்கு குல தெய்வமாவார். முதலர் தமக்கு வந்துற்ற உயிர்க்கோட்டினை அம்மையின் அருளினால் வென்றவர். இணுவையூரின் மார்க் கண்டேயன் எனப் பாராட்டப் பெற்றவர். இவர் தமது பகைவரால் ஏவப்பட்ட “பெல்லி” யினை அம்மையின் அருள்கொண்டு வென்றவர். தமது வாழ்நாளை வீழ்நாள் படாமைப் பேணியவர். அம்மையின் திருவடியினைச் சிறு குடிலில் வைத்து வணங்கிய இடம் இன்று பெரும் கோயிலாக வடிவு பெற்றுள்ளது. இக்கோயிலின் திருப்பணியினை கற்பக அம்மாவும், அவர் பின் மகள் சாத்திரகார அம்மாவும் பிடியரிசி எடுத்து அவ்வருவாயின் துணைகொண்டு வழிவழி செய்து வருகின்றனர். உண்மையில் கற்பக அம்மையாரின் தொண்டும், அவர் மகளின் தொண்டும் இணுவைக்குக் கிடைத்த அருட் கொடை யென்றே கூற வேண்டும். கோயில் ஆட்சியிலோ அன்றி முகாமைப் பேரிலோ எவ்வித பற்றும் வைக்காது. “எம் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அருள்வாக்குக்கு இலக்கியமாக அமைந்தது அவர்கள் வாழ்வு. இதனையுணராத கோயில் ஆட்சியாளர் வெம்மை நிறைந்த சொற்களைப் பலமுறை கூறியதுண்டு. அவற்றைப் பொருட்படுத்தாது பணிசெய்து வரும் பெரும் தன்மையைச் சாத்திரகார அம்மாவில் காண்கின்றோம்.

பரமு என்ற அடியவரும் அவரைச் சார்ந்தவர்களும் அம்மையாரின் கோயிலுக்கு வேண்டிய “வாகனங்களையும் - சூரனையுஞ்” செய்து கொடுத்துள்ளனர். திரு. வி. ஆறுமுகம் அவர்கள் பூந்தோட்டம் அமைத்து அம்மையின் பூசனைக்கு வேண்டிய மலர்கள்பெற உதவினார். இக்கோயிலுக்குச் செய்கைத்தேர் செய்யும்பணியில் ஊர்மக்கள் திரு. தியாகராசாச் சுவாமிகள் தலைமையில் முயன்று வருகின்றனர். இராசகோபுரவேலையும் நடைபெற்று வருகின்றது. சிவகாமியம்மை பேரில் இணுவையூர்ச் சின்னத்தம்பிப்புலவர் ஊஞ்சற்பாடல்கள் பாடியுள்ளார். அப்பாடல்கள் திருவிழாக்காலங்களில் படிக்கப்பட்டு வருகின்றன. சிவகாமியம்மை கோயிலை முதலர் பரம்பரையில் வந்த பெருமக்கள் நிர்வகித்து வருகின்றனர். இக்கோயிலின் பின்வீதியில் மாணிக்க வையிரவர் கோயில் அமைந்துள்ளது. அமைதியும் அருளும் நிறைந்த இக்கோயிலினால் இணுவையும் பெருமை பெறுகின்றது

பரராசப்பிள்ளையார் கோயில் (மடத்து வாசல்)

இக்கோயில் வரலாற்றுப்புகழ் கொண்டது. இணுவை மக்களி;ன் அருட்பணியால் சீருஞ்சிறப்பும் பெற்றுத் திகழ்கின்றது. இராசகோபுர கட்டப்பட்டுள்ளது. இவ்விராசகோபுரம் ஊருக்கு அழகினைக் கொடுக்கின்றது. செய்கைத்தேர் ஒன்று திராவிடச் சிற்பமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. இணுவை வேளான் பெருமகன் தியாகர் பரம்பை விழிவந்த நாகமுத்தரும் - அவர் உறவினரும் அப்பணியினைச் சீர்பெறச் செய்து நிறைவு படுத்தியுள்ளனர்.

செகராசசேகரப் பிள்ளையார் கோயில்
(பருத்தியடைப்பு)

வரலாற்றுச் சிறப்புக்குரிய இக்கோயில் ஊர் பொதுமக்களால் திருத்தியமைக்கப்பட்டுத் திருப்பணி வேலைகளும் நடைபெறுகின்றன. ஆயின் அதன் வளர்ச்சி வரலாற்றுப் புகழுக்கேற்ப அமையவில்லை எனலாம்.

பரமானந்த வல்லி அம்மன் கோயில்

இக்கோயில் சிறிதாக அமைவுபெற்றிருந்தாலும் அம்மையின் அருளாட்சி நிறைவு கொண்டது தவத்திரு வடிவேற்சுவாமிகளின் தந்தையார் சன்னியாசி கந்தர் என்ற பெருமகனார் வழிபடப்பட்ட திருவடிவே இன்று கோயில் கொண்ட அம்மையின் வடிவமாகும். இவ்வம்மையின் கோயில் நல்லமுறையில் பேணப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிடமாக வளர்ச்சிபெற்றுள்ளது.

வட்டுவினிப் பிள்ளையார்.

இக்கோயிலில் வட்டுவினி என்ற குறிச்சிப் பெயர் கொண்டு இணுவிலின் வடக்கில் அமைந்துள்ளது.

தற்போது இணுவில் அம்பலவாணக் கந்தன் கோயில்

பழைய கோவில் பட்டியல் நிலத்தில் கீழிருந்தபடியாலும் அடிக்கடி பூசல்கள் ஏற்பட்ட படியாலும், பொருத்தம் பார்த்துச் சில திருத்தகள் செய்ய வேண்டுமென்று ஊரெழு பிரம்மஸ்ரீ சோமசுந்தரக் குருக்கள் அவர்களின் ஆலோசனைப்படி. வண்ணை இராமகிருஷ்ண ஆசாரி, தாவடி சோமசுந்தர ஆசாரி என்பவர்களால் பொருத்தம் பார்க்கப்பட்டது. பழைய கோயில் காற்பிரவாய் 10 அடி 4 இஞ்சி. தற்போதுள்ள கோயில் காற்பிரவாய் 10 அடி 5 இஞ்சி 6 நூல். ஆயாதி 377. பொருத்தம்பார்த்து வயது 77. ஆதாயம் 4, விரயம் 3. பதினைந்து பொருத்தமும் நலமாக அமைந்தது. அதன்படியே கட்டப்பெற்றது. பழைய கோயிலின் வயது 44 என்று கணக்கிடப்பட்டது.

12-12-65ல் சங்குஸ்தாபனம் செய்து 26-1-66ல் வானவரிக்கல் நாட்டி 26-8-66ல் பிரதிட்டை செய்யப்பெற்று 2-9-66ல் மகா கும்பாபிஷேகமும் தூபி அபிஷேகமும் நடைபெற்றது.

கர்ப்பக்கிரகமும் அர்த்த மண்டபமும் இரட்டைப் பஞ்சாங்க வேலை திரு. மு. கணபதிப்பிள்ளை ஆசாரி (அராலி) அவர்களாற் கட்டப்பட்டது. 5ஆம் குரவராகிய ஆறுமுகநாவலர் அவர்கள் இக்கோயில் மூலஸ்தானத்தில் வேல்வைத்ததையிட்டுத் தனது பிரபந்தத்தில் கண்டனம் எழுதினாராகையால் தற்போது மூர்த்திகள் வைக்கப்பட்டன. மூலமூர்த்திகளும் ஆசனமும், கோமுகையும் வவுனியா க. தகங்கவேலு ஆசாரியால் செய்யப் பெற்றன.

மகாமண்டபம், சபாமண்டபம் ஆகிய இரு தயஸ்தானங்களில் சண்முகராசா, நடராசா, தியாகராசா ஆகிய மூவிராசாக்களும் கோவில்கள் கட்டிக் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றது. தூபிவேலை, நா. தங்கவேலு ஆசாரி அவர்கள் பொறுப்பில் கறுப்பையா ஆசாரி அவர்களாற் செய்து முடிக்கப்பட்டது. வயிரவ சுவாமி, சண்டேஸ்வரர், சிவலிங்கமூர்த்திகளைப் பிரதிஸ்டை செய்து கோவில்களும் கட்டிக் கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டன. திருமுறைகள் நூல்நிலையம் வைத்தும் கொடிஸ்தம்பத் திருத்தவேலையும் செய்யப்பட்டன. கோவிலின் அழகிய தோற்றம் யாவர்க்கும் பக்தியை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது.

வள்ளி தெய்வயானை சமேத முத்துக்குமார சுவாமி, தண்டாயுதபாணி, சிமித்திரசண்டேஸ்வரர், ஞானவைரவசுவாமி ஆதிய திருவுருவங்கள் வார்த்து வைக்கப் பெற்றன.

21-9-65 தொடக்கம், பொதுக்கோயிலாகத் தீர்ந்த தீர்வையின்படி மேற்படி கோவிலின் தர்மபரிபாலன சபையாரால் ஆட்சி எடுக்கப்பட்டு, களஞ்சியம் அமைத்து, தினவரவு செலவு, காசுப்புத்தகம், பொருட் புத்தகம் என்பன வைத்து, குருக்கள், பூசகர், பரிசாரகர், கணக்கர் ஆதியவர்கட்கு மாதவீதம் சம்பளம் கொடுத்து, அபிஷேகம், திருவிழா, அர்ச்சனை, விசேட பூசைகள் என்பவற்றுக்குரிய பற்றுச்சீட்டுகள் வழங்கி, காலம் தவறாது ஐந்து காலப் பூசையும் செய்து நிர்வாகம் நடத்தும் முறை மிகவும் போற்றத்தக்கது. மஞ்சத்திருத் வேலைக்கும், ஆலயக்கட்டிடத்துக்கும் பொருள் உதவியவர்கள் இணுவில், தாவடி, கோண்டாவில், கொக்குவில், சுதுமலை, நவாலி, மானிப்பாய், உடுவில், சுண்ணாகம் இன்னும் பல ஊர்ப் பொதுமக்களே.

பொதுக் கோயிலென நிலைநாட்டியவர் மூவர்.

எங்கள் ஊருக்கு உழைத்த பெரியார்கள் என்றால் மிகையாகாது. எங்கள் மூதாதையர்கள் தங்கள் கோயில் அற நன்கொடைகளை ஏகபோகமாய் விட்டபடியால் பின் சந்ததியாருக்கும், கோயிலுக்கும் இழுக்கை உண்டாக்கினர். ஐந்தாங் குரவராகிய ஆறுமுகநாவலர் கூறியபடி, அறநன்கொடையாக ஒரு சதம் கொடுத்தாலும் ஏன் எழுத்தில் வரக்கூடாது என்றபடி உறுதிப்படுத்தாதபடியால் பேனவர், வந்தவர் கிட்டவுள்ளவர்கள் அத்தனைபேரும் சொந்தம் பாராட்டி வாதாடி வழக்குரைத்தனர். சட்ட வல்லுனர்கள் அநேகம் பேர் ஈடுபட்டாலும் (அது) பொதுவென வழிவகுத்தவர்கள் த. முத்துசாமிப்பிள்ளையும். கு. வன்னியசிங்கமும் ஆகிய இருவருமே. அதை மேல் நீதிமன்றத்தில் நிலைநாட்டி பொதுக்கோவிலென 1953ஆம் ஆண்டு தீர்ப்பித்த பெருமை சா. யே. வே. செல்வநாயகம் அவர்களுக்கே உரியது என்பதை காலம் உணர்த்தும்.

வட்டுவினிக் கண்ணகை அம்மன் கோயில்.

இணுவையூரின் கண்ணகை அம்மன் வழிபாட்டிடமாக அமைந்துள்ளது.

இணுவை மருதனார்மடம் பல்லப்ப வைரவர்.

இவர் இணுவையூரின் எல்லைக் காவலனாக அமைந்துள்ளார். இவ்வைரவர் கோயில் அயலூரவர்க்கும் அருட்பணி செய்யும் இடமாக அமைந்துள்ளது. மருதனார்மடம் என்பது குறிச்சியின் பெயரேயன்றி ஊர்ப்பெயரன்று. மருதையனார் என்ற பெருமகனால் உருவாக்கப்பட்ட மடத்தின் பெயரே அவ்விடத்திற்கு இட்டு வளங்கப்படுகிறது. அப்பகுதி இணுவையின் ஒர் பகுதியேயன்றித் தனித்தவோர் ஊரன்று.

சைவன் கோயில் (சிவன் கோயில்)

இக்கோயிலில் சைவச் சின்னப்பிள்ளையென்றழைக்கப்பட்ட (சின்னத்தம்பி) என்பவர் சிவலிங்கம் வைத்து வழிபட்டார். இப்போது சிவன் கோயிலாகக் கட்டப்பட்டு ஊரவர் வணக்கத்திற்குரிய கோயிலாக உருப்பெற்றுள்ளது. கோயிலை அவர்வழிவந்தோர் பாதுகாத்து வருகின்றனர்.

பாருங்கள் வாருங்கள் பார்த்தருளைக் கூடுங்கள்
தீருமேயுங்கள் சிறைத்துயரம் - நேருங்கள்
இந்நேரிலாத விணுவை விசுவேசன்
தன்னையே தந்திடுவான்தான்.

இணுவையும் தமிழும் 4

எமது ஊர் எமது மக்கள் என்ற உணர்வு எம்மிடம் இருந்தாலும் வரலாற்று முறையில் நோக்கும்போது நடுநின்றே எழுதவேண்டும். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்த்து வரும் பெருமை இணுவையூருக்கு உண்டு. உள்ளமும் உணர்வும் தமிழாகவே உருவாகிய பெருமக்கள் இணுவையூரிலே வாழ்ந்து தமிழையும் கலையையும் வளர்த்தனர். இபபெருமக்களில் 16ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் இணுவையூர் சின்னத்தம்பிப்புலவர். ஏறக்குறைய ஒல்லாந்தருடைய ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். இவர் சிறந்த “வரகவி” ஆவர். சைவசமயத்தை அழிந்து கிறிஸ்து மதத்தைப் புகுத்திய காலம். சிவசி;ன்னங்கள் அணிவதும், சமய அனுஷ்டானங்கள் புரிவதும் பெரிய இராசத்துரோகக் குற்றமாகக் கருதிய காலம். சைவ ஆலயங்கள் இடிபட்டும், திருவுருவங்கள் கிணறுகளிலும் பூமியின் அடியிலும் சரண்புகுந்த காலம். அக்காலத்தில் புலவர் அவர்கள் அரசகட்டளையை மீறி சிவசின்னங்களை அணிந்தும், ஆலயவழிபாடு செய்தும் சமயப் பணிகள் புரிந்தும் வந்தார். இதைஅறிந்த அரசாங்கம் புலவர் அவர்களைப் பிடித்து அருஞ்சிறையில் அடைத்தது. காரணம் அரசகட்டளையை மீறியமை என்பதாகும். சிறையில் புலவரவர்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்தார். தமது சித்தமிசை குடி கொண்ட சிவகாமசுந்தரியை இடையறாது துதித்தார். தமது இன்னலைத் தீர்க்கும் வண்ணம் அன்னையை வேண்டிப் பாமாலை சாத்தினார். சிவகாமவல்லி சிறைக்கதவைத் திறந்து புலவரைச் சிறைநீக்கினாள். சிறையிலிருந்து வெளிவந்தபின் சிவகாமி அம்பாள்மீதும், அம்பலவாணக் கந்தன் மீது திருவூஞ்சல், எச்சரிக்கை, பராக்கு, லாலி, மங்களம் என்பனவும், மாணிக்க வைரவசுவாமி, பத்திரகாளியம்மைமீது தனிப்பாடல்களும், காலிங்கர் கயிலாயர் என்னும் இளந்தாரிமீது பஞ்சவர்ணத்தூது பாடியும், பள்ளுப்பாட்டு, நாட்டுப்பாடல்கள், ஊஞ்சல் முதலான தனிப்பாடல்கள் பாடியும் தமிழ்ப்பணி புரிந்துள்ளார். இராமநாடகம் என்னும் நாடகக் கூத்துநூல் ஒன்றும், ஊர்மக்கள் நடிப்பதற்கான பல கூத்து நூல்களும் இயற்றப்பட்டன. இவைகளுள் ஒரு சில பாக்களே இன்று எமது கைக்குக் கிட்டியுள்ளன. அவற்றை எடுத்துக்காட்டாக இங்கு நோக்குவோம்............ இப்புலவர் பெருமகனாற் பாடப்பட்ட பிரபந்தங்களும், மற்றைய பாடல்களும் கிடைக்கப்பெறின் நூல்வடிவாக அச்சு வாகனமேற்றி வெளியிடக்கூடும் என்பதையும் தெரிவிக்கின்றேன்.

தரு

தெந்தன தெனா தெந்த நாதெந்த நாதனெனே
தென்னா தெனா தெந்த நாதெந்த நானே

சீர்புகழும் இணுவைநகர் செல்வமிகு மல்குவனை
செய்குவாயரசே (அகவே) (1) பயன் (2)
பார்மேவு கமலவயல் புடைசூழும் இணுவைநகர்
பரராச சேகரப் பிள்ளையிது துணையே.

கந்தமலி யுங்குவளை அந்தொடர் விளங்குபுய (3)
தங்குல துங்க காலிங்க மகராசன்
சீர்பூத்த தென்னிணுவை நகரிலுறை முருகவேள்
சீர்பாதம் மறவாமல் நினைவுதரு மனமே.

அண்ணமார் விண்ணிலோர் நண்ணுவார் வல்லபமே (4)
வலதடியுடன் பொல்லு வலதடங்கையே
காராண் முகில் பொழியக் கதலிவனம் மிகவோங்கக்
கருணைமிகு மிணுவைநகர் கந்தர் பதந்துணையே
செந்தினை விளைந்திடு புனந்தனில் நடந்தஇணை
சேயிளைகள் உய்யவொரு மையல் கொள்ளுமையன்

சித்திரை முறுக்குபவள் அத்தூண் இறுக்கியொளி
திகழ்வயிர மிட்டவிட்டம் (5) மகிழ்வுடன் இறுக்கி
திருமருவு சுரப்பரவு கரையிளந் தாரிகையில்
ஆசான் மிசையூஞ்சல் இசைபாடி விளையாடக்
கப்பவொரு கதலியொரு கமுகமடல் வீசேல்
காஞ்சுரையாற் பொங்கி வெற்றியினை வீசேல்.

சந்தண மரம்பிழந்து ஊஞ்சலது செய்து
சாதியால் ஒருபலகை விட்டகமும் பூட்டி
சீர்புகழும் இணுவைநகர் செல்வமிகு மல்குவளை
செய்குவாய் அரசே (யகவே) (6)
தெந்தன தெனாதெந்த நாதெந்த நாதனெனே
தென்னா தெனாதெந்த நாதெந்த நானே.

1. 1-6 அகவே செவிவழிக்கேள்வி@
2. பயன் - நூலாசிரியன்?
3. அந்தொடர் விளங்குபுய செ. வ. கே@
4. வல்லபமே செ. வ. கே.
5. மனம் செ. வ. கே@
6. நூலாசிரியரின் சேர்க்கை.

பள்ளு

பலபலனெ விடியலிலே
பள்ளிய ளெல்லாந் துள்ளுவளாம்
ஆடுவ ளாம் சிலர் பாடுவளாம்
அள்ளிய கதிரிணை யளவுடனே
கொண்டாடிய களந்தனிற்
போடுவளாம் சதி ராடுவளாம் (5)

இப்புலவர் பெருந்தகை விதியின் விளையாட்டால் அன்றைய ஆட்சியாளராற் சிறை வைக்கப்பட்டார். அச்சிறையிலிருந்து மீள்வதற்குச் சிவகாமி அம்மைமேற் பதிகம் பாடினார். அதனாற் சிறைமீண்டார். அப்பாடல்களிற் சிலவற்றினை இங்கு காண்போம்.

காப்பு
எந்தையே யென்னாளு மிறைஞ்சு மன்பரகத்து றையுந்
தந்தையே யடியேனைத் தாபரித் தாண்டருள்வாய்
சுந்தரஞ்சேர் சுரும்பைவளர் சோதியே ஆறுமுகக்
கந்தனுக்கு முன்னவனே கருணாகரப் பிள்ளையே.

சிறைமீளப் பாடிய பாடல்கள்

முருகன்

புந்தி நொந்து தேவர் புலம்பச் சிறைதீர்க்க வெண்ணி
வந்ததுபோல் எந்தன் மனக்கவலை மாற்றியருள்
இந்திரன் மகளான தெய்வயானை மணவாளன் செந்தூரன்
கந்தசிவ மைந்தன் திருக்கல்யாண வேலவனே.

சிவகாம சுந்தரி

ஆத்தாளே எங்க ளனைவரையும் பூத்த வண்ணம்
காத்தாளே யின்னுங் கனகவின்ப சுத்தசிவம்
பூத்தாளே செங்கமலம் பூத்தாளே யென்னிதியம்
காத்தாளே தெய்வ சிவகாம சுந்தரியே!

பாடொத்து மற்றிடத்தும் பாவியோர் குற்றம்குறை
ஆரிடத்தே சொல்வேன்எனை அனுசரிப்பார் ஆருமில்லைச்
சேரிடத்தே நின்று சிறியேன் வினைதீர்க்கச்
சீரிடத்தே மல்கும் சிவகாம சுந்தரியே!

எப்பிழை செய்தாலும் இரங்கியிவ்வூர் மானிடர்க்கு
வெப்புவினை நீக்கிமிகு சுகந்தந்தா ளுமம்மா
அப்பணியும் பொற்கமல தாதையொரு பாதி கண்ணே
செப்பிணுவை வாழும் சிவகாம சுந்தரியே!

பெற்றவள் நீதானுனது பிள்ளை யுலகோர் அறிய
அற்றமிலாச் செல்வம் அருளி வளர்த்தன்பு தந்தாய்
இற்றைவரையுந் தனியே யான்வருந்த வெங்கொளித்தாய்
சி;ற்றிடை மின்னே சிவகாம சுந்தரியே!

