கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
(இலங்கை) சில சிந்தனைகள்
 
 

ஆ. தேவராசன்

 


நான்காவது


உலகத் தமிழாராய்ச்சி

மாநாடு

(இலங்கை)
















ஸ்ரீ சில சிந்தனைகள் ஸ்ரீ














ஆ. தேவராசன்



முதற் பதிப்பு ஜுலை 1970
பிரதிகள் 500









“செந்தமி ழணங்கின் சிந்தையி லென்றுந்
தங்குந் தமிழொளித் துங்கவன்”
திரு. வி. க













Pரடிடiளாநன டில: முயவாசையiஎநவிடைடi வுயஅடை சுநளநயசஉh Pசழதநஉவ
உ|ழ முயுவுர்ஐசுயுஏநுவுPஐடுடுயுஐ முயுடுயு ஆயுNசுயுஆ
Pருடுழுடுலு றுநுளுவு
PழுஐNவு Pநுனுசுழு
ஊநுலுடுழுN










வெளியீடு : கதிரைவேற்பிள்ளை தமிழாராய்ச்சித் திட்டம்
மே|பா. கதிரைவேற்பிள்ளை கலா மன்றம்
மேலைப்புலோலி
பருத்தித்துறை
இலங்கை




சமர்ப்பணம்

சில நாட்களேனும் எனக்குத் தமிழ் கற்பித்து ஆராய்ந்து அறிவதற்குத் தமிழில் நிறையக் கருத்துக்கள் உண்டென்று வலியுறுத்திய, சுயசிந்தனையாளன், ஆராய்ச்சியாளன், புலோலி தந்த புதுமைத்

தமிழ் ஆசான்

கந்த முருகேசன்
நினைவுக்கு இந்நு}லைச் சமர்ப்பணஞ் செய்கிறேன்.


ஆ. தேவராசன்.


பதிப்புரை

அறிஞர் தனிநாயகம் அடிகளார்.

“4-வது தமிழாராய்ச்சி மாநாடு – நமது பொறுப்புக்கள் யாவை?” என்ற கட்டுரை 21-1-70 ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. 22-1-70-ல் யாழ் - வீரசிங்கம் மண்டபத்தில் இந்த மாநாட்டை யொட்டி முன்னைநாள் மலேசியப் பல்கலைக்கழக இந்தியத் துறைப் பேராசிரியரும், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இணைச்செயலாளரும், “தமிழாராய்ச்சி ஏடு” (துழரசயெட ழக வுயஅடை ளுவரனநைள) ஆசிரியருமான அறிஞர் தனிநாயகம் அடிகள் நடத்திய கருத்தரங்கையொட்டி இந்தக்கட்டுரை வெளியாயிற்று.

இந்தக் கருத்தரங்கில் அறிஞர் தனிநாயகம் அடிகள் இக்கட்டுரையிற் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை மிகவும் பாராட்டினார். இந்த அடிப்படையில் இலங்கை மாநாடு அமையுமானால் அது முழுவெற்றி அளிக்கும் என்ற கருத்தும் இக்கருத்தரங்கின் போது தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் இந்தக்கட்டுரையை ஒரு சிறுநு}ல் வடிவில் வெளியிட வேண்டுமென்று பல அன்பர்கள் வற்புறுத்தி வந்தனர். அத்தோடு பாரிஸ்நகரில் நடைபெறும் மாநாட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே இதன் பிரதிகள் பாரிஸ் மாநாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

இக்கட்டுரை புதுக்கியும் சிறிது வரிவாக்கியும் வெளியிடப்படுகிறது. இந்நு}லின் ஆசிரியர் ஈழத்துத்தமிழ் கூறும் நல்லுலகில் மிகவும் அறிமுகமானவர். இவரது கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு இளைப்பாறிய நிரத்தரச் செயலாளர் திரு. எஸ். ஸி பெர்னாண்டோ, இளைப்பாறிய துணை நில அளவையாளர் நாயகம் திரு. ஜே. ஆர். சின்னத்தம்பி ஆகியோர் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளனர் என்பதை மட்டும் கூற விரும்புகிறேன்.

எமது கதிரைவேற்பிள்ளை கலாமன்றத்தின் செயலாளராகவும், ஆராய்ச்சித்திட்டத்தின் செயலாளராகவும், செயற்படும் இந்நு}லாசிரியர், சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களை எமது கிராமம் மட்டுமல்ல இந்நாடே அறியச் செய்த மதிப்புக்குரியவர்.

இச்சிறுநு}லை வெளியிடுவதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறோம்.

