கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  சன்டினிச புரட்சி நிக்கரகுவா  
 

 

 

சன்டினிச
புரட்சி
நிக்கரகுவா

First Edition : Oct 1986

Title : Sandinist
Puradchi
Nigcaragua,

விலை : ரூபா 12-00

வெளியீட்டு இல: 11


பதிப்புரை

இந்தவுலகு தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது. இம் மாற்றங்கள் விஞ்ஞான ரீதியானவை. மாற்றங்களின் போது சமுதாய மாற்றங்களின் போது சமுதாய மாற்றங்களும் நுட்பமாக நிகழ்கின்றன. ஆகவே சமுதாய மாற்றங்களும் விஞ்ஞான ரீதியாக அமைவது நியாயமானதும் அவசியமானதுமாகும். இந்த நியாயமான அவசியமான மாற்றம் உலகின் பிற்போக்கு சக்திகளால் ஏகாதிபத்திய நலன், சுயநலன் என்பன கருதி தடைப்படுவன போல் உள்ளன. இத் தடைகளை நீக்கி மனித மாண்பையும், மனித நேயத்தையும் மண்ணிலே நிலை நிறுத்த புரட்சியாளர் போராட்டத்தில் இறங்கவேண்டி நேரிடுகிறது.

வரலாறு பல புரட்சிப் போர்களைக் கண்டுள்ளது. அதே வரலாறு புரட்சிப் போர் முறை மூலம் புரட்சியாளர் பல நாடுகளை மீட்டதனையும் கண்டுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் எதிரான புரட்சிப் போர் இன்றும் முடிவடையாத போராட்டமாகவேயுள்ளது. அதாவது புரட்சிப் போர்முறை என்பது தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வுப் போக்காகவே உள்ளது. தங்கு தடையின்றி நடைபெற வேண்டிய இவ்யுத்தம் முழுமையான சமூக விடுதலையை இறுதி இலட்சியமாகக் கொண்டது.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் சமூக விடுதலையை தேசிய விடுதலையுடன் இணைத்து வெற்றிவாகை சூடியவையாக சீனாவும் வியட்நாமும் ஆசியாவில் உள்ளன. இதே போன்று லத்தீன் அமெரிக்காவில் புரட்சிகர இயக்கங்களின் செயற்பாடுகள் அவநம்பிக்கையூட்டியிருந்த வேளையில் கிரான்மா கெரில்லா இயக்கம் கியூபாவை சர்வாதிகாரி பாட்டிஸ்டாவிடமிருந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்தும் விடுவித்தமை மாற்றம் வேண்டி நின்ற மத்திய அமெரிக்க சக்திகளுக்கு வலுவூட்டின. அண்மையில் (1979 இல்) மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவில் நகர்ப்புற கெரில்லாப் போர் முறை மூலம் கருக்கொண்ட போராட்டம் மக்கள் கெரில்லா யுத்தமாகப் பரிணமித்து புதிய நிக்கரகுவாவைரத் தோற்றுவித்தது.

மத்திய அமெரிக்காவில் மாபெரும் அரசியல் எழுச்சியாகவும் பல்வேற மாற்றங்களுக்கான அடிப்படையாகவும் நிக்கரகுவாப் புரட்சி அமைகின்றது. அதேவேளை அமெரிக்காவை அதன் வாசலிலே தோற்கடித்த நாடாகவும் நிக்கரகுவா விளங்குகிறது. ஆனால் நிக்கரகுவாப் புரட்சியை இயாந்திரிக மாக்சியவாதிகளும், தமது ரொட்சிய வாதம் வென்றதற்கான ஒரு உதாரணம் கூடக் காட்ட முடியாத ரொட்சிச வாதிகளும் கண்டிக்கின்றனர். நிக்கரகுவாப் புரட்சியை புரட்சியே அல்ல என உண்மைக்கும் புறம்பாக வாதிடுகின்றனர். இவர்களது தத்துவ அடித்தளம் எவ்வளவு பலவீனமானது. காலத்திற்கு ஒத்துவராதது என்பதை திரு. டயன் ஜயதிலக இங்கு விரிவாக ஆராய்கிறார். இயாந்திரிகப் பாங்கான புரட்சியை எதிர்பார்ப்பவர்களுக்கும், புரட்சிகர யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போராளிகளுக்கும் நிக்கரகுவா சன்டினிஸ்டுக்களது போராட்ட வடிவமும் தத்துவார்த்த அடிப்படையையும் பற்றிய திரு. டயன் ஜயதிலகாவின் வாதம் பலவற்றையும் தெளிவுபடுத்தும் என நம்புகிறோம்.

மற்றம் தொடர்ந்து வரும் ‘லங்கா கார்டிய’னில் வெளிவந்த மூன்று கட்டுரைகளும் சன்டினிசப் புரட்சியில் கிறீஸ்தவம் வகித்த பங்கையும், முன்னர் குளுடுN போராளியாக இருந்து பின் எதிர்ப்புரட்சியாளராக மாறிய எடன் பஸ்டோரா பற்றியும், நிக்கரகுவாப் புரட்சிக்கு அமெரிக்க வல்லரசால் தொடரும் நெருக்கடி பற்றியும் விளக்குகின்றன. தொடர்ந்து வரும் ‘இம்பிறைக்கோர்’ சஞ்சிகையில் வெளியான தளபதி ஹம்பேர்ட்டோ ஒட்டேகாவுடனான பேட்டி புரட்சி பற்றி குளுடுN கொண்டிருந்த அனுபவங்களை, கருத்துக்களை தெளிவாக விளக்குவதாக உள்ளது.

எந்த ஒரு நாட்டின் புரட்சியும் அந்நாட்டின் சூழ்நிலைகளையும், சர்வதேச நிலைமைகளையும் உள்வாங்கிக் கொண்டு நெறிப்படுத்தப்படும் போதே வெற்றிப் பாதையில் சென்று வரலாற்றை முன்னேற்றுகிறது. இந்த வகையில் நிக்கரகுவாப் புரட்சியும் அகப் புறச் சூழ்நிலைகளை நன்கு விளங்கிக் கொண்டு நெறிப்படுத்தப்பட்டமையினாலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தடைகளையும் தாண்டி வெற்றி கண்டது. புரட்சியின் பின்னர் நாட்டை நிர்மாணித்து வழிநடத்துவதில் பல இடர்களை நிக்கரகுவா சந்தித்து வருகின்ற போதிலும் மக்கள் சக்தியின் துணைகொண்டு அவற்றை வெற்றி கொண்டுவருகிறது. அண்மையில் அமெரிக்க இராணுவம் நிக்கரகுவாவினுள் நுளையலாம் என்ற அச்சுறுத்தல் இருந்த வேளை நாட்டின் பொருளாதார அடிப்படையாக இருந்த பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகளைக் கூடக் கைவிட்டு அமெரிக்காவிற்கெதிராக சகல மக்களும் ஆயுதமேந்துவோம் என நிக்கரகுவாத் தலைவர் ‘டானியல் ஒட்டேகா’ சூளுரைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் கூர்முனையை உடைத்து எனும் வகையில் நிக்கராகுவாப் போராட்டம் என்றும் ஒரு முன்னுதாரணமாக உள்ளது. மேலும் மக்கள் சக்தி ஒன்று திரண்டு நிற்கும் போது எப்பெரும் சக்தியாலும் அதனைத் தோற்கடிக்க முடியாது என்பதற்கு நிக்கராகுவா நேரடி உதாரணமாக உள்ளது. இதனை தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாம் உள்வாங்கிக் கொள்ளல் அவசியமானது.

முடிவாக இந்நூல், புரட்சின் புதிய பரிணாமங்கள் விளங்கிக்கொள்ளாத இயாந்திரிக மாக்சிய வாதிகளுக்கு அவற்றி; தன்மையை விளக்குவதாகவும், புரட்சியாளர்கட்கு பிறநாட்டு வரலாற்று அனுபவங்களை கிரகிப்பதற்கு உதவுவதாகவும் அமையும் என நாம் நம்புகிறோம். 1985ம் ஆண்டு தை மாதம் வெளியிடுவதற்கு தயாராக இருந்த வேளையில் இராணுவத்தினால் அச்சகத்தில் வைத்துக் கைப்பற்றப்பட்டு தடைசெய்யப்பட்டமையினால் அன்று இந் நூலை வெளியிட முடியவில்லை மீண்டு இந் நூலை வெளியிடுவோம் என்று நாம் வழங்கிய உறுதி மொழிக்கேற்ப இன்று இந் நூல் உங்கள் கைகளில் தவள்கிறது. இந் நூல் பற்றிய விமர்சனங்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.


யாழ். பல்கலைக்கழகம் மறுமலர்ச்சிக்கழகம்
திருநெல்வேலி’
யாழ்ப்பாணம்.


சென்று திரும்பா
எம் நண்பனின் நினைவாக

அவனது பெயர்……..
அவனது பெயரைக் குறிப்பிட வேண்டாம்
உம் இதயங்களில் அச்சொல்
புனிதமாய் இருக்கட்டும்
சாம்பலைப் போல் காற்று அதனையும்
அள்ளிச் செல்ல விட வேண்டாம்
சுகப்படுத்த முடியாத ஒரு காயமாக
அவனை எங்கள் இதயத்தில் இருத்துவோம்
அன்புள்ளோரே, அனாதைகளே
நான் விசாரப்படுகிறேன்
அநேக பெயர்களுள்
அவனது பெயரை மறந்து விடுவோம் என்றஞ்சுகிறேன்
அவனை மறக்க நான் அஞ்சுகிறேன்
மாரி மழையிலும் புயலிலும்
எம் இதயக் காயங்கள் உறங்குதல் கூடும்
என நான் அஞ்சுகிறேன்

எங்கள் மண்ணிலே
அவனது கதையைக் கூறுகின்றனர்
அவன் ஓடி மறைந்த போது
நண்பர்களைச் சந்திக்கவில்லை
அச்சத்தைத் தணிக்கும் செய்தி எதனையும்
விட்டுச் செல்லவில்லை
வழி பார்த்திருக்கும் அவனது
தாயின் நீண்ட இரவுக்கு விளக்கேற்றும்
ஓர் சொல்லைத்தானும் அவன் கூறிச்செல்லவில்லை
அவனது தாயோ ஆகாயத்தோடும்
அவனது தலையணை, அவனது பெட்டி
என்பவற்றோடுமே பேசுகிறாள்.

இரவே, தாரகைகளே, தெருக்களே, முகில்களே
அவளுக்குச் சொல்லுங்கள்
எம்மிடம் விடையில்லை
கண்ணீரை, சோகத்தை, கஸ்டங்களை விட
பெரியது காயம்.
உண்மையை நீ தாங்கமாட்டாய்
ஏனெனில் உனது மகன் இறந்து விட்டான்
தாயே
கண்ணீரை முடித்து விடாதே
கண்ணீருக்குத் தேவை இருப்பதால்
ஒவ்வொரு மாலைநேரத்திற்கும்
அதில் கொஞ்சம் வைத்திரு

எனது நண்பனைப் பற்றி
எமது மண்ணிலே அதிகம் பேசுகின்றனர்
எப்படி அவன் சென்றான்
எப்படி அவன் திரும்பவே இல்லை
எப்படி அவன் தன் இளமையை இழந்தான்.

அன்புள்ள நண்பனே
அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்
என்று மட்டும் கேள்.


சமர்ப்பணம்

மறுமலர்ச்சிக் கழகத்தின் முக்கிய உறுப்பினனும் ‘தளிர்’ சஞ்சிகையின் ஸ்தாபகர்களில் ஒருவனும் விடுதலைப் போராளியுமான எமதருமை நண்பன் இராஜ சுந்தரம் இரவிசேகரனுக்கு (சுகந்தன்) இந் நூல் சமர்ப்பணம்.


நிக்குரகுவா வரலாற்றுப் பின்னணனி

எல்லா மத்திய அமெரிக்க நாடுகளைப் போலவும் நிக்கரகுவாவும் 1523-ல் ஸ்பானிய தளபதியான கோட்டஸ் என்பவனால் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட காலனியாதிக்கப் போட்டிகளால் நிக்கரகுவாவின் தலைவிதியை அந்நியர் நிர்ணயிப்பதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

1522-ல் இந்தியரின் உரிமைக்காகப் போராடிய பிஷப் கசாஸ் என்பவர் நிக்கரகுவாவின் அன்றைய நிலையை இவ்வாறு விளக்குகிறார். “இது ஒரு அழகிய பிரதேசமாகும். இதன் தட்டையான நிலப்பரப்பில் அடர்ந்த ‘ஓச்சாட்’ மரங்கள் நிறைந்திருக்கும். இம் மக்கள் ஆரோக்கியமானவர்கள். உற்சாகமானவர்கள். நட்புணர்வு உள்ளவர்கள். இவர்கள் தம் நிலத்தை இலகுவில் இழக்க விரும்பவில்லை. ஸ்பானியரின் கொடுமையைக் கூடியவரை பொறுத்தனர். ஸ்பானியர் தம் கொடுமைகளால் தினமும் பல உயிர்களைப் பலியாக்குகிறார்கள்….

சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஸ்பானிய காலனியாதிக்கத்தின் கீழ் இருந்து பின்னர் 1821-ல் நிக்கரகுவா விடுதலை அடைந்தது. ஸ்பானியர் காலத்தில் நிலையூன்றிய நிலபிரபுத்துவமும் சமூக அடிமை முறையும் சுதந்திரத்தின் பின்னரும் வளர்ந்து சென்றது. அரசியல் ரீதியாக லிபரல், கன்சவேட்டிவ் என நாடு பிளவுண்டிருந்தது. இதனால் தொடர்நது பல காலமாக நாடு ஆட்சச் சீர்குலைவுக்குள்ளாகி இருந்தது.

நிக்கரகுவாவின் புவியியல் அமைவு இராணுவ மேலாதிக்கத்தினை விரும்பும் வல்லரசுகளுக்கு வசதியாகவிருந்தது. வட, தென் அமெரிக்காக்களுக்கு இடைப்பட்ட சமுத்திரப் பிரதேசத்தில் நிக்கரகுவா அமைந்திருந்தமையினால் பல நாடுகள் அதனைப் பயன்படுத்த விரும்பின. நிக்கரகுவாவின் மேற்கு நோக்கிய கடற்கரை கரிபியன் தீவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு வசதியாகவிருந்தது. அதன் நில அமைப்பும் ஏரிகளும் அத்திலாந்திக் பசுபிக் கால்வாய்களுக்கு ஏற்ற தளமாகவிருந்தது. இவ்வகையில் அமெரிக்காவின் நலன் நிக்கரகுவாவுடன் நேரடியாகத் தொடர்புற்றிருந்தது. நிக்கரகுவா 1906-ல் பிரிட்டனுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்த முற்பட்டபோது அது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை. (அப்போது மொன்ரோ கோட்பாடு அமுலில் இருந்தது.) அமெரிக்கா நிக்கரகுவாவுடன் சம்பந்தப்பட ஆரம்பிக்க நிக்கரகுவாவில் அமெரிக்காவுக்கெதிரான கிளர்ச்சிகளும் ஆரம்பமாயின. 1912-ல் அமெரிக்க கடற்படை கிளர்ச்சியொன்றை அடக்க அங்கு இறக்கப்பட்டது.அது 1925- ம் வாபஸ் பெறப்பட்ட இரு மாதங்களில் உருவான உள்நாட்டுப் போரினைத் தொடர்ந்து அமெரிக்கப்படை மீண்டும் நுழைந்தது. 1927-ல் அமெரிக்க சார்புடைய மொன்காடோ ஆட்சியில் அமர்த்தப்பட்டபோது சான்டினோ என்பவர் அதனை எதிர்த்தார். இவர் மொன்கடாவைத் துரோகி என வர்ணித்தார்.

இந்த சான்டினோ பற்றி நாம் சற்று அதிகம் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. நிக்கரகுவா இடதுசாரிப் புரட்சியாளா தம்மை சான்டினிஸ்டுகள் என்றே அழைத்துக் கொண்டனர். அவர்கள் அப்படி அழைப்பதற்கான வரலாற்றுப் பதிவுகளைச் சான்டினோ விட்டச் சென்றதே அதற்குக் காரணமாகும். 1898-ல் செல்வந்த இந்தியனுக்கும் ஏழைக் கூலிப் பெண் ஒருத்திக்கும் முறைகேடாகப் பிறந்தவனே சான்டினோ. இளமையில் மிகுந்த துன்பங்களை அனுபவித்த சான்டினோ பல தொழில்களைச் செய்தான். மெக்சிக்கோவில் மெக்கானிக்காக வேலை செய்தபோது சித்தாந்த அறிவைப் பெற்ற சான்டினோ 1926-ல் நாடு திரும்பினான். அப்போது ஆட்சியிலிருந்த கன்சவேட்டிவ் ஆட்சித் தலைவனான கமாறோவுக்கு எதிராக லிபரல் கிளர்ச்சியாளருடன் இணைந்து கொண்டான். பின் அவன் தன் சொந்தப் பணத்தைக் கொண்ட படையொன்றை நிறுவினான். முன்னூறு வீரர்களைக் கொண்ட இவனது எதிர்ப்பியக்கத்தினால் மொன்காடா பதவியிழந்தான். ஆயினும் அமெரிக்க படைகள் வெளியேறும் வரையும் சன்டினோ களையாமல் கெரில்லா நடவடிக்கைகளில் மட்டும் இற்கினான். சன்டினோ தனித்து இராணுவ நடவடிக்கைகளில் இறங்கினான். சன்டினோ தனித்து இராணுவ நடவடிக்கைகளில் மட்டும் இறங்காமல் சமூகப் பிரச்சினைகளுடனும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். சான்டினோவின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான இப்போராட்டம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாயிற்று. இறுதியாக அமெரிக்கப் படைகள் பூசல்கள் வெளிக்கிளம்பின. இதன் காரணமாக சான்டினோ ஆயுதத்தைக் கீழே போட வேண்டியவனானான். அமெரிக்க படை வெளியேற்றத்தைத் தொடர்ந்து சாக்கசா என்பவர் ஜனாதிபதி ஆனார். இவர் பதவிக் காலத்தில் சோமோசா காசியா தேசியப்படைகளின் தளபதியாக இருந்தார். சாக்கசாவிற்கும் சோமோசாவிற்கும் இடையே எழுந்த அதிகாரப் போட்டியால் சாக்கசா சான்டினேவைப் பயன்படுத்த எண்ணினார். இதனை அறிந்த சோமோசா 1934.2.21ல் சான்டினோவைத் தன் தேசியப்படை மூலம் சுட்டுக் கொன்றான். தலைவனை இழந்த சான்டினோவின் படை சிதறுண்டது. இறுதியாக சோமேசர் 1936-ல் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். சோமோசா காசியாவினைத் தொடர்ந்து அவனது பரம்பரை நிக்கரகுவாவில் சுமார் 45 ஆண்டுகள் சீர்கெட்ட ஆட்சியை நடத்தியது.

சோமோசா காசியாவின் இளமை மிகக் கேவலமானது. அவன் கள்ள நோட்டு அடிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தான். சோமோசாநிக்கரகுவாவில் செல்வாக்குள்ள சாகசா குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்தமை அவனது அதிஷ்டமே. 1926 - ல் நடந்த கிளர்ச்சியில் இவன் சான் கார்கோலஸ் என்ற நகரத்தைக் கைப்பற்றி அதன் ஜெனரல் ஆனான். படிப்படியாக அமெரிக்க நல்லெண்ணத்தைப் பெற்று 1933-ல் ஜனாதிபதி சாக்கசாவின் விருப்பத்திற்கு மாறாகத் தேசியப்படைகளின் தளபதி ஆனான். 1936-ல் பல தந்திரங்கள் மூலம் ஜனாதிபதி ஆகி நாட்டைச் சூறையாட ஆரம்பித்து 20 வருடங்களின் பின் மத்திய அமெரிக்காவிலேயே மிகப்பெரும் செல்வன் ஆனான். விபச்சாரம், சூதாட்டம் போன்றவற்றை நடத்தும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்குச் சலுகைகளை வழங்குவதற்கு ‘ஜனாதிபதி ஆணைக்குழுவை’ நியமித்துப் பணம் பெற்றான். திறைசேரியிலிருந்து நேரடியாகவே பணம் பெற்றான். பொதுச் சேவைகளை இலவசமாகப் பயன்படுத்தினான். பற்றாக்குறைப் பொருட்களை அபகரித்தான். இவ்வாறு பல மார்க்கங்களில் நாட்டைச் சூறையாடினான். இவனைப் போலவே இவனைத் தொடர்ந்து வந்த சோமோசாக்களும் நாட்டைக் கொள்ளையடித்தனர். தொடர்ந்து வந்த சோமோசாக்களும் நாட்டைக் கொள்ளையடித்தனர். 1940களில் 10 மில் டொலர் ஆகவிருந்த சோமோசா குடும்பத்தின் சொத்துகள் 1979-ல் 150 மில். டொலர் ஆக அதிகரித்திருந்தது.

முதலாளித்துவத்தினதும், ஏகாதிபத்தியத்தினதும் ஏக பிரதிநிதியான சோமோசாவின் சீரழிவு வேலைகள் சகல சமூக மட்டங்களிலும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்தன. லத்தின் அமெரிக்காவிற்கே இயல்பான குணாம்சமான இரகசிய தலைமறைவு இயக்கம் தோற்றம் பெற்று இவ் அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள முயன்றது. 1961-ல் ஹொன்ரோசில் கார்லோஸ் பொன்சேகா, சில்வியா மயோகா, தொமஸ் போஜ் ஆகியோரால் நிக்கரகுவாவின் புரட்சி இயக்கமான குளுடுN தோற்றம் பெற்றது. 1930 களில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புவீரனாக மடிந்த சன்டினோவின் பெயரைத் தம்முடன் இணைத்துக்கொண்ட சன்டினிஸ்ட் இயக்கம் 1963-ல் அடைந்த இராணுவத் தோல்விக்குப் பின்னர் ஓரளவு சட்டத்திற்குட்பட்ட அரசியற் கிளர்ச்சிகளை நகர்ப்புறங்களில் மேற்கொண்டது. 1967-ல் இரண்டாவது தடவையாக அடைந்த தோல்வியை அடுத்து குளுடுN மலைப்பகுதிகளுக்குப் பின்வாங்கியது.

நெருக்கடிகளின் ஆரம்பம்

1970 களில் நிக்கரகுவா சமூகத்தின் அக முரண்பாடுகள் மோசமடைந்தன. 1970-ல் 1.7 வீதமாக இருந்த பணவீக்கம் 1977-ல் 11 வீதமாக அதிகரித்தது. கடுமையான வேலைநிறுத்தம் நிலவியதால் நாட்டில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தேசியக்கடன் என்றுமில்லாத உசக்கட்டத்தை அடைந்தது. 1972-ல் தலைநகரான மனாகுவாலில் நிகழ்ந்த பூகம்பத்திற்கு சோமோசா பொறுப்பாக இருந்து அதனையும் சூறையாடினான். இதனால் பூர்ஷ_வா கட்சியினரும் தம் சக்தியினை ஒன்று திரட்ட முற்பட்டனர். இவ்வகையில் ருனுநுடு (னுநஅழஉசயவiஉ டு.iடிநசயவழைn ருnழைn) ன் தோற்றம் குறிப்பிடத்தக்கது. மக்கள் ஆதரவு பெற்ற பூர்ஷ_வா வர்க்க எதிரணியான ருனுநுடு யாப்பு.அரசியல், தொழிற் சங்க உரிமைகளைக் கோரி ஆளும் வர்க்கத்தில் பிளவு உண்டாக்கி சர்வாதிகார ஆளும் வர்க்கத்தின் சமூக அடித்தளத்தைக் குறுக்கிப் பலவீனப்படுத்தும் அளவில் வெற்றி கண்டது.

நகர்ப்புற கெரில்லாப்பாணியில் தாக்குதல்களை வடிவமைத்துக் கொண்ட குளுடுN 1974 டிசம்பரில் ஆட்சிப்பீடத்தில் இருந்த பல முக்கியஸ்தர்களைப் பணயக் கைதிகளாக்கியது. இது பல அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டிக்கும் அறிக்கையொன்றி;ன் வெளியீட்டிற்கும் காரணமாக அமைந்தது. 1977 செப்டம்பரில் வாஷிங்டனின் கோரிக்கைக்கு இணங்க அவசர நிலை நீடிக்கப்பட்டதுடன் குளுடுN தன் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது. குளுடுN ன் தேசிப்படைகளின் மீதான தாக்குதல் இராணுவ ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது. அடக்குமுறை எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை என்பதன் மூலம் ஆட்சிக்கெதிரான் வெகுஜன எதிhப்பைக் கிளப்பிவிட்டது. நவம்பரில் பொருளாதாரம், கலாசாரம், சமயம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பன்னிருவர் குழு ஒன்று சர்வாதிகார ஆட்சிக்குப் பதில் ஜனநாயக ஆட்சி வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. மாற்று அட்சியில் குளுடுN ம் இடம்பெற வேண்டும் என்றது. எதிரணியினரின் இந்நடவடிக்கைகளுக்குச் சோமோசர் சற்றும் அசைந்து கொடுக்காமல் தன் பிடியை மேலும் இறுக்கினான். 1978 ஜனவரி பத்தில் ருனுநுடு தலைவரான Pநனசழ துழயபரசin ஊhயஅழசசழ மனாகுவாவில் வைத்து சோமோசாவினால் கொலை செய்யப்பட்டார்.

புரட்சி நெருக்கடிகள்

கமரோவின் கொலை புரட்சிக் கனலை மூட்டிவிட்டது. பொது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கூடுதலாகப் பங்கேற்கத் தொடங்க அதிகாரம் புரட்;சிகர குளுடுN இடம் கைமாறியது. கமரோவின் கொலையினால் மக்கள் ஆத்திரமடைந்தபோது அதைப் பயன்படுத்தி குளுடுN தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. சுiஎயளஇ புசயயெனய என்ற இடங்களிலிருந்த இராணுவத் தளங்களைப் பெப்ரவரி 1-ம், 2-ம் திகதிகளில் தாக்கினார்கள். குளுடுN இன் இராணுவ வெற்றிகளும் மக்களின் அணிதிரளலும் இணைந்து குளுடுN பக்கம் மக்களின் ஆதரவைப் பெருக்கியது. இந்நிலையில் சோமோசா சில சமரசங்களைச் செய்துகொளள் முன்வந்தபோதும் நாட்டின் பொருளாதார நிலைமை அதற்கு இடம் தரவில்லை. அந்நிய செலாவணி இழப்பு 315 மில் ஆகவிருந்தது. பணவீக்கம் 75 வீதமாகவிருந்தது. வேலையின்மை உழைப்பாளர்களில் 42 வீதத்தைப் பாதித்தது. புரட்சிச் சூழலின் தன்மைக்கு ஏற்ப அரசியல் கிளர்ச்சி பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. பொருளாhர வீழ்ச்சி அரசியல் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

தாராள பூர்ஷ்வாக்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட சோமோசா தேசியப் படைகள் தனக்கு ஆதரவாக இருக்கும்வரை தன்னை ஒன்றும் செய்ய முடியாது என எண்ணினான். பொது வேலை நிறுத்தங்கள் வீதி ஆர்ப்பாட்டங்கள் எத்துணைபெரிய அளவில் இடம் பெற்றாலும் எதிரி பலாத்கார மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும்போது அவனைத் தூக்கி எறிய முடியாது என்பது வெளியாகியது. ஆக ஆயுதப் போராட்டம் ஒன்றே தேசியப் படைகளை எதிர்ப்பதற்கான ஒரே வழியாக என குளுடுN உறுதியாகச் சிந்தித்தது.

வடமேற்குப் பகுதியில் பிரச்சினை முற்றி வெடிக்கும் நிலையில் இருப்பதைக் கண்ட குளுடுN அதற்குத் தலைமை தாங்க தீர்மானித்தது. 1978 செப்ரெம்பர் 9-6ல் அங்கிருந்த பல நகரங்களில் தேசியப் படையினரைத் தாக்கினர். பொதுமக்களையும் கிளர்ச்சிக்குத் தூண்டினர். இதனால் இந் நகரங்களில் தேசியப்படை குண்டுவீசி இந்நகரைத் தாக்கினர். மொத்தத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர். செப் 20-ல் சன்டினிஸ்டுகள் பின்வாங்கினர். இத் தோல்வி அந்தளவு பெரியதாக்கமாக இருக்கவில்லை என்பதிலிருந்து எந்தளவு எதிர்ப்புணர்ச்சி வளர்ந்துவிட்டது என்பதனை அறிய முடியும். இதனையடுத்து அமெரிக்கா, கௌத்தமாலா, டொனிமிகன் குடியரசு ஆகியவற்றின் பிரதி நிதிகள் அடங்கிய சமரச ஆணைக்குழு முன்நிலையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. பேச்சுவார்த்தையின் நோக்கம் சோமோசா இல்லாமலேயே சோமோசாயிசத்தை நிலைநாட்டுவதே. குளுடுN எவ்வித இணக்கத்திற்கும் உடன்படவில்லை.

1979 ஜனவரி 10-ல் கமரோ படுகொலையின் ஓராண்டு பூர்த்தி நினைவாக ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் மனாகுவாவில் நடந்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர். தேசியளவில் எதிர்ப்பு வலுப்பெற்றமையால் பூர்ஷ_வா இயக்கங்கள் உட்பட பன்னிருவர் குழு, மாணவர் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற 22 இயக்கங்கள் உள்ளடக்கிய யேவயயையெட Pயவசழைவiஉ குசழவெ (நுPN) என்ற ஒன்றியம் உருவாகி சன்டினிஸ்ட் தலைமையின் கீழ் பொது வேலை நிறுத்தங்களை நிர்வகித்தது சோமோசாவிற்கோ ஆர்ஜெந்தீனா, இஸ்ரேல் நாடுகளிடமிருந்து ஆயுத உதவி தொடர்ந்தும். கிடைத்து வந்தது. ஆயினும் அவன் தனிமைப்படுத்தப்பட்டான். கொஸ்டாரிக்கா, பனாமா, மெக்சிக்கோ, வெனிசுலா ஆகிய நிக்கரகுவாவிற்கு எதிர்ப்பைக் காட்டத் தொடங்கின அமெரிக்க இராச்சியங்களின் அமைப்பு சோமோசா நீக்கப்பட வேண்டும் எனக் கோரியது.

குளுடுN உம் தாக்குதலை முடுக்கிவிட்டது. வியட்நாமிய அனுபவங்களைக் கொண்டு குளுடுN தன் படைகளைப் பல பிரிவுகளாகப் பிரித்து பல இடங்களிலும் நிறுவியது. வேலை நிறுத்தங்கள், பிராந்திய கிளர்ச்சிகள், தனது படைகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை எண்ணிறைந்த பிராந்தியங்களில் ஏற்படுத்துவதே குளுடுN ன் தந்திரோபாயமாக இருந்தது. 132,000 சதுர கி.மீ. விஸ்தீரணமும், 2,3000,000 குடிகளும் கொண்ட நாட்டை 15,000 வீரர்களைக் கொண்ட படைகளும் தாக்குதலில் இறங்கினால் அவர்கள் முறியடிக்கப்படுவது திண்ணம். மாறாகத் தாக்குதலை ஒருமுகப்படுத்தினால் மற்ற இடங்களை குளுடுN கைப்பற்றுவது சுலபம். இத் தந்திரோபாயம் குளுடுN க்கு வெற்றியளித்தது.

ஜூன் 4-ல் குளுடுN பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்தது. அடுத்தநாள் நாடு முற்றாகச் செயலிழந்தது. ஒன்றின் பின் ஒன்றாக முக்கிய நகரங்கள் கிளர்ச்சிக்கான கட்டளையைப் பெற்றன. ஜூன் 10-ம் திகதி மனாகுவா வாசிகள் சன்டினிஸ்ட் குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாகவே தம்மிச்சையாகக் கிளர்ந்தெழுந்தனர். அரச படைகள் தலைநகரை நோக்கிப் பின்வாங்க நேரிட்டது. ஜூன் 14-ல் சாஸ்யோசிலுள்ள கோஸ்டாரிக்கா என்ற நகரில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டது. இவ்வரசாங்கத்தின் பெரும்பான்மைப் பலத்தை குளுடுN பெற்றது. சமாதானப் படையை அனுப்பும் சைரஸ் வான்ஸ் (அமெரிக்க இராஜாங்க அமைச்சர்)ன் திட்டமும் கைவிடப்பட்டது. அமெரிக்க இராச்சியங்களின் அமைப்பு அமெரிக்காவின் எவ்வித தலையீடும் இருக்கக் கூடாது என அறிவித்தது. ஏற்பட்டுவரும் சர்வதேச நிலைமைகளை அவதானித்த சோமோசா பிரச்சினைகள் முற்றிவிட்டதை உணர்ந்தான்.

யூன் 16-ம் திகதி நாட்டின் முக்கிய நகரங்கள் குளுடுN கட்டுப் பாட்டின் கீழ்வந்தன. 19-ம் திகதி அனஸ்டாசியோ சோமோசா டீபேய்ல் நாட்டை விட்டு ஓடினான். தேசியப்படையானது சோமோசா தப்பியோடியதும் சீர்குலையலாயிற்று. பல வர்க்கப் போராட்டங்களின் நெருக்கடிகளிலும் உடையாத இப்படை அதன் தலைவனின் வீழ்ச்சியோடு உடையத் தொடங்கியது. குளுடுN உடனடியாக இறுதித் தாக்குதலை நடத்தவதற்கான அழைப்பை விடுத்தது.

யூன் 19-ம் திகதி சன்டினிஸ்ட் படைகள் வெற்றிகரமாக மனாகுவா நகருள் பிரவேசித்தன. தேசியப் படை சிதறுண்டது. 7,000 வீரர் கைதிகளாக்கப்பட்டனர். மற்றவர்கள் ஹொன்ரோசிற்குத் தப்பியோட முயற்சித்தனர். மக்களின் பழிவாங்கலுக்குப் பயந்த எல்லா அதிகாரிகளும் மனாகுவாiவிட்டு வெளியேறினர். குளுடுN முழுமையாக வெற்றியீட்டிக்கொண்டது. ஆனால் 50,000 உயிர்கள் பலியானதோடு (சனத்தொகையில் 2 வீதம்) அளப்பரிய இழப்புகளும் ஏற்பட்டன. ஏனெனில் நாட்டின் தொழிற்சாலைகள் யாவற்றையும் சோமோசா குண்டுவீசித் தகர்த்திருந்தான். இறுதியாக 1979 யூன் 19-ல் குளுடுN ன் துரநெ ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றது.

ஒரு மனிதனின் மரணம்

இந்நூல் வெளிவருகின்ற வேளையிலே - அதற்காக தன்னுடைய முழு உழைப்பையும் வழங்கிய நண்பன் ரவிசேகரன் இன்று எம்மத்தியில்லை. ஆம் - அவன் தன்னுடைய இருப்பை மரணிக்கச் செய்துவிட்டான். இந்நூலினை வெளியிடவேண்டும் என்ற அவாவில் மொழிபெயர்ப்பாளர்களை தானே சந்தித்து - கையெழுத்துப்பிரதிகளை தானே எழுதி - அச்சகவேலைகளை தானே கவனித்து - இப்புத்தகத்தின் முழுமையை பார்க்கமுடியாமல் இறந்துவிட்டான்.

யார் இவன்? வாழ்க்கையின் ஒவ்வோரு படிமுறையும் விஞ்ஞான பூர்வமான கண்ணோடு பார்க்கப்படவேண்டும் எனக் கருதியவன் - அடக்குமுறை அரசுக்கெதிராக நாம் போராடுகிறோம் எனின் மனித நேயமே காரணம் என்பவன் - ஒருவரை ஒருவர் நாம் ஆழமாக நேசிக்கின்றோமென்றால், உண்மையில் அவர்களை மனிதர்களாக வாழ வழி செய்யவேண்டும் என்று கூறுபவன் - ஒருவனுடைய முகத்தாட்சண்யத்திற்காக அவனுடைய தவறுகளை சுட்டிக் காட்டாது விடுதல் கூடாது எனக் கருதுபவன் - மூடநம்பிக்கைகளும், வெற்று நோக்குகளும் ஒருவனுடைய வளர்ச்சியைத் தடைசெய்யும் என நம்பியவன் - எமது போராட்டத்திற்கு ஏனைய நாடுகளின் போராட்ட அனுபவங்கள் அவசியம் எனக் கருதி அதற்கான சான்றுகளை திரட்டியவன் - இத்தகைய வெளியீடுகளை மேற்கொள்வதற்காக நாம் ஒவ்வொரு சதமாக சேகரிக்கவேண்டுமெனக் கருதி ஒரு புத்தகாசாலையை அமைத்தவன் - ஆம் இவனொரு முழுமையான மனிதன்.

இவனுடைய முழுமையான ஆக்கத்தால் வெளிவருகின்ற இந்நூலினை இவனுக்கே சமர்ப்பணம் செய்கின்றோம்

இம்மனிதனின் மரணம் வேங்கையின் உறுமலாய் விடுதலைவரை கேட்கும்.

மறுமலர்ச்சிக் கழகம்

யாழ். பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்.


இலத்தீன் அமெரிக்காவின் கிராமப்புற கெரில்லா இயக்கம் 1967 அக்டோபரில் கடுங்குளிர் நிலவிய ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று பொலிவியாவிலுள்ள யூரோ மலையிடுக்கில் புதைக்கப்பட்டது. அப்படித் தான் அன்று தோன்றியது. ஆயுதம் ஏந்திய புரட்சியின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தின்மிகத் தலைசிறந்த கோட்பாட்டாளராகவும், நடை முறையாளராகவும் மேற்கு அரைக்கோளத்தில் திகழ்ந்தவரின் மரணம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும், சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய வலதுசாரி சந்தப்ப வாதம் உட்பட மாற்றத்தை விரும்பாத சகல சக்திகளாலும் வரவேற்கப்பட்டது.

கமான்டன்ட் (படைத்தலைவன்) குவேராவின் மரணத்துடனும், தென்பகுதியின் கைத்தொழில் அபிவிருத்தியடைந்த சமுதாயங்களில் தோன்றிய புரட்சிகர எழுச்சியுடனும் கெரில்லா யுத்தத்தின் மையம் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு மாறியது. கேந்திர ரீதியாகவும், இட ரீதியாகவும் பிறேசிலின் கம்யூனிசக் கட்சியின் நகர்ப்புறக் கிளையாகிய செயோப்பாயோலோ கிளையினைத் தன்னுட் கூட்டிச் சென்ற துறைபோன மார்க்சியவாதியாகிய கார்லோஸ் மரிகெல்லா நகர்ப்புற கெரில்லா யுத்தத்தின் பாதையை வகுத்தார். 1968-ம் ஆண்டு தொடக்கம் “துப்பமாறோஸ்” உருகுவேயின் பட்டினங்களிலும் நகரங்களிலும் ஆயுதப் போராட்டங்களைத் தொடங்கினர். இவர்களுக்குத் தலைமை தாங்கியவர் விவசாய தொழிலாளரை வர்க்க ரீதியாக அமைப்பதில் சளைக்காது உழைத்த ரவுல் சன்டிக் என்பவராவார். 1960 களின் நடுப்பகுதியில் சிலியில் ‘மேர்’ வேகமாக வளர்ச்சியடைந்தது. புகழ்வாய்ந்த கொன்செப்சன் பல்கலைககழகத்தின் மருத்துவ பீடத்தில் இதுதோற்றமெடுத்தது. ஆர்ஜென்டீனாவில் இடதுசாரி பெரனிஸ்டாக்களும் (மொன்டனேரோன்ஸ்), மார்க்சிய வாதிகளும் பயங்கரப் புரட்சிகரப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். 73க்கும் 76க்கும் இடையில் இது உச்சக்கட்டத்தையடைந்தது.

செயோப் பயலோ, மொன்டவீடியோ, புவர்னோஸ் அயர்ஸ் போன்ற பெரிய நகரங்கள் போராட்ட மையக் களங்களாக மாறின. இங்குதான் அரசுக்கும், இலத்தீன் அமெரிக்க கண்டப் புரட்சிகர சக்திகளுக்கும் இடையே பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தன. 60களின் பிற்பகுதியிலிருந்து 70களின் நடுப்பகுதி வரை இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. ஆனால் விரைவில் இந்த நகரங்கள் நகர்ப் புறப்போராளிகளின் மகாமயானங்களாக மாறின. எப்படி இவர்களுடைய கெரில்லாச் சகோதரர்களுக்கு மலைப்பகுதிகளும், காடுகளும் சவக்காலைகளாக மாறினவோ அதே போல்தான் இங்கும் நிகழ்ந்தது.

இளம் புரட்சிகர கவிஞராகிய சேவியர் கெரோரினதும், புரட்சிகர புத்திஜீவியான லூயிடெலா, புயன்டே உக்கேடாவினதும் மரணங்கள் 1965 அளவில் பெருவின் கிராமப்புற இயக்கம் நசுக்கப்பட்டதற்கு அடையாளங்களாக இருந்தன. இவர்கள் இருவரும் இருவேறு கெரில்லா முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினர். லூயி டெசியோல் லீமா ஒரு கார் விபத்தில் இறந்தார். இதற்குச் சற்றுப் பின்னர் கௌதமாலா கெரில்லாக்கள் தோற்கடிக்கப்பட்டனர். அதே ஆண்டு கொலம்பியாவில் பாதிரியார் கமிலோ டொரெஸ் இறந்தார். இதன் சோக எதிரொலியாக அமைந்தது பப்பரிசியோ ஓஜேடாவின் மரணமும், வெனிசுவேலா கெரில்லாக்களின் தோல்வியும். அடுத்த ஆண்டு சேகுவேரா கொல்லப்பட்டார்.

கிராமப்புற கெரில்லாப் போராட்டத்தின் தோல்விகளோடு நகர்ப்புறப் போராட்டங்களின் தோல்வியும் இணைந்தன. 1968-ல் கார்லோஸ் மரிகெலாவும். அவரது நெருங்கிய தோழர்களான பெரைராவும், லமேக்காவும் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் 1972 அளவில் நகர்ப்புற கெரில்லாக்களைச் செயலிழக்கச் செய்தன. பிறேசிலில் ஏற்பட்ட தோல்வி நகர்ப்புற கெரில்லா யுத்தம், அது பிறப்பெடுத்த நாட்டிலேயே திருகிக் கொலை செய்யப்பட்டதற்குச் சமனானதென்றால் ருப்பமாறேசுக்கு 1972-73ல் ஏற்பட்ட தோல்வி அக்கண்டத்திலேயே இத்தகைய இயக்கங்களுக்கு ஏற்பட்ட மிகப் பாரிய படுதோல்வி எனலாம். இலத்தீன் அமெரிக்காவில் இருந்த தீவிர இடதுசாரிகளும், இலத்தீன் அமெரிக்க புரட்சி மீது அக்கறை கொண்டிருந்த உலக அனுதாபிகளும், இறுதியாக ஆர்ஜென்டீனாவின் ஆயுதப் போராட்டத்தை எதிர்பார்த்து நின்றனர். அப்போது அங்கு ஆயுதப் போராட்டம் உச்சக்கட்டத்தினை அடைந்திருந்தது. ஆனால் இ.ஆர்.பி. ஈவிரக்கமற்ற இராணுவத் தளபதிகளால் அடியோடு அழிக்கப்பட்டமையும் அதன் தலைவர் றொபேட்டோ மரியோ சன்றுசியோவின் மரணமும், இலத்தீன் அமெரிக்காவின் ஆயுதப் புரட்சி இறுதியான தீர்க்கமான தோல்வியைக் கண்டுவிட்டது என்பதைக் குறிப்பன போல் தோன்றின.

கிராமப்புற, நகரப்புற கெரில்லா இயக்கங்களின் படுதோல்விகளும், சிலி கடைப்பிடித்த “சமாதானப் பாதை” சந்தியாகோ விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்ததும், சேகுவேரா. மரிகெல்லா அலண்டே ஆகியோரின் மரணங்களும் ரைகொன்டின்ரினதும் (முக்கண்ட) ஓலாசினதும் (இலத்தீன் அமெரிக்க அரசுகளின் நிறுவனம்) எதிர்பார்ப்புக்கள் நொருங்கி விட்டன என்பதைச் சுட்டிக் காட்டியதோடு இலத்தீனமெரிக்கப் புரட்சிக்கு மாற்றுத் தந்திரோபாயங்கள் தீர்ந்து விட்டன என்பதையும் கோடிட்டுக் காட்டின.

ஆனால் லெனினும், மாவோவும் கூறியது போல் எல்லாமே சமனற்ற முறையில்தான் வளர்ச்சியடைகின்றது. புரட்சிகர நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். சமனற்ற வளர்ச்சி நியதிக்கு அதற்கே உரித்தான தந்திரம் அதன் செயற்பாட்டிலேயே அடங்கியுள்ளது. கரிபியன்னிலிருந்து தோற்றமெடுத்த புரட்சிகர உந்துதல், 1960களிலும் 70களின் முதற் பகுதியிலும் மத்திய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியைச் சேர்ந்த “ஒடுக்கமான ஆனால் முடிவற்ற ஆழமுடைய” (விக்டர் ஜாராவின் வருணனை) நாடுகளுக்குப் பரவியது. பின்னோக்கின் உதவியுடன் அந்தப் புரட்சிகர உந்துதலின் அசைவியக்கம், கண்டத்தின் மேற் தளத்திற்குக் கீழே ஆழமாகச் சென்று அது எங்கிருந்து தோற்றமெடுத்ததோ அங்கு மீண்டும் செல்வதை, அதாவது மத்திய அமெரிக்காவுக்கும், கரீபியனுக்கும் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

மேலும், கியூபன் புரட்சி நிகழ்ந்த 20 ஆண்டுகளுக்குப் பின், முதற் தடவையாக இலத்தீன் அமெரிக்க மக்களும் முழு மேற்கத்தைய அரைக்ககோளத்தைச் சார்ந்த மக்களும் ஒரு உண்மையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை ஈட்டியுள்ளனர். இதுவே நிக்கரகுவா புரட்சியின் வெற்றியின் முதல் முக்கிய அம்சம். இந்த வெற்றியுடன் எல்சல்வடோரிலும், கௌதமாலாவிலும் புரட்சிகரப் போராட்டம் சக்தி மிக்க எழுச்சி பெற்றுள்ளதுடன், பழைய சர்ச்சைகள் மீண்டும் ஆரம்பமாகின. புதிய இணைப்புகள் தோன்றலாயின. சமாதானப் பாதையா? அல்லது ஆயுதம் ஏந்திய வழியா? லெனினிசபாணியில் அமைந்த கட்சியா? அல்லது கெரில்லாக் கூட்டத்தினரா? முன்னணிக் கட்சியா? அல்லது வெகுஜன இயக்கமா? ஆயுத நடவடிக்கைகளா? அலலது ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியா? வர்க்கப் போராட்டமா? அல்லது ஐக்கிய முன்னணியா? நிரந்தரப் புரட்சியா? அல்லது கட்டம் கட்டமான தடையற்ற புரட்சியா? இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளையே நிக்கரகுவாப் புரட்சிவாதிகள் எழுப்பி, அவற்றுக்குத் தீர்வும் கண்டனர். இவ்வாறு தீர்வு கண்டதன் மூலம் இலத்தீன் அமெரிக்கப் புரட்சி அடைபட்டிருந்த மொட்டைச் சந்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். இந்த மாபெரும் தடைகளை அகற்றுவதில் நிக்கரகுவா புரட்சிவாதிகள் பெற்றுள்ள அனுபவங்கள் உண்மையில் முக்கண்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் ஒன்றோடு ஒன்று இணைந்து இந்த அடிப்படைப் பிரச்சினைகளோ தென் பகுதியிலுள்ள புரட்சிவாதிகளின் கோட்பாட்டிற்கும், நடைமுறைக்கும் பெரும் இடர்களாய் அமைந்திருக்கின்றன. இதனால் தான் இப்பிரச்சினைகளை நிக்கரகுவா அனுபவத்தின் பின்னணியில் அணுகி நிக்கரகுவாப் புரட்சியிலிருந்து சில கோட்பாட்டு, தந்திரோபாயப் பாடங்களைக் கற்றுக் கொள்ள விழைகின்றோம்.

ஆயுத விமர்சனம்

நிக்கரகுவாப் புரட்சி ஒரு ஆயுதப் புரட்சியே. இக்கூற்று முதற்கண் எல்லோருக்கும் தெரிந்ததொன்றைச் சுட்டிக் காட்டுவதாகத் தோன்றலாம். ஆனால் இதன் தார்ப்பரியங்களை முழுமையாக ஆராயவேண்டும். அவ் ஆய்வு பல திசைகளிலே செல்வதொன்றாயும் இருத்தல்வேண்டும். 1973- ல் அலண்டே கவிழ்க்கப்பட்ட நிகழ்வின் பாடத்தினை நிக்கரகுவா மீண்டும் வற்புறுத்திற்று. அரசு அதிகாரப் பிரச்சினை, அதாவது அடக்கி ஒடுக்கும் வர்க்கத்திடமிருந்து ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரத்தினை மாற்றுவதென்பது ஆயுதப் புரட்சி மூலமே தீர்க்கப்படலாம். அமைப்பில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் கூட, அவை புரட்சிக் கட்டத்தை எட்டி விடாத போதிலும் மூலதனத்திரட்டைப் பாதிக்கக் கூடியவையாக இருந்தால், அச் சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதென்றால் அவற்றினை ஆயுத பலம் மூலம் பாதுகாக்கத் தயாராகியிருக்க வேண்டும். 1954-ல் ஆர்பென்ஸ் வெளியேற்றப்பட்டமை இதனை நிரூபிக்கின்றது. லெனினிச வாதத்தின், இந்த அடிப்படைக் கருத்தினை வரலாறு மீண்டும், மீண்டும், இரத்தம் சிந்தப்பட்டதன் மூலம் நிரூபித்துள்ள போது திரிவு வாதம் இதனைப் பொருட்படுத்தவேயில்லை. இதற்கு மிக அருவருப்பான ஒரு எடுத்துக்காட்டு சிலி கம்யூனிசக் கட்சியின் பொது செயலாளர் லூயிகொர்வலன் எழுதிய ஒரு கட்டுரையாகும். ‘ஆயுதம் ஏந்தாத புரட்சிப்பாதை@ அது எவ்வாறு சிலியில் தொழிற்பட்டது’. என்ற தலைப்பின் கீழ் அவர் பின்வருமாறு எழுதுகின்றார். “சிலியின் புரட்சி ஒரு தற்காலிக பின்னடைவினை அடைந்துள்ள போதிலும் வேறுநாடுகளிலே ஏன் சிலியில் கூட தொழிலாள வர்க்கமும், அதன் நண்பர்களும் அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றி ஆயுதம் ஏந்தாது தமது புரட்சியை வெற்றிகரமாக முடிக்கலாம் என்ற கருதுகோளைச் சிலி அனுபவம் மறுப்பதாக அமையவில்லை.”

மாறாக, சிலியும் நிக்கரகுவாவும் தத்தமது தனி வேறுபட்ட முரண்பட்ட வழிகளில் ஒரு உண்மையை நிலை நாட்டுகின்றன. ஆழ்ந்த பரந்துபட்ட சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் ஆயுதம் தாங்கிய மோதல் தவிர்க்க முடியாதது. எனவே ஆயுதப் போராட்ட பரிமாணமே புரட்சிக்கு யதார்த்தமான ஒரேயொரு தந்திரோபாயமாகும். இதை விடுத்து ஆயுதப் போராட்ட மார்க்கத்தைத் தவிர்ந்த வேறு எந்தத் தந்திரோபாயத்தையும், கையாள்வது வெறும் மாயை மட்டுமல்ல தற்கொலைக்கும் ஒப்பானது. எனினும் இக்கட்டத்தில் ஒரு முக்கிய எச்சரிக்கை’ ஏனெனில் இக்கருத்து புரட்சிவாதிகளாலேயே பெரும்பாலும் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. “கெரில்லா யுத்தம்” என்னும் தனது நூலில் 2வது பக்கத்திலே குவேரா பின்வருமாறு கூறியுள்ளார். அரசமைப்புச் சார்ந்த சட்டத்தன்மையையும், பூர்சுவா ஜனநாயக சுதந்திரங்களையும் பேணும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு எதிராக எல்லா வகையான சட்டரீதியான போராட்ட வழிவகைகளும் முற்றிலும் தீராத நிலையில் புரட்சிகர இயக்கம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கக் கூடாது. சட்ட அரசமைப்பு வாய்க்கால்களினூடாக அடிப்படைக் குடியியல் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. சம்பள உயர்வும், வாழ்க்கை நிலைமை மேம்பாடும் எய்த முடியாது. அடிப்படைச் சீர்த்திருத்தங்களைச் செயற்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர்ந்திருத்தல் வேண்டும் என்பதே குரோ சுட்ட விழைவது. அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டதொன்றாக இருக்கும் வரை, தனது செயற்பாடுகளில் அரசமைப்புத் தன்மையைப் பேணுவதைப் போல் காட்சியளிக்கும் வரை, ஓர் அளவுக்கு மக்களின் ஆதரவு இருக்கும்வரை, சட்டரீதியான போராட்டங்களில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை விடுபட்டுப் போயிருக்காது. வெகுஜனங்கள் பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். இத்தகைய நிலைமையில் கெரில்லா இயக்கம் வளர முடியாது. எனவே ஒன்றில் ஒரு இராணுவ சதி மூலமோ, அல்லது வேறெதேனும் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் மூலமோ (எடுத்துக்காட்டாகப் பாராளுமன்றத்தைக் கலைத்தல், வெகுஜனக் கட்சிகளைச் சட்டவிரோதமானவை எனப் பிரகடனஞ் செய்தல்) அரசாங்கம் ஏற்கனவே நிலைநாட்டப்பட்டுள்ள சட்ட உரிமைகளுக்கு முரணாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்க விழையும் போது தான் கெரில்லா இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நிலைமை உருவாகின்றது. முறைப்பட்ட இராணுவத்தைத் தோற்கடிக்க வேண்டுமாயின் சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சியின் பிரதிநிதியாக அது இல்லாதபோதுதான் சாத்தியமாகும். இத்தகைய நிலைமைகள் இல்லாதபோது ஆயுத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதன் விளைவாகப் புரட்சிவாதிகள் வெகுஜனங்களிடமிருந்து அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்படுவது தவிர்க்கமுடியாததாகி விடும்.

…………………………………..


எதிர்க்கட்சியும் இருந்த போதிலும் கூட ஒரு சில செல்வந்தர்களின் ஏகபோக ஆட்சியின் கோரமான யதார்த்தத்தினை அவற்றால் மூடி மறைக்க முடியவில்லை.

ஆயுதப்போராட்டம், வெகுஜனங்களை ஒன்று திரட்டல்

1961ல் கொண்டியூராசில் கார்லோஸ் பொன்சோ, சில்வியோ மயோகா தொமஸ், போஷ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது கோட்பாடு ரீதியான தலைமையைப் பொன்செகா அளித்தார். கியூபன் புரட்சியைத் தொடர்ந்து இலத்தீன் அமெரிக்க மண்ணிலே தோன்றிய பல டசின் கெரில்லா ‘குழஉழள’ களில் குளுடுN னும் ஒன்று. கியூபன் கொரில்லாக்கள் ஈட்டிய வெற்றியினால் உந்தப்பட்டு இலத்தீனமெரிக்காவின் சில பகுதிகளில் தீவிரவாத இளைஞர்கள் ஆயுதம் ஏந்தத் தொடங்கினர். உறவானாவின் 2வது பிரகடனத்தின் அறைகூவலுக்கு இணங்கவே அவர்கள் இவ்வாறு ஆயுதம் ஏந்தினர். ‘ஒவ்வொரு புரட்சி வாதியினதும் கடமை புரட்சி செய்வதே’ இதுவே உறவானாவின் அறைகூவல்.

1963ல் அடைந்த இராணுவதோல்விக்குப் பின்னர் ஓரளவு சட்டத்திற்குட்பட்ட அரசியற் கிளர்ச்சிகளை நகர்ப் புறங்களில் மேற்கொண்டது. இத்தகைய கிளர்ச்சி இயக்கங்கள் குறிப்பாக மாணவ இயக்கத்தினுள் நிகழ்ந்தது. அச் சமயம் குளுடுN க்கு உள்@ர் கம்யூனிச கட்சியான PளுN னுடன் உறுதியற்ற தொடர்பு நிலவியது.

1967ல் குளுடுN மீண்டும் மலைப் பகுதிக்குத் திரும்பியது. பன்கசனில்பெரும் தோல்வி ஒன்றினை அடைந்தது. 3ம் உலகிலுள்ள பெரும்பாலான வேறு புரட்சிகர இயக்கங்கள் போலன்றி கன்டினிஸ்டாக்கள் ரியோ பொக்கோயிலும், (1963) பன்காசனிலும் (1967) ஏற்பட்ட தோல்விகளுக்குப் பின்னர் தங்களுக்குள் சுய விமர்சனத்தை மேற் கொண்டனர். தமது பிரதான தவறை - வெகு ஜனங்களிடமிருந்து தனிமைப்பட்டிருந்தமை - அவர்கள் இனம் கண்டனர். 1963ல் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் தோமஸ் போர்ஜ் பின்வருமாறு கூறினார். “முதலில் ஆரம்ப அரசியல் வேலைகளை மேற்கொள்ளாது, இடத்தின்புவியியல் தன்மைகளை அறியாது, வழங்கீட்டு (ளுரிpடலடiநௌ) ஒழுங்குகளை செய்யாத நாம் ஒரு பகுதிக்குள் புகுந்தது தவறு” அரசியல் அமைப்பு வேலைகள் மூலம் உள்@ர் மக்களை ஒன்று திரட்டி ஆயுதப் போராட்டத்துடன் இணைக்காதது தவறு என இங்கு அவர் ஒப்புக் கொள்கிறார்.

பங்கசன் காலப்பகுதியின் ஐந்தொகையைத் தயாரித்து கார்லோஸ் பொன்சேகா ஒரு முக்கிய கட்டுரை ஒன்றை வரைந்தார். அது ரைக் கொண்டினன்டல் (முக்கண்ட) சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. அதில் அவர் பின்வருமாறு கூறுகின்றார். “ஒழுங்கமைப்புக்குட்பட்ட வெகுஜன அமைப்பு வேலைகள் (மாணவ, விவசாய தொழிலாளர் மத்தியில்) முடங்கியிருந்தது. ஒருபுறம் இத்தகைய வேலைக்குத் தேவையான முழுநேர ஊழியரின் (கார்டேர்ஸ்) தொகை போதாமையாக இருந்தது. மறுபுறம் இத்தகைய செயற்பாடு ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியில் வகித்திருக்கக்கூடிய முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப்பட்டது”. இவ்வாறு குளுடுN நடைமுறையைப் பொறுத்த வரையிலும், கொள்கையைப் பொறுத்தவரையிலும் புதிய வழியை உண்டு பண்ணியது. வெகுஜனங்களை ஒன்று திரட்டும் அவசியத்தை அவர்கள் உணரும்போது அதை ஆயுதப் போராட்டத்திற்கு மாற்று வழியாக அல்லது எதிரான ஒன்றாக அல்லாமல் ஆயுதப் போராட்டத்திற்கு தேவையான ஆயத்தமாகவும், அதனுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளாகவுமே கருதினார். வெகுஜனங்களை ஒழுங்கமைக்கும் பணிகளை ஒரு கெரில்லா இயக்கம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? மேலே குறிப்பிட்ட கட்டுரையில் பின்வரும் கருத்தினை கார்லோ பொன்சேகா வற்புறுத்துகிறார். “மக்களிடையே இருந்து பரந்துபட்ட தொகையினரைச் செம்மையாகப் பயிற்றுவித்தல் அவசியமாகும். அப்பொழுதுதான் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவல்லவர்களாக இருப்பர். மக்களை நாடிச் செல்வது மட்டும் போதாது. அவர்களும் புரட்சிகர யுத்தத்தில் பங்குபற்ற வேண்டும்.

பங்கசனைத் தொடர்ந்து இரகசியமான நகர்ப்புறச் செயற்பாடுகளுக்குக் கூடுதலான அக்கறை செலுத்தப்பட்டது. இடைநிலைப்பட்ட நிறுவனங்களை குளுடுN நிறுவத்தொடங்கியது. 1979-ல் ‘ஊழஅடியவந’ சஞ்சிகையைச் சார்ந்த வொக்ஸ்மன் சீன்காவிற்கு தொமஸ் போஜ் ஒரு பேட்டியளித்தார். அதில் அவர் பின்வருமாறு விளக்கமளித்தார். “இந்த இடை நிலைப்பட்ட நிறுவனங்கள் எம்மையும் வெகு ஜனங்களையும் இணைக்கும் தொப்புள் கொடி. எமக்கு மாணவ அமைப்புகள், தொழிலாள அமைப்புகள், அயலவர் குழுக்கள், கிறிஸ்தவ இயக்கங்கள், கலைஞர் குழுக்கள் போன்றவை இருந்தன. இந்த இடைநிலைப்பட்ட அமைப்புகளுக்கு நாமே தலைமை தாங்கினோம்” போஜ் மேலும் பேசுகையில்@ “அந்த முழுக்காலப்பகுதியிலும் (1967-74) இந்த இடைநிலைப்பட்ட நிறுவனங்கள் மூலமே எமது வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அச் செயற்பாடகள் மேற்கொள்ளப்பட்ட முறைகளை வரட்டுவாதிகளும், சாய்மனைக் கதிரைக் கோட்பாட்டாளரும் விமர்சிக்கக் கூடும். நாங்கள் பலதரப்பட்ட பணிகளை மேற்கொண்டோம். மலசல கூடங்கள் கட்டுதல், வயதுவந்தோருக்கு எழுத்து வாசனையைப் புகட்டுதல், சுகவீன முற்றவர்களுக்குச் சிகிச்சையளித்தல், இளைஞர்களுக்கு விழாக்களை ஒழுங்கு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள எமது போராளிகளை அனுப்பினோம். இதன்மூலம் அரசியல் வாழ்வு, புரட்சிகர உள்ளடக்கத்தைக் கொண்ட நிறுவனங்களை உருவாக்கல் போன்றவற்றுக்கு அவர்கள் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டர்.

