கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  குருதி மலை  
 

தி. ஞானசேகரன்

 

குருதிமலை

தி.ஞானசேகரன்

அணிந்துரை

கலாநிதி நா. சுப்பிரமணியன்

(யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்)



தமிழ் நாவலிலக்கியத்துக்கு ஈழத்து மண்ணில் ஒரு தனி வரலாறு உண்டு. 1885 இல் வெளிவந்த சித்திலெவ்வையின் அசன்பேயுடைய கதையிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. கடந்த 110 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம் பல படி நிலைப் பரிணாமங்களையும் எய்தியுள்ளது. இவ்வாறான வளர்ச்சி வரலாற்றில் முக்கிய கட்டங்களை உணர்த்தி நிற்கும் தரமான படைப்புகளிலொன்று திரு. தி. ஞானசேகரன் அவர்களின் இந்தக் குருதிமலை. ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப் பிரிவினரான மலைகத் தோட்டத் தொழிலாளர் சமுதாயத்தினரின் பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலிலே தம் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப் போராட்டத்தை நிகழ்த்தி வருபவர்களின் வரைலாற்றின் ஒரு காலகட்டம் இந்நாவலின் மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.



இந்நாவலுக்குப் பொருளாக அமையும் தொழிலாளர் சமூகம் இலங்கையின் பொருளியல் அடித்தளத்தைத் தாங்கி நிற்பது. ஆனால் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையில் பல்வகைச் சுரண்டல்களுக்கும் உட்பட்டு நின்ற இவர்களின் வரலாறு ஒரு கண்ணீர் காவியம் ஆகும். இலங்கையின் தோட்டங்களில் கூலிகளாகப் பணிபுரிவதற்காக தமிழகத்தினின்று கடந்த நூற்றாண்டில் அழைத்து வரப்பட்டவர்களின் பரம்பரையினர் இவர்கள். தோட்டங்களை நிர்வாகம் செய்தவர்களின் மனித நேய மற்ற அணுகுமுறைகள், “சுரண்டல்” உளப்பாங்கு என்பன இவர்களின் கண்ணீருக்கான தொடக்க நிலைக் காரணிகள். நாளடைவில் பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கொடூர பார்வையும் இவர்கள் மீது படிந்தது. 1948 இல் இவர்களின் குடியுரிமை பறிபோயிற்று. 1970களில் “தோட்டங்கள் தேசியமயம்” என்ற பெயரில் ஆட்சியாளரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அயற்கிராமங்களின் சிங்கள மக்கள் இத்தொழிலாளர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதற்குத் துணை நின்றன.



இவ்வாறு “முன்மமே தொடர்கதை” ஆகிவிட்ட இத்தொழிலாளர் சமூகத்தின் அநுபவங்களை நாவலிலக்கித்துக்குக் கருவாகக் கொள்ளும் முயற்சி “நந்தி” யின் மலைக்கொழுந்து (1964) நாவலுடன் தொடங்குகிறது@ (இவருக்கு முன்பே புதுமைப்பித்தன் தனது “துன்பக்கேணி” கதையில் (இதனைக் குறுநாவல் எனலாம்) இத்தொழிலாளர் வாழ்வின் அவலங்களைச் சித்தரித்துள்ளார் என்பது இத்தொடர்பில் நினைவிற் கொள்ளத் தக்கது) தொடர்ந்து, கோகிலம் சுப்பையா என்பாரின் தூரத்துப்பச்சை (1964) யோ. பெனடிக்ட் பாலனின் சொந்தக்காரன் (1968) தொ. சிக்கன ராஜுவின் தாயகம் (குறுநாவல் - 1969). தெளிவத்த ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை (1974) கே. ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது. (1976) ஸி.வி. வேலுப்பிள்ளையின் இனிப்பட மாட்டேன் (1984) க. சதாசிவத்தின் மூட்டத்தினுள்ளே.... (1988), மாத்தளை சோமுவின் அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் முதலிய நாவல்களிலே இத்தொழிலாளர் பிரச்சினைகள் பல்வேறு நிலைகளிற் பேசப்பட்டுள்ளன.



மேற்குறித்த நாவல்களுக்கும் குருதிமலைக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அடிப்படை வேறுபாடு உள்ளது. தொழிலாளர்களின் பொதுவான துன்பதுயரங்கள், உள்முரண்பாடுகள், தோட்ட நிர்வாகத்தின் சுரண்டல் உளப்பாங்கு, குடியுரிமை இழப்பின் துயரவிளைவுகள் தொழிசங்க நிலையிலான போராட்ட எழுச்சிகள் முதலியவற்றிற் சிலவற்றின் சித்தரிப்புகளாக மேற்படி நாவல்கள் பலவும் அமைந்தன. தோட்ட நிர்வாகம் பற்றிய விமர்சனம், தொழிலாளர்களின் பரிதாபநிலை பற்றிய கவன ஈர்ப்பு என்பனவே மேற்படி நாவல்களில் மையப்படுத்தப்பட்ட அம்சங்கள். ஆனால் குருதிமலை நாவலின் கதையம்சம் குறித்த ஒரு பிரச்சினைச் சூழலை மையப்படுத்தியது. “தோட்டங்கள் தேசிய மயமாக்கம்” என்ற சூழலே இதன் பிரச்சினை மையமாகும். மேற்படி சூழலிலே பேருருக் கொண்டெழுந்த பௌத்த சிங்கள பேரினவாதம் என்ற ஆக்கிரமிப்பு உணர்வோட்டம் பற்றிய விமர்சனமாக இது அமைகிறது. மேற்படி ஆக்கிரமிப்பு உணர்வோட்டத்துக்கு எதிராகத் தொழிலாளர் மத்தியில் உருவான பேரெழுச்சி இந்நாவலிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வகையிலே குறித்த ஒரு பிரச்சினைச் சூழலை மையப்படுத்திய கதையம்சம் கொண்டது என்ற வகையிலே இப்படைப்பு மலையகத் தமிழ் நாவல் வரலாற்றிலும், பொதுவாக ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலும் தனிக்கவனத்துக்குரிய ஒன்றாகிறது.



இந்நாவலின் ஆசிரியர் யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சார்ந்தவர்@ மலையகத்திலே மருத்துவப்பணி புரிபவர்@ கலைத்துறையிற் பட்டம் பெற்றவருங்கூட கடந்த ஏறத்தாழ 30 ஆண்டுகளாகப் படைப்பிலக்கியத் துறையிற் கவனம் செலுத்திவரும் இவர் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக நோக்கும் பண்பினர். அப்பிரச்சினைகளுக்கு மனிதநேயம் நோக்கிலே தீர்வுநாடும் ஒருவராகவே இவர் தம்மை இனங்காட்டி வந்துள்ளார். காலதரிசனம் (சிறுகதைத் தொகுதி) புதிய சுவடுகள் (நாவல்) ஆகியவற்றின் மூலம் இலக்கிய உலகிலே தம்மை அடையாளங்காட்டிக் கொண்ட இவரை, “முதல்வரிசைப் படைப்பாளிகளுள் ஒருவர்” என்ற கணிப்புக்கு இட்டுச் செல்லும் சிறப்பு இந்தக் குருதிமலைக்கு உரியது. தாம் நீண்டகாலமாகப் பணி புரிந்துவரும் மலையகச் சூழலிலே தமது கவனத்துக்கு சமூகத்தின் வரலாற்று நிகழ்வுகளை ஒரு சமூகப் பார்வையாளன் தளத்தில் நுனிந்து நோக்கி ஒரு வரலாற்று ஆவனம் எனத்தக்கவகையிலே இதனை இவர் உருவாக்கியுள்ளார்.



நாவல் என்பது உண்மையில் ஒரு கதை கூறும் முயற்சியல்ல. அது குறித்த ஒரு பிரச்சினை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினைகளின் தர்க்கரீதியான வளர்ச்சியினை வரலாற்று முறையில் எடுத்துரைப்பதாகும். அது வெறும் நிகழ்ச்சி விவரணமாக அமையாமல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மனித உணர்வுகளதும் உறவுகளினதும் இயங்கு நிலைகளை உள்ளத்தைத் தொடும் அநுபவங்களாக்கித் தருவதாக அமையும்போதே நாவல் என்ற பரிமாணத்தை எய்தும். இவ்வாறு அறுபவங்களாக்கும் முயற்சியே கதையம்சமாக உருப்பெறும். குருதிமலை நாவலிலும் இவ்வாறே பிரச்சினைகளின் வரலாறு கதையம்சமாக விரிகிறது.



தோட்டங்களைத் தேசியமயமாக்கும் திட்டம் அமுலுக்கு வந்த காலத்தில் தொடக்கத்தில் மலையகத் தொழிலாளர் சமூகம் அதனை வரவேற்றது. அத்திட்டத்தால் தமது கல்வி, பொருளியல், அந்தஸ்து என்பன உயரும் என அச்சகமும் நம்பியது. ஆனால் அத்திட்டம் செயற்படத் தொடங்கிய போது அதனை அத்தொழிலாளர் சமூகம் அநுபவிக்க முடியவில்லை என்பதோடமையாமல் அதுவரை அம்மக்கள் அநுபவித்தவற்றைக் கூடப் பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அயற் கிராமங்களின் சிங்கள மக்கள் தோட்டங்களைச் சூறையாடிதோடு தொழிhளரின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கவும் முற்பட்டனர். இவ்வாறான சூழ்நிலையிலே தொழிலாளரின் தற்காப்புப் போராட்ட எழுச்சி நிகழ்கிறது. இந்த எழுச்சியின் முன் சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு முயற்சி பணிந்தது. ஆக்கிரமிப்பாளர் பலரும் சட்டத்தின் பிடியில் அகப்படுகின்றனர். இது தோட்டங்கள் தேசிய மயமாக்கிய காலகட்டத்தில் (1970 களில்) மலையகத்தின் பல்வேறு தோட்டங்களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் வரலாறு. இதனை ஒரு குறித்த தோட்டக்களத்தில் சில கதைமாந்தரின் எணர்வுகளிலும் உறவுகளிலும் அநுபவங்களாக்கி கதைவடிவம் தந்துள்ளார் ஞானசேகரன்.



தோட்டங்கள் தேசியமயமாக்கத்தின் நல்விளைவுகளைத் தொழிலாளர் சமூகம் அநுபவிப்பதற்குத் தடையாக அமையும் சிங்கள பேரினவாதத்திற்குக் காட்டுருவாக அமையும் கதை மாந்தராக பண்டா முதலாளி, கிராமசேவகர் முதலியோர் அமைகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் பழைய தலைமை பேரினவாதத்துக்குப் பணிந்துவிட்ட நிலையில் புதிய உறுதியான தலைமை உருவாகின்றது. புத்தி சாதுரியத்தோடு தொழிலாளரை வழிநடத்தும் இத்தலைவன் போராட்டத்தில் ஏற்படுத்திய பொதுசன அபிப்பிராயத்தின் முன் ஆக்கிரமிப்பாளர் பணிந்தனர் எனக் கதை நிறைவடைகிறது.



நாவலை வளர்த்துச் செல்லும் முறையிலும் தொழிலாளரின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவு செய்யும் முறையிலும் மிகப் பொறுப்புணர்வுடன் ஞானசேகரன் செயற்பட்டுள்ளார். குறிப்பாகப் பௌத்த-சிங்கள பேரினவாதத்தைத் தோலுரித்துக் காட்டும் அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் சிங்களப் பொது மனிதனைக் கண்டிக்க முற்படவில்லை. அத்துடன் அமையாமல், பியசேனா, சுமணபால, முதியான்சே முதலிய சிங்கள மாந்தர் தொழிலாளர் சார்பாக நின்று போராடுவதைக் காட்டியுள்ளதன் மூலம் இன உறவுக்கு உள்ள வாய்ப்புகளையும் இனங்காட்டியுள்ளார். வீரையாவின் தங்கை செந்தாமரைக்கும் பியசேனாவுக்கும் காதல் மலர்வதைக் காட்டுவதனூடாக இந்நாவல் இனவிரோதக் கருத்துக்கொண்டதல்ல என்பதை ஞானசேகரன் அவர்கள் அழுத்தமாக உணர்த்தி விடுகிறார்.



ஆசிரியர் கூற்றாகவே நாவல் வளர்த்துச் செல்லப்படுகிறது. மலையகப் பேச்சு மொழி விரவிய சராசரித் தமிழ் நடை இதிற் பயில்கிறது.



இந்நாவல் வாசகர்களுக்கு புதிய அநுபவத்தை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

+++++++++++++++++++

அத்தியாயம் ஒன்று



பனிமூட்டத்திற்குள் அமிழ்ந்துகிடந்த அந்த மலைப் பிரதேசத்தில், காலைக் கதிரவனின் ஒளிக்கீறல்கள் தூரத்தே தெரிந்த மலையுச்சியின் பின்னாலிருந்து பரவத்தொடங்கின. பஞ்சுக் கூட்டங்கள்போல் எங்கும் பரவியிருந்த பனிப்புகார்கள் சிறிது சிறிதாக விலகத் தொடங்கின.



கொழுந்து மடுவத்தை நோக்கி வீரய்யா நடந்து கொண்டிருந்தான். முதன் நாள் இரவு அவனும் அவனது நண்பர்களுமாகச் சேர்ந்து மடுவத்தின் முன்னால் அமைத்த அலங்காரப் பந்தல் இப்போது அழகாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. பந்தலின் முகப்பில் கட்டியிருந்த வாழை மரங்களும், வண்ணக் கடதாசிகளும், கரத்தை றோட்டுவரை தொங்கவிடப்பட்டிருந்த தோரணங்களும், அந்த அதிகாலைப் பொழுதின் இளங்காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.



மடுவத்தை வந்தடைந்த வீரய்யா கையிலே கட்டியிருந்த கடிகாரத்தை ஒரு தடவை திருப்பிப் பார்த்தான்.



““ரொம்ப நேரமாச்சு, இன்னும் ஒருத்தனையும் காணோம்”” முணுமுணுத்துக்கொண்டே தான் கொண்டு வந்த பூக்களை மடுவத்தின் அரைச் சுவரின்மேல் வைத்து விட்டு தூரத்தே தெரிந்த லயங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினான்.



சில இளைஞர்களும், சிறுவர்களும் மடுவத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் வருவது பனிமூட்டத்தினூடே மங்கலாகத் தெரிந்தது.



இன்னும் சிறிது நேரத்தில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகள் யாவும் அவன் மனக்கண்முன் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.



இளைஞர்கள் இப்போது மடுவத்தை வந்தடைந்தனர்.



““என்ன வீரய்யா, மொதல்லயே வந்திட்டியா? நான் போயி ஆளுங்கெல்லாத்தையும் கூட்டிக்கொண்டு வர நேரமாயிருச்சு”” என முன்னால் வந்த இளைஞன் அசட்டுச் சிரிப்புடன் கூறினான்.



““என்னடா ராமு, நீயே இப்படிச் சொணங்கிவந்தா எத்தினை மணிக்குத்தாண்டா இந்த வேலையெல்லாஞ் செஞ்சு முடிக்கிறது?... ரொம்ப வேலை கெடக்கு... கண்டக்கையா பங்களாவிலையிருந்து நாக்காலி எடுத்து வரணும், கடைக்குப்போய் சோடாப் போத்தல் கொண்டு வரணும்.... இந்த எடமெல்லாங் கூட்டித் துப்புரவாக்கணும்....”” என்றான் வீரய்யா.



““அவசரப்படாதே வீரய்யா. ஐஞ்சு நிமிசத்தில எல்லா வேலையும் செஞ்சு முடிச்சுப்புடலாம். நான் இப்பவே போயி நாக்காலி கொண்டு வர்றேன்”” எனக் கூறிய ராமு தனது நண்பர்களில் இருவரை அழைத்துக் கொண்டு கண்டக்டரின் பங்களாவை நோக்கிப் புறப்பட்டான்.



பந்தலின் நடுவே போடப்பட்டிருந்த மேசையின்மேல் வெள்ளைத் துணியொன்றை எடுத்துவைத்தான் அங்கு நின்ற ஓர் இளைஞன்.



சிறிது நேரத்தில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களுமாக அநேகர் அந்த மண்டபத்தில் வந்து கூடினர். சிறுவர்கள் ஓடியாடுவதும், கூச்சல் போடுவதுமாக இருந்தனர். ஆண்களும் பெண்களும் கூட்டங் கூட்டமாக நின்று எதைப்பற்றியெல்லாமோ வாயோயாமல் கதைத்தனர். அவர்கள் எல்லோரதும் முகங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.



வீரய்யாவின் தங்கை செந்தாமரை அப்போது ஆரத்தித் தட்டுடன் மேசையருகே வந்தாள். செந்தாமரைக்குப் பதினேழு அல்லது பதினெட்டு வயதுதானிருக்கும். தோட்டத்திலிருக்கும் பெண்களில் அவள்தான் அதிக அழகுள்ளவள் என்ற காரணத்தினால், விழாவுக்கு வரும் பிரமுகர்களுக்கு ஆரத்தி எடுப்பதற்கு அவளை ஒழுங்கு செய்திருந்தனர். கொழுந்து நிறைந்த தேயிலைச் செடியைப் போன்று தளதளப்புடன் காணப்பட்ட அவளது வாளிப்பான உடலில் ஒருவகை பூரிப்பு நிறைந்திருந்தது. அவள் தன்னை அலங்கரித்த விதம் அவளது அழகுக்கு மேலும் அழகைக் கொடுத்தது. அங்கு நின்ற இளைஞர்கள் பலரின் கண்கள் அவளது அழகை அடிக்கடி இரசித்துக் கொண்டிருந்தன.



““என்ன வீரய்யா! எல்லா வேலையளும் செஞ்சு முடிச்சிட்டீங்களா?”” எனக் கேட்டபடி அங்கு வந்து மாரிமுத்துத் தலைவர் பந்தலை ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த்தார்.



““என்னங்க தலைவரே, நீங்கதானே மொதல்ல இங்கை வந்து நின்னு எல்லாத்தையும் கவனிக்கணும். நீங்களே பிந்தி வந்தா எப்படி?”” எனக் கேட்கவேண்டும்போல் வீரய்யாவுக்குத் தோன்றியது. ஆனாலும் அவன் எதுவுமே கூறாது தலைவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தான்.



நடவிலே போடப்பட்டிருந்த மேசையைக் கவனித்த தலைவர், ““என்ன வீரய்யா இன்னும் மாலையெல்லாம் கொண்டு வரல்லியா?”” என யோசனையுடன் கேட்டார்.



““இப்பத்தாங்க பண்டாரம் மாலையைக் கட்டி முடிச்சாரு, சுட்டிமுடிச்சவுடனையே நேரா எடுத்துக்கிட்டு வர்ரேன்”” எனக் கூறியபடி கையிலே கொள்டுவந்த மாலைகளை மேசையின்மேல் இருந்த தட்டில் வைத்தான். அப்போதுதான் அங்கு வந்த செபமாலை.



““எத்தினை மாலை கொண்டு வந்திருக்கே?”” எனக் கேட்டபடி மாலைகளைக் கையிலே எடுத்துப் பார்த்தார் தலைவர்.



““மூணு மாலைங்க.... ஒரு மாலை தேயிலைக் கொழுந்திலேயே கட்டியிருக்குங்க....”” என்றான் செபமாலை.



அப்போது தலைவரின் அருகே வந்த கறுப்பண்ணன் கங்காணி, ““என்னங்க தலைவரண்ணே, மூணு மாலை போதுங்களா?.... தொரைக்கு ஒரு மாலை போடணும்.... அப்புறம் கண்டக்கையா வருவாரு..... அவருக்கு ஒண்ணு இனி வர்றவங்களுக்கு வேறு மாலை வேணும்.....”” எனக் கூறியபடி மாலைகளை உற்றுப் பார்த்தார்.



கறுப்பண்ணன் கங்காணிக்குத் தலைவரையொத்த வயதுதான் மதிக்கலாம். ஆனாலும் தலையில் வழுக்கை விழாததால் அவர் தலைவரைவிட சற்று இளமையானவர் போலத் தோற்றமளித்தார்.



““நீங்க கொஞ்சம் சும்மா இருங்க கங்காணி. இன்னிக்கி தொரை, கண்டக்கையாவுக்கெல்லாம் மாலையில்ல@ கூட்டத்துக்கு வர்றது நம்ப மந்திரிதானே - அவருக்குப் போடத்தான் மாலை கட்டியிருக்கு”” எனச் சற்றுக் கண்டிப்பான குரலில் கூறினான் வீரய்யா.



““அப்புடியா வெசயம்! இது என்ன கொழுந்திலை கட்டியிருக்கிற மாலை. ஆள் ஓசரத்துக்கு இருக்கும்போல தெரியுது. இந்த மாலையை யாரு மந்திக்குப் போடுவாரு”” எனக் கேட்;டபடி பெரிதாக இருந்த மாலையைக் கையில் எடுத்து உயர்த்திப் பிடித்தவாறு ஆச்சரியம் ததும்பக் கண்களை அகல விரித்தபடி கேட்டார் கங்காணி.



““அந்த மாலையை நம்ம தலைவர்தான் மந்திக்குப் போடனும் தொழிலாளர்கள் சார்பா தலைவரு போடுறதாலைதான் அந்த மாலையைக் கொழுந்தாலையே கட்டியிருக்கோம்”” எனக் கூறிவிட்டு புன்னகை செய்தான் வீரய்யா.



பக்கத்தில் நின்றிருந்த தலைவர் அதைக் கேட்டுத் தலையை ஆட்டியபடி அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார். அவரது பற்கள் வெற்றிலைக் காவி படிந்து கருமையாகத் தெரிந்தன.



வீரய்யா ஒலிபெருக்கி சம்பந்தப்பட்ட வேலைகள் யாவும் முடிந்து விட்டதா எனக் கவனிக்க மடுவத்தின் உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து ராமுவுக்கு செப மாலையும் சென்றனர்.



தோட்டத்து கண்டக்டர் அப்போது மேடையை வந்தடைந்தார்.



““சலாங்கையா”” எனப் பணிவுடன் வணக்கம் தெரிவித்த கறுப்பண்ணன் கங்காணி, கண்டக்டர் அமருவதற்காக கதிரை ஒன்றை எடுத்து வந்து போட்டார்.



மூக்குக் கண்ணாடியைக் கழற்றி சேட் பெக்கட்டுக்குள் திணித்துக்கொண்டே கதிரையில் அமர்ந்தார் கண்டக்டர். பின்னர் தானணிந்திருந்த தொப்பியை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, தனது நரைத்த தலைமயிரைத் தடவியவாறு அங்கு குழுமியிருந்தவர்களைக் கண்ணோட்டம் விட்டார்.



““என்னாங்கையா தொரையை இன்னும் காணோங்களே?”” தலையைச் சொறிந்த வண்ணம் கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார் தலைவர்.



““இப்பதான் தொரை எனக்கு டெலிபோன் பண்ணினாரு. இன்னும் கொஞ்ச நேரத்திலை வந்திடுவாரு”” என்றார் கண்டக்டர்.



““நல்லதுங்க! எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருக்கோமுங்க.... மந்திரிமாருங்க தோட்டத்துக்கு வர்ரது இது தாங்க மொதல் தடவை. தோட்டங்களையெல்லாம் இண்ணையிலிருந்து அரசாங்கம் எடுத்திருச்சி. இனிமே நம்மளுக்கெல்லாம் விடுதலை கெடச்சமாதிரித்தாங்க”” எனக்குழைத்து கொண்டார் தலைவர்.



வெளியே நின்றிருந்த ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்து ““ஐயா ஐயா நாட்டிலிருந்து கூட்டமா ஆளுங்க வர்றாங்க”” எனத் தலைவரைப் பார்த்துக் கூறினான்.



எல்லோரும் வெளியே எட்டிப் பார்த்தனர்.



மேடையருகே நின்ற செந்தாமரையும் ஆவலுடன் வெளியே பார்த்தாள்.



கிராமத்திலிருந்து தோட்டத்துக்கு வரும் ஒற்றையடிப் பாதையில் ஒருவர்பின் ஒருவராக பலர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.



““ரொம்பப்பேர் வர்றாங்க.... இங்கதான் வர்றாங்க போலையிருக்கு”” என ஆச்சரியத்துடன் கூறினார் தலைவர்.



செந்தாமரையின் உள்ளம் ஒரு கணம் குதூலத்தில் நிறைந்தது.



““இப்பவே மடுவத்திலை ஆள் நெறைஞ்சுபோச்சு..... அவங்களும் வந்துட்டாங்கன்னா நிக்கிறதுக்கே எடம் கெடையாது”” என்றார் கறுப்பண்ணன் கங்கானி வியப்புடன்.



சிறிது நேரத்தில் கிராமத்திலிருந்து வந்தவர்கள் மடுவத்தை வந்தடைந்தனர். அநேகர் மடுவத்தினுள்ளே நுழைய முடியாமல் வெளியிலேயே நின்றனர். பார்த்த இடமெல்லாம் தலைகள் தெரிந்தன.



செந்தாமரையின் கண்கள் சனக் கூட்டத்தைத் துழாவின ஆவலுடன் அவளது கணகள் சுழன்று வந்தன.



கிராமத்திலிருந்து சற்றுப் பருமனான தோற்றதுடைய ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மேடையருகே வந்தார். அவரைப் பார்த்ததும், ““அட, நம்ப பண்டா மாத்தியா கூட கூட்டத்துக்கு வந்திருக்காரு. மந்திரி வாறாருன்னு நாங்க ஒங்களுக்கு சொல்லக்கூட இல்லையே...”” என வியப்புடன் கூறினார் தலைவர்.



““ஏங் தலைவர், நீங்க எங்களுக்கு சொல்லாட்டி நாங்க கூட்டத்துக்கு வரக்கூடாதா?”” என அசட்டுச் சிரிப்புடன் கேட்டார் வந்தவர்.



““அப்பிடியில்லீங்க மாத்தியா, மந்திரி நம்ப தோட்டத்துக்குத் தானே வாறாரு@ நாங்க தானே கூட்டத்துக்கு ஒழுங்கு செஞ்சிருக்கோம்.... அதனால தாங்க கேட்டேன்.””



““அப்படி சொல்லவேணாங் தலைவர். இப்ப தோட்டமெல்லாம் அரசாங்கம் எடுத்திருக்குத்தானே... இப்ப நீங்க நாங்க எல்லாங் அரசாங்கத்து ஆள்தானே. நம்ப எல்லாத்துக்கும் ஒரே மந்திரிதாங்.... நம்ப மந்திரி வந்தா நாங்க எல்லாம் வரத்தானே வேணுங்.|



பண்டா முதலாளியைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த கிராமசேவகர் தனக்குத் தெரிந்த தமிழில் கூறிவிட்டு சிரித்தார்.



அப்போது தோட்டத்துரையின் கார் விரைந்து வந்து மடுவத்தின் முன்னால் நின்றது. கூட்டத்தில் இப்போது சற்று அமைதி நிலவியது.



கண்டக்டர் எழுந்து காரின் அருகே சென்று ~குட்மோனிங்| எனத் துரைக்கு வந்தனம் தெரிவித்தார்.



““மந்திரி இன்னும் வரவில்லையா?”” என ஆங்கிலத்தில் கேட்டபடி காரிலிருந்து இறங்கினார் துரை.



““இன்னும் வரவில்லை சார். அடுத்த தோட்டத்தில் நடைபெறும் கூட்டத்திலே பங்கு பற்றிக் கொண்டிருக்கிநாரென இங்கு வந்தவர்கள் கூறினார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென நினைக்கிறேன்”” எனக் கூறிய கண்டக்டர் துரையைப் பந்தலுக்கு அழைத்துச் சென்றார்.



துரை அங்கு குழுமியிருந்த சனக் கூட்டத்தைப் பார்வையிட்டவாறு நடந்து சென்று கதிரையில் அமர்ந்தார்.



சிறிது நேரத்தின் பின்னர் ஒரு காரும் அதனைத் தொடர்ந்து ~ஜீப்| வண்டியொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக மடுவத்தின் அருகே வந்து சேர்ந்தன.



மாரிமுத்துத் தலைவர் அவசர அவசரமாக பந்தலின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மைக்கின் முன்னால் சென்று, ““அமைதி அமைதி, மந்திரி வந்துவிட்டார்.... எல்லோரும் அமைதியாக இருங்கள்”” எனப் பதட்டத்துடன் கூறினார்.



பட்டாசு வெடிகள் பலத்த சத்தத்துடன் முழங்கின. துரையும் கண்டக்டரும் அங்கு குழுமியிருந்தவர்களும் மந்திரியை எதிர்கொண்டு அழைப்பதற்காக காரின் அருகே சென்றனர்.



கறுப்பண்ணன் கங்கானி பெருமிதத்துடன் மாலைத் தட்டை ஏந்தியவாறு முன்னே சென்றார்.



துரை முதலில் மந்திரியின் கையைப் பிடித்துக் குலுக்கி அவரை வரவேற்றுவிட்டு, மட்டில் தயாராக வைக்கப்பட்டிருந்த மாலை ஒன்றை எடுத்து மந்திரிக்குச் சூட்டினார். அப்போது பலத்த கைதட்டலும் ~மந்திரி வாழ்க| என்ற வாழ்த்தொலியும் வானைப் பிளந்தன.



அடுத்த கண்டக்டர் சென்று மாலை அணிவித்து விட்டு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். மீண்டும் கரகோஷமும் ~மந்திரி வாழ்க| என்ற ஒலியும் பலமாக ஒலித்தன.



மக்கள் ஒருவரோடொருவர் முண்டியடித்துக் கொண்டு எப்படியாவது மந்திரியைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வத்துடன் முன்னே சென்றனர். மந்திரி எல்லோரையும் பார்த்துக் கரங்கூப்பி வணக்கம் தெரிவித்தார். பண்டா முதலாளி அவரது கண்ணில் பட்டபோது மந்திரி அவரைப் பார்த்து அறிமுகச் சிரிப்பொன்றை உதிர்த்தார்.



ஒலிபெருக்கியில் பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வந்த மாரிமுத்துத் தலைவர், மந்திரிக்கு மாலை அணிவிப்பதங்காக முன்னே வருவதற்கு எத்தனித்து, சனக்கூட்டத்தின் மத்தியில் அகப்பட்டு முண்டியடித்துக் கொண்டிருந்தார்.



தலைவரைக் காணாத கறுப்பண்ணன் கங்காணி கையில் இருந்த மாலைத் தட்டுடன் அங்குமிங்குமாக அலை மோதிய வண்ணம் இருந்தார்.



அதனைப்பார்த்த செந்தாமரை தன்னை மறந்து ~களுக்| கென்று சிரித்தாள்.



தட்டுடன் மாலையை வைத்துக்கொண்டு அதனை மந்திரிக்கு அணியாது தடுமாறிக்கொண்டிருந்த கறுப்பண்ணனைப் பார்த்ததும் பண்டா முதலாளிக்கு ஒரு யோசனை தோன்றியது. திடீரெனத் தட்டியிலிருந்த மாலையை எடுத்து மந்திரியின் கழுத்தில் அணிந்துவிட்டு பலத்த குரலில், ““அபே மந்திரி துமாட்ட ஜயவேவா”” எனத் தன்னிரு கைகளையும் உயரத் தூக்கிக் கோஷமிட்டார்.



அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த கிராம மக்களும் பலத்த குரலில் ““ஜயவேவா”” என ஒலியெழுப்பினார்.



மாரிமுத்துத் தலைவர் திகைத்துப்போய் நின்றார்.



தான் மந்திரிக்கு அணிவிக்கவிருந்த மாலையை பண்டா முதலாளி மந்திரிக்குச் சூட்டிவிட்டு வெற்றிக் களிப்புக் கொண்டாடுவதைப் பார்த்ததும் அவருக்கு ஆத்தரமும் அவமானமும் பொங்கி வந்தன.



மிகப்பெரிய கொழுந்து மாலையைத் தனக்குச் சூடிய பண்டா முதலாளியின் முதுகில் நன்றி தெரிவிக்கும் முகமாக அன்புடன் தட்டிய மந்திரி மேடையை நோக்கி மெதுவாக நடந்தார்.



மேடையருகே தயாராக இருந்த செந்தாமரை மந்திரிக்கு ஆரத்தி எடுத்தாள்.



வீரய்யா அவரது நெற்றியில் சந்தனத் திலகமிட்டு அவரை வரவேற்றான்.



மந்திரியின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் ஆவலுடன் மேடையருகே நெருங்கினர். வேறு தோட்டங்களுக்கும் செல்ல வேண்டி இருந்ததால் மந்திரி காலந்தாழ்த்தாது உரை நிகழ்த்தத் தொடங்கினார். சிங்கள மொழியில் அவரது உரை நிகழ்ந்தது.



““இங்கு குழுமியிருக்கும் தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிராமத்தில் இருந்து வந்த ஆதவாளர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தை முதற்கண் தெரிவிக்கிறேன். இன்று முதல் எமது நாட்டில் இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் யாவும் அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டன. நூறு வருடங்களுக்கு மேல் அந்நியர்களின் கையில் இருந்த எமது செல்வங்கள் இன்று எமது கைகளுக்குக் கிடைத்திருக்கின்றன. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக தோட்டங்கள் அரசுடமையானதினால் தோட்டத் தொழிலாளர்கள்தான் முதலில் விமோசனம் அடையப் போகின்றார்கள். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தொழிலாளர்களுக்குச் சம்பளம் அதிகரித்துக் கொடுக்கப்படுவதோடு அவர்களது தொழிலுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். இங்கிருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வசதி செய்வோம். தோட்டத்தில் பெறப்படும் இலாபத்தின் ஒரு பகுதி தொழிலாளர்களிடையே பகிர்ந்து அளிக்கப்படுவதோடு நிலமற்றவர்களுக்கும் காணி வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.””



மந்திரியின் பேச்சின் சுருக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார். மந்திரியுடன் கூட வந்த அரசியல் அமைப்பாளர். கரகோஷம் வானை முட்டியது.



““மந்திரி வாழ்க”” எனத் தொழிலாளர்கள் வாழ்த்தினர்.



அதனை அடுத்து வீரய்யா மேடைக்குச் சென்று மந்திரிக்கும் அவருடன் கூட வந்தவர்களுக்கும் தொழிலாளர்கள் சார்பில் நன்றியுரை கூறினான்.



வேறு தோட்டங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் மந்திரி பங்குபற்ற வேண்டியிருந்ததால் அவர் அவசர அவசரமாகப் புறப்பட்டார். முக்கியமாக துரை. கண்டக்டர், வீரய்யா முதலியோரது கைகளை அன்புடன் பற்றி தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் பண்டா முதலாளியின் முதுகில் அன்புடன் தட்டிப் புன்னகை செய்தபடி காரிலே சென்று ஏறினார் மந்திரி.



““ஜயவேவா”” என்ற கோஷம் இப்போது வானை முட்டி மோதியது.



மந்திரியின் கார் புறப்பட்டுச் சென்றதும் துரையும் தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.



மந்திரி எப்போது அங்கிருந்து புறப்படுவார், கூட்டம் எப்போது முடிவடையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்துத் தலைவர் சினத்துடன் பண்டா முதலாளியின் அருகே சென்றார்.



““என்னாங்க மாத்தயா, நீங்க என்னா நினைச்சுக்கிட்டு அந்த மாலையை எடுத்து மந்திக்குப் போட்டீங்க? இந்தத் தோட்டத்தில் நான் பத்து வருஷமா தலைவரு வேலை செஞ்சிக்கிட்டு வாரேன்@ என்னை யாரும் இந்த மாதிரி அவமானப்படுத்தல்ல. நான் தலைவரா.... இல்ல நீங்க தலைவரா?””



மாரிமுத்துத் தலைவரின் குரல் ஆத்திரத்தில் தடுமாறியது.



பண்டா முதலாளி தலைவரின் அருகே நெருங்கி அவரது தோளில் தனது கையால் மெதுவாகத் தட்டிச் சிரித்துவிட்டு,



““என்னாங் தலைவர் மிச்சங் கோபப்படுகறீங்க.... நம்ப மந்திரிக்கு மாலை போடுற நேரத்திலை நீங்க அங்கினைக்கி இல்லை தானே... அதுதாங் நாங் கோட்டது.... நாங் மாலை போட்டாலும், தோட்டத்து ஆளுங்க தான் கூட்டம் வச்சது சொல்லி மந்திரிக்குத் தெரியுங் தானே. தோட்டத்து ஆளுங்களுக்குத் தானே இனிமே மந்திரி ஒதவி செய்யப் போறது.... நம்மளுக்கு இல்லைத்தானே, இதுக்கிபோய் பெரிசா கோபப்படாதீங்க”” எனச் சமாதானப்படுத்த முயன்றார்.



அப்போது அவர்களது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த ராமு, ““அப்புடிச் சொல்லாதீங்க மாத்தியா, எங்க தலைவரு போட இருந்த மாலைய நீங்க போட்டது சரியில்லை”” எனப் படபடத்தான்.



““எங்க தோட்டத்து ஆளுங்களையே அவமதிக்கிற மாதிரி செஞ்சுப்புட்டீங்க”” எனக் குமுறினான் பக்கத்தில் நின்ற செபமாலை.



இப்போது பண்டா முதலாளியையும் தலைவரையும் பலர் சூழ்ந்து கொண்டனர். வாக்குவாதம் முற்றி ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடவுங் கூடுமென நினைத்த வீரய்யா நிதானமாக,



““முடிஞ்சுபோன வெசயத்தைப் பற்றி இனிக் கதைச்சு என்னா பெரயோசனம். நடந்தது நடந்து முடிஞ்சிச்சு..... சும்மா பேசிகிட்டு இருக்காம நடக்க வேண்டியதைக் கவனியுங்க....| எனக் கூறிவிட்டு ராமுவின் கைகளைப் பற்றி, ““இங்கபாரு ராமு அந்த ஸ்பீக்கர்காறங்களை அனுப்பனும், செபமாலையைக் கூட்டிக்கிட்டுப் போயி ஸ்பீக்கர் எல்லாம் அவுத்து அவுங்களை அனுப்புறதுக்கு வேண்டியதைக் கவனி”” எனக் கூறினான்.



பண்டா முதலாளியுடன் கூட வந்திருந்த கிராம சேவகர் அவரை அவசரமாக அழைத்தார்.



பண்டா முதலாளி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மெதுவாக அவ்விடத்தை விட்டு நழுவினார்.



கூட்டம் சிறிது சிறிதாகக் கலையத் தொடங்கியது.



நாட்டிலிருந்து வந்திருந்த ஓர் இளைஞனின் கண்கள் மேசையருகே நின்றிருந்த செந்தாமரையையே ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் இருந்தன. அப்போது செந்தாமரையின் பார்வை அவனது பக்கம் திரும்பியது. அவன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். செந்தாமரை நாணத்துடன் குனிந்து கொண்டாள். அவளது இதழ்களிலிருந்தும் மெல்லிதாக ஒரு புன்னகை மலர்ந்தது. புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியதும் அவன் அவளிடம் கண்களால் விடை பெற்றுக் கொண்டான். அவள் ஏக்கத்துடன் அவளையே பார்த்த வண்ணம் இருந்தாள்.

++++++++++++++++++++

அத்தியாயம் இரண்டு





அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் தோட்டத்தில் வேலை கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள் தத்தமது சொந்த வேலைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். பெண்களில் சிலர் தமது வீட்டைப் பெருக்குவதில் முனைந்திருந்தனர். சிலர் பீலிக்குச் சென்று வீட்டுப் பாத்திரங்களைத் துலக்குவதிலும் ஆடைகளைத் துவைத்துக் குளிப்பதுமாக இருந்தனர். வீட்டில் வேலை இல்லாதவர்கள் ~மிலார்| பொறுக்குவதற்காக மலைக்குச் சென்றிருந்தனர். ஆண்களில் பலர் தமது மரக்கறித் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர்.



வழுக்கங் பாறை லயத்தின் தொங்கல் காம்பராவின் முன்புறத்திலுள்ள இஸ்தோப்பில் அன்றைய தினசரியை வாசித்துக் கொண்டிருந்தான் வீரய்யா. அவனது தாய் மீனாச்சி காம்பராவின் உள்ளே சாணியால் நிலத்தை மெழுகிச் கொண்டிருந்தாள்.



““என்ன வீரய்யா இன்னைய பேப்பரா? இன்னிக்குப் பேப்பரிலை நம்ப தோட்டத்து வெசயமா ஏதும் போட்டிக்காங்களா?”” எனக் கேட்டபடி உள்ளே நுழைந்தான் ராமு.



பத்திரிகை வாசிப்பதில் மூழ்கியிருந்த ராமுவின் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான். அப்பொழுது தான் செபமாலையும் ராமுவின் பின்னால் வருவது தெரிந்தது.



இருவரும் இஸ்தோப்பில் இருந்த வாங்கில் அமர்ந்து கொண்டனர்.



““தோட்டத் தொரைமாருக்கெல்லாம் நேற்று மாவட்டக் காரியாலயத்தில் மீட்டிங் இருந்திச்சில்லையா..... அதில நம்ப மந்திரி பேசியிருந்ததை விசேசமா போட்டிருக்காங்க”” எனக் கூறிக் கொண்டே பத்திரிகையை செபாமாலையிடம் கொடுத்தான் வீரய்யா.



““தொரமாருக்கெல்லாம் என்னதான் மந்திரி சொல்லியிருக்காரு?”” என ஆவலுடன் கேட்டான் ராமு.



““மொதலாவதாக தோட்டத்திலை இருந்து இனிமே உத்தியோகத்தர் களையோ தோட்டத் தொழிலாளர்களையோ தொரைமார் வெளியே போடமுடியாது””



““அப்படியா ரொம்ப நல்லது@ இனிமே இந்த தொரைமாருங்க ஆட்டமெல்லாம் நின்னுபோயிடும். அவுங்க நெனைச்சபடி தோட்டத்திரை எதுவுமே செய்ய முடியாது”” என்றான் ராமு.



““அதுமட்டுமல்ல, தொரமாருங்க இஷ்டத்துக்கு தோட்டத்திலை யாரையும் வேலைக்கும் சேர்க்க முடியாதாம்@ அரசாங்கத்திலை இருந்து அனுப்புற ஆளுங்களை மட்டுந்தான் வேலைக்கு சேத்துக்கிறணுமாம்”” எனத் தொடர்ந்து கூறினான் வீரய்யா.



““ஆமா ஆமா, இவ்வளவு நாளா தொரைமாருங்க வூட்டு ஆளுங்களையும் ஸ்டாப்புமாருங்கவூட்டு ஆளுங்களையுந்தானே தோட்டத்திலை உத்தியோகங்களுக்கு சேத்துக்கிட்டு வந்தாங்க@ யாரைப் பார்த்தாலும் அவுங்க அவுங்க அண்ணன் - தம்பி, மச்சான் மாமனாகவே இருக்காங்க. இனிமே அதெல்லாம் நடக்காது.””



இதுவரை நேரமும் மரக்கறி தோட்டத்தில வேலை செய்துகொண்டிருந்த வீரய்யாவின் தந்தை மாயாகண்டி அப்போது இஸ்தோப்பின் உள்ளே நுழைந்தார். தோட்டத்திலிருந்து கொண்டுவந்த மரக்கறிகளை சுவர் ஓரமாக இருக்கும் செலவுப் பெட்டியின் மேல் வைத்துவிட்டு, நெற்றியிலே படிந்திருந்த வியர்வையை ஒரு துண்டினால் துடைத்துக் கொண்டார்.



““இனிமே தொலைமாருங்க நெனைச்சபடி தோட்டத்தை நடத்தமுடியாது. ஒவ்வொரு தோட்டத்திலையும் தோட்ட நிர்வாக கமிட்டின்னு ஒண்ணு அமைக்கப் போறாங்களாம். அதிலை தோட்டத் தொழிலாளர்கள் சார்பிலும் உத்தியோகத்தர் சார்பிலும் பிரதிநிதிங்க இருப்பாங்க@ அவங்களோட கலந்து ஆலோசிச்சுத்தான் தொரை தோட்டத்திலை எதையும் செய்ய முடியும்”” என பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்த செபமாலைக் கூறினான்.



““என்னதான் இருந்தாலுந் தம்பி தோட்டங்களைக் கொம்பனிக் காலத்திலை நடத்தினமாதிரி அரசாங்கத்திலை நடத்துவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை”” என அலட்சியமாகக் கூறிக்கொண்டே, காதிலே செருகிவைத்திருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் பொருத்தி அதனைப் பற்றவைத்தார் மாயாண்டி.



அவர் அப்படிக் கூறியது அங்கிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.



““என்னங்க மாமேன், அப்படிச் சொல்லிப்புட்டீங்க! இப்ப தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததினால் ஆளுங்கெல்லாம் எவ்வளவு சந்தோஷப்படுறாங்கன்னு தெரியுமா? நீங்க மட்டும் ஏன் இப்படிச் சொல்லுறீங்க?”” என வியப்புடன் கேட்டான் ராமு.



““தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததை நீங்க என்னமோ சாதாரணமாக நெனைச்சுப்புட்டீங்க போலையிருக்கு@ இனிமேதான் நம்மளுக்கு எவ்வளவோ ஒதவி கெடைக்கப் போவுது இவ்வளவு காலமும் கொம்பனிக் காரங்களுக்கும் தோட்டச் சொந்தக்காரங்களுக்கும் நாம அடிமையா இருந்தோம். இவங்க நெனைச்ச மாதிரி நம்மளை ஆட்டிப் படைச்சுக்கிட்டு இருந்தாங்க.... இனிமே இந்த நாட்டிலை இருக்கிற மத்தவங்க மாதிரி நாமளும் தலை நிமிர்ந்து நடக்கலாம்”” என விபரமாகக் கூறினான் செபமாலை.



““என்னங்க தம்பி எனக்குத் தெரியாத வெசயமா.... இந்தத் தேயிலையை இங்க கொண்டாந்து உண்டாக்கினதே அந்த வெள்ளைக்காரங்கதானே. அவுங்க தோட்டத்தை நடத்தினதை விடவா அரசாங்கத்திலை பெரிசா நடத்திப்புடப் போறாங்க?”” எனக் கேட்ட மாயாண்டி, அலட்சியமாகப் புகையை வெளியே ஊதினார்.



““அப்புடி இல்லீங்க மாமேன். நீங்க கொம்பனிக் காலத்து நெனைப்புலேயே இப்பவும் இருக்கிறீங்க.... இப்ப காலம் மாறிக்கிட்டே போவுது. நிச்சயமாக தோட்டத்து ஆளுங்களுக்கு இனிமேதான் நல்லது கெடைக்கப்போவுது.””



இதுவரை நேரமும் வீட்டை மெழுகிக்கொண்டு இவர்களது சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த மீனாச்சி வெளியே எழுந்து வந்தாள்.



““இவரு எப்பவும் இப்படித்தான் செபமாலை, ஏடக்குறுக்க ஏதாச்சும் வெளங்காம பேசிகிட்டு இருப்பாரு@ அதை வுட்டுட்டு வேற என்ன தம்பி போட்டிருக்கு அதைச் சொல்லுங்க”” எனக் கூறியபடி அவள் வாசலுக்குச் சென்று சாணிக் கையைக் கழுவினாள்.



““மந்திரி வேற ஒரு வெசயத்தையும் தொரைமாருக்கு சொல்லியிருக்காரு@ இனிமே தொலைமாருங்க எல்லாரும் கட்டாயமா தோட்டத்து ஆளுங்களோட நல்ல மொறையில நடந்துக்கணுமாம். முந்தி மாதிரி தொரைத்தனமா நடந்துக்காம ஆளுங்களோட அன்பாகப் பழகணுமாம்”” என்றான் செபமாலை.



அப்போது செந்தாமரை தண்ணீர்க் குடத்துடன் வீட்டினுள் நுழைந்தாள்.



““இவ்வளவு நேரமா பீலியிலை என்ன செஞ்சுகிட்டு இருந்தே? அங்க போய் என்னதான் செய்வியோ தெரியாது. இவுங்கெல்லாம் வந்து எவ்வளவு நேரமாச்சு? இன்னும் தேத்தண்ணிகூட கொடுக்கல..... வெரசா தண்ணி சுடவச்சி தேத்தண்ணி உத்து”” எனச் செந்தாமரையிடம் கூறிய மீனாச்சி செலவுப் பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்த மரக் கறிகளை எடுத்து நறுக்கத் தொடங்கினாள்.



செந்தாமரை எதுவுமே பேசாது புன்னகை செய்தவண்ணம் அடுப்படிப் பக்கஞ் சென்றாள்.



ஏங்க தம்பி, நான் ஒண்ணு கேக்கிறேன். தோட்டத்து ஆளுங்களோட தொரைமாருங்க கூட்டாளித்தனமா நடந்துகிட்டா தோட்ட வேலைங்கெல்லாம் எப்படி ஒழுங்கா நடக்கும்? தொரை ஆளுங்களோட கண்டிப்பா நடந்து கிட்டாத்தான் ஆளுங்க பயந்து ஒழுங்கா வேலையைச் செய்வாங்க..... அரசாங்கம் சொல்லுறபடி பாத்தா தோட்டத்தைச் சுறுக்கா மூடிடுவாங்க போலையிருக்கே”” என்றார் மாயாண்டி சிந்தனையுடன்,



““அப்படியில்லேப்பா, தோட்டத்து ஆளுங்களை அடிமையா நடத்த வேணாமுனுதான் அரசாங்கம் சொல்லுது@ அதோட தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகத்தில் அக்கறை காட்டுறதால, தோட்டம் ஒருநாளும் நஷ்டத்தில் போகாது”” என்றான் வீரய்யா விபரமாக,



““அதெல்லாஞ்சரி. தொரைமாருங்களுக்கு அரசாங்கம் சொல்லியிருக்கிற மாதிரி அவுங்க கேட்டு நடப்பாங்கன்னு எப்படி சொல்ல முடியும்?”” எனக் கேட்டார் மாயாண்டி சிந்தனையுடன்.



““அரசாங்கம் சொல்லுறபடிதான் தொலைமாருங்க தோட்டத்தை நடத்தணும். இல்லேன்னா அவுங்க வேலைய பறிகொடுக்க வேண்டியது தான்.... இல்லாட்டி தோட்டத்தை வுட்டு வேறை தோட்டத்துக்கு மாத்திப்போடு வாங்க”” என்றான் ராமு.



““ஏங்க தம்பி, இப்ப நாம வேலைக்குப் போனாத்தான் பேரு போடுவாங்க.... இனிமேலாவது மத்தவங்களுக்கு மாதிரி நம்மளுக்கும் மாதச் சம்பளம் கொடுப்பாங்களா?”” மீனாச்சி ஆவலுடன் கேட்டாள்.



““மாதச் சம்பளத்தைப் பற்றி இனிமேதான் பேசப்போறாங்க. மத்தவங்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கிற மாதிரி நம்மளுக்கும் கொடுக்கத்தான் செய்வாங்க@ அதோட நம்ப தோட்டத்து புள்ளைகளுக்கு படிக்கிறதுக்கு வேண்டிய வசதியும் செஞ்சு கொடுப்பாங்க. ஸ்கூலையும் அரசாங்கத்துக்கு எடுத்து தோட்டப் புள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்க புதுசா மாஸ்டர்மாரையும் அனுப்பிவைப்பாங்க.””



““அப்புடின்னா இனிமே நம்மளுக்கெல்லாம் நல்ல காலமுன்னு சொல்லுங்க தம்பி”” என மகிழ்வுடன் கூறினாள் மீனாட்சி.



““நீங்க சொல்லுறது எல்லாஞ் சரிதான். நம்ப பாட்டன் பூட்டன் காலத்திலை இருந்தே நாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறோமே. இவ்வளவு காலமும் இல்லாம இப்ப ஏன் இந்த அரசாங்கத்துக்கு நம்ப மேலை அக்கறை வந்திருக்கு? அதைக் கொஞ்சமாவது யோசிக்சுப் பாத்தீங்களா?”” எனக் கேட்டுவிட்டு வாயிலே ஊறிய சுருட்டுச் சாரத்தை வெளியே துப்பினார் மாயாண்டி.



““இவ்வளவு காலமும் தேயிலைத் தோட்டங்களெல்லாம் வெள்ளைக்காரங்களுக்குச் சொந்தமா இருந்திச்சி. ஆதாயமெல்லாம் அவுங்க நாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்திச்சி. ஆனா, இப்ப தோட்டங்களை அரசாங்கம் எடுத்ததினால ஆதாயமெல்லாம் நம்ப நாட்டுக்கு கெடைக்கப் போவுது. அது நம்மளுக்கும் நல்லது. நம்ப நாட்டுக்கும் நல்லது.”” வீரய்யா விளக்கம் கொடுத்தான்.



““நீங்கதான் என்னென்னமோ பெரிசா பேசிக்கிறீங்க........ இனிமே போகப் போகத்தான் எல்லாந் தெரியப்போவுது”” என்றார் மாயாண்டி வெளியே பார்த்தபடி.



செந்தாமரை எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தான்.



எல்லோரும் தேநீர் அருந்தத் தொடங்கினர்.



சிறிது நேரம் நண்பர்களது சம்பாஷணை தோட்ட விஷயங்களைப் பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது.



““சரி வீரய்யா, நான் வரட்டுமா? வூட்டுல கொஞ்சம் வேலை யிருக்கு”” எனக் கூறியபடி எழுந்திருந்தான் ராமு. அவனைத் தொடர்ந்து செபமாலையும் எழுந்தான்.



இருவரும் புறப்பட்டுச் சென்றதும் வீரய்யா மீண்டும் பத்திரிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அவனது உள்ளத்தில் தொழிலாளர்களின் எதிர்காலம் ஒளிமயமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

++++++++++++++++++++

அத்தியாயம் மூன்று



கடந்த நான்கு நாட்களாக பண்டா முதலாளியின் உள்ளம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. பக்கத்துத் தோட்டத்தில் நடந்த கூட்டத்தின் போது மந்திரி அவரைப் பார்த்து அறிமுகச் சிரிப்பை உதிர்த்ததும் எதிர்பாராத விதமாக அவர் மந்திரிக்கு மாலை அணிந்து தன் ஆதரவைக் காட்டிய நிகழ்ச்சியும், அவரது மனதில் அடிக்கடி வந்து கொண்டிருந்தன.



வீட்டின் பின்புறமாக இருந்த சிறிய கொட்டிலில் போடப்பட்டிருந்த கதிரையொன்றில் சாய்ந்தவாறு அவர் சுருட்டு ஒன்றைப் புகைத்துக் கொண்டிருந்தார்.



சற்று நேரத்திற்கு முன்னர் பக்கத்துத் தோட்டத்திலிருந்து வந்த ஒரு தொழிலாளியிடம் இரண்டு போத்தல் கள்ளுக்குரிய பணத்தைக் குறைத்து வாங்கிவிட்டது. அப்போதுதான் அவரது நினைவில் வந்தது.



நிலத்தில் சிந்தியிருந்த கள்ளின் நெடி ஒரு கணம் அவ்விடத்தில் வீசியது.



தோட்டங்களில் சம்பளம் போடுவதற்கு இன்னும் ஒரு கிழமையிருந்ததினால் அவருக்கு வியாபாரம் இப்போது கம்மியாகவே இருந்தது. இதுவரை ஐந்தாறு பேர்தான் கள்ளுக் குடித்துவிட்டுத் திரும்பியிருந்தனர். மூலையிலிருந்த முட்டியில் அரைவாசிக்கு மேல் கள்ளு அப்படியே கிடந்தது.



முற்றத்தில் படுத்திருந்த அவரது நாய் ஒரு கணம் தலையை நிமிர்த்திக் குரைத்துவிட்டு, வருபவர் வாடிக்கையாளர் என்பதைப் புரிந்து கொண்டதினாலோ என்னவோ மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டது.



பண்டா முதலாளி வெளியே எட்டிப் பார்த்தார்@ அங்கு கறுப்பண்ணன் கங்கானி வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த போது மந்திரி வந்தன்று மாலைத் தட்டுடன் கறுப்பண்ணன் கங்காணி அங்குமிங்கும் ஓடித்திரிந்த காட்சி அவரது நினைவில் வந்தது. தன்னையும் மீறிக் கொண்டு அவர் வாய் விட்டுச் சிரித்தார்.



பண்டா முதலாளி எட்டிப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டதும் வாயிலே நிரம்பியிருந்த வெற்றிலைத் துப்பலை வேலியோரமாக நின்ற கித்துள் மரத்தடியில் எட்டி உமிழ்ந்துவிட்டு சிரிப்பை வர வழைத்துக் கொண்டார் கறுப்பண்ணன் கங்காணி.



““ஏங் கங்காணி@ இந்த நாலு நாளா இங்க வரேல்லைத் தானே”” எனக் கேட்டுக்கொண்டே கறுப்பண்ணனை வரவேற்றார் பண்டா முதலாளி.



““நம்ப வயல்லை கொஞ்சம் வேலையிருந்திச்சுங்க. அதுனாலே வரமுடியாம போயிருச்சுங்க..... இன்னிக்குத் தாங்க கொஞ்ச நேரங் கெடச்சிச்சு”” எனக் கூறியபடி கொட்டிலினுள்ளே நுழைந்து அங்கே கிடந்த வாங்கில் அமர்ந்தார் கறுப்பண்ணன் கங்கானி.



““அப்புடியா.... நம்ப தலைவரையும் இந்தப் பக்கம் காங்கேல்ல... நம்பமேலை கோபப்பட்டது சொல்லி நான் நெனைச்சது.””



““அப்படி நெனைக்க வேணாங்க மாத்தியா, ஒங்க மேல எங்களுக்கு அப்படியேதுங் கோபமில்லீங்க. நம்ப தலைவருக்கு ரெண்டு நாளா சொகமில்லீங்க...... அதுதாங்க...”” என இழுத்தார் கங்காணி.

பண்டா முதலாளி சிரட்டையில் கள்ளை வார்த்துக்கொண்டு வந்து கங்காணியிடம் கொடுத்தார். இரு கைகளினாலும் அதனை வாங்கித் தனது வாயில் வைத்து ஓர் உறிஞ்சு உறிஞ்சிவிட்டு வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டார் கங்காணி.



““என்னங்க மாத்தியா இன்னிக்கு கள்ளு ரொம்பப் புளிப்பா இருக்கே@ பழைய கள்ளை ஏதும் கலந்துப்புட்டீங்களா?””



““ச்சா, என்னாங்க கங்காணி அப்புடிச் சொல்லுறது...... ஒங்களுக்கு நாங் அப்படி செய்யிறதா? இன்னிக்குத்தான் மரத்திலை இருந்து ஏறக்கினது”” எனக் கூறிவிட்டு வீட்டின் முன் பக்கத்தில் இருந்த தனது மனைவிக்குக் கேட்கும்படியாக, ““மெனிக்கே..... மே கங்காணிட்ட அளகெயின்ட”” எனக் கூறினார்.



வீட்டின் முன்புறமாகவுள்ள விறாந்தையில் பலசரக்குக் கடையொன்றையும் பண்டா முதலாளி வைத்திருக்கிறார். அந்தப் பகுதியில் வேறு கடைகள் ஏதும் இல்லாததால் அவருக்குப் பலசரகக்குக் கடையிலிருந்தும் கணிசமான வருமானம் கிடைத்தது. அந்தக் கடையை அவரது மனைவி மெனிக்காதான் கவனித்துக் கொள்வாள்.



பக்கத்துத் தோட்டங்களிலிருந்து அவரிடம் கள்ளு குடிக்க வருபவர்களும், அந்தக் கிராம மக்களும் அவரது கடையிலேதான் அன்றாட தேவைகளுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிச் செல்வார்கள்.



கள்ளுக் குடிப்பவர்கள் சுவைப்பதற்கென்றே தயாரித்து வைத்திருந்த மரவள்ளிக் கிழங்குக் கூட்டை சேம்பு இலைமொன்றில் எடுத்துவைத்து கங்காணியின் முன்னால் வைத்தாள் மெனிக்கே.



கறுப்பண்ணன் கங்கானி அதில் ஒரு துண்டை எடுத்துக் கடித்துவிட்டு மீண்டும் கள்ளை உறிஞ்சினார்.



பலசரக்குக் கடையில் சாமான் வாங்குவதற்காக யாரோ வந்தார்கள். மெனிக்கே வியாபாரத்தைக் கவனிப்பதற்காக முன்னே சென்றாள்.



““மே மாயாண்டி எனவா”” முன் பக்கத்தில் வியாபாரத்தைக் கவனித்தவாறே பண்டா முதலாளிக்குக் கேட்கும்படியாகக் கூறினாள் மெனிக்கே.



வழுவியிருந்த சாரத்தை ஒரு தடவை தனது பருத்த சொந்தியில் வரிந்து கட்டிவிட்டு ““ஆ! என்ட மாயாண்டி..... எப்புடி? ஏங் இன்னிக்கி மிச்சங் சொணங்கி வந்தாச்சு....”” எனக் கேட்டபடி அவரை வரவேற்றார் பண்டா முதலாளி.



““நம்ப கண்டக்கையா ஒரு வெசயமா வங்களாவுக்கு வரச் சொல்லியிருந்தாரு.... அதுதாங்க போயிட்டு வரக்கொஞ்சம் சொணங்கிப் போச்சு”” எனக் கூறியபடி கறுப்பண்ணன் கங்காணியருகே அமர்ந்து கொண்டார் மாயாண்டி.



கறுப்பண்ணன் கங்காணி மாயாண்டியைப் பார்த்துச் சிரித்துவிட்டு, மீண்டும் சிரட்டையுடன் கள்ளு உறிஞ்சத் தொடங்கினார்.



பண்டா முதலாளி வேறொரு சிரட்டையில் கள்ளை வார்த்து வந்து மாயாண்டியிடம் கொடுத்தார். பின்பு வெளியே சென்று வாயில் நிறைந்திருந்த வெற்றிலைத் துப்பலை உமிழ்ந்து விட்டு வந்து,



““அதிங்சரி மாயாண்டி, வீரய்யா சொல்லி சொல்றது ஒங்க மவன்தானே.... அன்னிக்கி நம்ப மந்திரி கூட்டத்துக்கு வாறப்போ அந்தப் பெடியன்தாங் எல்லா வேலையும் செஞ்சது... நமக்கு மிச்சங் சந்தோஷம்”” எனக் கூறிவிட்டுச் சிரித்தார்.



““ஆமாங்க மாத்தியா, தோட்டத்திலே எந்த ஒரு வெசயத்துக்கும் அவன்தாங்க முன்னுக்கு நிப்பான். நம்ப தோட்டத்து ஆளுங்ககூட அவன்மேல ரொம்ப பிரியமுங்க”” எனத் தட்டுத் தடுமாறியபடி கூறினார் கறுப்பண்னன் கங்கானி.



பண்டா முதலாளியும் கறுப்பண்ணன் கங்கானியும் கூறிய வார்த்தைகள் மாயாண்டிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.



““என்னகோ, நீங்கதான் அவனைப்பற்றிப் பெரிசா பேசிக்கிறீங்க... எந்த நேரம் பார்த்தாலும் தோட்ட வெசயமுன்னு சொல்லிக்கிட்டு பயலுங்களோட சேந்து சுத்திக்கிட்டு திரியிறான். அவனுக்கு வூட்டு வெசயத்தில கொஞ்சங்கூட அக்கறையிருக்கிறதாத் தெரியல்ல”” எனப் பொய்யாகக் குறைப்பட்டுக் கொண்டே தனது கற்றை மீசையில் படிந்திருந்த கள்ளைப் புறங்கையால் துடைத்துக் கொண்டார் மாயாண்டி.



““மாத்தியா எனக்கு இன்னொரு போத்தல் கள்ளுத் தாங்க, அப்படியே நம்ப மாயாண்டிக்கும் ஒரு போத்தல் என் கணக்கில கொடுங்க”” எனத் தடுமாறியபடி கூறினார் கறுப்பண்ணன் கங்கானி.



பண்டா முதலாளி மேலும் இரண்டு போத்தல் கள்ளை வார்த்துவந்து அவர்களது சிரட்டைகளில் நிரம்பினார்.



வெளியே இருள் சூழத் தொடங்கியது.



முற்றத்தில் காய்வதற்காகப் பரவியிருந்த கராம்புகளைப் பாயுடன் சுருட்டி எடுத்துக்கொண்டு வந்தாள் மெனிக்கே.



பண்டா முதலாளியின் தோட்டத்தில் நிறைய கராம்புச் செடிகளும், ஏலச் செடிகளும் இருக்கின்றன. அவற்றிலிருந்தும் பண்டா முதலாளிக்குக் கணிசமான வருமானம் கிடைக்கிறது.



மெனிக்கே கராம்பை உள்ளே கொண்டு வருவதைப் பார்த்ததும் நேரமாகிவிட்டதை உணர்ந்து கொண்டார் முதலாளி.



““சரிங் கங்காணி நேரமாச்சு.... நாங்களும் ரொம்பத் தூரங் போக வேணுங்”” எனக் கூறியபடி மெனிக்கே கொண்டு வந்த கராம்பை வாங்கி உள்ளே வைத்தார் பண்டா முதலாளி.



கறுப்பண்ணன் கங்காணியும் மாயாண்டியும் புறப்படுவதற்கு ஆயத்தமானார்கள்.



““அப்ப நாங்க வர்ரோமுங்க மாத்தியத”” எனக் கூறியபடி எழுந்த கறுப்பண்ணன் கங்கானி சுருட்டொன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு மாயாண்டியிடமும் ஒரு சுருட்டைக் கொடுத்தார்.



இருவரும் புறப்பட்டுத் தோட்டத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.



““கங்காணி, இந்த எடங் கொஞ்சம் வரக்கட்டா இருக்கு.... விழுந்திடாம பார்த்து நடந்து வாங்க”” எனக் கூறியபடி முன்னால் நடந்தான் மாயாண்டி.



““என்ன மாயாண்டி அப்புடிச் சொல்லிப்புட்டே, இது நம்மளுக்கு பழக்கப்பட்ட பாதைதானே. இந்தக் குறுக்கில எந்த எடத்தில வரக்கட்டு இருக்கு, எந்த எடத்தில மொடக்கிருக்குன்னு எனக்கு நல்லா நெதானம் இருக்கு”” எனக் கூறிய கறுப்பண்ணன் கங்கானி கால் தடுமாறிக் கீழே விழப்போனார். உடனே மாயாண்டி அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.



““பாரு மாயாண்டி அன்னிக்கி நாம மந்திரிக்குப் போடவச்சிருந்த மாலையை இந்த பண்டாப் பயல் எடுத்துப் போடிட்டான்@ அவன் ராங்கியை பாத்தியா?..... முந்தின காலத்தில அவன் லயத்துக்கு லயம் பாக்குத் தூக்கி வித்துக்கிட்டு திரிஞ்சது நமக்குத் தெரியாதா...? இப்ப என்னடான்னா பெரிச மனுசன் மாதிரி மந்திரிக்கு மாலை போட வந்திட்டான்”” எனக் கறுவிக் கொண்டார் கறுப்பண்ணன் கங்கானி.



““ஆமாங்க கங்காணி, கையில கொஞ்சம் பணம் சேர்த்திட்டா இன்னிக்கி எல்லாரும் பெரிய மனுசன்தான்... தோட்டத்து ஆளுங்க எல்லாம் இன்னிக்கி இவன் கிட்டத்தானே கள்ளுக்குடிக்கப் போறாங்க. அப்ப இவங்கிட்ட சல்லி சேராம வேற எங்க போகும்?””



““அதிலையும் பாரு மாயாண்டி இந்த பண்டாப்பய ஒரு நாளைக்கு நல்ல கள்ளு வைச்சிருக்கான்@ ஒரு நாளைக்கு மொட்டப் பச்சத்தண்ணியா ஊத்திறான்”” என்றார் கறுப்பண்ணன் கங்கானி.



ஆற்றிலே தண்ணீர் ஓடும் சலசலப்புக் கேட்டது. தோட்டத்து எல்லையைத் தாண்டிவிட்டதை இருவரும் ஊகித்துக் கொண்டனர். ஏற்றித்திலே ஏறிவந்ததால் இருவருக்கும் மூச்சு வாங்கியது. களைப்புத்தீர இருவரும் சிறிதுநேரம் அந்த இடத்தில் தரித்து நின்றனர். அவர்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும் போது தூரத்தே ஆங்காங்கே சிறிய வெளிச்சங்கள் நட்சத்திரங்களைப் போல மின்னின. எங்கோ தொலைவில் நாய் குரைக்கும் சத்தங் கேட்டுக் கொண்டிருந்தது.



““இந்தா பாருங்க கங்காணி, நம்ப தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததைப்பத்தி பயலுக பெரிசா பீத்திக்கிறானுக. எனக்கு என்னவோ இதெல்லாம் நல்லதா தெரியல்லே”” என்றார் மாயாண்டி.



““என்ன மாயாண்டி திடுதிப்புன்னு இப்புடிச் சொல்லுறே@ அரசாங்கம் எடுத்ததினால நமக்கு என்னா குறைஞ்சிடப் போவுது.””



““அண்ணைக்கு மந்திரி வந்தப்போ, இந்த நாட்டாளுக எல்லாம் தோட்டத்துக்குள்ள நொழைஞ்சி அவுங்களும் கூட்டத்தில பங்கு பத்தினாங்க, கொம்பனிக் காலமென்னா அப்படிச் செய்ய முடியமா?””



““நீ சொல்றதிலும் ஞாயம் இருக்குத்தான் மாயாண்டி@ ஆனாலும் அரசாங்கத்தில் நல்லது செய்யப் போறதா தானே மந்திரி சொன்னாரு.””



““மந்திரி சொன்ன மாதிரியே எல்லாம் நடந்திச்சின்னா நல்லது தான்... இவ்வளவு காலமும் தோட்டத்தில் நாமெல்லாம் ஒரு குடும்பம்போல ஒண்ணா இருந்துக்கிட்டிருந்தோம். வெளி ஆளுங்க ஊடையில் பூந்து யாரும் நம்ப வெசயத்தில் தலையிடல்.... இப்ப அப்படியில்ல கங்காணி, எல்லாமே மாறிப் போச்சு.””



எதிரே யாரோ சிலர் தீப்பந்தத்துடன் வந்துகொண்டிருந்தனர். நாட்டில் வாழும் யாரோ டவுணுக்குச் சென்றுவிட்டு இப்போதுதான் திரும்பிச் செல்கிறார்கள் என்பதை அறிந்த இருவரும், தமது பேச்சை நிறுத்திக் கொண்டனர்.



தீப்பந்தத்துடன் வந்தவர்கள் அவர்களைத் தாண்டிச் சென்றதும் மீண்டும் இருவரும் தோட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.



““மாயாண்டி..... ஒங்கிட்ட ஒரு முக்கியமான வெசயம் சொல்லணும்@ சொன்னா கோவிச்சுக்கிடுவியோன்னு பயமா இருக்கு...””



““அப்பிடி என்னாங்க கங்காணி வெசயம்... ஏங்கிட்ட சொல்றதுக்கு ஏன் பயப்படணும்?””



““தப்பா ஏதும் நெனைச்சுக்குடாத மாயாண்டி.... ஒம்மக இருக்கானே செந்தாமரை.... அவளைப்பத்தி தோட்டத்தில ஒரு மாதியா கதைச்சிக்கிறாங்க...””



கறுப்பண்ணன் கங்காணி இப்படிக் கூறியபோது மாயாண்டியின் நெஞ்சு பகீர் என்றது. செந்தாமரையைப் பற்றி கங்காணி தவறாக ஏதும் கூறிவிடக் கூடாது என அவரது உள்ளம் வேண்டியது. அந்தக் கடும் குளிரிலும் அவரது உடல் குப்பென்று வியர்த்துவிட்டது. ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதவாராய்த் தடுமாறினார்.



““என்ன கங்காணி சொல்றீங்க. எனக்கு ஒண்ணுமே வெளங்க மாட்டேங்குது. கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க.””



““இல்லை மாயாண்டி.... இந்த நாட்டியிலிருந்து நம்ப தோட்டத்துக்கு வேலைக்கு வாறானே பியசேனா...””



““என்னாங்க கங்காணி, தயங்கித் தயங்கி சொல்றீங்க. சொல்லுறதக் கொஞ்சம் வெரசா சொல்லுங்க”” என்றார் மாயாண்டி படபடப்புடன்,



““அதுதான் நம்ப பண்டா முதலாளியோட அண்ணன் மகன் இருக்கானே பியசேனா.... அவனும் ஓம் மகள் செந்தாமரையும் கூட்டா இருக்காங்கனு தோட்டத்தில எல்லோரும் பேசிக்கிறாங்க....””



மாயாண்டி தலை சுற்றுவதுபோல் இருந்தது. கறுப்பண்ணன் கங்காணி கூறியதை அவரால் நம்பவே முடியவில்லை. அவரது உடல் இலேசாக நடுங்கியது.



““இந்தா பாருங்க கங்காணி.... என் குடும்பத்த பத்தி இவ்வளவு காலமா யாரும் கேவலமாப் பேசல்ல. நீங்க சொல்லுற விஷயம் மட்டும் பொய்யா இருந்தா, அப்புறம் என்னா நடக்குமுனு தெரியாது”” மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது.



““நானென்ன ஒங்க கிட்ட பொய்யா சொல்லப் போறேன். நான் கேள்விப்பட்டதைத்தானே சொன்னேன்.”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி.



மாயாண்டி பதில் ஏதும் சொல்லாது விருட்டென நடக்கத் தொடங்கினார்.



““அப்படி என்னா வெசயம் நம்மவூட்ல நடந்துபோச்சு? ஏன் வந்ததும் வராததுமா ஒரே ஆட்டம் போடுறீங்க? குடிச்சுப்புட்டு வந்தா பேசாம தின்னுப்புட்டு படுங்க. ~சூர்ல| வந்து சும்மா உளறாதீங்க”” என அலட்சியமாகக் கூறினாள் மீனாச்சி.



““நான் ஒண்ணும் ஒளறல்லையடி... அந்தப் பியசேனா பயலோட இவளுக்கு என்னா கதை வேண்டிக்கெடக்கு. தோட்டமே சிரிப்பா சிரிக்குதடி”” எனப் பலமாகக் கத்திய மாயாண்டி, செந்தாமரையை முறைத்துப் பார்த்தார்.



திடீரெனத் தந்தை இப்படிக் கூறியதைக் கேட்ட செந்தாமரை திகைத்துப்போய், பயத்துடன் அவரை நோக்கினாள்.



மீனாச்சிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.



““என்னா சொல்லுறீங்க. சொல்லுறதைக் கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க””



““நான் என்னடி சொல்லவேண்டியிருக்கு.... ஓம் மகளையே கேளு. இவள் அந்த பியசேனா பயலோட சேர்ந்துகிட்டு ஆட்டம் போடுறாளா இல்லையான்னு!””



செந்தாமரை நடுங்கியவண்ணம் நின்றுகொண்டிருந்தாள்.



மாயாண்டி கூறியவை யாவும் மீனாச்சியின் றெஞ்சைக் கலக்கின.



அப்போது வீரய்யா ஸ்தோப்பின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.



