கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  புதிய சுவடுகள்  
 

தி. ஞானசேகரன்

 

புதிய சுவடுகள்
"கிணிங் கிணிங்'.
படலையடியில் சைக்கிள் மணியோசை கேட்டது. வீட்டு முற்றத்தில் நின்ற ஆட்டுக்குட்டிக்கு முருங்கைத் தளிர்களை மடித்து ஊட்டிக்கொண்டிருந்த பார்வதி நிமிர்ந்து பார்த்தாள்.
கிடுகு வேலிக்கும் தட்டிப் படலைக்கும் இடையிலுள்ள நீக்கலின் ஊடாகத் தபாற்காரன் வெளியே நிற்பது தெரிந்தது.
வாசற்படியில் சுருண்டு படுத்திருந்த நாய் வீமன் தலையை நிமிர்த்தி ஒரு தடவை உறுமியது. பின்பு பார்வதி எழுந்து செல்வதைப் பார்த்ததும் மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டது. இன்று அந்த நாய்க்கு ஏனோ சோம்பற் குணம் வந்துவிட்டது. மற்ற நாட்களில் தபாற்காரன் அந்த வழியாகச் சைக்கிளில் போகும்போது அது குரைத்துக்கொண்டே அவனைத் துரத்திச் செல்லும். அப்போது அவன் பயத்துடன் "அடி,அடி' என அதனை விரட்டியபடி காலை மேலே தூக்கிக்கொண்டு பனை வடலிகளின் ஊடாக ஒற்றையடிப் பாதையில் படுவேகமாகச் சைக்கிளை ஓட்டிச் செல்வான். அதனைப் பார்த்துப் பார்வதி வேடிக்கையாகச் சிரிப்பாள்.
பார்வதிக்கு இருபத்தேழு வயது முடிந்து விட்டது. ஆனாலும், அவளது மெலிந்த கொடிபோன்ற உடலும், நீண்ட கேசமும், வட்டவடிவான வதனமும் அவளது தோற்றத்தில் ஐந்தாறு வயதைக் குறைத்துக் காட்டின. அவளது கண்களில் மட்டும் சதா ஏனோ ஏக்கம் குடிகொண்டிருந்தது.
ஆட்டுக்குட்டியை நெஞ்சோடு அணைத்து அதனை வருடியபடியே சென்ற பார்வதி தபாற்காரன் கொடுத்த கடிதத்தைப் பெற்றுவந்தாள்.
அது அவளது சிநேகிதியால் அவளுக்கு அனுப்பப்;பட்டிருந்த திருமண அழைப்பிதழ்.
அதன் முன் பக்கத்தில் மணமக்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன.
"டேவிட் - மேரி'.
அதனை வாசித்தபோது பார்வதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"என்ன..... டேவிட் என்ற ஒருவனையா மேரி திருமணஞ் செய்யப் போகிறாள்‰ அப்படியானால், அவள் சந்திரனை ஏமாற்றி விட்டாளா?' பார்வதியால் அதனை நம்பவே முடியவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேரியின் சிநேகிதம் அவளுக்குக் கிடைத்தது. மேரியும் பார்வதியும் அப்போது ஊரிலுள்ள தையல் வகுப்பொன்றில் பயின்று வந்தார்கள். மேரி அயற் கிராமத்திலிருந்து அந்தத் தையல் வகுப்புக்கு வந்து போய்க்கொண்டிருந்தாள். வகுப்பு முடியும்வரை சந்திரன் அவளுக்காகத் தெருவிலே காத்திருந்து அவளுடன் வீடுவரை கூடிச் செல்வான்.
சிலநாட்களில் தையல் வகுப்புக்குப் போவதாகக் கூறிவிட்டு மேரி சந்திரனுடன் எங்கெல்லாமோ சென்று வருவாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்பினார்கள். தாய் தந்தையரின் எதிர்ப்புக்கிடையே அவர்களது காதல் வளர்ந்து வந்தது. தனக்கும் சந்திரனுக்கும் உள்ள காதல் விவகாரங் களையெல்லாம் மேரி பார்வதியிடம் கதை கதையாகச் சொல்வாள். உயிர் உள்ளவரை சந்திரனைப் பிரியமாட்டேன் எனக் கூறியவள் இப்போது வேறொருவனுக்கு மாலையிடப் போகிறாளா?
பாடசாலை வாழ்க்கையிலும், தையல் வகுப்பிலும் தனக்குக் கிடைத்த தோழிகள் ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்தாள் பார்வதி. மேரியைத் தவிர மற்ற எல்லோருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. அவர்களில் பலர் இன்று குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்கிறார்கள். வெகு காலமாகத் திருமணஞ் செய்யாதிருந்த மேரியும் இப்போது திருமணஞ் செய்யப்போகிறாள்.
ஆனால், எனது நிலை?
பார்வதியினது நெஞ்சின் அடித்தளத்திலிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.
எனது உள்ளத்தின் காதலை யாருக்கு எடுத்துச் சொல்ல முடியும்? பிறருக்குச் சொல்லக் கூடிய முறையிலா எனது காதல் அமைந்திருக்கிறது. நான் விரும்பியவரிடத்திலே கூட எனது காதலைத் தெரிவிக்க வகை அறியாது தவிக்கிறேனே‰ ஒரு வேளை வாழ்நாள் முழுவதும் எனது ஆசைகளை நெஞ்சுக்குள்ளே புதைத்து வைத்துக் கொண்டிருக்கவேண்டிய நிலைமை ஏற்படுமோ? அல்லது மேரியைப் போல காதலுக்கு ஒருவனும் கைப்பிடிக்க வேறொருவனுமாக அமைந்து விடுமோ என்னவோ?
பார்வதி, கையில் அணைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டி அவளது பிடியில் இருந்து திமிறித் துள்ளிக்குதித்துத் தாயிடம் ஓடியது.
வீட்டினுள்ளே "லொக்கு..... லொக்கு...' எனப் பார்வதியின் தாய் சின்னத்தங்கம் இருமும் சத்தம் கேட்டது. அவளைக் கவனிப்பதற்காகப் பார்வதி உள்ளே சென்றாள்.
பார்வதியின் தாய் ஒரு நோயாளி. அவளுக்கு அடிக்கடி தொய்வு நோய் ஏற்படும். அதனால், பார்வதிக்கு வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. சமையல் செய்வதிலிருந்து ஆடு மாடுகளைக் கவனிப்பதுவரை சகல வேலைகளையும் அவள்தான் செய்யவேண்டியிருந்தது. அவளது தந்தை செல்லப்பர் ஒரு லொறிச் சாரதி. அவர் வெளியிடங்களுக்கு லொறியுடன் புறப்பட்டுவிட்டால் எப்போது வீட்டுக்குத் திரும்புவார் எனச் சொல்ல முடியாது. கிழமையில் இரண்டு மூன்று நாட்கள்கூட வீட்டில் தங்குவது சந்தேகந்தான். அதனால், வீட்டின் நிர்வாகப் பொறுப்புகளையும் பார்வதிதான் கவனிக்க வேண்டியிருந்தது.
தொடர்ச்சியாக வந்த இருமலைக் கட்டுப்படுத்த முடியாமல் நெஞ்சை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தபடி சின்னத்தங்கம் இருமிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மூச்சு முட்டியது. கண்கள் கலங்கின. மிகவும் கஷ்டப்பட்டு நெஞ்சுக்குள் பசையாக ஒட்டிக்கொண்டு வெளியே வரமறுக்கும் சளியை வரவழைக்கும் முயற்சியில் பலமாகக் காறி பக்கத்திலிருக்கும் பேணிக்குள் உமிழ்ந்தாள்.
பார்வதி தாயின் பக்கத்தில் அமர்ந்து அவளது நெஞ்சை நீவிவிட்டாள்.
”ஏனம்மா மருந்து குடிக்கேல்லையோ? காலமை தொடக்கம் ஒரே இருமலாயிருக்கு“.
”இல்லைப் பிள்ளை, மருந்து முடிஞ்சுபோச்சு“.
”அப்ப கொஞ்சம் சுடுதண்ணி கொணந்து தரட்டோ?“
மகளின் கேள்விக்குப் பதில்கூற முடியாதவாறு சின்னத்தங்கத்தை மீண்டும் இருமல் பற்றிக் கொண்டது.
பார்வதி குசினிக்குள் ஓடிச்சென்று ஒரு பேணியில் வெந்நீர் எடுத்துவந்து சின்னத்தங்கத்தின் தலையை ஆதரவாகத் தடவியபடி சிறிது வெந்நீரை அவளுக்குப் பருக்கினாள்.
அதன் பின்புதான் சின்னத்தங்கத்துக்குச் சிறிது ஆறுதலாக இருந்தது. பார்வதி கவலையுடன் தாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பத்து வருடங்களுக்கு மேலாகச் சின்னத்தங்கம் இந்தத் தொய்வு நோயினால் கஷ்டப்படுகிறாள். சில நாட்கள் அவள் உற்சாகமாக வெளியே எழுந்து நடமாடுவாள். மற்றைய நாட்களில் படுக்கையில் படுத்துக்கொள்வாள். கடந்த இரண்டு மூன்று கிழமைகளாக அவளால் வெளியே வரமுடியவில்லை. நோயின் காரணமாக அவளது உடல் மிகவும் மெலிந்து போயிருந்தது. முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு கண்கள் குழி விழுந்திருந்தன.
”பிள்ளை, ஆர் வந்தது....... சைக்கிள் சத்தம் கேட்டுது?“
”அது தபாற்காரனம்மா. என்ரை சிநேகிதிக்கு கலியாணம். அதுதான் காட் அனுப்பியிருக்கிறாள்“.
சின்னத்தங்கம் ஏதோ நினைத்துக் கொண்டவளாகப் பார்வதியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். பின்பு ”அப்பு எப்ப வாறனெண்டு சொன்னவர் பிள்ளை?“ எனப் பார்வதியிடம் வினவினாள்.
”நேற்றே வாறன் எண்டு சொல்லிப்போட்டுப் போனவரம்மா. இன்னும் வரேலை...... ஒருவேளை இண்டைக்கு வரக்கூடும்“.
”அந்த மனிசனுக்கு குடும்பத்திலை அக்கறையில்லை. வீட்டிலை ஒரு குமர் இருக்கெண்டு சிந்தனை இல்லை. ஊர் ஊராய்ச் சுத்தித்; திரியிறார்“. என எரிச்சலுடன் தனது கணவனைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டாள் சின்னத்தங்கம்.
”என்னம்மா செய்யிறது.... அப்புவின்ரை வேலை அப்பிடி. வெளி இடங்களுக்கு லொறி கொண்டுபோனால், தூரப் பயணத்திலை ஏதேன் சுணக்கம் ஏற்படத்தானே செய்யும். எப்பிடியும் இண்டைக்கு வந்திடுவார்“.
”நான் அதைப் பற்றிச் சொல்லேல்லைப் பிள்ளை. உழைக்கிற காசுகளைக் குடிச்சு வெறிச்சுக் கொண்டு திரியிறார். வருங்காலத்தைப் பற்றி அவருக்கு யோசினை இல்லை. உனக்கு ஒரு கலியாணங் காட்சி வந்தால் கையிலை மடியிலை நாலு காசு இருந்தால்தானே இந்தக் காலத்திலை எதையுஞ் செய்ய முடியும்“.
”இப்ப என்ரை கலியாணத்துக்கு என்னம்மா அவசரம்‰ சும்மா மனசைப் போட்டுக் குழப்பாதையுங்கோ? பேசாமல் படுத்திருங்கோ“ எனச் சிறிது கண்டிப்பான குரலில் கூறினாள் பார்வதி.
சின்னத்தங்கம் போர்வையை இழுத்துப் போர்த்தபடி மறுபக்கம் புரண்டு படுத்தாள். அவள் பேசாது படுத்திருந்த போதிலும் பார்வதியைப் பற்றிய பலவாறான சிந்தனைகள் அவளது மனதில் அலைமோதி வேதனைப் படுத்திக் கொண்டிருந்தன.
மாட்டுக் கொட்டிலிலிருந்த பசு "அம்மா' எனக் குரல் கொடுத்தது.
பார்வதி எழுந்து வெளியே வந்தாள். அப்போது படலையைத் தாண்டி, பனையோலைக் கட்டைச் சுமந்த வண்ணம் மாணிக்கம் அங்கு வந்துகொண்டிருந்தான்.


2.
மாணிக்கத்தைப் பார்த்தபோது பார்வதியின் முகம் மலர்ச்சி அடைந்தது. அவன் ஒவ்வொரு நாளும் அங்கு வருவான். சிறுவயதிலிருந்தே மாணிக்கத்துடன் பார்வதி நெருங்கிப் பழகி இருக்கிறாள். ஆரம்பப் பாடசாலையில் அவனுடன் கல்வி பயின்றிருக்கிறாள். சிறுமியாக இருந்தபோது அவனுடன் பாடசாலைக்குச் சேர்ந்து சென்று வந்திருக்கிறாள். மாணிக்கத்தின் வீடு அவர்களது வீட்டிலிருந்து சிறிது தூரத்திலேதான் இருக்கிறது.
மாணிக்கம் சகல உதவிகளையும் பார்வதிக்குச் செய்து கொடுப்பான். பனையிலிருந்து ஓலை வெட்டிவந்து அவளது பசுவிற்குக் கிழித்துப் போடுவான். கூப்பன் கடைக்குச் சென்று அவர்களது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவான். செல்லப்பர் வெளி இடங்களுக்குச் செல்லும் வேளைகளில் அவன் சின்னத்தங்கத்திற்கும் பார்வதிக்கும் துணையாக அங்கே வந்து தங்குவான்.
சின்னத்தங்கத்தை, மாணிக்கம் "ஆச்சி ' என அழைப்பான். பார்வதியை அவன் பெயர் சொல்லித்தான் அழைப்பது வழக்கம். இப்படிச் சற்று அதிகப்படியான உரிமையை எடுத்துக் கொண்டதையிட்டு மாணிக்கத்தின் தாய் தந்தையர் அவனை அடிக்கடி கண்டிப்பதுண்டு. ஆனாலும், சிறுவயதிலிருந்து பழகிய பழக்கத்தை அவனால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. சின்னத்தங்கமும் பார்வதியும் கூட அவன் அப்படி அழைப்பதைத் தவறாக ஒருபோதும் எடுத்துக்கொண்டதில்லை.
தலையில் சுமந்துவந்த ஓலைக்கட்டை உடலைச் சரித்து தலையினால் நெம்பி தடாரென்ற சத்தத்துடன் கீழே சாய்த்தான் மாணிக்கம்.
கட்டுமஸ்த்தான உடலும் இளமைத் துடிப்பும் நெற்றியிலே அநாயாசமாகச் சுருண்டு விழும் கேசமும் அலட்சியம் நிறைந்த கண்களும் கபடமற்ற சிரிப்புமாக மாணிக்கம் எப்பொழுதும் தோற்றமளிப்பான்.
முற்றத்திலுள்ள முருங்கை மரத்தில் கட்டியிருந்த தாய் ஆடு, ஓலைக்கட்டு விழுந்த சத்தத்தினால் வெருட்சியுற்று மரத்தைச் சுற்றிச் சுற்றி வேகமாக ஓடியது. அப்போது படீரென அதன் கழுத்திலிருந்த கயிறு அறுந்துகொண்டது. மறுகணம் அது பலமாகக் கத்தியபடி வீட்டின் கோடிப்புறத்தை நோக்கித் துள்ளியோடியது.
”ஐயய்யோ........ ஆடு அறுத்துக்கொண்டு ஓடுது. கிணத்தடிப் பக்கம் போனால், கிணத்துக்குள்ளை விழுந்தாலும் விழுந்திடும்“ எனக் கூறியபடி ஆட்டைப் பின்தொடர்ந்து ஓடினாள் பார்வதி.
ஆடு அங்குமிங்குமாக ஓடி அவளை அலைக்கழித்;தது. ஆட்டைத் துரத்தியதினால் பார்வதி களைப்படைந்தாள். அவளுக்கு மூச்சு வாங்கியது.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கம் வேடிக் கையாக "கலகல' வெனச் சிரித்தான். எங்கெல்லாமோ சுற்றிய ஆடு மீண்டும் முற்றத்துப் பக்கமாக ஓடிவந்தது.
”மாணிக்கம், அந்த ஆட்டைப் பிடியன்..... நான் களைச்சுப் போனன்“ எனக் கெஞ்சியபடி பார்வதி வேகமாக ஓடிவந்தாள்.
மாணிக்கம் இரு கைகளையும் அகல விரித்தபடி ஆட்டின் கழுத்தை வளைத்துப் பிடிப்பதற்காக அதை நோக்கிப் பாய்ந்தான். அந்தப் பொல்லாத ஆடு அவனது பிடியிலிருந்து லாவகமாக நொளுந்தி ஓடியது. பின்னால் ஓடிவந்த பார்வதி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மாணிக்கத்தின்மேல் அடிபட்டுக் கீழே சாய்ந்தாள். மாணிக்கம் அவள் கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவளைத் தன் இருகைகளாலும் அணைத்துப் பிடித்துக் கொண்டான்.
ஆட்டைப் பிடிப்பதற்காகப் பாய்ந்து சென்றவனது கைகளில் அழகான மான்குட்டியொன்று துள்ளிக்குதித்து வந்து வீழ்ந்தது போல் பார்வதி அவனது கைகளுக்குள் வீழ்;ந்து அகப்பட்டுக் கொண்டாள்.
அவளின் கண்கள் படபடத்தன? வதனம் குப்பென்று சிவந்துவிட்டது. மாணிக்கம் இப்படித் தன்னை கட்டிப்பிடித்துக் கொள்வான் என அவள் சற்றேனும் எதிர்பார்க்கவில்லை. மறுகணம் மாணிக்கத்தின் பிடியை விலக்கிகொண்டு அவள் வெட்கத்துடன் குசினிக்குள் ஓடி மறைந்தாள்.
மாணிக்கம் ஒரு கணம் திகைத்து நின்றான். அவன் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது. பார்வதியை அவன் தாங்கிப் பிடித்திராவிட்டால் ஒருவேளை அவளது தலை நிலத்திலே அடிபட்டிருக்கும். வேண்டுமென்றேதான் தன்னைக் கட்டிப் பிடித்ததாகப் பார்வதி நினைத்துக்கொள்வாளோ என அவனது மனம் பதறியது.
ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டு ஆட்டைத் துரத்திப் பிடித்துவந்து மரத்திலே கட்டினான் மாணிக்கம். பின்பு திண்ணைத் தாழ்வாரத்தில் செருகியிருந்த பாளைக்கத்தியை எடுத்து முற்றத்திலே கிடந்த ஓலைகளைச் சிராய்த்து மட்டைகளை வேறாக்கத் தொடங்கினான்.
குசினிக்குள் சென்றிருந்த பார்வதி தேநீர் தயாரிக்கத் தொடங்கினாள். சிறிது நேரத்துக்குமுன் நடந்த நிகழ்ச்சியினால் அவளது நெஞ்சுக்குள் ஏற்பட்டிருந்த படபடப்பு இன்னமும் ஓயவில்லை.
மாணிக்கம் ஓலைகளைச் சிராய்த்துவிட்டு அதனைக் கிழிக்கத் தொடங்கினான்.
பார்வதி தேநீருடன் வெளியே வந்தாள்.
மாணிக்கம் எழுந்து சென்று சுவரின்மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தனது பேணியை எடுத்துவந்து பார்வதியிடம் நீட்டினான்.
அவள் தேநீரைப் பேணிக்குள் ஊற்றும்போது எதுவுமே பேசவில்லை. அவளிடத்தில் ஏற்பட்டிருந்த நாணம் அவளைப் பேசவிடாது தடுத்தது.
தேநீரைக் குடித்துக்கொண்டே ”நல்ல வேளை, நான் பிடிச்சிருக்காட்டில் உங்கடை தலை நிலத்திலை அடிபட்டிருக்கும்“ என்றான் மாணிக்கம்.
”நான் கீழே விழுந்திருந்தாலும் பறவாயில்லை. அந்த நேரத்திலை நீ என்னை பிடிச்ச மாதிரியை ஆராவது கண்டிருந்தால் வித்தியாசமாய்த்தான் நினைப்பினம்“.
”வித்தியாசமாய் நினைக்கிறதுக்கு அதிலை என்ன இருக்கு?“ எனக் கேட்டான் மாணிக்கம் அலட்சியமாக.
”அதிலை பிழையில்லை எண்டு நினைக்கிற அளவுக்கு எங்கடை சமுதாயத்தில இன்னமும் முன்னேற்றம் வரேல்லை மாணிக்கம்“ எனக் கூறிய பார்வதி, தான் அப்படிக் கூறியதால் அவனது மனம் புண்பட்டிருக்குமோ என நினைத்துக்கொண்டாள்.
”நான் ஒரு பிழையும் செய்யேல்லை எண்டு உங்களுக்குத் தெரிஞ்சா அது எனக்குப் போதும். மற்றவையளைப்பற்றி எனக்குக் கவலையில்லை“ எனக் கூறிவிட்டு கிழித்த ஓலைகளை அள்ளிக்கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் சென்றான் மாணிக்கம்.
பார்வதியின் மனதில் அவள் ஆரம்பப் ;பள்ளிக்கூடத்தில் மாணிக்கத்தோடு சேர்ந்து படித்தபோது நடந்த நிகழ்ச்சியொன்று நினைவில் வந்தது.
இடைநேரங்களில் பாடசாலை மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடுவார்கள். விளையாட்டு முடிந்ததும் தாகந்தீரப் பாடசாலைக் கிணற்றில் தண்ணீர் அள்ளிப் பருகுவார்கள். மாணிக்கம் பாடசாலைக் கிணற்றிலே கொடிபிடித்துத் தண்ணீர் அள்ளக்கூடாது.
ஒரு நாள் அவன் விளையாடிக் களைத்து தாகமெடுத்த நேரத்தில் கிணற்றிலே தண்ணீர் அள்ளக்கூடிய மாணவர்களிடம் தனக்குத் தண்ணீர் அள்ளி வார்க்கும்படி கெஞ்சினான். ஒருவராவது அவனுக்கு உதவ முன்வரவில்லை. அவனைத் தனியாகக் கிணற்றடியில் விட்;டுவிட்டு எல்லோரும் வகுப்பறையை நோக்கி ஓடிவிட்டார்கள். மாணிக்கம் மறுகணம் ஒருவித ஆவேசத்துடன் அந்தக் கிணற்றிலே கொடிபிடித்துத் தண்ணீர் அள்ளிப் பருகி விட்டான்.
வகுப்பறையில் இருந்தவாறு அதனைக் கவனித்த தலைமை யாசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.
பாடசாலைக் கிணற்றிலே தண்ணீர் அள்ளிய குற்றத்திற்காக மாணிக்கத்தை அழைத்து, "சுளீர் சுளீ'ரெனப் பிரம்பினால் முதுகிலே அடித்துவிட்டார். மாணிக்கம் அப்போது அழவில்லை. தனக்குத் தண்ணீர் அள்ளிக் கொடுக்க மறுத்தவர்களைப் பழிவாங்கிவிட்ட திருப்தியோடு அலட்சியத்துடன் வீரச் செயல் புரிந்துவிட்டவன்போன்று நடந்துசென்று தனது இடத்திலே உட்கார்ந்துகொண்டான்.
”என்ன பார்வதி, கடுமையான யோசினை?“
மாணிக்கத்தின் குரல் கேட்டுப் பார்வதி தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.
”இண்டைக்குத் திங்கட்கிழமையெல்லோ.. சங்கக் கடைக்குப் போகவேணும்“ என ஞாபகப்படுத்தினான் மாணிக்கம். பார்வதி உள்ளே சென்று அரிசிக் கூப்பன்களையும் ஓலைப் பையையும் எடுத்து வந்தாள்.
”அரிசியைமட்டும் வாங்கிக்கொண்டுவா மாணிக்கம். மற்றச் சமான்கள் வாங்கக் காசில்லை. அப்பு வந்த பிறகுதான் வாங்க வேணும்“ எனக் கூறிக்கொண்டே அவனிடம் கூப்பன்களையும் ஓலைப்பையையும் கொடுத்தாள்.
மாணிக்கம் அதனைப் பெற்றுக்கொண்டு கடைக்குப் புறப்பட்டான்.


3.
பனை வடலிகளுக் கூடாகச் செல்லும் ஒற்றைடிப்பாதையில் மாணிக்கம் நடந்துகொண்டிருந்தான். பெயர் பெற்ற யாழ்ப்பாணத்து வெயில் ‘சூள் சூளெ’ன்று கொளுத்திக்கொண்டிருந்தது. அந்த வெங்காரில் சமைந்துபோயிருந்த பனைவடலியொன்றின் காவோலை காற்றில் அசைந்து பக்கத்து வடலியில் கீறி "கொர்........ கொர்........' என ஒலியெழுப்பியது. அந்தச் சரசரப்பின் ஓசையைக் கேட்டு மாணிக்கம் முகத்தைச் சுளித்துக் கொண்டான். அவனுக்கு எப்போதுமே அந்த ஓசையைச் சகிக்க முடிவதில்லை. வெயிலில் வெந்துபோய்க்கிடந்த மண் அவனின் பாதத்தைச் சுட்டெரித்து உச்சி வரை சூடேற்றியது. அதன் தகிப்பைத் தாங்க முடியாதவனாய் அவன் வேகமாக ஒற்றையடிப் பாதையைக் கடந்து ஒழுங்கை முடக்கில் திரும்பித் தெருவை யடைந்தான்.
”டே.......“
பின்னாலிருந்து யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. மாணிக்கம் திரும்பிப் பாராது நடந்துகொண்டிருந்தான்.
Æ”டேய் மாணிக்கன்....“
மீண்டும் அதே குரல் சற்றுக் கடுமையாக ஒலித்தது. அது துரைசிங்கம் முதலாளியின் குரல்தான் என்பது மாணிக்கத்துக்குத் தெரியும். அவன் இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.
சைக்கிளில் வந்து கொண்டிருந்த துரைசிங்கம் முதலாளி அவன் அருகில் வந்ததும் சைக்கிளை நிறுத்தினார்.
துரைசிங்கம் முதலாளியைப் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஆஜானுபாகுவான தோற்றம், கிருதா மீசை, பரந்தநெற்றி, பருத்த தொந்தி, இவற்றைப் பார்த்தவுடனேயே அவரை ஊரிலுள்ள சண்டியன் என யாரும் இனங்கண்டு கொள்ளலாம்.
”என்னடா, நான் கூப்பிடக் கூப்பிடப் பேசாமல் போறாய். என்ன காது அடைச்சுப் போச்சோ..“
”............“
”உன்ரை கொப்பன் கோவிந்தன் எங்கை போட்டான்?“ துரைசிங்கம் முதலாளி கேட்ட விதம் மாணிக்கத்திற்கு ஆத்திரமூட்டியது. ஆனாலும், அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு பதில் சொன்னான்.
”அப்பு தோட்டத்திலைதான் நிப்பர்.“
”என்ரை வளவு வேலியெல்லாம் பிஞ்சுபோய்க்கிடக்கு? அதை வந்து அடைச்சுத் தரச்சொல்லி இரண்டு மூண்டு நாள் கொப்பனிட்டைச் சொன்னனான். அவன் அந்தப் பக்கம் திரும்பியும் பாக்கிறானில்லை“.
”இப்ப தோட்டத்திலை மிளகாய்க் கண்டு நடுகை நடக்குது. அதனாலைதான் அப்புவுக்கு வர நேரமில்லை“ பதில் கூறினான் மாணிக்கம்.
”நீ சும்மா தானேடா திரியிறாய். அந்த வேலியை வந்து அடைச்சுவிடன்“.
”எனக்கு நேரமில்லை“.
”செல்லப்பர் வீட்டு வேலையெல்லாம் செய்து குடுக்கிறாய். நான் கேட்டாத்தான் உனக்கு நேரமில்லையோ?“
துரைசிங்கம் முதலாளியின் கேள்வி மாணிக்கத்தைப் பொறுமையிழக்கச் செய்தது.
”அது என்ரை விருப்பம். அதைப் பற்றி நீங்கள் கதைக்கத் தேவையில்லை“.
”என்னடா ஞாயம் பேசிறாய். நீ வந்து வேலி அடைச்சுத்தரப் போறியோ இல்லையோ?“
”என்னாலை முடியாது“
”என்னடா ..... என்னோட எதிர்த்தோடா கதைக்கிறாய்“ துரைசிங்கம் முதலாளிக்குக் கோபம் பொங்கியது.
”உங்களுக்கும் எனக்கும் கதை இல்லை. ஏதேன் தேவையெண்டால் அப்புவோடை கதையுங்கோ.....“ மாணிக்கம் அவரை முறைத்துப் பார்த்தான்.
”என்னடா நீ அவ்வளவு தூரத்துக்கு வந்திட்டியோ, அடிச்சனெண்டால் பல்லெல்லாம் கொட்டிண்டுபோம்“; எனக் கூறிக்கொண்டே சைக்கிளிலிருந்து இறங்கினார் துரைசிங்கம் முதலாளி.
”சும்மா தெருவிலை போய்க்கொண்டிருந்த என்னோடை நீங்கள்தான் வலியக் கொளுவினனீங்கள்..... மேலிலை தொடுங்கோ பாப்பம். நீங்கள் நாலு அடி அடிச்சால் நான் ஒரு அடியெண்டாலும் அடிக்கமாட்டனோ...?
மாணிக்கம் துரைசிங்கம் முதலாளியை நெருங்கினான்.
துரைசிங்கம் முதலாளி அடிப்பட்ட சிறுத்தையானார். அவரது தேகம் ஆத்திரத்தால் ஆட்டங்கண்டது. ஆனாலும் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இவன் கூறுவது போல தற்செயலாகத் தனது தேகத்தில் கை வைத்துவிட்டால் மானம் போய்விடுமே என நினைத்துக்கொண்டு சைக்கிளில் ஏறிக்கொண்டார்.
ஒரு கீழ் சாதிப் பயலுக்கு இவ்வளவு துணிவு வந்திட்டுதோ...? அவர் மனம் மறுகினார்.
”டே ....உன்னை அடிக்கிறது எனக்கொரு பெரிய வேலை இல்லையடா, நீ இப்ப போ. நான் உன்னை கவனிச்சுக் கொள்ளுறன்“ எனக் கூறிவிட்டு சைக்கிளைச் செலுத்தத் தொடங்கினார் துரைசிங்கம் முதலாளி.
கோபத்தினால் ஏற்பட்ட படபடப்பு நீங்காதவனாய் கூப்பன் கடையை நோக்கிச் சென்ற மாணிக்கத்தின் மனதில் துரைசிங்கம் முதலாளியைப் பற்றிய பலவாறான சிந்தனைகள் அலைமோதின.

4.
பார்வதி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். எவ்வளவோ முயன்றபோதிலும் அவளுக்கு நித்திரை வரவில்லை. அவளது மனதில் மாணிக்கத்தைப் பற்றிய நினைவுகள் நிறைந்திருந்தன. காலையில் ஆட்டைப் பிடிப்பதற்காக ஓடிவந்த மாணிக்கம் தன்னைக் கட்டிப்பிடித்த நிகழ்ச்சி அவளது மனதில் அடிக்கடி அலைமோதிக்கொண்டிருந்தது. அது தற்செயலாக நடந்த நிகழ்ச்சியாக இருந்தபோதிலும் அதனை நினைத்துப் பார்க்கும்போது அவளது உள்ளத்தில் ஓர் இன்ப உணர்வு ஏற்படச் செய்தது.
"ஏன் எனது மனதில் மாணிக்கத்தின் நினைவுகள் அடிக்கடி வந்து அலைமோதுகின்றன? - இப்படி நான் மாணிக்கத்தைப் பற்றி நினைப்பது எவ்வளவோ விபரீதமான செயல்தான். ஆனாலும் இந்த நினைவுகளை என் மனதிலிருந்து அகற்ற முடியவில்லையே'.
"எனது மனதை மாணிகத்தினால் புரிந்திருக்க முடியுமா? என்னால் மாணிக்கத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மாணிக்கம் விரும்பினால், என்னை அடைவதற்கு எத்தகைய எதிhப்;புகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்த்து சமாளிக்கக்கூடிய துணிவும் மனத்திடமும் மாணிகத்திடம் நிறைய இருக்கின்றது'.
பார்வதியின் மனதில் சிறுவயதில் நடந்த நிகழ்ச்சியொன்று நினைவில் வந்தது.
மாணிக்கம் பாடசாலைக்குச் செல்லும்போது பார்வதியின் வீட்டுக்கு வந்து அவளையும் கூடவே அழைத்துச் செல்வான். பாடசாலையிலிருந்து திரும்பும் போதும் அவன் அவளை அழைத்து வந்து வீட்டிலே விட்டுவிட்டுத்தான் தனது வீட்டுக்குச் செல்வான்.
பாடசாலைக்குச் செல்லும் வழியிலே உள்ள வளவொன்றில் வேலியோரமாக இரண்டு கிளிமூக்கு மாமரங்கள் இருக்கின்றன. மாங்காய்க்; காலத்தில் கள்ளத்தனமாகப் பாடசாலைச் சிறுவர்கள் அந்த மரத்தில் மாங்காய் அடித்துச் சாப்பிடுவது வழக்கம்.
மாணிக்கம்தான் வேலிமேல் ஏறி வளவுக்குள் குதித்து மாமரத்திலிருந்து மாங்காய்களைப் பறித்து எல்லோருக்கும் கொடுப்பான். மரத்தின் சொந்தக்காரர் பலமுறை தலைமையாசிரிடம் அவன் களவாய் மாங்காய் பறிப்பதைப்பற்றிக் கூறியதால் மாணிக்கம் தண்டனையும் பெற்றிருக்கிறான்.
ஒருநாள் பாடசாலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது பார்வதி தனக்கு மாங்காய் பறித்துத் தரும்படி மாணிக்கத்திடம் வேண்டினாள். அவன் மரத்திலேறி மாங்காய் பறித்துக் கொண்டிருந்த போது மாமரத்தின் சொந்தக்காரர் திடீரென அங்கே வந்துவிட்டார். அவரைக் கண்டதும் மாங்காயை வாயிலே கௌவிக்கொண்டு மாணிக்கம் வேலிக்கு மேலால் வெளியே குதித்து விட்டான். பார்வதியும் மாணிக்கமும் ஒரே ஓட்டமாக அவ்விடத்தைவிட்டு ஓடினார்கள். வீட்டுக்குச் செல்லும் ஒழுங்கை முடக்கில் வந்ததுந்தான் மாணிக்கம் பார்வதியிடம் மாங்காயைக் கொடுத்தான்.
”என்ன மாணிக்கம் ஒரு மாங்காய்தான் கிடைச்சுதோ?“
”ஓம் பார்வதி, ஒண்டுதான் பிடுங்கினனான். அதுக்கிடையிலை அந்த வளவுக்காரன் வந்திட்டார்“.
”நீ மாங்காய் பிடுங்கினதைப் பற்றி அவர் வாத்தியாரிட்டைச் சொல்லுறாரோ தெரியேல்லை“ பார்வதி கவலையுடன் கூறினாள்.
”சொன்னால் சொல்லட்டும். வாத்தியார் இரண்டு அடி போடுவார், அதுக்கு நான் பயப்பிடேல்லை.“
”என்னாலைதானே உனக்கு அடிவிழப் போகுது மாணிக்கம்“ எனக்கூறியபோது பார்வதியின் கண்கள் கலங்கிவிட்டன.
பார்வதி மாங்காயை வாயில் வைத்துக் கடித்தாள். அதன் தோல் வயிரமாக இருந்தது. பலமாகக் கடிக்க முயன்றாள் அவளது முரசிலே இலேசாக இரத்தம் கசிந்தது. அவளால் அதனைக் கடிக்க முடியவில்லை.
”மாணிக்கம் நீதான் இதைக் கடிச்சுத்தா“ எனக் கூறி மாணிக்கத்திடம் மாங்காயைக் கொடுத்தாள் பார்வதி.
அவன் அதனைத் தனது வாயில் வைத்துக் காக்காய்க்கடி கடித்துக் கொடுத்தான். இருவருமாக அந்த மாங்காயை ருசித்த வண்ணம் வீட்டுக்குச் சென்றார்கள்.
அப்போது அதனைக் கவனித்தபடி அந்த வழியாக வந்த செல்லப்பர் பார்வதி வீட்டுக்கு வந்ததும் அவளைக் கடிந்தார்.
”எடியே, எளிய சாதிக்காரன் கடிச்சுப்போட்டுக் குடுத்த மாங்காயை ஏனடி சாப்பிட்டனி? இனிமேல் அவனோடை சேர்ந்து பள்ளிக்கூடம் போகப்பிடாது“ என ஏசினார்.
பார்வதியின் சிந்தனைகள் கலைந்தன.
மாணிக்கம் கடித்துக் கொடுத்த மாங்காயைச் சாப்பிட்டதற்கே கோபமடைந்த தந்தை இப்போது நான் மாணிக்கத்தை விரும்புகிறேன் என்பதை அறிந்தால் சும்மா விட்டுவிடுவாரா? - ஒரு பிரளயமே நடந்தாலும் நடக்கலாம் என எண்ணி அவள் கலக்கமடைந்தாள்.
5.
அம்பலவாணரை அறியாதவர்கள் யாரும் அந்த ஊரில் இருக்க முடியாது. அம்பலவாணர் என்று கூறுவதைவிட "ஐஸே’ அம்பலவாணர் என்று அடைமொழியுடன் கூறினால்தான் எல்லோரும் இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். அவர் தனது நண்பர்களை "ஐஸே, ஐஸே' என அடிக்கடி அழைப்பதனாலேதான் அந்த அடைமொழி அவருடன் ஒட்டிக்கொண்டுவிட்டது. அவரது தந்தை ஏராளமான செல்வத்தைத் தேடி வைத்துவிட்டு இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டன. தந்தை தேடி வைத்த பணத்தை வட்டிக்குக் கொடுத்து அதிலிருந்து வரும் வருவாயை எடுத்து அவர் படாடோபமாகச் செலவழிப்பார். அவரை அநேகமாக ஊரிலுள்ள வாசிகசாலையிலேதான் பார்க்கலாம். சலவை செய்து மடிப்புக் குலையாத வேட்டியும், உயர்ந்தரக சேட்டும், சென்ற் வாசனையும், கழுத்திலே தொங்கும் நீண்ட வடச் சங்கிலியுமாக அவர் எப்போதும் காட்சிதருவார். அவரைப் பார்ப்பவர்களின் மனதில் அவர் ஒரு "மைனர்' என எண்ணத் தோன்றும்.
அம்பலவாணர் அதிகம் படித்திருக்கவில்லை. ஆனாலும் தனக்கு ஆங்கிலமும் தெரியுமென மற்றவர்கள் நினைக்க வேண்டுமென்பதற்காகத் தனக்குத் தெரிந்த ஒரு சில ஆங்கிலச் சொற்களை அநாயாசமாக அள்ளி வீசுவார். ஊரிலுள்ள இளவட்டங்களிடையே அவருக்க ஒரு தனி மதிப்பு உண்டு. எப்பொழுதும் அவருடன் ஒரு சில இளைஞர்களைக் காணலாம். எந்தப் புதிய சினிமாப் படம் வந்தாலும் அவர் தனது நண்பர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்கச் சென்றுவிடுவார். சினிமாப் படங்களில் வரும் கதாநாயகர்களைப் போல அவர் தன்னை நினைத்துக் கொள்வார்.
காலை நேரங்களில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பலர் வாசிகசாலைக்குப் பக்கத்திலிருக்கும் பஸ்தரிப்பில் கூடுவார்கள். தையல் வகுப்புக்குச் செல்லும் மாணவிகளும் அந்த வழியாலேதான் செல்வார்கள். அவ்வேளையில் தனது நண்பர்களுடன் வாசிகசாலையிலிருந்து கேலிக்கதைகள் பேசிப் பலமாகச் சிரித்து பெண்களின் கவனத்தைத் தனது பக்கம் இழுப்பதில் அம்பலவாணருக்கு ஒரு தனி இன்பம். ஊரிலுள்ள பெண்களில் சிலர் தன்னைக் காதலிப்பதாகத் தனது நண்பர்களிடம் கதை கதையாகச் சொல்லுவார் அம்பலவாணர். அவர் கூறும் கதைகளில் எவ்வளவு தூரம் உண்மையிருக்குமென்பதை ஆராய்ந்து பார்க்காது இரசனையுடன் கேட்பதில் நண்பர்களுக்கு ஒரு தனி ஆனந்தம்.
நேரங் கிடைக்கும் போதெல்லாம் பார்வதியின் வீட்டுக்கு அம்பலவாணர் வருவதற்குத் தவறுவதில்லை. சின்னதங்கத்தைப் பார்க்கும் சாட்டில் அவர் அடிக்கடி அங்கு வருவார்.
”மாமி... மாமி...“
வெளியே குரல் கேட்டு குசினியிலிருந்த பார்வதி எட்டிப் பார்த்தாள். அம்பலவாணர் கையில் ஒரு பார்சலுடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.
”வாருங்கோ அண்ணை... வாருங்கோ... நேற்றுத் தொடக்கம் அம்மா உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறா“ என அவரை குதூகலித்தபடி வரவேற்றாள் பார்வதி.
அம்பலவாணர் அவளைப் பார்த்துச் சிரித்தப்படி உள்ளே நுழைந்தார். அப்போது அவர் அணிந்திருந்த சேட்டிலிருந்து ‘சென்ற்' வாசனை "கம்' மென்று வீசியது.
”அம்மா ...‰ இஞ்சை அண்ணை வந்திருக்கிறார்“ எனக் கூறியபடி தாய் படுத்திருக்கும் அறையை நோக்கிச் சென்றாள் பார்வதி. அவளைத் தொடர்ந்து அம்பலவாணரும் உள்ளே சென்றார்.
வெளியே அம்பலவாணரின் குரல் கேட்ட பொழுதே அவரை வரவேற்பதற்காகச் சின்னதங்கம் தனது படுக்கையிலிருந்து எழுந்து சுவரிலே சாய்ந்தபடி இருந்தாள்.
அம்பலவாணரைக் கண்டதும் சின்னத்தங்கம் முகம் மலர அவரை வரவேற்றாள்.
”வா தம்பி..... எனக்கு மருந்து வாங்கியந்தனியோ? அதில்லாமல் இப்ப இரண்டு நாளாய் எனக்கு நெஞ்சுக்குள்ளை முட்டாய்க்கிடக்கு? நித்திரையும் வருகுதில்லை“.
”எனக்கு எங்கைமாமி நேரம்... நேற்று முழுதும் ஒரு விசயமாய் யாழ்ப்பாணத்திற்குள்ளை "பிஸி' யாத் திரிஞ்சனான். அதுதான் இங்கை வரமுடியேல்லை. மருந்து இல்லாமல் மாமி கஷ்டப்படப்போறாவே எண்டு நேற்று ஒரே கவலையாய் இருந்தன்“ எனக் கூறிக்கொண்டே கையில் வைத்திருந்த கடதாசி உறையிலிருந்து ஒரு சாராயப் போத்தலை வெளியே எடுத்தார் அம்பலவாணர்.
தொய்வு நோயினால் மூச்சுமுட்டிக் கஷ்டப்படும்போதும் நித்திரையின்றித் தவிக்கும்போதும் சின்னத்தங்கம் சிறிது சாராயத்தைப் பருகுவாள். அது அவளுக்குச் சிறிது ஆறுதலைக் கொடுக்கும். தன்னை மறந்து நிம்மதியாகத் தூங்குவாள். அம்பலவாணர் அடிக்கடி சின்னதங்கத்துக்குச் சாராயம் வாங்கி கொடுக்கத் தவறுவதில்லை. இதற்காகச் சின்னத்தங்கம் அவருக்குப் பணம் ஏதும் கொடுப்பதில்லை. அவளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக அம்பலவாணர் இதனைச் செய்கிறார்.
தனது கணவன் செல்லப்பருக்கு தெரியாமல்தான் சின்னத்தங்கம் அந்த மருந்தைப் பாவித்து வருகிறாள். தெரிந்தாலும் அவர் அதனைத் தடுக்கப் போவதில்லை. ஆனால் சாராயம் வீட்டிலிருப்பது தெரிந்துவிட்டால் ஒரே நேரத்தில் அவர் அதனைத் தீர்த்துக் கட்டிவிடுவாரென்ற பயத்திலேதான் அவள் அதனை அவருக்குத் தெரியாமல் மறைத்து வருகிறாள்.
காகித உறையில் வேறு ஏதோ இருப்பது போலச் சின்னத்தங்கத்துக்குத் தெரிந்தது.
”என்ன தம்பி வேறையும் ஏதோ வாங்கியந்திருக்கிறாய் போலை கிடக்கு“ என ஆவலுடன் கேட்டாள் சின்னத்தங்கம்.
”போனகிழமை எங்கடை கறுத்தக் கொழும்பான் மாமரத்திலை கொஞ்ச மாங்காய் புடுங்கினனாங்கள். அதிலை ஒரு ஐஞ்சாறு பழங்கள் கொண்டு வந்தனான்“.
”தம்பி என்ரை வருத்தத்துக்கு உதுகள் சாப்பிடக்கூடாது“ எனக் கூறிக்கொண்டே கையிலிருந்த போத்தலைக் கட்டிலின் பின்புறமாக மறைத்து வைத்தாள் சின்னத்தங்கம்.
”நீங்கள் இதைச் சாப்பிடமாட்டியள் எண்டு எனக்குத் தெரியும் மாமி..... பார்வதி சாப்பிடலாம்தானே....“ எனக் கூறிய அம்பலவாணர், சற்றுத் தூரத்தில் நின்றிருந்த பார்வதியின் பக்கந் திரும்பி, ”இந்தா பார்வதி, உனக்கெண்டுதான் இதைக் கொண்டுவந்தனான்“ எனக் கூறியபடி பார்வதியிடம் பார்சலை நீட்டினார்.
பார்வதி மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்றுக்கொண்டாள். பின்பு, ”அண்ணை கொஞ்சம் இருங்கோ, தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்“ எனச் சொல்லிவிட்டு மாம்பழப் பார்சலுடன் குசினிப்பக்கம் சென்றாள்.
”மாமி ... இப்ப கொஞ்ச நாளுக்குள்ளை நல்லாய் ஒடுங்கிப் போனியள். உடம்பைக் கவனிக்கிறேல்லைப் போலைக் கிடக்கு“ எனச் சின்னதங்கத்தைப் பார்த்துக் கூறினார் அம்பலவாணர்.
”எனக்கு ஒன்டுமில்லைத் தம்பி, எல்லாம் உவள் பார்வதியைப் பற்றின யோசினைதான்;. அவளை ஒருத்தன்ரை கையிலை குடுத்திட்டால் என்ரை கவலையெல்லாம் தீர்ந்துபோம்“ எனக் கவலை தோய்ந்த குரலில் கூறினாள் சின்னத்தங்கம்.
”அதுக்கு ஏன் மாமி கவலைப்படுகிறியள். பார்வதியின்ரை வடிவுக்கும், குணத்துக்கும், கெட்டித்தனத்;துக்கும் அவளைக் கலியாணம் செய்யிறதுக்கு ஆக்கள் நான் நீயெண்டு போட்டி போட்டுக்கொண்டு வருவினம்“. இதனைக் கூறும்போது குசினிக்குள் இருக்கும் பார்வதிக்கும் கேட்க வேண்டுமென்பதற்காகச் சற்றுப் பலமாகவே கூறினார் அமபலவாணர்.
”எதுவும் முயற்சி செய்தால்தான் நடக்குந் தம்பி. அந்த மனிசன் ஒண்டிலும் அக்கறை இல்லாமல் திரியுது. அவர் கொஞ்சம் அக்கறை எடுத்திருந்தால் பார்வதியின்ரை கலியாணம் எப்பவோ முடிஞ்சிருக்கும்“.
”கவலைப்படாதேயுங்கோ மாமி, காலநேரம் வரேக்கை கலியாணம் தானே நடக்கும்? வேணுமெண்டால் இருந்து பாருங்கோ பார்வதிக்கு ஒரு திறம் மாப்பிளைதான் வருவார்“.
இப்படி அம்பலவாணர் கூறியபோது, பார்வதி தேநீருடன் அங்கு வந்தாள்.
அவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார் அம்பலவாணர்.
”அண்ணை தேத்தண்ணிக்குச் சீனி இல்லை, பனங்கட்டிதான்“. பார்வதி தேநீரையும் பனங்கட்டியையும் அம்பல வாணரிடம் நீட்டினாள்.
பனங்கட்டியை வாங்கும்போது பார்வதியின் விரல்களை வேண்டுமென்றே பற்றிச் சீண்டிவிட்டு மீண்டும் சிரித்தார் அம்பலவாணர்.
பார்வதியும் சிரித்தாள்.
வழக்கமாக அம்பலவாணர் பார்வதியிடம் இப்படிச் சில சேட்டைகள் செய்வார். அவள் அதனைப் பெரிது படுத்துவதில்லை. அதற்காக அவரை வெறுக்கவோ அல்லது கண்டிக்கவோ அவளுக்குத் தோன்றவில்லை. அவரது சேட்டைகள் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதெனக் கூறமுடியாது. ஆனாலும் அவள் அவற்றை ஏற்றுச் சிரித்துக் கொள்வாள்.
”அப்ப இருங்கோ மாமி, நான் போட்டு வரப்போறன். இண்டைக்கு எங்கடை வாசிகசாலையிலை ஒரு கூட்டம். நான் தான் நிண்டு ஓடியாடி நடத்தவேணும். பெடியன்கள் காத்துக் கொண்டு இருப்பாங்கள்“ எனக் கூறிக்கொண்டே எழுந்திருந்தார் அம்பலவாணர்.
”தம்பி, நீ அடிக்கடி இந்தப்பக்கம் வரவேணும். நீ செய்யிற உதவியளை நாங்கள் மறக்கமாட்டோம்“ எனக் கூறினாள் சின்னத்தங்கம்.
”இதென்ன மாமி பெரிய உதவியோ.... மனிசனுக்கு மனிசன் ஒத்தாசையாய் இருக்கத்தானே வேணும். ஏதேன் தேவையெண்டால் சொல்லுங்கோ நான் வாங்கிக்கொண்டுவந்து தாறன்.... பார்வதிதான் என்னட்டை ஒண்டுங் கேக்கிறதில்லை. நான் ஒரு பிறத்தியான் எண்டு நினைச்சுப் பழுகுது“ எனக் கூறிவிட்டுப் பார்வதியைப் பார்த்தார் அம்பலவாணர்.
”அப்பிடி ஒண்டுமில்லை அண்ணை? ஏதேன் தேவையெண்டால் கேப்பன்தானே. இப்ப எனக்கு ஒண்டும் தேவையில்லை“ எனச் சிரித்தபடி கூறினாள் பார்வதி.
”என்ன பிள்ளை..... ஏதோ சட்டை தைக்கிறதுக்கு நூல் வேணுமெண்டு சொல்லிக்கொண்டிருந்தாய். தம்பியிட்டைச் சொல்லிவிடன் வாங்கியருவர்“ என்றாள் சின்னத்தங்கம் பார்வதியைப் பார்த்து.
”அது ஒண்டுமில்லையண்ணை.... சிவப்பு நிறத்திலை கொஞ்சம் நூல் வேணும். வசதியிருந்தால் வாங்கியாருங்கோ..... பொறுங்கோ அண்ணை காசு தந்துவிடுகிறன்“.
”காசுக்கு ஒண்டும் இப்ப அவசரமில்லைப் பார்வதி. நான் நூல் வாங்கிக்கொண்டு வாறன், பிறகு பாப்பம்..... அப்ப நான் வரப்போறன்“ எனக் கூறிக்கொண்டே அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டார் அம்பலவாணர்.
அம்பலவாணர் படலையைத் தாண்டிச் சென்றதும் பார்வதி தாயைக் கடிந்துகொண்டாள். ”அம்மா உங்களுக்கு வேறை வேலையில்லையே, நூல்; வாங்;கிறதுக்கு நான் மாணிக்கத்திட்டைக் காசு குடுத்து அனுப்ப இருந்தனான். அதுக்குள்ள அவசரப்பட்டு ஏன் உவரிட்டைச் சொன்னனீங்கள்“.
”இப்ப நான் சொன்னதிலை உனக்கு என்ன குறைஞ்சு போச்சு? அதுக்கென்ன வாங்கியரட்டுமன் “ என்றாள் சின்னத்தங்கம்.
”அதுக்கில்லையம்மா சின்னச் சின்னத் தேவையளுக்கெல்லாம் ஒரு மனிசரைக் கடமைப்படுத்தப் பிடாது“.
”சரி.... சரி பிள்ளை நான் படுக்கப்போறன் . நீ போய் உன்ரை வேலையைப் பார்“ எனப் பார்வதியை அனுப்பிவிட்டு கட்டிலின் மறைவில் வைத்திருந்த போத்தலை எடுத்துச் சிறிது சாராயத்தைப் பேணியில் ஊற்றி அதனை ஒரு மிடறில் குடித்துவிட்டு முகத்தை அஷ்டகோணமாகச் சுளித்தபடி படுக்கையில் சாய்ந்தாள் சின்னத்தங்கம்.
6.
வீட்டு முற்றத்தில் நின்ற வேப்ப மரத்தின் அடியில் சற்றுக் களைப்பாறுவதற்காகச் சாய்ந்திருந்தான் கோவிந்தன். காலையில் நாலு பனை ஏறியிறங்கிய பின் உச்சி வெயிலில் நின்று தோட்டம் கொத்திவிட்டு வந்ததினால் ஏற்பட்ட களைப்பு.
முற்றத்திலிருந்த பானையில் தண்ணீர் எடுத்து கைகால் கழுவியபின் பொன்னி கொடுத்த பழஞ்சோற்றையும், மரவள்ளிக் கிழங்குக் கறியையும் குழைத்துச் சாப்பிட்டுவிட்டு ஏதோ சிந்தனையின் வயப்பட்டவனாக அவன் மரத்தின் வேரில் தலை வைத்தபடி படுத்திருந்தான்.
சில வேளைகளில் கோவிந்தன் இப்படிக் களைப்பாறும் போது பொன்னியும் அவனருகே இருந்து வெற்றிலை மடித்துக் கொடுத்து அளவளாவிக் கொண்டிருப்பாள். ஆனால், இன்று கோவிந்தனிடம் வந்து கதைப்பதற்கு அவளுக்குப் பயமாக இருந்தது. தோட்டத்திலிருந்து வந்ததிலிருந்து அவன் சிடுசிடுப்புடன் இருந்தான். அவன் கோபமாக இருக்கும் வேளைகளில், தான் ஏதும் கதைத்தால் அவனது கோபம் தன்மேல் திரும்பிவிடும் என்பதை பொன்னி அறிவாள்.
முற்றத்திலிருந்த பானையில் தண்ணீர் முடிந்திருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு தண்ணீர் எடுத்து வருவதற்காக வெளியே சென்றாள் பொன்னி.
தட்டிப் படலையைத்திறந்து கொண்டு அப்போது மாணிக்கம் உள்ளே வந்தான். வேப்ப மரத்தடியில் தகப்பன் படுத்திருப்தைப் பார்த்ததும், "அப்பு நித்திரை கொள்ளுகிறார்' என மனதிற்குள்ளே நினைத்துக்;கொண்டு மெதுவாக வீட்டினுள்ளே நுழைந்தான்.
”எங்கையடா ஊரளந்து போட்டு வாறாய்? நான் மரமேறப் போகேக்கை வீட்டை விட்டு வெளிக்கிட்டனி... இப்பதானோடா வாறாய்.?“ - கோவிந்தனின் குரல் கடுமையாக ஒலித்தது.
ஒரு கணம் திடுக்குற்று நின்ற மாணிக்கம் ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டு பதில் சொன்னான்.
”நான் ஒண்டும் ஊர்சுத்தித் திரியேல்லையப்பு... செல்லப்பர் கமக்காரன் வீட்டிலை கூப்பன் அரிசி எடுத்துத் தரச்சொன்னவை. அதுதான் சங்கக் கடைக்குப் போட்டு வந்தனான்“.
”டேய், நான் காலமை தொடக்கம் தனிய இருந்து கஷ்டப்படுகிறன். எனக்கு உதவி செய்வமெண்டு யோசினை இல்லை. ஊரா வீட்டுக்கெல்லோ உழைச்சுத் திரியிறாய்“.
”ஏன் அப்பு சத்தம் போடுறியள். இப்ப நான் என்ன செய்ய வேணும் சொல்லுங்கோ“ எனத் தந்தையைப் பார்த்துக் கேட்டான் மாணிக்கம்.
”தடி மாடு மாதிரி வளர்ந்திருக்கிறாய். உனக்குச் சொல்லித்தான் தெரியவேணுமோ? இரண்டு மரத்திலை கள்ளுச் சீவலாம், தோட்டத்தைக் கொத்தலாம் ...... சும்மா சுத்தித் திரிஞ்சால் வயித்துக்கு வருமோடா?“
”.................“ மாணிக்கம் பதிலெதுவும் பேசாது தலை குனிந்தப்படி நின்றான்.
”துரைசிங்கம் கமக்காரனோடை என்னடா மரியாதை இல்லாமல் கதைச்சனியாம், அவர் தோட்டத்திலை வந்து சத்தம் போட்டிட்டுப் போறார்“.
கோவிந்தன் இப்படிக் கூறியபோது தந்தையின் கோபத்துக்குக் காரணத்தை மாணிக்கம் புரிந்துகொண்டான்.
”அப்பு, நான் ஒண்டும் அவரோடை கதைக்கேல்லை. அவர்தான் என்னோடை வலியக் கொளுவி அடிக்க வந்தவர்“.
”டேய் அவர் ஏதேன் வேலை சொன்னால் செய்து குடுக்கத்தானே வேணும். நீதான் எதிர்த்துக் கதைச்சனியாம்“.
”நான் எதிர்த்துக் கதைக்கேல்லை அப்பு, எனக்கு நேரமில்லையெண்டுதான் சொன்னான்“.
”ஏனடா உனக்கு நேரமில்லை? செல்லப்பர் கமக்காறன் வீட்டிலை எந்த நேரமும் அடைஞ்சு கிடக்கிறாய். அவையின்ரை பாடுபயன் பாத்துக்கொண்டு திரியிறாய். துரைசிங்கம் கமக்காறன் கேட்டால்தான் உனக்கு நேரமில்லையோ?“
”அதுக்கில்லையப்பு, அவர் சண்டித்தன முறையிலை என்னைக்கொண்டு வேலை பாப்பிக்கப் பாக்கிறார்“.
”டேய் மடையா, அவற்றை காணியிலை தானேடா நாங்கள் குடியிருக்கிறம்? தோட்டஞ் செய்யிறம் ...... அதையெண்டாலும் நினைச்சுப் பாத்தியோடா..“
”அப்பு, நாங்கள் அவருக்குக் குத்தகைக் காசு குடுக்கிறம்தானே, அதுக்காக அடிமைச் சேவகம் செய்யவேணுமோ?“
இப்படி மாணிக்கம் கூறியதைக் கேட்டதும் கோவிந்தனது கோபம் அதிகமாகியது.
”பொத்தடா வாயை..... உனக்கு நாக்கு நீண்டு போச்சு. எங்கடை அப்பன் பாட்டன் காலத்திலையிருந்து நாங்கள் கமக்காரர் சொன்ன வேலையைச் செய்துகொண்டு தானே வாறம், நீயெல்லோ புதுசு புதுசாய்க் கதைக்கிறாய், உன்னைப் படிக்க வைச்சதுதான்ரா பிழையாய்ப் போச்சு“.
”நியாத்தைக் கதைச்சால் ஏனப்பு பிழையெண்டு சொல்லுறியள்?“
”நியாயங்கள் கதைக்க நீ வெளிக்கிடத் தேவையில்லை. அதுக்கு நாங்கள் - பெரியாக்கள் இருக்கிறம், நீ இப்ப போய் கமக்காறன்ரை காலிலை விழுந்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்டிட்டு வா“.
”அது மட்டும் நடக்காது“ - விறைப்பான குரலில் கூறினான் மாணிக்கம்.
”என்னடா சொன்னனி“ எனக் கர்ச்சித்த கோவிந்தன், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பக்கத்தில் இருந்த உழவாரப் பிடியையெடுத்து மாணிக்கத்தை நோக்கி வீசினான்.
மாணிக்கம் சடாரென விலகிக் கொண்டான். உழவாரப்பிடி வீட்டுத் திண்ணையில் பட்டுத்தெறித்தது.
அப்போது தண்ணீர்க் குடத்துடன் அங்கே வந்த பொன்னி, ”ஐயோ.... இதென்னப்பா கரச்சல்“ எனப் பதறியபடி மாணிக்கத்தின் அருகே ஓடினாள்.
”எல்லாம் நீ குடுத்த செல்லந்தானடி...... துரைசிங்கம் கமக்காரனுக்கு கை நீட்டுற அளவுக்கு உவன் வந்திட்டான். கமக்காறன் இந்தப் போகத்தோடை காணியை விடச்சொல்லி தோட்டத்திலை வந்து சத்தம் போட்டிட்டு போறார். உவனாலை தான் நாங்கள் குடியெழும்ப வேண்டிவரும்“.
கோவிந்தன் கூறியதைக் கேட்டபோது பொன்னியின் நெஞ்சு விறைத்துப் போயிற்று.
கமக்காறனுக்கு கை நீட்டுற அளவுக்கு மாணிக்கம் போயிருப்பான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை
”உவனுக்கு சும்மா இருந்து சாப்பிட்டுக் கொழுத்துப் போச்சு, எடியேய் ...... உவனுக்கு இண்டைக்குச் சாப்பாடு குடுக்காதை“ எனக் கூறிய கோவிந்தன், வேலியில் செருகியிருந்த பாளைக் கத்தியை எடுத்து இடுப்பிலே செருகியபடி, ”நான் ஒருக்கா துரைசிங்கம் கமக்காறனிட்டைப் போட்டு வாறன்“ எனக் கூறிவிட்டு கோபத்துடன் வெளியேறினான்.
தகப்பனின் கோபத்தைக் கண்டு மௌனமாக இருந்த மாணிக்கத்திடம் ”என்னடா மோனை நடந்தது?“ என விசாரித்தாள் பொன்னி.
நடந்தது யாவற்றையும் தாயிடம் மாணிக்கம் விபரமாகக் கூறினான்.
”என்னதான் இருந்தாலும் நீ துரைசிங்கம் கமக்காறனோடை உப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. எங்களைப் போலைதானே எங்கடை ஆக்கள் எல்லாரும் கமக்காரரவையின்ரை காணியளில் குடியிருக்கினம், துரைசிங்கம் கமக்காறன் நினைச்சால் எல்லாக் கமக்காறரிட்டையும் சொல்லி எங்கள் எல்லாரையும் குடியெழுப்பிப் போடுவர். அந்த மனிசனைப் பற்றி உனக்குத் தெரியாது. முந்தி ஒருத்தனை ஆள்வைச்சு வெட்டிச் சாக்கொண்டவரல்லோ“.
”ஆச்சி, எங்களுக்கு காணி இல்லையெண்டபடியாலை தானே நாங்கள் அடிமைச் சீவியம் செய்யவேண்டியிருக்கு. உழைச்சுப்பட்டு ஒரு காணியை வாங்கிப் போட்டமென்டால் பிறகு ஒருத்தருக்கும் பயப்பிடத் தேவையில்லை“.
”உனக்கு அனுபவம் இல்லை மோனை? அதுதான் உப்பிடிக் கதைக்கிறாய். கமக்காறரவை தங்கடை காணியை ஒருநாளும் எங்களுக்கு விலைக்குத் தரமாட்டினம்“.
மாணிக்கம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.
எப்படி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எனப் புரியாமல் அவனது மனம் தவித்தது.
”வாமோனை..... வந்து சாப்பிடு? சாப்பிட்டிட்;டு தோட்டத்திலை மிளகாயக் கண்டு நட்ட குறை கிடக்கு, அதைப் போய் நடவேணும்“ என அழைத்தாள் பொன்னி.
”ஆச்சி எங்களுக்கும் ஒரு நாளைக்கு நல்லகாலம் வரத்தான் போகுது“ எனக் கூறிக்கோண்டே வீட்டினுள் எழுந்து சென்றான் மாணிக்கம்.
7.
வாசிகசாலையில் சீட்டாட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருந் தது. அம்பலவாணரும், அவரது நண்பர்களுந்;தான் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
எப்போதோ அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு நேர்த்திவைத்து யாரோ புண்ணியவானால் கட்டப்பட்டது அந்தத் தங்குமிடம். சுற்றாடலில் இருக்கும் தோட்டங்களில் உழைத்துக் களைத்த கமக்காரர்களும், வழிப்போக்கர்களும் அந்த மடத்திலே வந்து களைப்பாறுவார்கள். வேலையற்றுத் திரிபவர்களும், வேலை செய்து ஓய்வு பெற்ற ஒரு சில ‘பென்சனியர்’களுங்கூடத் தமது பொழுதைக் கழிப்பதற்கு அங்கு வருவார்கள். மடத்தைச் சுற்றியுள்ள சூழலில் ஓங்கி வளர்ந்திருக்கும் பெருவிருட்சங்களைத் தழுவி வரும் இதமான காற்றின் சுகத்தையும் - சிலகாலங்களில் அந்தக் காற்றிலே கலந்து வரும் மகிழம்பூ வாசனையையும் சேர்த்து அனுபவிப்பதற்கென்றே அங்கு வருபவர்களும் உண்டு. ஊரிலுள்ள துடிப்புள்ள இளைஞர்கள் சிலரால் இப்போது அந்த மடம் வாசிகசாலையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் பத்திரிகை வாசிப்பதற்காகச் சிலரும் அங்கு வருவதுண்டு.
வாசிகசாலையை ஏற்படுத்திய இளைஞர்ளால் அதற்குரிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக அந்தக் கட்டிடம் தங்குமடமும், வாசிகசாலையுஞ் சேர்ந்த ஒரு படிமுறை வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
”கம்மாரிசு“ எனக் கூறியபடி கடைசிச் சீட்டை உற்சாகமாக அடித்தார் அம்பலவாணர்;.
”ஐஸே, நீர் இதை முந்தியே அடிச்சிருக்க வேணும். "டயமன்' பத்து விழுந்தவுடனை உமக்கு "கம்மாரிசு' தானே“.
”என்ன விசர்க் கதை பேசிறாயப்பா, "ஆசு' வெளியிலை நிக்கேக்கை "கம்மாரிசு' அடிக்க முடியுமோ...?“
”ஐஸே எனக்கு நீர் ‘காட்ஸ்' விளையாடக் காட்டித்தரத் தேவையில்லை. நீர் ஒன்பதை அடிச்சா, ஆசு விழுந்திருக்கும் தானே“ எனக் கையிலிருந்த காட்ஸை மேசையில் ஓங்கி அடித்தார் சின்னத்தம்பர்.
”காட்ஸ் விளையாடத் தெரியாட்டில் சளாப்புக் கதைகள் கதைக்காதையுங்காணும்“ எனச் சின்னதம்பரைப் பார்த்துக் கூறினார் அம்பலவாணரின் "பாட்னரான' கந்தையா.
”டேய், நீங்கள்தான் சளாப்புக் கதைகள் கதைக்கிறியள“. சின்னத்தம்பர் கோபத்துடன் எழுந்திருந்தார்.
அவர்களிடையே வாக்குவாதம் உச்சக் கட்டத்தை அடைந்தது.
வாசிகசாலையின் எதிர்ப் புறமாகத் தெருவின் மறுபக்கத்தில் இருக்கும் தமிழ்ப் பாடசாலையின் தலைமை உபாத்தியாயர் பொன்னம்பலம்; அப்போது அங்கு வந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். சீட்டு விளையாடுபவர்கள் போட்ட சத்தம் அவருக்கு எரிச்சலை மூட்டியது.
மூக்குக் கண்ணாடியைக் கையில் கழற்றியவாறு, ”தம்பியவை, இங்கை பேப்பர் படிக்கிறது உங்களுக்குத் தெரியேல்லையோ, ஏன் கா....... கூ..... எண்டு கத்திறியள்“ என்றார் சற்றுக் கோபமாக.
”ஒய் ... வாத்தியார்‰ நீர் ஏன்காணும் பள்ளிக்கூட நேரத்திலை இங்கை வந்து பேப்பர் வாசிக்கிறீர், பிள்ளையளைப் போய் மேயுங்காணும்“. என்றார் சின்னத்தம்பர் காரசாரமாக.
பொன்னம்பல வாத்தியார் வாயடைத்துப்போய் மீண்டும் கண்ணாடியை அணிந்துகொண்டு பேப்பரிலே பார்வையைச் செலுத்தினார்.
அப்போது அந்த வழியாக்; வந்த நடேசு, ”என்ன அண்ணையவை சண்டை பிடிக்கிறியளோ?“ எனக் கேட்டுக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான்.
சீட்டு ஆடிக் கொண்டிருந்தவர்களின் சண்டை ஒருவாறு ஓய்ந்து இப்போது நடேசுவைக் கண்டதும் அவர்களது கவனம் அவன் பக்கம் திரும்பியது.
”வா, மச்சான் நடேசு....... இவ்வளவு நேரமும் உன்னைத்தானே பார்த்துக் கொண்டிருந்தனாங்கள். உந்தத் திண்ணையிலை இரு“ என உற்சாகமாகக் கூறினார் கந்தையா.
நடேசு அங்குள்ள எல்லோரையும் பார்த்து விகற்பமின்றிச் சிரித்தான்.
நடேசுவுக்கு முப்பது அல்லது முப்பதைந்து வயதுவரை மதிக்கலாம். பார்ப்பதற்கு சிறிது கட்டையாகவும் பொது நிறம் பொருந்தியவானாகவும் காணப்படுவான். சேட் அணியாத அவனது தேகத்தில் ரோமங்கள் நிறைந்து காணப்படும். தலைமயிர் கட்டையாக ‘குறொப்' செய்யப்பட்டிருக்கும். அரையில் கட்டியிருக்கும் அழுக்குப் படிந்திருந்த சாரத்தை முழங்கால்வரை மடித்துக் கட்டி சதா சிரித்தபடி ஊரெங்கும் சுற்றித் திரிவான். நடேசுவைப் பொறுத்தவரையில் அவனுக்கு கவலை என்பதே கிடையாது. காண்பவர்களையெல்லாம் அண்ணண், தம்பி, மாமன், மச்சான் என ஏதோ வாயில் வரும் முறையைச் சொல்லி அழைப்பான். ஊரிலுள்ளவர்களுக்கு அவனிடம் கேலி செய்து மகிழ்வதில் ஓர் உற்சாகம்.
”நடேசு மச்சான், ஒரு பாட்டுப்படி, உன்ரை பாட்டைக் கேட்டு கனகாலம்“ எனக் கூறினார் சின்னத்தம்பர்.
நடேசு மூக்கைச் சுளித்து நுகர்ந்தபடி, ”எங்கையோ நல்ல வாசம் மணக்குது“ எனக் கூறிக்கொண்டே அம்பலவாணரின் பக்கம்வந்து, அவர் அணிந்திருந்த சேட்டை மூக்கின் அருகில் பிடித்துக்கொண்டு, ”உங்கடை சட்டையிலைதான்; அண்ணை "சென்ட்' வாசம் மணக்குது“ எனக்கூறினான்.
”டே...... டே....... சேட்டிலை ஊத்தையைப் பிரட்டாதை“ எனக் கூறியபடி அவனிடமிருந்து விலகிச்சென்று சேட்டில் படிந்திருந்த மண்ணை விரலினால் சுண்டிவிட்டார் அமபலவாணர்.
”நான் உன்னையல்லோ பாட்டுப் பாடச் சொன்னனான். உந்த வாங்கிலை இருந்து அசல் பாட்டாய் ஒரு பாடடுப் படி பாப்பம்“ என்றார் சின்னத்தம்பர் நடேசுவைத் தனது பக்கம் திருப்பியபடி.
”அண்ணை...... எனக்கு ஒரு பத்துச் சதம் காசு தாறியே, கடலைக் கொட்டை வாங்கிறதுக்கு “ அம்பலவாணரைப் பார்த்துக் கேட்டான் நடேசு.
”நீ முதல் பாட்டைப் படியன், பிறகு பாப்பம்“.
”வாணரண்ணை, பாட்டுப் படிச்சாப் பிறகு நீ என்னை ஏமாத்தப்பிடாது“ என்றான் நடேசு.
கந்தையா குறுக்கிட்டு, ”அவர் தராட்டில் நான் தாறன்“ என நடேசுவை உற்சாகப்படுத்தினார்.
நடேசு திண்ணையில் இருந்து ஒரு தடவை இருமி தொண்டையைச் செருமிவிட்டு கைகளினால் தாளம் போட்டபடி பாடத் தொடங்கினான்.
”சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்பிரமணிய சுவாமி எனை மறந்தார்
ஆவார் பொய் மொழிவார்“.
நடேசு பாடிக்கொண்டிருக்கும்போது அம்பலவாணரும், அவரது நண்பர்களும் ஒருவரையொருவர் பார்த்து, பொங்கிவந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள்.
பாட்டு முடிந்ததும் நடேசு, ”வாணரண்ணை எப்பிடி என்ரை பாட்டு?“ எனக் கேட்டான்.
”சோக்கான பாட்டு மச்சான், தியாகராஜ பாகவதர் பாடின மாதிரி இருந்துது“.
”அப்ப இன்னுமொரு பாட்டுப் படிக்கட்டோ?“ என உற்சாகத்துடன் கேட்டான் நடேசு.
”ஐயய்யோ..... வேண்டாம் - நீ இனி வாயைத் திறந்தால் வண்ணான் வந்திடுவன் நடேசு .... “ எனக் கூறினார் சின்னத்தம்பர்;.
எல்லோரும் "கொல்'லென்று சிரித்தனர். நடேசுவும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.
”என்ன வாத்தியார் ஒண்டும் பேசாமல் இருக்கிறியள்.... என்ரை பாட்டு உங்களுக்குப் பிடிக்கேல்லையோ?“ வாத்தியாரின் பக்கம் திரும்பிக்கேட்டான் நடேசு.
”உனக்குத்தான் மூளை வளர்ச்சி குறைவெண்டு பாத்தால் இங்கை இருக்கிறவங்கள் எல்லோருக்கும் அறிவு குறைவாய்த்தானே தெரியுது“ - இவ்வளவு நேரமும் மனத்திற்குள்ளே புகைந்துகொண்டிருந்த வாத்தியார் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு எழுந்து பாடசாலைக்குப் புறப்பட்டார்.
”ஏன் வாத்தியார் என்னோடை கோவமோ? எழும்பிப் போறியள்“. எனத் தலையைத் தடவியபடி கேட்டான் நடேசு.
பொன்னம்பல வாத்தியார் எதுவுமே பதில் கூறாது போய்விட்டார்.
”என்னதானிருந்தாலும் மாஸ்ரரின்ரை மனம் நோகும்படி நாங்கள் நடக்ககூடாது“ அம்பலவாணர் தனது நன்பர்களிடம் கூறினார்.
”நடேசு மச்சான் உன்னைப் பாக்கிறபொழுது சரியாய் ஜெமினி கணேசன் மாதிரித்தான் தெரியுது......“
”சும்மா விசர்க் கதை பேசாதை கந்தையா, ஒரு "சைட்டிலை' நிண்டு பாத்தால் சிவாஜியை உரிச்சு வைச்ச மாதிரி இருக்கு“.
நடேசு தனது தேகம் முழுவதும் குலுங்கக் கூடியதாக அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, ”அண்ணை காசைத் தா நான் போகப் போறன்“ என அம்பலவாணரிடம் கையை நீட்டினான்.
”இப்ப என்ன அவசரம் நடேசு ? கொஞ்சநேரம் இருந்திட்டுப் போவன்“.
”பிறக்கிறாசியாற்றை மேளுக்கு இண்டைக்குக் கலியாணமெல்லோ - சோடினை நடக்குது, என்னையும் வரச்சொன்னவை, நான் போவேணும்.
”அது சரி, உனக்கு எப்ப மச்சான் கலியாணம்?“
”தெரியாதண்ணை எனக்கும் கலியாணம் செய்ய ஆசை தான், அம்மாதான் ஒரு இடமும் பேசிச் செய்து வைக்கிறாயில்லை“.
”உனக்கு ஆர் மச்சான் பெம்பிளை தரப்போகினம்?“
”ஏன் அப்பிடிச் சொல்லுறியள், எனக்கு மச்சாள் இருக்கிறாதானே, அவவைத்தான் நான் கலியாணம் செய்யப் போறன்“.
”அதார் நடேசு உன்ரை மச்சாள்?“
”வேறை யார் செல்லப்பர் அம்மான்ரை மகள் பார்வதிதான்“. நடேசு உற்சாகத்துடன் கூறினான்.
”அடி சக்கை எண்டானாம்‰ காத்திருந்தவன் பெண்டிலை நேற்று வந்தவன் கொண்டு போனமாதிரியெல்லோ முடியப் போகுது“. அம்பலவாணரைப் பார்த்து நக்கலாகக் கூறினார் கந்தையா.
எல்லோரும் மீண்டும் சிரித்தனா.
”பார்வதியின்ரை காதிலை இந்தச் சங்கதி விழுந்தால் விளக்குமாத்தாலைதான் தருவள் மச்சான் உனக்கு“ என்றார் அமபலவாணர் அசட்டுச் சிரிப்புடன்.
”என்ன வாணரண்ணை உப்பிடிச் சொல்லுறாய், என்னைக் கலியாணம் செய்யிறியோ எண்டு நான் பார்வதியிட்டைக் கேட்டனான். அவவும் அதுக்கு "ஓம்' எண்டு சொல்லியிருக்கிறா. நீங்கள் வேணுமெண்டால் இருந்து பாருங்கோ நான் அவவைத்தான் கலியாணம் முடிக்கப் போறன்“.
”இதைச் செல்லப்பர் அம்மான் கேள்விப்பட்டால் உன்ரை முதுகுத் தோலை உரிச்சுப் போடுவர்“. அம்பலவாணர்தான் இப்படிக் கூறினார்.
”அம்மானுக்கும் என்னிலை நல்ல விருப்பம், அவர் ஒண்டுஞ் சொல்ல மாட்டார்...... அதுசரி நான் போகப்போறன். கடலைக் கொட்டை வாங்க காசைத்தா அண்ணை“.
அம்பலவாணர் ஒரு பத்துச் சத நாணயத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
”அண்ணையவை நான் போட்டுவாறன் “ எனக் கூறிக்கொண்டே நடேசு அந்த இடத்தை விட்டகன்றான்.
அப்போது சின்னத்தம்பர் அம்பலவாணரிடம் ”என்ன ஐஸே, பார்வதி உன்னை ஏமாத்தப் போறாள் போலை கிடக்கு“ எனக் கிண்டலாகக் கேட்டார்.
”அவன் விசரன் அலட்டிப் போட்டுப் போறான்“ எனக் கூறிவிட்டு அசட்டுத்தனமாகச் சிரித்தார் அம்பலவாணர். ஆனாலும் அவரது மனதில் ஒருவித தாக்கம் ஏற்படத்தான் செய்தது.