சேகுவேரா இறந்த அதே ஆண்டுதான் பன்கசன் தோல்வியேற்பட்டதென்பதை நாம் மறத்தலாகாது. இந்த நிகழ்வுகளில் தற்செயல் இணைவு கியூபாவின் கெரில்லா மாதிரியினை அப்படியே பிரதி செய்யும் முயற்சியின் பலவீனத்தை நன்கு வெளிப்படுத்திற்று. அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட எதிர்க் கிளர்ச்சிப்படைகளின் செயற்திறன் எவ்வளவோ அதிகரித்திருந்தமையால் கெரில்லாப் போராட்டத்தை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியதாக இருந்தது. ஆரம்பப் போராட்டக் களங்களாகிய கிராமப் புறங்களுக்குள் கெரில்லாப் போராட்டம் ஒடுக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது. 1967க்குப் பின்னர் குளுடுN மீண்டும் நகர்ப்புற அமைப்பு வேலைகளை மேற்கொண்டது. 1963-ம் ஆண்டுத் தோல்விக்குப் பின்னர் இத்தகைய பணியை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் குளுடுN மேற்கொண்டிருந்தது. கிராமப்புற கெரில்லா நடவடிக்கைகளை ஆதரித்து முழுமைப்படுத்தும் வகையில் நகர்ப்புற அமைப்புகளைக் கட்டியெழுப்புவதில் இப்பொழுது அக்கறை செலுத்தப்பட்டது. 1967கும் 74க்கும் இடையில் ஏற்பட்ட இச்செயற்பாட்டைப் பின்னர் தொமஸ் போஜ் வருணிக்கையில். “மௌனமாக சக்திகளை ஒன்று திரட்டி வளர்த்த கட்டம்” எனக் குறிப்பிட்டார். இந்தக் காலகட்டத்தில் குளுடுN நகரங்களில் ஒரு அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்பினர். இந்த அமைப்பின் இடைநிலைப்பட்ட நிறுவனங்கள் முன்னணித் துறையினருக்கும், வெகுஜனத் துறையினருக்கும் இடையே இணைப்புக்களாக விளங்கின. இந்த இணைப்புக்களினூடாகப் புதியவர்கள் குறிப்பாக நகர்ப்புறங்களைச் சார்ந்த மாணவ இளைஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இந்த நகர்ப்புறப் பகுதியினர் பின்னர் வடமத்திய நிக்கரகுவாவிலுள்ள சினிக்காவைச் சுற்றிய மலைச்சாரலில் வாழ்ந்த விவசாயத் தொழிலாளர் மத்தியில் தளங்களை உருவாக்க அனுப்பப்பட்டனர். அதேவேளை குளுடுN போராளிகள் ஆயுத முனையில் பறிமுதல்களைச் செய்துவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன@ கட்டியெழுப்பப்படுகின்ற அமைப்பினைப் பேணுதல். செயலின் மூலம் பிரச்சாரம் செய்தல், வேறு வகையில் கூறுவதானால் இரட்டை வகைத் தந்திரோபாயம் மேற்கொள்ளப்பட்டது. சினிக்காத்தளம் ஆயுதச் செயற்பாடுகளின் மையமாக அமைந்தது. அதேவேளை இந்தச் செயற்பாட்டை ஆதரித்துப் பேணுவதற்கு இரகசியமான நகர்புற வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குளுடுN ஐ அதன் ஆரம்பகால ‘ஒற்றைப் பரிமாணம் கொண்ட’ இராணுவ நடவடிக்கை, வாதத்திலிருந்தும் 1960களின் கெரில்லா அமைப்புத் தலைமுறையிலிருந்தும் வேறுபடுத்தியது. 1970 களின் முதல் ஆண்டுகள் அளவில் முக்கிய நகரங்களிலே பரந்துபட்ட இரகசிய அமைப்புகளை வலைப்பின்னல் போன்று குளுடுN உருவாக்கியிருந்தது. பல்கலைக்கழகங்களிலிருந்தும், தொழிற்சங்கங்களிலிருந்தும் கூடுதலான கார்டேர்ஸ் (ஊயசனழசள) சேர்க்கப்பட்டனர். நகரங்களுக்கு அண்மையில் பயிற்சி நிறுவனங்களை அமைத்து இந்த மாணவருக்கும் தொழிலாளருக்கும் ஆரம்ப இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. வேறுவகையாகக் கூறுவதானால், 60களின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயத்துடன் தொடர்ச்சியிருந்தது. கிராமப்புறங்களில் கெரில்லாப்படைகளைப் படிப்படியாகத் திரட்டி வளர்ப்பதே அடிப்படை நோக்கமாக இருந்ததோடு ஆயுதப் போராட்டத்தின் கட்டுப்பாடும் பொதுப்படையான நெறியும் கிராமப்புறங்களில் தங்கியிருந்த கெரில்லாத் தலைவர்களின் கைகளிலேயே தொடர்தும் இருந்தது. புதிய அம்சம் யாதெனில் 1970க்கும் 74க்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அதிரடிச் செயற்பாடுகளை நிறைவுபடுத்தும் பொருட்டு நகர்ப்புறங்களில் ஒழுங்கமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டமையும், மிக முக்கியமாக இறுதியில் வெகுஜனக் கிளர்ச்சிக்கு நகர்ப்புற மக்களை ஆயத்தப்படுத்துவதற்காக ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையுமே.

கியூபாவின் மாதிரியிலிருந்து விலகிச் செல்ல உந்திய மூலகங்களை குளுடுN தளபதி கென்றிரூயிஸ் வெளிப்படுத்தியுள்ளார். நிக்குரகுவாவின் கலாசார அமைச்சு வெளியிடும் சஞ்சிகையான நிக்கரவுக்கில் (1980 மேதின இதழ்) அவர் ‘மலை’ எனும் தலைப்பில் வரைந்த கட்டுரையில் இம் மூலகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. “பங்கசன் (1967 - ல் தோல்வி ஏற்பட்ட இடம்) பற்றித் தயாரிக்கப்பட்ட ஐந்தொகையில் நீண்டகால மக்கள் யுத்தம்பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. வியட்னாமியரினதும், சீனரதும் அனுபவங்கள் சிலவற்றைப் படித்ததிலிருந்து இந்த எண்ணம் உருவெடுக்கத் தொடங்கியிருந்தது. கியூபாவின் அனுபவத்தின் பக்கம் சாராது- அதாவது போரை முற்றுமுழுதாக மூளச் செய்யும் கெரில்லா நடவடிக்கைகள் கிராமப்புறங்களிலே ஒழுங்கமைப்பு வேலைகளை மேற்கொண்ட அதே வேளையில் நகர்ப்புறப் பிரச்சினைகளிலும் நாம் ஈடுபடலாயினோம்.”

சமூக சக்திகளின் இந்த ஒன்றுதிரட்டல் மிக அமைதியாக ஆரவாரமின்றி நடைபெற்றதினால் இலத்தீனமரிக்கப் புரட்சிபற்றி ‘றெஜிடி பிறே’ - தற்கால மாக்சிய அறிவாளிகளுள் மிகத் தலைசிறந்த நுண்மான் நுழைபுலன் வாய்ந்தவர் - 1973, 74-ல் எழுதிய இரு நூல்களிலும் குளுடுN பற்றி இரு இடங்களி;ல் மட்டுமே மேலோட்டமான அதிக பாராட்டு வழங்காத குறிப்புகளை அவர் தருகிறார். ஆரவாரமற்ற அமைதியான இக்கட்டம் டிசம்பர் 1974-ல் துப்பாக்கிகளின் முழக்கத்தில் முடிவுற்றது. அச்சயம் குளுடுN அதிரடிப் படையினர் அமெரிக்கத் தூதுவர் ரேணர் ஷெல்டனின் இல்லத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த நத்தார்க் கொண்டாட்டத்தைத் தாக்கினர். சொமோசாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேரைப் பணயக் கைதிகளாக அதிரடிப் படையினர் சிறைப்பிடித்தனர். இப்பயணக் கைதிகள் பின்னர் 14 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதும், பெருந்தொகைப் பணம் செலுத்தப்பட்டதும், விடுதலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலின் நோக்கங்கள் குளுடுN னின் அரசியல் படிவத்தினை அழுத்துவதும், சர்வாதிகார அமைப்பின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதுமே. இந்த நோக்கங்கள் நிறைவேறிய போதிலும், இத்தாக்குதலின் விளைவாக சொமோசாவின் தேசியப் படையினர் மிகப் பெருமளவில் எதிர்த் தாக்குதலை மேற்கொண்டனர். இவ் எதிர்த்தாக்குதல் மூன்றாண்டு காலம் நீடித்தது. கிராமப்புறங்களில் பெரும்பகுதி ‘சாந்தப்படுத்தப்பட்டது’. நகரங்களில் குளுடுN னின் சிறு குழுக்கள் ஊடுருவப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன.

இந்த அடக்குமுறை மிகக் கொடூரமாகவும், வெற்றிகரமானதாகவும் இருந்ததினால் 1975-ல் அமெரிக்க இராணுவக் குழுவினருடன் நிக்கரகுவாவுக்கு விஜயம் செய்த லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் யாபாரோ, சொமோசா கிராமப்புறங்களிலே இராணுவ வெற்றியை ஈட்டிவிட்டார் என்றும், சொமோசாவின் தேசியப் படையினர் தொழில் திறமை மிக்கவர்களாகவும், ஆணைகளுக்கு கட்டுப்படும் தன்மை வாய்ந்தவர்களாகவும், செயற்திறன் மிக்கவர்களாகவும் காணப்படுகின்றனர் என்ற முடிவுக்கு வந்தார். வேடிக்கை என்னவெனில் நான்கே நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இதே தேசியப் படையிர் தோற்கடிக்கப்பட்டு குளுடுN அதிகாரத்தைக் கைப்பற்றியமையே. உண்மை என்னவென்றால் கிராமப்புற கெரில்லாக்களுக்குப் பலத்த அடி விழுந்தபோதிலும் அடக்குமுறையின் விளைவாகப் புதியவர்கள் கெரில்லா அணியில் சேர்ந்தனர். ஐந்தொகையின் பாதகப் பகுதியில் குளுடுN 3 பிரிவுகளாகச் சிதறியமை அடங்கும். நிலைமை இவ்வாறாக இருந்தபோதிலும் செப்ரெம்பர் 1977-ல் சன்டினிஸ்டாக்கள் மீண்டும் தாக்குதலை மேற்கொள்ளலாயினர். அமைதியாக ஆரவாரமின்றி சக்திகளை ஒன்றுதிரட்டிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கைகளும், அப்பொழுது இடப்பட்ட பலமான வெகுஜன அத்திவாரமுமே இந்த சிறந்த சாதனைக்கும், ஏன் குளுடுN உயிர் வாழ்வதற்குமே வழிகோலின. 1977, 78-ல் சன்டினிஸ்டாக்கள் கூடுதலான நவீன ஆயுதங்கள் தாங்கி நிக்கரகுவா-கொஸ்தாரிக்காவின் காடுகள் நிறைந்த எல்லைப்புறத்திற்கு அப்பால் தாக்குதல்களை அதிகரித்ததுடன் ரோந்து சுற்றிவரும் இராணுவத்தினர்மீது தாக்கிவிட்டு மறையும் தாக்குதல்களையும் மேற்கொண்டனர். அதுமட்டுமன்றி நாடு முழுவதும் பொலிஸ் நிறையங்களையும், வங்கிகளையும், பாலங்களையும் அவர்கள் தாக்கலாயினர். மக்கள் யுத்தத்தின் தந்திரோபாய தாக்குதல் கட்டத்திற்கு மாறும் நிலைமையின் ஆரம்பத்தை செப்ரெட்பர் - அக்டோபர் 77 குறித்தது எனலாம்.

புரட்சிகர யுத்தத்தினை ஆராயும் மாணவர் குளுடுN சாதனையின் ஒரு அம்சத்தினை மனங்கொள்ளத் தவறமாட்டார்கள். இறுதிக் கட்டத்தினைத் தவிர மற்றும்படி இப்போராட்டம் நீண்டதாக இருந்ததோடு, அதி உக்கிரம் அற்றும் இருந்தது. பல நூற்றுக்கணக்கான தேசியப் படையினர் இக்காலகட்டத்தில் கொல்லப்பட்டபோதிலும் பத்திரிகைகளில் கொட்டையெழுத்துத் தலைப்புகளைத் தாங்கிச் செய்திகள் வெளிவரக்கூடிய அளவுக்கு குளுடுN பிரமாண்டமான அளவில் தேசியப்படையினரை ஓரேயடியாகக் கொல்லவில்லை. ருப்பமாறோசும் நுசுP யினரும் இத்தகைய பரபரப்புமிக்க தாக்குதல்களை மேற்கொண்டமையால் உலகெங்குமுள்ள தீவிர இளைஞர்களைக் கவரக்கூடியதாகவிருந்தது. எனினும் இலத்தீனமெரிக்காவின் ஏனைய பகுதிகளில் இரந்த வேறு கெரில்லா இயக்கங்களைவிட சன்டினிஸ்டாக்கள்தான் நின்று பிடிக்கக்கூடியவர்களாக, தாக்குப்பிடிக்கக் கூடியவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் அம்சத்தில் அதாவது நீண்டகாலமாக நின்றுபிடித்தல் சன்டினிஸ்டாக்களுடன் ஒப்பிடப்படக்ககூடியவர்கள் கௌதமாலா கெரில்லா இயக்கமாகிய குயுசு மட்டுமே.

60களிலும், 70களிலும் சன்டினிஸ்டா இயக்கத்தினருக்குப் பாரதூரமான பல தோல்விகளும் பின்னடைவுகளும் ஏற்பட்டபோதிலும் அவர்கள் இராணுவ ரீதியாக அழித்தொழிக்கப்படவுமில்லை. அரசியல் ரீதியாக அடங்கியொடுங்கிப் போகவுமில்லை. பின்னைய கதிதான் வெனிசுயேலா இயக்கமாகிய ஆயுளு க்கு நேர்ந்தது. இதற்குத் தலைமை தாங்கியவர் ரியரொடே பெற்கப் என்பவர். இலங்கையிலே ஏப்ரல் 71-ல் துஏP யினர் ஆயுதக் கிளர்ச்சினை மேற்கொண்டு ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமான பொலிஸ் நிலையங்களைத் தாக்கினர். ஆனால் இவ் ஆயுதம்தாங்கிய கிளர்ச்சி இராணுவரீதியாக நசுக்கப்பட்டதுடன் அரசியல்ரீதியாகவும் அவர்கள் ‘சாந்தப்படுத்தப்பட்டனர்’. காட்டுக்குள்ளே தப்பியோடி ஆயுதம் தாங்கிய சிறு குழக்களாகச் சொற்ப காலகம் அங்கு வாழ்ந்த போராளிகள்கூட 73-ல் பொருளாதார நெருக்கடியும், அடக்குமுறையும் நிலவியபோதிலும் மீண்டும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு வல்லமை அற்றவர்களாக இருந்தனர். இன்றைய பழமை பேண் அரசாங்கம் 1977-ல் துஏP தலைவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்ததும், துஏP கட்சி மீண்டும் தலைதூக்கி முன்னேற்றம் கண்டது. ஆனால் அது நவரொட்சியவாத நவதிரிபுவாத பாராளுமன்றக் கட்சியாகவே இன்று காட்சியளிக்கிறது.

இராணுவ புத்தாக்க ஆற்றல் தந்திரோபாயங்களின் இணைவு

குளுடுN னுடைய இராணுவ இயக்கம் சீனாவினுடைய நீண்டகால மக்கள் யுத்த மாதிரியிலிருந்தும், கியூபன் மாதிரி என அழைக்கப்படும் மாதிரியிலிருந்தும் விலகிச் செல்வது அல்லது சரியாகச் சொல்வதென்றால் வேறுபடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் இரு முக்கிய வடிவங்களை - இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என வழக்கமாகக் கருதப்படுவது தவறாகும் - குளுடுN மிகத் திறம்பட இணைத்தமை மிகவும் கவர்ச்சிகரமானது. நாம் இங்கு குறிப்பிடுவது ஒருபுறம் நீண்ட கெரில்லா யுத்தம் (சீனாவினதும், கியூபாவினதும் மாதிரிகளில் இதன் முக்கிய களம் கிராமப்புறமாகும்) மறுபுறம் நகரங்களிலும், பட்டினங்களிலும் பொது வேலை நிறுத்தங்களும் ஆயுதக்கிளர்ச்சிகளும் மேற்கொள்ளப்படுதல் ஆகும். சீனாவினதும், கியூபாவினதும் மாதிரிகள் நகரப்புறங்களில் அரசியல் பொது வேலைநிறுத்தங்களையும், ஆயுதக் கிளர்ச்சியையும் உள்ளடக்கிய போதிலும், இவை நகரங்களைக் கிராமப்புறம் முற்றுகையிட்டபின்னர், நன்றாகப் பழுத்த பழங்களைப்போல் இருக்கும் நகரங்களைக் கைப்பற்றக் கூடிய கட்டத்தில்தான், அதிகாரத்தைக் கைப்பற்றும் சமயத்தில் இவை நிகழும். இந்த மாதிரியில் நகர்ப்புற களத்தின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப்பட்டது. கியூபாவைப் பொறுத்தவரை மலைப் பகுதிகளுக்கும், சமவெளிகளுக்குமிடைய (சியறாசும், லானோவும்) இருந்த இணைப்புகள் குறைத்து மதிப்பிடப்பட்டன. சீனப் போராட்டத்தினைப் போலல்லாது வியட்நாமிய போராட்டம் நன்கு வளர்ச்சியடைந்த நகரப்புற-கிராமப்புற இயக்கவியலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. (ஆகக் குறைந்த அதன் இறதித் தசாப்தத்திலாவது) சன்டினிஸ்டாக்கள் கையாண்ட தந்திரோபாயங்கள் இதனைப் பலவழிகளிலும் ஒத்திருக்கிறது. ஆனால் நிக்கரகுவாவில் இறுதி வெற்றி விரைவில் இடம்பெயர்ந்த மரபுவழி படைகளின் சாதனையல்ல. குளுடுN னின் உடைய போராட்டம், ஏணியின் படிகளை ஒவ்வொன்றாக மித்துத்து ஏறுவதுபோல் படிப்படியாக நடைபெற்றதொன்றல்ல. மக்கள் யுத்தம் பற்றி எழுதப்பட்ட பல்வேறு நூல்களிலும், மாதிரிகளிலும் வரையறுக்கப்பட்டவாறும், அது எல்லாக் கட்டங்கள், உப கட்டங்கள் ஊடாகச் சென்றதொன்றல்ல. குளுடுN கிராமப்புறு கெரில்லா யுத்தத்தினையும், பரபரப்பினை ஏற்படுத்தக்கூடிய நகரப்புற கமான்டோத் தாக்குதல்களையும், வெகுஜன எழுச்சிகளையும் இணைத்தனர். இத்தகைய இணைப்பினை 1960களில் வெனிசுவேலா கெரில்லாத் தலைவனான டக்ளஸ் பிறேவோ தெளிவின்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தந்திரோபாயத்தினை ‘இணைந்த கிளர்ச்சி’ என அவர் பெயரிட்டார். இந்த இணைப்பில் பிறேவோ மிதமிஞ்சிய அழுத்தத்தினை தீவிர இராணுவ துறைகளுக்குக் கொடுத்ததோடு, பின்னர் அதிதீவிர அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் பலியானார். கியூபாவிற்கு மிகவும் பாதகமான ரொட்சியவாத, மாவோவாத நிலைப்பாடுகளை அவர் கடைப்பிடித்தார். ஆனால் அது வேறு விடயம்.

கிராமப்புறங்கள் நகரங்களை முற்றுகையிடுவது பூரணமாகும் வரை காத்திராது, குளுடுN அரசியல் நெருக்கடியின் ஆழத்தினையும், அளவினையும் செம்மையாகக் கணித்தனர். வெகுஜன இயக்கத்தின் (இதனைக் கட்டியெழுப்புவதில் குளுடுN க்குக் கணிசமான பங்கிருந்தது.) மன நிலையினையும், அது வேகமாகத் தீவிரமயப்படுத்தப்பட்டிருந்தமையையும், குளுடுN விரைவில் புரிந்து கொண்டனர். பல்வேறு சக்திகளின் முழுமொத்தமான சமநிலையைச் செம்மையாக மதிப்பிட்டு, வெகுஜன போராட்டத்தின் பெருக்கிற்கெற்ப நெகிழ்ந்துகொடுத்து குளுடுN மிக வேகமாகத் தமது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்தனர். கட்டம் ஒன்றிலிருந்து கட்டம் இரண்டிற்கு மாறி, இரண்டு கட்டங்களையும் ஒன்றோடொன்று இணைத்து, அவர்கள் நகரங்களைத் தாக்கி, இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு ஆயுதம் வழங்கி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இவற்றின் பயனாக சொமோசாவின் அதிகார பீடம் சுக்குநூறாகியது. இத்தகைய இராணுவ நெகிழ்ச்சியும் படைப்பாற்றலும் வியட்னாமில் நிகழ்ந்த ரெட் தாக்குதலில் வெளிப்படுத்தப்பட்டன. நீண்டகால கிராமப் புற கெரில்லாப் போராட்டத்திற்குப் பின் அதனுடன் இணைந்து திடீர் நகர்ப்புறத் தாக்குதல்கள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதால் உச்ச அரசியல் பாதிப்பினை ஏற்படுத்தின. இத்தகைய அரசியல் பாதிப்பை ஏற்படுத்துவதே அதன் நோக்கம். ரெட் தாக்குதலை 1975-ல் தளபதி வான்ரியன்குங் மேற்கொண்ட மாபெரும் இளவேனில் தாக்குதலே மேவியது.

இராணுவ நடவடிக்கைகளிலே இறங்குமுன்னர் அதற்கு வேண்டிய செம்மையான சூழ்நிலையை அண்மைக் காலங்களில் சரிவரப் புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் வியட்நாமியரையும், சன்டினிஸ்டாக்களையும் குறிப்பிடலாம். அதேபோன்று இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசியல் மேலாதிக்கத்தினைக் கைப்பற்றி, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையினைத் தாம்விரும்பிய திசைக்குத் திருப்பிய சிறப்பும் இவர்களைச்சாருட். சூழ்நிலை இணைவு (ஊழதெரnஉவரசந) மார்க்சிய அரசியல் விஞ்ஞானத்தின் மையக் கருத்துருவமாக லெனினும் சிறம்பசியும் கருதினர். அல்தியுசரின் விளக்கத்தின்படி “சூழ்நிலை இணைவு என்பது சக்திகளின் திட்ப நுட்பமான சமபலன், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முரண்பாடு மேல்நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலை@ இதற்கு அரசியல் தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.”

குறிப்பிட்ட சூழ்நிலை இணைவுக்குப் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு அரசியல் உத்தியே ஆயுத நடவடிக்கை. குளோஸ்விற்ஸ் என்பவர் கூறியிருப்பதைப் போன்று “போர் என்பது வெறுமனே ஒரு அரசியல் செயல் மட்டுமன்று@ அது உண்மையான அரசியல் கருவியும் கூட”. அரசியல் நடிவடிக்கைக்கும் இராணுவ நடவடிக்கைக்கும் இடையே உள்ள உள்ளாந்த இணைப்பைச் சன்டினிஸ்டாத் தலைமை மிக நுட்பமாகப் புரிந்து கொண்டது. இந்த இணைப்பை உலகிலிருக்கக்கூடிய புரட்சிவாதிகள் செவ்வனே புரிந்துகொள்ள அடிக்கடி தவறுவது பெரும் அவப்பேறே. அவர்கள் ஒன்றில் அரசியல் அம்சத்தினை அழுத்தி இராணுவ அம்சத்தினைப் புறக்கணிப்பார்கள் அல்லது இராணுவ அம்சத்தினை அழுத்தி அரசியல் அம்சத்தினைப் புறக்கணிப்பார்கள்.

இலத்தீன் அமெரிக்கக் கண்டத்திலே இதனால் ஏற்பட்ட தோல்வியினை நாம் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஒருபுறம் வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சிக்கும், மறுபுறம் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கும் இடையே இணைவின்மை நிலவியதை நீண்டகாலமாக மீண்டும் மீண்டும் நாம் காணக்கூடியதாகவுள்ளது. இந்த இணைவின்மையை வௌ;வேறு காலப்பகுதியிலும், வௌ;வேறு இடங்களிலும் காணக்கூடியதாகவுள்ளது. சில சமயங்களில் நாட்டின் ஒரு பகுதியில் கெரில்லா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை புரட்சியின் பிரதான சமூக சக்திகளிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதால் ஒரு குறுகிய நிலப்பரப்பிற்றான் அடங்கிவிடுகின்றன. றெஜிடி பிறே என்பவர் ‘சேயின் கெரில்லா யுத்தம்’ என்ற நூலை எழுதினார் அது மெலெழுந்தவாரியான, பல வழிகளிலும் திருப்தியற்ற நூல் எனினும் அவர் அங்கு குறிப்பிடும் ஒரு விடயம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தொன்றே. சேயினுடைய படைப்பிரிவுதான் பொறியாக இருக்கும் என எண்ணப்பட்டபோதிலும் அது ‘வெடிமருந்தாகிய’ பொலீவியசுரங்கத் தொழிலாளரிடமிருந்து விடுபட்டிருந்தது. என அவர் குறிப்பிடுகின்றார். சில சமயங்களிலே வெகுஜன இயக்கத்தினதும் அதன் அறிவுணர்வினதும் வளர்ச்சிக்கும் ஏற்ப கெரில்லாப் படையினர் நடவடிக்கையினை மேற்கொள்ளாது, வெகுஜன இயக்கத்தினின்று ‘ஆணையிடுதல்’ ‘வெகுமுன்னே செல்லுதல்’ ஆகிய தவறுகளை அவர்கள் விட்டனர். மாறாக வெகுஜன இயக்கம் எழுச்சி பெற்று முன்சென்ற கட்டங்களில் அவர்களுக்குக் கேடயமும் வாளும் இல்லாததினால் அந்த எழுச்சியை அரசு அடக்கக்கூடியதாக இருந்து. இதற்கு பொலீவியா ஒரு உதாரணம். 70களின் முற்பகுதியில் தொழிலாள வர்க்கத்தினரின் தலைமையில் வெகுஜனங்கள் களத்தில் குதித்தகட்டத்தில் நுடுN பின் வாங்கிக் கொண்டிருந்தது.

ஆயினும் நிக்கரகுவாவில் ஆயுதப் போராட்டம், வர்க்கப் போராட்டத்திலும், பின்னர் தேசிய - வெகுஜனப் போராட்டத்திலும் நன்கு வேரூன்றியிருந்தது. குளுடுN வெகுஜன இயக்கத்தின் ஈட்டி முனையாகச் செயற்பட்டது. சொமோசாவை ஆதரிக்காத தாராள பூர்சுவாக்களின் தலைசிறந்த பிரதிநிதியாகிய பீட்ரோ ஜேக்கின் - அவர் ஒரு மிதவாத பத்திரிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமாவார் - படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிக்கரகுவா மக்கள் தாமாகவே வெகுஜனப் போராட்டத்திலும், நேரடி நடவடிக்கைகளிலும் குதித்தனர். பெப்ரவரி 1978-ல் செவ்விந்தியர் வாழ்ந்த மொனிம்போ என்ற நகரில் கிளர்ச்சி வெடித்தது. அந்நகரம் உக்கிரமான போராட்டக்களமாக விளங்கியது. இந்நிலையில் சன்டினிஸ்டாக்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை இன்று நிக்கரகுவாவின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஹம்பேர்ட்டோ ஒட்டேகா சவேத்-ரா ஒரு கட்டுரையில் விவரித்துள்ளார். அக்கட்டுரை ‘நிக்கரவுக்’ என்ற சஞ்சிகையின் முதலாவது இதழில் (மே-யூன் 1980-ல்) வெளிவந்தது. அவர் பின்வருமாறு கூறுகின்றார்@ “மொனிம்போவில் பெப்ரவரி கிளர்ச்சி வெடித்தபின்னர் வடபகுதிப் போர்முனையிலிருந்து எமது கெரில்லாப் பிரிவையும் அதில் கடமையாற்றிய காடர்களையும் கலைப்பதென நாம் தீர்மானித்தோம். இந்த கெரில்லாப் பிரிவினர் வெற்றிகளை ஈட்டியிருந்தனர். எனினும் நகரப்புறங்களிலிருந்து வெகுஜன இயக்கத்தினருக்கு எமது இயக்கத்தின் முன்னணித் தலைமை உடனடியாகத் தேவைப்பட்டது. ஆகவேதான் இந்த கெரில்லாப் பிரிவுகளைக் கலைத்து வெகுஜன இயக்கப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கக் காடர்களை அனுப்புவது எனத் தீர்மானித்தோம்.”

இந்தக் கூற்று அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் செயற்பாடுகளை ஏளனத்தோடு நோக்கும் அல்லது ஆயுத நடவடிக்கைகளுக்கு கீழாக மதிக்கும் இராணுவமயவாத போக்கிலிருந்து சன்டினிஸ்டாக்கள் எத்தனை தூரம் கடந்து வந்துவிட்டார்கள் என்பதை இக்கூற்று வெளிப்படுத்துகின்றது. முதிர்ச்சியடைந்த சன்டினிஸ்டாக்களைப் பொறுத்தவரை அரசியலே ஆட்சி செலுத்தியது. ‘காடர்’ போன்ற அருந்தலான வளங்களைப் பங்கிடும்போது வெகுஜனங்களின் தேவைகளே முதன்மையாகக் கணிக்கப்பட்டன.

மொனிம்போ கிளர்ச்சிக்குப் பின்னர் ஏப்ரல் 1978-ல் மிகப் பிரமாண்டமான, நீண்டகாலம் நீடித்த மாணவர் வேலைநிறுத்தம் இடம்பெற்றது. இவ்வேலை நிறுத்தம் இடம் பெற்றது. இவ்வேலைநிறுத்தத்தில் 60000க்கும் அதிகமான மாணவர் பங்குபற்றினர். நகர்ப்புறங்களில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாணவரே ஈட்டிமுனையாக இருந்தனர். அக்காலகட்டத்தில் இளைஞரின் பங்கினை மனகுவாவின் மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழக வரலாற்றப் பேராசிரியரும், அந்நகரின் விவசாயக்கல்வி ஊக்குவிப்பு நிலையத்தின் வெகுஜன கல்விக்குழுவின் உறுப்பினருமாகிய பேராசிரியர் லூயிஸ் செரா பின்வருமாறு வருணிக்கின்றார். “விசேஷமாக பெப்ரவரி 78-ல் நடைபெற்ற மனிம்போ புரட்சிக்குப் பின்னரும். செப்ரெம்பரில் நிகழ்ந்த முதலாவது பொதுக் கிளர்ச்சிக்குப் பின்னரும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் பல இளைஞர் குழுக்கள் தாமாகவே இணைந்து கொண்டன. நிறுவன ரீதியான அநீதியை அவர்கள் பலமாக எதிர்த்ததன் விளைவாக அவ்விளைஞர் குழுக்கள் கெரில்லாப் படையின் முதுகெலும்பாக மாறின”.

“நிக்கரகுவாவில் இளைஞர்களே புரட்சிகர முன்னணி தோன்றுவதற்கும், வளர்ச்சியுறுவதற்கும், வேரூன்றுவதற்கும் காலாய் இருந்தனர்” என்பதே பேராசிரியர் செராவின் முடிவாகும். இந்த ஆதரவு பல அமைப்புகளுக்கூடாக நெறிப்படுத்தப்பட்டதென்பதை நாம் மனங்கொள்ள வேண்டியது அவசியம். “விடுதலைக்கு முன்னரும், பின்னரும் இளைஞர் நிறுவனங்களே சன்டினிஸ்டாக்களுக்கு மிகப் பலம் வாய்ந்த ஆதரவினை நல்கின. வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்போமானால் முதன்முதலில் நிக்கரகுவா தேசபக்த இளைஞர் நிறுவனம் இருந்தது. அதற்குப் பின் புரட்சிகர மாணவர் முன்னணி, பின்னர் நிக்கரகுவா புரட்சிகர இளைஞர் நிறவனம், சன்டினிஸ்த புரட்சிகர இளைஞர் நிறுவனம், உயர் பாடசாலை பல்கலைக்கழக மாணவ இயக்கங்கள் உருவாகின்.”

ஜனவரி 78 தொடக்கம் யூலை 79 வரை சன்டினிஸ்டாக்கள் அம்பிறொனொக் (தேசிய மகளிர் நிறுவனம்) பல்வேறுபட்ட திருச்சபைக் குழுக்கள் ஆகியன ஒவ்வொரு அயலில் உள்ளவர்களையும் சிவில் பாதுகாப்புக் குழுக்களாக அமைக்கத் தொடங்கின. யூலை 1978-ல் மருத்துவமனைத் தொழிலாளரின் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் வெடித்தது. இவ்வேலைநிறுத்தம் அம்பிறொனோக் தலைமை தாங்கிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராட்டத்துடன் இணைந்தது. இதே மாதத்தில் 22 வெகுஜன இயக்கங்கள் இணைந்து ஆPரு என்ற இணைப்பு நிறுவனத்தை உருவாக்கின. ஆகஸ்ட் மாதத்தில் தேசிய சட்டசபைமீது தாக்குதல் நடாத்தப்பட்டது. ஆPரு வும் சிவில் பாதுகாப்புக் குழுக்களும் (ஒவ்வொரு அயலுக்கும், ஒவ்வொரு பகுதிக்கும்) இவற்றுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தின. மருந்து வகைகள் சேகரிக்கப்பட்டதோடு அடிப்படை முதலுதவி அறிவு ஊட்டப்பட்டது. ஆடிப்படை உணவுவகைகள் சேரித்துப் பேணப்பட்டன. ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டதோடு சிலவகையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தேசிய படைப்பிரிவுகள் பற்றியும் அவற்றின் நடமாட்டம்பற்றியும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. குகைகளும் மறைவிடங்களும் நிர்மாணிக்கப்பட்டன. இரகசியமான முறையில் மருத்துவசிகிச்சை நிலையங்கள் (கிளினிக்குகள்) நிறுவப்பட்டதோடு மறைவான அச்கங்களும் நிறுவப்பட்டன. பயிற்சி பெறுவதற்கு கூடுவதற்குமான இடங்கள் ஒதுக்கப்பட்டன.

கிராமப்புறங்களைப் பொறுத்தவரை இந்தப் பணிகள் (அதாவது சிவில் பாதுகாப்புக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள்) விவசாய தொழிலாளர் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கழகத்தின் அத்திவாரத்தினைத் திருச்சபையின் முற்போக்கு சக்திகளே இட்டன. இவர்கள் 60களில் “வார்த்தையைக் கொண்டாடும்” இயக்கத்தினைத் தொடங்கி நெறிப்படுத்தினர். 1976-ல் சன்டினிஸ்டாக்கள் மாணவரோடும், விவசாயிகளோடும் இணைவதற்கு வழி சமைத்தனர். விவசாயிகளின் மேம்பாட்டிற்காகப் போராடுவதற்குக் கிராமப்புறத் தொழிலாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டன. 1978 மார்ச்சில்தான் விவசாயத் தொழிலாளர் கழகம் உருவாக்கப்பட்டது. நாட்டின் நாலு “துறைகளை” சேர்ந்த விவசாய அமைப்பாளரே இதனை உருவாக்கினர். இக்கழக உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சி இதனை உருவாக்கினர். இக்கழக உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது. தங்களுக்கு ஏற்படக்கூடிய பேராபத்தினையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தமது இல்லங்களை “பாதுகாப்பான வீடுகளாக” இவர்களுக்கு வழங்க முன்வந்தனர். கிராமப்புறங்களிலே கெரில்லாக்களுக்கு வேண்டிய ஆயுதங்களும், பாவனைப் பொருட்களும் சேகரித்து வைக்கப்பட்டன. விவசாயத் தொழிலாளர் கழகத்தினூடாக ஆயுதப் போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளரைத் திரட்டுவதில் சன்டினிஸ்டாக்கள் வெற்றி பெற்றனர்.

கிளர்ச்சிக்கான முன் ஆயத்தங்களை சன்டினிஸ்டாக்கள் மிக உன்னிப்பாகவும், கவனமாகவும் செய்தமையும், சிவில் பாதுகாப்புக் குழுக்கள் என்ற நிறுவன வடிவம் உருவாக்கப்பட்டமையும் புரட்சிகர முன்னணிகளுக்குச் சிறந்த முன்மாதிரிகளாக விளங்குகின்றன. சன்டினிஸ்டாக்களுடைய இராணுவ படைப்பாற்றலுக்கும், வெஜனங்களைத் திரட்டுவதில் அவர்கள் இட்ட அழுத்தத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு பரவலாக உணரப்படவில்லை. சுரண்டப்பட்ட மட்டத்தினருடன் நீண்டகாலமாக வலுவான இணைப்புகளை ஒரு நிறுவனம் ஏற்படுத்தின், அது வெகுஜன நெறியினைக் கடைப்பிடிக்கும் (ஆயளள டுiநெ) போதே முன்னணிப்பங்கினை உண்மையில் வகிக்கலாம். ஏனெனில் வெகுஜன உணர்விற்கு அது அதிக பின்னுக்குமில்லை, முன்னுக்குமில்லை. அப்பொழுது நிலவும் அல்லது வளர்ச்சியுறும் வெகுஜன மனநிலைக்கு ஏற்ப அது தனது போராட்ட உத்திகளை மேற்கொள்ளலாம். ஆல்லது மாற்றலாம். கெரில்லாப் போராட்டத்திலிருந்து நகர்ப்புற அதிரடித் தாக்குதல்களுக்கு அது மாறலாம். ஆரசியல் பொது வேலை நிறுத்தத்திலிருந்து ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிக்கு அது பெயரலாம். எடுத்துக்காட்டாக, தேசிய சட்டசபையைச் சன்டினிஸ்டாக்கள் பரபரப்பூட்டும் முறையில் கைப்பற்றியமை 1978 கிளர்ச்சி வெடித்தமைக்குத் தீப்பெறியாக அமைந்தது. முற்றுமுழுதான வெற்றியை ஈட்டிய இந்த நிகழ்வு அதிரடித்தாக்குதல் வரலாற்றில் நிரந்தர இடத்தினைப் பெற்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெகுஜன எழுச்சியைச் சன்டினிஸ்டாக்கள் முழுக்க முழுக்க எதிர்பார்த்திருக்காவிட்டாலும் அத்தகைய நிலைமை உருவாகியதும் அவர்கள் ஆயுதம் ஏந்திய முன்னணிப்படையாக இயங்குவதற்குத் தவறவில்லை.

இந்தக் கிளர்ச்சியை அடக்குவதற்குப் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டதோடு சொமோசோ விமானக்குண்டு வீச்சுக்களையும், தாங்கிகளையும் பயன்படுத்தினார். நகரங்களில் உள்ள சிவிலியன் பகுதிகள் இந்தத் தாக்குதல்களுக்கு இலக்காகின. 20,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். (யூன் 1979-ல் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையின்படி நிக்கரகுவாவில் ஏறத்தாள 30,000 மக்கள் 78-ல் இறந்ததாக மதிப்பிடப்பட்டது.) இயக்கவியல் விதிக்குச் சிறந்த எடுத:துக்காட்டாக அமைவதுபோல், சொமோசாவின் தற்காலிக இராணுவ வெற்றி அவரது அரசியல் தோல்வியை உறுதிப்படுத்திற்று. அவர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான அடக்கு முறைகள் உள்நாட்டில் அவரை முற்றாகப் தனிமைப்படுத்திற்று. அவர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான அடக்கு முறைகள் உள்நாட்டில் அவரை முற்றாகத் தனிமைப்படுத்திற்று. உள்நாட்டைப் பொறுத்தவரையில் தேசியப்படை ஒன்றே அவருக்கு ஆதரவாயிருந்தது. அயல் நாடுகளாகிய மெக்சிகோ வெனிகவேலா, பனாமா, கொஸ்தாரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து அவர் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டார். தத்தமது தேச நலன்கள் என அவை கருதியதன் அடிப்படையில் இந்நாடுகள் இவருடனான தொடர்பினைத் துண்டித்துக்கொண்டன. தாம் பெற்றெடுத்த கோரமான பிள்ளையாகிய சொமோசாவிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு வெளிப்படையாகத் தலையீட்டினை மேற்கொள்வதற்கு அமெரிக்காவினால் முடியவில்லை. அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் உருவாகிய பொதுஜன அபிப்பிராயம் இதனைத் தவிர்த்தது. செப்ரெம்பர் 1978-ல் சன்டினிஸ்டாப் போராளிகள், புகைந்துகொண்டிருந்த நகரங்களிலிருந்து மலைப்பகுதிகளுக்கும் காடுகளுக்கும் போர்த்தந்திர நோக்குடன் பின்வாங்கினர். சொமோசாவின் கொடூரமான அடக்கு முறையிலிருந்து தப்ப முயன்ற பெருந்தொகையான இளைஞர்கள் சன்டினிஸ்டாப் போராளிகளுடன் சேர்ந்து அவர்களின் அணிகளைப் பெருக்கினர். ஈரானுக்குப் பிறகு வாஷிங்டன் “பாரிசவாதத்தால்” பாதிக்கப்பட்டுச் செயலற்றுக் கிடந்தது. தாராள பூர்சுவா வர்க்கத்தினர் புரட்சிகர முகாமிற்குப் பெயர்ந்துவிட்டனர். சொமோசாவின் அரசியற்தனிமை உச்சத்தினை எட்டிவிட்டது. அவரது அதிகார அடித்தளமோ மிக மிகக் குறுகிவிட்டது. அதாவது புற அக நிலைமைகள் நன்கு முற்றிப் பழுத்த கட்டத்தில் சன்டினிஸ்டாக்கள் மீண்டும் திரும்பினர். இதற்கிடையில் அவர்கள் மீண்டும் ஆயுதங்களைச் சேகரித்துப் பயிற்சி பெற்றுத் தத்தமது உட்தொழிற்பாட்டுப் பிரிவுகளைச் சீராக்கி விடுதலை செய்யப்பட்ட தளங்களில் போராட்டத்திற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தனர்.

காகிதப் புலிகள் வைக்கோல் நாய்கள்

உலகிலே உள்ள சுரண்டப்படும், அடக்கியொடுக்கப்படும் மக்களுக்குச் சன்டினிஸ்டாக்களின் வெற்றி ஒரு மிக அடிப்படையான படிப்பினையைப் புகட்டுகின்றதென்றால் அது இதுவே@ முறைமைப்பட்ட இராணுவத்தை எதிர்த்துப்போராடி வெகுஜன புரட்சிகர சக்திகள் வெற்றியீட்டலாம். கியூபாவின் அனுபவத்திலிருந்து சேகுவேரா பெற்ற மூன்று முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்றே. இதனை அவரது நூலாகிய “கெரில்லா போராட்ட”த்திற்கு அவர் எழுதிய முகவுரையில் எமக்கு அளிக்கின்றார். தோழில்நுட்ப ரீதியாகவம், எண்ணிக்கையிலும் மேம்பட்டு நிற்கும் எதிரியைக்கூட மக்கள் புரட்சிகர சக்திகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பது சாத்தியம். வியட்னாமிலும், லாவோசிலும், கம்யூச்சியாவிலும், அங்கோலாவிலும், மொசாம்பிக்கிலும், கினிபிசோபிலும் மக்கள் ஈட்டிய வெற்றி இதனை உறுதிப்படுத்துகின்றது. இதற்கிடையில் எத்தியோப்பியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்டிருக்கும் புரட்சிகர மாற்றங்கள் ஆயுதப் படையினரின் ஒரு பகுதியினரிடம் உள்ளாந்து அடங்கியிருக்கும் சக்தியினைத் தெட்டத் தெளிவாகக் காட்டுவதுடன், இந்த அமைப்புக்களு;ககுள் அரசியல் பணிகளை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்துகின்றன. எழுச்சிபெற்ற வெகுஜனங்களின் விடாப்பிடியான போராட்டங்களின் அமுக்கத்தினால் மிகக் கொடூரமான “வெடிப்பின்றிய” சர்வாதிகார ஆட்சிகூட வெடித்து நொருங்கிச் சுக்குநூறாக என்பதற்கு ஈரானிய புரட்சி தலைசிறந்த எடுத்துக்காட்டாகும். ஈரானிய புரட்சியின் முன்மாதிரி சொமோசாவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து நிக்கரகுவ மக்கள் இறுதிப் போராட்டத்தில் இறங்கியபோது அவர்களுக்குத் திடசங்கர்ப்பத்தையும், தைரியத்தையும் நிச்சயமாக ஈட்டியிருக்கும்.

பல அம்சங்களில் சன்டினிஸ்டாக்களின் எதிரியே மேம்பட்டு நின்றது. எண்ணிக்கையளவில் தேசியப்படை ஏறத்தாள 15,000 பேரைக் கொண்டிருந்தது. சன்டினிஸ்டாக்களில் மையப்பகுதியினர் எண்ணிக்கையளவில் 1500க்கும், 3000க்கும் இடைப்பட்டிருந்தனர். செப்ரெம்பர் 1978-ல் கிளர்ச்சி ஏற்பட்டபோது ஏறக்குறைய 1000 சன்டினிஸ்டாக்கள் களத்தில் குதித்தனர். இவர்களே சன்டினிஸ்டா இயக்கத்தைச் சாராத இளைஞர்கட்குத் தலைமை தங்கினர். ஆந்தக் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டதும் இந்த இளைஞர்கள் (11க்கும் 20க்கும் இடைப்பட்ட வயதுதுடையவரே) சன்டினிஸ்டா அணிகளில் சேர்ந்து அதனைப் பெருக்கினர். கிளர்தெழுந்த வெகுஜனங்களுக்குத் தலைமை தாங்கி@ வெற்றிகரமான இறுதித் தாக்குதலைத் தேசியப்படையினர் மீது மேற்கொண்ட சன்டினிஸ்டாப் படையினர் 5000க்கும் மேற்பட்டிருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கணிப்பீடுகளின்படி சன்டினிஸ்டாக்களின் எண்ணிக்கை 3000க்கும் 5000க்கும் இடைப்பட்டிருந்தது. 5000 என எடுத்துக்கொண்டால் கூட விகிதாசாரப்படி தேசிய படையினருக்கே நிலைமை சாதகமாயிருந்தது. (1:3)

பயிற்சியைப் பொறுத்தவரையிலும் தேசியப் படையினருக்கே அனுகூலமாயிருந்தது. வேறெந்த இலத்தீனமெரிக்க நாட்டையும் விட நிக்கரகுவா இராணுவத்தினர்தான் கூடுதலாக அமெரிக்காவிலே அல்லது பனாமாவிலுள்ள அமெரிக்க தளங்களிலோ பயிற்சி பெற்றிருந்தனர். வட கரோலினாவிலுளள் ஜோன் எவ் கெனடி விசேட யுத்தம் பயிற்சி நிலையத்தில் நிக்கரகுவா அதிரடிப்படைகள் “கிறீன் பெரேட்ஸ் இடம் பயிற்சி பெற்றிருந்தன. அதேபோன்று பனமாவிலுள்ள கெரில்லா எதிர்ப் பயிற்சி நிலையத்திலும் இவர்கள் பயிற்சி பெற்றிருந்தனர். (அமெரிக்க எதிர்ப்புரட்சி அதிரடிப் படையினரான “கிறீன் பயிற்சி நிலையத்தில் நிக்கரகுவா அதிரடிப்படைகள் “கிறீன் பெரேட்ஸ் இடம் பயிற்சி பெற்றிருந்தன. அதே போன்று பனாமாவிலுள்ள கெரில்லா எதிர்ப்புப் பயிற்சி நிலையத்திலும் இவர்கள் பயிற்சி பெற்றிருந்தனர்.) அமெரிக்க எதிர்ப்புரட்சி அதிரடிப்படையினரான “கிறீன் பெரேட்ஸ்” ஐப் பின்பற்றி சொமோசாவின் அதிரடிப் படையொன்று “பிளக்பெரேட்ஸ்” என அழைக்கப்பட்டது. மேலும் கியூபாவிலிருந்து வெளியேறியவர்களும், தென்வியட்நாமிய கூலிப்படையினரும், கௌதமாலா, சல்வடோர் உயர் இராணுவ அதிகாரிகளும் அமெரிக்க கூலிப்படையினரும் தேசியப்படையின் ஆலோசகர்களாகக் கடமையாற்றினர். இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது தேசியப் படையின் தளபதியாகிய சொமோசாவை அவரது இராணுவத்தினர் பெரிதும் மதித்தனர். அவரது குடும்பத்தின் இராணுவ மரபு அவருக்கும் அவரது இராணுவத்துக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்தியது.

இறுதியாகத் தேசியப் படையினரிடம் பெருவாரியான ஆயுதங்கள் இருந்தன. அவர்களிடம் N16களும், இஸ்ரேலிய கலீல் தாக்குதல் ரைபிள்களும் (இந்த ரைபிள்களில் ஒன்று பிடல் காஸ்ரோவுக்கு ஹவானாவில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் சன்டினிஸ்டாத் தளபதி மொறாலெஸ்சினால் நன்கொடையாக வழங்கப்பட்டது) கவச வண்டிகளும், தாங்கிகளும், பீரங்கிகள் பொருத்தப்பட்ட கெலிக்கொப்ரர்களும், வு28 தாக்குதல் விமானங்களும் (கொரிய யுத்தத்தில் இவை பாவிக்கப்பட்டன@ எதிர் கெரில்லாப் போராட்டத்திற்கு இவை மிக உகந்தவை.) ஊ47 விமானங்களும் தன்னியக்கப் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றிலிருந்து பாயும் குண்டுகள் உதைபந்தாட்ட மைதானத்திற்குச் சமமான ஒரு நிலப்பகுதியின் ஒவ்வொரு சதுர அடியிலும் குண்டுகளைப் பாய்ச்ச வல்லன.

உண்மையில் சொமோசாவின் தேசியப்படை ஆற்றல்வாய்ந்த நவீனமயமான, நன்கு பயிற்றப்பட்ட படையாக இருந்ததோமு பயங்கரமான ஆயுதபலத்தையும் கொண்டிருந்தது. இவை யாவும் இருந்தும் தோற்கடிக்கப்பட்டது.

மக்கள் புரட்சி

ஆயுதப் போராட்டமே நிக்கரகுவா புரட்சியின் உச்ச, உக்கிர வெளிப்பாடாக இருந்தபோதிலும் இப்புரட்சியின் ஏனைய, வெளிப்படையாக அதிகம் புலப்படாத அம்சங்களையும் ஆராய்தல் இன்றியமையாதது. இத்தகைய ஆய்வின் மூலம் சமூக பொருளாதார அமைப்பில் உள்ளடங்கியிருந்த முரண்பாடுகளையும், இந்த முரண்பாடுகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக நிலைபெயர்ந்து இறுதியிலே அவை இணைந்ததன் மூலம் இறுதி நெருக்கடிக்கும், தன்மை மாற்றத்திற்கும் வழி வகுத்தமையைப் புரிந்து கொள்வதனூடாக நிக்கரகுவாவின் புரட்சிகர யுத்தத்தை விளங்கிக் கொள்ளலாம்.

1844-ல் மாக்ஸ் சுட்டிக்காட்டியதைப் போன்று. உண்மையான புரட்சி ஒரே வேளையில் அரசியல் புரட்சியாகவும், சமூகப்புரட்சியாகவும் விளங்குகின்றது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் உள்ளடங்கியிருக்கும் முரண்பாடுகளே புரட்சிக்கு வழிகோலுவதால் அது சமுதாய தன்மை வாய்ந்தது. புரட்சி என்பது சமூக வர்க்கங்களுக்கிடையே நடைபெறும் போட்டியே. இதன் விளைவாக சமூக உறவுகள் பேரோடு மாற்றியமைக்கப்படுகின்றன. எந்தவொரு புரட்சியிலும் அரச அதிகாரமே முக்கிய பிரச்சினையாக இருப்பதனால் புரட்சியானது அரசியல் தன்மை வாய்நதது.

நிக்கரகுவாப் புரட்சியின் தன்மையை நாம் எவ்வாறு வரையறுக்கலாம்? சிலர் நிக்கரகுவாப் புரட்சியை வானளாவப் பாராட்டும் அதே வேளை சன்டினிஸ்டாக்கள் கடைப்பிடித்த தந்திரோபாயங்களையும், உத்திகளையும், அவர்கள் வகுத்த திட்டங்களையும், எழுப்பிய சுலோகங்களையும் அவர்கள் உருவாக்கிய கூட்டமைப்புகளையும் ஒன்றில் புறக்கணிக்கின்றனர் அல்லது செம்மையாகப் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர். இதற்கு நல்ல எடுத்துக்காட்டுக்கள் அமெரிக்காவிலுள்ள சோசலிசத் தொழிலாளர் கட்சியும், இலங்கையிலுள்ள ஜனதா விமுக்தி பெரமுனையும் 1917-ல் இருந்து வெற்றிபெற்ற ஒவ்வொரு புரட்சியும், “நிரந்தர புரட்சி” என்ற அபத்த இடதுசாரிக் கோட்பாட்டின் மலட்டுத் தன்மையை எடுத்துக்காட்டியிருக்கின்றது. இந்த அருமையான கோட்பாட்டினை வரலாறு ஏன் பொருட்படுத்தவில்லை என 1915-ல் லெனின் ஏளனமாகக் கேட்டார். நிக்கரகுவா இதே வினாவை எழுப்பி அதற்கு மீண்டும் விடையளிக்கின்றது. “நிரந்தரப் புரட்சி” என்ற கோட்பாட்டை சன்டினிஸ்டாக்களின் அனுபவம் முற்றுமுழுதாக நிராகரித்த அதேவேளை “கட்டம் கட்டமாகத் தடையற்ற புரட்சி” என்ற லெனினிச கோட்பாட்டின் அடிப்படைகளை அது உறுதிப்படுத்துகின்றது. எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்களின் கைகளில் அரச அதிகார உள்ளதால் அது தூக்கியெறியப்பட வேண்டும்? எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் அரச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்? இந்த வினாக்களுக்கான விடைகளே புரட்சியின் கட்டத்தை நிர்ணயிக்கின்றது.

நிக்குரகுவாவில் அரச அதிகாரம் செல்வம் படைத்த ஒரு சிலர் வசமே இருந்தது. “சிலராட்சி” (ழுடபையசஉhல) என இதனைக் குறிப்பிடலாம். இந்த வரையறை திட்ப நுட்பமாக இல்லாதபோதிலும், இந்த சிலராட்சி என்பது பெரிய அல்லது மேல்தட்டு பூர்சுவாக்களதும் பெரிய நிலக்கிழாரினதும் கூட்டிணைப்பு என பிடல் காஸ்ரோவும், சேகுவேராவும் தமது பேச்சுக்களிலும் உரைகளிலும் குறிப்பிடுகின்றனர். பெரிய நிலவுடைமை அமைப்பே ஆளும் கூட்டின் பொருளாதார பலத்தின் அடிப்படையாகும். முpக பிற்போக்கான இந்த நிலக்கிழார் வர்க்கம் தன் சொந்தக் கால்களிலே நின்று உயிர் வாழ முடியாததனால், ஏகாதிபத்தியத்துடன் இணைந்து வடஅமெரிக்காவின் ஏகபோக மூலதனம் இந்த நாடுகளைச் சூறையாடுவதற்கு வழி வகுக்கின்றது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகமே பெரிய பூர்சுவாக்களின் பிரதான பொருளாதார அடிப்படையாகும். எனவே, அதன் நலவுரிமைகள் ஏகாதிபத்தியத்தினதும், நிலக்கிழாரினதும் நலவுரிமைகளுடன் ஒத்துப்போகக் கூடியவை. “ஏகாதிபத்தியம் - மிகக் கோரமான நிலவுடைமை முறை - பெரிய பூர்சுவாக்கள் - என்பவையே ஒன்றிணைந்து இலத்தீன் அமெரிக்காவின் புதிய வெகுஜனப் புரட்சிகளை நேரடியாக எதிர்க்கும் சக்திகளாகும்” என சேகுவேரா 1961-ல் குறிப்பிட்டார். அக் கட்டுரையின் தலைப்பு “கியூபா@ புறநடையா அல்லது முன்னணியா?”

இவையே எதிரி வர்க்கங்களாய் இருந்தன. மக்களுக்கெதிரான இந்த சக்திகளிடமிருந்தே அரசு அதிகாரம் பலாத்காரமாகப் பறிக்கப்படவேண்டி இருந்தது. நிக்கரகுவாவில் ஒருபுறம் அமெரிக்காவால் ஆட்சியில் அமர்த்தப்பட்டு ஆதரிக்கப்பட்டுவந்த சிலராட்சி, மறுபுறம் பரந்த தேசிய வெகுஜனசக்திகள். இவற்றுக்கிடையே நிலவிய முரண்பாடே நிக்கரகுவா சமுதாயத்தின் பிரதான முரண்பாடாகும். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு மாறிக்கொண்டு இருக்கும் இன்றைய வரலாற்று யுகத்தில் உலகளதவிய அடிப்படையில் மூலதனத்துக்கும், தொழிலாளருக்கும், பூர்சுவாக்களுக்கும், தொழிலாள வர்க்கத்துக்மிடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு என்பதில் ஐயமில்லை. எனினும் இந்த செம்மையான லெனினிசக் கருத்தில் இருந்து ஒவ்வொரு சமுதாயத்திலும் எல்லாக கட்டங்களிலும் பூர்சுவா தொழிலாள முரண்பாடே பிரதான முரண்பாமெனக் கூறுவதற்கில்லை. இவ்வாறு இயந்திரப்பாங்காக வாதிடும் முறை ரொட்சியவாதத்துக்கே உரித்தானது. லேனின் சிந்தனையில் இத்தகைய இயந்திரப்பாங்கான வாதங்களைக் காணமுடியாது. ஏகாதிபத்தியம் பற்றியும், கிழக்கிலே தோன்றியிருந்த விடுதலை இயக்கங்கள் பற்றியும் லெனினின் நுட்பமான எழுத்துக்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

“உன்னைத் தெரிந்துகொள், உனது எதிரியை அறிவாய். ஆயிரம் போர்கள், ஆயிரம் வெற்றிகள்” என சுன்சூ “போர்க்கலை” எனும் நூலில் எழுதினார். தனது இராணுவ எழுத்துக்களில் மாவோ சே துங் இந்த அடிப்படை அம்சத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார். இராணுவ தந்திரோபாயங்களுக்கு பொருத்தமானது பெரும்பாலும் அரசியல் துறைக்கும் பொருந்தும் என லெனினும், கிரம்சியும் எமக்கு நினைவூட்டுகின்றனர். ஏகாதிபத்தியமும் சொமோசா குழுவினரும் எதிரிகளென்றால் எந்த சமூக சக்திகள் “மக்களாக” இருந்தனர்? எல்லா வகையான இயந்திரப்பாங்கான மார்க்சியவாதிகளும் “மக்கள்” என்ற எண்ணக்கரு மாற்றம் அடையாத, நிலையான ஒன்றல்ல என்பதனை பெரும்பாலும் மறந்து விடுகின்றனர். புரட்சிகர நிகழ்வுத் தொடரின் வௌ;வேறு கட்டங்களுக்கு ஏற்ப “மக்கள்” என்ற நிகழ்வுத் தொடரின் வௌ;வேறு கட்டங்களுக்கு ஏற்ப “மக்கள்” என்ற எண்ணக் கருவும் மாற்றம் அடைக்கின்றது என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர். சீனாவிலேற்பட்ட நீண்ட புதிய ஜனநாயகப் புரட்சியின்போது மாவோ செம்மையாக “மக்கள்” என்று சுட்டிய சமூக சக்திகளின் தன்மையைச், சில மாவோவாதிகள் அடிப்படையிலேயே வேறுபட்ட சமூக பொருளாதார அமைப்புக்களுக்குப் பொருத்தப் பார்க்கின்றனர். 2-ம் உலகப் போருக்குப்பின் தொடங்குகின்ற, அடிப்படையிலேயே வேறுபட்ட வரலாற்றுக் காலகட்டத்திற்குரிய சமூக பொருளாதார அமைப்புகள் இவை என்பதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலான முக்கண்ட சமுதாயங்கள் இன்று ஒரே வேளையில் நவ காலனித்துவ அரசுகளாகவும், காலனித்துவத்திற்குப் பிற்பட்ட அரசுகளாகவும் இருக்கின்றன. “காலனித்துவத்திற்குப் பிற்பட்ட” எனும் போது இவை அரசயில் சுதந்திரம் பெற்ற தேசிய அரசுகள் என்பதைச் சுட்டும். அரசு அதிகாரம் உள்@ர்ப் பூர்சுவாக்களின் கைவசமே உள்ளது. “தாய்நாட்டின்” (அதாவது முன்பு காலனித்துவ ஆதிகம் பெற்றிருந்த) பூர்சுவாக்களின் வசமல்ல. எனவே, புரட்சியில் கட்டம், புதிய ஜனநாயக அல்லது தேசிய ஜனநாயக கட்டம் அல்ல. இக்கட்டங்கள் காலணித்துவத்திலிருந்து விடுபடுவதற்கு முன் நிலவிய காலகட்டத்திற்கு உரியவை. “மக்கள்” என்ற மாவோவின் வரையறை இன்றைய ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க சமுதாயங்கள் பலவற்றைப் பொறுத்தவரை மிதமிஞ்சிய விசாலத்தைக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை. மறுபுறம் இந்த சமூக பொருளாதார அமைப்புக்களில் மேலாதிக்கம் பெற்றுள்ள உற்பத்தி முறை அண்டி வாழும், ‘வெளிநோக்கிய’ முதலாளித்துவமாகும். எனவே, இந்த சமுதாயங்கள் நவகாலனித்துவ தன்மை வாய்ந்தவையும் கூட. ஆதலால் முக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணிகள் நிறைவவேற்றப்படவேண்டியமை அத்தியாவசியமாகின்றது. நவ பாவிச, அல்லது அதனை நோக்கிச் செல்லும் போக்கும், ஜனநாயகப் பணிகளுக்கு அதே போன்று முதன்மை அளிக்கின்றது. இன்றைய முக்கண்ட யதார்த்த நிலைக்கு ரஷ்யாவிலே 1917-ம் ஆண்டின் நடுப்பகுதியில் நிலவிய வர்க்க சக்தி வரிசைபற்றிய லெனினின் கூற்றுக்கள் அப்படியே பொருந்துவதாயில்லை. 1917-ம் ஆண்டு ரஷ்யாவையோ, அல்லது இன்றைய மைய முதலாளித்துவ அரசுகளையுயோ விட, இங்கு பொதுமக்கள் என்ற கருதுருவம் சமூக அடிப்படையில் விசாலமாய் இருத்தல் வேண்டும்.

