கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  புது முறைச் சரித்திரம்
G.C.E பகுதி II
 
 

நாராந்தனை
ஆ. சபாரத்தினம் B.A. (Cey.)

 

புது முறைச் சரித்திரம்

G.C.E

பகுதி II

(கி.பி. 1453 -கி.பி. 1796)

இலங்கைக் கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சாதாரணதர)ப் பரீட்சைக்குரிய திருத்தப்பட்ட பாடத்திட்டத்துக்கமைய எழுதப்பட்டது.

அடங்கன் II

ஆசிரியர்:
நாராந்தனை
ஆ. சபாரத்தினம் B.A. (Cey.)
1st Class Trained (English)



கலைவாணி புத்தக நிலையம்
யாழ்ப்பாணம் -- கண்டி
பதிப்புரிமை] 1968 [விலை: ரூபா 600

+++++++++++++++++++++++

பதிப்புரை

மாணவர்களின் தேவையை உடன் பூர்த்தி செய்யவேண்டுமென்று வேணவாக்கொண்ட நாம் கல்விப்பகுதியினரின் க. பொ. த. வகுப்பு சரித்திர பாடத் திட்டத்தின் பகுதி II-க்கு அடங்கன் I ஆக மிக விரைவில் வெளியிட்டுக் கல்விக்கழகங்களிலிருந்து பாராட்டுதல்கள் பெற்றுள்ளோம் என்பதை மகிழச்சியுடன் அறியத்தருகின்றோம். இலங்கைக் கல்விப்பகுதியின் பொதுத்தராதரப் பரீட்சைக்கென எழுதப்பட்ட சரித்திரநூல், மாணவர் பரீட்சையில் விசேட சித்திபெறப்பேருதவி புரிகின்றது. எமது அடங்கன் I-க்கு நல்லாதரவு தந்து பேரூக்கம் அளித்த கல்வியுலகிற்கு நன்றிக்கடனுடன் அடங்கன் II யும் சமர்ப்பித்து ஆதரவை வேண்டி நிற்கிறோம்.

மாணவர்களுக்கு எதுவித இடர்ப்பாடுமின்றி இலகுவில் நாட்டம் கொள்ளும் முறையில் இந்நூலை எழுதியுதவிய சரித்திர ஆசிரியர் திரு. ஆ.சபாரத்தினம் அவர்களின் அயாராதமுயற்சிக்கு எமது மாறாக் கடப்பாடும் நன்றியும் என்றும் உரித்தாகுக. இந்நூலில் பொருத்தமான இடங்களில் பரவிக்கிடக்கும் ஆராய்ச்சிக் குறிப்புக்கள், சிறந்தவிளக்கப்படங்கள், தக்க சான்றோடு இணைக்கப்பட்டிருக்கும் முக்கிய அனுபந்தங்கள் யாவும் ஆசிரியர் சரித்திரப்பாடத்தில் ஊன்றித்திளைத்தவர் என்பது நாம் கூறாமலே விளங்கும். கடந்தகாலப்பரீட்சை வினாக்களை அச்சிட அன்பான அனுமதியளித்த இலங்கைப் பரீட்சைப் பகுதியினருக்கு எமது நன்றி.

எமது அடங்கன் I-க்கு அமோக ஆதரவு தந்து பேரூக்கமளித்த ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள் யாபேருக்கும் பணிவான நன்றி உரித்தாகுக. தொடர்ந்து அடங்கன் II-யும் ஆதரித்து கண்ணுறும் வழுக்களை உடனுக்குடன் சுட்டிக் காட்டுவார்களானால் நன்றியுடன் வரவேற்று, அடுத்த பதிப்பைச் சீருற வெளியிடுவோமென்பதை உறுதி கூறுகின்றோம்.
யாழ்ப்பாணம்,

கலைவாணி பதிப்பகத்தார்

+++++++++++++++++++++++

முகவுரை

அடங்கன் I ஓராண்டுக்குள் இருபதிப்புகள் வெளியிட வேண்டிய அளவுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் அதனை ஆதரித்தமையால் மிகுந்த உற்சாகம் அடைந்தோம். எனினும், சென்ற ஆண்டே அச்சியற்றத் தொடங்கியும் , பல காரணங்களால் அடங்கன் II வெளிவரத் தாமதமாயிற்று. எம்மை ஆதரித்தோர் பலர் வற்புறுத்தியமையால், இதில் திருத்தத்துக்கு இடமுண்டு என உணர்ந்தும் விரைவில் வெளியிடுகிறோம்.

உலக வரலாற்றை எழுதுவதற்கு ஏற்ற மூல நூல்களும், முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க அரியபாடநூல்களும் பல உளவாதலின் அடங்கன் I விரைவில் எழுதப்பட்டது. ஆனால் துரதிருஸ்ட வசமாக அத்தகைய வாய்ப்பு இலங்கை வரலாற்றை எழுதுவதற்கு இல்லை. அதிலும் “போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிக்காலம்” எனப்படும். 1500--1800 காலப் பகுதிக்குரிய ஆராய்ச்சி நூல்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. வெளிவந்தவற்றுட் பல கிடைத்தற்கு அரியனவாயுள்ளன. சமீபகாலத்தில் வெளிவந்த மூன்று நூல்கள் பேராசிரியர் கார்ள். குணவர்த்தனா, கலாநிதிகள் அரசரத்தினம், திகிரி அபயசிங்கா ஆகியோர் எழுதியவை--தற்கால ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டயுள்ளன. எனினும் அவை துலக்கும் காலப்பகுதி மிகக்குறுகியது. போத்துகேய டச்சு மொழியறிவின்றிப் பாடநூல் எழுதப் புகும் நாம் அவற்றைக் கற்று ஆராட்சி நூல்களை வெளியிட்டோரின் கருத்துக்களை எடுத்துக்காட்டுவதுடன் அமைந்து விடவேண்டியுள்ளது. புதிதாக ஆராய்ச்சி செய்து எழுத இயலாத நிலையில் உள்ளோம். அவர்களது கருத்துக்கள் ஆங்கில மொழியில் இருப்பதாலும் அவற்றை மாணவர்கள் வாசித்து அறிதற்கு வேண்டிய மொழியறிவு இன்றியிருப்பதாலும் அவற்றை இங்கு தருதல் பயனுள்ளசெயலே எனக்கருதுகிறோம். முக்கியமாக இம்ழூன்றுநூலாசிரியர் கட்கும் நாம் பெரிதும் கடன் பட்டுள்ளோம். போத்துக்கேயர் கால நீதிபரிபாலனமுறை பற்றித் தம்கருத்தை எழுதிய கலாநிதி திகிரிஅபயசிங்கவுக்கும் நாம் விசேட கடப்பாடு உடையோம்.

பழைய வரலாற்று நூல்களைக் கற்றவர்கள் இதில் காணப்படும் கருத்துக்கள் புரட்சிகரமானவை. ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையில் ஊறியவை. ஏகாதிபத்திய வெறியரின் மதத்துக்கு எதிரானவை எனக் கருதுவர். ஆனால் இக்கருத்துக்கள் துவேஷ மனப்பன்மையுடன் எழுதப்பட்டவை அல்ல: சான்றுகள் இல்லாதவை ஒன்றும் இங்கு கூறப்படவில்லை என அவர்களுக்கு உறுதி கூறுகிறோம். இவற்றுக்கு மாறான சான்றுகள் இருப்பின் அவை வேண்டுமென்று விடப்பட்டவை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வழக்கம்போல எமது மாணவன் திரு.ஆ.சு.எமிலியானஸ் இதில் வெளிவந்த புதிய படங்களை வரைந்து தந்தார். அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

புதிய பாடத்திட்டதின் கீழ் வெளிவந்த வினாப்பத்திரங்கள் மூன்றிலிருந்தும் பகுதி ஐஐ க்குரியவை நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆண்டுகளாக வந்த பரீட்சை வினாக்கள் அனைத்தும் அவ்வப்பாடங்களினிறுதியில் தரப்பட்ட ஆண்டுகளுடன் வந்துள்ளன. அவை பரீட்சைக்கு ஆயத்தம் செய்யப் பெரிதும் பயன்படும் என நம்புகின்றோம். இவையனைத்தையும் இந்நூலில் வெளியிட அனுமதி தந்த பரீட்சைப் பகுதியினருக்கு எமது மனமார்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முதலாண்டில் அடங்கன் ஐ-டில் பன்னிரண்டு பாடங்கள் படித்தபின் இதில் ஐந்து பாடங்களைப் படிக்கலாம். அடுத்த ஆண்டில் அடங்கன் ஐ-ஐ முடித்த பின் இதிலுள்ள மீதிப் பாடங்களைப் படிக்கலாம்.

கரம்பன்,
ஊர்காவற்றுறை,
ஆ. சபாரத்தினம்
15-5-67.

+++++++++++++++++++++++

பொருளடக்கம்
முதலாம் பாகம்
அரசியல் வரலாறு
அத்தியாயம்;
1. பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் நிலை
1. அரசியல் நிலை-அரசியல் பிரிவுகள்:
(அ) கோட்டை அரசு
(ஆ) யாழ்ப்பாண அரசு 5
(இ) கண்டி அரசு 6
ஆட்சி முறை: மாகாண, கிராம நிர்வாகம்-நில உடமை-நீதி பரிபாலனம் 7-9
2. பொருளாதார நிலை - விவசாயம் 9, வாணிகம் 10
3. சமூகநிலை-சாதியாசாரம், சமயம், மொழி, பண்பாடு 11

2. கோட்டை அரசின் வீழ்ச்சி
காலப்பிரிவு:-
1. கோட்டையரசு போர்த்துக்கேயருடன் வணிகத்தொடர்பு கொள்ளல்(1505-1524) 15-22
2. கோட்டையரசு போத்துக்கேயரை நண்பர்களாகக் கொள்ளல் (1524-1551) 23-35
3. கோட்டையரசு போத்துக்கேயரின் பாதுகாப்பின் கீழ்வருதல் 35-41
4. போத்துக்கேயர் ஆட்சி உரிமைப் பிரகடனம் - “மல்வானை மகாநாடு” உண்மையில் நிகழ்ந்ததா? 41-55
5. கோட்டையரசின் வீழ்ச்சிக்குரிய காரணங்கள் 45-50
(அ) அரசியல் 40
(ஆ) பொருளாதாரம் 47
(இ) யுத்த முறைகள் 48
(ஈ) கடற்படையின்மை 49

3. சீதாவாக்கையின் தோற்றமும் மறைவும்
(1521-1592)
ஆரம்பம் - போத்துக்கேயரை எதிர்த்தலும் பின் ஆதரித்தலும் 51-52- இராஜசிங்கனின் இளமைக்காலப் போர்கள் 53-54- கோட்டையைக் கைப்பற்றல் (1565) -56- போத்துக்கேயரின் கொடுமைகள் - மலையாளத்தாருடன் கூட்டுச் சேருதல் 57 - தர்மபாலனைக் கொல்லச்சதி - இராஜசிங்கன் இளவரசுப் பட்டம் பெறல் 58-கொழும்பு முற்றுக்கை (1574-81) 59-இராஜசிங்கன் கண்டியைக் கைப்பற்றல் (1882) 59 - 60 கொழும்புப் பெருமுற்றுகை (1587-88) 61- கலகங்களும் இராஜசிங்கன் முடிவும் 62-63- இராஜசிங்கனுக்குப்பின் நிகழ்ந்தவை 65 - கோட்டையரசின் வம்சாவழி 66

4. யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி
16-ம் நூற்றாண்டுக்கு முந்திய நிலை - சங்கிலி செகராசசிங்கனாட்சி 68 - போத்துக்கேயர் தலையீடு - மதமாற்ற முயற்சிகள் 69- மன்னாரில் நிகழ்ந்தவை 70 - மத்திலும் பொன்னே முக்கியம் 72- அரசியற் சூழ்ச்சிகள் 73- வீதியபண்டாரனுக்கு ஆதரவு அளித்தல் 74- பழிவாங்குபடலம் - 1560-ம் ஆண்டுப்போர் 75 - 1591-ம் ஆண்டுப்போர் 77- “நல்லூர் மாகாநாடு”(?) 79-எதிர் மன்னசிங்கன் -தஞ்சை நாயக்கர் தலையீடு 80- சங்கிலி குமாரன் முடிவு 81- பின் இணைப்பு: தஞ்சை நாயக்கரும் யாழ்பாண அரசும் 82 - யாழ்பாண மன்னர் வம்சாவளி 85

5. கண்டி அரசும் போர்த்துக்கேயரும்
மாயாதுன்னை தலையீடு 87 - விக்கிரமபாகு போர்துக்கேயர் உதவியை நாடல் 88 - சௌசா வருகை (1546) 88- பறெற்றே வருகை - (1447)89 - கரலியட்டபண்டாரன் மரணம் 89 - கண்டியைக் கைப்பற்றும் திட்டம் (1594) - சொளசாவின் படையெடுப்பு 90 -போத்துக்கேயர் பேரழிவு - தாழ்பூமியிற் புரட்சி 92 - அஸெவெடோ வருகை - புரட்சிகாரரை அடக்குதல் 93- கண்டி மீது படையெடுப்பு 95- மீண்டும் படையெடுப்பு (1602) - சூழ்சிகள் 97 - டச்சுக்காரர் வருகை - விமலதர்மசூரியன் அவர்கள் உதவியை நாடுதல் 97-99 - அந்தோனியோ பறெற்றே அரன் பக்கஞ் சார்தல் 99 - டீ வீர்த் - டச்சுகாரர் தொடர்பு அறுதல் 100 - விமலதர்மசூரியன் - சேனரதன் அரசனாதல் 101 - அஸெவெடோவின் போர் வெறி 103 - அவனது ஆட்சின் இறுதிக்காலம்: டச்சு - தேனியத் தொடர்பு 104 - அஸெவெடோவுக்குப் பின் வந்தோர்: டீசா: ஹோமம் தோம்புகள் எழுதுவித்தல் 105- திருகோணமலையிற் கோட்டை 106- கண்டியின் மீது படையெடுப்பு(1629) 107- ஊவாவின்மீது படை யெடுப்பு- டீசா மரணம் 109- சேனரதன் மரணம் - 2-ம் இராஜசிங்கனின் ஆட்;;சி ஆரம்பம் -(1635) 111 போர்த்துக்கேயர் கண்டியைக் கைப்பற்ற முடியாமைக்குக் காரணங்கள்: மக்கள் விடுதலை உணர்ச்சி 112 - இயற்கை அரண்கள் 113- சிங்களக் கூலிப்படை பக்கம் மாறுதல் 115- போத்துக்கேயரின் வலி குன்றியமை 116

6. இரண்டாம் இராஜசிங்கனும் ஒல்லாந்தரும்

முதற் பருவம் 118-132
(அ) 1635-1644 - ஒல்லாந்தரின் உதவியை நாடல் 118- போத்துக்கேயர் பெருந்தோல்வி -மட்டக்களப்பு வீழ்ச்சி 119- டச்சுக்காரருடன் முதல் ஒப்பந்தம் 120- மூன்று அரசுகள் போட்டி 121- திருகோணமலை வீழ்ச்சி 122- நீர்கொழும்பு வீழ்ச்சி 123- காலி வீழ்ச்சி - ஒல்லாந்தருடன் பூசல் 125- “போத்துக்கேய-ஒல்லாந்த உறவு” 127

(ஆ) 1644-1652 - இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் போர் 127-ஒப்பந்தம் திருத்தப்படல் - 1649-128

(இ) 1652-1656 - மீண்டும் போர் தொடங்கல் 129- கொழும்பு வீழ்ச்சி - இராஜசிங்கன் தடுக்கப்படல் 130

இரண்டாம் பருவம் 132-168


(அ) 1658-1664 டச்சுக்காரர் ஆழும் உரிமை பெற முயற்சிகள் 132- வான் கோயன்ஸின் புதிய கொள்கை 134- இராஜசிங்கனின் எதிர் முயற்சிகள் 134- போரின் விளைவுகள் 135- ஆங்கிலேயருடன் நட்பு 136

(ஆ) 1664-1670- கண்டியிற் பூசல் - அம்பன் வலராள கலகம் - (1664) 137- டச்சு ஆட்சி விஸ்தரிப்பு - வான்கோயன்ஸ் திட்டம் 139 - கீழ் மாகாணம் கைப்பற்றப்படல் - புரட்சி 142

(இ) 1670-76-இராஜசிங்கன் சூழ்ச்சி 143- போர் (1670) அருந் தொரையில் வெற்றி 144-கீழ்மாகாணத்தில் மீண்டும் கலகம் 145-பிரஞ்சுக்காரர் தலையீடு (1672) 146-கண்டியின்மீது பொருளாதார முற்றுக்கை 147-கண்டியர் மீண்டும் போரிடல் (1772) 148 - டச்சுக்காரர் அடைந்தநட்டம் 149-- இளைய வான்கோயன்ஸ்;-- விருப்பமற்ற சமாதானப் பேச்சு 150 - வான்கோயன்ஸ் யுக’ முடிவு (1579 ) --- லோரன்ஸ் பைல் 151 -- இராயசிங்கனின் இறுதிக்காலம் 152---153---இராயசிங்கன் குணாதிசயங்கள் 154---சமய சகிப்புத்தன்iமை 155-றொபேட் நொக்ஸ் 156---159 முத்த றைக்லொவ்வான் கோயன்ஸ் 159--- அத்தியாயச் சுருக்கமும் கால அட்டவணையும் 164---166