8.
செல்லப்பர் லொறியை ஓட்டிவந்து கோவிந்தனது குடிசையின் முன்னால் நிறுத்தினார். அவருக்கு ஒரே அலுப்பாக இருந்தது. அலுப்புத்தீர இரண்டு போத்தல் கள்ளாவது குடிக்க வேண்டுமென்பது அவரது திட்டம்;. ஒழுங்கை முடக்கில் லொறியைத் திருப்பும் பொழுது கோவிந்தன் தோட்டத்தில் மிளகாய்க் கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை அவர் பார்த்துவிட்டுத்தான் வந்தார். வீட்டில் கோவிந்தன் இருக்காவிட்டாலென்ன, பொன்னியும் மாணிக்கமும் இருப்பார்கள் தானே என்ற நினைப்போடு லொறியை விட்டிறங்கிக் குடிசையை அடைந்தார் செல்லப்பர். அப்போது பொன்னி முற்றத்திலே இருந்து சட்டி, பானைகள் கழுவிக் கொண்டிருந்தாள். செல்லப்பரைக் கண்டதும் மரியாதையுடன் எழுந்து அவரை வரவேற்றாள்.
”வாருங்கோ கமக்காறன், இப்பதான் பூநகரியிலையிருந்து திரும்பி வாறியள் போலை கிடக்கு“.
”ஓம் பொன்னி, இன்னும் வீட்டுக்கும் போகேல்லை, நேரே இங்கைதான் வாறன் ..... ஏதேன் கிடந்தால் கொண்டு வா“ எனக் கூறிக்கொண்டே வெளித் திண்ணையில் உட்கார்ந்தார் செல்லப்பர்.
”கொஞ்சம் இருங்கோ, வாறன் கமக்காறன்“ எனக் கூறிக்கொண்டே குடிசையின் உள்ளே சென்ற பொன்னி, முட்டியுடன் கள்ளை எடுத்துவந்து பிளாவுக்குள் ஊற்றி அதனைச் செல்லப்பரிடம் கொடுத்தாள்.
செல்லப்பர் பிளாவை இரண்டு கைகளாலும் ஏந்தி கள்ளில் இருந்த நுரையை ஊதித் தள்ளிவிட்டு உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினார்.
”சோக்கான கள்ளு“. - கள்ளின் சுவையில் தன்னை மறந்து கூறினார் செல்லப்பர்.
”கமக்காறன், நீங்கள் ஒருவேளை வரக்கூடும் எண்டுதான் கலப்பில்லாததாய் எடுத்து வைச்சனான்“.
பொன்னிக்குத் தன்மேல் இருக்கும் அக்கறையை நினைத்தபோது செல்லப்பருக்கு உள்@ர மகிழச்சியாக இருந்தது.
”எங்கை மாணிக்கனைக் காணேல்லை?“
”அவன் கமக்காறன், உங்கடை வீட்டுப் பக்கந்தான் போயிருப்பன், அவனைப் பற்றித்தான் உங்களோடை கதைக்க வேணுமெண்டு இருந்தனான்“.
”என்ன பொன்னி, அப்பிடி அவனைப் பற்றி என்ன விசயம்?“
”ஏன், துரைசிங்கம் கமக்காறன் உங்களிட்டை ஒண்டும் சொல்லேல்லையோ?“
”இல்லைப் பொன்னி, இன்னும் நான் அங்கை போகேல்லை. பூநகரியிலையிருந்து நேரே இங்கைதான் வாறன். இனித்தான் லொறியைக் கொண்டுபோய் விடவேணும்“
துரைசிங்கம் முதலாளிக்குச் சொந்தமான லொறியிலேதான் செல்லப்பர் சாரதியாக வேலை செய்கிறார். இருப்பினும் துரைசிங்கம் முதலாளி ஒருபோதும் செல்லப்பரைத் தன்னிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியாகக் கருதுவதில்லை. தனது கூட்டாளியாகவே நடத்தி வருகிறார்.
”மாணிக்கனெல்லோ துரைசிங்கம் கமக்காறனோடை வாக்குவாதப் பட்டிட்டான். அவர் கறுவிக்கொண்டு திரியிறார். இந்தப் போகத்தோடை தோட்டத்தை விடட்டுமாம். எங்களுக்கு இரவு பகல் இதே யோசினையாய்த்தான் இருக்கு. என்ரை மனிசனுக்கும் ஒரே கலக்கமாய்க் கிடக்கு“ எனக் கூறிய பொன்னி நடந்தது யாவற்றையும் செல்லப்பரிடம் விபரமாகச் சொன்னாள்.
”துரைசிங்கம் ஒரு ஒற்றைப் புத்திக்காரன். அந்த ஆளிட்டை ஏன் இவன் வாயைக் குடுத்தவன்?“
”ஏதோ இளந் துடிப்பிலை பெடியன் தெரியாத்தனமாய்க் கதைச்சுப் போட்டான். நீங்கள்தான் துரைசிங்கம் கமக்காறனைச் சாந்தப்படுத்த வேண்டும்“ எனக் கெஞ்சும் குரலில் கூறினாள் பொன்னி.
”நீ ஒண்டுக்கும் யோசிக்காதை பொன்னி. நான் அதெல்லாம் சரிப்படுத்திறன். இனிமேல் மாத்திரம் அந்த ஆளோடை வீண் கதை வைச்சிருக்க வேண்டாமெண்டு மாணிக்கத்திட்டைச் சொல்லு.“
”இதைச் செய்தியளெண்டால் கமக்காறன் உங்களுக்குப் பெரிய புண்ணிமாய்ப் போம்......“
முட்டியிலிருந்து கள்ளு முடிந்தபோது செல்லப்பருக்கு வயிற்றுக்குள் இருந்த கள்ளு வேலை செய்யத் தொடங்கியது.
”பொன்னி, கள்ளு இருந்தால் இன்னும் கொஞ்சம் கொண்டு வாவன்“ என்றார் செல்லப்பர் ஒருவித மயக்கத்துடன்.
பொன்னி விட்டினுள்ளே சென்று முட்டியிலிருந்த கள்ளில் சிறிது வார்த்து எடுத்து வந்தாள்.
பிளாவுக்குள் அவள் கள்ளை ஊற்றும்போது தனது நரைத்திருந்த மீசையைத் தடவிவிட்டபடி, ”என்ன பொன்னி, இப்ப கொஞ்சக் காலமாய் நீ என்னைக் கவனிக்கிறதில்லை“ எனக் கூறிக்கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தார் செல்லப்பர்.
பொன்னிக்கு அவர் அப்படிக் கூறியதன் அர்த்தம் புரிந்தது. ஆனாலும் அவள்; ஒன்றுமே புரியாதவள் போன்று ”என்ன கமக்காறன், ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?“ என அவரிடம் வினவினாள்.
”என்னடி ஒண்டும் விளங்காத மாதிரிக் கேக்கிறாய், எனக் கூறியபடி தள்ளாடிய வண்ணம் எழுந்த செல்லப்பர் அவளது கைகளைப் பற்றினார்.
”சும்மா இருங்கோ கமக்காறன். யாரேன் கண்டால் என்ன நினைப்பினம்?“ என அவரது பிடியிலிருந்து தனது கைகளை விலக்க முயற்சி செய்தாள் பொன்னி.
”இப்ப இங்கை ஒருதரும் வரமாட்டினம். நீ பயப்பிடாதை பொன்னி“ எனத் தாழ்ந்த குரலில் சொன்ன செல்லப்பர், அவளை வீட்டின் உட்பக்கமாகத் தள்ளினார்.
”இல்லைக் கமக்காறன், இனி மாணிக்கன் வந்திடுவன். நீங்கள் வீட்டுக்குப் போங்கோ“ எனப் பதட்டத்துடன் அவரது பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டாள் பொன்னி.
செல்லப்பர் தள்ளாடியபடி வெளியே வந்தார்.
”என்ன பொன்னி, இப்ப நீ கொஞ்ச நாளாய்ப் பஞ்சிப்படுகிறாய். நான் கிழவனாய்ப் போனனென்டு நினைச்சிட்டியோ? சரி........... சரி.... நான் போட்டுவாறன்“ எனக் கூறிவிட்டு லொறியை நோக்கி நடந்தார் செல்லப்பர். ”கவனமாய் லொறியை ஓட்டுங்கோ கமக்காறன் குடிசிட்டு இருக்கிறியள்..... “ எனக் கொஞ்சத் தூரம் அவரைப் பின்தொடர்ந்து வந்த பொன்னி கூறினாள்.
”லொறியில் ஏறி உட்கார்ந்த செல்லப்பர், ”போடி போ, எனக்குப் புத்தி சொல்ல வந்திட்டாய்“ என எரிச்சலுடன் கூறிவிட்டு லொறியை வேகமாகச் செலுத்தத் தொடங்கினார்.
ஒழுங்கை முடக்கில் லொறி மறையும் வரை அதனையே பார்த்துக்கொண்டிருந்த பொன்னி, ”கமக்காறனுக்கு இப்பவும் இளமைத் துடிப்புக் குறையேல்லை“ எனத் தனக்குத்தானே கூறிச் சிரித்துக் கொண்டாள்.

9.
”அம்மா...... அம்மோய்.......“
நேரம் இரவு பத்தரையைத் தாண்டிவிட்டது. வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்ற சரசு அவளது தமையன் நடேசுவின் குரல்கேட்டு எழுந்திருந்தாள். இருட்டில் தனியாகச் சென்று கேற்றைத் திறந்துவிடுவதற்கு அவளுக்குப் பயமாக இருந்தது. தலைவாசலை அடுத்துள்ள திண்ணையில் அவளது தாய் அன்னம்மா குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
அது ஒரு பழைய காலத்து நாற்சாரம் வீடு. எல்லாவிதமான வசதிகளும் அந்த வீட்டில் அமைந்திருந்தன. அன்னம்மாவின் கணவன் அந்தக் காலத்தில் சிங்கப்பூரில் ஏதோ தொழிற்சாலையொன்றில் வேலையாக இருந்தவராம். அவர் வேலை செய்யும் இடத்தில் நடந்த விபத்தொன்றில் இளமையிலே அகால மரமணமடைந்துவிட்டார். இப்போது அன்னம்மாவுக்கு சிங்கபூரில் பென்சன்பணம் வந்துகொண்டிருக்கிறது. அந்தப் பணத்தில் அவளும் அவளது பிள்ளைகளும் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.அவளது கணவணுக்குச் சொந்தமாயிருந்த நிலபுலன்களிலிருந்தும் அவர்களுக்குப் போதிய வருவாய் கிடைக்கிறது.
”சரசு........ சரசு.......“
நடேசு இப்போது தங்கையைக் கூப்பிட்டான். ”அம்மா, அம்மா, எழும்புங்கோ..... அண்ணை கூப்பிடுகிறார்“ எனத் தாயை எழுப்பினாள் சரசு.
வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்த அன்னம்மா அரிக்கன் லாந்தரைக் கைலெடுத்து அதனைத் தூண்டிவிட்டாள்.
நிலைப்படியின் மேல் வைத்திருந்த கேற் திறப்பை சரசு எடுத்துக்கொண்டாள். இருவருமாகச் சென்று கேற்றைத் திறந்துவிட்டர்கள்.
”ஏனடா மோனை இரவிரவாய்ச் சுத்தித் திரியிறாய். உன்னையெல்லோ வீட்டைவிட்டு ஒரு இடமும் போகவேண்டாமெண்டு சொன்னனான்“. அன்னம்மா நடேசுவைப் பார்த்துக் கூறினாள்.
”அம்மா, நான் பிள்ளையார் கோயிலுக்குப் போனனான். கோயில் ஐயர் குத்துவிளக்குகளைத் தேய்ச்சுத் தரச் சொன்னவர். அதுதான் நேரம் செண்டு போச்சு.“
”அதெல்லாம் சரியண்ணை, உன்னாலை நாங்களுமெல்லே நேரத்துக்குப் படுக்கேலாமல் கிடக்கு. எங்கையோ திரிஞ்சுபோட்டு நடுச் சாமத்திலை வாறாய். இனிமேல் பிந்தி வந்தால் நாங்கள் கேற்றைத் திறக்க மாட்டோம்“ எனக் சினந்தாள் சரசு.
”கோவிக்காதை தங்கச்சி, நான் இனிமெல் வேளைக்கு வாறன்“.
”பிள்ளை சரசு, அவனைக் கூட்டிக்கொண்டு போய் ஏதேன் சாப்பாடு குடு. அவனுக்குப் பசிக்கும்“ என அன்னம்மா சரசுவிடம் கூறினாள்.
”அம்மா, எனக்கொண்டும் இப்ப வேண்டாம். ஐயர் மோதகம், வடை தந்தவர். நான் நிறையச் சாப்பிட்டிட்டன்“
”அப்ப சரி, பாயைப் போட்டுப் படண்ணை“ எனக் கூறிவிட்டு சரசு தனது படுக்கையில் படுத்துக்கொண்டாள்.
நடேசு திண்ணையில் ஒரு பக்கத்தில் படுக்கையை விரித்து உட்கார்ந்துகொண்டான்.
அன்னம்மா படுக்கையில் படுத்த சிறிது நேரத்தில் கண் அயரத் தொடங்கினாள்.
”அம்மா..... அம்மோய்.....“
”............“
”எணை அம்மா...... “ சற்றுப் பலமாகக் கூப்பிட்டான் நடேசு.
”டேய் பேசாமல் படடா“ எனக் கூறிவிட்டு மறுபக்கம் புரண்டு படுத்தாள் அன்னம்மா.
”அம்மா..... ஒரு சங்கதி கேக்கிறன், சொல்லுறியோ?“
”என்னடா.... நித்திரை கொள்ள விடமாட்டியே?“
”அம்மா, எனக்கு எப்ப கலியாணம்?“
திடீரென நடேசு இப்படிக் கேட்டப்போது சரசு தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் குபீரெனச் சிரித்தாள்.
”ஏன் மோனை ஒரு நாளும் இல்லாத மாதிரி இண்டைக்கு உதைப் பற்றிப் கேக்கிறாய்?“
”இண்டைக்குத்தான் மடத்தடியிலும், கோயிலடியிலும் இதைப் பற்றி என்னட்டைக் கேட்டவை. அதுதான் நான் உன்னைக் கேக்கிறேன்“ என்றான் நடேசு.
”அண்ணை, நீ அதுக்கு என்ன பதில் சொன்னனி? எனக் குறும்பாகக் கேட்டாள் சரசு.
”நான் அம்மாவைக் கேக்க வேணுமெண்டு சொன்னனான்“.
”நீ உப்பிடி ஊர் சுத்தித் திரிஞ்சால் ஒருத்தியும் உன்னைக் கலியாணம் முடிக்க மாட்டாளவை“ எனக் கூறினாள் அன்னம்மா.
”இல்லையம்மா ..... பார்வதி மச்சாள் என்னைக் கலியாணஞ் செய்யிறனெண்டு சொன்னவ“
”அண்ணை, நீதான் மச்சாளிட்டை இதைக் கேட்டனியோ.... அல்லது அவதான் வலியச் சொன்னவவோ?“ சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள் சரசு.
”நான் கேட்டதுக்குத் தான் மச்சாள் என்னைக் கலியாணங் கட்டுவனெண்டு சொன்னவ“.
”அண்ணை, மச்சாளும் உன்னோடை நல்லாய்த்தான் பகிடி விடுகிறா போலை கிடக்கு“ எனக் கூறிச் சிரித்தாள் சரசு.
”அம்மா, நான் கேட்டதுக்கு நீ ஏன் பதில் சொல்லுறாயில்லை“. நடேசு மீண்டும் தாயிடம் கேட்டான்.
”எல்லாம் நான் யோசிச்சுச்; சொல்லுறன் நீ இப்ப படுமோனை“.
நடேசு பெரிதாகக் கொட்டவி விட்டபடி படுக்கையில் சாய்ந்த சிறிது நேரத்தில் பலமாகக் குறட்டை விடத்தொடங்கினான்.
இப்போது அன்னம்மாவுக்கு நித்திரை வரமறுத்தது. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.



10.
காலைப் பொழுது புலர்ந்து வெகு நேரமாகிவிட்டது. ஆதவனின் ஒளிக் கதிர்கள் வீட்டுத் திண்ணைவரை நீண்டு, சார்மனைக் கதிரையில் சாய்ந்தவண்ணம் துயில் கொண்டிருந்த செல்லப்பரின் கால்களையும் தழுவியிருந்தது.
முதன்நாள் இரவு அவர் துரைசிங்கம் முதலாளி வீட்டிலிருந்து திரும்புவதற்கு வெகு நேரமாகி விட்டது. பூநகரியிலிருந்து செல்லப்பர் லொறியுடன் வந்து சேர்ந்ததும் துரைசிங்கம் முதலாளி அவருக்காக ஒரு போத்தல் சாராயம் வாங்கியிருந்தார். அதனை இருவருமாகக் குடித்துத் தீர்த்துவிட்டு, அங்கேயே இரவுச் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு நிதானமிழந்த நிலையிலேதான் செல்லப்பர் வீடு திரும்பினார். அப்போது பார்வதியும், சின்னத்தங்கமும் நித்திரையாகி விட்டனர். வெளியே படுத்திருந்த மாணிக்கம்தான் அவர் வந்தபோது படலையைத் திறந்துவிட்டான். அவர் வெளியே கிடந்த சார்மனைக் கதிரையில் படுத்துக்கொண்டார்.
அவரது வரவைக் கண்ட வீமன் அவரைச் சுற்றிச் சுற்றி வந்து சந்தோஷத்துடன் முன்னங்கால்களை அவரின் மேல் போட்டுத் தனது அன்பைத் தெரிவித்தது. பின்பு அவர் நித்திரையானதும் அவரது காலடியிலேயே சுருண்டு படுத்துவிட்டது.
பார்வதி காலையில் எழுந்து வெளியே வந்தபோதுதான் தந்தை வந்திருப்பதைக் கவனித்தாள். மாணிக்கம் அவள் எழுந்திருப்பதற்கு முன்பே எழுந்து தனது வீட்டிற்குச் சென்றுவிட்டான்.
செல்லப்பர் கண்விழித்தபோது பார்வதி முற்றத்திற்குச் சாணி தெளித்துக் கொண்டிருந்தாள். சார்மனைக்கதிரையில் படுத்திருந்தவாறே அவர் கைகள் இரண்;டையும் நீட்டி முடக்கி கால்களைச் சொடுக்கிவிட்டு உடலை நெளித்து பெரிதாகக் கொட்டாவிவிட்டுச் சோம்பல் முறித்துக் கொண்டார். பின்னர் மடியிலிருந்த புகையிலையை எடுத்து அதனைக் கையிலே வைத்துச் சுருட்டி வாயில் வைத்துக் கடித்தவண்ணம் பார்வதியிடம் ”கொஞ்சம் நெருப்பு கொண்டாடி பிள்ளை“ என வேண்டினார்.
அடுப்புக்குள் இருந்த கொள்ளிக்கட்டை ஒன்றை எடுத்துவந்து அவரிடம் நீட்டிய பார்வதி, அப்பு தேத்தண்ணி கொண்டு வரட்டோ“ என அவரிடம் வினவினாள்.
”இல்லைப் பிள்ளை வெளியிலை, போட்டுவாறன்“.
சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு செல்லப்பர் பனை வடலிப் பக்கம் சென்றார். திரும்பி வரும்போது வேப்பங்குச்சியால் பல்லைத் துலக்கியபடி கிணற்றடிக்குச் சென்று கைகால் கழுவிவிட்டு வந்தார்.
விறாந்தையில் கைவளையில் கட்டித் தொங்கவிட்டிருந்த திருநீற்றுக் குட்டானுக்குள் விரல்களைப் புதைத்து, திருநீற்றை எடுத்து நெற்றியிலே பூசிவிட்டு மீண்டும் சார்மனைக் கதிரையில் உட்கார்ந்து கொண்டார் செல்லப்பர்.
பார்வதி மூக்குப் பேணியில் தேநீர் கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தாள்.
”ஏன் பிள்ளை வெறுந் தேத்தண்ணியாய்க் கிடக்கு? சீனி இல்லையோ?“
”இல்லை அப்பு, சீனி இன்னும் ;வாங்கேல்லை. வேண்டின பனங்கட்டியும் முடிஞ்சு போச்சு. இண்டைக்குத்தான் மாணிக்கத்தை அனுப்பி எல்லாச் சாமானும் வாங்கவேணும்“.
அப்போது வெளியே வந்த சின்னத்தங்கம், ”இப்ப நாலைஞ்சு நாளாய் காசுக்குப் பெரிய தட்டுப்பாடு. நீங்கள் வந்த பிறகுதான் சமான்கள் வாங்கவேணுமெண்டு பிள்ளை சொல்லிக்கொண்டிருக்கிறாள்“ எனச் செல்லப்பரைப் பார்த்துக் கூறினாள்.
செல்லப்பர் ஒன்றுமே பேசாது தேநீரைக் குடித்தார்.
”நான் இன்னும் துரைசிங்கத்தைச் சந்திக்கேல்லை. லொறியை கொண்டே வீட்டிலை விட்டிட்டு வந்திட்டன். இண்டைக்குத்தான் ஏதேன் வாங்கவேணும்“
மாதம் முடிவதற்கு முன்னரே துரைசிங்கம் முதலாளியிடம் அவ்வப்போது முற்பணமாகச் சம்பளத்தைப் பெற்றுத் தீர்த்து விட்டிருந்தார் செல்லப்பர். அதனை இப்போது சின்னத்தங்கத்திடம் கூறினால் வீட்டில் ஒரு பூகம்பமே நடந்துமுடியுமென்பது அவருக்கு தெரியும். அதனால் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற பொய்யொன்றைக் கூறி வைத்தார். வருகிற மாதச் சம்பளத்தில் முற்பணமாகச் சிறிய தொகையை வாங்கிச் சமாளித்து விடலாம் என்ற எண்ணமும் அவரது மனதில் தோன்றியது.
”உண்மையாய்த்தான் துரைசிங்கத்தைச் சந்திக்கேல்லையோ அல்லது சம்பளக் காசு முழுவதையும் முடிச்சாசோ?“ சந்தேகத்துடன் கேட்டாள் சின்னத்தங்கம்.
”ஏனணை, விடிஞ்சதும் விடியாததுமாய் சண்டைக்கு வாறாய். நானெல்லோ சொன்னான் இண்டைக்கு காசு வாங்கித் தாறனெண்டு“ சற்றுக் கடுமையான குரலில் கூறினார் செல்லப்பர்.
”உப்பிடி வெருட்டி உருட்டித்தானே காலத்தைக் கழிச்சுக்கொண்டு போறியள்“.
அவர்களிடையே வாக்குவாதம் முற்றிவிடும்போல் தோன்றியது பார்வதிக்கு.
”அப்பு நாலு நாளைக்குப் பிறகு இப்பதானே வீட்டுக்கு வந்திருக்கிறார்.அவரோடை ஏன் அம்மா சண்டை பிடிக்கிறியள்“ என சின்னத்தங்கத்திடம் கூறிவிட்டு பாத்திரங்ககளைக் கழுவுவதற்காக அவள் கிணற்றடிப் பக்கம் சென்றாள்.
”ஏனப்பா உங்களோடை சண்டை பிடிக்க எனக்கு ஆசையே, உவள் பிள்ளையைப் பற்றி ஒருவிதமான அக்கறையும் எடுக்காமல் இருக்கிறியள் எண்டுதான் எனக்குக் கவலையாய்க் கிடக்கு“ தாழ்ந்த குரலில் கூறியபடி சார்மனைக் கதிரையின் அருகே வந்து அமர்ந்தாள் சின்னத்தங்கம்.
”அதுக்கேன் இப்ப கவலைப்படுகிறாய், காலநேரம் வந்தால் எல்லாம் தானே நடக்கும்“.
”இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே எல்லாம் இழுபட்டுக் கொண்டு போகுது“.
”நீயும் வருத்தக்காறி, என்ரை பிழைப்பும் வெளியிலை திரிய வேண்டியதாய்க் கிடக்கு. இந்த நிலைமையிலை பார்வதியை வெளியிலை விட்டிட்டால் எல்லாம் சீரழிஞ்சுபோம்“.
”அதுக்காக ஒரு குமரை எந்த நாளும் வீட்டுக்கை வைச்சிருக்க முடியுமோ?“
”எங்கடை வீட்டோடை இருக்கக்கூடிய மாப்பிளை சந்திச்சால்தான் பிள்ளையைக் கட்டிக் கொடுக்க வேணும். தூர இடங்களுக்கு கட்டிக் குடுத்தால் எங்களுக்கு உதவியில்லாமல்போம்“ என்றார் செல்லப்பர் யோசனையுடன்.
”அதுக்கு ஒரு வழி இருக்குது... நீங்கள் என்ன சொல்லுவியளோ எண்டுதான் எனக்குப் பயமாய்க் கிடக்கு“ - தன் மனதிலே எண்ணியிருப்பதைக் கூறுவதற்குப் பீடிகையுடன் தொடங்கினாள் சின்னத்தங்கம்.
”சொல்லன் சின்னத்தங்கம், சொன்னாத்தானே எனக்குத்தெரியும்“.
”இல்லைப் பாருங்கோ, பிள்ளையின்ரை விசயமாய் ஒருக்கா அம்பலவாணரைக் கேட்டுப் பார்க்கலாம் எண்டுதான் யோசிக்கிறன்“.
”நீ என்ன விசர்க்கதை சொல்லுறாய் சின்னத்தங்கம்..... அவன் வேலைவெட்டி இல்லாமல் ஊர் அளக்கிறான். அவனுக்கோ பிள்ளையைக் கட்டிக் குடுக்கிறது?“
”அவனுக்கு என்னத்துக்கு உழைப்பு. அவனிட்டை இருக்கிற சொத்துக்கு வீட்டிலை கால் நீட்டிக்கொண்டு இருந்து சாப்பிடலாம்“
”பணம் இருந்தால் மட்டும் போதாது சின்னத்தங்கம். குணம் நடையும் சரியாய் இருக்க வேணும். அம்பலவாணரைப் பொறுத்த வரையிலை ஊரிலை அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை“.
”ஒரு வயசிலை இளந்தாரியள் பொறுப்பில்லாமல் நடக்கிறதுதான். ஒரு கால்க்கட்டைப் போட்டிட்டால் எல்லாம் சரியாப்போம்“.
”இதுகளைத் தான் கணக்கெடுக்காமல் விட்டாலும் அம்பலவாணர் பகுதிக்கும் எங்களுக்கும் எப்பிடி ஒத்து போகும்? எங்கடை அப்புகாலத்திலையிருந்து அவையளோடை நாங்கள் சபை சந்தி கிடையாதெல்லோ“ என்றார் செல்லப்பர்.
”நீங்கள் எல்லாத்துக்கும் ஒவ்வொரு கதையள் சொல்லிக் கொண்டு இருக்கிறியள், முந்திப் பேசின சம்பந்தங்களையும் உப்பிடித்தான் நொட்டையள் சொல்லிக் குழப்பினனீங்கள்“ எனக் குறைப்பட்டாள் சின்னத்தங்கம்.
”அப்ப பிள்ளையைக் கண்ட இடத்திலை தள்ளிவிடுகிறதோ?“ எனக் கோபமாகக் கேட்டார் செல்லப்பர்.
அப்போது வீமன் குரைத்துக்கொண்டு படலைப் பக்கம் ஓடியது. படலையைத் திறந்துகொண்டு செல்லப்பரின் சகோதரி அன்னம்மா கவலை தோய்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்தாள்.
அன்னம்மா வருவதைப் பார்த்ததும் செல்லப்பரும் சின்னத்தங்கமும் தங்கள் சம்பாஷணையை நிறுத்திக் கொண்டனர்.
”என்ன மச்சாள், இந்த நேரத்திலை ஓடி வாறியள்..... என்ன விசயம்“ என வினவினாள்; சின்னத்தங்கம்.
”இரண்டு நாளாய் நடேசு வீட்டுக்கு வரேல்லை. ஒரு வேளை இங்கை ஏதும் வந்திருப்பானோ எண்டு பாக்கத்தான் வந்தனான்“ எனக் கவலையுடன் கூறினாள் அன்னம்மா.
”அதுக்கேனக்கா கவலைப்படுகிறாய். அவன் நெடுக உப்பிடித்தானே போனபோன இடத்திலை தங்கிவிடுவன்“ என அன்னம்மாவைத் தேற்றினார் செல்லப்பர்.
அன்னம்மா திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள்
”நடேசு முந்தநாள் காலைமையும் இங்கைவந்து பிள்ளையோடை கதைச்சுக் கொண்டிருந்தவன். பிள்ளை ஒடியல் புட்டு அவிச்சுக் குடுத்தவள். அதையும் வாங்கிச் சாப்பிட்டிட்டுத்தான் போனவன்“. எனக் கூறினாள் சின்னத்தங்கம்.
அப்போது கிணற்றடியிலிருந்து பாத்திரங்களுடன் வந்து கொண்டிருந்த பார்வதி, ”நடேசு அத்தான் எங்கேயோ கலியாணமெண்டு சொல்லிக் கொண்டிருந்தவர். அங்கைதான் போயிருப்பர்“ எனக் கூறிவிட்டு அன்னம்மாவை பார்த்துச் சிரித்தாள்.
”இந்தா பார்வதி, இதிலை கொஞ்சம் பனங்காய்ப் பணியாரம் இருக்கு. சரசு தமையனுக்கு எண்டு சுட்டவள். அதிலை உனக்கும் கொஞ்சம் கொணந்தனான் “ மடிக்குள்ளிருந்து ஒரு பார்சலை வெளியில் எடுத்தாள் அன்னம்மா.
”இருங்கோ மாமி, பாத்திரங்களை வைச்சிட்டு வாறன்“ எனக் கூறிக்கொண்டே குசினிக்குள் நுழைந்த பார்வதி சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள்.
”நடேசுவுக்குப் பனங்காய்ப் பணியாரம் எண்டால் சரியான ஆசை. என்ன செய்யிறது, எப்ப வீட்டுக்கு வாறானோ தெரியேல்லை“ எனக் கூறியபடி பார்வதியிடம் பார்சலைக் கொடுத்தாள் அன்னம்மா.
அப்போது செல்லப்பர் குறுக்கிட்டு, ”அது சரி அக்கா, உரும்பிராயிலை சரசுவுக்கு சம்பந்தம் பேசினனியெல்லோ.... அது எந்த மட்டிலை இருக்கு?“ என அன்னம்மாவிடம் கேட்டார்.
”அந்தச் சம்பந்தமும் குழம்பிப் போச்சுத் தம்பி“ எனக் கூறிப் பெருமூச்சு விட்டாள் அன்னம்மா.
”ஏன் மச்சாள், உரும்பிராயார் சீதனம் கூடக்; கேக்கினமோ?“ எனக் கேட்டாள் சின்னத்தங்கம்.
”அப்பிடியொண்டுமில்லை. எங்கடை குடும்பம் விசர்க் குடும்பம் எண்டு யாரோ அவையளிட்டைப் போய்க் கல்லுக்குத்திப் போட்டினம்“.
”நடேசு உப்பிடித் திரியிறதாலைதான் வீண்கதையள் வருகுது. சரசுவின்ரை கலியாணம் முடியிறவரைக்குமாவது அவனை வீட்டை விட்டுக் கண்டபடி திரிய விடாதையக்கா“ எனக் கூறினார் செல்லப்பர்.
”அவனை நான் கட்டுப்படுத்த முடியுமே? கலியாணம் முடிச்சு பிள்ளை குட்டியளோடை இருக்க வேண்டிய வயசு. அவன்ரை கால கஷ்டம் உப்பிடித் திரியிறான்“.
”மச்சாள் உங்களுக்கு இருக்கிற பொருள் பண்டத்துக்கு நடேசு மட்டும் ஒழுங்காய் இருந்தால் நான் நீயெண்டு போட்டி போட்டுக் கொண்டு பெம்பிளை குடுப்பினம்“ என்றாள் சின்னத்தங்கம்.
செல்லப்பர் ஏனோ சின்னத்தங்கத்தை பார்த்துச் சிரித்தார்.
”ஏன் சின்னத்தங்கம் அப்பிடிச் சொல்லுறாய், அவனுக்கு என்ன குறை? குழந்தைப்பிள்ளை மாதிரி? வஞ்சகம் சூதில்லாத பிறவி. அவனுக்கு ஒரு கலியாணம் மட்டும் நடந்திட்டுதெண்டால் அவன் வீட்டோடையே இருப்பன். அவன்ரை குணங்களும் திருந்திவிடும்“.
செல்லப்பர் இப்போது அன்னம்மாவைப் பார்த்துச் சிரித்தார்.
அந்த வேளையில் அங்குவந்த பார்வதி, ”அப்பு சாப்பிட வாருங்கோ“ எனத் தந்தையை அழைத்துவிட்டு, ”மாமி நீங்களும் வாருங்கோ இடியப்பமும், உங்களுக்குப் பிடிச்ச வெந்தயக் குழம்பும் வைச்சிருக்கிறன் “ என அன்னம்மாவையும் அழைத்தாள்.
”இல்லைப் பார்வதி, நான் போவேணும், எனக் கூறிக்கொண்டே புறப்பட்ட அன்னம்மா, ”மாணிக்கன் இந்தப் பக்கம் வந்தால் அவனை அனுப்பி நடேசுவை ஒருக்கா வீட்டை வரச் சொல்லிவிடு“ எனப் பார்வதியிடம் கூறிவிட்டுச் சென்றாள்.

11.
சின்னத்தங்கம் முற்றத்திலிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்தாள். காலை உணவை முடித்துக்கொண்டு செல்லப்பர் வெளியே சென்றிருந்தார்.
கிணற்றடியில் உடுப்புகளைத் தோய்த்துக் கொண்டிருந்த பார்வதி தனது உடைகளைக் களைந்துவிட்டு, உட்பாவாடையை நெஞ்சுக்கு மேல் குறுக்காகக் கட்டிக்கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளிக் குளிக்கத் தொடங்கினாள்.

இரவு வீசிய பலத்த காற்றினால் ஆடுகால்கள் ஆட்டங்கண்டு துலாவின் அச்சுலக்கை விலகியிருந்தது. அதனால் தண்ணீர் அள்ளும்போது துலா கிணற்றின் நடுப்பகுதியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
பார்வதி மிதிப்பக்கமாகத் துலாக்கொடியை இழுத்து அதனைச் சரிப்படுத்த முயன்றாள். ஆனாலும் அவளால் அது முடியவில்லை. ஒவ்வொரு முறையும் கிணற்றுக்குள் வாளியைத் தாழ்க்கும் போது துலாவின் நுனி கிணற்றின் நடுப்பகுதியை நோக்கி விலகிக் கொண்டே இருந்தது.
முற்றத்திலிருந்தபடியே அதனைக் கவனித்த சின்னத்தங்கம், ”பிள்ளை அச்சுலக்கை விலகிப் போச்சு, கவனமாய் அள்ளு“ எனப் பார்வதியை எச்சரித்தாள்.
”தண்ணீர் அள்ளிறது கஷ்டமாயிருக்கு? ; மாணிக்கம் ;வந்தவுடனை துலாவை அரக்கச் சொல்ல வேணும்“.
”கவனமாய் அள்ளி நாலு வாளியைக் குளிச்சிட்டு வா பிள்ளை“.
”சவுக்காரம் போட்டிட்டன், இன்னும் இரண்டு வாளி அள்ளிக் குளிச்சிட்டு வாறன்“ எனக் கூறிக்கொண்டே மீண்டும் கிணற்றுக்குள் வாளியைத் தாழ்த்தாள் பார்வதி.
இம்முறை சற்று அதிகமாகவே துலா கிணற்றின் நடுப்பகுதிக்கு விலகிச் சென்றது. பார்வதி துலாக் கொடியை வலிந்து இழுத்தாள். அப்போது சவர்க்காரம் படிந்த அவளது கால்கள் கிணற்று மிதியிலிருந்து வழுக்கியது. அதனால் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் துலாக்கொடியைப் பற்றிக்கொண்டு பார்வதி கிணற்றுக்குள் தொங்கினாள். உக்கியிருந்த துலாக்கொடி அவளது பாரத்தைத் தாங்க முடியாது படீரென அறுந்தது. ”ஐயோ அம்மா “ என அலறியபடி அவள் கிணற்றுக்குள் வீழ்ந்தாள்.
துலாவின் அடிப்பகுதி பலத்த சத்தத்துடன் நிலத்திலே மோதியது.
”ஐயோ....... என்ரை ஐயோ.... பிள்ளை கிணற்றுக்கை... விழுந்திட்டாள்....“ என அலறியபடி கிணற்றடியை நோக்கி ஓடினாள் சின்;னத்தங்கம்.
கிணற்றை அவள் எட்டிப் பார்த்தபோது பார்வதி தண்ணீருக்குள் மூழ்கித் திணறிக் கொண்டிருந்தாள்.
”ஐயோ.... என்ரை ஐயோ .... பிள்ளை கிணத்துக்குள்ளை..., ஓடியாருங்கோ ஐயோ...“
சின்னத்தங்கம் பலங்கொண்ட மட்டும் கத்தினாள்.
சின்னத்தங்கம் அலறுவதைக் கேட்ட மாணிக்கமும் பொன்னியும் வேகமாக ஓடி வந்தனர். தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், ஒழுங்கையால் சென்று கொண்டிருந்தவர்களும், சிறிது நேரத்தில் அங்கு வந்து கிணற்றைச் சூழ்ந்துகொண்டார்கள். வெளியே சென்ற செல்லப்பரும் பதறியபடி ஓடிவந்தார்.
கிணற்றில் தண்ணீர் அதிகமாகவே இருந்தது. பார்வதி கிணற்றின் அடியில் அமிழ்ந்துவிட்டாள்.
துலாக் கொடி அறுந்து கிணற்றுக்கள் கிடந்ததால் ஒருவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. சிலர் கயிறு, ஏணி எடுத்து வருவதற்காக அயல் வீடுகளை நோக்கி ஓடினார்கள்.
அப்போது அங்கு ஓடிவந்த மாணிக்கம் ஒரு நொடிப்பொழுதில் நிலைமையை அவதானித்துக்கொண்டான். தாமதித்தால் பார்வதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென அவனது உள்ளம் பதறியது. கிணற்றைச சுற்றி நின்றவர்களைத் தன் இருகைகளாலும் விலக்கித் தள்ளியபடி திடீரெனக் கிணற்றுக்குள் குதித்தான். மறுகணம் தண்ணீரில் சுழியோடி பார்வதியைத் தூக்கி மேல்தளத்துக்குக் கொண்டு வந்தான்.
பார்வதி மயக்கமுற்றிருந்தாள்.
ஏணி, கயிறு எடுக்கச் சென்றவர்கள் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
எல்லோருமாக ஏணியைக் கயிற்;றில் கட்டிக் கிணற்றுக்குள் இறக்கிவிட்டார்கள்.
பார்வதியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்ட மாணிக்கம், ஏணியில் ஒவ்வொரு படியாக ஏறி மெதுவாக வெளியே வந்தான். அவளது உடல் கொடிபோல அவனது தோள்;களிலே துவண்டு கிடந்தது.
அமபலவாணர், சின்னத்தம்பர் முதலியோரும் வாசிக சாலையிலிருந்த வேறு சிலரும் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தனர்.
வெளியே மாணிக்கம் பார்வதியைக் கொண்டு வந்ததும் செல்லப்பர் பதட்டத்துடன் மாணிக்கத்தின் தோள்;களிலிருந்த பார்வதியை இருகைகளாலும் ஏந்திக் கொண்டார். பார்வதியின் மயக்கம் இன்னமும் தெளியவில்லை.
பார்வதி கட்டியிருந்த பாவாடை நனைந்து அவளது உடலோடு ஒட்டியிருந்தது. அதனைக் கவனித்த அங்கிருந்த பெண்கள் சிலர் அவளை உடனே வீட்டினுள் கொண்டு செல்லும்படி செல்லப்பரிடம் கூறினர்.
பார்வதியை வீட்டினுள் தூக்கிச் சென்ற செல்லப்பர் அவளைக் குப்புறக் கிடத்தி, அவள் குடித்திருந்த தண்ணீரை வெளிப்படுத்த முயன்றார். அங்கிருந்த பெண்களும் அவருக்கு உதவி செய்தனர்.
சின்னத்தங்கம் பதறியபடி பார்வதியின் உடையைக் களைந்து, அவளுக்கு மாற்றுடை அணிந்து ஈரத்தைத் துவட்டினாள்.
சிறிது நேரத்திற்குப் பின் பார்வதி முனகியபடி கண்விழித்துப் பார்த்தாள்.
மாணிக்கம் முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். அவனது உடையிலிருந்தும், கலைந்த கேசங்களிலிருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. பார்வதிக்கு ஏதும் நடந்துவிடக் கூடாது என அவனது மனம் பிரார்த்தித்தது.
செல்லப்பர் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்ற அம்பலவாணர் அவரைப் பார்த்து, ”அம்மான், பார்வதிக்கு இன்னும் மயக்கம் தெளியேல்லையோ? நான் போய்க் கார் பிடிச்சுக் கொண்டு வரட்டோ? ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக...“ எனக் கவலையுடன் கேட்டார்.
”இல்லைத் தம்பி.. கார் ஒண்டும் பிடிக்கத் தேவையில்லை. பிள்ளைக்கு இப்ப கொஞ்சம் சுகம்“.
செல்லப்பர் அம்பலவாணிரிடம் கூறிய வார்த்தைகள் மாணிக்கத்துக்குப் பெரும் ஆறுதலை அளித்தது.
கிணற்றடியில் கூடி நின்றவர்க்ள் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினார்கள்.
”வாடா, வந்து உடுப்பைக் மாத்து. நீயும் நல்லாய் விறைச்சுப் போனாய்“ பொன்னி மாணிக்கத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.
அப்போது அங்கு நின்றவர்கள் கதைத்த கதைகள் மாணிக்கத்துக்கு ஆத்திரத்தை ஊட்டியது.
”கிணத்துக்கை விழுந்தவளைத் தூக்க உவன் மாணிக்கனைத் தவிர உங்கை வேறை ஒரு தரும் இல்லையோ....?“
”கொடி பிடிச்சுக் கிணத்திலே தண்ணீர் அள்ளக் கூடாதவன், கிணத்துக்கை குதிச்செல்லோ தூக்கியிருக்கிறான்....“
”நாங்கள் ஏணியைக் கட்டி கிணத்துக்கை இறக்க முன்னம் அந்த கீழ்சாதிக்காரன் குதிச்சிட்டான்..“
”எல்லாம் உவர் செல்லப்பர் குடுத்த இடந்தான்.. அவனை எந்த நேரமும் வீட்டிலை அடுத்து வைச்சிருந்தால், அவனுக்குத் துணிவு வருந்தானே..“
மாணிக்கத்தின் உள்ளத்தில் சொல்லம்புகள் மாறிப்மாறிப் பாய்ந்தன.
”கிணத்துக்குள்ளை விழுந்தவளைக் காப்பாத்த ஒருத்தருக்கும் நெஞ்சுத் துணிவு இல்லை. இப்ப நியாயம் பேசினம்“.
மாணிக்கம் கொதித்தெழுந்தான்.
”டேய், பொத்தடா வாயை... நாங்கள் எங்களுக்குள்ளை கதைச்சால் உனக்கென்னடா...?“ மாணிக்கத்தை முறைத்துப் பார்த்தார் அங்கு நின்ற சின்னத்தம்பர்.
பொன்னி பதட்டத்துடன் ”கமக்காறன், நீங்க போங்கோ... அவன் கிடக்கிறான்...“ எனச் சின்னத்தம்பரைப் பார்த்துக் கூறிவிட்டு, ”வாடா நீ... வீண் கதை கதைக்காதை “ என மாணிக்கத்தைப் பிடித்து இழுத்து கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.
”உவன் வர வர மிஞ்சிக் கொண்டு போறான். உவனை விட்டு வைக்கப்படாது-“ சின்னத்தம்பர் கறுவிக்கொண்டு அந்த இடத்தை விட்டகன்றார்.
அங்கு நடந்த சம்பாஷணைகள் அனைத்தும் செல்லப்பரது காதிலும் விழத்தான் செய்தன.