நிக்கரகுவாவைப் பொறுத்தவரை எந்த சமூக சக்திகள் வெகுஜனங்களாகக் கணிக்கக் கூடியவையாக இருந்தன? “மக்கள்” என்ற கருத்துருவம் பின்வருவோரை அடிக்கியிருந்தது@ நகரப்புற தொழிலாள வர்க்கம், விவசாயத் தொழிலாளர் தலைமைதாங்கிய விவசாய நகர்ப்புற சிறு பூர்சுவாக்கள் (குறிப்பாக உயர் நிலைப் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயின்ற மாணவர்கள்), கத்தோலிக்க திருச்சிபையின் இடை, கீழ் மட்டங்களைச் சேர்ந்த முற்போக்கான குருமார், போராட்டத்தின் பிற் கட்டங்களில் ஏகபோக உரிமையற்ற அல்லது மத்திய பூர்சுவாக்கள். உலகப்புரட்சி இயக்கம் 60 ஆண்டுகளாகப் பெற்ற அனுபவத்தினை டீ பிறே செம்மையாகப் பின்வருமாறு தொகுத்துக் கூறினார். “ஒருவர் ரொட்சியவாதக் குழுவில் ஆயட்கால உறுப்பினராகச் சேர்ந்து 50 ஆண்டுகளாகத் தொழிலாள வர்க்க முன்னணி தொழிலாள விவசாய அரசாங்கம் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்யலாம். ஆனால். இத்தகைய மந்திர உச்சாடனங்கள் வரலாற்றின் நடைமுறைப் போக்கைப் பெருமளவில் பாதிப்பதில்லை”.

நிக்கரகுவாப் புரட்சி செல்வம்படைத்த சிலர் ஆட்சியை எதிர்த்த புரட்சி. அது ஜனநாயகப் புரட்சி, அது ஏகாதிபத்தியத்தை எதிர்த்த புரட்சி, அது ஒரு தேசியப் புரட்சி, அது மக்கள் புரட்சி. 1961 லே சே குறிப்பிட்ட “இலத்தீன் அமெரிக்காவின் புதிய வெகுஜன புரட்சிகளில் நிக்கரகுவாப் புரட்சியும் ஒன்றாகும்.”

(வீதித் தாக்குதலுக்கு தயாரி நிலையிலுள்ள குளுடுN கெரில்லாப் போராளி)

“மக்கள் புரட்சி” அல்லது “வெகுஜன புரட்சி” என்ற சொற்றொடர் ரொட்சியவாதிகளுக்கும் ஏனைய குழுவாத மாக்சிய வாதிகளுக்கும் ஒத்துவராது. “மக்கள் யுத்தம்” என்ற சொற்றொடரும் அவர்களுக்குப் பிடிக்காது. எனினும் “மக்கள் புரட்சி” அல்லது “வெகுஜன புரட்சி” என்ற பதத்தின் தோற்றம் மாக்சிய வாதத்தினைச் சார்ந்தது என்பதில் ஐயமில்லை. ஐரோப்பாவிலே உண்மையான மக்கள் புரட்சிக்கு முன்னிபந்தனை அரசின் இராணுவ - பணியாளர் இயந்திரம் நொருக்கப்படுவதே என குகல்மனுக்கு 1871-ல் மாக்ஸ் எழுதிய கடிதத்தினை லெனின் மேற்கோள் காட்டுகிறார். லேனின் எழுதியதை விரிவாக இங்கு மேற்கோள் காட்டுவது பயன்தரும். “மாக்சினுடைய ஆழ்ந்த கூற்று (“உண்மையான மக்கள் புரட்சி ஒவ்வொன்றிற்கும் முன்னிபந்தனை பணியாளர் - இராணுவ அரசு இயந்திரம் அழித்தொழிக்கப்படுதலே”) நன்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. மாக்சிடமிருந்து மக்கள் புரட்சி என்ற கருத்துருவம் எழுதுவது நூதனமாய்த் தோன்றலாம். ரஷ்யாவின் பிளக்கனோவாதிகளும் மென்சிவீக்களும் (ஸ்ரூவைப் பின்தொடரும் இச் சீடர்கள் மாக்சியவாதிகளாகத் தாம் கருதப்பட விரும்புகின்றனர்.) இத்தகைய கூற்று மாக்சினுடைய பேனாவின் தவறுதலால் ஏற்பட்ட ஒன்று எனக் கூறக்கூடும். இவர்கள் மாக்சியவாதத்தை மிக மோசமான தாராள கோட்பாட்டுத் திரிபு நிலைக்குக் கீழிறக்கி விட்டதால் இவர்களுக்குப் பூர்சுவாப் புரட்சிக்கும் தொழிலாள வர்க்கப் புரட்சிக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைத் தவிர வேறொன்றும் இல்லை. இந்த முரண்பாட்டைக்கூட அவர்கள் உயிரற்ற முறையிலேயே விளக்குகின்றனர்.”

மேற்கூறியவற்றைத் தொடர்ந்து லெனின் பின்வரும் குறிப்பினைத் தருகிறார்: “ஐரோப்பாவில் 1871-ல் எந்தவொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் பெரும்பான்மையினராக விளங்கவில்லை. மக்கள் புரட்சி அதாவது பெரும்பான்மையினரை உண்மையில் செயற்படத் தூண்டவல்ல புரட்சி என்றால் தொழிலாள வர்க்கத்தையும் விவசாய வர்க்கத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகவே இருந்திருத்தல் வேண்டும். இந்த இரண்டு வர்க்கங்களுமே அப்பொழுது மக்களாயிருந்தனர்.”

டிபிரே எழுதிய “சிறைச்சாலை எழுத்துக்கள்” (1967க்கும் 70க்கும் இடையில் எழுதிய இந்நுட்பமான கட்டுரைகள் “புரட்சிக்குள் புரட்சி” என்ற நூலைவிட மெச்சத்தக்கவை)என்ற நூலில் அவர் லெனினினுடைய நிலைப்பாட்டுக்குச் சற்று அப்பால் சரியாகச் செல்கின்றார். இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு அரைக் காலனித்துவ நாட்டிலும் “புரட்சியின் எதிர்காலம் அல்லது புரட்சியொன்று ஏற்பட முடியுமா என்ற பிரச்சினை நகரப்புற பெற்றி பூர்சுவாக்களிலும், வெகுஜன சக்திகளிலும், ஏழை விவசாயிகளிலும் தொழிலாள வர்க்கத்திலும், புரட்சிகர புத்தி ஜீவிகளிலும் தங்கியிருக்கிறது.” எனக் குறிப்பிடுகிறார். முத்திய வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் அடிப்படை மாற்றத்தினை விரும்புவது முக்கிய, உற்சாகத்தையூட்டவல்ல ஒரு போக்கு என டிபிறே கருதுகின்றார். அரைக் காலனித்துவ நாட்டிலே முதலாளித்துவம் செயற்படும் முறையில் அது தமக்கு ஒன்றும் வழங்க வல்லதல்ல, தமது வாழ்க்கையை அதனால் மேம்படுத்த முடியாது, என்பதை இவர்கள் உணருகின்றனர் என அவர் கூறுகின்றார். இத்தகைய சூழ்நிலையில் முதலாளித்துவம் குறை விருத்தியினை மேலும் தொடர்ச்சியாக மோசமடையச் செய்யும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், ஆசிரியர்கள் போன்றோர் கடைப்பிடிக்கும் நிலைப்பாடுகள் பற்றி ஆட்சியில் கனிஸ்ட குறிக்கோள்களை ஆதரிக்கின்றனர், என அவர் கூறுகிறார். இக்கூற்று ஒவ்வொரு மூன்றாமுலக சமுதாயத்தைப்பற்றியோ அல்லது எல்லாக் காலகட்டங்களிலும் ஒவ்வொரு இலத்தீன் அமெரிக்க நாட்டுச் சமுதாயத்தைப்பற்றியோ உண்மையாக இல்லாவிடினும் சில சூழ்நிலைகளில் அது உண்மையானதாய், பொருத்தமானதாய் இருக்கின்றது. நிக்கரகுவாவில் ஈற்றிலே உருவாகிய வெகுஜன புரட்சிகர அணியில் தொழிலாளரினதும் விவசாயிகளினதும் முக்கிய நண்பர்களாக நகரப்புற பெற்றி பூர்சுவாக்கள்-மாணவர்கள், தொழில் சார்ந்த வர்க்கத்தினர், புத்திஜீவிகள் - இருந்தனர்.

தேசிய பூர்சுவா வர்க்கம்

நிக்கரகுவாப் புரட்சியின் கடைசிக்கட்டங்களில் பூர்சுவாக் கூறுகள் தேசிய வெகுஜன அணியில் இணைக்கப்பட்டமை மார்க்சிய ஆய்வுக்கு ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறது. இதனைக் கவனத்தில் கொள்ளாது பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளல் சாத்தியமே. கியூபாவின் புரட்சி ஆரம்பத்திலிருந்தே “தொழிலாள வர்க்க சோசலிச தன்மை” வாய்ந்ததென்பதும், கியூபாவின் தலைமை அதனை இனம் கண்டு கொள்ளவில்லை என்று கூறும் மார்க்சியவாதிகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த விளக்கம் கியூபாவின் புரட்சியின் பரிணாம வளர்ச்சியையும், தன்மையையும் செம்மையாக விளங்கிக் கொள்வதற்கு மிகத் தகமை வாய்ந்த கியூபன் புரட்சிகரத் தலைவர்களின் கருத்துகளுக்கு அறவே முரண்பட்டது எனச் சொல்ல வேண்டியதில்லை. பிடல்கஸ்ரோவுக்கு முன்பே அறிவுபூர்வமாக மார்க்சியவாதியாக விளங்கிய சேகுவேரா கியூபாவின் புரட்சிபற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்@ “நிலப்பிரபுத்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான விவசாயப் புரட்சி தனது உள்பரிணாம வளர்ச்சியாலும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களாலும் சோஷலிசப் புரட்சியாக உருமாறியது. இவ்வாறுதான் அது தன்னை அமெரிக்க நாடுகளுக்குப் பிரகடனஞ் செய்கிறது. ஆகவே அது சோஷலிசப் புரட்சி’ இவ்வாறுதான் சேகுவேரா கியூபாவின் புரட்சியின் தன்மை பற்றி உருகுவேயில் 1961-ல் அவர் நிகழ்த்திய ஒரு புகழ்வாய்ந்த உரையில் விளக்கமளித்தார். 1962-ல் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் கியூபாவின் புரட்சியின் மையத் தன்மை, அது விடுதலையை அளித்த தேசியப் புரட்சியிலிருந்து சோஷலிசப் புரட்சியாக மாறியமையே எனக் குறிப்பிடுகின்றார்.

மார்க்சிய லெனினிச வாதிகள், குழுவாதிகளின் குறுகிய நிலைப்பாட்டிலிருந்து மட்டுமல்ல வலது சந்தர்ப்பவாதிகளின் நிலைப்பாட்டிலிருந்தும் தமது நிலைப்பாட்டினை வேறுபடுத்தித் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்த வேண்டும். திரிபுவாதிகள் நிக்கரகுவாவின் வெகுஜன அணியின் பூர்சுவா கூறுகள் இடம்பெற்றிருத்தலைப் பயன்படுத்தித் தமது கேலிக்குரிய கோட்பாடகளை மீண்டும் வலியுறுத்த முனைகின்றனர். “Nதிசிய ஜனநாயகத்தினூடாக முற்போக்குத் தேசிய பூர்சுவாக்களை முதலாளித்துவமல்லாத அபிவிருத்திப் பாதையினூடாகச் சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்லல்” என்று திரிபுவாதம் மீண்டும் பழைய பல்லவியைப் பாடுகின்றது. பூர்சுவாக்களின் ஒருசில பகுதியினருடன் ஒத்துழைத்தல் அல்லது அவர்களுக்கு ‘வால் பிடித்தல் என்ற கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களுக்கு நிக்கரகவாவின் அனுபவம் எந்த வகையிலும் ஆளுதல் அளிப்பதாயில்லை. அதே போன்று ‘நிரந்தர புரட்சிக்’ கோட்பாட்டைப் பல்வேறு மாறுவேடங்களில் கடைப்பிடிப்பவர்களுக்கும் அது ஆறுதல் அளிப்பதாய் இல்லை.

நிக்கரகுவாப் புரட்சியின் சுட்டிப்புத் தன்மையை நாம் இனம் கண்டுகொள்ள வேண்டும். நாம் இதனை வலியுறுத்துவதற்குக் காரணம் உண்டு. ‘தேசிய பூர்சுவா வர்க்கம்’, ‘புரட்சியின் கட்டம்’ ஆகிய தொடர்புற்ற பிரச்சினைகள் குறித்து இடதுசாரி அணிகளின் பலத்த சர்ச்சைகள் நடைபெற்று வந்திருக்கின்றன, வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பொருத்தமான சில பொதுக் கூற்றுகளை இயந்திரப் பாங்கான முறையில் வேறொரு வரலாற்று சூழ்நிலைக்கு மிக எளிமைப்படுத்திப் பொருத்திப் பார்க்கும் தவறு இச்சர்ச்சைகளில் இடம் பெற்றுள்ளது. காலதேச பரிமாணம் என்பதற்கு ஏற்ப தேசிய பூர்சுவா வர்க்கத்தின் பணியும் தொழிற்பாடும் மாறுகின்றதென்பதைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. சுட்டிப்பான ஒரு சமூக பொருளாதார அமைப்பில் தேசிய பூர்சுவா வர்க்கம் ஆற்றும் பங்கு இன்னொரு அமைப்பில் மாறுபடும். அச்சமூக அமைப்பில் அது வகிக்கும் இடத்தினை இது பொறுத்திருக்கும். இந்த வர்க்கத்தினையும் அதன் ஆக்கக் கூறுகளையும் மதிப்பிடுவது என்றால் குறிப்பிட்ட சமூக பொருளாதார அமைப்பினையும் அந்த அமைப்பில் கூட்டாக நிலவும் உற்பத்தி முறைகளையும், இந்த முறைகள் இணைந்துள்ள பாங்கினையும் முதலாளித்துவ உலக பொருளாதார அமைப்பில், இந்த தேசிய சமூக பொருளாதார அமைப்பு வகிக்கும் இடத்தினையும், வடிவத்தினையும் ஆராய்தல் வேண்டும். இத்தகைய ஆய்வு பின்வரும் பிரச்சினைகளையும் உள்ளடக்கும். உற்பத்தி உறவுகளில் மேலாதிக்கம் செலுத்துபவை எவை? கீழ்ப்படிந்த நிலையிலுள்ளவை எவை? அவை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? முதலாளித்துவ உலக பொருளாதார ஏணிப்படி அமைப்பில் குறிப்பிட்ட தேசிய பொருளாதாரம் எந்த ஸ்தாபனத்தை வகிக்கிறது? இந்த பொருளாதார அமைப்பின் வெளித்தொடர்புகள் அண்டிவாழும் நிலையைச் சார்ந்தவையாக இருந்தால் இந்த அண்டி வாழ்தலின் உருவங்கள் வழிவகைகள் என்ன?

மார்க்சிய கோட்பாட்டில் எழக்கூடிய வேறேதேனும் பிரச்சினையைப் போன்று, தேசிய பூர்சுவாபற்றிய பிரச்சினையிலும் இயந்திரப் பாங்கான கருத்துக்களுக்கு எதிரான இயக்கவியல் பாங்கான கருத்துக்களை முன்வைப்பது இன்றியமையாதது. பொருள்முதல்வாத இயக்கவியல் எப்பொழுது சுட்டிப்பானது என அல்தியூசர் எமக்கு நினைவூட்டுகிறார். எந்தவொரு நாட்டிலும் தேசிய பூர்சுவாக்களின் பங்கு, பணி நடத்தை பற்றிக் கருத்துக்களைத் தொகுப்பதற்கு (அவை தற்காலிகமானவையாக இருப்பினும்) சுட்டிப்பான ஆய்வின் அவசியத்தினை இங்கு வற்புறுத்தி வந்திருக்கின்றோம். இந்த வர்க்கத்தின் நடத்தையை அமைப்புச் சார்ந்த காரணிகள் மட்டுமன்று. இணைவு காரணிகளும் நிர்ணயிக்கின்றன என்ற பாடத்தினை வரலாறு எமக்குப் புகட்டுகின்றது. சீனாவிலே நடைபெற்ற நீண்ட புரட்சி நிகழ்வுத் தொடரின் போது சீன தேசிய பூர்சுவா வர்க்கம் வௌ;வேறு கட்டங்களில் மேற்கொண்ட மாறுபட்ட நிலைப்பாடுகளும் இந்த வாக்கத்தினுள் நிலவிய அடுக்கு வேறுபாடுகளும் இதற்குச் சான்று பகரும். தேசிய பூர்சுவா வர்க்கம்பற்றி எவ்வாறு ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு 1925-ல் ஸ்ராலின் ஆற்றிய இரு முக்கிய உரைகள் சிறந்த எடுத்துக் காட்டுகள். இவ்வுரைகளை மாவோவாதிகள்கூடப் புறக்கணிப்புச் செய்து வருவது விந்தையே. “ஒர” நாடுகளில் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ வளர்ச்சியின் வௌ;வேறு மட்டங்களை அவர் கணக்கிலெடுத்து அதற்கேற்ப ‘ஓர’ நாட்டு சமுதாயங்களைத் தொகுக்கின்றார். தேசிய பூர்சுவா வர்க்கத்தின் மாறுபடும் இயல்பினையும் அவ் வர்க்கத்தின் மாறுபடும் இயல்பினையும் அவ் வர்க்கத்தில் நிலவும் அடுக்கு வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டுகிறார். முதுலாளித்துவத்தின் சமனற்ற வளர்ச்சியுடன் இவை தொடர்புற்றிருக்கின்றன. இத்தகைய அணுகுமுறையின் துணையுடன்தான் ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் தேசிய பூர்சுவா வர்க்கம் என்ற ஒன்று உண்டா என்ற அடிப்படைக் கேள்வியினைக் கிளப்பி அதற்கு நாம் விடைகாண முடியும்.

1970களில் கியூபாவின் மார்க்சியவாதிகளின் சிந்தனையில் இத்தகைய ஆய்வுமுறையினைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆய்வு முறை இலத்தீன் அமெரிக்கா பற்றிய நுட்பமான நோக்கினை அவர்களுக்கு அளித்தது. கியூபன் புரட்சியின் 20வது ஆண்டு விழாவின் போது (ஜனவரி 1. 1979) பிடல் காஸ்ரோ ஆற்றிய உரை இதற்கு எடுத்துக்காட்டு. உரையின் இறுதிப் பகுதிகளில் காஸ்ரோ இலத்தீன் அமெரிக்க அரசுகளை மூன்று பெரும் தொகுதிகளாக வகுக்கிறார். நிக்கரகுவா, பரகுவே போன்ற ஒருசிலரால் ஆளப்படும் அரைப் பிரபுத்துவ நாடுகள்@ நவகாலனித்துவ, அண்டிவாழும் முதலாளித்துவ நாடுகள் இவற்றிடையே போலி ஜனநாயக, தாராள ஆட்சிகள் காணப்படும். இறுதியாகச் சிலி போன்ற நவ பாசிச அரசியல் அமைப்புக்கள், கஸ்ரோவின் வகைப்பாடு சமனற்ற வளர்ச்சியினைக் கணக்கில் கொள்கிறது. இச் சமனற்ற வளர்ச்சியினால், நெகிழ்ச்சியற்று இறுகிப்போயிருந்த சமூக பொருளாதார அமைப்புகளைக் கொண்டிருந்த நிக்கரகுவா, பிரேசில், ஆஜென்டீனா, வெனிசுவெல, உருகுவே போன்ற நவீன மயப்படுத்தப்பட்ட அண்டிவாழும் முதலாளித்துவ நாடுகளிலிருந்து வேறுபட்டிருந்தது. அவரது வகைப்பாடு இத்தகைய முதலாளித்துவ நாடுகளை அரசியல் அமைப்புக்கேற்ப (அதாவது பூர்சுவா வர்க்க மேலாதிக்கத்தின் அரசியல் வடிவம்) மேலும் வேறுபடுத்தியது. ஒத்த பொருளாதார அமைப்புகளை இந்நாடுகள் கொண்டிருந்தபோதிலும் இவ்வரசுகளில் சில தாராளப் பாங்கானவை, (மெக்சிகோ, வெனிசுவெலா). வேறு சில நவ பாசிச தன்மை வாய்ந்தவை. பினோசே ஆட்சியின் பாசிசத் தன்மையை ஏற்க மறுக்கும் மார்க்சியவாதிகள் பிடல் இப்பதத்தினைக் கையாண்டதை மனதிற் கொள்ள வேண்டும். நவ காலனித்துவ நாடுகளில் காணப்படும் பாசிசத்தின் சுட்டிப்புத் தன்மை காலனித்துவ நாடுகளில் காணப்படும் பாசிசத்தின் சுட்டிப்புத் தன்மையை ஐரோப்பிய பாசிசத்திலிருந்து வேறுபட்டு நின்றதை பிடல் நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் நவ பாசிசம் என அவர் குறிப்பிட்டார்.

மேலே குறிப்பிட்ட நாடுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதி நாடுகளிலும் தேசிய பூர்சுவா வர்க்கத்தின் அந்தஸ்தும் அது வகிக்கும் பங்கும் வேறுபடுகின்றன. நிக்கரகுவா பூர்சுவா வர்க்கத்தின் வௌ;வேறு கூறுகளின் அரசியல் நடத்தையை, அந்த நாட்டில் நிலவிய “அரை நிலமானிய சிலராட்சி” உடனும், அந்நாட்டின் அரசியல் அதிகாரத்தில் காணப்பட்ட மன்னராட்சியை ஒத்த தன்மையுடனும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இவ் அம்சத்தினைப் புரிந்து கொள்வதன் மூலம் நிக்கரகுவா புரட்சியின் முக்கிய சுட்டிப்புத் தன்மை ஒன்றினை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அதிகார அணி

நிக்கரகுவா புரட்சியைப் புரிந்த கொள்வதென்றால் இரண்டு அம்சங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று தேசிய பூர்சுவா வர்க்கத்தின் பங்கின் சுட்டிப்புத் தன்மை. இரண்டாவது அப்பங்கின் கீழ்ப்படிந்த நிலை. “சொமோசாவிற்கெதிரான பூர்சுவா பகுதியினா” என்ற சொற்றொடரை சன்டினிஸ்டா மக்கள் இராணுவத்தின் தளபதியும், சன்டினிஸ்டாக்களின் தேசிய ஆட்சி சபையின் உறுப்பினருமான கம்பெட்டோ ஒட்டேகா ஒரு விசேட பத்திரிகைப் பேட்டியின் போது குறிப்பிட்டார். இந்த முக்கிய பேட்டியினை அவர் “பிறென்சாலட்டீனா”வின் சிறப்பு நிருபர் ஜோர்ஜ் ரிமோசிக்கு அளித்தார். அப்பேட்டி 1979 செப்ரெம்பர் 2-ம் திகதி வெளியிடப்பட்ட கிறன்மா பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

“அதிகார அணி” என்ற எண்ணக் கருவினை நாம் கையாண்டால்தான் சொமோசாவிற்கு எதிரான பூர்சுவா பகுதியினர் இருந்தமையை விளங்கிக் கொள்வதோடு இதே வேளை அவர்களுடைய பங்கு கீழ்நிலைத் தன்மை வாய்ந்தது என்பதனையும் நாம் உணர முடியும். அதிகார அணி என்ற கருத்துருவம் கிறெம்சியிடமிருந்து பெறப்பட்டு நிக்கோஸ் புலன்சாசால் புடமிடப்பட்டு இன்று புழக்கத்திற்கு வந்துள்ளது. மேலாதிக்கம் பெற்றுள்ள பொருளாதார வர்க்கங்கள் இயல்பாகவும், நேரடியாகவும் பெற்றுள்ள பொருளாதார வர்க்கங்கள் இயல்பாகவும், நேரடியாகவும் அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கம் என்ற கொச்சைப்படுத்தப்பட்ட மார்க்சிய கருத்துடன் இந்த எண்ணக் கரு முரண்படுகின்றது. வரலாற்றிலிருந்து பல்வேறு உதாரணங்களைக் காட்டியும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் முதலாளித்துவம் எடுத்த வளர்ச்சிப் பாதையினைப்பற்றி மார்க்சினதும், எங்கல்சினதும் நுட்பமான ஆய்வினை நன்கு பயன்படுத்தியும், புலன்சாஸ் பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் பெற்றுள்ள வர்க்கம் நேரடியாகவும், தன்னந்தனியாகவும் அரசியல் மேலாதிக்கத்தினைச் செலுத்துவதில்லை என எண்பிக்கிறார். மாறாக முதலாளித்துவத்திற்கு முற்பட்ட வர்க்கங்கள் உட்பட, வேறு வர்க்கங்களின் கூறுகளுடனும் இடைநிலைப்பட்ட மக்களுடனும், சுரண்டப்பட்ட வர்க்கங்களின் கூறுகளுடனும் மிகச் சிக்கலான இடையீடுக@டாகத்தான் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் பெற்றுள்ள வர்க்கம் அரசியல் ஆதிக்கத்தினை செலுத்துகின்றது என்பதை அவர் நிரூபிக்கின்றார். இந்த வர்க்கங்களும், வர்க்கக் கூறுகளும் சிக்கலான. சமனற்ற அமைப்புடைய அதிகார அணியில் கூட்டாக வாழ்கின்றனர். இந்த சமூகக் குழுக்களிடையே மேலாதிக்கம், கீழ்நிலை ஆகிய உறவுகள் காணப்படுகின்றன.

1970களில் நிக்கரகுவ சமுதாயத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்த அதிகார அணி முக்கியமான மாற்றத்திற்குட்பட்டது. இதற்கு முன்னர் மேல் வர்க்கத்தினரும், தேசிய பூர்சுவா வர்க்கத்தினரும் பெரும் பகுதியினரும் கூட சொமோசாவை ஆதரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1970கள் வரை தேசிய பூர்சுவாக்கள் என அழைக்கப்படும் வர்க்கம் சொமோசாவை எதிர்க்கும் நிலைப்பாட்டினை மேற்கொள்ளவில்லை என்பதும் நிலவிவந்தது. பெரிய பூர்சுவாக்களினதும் பெரிய நிலக்கிழாரினதும் மேலாதிக்கமும், இறக்குமதிப் பொருட்களினால் ஏற்பட்ட போட்டியும், அரசு பாதுகாப்பளிக்காமையும், மக்களின் ஏழ்மை நிலையும், மிகப் பழைய அமைப்புக்களால் உட்சந்தை கட்டுபட்டிருந்தமையும், இதன்விளைவாகத் தேசிய கைத்தொழிற் துறை தேக்க நிலையில் இருந்தமையும், சிறிய நடுத்தர கைத்தொழில் வர்த்தக பூர்சுவாக்களின் வளர்ச்சித் துறைகளுக்குத் தடைகளாகவிருந்தன. ஆனால் 1972-ல் ஏற்பட்ட பூகம்பத்தாலும் சொமோசாவின் குடும்பத்தினர் வெளிநாடுகள் அனுப்பிய நிவாரண உதவிகளைப் படுமோசமாகக் கையாடியதாலும் பூர்சுவா அணியினரிடையே உண்மையான பிளவு ஏற்படலாயிற்று. ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் ஆட்சி செய்த சொமோசா குழுவினர் அபிவிருத்தித் துறைகளைத் தடை செய்வது மட்டுமல்ல, இதுகால வரையும் கைத்தொழில் அதிபர்களதும், வணிகர்களதும், போக்குவரத்துச் சொந்தக்காரர்களதும், வங்கியாளரதும், கணிசமான பரப்பு நிலத்தையுடைய நிலக்கிழார்களினதும் வசமிருந்துவந்த துறைகளைக்கூட சொமோசா குழுவினர் ஊடுருவி தமது பொருளாதார ஏகபோக உரிமையை விரிவாக்கம் செய்ய விழைகின்றனர் என்பது புலப்படலாயிற்கு.

அரச அதிகாரத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சொமோசாவின் குடும்பம் 50 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேலான பெறுமதியுடைய பிரமாண்டமான வர்த்தக, விவசாய இராச்சியத்தைக் கட்டியெழுப்பியிருந்தனர். பயிர்ச் செய்கைக்குகந்த நிலத்தில் 70வீதம் இவர்கள் வசமிருந்தது. ஏறக்குறைய 400 கம்பனிகள் இவர்களுக்குச் சொந்தமாயிருந்தன. வடிசாலைகள், நகைக்கடைகள், வாகன வினியோகக் கம்பனிகள், கட்டிட நிர்மாணக் கம்பனிகள், பத்திரிகைகள், வங்கிகள், தொலைக்காட்சி நிலையம், தேசிய விமானச் சேவை, ஒரு முழுத் துறைமுகம் ஆகியவை இவர்களுடைய வணிக முயற்சிகளும் அடங்கியிருந்தன. எனவே, 70 களில் அதிகார அணி படிப்படியாக வெளிநாட்டு ஏகாதிபத்திய மூலதனத்துடன் இணைந்திருந்த சிலராட்சியுடன் ஒன்றித்தது. மேலும், இந்த சிலராட்சி சொமோசா குடும்பத்தினதும், அதன் நெருங்கிய நண்பர்களினதும் பொருளாதார இராச்சியத்துடன் ஒன்றித்துவிட்டது. சமூக வர்க்கம், அரசியல் அதிகாரம், குடும்ப அதிகாரம் ஆகியவை மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருந்தன. நிக்கரகுவ நிலைமையின் இம் முக்கிய சுட்டிப்புத்தன்மை சில பூர்சுவா மட்டங்களின் நடத்தையை நிர்ணயித்தது.

1970 களில் அதிகார அணி சிதைவுறத் தொடங்கியது. இது காறும் சொமோசாவை ஆதரித்துவந்த சமூக மட்டங்கள் அதிகார அணியிலிருந்து விலகலாயின. சொமோசாவிற்கு எதிரான பூர்சுவா எதிர்ப்பொன்று உருவாகத் தொடங்கியது. ஏகாதிபத்தியத்தினாலும், சொமோசா குழுவினராலும் வர்க்கரீதியாகப் பாதிக்கப்பட்ட பூர்சுவா மட்டங்கள் புறநிலையாக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தாராள ஜனநாயக நிலைப்பாட்டினை மேற்கொள்ளத் தொடங்கின. பூகம்ப நிவாரண உதவிகளை சொமோசா குழுவினர் மோசடி செய்து இரத்த தானத்திற்கு அனுப்பப்பட்ட இரத்தத்தைக்கூட அவர்கள் ஏற்றுமதி செய்யத் தொடங்கிய பின்னர் 1974-ல் யூனியன் டெமோக்ரடிக் டி லிபரேசன் (ருனுநுடு) என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. ஏழு அரசியல் கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்க சம்மேளனங்களும் இந்நிறுவனத்தில் அங்கம் வகித்தன. சொமோசாவை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவதே யூடெல்லி;ன் நோக்கமாயிருந்தது. இதற்கு அமெரிக்காவிலுள்ள மிதவாதிகளின் ஒத்துழைப்பைத் திரட்டலாம் என யூடெல் எதிர்பார்த்தது. சமுதாய மாற்றத்திற்கான திட்;டமெதுவும் யூடெல்லிடம் இருக்கவில்லை. சோமோசா அகற்றப்பட்டபின்னர் நிக்கரகுவாவில் பூர்சுவா ஜனநாயகத்தை நிலைநாட்டலாம் என அது எதிர்பார்த்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தொழிற்சங்கமும் மட்டுமே சொமோசாவின் சொத்துக்கள் யாவும் தேசியமயமாக்கப்பட வேண்டும் எனக் கோரின.

இவற்றிலிருந்து, அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலை இணைவில் நிக்கரகுவா சமுதாயத்திலே தேசிய பூர்சுவா வர்க்கமொன்று இருந்ததென்பதை அறியலாம். “லெனினும் காலனித்துவ பிரச்சினையும்” என்ற ஒரு முக்கிய கவர்ச்சிமிக்க கட்டுரையில் (1970 பெப்ரவரி) இதனை சிரேஷ்ட கியூபன் மார்க்சியவாதியான கார்லோஸ் றபேல் றொட்றி கோஸ் நன்கு விளக்குகின்றார். அவர் கூறுவதாவது, “தேசியம் என்ற கருத்துருவம் அதன் சொத்துடமையின் தோற்றுவாயிலிருந்து எழும் ஒன்றல்ல. இந்த சொத்துரிமை பூர்சுவா வர்க்கத்தின் ஒரு பகுதியினரை இட்டுச் சென்றுள்ள அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே அது எழுகிறது. இது புவியியல் ரீதியான கருத்துருவமல்ல. அரசியல் ரீதியான ஒரு கருத்துருவமே”.

ரொட்சியவாதிகள் நிரந்தர புரட்சி என்ற கோஷத்தினைப் பறை சாற்றி, கட்டங்கள் பற்றிய கோட்பாட்டினையும் தேசிய பூர்சுவா வர்க்கத்துடன் அணி சேர்வதையும் நிராகரிக்கின்ற அதே வேளை, ரொட்சியவாதிகள் அல்லாத மார்க்சியவாதிகள் இந்த வர்க்கத்தின் முரண்பட்ட தன்மையை, இரட்டை இயல்பினை, அதன் தடுமாற்றம் நிறைந்த பங்கினை வழமையாகச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் இவ்வாறு கூறுவது மட்டும் போதாது. புரட்சிகர நிகழ்வுத் தொடரின் குறிப்பிட்ட கட்டத்தில் இந்த முரண்பட்ட தன்மைகளில் எது மேலோங்கி இருக்கிறது என்பதனை மார்க்சியவாதிகள் செம்மையாக மதிப்பிட வேண்டும். சன்டினிஸ்டாக்கள் தமது மதிப்பீட்டிற்கு ஏற்ப சொமோசாவைச் சாதாரத பூர்சுவா மட்டத்தினரின் ஆதரவை தம்பக்கம் ஈர்த்து, அப்பொழுது உருவாகிவந்த தேசிய வெகுஜன அணியில் அவர்களுக்கு ஒரு கீழ்நிலையினை வழங்குவதற்கான உத்திகளை கையாண்டனர். இந்த மதிப்பீடும் உத்திகளும் 3-ம் உலக புரட்சி வாதிகளின் கவனத்தை ஈர்க்கவல்லன. ஆனால் தமது நாடுகளிலே நிலவும் வேறுபட்ட நிலமைகளில் இந்த உத்திகளை ஒரு ‘மாதிரியாக அவர்கள் திணிக்கலாகாது.

ஐக்கிய முன்னணிகள், ஐக்கிய இயக்கங்கள்

கட்சி, இராணுவம், ஐக்கிய முன்னணி, சீனப் புரட்சியின் வெற்றிக்கு இந்த மூன்று முக்கிய கூறுகளே வழிகோலின என மாவோ இனங்கண்டார். ஒன்றோடோன்று பின்னிச் செயற்படும் இந்த முக்காரணிகளின் முக்கியத்துவத்தினை வியட்நாம் மார்க்சியவாதிகளும் அழுத்தியுள்ளனர். இம்மூன்றிலும் கட்சியே நிர்ணத் தன்மை வாய்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்தது மக்கள் இராணுவம். “கட்சியே துப்பாக்கிக்கு ஆணையிடுகிறது”. இவ்விரண்டு கூறுகளின் இணைப்பு மூன்றாவது கூறு-ஐக்கிய முன்னணி-தோன்றுவதற்குத் தேவையானது. ஆரம்பத்திலில்லாவிட்டாலும், ஈற்றிலாவது கட்சியும் இராணுவமும் தான் ஐக்கிய முன்னணிக்குள் மார்க்சிய லெனினிச பகுதியினரின் மேலாதிக்கத்திற்கு வழி வகுக்க வல்லது.

கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவ மனப்பான்மையைக் கொண்டதாகவும், சமூக ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாகவும், மூலதனத்தின் தொழிலாளித் துணையாளரின் நலன்களைப் பேணும் ஒரு கட்சியாகவும் மாறிவிட்ட ஒரு நாட்டிலே என்ன நடக்கும்? இவ்வாறு கட்சி முற்றாக மாறிவிடாத ஒரு நாட்டிலும், அது புரட்சிகர வீறை இழந்து இரகசிய நடவடிக்கைகளையும், ஆயுதப் போராட்டங்களையும் மேற்கொள்வதற்கு அமைப்பு ரீதியாகவும், உளப்பாங்காலும் வலுவற்றதாக இருப்பின் என்ன நடக்கும்? கம்யூனிசக்கட்சி ஆயுதப் போராட்டத்தில் இறங்கினாலும் தற்பாதுகாப்பு என்ற மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலேயே இதனை மேற்கொள்ளுமாயின் அல்லது, பேரப் பேச்சுகளிலே தனது பேரம் பேசும் சக்தியைக் கூட்டுவதற்காகவும் பூர்சுவா வர்க்கத்தின் வௌ;வேறு பிரிவுகளுடன் தேர்தல் உடன்படிக்கைகளுக்கு வரும்பொருட்டும் இந்தப் போராட்டத்தை மேற்கொள்வதைத் தவிர பிரதான மூல உபாயமாகக் கையாளாதவிடது;து என்ன நடைபெறும்? இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகள் மூன்றாம் உலக நாடுகளிலே காணப்படும் வகைப்பாட்டான நிலைமைகளே.

ஐக்கிய முன்னணி பற்றிய கோட்பாடுகள் ஆரம்பத்திலே ‘இரட்டை மாதிரி’ அடிப்படையிலே வகுக்கப்பட்டன. அதாவது மூன்றாம் அகிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளும், 2-ம் அகிலத்தின் சமூக ஜனநாயகக் கட்சிகளுமே இந்த ‘மாதிரி’யில் இணைப்புக்களிலும் மாற்று முறைகளிலும் இரு முக்கிய கூறுகளாயிருந்தன. காலனித்துவ நாடுகளைப் பொறுத்தவரை இந்த மாதிரியில் சமூக ஜனநாயகத்திற்குப் பதிலாகப் பூர்சுவா தேசியவாதம் அல்லது, செம்மையாகக் கூறின் புரட்சிகர ஜனநாயகம் இடம் பெற்றது. 2வது கொமின்ரேன் காங்கிரசிலிருந்து இந்த ‘மாதிரி’யே பிறப்பெடுத்தது. அங்குதான் ஏகாதிபத்தியத்திற்கெதிரான ஐக்கியமுன்னணி என்ற கோட்பாடு வகுக்கப்பட்டது. இதே ‘மாதிரி 1921லும், 22லும் நடைபெற்ற 3வது, 4வது கொமின்ரேன் காங்கிரஸ் முன்வைக்கப்பட்டது. அங்கு ஐக்கிய தொழிலாள வர்க்க முன்னணி என்ற கோட்பாடு எடுத்துரைக்கப்பட்டது.

லெலினினால் வகுக்கப்பட்டு ஸ்ராலின் மாவோ ஆகியோரால் விருத்தி செய்யப்பட்ட ஐக்கிய முன்னணிபற்றிய கோட்பாடுகள் செல்லுபடியான தொடங்கு நிலையாக இருப்பினும், இன்றைய எவ்வளவோ மாறுபட்ட மூன்றாம் உலக சூழலில் மாற்றத்திற்கு உட்பட்டே ஆகவேண்டும். இன்று 3-ம் உலக நாடுகளிலே பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குப் பதிலாகச் சமாந்திரமாக இயங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளையே காண்கிறோம். தாமே தொழிலாள வர்க்கத்தின் உண்மையான முன்னணிப்படை எனக் கூறிக்கொண்டு அப்பட்டத்தைத் தமதாக்கிக் கொள்வதற்குத் தமக்குள்ள கடும் போட்டி போட்டுக்கொள்ளும் பல்வேறு புரட்சிக் குழுக்களையும் அடிக்கடி நாம் இங்கு காண்கின்றோம். பிளவுபடாத, உண்மையில் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமையினால் ஐக்கிய முன்னணிப் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமையினால் ஐக்கிய முன்னணிப் பிரச்சினை கூடிய முக்கியத்துவம் பெறுவதுடன் சற்று வேறுபட்ட அர்த்தத்தினையும் பெறுகிறது. ‘ஒர நாடு’களைப் பொறுத்தவரையில் நவகாலனித்துவத்திற்கும், பல்வேறுபட்ட சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கும் எதிராகப் போராட வேண்டியிருக்கும்போது. கட்சி நிர்மாண வேலைகள் முடிவுறும் வரை ஐக்கிய முன்னணியை உருவாக்கும் பணியினைப் பிற்போட முடியாது. இந்தச் சூழ்நிலையில் கட்சியும் முன்னணியும் முரண்பட்ட, ஒன்றை ஒன்று நிராகரிக்கும் கூறுகளாக இருப்பதில்லை. ஐக்கிய முன்னணிப் பணிகளுக்கு முரணாகக் கட்சி நிர்மாண வேலைகளை முன்வைக்க வேண்டியதில்லை. போல்சவீக் பாணியிலான முன்னணித் தொழிலாளவர்க்கக் கட்சி பூரண வடிவமும், தூய அழகும் பெறும்வரை பிற்போக்குவாதம் கைகட்டி வாழாவிருப்பதில்லை. “கட்சியா? முன்னணியா?” என்ற கேள்வி போலியானதொன்று என்பதனை இலத்தீன் அமெரிக்கப்புரட்சிவாதிகள் பல்லாண்டுகள் நிகழ்ந்த கசப்பான, இரத்தம் தோய்ந்த அனுபவங்கள் மூலம் உணர்ந்துள்ளனர். சிறையிலிருந்த டி பிறே பின்வருமாறு எழுதும்பொழுது அது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்றே@ அவர் கூறுவது நூற்றுக்கு நூறு வீதம் சரியானதே. “இன்றைய அரசியல் நிலைமையிலும், பொதுவாக உண்மையான விடுதலையைப் பெறுவதற்கு ஒரு அரைக்காலனித்துவ நாடு போராடும் சூழ்நிலையிலும் எல்லாச் சிந்தனையும், செயற்பாடும் ஐக்கிய முன்னணி என்ற பின்னணியிலிருந்தே எழவேண்டுமேயொழிய, தனிமைப்படுத்தப்பட்ட வர்க்க நிர்ணயக்கட்சிகள் அல்லது சிதறுண்ட சிறு குழுக்கள் என்ற பின்னணியிலிருந்ததல்ல”. இந்த நிலைப்பாடு அவர் “புரட்சிக்குள் புரட்சி” என்ற நூலில் மேற்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து எவ்வளவோ வேறுபடுகின்றன.

“ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சக்திகளின் ஒற்றுமை” என்ற சுலோகம் பிடல் கஸ்ரோவுக்கு, அவரது அறிவுபூர்வமான புரட்சிகர வாழ்வு முழுவதிலும், மிகப் பிடித்தமான ஒன்று. இந்த உண்மையை இலத்தீன் அமெரிக்கப் போராளிகள் உணரவேண்டுமென அவர் ஆணித்தரமாகத் தொடர்ந்து வாதாடி வந்துள்ளார். 1961-ம் ஆண்டு தொடக்கம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இலத்தீன் அமெரிக்கப் புரட்சிவாதிகள் ஒன்றுபட வேண்டுமென அவர் வலியுறுத்தி வந்துள்ளார். பரந்த அமைப்புகளை உருவாக்க முயல வேண்டும். ஆனால், ஆரம்பத்திலாவது புறநிலை, அகநிலை சூழ்நிலைகள் சில இணைப்புகளை மட்டும்தான் சாத்தியமாக்கலாம். சிலநாடுகளிலே மரபுவழி வந்த இடதுசாரிக்கட்சிகளை ஆயுதப் போராட்டக் களத்துக்குள் இழுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், வேறு சில நாடுகளில் (எடுத்துக்காட்டாக அண்மைக்காலம் வரை பினோசேயின் சிலியைக் குறிப்பிடலாம்) கீழிருந்து உருவாகும் ஐக்கிய முன்னணியே சாத்தியமாக இருக்கலாம். பல நாடுகளிலே மரபுவழிவந்த இடதுசாரித் தலைமைக்கு விமர்சனக் கண்கொண்ட ஆதரவினை நல்குவது அனுமதிக்கத்தக்கது. ஆனால், இது பிற் கட்டங்களில்தான்@ ஆரம்பத்தில் இந்த மட்டங்களைப் பொருட்படுத்தக்கூடாது. ஜான்போல் சாத் ஒரு கட்டத்தில் சொன்னார்: என்னைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவது தவிர்க்க முடியாத ஒன்று. அதே வேளை சாத்தியமற்றதும்” என்று. தனது நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியே உலகத்தில் மிக மோசாமானது என்று நினைப்பதுடன் அந்தக் கருத்தினை நிலைநாட்டுவதற்கும், வாதிடுவதற்கும் 3-ம் உலகப் புரட்சிவாதிகள் ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர் என்று, ஓரளவுக்குப் பகிடியாக, பஸ்கோல் அலன்டே கூறுகின்றார். உண்மை என்னவென்றால் பெரும்பாலான புரட்சிவாதிகளுக்கு, கம்யூனிசவாதிகளை ஐக்கிய முன்னணியில் ஒன்றிணைப்பதென்பது தவிர்க்க முடியாததும், அதே வேளை சாத்தியமற்றும் கூட. கம்யூனிசவாதிகளின் பங்குபற்றல் இன்றியமையாதது. ஏனெனில் எந்தவொரு வெற்றிகரமான கிளர்ச்சிக்கும் அவர்களுடைய நகர்ப்புறத் தொழிலாள வர்க்க ஆதரவு அடித்தளம் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். அத்துடன் புரட்சிக்குப் பிற்பட்ட நிர்வாகப் பணிகளையும், சோசலிச நிர்மாணப் பணிகளையும் நிறைவேற்றுவதற்கு அவர்களுடைய கார்டேர்ஸ் இன்றியமையாதவை. இவையெல்லாம் கம்யூனிசக்கட்சிகளுக்கு இருக்கக்கூடிய சர்வதெசத் தொடர்புகளைக் கணக்கிலெடுக்காதவை. இந்தத் தொடர்புகள் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு தடங்கலாக இருக்கலாம். ஆனால், பிற்பட்ட கட்டங்களில் அவை பயன்தரவல்லன.

இலத்தீன் அமெரிக்காவிலும் பொதுவாக 3-ம் உலகிலும் உள்ள போராளிகள் ஒற்றுமையின் முக்கியத்துவத்தினை இடைக்கிடைதான் உணர்ந்தனர். ஆனால், 1960-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்து சில நாடுகளிலே இந்த இலட்சியத்தை அடைவதற்கு, கனதியான வினைத்திட்பமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கொலம்பியா நாட்டைச் சேர்ந்த அருட்திரு. கமிலோ ரோறஸ் புரட்சிகர ஒற்றுமை என்ற குறிக்கோள் மீது தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். அவருடைய சகாவாக ஒரு கால கட்டத்திலிருந்த அருட்திரு.பிரன்சுவா குட்ஆட் (பெல்ஜியத்தின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையைச் சார்ந்தவர்) பின்வருமாறு கூறுகின்றார்@ “திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட குறிக்கோளினை எய்தும் பொருட்டு எல்லா இடதுசாரிக் குழுக்களையும் ஒன்றுபடுத்துவதன் அவசியத்தினை கமிலோ நன்குணர்ந்திருந்தார். பொது நடவடிக்கைகளிலே உடன்பாடு தேவை என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். 1964-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் அவருடைய திட்டம் வடிவம் பெறத் தொடங்கியது. செயற்திட்டம் ஒன்றை வகுப்பதற்கு அவர் மேலும் பலருடன் தொடர்பு கொள்ளலானார்”. மார்ச் 1965-ல் இந்த திட்டம் “மக்களின் ஒற்றுமைக்கான இயக்கத்தின் மேடை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. “முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதிலும் அதற்கு வரவேற்பிருந்தது. நாட்டின் முற்போக்குவாதிகள் எல்லோரையும் ஒன்றுபடுத்துவதற்கு அது சிலகாலம் உதவிற்று. ‘;(“திருச்சபையும் புரட்சியும்” - பிறன்சுவாகுட்ஆட், ஆந்திர ரூசோ)

சுட்டிப்பான அடக்குமுறைச் சட்டங்களை எதிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கோ, இயக்கங்களுக்கோ அல்லது. பூர்சுவா ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கோ இந்த ஐக்கியமுன்னணி வெறுமனே ஒரு கருவியாக இருக்கும் என கமிலே கருதாதது குறிப்பிடத்தக்கது. சோசலிசப் புரட்சியின் ஊடகமாகவே ஐக்கிய முன்னணியை அவர் கருதினார். தான் முன்வைக்கும் செயற்திட்டத்தினைப்பற்றி ஒக்ரோபர் 1965-ல் கமிலோ ஒரு பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார். “சோசலிச அரசு என்ற இலக்கொன்றினைச் சார்ந்து இத்திட்டம் அமைந்துள்ளது என்பதை நாம் தெளிவாக விளக்க வேண்டும்…… கொலம்பியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஒரு சோசலிச அரசை உருவாக்குவதற்கு இத்திட்டம் ஒரு மேடை”. நகல் செயல் திட்டத்தினை ஆராய்ந்து அதனை அங்கீகரிப்பதற்குச் சகல இடதுசாரி நிறுவனங்களினதும் தேசயி மகாநாடு ஒன்றினைக் கமிலோ கட்ட விரும்பினார். ஆனால் பழைய அதிகாரித்துவ மனப்பான்மை கொண்ட கட்சி தலைமைகள் குறிப்பாகக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, இதனை எதிர்த்தது. தனது முயற்சிகளுக்கு எதிராகச் சதி செய்யப்பட்ட போதிலும் கமிலோ தொடர்ந்தும் தனது இலட்சியத்தினைக் கடைப்பிடித்தார். கெரில்லாக்களுடன் சேர்வதெனத் தான் எடுத்த முடிவை விளக்கி “மலையிலிருந்து ஒரு செய்தி” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் அவர் வருமாறு கூறுகின்றார். “சமய காலங்காலமாக இருந்துவந்த கட்சி வேறுபாடுகளின்றி வேறு துறை, இயக்கம் அல்லது கட்சியின் புரட்சிகர கூறுகளை எள்ளளவும் எதிர்க்காது மக்களின் ஒற்றுமை உணர்வினை மதித்தல் வேண்டும்.” இந்தச் செய்தியில் ஒற்றுமைக் கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்துவது தெட்டத் தெளிவு.

இது எழுதப்பட்டது ஜனவரி 1966-ல். ஒரு மாதம் கடந்ததும், பெப்ரவரி 16-ம் திகதி மலைப்பகுதிகளிலே நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் அருட்திரு கமிலோ ரோறஸ் கொல்லப்பட்டார். 1960களில் அவரது உருவப்படமும், குவேராவின் உருவப்படமும் சிலுவையில் அறைந்த கிறிஸ்துநாதரின் சிலைக்கு அக்கம் பக்கமாக “திறந்த குருதிக்குழாய் கண்டத்தில்” பல ஏழைகளின் வீட்டுச் சுவர்களிலே காணப்பட்டன. ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டுமென கமிலோ வேண்டுகோள் விடுத்த அதே காலகட்டத்தில், தலைசிறந்த புத்திஜீவியும் கெரில்லாவுமான லூயிடேலா, புயன்டே உகேடா “ஏகாதிபத்தியத்திற்கும் ஒருசில செல்வந்தர்களின் ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபட்ட முன்னணி, ஆயுதப் போராட்டத்திலும் ஆயுதப் போராட்டத்திற்காகவும், உருவாக்கப்பட வேண்டும்.” என பேருவில் அறைகூவல் விடுத்தார். ஏப்ரல் 1967-ல் குவேராவின் நன்காகுவாசு முகாமிலிருந்து பொலிவிய மக்கள் “ஒன்றுபட்டு அரசியல் பேதம் எதுவுமின்றி உறுதியான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்” என பொலிவிய மக்களுக்கு அவசர அவசரமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நிக்கரகுவா அனுபவத்திற்குக் கூடிய பொருத்தமுடைய ஒரு விடயம்பற்றி, அதாவது புரட்சிகர இடதுசாரிகளின் ஒற்றுமை பற்றி இது சற்றுக் குறுகிய விடயமாகினும் முக்கியத்துவம் வாய்ந்ததே. கார்லோஸ் மரிகெல்லா எழுதும் போது பிரேசிலின் புரட்சிகர இயக்கத்தின் குறைபாடுகளைப் பின்வருமாறு இனங்கண்டார். “பிறேசிலின் புரட்சிகர இயக்கத்தின் முக்கிய குறைபாடு புரட்சிகர நிறுவனங்களின் ஒற்றுமையின்மையும், குறிக்கோள்கள், மனப்பாங்குகள் குறித்த அவர்களிடையெ நிலவும் உடன்பாடின்மையுமே. இந்த உடன்பாடின்மைக்கு மத்தியில் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்கு உக்கிர போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நிறுவனமும், வெளிப்படையாக இல்லாவிட்டாலும், புரட்சிகரத் தலைமைக்கு உரிமை கோருகின்றது. இதனால் எமது விரோதிக்கு எதிராகப் போராடுவதற்குத் தயாராக இருப்பவர்களிடையே பொதுமையைக் காண்பது கடினமாய் இருக்கிறது.”

ஒற்றுமையின்-புரட்சிகர இயக்கத்தின் ஒற்றுமை. இடதுசாரி நிறுவனங்களின் ஒற்றுமை, ஏகாதிபத்தியத்திற்கெதிரான ஜனநாயக மட்டங்களின் பரந்துபட்ட ஒற்றுமை- முக்கியத்துவத்தினைக் குறைத்து மதிப்பிடுவதற்குக் காரணம் மரபுவழி வந்த இடதுசாரிகளின் பாராளுமன்ற நாட்ட மடைமையும், அதனால் தீவிரமயப்படுத்தப்பட்ட குட்டி பூர்சுவாக்களின் அணிகளிலே எழும் குழுவாதமும் இராணுவ வாதமுமே ஆகும். இலத்தீன் அமெரிக்காவிலும், 3-ம் உலகிலே பெரும்பகுதியிலும், இதுவே நவ பாசிச அல்லது அரைப் பாசிச ஆட்சிகள் வேரூன்றுவதற்கு வழிகோலியுள்ளது.

அப்படியாயின் நிக்கரகுவாவின் நிலை என்ன? புரட்சி வெற்றி பெறுவதற்கு புரட்சிகர சக்திகளின் ஒற்றுமை என்ன பங்கினை வகித்தது? இது குறித்து எந்தவித மழுப்பலிற்கோ தவறான கணிப்பீட்டிற்கோ இடமில்லை. அது அதி முக்கியத்துவம் வாய்ந்த காரணியாக இருந்தது. ஹவானாவிற்கு விஜயம் செய்தபோது நிக்கரகுவாவின் பண்பாட்டு அமைச்சராயிருக்கும் அருட்திரு ஏணஸ்டோ காடினல் நிக்கரகுவா புரட்சி ஈட்டிய வெற்றியின் அனுபவங்களையும், அது புகட்டும் பாடங்களையும் பற்றி விளக்கினார். தெட்டத் தெளிவாக எதுவித ஐயத்திற்கும் இடமின்றி அவர் கூறுகின்றார். “வெற்றியீட்டுவதற்கு ஒற்றுமை இன்றியமையாதது என்பதே முதல் பாடம். வேறு நாடுகளில் இடதுசாரிகள் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்கையில் நாம் மேலும் மேலும் ஒற்றுமைப்பட்டோம். அந்த பூரண ஒற்றுமையே சொமோசா ஆட்சியினருக்குச் சாவுமணி அடித்தது. ஒற்றுமை இருந்திருக்காவிடின் எமது போராட்டம் மேலும் மேலும் நீண்டுகொண்டே சென்றிருக்கும். தமது பூரண விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஏனைய மக்களுக்குப் பயன்படக்கூடிய தலையான அனுபவம் இதுவே என நான் நினைக்கின்றேன்.” (கிறன்மா-ஒக்ரோபர், 21, 1979)

இந்தப் பாடத்தினை இலத்தீன் அமெரிக்க இடதுசாரிகள் உள்வாங்கிக் கொண்டனர். காலப்போக்கில் இந்த நாடுகளிலே உள்ள கம்ய+னிஸ்ட் கட்சிகள் ஓரளவுக்குப் புத்துயிர்ப்புப் பெற்று மத்திய அமெரிக்காவிலாவது ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதனை உணரத் தலைப்பட்டுள்ளனர். இந்த உணர்வு, அவர்கள் தமது சிந்தனை முறையை மாற்றுவதற்கும், புரட்சிகரச் சட்ட விரோதத்தினால் எழும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும், தமது தொழிற்பாட்டின் பாணியினைச் சீராக்குவதற்கும், தமது அமைப்பை மாற்றியமைப்பதற்கும், (“தலைமறைவுமயப்படுத்தல்”) ஏதுவாய் இருந்தது. இந்தப் புத்துயிர்ப்பிற்குப் புறநிலைக் காரணிகள் உதவிய பொழுதிலும், அகநிலைக் காரணி இருந்திருக்காவிடின் அது சாத்தியமாகியிருக்காது. இந்த அகநிலைக் காரணி உலக கம்யூனிச இயக்கத்திற்குள்ளே ஓடிய புரட்சிகர மார்க்சிய போக்கினை அதாவது, பிடல்வாத, குவேராவாத, வியட்நாமிய கம்யூனிஸ்ட்டுக்களாகிய வான்கியாப்டுவான் ஆகியோரின் சிந்தனையைச் சந்தித்தமையே. இந்தச் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1975-ல் வியட்நாமில் ஈட்டப்பட்ட வெற்றியும், நிக்கரகுவா புரட்சியில் ஈட்டப்பட்ட வெற்றியும் உலக கம்யூனிச இயக்கத்தின் மீது இவ்விரு கட்சிகளின் செல்வாக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

இதே போன்று புரட்சிகரக் குழுக்களும் - இவை பெரும்பாலும் கம்யூனிச கட்சிகளிலிருந்து பிளவுண்டு சென்ற போராளித்துவம் மிக்க குழுக்கள் - 1960 களில் நிலவிய குழுவாத தனிமை நிலையினை அகற்றி கம்யூனிச கட்சிகளையும் சேர்த்து ஐக்கிய முன்னணிகளையும் உருவாக்கியுள்ளன.

ஆயுதப் போராட்டத்தின் மீது பற்றீடுபாடு கொண்ட இடது சாரி நிறுவனங்களுக்கிடையே உருவாகிய இத்தகைய புரட்சிகர ஐக்கிய முன்னணிகள் செயற்திட்டம் பற்றிய பெரும்பாலான உடன்பாட்டினையும், பொது வேலைத் திட்டத்தினையும் மேற்கொள்வதில் வெற்றி கண்டுள்ளனர். இணைப்புக்குழுக்கள் என்ற இடைப்பட்ட கட்டத்திலிருந்து சுயாட்சி வாய்ந்த நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் ஆயுத நடவடிக்கைகள் கட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில், இப்பொழுது எல்சல்வடோரிலும் கௌதமாலாவிலும் இடதுசாரி இயக்கத்தில் உள்ள இந்த இருபெரும் போக்குகளின் இணைப்பின் மூலம் தனித் தலைமை உருவாவதை நாம் காண்கிறோம். இந்த தனித்தலைமைக்கு எல்லா நிறுவனங்களும் ஆட்களையும், பொருட்களையும், நிதியையும் கொடுத்துதவுகின்றன. இத்தகைய இணைப்பும் ஒருமையும் உருவாவதற்கு கியூபாவின் தலைமை வகித்த பங்கு பரமரகசியம்.

புரட்சிகரக் கட்டம் முழுவதற்கும் பொருத்தமான, செல்லுபடியான ஐக்கிய முன்னணிக்கான ஒரு தனி ‘மாதிரி’ இல்லை என்பதை நிக்கரகுவா எமக்குக் கற்றுக்கொடுக்கின்றது. வெகுஜன ஒற்றுமை என்பது ஒரு உயிரினம்: புரட்சிகர நிகழ்வுத் தொடர் பல்வேறு மட்டங்களிலும், சமயங்களிலும் கட்டவிழும்போது இந்த உயிரினம் வளர்ந்து மாற்றம் அடைகின்றது. ஐக்கிய முன்னணி என்பது வளர்ச்சி அடையாத நிலையான ஒன்றல்ல. அதே வேளை அது ஒற்றைப் பெறுமானத்தைக் கொண்டதுமல்ல. வெகுஜன ஒற்றுமை என்பது பல்வேறு பரிமாணங்களையும், மட்டங்களையும் கொண்டிருக்கின்ற தொகுதி என்பதனை நிக்கரகுவா எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அணிகள் இணைப்புக்கள், ஐக்கிய முன்னணிகள் ஆகியவற்றை இது உள்ளடக்கின்றது. (இவற்றுக்கிடையிலான வேறுபாடுகளைப் புலன்சாஸ் நேர்த்தியாக வரையறுத்துள்ளார்). அது பரிணாம வளர்ச்சி அடைந்த வண்ணமே இருக்கின்றது.