சைவப்புலவர் சி. அருளம்பலம்
தலைவர்.
கதிரைவேற்பிள்ளை கலாமன்றம்,
பருத்தித்துறை, 12-7-70


என் உரை

21-7-70 ஈழநாடு இதழில் “4-வது தமிழாராய்ச்சி மாநாடு - நமது பொறுப்புக்கள் யாவை” என்ற தலைப்பில் வெளியான இக் கட்டுரையைப் பாராட்டிய பல அன்பர்கள் இதனைச் சிறிது விரித்து ஒருசிறு நு}லாக வெளியிட வேண்டுமென்றும், பாரிஸ் மாநாட்டுக்கு வரும் அறிஞர்களுக்குக் கிடைக்கும்படியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

அவர்களின் து}ண்டுதலுக்கு அமைய இந்தச் சிறுநு}ல் உருப்பெற்று பாரிஸ் மகாநாட்டுக்கு செல்கிறது.

நான் ஒரு தமிழியல் மாணவன் - ஓரளவு திராவிடவியலிலும் ஈடுபாடுண்டு.

இந்தக் கட்டுரையில் விரிவாக, முடிபாக எதையும் கூறவில்லை. இலங்கை மாநாடு அமைய வேண்டிய அடிப்படை ஓரளவு சுட்டப்பட்டுள்ளது.

இதில் கூறப்பட்ட என் கருத்துக்களை உருவாக்க கலாநிதிகள் ராஜா த. சில்வா, சதாமங்கள் கருணரத்தின, ஹேவவாசம் பீட்டர் சில்வா, பீ. ஈ. ஈ. பெர்ணாண்டோ, செனரத் பரணவிதானை, சி. டபிள்யூ, நிக்கலஸ், ஈ. ஆர். சரத்சந்திரா, க. கைலாசபதி, திருவாளர்கள், சாள்ஸ் த. சில்வா, மாட்டின் விக்கிரமசிங்க, றோலண்ட் த. சில்வா, காலஞ்சென்ற முதலியார் டபிள்யூ எப். குணவர்த்தனா, கந்த முருகேசனார், முதலியோர் கருத்துக்கள் பெரிதும் உதவின.

என்னைத் தமிழாராய்ச்சித்துறையில் ஊக்கம்பெற உற்சாகப் படுத்தியவர் அறிஞர் தனிநாயகம் அடிகள் ஆவார். அண்மையில், நவீன விஞ்ஞான முறைப்படியான ஆராய்ச்சி முயற்சிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து, அந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க வைத்து, உற்சாகம் தந்தவர் இலங்கை அரும்பொருட்சாலைத்துணை இயக்குநர் திரு. எஸ். பி. எப் சேனரத்தின ஆவார். அவர்களுக்கு என் கடப்பாடும் நன்றியும் என்றென்றும் உரியதே.

இந்தச் சிறுநு}லில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப்பற்றி கருத்துக்களை எனக்கு அறியத்தரும்படி இதைக் கண்ணுறும் அறிஞர்கள், அன்பர்கள் அனைவரையும் கைகூப்பி வேண்டுகிறேன்.

இந்தக் கட்டுரையை நு}ல்வடிவில் வெளியிட அனுமதி தந்த ஈழநாடு ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி உரியதே.

மேலைப் புலோலி.
பருத்தித்துறை. ஆ. தேவராசன்
இலங்கை.
12-7-70.


4வது தமிழாராய்ச்சி மகாநாடு

நமது பொறுப்புக்கள் யாவை?