7. இரு இறுதிச் சிங்கள மன்னரும் போர்த்துக்கேயரும்

1. 2-ம் விமலதர்ம சூரியன் (1687-1706) 169 -டச்சுக்காரரின் சமயக்கௌ;கை 171- வான் றீ தேசாதிபதி (1692-97) 171---172-2- ம் விமலதர்ம சூரியன் ஆட்சியின் சிறப்பு 173
2. வீரநரேந்திர சிங்கன் (1706-39)173--- துறை முகங்களை டச்சக்காரர்மூடுதல174--சாலியர் கலகம் 175 --- பேதுருஸ் ய்ஸ்ற் ---இருட் காலம் 176பிலாத்தேசாதிபதி(1732---6) 176 வான் இம்மோவ் (1736) 177

8. கண்டியில் நாயக்கர் மன்னராட்சி
நாயக்கருடன் சிங்கள அரசர் மணத்தொடர்பு ---179
1. ஸ்ரீ விஜயராஜசிங்கன் (1739-47) அவன் புகுத்திய புதுமைகள் 198 ---டச்சுக்காரருடன் மிண்டுதல் 180 --- கரையோரத்தில் அரசனின் தலையீடு மிகுதல் 181 --- பொத்த மதப்பணி 182
2.கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747---82) 183 --- பௌத்த சங்க இழிநிலை 184 --- சீயம் நாட்டுக்குத் தூது --- உபசம்பதா - சரணங்காரர் வாழ்வும் பணியும் 185--- இலக்கிய மறுமலர்ச்சி 187 --- சரணங்கரரைப் பின்பற்றிச் சேவை புரிந்தோர் 187
3.கீர்த்தி --- டச்சுப்போர் 189 --- கீர்த்தி --- ஆங்கிலேயருடன் தொடர்பு --- வான் எக் படையெடுப்பு 189 --- 1766-ம் ஆண்டு உடன்படிக்கை 191 --- நாயக்கர் எதிர்ப்புக் கோஷ்டி 192
4. இராஜாதி ராஜசிங்கன் (1782---98) --- அமேரிக்க சுதந்தரப் போரும் ஆங்கிலேயர் தலை யீடும் 194 --- போய்ட் தூதும் பிரஞ்சுக்காரர் தலையீடும். ---டச்சுக்காரருடன் கண்டி மன்னன் பூசல் 195 --- ஆங்கில - டச்சுத்தொடர்புகள்: கரையோரப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றல் 196


இரண்டாம் பாகம்

அரசியல் நிர்வாகம், பொருளாதாரம்

9. கரையோர மாகாணங்களிற்
போர்த்துக்கேய நிர்வாகம்

ஐ. பழைய ஆட்சிமுறையை ஏற்றுக்கொள்ளல் --- படிப்படியான நிறுவனம் 201 ---திசாவைப் பிரிவுகள் 203 --- சிங்கள நிர்வாக அமைப்பு --- விளக்கப்படம் 204 --- நிலையற்ற எல்லைகள் --- உட்பிரிவுகள் ---அதிகாரிகள் 205 திசாவையின் கடமைகள் 206--- கீழதிகாரியின் கடமைகள் 207 ---“பத்த” விதானைமார் 208 --- நிர்வாக அமைப்பு 209-210--- போர்த்துக்கேயர் நிர்வாக அமைப்பை மாற்றாமல் விட்டகாரணம் 211 ---சிகரமற்ற கோபுரம் 212-தேசாதிபதியின் அதிகாரங்கள் 213 பழைய முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்:
(அ) உயர் பதவிகளைப் போர்த்துக்கேயர் பெறல் 213
(ஆ) அதிகாரிகளின் மீது மத்திய அரசாங்கக் கட்டுப்பாடு குறைதல் 114
(இ) அரசிறைக் கணக்குக்குத் தனிப் பிரிவு: இறைவரி அதிகாரியின் கடமைகள் 216 --- அவனுக்கும் பிற அதிகாரிகளுக்கும் உரிய அதிகார எல்லை 217 --- பண்டகசாலைத் தலைவன் கடமைகள் 218 --- வரி வசூலிக்கும் முறை 219 --- படையமைப்பு 221 --- நகர நிர்வாகம் 222
ஐஐ. போர்த்துக்கேயர் கால நீதிபரிபாலன முறை 224 --- போர்த்துக்கேயர் நிர்வாக அமைப்பு --- விளக்கப் படம்



10. டச்சு அரசியல் நிர்வாக முறை
ஐ. ஆரம்பகாலம் 229 --- 1659 ---க்குப் பின் 231 வாணிக அமைப்பு --- அரசியல், சிவில் நிர்வாகம் 233 --- துப்பாசிகள் --- திசாவைமார் 235 --- நிலவரிமுறை 236-தோம்புகள் 238- கீழ்மாகாணத்தில் டச்சு நிர்வாகத்தில் விளைந்த தீமைகள் 239
ஐஐ. டச்சுக்காரர் கால நீதி பரிபாலனம்: ஆரம்ப நிலை 242- |தேசவழமை| தொகுப்பு 244- நீதி மன்றங்களின் வகை 245- தண்டனைகள் 246

11. டச்சுக்காரரின் வணிகமுயற்சிகள்

ஆசிய வாணிகம் 250- இந்நியாவில் விற்கப்பட்ட பொருட்கள் 251- பாக்கு வாணிகம் - அதன் முக்கியத்துவம் 252- அந்நிய வியாபாரிகள் மீது தடை 255- வணிகத் தனியுரிமையின் விளைவுகள் 251- கறுவா 258- 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாண மக்களின் பொருளாதார நிலை 263

12. ஒல்லாந்தர் கால விவசாய வளர்ச்சி
விவசாயம் குன்றுதல் 272- முதற் பத்து ஆண்டு முயற்சிகள் 273- பிந்திய நிலை 276- இராஜ காரியத்தைப் பிழையான முறையில் பயன்படுத்தல் 278- கீழ்மாகாண விவசாயம் குன்றுதல் 279- நீர்ப்பாசனத்திட்டங்கள் 282

13. ஐ. கண்டி இராச்சிய நிர்வாக முறை 284-297

அரசன் 284- அதிகாரிகள் 285- நீதி பரிபாலனம் 288- மகா நடுவர் சபை 289- திசாவையின் கடமைகள் 291- உள்ளுராட்சி மன்றங்கள் 292- இம் முறையிலுள்ள குறைபாடுகள் 293

ஐஐ. கண்டி இராச்சியத்தின் பொருளாதார நிலை
கமத்தொழில் 394- கைத்தொழில், வாணிகம் 259


மூன்றாம் பாகம்

சமயம், சமூகம்

14. போத்துக்கேயரின் சமயம் பரப்பும் முயற்சிகள்
போத்துக்கேயர் வருமுன் கிறீஸ்தவ சமயநிலை 301- போத்துக்கேய அரசனின் மதம் பரப்பும் பணி 381- இந்தியாவில் சமயம் பரப்பும் முயற்சி 302- முத்துக் குளிக்கும் கரையில் மதமாற்றம் 302- பிரான்சிஸ் சேவியர் வருகை 304- அரச அவைகளிற் கிறிஸ்தவ குருமார் 305- மன்னாரில் மதம் பரப்பும் முயற்சி 350- அரசாங்க அதிகாரத்தால் மதம்பரப்பல் 307- சுதேச மக்களுக்கும் கத்தோலிக்க மதத்துக்குமுள்ள ஒற்றுமை 309- போத்துக்கேய ஆட்சியின் பின் கிறீஸ்தவ சமயத்தின் நிலை 311

15. டச்சுக்காரரின் சமயம் பரப்பும் முயற்சிகள்
சமயம் அரசியலின் கைப்பாவை - சுதேசிகள் மதம் மாறக்காரணம் 312- பாதிரிமார், உபதேசிகள் நியமனம் 314- பலாத்கார முறைகள் 317- கல்வி சமயத்தின் கைப்பாவை 318- ஆசிரியர்களின் கேவல நிலை 219- அரசுக்கும் திருச்சபைக்கும் பூசல் - பாதிரிமாரது குறைகள் 419- வண.பிதா ஜோசப் வாஸ் 322- பிதா.யாக்கோமே கொன்சால்வெஸ் (1676-1742) 326- பின் இணைப்பு வண.பிலிப்ஸ் பால்டேயஸ் 333

16. போத்துக்கேயர் காலக் கல்வி நிலை
பிரான்சிஸ் சபைக் குருமார் சேவை 337- யேசு சபைக்குருமாரின் சேவை 338- குருமாரின் சமூக சேவை 342

17. டச்சுக்காரர் காலக் கல்வி வளர்ச்சி

அனுபந்தம் ஐ
றோமன் டச்சுச் சட்டம் 349

அனுபந்தம் ஐஐ
நெதர்லாந்து கிழக்கிந்திய தீவுகளின் மகா தேசாதிபதிகள் 352

அனுபந்தம் ஐஐஐ
இலங்கையிற் பதவிவகித்த ஒல்லாந்த தேசாதிபதிகள் 353

அனுபந்தம் ஐஏ
க.பொ.த.ப. பரீட்சை வினாக்கள் (1965-66) 354-360.



படங்களின் அட்டவணை

படம் பக்கம்
1. அல்பக்கூர்க்கே 1
2. ஜயவர்த்தனக் கோட்டை 4
3. போர்த்துக்கேயரின் ஐந்து கேடக வீரமுத்திரை 16
4. போர்த்துக்கேயர் கொழும்பில் கட்டிய முதல் கோட்டை 19
5. ~பெரண்டிக் கோவில்| எனப்படும் வைரவர் ஆலயம் - சீதாவாக்கை 36
6. சைமன் பிஞ்ஞாவோ எதிர்மன்ன சிங்கனைக் காப்பாற்றுதல் 79
7. போர்த்துக்கேய உடையில் குசமாசனதேவி (டோனா கதரீனா) 91
8. ஸ்பில்பேர்கன் விமலதர்ம சூரியனைச் சந்தித்தல் 98
9. கண்டி தலதா மாளிகையின் நவீன தோற்றம் 102
10. 2-ம் இராஜசிங்கன் 119
11. ஒல்லாந்தர் வரைந்த திருகோணமலைக் கோட்டைப்படம் 122
12. காலிக்கோட்டையை ஒல்லாந்தர் கைப்பற்றல் 124
13. காலிக்கோட்டை 126
14. மற்சூய்க்கர் 128
15. ஜெராட் ஹல்ஃப்ற் 130
16. போர்த்துக்கேயரின் கொழும்புக்கோட்டை டச்சுக்காரரால் முற்றுகையிடப்படல் 131
17. றொபேட் நொக்ஸ் 138
18. கோவாவிலுள்ள அர்ச். கஜெற்றன் கோவிலும் மடமும் 322
19. வண. பால்டேயஸ் 333

தேசப்படங்களின் அட்டவணை
படம் பக்கம்
1. பதினாறாம் நூற்றாண்டு இலங்கை 2
2. சீதாவாக்கையின் வளர்ச்சி 52
3. தென்மேற்கு இலங்கை 55
4. டச்சு இராச்சிய எல்லை விஸ்தரிப்பு (1658-1670) 141
5. போர்த்துக்கேயர் கால அரசியற் பிரிவுகள் 202
6. ஒல்லாந்தர் வரைந்த இலங்கைப்படம் 240



முதலாம் பாகம்
அரசியல் வரலாறு

புது முறைச் சரித்திரம்

அடங்கன் ஐஐ

இலங்கை (1505 - 1796)

முதலாம் அத்தியாயம்

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் நிலை

கி.பி பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நிலவிய அரசியல், பொருளாதார சமூக சூழ்நிலை மகிழ்ச்சிக்குரியதன்று. அந்நியரின் தாக்குதலை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இத்தீர்வுக்கு எத்துறையிலும் இருந்திலது. புறக்காட்சிக்குத் தெரியும் இராணுவ தாக்குதலை மட்டுமன்றி, மறைமுகமாகச் சமூகத்தைத் தாக்கும் சமய பொரளாதார சக்திகளையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் ஆத்மீக பலத்தையும் இலங்கையர் சமூகம் இழந்திருந்தது.

1. அரசியல் நிலை
பெலநறுவையை கைவிட்டு ஊர் ஊராகத் தலைநகர்களை மாற்றித் திரிந்த மன்னர்கள் இலங்கை அரசியலின் கீழ்நோக்கிய செல்கைக்குச் சான்றாக விளங்கினார். 1415 -லிருந்து

படம் 1. 16ம் நூற்றாண்டு இலங்கை

கோட்டை கோநகராக விளங்கிற்று. எனினும் அதிலிருந்து ஆட்சி புரிந்தோர் பெயரளவில் மட்டுமே இலங்கையின் பேரரசர் என்ற பட்டத்தைத் தரித்திருந்தனர். உண்மையில் இச்சிறு தீவு பல சிற்றரசர்களாற் பங்கு போடப்பட்டிருந்தது. கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம், என்ற மூன்று பெரும் பிரிவுகளும் இவற்றுக்கு இடைப்பட்ட வன்னிப்பிரதேசமும் தனித்தனி அரசர்களாக விளங்கின. செல்வம் மிகுந்த கோட்டை பேரரசன் பலம் மிகுந்திருந்தால் அயலரசர்கள் திறையளிப்பர். அன்றேல் அடங்கமாட்டார். அடங்காதோரை அடக்க போர்கள் இடம்பெறும். இங்ஙனம் சின்னஞ் சிறிய நாடு அரசியல் ஒற்றுமையின்றி இருந்தால் அந்நியர் வந்து புகச் சந்தர்ப்பம் உண்டாயிற்று.

அரசியற் பிரிவுகள்
அ) கோட்டை அரசு :-
வடக்கே கலா ஓயா, தெற்கே வளவை கங்கை, கிழக்கே மத்திய மலைப்பகுதி, மேற்கே கடல் ஆகிய எல்லையுடையது. கோட்டை அரசு அதன் மாவட்டபிரிவுகள் ஏழு கோறளை, நாலு கோறளை, மூன்று கோறளை, இரண்டு கோறளை என்ற தேனவக்கை றைகமம் மாத்தறை என்பன ஒவ்வொன்றையும் பரிபாலித்தற்கு அரசன் திசாவை என்னும் உயர் அதிகாரியை நியமித்திருந்தார். இவ்விராச்சியத்தின் கோநகர் ஜயவர்த்தன கோட்டை - வெற்றி வளரும் அரண் - என்ற பெயருடையது அதனைச் சுருக்கிக் ‘கோட்டை’ என்றே அழைப்பர். சிற்றரசர்கள் ஆண்டுக்கொருமுறை திறை செலுத்த வரும்போது தலைநகரில் நடக்கும் ‘பெரஹா1’ என்ற பெருவிழாவிற் பங்கு பற்றுவர். அதற்கு வராமல் விடுபவர் அரசனை மதியாது புரட்சி செய்பவர் எனப் பொருள்படும்.
1. “பிரகாரம்” என்ற சொல் கோவில் வீதியைக் குறிக்கும் வீதிவலம் வருதலைப் ‘பெரஹர’ எனச் சிங்களர் குறிப்பர்.

படம் 2. ஜயவர்த்தனக் கோட்டை

ஆ) யாழ்ப்பாண அரசு :-
யாழ்ப்பாணக் குடாநாடு, வட இலங்கையில் மன்னார் வரையுள்ள நிலப்பகுதி, தீவுப்பற்று ஆகியனவற்றைக் கொண்டது. தமிழர் வதியும் யாழ்ப்பாண அரசு, சில நூற்றாண்டுகளாக அது சுதந்திரம் பெற்ற தனியரசாக விளங்கியது. தெற்கிலும் வடக்கிலும் பலம் மிக்க அரசுகள் எழும்போது யாழ்ப்பாண மன்னர் அவற்றுக்கு அடங்கித் திறையளிப்பார். அயலவர். பலம் குன்றினால் தாம் திறைகொடாது தனியரசு நடாத்துவர். இங்ஙனம் கோட்டையரசருக்கும் விஜயநகர வேந்தருக்கும் திறையளித்த சந்தர்ப்பங்கள் 15ம் நூற்றாண்டில் ஏற்பட்டன. ஆனால் 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாண மன்னர் சுகந்திர ஆட்சியை நடாத்தி வந்தனர். அவர்களது தலைநகராகிய நல்லூர் தமிழ்ப் பண்பாட்டையும் கலைகளையும் பேணிப்பாதுகாக்கும் தானமாயிற்று. தென்னாட்டில் முஸ்லிம்களின் படையெழுச்சியால் ஏற்பட்ட கொந்தளிப்பு பாக்கு நீரிணையைத் தாண்டி இங்கு வராமையால், சைவத்தமிழ்க் கலாச்சாரத்தின் இறுதிப்புகலிடமென யாழ்ப்பாணம் விளங்கியது. சங்கம் வளர்;த்துத் தமிழ்காத்த பாண்டி நாட்டைப்போல யாழ்ப்பாணத்திலும் ஒரு தமிழ்ச் சங்கம் இருந்தது. அரச குடும்பத்தில் உதித்தவர்கள் கூட வடமொழியிலும் தமிழிலும் சோதிடம் முதலிய துறைகளிலும் முதன்மை வாய்ந்த நூல்கள் எழுதப்பட்டன.

வன்னிப்பகுதி என அழைக்கப்படும் பிரதேசத்தில் புத்தளம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு முதலியனவும் அடங்கும் பதினெட்டுப் பற்றுக்கள் இதிலிருந்தன என்பர். அடங்காத்தமிழ் எனப்பெருமை பாராட்டும் இப்பகுதி மக்கள் தனியுரிமையுள்ள வன்னியர்களால் ஆளப்பட்டனர். இலங்கையின் மூன்று அரசர்களால் யார் படைப்பலம் கொண்டு அடக்க முற்படுவாரோ அவர்களுக்கு ஓரொரு சமயம் திறைசெலுத்துவர் மற்றப்படி தனியரசு நடாத்துவர். இவ்வன்னியர் (பிற்காலத்தில் டச்சுக்காரர் ஆட்சியிலும் இவர்களது ஓரளவு நிலை பெற்றேயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.)