12.
கிணற்றுக்குள் விழுந்ததில் பார்வதிக்குப் பெரிதாகக் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் கால்கள் இரண்டும் விண்விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்தன? எங்கோ கற்பாறையில் அடிபட்டிருக்க வேண்டும். அவளால் எழுந்து நடமாட முடியவில்லை. படுத்தபடுக்கையாகவே கிடந்தாள். செல்லப்பர் வேலைக்குப் புறப்பட்டபோது சின்னத்தங்கம் அவரைத் தடுத்து, பார்வதிக்கு ஓரளவு குணமாகும்வரை வீட்டிலேயே தங்கும்படி வேண்டிக்கொண்டாள்.
பார்வதி கிணற்றுக்குள் விழுந்த செய்தி அறிந்ததும் செல்லப்பரின் சகோதரி அன்னம்மா அங்கு வந்திருந்தாள். பார்வதியால் எழுந்து நடமாட முடியாததைப் பார்த்ததும் அவள் பகல் வேளைகளில் அங்கு தங்கி சின்னத்தங்கத்துக்கு உதவியாக வீட்டு வேலைகளைக் கவனித்தாள். பார்வதியின் வலியெடுத்த கால்களுக்கு அன்னம்மாதான் ஏதோ கைவைத்தியங்கள் செய்து ஒத்தடமும் கொடுத்தாள்.
இரண்டு நாட்களின் பின்புதான் பார்வதியால் ஓரளவு வெளியே எழுந்து நடமாடக் கூடியதாக இருந்தது.
அன்று பின்னேரம் துரைசிங்கம் முதலாளி செல்லப்பரைத்தேடி வந்தார். சில முக்கியமான விஷயங்களைப் பற்றி அவர் செல்லப்பரோடு பேச வேண்டியிருந்தது. அவர் அங்கு வந்தபோது சின்னத்தங்கம் வீட்டுத் திண்ணையிலிருந்து கிழிந்துபோன பனையோலைப் பெட்டியொன்றைப் "பொத்தி’ க்கொண்டிருந்தாள். செல்லப்பர் அவளோடு கதைத்துக்கொண்டு சார்மனைக் கதிரையில் படுத்திருந்தார்.
அன்னம்மா குசினியிலிருந்து அவர்களுக்கு இரவுச் சாப்பாடு தாயாரித்துக்கொண்டிருந்தாள். பொழுது படுவதற்கு முன்னரே, அவள் தனது வீட்டுக்குப் போக வேண்டியிருந்ததால் அவசர அவசரமாகச் சமையலில் ஈடுபட்டிருந்தாள்.
துரைசிங்கம் முதலாளி அங்குவந்ததும் ”வாருங்கோ அண்ணை“ எனச் செல்லப்பர் அவரை வரவேற்றார்.
சின்னத்தங்கம் எழுந்து உள்ளே சென்று வெத்திலைத் தட்டை
எடுத்துவந்து திண்ணையில் வைத்தாள்.
”நான் உங்காலை சந்திப்பக்கம் போகவேணும். போற வழியிலை இங்கையும் ஒருக்கா எட்டிப்பாத்திட்டுப் போகலாமெண்டு வந்தன்.... எப்பிடி மகள் கிணத்திலை விழுந்ததிலை ஏதேன் அடிகிடி பட்டுப்போச்சோ ....î?“ எனக்கேட்டபடி செல்லப்பருக்குப் பக்கத்திலிருந்த கதிரையில் உடகார்ந்தார் துரைசிங்கம்; முதலாளி.
செல்லப்பர் பதில் கூறுவதற்கு முன் சின்னத்தங்கம் குறுக்கிட்டு, ”அதையேன் கேக்கிறாய் துரைசிங்கண்ணை, கண்ணிலே வந்தது புருவத்தோடை போனமாதிரி ... பிள்ளை அருந்தப்பிலை தப்பிவிட்டாள். இன்னும் கொஞ்சநேரம் தண்ணீருக்கை இருந்திருந்தால் இண்டைக்கு பிள்ளை இங்காலை இல்லை...“ எனக் கூறினாள்.
”காலிலை கொஞ்சம் அடிப்பட்டுப் போச்சு“ என்றார் செல்லப்பர் அவளைத் தொடர்ந்து.
”ஓ.. உங்கடை கிணத்திலை தண்ணீர் கூடத்;தானே... அதுதான் கைகாலுக்குச் சேதமில்லாமல் மகள் தப்பிவிட்டாள்“ எனக் கூறிக்கொண்டே வெற்றிலைத் தட்டைக் கையிலெடுத்தார் துரைசிங்கம் முதலாளி.
”தம்பி வெத்திலையைப் போடாதையுங்கோ... இங்கை நான் தேத்தண்ணி கொண்டுவாறன் “ எனக் கூறிக்கொண்டு அன்னம்மா தேநீருடன் அங்கு வந்தாள்.
அப்போதுதான் அவளைக் கவனித்த துரைசிங்கம் முதலாளி ”இங்கை அன்னம்மா அக்காவும் உதவிக்கு வந்திருக்கிறா... பிறகென்ன“ எனச் சிரித்தப்படி கூறினார்.
தேநீரைத் துரைசிங்கம் முதலாளியின் அருகில் வைத்துவிட்டு அன்னம்மாவும் சின்னத்தங்கத்தின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.
”மச்சாள்தான் எங்களுக்குப் பெரிய உதவி. ... அவ இல்லாட்டில் எங்கடைபாடு பெருங் கஷ்டமாய்ப்போம.; முந்தியைப்போலை இப்ப என்னாலை ஓடியாடி வேலைசெய்யே லாது“ எனக் கூறினாள் சின்னத்தங்கம்.
”உங்களுக்கு இந்த நேரத்திலை செலவுக்கு ஏதும் காசுகீசு தேவையாயிருக்கும் .... இதிலை ஒரு ஐம்;பது ரூபாயிருக்கு... வச்சுக்கொள்ளுங்கோ“ எனக் கூறிக்கொண்டு துரைசிங்கம் முதலாளி ஒரு நோட்டை எடுத்துச் செல்லப்பரிடம் கொடுத்தார்.
”என்னத்துக்கண்ணை இதெல்லாம்“ எனக் கூறிய செல்லப்பர் பணத்தை வாங்கிச் சின்னத்தங்கத்திடம் கொடுத்தார்“.
”செல்லப்பர்,
நான் உன்னோடை ஒரு முக்கியமான விஷயம் கதைக்கத்தான் வந்தனான்“. ”என்னண்ணை அப்பிடியென்ன விஷயம், ...அவசரமாய் எங்கையாலும் லொறிகொண்டு போக வேணுமோ...?“
”சா... அதுக்கில்லை ... உவன் கோவிந்தன்ரை பெடியன் மாணிக்கனுக்கு நீ நல்லாய் இடங் குடுக்கிறாய.; என்னுடைய காதிலும் சிலபல கதையள் விழுகுது. அதைத்தான் உன்னட்டை ஒருக்காய் சொல்லி வைக்கலாமெண்டு வந்தனான்“.
”அப்பிடி நான் என்னண்ணை அவனுக்கு இடங்கொடுக்கிறன்....?
”அவங்களை வைக்க வேண்டிய இடத்திலைதான் வைக்கவேணும் இல்லாட்டில் தலையிலை ஏறிவிடுவங்கள்... அவன் மாணிக்கனுக்கு இந்த வீட்டிலை கூடின உரிமை இருக்கிற படியாலைதான் அவன் ஒரு வேளாளரையும் மதிக்கிறானில்லை“.
”இல்லையண்ணை நான் வெளியிடங்களுக்குப் போகேக்கை அவன்தான் இங்கை இவையளுக்கு உதவியாய் இருக்கிறவன். அதுக்காகத்தான் இங்கை வந்து போறவன்“.
”அதெல்லாஞ்சரி அவன் என்னோடையே றேட்டிலை கொளுவினவன்? நீ என்னட்டை வந்து, வீட்டிலை உதவிக்கு இருக்கிற பெடியன் எண்டு சொன்னபடியாலைதான் நான் அவனை விட்டு வைச்சிருக்கிறன். பிறகு பார்த்தால்;, முந்தநாள் சின்னத்தம்பர் ஆக்களோடும் எதிர்த்துக் கதைச்சானாம்...“
”இல்லை துரைசிங்கண்ணை, பிள்ளை கிணத்துக்கை விழுந்தவுடனை அவன் குதிச்சுத் தூக்கினத்துக்கு உவை நாலஞ்சுபேர் நொட்டையள் சொல்லிச்சினம் ... அதுதான் அவனும் எதிர்துக் கதைச்சுப் போட்டான்“; என்றாள் சின்னத்தங்கம்.
”அது சரி, அந்த இடத்திலே நாலு வேளாளர் இருந்தவைதானே, அவையள் உங்கடை மகளைத் தூக்காமலோ விடப்போயினம் ... எப்பிடியும் தூக்கி இருப்பினந்;தானே. அவன் ஏன் தூக்கினவன்?“
”ஆபத்து நேரத்திலை உதுகளைப் பாக்க முடியுமோ?“ சின்னத்தங்கம் தான் கூறினாள்.
”என்னதான் இருந்தாலும் கொடி பிடிச்சு அள்ளக் கூடாத ஒரு கீழ்சாதிக்கு கிணத்துக்கை குதிக்கிற அளவுக்குத் துணிவு வந்ததுக்குக் காரணம் நீங்கள் குடுத்த இடந்தான்.
ஊரிலை இதைப்பற்றி எக்கச்கமான கதையள் நடக்குது... இப்ப இரண்டு நாளாய் வாசிகசாலையிலும் இதுதான் கதை“.
”என்னண்ணை அப்பிடி என்ன கதைக்கினம்?“ எனக் கேட்டாள் சின்னத்தங்கம் பதட்டமாக.
”என்னட்டையும் வீட்டிலை ஒரு குமர் இருக்கு.. என்ரை வாயாலை நான் எப்பிடி அதுகளைச் சொல்லுறது? எதுக்கும் மாணிக்கனை இனிமேலெண்டாலும் இங்கை வர வேண்டாமெண்டு சொல்லி வைக்கிறதுதான் நல்லது“ என்றார் துரைசிங்கம்; முதலாளி.
அப்போது அன்னம்மா, ”ஊர் வாய்க்கு அவல் கிடைச்சா நல்லா மெல்லத்தான் செய்யும்? இந்த ஊரிலை ஒண்டெண்டால் பத்தெண்டுதான் சொல்லுவினம். அண்டைக்கு மாணிக்கன் குதிச்சுத் தூக்கியிராவிட்டால் இண்டைக்குப் பார்வதியை உயிரோடை பாக்கேலாது. அவன் தூக்கினதாலை இப்பென்ன அவளிலை ஏதோ ஒட்டிப்போச்சோ..“ என்றாள் படபடப்புடன்.
”அதில்லை அக்கா, நாளைக்கு கல்யாணஞ்செய்து வாழ வேண்டிய பிள்ளையைப்பற்றி வீண்கதையள் கிளம்பிறதுக்கு நாங்கள் இடங் குடுக்கப்பிடாது, அவ்வளவுதான் நான் சொல்லுவன்“ என்றார் துரைசிங்கம் முதலாளி.
”தம்பி, அப்பிடியொருத்தரும் அவளுக்கு மாப்பிளை குடுக்காட்டில் நான் குடுப்பன்“ என்றாள் ஆவேசமாக அன்னம்மா.
”அது சரி.. எனக்கு வேலை இருக்கு, நான் போவேணும். பூநகரியிலையிருந்து எரு ஏத்திறதுக்கு முந்தநாளே லொறி அனுப்பிறனெண்டு சொன்னனான். அச்சவாரமும் குடுக்கேல்லை. அதைப்பற்றித்தான் யோசினையாய் இருக்கு“ எனச் செல்லப்பரைப் பார்த்துக் கூறியபடி எழுந்திருந்தார் துரைசிங்கம் முதலாளி.
”அதுக்கேன் அண்ணை யோசிக்கிறாய,; ..? நாளைக்கே நான் போறன்“
எனக் கூறிக்கொண்டே செல்லப்பரும் எழுந்து துரைசிங்கம் முதலாளியை வழியனுப்பி வைத்தார்.
இதுவரை நேரமும் வெளியே நடந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த பார்வதி , கல்லாய் சமைந்திருந்தாள்.

13.
அன்னமார் கோயில் வேள்விக்கு இன்னும் பத்தே நாட்கள்தான் இருந்தன. கோவிந்தனும் அவனது இனத்தவர்களும் வருடாவருடம் வேள்வியை வெகு விமர்சையாகக் கொண்டாடுவார்கள். அன்னமார் அவர்களுடைய குலதெய்வம் அத்தெய்வத்திற்கு கேள்வியன்று பலியிடுவதற்காக ஆடு, கோழி முதலியவற்றை நேர்த்திவைத்து வளர்த்துவருவார்கள். ஊரிலுள்ள வேளாளர்களும் அன்னமாருக்கு நேர்த்திக்கடன் செய்வதுண்டு.
கேள்விக்குரிய ஆயத்தங்களை வெகு மும்முரமாகக் கோவிந்தன் செய்து கொண்டிருந்தான். வழக்கம்போல் இம்முறையும் பாடடுக்கச்சேரி, மேளக்கச்சேரி , சதுர்க்கச்சேரி, வாணவேடிக்கைகள் போன்றவற்றிற்கு ஒழுங்கு; செய்திருந்தான்.
கோவிந்தனது வீட்டிலிருந்து சற்றுத் தூரத்திலேதான் அன்னமார் கோயில் இருக்கிறது. பனை வடலிகள் நிறைந்த சூழலில் நன்றாகப் பருத்து விழுதுகள் விட்ட ஆலமரத்தின் கீழ் அன்னமார் குடிகொண்டிருக்கிறார். கோயிலைச் சுற்றியுளள் பகுதியில் கற்றாழை மரங்களும், நெருஞ்சி முட்புதர்களும் நிறைந்திருக்கும். இப்போது கோயிலைச் சுற்றியுள்ள பகுதியைத் துப்புரவு செய்து வேள்விக்கு வருபவர்கள் தங்குவதற்காக ஒரு தட்டிப் பந்தலும் போட்டிருந்தார்கள்.
வேள்வியன்று எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருப்பதற்குரிய ஒழுங்குகளையும் கோவிந்தன் செய்திருந்தான்.
வழக்கமாக செல்லப்பர், துரைசிங்கம் முதலாளி, சின்னத்தம்பர் முதலியோர்தான் வேள்வியை முகாமைக்கு நின்று நடத்தி வைப்பார்கள். அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்கென கோவிந்தன் போதியளவு சாராயமும் வாங்கியிருந்தான். வேள்விக்கு வருபவர்கள் தங்குவதற்கென கோவிந்தனது வீட்டு வாசலிலும் ஒரு சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது.
வீட்டு முற்றத்திலிருந்த தீட்டுக்கட்டையில் ஆடு பலியிடும் கத்தியை தீட்டிக் கூர்பார்த்துக் கொண்டிருந்தான் கோவிந்தன். சற்று நேரத்திற்கு முன்னர்தான்; அவன் கொல்லன் பட்டறையிலிருந்து அக்கத்தியைத் "தோய்ந்து' வாங்கிவந்திருந்தான்.
வேள்வியன்று, கோவிந்தன் உருக்கொண்டு நேர்த்திக்கடனுக்கு வந்த கிடாய்களை ஒரே வெட்டில் அந்தக் கத்தியாலேதான் வெட்டிச் சாய்ப்பான்.
வீட்டுத் தாழ்வாரத்தில் கட்டியிருந்த கிடாய் ஆட்டுக்கு பிண்ணாக்கை ஊட்டிக் கொண்டிருந்தாள் பொன்னி. அந்தக் கிடாய் நன்றாகப் பருத்துக் கொழுத்து மினுமினுப்புடன் காட்சியளித்தது. கேள்வியன்று பலி கொடுக்கப்படும் முதற்கிடாய் அது.
”மாணிக்கனைக் காணேல்லை, எங்கை போட்டான்?“
தீட்டிய கத்தியை விரலினால் கூர்பார்த்தபடி பொன்னியிடம் கேட்டான் கோவிந்தன்.
”உங்கினைதான் நிண்டவன்? ஒருவேளை கோயிலடிப்பக்கம் போயிருப்பன்“ என்றாள் பொன்னி.
”இந்த முறை கேள்வியைப்பற்றி கமக்காறரவையோடு கதைச்ச பொழுது எல்லோரும் மாணிக்கனைப்; பற்றித்தான் குறை சொன்னவை. வேள்வி முடியுமட்டும் அவனைக் கண்டபடி வெளியிலை விடாதை. கமக்காறவை கறுவிக்கொண்டு திரியினம். தனிக்கையிலை வைச்சு அவனுக்கு அடி உதையிலும் விடுவினம்“.
அப்போது தட்டிப்படலையைத் திறந்துகொண்டு பொன்னியின் கூடப்பிறந்த சகோதரனான குட்டியன் அங்கு வந்தான். அவனது காதிலும் கோவிந்தன் கூறிய வார்த்தைகள் விழுந்தன.
”மச்சான், ...அதைப்பற்றித்தான் உன்னோடை நானும் கதைக்க வேணுமெண்டு வந்தனான்“. எனக் கூறிக்கொண்டே திண்ணையில் அமர்ந்தான் குட்டியன்.
Æ”என்ன குட்டியன் செய்யிறது. நீயும் எல்லா விஷயமும் கேள்விப்பட்டிருப்பாய். அவன் கமக்காறரவையோடை கொழுவிப்போட்டான். வேள்வி முடியுமட்டும் ஒரு கலம்பகமும் இல்லாமலிருந்தால்தான் வேள்வியை ஒழுங்காய் நடத்தலாம்“.
பொன்னி மௌனமாக இருந்தாள். அவளது உள்ளத்தில் சில நாட்களாக இனம்புரியாத பயங்கரம் குடிகொண்டிருந்தது. மாணிக்கத்துக்கு ஏதோ தீங்கு நடக்கப் போகிறதென அவளது உள்ளம் கூறிக்கொண்டேயிருந்தது. அநேகமாக வேள்வியன்று ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் நடக்கலாம். அன்று கமக்காறவை மது போதையில் இருப்பார்கள். சந்தர்ப்பம் வரும்போது ஏதும் தீங்கு செய்து விடுவார்கள் என நினைத்துக் கலங்கிய வண்ணம் இருந்தாள்.
”செல்லப்பர் கமக்காரன் வீட்டுக்கு அடிக்கடி மாணிக்கம் போய்வாறதாலை தான் ஊரிலை வீண் கதையள் கிளம்புது. இப்பிடிப்பட்ட கதையள் வாறது கமக்காறாரவைக்கும் கூடாது? எங்கடை ஆக்களுக்கும் கூடாது. இதனாலை ஏதேன் கரச்சல் வந்தால் அது எல்லோரையுந்தான் பாதிக்கும்“.; எனக் கூறினான் குட்டியன்.
”நான் மாணிக்கனைச் செல்லப்பர் கமக்காறன் வீட்டுப் பக்கம் போக வேண்டாமெண்டு சொல்லிப் போட்டன். இப்ப அவன் அங்கை போறதில்லை“.
”மாணிக்கத்தை எங்கடை கட்டுப்பாட்டுக்குள்ளை கொண்டாறதெண்;டால், சுறுக்காய் அவனுக்குக் கலியாணத்தை முடிச்சு வைக்கிறதுதான் நல்லது. அப்பதான் அவனுக்கு நாலையும் யோசிச்சுப் பார்க்கிற தன்மைவரும்“.
”ஓம் தம்பி .... நீ சொல்லுறது சரி. அவனுக்கு கால்கட்டைப் போட்டால்தான் வீட்டோடை இருப்பன். எங்களுக்கும் உதவியாய்த் தோட்டம் துரவைப் பாப்பன்“; எனப் பொன்னி குட்டியனுக்குச் சார்பாகப் பேசினாள்.
”நீங்கள் இரண்டு பேரும் உதைப்பற்றிச் சொல்லமுன்னமே நான் மனசிலை ஒரு திட்டம் போட்டிட்டன். வேள்வியண்டைக்கே உன்ரை மேள் கண்மணியைக் கொண்டு அவனுக்கு ‘சோறு குடுப்பிச்சு’ப் போடவேணும்“. என்றான் கோவிந்தன்.
”கண்மணியை மாணிக்கத்துக்கு குடுக்கிறதெண்டு தானே முந்தியே நாங்கள் முடிவு செய்திருக்கிறம். ஆனால், திடீரெண்டு எப்பிடி மச்சான் கலியாணம் நடத்திறது? அவள் பெட்டையின்ரை நகையெல்லாம் அடைவிலை கிடக்கு, இந்தப் போகத்துக்கு வெங்காயங் கிண்டி வித்த பிறகுதான் ஏதேன் செய்ய வேணும்“ எனக் கூறினான் குட்டியன்.
”அப்ப சரி குட்டியன், உன்னுடைய வசதியைப்போலை செய்வம் ... இப்ப ஒருக்கா கோயிலடிப்பக்கம் போக வேணும். அங்கை கொஞ்ச Nலையிருக்குது? நீயும் வாவன் இரண்டு பேருமாய்ப்போய் அதைச்செய்வம்“ எனக் கூறிக்கொண்டே எழுந்திருந்த கோவிந்தன், பொன்னியிடம் கத்தியைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.
”நீ போ மச்சான்.. எனக்கு இன்னும் இரண்டு பனை இருக்கு? நேரத்தோடை சீவிப்போட்டு வாறன்“ எனக்கூறிவிட்டு குட்டியனும் புறப்பட்டான்.
மாணிக்கம் அப்போதுதான் வீட்டுக்குத் திரும்பினான். தூரத்தில் வரும்பொழுதே, குட்டியன் வீட்டுக்கு வந்துவிட்டுச் செல்வதை அவன் அவதானித்திருந்தான்.
”என்ன ஆச்சி ... அம்மான் வந்திட்டு போறார். ;என்ன சங்கதி?“ எனத் தாயிடம் கேட்டான் மாணிக்கம்.
”உன்ரை விஷயமாய்த்தான் கொப்புவும் , கொம்மானும் கதைச்சுப் போட்டு போயினம்“.
”அப்பிடி என்ன ஆச்சி என்னைப்பற்றிக் கதைச்சவை?“
”கண்மணியைக் கொண்டு இந்த வேள்வியோடை உனக்குச் ‘சோறு குடுப்பிக்க’வேணுமெண்டு கொம்மான் சொல்லிப்போட்டுபோறார். அவையளும் எத்தனை நாளைக்கு அவளை வீட்டுக்கை வைச்சிருக்கிறது?“
”அது மட்டும் கடைசி வரைக்கும் நடக்காது ஆச்சி“ மாணிக்கத்தின் இந்தப் பதிலை பொன்னி சற்றும் எதிர் பார்க்கவில்லை. திகைத்து நின்றாள்.
”ஆச்சி நீங்கள் எல்லாரும் கமக்காறரவையின்ரை காணியிலை இருந்துகொண்டு அடிமைச் சேவகம் செய்யிறமாதிரி என்னாலை செய்ய முடியாது. எனக்கெண்டு சொந்தத்திலை காணி பூமி தேடிக்கொண்டுதான் நான் கலியாணம் செய்வன்“. மாணிக்கத்தின் கூற்றில் உறுதி தொனித்தது.

14.
பார்வதி மிகவும் சோர்ந்து போயிருந்தாள். அவள் கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்தவர்கள் அவளிடம் வந்து குசலம் விசாரித்துச் சென்றார்கள். ஆனால், மாணிக்கம் அதன்பின் ஒரு நாளாவது தன்னை வந்து பார்க்காதது அவளுக்குப் பெரும் வேதனையாக இருந்தது. எந்த நாளும் தவறாது வீட்டுக்கு வருபவன் ஏன் இப்படித் திடீரென வருவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்?
ஒருவேளை அப்புதான் துரைசிங்கம் முதலாளியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மாணிக்கத்தை வீட்டுப்பக்கம் வரவேண்டாமென கூறியிருப்பாரோ....? இருக்காது, அப்பு ஒரு போதும் நன்றியற்றதனமாக அப்படிக் கூறமாட்டார்.
பல வருடங்களாக நெருங்கிப்பழகிய மாணிக்கத்துக்கு இப்படித் திடீரென வராமல் இருப்பதற்கு எப்படித்தான் மனம் வந்தது? யார் என்ன கூறியிருந்தாலும் ஒருதடவை, ஒரேயொரு தடவையாவது இங்கு வந்து என்னைப் பார்க்கக் கூடாதா?
கிணற்றுக்குள்ளையே என்னைச் சாகவிட்டிருக்கலாம்... என்னைக் காப்பாற்றிவிட்டு ஏன் எனது மனதைச் சித்திரவதைப்படுத்த வேண்டும்? இப்படி வராமல் இருப்பதானால் என்னைக் ;காப்பாற்றாமலே இருந்திருக்கலாம்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியொன்று பார்வதியின் நினைவில் வந்தது.
அவள் அழகான கிளியொன்றை ஆசையோடு வளர்த்துவந்தாள். செல்லப்பர் ஒரு முறை கிளிநொச்சியிலிருந்து திரும்பி வரும்போது அந்தக் கிளியை அவளுக்;காக வாங்கிவந்தார். அவள் அதற்கு உணவு ஊட்டுவாள? அதற்குப் பேசக் கற்றுக்கொடுத்துக் கொஞ்சி விளையாடுவாள்.
மாணிக்கம் அங்கு வரும் வேளைகளில் அது அவனைப் பெயர் சொல்லி அழைக்கும். பார்வதிதான் அதற்கு அவனது பெயரைச் சொல்லிக் கொடுத்தாள்.
மாணிக்கமும் பார்வதியும் கதைத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டால் அந்தக் கிளி "மாணிக்கம் - பார்வதி, மாணிக்கம்-; பார்வதி’ எனக் கத்திக்கொண்டே இருக்கும். அப்போது பார்வதி "சீ வாயை மூடு 'என அதனைப் பொய்க்கோபத்துடன் கடிந்துகொள்வாள். அதற்கு, கிளியும் ‘சீ வாயை மூடு’ எனத் திருப்பிக் கூறும். அதைக் கேட்டு ;மாணிக்கம் வேடிக்கையாகச் சிரிப்பான்.
”சோடியைப் பிரிச்சு இப்படிச் சுதந்திரம் இல்லாமல் கிளியை அடைச்சு வைச்சிருக்கக் கூடாது“ என மாணிக்கம பார்வதியிடம்; அடிக்கடி கூறுவான்.
”அப்படியானால் இந்தக் கிளிக்கு ஒரு சோடியைப் பிடிச்சுத் தாவன்? இரண்டும் சேர்ந்து இருக்கட்டும்' எனப் பார்வதி மாணிக்கத்திடம் வேண்டுவாள்.
ஒரு நாள் மாணிக்கம் அங்கு வந்திருந்த வேளையில் அந்தக் கிளி "மாணிக்கம் ...மாணிக்கம் 'என அழைத்துகொண்டே இருந்தது. கூண்டுக்குள் கையை விட்டு அதனை வெளியே எடுத்து, பட்டுப்போன்ற மிருதுவான இறக்கையை மெதுவாக வருடிக்கொடுத்தான் மாணிக்கம். அப்போது அவன் சற்றேனும் எதிர்பார்க்காத வகையில் அவனது விரல்களை அந்தக் கிளி பலமாக கொத்திக் குதறியது. ‘ஐயோ...' என அவன் கையை உதறியபோது அது சுதந்திரமாக மேல்நோக்கிப் பறந்துவிட்டது. பார்வதிக்கு எப்படிச் சமாதானம் கூறுவதென்றே அவனுக்குப் புரியவில்லை.
அவன் எவ்வளவோ கூறியும் பார்வதியின் மனம் சாந்தமடையவில்லை. வேண்டுமென்றே கிளியைப் பறக்கவிட்டு விட்டதாக அவள் அவனைத் திட்டினாள்? கோபமாக ஏசினாள். வீட்டுக்கு வரவேண்டாமெனவும் கடிந்து கொண்டாள்.
பார்வதியின் ஏச்சுப் பேச்சுக்களைப் பொறுத்துக் கொண்டிருந்த மாணிக்கம், அவள் தன்னை வீட்டுக்கு வரவேண்டாமெனக் கூறியபோது ரோசத்துடன் விருட்டென எழுந்து சென்றுவிட்டான்.
அப்போது பார்வதி மிகவும் கலக்கமடைந்தாள். சற்று அளவுக்கு மீறித் தான் மாணிக்கத்தை ஏசிவிட்டதை உணர்ந்து வருத்தமடைந்தாள்.
மறுநாள் மாணிக்கம் அங்கு வராத போது, இனி ஒரு போதும் மாணிக்கம் வரமாட்டானோ என எண்ணி அவள் ஏங்கினாள்.
ஆனால் அடுத்தநாளே அவள் எதிர்பார்க்காத வேளையில் அவன் அவளிடம் வந்தான்.
"என்ன பார்வதி, என்னோடை கோவமோ?’ மாணிக்கம் அவளிடம் கேட்டான்.
"எனக்கொரு கோவமுமில்லை’ எனக் கூறிப் பார்வதி சிரித்தாள்.
பார்வதியின் சிந்தனை கலைந்தது.
வீட்டுக்கு வரவேண்டாமெனத் தான் கடிந்துகொண்ட போதுகூட, வருவதை நிறுத்திக்கொள்ளாத மாணிக்கத்துக்கு இப்போது மட்டும் இங்கு வராமல் இருப்பதற்கு எப்படி மனம் லந்தது எனப் பார்வதி சிந்தித்துப் பார்த்தாள். கிணற்றுக்குள் விழுந்தபோது மாணிக்கம் எப்படி என்னைத் தூக்கி யிருக்ககூடும? அப்போது நான் உட்பாவாடை மட்டுந்தான் அணிந்திருந் தேன். என்னைக் கட்டி அணைத்துத் தனது தோளில் சாய்த்துக் கொண்டுதான் மாணிக்கம் வெளியே தூக்கி வந்திருக்க வேண்டும். அந்தக் காட்சியை அங்கு நின்ற எல்லோரும்தானே பார்த்திருப்பார்கள். இதை நினைத்தபோது அவளுக்கு வெட்கமாக இருந்தது.
ஊரிலே ஏதேதோ கதைகள் உலாவுவதாகத் துரைசிங்கம் முதலாளி தந்தையிடம் கூறியது அவளுக்கு ஞாபகம் வந்தது. நிச்சயமாகத் தன்னையும் மாணிக்கத்தையும் இணைத்துத்தான் கதைகள் கிளம்பியிருக்கவேண்டுமென்பது பார்வதிக்கு நன்றாகத் தெரிந்தது. அவள் அவனுடன் நெருங்கிப் பழகி இருக்கிறாள். மற்றவர்கள் தயங்கிய போது, அவன் கிணற்றுக்குள் குதித்து அவளைக் காப்பாற்றி இருக்கிறான். பின்பு ஊரிலே கதைகள் கிளம்புவதற்குக் கேட்கவா வேண்டும?
கடந்த சில நாட்களாகக் கோவிந்தன் தான் அவளது மாட்டுக்கு ஓலைவெட்டிக் கொணர்ந்து போட்டுவிட்டுச் சென்றான். கூப்பன் அரிசி வாங்குவதற்கு பொன்னியைத்தான. அனுப்பிவைத்தாள் சின்னத்தங்கம்.
கோவிந்தனோ, பொன்னியோ, மாணிக்கத்தைப்பற்றி அவளிடம் எதுவும் கதைக்கவில்லை. பார்வதிக்கும் அவர்களிடம் மாணிக்கத்தைப்பற்றிக் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. மாணிக்கத்துடன் சேர்ந்து, தான் ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போன்ற உணர்வு அவளது மனதிலே தோன்றியிருந்தது.
வழக்கமாகப் பார்வதி இரவில் சின்னத்தங்கம் படுக்கும் அறையில்தான் நித்திரை செய்வாள். கடந்த இரண்டு நாட்களாக நித்திரையில் அவள் ஏதோ கனவுகண்டு புலம்புவதாகச் சின்னதங்கம் அவளிடம் கூறினாள். அதைக் கேட்டபோது அவளுக்கு மேலும் கலக்கமாக இருந்தது. ஒருவேளை மாணிக்கத்தின் பெயரைச் சொல்லி, தான் ஏதாவது நித்திரையில் உளறிவிட்டால் தாய்கூடத் தன்னைச் சந்தேப்படுவாளே என அவளுக்குப் பயமாக இருந்தது.

15.
வேள்விக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன. கோவிலையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் அலங்கரிப்பதில் மாணிக்கமும் வேறு சிலரும் முனைந்திருந்தனர். சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். கடந்த நான்கைந்து நாட்களாக அவர்கள் கோவிலின் சுற்றாடலிலேதான் தமது நேரத்தைக் கழித்தார்கள். மகிழ்ச்சியோடு ஆடிப்பாடி கூடிநின்று கும்மாளம் அடித்தார்கள். மகிழ்ச்சியோடு ஆடிப்பாடி கூடிநின்று கும்மாளம் அடித்தார்கள். ஆரவாரம் செய்து நிலத்திலே பரவியிருந்த மணலில் உருண்டு புரண்டார்கள்.
கோவிலின் பந்தற்கால்களுக்கு வர்ணக் கடதாசிகளைச் சுற்றி அழகுபடுத்திக் கொண்டிருந்தான் மாணிக்கம். திடீரென அவனது முதுகில் யாரோ அறைந்தார்கள். மாணிக்கம் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தான். அங்கு சிரித்த வண்ணம் அவனது நண்பன் கந்தசாமி நின்றுகொண்டிருந்தான். மாணிக்கத்திற்குத் தனது கண்களையே நம்பமுடியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டோடிய கந்தசாமி, இப்போதுதான் ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறான். கந்தசாமியின் தோற்றம் மாணிக்கத்துக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. புத்தம் புதிய வேட்டி, உயர்ந்தரக சேட், கையில் விலையுயர்ந்த கைக்கடிகாரம், விரலில் பளபளக்கும் தங்கமோதிரம், அலையலையாக வாரிவிடப்பட்ட கிராப்பு, நாலு வருடங்களுக்குள் கந்தசாமியில் எவ்வளவோ மாற்றங்கள்‰
”மாணிக்கம், அப்படி என்னடா பார்க்கிறாய்?“ திகைத்து நின்ற மாணிக்கத்தின் அருகே சென்று அவனது கைகளை அன்புடன் பற்றிக்கொண்டான் கந்தசாமி.
அங்கு நின்ற சிறுவர்கள் ஓடிவந்து கந்தசாமியை வளைத்துக்கொண்டார்கள். சிலர் அவனது உடைகளைத் தொட்டுப் பார்த்தார்கள். கந்தசாமி எல்லோரையும் பார்த்துப் பெருமையுடன் சிரித்தான். அங்கு நின்ற எல்லோருக்குமே அவன் ஒரு புத்தம்புது மனிதனாகக் காட்சியளித்தான்.
”எப்ப மச்சான் வந்தனி?“ -மாணிக்கம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கந்தசாமியிடம் கேட்டான்.
”காலமைதான் வந்தனான். வீட்டிலை சூட்கேஸை வைச்சிட்டு நேரே உன்னட்டைத்தான் வாறன்“.
”வா மச்சான,; ஆறுதலாய் இருந்து கதைப்பம்“ கந்தசாமியைக் கோவிலிலிருந்து சற்றுத் தூரத்திலுள்ள தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றான் மாணிக்கம். நன்பர்கள் இருவரும் அன்போடு அளவளாவினார்கள்.
கந்தசாமி தனது கதையை மாணிகத்திடம் கூறினான்.
யாருக்குமே சொல்லாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்ட கந்தசாமி, நேராக முத்தையன்கட்டுக்குச் சென்றான். முத்தையன்கட்டில் அப்போது போதியளவு கூலிவேலையும, கூலிக்கேற்ற் ஊதியமும் கிடைத்தன. காடாகக் கிடந்த இடமெல்லாம் செல்வம் கொழிக்கும் பூமியாக மாறிக் கொண்டிருந்த நேரமது. அரசாங்கத்தினர் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கினார்கள். தூர்ந்து போயிருந்த குளங்கள் வெட்டப்பட்டு நீர்ப்;பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன . சிலர் தாமாகவே காடுகளில் ஒரு பகுதியைப் பிடித்துத் தமக்குச் சொந்தமாக்கி அதனை விவசாய பூமியாக்கினர். அங்குள்ள சூழ்நிலைகளைப் பாhதத்தும் கந்தசாமியின் இளம் உள்ளத்தில் பலவகையான ஆசைகள் துளிர்த்தெழுந்தன. எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்துத் தனக்கென காணியொன்றை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென அவன் ஆசைப்பட்டான்.
கந்தசாமி ஆவர்த்தோடு கடுமையாக உழைத்தான். மலைநாட்டிலிருந்து அங்கு வந்திருந்த ஒரு குடும்பத்தினரின் நட்பு அவனுக்குக் கிடைத்தது. அந்தக் குடும்பத்தில் செங்கமலம் என்ற இளநங்கையும் அவளது தாய் தந்தையருமாக மூவர் மட்டுமே; இருந்தனர். பல வருடங்களுக்குமுன்பு அங்கு வந்து குடியேறிய அவர்கள்,; கடினமான உழைப்பினால் தமக்கென ஒரு சிறிய வீட்டையும் ஐந்து ஏக்கர் காணியையும் சொந்தமாக்கி வைத்திருந்தனர்.
தனிக்கட்டையாக இருந்த கந்தசாமியின் தொடர்பால் அந்தக் குடும்பத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. அவர்கள் கந்தசாமியைத் தமது குடும்பத்தில் ஒருவனாகக் கருதினர். மகள் செங்கமலத்தின் இதயத்தில் கந்தசாமி சிறிது சிறிதாக இடம் பிடித்துக் கொண்டான். அந்த வருடமே கந்தசாமி அவர்களது நிலத்தில் மிளகாய்க் கன்றுகள் நாட்டினான். கந்தசாமியும் செங்கமலமும் கடினமாக உழைத்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செங்கமலத்தின் தாய் தந்தையர் செய்து கொடுத்தார்கள். அதிஷ்ட தேவதையின் பார்வை அவர்களது பக்கம் திரும்பியது. அந்த வருடத்தில் அவர்களுக்குப் பலமடங்கு இலாபமும் கிடைத்தது.
செங்கமலத்தின் தாய் தங்தையர்; தங்களது சகல சொத்துக்களையும் செங்கமலத்தையும் கந்தசாமியிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.
கந்தசாமிக்கும், செங்கமலத்துக்கும் திருமணம் நடந்த மறுவருடம,; செங்கமலத்தின் தந்தை மலேரியாக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உயிர் துறந்தார். அதனால் கந்தசாமிக்குப் பொறுப்புக்கள் அதிமாகின.
இதுவரை காலமும் தனது தாய் தந்தையும் சகோதரர்களையும் விட்டுப் பிரிந்திருந்த கந்சாமிக்கு அவர்களையும் அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அதனால் அவன் இப்போது ஊருக்கு வந்திருக்கிறான். கந்தசாமியின் கதையைக் கேட்ட மாணிக்கத்தின் மனதில் பலவகையான எண்ணங்கள் எழுந்தன. தானும் கச்தசாமியைப் போல் ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டுமென்ற ஆர்வம் அவனுள் துளிர்த்தது.
”மச்சான் நானும் முத்தையன் கட்டுக்கு வரட்டோ?“
மாணிக்கம் இப்படிக் கேட்டபோது அவனுள் இருந்த ஆசைகளைக் கந்தசாமியால் புரிந்துகொள்ள முடிந்தது. முத்தையன் கட்டிலிருந்த வேளைகளில், கந்தசாமி தனது நன்பன் மாணிக்கத்தைப் பற்றி அடிக்கடி நினைத்துக்கொள்வான். மாணிக்கம் முத்தையன் கட்டுக்கு வந்தால் வாழ்க்கையில் பெரிதும் முன்னேறி விடுவானென அவன் நினைத்திருக்கிறான். இப்போது மாணிக்கமே முத்தையன்கட்டுக்கு வர விரும்பியபோது கந்தசாமிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
”மாணிக்கம், நீ மட்டும் முத்தையன் கட்டுக்கு வந்தால் இரண்டே வருசத்திலை முன்னேறி விடுவாய், அதுக்கு வேண்டிய ஆர்வமும் உழைக்கிற சக்தியும் உனக்கிருக்கு“.
கந்தசாமி கொடுத்த உற்சாகம் மாணிக்கத்துக்கு மேலும் ஆர்வத்தை அதிகமாக்கியது.
கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்ச்சியினால் மாணிக்கம
;மிகவும் விரக்தியடைந்திருந்தான். துரைசிங்கம் முதலாளியும,; சின்னத்தம்பரும் தன்னுடன் தர்க்கித்துக்கொண்டதும,; பார்வதியைக் கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றியதால் ஏற்பட்டிருந்த வீண் கதைகளும் அவனது மனதை அதிகம் பாதித்திருந்தன.
பார்வதியை அவன் சந்திக்கக் கூடானெக் கோவிந்தன் இட்ட கட்டளை அவனது மனதைப் பெரிதும் வேதனைப்படுத்தியது. திடீரெனத் தாய் தந்தையரும் மாமனும் சேர்ந்து தனக்குத் திருமணம் முடித்து வைக்க தீர்மானித்திருப்பதும் அவனது மனதில் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. இவை யாவற்றையும் மாணிக்கம் கந்தசாமியிடம் விபரமாகக் கூறினான்.
”மாணிக்கம,; ஊரிலை நீ வீண் பகையெல்லாம் தேடி வைச்சிருக்கிறாய.; இந்த நிலைமையிலை நீ முன்னேற முடியாது? முன்னேறுவதற்கு இங்கை இருக்கிறவை விடவும் மாட்டினம். நீ என்னோடை முத்தையன் கட்டுக்கு வந்தால் உனக்கு வேண்டிய சகல வசதிகளையும் நான் செய்து தருவன். கமம் செய்யக்; காணிகூட நீ இலேசாய் பெற்றுக் கொள்ளளாம். கொஞ்சக் காலத்திலையே மற்றவர்கள் எல்லாம் மதிக்கக்கூடிய விதத்திலை நீ இந்த ஊருக்கு வரலாம்“.
கந்தசாமி மாணிக்கத்துக்கு ஆர்வமூட்டினான்.
”மச்சான், நான் யோசிச்சுத்தான் இதுக்கு ஒரு முடிவுக்கு வரவேணும். நீ இப்ப என்னோடை கதைச்ச விஷயங்களை அவசரப்பட்டு ஒருத்தரிட்டையும் சொல்லிபோடாதை“ எனச் சிந்தனையுடன் கூறினான் மாணிக்கம்.
”சரி மாணிக்கம,; ஏதோ யோசிச்சு நல்ல முடிவுக்கு வா. நான் வீட்டை போட்டுப் பின்னேரமாய் வந்து உன்னைச் சந்திக்கிறன்“ எனக் கூறிவிட்டுப் புறப்பட்டான் கந்தசாமி.
கந்தசாமி சென்று நேரமாகிய பின்பும் மாணிக்கம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
கடந்த ஆறு நாட்களாக அவன் பார்வதியைச் சந்திக்கவில்லை. பார்வதியுடன் பழகிய காலத்திலிருந்து அவன் ஒருபோதும் இத்தனை நாட்கள் அவளைச் சந்திக்காமல் இருந்ததில்லை. ஒரு நாள் பார்வதியின் வீட்டுக்குச் செல்லாமல் இருந்தால்கூட பார்வதி ஏதாவது காரணத்தை வைத்துக்கொண்டு அவனை வரும்படி சொல்லியனுப்புவாள். இந்தத் தடவையும் அதுபோல அவள் தன்னை அங்கு வரும்படி அழைப்பாள்; எனத்தான் மாணிக்கம் நினைத்திருந்தான். ஆனால், பார்வதிகூடத் தன்னை அழைக்காதது அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் கொடுத்தது.
பார்வதி என்னை அங்கு அழைக்காததற்கு காரணம் என்ன ? ஒரு வேளை கிணற்றுக்குள் விழுந்தபோது அவளது கைகால்கள் பலமாக அடிபட்டு எழுந்து நடமாடமுடியாத நிலையிலே அவள் இருக்கிறாளோ அல்லது தன்னைச் சந்திக்கக் கூடாதென அவளது தாய் தந்தையர்கள் அவளைக் கட்டுப்படுத்தி இருப்பார்களோ?
அவனது தாய் பொன்னி இப்போது செல்லப்பர் வீட்டிற்குச் சென்று அவர்களது வீட்டு வேலைகளைக் கவனித்து வருகிறாள். பார்வதியைப்பற்றித் தாயிடம் கேட்டறிந்து கொள்ளலாமா என அவன் சில வேளைகளில் எண்ணுவான். ஆனாலும் தாய் தன்னைத் தவறாக எண்ணிக் கொள்வாளே என நினைத்து அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வான்.
முத்தையன் கட்டுக்குச் சென்று கந்தசாமியைப் போல் தானும் வாழக்கையில் முன்னேறிவிட வேண்டுமென மாணிக்கம் தீர்மானித்துக் கொண்டான.; இதற்குத் தனது தாய் தந்தையர்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். தாய்தந்தையர்கள் தன்மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள். தன்னைத் தூர இடத்திற்கு அனுப்புவதற்கு அவர்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். இப்போது மாமன் குட்டியனின் மகளைத் தனக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கந்தாமியைப் போல் தானும் ஒருவருக்கும் சொல்லாமல் முத்தையன்கட்டுக்கு போவதுதான் நல்லது என அவனது மனம் சிந்தித்தது. ஆனாலும் தனது முடிவைப் பார்வதியிடம் கூறத்தான் வேண்டுமென அவன் தீர்மானித்துக்கொண்டான.; அவளைச் சந்தித்து தான் முத்தையன்கட்டுக்குப் போகப் போவதைப்பற்றி அவளிடம் கூறாமல் விட்டால், பின்பு அதனை நினைத்து வருந்திக்கொண்டே இருக்க நேரிடம் என அவனது உள்ளம் அஞ்சியது.
‘நான் முத்தையன் கட்டுக்குப் போகப் போவதைப் பற்றிக் கூறியதும் பார்வதி சந்தோஷப்படுவாளா...? இ;ப்போது என்னைச் சந்திக்கக்கூட விரும்பாத பார்வதி, நான் முத்தையன் கட்டுக்குப் போகப்போவதை அறிந்து சந்தோஷமடையத்தான் செய்வாள். நான் முத்தையன்கட்டுக்குச் சென்று விட்டால் என்னையும் பார்தியையும் இணைத்து ஊரிலே பரவியிருக்கும் கதைகள் யாவும் காலப் போக்கில் மறைந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்;. அதனால் பார்வதி நிச்சயமாக நான் ஊரைவிட்டுப் போவதை விரும்பத்தான் செய்வாள’.
‘ஏன் இப்படி எனது நினைவுகள் பார்வதியைப் பற்றியே சுற்றுகின்றன?“ அவளைப் பற்றி நினைப்பதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது? அவளைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?’
‘ஒரு வேளை என்னை அறியாமலே எனது உள்ளம் பார்வதியை விரும்புகிறதா?’ மாணிக்கத்துக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
எப்படியும் பார்வதியைச் சந்தித்து அவளிடம் தனது முடிவைக கூறவேண்டும்; என்ற தீர்மானத்துடன் பர்வதியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் மாணிக்கம்.

16.
விடிந்தால் அன்னமார் கோயில் வேள்வி. முதன்நாள் மாலையிலிருந்தே கோவிந்தனும் அவனது இனத்தவர்களும் கோயிலில் வந்து கூடிவிட்டார்கள். அயற்கிராமங்களில் இருந்தும் பலர் வேள்விக்காக அங்கு வந்திருந்தனர். ஒலிபெருக்கியில் சினிமாப் பாடல்கள் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தன. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் மின்சார வெளிச்சத்தினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரவிரவாக மேளக் கச்சேரிகளும் சதுர்க் கச்சேரிகளும் நடந்துகொண்டிருந்தன.
துரைசிங்கம் முதலாளி, செல்லப்பர், சின்னத்தம்பர் முதலியோர் அங்குமிங்கும் ஓடித்திரிந்து காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சதுர்க் கச்சேரிக்கு வந்தவர்களுக்கும் மேளக் கச்சேரிக்கு வந்தவர்களுக்கும் சின்னத்தம்பர் சோடா, மதுபானம் போன்றவைகளைக் கொடுத்து உபசரித்தார். கச்சேரி நடக்கும்போது ஆரவாரம் செய்த சிறுவர்களை அதட்டியும், அங்கு வந்திருந்தவர்களை சபையில் ஒழுங்காக இருக்கச் செய்தும் துரைசிங்கம் முதலாளியும், செல்லப்பரும் ஒழுங்கை நிலைநாட்டினார்கள்.
கோவிந்தன் வேள்விக்குரிய ஆயத்தங்களையும், மற்றக்காரியங்களையும் கவனித்தான். வேள்வியைச் சிறப்பாக நடத்தி முடித்துவிட வேண்டுமென்பதிலேயே அவன் கருத்தாக இருந்தான்.
”கமக்காறா,; நீங்கள் களைச்சுப் போனியள், வீட்டுப்பக்கம் ஒருக்காய் போட்;டு வாருங்கோ“ எனக்கூறி அடிக்கடி துரைசிங்கம் முதலாளியையும் செல்லப்பரையும் தனது வீட்டுக்கு அனுப்பி அவர்களை ஏற்ற முறையில் கவனிக்க அவன் தவறவில்லை. அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் பொன்னி அவர்களுக்குத் தேவையான மதுவகைகளைக் கொடுத்து உபசரித்தாள்.
பொழுது விடிந்தபோது மேலும் பலர் கோயிலுக்கு வரத் தொடங்கினர். இரவு முழுவதும் கோயிலில் நின்றவர்கள் வேள்வி தொடங்க முதல் தத்தமது வீட்டுக்குச் சென்று திரும்புவதற்காகப் புறப்பட்டனர். துரைசிங்கம் முதலாளியும் தனது காரில் செல்லப்பரைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். போகும் வழியில் செல்லப்பரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வருவதாகக் கூறிச்சென்றார் துரைசிங்கம் முதலாளி.
செல்லப்பர் வீட்டு வாசலை அடைந்த போது, திண்ணையில சின்னத்தங்கம்; தலையில் இரு கைகளையும் வைத்தபடி சோகமே உருவாக இருந்தாள். அவளது தோற்றமும் கண்களிலே வழிந்தோடிய கண்ணீரும் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதைச் செல்லப்பருக்கு உணர்த்தியது. ”ஏனணை, விடிஞ்சதும் விடியாததுமாய் வீட்டு வாசலிலை தலையை விரிச்சுப் போட்டுக்கொண்டு இருக்கிறாய்?“ செல்லப்பர் எரிச்சலுடன் கேட்டார்.
”ஐயோ.... உவள் பிள்ளையைக் காணேல்லை“. சின்னத்தங்கம் இதைக் கூறும்போது பெரும் சோகத்துடன் அழுது புலம்பினாள்.
செல்லபப்ருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
”அவள் உங்கினைதான் எங்கையேன் நிப்பாள்? கொஞ்சம் பேசாமல் இரு“ எனக் கூறிவிட்டு ”பார்வதி ....பார்வதி“ எனச் சற்றுப் பலமான குரலில் கூப்பிட்டார் செல்லப்பர்.
”விடியத் தொடக்கம் கூப்பிடதிலை என்ரை தொண்டைத் தண்ணியும்; வத்திப் போச்சு? வளவு வாய்க்கால் கிணறுகட்டை எல்லாம் தேடிப் பாத்திட்டன். அவளைக்; காணேல்லை“.
செல்லப்பருக்குச் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. இதுவரை காலத்தில் பார்வதி வீட்டைவிட்டுத் தனியாக எந்த இடத்துக்கும் சென்றதில்லை. இப்போது அவள் எங்கே சென்றிருப்பாள் என அவரால் தீர்மானிக்க முடியவில்லை.
”முந்த நாள் மாணிக்கன் இங்கை வந்து அவளோடை தனிய இருந்து கதைச்சுப் போட்டுப் போனவன்? அதிலை இருந்து பிள்ளை ஏதோ யோசினையும் கவலையுமாய் இருந்தவள். அதுதான்... எனக்குச் சந்தேகமாய்க் கிடக்கு. தனது மனதிலே தோன்றியிருந்த சந்தேகத்தைக் கணவனிடம் கூறினாள் சின்னத்தங்கம்.
அதைக் கேட்டபோது செல்லப்பருக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
”மாணிக்கன் வந்து அவளோட என்ன கதைச்சவன்?“
”என்னெண்டு எனக்குத் தெரியேல்லை .... இரண்டு பேரும் கிணத்தடியிலை கதைச்சுக்கொண்டு இருந்தவை. ... மாணிக்கன்; போன பிறகு அவனோடை உனக்கு என்ன ; கதையெண்டு நான் அவளை ஏசினனான். அதிலை இருந்து அவள் ஒரே யோசினையாய் இருந்தவள். ஒழுங்காய்ச் சாப்பிடவும் இல்லை“.
”நீ ஏன் இதுகளை முன்னுக்கு என்னட்டைச் சொல்லேல்லை?“
நீங்கள் எடுத்ததுக்கெல்லாம் எரிஞ்சு விழுவியள?; அதுதான் நான் ஒண்டும் பேசேல்லை“.
”தாயும் மேளுமாய் எல்லாத்தையும் மறைச்சு வைச்சுத்தானே இப்ப இந்த நிலைமை வந்திருக்கு? அவள் எங்கை போனாளோ, என்ன சங்கதியோ“ எனச் செல்லப்பர் சின்னத்தங்கத்தின்மேல் எரிந்து விழுந்தார்.
இரவு முழுவதும் கோயிலடிக்கு மாணிக்கம் வந்ததாகத் தெரியவில்லை. வீட்டிலும்; பொன்னி மட்டுந்தான் இருந்தாள். வேள்வி அமர்க்களத்தில் அவர் மாணிக்கத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை. மாணிகக்த்தைக் காணாததும் அவருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மாணிக்கந்தான் பார்வதியை எங்காவது அழைத்துச் சென்றிருப்பானோ? செல்லப்பர் தலையில் கை வைத்தப்படி திண்ணையில் அமர்ந்து கொண்டார். அவருக்கு என்னசெய்வது என்றே புரிய வில்லை உண்மையிலே பார்வதியை மாணிக்கம் அழைத்துச் சென்றிருந்தால் அதனால் ஏற்படக் கூடிய அவமானத்தை நினைத்தபோது அவர் மனம் வெதும்பியது.
துரைசிங்கம் முதலாளி அவரை அழைத்துச் செல்வதற்காக அங்கே வந்தபோது பார்வதியைக் காணவில்லை என்ற செய்தியையும், மாணிக்கனை ப் பற்றித்; தனது மனதிலே ஏற்பட்டிருந்த சந்தேகத்தையும் அவரிடம் கூறினார் செல்லப்பர். இந்த விசயத்தை துரைசிங்கம் முதலாளியிடம் சொல்லி ஆலோசனை கேட்பதைத் தவிர வேறுவழி எதுவும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.
”இரவு முழுவதும் மாணிக்கம் கோயிலடிப்பக்கம் வருகிறானோ என்டுதான் நான் கவனிச்சுக்கொண்டு இருந்தனான். அவன் அஙகை வரேல்லை. ஏதேன் கரச்சல் வருமெண்டுதான் கோயிலுக்கு வராமல் நிண்டிட்டான் எண்டு நினைச்சுப் பேசாமல் இருந்திட்டன். இப்பதான் தெரியுது, அவன் ஏன் அங்கை வரேல்லையெண்டு. அவ்வளவு துணிவு அவனுக்கு வந்திட்டுதோ .... அவனை உயிரோடை விட்டு வைக்கப்பிடாது“ என ஆத்திரத்துடன் கூறினார் துரைசிங்கம் முதலாளி.
”அண்ணை அவசரப்படாதை.... நல்லாய் விஷயத்தை ஆராய்ஞ்சு அறிய முன்னம் ஒண்டும் செய்யப்பிடாது. பிள்ளை இப்ப எங்கை போட்டாள் எண்டு ஒருக்காய்த் தேடிப் பாப்பம்“
”செல்லப்பா,; உனக்குப் பைத்தியமே... அவள் தனிய வெளிக்கிட்டு எங்கையன் போக முடியுமோ? மாணிக்கன்தான் அவளை எங்கையோ கூட்டிக்கொண்டு போட்டான்... நான் அப்பவே அவனை இங்கை எடுக்க வேண்டாமெண்டும் சொன்னனான். நீதான் அவனை அடி வீட்டுக்குள்ளை அடுத்து வைச்சிருந்தாய். இப்ப அவன் செய்த வேலையைப் பாத்தியே... கடைசியிலை மானம் கெட்டுப் போச்சு. இது உனக்கு மட்டுமில்லைச் செல்லப்பர், இந்த ஊருக்கே மரியாதைக் குறைவு“ என்றார் துரைசிங்கம் முதலாளி.
”துரைசிங்கண்ணை பதட்டப்படாதை. இப்ப என்ன செய்யலாமெண்டு யோசிச்சுச் சொல்லு“ என்றாள் சின்னத்தங்கம் கலையுடன்.
”இதிலை யோசிக்க என்ன இருக்கு, அவன் மாணிக்கனைத் தேடிப் பிடிச்சு நாலு உதை உதைச்சால் எல்லா விஷயமும் வெளியிலை வரும். கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் மாணிக்கம் இருக்கிற இடம் தெரியத்தானே வேணும். அவையள் சொல்லாட்டில், அவங்களை இண்டைக்கு வேள்வி நடத்த விடக்கூடாது. நீ காரிலை ஏறு, அவங்களை ஒருகை பாப்பம் “ துரைசிங்;கம் முதலாளி இப்படிக் கூறியதும் செல்லப்பரின் நிலைமை தர்மசங்கடமாகி விட்டது.
”அண்ணை, இப்ப அங்கை வேள்வியிலை குழப்பம் பண்ணினால் ஊர் முழுதும் கதை பரவிப்போம். இரகசியமாய்த்தான் விசாரிச்சு அறியவேணும் “ எனக் கெஞ்சும் குரலில் கூறினார் செல்லப்பர்.
பார்வதியைக் காணவில்லையே என்ற கவலை துரைசிங்கம் முதலாளிக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவரது பேச்சும் நடப்பும் மாணிக்கத்தைப் பழிவாங்குவதற்குக் கிடைத்து விட்ட சந்தர்ப்பத்தைப்; யபன் படுத்த வேண்டும் என்பதிலேயே இருந்தது.
பார்வதியைக் காணவில்லை என்ற செய்தியை தான் தெரியாத்தனமாக துரைசிங்கம் முதலாளியிடம் கூறிவிட்டேனோ எனச் செல்லப்பர் சிந்தித்துக் குழப்பமடைந்தார்;.
”இனி யோசிச்சுக் கொண்டிருக்கிறதிலை பிரயோசனமில்லை. வேள்வி நடத்திற இடத்துக்குப் போனால் விஷயம் தெரியவரும்“ எனச் செல்லப்பரைத் துரிதப்படுத்தினார் துரைசிங்கம் முதலாளி. செல்லப்பர் தயக்கத்துடன் காரில் ஏறினார்.
துரைசிங்கம் முதலாளியின் கார் உறுமலுடன் புறப்பட்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சின்னத்தங்கத்தின் நெஞ்சு ‘திக் திக்’கென்று அடித்துக்கொண்டது.