சீலைப்பேன் நுளம்பு தௌ;ளு நுள்ளான்மூட்டைக்கடி
சாலயான் சேயன் மனமிராங்கான் சற்றுமவன்
மாலையவன் மேவுமுன்னம் வந்துசிறை நீக்கியருள்
சேலொத்த வுண்கண் சிவகாம சுந்தரியே!

துப்பூட்டு மென்றனது துன்னார் சிறைப்படுத்தும்
அப்பூட்டுத் தீயப் பதைப்பார் சிறைமீட்டிருந்தாய்
இப்பூட்டுத் தீயவென் சிறையை நீக்கியருள்
செப்பூட்டும் பொற்றாட் சிவகாம சுந்தரியே!ஸ

இப்பாடல் பாடியவுடன் சிறைக்கதவு திறந்ததென்பர்.

சந்திரோதய முகமுஞ் சாற்றவொணாத் தோற்றமுடன்
வந்தேநின் திருவாயில் வைத்திருந்த பேரமிர்தம்
தந்தாயின்றே யுனது தாள்மலர்கள் யான்மேவச்
சிந்தா மணியே சிவகாம சுந்தரியே!

என்னைச் சிறையில்வைத்துப் பின்புவந்ததன் பகைவர்
தன்னைச்சிறையில் வைத்துத் தரணியெலாம் புகழுஞ்
சென்னிச் சுடரே சிவக் கொழுந்தே
துன்னிச் சிறைமீட்ட சிவகாம சுந்தரியே!

எந்தா யொருமருந்துச வாழ்வெனக்குண்டோ காவென்று
தந்தாயினியென் மாட்டோ தலைமுறை மூவேளுமினி
யுய்ந்தோ முய்ந்தோம எங்கட்கோர் குறையு மில்லையம்மா
செந்தாமரை வாழும் சிவகாம சுந்தரியே!

இப்புலவர் பாடிய பாடல்கள் தனியொரு நூலாகத் தொகுத்து வெளியிடும் சிறப்புப் பெற்றவை. இவர் வழிவந்தோரிடம் ஏட்டுப்பிரிதிகள் உண்டெனத் தெரியவருகிறது. அதனைச் செல்லரிக்கவிடாது ஆக்கமான முறையில் வெளியிட முன்வர வேண்டும்.

இணுவை முருகன்பேரிற் சின்னத்தம்பிப் புலவராற் பாடப்பட்ட ஊஞ்சற்பாட்டு முழுதுங் கிடைத்திலது. சில பாட்டுக்களே கிடைக்கப் பெற்றன. அதனால் திரு. மாணிக்கச் சட்டம்பியார் என்ற பெருமகனின் வேண்டுதலின் பேரால் இயற்றமிழ்ப்பேராசான் அ. க. வைத்தியலிங்கம் பிள்ளையவர்கள் சின்னத்தம்பிப் புலவர் பாடிய ஊஞ்சற்பாடலோடு தாமும் சில பாடல்களைப் பாடினார். பின் அந்நூல் அவர் மகன் திரு. வை. க. நாதன் அவர்களால் 1947 ஆம் ஆண்டளவில் ஸ்ரீ கல்யாணவேலவர் திருவூஞ்சல் என்ற சிறு வெளியீடாக வெளியிடப்பட்டது. அதிற் சின்னத்தம்பிப் புலவர் பாடிய பாடல்களிற் சில அடிகளை மாற்றி வெளியிட்டுள்ளனர். சின்னத் தம்பிப்புலவர் பாடிய பாடல்களிற் கிடைத்த நான்கினையும் கையெழுத்துப் படிவத்திற் கண்ட வண்ணம் காண்போம்.

செக்கர்பயில் பவளத்தூண் செறிய நாட்டிச்
செழுமைமிகு பதுமமணி விட்டம் ப+ட்டி
தொக்க தங்கப் பிரிவிணைத்த கயிறுகட்டித்
துலங்கு நவரத்தின மணிப்பலகை சேர்த்து
மிக்க மூத்தின் பந்தரிட்டு மாணிக்கச்சோடு
வெங்கவரி புனைந்தமணி யூஞ்சல்மீது
கைக்களிற்றின் இருந்துணையே யாடீ ரூஞ்சல்
கல்யாண வேலவரே யாடீ ரூஞ்சல்

திருவிளங்கு மதியாட நதியு மாடச்
செஞ்சடைக் காடாட முகமைந்து மாட
மருவிளக்கு சிவகாமவல்லி மனமகிழ்ச்சியாட
மங்கை சிவகாமவல்லி மனகமிழ்ச்சியாட
அருள்விளங்கு தொடையாட அழகமாட
அம்பலத்தே நடம்புரியும் எம்பிரான் றன்
கருணைபெறு பாலகரே யாடீரூஞ்சல்
கல்யாண வேலவரே யாடீ ரூஞ்சல்

இந்திரை கேள்வனும் அயனும் அருமறை
இறையவனு மிமையவரும் வடந்தொட் டாட்ட
சந்திரனும் மாதவனும் கவிகை தாங்கத்
தனதன் முதலோ ராலவட்டம் வீச
முந்து தவத்தினர் வேதகீதம்; பாட
முத்துநகை வள்ளிதெய்வானை யோடு
கந்தகுரு பரமுருகர் ஆடீ ரூஞ்சல்
கல்யாண வேலவரே யாடீ ரூஞ்சல்

தென்னினுவை நகர் வாழ்க அடியார் வாழ்க
சிவசமயம் வாழ்க வெற்றிச் செங்கோல் வாழ்க
மன்னு மறையவர் வாழ்க மாரி வாழ்கத்
மன்னுயிர்கள் குறைவின்றி மகிழ்ந்து வாழ்க
தன்னிகரி லொளி திகழுஞ் கெவ்வேல் வாழ்கத்
தனிமயிலுஞ் சேவலுஞ் சீர்பொலிந்து வாழ்கக்
கன்னியுமை பாலகரே பாடீரூஞ்சல்
கல்யாண வே லவரே யாடீரூஞ்சல்

எச்சரிக்கை
அத்தா பரிசுத்தா வெங்கட்கரசே யெச்சரீக்கை
அருளாறு நன்முகவா பசுபதியே யெச்சரீக்கை
சித்தாகிய வடிவம் பெறுமீதிருவே யெச்சரீக்கை
திருவே சுவைத்தேனே கடலமுதே யெச்சரீக்கை
குறுமாமுனிக் கருள்சீரிய குருவே யெச்சரீக்கை
கோலந்திகழ் மயிலேறிய குகனே யெச்சரீக்கை
வேலாவெந் துயர்சூரனை வென்றா யெச்சரீக்கை
விண்ணார் பொழிலிணுவை முத்துக்குமரா எச்சரீக்கை.

பராக்கு

அணிதிக ழிணுவைப் பதியமர்வோய் பராக்கு – ஆறிரண்டு
தோளுடைய வமரா பராக்கு
அன்பர் மனத்தி னன்பே பராக்கு – ஆனைமுகன்
பின்னுதித்த வையா பராக்கு
வள்ளி தெய்வானையம்மை வரனே பராக்கு – வானவரை
விண்ணேற்றி வைத்தாய் பராக்கு
வளமிகு மிணுவிற்பதி வதிவோய் பராக்கு – வடிவேலுடை
முத்துக் குமரா பராக்கு

லாலி

நித்த லாலி பரமுத்தலாலி யருள் நிமலனரு ளாறு முகனே லாலி
போதலாலி யருனீதலாலி பரனாதலாலி யுயர் வேதலாலி
ஜயலாலி யுயர் மெய்யலாலி மிருதுய்யலாலி முத்துக் குமாரலாலி
மேலலாலி இணுவிற் பாவலாலி விமானத்தடியிலமர் விமலலாலி.

இப்பாடல்கள் பற்றிய ஆய்வுரையும் இணுவை யூரைப்பற்றிய செய்தியும் கட்டுரை வடிவில் முன்பு ஆத்மசோதியில் என்னால் எழுதப்பட்டது. அதனை மறுத்து ஆத்மசோதி வெளியீட்டினர்க்குக் கடிதமும் மறுப்புக் கட்டுரையும் வந்தன. அதில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதனை எழுதியவர் குறிப்பிட்டிருந்தார். ஆயின் பின் அதனைப்பற்றி யாரும் ஒன்றும் பேசவில்லை.

தக்க சான்றுடன் மீண்டும் அதனை வலியுறுத்தும் வாய்ப்பினைக் கன்னியுமை பாலகர் தந்துள்ளார். திரு. வை. கதிர்காமநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட கல்யாண வேலவர் திருவூஞ்சலில் சின்னத்தம்பிப்புலவர் பாடிய பாடல்களின் அடிகள் சீர்கள் பல மாற்றப் பட்டதனைக் கீழ்வரும் பாடல்களிற் காணலாம்.

செக்கர் வெயில் பவளத் தூண்கள் நாட்டி
சிறந்த லொளி பொழிவயிர விட்டம் பூட்டி
தொக்க தங்கப் புரிபுனைந்த கயிறுமாட்டித்
துலங்கு செழும் பதுமமலர்ப் பலகை சேர்த்தி
மிக்க முத்தின் பந்தலிட்டு விதானம் போக்கி
வெண்கவரி புனைந்த திருவூசல் மீது
கைக் களிற்றினொரு துணையா யிணுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூஞ்சல்

திருவிளங்கு மதியாட நதியு மாடச்
செஞ்சடைக் காடாட முகனைந்து மாட
மருவிளங்கு தொடையாட வளக மாட
மங்கைசிவ காமி மனமகிழ்ச்சி யாட
அருள்விளங்கு பதஞ்சலியும் புலியு மாட
அம்பலத்தே நடம்புரியும் எம்பிரான் றன்
கருணைதங்கு பாலகரே இணுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூஞ்சல்.

இந்திரை கொழுநனும் சுதனும் வடந்தொட்டாட்ட
இமயவரும் இந்திரனுங் கவரிவீச
சந்திரனும் மாதவனும் கவிகை தாங்க
தனதன் முதலோரால் வட்டம்வீச
முந்து தவத்தினர் வேதகீதம் பாட
முத்தநகை வள்ளி தெய்வானை யோடு
கந்தமலர்ப்; பொழிலிணுவை வாழ்வு செய்யும்
கல்யாண வேலவரே யாடீர் ஊஞ்சல்

இம்மூன்று பாடல்களிலும் உள்ள மாற்றங்களைக் காண்போம். 1 ஆம் பாட்டில் 1 ஆம் அடியும் 2 ஆம் அடியும் 3 ஆம் அடியும் 4ஆம் அடியும் இடையிடையே சீர்களில் மாற்றம் பெற்றுள்ளதனை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. அஃதேபோல் 2ஆம் பாட்டின் 2ஆம் அடியின் சீரும் 3 ஆம் அடியின் சீரும் 4 ஆம் அடியின் சீரும் 3 ஆம் பாட்டில் 1ஆம் அடியின் சீரும் 3 ஆம் அடியின் சீரும் 4 ஆம் அடியின் சீரும் மாற்றப்பட்டிருக்கின்றன. இவை யாவற்றினையும் நடு நின்று ஆராய்வோர் உண்மை நிலையினை நன்கு உணர்வர்.

சிவகாமி அம்மன் ஊஞ்சல்

திருமார்ப நயன் முனிவர் தேவர் நாதன்
சித்தர் வித்யா தரராதி பத்தர் போற்ற
மருமாலை யிதழிபுனை பரமர் பாதம்;
மருவு சிவகாமி தன்மேல் ஊஞ்சல்பாட
நம்ப னடியவர் நினைந்த வரங்கணல்க
பரராச சேகர பூசிதனா முன்னோன்
பதும மலரடி யிணைகள் பரவுவோமே.

கொண்டல் வரை கனகவரை விட்டமாகக்
குலவு குலாசலங்கள் மணிக் கால்களாகப்;
பண்டமறை ஒரு நான்கங் கயிறதாக
அண்டர் நடுவமரர் சுராட் புருடன்றுள்ள
வரிகொள் நவரத்ன மணிப் பீடமாக
மண்டல மெல்லாம் புகழுமிணுவை வாழும்
மாது சிவகாமவல்லி ஆடீ ரூஞ்சல்

வி;ண்ணுலவு மிரு சுடர்கள் தீபமாக
விளங்கு பல தாரகைகள் விதாநமாக
தண்ணுலவு சந்தாந முதல வைந்தும்
தருமவர்கள் நறுமலர்ப் பூம் பந்தராக
எண்ணுலவு மிளந் தென்றல் கவரியாக
விலங்கு பகிரண்ட மணி மஞ்சமாக
அண்ணல் வளந்திகழ் இணுவைதனில் வாழும்
அம்மை சிவகாமவல்லி ஆடீ ரூஞ்சல்

செய்யவெண் டாமலர் இந்திரை சீர்வாணி
செகமுழுது நிழற்று வெள்ளைக் கவிகை கொள்ளத்
துய்யபகீ ரதிதவளக் கவரி வீசத்
தோகைய யிராணி செம்பொற் படிகமேந்த
ஐயை பைரவி முதலோரடப் பையஞ்சொல்
அங்சுக மஞ்சுங்குயில் கொண்டருகு நிற்பப்
பொய்யுமுகில் வளர்சோலை இணுவை வாழும்
பெண்ணரசி சிவகாமி யாடீ ரூஞ்சல்

தகர மணங்கமழ் பொன் மவுலி மி;ன்னச்
சசிக்கலைகள் மானு நெற்றியணிகள் துன்ன
மகரவணிக் குண்டலத் தோடிகலி நீல
வரிக்கயல்கள் பாயக் கழனியாம் பல்மேவ
நிகரிலா மைந்தர் சொரிநிலப் பூவார
நிரைவட முத்தரிய மிசைநிழல்கள் வீச
அத்கவளமும் பெருகும் இணுவை வாழும்
அம்மை சிவகாமவல்லி யாடீ ரூஞ்சல்

தும்புரு நாதர் முதலோர் கீதம்பாடத்
துய்ய வுருப்பசி முதலோர் நடனமாட
அம்பர மேலவர் பாரிசாத மேவு
மலர்மழை பொன்மழை போல வள்ளிவீசச்
செம்பதும கன்னிநரர் நாவு மாதுந்
திகழ் மாதரிரு கையினால் வடந்தொட்டாட்ட
அம்புவியில் நல்வளஞ் சேரிணுவை வாழும்
அம்மை சிவகாமவல்லி யாடீ ரூஞ்சல்

மந்திரமே முதலான வாதி தேவர்.
மன்றி நடராசரன்பர் மனதில் வாசர்
சிந்தை யுவந் தினிதிருக்கும் வானுலாவுந்
திங்கள் வயிரெனத் தி;கழ்கிம்புரி சேரொற்றைத்
தந்தனுடன் கந்தன் மடிமிசையே மேவச்
சகல வுயிர்களும் வானத்தரையோ ருய்யச்
செந்திருவா னிணுவைநகர் தன்னில் வாழும்
சிவகாம சுந்தரியோ யாடீ ரூஞ்சல்

கதிராரு மணியணி குண்டலங் களாடக்
கனக மணியணி வளைகொள் கவின்களாடப்
புத்தான கொண்டையணி குச்சு மாடப்
பொற்றருவின் மலர்மாலை பொலிந்தேயாட
மதிபோலு நுதலிலணிச் சுட்டி யாட
வனச மலரடியிணைகள் சிலம்பு மாட
அத்கவளமும் பெருகு மிணுவை வாழும்
அபிராமி சிவகாமி யாடீ ரூஞ்சல்.

பவர்முதலா முருத்திரர் பண்ணவர்கள் மூன்று
பத்துடனே முக்கோடி பதுமன் மாலோன்
இவர்களுட னிந்திரன் காலத் தீப்பேரோன்
இனியகூர் மாண்டனுட னாட கேசன்
தவர்களாக மங்கள் சதுர் வேதமோதத்
தசகோடி சக்திகளும் பாங்கின் மேவ
அவனி புகழிணுவை நகர்தன்னில் வாழும்
அபிராமி சிவகாமி யாடீ ரூஞ்சல்

உரகபதி நகரெட்டுங் கால்களாக
வோங்குபுவி தவிசிருப்பா யும்பர் மேலா
விரவுமொரு விதாநமா யுடுக்கள் பூவாய்
வீதுவுடனே கதிர்களொலி யாடி யாக
பொருவிலகி வாணட நிறை மன்றமாகப்
பொருந்தியுயிர் புரந்தருள மன்னர் மன்னன்
வரையரச னருள் குமரி இணுவை வாழும்
மாது சிவகாமவல்லி யாடீ ரூஞ்சல்

தந்துபரி ரவியூதை யாத்த மனங்காட்டித்
தருமருண விருவரை பொற்றம்ப நாட்டி
சுத்தமணி யவரைபோல் விட்டம் பூட்டித்
துருவமெனு மிருவடங்கள் தொட்டே யாட்டி
வைத்த செக மண்டலமாம் வளவில் மேவும்
சித்தமகிழ் நித்ய நடராச ரோடு
சிவகாம சுந்தரியே யாடீ ரூஞ்சல்

ஐயனே அம்மையே ஆடீ ரூஞ்சல்
அருளுதவு மாரமுதே ஆடீ ரூஞ்சல்
துய்ய வுபநிடதப் பொருளே ஆடீ ரூஞ்சல்
சோதியே ஆதியே ஆடீ ரூஞ்சல்
வையகத்தைப் பெற்றவரே ஆடீ ரூஞ்சல்
வானோர்கட் கரியவரே ஆடீ ரூஞ்சல்
செய்ய சிவாகப் பொருளே ஆடீ ரூஞ்சல்
தேவரொடு சிவகாமி ஆடீ ரூஞ்சல்

வாழி (அம்பிகை)

சங்கரர் தம்மிரு கருணை விழிகள் வாழி
சவுந்தரிய சிவகாம வல்லி வாழி
பொங்கு கடற்சூர் தடிந்த புலவர் வாழி
பூசுரரும் தோதனமும் பொலிந்து வாழி
ஐங்கரரோடரிய சேதர பாலர் வாழி
அரசர் செங்கோல்முறை வாழி அமரர்வாழி
தி;ங்கள்முகில் மும்மாரி பொழிந்து வாழி
செகம்புகழு மிணுவைநகர் சிறந்தே வாழி.

எச்சரிக்கை

திருவார் புகழிணுவைப் பதிகள் வாயெச்சரீக்கை
செல்வச் சிதம்பரமாம் வளவுறைவா யெச்சரீக்கை
அடியார்க் கருள்புரியுஞ் சிவகாமி யெச்சரீக்கை
அமராதிப நடராசர் தம்வாழி யெச்சரீக்கை
விண்ணோர்புகழ் கருணாநிதித் தாயே யெச்சரீக்கை
மி;ன்னேரிடை யணங்கேயருட் பரையே யெச்சரீக்கை
செந்தாமரை நேருத் திருவடிவா யெச்சரீக்கை
வந்தாதரித்தே நல்லருடருவா யெச்சரீக்கை
எல்லாவுரையு மீன்றருளிறைவீ யெச்சரீக்கை
எண்ணுங் கருமஞ் சித்திகளீவா யெச்சரீக்கை
அருமாதர்கள் பணியும் மலரடியா யெச்சரீக்கை
அருமாமறை முதல்வி சிவபரையே யெச்சரீக்கை
பச்சைத்திருமணி போலொளிர் வடிவா யெச்சரீக்கை
அன்னேயரு ளுருவேசிவ காமி யெச்சரீக்கை
அடைந்தேனுனை யெனக் கின்னருடருவா யெச்சரீக்கை

பராக்கு

ஏத்து மிணுவைப் பதியிலிருப்பாய் பராக்கு
எய்து சிதம்பர வளவிவிளைவீ பராக்கு
மூவுலகு மேத்து சிவகாமி பராக்கு
முத்த நடராசனருள் வாமீ பராக்கு
அன்பரினி தேத்து பராபரையே பராக்கு
ஆரமுத மன்ன மொழியணங்கே பராக்கு
உற்றவருக் குதவி செயுமுமையே பராக்கு
ஓங்கார மெய்ப்பொருளா யுறைவாய் பராக்கு
பண்ணவர்கள் போற்று மலர்ப் பத்தாய் பராக்கு
பச்சைமணி மேவிய சாம்பவியே பராக்கு
வைய முழுதுய்யவரு மானே பராக்கு
வாழ்த்து மடியேற்குதவ வருவாய் பராக்கு.

வைரவக் கடவுள்

மூதண்டரண்ட முங்கிடுகிடென வெண்டிக்கு முனிவருடனசுரர் தேவர்
முப்பத்து முக்கோடியுங் குலிசபாணியான் முகிலூர்தியுங் கோதிலாக்
கோதண்ட பாணியுட னம் போருகத்தனுங் குறையாத கந்தைதீர
கொடுவரியினத ழாடையை யானனத்தருள் கொண்ட வருமையமுறவே
மாதண்ட மென்றவர் செருக்கினுடனே குருதிவளவியே தின்பவற்குன்
மாறாத கருணைபொழி மறையானயூர்தியே வைரவக் கடவுளேயுன்
வேதண்டமியை புயவீரமாகாளிசூழ் மேதினியில் நாரர் யாரையும் மே
வாதகன்று பிணியோடவே நினதன்பு மிக்கவருள் செய்குவாயே

பத்திரகாளி

சீர்பூத்த தேமலர்ச்சி கழிகைச்சாமுண்டி சங்காரியை முக்கட்டேவி
கவுமாரி திரிசூலி யந்திரிகுமரி செய்யபட் டுடையசூரி
போர்பூத் திலங்கு நிணமுண் டொளிறுவை வேற்புய வரைந்தாருகனுடல்
பொடிசெய்த வெண்டோளி கங்காளி வேதாளி புண்டரீகவதனானானி
வார்பூத்த வண்டரள வடமிறுகி விம்மியே வளரிளங் கனதனத்தி
மாதங்கி நீலி கன்னிகை பரனுடனலாதாடு மரவுதாரி
நீர்பூத்த மகராளி யுலகெங்கணும் நிறைகருணை பொழி மேகமே
நித்ய பரிபூரணி உத்தமவிகாரணி நிகரில் பத்திரகாளியே.