ஒற்றுமை என்பதனை கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட செம்பாங்கான ஐக்கிய முன்னணி மாதிரிகளாகவோ, அம் மாதிரிகளை இயந்திரப் பாங்காக ஒன்றுக்கொன்று எதிரிடையாக நிலைநிறுத்துவதாகவோ நாம் கொள்ளலாகாது. ஒற்றுமை என்பது சிக்கல் நிறைந்த உயிரினம்@ அது வளர்ந்த வண்ணமே இருக்கின்றது. புரட்சிகர நிகழ்வுத்தொடரின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்திற்கேற்ப அதன் வளர்ச்சி பரந்துபட்டதாக இருக்கலாம். சிலவேளைகளில் குறுகலாம் கொமின்ரேனில் லெனின் முன்வைத்த கருத்துக்கள், கிரம்சியுடைய சிறைச்சாலை எழுத்துக்கள், டொக்லியரியின் பாசிசம் பற்றிய சொற்பொழிவுகள், 1935-ல் நடைபெற்ற 7வது கொமின்ரேன் காங்கிரசில் டிமிற்றோவ் ஆற்றிய சொற்பொழிவு ஆகியவை தலைசிறந்தவை. அவற்றிலிருந்து பெறப்படக்கூடிய ஐக்கிய முன்னணி ‘மாதிரிகளுக்கு’ அவற்றை மெச்சுவதைவிட அவை முன்வைக்கும் சுலோகங்களில் சுட்டிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒற்றுமையின் அளவும், வடிவமும் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமூக நிலையில் நிலவும் வர்க்க உறவுகள், முரண்பாடுகள் வர்க்கங்களினதும் வர்க்க மட்டங்களினதும் அறிவுணர்வு மட்டம், தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் ஆகியவற்றின் சுட்டிப்பான ஆய்வுடன் தொடர்புபடுத்தப்பட்டிருத்தலை உண்மையில் நாம் மெச்ச வேண்டும்.

1979 முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு என கம்பட்டோ ஒட்டேகா நாம் முன்னர் குறிப்பிட்ட பேட்டியில் கூறுகின்றார். அந்த ஆண்டில் சன்டினிஸ்டாக்களுக்கிடையே காணப்பட்ட பல்வேறு போக்குகள் ஒரு தனி அரசியல் இராணுவ செயற்திட்டத்தைச் சார்ந்து தமக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தின. அவை நெகிழ்ச்சியான நெறிக்கோடுகளைக் கடைப்பிடித்ததினால் முன்பைவிட பரந்துபட்ட கூட்டுக்களை உருவாக்குவதற்கும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களை மேற்கொள்ளுவதற்கும் ஏதுவாய் இருந்தது. இந்த மூன்று காரணிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றுக் கொன்று முட்டுக்கொடுப்பவை. சன்டினிஸ்டாக்களுக்கிடையே காணப்பட்ட வேறுபாடுகள் இராணுவ தந்திரோபாயங்கள் பற்றி மட்டும் எழுந்தவையல்ல. அந்தக் குறிப்பிட்ட புரட்சிக் காலகட்டத்தில் பல்வேறு மட்டங்களதும் வர்க்கங்களதும் பங்கினைப்பற்றியெழுந்த கருத்து வேறுபாடுகளும் நிலவின. வேறுவிதமாகக் கூறின், சமூக அரசியல் இணைப்புக்கள் பற்றிய பிரச்சினை உள் வாதங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாய் இருந்தன. இந்தச் சர்ச்சைகள் 1975-ல் பிளவுக்கு வழிகோலின. அரசியல் -சமூக இணைப்புகள், பல்வேறு வர்க்க சக்திகளின் பங்கு என்ற பிரச்சினைகளோடு இராணுவ தந்திரோபாய பிரச்சினைகள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தன. தோமஸ் போஜ்ஜஸ் உடைய “நீண்ட மக்கள் யுத்தம்” என்ற போக்கு ஆதரித்த தந்திரோபாயம் (இதுவே சன்டினிஸ்டாக்களின் ஆரம்ப தந்திரோபாயம்) கிராமப்புறங்களிலும், மலைப் பகுதிகளிலும் கெரில்லா யுத்தத்தினை அழுத்தியது. இது தவிர்க்க முடியாமல் விவசாயிகள் மத்தியல் அரசியல் வேலைகளை மேற்கொள்வதன் அவசியத்தினை வலியுறுத்திற்று. 70களின் முற்பகுதியில் சந்தியாகோ பல்கலைக்கழகத்தின் பரபரப்பும், உற்சாகமும் நிறைந்த சூழ்நிலையிலிருந்து திரும்பிய ஜெயிம் விலோக் “தொழிலாள வர்க்க போக்கிற்கு” தலைமை தாங்கினார். இந்தப் போக்கு நகரப்புற, கிராமப்புற தொழிலாள வர்க்கத்தினையும், கரையோரப் பகுதியிலுள்ள நகரப்புற, புறநகரப் பகுதிகளில் வாழும் “ஓர மயப்படுத்தப்பட்ட சமூக மட்டங்களையும் ஒன்று திரட்டும் அவசியத்தினை வற்புறுத்திற்று. “மூன்றாவது போக்கு” புரட்சிகர அரசியல் மாணவனுக்கு மிகவும் கவர்ச்சி வாய்ந்தது. ‘மிதவாத’ அரசியல் திட்டத்துடன் ஆயுதக் கிளர்ச்சியை அதாவது மிகத் தீவிர முன்னணிப் போராட்ட வடிவம் - அதிகம் வற்புறுத்திய இராணுவ தந்திரோபாயத்துடன் அவர்கள் இணைத்தனர். எனவே, இவர்கள் கிளர்ச்சியாளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்த மூன்றாம் போக்கின் தலைமையில் ஒட்டேகா சகோதரரும், பயோடா ஆர்சேயும் முன்னணி வகுத்தனர். 1972லிருந்து அதிகார அணியில் ஏற்படத் தொடங்கிய சிதைவினை இந்தப் போக்கினர் செம்மையாக உணர்ந்தனர். மத்திய வர்க்கத்தினருக்கும், செல்வந்தருக்குமிடையே ஏற்பட்டிருந்த பிளவினை இவர்கள் உணர்ந்து, இடைப்பட்ட மட்டத்தினரையும் சொமோசாவிற்கு எதிரான பூர்சுவா பகுதியினரையும் வென்றெடுக்கும் அவசியத்தினையும் இவர்கள் உணர்ந்திருந்தனர். இந்த குறிக்கோளை அடையும்பொருட்டு மிதவாத, சமூகஜனநாயகப் பாங்கான குறைந்தபட்ச செயற்திட்ட மொன்றினை வகுத்தனர். மத்திய வர்க்க பூர்சுவா எதிர்புக் குழுக்களுடன் இவர்கள் நிறுவனரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஒற்றுமை, பலத்தினை வெறுமனே கூட்டுவதில்லை. அதனை அது பெருக்குகின்றது. ஒவ்வொரு குழுவினரதும் பலமும் ஏனையவற்றின் பலத்தினை நிறைவுபடுத்துவதோடு அதனை வலியுத்துகிறது. ஒரு குழுவின் பலம் இன்னொன்றின் பலவீனத்தைச் சரி செய்கிறது. மூன்றாம் போக்கினரின் கிளர்ச்சித் தந்திரோபாயம், நகர்ப்புற ஏழைகளில் பங்கினை வற்புறுத்திய தொழிலாள வர்க்க போக்கினரின் நிலைப்பாடுகளுடன் இணையக்கூடியதாயிருந்தது. இந்த நகர்ப்புற ஏழைகள் தான் ஆயுதக் கிளர்ச்சியின் தாக்கத்திற்கு முகம்கொடுக்கவேண்டி நேர்ந்தது. படைகளைக் கட்டியெழுப்புவதற்கும், பின்வாங்கும்போது தங்குவதற்கும் கிராமப் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாய் இருந்தன. இங்குதான் விவசாயிகள் பற்றிய போர்ஜசின் நுட்பமான உணர்வு மிக முக்கியத்துவம் பெறுகின்றது. 1975 க்குப் பின் மூன்றாம் போக்கினர். தமது அணிகளிலே மார்க்சியவாதிகளல்லாத தீவிரவாத கிறிஸ்தவர்கள் சேரலாம் என முடிவு செய்தனர். அத்துடன் திருச்சபையின் முக்கியதுவம் வாய்ந்த மட்டத்தவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் அது முயற்சிகளை மேற்கொண்டது. 60களின் இறுதியிலிருந்து சொமோகளுக்காக, திருச்சபை எதிர்த்து வந்திருந்தது. இந்த முடிவுகாலும், முயற்சிகளாலும் 1977 பிற்பகுதியிலிருந்து சன்டினிஸ்டாக்கள் தந்திரோபாய அடிப்படையில் பரந்துபட்ட கூட்டிணைப்புக்களை உருவாக்க ஏதுவாக இருந்தது. வெகுஜனங்களை ஒன்றுதிரட்டி அமைப்பதில் தொழிலாளவர்க்கப் போக்கினரின் கிளர்ச்சித் தந்திரோபயத்தின் வெற்றியினைச் சாத்தியமாக்கியது. மேலும் இந்த வெகுஜன நிறுவனங்களும், மூன்றாம் போக்கினரின் துணிச்சல் மிக்க தாக்குதல்களும் தேசிய வெகுஜன அமைப்பில் சன்டினிஸ்டாக்கள் மேலாதிக்கத்தினைக் கைப்பற்றுவதற்கும் அதனைத் தொடர்ந்து தம்வசம் வைத்திருபதற்கும் ஏதுவாய் இருந்தன. மூன்றாம் போக்கினரின் “மிதவாத பிம்பம் சர்வதேச சமூக ஜனநாயகத்தினதும், அண்மை அரசிகளின் ஆதரவினையும் சன்டினிஸ்டாக்களுக்குப் பெற்றுக்கொடுக்க உதவியது. இதன் விளைவாக சொமோசா தனிமைப்படுத்தப்பட்டார். இறுதியாக, தொமஸ் போஜ்ஜே 20 ஆண்டுகளாக சன்டினிஸ்ட முன்னணியின் முதசொத்தின் களஞ்சியமாக இருந்து வந்தமையும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மூன்று சன்டினிஸ்ட போக்குகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமடைந்தமை புரட்சிகரத் தொழிற்பகுப்பையும், தந்திரோபாய இணைப்பினையும் உருவாக்கின. ஒருமுகப்பட்ட இராணுவ அதிகார பீடம், இராணுவ தந்திரோபாயம், அரசியல் செயற்திட்டம் ஆகியவற்றில் தாம் உடன்பாடு கண்டுவிட்டதாக மார்ச் 1979-ல் மூன்று சன்டின்ஸ்ட் போக்குகளும் பகிரங்கமாக அறிவித்தனர்.

‘லங்கா கார்டியனுக்கு’ பேராசிரியர் ஜேம்ஸ் பெற்றால் அளித்துள்ள பேட்டியில். இடதுசாரி ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அவர் பின்வருமாறு தொகுத்துக் கூறுகின்றார். “போராளிகளைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து தலைகளைக் கொய்யும்போது, இடதுசாரிக் குழுவினரிடையே பாசிவாதிகள் வேறுபாடு காண்பதில்லை. ஒற்றுமை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கணிசமான இடதுசாரிச் சக்திகள் இருக்கும்போது ஒற்றுமை இன்றியமையாதது எனலாம். இடதுசாரிக் குழுக்களிடையே போட்டி நிலவுவதை வெகுஜனங்கள் காணும்போது கோட்பாட்டுரீதியான வேற்றுமைகள்பற்றி வெகுஜனங்களுக்கு அக்கறையில்லை- இடதுசாரிகளை நம்பத்தகுந்த மாற்று ஆட்சியாளராக வெகு ஜனங்கள் கருதுவதில்லை. வெகுஜன இயக்கத்தோடு முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புகளை இடதுசாரி நிறுவனங்கள் கொண்டிருக்கும் போது பொதுப் போராட்டத்திற்கு நடைமுறை ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என அவர்களை அடிமட்டத்தினர் வற்புறுத்துவர். தனது ஆக்க கூறுகளின் கூட்டுத்தொகையைவிட முழுமை மேலானது என்பது பழமொழி. இந்தப் பாடம் இப்பொழுது துயரத்தோடு கற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அமெரிக்கப் புரட்சிகளின் பிரதான ஆக்கபூர்வமான படிப்பினைகளுள் இதுவும் ஒன்று. ஒற்றுமையைக் குலைப்பவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு மத்திய அமெரிக்காவிலே ஏற்படும் பெரும் இழுக்கு எனது மனதில் பதிந்துள்ளது. தனிவழியில் சென்ற குழுக்கள் இறுதியில் தனிமைப்படுத்தப்பட்டுக் லைக்கப்பட்டுள்ளன.

வெகுஜன ஒற்றுமைக்குள் புரட்சிகர மேலாதிக்கம்:

செப்ரெம்பர் 1977-ல் ‘பன்னிருவர் குழு’ என்ற ஒன்று உருவாக்கப்பட்டமை நிக்கரகுவா புரட்சித்தொடரின் முக்கிய மைல் கல் எனலாம். இக்குழு சன்டினிஸ்டாக்களின் ஆயுதப் போராட்டத்தினை ஆதரிக்குமாறு நிக்கரகுவா மக்களை வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டது. நன்கு மதிக்கப்பட்ட குருமாரும், புத்தி ஜீவிகளும், தாராள வணிகர்களும் - இவர்களில் பலர் அரசியல் நிறுவனங்களின் பிரதினிகளாய் இருந்தனர் - இக்குழுவில் அடங்கியிருந்தனர். ஒக்ரோபர் 1977-ல் சொமோசா 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இராணுவச் சட்டத்தினையும், பத்திரிகைத் தணிக்கையினையும் நீக்கினார். அதே ஆண்டின் முற்பகுதியில் அமெரிக்க காங்கிரஸ் இவரது ஆட்சிக்குத் தொடர்ந்தும் இராணுவ உதவிகளை அளிப்பதென்று பலத்த விவாதத்தின் பின்னர் தீர்மானித்தது. சொமோசாவின் நடவடிக்கை காங்கிரஸ் விவாதத்தின் எதிரொலி எனலாம்.

1977 பிற்பகுதியில் பல்வேறு மாகாண நகரங்களில் நிலைகொண்டிருந்த தேசியப் படையினரின் காவல் நிலையங்கள் மீது சன்டினிஸ்டாக்கள் துணிகரமான தாக்குதல்களை மேற்கொண்டனர். ஹம்பட்டோ ஒட்டேகாவின் கருத்துப்படி, சன்டினிஸ்டாக்கள் தற்காப்பு நிலையிருந்து தாக்குதல் நிலைக்கு மாறிவிட்டனர் என்பதனை இத் தாக்குதல்கள் குறிக்கின்றன. இதே காலகட்டத்தில்தான் சன்டினிஸ்டாக்கள் பரந்துபட்ட தந்திரோபாய இணைப்புக்களை உருவாக்கினர். அமெரிக்க ஏகாதிபத்தியம் சொமோசாவிற்கு எதிரான பூர்சுவா மட்டங்களைத் தனது பக்கத்திற்கு வென்றெடுக்க மேற்கொண்டிருந்த ராஜதந்திர, அரசியல் தந்திரோபாயங்களை முறியடிக்கும் நோக்குடனும் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. சிதைவுற்றுக்கொண்டிருந்த சொமோசா பரம்பரைக்கும் (இது பிரயோசனமற்றதாய் இருந்தது மட்டுமல்ல, அமெரிக்காவிற்குப் பெரும் பாறாங்கல்லாயும் இருந்தது). சன்டினிஸ்டாக்களு;ககும் மாற்று வழியாக இந்த பூர்சுவா மட்டங்களுக்கு முண்டு கொடுப்பது அமெரிக்காவின் நோக்கமாயிருந்தது. 2-ம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா கடைப்பிடித்த வெளிநாட்டுக் கொள்கையில் காணப்பட்ட ஒரு சிந்தனை இழைக்கு அமைவாக இருந்தன இம்முயற்சிகள். இச்சிந்தனை இழைபற்றி சேகுவேரா பெப்ரவரி 1962-ல் உலக மார்க்சிய றிவியூவில் வெளிவந்த அவரது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். கெனடி திட்டம் பற்றியும், புனரா டெல் எஸ்ரே மகாநாடுபற்றியும் அவர் ஐந்தொகை தயாரித்த போது வருமாறு கூறினார்: “இலத்தீன் அமெரிக்க மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுரண்டுவதற்குப் பயன்படுத்தும் இயந்திர அமைப்பிற்குச் சிறு மாற்றங்கள் செய்வதே இம்முயற்சிகளின் நோக்கமாகும். நிலமானியவாதிகளில் மட்டுமன்றி உள்@ர் பூர்சுவாக்களின் சில மட்டத்தினரிலும் தங்கியிருக்கும் பொருட்டு இம் முயற்சிகள் மெற்கொள்ளப்படுகின்றன.” முதலாளித்துவம் நவீனத்தை எய்துவதற்கான இம்முயற்சிகள் பூர்சுவா ஜனநாயகத்தைப் புகுத்தி. சீர்திருத்தங்களைச் செய்வதற்கு விழைந்தன. இதன் மூலம் ஆட்சியாளரின் சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தி அதனூடாக வளர்ந்துவரும் நெருக்கடியினை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம் எனக் கருதப்பட்டது.

இந்தச் சீர்திருத்தத் திட்டம் உலகப் போருக்குப் பிற்பட்ட கோட்பாட்டின் மற்றைய அம்சத்திலிருந்து - அதாவது வெளிப்படையான எதிhப்புரட்சி தலையீடு - முற்றிலும் வேறுபட்டதென்றோ, முரண்பட்டதென்றோ கருதிவிடக் கூடாது. “ஐரோப்பிய தொழிலாள இயக்கத்தினுள் வேறுபாடுகள்” என்ற தலைப்பில் லெனின் 1910-ல் எழுதிய கட்டுரையில் பூர்சுவா வர்க்கத்தினர் உருவாக்கிய இந்த இரு ஆட்சி முறைகளைப் பற்றியும், மேலாதிக்க தந்திரோபாயங்கள் பற்றியும் குறிப்பிட்டு ஆழும் வர்க்கத்தினருக்கு எந்த நெருக்கடியும் அறவே முறியடிக்க முடியாததொன்றல்ல என அடிக்க டிவற்புறுத்தினார். தொழிலாள வர்க்கம் தீர்க்கமாகத் தலையிடுவதற்கு வல்லமை அற்றதாக இருக்குமிடத்து ஆளும் வர்க்கத்தினர் சீர்திருத்தத்தினையும் அடக்குமுறையினையும் கூர்மதியுடன் கலந்து நெருக்கடியைச் சமாளித்துத் தற்காலிகமாகவாவது அமைப்பினை ஸ்திரப்படுத்தும் அல்லது பொருந்தக்கூடிய வகையில் செம்மைப்படுத்தும். வௌ;வேறு வகையான நெருக்கடி நிலைமைகளைப்பற்றி லெனின் மேற்கொண்ட ஆய்வுகள் ரொக்சியவாதத்தின் கற்பனை உலகில் காணப்படும் எளிமைப் படுத்தப்பட்ட இரு கவர்ப்பிரிவு வேறுபாடுகளுக்கும் தீர்க்கதரிசனப் பாங்கான முடிவுகளுக்கும் முற்றிலும் மாறானவை. லெனினைப் பொறுத்தவரை முதலாளித்துவத்திற்கு ‘திட்டவட்டமான தேக்கமும் சிதைவும்” அல்லது “ஐயுறவுக்கு இடமின்றிய முறிவு நிலை இல்லை. (இந்தச் சொற்றொடர்கள் ரொட்ஸ்கியினுடையவை).

நாம் எழுப்ப வேண்டிய வினாக்கள்: நிக்கரகுவா நெருக்கடியில் பூர்சுவா தீர்வினைத் திணிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுத்துக் கொண்ட முயற்சி ஏன் வெற்றி பெறவில்லை? நிக்கரகுவா வெகுஜனங்களுக்கு ஏன் பூர்சுவா மாற்றுவழி கூடிய கவர்ச்சி வாய்ந்ததாய், சாத்தியமானதாய் தோன்றவில்லை? நெருக்கடியை எவ்வாறு சன்டினிஸ்டாக்கள் புரட்சிகர முறையில் தீர்த்தனர்?

ஓர நாடுகளில் நிகழும் புரட்சிகளைப் புரிய முடியாத ரொட்சியவாதிகள் ஒன்றில் பூர்சுவாக குழுக்களின் பங்களிப்பினைப் பொருட்படுத்துவதில்லை. அல்லது இத்தகைய சமூக மட்டங்கள் இருப்பதனால் அது தவிர்க்கமுடியாமல் பூர்சுவா மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும் என கருதுகின்றனர். பின்னைய வகை ஆய்விற்கு உதாரணம் போஸ்ரோ அமடோ என்பவர் எழுதிய நான்கு கட்டுரைகள். இவர் சன்டினிஸ்டா இயக்கத்தின் ஸ்தாபகராகிய கார்லோஸ் பொன்சேகா அமடோவின் சகோதரர். ஆனால் அரசியல் ரீதியாக அவரின் எதிர்த்துருவம். இந்தக் கட்டுரைகள் நவம்பர் 21 1977, யூன் 19 1978, ஒக்டோபர் 16 1978, யூன் 11 1979 -ல் வெளியிடப்பட்ட இன்ர கொன்டினன்டல் பிறஸ், இன்பிறெக்கோ இதழ்களின் பிரசுரிக்கப்பட்டன. ஒக்டோபர் 1978-ல் வெளியிடப்பட்ட கட்டுரையில் போஸ்டோ அமடோ முன் வைக்கும் கருத்து ரொக்சியவாதிகளின் வாதிடும் முறைக்கு வகை மாதிரியானது. அவர் கூறும் கருத்து வருமாறு: “தலைமைத்துவத்தின் தவறுகளால் புரட்சிகர நிகழ்வுத் தொடர் வெகுஜன இயக்கத்திற்கு படு தோல்வியில் முடியுமா? அந்த ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. இதனால் புரட்சிகரத் தலைமையின்மை மேலும் துன்பியல் பரிமாணங்களைப் பெறுகிறது. சன்டினிஸ்டாக்களின் செயற் திட்டங்களும், கூட்டுக்களும், ஆட்சிச் சுலோகங்களும் புரட்சிக்கு மிக மிக ஆபத்தானவை.”

நிக்கரகுவா மக்களும் அவர்களது முன்னணியான சன்டினிஸ்டாக்களும், இதுகாலவரை வெற்றியீட்டிய புரட்சிகளைப் போன்று ரொக்சியவாதிகள் மீதும் ரொக்சியவாதம் மீதும் தமது தீர்ப்பை அளித்து விட்டனர். லெனின் “இரண்டு யுக்தி முறைகள்” என்ற பிரசுரத்தில் எடுத்துரைத்த கொள்கையையும், 2-ம் உலகப் போரின் போது ஸ்ராலினால் பிரமாண்டமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையையும், மாவோசேதுங் இரத்தின சுருக்கமாக “பலரை ஒன்றுபடுத்துங்கள், ஒருசிலரைத் தோற்கடியுங்கள்” எனக் குறிப்பிட்டகொள்கையையும், சன்டினிஸ்டாக்கள் செம்மையாகச் செயற்படுத்தினர் என்று நாம் திட்டவட்டமாகக் கூறுகின்றோம். சன்டினிஸ்டாக்கள், ஒற்றுமைப்படுத்தக்கூடிய சக்திகள் எல்லாவற்றையும் ஒற்றுமைப்படுத்தி, தடுமாற்றமான இடைநிலை மட்டங்களை முனைப்பிழக்கச் செய்து, பிரதான எதிரியை இனங்கண்டு தனிமைப்படுத்தியது. இதே வேளை பூர்சுவா வர்க்கத்தினரின் அடக்குமுறை இயந்திரத்தைப் பலாத்காரம் மூலம் நொருக்கும் பணியினையும் ஏகாதிபத்தியத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் எதிரான பூர்சுவா மட்டத்தினரை வென்றெடுக்கும் முக்கிய தேவையினையும் ஒன்றிணைத்ததன் மூலம் சன்டினிஸ்டாக்கள் பரந்துபட்ட வெகுஜன அணியில் தமது மேலாதிக்கத்தினை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றனர். இந்த இரு பணிகளுக்கிடையிலான முரணியக்கத்தில் பின்னைய பணியே அடிப்படையானது என அவர்கள் செம்மையாகக் கருதினர்.

பூர்சுவா எதிரணியினரும், அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கை வரையறுப்பாளரில் சற்று “அறவொளி” பெற்றவர்களும், செயற்படுத்தவல்ல சீர்திருத்தச் சட்டத்தினை வரையறுப்பதற்கு மீண்டும் மீண்டும் முயன்ற போதும் தோல்வியடைந்தனர். இதற்குக் காரணம் அரசியல் துறையிலே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் போதுமான இடமில்லாதிருந்தமையே. ஒருபுறம் சோமோசாவைப் பதவியிலிருந்து அவர்களால் மெதுவாகக் கழற்றவும் முடியவில்லை. அவருடன் ஒரு உடன்பாட்டை உருவாக்கவும் முடியவில்லை. அவருடன் ஒரு உடன்பாட்டை உருவாக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அவர் எதற்குமே மசிய தயாராக இருக்கவில்லை. மறுபுறம் சொமோசாவின் ஆட்சிக்கு எதிராகப் பயன்தரவல்ல போராட்டத்தைத் தொடங்கவோ அல்லது தொடர்ந்து நடத்தவோ அவர்களுக்கு வல்லமை இருக்கவில்லை. சீர்திருத்த தீர்வொன்றினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி காட்டரின் நிர்வாகம் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு ஜனவரி 1978-ல் மரண அடி விழுந்தது: பேற்றோ ஜோர்ஜ் சமறோசொமோசாவிற்குச் சார்பானவர்களால் கொல்லப்பட்டார். சமறோ எதிர்க்கட்சிப் பத்திரிகையான “லாப்பிரென்சா”வின் வெளியீட்டாளரும், ஆசிரியருமாய் இருந்தவர். பழமைபேண் கட்சியில் செல்வாக்கு மிக்க ஓர் உறுப்பினராகவும், ‘யுடெல்’லின் நிறுவன உறுப்பினராகவும் இருந்த இவர் சொமோசாவை உறுதியாக எதிர்த்தவர். நெருக்கடியைப் பூர்சுவா முறையில் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் இவருக்கு முக்கிய பங்கு இருந்தது. ஆகவே அமெரிக்கராஜாங்க திணைக்களம் மேற்கொண்டிருந்த இந்த முயற்சிகள் பற்றி சி.ஐ.ஏ. யிலிருந்த சொமோசாவின் நண்பர்கள் சர்வாதிகாரியை உசார்படுத்தினர். இதன் விளைவு சமறோ கொல்லப்பட்டார். சமறோ கொலை செய்யப்பட்டதும் பொது வேலை நிறுத்தமும், கதவடைப்பும் (அதாவது தொழிலாளர்களும், பூர்சுவா வர்க்கத்தின் சில மட்டத்தினரும் முயற்சி) நடைபெற்றன. தலைநகரமாகிய மனகுவாவிலும், வேறு பெரிய நகரங்கிலும் வாழ்க்கை ஸ்தம்பித்தது. ஒகஸ்ட் 1978-ல் பூர்சுவா மட்டத்தினர் பொதுவேலை நிறுத்தத்தினைக் கைவிடுவதற்கு முயன்ற போது சன்டினிஸ்டாக்கள் தேசிய சபையைத் தாக்கினர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளும் இலத்தீனமரிக்க தாராள பூர்சுவா அரசாங்கங்களும் நிக்கரகுவ எதிரணியிருந்து பூர்சுவா மட்டங்களோடு பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு சீர்திருத்த வாத தீர்வை உருவாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இது பலத்த அடியாக இருந்தது. செப்ரெம்பர் 1978-ல் ஒரு புதிய பொது வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து சன்டினிஸ்டாக்கள் மாகாண நகரங்களில் நிலைகொண்டிருந்த தேசிய படையினரின் நிலையங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சன்டினிஸ்டாப் போராளிகளுடன் இணைந்து போராடினர். நான்கு நகரங்க் விடுவிக்கப்பட்டன. இரத்தக்களரியைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் இக்கிளர்ச்சி அடக்கப்பட்டது. ஆனால் இதன்விளைவாக சொமோசா அண்டை நாடுகளிலிருந்து மேலும் தனிமைப்படுத்தப்பட்டார். அத்துடன் சோமோசாவை வெளிப்படையாக ஆதரிக்கும் கொள்கையை அமெரிக்காவினால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை.

நிக்கரகுவா பூர்சுவா வர்க்கத்தின் நடத்தை 20-ம் நூற்றாண்டில் அது வகித்த பங்கிற்கு அமைவாகவே இருந்தது. இந்த நூற்றாண்டில் நிக்கரகுவா பூர்சுவா வர்க்கத்தின் சில மட்டங்கள் அமெரிக்காவிற்கும் அடுத்தடுத்து வந்த சொமோசா ஆட்சியினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததோடு அவற்றில் பங்குபற்றினர். இந்தப் போராட்டங்கள் சில வேளைகளில் பலாத்கார வடிவம் எடுத்து ஆயுதக் கிளர்ச்சிகளுக்கு வழிகோலின. எனினும் சர்வாதிகாரிகளைக் கவிழ்ப்பதற்கு இந்தப் பூர்சுவா வர்க்கத்தினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. தவிர, இந்த பூர்சுவா பின்னங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசை வார்த்தைகளில் (நிதி, அரசியல் ரீதியானவை) மயங்கி விட்டனர். இதனால் இவர்கள் பலாத்கார வெகுஜன போராட்டங்களை இறுதியில் கைவிட்டு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வுகாண முனைந்தனர். இந்தத் தீர்வுகளும் இறுதியிலே தற்காலிகமானவையாகவோ அல்லது ஏமாற்றாகவோ இருந்தன. பூர்சுவா எதிரணியினர் தேசிய விடுதலைக்கான போராட்டத்தினைக் கைவிட்ட ஒரு கால கட்டத்தில் தான் எண்ணெய்க் கம்பனி தொழிலாளியாக ஒரு காலத்திலிருந்த தளபதி சண்டினோ அமெரிக்க கடற் படையினரை எதிர்த்து தொழிலாளர்களும் விவசாயிகளும் மேற்கொண்ட கெரில்லா யுத்தத்திற்குத் தலைமை தாங்கினார். எனவே, புதிய தலைமுறை சன்டினிஸ்டாக்கள் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு “தேசிய பூர்சுவா வர்க்க”த்தின் சில பின்னங்களை ஏகாதிபத்தியத்திற்கும், சொமோசா ஆட்சியினருக்கும் எதிரான போராட்டத்திற்கு வென்றெடுப்பது சாத்தியமும் இன்றியமையாததும் என்ற முடிவக்கு வந்தபோதிலும் இந்தப் போராட்டத்தை இறுதிவரை கொண்டு செல்வதற்கு இம்மட்டத்தினரால் முடியாது, அவர்கள் அவ்வாறு செய்யவும் மாட்டார்கள் எனவும் உணர்ந்தனர். பூர்சுவாத் தலைமையில் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டால், அது சிதைவுற்று, அடக்கு முறையினதும் போராட்டத்தினதும் பழுவினைச் சுமந்து பரந்துபட்ட தொழிலாள விவசாய மக்களுடைய தேசிய அபிலாசைகளும், சமூகக் கோரிக்கைகளும் நிறைவுறமாட்டாதென்பதனையும் அவர்கள் உணர்ந்தனர். இந்த பூர்சுவா மட்டத்தினருக்கு முன்னணிப்பாங்கு மறுக்கப்பட்டாலும் அல்லது பறிக்கப்பட்டாலும் அவர்கள் நம்பத்தகுந்தவர்களாய் இருக்க மாட்டார்கள்@ அவர்களில் பர் சோமோசாவை அகற்றிவிட்டு சோமோசா கொள்கைகளைத் தொடரும் ஒரு நிலையை ஏற்றிருப்பர். இது சேணத்தை மாற்றிவிட்டு கழுதையைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு ஒப்பாகும். (இந்த ஒப்புவமை ஈரானிய புரட்சிவாதிகளினுடையது). எனினும் நம்பிக்கைக்குப் பாத்திரமற்ற ஊசலாட்டம் மிக்க இவர்களையும் போராட்டத்தோடு இணைக்க வேண்டித்தான் இருந்தது.

சன்டினிஸ்டாக்களின் செயற்திட்டம் வருமா: இயன்றளவுக்கு தேசிய வெகுஜன ஒற்றுமையை விரிவுபடுத்துதல், அதே வேளை தலைமையைப் பூர்சுவா மட்டத்தினர் கைப்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளல். சன்டினிஸ்டா தலைமையையும், சீர்திருத்த பரிமாணத்தைப் புறக்கணிக்கும் புரட்சிகர பரிமாணத்தின் மேலாதிக்கத்தையும் உறுதிப்படுத்தல். இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சன்டினிஸ்டாக்கள் மூன்று முறைகளைக் கடைப்பிடித்தனர்:

1. ஆயுதப் போராட்டத்திற்கு கேந்திர முதன்மையை அளித்தல்.
2. மிகமுக்கியமான நெருக்கடிக் கட்டங்களில் தீர்க்கமான இராணுவ நடவடிக்கைகள் மூலம் முனைப்பான அரசியல் முயற்சிகளைக் கைப்பற்றிப் பேணல். இதன்மூலம் சர்வாதிகாரத்திற்கும் வெகுஜன நெருக்குவாரத்திற்மிடையே உள்ள சமநிலையைப் பேணுவதற்குப் பதில் அதனைத் துண்டித்தல்.(சேகுவேரா)
3. புரட்சிகர நிகழ்வுத் தொடரில் உழைக்கும் மக்களின் பங்களிப்பின் கனத்தினைப் பலப்படுத்துவதன் மூலம் அதேவேளை பூர்சுவா மட்டத்தினரின் கனத்தினைக் குன்றச் செய்தல்.

வெகுஜன நிறுவனங்களை உருவாக்கிப் பலப்படுத்தி விரிவடையச் செய்ததன் மூலமும் உண்மையான தேசிய விடுதலை, அடிப்படை சமுக மாற்றம். மக்கட் பலம் ஆகியவைபற்றிய பரிமாணத்தினை அவர்கள்களுக்கு சன்டினிஸ்டாக்கள் ஊட்டியதன் மூலமும் மூன்றாவது குறிக்கோளினை எய்தினர். எதிரணியின் பல்வேறு கூட்டுக்கள் உருவாகி உருமாறியதும், வெகுஜன மட்டத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிறுவனங்களுடன் பூர்சுவா எதிரணியினர் மாறிமாறி கூட்டுச் சேர்ந்ததும், சிக்கலான. கவர்ச்சியான வரலாறே. விரிவாக அவற்றினை எடுத்துரைக்க முடியாது. ஆனால் இந்நிகழ்வுத் தொடரின் சில முக்கிய திரும்பு கட்டங்களை இங்கே நாம் கோடிட்டுக் காட்டலாம்.

மார்ச் - யூலை 1978-ல் ஐக்கிய மக்கள் இயக்கம் உருவாகத் தொடங்கியது. இதில் 22 வெகுஜன நிறுவனங்கள் அங்கம் வகித்தது, பூர்சுவா அல்லாத வெகுஜன மட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தின. தொழிலாளர், மாணவர், அயல் நிறுவனங்களின் கூட்டணியான இவ்வியக்கத்தில் கம்யூனிச கட்சியும் அதன் தொழிற்சங்க சம்மேளனமும் அடங்கியிருந்தன. சொமோசாவிற்குப் பின் நிக்கரகுவாவில் கடைப்பிடிக்கப்படவேண்டிய செயற்திட்டமொன்றினை ஐக்கிய மக்கள் இயக்கம் வெளியிட்டது. இத்திட்டத்தின்படி, பொருளாதார அமைப்பு சீர்திருத்தப்பட்டு அதன் அடிப்படைத் துறைகள் யாவும் தேசிய மயமாக்கப்பட்டிருக்கும். யூலையில் பரந்துபட்ட எதிரணி உருவாக்கப்பட்டது. மே மாதத்தில் தொடங்கப்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பலனே இதுவாகும். எல்லா எதிரணிக் குழுக்களையும் இது உள்ளடக்கி (பன்னிருவர், யுடேல் தொழிலாளர் நிறுவனங்கள், வியாபாரிகளின் குழுக்கள், மரபுவழி வந்த அரசியல் எதிர்க்கட்சிகள்) முழு எதிர்ச்சக்திகளிடையேயும் பரந்துபட்ட ஒற்றுமையை இது உருவாக்கிற்று. இதில் 16 எதிர்க்கட்சிகள் இடம்பெற்றிருந்தன. பழமைபேண்வாதிகளின் நான்கு பிரிவுகள் சமூக கிறிஸ்தவர்கள், சோசலிசவாதிகள், கம்யூனிஸ்ட்கட்சி, மூன்று பெரிய தொழிற்சங்க சம்மேளனங்கள் ஆகியவை இந்த எதிரணியில் இடம் பெற்றிருந்தன. பன்னிருவர் குழு சன்டினிஸ்டாக்களையும் பூர்சுவா ஜனநாயகவாதிகள் மேலாதிக்கம் பெற்றிருந்த குயுழு வையும் இணைந்திருந்தது.

மார்ச் 1979-ல் ஐக்கிய மக்கள் இயக்கம் (இதில் சன்டினிஸ்டாக்களின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது) 12 அம்சங்கள் அடங்கிய ஒரு செயற்திட்டத்தினை வெளியிட்டிருந்தது. இத்திட்டம் பரந்துபட்ட அரசியல், தனிமனித சுதந்திரங்களை உத்தரவாதப்படுத்தியதுடன் சொமோசாவிற்கு பிற்பட்ட நிக்கரகுவாவின் பொருளாதார அமைப்பில் சொமோசாவின் சொத்துக்கள் யாவும் தேசியமயமாக்கப்படும் என்றும், அதே வேளையில் தனியார் துறைக்கு கணிசமான பங்கிருக்கும் என்றும் குறிப்பிட்டது. 3 சன்டினிஸ்டாப் போக்குகளும், ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ தலைமைப் பீடத்திலும் தந்திரோபாயத்திலும் தாம் உடன்பாடு கண்டுவிட்டதாக அறிவித்ததோடு ஐக்கிய மக்கள் இயக்கத்தின் செயற்திட்டத்தையும் அங்கீகரித்தன. ஏப்ரல்-மே மாதங்களில் சன்டினிஸ்டாக்களுக்கும் தேசிய படையினருக்குமிடையே அடிக்கடி ஆயுத மோதல்கள் நிகழ்ந்தன. இதற்கிடையில் கிளர்ச்சிக்கு முன் ஆயத்தமாக சன்டினிஸ்டாக்கள் நகரப்புற தொழிற்சாலைகளில் 130 தொழிலாள குழுக்களை உருவாக்கியிருந்தனர். யூன் மாதத்தில் புதிய பொது வேலைநிறுத்தம் தொடங்கியது. பிரமாண்டமான தேசிய கிளர்ச்சியை மூட்டிய சன்டினிஸ்டாக்களின் இறுதித் தாக்குதலோடு இது பொருந்தும் வகையில் தொடங்கப்பட்டது. சொமோசா சர்வதேச ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் முற்றுமுழுதாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமையால் யூன்மாத பிற்பகுதியில் வாஷிங்டனில் கூடிய அமெரிக்க அரசுகளின் நிறுவனம் பகுதியில் வாஷிங்டனில் கூடிய அமெரிக்க அரசுகளின் நிறுவனம் ழுயுளு போர் நிறுத்தத்தினையும், நிக்கரகுவாவிற்குச் சமாதானப்படை அனுப்பப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நிராகரித்தது. சன்டினிஸ்டாக்கள் ஆதரித்த ஐவர் அடங்கிய குழுவிற்கு குழிபறிப்பதற்கு அமெரிக்கா ழுயுளு ஆதரவை யூன்-யூலையில் நாடியது. இந்த ஐவர் குழுவில் பின்வருவோர் இடம் பெற்றிருந்தனர். பன்னிருவர் குழுவைச் சேர்ந்த எழுத்தாளராகிய சேர்ஜியோ ரமிறோஸ் மெக்காடோ, குயுழு வைச் சேர்ந்த தொழிலதிபரான அல்போன்சோ ரொபிலோ கலேஜாஸ், ஐக்கிய மக்கள் இயக்கத்தையும் சன்டினிஸ்டாக்களின் தொழிலாளர் போக்கையும் சேர்ந்த இளம் பல்கலைக்கழக விரிவுரையாளரான மொயிஸ்சஸ் கசான் மொரோல்லஸ், பழமைபேண் கட்சியைச் சேர்ந்தவரும் காலம்சென்ற பீற்ரோ ஜோக்கின் சமரோவின் மனைவியுமான வயலட்ரோ சமரோ, சன்டினிஸ்டாக்களின் மூன்றாவது போக்கைச் சேர்ந்த டானியல் ஒட்டேகா, தற்காலிக அரசாங்கத்தினை மாற்றியமைத்து இரு சன்டினிஸ்டாக்களையும் நீக்குவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன. எதிரணியிருந்த எல்லாப் பகுதியனரும் இதனை நிராகரித்தனர். இது சன்டினிஸ்டாக்கள் எவ்வளவிற்கு தமது மேலாதிக்கத்தினை நிலைநாட்டியிருந்தர் என்பதைக் காட்டுகின்றது.

யூலை 14இலும், 15 இலும் ‘யுண்டா’ (ஆளும்குழு) 18 பேரைக் கொண்டிருந்த தற்காலிக அமைச்சரவை ஒன்றினை நியமித்தது. இதில் சன்டினிஸ்டாக்களும் சமூகக ஜனநாயக, பழமைபேண் கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். யூலை 16-ல் சொமோசாவின் வாரிசு ஆட்சிப்பொறுப்பை ஏற்று தான் 1981 வரை ஆட்சியிலிருக்கப் போவாதாக அறிவித்தார். தேசிய படை சிதைவுறத் தொடங்கியது. யூலை 19-ல் மனகுவாவை சன்டினிஸ்டாக்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றினர்.

போராட்டம் தொடர்கையில் நிக்கரகுவா இரு முகாம்களாக துருவப்படுத்தப்பட்டது. இதனால் சொமோசாவை சாராத பூர்சுவா வர்க்கத்திற்குப் பேரம் பேசி தமது எண்ணங்களைச் சாதிப்பதற்கு வாய்ப்பில்லாது போய்விட்டது. ஒருபுறம், வெகுஜனங்களின் முகாமில்தான் வேறு வழியின்றி பூர்சுவா எதிரணியினர் இடம் பெற வேண்டியிருந்தது. சொமோசாவின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையால் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததாகி விட்டதாலும், துப்பாக்கியைச் சன்டினிஸ்டாக்களின் கைகளே உறுதியாக ஏந்தியிருந்தமையாலும், வெகுஜனங்கள் சன்டினிஸ்டாக்களோடு முழுமையாக ஒன்றுபட்டனர். வெகுஜனங்கள் போர்க்கோலம் கொண்ட சன்டினிஸ்டாக்களாக உருமாறி விட்டனர்.

தேசிய சுதந்திரமும் சோஷலிசமும்: சில கோட்பாட்டுக் குறிப்புகள்

மாhக்சியவாதிகள் தீர்க்கதரிசிகள் அல்லர். உணவு தயாரிக்கும் முறைகளை வருங்கால சமையற்காரர்களுக்காகத் தயாரித்தளிக்கும் நோக்கம் தமக்கில்லை என கார்ல்மார்க்ஸ் ஒரு முறை குறிப்பிட்டார். முன்கூட்டி தீர்க்கதரிசனமாய் கூறுவதில்தான் மார்க்சியவாதத்தின் பலம் தங்கியிருக்கிறது என ரொட்ஸ்கி பின்னர் உதித்த கூற்றுப்பற்றி இது சந்தேகங்களைக் கிளப்புகிறது. இது நிக்கரகுவாவின் உருவமும் தன்மையும் இறுதியில் எத்தகையதாய் இருக்கும்? யார் யாரை தோற்கடிப்பார்கள்? யார் வெற்றி பெறுவார்கள், இதுவே முக்கிய பிரச்சினை என லெனின் கருதினார். சோசலிச பாதைக்கும், முதலாளித்துவப் பாதைக்கும் இடையிலான போராட்டம், ஆயுதப் போராட்டத்தின் மூலம் வெகுஜனங்கள் வெற்றியீட்டிருப்பதால் மட்டும் ஒரேயடியாகச் சோசலிசத்திற்குச் சாதகமாகத் தீர்க்கப்படுவதில்லை. அல்ஜீரியா இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு, அங்கு மிக நீண்ட வீரம் மிகுந்த ஆயுதப் போராட்டம் நடந்தபோதிலும் தேசிய விடுதலைக் கட்டத்திலிருந்து அடுத்த கட்டமான சோசலிச நிர்மாணத்திற்குள் அலஜீரிய புகவில்லை. 1962-ல் பென்பெலா (சிலர் நோக்கில் இவர் சோசலிசத்தை நோக்கி செல்லத் தொடங்கியிருந்தார்) பதவியிலிருந்து நீக்கப்பட்டமை இந்த நிகழ்வின் தெட்டத் தெளிவான திரும்பு கட்டமாய் விளங்கியது. இந்த நிகழ்ச்சித் தொடரின் விளைவாக இன்று அரச முதலாளித்துவம் அங்கு உருவாக்கப்பட்டிருப்பதோடு. நவகாலனித்துவ தொடர்புகளும் பலப்படுத்தப்பட்டு, சுதந்திர அல்ஜீரியாவில் ஆளும் வர்க்கம் இராணுவ அரச ஊழிய, அரச பூர்சுவா வர்க்கம் நிலைபெற்று விட்டது.கியூபா இதற்கு மாறான ஒரு எடுத்துக்காட்டு. அங்கு சில செல்வந்தர்களின் ஆட்சிக்கு எதிரான ஜனநாயகப் புரட்சி மிக விரைவாகவும், தடைகளின்றியும் சோசலிசப் புரட்சியாய் உருமாறியது. வர்க்கமுரண்பாட்டு இயங்கியலும், பகைமைத்துவம் நிறைந்த வெளிச் சூழலுடன் பின்னிய செயற்பாடும், அகநிலைப்பட்ட காரணிகளும் இணைந்தே இதற்கு வழி கோலின. அகநிலைக் காரணிகள் எனும்போது, புரட்சிகரத் தலைமையின் அறிவுபூர்வமான தேர்வைக் குறிக்கும். உழைக்கும் பொதுமக்களுடன் இந்தத் தலைமை கொண்டிருந்த நெருங்கிய உறவும், முற்றுமுழுதான பற்றீடுபாடும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல், சித்தாந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு புரட்சிகரத் தலைமையை உந்தின.

இது அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினைக்கு எம்மை இட்டுச் செல்கிறது. இன்றைய வரலாற்று யுகத்தில் அண்டி வாழும் நிலையிலுள்ள ஒரு நாட்டில் மேற்கொள்ளப்படும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தினை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவருவதானால் சோசலிசத்தினை உருவாக்குவதன் மூலமே அது சாத்தியமாகும் என்பதனை அல்ஜீரியாவினதும் கியூபாவினதும் அனுபவங்கள் - ஒன்று எதிர்மறையாகவும் மற்றையது நேராகவும் - எண்பிக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் மேலாதிக்கத்திலே, தொழிலாள வர்க்கத்தினதும் ஏழை விவசாயிகள் வர்க்கத்தினதும் கூட்டிணைப்பின் அடித்தளத்தில் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட வர்க்கங்களின் அரசாங்கத்தை நிறுவும் கட்டத்திற்குச் செல்வதன் மூலமே தேசிய ஜனநாயகப் புரட்சியினை முடிவுக்குக் கொண்டுவரும் பணி சாத்தியமாகின்றது. இத்தகைய அரசு, சோசலிசத்தை நோக்கிச் செல்வதோடு, முதலாளித்துவ உற்பத்தி உறவு முறைகளைக் கட்டுப்படுத்திப் படிப்படியாக நீக்கும்.

ஒரு பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும். மேற்படி கோட்பாட்டு முடிவு ரொட்சியவாத நிலைப்பாடுகளுக்கு அண்மையில் எம்மை இட்டுச் செல்கிறதா? மேலோட்டமாக நோக்குபவர்களுக்கு இவ்வாறுதான் தோன்றும். மார்க்சின் கூற்றை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தம். தோற்றம்தான் உண்மையாயின் விஞ்ஞானம் தேவைப்படாது. இன்றைய வரலாற்று யுகத்தில் தேசிய ஜனநாயக புரட்சி சோசலிசத்தினை நிறுவுவதினூடாகத்தான் முடிவுக்குக் கொண்டு வரப்படலாம் என்ற எமது துணிவினை இன்றைய வரலாறு மீண்டும் மீண்டும் எண்பித்திருக்கிறது. இதற்கும் ரொட்சியவாத நிரந்தர புரட்சிக் கோட்பாட்டுக்கும் எதுவித தொடர்பும் இல்லை.

ரொட்சிவாதத்தின்படி புரட்சிகள் தொழிலாள வர்க்கத்தை மட்டுமே அதிகாரத்தில் அமர்த்த வேண்டும். அந்த வர்க்கம் ஜனநாயக கட்டமின்றி ஆரம்பத்திலிருந்தே முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளைத் தகர்க்க வேண்டும். இதுவே ரொட்சிய வாதத்தின் எண்பிக்கப்படாத எடுகோள். எனவே, ரொட்சியவாதம் புரட்சிக் கட்டங்களுக்கிடையெ வேறுபாடு காணத் தவறுகின்றது. முரண்பாடுகளின் பெயர்வைத் தேடிக்காணவும், ஒவ்வொரு கட்டத்திற்கும் பொருத்தமான வர்க்க இணைப்புக்களையும், அரசியல் வரிசைப்படுத்தல்களையும் அது இனம் காணவும் தவறுகின்றது. விவசாய வர்க்கத்தினதும் இடைநிரைப்பட்ட மட்டத்தினரதும் பங்களிப்பினை நிரந்த புரட்சிக் கொள்கை குழுவாதக் கண்ணோடு ஒருதலைப்பட்சமாகக் குறைத்து மதிப்பிடுகிறது. (லெனின் விவசாய வர்க்கத்தின் சுதந்திரமான பங்கினை மிகை மதிப்பீடு செய்துவிட்டார் என தான் குற்றம் சாட்டியதாக ரொட்சியே ஒத்துக் கொள்கிறார். ரொட்சி விவசாயிகளது புரட்சிகரப் பங்கினைக் குறைத்து மதிப்பிட்டார் என லெனின் குற்றம் சாட்டினார்.) 1905-ம் ஆண்டு பெற்றோகிறற் சோவியத்தின் முன் மாதிரியில் கட்டுண்டு ரொட்சியவாதம் புரட்சிகர பொதுவேலை நிறுத்தத்தையும், ரஷ்யப்பாணி நகர்ப்புற புரட்சிகர ‘மாதிரி’யையும் வணங்கி, கெரில்லா யுத்தத்தின் பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிடுகிறது. இத்தவறுக்கு லெனின் ஆளாகவில்லை. சீனா பற்றி ரொட்சி எழுதிய கட்டுரைகள் கிராமப்புற கெரில்லா யுத்தம் பற்றி அவரது இகழ்ச்சியான நோக்கினைப் புலப்படுத்துகின்றன. லெனின் தொழிலாள விவசாய கூட்டிணைப்பினை அழுத்தினார். ரொட்சிய சிந்தனையில் “தொழிலாளர்வாதம்” இவ்விணைப்பினைப் பதிலீடு செய்கின்றது. இத் ‘தொழிலாளவாதம்’ “தன்னிச்சைவாதம்” “பொருள்வாதம்” ஆகியவற்றோடு தொடர்புற்றிருக்கிறது. அண்டிவாழும் நிலையிலுள்ள ஒரு நாட்டின் தேசியவாதத்தில் அடங்கியிருக்கும் புரட்சிகர சாத்தியங்களை இது இனங்காண மறுக்கிறது. இல்லது மிக மிக குறைத்து மதிப்பிடுகின்றது. ஒரு தேசிய அரசின் தன்னிருப்புத் தன்மையை ஒப்பீட்டளவில் புரிந்து கொள்வதற்கு ரொட்சியவாதம் தவறிவிடுகின்றது. இதற்குக் காரணம் அதன் சமூகவியல் குறுக்கல்வாதமே. ஒரு சமூக அமைவாக்கத்தின் பல்வேறு மட்டங்களில் (எடுத்துக்காட்டாக அரசியல் மட்டம்) ஒப்பீட்டளவு தன்னிருப்புத் தன்மையை அது புரியத் தவறுகின்றது. நிரந்தரப் புரட்சிக் கொள்கை நிரந்தரத் தோல்வியில் முடிவதற்கு இவை விளக்கமளிக்கின்றன.

இவ் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறாக, கட்டம் கட்டமாக நிகழும் ஒரு புரட்சியே எமது பரிமாணம். இந்தக் கட்டங்கள் தங்கு தடையின்றி ஒன்று மற்றொன்றாக வளர்ச்சியுறும். இந்நிகழ்வுத்தொடரின் ஆரம்பம் பெரும்பாலும் வெளிப்படையாக முதலாளித்துவத்திற்கு எதிரான கோரிக்கைகளாக இல்லாமல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஜனநாயகக் கோரிக்கைகளைக் கொண்ட குறைந்தபட்ச செயற்திட்டமாக அமையும். இடைப்பட்ட கட்டங்களினூடாக இறுதியிலே ஒரு சோசலிச அரசு நிறுவப்படுவதற்கு இந்நிகழ்வுத்தொடர் இட்டுச் செல்லும். மத்திய ஐரோப்பா பற்றியும், அயர்லாந்து பற்றியும் மார்க்ஸ் எழுதியவற்றிலிருந்து இப்பரிமாணத்தைப் பெறலாம். லெனின் இதனை வெளிப்படையாகவே எடுத்துரைத்தார். “தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளதும் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம்” என்ற சுலோகத்தினை லெனின் முன்வைத்தார். 1920-ல் கொமின்ரேன் நடாத்திய 2வது மகாநாட்டில் லெனின் தனது கொள்கையைக் காலனித்துவ. அரைக்காலனித்துவ சூழ்நிலைக்குப் பொருத்தினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிபற்றி ரொட்சியினுடைய கொள்கை லெனினுடைய கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது என்பதனை அக்காலகட்டத்தில் தேசிய பூர்சுவா வர்க்கம் பற்றி இருவரும் கொண்டிருந்த மாறுபட்ட கருத்துக்களிலிருந்து தெளிவாகின்றது. கிழக்கே செல்லச் செல்ல பூர்சுவா வர்க்கம் மேலும் மேலும் பிற்போக்குத் தனம் வாய்ந்ததாக உள்ளது என ரொட்சி கூறிய அதே வேளை லெனின் இதற்கு முரண்பட்ட. செம்மையான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். ஆசியாவிலே பூர்சுவாவர்க்கம் “இன்னும் மக்களுடன் சேர்ந்து பிற்போக்கை எதிர்க்கிறது” என அவர் குறிப்பிட்டார். (எனவே தான் “பின்தங்கிவிட்ட ஐரோப்பா, முன்னேறிவிட்ட ஆசியா”)

லெனின் “இன்னும்” என்ற சொல்லினைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. தேசிய, தாராள, சீர்திருத்தவாத பூர்சுவா வர்க்கம் ஒரு குறிப்பிட்ட கட்டத்திலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமே முற்போக்குத்தன்மை வாய்ந்தது என லெனின் உணர்ந்திருந்ததை இது வெளிப்படுத்துகின்றது. எனவே அதனுடன் இணைவது நிபந்தனைக்கு உட்பட்டதும், தற்காலிகமானதுமாகும். பூர்சுவாவர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் ஒப்பந்தத்திற்கு வராமலும். தொழிலாள வர்க்கம் சுதந்திரமாக நிறுவன அமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கான ஜனநாயக உரிமையை அவர்கள் உத்தரவாதப்படுத்தினாலும் மட்டுமே மார்க்சியவாதிகள். சில புறநடையான சூழ்நிலைகளில், தற்காலிகமாக பூர்சுவா வர்க்கத்தின் முதன்மைப் பங்கினை ஏற்றுக் கொள்ளலாம். ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்தும் பல்வேறுபட்ட வர்க்கங்களின் இணைப்பிற்குள் தனது மேலாதிக்கத்தினை நிலைநாட்ட தொழிலாள வாக்கம் எப்போதும் முயல வேண்டும். ஏகாதிபத்திய யுகத்தில் புரட்சியைத் தங்குதடையின்றி வௌ;வேறு கட்டங்கள், உப கட்டங்க@டாக அதனை உண்மையான வெற்றிக்கு இட்டுச் செல்லும்வல்லமை தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமே உள்ளதால் ஈற்றிலே தலைமைப் பங்கினை அது பெற்றுக்கொள்ள வேண்டும்.

லெனினுடைய கருத்துக்களை ஸ்ராலினும். கொமின்ரேனும் மேலும் விருத்தி செய்தனர். 1925-ல் ஸ்ராலின் வருமாறு கூறினார். “எனவே, ஒக்டோபர் புரட்சி தேசிய விடுதலைக்கான பழைய பூர்சுவா இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அடக்கியொடுக்கப்பட்ட இனங்களின் தொழிலாள, விவசாய வர்க்கங்களின் புதிச சோசலிச இயக்கத்தின் யுகத்தை அது தொடக்கி வைத்தது. இந்த இயக்கம் எல்லாவகை அடக்குமுறைக்கும் எதிரானது. அதாவது தேசிய அடக்குமுறை உட்பட உள்@ர், வெளியூர் பூர்சுவாக்களின் ஆட்சி, ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கு எதிரானது.” (ஒக்டோபர் புரட்சியும் தேசிய இனப் பிரச்சினையும்’)

வியட்னாமிய கம்யூனிச கட்சியின் பொதுச் செயலாளரும் தலைசிறந்த கோட்பாட்டாளருமாகிய லே டுவான் 1963-ல் எழுதிய ஒரு கட்டுரையில் ஸ்ராலின் எவ்வாறு லெனினிசவாதத்தைச் செம்மையாகக் கடைப்பிடித்தார் எனக் குறிப்பிடம்போது, தடையற்ற புரட்சி என்ற லெனினின் கருத்தினைப் பின்வருமாறு விளக்குகிறார். “ஏகாதிபத்திய யுகத்தில் பூர்சுவ ஜனநாயக புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான கண்டிப்பான உறவினை லெனின் வரையறுத்தார். பூர்சுவா வர்க்கம் விவசாயிகளின் தலைமைக் கைப்பற்றுவதற்குத் தொழிலாள வர்க்கம் அனுமதிக்கக் கூடாது. பதிலாக. நிலமானிய அமைப்பினை வேரோடு கிளப்பி எறிவதற்கு விவசாயிகளுடன் இணைந்து தொழிலாள வர்க்கம் பூர்சுவாப் புரட்சியை ஏற்படுத்துவதற்குத் தலைமையைக் கைப்பற்ற வேண்டும். அப்புறம், நடு ஆற்றில் தரிக்காது பூர்சுவா ஜனநாயகப் புரட்சிக்கும், சோசலிச புரட்சிக்கும் இடையே பெரிய சுவரை எழுப்பி முதலாளித்துவத்தின் அமைதியான வளர்ச்சிக்கு காத்திராது புரட்சிகர இயக்கத்தினை அவர்கள் உந்தித் தள்ளி ஏழை விவசாயிகளுடன் இணைந்து சோசலிச புரட்சியை ஏற்படுத்துவதற்கு அவர்கள் தங்குதடையின்றி முன் செல்ல வேண்டும்.”

குருஷேவுடைய ஆட்சிக் காலத்தில் சோவியத் யூனியனின் கம்யூனிசக் கட்சி இச் செம்மையான லெனினிச நிலைப்பாட்டினை ஒன்றில் கைவிட்டது அல்லது திரித்தது. 1970களின் நடுப்பகுதி தொடக்கம் பல சோவியத் கோட்பாட்டாளரும், கிழக்கு ஐரோப்பிய கோட்பாட்டாளரும் இந்த செம்மையான லெனினிச கோட்பாட்டினை மீண்டும் கண்டுபிடித்து ஓரளவிற்கு உயிர்ப்பித்துள்ளனர். “தேசிய ஜனநாயக அரசு-மதலாளித்துவமல்லாத பாதை” என்ற கூற்றினைப் படிப்படியாகக் கைவிட்டு அதற்குப் பதில் “சோசலிச இலக்கைச் சார்ந்த பாதை” (இந்த வரையறை எதிர்மறையான ஒன்றாய் இல்லாது நேரான ஒன்றாக இருப்பதனால் மற்றக் கூற்றினை விட ஒப்பீட்டுரீதியாக முன்னேற்றமானது) என்ற கூற்றினைக் கடைப்பிடிப்பதில் இந்த மறு மதிப்பீடு பிரதிபலிக்கப்படுகிறது. குருசேவுடைய திரிபுவாதக் கருத்துக்களுக்கு முதன்முதல் ஆப்பு வைத்தது கியூபாவின் புரட்சியே. இந்தப் புரட்சி காலனித்துவமல்லாத ‘ஓர’ நாட்டுச் சூழ்நிலையில் ஏற்பட்டு வெகு விரைவில் சோசலிச தன்மையினைப் பெறத் தொடங்கி விட்டது. ‘ஓர’ நாடுகளிலே புரட்சிபற்றி செம்மையான கோட்பாட்டு நிலைப்பாடுகளை உறுதியாகக் கடைப்பிடித்தவர்கள் கியூப, வியட்நாமிய மார்க்சியவாதிகளே, டிசெம்பர் 1960-ல் லே டுவான் வியட்நாமிய தொழிலாளர் கட்சியின் மூன்றாவது அமர்வின்போது மத்திய குழுவிற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் பின்வருமாறு கூறுகின்றார். “எமது காலகட்டத்தில் தேசிய விடுதலை இயக்கமும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இயக்கமும் மிக நெருங்கி பின்னிப் பிணைந்துள்ளன. சோசலிச புரட்சியை அவை இலக்காகக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது.”