இ) கண்டி அரசு :-
இத்தீவின் மத்தியிலுள்ள மலைப்பகுதி (கந்த) ஜந்து ரட்டைகளைக் கொண்டிருந்தமையால், அது “கந்த - உட - பஸ் - ரட்ட” என்ற பெயரைப் பெற்றது. சுருக்கமாக அதனை உடரட்டை (உயர் பூமி) என்பர். அதன் ஜந்து மாவட்டங்கள் உடுநுவரை, யட்டிநுவரை, தும்பறை, ஹரிஸ், பற்று, ஹெவ ஹெற்ற என்பன. இம் மலையரசின் தலைநகர் கம்பளை (1540 அளவிலேயே செங்கடகலவுக்கு மாற்றப்பட்டது) சிற்றரசு எனினும் இயற்கையரண் வாய்ந்ததாயிருந்தமையால், கோட்டையரசனுக்கு கீழ்ப்படாது இருந்தது.

ஆட்சிமுறை :-
அக்கால அரசியமைப்பைப் பற்றிய பூரணமான சித்தி;ரம் ஒன்றை வரைதல் அரிது. கீழ்நாட்டு மன்னர்களணைவரும் சர்வாதிகாரிகள் என்ற கருத்தைப் பரப்பிய மேல்நாட்டவர் அவர்கள் தான்தோன்றித் தனமாக ஆட்சி புரிந்தனர் என எழுதுவர். ஆனால் அரசன் ஆலோசனைச் சபையொன்றை கூட்டி முக்கிய அரசியற் கருமங்கள் பற்றி ஆலோசனை செய்த பின்னரே செயலாற்றுவான் . அவன் செயல்களைக் கட்டுப்படுத்த ஏட்டில் எழுதிய சட்டதிட்டங்கள் இல்லையே ஒழிய அவன் கட்டுப்பாடெதுவுமின்றிக் கருமம் ஆற்றினான் என்பது தலைமுறை தலைமுறையாக வருவது அது எழுதுப்பட்ட அரசியல் திட்டத்திலும் வலிமை வாய்ந்தது. அதை மீறி மக்களின் அபிமானத்தை இழக்க எவ்வரசனும் துணியமாட்டான். பரம்பரை வழக்கத்தை மீறிய மன்னன் பொதுஜன அபிப்பிராயத்துக்கு மாறாக அரசாள முடியாது. அவன் சிம்மாசனத்தையோ உயிரையோ இழக்க வேண்டிவரும். அதனால் அவன் நாட்டுமக்கள், குருமார் ஆகியோருக்கு மாறாக நடக்கத் தயங்குவான்.

மாகாண, கிராமி நிர்வாகம் :-
இராச்சியம் பல மாகாணங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் “திசாவை” என்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கீழ் பல அதிகாரிகள் பல கிராமங்களடங்கிய கோறளைகளை நிர்வகித்தனர். இவர்களுக்கு கீழே கிராமந்தோறும் கிராம அதிகாரிகள் இருந்து நிர்வாகத்தை நடத்தினர். இவர்கள் வரி வசூலித்தல், வீதிகள், குளங்கள் முதலியவற்றை அமைத்து பழுதுபார்த்தல், நீதி வழங்குதல், அரசனுக்குப் போர்க்காலத்தில் வேண்டிய படை வீரரை சேர்த்து அனுப்புதல் முதலிய கருமங்களை கவனித்து வந்தனர்.

நில உடைமை :-
இவ்வதிகாரிகளனைவரும் செய்யும் சேவைகளுக்கு பிரதியுபகாரமாக நிலமே அளிக்கப்பட்டனர். “நித்தகம்2” எனப்படும். மானியக் கிராமிய அதிகாரிகளுக்கு மன்னன் இங்ஙனம் கொடுத்தவைகளே. அரசனுக்கென பயிர் செய்யப்படும் “கபடாகம்” என்ற நிலத்தையும் நித்தகங்களையும் தவிர்த்த மக்கள் பரம்பரையாக பயிர் செய்து வருவர். அதற்கு ஈடாக மக்கள் வழங்கும் அரசிறை ஒத்து3” எனப்படும். விளைபொருளில் ஒரு பகுதி அரசனுக்கு வழங்கப்படும். (“ஆறிலொரு கடமை வாங்கி அரசன் நாட்டையாண்டான்” என இந்திய நூல்களில் வருதலை நினைவு கூர்க) அரசனுக்கோ சமுதாயத்துக்கோ செய்யப்படும். சேவைகளாகிய காவல்புரிதல், செய்தி கொண்டு செல்லல், போர்க்கருவிகளை செய்தல், பொது மடங்களை அமைத்தல் முதலியவற்றுக்கு கூலியாக அவற்றை செய்வோர் நிலமானியமே பெற்றனர். இவர்கள் ஆண்டு தோறும் “இராஜகாரியம்” செய்ய கடமைப்பட்டவர்கள் கிராம அதிகாரிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலமானியம் வருடத்தில் அவர்கள் வேலை செய்த நாட்கள் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்வர். போர் வீரர்களும் இங்ஙனம் நிலம் பெற்றவர்களே முதலியார்மார் வீரரை சேர்த்து அரச சேவைக்கு அனுப்புதல் வேண்டும். ஒரு குடும்பத்தில் தந்தை இறக்கும் போது அவன் மகனோ சகோதரனோ போருக்கு செல்லக்கூடியவனாக இருந்தால் அக்குடும்பத்திற்கு வழங்கப்பட்ட மானிய நிலம் அவனிடமே விடப்படும். அன்றேல் அதனை வேறொரு குடும்பத்திற்கு அளிப்பர். அதிகாரிகள், இராஜகாரியம் புரிபவர்களை கொண்டு தாம் நித்தமமாகப் பெற்ற நிலத்தையும் செய்கை பண்ணுவோர் இங்ஙனம் கிராமத்தவர்களின் “கண்கண்ட அரசராக” விளங்கியவர் அதிகாரிகளே.

2. “கிராம” என்ற வடமொழிச் சொல் பாளி மூலம் சிங்களத்திற்கு வரும்போது “கம” எனத் திரியும்
3. ழுவர அல்லது யுனெந


நீதி பரிபாலனம் :-
குடிகளிடையே நிகழும் காணிச் சச்சரவுகள், தாயபாகம் பற்றிய பிணக்குகள் முதலியவற்றை தீர்க்கும் நீதி மன்றமாகக் கிராமசபை (கம் சபாவ) விளங்கியது. தற்கால சனநாயகத்தில் காணப்படம் குறைகள் அதில் இல்லை. கிராமத்தில் கண்ணியமானவர்கள் அதில் பங்குபற்றுவர் பரம்பரை வழக்கத்தையொட்டியே அதன் தீர்ப்புக்கள் இருக்கும். (கிராம சமுதாயத்தின் அத்திவாரமாக அமைந்திருந்தவை இச்சபைகளே குளம் கட்டல், வீதிகளமைத்தல் முதலிய பொதுச்சேவைகளையும் அவையே மேற்பார்வை செய்தன.) கிராம அதிகாரி இச்சபையின் தூண்போலிருந்து குற்றம் புரிவோரை தண்டித்தான். இந்த நீதி மன்றத் தீர்ப்பை ஏற்காதவர்கள் மேலதிகாரிகளுக்கோ, மன்னனுக்கோ விண்ணப்பிக்கலாம்.


2. பொருளாதார நிலை
குடிகளின் முக்கிய தொழில் விவசாயமே ஆனால் புராதன, மத்திய காலங்களில் வரட்சி மண்டலத்தில் பெருங் குளங்களையமைத்த மன்னர்களால் உழவுத் தொழில் விருத்தியடைந்த நிலை மாறியது. பாரிய குளங்கள் பல கட்டு முறிந்து பாழடைந்தன. கோநகரமும் ஈரலிப்பு மண்டலத்துக்கு வந்தது. அதனால் முற்காலத்தைப்போல் இலங்கையின் நெற்செய்கை புகழ் பெற்ற உந்நத நிலையில் இல்லை எனவே அதன் மூலம் வரும் அரசிறையும் சுருங்கியது. மேலை நாடுகளில் விரும்பி வாங்கப்படும் கறுவாவே கோட்டையரசின் முக்கிய வருமானமாயிற்று அதனை அரசனேயன்றி வேறெவரும் சேகரித்து விற்றல் கூடாது. இயற்கையாக வளரும் கறுவாவை ஒரு சாதியார் சேகரித்துப் பதனிட்டுக் கொடுக்க மன்னன் அவற்றை முஸ்லிம் வணிகருக்கு விற்பான். கோட்டைத் தலைநகராக்கியதன் நோக்கமே கறுவா வாணிகத்தால் முழுநயம் பெறுவது தான் எனலாம். கறுவா மட்டுமன்றி முத்து இரத்தினங்கள் யானை, பாக்கு, மிளகு முதலியனவும் அரசனது தனியுரிமையாயிருந்தன. அவற்றை விற்பதாலும் அரசன் பெருலாபம் பெற்றான்.
வணிகம் :-
முன்னேற்றமில்லா - விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட - பொருளாதார நிலையில் வாணிகத்துக்கு அதிக இடமில்லை. கிராம மக்கள் தத்தம் தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொண்டனர். உப்பு, கருவாடு, துணிகள் முதலியன மட்டுமே உள்நாட்டில் கிடைக்கமாட்டா இவற்றை கிராமங்களில் நிகழும் வாரச் சந்தைகளுக்குப் பொதி மாடுகளில் (தவலம்) ஏற்றிச் சென்று பண்டமாற்று முறையிருந்தமையால் நாணயப்புழக்கம் அதிகம் இல்லை தம்பதெனிக்காசு, பணம் என்ற நாணயங்களே சாதாரணமாகப் புழக்கத்திலிருந்தன.


3. சமூக நிலை

அக்கால இலங்கையரசு சமூக வாழ்க்கை தேக்கமடைந்து, தீவிர மாற்றமெதுவும் இன்றியிருந்தது. சிங்களரிடையில் வழக்கிலிருந்து சாதியொழுக்கமும் தென்னிந்திய திராவிட சாதி ஆசாரத்தைப் பின்பற்றியதே அரசனே வரிசை வரிசையாக அமைந்த சாதிகளின் தலைவனாவான். அவன் நினைத்தால் ஒருவனைச் சாதிமுறை என்ற ஏணிப்படிகளில் கீழே இறக்கிவிடலாம். குல ஒழுக்கத்தைக் கைவிட்டோரும் சமூகக் கட்டுப்பாட்டை மீறியோரும் சாதியினின்றும் விலக்கப்பட்டு இழிநிலை யுற்றனர். சாதி பற்றிய பிணக்குகளை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் பொறுப்பு ரட்டசபை என்ற மன்றத்திடம் இருந்தது. ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தோரும் இறுகிய சமூக மனப்பான்மையுடன் ஜக்கிய மற்றுத் தம் உரிமைகளைப் பேணிவந்தனர். தனி மனிதர் சமூகத்தின் பாதுகாப்பைப் பெற்றனர். ஆனால் ஒவ்வொருவரது தொழிலும் அவரது திறமை முயற்சிகளின்றி அவரவர் சாதியிலேயே தங்கியிருந்தமையால் மானிய முறைக் கட்டுப்பாடுகளை கைவிட்டுத் தனி மனிதனது திறமைக்கேற்றபடி முயற்சி செய்து முன்னேறி வந்த அக்கால ஜரோப்பியருடன் இலங்கையரால் போட்டியிட முடியவில்லை எனலாம். மாறிவரும் பொருளாதார நிலைக்கேற்றவாறு சமூக அமைப்பு மாறாமை இலங்கையர் வாழ்வுக்கு ஒரு காரணம் எனக்கூறலாம்.

சமயம், மொழி, பண்பாடு
பண்டைய மன்னர்களது காலத்திலிருந்த சீரும் சிறப்பும் பௌத்த சமயத்துக்கு இல்லை எனினும் இன்னும் அது மக்கள் சமூக வாழ்க்கையின் ஆணிவேராக அமைந்தது. என்பதை மறக்கலாகாது. அரசன் புத்தரின் புனித சின்னமாகிய தந்த தாதுவைத் தன் தலை நகரில் தலதா மாளிகையமைத்துப் பேணி வைத்திருந்தான். ஆண்டுதோறும் “பெரஹர” (பிரகாரத்தை வலம் வருதல்) என்ற விழா பதினாறு நாட்களுக்கு நடக்கும். (அத்தருணத்திலேயே அரசனின் கீழுள்ள சிற்றரசர் வந்து விழாவிற் பங்குபற்றித் தம் திறைமையும் அளிப்பர்.) அநுரதபுரி, பொலநறுவை, மன்னார்களைப் போல அநேக விகாரைகளைக் கட்டவில்லை எனினும் கொழும்பு, பெல்மதுளை ஆகிய இடங்களில் கோட்டையரசர் ழூ’விகாரை’களை யமைத்திருந்தனர். இரத்தினபுரிக்கருகில் சமண தேவாலயத்தைப் புதுக்கினர். அவர்கள் விகாரங்களுக்கும் தேவாலயங்களுக்கும் மானியமாக விட்ட கிராமங்கள் “விகாரகம்” “தேவாலகம்” எனப்பட்டன. அவற்றை ஆலய ஊழியர்கள் அனுபவித்து வந்தனர். சிங்கள மொழியும் அக்காலத்தில் மதிக்கத்தக்க முன்னேற்றமடைந்து வடமொழித்தொடர்பால் வளமுற்றது. கோட்டை மன்னர்களது. ஆதரவில் பல புலவர்கள் இலக்கண இலக்கிய நூல்களை எழுதினர்.

இத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்த இலங்கை மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதியில் இந்து சமுத்திரத்தில் தோன்றிய புதிய ஜரோப்பிய இனத்தைப் பற்றியாதும் அறியாதவராயினர். அவர்களது புதுமையான படை வலியும் பெரிய கப்பல்களும் விஞ்ஞானத்துறையில் அவர்கள் அடைந்த வெற்றிகளும் தம்மை எங்ஙனம் விரைவில் பாதிக்கக்கூடும் என்பதைப்பற்றிச் சற்றும் சிந்தித்தால் மன்னர்களைக் குறித்துக் கவலை கொள்ளாதவராய்த் தம் அற்ப போட்டி பொறாமைகளில் முழ்கிக் கிடந்தனர்.
ழூ விஹாரம் என்பதே இச்சொல்லின் சரியான உருவம்



உசாத்துணை நூல்கள்
மாணவருக்குரியவை :
1. நம் முன்னோரளித்த அருஞ்செல்வம் 2ம் பாகம்
2. இலங்கை சரித்திரம் - போத்துக்கீசர் காலம் கு.ஓ.ஊ நடராசா
3. பூவை விடுதூது - நவாலியூர் சோ. நடராசன் (மொழிபெயர்ப்பாளர்)
4. இரகுவமிசம் - தமிழ்மொழி பெயர்ப்பு (அரசகேசரி)

ஆசிரியர்களுக்குரியவை
1. யு ர்ளைவழசல ழக ஊநலடழn கழச ளுஉhழழடள - குச. ளு. Pநசநசய
2. ஊநலடழn ரனெநச றுநளவநசn சுரடந - டு. ர். ர்ழசயஉந Pநசநசய

வினாக்கள்
1. போத்துக்கேயர் வந்த காலத்தில் எமது நாட்டில் இருந்த அரசியல் நிலையை விரித்தெழுதுக. சிங்கள தமிழ் இராச்சியங்களின் வீழ்ச்சிக்கு இந்நிலை எவ்வாறு உதவியது.

2. பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த இலங்கையின் பொருளாதார நிலையை விளக்குக. அது எங்ஙனம் தன்னிலும் மேம்பட்ட நவீன ஜரோப்பிய பொருளாதாரத்தின் தாக்கதலைச் சமாளிக்க இயலாமல் வீழ்ச்சியுற்றது.


3. ஓர் இலங்கைப் படத்தில் 16ம் நூற்றாண்டின் இராச்சிய, மாகாணப் பிரிவுகள், முக்கிய ஊர்களைக் குறிக்குக.




இரண்டாம் அத்தியாயம்

கோட்டை அரசின் வீழ்ச்சி

1505 முதல் 1658 வரையுள்ள ஒன்றரை நூற்றாண்டு காலத்தையும் “போர்த்துக்கேயர் காலம்” எனக் கூறுவர் ஆனால் இது முற்றிலும் பொருந்தாதது. சென்ற காலத்தில் நம் நாட்டு வரலாற்றை எழுதிய மேனாட்டவரும் அவராற் பயிற்றப்பட்ட நம்மவரும் இக்கால வரலாற்றை மேனாட்டாரின் கோணத்திலிருந்து பார்த்து எழுதி வந்துள்ளார்கள். உள்நாட்டாரின் பார்வையினின்றும் எழுதப்பட்ட நூல்கள் மிகச் சிலவே. அதனால் இவ்வரலாற்றைக் கற்போர் சரியான தளத்தினின்றும் ஆராய இயலாமல் தவிக்கின்றனர்.

இக்காலத்தை நான்காக வகுக்கலாம்.
1. 1505 முதல் 1524 வரை போர்த்துக்கேயர் கோட்டை அரசுடன் இடையிடையே வாணிகத் தொடர்பு மட்டும் கொண்டிருந்தனர்.
2. 1524 முதல் 1551 வரை கோட்டையரசின் நண்பர்களாயிருந்து உண்ணாட்டுப் போர்களிலும் பங்கு பற்றினர்.
3. 1551 முதல் 1597 வரை கோட்டையரசனைப் பொம்மை போல் ஆட்டி வைத்துத் தாம் அரச கருமங்களை நடாத்தினர்.
4. 1597 முதல் 1638 வரை இலங்கை கரையோரப் பகுதியை தம் நேரடியான ஆட்சிக்குட் படுத்தியிருந்தனர்.