கயிலாய நாதன் (இளந்தாரி)

சிங்கமுக நங்கை மைதிருத்தாட்கன்பு சேர்ந்தநதி குலகாலிங்கேந்திரன் சேயாம்
துங்கமிகு கயிலாயநாதன் கீர்த்தி துலங்கு செஞ்சொற் பஞ்சவர்ணத்தூது பாட
வெங்கள சேகரனையொரு கோட்டாற்கீன்ற விண்ணவர் சேகரனை மலைவேந்தன் மாது
பங்கில் வைத்த சந்திரசேகரன்றானீன்ற சேகரனைப் பணிகுவோமே.

சிவகாமியம்மன் தூது

நதிக் குலத்தி லுதித்திரு காலிங்க மன்னன் நற்றவத்தாற் பெற்றசுத நவகண்டங்கள்
துதிக்கு மிளந்தாரி கயிலாயநாத துரைமீது ஊஞ்சல்பாட புதுக்குழந்தை
மதிக்குழந்தை கமலத்தாளை பெருவரிய பூத்தாளைப் போற்றென் சென்னி
பதித்தாளை மதித்தாளை இணுவை வாழும்பரை சிவகாமித் தாயைப் பணிகுவோமே.

சுப்பிரமணியர்

சுப்பிரமணியச் சயிலமிசை சந்திரமோகினி யகிலத் தந்திபூட்டும்
துப்பிரமணியப் புயன் கயிலாயநாதன் மிசை பஞ்சவர்ணத் தூதுபாட
எப்பிரமணியப் படையோ டெதிர்த்திடு சூரூரத்தை வகிர்ந்திட்டவை வேற்
சுப்பிரமணியக் கடவுள் பொற்பதத்தை யெப்பொழுதும் பணிகுவோமே.

இணுவையூர்ப் பிரமுகர்கள் 5

அந்தணர் நடராசனார்.

இவர் செந்தமிழும் ஆரியமும் கற்றுணர்ந்த சான்றோர். அந்தணராகப் பிறந்து அந்தணராகவே வாழ்ந்தவர். மணிமந்திர வைத்தியத்தில் சிறந்தவர். நான்குவேதங்களையும் நன்குணர்ந்தவராக இருந்ததனால் வைத்தியத்திலும் மணிமந்திரத்திலும் தன்னிகரற்று விளங்கினார். பாம்பு கடித்த நஞ்சினைத் தீர்ப்பத்தில் மிக்க புகழுடன் விளங்கியவர். கடித்த பாம்பினையே அழைத்துக் கடிவாயில் இருக்கும் நஞ்சினை மீட்டெடுக்கச் செய்யும் தவவலி கொண்டவர். இலைச் சருகுகளை அள்ளிவீசிப் பாம்பாக ஓடச் செய்யும் சித்துப் பெற்றவர். அதர்வ வேதத்திற் கூறப்பட்டவற்றைச் செயல்மூலஞ் செய்து காட்டியவர். ஈழநாட்டிலும், இந்தியாவிலும் பெரும்புலவரெனப் புகழ்பெற்றவர். சிவஞான சித்தியாருக்குச் சிறந்த உரையெழுதியவர். இலங்கையிலும் இந்தியாயிலும் இவரிடம் கல்வி பயின்றோர் பலர். பாரதியார் இப்பெருமகனிடம் கல்வி பயின்றதாகவும் தெரிகின்றது. இவர் நாவலர் காலத்தவர். அவருடன் தொடர்பு பூண்டவர். ஆயுள்வேதக் கல்லூரி விரிவுரையாளராக விளங்கிய அந்தணர் பெருமகன் சாம்பசிவம் அவர்களும் வேதாகம பண்டிதர் சதாசிவம் அவர்களும் அந்தணர் நடராசனாரின் பரம்பரையினராவர்.

புலவர் அம்பிகைபாகர்

இவர் சிலேடையாகப் பேசுவதிலும் பாடுவதிலும் பெரும்புகழ் கொண்டவர். இவர் இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பெரும் புலவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர். கடினமானதெனக் கருதப்பட்ட தணிகைப் புராணத்திற்கு உரை எழுதிப் புகழ் கொண்டவர். இணுவிற் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவித் தமிழும் சைவமும்;;; வளர்த்தவர். நாவலர் அவர்களுடன் அன்புறவு பூண்டவர்.

திரு. மு. சின்னத்தம்பிச் சட்டம்பியார்

இவர் சிறந்த புலவர். பல நாடகங்களை எழுதியவர். இவர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாடக வளர்ச்சி மிகச் சிறந்த நிலையினைப் பெற்றிருந்தது. இந்திய நாடக அறிஞர்களான எம். ஆர். கோவிந்தன் - சங்கரதாஸ் சுவாமிகள் - சுப்பிரமணியனார் போன்றோர் இங்கு வந்து பல நாடகங்களை நடாத்திய காலத்தில் அந்நாடகங்களுக்குச் சின்னத்தம்பிச் சட்டம்பியார் பாடல்கள் எழுதியுள்ளார். பல ஊர்களிலிருந்து நாடக அறிஞர் சின்னத்தம்பிச் சட்டம்பியாரிடம் வந்து தொடர்பு கொண்டனர். இதனைப் பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை. பேராசிரியர் திரு. வி. செல்வநாயகம் ஆகியோர் தமது சொற்பொழிவுகளிற் பாராட்டியுள்ளனர்.

சேதுலிங்கச் சட்டம்பியார்.

நிகண்டு - இலக்கணம் - இலக்கியம் - சமயம் - சோதிடம் என்பனவற்றைத் துறைபோகக் கற்றவர். அவரிடம் கல்வி பயின்றோர் எண்ணில் அடங்கார். காவியங்களுக்கும், புராணங்களுக்கும் உரை கூறுவதிற் சிறந்தவர். கூட்டுவழிபாட்டியக்கத்தை இணுவிலில் நிலைபெறச் செய்தவர். இராப்பாடசாலை வைத்துப் பயன்கருதாது சமய அறிவினையும் - இலக்கிய இலக்கண அறிவினையும் நீதிநூல்களையும்; இணுவை மக்களுக்கு ஊட்டியவர். அவரை இணுவை நாவுக்கரசர் எனப் போற்றுவார்கள்.

அ. வைத்தியலிங்கம்பிள்ளை

இவர் பெரும் புலவர். அம்பிகைபாகர் அவர்களின் மகன். சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராக இருந்தவர். புராணங்களுக்கு உரைசொல்லுவதில் வல்லவர். ஸ்ரீ கல்யாணவேலவர் திருவூஞ்சல் என்னும் ஊஞ்சற் பாடல்களைப் பாடியவர். சின்னத்தம்பிப் புலவர் பாடிய பாடல்களுடன் இவரின் பாடல்களும் அதில் இடம்பெற்று இவரின் மகன் அ. வை. க. நாதன் அவர்களால் கலாநிதி உ. வே. சாமிநாதையர் அவர்களின் முன்னுரையுடன் 1947ஆம்ஆண்டில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இவர் மகன் அ. வை. க. நாதன் அவர்கள் செந்தமிழும் ஆரியமும் கற்றுப் புலமை பூண்டவர். பெருங்கதைக்கு சிறந்த உரைகண்டவர்.

கேசவச் சட்டம்பியர்
பெரிதம்பிச் சட்டம்பியர்.

இவர்கள் சிறந்த தமிழறிவுடைய பெருமக்கள். புராண இதிகாசங்கட்கு உரைவிளக்கம் செய்வதில் வல்லவர்கள். வேதாந்த சித்தாந்த அறிவுமிக்கவர்கள். அன்பு வாழ்வினை மேற்கொண்டவர்கள்.

தவத்திரு வடிவேற் சுவாமிகள்

இவர்கள் இணுவை ஞானசம்பந்தர் என்றும் அப்பர் என்றும் - அம்மான் என்றும் அழைக்கப்பெறும் தகவுடையோராவர். முன்பும் இவரைப் பற்றிக் கூறப்பட்டபோதும்; மீண்டும் உரைக்க வேண்டிய கட்டாயம் ஒன்றுண்டு. அன்னார் வேதாந்த – சித்தாந்த அறிவுமிக்கவர். சமய வகுப்புக்களை நடத்திச் சமய அறிவு புகட்டியவர். இவரால் இணுவை நொச்சியம்பதி முருகன் தோத்திரம் பாடப்பட்டுள்ளது. இன்று உருத்திரபுரம் மகாதேவ ஆச்சிரமத் தலைவராகவிருக்கின்றார்.

திரு. சி. ஆறுமுகதாசர்

இவர்சிறந்த சிவநெறிச் செல்வர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் மிக்க புலமையுடையவர். ஆசிரியராகத் தமது வாழ்வை நடாத்தியவர். செந்தமிழும், ஆங்கிலமும் கற்ற நல்லறிஞர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றினை நாடகமாக அமைத்து மாணவர்மூலம் பக்தி நெறியினை வளர்த்தவர். இளவயதில் தானே பல நாடகங்களில் நடித்துச் சமயக் கருத்துக்களைப் பரப்பியவர். இன்று இணுவையில் வாழும் பெருமக்களுள் ஒருவர். செயலாலும், பேச்சாலும் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்த தத்துவஞானி. வயலின் வாசிப்பார். சங்கீத கதாப் பிரகங்கம் செய்வார்.

திரு. தா. வைத்திலிங்கச் சட்டம்பியார்.

சட்டம்பியார் என்று அழைத்தால் அது திரு. தா. வை. அவர்களையே குறிக்கும். அந்த அளவுக்கு ஊர் மக்கள் மத்தியில் சிறப்புப்புகழ் பெற்றிருந்தார். சொற்களுக்குப் பொருள் விரித்துரைப்பதில் வல்லவர். சிறந்த கல்விமான். உரையாசிரியர், சிறந்த குருபரம்பரையில் வந்தவர். சைவநெறி நின்று வாழ்ந்த குடும்பத்தில் தோன்றியவர். பெரிய சன்னாசியாரின் புராணப் படிப்பை நிறைவேற்றி வந்தார்.

திரு. சு. சதாசிவச்சட்டம்பியார்

திரு. சு. சதாசிவச்சட்டம்பியார் அவர்கள் இன்று எம்மத்தியில் சதாசிவமாக வாழும் பெருமகன். வைத்தியலிங்கச் சட்டம்பியாருக்குச் சகோதரர் உறவுக்குரியவர். வேதாந்த வித்தகர். எம்மத்தியில் நடமாடும் தத்துவஞானி. புராணம் வாசிப்பார். பெரிய சன்னாசியார் முன்னிலையில் திருவருட்பாக்கள் ஒதும் பாக்கியம் பெற்றவர்.

‘மாணிக்கச் சட்டம்பியார்’

இவர்சிறந்த இலக்கணப் புலவர். இணுவையூர்க் கல்விமான்களின் பிதாமகராக எண்ணத்தகும் பெருமைக்குரியவர். இணுவையூரின் ஆத்மீக விடுதலைக்கு வித்திட்டவர். போர்க்களம் கண்ட வீட்டுமன் போல் சொற்களமும், சட்டக் களமும் பல கண்டவர். பஞ்சலக்கண வித்துவான்.

திரு. க. கந்தசுவாமி

சிறந்த சமய அறிவும், இலக்கண இலக்கிய அறிவும் கொண்டவர். குடும்ப நலனும், சமூக நலனும் சிறக்க இல்வாழ்வைத் துறந்து கர்மயோகியாகத் திகழ்பவர். பாடநூற் திணைக்களத்தில் நூல்வெளியீட்டுக் குழுவில் பணிபுரிபவர். தம்மைப்போற் சிறந்த மாணவர்களைச் சமூகத்திற்கு உருவாக்கி அளித்தவர். சமூகத் தொண்டினையும், சமயத்தொண்டினையும் தமது வாழ்வாகக் கொண்டவர். ஈத்துவக்கும் அன்புள்ளங் கொண்டவர். சிறந்த சான்றோர். கண்ணியம் மிக்க ஆசான். எடுத்த கருமத்தை அயராது நின்று முடிக்கும் ஆற்றல் படைத்தவர்.

திரு. வ. நடராசா

இணுவில் சைவமகாசன வித்தியாசாலை முதல்வராகவிருந்து ஒய்வு பெற்றவர். சிறந்த மாணவர்களை உருவாக்கியளித்த பெருமைக்குரியவர். இயற்றமிழ் ஆசிரியர். கண்ணியம் மிக்க பெருமகன். இணுவைக் கந்தசுவாமி கோயில் அறக்காவலரில் ஒருவராகப் பணிபுரிபவர்.

திரு. செ. இராசதுரை

இவர் சேதுலிங்கச் சட்டம்பியார், பண்டிதர் கார்த்திகேயன் ஆகியோரின் நெருங்கிய உறவினர். மாணிக்கச் சட்டம்பியாரின் மாணவர். சிறந்த இயற்றமிழ் ஆசானாகத் திகழ்பவர். ஆடற் கலைஞர் அனுமான் கதிர்காமரின் மகள் வயிற்று மகன். இன்று புராணத்திற்குப் பயன் உரைக்கும் பணியினை மேற்கொண்டு வாழ்பவர். ஆசிரியராக தன் வாழ்வினைத் தொடங்கி வெள்ளிவிழாக் கண்டு வெற்றிபெற்றவர். தமது அறுபது ஆண்டு நிறைவிலும் இளைஞர்போற் துள்ளித்திரிபவர். குரல் இனிமையும் பண்ணிசைத்திறனுமுடையவர். கருத்தாளம் மிக்க உரையினைக் கூறுவதில் ஆற்றல் மிக்கவர். ஆசிரியத் தொழிலிலிருந்து ஓய்வுபெற்றபின் உணவுற்பத்தியில்; ஈடுபாடுடையவராகத் தமது வாழ்வினை மேற்கொண்டுள்ளார். அம்பலவாணக் கந்தசுவாமி ஆதீனத்திலும் மற்றுமிடங்களிலும் புராணத்துக்கு உரையாற்றி வருகின்றார்.

பண்டிதர் க. கார்த்திகேசன் (சரவணமுத்து)

இவர் இயற்றமிழ்ப் புலவராகவும், இசைத் தமிழ்ப்புலவராகவும், நாடகத்தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். சேதுலிங்கச் சட்டம்பியாருக்கு மருகர் உறவுகொண்டவர். தவத்திரு வடிவேற் சுவாமிகளின் மருகர். வேதாந்தமடத் தலைவராக விருந்த மகாதேவ சுவாமிகளின் மேற் பல பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் பல கிட்டவில்லை. சிறுவர் பாடலாகப் பல பாடியுள்ளார். அவையும் கிட்டவில்லை. கிட்டியதில் ஒன்று:

திவ்ய ஜீவன சங்கம் யாழ்ப்பாணம் - கிளை
பிரபல நியாயவாதியும், திவ்ய ஜீவன சங்கத் தலைவருமான சூரசங்காரம்.

“மாமா வீட்டு முற்றத்திலே
மாமரம் ஒன்று நிற்கிறது.
பொன்னைப் போலே பூப்பூக்கும்
பூவுக் குள்ளே பிஞ்சிருக்கும்
பச்சை மணிபோற் காய்காய்க்கும்
பவளம்போலே பழம் பழுக்கும்
அணிற்பிள்ளை வந்து கொத்தாமல்
அடிப்பேன் மணியைப் பிந்தாமல்
இன்றைக்கு மாமா கூப்பிட்டார்
இனிப்பான பழந்தந்தார் சாப்பிட்டேன்
ஒருபோதும் பொய் சொல்லமாட்டேன்
கையை மணந்து பார்த்தால் தெரியும்”

இவர் தமது இளமைக் காலத்திலே இயற்கை எய்தியது இணுவையின் தவக்குறையேயாகும்.

பண்டிதர் சபா ஆனந்தா டீ. யு. டீ. ழு. டு.

இவர் புகழ்பெற்ற கல்விமான். கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். செந்தமிழும் ஆங்கிலமும் கற்றுச் சிறந்த இயற்றமிழ் ஆசானாகத் திகழ்பவர். கேட்போரை மெய்மறக்கச் செய்யும் நாவன்மை கொண்டவர். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டச் சமயச் சொற்பொழிவுகளையும், இலக்கிய இன்பம் மீதுர இலக்கியச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர்.

திரு. இ. இரத்தினம் - திருமதி இரத்தினம்

இவர்கள் இருவரும் தமிழும் ஆங்கிலமும் கற்ற அறிஞர்கள். ஆங்கில நூல்களில் உள்ள சிறந்த கருத்துக்களைத் தமிழாக்கம் செய்து வருகின்றனர். இலங்கை வானொலியில் திருமதி இரத்தினம் கடமை புரிகின்றார். திரு. இ. இரத்தினம் அவர்கள் வெளியீட்டுத் திணைக்களத் தலைவராக இருப்பவர். இவர் காந்தியநெறிப் பற்றுடையவர்.

திரு. கா. செ. நடராசா டீ. யு

தமிழா விழித்தெழு, இளங்கோவின் கனவு, இணுவிற் கந்தசுவாமி கோயில் விடுதலை இயக்க வரலாறு. தலவாக்கொல்லை திருமுருகன் ஊஞ்சல் ஆகிய நூல்களின் ஆசிரியர். தனிக்கவிதைகளும் - கட்டுரைகளும் எழுதி வருபவர் – யாழ்ப்பாணம் தேவன் அவர்களின் கவிதைத் தொகுப்பில் இவரின் கதைகள் இடம்பெற்றுள்ளன. இவர் இணுவையூர் செ. நடராசன் என்ற பெயரில் அவற்றை எழுதியுள்ளார்.

திரு. ந. வீரமணி ஐயர்

முத்தமிழ் புலவராக விளங்குபவர். சிறந்த நாட்டிய நாடகங்களை எழுதியுள்ளார். இவரால் தென்னிந்தியாவிலுள்ள மயிலாப்பூர்த் திருத்தலம் கொண்ட தெய்வத்தின்மேற் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. “கற்பக வல்லிநின் பொற்பதங்கள் பிடித்தேன்” என்ற பாடல் இசையமைக்கப்பட்டு சீர்காழி கோவிந்தராசனால் பாடப்பட்டது. “உன்னை நான் காண்பதெங்கே”, “உள்ளம் உருகுதையா” போன்ற தமிழ்க் கீர்த்தனங்கள் இவராற் பாடப்பட்டு புகழ்பூத்த இசையறிஞர்களால் இசையமைக்கப்பட்டுள்ளன. ஐயரவர்கள் குறவஞ்சி – நாட்டிய நாடகம் - பக்திப் பாடல்கள் என்பவற்றினை எழுதி வெளியிட்டுள்ளார். இன்னும் பல வெளிவரவுள்ளன. இசையாராய்வு நிகழ்த்தி மேளகர்த்தா இராகங்கட்கு அமையப் பல கீர்த்தனங்களை அமைத்துள்ளார். மக்கள் அன்னாருக்கு “இயலிசைவாரிதி” யென்ற சிறப்புப் பெயரையிட்டு அழைக்கின்றனர். ஊர்ப்பற்றும், கலைப்பற்றும் கொண்ட கலைஞர். பிதாமகர் நடராசையர் கால் வழித் தோன்றல். நாட்டியப் பேரரசனாக அரசினர் ஆசிரிய கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றார்.

க. ச. ஆனந்தன்

இவர் சிறந்த நாவல் ஆசிரியர். சிறுகதை ஆசிரியர். நாவல், சிறுகதை என்பவற்றில் நலனாய்வுத் திறன் கொண்டவர். இவர் எழுதிய நாவல்கள் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. அவை நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளன. இளைஞர் ஆகிய இவர் துடிப்பும் கண்ணோட்டமும் கொண்ட நல்ல ஆக்க இலக்கியம் படைக்கும் ஆற்றல் கொண்டவர். இவர் புனைபெயரிலும் தன் சொந்தப் பெயரிலும் ‘ஈழநாடு’ பத்திரிகையிலும், சுதந்திரன் பத்திரிகையிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். அவரின் எதிர்காலம் மிகவும் ஒளியுள்ளதாகவே தோன்றுகின்றது. இளைய தலைமுறையின் உள்ளத் துடிப்பாக விளங்குபவர். அவர் கதைகளில் ஆத்மீக உயிர் ஓட்டமும் சேருமாயின் அவை காலத்தால் அழியா இலக்கியமாக இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

பண்டிதர் சா. வே. பஞ்சட்சரம்

இவர்பிறவிக் கவிஞர். சிறு வயதிலேயே கவிதை பாடும் ஆற்றல் கொண்டவர். இவரின் தனிக் கவிதைகள் பல இலங்கைத் தின வெளியீடுகளிலும், வார வெளியீடுகளிலும் வெளிவந்துள்ளன. இவர் வெளியிட்ட கவிதைக்குச் சாகித்திய மண்டலப் பரிசில் கொடுக்கப்பட்டுள்ளது. இவரால் எழுதப்பட்ட கவிதைத் தொகுதிகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இளங்கவிஞர்களில் நல்ல இடத்தினைத் தனக்கு ஏற்படுத்திக் கொண்டவர்.

சபா. ஜெயராசா டீ. நு. னு

இவர் மாணவப் பருவத்திலேயே கட்டுரைகளும் கவிதைகளும் எழுதும் ஆற்றல் கொண்டவராக இருந்தார். இவரால் எழுதப்பட்ட பாடல்கள் தின – வார வெளியீடுகளில் வந்துள்ளன. கல்விப்பட்டதாரியான பின் உளவியல், கல்வி என்பனபற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவை நூல் வடிவில் வரவேண்டும். அத்தகைய பணியினைச் செய்யும் ஆற்றலும் வளமுங் கொண்ட திரு. சபா. ஜெயராசா அவர்கள் தமது ஆய்வுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட முன்வரவேண்டும்.