17.
அன்னமார் கோயிலில் சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. பலி ஆடுகள் கோயிலின் முன்னால் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்தன. பலிகொடுக்கப்பட்ட ஆடுகளை இறைச்சிக்காக விலைக்கு வாங்க வந்தவர்களும், அவற்றை விலைபேசிக் கொடுப்பதற்காக வந்த சில தரகர்களும் அங்கே காணப்பட்டனர். அவர்களில் பலர் மது போதையுடன்தான் காட்சி அளித்தனர்.
கோயிலின் முன் பக்கத்தில் சிலர் நேர்த்தி வைத்துப் பொங்கிக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடி ஆரவாரித்துக் கொண்டு இருந்தனர். கோயில் வீதியில் மணிக்கடைக்காரரும், மிட்டாய்க்கடைக்காரும் துரிதமாக வியாபாரம் செய்தனர். ஒலி பெருக்கியின் சத்தத்தையும் மீறிக்கொண்டு பறை மேளம் அடிப்பவர்கள் ஒருவித லயத்துடன் உற்சாகமாகத் தமது வாத்தியத்தை முழங்கிக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கென விசேஷமாகப் பூசை செய்ய வந்த பூசாரி பூசைக்குரிய ஆயத்தங்கள் யாவற்றையும் செய்து முடித்துவிட்டு பொங்கல் முடியும்வரை காத்திருந்தார்.
பலி கொடுக்கப்படும் தலைக்கிடாயை கோவிந்தனும் அவனது உறவினர்களும் மேளவாத்தியங்களுடன் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அந்தக் கிடாய் நன்றாகக் கொழுத்துப் பருத்து மினுமினுப்புடன் காணப்பட்டது.
அதற்கு மாலை சூடி, பொட்டுப் போட்டு, பல விதமான அலங்காரங்கள்; செய்திருந்தார்கள். தலைக்கிடாய் கோயிலை வந்தடைந்தும் அங்கு நின்றவர்கள் பலர் அதனைச் சூழ்ந்து நின்று அதன் தோற்றத்தை விமர்சித்தனர்.
பூசைக்குரிய நேரம் வந்ததும் பொங்கியவர்கள் பிரசாதத்தைத் தெய்வத்தின் முன்னால் படைத்தார்கள்;. பூசாரி மந்திர உச்சாடனத்துடன்; பூசையை ஆரம்பித்தார். பறை மேளத்தின் ஒலி பலமாக அதிர்ந்தது. குட்டியன் சேமக்கலத்தை எடுத்து அடிக்கத் தொடங்கினான். ”அன்மாருக்கு அரோகரா, அன்னமாருக்கு அரோகரா“ என அங்கு நின்றவர்கள் பக்தியுடன் தலைமேல் கரம் குவித்து வணங்கினார்கள்.
பறை மேளத்தின் லயமும், சேமக் கலத்தின் நாதமும், மந்திர உச்சாடனமும் , அரோகராச் சத்தமும் கோவிந்தனது உளளத்தில் பக்தி உணர்வை ஏற்படுத்தின. அவனது உடல் அவனை அறியாமலே ஆட்டங்கண்டது. சிறிது நேரத்தில் அவன் உருக்கொண்டு ஆடத் தொடங்கினான். அவனது கரிய பருத்த தேகத்தில் ஆங்காங்கே விபூதிக் குறிகள் பட்டையாகத் தீட்டப்பட்டிருந்தன. அவனது நெற்றியிலே பெரிய சந்தனப் பொட்டும், அதன் நடுவில் குங்குமமும் இடப்பட்டிருந்தன. வேட்டியை மடித்துக் கொடுக்குக் கட்டி அரையிலே ஒரு சிவப்புத் துண்டையும் வரிந்து கட்டியிருந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன. குடுமி அவிழ்ந்து கேசங்கள் கலைந்திருந்தன. பறை மேளம் அடிப்பவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவனது ஆட்டத்துக்கு ஏற்ப தாளத்தை மாற்றி மேளத்தை ஓங்கி ஓங்கி அடித்தார்கள். இப்போது அங்கு நின்ற சிலருக்கும் உரு ஏற்பட்டு அவர்களும் கோவிந்தனோடு சேர்ந்து ஆடத் தொடங்கினார்கள். கோவிந்தன் கையிலிருந்த சங்கை எடுத்து இடையிடையே வாயில் வைத்து ஊதி ஒலியெழுப்பியபடி துள்ளித்துள்ளி உருவாடிக் கொண்டிருந்தான்.
துரைசிங்கம் முதலாளி காரை வேகமாக ஓட்டி வந்து கோயிலின் அருகே நிறுத்தினார். அவர் காரிலிருந்து இறங்கும்போது காரின் கதவைப் பலமாக அறைந்து சாத்திக்கொண்டு இறங்கினார். அவரைத் தொடர்ந்து செல்லப்பரும் காரை விட்டிறங்கினார். அவர்களைக்கண்டதும் அங்கு நின்ற சின்னத்தம்பரும், அம்பலவாணரும் அவர்களிடம் சென்றார்கள்.
”என்னண்ணை இவ்வளவு நேரம் பிந்திவாறியள்? பூசையெல்லாம் முடியப் போகுது“ என சின்னத்தம்பர் துரைசிங்கம் முதலாளியைப் பார்த்துக் கேட்டார்.
”அதெல்லாஞ் சரி, உவன் மாணிக்கன் எங்கை? துரைசிங்கம் முதலாளி கேட்ட தொனியிலிருந்து ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதென அங்கு நின்றவர்கள் ஊகித்துக்கொண்டார்கள்.
”அவனை இந்தப் பக்கம் காணேல்லை. என்ன சங்கதி?“ எனச் சின்னதம்பர் துரைசிங்கம் முதலாளிடம் விசாரித்தார்.

”நான் விஷயத்தைப் பிறகு ஆறுதலாய்ச் சொல்லுறன்.
இப்ப மாணிக்கன் உங்கினை நிற்கிறானோ பாருங்கோ“
அங்கு நின்றவர்களுக்கு அப்போதுதான் மாணிக்கம் அங்கு வரவில்லை என்பது புரிந்தது. மாணிக்கத்தைக் கண்டீர்களா என ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டனர். அங்கே நின்ற எவருமே கோயிலடியில் மாணிக்கத்தைப் பார்த்ததாகக் கூறவில்லை.
வேள்வி அமர்க்களத்தில் யாருமே மாணிக்கத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை . துரைசிங்கம் முதலாளியும் ;செல்லப்பரும் கோயிலுக்கு வரமுன்பு கோவிந்தனது வீட்டுக்குச சென்றுவிட்டுத்தான் வந்தார்கள். அவர்கள் அங்கு சென்ற வேளையில் ஒருவருமே வீட்டில் இருக்கவி;ல்லை. எல்லோரும் கோயிலுக்கு வநதுவிட்டார்கள். ஒருவேளை மாணிக்கமும் பார்வதியும் வீட்டினுள்ளே இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் துரைசிங்கம் முதலாளி வீட்டின் முன் கதவை உதைத்துத் திறந்து உள்ளே சென்று பார்த்து விட்டுத்தான் அங்கிருந்து புறப்பட்டார்.
சின்னத்தம்பர் பொன்னியைத் தனியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தார்.
”எங்கையடி உன்ரை மேன் மாணிக்கன்?“
”அவன் இங்கினேக்கை தான் நிப்பன்“ பொன்னி பயந்தவாறு பதில் சொன்னாள். ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இப்போது இவர்களது கையில் மாணிக்கன் அகப்பட்டால் கொலையும் செய்துவிடுவார்களோ என அவளது மனம் பதறியது.
”அடியே, ஒண்டும் தெரியாத மாதிரி நடிக்காதை. உண்மையைச் சொல்லிப் போடு“. துரைசிங்கம் முதலாளி உறுமினார்.
”அன்னமாராணைச்
சொல்லுறன் கமக்காறன், எனக்குத் தெரியாது. வேள்வி மும்முரத்திலை நாங்கள் அவனை எங்கை எண்டு கவனிக்கேல்லை. இங்கினேக்கைதான் நிப்பன் எண்டு நினைச்சுக் கொண்டு இருந்தனான்“. என நடுங்கியபடி கூறினாள் பொன்னி.
”உவளிட்டை என்ன கே;கிறது , வா துரைசிங்கண்ணை கோவிந்தனை நேரிலை கேப்பம்“ எனச் சின்னத்தம்பர் துரைசிங்கம் முதலாளியை அழைத்துக்கொண்டு கோவிந்தன் நிற்கும் இடத்திற்குச் சென்றார். செல்லப்பரும் அம்பலவாணரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். அங்கு நின்றவர்களில் பலர் வேடிக்கை பார்ப்பதற்காக அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அப்போது கந்தசாமி பொன்னியிடம் ஓடி வந்தான்.
”என்னணை மாமி, உவையள் என்னவாம்?“ என அவளிடம் விசாரித்தான்.
”அவையள் மாணிக்கனை எங்கையெண்டு விசாரிக்கினம்? எங்கையடா மேனை அவன் உன்னோடைதானே இரண்டு நாளாய்க் கூடித்திரிஞ்சவன்“ எனக் கந்தசாமியிடம் கேட்டாள் பொன்னி.
”நானும் அவனைத்தான் தேடிக்கொண்டு திரியிறன் மாமி? அவன் எங்கை போட்டானெண்டு தெரியேல்லை“. எனக் கூறிய கந்தசாமி பொன்னியையும் அழைத்துகொண்டு கோவிந்தன் நிற்கும் இடத்திற்குச் சென்றான்.
கோவிந்தனது உரு உச்ச நிலையை அடைந்திருந்தது. பூசை முடிந்ததும் பலி எடுக்கும் கத்தியைப் பூசாரி அவனது கையில் கொடுத்தார். ஒரு கையில கத்தியுடனும், மறுகையில் சங்குடனும அவன்;; ஆடிக்கொண்டிருந்த விதம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது.
அவனருகே சென்ற துரைசிங்கம் முதலாளி ”கோவிந்தன்‰ எங்கையடா மாணிக்கன்?“ என அதட்டும் குரலில் கேட்டார்.
கோவிந்தனுக்கு சுற்றாடலில் என்ன நடக்கிறது என்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அவன் தொடர்ந்தும் ஆடிக்கொண்டே இருந்தான். அவனருகே செல்வதற்கு எல்லோருக்கும் அச்சமாக இருந்தது.
”கோவிந்தன்‰ டேய் கோவிந்தன்‰ எனத் துரைசிங்கம் முதலாளி பலமாக அழைத்த போதும் அவன் பதிலேதும் கூறவில்லை.
குட்டியன் சேமக் கலத்தைப் பக்கத்தில் நின்ற ஒருவனிடம் கொடுத்து விட்டுத் துரைசிங்கம் முதலாளியின் அருகில் வந்து ,”என்ன கமக்காறன் என்ன சங்கதி ..... இந்த நேரத்திலை ஒரு குழப்பமும் செய்யாதையுங்கோ என்ன விஷயமெண்டாலும் என்னட்டைச் சொல்லுங்கோ நான் கவனிக்கிறன்“ எனப் பணிவான குரலில் கூறினான்.
”வாருங்கோ தனிமையான இடத்துக்கு போய்க் ;கதைப்பம்“; என துரைசிங்கம் முதலாளியைக் கார் நின்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார் செல்லப்பர். குட்டியனும், சின்னத்தம்பரும் , அம்பலவாணரும் அவர்களோடு சென்றார்கள்.
”மாணிக்கன் எங்கை?“
”சத்தியமாய்க் கமக்காறன் எனக்குத் தெரியாது. ஏன் என்ன விஷயம் சொல்லுங்கோ .... “ குட்டியன் பதட்டத்துடன் கேட்டான்.
” செல்லப்பற்றை மேளை இராத்திரித் தொடக்கம் காணேல்லை. மாணிக்கனையும் காணேல்லை. அதுதான் சந்தேகமாய் இருக்கு“ எனத் துரைசிங்கம் முதலாளி கூறினார்.
”அப்பிடியெண்டால், மாணிக்கன்தான் எங்கையாவது கூட்டிக்கொண்டு போயிருப்பன்“ என்றார் சின்னத்தம்பர்.
பறை மேளத்தின் சத்தம்; இப்போது ஓய்ந்திருந்தது. கோவிந்தன் மட்டும் உரு ஆடியபடி சங்கைப் ;பலமாக ஊதிக்கொண்டிருந்தான். போர்க் களத்திலே வெற்றி கண்டவர்கள் சங்கநாதம் ஒலிப்பதுபோல், கோவிந்தன் மீண்டும் மீண்டும் சங்கொலி எழுப்பிக் கொண்டிருந்தான்.
”பூம் .....பூம்...“ என அவன் எழுப்பிய ஒலி விண்ணில் அதிர்ந்தது.
துரைசிங்கம் முதலாளியும், சின்னத்தம்பரும் கூறிய வார்த்தைகள் குட்டியனுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.
”ஐயோ கமக்காறனவை இதைப்பற்றி ஒருத்தருக்கும் சொல்லாதையுங்கோ, வெளியிலை தெரிஞ்சால் இது உங்களுக்குத்தான் மரியாதைக் குறைவு. வெளியூர் ஆக்களும் இங்கை வந்திருக்கினம் . வேள்வி எல்லாம் முடியட்டும் பிறகு பாப்பம்?
இப்ப ஒரு குழப்பமும் செய்யாமல் வீட்டுக்குப் போங்கோ“ என அவர்களைப் பார்த்துக் கைகளைக் கூப்பி மன்றாடினான் குட்டியன்.
அவன் கூறியதில் நியாயம் இருப்பதைச் செல்லப்பரும் அம்பலவாணரும் புரிந்து கொண்டனர்.
”குட்டியன் சொல்லுறதும் சரிதான்? ;இப்ப வாருங்கோ வீட்டைபோய் எல்லாம் யோசிச்சுச் செய்வம்“; என அவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் செல்லப்பர். எல்லோரும் காரில் போய் அமர்ந்து கொண்டார்கள். கார் கோயிலிலிருந்து புறப்பட்டது.

18.
வேள்வி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. சின்னத்தங்கமும,; செல்;லப்பரும் சோகமே உருவாகி இருந்தனர். இரண்டு நாட்களாக அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை. அழுதழுது சின்னத்தங்கத்தின் கண்கள் வீங்கிப்போயிருந்தன.
பார்வதி செய்த செயலை நினைத்தபோது செல்லப்பருக்கு ஒரு புறம் கவலையும், மறுபுறம் அவமானமும் அவரது மனதைப் பெரிதும் வேதனைப்படுத்தின. மாணிக்கமும் பார்வதியும் ஊரில் இல்லையென்ற செய்தி அவர்கள் இருவருஞ் சேர்ந்து ஊரை விட்டு ஓடிவிட்டார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது. துரைசிங்கம் முதலாளியும், அம்பலவாணரும் தமக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் பார்வதியைத் தேடினார்கள். ஆனாலும், எந்தவிதத் தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அம்பலவாணர் சின்னத்தங்கத்திற்கு அடிக்கடி வந்து ஆறுதல் கூறினார். சின்னத்தங்கத்தைத் தேற்றுவது எல்லோருக்குமே பெருஞ் சிரமமாக இருந்தது.
செல்லப்பரின் சகோதரி அன்னம்மா தனது வீட்டிலிருந்து உணவு சமைத்து வந்து செல்லப்பரையும் சின்னத்தங்கத்தையும் சாப்பிடும்படி வற்புறுத்தினாள். உண்மையில் பார்வதி மாணிக்கத்துடன் ஓடிவிட்டாள் என்ற செய்தி அன்னம்மாவையும் பெரிதும் கலக்;கி இருந்தது. பார்வதி இப்படிச் செய்வாளென அவள் ஒரு போதும் எதிர்பார்க்க வில்லை.
அன்று துரைசிங்கம் முதலாளி " மை போட்டுப' பார்ப்பதற்கென ஒரு மாந்திரீகனைச் செல்லப்பர் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் தனது சொந்தச் செலவிலேயே இவற்றையெல்லாம் செய்தார். மாந்திரீகன் மை போட்டுப் பார்ததுவிட்டு ”பிரச்சினைக் குரியவர்கள் பாழும் கிணற்றிலே குதித்துத் தமது உயிரை மாய்த்துக்கொண்டார்கள்“ எனக் கூறினான்.
இதைக் கேட்டதும் சின்னத்தங்கம் ‘ஐயோ' என அழுது புலம்பி மூர்ச்சையாகி விட்டாள். செல்லப்பர் அதிர்ச்சியுடன் ஒன்றுமே பேசமுடியாது தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தார்.
அப்போது அங்கிருந்த அம்பலவாணர் , சின்னத்தங்கத்தின் மூர்ச்சையைத் தெளிவித்து ஆறுதல் கூறினார். மாந்திரீகன் கூறியதைத் துரைசிங்கம் முதலாளியால் நம்ப முடியவில்லை. தற்கொலை செய்வதனால் அவர்கள் ஊரைவிட்டே ஓடியிருக்க வேண்டிய அவசியமில்லை. மாணிக்கன் தற்கொலை செய்யக் கூடியவனும் இல்லை என என அவரது சிந்தனை ஓடியது.
மாந்திரீகனை அனுப்பிவிட்டு துரைசிங்கம் முதலாளியும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அம்பலவாணர், சாத்திரியார் ஒருவரை அழைத்து வந்தார். கண்காணாத இடத்தில் பார்வதியும் மாணிக்கமும் இருப்பதாகவும் , அவர்கள் இருக்குமிடம் வடக்குப் பக்கமாக உள்ளது, எனவும் சாத்தியார் கூறினார். அவர் கூறிய வார்த்தைகள் செல்லப்பருக்கும் சின்னத்தங்கத்துக்கும் சிறிது ஆறுதலை அளித்தன. துரைசிங்கம் முதலாளிக்கு எப்படியாவது மாணிக்கத்தையும் பார்வதியும் தான் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணமாகவே இருந்தது. மாணிக்கத்தையும் பார்வதியையும் தேடிபபிடிப்பதில் தான் அக்கறையாக இருப்பது ஊரிலுள்ளோருக்குத் தெரிந்த பின்பு அவர்களைத் தான் கண்டு பிடிக்காவிட்டால் அது தனது மதிப்புக்கும் செல்வாக்குக்கும் ஏற்படக்கூடிய இழுக்காகுமென அவர் கருதினார்.
கோவிந்தன் பெரிதும் கலக்கமடைந்திருந்தான். பொன்னி ஏந்நேரமும் அழுதவண்ணம் இருந்தாள். இரண்டு நாட்களாகத் தங்களுக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் குட்டியனும் கோவிந்தனும் மாணிக்கத்தைப் பற்றி விசாரித்தார்கள். அவன் வந்தால் உடனே தங்களுக்குத் தகவல் தரும்படி அயற் கிராமத்திலுள்ள தமது இனத்தவர்களிடம்; சொல்லி வைத்தார்கள். மாணிக்கத்தைத் தேடுவதில் கந்தசாமியும் அவர்;களுக்கு ஒத்தாசையாக இருந்தான்.
கோவிந்தனது உறவினர்கள் அடிக்கடி அவனது வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினார்கள். மாணிக்கம் பார்வதியை அழைத்துச் சென்றது தமது சமுதாயத்திற்குக் கிடைத்த ஒரு பெரிய வெற்றியென இளம் சந்;ததியினர் கருதினார்கள். சாதி வெறி பிடித்த வெறியர்களின் முகத்தில் கரி பூசி விட்டதாகத் தங்களுக்குள் பேசி மகிழ்ந்தனர். ஆனால,; வயதானவர்களோ இதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களை எண்ணிப் பயந்தார்கள். கமக்காறர்கள் எல்லோருஞ் சேர்ந்துகொண்டு தங்கள் எல்லோரையுமே குடி எழுப்பி கமம் செய்யும் குத்தகைக் காணிகளையும் மறித்து விடவும் கூடுமெனச் சிந்தித்துக் கலக்கமடைந்தார்கள். துரைசிங்கம் முதலாளி இந்த விஷயத்தில் முழுமூச்சாக நிற்பது அவர்களுக்கு மேலும் அச்சத்தைக் கொடுத்தது.
துரைசிங்கம் முதலாளி, அம்பலவாணர் , சின்னத்தம்பர் முதலியோர் ஒருபுறமாகவும் , கோவிந்தன் குட்டியன் முதலியோர் மறுபுறமாகவும் இரவு பகல் ஓயாது மாணிக்கத்தையும், பார்வதியையும் தேடுவதில் ஈடுபட்டனர்.
கந்தசாமி முத்தையன் கட்டுக்குப் போக வேண்டியிருந்தது. சிறிது நாட்கள் கழித்து மீண்டும் அங்கு வருவதாகக் கூறிவிட்டு அவன் புறப்பட்டான்.
19.
அது ஒரு சிறிய குளம். குளத்தில் சிறிதளவு தண்ணீர்தான் இருந்தது. கரையிலிருந்து சிறிது தூரத்தில் இரண்டு கொக்குகள் ஒன்றையொன்று அணைந்த வண்ணம் நீந்திக் கொண்டிருந்தன. ஒன்று மற்றையதைச் சீண்டிவிட்டு வேகமாக நீந்தக் தொடங்கியது. மற்றது அதைத் துரத்திப் பிடிப்பதற்காகப் பின்தொடர்ந்து வேகமாக நீந்தியது. பின்பு அவையிரண்டும் மேல் எழுந்து பறக்கத் தொடங்கின. சிறிது தூரம் உயரத்தில் பறந்துவிட்டு மீண்டும் குளத்தின் வேறொரு பகுதியில் இறங்கி அந்தக் கொக்குகள் இரண்டும் நீந்தத் தொடங்கின. ஒன்றையொன்;று சீண்டுவதும் பின்னர் துரத்திப பிடிப்பதுமாக அந்தக் காதற் பறவைகள் இரண்டும் களிப்புற்றிருந்தன. குளத்தின் கரையோரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டிருந்த மரக்கிளையொன்றில் அமர்ந்திருந்த பார்வதி, அந்தச் சோடிப்பறவைகளின் விளையாட்டைப் பார்த்து ரசித்த வண்ணம் தன்னை மறந்திருந்தாள்.
அது ஒரு காட்டுப் பிரதேசம். வாழ்நாளில் கண்டிராத பறவைகளையெல்லாம் பார்வதி அங்கு வந்த இரண்டு நாட்களில் கண்டு களித்தாள். எத்தனை எத்தனையோ விதமான புள்ளினங்களின் விதம் விதமான கீதங்களைக் ;கேட்டு மகிழ்ந்;தாள். குரங்குகள் மரங்களில் தாவி ஓடிப்பிடித்து அவளுக்கு வேடிக்கை காட்டின. அவள் அந்தப் பிரதேசத்துக்கு புதியவள் என்பதைப் புரிந்துகொண்டோ என்னவோ குரங்கொன்று அவளிடம் அழகு காட்டிவிட்டு பாய்ந்தோடியது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது பார்வதிக்கு ஒரே வேடிக்கையாக இருந்தது.
கந்தசாமிக்குச் சொந்தமான காணி குளத்தின் அருகேதான் இருந்தது. பார்வதியும், மாணிக்கமும் அங்கு வந்த நேரத்திலிருந்து இயற்கைக் காட்சிகளில் இருவரும் தம்மை மறந்திருந்தனர். கந்தசாமியின் மனைவி செங்கமலத்தைச்; சிறிது நேரத்திலேயே பார்வதிக்கு நன்றாகப் பிடித்துவிட்டது. செங்கமலம் அவர்கள் இருவருக்கும் வேண்டிய எல்லாவசதிகளையும் செய்து கொடுத்தாள். பார்வதியும் மாணிக்கமும் தங்குவதற்கென தனியாக ஓர் அறை ஒதுக்கி கொடுத்தாள்.
மாணிக்கமும், பார்வதியும் யாருக்குமே தெரியாமல் முத்தையன்கட்டுக்கு வந்து சேர்வதற்கு கந்தசாமிதான் எல்லா ஒழுங்குகளையும் செய்து கொடுத்தான். வேள்வி நடப்பதற்கு முதன்நாள் காலையில் அவன் திடீரென முத்தையன்கட்டுக்குப் புறப்பட்டு வந்து வேண்டிய ஒழுங்குகளைச் செய்தபின் மீண்டும் ஊருக்குத் திரும்பினான்.
பார்வதியும், மாணிக்கமும் அங்கு வருவார்கள் என்பதையும் அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் அளிக்குமாறும் அவன் செங்கமலத்திடம் கூறியிருந்தான். அவர்கள் இருவரும் வேள்வியன்று புறப்பட்டு முத்தையன்கட்டுக்கு வந்து சேருவதற்குத்; தனது நம்பிக்கையான நண்பன் ஒருவனின் காரையும் ஒழுங்கு செய்திருந்தான். எல்லாமே அவனது திட்டத்தின்படி ஒழுங்காக நிறைவேறிவிட்டன.
பார்வதியும் மாணிக்கமும் அங்கு வந்த மறுநாளே பக்கத்துக் காணியில் உள்ளவர்கள் அவர்களிடம் வந்து அன்பாகக் கதைத்துவிட்டுச் சென்றார்கள். அங்குள்ளவர்களிடத்தில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்கவில்லை. எல்லோரும் சமமாகப் பழகினார்கள். இவையாவும் பார்வதிக்கும், மாணிக்கத்திற்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தன. சிறையிலிருந்து விடுதலையான கைதி ஒருவன் சுதந்திரமாக வெளியேவரும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியின் மன நிறைவோடு மாணிக்கம் பார்வதியுடன் அந்தப் பிரதேசம் முழுவதும் சுற்றிவந்தான். பாலை மரங்களில் நிறையப பழங்கள் பழுத்திருந்தன. அவற்றைப் பறித்துப் பார்வதிக்குக் கொடுத்துத் தானும் சுவைத்து மகிழ்ந்தான்.
கந்தசாமியின் தோட்டத்திலுள்ள மிளகாய்க் கன்றுகளில் பழங்கள் நிறைந்து எங்கும் செக்கச் செவேரெனக் காட்சி அளித்தன. அவற்றைப் பார்த்தபோது மாணிக்கத்திற்கு ஒரே உற்சாகமாக இருந்தது. அன்று பின்னே ரங்கூட யாரோ வியாபாரி ஒருவன் வந்து செங்கமலத்திடம் மிளகாய் வாங்கிச் சென்றான். இந்த வருடத்தில் எப்படியும் கந்தசாமிக்குப் பத்தாயிரம் ரூபாவுக்கு குறையாத வருமானம் கிடைக்குமென மாணிக்கத்துக்கு மதி;ப்பிடக் கூடியதாக இருந்தது. கந்தசாமியின் காணியில் மேலும் இரண்டு ஏக்கருக்குக் குறையாத நிலம் செய்கை பண்ணப்படாமலே இருந்தது. அதை ஒட்டினாற்போல் இருந்த காட்டுப்பகுதியைத் துப்புரவு செய்து மேலும் நாலைந்து ஏக்கரை விவசாயப் பூமியாக மாற்றக் கூடியதாகவும் இருந்தது.
மாணிக்கத்தைச் செங்கமலம் ”அண்ணை, அண்ணை“ என வாயோயாமல் அழைத்து அவனுடன் கதைத்தாள்.
"அண்ணை, அடுத்த முறைச்செய்யைக்கு சும்மா கிடக்கிற காணியிலை நீங்களும் மிளகாய்க் கண்டுகள் வைச்சியளெண்டால் ஒரு பத்தாயிரத்துக்குப் பிழையில்லை“ என அவள் மாணிக்கத்துக்கு ஆர்வமூட்டினாள்.
வெற்றுநிலமாக இருந்த பகுதியை எவ்வாறு விவசாயக் காணியாக மாற்றவேண்டும் , எந்தப்பகுதியில் மிளகாய்க் கன்றுகள் நாட்டவேண்டும் , எங்கே வாய்க்கால் வெட்டவேண்டும், எங்கே வரம்பு கட்டவேண்டும் என்றெல்லாம் மாணிக்கம் சிந்தித்தான். தனது திட்டங்களை எல்லாம் பார்வதியிடம் கூறினான். அவன் கூறுவதையெல்லாம் பார்வதியும் ஆர்வத்துடன் கேட்டாள். சிலவேளைகளில் மாணிக்கமும் பார்வதியும் செங்கமலத்துக்கு உதவியாகக் கஙந்தசாமியின் தோட்டத்தில் வேலை செய்தார்கள்.
கந்தசாமி வேள்வி முடிந்தவுடன் ஊரிலிருந்து திரும்பி வருவதாக மாணிக்கத்திடம் கூறியிருந்தான். ஆனாலும் அவன் இதுவரை திரும்பி வராதது மாணிக்கத்திற்கு பெரும் யோசனையாக இருந்தது.
பார்வதியும் மாணிக்கமும் ; ஊரைவிட்டு ஓடிவரும்பொழுது கந்தசாமியும் கூடவே வந்தால் ஊரில் இருப்பவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு நேராக முத்தையன்கட்டுக்குத் தேடிவந்துவிடுவார்கள் என்ற காரணத்தினாலேதான் கந்தசாமி ஊரில் தங்கிவிட்டான். அத்தோடு பார்வதியும் மாணிக்கமும் ஊரைவிட்டுப் புறப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நடக்கும் விஷயங்களைக் கந்தசாமி அறிந்து வருவதற்கும் வசதியாக இருக்குமென எண்ணி நண்பர்கள் இருவரும் திட்டமிட்டு, கந்தசாமி மட்டும் ஊரில் தங்கிவிட்;டான்.
மாணிக்கத்துக்கு அடிக்கடி தாய் தந்தையரைப் பற்றிய எண்ணம் மனதில் எழுந்துகொண்டிருந்தது. அவர்கள் தன்னைக் காணாததால் மனந்துடித்துப் போவார்களே என நினைத்து அவன் கவலையடைந்தான். பார்வதியைக் கூட்டிவந்ததால் தனது தாய் தந்தையர்க்கும் இனத்தவருக்கும் கமக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து தீங்கு இழைத்து விடுவார்களோ எனவும் இப்போது மாணிக்கத்தின் மனம் திகிலடைநத்து. கந்தசாமி ஊரிலிருந்து திரும்புவதற்கு கால தாமதம் ஏற்படுவது அவனுக்கு மேலும் அச்சத்தைக் கொடுத்தது.
பார்வதியின் மனதிலும் தனது வீட்டைப்பற்றிய நினைவுகள் அடிக்கடி எழுந்தவண்ணம் இருந்தன. தன்னைக் காணாது தனது தாய் தந்தையர்கள் எவ்வாறெல்லாம் ஏங்குவார்களோஎன அவளது மனம் கவலையடைந்தது. தான் மாணிக்கத்துடன் ஓடிவந்ததனால் தாய்தந்தையரும் இனத்தவர்களும் அவமானமடைந்து என்னவெல்லாம் செய்வார்ளோ என அவள் ஏங்கினாள். தானும் மாணிக்கமும் முத்தையன் கட்டில் இருப்பதை ஊரிலுள்ளவர்கள் அறிந்தால் என்ன நேருமோ என அவளுக்குப் பயமாகவும் இருந்தது. ஆனாலும், தான் மாணிக்கத்துடன் ஓடி வந்தது சரியான முடிவுதான் என அவளது மனம் திடமாக நம்பியது.
முத்தையன்கட்டுக்குப்; புறப்படுவதற்கு முன் கிணற்றடியில் மாணிக்கம் அவளைச் ;சந்தித்போது அவளிடம் தனது தீர்மானத்தைக் கூறிய நிகழ்ச்சி பார்வதியின் நினைவில் வந்தது.
அப்போது அவள் கிணற்றடியில் உடுப்புத் தோய்க்கும் கல்லில் அமர்ந்தவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
அவள் அங்கிருப்பதைக் கண்ட மாணிக்கம் அவளருகில் வந்தான். அவன் தன்னை ;நோக்கி வருவதைப் பார்த்ததும் பார்வதி கோபத்துடன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
"பார்வதி ......'
"...............'
”என்ன என்னோடை கோபமோ?“
”என்ரை கோவம் உ;னனையொண்டும் செய்யாது“
”ஏன் பார்வதி உப்பிடிச் சொல்லுறியள்? ”நான் கிணத்துக்குள்ளையிருந்து உங்களைத் தூக்கினது பிழையெண்டால் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ“
”நான் அதைப்பிழையெண்டு சொல்லேல்லை.. இவ்வளவு காலமும் என்னோடை பழகிப்போட்டுத் திடீரெண்டு ஏன் இங்கை வராமலிருப்பான் ? நான் நாலைஞ்சு நாளாய் நடக்கமுடியாமல் படுத்திருந்தன். ஒரு நாளெண்டாலும் வந்து பாக்க உனக்கு மனம் வரேல்லையோ?“
இப்படிக் கூறும்போது பார்வதியின் கண்கள் கலங்கின. குரலில் சோகத்தின் சாயல் இழையோடியது.
மாணிக்கம் கலகலவெனச் சிரித்தான்.
”இதுக்கேன் இவ்வளவு கோவம்? நீங்கள் என்னை வரச்சொல்லி யாரிட்டையெண்டாலும் சொல்லியனுப்பியிருந்தால் நான் வந்திருப்பன் தானே. உங்களுக்கு என்னை வரச்சொல்லியனுப்ப எண்ணம்; வரேல்லை. பிறகு நான் ஏன் வருவான“.
”அப்படியெல்லாம் சொல்லாதை மாணிக்கம். இவ்வளவு காலமும் நான் வரச்சொல்லியோ நீ இங்கை வந்தனி? இந்த நாலைஞ்சு நாளாய் நீ வருவாயெண்டு எதிர்பார்த்திருந்தன் ... நீ வராததால் என்ரை மனம் எவ்வளவு வேதனைப்பட்டதெண்டு உனக்குத் தெரியுமோ....?
”நான் இங்கை வந்துபோறதாலை வீண் கதையெல்லாம் வருகுது. உங்களுக்கு என்னாலை கெட்ட பெயர் வாறதை நான் விரும்பேல்லை. அதனாலைதான் நான் வராமல் இருந்தனான்“.
”அப்பிடியெண்டால் இப்பவும் வராமல் இருந்திருக்கலாந்தானே“ இப்படிக் கூறிவிட்டுப் பார்வதி முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு விம்மினாள்.
”நான் இனிமேல் இங்கை வரமாட்டன் பார்வதி. இந்த ஊரை விட்டே போகப்போறன். உங்கடை கண்காணாத இடத்திலைபோய் இருக்கப்போறன்.“
”எனக்குக் கெட்டபெயரை ஏற்படுத்திப்போட்டு நீ மட்டும் கண்காணாத இடத்துக்குப்போய் நிம்மதியாய் வாழப்போறியோ?...நீ போறதாலை எனக்கு ஏற்பட்டிக்கிற கெட்;ட பெயர் நீங்கிவிடுமோ?“ இப்படிக் கூறியபோது பார்வதியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
அவளது கண்களிலிருந்து பெருகும் கண்ணீரைத் துடைத்துவிடவேண்டுமென மாணிக்கத்தின் கைகள் துருதுருத்தன. ஆனாலும் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
”என்னுடைய நிலைமையிலை நான இந்த் ஊரைவிட்டு எங்கையாவது போறதுதான் நல்லதுபோலை எனக்குத் தெரியுது“.
”என்னை ஏன் கிணத்துக்கையிருந்து காப்பாத்தினனி மாணிக்கம்..? சாக விட்டிருக்கலாந்தானே... உயிரோடை வைச்சு ஏன் இப்படியெல்லாம் சித்திரவதை செய்யிறாய்?“ வார்த்தைகளை விம்மியபடி கூறினாள் பார்வதி.
”ஏன் இப்படியெல்லாம் பேசிறியள் பார்வதி... நான் இப்ப என்ன செய்யவேணும் சொல்லுங்கோ....“
”நீ போற இடத்துக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போ மாணிக்கம். இனிமேல் ஒரு நிமிசம்கூட உன்னைப் பிரிஞ்சு என்னாலை இந்த ஊரிலை இருக்கேலாது“.
பார்வதி அப்படிக் கூறுவாளென மாணிக்கம் எதிர்பார்க்கவில்லை. அவன் திடுக்கிற்று நின்றான். அவளுக்கு என்ன பதில் கூறுவதென்றே அவனுக்குத் தெரியவில்லை. எல்லாமே ஒரே குழப்பமாக இருந்தது. அவன் மௌனமாக நின்றான்.
”மாணிக்கம் நீ என்னை இங்கை விட்டிட்டுப் போனால் நான் சத்தியமாய் இந்தக் கிணத்துக்கை குதிச்சு உயிரை விட்டிடுவன். என்னையும் நீ எங்கைவேணுமெண்டாலும் கூட்டிக்கொண்டு போ. நான் வரத்;தயாராய் இருக்கிறன“ எனக் கெஞ்சும் குரலில் கூறியபடி எழுந்து மாணிக்கத்தின் கைகளைப்பற்றிக் கொண்டாள்; பார்வதி.
”என்னோடை வாறதுக்கு நீங்கள் தயாராய் இருந்தால்- அதுக்குரிய துணிவு உங்களுக்கிருந்தால் கட்டாயம் நான் உங்களை கூட்டிக்கொண்டு போறன்“ எனக்கூறிய மாணிக்கம் பார்வதியின் பிடியிலிருந்து தன்னை மெதுவாக விலக்கிக் கொண்டான்.
”மாணிக்கம் நீ எப்ப என்னைக் கூப்பிட்டாலும் நான் உன்னோடை வரத்தயாராயிருக்கிறன்“ பார்வதி உறுதியுடன் கூறினாள்.
மாணிக்கம் அவளிடம் தனது திட்டங்கள் யாவற்றையும் விபரமாகக்; கூறினான். நண்பன் கந்தசாமியிடம் கலந்தாலோசித்துவிட்டு அவளை வந்து அழைத்துச் செல்வதாக வாக்களித்தான்.
வேள்விக்கு முதன்நாள் இரவு சின்னத்தங்கம் வீட்டினுள்ளே குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள.; மாணிக்கத்தின் வரவை எதிர்பார்த்துத் திண்ணையில் விழித்திருந்தாள் பார்வதி. நடுச்சாமம் தாண்டியதும் வாக்களித்தபடியே மாணிக்கம் வந்து அவளை அழைத்துச் சென்றான்.
ஒழுங்கை முடக்கில் கந்தசாமியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கார் அவர்களுக்காகக்; காத்திருந்தது. அதில் இருவரும் ஏறிக்கொண்டு முத்தையன்கட்டுக்குப் புறப்பட்டார்கள்.
குளத்தங்கரையில் பறவைகளின் வேடிக்கைகளைப் பார்த்துத் தன்னை மறந்திருந்த பார்வதியின் கண்களைப்; பின்னாலிருந்து யாரோ திடீரெனப் பொத்தினார்கள். அப்படி உரிமையுடன் தனது கண்களைப் பொத்தக் கூடியவர் மாணிக்கமாகத்தான் இருக்கவேண்டும் என்ற துணிவுடன் பலமாக அந்தக் கைகளில் கிள்ளினாள் பார்வதி.
”ஆ...“ எனக் கைகளை இழுத்துக்கொண்டான் மாணிக்கம்.
காரணமின்றி இருவரும் கலகலவெனச் சிரித்தார்கள்;. மாலை மயங்கிய நேரம?; சோடிக்கொக்குகள் இரண்டும் ஒன்றையொன்று சீண்டியபடி இப்போது குளத்தின் நடுப்பகுதியை அடைந்திருந்தன.

20.
"ஊரைவிட்டு ஓடிய காதலர்கள்' என்ற தலைப்பில் அன்றைய தினசரியில் வெளியான செய்தியை சின்னதம்பர் பத்துத் தடவைகளுக்குக் குறையாமல் வாசித்துவிட்டாh.; தனக்குத் தெரிந்தவர்கள் வாசிகசாலைக்கு வரும் போதெல்லாம் அவர் அந்தச் செய்தியை உரக்க வாசித்து விமர்ச்சித்துக்கொண்டிருந்தார். பத்திரிகையில் செய்தி வெளியான சங்கதி அறிந்ததும் அதனை வாசிக்கும் ஆர்வத்துடன் பலர் அங்கு வந்திருந்தனர். வழக்கத்துக்கு மாறாக அன்று காலை வாசிகசாலையில் அதிகமானோர் காணப்பட்டனர். துரைசிங்கம் முதலாளி, அம்பலவாணர் முதலியோரும் ;அங்கு வந்திருந்தார்கள்.
”அண்ணை, பேப்பரிலும் இந்தச் சங்கதி வெளிவந்திட்டுது. அதுவும் முன்பக்கத்திலை கொட்டை எழுத்திலை போட்டிட்டாங்கள.;. இனியென்ன எங்கடை ஊர்மானம் கொடி கட்டிப் பறக்கப்போகுது“ சின்னத்தம்பர் துரைசிங்கம் முதலாளியிடம் இப்படிக் கூறிவிட்டு, ஊர்மானம் போனதில் பெரிதும் கவலைப்படுபவர்போல முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டார்.
”ஓம் சின்னத்தம்பர், ஒரு குடும்பத்திலை நடந்த சங்கதியாலை இப்ப எல்லாருக்குந்தான் மரியாதைக்கேடு, நான் அப்பவே செல்லப்பரிட்டைச் சொன்னனான், மாணிக்கனை வீட்டிலை அடுக்கவேண்டாமெண்டு? அவர் கேட்டால் தானே. இப்ப அவன் பெட்டையையே கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான்“. எனக் கூறியபடி துரைசிங்கம் முதலாளி வாசிகசாலைத் திண்ணையில் அமர்ந்தார்.
”அண்ணை, நீ செல்லப்பரைக் கூட்டிக்கொண்டு உவ்விடம் முழுதும் தேடித் திரிஞ்சாய். அப்பிடி உன்னாலை ஓடிப்போனவையளைக் கண்டுபிடிக்க முடியாமல் போச்சோ?“
”அப்பிடிச் சொல்லாதை சின்னதம்பர். நான் முன்னுக்கு வைச்ச காலை ஒரு நாளும் பின்னுக்கு வைக்கமாட்டன். என்னவிதப்பட்டும் உவன் மாணிக்கனைக் கண்டுபிடிச்சு முதுகுத் தோலை உரிக்காமல் விடமாட்டன்“.
”கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் கொஞ்சமாவது விஷயம் தெரியத்தான் வேணும். அவையளை பிடிச்சு வெருட்டினால் விஷயம் தானே வெளியிலை வரும்“ என்றார் அம்பலவாணர் சிந்தனையுடன்.
”கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் ஒருவேளை இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவையின்ரை ஆக்கள் ஒருதருக்கெண்டாலும் தெரியாமல் போகாது. உவங்கள் ;எல்லாரும் ஒத்து நிண்டு இந்த விஷயத்தை மறைக்கிறாங்கள். “ என்றார் சின்னத்தம்பர்.
”நாங்களும் எங்களுடைய ஒற்றுமையைக் காட்டுறதெண்டால் ஊரிலை இருக்கிற கீழ்ச்சாதிக் குடும்பங்கள் எல்லாத்தையும் குடியெழுப்ப வேணும், அவங்கள் தோட்டம் செய்யிற குத்தகைக் காணியளை மறிக்கவேணும். கள்ளுச் சீவிற பனையளை நிப்பாட்ட வேணும், அப்பதான் அவங்கள் உண்மையைச் சொல்லுவங்கள்“ என்றார் துரைசிங்கம் முதலாளி அகங்காரத்துடன்.
”நீ சொல்லுறதுதான் சரியண்ணை, நாங்கள் இப்பவே வெளிக்கிட்டு, எங்கடை ஆக்கள் எல்லாரிட்டையும் சொல்லி இவங்களுக்குக் குத்தகைக்குக் குடுத்த காணியளை மறிச்சுப்போடவேணும்“ என்றார் சின்னத்தம்பர்.
”இந்த விஷயத்திலை எங்கடை ஒற்றுமையை நாங்கள் காட்ட வேணும்“ என்றார் அம்பலவாணர் உற்சாகமாக.
அப்போது அங்கிருந்த பொன்னம்பல வாத்தியார், ”தம்பியவை, நாலையும் யோசிச்சுச் செய்யுங்கோ.. ஆத்திரத்திலை அறிவை இழக்கப்பிடாது, நீங்கள் இப்பிடிச் செய்யிறதாலை உங்களுக்குத்தான் நட்டம் வரும்“ எனக் கூறினார்.
”ஏன் வாத்தியார் அப்பிடிச் சொல்லுறியள் ? எனக் கேட்டார் சின்னத்தம்பர் சற்றுப்பலமான குரலில்.
”இவங்களோடை பகைத்தால் கூலி வேலைக்கு உங்களுக்கு ஆள் கிடையாது. நீங்கள்தான் பனையிலை ஏறிக்; கள்ளுச் சீவ வேண்டிவரும். உங்கடை தோட்டந்துரவைப் பார்க்கவும் ஆக்கள் இல்லாமல்போம்' என்றார் பொன்னம்பல வாத்தியார் நிதானமாக.
அவர் கூறியதில் அர்த்தம் இருப்பதுபோல் அங்குள்ள பலருக்குத் தெரிந்தது.
”அப்ப வாத்தியார் இவங்கள் எங்கடை பெம்பிளையளைக் கலியாணம் முடிக்க, நாங்கள் விட்டிட்டு இருக்கிறதோ ..?“ என்றார் சின்னத்தம்பர் சற்றுக் கோபமாக.
”இதெல்லாம் சின்னத்தம்பர் காலமாற்றத்திலை நடக்கத்தான் செய்யும். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் எங்கடை நிதானத்தை இழக்கப்பிடாது . தனிப்பட்ட ஒருத்தன்ரை விஷயத்துக்காக ஒரு சமூகத்தைப் பழிவாங்கப்பிடாது“.
”மாஸ்டர் சொல்லிறதும் சரிதான். நாங்கள் அவசரப்பட்டு ஒண்டும் செய்யப்பிடாது “ என்றாh அங்கிருந்த கந்தையா.
”எப்பிடி இருந்தாலும் இதுக்கு ஒரு நடவடிக்கை எடுக்கத்தான் வேணும்“ என்றார் துரைசிங்கம் முதலாளி.
”துரைசிங்கண்ணை, உங்கடை காணியிலைதானே கோவிந்தன் கமம் செய்யிறான். உடனை காணியை மறிச்சுப் போடுங்கோ. பத்துநாள் தவணைக்குள்ளை உண்மை சொல்லாட்டில,; குடியிருக்கிற காணியிலையிருந்து எழுப்பிப் போடுங்கோ. இதுதான் இதுக்குச் சரியான வழி“ என முடிவாகக் கூறினார் சின்னத்தம்பர்.
எல்லோருக்குமே அது சரியான வழியாகத்தான் பட்டது. பொன்னம்பல வாத்தியார் இனி அவர்களோடு பேசுவதில் பிரயோசனமில்லை என நினைத்து மௌனமாக அவ்விடத்தை விட்டகன்றார்.
”சரி இதுவும் நல்ல யோசினைதான் , நான் இப்பவே போய் கோவிந்தனிட்டைச் சொல்லிக் காணியை மறிச்சுப் போடுறன்“ எனக் கூறிக்கொண்டு எழுந்திருந்தார் துரைசிங்கம் முதலாளி.
அவர் அந்த இடத்தைவிட்டு அகன்றதும், சீட்டு விளையாடுவதற்;காக எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொண்டார்கள்.
”என்ன ஐஸே அம்பலவாணர் , நீர் உம்மைப் பார்வதி "லவ்' பண்ணிறதாகச் சொன்னீர், அவள் கீழ்ச்சாதிக் காரனையெல்லோ "லவ்' பண்ணியிருக்கிறாள்' என்றார் சின்னத்தம்பர் கேலியாக.
பக்கத்திலிருந்த கந்தையா, ”அது பார்வதி இவரை லவ் பண்ணேல்லை. இவரல்லோ முன்னுக்கும் பின்னுக்கும் திரிஞ்சவர்“ எனக் கூறினார். அம்பலவாணர் இப்போது சின்னத்தம்பரிடம் வகையாக மாட்டிக்கொண்டார் அங்கிருந்தவர்கள் அவரைக் கேலிசெய்த போது அவருக்குப் பெரும் அவமானமாக இருந்தது. உண்மையில் பார்வதி தன்மேல் அன்பு வைத்திருப்பதாக அவர் நினைத்திருந்தார். அவள் மாணிக்கத்தோடு ஊரைவிட்டே ஓடிவிடுவாளெனஅவர் கனவிலும் கருதியதில்லை.
”காத்திருந்தவன்; பெண்டிலை நேற்று வந்தவன் கொண்டு போன கதை மாதரியெல்லோ முடிஞ்சுபோச்சு ' என்றார் சின்னத்தம்பர் அம்பலவாணரைச் சீண்டிவிடும் எண்ணத்துடன்.
எல்லோரும் பலமாகச் சிரித்தனர்.
”சும்மா விளல்;கதை பேசாதையுங்கோ , உப்பிடி யெண்டால் நான் ‘காட்ஸ்;' விளையாட வரமாட்டான்“ என கையிலிருந்த சீட்டுக்களை நிலத்தில் வீசிவிட்டு கோபமாக எழுந்திருந்தார் அமபலவாணர்.
”ஐஸே, கோவப்படாதையும?; சும்மா விளையாட்டுக்கு தானே... “ எனக்கூறி அம்பலவாணரின் கைகளைப் பிடித்து அமர்த்தி சமாதானம் செய்தார் கந்தையா.
"காட்ஸ்' விளையாட்டு ஆரம்பமாகியது.
21
துரைசிஙகம் முதலாளியின் லொறி பேரிரைச்சலுடன் புழுதியை வாரியிறைத்தபடி ஒழுங்கையில் நெளிந்து வளைந்துகொண்டு கோவிந்தனது குடிசையை நோக்கி விரைந்தது. முதலாளிதான் லொறியை ஓட்டிச்சென்றாh.; செல்லப்பர் இன்னமும் வேலைக்குத் திரும்பவில்லை. அவர் தற்போது இருக்கும் நிலையில் அவரை வேலைக்கு வரும்படி அழைப்பதும் துரைசிங்கம் முதலாளிக்குச் சரியாகப் படவில்லை. இதனால் துரைசிங்கம் முதலாளியினுடைய பல வேலைகள் தடைப்பட்டுக் கிடந்தன. மாணிக்கத்தையும் பார்வதியும் தேடி அலைந்ததில் எவ்வித பலனும் கிடைக்காதும் துரைசிங்கம் முதலாளிக்கு எரிச்லைக் கொடுத்தது. எப்படியும் கோவிந்தனோடு தந்திரமாகக் கதைத்து மாணிக்கம் இருக்கம் இடத்தை அறிந்துவிட வேண்டும் என்பதிலேயே அவரது சிந்தனை முழுவதும் ஓடியது. ஊரில் செய்யும் காரியங்கள் எதுவும் தோல்வியில் முடிந்ததில்லை. ஆனால் ,மாணிக்கத்தைத் தேடுவதில் எடுத்த முயற்சி முடிந்துவிடும் போல் அவருக்குத ;தோன்றியது.
குடிசை வாசலில் லொறி பலத்த சத்தத்துடன் நின்றபோது கோவிந்தனும, பொன்னியும் பதட்டத்துடன் வெளியே வந்தார்கள். துரைசிங்கம் முதலாளி அங்கு வந்ததைப் பார்த்ததும் அவர்களின் பயம் அதிகமாகியது. மாணிக்கம் பார்வதியைக் கூட்டிச் சென்றதால் ஏதோ ஒரு பயங்கரம் நிகழப் போகிறதென்பதை அவர்கள் எந்நேரமும் எதிர்பாhத்;திருந்தார்கள.; துரைசிங்கம் முதலாளி அவர்களைத் தேடி வந்தபோது அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த ;பயங்கர நிகழ்ச்சி ஆரம்பமாவதுபோல் அவர்களுக்குத் தோன்றியது. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் துரைசிங்கம் முதலாளி அவர்களைப் பார்த்துப் புன்சிரிப்பு உதிர்த்தபடி லொறியிலிருந்து இறங்கினார்.
”என்ன கமக்காறன், ஒரு சொல்லுச்சொல்லி அனுப்பியிருந்தால் நான் ஓடியந்திருப்பன்தானே. உங்கட வேலையையும் விட்டிட்டு இவ்வளவு தூரம் ஏன் வந்தியள்? “எனப்; பணிவுடன் கேட்டான் கோவிந்தன்.
”அதுக்கென்ன கோவிந்தன் நான் ஒரு முக்கியமான விஷயமாய்த்தான் உன்னைத்தேடி வந்தனான். இங்கைதான உன்னைத் தனிப்பட்ட முறையிலை சந்திக்கலாம.; என்ரை இடத்திலை நாலு பத்துப் பேர் வருவினம?; எதையும் விபரமாய்க் கதைக்கேலாது“ எனக் கூறியபடி குடிசையை நோக்கி நடந்தார் துரைசிங்கம் முதலாளி. பொன்னியும் கோவிந்தனும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.; வேப்ப மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த வாங்கில் துரைசிங்கம் முதலாளி அமர்ந்துகொண்டார்.
”அப்ப கமக்காறனுக்கு ஏதேன் கொண்டு வரட்டுமா......“ ”உன்ரை புருஷன் கோவிந்தன் வலு சூரன்தான.; எல்லா விஷயத்தையும் கச்சிதமாய் முடிச்சுப் போட்டான“; எனக் கூறி கொடுப்புக்குள் நமுட்டல் சிரிப்புச் சிரித்தார் துரைசிங்கம் ;முதலாளி.
”எதைச் சொல்லுறியள் கமக்காறன்? எனக்கொண்டும் விளங்கேல்லை“ எனக் குழைந்து கொண்டே பிடரியை ஒரு விரலினால் சொறிந்தான் கோவிந்தன்.
”என்ன கோவிந்தன் ஒண்டும் விளங்காத மாதிரி நடிக்கிறாய.; எனக்குக் கயிறு விடாதை.....“
”சத்தியமாய்க் கமக்காறன் நீங்கள் என்ன சொல்லுறியள் எண்டு எனக்கு விளங்கேல்லை , விபரமாக சொல்லுங்கோ.“
”உன்ரை பெடியன் மாணிக்கன்ரை விஷயத்தைப் பற்றித்தான் சொல்லுறன்.“
”அன்னமாருக்கப் பொதுவாயச்; சொல்லுறன், அவன் எங்கை இருக்கிறானெண்டு எங்களுக்குத் தெரியாது கமக்காறன்“; என்றான் கோவிந்தன் பதட்டத்துடன்.
”அவன் போனதிலையிருந்த அடுப்பிலை உலைகூட வைக்கேல்லைக் கமக்காறன், நாங்கள் இந்த ஊரிலை எவ்வளவு மானம் மரியாதையாய் புழங்கினனாங்கள், கடைசியிலை அவன் உந்த வேலை செய்துபோட்டுப் போட்டான்' என்றாள் பொன்னி குமுறலுடன்.
”எனக்கொண்டும் தெயாதெண்டு நீங்கள் நினைக்தையுங்கோ, சகல விஷயமும் தெரியும் மாணிக்கன் எங்கை போனான், எப்பிடிப் போனான் இப்ப எங்கை இருக்கிறான் என்ற விபரம் எல்லாஎனக்குத் தெரியும் எனக்கு நம்பிக்கையான ஒரு ஆள்- அதுவும் உங்கடை ஆள் தான் சொன்னவன். அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்லுறியள் எண்டு கேட்டுப் போட்டுப் போகாத்தான் இப்ப வந்தனான். என்றார் துரைசிங்கம்.
”ஐயோ கமக்காறன் கடவுளுக்குப் பொதுவாய் எங்களுக்குத் தெரியாது அவன் எங்கை இருக்கிறான் எண்டதை நீங்களெண்டாலும் எங்களுக்குச் சொல்லுங்கோ ' என இரண்டு கைகளையும் குவித்துக் கும்பிட்டபடி கெஞ்சும் குரலில் கூறினான் கோவிஙந்தன்.
”டேய் எனக்கேடா விடுகை விடுகிறாய் எல்லோருஞ் சேர்ந்த திட்டம் போட்டு அவனைச் செல்லப்பற்றைச் மகளோடை அனுப்பி வைச்சிட்டு நாடகமோடா நடிக்கிறியள்? கோபத்துடன் வாங்கிலிரந்து எழுந்த துரைசிங்கம் முதலாளி , கோவிந்தன் அரையில் கட்டியிருந்து வேட்டியைத் தனத கையால் பிடித்து உலுக்கியபடி அவனை அடிப்பதற்காக வலது கையை ஓங்கினார்.
கோவிந்தன் இரு கைகளைப் கூப்பியபடி ஐயோ கமக்காறன் சத்தியமாய் எக்கெண்டாந் எனச் சொல்லி நடுங்கினான்.
பொன்னி பெரிதாக ஓலமிட்டு அழுதபடி நில்த்தில் விழுந்து புரண்டு முதுரைசிங்கம் கால்களைக் கட்டிக்கொண்டு ,”ஐயோ கமக்காறன் அவரை அடிக்காதையுங்கோ“ எனத் கதறினாள்.
”இப்பவே போய் அவன் மாணிக்கனை இரண்டு துண்டாய் வெட்டிப்போட்டுத் தான் நான் மற்றவேலை பாக்கிறது“ எனக் கூறிய துரைசிங்கம் முதலாளி கோபாவேசத்துடன் வேட்டியை மடித்துகச் "சண்டிக்கட்டு ' கட்டிக் கொண்டார்.
”கமக்காறன் நாங்கள் மனம் நொந்து போயிருக்கிறன் நேரத்திலை நீங்கள் தான் எங்களுக்கு ஆறுதல் சொல்ல வேணும் நீங்கள் செய்யிறதைச் செய்யுங்கோ என்ரை பிள்ளையை வேணுமெண்டால் துண்டுதுண்டாய் வெட்டிப் போடுங்கோ... அக்கிரமம் கூடினாள் அன்னமார் உங்களைச் சும்மா விடாது எனக் கூறிஒரு பிடி மண்ணைஎடுத்து அன்னமார் கோயில் இருக்கும் திசையை நோக்கி வீசித் திட்டினாள்.
”என்னடி நீ சாபம் போட்டு என்னைப் பயப்பிடுத்தலாம்ட எண்டு நினைக்கிறியோ.... பெரிய பத்தினி ... உந்த வெருட்டுகெல்லாம் நான் பய்பிபடமாட்டன் . என்ரை காணியிலை இருந்துக்கொண்டு எனக்கேடி சாபம் போடுறாய்? என்ரை மண்ணையெடுத்து என்னையெல்லோ திட்டுறாய்... ஒரு கிழககுள்ளை மாணிக்கன் இருக்கிற இடத்தைச் சொல்ல வேணும் இல்லையெண்டால் நீங்கள் என்ரை காணியை விட்டுக் குடி எழும்பிப் போக வேணும் , தோட்டம் செய்யிற காணியையும் விட்டுவிட வேணும் எனக் கூறவிட்டு விருடடென லொறியை நோக்கிச் சென்ற துரைசிங்கம் முதலாளி சாரதியின் ஆசனத்தில் ஏறி அமர்ந்துகொண்டார். கோவிந்தணும் பொன்னியும் திகைத்தப்படி அவரையே பார்த்தக்கொண்டு நின்றார்கள், லொறியை "ஸ்ராட' செய்து கொண்டே கோவிந்தனின் பக்கம் திரும்பி உரத்த குரலில், "டேய் இன்னும் ஒரு கிழமைத் தவனைதான் இருக்கு எண்டதை வேகமாக செலுத்த த் தொடங்கினார்.
லொறி சென்று மறையும் வரை அதனையே பார்த்துக்கொண்டிருந்த கோவிந்தன் ஆத்திரத்துடன் பொன்னியை ஏசினான், ”உன்னாலை தானடி எல்லாம் வாறது கமக்காற னோடை நான் கதைக்கே;கை நீ ஏன் குறுக்கே வந்து கதைச்சனி ? இப்ப கமக்காறன் குடியெழும்ப வேணுமெண்டு நிக்கிறார். இனியென்ன செய்யிறது,?“
”அப்பிடி அவர் எங்களைக் குடி எழுப்பினாள் வேறயாற்றையேன் காணியிலை யெண்டாலும் கெஞ்சி மன்றாடி இருக்கம்தானே.
நீ விசர்க் கதை கதைக்காதையடி உன்ரை மேன் செய்துவிட்ட வேலைக்கு ஒரு கமக்காறரறையும் எங்களுக்குக் காணி தரமாட்னம்“ என எரிந்து விழுந்தான் கோவிந்தன்
பொன்னி மௌனமானாள்.
”தோட்டக் காணியையும் விடச் சொல்லிப்போட்டுப் போட்டார். மிளகாய்க் கண்டுகளெல்லாம் பிஞ்சும் பூவுமாய் நிக்கிதுகள் இந்த நேரத்திலை அவர் காணியைப் பறிச்சால் நாங்கள் பட்;ட கடனை எப்படியடி தீர்க்கிறது ?“ எனக் கூறியபடி தலையில்கை வைத்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்துவிட்டான். கோவிந்தன்.
பொன்னிக்குத் தலையை சுற்றியது.
மாணிக்கத்தைப் பற்றிய கவலையில் மனமுடைந்திருந்த அவளுக்கு இப்போது புதிய கவலைகளும் சேர்ந்துகொண்டன.