அவனது முகத்தில் கலக்கம் குடிகொண்டிருந்தது.



மாயாண்டி அவளை முறைத்துப் பார்த்தார்.



““ஏன் அப்பா இப்புடி பெரிசா சத்தம் போடுறீங்க? நீங்க போடுற சத்தம் இந்த லயமே கேட்கும் போல இருக்கு””



““ஆமா ஆமா, இப்போதான் தொர ஞாயம் பேச வந்திருக்காரு.... நீ ஒழுங்கா இருந்தா ஏண்டா இப்புடியெல்லாம் வரப்போகுது?”” எனக் கோபத்துடன் கத்தினார் மாயாண்டி.



““அப்புடியில்லப்பா! இப்புடி நீங்க பெரிசா சத்தம் போட்டா, இந்த வெசயம் லயத்தில் உள்ள எல்லாருக்கும் தான் கேக்கும். நமக்குத்தானே வெக்கம்.... கொஞ்சம் மெதுவா பேசுங்கப்பா”” எனக் கெஞ்சும் குரலில் கூறினான் வீரய்யா.



வீரய்யா இதுவரை நேரமும் வெளியே நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான் என்பதை மாயாண்டி உணர்ந்து கொண்டார்.



““ஆமா, நான் சத்தம் போடுறதாலதான் மத்தவங்களுக்குத் தெரியப் போகுதா? இந்த வெசயந்தான் தோட்டமே தெரிஞ்சு கிடக்குதே”” என முணுமுணுத்தபடி அந்த இடத்தில் நிற்க விரும்பாதவராய் காம்பராவின் உள்ளே கிடந்த கட்டிலில் போய்ச் சரிந்தார் மாயாண்டி.



மீனாச்சி பெரிதாக விம்மத் தொடங்கினாள்.



““இங்கே பாரம்மா... இனிமே செந்தாமரைய வெளியே எங்கேயும் தனியே அனுப்பாதீங்க@ வேலைக்கு போறப்போ ஒங்ககூடவே கூட்டிப் போங்க. தனியா அனுப்புறதால தான் இதெல்லாம் வருது”” எனத் தேற்றும் குரலில் கூறினான் வீரய்யா.



அன்று இரவு அவர்களது வீட்டில் யாருமே உணவு அருந்தவில்லை.



செந்தாமரை வெகு நேரம்வரை தூக்கம் வராது படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.

+++++++++++++++++++++

அத்தியாயம் நான்கு



மாலை நேரம், கொழுந்து மடுவம் கலகலப்பாக இருந்தது. மூலையில் போடப்பட்டிருந்த மேசையின்மேல் “செக்றோல்” புத்தகத்தை விரிந்து வைத்துக்கொண்டு அன்று வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்குப் “பேர்” போட்டுக் கொண்டிருந்தார் கண்டக்டர். கங்காணிமார்கள் சிலர் அன்று வேலை செய்தவர்களின் பெயர்களை அவரிடங் கூறி கொண்டிருந்தனர். அன்றைய தபாலில் தமக்கு ஏதாவது கடிதங்கள் வந்திருக்கிறதா என அறிவதற்காகவும் சிலர் அங்கு வந்திருந்தனர்.



ஆபீஸிலிருந்து பெட்டிக்காரன் அப்போதுதான் மடுவத்தை வந்தடைந்தான். எல்லோரும் கூட்டமாகக் கண்டர்டரைக் சூழ்ந்து கொண்டனர். கண்டக்டர் செக்றோலை முடித்துவிட்டு, பெட்டியைத் திறந்து அன்றைய தபாலில் வந்திருந்த கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து முகவரிகளை வாசித்து உரியவர்களிடம் கொடுத்தார். பின்பு டயரியைப் புரட்டி துரையிடமிருந்து ஏதாவது நிருபங்கள் வந்திருக்கிறதா எனக் கவனித்தார்.



கொழுந்தெடுக்கும் பெண்களைக் கூட்டிக்கொண்டு கறுப்பண்ணன் கங்காணி அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து வீரய்யாவும் கொழுந்தெடுப்பவர்களுடன் மடுவத்தை வந்தடைந்தான். கணக்கப்பிள்ளை அவர்கள் கொண்டுவந்த கொழுந்துகளை நிறுக்கத் தொடங்கினார்.



கையிலிருந்த நிருபத்தை வாசித்துவிட்டு, மூக்குக் கண்ணாடியைக் கழற்றினார் கண்டக்டர்.



““என்னங்கய்யா “சேக்குலர்” ஏதோ வந்திருக்குப் போலயிருக்கே... தொரை என்னங்க எழுதியிருக்காரு” எனக் கேட்டுக்கொண்டே கண்டர்டரின் அருகில் சென்றார் மாரிமுத்துத் தலைவர்.



““நம்ப தோட்டத்துக்கு புதிசா “சுப்பவைசர்” வேலைக்கு ஆளுங்களை எடுக்கப் போறாங்களாம். அதுனால விரும்பினவங்களை மனுப் போடச் சொல்லி மாவட்டக் காரியாலத்திலிருந்து தொரைக்கு கடிதம் வந்திருக்கு.... அதைத் தொரை நமக்கு அனுப்பியிருக்காரு”” எனக் கூறிய கண்டக்டர் மீண்டும் மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டார்.



““அப்புடீங்களா, நம்ப தோட்டத்துக்கு வேலை பாக்க இனிமே ரொம்பப் பேரு வருவாங்க போலையிருக்கே”” என மகிழ்ச்சியுடன் கூறிவிட்டுத் தலையாட்டினார் தலைவர்.



அப்போது வீரய்யா, கண்டக்டரின் அருகே வந்தான்.



““ஐயா நம்ப தோட்டத்திலயும் படிச்ச பொடியங்கள் இருக்கிறாங்க.... அவுங்களும் சுப்பவைசர் சேலைக்கு “அப்பிளிக்கேசன்” போடலாமுங்களா?”” எனக் கேட்டுவிட்டு கண்டக்டரின் முகத்தைப் பார்த்தான்.



““ஆமா வீரய்யா, அரசாங்க வேலையின்னா படிச்சவங்க எல்லாருந்தான் “அப்ளிக்கேசன்” போடலாம்”” என்றார் கண்டக்டர் சிந்தனையுடன்.



““என்ன வீரய்யா, அப்படிக் கேக்கிறே... நம்ப தோட்டத்தில் உள்ள பொடியன்கள் மனுப் போட்டா அரசாங்கத்தில உள்ள கொடுப்பாங்களா?”” எனக் கேட்டுவிட்டு ஏளனமாகச் சிரித்தார்.



““தோட்டத்து ஆளுங்களுக்கு சலுகை செஞ்சு கொடுக்கணு மென்னுதானே அரசாங்கத்திலே சொல்லியிருக்கிறாங்க. அதுனால கட்டாயம் தோட்டத்தில இருக்கிற படிச்ச பொடியங்களுக்கு வேலை கொடுப்பாங்க... எல்லாரையும் அப்பிளிக்கேசன் போடச் சொல்லுங்க”” என உறுதியான குரலில் கூறிய கண்டக்டர் தனது வேலையில் கவனஞ் செலுத்த தொடங்கினார்.



கொழுந்து நிறுத்து முடிந்த பெண்கள் ஒவ்வொருவராக வந்து பேர் போடத் தொடங்கினார்.



““அப்புடீன்னா ரொம்ப நல்லதுங்கய்யா. நம்ப பொடியங்களே நம்ப தோட்டத்தில வேலை பாக்கிறதுன்னா, நாமெல்லாம் சந்தோஷப்பட வேண்டிய வெசயம் தானுங்க”” எனக் கூறிவிட்டுத் தனது காவிபடிந்த பற்களைக் காட்டிச் சிரித்தார் கறுப்பண்ணன் கங்காணி.



““ஆமா கறுப்பண்ணன், நம்ப பொடியங்களுக்குத்தான் நம்பவுட்டு கஷ்ட நஷ்டமெல்லாம் வெளங்கும். அவுங்க வேலை பாத்தா நமக்கு எப்படியும் கொஞ்சம் சலுகை கொடுப்பாங்க”” பக்கத்தில் நின்றிந்த வயதான தொழிலாளி ஒருவர் கூறினார்.



““ஆமா ஆமா, நம்ப தோட்டத்திலேயே ஏழெட்டு படிச்ச பொடியங்க இருக்காங்க. அவுங்க எல்லாம் இந்த வேலைக்கு மனுப்போடச் சொல்லி சொல்லணும்.”” என்றார் வேறொரு தொழிலாளி.



““நம்ப வீரய்யாதான் இந்த மாதிரி வேலைங்களுக்கு முன்னுக்கு நிண்டு செய்வானே.... இந்தா பாரு வீரய்யா! நீதான் படிச்ச பொடியங்ககிட்ட சொல்லி மனுப் போடச் செய்யணும் ““ என வீரய்யாவின் பக்கம் திரும்பிக் கூறினார் கறுப்பண்ணன் கங்காணி.



வீரய்யா புன்னகையுடன் தலையாட்டினான்.



அங்கு குடியிருந்த ஒரு சிலரது உள்ளங்களில் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தோட்டத்தில் ஏதாவது சிறிய உத்தியோகமாவது கிடைக்காதா என்ற ஆவல் இப்போது தோன்றியிருந்தது. சிலர் தங்களைச் சேர்ந்த, படித்த இளைஞர்களை ஒரு தடவை எண்ணிப் பார்த்தார்கள். அவ்விளைஞர்களுக்குத் தோட்டத்திலே உத்தியோகம் கிடைப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பம் தோன்றியிருப்பதை நினைத்தபோது அவர்களது உள்ளத்தில் ஆர்வம் பொங்கியது.



துரையின் கார் அப்போது மடுவத்திற்கு முன்னால் வந்து நின்றது. இதுவரை நேரமும் இரைச்சல் நிறைந்திருந்த அந்த இடத்தில் இப்போது அமைதி நிலவியது. துரை காரிலிருந்து இறங்கி மடுவத்துள் நுழைந்தார்.



““குட் ஈவினிங் சேர்”” கண்டக்டர், துரைக்கு வந்தனம் தெரிவித்தார்.



““குட் ஈவினிங் மிஸ்டர் இராமசாமி”” என பதில் வந்தனம் கூறிய துரை அங்கிருந்த கதிரையில் போய் அமர்ந்தார்.



தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் துரைக்கு சலாம் வைத்து வந்தனம் செய்தனர்.



துரை மேசையில் விரித்திருந்த செக்றோலை ஒருதடவை புரட்டிப் பார்த்தார். பின்னர் கண்டக்டரைப் பார்த்து, ““உம்மிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். அதைப்பற்றிக் கூறுவதற்குத்தான் நான் இப்போது வந்தேன். ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இனிமேல் தோட்டத்தில் உத்தியோகம் பார்க்க முடியாதென எனக்கு அரசாங்கத்திலிருந்து அறிவித்தல் வந்திருக்கிறது. அதனால் நீங்களும் கட்டாயம் ஓய்வுபெற வேண்டித்தான் வரும். இதன் விபரம் உங்களுக்கு நான் உத்தியோக ரீதியாக நாளை கடிதமூலம் தெரிவிப்பேன்””



இதனை ஆங்கிலத்தில் கூறினார் துரை.



கண்டக்டருக்குப் பெரும் திகைப்பாக இருந்தது.



““என்ன துரை திடீரென இப்படிக் கூறுகிறீர்கள்? நான் எனது உத்தியோகத்திலிருந்து இப்போது ஓய்வு பெற்றால் எனது குடும்ப நிலை மிகவும் மோசமாகிவிடும்”” தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கூறினார் கண்டக்டர்.



““இது அரசாங்க உத்தரவு. என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. நீங்கள் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டி வரும்.””



““எனது மகன் படித்துவிட்டு வீட்டில் இருக்கிறான். அவனுக்கு வேலை கிடைக்கும் வரையாவது நான் வேலை செய்துதான் ஆகவேண்டும். இல்லாவிடில் எனது குடும்பம் கஷ்டத்திற்குள்ளாகி விடும்.””



““உமது நிலை நன்றாகப் புரிகிறது. கொம்பனிக் காலமாக இருந்தால் நானே உமது மகனுக்கு ஒரு வேலை கொடுத்து உதவியிருப்பேன். இப்போது என்னால் எதுவுமே செய்ய முடியாது”” எனக் கூறி கையை விரித்தார் துரை.



கண்டக்டரின் கண்கள் கலங்கிவிட்டன.



““இப்போதுதான் தோட்டத்திற்கு உத்தியோகத்தர்களை எடுக்கப் போகின்றார்களே. உமது மகனையும் மனுப்போடச் சொல்லுங்கள். அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கலாமல்லவா?”” எனக் கூறிய துரை காரை நோக்கிச் சென்றார். துரையின் கார் புறப்பட்டுச் சென்று வெகு நேரமாகிய பின்னரும் கண்டக்டர் சிலையாக நின்றார்.

++++++++++++++++++++

அத்தியாயம் ஐந்து



பியசேனா தனது “கொந்தரப்பு” மலையில் புல்வெட்டிக் கொண்டிருந்தான். வழக்கமாகப் பத்தாந் திகதிக்கு முன்பே கொந்தரப்பை முடித்துக் கணக்கப்பி;ளையிடம் பாரம் கொடுத்துவிடும் அவனுக்கு அம்முறை ஏனோ துரிதமாக வேலை செய்ய முடியவில்லை. பதினைந்தாம் திகதியாகிய போதிலும் அரைவாசி மலைகூட புல்வெட்டி முடிந்திருக்கவில்லை. அவனது உடலும் உள்ளமும் மிகவும் சேர்ந்து போய் இருந்தன. செந்தாமரையின் நினைவுகள் அடிக்கடி வந்து அவனை அலைக்கழித்த வண்ணம் இருந்தன. கிழமையில் எப்படியும் இரண்டு மூன்று தடவையாவது அவனைத் தேடி வரும் செந்தாமரை கடந்த சில வாரங்களாக அவனிடம் வராதது அவனுக்குப் பெரிதும் வேதனையைக் கொடுத்தது.



அவனை எப்படியாவது தனியாகச் சந்தித்துவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவன் பல தடவை முயற்சித்த போதும் அவனால் அது முடியவில்லை. அவள் வேலைக்குப் போகும்போதும் திரும்பி வரும்போதும் அவளது தாய் மீனாச்சி அவளுடன் கூடவே செல்வாள். அதைப் பார்த்துவிட்டு அவன் ஏக்கத்துடன் வீட்டுக்குத் திரும்புவான்.



வெயில் சுரீரென முதுகில் உறைத்தது. தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து வியர்வையைத் துடைத்துவிட்டு அவன் சற்று ஓய்வெடுத்தான். காலையிலிருந்து இதுவரை நேரமும் செய்துமுடித்த வேலை அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. எப்படியும் இன்னும் சில நாட்களில் கொந்தரப்பை முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் புல்வெட்டத் தொடங்கினான்.



அப்போது அவனது முதுகில் கல்லொன்று பட்டென்று வந்து விழுந்தது. அவன் நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான். எவருமே அங்கு தென்படவில்லை.



மீண்டும் அவன் குனிந்து புல்வெட்டத் தொடங்கினான்.



திரும்பவும் ஒரு சிறிய கல் அவனது முதுகில் பட்டுத் தெறித்தது. திடீரென அவன் நிமிர்ந்தான்.



ஒற்றையடிப் பாதையின் வளைவில் செந்தாமரை குறும்பாகச் சிரித்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள்.



கையில் இருந்த சுரண்டியை வீசிவிட்டு ஒடிச்சென்று அவளை அப்படியே கட்டியணைக்க வேண்டும்போல் அவனது உள்ளம் துருதுருத்தது. ஒரு கணம் தன்னை மறந்து நின்ற பியசேனா தன்னைச் சுதாகரித்துக்கொண்டு முகத்தில் பொய்க் கோபத்தை வரவழைத்த வண்ணம் மீண்டும் குனிந்து பல்வெட்டத் தொடங்கினான்.



செந்தாமரை அவன் அருகில் துள்ளிக் குதித்து ஓடிவந்தாள். வெடுக்கென அவனது கையிலிருந்த சுரண்டியைப் பறித்துத் தூர வீசிவிட்டு அவனது கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டாள்.



““என்னங்க என்மேல் கோபமா?”” அவளது கண்கள் அவனிடம் கேட்டன.



பொங்கிவந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதவனாய் பியசேனா அவளைத் தன் இரு கைகளாலும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.



அவள் அவனது கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்தபடி ““ஐயையோ..... என்னை விட்டுங்க..... மேல் ரோட்டுல யாரும் வந்தாங்கன்னா கண்டுக்கிடுவாங்க”” எனக் கெஞ்சினாள்.



““இன்னிக்கு நாங் ஒன்னை விடமாட்டேன்”” எனக் கூறியபடி அவளை அருகிலிருந்த நெற்றிக் கானுக்கு இழுத்துச் சென்றான் பியசேனா.



அது ஒரு மறைவான இடம். யாருமே அவர்கள் அங்கிருப்பதைப் பார்த்துவிட முடியாது.



““ஏன் செந்தாமரை இவ்வளவு நாளா என்னைச் சந்திக்க வரேல்ல?”” அவனது முகம் அவளது வதனத்தை நோக்கிக் குனிந்தது.



““நம்ம வெசயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சு போச்சுங்க. யாரோ எங்கப்பாக்கிட்டே சொல்லி வீட்டுல பெரிய கரச்சலாப் போச்சு. நா எங்கேயும் தனியா வெளி போகக்கூடாதுன்னு கண்டிப்பு பண்ணிப்புட்டாங்க.”” செந்தாமரை கவலையுடன் கூறினாள்.



““அப்போ இன்னிக்கு மட்டும் எப்படி வந்தே?””



““வேலக்காட்டுல, எனக்கு வயித்துவலின்னு கங்காணிகிட்ட பொய் சொல்லிப்புட்டு வந்திட்டேன்”” எனக் கூறியபடி செந்தாமரை அவனது நெஞ்சிலே விரல்களால் ஏதோ கோலம் கீறினாள்.



““சரியான தந்திரசாலிதான்”” எனக் கூறிய பியசேனா அவளது கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினான்.



““நான் சுறுக்கா போகவேணுங்க””



““என்ன செந்தாமரை வந்தவொடனேயே போகணுமுனு சொல்லுறியே. நா ஒன்னை இவ்வளவு நாளா காணாம எவ்வளவு துடிச்சுப் போனேன் தெரியுமா?””



““நா மட்டும் என்னா சந்தோஷமாவா இருந்தேன்... எந்த நேரமும் ஒங்க நெனைவுதான். சாப்பிடக்கூட மனசு வரல்ல. இரவுக்குப் படுத்தேன்னா தூக்கங்கூட வராது”” எனக் கூறிய செந்தாமரை அவனது நெஞ்சுக்குள் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.



““இனிமே ஒன்னை ஒருநாள் கூட பார்க்காம என்னால இருக்க முடியாது செந்தாமரை.”” அவனது குரல் கம்மியது.



““எனக்கு என்னமோ பயமா இருக்குங்க. இனிமே நாம இப்புடி தனியாச் சந்திக்க முடியாது. எப்புடியாச்சும் ஒங்ககூட என்னைக் கூமடடிக்கிட்டு போயிடுங்க.”” செந்தாமரையின் கண்கள் கலங்கின.



““இந்தா பாரு செந்தாமரை.... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க@ நான் எப்புடியும் ஒன்னை நிச்சயமா கூட்டிக்கிட்மு போவேன்.



““நா ஒங்ககூட வந்தா என்னைய ஒங்க வூட்டுல ஏத்துக்கிடு வாங்களா?”” ஏக்கத்துடன் அவனது கண்களை உற்று நோக்கியபடி கேட்டாள் செந்தாமரை.



““ஏன் செந்தாமரை இதுக்குப் போய் கவலைப்படுற. எங்க வூட்டுல அம்மா மட்டும்தான் இருக்காங்க. ஒன்னைப் பாத்தாங்கண்ணா அவுங்க ஒண்ணுமே சொல்லமாட்டாங்க| எனக்கூறிய பியசேனா அவளது வதனத்தைத் தன் இரு கைகளாலும் வருடினான்.



அவள் அவனது கைகளை மெதுவாக விலக்கியபடி, ““நா வந்து ரொம்ப நேரமாச்சுங்க@ ஆளுங்க பகல் சாப்பாட்டுக்கு வந்திடுவாங்க. எங்கம்மா வர்றதுக்குள்ள நான் வூட்டுக்கு போயிடணும்”” எனக்கூறியபடி எழுந்திருந்தாள்.



““இனி எப்ப செந்தாமர என்னைச் சந்திக்க வருவே?”” அவன் ஆவலுடன் அவளது கண்களை உற்று நோக்கியபடி கேட்டான்.



““வசதி கிடைக்கிற நேரமெல்லாம் ஒங்ககிட்ட நான் கட்டாயம் வருவேன்”” எனக்கூறிய செந்தாமரை அவனைப் பிரிந்துசெல்ல மனமின்றி மெதுவாக நடந்தாள்.



அவளது உருவம் மறையும்வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்ற பியசேனா மீண்டும் தனது வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.



இப்போது அவனது உள்ளம் ஊரளவு நிறைவுபெற்றிருந்தது.

+++++++++++++++++++++++++

அத்தியாயம் ஆறு



மாதங்கள் சில உருண்டோடின. மழைக்காலம் ஆரம்பமாகி இருந்தது.



தோட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றதினால் தங்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகளை எதிர்பார்த்த வண்ணம் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் நாட்களைக் கழித்தனர், படித்த இளைஞர்கள் தங்பளுக்குக் கிடைக்கப்போகும் வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.



கண்டக்டர் ராமசாமி கட்டாய ஓய்வு பெற்றுத் தோட்டத்தை விட்டுப் போய்விட்டார். மேலும் சில மாதங்கள் தன்னைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு அனுமதிக்கும்படி அவர் கோரிய விண்ணப்பம் அரசாங்கத்தால் நிராகரிக்கப்ப்பட்டுவிட்டது.



அவரது இடத்துக்குப் புதிதாக வேலைக்கு வந்த கண்டக்டர் இப்போது தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.



கடந்த இரண்டு நாட்களாகக் காலநிலை மிக மோசமாகி இருந்தது. இடையிடையே பலத்த காற்றுடன் மின்னலும் இடியுமாக மழை பெய்துகொண்டிருந்தது.



புதிய கண்டக்டர் பங்களாவில் இருந்து மடுவத்தை நோக்கிப் படிக்கட்டில் இறங்கி வந்துகொண்டிருந்தார். கையிலிருந்த குடையைப் பிடுங்கி எறிந்துவிடுவதுபோல் காற்றுப் பலமாக வீசியது. மழைச்சாரல் முகத்தில் தெறிக்காமல் இருப்பதற்காக அவர் குடையை முன்பக்கம் சரித்துப் பிடித்தபடி மடுவத்தை நெருங்கினார்.



எதிரே சற்றுத் தூரத்தில் வீரய்யாவும் கொழுந்தெடுக்கும் பெண்களும் வருவது, மலைகளைத் தழுவியிருக்கும் முகிற் கூட்டங்களினூடே மங்கலாத் தெரிந்தது.



எதிரே சற்றுத் தூரத்தில் வீரய்யாவும் கொழுந்தெடுக்கும் பெண்களும் வருவது, மலைகளைத் தழுவியிருக்கும் முகிற் கூட்டங்களினூடே மங்கலாகத் தெரிந்தது.



கண்டக்டர் தனது கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தார். அவரது புருவங்கள் தெளிந்தன. மடுவத்தின் உள்ளே சென்று குடையைச் சுருக்கி ஒரு மூலையில் வைத்துவிட்டு, தான் அணிந்திருந்த மழைக் கோட்டைக் கழற்றினார்.



வீரய்யாவும் பெண்களும் மடுவத்தின் உள்ளே நுழைந்தனர்.



““என்ன மனுசன், கொழுந்து நெறுக்க மிச்சங் நேரமிருக்குத் தானே. நீ ஏன் இப்பவே ஆளுங்களைக் கூட்டிக்கிட்டு வந்தது?”” கோபத்துடன் வீரய்யாவைப் பார்த்து வினவினார் கண்டக்டர்.



““நீங்கள் பாருங்கையா. இப்புடி ஊத்துற மழையில நின்னு கொழுந்தெடுக்க முடியுங்களா? அதுதானுங்க....”” வீரய்யா கண்டக்டருக்கு விளக்கம் கூற முயன்றான்.



““என்ன மனுசன் நீ பேசறது@ ~றவுண்| பிந்திப்போச்சு சொல்லி நான் ஒனக்கு பெரட்டுல வச்சு சொன்னதுதானே. ஒன்னை யாரு வெள்ளன வரச் சொன்னது?””



““இந்த ஆளுங்களைப் பாருங்க. நனைஞ்சி வெரச்சுப் போயிட்டாங்க@ அவுங்களால மழையில நின்னு கொழுந்தெடுக்க முடியல்லீங்க. அதுதாங்க வெள்ளனா கூட்டிக்கிட்டு வந்திட்டேனுங்க”” வீரய்யா பணிவான குரலில் கூறினான்.



““மிச்சங் பேசவேணாங் மனுசன், நான் சொல்லுறது ஒண்ணு. நீ செய்யிறது ஒண்ணு. மத்தக் கங்காணியெல்லாம் பாரு.... இப்பவும் மலையில நின்னு வேலை செய்யுறது. நீ மட்டுத்தான் குழப்பங் பண்ணுறது.”” கண்டக்டரின் வார்த்தைகள் கோபத்தினால் தடுமாறின.



““அந்த மலை வழுக்கப்பாறைத் துண்டுங்க. போன வருஷமும் இப்புடித்தாங்க சரியான மழையுங்க. ஒரு பொம்புளை ஆளு, அந்த மலையில விழுந்து ரொம்ப ஆபத்தாப் போச்சுங்க.””



அங்கு நின்ற பெண்கள் குளிரில் நடுங்கியவாறு, வீரய்யாவைக் கண்டக்டர் கோபித்துப் பேசுவதை பீதியுடன் கவனித்துக் கொண்டிருந்தனர். மூலையில் நின்றிருந்த ராக்கு தனது தலையில் இருந்த கொங்காணியைக் கையில் எடுத்து பிழிந்துகொண்டே.



““என்னாப்பா, இந்த ஐயா கொஞ்சங்கூட எரக்கமில்லாதவரு போலத் தெரியுது. இப்புடி ஊத்திற மழையில யாருதான் கொழுந்தெடுப்பர்”” என முணுமுணுத்தாள்.



பக்கத்தில் நின்ற பெண்களும் ராக்கு கூறியதை ஆமோதிப்பது போல ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.



““என்னா அங்க சத்தங் போடுறது? எல்லாங் வாயை மூடிக்கிட்டு நில்லு. இன்னிக்கு அரைப்பேருதான் எல்லாத்துக்கும் போடுறது”” எனப் பலமாகக் கத்தினார் கண்டக்டர்.



எல்லோரும் திகைத்துப்போய் நின்றனர். அரைமணி நேரம் முந்தி வந்ததற்காக அரை நாட் சம்பளத்தையே வெட்டிவிடப் போவதாகக் கண்டக்டர் கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.



““ஐயா, அப்புடியெல்லாம் செஞ்சுப்புடாதீங்க. நாளைக்கு வேணுமுன்னா கொஞ்சங் கூடநேரம் மலையில நின்னு, பிந்தின ~றவுணை| எடுத்துத் தர்ரோமுங்க| என்றான் வீரய்யா



““நீ மிச்சங் பேச வேணாம் மனுசன். நாளைக்கு மழை பெஞ்சா நீ இப்புடித்தான் நாளைக்கும் ஆளுங்களை கூட்டிக்கிட்டு வாறது.... நீ நம்மளை என்னா நெனைச்சது?”” கோபத்துடன் தனது சப்பாத்துக் காலை நிலத்திலே உதைத்தார் கண்டக்டர்.



வீரய்யா மௌனமாக நின்றான்.



““இந்த பாரு கங்காணி, ஒனக்கு இன்னிக்கு பத்து ரூபா தெண்டம்@ இனிமே இப்புடி ஏதும் செஞ்சா ஒனக்கு கங்காணி வேலை நிப்பாட்டுறது. இதைப் பத்தி நான் தொரைக்கும் சொல்லுறது.””



அப்போது கொழுந்துக் கணக்கப்பிள்ளை செக்றோல் புத்தகத்துடன் மடுவத்திற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் கொழுந்தை நிறுக்கச் சொல்லிவிட்டு, செக்றோலைப் புரட்டினார் கண்டக்டர்.



கண்டக்டர் ஏதோ கோபமாக இருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்ட கணக்கப்பிள்ளை, மௌனமாகக் கொழுந்தை நிறுக்கத் தொடங்கினார்.



வேறு மலையில் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த பெண்களும் கறுப்பண்ணன் கங்காணியும் சிறிது நேரத்தின் பின்னர் மடுவத்தை வந்தடைந்தனர்.



கணக்கப்பிள்ளை தொடர்ந்தும் கொழுந்தை நிறுத்துக் கொண்டிருந்தார். கொழுந்து நிறுத்து முடிந்த பெண்கள் கண்டக்டரின் அருகே சென்று பேர் போட்டுவிட்டுச் சென்றனர்.



பேர் போட்டு முடிந்ததும் சிகரட் ஒன்றை எடுத்து வாயில் பொருத்திவிட்டுத் தனது காற்சட்டைப் பொக்கட்டுக்குள் கையைவிட்டுத் துளாவினார் கண்டக்டர்.



““என்னாங்கையா, நெருப்பெட்டியேதும் பாக்குறீங்களா? ஏங்கிட்ட இருக்குங்க”” எனக் குழைந்தபடி தன்னிடம் இருந்த தீப்பெட்டியை எடுத்து மரியாதையுடன் கொடுத்தார் கறுப்பண்ணன் கங்காணி.



சிகரெட்டைப் பற்றவைத்து, ஒரு முறை புகையை ஊதித் தள்ளிய கண்டக்டர், கறுப்பண்ணன் பக்கம் திரும்பி, ““கங்காணி, ஒங்கமலை இன்னிக்கு கொழுந்தெடுத்து முடிச்சதா?”” எனக் கேட்டார்



““ஆமாங்க, ஐயா சொன்னமாதிரியே அந்த மலையை இன்னையோட முடிச்சிட்டேனுங்க. றவுண் பிந்திப்போயிருக்குத் தானுங்களே... அதுனால ஆளுங்களை கொஞ்ச நேரம் கூடவே மலையில நிப்பாட்டி அந்த ~றவுணை| முடிச்சுட்டேனுங்க”” எனக் கூறிய கறுப்பண்ணன் குழைந்தபடி சிரித்தார்.



உண்மையில் அவர் கூறியதுபோல் அந்த மலை வேலை முடிந்திருக்கவில்லை. ஆனாலும் கண்டக்டரிடம் பொய்யைக் கூறியாவது அவரின் நன்மதிப்பைப் பெற்றுவிட வேண்டும். என்பதிலேயே கருத்தாக இருந்தார் கறுப்பண்ணன் கங்காணி.



““பின்னர் கணக்கப்பிள்ளையை அழைத்து, ““நீங்கள் இன்றைய கொழுந்துக் கணக்குகளை முடித்துக் கொண்டு எனது பங்களாவுக்கு வாருங்கள். தோட்டத்து விடயமாக உங்களிடம் கதைக்க வேண்டும்.”” என ஆங்கிலத்தில் கூறிவிட்டு, மேசையில் இருந்த செக்றோலைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.



““ஐயா, செக்றோலை நான் கொண்டு வந்து தர்நேங்க.... எங்க மாதிரி ஆளுங்க இருக்கிறப்போ, ஐயா புத்தகத்தைத் துக்கலாமுங்களா?”” எனக் கூறிய கறுப்பண்ணன் கங்காணி, செக்றோலைக் கையில் வாங்கிக் கொண்டார்.



வெளியே இப்போது மழை ஓய்ந்திருந்தது. முதலில் சரித்து வைக்கப்பட்டிருந்த குடையை மறுகையில் எடித்துக் கொண்டு, கண்டக்டரைப் பின் தொடர்ந்தார் கருப்பண்ணன் கங்காணி.



புதிய கண்டக்டரின் பின்னால் அவரது பங்களா படிக்கட்டுகளில், ஏறுவது கறுப்பண்ணன் கங்காணியின் உள்ளத்திலே மகிழ்ச்சியைக் கொடுத்தது. எப்படியாவது கண்டக்டரின் தயவைப் பெற்றுவிட வேண்டும் என்பதிலேயே இப்போது கறுப்பண்ணன் கங்காணியின் சிந்தனை முழுவதும் லயித்திருந்தது.



இதுவரை நேரமும் குழம்பிய மனதுடன் நின்று கொண்டிருந்த வீரய்யா, இப்போது ஏதோ முடிவுக்கு வந்தவனாக மாதிமுத்துத் தலைவரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

++++++++++++++++++++=

அத்தியாயம் ஏழு



கண்டக்டரின் ஆபீஸ் அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. செக்றோல் செய்வதில் மூழ்கியிருந்தார் கண்டக்டர். அன்று வேலை செய்த ஆட்களின் தொகைக்கும் முடிந்திருந்த வேலைக்கும் சரிப்பட்டு வராததால் எப்படியும் அதனைச் சரிக்கட்டி விடவேண்டும என்ற எண்ணத்துடன் அவர் மூளையைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தார்.



முன் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.



சமையல் அறையில் வேலையில் ஈடுபட்டிருந்த வேலைக்காரப் பையன், கதவின் அருகே சென்று திரையை நீக்கி, கண்ணாடியின் ஊடாக வெளியே பார்த்தான். இருட்டில் யாரோ நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.



““ஆங் மல்லி, அபே கொந்தஸ்தர் மாத்தயா இன்னவாத?”” வெளியே நின்றவர் பையன் பார்ப்பதைக் கவனித்து விட்டு உரத்த குரலில் கேட்டார்.



பெடியன் அவசர அவசரமாக தாழ்ப்பாளை நீக்கி, கதவைத் திறந்துகொண்டே, ““ஐயா செக்ரோல் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.... நீங்க யாருங்க?”” என வினவினான்.



““நாங் பக்கத்து நாட்டுல இருந்து வந்திருக்கு. ஐயாவைப் பாக்கவேணுங்.””



வந்தவரை ஏற இறங்கக் கவனித்த பெடியன், அவரை உள்ளே வந்து கதிரையில் உட்காரச் சொல்லலாமா, கூடாதா என ஒருகணம் யோசித்தான். பின்பு ஏதோ முடிவுக்கு வந்தவனாக ““கொஞ்சம் நில்லுங்க@ நான் ஐயாகிட்ட சொல்லுகிறேன்”” எனக் கூறிக்கொண்டே ஆபீஸ் அறைப்பக்கம் சென்றான்.



சிறிது நேரங்கழித்து கண்டக்டர் முன் வாசலுக்கு வந்து வெளியே எட்டிப் பார்த்தார்.



““ஆயுபோங் மாத்தியா”” எனக் கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு, ““மங் கமே இந்தலா ஆவா@ மாத்தியா அம்புவேண்ட தமாய் ஆவே”” எனக் கூறியபடி குழைந்து கொண்டு சிரித்தார் வெளியே நின்றவர்.



பதிலுக்கு வணக்கம் தெரிவித்த கண்டக்டர், ““உள்ளே வாருங்கள்”” எனச் சிங்களத்தில் கூறி அவரை நடுக் காம்பராவுக்கு அழைத்துச் சென்றார்.



இருவரும் தமது மொழியில் உரையாடத் தொடங்கினர்.



““எனது பெயர் டிங்கிரிபண்டா@ பண்டா முதலாளி என்றால் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் இந்தத் தோட்டத்துக்குப் புதிதாக வேலைக்கு வந்திருப்பதாக அறிந்தேன். உங்களைச் சந்தித்து உரையாடலாம் என்ற எண்ணத்துடன் வந்தேன்”” எனக் கூறிக்கொண்டே சோபாவில் அமர்ந்தார் வந்தவர்.



““ஹோ அப்படியா! மிகவும் சந்தோஷம். உங்கள் கிராமத்தில் இருந்து கூட பலர் இங்கே வேலைக்கு வருகிறார்கள்”” எனக் கூறியபடி கண்டக்டரும் எதிரே அமர்ந்துக் கொண்டார்.



““ஆமாம், எனது அண்ணன் மகன் ஒருவன் கூட இங்கே வேலைக்கு வருகிறான். அவனது பெயர் பியசேனா. அவனை உங்களுக்குத் தெரியுமென நினைக்கின்றேன்.””



கண்டக்டர் சிந்தனையுடன், ““அவனை எனக்கு நன்றாகத் தெரியாது. நான் தோட்டத்துக்கு வந்து சிறிது காலந்தானே ஆகின்றது. ஆனாலும் பியசேனாவின் பெயரில் கொந்தரப்பு இருக்கிறதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது”” எனக் கூறிய கண்டக்டர், தொடர்ந்து பலமாக இரண்டு தடவை இருமினார்.



““உங்களுக்கு உடம்பு சரியில்லைப்போல் தெரிகிறது. அதிகமாக இருமுகிறீர்கள்”” என்றார் பண்டா முதலாளி.



““நேற்றிலிருந்து சிறிது சுகமில்லை”” எனக் கூறிய கண்டக்டர், தொடர்ந்தும் பலமாக இருமினார்.



““நீங்கள் இந்தப் பகுதிக்குப் புதிதுதானே. அதனாலேதான் சுவாத்திய நிலை உங்களுக்குப் பிடிக்கவ்ல்லைப் போலும் போகப் போக எல்லாம் சரியாகிவிடும். ““நேற்று நான் மந்திரியிடம் ஒரு விடயமாகச் சென்றிருந்தேன். அப்போது அவர் உங்களைப்பற்றி பெரிதும் விசாரித்தார்”” எனக் கூறிவிட்டு கண்டக்டரை உற்று நோக்கினார்.



““அப்படியா! மந்திரி முக்கியமான விஷயம் ஏதும் கூறினாரா?”” என ஆவலுடன் கேட்டார் கண்டக்டர்.



““எமது கிராமத்துக்கு மந்திரியை அழைத்து ஒரு கூட்டம் வைக்க ஒழுங்கு செய்துள்ளோம். அது விஷயமாகத் தான் நான் அவரிடம் சென்றிருந்தேன். அப்போதுதான் அவர் உங்களைப் பற்றிக் கூறினார்.””



““ஆமாம், மந்திரி எனக்கு மிகவும் வேண்டியவர். நான் அவரது ஊரைச் சேர்ந்தவன்”” என்றார் கண்டக்டர்.



““கடந்த தேர்தலின் போது கூட அவருக்காக நீங்கள் கடுமையாக உழைத்தீர்களென மந்திரி என்னிடம் கூறினார். எமது கிராமத்து மக்களும் மந்திரியின் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்டவர்கள்தான்”” என்றார் பண்டா முதலாளி சிரித்த வண்ணம்.



““அப்படியா! ரொம்பச் சந்தோஷம்”” எனக் கூறிய கண்டக்டர், சமையலறைப் பக்கம் திரும்பி ““இந்தா பொடியன், மொதலாளிக்கு தேத்தண்ணி கொண்டுவா”” என உத்தரவிட்டார்.



““மந்திரி எமது நாட்டுக்கு வரும்போது நீங்களும் கட்டாயம் அங்கு வரவேண்டும். இதை உங்களுக்குக் கூறுவதற்காகவே நான் இங்கு வந்தேன்.””



““ஓ... அது எனது கடமையல்லவா, மந்திரி வருவதாகக் கேள்விப்பட்டால் நானாகவே அங்கு வருவேன்”” எனக் கூறி விட்டுச் சிரித்தார் கண்டக்டர்.



குசினிப்புறக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. குசினியில் வேலை செய்து கொண்டிருந்த பொடியன் கதவைத் திறந்துவிட்டான்.



கறுப்பண்ணன் கங்காணி மெதுவாக உள்ளே நுழைத்தார். கையில் கொண்டு வந்த பார்சலை அம்மியின் மேல் வைத்துவிட்டு, நடுக்காம்பராவில் யார் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என ஆவலுடன் எட்டிப்பார்த்தார்.



கறுப்பண்ணன் எட்டிப் பார்ப்பதைக் கவனித்த பண்டா முதலாளி, சிரிப்புடன் அவரைப் பார்த்துத் தலையை ஆட்டினார்.



““அட நம்ப பண்டா மொதலாளியா? நான் யாரோன்னு நெனைச்சேன்”” எனத் தனது காவி படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தபடி பண்டா முதலாளியின் அருகே சென்றார் கறுப்பண்ணன்.



““ஆமாங் கங்காணி நம்ப கண்டக்கையாவை பாத்திட்டுப் போகலாமுனு நாங் வந்தது”” எனக் கூறிவிட்டு மீண்டும் சிரித்தார் பண்டா முதலாளி.



““நானும் ஐயாவுக்கு ஒரு சாமான் வாங்க டவுனுக்குப் போயிட்டு இப்பதாங்க வாரேன்| எனக் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த சுவரில் சாய்ந்தபடி நின்றார் கறுப்பண்ணன்.



வேலைக்காரப் பெடியன் கொண்டு வந்த தேநீரை கண்டக்டரும் பண்டா முதலாளியும் அருந்தத் தொடங்கினர்.



கறுப்பண்ணன் கங்காணி இப்போது கண்டக்டரின் பக்கம் திரும்பி, ““நம்ப பண்டா மொதலாளிய எனக்கு ரொம்ப நாளா தெரியுமுங்க. நாட்டுல இருக்காருங்க. இவரு கடைகூட வச்சு நடத்துறாருங்க”” என அசட்டுச் சிரிப்புடன் கூறினார்.



தேநீரை அருந்திவிட்டு கோப்பையைக் கீழே வைத்த பண்டா முதலாளி, ““நான் போகவேணும். பின்பு ஆறுதலாக உங்களைச் சந்திக்கிறேன்”” எனக் கூறிவிட்டு எழுந்திருந்தார்.



கண்டக்டரும் எழுந்து பண்டா முதலாளியுடன் வாசல் வரை சென்றார்.



வாசலில் சிறிது தரித்து நின்ற பண்டா முதலாளி, கண்டக்டரைப் பார்த்து, ““நீங்கள் லீவு இருக்கும்போது ஒருமுறை எங்களது வீட்டுக்கு வாருங்களேன்”” என வேண்டினார்.



அவர்கள் கதைப்பதைப் புரிந்துகொண்ட கருப்பண்ணன் கங்கானி, கண்டக்டரின் பக்கந் திரும்பி, ““நாட்டுக்கு ரொம்ப துரமில்லீங்க.... கிட்டத்தாங்க. பதினைஞ்சாம் நம்பர் மலையில இருக்கிற மாடசாமி கோயிலுகிட்ட இருந்து பாத்தா இவுங்க நாடே தெரியுமுங்க, அங்க இருந்துபோற குறுக்குப் பாதை வழிய நேராப் போனா அவுங்க நாட்டுக்கே போயிடலாமுங்க”” எனக் கூறினார்.



““ஆமாம், எனக்கும் உங்களது கிராமத்தைப் பார்ப்பதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது. கட்டாயம் வருகிறேன்”” என பண்டா முதலாளியிடம் கூறிவிட்டுச் சிரித்தார் கண்டக்டர்.



““ஐயா, என்னிக்கு போறீங்கன்னு ஏங்கிட்ட சொல்லிட்டீங்க”” எனக் கூறினார் கறுப்பண்ணன்.



வாசல்வரை சென்று பண்டா முதலாளியை அனுப்பிவிட்டுக் கண்டக்டர் திரும்பியபோது, கோட்டுக்குள் மறைத்து வைத்திருந்த சாராயப் போத்தலை மெதுவாக வெளியே எடுத்து மேசையின் மேல் வைத்தார் கங்காணி.

++++++++++++++++++

அத்தியாயம் எட்டு



தோட்டத்து ஆபீஸ் அன்று துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் போட இன்னும் நான்கு நாட்களே இருந்தன. அதனால் செக்றோல் செய்யும் கிளாக்கர் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிந்தார்.



பெரிய கிளாக்கர் அவரது அறையிலிருந்தே ஏதோ கணக்குப் புத்தகம் ஒன்றைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார். இரண்டாவது கிளாக்கரின் அறையிலிருந்து டைப் அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. டிவிசனிலிருந்துவந்த பெட்டிக்காரன் துரையின் அறையைத் துடைத்துத் துப்புரவாக்கிக் கொண்டிருந்தான்.



துரையின் கார் வேகமாக வந்து ஆபீஸ் வாசலில் நின்றது.



காரை வீட்டிறங்கிய துரை தனது அறைக்குச் சென்று ஆசனத்தில் அமர்ந்துகொண்டு மேசையிலிருந்து மணியை அழுத்தினார்.



துரையின் கார் வரும் சத்தத்தைக் கேட்டபோதே தான் சரிபார்த்துக் கொண்டிருந்த கணக்குப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டுத் தயார் நிலையிலிருந்த பெரிய கிளாக்கர் மணிச்சத்தம் கேட்டதும் துரையின் அறைக்குள் புகுந்தார்.



““குட் மோனிங் சார்......””



““எஸ், குட் மோனிங் மிஸ்டர் சுப்பிரமணியம் ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா?””



““ஆமாம் சார்! நமது எஸ்டேட் சப்பிளையர் வந்திருக்கிறார். சில பில்களுக்குரிய பணத்தைக் கொடுக்க வேண்டும்.””



““எப்படி.... இந்த ரசீதுகளைச் சரிபார்த்து விட்ஏரா?””



““ஆமாம், எல்லாமே சரியாக இருக்கின்றன. அதற்குரிய செக்கையும்”” எழுதி வைத்திருக்கின்றேன். நீங்கள் ஒப்பம் போட வேண்டியது மட்டும்தான்”” எனக் கூறிய பெரிய கிளாக்கர் ~செக்| புத்தகத்தை துரையின் முன்னால் வைத்தார்.



பெரிய கிளாக்கர் எல்லாவற்றையுமே சரியாகத்தான் செய்வார் என்ற நம்பிக்கை துரைக்கு இருந்தது. ஆதலால் செக்கில் கையொப்பத்தைப் போட்டுவிட்டு அதனை மீண்டும் பெரிய கிளாக்கரிடமே கொடுத்தார்.



““வேறு ஏதாவது வேலை இருக்கின்றதா? நான் அவசரமாக வெளியே போகவேண்டியிருக்கிறது”” துரை நாற்காலியின் பின்னால் சாய்ந்தபடி கேட்டார்.



““வேறொன்றும் இல்லை சார். இன்று தபாலில் வந்த கடிதங்கள் இருக்கின்றன. அவற்றை மட்டும்தான் நீங்கள் பார்வையிட வேண்டும்””



““அப்படியா!””



மேசையின் ஒரு மூலையில் இருந்த கடிதங்களை எடுத்து துரையின் முன்பாக வைத்தார் பெரிய கிளாக்கர்.



““சரி, உங்களுக்கு வேறு வேலை ஏதாவது இருந்தால் கவனியுங்கள். தேவைப்படும் போது நான் கூப்பிடுகிறேன்.”” எனக்கூறி துரை பெரிய கிளாக்கரை அனுப்பிவிட்டு ஒவ்வொரு தபாலாக எடுத்துப் பார்வையிடத் தொடங்கினார். சிறிது நேரத்தின் பின் துரையின் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் மணி மீண்டும் ஒலித்தது.



பொய கிளாக்கர் அவசரமாக எழுந்து சென்றார்.



““மிஸ்டர் சுப்பிரதணியம்.... உங்களுக்கு வேறு தோட்டத்திற்கு மாற்றம் வந்திருக்கிறது.”” எனக்கூறியபடி துரை தனது கையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை பெரிய கியாக்கரிடம் கொடுத்தார்.



துரை கூறியதைக் கேட்டுத் திகைப்படைந்த பெரிய கிளாக்கர் கடிதத்தைத் தடுமாற்றத்துடன் வாசித்தார்.



““றப்பர் தோட்டமொன்றுக்கு என்னை மாற்றம் செய்திருக்கிறார்கள். இந்த மாற்றத்தை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எவ்வித காரணமுமின்றி ஏன் என்னை றப்பர் தோட்டத்துக்கு மாற்ற வேண்டும்.”” எனப் பதட்டத்துடன் கூறினார் பெரிய கிளாக்கர்.



““மிஸ்டர் சுப்பிரமணியம், அவசரப்படாதீர்கள். உங்களுக்கு மாற்றம் வந்திருப்பது எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்னால்கூட இந்த மாற்றத்தைத் தடை செய்யமுடியாது. நீங்கள் மாற்றலாகிப் போவதைத் தவிர வேறு வழியே இல்லை””



““ஆரம்பத்திலிருந்தே தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த எனக்கு இப்போது றப்பர் தோட்டத்துக்கு மாற்றம் கொடுத்திருப்பது அநியாயமல்லவா?””



““அப்படியல்ல, அரசாங்க உத்தியோகம் என்றால் மாற்றம் கொடுக்கத்தான் செய்வார்கள். ஆனாலும், உங்களுக்கு இந்த மாற்றம் ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணத்தை நீங்கள் இன்னமும் உணரவில்லை என நான் நினைக்கிறேன்”” என்றார் துரை.



““என்ன சார் சொல்லுகிறீர்கள்@ எனக்கொன்றும் புரியவில்லையே”” எனக் குழப்பதுடன் கேட்டார் பெரிய கிளாக்கர்.



““இந்த மாற்றத்திற்கு அரசியல் பழிவாங்கல்தான் காரணம் என நான் நினைக்கின்றேன். இப்போதுள்ள சில அரசியல் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் முன்னர் தேர்தலின் போது பிரசாரம் செய்தீர்களல்லவா! மேடைகளில் கூட ஏறிப் பேசினீர்கள். அதனாலே தான் இப்போது நீங்கள் பழிவாங்கப்படுகின்றீர்கள்”” என்றார் துரை யோசனையுடன்.



““ஆமாம் இப்போதுதான் எனக்குப் புரிகின்றது. அரசியல் காரணங்களுக்காக என்னைப் பழிவாங்கி மட்டந்தட்டப் பார்க்கிறார்கள். நான் இதற்கு ஒருபோதும் அடிபணிந்து விடமாட்டேன். அந்த றப்பர்த் தோட்டத்திற்கு நான் ஏன் போகவேண்டும்? இந்தக் கிளாக்கர் வேலையொன்றும் எனக்குப் பெரிதில்லை. இந்த வேலையை ராஜினாமாச் செய்யக்கூட நான் தயாராக இருக்கின்றேன்.



““மிஸ்டர் சுப்பிரமணியம், உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்துவிடாதீர்கள். நீங்கள் உங்களது வேலையை ராஜினாமாச் செய்தால் உங்களது அரசியல் எதிரிகளுக்கு பெரும் மகிழ்ச்சிதான் ஏற்படும். பொறுமையாக இருந்து வேறு வழியில் மாற்றத்தைத் தடை செய்துதான் புத்திசாலித்தனமானது.””




““இந்த மாற்றம் ரத்தகுமென்பது எனக்கு நம்பிக்கையில்லை சார். ஏனென்றால எனது இடமாற்றத்துக்குக் காரணமாக இருப்பவர்கள் தமது ஆதரவாளர்களில் ஒருவரை இப்பதவிக்கு இதுவரையில் தெரிவு செய்து வைத்திருப்பார்கள்”” என்றார் பெரிய கிளாக்கர்.



சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த துரை. ““ஆமாம், நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரிதான். மனம்திறந்து உண்மையைச் சொல்லப்போனால் நான் கூட அந்த அரசியல்வாதிகள் சொல்வதற் கெல்லாம் தலையசைக்க வேண்டிய நிலையிலேதான் இருக்கின்றேன். அவர்களைத் திருப்திப்பண்ணி நடக்காவிட்டால் எனது வேலைக்குக் கூட ஆபத்து ஏற்படலாம்”” என பெரிய கிளாக்கரைப் பார்த்துத் தலையாட்டியபடி கூறினார்.



““ஆமாம் சார், நீங்கள் கூறுவதும் சரிதான். இன்றைய காலகட்டத்தில் அவர்கள் கையிலேதான் அதிகாரம் இருக்கின்றது. நாம் எதுவுமே செய்யமுடியாதுதான். ஆனாலும் எங்களுக்கும் ஒரு காலம் வரத்தான் போகிறது. அதுவரை நாம் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்.””



““இப்போது புதிதாக வந்திருக்கும் கண்டக்டர் கூட அவர்களது சிபார்சில் வந்தவர்தான். முன்பு வேறு ஒரு தோட்டத்தில் திருட்டுக் குற்றத்திற்காக வேலை இழந்தவருக்கு மீண்டும் இங்கே வேலை கிடைத்திருக்கிறது.



““ஆமாம் சார், நானும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டேன்”” என ஆமோதித்தார் கிளாக்கர்.



““இனிமேல் உமது இடத்திற்கு வேறொருவர் வந்தால், அவர் எப்படிப்பட்டவராக இருப்பாரோ தெரியவில்லை”” எனக் கவலையுடன் கூறினார் துரை.



““தோட்ட நிர்வாகத்தில் அரசியல் புகுந்தால் தோட்டம் ஒழுங்காக நடைபெறுமா என்பது சந்தேகந்தான்.””



““மிஸ்டர் சுப்பிரமணியம், இப்படி நான் உங்களுடன் கதைத்த விடயங்களை வேறு எவருக்குமே கூறிவிடாதீர்கள். எனக்கு நீர் எப்போதுமே உண்மையானவராகக் கடமை புரிந்து வருகிறீர். அதனாலேதான் நான் இந்த விடயங்களை உம்முடன் கதைத்தேன்.””



““நான் ஒருபோதும் உங்களைக் கஷ்டத்திலே மாட்டி விடமாட்டேன் சார்”” என்றார் பெரிய கிளாக்கர்.



““சரி மிஸ்டர் சுப்பிரமணியம், நீங்கள் மனதைத் தளரவிடாமல் உங்களது வேலையைக் கவனியுங்கள். மேலிடத்தில் உங்களுக்குத் தெரிந்த யாராவது இருந்தால் அவர் மூலமாக இந்த மாற்றத்தைத் தடைசெய்யப் பாருங்கள்”” எனக் கூறிய துரை எழுந்திருந்தார்.



““சரி சார், ஏதோ நடப்பது நடக்கட்டும், இந்த மாற்றத்தை ரத்துச் செய்ய முடியுமென நான் நினைக்கவில்லை”” எனக் கூறிய பெரிய கிளாக்கர் தடுமாற்றத்துடன் தனது அறையை நோக்கி நடந்தார்.

++++++++++++++++++++++++++

அத்தியாயம் ஒன்பது



அன்று லீவு நாள். கறுப்பண்ணன் கங்காணியை அழைத்துக் கொண்டு நாட்டிற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தார் கண்டக்டர்.



பாதையின் இரு மருங்கிலும் ஆள் உயரத்துக்குப் புல் பூண்டுகள் வளர்ந்திருந்தன. எங்கு பார்த்தாலும் பெருவிருட்சங்கள் நிறைந்த அந்தப் பிரதேசம் ஒரு காடாகக் காட்சியளித்தது.



விலங்குகளின் ஓசைகளும், பறவைகளின் கீதங்களும் இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் இரசித்த வண்ணம் கங்காணி அப்பிரதேசத்தைப் பற்றி கண்டக்டருக்கு விளக்கம் கொடுத்த வண்ணம் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்.



““ஐயா, இந்த எடத்தில ரெம்ப சகதியா கெடக்குங்க, சப்பாத்துக்காலை கொஞ்சம் பாத்து வச்சு நடந்து போங்க!””



ஓங்கி வளர்ந்திருந்த செண்பக மரமொன்றில் வாலைக் கிளப்பிக் கொண்டு தாவி ஏறிய குரங்கொன்றைக் கவனித்த வண்ணம் நடந்து கொண்டிருந்த கண்டக்டரிடம் கங்காணி கூறினார்.



கண்டக்டர் கீழே குனிந்து பார்த்தார்.



அந்த ஒற்றையடிப் பாதையின் குழிவான பகுதியில் ஐந்தாறு அடி தூரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த இடம் சேறும் சகதியுமாகக் காட்சியளித்தது.



““நாட்டு ஆளுங்க இந்த ரோட்டுலதான் நம்ம தோட்டத்துக்கு சேவைக்கு வராது@ அவுங்க இந்த பாதைய கொஞ்சம் வெட்டி சரிப்பண்ணி வச்சா மிச்சங் நல்லதுதானே”” எனக் கூறியபடி கண்டக்டர் தயங்கி நின்றார்.



““அங்க பாருங்க ஐயா, மேல புதிசா ஒரு பாதை வச்சிருக்காங்க, அப்புடியே சுத்திப் போங்க”” எனக் கூறிய கங்காணி தண்ணீர் தேங்கி நின்ற இடத்திலிருந்து சற்று மேற்புறமாக புதிதாக ஏற்பட்டிருந்த பாதையைக் காண்பித்தார்.



கண்டக்டர் தனது கையில் வைத்திருந்த கைத்தடியால் ஓங்கி வளர்ந்திருந்த பற்களை விலக்கிக் கொண்டு அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கினார்.



பாதையின் குறுக்காக கீரியொன்று பாய்ந்து சென்று மானாச் செடிக்குள் மறைந்தது.



““இந்தப் பாதை முந்தி ரொம்ப நல்லா இருந்திச்சுங்க. இப்போதாங்க காடுமண்டிப் போச்சி, நானும் நம்ம மாயாண்டியும் அக்கடி இந்தப் பாதையாலதாங்க நாட்டுக்குப் போவோம்.””



““யாரு அந்த மாயாண்டி சொல்லி சொல்லுறது, வீரய்யா கங்காணியோட அப்பாதானே, நீங்க சொல்லுற ஆள்”” எனக் கேட்டார் கண்டக்டர்.



““ஆமாங்க அவரேதாங்க”” கறுப்பண்ணன் கங்காணி தனது காவிபடிந்த பற்கள் தெரியப் பலமாச் சிரித்தபடி கூறினார்.



““ஆங் அதுசரி கங்காணி. ஒங்ககிட்ட முக்கியமான சங்கதி ஒண்ணு கேக்கணும்.... அந்த வீரய்யா கங்காணிக்கு ஒரு தங்கச்சி இருக்குதானே?””



““அந்த மட்டக் கொழுந்து மலையில கொழுந்தெடுக்கு மில்லீங்களா ஒரு செவத்தப் புள்ளை, அதுதாங்க... பேரு செந்தாமரைங்க”” என்றார் கங்காணி.



““அதுபத்தி நாங் ஒரு வெசயங் கேள்விபட்டது.... அந்தப் புள்ளை எப்புடி கங்காணி?””



““அது ஒரு மாதிரிதாங்க.... தோட்டத்து குட்டிங்களிலேயே அவ ரொம்ப அழகுங்க. ஆனா கொஞ்சம் பல்லுக்காட்டுற புத்தியிருக்குங்க”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி.



““அந்தப் புள்ளை, இந்த நாட்டுல இருக்கிற யார் கூடவோ கூட்டாளி சொல்லி நாங் கேள்விப்பட்டது”” என்றார் கண்டக்டர்.



““அப்புடீங்களா வெசயம்..... நான் வேற என்னமோ நெனைச்சுப்புட் டேங்க”” என அசட்டுச் சிரிப்புடன் சிரித்த கறுப்பண்ணன் கங்காணி, ““நம்ம பண்டா முதலாளி இருக்காங்களே.... அவரோட அண்ணன் மகன் பியசேனா தாங்க அந்தப் புள்ளையோட கூட்டா இருக்கான். இந்த வெசயம் எனக்கு முந்தியே தெரியுமுங்க”” எனத் தொடர்ந்து கூறினார்.



““இந்த பாருங்க கங்காணி.... நாங் கேக்குறேனு வேற ஏதுங் நெனைக்க வாணாங்.... இந்தப் பியசேனா சிங்கள ஆள்தானே, அந்தப் புள்ளை தமிழ் ஆளு@ அந்தப் புள்ளைய அவன் கல்யாணம் கட்டுறதா?”” எனக் கேட்டார் கண்டக்டர்.



““அங்கதானுங்களே சங்கதியே இருக்கு. எப்படீங்கையா அவேன் அந்தக் குட்டியை கல்யாணம் கட்ட முடியும்.... ரெண்டு பக்கத்து வூட்டுக்காரங்களும் சும்மா வுட்டுப்புட்டுவாங்களா?”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி.



““அதிங்தான் கங்காணி நாங் யோசிச்சுப் பார்த்தது. அப்புடீனா... அந்தப் புள்ளைக்கு வயித்துல கொழந்தை ஏதுங் வந்தா ஒன்னுங் செய்ய முடியாதுதானே. அந்த பியசேனாதானே கல்யாணம் செய்யவேனுங்”” என யோசனையுடன் கேட்டார் கண்டக்டர்.



““இல்லீங்கையா.... அந்தக் குட்டிக்கு கொழந்தையே பெறந்தாலும் ரெண்டு பேரும் ஒன்னா சேரமுடியாதுங்க@ வெசயம் பெரிசாப் போனா வேற தோட்டத்துல ஒரு மக்குப் பயலாப் பாத்து அவளுக்கு கல்யாணம் செஞ்சி வச்சிடவேண்டியதுதான்.”” எனக் கூறிச் சிரித்தார் கங்காணி.



““அப்படிச் செய்ய முடியுமா கங்காணி?”” என ஆச்சரியத்துடன் கேட்டார் கண்டக்டர்.



““இப்புடி எத்தினையோ சங்கதிகளை நான் செஞ்சு வச்சிருக்கேங்க.... இந்தப் பியசேனா பயலோட மச்சினன் ஒருத்தன் இருக்காங்க... அவன் உப்புடித்தான் நம்ம தலைவரோட தங்கச்சி மகளை கெடுத்துப்புட்டாங்க. அப்புறம் அவளை நாங்க வேற தோட்டத்தில ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்திட்டோமுங்க”” எனக் கூறி கங்காணி பெருமையுடன் சிரித்தார்.



““ஏங் கங்காணி நம்ம தோட்டத்திலேயும் சில சிங்கள ஆளுங்க தமிழ் பொம்பளைங்களை கல்யாணஞ் செஞ்சிருக்குத்தானே. நீங்க என்ன இப்புடி சொல்லுறீங்க?”” எனக் கேட்டார் கண்டக்டர்.



““ஆமாங்க, சில ஆளுங்க கட்டிக்கிட்டு இருக்காங்க தாங்க.... ஆனா இந்தப் பியசேனாப் பயல நம்பவே முடியாதுங்க. நீங்க வேணுமுனா இருந்து பாருங்க.... அந்தப் பயல் அந்தக் குட்டியை கல்யாணஞ் செய்யவே மாட்டானுங்க”” கறுப்பண்ணன் கங்காணியின் குரலில் உறுதி தொனித்தது.



கண்டக்டர் சிந்தனையுடன் நடந்தார்.



இருவரும் இப்போது பண்டா முதலாளியின் வீட்டை அடைந்தனர்.



கடையில இருந்தவாறே இருவரும் வருவதைக் கண்ட மெனிக்கே முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டு, ““எண்ட மாத்தியா எண்ட”” என கண்டக்டரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். கண்டக்டர் அங்கேயிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.



கறுப்பண்ணன் சுவர் ஓரமாக சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார்.



““கோ முதலாளி? கொஹேத கீயே?”” மெனிக்கேயிடம் கேட்டார் கண்டக்டர்.



““தெங் தமாய் மாத்தியா எயா எலியட்ட கீயா”” எனக் கூறிக்கொண்டே வெற்றிலைத் தட்டைக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்துவிட்டு, ““மென்ன மாத்தியா புலத்”” என உபசரித்தாள் மெனிக்கே.



பக்கத்தில் நின்றிருந்த கறுப்பண்ணன் கங்காணி தட்டில் இருந்த பாக்கொன்றைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தார். பின்னர் தனது கோட்டுப் பைக்குள் கையைவிட்டு சாவிக்கோர்வையுடன் தொங்கிய மடக்கத்தியை எடுத்துப் பாக்கை நறுக்கத் தொடங்கினார்.



““மே புவாக் மொணவத, றரிம லொக்குவா”” என மெனிக்காவிடம் வினாவினார் கண்டக்டர்.



““ஓவ் மாத்தியா, ஏக்க றட்டபுவாக்கியலா கியனவா”” எனக் கூறிய மெனிக்கே வெளியே நின்ற சில கமுகு மரகளை ஜன்னலின் ஊடாகக் காண்பித்தாள். அந்த மரங்களில் குலக்குக் குலக்காக பாக்குகள் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.



அவர்கள் கதைப்பதைப் புரிந்து கொண்ட கறுப்பண்ணன், ““இதுங்களா, இதுதாங்க... குமரிப் பாக்குணு சொல்லுறது, ரொம்ப ருசியா இருக்குமுங்க”” எனக் கூறிவிட்டு. சீவிய பாக்கை வெற்றிலைத் தட்டில் வைத்தார்.



கண்டக்டர் வெற்றிலை போடுவதில்லை. ஆனாலும் மரியாதைக்காக ஒரு வாய்க்கு வெற்றிலை போட்டுக் கொண்டு வெற்றிலைத் தட்டை கறுப்பண்ணனிடம் கொடுத்தார்.



““முதலாளி எண்ட வெலாய யனவாத?”” எனக்கேட்டுக் கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்தார் கண்டக்டர்.



““நே மாத்தியா, தெங் எய்”” எனக் கூறிக் கொண்டே தீப்பெட்டியுடன் சிகரட் பெட்டியையும் எடுத்து வைத்தாள் மெனிக்கே.



கண்டக்டர் சிகரட்டைப் பற்ற வைத்த சிறிது நேரத்தில் பண்டா முதலாளி அங்கு வந்து சேர்ந்தார்.



““ஆங் எண்ட மாத்தியா எண்ட. தெந்த ஆவே?”” எனக் கேட்டுக் கொண்டே கையில் கொண்டு வந்த சில காகிதத்துண்டுகளை சுவர் ஓரமாக இருந்த அலுமாரியில் வைத்து விட்டு திரும்பினார் பண்டா முதலாளி.



““டிங்கக் வெலாவ இஸ்சரதமாய் ஆவா”” என்றார் கண்டக்டர் பண்டா முதலாளியைப் பார்த்து.



““ஹோ எத்தத... போமஹொந்தாய்... மட்ட உங்காக் வெட மாத்தியா. லபன மாசேங் அபே மந்திரிதுமா மேங் எனவாதே. ஏநிசா ஹரிம வெட”” எனக் கூறிவிட்டு கண்டக்டரின் எதிரே கிடந்த கதிரையில் அமர்ந்து கொண்டார் முதலாளி.

இருவரும் தங்களது மொழியில் உரையாடினர்.



““ஆம், கூட்டம் வைப்பதென்றால் அதிக வேலையிருக்கத்தான் செய்யும்.... எப்போது மந்திரி வருவதாகக் கூறியிருக்கின்றார்?””



““இன்னமும் அதுபற்றி தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும் மிக விரைவில் கடிதம் மூலமாக மந்திரியின் காரியதரிசி எமக்கு அறிவிப்பார்.””



““மந்திரி வாறங்களா? எதுக்காக வரவழைக்கிறீங்க மாத்தியா?”” என வாய்க்குள் அதக்கி வைத்திருந்த வெற்நிலைத் துப்பலை யன்னலின் ஊடாக வெளியே துப்பிவிட்டுக் கேட்டார் கறுப்பண்ணன் கங்காணி.



““நாட்டுல நம்ம ஆளுங்களுக்கு மிச்சங் கஷ்டந்தானே. ரொம்ப ஆளுங்களுக்கு சொந்த காணியில்லைதானே. கவுண்மெண்டில் காணி தாரது சொல்லி சொல்லியிருக்கு. அது பத்தி பேசத்தாங் மந்திரி வாறது”” என்றார் பண்டா முதலாளி.



மெனிக்கே கண்டக்டருக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்.



““இன்று உங்களுக்கு லீவு நாள்தானே. நம்மேடு இருந்து பகல் போசனத்தை அருந்திவிட்டு ஆறுதலாகச் செல்லலாம்”” என பண்டா முதலாளி அன்புடன் வேண்னார்.



““இல்லையில்லை, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது. நான் இன்னொரு நாளைக்கு ஆறுதலாக வருகின்றேன்”” என்றார் கண்டக்டர்.



““அப்படியானால் கொஞ்சம் இருங்கள்”” எனக் கூறிய பண்டா முதலாளி உள்ளே சென்று சாராயப் போத்தல் ஒன்றை கிளாசுடன் கொண்டு வந்து வைத்தார்.



““இதெல்லாம் எதற்கு, நான் சும்மா உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்றல்லவா வந்தேன்”” எனக் கூறியபோது கண்டக்டரின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.



““அன்றுதானே எங்களது வீட்டிற்கு முதன்முதலில் வந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு எதுவுமே கொடுக்காமல் எப்படி சும்மா அனுப்புவது?”” எனக் கூறிச் சிரித்தாள் பக்கத்தில் நின்ற மெனிக்கே.



கண்டக்டரும் பதிலுக்கு சிரித்தார்

பண்டா முதலாளி கிளாசில் சாராயத்தை ஊற்றி கண்டக்டரின் கையிலே கொடுத்தார்.



பின்பு கறுப்பண்ணன் கங்கானியை நெருங்கி இரகசியமான குரலில், ““இந்தா கங்காணி, உங்களுக்கு இரண்டு போத்தல் கள்ளு நாங் எடுத்தி வைச்சிருக்கிறது. பின்னுக்குப் போங்க”” எனக் கூறினார்.



அதனை எதிர்பார்த்திருந்தவர் போல் கங்காணி அந்த இடத்தை விட்டு நழுவியபோது மீண்டும் ஒருதடவை கிளாசை நிரம்பினார் பண்டா முதலாளி.



கண்டக்டருக்கு சிறிது சிறிதாக போதை ஏறிக்கொண்டு வந்தது.



““முதலாளி உங்களுக்கு எது வேண்டுமானாலும் தயங்காமல் சொல்லுங்கள். நான் மந்திரியிடம் கூறி வேண்டிய உதவிகளைச் செய்து தருகிறேன். நான் சொன்னால் அதற்கு மந்திரி ஒருபோதும் மறுக்கமாட்டார்”” சிகரட்டை பற்ற வைத்தபடி கூறினார் கண்டக்டர்.



““ரொம்ப சந்தோஷம் எனக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்...”” எனக் கூறிய பண்டா முதலாளி தொடர்ந்தும் ஏதோ கூறும் பாவனையில் தயங்கியபடி தலையைச் சொறிந்தார்.



““என்ன முதலாளி தயங்குகிறீர்கள். சொல்லுங்கள்””



பண்டா முதலாளி மேலும் கிளாசில் சாராயத்தை ஊற்றியபடி, ““எனது வயலுக்கு கொஞ்சம் உரம் தேவைப்படுகிறது. டவுனிலிருந்து எங்கள் கிராமத்திற்கு அதைக் கொண்டுவந்து சேர்ப்பது மிகவும் சிரமமான காரியம். அதுதான்.........””



““அதற்கு நான் எப்படி உதவி செய்ய முடியுமெனக் கூறுங்கள். கட்டாயம் நான் செய்கிறேன். டவுனியிருந்து உரம் கொண்டு வருவதற்கு நான் ஏதாவது வகையில் உதவி செய்ய வேண்டுமா?””



““அப்படியில்லை மாத்தியா. உங்களிடம் தோட்டத்திற்குரிய உரம் ஸ்டொக்கில் இருக்குமல்லவா. அதில் கொஞ்சம் தந்தால் உதவியாக இருக்கும். அதனை நான் தோட்டத்திலிருந்து நாட்டிற்கு சுலபமாக கொண்டு வந்து விடுவேன்.””



கண்டக்டர் ஒருதடவை பண்டா முதலாளியை உற்றுப் பார்த்தார்.



ஒரு கணம் தடுமாறிய பண்டா முதலாளி, ““அதற்குரிய பணத்தை நான் உங்களிடமே தந்துவிடுகிறேன். நீங்கள் வேண்டுமானால் அந்தப் பணத்தை தோட்டத்திற்கு வரும் லொறிக்காரர்களிடம் கொடுத்து உரத்தை வாங்கி மீண்டும் ஸ்டொக்கில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா?”” எனக் கூறினார்.



கண்டக்டர் ஒருகணம் ஆழமாக யோசித்தார். பண்டா முதலாளி கூறுவது அவருக்கு இலேசாகப் புரிந்தது.



““நான் உங்களுக்கு உரம் தருவதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வது?”” என யோசனையுடன் கேட்டார் கண்டக்டர்.



““அதற்கு நீங்கள் ஒன்றும் பயப்படதேவையில்லை. மற்றவர்களுக்கு தெரியாத முறையில் நான் உரத்தைப் பெற்றுக் கொள்வேன்.””



கறுப்பண்ணன் இப்போது பின்புறத்தேயிருந்து உள்ளே வந்தார். அதனைக் கவனித்த பண்டா முதலாளி, ““சரி மாத்தியா நான் உங்களிடம் தனியாக வந்து இதைப் பற்றி பேசிக் கொள்கின்றேன்”” எனக்கூறி சம்பாஷணையை முடித்துக் கொண்டார்.



““ஐயா, அப்ப போவோங்களா? இல்லாட்டி என்ன மாதிரிங்க...? எனத் தயங்கியபடி கேட்டார் கறுப்பண்ணன் கங்காணி.



““இல்லை, நான் போக வேண்டும். எனக்கு கொஞ்சம் புஸ்தக வேலையிருக்கின்றது”” எனக் கூறியவாறு எழுந்திருந்தார் கண்டக்டர்.



““அப்போது அங்கே வந்த மெனிக்கே, ““மாத்தியா அடிக்கடி இங்கே வந்து போங்கள். அடுத்தமுறை வரும் போது கட்டாயம் உணவருந்திவிட்டு செல்ல வேண்டும்”” எனப் புன்னகைத்தபடி கூறினாள்.



““நேரம் இருக்கும்போது கட்டாயம் வருகின்றேன்”” எனக் கூறிய கண்டக்டர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கறுப்பண்ணன் கங்காணியுடன் புறப்பட்டார்.



வழியில் கறுப்பண்ணன் வாயோயாமல் எதையோ கூறிய வண்ணம் வந்தார். ஆனால், அவர் கூறிய எதுவுமே கண்டக்டரின் மனதில் பதியவில்லை. அவரது சிந்தனை முழுவதும் இப்போது வேறு பாதையில் விரிந்து கொண்டு சென்றது.

+++++++++++++++++++++

அத்தியாயம் பத்து



அன்று மாலை மடுவத்திலிருந்து வந்த மாரிமுத்துத் தலைவர், மனைவி பூங்கா கொடுத்த தேநீரை அருந்திய வண்ணம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.



அப்போது ஸ்தோப்பில் யாரோ நுழைவது தெரிந்தது. காம்பராவின் உள்ளேயிருந்த தலைவர் யன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.