“வியட்நாமிய புரட்சி - அடிப்படைப் பிரச்சினைகள், அத்தியாவசியமான பணிகள்” (1973) என்ற தலைப்பில் லே டுவான் எழுதிய மிகச் சிறந்த ஆய்வில் அவர் வருமாறு கூறியுள்ளார்: “இன்றைய யுத்தத்தில் தேசிய சுதந்திரமும், ஜனநாயகமும். சோசலிசமும் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன. இதுவே எமது காலகட்டத்தில் மிகப் பெரிய உண்மையாகும்.” லே டுவான் தனது கருத்தை வலியுறுத்தும் மூலங்களாக ஸ்ராலின் சோவியத் யூனியனின் கம்யூனிச கட்சியின் 19வது மகாநாட்டில் ஆற்றிய உரையையும், ஹோசிமினுடைய கூற்றையும் மேற்கோள் காட்டுகின்றார். ஹோசிமினுடைய கூற்று வருமாறு: “உலகத்திலேயுள்ள அடக்கியொடுக்கப்பட்ட தேசிய இனங்களையும், உழைக்கும் மக்களையும் சோசலிசத்தினால் மட்டுமே, கம்யூனிசத்தால் மட்டுமே, அடிமை நிலையிலிருந்து விடுதலை செய்ய முடியும்”. டிசெம்பர் 1976-ல் கூடிய வியட்நாமிய கம்யூனிச கட்சியின் நான்காவது மகாநாடு வருமாறு குறிப்பிட்டது: “இன்றைய வரலாற்று சூழ்நிலையில் முதலாளித்துவம் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வழக்கற்றுப்போன பிற்போக்குச் சக்தியாக அது இன்று காட்சியளிக்கின்றது. சோசலிசமே எல்லா நாடுகளதும் போராட்டத்தின் உடனடி இலக்காக விளங்குகின்றது. இன்று போல் சோசலிச புரட்சியின் வளர்ச்சிக்கு உள்ளாந்த சாத்தியப்பாடுகள் முன் எப்பொழுதுமே இருந்ததில்லை. தேசிய சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் போராடும் எல்லா இயக்கங்களும் சோசலிசத்துடன் பின்னிப் பிணைந்து சோசலிசத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன. சோசலிசப்பாதை உண்மையான சுதந்திரத்தினை உறுதிப்படுத்தி நவ காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து அவற்றைப் பாதுகாக்கின்றது. காலம் கடந்துவிட்ட பூர்சுவா ஜனநாயகத்தின் எல்லைக்கட்டுகளுக்கு வெகுதூரத்திற்கு அப்பால் செல்லும் உண்மையான ஜனநாயகத்தைப் பெரும்பாலான மக்களுக்கு அது உறுதிப்படுத்துகின்றது. “அக்டோபர் புரட்சியும் வியட்நாமிய புரட்சியும்” என லே டுவான் ருஷ்யப் புரட்சியின் அறுபதாவது ஆண்டு விழாவையொட்டி எழுதிய கட்டுரையில் இதே கருத்தினை மிகத் திறம்பட வலியுறுத்தி எடுத்துரைக்கின்றார்.

ஜனநாயக கட்டத்திலிருந்து சோசலிச கட்டத்திற்குப் புரட்சி வளர்ந்து மாறுகின்றது என்ற முடிவு ரொட்சியின் கூற்றுக்கள் சரியானவை என்றோ, ஜனநாயக தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பத்திலிருந்தே சோசலிச தன்மை வாய்ந்ததென்றோ கூறுவதற்கில்லை லெனின் எழுதிய “தொலைவிலிருந்து எழுதப்பட்ட கடிதங்கள்” “யுக்தி முறைகள் பற்றிய கடிதங்கள்”, “ஏப்ரல் கருத்துரைகள்” ஆகியவை அவர் ரொட்சிய கருத்து நிலைப்பாட்டினை ஏற்று ரொட்சியின் நிரந்தரப் புரட்சி என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டார் என்பதை எள்ளளவிலும் புலப்படுத்தவில்லை. இக்கருத்தினைக் கிரம்சி தெட்டத் தெளிவாக்குகின்றார். லெனினுக்குப் பின்னர் ஐரோப்பா கண்ட மிக ஆக்கபூர்வமான மார்க்சியவாதியான கிரம்சி “சிறைச்சாலைக் குறிப்பேடு”களில் பின்வருமாறு எழுதுகின்றார். “தனது கொள்கை உண்மையானதென எண்பிக்கப்பட்டுவிட்டதாக தனக்கு கூறப்பட்டதாக புறொன்ஸ்ரைன் தனது நினைவுக் குறிப்புகளில் கூறுகின்றார்…. அதுவும் 15 ஆண்டுகளுக்குப் பின்னர். உண்மையில் 15 ஆண்டுகளுக்கு முன்னரும் அது வலுவற்றது, 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் வலுவற்றது. பிடிவாதக்காரருக்கு நடப்பது போன்று அவர் கிட்டத்தட்ட சரியாகவே ஊகித்தார். அதாவது ஒரு பொதுப்படையான நடைமுறைப் போக்கில் அவர் கூறியது சரியே. நான்கு வயதுச் சிறுமி தாயாவாள் என தீர்க்கதரிசனம் கூறி 20 வயதில் அவர் தாயானதும் “அவள் தாயாவாள் என நான் ஊகித்தேன்” எனக் கூறுவதைப் போல் இது இருக்கின்றது. அவள் நான்குவயதுச் சிறுமியாக இருந்தபோதே அவள் தாயாகக்கூடும் என்ற நம்பிக்கையில் அவளைக் கற்பழிக்க முயன்றதை இது புறக்கணிப்பதாகும்.”

இறுதியாக, புரட்சிகர நிக்கரகுவாவிலே சோசலிசக் கட்டத்திற்கு மாறுவதில் எழும் பிரச்சனைகளையும், எதிர்பார்ப்புக்களையும் சுருக்கமாகவேனும் ஆராய்வோம்.

புதிய நிக்கரகுவா

பொருளாதார அமைப்பைப் பொறுத்தவரை, சொமோசா குடும்பத்தினரதும் அவர்களோடு ஒத்துழைத்தவர்களதும் சொத்துக்கள் புரட்சியாளரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் சொமோசாவாதத்தின் பொருள் அடிப்படை நொருக்கப்பட்டுள்ளது. அத்துடன் சன்டினிஸ்;டா செயற்திட்டத்திலே அளிக்கப்பட்டிருந்த ஒரு அடிப்படை வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. சோமோசாவின் நிக்கரகுவாவிலே சொத்துடைமை மிகச் சிலரின் கைகளிலே இருந்தமையினால் இந்த பறிமுதல்களினாலும், சொமோசாவாதிகள் தமது சொத்துடைமைகளை கைவிட்டு நாட்டையேவிட்டு ஓடிச் சென்றமையாலும், பொருளாதார அமைப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கணிசமான பகுதி அரசவசம் ஒப்படைக்கப்பட்டது. பல சோசலிச சமுதாயங்களிலே புரட்சிக்கு உடன் பின்வந்த ஆண்டுகளிலே அரச உடைமையாக்கப்பட்ட சொத்துக்களைவிட நிக்கரகுவாவிலே அரச வசமாகியுள்ள பொருளாதார அமைப்பின் விகிதம் கூடுதலானது என்றால் மிகையாகாது. இதனால் அனுகூலங்களும் பிரதிகூலங்களும் எற்பட்டுள்ளன. ஏனென்றால் தன்னை முற்றுமுழுதும் தயாராக்கிக்கொள்ள முன்னர் புதிய அரசு மிகமிகச் சிக்கலான பணிகளை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது.

இருப்பினும், நிக்கரகுவா பொருளாதாரத்தின் கணிசமான பகுதி, ஏன் பெரும் பகுதி என்றும் கூறலாம். தனியார் கைகளிலேயே தொடர்ந்தும் இருக்கின்றது. இவர்கள்தான் நாம், சன்டினிஸ்டாக்களைப் பின்பற்றி சொமோசாவிற்கு எதிரான அல்லது அவரைச் சாராத பூர்சுவா வர்க்கம் என்று நாம் அழைத்த சொத்துடைமை வர்க்கங்களின் ஒரு பின்னம். புரட்சிகர நிகழ்வுத் தொடரிலே இப் பகுதியினரின் மாறுபடும் பங்கினையும், செயற்பாட்டினையும் நாம் ஏற்கனவே சுருக்கமாக ஆராய்ந்துவிட்டோம்.

அரச உடைமையை அளவு கோலாகக் கொண்டு ஒரு சமுதாயம் சோசலிச பாதையினைக் கடைப்பிடிக்கின்றதா இல்லையா எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. அல்ஜீரியாவில் பொருளாதார அமைப்பின்மீதான அரச கட்டுப்பாடு மிக அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும் உற்பத்தி உறவுகள் - எனவே சமூக உறவுகளும் - முதலாளித்துவ சுரண்டலின்பாற்பட்டவையே. இதற்கு பர்மான இன்னொரு உதாரணம். திரிபுவாத பிரச்சாரர்களே அல்ஜீரியாவையும் பர்மாவையும் சோசலிச பாதையைக் கடைப்பிடிக்கும் நாடுகளாக வர்ணிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார கட்டமைப்பின் இயல்பினை ஆராயும்போது உண்மையான உற்பத்தி உறவுகளைப் பொருட்படுத்தாமல் சொத்துடைமையின் சட்ட வடிவங்களை இயந்திரப்பாங்கான கொச்சை மார்க்சியவாதிகளே அடிப்படையாகக்கொள்ளக் கூடியவர்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாயம் முற்போக்கு நெறிப்பாடுடையதா இல்லையா என்பதனைத் தீர்மானிப்பதற்கு எவ்வாறு சட்டரீதியான அரச உடைமையை பிரதான அளவு கோலாகக் கொள்ள முடியாதோ, அதேபோன்று புரட்சிக்கு உடன் பின்பட்ட சூழ்நிலையில் நிலவும் தனியார் சொத்துடமையைக் கொண்டு அந்தப் புரட்சியின் ஆழத்தையோ தன்மையையோ அளவிட முடியாது. இத்தகைய மதிப்பீட்டுத் தவறுகள் பொருள்வாதத்தின்பாற்பட்டவை. ஒரு புரட்சியைப் பொறுத்தவரை மையக் கேள்வி என்னவென்றால் எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் அரச அதிகாரத்தை வகிக்கின்றன. அரச அதிகாரமே மையப் பிரச்சினை என்பதனை பொருள்வாதிகள் உணரத் தவறுகின்றனர். அரசின் வர்க்கத் தன்மையே முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை. வேறு சொற்களில் கூறுவதானால், அரசியல் மட்டத்திலேயே மையப் பிரச்சினை பொதிந்திருக்கிறது. இந்த அர்த்தத்தில் அரசியலே அரசோச்சுகின்றது. எனினும் மாவோவாதத்தைப் போன்று இதனை நாம் விளங்கிக்கொள்ளக் கூடாது. ஒரு சமூக கட்டமைப்பிலே அரசியற் துறை ஓரளவிற்குத் தன்னாட்சி வாய்ந்தது என்பதனை நாம் கணக்கிலெடுக்க வேண்டும்.

சொமோசாவை எதிர்த்த தாராள பூர்சுவா வர்க்கத்தினரின் சொத்துக்களைச் சன்டினிஸ்டாக்கள் தற்பொழுது பறிமுதல் செய்ய மறுப்பதையும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட உடன்பாட்டிற்கமைய தேசிய புனருத்தாரண திட்டத்தினைச் செயற்படுத்துவதை அவர்கள் வற்புறுத்துவதையும் ரொட்சியவாதிகள் சாடுகின்றனர். குட்டி பூர்சுவா சன்டினிஸ்;டாக்கள் வர்க்க போராட்டத்தை மட்டுப்படுத்தி, முதலாளித்தவத்திற்கு வக்காலத்து வாங்கி அதனைப் பேணிப் பாதுகாக்கின்றனர் என ரொட்சியவாதிகள் குற்றம் சுமத்துகின்றனர். 1920களின் நடுப்பகுதிகள் வரை பரந்துபட்ட தேசியமயமாக்கல் நடவடிக்கைகளை வெற்றியீட்டிய விமர்சகர்கள் மறந்து விடுகின்றனர். சீனாவிலே புரட்சிக்குப் பின்னர் வகுக்கப்பட்ட முதலிரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் தனியார் முயற்சிகளுக்கு கணிசமான வாய்ப்பினை அளித்தது. 1955-ம் ஆண்டளவில்தான் தனியார் துறையினைச் சுருங்கச் செய்யும் நடவடிக்கைகள் விரிவாக்கப்பட்டன. 1946-ல் வரையப்பட்ட வியட்நாமிய ஜனநாயக அரசமைப்பு வியட்னாமிய பிரஜைகளின் சொத்துரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது. ஓகஸ்ட் 1945-ம் ஆண்டிலே வியட்னாமிய ஜனநாயகக்கூடியரசு நிறுவப்பட்டது. இதற்குப் பின்னர் முதல் நான்கு ஆண்டுகளில் விவசாயத் துறையிலே மட்டமான சிறு சீர்த்திருத்தங்களே மேற்கொள்ளப்பட்டன. குத்தகைத் தொகைகள் குறைக்கப்பட்டதுடன். நாட்டுப்பற்றற்ற நிலக்கிழார்களின் காணிகள் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டன. விவசாய சொத்துடைமைப் புரட்சி 1953-ல் தான் தொடங்கியது. 1954லிலே, இந்தக் கொள்கைகளைச் செயற்படுத்துவதில் சில “வீரதீர” கட்சி ஊழியர்களி;ன் (காடர்ஸ்) தவறுகளினால் தோழர் ரூயோங் சிங் தற்காலிகமாகப் பதவியிறக்கப்பட்டார். விவசாயி மக்களிடம் ஜனாதிபதி ஹோசீமின் மன்னிப்புக் கோரினார். போலந்திலே பண்ணைக்குரிய காணிகளில் 2ஃ3 பங்கு இன்னும் கூட்டுப்பண்ணை முறைகளுக்குட்படாதிருக்கின்றன. போலந்திலே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையும் அங்கு நிலவும் திரிபுவாத மதகுரு-தேசியவாதப் போக்குகளையும் இது பெருமளவுக்கு விளக்குகின்றபோதிலும் இதனால் போலந்து அல்ஜீரியாவைவிட (அலஜீரியாவிலே தனியார் நிலவுடைமை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பினும்) சோசலிசத்தன்மை குறைந்த நாடாகக் கொள்வதற்கில்லை.

வெற்றியீட்டும் ஒவ்வொரு புரட்சியும் “புதிய பொருளாதார செயற்திட்ட” கட்டத்தினை அனுபவித்தே ஆக வேண்டுமென ஸ்ராலின் எதிரணியினருடன் நடாத்திய சர்ச்சையின்போது விளக்கினார். இத்தகைய ஒரு கட்டத்தினைத்தான் நிக்கரகுவா இன்று அனுபவிக்கிறது. கம்பட்டோ ஒட்டேகா போன்ற சன்டினிஸ்டாத் தலைவர்கள் இந்த மாறிச்செல்லும் கட்டத்தினை “வெகுஜன-ஜனநாயகக் கட்டம்” என வர்ணித்துள்ளனர். எல்லோரிடமிருந்தும் பொருளாதார உதவியினை சன்டினிஸ்டாக்கள் நாடுவது உண்மையே. இதனால் “புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டது” (மீண்டுமா?!) என உடனே ரொட்சியவாதிகள் ஓலமிடத் தொடங்கியுள்ளனர். சந்தைத் தேடுதலும், போட்டியிடுதலும் முதலாளித்துவத்தில் உள்ளடங்கியிருப்பதனால் “நாம் அவர்களைத் தூக்கிலிடப் பயன்படுத்தும் கயிற்றையே ஏகாதிபத்தியவாதிகள் எமக்கு விற்பனை செய்வார்கள்” என லெனின் கூறினார். 1920-23 வரையிலான காலப்பகுதியில் லெனின் ஆற்றிய உரைகளிலிருந்தும், எழுத்துக்களிலிருந்தும் வெளிநாட்டு முதலீட்டாளருக்கு அவர் எந்தளவு சலுகைகளை அளிக்கத் தாயாராக இருந்தார் என்பது புலப்படுகின்றது. இதனையிட்டுத் தொழிலாளர் எதிரணி அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் படிப்பதற்குச் சுவையானவை. அவற்றின் எதிரொலிகளை “முதலாளித்துவத்தை மீண்டும் நிலைநாட்டுகின்றனர்” என சீனர் சோவியத் மீது சுமத்திய குற்றச்சாட்டிலும், இன்று பலர் அதே குற்றச்சாட்டினைச் சீனர் மீது சுமத்துவதிலும் இன்றும் கேட்கக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவிடமிருந்து கோடிக்கணக்கான டொலர்களை நட்டஈடாக வியட்னாமியர் கோரிய அதே வேளையில் 1976-ல் வெளிநாட்டு முதலீட்டாளருக்கான ஒரு ஒழுக்கக்கோவையினையும் தயாரித்தனர். கடற்கரை சார்ந்த எண்ணைவள ஆய்வுகளுக்கு ஜப்பானியரின் ஒத்துழைப்பைப் பெறுவதே இத்திட்டத்தின் தலையாய நோக்கமாயிருந்தது.

எனவே, கொமான்டன்ட் ஜெயிம் விலோக் இன்று விவசாயத் துறை சீர்திருத்த அமைச்சரான இவர் பற்றுறுதிமிக்க மார்க்சியவாதியும் கூட - கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில் சன்டினிஸ்டாக்கள் ஏகாதிபத்தியத்தின் பணத்தைப் பயன்படுத்தி சோசலிசத்தைக் கட்டியெழுப்புவார்கள் பணத்தைப் பயன்படுத்தி சோசலிசத்தைக் கட்டியெழுப்புவார்கள் என அடித்துக் கூறியபோது அவர் நடைமுறைக்குச் சாத்தியமான ஒன்றையே குறிப்பிட்டார். தொழிலாளர் வர்க்கப் போக்கினைச் சார்ந்த விலோக் ரொட்சிய வாதத்தினை காரசாரமாக விமர்சிப்பவரும் ஆவார். பொருளாதார சீர்குலைவுகளை இயன்றளவுக்குக் குறைத்து மட்டுப்படுத்துவது இன்றியமையாதது என விலோக் விளக்கினார். இத்தகைய சீர்குலைவுகளும் தட்டுப்பாடுகளும் இடைநிலைப்பட்ட மட்டத்தினரைப் புரட்சி முகாமிலிருந்து துரத்தி அவர்களை எதிர்ப்புரட்சி முகாமுக்கு தள்ளி விடுமென அவர் மேலும் குறிப்பிட்டார். சிலியின் அனுபவத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட படிப்பினை இதுவே.

தவறான புரிதலுக்கு இடமே இருக்கக் கூடாது. சுரண்டும் வர்க்கங்கள் அனைத்தையும் அழித்தொழிப்பதையே சோசலிசம் குறிக்கின்றது. சிறு கைத்தொழிலையும், சில்லறை வியாபாரத்தையும்கூட இறுதியிலே சமூகமயப்படுத்தலை இது உள்ளடக்கும். எதிர்காலத்திலே ஏதோ ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சினையோடு சன்டினிஸ்டா தலைமை மல்லுக்கட்டியே ஆகவேண்டும். இது எப்பொழுது நடைபெறும்? மோதல்களின் வழியாகச் சுரண்டும் வர்க்கங்கள் பலாத்காரமாக வேரோடு பிடுங்கி எறியப்படுவார்களா? அல்லது தேசிய பூர்சுவா வர்க்கத்தின் உளப்பாங்கு அமைதியான முறையில் மாற்றியமைக்கப்படுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்தக் கட்டத்தில் திட்டவட்;டமான விடைகளை நாம் அளிக்க முடியாது. அமைதியான முறையில் தேசிய பூர்சுவா வர்க்கத்தின் உளப்பாங்கை மாற்றியமைக்கும் வழியை மாவோசேதுங்கும் கோசீமின்னும் தகவுரை செய்தனர். இந்தக் கருத்து மார்க்சிடமிருந்து பெறப்பட்டது. வெற்றியீட்டிய தொழிலாள வர்க்கம் பூர்சுவாக்களை “வாங்கி விடும்” சாத்தியப்பாடு பற்றி மார்க்ஸ் ஒரு இடத்தில் குறிப்பிட்டார். இது குறித்து என்வகோசா மாவோவை கடுமையாக விமர்சித்தார். உண்மையில் எந்தவொரு வழியையும் பொதுமைப்படுத்த முடியாது. இரண்டு வழிகளையும் கலந்து இணைப்பதே பெரும்பாலும் சாத்தியமாக இருக்கும். பொதுப்படையான கொள்கை நெறிகளால் பிரச்சினையை தீர்க்க முடியாது. ஒரு நாட்டில் நிலவும் சமூக சக்திகளின் உண்மையான சமநிலையும், அச்சமநிலையில் ஏற்படும் மாறுதல்களுமே இவ் பிரச்சிiiயைத் தீர்த்து வைக்கும்.

ஒரு சோசலிச பொருளாதார அமைப்பினை கட்டியெழுப்புவதென்றால் பூர்சுவா வர்க்கத்தின் மீது கட்டுப்பாடுகளையும் தீர்க்கமான நடவடிக்கைகளையும் எடுத்தேயாக வேண்டும். நாட்டுப்பற்றும் தாராளமனப்பான்மையும் ஜனநாயகப் பற்றுமுள்ள இந்த வர்க்கத்தின் பகுதியினர் மீதும் கூட இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டேயாக வேண்டும். ஆனால் இந்த சோசலிசப் பணி நிக்கரகுவாவின் உடனடிப் பணிகளாக இல்லை. சோசலிசத்தை நோக்கிச் செல்வதென்பது சாராம்சத்தில் ஒன்றாக இருப்பினும், அதாவது தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம் வௌ;வேறு தேசிய நிலைமைகளும், சமூக சூழ்நிலைகளும் ஏற்ப தவிர்க்க முடியாதவாறு சோசலிசத்தை நோக்கிய இடைமாறுபாட்டுக் காலங்கள் என லெனின் கூறினார். எனினும் இதனை மார்க்சியவாதிகள் எப்பொழுதும் உணர்ந்தவர்களாயில்லை. சோசலிசத்தை நோக்கிய பல்வேறு தேசிய மார்க்கங்கள் என்ற எண்ணக்கருவுக்கு உதட்டளிவிலேயே பெரும்பாலும் வரவேற்பிருந்திருக்கிறது. இந்த தவறின் எதிர்த் துருவ தவறானது திரிபுவாதம்பாற்பட்டது. சாராம்சம் தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதை அது மறந்து விடுகின்றது. புரட்சிகர நிக்கரகுவாவில் இன்றைய இசைமாறுபாட்டுக் கட்டத்தின் சுட்டிப்பான வடிவத்தினை அந்நாட்டின் மரபுகளும் தேசியத் தன்மைகளும் உருவாக்கியிருக்கின்றன.

புரட்சிகர நிக்கரகுவா எந்த மார்க்கத்தை கடைப்பிடிக்கும்? சோசலிப்பாதையா, முதலாளித்துவப் பாதையா வெல்லும்? என்பது பொருளாதாரத் துறையை விட அடிப்படையிலே (முற்று முழுதாகவல்ல) அரசியல் துறையில்தான் தீர்மானிக்கப்படும். பொருளாதார அமைப்பின் எந்தளவு பகுதியினை அரசு கட்டுப்படுத்துகிறது என்பதல்ல முக்கிய கேள்வி, யார் அரசைக் கட்டுப்படுத்துகின்றனர் என்பதுதான் முக்கிய கேள்வி.

சன்டினிஸ்டா கைவசம்

நிக்கரகுவாவில், அடிப்படைப் பிரச்சனை - அரச அதிகாரம் - புரட்சிகர முறையில் தீர்க்கப்பட்டது. சொமோசாவின் அடக்குமுறை இயந்திரம் - தேசியப்படை - அழித்தொழிக்கப்பட்டது. இந் நடவடிக்கையும் சொமோசா கட்டியெழுப்பிருந்த பொருளாதார இராச்சியம் கலைக்கப்பட்டதும் சன்டினிஸ்டாக்களின் செயற்திட்டத்தின் மையம் எனலாம். இதனால் சுரண்டப்பட்ட வர்க்கங்கள் மட்டுமல்ல முழு நாடுமே இறுதியிலே சன்டினிஸ்டாக்களுக்கு ஆதரவு வழங்கத் தொடங்கியது. அமெரிக்காவும், அன்டியன் ஒப்பந்த நாடுகளிலுள்ள சில அரசியல் சக்திகளும் கடைசி நிமிட இராஜதந்திர நமவடிக்கைகளையும் நெருக்குவாரங்களையும் மேற்கொண்டன. தேசிய படையையும், ஆமா போட்டு வந்த தேசிய சபையையும், சொமோசாவின் “தாராள” கட்சியையும் பேணி பாதுகாப்பதே இவற்றின் நோக்கமாயிருந்தது. இம் மூன்றுமே சொமோவாத மேலாதிக்கத்தின் அரசியல் இயந்திரமாய் இருந்தது. சன்டினிஸ்டாக்களும், 5 பேர் அடங்கிய புரட்சிகர குழுவும் இந்த ஆலோசனையை ஓரேயடியாக நிராகரித்தன. இறுதியிலே ஆயுதச் சமரில் தேசியப்படை பலவந்தமாக சிதைக்கப்பட்டது. “தாராள” கட்சி கலைக்கப்பட்டது. பழைய தேசிய சபை ஒழிக்கப்பட்டது. எனவே சொமோசாவாதம் கட்டியெழுப்பிய பொருளாதார இராச்சியமும், அதனுடைய அரச இயந்திரமும் புரட்சிகர முறையில் அழித்தொழிக்கப்பட்டன. பூர்சுவா அரசு அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.

“அரசாங்கத்திற்கும்” “அரசிற்கும்” இடையே அரசியற் துறையில் வேறுபாடு காணப்பட வேண்டும். இந்த வேறுபாட்டினைப் பற்றி 19424-25 இலும், மீண்டும் 1930 களிலும் ஸ்ராலின் விளக்கினார். ஆரசாங்கம் அரச இயந்திரத்தின் மேற்தட்டு என்றும், இந்தத் தட்டே நாளாந்த முடிவுகளை எடுக்கின்றது என்றும் அவர் வருணித்தார். ஆனால் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு முரணான கொள்கைகளை அரசாங்கம் மேற்கொள்வது சாத்தியம். அவ்வாறு நிகழுமாயின் அரசாங்கத்திற்கும், அரசிற்கும் இடையே முரண்பாடு தோன்றும். இத்தகைய ஒரு நிலைமையில் அரசினூடாகச் சொத்துடைமை உறவுகளின் அமைப்பும், ஆளும் வர்க்கத்தின் நீண்டகால நலன்களும் தமது மேலாதிக்கத்தை அரசாங்கத்தின் கொள்கைகள் மீதும் நிலைநாட்டும். அப்பொழுது அரசாங்கம் அரசிற்கு கீழ்ப்படியும். அல்லது அரசாங்கத்தை இராணுவம், அதாவது அடக்கியொடுக்கும் அரச இயந்திரம் கழிழ்த்தது.

புதிய நிக்கரகுவாவின் தன்மை இறுதியிலே தீர்மானிக்கப்படும் மட்டம், அரசியலும் பொருளாதாரமும் இணைந்த மட்டங்களே. இந்த மரண்டு மட்டங்களிலும் அரசியல் மட்டமே தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு மேலும் நாம் சென்று அரசியற் துரையிலேயே அரசாங்கத்திற்கும், அரசுக்கும் இடையே வேறுபாடு காணவேண்டும். அரசே தீர்க்கமான காரணி எனலாம். இதனை வலியுறுத்துவதற்குக் காரணம் பெரும்பாலான ரொட்சிய வாதிகளும் வேறு வரட்டுவாதிகளும் புரட்சிகரக் குழுவையும், அமைச்சரவையையும், அரசு சபையையும் உருவாக்குவதில் சன்டினிஸ்டாக்கள் விட்டுக் கொடுத்து விட்டனர் என குற்றம் சாட்டுவதே. இவ்வாறு குற்றம் கண்டவர்கள் ஒன்றை உணரத் தவறி விடுகின்றனர். அரசாங்கமோ அதன் அமைப்போ அதனுள்ளே நிலவும் சமநிலையோ தீர்க்கமான காரணியல்ல. அரசாங்கத்திற்குப் பின்னால் நிற்கும் அரசியல் இராணுவ சக்தி, அதாவது அரச அதிகாரத்தை உண்மையில் கையாளும் சக்திதான் தீர்க்கமான காரணி. எனவே சன்டினிஸ்டா தேசிய நெறியாளர் குழுவே முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் களத்தளபதிகள் இடம் பெற்றிருக்கின்றனர். இந்தக் குழுவே நிக்கரகுவாவில் புதிய அரசியல் அதிகாரத்தின் மையம். வெற்றியீட்டிய புரட்சிகர சன்டினிஸ்டா படை - அதற்கு தலைமை தாங்குவது இந்தக் குழுவே தன்னைப் பலப்படுத்தி “சட்டத்திற்குட்பட்ட பலாத்காரத்தின் ஏகபோக உரிமையை “தன்கைவசமே வைத்திருக்கிறது. இது அடிப்படைகேந்திர முக்கியத்துவம் வாயந்த அரசியற் காரணியாகும். தூராள பூர்சுவா மேலாதிக்கம் நிலவும் அரசாங்க அமைபுக்களுக்கும், புதிய அரசின் மிக முன்னேற்றமான, முதலாளித்துவ தன்மையற்ற பலாத்கார இயந்திரத்திற்கும் இடையே இசைவின்மை நிலவுவது உண்மையே. ஆயினும் அரசியல் அதிகாரம் ‘துப்பாக்கி முனையில்தான் பிறக்கின்றது என்பதனை நாம் மறத்தலாகாது. புதிய நிக்கரகுவாவிலே அந்த துப்பாக்கியை உறுதியாகப் பிடித்திருப்பது சன்டினிஸ்டாக்களின் கைகளே.

இவ்வளவையும் கூறிய பின்னர் வேறு மட்டங்கள் பற்றி நாம் எண்ணிப் பார்ப்போம். ஆயுதந் தரித்த சன்டினிஸ்ட முன்னணி சூனியத்தில் வாழவில்லை. அது அந்தரத் தாமரையுமல்ல. நாம் முன்பு கூறியது போல, சன்டினிஸ்டாக்கள் வெகுஜன இயக்கத்துடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. ஆகவே வெகுஜன நிறுவனங்களை உருவாக்குவதில் அதுவே தலையாய காரணி. போராட்ட காலத்தைப் போன்று இன்று வெற்றியிலும் சன்டினிஸ்டாக்கள் வெகுஜனங்களுடன் இரண்டறக் கலந்துள்ளனர். போராட்டத்திலும் போராட்டத்தினூடாகவும் சன்டினிஸ்டாக்களே மக்களின் கூட்டு மனதில் மேலாதிக்க நிலையினை எய்தி இருக்கின்றனர். 1959ல் கியூபா புரட்சி வெற்றியடைந்த காலத்தையும் விட நிக்கரகுவா புரட்சி கூடிய முன்னேற்றமான வெகுஜன நிறுவனங்களை தோற்றுவித்திருக்கிறது என இப்பொழுது உள்நாட்டமைச்சராக இருக்கும் தோமஸ் போஜ் (இவர் மிக நீண்டகால சன்டினிஸ்டா) 1979ன் பிற்பகுதியில் நியூஸ்வீக் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார் ஹவானா மீது கிளர்ச்சியாளரின் படை மேற்கொண்ட இறுதித் தாக்குதலையும் விட நிக்கரகுவாவிலேற்பட்ட இறுதிக் கிளர்ச்சி மிக உக்கிரம் வாய்ந்ததாய் இருந்தமையோடு இதை நாம் தொடர்புபடுத்தலாம். கியூபாவின் யூலை 26 இயக்கத்திலே காணப்பட்ட அறிவுணர்வையும் அமைப்பையும் விட நிக்கரகுவாவின் வெகுஜன இயக்கத்தின் அறிவுணர்வும் அமைப்பும் மேலானது. 1959லிருந்த கியூபா கிளர்ச்சியாளர் படையை விட சன்டினிஸ்டாக்களின் அரசயில் மயத்தன்மை இன்றியமையாதவாறு, தவிர்க்க முடியாதவாறு மேலானது. ஆரசயில் அதிகாரம் துப்பாக்கி முனையிலிருந்து எழுகின்றதென்றால், அந்தத் துப்பாக்கியை ஏந்தும் கரம் சன்டினிஸ்டாக்களின் கரம் என்றால் அந்தக்கரத்திற்குப் பின்னாலுள்ள புயம் வெகுஜன இயக்கத்தினுடையது. உடல்-வெகுஜன சமூகத்துறைகள், அதாவது தொழிலாள விவசாய வெகுஜனங்களாகும். பூர்சுவா மேலாதிக்கத்தையுடைய அரசாங்க அமைப்புக்களில் பொதிந்துள்ள முரண்பாடுகள் விரோத முரண்பாடுகளாக மாறுமிடத்து சன்டினிஸ்டா படைகளே முரண்பாட்டின் அடிப்படை அம்சமாக தோன்றுமெனலாம். இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கத் துறைகளை யெடுக்கலாம். இதன் மூலம் எஞ்சியிருக்கும் ஏதேனும் பூர்சுவாப் பின்தள்ளலாம். 2ம் உலகப் போருக்குப் பிற்பட்ட ஐரோப்பாவின் மக்கள் ஜனநாயக அரசுகள், தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்திற்கு மாறியமை இதற்கு உதாரணங்களாகும். முhறாக போர்த்துக்கலிலே சமூக ஜனநாயகமும், ஏகாதிபத்தியமும் புரட்சிகர இடதுசாரிகளையும் அவர்களோடு நின்றவர்களையும் தோற்கடித்துவிட்டன. இதிலிருந்து இடை மாறுபாட்டுக் கட்டங்களில் சோசலிசத்தின் வெற்றி தவிர்க்கமுடியாத ஒன்றல்ல என்பது புலனாகின்றது. பழைய அமைப்பு மீண்டும் நிலைநாட்டப் படுவது தர்க்க ரீதியாக சாத்தியமே. சொமோசாவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்தி, ஆயுதப் போராட்டத்தின் மூலம் சன்டினிஸ்டாக்கள் வென்றெடுத்த மேலாதிக்கத்தினை பூர்சுவாப் பகுதியினர் அவர்களிடமிருந்து பறித்து கணிசமான காலப் பகுதிக்கு தம்வசமாக்கிக் கொள்வது மிக மிகக் கடினமே. சன்டினிஸ்டாக்களின் அரசியல் - இராணுவ சக்தியும், வெகுஜன நிறுவனங்களின் சமூக பலமும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

இக்கட்டத்தில் இன்னொரு வகை ஆட்சேபனை கிளப்பப்படலாம். சுpலரால் கிளப்பப் பட்டும் இருக்கின்றது. அல்ஜீரியாவை உதாரணம் காட்டி அங்கு நடைபெற்றது போல், இராணுவமே நெப்போலியன் பொனபாட்பாணி பங்கினை ஏற்று புரட்சி மூலம் வென்றெடுக்கப்பட்ட சமூக பலன்களை விட்டெறிந்து அண்டி வாழும் அரச முதலாளித்துவத்தை கட்டியெழுப்பாதா? என அவர்கள் வினவுகின்றனர். தேசியவாத இராணுவ-பொனபாட்வாதத்தினை ஒத்த பாத்திரத்தை சன்டினிஸ்டாக்களின் தேசிய நெறியாளர் குழு வகிப்பது சாத்தியமில்லையா? எனக் கேட்கப்படுகின்றது. ஓரளவு மேலோட்டமான ஒற்றுமைகள் இருந்தபோதிலும், பூமிதியனின் அல்ஜீரியா இராணுவத்திலிருந்து சன்டினிஸ்டாப்படைகள் தன்மையில் வேறுபட்டிருக்கின்றன என்பதே இதற்கு விடை. “துப்பாக்கி முனை” என்ற நூலில் ரூத் பேர்ஸ்ட இதனை விளக்குகிறார். முறைப்பட்ட அல்ஜீரிய இராணுவம் போரில் ஈடுபடாது ரியூனிசியாவில் நிலைகொண்டிருந்தது. ஆயுதப் போராட்டத்தில் உண்மையில் ஈடுபட்டிருந்த கெரில்லா குழுக்களையும் இந்த இராணுவத்தையும் பிரஞ்சுக்காரர் எல்லையில் கட்டியிருந்த காவல் நிலைகள் பிரித்தன நீண்ட அல்ஜீரியர்ஸ் போரில் அடைந்த தோல்வியினால் இந்த கெரில்லாக்கள் இராணுவ ரீதியாக பலவீனமுற்று இருந்தன. இந்தப் போர் பிரஞ்சுக்காரரை அரசியல் ரீதியாக பலவீனமுறச் செய்திருந்தது. டீ கொல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் ஈவ்வியான் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆக் கட்டத்தில் தேசியவாத இயக்கத்தினுள் மூன்று குழுக்களிடையே பலப் பரீட்சையும் செல்வாக்கும் போட்டியும் ஏற்படலாயிற்று. அக்குழுக்களாவன: பூர்சுவா சீர்திருத்தவாத அரசியல்வாதிகள், பூமிதியனின் முறைப்பட்ட இராணுவம், கொரில்லா ஆணைக்குட்பட்டிருந்த படைகள், ரியூனிசியாவில் நிலைகொண்டிருந்த முதலிரண்டு குழுக்கள் ஒன்றிணைந்து, ஏற்கனவே போராட்டத்தின் தாக்குதல் பாரத்தினால் இராணுவ ரீதியாக பலவீன முற்றிருந்த கொரில்லாக்களை தாக்கி நசுக்கின.

பின்னர், 1963-ல் சதியின் மூலம் முறைப்பட்ட இராணுவம் அரசியல் வாதிகளை (சீர்திருத்தவாதிகளையும், தீவிரவாதிகளையும்) கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.

நிக்கரகுவாவிலே நகர்ப்புற கிளர்ச்சிகளு;ககுத் தலைமை தாங்கிய பிரிவுகளுக்கும் கொஸ்டா எல்லைப்புறங்களிலிருந்து இயங்கிய படைகளுக்கும் இடையே வேறுபாட்டினைக் காணலாம். எனினும் அல்ஜீரியாவில் காணப்பட்டது போன்று, போரில் ஈடுபடாத முறைப்பட்ட இராணுவத்திற்கும், போரில் ஈடுபட்ட கெரில்லாப் படைகளுக்கும் இடையே பிளவு ஏதும் இங்கு இருக்கவில்லை. சன்டினிஸ்ட இராணுவத்திற்குத் தலைமை தாங்கும் தேசிய நெறியாளர் குழுவில் போர்களத் தளபதிகள் இடம் பெற்றிருக்கின்றனர். இது மக்களின் புரட்சிகர இராணுவம் மக்கள் யுத்தத்தின் போது அது உருவாகி, உருமாறி, பதப்படுத்தபட்டது.

அரசியல் மட்டத்திலிருந்து கோட்பாடு மட்டத்திற்கு இனி நாம் எமது கவனத்தை திருப்புவோம். தோழிலாள வர்க்கத்தின் கோட்பாட்டு ரீதியான மேலாதிக்கத்தை, செம்மையாக தொழிலாள வர்க்க கொள்கையின் தீர்க்கமான முக்கியத்துவத்தினை கிரம்சியும், மாவோவும் தத்தமது வழிகளில் அழுத்தியுள்ளனர்.

விடுதலை பெற்றுள்ள நிக்கரகுவாவில், ஒவ்வொரு மூலை முடக்கிலும் தளபதி சன்டினோவின் படங்கள் தொங்க விடப்பட்டிருத்தல் மிக முக்கியத்துவம் வாயந்த ஒன்று. ஏனெனில் சன்டினிஸ்டாக்களின் கோட்பாடு, நிக்கரகுவ புரட்சியில் மேலாதிக்கம் பெற்றுள்ள கோட்பாடு, (பூர்சுவா சீர்திருத்தவாதத்திலிருந்து இது வேறுபட்டது) சன்டினிஸ்டாவாதமே. வெகுஜனங்களின் பிற்போக்கான உணர்ச்சிகளுக்கு ‘தூய்மையான’ மார்க்சிச, லெனினிசவாதிகள் அளித்துள்ள சலுகையாக இதனை நாம் கொள்ளலாகாது. மாறாக, ஒவ்வொரு சன்டினிஸ்டா புரட்சியாளனின் உள்ளத்திலும் சன்டினோ வாழ்கின்றான். சுன்டினிசவாதம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பின், புரட்சிகர தேசியவாதத்தின் வலுவுள்ள வெளிப்பாடே. ஆதில் சமத்துவ சமூக உள்ளடக்கம் பொதிந்துள்ளது. ஏனெனில் அதன் அடித்தளம் தொழிலாள-விவசாய வெகுஜனங்களே. சீர்த்திருத்தவாத பூர்சுவா வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு சரணாகதி அடைந்த கட்;டத்தில்தான் சன்டினிஸ்டவாதம் ஏகாதிபத்தியத்திற்கெதிரான இந்த வெகுஜனங்களின் ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது. தனது நாடு கூட்டுறவுத் தன்மை வாய்ந்ததாய், சமத்துவம் நிறைந்ததாய் இருக்க வேண்டுமென்றே சன்டினோ கனவு கண்டார். கண்டிப்பாக நோக்குமிடத்து சன்டினிசவாதம் குட்டி பூர்சுவாக்களின் வர்க்க நிலைப்பாட்டோடு ஒத்திருக்கிறது எனக் கூறலாம். எனினும் அது தொழிலாள வர்க்க விஞ்ஞான சோசலிசத்திற்கு எதிரான குட்டிபூர்சுவா தேசியவாதம் என வரையறுத்து அதனைத் தட்டிக்கழிப்பது தவறாகும். காலனித்துவ, அரைக்காலனித்துவ, நவ காலனித்துவ நாடுகளில், மார்க்சிய லெனினிசவாதிகளை எதிர் நோக்கும் முக்கிய கேந்திர பிரச்சனைகளில் ஒன்று எவ்வாறு மரபையும், புரட்சியையும் ஒன்றிணைப்பதென்பதே.

வர்க்க நலன்களை சர்வதேச நலன்களுடன் இனங்காணும் பணியே இது லே டுவான் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முதல், லியூசெயோகி எழுதிய “எவ்வாறு நல்ல கம்யூனிஸ்டாக இருப்பது” என்ற நூலில் நல்ல சர்வதேச வாதியாக இருப்பதற்கு முதலில் நல்ல தேசியவாதியாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். அக்டோபர் 14ம் திகதி 1952ல் நடைபெற்ற 19வது கட்சி மகாநாட்டின் இறுதி அமர்வில் உரையாற்றிய (இதுவே அவரது இறுதிப் பொதுச் சொற்பொழிவு) ஸ்ராலின் மிக முக்கியமான கருத்தொன்றினைக் குறிப்பிட்டார். 2ம் உலகப் போருக்குப் பிற்பட்ட கால கட்டத்தில் பூர்சுவா வர்க்கம் தன்மையில் மாறி விட்டது எனக் குறிப்பிட்ட ஸ்ராலின், தமது நாடுகளின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் டொலர்களுக்காக பூர்சுவா வர்க்கத்தினர் விற்று தேசிய விடுதலையையும், தேசிய இறைமையையும் வெளியே தூக்கி வீசி விட்டனர் என்றார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜனநாயகக் கட்சிகளும் “அவர்கள் (பூர்சுவாக்கள்) வீசியெறிந்து விட்ட இந்தக் கொடியை எடுத்து முன் செல்ல வேண்டும், ---- நீங்கள் உங்கள் நாடுகளின் மீது பற்றுள்ளவர்களாக இருக்கவேண்டுமானால், உங்கள் நாடுகளிலே முன்னணிச் சக்திகளாக திகழவேண்டுமானால்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூற்றுக்கள் ஸ்ராலினிசவாதிகளுக்கே உரித்தான குறுகிய தேசியவாத திரிபுகளென எண்ணுவது தவறு. டிசம்பர் 1914ல் லெனின் இவ் வினாவினை எழுப்பி அதற்கு வருமாறு விடையளித்தார்: “அறிவொளிபெற்ற பெரிய ரஷ்ய தொழிலாளராகிய நாம் தேசியப் பெருமையை உணராதவர்களா? ஒரு போதும் இல்லை. எமது மொழியையும் எமது தாய் நாட்டையும் நாம் நேசிக்கின்றோம். வேறு எக் குழுவினரையும் விட, நாமே இந் நாட்டின் உழைக்கும் பொது ஜனங்களின் (இந்நாட்டின் மக்கள் தொகையில் 9ஃ10 வீதத்தினர்) நிலையை உயர்த்தி அறிவுவாய்ந்த ஜனநாயகவாதிகளாகவும், சோசலிசவாதிகளாகவும் ஆக்கப் பாடுபடுகின்றோம். பெரிய ரஷ்ய தொழிலாளர்களாகிய நாம் தேசியப் பெருமையால் நிறைந்தது, சுதந்தர, இறைமை வாய்ந்த, ஜனநாயக, பெருமைவாய்ந்த பெரிய ரஷ்ய தொழிலாளர்களாகிய நாம் தேசியப் பெருமையால் நிறைந்து, சுதந்திர, இறைமை வாய்ந்த, ஜனநாயக, பெருமைவாய்ந்த பெரிய ரஷ்யக் குடியரசை பெரிய ரஷ்யர்களின் தேசியப் பெருமை (இதனை இழிவான முறையில் விளங்கிக் கொள்ளக் கூடாது) பெரிய ரஷ்யத் தொழிலாளரதும், ஏனைய தொழிலாளரதும் சோசலிச நலன்களுடன் இணைக்கின்றது.”

கியூபாவின் புரட்சியின் போது, பிடல் காஸ்ரோ 100 ஆண்டுபோராட்டத்தின் மரபுகளை முன்னெடுத்துச் சென்றார். மக்சிமோ கோமஸ், ஜோஸ் மார்டி, அன்ரனியோ மாக்கியோ போன்ற சான்றோர் உருவாக்கிய கிளர்ச்சி மரபுகளை, 1933 கிளர்ச்சியிலிருந்து ஊற்றெடுத்த தொழிலாள வர்க்க சோசலிச மரபுடன் காஸ்ரோ ஒன்றிணைத்தார். இலத்தீன் அமெரிக்க அரசுகளின் நிறுவனம் வெளியிட்டபொதுப் பிரகடனத்தில் இலத்தீன் அமெரிக்க புரட்சிகர இயக்கத்தினை மாக்சிய லெனினிசவாத கொள்கைகள் நெறிப்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டிருந்தது. ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தும் இப்பிரகடனம் பின்வருமாறும் கூறுகின்றது: “19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த விடுதலை இயக்கத்திலே இலத்தீன் அமெரிக்க புரட்சி ஆழ்ந்து வேரூன்றி இருக்கின்றது. இலத்தீன் அமெரிக்க புரட்சிகர இயக்கத்திற்கு வரலாறு உந்துசக்தியாக இருப்பவை அமெரிக்க மக்களின் பிரமாண்டமான காவியப் போராட்டமும், முன்னைய தசாப்தங்களின் ஏகாதிபத்தியத்திற்கெதிராக எமது மக்கள் மேற்கொண்ட மாபெரும் வர்க்க போராட்டங்களுமே.”

எனவே சன்டினிஸ்டவாதம் ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு சில செல்வந்தர்களின் ஆட்சிக்கும் எதிரான தேசிய - வெகுஜன திரட்டலுக்கு வாய்ப்பான முக்கிய ஊடகம் என்பதோடு சோசலிசத்தை நோக்கிய பயணத்தின் இன்றியமையாத கட்டமாகும். இந்த நிலைப்பாடே கொமின்ரேனின் நிலைப்பாடாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கொமின்ரேனின் “மூன்றாவது கட்டத்தில்” அண்டிவாழும் நாடுகளில் குட்டி பூர்சுவா முதலாளித்துவத்தின் முக்கியத்துவத்தினை அது பொருட்படுத்த தவறிவிட்டது எனப் பரவலாக குற்றஞ் சாட்டப்படுகின்ற போதிலும் இதுவே அக்கால கட்டத்தின் அதன் நிலைப்பாடாக இருந்தது. யூலை 1928ல் நடைபெற்ற 6வது மகாநாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிராக சன்டினோ தொடுத்திருந்த தேசிய விடுதலைப் போரை திடமாக ஆதரிக்கும் பிரேரணையை கொமின்ரேன் ஏகமனதாக நிறைவேற்றியது. சாத்தியமான எல்லா வழிவகைகளிலும் சன்டினோவை ஆதரிக்குமாறு கொமின்ரேன் தனது உறுப்பினர்களை குறிப்பாக அமெரிக்க நாடுகளிலுள்ள உறுப்பினர்களை, வற்புறுத்தியது. இதற்கமைய, சீன கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி குவோமின்ரங்கும் தளபதி சன்டினோவின் பெயரை தமது ஆயுதப் படைப்பிரிவு ஒன்றுக்கு சூட்டினர். அந்த மகாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒரு பகுதி வருமாறு: “நிக்கரகுவாவின் தொழிலாளருக்கும், விவசாயிகளுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிவுமிக்க, உறுதியான போராட்டத்தினை நடாத்திவரும் தளபதி சன்டினோவின் வீரமிக்க தேசிய விடுதலைப் படைக்கும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது உலக மகாநாடு தோழமை கலந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. தளபதி சன்டினோவை ஆதரிக்குமாறு சகல தொழிலாள வர்க்க நிறுவனங்களையும், எல்லா நாடுகளிலுள்ள முழுத் தொழிலாள வர்க்கத்தையும் கம்யூனிஸ்ட் அகிலம் வேண்டிக் கொள்கிறது”.

1961ல் கார்லோஸ் பொன்சேகா அமடோரினால் அமைக்கப்பட்ட (அல்லது மாற்றியமைக்கப்பட்ட) தற்கால சன்டினிஸ்டா இயக்கம் வெறுமனே புரட்சிகர தேசியவாத இயக்கம் மட்டுமன்று. 1969ல் ‘ரைகொன்டினன்டல்’ என்ற சஞ்சிகையில் எழுதுகையில், மார்க்சிய வாதியாகிய கார்லோஸ் பொன்சேகா சன்டினிஸ்டா இயக்கத்தின் உந்துசக்திகளாக சன்டினோவைத் தவிர மார்க்ஸ், லெனின், பிடல், சே, ஹோசிமின் ஆகியோரைக் குறிப்பிட்டார். இன்றைய புதிய வளர்ச்சிக் கட்டத்தில் இந்த மார்க்சிய லெனினிச வாதக் கோட்பாட்டு இழையைத்தான் சன்டினிஸ்டாக்கள் மேலும் நுட்பமாக பண்படுத்தி தெளிவு படுத்தி, பலப்படுத்தவேண்டி இருக்கின்றது. குட்டி பூர்சுவா வர்க்கத்தை வர்ணிக்கும் போது அது உறுதியான ஆளும் வர்க்கமாக இருக்க முடியாது என லெனின் குறிப்பிட்டார். இறுதி ஆய்வில் அது பூர்சுவா வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு அல்லது தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு ஒரு படிக்கல்லாகவே அமையும் என்று அவர் மேலும் கூறினார். கோட்பாட்டு கொள்கைத் துறையிலும் இக் கூற்றுப் பொருந்தும்.

ஏகாதிபத்தியத்திற்கெதிரான புரட்சிகர தேசியவாதம் முக்கியத்துவம் வாய்ந்த தவிர்க்க முடியாத கட்டமாகினும் அது ஒரு இடைமாறுபாட்டு நிலையே - ஒரு படிக்கல்லே. சன்டினிஸ்டா வாதத்தை சமூக ஜனநாயகத்திற்கு இசைவு படுத்தி விஞ்ஞான சோசலிசத்திற்கு எதிராக கம்யூனிசத்திற்கு எதிராக பயன்படுத்துவதற்கு சீர்திருத்தவாத தாராள பூர்சுவா வர்க்க இப்பொழுது விழைகின்றது. கியூபாவில் புரட்சியின் சுட்டிப்பான தன்மைகள் என சேகுவேரா இனம் கண்ட 3 அம்சங்களும் சற்று மாறுபட்ட வடிவத்தில் நிக்கரகுவா புரட்சியிலும் காணப்படுவதால், கியூபாவிலே மேற்கொள்ளப்பட்ட “நாடகத்தை” மாற்றியமைத்து இங்கும் மேடையேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். உள்ளேயிருந்து கொண்டு புரட்சிகர நிகழ்வுத் தொடருக்கு தடங்கலாகி, “காஸ்ரோ கம்யூனிசத்தை நோக்கிய இடதுசாரிச்சரிவை” தடைப்பண்ண நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இந்த முயற்சிகளை முறியடிக்கவேண்டுமாயின், சன்டினிஸ்டாவாதம்கோட்பாடு ரீதியாக தற்கொலைசெய்து (இக்கருத்து அமில்கா கப்ரலினுடையது) விஞ்ஞான சோசலிசமாக, தொழிலாள வர்க்கத்தின் கோட்பாடாக மறுபிறப்பெடுக்க வேண்டும். இந்த நிகழ்வுப் போக்கில், சன்டினிஸ்டா வாதத்தின் சில கூறுகள் மறுக்கப்பட்டு, வேறு சில கூறுகள் மீண்டும் வரையறுக்கப்பட்டு, மீண்டும், உறுதிப்படுத்தப்படும். புதிய, முன்பிலும் விட செழுமையான கருத்திணைப்பில் இந்தக் கூறுகள் இயங்கியல் சுருள் வட்டத்தில் முன்பை விட உயர்ந்த மட்டத்தில் இடம் பெறும். விஞ்ஞான தொழிலாள வர்க்க சோசலிசத்தை நோக்கிய முன்னெடுப்பில் சன்னிஸ்டாவாதத்தில் ஏகாதிபத்தியத்திற்கெதிரான புரட்சிகரத்தன்மை பேணப்படும்.

இன்றைய நிக்கரகுவாவில் தளபதி சன்டினோவின் படங்களுடன் சேகுரோவின் படங்களும் அடிக்கடி தொங்கவிடப்பட்டிருத்தல், சன்டினிஸ்டாக்களும், நிக்கரகுவா மக்களின் முற்போக்கான கூறுகளும் இந்தப் பணியினை உணர்ந்து அதனை மேற் கொண்டிருக்கின்றனர் என்பதன் வெளிப்படையான குறியீடு. ஜோசே பேப்பே பிகுவேரசுடைய எதிர்மறையான முன்னுதாரணத்தை சேகுவேரா சுட்டிக்காட்டுவண்டு. 1948ல் பிகுவேரஸ் கொஸ்தாரிக்காவில் வெற்றிகரமான தேசியவாதப் புரட்சிக்குத் தலைமை தாங்கி ஜனாதிபதி ஆனார். ஆனால் அமெரிக்க ஏகபோகங்களுக்குத் தன்னை விற்றதன் மூலம் மக்களின் அபிலாசைகளுக்கு அவர் குழி பறித்தார். இந்த ஏகபோகங்கள் ‘கௌரவமான’ “நற்பெயருடைய” வெகுஜன அரசாங்கத்தினை வேண்டி நின்றன. வெறும் தேசியவாத பிரக்ஞையில் பொதிந்துள்ள பொறிகளுக்குள் விழுந்திடாது சன்டினிஸ்டாக்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்தப் பொறிகள் குறித்து இன்னொரு கண்டத்தில் பனோன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மறைமுகமான பிரதிநிதித்துவ ஜனநாயக நிறுவனங்களையும், நேரடி ஜனநாயக (மக்கள் சக்தி) நிறுவனங்களையும் இணைத்து. அத்தகைய இணைப்பிற்கான ஒரு முன்னுதாரணமாக நிக்கரகுவா பெரும்பாலும். புதிய நிக்கரகுவா, சுதந்தர, ஜனநாயக. சோசலிச நிக்கரகுவாவாகத் திகழுமென நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிர்ப்பவர்களாகவும், தாமே தமது கூட்டு எஜமானர்களாகவும் உழைக்கும் வெகு ஜனங்கள் விளங்குவார்கள்.

தளபதி ‘பூஜ்யம்’

“கடின் பஸ்டோராவை (தளபதி ணுநசழ) நாம் நன்கு அறிவோம். அவர் வகித்த பங்கையும் நாம் அறிவோம். உடலமைப்பு ரீதியாக வீரமுள்ளவராக இருந்தாலும் சிந்தனை ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் அதனால் அரசியல் ரீதியாகவும் பலவீனமானவராகவே இருந்தார். அவருடைய இந்தப்பலவீனத்திலும் ஆளுமை இயல்புகளிலும், கன்டிலிஸ்மோ (ஊயனெடைடளைழ) பற்றிய மனப்பாங்கிலும் ஏகாதிபத்தியவாதிகள் செயற்பட்டு அவரைப் புரட்சியின் துரோகியாக மாற்றி விட்டார்கள். இதைப்பற்றி ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? கிறிஸ்தவ மதம் கூட ஒரு யூதாஸைக்கொண்டுள்ளது.”

தளபதி சேரோ பிற்போக்கு முகாமிற்குத் தாவியது பற்றி விசாரித்தபோது கார்லோஸ் கமரோ இவ்வாறு கூறினார். கார்லோஸ் கமரோ தற்போது சன்டிடினிஸ்ராக்களின் உத்தியோக பூர்வமான நாளேடு ஒன்றின் பத்திராதிபராக உள்ளவர். கௌத்தமாலா கெரில்லாக்களும் சல்வடோர் குஆடுN உம் பஸ்டோராவுக்கு எதிரான பகிரங்கக் குற்றச்சாட்டுக்களை விடுத்துள்ளதாக இவர்மேலும் கூறினார். “பஸ்டோரா பதவியிலிருந்து விலகிய போது தனது சர்வதேசியக் கடமையைச் செய்து முடிக்கப் போவதாக கூறினார். பிடெல் அவர்கட்கு ஷே எழுதிய கடிதத்தின் பல சொற்றொடர்கள் அவரது கடிதத்திலே இடம் பெற்றன. கௌத்தமாலாவிலிருந்தும் சல்வடோரிலிருந்தும் தமது போராட்டத்தில் சேரும்படி அழைப்பு வந்தது. பத்துமாதங்களாக கௌத்தமாலாவின் புரட்சி நிறுவனமான ழுசுPயு யுடன் அவர் இருந்தார். அவர்கள் பொறுப்பு வாய்ந்த பதவியைக் கொடுத்தும் அவர் திருப்தியடையவில்லை கிராமப்புறங்களுக்குச் சென்று போராட விரும்பாமல் புரட்சியின் தலையாய தலைவராக இருக்கவே அவர் விரும்பினார். யுத்த தந்திரங்கள் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டுமென அவர் விரும்பினார். ஆனால் இராணுவ நடவடிக்கைகளில் புத்திசாலித்தனமான வழிமுறைகளை அறிந்திருந்தும் கூட யுத்ததந்திரங்களை நெறிப்படுத்துவதில் திறமை குறைந்தவராகவே இருந்தார். இவரது கொள்கைப் பலவீனத்தை கௌத்தமாலாப் புரட்சியாளர் அறிந்து அவருக்கு உதவமுனைந்த போதும் தனது பலவீனத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கௌத்தமாலாவின் கொம்பனேரோஸ் (ஊழஅpயநெழள) அவரை விலகும்படி கேட்டார்கள். இப்போதும் தான் உண்மையான சன்டினிஸ்டா என்றும் சோமோஸாக்களுக்கு எதிரானவன் என்றும் குளுடுN புரட்சிக்குத் துரோகம் இழைத்துவிட்டது. என்றும், புரட்சி முற்றிலும் சர்வாதிகாரமயமாகி விட்டது என்றும், தேசிய நெறியாளர் சபை ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கே உரியதாகிவிட்டது என்றும் இவர் கூறும் குற்றச்சாட்டுக்கள் றீகன்நிர்வாகத்தின் பிரச்சாரத்தையே எதிரொலிக்கின்றன. கொண்டூராஸ் எல்லைக்கு அப்பாலிருந்து ஆயுதத்தாக்குதலைப்புரட்சஜியாளர் எதிர்நோக்கும் போதும், எதிர்ப்புரட்சியாளர் புளோரிடாவில் பயிற்சி பெறும் போதும், எமது நாட்டுக் கடல் எல்லைக்குள் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நான்கு நிற்கின்ற போதும் பஸ்டோராவின் நிலை சோமோஸிஸ்டாக்களின் நிலையிலிருந்தும் புறநிலையாக வேறுபடவில்லை. அவர் புரட்சிக்கு எதிரான ஆயுதமேந்திய இயக்கம் ஒன்றின் இராணுவத்தலைவராக வந்தாலும் கூட நாம் ஆச்சரியப்படமாட்டோம். ஆனால் அவர்கள் வேறொரு அரசியற் தலைவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.”

நுPஐஊயு ஐச் சேர்ந்த பிலிப் வீற்றன் - சன்டினிஸ்டாக்கள் அல்போன்சோ றொபல்லோ பஸ்டோராவுடன் சேருவார் என எதிர்பார்ப்பதாகவும் அவரே எதிர்ப்புரட்சியின் அரசியல் தலைவராக வருவார் என்றும் கூறினார். இவர் மேலும் கூறியது: பனாமாவிலிருந்தபோது பஸ்டோரா தேசியவாதியும், ஓரளவு ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவரும் ஆனால் அதேவேளை, முதலாளித்துவத்திற்கு சார்பான மார்க்சிசத்திற்கு எதிரான ஒருவரான ஒமார் ரொறிஜோஸ் என்பவரின் செல்வாக்கிற்கு உட்பட்டார். பனாமியர். கோஸ்டாறிக்காவினர், வெனிசுலா நாட்டினர் ஆகியோர் நிக்கரகுவா போராட்டத்தை அதன் இறுதிக் கட்டங்களில் ஆதரித்தனர். சமூக உறவு சம்பந்தமான புரட்சிகரமான மாற்றங்களை செயற்படுத்தாதபடி அதனைத் தடுக்க இவர்கள் முயன்றனர். அவர்களது முதல் நடவடிக்கை ரெசறிஸ்ரா பிரிவினரை தம்பக்கம் இழுக்க முயன்றமை. ஆனால் டானியல் ஹம்பேர்ட்டா ஒற்றேகா, பயாடோ ஆர்ஸ் ஆகியோர் தீவிரமான ஈடுபாடுகொண்ட புரட்சியாளராக இருந்ததால் இம் முயற்சி தோல்வியடைந்தது. பாதுகாப்பு அமைச்சராக ஹம்பேர்ட்டா ஒற்றேகா நியமிக்கப்பட, பஸ்டோராவின் கோபத்தை இவர்கள் பயன்படுத்த முனைந்தனர். சிறு வாத்தகனாகவும், நிலச் சொந்தக்காரனாகவும் பஸ்டோரா இருந்ததால் கம்யூனிஸத்திற்கு எதிரான தன்மை இலகுவாக இவனிடம் காணப்பட்டது. புத்திஜீவிகளுக்கு எதிரானவன் என்பதால் ஜெயிம் வீலொக் மீது தீவிர எதிர்ப்புக் கொண்டிருந்தான்.