கலையும் வாழ்வும் 6

இசையும் கூத்தும்

மக்கள் வாழ்க்கையின் நோக்கம் தம் வாழ்வில் இன்பம் பெறுவதை அடிப்படையாகக் கொண்டதாகும். அவ்வின்பம் நிலையாகக் கிடைக்க வேண்டுமாயின் அதற்கு ஆத்மீக வாழ்வின் அமைதி வேண்டும். இவ்வமைதிக்கு உயிரின் உள்ளார்ந்த உந்துதலே அடிப்படை. இனிமைக்குரிய உந்தல் உள்ளிருந்து எழும்பும் அனாகத ஒலியால் ஏற்படுவது. இதனை அவனருளால் அவன் தாள் வணங்கும் மெய்யுணர்வுடையோரே உணர்ந்து கொள்வர். மற்றையோர் அதனை உணர்வதில்லை. அதனால் அகத்தெழும் உந்தல்களுக்குப் புறத்தே இன்பந்தேடும் நிலையுருவாகின்றது. அவ்வெழிச்சி நிலைதான் இன்பியற் கலைகளின் தோற்றமெனலாம். அதனால் ஆதமீக உணர்வுடையோர் உலகியலோடு கலையை இணைத்து அதன் வாழ்வுக்கும் ஆக்கமளித்தனர். அதன்மூலம் பொதுமக்களுக்கும் வழிகாட்டினர். சமய வாழ்விலும் கலையை இடம்பெறச் செய்தனர். இவ்வகைப் பணிகளினால் கோயில்களே கலை வாழ்வின் பிறப்பிடமாகத் திகழ்ந்தன.

இசையமைதியுடன் கோயிற்களிற் புராணம் காவியம் - என்பன படிக்கப்பட்டன. அவற்றிற்கு உரை சொல்வதும் - அவற்றில் வரும் நிகழ்ச்சிகளுக்கேற்ப நடிப்பதும் - உரையாடல்கள் செய்வதும் - பண் அமைதியுடன் பாட்டுக்களைப் பாடுவதும் கோயில்களில் இடம்பெற்றன. அந்நிகழ்ச்சிகளில் இசைக்கருவிகள் முழங்குவதும் - அம்முழக்கம் உள்ளத்தினை யூடுருவி வாழ்வியலுக்கு ஊக்கமும் - ஆக்கமும் அளிப்பதனை வாழ்வில் அமைதிகண்டோர் நன்குணர்வர். ஓசையொலி எல்லாமான இறைவனின் ஓங்கார நாதத்தினை அகத்தே கேட்டுணரும் திறனற்ற மக்கள், தமதுபுறத்தே எழும்ஓசை ஒலியினால் ஈடுக்கப்படுகின்றனர். இசையும் - கூத்தும் அவர்களின் அக்கதவினைத் தட்டுகின்றன. வாய்ப்பு ஏற்படும் போது அகக்கதவு திறந்து பேருணர்வு வயப்படுகின்றனர். இதனை உணர்ந்த சான்றோர்கள் கோயில் விழாக்களிலும் - பொது நிகழ்ச்சிகளிலும் இயல் - இசை - கூத்து என்பவற்றை இடம் பெறச் செய்தனர். தமிழர்கள் தம்மைத்தாமே ஆண்ட உரிமையுடையோராக இருந்த காலத்தில்@ மன்னர்களும் - மன்னர் பேராளர்களாக இருந்த ஆளுங்கணத்தாரும் மக்கள் நலன் கருதிக் கலைகளைப் பேணி வளர்த்தனர். அந்த வகையிற் பேராயிரவனும் - கைலாயநாதனும் (இளந்தாரி) கருணாகரரும் இணுவையின் கலைவாழ்வுக்கு ஆக்கம் அளித்தனர். ஆட்சி கைநெகிழ்ந்த காலத்தில் கலையினைப்பேணும் பொறுப்பு பெரு மக்களுக்கும் துறவியாக்கும் உரியதாகிவிட்டது.

குடிபுரந்த மன்னர்களும் - ஆளுங்கணத்தாரும் செய்த கலைப்பணிகளைச் சமயநிறுவனங்களும் - சமயத் தலைவர்களும் செய்ய முன் வந்தனர். அத்தகையவர்களில் ஒருவரே இணுவையூர் அப்பர். மஞ்சத்தடிக் கந்தசுவாமி கோயில், இணுவைக் கந்தசாமி கோயில், காரைக்காற்சிவன் கோயில் ஆகியவற்றில் கலைநிகழ்ச்சிகளை இடம் பெறச் செய்து தமிழின் சிறப்பை இணுவையில் ஓங்கச் செய்தார். இணுவையூர் மணமக்கள் இல்லம் போல் பொலிவுபெற்று என்றும் இசை ஒலி கேட்கும் திறத்தினை வளர்த்தார். அப்பா செய்த பணியினால் இவ்வூரில் எந்நாளும் மங்கல இசைக்கருவிகளின் நாதத்தினைக் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. பாட்டிசையினால் வழிபடுவோரின் பக்தியுணர்வில் நாமும் ஒன்றி இன்பம் பெற முடிகின்றது. இதனை இணுவை மண்ணின் சிறப்பியல்பென்றே கூறலாம்.

இணுவைப் புலவர்கள் பாடல்கள் பலவற்றினை ஆக்கினர். கூத்தியற்றுவோர்க்காக உரையிடையிட்ட பாடல்களையும் யாத்தனர். அதனைக் கூத்தியற் கலைஞர்கள் நடித்து மக்களுக்கு அறிவினையும் - அறத்தினையும் உணர்த்தினர். அதில் முன்னணியிலிருந்தவர் திரு. மு. சின்னத்தம்பிச் சட்டம்பியார் என்பதனை இணுவையும் தமிழும் என்ற பகுதியிற் கண்டோம். கூத்தியற் கலையிற் சிறந்தவர்களாகக் கருதப்பட்டபலர்@ இணுவையூரில் இருந்தனர். அவர்களில் முன்னணியிலிருந்தவர்கள் தாம் நடித்த நாடக பாத்திரங்களின் பெயர் கொண்டு அழைக்கப்பட்டனர். அதனால் அவர்களின் இயற்பெயர்கள் மறைந்து கதாபாத்திரங்களின் பெயர்களே நிலைபெற்றன.

இராமர் – அனுமான் - நாரதர் – அங்கதன் - வேடன் - பண்டாரக்கிழவன் - கோவலன் - நம்பி அரசன் - கீசகன் - சங்கோதி - இலங்கை இராசசிங்கன் - மயில் இராவணன் - சீதை போன்ற பெயர்கள் நாடக பாத்திரங்களினால் ஏற்பட்ட பெயர்களாகும்.

அனுமான் கதிர்காமர்.

இவர் அனுமானாக நடித்துப் பெரும்புகழ் கொண்டவர். காவடியாட்டக் கலையிற் றன்னிகரற்று திகழ்ந்தவர் நாட்டுக்கூத்துகள் பல ஆடியவர்.

இராமர் கந்தர்

இசையுடன் பாடுவதில் வல்லவர். வைத்தியநாதச் சைவக் குருக்களின் இசை மாணவர்.

சாமிவேடன் சண்முகம்.

இவர் சிறந்த நடிகர்.

பண்டாரக்கிழவன் கார்த்திகேசு

பண்டாரக்கிழவனாக நடித்துப்புகழ் கொண்டவர்.

நம்பியரசன் பொன்னையா

நம்பியரசன் பாத்திரத்தினை ஏற்று நடித்துப் புகழ்கொண்டவர். காவடி விளையாட்டுக் கலையிற் சிறந்தவர். ஆளுமைமிக்க தோற்றப் பொலிவுடையவர்.

சுப்பிரமணியர் சி. விசுவலிங்கம்

வள்ளியம்மன் நாடகத்தில் சுப்பிரமணியராக நடித்துப் புகழீட்டியவர்.

நாரதர் முதலித்தம்பி

நாரதராக நடித்துப் புகழ்கொண்டவர். இசையுடன் பாடுவதிலும் நகைச்சுவையுடன் பேசுவதிலும் வல்லவர்.

வள்ளியம்மன் வேதவனம்

வள்ளியாக நடித்துச் சிறப்புப் பெற்றவர். பெண் பாத்திரமேற்று நடிப்பதில் வல்லவர். பல ஊர்களிலும் நடித்துள்ளார். இவர்கள் அனைவரும் நாட்டுக்கூத்தினை வளர்த்த கலைஞர்கள். சொந்தத் தொழிலான உணவுற்பத்தியினைத் தமது வாழ்வியலாக அமைத்துக் கொண்டவர். பணத்திற்காக கூத்தியற்றாது மக்கள் இன்பத்திற்காகக் கூத்தியற்றிய நற்குடிப் பெருமக்கள். தமது உழைப்பின் பயன்கொண்டே கலையை மக்களுக்காகப் பேணியவர்கள். இவர்கள் கூத்தியற்றும் அரங்காக@ மஞ்சத்தடிக்கும் சிவகாமி அம்மன் கோயிலுக்கும் இடைப்பட்டிருந்த பெருவெளியே பயன்பட்டது. இன்று அவ்விடம் குடிகள் செறிந்த இடமாக மாறிவிட்டது.

மேடைக் கூத்தியற் கலையில் வல்லவர்களான எம். ஆர். கோவிந்தசாமி, சுப்பிரமணியஐயர், கிட்டப்ப, பெரியசீனிவாசகன், பாப்புச்சாமி, சண்முகதாஸ் காத்தமுத்து, அரங்கநாயகி, இராசலட்சுமி, கருப்பையாச் சேர்வை, சாப்புச் சான் சாய்பு போன்ற கலைஞர்கள் ஈழம் வந்த போது அக்கலைஞர்கட்கு நிகரான கலைஞர்களை இணுவையூரே உருவாக்கிக் கொடுத்தது. அண்ணாவி சுப்பராயர் பாட்டுக்களை எழுதியும், பின்ணனி பாடியும் இந்தியக் கலை வல்லோர்க்கு ஈடுகொடுத்ததனைப் பலர் கூறக்கேட்டுள்ளேன். இவர் எம், ஆர். கோவிந்தசாமிபோன்று கூத்து மேடையில் நினைத்தவுடன் இசையுடன் கவிபாடும் ஆற்றல் மிக்கவர். சீதையாக நடித்துப் புகழ் கொண்டவர். பக்கப்பாட்டுப் பாடுவதிலும் மிகச் சிறந்தவர். இவரின் உடன்பிறந்த சகோதரரான திரு. நாகலிங்கம் சிறந்த நடிகர். இசைப்புலவர், கூத்தில்@ சிறந்த நாடக பாத்திரங்களையே நடிப்பவர். அனேகமாக அவை கதாநாயக பாத்திரங்களாகவே அமைந்திருந்தன. அன்று அதனை “இராஜபாட்” என அழைத்தனர். “இராஜபாட்” நாகலிங்கம் - நடிகவேள் நாகலிங்கம் - இலங்கைராசசிங்கன் எனப் பலராலும் பாராட்டப்பட்டவர். புகழ்பெற்ற இந்தியக் கலைஞர்களான எம். ஆர். கோவிந்தசாமி – கிட்டப்பா போன்றவர்களுடன் ஒரே அரங்கில் தகவுடன் நடித்துப் புகழ்கொண்டவர். அக்காலத்தில் இந்தியா – மலேசியா – சிங்கப்பூர் போன்ற நாடுகட்குச் சென்று கூத்தியற் கலையிற் புகழ் கொண்டவர். அன்னாரின் வழித்தோன்றல்கள் சிங்கப்பூரிலும், இணுவையிலும் இன்றும் வாழ்கின்றனர். இவர் சிறந்த தமிழ்ப் பல்லவிகளையும் - உருட்டுப் பதங்களையும் - தமிழ்க்கீர்த்தனங்களையும் கற்பனைத்திறம் பொலியப்பாடுவதில் வல்லவர். நடிப்பிலும், இசையிலும் நாகலிங்கம்பாணியென ஒன்றை உருவாக்கியவர். சுப்பராயரின் மகன் கலைமணி வடிவேல் அவர்களின் சிறியதந்தை கலைமணி வடிவேல் தந்தைவழி வந்த கலையில் வல்லவராக இன்று வாழ்கின்றார்.

அண்ணாவி ஏரம்பர் நாட்டுக் கூத்தினையும், மேடைக் கூத்தினையும் பயிற்றிய சிறந்த கலைஞர். காவடியாட்டக் கலையில் சிறந்த அண்ணாவியராகத் திகழ்ந்தவர். “தத்தித் தாகச சொம்” என்றுஅவர் தாளம் தட்டும் போது அவரது உடலின் அசைவும் - கால்களின் அசைவும் தத்தித்தாகச சொம் என்றே ஒலித்தன. இலங்கையின் பல இடங்களுக்கும் சென்று அண்ணாவி மரபினைப் புகழ் மணக்கச் செய்தவர். இவருக்குத் துணையாகச் சின்னத்தம்பிச் சட்டம்பியார் பணிபுரிந்தார். கூத்தியல் அமைதிக்கேற்ப மேடைக்கூத்துக்களைய் உரை பாடல்களையும் பாடல்களையும் எழுதியுதவினார். அண்ணாவி ஏரம்பரின் மக்களான கதிர்காமத் தம்பி – சுப்பையா ஆகிய இருவரும் தந்தைவழிப் புகழை நிலைநிறுத்தும் வன்மை பெற்றவர்கள். இவ்விருவரில் மூத்தவரான கதிர்காமத்தம்பி தன் இளம் வயதிலேயே இயற்கை எய்திவிட்டார். அவரின் இழப்பு வைத்தியக் கலைக்கும், கூத்தியற் கலைக்கும் ஏற்பட்ட இழப்பாகும். இவரின் இளவல் திரு. சுப்பையா கூத்தியற்கலையிலும் - பரதக் கலையிலும் சிறந்தவர். தந்தையின் காவடியாட்ட கலையிலும் வல்லவர். இவர் கொக்குவில் என்ற ஊரகத்து கல்லூரியமைத்துத் தம் கலையை மாணவர்க்குப் பயிற்றிவருகின்றார். அண்ணாவி மரபில் வந்து தற்கால நெறிகளையும் கற்றுச் சிறந்த கலைஞராக வாழ்பவர். இந்திக்கலையறிஞர் கோபிநாத் அவர்களிடம் கலைபயின்றவர். கல்லூரிகளில் பரதக் கலைகற்பிக்கும் ஆசிரியராக கடமைபுரிகிறார்.

திரு. கா சிவக்கொழுந்து என்பவர் திரு. எம். ஆர். கோவிந்தன் அவர்களுடன் பாலபாட்டாக நடித்தவர். புராண இதிகாச அறிவும் குரல் இனிமையுங் கொண்டவர். சிறந்த பண்பாளர்.

இணுவையூரில் நாடகங்களை நடாத்தி நெறிப் படுத்தியவர். திரு. க. கதிர்காமர். ஆற்றலும் ஆளுமைப் பொலிவுங் கொண்டவர் ஊர்மக்களால் “ஏச்சண்டர்” என அன்பாக அழைக்கப்பட்டவர். இவரின் இயற்பெயர் வழக்கிழந்து ஏச்சண்டர் என்ற பெயரே நிலைபெற்றது. இவர்களின்பின் சிறந்த மேடைநடிகர் திரு. வி. மாசிலாமணி, திரு. பெ. கந்தையா, திரு. சி. இராதமநாதன், திரு. நா. பொன்னுத்துரை, திரு. ம. வேலுப்பிள்ளை, திரு. மு. தம்பியையா ஆகியோர் மேடைக்கூத்து வளர்;ச்சியிற் பங்கு கொண்டனர். இவர்களில் திரு. வி; மாசிலாமணி சிறந்த கலைஞராகத் தன்னை உயர்த்திக் கொண்டவர். இவர் தவில் வித்தகர் திரு. விசுவலிங்கம் அவர்களின் மகனாவர். கலையறிஞர் உருத்திராபதி – நாதஸ்வரவித்தகர் கோதண்டபாணி – வித்துவபூபதி தெட்சணாமூர்த்தி ஆகியோரின் சகோதரராவர். திரு. மாசிலாமணியவர்கள் எல்லாவகை இசைக்கருவிகளையும் இசைக்கும் வித்தகத்திறன் கொண்டவர். நடிப்பிசைப் புலவராகத் திகழ்ந்தவர். தன் வாழ்வினை இளம் வயதில் நீத்து இயற்கை எய்தியது@ கலையுலகின் - இணுவையின் பேரிழப்பாகும்.

திரு. பெ. கந்தையா அவர்கள் இசையுடன் பாடுவதிற் சிறந்தவர். மேடைக்கூத்துகளில் நடிப்பதிற் சிறந்தவர். சிறந்த குரலினிமையும் தொனி அமைப்பும் இயல்பாகவே இவரிடம் அமைந்திருக்கின்றது. ஆயின் தமது வாழ்வு நெறியினைக் கலை வாழ்விலிருந்து விடுவித்துக் கொண்டு வணிகராக வாழ்பவர்.

இசைவல்லோர்.

துறவி வேந்தரான தவத்திரு வடிவேற்சுவாமி அவர்கள் தேவாரத்தினைப் பண்ணுடன் இசைப் பதில் வல்லவர். பண்ணிசை வகுப்புகள் நடாத்தித் திருமுறைகளில் சிறப்பினைப் பேணியவர். இசையால் உள்ளத்தினை உருக்கும் ஆற்றல் கொண்டவர். திரு. சங்கர சுப்பையா, நாகலிங்கப் பரதேசி ஆகியோரின்பின் இலங்கையில் பக்திச்சுவை மீதூர இசையமைத்துக் கதைகளை விளக்கிச் சொல்வதில் வல்லவராகத் திகழ்பவர். இன்று மகாதேவ ஆச்சிரமத்தில் அமர்ந்து அமைதிப் பணி புரிகின்றார்.

திரு. வ. தியாகராச சுவாமிகள் தமது சகோதரர் திரு அம்பலம் அவர்களுடன் பக்திப்பாடல்களையும் திருப்புகளையும் இசையுடன் பாடியிருக்கின்றார். இவ்விருவரும் இசையிலும் மேடைக்கூத்தியற்றுவதிலுஞ் சிறந்தவர்கள். முன்னவரான சுவாமிகள் காரைக்காலில் தவக்குடில் அமைத்து அவ்வில்லம் துறவிகள் ஆச்சிரமமாக விளங்குகின்றது. நயினாதீவுச் சுவாமி குறிப்பிட்டவாறு அமைத்து வாழ்கின்றார். கூட்டுவழிபாட்டியக்கத்தினை நல்ல முறையில் நெறிப்படுத்தி வருகின்றார். சிவகாமி அம்மன் கோயில் தேர்த் திருப்பணியினை முன்னின்று செயற்படுத்;துகி;ன்றார். திரு. சு. குமாரசாமி, பண்களை முறையாகப் பாடுவார். பக்திப் பாடலால் எல்லோரையும் உருகச் செய்வார்.

இசைவல்லார் குடும்பங்கள் பல இணுவையைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர். இக்குடும்பங்;;களில் உள்ளவர்கள்பற்றி முன்வந்த கட்டுரைகளிற் சிற்சில இடங்களிற் பொருத்தம் நோக்கி நவிலப்பட்டன.

தவில்வித்தகர் சடையாரின் குடும்பம் இசைக்கலை வளர்த்த குடும்பம். இவரின் சகோதரர் இரத்தினம் சிறந்த நாதஸ்வர வித்தகர். இசையுடன் பாடல்களைப் பாடுவதிலும் மேடைக் கூத்தினை நடிப்பதிலும் வல்லவர்.

வித்தகர் பெருந்தகை பெரிய பழனியவர்களை ஈழத்தின் கலையுலகும் - இந்தியக் கலையுலகும் நன்கறியும். தவில் அவரின் தோளில் ஏறினால் - சுவை பொருந்திய நாத ஓசை மக்களை இன்புறச் செய்யும். அவரது ஒவ்வொரு உறுப்பும் நாதஒசைக்கேற்ப அசைவதனையும் - நாத ஓசை அவரின் அசைவிற்கேற்ப ஒலிப்பதனையும் கண்டு கேட்டு உற்றறிந்தவர்களே அதன் தகைமையை அறிந்து இன்புற முடியும். இவர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கலைப்பாலமாகத் திகழ்ந்தவர். இந்தியக்கலைஞர்கள் பலரை அழைத்து இணுவை ஊர்க்கும், ஈழத்திற்கும் கலைவிருந்து படைத்தவர். ஈழத்தின் புகழ்பெற்ற தவில் வித்தகர்களான திரு. ச. விசுவலிங்கம், திரு. பொ. சின்னப்பழனி, திரு. பொ. கந்தையா, திரு. நா. சின்னத்தம்பி, திரு. இரத்தினம் ஆகியோர்க்கும்; கலையிற் பிதாமகராக இருந்தவர். இவர்கள் வழிவந்தோர் இன்று ஈழத்தின் புகழ்பெற்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர்.

சடையரின் வழித்தோன்றல்களான தவில் வித்தகர் ச. சின்னத்துரை, ச. இராசகோபாலனும், நாதஸ்வர வித்துவான் ச. கந்தசாமி, ச. ஆறுமுகமும் தமது வித்தகத் திறத்தினால் வெளிநாடுகளிலும் புகழ் கொண்டவர்.

தவில் வித்தகர் திரு. ச. விசுவலிங்கம் அவர்களின் மக்களும் - மக்கள் வழிவந்த மக்களும் இன்று இசையுலகில் நன்கு மதிக்கப்படுகின்றனர். இவரின் முதல் மைந்தன் திரு உருத்திராபதி. நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதில் வித்தகர் பல்லவி வித்துவான். இசை பயிற்றுவதில் சிறந்த ஆசானாகத் திகழ்பவர். இவரின் முதல் மைந்தன் இராதாக்கிருஷ்ணன் சிறந்த வயலின் வித்துவானாகத் திகழ்கின்றார் ஈழநாடெங்கணுமே போற்றப்படுகின்றார்.

திரு. ச. விசுவலிங்கம் அவர்களின் இரண்டாவது மகனே நாதஸ்வர வித்தகர் திரு. கோதண்ட பாணி. இராமனின் கோதண்டம் போன்றது திரு. கோதண்டபாணியின் நாதஸ்வரம். நாதஸ்வரம் வாசிப்பதில் கோதண்டபாணியின் பாணியென ஒருமரபை உருவாக்கியவர். பல்லவி – கீர்த்தனம் என்பவற்றினை வாசிப்பதில் தன்னிகரற்றுச் சிறந்தவராக விளங்கினார். தென்னிந்திய நாதஸ்வர வித்தகர் வேதமூர்த்தியோடு நாதஸ்வரம் வாசித்துத் தன்வித்தகத் திறனை நிலைநிறுத்தியவர். இவரும் தமது இளம் வயதில் இயற்கை அன்னையின் அணைப்பில் துயில் கொண்டு விட்டார்.