கறுப்பண்ணன் கங்காணி இஸ்தோப்பில் ஒருகணம் தரித்து நின்று, வாயில் நிரம்பியிருந்த வெற்றிலைத் துப்பலைத் தனது இரு விரல்களை வாயிலே பொருத்தி கானுக்குள் எத்தி உமிழ்வது தெரிந்தது. கானுக்குள் தேங்கி நின்ற அழுக்கு நீரில் மொய்த்திருந்த ஈக்கள் ஒருகணம் கலைந்து மீண்டும் அமர்ந்து கொண்டன.



““என்ன கறுப்பண்ணேன், மடுவத்தில இருந்து இப்பதான் வாறியா?”” என உள்ளேயிருந்தபடி உரத்த குரலில் கேட்டார் தலைவர்.



““ஆமாங்கண்ணே.... நேரா மடுவத்தில இருந்துதான் வாறேன்@ நீங்கதான் பேருபோட்டு முடியிறதுக்கு முன்னேயே ஓடியாந்துட்டீங்களே.. கண்டாக்கையா ஒங்ககிட்ட என்னவோ கதைக்கிறதுக்கு இருந்தாராம். அதுக்குள்ள வந்துட்டீங்க”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி இஸ்தோப்பில் நின்றபடி.



““அப்புடியா, என்ன வெசயமா ஐயா எங்கிட்ட கதைக்கணு முன்னு சொன்னாரு?””

““அதென்னல் எனக்குத் தெரியாது. உடனே பங்களாவுக்கு வருவீங்களாம். அதைச் சொல்லிட்டுப் போகலாமுன்னு தான் இப்புடியே வந்தேன்”” என்றார் கறுப்பண்ணன்.



தலைவர் சிறிது நேரம் எதையோ யோசித்த வண்ணம் இருந்தார்.



““என்னாங்கண்ணே யோசிக்கிறீங்க, ஏதாச்சும் தோட்டத்து வெசயமா கதைக்க வேண்டியிருக்கும். தோட்டத்துக்கு தலைவர் எங்கிற மொறையில் ஒங்களோடை கதைக்க விரும்புறாருபோல தெரியுது@ போயி கதைச்சிட்டு வாங்களேன்”” எனக் கூறிவிட்டு கறுப்பண்ணன் கங்காணி திரும்பிப் போக முனைந்தார்.



““இருங்க கங்காணி, தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாம்””



தலைவரின் மனைவி பூங்கா காம்பராவின் உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள்.



““இல்லை.... வேணாம் பூங்கா, இன்னும் காலுகையி கூட கழுவல்ல நேரமாச்சு..... நான் போகனும்”” எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் கறுப்பண்ணன் கங்காணி.



தலைவரின் உள்ளம் பலமாகச் சிந்திக்கத் தொடங்கியது. பின்னர் ஏதோ முடிவுக்கு வந்தவராக தனது கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு அங்குமிங்கும் எதையோ தேடினார்.



““அந்த லேஞ்சித் துண்டை எங்க காணோம்? இந்த வூட்டில் ஒரு சாமானத்தை ஒரு எடத்தில வைச்சா திரும்ப அந்த எடத்தில எடுத்துக்கிட முடியாது...”” தலைவரின் குரலில் சினம் தொனித்தது.



““என்னா கண்டக்கையா வரச்சொன்னவொடன இப்புடித் தடு;மாறுறீங்க? லேஞ்சிய போட்ட எடத்தில் தேடி எடுக்க வேண்டியது தானே”” எனக் கூறிக்கொண்டே இஸ்தோப்புக் கதவின்மேல் கிடந்த லேஞ்சித் துண்டை எடுத்துக் கணவரிடம் கொடுத்தாள் பூங்கா.



““நான் ஒண்ணும் தடுமாறல்லடி, நான் என்னா கண்டக்கையாவுக்கு பயந்துக்கிட்டு இருக்கேனு நெனச்சுக்கிட்டியா? எப்படியாப்பட்ட வெள்ளைக்காரத் தொரைங்ககிட்டேயே எதிர்த்துப் பேசினவன்டி நான்... என் வாயைத் தொறந்தேன்னா இவருக்குப் பதில் சொல்ல முடியாம போயிடும். என்னமோ புதிசாவந்தவராச்சேனு பாக்கிறேன்.”” எனக் கூறியபடி தலைவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றார்.



““என்னாங்க கொடைய மறந்திட்டு போறீங்க. வெளியே மழை தூறிறது தெரியல்லியா... நல்லாத்தான் போங்க”” எனக் கூறிய பூங்கா குடையை எடுத்து வந்து தலைவரின் கையிலே கொடுத்தாள்.



தலைவர் கண்டக்டரின் பங்களாவை நோக்கி நடக்கத் தொடங்கினார்.



கண்டக்டர் பங்களாவின் முன் வராந்தாவில் எரியும் மின் விளக்கின் ஒளி, முன்பகுதி எங்கும் பதவியிருந்தது. பங்களாவை நோக்கிப் போகும் படிக்கட்டில் தட்டுத் தடுமாறி ஏறினார் தலைவர்.



““ஆங் தலைவரா ஒங்களைத்தாங் நான் பார்த்துக்கிட்டு இருந்தது... வாங்க.”” ஆபிஸ் அறையில் இருந்தவாறு எட்டிப் பார்த்த கண்டக்டர் தலைவரை வரவேற்றார்.



வாசல்வரை வந்த தலைவர் சற்றுத் தயங்கினார்.



““சும்மா பயப்புடாம வாங்க தலைவர்”” எனக் கூறிகொண்டே எழுந்திருந்த கண்டக்டர் நடுக் காம்பராவின் பக்கம் சென்றார்.



தலைவர் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தார்.



உள்ளே சென்ற கண்டக்டர் அங்கே போடப்பட்டிருந்த கதிரையொன்றில் அமர்ந்துகொண்டு ““என்னாங் தலைவர் நாங் பேர் போட்டு முடிஞ்சவொடன ஒங்ககிட்ட பேசறதிக்கி இருந்தது. நீங்க சுறுக்காப் போயாச்சிதானே”” எனக் கூறி விட்டுச் சிரித்தார்.



““வூட்டுல கொஞ்சம் வேலை இருந்துதுங்க. அதுதாங்க போனேன்”” எனக் குழைந்தபடி கூறினார் தலைவர்.



““ஆங் அதுசரி... நாங் ஏங் வரசொன்னது சொன்னா இந்த தோட்டத்தில ஆளுங்க எல்லாங் ஒழுங்கா வேலை செய்யிறதில்லை, மிச்சங் மோசங்@ காலையில நேரத்திக்கி வாராம பிந்திதாங் வராதது. ~ரவுண்| எல்லாங் ரொம்ப பிந்தி போயிருக்கு. அதுனால இந்த ஆளுங்களை இனிமே கொஞ்சங் வெள்ளன வேலைக்கு வர சொல்ல வேணுங்.””



““ஆமாங்க, ரவுண் பிந்திப்போய் இருக்கிறது எனக்கும் தெரியுமுங்க. இனிமே ஆளுங்களை பிந்திவராம கொஞ்சம் வெள்ளன வந்து ரவுணை எடுத்துக் கொடுத்துட சொல்லிப் புடுறேங்க”” என்றார் தலைவர் கைகளைப் பிசைந்தவாறு.



““அப்புடி இல்லே தலைவர், இனிமே யாராச்சும் பிந்தி வந்தா ஒடனே நாங் வெரட்டிப் போடுறது. அப்புறம் நம்மகிட்டே பிரச்சினை பேச வரக்கூடாது. அது சொல்ல தாங் நாங் இப்ப வரச் சொன்னது”” என்றார் கண்டக்டர் கண்டிப்புடன்.



““ஐயாவைப்பத்தி இன்னமும் ஆளுங்களுக்குத் தெரியாது தானுங்களோ....... ஐயா ரொம்ப கண்டிப்பானவருனு ஆளுங்களுக்குச் சொல்லி வச்சுப்புடுறேங்க.””



““அன்னிக்கு பாருங்க தலைவர், அந்த வீரய்யா கங்காணி ஆளுங்களை நாலு மணிக்கே மடுவத்துக்கு கூட்டிக்கிட்டு வந்தது.””



““ஆமாங்கையா நானுங் கேள்விப்பட்டேனுங்க... ஐயா கூட அவனிக்கு பத்து ரூபா தெண்டம் போட்;டுட்டீங்களாமே. அன்னிக்கே அவனும் அந்த ராமுப் பயலும் வந்து ஏங்கிட்ட ஒரே கரச்ச பண்ணிட்டானுங்க. அநியாயமா தெண்டம் போட்டுட்டீங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தானுக”” என்றார் தலைவர்.



““ஆமா தலைவர், அப்படி மோடத்தனமான வேலை செஞ்சா தெண்டம் போடத்தானே வேணுங்”” எனக்கூறிய கண்டக்டர் சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார்.



““அன்னிக்கு சரியான மழைதானுங்களே... வருசா வருசம் இப்புடித்தாங்க மழை பெஞ்சா அந்த மலையில கொழுந்தே எடுக்க முடியாதுங்க@ ஒரே வழுக்கப்பாறை துண்டுங்க.... அதுதாங்க அவேன் ஆளுங்களை கூட்டிக்கிட்டு வந்துட்டானுங்க.””



““அப்படி சொல்ல வேணாங் தலைவர். கங்காணி நெனைச்ச மாதிரி மலையில இருந்து ஆளுங்களை கூட்டிக்கிட்டு வரக்கூடாது தானே. நம்பகிட்ட சொல்லித்தானே செய்யவேணுங்””



““இவ்வளவு நாளும் தோட்டத்தில செஞ்சுவந்த மாதிரி தாங்க அவேன் செஞ்சுப்புட்டான். இனிமே ஐயாசொல்லாம அந்த மாதிரி நடந்துகிட வேணாமுனு சொல்லிப்புடுறேங்க. இந்தத் தடவை மட்டும் மன்னிச்சிடுங்க... அவனுக்கு அந்தத் தெண்டத்தை மட்டும் போட்டுப்புடாதீங்க”” எனத் தலைவர் தலையைச் சொறிந்த வண்ணம் கூறினார்.



““நான் தெண்டம் போட்டா போட்டதுதாங். அப்புறம் மாத்திறதில்லை”” எனக் கூறிய கண்டக்டர் ஒருகணம் தாமதித்து சிகரெட்டைப் பலமாக உறிஞ்சிவிட்டு புகையை வெளியே ஊதினார். பின்னர் ““ஆனாலுங் தலைவர் நீங்க கேக்கிறதினால அந்த தெண்டத்தை நான் நிப்பாட்டுறது. வேற ஆள் வந்து கேட்டா நான் இது செய்யிறது இல்லே”” எனக் கூறினார்.



““ரொம்ப நல்லதுங்க போன கண்டக்கையாவும் ஒங்க மாதிரிதாங்க. மிச்சம் நல்லவருங்க... நான் எது கேட்டாலும் மறுக்காம செஞ்சிடுவாருங்க”” எனக் குழைந்தார் தலைவர்.



““நாங் இங்க வந்தது ஆளுங்களுக்கு கெட்டது செய்யிறதுக்கு இல்லே.... நல்லது தாங் செய்யிறது. நாங் சொன்ன படி ஆளுங்க நடந்தா நான் மிச்சங் ஒதவி செய்யிறது.”” என்றார் கண்டக்டர்.



““ரொம்ப நல்லதுங்க. ஐயா கூடக் கேள்விப்பட்டிருப்பீங்க@ நான் இந்தத் தோட்டத்தில பத்து வருஷமா தலைவரா இருக்கிறேனுங்க. ஒரு காலத்திலையும் நான் ஐயாமாருங்க பேச்சை மீறி நடக்கல்லீங்க..... சும்மா சொல்லப்புடாதுங்க. ஐயாமாருங்களும் எனக்கு ரொம்ப ஒதவி செஞ்சிருக்காங்க. போன ஐயா கூட என் சம்சாரம் சொகமில்லாம வீட்டில் இருந்திட்டாளுன்னா அவர் கிட்ட ஒரு வார்த்தை தாங்க சொல்லணும். அவ வேலைக்கு வர்றவரைக்கும் பேரு போட்டு ஒதவி செய்வாருங்க. அவர மறக்கவே முடியாதுங்க”” எனக் கூறிய தவைர், கண்டக்டரைப் பார்த்து அசட்டுத்தனமாகச் சிரித்தார்.



““அதிங் எல்லாங் சரி தலைவர். நாங் வேற ஒரு விசயங் ஒங்ககிட்ட கதைக்க வேணுங். இந்த மாசம் முடியிறதுக்கு முந்தி அந்த ஒன்பதாங் நம்பர் மலைக்கும் பத்தாங் நம்பர் மலைக்கும் ஒரம் போட்டு முடிய வேணுங். அதுனால அந்த வேலைய நாங் ~கொன்றேக்| கொடுக்கிறது.... தலைவருக்கு அந்த ~கொன்றேக்| எடுத்து செய்ய முடியுமா?| எனக் கேட்ட கண்டக்டர் தலைவரை உற்றுப் பார்த்தார்.



தலைவர் சற்று யோசித்துவிட்டு ““ஒரம் போடுறதுக்கு வழக்கமா பெரட்டுல தானே ஆள் போடுவாங்க, இந்தப் பயணம் என்னாங்கையா கொந்தரப்பு குடுக்குறீங்க....”” எனக் கேட்டார்.



““ஆமாங்க தலைவர், அது நமக்குங் தெரியும். இந்த மாசம் தோட்டத்தில மிச்சங் வேலை இருக்கி. அதனாலதான் ~கொன்றேக்| குடுக்கிறது..... நீங்க எந்த நாளும் அந்த வேலைய அந்திக்கு ஆள் வச்சி செய்ய முடியுங்தானே”” எனக் கூறினார் கண்டக்டர்.

தலைவரின் துரிதமாக இயங்கியது. அந்தவேலையைக் ~கொன்றேக்| எடுத்தால் குறைந்த ஆட்களைக் கொண்டு கூடிய வேலையைச் செய்வித்து இலாபம் பெறலாம் போல அவருக்குத் தோன்றியது.



~ஐயா சொன்னீங்கன்னா நான் மறுத்துப் பேசப் போறேனுங்களா? என் பேருலேயே அந்த கொந்தரப்பை போட்டிடுங்க”” என்றார் தலைவர் சிரித்தபடி.



““அப்ப சரிங் தலைவர். நாங் ஒங்க பேருக்குத் தான் ~கொன்றேக்| கொடுக்கிறது. இதுபத்தி தொரகிட்ட கதைச்சி அப்புறங் நாங் ஒங்களுக்கு சொல்லுறேங்... அது வரைக்கும் நீங்க இதபத்தி யாருகிட்டேயும் சொல்ல வேணாங். அப்பறம் எல்லாங் நம்பகிட்ட வந்து கொன்றேக் தரச்சொல்லி கரச்சல் பண்ணுவாங்கதானே”” என்றார் கண்டக்டர், சிகரெட் துண்டை நிலத்திலே போட்டு சப்பாத்துக்காலால் மிதித்தபடி.



““எனக்குத் தெரியாதுங்களா.... இந்த மாதிரி வெசயங்களைப் போய் மத்தவங்ககிட்ட கதைக்கலாமுங்களா? மூச்சு விடமாட்டேனுங்க”” என்றார் தலைவர் கையை வாயில் வைத்தபடி.



““சரி தலைவர் நேரமாச்சி. இதைப்பத்தி நாம அப்புறங் கதைப்பங். இப்ப எனக்கு கொஞ்ச வேலையிருக்கு”” எனக் கூறியவாறு கதிரையை விட்டு எழுந்திருந்தார் கண்டக்டர்.



கண்டக்டர் எழுந்ததைப் பார்த்த தலைவர், ““அப்ப சரிங்க நான் போயிட்டு வாறேனுங்க”” எனக் கூறி கண்டக்டரிடம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.



““நம்ப கண்டக்கையாவப் பத்தி என்னென்னவோ நெனைச்சுப் பயந்துகிட்டு இருந்தேன். இப்பதான் அவரைப் பத்தி தெரியுது”” என முணுமுணுத்தபடி லயத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார் மாரிமுத்துத் தலைவர்.

+++++++++++++++++++++++

அத்தியாயம் பதினொன்று



கிராமத்து மக்கள் அன்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். மந்திரி உட்பட அரசியல் பிரமுகர்கள் சிலர் அன்று கிராமத்துக்கு வந்திருந்தார்கள். கிராமசேவகர் தலைமையில் மந்திரிக்கும், அவருடன் கூடவந்த பிரமுகர்களுக்கும் ஒரு வரவேற்பு உபகாரக் கூட்டம், அங்குள்ள புத்தவிகாரையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.



கிராமசேவகரும், பண்டா முதலாளியும் நாட்டிலுள்ள ஒருசில முக்கியஸ்தர்களுமாக மந்திரிக்கும் பிரமுகர்களுக்கும் மாலை யணிவித்து அவர்களை அந்த ஒற்றையடிப் பாதையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.



மந்திரி வருவதற்காகக் கிராமத்து மக்கள் அனைவருமானச் சிரமதானமும் அந்தப் பாதையைத் துப்பரவு செய்திருந்தார்கள்.



மந்திரியும் பிரமுகர்களும் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், கிராமத்திலுள்ள சில வீடுகளுக்கு விஜயம் செய்து அவர்களுடைய வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். பண்டா முதலாளிதான் ஒவ்வொருவரையும் மந்திரிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் தங்களது தாய்மொழியில் உரையாடினார்கள்.



முதலில் அவர்கள் ஒரு விவசாயியைச் சந்தித்தார்கள்.



““எப்படி உங்களது விவசாயம் நடக்கிறது? உங்களது சீவியத்திற்குப் போதுமானதாக இருக்கிறதா?”” என மந்திரி அந்த விவசாயிடம் கேட்டார்.



““எங்களது பாட்டனார் காலத்திலிருந்தே நாங்கள் விவசாயந்தான் செய்துவருகின்றோம். எனது பாட்டனாருக்குச் சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் காணிக்கு இப்போது தாங்கள் பதின்மூன்று பேர் வாரிசாக இருக்கிறோம். அதனால் எங்கள் ஒவ்வொவருக்கும் கிடைக்கும் வருமானம் மிகவும் சொற்பமாகவே இருக்கிறது”” என்றார் அந்த விவசாயி.



““அப்படியா, இது இந்த நாட்டிலுள்ள ஒரு சிக்கலான பிரச்சினை. சிலரிடம் அதிகமாகக் காணி இருக்கிறது. ஆனால், பாடுபட்டு உழைக்கும் பலரிடம் போதியளவு காணிகள் இருப்பதில்லை... உங்களது குடும்பத்தில் உள்ள அனைவரது பெயர்களையும் குறித்துத் தாருங்கள். உங்களுக்கு ஏற்ற உதவிகளை நாங்கள் செய்து தருகிறோம்.”” என்றார் மந்திரி.



அப்போது பக்கத்தில் நின்ற பண்டா முதலாளி கூறினார். ““இந்தக் கிராமத்தில் பொதுவாக எல்லோரது நிலைமையும் இப்படியாகத்தான் இருக்கிறது. பலருக்கு வசிப்பதற்குக் கூட இடமில்லாமல் இருக்கிறது. சிறிய வீடுகளில் நெருக்கமாகக் குடியிருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுகின்றது””



““அப்படியா... இது மிகவும் வருந்தக்கூடிய விசயம்”” என்றார் மந்திரி.



பக்கத்தில் நின்ற செண்பக மரமொன்றில் ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்டது. அவர்களைக் கண்ட குரங்கொன்று வெருட்சியுற்று வேறொரு மரத்துக்குத் தாவி ஓடியது.



அனைவரும் அடுத்து வேறொரு விவசாயியின் வீட்டுக்குச் சென்றனர். அந்த விவசாயி தனது கஷ்டங்களை விளக்கினார்.



““எனது குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு சிறிய வயல் இருக்கிறது. ஆனால், இந்த வயலில் இருந்து எந்தக் காலத்திலும் நாங்கள் பூரணமான பலனைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. விலங்குகளின் தொல்லை அதிகமாக இருக்கின்றது.



பக்கத்தில் அவர்களுடன் வந்துகொண்டிருந்த பொடிசிங்கோ என்ற இளைஞன் கூறினான்@ ““காட்டுப் பன்றிகளட இங்கு வந்து வயலில் இருக்கும் வரம்புகளை அழித்துச் சேதப்படுத்தி விடுகின்றன. குரங்குகள் கதிர்களை உருவி நாசப்படுத்திவிடுகின்றன.””



““அப்படியானால் வேறு ஏதாவது உணவுப் பயிர்களைச் செய்து பார்த்திருக்கலாமே?”” எனக் கேட்டார் மந்திரி.



““எந்தப் பயிர்களைச் செய்வதற்கும் இந்தக் குரங்குகளும் பன்றிகளும் விடுவதில்லை”” என்றான் பொடிசிங்கோ.



““சென்ற வருடம் நான் எனது தோட்டத்தில் பெருவாரியாகக் கிழங்குகளை நாட்டியிருந்தேன். ஆனால், பன்றிகள இரவிரவாக எல்லாவற்றையுமே நாசமாக்கிவிட்டன.””



““இந்த விலங்குகள் உங்கள் பயிர்களை அழிக்க முடியாமல் எந்த முறையிலும் தடை செய்ய முடியாதா?”” எனக் கேட்டார் மந்திரி.



““நாங்கள் வயல்களிலே இரவிரவாக விழித்திருந்து காவல் காப்போம். ஆனால் அவை கூட்டங் கூட்டமாக வரும்போது எம்மால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. எப்படியும் எங்களது காவலை மீறிக்கொண்டு அவை பயிர்களைச் சேதமாக்கி விடுகின்றன”” என்றார் அந்த விவசாயி.



அப்போது பக்கத்தில் வந்துக்கொண்டிருந்த கிராம சேவகர் கூறினார்@ ““முந்தின காலத்தில் ~நாட்டை| அடுத்துள்ள பகுதிகள் பெருங் காடாக இருந்தன. அவற்றையெல்லாம் தோட்டத் துரைமார்கள் அழித்து ~ஸ்டோர்| அடுப்புகளுக்கு விறகாக எரிந்துவிட்டனர். அதனால் இப்போது அந்தக் காட்டுக்குள் இருந்த விலங்குகள் அங்கு வசிக்க முடியாமல் நாட்டுக்குள் புகுந்துவிட்டன””



““இது நாடு இல்லை. எங்களது நாடு இப்போது காடாக மாறிவிட்டது. நாங்கள் காட்டிலேதான் வசிக்கிறோம்”” என்றான் பக்கத்தில் நின்ற பொடிசிங்கோ.



அந்த இளைஞனின் உணர்ச்சிகளை மந்திரியால் நன்றாக உணர முடிந்தது.



பின்பு எல்லோரும் அடுத்துள்ள குடிசைக்குச் சென்றனர். அந்தக் குடிசையைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கமுக மரங்கள் சோலையாகக் காட்சியளித்தன. அந்தக் கமுக மரங்களில் குலக்குக் குலக்காகப் பாக்குகள் காய்த்துக் குலுங்கின.



““ஓ..... இவருக்கு இந்தக் கமுக மரங்களில் இருந்து நல்ல வருமானம் கிடைக்குமல்லவா?”” எனக் கூறி அந்தக் கமுக மரங்களைப் பார்த்து வியந்தார் மந்திரி.



““ஐயா, இந்தப் பாக்குகளை நாங்கள் அறுவடை செய்யும் காலத்தில் இங்கு தண்ணீருக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டு விடுகின்றது, சென்ற வருஷம் நான் சுமார் ஐம்பதினாயிரம் பாக்குகள் அறுவடை செய்து, நிலத்திலே குழிவெட்டி அதற்குள் போட்டு நீர் ஊற்றி ஊறவிட்டிருந்தேன். அந்தப் பாக்குகள் சரியான பதத்தை அடையு முன்னர் இந்தப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. அதனால் ஊறப்போட்ட பாக்குகள் அனைத்தும் முளை கொண்டுவிட்டன. என்னால் அதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. செம்பால் அடித்த காசுகூட எனக்குக் கிடைக்கவில்லை”” என வருத்தத்தோடு கூறினார் அந்த விவசாயி.



““அப்படியானால் வரட்சியான காலத்தில் நீங்கள் வேறெங்காவது இருந்து தண்ணீர் பெற்று, பலனை எடுக்கலாந்தானே?”” என யோசனையுடன் கோட்டார் மந்திரி.



““அது எங்களால் முடியாத காரியம். மேலே அருவிகளிலிருந்து ஓடிவரும் நீரை வரட்சியான காலங்களில் அணைகட்டி மறித்து, தேயிலைத் தோட்டத்தில் இருக்கும் தேயிலைத் தொழிசாலைகளுக்கு எடுத்து; கொள்கிறார்கள்.



““இங்கு நாங்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது, அங்கே அந்தப் பெரிய இயந்திரங்கள் எமக்குக் கிடைக்கும் நீரை குடித்துவிடுகின்றன”” என இடைமறித்துக் கூறினான் பொடிசிங்கோ.



““இது பெரும் அநியாயமான செயல்”” என மந்திரி பதறினார்.



““அப்படியானால் இந்தப் பாக்குகளையெல்லாம் பதனிடாமல் பச்சையாகவே விற்றுவிடலாமே”” எனக் கேட்டார் மந்திரியுடன் கூடவந்த பிரமுகர்.



““அப்படித்தான் நாங்கள் இப்போது செய்துவருகிறோம். அதனால் நாங்கள் பெறக் கூடிய உண்மையான வருமானத்தில் பத்தில் ஒன்றுகூட எங்களால் பெறமுடியவில்லை. பச்சைப் பாக்கு ஒன்றின் விலை ஒரு சதந்தான்””



அதன் பின்பு எல்லோரும் பண்டா முதலாளியின் கடைக்கு வந்தனர். மந்திரி வருவதனால் பண்டா முதலாளி தற்காலிகமாகக் கள்ளுக் கடையை மூடியிருந்தார். மந்திரி முன்புறத்தில் உள்ள பலசரக்குக் கடையைப் பார்வையிட்டார்.



““இந்தப் பகுதியில் எனது கடையொன்று மட்டுந்தான் இருக்கின்றது. ஆனாலும் போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால் இங்குள்ள மக்களுக்குத் தேவையான பொருட்களை என்னால் கொண்டு வந்து கொடுக்க முடிவதில்லை. இந்தக் கடையில் கிடைக்கும் வருமானம் எனக்குச் சீவியம் நடத்தவே போதாமல் இருக்கின்றது. இங்குள்ள மக்களுக்கு இந்தக் கடையாவது பயன்படுபடட்டும் என்று தான் நான் இந்தக் கடையை நடத்தி வருகின்றேன்”” என்றார் பண்டா முதலாளி.



வெளியே உள்ள கித்துள் மரங்களைக் கவனித்தார் மந்திரி.



““ஹோ.... உங்களுக்குத்தான் இந்தக் கித்துள் மரங்களிலிருந்து நிறைய வருமானம் கிடைக்குமே. கள்ளும் உற்பத்தி செய்யலாமல்லவா”” எனக் கூறிவிட்டுச் சிரித்தார் மந்திரி.



““இல்லை இல்லை. நாங்கள் மரத்தில் பாளை சீவி, மருந்து கட்டி, முட்டி கட்டிவைத்தால் குரங்குகள் பதனீரைக் குடித்துவிட்டு முட்டிகளை உடைத்துச் சேதம் விளவிக்கின்றன””



““அப்படியானால் நீங்கள் இந்த மரங்களிலிருந்து சிறிதளவாவது பலன் பெறுவதில்லையா?”” எனக் கேட்டார் மந்திரி.



““ஏதோ சிறிது பதனீர் கிடைக்கின்றது. அதிலிருந்து நாங்கள் கருப்பட்டி காய்ச்சுகிறோம். அது எமது வீட்டுத் தேவைக்குத்தான் போதுமானதாக இருக்கின்றது”” என்றார் பண்டா முதலாளி.



தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த மந்திரி, ““ஹோ.... இங்கு ஏலம், கராம்பு முதலிய செடிகளும் இருக்கின்றனவே”” எனக் கூறினார்.



““குறிப்பிட்ட ஒருசில காலங்களில் மட்டுமே இதில் பலன் கிடைக்கிறது. ஆனாலும் இந்தக் கிராமத்தில் இருந்து கொண்டு நல்ல முறையில் இவற்றைச் சந்தைப்படுத்த எம்மால் முடிவதில்லை| எனக் கூறினார் பண்டா முதலாளி.



ஆனாலும் பண்டா முதலாளி சிறிது வசதியுள்ளவர் என்பதை மந்தியால் ஊகித்துக் கொள்ள முடிந்தது. அவர் தன்னிடம் கூறிய யாவும் உண்மையதனதல்ல என்பதை மந்திரி உணர்ந்துகொண்டார்.



பொதுவாக இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் ஓரிருவரைத் தவிர பலர் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அவரால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.



பின்னர் பண்டா முதலாளியின் வீட்டை அடுத்துள்ள குடிசைகள் நிறைந்த பகுதிக்குச் சென்று அங்குள்ளவர்களுடன் அளவளாவினர் மந்திரி.



முதலில் அவர்கள் பியசேனாவின் குடிசைக்குச் சென்றனர்.



மந்திரியும் அவரது குழுவினரும் தனது வீட்டுக்கு வருவதைப் பார்த்த பியசேனா, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்துச் சென்றான். வீட்டினுள்ளே இருந்த அவனது தாய் மேரி நோனா மெதுவாக எழுந்து, ““ஆயுபோங் மாத்தயா”” என மந்திரிக்கு வணக்கம் தெரிவித்தாள்.



““நீங்கள் குடியிருக்கும் இந்தக் காணி உங்களுக்குச் சொந்தமானதா?”” எனக் கேட்டவாறு மந்திரி அவ்விடத்தின் சுற்றுப்புறங்களை நோட்டம் விட்டார்.



““இல்லை ஐயா, இது எங்களது சிறிய தகப்பனாருக்குச் சொந்தமான காணி, அவரது உதவியாரேதான் நாங்கள் இந்தக் குடிசையை அமைத்துக் கொண்டு இங்கு இருக்கிறோம்”” எனப் பணிவாகக் கூறினான் பியசேனா.



““ஆமாம் இவர்களுக்குச் சொந்தமாகக் காணியேதும் இல்லை... இவன் இங்குள்ள இளைஞர்களில் ஓரளவு படித்தவன் பக்கத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கொந்தரப்பு வேலை செய்து வருகிறான்”” என்றார் அருகே நின்ற பண்டா முதலாளி.

““ஏன் தோட்டத்தில் உங்களுக்கு நிரந்தரமாக வேலை கிடைக்காதா? கொந்தரப்பு மட்டுந்தான் கிடைக்குமா?”” எனப் பியசேனாவைப் பார்த்துக் கேட்டார் மந்திரி.



““எனது தாயாரின் பெயரில் முன்பு கொடுக்கப்பட்டிருந்த கொந்தரப்பை இப்போது தொடந்து நான் செய்து வருகிறேன்;. சில்லறை வேலைகளைப் பொறுத்த வரையில் தோட்டங்களில் பதிவானவர்களுக்குத் தான் போதிய வேலைகள் கொடுக்கப்படுகின்றன. தோட்டத்தில் கூடுதலான வேலைகள் இருக்கும்போதுதான் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார்கள்”” என்றான் பியசேனா.



““ஏன் நாட்டில் இருந்து செல்லும் தொழிலாளர்களைத் தோட்டத்தில் நிரந்தரமான தொழிலாளர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா?”” என யோசனையுடன் கேட்டார் மந்திரி.



““மிகக் குறைந்த பகுதியினரே தோட்டத்தில் பெயர் பதிந்து வேலை செய்கின்றனர். மற்றவர்கள் தற்காலிகத் தொழிலாளிகளாகத் தான் அவ்வப்போது வேலை செய்கின்றனர்”” என்றான் பியசேனா.



மந்திரி யோசனையுடன் தலையாட்டியபடி அடுத்துள்ள குடிசைக்குள் சென்றார்.



அக்குடிசையின் முன்புறத்தில் நடுத்தர வயதுடைய ஒருவர் அமர்ந்திருந்தார். மந்திரியும் ஏனையோரும் அங்கு வருவதைக் கண்டதும் அவர் எழுந்து வணக்கம் தெரிவித்தார்.



““இவர் பெயர் முதியான்சோ@ பக்கத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் முன்பு கங்காணி வேலை பார்த்தவர். இப்பொழுது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். எங்கள் கிராமத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை இவரோடு கலந்தாலோசித்துத்தான் செய்வது வழக்கம்”” என பண்டா முதலாளி அவரை அறிமுகப்படுத்தினார்.



““அப்படியா, தோட்டத்து வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்பு எப்படி உங்களது சீவியம் நடக்கிறது?”” என மந்திரி அவரிடம் வினவினார்.



““எனது மகன் ஒருவன் கொழும்பில் வேலை செய்கிறான். அவன் அனுப்பும் பணத்தைக் கொண்டு நானும் எனது மனைவியும் சீவியம் நடத்துகிறோம்”” என்றார் முதியான்சே.



““சரி... மிகவும் நல்லது@ நான் உங்கள் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிய விரும்புகிறேன். இதைப் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?”” என மந்திரி அவரிடம் கேட்டார்.



““~நமது கிராமம் நாலு புறமும் தோட்டங்களினால் சூழப்பட்டு இருப்பதால் விரிவுபடமுடியாத நிலையில் இருக்கின்றது. ஆனால், மக்கள் தொகையோ நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றது. இதனால் இங்குள்ள எல்லோருக்கும் விவசாயம் செய்வதற்கு இப்போது போதிய நிலம் இல்லாமல் போய்விட்டது. இங்குள்ளவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பும், இருப்பிட வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால்தான் இந்தக் கிhhமம் முன்னேற்றமடைய வாய்ப்பு ஏற்படும்”” என யோசனையுடன் கூறினார் முதியான்சே.



““இவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாமென நீங்கள் கருதுகின்றீர்கள்?””



““இப்போதுதான் தேயிலைத் தோட்டங்கள் யாவும் அரசாங்கத்திற்குச் சொந்தமாகி விட்டதே. கிராமத்து மக்களுக்கு அங்கு போதியளவு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாமல்லவா?””



““நீங்கள் கூறுவதும் சரிதான். இது விஷயமாக வேறு என்ன கூற விரும்புகின்றீர்கள்?”” என மந்திரி ஆவலுடன் கேட்டார்.



““தோட்டத் தொழிலாளர்கள் பலர் இப்போது இந்தியாவிற்குத் திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது இடத்தைக் கிராமத்து மக்களைக் கொண்டு நிரவலாம். இதனால் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்து கிராமத்து மக்களும் தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி யடையச் செய்ய வாய்ப்பு ஏற்படும்”” என்றார் முதியான்சே.



முதியான்சே கூறிய கருத்துக்கள் மந்திரியைச் சிந்திக்க வைத்தன.



மந்திரி அடுத்துள்ள குடிசைகளுக்கும் சென்று அங்குள்ளவர்களுடன் அளவளாவினர். அவர்களது நிலைமையை அறிந்துகொண்ட பின்னர், கூட்டம் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட புத்த விகாரைக்கு எல்லோரும் சென்றனர்.



அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பாகவே கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக சில தொழிலாளர்களையும் அழைத்துமுக் கொண்டு கண்டக்டர் அங்கு வந்து காத்திருந்தார்.



மந்திரி மேடையில் ஏறியதும், தயாராகக் கொண்டு வந்திருந்த மாலையை மந்திரியின் கழுத்தில் அணிவித்தார் கண்டக்டர் அப்போது அங்கிருந்த அனைவரும் கரகோஷம் செய்தனர்.



அதனைத் தொடர்ந்து பலர் மந்திரிக்கும் அங்கு வந்த ஏனைய பிரமுகர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



சிறிது நேரத்தில் கூட்டம் ஆரம்பமாகியது. தனது பேச்சில் முக்கியமாகப் பின்வரும் கருத்தினை மந்திரி வலியுறுத்திப் பேசினார்.



““இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் மிகவும் வறுமையான நிலையிலேயே இருக்கின்றனர். அதற்கு அடிப்படையான காரணம் இங்குள்ளவர்களுக்குக் குடியிருப்பதற்கோ விவசாயம் செய்வதற்கோ ஏற்ற நிலம் இல்லை என்பதை நான் உணருகிறேன். ஒரு சிலருக்கு நிலம் இருந்த போதிலும் அதில் இருந்து பலன் பெறமுடியாமல் பல பிரச்சினைகள் அவர்களைப் பாதிப்பதை நான் அறிகிறேன்.

எங்களது மூதாதையர்களின் நிலங்களையெல்லாம் வெள்ளையர்கள் வந்து கைப்பற்றி அவற்றைத் தேயிலைத் தோட்டங்களாக மாற்றி, அதிலிருந்து பெரும் வருமானத்தைத் தங்களது நாட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. வெள்ளையர்கள் வசமிருந்த தேயிலைத் தோட்டங்கள் யாவும் இப்போது அரசாங்க உடைமையாகிவிட்டன, உண்மையில் இவை யாவும் உங்களது மூதாதையர்களின் சொத்துத்தான்.



இன்று நிலமற்றவர்களாகவோ, அல்லது வசதி குறைந்தவர் களாகவோ இருக்கும் உங்களுக்கு, உங்களுடைய மூதாதையர்களுடைய சொத்தைத் தருவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாம் செய்து கொண்டு இருக்கின்றோம். நீங்கள் எல்லோரும் இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரஜைகள்@ நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு எவருமே சும்மா இருக்க முடியாது.



இந்தக் கணத்திலிருந்தே நீங்கள் எல்லோரும் சுபீட்சமான ஓர் எதிர்காலத்தை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறீர் களென்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். உங்கள் எல்லோருக்கும் நிச்சயமாகப் போதியளவு காணி கிடைப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்””



““ஐயவேவா......””

““அப்பே மந்திரி துமாட்ட ஐயவேவா...””

கூட்டத்திலிருந்து பல குரல்கள் வானத்தைப் பிளந்து ஒலித்தன.

அன்று கூட்டம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பிரவாகித்துக் கொண்டிருந்தது.



கூட்டம் முடிந்த பின்னர் மந்திரிக்கு, அவருடன் கூட வந்தவர்களுக்கும் கிராமசேவகரின் இல்லத்தில் ஒரு தேநீர் விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தோட்டத்தில் இருந்து வந்த கண்டக்டர் உட்பட பண்டா முதலாளியும், வேறு சிலரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

மந்திரி கண்டக்டரின் அருகே நெருங்கி, ““எப்படி உங்களது புதிய வேலை..... தோட்டத்தில் எல்லா வசதியும் உங்களுக்கு இருக்கிறதா?”” என வினவினார்.



““உங்களது தயவால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்”” எனப் பணிவுடன் கூறினார் கண்டக்டர்.



““மிகவும் சந்தோஷம்..... உங்களது தோட்டத்தில் விரைவில் ஒரு கூட்டுறவுச் சங்கக் கடை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன்”” எனக் கூறினார்.



““மிகவும் நல்லது. இப்போது தொழிலாளர்கள் தமக்கு வேண்டிய பொருட்களைப் பெறுவதில் பெருங் கஷ்டப்படுகிறார்கள். கூட்டுறவுச் சங்கக்கடை வந்தால் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்”” எனக் கூறிவிட்டுச் சிரித்தார் கண்டக்டர்.



அப்போது அங்கிருந்த கிராமசேவகர் மந்திரியின் அருகே வந்து, அவருக்கு மூன்று இளைஞர்களை அறிமுகம் படுத்தினார்.



““இவர்கள் இந்தக் கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள்@ வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். அது விஷயமாகத் தங்களுடன் கதைக்க விரும்புகிறார்கள்.



““ஆமாம் எங்களது கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் இவர்கள் எல்லோரும் வெகுதூரம் நடந்து சென்று சிரமப்பட்டு ~டவுனில்| உள்ள பாடசாலையில் படித்தவர்கள். கடந்த பொதுத் தேர்தலின்போது இவர்கள் தங்களது வெற்றிக்காகப் பெரிதும் உழைத்தவர்கள்”” எனப் பக்கத்தில் நின்ற பண்டா முதலாளி கூறினார்.



““அப்படியா, நீங்கள் இதுவரை காலமும் ஏதாவது தொழில் பெறுவதற்கு முயற்சி செய்யவில்லை?”” என அந்த இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார் மந்திரி.



““நாங்கள் பல இடங்களில் வேலை தேடி அலைந்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை”” என அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.



““தற்பொழுது படித்த இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் நாங்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை கொடுக்க எண்ணியுள்ளோம். வேலையில்லாத இளைஞர்களை மனுப்போடச் சொல்லியும் அறிவித்திருந்தோம். நீங்கள் ஏதாவது வேலைகளுக்கு மனுப் போடவில்லையா?”” என மந்திரி அவர்களிடம் வினவினார்.



““ஆம், நாங்கள் ஆரம்பத்திலேயே விண்ணப்பம் போட்டோம். இதுவரையிலும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. உங்களது சிபார்சு இருந்தால் ஏதாவது வேலையைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது”” என்றான் அந்த இளைஞர்களில் ஒருவன்.



““ஆம், உங்களைப் போல பிரச்சினையுள்ள இளைஞர்கள் எமது பகுதியில் நிறையப்பேர் இருக்கிறார்கள். நீங்கள், உங்களது மனுவின் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு என்னை வந்து சந்தியுங்கள்@ என்னால் முடிந்த உதவியைக் கட்டயம் செய்வேன்”” என்றார் மந்திரி யோசனையுடன்.



அவரது பேச்சில் தொனித்த உறுதி அந்த இளைஞர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.



அன்று மந்திரி விருந்து முடிந்து தமது இல்லத்துக்குத் திரும்பியபோது, அவரது உள்ளம் பூரித்திருந்தது. கிராமத்து மக்களிடம் தமக்கு இருக்கும் ஆதரவை எண்ணி அவர் பெரிதும் மகிழ்வடைந்தார்.

+++++++++++++++++++++++

அத்தியாயம் பன்னிரண்டு



பெரிய கிளாக்கர் சுப்பிரமணியத்தினால் அவரது இடமாற்றத்தை எவ்வகையிலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் இப்போது றப்பர் தோட்டத்துக்கு வேலை ஏற்றுச் சென்றுவிட்டார். கடந்த ஒரு கிழமையாக புதிய பெரிய கிளாக்கர் தோட்டத்து ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.



அன்று வந்த கடிதங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த துரை “கோலிங் பெல்லை” அமுக்கினார். தனது அறையில் இருந்த பெரிய கிளாக்கர் எழுந்து துரையின் அறையின் உள்ளே நுழைந்த போது, மேசையிலிருந்த டெலிபோன் அலறியது. அதை எடுத்துக் கதைத்துவிட்டு போனை கீழே வைத்தார் துரை. பின்னர் பெரிய கிளாக்கரைப் பார்த்துக் கூறினார்.



““மிஸ்டர் பெரேரா, நமது தோட்டத்துக்கு புதிதாக ஆறு “குப்பவைசர்கள்” வர இருக்கிறார்கள். எனக்கு மாவட்டக் காரியாலயத்தி லிருந்து அறிவித்தல் வந்திருக்கிறது””



““எப்போது வருகிறார்கள் சார்?”” என்றார் பெரிய கிளாக்கர் ஆவலுடன்.



““எதிர் வரும் முதலாம் திகதியே அவர்கள் வேலைக்கு வரவிருக்கின்றார்கள். தோட்டங்களில் அவர்களுக்கு வேலை செய்து எவ்வித அனுபவமும் இல்லை. இங்கு வந்தபின்பு தான் அவர்கள் வேலை பழகவேண்டும்.



““சரி சார், இது சம்பந்தமாக நான் ஏதாவது செய்ய வேண்டுமா?””



சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த துரை பெரிய கிளாக்கரின் பக்கம் திரும்பி, ““உண்மையில் இந்தத் தோட்டத்தில் சுப்பவைசர் வேலை எதுவும் காலியாக இல்லை. ஆனாலும் அரசாங்கம் அனுப்பும்போது நாம் ஏற்கத்தான் வேண்டும். அவர்கள் வந்தவுடன் அவர்களுக்குரிய இருப்பிட வசதிகளை நீர்தான் செய்ய வேண்டும்”” என்றார்.



““மிகவும் நல்லது சார், அதைப்பற்றி நான் கவனித்துக் கொள்கிறேன்””



துரை அது சம்பந்தமான கடிதத்தை பெரிய கிளாக்கரிடம் கொடுத்தார்.



கடிதத்தைப் பெற்ற கிளாக்கர் சற்றுத் தயங்கியபடி, ““சார், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கூறவேண்டும்@ இப்போது அநேகமான கடிதங்கள் சிங்கள மொழியில்தான் எமக்கு வருகின்றன. இங்கு எனக்குக் கீழே கடமைபுரியும் ஒருவருக்கும் அந்த மொழி தெரியாது. அதனால் இந்த ஆபீஸில் பலவேலைகள் தாமதமாககி கொண்டிருக்கின்றன”” எனக் கூறினார்.



““நாங்கள் இந்த ஆபீஸில் ஆங்கில மொழியிலேதான் கடிதத் தொடர்பு வைத்திருப்பது வழக்கம். அதையே நாம் தொடர்ந்தும் செய்வோம்”” என்றார் துரை.



““நீங்கள் சொல்வது சரி சார். ஆனால், நமக்கு வரும் கடிதங்கள் யாவும் சிங்கள மொழியிலேயே வருகின்றன அந்த மொழியிலே தேர்ச்சியுள்ள ஒருவர் இங்கிருந்தால் நல்லதென நினைக்கின்றேன்.””



““ஏன் உமக்கு நன்றாகச் சிங்களம் தெரியும்தானே. நீரே அந்தக் கடிதங்களை மொழி பெயர்த்துக் கொடுக்கலாமல்லவா?””



““ஆமாம் சார், ஆனாலும் எனக்கு வேலைகள் அதிகமாக இருக்கும்போதே, அல்லது நான் எப்போதாவது லீவில் செல்லும்போதோ, சிங்கள மொழி தெரிந்தவர் ஒருவர் இருந்தால் உதவியாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.””



துரைபதில் ஏதும் கூறாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.



““இங்கே பாருங்கள் சார், சுப்பவைசர்களாக வரப்போகும் ஆறு பேரும் சிங்கள இளைஞர்கள் தான் என இந்தப் பெயர்களிலிருந்து நாம் ஊகிக்க முடிகிறதல்லவா? வருகின்ற எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியுமென நாம் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் சிங்கள மொழியிலேதான் தங்களது கடமையைச் செய்யப் போகின்றார்கள். இனி வருங்காலத்திலும் சிங்கள மொழி மட்டும் தெரிந்தவர்களே இங்கு வேலைக்கு வரவும் கூடும். அதனாலேதான் நாங்கள் சிங்கள மொழி தெரிந்த ஒருவரை டைப்பிஸ்டாக வைத்துக்கொள்வது நல்லது என எண்ணுகிறேன்.””



““நீர் சொல்வது சரிதான். நமக்கு சிங்கள மொழி தெரிந்த “டைப்பிஸ்ட்” தேவையென நமது மாவட்டக் காரியாலயத்திற்கு தெரிவிப்போம்”” என்றார் துரை சிகரட் ஒன்றைப் பற்றவைத்தபடி.



““எனது அபிப்பிராயமும் இதுதான் சார், இது சம்பந்தமான கடிதத்தை ரடப் பண்ணிக்கொண்டு வந்து தருகிறேன்”” எனக் கூறிவிட்டு”” எனக் கூறிவிட்டு பெரிய கிளாக்கர் தனது அறைக்குச் சென்றார்.



துரை சிங்களவராக இருந்தபோதிலும் அவருக்கு அம்மொழி நன்றாகத் தெரியாது. அவர் ஆங்கிலத்திலே தான் கல்வி பயின்றவர். அதனால் பெரிய கிளாக்கர் கூறிவிட்டுப்போன செய்தி அவருக்கு குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தது. தனது ஆசனத்தில் அமர்ந்தவாறு ஏதோ சிந்தித்தவண்ணம் அவர் சிகரட் புகையை ஊதிக் கொண்டிருந்தார்.



பெரிய கிளாக்கர் பெரேரா தனது அறையில் இருந்தபடியே கடிதம் ஒன்றை எழுதித் தயாரித்துக் கொண்டிருந்தார்.



அவரது மருமகள் முறையிலான பெண்ணொருத்தி சிங்களத்தில் தட்டச்சுப் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தாள். புதிதாக தோற்றுவிக்கப்படும் வேலையில் அவளை எப்படியாவது நுழைத்துவிடலாம் என்ற நம்பிக்கை பெரிய கிளாக்கருக்கு இப்போது ஏற்பட்டிருந்தது.



எப்படியாவது கட்சி அமைப்பாளரைச் சந்தித்து ஏற்ற ஒழுங்குகளைச் செய்துவிட வேண்டும் என்ற சிந்தனையுடன் அவர் கடிதத்தை டைப் அடிக்கத் தொடங்கினார்.

++++++++++++++++++++

அத்தியாயம் பதின்மூன்று



தொழிலாளர்களின் நன்மை கருதி தோட்டத்தில் புதிதாக சங்கக்கடை திறந்திருந்தார்கள். கடையில் அன்று மாலை ஒரே கூட்டமாக இருந்தது. சிறுவர்கள் கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்குமாக ஓடித்திரிந்தனர். பொருட்கள் வாங்குவதற்கு அதிகமானோர் வந்திருந்தபடியால் எல்லோரும் ஒருவருக்குப் பின் ஒருவராக ~கியூவில்| நின்றிருந்தனர். கரத்தை றோட்டு வரைக்கும் கியூவரிசை நீண்டிருந்தது.



மனேஜர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைப் பணத்திற்கு சாமான் வாங்குபவர்களுக்கு ரசீதை எழுதிக் கொடுத்து, பணத்தை வாங்கி லாச்சியில் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக இருக்கும் ~பில்கிளாக்கர்| கடனுக்குச் சாமான் வாங்குபவர்களுக்கு வேகமாக பில்களை எழுதிக் தள்ளினார்.



சாமான்களை நிறுத்திக் கொடுப்பதற்காக ஒருவர் தராசின் அருகிலும் வேறொருவர் அவருக்கு உதவியாக சாமான்கள் எடுத்து கொடுத்துக் கொண்டும் இருந்தார். சாமான்களை நிறுப்பவரது கை துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தது.



““அட யாருடா அங்க சத்தம் போட்டுக்கிட்டிருக்கிறது. ஒழுங்கா நின்று சாமானத்தை வாங்கிகிட்டு போங்களேன். மாடுமாதிரி அடிச்சிக் கிட்டு கெடக்குறானுக”” கறுப்பண்ணன் கங்காணி உரத்த குரலில் கூறினார்.



அவரது கையில் பெரிய உறை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.



““ஏய் யாருடா அங்க இடையில் பூர்றது. கங்காணி கங்காணி, அங்க பாருங்க இடையில் பூர்றானுங்க. அப்ப நாங்க எப்புடீங்க சாமான் வாங்கிறது?”” வரிசையில் நின்றிருந்த ஒருவன் கத்தினான்.



““இப்ப யாராச்சும் போலிங்கிலை பூந்திங்கனா கொழப்பந்தான் வரும். இன்னிக்கு சாமான் வாங்காட்டியும் பரவாயில்லை”” வரிசையில் பின்னால் நின்றிருந்த வேறொருவன் கத்தினான்.



““அட ஏம்பா இந்த ஆம்புளை ஆளுங்க எல்லாம் இப்புடி சத்தம் போடுறாங்களோ தெரியாது@ பொம்புளை ஆளுங்க நிக்கிறோமுனு கொஞ்சமாவுது எடங் கொடுக்கிறாங்களா? மிச்சமோசம்”” என முணுமுணுத்தான் அங்கே நின்ற பெண்களில் ஒருத்தி.



““இந்தா பாருங்க, இந்த பொம்பளை ஆளுங்களுக்கு கொஞ்சம் எடங் கொடுங்க. அவுங்க சாமான் வாங்கிட்டு போனாப்புறம் நாம வாங்கலாம். ஏன்தான் இப்புடி அடிச்சிக்கிறாங்களோ தெரியாது. கோப்புரெட்டி கடை என்னா ஓடியா போவப் போவது?”” சத்தம் போடாம நின்னு சாமான் வாங்குங்களேன்”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி பலமாக.



அப்போது அங்கே வந்த வீரய்யா என்னாங்க கங்காணி சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க”” எனக் கேட்டபடி கறுப்பண்ணன் அருகிலே சென்றான்.



““இந்தப் பயலுகளோட இன்னிக்கு சாமான் வாங்க முடியாது. கோச்சிக்கி போறமாதிரி அடிச்சிக்கிறாங்க. கடனுக்குனு சொன்னா போதும் ஆடிக்கிட்டு சாமானுங்களை அள்ளுவாங்க, அப்புறம் செக்குறோலுல கடன் வந்தவொடன ஆட்டமெல்லாம் அடங்கிப் போயிடும்”” கறுப்பண்ணன் கங்காணி வீரய்யாவிடம் கூறிவிட்டு ஒரு வாய்க்கு வெற்றிலை போட்டுக் கொண்டார்.



வாசல் வழியாக கடைக்குள் எட்டிப் பார்த்த வீரய்யா, இன்னிக்கு கோப்புறட்டில ரொம்ப சாமான் வந்திருக்குப் போல இருக்கே. துணியெல்லாம் வந்திருக்கே. அப்புறம் என்னா? தோட்ட ஆளுங்கள இனி கையில புடிக்க ஏலாது? எனக் கூறிவிட்டுச் சிரித்தான்.



““ஆமா வீரய்யா, காலையிலை யூனியனில இருந்து நெறைய சாமான் வந்திச்சாம். நல்ல கருவாடெல்லாம் வந்திருக்கு. ஒரு ஆளுக்கு அரை றாத்தல்படி கொடுக்குறாங்களாம்”” என்றார் கறுப்பண்ணன், வாயில் ஒரு பக்கமாக வெற்றிலையை அதக்கிக் கொண்டு.



““அப்ப நல்லதுதான்.... டவுனுல ஒரு றாத்தல் கருவாடு ஆறு ரூபா@ அதும், அந்த வெலை கொடுத்து வாங்கிறதுக்கு சாமான் தட்டுப்பாடா இருக்கு, இங்க என்ன வெலை போடுறாங்களாம்? அருகே நின்ற ராமு காதிலே செருகி வைத்திருந்த பீடியை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டு கேட்டான்.



அப்போது கடைவாசலில், வாங்கிய பொருட்களை உறையிலே போட்டுக் கொண்டிருந்த ராக்கு ஏதோ சிந்தித்து விட்டு கடையிலே கொடுத்த பில்லை எடுத்துப் பார்த்தாள்.



““வீரய்யா, கொஞ்சம் இங்க வாப்பா, எந்தெந்த சாமானுக்கு என்ன வெலை போட்டிருக்காங்கன்னு கொஞ்சம் வாசிச்சு சொல்லிப்புடு.””



ராக்கு வீரய்யாவை அழைத்தாள்.



““என்னக்கா நீங்க ஒன்னு.... எல்லாம் சரியாத்தான் போட்டிருப்பாங்க... டவுண் கடையில மாதிரி நெனைச்சுக் கிட்டீங்களா.... இது கோப்புரட்டிகடை”” எனக் கூறிக் கொண்டே மில்லை வாங்கினாள் வீரய்யா, பின் அதனை உற்றுப் பார்த்துவிட்டு, ““என்னாக்கா ஒன்னும் வெளங்கல சிங்களத்தில் இல்லியா எல்லாம் எழுதியிருக்கு”” என முணுமுணுத்தான்.



““என்னா தம்பி வெளங்கலியா. இது என்ன சாமான்னு பாத்துச் சொல்லிப்புடு. அதுக்கு அவ்வளவு வெலை போட்டிருக்கு?”” ராக்கு மீண்டும் வீரய்யாவை துரிதப்படுத்தினாள்.



““அதுக்கு ரெண்டு ரூபா தெண்ணூரு சதமுனு போட்டிருக்காங்க. என்ன சாமான்னுதான் வெளங்கல. எல்லாம் சிங்கள ஆளுங்களை கொண்டு வந்து போட்டுக்கிட்டு வேலை செஞ்சா, யாருக்குத்தான் வெளங்கப் போவுது. ஒரு தமிழ் ஆளுங்ககூட கோப்புரட்டி கடையில வேலை இல்லை”” எனக் கூறினான் வீரய்யா.




““அப்போது பக்கத்தில் நின்ற ராமு, ஏதோ ஞாபகம் வந்தவனாக, ““ஆமா, பார் சோப் ஏதும் வாங்கியிருக்கீங்களா?”” என ராக்குவைப் பார்த்துக் கேட்டான்.



““ஆமாம் தம்பி. பார் சோப்பு சவுக்காரம் ஒன்னு வாங்கி யிருக்கேன்.”” என்றாள் ராக்கு.



““அப்ப அதுக்குத்தான் அந்த வெலை. பார் சோப்புக்குத்தான் இரண்டு ரூபா தொண்ணூறு சதமுனு சொல்லிக்கிட்டாங்க என்றான் ராமு. பெரிய வீஷயத்தைக் கண்டு பிடித்தவன் போல.



ஆநரம் செல்லச் செல்லச் கடையிற் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரே சத்தமும் கூச்சலுமாக இருந்தது.



அப்போது, மனேஜர் உள்ளே இருந்தபடியே, ““இந்தா சத்தம் போட வேனாங், யாருங் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா நாங் சாமாங் கொடுக்கிறத நிப்பாட்டி போடுறது. எல்லாங் ~போலிங்கில| வந்து சாமான் எழுதி வாங்கு. இனி யாருங் சத்தம் போட்டா கடையை மூடிப் போடுறது. இப்படி சத்தம் போட்டா எப்புடி நாங்க சாமாங் கொடுக்க முடியும்”” எனக் கோபமாக அங்கிருப்பவர்களைப் பார்த்துக் கூறினார். ஒருகணம் அங்கு அமைதி நிலைவியது.



““இந்தா இங்க பாருங்க. டவுனில் உள்ள கோப்புரெட்டிவ் கடையில் எல்லாம் இப்புடியா சத்தம் போட்டு அடிச்சிக்கிட்டு கெடக்குறாங்க.இந்த தோட்டத்து ஆளுங்க மிச்சம் மோசம். இன்னிக்கு வாங்க முடியாட்டி நாளைக்கி வாங்கிறது”” வீரய்யா கண்டிப்புடன் கூறினான்.



““இந்தா வீரய்யா. சான் எவ்வளவோ, சொல்லிப் பாத்துட்டேன். கேட்கமாட்டேங்கிறாங்க. இப்புடி நடந்து கிறதுனாலதாண்டா நம்பள தோட்டக்காட்டானு சொல்லுறானுங்க”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி.



““ராமு அங்கபாரு பில்லுக் கிளாக்கரை சிகரட்டை குடிச்சிகிட்டு சாதுசாப்பா எழுதிக்கிட்டு இருக்காரு. வெரசா எழுதுனாதானே நாங்க வாங்கிட்டுப் போகலாம்”” என்றான் குப்பன், வரிசையில் சிரமப்பட்டு நின்று கொண்டு,



““அதுசரி, அந்த மனேஜர் பாக்குறப்போ சரியா யாரு மாதிரி இருக்கு? நம்ப ரெண்டாவது கிளாக்கரையா மாதிரி இல்லியா இருக்கு”” குப்பனுக்கு பின்னால் நின்றவன் கூறினான்.



““மொக சாடையா பாத்தா அப்புடித்தான் தெரியுது. மனேஜரும் நம்ப மந்திரியோட ஊர்தானாம். கண்டக்கையாவுக்கு நல்ல பழக்கமாம்””



““இப்ப கோப்புறட்டிக்கட போட்டதில இருந்து ஆளுங்களுக்கு ரொம்ப வசதி. வேலைவுட்டு வந்தவாக்குல இப்படியே சாமானத்த வாங்கிக்கிட்டு போகலாம். டவுனு பக்கமே போகத் தேவையில்லை.

சேட்டு, துணி எல்லாங் கூட வந்திருக்கு.



““அது மட்டுமில்ல ராமு, எல்லா சாமானத்தையும் ~கொன்றோல்| வெலைக்கி கொடுக்கிறாங்க. கடனுக்கும் தாறாங்க. டவுன் கடையிலயா இருந்தா கடனுக்கு ஒன்னுக்கு ரெண்டா வேலை போடுவாங்க. தோட்டத்த அரசாங்கம் எடுத்தாப் பொறகு, இப்ப ஆளுங்களுக்கு ரொம்ப வசதி செஞ்சி கொடுக்கிறாப்போலதான் தெரியுது| என்றான் வீரய்யா!



““என்னாங்க கங்காணி, சாமான் வாங்கிட்டீங்கபோலை தெரியுது. மாசியெல்லாம் வாங்கியிருப்பீங்க, கொஞ்சம் தாங்க?”” என கறுப்பண்ணன் கங்காணியின் பக்கம் திருப்பிக் கேட்டான் ராமு.



~என்னா ராமு, ஒரு ஆளுக்கு ரெண்டு அவுன்சுதான் ரேசனுக்கு கொடுக்குறாங்க. நல்ல மாசிக் கருவாடு இருக்கு. நீ இன்னும் வாங்கல்லியா?””



““இல்லீங்க கங்காணி. இந்த கூட்டத்துல எப்படி எழுதுறது. அப்புறமேல மெல்ல எழுதி வாங்குவோம்”” என்றான் ராமு சாவதானமாக.



““அந்த பில் கௌhக்கரையாவுக்கு என்னாத்தம்பி ஒன்னும் வெளங்கல. நாம ஒன்னு சொன்னோமுனா அவருஒன்னு எழுதுறாரு தமிழே தெரியாது போல இருக்கு. நான் உப்பு ஐஞ்சிறாத்தல் எழுதச் சொன்னேன். அவரு என்னாடான்னா வெஙகாயத்த புடிச்சி ஐஞ்சி றாத்தல் எழுதி வச்சிருக்காரு. உப்பு இல்லாம இதைக் கொண்டே என்னா செய்யுறது”” என்றான் கறுப்பண்ணன் கங்காணி வெறுப்பாக



““அது சரிங்க கங்காணி அவருமேல ஒன்றும் குத்தமில்ல. உப்புக்கும், வெங்காயத்துக்கும் ~லுனு| ~லூணு| என்னுதாங் சிங்களத்துல சொல்லுறது. நீங்க உப்பு எழுத சொன்னதுக்கு அவரு வெங்காயத்தை எழுதிப்புட்டாரு| என்றான் அவர்களது சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த செபமாலை.



““என்னாமோ தம்பி நீங்கதான் எல்லாம் படிச்சிருக்கீங்க எங்க வூட்டில இருக்கிறதே ரெண்டு பேருதான். ரெண்டு பேத்துக்கு ஐஞ்சிறாத்த வெங்காயம் என்னாத்துக்கு””



““சரிங்க கங்காணி கொண்டு போயிட்டு நல்லா ரெண்டு மாசத்துக்கு வெங்காயச் சட்டினி வச்சி சாப்புடுங்க. நல்லாயிருக்கும்”” என்றான் ராமு சிரிப்பை அடக்கியபடி.



““எல்லாருக்கும் இந்த மாசம் கடனுக்கு சாமான்களை வாங்குறாங்க. சம்பளத்து வாசல்லதான் தெரியப் போவுது. அப்புறம் தலையில கைவச்சிக்கிட்டு போக வேண்டியது தான்”” என்றான் ராமு அங்கே கிடந்த மண்ணெண்ணெய் பரல்மேல் அமர்ந்து கொண்டு.



““இனிமே ரேசன் அரிசியெல்லாம் ஒவ்வொரு செவ்வாக்கெழம அன்னிக்குத்தான் கொடுப்பாங்களாம். முந்திமாதிரி அரிசி புடிக்க மடுவத்துல போய் காத்துக்கிட்டு இருக்கத் தேவயில்ல. வேண்டிய நேரத்துல இங்கேயே வாங்கிக்கிறலாம்”” என்றான் செபமாலை ராமுவின் பக்கம் போய் அமர்ந்து கொண்டு.




~பொதுவா இந்தத் தோட்டத்து ஆளுங்களுக்கு அடிக்கடி சாப்பாட்டு சாமான்தான் தட்டுப்பாடா இருக்கும். அந்த மொறையில இப்புடி ஒரு கோப்புறேட்டு கடைபோட்டு ஆளுங்களுக்கு சாமானுகளை இங்கேயே கொண்டு வந்து கொடுக்கிறதுபத்தி சந்தோஷப்பட வேண்டிய விசயந்தான்”” என்றான் வீரய்h.



அவனது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

++++++++++++++++++

அத்தியாயம் பதின்னான்கு



நாட்கள் சில கழிந்தன.



கண்டக்டரின் பங்களாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார் மாரிமுத்து தலைவர்.



““என்னாங்க இந்த நேரத்தில எங்க பொறப்படுறீங்க?”” இஸ்தோப்பில், அடுப்புக்கு முன்னால் இருந்து ரொட்டி சுட்டுக் கொண்டிருந்த பூங்கா அவரிடம் வினவினாள்.



““நம்ப கண்டக்கையா வூடுவரைக்கும் போயிட்டு வரணும்”” என்றார் தலைவர் கோர்ட்டை அணிந்துகொண்டு.



““கண்டக்கையாகிட்ட கதைக்கணும்னா நாளைக்கு காலையில கதைக்கலாமே@ நேத்து ராவெல்லாம் இருமிக்கிட்டுக் கெடந்தீங்க@ சொகமில்லாததோட ஏன்தான் இந்த பனியில போகனும்?””



““இவ ஒருத்தி, பெரிய மனுஷங்கிட்ட கதைக்கிறதுக்கு பொறப்படுற நேரத்திலயே ஏதாச்சும் தடுத்துத்தான் பேசிக்கிட்டு இருப்பா.... எனக்கும் அவருக்கும் எத்தனையோ ரகசியங்க இருக்கும். மலையில வைச்சு அத்தனை ஆளுங்களுக்கு முன்னுக்கு எப்புடிடி கதைப்பாரு”” எனக் கூறிக் கொண்டே சுருட்டொன்றை எடுத்துப் பற்றவைத்தார் தலைவர்.



““நானு ஒண்ணும் தடுத்துப் பேசலீங்க... இந்தாங்க சரியான பனி கொட்டுது, இந்த லேஞ்சிய தலையில சுத்திக்கிட்டு போங்க”” எனக் கூறிய பூங்கா, லேஞ்சித் துண்டை எடுத்துத் தலைவரிடம் கொடுத்தாள்.



அதனை வாங்கித் தலையிலே சுட்டிக்கொண்ட தலைவர் கண்டக்டர் வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.



கண்டக்டர் பங்களாவை நெருங்கியதும் புகைத்துக் கொண்டு வந்த சுருட்டை அணைத்துத் தனது கோர்ட்டுப் பைக்குள் திணித்துக் கொண்டே, பின்புறமாகச் சென்று சமையறைக்குள் நுழைந்தார் தலைவர்.



அங்கு சமையல் செய்து கொண்டிருந்த பெடியன், அவரைக் கண்டதும், ““ஐயா டவுணுக்குப் போயிருக்காரு@ ஒங்களை வந்தா இருக்கச் சொன்னாரு”” எனக் கூறினான்.



““ஐயாவர நேரமாகுமாடா? மொதல்லேயே போயிட்டாரா?””



““மடுவத்திலயிருந்து வந்தவொடனேயே உடுப்ப மாத்திக்கிட்டு போயிட்டாரு. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாரு.””



தலைவர் கோர்ட்டுப் பைக்குள் வைத்திருந்த குறைச்சுருட்டை மீண்டும் எடுத்து வாயில் பொருத்தி, அடுப்புக்குள் இருந்த கொள்ளிக் கட்டை ஒன்றை எடுத்துச் சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டார்.



சுருட்டுப் புகை தொண்டையை அருவியபோது அவருக்கு இருமல் பற்றிக்கொண்ட பலமாக இருமித் தொண்டைக்குள் புரண்டுவந்த சளியைக் காறி, பின் பக்கச் கதவு வழியாக வெளியே எட்டித் துப்பினார்.



கண்டக்டர் கையில் ஏதோ பார்சலுடன் முன்புறக் கதவால் உள்ளே நுழைந்தார்.



கண்டக்டர் வருவதைக் கண்ட தலைவர் கையிலே இருந்த சுருட்டை வீசிவிட்டு மெதுவாக நடுக் காம்பராவுக்கு வந்தார்.



““சலாமுங்க!””



பதிலுக்கு அவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்த கண்டக்டர். பார்சலை மேசையின் மேல் வைத்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சோம்பல் முறித்துக் கொண்டார்.



பின்னர் தலைவரைப் பார்த்து, ~ஓங்ககிட்ட ஒரு முக்கியமான வெசயங் கதைக்கத்தாங் நாங் வரச் சொன்னது..... அந்த ஓரம் போடுறதுக்கு ஒங்களுக்கு ~கொன்றாக்| தாரது சொல்லி சொன்னது தானே?””



““ஆமாங்க! அமைப்பத்திதான் அன்னிக்கி சொன்னீங்க. அப்புறம் ஒரு வார்த்தைகூட கதைக்கவே இல்லீங்களே”” எனக் கூறிய தலைவர் பலமாக இருமினார்.



““என்னாங்க தலைவர் ஒடம்புக்கு சரியில்லையா? ரொம்ப இருமுறதுதானே. அதை நீங்க கவனிக்க வேணுங்””



““அப்புடியா அப்போ கொஞ்சம் சாராயங் அடிச்சா எல்லாங் சரியாப் போறதுதானே”” எனக்கூறி கண்டக்டர், குசினிப் பக்கம் திரும்பி பொடியனிடம், ““இந்தா பொடியன் நம்ப தலைவருக்கு கொஞ்சங் சாராயங் ஊத்திக்குடு”” எனக் கட்டளையிட்டார்.



தலைவர் தயங்கியபடி, ““அதெல்லாம் என்னாத்துங்க... ஐயா முன்னுக்கு அதெல்லாம் குடிக்கலாமுங்களா? எனக்கு வேணாமுங்க”” எனக் கூறினார்.



““சும்மா வெட்கப்பட வேணாங் தவைர். குசினிக்குப் போய் குடிங்க. நாங் உடுப்பு மாத்திக்கிட்டு வாறது”” எனக் கூறிவிட்டு அறைக்குள் எழுந்து சென்றார் கண்டக்டர்.

குசினிப் பக்கம் தலைவரை அழைத்துச் சென்ற பெடியன், ஒரு கிளாஸில் சாராயத்தை ஊற்றி அவரிடம் கொடுத்தான்.



அதனை வாங்கி ஒரே மிடறில் குடித்து முடித்த தலைவர், ““இன்னும் கொஞ்சம் ஊத்துடா”” எனக் கூறியபடி பெடியனிடம் இருந்த போத்தலைப் பிடுங்கி கிளாஸில் மீண்டும் சாராயத்தை நிரப்பி அதனையும் குடித்து முடித்தார்.



““என்னாங் தலைவர் அடிச்சதா? இப்போ எப்படி இருக்கு....? தடிமல் எல்லாங் சரியாப்போங்”” எனக்கூறிக் கொண்டே அறையிலே இருந்து வெளியே வந்த கண்டக்டர், சாரத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.



““கொஞ்சந்தாங்க குடிச்சேன். நான் இதெல்லாம் ரொம்ப பாவிக்கிறது இல்லேங்க”” எனக் குழைந்தபடி குசினியிலிருந்த தலைவர், கண்டக்டரின் முன்னால் வந்தார்.



நாற்காலியில் உட்கார்ந்தபடி சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்ட கண்டக்டர். ஏதோ சிந்தித்தவாறு, ““தலைவர், நான் ஒரு முக்கியமான விசயம் சொல்றது@ யாருக்குங் கூடாது”” எனக் கூறிவிட்டு தலைவரை உற்றுப் பார்த்தார்.



““என்னங்க ஐயா அப்புடி சொல்லுறீங்க@ நம்ப ரெண்டு பேத்துக்குமுள்ள ரகசியம் எப்புடீங்க மத்தவங்களுக்கு தெரியப் போவுது? என்றார் தவைர் அசட்டுச் சிரிப்புடன்.



““நம்ப ஓரக் காம்பராவில் ஓரங் கொஞ்சங் குறையுது. யாருங் களவெடுத்ததா சொல்லத் தெரியாது. நான் இன்னிக்குத்தாங் கவனிச்சது.””



““அப்புடீங்களா! இது தொரைக்கு தெரிஞ்சா ரொம்ப கரச்சலுங்களே”” எனப் பதட்டத்துடன் கூறினார் தலைவர்.



““ஆமா தலைவர்@ அதிங்தான் நான் ரொம்ப யோசிக்கிறது. தொரை இப்போ லீவுலை போயிருக்குத்தானே. அவரு வந்தா, என்னாங் சொல்லுறது சொல்லித்தாங்க. நான் பயப்புடுறது.... யாருங் களவெடுத்ததோ, இல்லாட்டி அன்னிக்கு ஓரங் கொண்டுவந்த லொறிக்காரன் ஏதுங் குறைச்சு இறக்கிப் போட்டதோ தெரியாது@ இந்தத் தோட்டத்தில யாருங் களவாணி இருக்கிறதா?””



கண்டக்டரின் முகத்தில் கலக்கம் தெரிந்தது.



““தோட்டத்தில் அப்புடி யாரும் களவாணி இல்லீங்க@ இதுவரைக்கும் நம்ம தோட்டத்தில இப்புடி ஒரு சங்கதி நடக்கலீங்க”” என யோசனையுடன் கூறிய தலைவர், ““ஐயா ஓரக் காம்பராவை ஒடச்சா எடுத்திருக்காங்க?”” எனக் கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார்.



““அதிங்தாங் இல்லே தலைவர்..... காம்பராவிலே ஒரு எடத்திலேகூட ஒடச்சிருககிறதா தெரியல்ல. அதுதான் எனக்கு மிச்சங் குழப்பமாயிருக்கு””



““ஐயா, அப்புடீன்னா சந்தேகமே இல்லீங்க, அந்த லொறிக்காறன் தாங்க கொறைச்சு இறக்கிப் போட்டு கணக்குக் காட்டிட்டுப் போயிட்டான்”” என்றார் தலைவர் முடிவாக.



““ஆமாங், ஆமாங் தவைவர். அதிங்தான் நானும் நெனைச்சது. அன்னிக்கி லொறியில இருந்து ஓரம் இறக்கினப் நாங் தேத்தண்ணி குடிக்க பங்களாவுக்கு வந்தது. அப்புறங் போய் நாங் ~செக்| பண்ணி பாக்க இல்லை. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... அந்த நேரத்தில தாங் இது நடந்திருக்கு”” எனக் கூறிவிட்டுத் தலையாட்டினார் கண்டக்டர்.



““காம்பரா ஒடைக்காம இருக்கிறப்போ வேறு யாரும் களவெடுத்திருக்க முடியாதுங்க. அந்த லொறிக்காரன் தாங்க ஒங்களை ஏச்சுபிட்டான்”” என்றார் தலைவர் தலையை ஆட்டியபடி.