22
செங்கமலத்துக்கு உதவியாக மாணிக்கமும் பார்வதியும் மிளகாய்ப் பழங்களைப் பிடுங்கிய பழங்களக் கொட்டிலின் முன் காலையிலிருந்து பிடுங்கிய பழங்களைக் செங்கமலம் குவித்தருந்தள். வேறோரு பகுதியில் முன்னர் பிடுங்கிய பழுங்களைக் காய் விட்டிருந்தாள் , அவற்றையெல்லாம் பார்க்கும் போது பார்வதிக்கும் மாணிக்காத்திற்கும் உற்சாகமாக இருந்தது, ஊரிலே தனது தந்தை கோவிந்தன் செய்கை பண்ணியிருக்கும் மிளகாய்க் கன்றுகளோடு கந்தசாமியின் கன்றுகளைக் அவன் ஒப்பிட்டுப் பார்த்தான் ஊரிலுள்ள கன்றுகளை அதிக பலனை க் கொடுக்கின்றன அதற்குகடகாரணம் அப் பிரதேசத்திலுள்ள மண் வளந்தான் என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது.
ஊரிலே மிளகாய்க் கனக்றுகளை செய்கை பண்ணுவ வதற்க உரத்திற்கும் மருந்து வகைகளுக்கம் அதிக செலவுகள் செய்யவேண்டியிருந்தது. ஆனால் முத்தையன்கட்டில் மண்ணிலே இயற்கையான இருக்கம் பசளையின் காரணமாகச் செலவு குறைவாக இரக்குமென்பதை மாணிக்கம். புரிந்து கொண்டான்.
அடுத்த போகதத்திற்கு நாலாயிரம் மிளாகய்க் கன்றுகளையாவது நடவேண்டுமெனத் தனக்குள்ளேயே திட்டமிட்டான் மாணிக்கம் , கஷ்டப்பட்டு உழைத்துக் கவனமாகக் கமஞ்செய்தால் பத்தாயிருத்துக்குக் குறையாத இலாபத்தை நிச்சயம் பெற்றுவிடலாம் .செலவுக்க வேண்டிய பணத்தை நன்பன் கந்தசாமி கொடுத்து உதவுவான் மண்ணிலே இட்ட பணம் ஒரு நாளும் வீண்போகாது ஒரு நல்ல நிலை ஏற்பட்டதும் முதல் வேலையாக தனது தாய'; தந்தையரை முத்தையன்கட்டுக்குப் அழைத்து வரவேண்டும் சீர் கெட்டுப் போயிருக்கம் சமுதாய அமைப்பிலிருந்து தாய் தந்தையரை விடுவிக்க வேண்டும் அவர்கள் தங்களது இறுதிக் கால்த்திலேயாவது சுதந்திரமாக இருக்க வேண்டும'; என்றெல்லாம் அவன்மனதிலே எண்ணிக்கொண்டான்.
ஊரிலிருந்து அப்போதுதான் கந்தசாமி அங்கு வந்து சேர்ந்தான் அவனைக் கண்டதும் பார்வதியும்செங்கமலமும் அவனைக் சூழ்ந்துகொண்டார்கள்.
”பிரச்சினை ஒண்டும் இல்லை எல்லாம் நல்லபடியாய்த் தான் நடந்து முடிஞ்சிருக்கு என்றான் கந்தசாமி சிரித்த படி,
”கமக்காறரவை எங்கடை ஆக்களுக்கு ஏதேன் கரச்சல் கொடுத்தவையோ உள்ளதைச் சொல்லு மச்சான் 'எனக் கேட்டான் மாணிக்கம்,
”அங்கை ஒரு கரச்சலும் இல்லை அவையள் இரண்டு நாளாயக் காரிலை ஓடியாடித் திரிஞ்சினம் இப்ப எல்லோருக்கும் அலுத்துப் போய் அவரவரே பேசாமல் இருக்கினம்.“
பார்வதி இடைமறித்து எங்கடை வீட்டிலை அப்புவும் அம்மாவும் எப்பிடி இரக்கினம் ? அம்மாவுக:க ஏதேன் வருத்தம் வந்ததோ ?“ என ஆவலுடன் கேட்டள்.
”நான் இங்கை வாறதுக்கு முன்னுக்கும் உங்கடை வீட்டை போய்க் கதைச்சுப் போட்டுத்தான் வந்தனான். உங்கடை அன்னம்மா மாமிதான் அவையளுக்கு உதவியாய் இருக்கிறா நான் போன நேரத்திலை உங்கடை அப்பு வீட்டிலை இல்லை.... வேலைக்குப் போட்டார். உங்கடை அம்மாதான் நடந்து முடிஞ்ச காரியத்துக்கு இனியென்ன செய்யிறதெண்டு சொன்னவ.“
கந்தசாமி கூறிய வார்த்தைக்ள் எவற்றையுமே மாணிக்கம் நம்பவி;லலை. பார்வதியும் தானும் மன அமைதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகக் கந்தசாமி பொய் சொல்லுகிறான். என அவன் நினைத்துக்கொண்டான் ஆனாலும் பார்வதியின் முன்னால் எதையுமே விபரமாக கேட்க கூடாதென எண்ணி அவன் மௌனமானான்.
செங்கமலம் தேநீர் தயாரிப்பதற்காக வீட்டினுள்ளே செ;னறாள் அவளைத்தொடர்ந்து பார்வதியும் சென்றாள்.
”என்ன மாணிக்கம் சோர்ந்து போயிருக்கிறாய் ? புது மாப்பிள்ளை சந்தோஷமாயெல்லோ இருக்கவேணும் எனக் 4றிக் கொண்டே மாணிக்கத்தின் முதுகில் விளையாட்டாகத் தட்டினான் கந்தசாமி.
”நான் சந்தோஷமாய்த்தான் இருக்கிறன் “ எனச் சிரிப்பைவரவழைத்துக்கொண்டு கூறினான் மாணிக்கம்.
”மாணிக்கம் , உனக்கும் பார்வதிக்கும் இங்கை ஒரு குறையும் இருக்கப்பிடாது என்ன வேணுமெண்டாலும் என்னட்டைத் தயக்கமில்லாமல் சொல்லு,“
”இங்கை எங்களுக்கு ஒரு குறையுமில்லை மச்சான் “ மாணிக்கம் அன்புடன் கந்தசாமியிடம் கைகளைப் பற்றிய வண்ணம் கூறினான்.
அப்போது படலை பக்கம் ஒரு கார் வந்து நிற்கும் சத்தங் கேட்டது காரிவலிருந்து மூவர் இறங்கிக் கந்தசாமியிடம் வந்தார்கள்.
”மிளகாய்ச் செத்தல் இருக்கோ கந்தசாமி.... “ வந்தவர்களில் ஒருவன் கேட்டான்.
”ஓ..... இருக்குத்தான்.... இப்ப என்ன விலை நடக்குது?“
”நல்ல காஞ்ச செத்தலெண்டால் பத்து ரூபாய்க்கு எடுப்பம்.“
ஏனண்ணை .... கொழும்பிலை இப்ப பதின்னாலு பதினைஞ்ச்சு , நடக்குதுதாம் . நீங்கள் ஆகக் குறைச்சப் கேக்றியள்“ என்றான் கந்தசாமி .
”போன கிழமைதான் அந்த விலை இப்ப விழுந்து போச்சு நொச்சிகாமம் செத்தலும் கொழும்புக்குப் போகுதாம்.“
”அண்ணைபதினெரு ரூபாயெண்டாலும் போடுங்கோஎன்னட்டை நாலு அந்தர் மட்டிலை இருக்கு.“
”தம்பி எங்களுக்கு கட்டாது பத்தரையெண்டால் சொல்ல முழுக்க எடுக்கிறம்.“
அவர்களது சம்பாஷனையிலிருந்து வந்தவர்கள் மிளகாய் வியாபாரிகள் என்பதை மாணிக்கம் புரிந்துகொண்டான் அப்போதுசெங்கமலமும் பார்வதியும் வந்தார்கள்.
கையிலே தராசுடன் நின்றவன் பார்வதியை உற்று நோக்கினான் பார்வதியும் அவனைப் பார்த்தாள், முன்னர் எங்கையோ அவனைப் பார்த்து அவளுக்கு நினைவில் வந்தது. ஆனால் எங்கே எப்போது பார்த்திருக்கக் கூடுமென்பதை அவளாள் நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை பார்வதி மீண்டும் மெதுவாக வீட்டினுள்ளே சென்று விட்டாள்,
வந்தவர்கள் மிளகாயை விலைக்குப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அவர்கள் போன பின் கந்தசாமியும் மாணிக்கமும் வெளியேயிருந்து தேநீர் அருந்திய படி எதைப்பற்றியோ கதைத்துக்கொண்டிருந்தார்கள்.
செங்கமலம் சமையல் செய்வதில் ஈடுபட்டிருந்தாள். பார்வதி மட்டும் தனியாக ஓர் அறையிலிருந்து ஆழ்ந்துயோசித்து கொண்டிருந்தாள்.

23
லொறியின் கீழே படுத்திருந்து அதன் இயந்திரத்தைப் போட்டு குடைந்து கொண்டிருந்தார் துரைசிங்கம் முதலாளி, காலையில் எழுந்ததிருந்து ஒரு மணி நேரமாக இயநிதிரத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறைக் கண்டு பிடிப்பதி;ல முனைந்திருந்த போதும். அதனை அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. வழக்கமாக லொறியில் ஏதாவது சிறிய பிழைகள் ஏற்பட்டால் அதனைச் சரி படுத்தி விடுவார். இப்போது செல்லப்பர் வேலைக்குவராதினால் துரைசிங்கம் முதலாளிக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டு இருந்தன அவரது வேலைகள் பல தடைப்படடு வருவாயும் குறைந்து போயிருந்தன.
செல்லப்பர் அவரிடம் வேலைக்குச் சேருவதற்கு முன்புபலர் அவரிடம் லொறிச் சாரதியாக வேலை பாhத்திருக்கிறார்கள். ஆனாலும் ஒருவராது அந்த வேளையில் நிரந்தரமாக நின்று பிடிக்கவில்லை. உண்மையில் துரைசிங்கம் முதலாளியிடம் வேலை செய்வது மிகவும் சிரமான காரியம் அவரிடம் லொறிச் சாரதிகளாக இருப்பவர்கள் அவருக்குப் பல வேளைகளில் ஒத்தாசை புரிய வேண்டும் ஊரில் அவர் செய்யும் சண்டித்தனஙக்ளுக்கும் அட்டகாச செயல்களுக்கும் லொறிச் சாரதியும் உடந்தையாக இருக்க வேண்டுமென அவர் எதிர்பார்ப்பார் அவருக்க இருக்கும் எதிரிகள் யாவரோடும் லொறிச் சாரதியும் எதிரியாக இருக்கவேண்டும் அவர் யாரையாவது அடித்துவிட்டுவரும்படி கூறினால் அதனைக் தட்டாது சிரமேற் கொண்டு சாரதி அதனைச் செய்து விட்டுவர வேண்டும்.
முன்பு ஒரதடவை சினிமா பார்த்து விட்டு சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த தனது எதிரியை அப்போது தன்னிடம் வேலை செய்த லொறி ச் சாரதியைக் கொண்டு லொறினால் மோதவைத்து ஸ்தலத்திலே மரணமயைச்செய்த சங்கதி ஊருக்குள் பிரபலமடைந்த பரமரகசியம் அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் ஏகப்பட்ட செலவு ஏற்பட்டுத்தனக்குச் சொந்தமான காணிகள் சிலவற்றை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் பலருக்கத் தெரியும்.
இப்படியான காரணங்களாலே தான் துரைசிங்கம் முதல்hளிடம் வேலைக்கு வருவதற்கு பயப்படுகிறார்கள்.
செல்லப்பரைப் பொறுத்த வரையில் முன்பு முதலாளியிடம் வேலை செய்த எவருக்குமே இல்லாத சலுகைகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. அதற்குக் காரணம் ஆரம்ப காலத்தில் செல்லப்பர்தான் துரைசிங்கம் முதலாளிக்கு லொறி ஓட்டுவதற்கு க் கற்றுக் கொடுத்தவர் அத்தோடு இருவுரும் வெகுகாலமாக அந்நியோன்னியமாகப் பழுகுகிறார்கள்.
செல்லப்பரின் வயது காரணமாக முதலாளி அவரைத் தனது சண்டித்தன வேலைகளுக்குப் பயன்படுத்தும் மிகவும் குறைவு அதனாலேதான் செல்லப்பர் சில் வருடங்களாகத் துரைசிங்கம் முதலாளியிடம் லொறிச் சாரதியாக நின்று பிடிக்கிறார். செல்லப்பரை விட்டால் வேறு ஒரு வரும் தன்னிடம் சாரதியாக நின்று பிடிக்கமாட்டார்கள் என்பதும் துரைசிங்கம் முதலாளழக்கு தெரியும்.
இரண்டு மூன்று நாட்களாக துரைசிங்கம் முதலாளியின் மனதைப் பல விஷயங்கள் குடைந்து கொண்டிருந்தன அவரது மகளுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன சீதனம் கொடுப்பதற்கும் ஊருக்கு சொல்லித் தனது பவிசு குறையாமல் கலியாணத்தை நடத்தி வைப்பத்ற்கும் அவருக்குப் பெருந்தொகையான பணம் தேவைப்பட்டது.
அந்தப் பணத்தைப் பெறுவதற்கு அவர் தனது காணியையோ காரையோ அல்லது லொறியோ விற்கவேண்டும் வேறு எந்த வழியும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. அவர் தனது பரம்பரைச் சொத்;தாக இருந்த பல காணிகளை விற்று விட்டார் தற்போது கோவிந்தன் குhயிருக்கும் காணியும்,தோட்டஞ் செய்யும் பகுதியும், அன்னமார் கோயிலிருக்கம் காணியும் அவரது வீடுவளவும் மட்டுமே மீயாக இருக்கிறது.
துரைசிங்கம் முதலாளியின் மனைவி இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன அவரது மனைவி இரக்கும் வரை தனக்குச் சொந்தமான ஒரு காணியையாவது துரைசிங்கம் முதலாளியால் விற்க முடியவில்லை. காணி விற்பதைப் பற்றிக் கதைத்தாலே அவள் பெரிதாக அவரிடம் சண்டை பிடித்துத் தடுத்து விடுவாள் .அவள் இறந்திருந்து அவர் செய்யும் எங்தக் காரியத்தையும் தடுக்க ஆள் இலல்hமல் போய்விட்டது, அவர்தனது ஒரே மகளைச் செல்லமாக வளர்த்து வந்ததினால் அவளுக்கும் போதிய அனுபவம் இருக்கவில்லை .அதனால் அவள் தந்தையை ஒரு போதும் கண்டிப்பதில்லை இப்போது துரைசிங்கம் முதலாளி பெருந்தொகையான கடனுக்கு மத்தியில் தனக்கள்ள பகட்டினை விட்டுக்கnhடுக்காமல் வாழ்ந்து வருகிறார்.
”என்னதுரைசிங்கண்ணை லொறியிலை ஏதோ பழுது போலை கிடக்கு.?
லொறியின் அடியில் படுத்திருந்த துரைசிங்கம் முதலாளியால் பக்கத்தில் வந்து நிற்பது யாரென்பதைப் பார்க்க முடியவில்லை. கால்களை மட்டுமே பார்க்க கூடியதாக இரந்தது. அவை யாருக்ணுகுச் சொந்தமான கால்கள் என்பதையும் துரைசிங்கம் முதலாளியால் ஊகிக்க முடியவில்லை அதனால் அவர் நிலத்தி;லே அரைந்தபடி லொயியின் அடியிலிருந்து வெளியே புறப்பட்டு வந்தவர் தரகர் ஆறுமுகமென்பது அவுருக்க தெரிந்தது.
”என்ன ஆறுமுகம் ... கனகாலமாய் இந்தப் பக்கம் காணேல்லை. என்ன சங்கதி ....?“
”இப்பதானண்ணை கொஞ்ச வருவாய் வாற காலம் மிளகாய் விலையும் கொஞ்சம் சூடாய் இருக்கிது அதுதான் மிளகாய் கட்டுறதிலை திரியிறன்“
”அப்ப ஆறுமுகம் இந்த முறை உனக்கு பிழையிலைப்போலை ....“ எனக் கூறிய துரைசிங்கம் முதுலாளி முதுகுப் பக்கம் படிந்திரந்த மண்ணைத் தனது சால்வையால் துடைத்துக் கொண்டார்.
”போனமுறை உவ்விடம் முழுதும் தரிஞ்சு வெங்காயம் கட்டின னான். கொழும்பில் திடீரெண்டு விலை விழுந்தாலை எனக்கு ஆறாயிரம் நட்டம். இப்பாதாண்ணை அதைக் கொஞ்சம் நிரவியிருக்கிறேன்.“
”ஓ... வியாபாரம் எண்டால் அப்பிடித்தானே ஒண்டிலை விழுந்தால் ஒண்டிலைதாணே எடுக்க வேணும்......“
”அது சரி ஆறுமுகம், என்ன சங்கதி இப்ப விடிஞ்சதும் விடியாததுமாய் வந்திருக்கிறாய்.?“
”இல்லையண்ணை உங்கடை செல்ல்ப்பர் வீட்டுவிசயங்கள் எல்லாம் கேள்விபப்பட்டன் ... அது தான் ஒருக்கா கதைப்பம் எண்டு வந்தனான்...“
”அது ஆறுமுகம் செல்லப்பற்றை பிழைதான் மகளை அவனோடை பழகவிட்டிப் இப்ப யோசிச்சு என்ன பிரயோசணம் அவனை வைக்க வேண்டிய இடத்திலை வைச்சிருக்கவேணும்.“
”ஓ..... அது சரிதாண்ணை, ஆனால் செல்லப்பர் தான் பாவம் நல்லமனிசன் எதோ நடந்தது நடந்து போச்சு, அவரை நீங்கள் கைவிடக்கூடாது.“

”ஓ.... நானும் உவ்விடம் முழுதும் தேடிப்பாத்திட்டன், அவனும் கண்டு பிடிக்க முடியேல்லை .அவங்கோடை சாதியாக்கள் எல்லோரும் ஒத்து நிண்டு விஷயத்தை மறைக்கிறாங்கள்.
”எல்லாம் விஷயமும் நான் கேள்விப்பட்டனான். நீ தானண்ணை மும்மரமாய் ஓடியாடித் திரிஞ்சனியெண்டும் அறிஞ்சன் அதுதான் உன்னட்டை ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தனான்“ எனக் கூறினார் ஆறுமுகம்
”அப்பிடியென்ன ., நீ கதைக்கிறதைப் பார்த்தால் உனக்கு ஏதோ தெரியும் போலை கிடக்கு “
”ஓமண்ணை சில பல விஷயங்கள் தெரியுந்தான், நான் அதை வெளியிலை கதைக்கிறது நல்லாயில்லைத் துஐரசிங்கம்கண்ணை என்ரை தொழிலுக்கு நான் பலரோடும் புழங்குகிறவன் பல இடத்திற்கும் பொறனான் என்ரை வாயாலை உதுகளைச் சொல்லி பிறக ஏதேன் பிரச்சினை வந்தால் எனக்குத்தான் வீண்கரச்சல்.“
”இல்லை ஆறுமுகம் , நீ தெரிஞ்சதைச் சொல்லு , நீ சொன்னதாய் நான் ஒருத்தருக்கும் சொலலமாட்டன்.“
”இப்ப இரண்டு மூண்டு நாளைக்கு முன்னம் நான் முத்தையன் னட்டிலை மிளகாய் கட்டினனான் அப்ப தான் செல்லப்பற்றை மகளை ஒர வீட்டிலை பாத்தன் அங்கே அவளோடை வேறை ஒரு பெடியனும் நிண்டவன் அவனை ஆரெண்டுமு என்க்குச் சரியாத் தெரியேல்லை.“
”என்ன முத்தையன்கட்டிலையோ.... ஆர் , அவன் கந்தசாமி வீட்டிலையோ அவையள் இருக்கினம்.?“
”ஓமண்ணை உன்ககும் கந்தசாமியைத் தெரியுமோ ? “ என ஆச்சரியத்துடன் கேட்டார் ஆறுமுகம்.
”என்ன விசர்க் கதை கதைக்கிறாய் .அவன் எயங்கடை ஊர்ப் பெடியன்தானே,“
”அப்பிடிளே சங்கதி எனக்கு உண்மையிலை தெரியாது .அவன் ஒரு இந்தியாக்காற மனுசியைக் கலியாணம் செய்திருக்கிறான் அவனம் ஒரு இந்தியாக்காறப் பெடியன்னெண்டுதான் நான் இவ்வளவு காலமும் நினைச்சுக்கொண்டிருக்கிறன்.“
”என்ன ஆறுமுகம் அப்பிடி எங்கடை ஊர்ப் பெடியன்களை உனக்கு தெரியாமல் போச்சோ?“
”இந்த ஊரிலை அண்ணை எனக்கு உங்களையும் செல்லப்பரையும் வேறை நாலைஞ்சு பேரையும் நல்லாய்த் தெரியும் உங்கடை லொறியிலை சில நேரங்களிலை சாமான் ஏத்திர படியாலை உங்கள் இரண்டு பேரையும் நல்லாய்த் தெரியும் வேறையும் ஒரு நாலைஞ்சு பேரை மட்தடியிலை கண்டு பழக்கம் இந்த ஊரிலை இருக்கிற மற்றப் பகுதி ஆக்களை உனக்கு அவ்லவளவு தெரியாது.“
”ஓகோ..... இவங்கள் திட்டம் போட்டுத்தான் எங்களை ஏமாத்தியிருக்கிறாங்கள் நான் உவையளை லேசிலை விடமாட்டன் “ எனக் கறுவிக் கொண்டார் துரைசிங்கம் முதலாளி.
”அண்ணை இந்த ஊரிலை இப்பிடியொரு விஷயம் நடந்துதுதெண்டு பேப்பரிலெ வாசிச்சனான். முத்தையன் கட்டிலை செல்லப்பபற்றை மகளைக் கண்டதும்தான் எனக்குச் சந்தேகம் வந்தது நேற்றுப் பின்னேரம் உங்கடை மடத்தடியிலை வந்து பொழுதுதான் முழு விபரமும் அறிஞ்சன் ஆனால் ஒருத்தரிட்டையும் எனக்கு விஷயம் தெரிஞ்சதாய்க் காட்டிகொள்ளேல்லை.“
”ஆறுமுகம் இப்ப உடனே வெளிக்கிட்டுப் போனால் ஆக்களைப் பிடிக்கலாமோ? “ எனக் கேட்டார் துரைசிங்கம் முதலாளி.
”முத்தையன் கட்டிலை பிள்ளையார் கோயில் வீதியோடை இருக்கிற நாலாவது காணியிலை தான் அவையள் இருக்கினம் . அதுசரி கூட்டிக்ககொண்டு போனது குறைஞ்ச பகுதிப் பெடியனெண்டால் பிறகு ஏனண்ணை உதிலை தமினக்கிடுறியள், கை கழவி விட வேண்டியது தானே “ எனக் கூறினார் ஆறுமுகம்.
”ஆறுமுகம் உனக்கு உதுகளொண்டம் விளஙகாது, செல்ப்பர் என்ரை ஆள் அவற்றை எனக்கும் பயப்பிடேல்லைத்தனே இதுக்கு நான் ஒரு நல்லமுடீவு எடுக்காட்டில் இந்த ஊரில் நான் ஒரு மனிசனெண்டு இருக்கிறதிலை வேலைல்லை.“
”அண்ணை ஏதோ நாலையும் யோசிச்சு செய்யுங்கோ என்னாலை இந்த விஷயம் கிளம்பின தெண்டு ஒருத்தருக்கும் தெரியப்பிடாது,“
”அதுக்கு நீ யோசிக்காதை ஆறுமுகம் அப்படி ஏதேன் பிரச்சனை வந்தாலும் எல்லாதத்துக்கம் நான் இருக்கிறேன்.
”அப்ப நான் வரப்போறண்ணை , என்னோடை கூட வந்தவையை மடத்தடியிலை விட்டிட்டு வந்தனான் சுண்கேலாது“ எனக் கூறிவிட்டு புறப்பட்டார் ஆறுமுகம்.
”அப்ப சரி ஆறுமுகம் எனக்கும் கொஞ்சவேலைஇருக்கு நீ போட்டு வா எனக் கூறி ஆறுமுகத்தை அனுப்பி வைத்தார் துரைசிங்கம் முதலாளி.
தொடர்ந்தும் லொறியில் பழுது பார்பதற்கு துரை சிங்கம் முதலாளியின் மனம் இடங்கொடுக்கவில்லை அப்படியே போட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தார் மகளிடம் ”பிள்ளை எனக்குக் கொஞ்சம் தேதண்ணி தா, நான் அவசரமாய் வெளியிலை போக வேணும் “ எனக் கூறிக் கொண்டே முன் விறாந்தையில் சுவரோரமாகச் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்து முற்றத்தில் வைத்தார்.

24
படலையடியில் துரைசிங்கம் முதலாளி சைக்கிளிலிருந்து இறங்குவதைக் கண்டதும் செல்லப்பர் சார்மனைக் கதிரையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த துரைசிங்கம் முதலாளி சைக்கிளை உருட்டிகொண்டு வந்து முருங்கை மரத்தடியில் சாத்திவிட்டு செல்லப்பரின் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்தார்.
”என்னண்ணை காலைமை வந்திருக்கிறியள். ஏதேன் அவசரமோ ?“ என வினாவினார் செல்லப்பர்,
”ஓ...... அவசரமான விஷயமாய்த்தான் வந்திருக்கிறன். உன்ரை மகளும் மாணிக்கனும் இப்ப முத்தையன்கட்டிலை இருக்கினமாம்“
”என்ன முத்தையன் கட்டிலையோ.... எப்பிடியண்ணை உனக்குத் தெரியும்?“
அவர்களது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த சின்னத்தங்கம் வெளியே வந்தாள். குசினியில் வேலையாய் இருந்த அன்னம்மாவும் இப்போது மேலும் விபரம் அறியும் ஆவலுடன் அஙகு வந்தாள் துரைசிங்கம் முதலாளியின் முன்பாக அன்னம்மாவும், சின்னத்தங்கமும் உட்கார்ந்து கொண்டார்கள்.
”இண்டைக்கு காலமைதான் எனக்கு ஒரு ஆள் சொன்னது, அவன் கந்தசாமியின்ரை வீட்டிலைதான் இப்ப அவையள் இருக்கினமாம.“;
”அவள் எங்கையிருந்தாலும் என்ன, இனி அவளை நாங்கள் கைகழு
விடவேண்டியது.“
செல்லப்பர் இப்படிக் கூறுவாரென அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை
”என்ன செல்லப்பர் விசர்க்கதை பேசிறாய். பிள்ளையை கீழ்சாதிக்காரன் கொண்டு போய் வைச்சிருக்க நாங்கள் பார்த்துக்கொண்;டு இருக்கிறதோ?“ எனக் கேட்டார் துரைசிங்கம் முதலாளி.
”அப்ப, ஓடிப் போனவளைக் கூட்டியந்து நாங்கள் வீட்டிலை வைச்சிருக்கிறதோ?“ என்றார் செல்லப்பர் வெறுப்பான குரலில்.; செல்லப்பர் இப்படிக் கூறியதைக்கேட்டதும் அன்னம்மாவும் சின்னத்;தங்கமும் திகைத்துப்போனார்கள்.
”செல்லப்பர் நீ இப்ப மனக்குழப்பதிலை இருக்கிறாய். அதுதான் உப்பிடியெல்லாம் கதைக்கிறாய். நான் உன்ரை நன்மைக்குத்தான் சொல்லுறன். இப்பவே போய் உன்ரை மகளைக் கூட்டியாறதுதான் நல்லது.“
”அண்ணை நான் நிதானமாய் யோசிச்சுப் போட்டுத்தான் சொல்லுறன் .இனி நான் அவளை இந்த வீட்டுவாசலுக்கும் அடுக்கமாட்டன்;. அவளைக் கண்டால் வெட்டித் துண்டாக்கிப் போட்டுத்தான் மற்றவேலை பாப்பன்.“ செல்லப்பருக்குக் கோபத்தினால் உடலெல்லாம் ஆடியது? கண்கள் கலங்கிச் சிவந்தன.
”ஐயோ, இங்த மனிசனுக்கு விசர்தான் பிடிச்சிருககு, அவள் பிள்ளை “ எனக் கூறிப் பெரிதாக ஓலமிட்டு அழத்தொடங்கினாள் சின்னத்தங்கம்.
”எடியேய்.... பொத்தடி வாயை? மூச்சுக் காட்டக்கூடாது எல்லாம் உன்னாலைதான்ரி வந்தது“ என ஆக்குரோஷத்துடன் எழுந்த செல்லப்பர் தன்னை மறந்த நிலையில் சின்னத்தங்கத்தின் கையை ஓங்கினார்.
”செல்லப்பர்‰ கொஞ்சம் பொறு உதென்ன வேலை? “எனக் கூறி துரைசிங்கம் முதலாளி சின்னத்தங்கத்தைச் செல்லப்பருடைய பிடியிலிருந்து விலக்கிவிட்டார்.
”என்ரை குடும்ப மானத்தையெல்லாம் இவள் கப்பலேத்திப் போட்டாள். இவள் ஒழுங்காயிருந்தால் அவள் ஒரு நாளும் ஓடியிருக்கமாட்டாள் “ எனக் கூறிய செல்லப்பர் கவலை தாளாது விம்மி விம்மி அழத்தொடங்கினார்.
துரைசிங்கம் முதலாளியின் மனமும் வேதனையடைந்ந்தது.
”செல்லப்பர் நீ கொஞ்சம் அமைதியாயிரு? நடந்து முடிஞ்சதைப்பற்றி யோசிக்கப் பிடாது. இனி நடக்க வேண்டியதைக் கவனிக்கவேணும் “ எனச் செல்லப்பரின் கைகளைப் பற்றியபடி துரைசிங்கம் முதலாளி.
இதுவரை நேரமும் அமைதியாயிருந்த அன்னம்மா செல்லப்பர் கலங்குவதைப் பார்த்ததும் முந்தானையால் முகத்தைப் பொத்தி கொண்டு விம்மினாள். அவர்கள் எல்லோரும் தேறுதல் அடையட்டும் என்பதற்காகத் துரைசிங்கம் முதலாளி சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
”செல்லப்பா, நான் சொல்லிறதைக் கொஞ்சம் அமைதியாய்க் கேக்கவேணும் . உன்ரை மகளைப் போய் கூட்டியாறதுதான் நல்லது. மாணிக்கனோடை இருக்க விடுகிறது எங்கள் எல்லோருக்கும் மானக்கேடு.“
”அவளைக் கூட்டியந்துதான் என்ன செய்யலாம்?“
”அதுக்கொண்டும் யோசிக்காதை செல்லப்பர். கொஞ்சகக்hலம் அவளுக்கு ஏதேன் ஒரு வழி செய்யலாம். காலப்போக்கில எல்லாம் சரிவரும்“ எனத் தேறுதல் கூறினார் துரைசிங்கம் முதலாளி.
”தம்பி, துரைசிங்கம் சொல்லுறது சரியெண்டுதான் நானும் நிகை;கிறன். பார்வதியை எப்பிடியாவது கூட்டியாறதுதான் நல்லது“ எனச் செல்லப்பரிடம் சொன்னாள் அன்னம்மா.
சகோதரியும் இப்படிக் கூறியபோது செல்லப்பர் சிறிது அமைதியடைந்தார்.
”என்னவோ நீங்களெல்லாம் விரும்பினபடி செய்யுங்கோ. எனக்கெண்டால் அவனைக் கூட்டிக்கொண்டு வாறது விருப்பமில்லை“ எனத் தலையில் கைவைத்தபடி கூறினார் செல்லப்பர்.
”தம்பி, நீ ஒண்டுக்கும் யோசிக்காதை.
பார்வதியைக் கூட்டிக்கொண்டு வா. எதுவந்தாலும் அதுக்கு நான் பொறுப்பு.“ அன்னம்மா செல்லப்பரைப் பார்த்துக் கூறினாள்.
”மச்சாள், நான் இன்னும் கனகாலம் இருக்கமாட்டன்.; சாகிறதுக்கு முன்னம் என்ரை பிள்ளையை ஒருக்கா கண்ணாலை பாக்கவேணும் “ எனக் கூறிய சின்னத்தங்கம் மீண்டும் விம்மினாள்.
இப்போது செல்லப்பர் எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருந்தார்.
”செல்லப்பர், பொழுது பட்ட பிறகு நான் கொண்டுவாறன் . நீ ஆயத்தமாயிரு. இண்டைக்கே உன்ரை மேளைக் கூட்டியந்திடவேணும.“

”நாங்கள் போய்க் கூப்பிட அவள் வரமாட்டன்; எண்டு சொன்னால் என்ன செய்யிறது ? மானங் கெட்டெல்லோ திரும்ப வேணும்“ என்றார் செல்லப்பர் யோசித்தபடி.
”என்ன செல்லப்பர் இவ்வளவு காலமும் நீ என்னோடை பழகின பிறகு உப்பிடிச் சொல்லுறாய்? அவள் வரமாட்டன் எண்டு சொன்னால் காரிலை தூக்கிப் போட்டுக்கொண்டு வாறதுதானே.“
”இல்லையண்ணை நாலையும் யோசிச்சுத்தான் செய்யவேணும். போற இட்த்திலை ஏதேன் பிரச்சினை வந்தால் என்ன செய்யிறது?“
”ஒரு பிரச்சனையும் வராது செல்லப்பா.; அப்பிடி ஏதேன் வந்தாலும் சமாளிக்கிறதுக்கு நான் ஆயத்தமாய்த்தான் வருவன். நாங்கள் போற விஷயத்தை மட்டும் இப்ப வேறையொருத்தருக்கும் சொல்லிப் போடாதை.“ எனக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார் துரைசிங்கம் முதலாளி.
செல்லப்பர் சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். துரைசிங்கம் முதலாளி ஏதாவது முரட்டுத்தனமாக நடந்து கொள்வாரோ என மனம் கலக்கமடைந்தது.
”தம்பி ஒண்டுக்கும் யோசிக்காதை? எல்லாம் நல்ல படியாய்த்தான் நடக்கும். நீ இப்ப வந்து சாப்பிடு.“ எனக் கூறிவிட்டுப் குசினிப் பக்கம் எழுந்து சென்றாள் அன்னம்மா.
செல்லப்பருக்கு உணவருந்த மனம் வரவில்லை. ஆனாலும் சகோதரியின் பேச்சைத் தட்டாது எழுந்து குசினிப் பக்கம் சென்றார்.

25
ப+ரணச்சந்திரன் நான்கு நாட்களில் மெலிந்து போயிருந்தான். நிலமடந்தையுடன் சல்லாபம் புரிந்ததால் ஏற்பட்ட மெலிவு ‰ நிலமடைந்தை வெறும் மேனியாய்ச் சோர்ந்து கிடந்தாள். சந்திரன் தனது வெண்ணிற ஒளித் துகிலால் அவளது உடலைப் போர்த்தி விட்டான்.
மாணிக்கமும பார்வதியும் வீட்டு முற்றத்திலிருந்து கொட்டிலில் நிலமடந்தையின் மேனியை மூடியிருந்த வெண்ணிற ஒளித்துகிலின் அழகினை இரசித்தப்படி தங்களுக்குள் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். செங்கமலம் அவர்களின் தனிமையைக் கலைக்க விரும்பாது வீட்டினுள்ளே ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாள.
கந்தசாமி பகல் போசனத்துக்குப் பின்பு உரம் வாங்குவதற்குகாக முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தான். இரவு எப்படியும் திரும்பி விடுவதாகக் கூறிச் சென்றவன் இன்னமும் திரும்பவில்லை.
குளத்தைத் தழுவி வந்த குளிர் காற்று சில்லென அவர்களின் உடலைத் தழுவிச் சென்றது. அந்தக் குளிரைப் பொருட்படுத்தக் கூடியதாக மாணிக்கமும் பார்வதியும் இருக்கவில்லை.
சற்று நேரத்திற்கு முன்னர் குழு மாடுகள் சில கூட்டமாக வேலியை உடைததுக் கொண்டு உள்ளே வந்து மிளகாய்க் கன்றுகளில் சிலவற்றைச் சேதப்படுத்துவதற்கு எத்தனித்த போது மாணிக்கம் பாய்ந்து சென்று அவற்றை விரட்டிவிட்டு வந்தான. அதனால் அவனது நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்திருந்தன. பார்வதி, மாணிக்கத்தின் தலையைத் தன் மடியில் சாய்த்து வியர்வைத் துளிகளைத் தனது முந்தானையால் ஒற்றி எடுத்தாள். அந்தச் சுகத்தில் மாணிக்கம் தன்னை மறந்திருந்தான்.
காட்டினுள்ளேயிருந்து பறவைகள் இனிமையாகக் கீதமெழுப்பின. விலங்குகளின் விதம்விதமான ஒலிகளும் இடையிடையே கேட்டுக்கொண்டிருந்தன. இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டுயானை யொன்று பக்கத்துக் கமத்தில் சேதம் விளைவித்ததாகப் பலரும் பேசிக்கொண்டார்கள். அதைக் கேட்ட பார்வதிக்குக் கலக்கமாக இருந்தது. ஒரு வேளை கந்தசாமியின் தோட்டத்துககும் அந்த யானை வந்துவிடுமோ என அவள் பயந்தாள்.
அந்த யானை வந்தால் அதனைத் தூக்கி வேலிக்கு வெளியே ஒரே வீச்சில் வீசி எறியப் போவதாகக் கூறிச் சிரித்தான் மாணிக்கம். அவன் கூறியதைப் பார்வதியும் இரசித்துச் சிரித்தாள்.
பார்வதிக்கு தாய் தந்தையரைப் பிரிந்து வந்தபோது ஏற்பட்டிருந்த பயமும் கலக்கமும் இப்போது ஓரளவு அற்றுப் போயிருந்தன. ஆரம்பத்தில் தாய் தந்தையரின் நினைவுகள் அடிக்கடி வந்து அவளைக் கலக்கிய வண்ணம் இருந்தன. தான் மாணிக்கத்தோடு வந்ததினால் ஊரிலே என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருக்குமோ என நினைத்த அவளது உள்ளம் நடுங்கும். இப்போது மாணிக்கத்தின் அன்பும் ஆதரவும் அவளை ஊர் நினைவுகளிலிருந்து முற்றாக மறக்கச் செய்திருந்தன.
மாணிக்கத்திற்கும் ஆரம்பத்தில் இருந்த மனக்குழம்பங்கள் யாவும் இப்போது நீங்கியிருந்தன. கடந்த பத்து நாட்களில் அவன் பார்வதியினுடைய பெண்மையின் நளினங்களை எல்லாம் பூரணமாக அனுபவித்திருந்தான்.
மாணிக்கத்துடன் அனுபவித்த இன்பத்தினால் பார்வதியின் பெண்மை பூரணத்துவமடைந்திருந்தது. அவள் என்று மில்லாதவாறு இப்போது மலர்ச்சியுடன் இருந்தாள். எந்த நேரமும் மாணிக்கத்தின் அணைப்பிலேயே இருக்க வேண்டுமென அவளது உள்ளம் விரும்பியது. தாய் தந்தையரோடு கழித்த நாட்களைவிட மாணிகத்தோடு கூடிச் களிக்கும் நாட்கள் அவளை மெய்மறக்க செய்தன.
வெளியே படலையடியில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. கந்தசாமிதான் வந்திருக்க வேண்டுமென நினைத்து பார்வதியும் மாணிக்கமும் எழுந்திருந்தார்கள். வீட்டினுள்ளே இருந்த செங்மலம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விறாந்தையில் மாட்டியிருந்த லாந்தரின் திரியைத் தூண்டிவிட்டாள. வெளிச்சம் பளீரென எங்கும் பரவியது. காரிலிருந்து நால்வர் இறங்குவது நிலவு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. சிறிது நேரம் அந்த நால்வரும் காருக்குப் பக்கத்திலிருந்து தங்களுக்குள் ஏதோ பேசிகொண்டார்கள். பின்னர் இருவர்; மட்டும் வீட்டை நோக்கி வந்தார்கள். விளக்கு வெளிச்சம் அவர்கள்மேல் படிந்தபோது அங்கு வந்தவர்கள் துரைசிங்கம் முதலாளியும் செல்லபருந்தான் என்பதை மாணிக்கமும் பார்வதியம் தெரிந்து கொண்டார்கள்.
பார்வதியின் நெஞ்சு "திக் திக்' கென அடித்துக்கொண்டது. பயத்தினால் அவளது உடல் நடுங்கியது.
மாணிக்கத்தின் மனமும் சிறிது பதட்டம் அடைந்தது. ஆனாலும் எதையும் சமாளிப்பதற்கு அவன் தன்னைத்; தயாராக்கிக் கொண்டான்.
”ஆர் நீங்கள்......? ஆரைப் பாக்க வேணும்? விட்டிலை அவர் இல்லை.. வெளியிலை போயிருக்கிறார்.“ செங்கமலந்தான் இப்படிக் கூறினாள்.
பார்வதி பதட்டமடைவதிலிருந்து மாணிக்கத்தின் முகமாற்றத்திலிருந்தும் வந்திருப்பவர்கள் மாணிக்கத்தையும் பார்வதியையும் தேடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்பதைச் செங்கமலம் ஊகித்துக் கொண்டாள்.
”நாங்கள் இவையளைத் தேடித்தான் வந்திருக்கிறோம்“ மாணிக்கமும் பார்வதியும் நின்ற பக்கம் கையைக் காட்டி கடுமையான குரலில் கூறினார் துரைசிங்கம் முதலாளி.
அப்போது செல்லப்பர் முன்னே வந்து , ”பிள்ளை..... வா பிள்ளை... வீட்டை போவம் “ எனப் பார்வதியைப் பார்த்துக் கூறினார்.
”அப்பு, நான் இனி அங்கே வரமாட்டன்“
”பிள்ளை நான் உன்னை ஓண்டும் செய்யமாட்டன.; அங்க அம்மா வருத்தத்திலை கிடக்கிறா..... அவதான் உன்னைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவ... வா பிள்ளை.... “ செல்லப்பர் அன்பான குரலில் கூறினார்.
”நான் வரமாட்டன ;அப்பு.“ பார்வதி ஏனோ அழத்தொடங்கினாள்.
செல்லப்பர் பார்வதியின் அருகில் சென்று அவளது கைகளைப் பற்றி, வா பிள்ளை வந்து காரிலை ஏறு“ என அவளை இழுத்தார்.
”அப்பு என்ரை கையை விடுங்கள் . நான் வரமாட்டனெண்டால் வரமாட்டன் “ என அழுது கொண்டு செல்லப்பர் பிடித்திருந்த கையை விலக்க முயன்றாள பார்வதி.
செல்லப்பருக்கு இப்போது கோபம் பொங்கியது.
”வாடி நாயே “ என அதட்டியபடி அவளைத் தன் இரு கைகளாளும் வாரித் தூக்கிக் காருக்குக் கொண்டு செல்லமுயன்றார்.
பார்வதி கைகளையும் கால்களையும் உதறி Æ”ஐயோ அப்பு என்னை விடுங்கோ“ எனக் கதறி அவரது கையைக் கடித்துத் திமிறி , பிடியிலிருந்து விலக முயன்றாள்.
மாணிக்கம், செல்லப்பரின் முன்பக்கமாக வந்து அவரைத் தடுத்து நிறுத்தி;னான. அப்போது துரைசிங்கம் முதலாளி கழுத்தைப் பிடித்துப் பலமாகத் தள்ளினார். ஒருகணம் நிலை தடுமாறிய மாணிக்கம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு துரைசிங்கம் முதலாளியின் மேல் பாய்ந்தான். செங்கமலம் ”ஐயோ“ என அலறியபடி ஓடிவந்து செல்லப்பரைப் பிடித்து இழுத்து அவரைப் போகவிடாது தடுத்தாள்.
”டேய் வாருங்கோடா ,இங்கை இவனை அடிச்சு முறியுங்கோடா“ என பலத்த சத்தமாகக் கூறினாh துரைசிங்கம் முதலாளி.
காரின் அருகில் நின்றவர்கள் திடுமென அங்கு வந்தார்கள். ஒருவனது கையில் துவக்கும் மற்றவனது கையில் ஒரு பலமான இரும்புத் துண்டும் காணப்பட்டன. ஒருவன் ஒடிவந்த வேகத்தில் பாய்ந்து துவக்குப் பிடியினால் மாணிக்கத்தின் பிடரியில் பலமாக அடித்தான். மற்றவன் இரும்புத் துண்டினால் மாணிக்கத்தின் காலில் அடித்தான் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வதி ”ஐயோ அவரை ஒண்டும் செய்யாதையுங்கோ...... ஒண்டும் செய்யாதையுங்கோ.... என அலறினாள்.
செல்லப்பரைத் தடுத்து நின்ற செங்கமலத்தை துரைசிங்கம் முதலாளி ஒரு பக்கம் இழுத்து நிலத்திலே தள்ளி;னாh.; ”ஐயோ........ ஐயோ....... “ எனச் செங்கமலம் பலமாகக் கத்தினாள். பார்வதியை வாரித் தூக்கிய செல்லப்பர் விரைந்து சென்று காரின் பின்பக்கத்தில் ஏற்றி அவள் வெளியில் பாய்ந்து விடாமல் அமுக்கிப் பிடித்துக்கொண்டாh.; பார்வதியால் எதுவும் செய்யமுடியவில்லை.
செங்கமலத்தின் அலறலும், பார்வதியின் அழுகையும் அந்தப் பிரதேசத்தில் பலமாக ஒலித்தன. மயக்கமுற்று இரத்த வெள்ளத்தில் சாய்ந்திருந்த மாணிக்கத்தைப் புரட்டித் தள்ளிவிட்டு ஓடிவந்து எல்லோரும் காருக்குள் ஏறிக்கொண்டார்கள்.
மறுகணம் கார் உறுமலுடன் வேகமாகக் கிளம்பியது.
கை கால்களை அடித்துப் பலத்த சத்ததுடன் அழுதவண்ணம் இருந்த பார்வதியை செல்லப்பர் அமுக்கிப் பிடித்தபோது வேறொருவன் அவளது கைகளையும் கால்களையும் வரிந்து கடடினான். இப்போது பார்வதியால் அசைக்கக்கூட முடியவில்லை. செல்லப்பர் அவளது வாய்க்குள் தனது சால்வையை திணித்துவிட்டார். பார்வதிக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.
”முதலாளி, நான் அடிச்ச அடியிலை மண்டை பிளந்து போச்சு. இதுவரையிலை அவன்ரை உயிர் போயிருக்கும் என கையில் துவக்கு வைத்திருந்தவன் கூறுவது பார்வதியின் காதிலும் விழுந்தது.
பார்வதியின் இதயத் துடிப்பு ஒருகணம் நின்று துடித்தது. மறுகணம் அவள் மயக்கமுற்றுச் சாய்ந்தாள்.
வேகமாக ஓட்டி வந்த காரை துரைசிங்கம் முதலாளி ஓரிடத்தில் நிறுத்தினார். காரிலிருந்து இருவர் இறங்கினர்.
”முதலாளி நாங்கள் பிறகு ஆறுதலாய் உங்களை வந்து சந்திக்கிறம் “எனக் கூறி அந்த இருவரும் தரைசிங்கம் முதலாளியிடம் விடைபெற்றுக் கொண்டார்கள்.
செல்லப்பருக்கு அவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு வெறுப்பாக இருந்தது. எப்படியிருந்த போதிலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அவர்கள் மாணிக்கனை அடித்திருக்கக் கூடாது என அவர் எண்ணினார்.
மீண்டும் கார் வேகமாகப் புறப்பட்பது. செல்லப்பரும் துரைசிங்கம் முதலாளியும் ஒருவரோடு ஒருவர் கதைக்கவில்லை. பார்வதி மயக்க நிலையிலேயே இருந்தாள். இரவின் நிசப்தத்தினூடே செல்லப்பரின் வீட்டை நோக்கி கார் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

26
இரவின் நிசப்பதத்தை கிழித்துக் கொண்டு எங்கோ சாமக்கோழி கூவியது. அன்னம்மாவும் சின்னத்தங்கமும் வெளி விறாந்தையில் இருந்து செல்லப்பரினதும் துரைசிங்கம் முதலாளியினதும் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். நேரஞ் செல்லச்செல்ல அவர்களின் மனதில்கலக்கம் அதிக மாகியது. பார்வதியை கூட்டிவரச் சென்ற இடத்திலே ஏதும் அசம்பாவிதங்கள் நடந்திருக்குமோ என எண்ணி அவர்கள் பயந்தார்கள்.
வெகு நேரத்தில் பின் படலையடியில் கார் வந்து நிற்கும் சத்தங் கேட்டது சின்னத்தங்கமும் அன்னம்மாவும் அவசர அவசரமாக எழந்து படலையடிக்குச் சென்றார்கள்.
பார்வதிக்கு மயக்கம் இப்போது தெளிந்திருந்தது. செல்லப்பர் காரை விட்டு இறங்கியதும் பார்வதியையும் இறங்கும்படி கூறினார், பார்வதியின் முகம் அழுதழுது வீங்கி இருந்தது. அவளது உடலெல்லாம் வலி எடுத்தது. அவள் எதுவுமே பேசாது மெதுவாகக் காரிலிருந்து இறங்கினாள்.
துரைசிங்கம் முதலாளி அவர்கள் இறங்கியதும் ”செல்லப்பர் நேரமாகுது நான் வாறன் : நாளைக்கு எல்லாம் ஆறுதலாய்க் கதைப்பம் “ எனக் கூறிவிட்டு புறப்பட்டார்.
சின்னத்தங்கம் பார்வதியை கட்டிப்பிடித்துக்கொண்டு பெரிதாக அழத்தொடங்கினாள், செல்லப்பருக்கு அதைப்பார்த்தபோது எரிச்சலாக இருந்தது. பார்வதியும் விம்மத் தொடங்கினாள்.
”ஏனடி , இரண்டு பேரும் அழுகிறியள். நான் செத்தாப் பிறகு கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வையுங்கோடி“ செல்லப்பர் எரிச்சலுடன் கூறினார்.
படலையடியில் நிக்காமல் எல்லோரும் வாருங்கோ வீட்டுக்குப் போவம்“ எனக் கூறி அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் அன்னம்மா.
செல்லப்பர் சார்மனைக் கதிரையில் போய் தொப்பென்று உட்கார்ந்து கொண்டார், அவரது உள்ளம் நிம்மதியற்றுத் தத்தளித்துக் கொண்டிருந்தது.
சின்னத்தங்கத்தின் அழுகை ஒருவாறு ஒய்ந்திருந்தது.பார்வதி மட்டும் அழுத வண்ணம் இருந்தாள்.
”என்ன தம்பி ஒரு மாதிரியிருக்கிறாய்.? போன இடத்திலை ஏதேன் கரச்சலோ?“ எனத் தயங்கிய படியே அன்னம்மா செல்லப்பரிடம் கேட்டாள்.
”எல்லாம் இவள் ஆட்டக்காரியாலை வந்து கரச்சல்தான் “ பல்லை நெருடிக்கொண்டு பார்வதியை முறைத்துக்பார்த்தார் செல்லப்பர்.
ஏன் தம்பி கோவிக்கிறாய், கொஞ்சுமு; விளக்கமாய்ச் சொல்லன் “ என வேண்டினாள் அன்னம்மா.
உவள் ...உந்தச்சனியன் ..நான் கூப்பிட வரமாட்ன் எண்டு சொல்லி அடம் பிடிக்கதொடங்கிவிட்டாள். உவளுக்கு அந்தக் கீழ்சாதிக்காரன் அவ்வளவு பெரிசாப்போச்சு“ இப்படிக் கூறியபோது செல்லப்பருக்கு ஆத்திரத்தினால் உடல் நடுங்கியது. கோபவேசத்துடன் எழுந்த செல்லப்பர் பார்வதியின், கோபாவேசத்துடன் எழுந்த செல்லப்பர் பார்வாதியின் பக்கம் பாய்ந்து சென்று ”சீ... நாயே... உனக்கு அவ்வளவு தமிர் பிடிச்சிட்டோடி“ எனக் கூறி அவளைக் காலால் எட்டி உதைத்தார்.
பார்வதி நிலைதடுமாறி நிலத்திலே சாய்ந்தாள்.
அன்னம்மா பதறிப்போறிபோய் ”உனக்கென்ன தம்பி பயித்தியம் பிடிச்சிருக்கோ “ எனக் கூறியபடி செல்லப்பின் கையைப் பிடித்து அவர் மேலும் பார்வதியை எதுவும் செய்து விடாதபடி தடுத்தாள்.
”நீ சும்மா இரக்கா, உன்கொண்டும் தெரியாது உவளை... துண்டு துண்டாய் வெட்டினால்தான் என்ர ஆத்திரத்திரம் தீரும் ·“ செல்லப்பர் பார்வதியை உதைப்பதற்காக மீண்டும் காலை ஓங்கினார்.
ஓவென பெரிதாக அழுதுகொண்டு சின்னத்தங்கம் ஓடிவந்து செல்லப்பரின் கால்களைக் கட்டிக் கொண்டான்.
”எல்லாம் இந்த ஆட்டக்காரியாலை வந்ததுதான் “ எனக்கூறிய செல்ல்பப் சின்னத்தங்கத்தைக் காலால் எத்தித் தள்ளினார்.
சின்னத்தங்கம் சிறது தூரத்திலே போய் விழுந்தாள்.
”தம்பி இதுசக்கோ போய் பார்வதியைக் கூட்டியந்தனி ஆத்திரப்படு;த்தி பிரயோசனமில்லை, நீ இப்;ப கொஞ்சம் அமைதியாய் இரு “ அன்னம்மா செல்லப்பரைச் சமாதானம் படு;த்தினாள்.
”அக்கா நான் கூப்பிட உவள் வரமாட்டன் எண்டு சொல்லி ஆட்டம் போட்டவள் . உவள் அப்பிடி அடம்பிடிச்சதிலை மாணிக்கணுக்கு உசார் வந்து அவன் எங்களை எதிர்க்க தொடங்கிவிட்டான். அவனை அடிச்சு முறிச்சுப்போட்டுத்தான் நாங்கள் இவளைக் கூட்டியந்தனாங்கள், இனி என்னென்ன கரச்சல் வரப்போகுதோ தெரியாது “ செல்லப்பர் மீண்டும் ஆத்திரத்துடன் பார்வதியை முறைத்து பார்த்தார்.
பார்வதி பயத்துடன் நடுங்கிக் கொண்டிரந்தாள்.
”சின்னத்தங்கம் நீ பிள்ளையைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளே போ“ எனக் கூறிய அன்னம்மா சின்னத்தங்கத்தையும் பார்வதியையும் வீட்டினுள்ளே அனுப்பி வைத்தாள்.
செல்லப்பர் தலையில் கைவைத்த வண்ணம் மீண்டும் கதிரையில் அமர்ந்து கொண்டார்.
இப்போது செல்லப்பருடன் கதை கொடுத்தால் திரும்பவம் அவருக்குக் கோபம் வந்து விடுமென நினைத்த அன்னம்மா ஒன்றம் பேசாது வீட்டினுள்ளே சென்றாள் .
”மாமி இந்த வீட்டிலை இனி என்னாலை இருக்க முடியாது“ அப்பு என்னை அடிச்சுக் கொண்டு போடுவர் “ பார்வதி அன்னம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு விம்மினாள்.
”நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை எனக் கூறிய அன்னம்மா பார்வதியின் முதுகை ஆதரவாக தடவினாள்.
”மாமி இனி நான் உயிரோடை இருக்கிறதிலை பிரயோசனமில்லை பார்வதி அழுகையை அடக்க முடியாமல் தேம்பினாள்.
அன்னம்மாவின் உள்ளம் பதைபதைத்தது. பார்வதி இப்போது இருக்கும் நிலையில் சில வளை தனது உயிரை மாய்த்துக் கொள்ளவும் என எண்ணி ள் கலக்க மடைந்தாள்.
பார்வதி நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை , உனக்கு கரச்சல் வராமல் பாக்கிறது என்ரை பொறுப்பு எனப் பார்வதிக்கு ஆறுதல் கூறினால் அன்னம்மா.
”அவர் கோவத்திலை இருக்கிறார் எனக்குப் பயமாயக் கிடக்கு. நீதான் மச்சால் அவரைச் சமாதனப் படுத்த வேணும் “ என அழுதுகொண்டே கூறினாள் சின்னத்தங்கம்.
”இப்ப நீங்கள் இரண்டு பேரும் கொஞ்சம் ஆறுதலாயக் படுத்திருங்கோ நான் தம்பியோடை கதைச்சுச் சமாபதானப்படு;ததிறன். எனக் கூறிய அன்னம்மா வெளியே வந்து செல்லப்பர் படுத்திருந்த சார்மனைக் கதிரையின் அருகெ அமர்ந்த , அவரோடு கதைக்கத் தொடங்கினாள்.