வித்தகர் ச. வி; யின் மூன்றாவது மைந்தன் திரு. மாசிலாமணி@ பல்கலைப் புலவராகவும் - கலைஞராகவும் திகழ்ந்தவர். இவர்பற்றி முன்னர் கூறப்பட்டுள்ளது. ஐந்தாம் மகன் லயஞான குபேர பூபதி திரு. தெட்சணாமூர்த்தி அவர்கள்.

ஈழத் தமிழ் அன்னையின்
இசைக்கலைச் சக்கரவர்த்தி

திரு. தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் நாதத்தினைக் கேட்காதவர்கள் இல்லையென்னும்படி தன்னிகரற்றுத் திகழ்பவர். இவர் மண வினையின் தொடர்பால் அளவெட்டியில் வாழ்வினை மேற்கொண்டுள்ளார்.

1960இல் சென்னைத் தமிழ் இசைச் சங்கத்தில் காரைக்குறிச்சி அருணாசலத்துடன் தவில் வாசித்து நாதசுரத்துக்கு தவில் பக்கவாத்தியம் என்றிருந்த நிலையை மாற்றி, தவில் இசைக்கு நாதசுரம் பக்கவாத்தியம் என்ற நிலையையும் உருவாக்கி உயர்வடைந்தார். இவரை பலமுறை இந்தியா அழைத்தது.

தமிழகத்தின் தலைசிறந்த வித்துவான் சின்னமௌலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், குளிக்கரைப்பிச்சப்பா, சேதுராமன் பொன்னுச் சாமி ஆகியோருடன் தலைசிறந்த திவ்வியNºத்திரங்களாகிய திருச்செந்தூர், மதுரை, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களிலும், பிரபலமான வைபவங்களிலும் தவில்வாசித்து பெரும் புகழீட்டியுள்ளார். மேடையில் அமர்ந்து மடிமேல் தவிலை வைத்த மாத்திரத்தே தவிலிலே ஒன்றிவிடும் அவர் கைகளிலே சரஸ்வதிதேவி களிநடனம் புரிவதைக் காணலாம். அப்படியான ஒர் தவில் வாசிப்பாளன் வேறு எவராலுமே கிட்டமுடியாத ஒப்பற்ற கலைஞன் இத்தகைய மேதை தனது 43ஆவது வயதில் 13-5-75இல் இறைவனடி சேர்ந்தார்.

திரு. ச. வி. அவர்களின் மகள் வயிற்று மக்களான இ. சுந்தரமூர்த்தி - இ. புண்ணியமூர்த்தி சகோதரர்களும் இசையுலகில் இரட்டையராகப் புகழ் பரப்புகின்றனர். திரு. கோதண்டபாணியின்மக்களும் இசையுலகில் புகழ்பரப்புகின்றனர். திரு. ச. வி. அவர்களின் பூட்டப்பிள்ளைகளும் இளம் வித்தகர்களாக உருப்பெற்று வருகின்றனர்.

வித்தகர் பொ. கந்தையாவின் மருமக்களான திரு. கனகசபாபதி (கனகர்) திரு. இ. சண்முகம் ஆகியோர் தமது மாமனார் வழிவந்த வித்தகர்களாகத் திகழ்கின்றனர். திரு. கந்தசுவாமியின் மகன் வயிற்று மக்களான திரு. என். ஆர். சின்ராசா, திரு. என். ஆர். கோவிந்தசாமி ஆகிய இரு சகோதரர்களுள் முன்னவர் நாதஸ்வரத்திலும், பி;ன்னவர் தவிலிலும் புலமைமிக்க வித்தகராவர். வெளிநாடுகளிலும் ஈழத்திலும் புகழை நிலைநிறுத்தியவர். இவர்களின் தாய்மாமன்மாரான திருவாளர்கள் க. சண்முகம், க. கணேசன் என்போர் கலைச்சிறப்புப்பெற்ற வித்தகர்கள். முன்னவர் மிருதங்க வித்தகராக இலங்கை வானொலியில் பணிபுரிகின்றார். பின்னவர் தன்னை நாச்சிமார் கோயிலுடன் இணைத்துக் கொண்டு நாச்சிமார்கோயில் கணேசன் என்று தவில் வித்தகராக புகழ்பரப்புகின்றார். திரு. சண்முகம் அவர்களின் துணைவியார் வானொலியில் இசைப் பாடல்கள்பாடி வருகின்றனர். இக்கலைஞர்கள் அனைவரும் இந்தியாவில் இசைவிழாக்களிற் பங்கு கொண்டு ஈழத்தின் புகழை உயர்த்திய பெருமக்களாவர். இவர்கள் அனைவரும் மரபால் ஒன்றிணைந்தவர். இணுவையின் கலைக் குழந்தைகளாகப் பிறந்து ஈழமும் - இந்தியாவும் - மலேசியாவும் பாராட்டும் வித்தகர்களாக வளர்ந்துள்ளனர். ஈன்றபொழுதிலும் பெரிதுவந்து – சான்றோர் எனத் தம்மக்களை உலகு பாராட்ட – அதனைக் கண்டு அவர்களை ஈன்று புறந்தந்த மண்வள் உளம் மகிழ்கின்றாள். அம்மண்ணிற் பிறந்த அனைவரும் பெருமிதமடைகின்றனர்.

சிறப்பிடம் பெறத்தக்க பிற கலைகள்

கட்டிடக்கலையில் வல்லவர்களாகத் திருவாளர்கள் செ. ஞானி – ந சங்கரன் - வெ. சின்னப்பு – பொ. அழகரத்தினம் - நா. முத்துக்குமாரு – கா. கிருஷ்ணன் - சி. பிலேந்திரன் - கந்தசாமி ஆகியோர் சிறப்பிடம் வகிக்கின்றனர்.

பூக்கன்றுகள் இன உற்பத்தியிலும் - கனிதரு தாவர இன உற்பத்தியிலும் - சிறப்பாக – மாங்கன்று – தோடை, எலுமிச்சை போன்றவற்றினை உயர்தர இனமாக மாற்றியமைப்பதில் திருவாளர்கள் சு. சீவரத்தினம் க. செல்லப்பா – க. துரைசிங்கம் பொ. வி;க்கினேஸ்வரன் முதலியோர் சிறப்பிடம் பெறுகின்றனர். இலங்கையின் பல பாகத்துக்கும் அனுப்பி பாராட்டப்பட்டு வருகின்றனர்.

சிறப்பாக இணுவிலில் தங்கியிருந்தவர்கள்.

இந்தியாவிலிருந்து பிரபலமான நாதஸ்வர, தவில் வித்துவான்களை வருடாவருடம் அழைப்பித்து அவர்களுடைய இசைவிருந்தை அருந்தினர். இணுவிலில் வந்து தங்கியிருந்த நாதஸ்வர வித்துவான்களில் சக்கரபாணி, நாராயணசாமி, காஞ்சிபுரம் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம், திருச்சடை முத்துக்கிருஷ்ணன், கோவிந்தசாமி, சிதம்பரம், î கதிரவேல். சேகவ் சோமு, வேதாரணியம் வேதமூர்த்தி, நாகூர் இராசு, அறந்தாங்கி மணியம், ஆண்டாங் கூங்கோவில் கறுப்பையா, ஆலங்குடி வேணு, பசுபதி முதலியோர் பிரதானமானவர்கள். தவில்வித்துவான்களில் மலைப்பெருமாள், பக்கிரிசாமி, திருநகரி நடேசன், பாளையங்கோட்டை வீராச்சாமி, வலங்கைமான் சண்முகசுந்தரம், திருவாளப்புத் தூர் நடேசன் என்பவர்கள் பிரதானமானவர்கள்.

பாரதநாட்டியக் குழுவினரும், சங்கீதவித்துவான்களும், சங்கீத கதாப் பிரசங்கிகளும் வந்து வந்து மகிழ்ச்சியூட்டினர். இராமநாதன் மகளிர் கல்லூரியில் சங்கீத வகுப்புக்கள் நடைபெற்றன. அங்கு வந்து இசை ஆசிரியர்களாகக் கடமை புரிந்த வித்துவான்களில் மகாராசபுரம் விஸ்வநாதஐயர், அவர் மகன் சந்தானம், கல்யாண கிருஷ்ணபாகவதர், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஆதியோர் குறிப்பிடத் தக்கவர்கள. அந்தச் சங்கீத பாடசாலையைத் தற்போது அரசாங்கம் எடுத்து, சங்கீத சர்வகலாசாலையாக நடத்துகின்றது. அதுவும் இணுவையூரின் கொடையாகும்.

இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தேசத்தலைவர்கள் - சங்கீதவித்துவான்கள் ஆத்மஞானிகள் - சமயப் பிரசாரகர்கள் சிலர்.

ஆத்மஞான குரு:

(ஆண்டவனை அடைவதற்கு வழிகாட்டியாயுள்ள ஞானவான்கள்)

சுவாமி விவேகாந்தா, சுவாமி சிவானந்த சரசுவதி ரிசிகேசம், சுவாமி சிதானந்த சரசுவதி, சுவாமி சிற்பவானந்தா திருச்சி, சுவாமி நிசானந்த பரமேந்திர சரசுவதி, சுவாமி சத்தியானந்தா, சுவாமி கவியோகி சுந்தானந்த பாலயோகி பெங்களுர். சுவாமி அத்வைதானந்த சரசுவதி.

சமயப்பிரசாரகர்கள்

திருமுருக கிருபானந்தவாரியார், கிரதாரி பிரசாத், ஜெகன்நாதன்.

தேசத் தலைவர்கள்:

மகத்மாகாந்தி, இராசகோபாலச்சாரியார், ஜவகர்லால் நேரு, சிவஞானகிராமணி

சங்கீதக் கச்சேரி (மும்மூர்த்திகள்)

செம்பை வைத்தியநாதையர் பாட்டு, மைசூர் சௌடையா வயலின், பாலக்கட்டு மணி மிருதங்கம். எம். எஸ். சுப்புலட்சுமி, கான சரசுவதி, எம். எல். வசந்தகுமாரி, கே. பி. சுந்தராம்பாள் முதலியோர்.

நாதஸ்வர வித்துவான்கள்:

மதுரை பொன்னுச்சாமி (மைசூர் சமஸ்தான வித்துவான்) திருவாவடுதுறை இராசரத்தினம் நாதஸ்வரச் சக்கரவர்த்தி) திருவெங்காடு சுப்பிரமணியம், காரைக்குறிஞ்சி அருணாசலம், சின்னமௌலானா, நாமகிரிப்பேட்டை கிட்டினன், திரு. வீளிமிளலைச் சகோதரர்கள்.

தவில் வித்துவான்கள்.

நிடாமங்கலம் மீனாட்சிசுந்தரம், நிடாமங்கலம் ராகவன், திருமங்கலம் பஞ்சாபிகேசன், திருமறைக்காடு பொன்னுச்சாமி, கும்பகோணம் தங்கவேலு, திருக்கோரவாசல் முத்துவீரு.

சிற்பம்

அப்பர் தந்த மஞ்சம்

ஈழத்தின் சிற்பக் களஞ்சியமாக விளங்கும் மஞ்சத்தை உருவாக்கியவர் அருட்குரவர் பெரிய சன்னியாசியாராவர். அப்பர் மஞ்சங்கட்ட விரும்பிய காலத்தில் இஸ்லாமியரான செய்யது என்பவர் தமது உடல்நோயினைத் தீர்ப்பதற்காக அடிகளாரிடம் வந்து சேர்ந்தார். அன்னாரின் உடற்பிணியோடு உளப்பிணியும் நீங்கியது. அதனால் அடிகளாரிடம் பெருமதிப்புக் கொண்டார். அடிகளாரும் செய்யது அவர்களிடம் அருளுறவு பூண்டார் மதவேறுபாடு நீங்கி இருவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டினைக் கொண்டனர்.

செய்யது அவர்கள் தேவகோட்டையைச் சேர்ந்த முத்துராக்கப்ப ஆச்சாரியாருக்கு அஞ்சல் எழுதி மஞ்சவேலையினைப் பொறுப்பேற்கும் படி வேண்டினார். அவ்வஞ்சல் முத்துராக்கப்பருக்குக் கிடைத்த வேளையில் பெரிய சன்னியாசியார் போன்ற ஒருவர் முத்துராக்கப்பரிடம் சென்று யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிற் கந்தசுவாமி கோயிலுக்கு மஞ்சம் செய்ய வேண்டிய ஆள் அணியுடன் புறப்படும்படி கூறினார். தான் திருச்செந்தூர் செல்லவிருப்பதாகவும் உடன்வர இயலாதென்றும் - தன்னைக் காங்கேசன்துறையிற் சந்திக்கலாமென்றும் - ஆங்கு சந்திக் கவியலாதாயின் யாழ்ப்பாண நகர் செல்லும் வழியில் ஆறுகல் தொலைவு சென்றபின் இணுவிற் பெரிய சன்னியாசிரியார் இருக்குமிடம் எதுவென வினவின் இடத்தினை அடையலாமெனவுங் கூறிச் சென்றார். அவ்வண்ணமே முத்துராக்கப்பர் தன் ஆளணியுடன் இணுவை வந்து பெரியசன்னியாசியாரை வணங்கி நடந்தவற்றைக் கூறினார். அப்பர் திருவருளை வியந்து மஞ்சம் செய்ய வேண்டியதற்குரிய ஒழுங்குகளைச் செய்து கொடுத்தார். மஞ்சத்திருப்பணி 1904 ஆம் ஆண்டு தொடங்கியது. திருப்பணி நடந்த இடம் ‘மஞ்சத்தடி’ எனப் பெயர்பெற்றது. மஞ்ச வேலைகள் அடிகளாரின் விருப்பப்படியே நடைபெற்றன. முத்துராக்கபருக்கும் அடிகளாருக்கும் சிற்ப அமைதி பற்றிக் கருத்து வேறுபாடு தோன்றுவதுண்டு. அவ்வேளையில் அருளுணர்வினால் அவற்றிற்குரிய விளக்கத்தினைக் கொடுப்பார். முத்துராக்கப்பரும் அவற்றினையேற்றுச் சிற்பப்பணியினைச் செய்து முடித்தார். இம்மஞ்சத்தில் அண்டத்தின் உண்மைகளை விட்டுரைக்குஞ் சிற்ப அமைதியினைக் காணலாம். 1908 ஆம் ஆண்டளவில் மஞ்சவேலைகள் சிற்பக்களஞ்சியம் நிறைவுபெற்றன. ஆரவாரமின்றிய தொண்டர்பணி மூலமே மஞ்சம் உருவாகியது. உடுவில், தாவடி, சுதுமலை, கோண்டாவில், இணுவையூர் ஆகிய இடங்களில் வாழ்ந்த மக்கள் பயன்கருதாத் தொண்டிற்கு எடுத்துக்காட்டாக இன்றும் நின்று நிலவும் பெருமை இணுவை மஞ்சத்திற்கு உண்டு அப்பரால் மஞ்சவேலைகள் நடைபெற்ற காலத்தில் பெருஞ்சோற்றுவிழா பல நடத்தப்பட்டது. உதயஞ் சேரலாதான் போர்முகத்துப் பெருஞ் சோறளித்து மகிழ்ந்ததுபோல் அடிகளாரும் அருள்முகத்துப் பெருஞ்சோறளித் தின்புற்றார். மஞ்சம் சென்றவீதி, மஞ்சத்தடி வீதி எனப் பெயர் கொண்டது. இன்று காரைக்கால் அம்பலவாணர் வீதியெனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. தைப்பூசத் தினத்தன்று மஞ்சத் திருவிழா நடைபெற்று வந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல இடங்களிலிருந்தும் விழாவினைக் காண்பதற்காக மக்கள் வந்து கூடினர். விருந்தோம்பல் பெருஞ்சோற்று விழாவாக நடைபெற்றது.

மஞ்சத்திருவிழாவின் ஆட்டக்காவடிகளும் - பாட்டுக் காவடிகளும் - புராணகாவிய நாட்டுக் கூத்துகளும் இடம்பெற்றன அனுமான் எனப் புனைபெயர் கொண்ட பொன்னையா – அண்ணாவி ஏரம்பர் – அண்ணாவி சுப்பராயர் - இவர் உடன் பிறந்தவரான இலங்கை இராசசிங்கம் நடிகவேள் நாகலிங்கம் - கந்தர் தாமோதரம்பிள்ளை – பொருத்தர் ஆறுமுகம், புளியடி முருகேசு ஆகியோரின் ஆட்டக்காவடிகளும், பாட்டுக் காவடிகளும் குடாநாட்டவரின் கவனத்தை ஈர்த்தன. அக்காவடிகளில் ஒன்றான மரக் காவடி கந்தர் தாமோரம்பி;ள்ளை வழிவந்தவர்களின் பாதுகாப்பிலிருந்து வந்தது. இன்று காசிநாதர் கணேசர் என்பவர் பாதுகாப்பிலிருந்து வருகின்றது. இக்காவடி பொருத்தர் ஆறுமுகம் பரம்பரையினர்க்கு உரியதெனக் கூறக் கேட்டுள்ளேன். இப்பரம்பரையினர் அனைவரும் ஒரு கொடியில் தோன்றிய பல மலர்கள் போன்று அமைந்து இணுவை வாழ்விற் பங்கு கொண்டனர்.

காசிநாதர் – கணேசர் பராமரிப்பில் உள்ள இக்காவடி சிற்பவேலைத்திறன் கொண்டது. இன்று சாதாரண மக்கள் நால்வர் சேர்ந்தே தூக்க வேண்டும். அவரின் இல்லத்தில் இன்றும் காணக் கூடியதாக அக்காவடி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அது வணக்கத்திற்குரிய புனிதப் பொருளாகப் பேணப்படுகின்றது. அக்காவடியினை ஆண்டில் ஒருமுறை – சிலவேளையில் இர முறை ஆட்டத்திற்கு எடுப்பதுண்டு.

பக்தி இயக்கத்தினையும் - இன்கலை வளத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக மஞ்சத் திருவிழா அடிகளாரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மஞ்சம் திராவிடச் சிற்பக்கலையின் உறைவிடமாக அமைந்துள்ளது. இலங்கை - இந்தியக் கலாசாரத் தொடர்புக்கு எடுத்துக்காட்டாக அமைவது. மஞ்சத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு உறுப்பும் திராவிடச்சிற்பக்கலையின் பெருமையினை உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன. பண்பாடும் - கைவண்ணமும் நிறைந்த இந்தியத் திராவிடச் சிற்பிகளின் கலைத்திறனையும் அடிகளாரின் அருட்திறனையும் எடுத்து விளக்குவதே இணுவை மஞ்சம். இன்றுவரை தன்னிலை தெரியாது கலையழகோடு திகழ்வதற்கு அவையே ஏதுவாகும். இம்மஞ்சம் நாற்பதடிக்கு மேற்பட்ட உயரமுடையது. புராண – காவிய நிகழ்ச்சிகளை விளக்கும் அமைப்புக் கொண்டது. தத்துவ உண்மைகளை விளக்கும் திறனை அதனிற் காணலாம். கலைப்புலவர்களாலும் வெளிநாட்டு நல்லறிஞர்களாலும் வியந்து பாராட்டப்பட்ட பெருமைக்குரியது. இம்மஞ்சம் இணுவிலுக்கு மட்டும் உரித்துடையதன்று. தமிழ்கூறும் நல்லுலகிற்கே சொந்தமானது. இதனை நன்கு பாதுகாக்க வேண்டும். இதுவே இன்றுள்ள இணுவை மக்களின் முதற்பணி. இப்பணியினை மறந்து நாகதாளிச் செடிகளும், முட்புதர்களும் மூடிமறைக்க விடக்கூடாது. சொந்த விருப்பு வெறுப்புகட்கு இடங்கொடுப்பது சான்றாண்மையாகாது. சான்றான்மை மறந்த செயல்களைத் தக்கார் செய்வதில்லை. இதனை உணர மறுத்தால் காலம் எமக்காகக் காத்திருக்காது. அருமை பெருமைக்குரிய மஞ்சம் கால வெள்ளத்தில் மறைந்துவிடும்.

மஞ்சத்திற்கு ஆயிரம் மணிகளையும் - ஆயிரம் சதங்களையும் முகமதியப் பெரியார் செய்யது என்பவர் அறநன்கொடையாகக் கொடுத்தார். திருமதி ஆறுமுகம் தெய்வயானை என்பவர் வெண்கலமூடி ஐந்தினை நன்கொடையாக கொடுத்தார். அப்பரின் திருக்கூட்டத்தார் மஞ்சம் உருவாக அருட்பணி பல புரிந்தனர். மஞ்சம் போன்று ஒர் சிற்பத் தேருக்கும் அடியிடப்பட்டது. ஆயின் அது நிறைவு பெறவில்லை. அத்தேரின் அடித்தளம்@ இணுவையூரின் மூதாதையரில் ஒருவரான கருணாகரராற் கட்டப்பட்ட உரும்பராய்க் கருணாகரப்பிள்ளையார் கோயிற் சிற்பத்தேருக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அப்பரான பெரிய சன்னியாசியாரிட்ட வித்தே இணுவையின் பிற்கால வாழ்விற்குச் செழுமை கொடுத்தது. முத்தமிழ் வல்ல புலவர்களையும் - இசைவாணர்களையும் இணுவை தமிழ் உலகிற்குக் கொடுத்துதவியதற்கு அன்னாரின் அருளாட்சியே துணைபுரிந்தது. அவரின் பணியினை இன்று ஈழமும், இந்தியாவும் சுவைத்து அனுபவிக்கின்றன.