““ஆமாங் தலைவர்@ நம்ப தொர லீவு முடிஞ்சு வாறதுக்கு முந்தி நாம தொரைக்கு தெரியாம எப்புடியாச்சுங் சமாளிக்க வேணுங்.... அதுக்கு நீங்கதாங் ஒதவி செய்ய வேணுங்.””



““நானுங்களா? நான் எப்புடீங்க இந்த செவயத்தில ஒதவி செய்யிறது? தொரை ஏதுங் கண்டுக்கிட்டாருன்னா அப்புறம் என்னை தோட்டத்தைவுட்டே வெரட்டுப்புடு வாருங்களே”” எனக் கூறினார் தலைவர் கலக்கத்துடன்.



““அதப்பத்தி பயப்புட வேணாங் தலைவர்@ அதுக்குத் தாங் நாங் ஒரு ஐடியா நெனச்சு வச்சிருக்கிறது.... நாளைக்கு நாங் கொஞ்சங் ஓரங் தாறது. நீங்க ஆளுங்களை வச்சிரோட்டு பக்கமா இருக்கிற மலைக்கு அந்த ஓரத்தை போடுங்க@ தொர வந்து கேட்டா நாங் எல்லா மலைக்கும் ஓரம் போட்டு முடிஞ்சது சொல்லி சொல்லுறேங்.... ஒங்க கிட்ட கேட்டாலுங் அப்புடியே சொல்ல வேணுங்.””



““ஐயோ எப்புடீங்க நான் திடீருனு அபாண்டமா பொய் சொல்லுறது? என் வாயில பொய்யே வராதுங்களே”” என்றார் தலைவர் குழப்பத்துடன்.



““சும்மா பயப்புடாம, நாங் சொல்லுறத கொஞ்சங் கேளுங்;க தலைவர். ஒங்க பேருக்கு உரம் போடுறதிக்கு முடிஞ்சு வாறதுதானே... நான் டயறியில எல்லாங் எழுதியனுப்புறது”” எனக் கூறிக்கொண்டே எழுந்திருந்தார் கண்டக்டர்.



““சரிங்க ஐயா. அப்ப நான் போயிட்டு வாறேங்க@ நாளைக்கு அந்திக்கு வந்து ஒங்களை சந்திக்கிறேங்க எனக் கூறிய தலைவர். கண்டக்டரிடம் விடை பெற்றுக் கொண்டு லயத்துக்குப் புறப்பட்டார்.



அவரு மனதில் இப்போது பலவிதமான கற்பனைகள் விரியத் தொடங்கின.

++++++++++++++++++=

அத்தியாயம் பதினைந்து



பண்டா முதலாளி, கண்டக்டரைச் சந்திப்பதற்காக அவரது பங்களாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.



மடுவத்தைச் சமீபித்த போது அங்கே சில தொழிலாளர்களும், கண்டக்டரும் இருப்பதை அவர் கவனித்தார். மடுவத்தின் வாசலில் நின்றபடியே கண்டக்டருக்குக் கேட்கும்படியாக, ““ஆயூபோங் மாத்தியா”” என அவருக்கு வணக்கம் தெரிவித்தார் முதலாளி.



நிமிர்ந்து பார்த்த கண்டக்டர் பண்டா முதலாளியைக் கண்டதும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, ““எனது பங்களாவில் போய் இருங்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன்”” எனக் கூறினார்.



பண்டா முதலாளி கண்டக்டரின் பங்களாவிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தார். சில நிமிட நேரத்தில் கண்டக்டர் பங்களாவை வந்தடைந்தார். அவரைப் பின்தொடர்ந்து கறுப்பண்ணன் கங்காணியும் ~செக்றோல்| புத்தகத்தை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார்.



தனது தொப்பியைக் கழட்டி ஸ்டாண்டில் மாட்டிய கண்டக்டர். ““முதலாளி, நீங்கள் கொஞ்சம் தாமதித்துப் போகலாம்தானே. அவசர வேலையொன்றும் இல்லையே?”” எனக் கேட்டுவிட்டுச் சிரித்தார்.



““இல்லை மாத்தியா, அப்படி ஒன்றும் இல்லை. உங்களுக்கு ஏதும் வேலை இருக்குமல்லவா. என்னால் உங்களுக்கு சிரமம் இல்லாமல் இருந்தால் சரிதான்.””



““நாளைக்கு போயா தினமாக இருப்பதால் தோட்டத்தில் வேலையில்லை. அதனால் இன்று இரவு நான் செக்றோல் செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் என்னுடன் இரவுச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டுப் போகலாம்”” என மகிழ்வுடன் கூறிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டார் கண்டக்டர்.



““ஏன் உங்களுக்கு வீண் சிரமம். இன்னொரு முறை அறிவித்துவிட்டு வந்து ஆறுதலாக இருந்துவிட்டுப் போகிறேன் என்றார் பண்டா முதலாளி அசட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி.



““அப்படி எனக்கு எவ்வித சிரமமும் இல்லை, கட்டாயம் இன்று என்னோடு இருந்து சாப்பிடுவிட்டுத்தான் போக வேண்டும்”” எனக் கண்டிப்பாக கூறிய கண்டக்டர். பின்பு ஏதோ சிந்தித்துவிட்டு, கறுப்பண்ணன் கங்காணியின் பக்கந் திருப்பி, ““இந்தா கறுப்பண்ணன் டவுணுக்குப் போய் போத்தல் ஒன்னு கொண்டுவரனுங், சுறுக்கா வரவேனுங்”” எனக் கூறிக்கொண்டே தனது அறைக்குச் சென்று இரண்டு பத்து ரூபா நோட்டுக்களை எடுத்துவந்து, கறுப்பண்ணன் கங்காணியிடம் கொடுத்தார்.



““வேற ஏதும் வாங்கிட்டு வரணுமுங்களா? சிரட்டு முட்டை ஏதும் வாங்கனுமுனா...”” என மெதுவாகக் கேட்டார் கறுப்பண்ணன்.



““ஆங், கங்காணி சிகரட் ஒரு பக்கெட் வாங்கி வரவேணுங். அந்த சமையல் பொடியங்கிட்ட முட்டை இருக்கான்னு கேளுங்க. இல்லாட்டி முட்டையும் வாங்கி வரோனுங்”” எனக் கூறிவிட்டு பண்டா முதலாளியின் எதிரே போய் அமர்ந்தார் கண்டக்டர்.



பண்டா முதலாளி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தான் அணிந்திருந்த கோட்டின் உள்ளே கையை நுழைத்து நோட்டுக்கள் அடங்கிய ஒரு கட்டுப்பணத்தை எடுத்து கண்டக்டரிம் கொடுத்தார்.



““இந்தாருங்கள் இதில் எழுநூறு ரூபா இருக்கின்றது. வைத்துக் கொள்ளுங்கள். ஏதும் குறையாக இருந்தால் சொல்லுங்கள் அதை நான் தந்துவிடுகிறேன்””



““இல்லையில்லை, இது போதுமானது| எனக் கூறிவிட்டுச் சிரித்தார் கண்டக்டர்.



““உங்களது மனத்திருப்திதான் எனக்கு முக்கியம் இனிமேலும் நமக்குள்ள தொடர்பு நீடிக்க வேண்டுமல்லவா”” எனக் கூறிவிட்டுப் பலமாக சிரித்தார் பண்டா முதலாளி.



““இதில் என்ன கணக்குப் பார்க்க இருக்கின்றது. கூடக் குறைவாக இருந்துவிட்டால் மறுமுறை உரம் தரும்போது அதை ஈடு செய்யலாம் அல்லவா””



““அதெல்லாம் சரி. உங்களது தொழிலுக் ஏதும் பங்கம் ஏற்படாத வகையில் நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும், அதுதான் முக்கியம்”” என்றார் பண்டா முதலாளி.



““தோட்டத்து தலைவரையே என் வசமாக்கியுள்ளேன். அதனால் எதையும் சமாளித்து விடலாம்”” இப்படிக்கூறி விட்டு கண்டக்டர் பலமாகச் சிரித்தார்.



““பிறகென்ன... நீங்கள் மிகவும் சமார்த்தியசாலிதான்”” எனக் கூறிச் சிரித்தார் பண்டா முதலாளி.



““அதுசரி முதலாளி! இன்னும் சிறிது நேரத்தில் கோப்பரேட்டிவ் மனேஜர் இங்கு வந்து விடுவார். அதற்கு முன்பு நாம் கதைக்க வேண்டியதை கதைத்துவிட வேண்டும்.””



““அர் ஏன் இந்த வேளையில் இங்கு வருகிறார்?”” என யோசனையுடன் கேட்ட பண்டா முதலாளி தான் அப்படிக் கேட்டதை கண்டக்டர் தவறாகப் புரிந்து கொள்வாரோ என நினைத்து ஒருகணம் மௌனமானார்.



““தற்காலிகமாக அவர் எனது பங்களாவிலேதான் உணவருந்தி வருகிறார். நல்ல வசதியான வீடு கிடைத்த பிறகுதான் குடும்பத்தோடு வருவதாகத் தீர்மானித்துள்ளார். அது வரைக்கும் கடையின் பின் காம்பராவில் தங்கிக் கொண்டு இங்கு வந்து உணவருந்திச் செல்கிறார்””



““ஹா அப்படியா...”” எனக் கூறிய பண்டா முதலாளி சற்றுத் தயங்கிவிட்டு ““மற்றுமொரு விஷயம் உங்களிடம் கதைக்க வேண்டும்.. இது எனது குடும்ப விஷயம். இதில் உங்கள் உதவி எனக்குப் பெரிதும் தேவைப்படுகிறது”” எனக் கூறினார்.



““அப்படி என்ன பிரச்சினை உங்களுக்கு, ஏன் என்னிடம் சொல்லத் தயங்குகின்றீர்கள் தாராளமாகச் சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்”” என்றார் கண்டக்டர்.



““எனது அண்ணன் மகன் ஒருவன் இங்கு வேலைக்கு வருகிறான். உங்களுக்கு அவனை இப்போது நன்றானத் தெரிந்திருக்குமென நினைக்கிறேன்.””



““ஆமாம். பியசேனாவைத்தானே சொல்லகிறீர்கள்?””



““அவனேதான், அவன் இங்குள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பாக இருக்கிறானாம்.””



““இதை நானும் கேள்விப்பட்டேன். இங்கு தோட்டத்திலும் ஒரே பரபரப்பாகத்தான் எல்லோரும் கதைத்துக் கொள்கிறார்கள்”” என்றார் கண்டக்டர்.



““விஷயம் முத்திப்போயிருக்கிறது. இதற்கு நீங்கள் தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்ப மானமே இதிலேதான் தங்கியிருக்கிறது. அவன் வேறொரு இனத்தைச் சேர்ந்த பெண்ணைக் கலியாணம் செய்வதால் எம்மைத் தாழ்வாகத்தானே எல்லோரும் நினைப்பார்கள். கிராமத்திலேயே நான் சிறிது அந்தஸ்தோடு இருக்கிறேன். அதனை இவன் கெடுத்து விடுவான் போலத் தெரிகிறது””



““நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு எப்படித்தான் உதவி செய்ய முடியும்? எனக் கேட்டார் கண்டக்டர்.



““பியசேனா இந்தத் தோட்டத்துக்கு வேலைக்கு வருவதை நீங்கள் எப்படியாவது நிறுத்திவிட வேண்டும்.””



கண்டக்டர் சிறிது நேரம் யோசித்தார்.



““நீங்கள் சொல்வது போல் இலேசில் செய்துவிட முடியாது. பியசேனாவுக்கு விஷயம் தெரிந்தவன் போலத் தெரிகிறது. திடீரென அவனது வேலையை நிற்பாட்டினால் அவன் வேறு வழிகளில் எனக்குத் தொந்தரவு கொடுக்கவும் கூடுமல்லவா.””



““அப்படியென்றால் இதற்கு என்னதான் செய்யலாம்?”” என பண்டா முதலாளி கேட்டார்.



““ஏன் அந்தப் பெண்ணின் தந்தை மாயாண்டியிடமே இதைப்பற்றிக் கதைத்து ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமல்லவா”” என்றார் கண்டக்டர்.



““எப்படி ஒரு சாதாரண தொழிலாளியிடம் இதைப் பற்றிக் கதைப்பது? எனக்கு அவமானமாக இருக்கிறது. நீங்கள் தோட்டத்துக் கண்டக்டர் என்ற முறையில் மாயாண்டியைக் கூப்பிட்டு அவரிடம் நீங்கள் தோட்டத்துக் கண்டக்டர் என்ற முறையில் மாயாண்டியைக் கூப்பிட்டு அவரிடம் விஷயத்தைக் கூறி தொடர்ந்தும் அவரது மகள் பண்பு குறைவாக நடந்தால் குடும்பத்துக்கே வேலை நிற்பாட்டப் போவதாகப் பயமுறுத்தலாமல்லவா? இந்த உதவியை நீங்கள் கட்டாயம் எனக்காகச் செய்துதான் ஆகவேண்டும்”” என வேண்டினார் பண்டா முதலாளி.



கண்டக்டர் மீண்டும் சிறிது நேரம் யோசித்தார்.



““நீங்கள் கேட்கும்போது நான் எப்படி மறுப்பது? விரைவில் மாயாண்டியை அழைத்து இது விடயமாக எச்சரிக்கை செய்கிறேன். எப்படியும் அவர்களது தொடர்பை துண்டித்துவிட வேண்டும்.... அவ்வளவுதானே உங்களுக்காக அதனை நான் கட்டாயம் செய்கிறேன்”” எனக் கூறிவிட்டுச் சிரித்தார்.



அப்போது முன் வாசற் கதவு தட்டப்படும் சத்தங் கேட்டது. கண்டக்டர் எழுந்து சென்று கதவைத் திறந்தார்.



““ஆயூபோங்”” கண்டக்டரைப் பார்த்து வணக்கம் தெரிவித்த வண்ணம் கோப்பறேட்டிவ் மனேஜர் உள்ளே வந்தார்.



கண்டக்டர் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு ““இவர்தான் கோப்பரேட்டிவ் மனேஜர்”” என பண்டா முதலாளிக்கு அவரை அறிமுகப் படுத்தினார்.



““ஆயூபோங்”” என அவரைப் பார்த்துக் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார் பண்டா முதலாளி.



பதிலுக்கு வணக்கம் தெரிவித்த மனேஜர், ““உங்களைப் பற்றிக் கண்டக்டர் என்னிடம் கூறியிருக்கிறார். நான் உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகமும் இருக்கின்றது”” எனக் கூறினார்.



பண்டா முதலாளி சிரித்துவிட்மு ““ஏதாவது அரசியல் கூட்டங்களில் என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்”” என்றார்.



அப்போது பக்கத்திலிருந்த கண்டக்டர், ““சென்ற மாதங்கூட இவர் நமது மந்திரியை கிராமத்துக்கு அழைத்திருந்தார். கிராமத்தில் இவர் ஒரு பெரும்புள்ளி”” என மனேஜரிடம் கூறினார்.



““அப்படியா மிகவும் சந்தோஷம்”” எனக்கூறி சிகரட் பக்கெட்டை எடுத்து பண்டா முதலாளியிடம் நீட்டினார் மனேஜர்.



““நன்றி, நான் சுருட்டுத்தான் பாவிப்பது வழக்கம்”” எனக் கூறிப் பண்டா முதலாளி குழைந்து கொண்டார்.



கண்டக்டரும் மனேஜரும் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டனர்.



அப்போது கறுப்பண்ணன் கங்காணி சாராயப் போத்தலுடன் அங்கு வந்து சேர்ந்தார்.



கண்டக்டர் போத்தலைத் திறந்து மேசையிலிருந்த கிளாஸ்களில் சாராயத்தை நிரப்பினார். பின் பண்டா முதலாயியைப் பார்த்து, ““முதலாளி பொண்ட”” எனக் கூறி விட்டு மனேஜரைப் பார்த்து கண்களைச் சிமிட்டினார்.



மூவரும் சாராயத்தை அருந்தத் தொடங்கினர்.



ஒரு தடவை சாராயத்தை அருந்திவிட்டு மேசையில் வைத்த மனேஜர், ““உங்களது கிராமத்திலிருந்துதானே நமது கோப்புலட்டிவ் கடையில் ~சேல்ஸ்மென்| ஆக வேலை செய்யும் ரஞ்சித்தும் சோமபாலாவும் வருகிறார்கள். அவர்களை உங்களுக்குத் தெரியுமா?”” எனக் கேட்டார்.



““ஆமாம், அவர்களை எனக்கு நன்கு தெரியும். உங்களைப் பற்றிக்கூட அவர்கள் என்னுடன் அடிக்கடி கதைப்பார்கள். அது சரி எப்படி உங்களது கோப்புரட்டிவ் கடை நடக்கிறது? எல்லாப் பொருட்களுமே கிடைக்கிறதா?”” எனக் கேட்டார் பண்டா முதலாளி.



““ஆமாம். எல்லாப் பொருட்களுமே கிடைக்கின்றன. நல்ல வியாபாரமும் நடக்கிறது”” எனக் கூறிய மனேஜர் கிளாஸை மேசையில் வைத்தார். பின்னர் எதையோ நினைத்துக் கொண்டவர் போல், ““நீங்கள் கூட கிராமத்தில் கடை வைத்திருப்பதாக அறிந்தேன். உங்களது வியாபாரம் எப்படி? எங்கே பொருட்களை கொள்வனவு செய்கிறீர்கள்?”” எனக் கேட்டார்.



““அந்தப் பகுதியில் என்னுடைய கடை மாத்திரம் தான் இருக்கிறபடியால் வியாபாரம் பரவாயில்லை. முக்கியமாகப் பங்கீட்டுப் பொருட்களைப் பெறுவதுதான் சிரமமாக இருக்கிறது.””



““ஏன் பங்கீட்டுப் பொருட்களைப் பெறுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?”” எனக் கேட்டார் மனேஜர்.



““அப்படியான பொருட்களைக் கறுப்புச் சந்தையில் அதிக பணம் கொடுத்து வாங்கித்தான் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் எனக்கு சொற்ப இலாபமே கிடைக்கிறது.



““ஏன் மிஸ்டர் ரணசிங்க, நீங்கள் ஏதாவது வகையில் முதலாளிக்கு உதவ முடியுமா?”” எனக் கேட்ட கண்டக்டர் மனேஜரை பார்த்துச் சிரித்தார்.



““என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கொன்றும் விளங்கவில்லையே”” என நெற்றியை சுருக்கிக் கொண்டு கேட்டார் மனேஜர் ரணசிங்க.



““அதாவது நமது கோப்பரேட்டிவ் கடைக்கு வேண்டிய பொருட்களை நீங்கள் மாவட்ட யூனியனில்தானே வாங்குகின்றீர்கள்? அதனால் அங்கிருப்பவர்களை உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அவர்கள் மூலமாக நமது முதலாளிக்கும் சாமான்கள் கொஞ்சம் எடுத்துக் கொடுக்க முடியுந்தானே?””



மனேஜர் சிறிது யோசனையில் ஆழ்ந்தார்.



““என்ன யோசிக்கிறீர்கள் முதலாளியும் எங்களுடைய ஆள் தானே. அவருக்கு நாங்கள் உதவி செய்யத்தான் வேண்டும்”” என்றார் கண்டக்டர்.



““அதற்கில்லை, யூனியனில் இருப்பவர்களுக்கு ஏதாவது ~சம்திங்| கொடுத்தால் தானே அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கலாம். இந்தக் காலத்தில் யாரிடமிருந்தும் ஏதும் பெறவேண்டு மென்றால் அதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்”” எனக் கூறிவிட்டு பெடியன் கொண்டு வந்து வைத்த முட்டைப் பொரியலில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டார் மனேஜர்.



““அது எனக்குத் தெரியாதா மாத்தியா, அதற்கு வேண்டியதை நான் கொடுத்து விடுகிறேன்”” என்றார் பண்டா முதலாளி அசட்டுச் சிரிப்புடன்.



““மிஸ்டர் ரணசிங்க, அடுத்த முறை நீங்கள் யூனியனுக்குச் செல்லும் பொழுது முதலாளியையும் அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு நாங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்”” எனக் கூறிய கண்டக்டர் மெதுவாக குசினிப் பக்கம் எழுந்து சென்று சாப்பாடெல்லாம் தயாராக இருக்கின்றதா எனக் கவனித்தார்.



அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பண்டா முதலாளி தான் இருற்த கதிரையை நகர்த்தி மனேஜரின் அருகில் போட்டுவிட்டு இரகசியமான குரலில் ““றேசன் அரிசி ஏதும் மீதிப்பட்டால் கூறுங்கள். நான் அதற்குரிய பணத்தைத் தந்துவிட்டு பெற்றுக் கொள்னுகிறேன்”” எனக் கூறிக் கொண்டே மனேஜரின் வெற்றுக் கிளாசில் சாராயத்தை ஊற்றினார்.



மனேஜருக்கு போதை ஏறியிருந்தது.



““இம்மாதக் கடைசியில் இதைப் பற்றி நான் தெரிவிக்கின்றேன்”” என அவர் பண்டா முதலாளியின் காதில் கிசு கிசுத்தார்.



~வாருங்கள் உணவருந்தலாம்”” என அவர்கள் இருவரையும் குசினியில் இருந்தபடியே அழைத்தார் கண்டக்டர்!



இருவரும் தள்ளாடியபடியே எழுந்து சாப்பாட்டு மேஜையருகே சென்றனர்.



கண்டக்டர் கறுப்பண்ணன் அழைத்து, ““கங்காணி அந்த போத்தல் எல்லாங் எடு;த்து வைச்சிட்டு, அதில கொஞ்சங் சாராயங் இருக்கி... அத எடு;து அச்சிடுங்க”” எனக் கூறிவிட்டு சாப்பாட்டு மேசையருகே சென்றர்.



அன்று இரவு வெகுநேரம் வரை அவர்களது விருந்து நடந்து கொண்டிருந்தது.

+++++++++++++++++++

அத்தியாயம் பதினாறு



அன்று கறுப்பண்ணன் கங்காணி வேலைக்குப் போகவில்லை. அவருடைய வயலில் நாற்று நடும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஐந்தாறு பெண்கள் அந்தச் சிறிய வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். கண்டக்டரின் தயவினால் கங்காணிக்கும் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கும் எப்படியும் அன்று செக்றோலில் பெயர் விழுந்துவிடும்.



வயலில் துரிதமான வேலை நடந்து கொண்டிருந்தது அப்போது நாட்டிலுள்ள முக்கிய பிரமுகரான கிராம சேவகர் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் வயலுக்குள் நின்று கொண்டிருந்த கறுப்பண்ணன் அவரருகே சென்று, ““சலாங்க மாத்தியா@ என்ன இந்தப் பக்கமா வந்திருக்கீங்க?”” என வினயமாக வினவினார்.





““இந்த வயல்ல ஏன் நீங்க வேலை செய்யுறது?”” கிராம சேவகர் கறுப்பண்ணன் கங்காணியைப் பார்த்து சிறிது அதட்டலாகக் கேட்டார்.



““என்னங்கையா அப்புடி கேக்கிறீங்க@ இந்த வயலை எங்க பாட்டன் காலத்தில இருந்தே நான் தாங்கையா செஞ்சுக்கிட்டு வர்ரேனுங்க. தொரைக்கும் இது தெரியுமுங்க”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி குழப்பதுடன்.



““ஆங், அது நமக்குங் தெரியும். இப்ப தோட்டத்த அரசாங்கம் எடுத்ததினால இந்த வயல் எல்லாங் நமக்குத் தான் பொறுப்பா கொடுத்திருக்கு. இனிமே நாங் சொல்லாம இந்த வயலில் யாருங் வேலை செய்ய முடியாது”” என்றார் கிராமசேவகர் சற்றுப் பலமான குரலில்.



கறுப்பண்ணன் கங்காணி வெல வெலத்துப் போனார்.



சிறிது காலத்துக்கு முன்னர் கிராம சேவகர் அங்கு வந்து வயலைப் பார்த்துவிட்டுச் சென்றதும், அந்த வயல் தோட்டத்தில் எந்தப் பகுதியில் இருக்கிறதென்பதைக் குறிப்பெடுப்பதற்காகப் பக்கத்திலுள்ள தேயிலை மலைகளின் இலக்கங்களைக் கேட்டறிந்ததும், வயலுக்குத் தண்ணீர் வசதி இருக்கிறதா என்பதை வினவியதும் கறுப்பண்ணனுக்கு இப்போது நினைவில் வந்தது.



““இது என்னங்கையா அநியாயமா இருக்கு? நான் வேலை செஞ்சுகிட்டு இருக்கிறவயலையா அரசாங்கம் ஒங்களுக்கு கொடுத்திருக்கு? தோட்டத்தில் எத்தனையோ வயலுக கெடுக்கு@ அதைப் போயி வெட்டுங்க.””



““அந்தக் கதையெல்லாம் நமக்குத் தேவையில்லை. இந்த வயலைத்தான் நமக்கு வேலை செய்யச் சொல்லி டி.ஆர்.ஓ. சொல்லியிருக்கு.””



““ஒருத்தன் வேலை செஞ்சுகிட்டு இருக்கிற வயலைப் புடுங்கி, அடுத்தாளுக்கு கொடுத்துப்புடனுமென்னு அரசாங்கம் ஒண்ணும் சொல்லலை@ என்னோட வயலை நான் கொடுக்கமாட்டேன்”” கறுப்பண்ணன் கங்காணி சற்று விறைப்பாகக் கூறினார்.



““இந்தா, நீ மிச்சங் பேவேணாங். நீ இந்த வயலை வுட்டு இப்பவே போகவேணுங்! இல்லாட்டி நாங் பொலிஸ் கொண்டு வாறது.””



கிராம சேவகர் இப்படிக் கூறியபோது கறுப்பண்ணன் கங்காணி மிரண்டு போனார்.

““என்னங்கையா அப்புடி சொல்லுறீங்க... இந்த வயலுக்கு நான் எவ்வளவோ செலவழிச்சு வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்@ எப்புடீங்கையா எனக்குக் கொடுக்க மனம் வரும்”” கறுப்பண்ணன் கங்காணி கலக்கத்துடன் கூறினார்.



““அது எல்லாங் நமக்குத் தெரியாது. இனிமே இந்த வயல் பக்கம் யாருங் வரக்கூடாது. அப்புடி நம்ம பேச்சு மீறினா, பொலிசுக்குத் தான் நான் சொல்லுறது”” எனக் கூறிய கிராம சேகவர், மேலும் கறுப்பண்ணன் கங்காணியிடம் கதைக்க விரும்பாதவர்போல் விர்ரென்று திரும்பிப் போய் விட்டார்.



கறுப்பண்ணன் கங்காணிக்கு தொடர்ந்தும் வயலில் நின்று வேலை செய்வதற்கு முடியவில்லை. மனது ஒரே குழப்பமாக இருந்தது. கண்டக்டரைச் சந்தித்து அவரிடம் ஏதாவது ஆலோசனை கேட்கலாம் என்ற எண்ணத்துடன் கண்டக்டரைத் தேடிப் புறப்பட்டார் கங்காணி.



பதினான்காம் நம்பர் மலையில் தொழிலாளர்கள் கவ்வாத்து வெட்டிக்கொண்டிருந்தனர். கண்டக்டர் அதனை மேற்பார்வை பார்த்த வண்ணமிருந்தார்.



கறுப்பண்ணன் கங்காணி கலக்கத்துடன் வருவதைக் கண்டதும், ஏங் கங்காணி, ஏன் வந்தது? ஏதும் அவசரமா?”” எனக் கேட்டார் கண்டக்டர்.



““ஐயா, என்வூட்டு வயலை இந்த ~ஆராச்சி| வந்து வேலை ஒண்ணும் செய்ய வேணாமென்கிறாரு.... வயல் அவருக்குத்தான் சொந்தம் என்கிறாரு. இது என்னங்கையா பெரிய அநியாயமா இருக்கு. தொரைக்குத்தான் தெரியுமே, நான் இந்த வயல்ல மிச்ச நாளா வேல செஞ்சிக்கிட்டு வாறேனு.... எப்படியாச்சும் ஆராச்சிக்கிட்ட சொல்லி நம்ப வயல்ல எடுக்க வேணாமுன்னு சொல்லுங்க”” எனக் கெஞ்சும் குரலில் கூறினார் கங்காணி.



கண்டக்டர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ““என்னங்.... ஆராய்ச்சியா சொன்னது? அவர் வேற ஏதுங் சொன்னதா?”” எனக் கேட்டார்.

““வயலக் கொடுத்துப்புடாட்டி பொலிசைக் கூட்டி வாறதுன்னு சொல்லுறாங்”” கறுப்பண்ணன் கங்காணியின் குரலில் கலக்கம் தொனித்தது.



““அப்படியா அந்த ஆராச்சி சொன்னது? அப்பநாங்க ஒண்ணும் செய்ய முடியாதுதானே பொலிஸ் வந்தா கரச்சல்தானே”” எனக்கூறி கையை விரித்தார் கண்டக்டர்.



““ஒங்களுக்கு அந்த ஆராய்ச்சி நல்ல பழக்கந்தானுங்களே. அவருகிட்ட சொல்லி வயலை எடுக்க வேணாமுணு சொல்லுங்கையா?”” என மன்றாட்டமாகக் கூறினார் கங்காணி.



““அப்புடியில்லை கங்காணி. அரசாங்கத்தில சொல்லாம ஆராச்சி அப்புடி செய்யிறதில்லதானே@ நீங்க வேணுமுன்னா இதைப்பத்தி தொரைகிட்ட பேசிப் பாருங்க”” என்றார் கண்டக்டர் யோசனையுடன்.



““என்னங்கையா நீங்களே இப்புடி சொல்லிபுட்டா நான் யாருகிட்டதாங்க போவேன்?”” எனப் பதறியவாறு கேட்டார் கறுப்பண்ணன் கங்காணி.



““நமக்கு முடிஞ்சா நான் ஒங்களுக்கு ஒதவி செய்யிறது தானே கங்காணி.... எதுக்கும் நான் அந்த ஆராச்சிகிட்ட பேசிப் பாக்;கிறன்.””



கண்டக்டரின் பேச்சு கங்காணிக்கு நம்பிக்கையை இழக்கச் செய்தது. வயலை இழந்துவிட அவரது மனம் சிறிதும் ஒப்பவில்லை.



வேறு எவ்வித வழியும் தெரியாததால் அவர் துரையிடமே சென்று இதைப்பற்றி முறையிட்டு ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம் என்ற எண்ணத்துடன் கண்டக்டரிடம் விடை பெற்றுக் கொண்டு தோட்டத்து ஆபீசை நோக்கிக் கலவரத்துடன் நடந்தார்.



கறுப்பண்ணன் தோட்டத்து ஆபீசை அடைந்த வேளையில் துரை அங்கு இருக்கவில்லை.



பெரிய கிளாக்கர்தான் அவருடன் கதைத்தார்.



““சலாங்கையா..””



““ம்... சலாம்@ என்ன மனுஷன் இந்த நேரம் இங்க வந்தது?”” புதிய பெரிய கிளாக்கர் வினவினார்.



““தொரை இல்லீங்களா? அவருகிட்ட ஒரு முக்கியமான செவயம் கதைக்கணுமுங்க....””



““தொரைக்கிட்ட நீ நெனச்ச நேரம் கதைக்க வாறதா. போ... போ.. போயிட்டு வெள்ளிக்கிழமைதான் ஆபிஸ் நாள்@ அன்னிக்கு வா.””



““என்னய்யா, நாயை வெரட்டின மாதிரி வெரட்டுறீங்க? அவரசமான செவயம் எங்கிறபடியாலதானே நான் இந்த நேரத்தில வந்தேன்”” எனக் கறுப்பண்ணன் கங்காணி கடுகடுப்புடன் கூறினார்.



கங்காணியின் சினம் பெரிய கிளாக்கரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.



““என்னா, ஒனக்கு அப்புடி அவசரமான வெசயம். நம்பகிட்ட சொல்லு.... நான் தொரைக்கு சொல்லுறது.””



““இல்லீங்கய்யா.... எங்க லயத்துகிட்ட எனக்கு ஒரு வயல் இருக்குங்க.... பரம்பரையா நான் தாங்க அந்த வயலை செஞ்சுகிட்டு வாறேனுங்..... தொரைக்கும் இது தெரியுமுங்க. இன்னிக்கி அந்த ஆராச்சி மாத்தியா வந்து நம்ப வயலை வேலை செய்ய வேணாமுன்னு சொல்லுறாரு.””



கங்காணி சொன்ன விஷயம் பெரிய கிளாக்கருக்கு ஓரளவு புரிந்தது.



இரண்டு நாட்களுக்கு முன் துரைக்கும் அந்த வயல் சம்பந்தமாக ஒரு கடிதம் வந்திருந்தது அவருக்கு இப்போது ஞாபகத்தில் வந்தது. கிராம சேவகர்தான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.



தான் அந்த வயலில் வேலை செய்யப் போவதாகவும், அதற்கு டி.ஆர்.ஓ. வினால் தனக்கு அனுமதிப்பத்திரம், வழங்கப்பட்ட பத்திரத்தின் பிரதியொன்றையும் அந்தக் கடிதத்துடன் அவர் இணைத்து அனுப்பியிருந்தார்.



““ஓ, அது தொரைக்கு ஒண்டும் செய்ய முடியாது. டி.ஆர்.ஓ. தான் அந்த ஆராய்ச்சிக்கு வயலை கொடுத்துப் போட்டாச்சு. தொரைக்கும் லெட்டர் வந்திருக்கு....””



““பெரிய கிளாக்கர் இப்படிக் கூறியது கறுப்பண்ணன் கங்காணிக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.



““ஆராய்ச்சிக்கிட்ட கரச்சலுக்குப் போகாம அந்த வயலை விட்டுப் போடுறதுதாங் நல்லது””



இப்படிக் கூறிய பெரிய கிளாக்கர் தொடர்ந்தும் கங்காணியிடம் கதைக்க விரும்பாதவராய் ஏதோ புத்தக வேலையில் கவனஞ் செலுத்தத் தொடங்கினார்.



கங்காணிக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. தள்ளாடிய படியே ஆபீஸில் இருந்து திரும்பி நடக்கத் தொடங்கினார்.



தலைவரிடம் சென்று இதைப்பற்றிக் கூறி யூனியன் மூலமாக ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமென்ற எண்ணம் இப்போது அவருக்குத் தோன்றியது. அவர் தலைவரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

++++++++++++++++++

அத்தியாயம் பதினேழு



இஸ்தோப்பில் அடுப்புக்கு முன்னாலிருந்து றொட்டிக்கு மாவு பினைந்துகொண்டிருந்தான் ராக்கு. அவளது கடைசிக் குழந்தை வாயோயாமல் அழுது அவளின் பொறுமையைச் சோதித்தது.



““இந்தா வாயை மூடு மூச்சு விட்டியனா கொன்னுப்புடுவேன்”” எனக் கூறியபடி கண்களை உருட்டிக் குழந்தையை முறைத்துப் பார்த்த ராக்கு, “பொத்” தென அதன் முதுகிலே எட்டி அடித்தாள். குழந்தை மீண்டும் வீரிட்டுப் பலமாக அழுதது.



வெளியே முற்றத்தில் இருந்தவாறு செந்தாமரையின் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்த மீனாச்சி, ““ஏன் ராக்கு கொழந்தையா இப்புடிப் போட்டு அடிக்கிற?”” என உரத்த குரலில் கேட்டாள்.



““என்னக்கா வேலைவுட்டு வந்தலிலயிருந்து கொஞ்ச நேரமாவது இந்தப் புள்ள சும்மா இருக்க வுடமாட்டேங்குது@ காக்கா மாதிரி கரஞ்சுக்கிட்டே இருக்குது”” எனச் சலிப்புடன் கூறினாள் ராக்கு.



““புள்ளைக்குப் பசிக்கும் போலயிருக்கு. மாவு ஏதும் இருந்தா கொஞ்சம் கலக்கிக் குடுத்துப்புட்டா போவுது@ அது பாட்டுக்குக் குடிச்சுப்புட்டு வெளையாடிக்கிட்டு இருக்கும். பசிக்கிற புள்ளைய ஆடிச்சுக்கிட்டு இருந்தா எப்புடி?””



““மாவு டின்னு முடிஞ்சுதான் ரெண்டு கெழமையர்வது, ரொட்டித் துண்டு குடுத்தா திங்க மாட்டேங்குது. பால் வேணுமுனு அடம்புடிச்சு அழுவுது.””



““ஏன் “லக்ஸ்பிரே” மாவு முடிஞ்சு போயிருச்சா? முடியிறதுக்கு முன்னம் ஒவ்வொரு டின்னு டின்னு வாங்கி வச்சுக்கிறது நல்லதுதானே. நம்ம கோப்புறட்டிலைதான் கெடைக்குமே”” எனக் கூறிய மீனாச்சி, கையில் அகப்பட்ட பேன் ஒன்றை எடுத்து நகங்களினூடே வைத்து நசித்தாள்.



““தெனம் கோப்புறட்டி கடைக்கு அலைஞ்சுக்கிட்டுத் தான் இருக்கேன். போனகிழம போய் கேக்கிறப்போ மாவு டின்னு இன்னும் வரலேன்னு சொன்னாங்க. இந்த கெழம போய் கேக்கிறப்போ முடிஞ்சு போச்சினு சொல்லுறாங்க. கடை போட்ட புதிசில வேண்டிய சாமான் இருந்துச்சு. போகப்போக என்னாடான்னா அது இல்லே, இது இல்லேன்னு சொல்லுறாங்க”” என்றாள் ராக்கு.



““கோப்புறட்டிவ் கடையில மாவுடின்னு இல்லாட்டி புள்ளையப் பட்டினியா போட முடியுங்களா அக்கா@ டவுனிலயாவது வாங்கி கொடுத்திருக்கலாந்தானே”” எனக் கேட்டாள் செந்தாமரை.



““டவுனுல பழைய கடன் பாக்கி அப்புடியே நிக்குது செந்தாமரை.... இந்த கோப்புறட்டிக் கடை போட்டதிலயிருந்து அந்தப் பக்கமே போகல்ல. இப்ப போய்க் கேட்டா சாமான் கொடுப்பாங்களா?””



““ஏன் ராக்கு, ஒவ்வொரு மாசச் சம்பளத்திலேயும் கொஞ்சங் கொஞ்சமா அந்தக் கடனை கட்டியிருக்கலாந் தானே. சம்பளத்து சல்லியெல்லாம் என்னா செஞ்ச?””



““என்னா அக்கா அப்புடிக் கேக்குறீங்க, நான் ஒருத்தி வேலை செஞ்சுதான் ஏம்புள்ளைகளை காப்பாத்த வேண்டியதா இருக்கு. கோப்புறேட்டிவ் கடையிலபோய் சாமான் வாங்கிறதுனால அந்தக் கணக்கு எல்லாத்தையும் ஏஞ்சம்பளத்தில புடிச்சுப்புடுறாங்க. சம்பள வாசலுக்குப் போனா எனக்குக் கடன்தான்னு வாசிக்கிறாங்க”” எனச் சலிப்புடன் கூறினார் ராக்கு.



இதுவரை நேரமும் அவர்களது சம்பாஷணையைக் கேட்டபடி உள்ளே படுத்திருந்த மாயாண்டி ஒருமுறை இருமிவிட்டு...



““என்னா மாவிடின்னு இல்லேன்னு பேசுக்கிறீங்க. நாட்டுல பண்டா முதலாளி கடையிலதான் நெறைய அடுக்கி வச்சிருக்கானே, வேணுமுனா சொல்ல நான் வாங்கியந்து தாறன்”” எனக் கூறினார்.



““என்னாங்க அண்ணே அந்த நாட்டுல கடையில இப்ப மாவு டின்னு எல்லாம் விக்கிறாங்களா? முந்தி பீடி, சிகரட் இல்லியா வித்துக்கிட்டு இருந்தாங்க”” எனக் கேட்டாள் ராக்கு.



““என்னா ராக்கு அப்புடிச் சொல்லிப்புட்டே! டவுனுல இல்லாத சாமாங்கூட இப்ப அங்க இருக்கு. அன்னிக்கு நான் போயிருந்தப்போ பாத்தேன்@ டவுனுல மீன் டின் இல்லாம அங்க வந்துதான் வாங்கிட்டு போறாங்க. நெறைய சாமாங்க அடிக்கி வச்சிருக்காங்க”” என்றார் மாயாண்டி.



““ஏன் நம்ம கோப்புரேட்டிவ் கடை போட்ட புதிசுல கூட எல்லாச் சாமானுந்தான் இருந்திச்சு. இப்போது தான் கடைய மொட்டையா வச்சிருக்காங்க”” என்றாள் மீனாச்சி.



இஸ்தோப்பில் கோழி கொக்கரிக்கும் சத்தம் கேட்டது. மாயாண்டி நிமிர்ந்து பார்த்தார். அடுப்பின் முன்னால் சுளகிலிருந்து அசிரியை கோழிகள் இரண்டு கொத்தித் தின்று கொண்டிருந்தன.



““இந்தா பாரு மீனாச்சி, அரிசிய பொடைச்சவாக்கில அப்புடியே போயிட்டே. அதெல்லாத்தையும் நல்லா கோழி திங்குது.... இப்புடிதான் இருக்கும் ஓம்புத்தி”” எனக் கூறிக் கொண்டே படங்குக் கட்டிலில் இருந்த மாயாண்டி கோழிகளை “சூ....சூ....” என விரட்டினார்.



““ஐயையோ, மறந்தே போயிட்டேன்”” எனக் கூறிக் கொண்டே உள்ளே ஓடிவந்தாள் மீனாச்சி. அவளை உரசிய படியே இரண்டு கோழிகளும் வெளியே பறந்து போயின.



சுளகுடன் அசிரியைக் கையில் எடுத்த மீனாச்சி, திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவளாக, ““ஏன் ராக்கு, இந்தப் பயணம் கொடுத்த அசிரிய அளந்து பாத்தியா? எங்களுக்கு எப்போதும் மீன் சுண்டால் இருபது சுண்டு அரிசி இருக்கும்@ இந்தப் பயணம் நாலு சுண்டு குறையுது”” எனக் கூறினாள்.



““ஆமாங்க அக்கா, எங்க வூட்டுலேயும் அப்புடித்தான் போலையிருக்கு. வழமையா அரிசி போட்டா நாலு நாளைக்கு ஒப்பேத்திக்கிடுவோம். இந்த ரெண்டு கெழமையா மூணு நாளையிலேயே அசிரி முடிஞ்சு போயிருச்சு. என் மனதான் கூடக் கூட அரிசியப் போட்டு ஆக்கிப்புடுதுனு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்”” எனச் சிந்தனையுடன் கூறினாள் ராக்கு.



““அது எப்புடி எல்லா வூட்டுக்கும் அரிசி கொறையுது...? நிறுத்துப் போடுறவங்கதான் ஏதோ “திருக்கீசு” பண்ணுறாங்க போல தெரியது”” என்றார் மாயாண்டி.



““கோப்புரட்டி கடை வந்தா நல்லதுன்னு நம்ப வயித்தில அடிக்கிற மாதிரியில்லையா தெரியுது”” எனக் கூறினாள் மீனாச்சி.



““இதை இப்புடியே சும்மா வுட்டுடக்கூடாது@ இதப்பத்தி நம்ப வீரய்யா தம்பிகிட்ட சொல்லி கவனிக்க சொல்லோணும்”” என்றார் ராக்கு.



இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாயாண்டியின் மனதில் பலவாறான சந்தேகங்கள் துளிர்த்து எழத் தொடங்கின. கடைசியில் அவரது சிந்தனை முழுவதும் பண்டா முதலாளியின் கடையை வட்டமிட்டுக் கொண்டிருந்தது.



கடந்த வாரங்களாக பண்டா முதலாளியின் வீட்டிற்கு கோப்பறேட்டிவ் மனேஜர் அடிக்கடி செல்வதை அவர் கவனித்திருந்தார். மனேஜர் யூனியனுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போதெல்லாம் பண்டா முதலாளியும் கூடவே செல்வதும் மாயாண்டியின் நினைவில் வந்தது.



தோட்டத்து ஆளுகளுக்கு ரேசனுக்குக் கொடுக்கப்படும் அNஆத வகையான அரிசி, வார இறுதியில் பண்டா முதலாளியின் கடையில் விற்பனைக்கு இருப்பதும், கோப்பறேட்டிவ் கடையில் மட்டுமே கிடைக்கக் கூடிய பங்கீட்டுப் பொருட்கள் இப்போது அங்கு கிடைக்காததும், அதே வேளையில் பண்டா முதலாளியின் கடையில தாராளமாகக் கிடைப்பதும் அவரது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்தன.

++++++++++++++++++++=

அத்தியாயம் பதினெட்டு



அன்று சம்பள நாள். மடுவத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர். முதல் மாதத்தில் தொழிலாளர்கள் செய்த வேலைக்குரிய சம்பளத்தைக் கணக்குப் பார்த்து ரேஷன் அரிசி, கோப்பரேட்டிவ் கடையில் சாமான் வாங்கிய கணக்கு, ~புறவிடன்ட் பணம்| டோபி-பாபர் பணம் முதலிய கணக்குகளைச் சம்பளத்தில் பிடித்துக் கொண்டு மிகுதிப் பணத்தை மறு மாதத்தின் முதற் கிழமையில் கொடுப்பது வழக்கம்.



தொழிலாளர்கள் மகிழ்வுடன் தங்களுக்குள் ஏதேதோ கதைத்த வண்ணம் துரையின் வரவுக்காகக் காத்திருந்தார்கள்.



சிறு வியாபாரிகள் தீன் பண்டங்கள், றப்பர் சீட், மரக்கறி, பழவகைகள் முதலிய பொருட்களை மடுவத்தின் முன்னால் பரப்பி வைத்துக்கொண்டு வியாபாரத்துக்குத் தயாராக இருந்தனர்.



துரை மடுவத்தின் முன்னே காரை நிறுத்திவிட்டு சிறிய குட்டிச் சாக்குடன் பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மடுவத்திற்குள் நுழைந்தார். சம்பளம் வாசிக்கும் கிளாக்கர் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.



இதுவரை நேரமும் வாயோயாமல் கதைத்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் இப்போது மௌனமாகினர்.



துரை மடுவத்தின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மேசையில் குட்டிச் சாக்கை வைத்து தனை அவிழ்த்துப் பணத்தை வெளியே எடுத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த தொழிலாளர்களை ஒரு தடவை நோட்டம் விட்டார்.



பின்பு நோட்டுக்களைக் கட்டுக் கட்டாக மேசையின் மேல் பரப்பி வைத்துக் கொண்டு சில்லறைகளைக் கண்டக்டரிடம் கொடுத்தார்.



கிளாக்கர் செக்ரோலை மேசையின் மறு முனையில் விரித்து வைத்துக் கொண்டு பெயர்களை வாசிக்கத் தயாரானார்.



துரை அனுமதி கொடுத்ததும் பெயர்களை வாசிக்கத் தொடங்கினார்.



““முதலாம் பிரட்டு தெய்வானை.... தெய்வானை.””



தலையில் முக்காடு போட்டபடி பெண்யெதருத்தி அவர்கள் முன்னால் போய் நின்றாள். அவளைக் கவனித்த கிளாக்கர், ““அறுபத்தேழு ரூபா முப்பது சதம்”” எனக் கூறினார்.



துரை ரூபாய்களைக் கொடுக்க கண்டக்டர் சதக் கணக்கைக் கொடுத்தார்.



கிளாக்கர் தொடர்ந்தும் பெயர்களை வாசித்து சம்பளக் கணக்குகளைக் கூறினார். தொழிலாளர்கள் ஒவ்வொருவராக சம்பளத்தைப் பெறத் தொடங்கினர்.



இப்போது மடுவத்திலே மீண்டும் சத்தம் அதிகமாகத் தொடங்கியது.



““என்னடா ராமு இப்போதுதான் வாறியா?”” அப்போதுதான் அங்கே வந்துசேர்ந்த ராமுவைப் பார்த்துக் கேட்டான் வீரய்யா.



தலையிலே கட்டியிருந்த லேஞ்சியை அவிழ்த்துக் கையில் வைத்துக்கொண்டு, ““மொலாதலயே சம்பளம் போடத் தொடங்கிட்டாங்களா?, எங்க பெரட்டு பிந்திப் போயிருச்சோ என்னமோ தெரியல்ல”” எனக் கேட்டான் ராமு.



““அவசரப் படாதடா@ இப்பதாண்டா தொர வந்தாரு. ஒன் சம்பளம் என்ன ஓடியா போயிடும்?”” எனக் கூறிவிட்டுச் சிரித்தான் வீரய்யா.



““போன மாசம் இருபத்தி ஆறுநாள் வேலை செஞ்சிருக்கேன். ரேஷன் சாமான், கோப்புறட்டிவ் கடன் எல்லாம் போக எப்புடியாச்சும் அறுவது ரூபாகிட்ட இருக்கும். போட்டுக்கிறதுக்கு ஒரு நல்ல சேட்டுக்கூட இல்ல.... இந்தப் பயணம் நல்ல சேட்டு ஒண்ணு எடுக்கணும்”” என்றான் ராமு.



““இன்னும் சம்பளம் வாங்கவே இல்லை. அதுக்குள்ள ஏண்டா இப்படித் திட்டம் போடுறே. அவுங்க எப்புடி கடன் புடிச்சு, கணக்குப் பாத்து வச்சிருக்காங்களோ தெரியாது”” என்றான் வீரய்யா.



““இந்தப் பயணம் எல்லாத்துக்கும் நல்ல சம்பளம் இருக்குமுங்க அண்ணே... போன மாசம் எல்லாரும் நல்லா வேலை செஞ்சாங்க. கவ்வாத்து, மீனா புல்லு வெட்டு.... எல்லா வேலையும் கொடுத்தாங்க இல்லியா....”” என்றான் பக்கத்தில் நின்ற ஒருவன்.



““இந்தா பாருங்க ஆளுங்களா... தயவு செஞ்சி கொஞ்சம் சத்தம் போடாம இருங்க. இப்புடி சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா எப்புடி தொர சம்பளம் போடுவாரு? என்றார் மாரிமுத்துத் தலைவர் பலமான குரலில்.



துரை நிமிர்ந்து தலைவரை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் பணத்தை எண்ணத் தொடங்கினார்.



““ஆமா.... நீங்க போடுற சத்தத்தினால கௌhக்கரய்யா பேரு வாசிக்கிறது இங்க வெளங்கல@ டேய் இந்த பயலுக்கு எல்லாம் லயத்துக்குப் போங்கடா... சம்பளம் வாங்கிற மாதிரி இந்தச்சின்னப் பயலுக வேற வந்துங்கிறாங்க”” எனத் தொடர்ந்து கூpய தலைவர், அங்கு நின்ற சிறுவர்களை விரட்டினார்.



பின்பு பெரியவர்களைப் பார்த்து, ““இந்தா பாருங்க... கொஞ்சம் தள்ளி அப்புடியே பின்னுக்குப் போங்க. இப்புடி எல்லாரும் தொரைய சுத்தி அடைஞ்சிக்கிட்டு நின்னா எப்படி அவுங்களுக்கு வெளிச்சம் தெரியும். பின்னுக்குப் போங்க...”” எனக் கூறியபடி அங்கிருந்தவர்களைப் பின்னால் நகர்த்தினார்.



““கறுப்பையா.... கறுப்பையா....””



கிளாக்கர் செக்றோலைப் பார்த்தபடி கூறினார்.



““அந்த ஆளைக் காணோமுங்க”” எனக் கூறியபடி தலைவர் முன்னே வந்தார்.



““அப்போ தலைவர், நீங்க அந்தக் சம்பளத்தை வாங்கி அந்த ஆளுக்குக் கொடுங்க”” தலைவரைப் பார்த்துக் கூறினார் கண்டக்டர்.



““எண்பத்தைந்து ரூபா இருபத்தெட்டுச் சதம்”” தலைவர் கறுப்பையாவின் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டார்.



வேறு சிலரும் தமது சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அங்கு சமூகமளிக்கவில்லை. தலைவர்தான் அவர்களுக்குரிய சம்பளத்தைப் பெற்றுக் கொண்டார்.



பின் வரிசையில் நின்றவர்களிடையே ஏதோ முணு முணுப்புச் சத்தம் கேட்டது.



““என்னடா இது அநியாயமா இருக்கு. கறுப்பையா வவுனியாவுக்குப் போயி ரெண்டு மாசமாகுது. அவன் பேருக்கு சம்பளம் கொடுக்கிறாங்க.””



““ஆமாங் நானும் அதுதான் யோசிக்சுக்கிட்டு இருக்கேன்... அவன் சம்சாரம் மட்டுந்தான் வூட்ல இருக்கா. அவதான் தோட்டத்தில வேலையில்லையே... பேரையும் வெட்டிப்புட்டாங்க.



““என்னமோ தெரியல்ல, அந்தச் சம்பளத்தை நம்ப தலைவரு தான் வாங்கிக்கிறாரு.””



““கண்டக்டரும், தலைவரும் சேர்ந்துகிட்டு தோட்டத்தில இல்லாதவங்களுக்கு பேரு போட்டு சம்பளம் வாங்கிக்கிறாங்க போல இருக்கடா”” என்றான் வேறொருவன்.



““என்னா அநியாமா இருக்கு@ போன மாசம் பூரா நான் பேரு போட்டிருந்தேன். எனக்கு சம்பளம் இல்லைங்குறாங்க”” எனக் கூறிக்கொண்டே வந்தான் குப்பன்.



அவனைப் பார்த்த வீரய்யா, ““இங்க வாங்க குப்பன்... சும்மா சத்தம் போடாதீங்க@ கோப்புறட்டி கடையில ஏதும் ரொம்ப சாமான் வாங்கியிருப்பீங்க.... நீங்க வேலை செஞ்சது ஒங்கவூட்டு ரேசனுக்கும், கோப்புறட்டிவ் கடனுக்கும் சரியாப் போயிருக்கும்.... அவுங்க கணக்கில பிழைவிட மாட்டாங்க”” என்றான் அமைதியாக,



““இல்லீங்க தம்பி.... போன மாசம்தான் கோப்புறட்டிக் கடையில சாமான் ஒண்ணும் இல்லியே. நான் சரியாக் கூட சாமான் வாங்கலே. ஒரு நாத்தான் இருபத்தி மூணு ரூபா வுக்கு சாமான் வாங்கியிருந்தேன். போன மாசம் பூரா என் சம்சாரமும் நல்லா வேலை செஞ்சிருந்தா. என்னா கணக்குப் பாத்து வச்சிருக்காங்கனு தெரியலே”” என்றான் குப்பன் ஆவேசத்துடன்.



““சரிங்க அண்ணே, கொஞ்சம் பொறுங்க. கணக்கு ஏதும் வித்தியாசமா இருக்கும். சம்பளம் போட்டு முடிஞ்சவொடன கணக்கு கேட்டுக்கிடலாம்”” என்றான் அங்கிருந்த ஒருவன்.



““ராமு... ராமு...””



கிளாக்கர் பலமாகப் பெயரை வாசித்தார்.



வீரய்யாவுடன் கதைத்துக் கொண்டிருந்த ராமு துரையின் முன்னே ஓடினான்.



““ராமுவுக்கு அறுபது சதம் மட்டுத்தான்””



கிளாக்கரையாவின் குரல்கேட்ட ராமுவுக்கு திக்கென்றது.



ஒரு கணம் மலைத்து நின்ற ராமு தன்னைச் சுதாரித்துக் கொண்டு, ““நல்லா பாருங்கையா அறுபது ரூபாவா, அறுபது சதமான்னு....””



““எனக்கென்ன கண்ணா தெரியல்ல? அறுபது சதம் மட்டுந்தான்””



எரிச்சலுடன் கூறினார் கிளாக்கர்.



““என்னாங்க, நான் போனமாசம் பூராவும் வேலைசெஞ்சேங்க. எனக்கு சம்பளம் அறுபது சதம் மட்டுமெங்கிறீங்க”” எனக் கிளாக்கரைப் பார்த்துக் கேட்டான் ராமு.



““இந்தா, இப்ப ஒண்ணும் அதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நாளைக்கு வேணுமுன்னா ஆபிசில் வந்து கேளு”” எனக் கூறிய கிளாக்கர். தொடர்ந்து பெயர்களை வாசிக்கத் தொடங்கினார்.



துரைக்கு அவர்களது சம்பாஷணை விளங்கவில்லை. கிளாக்கரைப் பார்த்தார்.



““இவன் தனக்குச் சம்பளம் குறையுது என்கிறான்”” என விளக்கம் கொடுத்தார் கிளாக்கர்.



துரை ஏதோ சிந்தித்துவிட்டுத் தலையை ஆட்டியபடி, தொடர்ந்தும் பெயர்களை வாசிக்கும்படி கிளாக்கருக்குக் கட்டளை யிட்டார்.



ராமுவைப் போலவே பலர் சம்பளம் குறைவாக இருக்கிறதென்றும், சிலர் தமக்குச் சம்பளமே இல்லையென்றும் குமுறிக்கொண்டனர்.



““என்னா அநியாயமா இருக்கு. இவ்வளவு நாளா இல்லாம இந்த மாசம் மட்டும் எப்புடி சம்பளம் குறையுது”” என்றான் ஒருவன் ராமுவை பார்த்து.



““அதுவும் பாருங்க. ஆம்புளை ஆளுக்கா சம்பளம் கொறையுது. பொதுவா கவ்வாத்து வெட்டின ஆளுங்களுக்கு சம்பளமே இல்லை”” என்றான் மற்றொருவன்.



““இதை இன்னிக்கு சும்மா விடக்கூடாது. சம்பளம் போட்டு முடியட்டும் என்னா சங்கதின்னு கேட்டுப்புடுறேன். சம்பளம் கொறைஞ்ச யாரும் வூட்டுக்குப் போக வேணாம். எல்லோரும் மடுவத்திலயே இருங்க”” என அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான் ராமு.



““இந்தா ராமு, நீ மொறட்டுத்தனமா கதைக்காதடா சம்பளந்தானே கொறையுது? நாளைக்கு ஆபீசில சம்பளக் கணக்குக் கேட்டா சொல்லுவாங்கதானே@ அப்ப என்னான்னு தெரிஞ்சுக்கலாம்”” என வீரய்யா அவனைச் சமாதானப்படுத்த முயன்றான்.



““நீ சும்மா இரு வீரய்யா... எனக்கு வவுத்த எரியுது. இன்னிக்கே கேக்காம வுடமாட்டேன்”” எனப் பிடிவாதமாகக் கூறினான் ராமு.



எல்லோருக்கும் சம்பளத்தைக் கொடுத்து முடித்த துரை, தனது காரில ஏறி பங்களாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.



கிளாக்கரும், கண்டக்டரும் ஏதோ கதைத்த வண்ணம் எழுந்து செல்ல முயன்றபோது, ராமு வீரய்யா உட்பட எல்லோரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.



மாரிமுத்துத் தலைவர் கண்டக்டரின் பின்னால் தயங்கியபடி நின்று கொண்டிருந்தார்.



““ஐயா, எனக்கு இன்னிக்குக் கணக்கு சொல்லிட்டுத் தான் போகணும்@ இல்லாட்டி நான் ஒங்கள போகவுடமாட்டேன்”” என்றான் ராமு கிளாக்கரைப் பார்த்து,



கண்டக்டரும் கிளாக்கரும் திகைத்துப்போய் நின்றனர்.



““இந்தா ராமு, எல்லாத்துக்கும் நாளைக்குத்தாங்க கணக்கு சொல்றது. இப்ப கொழப்பம் பண்ணவேணாங். ஒனக்கு மட்டும் இன்னிக்கு கணக்கு சொல்லிக்கிட்டு இருக்க முடியாது”” என்றார் கண்டக்டர்.



““எட்;டாம் பெரட்டுல பாருங்க.””



““போன மாசம் பூரா வேலையா நீ?””



““ஆமாங்க இருபத்தாறு நாளு பேர் போட்டிருக்கேன்”” என்றான் ராமு.



கிளாக்கர் செக்ரோலைப் பார்த்தபடி, நீயென்னப்பா சொல்லுற, பதினேழு நாள் தான் நீ வேலை செஞ்சிருக்கே”” எனக் கூறினார்.



““அப்ப எனக்கு ஒன்பது நாள் பேர் போடயில்லையா? எந்தெந்த நாளுங்க எனக்கு பேரு போடலேனு பாருங்க””



““நீ போன மாசத்தில பதிமூணாம் தேதி வேலையில்ல. அப்புறம் பதினாறு, பதினேழு, பதினெட்டு........... இருப்பத்தி மூணாந்தேதி வரைக்கும் வேழைலயில்ல.””



எனக்கூறிய கிளாக்கர் புத்தகத்தை மூடமுயன்றார். அப்போது அங்கிருந்த மற்றவர்களும் பிடிவாதமாகக் கணக்குக் கேட்கத் தொடங்கினர். கிளாக்கரால் மறுக்க முடியவில்லை.



நிலைமையைப் புரிந்து கொண்ட கண்டக்டர் மெதுவாக அவ்விடத்தைவிட்டு நழுவித் தன் பங்களாவை நோக்கிச் சென்றார்.



கிளாக்கர் எல்லோருக்கும் விபரமாக வேலைக் கணக்கைக் கூறத் தொடங்கினார்.



““என்னாங்க தலைவரு, ஒங்ககிட்ட தானே நான் பதின்மூணாந் திகதியில் இருந்து கவ்வாத்து வெட்டினேன். எப்படி ஒம்பது நாள் பேரு கொறையும்?”” எனப் பலமாகக் கத்தினான் ராமு.



““இந்தா ராமு, சத்தம் போடாத. நான் ஒழுங்காத் தான் பேர் எழுதி ஐயாகிட்ட கொடுத்தேன். இதில ஏதோ தவறு நடந்திருச்சி... ஒனக்கு ஒம்பது நாள் பேருதானே கொறைஞ்சு போயிருச்சி... பேசாம இரு@ நான் ஐயாகிட்ட சொல்லி அந்தப் பேரைப் போடச் சொல்லிப்புடுறேன்.”” எனக்கூறி அவனைச் சமாதானப்படுத்த முயன்றார் தலைவர்.



கண்டக்டர் பேர் போடாமல்விட்ட விஷயம் இப்போது தான் தலைவருக்குப் புரிந்தது.



கவ்வாத்து வேலையெல்லாம் கொன்றாக்கில் போட்டு சல்லி எடுத்துமில்லாம, ஆளுகளுக்குப் பேரும் போடாம வுட்டுட்டு, இப்ப பங்களாக்கு வேற போயிட்மாரு. இவங்களோட நான்தான் மாட்டிக்கிட்டு கெடக்கிறேன்”” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார் தலைவர்.



““அதெல்லாம் முடியாது... எப்புடி எல்லாத்துக்கும் பேரு கொறையும்? இந்தா பாருங்க... இவுங்க எல்லாம் ஒங்ககிட்ட போன மாசம் கவ்வாத்து வெட்டினவங்க. இவங்க எல்லாத்துக்கு பேரு இல்லே... எல்லாத்துக்கும் பேரு வாங்கிக் கொடுக்க முடியுமா?”” என்றான் வீரய்யா அங்கிருந்தவர்களைச் சுட்டிக்காட்டி.



““இந்தா பாரு வீரய்யா, நான் எல்லாருக்கும் ஒழுங்காத்தான் பேரு போட்டேன்.... இது நம்ப கண்டக்கையாவோட தவறுதான். இதை எப்புடியாச்சும் அவருகிட்ட சொல்லிக் கேப்போம். ஏம்மேல ஒண்ணும் குத்தமில்லே.””



தலைவருக்குக் கண்டக்டரின் மேல் கோபம் கோபமாக வந்தது. தன்னை நடுக்கடலில் தள்ளிவிட்டு, அவர் மட்டும் கரை சேர்ந்துவிட்டார் என்ற உணர்வு அவருக்கு ஆத்திரத்தை ஊட்டியது.



““சும்மா மழுப்பாதீங்க@ நீங்களும் கண்டக்கையாவும் சேந்து செஞ்ச வேலைதான் இது. இவ்வளவு நாளும் இல்லாம இப்ப எப்புடி புதிசா ~கொன்றாக்| வேலை வந்திச்சு@ அதுவும் எல்லா ~கொன்றாக்| வேலையும் ஒங்க பேருலேயே கண்டக்கையா போடுறாரு... தோட்டத்தில நீங்க ஒரு ஆளு மட்டுந்தான் இருக்கிறீங்களா? வேற ஒருத்தரும் இல்லியா?”” ராமு ஆவேசமாகக் கத்தினான்.



““ஆமா ஆளுகளுக்குப் பேர் போடாம ஒங்க கொன்றாக் வேலையெல்லாம் செஞ்சு நல்லா சல்லி அடிச்சிட்டீங்க”” என அங்கிருந்த ஒருவன் கூறினான்.



““நீங்க எங்க தலைவரா இருந்துகிட்டே இப்புடி செய்யலாமா? ஒரு தலைவரே இப்புடி நடந்தா தோட்டம் என்னத்துக்கு உருப்படும். இப்புடி செய்யிறது உங்களுக்கே நல்லாயிருக்கா?”” வீரய்யா ஆத்திரத்தில் குமுறினான்.



““இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ தெரியாது@ அந்தக் கண்டாக்கு பூனைமாதிரி நடந்துகிட்டு தோட்டத்தில நல்லா வெளையாடுறான்”” குழுமி நின்றவர்களது பக்கத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.



““வவுனியாவுக்குப் போன ஆளுக்கு செக்றோல்ல பேரு விழுகுது@ அந்தச் சல்லிய நீங்க வாங்கி கண்டக்கையா கையில் கொடுப்பீங்க.... இங்க தோட்டத்தில கஷ்டப்பட்டு ஒழைக்கிறவங்க பேரை வெட்டிப்புடுறீங்க.””



வீரய்யா ஆவேசமாகக் கத்தினான்.



““நாங்க எல்லாம் தோட்டத்தில் தூங்கிக்கிட்டு இருக்கோமுனு நெனைச்சீங்களா? இனிமே சும்மா விடமாட்டோம்@ புதிசா வேலைக்கு வந்து எல்லாரும் தோட்டத்தை சொறண்டுறானுக. ஏழைங்க வவுத்தில இல்லியா அடிக்கிறாங்க.



இன்னொரு குரல் கூறியது.



““இந்த கோப்புறட்டி மனேஜரும் கண்டக்கோட கூட்டாளிதான்@ அவன் கோப்புறட்டிக் கடையில இருந்துக்கிட்டு ஆளுங்கவூட்டு அரிசியைக் கொள்ளை அடிக்கிறான். இந்த இரண்டு மூணு மாசமா கோப்புறட்டிக் கடையில ஒரு சாமாங்கூட இல்ல. வர்ற சேரன் சாமானெல்லாம் எங்க கொண்டு போய்க் கொடுக்கிறாங்களோ...?”” குப்பன் குமுறினான்.



““அந்த பண்டா மொதலாளிதான் இவுங்களோட சுத்திக்கிட்டுத் திரியிறான். அங்கதான் எல்லா சாமானமும் போயிருக்கும். எல்லாரும் ஒண்ணா வந்து சேர்ந்துக்கிட்டானுக.””



““இனிமேலும் நம்ப இப்புடி பாத்திக்கிட்டு இருக்க முடியாது, எல்லாத்துக்கும் சுறுக்கா ஒரு முடிவு கட்டணும்.



அப்பதான் இந்தத் தோட்டம் உருப்படும்”” என்றான் பக்கத்தில் நின்ற வேறொரு தொழிலாளி.



““இனிமே ஒங்களைத் தலைவரா வைச்சிருந்தா நாங்க எல்லாம் மண்ணோட அழிய வேண்டியதுதான்”” ராமு படபடத்தான்.



““நீங்க இன்னையில இருந்து எங்களுக்குத் தலைவரில்ல”” குப்பன் ஆத்திரத்துடன் கத்தினான்.



அங்கு நின்ற எல்லோரது குரல்களும் அவ்வாறு மீண்டும் மீண்டும் முழங்கின.

++++++++++++++++++++

அத்தியாயம் பத்தொன்பது



நடுச்சாம வேளை, வெகு நேரமாக நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த மாரிமுத்துத் தலைவர் ஏதோ முடிவுக்கு வந்தவராக வெளியே புறப்பட ஆயத்தமானார்.



““இந்தா பாருங்க..... நான் சொல்லுறேன்னு கோவிச்சுக்கிறாதீங்க. நாளைக்கி வேலைக் காட்டுலவச்சி சொல்லிக்கிடலாமுங்க இந்த நேரத்துல நீங்க மட்டும் எப்புடிங்க ஒத்தையா போவீங்க?”” கலக்கத்துடன் கேட்டாள் பூங்கா.



““என்னாடி வெளங்காம கதைக்கிற? ஒனக்குக் கொஞ்சமாவது மூளை இருக்கா? வேலக் காட்டுல வச்சி எப்புடி இந்த வெசயத்த கண்டக்கையாகிட்ட சொல்லுறது? யாராச்சும் கண்டாங்கன்னா அப்புறம் என்னைய உயிரோடை வைக்க மாட்டானுங்க”” மாரிமுத்துத் தலைவரின் பதிலில் சினம் தொனித்தது.



““அங்க கதைக்க முடியாட்டி நாளைக்கி கொஞ்சம் வெள்ளனாவே கண்டக்கையா வூட்டுக்ப் போகலாந்தானே. இன்னிக்கு ஒரு ரவைக்கு மட்டும் பொறுத்துக்கிட்டு இருங்க... சரியான இருட்டா இருக்குங்க. எனக்கு என்னமோ பயமா இருக்கு. இந்த நேரத்துல கண்டக்கையா வூட்டுக்குப் போறதை யாரும் கண்டுகிட்டாங்களா..””



““இந்த நேரத்துல யாரு காங்கப் பேராங்க? எல்லாந்தான் நல்லா தூங்குறாங்களே. இத இன்னிக்கே கண்டக்கையா கிட்ட சொல்லாட்டி அப்புறம் நாம இந்தத் தோட்டத்துயே இருக்கமுடியாது””



““நான் அப்பவே தலையால அடிச்சிக்கிட்டு இருந்தேனே... கேட்டீங்களா? இந்த கண்டக்கையாவோட கவனமா இருங்க... இருங்கனு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருறந்தேன். செய்யிறத எல்லாம் செஞ்சிப்புட்டு அவரு சொகமா பங்களாவில் இருக்காரு. இங்க ஆளுங்ககிட்ட மாட்டிக்கிட்டு கெடக்கிறது நீங்கதான்”” என்றாள் பூங்கா.



““இவ்வளவு காலமா இல்லாம ~இந்தக் கண்டக்கையா பேச்சைக் கேட்டு சுத்திக்கிட்டு திரிஞ்சிங்களே@ இப்ப பாத்தீங்களா.....? இந்தத் தோட்டத்து ஆளுங்க எல்லாத்துகிட்டேயும் கெட்ட பேரு வாங்கியாச்சி.



““அடியே... வாயை மூடு@ அது இதுனு சொல்லி எனக்குக் கோவத்தக் கிண்டாத. இந்தத் தலைவரு வேலைய நான் பாத்துக்கிட்டு இருக்கல. ஏதோ கொந்தரப்புக்கு எடுத்து வேலை செஞ்சா நாமளும் நாலு பணம் தேடிக்கிறலாமுனுதான் செஞ்சேன். இந்தக் கண்டாக்குபய இவ்வளவு அநியாயம் செய்வான்னு யாரு கண்டாங்க. எல்லாத்துக்கும் சேத்து இப்பவே அவருக்கிட்ட கதைச்சி ஒரு முடிவு கட்டிபுடுறேன்”” எனக் கூறிய தலைவர் லேஞ்சியை எடுத்துத் தலையில் சுற்றிக் கொண்டார்.



““இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியாது. இனிமே இந்த கண்டக்கையாவூட்டு சகவாசமே நமக்கு வேணாம். நாம பாட்டுககு நம்ப வேலைய செஞ்சிக்கிட்டு இருப்போம். இந்த தோட்டத்து ஆளுங்க பேசுற பேச்சி எல்லாம் எனக்குக் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது”” எனக் கூறிய பூங்கா மெதுவாகக் காம்பராவின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.



அவசர அவசரமாகக் கோட்டை எடுத்து அணிந்து கொண்ட தலைவர். ““என்னா பூங்கா... யாராச்சும் இருக்காங்களா?”” எனக் கேட்டவாறே அவளின் அருகே சென்றார்.



““ஒருத்தருமில்லீங்க... சுறுக்கா போயிட்டு, போன வொடன வந்திடுங்க”” எனக் கிசுகிசுத்தாள் பூங்கா.



தலைவர் வெளியே இறங்கி நடக்கத் தொடங்கினார்.



எங்கும் இருள் சூழ்ந்து அமைதியாக இருந்தது. தூரத்து மலைக் குன்றுகள் யாவும் கருமையாகக் காட்சியித்தன. எங்கோ நாய் ஊளையிடடும் சத்தமும், இனத்தெரியாத ஒலிகளும் இரவை மேலும் பயங்கரமாக்கித் கொண்டிருந்தன.



கண்டக்டரின் பங்களாவை அடைந்ததும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, வாசற்படியை நெருங்கி, கண்ணாடியின் ஊடாக உள்ளே பார்த்தார் தலைவர். பின்பு மெதுவாக, ~ஐயா.... ஐயா....| எனக் கூப்பிட்டார். அவரது குரல் அந்த இரவில் சற்றுப் பலமாகவே ஒலித்தது.



சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது.



““என்னாங் தலைவர்.... என்னா நடந்தது? ஏன் இந்த நேரத்துல வந்தது? உள்ளுக்கு வாங்க””



ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்வேண்டும். அதனாலே தான் தலைவர் அந்த நேரத்தில் அங்கு வந்துள்ளார் என்பதைக் கண்டக்டர் ஊகித்துக் கொண்டார்.



““என்னாங்கையா, ரொம்ப தர்மசங்கடமாப் போயிருச்சி@ நீங்க செஞ்சது ரொம்பவும் சரியில்லீங்க. தோட்டமே குழம்பிக் கெடக்கு”” என்றார் தலைவர் படபடப்பாக.



““என்னாங் தலைவர் சொல்லுறது? நமக்கு ஒன்னுங் வெளங்க இல்லைத்தானே@ இப்போ என்னாதாங் நடந்து போச்சு?””



““என்னாங்க அப்புடி கேக்குறீங்க? நீங்க ஆளுங்களுக்கு பேரு போடாம விட்டதுனால சம்பளத்து வாசல்ல வச்சி எல்லாரும் ஏங்கிட்ட கரச்சலுக்கு வந்துட்டாங்க....””



““அப்படியா விஷயம்.... யார் கரச்சலுக்கு வந்தது?””