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் நடத்தி வருகின்ற உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளின் நான்காவது மகாநாடும் கருத்தரங்கும் இலங்கையில் நடைபெறவுள்ளது. குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அதேவேளை எம்மீது பெரும் பொறுப்பும் சுமத்தப்பட்டுள்ளது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. முதலாவது மகாநாடு மலேசியாவில் கோலாலம்பூரிலும். இரண்டாவது மகாநாடு இந்தியாவில் தமிழ்நாட்டிலும் மிக மிகச் சிறப்பானமுறையில் நடைபெற்று முடிந்தன. இந்த ஆண்டு பிரெஞ்சு நாட்டுத் தலைநகரான பாரிஸ் நகரில் மகாநாடு நடைபெறவிருக்கிறது. இதையடுத்து நான்காவது மகாநாடு தான் 1973-ம் ஆண்டு தைத்திங்களில் இலங்கையில் நடைபெறும். செல்வந்தர்கள் நிறையப் பொருள் உதவி செய்து மகாநாட்டின் வெற்றிக்கு உழைக்க வேண்டும். அறிஞர்கள் தமது பொறுப்பை உணர்ந்து இலங்கையை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தயாரித்து இலங்கை செய்துள்ள தமிழ்ப்பணிகளின் மேம்பாட்டை உலக அரங்கில் வற்புறுத்தத் தவறக் கூடாது. முக்கியமாக இலங்கை ஒரு குடியேற்ற நாடு, இலங்கைத் தமிழர்கள் வந்தேறு குடிகள், அவர்களுக்கு கலாசார வரலாற்றுப் பாரம்பரியம் இல்லை. என்ற தவறான கருத்து நிலவிவருகிறது. இன்னும் சிலர் வேண்டுமென்றே இந்தக் கருத்தை வளர்த்து வருகிறார்கள்;. இந்தநிலையில்தான் எமது பொறுப்பு அதிகமாகிறது. நாம் எடுத்துக் காட்டக் கூடிய சிலகூறுகளை இங்கு சிந்தனைக்கு எடுத்துக் கொள்வது நன்மைபயக்கும்.

இலக்கியத் திருப்பு முனைகள்:

தமிழ் இலக்கிய வரலாற்றில் 19-ம் நு}ற்றாண்டு மிக முக்கியமான காலம். அச்சு எந்திரத்தால் ஏற்பட்ட புரட்சி நிகழ்ந்தது அந்தக்காலத்திலேயே. அதைத் தோற்றுவித்த ஆறுமுக நாவலரின் சாதனைபற்றி ஆராயப்பட வேண்டும். தமிழ் இலக்கியத்திலும் மற்றும் பல துறைகளிலும் இலங்கை பல திருப்பு முனைகளைத் தோற்றுவித்து இருக்கிறது. அகராதித்துறையில் இன்றுவரை செங்கோல் ஒச்சுகின்ற பேறு இலங்கைக்கே கிடைத்துள்ளது. மானிப்பாய் சந்திரசேகர பண்டிதர், நா. கதிரைவேற்பிள்ளை, வைமன் கதிரைவேற்பிள்ளை ஆகியோர் பணிகள் மறக்க முடியாதன. உரை வளத்தில் முன்னோடியாக இலங்கை இருந்திருக்கிறது. வரலாற்று ஆராய்ச்சியில் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியை திரு. வி. கனகசபைப்பிள்ளை தொடக்கி வைத்தார். ஆறுமுக நாவலரால் கால்கோள் கொள்ளப்பட்ட தமிழ் நு}ற்பதிப்புப்பணி சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களால் வளமாக வளர்க்கப்பட்ட பின்னரே. சாமிநாதஐயர் தன் பணியைத் தொடர்ந்தார். அப்படியே மொழி நு}லாராய்ச்சியினால் ஞானப்பிரகாசர், சபாபதி நாவலர் ஆகியோர் பணிகள், கலைக் களஞ்சிய ஆக்கத்திலும் இலங்கை முன்னோடியாக இருக்கிறது. திரு மூத்ததம்பிப்பிள்ளை அவர்களே முதன் முதலில் கலைக்களஞ்சியத்தை தமிழில் வெளியிட்டார். இவற்றை எண்ணியே பம்பல் சம்பந்த முதலியார் தமிழ் இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நு}ற்றாண்டு இலங்கைக்கே உரியது என்று கூறியுள்ளார். இவற்றைப் பல கோணங்களிலும் ஆராய்ந்து வெளிப்படுத்த இது நல்லதருணம்.

நாட்டுக்கூத்து முதலான கிராமியக் கலைகள், கிராமியப் பாடல்கள் முதலியவற்றில் காணப்படும் இலங்கையின் தனித்துவம் வெளிப்படுத்தப்பட வேண்டும். சிறுகதை, நாவல், கவிதை. காவியம் முதலான ஆக்க இலக்கியங்களின் வளர்ச்சிக்கு இலங்கை செய்துள்ள பணிகள், இவற்றில் இலங்கை முஸ்ஸிம்களின் கணிசமான பங்கு தெளிவாக விளக்கப்படுதல் வேண்டும்.