பஸ்டோராவின் துரோகம் பற்றிய செய்தி நிக்கரகுவாவில் பரவியதும் மக்கள் படையைச் சேர்ந்த பலரும் பஸ்டோராவைப் பகிரங்கமாகக் கண்டிக்கவும் அவனுடைய கையெழுத்துப் பொறித்த தமது உறுப்பினர் பத்திரத்தை எரிக்கவும் வீதிகளில் தொகையாகக் கூடினர்.

பஸ்டோராவின் தலைமையில் தெற்குப் புற முனையில் கோஸ்டாறிக்கா எல்லைக்கு அண்மித்ததாக நிறுத்தப்பட்ட படை ஒன்றுதான் இறுதித்தாக்குதலின் போது இராணுவ நோக்கங்களைப் பூர்த்தி செய்ததாக, சோமோசாவின் தேசியபடைக்கு எதிராக அசையமுடியாமல் இருந்தது. டோரா மரியாவின் தலைமையின் கீழ் குளுடுN படைப்பிரிவு அடைந்த பெரு வெற்றியோடு இத் தோல்வியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

தெற்குப் புற எல்லையில் போராளிகளுடன் இருந்த பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ராஸ், பஸ்டோராவின் பிரிவு தோல்வியடைந்ததுக்குக் காரணம் அதன் ஆயுதப் பற்றாக்குறை அல்ல, என்கிறார். சர்வதேச மட்டங்களில் பல இடங்களிலிருந்து ஆயுதங்கள் பெறப்பட்டு குவிக்கப்பட்டு இருந்தபோதும், வீலொக், போர்ஜ் ஆகியோரின் பிரிவினரைப் போலன்றி பஸ்டோராவின் பிரிவினரின் கோட்பாட்டு அறிவு மிகவும் மத்திமமாகவே இருந்தது எனப் பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

நன்றி :- லங்கா கார்டியன்

கிறிஸ்துநாதர் சன்டினிஸ்டாவா?

“உள்நாட்டு மந்திரி யார் என்று சொன்னால் நாட்டின் அரசாங்ககத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் யார் என்று சொல்வேன்”

புதிய நிக்கரகுவாவின் உள்நாட்டு அமைச்சர் - கவிஞரும், முதுபெரும் போர்வீரனும் குளுடுN ஐ ஆடி 26,1961ல் அமைத்த மூவரில் ஒருவரான தளபதி தொமஸ் போர்ஜ். இவர் சொல்கிறார். “புரட்சியும் கிறிஸ்தவமும் ஒன்று”. பிடல் காஸ்ரோவினால் சிலவருடங்களின் முன் முன் வைக்கப்பட்ட “கிறிஸ்தவர்களுக்கும் மார்க்சியவாதிகளுக்கும் இடையிலான தந்திரோபாயரீதியான இணைப்பு” என்ற சுலோகத்தை ஒட்டியதாக தர்க்கரீதியான முடிவாக இது உள்ளது.

முத்திய அமெரிக்காவின் புரட்சி நடவடிக்கைகளில் கத்தோலிக்க திருச்சபையின் பங்குபற்றி அண்மையில் வெளிவந்த பலகட்டுரைகளும் நூல்களும் அழுத்திக் கூறுகின்றன. ‘லத்தீன் அமெரிக்காவில் வர்க்கப் போராட்டங்களுக்கான தந்திரங்கள் (யுக்திகள்)’ என்ற தலைப்பில் வந்த ‘தற்கால மார்க்சியம்’ என்ற சஞ்சிகையின் சிறப்பிதழில் சல்டோரின் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னைய தலைவரும் குனுசுன் முக்கிய அங்கத்தவருமான நவவாயெல் மெஞ்சிவார் கூறுகிறார் - “புரட்சிகர கிறிஸ்தவ விவசாய இயக்கங்களை அமைப்பதில் குருமாரின் பங்கு முக்கிய அம்சம். பழமை விரும்பும் முதலாளித்துவக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும் மதத்திற்குப் பதிலாக இத்தகைய மாற்றம் ஏற்பட்டது போராட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். இது மதத்தின் அமைப்பிலேயே மாற்றத்தை ஏற்படுத்தி, குருமடங்களையே மூடிவிடுவதில் முடிந்தது. எனவே திருச்சபையின் ஒரு பகுதியினரின் படுகொலை, வெளியேற்றம், கொடுமைகள் என்பவற்றிற்கும் வழிவகுத்தது. 1970ல் குட்டி பூர்சுவா வர்க்கத்திடமிருந்து தோன்றிய தீவிர கிறிஸ்தவ குழுக்களிடமிருந்து நுசுP அமைக்கப்பட்டது.

பாட்டாளி, உழவர் வர்க்கத்தை ஒழுங்கமைப்புச் செய்தல்:

மனித உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் றொபேர்ட் ஆம்ஸ்ரோங் ‘கார்டியன்’ இல் ‘எல் சல்வடோர் - ஒரு புரட்சி கொதிக்கிறது’ என்ற தன் கட்டுரையில் - “கிராமப் புறங்களில் வளர்ந்த குழப்பநிலை ஆட்சியாளர் கவனத்தை முக்கியமாக ஈர்த்தது. 1960 இலிருந்து குருக்களும் கன்னியர்களும் கல்வியும் சமூக நடவடிக்கைகளும் இணைந்த குழுக்களைத் தொழிலாள, விவசாயிகளைக் கொண்டு ஆரம்பித்தனர். அவர்கள் வகுப்புக்களை நடத்தி புதிய விவசாய தொழில் நுட்பங்களை அபிவிருத்தி செய்தனர். அநீதி ஒரு பாவம் என அவர்கள் போதித்தனர்.”

‘டீPசு இனால் ஒழுங்கு செய்யப்பட்ட கிராமிய தொழிலாளர் சங்கங்களில் - சல்வடோர் உழைப்பாளிகளின் கிறிஸ்தவ சங்கம் போன்றவற்றில் அவர்கள் காட்டிய தீவிர பங்களிப்பினால் வலதுசாரிக் கொலைப்படைகளின் குறியிலக்குகளாக குருக்கள் அமைந்தனர். வெள்ளைப் போர்வீரல் சங்கத்தினால் (றூவைந றுயசசழைசள ரnழைn) கொடுக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்று ‘தேசாபிமானியாக இரு - ஒரு குருவைக் கொலை செய்’ என்கிறது’

பெயர் தெரியாத கொலைகாரரால் இயேசு சபையைச் சேர்ந்த வண றுட்டிலியோ கிராண்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். கிராமிய சமூகத்தின் முக்கிய பகுதிகள் சிலவற்றில் அவரது பணிகள் ஆதிக்கம் செலுத்தி தீவிரமயப்படுத்தியிருந்தன. வடக்கே 20 மைல் தொலைவில் அமைந்த அகுய்லராஸின் அமைதியைக் கெடுப்பதாக நில ஆக்கிரமிப்புக்களும், கூலி உயர்வுக்கான வேலை நிறுத்தங்களும் இடம் பெற்றன. டீPசு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது. நுகரில் இராணுவத் தாக்குதல் நடந்தபின் இயேசுசபைக் குருவர் கொல்லப்பட்டார். இராணுவம் இதனை ‘ழுpநசயவழைn சுரவடைழை’ என்றது கத்தோலிக்க வானொலி நிலையம் பல தடைவ குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியது. இயேசு சபையின் அனைவருக்கும் நாட்டைவிட்டு அகலுங்கள் அழிந்துவிடத் தயாராகுங்கள்’ எனப் பயமுறுத்தல்கள் வெள்ளைப் போர்வீரர் சங்கத்திடமிருந்து (றுறுரு) கிடைத்தன.

நிக்கரகுவா அனுபவம்:

பிலிப் வீற்றனின் தலைமையிலான நுPஐஊயு யின் “நிக்கரகுவா ஒரு மக்கள் புரட்சி” என்ற நூலில்

“விவசாயிகளின் வாழ்க்கை தொழில் நிலைகளை அபிவிருத்தி செய்வதற்கான உறுதியான முயற்சிகள் இரு சமயக்குழுக்களிடமிருந்து வந்தன.

1. ஊநுPயு 2. ‘உலகின் பிரதிநிதிகள்’

ஊநுPயு- 1969 ல் இயேசு சபையினரால் ஆரம்பிக்கப்பட்டது. அது அடிப்பசைட் சமூகங்களை அமைப்பதில் தலைவர்களைப் பயிற்றும் கிராமிய நாட்டுப்புறத் திட்டங்களை மேற்கொண்டது. 1970-76 காலகட்டத்தில், அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்ற குற்றசாட்டுக்கள், அடக்குதல் முயற்சிகளின் கீழ் ஊநுPயு குருக்கள், தோட்டத் தொழிலாளர், கராஸோ, மசாயாவின் இன் திணைக்கள ஊழியர் ஆகியோருக்கு கருத்தரங்குகளை நடத்தியது. பைபிள் அறிவுடன் விவசாய தொழில்நுட்ப பயிற்சியையும் இணைப்பதில் இக்கருத்தரங்குகள் முனைந்தன. ஊநுPயு-‘ஊhசளைவழ ஊயஅpநளiழெ’ என்ற சித்திரத்தொடர் கையேடு ஒன்றையும் வெளியிட்டது. ஊநுPயு கருத்தரங்குகளில் பங்கு பற்றியோர் ‘உலகின் பிரதிநிதிகள்’ என்ற இன்னொரு கத்தோலிக்க இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களும் நாடு முழுவதும் விவசாயிகளின் நிலையை உயர்த்தப் பாடுபட்டவர்கள்.

1968ல் லத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கான மெடலின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட மாற்றங்களை அண்டியதாக நிக்கரகுவாவின் கத்தோலிக்க பீடம் தனது மதத்தை வறியவர்களுக்காக ஆக்கமுயன்றது. இம்முயற்சியில் ஈடுபடப் போதுமான குருக்கள் இல்லாததால் சாதாரண மக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கோப்பித் தோட்டங்களில் பிரதிநிதிகளும், தொழிலாளர்களும் சுகாதார சேவைள், குடிநீர், தகுந்த சம்பளம், வருடம் முழுவதும் உழைப்பு ஆகியவற்றைச் கோரிநின்றனர்.

இம் முயற்சிகள் சன்டினிஸ்ராவின் முயற்சிகளுடன் எவ்வாறு இணைந்தன என்பது புரட்சி வரலாற்றின் பகுதியாகும். ஊநுPயு யின் பயிற்சி நிலையங்கள், பிரதிநிதிகளின் சமூகப்பணிகள் என்பவற்றின் விளைவாக கராஸோ, மஸாயோ பிரதேசங்களில் தோட்டத் தொழிலாளர்கள் விவசாயிகளின் குழுக்களை அமைத்தனர். இக்குழுக்கள் வாழ்க்கை நிலைகளின் உயர்வுக்காக ஒன்றாகக் குரல் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. தேசிய காவற் படை இதனை எதிர்த்த போது - விவசாயிகளை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்த போது - நிலமில்லாத விவசாயிகள் தமது தோழர்கள் துன்புத்தப் படுவதைக் கண்டு தமது முயற்சிகளை இன்னும் தீவிரமாக்கிக் கொண்டனர். இக்குழுக்கள் பசுபிக் பிரதேசத்தில் கோப்பி, பருத்தி, சீனித் தோட்டங்களிலும் அமைக்கப்பட்டன. இதேவேளை 1975 இல் குளுடுN இன் ‘தொழிலாள வர்க்கம் சார்ந்த போக்கு’ விவசாயிகளுடன் இணைந்து குழுக்களை அமைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியது. பிரதிநிதிகள் சிலரும் வேறு தலைவர்களும் குளுடுN ஆதரவாளர்களாகியதும், குளுடுN உடன் தொடர்புடையனவாகின. இவற்றுக்குள் குளுடுN தனது செல்வாக்கினை வளர்த்துக் கொண்டது. 1977இல் கராஸோ, மஸாயோ, லியோன், மனகுவா, சினன்டிகோ பகுதிகளில் விவசாயிகளின் குழுக்களை இணைத்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியது.

சர்வதிகாரத்துக்கு எதிரான போராட்டம்:

‘லத்தீன் அமெரிக்காவில் அரசியல் எதிர்ப்பும், நவீன பாசிசத்தின் எழுச்சியும்’ என்ற தலைப்பின் கீழ் ‘மூன்றாம் உலக நாடுகளில் வர்க்க அரசு, அதிகாரம்’ என்ற நூலில் பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ராஸ் புதிய பாசிசத்திற்கு எதிரான அம்சங்களுள் குருமார் உள்ளனர் என்று கூறியுள்ளார். இவர் மேலும் அரச அதிகாரத்தின் ஏகபோகம், கொள்ளைகள் - அமைப்புத்துறையில் கத்தோலிக்க பீடத்துடன் முரண்பட்டு நிற்கிறது. ஆனால், சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவருடன் மட்டுமே இந்நிலை என்று கூறிவிட முடியாது. பிறேசிலின் கத்தோலிக்க பீடம் தேசிய பாதுகாப்புக் கொள்கையை அரசியல் உரிமைகளை மறுக்கும் கொள்கை எனவும், வறியவரை மேலும் ஒடுக்கும் வகையில் அமைந்ததே பொருளியல் நவீன மயமாக்கலாக்கும் கொள்கை சாட்டியுள்ளது. பல நாடுகளில் கத்தோலிக்க பீடத்தின் உயர் அதிகாரிகள் ஆட்சியாளரின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து தம்மைச் சார்ந்த அடிமட்ட திருச்சபை ஊழியர்களுக்கு ஆதரவை வழங்கி, இன்னும் திருச்சபையிலுள்ள கணிசமான பிற்போக்குவாத பகுதியினரை மேலும் பலங்குறைந்தவர்களாகியுள்ளனர்.

மதக்கொள்கைகளின் தாற்பரியங்கள்:

கிறீஸ்தவ சாத்திரங்களில் இத்தகைய புரட்சிகரமான பழக்களின் தாக்கம் என்ன? மதம் சார்ந்தவர்களை, புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட விடுதலை பற்றிய மதக் கொள்கை எவ்வாறு உதவியது? முத்திய அமெரிக்காவில் புரட்சியும் தலையீடும் பற்றிய சிறப்பு வெளியீட்டில் (‘தற்போதைய மார்க்சிசம்’ என்ற சஞ்சிகையில்) மத்திய அமெரிக்க நெருக்கடியை விளங்கிக் கொள்ள ஏழு திறவுகோல்கள்’ என்ற தன் கட்டுரையில் ஈடில் பெட்டோ ரொறஸ் கோட்பாடும் நடைமுறையும் எவ்வாறு ஒன்றை ஒன்று இயங்கியல் முறையில் பாதித்துள்ளன எனப்பதை விளக்குகின்றார்.

“சமயக் குழுவினரின் முக்கியமான பங்களிப்பு பற்றிக் கருத்திற் கொள்ளாவிட்டால் எமது பகுப்பாய்வு முழுமையாகாது. கிறீஸ்தவக் குழுக்கள் துன்பத்தின் உண்மை நிலையை உணர முற்பட்டது, மக்களின் சுரண்டல்பற்றி அறிய முனைந்தனர். உண்மையை நேசிப்பது என்பது நிஜத்தை அறியத் தொடங்குவதன் முதல் நிலை. ஆதனை அறியத் தொடங்குவது அதனை மாற்றத்தொடங்குவதற்கு முதல் நிலை. இதன் மூலம் மக்கள் சார்ந்த தன்மை அவர்களது குருத்துவத்திற்கு எற்பட்டது. இக் காரணங்களால் அவர்களது பணி தனிப்பட்ட பகுப்பாய்வை நாடி நிற்கிறது.

குருக்கள், பாமர மக்கள் ஆகியோரால் அமைக்கப்பட்ட கிறீஸ்தவ இயக்கங்கள் மக்கள் போராட்டத்தில் தாமே முன்னணி வகித்ததுடன் தம்மை மக்களுடன் இணைத்துக் கொண்டனர். இத்தகைய முயற்சிகள் குருமரபு வழிவந்த பாரம்பரிய கொள்கைகளை அரசியல் கருத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மாற்றிக் கொண்டன. அயலானை நேசி என்ற தத்துவம் கிறீஸ்தவ விசுவாசத்தைப் பலப்படுத்துவது. இங்கே சுரண்டப்படுபவனே அயலான் ஆகிறான். எனவே விசுவாசத்துக்குரிய செயலானது பாரம்பரிய பண்பாடு என்ற அமைப்பைக் குலைப்பதாக மாறுகிறது. மேலும், இது நேரடியான அரசியல் செயற்பாடாக மாறுகிறது. முத சாஸ்திரங்கள் என்ற மட்டத்தில் நடந்த கிறீஸ்தவ - மார்க்சிஸ உரையாடலானது குளுடுN இன் முழுமையான ஆதரவுடன் நடந்தது. 1979 இல் இயேசு சபையைச் சேர்ந்த வரலாற்று அறிஞரான வண. அல்வாரோ ஆர்க்குவேலோ ‘கிறீஸ்தவ விசுவாசமும் சன்டினிஸ்ரா புரட்சியும்;’ என்ற தலைப்பில் மனாகுவாவில் மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கை ஒழுங்கை செய்தார். இதில் பங்குபற்றிய தலைவர்கள் கிறீஸ்தவக் கருத்துக்களை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து அரசியல் கருத்துக்களை முன்வைத்தனர். கிறீஸ்தவ பீடத்தின் தலைவர்களும், ஆசிரியர்களும் மத சாஸ்திரங்கள் சம்பந்தமான கருத்துக்களை முன்வைத்தனர். பிறேசிலில் 1980 இல் நடந்த லத்தீன் அமெரிக்க ஆயர்கள் மாநாடு பற்றிய தகவல்களை நிக்கரகுவா தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியது. இங்கு நிகழ்த்தப்பட்ட மிக முக்கிய பேச்சு டானியல் ஒட்டெகாவினுடையதாகும்.

புதிய நிக்கரகுவாவில் வானொலி பொதுமக்கள் கல்விக்குரிய மிக முக்கிய தொடர்புச் சாதனமாக கருதப்படுகிறது. நாளாந்த செய்திகளுடன், வண. எர்னெஸ்ரோ கார்டினல் அவர்களுடைய ‘சங்கீதங்கள்’ பற்றிய தீர்க்கதரிசன விளக்கங்களையும் வானொலி ஒலிபரப்புகிறது. உத்தியோக பூர்வ செய்தித்தாளான பரிக்கடா (டீயசசiஉயனய) கூற்றின்படி கார்டினஸ் அவர்களுடைய சுவிசேஷ நற்செய்தி, கவிதைகளான சங்கீதங்கள் ஆகியவை புதிய அரசியல் - பண்பாட்டுக் கல்வி நிகழ்ச்சியின் அம்சங்களாகும். எல்லாராலும் அறியப்பட்டதுபோல, வண. கார்டினல் நிக்கரகுவாவின் பண்பாட்டுத்துறை அமைச்சராகவுள்ளார். மேல் வர்க்கத்தினராக வண. மிகுவெல் டி எஸ்கொட்டோ வெளிநாட்டு அமைச்சராக உள்ளார்.

போலாந்து நெருக்கடி என் அம்சத்தில் வார்சோ உடன்படிக்கையில் போலந்தின் அங்கத்துவம், கம்யூனிச கட்சியின் தலைமைப் பங்கு என்பன பற்றி பொதுவான வாக்கெடுப்பு நடத்தக் கோரும் ‘சொலிடாரிட்டி’ தலைமைத்துவத்துக்கு ஆதரவைக் கேட்டும் பாப்பரசர் அருள் சின்னப்பர் இந்த அமைச்சர் பதவிகளை வகிக்கும் மூன்று குருக்களையும், நிக்கரகுவாவின் உயர் அரசபதவிகளை வகிக்கும் இன்னும் 26 பேரையும் ‘சமயம் அரசியலுடன் கலக்கக்கூடாது’ என்ற அடிப்படையில் பதவிகளிலிருந்து விலகும்படி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்திய அமெரிக்கப் புரட்சியில் திருச்சபையின் பங்கானது, சிறீலங்காவின் மார்க்சிச- லெனினிச வாதிகளு;ககு ஒரு பலத்த அடியாகும். மாறாக, திருச்சபையின் பங்கும், உள்ளார்ந்த வல்லமையும் பிற்போக்குவாதிகளால் குறைமதிப்பீடு செய்யப்படவில்லை. சல்வடோர் மார்க்சிச புரட்சியாளர் ஒருவர் தமது நாட்டில் நடைபெறும் போராட்டத்தின் தற்போதைய நிலைபற்றிக் கூறுகையில் இதனைச் சொன்னார்: தமது வழமையான தேடுதலின்போது சல்வடோர் இராணுவ வீரா ஒருவர் ஒரு பெண்ணை அவள் ஒரு கம்யூனிசவாதி என்பதற்காக் கொல்ல முயன்றார். இதை மறுத்த பெண் அவரது குற்றச்சாட்டுக்கு காரணம் கேட்டபோது ‘நீ அந்த கலகக்காரன் றொமெறோவினைப் பின்பற்றுகிறாய்’ என்றான். இதை எவ்வாறு அவன் கண்டுபிடித்தானென்றால் நன்கு பாவிக்கப்பட்ட விவிலியப் பிரதியொன்று அந்த வீட்டில் இருந்ததாம். எனவே, பிற்போக்குவாதிகளுக்கும், கிளர்ச்சி செய்கின்ற மத்திய அமெரிக்க மக்களுக்கும் கிறீஸ்துவின் மலைப்பிரசங்கமானது கம்யூனிச பிரகடனத்தின் முன்னோடியாகவே உள்ளது.

நன்றி :- லங்கா கார்டியன்.


றீகனைமேவி சன்டினிஸம்
தாக்கும் பிடிக்குமா?

“ஒரு காலகட்டத்தில் யங்கீஸ் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார்கள். சுந்தர்ப்பவசத்தால் இந்த முடிவைக் காண்பதற்கு நான் இல்லாவிட்டால் நிலத்திலுள்ள எறும்புகள் எனது கல்லறைக்கு வந்து இதனைச் சொல்லும்.” - இவ்வாறு அகஸ்ரோ சீசர் சன்டினோ கூறினார். சுpல நிக்கரகுவா மக்களின் கூற்றுப்படி இந்த எறும்புகள் 1979 ஆடி 19ல் கல்லறைக்குச் சென்றன. அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கிய சோமொசா சர்வாதிகாரத்தை சன்டினிஸ்ராஸ் அன்றுதான் முறியடித்தார்கள். சன்டினோவுக்கு இச்செய்தியினை எறும்புகள் சொல்லும்போது இந்த முறியடிப்பு ஆரம்பிக்கப்பட்டுவிட்டாலும் இன்னும் முற்றுப்பெறவில்லை எனக் கூறின.

பெரும்பாலான நிக்கரகுவா மக்களுக்கு றீகனின் தலையீட்டுக் கொள்கை தங்கள் நாட்டை மீண்டும் முற்றுகையின் கீழ் வைத்துள்ள ஒரு அம்சம் என்றே தெரிகிறது. றீகனின் பட்டியலில் ‘சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் அதாவது புரட்சி, முதலிடம், பெறுகிறது. நிக்கரகுவாவின் பொருளாதாரத்தை நாசஞ் செய்வதும் அதன் அரசியல் சமநிலையைச் சீர்குலைக்கும் வேலைகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இத் திட்டமானது நிதி உதவிகளை இடை நிறுத்தல், கொண்டூராஸ், கௌத்தமாலா, கலிபோர்னியா, புளோரிடா முகாம்களில் முன்னைய சோமோசிச படையினருக்கும், நூற்றுக்கணக்கான கூலிப்பட்டாளங்களுக்குமான ஆயுதப்பயிற்சி அளித்தல், சன்டினிச புரட்சியின் நன்மதிப்பைக் குறைக்கும் வகையிலும், தனிமைப்படுத்தும் வகையிலும் தொடர்பு சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

சன்டினிச நிக்கரகுவாவின் முன்னாள் அரசசபை உபதலைவராகிய ஜோஸ் பிரான்சிஸ்கோ கார்டினல் அவர்களால் நடத்தப்படும் ருனுN (னுநஅழஉசயவiஉ ருnழைn ழக Niஉயசயபரய) உடன் இணைந்து உயர்வர்க்கத்தினரும் இனரீதியான சிறுபான்மையினரும் சன்டினிசத்தை கவிழ்க்கும் முயற்சிகள் நிக்கரகுவாவிலே மேற்கொள்ளப்படுகின்றன. ருனுN என்பது சோமோசிசமல்லாத, சன்டினிஸ்ராவுக்கு எதிரான இயக்கமாகும். ஆண்டை நாடுகளிலுள்ள இராணுவ ஆட்சியாளருக்கு கூடிய ஆயுதங்கள், நிதி என்பவற்றுடன் ‘ஆலோசகர்கள்’ வழங்கப்பட்டுள்ளதுடன் அதிவேக அமெரிக்கப்படை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. பனாமாக் கால்வாய்ப் பகுதியில் உள்ள இராணுவத் தளங்கள் கார்ட்டர் - ரொறிஜோஸ் பரஸ்பர ஒப்பந்தத்தை மீறும் வகையில் மீள செயற்படுத்தப்பட்டன.

தேசிய ஆட்சி முறையை அழிப்பதற்கென நிக்கரகுவாவில் அமெரிக்கக் கடற்படையினர் வந்து சேர்ந்த 75வது ஆண்டு நிறைவுறும் 1984ல் சன்டினிசம் றீகனின் கொள்கைகளிடையே தலைதூக்கி நிற்க முடியுமா என்ற கேள்வி பொருளற்றது என்று கூறிவிட முடியாது. இவ் வினாவுக்கு விடைகூறும் வகையில் ஜோர்ஜ் பிளக், கென்றி வெபர் ஆகியோர் இரு நூல்களை எழுதியுள்ளனர். இருவருமே சன்டினிச புரட்சிக்கு ஆதரவாயுள்ளனர். ஆனால் புதிய பொருளாதார அமைப்பிற்கு மாறுவதில் உள்ள ஜனநாயக அம்சங்கள் சம்பந்தமான முனையில் இது எந்தவிதத்திலும் ஆசிரியர்களின் கண்டிக்கின்ற போக்கைக் குறைக்கவில்லை.

தெற்கில் தொடர்ச்சியாக வந்த வீழ்ச்சிகளின் பின் சன்டினிசவாத வெற்றியானது சமூகப் பொருளாதார விடுதலைக்கான போராட்டத்திற்கு வலிமையான தூண்டு சக்தியாக விளங்கவே செய்கின்றது. நிக்கரகுவா இதனை எவ்வாறு மேற்கொண்டது? நிக்கரகுவாவுடன் ஒன்றுபடும் தன்மைகளைக் கொண்ட எந்த நாட்டிலுள்ள போராட்ட இயக்கங்களுக்கும் இவ் வினா அவசியமானதொன்றாகும். கியூபா, வியட்னாம், ஆகிய நாடுகளின் முன்மாதிரியை இயந்திரரீதியாக பின்பற்றுவதைக் கைவிட்டு ‘நிக்கரகுவா முறை’ யொன்றைக் கைக்கொண்டதை இவ்விரு நூல்களும் சுட்டுகின்றன.

நாட்டின் காலனித்துவ சரித்திரத்தையும் சோமோசா ராஜபரம் பரையின் பலப்படுத்தப்பட்ட வரலாற்றையும் உள்ளடக்கி, தேசிய விடுதலைக்கான சன்டினிச முன்னிணியின் (குளுடுN) கொந்தளிப்பான சரித்திரத்தையும் புரட்சிகர நிலையையும் இவர்கள் ஆராய்கின்றனர். பின் சோமோசாவினுடைய தோல்வி, தேசிய சுதந்தரம், மக்களாட்சி நிலையின் கீழ் புதிய பொருளாதார நோக்கங்களை அடைவதற்கான சமநிலையைக் கடைப்பிடித்த சன்டினிஸ தலைமைத்துவம் பற்றியும் இவர்கள் சொல்கின்றனர்.

1979 பங்குனியில் நிகழ்ந்த முரண்பட்ட மூன்று குழுக்களின் இணைப்பின் மூலம் சன்டினிச தலைமைப்பீடம் பல அனுபவங்களைப் பெற்றது. 1பன்மைவாதத்தின் அநுகூலங்கள், 11தமது தவறுகளை உணர்ந்து, விளங்கித் திருத்திக் கொள்ளும் கலை, 111 இலட்சியரீதியான திட்டங்கள், உண்மை நிலைகள் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வெளியை ஓடுக்குவதற்கு தேவையான நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை. தளபதி ஹன்றி ரூயிஸட கூறுகின்றார் “அ’விலிருந்து ‘ஃ’ வரை யுக்திகளை வரைந்து கொள்ள முடியாது. மாறுகின்ற வரலாற்று நிகழ்வுகளுக்கேற்ப திட்டங்களை மாற்றக் கூடிய தன்மை தேவை. இந்த மாற்றமானது கேந்திர நோக்கங்களை அடையக்கூடியதாக இருக்க வேண்டும்.”

இன்னொரு சன்டிச தலைவர் ஹம்பேர்ட்டோ ஒற்றேகா தமது ஆரம்ப நோக்கம் பொதுமக்களே கெரில்லா யுத்தகாரியங்களுக்கு தகுந்த ஆதாரமாக இருப்பர் என்றும் இது தேசிய காவற்படையினரைத் தாக்க உதவும் என்றும் நினைத்ததாக ஒத்துக் கொண்டார். ஆனால் உண்மையில் இது எதிர்மாறாகவே இருந்தது. அவர்களுடைய கெரில்லா யுத்தகாரியங்கள், எதிரிகளை கிளர்ச்சி மூலம் நசுக்கிய மக்களுக்கு ஒரு ஆதாரமாகவே இருந்தது. உண்மையில் ஆயுதங்கள் தலைமைத்துவம், ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றிற்கான பெருமளவிலான கோரிக்கையே மக்களிடம் ஏற்பட்டது. மூன்று முரண்பட்ட புரட்சி குழுக்களுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான உந்துசக்தியா இது அமைந்தது.

சன்டினிஸ்ராவின் கூட்டுத்தலைமைத்துவம் காலஞ் சென்ற கார்லோஸ் பொன்சோ அமெடொரின், “நிக்கரகுவாவின் புரட்சியானது நிக்கரகுவா மக்களை விடுதலைக்கு இட்டுச் செல்லக்கூடிய கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்டரீதியில் வேறுபட்ட கோட்பாடுகளின் மக்கள்சார்ந்த பொருட்கூறுகளை நான் வரவேற்கின்றேன். மார்க்ஸிசம், கிறீஸ்தவசோஷலிசம், தாராளக் கொள்கை, சோஷலிச, தேசியநோக்கங்கள் சன்டினிச மக்கள் புரட்சியில் கலந்துள்ளன.” என்ற கூற்றைக் கருத்தில் கொண்டுள்ளனர்.

தேசிய சுதந்திரத்தை சன்டினிஸம் பேணிக் கொள்வது, தனியார் துறை விவசாய உற்பத்தியில் 80 வீதத்தையும், கைத்தொழில் உற்பத்தி 75 வீதத்தையும், உள்நாட்டு வாணிபத்தில் 70 வீதத்தையும் எடுத்துக் கொண்டபோதும் புதிய பொருளாதார அமைப்பைக் கட்டியமைப்பது ஆகியவை நிச்சயமாகிவிட்டன. கூட்டுறவு இயக்கங்கள் நிறுவப்படுகின்றன. பலமான சங்கங்கள் வளர்க்கப்படுகின்றன. வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், சுரங்கங்கள், கடற்றொழில், பாரிய விவசாய முயற்சிகளுடன். சோமோசாவின் செல்வமும், தேசிய மயமாக்கப்பட்டு விட்டன றீகனின் பிரச்சாரத்திற்கு மாறாக மொஸ்கோ, கியூபா என்பன மனாகுவாவில் அதிகாரம் செய்யவில்லை. சல்வடோர் கிளர்ச்சியாளருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்ற சாக்குப் போக்குக் கூறி அமெரிக்க நிதியுதவி நிறுத்தப்பட்ட போதும் நிக்கரகுவாவின் முக்கிய வெளிநாட்டு நன்கொடையாளர்கள் சோவியத் யூனியனோ, கியூபாவோ அல்ல. மெக்சிக்கோ, வெனிசுலா, மேற்கு ஜேர்மனி லிபியா ஆகியனவே.

சன்டினிசம் ஜனநாயக ‘பன்மைவாத’ முறையில் தனது தேசிய சோஷசலிச நோக்கங்களை அடையமுடியுமா என்பது பொதுவான ஒரு கேள்வியாக உள்ளது. றீகன் நிர்வாகத்தில் புதிய திருத்தியமைக்கப்பட்ட ‘டீயல ழக Pபைள’ நடவடிக்கை பல தீவிரமான ஆதரவாளரைப் பெற்றுள்ளது. இத்தகைய திருத்தியமைக்கப்பட்ட திட்டம் ஒன்றுக்குரிய ஆரம்ப வேலையானது நிக்கரகுவாவில் ‘பொதுவாக ஆரம்பிக்கும் சர்வாதிகார ஆட்சிமுறையைத்’ தொடர்ச்சியாக கண்டிப்பதாகும்.

சன்டினிச வெற்றியின் 2 வருடங்களின் பின் நிக்கரகுவாவில் குடியியல் அரசியல் உரிமைகள் வெறுமனே சட்டம் சம்பந்தமான ஆபரணங்கள் அல்ல என இரு ஆசிரியர்களும் கூறுகின்றனர். பல கட்சிகள், தொழிற்சங்கங்கள், பத்திரிகைகள் இயங்கும் பல்வேறுதன்மை காணப்படுகின்றது. மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டு, ஆகக்கூடிய சிறைக்காலம் 30 வருடங்களாக்கப்பட்டுள்ளது. உண்மையான வேலைநிறுத்தங்கள், ஊர்வலங்கள், அரசியல்கட்சியின் கூட்டங்கள் ஆகியன நடைபெற்றுள்ளன. சமய வழிபாட்டுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. வெபர் சொல்கிறார் - “நிக்கரகுவா”, கம்போடியா, ஹங்கோரி ஆகியவற்றைவிட எவ்வளவோ வேறுபட்டுள்ளது.

ஆக்கிரமிப்பை எதிர்க்க வேண்டும் என்ற பழைய உறுதி நிக்கரகுவாவில் பலப்படுத்தப்படுகிறது. மக்கள்படை 2,00,000 ஆக வளர்ந்துள்ளது. 50,000 பேர் அடங்கிய சன்டினிஸ இராணுவம் மேலும் பயிற்சியும் ஆயுதங்களையும் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கைத்தொழில் நேசநாடுகள் எல்லாம் றீகனுக்குச் சார்பானவை என்று கூற முடியாது. “சோமோசாவை வெளியேற்ற 50,000 பேர் இறந்தோம்” என சன்டினிஸ்ரா ஒருவர் கூறினார். “றீகனின் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற இதன் 5 மடங்கு தேவைப்பட்டாலும் நாம் அதற்கும் தயாராக உள்ளோம் “இந்தப் புரட்சியின் பெறுமதி என்னவென்று நாம் யாவருமே அறிவோம் நிக்கரகுவா முற்றாக அழிக்கப்படலாம். ஆதன் வயல்கள் உப்பாகவோ சாம்பலாகவோ மாற்றப்படலாம். ஆனால் அது ஒருபோதும் வெற்றி கொள்ளப்பட மாட்டாது :- இவ்வாறு தளபதி ஜெயிம் வீலொக் கூறுகிறார்.

நன்றி. ‘சவுத்’ ளுழரவா.


குளுடுN தளபதி ஹம்பேர்டோ
ஓட்டேகாவுடன் ஒரு பேட்டி

நிக்கரகுவாவின் புரட்சி இயக்கமான குளுடுN இன் தளபதியான ஹம்பேர்ட்டா ஒட்டேகா (ர்ரஅடிநசவய ழுசவநபய) உடன் நடாத்திய மாட்டா ஹானெக்கர்

மாட்டா ஹானெக்கர் :- நிக்கரகுவா மக்களின் ஆயுதப் போராட்டம் சான்டினியர்களின் ஐம்பது வருட போராட்டம் என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் 1975 ம் ஆண்டு வரையிலான போராட்டத்தின் முக்கிய அம்சங்கள் நீங்கள் விபரித்திருக்கிறீர்கள் எனினும் இரண்டு வருடங்களிற்கு முன்னர் இப் புரட்சி வெற்றியடைவதற்கான சாத்தியக் கூறுகள் சிறிதளவேனும் காணப்படவில்லை. இப் புரட்சிகர சக்திகளுக்கு, சோமோசாவையும் அவரது சகாக்களையும் அரசாங்கத்தையும் தூக்கி எறிவதற்கு வழி வகுத்தது எது?

ஹம்பேர்ட்டா ஒட்டேகா:- நன்றி. உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் முன்னர் நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள முக்கிய அம்சங்களைச் சுருக்கமாக விபரிக்க விரும்புகிறேன். எந்த ஒரு விஷயத்தையும் தவிர்த்து, இச் சுருக்கத்தைத் தருதல்மிகவும் கடினம். 1930ம் ஆண்டுக் காலங்களில் சன்டினோவின் போராட்டத்துடன் புரட்சிகர இயக்கம் ஒன்று உருவானது என்று கூறலாம்.

மா.ஹா: எது உருப்பெற்றது அல்லது ஆரம்பித்தது?

ஹ.ஒ: நன்று@ நிக்கரகுவாவில் இடம் பெற்ற புரட்சிப் போராட்டப் முனைப்புப் பெற்றது அல்லது உருப்பெற்றது என்று கூறுகின்றேன் என்றால், இப்போராட்டமானது முன்னைய முயற்சிகள், உழைப்புகள் யாவற்றையும் ஒருங்கிணைத்தாகக் காணப்பட்டது. அத்துடன் சான்டினோ அக்காலத்தில் காணப்பட்ட எல்லா முற்போக்கு புரட்சிகர சக்திகளையும் ஒருங்கு திரட்டியது மட்டுமல்லாது அவற்றை எமது வரலாற்றுச் செயல் முறையுடன் ஒன்று திரள வைத்ததுமாகும்.

சன்டினோ அவ்வியக்கத்தை ஆரம்பித்தவர் என்பதில் எள்ளளவு சந்தேகமும் கிடையாது. அவ் வியக்கத்தின் வளர்ச்சிப்படிகளில், அவர் படிப்படியாக , அரசியல் சித்தாந்த, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை, சர்வதேசிய வாதிகளை, ஆயுதந் தாங்கிய சக்திகளையும் இணைத்துக் கொண்டார்.

இதனால் தான் நம் இயக்கம் உருப்பெற்றது அதாவது புதிய பரிணாமம் பெற்றது எனக் கூறுகிறோம். அதாவது, (லுயமெநநள) யான்கீஸிற்கு எதிராக சன்டினோ நிகழ்த்திய ஏழுவருட காலப் போராட்டம் ஆனது, எமக்கு அளவிடமுடியாத சரித்திரச் செயல் முறை மூலகங்களையும், புரட்சிகர நோக்குளையும் அளித்திருக்கிறது. இவற்றைத்தான் நாம் ஒன்று திரட்டினோம்.

சன்டினோ இயக்கத்தைக் குறிப்பிடும் அதேவேளை, அக்கால கட்டத்தில் புரட்சிகர நிலைகளைக் கொண்டு விளங்கிய புரட்சியாளர்களால் தலைமை தாங்கப்பட்ட 33 ஆயுதமேந்திய இயக்கங்கள் காணப்பட்டன. என்பதை நாம் மனதில் கொள்ளுதல் அவசியம். இவை ஏகாதிபத்திய வாதிகளுக்கு எதிராகப் போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

சன்டினோவால், எடுத்துச் செல்லப்பட்ட போராட்டமானது, சன்டினோவினதும் அவரது சில சக உறுப்பினர்களதும் மரணத்தின் பின்னர், இப் போராட்டம் சிறிது பின்னடைவு பெற்றதாயினும், மக்கள் எப்பொழுதும் ஒடுக்குமுறைக்கெதிராக கிளர்ந்தெழுதலானது மிகவும் சொற்ப அளவிலும், பகுதி பகுதியாகவும் ஆரம்பித்ததாயினும் படிப்படியாக வளர்ச்சியுற்றுக் கொண்டு சென்றது.

இத்தகைய போராட்டங்களில் முக்கிய எழுச்சி இடம் பெற்ற காலகட்டம் 1950களில் எனலாம். ஏனெனில் எமது மக்களின் துயர வரலாறுகளுக்கு காரண கர்த்தாவாக விருந்த சர்வாதிகாரி அனஸ்டாசியோ சோமோசா கார்சியா, றிகோ போட்டோ லொப்பெஸ் பெரெஸ் ஆல் கொலை செய்யப்பட்டமையாலாகும். அத ஒரு தனிநபர் நடவடிகையாய் அமைந்தபோதும், அது ஒரு சர்வாதிகாரியின் மரணம் மட்டுமல்ல. லொப்பெஸ் பெர்ஸ் கூறுவது போல், சர்வாதிகாரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமாகவும் அமைந்தது என்றே கூறவேண்டும்.

1958 இல், பிடல் கியராமாஸ்ராவில் இருந்த வேளை. ரோமோன் ரௌடாலேஸால் தலைமை தாங்கப்பட்ட ஆயுதந் தாங்கிய இயக்கம் ஒன்று உருவானது. அடுத்த வருடங்களில், இவ் இயக்கமே கார்லோஸ் பொன்சேகாவினால் முன்னெடுத்து செல்லப்பட்ட கெரில்லாக் குழுவாக அமைந்தது. 1958 இலிருந்து 1961 வரை, சர்வாதிகாரத்திற் கெதிராக, 19 ஆயுதந் தாங்கிய இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.

கியூபப் புரட்சியின் வெற்றியானது, எமக்கு மாபெரும் அரசியல் புத்துணர்வை ஏற்படுத்தியது. எங்ஙனம் ஒரு சர்வாதிகாரியை, சர்வாதிகார ஆட்சியை ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலம் வீழ்ச்சியுறச் செய்யலாம் என்பதற்கு நடைமுறை உதாரணமாக கியூபப்புரட்சி விளங்கியது. இனால், இக் கியூபா புரட்சி, எமது மக்களில் பெரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்தியது.

1950-60 காலகட்டங்களில்தான், சன்டினோ செயல்படுத்த முனைந்த அதே புரட்சிகர மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துச் செல்லக்கூடிய புரட்சிகர முன்னணி ஒன்று உருவாவதற்குரிய நிலைமைகள் உருவாக்கப்பட்டன.

1961 இல், சோமோசாவிற்கு எதிராக போராடிவந்த சமகால வரலாற்றுக்குரிய ஆயுதந் தாங்கிய குழுக்களிலிருந்து மாறுபட்டதாக, சன்டினிஸ்ட் முன்னணி எழுந்தது.

சன்டினிஸ்ட் முன்னணி மற்றையவற்றிலிருந்து வேறுபட்டதாக விருப்பினும், சன்டினோவால் தோற்றுவிக்கப்பட்ட அதே புரட்சித் தன்மைகள் பொருந்திய இயக்கமாகவே அது பரிணமித்தது.

அது நிறுவப்பட்டதன் பின்னர், எதிhகால நடவடிக்கைகளுக்காக அமைப்புரீதியாகவும், இராணுவரீதியாகவும் அனுபவங்களைப் பெற நீண்டகாலம் எடுத்தது. இந் நீண்டகால கட்டத்தில் இம் முன்னணியினரின் உறுப்பினர்களின் தேசப்பற்றும், தியாக மனப்பாங்கும், நிக்கரகுவாவின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த உறுதியான உளப்பாங்கும் மக்களை வெகுவாக இம் முன்னணியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும், அவர்களை ஒன்றுதிரட்டி, மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்வதற்கும் ஏதுவாகின. ஆனால் அதேவேளை, கெரில்லாக்களை ஒழிப்பதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக முனைந்தது.

27 மார்கழி 1974 இல், நிக்கரகுவா விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய இயக்கமொன்று உருவாகியிருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட முனைந்தது எம் முன்னணியால் நிறைவேற்றப்பட்ட முக்கிய செயல்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறேன். இதில், சோமோசாவின் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளைப் பணயக் கைதிகளாக்கினோம். இச் செயல்பாட்டின் மூலம் ஒரு கோடி டாலர்களைப் பெற்றது மட்டுமல்லாமல், முதன் முறையாக எம்மைப் பற்றிய செய்திகள் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் வெளியாகின. இத்துடன் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

கெரில்லாக்களை மலைப்பிரதேசங்களில் ஸ்திரமாக நிலைகொள்ளச் செய்வதற்காகவே இச் செயல்பாடு செய்யப்பட்டது. இருந்தும் முற்று முழுதாக எமது நோக்கம் பலிக்கவில்லை. சோமோசா, நகரப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும், மலைகளிலும் தீவிரமான ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டார். இப் பிரதேசங்களில்தான், இயக்கமானது கெரில்லாக் குழுக்களை ஏற்படுத்தி, தொடர்புகளை விஸ்தரிக்க எண்ணியிருந்தது. 1974 தொடக்கம், 1977 வரை ஆயிரமாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பேர் காணாமலும் போயினர்.

ஒழிப்பு நடவடிக்கைகளும், எமது கெரில்லா அணியின் பலவீனமும் கெரில்லாக்களை, எதிர் நடவடிக்கைகளிலிருந்த பின்வாங்கச் செய்தன. சன்டினிஸ்ட் நடவடிக்கைகளால் வரும், அனுகூலங்களை, அரசியல் அழுத்தங்களை எம்மால் நெறிப்படுத்த முடியாதிருந்தது. இது எமது எதிரிக்கு எம்மை முளையிலேயே கிள்ளி எறிய இலகுவானதாக இருந்தது. இந்நடவடிக்கைகளின் ஆரம்பமாக பத்திரிகைத் தணிக்கை அமுலானது. இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இராணுவ முறையில் கைதிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

எமது நடவடிக்கைகளின் மந்தநிலை 1977 ஐப்பசியுடன் புத்துயிர்ப்புப் பெற்றது. எமது எதிர்ப்பு நடவடிக்கையானது, இக் கட்டத்தில் சான் கார்லோஸ் பாதுகாப்புப் படையினரைத் தாக்கி அவ்விடத்தைக் கைப்பற்றியதுடன் ஆரம்பமானது. அத்துடன், தொடர்ந்து கரையோரப் பிரதேசமான ‘கோஸ்டாறிக்கா’ வை 13ம் திகதியும், பின்னர் மொசொன்டே நகரத்தைத் தாக்கி அதனையும் கைப்பற்றினோம் இம் மொசொன்டே நகரமானது ஒகோடல் என்ற இடத்திலிருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. இத் தாக்குதல் 15ம் திகதி இடம்பெற்றது. மொசொன்டே பிரதேசத்தில் கெரில்லாத் தாக்குதலை நிகழ்த்தி, அப்பிரதேசத்தை வெற்றி கொண்ட பின்னர். பொதுச்சதுக்கமொன்றில் பொதுமக்களிற்கு தமது நடவடிக்கைகளைப்பற்றி பொதுக் கூட்டமொன்றை நிகழ்த்தினர். பின்னர் அப்பிரதேசத்திலிருந்து வெற்றிகரமாகப் பின்வாங்கினர்.

இரண்டு நாட்களின் பின்னர், தலைநகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ‘மஸாயா’ என்ற இடத்திலுள்ள பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது அத்துடன் எதிரிகள் மீதான தீவிரத் தாக்குதலையும் நிகழ்த்தினோம். நான்கு மணித்தியாலங்களுள், எமது நான்கு சக உறுப்பினர்கள் மனாகுவாவிலிருந்து மஸாயா வரை எல்லா எதிரிப் படைகளையும் தமது கட்டுப் பாட்டின் கீழ் கொணர்ந்தனர். 25ம் திகதி குளுடுN ஆனது சான் பெர்னாண்டோ நகரத்தைக் கைப்பற்றியது. அங்கிருந்த இராணுவ வீரர்கள் எம்மிடம் சரணடைந்தனர்.

இத்தகைய வளர்ச்சியுள்ள தாக்குதல் நடவடிக்கைகள் இராணுவ அரசியல் ரீதியில் பெரும் திருப்பங்களை விளைவித்தன இந்நேரத்தில் தான் ஒருங்கிணைதலிற்கான, முயற்சிகள் முளை கொள்ள ஆரம்பித்தன. இதிலிருந்து, பன்னிரண்டு குழுக்கள் அடங்கிய அமைப்பு ஒன்று உருவாகியது. (புசழரி ழக வறநடஎந).

மா.ஹா. ஐப்பசி 1977ல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏதுவாக அமைந்த காரணங்கள் யாவை?

ஹ.ஒ: 1977 ஐப்பசியில், ஆயுதப் போராட்டத்தை நிலைநிறுத்தக் கூடிய அல்லது இலகுவாக்கக்கூடிய சூழ்நிலையொன்று காணப்பட்டது. ஏனெனில் அப்போது. சோமோசாவின் அரசாட்சியானது மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

1972 இல் இடம் பெற்ற பூமியதிர்ச்சியினைத் தொடர்ந்து, விளைந்த தேசங்களால் சோமோசாவின் அரசாங்கம் மிகவும் நெருக்கடி நிலைகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. அத்துடன் சோமோசாவின் இராணுவப் பிரிவிலும் ஊழல்கள் நிறைந்திருந்தன. இத்தகைய அரசாட்சியின் ஊழல்கள், இவற்றால் பாதிப்புற்ற குட்டிபூர்ஷ_வாக்கள், நடுத்தர பூர்ஷ{வாக்கள் யாவரையும் அரசிற்கு எதிராக, தமது எதிர்ப்பைக் காட்டத் தூண்டியது.

மறுபுறம், வியாபாராம் செய்கின்ற பெருவியாபாரிகள், தமது நாட்டை, நாட்டின் பொருளாதாரத்தை இச் சர்வாதிகாரம் கட்டியெழுப்பும் என்பதில் நம்பிக்கை இழந்தனர். இவ் ஆட்சியின் அடக்கு முறை கொள்கையின் காரணமாக எழுந்த சர்வதேச எதிர்ப்புக்கள் உட்பட, நாட்டின் உள்ளேயும் மக்களின் பல பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புத் தீவிரமாகிக் கொண்டிருந்தது.

சோமோசாவின் அரசாங்கம் பலத்தை இழந்து கொண்டு செல்ல, எமது கெரில்லா வீரர்கள் அப் பலத்தையெல்லாம் தம்முள் கிரகித்துக் கொண்டனர். எமத கெரில்லா வீரர்கள், வாழ்ந்த வடமலைப் பிரதேசங்களில் 1975 அளவில், கெரில்லா ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீட்பதில் பாப்லோ உபேடா அணி தீவிரமாக இறங்கியிருந்தது.

இத்தகைய கடின சூழ்நிலைகளிலும், மனம் தளராத உறுதி மிக்க எமது நாடளாவிய கெரில்லா வீரர்களின் அயராத முயற்சியாலும், சுறுசுறுப்பாலும் எமது நடவடிக்கைகள் மேலும் மேலும் வளர்ச்சிபெற்றன. எத்துணை கஷ்டத்திலும் கெரில்லாக்கள் அழிந்த நோய் விடவில்லை. இத்தகைய மன உறுதிமிக்க எமது கெரில்லா வீரர்கள் இந் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருந்தால், இப்பொழுது இடம்பெற்றது போன்று, எமது ஆயுதப் பலத்தை, சர்வாதிகாரத்திற்கெதிரான பெரும் சக்தியாக உருக்கொள்ளச் செய்ய இயலாதிருக்கும்.

பொருளாதார நெருக்கடியும், வளர்ந்துகொண்டேவந்த மக்கள் எதிர்ப்பும், நாட்டில் பெரும் நெருக்கடி நிலையை தோற்றுவித்தது. சர்வாதிகாரியின் சர்வாதிகார ஆட்சி முறைக்கு ஏற்ப, தமது வியாபாரா முறைகளை மாற்றிக் கொண்டே வந்த பெருமுதலாளிகள் தற்போத பகிரங்க எதிர்ப்பைக் காட்ட முனைந்தனர். சனநாயக முன்னணியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் சோமோசா எதிர்ப்புக் குழுவான ருனுநுடு உடன் இணைந்தனர். ருனுநுடு பூர்ஷ{வாக்களை அங்கத்தினர்களாகக்கொண்டது. அப்போது சனநாயக முன்னணிக்குத் தலைமை தாங்கியவர் லாபிரொன்ஸா ஆசிரியரான பெட்ரோ ஜோஅகுவின் சாமோரா. ருனுநுடு ஆனது பின்வரும் உரிமைகளை வலியுறுத்தி வந்தது. அரசியல், தொழிற்சங்க சுதந்திரங்களை வழங்குமாறு கோரியது@ பத்திரிகைத் தணிக்கையினை நீக்குமாறு கோரியது@ முற்றுகையும் அடக்குமுறைகளையும் ஒழிக்குமாறு வேண்டியது@ நாடு கடத்தப்பட்டவர்களிற்கும், அரசியல் கைதிகளிற்கும் பொது மன்னிப்பு வழங்கக் கோரியது.

பூர்ஷ{வாக்களின் அரசியல் எதிhப்பு நடவடிக்கைகள் 1977 மத்தியகாலப் பகுதிகளில், காட்டர் நிர்வாகத்தின் வெளிநாட்டின் கொள்கையின் விளைவாக. மிகவும் தீவிரமாகக் காணப்பட்டன.

அடிப்படைப் பிரச்சினைகளான தேசிய இராணுவப் படையின் அடக்கு முறையையும், பொருளாதார நெருக்கடியையும் தீர்த்து வைக்காது இப்போதைய அரசமைப்பை மாற்ற ஏகாதிபத்தியங்கள் முனைந்தன.

அரசியல் சூழ்நிலைகள், சோமோசாவை, தனது நிலையை ஸ்திரப்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருந்தன. 19ம் திகதி புரட்டாதி மாதம், முற்றுகைகளும் இராணுவச் சட்டங்களும் தளர்த்தப்பட்டன. அத்துடன் மாநகரசபைத் தேர்தல் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜனநாயகப் போர்வையில் இடம் பெற்ற இம் முயற்சியானது 1977 காலப் பகுதிகளில், குளுடுN ஐ முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளில் சோமோசாவின் ஆட்சி மும்முரமாக இறங்கியபோது எடுக்கப்பட்ட முயற்சி என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

1975 தொடக்கம் 1977 வரை அவர்கள் எம்மை முற்றாக ஒழிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகள் சகலதையும் கையாண்டிருந்தனர். இந் நடவடிக்கைகளைச் செயல் முறைப் படுத்தும் வகையில் பெரும்பாலான கிராமப் புறங்களை ஒழித்தனர். இராணுவ-நீதிமன்றங்களை விஸ்தரித்தனர். எமது முன்னணிப் போராளிகளான, கார்லோஸ் பொன்சேகா, எட்டுவாடோ கொன்ரெராஸ், கார்லோஸ் அகுவேரா, எட்கார் மன்குவியா, பிலமென் றிவரோ ஆகியோர், இதன்போது கொல்லப்பட்டனர்.

குளுடுN இற்கு அப்போதைய சூழ்நிலையில் எதிர் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் எல்லைப் படுத்தப் பட்டே இருந்தன.

சோமோசாவும் யான்கீகளும், எம்மை முற்றாக அகற்றிவிட்டோம் என எண்ணியிருந்ததால், இத்தகைய நெருக்கடிகளுக்கு எம்மைக்காரண கர்த்தாக்களாக்க முடியவில்லை. எம்மை முற்றாக அழித்தாகி விட்டது என்ற உணர்வில். சோமோசாவும் அவரது ஆட்சியாளர்களும், ஜனநாயகத் திட்டங்களை மக்கள் முன்வைக்க சரியான தருணமாக அக்காலத்தை தீர்மானித்தார்கள்.

இந் நேரத்தில், நாங்கள் அரச இராணுவப் படைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரமாக முயன்று வந்தோம்.

ஆனால் 27 மார்கழி 1974ல் நடத்திய தாக்குதலின்போது தொடக்கத்தையே இழந்து போனது போன்று, இம்முறைத் தாக்குதலின்போது எவற்றையும் இழப்பதில்லை அல்லது இயலுமானவரை இழப்பதைத் தவிர்த்துக் கொளள் வேண்டும் என்று எண்ணினோம். ஆரம்பத்தில் எம்மிடம் மக்கள் அமைப்புக்கள் இருக்கவில்லை. ஆனால் தீவிரமாக சுறுசுறுப்பாக, உண்மையுடன் இயங்கும் அங்கத்தவர்கள் இருந்தனர். எனவே, படிப்படியாக, மக்களைப் பேராளிகளாக்கி, ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை எம்மால் கட்டியெழுப்ப முடிந்தது. அப்போது போராட்டத்தை முன்னெடுக்க கூடிய வகையில், உயர்ந்த சக்திகளை நாம் கொண்டிருக்காவிட்டாலும், எமது இராணுவ நடவடிக்கைகள் அரசியல், நிர்வாக அமைப்பினில், நிரந்தரப் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய தந்திரோபாய நடவடிக்கைகள் என்பதை உணர்ந்து கொண்டோம்.

மா.ஹா:- படை முன்னணியானது இவ்வாறான நிலையில் இருந்தபோது எங்ஙனம் நீங்கள் தாக்குதலை நடத்துவதெனத் தீர்மானித்தீர்கள்?

ஹ.ஓ:- நாங்கள் நம்பிக்கையிழந்த நிலையில் இருந்தது உண்மை எனினும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியாதிருந்தது. உண்மையில், நாங்கள் எங்களைப் பாதுகாப்பதிலே ஈடுபட்டோம். அத்துடன் சூழ்நிலைகளை வெற்றி கொள்ளும் அதே நேரம், வெறும் தீரச் செயல்களால், வரும் விழுக்காடுகளையும் தவிர்த்துக் கொள்ள விழைந்து தீவிரமாக ஆராய்ந்தோம்.

எமது எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முன் சில பழமைவாத மனப்பாங்கையும் வெற்றி கொள்ளவேண்டி இருந்தது. இதனாலேயே, எமது இயக்கம் மெதுவாகவே சக்திகளை அணி திரட்டிக் கொண்டிருந்தது “மெதுவாக” அல்லது “குறைந்த வேகத்திலேயே” அணிதிரட்டவேண்டி இருந்தது. ஏனெனில் எமது ஆரம்ப கால நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட இழப்புக்களே காரணம்.

மா.ஹ :-“மந்தமாக சக்திகளை அணிதிரட்டுதல்” பற்றி மேலும் விளங்குமாறு கூற முடியுமா?

ஹ.ஒ :- இங்கு நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்றால், ஐக்கியத்தில் பங்குபற்றாதிருத்தல், ஒப்பந்தங்களில் நம்பிக்கை கொள்ளாதிருத்தல் போராடும் அதேவேளை பலத்தையும் அதிகரித்தல் என்பவற்றையே, எதிரியுடன் மோதலைத் தவிர்த்து ஆயுதப் பலத்தை அதிகரித்தல், நிர்வாகத்தை விஸ்தரித்தல், மக்கள் பங்கு பற்றாமல் விடுதல் என்பவை போராட்டத்தில் மிகவும் எதிரான கண்ணோட்டங்கள். இச் செயல் முறைகளில் நாங்கள் ஈடுபடவில்லை. ஏனெனில், நாம் எமது முழுப் பலத்தையும் அளவுக்கதிகமாக வெளிக்காட்டுவோமாயிருந்தால் அது எமது இயக்கத்தின் அழிவை உறுதி செய்யும் என்பதை நன்கு உணர்ந்திருந்தோம்.

வைகாசி 1977ல் நாங்கள் ஒரு செயல்முறைத் திட்டத்திற்கான அடிப்படையொன்றை உருவாக்கினோம். ஒரு புரட்சிக்கான கண்ணோட்டத்தில், புரட்சிக்குரிய தந்திரோபாயங்கள் கொண்டது. இச் செயல்முறைத்திட்டம். இத்திட்டம் உண்மையில் 1975 இல் கார்லோசும் நானும் இணைந்து தயாரித்ததொன்று. 1973 இல் சிலியில் இடம் பெற்ற ஆட்சி கவிழ்ப்பின்போது, ஒஸ்கார் ரேர்சோ, றிக்காடோ மொறாலேஸ் ஆகியோரின் மரணத்தின் பின் இடம்பெற்ற நிகழ்ச்சிகளின் ஒருவித வளர்ச்சிக் கட்டமாகவே இத்திட்டம் அமைந்தது. இது இரண்டு விதப்போர்த்தந்திரங்களைப் பற்றிய விவாதத்தில் எம்மை ஈடுபடச் செய்துது.

ஒரு புறத்தில், மலைப்பிரதேசங்களில் செறிவாக்கப்பட்ட கெரில்லா யுத்தமுறை, மறுபுறம் மக்களின் செறிவாக்கப்பட்ட கெரில்லா யுத்தமுறை.

இதுதான் முதலாவது விவாதம். ஆகவே அது ஒரு முற்றிலும் பக்குவமடையாத வகைப்பட்டதாகவே இருந்தது. அதாவது மலைப்பிரதேசங்களா, நகரங்களா சிறந்தவை என வேறுபடுத்துதல் சரியானதாக இருக்கவில்லை.