““தோட்டத்து ஆளுங்க எல்லாதே ஒன்னா சேந்துகிட்டாங்க@ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி என்னால வூட்டுல இருக்கமுடியலீங்க. நல்லாக் கள்ளுத் தண்ணிய குடிச்சிப்புட்டு வந்து கண்டக்கையாவுக்கு பந்தக்காரன்.... வால் புடிக்கிறவன்... அந்த ஆண்டி, இந்த ஆண்டின்னு ஊத்தப் பேச்சில ஏசிப்புட்டாங்க....”” என்றார் தலைவர்.



““ஆங். அதக்கி ஒன்னுங் பயப்புடவேனாங் தலைவர். நாங் நாளைக்கே பொலிசுக்கு சொல்லி அவுங்க எல்லாத்துக்குங் செம்மையா ஒதைக்க சொல்லுறேங்”” என்றார் கண்டக்டர் அலட்சியமாக,



““என்னாங்கையா அப்புடி சொல்லுறீங்க. நீங்க பேர் போடாம விட்டதுனாலதானே இப்ப கரச்சரே வந்திருக்கு, இனி பொலிசுக் வேற போனா கரச்ச வருமோ தெரியாது. ஒங்கமேல குத்தத்த வச்சிக்கிட்டு என்னாங்க ஐயா.... இப்புடி பேசிறீங்க.””



தலைவர் இப்படிக் கூறியதும் கண்டக்டருக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.



““என்னாங் மோடத்தனமா கதைக்கிறது? ஒங்களுக்கு நாங் ஒதவி செஞ்சதுனாலைதாங் இப்புடி வந்தது. ஒங்க கொன்றேக்கில் வேலை செய்யிறதுக்குத்தான் நாங் ஆளுங்களை கொடுத்தது. அதிங்னாலதாங் நாங் அந்த ஆளுங்களுக்கு பேர் போடமவிட்டது.””



நீங்கதானே சொன்னீங்க... கொன்றாக்கில வேல செய்யுற ஆளுங்களுக்கு செக்குறோலுல வேற வேலையில பேர் போட்டுப்புடு றேன்னு@ இப்ப என்னடானா பேர் போடாம வுட்டுப்புட்டீங்க... இது அநியாயமா இல்லியா இருக்கு”” என்றார் தலைவர்.



““ஒங்களுக்கு அதிங் ஒன்னுங் வெளங்காது தலைவர். இப்ப தோட்டத்தில குடுக்கிற ~எஸ்டிமேட்டில், தொரைக்கு சரியா வேலைக் கணக்கு காட்டவேணுங்... அந்த ஆளுங்களுக்கு சொல்லுங்க, அந்த கொறைஞ்ச பேர் எல்லாங் அடுத்த மாசத்தில நான் போட்டுத்தராது சொல்லி| என்றார் கண்டக்டர் தலைவரைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன்.



““அது எல்லாம் என்னால சொல்ல முடியாதுங்க. ஒரே முடிவோடதான் எல்லாரும் இருக்காங்க... ஜில்லாவுக்குப் போய் சொல்லி இதப்பத்தி வெசாரணை வைக்கோனுமுனு சொல்லிப்பிட்டாங்க. இப்போ வெசாரணை வச்சாங்கனா ஒங்களுக்குதாங்க பெரிய கரச்ச வரப்போவுது”” என்றார் தலைவர்.



““என்னாங் தலைவர் நம்பளை மெரட்டப் பாக்கிறது.



நானா ஒப்பங் வச்சி சல்லி எடுத்தது? நீங்கதானே ஒப்பங் வச்சி எல்லாத்திக்கும் சல்லி வாங்கினது. நம்பளை யாருங் ஒன்னுங் செய்ய முடியாது”” என்றார் கண்டக்டர் பலமாக.



““அப்புடினா, என்னைய மட்டும் மாட்டப்பாக்குறீங்க போல இருக்கு. நான் வாங்கின சல்லி எல்லாங் ஒங்ககிட்ட தானே கொடுந்தேன். நீங்க மட்டும் தப்பிச்சுக்கிறலாதுனு பாக்கறீங்களா?”” எனப் படபடத்தார் தலைவர்.



““ஆமாங் தலைவர்... நீண்க தப்பிச்சுக்கோனுமுனா அளுங்ககிட்ட அது இதுனு@ சொல்லி ஒருமாதிரி சமாதானமா கதைச்சி வச்சிக்குங்க. இல்லையன்னா ஒங்களுக்கு மிச்சங் கரச்சல் வறாது@ இந்தத் தோட்டத்து ஆளுங்களால நம்மளை ஒண்ணும் செய்ய முடியாது”” என்றார் கண்டக்டர்.



““இப்ப அப்புடித்தாங்க சொல்லுவீங்க. நானுந்தாங்க பத்து வருஷமா தலைவரு மேல செஞ்சிக்கிட்டு வாரேன். ஆனா, இந்த மாதிரி ஒரு நானும் அவமானப்பட்டது இல்லேங்க. ஏம் பேச்சி கேட்டு நடந்தவங்க எல்லாம் இப்ப என்னைக் கெட்டவனென்று சொல்லுறாங்க. அது மட்டுமா, என்னைய தலைவ வேலையில இருந்து விலக்கிப்புட்டு அந்த வீரய்யாவ தலைவரா வைக்கப்போறாங்களாம். நீங்க இப்புடி செய்வீங்கனு நான் கொஞ்சங்கூட நினைக்கலீங்க”” என்றார் தலைவர்.



““இந்தா பாருங் தலைவர்.... தோட்டத்துல யாரும் புதிசு புதிசா தலைவரா வந்து இங்கே ஒன்னும் செய்யமுடியாது. நாங் மத்த ஆள் மாதிரி பயந்துகிட்டு இருக்கிற ஆள் இல்ல. தோட்டத்துல யாருங் கொழப்பங் பண்ணி கரச்சலுக்கு வந்தா அப்புறங் என்னா நடக்குமுனு சொல்லத் தெரியாது””.



கண்டக்டரின் வார்த்தைகள் கோபத்தில் தடுமாறின.



““ஒங்க பேச்ச கேட்டு நடந்தேனுங்களே, என்னைத் தாங்க செருப்பாலை அடிக்கணும். நீங்க இப்புடி செய்வீங்கனு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா நான் இந்த வேலையில இறங்கியிருக்க மாட்டேங்க. என்னைய தோட்டத்தில தலைகாட்ட முடியாம செஞ்சுப்புட்டீங்க.



““இந்தா .... நீங்க கொன்றேக்குல சல்லி வாங்கிறப்போ பேசாம இருந்தது. ஆளுங்க கரச்சல் வந்தவொடனதாங் நம்மலை குத்தங் சொல்லுறது.””



““இவ்வளவு நாளும் தோட்டத்து சல்லியதான் எடுத்துக்கிட்டிருந்தீங்க. இப்ப ஆளுங்க வவுத்துலேயும் அடிக்கத் தொடங்கிட்டீங்க. இனிமே ஒங்ககூட பேசுறது கண்டாலே ஆளுங்க என்னை உயிரோடை வைக்கமாட்டாங்க. இது எல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியாது”” மாரிமுத்துத் தலைவர் குமுறினார்.



““சும்மா வளவளனு கதைக்கவேணாங் தலைவர்.... நான் ஒங்களுக்கு உதவி செஞ்சிதான் சல்லி எடுத்துக் கொடுத்தது@ உங்களுக்கு விருப்பங் இல்லாட்டி விட்டுப்போடுங்க. நமக்கு தூக்கம் வாறது... நாங் படுக்கப் போறது. நீங்க ஒங்களுக்கு முடிஞ்சா எதுசரி செய்யுங்க. நம்மளை ஒன்னுங் செய்ய முடியாது”” எனக்கூறிக்கொண்டே பெரிய கொட்டாவி விட்டபடி எழுந்திருந்தார் கண்டக்டர்.



கண்டக்டர் இப்படிக் கூறியதும், இனி அவருடன் கதைப்பதில் பிரயோசனமில்லை என நினைத்து தலைவர், கோபத்துடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார்.



~இந்த கண்டாக்கு பயகூட இனிமே சகவாசமே வச்சிருக்கக ;கூடாது செய்யிறது எல்லாம் செஞ்சிப்புட்டு கடைசியில நழுவிக்கிற பாக்குறான்| என எண்ணியபடி வீட்டை நோக்கி நடந்தார் மாரிமுத்துத் தலைவர்.

+++++++++++++++++++++

அத்தியாயம் இருபது



இஸ்தோப்பில் ஒரு பக்கத்திலே வைத்திருந்த குப்பிலாம்பு ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. அதன் அருகே போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்திருந்த வீரய்யா ஏதோ சிந்தனையுடன் தனது நண்பர்களின் வரவுக்காகக் காத்திருந்தான்.



வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. கையில் தீப்பந்தத்துடன் யாரோ வந்து கொண்டிருந்தனர்.



ராமுவும் செபமாலையுந்தான் வருகிறார்கள் எனப் புரிந்து கொண்ட வீரய்யா இஸ்தோப்பில் நின்றபடி வெளியே எட்டிப் பார்த்தான்.



““இவ்வளவு நேரமா என்னடா செஞ்சிக்கிட்டிருந்தீங்க@ நான் வெள்ளணவே வரச் சொல்லியிருந்தேனே”” எனக் கேட்ட வீரய்யா கதவைத் திறந்து விட்டான்.



கையில் இருந்த பந்தத்தை ஊதி அணைத்துவிட்டு உள்ளே நுழைத்த செபமாலை, ““இப்போதான் டவுனுல இருந்து வந்தேன்@ வூட்டிலை சாமான் இல்லேனு சொல்லிக்கிட்டுந்தாங்க. வாங்கிக் குடுத்திட்டு வாறதுக்கு கொஞ்சம் சொணங்கிப் போயிடிச்சு”” எனக் கூறினான். அவனைத் தொடர்ந்து ராமுவும் வேறு சில இளைஞர்களும் உள்ளே நுழைந்தார்கள்.



அவர்கள் எல்லோரும் சுவர் ஓரமாக வைக்கப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டனர்.



““இப்போ நம்ப தோட்டம் போய்கிட்டு இருக்கிற போக்கே சரியில்லை@ இதப்பத்தி ஒங்களோட கதைக்கலா முனுதான் நான் எல்லாத்தையும் வரச்சொன்னேன்.””



வீரய்யா தேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

““ஆமா வீரய்யா, தோட்டத்த அரசாங்கம் எடுத்ததில இருந்து எல்லாமே தலைகீழாகத்தான் நடந்துகிட்டு வருது”” என்றான் ராமு.



““அண்ணே.... இன்னிக்கு நம்ப தோட்டத்துக்கு ஆறுபேரு சுப்பவைசர் வேலைக்கு வந்திருக்காங்க. நம்ப தோட்டத்தில உள்ள படிச்ச பொடியங்க எல்லாம் வேலைக்கு அப்பிளிக்கேசன் போட்டோம். ஆனா ஒருத்தனுக்குக் கூட வேலை கெடைக்கல்ல.



““போட்ட அப்ளிக்கேசனுக்கு பதில்கூட வரலீங்கண்ணே””



““அதுமட்டுமில்லே ராமு, இப்ப வேலைக்கு வந்தவங்களுக்கு வேலையே தெரியாதுடா. இனிமேதான் பழக்கப் போறாங்களாம். ஒண்ணுமே தெரியாதவங்களை கொண்டு வந்து போட்டு தோட்டத்தை நாசமாக்கப் போறாங்க”” என்றான் வீரய்யா.



““எல்லாரும் வால் புடிச்சு வந்தவங்கபோலத் தெரியுது. தேயிலை மரத்தையே கண்ணால காணாதவங்க நம்மளுக்கு வேலை படிச்சுக்கொடுக்க வந்திருக்காங்க”” என்றான் செபமாலை.



““தோட்டத்திலையே பொறந்து வளந்து படிச்ச எங்களுக்கு வேலை இல்லேங்குறாங்க. எங்கையோ கெடந்தவங்க எல்லாத்துக்கும் வேலை குடுக்கிறாங்க.””



““அண்ணே.... நம்ம ஸ்கூலுக்கு ரெண்டு சிங்கள மாஸ்டர் மார்களை அனுப்பியிருக்காங்க. அந்த வேலைய நம்ம தோட்டத்துல படிச்சிட்டு இருக்கிற பொடியங்களுக்கு கொடுத்திருக்கலாந்தானே”” என ஆதங்கத்துடன் கூறினாள் செபமாலை.



““சிங்கள வாத்தியாருங்களை புடிச்சி அனுப்பியிருக்காங்களே, அவுங்க நம்ப புள்ளைங்களுக்கு என்னத்தைத் தான் படிச்சி கொடுக்கப் போறாங்களோ தெரியாது””

““நம்ப புள்ளைங்க படிச்சா என்ன....? கெட்டுப் போனாதான் என்ன......? அவுங்களுக்கு அதப்பத்தி கவலையில்லை. மாஸ்டர் மாருங்களுக்கு சம்பளம் மட்டும் கெடைச்சா சரி”” என்றான் செபமாலை.



““நம்ம வருங்கால புள்ளைங்கவூட்டு வாழ்க்கையே படிப்பிலேதான் இருக்கு. அதையே நாசமாக்குறாங்க@ இந்த அநியாயத்த பாத்துக்கிட்டு சும்மா இருக்கக் கூடாது”” என்றான் வீரய்யா.



இவர்களது சம்பாஷணையைக் கேட்டவண்ணம் காம்பராவில் இருந்த மீனாச்சி. ““என்னங்க தம்பி... தோட்டம் அரசாங்கம் எடுத்த புதிசுல என்னென்னமோ செய்யப் போவுதுனு சொல்லி நீங்கதான் பேசிக்கிட்டீங்க@ இப்ப நீங்களே இப்படி கதைக்கிறீங்க. எங்களுக்கு ஒண்ணுமே வெளங்கலே”” என்றாள் பலமான குரலில்.



““அப்புடியில்லீங்க அத்தை.... அரசாங்கத்தோட கொள்கை யெல்லாம் நல்லதுதான்.... ஊடையில இருக்கிறாங்களே.... இந்த வாலு புடிக்கிற பயலுக, அவங்கதான் இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சிகிட்டு வாறாங்க”” என்றான் செபமாலை.



““இப்ப பாருங்கண்ணே.... நம்ம தோட்டத்துக்கு எத்தினை பேரு வேலைக்கு வந்துட்டாங்க. யாரைப் பார்த்தாலும் அவுங்க ~சப்போட்டுல| வந்த ஆளுங்களாத்தான் இருக்குறாங்க””



““யாரா இருந்தாலும் பரவாயில்லையடா, வர்றவங்க எல்லாம் சொரண்டுற பயலுகளாக இல்லியா இருக்காங்க”” என்றான் வீரய்யா.



““ஆமாங்கண்ணே, புதிசா கண்டக்கையா வந்தாரு@ ஆறு மாசத்திலேயே தோட்டத்தைக் காடாக்கிட்டா..... அவரு வந்ததிலயிருந்து தேயிலைக்கு ஒரம் போட்டதையே நாங் காங்கலே. ஒழுங்கா மருந்தடிக்காம தேயிலையெல்லாம் பூச்சி வச்சிக் கெடக்குது. இப்புடியே பொயிக்கிட்டு இருந்தா இன்னும் கொஞ்சக் காலத்தில கொழுந்தே வராது”” என்றான் சுவரிலே சாய்ந்தபடி நின்ற இளைஞன்.



““ஆமாட ராமு, இந்த வேலையெல்லாம் செஞ்சு முடிஞ்சதாக் கணக்குக்காட்டி கண்டக்கையா சல்லி அடிச்சிருப்பார். இப்ப புதிசா வந்திருக்கிற பெரிய கிளாக்கரும் அவருடைய கூட்டாளிதானே@ ரெண்டு பேருமா சேர்ந்து வெளையாடியிருந்தா யாருக்குத் தெரியப் போவுது?””



““அது எப்புடிங்கண்ணே, இவுங்களுக்கு சல்லி அடிக்க முடியும்@ தொர கண்டுக்கிட மாட்டாரா?”” என்றான் இளைஞனொருவன்.



““அதுதாண்டா வெளங்கல, இப்ப தொரையும் சரியா மலைக்கு வேலை பாக்க வாறதில்லை. எல்லாம் கண்டக்கையா பொறுப்புலேயே நடக்குது. நம்ப மாரிமுத்துத் தலைவரும் ஐயா பின்னுக்கே சுத்திக்கிட்டு திரியிறாரு. ஒண்ணுமே புரியமாட்டேங்குது”” என்றான் ராமு சிந்தித்தவாறு.



““தோட்டத்தில இப்ப நடந்துகிட்டு வாறதப்பாத்தா நெனைச்சது ஒண்ணு நடக்கிறது ஒண்ணா இருக்கு@ நாம நல்லா மாட்டிக்கிட்டம் போல தெரியுது”” என்றான் செபமாலை.



““இனிமே நாம இப்படியே சும்மா இருந்திடக்கூடாது. இதுங்களுக்கு நடவடிக்கை எடுக்கணும். மொதல் வேலையா யூனியன் மூலமா அரசாங்கத்துக்கு நம்ப எதிர்ப்பைத் தெரிவிக்கோனும்”” என்றான் வீரய்யா.



““ஆமாங்கண்ணே நீங்க சொல்லுறபடி செய்வோம்”” என ஆமோதித்தான் செபமாலை.



““அதுமட்டுமில்லே நீங்க எல்லாரும் முக்கியமாக ஞாபகத்துக்கு வச்சிருக்கிற வெசயம் என்னடான்னா, இனிமே நாம எல்லாம் பயப்புடாம எதுக்கும் எதிர்த்து பேராட்டத் தயராக இருக்கணும்”” என்றான் வீரய்யா ஆவேசமாக.



வீரய்யா கூறிய சொற்கள் அங்கிருந்த இளைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவர்கள் இப்போது எதற்கும் அஞ்சாதவர்களாக மாறத் தொடங்கினர்.



அவர்களது மனதில் ஆவேசம் துளிர்த்து சுடர்விடத் தொடங்கியது.

+++++++++++++++++++++++

அத்தியாயம் இருபத்தொன்று



செந்தாமரை மகிழ்வுடன், துள்ளிக்குதித்த வண்ணம் பியசேனாவின் கொந்தரப்பு மலையை நோக்கி ஓடி வந்தாள்.



அவள் வருவதைக் கவனிக்காத பியசேனா, ஏதோ யோசனையுடன் கற்பாறையொன்றின் மேல் அமர்ந்திருந்தான். அருகே நெருங்கிய செந்தாமரை பின்புறமாகச் சென்று குறும்புத்தனமான அவனது கண்களை திடீரெனப் பொத்தினாள்.



ஒரு கணம் திடுக்குற்ற பியசேனா, அவளது கைகளில் பலமாகக் கிள்ளினான்.



““ஆ...”” எனச் செல்லமாகச் சிணுங்கியபடி கைகளை உதறிக்கொண்டே அவன் முன்னே வந்தாள் செந்தாமரை.



““என்ன செந்தாமரை.... எவ்வளவு நேரமா நான் ஒனக்காக இங்க காத்திருக்கேன் தெரியுமா?”” எனக் கேட்டுக் கொண்டே கைகளால் அவனது இடையைச் சுற்றி வளைத்து தன்னருகே இழுத்தான் பியசேனா.



““இன்னிக்கு எங்க மலைக்கு கண்டக்கையா வந்திட்டாரு@ இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தித்தான் மலையை வுட்டுப் போனாரு. அதற்கு அப்புறந்தான் நான் கங்காணிக்கிட்ட சொல்லிப்புட்டு வந்தேன்”” எனக் கூறிய செந்தாமரை அவனது கைகளை மெதுவாக விலக்கிவிட்டு அவனருகே அமர்ந்து கொண்டாள்.


““நீ வராமயேதும் இருந்திடுவியோன்னு நான் பயந்தே போயிட்டேன்”” எனக் கூறிக் கொண்டே அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்து கொண்டான்”” எனக்கூறிக் கொண்டே அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்து கொண்டான் பியசேனா.



““எப்புடீங்க நான் வராம இருப்பேன். நீங்கதான் முக்கியமா ஏதோ கதைக்கணுமுன்னு ஒங்க கூட்டாளிகிட்ட சொல்லியனுப்பி யிருந்தீங்களே”” எனக் கூறிய செந்தாமரை பியசேனாவின் கைகளைத் தனது கைகளோடு கோர்த்துக் கொண்டாள்.



““ஆமாம் செந்தாமரை, முக்கியமான விசயந்தான்... எங்க சித்தப்பா எனக்கு வேற கலியாணம் செஞ்சு வைக்கபாக்கிறாரு. எங்கம்மாகிட்ட போன கிழமை வந்து இதைப்பத்திக் கதைச்சாரு”” எனக் கவலை தோய்ந்த குரலில் கூறினான் பியசேனா.



““இதுதான் ஒங்க முக்கியமான வெசயமா?”” எனச் செந்தாமரை சிறிது எரிச்சலுடன் கேட்டாள்.



““எங்கம்மாவும் சித்தப்பா பேச்சைக் கேட்டுக்கிட்டு, என்னை வேற கல்யாணஞ் செய்யச் சொல்லி கரச்ச பண்ணிக்கிட்டு இருக்காங்க”” எனக் கூறிய பியசேனா அவளது கைகளை மெதுவாக வருடினான்.



““அப்படீன்னா.... இதுவரைக்கும் நம்ப வெசயத்தைப் பத்தி உங்க அம்மாக்கிட்ட சொல்லவே இல்லியா?”” எனக் கலக்கத்துடன் கேட்டாள் செந்தாமரை.



““நம்ம வெசயமெல்லாம் அம்மாவுக்கு நல்லாத் தெரியும் செந்தாமரை... நான் எவ்வளவோ அவுங்ககிட்ட சொல்லிப் பாத்திட்டேன்@ ஆனா அவுங்களும் பிடிவாதமா இருக்காங்க”” எனக் கூறிய பியசேனா அவளது கைகளை உற்றுப் பார்த்தான்.



““இதுக்கு நம்ம என்னதான் செய்யலாம்”” என யோசனையுடன் கேட்டாள் செந்தாமரை.

““இந்த விசயத்தில நான் எங்க அம்மாவோட மனச கஷ்டப்படுத்த விரும்பல்ல@ அவுங்க மட்டுந்தான் எனக்கு இருக்காங்க.””



““அப்படின்னா ஒங்கம்மா பேச்சைக் கேட்டுத்தான் நீங்க நடக்கப்போறீங்களா?”” என வெடுக்கெனக் கேட்டாள் செந்தாமரை.



““என் நிலைமையில நான் என்னதான் செய்யலாம்@ நீயே சொல்லு.... எனக் கெஞ்சும் குரலில் கூறினான் பியசேனா.



““நீங்க சொல்லுறதைப் பார்த்தா என்னைக் கைவிட்டுப்புடுவீங்க போல இருக்கு”” செந்தாமரையின் குரல் கரகரத்தது. அவளது கண்களில் நீர் முட்டியது.



““எங்கம்மா மட்டுமல்ல... நாட்டில இருக்கிற ஒருத்தருமே நம்ம தொடர்பை விரும்பல்ல செந்தாமரை@ எல்லோரையுமே பகைச்சுக் கிட்டு இருக்க முடியுமா?””



““என்னை நீங்க ஏமாத்தப் பாக்குறீங்க@ புதிசா கலியாணம் பேசினவொடன ஒங்க மனசே மாறிப்போச்சு...”” எனக் கூறிய செந்தாமரை திடீரென எழுந்தாள். அவளையும் மீறிக் கொண்டு அவளது கண்களில் நீர் முட்டி வழிந்தது.



பியசேனா எழுந்து அவளது கைகளைப் பற்றினான்.



““என்னைத் தொடாதீங்க, வரவர ஒங்க பேச்சே மாறிக்கிட்டு வருது. நான்தான் ஏமாந்திட்டேன்”” எனக் கூறிய செந்தாமரை முகத்தைப் பொத்திக்கொண்டு விம்மினாள்.



““இப்ப என்ன தான் சொல்லிட்டேன். ஏன் இப்புடி அழுறே. நம்ம வெசயத்துக்கு எல்லாரும் எதிர்ப்பா இருக்காங்கன்னுதானே சொன்னேன்”” என அவளைத் தேற்றும் வண்ணம் கூறினான் பியசேனா.



செந்தாமரை தொடர்ந்தும் பெரிதாக விம்மினாள். அவன் அப்படி விம்முவதைப் பார்த்த பியசேனாவின் உள்ளம் பதறியது.



““செந்தாமரை, ஒன்னைப் பிரிஞ்சு என்னாயி இருக்கி முடியுமுனு நெனைக்கிறியா? அழாத செந்தாமரை...”” எனக் கூறிய பியசேனா ஆதரவுடன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான்.



““என்னை, நீங்க கைவிட்டுட்டீங்கன்னா அப்புறம் நான் உசிரோட இருக்கமாட்டேன்”” செந்தாமரை விம்மலிடையே கூறினாள்.



““ஏன் செந்தாமரை.... இப்புடி எல்லாம் கதைக்கிறே. நான் ஒன்னை ஒரு நாளும் ஏமாத்தமாட்டேன்”” எனக் கூறிய பியசேனா அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.



““சரிங்க.... நான் வந்து ரொம்ப நேரமாகுது. வூட்டுக்குப் போகனும்”” எனக் கூறிக் கொண்டே அவனது கைகளை மெதுவாக விலக்கி விட்டாள் செந்தாமரை.



““இந்தா பாரு செந்தாமரை.... நான் எந்த நேரத்தில வந்து ஒன்ன கூப்பிட்டாலும் நீ என்னோட வாறதுக்கு ரெடியா இருக்கோனும் நான் எல்லா ஒழுங்குகளையும் செஞ்சிட்டு வந்து ஒன்ன கூப்பிடுவேன்@ இத சொல்லத்தான் முக்கியமா ஒன்னை வரச் சொன்னேன்”” எனக் கூறியபடி அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீரைத் தனது விரல்களால் துடைத்துவிட்டான் பியசேனா.



அவள் அவனது கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு அவனிடம் விடை பெற்றாள்.



மகிழ்ச்சியுடன் துள்ளியபடி அவள் ஒற்றையடிப் பாதையின் வளைவில் ஏறியபோது அங்கே அவள் கண்ட காட்சி அவளது நெஞ்சை விறைக்க வைத்தது.



அங்கு கண்டக்டர் சிகரெட் புகைத்த வண்ணம் அவளையே உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார்.

+++++++++++++++++++++++

அத்தியாயம் இருபத்திரண்டு



அன்று சனிக்கிழமை.



வழமைபோல் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத் துரைமார்கள் எல்லோரும் கிளப்பில் சந்தித்தார்கள்.



பொதுவாக கிளப்நாள் என்றால் துரைமார் எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும். அன்றுதான் அவர்கள் தங்களது நண்பர்களான மற்றைய தோட்டத்து துரைமார்களைச் சந்தித்து உரையாடுவார்கள்@ மது அருந்திவிட்டு ஆடிப்பாடி குதூகலமாகப் பொழுதைக் கழிப்பார்கள்@ தமது சொந்தப் பிரச்சினைகளிலிருந்து தோட்டப் பிரச்சினைகள் வரை ஒருவரோடொருவர் கதைத்துப் பரிமாறிக் கொள்வார்கள்.



““ஹலோ மிஸ்டர் சில்வா, வாருங்கள் நாம் கரம் விளையாடலாம்.””



~பார்| அருகே மது அருந்திக் கொண்டிருந்த ஒருவர் பக்கத்துத் தோட்டத் துரையை அழைத்தார்.



““கம் யூ ஒல்சோ ஹாவ் ஏ ட்றிங்...”” எனக் கூறிவிட்டு அவரின் பதிலைக் கேளாமலே பார் கீப்பரிடம் ஆடர் கொடுத்தார் சில்வா துரை.



இருவரும் தனிமையான ஓர் இடத்தில் போய் அமர்ந்து கொண்டனர். ~பார்கீப்பர்| அவர்களுக்கு மதுவைக் கொண்டு வந்து பரிமாறினான்.



““எப்படி உங்களது எஸ்டேட் விஷயங்கள் யாவும் ஒழுங்காக நடக்கின்றதா? தேயிலை விலையெல்லாம் எப்படி?”” எனக் கேட்டவாறு மதுவை கிளாஸில் ஊற்றினார் பக்கத்து தோட்டத்துரை.



அவர்களது உரையாடல் ஆங்கிலத்தில் நடந்தது.



““உலகச் சந்தையில் தேயிலைகள் விலை அதிகரித்ததால் எமது தோட்டத் தேயிலையும் கூடிய விலைக்கே விற்கப்படுகின்றது. உண்மையில் நாம் தயாரிக்கும் தேயிலையின் தரம் மிகவும் குறைந்து விட்டது”” என்றார் மிஸ்டர் சில்வா மதுக்கிண்ணத்திற்குள் உற்றுப் பார்த்தவாறு.



““ஆமாம். தேயிலைத் தோட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி வீழ்ச்சியை யாருமே புரிந்து கொள்ளாத வகையில் அதிர்ஷ்டவசமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது”” என்றார் பக்கத்து தோட்டத்துரை.



““இந்த உற்பத்தி வீழ்ச்சியை இனிமே சரிப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை...””



““ஏன் திடீரென அப்படிக் கூறிவிட்டீர்கள், இப்போது தோட்டங்களில் மேலும் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க நிறையப் பணம் அரசாங்கத்தில் ஒதுக்கியிருக்கின்றார்கள் அல்லவா?””



““ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் அந்தப் பணத்தை தோட்டத்திற்கு சரியான முறையில் உபயோகிக்க முடியாத நிலை உருவாகிக்கொண்டு வருகிறது”” சில்வா துரையின் பேச்சில் கவலை தொனித்தது.



““இப்போதுள்ள சூழ்நிலையில் நமக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏன் இந்த நாட்டுக்குமே பெரிய பாதிப்பு ஏற்படப்போகின்றது. உடனே நாம் இதைப் புரிந்து கொள்ள முடியா விட்டாலும் போகப் போக இதைப் புரிந்து கொள்ளலாம்””



““தொழிலாளர்களது யூனியனிலிருந்து இது சம்பந்தமாக எனக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்கள்”” என்றார் சில்வா துரை.



““அப்படியா, அந்தக் கடிதத்தில் என்ன விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்?””



““தொழிலாளர்களது சலுகைகள் பெரிதும் குறைக்கப்பட்டு விட்தென்றும், வழமையாக தோட்டங்களில் செய்து வந்த வேலைகள் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.””



““இதற்கு நீங்கள் என்ன கூறுவதாக உத்தேசித்துள்ளீர்கள்?””



““அதுதான் எனக்கும் புரியவில்லை. தோட்டத்துக் கண்டக்டர், தோட்டத்தில் ஒழுங்காக வேலை செய்யாது தோட்டத்தைச் சுரண்டுகிறார்@ அதைப்பற்றி இரகசியமான முறையில் நான் மாவட்டக் காரியாலய மனேஜரிடம் கூறினேன். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு எனக்கு அனுமதி தரவில்லை.””



““ஆமாம்... மாவட்டக் காரியாலயத்தில் இருப்பவர்கள் கூட கட்சி அமைப்பாளரின் ஆட்கள் தானே.””



““எனது தோட்ட கோப்பிரட்டிவ் மனேஜர் கூட அரிசியைக் குறைத்து நிறுக்கின்றாhர் என்றும், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ரேஷன் சாமான்களை கள்ள மார்க்கட்டில் விற்று விடுகிறார் என்றும் எனக்குத் தெரிய வந்துள்ளது. நான் யூனியனுக்குச் சென்று இதைப் பற்றி விசாரித்தும் பார்த்தேன். அந்தந்த மாதத்துக்கு வேண்டிய ரேஷன் சாமான்களை அவர்கள் கொடுத்து விட்டதாக என்னிடம் கூறினார்கள்.



““ஆமாம் அரசியல்வாதிகள் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக தோட்டங்களில் கூட்டுறவுச் சங்கக் கடைகளை அமைத்து, அதில் தங்களுக்கு சாதகமான ஆட்களையே வேலைக்கு அமர்த்துகின்றனர். ஆனால், அவர்களோ கடைகளில் உள்ள சாமான்களைச் சுரண்டி தொழிலாளர்களைக் கஷ்டத்துக்குள்ளாக்குகின்றனர்.””



““இப்படித் தோட்டங்களில் அரசியல் நிர்வாகத்தில் பங்கம் விளைவிப்பதால் தோட்டங்களை நாம் சரியான பாதையில் கொண்டு நடத்த முடியாமல் இருக்கிறது.””



““அது மட்டுமல்ல, இன்னுமொரு முக்கியமான விடயம். யாதெனில், தோட்டங்களில் இப்படி ஊழல் செய்பவர்களைத் தண்டிக்கவோ அல்லது தடைசெய்யவோ எத்தனிக்கும் போது நாம் எமது தொழிலையே இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி விடுகிறது.



““சரியாகக் கூறினீர்கள் மிஸ்டர் சொய்சா, எனது தோட்டத்துக்கு புதிதாக வந்திருக்கும் பெரிய கிளாக்கர் மீது கூட எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. என்ன செய்வது, ஏதோ ஒருவாறு சமாளித்துத்தான் தோட்டத்தைக் கொண்டு நடத்துகிறேன்”” எனக் கூறிய சில்வாத் துரை கிளாஸில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்துவிட்டு கிளாசைக் கீழே வைத்தார்.



““மிஸ்டர் சில்வா, உங்களுக்கு கோப்புரேட்டிவ் மனேஜர் எங்கே சாமான்களை விற்கின்றார் என்பது தெரியுமா?””



““ஆமாம். தொழிலாளர்கள் எனக்கு அனுப்பியிருந்த கடிதமூலம் தெரிந்து கொண்டேன். பக்கத்துக் கிராமத்தில் உள்ள கடையில் விற்கின்றார்.””



““அப்படியானால் இது விஷயமாக நீங்கள் பொலிசுக்கு அறிவித்தல் கொடுக்கலாமல்லவா.””



““பொலிசாரும் எம்மைப்போல் அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டுதானே இருக்கின்றனர்.””



சொய்சா சிந்தனையுடன் சிகரெட்டைப் பற்றவைத்து புகையை வெளியே ஊதினார்.



““ஏன் இப்போதுள்ள இன்ஸ்பெக்டர் நமக்குத் தெரிந்தவர்தானே. அவரிடம் இரகசியமாகச் சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம். அவர் எம்மை அரசியல் வட்டாரங்களுக்குக் காட்டிக் கொடுக்க மாட்டார்”” எனக் கூறினார் மிஸ்டர் சொய்சா.



சிறிது நேரத்தின் பின்னர் இருவரும் எழுந்து இசைக் கச்சேரி நடக்கும் இடத்துக்குச் சென்றனர்.



இப்போது சில்வா துரைக்கு சிறிது மனப்பாரம் குறைந்திருந்தது.

++++++++++++++++++++

அத்தியாயம் இருபத்திமூன்று



மடுவத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர். ஒரு பக்கத்தில் கண்டக்டர் அன்று வேலை செய்தவர்களுக்கு பேர் போட்டுக் கொண்டிருந்தார். மறுபக்கத்தில் கொழுந்துக் கணக்கப்பிள்ளை கொழுந்து நிறுத்திக் கொண்டிருந்தார். கொந்தரப்புக் கணக்கப்பிள்ளை கணக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார். மடுவம் ஒரே கலகலப்பாக இருந்தது.



ஆபீஸில் இருந்து ~டயறிப் பொடியன்| அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தான். தினமும் காலையில் அன்றைய வேலைகளைப் பற்றிய விபரத்தை டயறியில் குறித்து, துரையின் பார்வைக்காக கண்டக்டர் அனுப்பி வைப்பார். அதனைப் பார்வையிட்டு, ஒப்பம் வைத்தபின்பு மாலையில் அதனை கண்டக்டருக்கு திருப்பி அனுப்பி வைப்பார் துரை.



டைப் செய்யப்பட்டு துரையின் ஒப்பத்துடன் ஒரு நிருபமும் அன்று டயறியில் வைத்து அனுப்பப்பட்டிருந்தது. அதனை வாசித்த போது கண்டக்டரின் முகத்தில் குழப்பம் காணப்பட்டது.



““நமது தோட்டத்தை நிலமற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. வெகு விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும். இப்போது தோட்டத்தில் குடியிருப்பவர்கள் எல்லாரும் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் அதற்குறிய ஒழுங்குகளையும் அரசாங்கம் செய்யும்.””



மேற்கண்டவாறு அந்த நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



கண்டக்டரின் முகம் மாறியிருப்பதைப் பார்த்த வயதான தொழிலாளி ஒருவர் அருகே வந்து, ““என்னங்கையா வேலை ஏதும் சரியில்லேன்னு தொர கடுதாசி அனுப்பியிருக்காருங்களா?”” எனக் கேட்டார்.



““நம்ப தோட்டத்தை கொலனிக்கு கொடுக்கப்போறது சொல்லி அரசாங்கத்தில் இருந்து தொரைக்கு லெட்டர் அனுப்பியிருக்கு”” கண்டக்டர் இப்படித் திடீரெனக் கூறியதும் மடுவத்தில் இருந்த எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.



கண்டக்டர் கூறிய விஷயம் வீரய்யாவுக்கும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.



““தோட்டத்தைவுட்டு ஆளுங்க எல்லாத்தையும் வெளியே போகவேணுஞ் சொல்லி கடுதாசி வந்திருக்கு. நீங்க எல்லாம் என்ன செய்யப்போறது?”” என அங்கு சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்துக் கேட்டார் கண்டக்டர்.



““தோட்டத்தைவுட்டு நாங்கெல்லாம் எங்க ஐயா போறது?”” எனக் கலக்கத்துடன் கேட்டான் அங்கு நின்றகுப்பன்.



““அதைப்பற்றி நமக்கு ஒண்ணும் தெரியாது. தோட்டத்தைவுட்டுப் போகச் சொல்லித்தான் கடதாசி வந்திருக்கு.””



““இது என்னங்க பெரிய அநியாயமா இருக்கு. நாங்கெல்லாம் இந்தத் தோட்டத்திலயே பொறந்து வளந்தவங்க.... இதைவுட்டு எங்கை ஐயா போறது?”” எனப் பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.



““அரசா ங்கத்தில இருந்துதானே கடுதாசி வந்திருக்கு. யாருக்கும் ஒண்ணும் செய்யமுடியாது. நீங்கள் எல்லாம் போக வேண்டித்தான் வரும்”” எனக் கூறினார் கண்டக்டர்.

““இது பெரிய அநியாயமாக அல்லவா இருக்கிறது?”” எனக் கூறினாள் சுமணபால.



““அப்படியல்ல@ அரசாங்கம் ஏதோ ஒரு முக்கிய காரணத்தோடு தான் இதனைச் செய்கிறது? அதற்கு நாமெல்லாரும் உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்.”” எனக் கூறிய கண்டக்டர் அவனுடன் மேலும் கதைக்க விரும்பாதவராய் ““சரி சரி, நீ போய் உனது வேலையைக் கவனி”” எனச் சொல்லி அவனை அனுப்பிவைத்தார்.



சுமணபால கிராமத்திலிருந்து தினமும் வேலைக்கு வருபவன். வேலையில நிதானமும், பொறுப்புணர்ச்சியும் மிக்கவன். எதையும் சிந்தித்து தெளிவோடுதான் பேசுவான். அதனாலேதான் முன்பிருந்த கண்டக்டர் அவனுக்கு ~சாக்குக்காரன்| வேலை வழங்கியிருந்தார்.



கிராமத்திலிருந்து வேலைக்கு வரும் ஒருவன் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்துகொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உதிராகக் குரல் எழுப்புவது கண்டக்டருக்கு எரிச்சலை ஊட்டியது.



““என்ன வீலய்யா ஒண்ணும் பேசாம இருக்கிற........ நாமெல்லாம் போய்த்தான் ஆகணுமா?”” ராமு கலக்கத்துடன் கேட்டான்.



““தோட்டத்தைவுட்டு அவுங்க போகச் சொல்லிட்டா அப்புடி ஒடன எல்லாரும் போயிட முடியாது. நாமெல்லாம் ஒண்ணா சேர்ந்து யோசிச்சாத்தான் இதுக்கு ஒரு முடிவு செய்யணும்”” என்றான் வீரய்யா யோசனையுடன்.



““இன்னிக்கே கூட்டம் போட்டு இதைப்பத்திப் பேசுவோம்”” என்றான் பக்கத்தில் நின்ற செபமாலை.



““ஆமாம் அந்திக்கு ஆறுமணிக்கு கூட்டம் வைப்போம். எல்லோரும் வந்திடுங்க”” என்றான் வீரய்யா.



ஒவ்வொருவராகக் கொழுந்து மடுவத்தைவிட்டு சஞ்சலத்துடன் கலைந்து சென்றனர். ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பெருந் திகில் ஏற்பட்டிருந்தது.



ஆண்டாண்டு காலமாக, அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரே குடும்பம் போன்று வாழ்ந்து வந்த சமூகப் பிணைப்பிலிருந்து நிதறிப் போவதை விரும்பவில்லை.



தோட்டத்தைவிட்டு வெளியேறுவதானால் அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் சென்று குடியேறிவிடவும் முடியாது. அப்படிக் குடியேறுவதற்கு இந்த நாட்டில் அவர்களுக்கு உரிமையும் இல்லை.



தோட்டத்திலிருந்து சிதறிப்போய், வௌ;வேறுத் தோட்டங்களில் சேர்ந்து, புதிதாகத் தத்தமது வாழ்க்கையை ஆரம்பிப்பது அவர்களுக்கு ஒரு வேதனை தரும் விஷயமாக இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அது அவர்களுடைய பிறந்த மண். சிறுவயதில் அவர்கள் ஓடியாடி விளையாடிய பூமி, ஏறியிறங்கிய மலைகள், குடியிருந்த லயங்கள், இரத்தத்தைப் பிழிந்து உழைத்து வளர்த்தெடுத்த தேயிலைச் செடிகள், இவை எல்லாவற்றையும் இழந்து போவதானால்... ஓ! அது மிகவும் கொடுமையான விஷயந்தான்.



அவர்களுக்கு இந்த உலகத்திலே இருப்பதெல்லாம் அவைகளின் மேல் அவர்கள் வைத்துள்ள பாச உணர்வு ஒன்றுதானே!



உதிர்காலம் எப்படி அமையப் போகிறதோ என்று எதுவுமே தெரியாமல் சூனியப் பெருவெளியாக மனதிலே விரிந்துகிடக்க, எப்படித்தான் அவர்கள் தமது பாசப் பிணைப்புகளை அறுத்துக்கொண்டு வெளியே செல்ல முடியும்!



அன்று இரவு மடுவத்திலே நடந்த கூட்டத்தில் பெருந் தொகையான தொழிலாளர்கள் பங்கு பற்றினர்.



““தோட்டத்த அரசாங்கம் எடுத்தவொடன நாமெல்லாம் ரொம்ப சந்தோஷப்பட்டோம். அரசாங்கத்திலை நம்மளுக்கு நல்லது செய்வாங்கன்னு எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனா நாம நெனைச்சதுக்கு மாறாத்தான் எல்லாமே நடந்துக்கிட்டு வருகுது! நாமெல்லாம் ஏமாந்திட்டோம்”” வீரய்யா உணர்ச்சி ததும்பக் கூறினான்.



““தோட்டத்துக்குப் புதிசு புதிசா ஆளுங்க வந்தாங்க. இப்ப தோட்டத்த மூடுற நெலைக்கு கொண்டு வந்திட்டாங்க”” என்றான் ராமு.



““ஆளுகவூட்டு சம்பளத்தை வெட்டினாங்க, சாப்புடுற சாப்பாட்டை கொள்ளை அடிச்சானுக... நம்ப படிச்ச பொடியன்களுக்கு கெடைக்கிற வேலையளை அவுங்க புடிச்சிகிட்டாங்க. சிங்கள மாஸ்டர்மாரை அனுப்பி எங்க பிள்ளைங்களோட படிப்பையே சுரண்ட ஆரம்பிச்சாங்க.



இதுக்கெல்லாம் நாம பொறுத்துக்கிட்டிருந்தோம். இப்ப நாங்க இருக்கிற எடத்தைவுட்டே நம்மளை துரத்தப் பாக்கிறாங்க. இனியும் நாம பொறுக்கணுமா?”” உணர்ச்சி வேகத்துடன் கூறிவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த்தான் வீரய்யா.



““முடியாது.. முடியாது.... இனி மேலும் நாங்க பொறுத்திருக்கக் கூடாது”” பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.



நாம எதையுமே எதிர்த்துக் கேக்கமாட்டோமுனு நெனைச்சுக் கிட்டுத்தான், அவுங்க நெனைச்சபாட்டுக்கு செஞ்சுகிட்டு வாறானுக...... நாம இனிமே சும்மா இருக்கக் கூடாது. நம்ம எதிர்ப்பைக் காட்டணும்.””



வீரய்யா உறுதியுடன் கூறினான்.



அங்கிருந்த ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அசைக்க முடியாத உறுதி கிளர்ந்தெழுந்தது. எவ்வித கஷ்டங்கள் வந்தாலும் எதையும் எதிர்த்துப் போராடக் கூடிய மனவலிமை இப்போது அவர்களிடத்தில் உருவாகியிருந்தது.

++++++++++++++++++++

அத்தியாயம் இருபத்துநான்கு



அன்று நாட்டிலுள்ள புத்தவிகாரையில் கூட்டமொன்று நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிரந்தது. கிராம சேவகர், கூட்டம் நடை பெறுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னதாகவே பண்டா முதலாளியை அழைத்து வருவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார்.



““வாங்க, வாங்க ஜி. எஸ். மாத்தயா. எப்படி நமது விஷயமெல்லாம், சரிவந்திருக்கிறதா?”” எனக் கேட்டபடி கிராமசேவகரை வரவேற்றார் பண்டா முதலாளி.



““காரிங்கள் துரிதமாக நடக்கின்றன. நமது மனுக்களை விரைவில் உரிய இடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால் எல்லாமே ஒரு கிழமையில் முடிந்துவிடும்”” எனக் கூறிவிட்டு கிராமசேவகர் பண்டா முதலாளியின் வீட்டின் முன்புறமாக இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார்.



““கூட்டத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறதுதானே...... நல்ல சரக்கு இருக்கிறது@ அருந்திவிட்டுச் செல்லலாம்”” எனக் கூறிய பண்டா முதலாளி கிராமசேவகரின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஒரு போத்தல் கள்ளை முட்டியில் இருந்து எடுத்துக் கொண்டு வந்தார். மெனிக்கா கடையிலிருந்து கிளாஸ் ஒன்றை எடுத்துவந்து மேசையில் வைத்தாள்.



““எப்படி அந்த வயல் விடயமெல்லாம் முடிந்துவிட்டதா, அல்லது ஏதும் பிரச்சினை இன்னும் இருக்கா?”” என வினவியபடி கிளாலில் கள்ளை ஊற்றிக் கிராமசேகவரிடம் கொடுத்தார் பண்டா முதலாளி.



ஒரே மிடறில் கள்ளை உறிஞ்சிக் குடித்துவிட்டு வாயை புறங்கையினால் கள்ளை உறிஞ்சிக் குடித்துவிட்டு வாயை புறங்கையினால் துடைத்தபடி கிளாசை மேசையில் வைத்தார் கிராமசேவகர்.



““டி.ஆர்.ஓ. நமது ஆள்தானே. அதனால் எல்லா விடயமும் சுலபமாக முடிந்துவிட்டது. தரிசாகக் கிடக்கும் நிலங்களையெல்லாம் பண்படுத்தி பயிர் செய்யும்படி தானே அரசாங்கம் கூறியிருக்கிறது””



““என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்....? அந்த இடத்தில் கறுப்பண்ணன் கங்காணி வெகு காலமாக பயிர் செய்து கொண்டு வருகிறார். அது தரிசு நிலமாகக் கிடக்கவில்லையே”” எனக் கூறியபடி மீண்டும் கிளாஸில் கள்ளை நிரப்பினார் பண்டா முதலாளி.



““நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனாலும் ஒரு விடயத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள். இது எங்களுடைய நாடு. இந்த நாட்டின் பிரஜைகளாகிய எங்களுக்குத்தான் முதலில் எல்லா உரிமைகளும் இருக்கவேண்டும். அரசாங்கம் நமக்குச் சலுகைகளைச் செய்து கொடுக்கும்போது நாமாகவே அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு பயிர் செய்வதற்கு காணி இல்லாதபோது, இந்த நாட்டில் உரிமையற்ற ஒருவர் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை தனதாக்கிக்கொண்டு பயிர் செய்வது ஓர் அடாத்தான விஷயமல்லவா..””



““அது சரி மாத்தாயா... அந்த மடுவத்துக்குப் பக்கத்திலும் ஒரு வயல் இருக்கிறதல்லவா? அந்த வயலை நீங்கள் எப்படியாவது எனது பெயருக்கு மாற்றித் தாருங்கள்.... நான் உங்களைக் கவனித்துக் கொள்கின்றேன்.””



““இப்போது யார் அந்த வயலைச் செய்து வருகின்றார்கள் என்பது தெரியுமா.......?”” என யோசனையுடன் கேட்டார் கிராம சேவகர்.



““குண்டன் கங்காணி லயத்தில் வசிக்கும் தொழிலாளி ஒருவர்தான் அந்த வயலில் வேலை செய்து வருகிறார். அந்த வயலுக்கும் நல்ல நீர் வசதி உண்டு””



““~இப்போதுதான் சூழ்நிலையில் அந்த வயலை உங்களுக்கு எடுத்துத் தருவது மிகவும் சுலபம். தோட்டத் தொழிலாளர்கள் எல்லாரும் இந்த மாத இறுதியில் தோட்டத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். அந்தத் தோட்டத்தைத் தான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் காணியற்றவர்களுக்கு கொடுக்கப்போவதாக எனக்கு அறிவித்தல் கிடைத்திருக்கிறது. காணிகளைப் பகிர்ந்து கொடுக்கும்போது வயல் உள்ள பகுதியை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்”” என்கிறார் கிராம சேவகர்.



அதைக் கேட்டதும் பண்டா முதலாளியின் உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பியது. போத்தலில் கள்ளு முடிந்ததைக் கவனித்ததும் அவர் மேலும் ஒரு போத்தல் கள்ளு கொண்டு வரும்படி மெனிக்காவிடம் உத்தரவிடுகிறார்.



““வேண்டாம்... நாங்கள் இப்போது கூட்டத்திற்குப் போக வேண்டும். அதனால் அதிகம் குடித்துவிட்டால் பின்பு என்னால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விடும்”” என்றார் கிராம சேவகர் சிரித்தபடி



““தோட்டத்தில் காணி பகிர்ந்து அளிக்கும்போது எனது பெயரிலும் காணி கொடுக்க முடியும் தானே...”” எனக் கண்களைச் சிமிட்டி சிரித்த மெனிக்கா, கிராம சேவகருக்கு முன்னால் சிகரட் பக்கற் ஒன்றை எடுத்து வைத்தாள்.



““குடும்பத்திற்கு ஒருவருக்குத்தான் முதலில் காணி கொடுப்பதாகத் திட்டம் இருக்கின்றது. ஆனால் உங்களைப் பொறுத்தவரையில் நான் விசேஷ சலுகை செய்துதானே ஆகவேண்டும்”” எனக் கூறிய கிராம சேவகர் சிகரட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தார்.



““நமது அண்ணன் மகன் பியசேனாவுக்கும், உமக்குக் கிடைக்கப்போகும் காணியின் பக்கத்திலேயே நிலம் கொடுத்து உதவ வேண்டும்”” என வேண்டினார் பண்டா முதலாளி.



~ஓ......! இதெல்லாம் மிகவும் சின்ன விஷயம்@ அதை நான் கட்டாயம் செய்து தருகிறேன். எனது சிபார்சின் பேரிலேதான் எல்லோருக்கும் காணி கொடுபடப்போகின்றது”” எனக் கூறிய கிராமசேவகர் ஏதோ நினைத்துக் கொண்டவராக,



““எப்படி அவனது விஷயம் இருக்கின்றது? இப்போலும் அந்த மாயாண்டியின் மகளுடன் அவன் தொடர்பு வைத்திருக்கிறானா?”” என்க் கேட்டார்.



““அவர்களது தொடர்பைத் தடை செய்வதற்கு நான் என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். நமது கண்டக்டர் கூட இந்த விஷயத்தில எனக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்திருக்கின்றார்.””



““அப்படியா? கண்டக்டரின் உதவியிருந்தால் நிச்சயமாக அவர்களைப் பிரித்துவிடலாம். அவர் தனது பதவியைப் பயன்படுத்தி, மாயாண்டியின் குடும்பத்தினருக்கு தொல்லைகள் கொடுத்தால் எல்லாமே சரியாகிவிடும்”” என்றார் கிராம சேவகர்.



““அதே நேரத்தில் பியசேனாவுக்கும் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து வைக்கும்படி அவனது தாயைத் தூண்டியிருக்கின்றேன்”” என்றார் பண்டா முதலாளி.



““இப்போது உள்ள சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. வெகு விரைவில் தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தோட்டத்தைவிட்டுப் போய்விடுவார்கள். அதன் பின்னர் பியசேனாவுக்கு அவளைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்காது”” என்றார் கிராம சேவகர்.



““இன்னும் சிறிது காலத்துக்கு அவன் அவளுடன் தொடர்பு கொள்ளாதவாறு நாங்கள் பார்த்துக்கொண்டோமானால், பின்னர் பிரச்சினையே இருக்காது”” என்றாள் பக்கத்திலே நின்ற மெனிக்கே.



““நான்கூடப் பியசேனாவைத் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை செய்கின்றேன். அந்தப் பெண்ணுடன் இருக்கும் தொடர்பை அவன் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவனுக்குக் காணி கிடைக்காதவாறு செய்யப்போவதாக பயமுறுத்தி வைக்கிறேன்”” என்றார் கிராமசேவகர்.



““அதுவும் நல்ல யோசனைதான். எல்லோருமே எதிர்ப்பைக் காண்பித்தால் அவன் அவளைக் கைவிட்டுத்தான் ஆக வேண்டும்”” என்றார் பண்டா முதலாளி.



““சரி, சரி நேரமாகிறது, நாங்கள் விகாரைக்குப் புறப்பட்டுப் போவோம். இதுவரையில் மக்கள் எமக்காகக் காத்திருப்பார்கள்”” எனக் கூறி எழுந்திருந்தார் கிராம சேவகர்.



பண்டா முதலாளியும் தனது ~கோட்டை| எடுத்து மாட்டிக் கொண்டு அவருடன் புறப்பட்டார்.



அவர்கள் விகாரையை அடைந்தபோது அங்கு சனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.



கூட்டத்தில் பேசிய கிராமசேவகர், பக்கத்தில் உள்ள தோட்டம், கிராமத்தில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படப் போவதாகவும், அதற்கு வேண்டிய நடவடிக்கைகள் யாவும் துரிதமாக நடக்கிறதெனவும், இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த கிராம மக்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் ஏற்படப்போகிறதெனவும் விளக்கினார். அத்துடன் காணியற்றவர்கள் தங்களது விபரங்களை மனுப் பத்திரங்களில் நிரப்பித் தன்னிடம் தந்துவிட்டால், மிக விரைவில் எல்லோருக்கும் காணி பெற்றுத் தருவதாகவும் கூறினார்.



அங்கு நின்றவர்களது முகத்தில் உற்சாகம் தாண்டவமாடியது. காணியற்றவர்கள் எல்லோருக்கும் இப்படிச் சுலபமாகக் காணி கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் வருமென ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்களது உள்ளம் கிராம சேவகரையும், இவற்றுக்கெல்லாம் உறுதுணையாக நின்ற பண்டா முதலாளியையும் வாழ்த்தியது.



கூட்டம் முடிவடைந்ததும் கிராம சேவகர் அங்குள்ள மக்களின் சார்பில் தாமாகவே மனுப் பத்திரங்களை நிரப்பி அவர்களிடம் ஒப்பம் வாங்கினார். அங்குள்ள கிராம மக்களுக்குச் சரியான முறையில் மனுப் பத்திரங்களை நிரப்ப வேண்டிய அறிவு இல்லையென்பது அவருக்குத் தெரியும்.



பியசேனா தனது மனுப் பத்திரத்தைக் கிராம சேவகரிடம் கையளித்தபோது, ““இது விடயமாக நான் உன்னிடம் தனிப்பட்ட முறையில் சில விடயங்களைப் பின்னர் கதைக்க வேண்டும்”” எனக் கூறியவண்ணம் அவனது பத்திரத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.



மனுப் பத்திரங்களில் கையொப்பமிட்ட மக்கள் மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர்.

+++++++++++++++++++

அத்தியாயம் இருபத்தைந்து



கிராம சேவகர் வயலின் நடுவே குடை பிடித்தபடி நின்று வேலை செய்பவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். முன்பு கறுப்பண்ணன் கங்காணிக்குச் சொந்தமாயிருந்த வயல் இப்போது அவருக்குச் சொந்தமாகிவிட்டது. கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் பலர் இப்போது அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.



சிலர் வரம்புகள் கட்டுவதிலும், வேறு சிலர் ஏற்கனவே கறுப்பண்ணன் கங்காணி நாற்றுப்போட்டு முளைக்க வைத்திருந்த நெற்பயிர்களைப் பிடுங்கி வயலில் நடுவத்திலும் முனைந்திருந்தனர். வயலின் மறுபகுதியில் ஒரு சிலர் விதைநெல்லை விதைத்துக் கொண்டிருந்தனர்.



இஸ்தோப்பில் இருந்தபடியே முன்பு தனக்குச் சொந்தமாக இருந்த வயலில் இப்போது கிராம சேவகர் வேலை செய்விப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கறுப்பண்ணன் கங்காணிக்கு நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பதைப்போல இருந்தது. அவரது கண்கள் கலங்கியிருந்தன.



தரிசாகக் கிடந்த நிலத்தை நெற்றி வியர்வை சிந்திமாடாக உழைத்து வயலாக மாற்றியவர் அவர். பெரும் பணத்தைக் கொட்டி வயலைப் பண்படுத்தியவர் அவர். ஆனால், இன்று வேறொருவன் அடாத்தான முறையில் அந்த வயலின் நடுவே நின்றுவேலை செய்விக்கின்றான். அதனைப் பார்க்கும் போது அவரது அங்கங்கள் ஆத்திரத்தால் துடித்தன.



கவ்வாத்துக் கத்தியால் அந்த ஆராய்ச்சியின் கைகளைத் துண்டு துண்டாய் வெட்டி விட்டால் என்ன? அவரது கைகள் துருதுருத்தன. உணர்ச்சிகளை ஒருவாறு அவர் கட்டுப்படுத்திக் கொண்டார்.



அவரது மனைவி முதல் நாள் இரவு அவருடன் சண்டை பிடித்துக் கண்ணீர் சிந்தியதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார் கங்காணி.



நிலத்தை உழுது பண்படுத்த வேண்டிய செலவுக்காக மனைவியின் சங்கிலியை வட்டிக் கடையில் அற வட்டிக்கு வைத்துத்தான் அவர் பணம் எடுத்திருந்தார். அவரது மனைவிக்குத் தனது நகை மாண்டுவிடப் போகின்றதே என்ற ஏக்கத்தோடு, வயல் பறிமுதலாகிவிட்டதே என்ற கவலையும் சேர்ந்து கொண்டு அவளைப் பெரிதும் கலக்கியது. அவள் தான் என்ன செய்வாள்? கவலைகள் எல்லாம் கோபமாக மாறி, கணவனுடன் சண்டை பிடித்துத் தீர்த்தாள்.



““என்னாங்க கங்காணி ஒரே யோசனையா ஒக்காந்திட்டு இருக்கீங்க...... இன்னிக்கு வேலைக்குப் போகலியா.......”” சுரண்டியைக் கழுத்துக்குப் பின்னால் தோள்பட்டையின் மேல் வைத்தவாறு உள்ளே நுழைத்த குப்பன் கறுப்பண்ணன் கங்காணியின் அருகில் போய் அமர்ந்துகொண்டான்.



““காலம் போற போக்காப் பாத்தா நாமெல்லாம் இனிமே நல்ல முறையில வாழமுடியாது போயிருக்கு. இது எங்க போயி முடியுமோ தெரியாது”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி விரக்தியுடன்.



““என்னாங்க கங்காணி ஒரு மாதிரி சலிப்பா பேசுறீங்க@ வயல் போனதிலயிருந்து ஆளும் ரொம்ப மோசமாப் போயிட்டிங்க””



““அந்த ஆராய்ச்சிப்பய வயலை எடுத்ததிலயிருந்து எனக்குப் பயித்தியம் புடிச்சமாதிரி போயிருச்சு@ சாப்பிடக்கூட மனசு வரல்ல@ தூங்கவும் முடியல்ல. நம்ப ஜில்லா பிரதிநிதியையும் டி.ஆர்.ஓ. கிட்ட கூட்டிக்கிட்டுப் போய் கதைச்சுப் பார்த்தேன். அவரு என்னடான்னா ஏதேதோ கேள்வியெல்லாம் கேக்கிறாரு.””



““அப்புடி என்னதான் கேட்டுப்புட்டாங்க?”” குப்பன் மேலும் விபரம் அறிய விரும்பி ஆவலுடன் கறுப்பண்ணனின் முகத்தைப் பார்த்தான்.



““அத ஏங்கேக்கிற குப்பன்! நீ அந்த வயல்ல எவ்வளவு காலமா வேலை செஞ்சு வாற? வயல் வச்சிருக்கிறதுக்கு அரசாங்கத்துக்கு வரி கட்டுறியா.... ஒனக்கு பிரஜா உரிமை இருக்கா? ஒன்னுடைய வயலென்னு என்ன ஆதாரம் இருக்கு? அப்புடி இப்புடினு கேள்வி மேல கேள்வி கேக்கத் தொடங்கிட்டான்.””



““நம்ப வயலை அவுங்க புடுங்கிக்கிட்டதுமில்லாம, அவங்க கேக்கிற கேள்விக்கும் பதில் சொல்ல காலமிது...... ம்.......”” எனச் சலிப்போடு கூறினான் குப்பன்.



““நான் எல்லாத்தையும் வௌரமா சொன்னேன். பிரசா உரிமைக்கு இப்போதுதான் மனுப் போட்டிருக்கேன். தொரைதான் என்னை வயல் வெட்டிப் போடச் சொன்னாரு. எவ்வளவு காலம் செய்யுரோமுன்னு நான் எழுதி வைக்கல, ரொம்பப் பணமும் அந்த வயல்ல செலவு செஞ்சேன்னு சொன்னேன்@ நம்ப பிரதிநிதியும் கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. அவுங்க கேட்டாத்தானே! ஒனக்கு பிரசாவுரிமை இல்லாததினால் நீ இந்தியாவுக்குப் போற ஆள். இந்த நாட்டிலே ஒனக்கு உரிமை இருந்தால்தானே காணி கொடுக்கலாமுனு சொல்லிப்புட்டாங்க. அப்புறம் என்னதான் செய்யிறது? நான் கவலையோட வூட்டுக்கு வந்துட்டேன்”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி கவலை தோய்ந்த குரலில்



““இது பெரிய அநியாயம்”” என்றான் குப்பன்.



““அது மட்டுமல்ல குப்பன், நாங்க கதைச்சிட்டு வந்தவுடன் அந்த ஆராய்ச்சிப்பய ஏதோ புத்தகம் மாதிரி பெரிசா கொண்டுகிட்டு உள்ளுக்குப் போனான். ரெண்டு பேரும் சிங்களத்தில பேசிச் சிரிச்சாங்க. அப்பவே நெனைச்சன் இந்த ஆராய்ச்சிப் பயலும் டி.ஆர்.ஓ. வும் ஒரே கூட்டாளின்னு.””



அப்போது வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்தான்.



““தாத்தா, தாத்தா அங்க பாருங்க, ஒங்க வாழைமரகளை எல்லாம் வெட்டுராங்க.””



““அட அநியாயக்கார பசங்களா... ஏண்டா வாழமரத்த எல்லாம் வெட்டுறீங்க”” எனப் பலமாக கூறிக்கொண்டு வயல் பக்கமாக ஓடினார் கறுப்பண்ணன் கங்காணி. அவரைத் தொடர்ந்து குப்பனுக்கு சென்றான்.



““ஐயா இது அநியாயமுங்க.... நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உண்டாக்கினேன் தெரியுமா? வயலைத்தான் புடிங்கிக்கிட்டீங்கன்னா... வாழ மரத்தையும் வெட்டுறீங்களே. அதை வெட்டுரதுக்கு பதிலா என்னைய வெட்டுங்க”” என்றார் கறுப்பண்ணன் கங்காணி ஆக்குரோசத்துடன் அவரது ரோமங்கள் சிலிர்த்தன. வார்த்தைகள் தடுமாறின.



““இந்தா கங்காணி சும்மா சத்தம் போட்டு மெரட்ட வேணாம்... இந்த வாழ மரங்களால நெல்லுக்கு பூச்சி ரொம்ப வாராது. நீ கொண்டு போய் ஒங்க வீட்டுக்குகிட்ட வச்சுக்கோ”” என்று கறுப்பண்ணன் கங்காணியைப் பார்த்து முறைத்தார் கிராம சேவகர்.



““நானுந்தாங்க வருசக் கணக்கில வயல் செஞ்சிக்கிட்டு இருந்தேன். பூச்சியொண்ணும் வரல்ல. இப்பதான் ஒங்களுக்கு புதுசா பூச்சி வருதா? சும்மா அது இதுன்னு சொல்லி அநியாயமா வாழ மரங்களை வெட்டாதீங்க...””



““இந்தா அதிங் எல்லாம் எங்கிட்ட பேசவாணாங். இத போயி ஒங்க தொரகிட்ட பேசிக்க. நீ நம்பகிட்ட அடிக்கடி சண்டைக்கி வராது. இனிமே நம்மளொட கரச்சலுக்கு வந்தா பொலிசில சொல்லி ஒன்னை ~ரிமான்ட்| பண்ணுவேன்”” எனக் கோபமாக பேசிய கிராம சேவகர், மறுபக்கத்தில் விதைத்த நெல்லை லயத்திலிருந்த கோழிகளில் சில மேய்ந்து கொண்டிருந்ததைக் கவனித்தார்.



கிராம சேவகரின் ஆத்திரம் கோழிகளின் மேல் பாய்ந்தது. வரம்பின் மேல் இருந்த கல்லொன்றை எடுத்து மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் மீது பலமாக வீசினார். கோழியொன்று கல்லடி பட்டு சிறகைப் படபடவென்று அடித்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி நிலத்தில் வீழ்ந்தது.



கிராமசேவகர் அந்தக் கோழியை எடுத்துக்கொண்டு லயத்துப் பக்கமாக வந்தார்.



மரணப்பிடியில் அகப்பட்டு துடித்துக் கொண்டிருந்த அந்தக் கோழியின் காலில் பிடித்துத் தலைகீழாகத் தூக்கிய படி, ““இந்தா பாருங்க, இந்த லயத்து ஆளுங்களுக்கு இது தான் கடசி முறையா நாங் சொல்லுறது, இனிமே யாராச்சுங் ஆடு, மாடு, கோழியெல்லாம் வயல் பக்கம் விட்டா.... நாங் இப்புடித்தான் அடிச்சி கொல்லுரது”” எனக் கோபத்துடன் கூறினார்.



““நாங்க என்னங்கையா செய்வோம். காலையில கோழியத் தொறந்து வுட்டுட்டு வேலைக்குப் போயிடுரோம். அந்தக் கோழியங்களுக்கு என்னாங்க தெரியும், அது போயிட்டுமேயுது.”” இப்போது லயத்தில் முன்னால் முடிய கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.



““அதிங் எல்லாம் நமக்குதெரியாது. நீயெல்லாம் கோழிய அடைச்சு தீனியப் போது.””



““இது நாட்டுக் கோழிங்க, இதை அடைச்சிப்போட்டு வளக்க முடியாதுங்க. நீங்க குருவீங்க வராம எப்புடி ஆள் போட்டு வெரட்டுறீங்களோ அதேமாதிரி வயலுக்கும் ஒரு ஆள் போட்டு கோழிங்க வராம பாத்துக் கொள்ளுங்க....”” எனச் சூடாக அங்கிருந்த பெண் ஒருத்தி கூறினான்.



““நீங்க எல்லாம் நம்மகிட்ட மிச்சம் பேசவானாங், இனிமே ஆடு, மாடு, கோழி நம்மவூட்டு வயலுக்ரு வந்தா. நா எல்லாத்தையும் புடிச்சுக்கொண்டு போறதது”” என அதிகாரத்துடன் கூறிய கிராம சேவகர் கையில் பிடித்திருந்த கோழியை சுழற்றி லயத்தின் முன்னால் வீசிவிட்டு வயல்பக்கமாகச் சென்றார்.



““இது என்னடா பெரிய அநியாயமா இல்ல இருக்கு.... வழக்கமா யாரும் வயல்ல காவல் போட்டுத்தான் கோழி குருவி வெரட்டுவாங்க. இந்த ஆராய்ச்சி என்னடான்னா பெரிய சட்டமில்லியா போடுறான். லயத்திலே இனிமே ஒன்னும் வளக்க முடியாது போல இருக்கு”” எனக் கூறினார் அப்போதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெண் ஒருத்தி.



““ஏண்டி சும்மா பெரிசா சட்டம் தெரிஞ்சமாதிரி கதைக்கிறீங்க... இன்னிக்கு கோழிய அடைச்சு வைக்கச் சொல்லுறான். நாளைக்கு ஆளுங்களெல்லாத்தையும் அடைச்சுப் போட்டாலும் போட்டிடுவான். அதுதாண்டி நமக்கு உள்ள சட்டம்”” எனப் பலமாகக் கத்தினார் கறுப்பண்ணன் கங்காணி.



““அண்ணே, ஆத்திரப்படாம இருங்க@ அவ்வளவு தூரத்துக்குப் போக நாங்க வுட்டுடுவோமா?”” என கறுப்பண்ணன் கங்காணியைச் சாந்தப்படுத்தினான் குப்பன்.



““நீ ஒன்னும் வெளங்காம ஒளற குப்பன், இந்த நாட்டுல நமக்கு என்ன உரிம இருக்கு? நாமெல்லாம் அடிமைகளாத்தான் இருக்கோம். இன்னும் கொஞ்சக் காலம் போனா நாம செத்தாலும் பொதைக்கக்கூட இவுங்க எடம் குடுக்கமாட்டாங்க”” எனக் கூறிக் கண் கலங்கிய கறுப்பண்ணன் கங்காணி. மறுகணம் ஆவேசம் வந்தவராகத் தன் இரு கைகளாலும் தலையில் அடித்தபடி, ““இதெல்லாம் நம்ப தலைவிதியடா... நாமெல்லாம் உரிமையில்லாத நாய்தாண்டா”” எனக் கூறி விம்மத் தொடங்கினார்.



அவரைப் பார்த்தபோது அங்கு நின்ற அனைவரது கண்களும் கலங்கின.

+++++++++++++++++++++

அத்தியாயம் இருபத்தாறு



மாலை நேரம், மீனாச்சி இரவுச் சாப்பாடு சமைப்பதற்கானச் செய்து கொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து வந்த மாயாண்டி கோபத்துடன் வீட்டினுள்ளே நுழைந்தார்.



““இந்தா பாரு மீனாச்சி, எங்க அவள் செந்தாமரை?”” மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது.



““இப்போதாங்க வேலை முடிஞ்சு வந்தவொடன குளிக்கப் போனா@ அதுக்கு ஏன் இப்புடி சத்தம் போடுறீங்க?”” என மீனாச்சி குழப்பத்துடன் கேட்டாள்.



““அடியே இன்னிக்கு கண்டக்கையா ஏங்கிட்ட என்னா சொன்னாரு தெரியுமா... இவளும் அந்தப் பியசேனாப் பயலும் கதைச்சுக்கிட்டு இருந்ததை அவரு கண்ணால பாத்தாராண்டி. மலையில வச்சு அத்தனை பேருக்கும் முன்னால சொன்னாரடி. இவளால நம்ப குடும்ப மானமே நாசமாப்போவுது”” எனப் பலமாகக் கத்தினார் மாயாண்டி.



““ஐயையோ, கண்டக்கையா வரைக்கும் தெரிஞ்சு போச்சா? இப்ப என்னாங்க செய்யுறது?”” எனப் பதறினாள் மீனாச்சி.



““இப்ப என்னாடி செய்யுறது? எல்லாம் ஒன்னால தாண்டி வாறது. வேலைக்குக் கூட்டிப் போறபோது ஒன் கூடவே கூட்டிக்குட்டுப் போன்னு சொன்னேனே, கொஞ்சமாவது நீ அக்கறைப்பட்டியா?”” மீனாச்சி முறைத்தார் மாயாண்டி.



““நான் என்னாங்க செய்யுறது? எம்மேல மொறைக்கிறீங்க. அவள் வேலைக்காட்டுல வச்சு வவுத்துவலி, தலைவலினு கங்காணி கிட்ட சொல்லிப்புட்டு வூட்டுக்கு வாறாப்போல அவனைச் சந்திக்கப் போயிறா@ நானும் அவ பின்னாலையே என் வேலையை உட்டுப்புட்டு ஓடியர முடியுமா?””



““அவளுக்கு எவ்வளவு துணிச்சல் பாத்தியா? நம்ம எவ்வளவு சொல்லியும் கேக்காம அந்தப் பியசேனாப் பயலோட போய் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்திருக்கிறா. இன்னிக்கு அவ வூட்டுக்கு வரட்டும், கவ்வாத்துக் கத்தியால அவளை ரெண்டு துண்டா வெட்டிப் போடுறன்”” என கத்தினார் மாயாண்டி.



““இங்க பாருங்க.... தயவுசெஞ்ச மெதுவாப் பேசுங்க. இதைக் கேட்டு லயத்தில உள்ளவங்க எல்லாம் சிரிப்பாங்க”” என அவரைப் பார்த்து கெஞ்சும் குரலில் கூறினாள் மீனாச்சி.



““இனி என்னாடி சிரிக்க இருக்கு. தோட்டமேதான் சிரிப்பா சிரிக்குதடி@ அவ வூட்டுக்குள்ள நுழையட்டும் அப்புறம் என்னா நடக்குதுன்னு பாரு....| என்றார் மாயாண்டி ஆவேசமாக.



““நாம அவளை அடிச்சி ஒதைக்கிறதுனால ஒண்ணும் பெரயோசனமில்லீங்க@ இப்புடி நாம அடிக்கடி ஏசிக்கிட்டு இருந்தொமுனா ஒருவேளை அந்தப் பயகூட ஓடினாலும் ஓடிப்போயிடுவாளுங்க”” என்றாள் மீனாச்சி கலக்கத்துடன்.



““அப்புடீன்னா அவளை அவேன் கூடவே சுத்திக்கிட்டு இருக்கச் சொல்லுறியா? இவளை என்னதாண்டி செய்யுறது?””