இணுவிற்கந்தசுவாமி கோயிலிலுள்ள கடாவாகனம் உயிரோவியமாக அமைந்துள்ளது. அதன் கொம்புகள் இயற்கையான அமைவினைப் பெற்றுள்ளன. சிறந்த சிற்பக்கலைக்கு உறைவிடமாக இருக்கும் தகுதி அதற்கு உண்டு. இக் கோயிலிலுள்ள ஆறுமுகக் கடவுளின் திருவுருவமைப்பும் - சூரனின் உருவ அமைப்பும் மிகச்சிறப்புடன் அமைவுபெற்றுள்ளன. தியாகராசர் திருவுருவம் நடராசர் திருவுருவும் சிற்ப அழகோடு திகழ்வன. காரைக்காற் பஞ்சலிங்கம் வேறு எங்கும் காணவியலாத தத்துவ அமைப்புக் கொண்டது. சிவகாமியம்மை ஆலயத்திலுள்ள அம்மையின் திருவடிவும் - மகிடாசூரனும் - குதிரையும் சிற்ப அழகுடன் பொலிபவை. இணுவை பரராச சேகரப்பிள்ளையார் கோயிலில் உள்ள சிற்பத்தேர் அண்மைக்காலத்தில் திராவிடச் சிற்ப விதிகட்கமைய உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஈழநாட்டிலுள்ள சிறந்த சிற்பத்தேர்களில் ஒன்றாக எண்ணப்படுகின்றது. இக்கோயிலின் இராசகோபுரமும் அதன் அயலிலுள்ள மணிக்கூடுக் கோபுரமும் ஊருக்குப் பெருமையினையும் அழகினையும் ஊட்டி நிற்கின்றன. பண்டு கண்ணாடிச் சப்பரம் முத்துச்சிவிகை – முத்துப்பந்தர் எனப்பெயர்பெற்ற அமைப்புகளை இணுவைக் கலைஞர்கள் உருவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக விருந்தனர். இவர்களில் வீரசைவர் மரபில் வந்த முத்தையா புகழ்கொண்டவர். இவர் பாம்பரைத் தொடர்பு கொண்ட பலர் இன்று கண்ணாடிச்சம்பரம் - மயிற்சோடனை – ஆட்டக்காவடி – மணிச்சோடனை என்பவற்றிற் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

வைத்தியம்

வைத்தியக் கலைபற்றிக் குறிப்பிடும்போது இணுவையூரினை மணிமந்திர வைத்தியசாலையென்றே கூறலாம். தட்டுப்பட்டால் வைத்தியர்களின் காலிற்றான் தட்டுப்பட வேண்டும். அப்படித் தட்டுப்படுபவர்கள் வீழ்வதாயின் மாந்திரீகர்களின் மேற்றான் வீழவேண்டும். வைத்தியக் கலையிற் சிறந்த சிலர் இயற்கை யெய்தி விட்டனர். அவர்களின் வைத்தியர் தம்பர். வைத்தியர் வினாசித்தம்பி, வைத்தியர் முருகேசர், வைத்தியர் அப்பாக்குட்டியர், வைத்தியர் நா. இராமுப்பிள்ளை, வைத்தியர் நா. வேலுப்பிள்ளை, வைத்தியர் வையிரமுத்து ஆகியோர் நஞ்சுகடி வைத்தியத்திலும் - கிரந்தி – வாத வைத்தியத்திலும் சிறந்துவிளங்கினர்.

புகழ்பூத்த அண்ணாமலை வைத்தியரையும், அவர் சகோதரர் முத்துலிங்க வைத்தியரையும், இணுவை வைத்தியர் திரு. நாகலிங்கமவர்களே ஈன்று புறந்தந்தவர். இவர் இணுவில் கந்தசுவாமி கோயில் இராசகோபுரத்தையும், மடத்தையும் கட்டியவர். இவரின் மக்கள் இருவரும் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டனர். மேலே குறித்த அண்ணாமலை வைத்தியருக்கு சிறுவயதில் ஏற்பட்ட சன்னி வருத்தம் வைத்தியர்களால் கைவிட்ட நிலையில் பெரயி சன்னியாசியார் அவர்களின் முன்னிலைப்படுத்தினர் அடுத்தநாள் சன்னிதான வாசலில் குழந்தையைச் சுற்றிவர சாதம், கறிவகை படைத்து ஆறாதாரத்திலும் சூடத்தை வைத்துக் கொழுத்தி அவ்வக்கினி தணியக் குழந்தை கண்விழித்தது. அந்த அண்ணாமலை வைத்தியரின் நோய் தீர்த்த ஞாபகமாகவே இராசகோபுரமும், மடமும் மு. நாகலிங்க வைத்தியரால் கட்டப்பட்டது.

அக்காலத்தில் வைத்தியர் செல்லப்பா இணுவையிலிருந்து அவ்வைத்தியத்தினைப் புகழ்பூக்கச் செய்தவர் இவர் சிறந்த நாடி நிபுணர். வைத்தியர் கந்தையாவின் தந்தையாவர். இவரும் சிறந்த நாடி நிபுணர். குழந்தை வைத்தியத்தில் அனுபவம் மிக்கர்கள். தந்தையார் காலஞ் சென்ற பின் அவரின் இடத்தினை ஈடுசெய்து வருபவர். வைத்தியத்திற் பலதுறை அறிவு கொண்ட இவர் சக்தி உபாசகர். இவர்களின் குடும்பம் புகழ் கொண்ட வைத்திய பரம்பரையில் வந்தது.

சித்த வைத்தியர் திரு. சு. இராமலிங்கம் அவர்கள் ஆவரங்கால் சின்னத்தம்பி வைத்தி;ய சாலையினை நிறுவி நடாத்துகின்றார். சித்தர் பெரிய சன்னியாசியாரின் உறவினர். வாதம், மேகம் போன்ற வியாதிகட்கு வைத்தியஞ் செய்வதில் நிபுணர். பல்வகை நோய்களையும் நிலை கண்டுணர்வதில் ஆற்றல் மிக்கவர். இவரின் வாதநோய் எண்ணெயும் - இரும்புக் குழம்பும் - அமுது சர்க்கரையும் புகழ் கொண்டவை. முருகன் உபாசகர். சிறந்த சமூகப் பணியாளர். இவரின் மகன்பாலசுப்பிரமணியம் பிதாவின் வழியைப் பின்பற்றி நடாத்தி வருகின்றார்.

திரு. அ. முருகையா அவர்கள் திரு. அப்பாக்குட்டியரின் மகன். வைத்திய பரம்பரையில் வந்தவர். ஆசிரியப் பணிபுரிந்தவர். பாம்புகடி வைத்தியத்திற் சிறந்தவர். திரு. க. அம்பலவாணர் காரைக்காற் சிவன் கோயில் ஆளுணராகவும் மணி மந்திர வைத்தியராகவுந் திகழ்பவர். இவர் ஞானபண்டிதர் நடராசனாரின் மாணவர். திரு. சு. இராமலிங்கம் அவர்கட்குச் சகோதரர் உறவு கொண்டவர்.

வைத்திய கலாநிதி க. பாலசுப்பிரமணியம் ஆண்டால் இளையவர். நகைச்சுவை மிக்கவர். திரு. பெ. கந்தையா அவர்களின் இரண்டாவது மைந்தர். ஆயுள்வேதமும் மேலைநாட்டு வைத்தியமும் கற்றுச் சிறந்து விளங்குகின்றார். அன்பும் பண்புங் கொண்டவர். உடற்கூற்;று வைத்தியத்தில் இளமையிலேயே புகழ்கொண்டு விளங்குகின்றார்.

நாய்கடி வைத்தியத்தில் திரு. தம்பு வைத்தியர் புகழ் கொண்டவர். வைத்தியர் திரு. சீவரத்தினம் அவர்கள் சத்தி உபாசகர். மணி மந்திரத்தில் சிறந்தவர். திரு. சிவகுரு சுப்பிரமணியசுவாமி அவர்கள் மாந்திரீகத்திற் சித்திமிக்கவர். தமது சித்த ஆற்றலால் தம்மை யண்டி வந்தவர்கட்கு ஆறுதலும் அமைதியுங் கொடுப்பவர். மேற்குறித்த வைத்திய மாந்திரீக நிபுணர்களோடு ஒவ்வொரு குடும்பத்திலும் நாட்டு வைத்திய அறிவினைக் கொண்டவர்களும் - மணிமந்திரந் தெரிந்தவர்களும் நிறையப்பெற்று வாழும் ஊர்தான் இணுவையெனக் கூறலாம்.

ஊர்ப் பொதுமன்றுகள் 7

இணுவையூரின் கல்வி வளர்ச்சிக்குத் துணையாக இருப்பவை பாடசாலைகளும் படிப்பகங்களுமாகும். அந்தவகையில் நாவலருடன் உறவுபூண்ட திரு. வெங்கடாசல ஐயரால் தோற்றுவிக்கப்பட்டுப் பின் திரு. அம்பிகைபாகரால் பொறுப்பேற்கப்பட்டு அம்பிகைபாகர் பள்ளிக்கூடம் என வழங்கும் சைவப்பிரகாச வித்தியாசாலையையும் திரு. அப்பாக்குட்டியர் பெயரால் வழங்கும் அப்பாக்குட்டியர் பள்ளிக்கூடம் என்ற சைவ மகாஜன வித்தியாசாலையையும் அதன் அண்மையில் உள்ள வேதப்பள்ளிக்கூடம் என வழங்கும் அமெரிக்கக் கிறிஸ்தவ இயக்கத்தினரால் (மிசன்) நடத்தப்பட்ட ஆரம்பப் பாடசாலையையும்@ இணுவிலின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனங்களெனலாம்.

அம்பிகைபாகர் பள்ளிக்கூடமான சைவப்பிரகாச வித்தியாசாலை இணுவிலின் தெற்கில் பரராசசேகர பிள்ளையார் கோயிலுக்கும் இணுவிற் கந்தசுவாமி கோயிலுக்கும்இடையில் அமைந்துள்ளது. அமைதிநிறைந்த இடத்தில் எதிர்கால வளர்ச்சிக்குரிய அமைப்புடன் அமைந்துள்ளது. இணுவையின் கல்விக்காகச் சைவசமய நெறி வளரத் தோற்றுவிக்கப்பட்ட இக் கல்விக்கூடம் நூற்றாண்டு வாழ்வை நிறைவு செய்துள்ளது. அது நல்ல அமைப்பினைப் பெற்ற எமது ஊர்க் குழந்தைகளின் கல்விக்குத் துணைபுரிய வேண்டும்.

அமெரிக்கக் கிறிஸ்த்தவ இயக்கத்தினரால் நடாத்தப்பட்ட வேதப் பள்ளிக்கூடம் இன்று சைவமகாஜன வித்தியாசாலை அமைந்திருக்கும். வைத்தியர் அப்பாக்குட்டியர் வளவில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்பகால ஆசிரியர்களாகச் சரவணன் என்ற பெயர் கொண்ட சரவணைச் சட்டம்பியாரும் அனுமான் கதிகாமர் கடமை புரிந்தனர். திருமதி பார்வதி கதிர்காமரும் கடமை புரிந்தனர். திருமதி பார்வதி கதிர்காமர்@ ஆசிரியர் திரு செ. இராசதுரையவர்களின் பாட்டியாவர். இவர்களால் இயக்கப்பட்ட பாடசாலையின் மக்கிலோட் வைத்தியசாலை அமைந்துள்ள இடத்திற்கு அண்மையில் இன்றுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு அரசினர் அனுமதி பெற்ற உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக இயங்கத் தொடங்கியது. அன்றுதொட்டு இன்றுவரை ஆரம்பப் பாடசாலையாகவே இயங்கி வருகின்றது. கிறிஸ்தவ நெறியைப் பரப்புவதற்கு அமைக்கப்பட்ட அப்பாடசாலையில் கல்வி கற்றவர்கள் வரும் கிறிஸ்தவ நெறியாளர்களாக மாற்றமடையாமலே வாழ்ந்தன ரெனலாம். அதுவே இணுவையின் சிறப்புகளில் உயர்ந்ததாக அமைந்தது.

இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலை சரவணைச் சட்டம்பியாரும் திருமதி பார்வதி கதிர்காமரும் நடாத்திவந்த திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்த விடத்தில் 1930ம் ஆண்டு ஆணியத்திரத்தினத்தில் திரு. சாம்பசிவ ஐயர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பாடசாலையை நிறுவுவதற்குரிய நிலத்தினை வைத்தியர் அப்பாக்குட்டியர் அறநன்கொடையாகக் கொடுத்தார். உடையார் சிதம்பரநாதர், மயில்வாகன் அவர்களும் அவர் இளவல் முன்னைநாள் ஊராட்சி மன்றத் தலைவரா விருந்த திரு. மாணிக்கர் அவர்களும் பெரும் பொருள் கொடுத்துதவினர். இவர்கள் பணிக்கு மலேசியாவில் அன்று தொழில் புரிந்த இணுவை மக்கள் நன்கு உதவினர். இன்று அவர்களிற் பலர் இணுவைக்கு மீண்டும் வந்து குடியமர்ந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அக்கல்விப்பணியில் ஈடுபட வேண்டும்.

மலேசியாவில் திரட்டப்பட்ட பணமும் ஊர் மக்களால் உதவப்பட்ட பணமும் சைவ மகாஜன வித்தியாசாலையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இதனை நல்லமுறையில் நெறிப் படுத்துவதற்குச் “சைவம்” சபாபதிச் சட்டம்பியாரும் திரு. க. பொன்னையா அவர்களும் பொறுப்பாக இருந்தனர். திரு. க. பொன்னையா அவர்கள் பாடசாலை நிர்வாகத்திற் பெரும் பங்கு கொண்டு இயங்கி வந்ததால் “மனேச்சர்” என அழைக்கப்பட்டார். திரு. சி. மயில்வாகனம் அவர்கள் பாடசாலை வளர்ச்சிக்குப் பெரும்பொருள் கொடுத்து உதவினார். ஆசிரியர்கட்கு ஊதியம் கொடுப்பதற்கும் பொருள் கொடுத்தார். ஆயின் அவர் பணி நன்கு மதிக்கப்படவில்லை. சூழ்ச்சித்திறத்தால் அவர் ஆட்சிக்குழுத் தலைவராக வரும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒருவரி;ன் தனியுடைமை யாக்கப்பட்டது. பிற்காலத்தில் உரிமை வழக்கும் நடந்தது. இன்று அரசினர் பாடசாலையாக இயங்கி வருகின்றது. இப்பாடசாலை உயர்நிலைக் கல்லூரியாக வளர்ச்சி பெற்று இணுவிலின் எதிர்கால வாழ்வுக்கு அமைதி காணவேண்டும். கல்வியில் அரசியற் செல்வாக்கினைப் பயன்படுத்தி ஊரை இரண்டுபட வைக்கும் - கனதனவான்களாக எண்ணப்படும் கனதனமற்றவர்கள் தமது மனப் போக்கினை மாற்றிச் சீரிய வழிச் செல்லத் தமிழன்னை அருள்புரிய வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோம்.

தவத்திரு யோகசுவாமிகளின் அருள்வாக்கினை யேற்றுப் பெருமைமிகு பொன். இராமநாதன் அவர்களால் சைவ மகளிர் கல்லூரி கட்டுவதற்கு இணுவை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1913ல். இணுவையில் இன்று மருதனார்மடம் என அழைக்கப்படும் குறிச்சியில் அப்பெண்கள் கல்லூரி நிறுவப்பட்டது. இன்று சுன்னாகம் இராமநாதன் கல்லூரியென அழைக்கப்படுகின்றது. இன்றும் அக்கல்லூரி யமைந்த குறிச்சி இணுவில் கிராம சேவகரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இப்பெயர் மாற்ற விந்தையினைப் பின்வந்தோர் செய்துவிட்டனர். மருதையினார் என்ற பெருமகன் அவ்விடத்தில் ஓர் மடம் கட்டியதனால் அவரின் பெயர் அக்குறி;ச்சிக்கு இடப்பட்டு மருதனார் மடமென வழங்கப்பெற்றது. அதுஓர் தனியூரன்று. உண்மையில் “இராமநாதன் கல்லூரி, மருதனார்மடம், இணுவில்” என அழைக்கப்படவேண்டிய பெயர் இன்று அவ்விரு பெயர்கட்கும் பதிலாகச் சுன்னாகம் என அழைக்கப்படுகின்றது. மேலே குறித்த கல்லூரியில் சங்கீத சர்வகலாசாலை நடக்கின்றது.

மருதனார்மடம் குறிச்சியில் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமமும் உவில்லியம் மேதர் நினைவு நிலையமும் சிறப்பாக நடந்து வருகின்றன. இணுவில் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கில் விவசாயத் தொழில்நுட்பக் கல்லூரி அரசாங்கத்தால் நடாத்தப்படுகின்றது. வைத்;திய கலாநிதி கேர். அம்மையார் 1898ல் அமைத்துப் பணிபுரிந்த பெண்கள் மருத்துவ மனையொன்று சிறப்பாக இயங்க வருகின்றது.

பன்றிக்குட்டி போலே பதினாறு பிள்ளைபெற்றார் அன்று வருத்தமில்லை ஆஸ்பத்திரி போனதில்லை இன்றுபார் இணுவிலிலே பெண்கள் தொகை எண்ணவுமோ முடியவில்லை.
(கல்லடி வேலுப்பிள்ளை)

அதனையின்று மக்கிலேயட் ஆஸ்பத்திரி - இணுவில் ஆஸ்பத்திரியென மக்கள் அழைக்கின்றனர். சிறந்த கூட்டுறவு இயக்கத்திற்கு இணுவையெடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. அதன் பயனாகப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அது நல்ல வளர்ச்சியும் பெற்று வந்தது. இதற்கு வித்திட்டவர்கள் முன்னை நாள் ஊராட்சிமன்றத் தலைவராக விருந்த திரு. சி. மாணிக்கமவர்களும், ஆசிரியர் திரு. க. கந்தசுவாமியவர்களும், பண்டிதர் இ. திருநாவுக்கரசர் அவர்களுமாவர். இதற்கு ஊர்மக்களும் துணைபுரிந்தனர். இவ்வியக்கத்தினை நல்லமுறையிற் கட்டிக் காத்து வளர்த்துவந்தவர் ஒ. ஏ. என ஊர்மக்களால் அன்பாக அழைக்கப்படும் திரு. க. விசுவலிங்கம் அவர்களாவார். அவர் செய்த பணியினால் கூட்டுறவு இயக்கம் இணுவையில் நற்பயனைக் கொடுத்தது. ஆயின் அரசியற் கருத்து மாறுபாட்டினால் ஏற்பட்ட மோதல் கூட்டுறவு இயக்கத்தினைச் சீர்கெடச் செய்துவிட்டது. “கயிறிழுப்புகளும் களுத்தறுப்புகளும்” நடைபெற்றன. நல்லமுறையில் இயங்கிவந்த இணுவில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் அதன் வைப்பு நிதியுடனும் பெரும் லாபத்துடனும் சுண்ணாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துடன் இணைக்கப்பட்டது. அதன் தனித்தன்மையும் அழிக்கப்பட்டது. எமது ஊரவர்களால் வளர்க்கப்பட்டு – பெரும் பயன் பெறும் வேளையில் - அப்பெரும் பயன் பெறும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுவிட்டன. கறையான் புற்றெடுக்கப் பாம்பு குடிகொண்ட கதையாக முடிந்துவிட்டது. இதனால் களுத்தறுப்பில் ஈடுபட்டவர்களோ கயிறிழுப்பில் ஈடுபட்டவர்களோ பயனடைந்ததாகத் தெரியவில்லை. பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் அழுக்காற்றினால் விளையும் வினைக்கு இதுவோர் எடுத்துக்காட்டாகும்.

நெசவுத்தொழில் நிலையங்கள் நான்கு இவ்வூரில் உண்டு. இந்நிலையங்களில் இருந்து பல ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இன்று அத் தொழில்மூலம் வாழ்வினை நடாத்துவோர் பலராவர். இணுவையூரில் அமைந்துள்ள படிப்பகங்கள் சிறந்த பணியினைச் செய்து வருகின்றன. இவற்றில் பரமானந்த வாசிகசாலை நூல் நிலையம் சிறந்த இடத்தினைப் பெறுந்தகுதியுடையது. இந்நிலையம் 1936ம் ஆண்டு இணுவையூர் ஆசிரியர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது. முதல் மஞ்சத்தடியில் தொடங்கப்பட்டது. பின் காங்கேசன் பெருவீதியில் திரு. வ. செல்லப்பாவின் நிலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது இணுவில் மத்திய வாசிகசாலை யென அழைக்கப்பட்டது. காணி நிலம் கைமாற அதன் வளர்ச்சியுந் தடைப்பட்டது. அவ்வாசிகசாலை சேதுலிங்கச் சட்டம்பியாரின் வாழ்விடமாக அமைந்ததால் அதில் இரவுப்பாடசாலை நடந்து வந்தது. உடுவில் ஊராட்சி மன்றம் நாளேடுகளை யுதவி வந்தது. பின் வந்த இளையப்பரம்பரையினர் அதனைப் பொறுப்பேற்றுப் பரமானந்த வல்லி வாசிகசாலையெனப் பெயரிட்டு நடாத்திவந்தனர். அதன் பின் அந்நிலத்தினை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமேற்பட்டது. அந்நேரத்தில் ஊர்ப் பெரியவர்களும் பொதுமக்களும் பணம் உதவினர். அப்பணவுதவி கொண்டு இப்போது அமைந்துள்ள வாசிகசாலை நிலத்தினை வைத்தியர் திரு. சு. இராமலிங்கம் அவர்களிடமிருந்து விலையாகப் பெற்றனர். அந்நிலத்தில் நூல்நிலயக்கட்டிடத்தினையும் அமைத்தனர். அதன் பெயரில் சிறிது மாற்றத்தினைக் கொண்டு வந்து பரமானந்த வாசிகசாலை நூல்நிலையம் என மாற்றி யமைத்தனர். இப்பணியில் இளையதலைமுறையின் பணி மிகப் பெரியதாகும். அவர்களின் பெயர்களைப் பட்டியல் முறையில் கூறுவதாயின் அதற்கே பல ஏடுகளை ஒதுக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதாயின் இணுவையூரின் இளந்தலைமுறையில் வந்த அனைவரினதும் பங்கு வாசிகசாலைப் பணிக்கு உதவின தெனலாம். அதனால் இம்மன்றம் தனியொருவர் உடைமையாக இல்லாமல் ஊர்ச் சொத்தாகவிருந்து வருகின்றது.