மா.ஹ :- ஏன் நீங்கள் மக்களையும் நகரங்களையும் ஒருங்கே இணைத்தும், அதேவேளை கெரில்லாக்களையும் மக்களையும் ஒருங்கே இணைக்காதும் வேறு படுத்தீனீர்கள்? என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

ஹா.ஒ:- உண்மை இதுதான்@ நாங்கள் எப்பொழுதும் மக்களை எமது கணிப்பில் எடுத்துக் கொண்டோம். அதாவது கெரில்லாக்களிற்கு அவர்கள் அளித்துவரும் ஆதரவைக் கொண்டே இதனை நாம் கணித்தோம். ஆகவே தான், அரச இராணுவப்படைகளை இலகுவில் வெற்றி கொளள் முடிந்தது. உண்மையில் கூறப்போனால் மக்களிற்குப் பக்க பலமாக கெரில்லா வீரர்கள் எப்போதும் இருந்தனர். எனவே, ஒரு புரட்சியின் மூலம் மக்களே எதிரியை வெற்றி கொண்டார்கள். நாம் எல்லோரும் இதே கண்ணோட்டத்தைக் கண்டு விளங்கினோம். செயல் முறையில் வெற்றி பெறுவதானால், மக்களை அரசியல் மயப்படுத்தி ஆயுதப் போராட்டத்தில் பங்கு பெறச் செய்ய வேண்டும் என்பதும் நிதர்சனமாகியது. கெரில்லாக்கள் மட்டும், தனித்து எதனையும் சாதிக்க இயலாது. ஏனெனில் எதிரியை வெற்றி கொள்வதற்கான முழு ஆயுதப்பலத்தையும், முன்னணிப்படையாகிய ஆயுதந்தாங்கிய இயக்கம் கொண்டிருகக்கவில்லை. அரச இராணுவப்படைகளைத் தாக்கக் கூடிய ஆயுதங்களையும் மூலவளங்களையும் மட்டுமே கொண்டிருந்தோம். எமது உண்மையான பலம், எதிரியின் அரசியல் இராணுவ தொழில் நுட்பங்களை கலைக்கக் கூடிய ஒருமுகப்படுத்தப்பட்ட நிலையை நிரந்தரமாக பேணுவதிலேயே தங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம்.

அபிவிருத்தி பெருந்தெருக்கள், சமூகநிலைமைகள் பாதிப்படைய எதிரியால் தனது சக்திகளை எமக்கெதிராக இயக்க முடியாமல் போனது. ஏனெனில் மக்கள் அமைப்புக்களில் மக்கள் ஒருங்கு திரண்டமை, ஊர்வலங்கள், நாசவேலைகல், எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை அதிகரிக்க எதிரிக்கு மேலும் மேலும் தலையிடி கூடிக்கொண்டு சென்றது. இந்நிலையில், மக்களின் முன்னணிப்படையாகிய நாம் எம் மக்களின் எதிரிகளை, வெகு சுலபமாக வெற்றி கொண்டோம்.

நான் என்ன கூறுகிறேன் என்றால், இந் நெருக்கடி நிலையினை இவ் எதிர்ப்பு புரட்சிசக்திகள் (ஏகாதிபத்திய அடிவருடிகள்) தமக்கு சாதகமாகப் பயன்படுத்த விழைந்தனர். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எம்மால் பூரணமாக உணர முடிந்தது. அத்துடன் எதிரி முற்றுகையைத் தளர்த்தி பொதுமன்னிப்பை வழங்குவது எனத் தீர்மானித்துத் தனது காலை முன்வைக்கிறான் என்பதையும் கவனித்துக் கொண்டோம். ஆகவே இது நடந்து முடிந்தால், நாம் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுவோம். எனவே தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரமாக்கினோம்.

மா.ஹா :- எதிர்ப்பு நடிவடிக்கைகள் என நீங்கள் ஈடுபட்டிருந்த தாக்குதல்கள் ஓர் எல்லைக்குட்பட்டவையாய் உள்ளன.

ஹ.ஓ:- நன்று@ முன்னர் ஒரு புரட்சியின் அனுபவங்களைக் கொண்டிராதவர்கள் என்ற ரீதியில், இத்தகைய நடவடிக்கைகளில் மக்களை அணிதிரட்டுவதற்குரிய வழிமுறையாகவே நாங்கள் அதனைக் கருதினோம். ஆனால் செயல்முறை எங்களுக்கு உணர்த்தியது எதுவெனில், மக்களைப் பேராளிகளாக்கும் நிபந்தனைகள் யாவற்றையும் இத்தாக்குதல்கள் நிவர்த்தி செய்யவில்லை என்பதே. ஆகவே புரட்சியின் குணாதிசயங்கள் சரியான பாதையைத் தேர்ந்து கொண்டன.

இவ் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகள், புரட்சிக்கான தந்திரோபாயங்களாயே செய்யப்பட்டன. ஆனால் அதுவே புரட்சி அல்ல. ஆனால் அத்தாக்குதல்கள் புரட்சிக்கான நிகழ்ச்சிகளிற்கு அடிகோலின.

மா.ஹா:- நீங்கள் இவ்வகையிலான தோல்வி ஏற்படும் என முன்பே கருதினீர்களா?

ஹா.ஒ:- ஆம்@ நாம் தோற்றிருப்போமாயின் அது சன்டினிஸத்திற்குப் பலத்த அடியாகி இருக்கும். இந்தச் சவாலை நாங்கள் ஏற்க வேண்டி இருந்தது. எங்களது எதிரியை நாங்கள் நன்கு உணர்ந்தபடியால், நாங்கள் அழிந்து விடமாட்டோம் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம். இருந்த பொழுதும், எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குவது பெரும் சவாலாகவே இருந்தது. ஆனால், எதிர்ப்பினைக் காட்டாது நாங்கள் அழிந்து போவதை விட எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மடிவதுமேல் என எண்ணினோம். ஏனெனில் சண்டையிடுதலின் மூலம் வெற்றிக்கான வழிமுறையொன்றை நாம் முன்னெடுக்கலாம் என்பதாலுமே. அரசியல், இராணுவ ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில், நாம் இறங்கியிருந்தால், எமது வெற்றி நிச்சயப்படுத்தப்படாததொன்றாகவே அமைந்திருக்கும். இப் பிரச்சினைகளைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. தோல்வியை அல்ல.

மா.ஹ :- ஆகவே புரட்சி கிளம்பவில்லை எனினும் ஐப்பசித் தாக்குதல்களை நீங்கள் தோல்வியில் முடிந்தவை எனக் கருதவில்லை.

ஹா.ஒ:- ஐப்பசித் தாக்குதல்களை நாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே கருதுகிறோம். ஏனெனில் எல்லாவற்றிற்கும் முதன் முதலாக, ஏகாதிபத்தியத்தின் திட்டங்களை முறியடிக்க இத்தாக்குதல்கள் எமக்கு உதவின. எம்மை ஒழித்து விட்டதாக எதிரி நினைத்துக் கொண்டிருந்த வேளை, முன்பிராத பலத்துடன் மீண்டும் அரங்கில் தோன்றி எதிரிக்குப் பலத்த அடிகளைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது. நகரப்புறங்களில் நாங்கள் தாக்குதல் தொடுத்தபோது, எதிரி மேலும்வியப்படைந்தான். ஏனெனில் நகரப்புறங்களை அவன் புனிதமான இடங்களாக நினைத்திருந்தான்.

மறுபுறம், நெருக்கடிகள் மிகுந்து கொண்டு போக. மக்கள் எவ்வித எதிர்த்தாக்கத்தையும் காட்டவில்லை. அவர்களால் முன்னணிப்படையொன்று தாக்குதல் நிகழ்த்துவதை மட்டும் காண முடிந்தது. இத்தாக்குதல்கள், சன்டினஸத்தை மக்கள் பூரணமாக விளங்கி, அதை ஏற்றுக் கொள்வதற்கும், மக்களைத் தமது அரசியல், பொருளாதார போராட்டங்களில் நம்பிக்கை கொள்ளச் யெ;வதற்கும் காரணமாய் விளங்கின. அத்துடன் இந் நிகழ்ச்சிகள், அரசைப் பாரதூரமான தவறுகளைச் செய்யக் கூடிய நிலைக்கு ஆளாக்கின. இத் தவறுகளில் மிகப் பெரிய தவறு எதுவெனில், 10 தை, 1978இல் இடம் பெற்ற பெட்ரோ ஜோ அகுவின் சாமோரோவின் கொலையாகும்.

இக் கொலைச் சம்பவமானது, முதன் முறையாக மக்களை வீதியில் இறங்கி நியாயம் கேட்குமாறு தூண்டியது. இந்நிகழ்ச்சி, சன்டினிஸத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஒரு அளவுகோலாகவும் அமைந்திருந்தது. ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் நமக்குச் சாதகமாக திசைதிருப்ப முயன்ற நெருக்கடி நிலையை இவ் ஐப்பசித் தாக்குதல் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

மா.ஹா :- ஐப்பசித் தாக்குதல்களுக்காக, எப்போது உங்களைத் தயார் படுத்திக் கொள்ள ஆராம்பித்தீர்கள்?

ஹ.ஒ:- முன்பு நான் குறிப்பிட்ட எமது திட்டத்தின்படி, மே, 1977 இற்கு முன்பே நாம் ஆயுதங்களைச் சேகரித்துக் கொண்டோம்@ அரசியல், போர்த் தந்திர வேலைகளை செய்து கொண்டிருந்தோம். இதன்மூலம் எமது நோக்கத்தினை விளங்கிக் கொண்டிருந்த மக்களை அணி திரட்டிக் கொண்டிருந்தோம்.

இச் சூழ்நிலைகளுக்காய் எவற்றையெல்லாம் வழங்கினோமோ, அதற்கமைய அச் சூழ்நிலைகளைச் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஓரளவு எல்லாவற்றுக்கும் முண்டு கொடுத்துக் கொண்டே வந்தோம்.

நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியபோது, ஒன்றை மட்டும் பூரணமாக உணர முடிந்தது. அதாவது, எமது முயற்சி நிட்சயமாக வெற்றி பெறும் என்பதே. ஏனெனில் வளர்ந்து வரும் நெருக்கடி நிலையை எதிரியின் சதி முயற்சிகளை, நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்ற உண்மையை, நாங்கள் கவனத்தில் கொண்டு அப்போதே, அங்கேயே எமது எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். நாங்கள் பழமைவாதிகளாக மௌனமாக அடங்கிக் கிடப்போமாயிருப்பின், நாம் எமது அரிய சந்தர்ப்பத்தை எதிரியிடம் இழந்து போயிருப்போம். எதிரியோ எம்மை முதலும் கடைசியுமாக ஒழித்துக் கட்டியிருப்பான் அல்லது நீண்டகாலத்திற்கு எம்மைச் செயலிழக்கச்செய்திருப்பான். ஏனெனில், மக்கள் குழப்பநிலையில் இருந்தார்கள். அரசு சில அற்ப சலுகைகளைக் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த வேளை, மக்களால் எமது நோக்கங்களை விளங்கிக் கொள்வதும் கடினமாக இருந்தது.

ஐப்பசித் தாக்குதல்கள், எதிரியின் மாயவலையைக் கிழித்தெறிந்து, சான்டினிஸத்துக்கு வேகமான வளர்ச்சியையும் புத்துயிர்ப்பையும் கொடுத்தது. அத்துடன், இராணுவ ரீதியில் அது ஒரு முழுதான தோல்வியே அல்ல. மஸாயா படைத்தளத்தை முற்றுமுழுதாகக் கைப்பற்றமுடியாது போனாலும், தாக்குதல் தொடுத்த முழுதாகக் கைப்பற்றமுடியாது போனாலும், தாக்குதல் தொடுத்த பெரும்பாலும் எல்லாக் கெரில்லா வீரர்களும் உயிர் தப்பினர். வடக்கில், ஐப்பசி “77 தொடக்கம் வைகாசி” 78 வரை கெரில்லாக்கள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர். இக் கெரில்லாக் குழுவினரையே கார்லோஸ் பொன்சேகா வடக்கு அணி என அழைப்போம். எமது சில கெரில்லா வீரர்கள் சான் கார்லோஸில் இடம் பெற்ற தாக்குதலின்போது உயிரிழந்தனர். ஆனால் இராணுவ ரீதியில் அத்தாக்குதல் எமக்குப் பெரு வெற்றியாகும். சான் கார்லோஸைத் தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை. ஆனால் இத்தாக்குதல் கியூபாவில் இடம் பெற்ற மொன்கடாத் தாக்குதலையொத்ததல்ல@ முதலில் தாக்கினோம் பின்வாங்கினோம்@ பின்னர் தாக்கினோம்.

இதை நிரூபிக்கும் பொருட்டு, நான்கு மாதங்களின் பின்னர், 2 நகரங்களை நாங்கள் கைப்பற்றினோம். முதல் முறையாக, கெரில்லா எதிர்ப்பு முகாமொன்றை நியூவா செகோவியாவில் கைப்பற்றினோம்.

ஐப்பசித் தாக்குதல்கள் தோல்வியைத் தழுவின என்றால், அடுத்த சில மாதங்களில் நாம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியாது. ஐப்பசியிலிருந்து, எமது அரசியல் இராணுவ நடவடிக்கைகளில் வளர்ந்து கொண்டே வந்தோம்.

மா.ஹ :- ஐப்பசியில் மக்களின் நிலை எவ்வாறு இருந்தது?
ஹ.ஒ:- ஐப்பசியில் மக்களின் பங்களிப்பு சொற்பமாகவே இருந்தது. மக்கள் எவ்வித தாக்கத்தையும் காட்டவில்லை.

மா.ஹா :- ஆகவே அந்நடவடிக்கைகள் முன்னணிப்படையின் நடவடிக்கைகள் மட்டுமே?

ஹ.ஒ:- ஆம்@ அது மக்களின் முன்னணிப் படையினராலேயே மேற்கொள்ளப்பட்டது. இந் நடவடிக்கை, நெருக்கடி நிலையை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது மட்டுமல்லாமல், எதிர்ப்புரட்சிச் சக்திகளின் திட்டங்களைச் சிதறடித்தது@ முன்னணிப்படையின் பலத்தைப் புதுப்பிக்கச் செய்தது@ அத்துடன் மக்கள் முன்னெடுத்துச் செல்லக் கூடிய அடக்கு முறைக்கெதிரான அரசியல், தொழிற்சங்கரீதியான போராட்டங்களை அதிகரிக்கச் செய்தது@ ஆகவே இந் நடவடிக்கைகள் மக்கள் இயக்கத்தை மேலும் பலப்படுத்தி, புரட்சிக்கு வித்திட்டன.

மா.ஹா :- ஆனால், உங்கள் செயல்பாடுகளின் காரணமாக, சர்வாதிகாரியின் அடக்குமுறை மேலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கலாம் தானே?

ஹ.ஒ :- ஆம்@ சர்வாதிகாரம் தொடர்ச்சியான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. புரட்சிகர இயக்கம் சோமோசாவின் ஆட்சியால் வெகு கொடூரமாக ஒடுக்கப்பட்டது.

மா.ஹ :- இந்தவகையில் உங்கள் செயற்பாடுகள், மக்கள் மீது அரசு பலமான அடக்குமுறையை மட்டும் கட்டவிழ்த்தது என்றரீதியில், சாசகச் செயல்கள் ஆகி விடாதா?

ஹா.ஓ:- ஆம்@ தொழிற்சங்கங்களை அமைப்பதில் ஈடுபட்டிருந்த சில இடதுசாரிகள், மக்கள் இயக்கங்களின் அமைப்பினையும் புரட்சிகர தன்மையையும் பாதித்ததாகக் கூறித் திரிந்தன. ஆனால்: உண்மையில் அங்ஙனம் நடக்கவில்லை. ஆனால், சட்டபூர்வமான, பகிரங்க மக்கள் அமைப்புக்களை இந்நடவடிக்கை ஓரளவு பாதித்தது என்றாலும் புரட்சிகர நிபந்தனைகளில், அவர்களது அமைப்பை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. இத்தகைய இடதுசாரிகளின் வாதமானது. ஜனநாயகப் போர்வையில் மறைந்திருக்கும் ஏகாதிபத்தியவாதிகள் விரித்துள்ள வலையில் விழுவதற்கு ஒப்பானது. எம்மைப் பொறுத்தவரை இது போன்ற தொழிற்சங்கங்கள் தோன்றாதிருப்பதே நல்லது.

1977 ஐப்பசியில் ஏற்பட்ட பெரிய திருப்பமானது. மொத்தத்தில் பெரும் நெருக்கடி நிலையொன்றை விளைவாக்கியது. அடுத்ததாக பெட்ரோ ஜோ அகுவினின் கொலை. இது மேலும் நிலைமையை நெருக்கடிக்குள்ளாக்கியது. அத்துடன் நகரப்புற மக்கள், அயலவர், எல்லா மக்களும் எல்லா இடத்திலும் பெருந்தொகையாகக் கிளர்ச்சியில் பங்கு கொள்ள, மீளமுடியாத நெருக்கடி நிலையில் அரசு தளம்பிக் கொண்டிருந்தது.

அதன்பின், 2 மாசி 1978 இல் கிரனடாவின் தலைநகரும். றிவாஸின் தலைநகரும் கைப்பற்றப்பட்டன. இந் நடவடிக்கைகளில் பல கெரில்லா வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர். இவர்களில் பலர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்கள் கிரனெடாத் தாக்குதலை முன்னெடுத்துச் சென்ற தளபதியான கமிலோ ஒட்டேகா சாவோடிரா, கெரில்லாக்களின் குருவும் தளபதியுமான காஸ்பார் கார்சியா றவியானா@ அத்துடன் இவர் ஸ்பானிஷ் தேசத்து சர்வதேசியவாதியும் ஆவார்.

மா.ஹ :- எப்பொழுது மக்கள் புரட்சி நடவடிக்கைகளில் பங்கு பற்றத் தொடங்கினர்?

ஹ.ஒ :- 1977 ஐப்பசித் தாக்குதல்கள், மக்கள் இயக்கம் ஆரம்பிப்பதற்குரிய பாரிய அடித்தளம் ஒன்றை இட்டது. ஆனால் ஜோ அகுவினின் கொலையின் பின் மக்கள் தெளிவாகத் தமது நிலைப்பாட்டை தமது உரிமையை எடுத்துக் காட்டினர். அத்துடன் ஆயுதமேந்திய போராட்டத்திலும் தம்மைப் பிணைத்துக் கொள்ள விழைந்தனர்.

மா.ஹா:- மக்கள் எழுச்சியானது ஒரு தன்னிச்சையான செயற்பாடா?

ஹா.ஓ :- முடிவில் அது குறிப்பிட்ட சில மக்களின் தன்னிச்சையான செயற்பாடுதான். ஆனால் சன்டினிஸ்ட முன்னணி, தனது இராணுவப் பிரிவுகள் மூலமும் சுறுசுறுப்பான அங்கத்தவர் மூலமும் அவர்களை நெறிப்படுத்தியது. சன்டினிஸ்டுக்களின் வேண்டுகோளுக்கமையத் தோன்றியதல்ல இம் மக்கள் எழுச்சி@ ஒருவரும் முன் நோக்கியிராத சூழ்நிலையின் பிரதிபலிப்பாய் அமைந்ததே இம்மக்கள் இயக்கம்.

அப்பொழுதும் மக்கள் மத்தியில் எம்மை அறிமுகப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் சொற்பமாகவே இருந்தன. எமது இராணுவ, அரசியல் நிலைகளை மக்களுக்கு திடப்படுத்தி நம்பிக்கையளிப்பதே முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆனால். உறுதியான நிலைப்பாட்டை நாம் இக் குறிக்கோளில் கொண்டிருக்கவில்லை ஏனெனில், நாங்கள் தேவையான காடர்கள் (ஊயனசநள) கை; கொண்டிருக்கவில்லை.

ஐப்பசியில், நாங்கள் இக் குறிக்கோளை நோக்கி படிப்படியாக முன்னேறினோம். புதிய மக்கள் அமைப்புக்கள் எல்லா வகையிலும் முனைப்புறத் தொடங்கின. அயற்குழுக்கள், பல தொழிற்சாலைகளில் பிரச்சார வேலைகளை மேற்கொண்டு தொழிலாளர் அமைப்புக்களை உருவாக்கினோம்@ மாணவர் இயக்கங்களிலும் நாம் எமது பிரச்சார வேலைகளை மேற்கொண்டோம். மேலும் கூறப் போனால், ஐப்பசிக்கு முன்னமே ஐக்கிய மக்கள் அமைப்பு ஒன்று ஆரம்பமாகி இருந்தது. இவை தான், புரட்சிகர அமைப்புக்களை அவற்றி;ன் செயல்முறைகளை புதுப்பித்து ஒன்றிணைந்து சோமோசாவின் அரசிற்கெதிராக போராடச் செய்ய சன்டினிஸ்டுக்கள் எடுத்த முயற்சிகளாகும். இதுவே, படிப்படியாக, மக்களைத் தேசிய, சமூக விடுதலையின் பங்குபற்றச் செய்தது.

வேலை நிறுத்தங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது பூர்ஷ{வாக்கள் இப்போராட்டத்திலிருந்து பின்வாங்கின வேளை குளுடுN ஆனது, பெப்ரவரி2 இல் இராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருந்தது. இதனால்தான் நாங்கள் கிரனெடாவையும், கெரில்லா எதிர்ப்பு முகாமிருந்த சான்ரா கிளாராவையும் கைப்பற்ற நினைத்தோம்.

கெரில்லா எதிர்ப்பு முகாமை, தாக்கும் குழுவிற்கு தலைமை வகுத்தது ஜேர்மன் போமறிஸ், விக்டர் ரிறாடோ, டானியல் ஒட்டேகா என்பது. எமது இளைய சகோதரரான கமிலோ கிரனெடாத்தாக்குதலை நிகழ்த்தினார். றிவாஸ் மீதான தாக்குதலை எடென் பஸ்டோரா நிகழ்த்தினார். அத்துடன் கஸ்பார் கார்சியாவும் பங்கு பற்றினார். அந் நெருக்கடி நிலையில் இதுவோர் பலத்த அடியாகும்@ இத்தகைய நடவடிக்கைகள் மக்களிடையே தன்னம்பிக்கையையும், சோமோசாவிற்கெதிராக போராடுவதற்கு அவர்கள் பெற்றுள்ள உரிமையையும் இரட்டிக்கச் செய்தன. இப்போது மக்கள், எதிரிக்குப் பலத்த தாக்குதல்களை விளைவிக்கக்கூடிய, பலம் வாய்ந்த முன்னணிப் படையை இனம் கண்டு கொண்டனர். ஆகவே, பெப்ரவரித் தாக்குதலிற்குத் தேவையான உந்துசக்தியை நாம் பெற்று வந்தோம்.

முh.ஹா:- உங்களால் கைப்பற்றப்பட்ட நகரங்களிலிருந்து பின் வாங்க வேண்டியிருந்ததைத் தோல்வியாகக் கருதவில்லையா?

ஹா.ஒ :- இல்லை@ ஒருபொழுதும் இல்லை@ கைப்பற்றிய நகரங்களில் அரசபடையினரின் ஆயுதங்களைக் கைப்பற்றினோம்@ அவர்களது இராணுவப் பலத்தை முறியடித்தோம்@ ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் தொடர்ச்சியாகத் தாக்குதளைத் தொடுத்தோம்@ ஒவ்வொருவரும் நகரின் உள்ளேயோ, நகரச் சுற்றுப்புறங்களிலேயோதான் இருந்தோம்.

அப்பொழுது நாட்டின் வடபகுதியில், கார்லோஸ் பொன்சேகா அணி தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தது. அது எவ்வித இழப்புகளையும் சந்திக்காது தனது தாக்குதல்களை வெற்றிகரமாக தொடுத்துக் கொண்டிருந்தது.

அதேவேளை பாப்லோ உபேடா அணியைச் சார்ந்த கெரில்லாக்கள் மலைப்பிரதேசங்களில் இயங்கி வந்து கொண்டிருந்தனர். அரச இராணுவங்களில் நடவடிக்கைகளின் விளைவாக அவர்கள் பின்வாங்க வேண்டி நேர்ந்தது. நாட்டின் முக்கிய பொருளாதார, சமூக, அரசியற் கேந்திரஸ்தானங்களுக்கருகே, நியூவா செகோவியா இல் இருந்த கெரில்லாக்கள் தாக்குதல்களை மேற்கொண்டதால், பொருளாதார, அரசியல்ரீதியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்த முடிந்தது. ஆனால் நியூவா செகோவியாவில் இயங்கிவந்த கெரில்லாக்குழு ஆனது ஒரு பராம்பரிய அமைப்பாகும். மலைப்பிரதேசங்களில் இயங்கி கெரில்லாக் குழுவின் நடவடிக்கைகள் ஐப்பசி வரையும் சன்டினிஸ்ட இயக்கத்தின் வளர்ச்சிக்கும், இறைமைக்கும், அரசியல் ரீதியான உயர்ச்சிக்கும் காரணமாக இருந்தன.

இதனை வேறு முறையில் கூறினால், ஐப்பசி நிகழ்வுகள், மலைப்பிரதேசங்களில் இருந்த கெரில்லாக்களின் ஆயுதமேந்திய போராட்டத்தின் தொடர்ச்சியே. ஏனெனில் அதுதான், எத்தகைய சூழ்நிலையொன்றைத் தோற்றுவிக்க வேண்டுமென எதிர்பார்த்தோமோ அதே விளைவுகளைத் தந்திருந்தன. ஆனால் தக்க நேரத்தில், இவ் ஆயுதப் போராட்டமானது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளாக மாற்றப்பட்டன.

அது, நாங்கள் சேர்ந்து வைத்தவற்றை சேமிப்பது போன்ற ஒரு காரியமல்ல@ மாறாக சேர்த்துக் கொண்டவற்றிலிருந்து மேலும் பல புதியவற்றை உருவாக்குதலே மிக்க அவசியமாயிருந்தது. அதேபோல் நாங்கள் ஒரு இடத்திலேயே நிரந்தரமாக தங்கினோமாயிருப்பின், அந்த ஒரு பிரதேசத்தை மட்டுமே நாம் விடுதலையாக்கலாம்@ மாறாக மற்றப் பகுதிகளுக்குள் நகர்வதனூடாக அங்கே எம்மைப் பலப்படுத்திக் கொள்ளும் அதேவேளை பிரதேசத்தையும் விஸ்தரிக்கலாம்.

மோனிம்போவில் வாழ்ந்த இந்தியர்களின் கிளர்ச்சிதான் மாசியில் இடம் பெற்ற நடவடிக்கைகளில் பின்னர், ஏற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விளைவு. ஆக் கிளர்ச்சிதான் அவ்வகையில் முதலாவதாக இடம் பெற்றது. அங்கிருந்த இந்தியர்களாலும், சன்டினிஸ்டுக்களாலும் நன்கு திட்டமிடப்பட்ட, அமைப்புரீதியாக ஒழுங்கு படுத்தப்பட்ட நடவடிக்கையாகவும் இருந்தது. எதிரியோ இவ் எழுச்சியை நசுக்கினான் ஆனால் முற்று முழுதாக அவனால் நசுக்க முடியவில்லை. இவ் எழுச்சி ஒரு கிழமை வரை நீடித்தது.

மா.ஹ :- இது ஒன்று மட்டும்தான நாட்டில் அந்நேரம் இடம் பெற்ற கிளர்ச்சி என்கிறீர்களா?

ஹ.ஒ:- ஆம்@ ஆனால் அதேவேளை பகுதிபகுதியாக தேசியரீதியாக எழுந்த பகுதியான கிளர்ச்சிகள் ஒன்று சேர்ந்து, நாடுமுழுவதும் காரணிகள் கிளர்ச்சியின் உயிர்நாடியாய் விளங்கின.

மா.ஹா :- நீங்கள் மொனிம்போ நடவடிக்கையைத் திட்டமிட்டபோது, ஒரு தனிப்படுத்தப்பட்ட நடவடிக்கையினை எல்லைப்படுத்தும் காரணிகள் பற்றி கவனத்திற் கொள்ளவில்லையா?

ஹ.ஒ :- ஆனால் நாங்கள் எழுச்சியைத் திட்டமிடவில்லை, இந்திய சமுகத்தினரால் தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்தோம்.

மொனிம்போ கிளர்ச்சியானது மாசி 20ல் ஆரம்பமாகி ஏறத்தாழ ஒரு கிழமைவரை நீடித்தது. பல நகரங்களைக் கைப்பற்றியமையும், வடக்கு முன்னணியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பலத்த எதிர்பார்ப்புக்களையும், மக்களை ஒன்று திரளவும் செய்தன. அத்துடன் மக்களைக் கிளர்ச்சியில் பங்குபற்ற வைப்பதற்காக துண்டுப்பிரசுரங்களையும் ஐப்பசி மாதத்தில் குளுடுN விநியோகிக்க ஆரம்பித்திருந்தது. இது நாளடைவில் நாடு முழுவதும் தக்க பலனைத் தந்தது. முன்னணிப் படையானது, எது எங்ஙனமாயிருந்த போதும் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மக்களுடன் இறுக்கமான உறவுகளை ஏற்படுத்த முடியாதிருந்தது. ஆனால், இப்படிப்பட்ட மக்களின் நடவடிக்கையானது, சோமோசாவின் நெருக்கடிமிக்க ஆட்சியில் அரசகாவல் படையினரின் மீது குளுடுN நடத்திய தாக்குதல்களால் ஊக்குவிக்கப்பட்டது. அத்துடன் எல்லாவிதமாக ஒன்று திரண்ட மக்களை ஒன்று சேர்ப்பதற்குரிய குளுடுN இன் ஆளுமையையும் இத்தாக்குதல்கள் அதிகரித்தன.

மொனிம்போவிற்கு அருகிலுள்ள, ஒரு மாவட்டம் மஸாயா 20,000 குடிமக்களைக் கொண்டது. நகரப்புறங்களும், கிராமப்புறங்களும் காணப்படும் இப் பிரதேசமானது, தன்னிச்சையான முறையில் கிளர்ச்சிக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டது. சிறு சிறு குழுக்களாக அவர்கள் அமைப்புக்களை ஏற்படுத்தினர். பாதுகாப்பு படைகளை ஏற்படுத்தி முக்கிய கேந்திர ஸ்தாபனங்களைக் கைப்பற்றினர். முதன் முறையாக, அரசாங்கத்தின் கையாட்களுக்கு மரணதண்டனை வழங்கி, மக்களுக்கு நீதி வழங்குவதில் உள்ள உரிமையை எடுத்துக் காட்டினர். சுன்டினிஸ்ட இயக்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட தலைமைத்துவம் அவர்களுக்குக் கிடைக்காதபோதும், அவர்கள் ஒரு சன்டினிஸ்ட குழுப் போலவே இயங்கி வந்துள்ளனர்.

ஆனால், அங்கே சன்டினிஸ்டுகள் எவரும் இல்லை என்பதைக் குறிக்கவில்லை: கமிலோ இதற்காகத்தான் மொனிம்போவிற்கு அனுப்பப்பட்டார். மக்களைப் புரட்சிக்குத் தயார் பண்ணிய அதேவேளையில் அங்கு இடம் பெற்ற சண்டை ஒன்றில் கமிலோ உயிரிழந்தார்.

மா.ஹ:- இப்போது என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது: ஆகவே இப் புரட்சியானது நீங்கள் திட்டமிட்ட தொன்றல்ல: அங்ஙனமாயின் இப் புரட்சியை உங்களால் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி இருக்குமாயின் தடுத்து நிறுத்தியிருப்பீர்களா?

ஹ.ஒ:- அது மிகவும் கடினமான காரியம்@ ஏனெனில், அப் புரட்சியானது சமூகத்தின் படிப்படியான அபிவிருத்தியின் விளைவாக ஏற்பட்டது, நாம் எமது திட்டத்தின்படி அதனை வேறு விதமாக, அன்றி சிறிது காலம் பின்தள்ளச் செய்திருக்கலாம். சிலவேளை, நாங்கள் சிறிது காலம் பின்தள்ளச் செய்திருக்கலாம். சிலவேளை, நாங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்காவிடினும், வேறு ஏதோ வகையில் மக்கள் இக் கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் இப்படித்தான் எல்லாமே திசைதிரும்பின. இப்படித்தான் குளுடுN ஆல் நகரங்கள் கைப்பற்றப்பட்ட பின்னர், மொனிம்போ இந்தியர்களும் தமது தாக்கத்தை கிளர்ச்சியாக மாற்றிக் கிளர்ந்தெழுந்தனர்.

பெப்ரவரிக் கடைசிப் பகுதிகளில், முன்னணிப்படையானது மிகவும் எல்லைப் படுத்தப்பட்டே இருந்தது. மக்களிடையே இருந்த போராட்ட உணர்வையும், அவர்களது பங்களிப்பையும் ஒரு செய்முறைத் திட்டத்தின் கீழ் ஒழுங்கு படுத்த முடியவில்லை.

மா.ஹ :- இங்ஙனமான தனிப்படுத்தப்பட்ட கிளர்ச்சி நடவடிக்கைகளின் காரணமாக, எதிரி தனது முழுப்பலத்தையும் இவற்றின் மீது பிரயோகிக்க முயல்வான் அல்லவா?

ஹா.ஒ:- உண்மையாக இதைத்தான் நாம் அனுபவவாயிலாக அறிந்துகொண்டோம்.

மா.ஹ :- ஆகவே மற்றைய சரித்திர அனுபவங்களையும், உண்மைகளையும் நீங்கள் அறிந்திருக்வேண்டும்@ அப்படியானால்தான் இது போன்ற தவறுகளைத் தவிர்க்கலாம் அல்லவா?

ஹ.ஒ:- ஆம்@ நாம், இச் சரித்திர அனுபவங்களை அறிந்திருந்தோம்@ மக்கள் அறிந்திருக்கவில்லை.

ஹ.ஒ:- ஆம், நாம் அதை புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். படைபல அதிகரிப்பு பழைய காலத்து யுத்தமுறையின் அடிப்படை தத்துவம்@ எம்மைப் பொறுத்தவரை, எது முக்கியமெனில், முன்னணிப்படையாக இருந்த அதேவேளை இந்த அனுபவங்களையும் அறிய வேண்டி இறுத்தது. மக்களின் எழுச்சியைத் தற்காலிகமாக நாம் பின் தள்ளுவோமாயினும், அது ஒரு நிரந்தரமற்ற நிகழ்வு என் பதில் மக்களின் முன்னணிப்படையாகிய நாம் உறுதியாயிருந்தோம் ஏனெனில், மொனிம்போவில் இடம் பெற்ற நிகழ்வுகள், மக்களுக்கு போராட்டத்தில் பங்கு பற்ற தளராத மனவுறுதியை ஈந்திருந்தன.

எவ்வளவு தூரம் ஒரு நிகழ்வு வரலாற்றுத் தவறு என்று கூறமுடியும்? எவ்வளவு தூரம் ஒரு நடவடிக்கை மக்களிற்கு தவறகலாம் அல்லது அந்த நேரத்தில் அவர்களுக்கு வேண்டியவை சுலபமாகப் பெற்றெடுக்கக் கூடிய காரியமாகலாம் என்பதைக் கூற முடியும்? உண்மை எதுவென்றால் மொனிம்போ நிகழ்வானது எமது தேசிய ரீதியாகவும், சர்வதேசரீதியாகவும் புரட்சிக்கான வித்தாக அமைந்தது. ஒருவேளை இந்த மொனிம்போ நிகழ்வுகள் நடைபெறாதவிடத்து, புரட்சி இடம் பெறுவதற்கான நிபந்தனைகளை இத்தனை விரைவுபடுத்தி இருக்கவியலாது:

இவைதான் நாமும் எமது மக்களும் பெற்றுக் கொண்ட அனுபவம்:

ஐப்பசியிலிருந்து மொனிம்போவரை நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களிலிருந்தும், ஒன்றைமட்டும் தெளிவுபடுத்தக் கூடியதாக இருந்தது. அதாவது@ மக்கள் போராட்டத்தில் பங்களிக்க விருப்பம் கொண்டுள்ளார்கள் என்பதே. ஆனால் அவர்கள் மக்கள் பங்குபற்றும் இராணுவ அமைப்பு முறையைக் கூடுதலாக விரும்பினார்கள். நிறைவான அரசியல் நிபந்தனைகளுக்கு அப்போது தேவை இருந்தது. எனவே மறைமுக வானொலிப் பிரச்சாரம் மூலம், மக்களை அணிதிரட்ட வே;ணடிய அவசியம் இருந்தது.

மக்களை, மிக மிக எளிமையான அமைப்புக்களுடாக, அணிதிரட்ட வேண்டிய மிகப் பெரிய தேவை இருந்தது.

மா.ஹ :- அப்பொழுது, வானொலி நிலையம் அமைப்பது பற்றிக் கவனத்தில் கொள்ள வேண்டிய இருந்தது?

ஹ.ஒ: ஐப்பசியிலிருந்து, நாங்கள் வானொலி நிலையம் அமைப்பது பற்றி ஆலோசனை செய்து வந்தோம். ஆனால் அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தோம். எம்மிடம், 1960 களில் சோமோசா எதிர்ப்புக் குழுவினர், உபயோகித்த பழைய வானொலித் தொகுதி ஒன்று இருந்தது. இருந்தும், அந்த நேரத்தில் அதைச் செயல்படுத்த முடியாதிருந்தோம்.

இருந்தும், பின்னர் அதனை 1978 களில் செயல்படுத்துவதில் வெற்றியும் கண்டோம். இவ் ஒலிபரப்பு றிவாஸில் ஒலிப்பரப்பாகியது. மிக மெதுவான ஒலியே முதலில் கேட்டது. அதிலிருந்து மக்களைப் புரட்சியில் பங்காளிகளாக்க வானொலிப் பிரச்சாரம் அவசியம் என்பதில் மிகவும் எச்சரிக்கையாகவிருந்தோம்.

நான் சொல்கிற கருத்தை - கூறுவதானால்@ எமது படிப்படியான பலப்படுத்தல்கள், சில நிகழ்ச்சிகளுக்கிடையே நடந்தேறின@ குறிப்பாக, ஜெனரல் றெகுவாலீடோ பெரெஸ் மெகாலின் கொலை, ஆவணியில் அரண்மனையைக் கைப்பற்றியமை போன்ற நிகழ்ச்சிகள். ஐப்பசி 77ல் ஆரம்பமாகிய இவ் இயக்கத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள். பின்னர் அதுவே செப்டெம்பர் 78ல் தேசிய எழுச்சியாக மாறியது.

மா.ஹா: அந்த நேரத்தில், நீங்கள் மக்கள் எழுச்சிக்கு விட்ட கோரிக்கைகள் வெற்றியாய் அமையும் என நினைத்தீர்களா?

ஹ.ஒ: நாங்கள் மக்களைப் பங்காளிகளாகுமாறு அழைப்பு விடுத்தோம். எமது முற்று முழுதான தயார்ப்படுத்தலுக்கு சில தொடர்ச்சியான நிகழ்வுகளும், குறிப்பிட்ட நிபந்தனைகளும் திடீரெனத் தோன்றி தடை செய்தன. எம்மால் கிளர்ச்சியைத் தடுதது நிறுத்த முடியவில்லை. மக்கள் அமைப்புகள் முன்னணிப் படையினரின் பின் அணிதிரண்டன. எம்மால் மக்கள் இயக்கத்தை நிராகதிக்க முடியவில்லை. ஏனெனில் அது திடீரென நழுவி விழும் பனிப்பாறை போலிருந்தது. மறுபுறம், அதனை ஓரளவு தூரம் செவ்வனே வழிநடத்தி அம் மக்கள் இயக்கத்தின் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியமிருந்தது.


இதன்படி எமது இயக்கம் எல்லைகளை மக்கள் எடுக்கும் தீர்மானங்களிற்காக விட்டுக்கொடுத்து, மொனிம்போ இந்தியப் பொதுமக்களால் எடுக்கப்பட்ட முடிவிற்கு முன்னிப் படையினராகிய நாம் ஊக்கமளித்தோம்.

வேறு முறையில் கூறப்போனால், முன்னணிப்படை ஐப்பசியில் முன் உதாரணம் ஒன்றைச் செய்துவிட, மக்கள் அதனைப் பின்பற்றி மொனிம்போவில் ஒருங்கு திரண்டனர். முன்னணிப்படை அம் முன் உதாரணத்தின் அடிப்படையில் நிபந்தனைகளைத் தோற்றுவிக்க மக்கள், முன்னணிப் படையினரையும் விஞ்சி முன்னேறினர். ஏனெனில் சோமோசாவின் ஆட்சியில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளால் தோற்றுவிக்கப்பட்ட சில நிபந்தனைகளே காரணம். அத்துடன், அரசு சிதைந்து போகும் நிலையிலிருந்ததால் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவும் நாம் எதிர்பார்த்ததை விடக்கூடிய பலனைத் தந்தன. ஆனால் தாக்குதலைத் தொடர்ச்சியாக்க வேண்டி இருந்தது. இலக்கைத் தாக்குவதோ மிகக் கடினமாக இருந்தது. நாம் தாக்கினோம். ஆனால் அது இலக்கின் மையமாகவே அமையவில்லை.

எமது வெற்றியின் உள் அர்த்தத்தை நாம் உணர்ந்த அதேவேளை, எமது எல்லைகளையிட்டு (நடவடிக்கைகளின்) மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தோம். எமக்குத் தெரியும் இதில் வெற்றியடைவது என்பது மிகவும் கடினம் என்று@ ஆனால் எம்மை முழுமையாக அர்ப்பணித்து போராட்டத்தில் இறங்க வேண்;டி இருந்தது. ஏனெனில் மக்கள் தமது இரத்தம் சிந்தியும் போராடத் தயார் என்ற உணர்வை ஏற்றுக் கொண்டதாலேயே.

மேலும், மக்கள் இயக்கத்தை ஒருங்காமைக்காது இருந்திருப்போமாயின், அது வெறும் குழப்பத்தையே விளைவித்திருக்கும்தாவது செப்டம்பரில் முன்னணிப் படையால் விடுக்கப்பட்ட அழைப்பானது பெரும் தாக்குதலிலிருந்தும் அழிவிலிருந்தும் காப்பாற்றி, புரட்சிப் போராட்டத்தை செவ்வனே நெறிப்படுத்தி புரட்சிக்கான வெற்றிப்பாதையில் வீறு நடையிடச் செய்தது.

மா.ஹ.: புரட்சிக்கான எத்தகைய முற்று முழுதான நிபந்தனைகள் காணப்பட்டன.
ஹ.ஒ: சமூக, அரசியல் நெருக்கடி நிலைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆயுத ரீதியாக மக்களை ஒன்று திரட்டுவதற்குரிய நிபந்தனைகள் முன்னணிப் படையினரிடம் இருக்கவில்லை.

எம்மிடம் மிக அத்தியாவசியமான ஆயுதங்கள் இருக்கவில்லை. ஆனால் நிலைமைகள்யாவும் முற்று முழுதாக முதிர்ந்து காணப்பட்டன.

மா.ஹ : அப்பொழுது மிக இக்கட்டன பொருளாதார நெருக்கடி இருந்தது. ஆனால் சோமோசாவிடம் பலவகையிலான பலம் இருந்தது. முக்கியமாக இராணுவப்பலம்…

ஹ.ஒ : ஆம் இராணுவ பலம் அதிகமாக இருந்தது. ஒரு தேசிய எழுச்சியில் பங்குபற்றிய அனுபவம் எமக்கு இருக்கவில்லை. ஆனால் நாம் அனுபவித்தவை யாவும் தனது பலவீனங்கள் முழுவதையும் வெளிக்காட்டிய எதிரியைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற வழிவகுத்தன. எம்மிடம் போதுமான அளவு ஆயுதங்கள் இருக்கவில்லை. ஆனால் இப்புரட்சி வெற்றியளிக்காது விடினும் மீளமுடியாத பலத்த தாக்கத்தை அரசிற்கு கொடுக்கும் என்பதை நன்கு தெரிந்திருந்தோம். இதில் முழுமையாக நாம் வெற்றியடைந்தோம். இவ் வெற்றியின் பின்னர் மீண்டும் நாம் மக்களைப் பங்காளிகளாகுமாறு அழைப்பு விடுத்தோம். இடதுசாரியிலிருந்து சில தோழர்கள், செப்டெம்பர் நிகழ்வுகள் குறைந்த கால வெற்றியையும் கூட பின்தள்ளிப் போட்டுவிட்டன. என்ற பார்வையைக் கொண்டிருந்தனர். அதாவது அத்தாக்குதல் வெற்றியின் நாட்களைப் பின் தள்ளிவிட்டன என அவர்கள் கூறினர்.

உண்மையில் அவர்கள் தாக்குதல்களைத் தவறாகப் புரிந்துள்ளார்கள், செப்டெம்பர் நிகழ்வுகள் இறுதிக்கட்ட வெற்றியுமல்ல, ஆனால் தோல்வியுமல்ல. அவை சாதக, பாதக விளைவுகளைக் கொண்ட வரலாற்று பெறுமதியான தாக்குதல்கள்.

மா.ஹா : ஆகவே இறுதியான அபிப்பிராயம் என்ன?
ஹ.ஒ: அத் தாக்குதல்கள். நாம் பெற்ற ஆற்றல்கள் என்றே வேண்டும். ஏனெனில் நாம் மக்களின் முன்னணிப் படையாக வளர்தோம். நூற்றைம்பது போராளிகள் அக் கிளர்ச்சியில் பங்குபற்றினர். எமது சக்தி இரு மடங்காக, மும்மடங்காக, பன் மடங்காக வளர்ந்தது. அத்துடன் ஆயிரம் புது அங்கத்தினர் சேர்வதற்கும் வழிவகுத்தது. எதிரியிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியதால் நாங்கள் தாக்கும் திறனிலும், அளவிலும் வெகு வேகமாக வளர்ந்தோம். அதே நேரம் முன்னணிப் படையினரின் இழப்பும் வெகு சொற்பமாகவே இருந்தது. சோமோசாவின் இனப் படுகொலையின்போது சிலர் உயிரிழந்தனர். போர்முனையில் அதாவது தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் வெகு சொற்பமானவரே. வேறு விதமாக இதனைக் கூறுவதாயின் நாம் நமது பலத்தை மேலும் பாதுகாத்துக் கொண்டோம்.

மா.ஹ : இராணவ நிலைப்பாட்டைப் பொறுத்தவரை உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஹ.ஒ : நாம் எமது சக்திகளை மேலும் பாதுகாத்துக் கொண்டோம். இராணுவ ரீதியான அனுபவங்களைப் பெற்றோம். ஆயுதங்களைக் கைப்பற்றினோம். எதிரியை நன்கு அறிந்துகொண்டோம். எதிரியின் நடமாட்டங்களை, அவனது தயார்ப்படுத்தல்களை அழித்தோம். பல கவச வண்டிகளைக் கூட அழித்தோம். எம்மைவிட, எதிரியின் பக்கத்தில் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. மக்களுக்கு இதில் பெரும் பங்கு உண்டு. இது ஒரு வெற்றிகரமான நடவடிக்கையும் அதே வேளை நல்லதொரு படிப்பினையும் கூட. முதன் முறையாக நகரப் புறங்களிலும் கிராமப் புறங்களிலும் இராணுவ நடவடிக்கைகளை விஸ்தீரணப் படுத்தக் கூடியதாய் இருந்தது. இதன்மூலம் கிளர்ச்சிக்குரிய சகல திசைகளிலும் மக்களைத் தயார்ப்படுத்தக் கூடியதாக இருந்தது.

ஆகவே இதனை முற்று முழுதாகத் தோல்வி எனக் கருத முடியாது. எம்மை முற்றாக அழித்திருப்பார்களேயானால் அது ஒரு தோல்வியே. எமது ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு எமது இயக்கம் உடைந்து போயிருக்குமாயின் அது ஒரு தோல்வியான நடவடிக்கைதான். அது இராணுவரீதியான முழு வெற்றி என்று முடியாது. ஏனெனில் அதேவேளை ஐந்து நகரில் தாக்குதல்கள் தொடுத்தும் அவ் அவ் நகரில் உள்ள படை முகாம்களை பூரணமாகக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் எமது தாக்குதல்கள் சில ஆற்றல்களைப் பெற்றுத் தந்தன என்பது உண்மை.

மீண்டும் நான் கூறுகிறேன்@ வெறுமனே வீதிகளில் நிராயுத பாணிகளாக இறங்கிய “மொனிம்போ” மக்களது கிளர்ச்சியில் ஏற்பட்ட அழிவுகளைத் தடுக்கும் முகாமாகவே நாம் மீண்டும் மக்களிற்கு புரட்சியில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்தோம். அத்துடன் அப்பொழுது நிலவிய அரசியல் சூழ்நிலையும் எமக்குச் சாதகமாகவே இருந்தது.

மா.ஹ: நீங்கள் இருந்தாலும், இல்லாவிடினும் மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள்தானே?

ஹ.ஓ: இல்லை நாம் இல்லாதபோது அது மிகவும் மோசமான நிலைக்கு வழிவகுத்திருக்கும். ஏனெனில் நாங்கள் மொனிம்போவில் பங்குபற்றியதைவிடக் கூடுதலான அளவில் பங்குபற்றி மக்களது ஆர்வத்திற்குச் சரியான வடிவங்களை அமைத்துக் கொடுத்தோம். இதனைத் தான் நான் முன்பு முன்னணியில் நாம் சென்றதாகக் குறிப்பிட்டேன். ஒருபோதும் சுற்றி வளைத்துச் செல்லவில்லை.

கடைசிக் கால கட்டங்களில் விவசாயிகள் நகரப் புறங்களிலிருந்து வந்து போராட்டத்தில் இணைந்து கொண்டனர். சினான்டேகா என்ற இடத்தில் பாதுகாப்புக்குரிய வீடுகள் முழுவதிலும் 3 மணித்தியால வகுப்புக்கள் இடம் பெற்றன. இதில் பெரும் திரளான மக்கள் பங்கு கொண்டனர். ஏனெனில் மக்கள் தான் வீதிகளில் இறங்கப் போகின்றவர்கள்@ அவர்கள்தான் போராட்டத்தின் முன்னணிக்கு உரியவர்கள். ஆனால் இத்தகைய மக்கள் எழுச்சிக்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டு சாதக பலன்களை பெற்றுக்கொள்வதைவிட வேறு வழி தென்படவில்லை.

கடைசிக் கால கட்டங்களில் விவசாயிகள் நகரப் புறங்களிலிருந்து வந்து போராட்டத்தில் இணைந்து கொண்டனர். சினான்டேகா என்ற இடத்தில் பாதுகாப்புக்குரிய வீடுகள் முழுவதிலும் 3 மணித்தியால வகுப்புக்கள் இடம் பெற்றன. இதில் பெரும் திரளான மக்கள் பங்கு கொண்டனர். அவர்கள்தான் போராட்டத்தின் முன்னணிக்கு உரியவர்கள். ஆனால் இத்தகைய மக்கள் எழுச்சிக்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டு சாதக பலன்களை பெற்றுக்கொள்வதைவிட வேறு வழி தென்படவில்லை.

நாம் ஐந்து நகரங்களில் இடம்பெற்ற போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினோம். இதுதான் குளுடுN ஆல் முன்னெடுக்கப்பட்ட முதலாவது தேசயி எழுச்சி. ஆனால் இவ் எழுச்சியானது மக்களில் ஏற்பட்ட தாக்கத்தாலேயே தோன்றியது.

மா.ஹ. புரட்சிக்கான அழைப்பு என்று கருதுகையில் எல்லாவகைப்பட்ட மக்களின் உணர்வினையும் கருத்தில் கொண்டீர்களா?

ஹ.ஒ. அது சரியானதே@ ஆவணிமாதத்தில் அரச மாளிகை கைப்பற்றப்பட்டதுடன் மக்களின் மன உறுதி மேலும் வளர்ச்சியுற்றது. இதுதான் செப்டெம்பர் புரட்சிக்கு வழி வகுத்தது.

மா.ஹ: மாளிகையைக் கைப்பற்றுவதற்காக நீங்கள் திட்டம் தீட்டியபோது இதன் விளைவாக மக்களுக்கு ஏற்படும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டீர்களா?

ஹா.ஒ. மக்கள் இயக்கமே முன்னணிக்கு உரியது என்பதை நாம் எனக்கு தெரிந்திருந்தோம். அதேவேளை மக்கள் இயக்கம் முன்னணிக்கு வராமலிருப்பதை விட முன்னணிக்கு வருவதே மேல் என நாம் நினைத்தோம்.

எமது முக்கிய நோக்கம் எஎதுவெனில் ஏகாதிபத்திய வாதிகளின் சதியை முறியடித்தலே. இவர்களது சதி என்னவெனில், ஆகஸ்ட் மாதத்தில் ஒரு ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தி சிவில் - இராணுவ அரச ஒன்றை நிறவுதல் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை மந்தமுறச் செய்தலே ஆகும்.

இச் சதியை முறியடிப்பதற்காகவே மாளிகைமீதான தாக்குதலை நிகழ்த்தவேண்டி இருந்தது. தொழிலாள வர்க்கமும், தொழில் புரியும் மக்களும் ஒருங்குதிரண்ட நிலையில் இல்லாததால் கட்சியமைப்பற்றி நாம் அரசியல் நடடிவக்கைகளை ஆயுத ரீதியிலேயே எடுக்க வேண்டி இருந்தது. இதனால்தான் எமது தாக்குதல்கள் பெரும்பாலும் இராணுவ ரீதியில் அமைந்தன. ஆனால் இவற்றின் அடிப்படை நோக்கம் அரசியல் ரீதியானதாய் இருந்தது. இதுதான் ஆவணியின் நிகழ்வுகளிற்கான விளக்கங்கள்.

உண்மையில் இந்த தாக்குதல் அரசியலின் வெளி வளர்ச்சியேதவிர ஒரு இராணுவச் சூழ்நிலை கொண்ட தாக்குதல் அல்ல. ஒக்டோபர் 1977 தாக்குதலும் இத்தகையதொன்றே.

மா.ஹ: மூன்றுவித தன்மைகளையும் ஒன்றிணைக்காது. செப்டெம்பர் புரட்சிக்கு அழைப்பு விடலாமா எனச் சில மக்கள் கேட்கக் கூடும். இதனை எங்ஙனம் விளங்கச் செய்வீர்கள்?

ஹ.ஒ: ஒன்றிணைப்புக்கான சூழ்நிலை அப்போது நிலவவில்லை. முதலில் போராட்டத்தைப் பலப்படுத்த வேண்டி இருந்தது, பின்பு இதற்காக இப்போராட்டத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கும் சக்திகளை ஒன்றிணைக்க வேண்டி இருந்தது.

படிப்படியாக ஒரு இலக்கினை நோக்கி ஒரு வரையறைக்கு உட்பட்டு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். இது நாமிட்ட வரையறை அல்ல@ மக்களே கோரிய வரையறை.

மோனிம்போ நிகழ்விற்குப் பிறகு கார்லோஸ் பொன்சேகா அணியை நாங்கள் கலைத்துவிட்டோம். இவர்களை நாட்டின் முக்கிய அரசியல் சமூக, பொருளாதார கேந்திர ஸ்தானங்களுக்கு அனுப்பினோம். எம்மைப் பொறுத்தவரை மலைகளோ, நகரங்களோ தெரிவு செய்யப்படவில்லை. உண்மையில் இது மக்களுடன் சம்மந்தப்பட்ட தொன்றாகவே இருந்தது.

எமது அணியில் இருந்த நாற்பது வீரர்களை எஸ்ட்லீ பகுதிக்கும், சிலரை மனகுவாவிற்கும், சிலரை லியோன் நகரிற்கும் அனுப்பினோம். இந்த வீரர்கள் கல்வியறிவை மக்களுக்குப் போதித்தார்கள். இது மக்களை முற்றுமுழுதான, பயிற்சிக்குத் தயார்படுத்த உதவியது. ஏனெனில் போரேஸ் கீழும், அவர்போன்ற எமது வீரரின் கீழும் மக்கள் அணி திரட்டப்பட்டனர். இப்படித்தான் சிறு சிறு குழுக்களாகப் பயிற்றுவித்து புரட்சிக்கான தயார்ப்படுத்தலை நாட்டின் பல்வேறு நகரப் பகுதிகளிலும் மேற்கொண்டோம். மொனிம்பொவில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு மக்கள் இயக்கம் அடக்கு முறைகளால் சிதைவடைந்து போகாமல் இருப்பதற்காக நாம் தலைமை தாங்கவேண்டிய தேவை இருந்தது. ஏனெனில் அடக்கு முறைகளின் விளைவால் சிதைவடைந்து போயிருக்குமாயின் எவ்வளவு கெரில்லா அணிகள் இருந்தும் என்ன பயன்? குறுகியகால வெற்றி என்பதே கேள்விக்குறிதான்.

வெற்றியின் மகத்துவம் வெறுமனே இராணுவ ரீதியாலானது மட்டுமல்;ல. புரட்சிகர சூழ்நிலையில் மக்களின் பங்களிப்பிலேயே இது தங்கியுள்ளது. நாங்கள் மக்களின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அமைவதற்காக எப்பொழுதும் போராட்டம் நடத்தினோம். முடிவில் மக்கள் எழுச்சி வீழ்ச்சியுறுவதற்கான அறிகுறிகளே தென்பட்டன. அத்துடன் மிகவும் மோசமான அடக்குமுறை நிலவியது. ஆரச இராணுவப் படைகள், கெரில்லா வீரர்கள் போல் உடையணிந்து அயற் கிராமங்களில் மக்களிடையே ஊடுருவி மக்களை அழிக்க முனைந்தனர்.

அடக்குமுறை மிகக் கொடூரமாக இருந்ததால் மக்கள் பின்வாங்கத் தொடங்கினர்.

எமது யுத்த தந்திரங்கள் பெரும்பாலும் மக்கள் தமது மன உறுதியை இழக்காத விதத்தில் மக்களை மையமாகக் கொண்ட அரசியல், இராணுவ ரீதியான நடவடிக்கைகளாகவே அமைந்தன. இதனால்தான் குறிப்பிட்ட அரசியல் இராணுவ திட்டத்தின்படி எமது தாக்குதல்கள் அமையாது விடினும் மக்களைத் தொடர்ச்சியாக இயங்கச்செய்வதற்கு அவை உதவின. நகரப்புறங்களில் மக்கள் இயக்கங்களைக் கட்டி எழுப்பின. மோத்தத்தில் எம்மை நன்கு பலப்படுத்திக் கொள்ள உதவின. மக்களே தமக்குத் தேவையான சக்திகளைக் கட்டி எழுப்புவதில் ஆயுதந் தாங்கிய இயக்கத்திற்கு உதவி புரிந்தனர்.

நாங்கள் மக்களைச் செயலில் இறக்க முயற்சித்தோம். இதனால் தான் இவை இராணுவத் திட்டங்களுக்கு அமையாத தாக்குதலாய் இருந்த போதிலும் உண்மையில் மக்கள் இயக்கத்தைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய அரசியல் - இராணுவத் தந்திரோபாயமாக அமைந்தது. ஏனெனில் இவ்வழியில்தான் இராணுவ ரீதியலான வெற்றியை அடையவேண்டி இருந்தது.

எமது புரட்சிக்கான தந்திரோபாயங்கள் மக்களை மையமாகக் கொண்டதே தரவி வெறுமனே இராணுவ ரீதியிலானவை மட்டும் அல்ல. இதைத்தான் முக்கியமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

மா.ஹா: கெரில்லா அணி பங்குபற்றாத பட்டினக் கிளர்ச்சிகள் பெருமளவு உயிரிழப்பையும் அழிவையும் ஏற்படுத்தின எனின் நகரப்புறத் தாக்குதல்களில் முடிவில் அரச அடிக்குமுறையை மேலும் இலகுவாக்கியதல்லவா? உதாரணமாக நகரங்கள் மீது குண்டுபொழிதல்….

ஹ.ஒ: இக் கேள்வியில் எவ்வித அர்த்தமுமில்லை. ஏனெனில் நிக்கரகுவாவில் வெற்றிக்கு இத் தாக்குதல்கள்தான் ஒரேவழி: மாறாக அமைந்திருந்தால் அங்கு வெற்றியே கிடைத்திருக்காது. நாம் சுதந்திரத்துக்கான உழைப்பை இலகுவாக்கினோம். எம் விடுதலைக்கான உழைப்பு மிகக் குறைவானது என்றால் நாம் அதனை நிச்சயமாக பயன்படுத்த வேண்டும். ஆனால் உண்மையில் நடந்தது எதுவென்றால் வெற்றியைப் பெறுவதற்காக முனைப்படைந்து வரும் சூழ்நிலைகளுக்கேற்ப எம்மை மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. சூழ்நிலைகள் சாதகமாகவோ, அன்றிப் பாதகமாகவோ அமையலாம். அன்றி ஒரு ஒழுங்கற்ற நிலையைக் கொண்டிருக்கலாம். அத்துடன் இவை மிக மிக சமூகப் பெறுமதி வாய்ந்தவையாக விளங்கின.

சுதந்திரத்துக்கான விலை மிகப்பெரியது என மக்களிற்கு கூறுவேகமாயின் அவர்கள் இன்னொரு வழியைத் தேடியிருப்பார்கள்:- அதாவது புரட்சிகர இயக்கத்தின் தோல்வி என அதனை அவர்கள் கருதலாம். மேலும் சொன்னால் வெறும் கற்பனாவாதம், சிந்தனாவாதம், மரபுவழிமுறைகளைக் கைவிடாத முறை போன்ற வெற்றுச் சித்தாந்தங்களில் வீழ்ந்திருப்பார்.

விடுதலைக்காகப் போராடும் இயக்கங்கள் இதனை உணர வேண்டும். அதாவது அவர்களது போராட்டமானது எமது உழைப்பை விடப் பெறுமதி கூடியவை. முக்களின் பங்களிப்பு இல்லாத ஒரு வெற்றியை லத்தின் அமெரிக்காவிலோ, அன்றி வேறெங்காவதோ என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அத்துடன் நிக்கரகுவாவில் தோன்றிய அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடி போன்ற தோற்றம் இல்லாதவிடத்தும் வெற்றியின் சாத்தியம் மிகக் குறைவே.