““இப்ப இருக்கிற நெலமையில பேசாம அவளுக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணி வைக்கிறதுதாங்க புத்திசாலித்தனம். சும்மா வூட்டுல சத்தம் போட்டுகிட்டு இருக்கிறதில வேலையில்லீங்க.””



““சரி நி சொல்லுறபடி பார்த்தாலும் இப்ப அவளுக்கு கலியாணம் செஞ்ச வைக்கிறதுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பாக்க வேணாமா? இந்தச் காலத்தில நம்ம தகுதிக்கு ஒர பையன் கெடைக்க வேணுமே. மாப்புளையென்ன கடையில காசு குடுத்து வாங்கிற சாமான்னு நெனைச்சுக்கிட்டியா?”” எனக் கேட்டார் மாயாண்டி



““அவ்வளவு தூரத்துக்கு ஏங்க போறீங்க... ராசாத் தோட்டத்திலே இருக்கிற ஒங்கதங்கச்சி மவனுக்குத்தான் நம்ம செந்தாமரையை கட்டித்தாங்கன்னு அடிக்கடி கேட்டுக்கிட்டு இருக்காங்களே, அந்தப் பொடியனுக்கே கட்டிக் குடுத்திடாப் போகுதுங்க.””



““நீ லேசா சொல்லிப்புட்டே@ அந்தப் பயலை இவளுக்குப் புடிக்கணுமே. அவனைப் பாத்தா ஒரு மாதிரி மக்குப் பயலா இல்லியா இருக்கான்”” என்றார் மாயாண்டி.



““பயலைப் பத்தி என்னாங்க பாக்கிறது. இவவூட்டு நடத்தையே எனக்குப் புடிக்கல்ல. ஏதாச்சும் வயித்திலே வாயில வந்துருச்சினா.... அப்புறம் தோட்டமே நம்மளைப் பாத்துத் துப்புமே”” என மீனாச்சி கவலையுடன் கூறினாள். அவளது கண்களில் நீர் முட்டியது.



““சரி சரி மீனாச்சி நீ சொல்லுறபடியே செய்வோம். நான் வாறகெழம ராசாத் தோட்டத்துக்கு போயி அவுங்ககிட்ட பேசி முடிச்சுகிட்டு வாறன். சட்டுப்புட்டுனு கல்யாணத்த நடத்திபுடுவோம்”” எனச் சிந்தனையுடன் கூறினார் மாயாண்டி.



““ஏங்க நான் ஒண்ணு கேக்கிறேன். நீங்க அங்க போய் கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா வெசயத்தையும் முடிச்சிட்டு வந்தவொடன, இங்க இவ ஏதும் மறுப்பு தெரிவிச்சு கொழப்பம் பண்ணிப்புட்டாளென்னா என்னாங்க செய்யுறது? மாப்பிள்ளை வூட்டுக் காரங்களுக்கு என்னா பதில் சொல்லுறது? அப்புறம் நாம தலை நிமிர்ந்துதான் நடக்க முடியுமா?”” எனக் கவலையுடன் கேட்டாள் மீனாச்சி.



““என்ன மீனாச்சி வெளங்காம கதைக்கிற.... நாம ஏன் இவகிட்ட எல்லா வெசயத்தையும் சொல்லணும். நான் ஒரு நாளைக்கு ராசாத் தோட்டத்துக்குப் போயி ரகசியா கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை முடிச்சுப்புட்டு வந்துடுறேன். சரியான சொன்ன தேதிக்கு அங்கே விருந்தாளி போற மாதிரி செந்தாமரையையும் அழைச்சுக்கிட்டுப் போவோம்.””



““ஆமாங்க மாப்பிளை வூட்டுக்காரங்களும் அங்க ரெடியா இருப்பாங்க@ அந்தத் தோட்டத்து மாரியம்மா கோயில்லையே தாலிய கட்டிப்புடலாம்”” என்றாள் மீனாச்சி.



““ரொம்ப ரகசியமாத்தான் இத நாம செய்யணும். வெளியில யாருக்கும் தெரியக்கூடாது....”” என மாயாண்டி கூறியபோது வெளியே இஸ்தோப்பில் யாரோ நடந்து வரும் அரவம் கேட்டது.



யன்னல் ஊடாக எட்டிப் பார்த்த மீனாச்சி. ““செந்தாமரை குளிச்சிட்டு வந்துட்டா”” என மெதுவாகக் கூறிவிட்டு தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.



மாயாண்டி அடுப்பின் அருகே சென்று குளிர்காயத் தொடங்கினார்.



வேலை முடிந்து வீடு திரும்பியிருந்த ராக்கு இவர்களது சம்பாஷணையைத் தனது காம்பராவில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது உள்ளம் பெரிதும் கலக்கமடைந்தது. செந்தாமரையிடம் இந்த விஷயத்தைக் கூறி, அவளை எப்படியும் இந்தச் சிக்கலிருந்து காப்பாற்றி விட வேண்டுமென அவள் எண்ணிக்கொண்டாள்.

+++++++++++++++++++=

அத்தியாயம் இருபத்தியேழு



மடுவத்தின் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர்.



முதலில் கொழுந்து நிறுத்துப் பேர் போட்டு முடிந்த ஒரு சில பெண்கள் ஏற்கனவே லயத்துக்குத் திரும்பியிருந்தனர். வேறு சிலர் கொழுந்துகளைக் கயிற்றுச் சாக்குகளில் போட்டுக் கட்டி ஸ்டோருக்கு அனுப்புவதற்குத் தயராகிக் கொண்டிருந்தனர்.



சாக்குக்காரன் சுமணபால, கொழுந்து நிறைந்த சாக்குகளை லொறியில் எற்றுவதற்கு வசதியாக மடுவத்து வாசலில் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான்.



அப்போது தோட்டத்து லொறி மடுவத்தை வந்தடைந்தது. என்றும் இல்லாதவாறு துரையும் அந்த லொறியில் வந்திருந்தார். அவர் அங்கு வந்ததும், மடுவத்தில் இவ்வளவு நேரமும் நிறைந்திருந்த இரைச்சல் குறைந்து அமைதி நிலவியது. துரை லொறியை விட்டிறங்கி மடுவத்திற்குள் நுழைந்தபோது அவரது முகத்தில் கலக்கம் குடி கொண்டிருப்பதை சிலர் அவதானிக்கத் தவறவில்லை.



கண்டக்டர் எழுந்து துரைக்கு வணக்கம் தெரிவித்தார். அங்கு நின்ற தொழிலாளர்களும் துரைக்கு சலாம் வைத்து மரியாதை செய்தனர்.



துரை ஒரு கணம் அங்கு நின்றவர்களைக் கவனித்துவிட்டு மேசையின் பக்கத்திலிருந்த நாற்காலியில் போல் அமர்ந்துகொண்டார்.



துரை தங்களுக்கு ஏதோ விரும்புகின்றார் என்பதைப் புரிந்துகொண்ட தொழிலாளர்கள் அவர் முன்னே சென்று அடக்கமாக நின்றனர். வீரய்யாவும் ராமுவும் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.



““இப்ப நாங் ஒங்களுக்கு ஒரு முக்கியமான விஷயங் சொல்லத்தாங் வந்தது. தோட்டத்தை இந்த மாசத்தோட மூடச்சொல்லி அரசாங்கத்திலேயிருந்து இன்னிக்கு எனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு. வாற மாசத்திலயிருந்தது ஒங்களுக்கு இந்தத் தோட்டத்தில வேலையில்லை. வேலை நிப்பாட்டிரது.””



துரை இப்படிக் கூறியதும் எல்லாத் தொழிலாளர்களும் திகைத்துப் போய் நின்றனர்.



துரை கூறிய விஷயம் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தோட்டத்தை கொலனிக்குக் கொடுக்கப் போவதை அவர்கள் அறிந்துதான் இருந்தார்கள். அதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் திட்டமிட்டிருந்தனர். ஆனாலும் இப்படித் திடீரென ஒரு மாதத் தவணையில் தோட்டத்தை மூடுவார்களென அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தோட்டத்தில் தொடர்ந்தும் வேலை நடந்து கொண்டே இருக்கும்... அப்போது சிறிது சிறிதாக தொழிலாளர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிப்பார்கள்@ அதே வேளையில் குடியேற்றமும் நடக்கும் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தனர். தோட்டத்தில் வேலையை நிறுத்துவது அவர்களது காலையே வாரிவிடுவது போன்ற நிகழ்ச்சி. வேலை வழங்காவிட்டால் அவர்களுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தலைதூக்கி நிற்கும். எதனையும் எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய சக்தி அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.



வீரய்யா தன்னை சுதாகரித்துக்கொண்டு ““என்னாங்க தொர, இப்புடித் திடீருனு வந்து சொல்லுறீங்க... நாங்க போறந்து வளந்ததே இந்தத் தோட்டந்தானுங்களே. இந்தத் தோட்டத்த நம்பித்தானுங்களே நாங்க எல்லாம் இங்க வேலை செஞ்சிட்டு இருக்கோம். வேலைய நிப்பாட்டினா நாங்க எப்புடீங்க தொரை பொழைக்கிறது...?”” எனப் பணிவாகக் கேட்டாள்.



““அதிங் நமக்கும் மிச்சம் மனவருந்தங்தான். இப்படி வாறது சொல்லி நமக்குத் தெரியாது தானே. இது அரசாங்கத்திலயிருந்து நமக்கு சொல்லி இருக்கு. அதனால தான் வேலை நிப்பாட்டுறது. நீங்கெல்லாம் வேற தோட்டத்துக்கு போகவேணும்””



““அப்புடி திடீருனு போகமுடியாதுங்க. நாங்கெல்லாம் லயத்தில ஆடு, மாடு, கோழி, மரக்கறித் தோட்டமெல்லாம் வச்சிருக்கோம். ரொம்ப கஷ்டப்பட்டுத் தாங்க இதெல்லாம் நாங்க செஞ்சோம். இதெல்லாத்தையும் வுட்டுப்புட்டு நாங்க எப்புடி போறது”” எனக் கூட்டத்தில இருந்து ஒரு குரல் எழுந்தது.



““எங்க பாட்டன் பூட்டன் காலத்திலயிருந்தே நாங்க மாங்கா மரம், பெலாக்கா மரம், பாக்குமரம் இன்னும் நெறைய மரங்கெல்லாத்தையும் வச்சுகிட்டு இருக்கோம். நாங்க போற எடத்துக்கு இது எல்லாம் கொண்டு போக முடியுங்களா தொரை?”” என்றது இன்னொரு குரல்.



““அப்புடி தொர சொல்றமாதிரி போறதுன்னா, நாங்க எல்லாம் எந்த தோட்டத்துக்குத்தான் போறது?”” என மூலையிலிருந்து ஒரு குரல் கேட்டது.



இவ்வளவு நேரமும் தொழிலாளர்கள் கூறியதையே கேட்டுக் கொண்டிருந்த துரை கூறினார்.



““ஓ... அதுதான் ரொம்ப தோட்டங் இருக்குத்தானே. இந்தியாவுக்கு இப்ப ரொம்ப ஆள் போயாச்சு. அந்தத் தோட்டங்களுக்கு ஒங்களை எல்லாம் அனுப்பறது@ இப்ப நீங்க இங்க ஆடு, மாடு, கோழி எல்லாங் வளக்கிற மாதிரி அங்கையும் வளர்க்க முடியும். அங்கேயும் ஒங்களுக்கு அந்த மரங்கள் எல்லாம் இருக்குத்தானே....|



““நாங்கெல்லாம் இந்தத் தோட்டத்திலேயே பொறந்து வளந்து ஒரு குடும்பம் மாதிரி இருக்குறோமுங்க தொர.... நீங்க சொல்லுற மாதிரி நாங்க வேற தோட்டத்துக்குப் போறதாயிருந்தா நீங்க எங்களையெல்லாம் பிரிச்சு பிரிச்சுத் தானே அனுப்புவீங்க... அப்புடி எங்களால போய் இருக்க முடியாதுங்க”” என்றான் வீரய்யா உறுதியான குரலில்.



““நீங்க சொல்லுற மாதிரி நான் கேக்க முடியாது. அரசாங்கம் சொல்லுறது தான் நான் செய்யுறது, மாசம் முடிய எல்லாரும் தோட்டத்தவுட்டு போயிடணும், அதிக்கு தோட்டக் கணக்கில லொறி எல்லாங் கொடுக்கிறது”” எனக் கூறினார் துரை சற்று விறைப்பான குரலில்.



அப்போது லொறியில் கொழுந்துச் சாக்குகளை ஏற்றி முடித்துவிட்டு வந்த சுமணபால ““அரசாங்கம் எடுத்ததில இருந்து தான் இந்தத் தோட்டமே காடாகிப் போய்விட்டதே. இப்போது தொழிலாளர்களின் சுதந்திரத்திலும் தலையிட்டு அவர்களையும் நாசமாக்கப் போகின்றார்கள் போலத் தெரிகிறது”” எனச் சிங்களத்தில் கூறினான்.



துரை அவனை நிமிர்ந்து பார்த்தார். அவனது உணர்ச்சிகளை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.



““யாரு என்னா சொன்னாலும் தொர, நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட்டோம்”” எனக் கூறினான், வீரய்யா திடமான குரலில்.



““ஆமாங்க... நாங்க போகமாட்டோம்...”” எனக் கூட்டத்திலிருந்து பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.



துரையின் நிலைமை மிகவும் தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஆனாலும் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் உத்தரவுக்கு மாறாகத் தான் நடந்தாலோ அல்லது தொழிலாதிபர்களோடு கதைத்தாலோ அது தனது தொழிலுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். மேலும் தோட்டத்திலே நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேலிடத்துக்கு அறிவிப்பதற்கு அங்கு அரசியல் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்களென்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தன.



அந்நிலையில் அரசாங்கத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாக அவருக்கு தெரியவில்லை.



““நீங்க எல்லாங் சும்மா அரசாங்கத்தோட எதிர்த்துக்கிட்டு இருக்கிறதுல பொலயோசனம் இல்லை. ஒங்களால ஒன்னுங் செய்ய முடியாது. ஒங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியுங் செஞ்சிதானே வேற தோட்டத்திக்கி அனுப்புறது. அப்போ எல்லாங் போக வேண்டியது தானே”” எனக் கூறினார் துரை.



““இது நாங்க பொறந்த பூமிங்க... இதை வுட்டிட்டு எங்களால போக முடியாதுங்க. இங்கதாங்க நாங்க பொறந்தோம். வளந்தோம். கஷ்டப்பட்டோம். அந்தக் கஷ்டங்களுக்குள்ளேயே வாழ்ந்தோம். இந்த எடத்தவுட்டு நாங்க போகமாட்டோமுங்க தொரை...”” இப்படிக் கூறும் பொழுது வீரய்யா சற்று உணர்ச்சி வசப்பட்டான்.



தோட்டத்தை விட்டு தொழிலாளர்கள் வெளியேற மறுப்பதற்குரிய காரணம் இப்போதுதான் துரைக்கு நன்கு விளங்கியது. ஆனாலும் அவர் மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர். அவற்றை மீறி அவரால் எதுவும் செய்ய முடியாது. சிந்தனையுடன் எழுந்திருந்த அவர் கண்டக்டரின் பக்கம் திரும்பி...



““இந்த மாத துடிவில் எஸ்டேட் மூடவிருப்பதால் கூடிய வரை செலவினங்களை தவிர்க்க வேண்டும். கொழுந்தெடுக்கும் வேலையைத் தவிர மற்றைய வேலைகள் எல்லாவற்றையும் உடனே நிறுத்திவிட வேண்டும்”” என ஆங்கிலத்தில் கூறி விட்டு விருட்டெனச் சென்று லொறியில் ஏறினார். லொறி ஸ்டோர் பக்கமாகப் புறப்பட்டுச் சென்றது.



துரை ஆங்கிலத்தில் கூறியதை கண்டக்டர் தொழிலாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.



அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளங்கள் நிம்மதியற்றுத் தவித்தன. எல்லோருக்கும் ஒரே குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. எல்லோரும் வீரய்யாவை சூழ்ந்து கொண்டு அவனது கருத்தை அறிய முற்பட்டனர்.



““நீங்க எல்லாரும் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கும் வரவேணாம்.... நாங்க இந்தத் தோட்டத்தை வுட்டுப் போறதில்லேனு முடிவு செஞ்சிட்டோம். அந்த முடிவை எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாங்க மாத்தப்போறதில்ல. எல்லாரும் ஒத்துமையா இருந்து போராடுவோம். நான் இன்னிக்கே நம்ம ஜில்லாவில போய் எல்லா விபரத்தையும் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்லுறன். இப்ப எல்லாரும் அமைதியா வூட்டுக்குப் போங்க”” என வீரய்யா கூறினான்.



வீரய்யாவின் கூற்று அங்கு நின்றவர்களுக்கு சிறிது ஆறுதலைக் கொடுத்தது. ஒவ்வொருவராக அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர்.



வீரய்யா சிந்தனையுடன் தொழிற்சங்க காரியாலயத்தை நோக்கிப் புறப்பட்டான்.

+++++++++++++++++++

அத்தியாயம் இருபத்தெட்டு



ஸ்டோருக்கு அருகிலுள்ள மலையில் ஆண்களும் பெண்களுமாகப் பலர் கொழுந்து பறித்த வண்ணமாக இருந்தனர். தோட்டத்தைக் கொலனிக்குக் கொடுக்கப் போவதால் இப்போது ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சில்லறை வேலைகள் யாவும் நித்திப்பட்டிருந்தன. ஆண்களுக்கும் இப்போது கொழுந்தெடுக்கும் வேலையே வழங்கினார்கள்.



அவர்கள் எல்லாரும் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதிலும், ஒவ்வொருவரது மனதிலும் கலக்கமும், பெரும் சஞ்சலமுமே குடிகொண்டிருந்தன. இன்னும் சிறிது நாட்களில் தோட்டத்தைவிட்டு எல்லோருமே போய்விட வேண்டுமென்று துரை அறிவித்ததிலிருந்து அவர்கள் எல்லாரது உள்ளத்திலும் தங்களது எதிர்காலத்தைப் பற்றிய தெளிவற்ற நிலை உருவாகியிருந்தது.



வழமைபோல கண்டக்டர், கணக்கபிள்ளை போன்ற உத்தி யோகத்தர்கள் இப்போது மலைக்கு வந்து அடிக்கடி வேலைகளைக் கவனிப்பதில்லை. கண்டக்டர் காலையிலேயே ஆபிசுப் பக்கம் போய் விட்டார். கணக்கப்பிள்ளை மட்டும் கொழுந்து நிறுப்பதற்காக மடுவத்திற்கு வந்துவிட்டுத் திரும்பினார்@ அப்போது மேலோட்டமாகக் கொழுந்தெடுப்பவர்களைக் கவனித்துவிட்டு கங்காணியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்றார்.



தோட்டத்தில் இப்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருந்தது. எவருமே அக்கறையோடு எந்த வேலையையும் கவனிப்பது கிடையாது. தொழிலாளர்களும், உத்தியோகத்தர்களும் ஏதோ கடமைக்காகத் தத்தமது வேலைகளைச் செய்தனர்.



மலையிலே கொழுந்து பறித்த ஆண்களும், பெண்களும் வாய் ஓயாமல் தோட்டம் கொலனிக்கு எடுக்கப் போவதைப் பற்றியே கதைத்த வண்ணம் இருந்தனர்.



தொழிலாளர்கள் வேலையில் கவனம் செலுத்தாது கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வீரய்யா.



““சும்மா சும்மா....... ஏன் இதுபத்தியே கதைச்சிக்கிட்டு இருக்கீங்க. நாமெல்லாம் ஒத்துமையா இருந்தா, அவுங்க எப்புடி நம்மள வேற தோட்டத்திற்கு அனுப்ப முடியும்? நாங்க ஒருபோதும் இந்தத் தோட்டத்தவுட்: போகப் போறதில்லேனு முடிவு செஞ்சிருக்கோம். இந்த தோட்டத்தில் நம்மளக்கு வேலை கொடுக்காமப் பட்டினி கெடந்தாலும் நம்ப உயிரைக் கொடுத்துப் போராடுவோம்?”” என உறுதியான குரலில் கூறிவிட்டு மட்டத்திற்கு மேல் வளர்ந்து போய் இருக்கும் தேயிலைச் செடியைத் தனது கையில் இருக்கும் கத்தியினால் மட்டப்படுத்தினான்.



““யார் வந்து எங்களை வெரட்டினாலும், எவர் வந்து எங்களை தோட்டத்தவுட்டுப் போகச் சொன்னாலும், யாரும் தோட்டத்தவுட்டு அசையக்கூடாது”” எனக் கண்டிப்பான குரலில் கூறினான். கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த ராமு.



மலையில் கொழுந்தெடுத்த வண்ணம் தொழிலாளர்கள் வெகுதூரம் சென்றபோது, ஜீப் வண்டியொன்று பலத்த உறுமலுடன் ஸ்டோர் முடக்கில் வந்தது. அது ஆபீசுப் பக்கத்திலிருந்து வந்துக்கொண்டிருப்பதை மலையில் நின்றபடியே வீரய்யா கவனித்தான்.



ஜீப் வண்டியின் உள்ளே, முன் ஆசனத்தில் மூவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் கண்டக்டரும், பெரிய கிளாக்கரும் இருந்தனர். மடுவத்தின் அருகே ஜீப் வண்டி நிறுத்தப் பட்டதும் அதிலிருந்த கண்டக்டர் முதலில் இறங்கினார்.



தூரத்தே கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை அவர் ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். பின்னர் குறிப்பாக வீரய்யாவைக் பார்த்து அவனை அருகே வரும்படி கையசைத்தார். வீரய்யா அவசர அவசரமாகத் தேயிலைச் செடியைப் பிடித்துக்கொண்டு மலையிலிருந்து இறங்கி வந்தான். ராமுவும் கொழுந்துக் கூடையை மலையிலே எறிந்துவிட்டு அவனைத் தொடர்ந்து ஓடி வந்தான்.



““வீரய்யா இவுங்க எல்லாங் அரசாங்கத்தில உள்ளவங்க, காணி அளக்கிற ~டிப்பாட்மெண்|டிலிருந்து வந்திருக்காங்க. நம்ப தோட்டத்த கொலனிக்கு கொடுக்கப் போறதானே. அதுனாலதான் காணி எல்லாங் அளந்து கணக்குப் பார்க்கப் போறாங்க.



கண்டக்டர் இப்படிக் கூறியதும் வீரய்யா ஒரு கணம் திகைத்து நின்றான். அவனால் உடனே எவ்வித பதிலையும் கூற முடியவில்லை.



““நீங்க கொழுந்தெடுக்கிற மலையத்தாங் இப்ப அளக்கப் போறது. அதுனால நீங்க எல்லாங் முப்பதாம் நம்பர் மலைக்குப் போகவெணுங்க”” எனத் தொடர்ந்து கூறினார் கண்டக்டர்.



““ஐயா எங்களுக்கு ஒரு முடிவு தெரிவிக்காம இப்புடி நீங்க திடீரென்னு வந்து இந்தத் தோட்டத்தை கூறுபோட்டு, மத்தவங்க கையில கொடுக்க நாங்க அனுமதிக்க முடியாதுங்க@ நாங்க இவுங்களை காணி அளக்க விடமாட்டோம்”” வீரய்யா தன்னைச் சுதாகரித்தபடி கூறினான்.



““நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட்டோம். யாரும் காணி அளக்கிறதா நெனச்சி தேயில உள்ளுக்கு கால் வச்சா, அப்புறம் என்னா நடக்குமுனு தெரியாது”” படபடப்புடன் கூறினான் பக்கத்தில் நின்றிருந்த ராமு.



கண்டக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.



அப்போது ஜீப்பினுள் இருந்த பெரிய கிளாக்கர், ““இந்தா பாரு, நீயெல்லாங் வெளங்காம கதைக்கிறது. இப்ப அரசாங்கம் சொல்லுறபடிதாங்க நாங்க செய்ய வேணுங்க. நீங்க காணி அளக்க வந்தவங்களுக்கு கரச்சல் கொடுக்க வேணாங்”” எனக் கூறிக்கொண்டு ஜீப்பிலிருந்து கீழே இறங்கினார்.



““அப்புடி முடியாதுங்கையா..... இங்க இருக்கிற தேயிலை யெல்லாம் அரசாங்கம் வந்து நட்டு வைக்கல. நாங்க நட்டுவச்ச தேயிலையுங்க. அதவுட்டு நாங்க செத்தாலும் போகமாட்டோம்”” எனக் கூறினார். அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த கறுப்பண்ணன் கங்காணி. உணர்ச்சியால் அவரது ரோமங்கள் முடித்தன.



பெரிய கிளாக்கரைப் பார்த்து கறுப்பண்ணன் கங்காணி கூறியது, கண்டக்டருக்குப் பெருங் குழப்பமாக இருந்தது. எப்போதும் தனது பேச்சுக்குத் தலையாட்டும் கறுப்பண்ணன் கங்காணிகூட மாறிவிட்டது அவருக்குப் பெரும் வியப்பாக இருந்தது.



மேலும் பல தொழிலாளர்கள் இப்போது ஜீப்பின் அருகே வந்து சேர்ந்தனர்.



~என்ன மிஸ்டர், இந்தத் தொழிலாளர்கள் எல்லாரும் ஏன் சத்தம் போடுகிறார்கள்...? அரசாங்கம் சொன்னபடி தானே நாங்கள் செய்ய வேண்டும். நாங்கள் எங்களது கடமையைத்தான் செய்ய வந்திருக்கிறோம். எங்களுக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டாமென்று சொல்லுங்கள்”” அளக்க வந்த உத்தியோகத்தர்களில் ஒருவர் பெரிய கிளாக்கரைப் பார்த்து ஆங்கிலத்தில் கூறினார்.



இவர்கள் நமது பேச்சைக் கேட்கமாட்டார்கள் போல் தெரிகிறது. இப்போதே நான் ஆபீசுக்குச் சென்று பொலிசுக்கு டெலிபோன் பண்ணி அவர்களை இங்கு வரவழைக்கின்றேன்”” என்றார் பெரிய கிளாக்கர் ஆத்திரத்துடன்.



இவர்களது சம்பாஷணை வீரய்யாவுக்கு ஓரளவு புரிந்தது.



““அவசரப்பட்டு அப்படியொன்றும் செய்துவிடாதீர்கள். நியாயமான முறையில் இவர்களுடன் பேசிப்பார்ப்போம்”” எனக் கூறியபடி ஜீப்பில் இருந்த ஓர் அதிகாரி கீழே இறங்கினார்.



““ஐயா தயவுசெய்து நீங்கள் இன்று காணி அளக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரியிடம் சென்று இந்தத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் எல்லாரும் காணி அளப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று கூறுங்கள்..”” என அந்த உத்தியோகத்தரைப் பார்த்து மிகப் பணிவுடன் கூறினான் வீரய்யா.



““அதெல்லாம் முடியாது.... அரசாங்கக் கடமையைச் செய்ய வந்த எங்களை நீங்கள் தடுப்பது மிகவும் பெரி குற்றம். உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை நீங்கள் வேண்டுமானால் எமது மேலிடத்திற்குத் தெரியப்படுத்துங்கள்... எங்களுக்குக் கலச்சல் கொடுக்க வேண்டாங்க. நாங்கள் காணியை அளக்கத்தான் போகின்றோம்”” எனச் சினத்துடன் கூறினார் அந்த அதிகாரி.



அவர்களோடு மேலும் கதைப்பதில் எவ்வித பியோசனமும் இல்லையென வீரய்யா உணர்ந்து கொண்டான்.



““சரி ஐயா, நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். எங்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன. நாங்கள் அதனைச் செய்தே தீருவோம். அதனால் உங்களுக்குச் சில வேளை சிரமங்களும் நேரிடலாம். பின்பு எங்களைக் குறை சொல்லாதீர்கள்”” என வீரய்யா அடக்கமாகக் கூறினான்.





பின்பு தொழிலாளர்களைப் பார்த்து, ““நீங்கள் எல்லாம் பதட்டப்படாம அமைதியா முப்பதாம் நம்பர் மலையில போய் கொழுந்தெடுங்க. இவங்களோட இப்ப நாங்க கரச்சலுக்குப் போறது முறையில்லை. இவுங்க மேலதிகாரியின் சொற்படி தானே நடக்கணும். இதுபத்தி நாங்க ஆறுதலா யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவோம்”” எனக் கூறினான்.



தொழிலாளர்கள் யாவரும் முப்பதாம் நம்பர் மலையை நோக்கிச் சென்றனர். நில அளவையாளர்கள் சிறிது நேரம் பெரிய கிளாக்கருடனும், கண்டக்டருடனும் உரையாடிவிட்டு, தாங்கள் கொண்டுவந்த கருவிகளுடன் மலையின் பக்கம் சென்றனர்.



பெரிய கிளாக்கரும், கண்டக்டரும் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்தவண்ணம் ஆபீஸ் பக்கம் சென்றனர்.

++++++++++++++++++

அத்தியாயம் இருபத்தொன்பது.



கிராமத்தின் ஓரமாக உள்ள தோட்டத்து மலைகளில் ~ரவுண்ட்| பிந்தியதால் எங்கும் கொழுந்து நிறைந்து பச்சைப்பசேலென காட்சி அளித்தது.



அதிகாலையிலே கிராமத்தில் உள்ளவர்கள் பலர் சாக்குகளுடன் தோட்டத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் படையெடுத்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கிராமத்தின் எல்லையிலே உள்ள மலைகளில் ஏறி ஆங்காங்கே நின்று கொழுந்தெடுக்கத் தொடங்கினர்.



கொழுந்தெடுத்து முன்பின் பழக்கமில்லாதவர்கள் வயல் வெட்டும் அரிவாளால் கொழுந்தை அரிந்து தமது சிறிய சாக்குகளுக்குள் நிரப்பத் தொடங்கினர். ஒருசிலர் தாங்கள் அணிந்திருக்கும் சாரத்தை முழங்கால் வரை மடித்துக் கட்டிக்கொண்டு கொழுந்துகளை உருவி, சாரத்துக்குள் திணித்தனர்.



எப்படியாவது பெருந்தொகையான கொழுந்துகளைச் சேர்த்து விடவேண்டும் என்பதிலேயே எல்லோரது குறிக்கோளும் இருந்தது. நேரம் செல்லச் செல்ல கிராமத்தில் இருந்து மேலும் பலர் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு மிகவும் குதூகலத்துடன் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தனர்.



““டேய்....... நாங்கள் இப்படி களவாகக் கொழுந்தெடுப்பதை யாரும் கண்டால் நமக்கு கரச்சல் வரும். யாராவது பார்க்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்”” என்றான் பொடிசிங்கோவுக்கு பக்கத்தில் நின்று கொழுந்தை அரிவாளால் அரிந்து கொண்டிருந்தவன்.



““என்ன நீ இப்படிப் பயப்புடுறாய்..... நாங்கெல்லோரும் பட்டப் பகலில் துணிவோடு கொழுந்து எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.... எவராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது”” என்றான் பொடிசிங்கோ அலட்சியமாக.



““துரை பொலிசுக்கு தகவல் கொடுத்து விட்டால் என்ன செய்வது?”” எனக் கேட்டாள் அங்கு கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த பெண்யொருத்தி.



““அம்மே, நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீங்க. பொலிசுக்காரன் என்ன தேயிலைத் தூரிலையா மறைந்திருந்து எங்களைப் பிடிக்கப் போறான். மேல் ரோட்டில் ஜீப் வரும்போதே நமக்கு தெரிந்து விடும். அப்போது எல்லோரும் நாட்டிற்குள் இறங்கி விடலாம்”” எனச் சண்டிக்கட்டோடு கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தவன் கூறினான்.



““அப்படிப் பொலிசில் பிடித்தாலும் எங்களை என்ன தான் செய்யப் போகிறார்கள். நமது வாக்குமூலத்தை எடுத்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள்தானே”” என்றான் சற்றுத் தூரத்தில் கொழுந்து எடுத்துக் கொண்டிருந்த மற்றொருவன்.



““நாட்டில் இருந்து எல்லோருந்தானே இங்கு வந்து கொழுந் தெடுக்கிறோம். எல்லாரையுமi; பொலிஸ் பிடித்துவிட முடியுமா?”” என்றான் பொடிசிங்கோ.



““நாங்கள் என்ன அநியாயமா செய்கிறோம். இந்தத் தோட்டத்தை நமக்குத்தானே பிரித்து கொடுக்கப் போகிறார்கள். நமக்கு கிடைக்கப் போகும் காணியில் கொழுந்தெடுப்பதற்கு நாம் ஏன் பயப்பிட வேண்டும்”” என்றான் அரிவாளால் கொழுந்து அறுப்பவன்.



““இந்த தோட்டத்து ஆட்கள் எல்லோரும் நமக்கு காணி கொடுக்கவிடாமல் தடுக்கிறார்கள். நாங்கள் செய்கிற செயலில் இருந்தே அவர்கள் தோட்டத்தைவிட்டு ஓடி விட வேண்டும்”” என்றான் பொடிசிங்கோ.



தூரத்தில் தெரியும் லயங்களின் முன்னால் சிறுவர்களும் பெரியவர்களுமாக பலர் கூடி நின்று இவர்கள் கொழுந்தெடுப்பதையே கவனித்தபடி இருந்தனர்.



அதைக் கவனித்த ஒருத்தி ““தோட்டத்து ஆட்களெல்லாம் லயத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் போய் துரையிடம் சொல்லுவார்கள்”” எனப்பயந்தபடி கூறினாள்.



““துரை வந்தாலென்ன, யார் வந்தாலென்ன இனிமேல் நாங்கள் கொழுந்தெடுப்பதை நிறுத்தப் போவதில்லை”” என்றான் பொடிசிங்கோ அலட்சியமாக,



பண்டா முதலாளியின் பேச்சைக்கேட்டு எல்லாரும் கொழுந் தெடுக்கிறோமே. நாங்க கொண்டு போகும் கொழுந்து எல்லாவற்றையும் அவர் பணம் கொடுத்து அவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வாரா எனச் சந்தேகத்துடன் கேட்டான் சண்டிக்கட்டோடு கொழுந்தெடுத்தவன்.



““எவ்வளவு கொழுந்து கொண்டு வந்தாலும் வாங்கிறதாகத் தானே அவர் சொல்லி இருக்கிறார். பின்பு நாம் ஏன் தயங்க வேண்டும். முடிந்தவரை எடுத்துக்கொண்டு போவம்”” என்றான் மூலையில் நின்று கொழுந்தெடுத்தவன்.



அப்போது தோட்டத்தில் முன்பு கங்காணியாக வேலை செய்த முதியான்சே, அவர்கள் கொழுந்தெடுக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். மேல் றோட்டில் இருந்தபடியே கொழுந்தெடுப்பவர்களை அவர் ஒரு தடவை நோட்டம் விட்டார். அவர்கள் கொழுந்தெடுத்த விதத்தைப் பார்த்தாலும் அவரது நெஞ்சு பதறியது.



““என்ன நீங்கள் செய்வது பெரிய அநியாயமாக வல்லவா இருக்கிறது. தேயிலையையே நாசமாக்கிவிடுவீர்கள் போல் தெரிகிறது@ இப்படி அரிவாளால் கொழுந்து nரிந்தால் தேயிலைச் செடிகள் என்னத்துக்கு உதவும்?”” என உரக்கக் கூறினார் முதியான்சே.



““தோட்டத்தைத்தான் விரைவில் கூடிவிடப் போகின்றார்கள், இனி எப்படிக் கொழுந்தெடுத்தால் தான் என்ன?”” என அலட்சியமாகக் கூறினான் பொடிசிங்கோ.



““நீங்கள் சொல்லுவதுபோல் தோட்டத்தை மூடிவிட்டாலும், பின்னர் இந்தப் பகுதியைத்தானே உங்களுக்கு பிரித்து கொடுக்கப் போகின்றார்கள். இப்போதே இப்படி மோசமான காரியத்தைச் செய்யும் உங்களுக்கு, இந்த தோட்டத்தை பிரித்துக் கொடுத்துவிட்டால் கொஞ்சக் காலத்தில் தேயிலைச் செடிகளையே அழித்துவிடுவீர்கள்”” என்றார் முதியான்சே.



அப்போது சண்டிக்கட்டோடு கொழுந்தெடுப்பவன் கூறினான்@ ““தோட்டத்தை பிரித்துக் கொடுக்கும்போது, கிராம சேவகரிடம் சொல்லி நமது முதியான்சே தாத்தாவிற்கு இந்த மலையை கொடுக்கச் சொல்லுவோம்”” எனக் கிண்டலாகக் கூறினான்.



எல்லோரும் கொல்லெனச் சிரித்தனர்.



““என்னமோ... நீங்கள் போகும் போக்கு சரியானதாகத் தெரியவில்லை. இது எங்கேபோய் முடியுமோ தெரியாது”” எனக் கூறிய முதியான்சே, மேலும் அவர்களுடன் கதைக்க விரும்பாதவராக அவ்விடத்தைவிட்டு அகன்றார்.



இப்போது பலரது சாக்குகளிலும் கொழுந்து நிறைந்திருந்தது. அவர்கள் ஒவ்வொருவராக நாட்டுக்குத் திரும்பத் தொடங்கினர்.



பண்டா முதலாளி தனது கடையின் முன்பக்கத்தில் உள்ள கிராதியொன்றில் கொழுந்து நிறுக்கும் தராசு ஒன்றை மாட்டி வைத்துக் கொண்டு புதிதாக வாங்கிய கொழுந்துச் சாக்குகளுடன் அமர்ந்திருந்தார்.



ஒவ்வொருவராக பண்டா முதலாளியிடம் தாங்கள் எடுத்துக் கொண்டுவந்த கொழுந்துகளை நிறுத்துக் கொடுத்தனர். பண்டா முதலாளி ஒரு சிறிய கொப்பியில் கொழுந்து கொண்டு வந்தவர்களின் பெயரையும், அவரவர் கொண்டு வந்த கொழுந்தின் நிறையையும் குறித்துக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார்.




பின்னர் அவர் கொழுந்தை சாக்கில் திணித்துக் கட்டி, அதனைக் கிராமத்தின் எல்லையில் இருக்கும் தெருவுக்கு ஆட்கள் மூலம் அனுப்பிவிட்டு தானும் அவர்களைப் பின் தொடர்ந்தார்.



கிராமத்தின் மறுபக்கத்தில் குறைந்த பரப்பளவு கொண்ட சிறிய தோட்டங்கள் இருக்கின்றன@ அவை ஒவ்வொன்றும் தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான தோட்டங்கள். சிறு தோட்டச் சொந்தக்காரர்கள் தமக்கெனத் தனியாக தொழிற்சாலையை நிறுவி, தேயிலை தயாரிக்க முடியாத காரணத்தினால், தமது தோட்டங்களில் கிடைக்கும் கொழுந்தை வியாபாரிகளுக்கு விற்றுப் பணமாக்குவது வழக்கம். அக்கொழுந்துகளை வாங்குவதற்கென தனிப்பட்ட வர்த்தகர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் தனியார் தோட்டங்களிலிருந்து தாம் வாங்கும் கொழுந்தை லொறிகளில் ஏற்றிச் சென்று தமக்கு வசதியாகவுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளில் பெரும் இலாபத்துடன் விற்று வருவார்கள். இப்படியான வர்த்தகர் ஒருவரிடம், தான் சேகரித்துள்ள கொழுந்துகளை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்தார் பண்டா முதலாளி. அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் அந்த வர்த்தனர் லொறியுடன் வந்து சேர்ந்தார்.



பண்டா முதலாளி தான் கொண்டு வந்த கொழுந்துகளைச் சாக்குடன் நிறுத்து லொறியில் வந்த வர்த்தகரிடம் கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொண்டார். பின்பு ஒவ்வொரு நாளும் லொறியை அங்கு கொண்டு வரும்படி அவரிடம் பணித்துவிட்டு அவர் வீடு திரும்பினார்.



அன்று மாலை பண்டா முதலாளியின் கடை ஒரே கலகலப்பாக இருந்தது. பகலில் கொழுந்தை அவரிடம் கொடுத்தவர்கள் பணத்தை பெறுவதற்காக அங்கு வந்து குழுமி இருந்தனர்.



பண்டா முதலாளி நோட்டுக்கட்டுக்களை லாச்சிக்குள் திணித்து வைத்துக் கொண்டு குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து ஒவ்வொருஐ பெயராக வாசித்து பணத்தை எண்ணி மெனிக்காவிடம் கொடுத்தார். மெனிக்கா புன்சிரிப்புடன் அதனை வாங்கி மீண்டும் சரியாக இருக்கிறதா எனக் கணக்குப் பார்த்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பணத்தை கொடுத்தாள்.



அன்று கொழுந்து கொடுத்த எல்லோருக்கும் பத்துமுதல் பதினைந்து ரூபாவரை பணம் கிடைத்தது. கொஞ்ச நேரத்திற்குள்ளேயே இவ்வளவு தொகைப் பணம் அவர்களுக்கு கிடைத்துவிடுமென அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எல்லோருக்கும் பணம் கொடுத்து முடிந்ததும் லாச்சியில் இழுத்து மூடிக்கொண்டு எழுந்திருந்தார் பண்டா முதலாளி. பணம் பெற்றுக் கொண்டவர்கள் அவரது கடையிலேயே தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும், பலசரக்குகளையும் வாங்கினர். வேறுசிலர் பின்புறமாகச் சென்று கள் குடித்துவிட்டுச் சென்றனர்.



அன்று பண்டா முதலாளிக்கும், மெனிக்காவுக்கும் வியாபாரத்தை கவனிப்பதற்கு பெரும்பாடாகப் போய்விட்டது. ஆட்கள் எல்லாரும் கடையை விட்டு அவருக்குச் சேர்ந்திருந்த பணத்தை எண்ணத் தொடங்கினார். மெனிக்கா அடுப்படிக்குச் சென்று கோப்பி தயாரித்து வந்து அவருக்குக் கொடுத்தாள்.



பணத்தை எண்ணியபடியே, மெனிக்காவின் பக்கம் திரும்பி, ““என்ன மெனிக்கே இன்றைக்கு என்ன விசேஷம்... கோப்பி கொண்டு வந்திருக்கிறாய்”” எனச் சிரிப்புடன் கேட்டார் பண்டா முதலாளி.



““நீங்கள் ரொம்ப களைத்துப் போனீர்கள்”” எனப் புன்னகைத்தாள் மெனிக்கே.



பண்டா முதலாளி பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, அதனை லாச்சியில் வைத்துப் பூட்டினார் அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது.



ஒரே நாளில் அவருக்கு இலாபமாக முந்நூறு ரூபாவுக்கு மேல் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு றாத்தல் கொழுந்திற்கும் இருபது சதம் கமிஷக் வைத்தபடியால் இவ்வளவு பெருந்தொகையான பணத்தை அவர் பெற்றிருக்கிறார். உண்மையில் இவ்வளவு இலாபம் கிடைக்குமென அவர் எதிர்பார்க்கவில்லை@ தொடர்ந்தும் இந்தக் கொழுந்து வியாபாரத்தை நடத்தினால் மிக விரைவிலேயே அதிக பணத்தை சுலபமாக சம்பாதித்து விடலாமென எண்ணியபோது அவரது உள்ளம் நிறைந்தது.



““நாம் இப்படிக் களவாகக் கொழுந்தை வாங்கி விற்பதனால் நமக்கு ஏதும் காச்சல் ஏற்பட்டு விடாதா?”” எனச் சிந்தனையுடன் கேட்டாள் பக்கத்தில் நின்றிருந்த மெனிக்கே.



அவள் இப்படித் திடீரெனக் கேட்பதன் காரணத்தை புரிந்து கொண்டு சிரித்த பண்டா முதலாளி, ““நாம் எதற்குமே பயப்படத் தேவையில்லை. இந்த விஷயம் தேட்டத்து கண்டக்டருக்கும் பெரிய கிளாக்கருக்கும் நன்கு தெரியும். ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அவர்கள் உடனே எனக்குக் தகவல் கொடுத்து விடுவார்கள். நாம் ஏற்ற நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம்”” எனக் கூறினார்.



““பொலிசாருக்கு ஏதும் தகவல் கிடைத்து திடீரென வந்து உங்களைக் கைது செய்துவிட்டால் நான் என்ன செய்வது?”” எனக் கலக்கத்துடன் கேட்டாள் மெனிக்கே.



““என்ன மெனிக்கே இப்படி பயப்படுகிறாய்? கட்சி அமைப்பாளர் எமக்குச் சார்பாக இருக்கும்போது, நாம் எதற்குச் சார்பாக இருக்கும் போது, நாம் எதற்குமே பயப்படத் தேவையில்லை. அப்படி ஏதும் கஷ்டம் ஏற்பட்டாலும் அவர் ஒருபோதும் எம்மைக் கைவிடமாட்டார்| எனக் கூறிவிட்டு மகிழ்வுடன் மெனிக்கே கொடுத்த கோப்பியை சுவைக்கத் தொடங்கினார் பண்டா முதலாளி.



மெனிக்கேயும் அவரது சந்தோஷத்தில் கலந்து கொண்டாள்.

+++++++++++++++++++++++

அத்தியாயம் முப்பது



பூரணச் சந்திரன் மலைமுகட்டின் பின்னாலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான். லயங்கள் யாவும் சோபை இழந்துபோய்க் கிடந்தன. ஓரிரு காம்பராக்களில் மட்டும் மினுக் மினுக்கென்று விளக்கு எரிவது தெரிந்தது. மடுவத்தைக் சுற்றிக் கட்டப்பட்டிருந்த அரைச் சுவரில், ராமுவும் செபமாலையும் வேறு இரு இளைஞர்களும் ஏறி அமர்ந்திருந்தனர். மடுவத்திலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கண்டக்டரின் பங்களாவிலிருந்து மின்விளக்கின் ஒளிக் கீறல் மடுவத்தின் ஒரு பக்கத்தில் கோடுகள் போல் விழுந்திருந்தது. இளைஞர்கள் மடுவத்தின் இருட்டான பகுதியில் அமர்ந்திருந்தனர். சில்லென்று வீசிய குளிர் காற்று அவர்களின் உடலைத் தைத்தது.



““டேய் செபமாலை, பீடி இருந்தா தாடா... சரியான கூதலா இருக்கு. ஒரு ~தம்| அடிச்சாத்தான் நல்லா இருக்கும்...”” என்றான் ராமு மெல்லிய குரலில்



செபமாலை தானணிந்திருந்த சேட் பொக்கட்டைத் துளாவிப் பார்த்தவாறு, ““எங்கிட்ட ஒரு துண்டு பீடிகூட இல்லேடா... எனக்கும் பீடியில்லாம ஒரே பைத்தியமா இருக்கு”” என வாயைச் சப்புக்கொட்டிக் கொண்டான்.



““இந்த வீரய்யாவைத்தான் இன்னும் காணோமே... ஏழு மணிக்கெல்லாம் வந்திருவேனு சொல்லிட்டு ஜில்லாவுக்குப் போனான். இப்ப மணி எட்டாகுது...””



““ஜில்லாப் பெரதிநிதி இருக்காரோ இல்லியோ தெரியாது. எத்தின மணியா இருந்தாலும் அவரைக் கண்டு கதைச்சிட்டுத்தானே வரணும். இது முக்கியமான விஷயம் இல்லியா?”” என்றான் இதுவரை நேரமும் மௌனமாக இருந்த இளைஞர்களில் ஒருவன்,



அப்போது மடுவத்தின் முன்பாக ரோட்டில் காரொன்று வரும் வெளிச்சம் தென்பட்டது.



““அடே........ தொரவூட்டு கார் சத்தம் மாதிரி கேக்குது, நம்மளைக் கண்டா ஏதும் சந்தேகமா நெனைப்பாரு@ கீழே இறங்கி சுவருக்குப் பின்னுக்கு மறைஞ்சிக்குங்கடா”” என செபமாலை உத்தர விட்டான்.



எல்லோரும் கீழே குதித்துச் சுவரின் பின்னால் மறைந்து கொண்டனர். துரையின் கார் மடுவத்தை நெருங்கியதும் ஒருகணம் நின்று, பின்பு அதே வேகத்துடன் புறப்பட்டுச் சென்றது.



இளைஞர்கள் மீண்டும் சுவரின் மேல் தாவி ஏறிக்கொண்டனர்.



““தொர படம் பார்க்கவோ, கிளப்புக்கோ போயிட்டுப் போறாரு... நம்மதான் தோட்டத்தவுட்டு வெரட்டுறாங்களேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கெடக்குறோம்@ தொர ஜாலியா சுத்திட்டுப் போறாரு”” என்றான் செபமாலை சலிப்புடன்.



~ஆமாடா அவருக்கென்னா... இந்தத் தோட்டம் இல்லாட்டி வேற தோட்டத்துக்கு தொரையாப் போவாரு. நம்மளுக்குத்தான் எந்த நாளும் கஷ்டம்”” எனக் கூறினான் ராமு.



கீழே ஒற்றையடிப் பாதையில் யாரோ வருவது நிலவு வெளிச்சத்தில் மங்கலக்கத் தெரிந்தது. இளைஞர்கள் ஒரு கணம் தங்களது சம்பாஷணையை நிறுத்திக் கொண்டனர்.



வீரய்யா அந்த ஒற்றையடிப் பாதையிலிருந்து ஏறிக்கரத்த றோட்டுக்கு வந்து மடுவத்திற்குள் நுழைந்தான்.



““போன வெசயம் எப்புடி.... சரி வந்துச்சா? ஜில்லாவுல என்னா சொன்னாங்க?”” என ஆவலுடன் வினவினான் ராமு.



““இன்னும் ஒன்னும் சரியான முடிவு தெரியல்ல. தோட்டத்த கொலனியாக்குற விஷயமா யூனியனில இருந்து எதிர்ப்பு தெரிவிச்சு கடதாசி எழுதியிருக்காங்க.... அதற்கு எந்தவித பதிலும் இன்னும் கெடைக்கலியாம். அதுனால ஜில்லா பிரதிநிதியால் எந்த முடிவுக்கும் வரமுடியல்ல. மத்தியக் கமிட்டிய கேட்டுத்தான் சொல்ல முடியும் எங்கிறாரு”” என்றான் வீரய்யா.



““மத்தியக் கமிட்டியில இருந்து பதில் வாறதுக்கு இடையில தோட்டமெல்லாம் அளந்து கொலனிக்குக் கொடுத்திடுவாங்க போல இருக்கு... அவ்வளவு சுறுக்கா காணி அளக்கிற வேல நடக்குது”” எனப் படபடத்தான் ராமு.



கீழே ஒற்றையடிப் பாதையில் யாரோ வருவது நிலவு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. இளைஞர்கள் ஒரு கணம் தங்களது சம்பாஷணையை நிறுத்திக் கொண்டனர்.



வீரய்யா அந்த ஒற்றையடிப் பாதையிலிருந்து ஏறிக் கரத்த றோட்டுக்கு வந்து மடுவத்திற்குள் நுழைந்தான்.



““போன வெசயம் எப்புடி.... சரி வந்துச்சா? ஜில்லாவுல என்னா சொன்னாங்க?”” என ஆவலுடன் வினவினான் ராமு.



““ இன்னும் ஒன்னும் சரியான முடிவு தெரியல்ல. தோட்டத்த கொலனியாக்குற விஷயமா யூனியனில இருந்து எதிர்ப்பு தெரிவிச்சு கடதாசி எழுதியிருக்காங்க... அதற்கு எவ்தவித பதிலும் இன்னும் கெடைக்கலியாம். அதுனால ஜில்லா பிரதிநிதியால் எந்த முடிவுக்கும் வரமுடியல்ல. மத்தியக் கமிட்டிய கேட்டுத்தான் சொல்ல முடியும் எங்கிறாரு”” என்றான் வீரய்யா.



மத்தியக் கமிட்டியில் இருந்து பதில் வாறதுக்கு இடையில தோட்டமெல்லாம் அளந்து கொலனிக்குக் கொடுத்திடுவாங்க போல இருக்கு.... அவ்வளவு சுறுக்கா காணி அளக்கிற வேல நடக்குது”” எனப் படபடத்தான் ராமு.



““ராமு... நாங்க இப்புடியே காலத்தைக் கடத்திக் கிட்டே போனா சரிவராது.... இப்ப நான் ஒரு நல்ல திட்டத்தோடதான் வந்திருக்கேன்...... அதை நாங்க ரொம்ப ரகசியமாத்தான் செய்யனும்@ வெளியில மத்தவங்களுக்குத் தெரிய வந்திச்சினா அது எல்லாத்துக்கும் ஆபத்தா முடியும்”” என்றான் வீரய்யா மெல்லிய குரலில்.



““எல்லாரும் எங்ககூட வாங்க@ அப்புறம் எல்லாத்தையும் வெபரமா சொல்றேன்”” எனக் கூறிய வீரய்யா, மடுவத்தை விட்டுப் புறப்பட்டான். இளைஞர்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.



மடுவத்திற்கு அருகில் உள்ள மலையில் கடந்த இரண்டு நாட்களாக நில அளவைத் திணைக்களத்தினர் அளந்து கூனி அடித்திருந்த பகுதியை அவர்கள் அடைந்தனர். வீரய்யா முதலில் ஓர் கூனியைப் பிடுங்கி கையில் எடுத்தான்.



““என்ன வீரய்யா கூனியப் பிடுங்கிறே?”” எனக் கேட்டான் ராமு.



““காணியளக்கிறவுங்க அடிச்சிருக்கிற கூனியெல்லாம் பிடிங்கி வீசுங்க... மாயம் தெரியாம அழிச்சிப்புடுங்க. அப்புறம் எப்புடித்தான் காணியைப் பிரிச்சிக் கொடுப்பாங்கனு பார்ப்போம்.”” வீரய்யாவின் குரல் ஆக்ரோஷமாக ஒலித்தது.



““என்ன வீரய்யா யோசிக்காம செய்யுற@ இன்னிக்குக் கூனியெல்லாம் பிடிங்கி வீசிட்டா, நாளைக்கு நம்மளைப் பொலிசுல புடிச்சி அடைச்சிட்டு, வந்து புதுக்கூனி அடிப்பானுக”” எனக் கூறினான் செபமாலை.



““இந்த விஷயத்துலதான் நாம கவனமா இருக்கோனும்@ யாரு கூனியப் புடுங்கினாங்கனு ஒருத்தருக்குமே தெரியவரக்கூடாது”” என்றான் வீரய்யா நிதானமாக.



““ஆமா வீரய்யா, நீ சொல்லுறது சரிதான். இந்த நேரத்துல கூனி எல்லாத்தையும் புடிங்கி வீசிட்டா, புடிங்கி வீசினது யாருன்னு சொல்லமுடியுமா? தோட்டத்து ஆளுங்கதான் புடுங்கி வீசினாங்கன்னு எல்லாத்தையும் பொலிசில கொண்டுபோய் ~ரிமான்ட்| பண்ணமுடியுமா?”” எனக் கூறினான் ராமு அலட்சியமாக.



அப்போது அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன், ““இன்னிக்கு நாமெல்லாம் பிடிங்கி வீசிட்டா, நாளைக்கு காணியளக்கிறவங்க வந்து திரும்ப கூனி அடிக்காமலா இருக்கப் போறாங்க?”” எனக் கேட்டான்.



““இனிமே காணி அளக்கிறவுங்கள தோட்டத்தில கால் வைக்க வுடுறது இல்ல”” எனக் கூறினான் வீரய்யா. அவனது கூற்றில் உறுதி தொனித்தது.



““அது நம்மளால முடியுமா அண்ணே.......”” எனச் சந்தேகத்துடன் கேட்டான் செபமாலை.



““ஏன் முடியாது. நம்ம எல்லோருமே சேந்து ஒத்துமையா இருந்தா எதையும் சாதிக்க முடியும். காணி அளக்கிறங்க வாறப்போ எல்லோருமா சேந்து வந்து அவுங்கள தோட்டத்துக்குள்ள நுழையாம தடு;ப்போம்”” என்றான் வீரய்யா.



““காணியளக்கிறவங்க எந்த நேரத்தில வருவாங்க? எப்ப வருவாங்கனு நமக்குத் தெரியவா போவுது. நம்பகிட்ட சொல்லிக்கிட்டா வாறானுக?”” எனக் கேட்டான் ராமு.



““அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன். காணியளக்கிறவங்க வாறப்போ, அவுங்களை யார் கண்டாலும் ஒடனே மடுவத்து வந்து பெரட்டு மணிய அடிக்கோனும். மணிச்சத்தம் கேட்டவொடன லயத்துல இருக்கிறவங்க எல்லாரும் ஓடிவந்து அவுங்களை காணி அளக்கவிடாம தடுக்கனும்”” வீரய்யா இப்படிக் கூறியபோது நண்பர்களது மனதிலும் அவன் கூறிய திட்டம் சரியானதாகவேபட்டது.



““இது ஒரு நல்ல யோசனைதான். நாளைக்கி காலையில லயத்துல இருக்கிறவங்க எல்லாத்துக்கிட்டேயும் சொல்லிடுவோம்”” என்றான் செபமாலை உற்சாகத்துடன்.



““இனிமே நாமெல்லாம் ரொம்ப துணிவோடதான் எல்லா வேலையும் செய்யணும்”” எனக் கூறிய ராமு. ““மொதல்ல எல்லாரும் இந்தக் கூனி எல்லாத்தையும் பிடுங்கி வீசுங்க”” எனக் கூறிவிட்டு, அங்கிருந்த கூனிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எறிந்தான். நண்பர்கள் ஒவ்வொருவராகக் கூனிகளைப் பிடுங்கி வீசத் தொடங்கினர். இப்போது அவர்களுடைய நெஞ்சில் எதற்குமே அஞ்சாத துணிவு துளிர்விடத் தொடங்கியது.

+++++++++++++++++++

அத்தியாயம் முப்பத்தொன்று



பெரிய பங்களாவின் பக்கத்திலுள்ள மலையில் ஆண்களும் பெண்களுமாகப் பலர் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். வீரய்யா ஒரு புறமும் கறுப்பண்ணன் கங்காணி மறுபுறமும் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.



இரவிரவாகக் கூனிகள் பிடுங்கப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டதும், கண்டக்டர் துரையின் பங்களாவுக்குச் சென்று அவரிடம் விஷயத்தைக் கூறினார். வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்று தனக்கு எழுந்த சந்தேகத்தையும் அவர் துரையிடம் கூறத் தவறவில்லை.



முதன்நாள் இரவு, தான் கிளப்புக்குச் சென்று திரும்பும் வேளையில் யாரோ நாலைந்து பேர் மடுவத்தில் இருந்ததும், தன்னைக் கண்டு மறைந்து கொண்டதும் துரைக்கு நினைவில் வந்தது.



வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டுமென துரைக்கும் சந்தேகம் எழுந்தது. இப்படியான காரியத்தை வேறு எவரும் தோட்டத்தில் துணிந்து செய்யமாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.



இந்த விஷயத்தில் தான் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் விட்டால், கட்சி அமைப்பாளரின் சந்தேகத்துக்கு ஆளாக வேண்டிவரும் என அவரது உள்ளம் கூறியது. அவரது நண்பரான பக்கத்துத் தோட்டத் துரை, ““தற்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குச் சார்பாகவே கடமை புரிவதுதான் புத்திசாலித்தன மானது”” என அவருக்கு புத்திமதி கூறியதும் அவரது நினைவில் வந்தது.



துரை, கண்டக்டரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு மடுவத்தின் அருகே இருக்கும் மலைக்குச் சென்று கவனித்தார்@ அதிகாலையில் சிறிது மழை பெய்திருந்ததால் கூனிகள் பிடுங்கப்பட்ட அடையாளங்கள் அழிந்து போயிருந்தன.



துரை காரைத் திருப்பிக்கொண்டு தொழிலாளர்கள் கொண்டு மடுவத்தின் அருகே இருக்கும் மலைக்குச் சென்று கவனித்தார்@ அதிகாலையில் சிறிது மழை பெய்திருந்ததால் கூனிகள் பிடுங்கப்பட்ட அடையாளங்கள் அழிந்து போயிருந்தன.



துரை காரைத் திருப்பிக்கொண்டு தொழிலாளர்கள் கொழுந் தெடுக்கும் மலையை வந்தடைந்தார். காரை விட்டிறங்கியதும், கண்டக்டரிடம் வீரய்யாவை அருகில் வரும்படி அழைக்கச் சொல்லிப் பணித்தார். கண்டக்டர் அழைப்பதை அறிந்து வீரய்யா ஒன்றும் அறியாத பாவனையில் காரின் அருகே வந்தான்.



““யார் அந்தக் கூனியெல்லாம் பிடுங்கி வீசினது?”” துரை விறைப்பான குரலில் கேட்டார்.



““எனக்குத் தெரியாதுங்க தொர, இன்னிக்குக் காலையிலதான் நானும் அதைப்பத்திக் கேள்விப்பட்டேனுங்க.””



கொழுந்தெடுப்பவர்கள் எல்லோரும் துரை, வீரய்யாவுடன் கண்டிப்பான குரலில் பேசுவதை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.



““பொய் சொல்ல வேணாம்@ இது நீயெல்லாந்தான் சேந்து செஞ்சிருக்கவேணும்”” என்றார் துரை கோபத்துடன்.



““நான் நேத்து தோட்டத்துக்கு விருந்தாளியா போயிருந்தேனுங்க. இன்னிக்கு காலையிலதாங்க தொர வந்தேன். தொர அநியாயமா என்னைய சொல்லுறீங்க”” என்றான் வீரய்யா ஒன்றும் அறியாதவன்போல.



““எங்கே ஒன் கூட்டாளி ராமு....... அவனுந்தானே சேந்து இந்த வேலை செஞ்சது?””



““அவன் இன்னிக்கு வேலைக்கு வரல்லீங்க, அவனுக்கு இந்த ரெண்டு நாளா சரியான வவுத்து வலிங்க... படுத்திருக்கானுங்க....”” என்றான் வீரய்யா பணிவான குரலில்.



““நீ மிச்சம் பொய் பேசுறது. இந்தக் கூனியெல்லாம் புடுங்கி வீசுறது. மிச்சங் பெரிய குத்தம்@ நீதானே இப்ப தோட்டத்தில தலைவரு..... ஒன்னைத்தான் பொலீசில புடிச்சுக் கொடுக்கிறது”” என்றார் துரை மிகவும் கோபமாக.



““தோட்டத்தில தலைவரா இருந்தா... நான் செய்யாத குத்தத்துக்கு என்னைப் பொலிசுல புடிச்சுக்குடுக்க முடியுங்களா துரை”” வீரய்யா துரையைப் பார்த்துக் கேட்டான்.



அந்த வேளையில் மடுவத்தின் பக்கமிருந்து ““டாண்.... டாண்...”” என பிரட்டு மணியின் ஓசை பலமாக ஒலித்தது.



மறுகணம் வீரய்யா மலையிலே கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களைப் பார்த்து, ““எல்லாரும் மடுவத்துக்கு வாங்க| எனப் பலமாகக் கூறிக்கொண்டே மடுவத்துக்கு ஓடினான்.



மலையில் நின்ற தொழிலாளர்கள் எல்லோரும் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போன்று, வீரய்யாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து தமது கொழுந்துக் கூடைகளுடன் மடுவத்தை நோக்கி விரைந்தனர்.



துரையும் கண்டக்டரும் திகைத்துப்போய் நின்றனர்.



““ஏய்... ஏய்... ஏன் எல்லாம் வேலை செய்யிறதை விட்டுட்டு ஓடுறது? நீங்க நெனைச்சாபாட்டுக்கு இப்புடிச் செஞ்சா எல்லோருக்கும் நான் வேலை நிப்பாட்டிறது”” துரை தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பெரிதாகக் கத்தினார். ஆனால், எவருமே அதனைக் காதில் வாங்கிக்கொண்டவர்களாகத் தெரியவில்லை. கோபத்தினால் துரையின் உடலெல்லாம் நடுங்கியது.



ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததுபோல நாலா புறமும் இருந்து தொழிலாளர்களும் முதியவர்களும் சிறியவர்களும் பெண்களும் மடுவத்தை நோக்கி விரைந்து வந்தனர். சில நிமிடங்களில் மடுவத்தின் முன்னால் மக்கள் சமுத்திரம் போலக் கூடிவிட்டனர். அதைப் பார்த்தபோது வீரய்யாவின் உள்ளம் மகிழ்ச்சியினால் துள்ளியது தொழிலாளர்கள் தனக்கு ஒத்துழைப்புத் தருவதற்கு இப்போது தயாராகிவிட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவர்களிடையே இருந்த பய உணர்ச்சியெல்லாம் மறைந்து இப்போது எதற்கும் துணிந்தவர்களாக மாறிவிட்டதை வீரய்யா கண்டு கொண்டான்.



தூரத்திலே ஸ்டோர்ப் பக்கமாக நில அளவையாளரின் ஜீப் வந்து கொண்டிருப்பதைக் கண்டதும், செபமாலை பிரட்டு மணியை அடித்து ஓசை எழுப்பியிருந்தான். ஜீப் வண்டி மடுவத்துக்கு வந்து சேருவதற்கு முன்னரே இவ்வளவு தொகையான மக்கள் அங்கு வந்து சேருவார்கள் என்பதை அவன் எதிர்பார்க்கவேயில்லை.



வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப், மடுவத்தின் ஓரமாகப் பாதையை மறைத்துக்கொண்டிருந்த சனங்களைக் கண்டதும் ~பிரேக்| போட்டு நிறுத்தப்பட்டது. அதில் இருந்தவர்கள் திகையுடன் சனக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.



அப்போது துரையும் கண்டக்டரும் காரில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.



டிரைவர் ஜீப் வண்டியின் ~ஹோணை|ப் பலமாக அழுத்தினான். எவருமே தாங்கள் நின்ற இடத்தைவிட்டு அசையவில்லை.



வீரய்யா முன்னால் சென்று ஜீப்பில் உட்கார்ந்திருக்குக்கும் உத்தியோகத்தர்களைப் பார்த்து, ““நாங்க இனிமே ஒங்களை காணியளக்க விடமாட்டோம்@ தயவு செஞ்சு நீங்கெல்லாம் திரும்பிப் போங்க”” எனக் கூறினான்.



துரையும் கண்டக்டரும் காரிலிருந்து இறங்கி ஜீப் நிற்கும் இடத்திற்கு வந்தனர்.



ஜீப்பில் இருந்த ஒருவர். ““இவர்கள் எல்லோரையும் எங்களுக்கு வழிவிட்டு விலகச் சொல்லுங்கள். நாங்கள் எங்களது கடமையைச் செய்ய வேண்டும்”” எனத் துரையிடம் ஆங்கிலத்தில் கூறினார்.



அதைக் கேட்டதுரை, வீரய்யாவின் பக்கம் திரும்பி, ““நீங்க இவங்களை எல்லாம் தடுக்க வேணாம். அவுங்க வேலையைச் செய்யட்டும்@ கொழப்பம் பண்ணாதீங்க”” எனக் கோபத்துடன் கூறினார்.



““நாங்க அவங்களை காணியளக்க விடமாட்டோம்”” எனக் கூறினான் அப்போதுதான் அவ்விடம் வந்து சேர்ந்த ராமு.



““இப்புடி நீயெல்லாம் கொழப்பம் பண்ணினா நான் பொலீசுக்குச் சொல்லி, ஒங்களை எல்லாம் ‘ரிமாண்ட்’ பண்ணுறது”” என்றார் துரை சிடுசிடுப்புடன்.



““ஆமாந் தொர.... அப்புடிச் செய்யுங்க. ஒங்களுக்கு முடிஞ்சா தோட்டத்துல இருக்கிற எல்லாரையும் கொண்டு போய் ~ரிமாண்ட் பண்ணுங்க”” என்றான் வீரய்யா.



““எல்லாரையும் பொலிசுல அடைச்சிட்டு வேணுமுன்னா இவங்க வந்து காணி அளக்கட்டும்”” எனக் கூறினான் பக்கத்தில் நின்ற செபமாலை.



““கடைசியா நான் கேக்கிறது... நீ எல்லாம் இந்த எடத்தை வுட்டுட்டு போறதா இல்லையா?”” எனத் துரை அதட்டிக் கேட்டார்.



~முடியாது| என்ற பாவனையில் வீரய்யா தலையசைத்தான். அங்கு நின்ற எல்லோரும் ஒரே குரலில் ““நாங்கள் காணியளக்க விட மாட்டோம்”” என முழங்கினர்.



துரைக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது.



அப்போது ஜீப்பில் உட்கார்ந்திருந்த ஓர் உத்தியோகத்தர், ““இவர்களோடு கதைப்பதில் பிரயோசனம் இல்லை... நாங்கள் திருப்பிச் செல்கிறோம். மீண்டும் சில நாட்களில் வேண்டிய ஏற்பாடுகளுடன் வருகிறோம்.”” எனக் கூறினார்.



சாரதி ஜீப்பை பின்பக்கமாக ரிவேஸில் செலுத்தினான்.



துரை கோபத்துடன் சென்று காரில் ஏறி பலமாகக் கதவைச் சாத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.



எல்லாவற்றையும் இதுவரை நேரமும் மௌனமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த கண்டக்டர், ‘இவர்களுக்கு இவ்வளவு துணிவு ஏற்பட்டுவிட்டதா? இன்றே கட்சி அமைப்பாளரிடம் சென்று நடந்தது எல்லாவற்றையும் கூறி, இவர்களை மட்டந்தட்டுவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

++++++++++++++++++++

அத்தியாயம் முப்பத்திரண்டு



பண்டா முதலாளியின் வீட்டில் அன்று ஒரு கூட்டம் நடை பெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. முதலாளிதான்ட கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். அரசாங்கத்தினால் இனாமாக வழங்கப்படவிருக்கும் காணிக்கு மனுப் போட்டவர்கள் எல்லோரும் கூட்டத்துக்குத் தவறாது சமூகம் அளிக்கும்படி அவர் அறிவித்தல் கொடுத்திருந்தார். கூட்டம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பலர் முதலாளியின் வீட்டில் வந்து கூடிவிட்டனர். சுமணபாலாவும், பியசேனாவும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர்.



வயலின் நெற்பயிர்களை பூச்சிகள் தாக்கியிருந்ததால் கிராம சேவகர் அவற்றிற்கு தொழிலாளர்களைக் கொண்டு மருந்து அடித்துவிட்டு, நாட்டிலிருக்கும் தனது வீட்டிற்குச் சென்று மனுப் பத்திரங்களின் பிரதிகளை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாகக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார்.



““வாருங்கள் ஜி.எஸ். மாத்தியா... உங்களது வரவைத் தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்”” எனக்கூறி பண்டா முதலாளி அவரை வரவேற்று அங்கிருந்த கதிரையொன்றில் அமரும்படி கூறினார்.



““எப்படி எல்லாரும் வந்துவிட்டார்களா?”” எனக் கேட்டபடி அங்கிருந்தவர்களை ஒரு தடவை நோட்டம் விட்டார் கிராம சேவகர்.



““மனு அனுப்பியவர்களில் ஒரு சில பெண்கள் வரவில்லை. ஆனாலும் அவர்களது சார்பில் அவர்களது குடும்பத்திலிருந்த வேறு ஆட்கள் வந்திருக்கின்றனர்””



““அப்படியானால் நாம் கூட்டத்தை ஆரம்பிக்கலாம்”” என்றார் கிராம சேவகர்.



““நாம் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அரசாங்கத்திற்கு நாங்கள் மனு அனுப்பியிருந்த போதிலும் நமக்குக் காணி கிடைப்பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இது விஷயமாக உங்களிடம் கதைத்து உங்களது அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள விரும்புகின்றோம்””



பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.



““அப்படி என்ன பிரச்சினைதான் இப்பொழுது ஏற்பட்டு இருக்கின்றது?”” கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது.



““அதாவது, மேலிடத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. அவர்கள் எமக்குக் காணி தருவதற்கு ஏற்ற முயற்சிகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அதற்குத் தடையாக இருக்கின்றார்கள்”” என்றார் பண்டா முதலாளி



““ஆமாம்@ சில அளவையாளர் அடித்து வைத்த கூனிகளை யெல்லாம் அவர்கள் பிடுங்கி வீசிவிட்டார்களாம். நேற்று காணியளப்பதற்கு உத்தியோகத்தர்கள் வந்தபோது கூட தொழிலாளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவர்களைத் தடுத்துவிட்டார்களாம்”” என்றான் முன் பகுதியில் நின்ற பொடிசிங்கோ.



““தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டுப் போவதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கின்றார்கள்.நாம் இந்த விஷயத்தில் எவ்விதநடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் எமக்குக் காணி கிடைப்பது சந்தேகந்தான்”” என்றார் கிராம சேவகர்.



““நாங்கள் அதற்கு என்ன செய்ய முடியும்? அரசாங்கம்

அல்லவா அதற்கு நடவடிக்கை எடு;க்க வேண்டும்”” என்றான் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன்.



““எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வளவு நாளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு இப்போதுத்தான் காணி கிடைக்கும் சந்தர்;ப்பம் கிடைத்திருக்கிறது.அதனைத் தடுப்பவர்களை நாம் சும்மா விட்டு வைக்கக் கூடாது””. என்றான் அருகில் இருந்தவர்களில் ஒருவன்.



““நீங்கள் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றித் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள். எமக்கு காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கமல்ல. தங்களைத் தோட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டாமென்றுத்தான் அவர்கள் போராடுகின்றனா”” என்றான் இதுவரை நேரமும் மௌனமாக நின்ற சுமன பால.



““முட்டாள் தனமாய் பேசுகிறாய். உனக்கு அனுபவம் போதாது. எமக்குக் காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கம் இல்லையென்றால் அவர்கள் ஏன் கூனிகளைப் பிடுங்கி வீச வேண்டும்?... காணியளப்பவர்களை ஏன் தடுக்க வேண்டும்?...”” என்றார் பண்டா முதலாளி படபடப்புடன்.



அப்போது சுமணபாலாவின் அருகே நின்ற பியசேனா கூறினான்@



““நீங்கள் கோபத்தில் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றீர்கள். ஆண்டாண்டுகாலமாக எங்களோடு ஒற்றுமையாக வாழ்ந்த தொழிலாளர்கள். இப்போது எங்களுக்குக் காணி கிடைப்பதற்கு ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள். தங்களைத் தோட்டத்தை விட்டு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே அவர்கள் அப்படிக் கூனிகளைப் பிடுங்கி வீசினார்கள். அதனை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.”” அவனது குரல் கணீரென ஒலித்தது.



““தோட்டத் தொழிலாளர்கள் என்ன நோக்கத்தோடு கூனிகளைப் பிடுங்கினார்கள் என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அவர்கள் அப்படி செய்வதால் எங்களுக்குக் காணி கிடைக்காமல் போய்விடுமல்லவா?”” என்றான் பொடிசிங்கோ பலமாக,



““இது எங்களுடைய நாடு. நாமெல்லாம் மதிப்பிற்குரிய பிரஜைகள். எங்களுக்குக் கிடைக்கப்போகும் சலுகைகளுக்கு யார் தடையாக இருந்தாலும் நாம் இலேசில் விட்டுவிடக் கூடாது”” என்றார் பண்டா முதலாளி.