வரலாறு:

தென் இந்தியாவுக்கும், இலங்கையின் வட பகுதிக்குமிடையில் உள்ள பாதுகாப்பான கடற்பகுதி கப்பற்போக்குவரத்துக்கு மிகஏதுவாக இருந்து வந்தது வரலாற்று உண்மை. இதனால் வடபகுதித் துறைமுகங்கள் வணிகத்துறையிலும், வெளிநாட்டுத் தொடர்பிலும் மிக முன்னணியில் இருந்திருக்கின்றன. வெளிநாட்டு வணிகக்கப்பல்கள் அரசிறை செலுத்திச் சென்றன. அவற்றைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டும், பாதுகாப்பின் பொருட்டும் பல காவற்கோட்டைகளும் வடபகுதியில் கட்டப்பட்டன. இலங்கையின் போக்குவரத்து எல்லாம் வட பகுதியினு}டாக நடந்திருக்கின்றன. சம்பத்துறை, திருவடிநிலை, கந்தரோடை, வல்லிபுரம், காங்கேசந்துறை போன்ற துறைமுகங்கள் மிக முக்கிய இடங்களை வகித்துள்ளன. இந்தக் கருத்தையே அதி மாண்புமிகு இந்திய ஜனாதிபதி திரு. வி. வி. கிரி அவர்களும் இவ்வாண்டு யாழ்ப்பாண வரவேற்பின் போது குறிப்பிட்டார். வணிகத்தொடர்புகளாலும், மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் வரலாற்றில் இவை மிகமுக்கிய இடம் வகிக்கின்றன. சம்புத்துறை, திருவடிநிலை, கீரிமலை, வல்லிபுரம், கந்தரோடை, நயினாதீவு, வன்னிநாடு போன்ற இடங்கள் நடுநிலைமையான அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப் படவேண்டும். இப்பகுதிகளின் வரலாற்றுப் புகழ் எங்கும் பரவ வேண்டும். கிரேக்க, ரோம, சீன வணிகத் தொடர்புகளுக்கான சின்னங்கள் நிறைய உண்டு. அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் புராதன வரலாற்றின் தன்மையும் உண்மைப்பாடும் ஆராய்ச்சிமூலம் நிறுவப்படவேண்டும்.

போர்முறை:

இலங்கையில் நடந்த போர்கள் வெளிநாட்டார் தாக்குதல்கள் தாம் - அதாவது தமிழ் நாட்டிலிருந்து வந்த படைகளின் தாக்குதல்கள் என்ற தப்பான கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது அம்பலப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் போரிட்ட அரசர்கள் யார்? அவர்கள் மூதாதையர்கள் யார்? அவர்கள் போரிடுவதற்கு இருதரப்பிலும் தமிழ்நாட்டு வீரர்களையே போர் வீரர்களாக வைத்திருந்தனர். கண்டிய அரசன் ஆங்கிலேயருடன் நடத்திய இறுதிப்போரிலும் பங்குகொள்ள 400 வீரர்கள் தமிழ் நாட்டிலிருந்து கண்டிக்கு கடத்தப்பட்டார்கள். இலங்கையின் கரையோரங்களில் பாதுகாப்புக்காகத் தமிழ் வீரர்கள் அமர்த்தப்பட்டார்கள். மாத்தறை முதல் கொழும்பு வரை தென்கரையிலும், சிலாபம் முதல் கொழும்புவரை மேல்கரையிலும் உள்ள மக்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும்;. இன்று சிங்களவர்களாக மாறிவிட்ட இவர்களைப்பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் நன்கு ஆராய்ந்துள்ளார். இவை மேலும் ஆராயப்பட வேண்டியவை.

கலாசார உறவு:

இலங்கையிலுள்ள சிங்களமக்கள் ஐம்பெரும் விழாக்கள் என்று கொண்டாடும் அலுத்சால் மங்கல்ய, புத்தாண்டு, வெசாக், கண்டிப் பெரஹர, கார்த்திகா மங்களய ஆகியவை முறையே தைப்பொங்கல், தமிழர் புத்தாண்டு சித்திரைப் பூரணை, கண்டி வேலவன் திருவிழா, கார்த்திகைத் திருநாள் என்னும் தமிழர் திருநாள்களுடன் ஒத்திருப்பதை யாருமே மறுக்க முடியாது.