இணுவில் தெற்கில் விக்கினேஸ்வர வாசிகசாலையும், இணுவில் கிழக்கில் சிவகாமசுந்தரி வாசிகசாலையும், மஞ்சத்தடியில் விவேகாநந்த சுவாமிகள் படிப்பகமும் நெசவு நிலையமும் சங்கீத வகுப்பும் திரு. செ. மதியாபரணமவர்களால் ஓர் நெசவு நடைபெற்று வருகின்றன. இதனை இளையத்தலைமுறையில் வந்தவர்களே இயக்கி வருகின்றனர். இணுவில் கிழக்கிலும் நாலாம் கட்டை எல்லையிலும் ஆதித்திராவிட மக்களால் இருபடிப்பகங்கள் நல்லமுறையில் நடாத்தப்பட்டு வருகின்றன. கந்தசுவாமி கோவிலில் திருமுறை நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இணுவையூரின் சமூக வாழ்வில் இப்படிப்பகங்கள், பல நல்ல மனிதர்களைச் சமூகவியல்பு கொண்ட சான்றாண்மை மிக்கவர்களை நாட்டுக்கு உருவாக்கி அளித்துள்ளன. அவர்கள் வரலாற்றுப்புகழ் கொண்டவர்களாக உருவாக்கா விட்டாலும் எதிர்கால வரலாற்றினை உருவாக்குஞ் சிற்பிகளாகவோ அன்றி அச்சிற்பிகளை உருவாக்கும் பிதாமகர்களாகவோ இருக்கவே செய்வர். இதனை வருங்காலம் உணர்த்தியே தீரும். அக்காலத்தில நம்மிற்சிலர் இருக்கலாம். பலர் மறையலாம். கவலை யில்லை. ஆயின் இவ்வுண்மை அழிவுபடாது.

திரு. சி. சின்னத்துரை

திரு. சி. சின்னத்துரையவர்கள் தாவடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இணுவில் மக்களோடு குடும்ப உறவு கொண்டு இணுவையூரவராக வாழ்பவர். இலங்கையில் உள்ள தொழில் அதிபர்களில் ஒருவர். பெரு வணிகர். கோயிற் பணிகள் பலவற்றிற்குப் பெரும் பொருள் உதவியவர். கல்வி நிலையங்களின் வளர்ச்சிக்காகப் பெரும் பொருளை வளங்கி வருபவர். இவ்வண்ணம் செய்யும் பணிகளில் தனது பெயரையோ தன் குடும்பத்தவர் பெயரையோ தொடர்பு படுத்தாத பண்பாளர். இவர் எண்ணியிருந்தால் இராமனாதன் கல்லூரி போல் சின்னத்துரை கல்லூரி யொன்றை உருவாக்கியிருக்கலாம். சிற்பக்களஞ்சியமான மஞ்சத்திற்குச் சோதி மயமான வீடும் அமைத்திருக்கலாம். என் செய்வது எமது ஊர் அந்த அளவுக்குப் புண்ணியஞ் செய்யவில்லை போலும். (வீடு அமைந்தேயாகும்)

அண்ணா தொழிற்சாலை

இதன் உரிமையாளர்களான திரு. பொ. நடராசா சகோதரர்கள் தமது உழைப்பால் உயர்ந்த இளம் பரம்பரையினராவர். பல சிறு கைத்தொழில்களை நடாத்துபவர். தமது ஊரவர்கள் சிலருக்குத் தொழில் கொடுத்துத் தம்மால் இயன்ற பணியினைச் செய்பவர். முயன்றால் முன்னேறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். அவர்கள் தொழில் வளம் பெற்று ஊர்மக்கட்குத் தொழில் கொடுக்கும் பெருவணிகராக வளர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

இணுவில் புகைவண்டி நிலையத்துக்கண்மையில் உரும்பராய் வீதியில் திரு. பொ. சந்திரலிங்கம் என்பவரால் கல்லுடைக்குந் தொழிற்சாலை யொன்று நடாத்தப்பட்டு வருகின்றது. இவைபோல் பல தொழில் வளங்களைப் பெருக்கி ஊர்மக்கட்குப் பணி புரிய இளந்தலை முறையினர் முயல்வார்களாக.

இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலைப்
பழைய மாணவர் சங்கக்
கொழும்புக் கிளைச் சங்கம்

இச்சங்கம் இயக்குனர்களாகிய திருவாளர்கள் க. கந்தசாமி, சி;. பாலச்சந்திரன், க. குமாரசாமி, தி. ஆ. கந்தையா முதலியவர்களின் பெரு முயற்சியால் மேற்படி வித்தியாசாலைக்கு அருகாமையிலுள்ள காணி 2 பரப்பு 10000 ரூபா செலவில் வாங்கி வித்தியாசாலையின் வளர்ச்சிக்காக அரசாங்கத்திடம் வித்தியாதிபதி மூலம் கையளிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றப் பணி

திரு. ச. முத்துலிங்கம் அவர்கள் உடுவில் ஊராட்சி மன்றத் தலைவராக விருந்த காலத்தில்:-

1. ஊராட்சி மன்றத்தால் இணுவைக் கந்தன் கோயில் ஆறுமுகசுவாமி வாசலின் தென்புறத்தில் புனித நீர்நிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்புனித நீர்நிலைக்குத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைந்துள்ள சிறி கந்தபுட் காணியில் புனிதநீர் விடப்பட்டுள்ளது. அதனால் திரு. கந்த புட்காணியென்னும் திருப் பெயரும் இடப்பட்டது. இந்நீர்நிலை அமைந்துள்ள நிலத்தினை ஊராட்சி மன்றம் சிவத்தரு இராமநாத ஐயர் மகன் திரு. சிறிதரஐயரிடம் விலைக்குப் பெற்று ஊர்ச் சொத்தாக விட்டுள்ளது.

இணுவைக் கந்தபுட்காணியில் கந்தன் திருநீராடல் நடைபெற்று வருகின்றது. பொது மக்களும் கலாசாலை மாணவரும் தூயமுறையில் அதன் பயனை நுகர்ந்து வருகின்றனர். இதற்கு வினாயர் வாரியரால் கோயிலுக்கு விடப்பட்ட தேனாரொல்லைப் பாப்பா தோட்ட அறநன்கொடைக்கு நிகழ்ந்த கேடுபோல் சூழ்வினை அமைந்து விடாமல் இறைவன் காப்பானாக.

2. உள்ðராட்சி மன்றத்தில் ஓர் திறந்த வெளி அரங்கு அமைத்து திருமுறைகள் நூல் நிலையத்தினையும் ஏற்படுத்தி சமயப்பணிகளும். இயல், இசை, நாடகமாகிய முத்தமிழ் வளர்ச்சியும் நடைபெற வசதிகள் செய்தார்.

3. பல இடங்களிலும் மாறி மாறி நிலையற்ற தாயிருந்த சந்தைக்கு நிலம் வாங்கி விஸ்தரித்து பொருட்களை விற்பவர்களுக்கும் வாங்குவோருக்கும் ஏற்ற வசதிகளைச் செய்தார்.

4. இணுவில் அம்பலவாணக் கந்தசுவாமி கோவில் வடக்கு வீதிக்கருகாமையில் ஓர் நெசவு நிலையத்தையும், அருணகிரி அன்னதான மடத்தையும் நிறுவி மக்களுக்கும் ஆலயத்துக்கும் பயன்படுமாறு செய்தார்.

5. அம்பலவாணக் கந்தசுவாமி கோயில் புனருத்தாரணம் செய்வதற்கு 1965ல் எந்தெந்த வழிகளில் உதவிகள் செய்யமுடியுமோ அவற்றை யெல்லாம் போதிய அளவு செய்து கொடுத்தார்.

6. 1967ல் மஞ்சம் அச்சுமுரிந்து ஓடமுடியாமலிருந்தபோது இரும்பினாலான அச்சுப் போடவும், மற்றைய திருத்த வேலைகள் செய்யவும் தம்மாலான உதவிகள் அத்தனையும் செய்து வைத்தார்.

7. கலைத்திறன் மிக்க இணுவை மஞ்சத்தை உல்லாசப்பிரயாணிகள் வந்து பார்வையிடக் கூடியதான ஒழுங்குகளைச் செய்தார். இன்னும் பல உதவிகளைச் செய்து கொண்டேயிருக்கிறார்.

என்னைப்பற்றி

எல்லாவிஷயங்களையும் அறிகின்ற வாசக நேயர்கள் என்னைப் பற்றித் தப்புக் கணக்குப் போடாமலிருக்கும் பொருட்டு என்னைப்பற்றியும் சிறிது கூறிக் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. அன்பர்களே!

இணுவில் அம்பலவாணக் கந்தன் தேவஸ்தான மனேஜராயும் உரிமையாளராயு மிருந்த திருவாளர் அ. கதிரித்தம்பி அவர்களுக்கு î கோவில் பூசகர்களும் அவர்களோடிணைந்த நம்மவர்களும் கொடுத்த தொல்லைகள் காரணமாய் மனந்தளர்வுற்ற கதிரித்தம்பி (எனது பெரிய தகப்பனார்) அவர்கள், எனது தகப்பனாராகிய திருவாளர் அ. சுப்பிரமணியம் அவர்களை î கோவிலின் ரஸ்தியாக 1912ம் ஆண்டில் நியமனம் செய்து வைத்தார்கள். அதே ஆண்டில் எனது தகப்பனார் பூசகர் மீது நடத்துரட்சி வழக்கைத் தாக்கல் செய்யவே அவர்கள் தங்களின் சொந்தக் கோவில் என்றும் தாங்களே மனேஜரும் உரிமையாளரும் என்றும் மறுமொழி அணைத்து வழக்கை நடத்தினர்.

ஆட்சி, சாட்சி, திறப்பு என்பன அவர்களின் சார்பாயிருந்தால் அவர்களின் சொந்தமென டிஸ்றிக்கோடும், சுப்பிறீம் கோடும் தீர்ப்பளித்தன. இந்த அவமானத்தையும் துக்கத்தையும் தாங்கமுடியாத நிலையில் எனது தகப்பனார் மலாயாவுக்குப் பயணமானார். அங்குள்ளவர்கள் இவருடைய மனத்தைத் தேற்றி இங்கு அனுப்பிவைத்தார்கள். வந்து ஆறாவது மாதம் (1916) சித்திரை மனநோய் காரணமாக இறந்தார். இறந்ததும் மூன்று பிள்ளைகளும் (ஒரு ஆண் இருபெண்) தாயாரும் அபலைகளானோம். எங்கள் வல்வினைகள் திரண்டன. தகப்பனார் உரிமையிழந்து உயிரையுமிழந்தார். நாங்கள் தகப்பனையுமிழந்து அவரது கமபுலத்தையு மிழந்து, அவரின் இனபந்துக்களையுமிழந்து தவித்தோம்.

இந்த அவலநிலையைப் பெரிய சந்நியாசியாரிடம் முறையிட்டோம். கொடிது கொடிது இளமையில் வறுமை. அப்பெருமான்தான் என்ன செய்வார்? வேற் பெருமானுக்கு நிவேதிக்கும் திருவமுதை அப்படியே அனுப்பி வந்தார். இந்த நிலையும்ஒருவருட காலமே நீடித்தது. 1917 சித்திரையில் அவரும் சமாதியடைந்தார். எனது தாயார் பசு மாடு வளர்த்தல் முதலான சிறு வருவாயுள்ள தொழில்களைச் செய்து கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து வந்தார். முதலாந் தரத்தோடு பள்ளிப் படிப்பைக் கைவிட்டேன்.

சுருட்டுக் கைத்தொழில் பழகச்சென்று நாளொன்றுக்கு மூன்று சதம் சம்பளம் பெற்றேன். சேதுலிங்க உபாத்தியாரிடம் இரவி;ல் படித்தேன். இராப் பள்ளிக்கூடமும் அப்போது நடைபெற்றது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நீதிநூல்கள், நிகண்டு, அந்தாதி வகைகள் படித்தேன். சதாசிவ உபாத்தியாயரிடம் புராணத்துக்கு உரை சொல்லப் பழகினேன். வடிவேற் சுவாமியாரிடம் தேவாரப் பண்முறை பழகினேன். பண்டிதர் கார்த்திகேசு (சரவணமுத்து) அவர்களிடம் எழுத்து, சொல், யாப்பு இலக்கணங்கள் ஒரளவு படித்தேன். நண்பன் உருத்திராபதி அவர்களிடம் வர்ணம் வரை சங்கீதமும் புல்லாங்குழலும் பயின்றேன். வைத்தியம் பழகத் தொடங்கியதும் இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதாயிற்று

எனது இளைய சகோதரியை ஆவரங்கால் வைத்தியர் தாமோதரம்பிள்ளை அவர்களின் இளைய மகனும் வைத்தியருமாகிய சின்னத்தம்பி அவர்கள் விவாகம் செய்தமையால் வைத்தியம் பழகும் படி என்னை அழைத்தார்கள். எனக்கு அதில் நாட்டம் செல்லவில்லை. வடிவேற் சுவாமியார் அவர்களும், விசுவலிங்கத் தவில்காரர் அவர்களும் வற்புறுத்தியதின் பயனாக 13 வருடகாலம் அவரிடம் வைத்தியம் பழகி 1941ம் ஆண்டில் பதிவு செய்த வைத்தியனானேன். கொழும்பிலுள்ள ஆயுள்வேத வைத்தியசபை வைத்தியர்களைப் பரிசோதித்துப் பதிவு செய்தது அதில் வாதவைத்திய சிரேஷ்டன் (ஸ்பெஷலிஸ்ற்) எனப் பதிவு செய்து 59 இலக்கமுள்ள பதிவு பத்திரமும் 1953ல்பெற்றேன். அத்துடன் கிறான்ரும் எடுத்துவந்தேன். வைத்தியத் தொழில் நல்லாய் நடைபெற்றது. இலங்கையின் பலபாகங்களிலும் மிருந்து மக்கள் வந்து வைத்திய சிகிச்சை பெறுகிறார்கள். தொழில் வகையால் நில்ல வருவாய் கிடைக்கப் பெற்று முன்னேற்றமடைந்தேன்.

வடிவேற் சுவாமியார் அவர்களின் தொடர்பு என் சிறுமையை நீக்கவும் தத்துவம் 96 ஐயும் இலகுவாய் விளங்கிக் கொள்ளவும் உதவிபுரிந்தது. வைத்தியப்படிப்பிற்கு பிரதானம் நான் விரும்பிப் படித்தநூல் “டக்ரர் கிறீன் பாதிரியார்” (மானிப்பாய்) அவர்களால் எழுதப்பட்ட ‘ரணவைத்தியம்’ என்பதாகும். அந்த நூலில் உடம்பிலுள்ள ஒவ்வோர் உறுப்பையும் அவற்றில் உண்டாகும் சகல நோய்களையும் பற்றி படங்களுடன் விளக்கமாகத் தமிழில் எழுதியுள்ளார். அதனை ஆதாரமாகக் கொண்டு பல ரோகங்களையும் மிக இலகுவாக உணரக்கூடியதாக இருந்தது.

நயினாதீவு ஸ்ரீமுத்துச்சாமி சுவாமிகள், சுவாமி அத்வைதானந்தா, சுவாமி சத்தியானந்தா (குரு), சுவாமி நிசானந்த பரமேந்திர சரஸ்வதி முதலான பெரியோர்களின் தரிசனமும் ஆசீர்வாதமும் பெறும்பெரும் பேறு கிடைத்தது. சுவாமி நிசமானந்தாவிடம் வைத்தியமும் படிக்க வாய்ப்புக்கிட்டியது.

வடிவேற் சுவாமியார் அவர்கள் எனது குடியிருப்புக்குரிய காணியை வாங்குவதற்கும் விவாகம் நடைபெறுவதற்கும் வகைசெய்து உதவினார்கள். 1938-ல் அம்பலவாணக் கந்தசுவாமி கோவில் சம்பந்தமான ஒற்றி வழக்கு ஆரம்பமானது. அதில் ஈடுபட்டேன். 1941ல் கொமிசன் பெட்டீசத்துக்குக் கையொப்பம் சேகரித்தேன். 1942ல் கொமிசன் விளங்கி, பொது வழக்குவைக்க உத்தரவு செய்தது. பொதுவழக்கிலும் 1948ல் பிராமணருக்குச் சாதகமாய் தீர்வை சொல்லப்பட்டது அப்பீல் எடுக்கப்பட்டது. சுவாமியாராவர்களின் முயற்சியால் இணுவில் ஐக்கியமுன்னணி சேவாசங்கம் உருவானது. அதற்குத் தலைவராக என்னைத் தெரிவு செய்தனர். பூசகர்களுடன் ஒத்துழையாமை இயக்கம் உண்டானது. அப்பீல் வழக்கு நடத்தும் பொறுப்பு எனக்கே வந்தது. பொதுப் பணத்துடன் என்னிலும் கொஞ்சம் பொறுத்தது. கூடிய காலம் இதில் ஈடுபடக்கூடியதாக மனம் ஏவப்பட்டேன். 1953ல் பொதுக்கோவிலாக, சந்ததி உரிமையுடன் தீர்ப்பளிக்கப்பட்டது, மனந்தாழாத பெரியோர் சிலர் மாறாக வேலைசெய்ய முன்னிலைப் பட்டனர்.

தங்கள் பணத்தில் வழக்குநடத்தி எங்களுக்கு உரிமை தீர்ப்பித்தேன் என்றும், கள்ளக்கணக்கு வைத்தேன் என்றும், பிரசாரஞ் செய்யத் தொடங்கினர். பிரதானமாக ஆசரிய, பண்டித சகோதரராகிய திரு. இ. இராசலிங்கம், திரு. இ. திருநாவுக்கரசு என்பவர்களே முதன்மை வகுத்தனர். தற்காலிக றஸ்திசபையை 1955ல் கோடு அமைத்தது. அதற்கும் தலைவராக என்னை நியமித்தது. நான் அதை மறுத்து திரும்ப ஏற்றேன். 12-8-57ல் நிரந்தரசபை தெரிவு செய்யப்பட்டது. அதிலும் என்னைத் தலைவராக்கினார்கள். சபையார் திருப்பணிக்கும் பொறுப்பாக்கினர். 21-9-65ல் ஆட்சி எடுக்கப்பட்டது. கோயில் முற்றாக இடிபட்ட நிலையில் கோபுரவாயிற் கதவு உடைத்து ஆட்சி எடுக்கப்பட்டது.

சபை அனுமதியுடன் ஊரெழு ச. சோமசுந்தரக் குருக்களை அழைத்துவந்து காட்டினேன். பாலஸ்தானம் செய்யப்பட்டது. மஞ்சத்துக்குப் பாதுகாப்புச் செய்யப்பட்டது. கோயிற் கட்டட வேலை தொடங்கவே எதிர்ப்புச்சக்திகளும் சுயரூபமெடுத்தன. அவற்றையும் தாண்டி ஒருவாறாகக் கட்டிமுடித்து 2-9-66ல் கும்பாபிஷேகமும் நடந்தது. கெதியில் கும்பாபிஷேகம் நடைபெற்றால் முன்நின்று நடத்துபவரை முடித்துப் போடும் என்று சொன்னார்கள். அதுவும் சரிதான் என்ற நிலையில் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.

தங்கள் காரியங்களை நிறைவேற்றுவதற்கு நான் தடையாயிருக்கிறேன் என்று கருதியவர்களும் தங்கள் உள்ளக்கிடக்கையைத் தாமாகவே வெளிப்படுத்தத் தொடங்கினர். “பிசுங்கான் அரைத்துப் போட்டேன்”, “எனது பிள்ளைகளுக்கு உரிமையாக்க உறுதி படைத்தேன்”, “கோயிற்பணத்தை அபகரித்தேன்”, “மஞ்சத்தின் வெண்கல முடியை விற்றேன்” என்ற பிரசாரங்களைச் செய்ததோடமையாது கோவிலினுள்ளே பூட்டிவைத்து அடிக்கவும் முற்பட்டார்கள். ஒவ்வொருவரதும் “நான்” என்ற ஆணவமே சாகடிக்கப்பட்டது. நான் நிரபராதியானேன்.

1967 ஆனி மாதம்கொடியேற்றத்துக்குரிய ஒழுங்குகள் செய்யப் பெற்றன. அப்போது கொடியேற்றாது விட்டால் பின்பு 12 வருடங்கள் செல்ல வேண்டும் என்று குருக்கள் கூறியமையால் ஆயத்தம் செய்தோம். முதல்நாள் சாந்தி நடைபெற்றது. எதிரிகள் தங்கள் மனச்சாந்தியை இழந்தனர். சாந்தி முடித்து றஸ்தி சபையினரில் மூவர் வீடுநோக்கி வந்தோம். இரவுநேரம் நல்ல இருளில் தலைவருக்கு விழுந்தது தலையில் அடி. மண்டை உடைந்தது. இரத்தம் ஓடியது. சேர்மன் முத்துலிங்கம் அவர்களின் உதவியுடன் பொலிசில் பதிவு செய்துவிட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மருந்து கட்டுவித்தேன். அடுத்தநாள் கொடியேற்றம். இங்கு வருவதற்கு டக்ரர் சம்மதிக்கவில்லை. கூடியவரை வாதாடி சிவப்பு மையால் ஒப்பம் வைத்துவிட்டு முத்துலிங்கம் அவர்களின் காரில்வந்து சேர்ந்தேன். கொடியேற்றமும் நிறைவேறியது.

எதிரிகள் இந்தநடைமுறைகளைக் கண்ணுற்று மனம் பொறாது கேலிசெய்தும், ஏசியும், தகாத வார்த்தைகளைப் பேசியும், சாமபேத, தான, தண்டங்களைப் பிரயோகித்தும், தங்கள் மன உளைச்சலை வெளிப்படுத்திக் கொண்டனர். பாண்டவர்களுக்கு நூற்றுவர் செய்த அக்கிரமங்களிலும் பார்க்க அதிகப்படியான அக்கிரமங்களை இன்றும் செய்து கொண்டேயிருக்கின்றனர்.