““இது நமது நாடுதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனாலும் காடாகக் கிடந்த மலைகளை வெட்டி, வளம்படுத்தி தேயிலைச் செடிகளை நாட்டி வளர்த்தெடுத்தவர்கள் அந்தத் தோட்டத் தொழிலாளர்கள் தான். அவர்களுக்கும் இந்த மண்ணிலே பற்று இருக்கத்தான் செய்யும். அவர்களை விரட்டிவிட்டுத்தான் நாம் காணி பெற்றுக் கொள்ள வேண்டுமா?”” எனக் கேட்டுவிட்டு எல்லோரையும் ஒருகணம் பார்த்தான் சுமணபால.



““சுமணபால சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது”” என்றார் இதுவரை நேரமும் அமைதியாக நின்று அங்கு நடந்த சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்த முதியான்சே.



““தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு கூலிகளாகத் தானே கொண்டு வரப்பட்டார்கள். ஊதியம் பெற்றுக்கொண்டுதானே அவர்கள் வேலை செய்தார்கள். எப்படி அவர்கள் உரிமைகொண்டாட முடியும்? இது அநியாயமாகவல்லவா இருக்கிறது”” எனப் படபடத்தான் அங்கு நின்ற வேறொருவன்.



““அவர்கள் இந்த நாட்டுக்கு கூலிகளாக வந்திராவிட்டால் இந்தத் தேயிலைச் செடிகளையே நாம் இங்கு பார்க்க முடியாது. நூறு வருடங்களுக்கு மேலாகத் தமது உழைப்பை அர்ப்பணித்து, இந்தத் தேயிலைச் செடிகளை வளர்த்தெடுத்த தொழிலாளர்ககளை இன்னும் நாம் கூலிகள் என்று உதாசீனப்படுத்துவது தான் பெரிய அநியாயம்| என்றான் பியசேனா.



““எங்களது மூதாதையர்களிடமிருந்து வெள்ளையர்கள் பிடுங்கிக்கொண்ட காணியை இப்போது அரசாங்கம் எமக்குத் திருப்பி அளிக்க முன் வந்துள்ளது. அதனைத் தோட்டத் தொழிலாளர்கள் தடுப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. இந்தக் கொடுமையை நாம் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது”” எனக் கூறினான் பொடிசிங்கோ அவனது முகத்தில் கோபம் தெறித்தது.



““நமது காணியில், நாட்டு உரிமையே இல்லாத தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கிறதுமல்லாமல் அடாத்தான முறையில் நடக்கவும் தொடங்கிவிட்டார்கள். இதனைப் பார்த்துக் கொண்டு இருக்க நாம் என்ன கோழைகளா...?”” மூலையில் நின்ற இளைஞன் கூறினான். அவனது உடல் உணர்சசி;வசத்தால் நடுங்கியது.



““நீங்கள் எல்லோரும் ஆத்திரத்தில் அறிவை இழக்கின்றீர்கள். சில அரசியல்வாதிகள் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக, பிழையான வழியில் முயற்சி செய்கின்றார்கள். எங்களுக்கு வாக்குரிமை இருப்பதனால் அடுத்த தேர்தலிலும் தமது பதவியைக் காப்பாற்றும் எண்ணத்துடன் எமக்கு சலுகைகள் செய்ய முனைகிறார்கள். நமக்கு இருப்பதுபோல் தொழிலாளர்கள் எல்லாருக்கும் வாக்குரிமை இருந்தால், ஒருபோதும் அவர்களை தோட்த்தைவிட்டு விரட்டவே மாட்டார்கள். அவர்களுக்கும் ஏதாவது சலுகை செய்ய முயற்சிப்பார்கள்”” என்றார் முதியான்சே.



““தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவது உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நீங்கள் ஏன் காணிக்கு மனுக்கொடுத்தீர்கள்?”” என்றார் கிராமசேவகர்.



““தோட்டத் தொழிலாளர்களை விரட்டிவிட்டுத்தான் காணி தரவேண்டுமா? தரிசாகக் கிடக்கும் காணியை நமக்குத் தரலாமே”” என்றான் பியசேனா.



““இவன் எப்பொழுதும் தோட்டத் தொழிலாளர்களின் சார்பாகவே பேசுகிறான். இவன் நமது ஆளாக இருந்துங்கூட, இவனுக்கு இனப்பற்றுக் கொஞ்சங்கூட இல்லை. இவன் நமது சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கும் கோடரிக்காம்பாக மாறினாலும் மாறிவிடுவான்”” எனக் கூறிவிட்டு பண்டா முதலாளி தனது பற்களைக் கடித்துக் கொண்டார்.



““முதலாளி.... அவன் அப்படித்தான் கதைப்பான். அவன் அப்படிக் கதைப்பதற்கு வேறு ஏதாவது சொந்தக் காரணம் இருக்கலாம் அல்லவா?”” எனக் கிண்டலாகக் கூறிவிட்டுச் சிரித்தான் பொடிசிங்கோ.



““ஆமாம் தோட்டதொழிலாளர்கள் போய்விட்டால் அவனுக்கும் சில பாதிப்புகள் ஏற்படலாமல்லவா...?”” எனக் கூறினான் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன்.



எல்லோரும் ~கொல்| லெனச் சிரித்தனர்.



““அவன் நியாயத்தைக் கூறும்போது, அதனை ஏற்றுக் கொள்ளும் அறிவு உங்களுக்கு இல்லை@ குதர்க்கம் பேசத் தான் உங்களுக்கு நன்றாகத் தெரியும்”” எனப் படபடப்புடன் கூறினார் முதியான்சே.



““நாங்கள் ஒன்றும் குதர்க்கம் பேசவில்லை. நாங்கள் எல்லோரும் ஒருமுகமாக நிற்கும்போது நீங்கள் தான் குறுக்கே இழுக்கின்றீர்கள்”” என்றார் கிராமசேவகர்.



““நாங்கள் ஒன்றும் உங்களுக்குக் குறுக்கே நிற்கவில்லை. நியாயத்தைத்தான் கூறினோம்”” என்றான் சுமணபால.



““அப்போ நாங்கள் எல்லோரும் நியாயமற்றவர்கள் என்றா சொல்லுகின்றாய்? உங்களைப் போன்று எமது சமுதாயத்துக்கு மாறாக நடக்கும் புல்லுருவிகளல்ல நாங்கள். நீங்கள் பேசுவதை நாங்கள் ஏற்கத் தயராகவும் இல்லை”” என்றார் பண்டா முதலாளி.



““நீங்கள் என்ன அநியாயத்தையாவது செய்யுங்கள். அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கமாட்டோம். இங்கு இனி நாங்கள் நிற்கவும் விரும்பவில்லை”” எனக் கூறிய பியசேனா, விருட்டென அவ்விடத்தை விட்டு வெளியேறினான். அவனைத் தொடர்ந்து சுமணபாலாவும் வெளியே சென்றான்.



““அவர்கள் போனால் போகட்டும். நாம் எப்படியும் தோட்டத் தொழிலாளர்களை விரட்டியே தீரவேண்டும்”” என்றான் பொடிசிங்கோ.



““தோட்டத் தொழிலாளர்களோடு போராடி ஏதாவது குழப்ப நிலை ஏற்பட்டுவிட்டால் பின்பு என்ன நடக்குமோ சொல்ல முடியாது. சில வேளை அரசாங்கம் காணி கொடுப்பதை நிறுத்தினாலும் நிறுத்திவிடவுங்கூடும்”” என யோசனையுடன் கூறினார் முதியான்சே.



““நீங்கள் இப்படிப் பயந்து நடுங்கினால் நாமெல்லாம் என்ன செய்வது? நீங்களும் வேண்டுமானால் அவர்களைப் போல் ஒதுங்குங்கள். நாங்கள் போட்ட திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்”” என்றார் கிராமசேவகர்.



இப்போது முதியான்சேயும் அவ்விடத்தில் நிற்க விரும்பாதவராக வெளியே சென்றார்.



அங்குவந்து இருந்தவர்கள் எல்லோரும் தங்களது திட்டத்தை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை வெகு நேரமாகக் கலந்தாலோசித்து விட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.

++++++++++++++++++++++++++

அத்தியாயம் முப்பத்து மூன்று



வழுக்கற்பாறை லயத்தின் பக்கமாக உள்ள மலையில் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கிராமத்திலுள்ளவர்களில் பலர் ஆண்களும், பெண்களுமாகப் பெருங் கூட்டமாகத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் மலையை வந்தடைந்தனர்.



களவாகக் கொழுந்தெடுப்பதற்கு எதிராக எவரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததினால் கிராமத்தவர்களுக்கு இப்போது துணிவு அதிகரித்திருந்தது@ அவர்கள் தோட்டத்தின் உள்ளே அதிக தூரம் வந்து கொழுந்து பறிக்கத் தொடங்கியிருந்தனர்.



நாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் மலையின் மறு பக்கத்திலிருந்து விரைவாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர். அப்படி அவர்கள் கொழுந்தெடுப்பதைப் பார்த்தும் வீரய்யாவின் உள்ளம் கொதித்தது. கடந்த ஒரு கிழமையாகத் தோட்டத்துக் கொழுந்துகளை அவர்கள் களவாடி வருகிறார்கள். வீரய்யா அதைப்பற்றி ஆரம்பத்திலேயே துரையிடம் முறையிட்டிருந்தான். துரை அது விஷயமாக மேலிடத்துக்கு அறிவித்தல் கொடுக்கப் போவதாக கூறியிருந்தார். அவர் அறிவித்தல் கொடுத்தாரா இல்லையா என்பது வீரய்யாவுக்குச் சந்தேகமாக இருந்தது.



தோட்டத்துக் கொழுந்தைக் கிராமத்தவர்கள் வந்து எடுப்பதால், தோட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகிவிடும். இப்போது நடந்துகொண்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூட தோட்டத்தில் வேலை கிடைக்குமா என்பது வீரய்யாவுக்குச் சந்தேகமாக இருந்தது. தொழிலாளர்களை எப்படியாவது, தோட்டத்தைவிட்டுத் துரத்திவிட வேண்டுமென்ற நோக்கத்துடனேயே கிராமத்தில் உள்ளவர்கள் செயலாற்றுகிறார்கள் என்பதை வீரய்யா புரிந்துக்கொண்டான். மலையில் எதிர்ப்புறமாக வேகமாகக் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்தெடுக்கும் பக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.



““ஏய் கங்காணி, நீயெல்லாம் இந்த மலையில கொழுந்தெடுக்க வேணாம்... நாங்க எடுக்கவேணும். எல்லாம் லயத்துக்கு ஓடிப்போ....”” எதிர்புறத்திலிருந்து பொடிசிங்கோ வீரய்யாவைப் பார்த்துப் பலமாகக் கூறினான்.



““நாங்க தோட்டத்து வேலைய செய்யுறோம். ஒங்களப் போல கள்ளக் கொழுந்து எடுக்கல்ல.... நீங்க எல்லாருந்தான் வூட்டுக்குப் போகணும்”” என்றான் வீரய்யா பொடிசிங்கோவைப் பார்த்து.



““என்னா கங்காணி, எங்களைப் பாத்தா கள்ளக் கொழுந்து எடுக்குறோமுனு சொல்றது? நாங்க என்னா களவானியா? இந்தக் காணியெல்லாங் நமக்குக் கொடுக்கப் போறதுதானே@ அதனாலைதான் நாங்க வந்து கொழுந்தெடுக்கிறது.””



““சட்டப்படி இன்னும் ஒங்களுக்கு காணி ஒண்ணும் குடுக்கல. அதுக்கு முந்தி நீங்க வந்து இப்புடிக் கொழுந்தெடுக்கிறது சரியில்லை”” என வீரய்யா கூறினான்.



““எங்களுக்கு காணி கொடுக்காவிடாம நீங்கதான் தடுக்கிறது. அதனாலதான் நாங்க இப்புடி வந்து கொழுந்தெடுக்கிறது”” என்றான் பொடிசிங்கோ விறைப்பான குரலில்.



““நீங்கள் எங்களைத் தவறா நெனைச்சிக்கிட்டீங்க. நாங்க ஒங்களுக்கு காணி ஒன்னும் கொடுக்க வேணாமுனு சொல்லல்ல. நெலம் இல்லாத ஆளுகளுக்கு காணி கொடுக்கத்தான் வேணும். ஒங்களுக்கெல்லாம் காணி கொடுக்கத்தான் வேணும். ஆனா எங்களை இந்தத் தோட்டத்தவுட்டு போகச் செல்லாவேணாமுனுதான் நாங்க சொல்லுறோம்”” என்றான் வீரய்யா அடக்கமாக.



““ஒங்களை வேறதோட்டத்துக்குப் போகச் சொல்லுறது தானே. இது எங்களுக்குக் கொடுக்கிற தோட்டம். நீங்க எல்லாங் சுறுக்கா போயி;னும்”” என்றான் பொடிசிங்கோவுக்குப் பக்கத்தில் நின்றவன்.



““நாங்க இந்த தோட்டத்தில பரம்பரையா இருக்கிறோம். இந்தத் தோட்டத்தவுட்டு நாங்க போகமாட்டோம். நீங்கதான் இப்ப கள்ளக்கொழுந்து எடுக்கிறதவுட்டிட்டு சுறுக்கா இந்த இடத்தைவிட்டுப் போயிடனும்”” என்றான் தூரத்தில் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த ராமு.



அதைக் கேட்டதும் பொடிசிங்கோவின் கோபம் அதிகமாகியது.



““ஏய், என்னடா நீ மிச்சங் பேசறது... பேசாம லயத்துக்குப் போடா”” எனக் கத்தினான் பொடிசிங்கோ.



““எங்களை போகச் சொல்லுறதுக்கு நீ யாருடா?”” எனப் பலமாகக் கத்தியபடி பொடிசிங்கோவின் பக்கம் பாய்ந்தான் ராமு.



வீரய்யா பாய்ந்து சென்று ராமுவைக் கட்டிப்பிடித்து இழுத்தான்@ என்ன ராமு. அவரசப்பட்டு சண்டைக்குப் போறே. நம்ம நெலமைய யோசிக்க வேணாம்”” கொஞ்சம் நெதானமா இரு”” என அவனைச் சாந்தப்படுத்தினான்.



““அட பலப்பாங்கோ மூ அபிட்ட காண்ட எனவா. அபித் நிக்காங் இண்ட பே எண்ட அபித் காமு”” பொடிசிங்கோ ஆத்திரத்தில் அலறினான்.



மறுகணம் நாட்டிலிருந்து வந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கத் தொடங்கினர். கையிலிருந்த ஆயுதங்களாலும், கற்களாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கினர். தொழிலாளர்களும் அவர்களை எதிர்க்கத் தொடங்கினர்.

““டேய், டேய்... ஒருத்தரும் நாட்டாளுங்களோட சண்டைக்கி போகாதீங்க. எல்லாரும் லயத்துக்குப் போங்க”” எனப் பலமாகக் கத்தினான் வீரய்யா.



வீரய்யா இப்படிக் கூறியதும் தொழிலாளர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். காரணமில்லாமல் அவன் இப்படிக் கூற மாட்டான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் வீரய்யாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு லயத்துக்கு விரைந்தனர். தொழிலாளர்கள் லயத்துக்குத் திரும்புவதைக் கண்டதும் கிராமத்தவர்கள் தமது தாக்குதல்களை நிறுத்திக் கொண்டனர்.



அந்தச் சொற்ப நேரத்தில் தொழிலாளர்களில் நான்கைந்து பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு விட்டன. அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வழி செய்துவிட்டு வீரய்யா துரையின் பங்களாவை நோக்கி விரைந்தான்.



தோட்டத் தொழிலாளர்களைத் தான் லயத்துக்குப் போகும்படி கூறியிருக்காவிட்டால் பெரிய பயங்கரம் நிகழ்ந்திருக்கும் என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். இருபகுதியினரும் போராடிப் பலத்த காயங்கள் ஏற்பட்டு கொலை கூட விழுந்திருக்கலாம். நல்ல வேளையாக அப்படி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லையென நினைத்து வீரய்யா மனதைத் தேற்றிக் கொண்டான்.



உண்மையில் நாட்டு மக்களுக்கு காணி கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவன் மனப்பூர்வமாக ஆதரித்தான். அவர்களோடு தோட்டத்து மக்கள் அன்புடனும், அந்நியோன்னியமாகவும் இதுவரை காலமும் இருந்ததைப் போலவே இனிமேலும் இருக்க வேண்டும். என்பதையே அவன் விரும்பினான். நாட்டு மக்கள் தங்களைத் தவறாகப் புரிந்துக் கொண்டு சண்டைக்கு வந்தது அவனது மனதை மிகவும் வேதனையடையச் செய்தது.



வீரய்யா, துரை பங்களாவை அடைந்தபோது துரை எங்கேயோ போவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

““தொர, நம்ம ஆளுங்க கொழுந்து எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் அந்த நாட்டாளுங்க வந்து அடிச்சி வெரட்டிப்புட்டாங்க. நாலைஞ்சு பேருக்கு சரியான காயமுங்க@ நாட்டாளுங்க கள்ளக் கொழுந்தெடுக்கிறதைப்பத்தி, முந்தியே தொரகிட்ட சொல்லியிருக்கேன். தொரை இதப்பத்தி கொஞ்சஞ்கூட கவனிக்காம இருக்கிறீங்க. அதனால இப்ப பெரிய கரச்சல்தான் வரப்போகுது”” எனக் கூறினான் வீரய்யா.



““ஓ அதிங் நான் அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டிருக்கு, அவங்கதான் நடவடிக்கை எடுக்கவேணும். நா ஒன்னும் செய்ய முடியாது. ஒங்களையெல்லாம் தோட்டத்தைவுட்டு போக சொன்னாப் பிறகு, நீங்க எல்லாங் இருக்கிறதினாலதான் இப்புடிக் கரச்சல் வாறது”” எனக் கோபத்துடன் சீறினார் துரை.



““என்னாங்க தொர, நம்ம ஆளுங்களுக்கெல்லாம் நாட்டாளுங்க அடிச்சிப்புட்டாங்கண்ணு சொல்ல வந்தா, எங்களை தோட்டத்தவுட்டு ஏன் போகலேன்னு கேக்கிறீங்க. இது நாயமுங்களா?””



““சரி சரி, நாங் இதுபத்தி அரசாங்கத்துக்கு கடதாசி எழுதி, பொலீசுக்கும் சொல்லுறது. நீங்க எல்லாங் லயத்துக்குப்போய் சத்தம் போடாமல் அமைதியா இருக்கோணும்”” எனக் கூறிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டார்.



வீரய்யா நடந்து முடிந்த விஷயங்களைப்பற்றிக் கதைப்பதற்காக தொழிற் சங்கக் காரியாலயத்தை நோக்கி நடந்தான் தோட்டத் தொழிலாளர்களைச் சரியான வழியில் கொண்டு செல்லவேண்டிய பெரும் பொறுப்பு தலைமைப் பதவி, தன்னிடம் வந்த வேளையில் இப்படியான அசம்பாவிதங்கள் நடந்துகொண்டிருக்கின்றனவே என எண்ணிக் கலங்கியவாக அவன் நடந்து கொண்டிருந்தான்.



நாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்தும் அதே மலையில் கொழுந்தெடுத்தவண்ணம் இருந்தனர். தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தமக்குப் பயந்து லயத்துக்கு ஓடிவிட்டார்கள் என்பதைக் கதைத்த வண்ணம் மிகவும் குதூகலமாக அவர்கள் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தனர்.

++++++++++++++++

அத்தியாயம் முப்பது நான்கு



பண்டா முதலாளி கொழுந்துத் தரகராக மாறியதிலிருந்து அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அவர் பக்கம் திரும்பியிருந்தது. உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்ததால் கொழுந்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. கொழுந்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லச் செல்ல பண்டா முதலாளியின் “கதிஷ”னும் அதிகமாகிக் கொண்டு வந்தது. ஒரு மாத காலத்துக்குள் பண்டா முதலாளி ஆயிரக் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டது.



கிராமத்தில் வாழும் மக்களுக்கும் கொழுந்தெடுத்து விற்பதால் கிடைக்கும் வருமானமும் கூடிக்கொண்டு வந்தது அதனால் அவர்களது வாழ்க்கைத் தரத்திலும் மாற்றம் காணப்பட்டது. மூன்று வேளையும் அவர்கள் வயிரார உணவருந்தினார்கள். தமக்கு வேண்டிய உடைகளை அந்த மாத காலத்துக்குள் அவர்கள் வாங்கினார்கள். சிலர் தமது குடிசைகளைத் திருத்தி அமைத்தார்கள். வேறு சிலர் வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்கிக் கொண்டனர். ஒரு மாத காலத்துக்குள் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்தது.



கொழுந்தெடுத்து விற்பதினால் நாளுக்கு நாள் பணம் அதிகமாகக் கிடைத்துக் கொண்டிருக்க மக்களிடையே கொழுந் தெடுக்கும் ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அவர்கள் அந்தக் கிராமத்தின் நாலாபுறமும் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து திருட்டுத்தனமாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர்.



முன்பெல்லாம் பண்டா முதலாளி தான் வாங்கும் கொழுந்தை விற்ற பின்னரே ஆட்களுக்குப் பணம் கொடுப்பார். ஆனால் அவரிடம் இப்போது போதியளவு பணம் சேர்ந்துவிட்டபடியால் கொழுந்து கொண்டு வருபவர்களிடம் கொழுந்தை நிறுத்து உடனுக்குடன் பணத்தைக் கொடுத்தார்.



நாட்டில் உள்ளவத்களுக்குப் பணம் தேவைப்பட்டால் இப்போது அவர்கள் எவ்வித யோசனையுமின்றி எங்காவது சென்று கொழுந்தைப் பறித்துக் கொண்டுவந்து பண்டா முதலாளியிடம் கொடுத்து உடன் பணம் பெற்றுக் கொள்ளும் நிலைமை உருவாகியிருந்தது. அவசர தேவைகளுக்கெல்லாம் பண்டா முதலாளி இப்போது முற்பணம் கொடுத்து உதவினார். அவருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர் கொழுந்தைத்தான் எதிர்பார்த்தார்.



பண்டா முதலாளியின் கடையிலும் வியாபாரம் இப்போது பெருகியிருந்தது. அவராலும் மெனிக்காவினாலும் வியாபாரத்தைச் சமாளிக்க முடியாததால் எடுபிடி வேலைக்காக ஒரு பையனையும் அமர்த்தியிருந்தார். பண்டா முதலாளி. இப்போது கடையில் பலவகைப் பொருட்கள் நிறைந்திருந்தன. நாட்டிலுள்ளவர்கள் தமக்கு வேண்டிய சகல பொருட்களையும் அவரது கடையிலேயே வாங்கக் கூடியதாக இருந்தது.



இன்று மாலை வழக்கம்போல கொழுந்து நிறைந்த சாக்குகளுடன்இ தெருவோரமாக லொறியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பண்டா முதலாளி. அன்று அவருக்கு என்றுமில்லாதவாறு பெருந்தொகையான கொழுந்து கிடைத்திருந்தது. மூவாயிரம் ரூபாவுக்கு மேல் பணத்தைக் கொடுத்து ஆட்களிடம் அவர் கொழுந்தை வாங்கியிருந்தார். அவ்வளவு கொழுந்தையும் லொறிக்காரனுக்கு விற்றுவிட்டால் சுளையாக ஆயிரம் ரூபாவாவது இலாபமாகக் கிடைக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது. வழக்கமாக வரும் நேரத்துக்கு அன்று ஏனோ லொறி வரவில்லை. வெகு நேரமாகத் தெருவோரமாக நின்று கொண்டிருந்தபடியால் அவரது கால்கள் வலித்தன. அருகில் இருந்த கொழுந்துச் சாக்கின் மேல் அமர்ந்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.



நேரஞ் செல்லச் செல்ல பண்டா முதலாளிக்கு மனதில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. ஒருவேளை இன்று லொறி வராமல் விட்டுவிடுமோ என நினைத்தபோது அவருக்குப் பெரும் திகிலாகிப் போய்விட்டது. தற்செயலாக அன்று லொறி வராவிட்டால் கொழுந்தெல்லாம் பதங்கெட்டு வீணாகிவிடும் பின்னர் அந்தக் கொழுந்தை ஒன்றுமே செய்ய முடியாது வீசவேண்டியதுதான். அப்படி நேர்ந்து விட்டால் ஒரே நாளில் மூவாயிரம் ரூபாவுக்கு குறையாத நட்டம் ஏற்பட்டு விடும். அதை நினைத்துப் பார்த்தபோது அவருக்கு பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது.



எங்கும் நன்றாக இருட்டிவிட்டது. ஒருவேளை லொறியில் ஏதாவது பழுது ஏற்பட்டிருக்கும். அதனைத் திருத்திக் கொண்டு வருவதற்கு சுணக்கம் ஏற்படலாம் என நினைத்து பண்டா முதலாளி நம்பிக்கையுடன் லொறியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.



இருட்டிய பின்பு வெகுநேரமாகியும் பண்டா முதலாளி வீட்டிற்குத் திரும்பாததால் அவர் வேலைக்கு அமர்த்தியிருக்கும் பையன் தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு அவரைத் தேடி வந்திருந்தான்.



பண்டா முதலாளி பந்தத்தை வாங்கி நிலத்திலே குத்தி வைத்துவிட்டு ““லொறி வர நேரம் செல்லும் போல் இருக்குகிறது. லொறி வந்தவுடன் கொழுந்தை விற்றுவிட்டுத் தான் வரவேண்டும். நீ போய்க் கடையை கவனித்துக் கொள்”” எனக் கூறி அவனைத் திருப்பி அனுப்பி வைத்தார்.



சில்லென்று வீசிய குளிர்காற்று அவரது உடலைத் தைத்தது. உடல் குளிரால் நடுங்கியது. லொறி எப்படியாவது வந்து சேரும் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்குத் தளரவில்லை.



நேரம் ஒன்பது மணியைத் தாண்டியதுந்தான் இனி லொறி வருவது சந்தேகமென அவர் எண்ணிக் கொண்டார். ஒன்றா இரண்டா மூவாயிரம் ரூபாய் அல்லவா பாழாகப் போகின்றது என எண்ணியபோது அவருக்குத் தலை சுற்றியது. தலையில கைவைத்துக் கொண்டு பெருஞ்சோகத்துடன் கொழுந்துச் சாக்கின்மேல் வீற்றிருந்தார் பண்டா முதலாளி.



லொறிக்காரனை நினைத்தபோது அவருக்குக் கோபம் பொங்கியது. எவ்வளவு பொறுப்பில்லாமல் அவன் நடந்திருக்கிறான். அவனுக்கு வரவசதியில்லையானால் யாரிடமாவது சொல்லியனுப்பியிருக்கலாந் தானே. நான் இப்போது அடைந்த நட்டம் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது. என்னிடமிருந்து வாங்கும் கொழுந்தை அவன் கொண்டு போய்க் கூடுதலான விலைக்கு தனக்கு வசதியாகவுள்ள தேயிலைத் தொழிற்சாலையில் விற்றுவிடுவான். அதனால் எனக்குக் கிடைக்கும் இலாபத்தைவிட அவனுக்கு அதிக இலாபம் கிடைத்துக் கொண்டு தானே இருக்கிறது. அவன் லொறியுடன் வந்தால் நிச்சயம் அவனுக்கு ஒருபோதும் நட்டம் வராது. இந்த வியாபாரத்தில் நான் வேறு ஒருவரிடம் தங்கியிருப்பதால்தானே எனக்கு இப்படியான நட்டம் ஏற்படுகிறது. நான் எனக்குச் சொந்தமாக ஒரு லொறியை வாங்கிவிட்டால் இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது நட்டமும் அடையத் தேவையில்லை. இலாபமும் இரண்டு மடங்காகக் கிடைக்கும் - இப்படிப் பலவாறாக அவரது சிந்தனை ஓடியது.



கடையிலிருந்து மீண்டும் பெடியன் அவரைத் தேடி வந்திருந்தான். மெனிக்கே அவனிடம் சுடுதண்ணிப் போத்தலில் தேநீர் அனுப்பியிருந்தாள். தேநீரைப் பருகிய போது அவருக்குத் தொண்டைக்கு கீழே இறங்குவதற்குச் சிரமமாக இருந்தது.



இனி லொறியை எதிர்பார்த்து நிற்பதில் பிரயோசனமில்லை என அவர் எண்ணிக்கொண்டார். ஆனாலும் அவ்வளவு கொழுந்தையும் அங்கு போட்டுவிட்டு வீட்டுக்குத் திருப்பிப் போகவும் அவருக்கு மன வரவில்லை. தற்செயலாக லொறி பிந்திவந்தால் அவ்வளவு கொழுந்தையும் பணமாக்கிவிடலாம் என்ற நப்பாசை எழுந்து அவரை வீட்டுக்குப் போகவிடாது தடுத்தது.



இப்போது பொடியனஷனும் அவருடன் இரவிரவாக விழிதிருந்தான்.



மறுநாள் விடிந்ததுந்தான் பண்டா முதலாளி வீட்டுக்குப் புறப்பட்டார். அவரது உடலும்இ உள்ளமும் பெரிதும் சோர்ந்துபோய் இருந்தன. தள்ளாடியபடியே வீட்டை அடைந்தார் பண்டா முதலாளி.



இரவு லொறி வராததை மெனிக்கேயிடம் சொல்லிவிட்டு “இனிமேல் நாம் வேறொருவரின் கையை எதிர்பார்த்து நிற்காமல் எமக்கச் சொந்தமாக ஒரு லொறி வாங்கிவிட வேண்டும்” என அவர் திடசங்கற்பம் செய்து கொண்டார்.



மறுநாள் மாலையில் வழக்கமான நேரத்திற்கு லொறி வந்தது. முதல் நாள் லொறி பழுதடைந்தமையால் லொறியைக் கொண்டுவர முடியவில்லையெனக் கூறிய அந்தக் கொழுந்து வியாபாரிஇ முதல் நாள் பண்டா முதலாளி சேகரித்து வைத்திருந்த கொழுந்தை வாங்குவதற்கு முற்றாக மறுத்துவிட்டான்.



மறு வாரத்தில் பண்டா முதலாளிக்குச் சொந்தமான லொறி யொன்று அந்த மலைப் பாதையில் அங்குமிங்குமாக ஓடி கொழுந்தை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தது. கொழுந்துத் தரகராக இருந்த பண்டா முதலாளி இப்போது ஒரு லொறிச் சொந்தக்காரராகி விட்டார்.

+++++++++++++++++++

அத்தியாயம் முப்பத்தைந்து



அன்று முதியான்சேயைச் சந்திப்பதற்காக அவரது குடிசைக்கு சுமணபாலாவும் பியசேனாவும் சென்றிருந்தனர்.



ஏதோ பழைய புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்த முதியான்சே அவர்கள் வருவதைக் கண்டதும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு தான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றினார்.



““வாருங்கள், வாருங்கள்.... என்ன இருவருமாகச் சேர்ந்து வருகின்றீர்கள். ஏதாவது விசேஷம் உண்டா?””



““விசேஷமாக ஒன்றும் இல்லை. சும்மா உங்களைப் பார்த்துக் கதைத்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்”” என்றான் பியசேனா.



இருவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்துக் கொண்டனர்.



““தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக்கள் சண்டைக்குப் போய்விட்டார்களாமே@ இதைப்பற்றி தோட்டத்து மக்கள் என்ன அபிப்பிராயப்படுகின்றார்கள்? நீங்கள் தினமும் தோட்டத்துக்கு வேலைக்குப் போகின்றீர்கள்தானே, அதனால்தான் கேக்கிறேன்”” என்றார் முதியான்சே.



~ஆமாம். கொழுந்து மலையில சண்டை ஏற்பட்டது உண்மை தான். ஆனாலும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை கிராமத்து மக்களுடன் போராடும் எண்ணம் அவர்களுக்குச் சிறிது கூடக் கிடையாது. அவர்கள் எம்முடன் ஒற்றுமையாக வாழ்வதைத் தான் விரும்புகின்றார்கள்”” என்றார் சுமணபால.



““அது எனக்கு நன்றாகத் தெரியும். நான் முப்பது வருடகாலமாக தோட்டத்தில் வேலை செய்திருக்கின்றேன்@ அவர்களோடு நன்கு பழகியும் இருக்கின்றேன். எப்போதுமே அவர்கள் எம்முடன் ஒற்றுமையாகவே வாழ விரும்புபவர்கள் தான்”” என்றார் முதியான்சே.



““கிராம சேவகரும் பண்டா முதலாளியுந்தான் இங்குள்ள மக்களைத் தோட்டத் தொழிலாளர்களோடு தூண்டி விட்டுப் போராட வைக்கின்றனர்”” என்றான் சுமணபால.



““இவர்கள் இப்படிப் பகைமையை ஏற்படுத்துவதால் என்ன நன்மையைத் தான் பெறப்போகின்றார்களோ தெரியவில்லை”” எனக் கவலையுடன் கூறினான் பியசேனா.



““என்ன அப்படிச் சொல்கின்றாய்@ தோட்டத்து மக்களை வெளியேற்றிவிட்டுத்தான் கிராமத்து மக்களுக்குக் காணி கொடுக்க வேண்டுமென்று சில அரசியல்வாதிகள் கருதுகின்றார்கள். அவர்களது கருத்தை முன்னின்று செயற்படுத்திவிட்டால், இவர்களும் அரசியல் செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?”” என்றார் முதியான்சே.



““அதுமட்டுமல்ல. தோட்டம் கிராமத்து மக்களின் கைக்கு மாறிவிட்டால், பின்னர் அங்கு கிடைக்கும் கொழுந்து முழுவதையுமே பண்டா முதலாளி வாங்கி வியாபாரம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமல்லவா”” என்றாள் சுமணபால.



அவன் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தக் கிராமத்து மக்களிடையே பிரித்துக் கொடுத்துவிட்டால் கொஞ்சக் காலத்திலேயே அந்தப் பகுதி முழுவதும் காடாக மாறிப் போய்விடும்”” என்றார்.



““ஆமாம் கங்காணி.... நீங்கள் சொல்வது சரிதான். தோட்டம் ஒரு ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் போது அதனை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற வசதியிருக்கும். ஆனால் தனி மனிதர்களின் கையில் துண்டு துண்டாகப் பகிர்ந்து கொடுத்துவிட்டால் எல்லோருமே சீரான முறையில் அதனைக் பராமரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது”” என்றான் சுமணபால.



““தேயிலைச் செடியில் கொழுந்து இருக்கும் வரை அதனை விற்றுப் பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள்@ ஆனால் செடியைப் பராமரிக்க மாட்டார்கள்.கொஞ்சக் காலத்தில் தோட்டமே காடாகிப் போய்விடும்”” என்றான் பியசேனா.



““கிராமத்து மக்களுக்கு தோட்டத்தில் இப்போதிருக்கும் தொழில் வாய்ப்புக்கூட பின்னர் கிடைக்காது போய்விடும்”” என்றான் சுமணபால.



““எல்லாருமே சுறுக்கமாகப் பணத்தைச் சம்பாதிக்கத்தான் யோசிக்கின்றார்கள். ஆனால், காலப்போக்கில் ஏற்படப்போகும் பாதிப்பைப்பற்றி எவருமே சிந்திக்கவில்லை. இதனால் ஒரு காலகட்டத்தில் எமது நாடே பாதிக்கப்படலாம்”” என்றார் முதியான்சே கவலையுடன்.



““நாங்கள் எதைச் சொன்னாலும் கிராமத்து மக்கள் புரிந்து கொள்கின்றார் களில்லை. பண்டா முதலாளியின் பேச்சைத் தான் கேட்கின்றார்கள்”” என்றான் சுமணபால.



““அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக நாம் ஏதாவது நியாயத்தைக் கூறிவிட்டால் சண்டைக்கு வரப் பார்க்கிறார்கள்”” என்றான் பியசேனா.



““பண்டா முதலாளியிடமிருந்து தானே அவர்களுக்கு பணம் கிடைக்கின்றது. பின் ஏன் அவர்கள் எமது பேச்சைக் கேட்கப் போகிறார்கள். அதற்காக நாம் மனம் தளர்ந்து விடக் கூடாது@ சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மக்களுக்கு நியாயத்தை எடுத்துக் கூறத்தான் வேண்டும்”” என்றார் முதியான்சே.



““நீங்கள் சொல்வது சரிதான் கங்காணி.... ஆனாலும் அன்று கூட்டத்தில என்ன நடந்ததென்று எண்ணிப் பாருங்கள். பியசேனா நியாயத்தை எடுத்துக் கூறியபோது சொந்தக் காரணத்திற்காக அவன் அப்படிக் கூறுகிறானென எல்லோரும் கேலி செய்து அவனை அவமதித்தார்கள் தானே”” என்றான் சுமணபால.



““நியாயமற்றவர்கள் அப்படித்தான் தனி மனிதனைத் தாக்கிப் பேச முனைவார்கள். அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை”” எனக் கூறிய முதியான்சே, சிரித்துவிட்டு ““அதுசரி பியசேனா....... நீ அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டி வரத்தான் போகின்றாயா?| எனப் பியசேனாவைப் பார்த்துக் கேட்டார்.



முதியான்சே இப்படி திடீரெனக் கேட்டதும் பியசேனா சிறிது வெட்கம் அடைந்தான்.



““இதில் வெட்கப்பட என்ன இருக்கின்றது. நான் கூட எனது இளமைக் காலத்தில் ஒரு தோட்டத்துப் பெண்ணைக் காதலித்தேன். ஆனால், அவளை எனக்குத் தெரியாமல் அவளது தாய் தந்தையர் வேறொருவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டார்கள் எனக்குக் காதலில் தோல்வி தான் ஏற்பட்டது| எனக் கூறிவிட்டுப் பலமாகச் சிரித்தார் முதியான்சே.



““கங்காணி, உங்களுக்குக் காதல் தோல்வியாக இருந்திருக்கலாம். ஆனால் பியசேனாவைப் பொறுத்தமட்டில் அவன் ஒரு போதும் தோல்வியடையமாட்டான்”” எனக் கூறிச் சிரித்தான் சுமணபால.



““கிராமத்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பகைமை ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், நீ அந்தப் பெண்ணைக் கூட்டி வருவதால் ஏதும் ஆபத்து ஏற்படாதா?”” என யோசனையுடன் கேட்டார் முதியான்சே.



““என்னதான் ஆபத்து ஏற்படப்போகின்றது? இது பியசேனாவின் சொந்த விடயம். இதில் யாரும் தலையிட முடியாது. இந்த விஷயத்தில நான் எனது பூரண ஒத்துழைப்பை அவனுக்குக் கொடுப்பேன்”” என்றான் சுமணபால உறுதியான குரலில்.



முதியான்சே பதில் எதுவும் கூறாது சிரித்தார்.



““சரி கங்காணி.... நேரமாகிறது, நாங்கள் போய் வருகின்றோம்”” எனக் கூறி பியசேனா எழுந்தான் சுமணபாலாவும் அவனுடன் புறப்பட்டான்.

++++++++++++++++++

அத்தியாயம் முப்பத்தாறு



வயல் லயத்தில் வெகு காலமாக வாழ்ந்து வந்த கங்காணி ஒருவர் இறந்துவிட்டார். அதனால் தோட்டத்தில் இரண்டு மணிக்கே வேலை விட்டிருந்தனர்.



வேலை முடிந்து லயத்துக்குத் திரும்பிய தொழிலாளர்கள் அன்று மாலை நடக்கவிருக்கும் “கேதத்தி”ல் பங்குபற்றுவதற்காக வயல் லயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வீரய்யா முன் நின்று மரணச் சடங்குகளுக்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தான்.



அந்த வேளையில் மடுவத்திலிருந்து திடீரென பிரட்டு மணியின் ஓசை “டாண், டாண்” என அதிர்ந்தது. திடுக்குற்ற வீரய்யா வெளியே ஓடிவந்து கரத்தை ரோட்டின் பக்கம் பார்த்தான்.



வழக்கமாக வரும் நில அளவைத் திணைக்களத்தினரின் வாகனம் தான் வருகின்றதென்பதை எல்லோரும் புரிந்து கொண்டனர். ஆனால், புதிதாக இன்று வேறொரு வாகனமும் வந்துகொண்டிருந்தது. அது யாருடைய வாகனமாக இருக்குமென எல்லோரது மனதிலும் கேள்வி எழுந்தது.



எல்லோரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். அந்த வாகனங்கள் இரண்டும் மடுவத்தை வந்தடையும் முன்னரே குறுக்குப் பாதை வழியாகத் தொழிலாளர்கள் மடுவத்தை வந்தடைந்தனர். வீரய்யா தொழிலாளர்களின் முன்னால் நின்று கொண்டிருந்தான். மடுவத்தைப் பிந்தி வந்தடைந்த ராமு பெரும் சிரமத்துடன் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்து முன் பகுதிக்கு வந்தான்.



““அடே பொலிசுடா........””



முன்னால் வந்துகொண்டிருந்த வானின் உள்ளே கவனித்த செபமாலை பலமாகக் கூறினான்.



அங்கு நின்றிருந்த சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மனதிலே திகைப்பு இருந்த போதிலும் வீரய்யாவும் ராமுவும் செபமாலையும் முன்னால் நிற்பது அவர்களுக்குத் தென்பை அளித்தது.



சனக்கூட்டம் ரோட்டை மறித்துக்கொண்டு இருந்ததால் ஜீப் வண்டிகள் இரண்டும் மடுவத்தின் அருகே தெருவோரமாக நிறுத்தப்பட்டன. பொலிஸ் ஜீப்பில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு வெளியே குதித்தார்கள்.



இரண்டு பொலிஸ்காரர்கள் குண்டாந்தடியுடன் நடந்து வந்து சனக்கூட்டத்தின் முன்னால் நின்றனர்.



““ஏய்... ஏன் நீயெல்லாங் இப்புடி கூட்டமா நிக்கிறது.... ரோட்ட மறிக்காம எல்லாம் லயத்துக்கு ஓடிப்போ.....”” என அவர்களில் ஒருவன் குண்டாந்தடியை ஒங்கியபடி பலமாகக் கூறினான்.



““நாங்க ஒருத்தரும் இந்த எடத்த வுட்டுப் போக மாட்டோம்”” என நிதானமாகப் பதிலளித்தான் வீரய்யா.



““என்னடா பேசுறது? இப்ப நாங்க போறதுக்கு இடங்கொடுகாட்டி எல்லோரையும் அடிச்சு “ரிமாண்டில” கொண்டு போய் போடுறது”” என்றான் பக்கத்தில் நின்ற பொலிஸ்காரன்.



““நீங்க எதை வேணுமுனாலும் செய்யுங்க. நாங்க இந்த எடத்த வுட்டு அகலமாட்டோம்”” எனக் கூறியபடி முன்னே வந்தான் ராமு.



““ஆமா. நாங்க இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் போக மாட்டோம்...”” எனப் பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.



பொலிஸ்காரருக்கு கோபம் பொங்கியது. திடீரெனக் கையில் இருந்த குண்டாந்தடியால் அவர் ராமுவைத் தாக்கியபடி, ““போடா சுறுக்கா”” எனக் கத்தினார்.



குண்டாந்தடி ராமுவின் தோள் பட்டையில் தாக்கியது. ராமு ஆத்திரத்தால் தன்னை மறந்தான். ஆவேசம் வந்தவனாக அந்தப் பொலீஸ்காரன் மீது பாய்ந்து அவன் வைத்திருந்த குண்டாந்தடியை லபக்கெனப் பிடுங்கிக் கொண்டு பொலிஸ்காரனை முறைத்துப் பார்த்தான்.



““ராமு.... நெதானத்த இழக்காதடா”” என வீரய்யா எச்சரித்தான்.



ராமுவுக்கு அப்போதிருந்த ஆத்திரத்தின் வேகத்தில் அங்கிருந்த பொலிஸ்காரர்களை அடித்து நொறுக்கி விடுவான் போல் தோன்றியது. வீரய்யா கூறியதுந்தான் ராமு ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.



அப்போது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரர் கோபத்துடன், ““ஏய் நீ எல்லாம் இந்த எடத்தவுட்டு போகவேணும். இல்லாட்டி நான் இந்த ஜீப்பை ஆளுகளுக்கு மேல ஏத்திக்கிட்டு போறது. ஒங்க உயிர் வேணுமுனா எல்லாங் ஓடிப்போ”” எனக் கூறிவிட்டு கோபத்துடன் விரைவாகச் சென்று ஜீப்பில் ஏறி “றைவர்” ஆசனத்தில் அமர்ந்து கொண்டு ஜீப்பை “ஸ்ராட்” செய்தார்.



சனங்களிடையே அப்போது சலசலப்பு ஏற்பட்டது. பொலிஸ்காரர் கோபத்தில் முரட்டுத்தனமாக ஜீப்பை ஓட்டி வந்து ஆட்களுக்கு மேல் ஏற்றிவிடுவாரோ என அவர்கள் பயந்தார்கள்.



பொலிஸ்காரர் ஜீப்பை “ரிவேர்ஸ்” செய்து கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு மிக வேகமாகச் சனங்களை நோக்கி ஓட்டி வருவதற்கு ஆயத்தமானார்.



““யாரும் பயப்புடாதீங்க இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் அசையவேணாம்”” என வீரய்யா கட்டளை இட்டான்.



ஜீப் கொலை வெறியுடன் சனக்கூட்டத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.



“சடார்” என வீரய்யா ரோட்டின் குறுக்கே விழுந்து படுத்துக் கொண்டான்.



ஜீப்பின் சக்கரங்களுக்குள் வீரய்யா அகப்பட்டு சின்னா பின்னம் அடையப் போவதைப் பார்க்கச் சகிக்க முடியாத பலர் கண்களை மூடிக் கொண்டனர்.



சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த அவனது தாய் மீனாச்சி, ““ஐயோ.... வீரய்யா...”” என அலறினாள்.



வேகமாக வந்த ஜீப் பயங்கர உறுமலுடன் “பிரேக்” போட்டு நிறுத்தப்பட்டது. அதன் முன் சக்கரங்கள் வீரய்யாவின் உடலை உரசியபடி இருந்தன. ஒரு மயிரிழை தப்பியிருந்தால் வீரய்யாவின் உடல் அந்தச் சக்கரங்களுக்குள் நசிந்துபோய் இருக்கும்.



எல்லோரும் ஒருகணம் திகைத்து நின்றனர்.



““இவன் எதற்குமே அஞ்சமாட்டான்போல் இருக்கிறது”” என முணுமுத்தபடி ஜீப்பில் இருந்து இறங்கிய பொலிஸ்காரர் வீரய்யாவின் தீரத்தை எண்ணி மனத்திற்குள் வியந்துகொண்டார்.



அங்கு இனித் தாமதித்தால் நிலைமை வேறுவிதமாக மாறிவிடுமோ எனப் பொலிஸ்காரர்கள் நினைத்துக் கொண்டனர்.



நில அளவையாளர்கள் அங்கு நடந்த எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.



““ஏய் நீ எல்லாங் இந்த எடத்த வுட்டு போறது இல்லைத்தானே. நான் அடுத்த முறை வந்து எல்லாரையும் சுட்டுப் போடுறது”” எனக் கோபமாகக் கூறிய பொலிஸ்காரர் மீண்டும் ஜீப்பில் ஏறி “றைவர்” ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். கீழே நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர்களும் ஜீப் வண்டியினுள் ஏறிக்கொண்டனர்.



ஜீப் இப்போது “ரிவேர்சி”ல் செலுத்தப்பட்டது.



அப்போதுதான் வீரய்யா மெதுவாக எழுந்திருந்தான்.



பொலிஸ்காரர் ஜீப்பைத் திருப்பிக் கொண்டு நில அளவையாளர்களையும் அங்கு தாமதிக்க வேண்டாமெனக் கூறிவிட்டு ஜீப்பை வேகமாகச் செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நில அளவையாளர்களின் வாகனமும் புறப்பட்டது.



வீரய்யாவின் தீரச்செயல் அங்கிருந்த ஒவ்வொரு தொழிலாளர்களின் உள்ளத்திலும் பெரும் வீர உணர்ச்சியைத் தூண்டிவிட்டிருந்தது. அவர்கள் எது வந்தாலும் உயிரைக் கொடுத்தாவது எதிர்த்துப் போராட இப்போது தயாராகியிருந்தனர்.

+++++++++++++++++++++++

அத்தியாயம் முப்பத்தேழு



அதிகாலை நேரம், பனிமூட்டம் இன்னும் அகலவில்லை. குளிர்காற்று சில்லென வீசிக்கொண்டிருந்தது. தொழிலாளர்கள் எல்லோரும் வேலைக்குப் புறப்பட்டு மடுவத்தை வந்தடைந்தனர். அப்போது, துரை காரில் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் கண்டக்டரும் கணக்குப்பிள்ளையும் அவருக்கு வந்தனம் தெரிவித்தனர்.



““இன்று தொடக்கம் ஒருவருக்கும் வேலை கொடுக்க வேண்டாம். எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கின்றது.”” என கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் கூறினார் துரை.



பின்பு தொழிலாளர் பக்கம் திரும்பி, ““தோட்டத்தில வேலை நிப்பாட்டி இருக்கு. இனிமே இங்க ஒருத்தருக்கும் வேலை இல்லே. நீங்க இங்க இருந்து பிரயோசனங் இல்லே வேற தோட்டத்துக்கு போறதுதான் நல்லது”” எனக் கூறி விட்டு அங்கு நின்ற எல்லோரையும் ஒருதடவை பார்த்தார்.



““என்னாங்க தொர, திடீருனு வேல இல்லேனு சொல்லுறீங்க. வேல நிப்பாட்டிட்டா. நாங்க எப்புடிங்க தொர சாப்புடுறது?”” வீரய்யா திகிலுடன் கேட்டான்.



““நான் ஒன்னும் திடீருனு வந்து சொல்லல்ல. ஒரு மாசத்துக்கு முந்தியே நான் எல்லாத்துக்கும் சொல்லியாச்சு”” என்றார் துரை அலட்சியமாக.



““நாங்க எல்லாம் இந்த தோட்டத்தவுட்டு போறதில்லேனு தொரகிட்ட சொல்லி இருக்கோம் தானுங்களே. அதுக்கு ஒரு முடிவும் தெரியாம ஏங்க தொர வேல நிப்பாட்டுறீங்க. ஆளுங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. எப்படியாச்சும் வேலை கொடுங்க”” என மன்றாட்டமான குரலில் கூறினான், வீரய்யா.



““அது நமக்கு ஒன்னுங் செய்ய முடியாது. வேலை நிப்பாட்ட சொல்லி மாவட்டக் காரியாலயத்தில் இருந்து ஓடர் வந்திருக்கு. என்னால ஒன்னுங் செய்ய முடியாது”” எனக் கூறி கையை விரித்தார் துரை.



வீரய்யாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேலை வழங்காமல் விட்டால் தொழிலாளர்கள் எல்லோரும் பட்டினி கிடக்க நேரிடும். தொழிலாளர்களை பட்டினி போட்டே தமது காரியத்தைச் சாதிப்பதற்கு மேலிடத்தில் திட்டம் போட்டுவிட்டார்கள் என்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான்.



““நீங்க தொழிலாளிங்களுக்கு வேலை கொடுக்காம இருக்க முடியாதுங்க.... வேலை கொடுக்காம இருக்கிறது சட்டப்படி குத்தமுங்க”” என்றான் வீரய்யா.



““ஓ அது சரிதாங்@ வேலை குடுக்கிறது இல்லைன்னு யாரும் சொல்லேல்ல.... ஒங்களுக்கெல்லாம் வேற தோட்டத்தில வேலை குடுக்கிறதுதானே”” என்றார் துரை.



““நாங்க ஏன் வேற தோட்டத்துக்கு போகனுங்க? இந்தத் தோட்டத்திலேயே எப்போதும் வேலை கொடுத்த மாதிரி எங்களுக்கு வேலை கொடுத்தா என்னங்க? நாங்க என்ன குத்தம் செஞ்சோம்?””



““கொம்பனிக் காலம் மாதியல்ல இப்ப... தோட்டங்கள எல்லாம் அரசாங்கம் எடுத்திருக்குத்தானே. அதுனால. அரசாங்கத்தில வேலை செய்யிற ஆளுகளுக்கு வேற எடத்துக்கு மாற்றம் வாறமாதிரி, இப்போ உங்களுக்கும் மாற்றம் வந்திருக்கு”” என்றார் துரை முன்னால் இருந்த மேசையில் சாய்ந்தபடி



வீரய்யா ஒருகணம் திகைத்து நின்றான். துரை கூறுவதிலும் சட்டரீதியான நியாயம் இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது.



““நீங்க சொல்லுறது சரியுங்க தொர@ மாற்றம் வாறபொழுது, அதற்கு ஏற்ற காரணம் காட்டி மாற்றத்தை மறுத்தக் கூறவும் எங்களுக்கு உரிமை இருக்குத்தானுங்களே”” என்றான் வீரய்யா யோசனையுடன்.



அப்போது பக்கத்தில் நின்ற ராமு, ““அதுமட்டுங்களா, அரசாங்கம் எங்களுக்கு மாற்றம் கொடுக்கிறதா இருந்தா. எங்க எல்லோரையுமா ஒரே நேரத்தில மாத்திப் போகச் சொல்லுது. எந்த எடத்திலும் எல்லாருக்கும் ஒரே நேரத்தில வந்திருக்குங்க... இது வேற ஒண்ணும் இல்லீங்க. தொழிலாளிங்க எல்லாத்தையும் தோட்டத்தைவிட்டு வெரட்டிறதுக்கு போட்ட திட்டமுங்க...”” எனக் கூறினான்.



““அப்புடி எல்லாங் நீங்க நெனைக்க வேணாங்.. அரசாங்கம், நம்ம நாட்டில காணி இல்லாம கஷ்டப்படுற ஆளுகளுக்கு காணி கொடுத்து ஒதவி செய்யிறதுக்குத்தான். இப்புடி செய்யிறது... உங்கள மட்டும் தோட்டத்தைவிட்டு போகச் சொல்லலை. நம்மளுக்கும் கண்டக்கையாவுக்கும் எல்லாத்துக்கும் மாற்றம் வந்திருக்கு.... நாங்க எல்லாம் வேற தோட்டத்துக்குப் போறதானே....”” எனக் கூறிவிட்டு துரை தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.



துரை இப்படிக் கூறியது அங்கு நின்றவர்கள் எல்லோருக்கும் திகைப்பைக் கொடுத்தது. துரையும் மற்ற உத்தியோகத்தர்களும் தோட்டத்தை விட்டுப் போய்விட்டால் பின்பு தொழிலாளர்கள் மட்டும் தோட்டத்தில் இருந்து வேலை செய்ய முடியாது. இப்போது பிரச்சினை புதிய உருவத்தில் ஏற்பட்டிருக்கிறதென்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர்.

++++++++++++++++++++=

அத்தியாயம் முப்பத்தெட்டு



தோட்டத்தில் வேலை நிறுத்தப்பட்டதிலிருந்து தொழிலாளர்கள் எல்லோரும் பெருந்திகிலுடன் இருந்தனர். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலேயே அவர்களது எண்ணம் முழுவதும் வயித்திருந்தது. வீரய்யா தீவிரமாக யோசனையில் ஆழ்ந்திருந்தான்.



அன்று மாலை ராமு, செபமாலை உட்பட பல இளைஞர்கள் வீரய்யாவின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.



““வேலையையும் தோட்டத்தில் நிப்பாட்டிப்புட்டாங்க. கண்டக்கையாவுக்கு வேற மாற்றம் வந்திருக்குனு தொர சொல்லுறாரு, இனிமே நாம என்னதான் செய்யணும்?”” எனக் கவலையுடன் கேட்டான் செபமாலை



““கண்டாக்கு மாத்தி போனாதான் நல்லதாச்சே. அவன் தானே எல்லா வெசயத்தையும் அவுங்க ஆளுகளுக்கு சொல்லுறவன். அவன் போனாதான் நம்மளோட திட்டத்தை ஒழுங்கா செய்யலாம்”” என்றான் ராமு.



““அவன் போனா ஒரு சனியன் தொலைஞ்ச மாதிரியிருக்கும் அப்புறம் கோப்புறட்டி மனேஜர் அவுங்க கூட்டாளிமார் எல்லோருமே போயிடுவாங்க”” என்றான், அடுப்பின் முன்னால் இருந்த மீனாச்சி.



இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு காம்பராவின் உள்ளே இருந்த மாயாண்டி, எழுந்து இஸ்தோப்புக்கு வந்தார்.



““இப்ப மேற்கொண்டு என்னதான் தம்பி செய்யலாமுனு நெனைச்சிகிட்டு இருக்கீங்க?”” அங்கிருந்த வாங்கொன்றில் அமர்ந்தவாறு கேட்டார் மாயாண்டி.



““என்னதாங்க மாமேன் செய்யுறது? அதுதான் தோட்டத்த வுட்டே போகச் சொல்லுறாங்களே. எண்ணைக்கு தோட்டத்த அரசாங்கம் எடுத்திச்சோ, அன்னிக்கே நம்ப தோட்டத்துக்கு சனியன் புடிச்சமாதிரி.””



““இந்தா பாருங்க தம்பி. இப்போ எதைப்பத்தியும் பேசி கொறைப்பட்டுக்கிட்டு இருக்கிறதில பொரயோசனமில்லை. நடக்க வேண்டியதை புத்திசாலித்தனமா செய்யிறதுதான் நல்லது. இந்த நிலையில நாம ரொம்பக் கவனமாத்தான் நடக்கணும்”” என்றார் மாயாண்டி.



““இங்க பாருங்க, கொஞ்ச நேரம் பேசாம இருங்க. அவுங்கதான் கதைச்சி ஒரு முடிவு காங்கட்டுமே ஊடையில நீங்க வேற அது இதுனு சொல்லிக்கிட்டு....”” என இடைமறித்தாள் அங்கே வந்த மீனாச்சி.



““நான் பேசுறதுதான் ஒருத்தருக்கும் புடிக்காதே. ஆரம்பத்துல இருந்தெ சொல்லிகிட்டு இருக்கேனே... ஒரு காலமும் இல்லாம தோட்டத்த அரசாங்கத்துக்கு எடுத்து, என்னென்னமோ செஞ்சி இப்ப எல்லாத்தையும் தோட்டத்தவுட்டே வெரட்டுறாங்க. இதுல ஏதோ ஆபத்து வரப்போவுதுனு அப்பவே சொன்னேனே@ யாராச்சும் கேட்டீங்களா?”” என்றார் மாயாண்டி, மீனாச்சியைப் பார்த்து.



““இப்ப கண்டாக்கும், நாட்டில உள்ள ஆளுங்களும் ஒன்னா சேந்துகிட்டு திட்டம் போட்டுத்தான் வேலை செய்யுறானுங்க. எப்படியாச்சும் நம்மளை தோட்டத்தவுட்டு வெரட்டிப்புட்டு, காணி வாங்கலாம் எங்கிற நெனைப்போட அவுங்க இருக்காங்க. அதுக்கு தகுந்தாப்போல அரசாங்கம் எல்லா வேலையும் செய்யுது”” என்றான் செபமாலை யோசித்த வண்ணம்.



““கண்டக்கையா தோட்டத்தவுட்டு போயிட்டாருன்னா அப்புறம் வேர கண்டக்கையா புதுசா வேலைக்கு வரப்போறாரா?”” ஒருத்தர் போனவொடனை அப்புறம் தொர, மத்த ~ஸ்டாப்பு| மாருங்க எல்லாம் போயிடுவாங்க. கடைசியா தோட்டத்தில நாம மட்டுந்தான் உக்காந்துகிட்டு இருக்கோனும்”” என்றார் மாயாண்டி.



““யாரு போனாதான் என்னங்க மாமேன், நாம தோட்டத்தவுட்டு போயிடவா போறோம். கடைசிவரைக்கும் போராடித்தான் தீருவோம்”” என்றான் ராமு.



““என்னா ராமு அப்பிடி சொல்லுற, தோட்டத்திலை தான் வேலையை நிப்பாட்டிப்புட்டாங்க. நாம வேலை செய்யாட்டி, எங்கே இருந்து சாப்பாடு வரும்? நாலு நாளைக்கி பட்டினியாக் கெடந்தா நாமளாகவே தோட்டத்தவுட்டு போக வேண்டியதுதான்.””



தந்தை கூறுவதில் உண்மை இருக்கிறதென்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான்.



““நீங்க சொல்லுறதும் எனக்குச் சரியாதான் படுது. அப்புடினா, இந்தா நெலையில நாங்க என்னதான் செய்யுறது?”” வீரய்யா தந்தையைப் பார்த்துக் கேட்டான்.



““நம்மளுடைய போராட்டத்தில வெற்றி கிடைக்கணுமென்னா இந்த தோட்டத்தவுட்டு ஒருத்தரையும் வெளியே போகவிடக்கூடாது. இந்தக் கண்டாக்கைக்கூட கண்டிப்பா போகவுடாம நிப்பாட்டணும்”” என்றார் மாயாண்டி உறுதியான குரலில்.



““எவ்வளவு கெட்டவனா இருந்தாலும் நம்மளுடைய வெசயம் சரிவரனுமென்னா கட்டாயம் யாரையும் வெளியிலை போகவிடக்கூடாது. அப்படிச் செஞ்சாதான் அவங்களுக்காகவாவது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கும்”” என்றார் மாயாண்டி.



மாயாண்டி கூறியது இப்போதுதான் அங்கிருந்த இளைஞர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.



““ஆமா ராமு.... அப்பா சொல்லுறதும் சரிதான். நாம இந்தக் கண்டாக்கை போகவுடவே கூடாது”” என்றான் வீரய்யா.



““நான் ஒன்னுமட்டும் சொல்லுரேன் வீரய்யா. இந்தப் போராட்டத்தில நமக்குத்தான் வெற்றி கெடைக்கும். அப்புறம் இந்தக் கண்டாக்கை நான் ஒதச்சி வெரட்டாம விடமாட்டேன்”” என்றான் ராமு ஆவேசத்துடன்.



““சரி நேரமாகுது. நம்ப தோட்டத்தில உள்ள பொடியங்களுக்கு இதை இப்பவே சொல்லிப்புடுவோம்”” எனக் கூறிக் கொண்டே எழுந்திருந்தான் செபமாலை அவனைத் தொடர்ந்து ராமுவும் இளைஞர்களும் எழுந்திருந்தனர்.



இளைஞர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றதும்தான் மீனாச்சிக்குச் செந்தாமரையின் நினைவு வந்தது. பீலிக்குச் சென்றவளை வெகுநேரமாகியும் காணவில்லையே என்ற எண்ணத்துடன் அடுப்படிப்பக்கம் சென்றாள். தண்ணீர்க் குடம் அடுப்பின் அருகேயுள்ள திட்டில் இருப்பதைப் பார்த்ததும் அவளது மனதில் சந்தேகம் துளிர் தெழுந்தது@ பீலிக்குச் சென்று பார்க்கும் எண்ணத்துடன் வெளியே வந்தாள்.



அப்போது குப்பன் மூச்சு இரைக்க இரைக்க அவர்களது இஸ்தோப்பினுள் நுழைந்தான்.



““இங்க பாருங்க அக்கா, நம்ம செந்தாமரை அந்த பியசேனாப் பய நாட்டுப் பக்கமா கூட்டிக்கிட்டுப் போறான்@ நான் என் கண்ணால பார்த்தேன். அதுதான் நேரா ஒங்க கிட்ட சொல்லுறதுக்கு ஓடிவந்தேன்.””



குப்பன் கூறியதைக் கேட்டதும் ““ஐயோ.... வீரய்யா அவள் அந்தப் பயலோட ஓடிப்போயிட்டாளாமே”” எனக் கதறியழுதாள் மீனாச்சி.



மாயாண்டி அதிர்ச்சியுடன் எழுந்தார்.



ராசாத் தோட்டத்தில் இருக்கும் அவரது தங்கையின் மகனுக்கும் செந்தாமரைக்கும் விரைவில் திருமணம் செய்து வைப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளை, சென்றகிழமைதான் அவர் இரகசியமாகச் செய்து முடித்திருந்தார். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடுமென அவர் எதிர்பார்க்கவே இல்லை.



அவரது தலை சுற்றியது@ அந்த லயமே இடிந்து நெருங்கித் தலையில் விழுந்ததுபோல் இருந்தது. மறுகணம் அவர் அப்படியே நிலத்தில் சாய்ந்தார்.



வீரய்யா செய்வதறியாது திகைத்துப்போய் மரமாக நின்றான்.

+++++++++++++++++++

அத்தியாயம் முப்பத்தொன்பது



கிராமத்து மக்களில் சிலர் தாம் கொண்டுவந்த கொழுந்துகளுடன் பண்டா முதலாளியின் கடையின் முன்னால் அவரது வரவுக்காகக் காத்திருந்தனர்.



வழக்கமாக நான்கு மணிக்கெல்லாம் கொழுந்து நிறுத்து விடும் முதலாளி, அன்று மந்திரியைச் சந்திக்கச் சென்றிருந்ததால் சற்றுத் தாமதமாகியே வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் கையில் கொண்டு வந்த ~பைலை| கடையின் முன் பக்கத்திலுள்ள மேசையின் மேல் வைத்துவிட்டு அவசர அவசரமாகக் கொழுந்து நிறுக்கத் தொடங்கினார்.



வழக்கத்துக்கு மாறாக அன்று அநேகர் குறைவாகவே கொழுந்து கொண்டு வந்திருந்தனர். அதனைக் கவனித்த பண்டா முதலாளி, ““என்ன... இன்று மிகவும் கொழுந்து குறைவாக இருக்கிறதே@ என்ன காரணம்?”” எனப் பக்கத்தில் நின்ற பொடிசிங்கோவிடம் விசாரித்தார்.



““கிராமத்துப் பக்கமாக இருக்கும் மலைகளில் கொழுந்து முடிந்துவிட்டது. தோட்டத்தின் நடுப் பகுதிக்குப் போய் கொழுந் தெடுப்பதற்கு இப்போது ஒருசிலர் தயங்குகிறார்கள். அதனாலேதான் இன்று கொழுந்து மிகவும் குறைந்து விட்டது”” என்றான் பொடிசிங்கோ.



““ஏன் நீங்கள் தயங்க வேண்டும்? இப்போதுதான் தோட்டத்தில் வேலை நிற்பாட்டிவிட்டார்களே... அதனால் தொழிலாளர்கள் மலைக்குச் செல்லமாட்டார்கள். எல்லோருமே பயப்படாமல் சென்று கொழுந்தெடுக்க வேண்டியது தானே?”” என்றார் பண்டா முதலாளி.



““அப்படியில்லை முதலாளி.... இப்போது தொழிலாளர்கள் மிகவும் தீவிரமாக இயங்குகிறார்கள். முன்பு அவர்களுக்குத் தோட்டத்தில் வேலையிருந்தபோது ஓரளவுக்கு நிதானமாக எதையுமே செய்தார்கள். ஆனால் வேலை நிறுத்தப்பட்டபின் அவர்களிடையே போராட்ட உணர்வு அதிகமாகி இருக்கிறது. அதனாலேதான் லயன்களுக்கு அருகே இருக்கும் தேயிலை மலைகளுக்குச் சென்று கொழுந்தெடுப்பதற்கு நம்மில் சிலர் பயப்படுகிறார்கள்”” என்றான் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்றவன்.



““அதுமட்டுமில்லை முதலாளி@ அந்தத் தொழிலாளர்களது போராட்டத்துக்குச் சார்பாக நமது கிராமத்தில் உள்ள ஒரு சிலரும் இப்போது கிளம்பியிருக்கிறார்கள்”” என்றான் அங்கிருந்த வேறொருவன்.



““அதற்கெல்லாம் காரணம் அந்த முதியான்சேயும், சுமண பாலாவுந்தான்””



““அவர்களது ஆதரவிலேதான் உங்கள் பியசேனக் கூட அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டிவந்து இங்கே கிராமத்தில் வைத்திருக்கிறான”” என்றான் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்ற இளைஞன்.



““உங்களது சொந்தக் காணியிலேயே குடியிருந்து கொண்டு, உங்களுக்கு மாறான காரியங்களை அவன் செய்வதை நீங்கள் அனுமதிப்பதுதான் எங்களுக்கு வியப்பாக இருக்கிறது”” என்றான் பண்டா முதலாளியின் பக்கத்தில் நின்றவன்.



““அதைமட்டும் சொல்லாதீர்கள். அந்தப் பெண்ணையும் அவனையும் பிரித்து வைப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். ஆனாலும் இப்படி அவன் திடீரென அந்தப் பெண்ணையே நாட்டுக்கு அழைத்து வருவானென நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை”” என்றார் பண்டா முதலாளி யோசனையுடன்.



““அந்த வீரய்யா இனிமேல் அதிகமாகத் துள்ளினால் இங்கே அவனது தங்கையைக் கொலை செய்யப்போவதாக அவனை நான் பயமுறுத்தப் போகிறேன்”” என்றான் பொடிசிங்கோ.



~அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே. நமக்குக் காணி கிடைப்பதுதான் முக்கியம். நமது கிராமத்திலேயே ஒரு சிலர் எமக்கு மாறாக இயங்குகிறார்கள். அத்தோடு இப்போது தோட்டத் தொழிலாளர்கள் பொலிஸ்காரரையே எதிர்க்குமளவுக்குத் தீவிரமாக இருக்கிறார்கள். அதனால் நாம் மிகவும் தந்திரமாகவே நடக்க வேண்டும்”” என்றார் பண்டா முதலாளி.



““எனக்கொரு யோசனை தோன்றுகிறது முதலாளி.... பொலிஸ்காரர்கள் வரும்போது தோட்டத் தொழிலாளர்கள் அடிக்கும் அந்தப் பிரட்டு மணியைக் கழற்றிவிட்டால் என்ன? பின்னர் அவர்களால் ஜீப் வரும்போது ~சிக்னல்| கொடுக்க முடியாதல்லவா?”” என்றான் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்ற ஓர் இளைஞன்.



““ஆமாம்! அது நல்ல யோசனைதான். இன்று இரவே நான் அந்த மணியைக் கழற்றி வந்து விடுகிறேன்”” என்றான் பொடிசிங்கோ.



““அப்படிச் செய்வதால் நமது திட்டம் வீணாகிவிடும். அந்த தணியை நாம் கழற்றிவிட்டால், அவர்கள் அதற்குப் பதிலாக வேறொரு மணியைக் கட்டிவிடுவார்கள். அத்தோடு அந்த மணியைக் கழற்றுவதால் அவர்களுக்கு எம்மீது சந்தேகமும் ஏற்படலாமல்லவா?”” என யோசனையுடன் கூறினார் பண்டா முதலாளி.



““நீங்கள் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஏதாவது பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் எப்படித்தான் அந்தத் தோட்டத் தொழிலாளர்களை மட்டந் தட்டுவது?”” எனப் படபடத்தான் பொடிசிங்கோ.



““அதற்காகத்தான் அந்த மணியைக் கழற்ற வேண்டாமெனச் சொல்கிறேன். அதிலேதான் எனது திட்டமே அடங்கியிருக்கிது. அந்த மமணியை வைத்தே அவர்களைத் தோட்டத்தைவிட்டு விரட்டுகிறேன். பாருங்கள்.. முதலில் அவர்கள் தோட்டத்தைவிட்டு ஓடவேண்டும். பின்புதான் அந்தப் பியசேனா கூட்டிவந்து வைத்திருக்கும் குட்டியை ஓடஓட விரட்ட வேண்டும்.”” என ஆவேசமாகக் கூறினார் பண்டா முதலாளி.



இப்போது அவரது கண்கள் சிவந்திருந்தன.

+++++++++++++++++++++

அத்தியாயம் நாற்பது



அந்தக் குடிசையின் முன் பகுதியில தொங்கவிடப்பட்டிருந்த அரிக்கன் லாந்தர் ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. அதன் ஒளி கண்களைக் குத்தாதவாறு, மறுபுறம் திரும்பிச் சுவர்ப்பக்கம் பார்த்தவாறு படுத்திருந்தாள் பியசேனாவின் தாய் மெரினோனா.



செந்தாமரை அடுப்படியிலிருந்து இரவுச் சாப்பாட்டைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். பியசேனாவின் தாய் அவளை மிகவும் அன்புடன் நடத்தினாள். பியசேனாவும் எந்நேரமும் அவளைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். அந்தச் சிறிய குடிசையில் அவளுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. ஆனாலும் அவள் மிகவும் வாடிப் போயிருந்தாள்.



வீட்டு நினைவு அடிக்கடி வந்து அவளை அலைகழித்த வண்ணம் இருந்தது. தன்னைக் காணாது தாய் துடித்துப் போவாளே என்ற நினைவு அவனை வருந்திக்கொண்டிருந்தது. தோட்டத்தில் மதிப்போடு இதுவரை காலமும் வாழ்ந்து வந்த தந்தை, இப்போது அவமானத்தால் குன்றிப்போய் இருப்பாரே என நினைத்தபோது அவளது நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பதைப்போல் இருந்தது. தோட்டத்துத் தொழிலாளர்களுக்கே தலைவனான தனது தமையனுக்குத் தலை குனிவை ஏற்படுத்திவிட்டேனே என எண்ணியபோது அவளது கண்கள் கலங்கின.



தாய் தந்தையர் தனக்கு இரகசியமாகத் திருமண ஏற்பாடு செய்வதை ராக்கு மூலம் அறிந்ததும், தன்னை உடனே வந்து அழைத்துப் போகும்படி அவள் பியசேனாவிடம் வேண்டியிருந்தாள். அப்போது அவளிடமிருந்தன.



இதவரை நேரமும் குடிசையின் பின்புறத்தில் விறாந்தை யொன்றை அமைப்பதற்கு வேண்டிய தரக் கம்புகளைச் சீவிக் ;கொண்டிருந்த பியசேனா, இப்போது அவளருகே வந்தான்.



““என்ன செந்தாமரை, ஏதோ யோசிச்சுக்கிட்டு இருகிகிறே?”” பியசேனாவின் குரல் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந்தாள் செந்தாமரை.



““ஒண்ணுமில்லீங்க....”” எனக் கூறிய செந்தாமரை, அவனைப் பார்த்துச் சிரிக்க முயன்றாள்.



““இல்ல செந்தாமரை... நீ எதையோ மறைக்கப் பாக்கிற, ஓம் முகத்தைப் பார்த்தாலே தெரியுது”” எனக் கூறிய பியசேனா, அவள் அருகே அமர்ந்து கொண்டான்.



““இல்லீங்க நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்””



““நீ பொய் சொல்லுற செந்தாமரை.... ஒனக்கு ஏதாவது கொறை இருந்தா எங்கிட்ட சொல்லு”” என அவளது கைகளைப் பற்றியவாறு கூறினான் பியசேனா.



““இங்க எனக்கு ஒரு கொறையுமே இல்லீங்க”” எனக் கூறிய செந்தாமரை ஒருகணம் தயங்கிவிட்டு, ““எங்க வூட்டுல அப்பா அம்மா என்னா நெலைமையில இருக்காங்களோ தெரியல்ல. அத நெனைக்கத்தான் எனக்கு கவலையாக் கெடக்கு”” அவளது குரல் கரகரத்தது.