1. கோட்டையரசு போத்துக்கேயருடன் வணிகத் தொடர்பு கொள்ளல்
(1505 - 1524)
போத்துக்கேயர் இலங்கையின் கறுவா வாணிகம் பற்றி நன்க அறிந்திருந்தனர். எனினும் இதனை நாடி வரச் சந்தர்ப்பமின்றியிருந்தனர். அன்றியும் இந்த சமுத்திரப்பகுதிக்கு முதற் போத்துக்கேய இராஜப்பிரதிநிதி (ஏiஉநசழல) யாயிருந்த பிரான்சிஸ்கோ டி அல் மேய்டா தொடக்கத்தில் சிறுகக் கட்டிப் பெருகவாழ் என்ற முதுமொழிப்படி மலையாளக்கரை வாணிகத்தைப் பெருக்கினாற் போதும் பிற நாடுகளில் அப்போது வாணிகவிருத்தி செய்வது அறிவுடைமையாகாது என்ற கருத்துடையவன் ஆனால் விதி வேறாயிருந்தது. கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து வாசனைச்சரக்குகளைக் கொண்டு பருவக்காற்றுக்களின் உதவியால் நேரே மத்திய கிழக்குத் துறைமுகங்களுக்குச் செல்லும் முஸ்லிம் கப்பல்களைத் தடுத்து நிறுத்தும் படி இராஜப் பிரதிநிதி தன் மகன் லோரன்ஸோ டீ அல்மேய்டாவுக்குகக் கட்டளையிட்டான். அவன் கொச்சியினின்றும் புறப்பட்டு மாலைதீவுப் பக்கமாகக் காத்து நிற்கையில் புயற்காற்றால் அள்ளுன்டு காலித்துறை முகத்தையடைந்தான். தலைநகர் கொழும்புக்கு அயலில் உளது என அறிந்து அங்கு சென்றான். அங்கு தம் பகைவராகிய அராபிய முஸ்லிம்கள் குடியிருப்பதைக் கண்டான். அவர்கள் அவன் மன்னனைப்பற்றி விசாரித்தபோது சாக்குப்போக்குச் சொல்லிச் சிங்கள மன்னனைக் காணாது தடுக்க முயன்றனர். அவர்கள் தூண்டுதலால் ஊரவர் போர்த்துக்கேயர் சிலரைத் தாக்கவே கப்பலின் பீரங்கிகள் முழங்கின. குடிகள் அஞ்சி நடுங்கி அரசனுக்கு அறிவித்தனர் இதனை “இராஜாவலி” என்ற சிங்கள வரலாற்று நூல் சுவைபட வர்ணிக்கிறது.
அரசன் போர்த்துக்கேய தளபதியைச் சந்திக்கச் சம்மதித்தான். ஆனால் தூதுவனாய் வரும் போர்த்துக்கேயனைச் சுற்றிவழியே அழைத்துச் செல்லவேண்டும் என அவைக்களத்தோர் ஆலோசனை கூறினர். அதன் படி சுமார் எட்டுமைல் தூரத்தை மூன்று நாட்கள்வரை நடந்து அரண்மனையை அடைந்தான் தூதுவனாய் வந்த பேணாவோ - குத்ரிம். அரசன் போர்த்துக்கேயருடன் நட்புறவு உடன்படிக்கை ஒன்றைச் செய்யச் சம்மதிப்பதாக அவனுக்குக் கூறப்பட்டது. அவன் இதனை அல்மேய்டாவுக்கு அறிவிக்கவே ஸ்தானீகன் (யுஅடியளளயனழச) ஒருவன் அரசசபைக்கு சென்றான். ஓர் உடன்படிக்கை


படம் 3. போத்துக்கேயரின் ஜந்து கேடக வீரமுத்திரை

(கொழும்பு இராணி மாளிகைக்குப் பக்கத்திலுள்ள கோர்டன் பூங்காவிலுள்ள பாறையொன்றில் செதுக்கப்பட்டுள்ளது. இது பிற்காலத்திலேயே இங்கு கொண்டு வரப்பட்டது. இதனை அல்மேய்டா செதுக்கினான் என்பதில் ஜயம் கொள்வார் உளர்.)

எழுதப்பட்டது.1 அதன்படி போத்துக்கேயர் இலங்கைக் கரையோரத்தைப் பாதுகாத்தற்குப் பிரதியுபகாரமாக மன்னன் ஆண்டுதோறும் 400 பாரம் (டீயாயச)2 கறுவா திறை செலுத்தல் வேண்டும். கடலுக்குள் நீண்டிருக்கும் நிலப்பகுதியில் ஒரு பண்டகசாலையும் ஒரு கோவிலும் கட்டப்பட்டன. அதனை பாதுகாக்க ஒரு சிறுபடையை லோரன்சோ இங்கு விட்டுச்சென்றான். அவன் பதித்த அரச சின்னம் இன்றுமுள்ளது. புகழ் மிக்க இத்தீவைக் கண்டு கோயில் கட்டியமை பற்றிய போத்துக்கேய மன்னன் உரோமிலுள்ள பாப்பரசருக்குச் சிறந்த வருணனையோடு கூடிய கடிதமொன்றை எழுதினான் ஆனால் முஸ்லிம்கள் போத்துக்கேயப்படை இலங்கை மண்ணில் இருப்பது நாட்டுக்கு அவமானம் எனச் சிங்களரைத் தூண்டிவிட்டான். எதிர்ப்புப் பலமாயிருந்தமையால் 1507ல் இராஜப்பிரதிநிதி அல்மேய்டா படைகளைத் திரும்ப அழைத்தான். ஆனால் இலங்கையின் முக்கியத்துவத்தைக் குறித்துத் தன் மன்னனுக்கு எழுதி, இங்கு தமக்கு ஒரு கோட்டையிருத்தல் அவசியமென வற்புறுத்தினான் இதனைப் போர்த்துக்கேய அரசன் மனவலும் உணர்ந்தான்.

1. 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிங்களச் செய்யுள் நூல் ஒன்றில் போர்த்துக்கேயரே வணிக உரிமையும் கோட்டை கட்ட நிலமும் தந்தால் திறை செலுத்துவதாக வாக்குப்பண்ணினர் என்ற கதை உளது.
400 பஹர் எனக் குவேய்றோஸ் கூறுவதை நம்ப இயலாது. ஆரம்பகால வரலாற்றை அவர் சாசன மூலகங்களின்றியே எழுதினான். போத்துக்கேய மன்னன் பாப்பரசருக்கு எழுதிய கடிதத்தில் 150 பாரமே திறை பெற்றதாகக் குறிப்பிடுகிறான். சைமாவோ பொடெல்ஹோ என்பவர் 300 பஹர் என்று குறிப்பிடுகிறார். 1505ல் உடன்படிக்கை எழுதப்படவில்லை என்பது பெரும்பாலும் நிச்சயம் என கலாநிதி அபயசிங்கா குறிப்பிடுகிறார். 1524 - 1539 க்கிடையில் படையுதவி பெற்றபோதே உடன்படிக்கை எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

2. சுமார் 744 இறாத்தல் ஒரு பாரம் (ஆனால் போர்த்துக்கேயர் காலத்தில் ஒருவகையாகவும் டச்சுக்காரர் காலத்தில் இன்னொருவகையாகவும் கணித்தனர்.)

இந்நிகழ்ச்சி நடந்த காலத்தில் கோட்டை மன்னனாகயிருந்த வீரபராக்கிரபாகு (14841509) வயோதிபனாகையால் அரசனின் நிர்வாகத்தை தன் மைந்தன் இருவரிடமும் விட்டு விட்டான். பின்னாலே தர்ம பராக்கிரபாகு எனப் பெயர்பெற்ற மூத்தவன் கோட்டையிலும் விஜியபாகு என்பவன் தென்கோடியில் உள்ள தேவன் துறையிலும் பரிபாலனம் செய்தனர். பிற மைந்தரும் உறவினரும் பிற மாவட்டங்களை நிர்வகித்தனர். இவர்கள் வீரபராக்கிரமபாகுவிற்கு பல இடுக்கண் விளைத்தனர். 1509ல் தந்தை இறக்க மூத்தவரிருவரும் அரசு உரிமைக்கும் பிணக்குற்றனர் போலும் தர்மபராக்கிரபாகு போர்த்துக்கேயர் பால் தூது அனுப்பி படை உதவி கேட்டான் என்பானும் உளர். ஆனால் இந்தியாவில் நாடு கவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போர்த்துக்கேயர் யாதும் செய்யவில்லை
3. சிங்கள தீவில் தன் ஆதிக்கம் நிலை பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் நீவிர் செய்தல் வேண்டும். உயர்ந்த வகை கறுவாவும் அருமையான முத்துக்களையும், யானைகளும் அத்தீவில் கிடைக்கின்றன என்று நாம் அறிகின்றோம். மேலும் இந்தியாவிற்கு அருகில் வங்காளம், மலாக்கா, முதலிய இடங்களுக்கு செல்லும் மார்க்கத்தில் கேந்திரமாக அது அமைந்திருப்பதால் அங்கு ஒரு கோட்டையும் எமது இந்திய தேசாதிபதிகளின் இருப்பிடமும் அமைக்கப்படுவதனால் தமது வியாபாரமும் படைவலிமையும் பெருக ஏதுவாகும்.... எனக் கட்டளையிட்டான்

போத்துக்கேய மன்னன் மனவால் அல்புக்கூர்க்கேயின் புத்திமதியை பின் பற்றி போத்துக்கேயரது வணிகப் பேரரசை விரிவடைய செய்யும் கொள்கைக்கு பேராதரவு கொடுத்தான். அதன் கட்டளை படி கிழக்கிந்திய கரையோர வாணிகத்தை கைப்பற்றுவதற்கு முதற்படியாக இலங்கையில் ஒரு கோட்டை கட்ட அவசியமாயிற்று. இராஜப்பிரதிநிதி அல்பகேரியா இந்த நோக்கமாக 1518ல் கொழும்பிற்கு வந்தான். மன்னன் தர்மபராக்கிரமபாகு நேரில் சென்று வரவேற்றான். ஆனால் கோட்டை கட்டும் விடயமாக அவனது ஆலோசனை சபையும் மக்களும் அதிக எதிர்ப்பை தெரிவித்தனர். போத்துக்கேயரை எதிர்த்து போர் நடந்தது. ஆனால் போத்துக்கேயர் முஸ்லிம் எதிர்ப்பை பொருட்படுத்தாது கல்லாலும் மண்ணாலும் கோட்டை கட்டி அரசனுடன் பழைய உடன்படிக்கையை புதுப்பித்தனர். இம்முறை ஆண்டு தோறும் திறையாக 400 பாரம் கறுவாவும் மணிகள் குயிற்றுச் செய்யப்பட்ட இருநூறு மோதிரங்களும் 10 யானைகளும் குறிப்பிடப்பட்டன. மன்னனின் துறைமுகங்களை பாதுகாப்பதுடன் அவனது பகைவருக்கு மாறாய் அவனுக்கு படை உதவி செய்வர் என்ற நம்பிக்கையும் தர்மபாராக்கிரமபாகுவிற்கும் போர்த்தக்கேயருக்கு அதிக சலுகைகள் அளிக்கத் தூண்டுகோலாக இருந்தது போலும் ஆனால் விரையில் அந்நியரை துரத்தும் காட்சி பலமடைந்தது. முஸ்லிம்களும் மன்னரது உறவினரும் கோட்டையின் ஒரு பகுதியை அளித்தனர். மன்னரும் தன் முடிவை அடைந்தான்.


படம் 4. போத்துக்கேயர் கொழும்பில் கட்டிய முதற் கோட்டை

தெற்கில் ஆட்சி செலுத்திய விஜியபாகு கோட்டையரசு பதவி அடைந்தான். 1519 -1521 முஸ்லிம்கள் மூலம் இவன் கோழிக்கோட்டை சமூத்திரியின் ஆதரவை நாடினான். மலைகளுக்கும் அலைகளுக்கும் அதிபர் என்ற பட்டம் சூட்டியவன் 500 ஆண்டுகளாக அரபிக் கடலில் ஆதிக்கஞ் செலுத்திய பரம்பரையினனுமாகிய சமுத்திரி இதற்குச் சம்மதித்தான். சுமார் ஒரு நூற் றாண்டு வரை அவனது கடற்படைத் தலைமை பூண்டு அருஞ் சேவை செய்த குஞ்ஞாலி மரைக்காயர் குடும்பத்தினர் இலங்கை முஸ்லிம்கள் மூலம் அரசன் அனுப்பிய வேண்டுகோளுக்கு உடனே செவிசாய்த்தான் இருமுறை போத்துக்கேயரைத்தாக்கினான் முதலில் சிங்களவர் அவர்களுக்கு உதவியளித்தனர். ஆனால் பின் அவர்களுக்கேனும் போர்த்துக்கேயனுக்கேனும் விஜியபாகு உதவி அளித்திலன். போர்த்துக்கேயர் வெற்றி பெற்றவுடன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து அவர்கள் படைத்தலைவனைத் திருப்தி செய்வித்தான். 1520ல் இந்தியாவில் பதவியேற்ற புதிய போர்த்துக்கேய இராஜப்பிரதிநிதி சிக்வீரா கொழும்புக் கோட்டையைக் கட்ட ஆட்களையனுப்பினான் மன்னனும் பொதுசனக் கிளர்ச்சிக்குப் பணிந்து இப்போது வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவித்தான். மலையாளத்திலிருந்து குதிரைப்படையும் உதவிக்கு வந்தது ஆயினும் செங்கடலினின்று வந்த போத்துக்கேயப்படை தாக்கவே மன்னன் பின்வாங்க வேண்டியதாயிற்று கொழும்பு நகரின் முஸ்லிம் குடியிருப்புகள் எரிக்கப்பட்டன.

மீண்டும் மீண்டும் அடைந்த தோல்விகளால் மக்களின் அபிமானத்தை இழக்க விஜியபாகுவின் வாழ்க்கை ஓர் அரண்மனைப் புரட்சியால் முடிவுற்றது. அவன் சிம்மாசன மேறியபின் மணந்த கீரவெல்ல அரசகுமாரி கொணர்ந்த சிறுவனையே தனக்கு பின் அரசனாக்குவான் எனக்கருதிய அவனது முந்திய தாரத்து மைந்தர் மூவரும் தம் உயிருக்கு அஞ்சியோடினர். இளையவனான மாயாதுன்னை தன் உறவினனான கண்டியரசனையணுகிப் படையுதவி பெற்று மீண்டான். மூவரும் அரண்மனையைச் சூழ்ந்ததும் மன்னன் சமாதானஞ் செய்ய முயன்றான். ஆனால் பின் இவர்களைக் கொல்ல சதிசெய்தான். இதனை அறிந்த மைந்தர் அவனை அயல் நாட்டான் ஒருவனைக் கொண்டு கொல்வித்தான். (1521) குடிகளும் அரசகுமாரர் பக்கமே நின்றனர். அரசு மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது. மூத்தவன் பவனேகபாகு என்று பெயர் சூட்டிப் பேரரசனானான் மாயாதுன்னைக்குச் சீதாவக்கை நாலு கோறளை, தேனவக்கை என்னும் பகுதிகள் கிடைத்தன மற்றவன் றைகமம் என்ற பகுதிக்கு அதிபதியானான். இங்ஙனம் கோட்டையரசு பங்கு போட்டதால் அது பலவீனமுற்றுப் போர்த்துக்கேயரை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தது. அந்நியர் இலகுவிற் காலுன்றச் சந்தர்ப்பம் உண்டாயிற்று விஜியபாகுவை ஆதரித்தோர் கலகஞ் செய்தனர். அவர்களை மாயாதுன்னை அடக்கினான்.

கோட்டையைப் பலப்படுத்திய போர்த்துக்கேயர் இங்கு கோட்டையொன்று அவசியமில்லை வெறும் பண்டகசாலை மட்டும் போதும் எனப் போர்த்துக்கல் மன்னனுக்கு எழுதினான். வஸ்கோ-ட-காமா 1524ல் இராசப் பிரதிநிதியாக நியமனம் பெற்று வந்தபோது இக்கோட்டையை அழித்து விடும்படி அரசன் இட்ட ஆணையுடன் வந்தான். அங்ஙனமே கோட்டையைக் கைவிட்டு ஒரு பண்டகசாலையதிபன் மட்டுமே காவல் வைக்கப்பட்டான். ஆனால் புதிய சக்திகள் இங்கு வேலை செய்து அவர்களை மீண்டும் இங்கு ஈர்த்தன.



2. கோட்டையரசு போத்துக்கேயரை நண்பர்களாகக் கொள்ளல்
(1524 - 1551)

சீதாவக்கையரசன் தன்சிற்றரசுடன் திருப்தியடையாமல் பேரரசனாவதற்கு விரும்பினான் இதனால் அச்சமடைந்த புகனேகபாகு போர்த்துக்கேயரின் ஆதரவை நாடினான். முஸ்லிம்களின் உதவியுடன் தன் அரசைப் பெருக்க நினைத்த மாயாதுன்னை போத்துக்கேயரின் பகைவனான கோழிக்கோடு சமுத்திரிழூ க்கு ஒரு தூதனுப்பினான் எனலாம.; சோழர் படையெடுத்த போது விஜியபாகு முதலிய சிங்கள மன்னர் சேர வேந்தரின் உதவியை நாடினரன்றோ? சீதாவக்கை கோழிக்கோடு அச்சு, கோட்டை - கோவா ஜக்கியத்தை முடியடிக்கும் நோக்கமாக ஏற்பட்டது. இருபகுதியாரும் யுத்த முயற்சிகளைச் செய்யலாயினர்.