27
காலை நேரத்தில் ஐந்தாறு பேர்தான் வாசிகசாலைக்குப் பேப்பர் வாசிக்க வருவது வழக்கம். ஆனால் அன்று அதிகமானோர் வாசிகசாலையில் கூடியிருந்தனர். செல்லப்பரின் மகளை மீட்டு வந்த செய்தி நேரத்தில் ஊர்முழுவதும் காட்டுத்தீபோல் பரவியிருந்தது. வாசிகசாலைக்கு வந்தால் விபரம் அறியலாம் என்றெண்ணிப் பலர் அங்கு வந்திருந்தார்கள் . செய்தி அறிந்தவுடனேயே சின்னத்தம்பர் முதல் வேலையாகத் துரைசிங்கம் முதலாளியின் வீட்டுக்குப்போய் அவருடன் கதைத்து விட்டுத்தான் வாசிகசாலைக்கு வந்தார். துரைசிங்கம் முதலாளியிடம் தான் கேட்டறிந்த விஷயத்தை அங்கிருந்தவர்களுக்கு அவர் சுவைபடக்
கூறிக்கொண்டிருந்தார். அவரைச்சுற்றி எல்லோரும் வட்டமாக அமர்ந்திருந்தனர்.
”என்னதான் இருந்தாலும் துரைசிங்கம் ஆள் ஒரு விண்ணன்தான். செல்லப்பற்றை மகளை எப்படியோ வீட்டை கொண்டு வந்து சேர்த்துப் போட்டார்தானே “ சின்னத்தம்பர் தன்னைச் சூழ்ந்தவர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கூறினார்.
”எப்பிடிச் சின்னத்தம்பர் அவையள் இருந்த இடத்தைத் துரைசிங்கம் கண்டு பிடிச்சவராம்?“ எனக்கேட்டார் அருகிலிருந்த கந்தையா.
”என்ன கந்தையா விசர்க் கேள்வி கேக்கிறாய்?..... அந்த ஆள் ஊரைத் திண்ட புலி. ஒவ்வொரு ஊரிலும் அவருக்கு ஆக்கள் இருக்கினந்தானே.“
”எந்த ஊரிலிருந்து பார்வதியைப் பிடிச்சுக்கொண்டு வந்தவையாம்?
”அதைமட்டும் என்னட்டைக் கேக்காதையுங்கோ... அதுகள் வெளியிலை வந்தால் வீண் கரச்சல்தான் வரும்.“
”அப்ப மாணிக்கன்ரை சங்கதி என்ன மாதிரி?“ ”அவனைத் துரைசிங்கம் சும்மா விட்டிட்டாரோ?“
”எங்களுக்கேன் உந்தக் கதை ? துரைசிங்கம் ஊருக்குள்ளையே அவனைச் சரிக்கட்ட வேணுமெண்டு கறுவிக்கொண்டு திரிஞ்சவர். இப்பிடியொரு சந்தர்ப்பம் கிடைச்சிருந்தால் சும்மாவோ விட்டிட்டு வந்திருப்பார்“ என்றார் சின்னத்தம்பர் சிரித்தபடி.
”என்ன சின்னத்தம்பர் நீ மறைச்சு மறைச்சுப் பேசிறாய் துரைசிங்கம் உன்னட்டை ஒண்டும் சொல்லேல்லையோ?“ எனக் கேட்டார் இதுவரை நேரமும் பேசாதிருந்த அம்பலவாணர்.
”அதுதாண் "ஐஸே' எனக்கும் சந்தேகமாய்க் கிடக்கு. துரைசிங்கம் என்னட்டை ஒண்டும் விளக்கமாய்ச் சொல்லேல்லை. ஒரு வேளை மாணிக்கனைச் சரிக்கட்டிப் போட்டுத்தான் வந்தாரோ தெரியேல்லை“ என யோசனையுடன் கூறினார் சின்னத்தம்பர்.
”துரைசிங்கம் செய்தது சரியெண்டே நீ நினைக்கிறாய் சின்னத்தம்பர்?
இப்படித் திடீரெனக் கந்தையா கேட்டது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் கந்தையாவைத் திரும்பிப் சின்னத்தம்பர்.
”என்ன கந்தையா திடீரெண்டு உப்பிடிக் கதைக்கிறாய்? உன்ரை கதையைப் பாத்தால் துரைசிங்கம் ஏதோ பிழை செய்த மாதிரியெல்லோ கதைக்கிறாய்“
”அந்த ஆள் செய்தது முழுப்பிழைகாணும்“ என்றார் கந்தையா பக்கத்திலிருந்த மேசையில் குத்தியப்படி.
”அப்ப கந்தையா அண்ணை, நீயும் அவங்களுக்கெல்லாம் "சப்போட்' பண்ணுறாய் “ என்றார் அம்பலவாணர் கிண்டலான குரலில்.
”நான் ஒண்டும் ‘சப்போட்' பண்ணிக்கதேக்கேல்லை நீங்கள்தான் துரைசிங்கத்துக்குச் சார்;பாய்க் கதைக்கிறியள்.“
”கந்தையா, இண்டைக்கு நாங்கள் மானம் மரியாதையோடை ஊரிலை இருக்கிறதுக்கு காரணம் அந்த மனிசன் துரைசிங்கந்தான். இல்லாட்டில் கீழ் சாதிக்காரன்கள் தலைக்கு மேலை ஏறிவிடுவினம். அந்த ஆள்தானே அவங்களை அடக்கி வைச்சிருக்கு“ என்றார் சின்னத்தம்பர்.
”நான் சொல்லுறது உங்கள் ஒருத்தருக்கும் விளங்கேல்லை ... ஒரு கீழ்சாதிக்காரன் கூட்டிக்கொண்டுபோய் வைச்சிருந்த பெட்டையைத் திரும்பி வீட்டை கொணந்ததுதான் பிழையெண்டு சொல்லுறன்“ என்றார் கந்தையா சின்னத்தம்பரைப் பார்த்து.
”அப்ப கீழ்சாதியன்கள் எங்கடை பிள்ளையளைக் கலியாணம் முடிச்சு குடும்பம் நடத்தி, பிள்ளைகுட்டியளும் பெறுவாங்கள், எல்லாத்தையும் நாங்கள்; பாத்துக்கொண்டல்லோ இருக்கவேணும்“ என்றார் சின்னத்தம்பர் காரசாரமாக.
”நீ என்னப்பா விழல்கதை கதைக்கிறாய். அவங்கள் கொண்டுபோய் எச்சில் படுத்தினதை வீட்டுக்குள்ளை கொண்டுவந்து வைச்சிருக்கிறதுதான் சரியெண்டு நீசொல்லுறாய் போலை கிடக்கு“ என்றார் கந்தையா பலமான குரலில்.
” நீ தான் கந்தையா விசர்க்கதை கதைக்கிறாய். துரைசிங்கம் அண்ணை உப்பிடிச் செய்யாமலிருந்தால் நாளைக்கு உன்ரை வீட்டிலும் அவங்கள் நுழைஞ்சிடுவாங்கள் என்டதை நினைச்சுக்கொள், அவங்கள் ஒருத்தருக்கும் பயப்பிடமாட்டாங்கள்“ என்றார் சின்னத்தம்பர் கோபமாக.
”என்ரை வீட்டிலை உப்பிடியொண்டு நடந்தால் நான் அவையளைக் விட்டிடுவன். திரும்பவும் அடிவீட்டுக் குள்ளை கொண்டுவந்து வைக்கமாட்டன்.; நாளைக்கு உங்கடை வீட்டிலை நல்லது கெட்டது நடந்தால் செல்லபரும வருவார்தானே . கீழ்சாதிக்காரன் கூட்டிக்கொண்டு போன மகளைக் கொண்டு வநது வைச்சிருக்கிற செல்லப்பர், வரலா மெண்டால் ஒரு கீழ் சாதிக்காரனும் வரலாந்தானே.... “
கந்தையா ... இப்படிக் கூறியதும் அங்கு ஓர் அசாதாரண மௌனம் நிலவியது. ”என்ன, ஏன் எல்லோரும் வாயடைச்சுப்போய் இருக்கிறியள?“;
”.........“ ஒருவரும் பதில் பேசவில்லை.
”செல்லப்பர் இப்ப மகளை வீட்டிலை கொணந்து வைச்சிருக்கிறார்.; கொஞ்சக்காலம் போனால் அவளுக்குக் கலியாணமும் பேசிச் செய்து வைப்பர். நீங்கள் எல்லோரும் அந்தக் கலியாணத்தை நிண்டு நடத்தி வைப்பியள் போலை கிடக்கு“ என்றார் கந்தையா தொடர்ந்து.
அப்போதும் ஒருவரும் பேசவில்லை .
”என்ன அண்ணையவை கதைச்சுக்கொண்டு இருக்கிறியள். கடுதாசிக் கூட்டம் விளையாடேல்லையோ?“
எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். நடேசு சிரித்த படி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். கசங்கிக் கிழிந்து போயிருந்த அரைக் காற்சட்டைப்பைக்குள் கையை விட்டுத் துழாவி, கச்சான் கடலையொன்றை எடுத்து வாயில் வைத்துக் கடித்து, அதன் தோலை வெளியே துப்பிவிட்டு ஏதோ முணுமுணுத்தபடி கடலையை வாயில் போட்டுச் சப்பிக்கொண்டு வந்தவன், மடத்; திண்ணையில் போய் அமர்ந்து கொண்டு எல்லோரையும் பார்த்து விகற்பமின்றிச் சிரித்தான்.
”என்ன மச்சான் விசேஷம்?“ சின்னத்தம்பர் ;தான் கேட்டார்.
நடேசு அவரது கேள்விக்குப் பதில் சொல்லாது அம்பலவாணரின் பக்கந்திரும்பி, ”வாணரண்ணை , பார்வதி மச்சாள் வந்திட்hளெல்லோ, உனக்குத் தெரியாதே? “எனக் கேட்டான்.
தன்னிடம் நடேசு அப்படிக் கேட்டது அம்பலவாணருக்குச் சங்கடமாக இருநதது. ஆனாலும் சமாளித்துக் கொண்டார்.
”இல்லை மச்சான் எனக்குத் தெரியாது. எப்ப வந்தவ?
”இராத்திரித்தான் வந்தவவாம்.“
”இவ்வளவு நாளும் எங்கை போயிருந்தவ“
”முத்தையன் கட்டுக்கு“
”என்ன முத்தையன்கட்டுக்கோ? நடேசுவைப் பார்த்துக் கேட்டார்.
”அப்பிடியெண்டுதான் எங்கடை அம்மாவும் மாமியும் கதைச்சுக் கொண்டிருந்தவை.“
இப்போது அங்கிருந்தவர்களுக்கு செய்தியொன்று புதிதாகக் கிடைத்ததால் ,மேலும் விஷயம் அறிவதற்காக நடேசுவிடம் கதைகொடுத்தார்கள்.
”முத்தையன்கட்டிலையிருந்து எப்பிடி உன்ரை மச்சாள் வீட்டுக்கு வந்தவ?
”அது எப்பிடியெண்டு எனக்குத் தெரியாது அண்ணையவை.“
நடேசு இப்படிக் கூறியதும் அங்;கிருந்தவர்களுக்கு ஏமாறறமாயப்; போய்விட்டது.
”நடேசு நீ உன்ரை மச்சாளைப் போய்ப் பாக்கேல்லையோ? எனக்கேட்டார் கந்தையா.
ஏன் பாக்கேல்லை, இப்ப அவவைப் போய்ப் பாhத்திட்டுத்தான் இங்கைவாறன்.“
”நீ உன்ரை மச்சாளோடை கதைக்கேல்லையோ?“ எனக்கேட்டார் கந்தையா.
”ஏன் பாக்கேல்லை, இப்ப அவவைப் போய்ப் பாத்திட்டுத்தான் இங்கை வாறன்.“
”நீ உன்ரை மச்சாளோடை கதைக் கேல்லையோ?“ என்றார் சின்னத்தம்பர் சிரித்தபடி
”அவவுக்கு இப்ப பெரிய நடப்பு, ஒருதரோடையும் கதைக்கிறேல்லை. நெடுக நெடுக அறைக்குள்ளை போய் இரக்கிறா. நான் கதைகேட்ட பொழுதும் என்னொடை ஒண்டும் பேசேல்லை... ”ஏன் மச்சாள் என்னொடை கோவமோ“ எண்டு கேட்டன் . இல்லையெண்டு தலையை மட்டும் ஆட்டினா.... பதில் சொல்லே;லை“ எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்தான் நடேசு.
”என்ன நடேசு அவசரப் படுகிறாய்? கொஞ்சநேரம் இருந்து கதைச்சிட்டுப் போவன்“ என அவனைத் தடுத்தார்; அம்பலவாணர்.
”அண்ணையவை எனக்கு நேரமில்லை . நான் போகவேணும் உங்கை பிள்ளையார் கோயிலிலை ஒரு கலியாணமாம, கோயிலடியிலை நிறையக் கார் நிற்குது. நான் ஒருக்கா பெம்பிளையை பாக்கவேணும் “ எனக் கூறிய நடேசு அங்கிருந்தவர்களிடம் மேலும் கதைத்துக் கொண்டிராமல் அவ்விடத்தை விட்டகன்றான்.
வாசிகசாலையில் இருந்தவர்களும் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினார்.

28
சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்ட அந்தப் பயங்கர நிகழ்ச்சி செங்கமலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. அதிலிருந்து விடுபட அவளுக்குச் சிறிது நேரம் பிடித்தது. மாணிக்கத்தின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடிய படி இருந்தது. அவன் நினைவிழந்து கிடந்தான். செங்கமலத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மாணிக்கத்தின் மூக்கினருகே விரலை வைத்து மூச்சு வருகிறதா எனக்கவனித்தாள். சிறிதாக மூச்சு வந்துகொண்டிருந்தது.
சற்று முன்னர் அவள் போட்ட சத்தத்தைக் கேட்டு அயலிலுள்ள வர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். செங்கமலத்துக்கு நடந்ததை விளக்கிக் கூறினாள். மாணிக்கத்தை எல்லோருமாகத் தூக்கி ஒரு வாங்கில் படுக்கவைத்துவிட்டு ஈரத் துணியால் அவனது தலையில் கட்டுப்போட்டார்கள.; இரத்தம் வழிந்தோடுவதைக் தடுப்பதறகு அவர்கள் செய்த முயற்சி எதுவுமே பலனளிகவில்லை. மாணிக்கம் மயங்கிய நிலையிலே கிடந்தான்.
மாணிக்கத்தைஉடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் போல் அவர்களுக்கு தோன்றியது. ஒருவன் கார்பிடித்து வருதாகக் கூறிவிட்டு வீட்டு விறாந்தையில் வைக்கப்பட்டிருந்த கந்தசாமியின் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியிலே சென்றான்.; தனது கணவன் கந்தசாமி அந்த நேரத்தில் அங்கு இல்லாமல் மனம் பதறிய வண்ணம் இருந்தது.
சிறிது நேரத்தின் பின் மாணிக்கத்தைக் கொண்டு செல்வதற்கு கார் வந்து சேர்ந்தது. மாணிக்கத்தை அங்கிருந்தவர்களின் துணையோடு காரில் ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டாள் செங்;கமலம். மாணிக்கத்தின் உயிருக்கு எதுவும் நேரக்கூடாது மனம் பிரார்த்தித்துகொண்டிருந்தது. பார்வதியைப்; பற்றிய எண்ணமும் செங்கமலத்தைப் பெரிதும் வாட்டியது. பார்வதிக்கு என்ன நேர்நதிருககுமோ. அவளை என்ன செய்திருப்பார்களோ என்றெல்லாம் அவள் எண்ணிக் கலங்கினாள்.; ஆஸ்பத்திரியில் மாணிக்கத்தைச் சேர்க்கும்போது அவன் நினைவிழந்த நிலையிலேயே கிடந்தான்.
மாணிக்கம் யாரால் தாக்கப்பட்டானென ஆஸ்பத்திரியிலுள்ளவர்கள் விபரம் கேட்டபோது செங்கமலத்தால் எதுவுமே கூற முடியவில்லை. உண்மையில் யார் மாணிக்கத்தைத் தாக்கினார்கள் என்பது அவளுக்குத் தெரியவில்லை.
அவசர அவசரமாக மாணிக்கத்தைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவனைச் சிகிச்சைக்காக உள்ளே எடுத்துச் சென்றார்கள். மாணிகக்த்தின் நிலைமை மிகவும் மோசமாயிருக்கிறது என்பதை மட்டுந்தான் அவர்கள் செங்கமலத்திடம் கூறினார்கள்.
ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் செங்மலத்தையும் கூடவந்தவர்களையும் ஆஸ்பத்திரியின் உள்ளே அனுமதிக்க மறுத்து மறுநாட் காலையில் வந்து பார்க்கும்படி கூறிவிட்டார்கள்.
மாணிக்கத்தை அநாதரவாக ஆஸ்பத்திரியில் விட்டுச் செல்ல செங்கமலம் விரும்பவில்லை. ஆனாலும் வேறு வழியின்றி அவள் கூட வந்தவர்களோடு வீட்டிற்குப் புறப்பட்டாள.
செங்கமலம் வீட்டை அடைந்து வெகுநேரத்தின் பின்புதான் கந்தசாமி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். முத்தையன்கட்டுக்கு வரும் கடைசி பஸ்ஸையும் தவற விட்டுவிட்டு அவன் வெகு தூரம் நடந்து வீட்டுக்கு வந்ததால் காலதாமதமாகிவிட்டது. செங்கமலம் சகல விஷயங்களையும் அவனிடம் கூறினாள். அதைக் கேட்டபோது கந்தசாமி பதறிப்போனான்.மாணிக்கத்துக்கு ஏற்பட்ட நிலையை நினைத்தபோது அவனது கண்கள் கலங்கின. உடனே ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டுமென அவன் புறப்பட்டான.; ஆனால் அந்;த நேரத்தில் மாணிக்கத்தைப் பார்க்க ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனக் கூறிச் செங்கமலம் அவனைத் தடுத்துவிட்டாள்.
அன்று இரவு முழுவதும் செங்கமலமும் கந்தசாமியும் நித்திரை கொள்வேயில்லை. செங்கமலம் கூறியதிலிருந்து செல்லப்பரும் துரைசிங்கமும் அவர்களுடைய கையாட்களுந் தான் மாணிக்கத்தைத் தாக்கியிருக்கிறார்கள் என்பதை கந்தசாமியால் ஊகிக்க முடிந்தது.
”இதெல்லாத்துக்கம் நான்தான் காரணம். என்னாலைதான் மாணிக்கம் பார்வதியை முத்தையனகட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தான். அவன்ரை உயிருக்கு ஏதேன் நடந்தால் அதுக்கு காரணம் நான்தான் என செங்கமலத்திடம் கூறிக் கலங்கிய வண்ணம் இருந்தான் கந்தசாமி.
நன்றாகப் பொழுது புலர்வதற்கு முன்பே செங்கலமும் கந்தசாமியும் ஆஸ்பத்தரிக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் அங்கு சென்றபோது ஆஸ்பத்திரில் கிடைத்த அதிர்ச்சியைக் கொடுத்தது, மாணிக்கத்தின் நிலைமை மோசடைந்திருந்ததினால் அவனை முல்லைத்தீவு பெரியாஸபத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் அவனுக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை என்றும் அறிந்தபோது கந்தசாமியின் நெஞ்சு விறைத்துப் போயிற்று. ; செங்கலத்தைக் கூட்டிக்கொண்டு முல்லைத்தீவு பெரியாஸ்பத்திரிக்கு புறப்பட்டான்.

29
கோவிந்தனும் பொன்னியும் பெரிதும் கலங்கிப் போயிருந்தனா. துரைசிங்கம் முதலாளி இன்னும் ஒரு கிழமைக்குள் குடியிருக்கும் காணியையும் தோட்டம் செய்யும் நிலத்தையும் விட்டுவிடவேண்டுமெனக் கூறியதிலிருந்து அவர்களுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. துரைசிங்கம் கமக்காறனிடம் சென்று கெஞ்சி மன்றாடியாவது இன்னும் சிறிது காலத்துக்குத் தவணை தரும்படி கேட்கலாமெனக் கோவிந்தன் யோசித்தான.; ஆனால் துரைசிங்கம் கமக்காறன் இப்போது இருக்கும் நிலையயில் தங்களுக்கு இரக்கம் காட்டமாட்டார் என்பதும் அவனக்குத் தெரிந்தது. எல்லாவற்றிக்கும்; மேலாக மாணிக்கம் எங்கே இருக்கிறான் என்ன ஆனான் என்ற விபரங்கள் எதுவும் தெரியாதது அவனுக்கும் பொன்னிக்கும் பெரிதும் கலக்கத்தைக் கொடுத்தது.
கோவிந்தனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. துரைசிங்கம் கமக்காறன் வந்து போனதிலிருந்து ஒரே யோசனையுடனும் கவலையுடனும் எந்த நேரமும் வீட்டிலேயே அடைந்து கிடந்தான்.
”என்ன மச்சான் யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய்?“ குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது, குட்டியன் அங்கே வந்திருப்பதைக் கவனித்தான் கோவிந்தன்.
”ஒண்டுமில்லை குட்டியன், இப்ப இருக்கிற நிலமையிலை எனக்கு விசர் வந்திடும் போலை கிடக்கு. இன்னும் ஒரு கிழமையிலை நாங்கள் தெருவிலை நிக்க வேண்டிவரும்.
”இல்லை மச்சான் நீ அப்பிடியொண்டும் யோசிக்hதை. நான் எல்லாத்துக்கும் துரைசிங்கம் கமக்காறனோடை பேசி ஒரு நல்லமுடிவு எடுத்துக் கொண்டுதான் இங்கை வந்திரக்கிறன்.
அப்போது வீட்டினுள்ளே அடுப்படியில் வேலையாய் இருந்த பொன்னி குட்டியனின் குரல் கேட்டு வெளியே வந்தாள்.
”என்ன தம்பி கமக்காறன் சொன்னவர்....?“
”அக்கா உனக்குச் சங்கதி தெரியாதோ? செல்லப்பர் கமக்காறன்ரை மேளைக் கூட்டிக்கொண்டு வந்திட்டினமாம்.“

”என்ன ..? எப்ப கூட்டியந்தவை ? எங்கையிருந்து கூட்டியந்தவை ? பொன்னி கேள்விமேல் கேள்வியாகக் கேட்டாள்.
”அதுதானக்கா எனக்கும் தெரியேல்லை. நான் இந்தச் சங்கதியைக் கௌ;விப்பட்டவுடனே துரைசிங்கம் கமக்காறன்ரை வீட்டுக்குப்போய் கதைச்சுப் போட்டுத்தான் வாறன். அவர் ஒண்டும் சொல்லுறாரில்லை.
சா, அப்பிடியொண்டும் இருக்காது . ஆனால் துரைசிங்கம் கமக்காறன் ஒண்டையும் எனக்குக் கொஞ்சம் யோசனையாயிருக்கு. எனச் சிந்தனையுடன் கூறினான்; குட்டியன்.
கமக்காறரவை மாணிக்கனைச் சும்மா விட்டிருக்கமாட்டினம் உயிரோடை தன்னும் விட்டு வைச்சிருப்;பினமோ தெரியேல்லை“ எனப் பதறினான் கோவிந்தன்.
அதைக்கேட்ட பொன்னி அழத் தொடங்கிவிட்டாள்.
”நீங்கள் இரண்டும் பேரும் மனசைத் தளரவிடாதையுங்கோ. அப்பிடியொண்டும் நடந்திருக்காது“ என அவர்களுக்கு ஆறுதல் கூறினான் குட்டியன்.
”குட்டியன் எல்லாத்தையும் நீ விபரமாய்ச் சொல்லு? அரையும் குறையுமாய்ச் சொல்லி எங்களைக் கலங்க வைக்காதை எனப் படபடத்தான் கோவிந்தான்.
”செல்லப்பர் கமக்காறன் துரைசிங்கம் கமக்காறனோடை போய்த்தான் மேளைக் கூட்டியந்தவராம் நான் எவ்வளவோ கெஞ்சி மன்றாடிக் கேட்டுப்பாத்தன். அந்த விஷயம் உனக்குத் தேவையில்லையெண்டு கமக்காறன் சொல்லிப்போட்டார். மாணிக்கத்துக்கு ஏதேன் உயிருக்கு ஆபத்தோ எண்டு கூடக்கேட்டுப்பாத்தன். அவர் மாணிக்கனைத் தாங்கள் காணவேயில்லை எண்டு சொலலுறார்.
”அப்ப செல்லப்பர் கமக்காறனிட்டையாவது போய்க் கேட்டு வாவன் தம்பி“ என அழுத வண்ணம் கூறினாள் பொன்னி.
”என்னக்கா நீ கதைக்கிறதை அவற்றை மேளைத்தானே மாணி;க்கன் கூட்டிக்கொண்டு போனவன.; நான் எந்த முகத்தோடை போய் அவரோடை கதைக்கிறது“
”துரைசிங்கம் கமக்காறன் வேறையொண்டும் சொல்லேல்லையோ ? என யோசனையடன் கேட்டான் கோவிந்தன்.
”கொஞ்சக் காலத்துக்கு எண்டாலும் உங்களை இந்தக் காணியிலை இருக்கிறதுக்கும் , தோட்டம் செய்யிறதுககும் தவணை குடுக்கச் சொல்லி அவரிட்டைக் கோபம் வந்திட்டுது. தன்னை மண் அள்ளித் திட்டினவையை காணியிலை இருக்க விடுகிறதோ எண்டு கேக்கிறாh. நான் அவரைச் சமாதானப்படுத்த பெரிய கஷ்டமாயப் போச்சு. கடைசியிலை காலிலை விழுந்து கும்பிட்டன. அதுக்குப் பிறகுதான் அவற்றை கோபம் அடங்கிச்சுது. இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்களை இந்தக் காணியிலை இருக்கலாமெண்டு சொல்லி இருக்கிறாh.; என விபரமாகக் கூறினான் குட்டியன்.
”குட்டியன் இதிலை ஏதோ சூழ்ச்சி; இருக்கு? கமக்காறன் ஒண்டு சொன்னால் பிறகு ஆர் என்ன சொன்னாலும் மாத்தமாட்டார்;. அவற்றை குணம் எனக்குத் தெரியும். அவர் மாணிக்கனுககு ஏதோ செய்து போட்டுத்தான் இப்ப எங்களைக் காணியிலை குடியிருக்க தவணை குடுத்திருக்கிறாh“;.
கோவிந்தன் கூறுவதும் சைக்கிள் மணியோசை கேட்டது. தட்டிப்படலையடியில் தந்திச் சேவகன் நின்று கொண்டிருந்தான்.
”கோவிந்தன் வீடு இதுதானே?“
கோவிந்தன் எழுந்து தந்திச் சேவகனருகில் சென்றான். அவனைத் தொடர்ந்து குட்டியனும பொன்னியும் சென்றார்கள்.

”அவசரத் தந்தி ஒண்டு வந்திருக்கு “ எனக் கூறிக் கொண்டு கோவிந்தனிடம் கையொப்பம் வாங்கினான் தந்திச்சேவகன்.
”எங்களுக்கு வாசிக்கத் தெரியாது? உந்தத் தந்தியை ஒருக்கா வாசிச்சுக்காட்டுங்கோ தம்பி“ எனப் பதட்டத்துடன் சொன்னான் கோவிந்தன்.
”மாணிக்கம் முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான். உடனே வரவும் “ கந்தசாமி.
தந்தியை வாசித்துக் கூறிய தந்திச் சேவகன், அதனைக் கோவிந்தனது கையில் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.
”என்ரை பிள்ளையை அன்னமார்தான் காப்பாத்த வேணும் “ பொன்னி பெரிதாக ஒப்பாரி வைத்து அழத்தொடங்கி விட்டாள்.
கோவிந்தனுக்கும், குட்டியனுக்கும் அதிர்ச்சியிலிருந்து விடுபட சிறிது நேரம் பிடித்தது. மாணிக்கத்துக்கு கமக்காறர்கள் தான் ஏதோ தீங்கு செய்து விட்டார்கள் என்பது இப்போது அவர்களுக்கு திட்டவட்மாகத் தெரிந்து விட்டது.
கந்தசாமி ஏன் தந்தி கொடுத்திருக்கிறான்? அவனுக்கு எப்படி மாணிக்கம் முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் இருப்பது தெரிய வந்தது? மாணிக்கத்தின் உயிருககு ஏதேன் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ?
எதற்கும் உடனே முல்லைத்தீவு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டுச் செல்வதுதான் சரியெனத் தீர்மாணித்தான் கோவிந்தன்.
”மச்சான் நீயும் அக்காவும் உடனே புறப்படுங்கோ.. நான் ஒருக்கா என்ரை வீட்டை போட்டுவாறன் . எல்லோருமாய் முல்லைத்தீவுக்குப் போவம் “ எனக் கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டான்.
முல்லைத்தீவு அரசினர் ஆஸபத்திரியில் அவசர சிகிச்சைப் பகுதியில் உள்ள பிரத்தியோக அறையொன்றில் மாணிக்கம் படுத்திருந்தான.; அவனது உடலைச் சுற்றி எங்கும் போட்டிருந்தார்கள். கையில் ஊசியொன்று பொருத்தப்பட்டு அதன் மூலமாக அவனது உடலில்; சிறிது சிறிதாக ஏதோ திரவம் ஏற்ற்பட்டுக் கொண்டிருந்தது. அவனைப் பார்ப்பதற்கோ அல்லது அவனுடன் கதைப்பதற்கோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
அதிகாலையில் அவனுக்கு நினைவு திரும்பி இருந்தது. அப்போது அவன் தன்னை இனம் தெரியாத நான்கு பேர் தாக்கிவிட்டுச் சென்றதாக வைத்தியர்களிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தான். பார்வதியைத் தன்னிடமிருந்;து அவர்கள் பிரித்து சென்ற விபரம் எதையும் அவன் அவர்களிம் கூறவில்லை.
ஆஸ்பத்திரி விறாந்தையில் வாங்கொன்றில் கந்தசாமியும் செங்கமலமும் கவலையே உருவாக அமர்ந்திருந்தனா. ;வைத்தியர்கள் கூறிய விபரங்கள் பெரிதும் அவர்களைக் கவலைக்குள்ளாக்கியிருந்தது. மாணிக்கத்தின் வலது கால் முறிந்து விட்டதென்றும் தலையில் பலமான அடி விழுந்ததினால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு அவனது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறதென்றும் அவன் பலமான அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறான் எனவும் அவர்கள் கூறினார்கள்.
மாணிக்கம் காலையில் தங்களுடன் சில வார்த்தைகள் பேசியதாகவும் தன்னை அடித்தவர்களை அவனுக்குத் தெரியவில்லை எனவும் வைத்தியர்கள் கூறியபோது கந்தசாமிக்கு பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது.
மாணிக்கம் காலையில் தன்னைத் தாக்கியவர்களை யாரெனத் தனக்குத் தெரியாதெனக் கூறவேண்டும் பார்வதியைக் கடத்திச் சென்ற விபரத்ததை ஏன் மாணிக்கம் அவர்களிடம் கூறவில்லை. ஒருவேளை அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியினால் மூளை தாக்கப்பட்டு எல்லாவற்றையும் மறந்துவிட்டானோ.
கந்தசாமி இப்போது பெரிதும் சோர்வடைந்திருந்தான். ஒவ்வொரு நிமிடமும் அவன் கோவிந்தனது வரவை எதிர்பார்த்த வண்ணம் இருந்தான்.
கோவிந்தனும், குட்டியனும், பொன்னியும் அன்று மாலைதான் ஆஸ்பத்திரியை வந்தடைந்தார்கள். அவர்களைக் கண்டதும்தான் கந்தசாமிக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. அவர்கள் அங்கு வந்தபோது காலந்தாழந்;து விட்டபடியால் ;ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள.; கந்தசாமி பெரும் சிரமப்பட்டு அங்குள்ளவர்களுக்கு நிலைமையையை விளக்கிய பின்புதான் அவர்களை ஐந்து நிமிட நேரம் மாணிக்கத்தைப் பார்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.
மாணிக்கம் கட்டிலில் படுத்திருந்த நிலைமையைப் பார்த்ததும் பொன்னி பெரிதாக ஓலமிட்டு அழத்தொடங்கிவிட்டாள. கோவிந்தனது நெஞ்சு விறைத்துப் போயிற்று. குட்டியனும் ஒருகணம் கலங்கிவிட்டான்.
மாணிக்கம் எதுவுமே பேசவில்லை எல்லோரையும் ஒருகணம் பார்த்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டான.;; அவனது முகத்தில் வேதனையின் சாயல் படர்ந்திருந்தது.
பொன்னி, மாணிக்கத்தின் அருகே சென்று அவனோடு கதைக்க முயன்றபோது வைத்தியசாலை ஊழியர்கள் அவளைத் தடுத்து எல்லோரையும் வெளியேறும்படி கூறிவிட்டார்கள. பொன்னியைத் தேற்றுவது குட்டியனுக்கும் கந்தசாமிக்கும் பெருஞ்சிரமமாய் போயிற்று. அவள் மாணிணக்கத்தின் அருகேயே தான் இருக்கவேண்டுமெனக் கூறி ஆஸ்பத்திரியை விட்டு வெளியேவர மறுத்துவிட்டாள். பெருஞ் சிரமப்பட்டு கந்தசாமி அவளை வெளியே கூட்டிவந்தான்;. இனி அங்கு இருப்பதில் பிரயோசனமில்லை எனத் தெரிந்த கந்ந்தசாமி மறுநாட்காலை வந்து மாணிக்கத்தைப் பார்க்கலாம் எனக்;கூறி எல்லோரையும் அழைத்துக்கொண்டு முத்தையன்கட்டுக்குப் புறப்பட்டான்.

30
பலவிதமான பிரச்சினைகள் துரைசிங்கம் முதலாளியின் மூளையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தன. செல்லப்பரின் மகள் பார்வதியை மாணிக்கத்திடமிருந்து மீட்டு வராவிடில் தனது மதிப்புக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமென நினைத்த அவர் காரியம் இப்போது விபரீதத்தில்முடிந்திருக்கிறது . மாணிக்கத்தின் திமிரை அடக்குவதறகுச் சென்றவர்கள் அவனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் அவனை அடிப்பார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை மாணிக்கத்தின் உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டால் அதனால் பலகரச்சல்கள் ஏற்படும் என்பதைத் துரைசிங்கம் முதலாளி இப்போது உணர்ந்து கொண்டார்.
அவர் பார்வதியை மீட்டு வந்ததைப் பற்றி பலரும் பல விதமான அபிப்பிராயங்கள் தெரிவித்தனர்;. பார்வதியை மீட்டுக்கொண்டு வந்திருக்கக் கூடாதென அவரிடம் நேரடியாகச் சிலர் கூறியிருந்தனர். ஒரு கீழ்ச்சாதிக்காரனோடு கூடிச் சென்றவளை மீட்டு வந்ததால் தமது சமூகத்துக்கே இழுக்கு ஏற்பட்டுவிட்டதெனப் பலர் கூறிக்கொண்டார்கள்.
பார்வதியை அழைத்து வந்து ஐந்து நாட்கள் கழிந்துவிட்டன. இந்த ஐந்து நாட்களும் அவர் கலங்கிய வண்ணம் இருந்தார். எந்த நேரமும் பொலிசார் தன்னைத்தேடி வரலாமென அவர் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்தது போல் எதுவுமே நடக்காதது அவருக்குச் சிறிது யோசனையாகவே இருந்தது.
மாணிக்கம் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான என்றும் அவனைப் பார்ப்பதற்காக கோவிந்தன், குட்டியன், பொன்னி முதலானோர் முல்லைத்தீவுககுச் சென்றதாகவும் அறிந்த பொழுது துரைசிங்கம் முதலாளியின் மனம் மேலும் கலக்க மடைந்தது.
செல்லப்பர் வேலைக்கு வராததினால் தாமதமாகியிருந்த வேலைகளை யெல்லாம் அவர் காலந்தாழ்த்தாது கவனிக்கவேண்டியிருந்தது. அதனால் அவர் செல்லப்பரை உடனே வேலைக்கு வரும்படி சொல்லியனுப்பி இருந்தார். செல்லப்பரும் மறுப்புக் கூறாது உடனே வந்து லொறியில் வேலை செய்யத்தொடங்கினார்.
இந்த வேளையில் தான் துரைசிங்கம் முதலாளியின் மகளுக்குத் திருமணம் பொருந்தி வந்திருந்தது. மாணிக்கத்தைத் தாக்கியதால் ஏற்படும் பிரச்சினைகள் தோன்றுமுன் தனது மகளின் திருமணத்தை எப்படியாவது செய்துமுடித்துவிட வேண்டும் என அவர் விரும்பினாh. மாப்பிள்ளை வீட்டார் பெருந்தொகையான சீதனம் கேட்டார்கள.; எப்படியாவது அவர்கள் கேட்டதைக் கொடுத்து மகளின் திருமணத்தை
முடித்துவிட வேண்டுமென் ;பதிலே அவரது எண்ணம் முழுவதும் லயித்திருந்தது. சீதனமாகத் தோட்டக் காணியையும் கோவிந்தன் குடியிருக்கும் காணியையும் கொடுப்தற்காக முடிவாயிற்று. ஆனால், மாப்பிள்ளை வீட்டார் கேட்;ட பதினையாயிரம் ரூபா பணத்தைக் கொடுப்பதுதான் துரைசிங்கம் முதலாளிக்குப் பெரும் சிரமமாக இருந்தது.
அன்னமார் கோயிலிருக்கும் காணியை விற்று அந்தப் பணத்தைக் கொடுத்து விடலாமென அவரது சிந்தனை ஓடியது. ஆனால் அவர் நினைத்ததுபோல் அது சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஊரிலுள்ள ஒருவராவது அந்தக் காணியை வாங்க முன்வரவில்லை. கோயிலிருக்கும் காணியில் குடியிருக்கவோ அல்லது அதனை அழித்து கமம் செய்யவோ யாருமே விரும்பவில்லை. அந்தக் காணியில் அன்னமார் கோயில்கொண்டிருக்கும் ஒரே காரணத்தினால் ஊரிலுள்ளவர்கள் எல்லோருமே அதனை விலைக்கு வாங்கத் தயங்கினார்கள். அந்தக் காணிக்கு அடைமானமாக பணம் கொடுக்கவும் முன்வரவில்லை. கடைசியில் தனது சொந்த வீட்டை அடைமானம் வைத்துத்தான் துரைசிங்கம் முதலாளி பணத்தைப் பெறவேண்டியிருந்தது. அந்தப் பணம் மகளுக்குச் சீதனம் கொடுப்தற்குமட்டுமே போதக்கூடியதாக இருந்தது. திருமணச் செலவுககு எப்படிப் பணத்தைப் புரட்டுவது எனத் தெரியாமல் யோசித்தவண்ணம் இருந்தார் துரைசிங்கம் முதலாளி.


31
முத்தையன் கட்டிலிருந்து வந்த நாள் முதல் மாணிக்கத்தின் நிiவாவே இருந்தாள் பார்வதி. இரத்த வெள்ளத்தில் மாணிக்கம் விழுந்து கிடந்த போதுதன்னைத் தந்தை தூக்கி வந்து காரிலே ஏற்றியதும் காருக்குள். இருந்தவன் மாணிக்கத்தின் உயிர் பிரிந்துயிருக்குமெனக் கூறியதும் அவளது நினைவில் அடிக்கடி வந்து அவளைப் பெரிதும் வேதனைப்படுத்திக்கொண்டிருந்தது அவள் எந்த நேரமும் அழுத வண்ணம் ,இருந்தாள். அவளால் ஒழுங்காக உணவருந்த முடியவில்லை. மாணிக்கத்தின் உயிரக்கு எவ்வித தீங்கும் நேரிடக்கூடாதென அவளத மனம் பிராத்தித்துக் கொணடிருந்தது. மாணிக்கத்தின் உயிருக்கு ஏதும் தன்னை மீண்டும் அழைத்துச்செல்வானென்றும் தன்னைப்பரிந்துத மாணிக்கத்தால் இனி ஒரு கணமேணும் இருக்கமுடியாதெனவும் பார்வதி நம்பினாள்.
செல்லப்பர் இப்போது பார்வதியுடன் கதைப்பதில்லை. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பினால் சின்னத்தங்கத்துடன் மட்டும் ஒரு சில வார்த்தைகள் பேசுவார்; சின்னத்தஙகம் கூட முன்பு போல் பார்வதியுடன் அதிகம் கதைப்பதில்லை . அன்னம்மா அடிககடி வந்து பார்வதியுடன் அன்பாக அளவளாவி விட்டுச் செல்வாள் அவளை உணவருந்தும்படி வற்புறுத்துவாள். நடேசும் அடிக்கடி அங்கே வருவான் அவன் வரும் போதேல்லாம் வழமைபோல் பார்வதியுடன் சிறிது நேரம் கதைத்து விட்டுத் தான் செல்வான்.
காலையில் நடேசு அங்கு வந்திருந்த போது”ஏன் பார்வதி நீ இப்ப எனக்குப் பலகாரங்கள் சுட்டுத் தாறேல்லை முந்தி நான் வரேக்கை நிறையத தாறனியெலலோ , என அவளிடம் கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டபோது, பார்வதிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
இந்த நடேசு மச்சானைப் போலை வஞசகம் சூதில்லாமல் எல்லோருமே இருந்துவிட்டால். எவ்வளவு நன்றாக இருக்குமென பார்வதி மனதில் எண்ணிக்கொண்டாள்.
”நாளைக்கு வா மச்சான் உனக்கு கட்டாயம் பலகாரம் சுட்டுத்தாறன்
”நீ சும்மாசொல்லி என்னை ஏமாத்ததிறாய் பார்வதி“
”இல்லை மச்சான். உன்னை ஒருநாளும் நான் ஏமாத்தமாட்டான்“
” உன்னை நம்பேலாது பார்வதி, என்னைக் கலியாணம் செய்யிறதெண்டு சொல்லிப்போட்டு ஏமாத்திப்போட்டாய் தானே “எனக் கூறிவிட்டுச் சிரித்தான் நடேசு.
பார்வதி தன்னையும் மீறிக்கொண்டு சிரித்துவிட்டாள்.
”இலலை மச்சான் இனி உன்னை ஒரு நாளும் ஏமாத்தமாட்டன்.... பலகாரம் சுட்டுத்தாறன்.“
Ž”நாளைக்குக்கட்டாயம் வருவன் “ எனக் கூறிவிட்டு நடேசு புறப்பட்டான்.
தான் முன்பு விளையாட்டுத் தனமாக நடேசு மச்சானுக்னுடன் கேலி பேசி அவரது மனதிலே ஆசைகளை வளர்த்து விட்டதற்காகப் பாhவதி இப்போது மிகவும் மனம்வருந்தினாள்.
மறுநாள் காலையில் எழுந்தபோது பார்வதிக்கு நடேசு வருவானென்ற ஞாபகம் வந்தது. அவனுக்காக ஏதாவது. பலகாரம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் குசினிப்பக்கம் சென்றாள்.
பார்வதிக்கு தலை சுற்றியது அடிவயிற்றுகடகுள் ஏதோ குடைந்து குமட்டியது. விழுந்து விடாமல் இருப்பதற்காகத் திண்ணையிலே உடகார்ந்து கொண்டாள், மீண்டும் மீண்டும் வயிற்றை க் குமட்டியது, நெ;ஞ்சுக்கள் ஏதோ செய்தது அவள் வெளியே ஓடிவந்து பலத்த சத்தத்துடன் ”ஓங்காளித்து“ வாந்நி எடுத்தாள், அவள் வாந்தியெடுக்கும் சத்தங்கேட்டுசின்னத்தங்கம் பதட்டத்துடன் வெளியே வந்தாள்.
முற்றத்தில் வேலியோரமாக எப்போதோ மாணிக்கம் கொண்டு வந்த நட்டு வைத்த மொந்தன் வாழமைரம் இப்போது தழதழவென வளர்ந்து பொத்திதள்ளியிருந்தது, அந்தக் பொத்தியிலீருந்து விரிந்த செம்மடல்களினுடாக நான்கைந்து காய்கள் வெளியே தலை நீட்டியிருந்தன, அடிமரத்திலிருந்து ஒரு சில குட்டிகள் முளைத்து வெளிக்கிளம்பியிருந்தன . பொத்தி விரிந்த பொலிவோடு அந்தவாழைமரம் ஒரு புறம் சாய்ந்திருந்தது.
அந்த வாழைமரத்தை ஒரு கைகையால் பிடித்தபடி குனிந்து வாந்தியெடுத்துக் கொண்டிருந்த பார்வதியைப் பார்த்தும் சின்னத்தங்ஙகம் துனுக்குற்றாள்.
”என்னடி பிள்ளை, ஏன் சக்தியெடுக்கிறாய் ,ஏதேன் குடிச்சுப்போட்டியோ? பார்வதி ஏதாவது நஞ்சைக்குடித்திருப்பாளோ என்ற சந்தேகம் சின்னத்தங்கத்துக்கு ஏற்பட்டது.
”நான் ஒண்டும் குடிக்கேல்லை அம்மா, தேதண்ணிதான் குடிச்சனான் தேத்தண்ணிக்கு சாயம் கூடிப்போச்சுப் போலை அதுதான் வயித்தைக் குமட்டுது“பார்வதிமெது வாக வந்து திண்ணையில் உட்காhந்து கொண்டான்.
சிறிது நேரத்தின் பின்பு எழுந்து குசினிக்கு சென்ற போது மீண்டும் அவளுக்கு தலையைச் சுற்றி வாந்தி வந்தது பார்வதியால் எதுவுமே செய்யமுடியவில்லை.
ஏன் இப்படித் தலையை சுற்றகிறது.?
ஏன் இப்படிக் களைப்பாக இருக்கிறது?
ஏன் வாந்திஎடுக்க வருகிறது?
பார்வதி யோசித்தப் பார்த்தாள்
ஒரு வேளை...ஒருவேளை.... அப்படியும் இருக்குமோ ? பார்வதிக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. மயக்கம் வருவது போல் இருந்தது. அவள் அப்படியே திண்ணையில் சாய்ந்து விட்டாள்.
இவ்வளவு நேரமும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த சின்னத்தங்கத்துக்கு பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன . என்றும் இல்லாதவாறு பார்வதிஏன் வாந்தி எடுக்கவேண்டும் ? ஒரு வேளை... கடவுளே எங்கடை குடும்பத்துக்கு எந்தவித அவமானமும் ஏற்படக்கூடாது. சின்னத்தங்கம் கையைவைத்தபடி யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.
அப்போது அங்கு வந்த அன்னம்மா, ”என்ன சின்னத்தங்கம் தலையில் தலையில் கைவைச்சு யோசித்துக்கொண்டிருக்கிறாய்?“ எனக்கேட்டாள்.
”ஒண்டமில்லை மச்சாள் , உவள் பிள்ளையைப் பற்றித்தான் எனக்குக் கவலையாய்க் கிடக்கு சாப்பிடாமல் கிடக்கிறாள். உப்பிடிச் சாப்பிடாமல் கிடந்தால் உடம்பு என்னத்தக்கு உதவும்.“
பார்வதி வாந்தி எடுத்ததை ஏனோ அன்னம்மாவிடம் கூறாமல் மறைந்து விட்டாள் சின்னத்தங்கம்.


”நான் பார்வதியைச் சாப்பிட வைக்கிறவன், நீ வைக்கிறவன் .நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை “ எனக் கூறிய அன்னம்மா பார்வதியின் அமர்ந்து அவளின் முதுகை ஆதரவாக தடவினாள்,

32
காலத்துக்குத் தான் எத்தனை மகத்தான சக்திஎத்தனையோ சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய சரித்திரங்களைப்படைத்திருக்கிறது. புது யுகங்களை உருவாக்கியிருக்கிறது, ஏன் பிரளயங்களையே ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப் பார்வதியின் இதயத்திலே ஏற்பட்டிருக்கும் புண்களை ஆற்றுவதிலா சிரமம் இருக்கப்போகிறது.?
பார்வதிக்கு அடிக்கடி தலைசுற்றுவதும் வாந்தியெடுப்பதும் கேத்தில் ஏற்பட்ட வேறும் பல மாற்றங்களும் அவளின் மனதில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்பட்த்தியிருநதன,
மாணிக்கத்துடன் சேர்ந்து வாழ்ந்த குடும்ப வாழ்க்கையின் பயனான அவனால் அவளுக்கு அளிக்கப்பட்ட சின்னமொன்று வயிற்றக்குள் வளர்ந்து கொண்டிருப்பவை அவள் உணரத்தொடங்கினாள்.
வயிற்றிவ் வளரும் அந்தக் கர உண்மையிலேயே அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மாணிக்கம் கொடுத்த அந்தப் பரிசை ஏற்று அதனை நல்ல முறையில் வளர்ப்பது தான் மாணிக்கத்துக்கு தான் செய்யும் கைமாறாக இரக்குமென அவள் எண்ணினாள், மாணிக்கத்திடமிருந்து தன்னைப் பிரித்தெடுத்த மூடத்தனமான சமுதாய அமைப்புக்கு தனது வயிற்றிலே வளரும் சிசுவைப் பற்றி யாருக்குத் தெரிந்தால் அதனால் பலதொல்லைகள் ஏற்படும் என்பதைப் பார்வதி உணர்ந்தாள். இதைப் பற்றி யாரிடமும் கூறாமல் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற முடிவுடன் அவள் எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாரானாள்.
செல்லப்பர் அன்று வேலை ஆஸ்பத்திரியிலை செத்துப்போனானாம்“ தேநீர் அருந்தும் போது இதனைச் செல்லப்பர் சின்னத்தங்கத்திடம். கூறினார்.
குசினியிலிருந்த பார்வதி ,”ஐயோ“ என ஒரு கணம் தன்னியறிளாமல் அலறினாள் பின்பு சேலைத் தலைப்பை வாயில் வைத்து அமுக்கியபடி தன்னை மறந்து விம்மிம்மி அழுதாள்.
”என்ன தான் இருந்தாலும் அவனைச்சாகக் கூடியதாக அடிச்சிருக்கப்படாது“ சின்னத்தங்கம் கலக்கத்துடன் கூறினாள்.
”நீ விசர்க்கதை பேசிறாய். நானோ அவனை அடிச்சனான்? துரைசிங்கம் கூட்டி வந்த ஆக்கள் எல்லோரும் அவனை முறட்டுதனமாக அடிச்சவை“
”இதாலை ஏதேன் உங்களுக்கும் கரச்சல் வருமோ? எனப் பயத்துடன் கேட்டாள் சின்னத்தங்கம்.
”அதைப் பற்றித்தான் எனக்குப் பயமாய்க் கிடக்கு. போகப் போகத்தான் எல்லாம் தெரியும். உவளை கூட்டியரப்பிடாதெண்டு நீ கூட்டியரவேணுமெண்டு பிடிவாதம் பிடிச்சாய். அதனாலைதானே உவ்வளவு கரச்சல்“ செல்லப்பர் சின்னத்தங்கத்தைக் கடிந்துகொண்டார்.
”உங்களுக்கு எப்படி மாணிககன் செத்த சங்கதி தெரியும்?“ சின்னத்தங்கம் யோசனையுடன் கேட்டாள்.
”துரைசிங்கந்தான் சொன்னவர். அண்டைக்கு முத்தையன்கட்டுக்கு எங்களோடை வந்த ஆள்தான் வந்து சொல்லிப் போட்டுப் போனவனாம்.“
”உது ஆரோ சும்மா கதை கட்டியிருக்கினம.; அவனை அடிச்சும் இப்ப ஒரு மாசத்துக்கு மேலையாய்ப்போச்சு.. இப்ப உந்தக் கதை வாறதெண்டால் நம்பேலாது“
”அவனை அடிச்சவன் பயத்திலை வந்து துரைசிங்கத்திட்டைச் சொல்லிப்போட்டு போயிருக்கிறான். நீ விசர்க்கதை பேசிறாய்... உனக்கு எதைச் சொன்னாலும் சந்தேகந்தான்.“
”கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் இது தெரியுமோ?“
”அடிப்பட்ட மறுநாளே கோவிநதனும் ,பொன்னியும் குட்டியனோடை முத்தையன்கட்டுக்குப் போனவையெல்லோ... குட்டியன் மட்டும் அடுத்த நாள் வந்திட்டானாம். கோவிந்தனும் பொன்னியும் இன்னும் திரும்பிவரேல்லை.“
இதுவரை நேரமும் அவர்களது சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த பார்வதி தனது மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். ”எல்லோருமாகச் சேர்ந்து எனது மாணிக்கத்தைக் கொலை செய்துவிட்டார்கள். இனிநான் யாருக்காக வாழவேண்டும் ? என் உயிரைப் போக்கிவிட வேண்டியது தான்.“
”சீ........... அப்படி நான் கோழையாக மாறக்கூடாது, எனது மாணிக்கம் துணிச்சல் மிக்கவர். நான் கிணற்றுக்குள் விழுந்தபொழுது எல்லோருக்கும் முன்னிலையில் எனது உயிரைக் காப்பாற்றியவர். இந்த உயிர் அவருக்குத்தான் சொந்தம். நானாக இந்த உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது. மாணிக்கம் அளித்த அவரது குழந்தைக்காகவாவது நான் வாழவேண்டும் . எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை மாணிக்கத்தின் வாரிசென எல்லோருக்கும் தெரியவேண்டும.; மாணிக்கம் அழிந்தாலும் அவர் விட்டுச் சென்ற அவரது சொத்து இந்த சமூகத்தில் இருந்து எல்லோரையும் பழிவாங்கவேண்டும்.
பார்வதியின் மனம் கல்லாகியது, எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவள் அதைத் தாங்குவதற்குத் தயாரானாள்.

33
மறுநாட் காலையில் கட்டிலில் படு;த்திருந்தபடி சின்னத்தங்கம் ஏதோ கடுமையான யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அப்போது அங்கு வந்த அன்னம்மாவைக்கூட அவள் கவனிக்கவில்லை.
”என்ன சின்னத்தங்கம் தனிய இருந்து யோசிச்சுக்கொண்டிருக்கிறாய்?“
சின்னத்தங்கம் திடுக்குற்றபடி எழுந்திருந்தாள். விஷயம் கேட்டவன் . அதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தனான்,“ எனக் கூறிவிட்டு அன்னம்மாவைப் பார்த்துச் சிரித்தாள் சின்னத்தங்கம்.
”நீ உப்பிடி யோசிக்கக் கூடிதாய் அவன் என்ன கேட்டவன்.?“
சின்னத்தங்கம் பதில் பேசாது வெளியே வந்து பார்வதி எங்கிருக்கிறாள் என்பதைக் கவனித்தாள.; அப்போது பார்வதி பின்வளவில் ஆட்டுக்குக் குழையொடித்துக்கொண்டிருந்தாள்.
இருவரும் வெளித் திண்ணையில் அமர்ந்து கொண்டார்கள்.
”மச்சாள் ,பார்வதியைத் தனக்கு கலியாணஞ்செய்து தரச் சொல்லி நடேசு என்னை அடிக்கடி வந்து கேக்கிறான் ...... “ அன்னம்மாவின் முகத்தைப் பார்த்தவண்ணம் கூறினாள் சின்னத்தங்கம்.
”நீ அவனுக்கு என்ன பதில் சொன்னனி ?“ எனச் சிரித்த வண்ணம் வினாவினாள் அன்னம்மா.
”உன்ரை கொம்மா இதைக் கேள்விப்பட்டால் என்னோடை சண்டைக்கு வந்திடுவா எண்டு சொன்னான்“
”அதுக்க நடேசு என்ன சொன்னவன்.?ô
”அம்மா சண்டைக்கு வரமாட்டா, அவவுக்குப் பார்வதியிலை நல்ல விருப்பம் எண்டு சொன்னான்.“
”சின்னத்தங்கம் , அவன்ரை குணம் உனக்குத் தெரியாதோ அவன் உப்பிடித்தான் ஏதேன் தேவையில்லாத கதையள் அலட்டிறவன் “ எனக் கூறிவிட்டுச் சிரித்தாள் அன்னம்மா.
”அதுக்கென்ன மச்சாள் அவன் வேறையாரோவே....? அவன் கேட்டதிலை ஒரு பிழையும் இல்லை. ஏதோ பார்வதி தெரியாத்தனமாய் நடந்து போட்டாள் ... என்ன செய்யிறது நீதான் மச்சாள் அவளக்கு ஒரு நல்ல வழிகாட்டவேணும.; நீமட்டும் ஒரு தடையும் சொல்லாமல் இருந்தால் நான் பார்வதியை நடேசுவின்ரை கையிலை பிடிச்சுக் குடுத்திடுவன்“ எனக் கூறிய சின்னத்தங்கம் ஆவலோடு அன்னம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.
அன்னம்மாவுக்கு உள@ரச் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும்; அதனை அவள் வெளிகாட்டவில்லை.
நடேசுவுக்கு யாருமே பெண் கொடுக்க மாட்டார்கள். அவன் வாழ்க்கை முழுவதும் பிரமச்சாரியாகவே இருக்க வேண்டும் என இதுவரை காலமும் எண்ணியிருந்தாள் அன்னம்மா. இப்போது நடேசுக்குத் திருமணம் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது அவளுக்கு அவளுக்குப் பெரும் மகிழச்சியைக் கொடுத்தது. பார்வதியின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி அன்னம்மா சிறிதுகூடக் கவலைப்படவில்லை. மகனுக்குத் திருமணஞ் செய்து வைக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருப்பதை எண்ணி அவள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள்.
”பார்வதியிட்டை இதைப்பற்றி நீ கேட்டனியோ சின்னத்தங்கம் ?“ எனக் கேட்டாள் அன்னம்மா.
அவளை நான் எப்பிடியும் சம்மதிக்க வைச்சுப் போடுவன். அவள் செய்த காரியத்தாலை என்ரை மனிசன் நடைப்பிணமாய்த் திரியிறார். எனக்கும் இரவு பகலாய் ஒரே கவலையாய்க் கிடக்கு. நாங்கள் எல்லாம் பழையபடி சந்தோஷமாய் இருக்கிறதெண்டால், நீதான் மச்சாள் உதவி கூடப்பிறந்த சகோதரத்தின்ரை சந்தோஷத்துக் காகவாவது நடேசுவைப் பார்வதிக்குக் கட்டி வைக்கவேணும்“ சின்னத்தங்கம் அன்னம்மாவின் இரு கைகளையும் பிடித்தபடி கண்களில் நீர் மல்கக் கூறினாள்.
”சின்னத்தங்கம் நீ உவ்வளவு தூரம் கேக்கேக்கை நான் எப்பிடி மறுப்புச் சொல்லிறது... ஏதோ கடவுள் நல்லதைத்தான் செய்வார். நீ எதுக்கும் ஒருக்கா என்ரை தம்பியிட்டை இந்த விஷயமாய்க் கதைச்சுப்பார்“
”மச்சாள, அவர் ஒரு நாளும் உதுக்கு மறுப்புத் தெரிவிக்க மாட்டார் “ சின்னத்தங்கம் உறுதியுடன் கூறினாள்.
”சரி சின்னத்தங்கம் போட்டுப் பின்னேரமாய் வாறன.; எல்லாம் விபரமாய் கதைப்பம் “ எனக் கூறிவிட்டு மனநிறைவுடன் புறப்பட்டாள அன்னம்மா.
உண்மையில் நடேசு ஒரு போதும் தனக்குப் பார்வதியைக் கலியாணஞ் செய்து தரும்படி சின்னத்தங்கத்திடம் கேட்டதில்லை. இப்போதுள்ள நிலைமையில் பார்வதியை நடேசுவுககுத் திருமணம் செய்து வைத்தால் பலபிரச்சினைகள் தீர்ந்துவிடுமென சின்னத்தங்கம் எண்ணினாள். தனது எண்ணத்தை அன்னம்மாவிடம் நேரிடையாகத் தெரிவிப்பதற்கு அவளுக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் நடேசுவே பார்வதியைத் தனக்குக் கலியாணம் செய்து தரும்படி கேட்டதாகப் பொய் சொல்லி, சாதுரிமாக அன்னம்மாவின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டாள் சின்னத்தங்கம்.
அன்னம்மா சென்றதும் சிறிது நேரங்கழித்துப் பார்வதியை அழைத்தாள் சின்னத்தங்கம்.
”பிள்ளை நான் உன்னட்டை ஒண்டு கேக்கிறன் நீ அதுக்கு மறுப்புச் சொல்லக் கூடாது.“
”என்னணை அம்மா, என்ன விசயம் சொல்லுங்கோவன்“ எனக் கேட்டாள் பார்வதி.
”உன்ரை மாமி ஒரு சங்கதி சொல்லிப்போட்டுப் போறா... அதைப்பற்றித்தான் .... “ என இழுத்தாள் சின்னத்தங்கம்.
”என்ன மாமி சொன்னவ?“
”உன்னை நடேசுவுக்குக் கலியாணம் செய்து வைக்கவேணுமெண்டு கேட்டா“
”எனக்கு இனிமேல் கலியாணம் தேவையில்லை“
”அப்பிடிச் சொல்லாதை பிள்ளை, ஏதோ உன்ரை கெட்ட காலம் நடக்ககூடாதது நடந்து போச்சு... மாமி அதுகள் எல்லாத்தையும் மனசிலை வைச்சிருக்காமல் உன்னை மருமகளாக எடுக்கிறதெண்டு சொல்லுறா, நீ அதுக்கு மறுக்கப்படாது.
”உந்த விசயத்தை மட்டும் என்னட்டை கேக்காதையுங்கோ நான் இனிமேல் கலியாணம் செய்யமாட்டன்.“
”எடியேய் , உனக்கு அவ்வளவு பிடிவாதமோடி ? எங்கடை மானம் மரியாதை யெல்லாத்தையும் அழிச்சு ஊரவை எங்களை ஒதுக்கி வைக்கச் செய்து போட்டாய.; இவ்வளவு நடந்தபிறகும ;உனக்குப் பிடிவாதம் போகேல்லை ... நீ நடேசுவைக் கலியாணம் செய்யத்தான் வேணும்.“ சின்னத்தங்கத்தின் கண்களில் கோபம் தெறித்தது.
”அம்மா என்னைக் கரச்சல் படுத்தாதையுங்கோ உப்பிடிக் கரச்சல் படுத்தினால் என்னை உயிரோடை பாக்கமாடடியள்.“
”எடியோய் நீ இந்தக் கலியாணத்துக்குச் சம்மதிக்காட்டில் என்னை உயிரோடை பாக்கமாட்டாய்; எண்டதை நினைச்சுக்கொள் “ என்றாள் சின்னத்தங்கம்.
”.........................“
பார்வதி மௌனமானாள்.
”பிள்ளை கொஞ்சம் நீ யோசித்துப்பார் . நீ இப்ப இருக்கிற நிலைமை எனக்குத் தெரியாதெண்டு நினைக்காதை ..... எல்லாம் எனக்குத் தெரியும். உன்ரை அப்பு இதை அறிஞ்சால் உடனே உன்னையும் என்னையும் வெட்டித் துண்டாடிப் போட்டுத் தானும் உயிரை விட்டிடுவர். நான் நல்லதுக்குதான் சொல்லுறன், இந்த விசயத்திலை என்ரை பேச்சைத் தட்டாதை பிள்ளை....“ எனக்கூறிய சின்னத்தங்கம் பார்வதியின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் வடித்தாள்.
பார்வதியால் எவ்வித பதிலும் கூற முடியவில்லை, அவளது கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

34
அன்றொருநாள் தோழியால் அனுப்பட்ட திருமணஅழைப்பிதழை வாசித்பின் கூரைத் தாழ்வாரத்திலே செருகியிருந்தாள். பார்வதி இப்போது அந்தத் திருமண அழைப்பிதழ் அவளது கண்களிலே பட்டது. அதனை அவள் கையில் எடுத்தாள்.
மேரி -டேவிட்
சந்திரனைக் காதலித்த மேரி , இன்று டேவிட்டைத் திருமணஞ் செய்திருக்கிறாள். அவளால் எப்படிச் சந்திரனை மறக்க முடிந்தது?
பார்வதி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். சிந்தித்து சிந்தித்து அவளது மூளை குழம்பிப் போயிருந்தது. தலை "விண் விண்' னென்று தெறித்தது. "மாணிக்கத்துக்குத் துரோகம் செய்வதா? சில காலமானாலும் அவரோடு கூடி வாழந்த குடும்பவாழக்கையை மறந்து இப்போது வேறோரு வரைத் திருமணம் செய்வதா? இந்தப் பாவிகள் அவரை என்னிடமிருந்து பிரித்து கொலையும் செய்துவிட்டார்கள். அவரது என் வயிற்றிலே வளரும்போது அதனை மறைத்து வேறெருவரைத் திருமணம் செய்வது எவ்வளவு பாவமான காரியம். இதையெல்லாம் அறிந்து எனது அம்மாவே பாதகமான செயலைச் செய்யும்படி என்னை வேண்டுகிறாள். நான் ஒருபோதும் இதற்குச் சம்மதிக்கக் கூடாது.......“
”நான்; இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்காவிட்டால் என்ன நடக்கும்? எனது வயிற்றிலே மாணிக்கத்தின் சிசு வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதனை ஊரார் அறியும்போது காறி உமிழ்வார்கள். உமிழ்ந்துவிட்டுப்; போகட்டுமே...“
சாதி வெறி பிடித்த இந்தச் சமூகத்தின் மத்தியில் எனக்கு மாணிக்கம் கொடுத்த அன்புப் பரிசு நான் மற்றவர்களும் அறியுமபடி செய்தால்தான் அவரது ஆத்மா சாந்தி அடையும.; ஒரவேளை அம்மா கூறியதும் போன்று எனது தந்தை கோபங்கொண்டு என்னையே ஒழித்துக்கட்டி விடவும் கூடும் . அப்படி எதுவும் நிகழந்துவிட்டால் எப்படி இந்தச் சமூகத்தைப் பழிவாங்க் முடியும் எப்படி மாணிக்கத்தின் அன்புப் பரிசை இந்தச் சமூகத்தின் கைகளில் கொடுக்க முடியும்? நான் வாழத்தான் வேண்டும்...
மாணிக்கம் எனக்குக் கொடுத்த கரு உருவாகி இந்த உலகத்துத்துக்கு வரும்வரையாவது நான் எப்படியும் வாழவேண்டும.;
எனது உள்ளம் மாணிக்கத்துக்குச் சொந்தம் அதை நான் வேறொருவருக்குக் கொடுக்மாட்டேன். எனது உடல் மாணிக்கத்தின் சொத்து அதனையும் நான் மனப்பூர்வமாக யாருக்கும் கொடுக்கமாட்டேன். ஆனாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் மாணிக்கம் எனக்கு அளித்த அன்புப்பரிசை நான் காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி நடேசு அத்தானைத் திருமணம் செய்யச் சம்மதிப்பதுதான்.
சமூகத்தின் கண்களுக்கு நான் செய்வது தவறாகத் தெரியலாம்;. எனது வாழ்வைச் சிதைத்த இந்தச் சமூகத்துக்கு நான் ஏன் பயப்பிடவேண்டும.; மனதார நான் என் மாணிக்கதுக்குத் துரோகம் செய்யப்போவதில்லை. அவர் எனககுத் கொடுத்த அன்புப் பரிசைக் காப்பாற்றுவதற்காகவே நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இப்போதுள்ள சூழ்நிலையில் வேறு எந்த முடிவும் நல்ல முடிவாக அமையாது. நான் எடுத்திருக்கும் இந்த முடிவினால் மாணிக்கத்தின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும்.
காலையில் சின்னத்தங்கத்திடம் பார்வதியாகவே தனது முடிவைத் தெரிவித்தாள்.
”அம்மா நீங்கள் உங்கடை விருப்பம்போலை செய்யுங்கோ, நான் கலியாணத்துக்குச் சம்மதிக்கிறன்.“ எவ்வித உணர்ச்சியுமின்றி இவ்வாறு பார்வதி கூறினாள்.