அடிப்படையில் இருக்கும் இந்த ஒற்றுமைக்கு அடிப்படையான ஒரு கலாசார உறவு இருப்பதை எண்ணிப் பார்க்கையில் திராவிடப்பண்பு இழையோடியிருப்பதை ஏற்கவேண்டும். இது ஆராய்ச்சி மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

கட்டடடக்கலை, கலையுறவு

இலங்கையின் கட்டடக்கலை வளர்ச்சியை ஆராய்ந்து பார்த்தால் திராவிடப்பண்பு பல துறைகளில் ஊடுருவி நிற்பதை சிற்பக்கலை வல்லுனர்கள் ஏற்றுள்ளனர். களனிப் பௌத்த கோவிலில் திராவிடப் பண்பு இழைத்திருக்கிறது. கண்டியில் இதற்கான முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன. கண்டியிலுள்ள எம்பெக்கை தேவாலயம், கடல்தெனியா விகாரை, இலங்காதிலக விகாரை, ஆகிய மூன்றும், மூன்று மைல்களுக்குட்பட்ட சுற்றளவில் உள்ளன. எம்பெக்கை தேவாலயம் முழுத்திராவிடப் பண்பு கலந்ததாகவும் ஏனையவை ஓரளவு கலந்தவையாகவும் இருக்கின்றன. இதேபோன்று அனுராதபுரம் பொலனறுவையிலும் திராவிடப் பண்புள்ள கட்டடங்கள் உள்ளன.

சிங்களத்தில் திராவிடம்

சிங்கள மொழி இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ் எவ்வளவு து}ரம் உதவியுள்ளது என்பதும் மிக நுணுகி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். காலஞ்சென்ற முதலியார் டபிள்யூ. எவ். குணவர்த்தனா அவர்கள் திராவிடத்தின் கிளையே சிங்களம் என்;று வலியுறுத்தி இருக்கிறார். இந்தக் கருத்தை இன்று அறிஞர் சாள்ஸ் சில்வா அவர்கள் முழுமனதாக ஏற்றுள்ளார். அதேபோல இந்த ஆராய்ச்சியில் கலாநிதிப் பட்டம் பெற்ற இலங்கைப் பல்கலைக்கழக சிங்கள விரிவுரையாளர் கலாநிதி எம். ஹேவவாசம் பீட்டர் சில்வா அவர்களும் ஏற்றுவருகிறார். அவரது ஆராய்ச்சி மிக நுணுக்கமானது@ விஞ்ஞான ரீதியானது.

புராதன கல்வெட்டில் தமிழ்:

இலங்கையின் மிகப் புராதன கல்வெட்டுகளில் கி. மு. 2-ம் நு}ற்றாண்டு முதல் கி. பி. 2-ம் நு}ற்றாண்டுவரை உள்ள கல்வெட்டுகளில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. ‘பெருமகன்’, ‘வேலு’, ‘மருமகன்’, ‘ஆசிரியன்’, ‘வணிகன்’, ‘திராவிடன்’ போன்ற சொற்கள் காணப்படுகின்றன. செல்வாக்குப் பெறாத ஒரு மொழியின் சொற்கள் இடம்பெற இடமேயில்லை. இவற்றின் செல்வாக்கு நிலைக்கான காரணங்களை ஆராய வேண்டும்.

பிராமிக் கல்வெட்டுகள்:

அத்துடன் பிராமிக் கல்வெட்டுகள் சரியானமுறையில் விமர்ச்சிக்கப்பட்டுள்ளனவா வென்பதும் ஆராயப்பட வேண்டும். இலங்கையில் வழக்கிலிருந்தது தென்பாணிப் பிராமிக் கல்வெட்டுக்கள். இதே வகைதான் தமிழ் நாட்டிலும் இருந்தது. இதைத் திராவிடை (னுசயஎனை) என்றழைப்பர். மகிந்தன் வருகையைத் தொடர்ந்து அசோக பாணிக்கு மாறிய இந்தக் கல்வெட்டுகள் கி. பி. முதலாம் நு}ற்றாண்டில்தான் முற்றாக அசோக பாணிக்கு மாறின. எனவே தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இருந்ததொடர்பும் ஒருமைப்பாடும் ஆராயப்பட வேண்டியதே. இவற்றில் உள்ள தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையையும், செல்வாக்கையும் கணிப்பி (ஊழஅpரவநச) எந்திரத்தின் உதவியுடன் அளவிடலாம்.

அரச பீடத்தில் தமிழ்

இலங்கை அரசபீடத்தில் தமிழ்பெற்ற இடங்களை சாசன ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டவும் இது நல்ல சந்தர்ப்பம். காலந்தோறும் நிலவிய அரசுகளில் தமிழ் பெற்ற இடத்தை ஆராய்ந்து வெளியிட வேண்டியது மிக அவசியம். புவனேகபாகு, ஸ்ரீவிக்கிரமராஜசிங்க முதலான அரசர்கள் ஒப்பந்தங்களில் கூட தமிழில் ஒப்பமிட்டுள்ளனர்.