கோழிக்கோட்டுக்குத் தெற்கேயிருந்த பொன்னனி என்ற இயற்கைத் துறைமுகத்திற் பெரும் கப்பற்படை வைத்திருந்த சமுத்திரியின் சேனாதிபதி அலி மரைக்காயர் கொட்டக்கல் என்னுமிடத்திற் கோட்டையும் கப்பல் திருத்தும் தளங்களும் அமைத்தான். 1524ல் போர்த்துக்கேயர் பொன்னனியைத் தாக்கினர். குஞ்ஞாலி குலத்தில் அப்போதிருந்த குட்டி அலி போர்த்துக்கேய கப்பற்படைத் தலைவன் லொபேவாஸ் டீ சம்பாயோ என்பவனைக் கண்ணனு}ருக்கு அருகே தாக்கி மலையாளக் கரையை விட்டு நீங்குமாறு விரட்டிவிட்டனர். போத்துக்கேயரை எதிர்த்ததில் கொழும்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த சமுத்திரி தன் படையை இங்கு அனுப்பினான். அதன் தளபதி கோட்டையரசனைப் பகைக்கும் கருத்து இல்லாதவனாய் அவன் ஆதரவில் வாழ்ந்த போர்த்துக்கேயரைத் தன்பால் ஒப்புவிக்குமாறு கேட்டான். தாங்கள் சமுத்திரத்தில் பெற்ற வெற்றிகளை குறிப்பிட்டு, கோழிக்கோட்டு வேந்தனும் பிற இந்திய அரசரும் போத்துக்கேயரை நிலத்திலும் வெல்லதிட்டமிட்டுள்ளனர் எனக்கூறினான். போத்துக்கேய வணிக நிலைய அதிபதி இதனை மறுத்ததுடன், கப்பல்களைத் திருத்த வென்று கரையிலேற்றும் மலையாளத்தாரின் செய்கை ஐயத்துக்கிடமானதென்றும் புகன்றான். சலப்பு ஆராய்ச்சி என்பவன் தலைமையிற் சிங்களப்படை யுதவி பெற்ற போர்த்துக்கேயர் மலையாள வீரர்களை தாக்கி வென்றனர். மீண்டும் ஒரு படை வந்து தோல்வியுற்றது. தோற்றோருள் உயிர் தப்பியோர் சீதாவக்கைக்கு ஓடிப்புகழிடம் பெற்றனர். புகனேகபாகு போர்த்துக்கேயரை திருப்தி செய்விக்கும் பொருட்டு முஸ்லிம்களை கொழும்பிலின்றும் விரட்டினான். மாயாதுன்னை அவர்களை ஆதரித்து புகனேகபாகுவுக்கு எதிராக படையெடுக்கதிட்டமிட்டு அவர்கள் மூலம் கோழிக்கோட்டு வேந்தனுக்குத் தூதனுப்பினான். மலையாளப் படை மூன்று சேனாதிபதிகளின் தலைமையில் வந்தது. கோட்டை - கோவா அரசு பலமுற்றது. புகனேகபாகு கோவாவுக்குத் தூதுனுப்பினான். அங்கு இக்கட்டான நிலையிருந்தும் போத்துக்கேயர் ஒரு சிறு படையை 1527ல் டீ - மெல்லோ தலைமையில் அனுப்பினார். இதனை அறிந்த மாயாதுன்னை கோட்டை முற்றுகையைக் கைவிட்டுத் தன் நகர்க்குச் சென்றான். உதவிக்கு வந்த மலையாளப்படையும் இந்நாட்டை விட்டுச் சென்றது. போர்த்துக்கேயர் சீதாவக்கையைத் தாக்குமாறு புகனேகபாகுவைத் தூண்டினர். ஆனால் அவன் தன் தம்பிக்கு நாட்டில் உள்ள செல்வாக்கை அறிவான். எனவே தனக்குள்ள மதிப்பைக் கெடுத்துக்கொள்ள விரும்பாது சமாதானஞ் செய்து கொண்டான். ஆனால் அது மணலில் எழும்பிய கட்டடம் போலாயிற்று.
ழூஇவர்களது சந்ததியார் “தம்புரான்” என்ற பட்டத்துடன் இப்பொழுது உளர்.

இந்தியாவில் மாயாதுன்னையின் நண்பன் சமுத்திரியைப் போர்த்துக்கேயர் சும்மா இருக்கவிட்டிலர். 1528ல் அவனது கடற்படையை அழிக்க முழு முயற்சி எடுத்துக்கொண்டனர். தளபதி குட்டி அலியைச் சிறைப்பிடித்தனர். அவன் மகன் 2ம் குஞ்ஞாலி அவனைத் தொடர்ந்தும் சமுத்திரியின் கடற்படைத் தளபதியானான். தந்தையிலும் கூடிய வீரத்துடன் போரை நடத்தினான். அவன் 50 கப்பல்களை அழித்தான் எனப் போர்த்துக்கேய சரித்திராசிரியர் கூறுகின்றார். சீதாவக்கை கோழிக்கோடு அச்சு மேலும் வலுவுற்றது. பகைவரது பூமியிற் போரை நடத்த முன்வந்தான் குஞ்ஞாலி. இலங்கையில் போத்துக்கேயப் படைத்தளத்தை தாக்கலானான். ஏழாண்டு வரையில் மாயாதுன்னையை ஆதரித்தான். போர்த்துக்கேயருக்கு ஆதரவு அளித்த புகனேகபாகுவுடன் போரிட்டான். 1536ல் மாயாதுன்னை கோட்டையை முற்றுகையிட்டான். போர்த்துக்கேயரால் அரண் செய்யப்பட்ட அக்கோ நகரில் இலகுவில் நுழைய முடியவில்லை கோவாவுக்கு புகனேகபாகு செய்தி அனுப்பியதும் மாட்டின் டீ சௌசா தலைமையில் 11 கப்பல்களில் போர்த்துக்கேய படை வந்தது. மாயாதுன்னை பின்வாங்கினான். போர்த்துக்கேயர் “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்” புகனேகபாகு அதனை “ஞாலத்தின் மாணப் பெரியது” எனக்கருதி அவர்களுக்கு பெருமளவில் பதிலுபகாரம் செய்தான். மாயாதுன்னையின் சகோதரன் இறக்க, றைகமத்தையும் இளையவனே கைப்பற்றினான்.

1537ல் சமுத்திரி மாயாதுன்னைக்கு உதவி செய்ய பெரும் படையொன்றை திரட்டினான். 51 கப்பல்களில் 500 பீரங்கிகளும் 2000 ஆட்களும் அனுப்பினான். அப்படை வழியிற் கண்ட போர்த்துக்கேய கப்பல்களைத் தாக்கியும் அவர்களது தளங்களையும் அளித்தும் வந்தது. குமரிமுனையைச் சுற்றிக்கொண்டு நாகபட்டினத்தைத் தாக்கியது. எதிர்பாராமல் போர்த்துக்கேயப்படை ஒன்றைக் கண்டது. மாட்டின் டீ சௌசா புகனேகபாகுவின் வேண்டுகோளுக்காக புறப்பட்டான். குஞ்ஞாலியின் போர்முறை யாதெனில் போர்த்துக்கேயப் படையை நேருக்கு நேர் நின்று தாக்கி முடிவுகாணும் போர்செய்ய இடமளிக்காமல் துன்புறுத்துவதாகும். ஆனால் இம்முறை டீசௌசா அவனை நேரே போரிடச் செய்தான். இராமேஸ்வரத்திற்கு அயலிலுள்ள வெத்தலை (ஏயனயடயi) (மண்டபம்?) க்கு அருகில் 1538 மாசி 20ல் நடந்த பெருங்கடல் போரில் போத்துக்கேயர் வென்றனர். ழூ போர்த்துக்கேயக் கைதிகளையும் விடுவித்துப் பெரும் பொருள்களுடன் மாயாதுன்னைக்குச் சமுத்திரியனுப்பிய வெண்கொற்றைக் குடையையும் அபகரித்தனர். இப்போர் சமுத்திரியின் கடற்பலத்தை யழிக்கத் தவறிவிட்டது எனினும் சிறிது காலத்துக்கு இப்பகுதியில் போர்த்துக்கேயர் பயமின்றி உலாவ இடமிளித்தது. புகனேகபாகு டீ சௌசாவுக்கு 45000 “குருசாடோ” (ஊசரணயனழ) பணம் கொடுத்தான் ஆனால் மாயாதுன்னையைத் துரத்திச் சென்று போரிட மறுத்தான். இவனது குடிகள் பலர் மாயாதுன்னையின் பக்கஞ் சேர்ந்தனர்.

புகனேகபாகு தனக்குப்பின் மாயாதுன்னை எதிர்த்துப்போரிட வல்லவன் ஒருவனே சிம்மாசனமேற வேண்டுமெனக் கருதி வீரமிக்க வீதிய பண்டாரனுக்குத் தன் மகளை மணஞ் செய்வித்தான். சிங்கள மரபுக்கு மாறாகத் தனக்குப் பின் தன் தம்பிக்கு அரசை அளிக்க மறுப்பான் என ஊகித்த மாயாதுன்னை தன் நன்பன் சமுத்திரிக்கு விலையேறப்பெற்ற பரிசுகளை நல்கி அவன் உதவியை நாடினான்.

போர்த்துக்கேயர் பலம் நாள் தோறும் வளர்வதைக் கண்ட சமுத்திரி அயல் வல்லரசு ஒன்றின் உதவியின்றிப் போரிட முடியாதெனக்கண்டு, துருக்கிப் பேரரசின் உதவியை நாடினான். போர்த்துக்கேய வாணிகத்தால் நட்டமடைந்த கம்பே மன்னன், துருக்கி சுல்தான், சமுத்திரி ஆகிய மூவரும் சேர்ந்து மூவர் உடன்படிக்கை ஒன்றைச் செய்தனர் தெற்கே சீதாவக்கையரசு முதல் எகிப்து வரை பல அரசுகள் ஒன்று சேர்ந்து போர்த்துக்கேயரை முறியடிக்கும் முயற்சியைத் தொடங்கின. ஆனால் அதிஸ்டம் போர்த்துக்கேயர் பக்கமிருந்தது. 1538ல் சுல்தான் 72 கப்பல்களும் 6500 பேரும் கொண்ட கடற்படையுடன் வந்தான். டி சௌசா இராமேஸ்வரப் போரின் பின் வடக்கே சென்று அவனை எதிர்க்கும் முயற்சியை மேற்கொண்டனர். டையு துறைமுகக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. கூர்ஜர முஸ்லிம் வேந்தன் முதலில் உதவி செய்தான். பின் பூசலிட்டு விலகினான். இதனால் துருக்கிப்படை தன் நாட்டுக்குத் திரும்பியது போத்துக்கேயர் மயிரிழையில் தப்பினர்.

இதன் பிறகு சிறிது காலம் கடற்போர் மூளவில்லை ஆனால் போத்துக்கேயர் தம் வாக்குறுதியைக் காப்பாற்றாமல் விட்டதும் சமுத்திரி மீண்டும் தாக்குதலை தொடங்கினான். மாயாதுன்னையின் விருப்பப்படி ஒரு மலையாப்படை புத்தளத்திலிறங்கிச் சீதாவக்கைப் படையுடன் சேரச்சென்றது. வீதிய பண்டாரன் எல்லைக்காவலில் ஈடுபட்டு மாயாதுன்னை முன்னேறாமல் தடுத்தான் (போர்த்துக்கேயப் படையொன்று பெரேரா தலைமையில் 1539ல் வந்து நீர்கொழும்பில் சமுத்திரியின் படையை வென்றது) அதை கோட்டையில் உபசரித்த புகனேகபாகு இருமாதச் சம்பளத்தை முற்பணமாக அளித்தான். தன் விருப்பத்திற்கு மாறாக போர்த்தக்கேயர் சொற்படி தானே முன் நின்று படை நடத்திச் சென்று சீதாவக்கையைத் தாக்கப்புறப்பட்டான். களனிப்பாலத்தை பாதுகாத்து நின்ற மலையாள வீரரை வென்று குருபவில என்னுமிடத்தை தாக்கிய போது மாயாதுன்னை சமாதானம் செய்ய தூதுஅனுப்பினான். போர்த்துக்கேயர் மகனையும் வேறிருவரையும் பிணையாக அனுப்பிய பின்னரே சமாதானப் பேச்சு தொடக்கலாம் என்றான். அவர்கள் வஞ்சகத்தை அறியாத மாயாதுன்னனை நம்பித் தன் எட்டு மகன் திகிரி பண்டாரனை ஒரு சிங்களப் பெருமாட்டியையும் அனுப்பினான். போர்த்துக்கேய தளபதி பெரரேரா நான்கு மலையாளத் தளபதிகளையும் வேறு ஆறு படைத்தலைவர்களையும் தன்னிடம் ஒப்பிவிக்கமாறு கேட்டான். மாயாதுன்னை தன்னிடம் சேவை செய்த போர்த்துக்கேயன் ஒருவனை அனுப்பித் தனக்கு உதவிக்கு வந்தவர்களை காட்டிக்கொடுப்பது அக்கிரமம் என்று அறிவித்தான். ஆனால் பிடிவாதமாக நின்ற பெரேராவின் சூழ்ச்சி பலித்தது. மைந்தன் மேலிருந்த பற்றினாலும் போரை தொடர்ந்து நடத்த பலமின்மையாலும் மாயாதுன்னை பெருந் துரோகச் செயலை அருவருப்புடன் செய்தான் நான்கு நாட்களின் பின் மலையாளத் தளபதிகளின் தலைகளை வெட்டி அனுப்பினான். ழூ தான் பிடித்த பகுதியனைத்தையும் கொடுத்து யுத்தச் செலவும் ஈந்து சமாதானம் செய்தான். இச்சூழ்ச்சியால் போர்த்துக்கேயர் சீதாவக்கை கோழிக்கோட்டு அச்சை உடைத்தனர். இதன் பின் பலகாலம் சமுத்திip மாயாதுன்னை உதவியளித்திலன் தன்னந்தனியே போர்த்துக்கேயரை எதிர்த்துப் போரிட்டு வந்தான் மாயாதுன்னை.

ழூ இலங்கையிற் போராடத் தனக்கு உதவிக்கு வந்த குரங்குப்படையில் ஒரு குரங்கு குறையினும் தாயகம் திரும்பேன் எனக் கூறி அனைத்தையும் உயர் பெறச் செய்து சுக்கிரீவன் பால் ஒப்புவித்த இராமன் கதையைப் படித்தவர்களுக்கு இது வெறுப்பையே அளிக்கும் ஆனால் நிஜவாழ்க்கையில் அநீதியுடன் உறவாடுதலை அரசியலார் தவிர்க்க முடிவதில்லை.

போர்த்துக்கேயர் புகனேகபாகுவின் பலவீனத்தையுணர்தனர். கொழும்பில் பண்டகசாலைத் தலைவன் (குயஉவழச) பேரோ வாஸ் மனம் போனவாறு நடந்தான் இது பற்றிப் புகனேகபாகு பெரேராவுக்கு முறையிட்டான். குருமாரின் ஆலோசனையைக் கேட்ட பின்னரே பெரேரா அவனை நீக்கினான்.

புகனேகபாகு தம்பிக்கு பின் தன் அரசு தன் மகள் வயிற்றுப்பேரன் தர்மபாலனுக்குச் சேர வேண்டுமென விரும்பினான். சிங்கள பரம்பரை வளக்கத்திற்கு மாறாக தன் தம்பிக்கு தன் அரசைக் கொடாமல் விடத்தீர்மானித்தான். முறைதவறிய இச்செய்கை பெரும் சிக்கல்களை உண்டாக்குமென உணர்ந்த அவன் போர்த்துக்கேயரின் உதவியைக் கொண்டே தன் பேரன் அரசாள வேண்டுமென திட்டமிட்டான். அதன் பொருட்டு போர்த்துக்கேய அரசனுக்கு ஒரு கடிதம் எழுதினான். அரசனுக்கு ஆலோசனை கூறிய கோவை இராஜப்பிரதிநிதி தர்மபாலனை சிம்மாசனம் ஏற்றினால் போர்த்துக்கேயரின் செல்வாக்கு உயரும். ஆனால் அதனை நிலைநாட்ட அதிக படைகள் அவசியம் எனத் தெரிவித்தான். கொழும்பில் உள்ள போர்த்துக்கேயரின் தூண்டுதலால் புகனேகபாகு லிஸ்பானுக்குத் தூதுக்குழுவொன்றை அனுப்பினான். ஸ்தானீகராகத் தெரிவு செய்யப்பட்ட இராதரக்க பண்டிதனும் சலப்பு ஆராச்சியும் தர்மபாலனனின் பொற்படிமம் ஒன்றை எடுத்துச் சென்றனர். 1543ல் அதற்கு முடிபுணைந்த போர்த்துக்கேய மன்னன் 3ம் ஜோன் தர்மபாலனை இலங்கையின் வருங்கால வேந்தன் என பிரகடனம் செய்தான். தன் முன்னோரிலும் அதிக மதப்பற்று மிக்க இவனை திருப்தி செய்யும் பொருட்டு தூதுக்குழுவினர் குருமாரை அனுப்பினால் இலங்கை வேந்தன் கிறீஸ்தவ சமயத்தை ஏற்பான் என அறிவித்தனர். பிரான்சிஸ் சபைக்குரமார் மன்னனால் இங்கு அனுப்பப்பட்டனர். தூதுக்குழுவினரின் இராஜதந்திர திறனால் இங்குள்ள போத்துக்கேயரின் பிசகான செயல்களை தடுக்கும் கட்டளைகளை மன்னன் வெளியிட்டான். ஆனால் அதற்கு அளித்த விலை குருமாரை வேண்டிப்பெற்றவை பல சிக்கல்களை உடன் கொணர்ந்தது.