““இதுக்குப்போய் ஏன் செந்தாமர கவலைப்படுற.... நீ எங்கூடத்தான் வந்திருப்பேன்னு ஒங்க வூட்டுக்கு தெரிஞ்சிருக்குமே. கொஞ்சநாள் போனா எல்லாமே சரியா போயிடும்”” எனக் கூறி அவளைத் தேற்ற முயன்றான் பியசேனா.



““அதுக்கு சொல்லலீங்க.... இப்போதான் தோட்டத்தை வுட்டு எல்லாரையுமே போகச் சொல்லியிருக்கே. அப்புறம் எங்கம்மா, அப்பாவை இனிமே எப்புடீங்க பாக்கப் போறேன்.””



செந்தாமரையின் கண்கள் கலங்கின.



““அப்புடியெல்லாம் ஒண்ணுமே நடக்காது செந்தாமரை. தோட்டத்து ஆளுங்க ஒரு நாளும் தோட்டத்தைவுட்டுப் போக மாட்டாங்க”” பியசேனாவின் குரலில் உறுதி தொனித்தது.



““இல்லீங்க... இப்ப நாட்டாளுங்களும் ரொம்ப கொழம்பிக்கிட்டு இருக்காங்க. தோட்டத்து ஆளுங்களும் போக மாட்டேனு பிடிவாதமா இருக்காங்க. இப்புடி இருக்கிறப்போ என்னா நடக்குமோனுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க”” என்றான் செந்தாமரை.



““இந்தா பாரு செந்தாமரை..... நீ ஒண்ணுக்கும் கவலைப்படாத@ ஒனக்கு ஒரு கஷ்டமும் வராம நான் பாத்துக்கிறேன். சும்மா சும்மா மனசுல ஏதாச்சும் நெனைச்சி கவலைப்பட்டுக்கிட்டு இருக்காத......”” எனக் கூறிய பியசேனா, அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.



அப்போது முன்புறத்தில் படுத்திருந்த பியசேனாவின் தாய எழுந்து, ““மே, பலண்ட புத்தே.... மேயிங் கவுதோ எவில இன்னே”” எனக் குரல் கொடுத்தாள்.



யார் இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும் என எண்ணியவாறு வாசலுக்கு வந்தான் பியசேனா. அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியடைய வைத்தது.



வீரய்யாவும், ராமுவும் குடிசையின் வாசலில் நின்றிருந்தனர்.



செந்தாமரையைத் திருப்பியழைத்துச் செல்லும் நோக்கத்துடன் வீரய்யா அங்கு வந்திருந்தான். தோட்டத் தொழிலாளர்களின் மேல் கிராமத்தவர்கள் பகை கொண்டிருக்கும் இந்த நேரத்தில் செந்தாமரை கிராமத்தில் இருப்பது எந்த நேரமும் அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் வீரய்யாவின் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தது. அவனால் எதையும் நிம்மதியாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியவில்லை@ பெரிதும் குழம்பிக் போயிருந்தான். தோட்டத் தொழிலாளர்களைச் சரியான முறையில் வழி நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு தன் மேல் இருக்கும் இந்த வேளையில் சொந்தப் பிரச்சினைகள் தன்னைப் பாதிப்பதை அவன் விரும்பவில்லை. செந்தாமரையை எப்படியாவது திருப்பி அழைத்து வரும்படி தாய் மீனாச்சி எந்த நேரமும் அவனை நச்சரித்தபடி இருந்தாள். அதனாலே தான் அவன் ராமுவையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தான்.



இந்த நேரத்தில், அதுவும் இப்போதுள்ள குழப்பமான சூழ்நிலையில் வீரய்யாவும், ராமுவும் அங்கு வந்திருப்பது பியசேனாவின் உள்ளத்தில் ஒருவித பய உணர்வை ஏற்படுத்தியது.



““எங்க செந்தாமரை...?”” வீரய்யாவின் குரல் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது.



உள்ளேயிருந்த செந்தாமரையின் உள்ளம் திக் திக் கென்று அடித்துக் கொண்டது. அவள் பயத்துடன் மெதுவாக எழுந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.



““செந்தாமரை எங்ககூடத்தான் இருக்கிறாள்.”” பியசேனாவின் வார்த்தைகள் தடுமாறின.



““அவளை வெளியே வரச் சொல்லு@ அவளைக் கூட்டிக்கிட்டுப் போகத்தான் நாங்க வந்திருக்கோம்”” என்றான் வீரய்யா.



““அவளை நான் அனுப்ப முடியாது. இனி இங்கதான் அவள் இருப்பாள்”” என்றான் பியசேனா திடமான குரலில்.



““அதை நான் செந்தாமரைக்கிட்டேயே கேக்கிறேன். அவளை இங்க வரச்சொல்லு”” அடுப்புப்பக்கம் பார்த்தவாறு கூறினான் வீரய்யா.



வீரய்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பயத்துடன் வெளியே வந்தாள்.



வீரய்யாவுக்கு அவளைப் பார்த்தபோது எரிச்சலாக இருந்தது. ஆனாலும் எப்படியாவது அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.



““என்ன செந்தாமரை? நீ எங்கூட இப்ப வாறியா இல்லியா?”” என அதட்டும் குரலில் கேட்டான் வீரய்யா.



செந்தாமரை பதில் எதுவும் கூறாது மௌனமாகத் தலை குனிந்தபடி நின்றாள்.



““இங்க பாரு செந்தாமரை... நீ இங்க வந்ததில இருந்து, அம்மா சாப்பிடவே இல்லை. அழுதுகிட்டே இருக்காங்க. ஒன்னை பாக்காம அவுங்களால ஒண்ணுமே செய்ய முடியல.””



வீரய்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பெரிதாக அழத் தொடங்கினாள்.



““என்னை மன்னிச்சிடுங்க அண்ணா.... நான் இனி இங்கதான் இருக்கப்போறன்”” விம்மலுக்கிடையே கூறினாள் செந்தாமரை.



““அப்பா ஒரே பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்காரு. நீ இப்புடிச் சொன்னா நான் என்னதான் செய்யிறது?”” எனக் கூறிக்கொண்டே செந்தாமரையின் அருகில் சென்றான் வீரய்யா.



““அண்ணா...... இனி என்னால அவரப் பிரிஞ்சி இருக்க முடியாது. தயவுசெஞ்சி என்னை வற்புறுத்தாதீங்க”” எனக் கெஞ்சும் குரலில் கூறினாள் செந்தாமரை.



இனி அவளைத் தன்னுடன் வரும்படி அழைப்பதில் பிரயோசனமில்லை@ அவள் ஒருபோதும் பியசேனாவைப் பிரிந்து வரமாட்டாள் என்பதை வீரய்யா உணர்ந்து கொண்டான்.



““சரி செந்தாமரை..... அப்படீவா நீங்க ரெண்டு பேருமே தோட்டத்துக்க வந்திடுங்க.””



அப்போது இதுவரை நேரமும் மௌனமாக நின்ற ராமு, ““ஆமா பியசேனா, நீ செந்தாமரையைக் கூட்டிக்கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது. செந்தாமரையைக் காணாட்டி, அவுங்க அம்மா உயிர விட்டாலும் வுட்டுடுவாங்க போல இருக்கு”” எனக் கூறினான்.



பியசேனாவுக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மௌனமாக நின்றான்.



““செந்தாமரை, நாட்டுல ஒனக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திடுமோனு நெனைச்சு ஒங்க அம்மா எந்த நேரமும் அழுது புலம்பிகிட்டு இருக்காங்க. நீ எப்புடியாச்சும் பியசேனாவைக் கூட்டிக்கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது”” இப்போது செந்தாமரையின் பக்கம் திரும்பிக் கூறினான் ராமு.



பியசேனா சிறிது நேரம் யோசித்தான். வீரய்யா மிகவும் நல்லவன். ஒருபோதும் தனக்குத் தீமை செய்யமாட்டான் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இப்போதுள்ள சூழ்நிலையில் செந்தாமரையோடு கூடச் சென்று தோட்டத்திலே தங்கிவிடுவது ஒரு பாதுகாப்பான செயலாக இருக்குமென அவன் எண்ணினான்.



““என்ன பியசேனா, ரொம்ப யோசிக்கிறே? நீ ஒண்ணுக்கும் பயப்படத் தேவையில்ல. இப்பவே செந்தாமரையை கூட்டிக்கிட்டு எங்ககூட வந்திடு”” என பியசேனாவின் தோள்களைத் தன் இரு கைகளாலும் பற்றியவாறு கூறினான் வீரய்யா.



பியசேனாவால் எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.



““சரி வீரய்யா: நீ சொல்லுறபடி செய்கிறேன்@ ஆனா, இந்த நேரத்தில அம்மாவைத் தனிய வுட்டுட்டு வர முடியாது”” என்றான் பியசேனா.



““ஆமா அண்ணா, நாளைக்கி கட்டாயமா ரெண்டு பேருமா அங்க வர்றோம், அம்மாகிட்ட சொல்லுங்க”” என்றாள் செந்தாமரை.



வீரய்யா சிறிது நேரம் யோசித்தான்.



““ஆமா வீரய்யா. நாளைக்கி அவுங்க ரெண்டு பேருமா வரட்டும்@ அதுதான் நல்லது. பியசேனாவும் அம்மாவுக்கு ஒரு ஒழுங்கு பண்ணிட்டுத்தானே வரணும்”” என்றான் ராமு.



இனிமேலும் அவர்களை வற்புறுத்துவது சரியில்லை என நினைத்த வீரய்யா, ““சரி நாளைக்குக் கட்டாயம் வாங்க@ ஒங்களை எதிர்பார்த்துகிட்டு இருப்போம்”” எனக் கூறிவிட்டு ராமுவுடன் அங்கிருந்து புறப்பட்டான்.



பியசேனாவும், செந்தாமரையும் அவர்கள் இருவரையும் வாசல்வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.



மறுநாள்



வீரய்யாவுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி செந்தாமரையையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றான் பியசேனா.



செந்தாமரையைக் கண்டதும் மீனாச்சி ஓவெந்து அவளைக் கட்டியணைத்துக்கொண்டு பெரிதாக அழத் தொடங்கினாள். செந்தாமரையால் எதுவுமே பேச முடியவில்லை. தாயிளன் மார்புக்குள் முகத்தைப் புதைத்தவாறு விம்மினாள்.



மாயாண்டி மௌனமாகக் கட்டிலில் படுத்திருந்தார். செந்தாமரையின் மேல் அவருக்கிருந்த கோபம் தணியயேயில்லை. ஆனாலும், அவள் கிராமத்திலிருந்து ஏதாவது ஆபத்தில் சிக்கிவிடாமல் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தது அவரது மனதிற்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது.



வீரய்யாவின் மனதிலும் பெரும் ஆறுதல் ஏற்பட்டது. இனித் தோட்டத்து விடயங்களை எவ்வித குழப்பமுமின்றிக் கவனிக்கலாம் என எண்ணிக் கொண்டான்.

++++++++++++++++++++

அத்தியாயம் நாற்பத்தொன்று



மறு வாரத்தில் ஒரு நாள் மாலை!



கண்டக்டரின் பங்களாவிலிருந்து கரத்தை ரோட்டு வந்து முடியும் குறுக்குப் பாதையில் பண்டா முதலாளியின் லொறி நின்று கொண்டிருந்தது. அவரது கையாட்கள் இருவர், கண்டக்டருக்குச் சொந்தமான பொருட்களை லொறியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.



லொறி அங்கு வந்து நிற்பதையும் பொருட்கள் ஏற்றப்படுவதையும் அறிந்த தொழிலாளர்கள் கண்டக்டரின் பங்களாவின் முன் கூட்டமாகக் கூடிவிட்டனர்.



விஷயமறிந்த வீரய்யாவும், ராமுவும், செபமாலையும் அப்போது தான் அவசர அவசரமாக அங்கு வந்து சேர்ந்தனர்.



பங்களாவின் உள்ளேயிருந்து கண்டக்டரும், பண்டா முதலாளியும் வெளியே வந்தனர். அவர்களைத் தொடர்ந்து கண்டக்டரை வழியனுப்ப வந்த பெரிய கிளாக்கரும், கோப்பரட்டிவ் மனேஜரும் ஏதோ கதைத்த வண்ணம் வந்தனர்.



தோட்டத்துக்குரிய தளபாடங்களைத் தவிர மற்றவையாவும் லொறியில் ஏற்றப்பட்டு விட்டன.



““என்னாங்க ஐயா? நாங்க போராடிக்கிட்டு இருக்கிறபோ, நீங்கமட்டும் தோட்டத்தவுட்டுப் போறது சரியில்லீங்க”” என்றான் வீரய்யா கண்டக்டரைப் பார்த்து.



““எங்களுக்கெல்லாம் செய்யிறத செஞ்சிப்புட்டு தோட்டத்துவுட்டு தப்பிப் போகலாமுனு பாக்கிறீங்களா? நமக்கு ஒரு முடிவு வந்தாத்தான். நீங்க தோட்டத்தவுட்டுப் போகலாம்”” என்றான் செபமாலை.



வீரய்யாவும், செபமாலையும் இப்படிக் கூறியதும் கண்டக்டர் ஒரு கணம் நிலை தடுமாறிப் போனார்.



பக்கத்தில் நின்ற பண்டா முதலாளிக்கு வீரய்யாவைப் பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. இவனால்தானே எல்லாக் காரியங்களும் தடைப்படுகின்றன. கிராமத்திலிருந்து தனது தங்கையை அழைத்து வந்ததுமல்லாமல் இப்போது பியசேனாவையும் தனது குடும்பத்தில் ஒருவனாகச் சேர்த்துக் கொண்டு விட்டான். இனி இவன் எதற்குமே பின்நிற்க மாட்டான் என எண்ணியவாறு அவர் மௌனமாக நின்றார்.



கண்டக்டர் எதுவும் பேசாது அலட்சியமாக முகத்தை வேறுபுறம் திருப்பியபடி படியில் இறக்கத் தொடங்கினார்.



லொறியை அண்மித்ததும் அதனைச் சுற்றிப் பலர் கூட்டமாகக் கூடி நிற்பதைக் கவனித்த எல்லோருக்கும் சிறிது அதிர்ச்சியாக இருந்தது.



““என்னாங்க ஐயா... நாங்க சொல்லுறதுக்கு ஒன்னும் பேசாமப் போறீங்க....?”” என அவர்களின் பின்னே வந்து கொண்டிருந்த வீரய்யா கேட்டான்.



““இந்தா பாரு.... நாங் தோட்டத்தைவிட்டுப் போறது எங்விருப்பங் ஒங்களுக்கு என்னா? என்னையும் ஒங்க மாதிரி தோட்டத்தில கொழப்பங் பண்ணிக்கிட்டு இருக்க சொல்லுறதா?”” என வீரய்யாவைப் பார்த்து முறைத்தபடி கூறினார் கண்டக்டர்.



~அப்புடி இல்லீங்க. நீங்க தோட்டத்தவுட்டுப் போயிட்டா, அப்புறம் எங்களால தனிய இருந்து ஒண்ணும் செஞ்சிக்கிட முடியாதுங்க. அதனாலதாங்க கேக்கிறோம்... நீங்க போகவேணாம்”” என்றான் வீரய்யா.



““ஏய், என்னா முட்டாள் மாதிரி பேசுறது@ அரசாங்கத்துல இருந்துதாங் நமக்கு மாத்திப் போகச் சொல்லி உத்தரவு வந்திருக்கு. நாங் வேற தோட்டத்திக்கி போய் வேலை செய்ய வேணுங். நீ மடையன் மாதிரி கதைக்கிறது. எல்லாங் ஒன்னா சேந்துக்கிட்டு இங்க வந்து கொழப்பம் பண்ணுறது.... எல்லாங் ஓடிப்போ”” என லொறியின் அருகே வந்த கண்டக்டர் ஆவேசத்துடன் பலமாகக் கத்தினார்.



““என்னாங்கையா, நாங்க மரியாதையாப் பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க என்னடானா ரொம்ப மேலை போறீங்க. நீங்க போகக் கூடாதுனா போகக்கூடாது.”” இதுவரை நேரமும் குமுடுக் கொண்டிருந்த ராமுகூறினான். அவனது உடல் வெடவெடத்தது.



““நீங்க மத்தத் தோட்டத்துக்கு மாத்திப்போகத் தேவையில்ல@ இதே தோட்டத்திலையே வேலை செய்யலாம். இதுக்குத்தானே நாம இப்ப அரசாங்கத்தோட போராடிக்கொண்டிருக்கிறோம்@ ஒங்களை நாங்க போகவுடமாட்டோம்”” என்றான் வீரய்யா, அவனது முனம் இப்போது வியர்த்திருந்தது.



““இந்தா, சும்மா பேசவானாங், கண்டக்கையா தோட்டத்துல இருக்கிறப்போ எல்லாங் கரச்சலுக்கு வந்தது. இப்போ அவர் போற நேரங் போகவுடாம கொழப்பங் பண்ணுறது ஒனக்கு என்னா பைத்தியங் புடிச்சிருக்கா?””



பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த பெரிய கிளாக்கர் எரிச்சலுடன் கூறினார்.



““எங்களுக்கு ஒண்ணும் பையித்தியம் பிடிக்கலீங்க. எங்களுடைய உரிமைக்காகத்தான் நாங்க பேராடிக்கிட்டு இருக்கோம்”” என்றான் ராமு சினத்துடன்.



““தோட்டத்தையே நாசம் பண்ணிப்புட்டு தப்பிச்சு போகலாமுனு நெனைக்கிறீங்களா?”” என அங்கிருந்த ஒருவன் கத்தினான்.



““நீங்க வந்து எங்களுக்கு ஏதும் நல்லது செய்யல. நீங்க நல்லவருனு சொல்லி போகவுடாம தடுக்குறோமுனு நெனைச்சிக்கிடாதீங்க. எங்களுடைய பிரச்சினை முடியிற வரைக்கும் நாங்க யாரையும் தோட்டத்தவுட்டுப் போக விடமாட்டோம். நாங்களும் தோட்டத்தவுட்டுப் போக மாட்டோம்”” என்றான் வேறொருவன்.



““எங்களுக்கு ஒரு நல்ல முடிவு வந்தவொடன நீங்க எங்கசரி தொலைஞ்சு போனாலும் கவலையில்லை”” என்றான் அங்கு நின்ற குப்பன்.



““இந்தா பாரு மனுஷன், இது அரசாங்கத்தோட சட்டம். ஒங்களுக்கு அதுபத்தி ஒண்ணும் தெரியாதுதானே. ஒங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு கண்டக்கையா நடக்க முடியாது. போராட்டமுனு சொல்லிகிட்டு இருக்காம எல்லாந் தோட்டத்தவுட்டுப்போ. அரசாங்கத்தோட எதிர்த்துக்கிட்டு, ஒங்களுக்கு ஒண்ணுங் செய்ய முடியாது”” என்றார் பெரிய கிளாக்கர் பலத்த குரலில்.



கண்டக்டரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. இவர்கள் திட்டம் போட்டுதான் எல்லாம் செய்கிறார்கள் என அவரது மனம் எண்ணியது.



““அவருகிட்ட என்னா வீரய்யா கதைக்கிறது? வாங்கடா எல்லாம். லொறியில இருக்கிற சாமானத்த இறக்குவோம்”” எனப் பலமாகக் கூறிவிட்டு லொறியின் பின்புறத்தில் போய்த்தாவி ஏறினான் ராமு.



அப்போது அங்கே நின்ற பண்டா முதலாளி, ~டேய், யார சரி நம்ப லொறியில ஏறவேணாம் லொறியில ஏறினா காலை ஒடிச்சுப் போடுறது”” எனக் கத்தியபடி ராமுவை லொறியிலிருந்து வெளியே இழுப்பதற்காக அவனருகே சென்றார்.



““என்னா ஓய்... பெரசா பேசுற? எங்க யாரு மேல சரி கைவச்சா, அப்புறம் எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி இந்த லொறிக்கும் நெருப்பு வச்சிடுவோம்”” என ராமு கோபத்துடன் கூறினான்.



அங்கு நின்ற தொழிலாளர்கள் யாவரும் திமுதிமுவென லொறிக்குள் பாய்ந்தனர்.



பண்டா முதலாளி ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றார்.



இப்போது இவர்கள் இருக்கும் நிலையில் எதைச் செய்வதற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டார்.



லொறிக்கு ஏதும் சேதம் விளைவித்துவிடாமல் இருக்க வேண்டுமே என அவரது மனம் ஏங்கியது.



லொறிக்குள் பாய்ந்த தொழிலாளர்கள் சில நிமிட நேரத்திற்குள் அதனுள் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் இறக்கி பங்களாவின் உள்ளே கொண்டு சென்று வைத்தனர்.



““ஏய்... லொறியை இங்க நிப்பாட்டாம சுறுக்கா கொண்டுபோ”” எனப் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்தன.



லொறியில் பண்டா முதலாளி ஏறி உட்கார்ந்து கொண்டார். றைவர் லொறியை ~ஸ்ராட்| செய்தான்.



““அடே, நம்மல யாருன்னு நெனச்சது? நம்ம லொறியவா கொழுத்திறேனு சொன்னது. ஒங்களை எல்லாங் என்ன செய்யுறேன்னு பாரு”” எனக் கர்ச்நித்தார் பண்டா முதலாளி.



கூட்டத்திலிருந்து கேலிக் குரல்களும் கூச்சல்களும் பலமாக எழுந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் விசில் அடித்தனர். லொறி பேரிரைச்சலுடன் உறுதிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றது.



பண்டா முதலாளி பற்களைக் கறுவிக்கொண்டார்.



கண்டக்டரும், கிளாக்கரும், மனேஜரும் பெரும் குழப்பத்துடன் பங்களாவினுள்ளே சென்றனர்.

++++++++++++++++++++

அத்தியாயம் நாற்பத்திரண்டு



பண்டா முதலாளிக்கு இப்போது வியாபாரம் சிறிது குறைந்திருந்தது. ஆனால் அவர் அதைப்பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. அவருக்குத்தான் முன்பைவிட பலமடங்கு வருமானம் கொழுந்து வியாபாரத்தில் கிடைக்கிறதே! பின்பு ஏன் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போகிறார்.



அன்று மாலை அவரது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கள்ளுக்கடையில் நாட்டில் உள்ள பல இளைஞர்களும் முக்கியஸ்தர்களும் கூடியிருந்தார்கள். கிராமசேவகரும் அங்கு வந்திருந்தார்.



கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் முக்கியமானவர்கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிறார்களா என பண்டா முதலாளி நோட்டம் விட்டு விட்டு கூட்டத்தை ஆரம்பித்தார்.



““நான் உங்களை இங்கு எதற்காக அழைத்தேன் என்றால், நீங்கள் எல்லோரும் உங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதென மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் உங்களுக்கு ஒரு துண்டுக் காணி கூடக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் தெரிவிப்பதற்குத்தான்””



பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் அங்கு நின்றவர்களிடம் சலசலப்புத் தோன்றியது.



““என்ன முதலாளி நீங்கள்தான் முதலில் எங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதெனக் கூறினீர்கள்@ இப்போது இல்லையென்று சொல்லுகிறீர்கள். ஏன் இப்படி எங்களை யெல்லாம் ஏமாற்றுகிறீர்கள்?”” எனக் கேட்டான் அங்கிருந்த பொடிசிங்கோ.



““நான் உங்களை ஏமாற்றவில்லை. எங்களுடைய மந்திரியும் எங்களுக்கு நிலம் கிடைப்பதற்கு ஏற்ற ஒழங்குகளைச் செய்திருக்கிறார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள்தான் எங்களுக்குக் காணி கிடைப்பதற்குத் தடையாக இருக்கிறார்கள்””



““ஓ.... அது எங்களுக்கும் தெரியும். எங்களுக்குக் கிடைக்கப்போகும் காணியை கிடைக்காமல் செய்வதற்கும், எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமை யிருக்கிறது”” என ஆத்திரத்துடன் கேட்டான் ஒரு இளைஞன்.



““அவர்களுக்கு உரிமையில்லைதான்... ஆனால் அவர்களிடம் வீரம் இருக்கிறது. எங்களைப் போல அவர்கள் கோழைகளல்ல”” என்றார் பண்டா முதலாளி.



““அப்படிச் சொல்லாதீர்கள் முதலாளி! எங்களைக் கோழைகள் என்று மட்டும் நினைக்காதீர்கள்”” எனக் கத்தினான் அங்கிருந்த வேறொருவன்.



““உங்களிடம் என்ன வீரம் இருக்கிறது....? தோட்டத்தொழிலாளர் எல்லோரும் தோட்டத்தை வுட்டுப் போகப் போவதில்லையெனக் கூறிப் போராடுகிறார்கள். ஆனால் உங்களுக்குக் காணி கிடைக்க வேண்டுமென நீங்கள் ஒருபோதும் போராடியதில்லையே”” என்றார் பண்டா முதலாளி.



அப்போது கிராமசேவகர் ““காணியளப்பவர்கள் நட்டு வைத்த கூனிகளைத் தோட்டத் தொழிலாளர்கள் பிடுங்கி வீசினார்கள். கொழுந்தெடுக்கப் போன உங்களை எதிர்த்து வலியச் சண்டைக்கு வந்தார்கள்@ பொலிஸ்காரரையே எதிர்த்து உயிரைகூட மதியாமல் ஜீப்பின் முன்னால் படுத்து, அவர்களை விரட்டித் துரத்தினார்கள்”” எனக் கூறினார்.



““அதுமட்டுமா, தோட்டத்திலிருந்து உத்தியோகத்தர் வெளியேறுவதைக் கூட தடுத்து நிறுத்தினார்கள். அன்று கண்டக்டரின் பொருட்களை ஏற்றப்போன என்னையும் அடிக்க வந்து லொறியையும் நெருப்பு வைப்பதாகச் சொன்னார்கள்”” என்றார் பண்டா முதலாளி.



““அவர்கள் எல்லோரும் இப்படிப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் எங்களுக்குக் காணி வேண்டுமென நாங்கள் எப்போதாவது பேராடியிருக்கிறோமா?”” எனக் கேட்டுவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த்தார் கிராம சேவகர்.



““தோட்டத்தொழிலாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக நின்று பேராட்டத்தை நடத்துகின்றார்கள். நம்மிடையே அப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதா? முதியான்சேயும் சுமணபாலவும் நமக்கு எதிராகப் பிரசாரம் செய்வதால், இன்று நம்மில் சிலர் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சார்பாகத் திரும்பி இருக்கிறார்கள்”” என்றார் பண்டா முதலாளி.



““நம்மோடு நின்று போராட வேண்டிய பியசேனா இன்று அந்தத் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்து கொண்டு நமக்கு எதிரான காரியங்களையும் செய்கிறான்”” என்றார் கிராமசேவகர்.



எல்லோரும் மௌனமாக இருந்தனர்.



““நான் உங்கள் எல்லோரையும் கோழைகள் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?”” என பண்டா முதலாளி இப்போது கேட்டார்.



““நாங்கள் ஒருவரும் கோழைகள் அல்ல.... நாங்கள் எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.”” பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.



பண்டா முதலாளி சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார்.



மெனிக்கே. கிராம சேவகருக்கும், அங்கு நின்ற ஒரு சிலருக்கும் சிகரெட் வழங்கினான்.



““எங்கள் எல்லோருக்கும் காணி கிடைக்க வேண்டுமானால் அதற்குத் தடையாக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முதலில் ஒழிக்க வேண்டும்.””



““இது நம்ம நாடு, நாம் எவருக்கும் பயந்து வாழத் தேவையில்லை”” என்றார் பண்டா முதலாளி.



““எமக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தொழிலாளர்களை அடித்து நொறுக்கிவிடுவோம்”” எனக் கத்தனான் பொடிசிங்கோ.



““இல்லையில்லை... அப்படிச் செய்யும்படி தூண்டுவதற்காக நான் உங்களை இங்கு அழைக்கவில்லை. நாமும் போராட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் உங்களை அழைத்தேன்”” என்றார் பண்டா முதலாளி.



““எங்களுக்குக் காணி கொடுப்பதைத் தடைசெய்பவர்களை நாங்கள் சும்மா விட்டுவிடப் போவதில்லை. அவர்களின் போராட்டத்தை எப்படியும் தகர்த்துவிடுவோம்”” எனப் பலர் ஒரே சமயத்தில் கூறினர்.



““இதுதான் நீங்கள் எடுத்திருக்கும் முடிவா? அவர்களை உங்களால் எதிர்த்து நின்று போராடமுடியுமா?”” எனச் சிந்தனையுடன் கேட்டார் பண்டா முதலாளி.



““ஆமாம்@ இதுதான் எங்கள் முடிவு எத்தனை பேர் வந்தாலும், எங்களது உயிரைப் பணயம் வைத்துக்கூடப் போராடி, அவர்களை அடித்து விரட்டுவோம்”” என்றான் அங்கிருந்த மற்றொருவன்.



பண்டா முதலாளி யோசனையுடன் தலையாட்டிவிட்டு, ““அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். எல்லோரும் நான் சொல்வதை மிகவும் இரசகியமாக வைத்துக் கொள்ள வேண்டும்... முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் இவ்விஷயம் தெரியக்கூடாது.””



““இங்கு துரோகிகள் எவரும் இல்லையென்பதை நீங்கள் நம்பலாம். நீங்கள் கூறும் விஷயங்களை இங்குள்ள எவருமே வெளியிடமாட்டார்கள்”” எனக் கூறினான் பொடிசிங்கோ உறுதியான குரலில்.



““மிகவும் நல்லது.... எமகுக் எதிராகப் பிரசாரம் செய்பவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள எல்லோருமே ஒற்றுமையாக இருந்தால் நாம் எதையுமே சாதித்துவிடலாம்”” எனக் கூறிய பண்டா முதலாளி தனது திட்டத்தை விளக்கத் தொடங்கினார். அவரது முகம் மிகவும் கொடூரமாக மாறிக் கொண்டு வந்தது.



கடையில் நின்ற பெடியன் அங்கு வந்தவர்கள் எல்லோருக்கும் தாராளமாகக் கள்ளை ஊற்றிக் கொடுத்தான். முட்டிகளில் இருந்த கள்ளு முடிந்தபோது முதலாளியிடமிருந்த சாராயப் போத்தல்களும் வெளியே வந்தன.



சிறிது நேரத்தில் அங்கிருந்த எல்லோரும் வெறியர்களாக மாறினர்.

++++++++++++++++++++

அத்தியாயம் நாற்பத்து மூன்று



இரவு, நேரம் ஏழு மணி இருக்கும்........



லயத்துக்கு வெளியே எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. தொழிலாளர்கள் எல்லோரும் தத்தம் காம்பராக்களில் இருந்தபடி, தோட்டத்து நிலைமைகளைப் பற்றிக் கதைத்த வண்ணம் இருந்தனர். பெண்கள் சமையலில் ஈடுபட்டிருந்தனர்.



குண்டன் கங்காணி லயத்தில் பழைய மாரிமுத்துத் தலைவர், ~ராஜா தேசிங்கு| கதையை உரத்து, ஒருவித இராகத்துடன் படித்துக் கொண்டிருந்தார். அந்த லயத்தில் இருக்கும் நான்கைந்து வயதானவர்கள் அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்துகொண்டு மிக ரசனையுடன் அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். மாரிமுத்துத் தலைவரின் குரல் நிசப்தமான அந்த வேளையில் லயம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.



எங்கோ பூசாரி ஒருவன் உடுக்கடிக்கும் ஓசையும் காற்றிலே கலந்து வந்து கொண்டிருந்தது.



தோட்டத்திலே வேலை நிறுத்தியதைத் தொடர்ந்து, என்ன நடவடிக்கை எடுக்கலாமெனக் கலந்து ஆலோசிக்கும் நோக்கத்துடன் வீரய்யா தனது நண்பர்களைத் தேடிச் சென்றிருந்தான்.



மீனாட்சி இரவுச் சாப்பாடு செய்வதில் முனைந்திருந்தாள். செந்தாமரையும் பியசேனாவும் இஸ்தோப்பில் இருந்தவாறு எதைப் பற்றியோ சுவாரஷ்யமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர்.



மாயாண்டி காம்பராவின் உள்ளே கிடந்த கட்டிலில் படுத்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்.



வயல் லயத்தில் கறுப்பண்ணன் கங்காணியின் காம்பராவிலிருந்து, அவரும் அவரது மனைவியும் பெரிதாகச் சண்டை போடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. கிராம சேவகர் வயலைப் பிடுங்கியதிலிருந்து அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் நடக்கும். அவரது மனைவி தனது நகை மூழ்கிப் போய்விட்டதை எண்ணி கவலையுடன் அவரோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.



குப்பன் வீட்டில் அவரது மனைவி அடுப்படியில் இருந்து ரொட்டி போட்டுக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி குப்பனும் அவனது நான்கு பிள்ளைகளும் வட்டமாக அமர்ந்திருந்தனர். பிள்ளைகள் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் ரொட்டியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அரிசி இல்லாத காரணத்தால், கிடந்த இரண்டு சுண்டு மாவைப் பிசைந்து ரொட்டி போட்டுக் கொண்டிருந்தாள் குப்பனின் மனைவி. ரொட்டி வெந்ததும் அவள் அதனைப் பகிர்ந்து எல்லோருக்கும் கொடுக்கிறாள். அந்தச் சிறிய துண்டு ரொட்டியைச் சாப்பிட்டுவிட்டு வெறுஞ்சாயத் தண்ணியால் அவர்கள் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றனர்.



அந்த வேளையில் மடுவத்தின் பக்கத்திலிருந்து ~டாண்...... டாண்.......| என மணியோசை பலமாகக் கேட்டது.



லயத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் திடுக்குற்று எழுகின்றனர். ஒருநாளும் இல்லாதவாறு ஏன் இந்த நேரத்தில் மணியோசை கேட்கிறது? காணி அளப்பவர்கள் இரவு நேரத்திலா வரப்போகின்றனர்? பகலிலே அவர்கள் வருவதைத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்துவதால், ஒருவேளை இரவு நேரத்தில் வந்திருப்பார்களோ? அல்லது கண்டக்டர் தான் இரவிரவாகத் தோட்டத்தை விட்டுப் போக முயற்சி செய்யும் போது அதனைக் கண்டுகொண்ட யாராவது மணி அடித்திருப்பார்களோ? எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.



ஆண்கள் எல்லாரும் மடுவத்தை நோக்கித் தீப்பந்தங்களுடன் விரைந்தனர். செந்தாமரையுடன் கதைத்துக் கொண்டிருந்த பியசேனாவும் அவர்களோடு சேர்ந்து மடுவத்துப் பக்கமாக ஓடினான். பெண்களும் வயோதிபர்களும் சிறுவர்களும் லயத்திலே தங்கிவிட்டனர்.



திடீரென லயத்தில் இருந்த நாய்கள் எல்லாம் பலமாகக் குரைக்கத் தொடங்கின.



பலர் திமுதிமுவெனத் தேயிலைப் புதர்களில் இருந்தும் மறைவான இடங்களில் இருந்தும் லயத்துக் காம்பராக்களில் ஒரே சமயத்தில் புகுந்தனர். சிலரது கைகளில் கத்தியும் கோடரியும் தடிகளும் காணப்பட்டன. ஒருசிலர் பளபளக்கும் வாள்களுடன் பாய்ந்து வந்தனர்.



அவர்கள் எல்லோருமே மதுபோதையில் நிறைந்திருந்தனர்.



அவர்களைக் கண்டதும் லயத்திலிருந்த சிறுவர்களும் பெண்களும் பயத்துடனும் பீதியுடனும் கூச்சலிடத் தொடங்கினர்.



““ஏய்@ யாருங் சத்தங் போவேணாம்@ சத்தம் போட்டா வெட்டிப் போடுவேன்”” என அங்கு வந்த குண்டர்களில் ஒருவன் கூறினான்.



எல்லோரும் பயத்துடன் நடுங்கியவாறு வாயடைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர்.



குண்டர்கள் காம்பராக்களுக்குள் புகுந்து சூறையாடத் தொடங்கினர். ஒருசில பெண்களின் கழுத்திலும் காதுகளிலும் இருந்த நகைகளை மூர்க்கத்தனமாகப் பிடுங்கி எடுத்தனர். எந்தெந்தக் காம்பராக்களில் எல்லாம் தொழிலாளர்களது உடைமைகளைச் சூறையாட முடியுமோ, அவற்றையெல்லாம் சூறையாடினர்.



குண்டன் ஒருவன், கண்களில் தென்பட்ட அழகான, வயதுவந்த பெண் ஒருத்தியைப் பலவந்தமாகப் பிடித்து, லயத்தின் சற்றுத் தூரத்திலுள்ள இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்றான். அவன் எவ்வளவோ கதறியும், அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்தபோதும் அவளால் தப்ப முடியவில்லை. அந்தக் கொடியவனின் மிருக இச்சைக்கு அவள் பலியானாள்.



ஒருசில வயோதிபர்கள் அந்தக் குண்டர்களை எதிர்க்க முயன்றபோது, அவர்களைக் குண்டர்கள் அடித்துத் துன்புறுத்தினர்.



லயங்களில் இருந்த பொருட்கள் யாவும் சூறையாடப்பட்டதும், தாங்கள் தயாராகக் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய், பெற்றோல் முதலியவற்றை லயத்தின் உள்ளேயும் வெளிப்புறத்திலும் ஊற்றி கையில் இருந்த பந்தத்தால் லயங்களுக்குத் தீ வைத்தனர். சில குண்டர்கள் முன்பே தயாராகக் கொண்டுவந்த பெற்றோல் குண்டுகளை லயங்களின் கூரைமீது வீசினர். அவை பயங்கரமாக, பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீச்சுவாலைகளை எங்கும் பரவ வைத்தன.



பக்கத்திலிருந்த மாரியம்மான் கோயிலை நோக்கி ஒரு குண்டன் தனது கையிலிருந்த குண்டை வீசி அந்தக் கோயிலைத் தகர்த்தெறிந்தான்.



லயங்களில் இருந்த வயோதிபர்களும் பெண்களும் சிறுவர்களும் வீரிட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடினர். லயங்களில் பற்றிய நெருப்பு இப்போது சுவாலைவிட்டுப் பெரு நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது.



குறுகிய நேரத்தில் அந்தக் கொடுங் செயல்களை நடத்தி முடித்து விட்டு, தமக்குக் கிடைத்த பொருட்களுடன் குண்டர்கள் அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்தனர்.

மடுவத்தைச் சென்றடைந்த ஆண்களும், அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது புரிந்தது. யாரோ வேண்டுமென்று மணியை அடித்துத் தங்களை மடுவத்திற்கு வரவழைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.



லயத்துப் பக்கமிருந்து பெண்களினதும் சிறுவர்களினதும் அவலக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. தீச்சுவாலைகள் கொழுந்து விட்டு எரிவதை மடுவத்திலிருந்து பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது எல்லோரும் லயத்தை நோக்கி விரைவாக ஓடத் தொடங்கினார்கள்.



லயங்களின் அருகே நெருங்கக்கூட முடியவில்லை. தீப் பிழம்புகள் அனலைக் கக்கிக்கொண்டு இருந்தன. எங்கும் ஒரே புகைமண்டலமாகத் தெரிந்தது. தீப்பொறிகள் வெகு தூரம் வரை பறந்து சென்று பக்கத்திலுள்ள மரஞ்செடிகளைத் தாக்கின.



லயத்தை அடுத்துள்ள, மீனாப் புல்லினால் வேயப்பட்டிருந்த மாட்டுத் தொழுவங்களின் கூரைகளில் தீ பற்றிய போது, அங்கிருந்த பசுமாடுகள் மிகப் பயங்கரமாகக் கதறிக் கொண்டிருந்தன.



கோழிக் கூடாப்பிற்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகள் யாவும் தீயின் வாயில் அகப்பட்டு மரண ஓலம் எழுப்பின.



தொழிலாளர்கள் வளர்த்து வந்த நாய்கள் இப்போது தூரத்தே நின்று லயங்கள் எரிவதைப் பார்த்துப் பெரும் சோகமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தன.



யாராலுமே அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆண்டாண்டு காலமாக அவர்கள் தேடி வைத்திருந்த உடைமைகளைப் பறிகொடுத்து விட்டு, எஞ்சியவையெல்லாம் நெருப்பிலே வெந்து சாம்பலாவதைப் பார்த்துக் கொண்டும், பெருஞ் சோகமாக அழுதுகொண்டும் இருப்பதைத் தவிர அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.



வீரய்யாவும் ராமுவும் அவர்களது நண்பர்களும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். சனங்களின் கதறல் அவர்களுக்குத் தாங்கமுடியாத வேதனையைக் கொடுத்தது. நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் திட்டமிட்டு இப்படியொரு கொடுமையைச் செய்துவிட்டு ஓடிவிட்டார்கள் என்பதனை அங்கிருந்தவர்கள் வீரய்யாவிடம் கூறினர்.



தோட்டத்தை விட்டு வெளியேறாத ஒரே காரணத்திற்காக தொழிலாளர்களது உடைமைகளைச் சூறையாடி, இருப்பிடங்களைக் கொறுத்தி நாசம் செய்தால், தொழிலாளர்களுக்குப் போராடுவதற்குத் தெம்பு இருக்காதென நினைத்துத் திட்டம் தீட்டி இப்படியொரு கொடூரச் செயலை நாட்டில் உள்ளவர்கள் செய்துவிட்டார்கள் என்பதை இப்போது வீரய்யா புரிந்துகொண்டான்.



அங்கிருந்தவர்களுக்கு உண்ண உணவோ, உடுப்பதற்கு மாற்றுடையோ, வசிப்பதற்கு இடமோ எதுவுமே இல்லை. இப்படியான ஒரு பரிதாப நிலையில் தள்ளப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்கும், மேலும் அசம்பாவிதங்கள் நடவாமல் தடுப்பதற்கும் உரிய பெரும் பொறுப்பு தனக்கு இருக்கிறதென்பதை வீரய்யா உணரத் தொடங்கினான்.



அங்கு நிகழ்ந்து முடிந்துவிட்ட சம்பவங்களையும், இழப்புகளையும் ஒவ்வொருவரும் அவனிடம் கூறிய போது, வீரய்யாவின் நெஞ்சத்தில் உதிரம் கொட்டியது.



சிலமணி நேரத்தின் பின் அங்கு நடந்து முடிந்துவிட்ட கொடுமைகளை அறிந்த பொலிசார் ஜீப்பில் தோட்டத்தை நோக்கி விரைந்து வந்தனர்.



அன்று எல்லோரும் இருப்பதற்கு இடமின்றிப் பக்கத்திலுள்ள தேயிலைச் செடிகளின் அணைப்பில் அந்தப் பயங்கரமான இரவைக் கழித்தனர்.

ழூ ழூ ழூ ழூ



அந்த இரவு நீண்ட இரவாகவே இருந்தது, தொழிலாளர்கள் எல்லோரும் விடிவை நோக்கி காத்திருந்தனர். மறுநாட்காலை நிலம் வெளித்தபோது இரவு நடந்த கோரத்தின் சுவடுகள் ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங்கின.



லயங்கள் யாவும் தரைமட்டமாகிப் போயிருந்தன. தீ இன்னும் அணையாமல், தணல்களிலிருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. லயங்களைச் சுற்றியுள்ள பெருவிருட்சங்கள் எல்லாம் கருகிப்போய்க் கிடந்தன. மாமரங்களிலும் பலாமரங்களிலும் காய்கள் வெந்துபோய்த் தொங்கின. பக்கத்தில் இருந்த ஓரிரு மாட்டுத் தொழுவங்களும் தரை மட்டமாகிப் போய் கிடந்தன. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த பசு மாடுகளும் கன்றுகளும் மிகக் கோரமாய் வெந்து போய்க் கிடந்தன.



கூரைத் தரகரங்ளெல்லாம் நெருப்பு வெக்கையில் வளைந்து சுருண்டுபோய் நிலத்தில் விழுந்து கிடந்தன. சுவர்கள் யாவும் கருமை படிந்தும், வெடித்தும் காட்சியளித்தன. காம்பராவில் கிடந்த ராக்கைகளில் சேர்த்து வைத்திருந்த பொருட்களும் இட்டாளை மரங்களும் எல்லாமே எரிந்து சாம்பலாகிப் போய்க்கிடந்தன.



நெருப்பு ஒருவாறு அணைத்தபோது, தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது காம்பராக்களுக்குள் சென்று ஏதாவது பொருட்கள் தீயின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறதா என்ற நப்பாசையோடு ஆராயத் தொடங்கினார்கள்.



வீரய்யாவும் ராமுவும் ஒவ்வொரு லயமாகச் சென்று தொழிலாளர் களுக்கு ஏற்பட்டுவிட்ட பெரந் துன்பத்தில் கலந்து கொண்டனர்.



மாயாண்டியும் மீனாச்சியும் தலையிலே கைவைத்தபடி காம்பராவின் முன் வெளிவாசலில் அமர்ந்திருந்தனர். செந்தாமரையினதும் மீனாச்சியினதும் கழுத்திலும் காதிலும் இருந்த நகைகளெல்லாம் சூறையாடப்பட்டு விட்டன. வீரய்யாவின் குடும்பத்தினர் என்ற காரணத்தினாலோ என்னவோ குண்டர்கள் அந்த வீட்டில் தமது கைவரிசையைக் கூடுதலாகக் காட்டியிருந்தனர்.



பியசேனாவின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் செந்தாமரையைப் பார்க்குபோதெல்லாம் அவன் அழுதவண்ணம் இருந்தாள். அங்குள்ள ஒவ்வொருவரும் அவனைப் பார்க்கும் போது அவனுள் ஏதோ குற்ற உணர்வு ஏற்படுவதைப் போன்று அவன் உணர்ந்தான். ~உனது ஆட்கள்தான் இப்படியொரு கொடுமையை உமக்கு இழைத்து விட்டார்கள்| என அவர்கள் குற்றஞ்சாட்டுவதைப் போன்று அவன் உணர்ந்தான். அவனது உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.



அங்குள்ள பலருக்குச் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. பல பெண்களின் பாதிலிருந்த நகைகளைக் குண்டர்கள் முரட்டுத்தனமாகப் பிடுங்கி எடுத்ததினால் ஏற்பட்ட காயம் அவர்களுக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.



வீரய்யா, முதல் வேலையாகத் தோட்டத்து லொறியை வரவழைத்து காயமடைந்த எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய ஒழுங்குகளைச் செய்தான். பியசேனாவும் செபமாலையும் காயமடைந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.



இரவு நடந்த கோரத்தை அறிந்து பக்கத்து தோட்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள் பெருங்கூட்டமாக அங்கு படையெடுக்கத் தொடங்கினர். டவுணில் உள்ள மக்களும் தொழிற்சங்கவாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் இப்போது தோட்டத்துக்கு வரத் தொடங்கினர். எரிந்து சாம்பலாகிப் போய்கிடந்த லயன்களுக்கு பொலிஸார் காவல் புரியத் தொடங்கினர். பக்கத்துத் தோட்டத் துரைமார்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து சேர்ந்தனர்.



முதல்நாள் இரவு எங்கோ லீவில் சென்றிருந்த தோட்டத்துரை சில்வா, தோட்டத்தில் நடந்து முடிந்த கோரத்தைக் கேள்விப்பட்டதும் மறுநாள் பதறியடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.



முதல்நாள் இரவு எங்கோ லீவில் சென்றிருந்த தோட்டத்துரை சில்வா. தோட்டத்தில் நடந்து முடிந்த கோரத்தைக் கேள்விப்பட்டதும் மறுநாள் பதறியடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.



அங்கு வந்து சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் மனம் பதறினர். மனிதாபிமானமற்ற முறையில தோட்டத் தொழிலாளர்களுக்கு நடந்த அநியாயத்தைப் பார்த்துக் கொதித்தனர். தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கு நடந்த கொடுமைகளையும் இழப்புகளையும் பார்வையிட வந்தவர்களிடம் கூறிக் கதறியழுதனர்.



““ஐயா, ஏங் குடும்பத்துக்கு போன கெழமைதான் சேவைகாலப் பணம் வந்திச்சி. அந்தப் பணத்தை எம்பொட்டியில வச்சிருந்தேன்@ அவ்வளவு பணமும் எரிஞ்சு போச்சுங்க...”” எனக் கூறி விம்மினார் ஒரு வயோதிபர்.



““என் மாடெல்லாம் உசிரோட எரிஞ்சு வெந்து போச்சுங்க@ அத நம்பித்தான் நான் சீவிச்சுக்கிட்டிருந்தேன்.”” எனக் கதறினான் ஒரு நொண்டி.



““வாற மாசம் நான் இந்தியாவுக்கு போயாகனும். அதுக்குள்ள இப்புடி ஒரு அநியாயம் நடந்திருச்சுங்க. என் பாஸ்போட்டு எல்லாம் எரிஞ்சு சாம்பலாப் போச்சிங்க”” எனக் கூறி கண்கலங்கினார் மாரிமுத்து தலைவர்.



““எங்க வீட்டுல ஒண்ணுமே இருக்கல்லீங்க.... மாத்திக் கட்டுறதுக்கு மட்டும் ரெண்டு துணி கெடந்திச்சி. அது தானுக எரிஞ்சு போயிருச்சு”” எனக் கவலையுடன் கூறினான் குப்பன்.



““ஏங் காதுல கெடந்த நகையைக் கழட்டித் தரச்சொல்லி ஒருத்தன் கேட்டானுங்க. நான் தப்பி ஓடலாமுனு வெளியே ஓடினேன். ஏம்புள்ளையத் தூக்கி வச்சுக்கிட்டு வெட்டப் போறேனு கழுத்தில கத்திய வச்சான்@ நான் பதறிப்போய் ஒரு காதுல இருந்த நகையைக் கழட்டப் போனேன். அதுக்குள்ள அவேன் மற்றக்காதுல இருந்ததைப் பிச்சு எடுத்துக்கிட்டானுங்க”” எனக் கூறியபடி பிரிந்து போயிருந்த காதைக் காண்பித்துக் கண்கலங்கினாள் பெண்ணொருத்தி.



““அடுத்த நேரச் சாப்பாட்டுக்கே வழியிலலாம செஞ்சுப் புட்டாங்களே. இந்தப் பாவிக”” எனக்கூறி தலையில கை வைத்த வண்ணம் நிலத்திலே உட்கார்ந்தார் கறுப்பண்ணன் கங்காணி.



““புள்ளைங்க எல்லாம் பசியில கதறுதுங்க, என்ன செய்யிறதுன்னே எங்களுக்குப் புரியல்லீங்க”” எனக் கூறிக் கண் கலங்கியபடி அருகே நின்ற தன் குழந்தையை வாஞ்சையுடன் தடவினாள் ஒரு தாய்.



““போன கெழமைதாங்க எனக்குப் பெரசாவுரிமை கெடைச்சிச்சி. ரொம்ப கஷ்டப்பட்டுத்தானுங்க அத எடுத்தேன். அதெல்லாம் எரிஞ்சு போச்சுங்க”” எனக் கூறிய ஒரு தொழிலாளி விரக்தியோடு சிரித்துவிட்டு, ““அந்தக் கடதாசியெல்லாங் வெறுங் கடதாசிதானுங்களே@ இந்த நாட்டுல எங்களுக்கு என்னதாங்க உரிமையிருக்கு? நாங்க எப்பவும் அடிமைதாங்க”” எனச் சாகமாகக் கூறினார்.



வயதுபோன பெண்ணொருத்தி தனது ஒரே மகளைக் காண்பித்து, ““ஐயோ இந்தப் புள்ளைக்கு நடந்த கொடுமையை எப்புடீங்க என் வாயால சொல்லுவேன்.”” எனக் கூறிவிட்டுச் சோகம் தாங்காமல் பெரிதாக விம்மினாள்.



அவளது மகளின் உடைகள் யாவும் கிழித்துபோய் இருந்தன. முகத்திலும் கைகளிலும் சிறிய காயங்கள் தென்பட்டன. அந்தப் பெண் உடலெல்லாம் குறுகத் தன் இருகைகளாலும் முகத்தை மூடியபடி விம்மிக் கொண்டிருந்தாள்.



அங்கு நின்ற ஒவ்வொருவருடைய மனதையும் தொழிலாளருக்கு நடந்த துன்பங்கள் பெரிதும் கலக்கின. அதனைக் கண்டு சகிக்க முடியாத பலர் கண்கலங்கினர். ஒரு சிலர் வாய்விட்டுக் கதறினர். டவுனில் உள்ள கடைக்காரர்களும் பக்கத்து தோட்டத்துத் தொழிலாளர்களும் தொழிற் சங்கவாதிகளும், ஒரு முகமாகச் சேர்ந்து பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உதவிகள் செய்வதற்கு முயன்றனர்.



தம்மால் இயன்ற சிறுதொகைப் பணத்தை சிலர் கொடுத்து உதவினர். சிலர் மாற்றுடைகள் கொடுத்து உதவினர். இன்னும் சிலர் ஒருநேர உணவைக்கொடுத்தனர். வேறு சிலர் அரிசி மாவு முதலிய பொருட்களை வழங்கினர்.



லயங்கள் எரிக்கப்பட்ட செய்தியறிந்ததும் கிராமத்திலிருந்து முதியான்சேயும் சுமணபாலவும் தோட்டத்துக்கு வந்து நடந்த கொடுமைகளை பார்வையிட்டனர்.



அங்கு நடந்த கோரத்தைப் பார்த்த முதியான்சேயின் உள்ளம் பதறியது. இப்படியொரு கொடுமையைச் செய்துதான் கிராமத்து மக்கள் காணி பெறவேண்டுமா? அவர் எண்ணி மனம் மறுகினார்.



““இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமாக இருந்த பண்டா முதலாளி, கிராம சேவகர், கண்டக்டர் முதலியோரை நான் பொலிசில் காட்டிக் கொடுக்கப் போகிறேன்”” என சூளுரைத்தான் சுமணபால.



பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தனித் தனியாகச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.



எதைச் செய்துமென்ன தொழிலாளர்கள் இழந்த எல்லாவற்றையும் இனி யாரால்தான் திருப்பிக் கொடுக்க முடியும்.

++++++++++++++++++++

அத்தியாயம் நாற்பத்து நான்கு



பாதிக்கப்பட்ட மக்களை தோட்டத்துரை அடிக்கடி வந்து சந்தித்து

அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். பிற இடங்களிலிருந்து பார்வையிட வந்தவர்களும், அயல் தோட்டத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்மாலியன்ற உதவிகளைச் செய்தனர்.



முன்பு காம்பராக்களில் தனித்தனிக் குடும்பங்களாக வாழ்ந்த தொழிலாளர்கள் எல்லோருமே இப்போது ஒரே குடும்பம் போன்று கூட்டமாக தோட்டப் பாடசாலைகளிலும், பிள்ளை மடுவத்திலும் தங்கியிருந்தனர்.இதனால் பலர் தம்மிடையே இருந்த சிறு மன வேற்றுமைகளையும் மறந்து மிக அந்நியோன்யமாக ஒருவரோடு ஒருவர் பழகினர். மாரி முத்து தலைவர், கருப்பண்ணன் கங்காணி முதலியோர் இப்போது வீரய்யாவுக்குப் பக்கப்பலமாக நின்று காரியங்களை கவனித்தனர்.



பியசேனா தன்னை சந்திக்க வந்திருந்த முதியான்சே, சுமணபால முதலியோரிடம், இனி நான் நாட்டுக்கு வரப் போவதில்லை எனக் கூறிவிட்டு தோட்டத் தொழிலாளர்களுடனேயே இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துக்கொடுத்துக் கொண்டிருந்தான்.



தோட்டத்துரை அன்று தொழிலாளர்கள் குழுமியிருந்த இடத்துக்கு வந்தார். அங்கு கூடியிருந்த தொழிலாளர்களைப் பார்த்து அவர் தனது மனதிலே தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்தார்.



““இப்ப நீங்கள் ஒங்களுடைய சாமானங்கள் எல்லாம் பறிகொடுத்து, வூடுங் இல்லாம, சாப்பிடுறத்துக்கு சாப்பாடுங் இல்லாம, இனிமே இந்த தோட்டத்துல இருக்கிறது, மிச்சங் கஷ்டம்தங்தானே. இனி இங்க இருந்துங் பிரயோசனங் இல்ல.அரசாங்கம் சொன்ன மாதிரி, வேற தோட்டத்துக்கு போனா ஒங்களுக்கு எல்லா வசதியுங் கிடைக்கும். நீங்க எல்லாங் போறதுத்தாங் நல்லது.””



““தொர எங்களுடைய உடமை எல்லாத்தையும் பறிச்சி, இருக்க எடங்கூட இல்லாம செஞ்சா, நாங்க தோட்டத்தவுட்டு போயிடுவோமென்று திட்டம் போட்டுத்தான் நாட்டாளுக இப்புடி செஞ்சிருக்காங்க, ஆனா நாங்க ஒரு நாளும் இந்த தோட்டத்தவுட்டு போக மாட்டோமுங்க”” என வீரய்யா கூறினான்.அவனது குரலில் உருதி தொனித்தது.



““நாங்க மட்டும் இல்லீங்க தொர. ஒங்களையுந்தான் இந்த தோட்டத்தைவுட்டு போகவுடமாட்டோம். என்னா கஷ்டம் வந்தாலும் நாங்க பயந்துகிட்டு மட்டும் தோட்டத்தைவுட்டுப் போகமாட்டோம்”” எனப் படப்படத்தான் ராமு.



““ஏய் நீ ரெண்டு பேருங் மச்சங் முட்டாள்கதை பேசுறது. ஒங்க பேச்சுக் கேட்டுத்தான் இந்த ஆளுங்களுக்கு எல்லாங் இப்புடி வந்தது”” எனக் கோபத்துடன் கூறினார் துரை.



““ஒங்க பேச்சக் கேட்டுக்கிட்டு நாங்கெல்லாம் தோட்டத்தவுட்டுப் போகமாட்டோம்.சாகிறவரைக்கும் இந்த் தோட்டத்திலேத்தான் இருப்போம்”” என்றான் ராமு.



““ தோட்டத்த மூட நாங்க வுடமாட்டோங்க தொர அப்படி மூடினாலும், நாங்க நட்டு வளத்த தேயிலை இருக்குமட்டும் நாங்க பொலச்சிக்குவோமுங்க”” என்றார் அங்கே நின்ற கறுப்பண்ணன் கங்காணி நிதானமாக.



““இனிமே தோட்டத்தவுட்டுப் போனா, ஒவ்வொரு தோட்டத்திலும் இருக்கிற தொழிளிங்களுக்கும் எங்களுக்கு நடந்த மாதிரிதான் நடக்கும்”” என்றான் வீரய்யா.



““ நீ என்னா மனுசன் கதைக்கிறது? நீங்க எல்லாங் தோட்டத்தவுட்டு போனா மத்த தோட்டத்து ஆளுங்களுக்கு ஏன் கரச்சல் வாறது? “” எனக்குழப்பத்துடன் கேட்டார் துரை.



““இப்ப நாங்கெல்லாம் தோட்டத்தவுட்டுப் போனா... தோட்டத் தொழிலாளிங்களை பயங்காட்டி வெரட்டிப்புடலாமுனு நெனைச்சுக்கிடு வாங்க. அப்புரம் மத்த தோட்டங்களில் இருக்கிற தொழிலாளிங்களையும் அநியாயம் செஞ்சி வெரட்டப் பாப்பாங்க... தோட்டத் தொழிலாளிங்க கோலைகள் இல்லேங்கிறதை நாங்க இங்கேயே இருந்து போராடிக் காட்டத்தான் போறோம்”” என வீரய்யா விளக்கமாகக் கூறினான்.



““நாங்க எங்க இனத்தைக் காட்டிக் கொடுக்க மாட்டோமுங்க தொர. உயிரைக் கொடுத்தாவது போராடியே தீருவோம்”” என்றான் ராமு.

““ என்னா மனுசன் போராட்டம், போராட்டமுனு சொல்லி பைத்தியக்காரன் மாதிரி போசுறது. இப்புடி பேசித்தாங் இன்னிக்கு ஒன்னும் இல்லாம நீங்க எல்லாங் இருக்கிறது”” என்றார் துரை எரிச்சலுடன்.



““எங்ககிட்ட ஒன்றும் இல்லத்தாங்க தொர. நாங்க எல்லாத்தையும் இழந்திட்டோம். எங்க உயிhதான் மிச்சமாக இருக்குங்க. ஆனா இது நாங்க பொறந்த மண் எங்கிற உரிமையை நாங்க இன்னும் இழக்கலீங்க. அந்த உரிமைக்காக எங்கக்கிட்ட மிச்சமா இருக்கிற இந்த உயிறக் கொடுத்தாவது போராடத்தான் போறோம்”” என்றான் வீரையா. இதைக் கூறும் போது அவன் உணர்ச்சி வசப்பட்டான்.



““ ஆமாங்க... நாங்க இந்த எடத்தவுட்டுப் போகமாட்டோம்...”” எனப் பலக் குரல்கள் அவனது கூற்றைத் தொடர்ந்து ஒலித்தன.



““ஏய் ஏய், மிச்சங் சத்தங் போட வேண்டாம். நீங்க போகாட்டி, நாட்டில இருக்கிற ஆளுங்களுக்கு காணி கிடைக்கிறது இல்லத்தானே.அப்புறங் உங்களுக்கு மிச்சங் கரச்சல்தாங் வாறது”” என்றார் துரை கோபத்துடன்.



““நாட்டாளுங்களுக்கு காணி கொடுக்க வேண்டாமுணு சொல்லல்ல. அவுங்களுக்கு காணி கொடுக்கிறத்துக்காக எங்கள தோட்டத்தவுட்டு வெரட்டவேணாமுன்னுத்தான் சொல்லுகிறோம்”” என்றான் வீரய்யா.



““அதிக்கி என்னத்தாங் செய்ய முடியுங்.... வேற வழி இல்லத்தானே”” என்றார் துரை.



““எங்களை எல்லாம் அனுப்பிவிட்டுத்தான் காணி குடுக்கோணு முங்கிறது இல்லீங்க தொர... எங்னளை இப்புடியே வச்சிக்கிட்டு அவுங்களுக்கும் காணி கொடுக்கலாந்தானுங்களே”” என்றான் வீரய்யா.



அவனது கூற்று துரையைச் சிந்திக்க வைத்தது.



““ஆமாங்க தொர... நம்ம தோட்டத்திலத்தான் நெறைய எடம் சும்மா கெடக்குங்களே. அந்த இடத்தை எல்லாம் நாட்டு ஆளுங்களுக்கு பிரிச்சி கொடுக்க முடியுந்தானுங்களே”” என்றார் மாரி முத்துத் தலைவர்.



““ ஹோ... அது அப்படி செய்ய முடியுந்தான். ஆனா அரசாங்கம் இப்ப வேற மாதிரித்தான் செஞ்சிக்கிட்டுப் போறது”” என்றார் துரை.



““ அப்புடீனா தோட்டத்தொழிலாளிங்களோட நாட்டாளிங்களும் ஒரே தோட்டத்தில் ஒற்றுமையா இருக்கிறத அரசாங்கம் விரும்பலீங்களா?”” எனக் கேட்டான் வீரய்யா.

வீரய்யா இப்படிக் கேட்டதும் துரைக்கு ஒரே குழப்பமாக இருந்தது.



““ இதுபத்தி நாங் ஒன்னுங் சொல்ல முடியாது.இது எல்லாங் அரசாங்கத்தில பேசித்தானே செய்கிறது. அதினால அவுங்க சொல்லுறபடித்தாங் நாங் செய்ய வேண்டும்”” எனக்கூறி விட்டு அவ்விடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார் துரை.



வீரய்யா கூறிய கருத்துக்கள் யாவும் வீரய்யாவின் மூளையைப் போட்டுக்குடைந்து கொண்டிருந்தன.



தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக்களையும் குடியிருத்தி அவர்களது ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு ஏற்ற ஒரு நல்ல வழி இருக்கும் போது ஏன் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற அரசியல்வாதிகள் முனைகிறார்கள்?



தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக்கள் ஒன்றாக வாழ்வதை ஏன் இந்த அரசியல்வாதிகள் விரும்பவில்லை?



“ஏன்? ஏன்? ஏன்?”| - துரைக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

+++++++++++++++++++

அத்தியாயம் நாற்பத்தைந்து



டாண்... டாண்...



மடுவத்திலிருந்து மணியோசை கேட்டுக்கொண்டிருந்தது. தூரத்தே மடுவத்தை நோக்கி மூன்று வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.



மணியோசை கேட்டதும் தொழிலாளர்கள் எல்லோரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். முதியவர்களும், இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களுமாக அணிதிரண்டு மடுவத்தை வந்தடைந்தனர்.



நில அளவையாளர் மீண்டும் அங்கு வரக்கூடும் என்பதை அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்துத்தான் இருந்தனர். அங்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரது மனதில் விரக்திதான் மிஞ்சியிருந்தது. சகலதையுமிழந்து நிற்கும் அவர்கள், இப்போது எதையும் ஏற்கத் தயாராக இருந்தனர். எதுவந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் மனநிலை அவர்களுக்கு உருவாகியிருந்தது. அவர்கள் எதையும் துச்சமாக மதிக்கத் தொடங்கியிருந்தனர்.



பியசேனா அந்தச் சனவெள்ளத்தின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்தான். தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்களில் பங்கு பற்றிய அவன், இப்போது அவர்களில் ஒருவனாக மாறியிருந்தான்.



மடுவத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதி நிற்பதைக் கண்டதும் அந்த மூன்று வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டன. முன்னும் பின்னுமாக நின்ற இரு வாகனங்களிலும் பொலிஸ் படையினர் இருந்தனர். நடுவில் உள்ள வாகனத்தில் நில அளவையாளர்கள் காணப்பட்டனர். முன்பு அங்கு வந்தவர்களினால் காரியத்தைச் சாதிக்க முடியாமல் போய்விட்டதினாலோ என்னவோ இப்போது மேலிடத்திலிருந்து புதியவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர். வாகனத்தில் இருந்த பொலிசார் ஒவ்வொருவராகக் கீழே குதித்தனர். அவர்கள் ஒவ்வொருவரது கைகளிலும் துப்பாக்கிகள் காணப்பட்டன.

தோட்டத் தொழிலாளர்கள் குழப்பம் விளைவித்ததன் காரணத்தினாலேத்தான் அவர்களின் உடமைகளுக்கும் லயங்களுக்கும் சேதம் ஏற்பட்டது என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு தோட்டத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை அடக்குவதற்காகவும் நில அளவையாளரைத் தடுத்து நிறுத்துபவர்களை எதிர்ப்பதற்காகவும் இப்போது பொலிஸ் படையினர் அங்கு வந்திருந்தனர்.



“”ஏய் ரோட்டுல மறிச்சிக்கிட்டு நிக்காம எல்லாங் தூரப் போ”” எனக் கூறிவிட்டு அங்கு நின்றவர்களை விரட்டுவதற்காக துவக்கை ஓங்கினார் இன்ஸ்பெக்டர்.



அங்கு நின்ற எவறுமே அவரது மிரட்டலுக்கு பயப்படவில்லை.



அணி திரண்டிருந்த தொழிலாளர்கள்,””நாங்க வெலக மாட்டோம்”” என்று பலமாக கத்திக்கொண்டே பொலிஸ் படையை நோக்கி முன்னேறினர்.



“”ஏய் இனிமே யாராவது ஒரு அடி முன்னுக்கு வெச்சாலும் சுட்டுப்போடுவேன்”” எனக் கத்திய இன்ஸ்பெக்டர் ஆகாயத்தை நோக்கி மூன்று முறை சுட்டார்.



“” எங்க எல்லோரையும் வேணுமுனா சுட்டுக் கொன்னுபுட்டு எங்க பொணத்துக்கு மேலே ஜீப்ப ஓட்டிக்கிட்டு போங்க.”” எனக் கூறிய ராமு தனது மார்பைத் திறந்து காட்டிக்கொண்டு முன்னே பாய்ந்தான்.



இன்ஸ்பெக்டர் திடீரென அவனது தலையின் மேல் துவக்குப் பிடியினால் ஓங்கிப் பலமாக அடித்தார். ராமுவின் தலையில் இருந்து குபீரென இரத்தம் பெருகியது. ராமு வெறி கொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்தான்.



தனது கையிலிருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் அவனை மாறி மாறிப் பல தடவை தாக்கினார்.



அதைப் பார்த்த வீரய்யா, இன்ஸ்பெக்டர் ராமுவைத் தாக்காமல் தடுப்பதற்காக அவரது கையிலே இருந்த துப்பாக்கியைத் தன் இரு கைகளாளும் இருக்கிப் பிடித்துக்கொண்டார். இன்ஸ்பெக்டர் அவனது பிடியிலிருந்து துப்பாக்கியை இலுத்துப் பறிக்க முயன்றார். ஆனால் வீரய்யா தனது அசுரப்பிடியை விடவேயில்லை. இருவரும் துப்பாக்கியைப் பிடித்தபடி போரடிக்கொண்டிருந்தனர்.



ராமு மயக்கமுற்று கீழே சாய்ந்துவிட்டான்.



வீரய்யா இன்ஸ்பெக்டருடன் போராடுவதைப் பார்த்த பியசேனாவும், செபமாலையும் ஆவேசத்துடன் இன்ஸ்பெக்டரை தாக்கும் நோக்கத்துடன் முன்னே பாய்ந்தனர்.



கூட்டத்திலிருந்த பலர் இப்போது வெறி கொண்டவர்களாகப் பொலிசாரை நோக்கிப் பாய்ந்தனர். இன்ஸ்பெக்டர் போராடிக் களைத்துப்போய் துவக்கின் விசையை அழுத்தினார்.



~டுமீல்| என்ற சத்தத்துடன் பக்கத்தில் வந்த செபமாலையின் காலில் குண்டு பாய்ந்தது. செபமாலையும் காலைப் பிடித்தபடி கீழே சாய்ந்தான்.



பியசேனா இப்பொழுது வெறி கொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்து அவரின் முகத்திலே பலமாகத் தாக்கினான். இன்ஸ்பெக்டர் நிலை தடுமாறினார். அவரது மூக்கிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.



பக்கத்திலே நின்ற பொலிஸ்காரர் பியசேனாவைச் சுட்டு வீழ்த்தும் நோக்குடன் அவனது நெஞ்சைப் பார்த்து குறி வைத்தார்.



அதனைக் கண்ட வீரய்யா அந்தப் பொலிஸ்காரரின் துப்பாக்கியை தட்டி விடும் நோக்குடன் குறுக்கே பாய்ந்தான்.



~டுமீல்...|



பியசேனாவின் மேல் பாயவிருந்த குண்டு வீரய்யாவின் மார்பைத் துளைத்தது.



வீரய்யா அசுர வேகத்துடன் இப்போது பொலிஸ்காரரின் மேல் பாய்ந்தான்.



~டுமீல்... டுமீல்...|



குண்டுகள் மாறி மாறி அவனது நெஞ்சை துளைத்தன. மறுகணம் அவனது உடல் தள்ளாடின. கண்கள் இருந்து கொண்டு வந்தன. அவன் கீழே சாய்ந்தான்.



வீரய்யா சுடப்பட்டுக் கீழே சாய்ந்ததைப் பார்த்ததும் அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளத்தில் போராட்ட வெறி கிளர்ந்து எழுந்தது. நீட்டப்பட்டிருந்த துப்பாக்கிகளின் எதிரே எதற்கும் அஞ்சாதவர்களாக வெறி கொண்டவர்களாக பொலிஸ்காரரின் மேல் பாய்ந்தனர். அவர்களிடையே காணப்பட்ட வெறியையும் வேகத்தையும் ஆயிரமாயிரம் துப்பாக்கிகளினால் கூடத் துணிக்க முடியாது என்பதைப் பொலிசார் பார்த்துத் திகைத்தனர்.

நிலைமையை இனி அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டனர். இனிமேலும் அங்கு தாமதித்தால் அந்தச்சன வெள்ளத்தின் வேகத்துக்கு தாங்களும் பலியாகிவிடவேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுமோ என்று அச்ச முற்றனர். மறுகணம் எல்லோரும் பாய்ந்து தமது வாகனங்களுக்குள் ஏறிக் கொண்டனர்.



கீழே இரத்த வெள்ளத்தில் மிடந்து கிடந்த வீரய்யாவின் அருகில் மீனாட்சி அமர்ந்து அவனது தலையை மடியிலே எடுத்து வைத்தாள்.



அவளது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது பெருஞ் சோகத்துடன் உதடுகள் அசைந்தன. அவன் தாயிடம் ஏதோ கூறுவதற்கு முயன்றான்.



மறுகணம் அவனது தலை, அவளது மடியில் சாய்ந்தது. மீனாச்சியின் இதயத்தைப் பிளந்து கொண்டு பெரிதாக விம்மலொன்று வெளிப்பட்டது.



அப்போது அங்கே ஓடிவந்த செந்தாமரை இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த வீரய்யாவைப் பார்த்ததும்



“”ஐயோ அண்ணா...”” எனக் கதறியபடி அவன்மேல் வீழ்ந்து மூர்ச்சையானாள்.



வீரய்யாவின் பாதங்களைப் பிடித்தவாறு மண்டியிட்டிருந்த பியசேனாவின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. அவனது நெஞ்சைத் துளைக்க இருந்த குண்டைத் தனது நெஞ்சிலே ஏற்று உயிரை மாய்த்துக் கொண்ட அந்தத் தியாகியின் பாதங்களைக் கண்ணீரால் கழுவத்தான் அவனால் முடிந்தது.



இப்போது பொலிசாரின் ஜீப் பின்னோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.



சனசமுத்திரம் முன்னோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. அசுரவேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.



இனி அந்த வெள்ளத்திற்கு யாராலும் அணைபோட முடியாது.



வீரய்யாவின் உயிர்த்தியாகமும், தொழிலாளர்களின் போராட்டமும் பத்திரிகை வாயிலாகவும், பார்வையாளர்கள் மூலமாகவும், நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் பொதுசன அபிப்பிராயம் அவர்களின் போராட்டத்துக்குச் சாதகமாக அமைந்தது. தொழிலாளர்கள் அகற்றுவதில் தீவிரமாக நின்ற அரசியல்வாதிகள் செயலிழந்தனர். அவர்களுக்கும் மேலான சக்திகள் இப்போது செயல்படத் தொடங்கின. தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவித்த கண்டக்டர், கிராமசேவகர், பண்டா முதலாளி முதலியோர் சட்டத்தின் பிடியில் சிறைப்பட்டனர்.



வீரய்யாவின் உடலில் இருந்து வடிந்த குருதியில், தோய்ந்து செழுமையுற்ற அந்த மலைப் பிரதேசத்தில், இப்போது தேயிலைச் செடிகள் புதிதாகத் துளிர்விடத் தொடங்கின.

+++