பொன் பரப்பி கேதீஸ்வரம்

மண்தாழியிலிட்டு புதைக்கும் ஈமக்கிரியை முறை சங்ககாலத்திலிருந்தே திராவிட நாகரிகமாக இருந்துள்ளது. இந்த நாகரிகத்தின் அழிபாடுகள் பொன்பரப்பியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் ஆதித்த நல்லு}ரில் இந்நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் மிக நெருங்கிய ஒருமைப்பாடு உண்டு. அதே போல கிரேக்க ரோம வணிகத்தின் அழிபாடுகள் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதே நாகரிகம் தமிழ் நாட்டில் அரிக்கன்மேட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவையும் ஒரேமாதிரியான நாகரிகங்களே.

அனுராதபுரத்திலும், கந்தரோடையிலும், வல்லிபுரக் கோவிலடியிலும் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட சின்னங்கள், காசுகள் முதலியன கிரேக்க – ரோம வணிகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துகின்றன. அரிக்கன்மேடு – கேதீஸ்வர கலாசாரத்தை இவை ஒத்திருக்கின்றன.

மண்தாழியிலிட்டுப் புதைக்கும் ஈமக்கிரியை முறையை ஆதித்த நல்லு}ர் – பொன்பரப்பி நாகரிகங்கள் வலியுறுத்துவதைப் போலவே தபோவ, அம்பலாந்தோட்டை முதலான இடங்களில் காணப்படும் அழிபாடுகளும் வலியுறுத்துகின்றன.

குளக்கட்டு நாகரிகம்:

குளக்கட்டு நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை தமிழக அகழ்வாராய்ச்சி நிறுவியுள்ளது. இலங்கையில் வன்னியிலும் அனுராதபுர மாவட்டத்திலும் ஏனைய இடங்களிலும் காணப்படும் நாகரிகங்கள் இவற்றை நினைவுபடுத்துகின்றன.

இலங்கையின் வடக்கில் இருந்த துறைமுகங்கள் யாவும் வெளிநாட்டு வாணிகத்தில் ஈடுபட்டிருந்தன. கரையோரம் முழுவதும் வணிகமயமாக இருந்தன. இதனால் வன்னிநாடு, அனுராதபுரப்பகுதி உட்பட உணவுற்பத்தியில் ஈடுபட்டன. இதற்கு ஆதாரமாகக் குளங்கள் ஏராளமாகக் கட்டப்பட்டன.

நாக கலாசாரம்:

இலங்கையின் ஆதிக்குடிகள் நாகர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்;ட முடிவு. நாககலாசாரம் தென் கிழக்காசியாவில் பரவியிருந்தது. நாகர் என்போர் நாக வணக்கத்தைக் கைக்கொண்டிருந்த திராவிடர் என்றும் நம்பப்படுகிறது. இலங்கையின் வடபகுதி முழுவதும் இந்த நாகரிகத்தின் அழிபாடுகள் நிறைய உண்டு. ஈழநாகர்கள் தமிழ்ச் சங்கப் புலவர்களாகவும் இருந்திருக்கின்றனர். தென் இலங்கையில் எம்பிலிப்பிட்டியாவிலுள்ள உடவளவையில் கண்டு பிடிக்கப்பட்ட ஐந்து தலை, நாகக்கல்லு திராவிட நாகரிகத்தை நினைவூட்டுகின்றது.

தழுவல் இலக்கியங்கள்:

சிங்களத்தில் முதன்முதலில் வசனநு}லை எழுதிப் பெருமையடைந்தவர் முதலியார் நமசிவாயம் என்பதை கலாநிதி ஈ. ஆர். சரச்சந்திரா குறிப்பிட்டுள்ளார். சந்தேச காவியங்கள் எனப்படும் து}துகாவியங்கள் தமிழ்த் து}து இலக்கியங்களின் தழுவல்களே. இவைபற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டும்.

சிங்கள நீதி முறைகள்:

சிங்கள நீதி முறைகள், உடமை உரிமைமுறைகள், இன முறைகள், பரம்பரை உரிமைகள் முதலியன யாவும் தமிழ் முறையை ஒத்துள்ளன. கண்டிய நீதி நிர்வாகம் தமிழ் நீதி முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவை ஆராயப்பட வேண்டும்.

சிங்கள கலைகள்:

சிங்களக்கலை வளர்ச்சிக்குத் திராவிடக் கலைகள் அடித்தளமாய் அமைந்திருப்பதுடன் ஆக்கமும் தந்துள்ளன என்று சிங்களக் கலையுலகின் விடிவெள்ளியான கலாநிதி ஈ. ஆர். சரச்சந்திரா கூறுகிறார்.