புகனேகபாகு கீழ்நாட்டு வழக்கப்படி அவர்கள் போதனைக்கு தடை விதித்திலன் எனினும் தான் மதம் மாறச் சம்மதித்தானல்லன். அதனால் மாயாதுன்னையின் செல்வாக்கு உயரும் என அவனறிவான். குருமார் தம் கருமம் வெற்றிகரமாக நடைபெறாமையால் மன்னன் மீது வெறுப்புற்றனர். புகனேகபாகுவின் இளைய தாரப்பிள்ளைகள் இருவரை மதம் மாற்ற முயன்றனர். கோவாவுக்கு சென்று கிறீஸ்தவர்களானால் சிம்மாசனமேற வழி செய்வதாக ஆசை காட்டினர். ஓர் அரசகுமாரனும் அவன் மைத்துனனும் சில உயர் குலப்பிள்ளைகளுடன் கோவாவுக்கு கூட்டிச்செல்லப்பட்டனர். இவர்கள் போர்த்துக்கேயரின் சமய - அரசியற் செல்வாக்கை பெருக்கும் முயற்சிகளுக்கு பகடக்காய்களாயினர். இவர்களை இலங்கையிற் சிம்மாசனமேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புகனேகபாகுவிற்கும் போத்துக்கேயருக்குமிடையில் வெறுப்பு வளரலாயிற்று. எனவே மாயாதுன்னைக்கும் தமயனுக்குமிடையில் ஒற்றுமை பெருகியது.

சமுத்திரியின் உதவியை இழக்க மாயாதுன்னை போர்த்துக்கேயரிடமிருந்து புகனேகபாகுவை முற்றாக பிரித்துவிடவும் சகோதர ஒற்றுமைப் பலத்தால் தன் இராச்சியம் பெருக்கும் ஆசையை நிறைவேற்றவும் திட்டமிட்டான். கண்டி மன்னன் முன்னாளில் அளித்த திறையைக் கோட்டையரசுக்கு அளிக்கவில்லையென்ற காரணத்தால் அவன் மீது படையெடுக்க அண்ணனின் சம்மதத்தைப் பெற்றான். கண்டி வேந்தன். விக்கிரமபாகு தன்னிடம் உதவி பெற்றோர் இப்பொழுது தன்னைத்தாக்க முற்படுவதையறிந்து போர்த்தக்கேயரின் உதவியை நாடினான். (அவர்கள் திருகோணமலையிற் பண்டகசாலையமைக்க இடமளிக்கவும் சம்மதமீத்தான் சமயம் மாறுவதாகவும் நடித்தான்.)

இக்காலத்தில் கோவாவில் புதிதாக பதவியேற்ற இராசப் பிரதிநிதி டீகாஸ்ற்றே போர்த்துக்கேய மன்னன் 3ம் ஜோண் கட்டளைப்படி கிறீஸ்தவரல்லாதவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானித்தான். புகனேகபாகு கிறீஸ்தவனாக மறுத்தமை கிறீஸ்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டவர்களின் நிலங்களைக் கைப்பற்றியமை ஆகிய கருமங்களுக்கு விளக்கம் கோரினான். மன்னனே தான் கிறீஸ்தவ சமயத்தை ஏற்கமுடியாது என்பதை தெளிவு படுத்திக் குருமார் மதப்பிரசாரம் செய்ய உரிமையளிப்பதாக தெரிவித்தனர். விக்கிரமபாகு தான் போர்த்துக்கேயருக்குச் சலுகைகள் வழங்கும் செய்தியை ஒரு கிறீஸ்தவ குரு மூலம் கோவாவுக்கு அனுப்பினான். 1546 மாசியில் அந்திரே டீ சௌசா தலைமையில் 50 போர் வீரரும் ஒரு மத குருவும் கண்டிக்குச் சென்றனர்.

ஆனால் அதற்கிடையில் கண்டி மன்னனை மதம் மாற்றுவதில் ஊக்கமுடைய குருமார் அவன் ஞானஸ்நானம் பெற்றுக் கிறீஸ்தவனானால் உடனே படையுதவி கிடைக்குமென ஆசைகாட்டி தன் பிரசைகளுக்கு அஞ்சிய மன்னன் இரகசியமாக ஞானஸ்நானம் பெற்றானாம். அதன் பின்னரும் படையுதவி வரத்தாமதிக்கவே வேறுவழியின்றி அவன் மாயாதுன்னைக்கு 24 இலட்சம் பணம் பட்டத்து யானை முதலியவற்றைத் திறையாக அளித்தும் புகனேகபாகுவின் பேரன் தரம்பாலனுக்குத் தன் மகளை விவாகம் செய்யச் சம்மதித்தான். எனவே போர்த்துக்கேயர் கண்டியை அடைந்த போது அவன் அவர்களின் அற்பஉதவியை ஏற்க மறுத்தான். மதகுரு ஒருவன் மீண்டும் அவனது கடிதங்களுடன் கோவாவிலிருந்து படையுதவி பெற்று வரச் சென்றனர் அனால் அங்கு கூர்ஜரப்படை1 டையூவை முற்றுகையிட்டமையால் காஸ்ற்றே இலங்கைக்குப் படையனுப்ப இயலவில்லை.

வாட் பலத்தை அளித்தாயினும் தம் கருமத்தைச் சாதிக்க விரும்பிய கொச்சி மேற்றிராணியாரும் குருமாரும் கண்டியரசனுக்கு உதவிப் படையனுப்புமாறு இடைவிடாது வற்புறுத்தி வந்தமையால் 1547ல் அந்தோனியோ - மோனிஸ் பறெற்றோவின் தலைமையில் 100 படைவீரர்களை சில குருமாரையும் இராசப் பிரதிநிதி காஸ்ற்றோ அனுப்பினான். போர்த்துக்கேயரின் தலையீட்டை எதிர்பார்த்த கோட்டை மன்னன் அவர்களுதவி கண்டியை அடையமுன் அரசனை அச்சுறுத்தி அவன் மகளையும் கோட்டைக்கு அழைத்துச் சென்றான். ஆதலால் கண்டிக்கு வந்த போர்த்துக்கேயர் வரவேற்றைப்பெறாது உயிருக்கு அஞ்சி ஓட வேண்டியதாயிற்று சூழ்ச்சி மிக்க மாயாதுன்னை தன் பிரவேசத்துக்குட் புகுந்த அவர்களை ஆதரித்து கோவாவுக்கு தூதனுப்ப முன்வந்தான். கண்டியிலிருந்து மணப்பரிசாக வந்த பெருந் திரவியங்களை அபகரித்துக் கொண்டு பறெற்றோ கோவாவுக்குச் சென்றான். புகனேகபாகுவிற்கு கொடுக்க வேண்டிய கடனையும் கொடுக்க போத்துக்கேயர் மறுத்தனர். மன்னன் அவர்கள் மீது பகைமை பாராட்டலானான் அவர்கள் சீதாவக்கைக்கு வியாபாரத்திற்குச் செல்லலாகாது எனத் தடுத்தான். மதம் மாறியோர் போர்த்துக்கேயரின் ஒற்றர்களாவர் எனக்கண்டு அவர்களைத் துன்புறுத்தினான். போத்துக்கேயர் செய்த அக்கிரமங்களும் அதிகரித்தன. இரு பக்கத்தாரின் இடைஞ்சல்களையும் குறைக்க வழிகாணும் பொருட்டு ஜோண் என்ற மதகுரு விஸ்பனுக்குச் சென்றான்.
“புதுமுறைச் சரித்திரம்” அடங்கன் ஐ பக்கம் 293 ஜப் பார்க்கவும்

மாயாதுன்னை கோட்டைமீது படையெடுத்தான். புதிய இராஜப்பிரதிநிதி கப்றால் மாயாதுன்னை பக்கஞ் சேர்வதாகப் பயமுறுத்திப் புவனேகபாகுவிடமிருந்து 3000 “குருசாடோ” பணம் தருமாறு கேட்டான். அவ்வளவு பெருந்தொகை சேர்க்க இயலாத2 அரசன் போர்த்துக்கல் மன்னன் தனக்களித்த வாக்குறுதியை காக்க வேண்டுமென வேண்டி விஸ்பனுக்கு விண்ணப்பித்தான். அவனது வேண்டுகோளுக்கு இணங்கினான். போர்த்துக்கேய அரசன் இறக்க இராசப் பிரதிநிதி காஸ்ற்றோவின் சிறிய தகப்பன் காஸ்ற்றே இலங்கைக்கு 600 படை வீரருடன் அனுப்பப்பட்டான். அவன் புகனேகபாகுவின் படைகளையும் இட்டுச் சென்று சீதாவக்கை நகரை அழித்தான். அரசியலில் அநாவசியமாகத் தலையிடும் மதகுரு ஒருவர் அவனைக் கண்டி மீது படையெடுக்குமாறு வற்புறுத்தினான். புகனேகபாகு தடுக்கும் காஸ்ற்றோ கண்டிக்குப் போனான் வழியில் எதிர்பாராமல் தாக்கப்பட்டு இழந்தான்.
3. 1537ல் போர்த்துக்கேயருக்கு 45000 குருசாடோ பணம் கொடுத்த புகனேகபாகு 10 ஆண்டுகளுக்குள் போர்த்துக்கேயரின் சுரண்டலுக்கு ஆளாகி 3000 குருசாடோ கொடுக்கவும் இயலாத நிலையடைந்தான் என்பது கவனிக்கத்தக்கது. அவனது கறுவாவைக் கடனாக வாங்கி அவனுக்கு பெருந்தொகை கடன் கொடுக்க வேண்டியவராயினர்.
(குருசாடோ ஸ்ரீ 400 றீஸ் கொண்டது)

1505ல் கீழ்நாட்டின் இராஜப்பிரதிநிதியாக வந்த நொரொன்ஹே கொழும்பையடைந்து இப்படையழிவுக்குப் புகனேகபாகுவே காரணம் எனக் குற்றஞ் சாட்டியதுடன் கிறீஸ்தவர்களைத் துன்புறுத்திய குற்றத்தும் சேர்த்துப் பதினாயிரம் பர்தா3 பணம் கேட்டான். அரசன் பெருஞ் செல்வம் படைத்தவன் எனக் கேள்வியுற்ற அவன் புகனேகபாகு தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதை மறுத்தான். மாயாதுன்னையின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கலானான். இதனால் அச்சமடைந்த புகனேகபாகு அவன் கேட்ட தொகையில் ஒருபகுதியையளித்துப் போர்த்துக்கல் மன்னன் தனக்கும் பேரனுக்கும் அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்தினான். நொரொன்ஹா முதுமையுற்ற புகனேகபாகு இறந்தால் போர்த்துக்கேய அரச கட்டளைப்படி பேரனைச் சிம்மாசனம் ஏற்ற முன் தன்னிடம் உத்தரவு பெறும்படி கொழும்புப் பண்டகசாலைத் தலைவனுக்கு கூறி இந்தியாவுக்குச் சென்றான்.

விரைவில் மாயாதுன்னை கோட்டைமீது படையெடுத்தான். போர்த்துக்கேய பண்டகசாலை தலைவனும் படையும் புகனேகபாகுவும் களனியாவுக்குப் பாதுகாப்பின் பொருட்டுச் சென்றான். ஆனால் அங்கு போர்த்துக்கேய போர் வீரன் ஒருவனால் புகனேகபாகு சுடப்பட்டு இறந்தான். (1551) இதனைத் தூண்டியவர் யாரென முடிவு கட்டுதல் அரிது. நொரொன்ஹாவைச் சிலரும் மாயாதுன்னையைச் சிலரும் குற்றம் சாட்டுவர்.

புவனேகபாகுவின் மரணத்துடன் கோட்டையரசின் வரலாற்றில் ஒரு பருவம் முடிவுற்றது. அவன் தம்பிக்குப் பயந்து போர்த்துக்கேயருக்கு இடமளித்தான். அதனால் “தராசும் பைபிளும்” கொண்டு வந்த அவர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் பாரதூரமான மாற்றங்களை உண்டாக்கினர். அரசன் இதற்கு உடந்தையாயிருந்தானல்லன் எனினும் மதியீனமாக அன்னியருக்கு இடமளித்தமையால் விளைந்த கோடுகளுக்கு அவனையே குற்றவாளியாக்கினர். பொது மக்கள் அதனால் பலர் அவனை ஆதரிக்காது மாயாதுன்னை பக்கஞ் சாய்ந்தனர்.
3. Pயசனயழ ஸ்ரீ 300 சநளை இது ஓசநயகiஅ என்றும் அழைக்கப்படும்.


3. கோட்டையரசு போர்த்துக்கேயரின் பாதுகாப்பின் கீழ் வருதல்
(1551 - 1597)
புவனேகபாகு இறந்ததும் கோட்டை நகரில் தர்மபாலன் அரசனாயும் அவன் தந்தை வீதிய பண்டாரன் பாதுகாவலனாயும்4 நியமிக்கப்பட்டான். ஆனால் இதைக்கேள்வியுற்ற நொரொன்ஹா புகனேகபாகுவின் நிதியை அபகரிக்க இங்கு வந்தான். தர்மபாலன் கிறீஸ்தவனாகாவிடின் அரசனாக முடியாது என வாதித்தான். வீதியன் இப்போது மதம் மாறினால் தர்மபாலனைக் குடிகளனைவரும் கைவிட்டு மாயாதுன்னை பக்கம் சேர்ந்து விடுவர் எனச்சுட்டிக்காட்டி மாயாதுன்னை பிடித்துக் கொண்ட பிரதேசத்தை மீட்டுத் தருமாறு கேட்டான். இராஜப் பிரதிநிதி சம்மதித்துத் தர்மபாலனை போர்த்துக்கேய மன்னனின் கீழ் அரசனாக ஏற்றுக்கொண்டான். வீதியனையும் கோட்டை இராச தந்திரிகளான தம்மித பண்டிதர்களையும் சிறையிட்டு இறந்த அரசனின் பொக்கிஷங்களைத் தேடி பெற முயன்றான். களனி விகாரையின் நிதிக்குவையே அவன் கைப்பட்டது. இக்கொள்ளைகள் ஸ்பானியர் அமெரிக்காவில் நிகழ்த்தியவற்றுக்குச் சற்றும் குறைந்தன அல்ல. இதனால் சிங்களவர் அராஜகம் நிகவும் நாட்டில் வாழ விரும்பாது மாயாதுன்னை பக்கஞ் சாந்தனர். அவன் கோட்டை அரசின் பெரும் பகுதியைப் பிடித்துக் கொண்டான்.
4. சுநபநவெ

போர்த்துக்கேயப் படை தர்மபாலனின் சிங்களப் படையுடன் சீதாவக்கையை நோக்கிச் சென்றது. போரில் தோற்ற மாயாதுன்னை சமாதானத்தை நாடினான். ஆனால் புகனேகபாகுவின் மரணத்திற்குப் பழிவாங்கவதாகக் கூறிப் போர்த்துக்கேயர் தலைநகரை அழித்தனர். அரண்மனையும் வைரவ ஆலயமும் எரியூட்டப்பட்டன. (அவிசாவலைக்கு அப்பாலுள்ள சீதாவக்கையில் இன்னும் அழிவுற்ற நிலையிலுள்ள அக்கோவிலில் திராவிட சிற்ப அழகுகளை காணலாம்)


படம் 5. “பெரெண்டிக் கோவில்” எனப்படும் வைரவர் அலயம் - சீதாவக்கை

ஆனால் குடிகள் அனைவரும் சகோதரப் போட்டியைச் சாக்கிட்டுப் போத்துக்கேயர் சிங்கள சமூகத்தை அழிப்பதை யுணர்ந்தனர். தன்னை சூழ்ந்து எங்கும் எதிர்ப்பு தோன்றுவதை அறிந்த நொரொன்ஹா மெல்லச் சீதாவக்கையை விட்டு மிகக் கஷ்டத்துடன் கொழும்புக்குத் தப்பி வந்தான். இந்தியாவில் போர் மூண்டதை அறிந்து ஒருவாறு கிடைத்த கொள்ளைப் பொருட்களுடன் சென்றான். அவன் போர்த்துக்கல் மன்னனுக்கு எழுதிய கடிதம் தம் அவனது பகற் கொள்ளையை ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்துகிறது.

அவனுக்கு அஞ்சி ஓடிய வீதிய பண்டாரன் மீண்டு வந்து போர்த்துக்கேயரைப் பழிவாங்கினான். திறை செலுத்த மறுத்தான். அவர்கள் கறுவாவையும் கிறீஸ்தவர்களையும் பெறவியலாமல் தடுத்தான். போர்த்துக்கேயரை எதிர்த்து நின்ற கோட்டை இராசதானியின் கடைசிச் சுடர் அவனுட் பிரகாசித்தது. யாழ்ப்பாண சீதாவக்கை மன்னரும் அவனை நாடினர். ஆனால் அவன் மாயாதுன்னையின் மகளை மணந்தான். எனினும் அவன் மீது நம்பிக்கை வைத்திலன் இலங்கையிற் போர்த்துக்கேயர் செல்வாக்கு முற்றாக அழியும் நிலையேற்பட்டதை அறிந்த போர்த்துக்கேய அரசன் இராசப்பிரதிநிதி பொருட்களைத் திருப்பி கொடுத்துச் சமாதானஞ் செய்ய வேண்டுமெனக் கட்டளையிட்டான். நொரொன்ஹா ஒரு பகுதியைக் கொடுத்தும் மீதியைத் திறைப் பொருட்கணக்கிலும் போர்த்துக்கேயருக்குக் கோட்டை மன்னன் அளித்த பரிசுக் கணக்கிலும் தானே வைத்துக்கொண்டான். ஆங்கில எகாதிபத்தியத்துக்குச் சேவை புரிந்த கிளைவ் போன்றவர்கள் பிற்காலத்தில் இதே கொள்கையைக் கடைபிடித்துப் பகற்கொள்ளையடித்தனர்.