நகரங்களிலோ, கிராமங்களிலோ அன்றி மலைப்புறங்களிலோ ஒருமித்த போராட்டங்களைத் தோற்றுவிக்கக்கூடிய ஆக்கபூர்வங்களைக் கொண்டிராத விடத்து அரசியல் வல்லமை பெறுதல் மிகக் கடினம் என நான் உணர்கிறேன். ஆனால் இப் போராட்டங்கள் யாவும் மக்களை மையமாகக் கொண்டு அமைய வேண்டுமே தவிர, முன்னணிப் படைக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் மட்டும் மக்கள் தங்களை எல்லைப் படுத்திக் கொண்டுவிடக் கூடாது.

எமது அனுபவங்களினுடாக கிராமப்புறப் போராட்டங்களை ஒன்றிணைக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. நகரப் புறங்களில் எமது தாக்குதல்களை நிகழ்த்தினோம். இவை தொடர்புகளில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் போராட்டங்களாகவும் அமைந்தன. அத்துடன் கிராம மலைப் பிரதேசங்களிலும் எமது கெரில்லா அணியினர் போராட்டங்களை நிகழ்த்தினர். ஆனால் இவ் அணிகள் மட்டும் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகிவிடா. ஆவை ஒரு பெரிய தீர்வுக்குரிய காரணியின் ஒரு பாகம் மட்டுமே. பேரிய தீர்வுக்குரிய காரணி மக்களின் ஆயுதமேந்திய போராட்டமே. இதுதான் பாரிய பங்களிப்பு.

மே மாதத்தில், செப்டெம்பர் மாதத்தின் பின்னர் இடம்பெற்ற அபிவிருத்திகளின் பின் எம்மியக்கமானது இராணவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலம்பெற்றது. மக்களின் நடவடிக்கைகள் உச்ச கட்டத்தை அடைந்தன. பல தடுப்பு முகாம்கள் எழுப்பப்பட்டன. அயலிலே தினசரி போராட்டங்கள் நடந்தேறின. யுத்த தந்திரத் தோல்வியை இந்த நடவடிக்கைகள் எதுவும் முறித்துக் காட்டவில்லை.

செப்டெம்பரிலிருந்து ஆரம்பித்து மே மாதத்தில் நாம் அடுத்த எதிர்த் தாக்குதல் நடவடிக்கையைத் தொடுத்தோம். வட முன்னணியிலும் நியூவாகினியில் இருந்த கெரில்லா அணியும் கிராம, மலைப்பறங்களில் மிக உக்கிர தாக்குதலை ஆரம்பித்தன. இறுதித் தாக்குதல்கள் நியூவா சொகேவியாவில் உள்ள எல்ஜிக்காரோ இடத்தைக் கைப்பற்றியதுடன் ஆரம்பமாகியது. பங்குனியில் தளபதி போமாரெஸ், தமது பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினார். ஏதிரியின் பாதுகாப்புப் படைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடுத்து எதிரியை நிர்மூலமாக்கி வந்தார். ஏதிரியின் உதவிக்கு வந்த படைகளையும் நிர்மூலமாக்கி எல் ஜிக்காரோவைக் கைப்பற்றினார். இத் தாக்குதல்கள் வட முன்னணி கெரில்லா அணியால் எஸ்டெலி நகரத்தைத் கைப்பற்றுதலுடன் தொடர்ந்தன. எஸ்டெலி நகரம் முழுதாக ஒரு கெரில்லா அணியாலேயே கைப்பற்றப்பட்டது தவிர அங்கு மக்கள் எழுச்சி இடம்பெறவில்லை. மக்கள் பின்னரே இணைந்து கொண்டனர்.

மா.ஹ:- ஏன் நீங்கள் ஒரு தனித்த நகரத்தை மட்டும் கைப்பற்றினீர்கள்? இது மீண்டும் ஒது “மொனிம்போ” அனுபவத்தைத் தரலாம் அல்லவா?

ஹா.ஒ:- இல்லை, ஏனெனில் எஸ்டெலியில் நாங்கள் தோல்வியடையவில்லை. அரச இராணுவங்களால் எமது கெரில்லாப் போராளிகளைக்கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு முற்றுகையிலிருந்து வெற்றிகரமாகப் பின்வாங்கிய எமது கெரில்லா அணியினர் கருத்துத் தெரிவிக்கைமாகப் பின்வாங்கிய எமது கெரில்லா அணியினர் கருத்துத் தெரிவிக்கையில், ஆயிரம் ஆளணிகொண்ட அரச படை இருநூறு கெரில்லாப் போராளிகளிடம் தோல்வி கண்டு நீர்மூலமாகியது எனக் கூறினர். இது உண்மை. எஸ்டெலிக்கு அனுப்பப்பட்டிருந்த அரச இராணுவங்களின் தொகை மிக மிகப் பெரியது. உண்மையில் என்ன நடந்தது என்றால் தொடர்ச்சியான இடைவிடாத தாக்குதல்களை எஸ்டெலியில் நடத்துமாறு எமது வீரர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. எமது வீரர்கள் நகரத்தில் நேரடித் தாக்குதலை மேற்கொண்டனர். இவை வட முன்னணிக் கெரில்லா அணியின் பிடியுள் இடம்பெற்ற நடவடிக்கைகள். அதாவது இக் கெரில்லா அணியிலிருந்த பல்வேறு சக்திகளின் பரஸ்பர ஒத்துழைப்புகளே இவ் வெற்றிக்குக் காரணம். ஆனால் நகரம் கைப்பற்றப்பட்டதால் நாட்டின் சூழ்நிலையில் பலத்த திருப்பம் ஏற்பட்டது. தேசிய எதிர்ப்பு உணர்வு ஒன்று உருவாகி இதுவே பின்னர் புரட்சிநடவடிக்கைகளுகு;கு புதிய உத்வேகத்தை கொடுத்தது.

செப்டெம்பரிற்கு பிறகு யுத்தத்தின் உக்கிரமானது வடக்கு முன்னணி கெரில்லா அணியினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேவேளை நாடு முழுவதும் கனிஸ்ட அணியின் இராணுவத் தாக்குதல் பிரிவுகள் எதிரியின் மீது தாக்குதல் தொடுத்து அழித்துக்கொண்டே வந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட அரசாங்கத்தின் அடிவருடிகளும், அரசாங்கத்திற்கு உளவறிந்து செய்தி கொடுப்பவர்களும் தண்டிக்கப்பட்டனர். மக்கள் பின்னர் அடக்கு முறைகளை வென்கொள்ளும் மாபெரும் சக்தி தமக்கு உண்டு என்பதை உணர்ந்து கொண்டனர்.

மா.ஹ :- அதாவது அடக்குமுறையால் மக்களில் ஏற்பட்ட தாக்கத்தை விட எதிரிக்கு உங்கள் இயக்கம் விளைவித்த பலத்த தாக்குதல்களாலும், தேசங்களாலும் ஏற்பட்ட தாக்கம் அதாவது அவர்களிடம் ஏற்பட்ட உணர்வின் அளவு மிகப் பெரியது.

ஹ.ஒ:- ஆம் மிகப்பெரியது. இப்பொழுது மக்கள் யுத்த அனுபவங்களைப் பெற்றிருந்தர்கள். அத்துடன் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகமும் மேலோங்கியிருந்தது. செப்டெம்பர் மாத நிகழ்வுகள் அவர்களது உணர்வுகளைக் குழிதோண்டிப் புதைத்து விடவில்லை. மேலும் மேலும் அவ்வணர்வுகளை வளர்த்தெடுக்கவே உதவின. ஒவ்வொருவரதும் உறவினனோ, நண்பனோ இப் போராட்டத்தின்போது உயிரிழந்திருந்தனர். எனவே எதிரியைப் பழிவாங்கும் உணர்வு அவர்களிடம் மேலோங்கி இருந்தது. மக்களுடைய உணர்வு இத்தகையதாக உள்ளபோது அவர்களது அபிலாசைகளுக்கும் குறுக்காக நிற்க நாம் முனையவில்லை.

இறுதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் மார்ச் 79இல் எல் ஜிக்காரோவைக் கைப்பற்றியதுடன் ஆரம்பமாகியது. வௌ;வேறு வித சக்திகள் ஒருங்கிணைய ஆரம்பித்தன. ஒவ்வொருவரும் வடக்கில் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கத் தொடங்கினர். அத்துடன் புரட்சி பற்றிய கண்ணோட்டம் ஒன்று வெகு வேகமாக வளர்ந்துவரத் தொடங்கியது எல் ஜிக்காரோவைக் கைப்பற்றிய பின் எஸ்டெலியைக் கைப்பற்றினார்கள். பின்னர் நியூவாகினி கைப்பற்றப்பட்டது. ஆனால் அது இராணுவ ரீதியில் பின்தள்ளப்பட்டதாக அமைந்தது. ஆனால் எதிரியை சிதறடித்து வீழ்ச்சியுறச் செய்தது. அது எதிரியை நிர்மூலமாக்க உதவியது அது எம்மில் 128 வீரரின் மரணத்திற்கும் காரணமாகியது. எமது திட்டம் சரியானது. ஆனால் எமது தோழர்கள் பல்வேறுபட்ட தந்திரோபாயங்களை எதிரி பிரயோகிக்கையில் அவற்றை எதிர்கொள்ள இயலாது போயின.

மா.ஹா:- நியூவாகினிக்குரிய உங்கள் திட்டம் என்ன?

ஹ.ஒ:- கெரில்லா தாக்குதல்கள் மூலம் எதிரியை சிதறடித்து நிர்மூலமாக்குதல். ஆரச இராணுவப்படை ஒருமுறை கலைக்கப்படுமாயின் நாட்டின் மீதிப் பகுதிகளில் எமது அரசியல் இராணுவ வேலைகளைத் துரிதமாக்கலாம். எதிரியின் அடக்குமுறையின் அளவும் மிகவும் குறைந்தளவிலேயெ இருக்கும். ஏனெனில் நியூ வா கினியில் எதிரிகள் நிர்மூலமாக்கப்பட்டிருந்தனர். எமது வீரர்கள் கெரில்லாத் தாக்குதல் மட்டுமல்லாது, நேரடித் தாக்குதல்களிலும் இரறங்கினார்கள். இது எதிரிக்கு எம்மீது எதிர் நடவடிக்கை எடுப்பதை இலகுவாக்கியது.

மா.ஹா :- அதாவது போராட்டத்தின் மையம் கெரில்லா அணிகளிடமே ஒன்றியிருந்தது என்கிறீர்கள்?

ஹ.ஒ:- மக்கள் இயக்கமானது எதிரியின் எல்லா சக்திகளையும் கெரில்லா அணியினர் மீது தாக்குதல் தொடுக்க அனுமதிக்கவில்லை. அத்துடன் கெரில்லா வீரர்களின் தாக்குதல்கள் எதிரியை கெரில்லா வீரர்களைத் தேடும் முயற்சியிலிருந்து விரட்டி அடித்தன. இது நகரப்புறங்களில் மக்கள் போராட்டத்தை மிக இலகுவாக்கியது.

எதிரி தனது முடிவுகாலத்தை உணர்ந்தான். அவன் நகரத்தை விட்டு நீங்கினால் மக்கள் போராட்டம் உயர்ச்சி அடையும். அவன் அங்கேயே நிலைத்து கெரில்லாத் தாக்குதல்களை மேற்கொள்ளல் இலகுவாகும்.

மா.ஹ:- இப்படி ஒரு ஆயுதமேந்திய போராட்டத்தை நிறுவன மயப்படுத்துவது பற்றி முன்பே நீங்கள் தெரிந்துகொண்டீர்களா? அல்லது அனுபவங்க@டாக ஏற்பட்ட படிப்பினை என்று கூறலாம்?

ஹ.ஜ:- இவை போராட்டம் நடந்தேறுகையில் நாம் பெற்ற படிப்பினைகளைக்கொண்டு, எமது நாட்டின் நன்மைக்காக உயர்ச்சிக்காக, எடுக்கப்பட்ட முடிவுகள் என்று கூறலாம். அது ஆயுதவகையில் தான் நடந்தேறும் என்பதை அறிந்தோம். வடக்கில் தாக்குதலை நிகழ்த்தி எதிரியின் முழுக்கவனத்தையும் வடக்கே திருப்பிவிட்டு நாட்டின் எஞ்சிய பகுதிகளில் எம்மை நன்கு ஸ்திரப்படுத்திக்கொண்டோம்.

மா.ஹ:- நகரங்களில் இடம்பெற்ற மக்கள் பங்குபற்றிய போராட்டங்களினூடாககெரில்லாக்கள் இராணுவபலத்தை மேலும் பெற்றனர். என நீங்கள் ஒரு கட்டத்தில் குறிப்பிடுகிறீர்கள். இதற்குரிய திட்டங்களை இவ்வகையில் நீங்கள் முன்பே தயாரித்தீர்களா? இல்லைத் தானே?

ஹ.ஒ:- நீங்கள் கூறுவது சரி. அது செய்முறை அனுபவங்களினூடாகப் பெற்ற முடிவு என்பது தாக்குதல்களை எடுத்துக்கொண்டால் நியூவேகினிக்கு பின் மே மாதத்தில் ஜினேடெகா நகரத்தைக் கைப்பற்றினோம். இது பின்னர் எல் நிரஞ்சோவைக் கைப்பற்றுதலுடன் தொடர்ந்தது. இதனால் இதனை இறுதியாக எழுச்சி எனக் குறிப்பிட்டோம்.

மா.ஹா :- மே மாதத்தில் இடம் பெற்ற புரட்சிக்கான அழைப்பை விட எது உங்களிற்குத் தூண்டு கோலாயிருந்தது?

ஹ.ஒ: ஏனெனில் அவ் வேளையில் தொடர்ச்சியான பல குறிப்பிட்ட நிபந்தனைகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன. அதாவது பொருளாதார நெருக்கடி. பணப் பெறுமதி குறைதல், அத்துடன் அரசியல் நெருக்கடி போன்றவை. அத்துடன் காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல நாடு முழுவதும் இடம் பெற்ற மக்கள் எழுச்சியும் மக்களின் முன்னணிப்படையாகிய ஆயுதந் தாங்கிய இயக்கத்தின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கையும் தேசீய ரீதியான வேலை நிறுத்தங்களையும் ஒருங்கிணைத்தல் மிக அவசியம் என செப்டெம்பர் நிகழ்;வுகளின் போது உணர்ந்தோம்.

இம் மூன்று சக்திகளையும் ஒன்றிணைக்காது இருந்திருப்போமாயின் நாம் வெற்றியை அண்மித்திருக்க முடியாது. முன்பே தேசிய ரீதியிலான பல வேலை நிறுத்தங்கள் இடம்பெற்ற போதும் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் அவை ஒன்றிணைக்கப் படவில்லை மக்கள் எழுச்சி இடம்பெற்றபோது வேலைநிறத்தங்களுடனோ முன்னணிப் படையினரின் எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கைகளுடனோ அது ஒன்றிணைக்கப்பட்டவில்லை. முன்னணிப்படை பலத்த அடிகளைத் தாங்கிக்கொண்ட பொழுது மற்றைய இரு சக்திகளும் காணப்படவேயில்லை. இம்மூன்று காரணிகளும் செப்டெம்பர் மாதம் ஓரளவு ஒன்றிணைக்கப்பட்டன. ஆனால் முற்று முழுதாக அல்ல. ஏனெனில் செயல்முறையானது முற்று முழுதாக எம்மால் முன்னெடுக்கப்படவில்லை. இதன்பின் உள் சுற்று நிருபம் ஒன்றின்மூலம் இம்மூன்று சக்திகளும் ஒன்றிணையாதவிடத்து வெற்றி கிடைப்பது அரிது எனத் தெளிவாக்கினோம்.

சன்டினிஸ்டுக்களின் ஒருங்கிணைவு இல்லாதவிடத்து மற்ற எல்லா சக்திகளையும் ஒருங்கிணைத்தல் மிகவம் கடினமாக இருந்தது. இதனால் தான் கூறுகிறோம் ஒருங்கிணைவு ஆனது புரட்சியில் பெரும் பங்கினை வகித்தது. வகித்துக்கொண்டும் இருக்கிறது.

மா.ஹ:- வேறு சக்திகள் எதுவும் காணப்படவில்லையா? இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் வெளியிலிருந்து ஏதாவது ஒரு சக்தி காணப்பட்டிருக்கலாம் அல்லவா?

ஹ.ஒ:- நன்று: இது இராணுவ ரீதியிலானது. இதனைப் பின்னர் விளங்கவைக்கிறேன். இப்போது நாம் போர்த்தந்திர காரணிகளைப் பற்றியே கதைக்கின்றோம். ஒரு யுத்த தந்திர நிலைப்பாட்டில் மே மாதத்தைப் பொறுத்தளவிலே சோமோசா யுத்தத்தில் தோல்வியடைந்தார் என்றே கூறவேண்டும். அது காலத்துடன் சம்பந்தப்படும் வினாவாகவே அமையும்.

மா.ஹ:- இந்தக் கடைசிக் காலங்களில் உங்களிற்கு அத்தகைய ரீதியான உதவி கிடைக்காது விடின் உங்களால் வெற்றியைத் தழுவியிருக்க முடியுமா?

ஹ.ஒ:- இதையே இப்போது கூறுகிறேன். அதனை முன் நான் சொல்ல விரும்புவது அம்மூன்று சக்திகளின் ஒருங்கிணைவின் அவசியத்தையே செப்டெம்பரிற்குப் பிறகு எல்ஜிக்காரோவைக் கைப்பற்றிய பின் எஸ்டெலியைக் கைப்பற்ற முயன்றோம் ஆனால் தாக்குதலைத் தொடர்பு படுத்த முடியவில்லை. பின்னர் எஸ்டெலி கைப்பற்றப்பட்டது. இது முன்னணிப்படையினரின் நடவடிக்கையால் மட்டுமே அமைந்தது. பலத்தஅடி. ஆனால் மீண்டும் தனிப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே இது அமைந்தது. நியூவாகினித் தாக்குதல் எஸ்டெலிக்கு ஆதரவாகவே நடத்தப்பட்டது. ஆனால் எஸ்டெலியில் இருந்து எமது அணியினர். வெளியேறத் தொடங்கினர். நியூவாகினித் தாக்குதல் தேசிய ரீதியான ஆர்வத்தைப் பெறத் தொடங்கியிருந்தது. அத்துடன் எல்லா சக்திகளையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளும் நடந்தேறின. நியூவாகினி தோல்வியில் முடிந்தது. ஆனால் அடுத்ததாக இடம்பெற்ற ஜினோடெகா தாக்குதல் வெற்றியான முயற்சியானதுடன் நியூவாகினியும் மற்றைய எல்லாவற்றையும் படிப்படியாக தொடர்பு படுத்தியது.

ஜினோடெகாவைக் கைப்பற்றிய நிகழ்ச்சி தெற்கு முன்னணியின் நடவடிக்கையுடனும். எல் நரன்ஜோவைக் கைப்பற்றுதலுடனும் ஒருங்கிணைந்ததாக அமைந்தது. எல்நரன்ஜோவில்தான் அரச படைகள் குவிக்கப்பட்டுக் காணப்பட்டன. ஹிபாஸ_ தாக்குதலுடன் தொடர்புள்ளதாகவே எமது தெற்கு முன்னணயினர் இவ் எல் நரன்ஜோவை கைப்பற்றுதலை ஆரம்பித்தனர். இதிலிருந்து நிக்கரகுவாவின் தெற்கு முன்னணியின் இறுதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்தன.

தெற்கு முன்னணியினர் ஜினோடெகாவைக் கைப்பற்றுதலுடன் எதிரியை சிதறடிக்க முனைந்தனர். ஆனால் தாக்குதல் நடவடிக்கை ஆரம்பித்தவுடனேயே எதிரிகள் கலைந்துபோய் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். இதன்போதுதான் ஜெர்மன் போமரெஸ் கொல்லப்பட்டார்.

நாங்கள் இத்தகைய தாக்குதல் முறையைத் தொடர்ச்சியாகக் கைக்கொள்வோமாயின் எதிரி எங்கள் அணியைத் துண்டுகளாக்கி சிறிது சிறிதாக எம்மைப் பலவீனப்படுத்திவிடுவான். என்று முடிவுக்கு வந்தோம். நாங்கள் எல் நிரன்ஜோவில் தோல்வியடைந்தோமாயின் எமது குறுகிய கால இராணுவ வெற்றி பெரும் கேள்விக்குறியாகும் நாங்கள் அந்த வேளையில் நகரப்புறங்களில் தாக்குதலை நிகழ்த்தி வரும் கெரில்லா முன்னணியினருக்கு தாக்குதல் திட்டங்களை அமைத்தோம், ஏனெனில் எமது கெரில்லா அணிகள் அப்போது பெரும் இழப்புக்களை நிவிர்த்திசெய்யவேண்டி இருந்தன. உடன்டியாகத் தாக்குதலில் ஈடுபட முடியாதவாறு அவை கலைந்து இருந்தன. உடனடியாகத் தாக்குதலில் ஈடுபடமுடியாதவாறு அவை கலைந்து இருந்தன. ஆகவே முழு விழிப்புணர்வுடன் புரட்சி ஆரம்பமாகியபோதும் மலைப்புறங்களில் தாக்குதலை நிகழ்த்திக்கொண்டிருந்த வட முன்னணியால் உடனே தமது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர முன்னணியால் உடனே தமது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர முடியவில்லை. ஆனால் பின்னர் அவர்களும் சேர்ந்து கொண்டனர்.

நாங்கள் தெரிந்துகொண்ட முறை எதுவென்றால், தேசிய ரீதியாக எழுச்சி இடம்பெறுவதற்கு முன் சரியான நேரத்தில் சரியான தாக்குதலை மேற்கொள்ள எமது கெரில்லா அணிகளை மீளமைத்து ஒழுங்கமைக்க குறைந்தது இரு வாரங்களாவது தேவைப்பட்டது. அங்ஙனமாயின்தான் எதிரி தனது பலமான தாக்குதலை மேற்கொள்ளாதவாறு அவனை நிர்மூலமாக்கி, சிதறடிக்கச் செய்து எமது நிரந்தர தந்திரோபாயமான முற்றுகைக்கு ஆளாக்கலாம். எதிரியைப் பலவீனப்படுத்த நாம் பின்வரும் முறைகளைக் கையாண்டோம். எதிரியின் தொடர்புகளைத் துண்டித்தல். அவனது இராணுவ பிரிவுகளைத் தனிப்படுத்தல் அவனுக்கு வழங்கப்படும் உதவிகளைத் துண்டித்தல். இங்ஙனம் மேலும் பல நடவடிக்கைகளைக் கையாண்டோம். இதனை சோமோசாவின் அரசாட்சியால் எதிர்கொளள் முடியவில்லை. அத்துடன் இவை தேசிய ரீதியான எழுச்சியின் தளமாகவும் அமைந்தன.

இதுதான் இடம்பெற்ற நிகழ்வுகள் - நாங்கள் புரட்சிக்கான திட்டங்களை வகுத்தோம். எத்தகைய திட்டங்கள் என்றால், பென்ஜமின் அணி எல் நிழன்ஜோவில் எழுச்சி ஆரம்பித்தது. இவை நகரங்களுக்கே சிறப்பாகப் பொருந்திய திட்டங்கள் என்றாலும் அரச இராணுவப்படையினருக்குப் பாரிய தலையிடியைக் கொடுத்தன. ஆனால் இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். வடக்கிலும் தாக்குதல், மேற்கிலும் தாக்குதல், தெற்கிலம் தாக்குதல். எல் நிரஞ்சோவில் இடம்பெற்ற நீண்டகால சண்டையின்பின் மஸாயா, கிரனடா, கராசே பகுதிகளில் இருந்த எமது கெரில்லா அணியினர் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு தெற்கிலிருந்த அரச இராணுவத்தினருக்கும், ஏனைய இராணுவத்துக்கும் இடையிலான தொடர்பைத் துண்டித்தனர். மனாகுவாவிலும் இதனைத் தொடர்ந்து எழுச்சி விரைவாக உருக்கொண்டது.

மா.ஹ:- குறுக்கிடுவதற்காக மன்னிக்கவேண்டும். எல்நிரஞ்சோவில்தானே சன்டினிஸ்ட அணியினர் தோல்வியடைய வேண்டி நேர்ந்தது.

ஹ.ஓ:- இல்லை நாங்கள் எல்நிரஞ்சோவை விட்டு நீங்கி, நீண்ட நாட்களின்பின் அரச இராணுவத்தின் முக்கிய பெரிய தளங்களாக இருந்த பெனாஸ் பிளான்கஸ், சாப்போ போன்ற இடங்களைக் கைப்பற்றினோம். சாப்போவிலிருந்து தளபதி பிரேவோவை வெயேற்றுவதிலும் வெற்றி கண்டோம். இதன்பின் முழு அளவிலான நிலையான யுத்தம் ஒன்றை, முழு யுத்தமும் முடியும்வரை நிகழ்த்தினோம்.

மா.ஹ:- எனது கேள்வியை மீண்டும் நினைவுகூர்ந்தால், ஆயுதரீதியான சமநிலைக்கு உங்கள் திட்டம் என்னவாக இருந்தது.

ஹ.ஒ:- எதிரியிடமிருந்தே எமது ஆயுதங்களைக் கைப்பற்றுவது எனவே திட்டமிட்டோம்.

மா.ஹா :- ஆனால் அது அவ்வகையில் அமையவில்லை.

ஹ.ஒ:- நல்லது ஆனால் அது அவ்வகையில்தான் அமைந்தது. உண்மையில் நடந்தது எதுவென்றால், எல் நிரஞ்சோவில் ஆரம்பித்த தாக்குதலுடன் மற்றைய முன்னணிகளையும் இம் முன்னணிப்படையுடன் தொடர்புபடுத்தி வெற்றி கண்டோம். நாம் வேலைநிறுத்தம் ஒன்றை நடத்துமாறு கோரி, அழைப்பு விடுத்தபோது மிகவும் வெற்றிகரமாகப் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. அதில் ரேடியோ சன்டினோ முக்கிய பாகத்தை வகித்தது. அந்த ஒலிபரப்பு நிலையம் இல்லாதவிடத்து வேலை நிறுத்தத்தைக் கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருந்தது. இத்துடன் மக்களும் கிளர்ந்தெழுந்தனர். ஆகவே நாம் முன்பு கூறிக்கொண்ட மூன்று நிபந்தனைகளும் இங்கு ஒருங்கிணைந்தன. இதன்பின் சோமோசா வீழ்ச்சியுறத் தொடங்க அவரால் எம்மை அழிக்கமுடியாது போயிற்று. ஆனால் அவரது வீழ்ச்சியும் சொற்ப காலத்துக்கானதாகவே அமைந்தது. யுத்த தந்திரங்களிற்கான சூழ்நிலை முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி எதிரி தோல்விகண்டான். தன்னைப் பாதுகாத்துக்கொண்டான். ஆனால் ஆயுதரீதியான பலம் காரணமாகவோ, என்னவோ அவனை வெற்றிகொள்ள முடியவில்லை. சோமோசாவால் தான் விழுந்த பள்ளத்தில் இருந்து எழும்பவே முடியவில்லை. எம்மிடம் போதியளவு ஆயுதம் இல்லாதிருப்பின் இவ் யுத்தம் நெடு நீளத்திற்குத் தொடர்ந்திருக்கும். பெரும் அழிவையும் இரத்தக்களரியையும் ஏற்படுத்தியிருக்கும். குறைவாக ஆயுதபலத்துடன் எப்படியோ நாம் வென்றுகொண்டோம். ஆனால் பெரும் அழிவுகளின் விளிம்பிலே இவ்வெற்றியைப் பெறவேண்டி இருந்தது.

நாம் ஆயுதங்களைப்பெற்றோம் ஆனால் எங்கெங்கு தேவையோ அங்கு அங்கு அவை சென்றடையவில்லை. இத்தகை இடங்களில் இராணுவ முகாம்களைச் சுற்றி பெரும் தீயை மூட்டுவதன் மூலம் அழிவை ஏற்படுத்தி எதிரியைத் தோல்வியுறச் செய்தோம். எங்கெங்கு இராணுவ முகாம்கள் இருந்தனவோ அங்கெல்லாம் எம்மிடம் போதியளவு ஆயுதம இருக்கவில்லை. ஆனால் எதிரியின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி வீடிழந்து மக்கள் வீதியில் நின்றார்கள். இத்தகைய இராணுவ முகாம்களிற்கு அருகாமையில் உள்ள சிதைவுற்ற வீடுகளில் எமது அணியினர் குடிபுகுந்தனர். இதன் மூலம், இராணுவ முகாம்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழும் கொணர்ந்தனர். சுற்றி வளைக்கப்பட்ட இராணுவ முகாமிலிருந்து எதிரியை வெளியேற்ற, இவ் வீடுகளை மேலும் நெருப்பிட்டோம்.

முக்கியமான இடங்களில் பாவிக்கப்பட்ட ஆயுதங்கள், தொடுகைக் குண்டுகளே (ஊழவெயஉவ டிழஅடிள). அதாவது பெரும்பாலான மக்கள், சாதாரணமாகக் கிடைக்கும் குத்தூசிகள், நீண்ட பிடிகொண்ட மண்வெட்டிகள், வீடுகளில் தயாரிக்கப்பட்ட எறி குண்டுகள் என்பவற்றைக் கொண்டே போராட்டங்களில் இறங்கினார்கள். இவைதான் எமது ஆயுதம்@ அவையே எதிரியை அழிக்கப் போதுமாய் இருந்தன. இன்றும் இருந்து வருகின்றன. ஆனால் எதிரியுடனான நீண்ட யுத்தத்தைத்தவிர இவ்வகையிலான தாக்குதலிற்கு இத்தகைய ஆயுதங்கள் போதுமானவையாகவே இருந்தன. ஆயுத பலத்திற்கு ஓர் தீர்வு காண்பதன் மூலமே இவ் யுத்தத்தின் முடிவைத் துரிதப்படுத்தலாம். இத்தகைய ஆயுத பலத்தை எதிரி முன்பே இழந்திருந்தான்.

அவ்வேளையில் சோமோசா ஆட்சி போதியளவு உணவுச் சேமிப்பைக் கொண்டிருக்கவில்லை. எரிபொருள் போதியளவு இல்லை. எனவே போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. நாட்டைக் கட்டப்பாட்டில் வைத்திருக்கவே முடியவில்லை. தனது நிலைக்கு மீள அவரால் முடியாதிருந்தது. இத்தகைய நிகழ்வுகளகு;கு நாம் சர்வதேச அழுத்தத்தையும் கொடுத்தோம். சோமோசா தூக்கியெறியப்படுவதற்குரிய காலமாக அது திகழ்ந்தது.

மா.ஹா:- மக்கள் இயக்கத்திலிருந்து முழுப்பலத்தையும் பெறுவது சாத்தியப்படக் கூடிய காரணியாக இருந்ததா?

ஹ.ஒ:- இல்லை@ போதியளவு ஆயுதங்கள் இல்லாதபடியால், மக்கள் சக்தி முழுவதையும் செலவளிக்க வேண்டிய நேரிடவில்லை. அத்துடன் எதிரியுடன் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றினோம். எதிரியைத் தோல்வி காணச் செய்தோம். நாம் கைப்பற்றிய ஆயுதங்கள் வெற்றியைத் துரிதமாக்கின. சில வேளைகளில் சில தாக்குதல்களில் தோல்வியுற வேண்டியும் நேர்ந்தது ஆனால் இங்ஙனம் தாக்குதல்கள் தோல்வியுற வேண்டியும் நேர்ந்தது ஆனால் இங்ஙனம் தாக்குதல்கள் தோல்வியுற நேரினும், மக்களின் உறுதியிலும் இராணுவச் சூழ்நிலையிலும் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்காதோ, இருக்குமோ என்பதை நாம் அறியோம். இவ்வகையில் ஆயுதங்கள் யுத்த தந்திரங்களில் முக்கிய பங்கை வகித்துள்ளன. அத்துடன் மிக மிக குறைந்தளவிலாவது இத்தகைய ஆயுதங்களைக் கொண்டிருப்பது அவசியமாயிருந்தது. பஸ{க்காக்கள், வெடிமருந்துகள், உயர்ந்த தாக்குதற் திறன்கொண்ட துப்பாக்கிவகை, என்பவற்றை பெரிய அளவில் கொண்டிராவிடினும் சிறிய அளவிலாவது கொண்டிருக்க வேண்டும்.

ஏனெனில், எவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நாம் கொண்டிருப்பினும், அவை முழுமக்களிற்கும் போதாது, என்ன உண்மையில் மக்களைப் பொறுத்தவரை நிகழ்ந்தது என்றால், மக்கள் வீதிகளில் இறங்கி, தமது கையில் என்னென் இருந்ததோ அவற்றையெல்லாம் ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

மொத்தத்தில். வேலைநிறுத்தம், கிளர்ச்சி, இராணுவ எதிர்ப்புத் தாக்குதல் நடவடிக்கை மூன்றையும் ஒருங்கிகை;கக் கூடியதாக இருந்தது. இதன் முன் சன்டினிஸ ஒருமைப்பாடு ஏற்பட்டிருந்தது. இவ் ஒருமைப்பாடு ஏற்படாவிடின், மூன்று சக்திகளையும் ஒருங்கிணைப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும். மேலும் மிகத்திறமான பின்னணிப் படை ஒன்று ஏற்படுத்தி இருந்தோம். யுத்தத்தை வெகு விரைவாக முடிப்பதற்கான தொழில் நுட்ப வேலைகளை இது செய்து கொடுத்தது. சாதனங்களும் முக்கிய பங்கை வகித்தன. தந்தியில்லாக் கம்பி (வயர் லெஸ்) வௌ;வேறு முனையிலிரந்த கெரில்லா அணிகளிடையே தொடர்பை ஏற்படுத்துவதில் உதவின. வானொலியும் இதில் முக்கிய பங்கை வகித்தது. இப் பொருட்கள் இல்லாது யுத்தத்தில் வெல்வது முடியாத காரியம். ஏனெனில் இவை இல்லாது அரசியல் ரீதியாகவோ அன்றி இராணுவ ரீதியாகவோ தொடர்புகளை ஏற்படுத்துதல் முடியாத காரியமாக இருந்தது. கிளர்ச்சிக்கும் வேலை நிறுத்தத்திற்கும் முக்கிய காரணியாக அமைந்த ரேடியோ சன்டினோவை அமைப்பதிலும் வெற்றிகண்டோம். சோமோசா எதிர்ப்பு சக்திகளை ஒன்று திரட்டி சோமோசா அரசைத் தனிமைப் படுத்துவதில் வெற்றிகண்டோம்.

சன்டினிஸ்டுகளின் ஒருங்கிணைவு இல்லாது, மக்கள் போராட்டங்களில் பங்கு கொள்ளாது, கெரில்லா அணிகளிடையே தொடர்புகள் இல்லாது@ சக்தி வாய்ந்த தொடர்புபடுத்தும் சாதனமான வயலெஸ் ரேடியோ என்பன இல்லாது. தொழில்நுட்ப, இராணுவ வளங்கள் கொண்ட தாக்குதல்கள் இல்லாது, திடமான பின்னணிப்படை ஒன்று இல்லாது, முன் பயிற்சிநெறி இல்லாது, ஐப்பசி 77ல் நிக்கரகுவாவில் ஆரம்பமான நிகழ்வுகள் இல்லாது, தேசிய சர்வதேச ரீதியிலான உறவுகள் இல்லாது இங்கு ஒரு புரட்சி வெற்றியளித்திருக்காது. இத்தனையின் விளைவே இவ்வெற்றி.

இவ்வெற்றி மிக எளிதானதாகத் தோன்றலாம் ஆனால் இதனை நிறைவேற்ற நாம் கொடுத்த விலையை உங்களால் கற்பனை செய்யக் கூட முடியாது. ஒரு ஐப்பசி, ஒரு மாசி, ஒரு அரண்மனை ஒரு செப்டெம்பரில் இடம்பெற்ற கிளர்ச்சி பின்னர் எல்ஜீக்காரோ எஸ்டலி நியூவேகினித் தாக்குதல்கள், இது மலைப்பிரதேசங்களில் செயல்பட்ட பாப்லோ உபேடா கெரில்லா அணியில் இத்தகையவற்றில் ஏற்பட்ட இழப்புகளே… நாம் வெற்றிபெறக் கொடுத்த விலைகளாயின.

மா.ஹ :- பல லத்தின் அமெரிக்க கெரில்லா அணிகளிடம் காணப்படாத பின்னணிப்படையொன்றை நீங்கள் எப்பொழுது உருவாக்கினீர்கள்?

ஹ.ஒ@ நாம் எப்பொழுதும் ஒரு பின்னணிப்படையைக் கொண்டிருந்தோம். வெகு காலத்துக்கு முன்னரே இத்தகைய பின்னணிப்படையுடன் எமது இயக்கம் நேரடி அனுபவங்களை பெற்றிருந்தது. கியூபாவைப்போல எமது நாடு ஒரு தீவு அல்ல மற்றைய அயல் நாடுகளில் எப்போதும் தங்கியிருக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் அயல் நாடுகளில் இந்த இயக்கங்களின் ஆதரவையும் திரட்டவேண்டி நேர்ந்தது. சன்டினோ, மெக்ஸிக்கோ, ஹொண்டூராஸ் பிரதேசங்களிற்குச் சென்றார். அங்கே ஹொண்டூராமக்களும், கோஸ்டாறிக்கா மக்களும், சன்டினோ போராட்டத்திற்கும் பெரும் ஆதரவளித்தார்கள். நிக்கரகுவாவில் பெறமுடியாத பின்னணிப்படைக்குத் தேவையான சிலவற்றை ஹொண்டூராவிலும், கோஸ்டாறிக்காவிலும் பெற்றோம்.

கோஸ்டறிக்காவிலும், ஹொண்டூராவிலும் நாங்கள் மறைமுகமாக இயங்கினோம். ஒரு பின்னணிப்படையை உருவாக்க எடுத்த முயற்சியில் இதற்கான வளங்களைத் தேடிக்கண்டு பிடித்தோம். மறைமுகப் பயிற்சி நிலையங்களை ஆரம்பித்தோம். இதனால் மற்ற எல்லா நாடுகளிலும் உள்ள முன்னணி அரசியல் இயக்கங்களுடன். இடதுசாரி இயக்கங்களுடன் மட்டுமல்லாது எல்லாவற்றுடனும் நேச உறவை ஏற்படுத்தினோம். இடது சாரிகளுடன் மட்டும் தொடர்பை ஏற்படுத்துவதாயின், அது எம்மை நாமே தனிமைப்படுத்தும் நடவடிக்கையாகவே அமையும் எவருமே எமக்குச் சரியான பின்னணிப்படையைத் தரவில்லை. எமக்குப் பொருந்தும் வகையில் எமது வீரர்களைக் கொண்டு நாமே அதனை அமைத்துக்கொண்டோம்.

எமது முயற்சியால் ஏற்பட்ட உறவுகள் எமக்குரிய ஆயுதங்களைப் பெறுவதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

மா.ஹ : உண்மையில் கட்சிரீதியாக தேர்தல் அமைப்புகளினூடாக வரும் அரசியல் கட்சிகளே சினேக உறவுகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என்ற விதிக்கு மாறாக, ஆயுதந்தாங்கிய இயக்கமாகிய உங்களால் எங்ஙனம் அத்தகைய உறவுகளை ஏற்படுத்த முடிந்தது?

ஹ.ஒ :- நாம் இம்முயற்சியில் வெற்றி கண்டோம். எமக்குரிய மரியாதையை நாம் பெற்றுக்கொண்டோம். இதனை வேறு எவ் இயக்கமும் பெற முடியாதிருந்தது. அவர்கள் இதனைப் பாரதூரமாக எடுக்கவில்லை. ஆகவே அவர்களால் இதனைப் பெற முடியாதிருந்தது. எமது உரிமைகளை எடுத்துக்காட்டி, சினேக உறவுகளை ஏற்படுத்தும் உரிமையை நாம் மக்களிடமிருந்து வெற்றி கொண்டோம். எம்மை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்திராவிடின், அவர்கள் எம்மை அணுகியிருக்க மாட்டார்கள். அவர்கள் நாம் ஒரு முழுமை பெற்ற முன்னணிச் சக்தியாக உருவாகியுள்ளதை உணர்ந்து கொண்டார்கள். ஆகவே எம்முடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டார்கள். எமது அரசியல் திட்டமுறைகளால் அங்ஙனம் அவர்கள் செயல்பட்டார்கள். ஆகவே எமது இயக்கமானது ஆயுதந்தாங்கியிருந்த அதேவேளை புரட்சிகரத் தலைமையையும் வகித்தது.

தீவிரவாத முற்போக்குகள் எமத இயக்கம் ஒரு புரட்சிகர இயக்கம் என்பதனை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களது தத்துவத்தோடு நாம் ஒருபோதும் இசையவில்லை. ஆனால் எம்மிடம் ஒரு அரசியல் திட்டமுறை இருந்ததை அவர்கள் உணர்ந்தனர். மூன்று காரணிகளும் எமக்கு உண்மையான உறவு ஏற்படுவதை இலகுவாக்கின. தவிர வெறும் காகிதங்களிலும் வாய்ப்பேச்சாலும் ஏற்படும் ஒற்றுமையை அல்ல. எந்த வித ஒப்பந்தத்தையும் இவ் ஒற்றுமைக்காக நாம் ஏற்படுத்தவில்லை. நாம் திட்டுடமிட்டு அதன்படி செயல்பட்டதால் அரசியல் தளத்தில் வெகு வேகமாக முன்னேறினோம்.

மா.ஹ:- உங்கள் வெற்றியில் எவ்வளவு தூரம் சர்வதேச சக்திகளின் தாக்கம் இருந்தது.

ஹ.ஒ:- சர்வதேச சக்திகளின் சமநிலை, சர்வதேசச் சூழ்நிலை, இப்பகுதியில் காணப்பட்ட நாடுகளின் பல்வேறு சக்திகள், மேற்கத்திய அபிவிருத்தியுற்ற நாடுகளின் முரண்பாடுகள், போன்ற யாவும் கருத்தில் கொள்ளப்பட்டன.

உள்நாட்டு ரீதியிலான அபிவிருத்தியை மட்டும் கொண்ட வெல்வது என்பது மிகவும் கடினமான காரியம். உள்நாட்டில் நாம் பெற்றுள்ள சக்திகளை வெளிநாட்டு சக்திகள் அழிக்கவும் கூடும் என்பதை நாம் உணர்ந்தோம். ஆகவே வெற்றி பெற தேசியச் சீரமைப்பிற்கான முழுமையான புரட்சிகர, தேசப்பற்று மிக்க திட்டம் ஒன்றின் மூலம் வளைந்து கொடுக்கக்கூடிய கொள்கைகளை உருவாக்கினோம். இதுவே உலகம் முழுவதும் உள்ள முழுமையான சக்திகளிலும் ஆதரவைப் பெற்றுத்தந்தது.

மா.ஹா. முழுமையான சக்திகள் என நீங்கள் குறிப்பிடுவது எதனை?

ஹ.ஒ:- நான் குறிப்பிடுவது பூர்ஷ{வா சக்திகளை, இவர்கள் முழுமையுற்றிருப்பினும் ஊஐயு இன் நடவடிக்கைகளையும் அவைபோன்றவற்றையும் ஆதரிப்பதில்லை. உலகத்தில் உள்ள இம் முழுமையான சக்திகள் புரட்சி இயக்கமொன்றின் பலத்தையும், தரத்தையும் உணர்ந்துகொண்டு, இப் புரட்சிக் கருத்துக்கள் அவர்களுக்கு எதிராக அமையினும், இப்புரட்சிகர இயக்கத்திற்குரிய மரியாதையை என்றும் வழங்குவார்கள். சிலவேளை உண்மையில் இறுதித் தாக்குதலின்போது தேவையான சக்திகளின் சமநிலைக்கு இவர்களது உறவு சாதகமாக அமையும். இதைப் பெறுவதற்காக நாட்டின் உண்மையான பிரச்சினைகயும். இதைப் பெறுவதற்காக நாட்டின் உண்மையான பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கொண்ட திட்டம் ஒன்றை அமைப்போமாயின் ஒவ்வொருவரும் சரி என்று ஏற்கக் கூடிய தீர்வாக அது அமையும்.

நாங்கள் பிரச்சினைகளை வரையறுத்தோம், நிக்கரகுவா இப்படிப் பட்ட காரணங்களுக்காக சீரமைப்பிற்கு உள்ளாக வேண்டும். தேசிய ஐக்கிய இன்ன காரணங்களுக்காக அவசியம் இப்படி மேலும் பலவற்றை வரையறுத்தோம்.

இடதுசாரிகளின் ஆதரவை விட எல்லோரது ஆதரவையும் பெறுவது மிக முக்கியமாகவும் அவசியமாகவும் இருந்தது. சன்டினிஸ்ட இயக்கம் எல்லா நாட்டிலும் நேச சக்திகளை உருவாக்க முனைந்தது. முதலாவதாக எல்லோரது ஆதரவையும், இரண்டாவதாக எமது பிரச்சினைகளை நன்கு விளக்கிக் கொண்டவருடன் கூடுதலாகவும் உருவாக்க முனைந்தது.

இப்பொழுது ஆதரவாளர்களாயிருப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது. யார் இந்த உதவிகளை வழங்குவார்கள்? எந்தவிட அரசியல் நோக்கமும் இல்லாமல் எமது முதலீட்டிற்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் யார் இதனைச் செய்ய விரும்புவார்?

இத்தகைய ஆதரவைத் திரட்டியதே சன்டினின்டுகளிற்கு பெரும் பரிசாக அமைந்தது. வெளிநாட்டு ஊடுருவலைத் தடுக்கு முகமாக நாம் இத்தகைய எமக்கு ஆதரவான சக்திகளை வெளிநாட்டில் ஏற்படுத்தினோம். இவ்வகையில் ஐக்கிய நாடுகளின் ஒருபகுதியின் ஆதரவையும் பெற்றோம்.

மா.ஹா.: சன்டினிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரை மூன்று காரணிகளின் இணைப்பிற்கும் பின்னர் அவற்றின் பிரிவிற்கும் என்ன காரணம்?

ஹ.ஒ:- நான் முன்பு கூறியது போல சன்டினிஸ்டுகளின் ஐக்கியமானது எமது வெற்றிக்கான தீர்க்கமான காரணி. எங்ஙனமாயினும் மீள பகுதிகளானதை விளங்க வேண்டுமாயின் வரலாற்றினை நன்கு ஊடுருவிப் பார்க்க வேண்டும்.

நிக்கரகுவாவில் என்ன இடம்பெற்றதென்றால் குளுடுN இல் முன்பே பிளவுகள் காணப்படவில்லை. ஆனால் நாம் அந்நேரத்தில் முழுமையடையதாக காரணத்தால் முன்னணிப்படையானது மூன்று பகுதிகளாகப் பிளந்தது.

மா.ஹ : இது எப்போது நடந்தது?

ஹ.ஒ:- 1976-77 காலப் பகுதிகளில்

மா.ஹ: இதற்கான காரணம் யாது?

ஹ.ஒ : சொல்கிறேன் வெறும் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடவில்லை. புரட்சிகர இயக்கத்தின் பிரச்சினைகளை நன்கு விளங்கி அதற்கேற்ற வகையில் புரட்சிகர நடவடிக்கைகளை நெறிப்படுத்துதலே ஒரு உண்மையான தலைவனிற்குரிய ஆற்றல் முறை. இவ்வகையிலேயே எமது தலைமையும் இருந்தது.

மா.ஹ:- நீங்கள் கருதுவதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

ஹ.ஒ: நன்று. பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் தலைமைத்துவம் என்ற கருத்து ஆதியானது. நடைமுறையில் அங்ஙனம் தொடர்பு படுத்தப்பட்ட தலைமை இருக்கவில்லை. அடக்குமுறையின் காரணமாகவும், வெகுகாலம் ஒருவரோடு ஒருவர் தொடர்பற்று இருந்தமையாலும் பொதுவான வழிமுறை ஒன்றின்மையாலும், ஒவ்வொருவரம் தமக்குத் தெரிந்த வகையில் செயலாற்றினர். இது மோதல்களிற்கு வழி வகுத்தது. ஆகவே இம் மோதலானது அரசியல் சித்தாந்த வேறுபாடுகளால் தோன்றாவிடினும் இம் மோதல்கள் நிலைத்திருந்தன. நாங்கள் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டு இருப்போமாயின் இத்தகைய முரண்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். ஐக்கியத்தைப் பேணும் அதேவேளை குறை குற்றங்களை ஆராய்ந்து திருத்தியிருப்போம். விவாதித்து பிரச்சினைகளை தீர்க்கும் பண்பு இன்மை, தனி மனிதர்களாகவோ, புரட்சியாளர்களாகவோ முற்றாகப் பக்குவப்படாத நிலை, அரசியல் அடக்குமுறை என்பன எம்மைப் படிப்படியான பிளவு படுத்தலுக்கு உள்ளாக்கி மூன்று காரணிகளாகப் பிளவுபடுத்தின.

இதனால் ஒஸ்கார் டேர்சோ, றிக்காடோ மொறாலேஸ் போன்ற தேசியத் தலைமைகளை நாம் இழக்க வேண்டியும் நேர்ந்தது. இவற்றிலிருந்து மக்களது போராட்டத்திற்கு தலைமை தாங்கக் கூடிய ஆயுதமேந்திய போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுக்கக் கூடிய இயக்கமாக எமது இயக்கம் இவற்றிலிருந்து வெளிவந்தது. எமது பழைய தோழர்களின் அனுபவங்களைக் கொண்டும், மக்களுடன் சேர்ந்து வேலை செய்தும், உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளை இணைத்துக்கொண்டும் இயக்கத்தில் பாரிய அளவில் சேர்ந்துகொளள் முயற்சித்த ஆயிரம் ஆயிரம் இளைய தலைமுறையை சேர்த்துக் கொண்டும், இதனை நாங்கள் கட்டி எழுப்பினோம்.

இப்போது பழையவர்களையும், புதியவர்களையும் சேர்க்கவேண்டிய தேவை இருந்தது. நடைமுறையில் இது பெரும் மோதல்களை ஏற்படுத்தியது. இளைய அங்கத்தவர்கள் மீது முதிய அங்கத்தவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்தனர். இவ் இளைய அங்கத்தவர்கள் வௌ;வேறு பகுதிகளில் பொறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்தவர்கள். இளையவர்களோ முன்னைய காலகட்டங்களின் போராட்டத் தன்மையை உணராதவாறு அதன் கடினத்தை அறியாவாறு பழைய அங்கத்தினரை அலட்சியப்படுத்த முனைந்தனர். ஏனெனில் புதியவர்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கருதிய பழமையான செயல் முறைகளை பழைய அங்கத்தவர்கள் நீண்டகால அனுபவமுள்ளவர்கள் என்ற ரீதியில் செயல்படுத்தி வந்தனர்.

மா.ஹ : நீங்கள் உங்களை நீண்டகால அனுபவமுள்ளவர்களுடன் சேர்த்துக் கொள்கிறீர்களா?

ஹ.ஒ: அப்படித்தான் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவன் நான்.

மா.ஹ: நகர்ப்புற மக்களுடன் பாட்டாளி வர்க்கம் இணைந்தும், மலைப்புறங்களில் கெரில்லாக்களுடன் இணைந்து நீண்டகால மக்கள் யுத்தத்தையும் வைத்து மூன்றுவித காரணிகளிற்கும் இடையே காணப்பட்ட தொழில் ரீதியான வேறுபாட்டை விளக்குவீர்களா?

ஹ.ஒ: இத்தொழில் வேறுபாட்டை நிச்சயம் விளங்கவைக்க வேண்டும். நீங்கள் குறிப்பிடுவது போல் மூன்று காரணிகளாக இவை பிரித்திருக்கவில்லை. இது முன்னணியின் பிரிவுக்கு முன்னரே காணப்பட்டதொன்று.

இதை நான் விளங்க வைக்கிறேன்.

மூன்று வகை காரணிகளுக்குரிய தலைமைகளும், புரட்சி பற்றிய சகலவித பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டிருந்தன. நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால் பிளவு ஏற்பட்ட வேளையில் குளுடுN ஆல் வழங்கப்பட்ட சில வேளைகளைச் செய்து கொண்டிருந்தவர்கள் தாம் முகம்கொடுக்க வேண்டிய பிரச்சினைகளிற்குத் தீர்வைப் பெற இயலாது இருந்தனர். ஏனெனில் நான் முன்பு குறிப்பிட்டது போல் பலயீனங்களும், பின்வாங்கல்களும் தான். எந்த வகையில் பிரச்சினை அணுகினார்களோ அந்த வகையில் தமக்கு, தமக்கு தெரிந்த முறையில் செயல்பட்டு ஒரு அமைப்பாக மாறவும் தொடங்கினர். ஆனால் அனைவரும் கொடூர அடக்கு முறைக்கெதிராகவே போராடிக்கொண்டிருந்தோம். என்பதை ஞாபகத்திற் கொள்ளுங்கள். தேசிய ரீதியாக வேலைசெய்ய முடியாதிருந்தது. ஒவ்வொருவரும் சூழ்நிலைக்கு எற்ற வகையில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். மலைப் பிரதேசங்களில் தரித்த எமது தோழர்களும் ஏற்பட்டுக்கொண்டிருந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயலாற்றிக்கொண்டிருந்தனர். மாணவப் பிரிவில் வேலை செய்பவர்கள் புரட்சிகர விஞ்ஞான சித்தாந்தத்தை அமைப்பதிலும் கூடுதலாக இராணுவ வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் கிளர்ச்சியை நெறி அமைப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். மூன்று சக்திகளும் உண்மையில் ஒரே ஒரு போராட்டத்தையே முன்னெடுத்துச் சென்றன. ஆகவே ஒரே ஒரு கொள்கையே இதிலிருந்து எழுந்தது. ஆகவே வெற்றிக்கான ஒரே ஒரு தந்திரம் உருவாகியது.

இது, ஏன் ஒரு புதிய குளுடுN தோற்றுவிக்கும் சிந்தனையை ஏற்படுத்தவில்லை என்பதை நன்கு விளங்கும் என நினைக்கிறேன்.

மா.ஹா: ஆகவே நீங்கள் மூன்று செயலாளர்களையும் வைத்திருக்கவில்லை.

ஹ.ஒ: இல்லை அதாவது இயக்கத்தின் ஒருமைப்பாடு பேணப்பட்டவுடன் மூன்று காரணிகளினதும் வேலை முழுமையானதாக ஒன்றை ஒன்று சார்ந்து முழுமைப் படுத்தியாக அமைந்ததாக இருந்தமை இதனை நன்கு விளங்க வைக்கும்.

மா.ஹ: ஆகவே இத்தகைய வேலை ரீதியான பிரிவு, பிளவுக்கு முற்பட்டதொன்று.

ஹ.ஒ: ஆம் வௌ;வேறு பகுதிகளில் வேலை செய்வது பற்றி இயக்கமே முடிவெடுக்கும். நாம் எல்லோரும் ஒர் ஆணிவேரைக் கொண்டிருந்தோம் என்பது எவ்வளவோ உதவியாக இருந்தது. அந்த நினைவு மற்றைய காரணிகளிற்கான வேலையை மதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அதாவது, கிளர்ச்சிக்கான ஒரு காரணி இன்னொரு புதிய மாணவ முன்னணியைக் கட்டி எழுப்ப முயலவில்லை. வௌ;வேறு தொழிற்சாலைகளில் பாட்டாளி வர்க்கத்தினர் செய்து வந்த வேலைகளுக்கெதிராக இன்னொரு அமைப்பைக் கட்ட முயலவில்லை. மாறாக வீணாகத் தலையிடவும் இல்லை. அத்துடன் இராணுவ ரீதியில் நடவடிக்கைகளை எடுத்துவரும் வடக்கு முன்னணியையோ தெற்கு முன்னணியையோ போன்ற அமைப்பைப் புதிதாக உருவாக்கவில்லை. எல்லா முயற்சிகளும் தொடர்பு படுத்தப்பட்டு, ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தன.

மா.ஹ: இம் மூன்றும் ஒருங்கே இல்லாது தனித்தனியாக இருப்பின் வெற்றியைத் தழுவ முடிந்திருக்காது இல்லையா?

ஹ.ஒ: அது சரி பிரச்சினை என்னவென்றால் ஒவ்வொருவரும் தலைமை தாங்க முனைந்தனர். ஆனால் அது இயலாத காரியம் என்றாலும் போராட்டத்தில் ஒவ்வொருவரது பங்கும் வெற்றிக்கு மிக அவசியமானது என்பதையும் அனைவரும் உணர்ந்தனர் ஆகவே 1978-ன் பிற்பகுதிகளில் நாம் ஆரம்பித்த ஒருங்கிணைப்பு முயற்சிக்கு சகலரது ஒத்துழைப்பும் கிடைத்தது. முழு சன்டினிஸ்ட இயக்கமும் ஒருங்கிணைப்பு என்பதற்கு போராட்டத்திற்கான கிளர்ச்சித் தன்மையை ஏற்படுத்தும் ஒரு கொள்கை அடிப்படையில் ஒத்துவந்தன. இத்தகைய திட்டமிடப்பட்ட அரசியல் சித்தாந்த ரீதியான அடிப்படைகள் எமது முயற்சிகள் யாவற்றையும் ஒருங்கிணைத்தது மட்டுமல்லாமல் ஒருங்கிணைப்பிற்கும் வழி கோலின. ஒருங்கிணைப்பு என்று கூறுவதைவிட மறுசீரமைத்த குழுவாக இயங்கினோம் என்று கூறலாம். சன்டினிஸ்டுகளின் ஐக்கியம் வெற்றிக்கு மிகவும் அவசியமானது. சன்டினிஸம் ஆனது சன்டினிஸத்தைச் சார்ந்த இடதுசாரிகளிற்கும் இடதுசாரிகளைச்சார்ந்த மக்களிற்கும் எமது இலக்குகளை அடைவதற்கு மிகவும் உறுதுணையானது.

மா.ஹ: நிக்கரகுவாவின் ஆயுதமேந்திய போராட்டத்தில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என அறிகிறோம். நகரப் புறங்களில் ஆண்களோடு சரிநிகராக நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கெரில்லா அணிகளில் 25மூ பெண்களாகவும் இருந்துள்ளனர் இதனைப்பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன? இங்ஙனம் பெண்கள் பங்கு பற்றுவது பரம்பரையானதா அன்று ஒரு புதிய சம்பவமா?

ஹ.ஒ: சன்டினிஸ்ட இயக்கம் பெண்களைப் போராட்டங்களில் பல காலமாக இணைத்துக் கொண்டுள்ளது. சன்டினோவின் காலத்தில் மட்டுமல்ல அதற்கு முற்பட்ட காலங்களிலும் பெண்கள் பங்குகொண்டுள்ளனர். சன்டினோவின் காலகட்டத்தில் பங்கு பற்றிய லியோரோறோ சகோதரிகள் பற்றி நீவிர் அறிந்திருப்பீர். யான்கீகளால் 1912ல் படுகொலை செய்யப்பட்ட பெண்களைப் பற்றியும் அறிந்திருப்பீர். எசல்வடோரிய பெண்மணியான லூசியா மாட்டோ மொறொயைம் இப் போராட்டத்தில் பங்குபற்றி இருந்தாள். அந் நாட்டில் ஏற்பட்ட ஊடுருவல்களிற்கு எதிராகப் போர் தொடுத்தால் அவர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். 1926ல் கொல்லப்பட்ட அல்டே என்னும் பெண்மணி யான்கீகளுக்கு எதிராகப் போராடிய முதலாவது விடுதலைக் கெரில்லா வீரனின் மனைவி.

சன்டினிஸ்ட இயக்கம் எல்லாவகையான போராட்ட நடவடிக்கைகளிலும் பெண்களை இணைத்தது. இதன்படி கெரில்லா தலைவி 2 என அழைக்கப்படும் பெண்மணியான டோரா இன்னொரு கெரில்லாத் தலைவியான மொனிக்கா, லெஸ்றிசியா போன்றோர். கெரில்லா அணிகளில் அங்கம் வகித்தனர். இவர்கள் புரட்சிகரப் போராட்டத்தில் மிக முக்கியத்துவம் வகித்தார்கள். ஆனால் இவர்கள் பங்களிப்பு அரசியல் தலைவிகள் என்ற ரீதியில் அமைந்தது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சியின் போக்கில் யுத்தமுனையில் இப் பெண்கள் தலைமை வகுத்துச் சென்றனர். யுத்தத்தின் போது முன்னணியில் நின்ற முக்கியமான கெரில்லா அணியான லோப்பெஸ் அணி டோரோ என்ற பெண்மணியின் கீழ் தலைமை வகுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

சன்டினிஸம் பெண்களின் பங்கை ஒரு போதும் நிராகரிக்கவில்லை. அது அங்ஙனம் நிராகரிக்குமாயின் சன்டினிஸம் ஒருபிற்போக்கான மட்டுமல்ல பெண்களை வெறுமனே கவர்ச்சி வஸ்தக்களாக, கீழ்த்தரமாக மதிப்பிட்டும் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல, பெண்கள் புரட்சியில் பெரும் பங்கு வகித்தார்கள் சில அணிகளில் முழுவதுமே பெண்களாக இருந்தனர். எத்தனையோ நூறு ஆண்டுகள் கொண்ட அணியை எவ்வித பிரச்சினையுமின்றி அப்பெண்கள் தலைமை தாங்கினார்கள்.

மா.ஹர் இப் போட்டியை முடிக்க முன்பு இறுதியா எதையாவது கூற விரும்புகிறீர்களா?

ஹ.ஒ: நல்லது முதலாவதாக இத்தகைய கலந்துரையாடலினூடாக எமது புரட்சியின் முக்கிய செயல்முறைகளை அறியும் வண்ணம் செய்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனது பதில்களுக்கு கூடிய சிந்தனையாக்கம் கொடுக்க விரும்பினேன். ஆனால் தினசரி நாம் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் இதனை முடியாத காரியமாய் ஆக்கி உள்ளன. நாம் இங்கு குறிப்பிட்டவற்றை தீர்மான ஆராய்வின் இறுதி வாக்குகள் என்று மட்டும் நோக்கக்கூடாது. எமது துணிகரமான, உறுதியான விடுதலைப் போராட்டச் செயல்முறைகளை ஒரளவு என்னால் முடிந்த வரை இதில் விளங்க வைத்துள்ளேன்.

நன்றி
‘இம்பிறெக் கோர்’ (Imprecor)