பொம்மலாட்டம், கண்டிய நடனம் முதலானவை திரவிடக் கலைகளை நினைவூட்டுகின்றன.

சமய ஆசாரம்:

பௌத்த பள்ளிகள் அனைத்திலும் இந்து தெய்வங்களை – பிள்ளையார், விஷ்ணு, முருகன், சரஸ்வதி முதலான தெய்வங்களை வைத்து வணங்கி வருகிறார்கள். பௌத்தமதம் இங்கு ஏற்கப்பட்ட பின்னர், பௌத்தம் தழுவியே இந்து அரசர்கள் அரசபீடம் ஏறினர். பௌத்தத்தை ஏற்ற அரசர்களும் பாண்டிய இளவரசியரை மணம் செய்து வாழ்ந்தனர். அரசிகள் இந்துக்களாகவே இருந்தனர். எனவே இந்த ஒற்றுமை இற்றைநாள் வரை நீடித்துள்ளது. தேவநம்பியதீசனின் பாட்டன் பாண்டுகன் அபயன் சிறந்த சிவநேசச் செம்மலாக வாழ்ந்தான் என்பது நினைவு கூரத்தக்கது.

சிங்கள இனம்:

தேவநம்பியதீசன் முதன்முதலில் பௌத்தம் தழுவிய அரசனாவான். தீசன் என்ற பெயருடன் திராவிடர்களும் இருந்திருக்கிறார்கள். தேவநம்பிய என்பது சிறந்த பௌத்தர்களுக்கு அசோகன் வழங்கிய பட்டம். தீசன் தம்பியின் பெயர் உதியன். உதியன் சேர மன்னர் பெயர். எனவே தேவநம்பியதீசன் சேரமன்னனாக இருந்திருக் முடியுமா? மூத்த சிவன், சிவகுட்டகன் போன்ற பெயருடன் முன்னைய அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் திராவிடர்களாக இருந்திருக்க முடியுமா? பாண்டிய அரச பரம்பரையுடன் நெருங்கிய உறவு பூண்டதாலும், தமிழ்நாட்டுப் போர்வீரர்களைப் போர்க்காலங்களில் அடிக்கடி அழைத்ததாலும், தமிழ்க்கலைஞர்களை – கொல்லர், பொற்கொல்லர், சிற்பிகள், ஓவியர்கள் முதலான பல்வகைக் கலைஞர்களை – அழைத்ததாலும் திராவிடக் கலப்பு சிங்கள இனத்தில் அதிகமாகக் காணப்படுவதை மறுக்க முடியாது. இவை ஆதார ரீதியாக விளக்கப்பட வேண்டும். அம்பாந்தோட்டை. திசமகராம. கதிர்காமப் பகுதியில் திராவிட நாகரிகம் பரவியதற்கான சான்றுகள் உண்டு. மாத்தறை என்ற நகரம் “மாத்தறை” என்பதன் திரிபு என்பது அறிஞர் கருத்து. இவற்றை சரிவர ஆராய்ந்தால் பல புதிய உண்மைகள் புலப்படும்

தமிழின் தொன்மை:

இலங்கைத் திருநாட்டில் வழங்கிவரும் தமிழ் மிகத் தொன்மை வாய்ந்தது. தொல்காப்பிய இலக்கண அமைதிக் குட்பட்ட சொற்கள், சொற்றொடர்கள் இன்றும் இன்னும் யாழ்ப்பாணத் தமிழில் சாதாரணவழக்கில் உள்ளன. கலித்தொகையில் காணப்படும் சொல்வழக்கு இன்றும் மட்டக்களப்பில் சாதாரண வழக்கில் உள்ளது. எனவே ஈழத்துத் தமிழ் மிகத் தொன்மைவாய்ந்தது. இது விரிவாக ஆராயப்பட வேண்டும்.

தமிழின் முக்கியத்துவம்:

மிகப் பழைய கல்வெட்டுகளில் இடம்பெற்ற தமிழ் மேற்கத்திய வல்லரசுகள் வருகைவரை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலியிலுள்ள 15ம் நு}ற்றாண்டுக் கல்வெட்டில் தமிழ் பேர்சியன்மொழி (அரபுவகை) சீனம் ஆகிய மூன்று மொழிகளுமே இடம்பெற்றுள்ளன. இது தெய்வேந்திரமுனை விஷ்ணுகோவில் சம்பந்தப்பட்டது. 16ம் நு}ற்றாண்டுக் கவிஞர் அழகிய வண்ணன் ஒரு சந்தேச காவியத்தை சிங்கள மொழியில் மொழிபெயர்த்த காரணத்தைக் கூறுகையில் தமிழ், சமஸ்கிருதம், பாளி ஆகிய வளமான மொழிகளை அறியாத படிப்பற்றவர்களுக்காக சிங்களத்தில் மொழிபெயர்த்ததாகக் கூறுகின்றார் எனவே காலந்தோறும் இலங்கையில் தமிழ் வகித்த செல்வாக்கான இடத்தை ஆராய வேண்டும்.