வீதியனின் பலம் பெருகுவதைக் கண்ட போர்த்துக்கேயர் அவனைச் சிறை செய்தால் இளைஞனான தர்மபாலனைத் தாங்கள் தம் கைப்பொம்மை போல் ஆட்டி வைக்கலாம் என உணந்தனர். (புதிதாக வந்த இராசப் பிரதிநிதி கொழும்பில் பழைய கோட்டைக்குப் பதிலாகப் பலம் வாய்ந்த புதிய கோட்டையொன்றையமைத்தான். நகரை சுற்றி மதில் கட்டப்பட்டது.) படைகளும் பெருகின டீமெல்லோ என்பவன் பத்துப்போருடன் வீதியனுடைய அரண்மனையிற் புகுந்து அவனை கைது செய்தனர். கொழும்பில் அவனை பாதாள அறையில் சிறைவைத்த போர்த்தக்கேயர் தம்மித சூரியனை அரச பாதுகாவலனாக்கினர். வீதியனுடைய மனைவி சில போர்த்துக்கேயரை தன்வசப்படுத்தி ஒரு சுரங்க வழி செய்தாள் (1552) தப்பிப் போகும் போது காலிவரை வீதியன் போர்த்துக்கேயர் வசமிருந்த துறைமுகங்களையும் தாக்கினான். காலியில் நின்ற கப்பல் ஒன்றையும் கொழுத்தினான். போர்த்துக்கேயரும் பழிவாங்கினர். அக்கால நிலையை வருணித்துத் தாய் நாட்டுக்கு எழுதிய கடிதமொன்றில் ஒரு யோசுசபைச் சகோதரர்5 பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
5. டுயல - டிசழவாநச

“கொழும்பிலோ கோட்டையிலோ மக்கள் வசிக்கக் கானோம். வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன. மையால் அன்று கண்ணீராலேயே இவற்றை எழுதுகிறேன். குடிகள் காடுகளிற் தஞ்சம் புகுந்துள்ளனர். கிறீஸ்தவர்கள் பழையபடி தம் சமயத்தைக் கைக் கொள்கின்றனர். போர்த்துக்கேயர் இங்கு செய்யும் கொடுமைகளால் நம் மதத்தை ஏற்றவர்களும் எம்மதம் நாம் போதிக்குமளவு நல்ல மதமென்று என நினைக்கத் தொடங்கி விட்டனர். போர்த்துக்கேயர் இது காலவரை செய்த இப்பொழுதும் செய்கின்ற கொடுமைகளை எமக்கு சுட்டிக்காட்டி முகத்தில் அறைந்தாற் போலப் பேசுகின்றனர்.

இவ்வாபத்து நிலையைச் சமாளிக்கும் படி அனுப்பப்பட்ட புதிய போர்த்துக்கேய தளபதியுடன் மாயாதுன்னை தொடர்பு கொண்டு தன்னைக் கோட்டையரசராக ஏற்றுக்கொண்டால் தான் போர்த்துக்கல் மன்னனுக்கு கீழ் அரசாள்வதாக கூறினான். இதற்கு தடையாக இருந்த தம்மித சூரியனுடன் வேறிரு இராசதந்திரிகளையும் கைது செய்து கோவாவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு மதம் மாற்றிய பின் தம்மிதன் கொளரவத்துடன் இங்கு திருப்பியனுப்பப்பட்டனர்.6 மாயாதுன்னை இதனை வரவேற்காவிடின் போர்த்துக்கேயருடன் ஒத்துழைத்தான். அவனது இளைய மகன் திகிரிபண்டாரன் (பின்னர் இராஜசிங்கன் எனப்பெயர் பெற்றவன்.) அவர்களுக்கு உதவியாக படைநடத்தி சென்று வீதிய பண்டாரனைத் தோற்வியுறச்செய்தான். வீதியன் தெற்கே நோக்கி சென்று பிக் வடக்கு எழு கோறளை ஏகினான். அங்கு தன்னை வரவேற்ற அதிபதியை அழித்துத்தானே அப்பிரதேசத்திற்கு உரிமை பூண்டான். அதனால் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகி யாழ்ப்பாணத்தில் அடைக்கலம் புகுந்தான். அங்கு எதிர்பாராது ஏற்பட்ட தீவிபத்தின் போது ஒரு தெருச் சண்டையிற் சிக்கி உயிர் நீத்தான். துணியும் வீரமும் மிக்க இவன் அரசியல் ஞானமின்றி அதிக ஆசையுடையோனாயிருந்தமையால் மாபெருந் தலைவனாகிப் போர்த்துக்கேயரின் வளர்ந்து வரும் அதிகாரத்தைத் தடுக்க இயலாதவனாயினான்.

போர்த்துக்கேயர் புத்தளம் முதல் தேவன் துறை வரை கறுவா விளையும் பகுதியில் வாழ்ந்த மக்களை மதம் மாற்றியதுடன் அநாதையான அரசன் தர்மபாலனையும் மதம் மாற்றத் தீர்மானித்தனர். (1557) அவனது இரு முக்கிய அரசியல் ஆலோசகராக ஏற்கனவே கோகாவில் மதம் மாறி வந்தமையால் அவனை மதம் மாற்றுவதில் தடையேதும் ஏழவில்லை போர்த்துக்கல் மன்னனதும் இராணியினதும் பெயர்களை - டெயன்ஜீவான் டோனா கதிரீனா - இவனுக்கும் அரசிக்கும் சூட்டினர் இம்மத மாற்றத்தால் அரசனை ஆதரிக்கும் உயர் வகுப்பினர் சிலரும் மதம் மாற்றினர். பிரான்ஸிஸ் சபைக்குருமார் பன்னிரண்டு கோவில்களைக் கட்டினர். அவர்களுக்குரிய செலவு அரசிறையில் இருந்தே போயிருக்கும் எனக் கூறவேண்டியதில்லை. பொது மக்கள் கொதிப்படைந்து கலகஞ் செய்தனர். போர்த்துக்கேயர் வாட் பலத்தால் அதனை அடக்கினர். அவர்களது கொடுமைக்கு ஆற்றாது பலர் மாயாதுன்னை பக்கஞ் சாந்தனர். அவன் சிங்கள அரச வழியுரிமைப்படி தானே புகனேகபாகுவுக்குப் பின் இலங்கையின் சக்கரவர்த்தி என உரிமைபாராட்டி வந்தான். இப்பொழுது புத்தசமயத்தின் ஓரே பாதுகாவலன் என்ற முறையில் சிங்களவரின் விசுவாத்துக்கு உரிமையுடையவன் ஆனான்.
6. டெல்கி சுல்தான் முகமது - இபின் - துக்லக் தென் இந்தியாவில் தன் ஆட்சியை நிலைபெறச் செய்வதற்கு உள்ளுரவரை மதம் மாற்றி உயர்பதவியில் மீண்டும் வைக்கும் கொள்ளையை கடைப்பிடித்ததை ஓப்பிடுக. (பு.மு.ச அடங்கன் 1 முதற்பதிப்பு பக் 49 2ம் பதிப்பு பக் 37)

சீதாவக்கை படை கொழும்பை முற்றுகையிட்டது. கோட்டையைச் சுற்றியிருந்த பிரதேசமனைத்தும் மாயாதுன்னையின் வசமாயின. போர்த்துக்கேயர் உணவு முதலிய பொருட்கள் இன்றி துன்படைந்தனர். இந்தியாவில் இருந்து வந்த உதவிப்படை போதாமையால் போர் எப்பக்கத்துக்கும் முழு வெற்றியின்றி நீண்டகாலம் நிகழ்ந்தது. கோட்டைக் குடிகள் இறையுறாத் துயரமடைந்தனர். மன்னன் பார்த்துக்கொண்டிருக்க அந்நியர் தம் மனம் போனவாறு கொடிய போரை நடத்தினர். பல முறை சீதாவக்கை படைகள் கொழும்பையும் கோட்டையையும் முற்றுகையிட்டனர். 1562ல் முல்லேரியாவில் நிகழ்ந்த போரில் போர்த்துக்கேயர் மாயாதுன்னையின் மகன் இராஜசிங்கனால் படுதோல்வியடைந்தனர். கோட்டை, களனியா ஆகிய கோநகரங்கள் முற்றுகையிடப்பட்டன. கொழும்பையும் கோட்டையையும் காப்பது அரிது எனக் கண்ட போர்த்துக்கேயர் தர்மபாலன் கோட்டையைக் கைவிட்டு கொழும்பு நகருக்கே வந்துவிடவேண்டுமெனக் கூறினர். வேறு வழியின்றி தர்மபாலன் அங்ஙனமே செய்தான். (ஆடி 1565) சுமார் 150 வருடகாலம் தலைநகராயிருந்த பட்டணம் அழிவுற்று வனவிலங்குகளின் உறைவிடமாயிற்று. தர்மபாலன் போர்த்துக்கேயர் தயவில் வாழ்ந்த உபகாரச் சம்பளம் பெற்று இறுதியில் அவர்களுக்கே தன் நாட்டையையும் எழுதிக்கொடுத்த பின் 1597ல் உயிர் துறந்தான்.
4. போத்துக்கேயர் ஆட்சி உரிமை பிரகடனம்
(மல்வானை மகாநாடு)

1597 வைகாசி 27ல் தர்மபாலன் இறந்தான். விரைவில் அசெவெடோ மல்லானையில் ஒரு மகாநாடு கூட்டினான். ஒவ்வொரு கோறளையிலிருந்து இவ்விரண்டு பிரிதிநிதிகளை அழைத்தான். அம் மகாநாட்டில் போர்த்துக்கேய அரசன் 1ம் பிலிப்பேழூ இப்பொழுது இலங்கையின் அரசனாதலால் இலங்கையிலுள்ள அவனது பிரசைகள் போர்த்துக்கேய சட்டதிட்டங்களின் படியே அரசாளப்படல் வேண்டும் என்றும் இதற்கு அவர்கள் சம்மதித்தால் அவர்களது பண்டைய உரிமைகள் எல்லாம் பாதுகாக்கப்படாம் என்றும் அறிவித்தான். பிரதிநிதிகள் இரண்டுநாள் ஆலோசனை நடாத்தியபின் தங்களது புராதனமான வழக்கங்கள் தமக்கு புனிதமானவை என்றும் அவற்றின் படியே தாங்கள் அம் மகாநாட்டினர் ஏற்றுக்கொள்ளத்தக்க மாற்றுத்திட்டமெதையும் வகுக்கமாட்டாமையால் அசெவெடோ வேறுவழியின்றிச் சிங்களரது பழைய வழக்கங்களையும் சட்டங்களையும் பேணிக் காப்பதாக வாக்களித்தான். பிரதிநிதிகளும் போர்த்துக்கேய மன்னன்பால் விசுவாசமுடன் இருப்பதாக வாக்களித்தனர்.
ழூ ஸ்பானிய மன்னர் 2ம் பிலிப்பு

மல்லானை மகாநாடு பற்றிய இக்கதை தற்கால வரலாற்று ஆசிரியர்கள் பலராலும் முழுவதும் நம்பப்படுகிறது. யேசுசபைக் குருவான பெரேரா சுவாமியும் தேசீயப் போக்குடைய சிவில் சோவையாளரான போல் ஈ.பீரிசும் இதனை நம்பி எழுதியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு முன் இலங்கைத் தரித்திரத்தை எழுதிய கொட்றிங்கரன் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ரெனெற் என்ற சரித்திராசிரியர் தர்மபாலனின் மரணத்துக்கு பின் ஒரு கூட்டம் நிகழ்ந்தது என்கிறார். ஆனால் மல்வானையைப் பற்றிக் குறிப்பிட்டிலர்.

இவர்கள் போர்த்துக்கேய மூலநூலாசிரியராகக் குறிப்பிட்டுள்ள குவேய்றோஸ் சுவாமியாரும் றிபேய்றோவும் எழுதிய வரலாறுகளில் பலமுரண்பாடுகள் உள்ளன. குவேய்றோசின் கூற்றுப்படி முதற் சபை தர்மபாலன் இறந்ததும் கொழும்பிற் கூட்டப்பட்டது. இரண்டாம் சபை மல்வானையில் கூடிற்று ஆனால் திகதி தெரியாது றிபேய்றோவின் கதை குவேய்றேஸ் கூறியதினின்றும் பல முக்கிய விடயங்களில் வேறுபடுகின்றது. அவர் கருத்தப்படி ஒரு சபையே கொழும்பிற் கூடிற்று.

போர்த்துக்கல் மன்னனைக் கோட்டையரசனாகப் பிரகடனஞ் செய்த வைபவம் நிகழ்ந்தது. என்பதற்கு வேறோரு பழைய சான்று உளது. கோவாவில் அரசாங்க சாசனசாலையின் அதிபனாயிருந்த குற்றோ7 என்பவன் வைகாசி 29 1597ல் தர்மபாலனின் கீழ் சேவை புரிந்த பிரபுகளும,; முதலியார்களும், வேறு முக்கியஸ்தரும் கொழும்பில் கூடினர் என்றும் அசெவெடோவின் விருப்பப்படி அரசகுலத்துப் பிரபுக்கள் ஜவரும் முதலியார், ஆராய்ச்சி, பட்டங்கட்டி8 என்போருள் ஒவ்வொருவரும் தேர்தெடுக்கப்பட்டுப் போர்த்துக்கல் மன்னனுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தனர் என்றும், அப்போது எழுதப்பட்ட சாசனம் சாசனசாலையிலல் இருந்தது என்றும் 1611ல் எழுதி வைத்துள்ளான்.
7. னுழைபழ னழ ஊழரவழ 8. மீனவர் குலத்தலைவன்
இராசப்பிரதிநிதி அசெவெடோ கோட்டையரசனைப் பொறுப்பேற்றமை பற்றிய போர்த்துக்கல் மன்னனுக்கு கடிதம் எழுதினான். அதற்கு பதிலாக மன்னன் எழுதிய கார்த்திகை 21. 1598 எனத் திகதியிட்ட கடிதத்தில் இதற்கான சாசனங்கள் இதுவரை எழுதுப்படாவிடில் அவற்றை எழுதுவிக்குமாறு கட்டளையிட்டான். (இக்கடிதம் இன்றும் உளது) எனவே கொழும்பில் நடந்த வைபவம் சரித்திர சான்றுகள் கொண்டு நிரூபிக்கத்தக்கதே.

ஆனால் குவேய்றோஸ் கூறும் இரண்டாம் பேரவை பற்றிய சான்றுகள் அருமையாகவே உள்ளன. அக்காலத்தில் எழுதப்பட்ட கடிதங்களில் அது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. அக்கால வரலாற்றைப் பூரணமாக எழுதிய குற்றோ இது பற்றி யாதொன்றும் கூறவில்லை குவேய்றோசும் தர்மபாலன் இறந்தமை பற்றிக் கூறியதை அடுத்து இதனை எழுதாது தமது நூலின் பிற்பகுதியில் (6ம் பாகத்தில்) போர்த்துக்கேயர் செய்த குற்றங்களைக் காட்டி ஒழுக்க நெறி பற்றிப் போதனை செய்யுமிடத்திலேயே மும்முறை மல்வானை மகாநாடு பற்றிக் குறிப்பிடுகின்றார். அசெவெடா ஆட்சியில் பத்து ஆண்டுகளின் (1594 - 1604) வரலாற்றை இரு சம காலத்தவரின் வாய்மொழி கொண்டே குவேய்றோஸ் எழுதினார். எனவே அங்கு இதனைக் கறிப்பிட்டிருந்தால் நம்பலாம் அங்கு இல்லாமையால் இது பற்றிய ஜயங்கொள்ளவே இடம் உண்டாகின்றது. மல்வானை பற்றிய மூன்று குறிப்புக்களில் இரண்டு சிங்களவர் தேசாதிபதி காஸ்ற்றோ (1636 - 1638) விடம் சமர்ப்பித்த விண்ணப்பத்திலேயே வருகின்றன. அதில் சிங்களவர் தமக்குப் போர்த்துக்கேயர் புரிந்து வரும் கொடுமைகளைச் சுட்டிக்காட்டி மல்வானையில் அசெவெடோ அளித்த வாக்கறுதியை நினைவூட்டியிருந்தனர். அதனை விரிவாகக் குவேய்றோஸ் எடுத்துக் காட்டியுள்ளார். அதன் முன்னுரையாகக் கூறும் வாக்கியங்களில் அவர் மல்வானை என்ற இடத்தை சுட்டவில்லை 1636ல் இவ் விண்ணப்பம் எழுதிய காலத்தில் மல்வானை அரசியல் முக்கியத்துவம் உடையதாயிந்ததே அன்றி 1597ல் இது முக்கியமான அரச பீடமாயிருக்கவில்லை 1636 அளவில் சிங்களவரிடையே ஒரு சபையில் தமது உரிமைகளைப் பேணுவதாகப் போத்துக்கேயர் வாக்குப் பண்ணினர். என்ற செய்தி பலமாகப் பரவலாயிற்று என்பதும் 1640 -1658ல் இலங்கையில் வசித்தவனும் அதற்கு 25 ஆண்டுகளின் பின் தன் அனுபவங்களை எழுதியவனுமாகிய றிபெய்றோ அதனைக் கேள்வியுற்றான்; என்பதும் ஊகிக்கத்தக்கது. குற்றோ அரச சபைப்பிரிவுகளும் வேறு முக்கியஸ்தர்களும் கூடினர் என்று கூறியிருக்க றிபேய்றோ இக்கதையை விரித்து அசெவேடோவும் அவனது ஆலோசனைச் சபையினரும் இராச்சியத்தின் எல்லாப் கோறளைகளுக்கும் கட்டளையனுப்பி அவ்வவ் கோறளை வாசிகளின் சார்பில் சத்தியம் செய்யதக்க இவ்விரு பிரதிநிதிகளை யனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். என்கிறான் ஆனால் றிபெய்றோ டச்சுக்காரருடன் போராடிய செய்திகளை தன் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்த எழுதியமையால் அவ்வரலாறு ஒருவாறு ஏற்றுக்கொள்ளத் தக்கதேயன்றி அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றைத் தன் காதுகெட்டியவாறு கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது.