சின்னத்தங்கத்தின் நெஞ்சிலிருந்து நிம்மதியுடன் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
பார்வதியை நடேசுவுக்குத் திருமணம் செய்து வைப்பது பற்றி முதன்நாள் இரவே சின்னத்தங்கம் செல்லப்பரோடு கதைத்திருந்தாள். செல்லப்பருக்கும் அது ஒரு நல்ல முடிவாகத்தான் தோன்றியது.
பார்வதி தனது முடிவைக் கூறியதும் செல்லப்பரிடம் அதனைக் கூறி விரைவிலேயே திருமணத்தை முடித்துவிட வேண்டுமென சின்னத்தங்கம் தீர்மானித்துக்கொண்டாள்.

35
செல்லப்பர் அன்று மாலை வேலை முடிந்ததும் துரைசிங்கம் முதலாளியின் வீட்டில் லொறியை நிறுத்திவிட்டு அதன் சாவியை எடுத்துச் சென்று துரைசிங்கம் முதலாளியிடம் கொடுக்கும் போது பார்வதியின் கலியாண விஷயமாக அவரோடு கதைத்தார்.
”அண்ணை, பார்வதியை நான் என்ரை அக்காவின்ரை மகனுக்குக்குக் கலியாணம் செய்து வைக்கத் ; தீர்மானிசிருக்கிறன்.“
அதைக் கேட்டபோது துரைசிங்கம் முதலாளிக்கு ஆச்சரிமாக இருந்தது. பார்வதியை மீட்டுவந்து கிட்டதட்ட ஒரு மாதகாலந்தான் ஆகிறது. அதற்குள் அவளுக்கு மீண்டும் கலியாணத்துக்கு ஏற்படாகியிருப்பது வியப்புக்குரிய விஷயந்தான்.
”செல்லப்பர் நீ எடுத்த முடிவு சரிதான். பார்வதிக்கு இப்படியொரு கலியாணம் செய்துவைச்சால் காலப்போக்கில் எல்லாம் சரியாய்ப்போம்.
”கலியாணத்தைச் சுருக்கமாகத்தான் செய்யப்போறமண்ணை... செல்வச் சந்நிதியிலை கொண்டுபோய்த் தாலி கட்டலாமெண்டு தீர்மானிச்சிருக்கிறம்.“
”ஓம் செல்லப்பர், அதுவும் சரிதான். இந்த விஷயத்தை நாலு பேருக்குத் தெரியிறமாதிரி செய்யப்பிடாதுதான்“
”அண்ணை நாங்கள் கலியாணத்தை ஒருதருக்கும் சொல்லாமல்தான் செய்யிறம். ஆனால் நீ மட்டும் கட்டாயம் கலியாணத்துக்கு வந்திடவேணும்.“
”எப்ப செல்லப்பர் கலியாணம் வைக்க
யோசிச்சிருக்கிறாய் ... நாள் பாத்தாச்சோ?“
”வாற வெள்ளிக்கிழமை காலைமை ஒரு நல்ல நேரம் இருக்காம்;. அந்த நேரத்திலை கலியாணத்தை முடிக்கலா மெண்டு யோசிக்கிறம்.“
”எனக்கும் இங்கை பலவேளையள் இருக்கு. நான்தானே எல்லாத்தையும் ஓடியாடி பாக்கவேணும. எப்படியும் நான் வரத்தெண்டிக்கிறன்“ என்றார் துரைசிங்கம் முதலாளி.
”என்ன இருந்தாலும், தாலிகட்டுற நேரத்துக்கெண்டாலும் அதிலை ஒருக்கா தலையைக் காட்டிப்போட்டு போவேணும்.“
”சரி செல்லப்பர் நான் கட்டாயம் வாறன் “
”நாளையிலிருந்து பிள்ளையின்ரை கலியாணம் முடியும் வரைக்கம் எனக்கு லீவு வேணும். கலியாணந்தானே முக்கியம. அதை முதலில் கவனி “ எனக் கூறினார் துரைசிங்கம் முதலாளி.
”சரியண்ணை நான் வரப்போறன் வெள்ளிக்கிழமை கட்டாயம் வந்திடுங்கோ “ எனக் கூறிவிட்டுச் செல்லப்பர் புறப்பட்டார்.
ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இப்போது செல்லபப்ரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். எந்த நன்மை தீமைகளுக்கும் அவரை எவருமே அழைப்பதில்லை. அவர் சமூக்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார். பார்வதியை மீட்டுவந்திலிருந்து துரைசிங்கம் முதலாளிகூட முன்பு போல செல்லப்பரின் வீட்டுக்குச் செல்வதில்லை.
நடேசு என்றுமில்லாதவாறு குதூகலத்துடன் இருந்தான். தான் வழக்கமாகச் செல்லும் இடங்களுக்குகெல்லாம் சென்று தனக்கு நடக்கபபோகும் திருமணத்தைப் பற்றி எல்லோருக்கும் கூறினான். அவன் வாசிகசாலையை அடைந்த போது அங்கு சின்னத்தம்பரும் , அம்பலவாணரும் மட்டுமே இருந்தார்கள்.
”வாணரண்ணை எனக்கு வெள்ளிக்கிழமை கலியாணம் “ எனக் கூறிவிட்டுச் சிரித்தான் நடேசு.
”என்ன நடேசு உனக்கு கலியாணமோ... ஆர் மச்சான் பெம்பிளை?“ என ஆச்சரியத்துடன் கேட்டார் அம்பலவாணர்.
”வேறையார்..... என்ரை பார்வதி மச்சாள்தான்.“
அம்பலவாணருக்கும், சின்னத்தம்பருக்கும் நடேசு கூறியதை நம்புவது சிரமாக இருந்தது.
”என்ன நடேசு நீயும் ஆள் ஒரு புழுகனாய்கிடக்கு. உன்னை ஒரு நாளும் பார்வதி கல்யாணம் செய்யிறதுக்குச் சம்மதிக்க மாட்டான்“ சின்னத்தம்பர் தான் இப்படிக் கூறினார்.
”ஏன் அண்ணையவை ...என்னை நம்பமாட்டியளோ? நான் எப்பவெண்டாலும் உங்களுக்குப் பொய் சொல்லியிருக்கிறேனா?
அம்பலவாணரும் , சின்னத்தம்பரும் ஒருவரையொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர்.
சந்நதிக் கோயிலிலைதான் கலியாணம் அண்ணையவை நீங்கள் கட்டாயம் கலியாணத்துககு வரவேணும். எனக்கு நிக்க நேரமில்லை. வேறையும் ஆக்களுக்குக் கலியாணத்துக்குச் சொல்ல வேணும்.“ எனக் கூறிப் புறப்பட்ட நடேசு கலியாணத்துக்கு மட்டும் வராமல் நிண்டிடாதையுங்கோ“ என மீண்டும் சொல்லிவிட்டுச் சென்றான்.
”என்ன ஐஸே, நடேசு சொல்லிப்போட்டுப் போறன் பெரிய புதினமாய்க் கிடக்கு “ என்றார் சின்னத்தம்பர் அம்பலவாணரைப் பார்த்து.
”பார்வதியைக் கூட்டியந்து வீட்டிலை வைச்சிருக்கிறது மில்லாமல் செல்லப்பர் அவளுக்கு கலியாணம் செய்து வைக்கப்பபோறார். என்றார் அம்பலவாணர்.
பார்வதியைக் கூட்டியந்த ஒரு மாசத்திலை ஏன் அவசரப்பட்டுக் கலியாணம் செய்யினம் உதிலை ஏதோ விசயம் இருக்கு எனச் சந்தேகமான முறையில் கூறினார் சின்னத்தம்பர்.
”அதுதான் சின்னத்தம்பர் எனக்கும் விளங்கேல்லை நடேசு ஒரு விசரன் தானே அதுதான் அவனைப் பிடிச்சுக் கலியாணம் செய்து வைக்கினம் என்றார் அம்பலவாணர்.
ஊரிலை ஒருத்தருக்கும் நன்மை தீமைக்குக் கூட செல்லப்பரைக் கூப்பிடுகிறதில்லலை அப்படியிருக்க அன்னம்மா எப்பிடித் தன்ரை மகனுக்குப் பார்வதியைக் கட்டிவைக்க ஒப்புக்கொண்டாவோ தெரியேல்லை.
”பார்வதிக்கு கலியாணம் செய்து வைச்சால் நடந்த சங்கதியை ஊரிலை யாரும் மறந்து விடுவினமோ அவையளைச் சபைசந்திக்குத்தான் இனி எடுக்கப்போயினமோ பாவம் ..நடேசு ஒரு பேயன் எண்டாப்போலை இப்பிடி ஒருநாளும் ஏமாத்திக் கலியாணஞ் செய்யப்பிடாது,“
”ஐஸே, நடேசு கலியாணத்துககு வரச் சொல்லிப் போட்டுப் போறான் ..நீர் போறீரோ?“ என்றார் சின்னத்தம்பர் கேலியாக‰
”போகத்தான் வேணும் சின்னத்தம்பர் நீயும் வாவன் இரண்டு பேருமாய்க் கூடிப் போவம்
”நான் ஒருநாளும் அந்த வீட்டை போக மாட்டன் ஐஸே ‰ நீர்தான் கட்டாயம் போவேணும் . பெம்பிளை உம்முடைய கூட்டாளியெல்லோ
”என்ன சின்னத்தம்பர் என்னை எப்பிடி யெண்டு நினைச்சிருக்கிறீர், செல்லப்பர் வீட்டுக்கு இனி நான்போனனெண்டால் ஊரிலை என்னை யாரும் மதிப்பினமோ “ என அம்பலவாணர் கூறியபோது பொன்னம்பல வாத்தியார் பேப்பர் வாசிப்பதற்காக அஙகு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் இருவரும் தமது பேச்சை நிறுத்திக்கொண்டனர்.

36
நடேசுவுக்கும் பார்வதிக்கும் சுருக்கமான முறையில் திருமணம் நடந்தேறியது. செல்லப்பர் , சின்னத்தங்கம் அன்னம்மா, பார்வதி, நடேசு -இவர்கள் மட்டும் ஒருகாரில் கோவிலுக்குச் சென்று திருமணத்தை முடித்துவிட்டுத் திரும்பினார்கள்.வேறு எவருமே திருமணத்துக்கச் சமூகம் அளிக்கவி;ல்லை,
நடேசு பட்டு வேட்டி பட்டி புதிய சேட் அணிந்து தலைப்பாகையுடன் மாப்பிள்ளை மாப்பிள்ளையாகக் காட்சியளித்தான் அவனுக்குப் பக்காத்தில் பார்வதி கூறைச் சீலை உடுத்து மணப்பெண்ணாக அமர்ந்நதிருந்தாள். அவளது கழுத்தில் நடேசு கட்டிய தாலி கனத்து கொண்டிருந்தது.
நடேசு அடிக்கடி தனது புதிய பட்டு வேட்டியைத் தடவிபார்த்துமகிழ்ந்தான். பார்வதி பேசாமல் இருப்பதை பார்த்து ஏன் மச்சாள் என்னோடை பேசாமல் இருக்கிறாய்? என அடிக்கடி அவளிடம் கேட்டாள் ஆப்படிக் கேட்டும் போதெல்லாம் அவள் பதிலொன்றும் சொல்லாது மெல்லிதாகப் புன்னகை செய்தாள்.
செல்லப்பர் வீட்டை நோக்கிக் கார் விரைந்தது, அதன் வேகத்தையும் மீறிக்கொண்டு செல்லப்பரின் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது, அவர் திட்டமிட்படியே எல்லாம் நடந்துகொண்டிருந்தன.
பார்வதி, மாணிக்கத்தை மறந்தவிடவேண்டும் என்பதற்காகவே . அவர் அவனை இறந்துவிட்டதாக அவளது காதில் விழும்படி கூறியிருந்தார். அப்படி ஒரு பொய்யைச் சொன்னாலேதான் பார்வதி இந்தக் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதெனவும், அவர் இப்போது திருப்தியடைந்தார்.
பார்வதிக்கும் நமேசு;கும் திருமணம் நடந்து ஒரு கிழமை கழிந்துவிட்டது நடேசுவின் போக்கில் எவ்வித மாறுதல்களும் ஏற்படவில்லை. பார்வதியுடன் அவன் முன்போலவே இப்போதும் பழகினான். அடிக்கடி அவளோடு கதைப்பதும் அவளிடம் தனக்குப் பலகாரங்கள் செய்து தரும்படிவேண்டுவதும் , குதூகலமாக ஏதாவது பாட்டைப் பலமாக பாடுவதும் சின்னத்தங்கத்துடனும் தாயுடனும் அளவளாவுவதுமாக அவனது காலம் கழிந்தது.
திருமண நாளன்று பார்வதி மிகவும் பயந்து போயிருந்தாள் நடேசு தன்னை நெருங்கும்போது அவனிடமிருந்து எப்படியாவது தன்னைக் காப்பாற்றிவிட வேண்டுமென எண்ணியிருந்தாள். முதலிரவன்று அவளுடன் அவன் தனியாக இருந்த வேளையில் ”மச்சாள் எண்ணிலை உனக்க விருப்பமோ? எனத் திடீரெனக் கேட்டான் நடேசு.
”ஓ........ உங்களைலை எனக்க நல்ல விருப்பம் அது தானே நான் உங்களைக் கலியாணஞ் செய்தனான் எனப் பதிலளித்தால் பார்வதி.
என்னிலை கூட விருப்பமோ , மாணிக்கனைகூட விருபப்மோ......
பார்வதிக்குச் சுரீரென ஏதோ இதயத்தில் தைப்பது போல் இருந்தது. என்ன சொல்வதுதென்றேதெரியவில்லை,
ஏன் அத்தான் அப்பிடிக் கேக்கிறியள்...... ? எனச் சமாளித்தபடி கேட்டால் பார்வதி
மடத்தடியிலை கதைச்சவை உனக்கு மாணிக்கனில்தான் கூட விருப்பமாம்.
”ஆர் அப்பிடிச் சொன்னது?
”வாணரண்ணை அவற்றை கூட்டாளிமாருந்தான் சொன்னவை.“
”இப்ப ஏன் உந்தக் கதையெல்லாம் கதைக்கிறியள்? உப்பிடியெல்லாம் நீங்கள் கதைத்தக்க கூடாது.“
”சரி மச்சாள் நான் இனிமேல் உப்பிடியொண்டும் கதைக்க மாட்டன் எனக் கூறிவிட்டு கைகளைநீட்டி முடக்கிப் பெரிதாகக் கொட்டாவி விட்டான் நடேசு.
”அத்தான் உங்களுக்கு நித்திரை வருகுது போலை கிடக்க படுங்கோவன்.“
”ஓம் பார்வதி நான் படுக்க போறன் “ எனக் கூறிய நடேசு மேலும் பார்வதியுடன் பேசாது கட்டிலில் புரண்டு படுத்தான்.
பார்வதி நிலத்திலே பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள் அவளுக்கு நித்திரை வரவில்லை.
இந்த நடேசு மச்சானின் உலகம் ஒரு புதுமையான உலகம் பரந்த ஒரு உலகம் இவருக்கு எற்றத்தாழ்வுகள் இல்லை இவரைப்போல் எல்லோருமே இருந்துவிட்hல் எவ்வளவு நன்றாக இருக்கும் , நான் இருக்கும் நிலையில் இவரைத் தவிர யார்தான் என்னைத் திருமணம் செய்திருப்பார்கள் இவரிடமிருந்து என்னைப் காதுகாக்க எவ்விதமான சிரமங்களும் இருக்காது.
நடேசுவின் குறட்டைச் சத்தம் அந்த அறையில் பெரிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் எவ்வித சலனமுமின்றி தூங்கிக்கொண்டிருந்தான் பார்வதிக்கு இப்போது ஓரளவு மனதில் நிம்மதி ஏற்பட்டிருந்தது.

37
மாலை மயங்கிய நேரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் அம்பலவாணர் அன்று செல்லப்பர் வீட்டுக்கு வந்தார். வழக்கம் போல டாம்பீகமாக உடையணிந்து "சென்ற்'றின் மனம் தமழக் கையில் ஒரு பெரிய பாhடசலுடன் அவர் அங்கு வந்திருந்தார். வேலைக்குச் சென்ற செல்லப்பர் இன்னமும் வீட்டுக்குத் திரும்பவில்லை விறாந்தையில் கிடந்த சார்மனைக் கதிரையில் நடேசு படுத்திருந்தான். திண்ணையில் அரிக்கன் அருகே பார்வதி அமர்ந்திருந்து ஏதோபுத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிரந்தாள். அம்பலவாணரைக் கண்டதும் வீமன் வாலாட்டியபடி அவரைச் சுற்றிச் சுற்றி வந்த . அவருக்குத் தனது அன'பைத'; தெரிவித்தது.
”வாணரண்ணை வா......வா...... கையிலை பார்சலோடை வந்திருக்கிறாய் நடேச குதூகலத்துடன் அவரை வரவேற்றான்.
பார்வதி மெதுவாக எழுந்து உள்ளே சென்று சின்னத்தங்க்திடம் அம்பலவாணரின் வரவைத் தெரிவித்தாள் சின்னத்தங்கம் பெரு மகிழ்ச்சியுடன் வெளியே வந்தாள்.
”வா தம்பி ....வா.... இப்ப எங்களையெல்லாம் மறந்திட்டாய் ....“ எனக் குறைப்பட்டு கொண்டே அவள் அம்பலவாணரை வரவேற்றாள். அம்பலவாணர் வெளியே இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.
”நான் உங்களை ஒரு நாளம் மறக்கமாட்டேன் மாமி ... மறந்திருந்தால் இப்ப இங்கை வருவனே?
”ஏன் வாணரண்ணை நீ என்ரை கலியாணத்துக்கு வரேல்லை? வாறனெண்டு சொல்லிப்போட்டு ஏமாத்திப் போட்டாய் ..“ நடேசு அம்பலவாண்ரைப் பார்த்துக் கேட்டான்.
”கலியாணத்துக்கு அம்மா நிறையப் பலகாரங்கள் சுட்டவை எல்லாம் முடிஞ்சு போச்சுது. வாரண்ணை ...நீ பிந்திப் போனாய் “ இப்படிக் கூறியபோது அம்பலவாணருக்குச் சிரிப்புத்தான் வந்தது.
”பலகாரம் இல்லாட்டிப் பராவாயில்லை..... மச்சான் நான் இப்ப உங்களைப் பாக்கிறதுக்குத்தான் வந்தனான்.
”வாரண்ணை நீ நாளைக்கு வந்தியெண்டால் பார்வதி யிட்டைச் சொல்லிப் பலகாரம் சுடுவிச்சுத் தாறன் அம்பலவாணருக்குப் பலகாரம் கொடுக்க முடியவில்லையே என்பது நடேசுவுக்குப் பெருங்கலையாக இருந்தது.
”என்ன மாமி ..நல்லாய் மெலிஞ்சு போனியள்? என சின்னத்தங்கத்தைப் பார்த்துக் கேட்டார் அம்பலவாணர்.
”என்ன செய்யிறது தமபி எல்லாம் உனக்குத் தெரியுந்தானே‰ஏதோ எங.கடை குடும்பத்துக்கு ஒரு கெட்டகாலம்... இந்தக் கவலையிலை எனக்கும் வருத்தம் கூடிக்கொண்டுது.”
நடந்து முடிஞ்சதுகளைப் பற்றி யோசிங்காதையுங்கோ மாமி... இனி உங்களுக்கு ஒரு கவiயும் இருக்காது......... நடேசு ஒரு வஞ்சகம் சூதில்லாத பிறவி........ அவரை மருமகனாய் எடுத்திடடியள், .இனியேன் யோசிப்பான்.“
”அண்ணை இப்ப பெம்பிளை மாப்பிளையை பார்க்கவெல்லோ வந்திருக்கிறன். அதுதான் பிரசென்ட்கொண்டு வந்தனான். எங்கை பார்வதியைக் காணேல்லை“ எனக் கேட்டுக்கொண்டே அம்பலவாணர் அறையின் வாசலை நோக்கினார்.
”ஏனடி பிள்ளை உள்ளுக்கு நிக்கிறாய் .... என்ன வெக்கம் வெயிலை வாவன் .உன்னை பாக்கிறதுக்குத்தானே கொண்ணை வந்திருக்கிறார்“எனப் பார்வதியைக் அழைத்தாள் சின்னத்தங்கம்
பார்வதி குனிந்து தலை நிமிராமல்வெளியே வந்தாள் .
”மச்சான் நீ பார்வதிக்குப் பக்கத்திலை போய் நில்லு நான் கொண்டு வந்திருக்கிற பரிசை இரண்டு பேரிட்டைடைடயந்கான் தரவேணும்.“
நடேசு எழுந்து பார்வதியின் அருகில் போய் நின்றான். அம்பலவாணர் தான் கொண்டு வந்த பார்சலை இருவரது கைகளிலும் கொடுத்து விட்டுச் சிரித்த்ப்படி மீண்டும் கதிரையில் போய் உட்கார்ந்துகொண்டார்.
”என்ன வாணரண்ணை பெரிய பிரசென்டாய்க் கிடக்கு “ எனக் கதூகலித்தபடி நடேசு அந்தப் பார்சலை அவிழ்த்துப் பார்த்தான், உள்ளே நடேசுவுக்கு ஒரு வேட்டி, சேட் முதலியனவும்,பார்வதிக்கு ஒரு சேலையம் இருந்தது.
”வாணரண்ணைதான் எங்களுக்குப் "பிரசென்ட்'
ஒரு வேளை அவளுக்கு தான் செய்த காரிய்ங்களினால் ஏற்பட்ட வெட்கமாக இருக்கலாம் என நினைத்துத் தனது மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டார் அம்பலவாணர்.

38
முல்லைத்தீவு ஆஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணிக்கத்தின் உடல் நிலை சீரடைந்து வந்தது. அவன் இப்போது சிறிது தூரம் உலாவக் கூடிய நிலையில் இருந்தான்.
”ஏன் மாணிக்கம் உன்னை அடிச்ச ஆட்களை ஆரெண்டு உனக்குத் தெரியாதோ? கந்தசாமி மாணிக்க்திடம் கேட்டான்.
”செல்லப்பரும், துரைசிங்கமும் ஆரோ இரண்டு பேரைக் கூட்டியந்தவை என்னை அடிச்சவை,“
”அப்ப நீ ஏன் துரைசிங்கத்தைப் பற்றியும் செல்லப்பரைப் பற்றியும் வாக்குமூலத்திலை எதுவும் சொல்லேல்லை ?“
”அவையளைப் பற்றிச் சொல்லப்போனால் பார்வதியைப் பற்றியும் சொல்ல வேண்டிவரும் . அதைத்தான் நான் விரும்பேல்லை“ என்றான் மாணிக்கம்.
”நீ ஒரு மடையனடா . அக்கிரமம் செய்யிறவங்களைக் காட்டிக் குடுக்காமல் விட்டிட்டாய்“ எனப் படபடத்தான் கந்தசாமி.
”மச்சான் நீ ஆத்திரத்hதிலை உப்பிடிச் சொல்லுறாய் நாங்கள் ஆத்திரத்திலை செய்யிர காரியம் பார்வதிக்குத் தான் கஷ்டத்தைகொடுக்கும் எண்டது உனக்கு விளங்கேல்லை . பார்வதிஎண்டைக்கோ ஒரு நாளைக்க என்னட்டைத் திரம்பி வருவாள் . அதுக்கு பிறகு நான் கட்டாயம் என்னை அடிச்சவையைப் பழிவாங்கத்தான் போறன்?“ என்றான் மாணிக்கம் உறுதியான குரலில்.
மாணிக்கம் வாக்குமூலத்தில் எதுவுமே விபரமாகக் கூறாததன் காரணம் இப்பொதுதான் கந்தசாமிக்குப் புரிந்தது.
கோவிந்தனும், பொன்னியும் பார்வதியைப் பற்றிய விபரங்களை மன்பே கந்தசாமியிடம் கூறியிருந்தார்கள். பார்வதியை அழைத்துச் சென்றவர்கள் செல்லப்பரும், துரைசிங்கமும்தான் என்பது அவர்கள் மூலந்தான் அவனுக்கு ஊர்ஜிதமானது. அப்போதும் கந்தசாமி ஆத்திரதடைந்தான் உடனேயே பொலிஸில் புகார் செய்யவேண்டுமெனக் கூறினான். கோவிந்தன் அதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டான்.
கமக்காறர்களைப் பகைக்க வேண்டுமே என்பதற்காக அவன் பயப்படவில்லை. ஆண்டாண்டு காலமாக அவர்களது காணியில் தோட்டம் செய்து வாழக்கை நடத்திய நன்றிக் கடனுக்காகவாவது துரைசிங்கம் முதலானியைப் பற்றி எவ்விதமான புகாரும் செய்யக்கூடாதெனக் கோவிந்தன் விரும்பினான்.
கமக்காறரவைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும் துரைசிங்கம் கமக்காறரைப் பற்றி பொலிஸில் புகார் செய்தால் , சிலவேளை எல்லாக் கமக்காறர்களும் சேர்ந்து தனது இனத் தவர்கள் எல்லோரையும் ஓடியெழுப்பி விடவும் கூடுமென அவன் எண்ணினான். துரைசிங்கம் கமக்காறனோடு பகைத்து அவரோடும் போராடுவது ஓர் ஆண்மைமிக்க செயலாக அவன் கருதவில்லை கஷ.டமும் ஏற்படலாம் காப்பதுதான் ஓர் ஆண்மையுள்ள செயலாகக் கோவிந்தன். கருதினான.
அத்தோடு மாணிக்கம் பார்வதியைக்கூட்டி வந்ததை அவன் பெரிதும் வெறுத்தான். அதனாலே தான் இப்போது எல்லாப் பிரச்சனைகளும் உருவாகியிருக்கிறது என்றும். மாணிக்கத்தில் பிழையிருக்கும் போது கமக்காறர்களை ஏன் பகைக்கவேண்டும் எனவும் அவனது மனம் எண்ணியது இதனாலேதான் துரைசிங்கம் முதலாளிக்கு எதிரான காரியங்களில் கந்தசாமியை ஈடுபடாமல் தடுத்துவிட்டான். கோவிந்தன்.
கொவிந்தனையும் பொன்னியும் , மாணிக்கம் ஓரளவு குணமாகும் வரையாவது முத்தையன்கட்டிலேயே தங்கும்படி கந்தசாமி வேண்டிக்கொண்டான். குட்டியன் மட்டும் அங்கு வந்த மறுநாளே ஊருக்குத் திரும்பி சென்று விட்டான்.
மாணிக்கம் முற்றாக குணமடைவதற்கு இன்;னும் இரண்டு மாதமாவது செல்லும் என வைத்தியர்கள் கூறினார்கள். அவன் குணடைந்தபின்பும் முத்தையன்கட்டிலேயே தங்கி இருப்பது தான் நல்லதென கோவிந்தனும் பொன்னியும் தீர்மாணித்தார்கள். அவன் ஊருக்குத் திரும்பி வந்தால் பின்பும் ஏதாவது விபரீதங்கள் நிகழ்ந்து விடலாமெனக் கோவிந்தன் பயந்தான். கந்தசாமிக்கும் கோவிந்தன் கூறுவது சரியாகவே பட்டது. சில "நாட்கள் கழிந்த பின்பு கோவிந்தனும் பொன்னியும் ஊருக்குத் திரும்பினார்கள்.

39
நடேசும் பார்வதிக்கும் திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ககழிந்துவிட்டன, திருமணமான புதிதில் நடேசு எங்கும் செல்லாது பார்வதியுடனேயே இருந்தான். ஆனால் நாட் செல்லச்செல்ல பழையபடி அவன் ஊர் சுற்றத் தொட்ங்கிவிட்டான். அன்னமா அவனிடம் எவ்வளவோ எடுத்துச் கூறியும் அவன் கேட்கவில்லை, சில் நாட்களில் அவன் வீட்டில் தங்குவான் சில நாட்களில் அவன் அன்னமா வீட்டில் வந்து படுத்து விடுவான். ஒரு நாள் அன்னம்மா நடேசுவிடம் அதனைப் பற்றிக் கேட்டாள்.
Æ”ஏனடாமேனை பார்வதியை விட்டிட்டு இங்கை வந்து படுத்திருக்கிறாய் ?“
”ஏனம்மா அங்கை நெடுகப் படுப்பான் . நான் இண்டைக்கு இங்கை படுக்கப் போறன்“ எனக் கூறினான் நடேசு
”அப்ப ஏனடா கலியாணம் முடிச்சனி ? பெம்பியைத்தனிய விட்டிட்டுத் திரியிறதுக்கோ
”இல்லை, அம்மா அங்கை செல்லப்பரம்மானும் மாமியும் இரக்கினம்தானே
அன்னம்மாவுக்க அதற்குமேல் அவனோடு கதைக்க முடியாமல் போய்விட்டது.
சில நாட்களில் அவன் தன்னந்தனியனாக வாசிகசாலையில் படுத்த நித்திரை கொள்வான். நடேசு வீட்டில் தங்காதைப் பற்றி பார்வதி ஒரு போதும் கவலையடைவதேயில்லை. வீட்டுக்கு வந்தால் மட்டும் அவள் அவனை உபசிரிப்பாள். அவனுக்கு வேண்டியவற்றைக் கவனிப்பாள், நடேசு வராத நாட்களில் ஏன் வரவில்லை. எங்கேஎங்கே போயிருந்தீர்கள்,? என அவள் ஒருபோதும் அவனைக் கேட்பதில்லை. சின்னத்தங்கம் மட்டும் அவன் வீட்டுக்கு வராவிட்டால் சிறிது கண்டிப்புடன் , ஊர்சுற்றித் திரிவதை நிறுத்த வேண்டுமெனக் கூறுவாள். சின்னத்தங்கத்தின் கண்டிப்பை அவன் சட்டை செய்வதே இல்லை.
இப்போதெல்லாம் அவன் கூடுதலான நாட்களில் வெளியே எங்கையாவது தங்கிவிடுவான்.
பார்வதியின் சொல்லை நடேசு ஒருபோதும் தட்டுவதில்லை , அவள் நினைத்திருந்தால் அவனை எந்கம் சுற்றித் திhயாமல் வீட்டிலே தங்கும்படி கூறியிருக்காலாம் ஆனால் , ஏனோ பார்வதி அதனை விரும்பவில்லை.
ஒரநாள் இரவு நடேச பார்வதியின் வீட்டில் தங்கியிலிருந்த போது , நடுச்சாமத்தில் விழித்தெழுந்த பார்வதியின் பாயிலே வந்து அமர்ந்து கொண்டான். அப்போது பார்வதி நல்ல நித்திரையில் ஆழ்நத்திருந்தாள்.. நடேசு பார்வதி கூங்தலை மெதுவாக வருடிவிட்டான். அவளது கன்னங்களைத் ஆசையோடு தடவினான்.பார்வதி திடீரென விழித்துக் கொண.டாள். நடேசு தடவி விடுவதைப் பார்த்ததும் .அவளது உடல் நடுங்கியது. அவள் கைகளை வில்க்கியப்படி பாயிலே எழுந்து உட்கார்ந்தாள். அப்போது அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவளைக் கட்டியணைத்து அவளது கன்னத்திலே முத்தமிட்டான் நடேசு.
”சும்மா இருங்கோ , உதென்ன வேலை “ எனக் கூறியபடி அவனை விலக்கித் தள்ளினாள் பார்வதி.
நடேசு வெறி கொண்டவன் போல் பார்வதியை இறுகக் கட்டியனைத்து முத்தமிட்டான். பார்வதி பலம் கொண்ட மட்டும் அவனை விலக்கித் தள்ள முயன்றாள். அவளால் அவனை விலக்க முடியவில்லை. அவள் அவனுடன் போராடிச் சோர்ந்து போனால். நடேசுவின் வெறி அதிகமாகிக் கொண்டே வந்தது. பார்வதிக்குத் தலை சுற்றியது. மயங்கிக் கீழே சாய்ந்தாள்.
அவளது பெண்மை அவனிடம் தோல்வியடைந்தது.
அவள் மயக்கம் நீங்கிவழித்து போது நடேசு அவள்ருகே சோர்ந்து போய்ப் படு;த்திருந்தான். அப்போதுதான் பார்வதி தனது இழப்பை உணர்ந்துகொண்டாள். அவளது உடல் முழுவதும் தழலாகத் தகித்துது. அவளது நெஞ்சில் வேதனை பொங்கி வடிந்தது. அவள் விம்மி வம்மி அழுதாள் அவள் அழுவதைப் பார்ர்தபோது நடேசுவின் மனம் பதட்டமடைந்தது.
”ஏன் பார்வதி அழுகிறாய் , நான் இனிமேல் உப்பிடி நடக்கமாட்டன் “ கெஞ்சும் குரலில் கூறினான் நடேசு.
அவன் அப்படிக் கூறியதும் பார்வதியின் கவலைமேலம் அதிகமாகியது அவள் விடியும் வரை அழுதுகொண்டே இருந்தாள். அந்த நிகழச்சியின் பின்பு நடேசு முன்பு போல் பார்வதியுடன் நெருங்கிப் பழகுவதற்குத் தயக்கமடைந்தான்.

40
அன்னம்மா அன்று காலை செல்லப்பரின் வீட்டுக்கு வந்தபோது பார்வதி சோர்வடைந்த நிலையில் திண்ணையில் படுத்திருந்தாள்.
அன்னம்மாவைக்கண்டதும் அவள் எழுந்திருக்க முய்சித்தாள். அவளால் முடியவில்லை, அதிகமாகத் தலைசுற்றியது மீண்டும் தலையைத் திண்ணையில் சாயத்துக்கொண்டாள்,
”என்ன பார்வதி என்ன ..ஏதேன் சுகமில்லையோ?“ எனப் பதட்டத்துடன் கேட்டாள் அன்னம்மா.
அப்போது அங்கு வந்த சின்னத்தங்கம் , இப்ப கொஞ்சம் நாளாய்க் உப்பிடித்தான் தலைசுத்தும் பிரட்டுந்தான் சோந்த படுக்கிறாள். சாப்பாட்டுக்கும் மனமில்லை“ எனக் கூறினாள்.
”ஏன் சின்னத்தங்கம் பிள்ளைக்கு தேகத்திலை ஏதேன் வித்தியாசமோ?“
”ஓம் மச்சாள் ... இரண்டு மாசமாய்ப் பிள்ளை குளிர்கேல்லை ,,, நடேசு உங்களிட்டைச் சொல்லேல்லையோ?“
”அதைக் கேட்ட போது அன்னம்மாவுக்க பெரும் மகிழச்சியாக இருந்தது.
”அவனுக்கு பெண்டிலைப் பற்றி கவலையில் ஊர் சுத்துறதுதான் அவன்ர வேலை, கலியாணம் முடிஞ்சாப் பிறகெண்டாலும் திருந்துவான் எண்டு பாத்தால் இப்ப தான் வரவர மோசமாய்க்கிடக்கு “ என நடேசுவின் மேல்குறைபட்டுக் கொண்டே அன்னம்மா , பார்வதியின் அருகிலிருந்து தலையை மெதுவாக வருடிவிட்டாய்.
”பிள்ளை உப்பிடிச் சாப்பி;டால் இருக்கக்கூடாது. மகன் இல்லாமல் இருந்தாலும் தெண்டிச்சு ஒரு பிடிதன்னும் சாப்பிட வேணும்“ என வாஞ்சையுடன் கூறினாள்.
”என்ன சாப்பிட்டாலும் வயித்தைப் பிரட்டது மாமி
”பிள்ளையை நாங்கள் அனுப்ப ஏலாது மச்சாள். அவள் இங்கை தான் இருக்கவேணும் நான் என்னாலை முடிஞச்சதை அவளுக்குச் செய்து குடுக்கிறேன் என்ன இருந்தாலும் இந்த நேரத்திலை எங்களோடை இருக்கிறது தான் நல்லது “ என முடிவாக கூறிவிட்டாள் சின்னத்தங்கம்.
”பிள்ளை உனக்க விருப்பமான சாப்பாட்டைச் சொல்ல .நான் செய்து கொண்டுவாறன் “ பார்வதியை வற்புருத்தி;க் கேட்டாள். அன்னம்மா.
”மாமி உங்களுக்கு என்னத்துக்கு கரச்சல் எனக்கொண்டும் வேண்டாம்“ பார்வதி அன்னம்மாவிடம் கூறினாள்.
”எனக்கென்ன கரச'சல் பிள்ளை வீட்டிலை சரசு இருக்கிறாள் தானே .நான் என்னாலை முடிஞ்சதைச் செய்து கொண்டு வாறன் உடம்பு பெலயீனப்பட்டுக் போனால் மாசம் ஏற ஏற உனக்குத்தான் கரச்சல் எனக் கூறி அன்னம்மா சின்னத்தங்கத்திடம் ”மச்சாள் பிள்ளையைக் கவனமாய்ப பாhததுக் கொள்ளுங்கோ அங்கையிங்கை திரியவிடாதையுங்கோ தலைசுத்தி பார்வதி எங்கையேன் விழுந்துபோவள் “ எனக் கூறிவிட்டுத் தனது வீட்டுக்குச் சென்று வருவதற்காகப் புறப்பட்டாள்.
பேரக்குழந்தை பிறக்கப்போவதை அறிந்ததிலிருந்து அன்னம்மாவின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. நடேசுவை நினைத்துபோதுதான் அவளுக்கு கோபங்கோபமாக வந்தது. பிள்ளைத்தாச்சியைத் தனிய விட்டிட்டு ஊரளந்து கொண்டு திரியிறான். இண்டைக்கு வரட்டும் நல்ல பேச்சுக் கொடுக்க வேணும் என எண்ணிக் கொண்டாள்.
அன்று மாலை பார்வதிக்கென பயித்தம் பணியாரமும் பால் ரொட்டியும் சுட்டு பனையோலைப் பெட்டியில் வைத்துக் மூடிக் கட்டிக்கொண்டு பார்வதியிடம் வந்தாள் அன்னம்மா. அவள் அங்கு வந்த நேரத்தில் நடேசும் அம்பலவாணரும் முன் விறாந்தையிலிருந்து கதைத்துக் கொண்டார்கள்.
அன்னம்மாவைக் கண்டதும் நடேசு , ”எண்ணணை அம்மா . குஞ்சுப் பெட்டிக்கை கொண்டு வாறாய் ? எனக் கேட்டபடி எழுந்திருந்தான்
”சும்மா இரடா ..நான் பார்வதிக்கெண்டு பலகாரம் சுட்டுக் கொண்டு வந்தனான்.“
”என்ன அன்னம்மா மாமி விசேஷம்பகாரத்தோடை வாறியள் ? “ எனக்கேட்டார். அம்பலவாணர்.
”பார்வதிக்கு இப்ப சாப்பாட்டிலை மனமில்லைத் தம்பி சுகமில்லாமல் இருக்கிறாள். அதுதான் அவளுக்கெண்டு இரண்டு பால் ரொட்டியும் பயித்தம் பணிகாரமும் சுட்டுக்கொண்டு வந்தனான்.“
”என்ன மாமி பர்வதிக்கு சுகமில்லையோ...? என ஆச்சரியத்துடன் கேட்டார் அம்பலவாணர்.
”பார்வதி;ககு சுகமில்லைத்தான் தம்பி“ எனக் கூறிய அன்னம்மா, ”கிட்டடியில் எனக்கு ஒரு பேத்தியோரபேரனோடு வரப்போகுது“ எனச் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
”அப்படியே சங்கதி . ஏன் மச்சான் எனக்கு நீ இந்த விஷயத்தை சொல்லேல்லை. என்னட்டை மறைச்சுப்போட்டடாய்“ எனப் பொய்க கோபத்துடன் நடேசுவின் முதுகிலே தட்டினார் அம்பலவாணர்.
நடேசுவிவுக்க ஒன்றுமெ புரியவில்லை, ”என்ன வாரண்ணை சொல்லுறாய், உனக்கு நான் என்ன சொல்லாமல் மறைச்சனான்? “எனககேட்டான்.
”உனக்கு மகனோ, மகளோ பிறக்கப் போகுதெண்டு கொம்மா சொல்லுறா...“
நடேசு தனது உடம்பை நாணிக கோனிக் கொண்டு Ï”அப்பிடியே வாரண்ணை எனக்குச் சத்தியமாய்த் தெரியாது“ எனக் கூறி விகற்பமின்றிச் சிரித்தான்.
”எனக்கே இண்டைக்குத்தான் ஒரே வியப்பாக இருந்தது. இப்போதெல்லாம் அவர் அடிக்கடி அந்கு வருவத வழக்கம், அவர் வரும் வேளைகளில் நடேசு அங்கு இருக்காவிட்டால் அவர் சின்னத்தங்கத்தோடு சிறிது நேரம் கதைத்துவிட்டால் அவர் சின்னத்தங்கத்தோடு சிறிது நேரம் கதைத்துவிட்டுச் செல்வார் ஆரம்பத்தில் அவருடன் கதைக்கத் தயங்கிய பார்வதியும் நாட் செல்லச்செல்ல சிறிதுசிறதாக அவருடன் கதைக்கத் தொடங்கியிருந்தாள்.
சின்னத்தங்கமோ பார்வதியோ இந்த விஷயத்தைத் தன்னிடம் கூறாதது அம்பலவாணருக்கு மனதிலே பெருங் குறையாத இரந்தது. அவருக்குப் பலவிதமான சந்தெகங்கள் இப்போமு துளிர்த்தெழுந்தன.
அன்னமமா தான் கொண்டு வந்த பலகாரத்தில் கொஞ்சத்தை ஒரு தட்டில் எடுத்து வந்த நடேசுவும், அம்பலவாணரும் சாப்பிடுவதற்காக அவர்களின் முன்னே வைத்தாள்.
”வாரண்ணணை , அம்மாவைப் போலை ஒருத்தரும் பயித்தம் பணிகாரம் சுNடுலாது, சாப்பிட்டுப் பார் சோக்காய் இருக்கும் “ எனக் 4pறக் கொண்டு பலகாரத்ததைச் சாப்பிடத் தொடங்கினான் நடேசு,
யோசனையில் ஆழ்ந்திருந்த அம்பலவாணரும் பயித்தம் பணிகாரம் ஒன்றை எடுத்துச் கடித்து விட்டு ”மச்சான் எனக்கு அவசரமாய்க் கnhஞ்சம் வேலையிருக்கு, நான் போட்டுவாறன் “ எனக் கூறிக்கொண்டு எழுந்திருந்தார்.
”ஏன் தம்பி அவசரப்படுகிறாய். வைச்ச பலகாரத்தை யெண்டாலும் சாப்பிட்டுப் போவன் “ என அவரிடம் கூறினாள் அன்னம்மா,
”இல்லை மாமி ...எனக்கு போதும் . நான் இனிப்புப் பலகாரங்கள் சாப்பிடுகிறது குறைவு... மச்சான் சாப்பிடட்டும்“ எனக் கூறிவிட்டுப் புறப்பட்டார் அம்பலவாணர்.
41
மாணிக்கம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான். ஆஸ்பத்திரியிலிருந்து வந்த நேரம் தொடக்கம் அவனது எண்ணம் முழுவதும் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதிலேயே லயித்திருந்தது.
”மச்சான் நான் இனி ஒரு நிமிஷம் கூட இங்கை இருக்க ஏலாது, ஊருக்குப் போவேணும் “ மாணிக்கத்தின் குரலில் உறுதி தொனித்தது.
”இப்பதான் ஆஸ்பத்திரியிலை இருந்து குணடடைஞ்சு வந்திருக்கிறாய் மாணிக்கம் , இன்னும் கொஞ்சநாளைக்கெண்டாலும் நீ முத்தையன் கட்டிலை தங்கி இருக்கிறதுதான் நல்லது.“
கந்தசாமிக்கு , மாணிக்கத்தை ஊருக்கு அனுப்புவது புத்திசாலித்தனமான காரியமாகத் தெரியவில்லை.
”மச்சான் நான் உடனை போய்பார்வதியைச் சந்திக்கவேணும் . இலலாட்டில் எனக்குப் பயித்தியம் பிடிச்சிடும் .“
”அவசரப்படாதை மாணிக்கம் நிதானமாகய் யோசிச்சுப் பார், நீ ஊருக்கு போறது உன்னுடைய உயிருக்கே ஆபத்தாய முடியலாம்.“
”மச்சான் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை நான் உடனே போகத்தான் வேணும்
முட்டாள்தனமாக அவசரப்படாதை மாணிக்கம் ..நான் திட்டம் போட்டு கமக்காறவை உன்னைக் கொலை செய்து போடுவினம் “
பார்வதியைப் பிரிஞ்ச என்னாலை உயிரோடை இருக்க முடியாது மச்சான் இநடத உயிரைப்பற்றி நான் கவலைப்படேல்லை எப்பிடியாவது நான் பார்வதியைச் சந்திக்க வேணும்.
மாணிக்கத்தின் பிடிவாதத'தைக' கண்ட கந்தசாமி இனி அவனுடக் கதைப'பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான்
சரிமாணிக்கம் இனி நீ உன்ரை விரப்பம்போலை செய் இங்கை திரும்பி வந்தாலும் உனக்கு பாதுகாப்பு அளிக்கிறதுக்கு நான் தயாராக இருக்கிறேன் ஆனால் நீ எதிலுமே நிதானமாய் இருக்கிறதுதான் நல்லது. நீஊருக்கு போறதாலை ஏதாவது பிரச்சினைக்ள் ஏற்பட்டால் அது உன்னுடைய சொந்தப் பிரச்சனையாய் இருக்கமாட்டாது ..இரண்டு சமூகங்களிடையே ஏற்படும் பிரச்சனையாய்த்தான் இருககும் அதுக்கு நாங்கள் எல்லோரும் முதலை எங்களைத் தாயாராக்கிக் கொள்ளவேணும்.
கந்தசாமி கூறுவது மாணிக்கத்துக்குச் சரியாய்த்தான் பட்டது. ஆனாலும் பார்வதியை மட்டும் பார்க்காமல் இருப்பது அவனுக்கு முடியாத காரியமாய் இருந்தது, அன்று மாலையே மாணிக்கம் புறப்பட்டான்.
மாணிக்கத்தைக் கண்டபோது கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவன் ஊருக்குத் திரும்பி வந்ததால் கமக்காறர்கள் அவனுக்கு ஏதாவது தீங்கு இழைக்கவும் கூடுமென அவர்களது மனதிலே பயமும் தோன்றியது. மாணிக்கம் குணமடைந்து வந்ததில் கோவிந்தனுக்கும்ட மகிழ்ச்சி ஏற்பட்டபோதிலும் பார்வதியைக் கூட்டிச் சென்றாதால் ஏற்பட்டிருந்த கோபம் அவனுக்கு தீரவேயில்லை . அதனால் அவன் மாணிகத்தோடு முகங்கொடுத்துப் பேசவில்லை. மாணிக்கத்துக்குத் தந்தையைப் பார்பதற்கே பயமாக இருந்தது. அதனால் அவனும் கோவிந்தனோடு கதைப்பதற்கு முயலவில்லை.
மாணிக்கம் வந்த சிறிது நேரத்தில் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு, குட்டியன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான் கோவிந்தன்.
”ஏனடா மேனை இங்கை வந்தனீ ? ஒரு கடதாசி போட்டால் நாங்கள் உன்னை வந்து பாத்திருப்பந்தானே ...“ மாணிக்கத்துக்கு உணவு பரிமாறிக் கொண்N;ட கேட்டாள் பொன்னி.
”ஆச்சி ...ஏன் நான் இங்கை வந்தது உங்களுக்குப் பிடிக்கேல்லையோ?“ கோபத்துடன் கேட்டான் மாணிக்கம்.
”ஏனடா மேனை கோவிக்கிறாய் ...இங்கை கொஞச்நாளாய்த்தான் எல்லாக் கரச்சலும் அமந்துபோய்கிடக்கு.. உன்னைக் கண்டதும் கமக்காறவை என்ன செய்வினமோ எண்டுதான் பயமாய்க் கிடக்கு
”அவையளுக்கு பயந்து கொண்டு எந்த நாளும் நான் ஒளிஞ்சிருக்க ஏலாது “ என்றான் மாணிக்கம்.
”இல்லையடா மேனை கொஞ்ச நாளைக்கெண்டாலும் நீ முத்தையன் னட்டிலை நீ முத்தையன் கட்டிலை இருக்கிறதுதான் நல்லது.... உனக்கு நாங்கள் குட்டியன்ரை மேனைக் கலியாணம் செய்து வைக்கிறதுக்கு ஒழுங்கு செய்திருக்கிறம். சுறுக்காய் கலியாணத்தை முடிச்சுப் போட வேணுமெண்டு கொம்மான் விரும்புறார். உனக்கு ஒரு மனமாற்றமாய் இருக்கும் நாங்களும் கொஞ்சக்காலத்திலை உன்னோடை முத்தையன்கட்டிலை வந்திருக்கலாம்.“ பொன்னி தனது மனதிலே இருந்த திட்டத்தை மாணிக்கத்திடம் கூறினாள்.
”ஆச்சி இனிமேல் எனக்குக் கலியாணம் தேவையில்லை அம்மானிட்டைச் சொல்லி அவற்றை மேளுக்கு வேறை இடத்திலை கலியாணம் செய்து வைக்ச் சொல்லுங்கோ“
மாணிக்கம் இப்படிக் கூறியபோது பொன்னி திகைத்துபக்போனால்.
”ஏன் மேன் அப்பிடிச் சொல்லகிறாய்? கொம்மான் உனக்கெண்டுதானே மேளை ஒரு இடமும் கட்டிக் குர்க்காமல் வைச்சிருக்கார்.“
”ஆச்சி என்னைக் கரச்சல் பண்ணாதையுங்கோ....... இனிமேல் என்கு கலியாணம் வேண்டாம்.“
”ஏனடா உனக்கு கலியாணம் வேண்டாம்? நீ நினைச்சு பாட்டுக்கு செல்லப்பர் கமக்காறன்ரை மேளைக் கூட்டிக்கொண்டுபோய்ப் பட்ட கஷ்டம் போதும் ... இனிமேல் எண்டாலும் எங்கடை சொல்லைத் கேட்டுநட...“
”ஆச்சி இப்ப ஏனணை தேவையில்லாத கதையெல்லாம் கதைக்கிறாய்.?“
”நீ தானடா தேவயில்லாதை நினைச்சுக்கொண்டு கொம்மான்ரை மேனைக் கட:டுறதுக்கு மாட்டன் எண்டு சொல்லுகிறாய்., செல்லப்பர் கமக்காறன்ரை மேள் இப்ப வேறை கலியாணம் முடிச்சு சந்தோஷமாயம் இரக்கிறா.... நீதான் அவளைப் பெரிசா நினைச:சக் கொண்டு அழியிறாய்....
திடீரெனப் பெரிய பாறங்கல் ஒன்ற தலையிலெ விழுந்தது போன்று இருந்தது மாணிக்கத்து என்ன ..பார்வதி வேற கலியாணம் செய்து விட்டாளோ? நெஞ்சுக்கள் ஏதோ அழுத்தியது. அவனது கண்கல் கலங்கிவிட்டன.
”என்னணை சொல்லுறாய் ஆச்சி? “ மாணிக்கம் தடுமாறிபடி கேட்டான்.
”செல்லப்பர் கமக்காறன்ரை மேளுக்கும் அன்னம்மாக் கமக்காறிச்சியின்ரை மேன் நடேசுக்கும் கலியாணம் நடந்து மூண்டு மாதமாச்சு.“
”ஆச்சி உண்மையாய்த்தான் சொல்லறியோ...?Â
”ஏனடா உனக்கு நான் பொய் சொல்ல வேணும் . நீ தான் கமக்காறன்ழர மேளை நம்பி மோசம் போனாய் ... கமக்காறன்ரை மேள் ஊருக்கு வந்து ஒருமாசத்திலையே கலியாணம் முடிச்சிட்டா, நீ இப்பவும் அவவை நினைச்சுக் கொண்டு இரக்கிறாய், நீயும் கலியாணம் செய்து சந்தோஷமாய் இரன்,“ என்றாள் பொன்னி ஏக்கத்துடன்.
மாணிக்கத்துக்கு அதற்கு மேல் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை உணவு அருந்தாமல் அரைவாசியில் எழுந்து கைகழுவிக் கொண்டான்.
அவனது தலை இலேசாக வலித்தது, அவனுக்கு அப்போது தனிமையாக இருக்க வேண்டும் போல்தோன்றியது.
”ஆச்சி எல்லாம் நதளைக்குக் கதைக்லாம் . இப்ப நான் படுக்கப்போறன் “ எனக் கூறிக்கொண்டே திண்ணையில் பாளை விரித்துக் கொண்டான் மாணிக்கம்.
”பார்வதி என்னை ஏமாற்றி விட்டாளா...?
”ஒரு வேளை ஆச்சிதான் எனக்கு கலியாணம் செய்து வைப்பதற்காக பொய் சொல்லுகிறாளோ?“
”ஆச்சி எனக்கு ஒழு நாளும் பொய் சொல்லமாட்டாள் பார்வதி நடேசுவைத் திருமணம் செய்து இருக்கத் தான் வேண்டும்.“
”உயிர் உள்ள வரைக்கும் என்னை மறக்கமாட்டேன் என்றவள் இன்று வேறொருவனுக்கு மனைவியாகி விட்டாளோ? என்மேல் உண்மையான அன்பிருந்தால் அவள் ஒருபோதும் வேறெருவனைத் திருமணம் செய்யச் சம்மதித்து இருக்க மாட்டாள்.“
”துரோகி ‰ அவளால் எனது வாழ்க்கையே அநியாயமாகி விட்டது எனது குடும்பத்தவர்களுக்கும் என் குலத்தவர்களுக்கும் கஷ்டம் ஏற்பட்டுவிட்டது.“