யாழ்ப்பாண அரசு:

யாழ்ப்பாண அரசு என்ற பெயருடன் ஒரு அரசு இலங்கையில் கி. பி. 10 ஆம் நு}ற்றாண்டு மட்டில் ஆரியச் சக்கரவர்த்திகளால் ஆரம்பிக்கப்பட்டது என்ற கருத்தை கலாநிதிகள் கா. இந்திரபாலா, சி. பத்மநாதன் ஆகியோர் கூறுவர். அதற்கு முன்பு இருந்த அரசுகள் சிங்கள அரசுகள் எனப் பெயர் பெற்றிருப்பினும் அவர்கள் மூதாதையர்கள் யார்? அரசிகள் யார்? சிவன், மூத்தசிவன், சிவகுட்டகன் எல்லோரும் சிங்களவரா? கி. பி. 10ம் நு}ற்றாண்டிலிருந்து பெற்றவளர்ச்சியின் பின்னர் சிங்களம் என அடையாளம் காட்டப்பட்ட மொழி, அதற்கு முன்பு இருந்த நிலையில் சிங்களமாகவே இருந்தா? அதில் திராவிடக்கலப்பு, திராவிட அடித்தளம் இருக்கவில்லையா, அப்படியானால் 10ம் நு}ற்றாண்டிலிருந்து ஏற்பட்ட திரிபு சிங்களமொழி என்ற மொழிப்பிரிவுக்கு வித்திட்டதா? இவை தெளிவாக்கப்படல் வேண்டும். இதுவரை விமர்சிக்கப்பட்ட கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி முடிபுகளை வைத்து முடிவுகூறுவது சரியாயினும், ஆராயப்படாதவற்றை முற்றாக ஒதுக்கி இறுதி முடிவு கூறுவதும் தற்கால ஆராய்ச்சிக்கு நன்றன்று.

இலங்கை திராவிட நாடா?

இலங்கையில் இராமாயணச் சான்றுகள் குறித்து ஆராய்ச்சி செய்ய – அகழ்வாராய்ச்சி – சில அறிஞர்கள் முனைந்துள்ளனர். இந்த முடிவுகள் முக்கியமான வையாக அமையலாம். ஒரு காலத்தில் இந்திய துணைக் கண்டத்தின் தென்பகுதியிலிருந்து கடலாற் பிரிக்கப்பட்ட இலங்கை, பௌத்த மதச் செல்வாக்கு அதிகரித்ததன் விளைவாக, சமஸ்கிருதம், பாளி முதலிய மொழிகளுக்கு ஆட்பட்டுச் சிதைந்து, சிங்களம் என்ற மொழியை உருவாக்கி, அதன்வழி சிங்கள மக்களையும் உருவாக்கியதா? மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்ற வரிசையில் சிங்களமும் சேருமா? இது ஆராய்ச்சி மூலம் தெளிவு படுத்தப்பட வேண்டும். நிச்சயமாக இலங்கைத் தமிழர்கள் வந்தேறு குடிகளல்ல. அவர்கள் பரம்பரைக் குடிகள்.

ஆகமொத்தத்தில் பார்க்குமிடத்து இலங்கையில் பார்க்கும் துறையனைத்திலும் நீக்கமற விரவிப் பரவி இழையோடி இருக்கிறது திராவிட நாகரிகம். இவற்றை தற்கால ஆராய்ச்சி முறைப்படி ஆராய்ந்து காட்டவேண்டும். பயிற்றிப்பயிற்றி புராணங்களையும் இலக்கியங்களையும் ஆதாரம் காட்டுவதால் பயனில்லை. நல்ல முறையில் இந்த ஆராய்ச்சி மாநாடும் கருத்தரங்கும் நடந்து முடிய நாம் நல்ல முறையில் முயற்சி செய்ய வேண்டும்.









எமது பிறவெளியீடு;:

செந்தமிழ்ச்செம்மல் நா. கதிரைவேற்பிள்ளை
விலை ரூபா 1-50



ஊழியன் அச்சகம், பருத்தித்துறை.