ஆண்டவன் திருவுளம் இதற்கு மறுதலையாக அமைந்தது. பலஊர்களிலும், தொழிற்சாலைகளிலும், இல்லங்கள் தோறும் இரந்தும், தண்டியும் கோயில் திருப்பணிகளையும் மஞ்சத்திருப்பணியையும் செய்விக்கும் பொறுப்பையும் ஊக்கத்தையும் அரிய பெரிய உதவிகளையும் மனோதிடத்தையும் அடியேனுக்குத்தந்து குறித்த விஷயங்களை நிறைவேற்றி வைத்தது.

இணுவை அப்பரின் சரித்திரத்தை வெளியிட வேண்டும் என்ற எனது பேராசையை நிறைவேற்ற இணுவை க. கந்தசாமி ஆசிரியர் அவர்களதும் இணுவை செ. நடராசா ஆசிரியர் அவர்களதும் பேருதவியைத் தந்ததோடமையாது தர்ம பரிபாலன சபையாரினதும் பல பெரியோர்களதும், பொருளுதவியையும், அச்சிடுவதற்குரிய வசதிகளையும் அள்ளித் தந்தது.

அப்பர் சமாதியாகி 58 ஆண்டுகளாகியும் அவரது வரலாற்றை எழுதவேண்டும் என்ற எண்ணம் எவர்களுக்கும் உண்டாகவில்லை. அடியேன் மனதில் உதித்த எண்ணம் ஆசிரியர் வாயிலாக உருவாகியது. முதியவர்களும் அறிஞர்களுமாகிய மஞ்சத்தடி சதாசிவ உபாத்தியாயர், ஆறுமுகதாசர் ஆசிரியர் ஆகிய இருவருக்கும் தனித்தனி வாசித்துக் காட்டியபோது “அப்பப்பா! அந்தப் பெரியார் செய்த அற்புதங்களை நம்மால் அளவிட்டுக் கூறமுடியா@ அவருடைய சித்துவிளையாட்டுக்கள் சொல்லுந்தரமன்று@ எழுத ஏடு அடங்காது” என்று கூறி முன்னுரைகளும் தந்தார்கள்.

இளமையில் அனாதையாயிருந்த என்னை முதலில் சுருட்டுக் கைத்தொழிலாலும், ஓரளவு கற்பன கற்கற் செய்து, வைத்தியத் தொழிலில் ஈடுபடச் செய்து வாதவைத்திய சிரேஷ்டன் எனப் பதிவு செய்யவைத்தும், பிரபல வைத்தியனாக்கியும் போதிய பொருளீட்டச் செய்தும். பலரிடத்தும் யாசித்துத் தரும கைங்கரியங்களை நிறைவேற்றக் கூடிய மனோநிலையைத் தந்தும், றஸ்த்தி சபைக்குத் தலைமைதாங்கச் செய்தும், புன்னெறிய தனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சிநல்கி, என்னையும் அடியானாக்கிய ஆண்டவனுக்கு என்ன கைமாறு செய்ய வல்லேன்? அவனருளாவே அவன் தாள் வணங்கி, அவனது பாதச் சிலம்பொலியில் எனது மனம் ஒடுங்க வேண்டும் என்பதே எனது ஆசையும் கைமாறுமாகும்.

ஆவரகால் சின்னதம்பி சு. இராமலிங்கம்
வைத்தியசாலை, வைத்தியர்
இணுவில்.

கோவில் திருப்பணி வேலைகளுக்குப்
பொருளுதவியோர்.

இணுவில், தாவடி, கோண்டாவில், கொக்குவில், சுதுமலை, மானிப்பாய், நவாலி, உடுவில், சுன்னாகம் ஆகிய ஊர்களில் இல்லங்கள் தோறும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடத்தும், பலவூர் முதலாளிகளிடத்தும், பாடசாலைகளில் ஆசிரியர்களிடத்தும் சென்று பொருளீட்டியதோடு சில பெயர்வளிகளையும் குறிப்பிடுதல் வேண்டும். சி. சின்னத்துரை அவர்கள், மூலத்தானக் கட்டிடம், மஞ்சத்திருத்த வேலைகளிலும், சு. கனகலிங்கம் (சுதுமலை) ஆறுமுகசுவாமி கோவில் மகாமண்டப வேலைகளிலும் (நீதிராசாவின் சகலன்) மஞ்சத்திருத்த வேலைக்கு முதலியார் மகேசன் (நவாலி) அவர்கள் தான் உதவியதோடமையாது. எங்களுடன் தானுமொருவராக வந்து மற்றையவர்களின் உதவியையும் பெறுதற்கு உதவினார்கள். மஸ்க்கன் சுப்பிரமணியம், அவர்தம்பி நாகராசாவும். மஞ்சத்துக்கு அச்சு இங்கிலாந்திலிருந்து வரவளைத்து, தங்கள் தொழிற்சாலையில் கடைந்து தந்தார். அச்செலவில் ஒரு பகுதியைத் தாங்கள் ஏற்றுக்கொண்டார்கள். க. பொன்னுத்துரை ஒவசியர், முத்துக்குமாரசுவாமி அம்பாள் திருஉருவங்களை வார்த்துவைத்தும் மஞ்சக்கட்டிடத்துக்;குதகரமும் “யாக்”கும் கொடுத்தார். மு. இராசா அவர்கள், சண்டேசுவர மூர்த்திகள் மேற்படி கோவில் உள்வீதி சகடைக்குமாகிய பொறுப்பில் ஈடுபட்டுள்ளார். ப. சு. சிவசம்பு ஞானவயிரவ சுவாமி திருவுருவத்தை வார்ப்பித்தும், கோயிலைக் கட்டியும், வாகனத்தைச் செய்தும் வைத்துள்ளார். க. கனகராசா (மில்க்வைற் சோப் ஸ்தாபன அதிபர்) நடேசர் கோவிலும் அதற்கு வேண்டிய அலங்காரத்துக்குரிய காணிக்கை பொருள்களையும் முடிகளையும் கொடுத்தார்கள். ச. தம்பியையா வடக்குவீதி கொட்கைவேலை செய்தார்கள். பிள்ளையார் கோவில் கட்டிட திருத்;த வேலையில் பொ. சண்முகநாதன் நாலில் மூன்று பங்கை ஏற்று செய்வித்தார். கு. கிருபாகரன் தண்டாயுதபாணி திருவுருவத்தை வார்த்து வைத்தார். உரும்பிராய் திருமதி. திருவிளங்கம் (கனகம்மா) அவர்கள் கொடித்தம்பத்தின் திருத்த வேலைகளையும் சி. சிவகுமாரன் மூலமூர்த்திகளுக்கு வெள்ளி அங்கிகள், திருவாசி, கமலபீடம் (எனாமல்) கதவுகளின், பொறுப்பை வி. கதிர்காமு வி. கார்த்திகேசுவும் இன்னும் மனேச்சர் கோவில் முடிகளும், திருவாசிகளும், பீடம், கோமுகை, குத்துவிளக்குகள், பஞ்சாலாத்திகள், அடுக்கு தீபம், குடைகள், முதலிய காணிக்கை பொருள்களும் வாகனங்களும் கொடுத்துதவினார்கள். வயிரவருக்குரிய வெள்ளி அங்கிகளும் கொடுத்தார்கள். கட்டிடம், மஞ்சத்திருத்தம், திருவுருவங்கள், அங்கிகள் காணிக்கைப் பொருட்கள் வாகனங்கள் ஐந்துலட்சத்துக்கு உதவினார்கள். ஆனால் பிரதானம் தேருக்கும், மஞ்சத்துக்கும் நிலையா கட்டிடமும் (வீடும்) தேவை. தாங்களும் செய்யார்கள் மற்றையவர் மூலம் செய்விக்கவும் விடார்கள். அப்படிப் பெருவுள்ளம் படைத்த பெரியோர்களும் உண்டு.

ஆவி துடிக்குதடி

4. ராகம்: சுருட்டி தாளம்:- ஆதி

பல்லவி
ஆவி துடிக்குதடி - ஸகியே
பூவில்நல் இணுவைப் புண்ணியனைக் காண – ஆவி

அணுபல்லவி
தேவியாம் வள்ளியும் பூவை குஞ்சரியும்
மேவிக் குலவிடும் வேலனைக் காண – ஆவி

சரணம்
ஒளிரும் முகத்தழகும் மதிவதனத் தழகும்
களிகொள் இதழ்முறுவல் நெளியும் குறும்பழகும்
மிழிரும் பொன் வேலழகும் மேனியழகும் ஞானம்
தெளியும் அருள்அழகும் இருகண் குளிரக்காண – ஆவி

பூவையே நீ தூதுசொல்லடி!

5. ராகம்:- காபி. தாளம்:- ஆதி

பல்லவி
பூவையே நீ தூது சொல்லடி – என்றும்
நாவலர் போற்றிசெய்யும் நல் இணுவைக் கந்தனிப் - பூ

அனுபல்லவி
கோவையிதழ் கனிய கோடியின்பம் தாரானோ?
பாவையென் வேதனைகள் வேலவன் தீரானோ? – பூவை

சரணம்
தோகைமயில் ஏறி ஓடியே வாரானோ?
தொண்டுசெய் காதலியாற் துடிப்பதைப் பாரானோ?
வாகைக் கடம்பணியும் மார்போ டணையானோ?
வடிவேலன் எனையர வணைக்க வந்திடுவானோ? – பூவை

சிந்தை துடிக்குதடி!

6. ராகம் :- கல்யாணி தாளம் :- ஆதி

பல்லவி
கந்தஸ்வாமியைக் காண வேணுமென்று
சிந்தை துடிக்குதடி - இணுவைக் - கந்த

அனுபல்லவி
அந்தி நேரந்தனிலேர மந்தமாருதம் வீச
சந்திர வொளியிலே எந்தனை யணைத்திடும் - கந்த

சரணம்
கதிர்காம வேலவன் அபிராமி பாலகன்
கருணாகர முருகன் காதலெல்லாம் தருவன்
மதிசூடும் அரன்மைந்தன் மாலவனின் மருகன்
மயில்வாகனன் இணுவை தமிழ்மா முருகனாம் - கந்த

கந்தன் கழலடிகள் பணிமனமே!

7. ராகம் :- தாளம்:- ஆதி

பல்லவி
கந்தன் கழலடிகள் பணிமனமே – தினமே
உந்தன் வினையகற்றும் செந்தமிழ் இணுவைவளர் – கந்த

அனுபல்லவி
அந்தமில்லாத வேத அருமறை புகழ்பவன்
சுந்தரியாள் சுதன் சுப்ரமண்யன் குஹன் - கந்

சரணம்
முந்தை வினைகளெல்லாம் முற்றுமே நீக்கிடுவான்
பந்தமகற்றி உந்தன் பாவங்கள் போக்கிடுவான்
விந்தை மயில்மீதேறி விரைந்தருள் செய்திடுவான்
சிந்தையால் அன்பு செய்யச் சிறப்பெல்லாந் தந்திடுவான்.

ஞானவேல் முருகன்

8. ராகம்:- ஸஹானா தாளம்:- ஆதி.

பல்லவி
ஞானவேல் முருகன் மோனக் குருபரன்
தேனமுதான கழல் தினமும் பணிமனமே – ஞான

அனுபல்லவி
கானக் குறவள்ளி குஞ்சரியின் காந்தன்
கானத் தமிழ்திகழும் கவின் இணுவையம்பதி – ஞான

சரணம்
நெக்குநெக் காயுருகி நெஞ்சம் முருகன்பதம்
எக்கணமும் மறவா தேத்திடும் செந்தமிழில்
திக்கு வேறில்லைஎனத் திருவடித் தாமரைகள்
அக்குகனும் தருவான் அருளைஅள்ளிச் சொரிவான்

மஞ்சமதிலேறிக் கொஞ்சி வந்தான்

9. ராகம்:- கானடா தாளம்:- ஆதி

பல்லவி
மஞ்சமதி லேறிக் கொஞ்சிவந்தான் - கந்தன்
அஞ்சலெனக் குஹன் அபய கரந்தந்தான் - மஞ்ச

அனுபல்லவி
நெஞ்சமதில் நிறைந்தஎன் நீலாயதாஷி பாலன்
கஞ்சமலர்ப் பதத்தைத் தஞ்சமடையத் தந்தான் - மஞ்ச

சரணம்
நல்இணுவைவளர் நாதன் ஷண்முக வேலன்
கல்லும் கனிய அருள் காந்தமென இழத்தான்
வெல்லும் விறல் வேலேந்தி வள்ளி குஞ்சரியோடு
சொல்லும் தமிழ்இனிக்க நல்இணுவை வீதியிலே

ஆறுமுகத்தையனின் அழகு

10. ராகம்:- கரஹரப்ரிய தாளம்:- ஆதி

பல்லவி
ஆறுமுகத் தையன் அழகு – பருகிக்
கூறுவதற்கோர்மொழி தமிழே இணுவை – ஆறு

அனுபல்லவி
நீறுதவழ் நெற்றி நிமிர்ந்திடும் ஞானவேலும்
ஏறுமயில் வாகனமும் எழில்வள்ளி குஞ்சரியும் - ஆறு

சரணம்
அழகுக் கழகுசெய்யும் அழகன் அவன் முருகன்
பழகுதமிழ் மொழியின் பண்புநிறை குமரன்
தவழும்எழில் அழகின் தனிப்பெரும் தவத்தழகன்
கமழும்பொழில் மலியும் கவின் இணுவையம்பதி

தெ. கோபாலசிங்க அவர்கள் பாடியது (பளை)

பதியிற் பழமைப் புகழ்சேர் பதியாம்ஸ
இணுவிற் கரசே இருஞானப்
பழமென் றடியார் பரவித் துதிசெய்
பரமே குமரப் பெருமானே
விதியிற் பழுதுற் றிழிமைப் படுவோர்
விடிவிற் கொருபே ரொளியாகி
விழுவார் அழுவார் விழிநீர் பொழிவார்
வினைதீர் வடிவேற் பெருமானே
கதியொன் றிலையென் றுனையே தொழுவார்
கனவிற் களியுற் றருள்செய்யுங்
கருணைக் கடலே மயில்வா கனனே
கவினார் முருகப் பெருமானே
அதியற் புதமுற் றொருநற் கனவிற்
றனதுற் பவமென் றுரைசெய்தே
அருநொச் சியொலைப் பதிபுக் கமரும்
அழகா இவணீ வருவாயே!

இணுவில் ஸ்ரீ கல்யாண வேலவர்
திருவூசல்
அ. க. வைத்தியலிங்கம் ஆசிரியர் இயற்றிய

காப்பு

சீரெறு மீழவள நாட்டி னோர்சார்
திகழ்கின்ற யாழ்ப்பாண தேச மேவும்
காரேறு பொழிலிணுவை நகரில் வாழும்
கல்யாண வேலவர்மே லூசல் பாடப்
பாரேறு பரராச சேகரப் பேர்ப்
பார்த்திபர்கோ னன்னகரிற் றாபித் தேத்தும்
பேரேறு விநாயகமுக் கண்ணன் பாதம்
பேரன்பு கொண்டுநிதம் வாழ்த்து வாமே.

திருவளரு மெழின்மருமச் செங்கண்; மாலுஞ்
செம்பதும மலரோனுந் தேடிக் காணா
அருவுருவாஞ் சதாசிவன்றன் கருணை யாகி
யவதரித்துத் திருமுகமோ ராறு கொண்ட
வரமருவு கல்யாண வேலர்மீது
வாஞ்சைபெறு மூஞ்சலிசை யினிது பாட
கரமருவு மங்குசபா சத்த னான
கணபதித னிருசரணங் கருத்துள் வைப்பாம்.

காரணமாந் நாதவிந்து தூண்க ளாகக்
கருதரிய குடிலையது விட்ட மாக
பூரணமாக கியகலைகள் கயிற தாகப்
பொற்புறுநற் சிவாகமங்கள் பலகை யாக
எரணங்கொள் சதாசிவமாம் பீட மீதில்
ஏகபர சிவசோதி யென்ன வந்து
காரணவு சோலைசெறி யிணுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (1)

செக்கர்வெயில் பயில்வளத் தூண்கள் நாட்டி
சிறந்தவொளி பொழிவயிர விட்டம் பூட்டி
தொக்கதங்கப் புரிபுனைந்த கயிறு மாட்டி
துலங்குசெழும் பதுமலர்ப் பலகை சேர்த்தி
மிக்கமுத்தின் பந்தரிட்டு விதானம் போக்கி
வெண்கவரி புனைந்ததிரு வூசல் மீது
கைக்களிற்றி னொருதுணையா யிணுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (2)

திருவிளக்கு நதியாட மதியு மாடச்
செஞ்சடைக்கா டாடமுக னைந்து மாட
மருவிளங்கு தொடையாட வளக மாட
மங்கைசிவ காமிமன மகிழ்ச்சி யாட
அருள்விளங்கு பதஞ்சலியும் புலியு மாட
வம்பலத்தே நடம்புரியு மெம்பிரான் றன்
கருணைதங்கு பாலகரே யிணுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (3).

அருள் பொழியுந் திருமுகங்க ளாறு மாட
வாறிரண்டு திருக்கரமா மலர்க ளாட
மருள்பொழிமும் மலஞ்சீக்கும் வடிவே லாட
மங்கைதெய்வ யானைவள்ளி மகிழ்ந்தே யாட
பொருள்பொழிசெங் கனககுண்ட லங்க ளாட
புண்டரிக சரணமல ரிரண்டு மாட
கருணைபொழி கணபதிசே ரிணுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (4)

இந்திரைகொழு நனும்சுதனும் வடந்தொட்டாட்ட
விமையவரு மித்திரனுங் கவரி வீச
சந்திரனு மாதவனுங் கவிகை தாங்க
தனதன்முத லோரால வட்டம் வீச
முந்துதவத் தினர்வேத கீதம் பாட
முத்தநகை வள்ளிதெய்வ யானை யோடு
கந்தமலர்ப் பொழிலிணுவை வாழ்வு செய்யும்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (5)

தி;ங்களணி மணிமகுட மிருள்கால் சீப்பத்
தேவர்சொரி மலர்மாரி திசைக டூர்ப்ப
மங்களமார் முரசாதி யியங்க ளார்ப்ப
மறையவர் செய் வேதவொலி வானம் போர்ப்ப
பங்கமிலா வள்ளிதெய்வ யானை யென்னும்
பக்தினிக ளிருவோரும் பாங்கர் மேவக்
கங்கைதரு பாலகரே யிணுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (6)

வாரணனோ டமரர்களைப் பெரிதும் வாட்டி
வருத்தமிகப் புரிந்தசூர் முதலை வீட்டி
எரணவும் பொன்னுலகங் கவர்க்கு நாட்டி
யேத்துவோர்க் கிடர்களெல்லாந் தீர வோட்டி
நாரணனு நாடரிய பாதங் காட்டி
நாயேனை யாளாக நயந்து கொண்ட
காரணனே மறையவர்வா ழிணுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (7)

தடமதில்கோ புரங்கோயில் சமைப்போர் வாழத்
தாங்குநிழற் றருக்கள்பல தொகுப்போர் வாழக்
கடமைபசு வாதியநீ ரருந்த நாளுங்
காவலுற கேணிகுளம் தொடுவோர் வாழப்
படவரவு புனைபரம னடியார்க் கென்றும்
பாங்குபெறு திருவமுது கொடுப்போர் வாழக்
கடமுனிநே ரறிஞர்செறி யிணுவை மேவுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (8)

புரந்தரனு மிமையவரும் பொருமல் நீங்கப்
பூங்கமலத் தயனொடுமால் புவனந் தாங்க
வரந்தருசீர் நுதற்கணிடை வந்து தோன்றி
வயங்கு மழற் பொறியாறாய் விழுமந்தீர்க்க
சரந்திகழுஞ் சரவணப்பூம் பொய்கை மீது
சார்வுறுமோர் சிறுகுழவி வடிவே யாகிக்
கரந்தயனு மறிவரிதா யிணுவை வாழுங்
கல்யாண வேலவரே யாடீ ரூசல் (9)

அந்தணர்கள் வாழிபசு நிரைகள் வாழி
யரசரொடு வசியர்பின் னோர்கள் வாழி
சந்ததமும் முகில்கள்மழை பொழிந்து வாழி
தகுதிபெறு மகளிர்பதி விரதம் வாழி
முந்துமெழுத் தைந்தோடுகண் டிகையும் வாழி
முதன்மைபெறு சிவநாமம் நீறும் வாழி
செந்திருவா ழிணுவையினிற் கோயில் கொண்ட
சிவதசுப் பிரமணிய ரருளும் வாழி. (10)

இணுவை நொச்சியம்பதி
“முருகன் தோத்திரம்”
சுவாமி வடிவேல் அவர்கள்

உயர்வதற்கோர்வழி யென்று உயர்பரங் குன்றினிலே
தெய்வத யானை திருமணக் கோலத்தை தேர்ந்தவனை
கைவேல் பிடித்துநக் கீரர்க்கு கண்ணருள் கற்பகத்தை
மெய்;யா ரிணுவையம் நொச்சிப் பதியின்று மேவினனே.

பன்னிரு கையன் பரஞ்சுடர்ச் சோதி பனிமலையின்
மன்னிய அம்பிகை மாண்புறு புத்திரன் மாமலர்த்தாள்
சென்னியில் வைத்தென் சிறுமை தவிர்த்து கிறப்புறவே
மன்னு மிணுவை வளம்பதி நொச்சிப் பரஞ்சடரே

ஐயா வென்றுன் னடிபோற் றிடுந்தேவற் கன்றாருநாள்
மெய்யாயங் காட்டிப் பொருதிடுஞ் சூரர் பொருப்புடனே
வையார் நுதிவடி வேலால் வதைத்து வரமளித்த
செய்யா ரிணுவை வளம்பதி நொச்சியம் சேவகனே.

உரும்பிராய்
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
பாடியது

பன்றிக்குட்டிபோல பதினாறு பிள்ளைப்பெற்றார்.
அன்றுவருத்தமில்லை ஆசுப்பத்திரி போனதில்லை
இன்றுபார் இணுவிலிலே பெண்கள்தொகை
எண்ணவோ முடியவில்லை.

பனங்காய் பனாட்டுபிட்டு
பழஞ்சோறு கூழ் குரக்கன்
தினைச்சோறு கஞ்சிஒன்றும்
சீர்திருத்தமில்லை யென்று
தேனீரும் கோப்பியுமாம்
பாருமடி வேடிக்கையை