”அவள் என்னுடன் முத்தையன்கட்டுக்கு ஓடிவந்தும் கூடிக்குலாவியும் கொஞ்யதும்... எல்லாமே நடிப்புத் தானா?“
”ஏன் அவள் இப்பிடி எனது வாழக்கையைச் சிதைக்க வேண்டும் ? அவளை ஒரு போதும் நான் வாழவிடமாட்டேன் , அவளையும் அவளது குடும்பத்தவர்களையும் பூண்டோடு ஒழித்துவிட்டு நானம் அழிந்து போக வேணும் என்னால் அவளது நினைவுகளை அகற்ற முடியவில்லை.
எனது இதயத்தில் வேறொருவளுக்கு இடம் கொடுக்க முடியவில்லை . அவளால் சுலபமாக என்னைக் மற்க்க முடிந்தது? ஒரு வேளை ஏதும் சூழ்ச்சி செய்திரப்பார்களோ?“
”இனி ஒருபோதும் பார்வதி எனக்குரியவளாமாட்டாள், என்னோடு குலாவியள் இன்று வேறொருவனோடுகூடிக் குலாவுகிறாள். மீண்டும் அவளை நான் அடைவதற்கு முயற்சி செய்யவே கூடாது.“
மாணிக்கத்தை அவனது சிந்தனைகள் சித்திரவதை செய்து கொண்டிருந்தன.
42
பார்வதி உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின். அவளது வயிற்றினுள்ளே வளர்ந்து வரும் சிசு துடித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவளது உள்ளத்தில் மாணிக்கத்தைப் பற்றிய நினைவுகள் அலைமோதின , முன்பு போல் அவளால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை, உடலில் சோர்வு அதிகமாகி வயிறும் சற்றுப் பருத்திருந்தது. தனிமையில் இருக்கம் வேளையில் அவள் ஆசையோடு தனது வயிற்றைத் தடவிப்பார்ப்பாள்.
”குழந்தை பிறந்ததும் எப்படி அதன் தோற்றமிருக்கும் ? மாணிக்கத்தைப் போன்றுதான் அழகாக இருக்குமோ? அந்தக் குழந்தையைப் பார்ப்பவர்கள் அது மாணிக்கத்தின் குழந்தையைப் என இனங்கண்டு கொள்வார்களா? அப்படி இனங்கண்டு கொண்டால் இந்தச் சாதித் தமிர்பிடித்தவர்கள் அந்தக் குழந்தையை என்ன செய்வார்கள்?“
”அன்னம்மா மாமிதான் முதலில் ஏமாற்றமடைவாள் எனது வயிற்றில் வளரும் குழந்தையைத் தனது பேரப்பிள்ளையென நினைத்து ஆசையோடு கொஞ்சிக்குலாவுவதற்குக் காத்திருக்கிறாள்.“
”எனது வயிற்றிலே வளரும் குழந்தை மாணிக்கத்தினுடையதுதான் என்பது அம்மாவுக்குத் தெரியும் , ஆனாலும் அவள் அதனைத் தெரிந்து கொண்டவள்போல் காண்பில்லை. ஒருவேளை அம்மா அதனை அப்புவிடம் சொல்லியிருப்பாளோ? குழந்தை பிறந்ததும் அம்மாவும் அப்புவும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள.;? “
எப்போழுதாவது ஒரு நாள் பொன்னியோ கோவிந்தனோ அந்தக் குழந்தையைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் ? தங்களது பேரக் குழந்தைதான் எனப் புரிந்து கொண்டு பூரிப்படைவார்களா? அல்லது அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய ஒரு கமக்காறனின் வாரிசென எண்ணிப் பயக்தியோடு மதிப்பு கொடுப்பார்களா ?
சிந்தனையிலிருந்த பார்வதி படலை கிறீச்சிடும் ஓசை கேட்டு நமிர்ந்து பார்த்தாள் அம்பலவாணர் வந்து கொண்டிருந்தார்.
பார்வதி, சின்னத்தங்கம் படுத்திருக்கும் அறைக்கு எழுந்து சென்றாள். சின்னத்தங்கத்துக்கு கடந்த இரண்டு நாட்களாகத் தொய்வு நோயின் பாதிப்பு அதிகமாகி இருந்தது. மூச்சு முட்டித் திணறுவதம் ,தொடர்ந்து வரும் இருமலைத் தாங்க முடியாமல் களைத்துச் சோர்ந்து போவதும் தொண்டைக்குள் ஒட்டிக் கிடக்கும் சளியை வெளியே கொண்டு வரும் முயற்சியில் காறி உமிழ்வதுமாக இருந்தாள்.
முதல் நாள் அம்பலவாணர் அங்கு வந்திருந்த போது வழக்மாக அவர் கொண்டு வரும் மருந்தில் கொஞ்சம் வாங்கிவரும்படி சின்னத்தங்கம் அவரை வேண்டிருந்தாள்.
”அம்மா .... எழும்புங்கோ ... இங்கை அண்ணை வந்திருக்கிறார்“ பார்வதி, சின்னத்தங்கத்தின் தோள்களை உலுப்பியப்படி கூறினாள்.
தலைக்கு மேல் இரகைகளையும் வைத்து கால்களை மடித்து உடலை;ச் சுருட்டி படு;த்திருந்த சின்னத்தங்கம் , மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். அம்பலவாணர் அவளருகே இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார்.
”தம்பி .... என்பாடு பெரிய உபாதையாய்க் கிடக்கு மூச்சு விட முடியேல்லை . மருந்து கொணந்தனியோ.?
”அதை நான் மறப்பனோ மாமி...அது இல்லாட்டில் நீங்கள் கஷடப்படுவியள் எண்டு தான் எனக்குத் தெரியுந்தானே “ எனக் கூறிக்கொண்டே தான் கொண்டுவந்த கடுதாசி பைக்குள் இருந்த சாராயப் போத்தலை எடுத்து சின்னத்தங்கத்திடம் கொடுத்தார் அம்பலவாணர்.
வழக்கமாகச் சின்னத்தங்கம் சாராயப் போத்தலை வாங்கியதும் கட்டிலின் அடியில் மறைத்து வைப்பாள் ஆனால் .இன்று பக்கதத்தில் இருக்கும் பேயணியை எடுத்து அதில் சாராயத்தை நிரப்பி ஒரே மூச்சில் 'மடக் மடக்' என குடித்துவிட்டு பேணியை அருகே வைத்தாள்.
”மாமிக்கு இண்டைக்கு வருத்தம் கூடத்தான் “ அம்பலவாணர் , சின்னத்தங்கத்தைப் பார்த்துக் கூறினார்,
”தம்பி என்னாலை கதைக்க முடியேல்லை.... நீ பிள்ளையோடை இருந்து கதைச்சிட்டுப் போ“ எனக் கூறியபடி கட்டிலில் சாய்ந்து கொண்டாள் சின்னத்தங்கம்.”மாமி வருத்தம் கூட இருந்தால் இன்னும் கொஞ்சம் குடியுங்கோவன்.“
சின்னத்தங்கத்தின் பதிலையும் எதிர்பார்க்காமல் சாராயத்தைக் மீண்டும் பேணிக்குள் நிரப்பி அவளது கையில் கொடுத்தார் அம்பலவாணர்.
”வேண்டாம் தம்பி.... கூடக் குடிச்சாலும் எனக்கு ஏதேன் செய்யும்.“
”ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ மாமி , குடியுங்கோ, இரண்டு நாளாய்க்கஷ்டப்படுகிறியள். இதைக்குடிச்சால் தான் கொஞ்ச எண்டாலும் நித்திரை கொள்ளலாம்.“
சின்னத்தங்கம் பதில் எதுவும் கூறாமல் அவர் கொடுத்த சாராயத்தைக் வாங்கிக் குடித்துக்கொண்டாள்.
சாராயத்தின் நெடி பார்வதிக்கு அருவருப்பைக' கொடுத்தது. அவள் மூக்கை சுளித்துக் கொண்டாள்.
”எங்கே ..... பார்வதி... நடேசு மச்சானைக் காணேல்லை?“
”காலமை அன்னம்மா மாமி வந்திருந்தவ அவவோடை கூடிக்கொண்டு அவரும் போட்டார்.
சின்னத்தங்கம் தொண்டையைச் செருமிக்கொண்டு மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள
”மாமி இப்ப உங்களுக்கு கொஞ்சம் சுகம் போலை “
”ஓம் தம்பி ... நெஞ்சுகுள்ளை இருந்த முட்டு கொஞ்சம் சங்குறைஞ்சுக்கிடக்கு.“ சாராயம் குடித்தினால் ஏற்பட்ட போதையில் கண்கள் துஞ்ச தட்டுத் தடுமாறியபடி கூறினாள் சின்னத்தங்கம்.
”அப்பிடியெண்டால் இ;னனும் கொஞ்சம் குடியுங்கோ மாமி ... நல்ல சுகம் வரும்
மீண்டும் பேணியை எடுத்து அதனுள் சாராயத்தைக் நிரப்பி , சின்னத்தங்கத்திடம் நீட்டினார் அம்பலவாணர்.
அதனைச் சின்னத்தங்கம் வாங்கும் போது அவளது கைகள் தடுமாறின .பேணியிலிருந்து சிறிது சாராயம் தழும்பி வெளியே சிந்தியது.
”மாமி கொஞ்சம் பொறுங்கோ நான் பருக்கி விடுகிறேன் எனக்கூறிக்கொண்டே அம்பலவாணர் சின்னத்தங்கத்தின் வாயில் பேணியை பொருத்தினார். சின்னத்தங்கம் அதனை ஒரு மிடறில் உறிஞ்சி குடித்துவிட்டு,”தலை சுத்துது தம்பி நான்படுக்க போறன் “ எனக் கூறிக்கொண்டே போர்வையை இழத்துத் தன்னை மூடிக்கொண்டு சாய்ந்து விட்டாள.
”அண்ணை இருங்கோ , நான் தேத்தண்ணீ போடடுக்கொண்டுவாறன்“ எனக் கூறிக்கொண்டு குசினிக்குச் சென்றாள் பார்வதி.
சிறிது நேரத்தின் பின் அம்பலவாணரும் எழுந்து குசினி பக்கம் சென்றார். அவரது நெஞ்சு 'திக் திக்' கென அடித்துக்கொண்டது. இதுதான் சரியான சந்தர்ப்பம். இதனை நழுவ விட்டால் வேறோரு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது என எண்ணியபடி அவர் பார்வதியின் பின்னால் போய் முதுகில் தட்டினார்.
திடுக்கிற்றுத் திரும்பிய பார்வதி அம்பலவாணர் அங்க வந்திரப்பதைக் கண்டதும் ”ஏன் அண்ணை இங்கை வந்தனீங்கள் ?“ எனப் பயத்துடன் கேட்டாள்.
அம்பலவாணர்ஒரு பொழுதும் குசினிப் பக்கம் வந்தில்லை இன்று ஏன் வந்திருக்கிறார். பார்வதியின் மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்பட்டது, அவளது நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. அம்பலவாணரின் தடுமாற்றமும் அவரது பேச்சும் அவளுக்கு அச்சத்தை ஊட்டியது குசினியிலிருந்து வெளிNயு வருவதற்குள் பார்வதி எத்தனித்தாள். திடீரென அம்பலவாணர் அவளது கைகளைப் பற்றிக் கொண்டார்.
”எங்கை பார்வதி போறாய் ..? என்னோடை கொஞ்சம் நேரம் இருந்திட்டுப் போவன்.“
”அண்ணை என்ரை கையை விடுங்கோ... “ அம்பலவாணாரின் பிடியை விலக்க முயன்றாள் பார்வதி,“
”பார்வதி உன்னிலை நான் எவ்வளவு ஆசை வைச்சிருக்கிறன் தெரியுமோ... கொஞ்சம் நேரம் என்னோடை என:னோடை இருந்தால் என்ன?“

அம்பலவானர் பார்வதியைத் தன் நெஞ்சோடு இறுகக் கட்டி அணைத்துகொண்டார். அவள் அவரது பிடியிலிருந்து திமிறினாள் வெறி கொண்டவள் போலபலங்கொண்ட மட்டும் அவரைப் பிடித்துத் தள்ளினாள் .தனது இருகைகளாலும் அவரது கன்னங்களில் மாறி மாறி அறைந்தாள்.
அவளது கூந்தல் கலைந்தது கோபம் நிறைந்த கண்களில் கண்ணீர் முட்டியது.
அம்பலவாணார் அவளது எதிர்பபைத் தாங்க முடியாது சோர்நது போய் பிடியைத் தளர்த்திகொண்டார். அவரது கண்கள் கண்கள் சிவந்தன பார்வதி தன்னை உதாசீனம் செய்து விட்டாள் என்ற அவமானம் ஒருபுறமும், அவள் தனது கன்னங்களில் அறைந்துவிட்டதால் ஏற்பட்ட கோபம் மறுபுறமும் அம்பலவாணருக்கு ஆத்திரத்தைப் ஊட்டியது,
”எடியே .. உன்ரை சங்கதி ஊர் முழுக்க தெரியும் கீழ்ச்சாதிக்காரகோடு கூடிக் களவாய் ஓடினனி இப்ப பத்தினி வேஷமோ போடுறாய் ....? பல்லை நெருடியபடி பார்வதியைப் பார்த்துக் கூறினார் அம்பலவாணர்.
பார்வதி மௌனமாhனாள் அவளது கண்களில் நீர்முட்டி வழிந்தது.
”நீ என்னிலையிலிருந்து ஒரு நாளும் தப்ப முடியாது உன்னை நான் கவனிச்சுக் கnhள"ளறன் பாரடி....-‰ “எனக் கூறிவிட்டு விருட்டென அவ்விடத்தை விட்டகன்றார் அம்பலவாணர்.
பார்வதி அழுது கொண்டேயிருந்தாள.
மாணிகத்தோடு கூடிச்சென்ற ஒரு காரயத்துக்காக மற்றவர்கள் தன்னைக் கேவலமாக நினைக்கிறார்களோ என நினைத்த போது கவலை மேலும் அதிகமாகியது,மணமறிந்து நான் ஒரு போதும் மாணிகத்தக்குத் துரோகம் செய்யவில்லை ,அம்பலவாணர் கூறிச் செனறது போல் நான் பத்தினி வேஷம் போடவில்லை - நான் பத்தினியேதான்.
பார்வதியின் மனம் ஆறுதலடைவதற்கு வெகுநேரம் பிடித்தது.

43
மாணிக்கம் உயிரோடு இருப்பதாகவும் இப்போது ஊருக்கு வந்து தாய் தகப்பனடன் தங்கி இருப்பதாகவும் கேளிவியுற்ற அன்னம்மா பதட்டமடைந்து சின்னத்தங்காத்திடம் வந்தாள்.
அவள் முகத்திலை தெரிந்த மாற்றத்தையும் அவளது பரபரப்பையும் கண்ட சின்னத்தங்கம் ஏதோ விபரீதம் நடந்து விட்டாதை புhந்துகொண்டால்
”சின்னத்தங்கம் , எங்கை பார்வதியைக் காணேல்லை.?
”அவள் உங்கைத்தான் பின் வளவுக்குப் போனவள் இப்ப வந்திடுவள்“ எனப் பதிலளித்தாள் சின்னத்தங்கம் .“
”சின்னத்தங்கம் ஒரு சங்கதி கேள்விப்பட்டனியோ? அவன் மாணிக்கன் உங்கை வந்திட்டானாம்.“
”என்ன மச்சாள்... என்ன சொல்லுறாய்.... அவன் செத்துப் போனான் எண்டல்லோ அவர் சொன்னவர்..
”அ;பபிடித்தான் சின்னத்தங்கம் ... நானும் நினைச்சுக்ககொண்டிருந்தனான் எல்லோருமாய் சேர்ந்து அவன் செத்துப் போனான் எண்டு கதை கட்டிப் போட்டினம்.“
”ஆர் மச்சாள் உனக்கு உந்த கதை சொன்னது ?“
”இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னம் சின்னத்தங'கம் பரை ரோட்டிலை சந்திச்சனான் அவர்தான் இதைச்சொன்னவர், அந்த மனிசன் ஒருநாளும் பொய் சொல்லாது.
கோடிப் புறத்தில் நின்று இதுவரை நேரமும் அவர்களது சம்பாஷயையைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதிக்குத் தலையை சுற்றியது.
”ஆம் ...எனது மாணிகக்ம் உயிருடனா இருக்கிறார் இந்த வஞ்சகர்கள் எல்ரேலாரும் அவர் இறந்துவிட்டாதாகக் கதை கட்டி என்னை நம்ப வைத்துவிட்டார்களே? அதனால் இப்போது எவ்வளவு விபரீதங்கள் நடந்துவிட்டன ? அவர் உயிருடன் இருக்கும்போடீத நான் வேறொருவரைத் திருமணம் செய்துவிட்டேனே. அவர் என்னைக் ஒரு துரோகி என்றல்லவா நினைக்கப்போகிறார் நான் எப்படியாவது அவரைச் சந்திக்க வேண்டும் நடந்தவற்றையெல்லாம் அவருக்கு எடுத்துக் கூற வேண்டும்.
பார்வதியின் கண்கள் இருண்டு கொண்டு வந்தன தடாலென நிலத்திலே சாய்ந்தாள்.
”மச்சாள் ,இப்ப மாணிக்கம் ஏன் ஊருக்கு வந்திருக்கிறானோ தெரியாது அதுதான் எனக்கு யோசனையாய்க் கிடக்கு இன்னும் ஏதேன் கரச்சல் வருமோ தெரியாது ,,,“ என்றாள் சின்னத்தங்கம்.
”அதுதான் சின்னததங்கம் நானும் உன்னட்டைச் சொல்ல வந்தனான் இனி ஏதேன் நடந்தாhள் எல்லோருக்குந் தான்மானக்கேடு பார்வதியை நீ கொஞ:சம் கய்காயிக்க வேணும் அவளைத் தனிமையாய் விடக்கூடாது“ என்றாள் அன்னம்மா யோசனையுடன்.
”உவள் பிள்ளை பின்வளவுக்குப் போனவள் ..இவ்வளவு நேரமாய்க் காணேல்லை “ என எழுந்த சென்றாள் சின்னத்தங்கம் . அன்னம்மாவும் அவளோடு வீட்டின் பின்புறமாகச் சென'றாள்.
கோடிப்புறத்திலே பார்வதி விழுந்து கிடந்ததைக் கண்ட சின்னத்தங்கம் அலறிப் புடைத்துக்கொண்டு ”ஐயோ... பிள்ளை நிலத்திலே விழுந்த கிடக்கிறாள்... “ என்க கூறியபடி பார்வதியின் அருகில் சென்று அவளது தலையைத் தூக்கி நிமிர்த்த முயன்றபள் அன்னம்மா வீட்டினுள் ஓடிச் சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்து பார்வதியின் முகத்திலே தெளித்தாள்.
சிறிது நேரத்தின் பின்புதான் பார்வதி கண் விழித்துப் பார்த்தாள் சின்னத்தங்கமும் அன்னம்மாவும் அவளைக் கைதாங்கலாகக் கூட்டி வந்து தண்ணையில் படுக்க வைத்தனர்.
அன்னம்மா கோப்பி தயாரிப்பதற்காக அவசர அவசரமாகக் குசினிப் பக்கம் சென்றாள்.
”பிள்ளை....... பிள்ளை...... என்ன நடந்தது? ஏன் விழுந்தனி?“ எனக் கவலையுடன் கேட்டாள் சின்னத்தங்கம்.
”அம்மா எனக்கு தலைசை; சுத்திக்கொண்டு வந்தது பிறகு என்ன நடந்ததெண்டு எனக்குத் தெரியேல்லை“ என தடுமாற்றத்முடன் கூறினாள் பார்வதி.
”பிள்ளை இனிமேல் ஒரு இடத்துக்கும் தனியப்போகப் பிடாது, தேகம் பலவீனப்படடுச் போச்சுச“ என ஆதரவுடன் கூறினாள் சின்னத்தங்கம்.
பார்வதி பதிNலுதும் பேசவில்லை, அவளையும் மீறிக்கொண்டு அவளது வழிகளில் கண்ணீர் நிறைந்துகன்னங்களிலே வழிந்தது.
44.
இந்த வருடம் அன்னமார் கோயில் வேள்வி நடப்பதற்கு இனனும் ஒரு சில் மாதங்களே இருந்தன குட்டியன் காலை வேள்வி விஷயமாக க் கதைப்பதற்கு கோவிந்தனது வீட்டிற்கு வந்திருந்தான்.
”மச்சான் இந்த வரியம் வேள்வி என்ன மாதிரி , ஒரு ஆயத்தம் செய்யாமல் இருக்கிறாய்?“
”இந்த முறை சுருக்கமாய்த்தான் செய்யவேணும் குட்டியன் பெரிசாக த் துவக்கினாள் ஏதேன் கரச்சல் வரப்பாக்கும்,“
”அதெப்படி மச்சான் சுருக்கமாய் செய்யிரது... நேர்த்திக்கடனுக்கு எல்லோரும் கிடாயள் வளர்த்து வருகினம் ஒரு நூறு நூற்றம்பது கிடாயெண்டாலும் இந்த முறை விழும்போலை தெரியுது,“
”அப்பிடியில்லை குட்டியன் வழக்கமாய்த் துரைசிங்கம் கமக்காறனும் .செல்லப்பர் கமக்காறனும் தானே வந்து நிண்டு வேள்வியை நடத்திறவை உவன் பெடியன் செய்த வேலையாலை அவையாள் எல்லாம் எங்களோடை பகைச்சுக் கொண்டல்லோ திரியினம்.“
”இல்லை மச்சான் அந்தச் சங'கதியெல்லாம் இப்பபழங்கதையாய்ப் போச்சு செல்லப்பர் கமக்காறனின்ரை மேளுக்குக் கலியாணம் முடிச்சாப்பிறகு அவையின்ரை கோவமெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாய்க குறைஞ்சு போச்சு,“
”எப்பிடிஇருந்தாலும் குட்டியன் ,முன்மாதிரி கமக்காறரவை எங்களோடை புழங்கமாட்டினம் எல்லாத்துக்ககும் எங்களோடை புழுங்கமாட்டினம். எலல்hத்துக்கம் பின்னக்குத்தான் நிப்பினம் “ என்றான் கோவிந்தன்
”அவையள் பின்னுக்கு நிண்டால் நிக்கட்டுமென் நாங்கள் வழக்கம் போலை வேள்வியைப் பெரிசாய் நடத்துவம்“ என்றான் குட்டியன் அலட்சியத்துடன்.
”என்னதான் இருந்தாலும் எங்கடை கோயில் துரைசிங்கம் கமக்காறனின்ரை காணியலைதானே இருக்குது, நாங்கள் வேள்வியை ஆயத்தம் செய்யெக்கை அவர் வந்து வேள்வி செய்யக் கூடாதெண்டு தடுத்தால் என்ன செய்யிரது“ என்றான் சிந்தனையுடன்.
”மச்சான் இப்ப துரைசிங்கம் முதலாளியின்ரை மூச்சு வலுவாய்க் குறைச்சு போச்சு மேளின்ரை கலியாணத்துக்கு காசுக்க ஓடித்திரியிறார், அவருக்குக் கடன்தனி பெருகிப் போச்சாம் “ என்றான் குட்டியன்.
இதுவரை நேரமும் அவர்களுடைய சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த பொன்னி, ”அவருக்கக் கடன் வராமல் என்ன செய்யும் , முந்தி இரண்டு மூன்று வழக்கிலை எக்கச்சக்கமாய் காணியளை வித்துச் செலவழிச்சவரல்லோ“ எனக் கூறினாள்,
”ஓம் அக்கா, இப்ப நீங்கள் இருக்கிற இந்தக் காணியையும் மேளுக்க்குச் சீதனமாகக் குடுத்தாப்பிறகு அவரிட்டை மிச்சமாக இருக்கிறது இந்தக் கோயில் காணியும், அவர் குடியிருக்கிற வீட்டுக்காணியுந்தானே.“
”என்னதான் இருந்தாலும் துரைசிங்கம் கமக்காறனி;டைப் ஒரு சொல்லுசசொல்லாமல் வேளிவியைத் துவக்கிறது புத்தியில்லை.“ என்றான் கோவிந்தன்.
”ஒ.... அதுசரிதான் அப்பிடியெண்டால் இண்டைக்கு ஒருக்கா அவரோடை பொய் கதைப்பம் “ எனக் கூறிய குட்டியன் பொன்னியின் பக்கந்திரும்பி எனக் கூறி குட்டியன் பக்கந்திரும்பி, அக்கா இந்தமுறை வேள்வியோடையெண்டாலும் என்ரை பிள்ளை கண்மணியைக் கொண்டு மாணிக்கத்துக்கு "சொறுகுடுப் பிச்சுப் போட வேணும் நாணும் எத்தனை நாளைக்கு அவளை வீட்டுக் குள்ளை வைச்சிருக்கிறது? எனக் கேட்டாள';.
”தம்பி நாங்களும் எவ்வளவோ மாணிக்கணிட்டைச் சொலலிப் பாத்தம் அவன் கேக்கிறானில்லை, தனக்குக் கலியாணம் வேண்டாமெண்டு நிக்கிறான். நாங்கள் என்னதான் செய்யிது“ எனக் கவலையுடன் கூறினாள் பொன்னி.
”அக்கா , நீங்கள் இப்பிடிசொல்லுவியளெண்டு நான் கனவிலும் நினை;ககேல்லை இவ்வளவு காலமும் அவள் பிள்ளையைக் கட்டிக் குடுக்காமல் மாணிகத்துக்கு எண்டு தானே வைச்சிருந்தனான்.
”அதுக்கென்ன தம்பி செய்யிறது .அவன் விசரன் பைத்தியபக்காரன் மாதிரி ஏதோ யோசிக்சுக் கொண்டு திரியிறான், ஒருத்தரோடையும் கதைக்கிறானம் இல்லை .நாங்கள் ஏதேன் சொன்னாலும் அவனுக்குக் கோபம் வருகுது,“
”அவன் இப்பவும் செல்லப்பர் கமக்காறன்ரை மேளின்ரை நினைவிலைதான் இருக்கிறான் போலத் தெரியுது“ என்றான் கோவிந்தன்.
”நான் நடந்ததெல்லாத்தையும் நினைச்சுப் பாராமல் ஒண்டுக்கையொண்டு ஒற்றுமையாய் இருக்குங்கள் எண்டுதாணே என்ரை பிள்ளையை மாணிக்கனுக்க கட்டிக் குடுக்கிறுதுக்க ஆசைப்படுகிறேன்.“
”குட்டியன் நீ இந்த விஷயத்திலை குறை நினைக்காதை உன்ரை மேள் கண்மணி ஒர தங்கப் பவுன் : அவளை நாங்கள் மருமேளாய் எடுக்கக் குடுத்து வைக்கேல்லை . என்ன செய்யிறது மாணிக்கனை எந்த வகையிலும் எங்களாலைத் திருப்ப ஏலாம் கிடக்கு“ என முடிவாகக் கூறினான். கோவிந்தன்.
”நீங்கள் உப்பிடிச் சொல்லோக்கை நான் என்னதான் செய்யிறது. அப்ப பிள்ளைக்கு வேறை இடத்திலேதான் பாக்கவேணும் “ எனக் கூறிக்கொண்டே எழுந்து புறப்பட்டான் குட்டியன்.“
கோவிந்தனும் பொன்னியும் குட்டியனின் மனதை நோகவைக்கவேண்டிய நிலை வந்துவிட்hதே என்ற கவலையுடன் அவனை வழியனுப்பி வைத்தார்கள.


45.
மயக்கமுற்று விழுந்திதிலிருந்து பார்வதியின் உடல் நிலை பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது. அவாளால் எழுந்து நடமாட முடியவில்லை. எந்த நேரமும் படுத்தபடு;கககையாகவே கிடந்தாள். சில் நாட்களுக்குள் அவளது காலடகளும் முகமும் வீங்கிப் போய்விட்டன, தேமெல்லாம் வெளிறிப் போயிரந்தது. அவளது உடல்நிலை மோசமடைந்து போயிருந்தது, அவளது உடல்நிலை மேபாசமடைந்திருந்து கொண்டே வந்ததினால். செல்லப்பரும் சின்னத்தங்கமும் பெரிதும் கவலையடைந்திருந்தனர். பார்வதியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று காட்டியபோது அவளுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் , நோயாளி அதிகம் யோசிப்பதோ கவலையடைவதோ கூடாதெனவும் வைத்தியர்கள் கூறினார்hகள் மாசங் கூடக்கூட பார்வதியின் நிலைமை மோசமடைந்துகொண்டே வந்தது. அன்னம்மா அவளைப்கவனிப்பதற்காகத் தனது மகள் சரசுவுடன்செல்லப்பர் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.பிரசவகாலம் நெருங்கியபடியால் பிரசவத்துக்குரிய ஆயத்தங்களையும் அவள் செய்திருந்தாள்.
மாணிக்கம் உயிருடன் இருக்கிறான் என்பதை அறிந்ததிலிருந்து பார்வதியின் மனதிலும் பெருந் தாக்கம் ஏற்பட்டிருந்தது,
ஏன் மாணிக்கம் என்னைச் சந்திப்பதற்கு முயற்சிசெய்ய வில்லை?இந்த ஊரிலேயே இருந்த கொண்டு என்னை வந்து பார்க்காமல் இருப்பாதற்க எப்படி அவருக்க மனம் வந்தது? மாணிக்கத்திக்க என்மேல் கோபமாகத்தான் இருக்கவேண்டும் . நான் அவரை மறந்து வேறு திரமணம் செய்து விட்டேன் என எண்ணி என்மெல் கோபமடைந்திருப்பார். அவரை நான் எப்படிச் சந்திப்பது? அவரை எப்படிச் சந்திப்பது? அவரை இறந்தவிட்டதாகச் சொல்லி என்னை நம்பவைத்துச் சூழ்ச்சி செய்துவிட்டார்கள் என்பதை அவருக்க எப்படிப் புரியவைப்பது, என வயிற்றிலேவளரும் குழந்தை அவருடையது தான் என்பதை தெரிவிப்பது? அவரது குழந்தையைஅவரின் நினைவாக வளர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலேதான் இன்னும் உயிருடன் இருக்கின்றேன் என்பதை அவருக்கு எப்படி எடுத்துக் கூறுவது.
சிந்தித்துச் சிந்தித்து பார்வதி எந்த நேரமம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அன்னம்மாவுக்கு சின்னததங்கத்தங்கத்திற்கும் பார்வதியின் நிலையைப் பார்க்கும் போது கவலையாக இருந்தது. சில் நாட்களாக அவள் படுக்கையில் இருந்தவாறு பிதற்றத் தொடங்கி இருந்தாள்.
”மாணிக்கம் நான் உங்களுளக்குத் துரோகம்; செய்யேல்லை... உங்களைச் செத்துப்போகச்செண்டு சொல்லி என்னை ஏமாத்திப் போட்டினம் மாணிக்கம்...உங்களைச் செத்துப்போகச்செ:டு சொல்லி என்னைஏமாத்திப் போட்டினம் மாணிக்கம்... நான் உங்களிட்டை வரப் போறன் மாணிக்கம்.. என்ரை வயித்திலை வளருகிறது உங்கட்டை பிள்ளைதான் மாணிக்கம்..“
என்றெல்லாம் பைத்தியக்காரிபோல் அவள் அலட்டத்திதொடங்கி விட்டாள். அதைக் கேட்டபோது அன்னம்மாவுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது.
சின்னத்தங்கத்துக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை,”கோவிந்தன் ஆட்கள் அன்னம்மாரை ஏவிவிட்டினமோ .அல்லது பிள்ளைக்க ஏNhன் செய்வலினை சூனியம்.செய்திட்டினமோ தெரியேல்லை nதுதான் பிள்ளை உப்பிடிப் புலம்புகிறாள். “ எனக் கேட்டாள் கவலையுடன் கூறினாள்.
பார்வதி இப்படி மாணிக்கத்தை நினைத்து அடிக்கடி புலம்புவது ஊரிலுள்ள சில்ருக்கும் தெரிய வந்திருந்தது. நடேசு வாசிகசாலைக்கு வரும் வேளைகளில் பார்வதியைப் பற்றிய செய்திகளை எல்லாம் அம்பலவாணர் அவனிடம் கேட்டறிந்து தனது நண்பர்களுக்கும் கூறியிருந்தார்.
வாசிகசாலையில் இப்போது சில நாட்களாக மாணிக்கம் ஊருக்குத் திரும்பி வந்திருப்தைப் பற்றியும், அவனை நினைத்து பார்வதி எந்நேரம் புலம்புவது பற்றியுமெ கதையாக இருந்தது.


46.
துரைசிங்கம் முதலாளி பெரிதும் சோர்வடைந் திருந்தார்.அவரத திருமணத்தைக் கூடியவிரைவிலேயே நடத்த வேண்டிய நிலைமை அவருக்க ஏற்பட்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டார் தழருமணத்தை உடனே வைக்க வேண்டுமென அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். உடனே திருமணத்தை நடத்ததுவதனால் அவர் அன்னமார் கோயில் திருமணத்தை காணியை எப்படியும் விற்க வேண்டும் அலல்து தனமுது காரையோ லொறியையோ விற்கவேண்டும் தனது சொந்தப் பாவனையிலுள்ள காரை மகளின் திருமணத்துக்கு முன் விற்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை.
லொறியினால் அவருக்குக் கிடைத்து வந்த வருமாணம் இப்போதுத பெரிதும் குறைந்திருந்தது, செல்லப்பர்.தனது மகளுக்கு வருத்தம் வருவதாக க் கூறி அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டிருந்தார். அதனால் தொழிலும் பெரிதும். பாதிக்கப் பட்டிருந்தது. இந்நிலைலொறியை விற்பது தான் புத்திசாலித் தனமாகத் துரைசிங்கம் முதலாளிக்குப் பட்டது அதனைச் செல்லப்பரிடம் தெரிவித்தபோது துரைசிங்கம் முதலாளியின் நிலையை உணர்ந்த செல்லப்பரும் அதற்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை,
லொறியை விறபது சம்பந்தமாகத் தனக்குத் தெரிந்வர் களுடன் கதைக்கும் நோக்கத்துடன் வெளியே புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் துரைசிங்கம் முதலாளி அப்போது கோவிந்தனும் ,குட்டியனும் அவரைத் தேடி அங்கு வந்தார்கள்.
”என்ன விஷயம் இந்த நேரத்திலை இரண்டு பேருமாய் வாறியள்?“ அவர்களைப் பார்த்துக் கேட்டார் துரைசிங்கம் முதலாளி.
”உங்களிட்டைத்தான் கமக்காறன் வந்தனாங்கள் ஒரு முக்கியமான விஷயமாய்க் கதைக்க வேணும் “ எனக் கை களை பிசைந்தபடி கூறினான் குட்டியன்.
துரைசிங்கம் முதலாளி விறாந்தையிலிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டார்.
குட்டியனும் கோவிந்தனும் வாசற்படியில் வந்து நின்றார்கள் .
கமக்காறன் எங்கடை அன்னமார் கோயில்வேள்விக்கு இன்னும் கொஞ்சகால்திலந்தானே இருக்குது, அதைக் பற்றி ஒருக்கா க் கதைப்பமெண்டுதான் வந்தனாங்கள் எனப'பபிடரியைச் சொறிந்தபடி கூறினான் கோவிந்தன்.
”அதுக்கேன் என்னடடை வந'து கதைப்பான் .நீங்கள் ஏதோ செய்யிரதைச் செய்யுங்கோவன்.
”அப்பிடிச் சொல்லக் கூடாது கமக்காறன் ..நீங்கள்தான் ஒவ்வொரு வரியமும் வந்து நிண்டு வேள்வியை நடத்தி வைக்கிறனீங்கள், இந்த வரியமும் நீங்கள்தான் நடத்தவேணும்.
கோவிந்தன் இப்படிக் கூறியது துரைசிங்கம் முதலாளியின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது , மாணிக்கத்தைக் தான் தாக்கியதையும் அவர்களுக்குத் தான் இழைத்த துன்பத்தையும் மறந்து இப்போது தன்னிடமே கோவிந்தன் வந்திருப்பதை நினைத்துபோது அவனைப் பற்றி ஓர் உயர்ந்த எண்ணம் அவரது மனதில் ஏற்பட்டது.
”ஏதோ என்னாலை இயண்டதைச் செய்யிறன் , இந்த வருஷம் நீங்கள் வேள்வியை நடத்துங்கோ அடுத்த வருஷம் என்னென்ன நடக்குமோ சொல்ல முடியாது எனக் கூறினார் துரைசிங்கம் முதலாளி.
”ஏன் கமக்காறன் அப்பிடிச் சலிப்பாய்ச் சொல்லுறியள் ?“ எனக் கேட்டான் குட்டியன்.
நான் கோயில் காணியை விறகத் தீர்மானிச்சுட்டன், எப்பிடியும் அடுத்ர வருஷம். அந்தக் காணி கைமாறி விடும் “ எனக் குட்டியனைப் பார்த்துச் கூறினார் துரைசிங்கம் முதலாளி.
”அது எங்கடை குலதெய்வம் இருக்கிற காணி கமக்hறன் அதைக் நீங்கள் விக்கப்படாது “ கோவிந்தனின், குரலில் உறுதி தொனித்தது.
எந்தக் காரணத்துக்காக அந்தக் காணியை விலை கொடுத்து வாங்குவதற்க மற்றவர்கள் தயங்குவார்களோ அதே காரணத்தக்காக கோவிந்தன் அதனை விற்பதற்காக கோவிந்தன் அதனை விற்பதற்கும் தடை சொல்லுகிறான்.
”அது என்ரை காணணணி . அதை நான் விற்கத்தான். போறன் அதைக் ஒருத்தரும் தடுக்கேலாது“ எனக் கண்டிப்பான் குரலில் கூறினாhர் துரைசிங்கம் முதலாளி.
”கமக்காறன் நீங்கள் விக்கிறதை நாங்கள் துடுக்கேல்லை அது உங'கடை பாணி ...நீங்கள் இவ்வளவு காலமும் எங்களை அந்தக் காணியிலை கோயில் கட்டிக் கும்பிடவிட்ட மாதிரி இனிமேல் அந்தக் காணியை உங்களிட்டை விலைக்கு வாங்கப் போறவையும் விடுவினமென்று நாங்கள் எப்பிடிநம்பிறது? “ எனக் கேட்டான் குட்டியன் பணிவான குரலில்.
”நான் உங்களு;க்குப் பெருந்தன்மையோடை அந்தக் காணியிலை கோயில் வைச்சிருக்க விட்டமாதிரி எல்லோரும் விடமாட்னம்தான் குட்டியன் .. அதுக்காக நான் காணியை விக்காமல் விடமுடியாது அதை வித்துத்தான் என்ரை சில் பிரச்சியளைத் தீர்க்கவேண்டியிருக்கு,“
”கமக்காறன் நாங்கள் இப்பிடிச் கேக்கிறதுக்கு குறை நினைக்கப்பிடடாது. எங்கடை குலதெய்வம் இருக்கிறகாணியை நீங்கள் எங்களோடை விட்டுடுங்கோ... ஆதுக்கரியகாசை நாங்கள் எல்லோருமாய்ச் கேர்ந்து உங்களுக்குத் தாறம்.“
குட்டியன் இப்படிக் கூறியபோது துரைசிங்கம் முதலாளி ஒரு கணம் யோசித்தார்.
”இவங்களக்குகாணியை விலைக்க கொடுப்பதா...?
”ஊரிலே உள்ள எவருமெ இதுவரை காலுமும் செய்யாத காரியத்தை நான் செய்வதா?
”ஏன் செய்யக் கூடாது? எனது சமூகத்தவர் எல்லாரும் அந்தக் காணியை வாங்குவதற்குத் தயங்கும்போது.. அதனை ஏன் இவர்களுக்கு வழலைக்குக் கொடுக்க கூடாது?“
”இந்த ஊரிலே இதுவரைக்கும் அப்படி ஒரு வழமையில்லை உங்களக்கு ஒருத்தரும் காணியை விலைக்குக் கொடுக்கமாட்டினம் ஆனாலும் நீங்கள் இவ்வளவு தூரும் வற்புருத்திக் கேக்கிறபடியால் உங்களுக்கு அந்தக் காணியை விலைக்கத் தாறன்“ துரைசிங்கம் முதலாளி ஏNh பரிந்து உதவி செய்ய முன்வந்திருப்பவர் போன்ற பாவனையில் அவர்களிடம் கூறினார்.
கோவிந்தனுக்கும் குட்டியனுக்கும் உள்ளத்திலே மகிழ்ச்சி பிரவாகித்துப் பாய்ந்தது.
”கமக்காறன் ,அன்னம்மார் உங்களுக்கு ஒருகுறையும் விடமாட்டாய் “ என வாழ்த்தினாhன் கோவிந்தன்.
அப்போது கேற்றைத் திறந்து கொண்டு பரபரப்புடன் வந்தார் செல்லப்பர்
”அண்ணைபிள்ளைக்கு கொஞ்சம் வருத்தம் கடுமை தெகமெலலாம் வெட்டி வெட்டி இழுக்குது மேலும் குளிர்ந்து போச்ச உடனே பெரியாஸ்ப்த்ரிக்சுகுக் கொண்டு போக வேணும் அண்ணை ஒருக்கா உந்தக்காரைக் கொண்டு வாறியே....“
செல்லப்பர் இப்படிக் கூறியபோது அவரது முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்து துரைசிங்கம் முதலாளி உடனே எழுந்திருந்தார்.
நிலைமையை புரிந்துக்கொண்ட கோவிந்தனும் குட்டியனும் இனிஅங்குதாமதிப்பது முறையில்லை என நினைத்து துரைசிங்கம் தலாளியிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள்.
செல்லப்பரை காரில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டுக்கு விரைந்தார் துரைசிங்கம் முதலாளி.

47.
பகல் உணவக்காக தோட்டத்தில் இருந்து அப்போது தான் பிடுங்கி வந்த மரவள்ளி;கிழங்கை ,துண்டுதுண்டாக கத்தியால் நறுக்கி அதன் தோலை உரித்துச் சட்டியில் போட்டுக் கழுவிக் கொண்டிருந்தாள். பொன்னி
துரைசிங்கம் முதலாளியின் வீட்டிலிருந்து திரும்பி வந்த கோவிந்தன் முகத்தைப் பார்த்தபோது அவள் துனுக்கிற்றாள். அவன் அதிர்ச்சி அடைந்தவன் போலக் காணப்பட்டான்.
Æ”போன இடத்திலை ஏதேன் கரச்சலோ...? கமக்காறன் ஏதேன் சொன்னவரோ? “ எனக் கோவிந்தனிடம் பதட்டத்துடன் கேட்டாள் பொன்னி.
”அங்கையொரு கரச்சலும் இல்லை “ எனக் கூறிய கோவிந்தன் ,” எங்கை உவன் பெடியன் மாணிக்கனைக் காணேல்லை?“ என வினவினான்.
”அவன் கொஞச்சத்துக்துக்கு முன்னந்தான். கிணத்தடிப்பக்கம் போனவன் ................ ஏன்............. அவனைப் பற்றி ஏதோ கரச்சலோ?“
”செல்லப்பர் கமக்காறனினன்ரை மெளுக்கு வருத்தம் கடுமையாம: அவசரமாய் கொண்டு போகினம் “ என்றான் கோவிந்தன்.
”அதுக்கென்ன போகட்டுமன்: நீங்கள் ஏன் கவலைப்பர்றியள்? எனக் கேட்டாள் பொன்னி.
”அதுக்கில்லைப்பொன்னி , துரைசிங்கம் கமகாறன் வீட்டாலை வரேக்கை ஒரு விஷயம் கேள்விப்பட்டம். Nதுதான் எனக்குப் பெரிய யோசனையாய்கிடக்கு. கமக்காறனின்ரை மேள் உவன் மாணிக்கனை பார்க்க வேணுமெண்டு புலம்பிக்கொண்டு இருக்கிறவாம்.“
”அதுக்கு நாங்கள் என்ன செய்யிரது ? என்றாள் பொன்னி அலட்சியமாக .
அப்போது கிணத்தடியிலிருந்து குளித்துவிட்டுத் திரும்பியமாணிக்கம், பார்வதியைப் பற்றி ஏதோ தாயும் தந்தையும் கதைப்பதைக் கேட்டதும் தட்டிப்படலையின் அருகில் நின்று அவர்களது பேச்சை உற்றுக் கேட்டான்.
”உவன் பெடியன் செத்துப் போனானெண்டு சொல்லிஏமாத்தித்தானாம் கமக்காறன்ரை மேளுக்குக் கலியாணம் முடிச்சு வைச்சவையாம்.“
”ஆர் உந்தச் சங்கதி உங்களுக்குச் சொன்னது.?“
”நானும் குட்டியனும் துரைசிங்கம் கமக்காறன் வீட்டிரையிலிருந்து திரும்பி வரேக்கை கேள்விப்பட்டம். உங்கை மட்தடியில் உதுதான் கதையாய்க் கிடக்கு,“
”ஐயோ உதாலை எங்களுக்குமெல்லோ வீண்பழிவரப்போகுது“ எனக் கூறினாள் பொன்னி.
இதுவரைநேரமும் அவர்களது சம்பாஷனையை க் கேட்டுக் கொண்டிருந்த மாணிக்கம் அதிர்ச்சியடைந்தான் பார்வதி என்னை நினைத்துக்கலங்குகிறாளா?இந்தப் பாவிகள் எல்லோரும் சேர்ந்து என்னை இறந்துவிட்டதாகக் கூறி அவளை ஏமாற்றிவிட்டார்களா? அவளது மனதை இவ்வளவு காலமும் அணு அணுவாய்ச் சித்திரவதை செய்துவிட்டார்களே‰ ஒவ்வொரு நிமிஷமும் என்னைச் சந்திப்பதற்காக அவள் தவித்திருப்பாளே‰ நான் ஒரு பாவி : அவளைத் தவறாக எண்ணிக் கொண்டு அவளைச் சந்திப்பதற்கு எந்த முயறட்சியும் எடுக்காமல் விட்டுவிட்டேனே. எவ்வித தடையேற்பட்டாலும் அதைக் தகர்த க்கொண்டு அவளைச் சந்தித்து உண்மை நிலையை அறிய வேண்டும்.
மறுகனம் மாணிக்கம் அவசர அவசரமாக வீட்டினுள்ளே சென்று உடைய மாற்றிக் கொண்டு வெறிகொண்டவன் போல் வெளியே ஓடினான்.





48.
செல்லப்பரும் அன்னம்மாவும் பார்வதியைத் தூக்கி வந்து காரில் ஏற்றியபோது அவளைக் கவனித்த கட்டிலிருந்து அவளை துரைசிங்கம் முதலாளி திகைத்துப் போபனார். முத்தையன் கட்டிலிருந்து அவளை அழைத்து வந்த போதுதான் அவர் பார்வதியைக் கடைசித் தடவையாகப் பார்த்திருந்தார். இப்போது பார்வதியின் தோற்றம் முழுமையாகக் கடைசித் தடவையாகப் பார்த்திருந்தார். இப்போது பார்வதியின் தோற்றம் முழுமையாக மாறியிருந்தது, துரைசிங்கம் முதலாளிக்கு ஏனோ அவரை அறியாமலே அவரது மனதில் ஒருவித பயம் ஏற்பட்டது.
ஆஸ்பத்திரிக்கு இவளைக் கொண்டு போனாலும் பிழைத்துக் கொள்வாளா என்பது அவருக்குச் சந்தேகமாக இருந்தது.
என்னாலைதான் பகார்வதி இந்த நிலையையை அடைந்து திருக்கிறாளா? நான் இவளை மாணிகத்திடமிருந்து பிரித்த கூட்டி வந்தாலேதான் இவளுது உயிருக்கெ ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறதோ?
துரைசிங்கம் முதலாளி ஆஸ்க்ததிhயை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் சென்றாhப் பாh'வதிக்கு எதுவும் நடந்ததுவிடக் கூடாதேயென அவரது மனம் ஏங்கிய வண்ணம் இருந்தது.
”தம்பி கொஞ்சம் சுறுக்காய்ப் போ. பாவர்தியின்ரை கைகால் எல்லூம் குளிரத் தொடங்குது “அன்னம்மா துரைசிங்கம் முதலாளியைத் துரிப்படு;தினாள்.
செல்லப்பரும் சிளன்னத'தங'கமும் எதுவமே பேசவில்லை அவர்களது இருவருமெ அப்போது கதைக்ககூடிய நிலையில் இருக்கவில்லை.
ஆஸபத்திரியை அடைந்தபோது வாசலில் நின்ற காவலாளியிடம் “இது அவசரமான கேஸ் எனக் கூறி படி நேராகப் பழரவவவீடதியின் அபக்கம் nhக்ணட சென்ற வாலசலில் நிறுத்தினார் துரைசிஙகம் முதலானளி.
ஆஸ்பத்திரியி ல் ஊடழியதர்க்ள் தாரிமாடனபகளய்" ஸறெச்சிரி ல் வைத்டதுப் பிரசவ அறைக்கு பெகர்டு சென்றார்கள்.
பார்வதியியைக் சோதித்து வைத்தியர்கள் துரிதமாதக இயங்கத்தொடநஙஜகினார் பார்வதியிள் இரண்டு கைகளில் ஊசி மூலம் மருந';தைச் செலுத்தினார்க்.
டொக்கடர் இப்ப நாங்கள் கொணஒ;டு வந்த நோயாளியின் விதைமை எப்படி இருக்கு வெளியே வந்த மருத்துவரிடம் முதலாளிவிசாரித்தார்
இது ஒரு சீரியஸ் கேஸ் நோயானளியின் நிலைமை யை நாங்கள் திடமாக சொல்லெலாது இன்னுமு; கொஞ';சநேரத்துக் குள்ளை குழந்தையைப் பிரசவித்க்க்ச் செய';யவேணும்.இல்டலாவிட்hதல் நோயாளழியின் உயிரக்கே இஷஆபத்ததாக் முடிஙயலாம் எனக் 4றயயவைத்தியர்n மிண்டுதம் பிரசவ அறைக்குச் சென்றார்
ஐயா என்ரை பிள்ளையை எப்பிடியெண்டாலும் காப்பாத்திப்போடுங்கோ என அழுதபடி அவரைக் கைகூப்பி வணங';கினா சின்னத்தங்கம்.
சிறது நேரத்தில் பிரசவ அறைக்குள் இருந்து குழந்தை வீரிட்டு அழும் சத்தம் கேட்டத.
வைத்தியர் தலைமை தாதியும் Nஏதோ தங்கணளுக்குள் பேசியபடி வெளியே வந்தார்கள்.
ஆன்ண்குழந்தை பிறந்திருக்கு இப்ப நாங்கள் தாயக்கு இரத்ம் ஏத்திருக்கறம் தாயின் நிலைமையைப் பற்றி எதுவம் சொல்ல முடியாது தலைமைத்தாதி கூறினாள்,
துரைசிங்கம் முதலாளி நிலை கொள்ளதமல் அங்குமிங்கும் உலாவியப்படி இருந்தார் செல்லப்ர் தலையிலெ கை வைத்திபடி வெளியே போடப்பட்டிருநந்த வாங்கில் உட்காhந்நதிருந்தார் அன்னமம்மா சின்டனத்தங்கமும் அழுத வண்ணம் பிரசவ அறையின் வாசலிலேயே நின:று கொண்டிருந்தார்கள்.
ஒரு மணி நேரத்தின் பின் பார்வதியைப் பிரசவ அறை யிலிருந்து பக்கத்திலுள்ள வேறோரு ஆஐறுகு;க மாற்றினார்.கள் வளது இடது கையில் ஊசிமூலம் இரத்தம் ஏற்றப்படுடுக்கொண்டிருந்தது.
சிறது நேரத்தில் பாhப்வதி க:விழித்து பார்தததாள் எல்லோரும் கட்டிலின் பக்கத்தில் போய் நின்று அவளைக் கவலையுடுன் பார்த்த வண்ணம் இரந்தார்க்ன அப்பொது தாதி ஒருத்தி பார்வதியின் குழந்தையை எடுத்து வந்து கட்டிலின் பக்கத்திலுள்ள தொடடி;லில் கிடத்திவிட்ச் சென்றாள்.
பார்வதி அங்;கிருந்த எல்லோரையும்ட மாறிமாறிப் பார்ததாள் அவளது 0கண்கில் அளவிட முடியாத ஏக்கம் குடிகொணட்டிருந்துது, அவளது இதயததிலிரந்த பெருமூச்சு சொன்டறு வெளிபபட்த.
அப்போது யாரும் எதிர்பார்கக காத வகையில் மாணிகக்கம் அங்கு ஓடிவந்தான்ட அவனைக் கண்டதும் பாப்வதியின் கண்கள் மலர்ச்சியடைந்தன அவள் எழுந்து உடகார முயன்றாள்.
மாணிக்கம் ....மாணிக்கம்.... பாhப்வாதியனின் உதடுகள் அசைந்தன
அவன் அவளது வதனத்தைதக் நோக்கிக் குனிந்தான்.
மாணிக்கம் ,உங்களை செத்துப் போகச்செண்டு என்னைநம்ப வைச்சிட்டினம் என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோஅவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது,
மாணிகடகம் அவளது கன்னங்களில் வழந்த கண்ணீர் ரைத் தனது கைகளால் துடைத்துவிட்டான் அவனது கண்களிலும் கண்ணீர் குளமாகி நினறது;
பிள்ளை நீ கொஞ்சநேரம் பேசாமல் படுத்திரு எனச் சின்னத்ங்கம் அழுதவண்ம் கூறினாள்.
அம்மா என்ரை தொட்டிலில் கிடந்த குழந்தையை டிடுhத';து வந்து பார்வதியின் அருபேக கிடந்தால்.
பார்வதி குழந்தையை வருடியபடி மாணிக்பகத்ன் முகத்தைப் பார்த்து ஏதோ கூறுவதற்கு முயன்றாள்.
கொஞ்சம் அமைதியாள் பமுஷடுத்திலுரங'கோ பார்வதிமாணிக்கம் அவளை மன்டறாடினான் அவனது குரல் தழதழத்தது
மாணஜககம் இது,,,,இது உங்களுடைய சொது:து அவனது கையைப் பிடித்து குழந்தையின் மேல் வைத்தப்படி கூறினாள் பார்வதி
மாணழிகககம் குழநட்தையை தன் இரு கைகாளும் தூக்கி நெஞ்சொடு அணைத்தகொண்டான்
திடீரெனப் பார்வதி உடல் பதறியது அவள் ஆவேசத்துடன் கட்டிலில் எழுந்து உட்கார முயன்றாள் கையழலே ஏற்பட்டிருந்த ஊசியைப் பிடுங்கி எறிந்தாள்.அதனைப் பார்தத்த தாதி ஓடிப்போய் வைத்தியரை அழைத்துக்வந்தாள் அவர் அவசரஅவசரமாக அவளுக்கு ஏதோ சிகிச்சைகள செய்தார் என்னைக் ஒண்டும் செய்யாதையுஙகோ டொக்டர்,,, என'னைச'; சாகவிடுங்கோ பார்வதியி படுக்கையில் தலையை அங்குமங்குமதக ஆட்டியபடி புரண்டாள் அவளது நாடியைச் சோதித்த வைத்தியரின் முகத்தில் பரப்பபு ஏற்பட்டது.
பார்வதியின'; கண்கள் சோர்வடைந்தன அவள் இப்போது மாணிகக்கத்தை பார்த்து ஏதோ கூற முயன்றாள்
மாணிக்கம்,,,... மாணிக்கம்
அவளது உதடுகள் அசைந்தன வழிகள் இமைக்குள் செருக்pன மறுகணம் அவளது தலை சாய்ந்தது.
மாணிகக்கத்pன் தலையை மோதி ஐயோ,.... என்ரை பார்வதியைக் கொலைசெய்து போட்டார்களே எனக் கதறி துடித்தான்.
சின்னத்தங்கமும் அன்னம்மாவும் ஒருவரை யொருவர் கட்டிப் பிடித்து ஓலமிட்டு அழுதார்கள்.
செல்லப்பர் பர்வதியின'; கால்களை கூட்டிக்கொண்டு பி;ள்ளைய எங்களை விட்டிட்டு போட்டியே என விம்மினார்.
துரைசிங்கம் முதலாளியினக் நெஞ்சு பதைபதைத்தது. அவரது கண்களிலும் கண்ணீர் குளமாகி நின்றது.
உலகத்துச் சோகஅமல்லாதம் ஒன்றுகபலயந்தாபட்போல் மாணிக்கத்தின் கையிலிலுரு;ந';து குழந்தை Pரிட்டு அழுது கொண்டிருந்தது.

49.
அன்று சனிக்கழமை அன்னமார் கோயில் வேள்வி வெகு நடந்து கொண்டிருந்தது எங்கும் பார்ததாலும் சனக்கூட்டம் நிரம்பி வழிந்ததுஒலிபெருக்கியால் இசைத்துக்கொண்டிருந்த சினமாப் பாட்டின் ஓசை யையும் மீறிக்கொண்டு பறைமேளத்தின் ஒலி ஒருவித லயத்முடன் ஒலித:துககொண்டிருந்தது.
இந்தவருடம் மாணிககம்தான் முகாமைக்கு நின:று வேள்வியை நடதத்pனால் அவனது அவனது நன்பன் கந்தசாமியும் அவனுக்கு ஒத்தசையா அங்கு ஒத்தாசையாக அஙடக நடக்கும் காரியங்களைக் கவத்துக்கொண்டிருந்தான்ட கந';தசாமியின் மனைவி செங்கமலம் வியப்ர்புடள் அங்கு நடப்தையெல்லாம் பார்தத:கத்இரசித்துக்கொண்டிருந்தாள்.
துரைசிங்கம் முதலாளியை வேள்விக்கு வரும்படி கோவிந்தன் அழைத்திருந்த போதும் அவர் அங்கு செல்ல வில்லை அன்று தான் செல்லப்பர் தனது பேரக்குழந்தையைப் அன்று தான் செல்லப்பர் தனது பேரக்குழந்தையைப் பள்ளையார் கோயிலுக்க கொண்டு செல்வதாக இருந்தார் அவரோடு தானும் கூடிச் செல்ல விரும்பிய துரைசிஙகம் முதலாளி காலையிலேர செல்லப்பாஜன் வீட்டுக்கு வந்திருந்தார்.
எல்லோருமாதகச் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
செல்லப'h' குழந்தையைத் தனது இருகைகளாலும் அணை;த:ர்துக்கொண்டு முன்னால் நடந்தார் அவருக்குப் பக்கத்தில் தன:னுடன் நடேசு வந்தான் துரைசிங்கம் முதலாளியும் அன்னம்மாவும் அவ்களைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார் சின்னத்தங்கம் மட்டும் கோயிலுக்கு வராமல் வீடடிலேயே தங்கி விட்டான்
அவர்கள் வாசிகசாயைத் தாண்டிச்செல்லும் போது சின்னததம்பரும் அம்பலவாணரும் அங்கிருப்பதைக் கனித்த நடேசு,
”அண்ணையவை, நாங்கள் பிள்ளையயக் கோணிலுக்குக் கொண்டு போறம் , நீங்களுளும் வாறியளோ ?“ என உற்சாகத்துடன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.
”நீ போ மச்சான் .... நாங்கள் இப்ப வேள்விக்கு போக வேணும் பிறகு உன்னைக் வீட்டிலை வந்து சந்திக்கிறம் “எனச் சிரித்தப்படி கூறினார் அம்பலவாணர் .
”பாவம் செல்லப்பர் அநியாயமாய்ப் பார்வதியைச் சாகக் குடுத்திட்டு இருக்கிறார். அவளை மாணிக்கனோடையே வாழ விட்டிருக்கலாம்“ சின்னத்தம்பர்தான் அம்பலவாணரிடம் கூறினார்.
பறை மேளத்தின் ஒலியும் , சேமக்கலத்தின் நாதமும் காற்றிலே மிதந்து வந்தது.
அன்னமார் கோயில் வேள்வி ஆரம்பமாகிவிட்டது.
கோவிந்தன் உருக்கொண்டு ஆடத் தொடங்கினான். பறைமேளம் அடிப்பவர்கள் அவனைச் சூழ்ந்து நின்று அவனது ஆட்டத்துக்கேற்ப தாளத்தை மாற்றி அடிக்கதொடங்கினார்கள்,”அன்னமாருக்கு அரோகரா ... அன்னமாருக்கு அரோகரா “ எனப் பக்தர்கள் தலைமேல்கரம் குவித்து வணங்கினார்கள்.
கோவிந்தன் கையிலே சங்கை எடுத்தக் கொண்டு இப்போது பலமாகத் துள்ளித் துள்ளி உருவாடிக்கொண்டிருந்தான்.
கோயிலில் பலிபீடத்தின் பின்னால் தனது சால்வையை விரித்து அதிலே குழந்தையைக் கிடத்தினார் செல்லப்பர்.
”பூம்.........பூம்..........“
கோவிந்தன் எழுப்பிய சங்கொலி காற்றிலே மிதந்து வந்தது.
பிள்ளையார் கோயிலில் குருக்கள் பூசையை ஆரம்பித்தார்.
செல்லப்பர் பேரப்பிள்ளையை இரு கைகளிலும் தூக்கி கோயிலை
வலம் வந்து குழுந்தையின் பெயரில் அர்ச்சனை செய்வித்தார்.
குருக்கள் பூசை முடிந்ததும் குழந்தையின் நெற்றியில் திரு நீறு அணிந்து சந்தப் பொட்டும் இட்டார்.
”பூம்.........பூம்..........“
கோவிந்தன் மீண்டும் மீண்டும் சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருந்தான். போர்க்களத்திலே வெற்றி கண்ட வீரன் சங்கநாதம் ஒலிப்பது போல் அவன் ஆவேசத்துடன் சங்கை ஊதிக்கொண்டிருந்தான் .
அவன் எழுப்பிய சங்கநாதம்விண்ணில் அதிர்ந்து எங்கும் பிரவாகிதது ஒலித்துக்கொண்டிருந்தது.
(முற்றும்)