அங்ஙனமாயின் மல்வானை மகாநாடு பற்றிய கற்பனைக் கதை எழுந்தது? கோட்டையரசில் ஆதிக்கம் பெற்ற போர்த்துக்கேயர் சாதி ஆசாரங்களைக் கவனியாமல் விட்டனர். பாக்கு முதலிய பொருட்களைக் கட்டாயப்படுத்திக் குடிகளிடமிருந்து சேகரித்தனர். போர்த்துக்கேயருக்கு நிலம் அதிக அளவில் நன்கொடையாக வழங்கப்பட்டது. சிங்களவருக்கு மிகச் சொற்பமே கிடைத்தது. இவற்றால் மனவேதனையுற்ற மக்களிடையே கற்பனைக்கதையே வளர்ச்சி பெற்றது. 1597ல் கொழும்பில் நிகழ்ந்த சாதாரண வைபவத்தில் தேசாதிபதி ஏதோ அந்நேரத்து நிலைமையைச் சமாளிக்கச் சொன்ன வாய்மொழியைப் பொதுமக்களின் உரிமை சாசனம் எனக் கொண்டாடத் தொடங்கினர். தம் உரிமைகள் பறிக்கப்படும் போது அதைச் சுட்டிப் போர்த்துக்கேயர் தம் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை எனக் குறை கூறினர். இத்தொடர்பில் சிங்களவர் தம் பழைய வழக்கங்களைப் போர்த்துக்கேயர் பேணுவர் என்ற அடிப்படையிலேயே அவர்களது மன்னனை ஏற்றனர். எனச் சிலர் கூறிவரும் கருத்துச் சரியன்று என்ற கொட்றிங்க்ரனின் கூற்று நுணுகிய ஆராச்சிக்குரியது. குற்றோ குறிப்பிடும் சாசனத்தைப் பாராமல் நாம் எப்பக்கத்துக்கும் பேச இயலாது ஆனால் அசெவெடோ வாக்களித்தான் என்ற வரலாற்றை நம்புவோமாயின் கொட்றிங்க்ரனின் கூற்று நம் கண்டனத்துக்குரியது.


5. கோட்டையரசின் வீழ்ச்சிக்குரிய காரணங்கள்
15ம் நூற்றாண்டில் இலங்கை முழுவதிலும் அதிகாரம் செலுத்திய கோட்டையரசு அடுத்த நூற்றாண்டில் தேவுற்று அழிந்து ஒழிய வேண்டி வந்தமைக்குக் காரணங்கள் யாவை எனச் சிந்தித்தல் நல்லது.

அ) அரசியல் :-
நாட்டின் அரசியல் நிலை குழப்பம் மிக்கதாயிருந்தது. “பாழ்செய்யும் உட்பகை” யே அதன் பலவீனத்துக்கு வித்திட்டது. 1505ல் வந்த போர்த்துக்கேயர் அற்ப அநுகூலங்களுடைய ஒப்பந்தம் செய்து கொண்டு போயினர் பின் கொழும்பில் அவர்களது இருப்பிடமும் அழிக்கப்பட்டது. ஆனால் வீரபராக்கிரமபாகு 1509ல் இறந்த பின் இருவராட்சியேற்பட்ட போதே போட்டி பொறாமை உட்பகையும் அதிகரித்தன. அதனாலேயே 1518ல் போர்த்துக்கேயர் முன்னைய ஒப்பந்தமொன்றை எழுதிக் கொண்டனர். கோட்டையொன்றைக் கட்ட இடங் கொடுத்ததே தன் சகோதரன் மீது கொண்ட அச்சங் காரணமாகத் தான் என்றும் கூறுவார் உளர்.

எல்லாவற்றுக்கும் மேலாக 1521ல் எற்பட்ட விஜியபாகு கொள்ளையுடன் கோட்டையரசு மூன்று சகோதரரிடையே பிரிக்கப்பட்டமையும் அதனைச் சற்றேனும் பலமற்றதாக்கியது. ஏற்கனவே இச்சின்னஞ்சிறு இலங்கைத்தீவு மூன்று சிற்றரசுகளாக பிளவுண்டு கிடந்தமையால் அந்நியரை நாடுமுழுவதும் ஜக்கிய உணர்வுடன் எதிர்க்க இயலவில்லை இப்பொழுது அவற்றின் அவற்றின் அதிகவல்லமையுள்ள கோட்டையரசு மேலும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படவே இத்தீவின் எப்பகுதியும் அந்நிய ஆதிக்கபரவுதலை எதிர்க்கும் திறனை இழந்து. மூன்று அரசகுமாரரும் தம்முள் ஒற்றுமையின்றிப் பேராசைமிக்கோராய்ப் பயன்படுத்த வேண்டிய சக்தியைச் சகோதரரையழிக்கும் யுத்தத்திற் செலவிட்டனர். தம்பிக்கு அஞ்சிய அண்ணன் தம்பியுடன் எங்ஙனமாயினும் சந்து செய்தலை விட்டு அந்நியரை நம்பிவாழலானான். தன் இறுதிக் காலத்தாயினும் பரம்பரை வழக்கத்தை யொட்டித் தம்பிக்கு அரசை நல்கி நாடு ஜக்கியமாவதற்கு வழிசெய்யாது தம் சந்ததியினர் தொடர்ந்து போரிடுதற்கு வழிவகுப்பான் போலத் தன் அரசைத் தன் பேரனுக்கு நல்கினான். இங்ஙனம் இடையறாது நிகழ்ந்த பிரிவினைகளும் அரசியற் பூசல்களும் நாட்டை நாள் தோறும் பலவீனமுறச் நெய்து ஈற்றில் அன்னியரால் எளிதில் அழிக்கப்படுவதற்கு அடிகோலின.

(ஆ) பொருளாதாரம் :-
கோட்டையரசின் பொருளாதரக் கட்டுக் கோப்புத்தளர்ந்து வந்து மகவும் கீழ் நிலையுற்றது. வரட்சி மண்டலத்தில் தலைநகர் அமைந்திருந்த மன்னர்கள் குளந்தொட்டு வளம் பெருக்கி நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்தனர். இனால் அவர்கள் தலைநகரை மாற்றி மாற்றிக் கொண்டு தென்மேல் சரிவை நோக்கிச் செல்லவே வரட்சி மண்டல நாடிகளுக்கு இரத்தம் பாய்ச்சிய இதயம் போல விளங்கிய குளங்கள் அழியுநிலையுடைந்தன. பிரபல சரித்திராசிரியர் ரொயின்பீ சுட்டிக் காட்;டியிருப்பது போல மன்னர் தம் சு10ழ்நிலையைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரும் திறமையை இழந்தாலும் காடு வெள்ளம்போற் பரந்து விளை நிலங்களை விழுங்கலாயிற்று. மலேரியா முதலிய நோய்கள் மக்களைப் பலவீனமுறச் செய்தன. தென்மேல் சரிவில் நெல்விளைவு அதிகம் எனக் கூறஇயலாது. வணிகப் பொருளாகிய கறுவாவிலோயே அரசனின் வருமானம் தங்கியிருந்தது. அயல் நாட்டு வணிகர் வரும் வரை அரசிறை பெருகும். அவர்கள் வரத் தவறினால் பொக்கிஷம் வெறுமையாகும். போர்களால் பொருளாதார வாழ்வு பாதிக்கப்பட்டது. இலங்கையரசர் நிரந்தரமாகப் படை வீரரைப் பயிற்றி வைப்பதில்லை. போர்க்காலங்களில் நிலத்தைப் பயிர்செய்து கொண்டிருப்போர் அவற்றை விட்டு இரு வாரங்களுக்கேனும் போர்க்களத்துக்குச் செல்ல வேண்டும். இதனால் உழுதொழில் சீராக நடைபெறமாட்டாது. பகைவரது நிலங்களைப் பாழ் செய்யும் வழக்கமும் அக்காலத்தில் இருந்து வந்தது. போர்த்துக்கேயரின் செல்வாக்குப் பெருகத் தொடங்கிய பின் விளையும் கறுவாவும் கரையோரத்துறைமுகங்களும் அவர்கள் வசமாயின. கறுவா வணிகத்தால் அரசனுக்குக் கொடுக்கவேண்டிய பணம் கடனுக்கு எழுதப்பட்டது. பின் சந்தர்ப்பம் வாய்க்கும் போது அக்கடனைத் தீர்த்து விட்டதாகக் கணக்கு எழுத அரசனது சம்மதம் பெறப்படும். அங்ஙனம் எல்லா வகையாலும் போர்த்துக்கேயர் வருகையின் பின் கோட்டையரசின் பொருளாதாரம் சீர் குலைத்து அவ்வரசின் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.

(இ) யுத்த முறைகள் :-
போர்த்துக்கேயர் வந்திறங்கிய காலத்தில் கோட்டை மன்னர் மிகப் பழைய போர் முறைகளைப் பின்பற்றினர். மாற்றமில்லாது தேக்க நிலையுற்ற மத்திய கால வாழ்வில் மூழ்கியிருந்த அவர்கள் புதிய கருவிகளையோ சிறந்த யுத்த முறைகளையோ அபிவிருத்தி செய்ய நினைத்திலர். சிங்களப் போர்வீரர் வாள் ஈட்டி முதலிய புராதன ஆயுதங்களையே உபயோகித்தனர். அவையும் மத்தியகால ஜரோப்பிய வீரரின் போர்க்கருவிகளிலும் தரங்குறைந்தனவே. போர்த்துக்கேயரை பீரங்கி துப்பாக்கி முதலியன வெடிமருந்துகளைச் செய்து தம் போர்க்கருவிகளை அக்காலத்தில் வழங்கியவற்றுள் சிறந்தனவாக அபிவிருத்தி செய்து வைத்திருந்தனர். மலையாளத்தார் போர்த்துக்கேயரின் வெடிமருந்து செய்யும் முறைகளை விரைவில் அறிந்து கெண்டனர். அங்ஙனம் சிங்களர் விஞ்ஞான hPதியான போர் முறைகளைக்கண்டறிய முற்பட்டிலர். (அரை நூற்றாண்டுக்குப் பின்னரே போர்த்துக்கேயருட் சிலருக்குக் கைக்கூலி கொடுத்து நவீன போர்க் கருவிகளைப் பெற்றனர்).

(ஈ) கடற்படையின்மை :-
சிங்களர் தாம் ஒகு தீவில் வசித்தனரேனும் கடலோடு திறமையை விருத்தி செய்திலர். சிங்கள வரலாற்றில் ஓரிரு மன்னர்களே கடற்படையமைத்துக் கடல் கடந்து போரிடச் சென்றனர் என்னும் செய்தி உளது. பொதுவாக அயல் நாடுகளில் இருந்து வந்தவர்களே இலங்கையின் கடல் வாணிகத்தாற் பயனடைந்தனர். 15ம் நூற்றாண்டில் போர்த்துக்கல்லுக்கு ஒரு கடலோடி ஹென்றியும் இங்கிலாந்துக்கு ஒரு 7ம் ஹென்றியும் சீனாவுக்கு ஒரு செங்-ஹோவும் செய்த சேவையை இலங்கைக்குச் செய்ய ஒருவனும் பிறந்திலன். முந்திய நூற்றாண்டுகளில் கடற்படையின்மையால் தாய்நாட்டைக்காக்க இயலாமல் சீனர் மலாயர் தமிழர் முதலியோருக்குக் கப்பங்கட்டும் நிலை ஏற்பட்டும் இலங்கையர் பாடம் படித்திலர். சரித்திரத்திலிருந்து நாம் கற்கும் பாடம் சரித்திரத்திலிருந்து ஒருவனும் ஒரு பாடமேனும் கற்கவில்லை என்பதே என்ற ஜேர்மன் தத்துவ அறிஞரின் கருத்தை மெய்யாக்குவார் போல் கடல் சு10ழ்ந்த தம் தாய் நாட்டைக் காக்கக் கடற் படையமைக்கும் எண்ணமற்றிருந்தனர். இதற்கு எதிராக இங்கு வந்த போர்த்துக்கேயரோ கடலோடி ஹென்றியின் தூண்டுதலினால் கரவல் கலியன் என்ற இருவகைக் கப்பல்களையும் சிறந்த மறையில் திருத்தியமைத்துக் கடலிலும் பீரங்கிப் போர் செய்யும் திறமை பெற்றிருந்தனர். அவர்களின் கப்பல்கள் ஆயுதங்கள் போன்றவை இல்லாமலே சமுத்திரியின் கடற்படைத் தலைவர்கள் தாம் வழக்கமாகக் கட்டிய சிறு கப்பல் 13 களைக் கொண்டே 1595வரை போர்த்துக்கேயருக்கு இடுக்கண் விளைத்தனர். அவ்வளவுக்கேனும் நம் இலங்கையர் எதிர்த்துப் போரிட ஏன்தவறினர்? அவர்களிடையே கடற் பாரம்பரியம் 14 இல்லாமையே காரணம்.

உசாத்துணை நூல்கள்
1. யு ர்ளைவழசல ழக ஊநலடழn கழச ளுழாழழடள-குச.ளு.பு.pநசநசய.
2. ஊநலழைn யனெ Pழசவரபரநளந-னுச.Pயரட நு. Pநசைளை
3. வுhந முரதெயடளை: யுனஅசையடள ழக ஊயடiஉரவ - ழு. மு. யேஅடியைச
4. வுhந டுகைந யனெ வுiஅநள ழக ஏனைலைந டீயனெயசய - துழாn ஆ. ளுநயெஎநசயவநெ.

வினாக்கள்
1. வாணிக்கர்களாய் வந்த போர்த்துக்கேயர் விரைவில் கோட்டை இராச்சியத்தின் மீது அதிகாரம் செலுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது என்பதை விளக்குக?
2. இலங்கைச் சரித்திரத்தில் மிகத் துயர் நிறைந்த பாத்திரம் - டொன் ஜீவான் தர்மபாலனைப் பற்றிய இக்கருத்தை நீர் ஒப்புக்கொள்கறீரா? உமது விடையைத் தக்க நியாயங்களால் நிரூபிக்குக?
3. 16ம் நூற்றாண்டில் கோட்டை இராச்சியத்தின் வீழ்ச்சிக்குரிய காரணங்களை விளக்குக?
4. வரலாற்றுக் குறிப்புக்கள் எழுதுக? விஜயபாகு, புவனேகபாகு, மாயாதுன்னை, வீதிய பண்டமாரன்,.






மூன்றாம் அத்தியாயம்

சீதாவக்கையரசின் தோற்றமும் மறைவும்
(1521 - 1592)

ஆரம்பம் :-
7ம் விஜயபாகுவைக் கொலை செய்து கோட்டையரசை அவன் மக்கள் மூவரும் பங்கிட்டதிலிருந்து சீதாவாக்கை அரசின் வரலாறு தொடங்குகிறது. தற்பொழுது சபரகமுவ மாகாணம் எனப்படும் பகுதியே ஏறக்குறைய இவ்வரசில் அடங்கியிருந்தது. அதன் தலைநகர் அவிசாவலைக்கு அயலிலுள்ளதும் களனி கங்கையின் ஒரு கிளை நதியின் பக்கத்திலுள்ளதுமாகிய சீதாவாக்கையாம். மூன்று சகோதரர்களுள் இளையவன் எனினும் திறமை மிக்கவனாகிய மாயாதுன்னையின் வசம் இப்பகுதி வந்தமையாலேயே அவ்வளவு விரைவில் அது சீருஞ்சிறப்பும் எய்தியது.

போர்த்துக்கேயரை எதிர்த்தலும் ஆதரித்தலும் :-
முதலில் மாயாதுன்னை கோட்டைப் பிரிவினையை எதிர்த்த வீரசு10ரியன் மன்னம்பேரி ஆராய்ச்சி முதலியோரைக் கொன்று அவர்களது கோறளைகளைத் தனதாக்கினான். ஒருசின்னஞ்சிறு பகுதியின் அரசனாயிராது கோட்டை அரசுக்கும் அதன் மூலம் இலங்கை முழுவதற்கும் அரசனாக எண்ணினான். இரண்டாம் தமையனிறக்க அவனது பிரிவாகிய றைகமையரசைத் தனதாக்கினான். தமையன் புவனேகபாகு போர்த்துக்கேயரின் பக்கம் சேர்ந்தமையால் வளர்ந்து வரும் போர்த்துக்கேய வல்லரசை எதிர்க்கும் சக்திகளுடன் தொடர்பு கொண்டான். முஸ்லிம்கள் மூலம் கோழிகோடு சமுத்திரியுடன் கூட்டுச் சேர்ந்தான். 1526 முதல் 1539வரை அடிக்கடி போரிட்டான். 1539 முதல் 1547 வரை நிலவிய சமாதானகாலத்தை வீணாக்காமல் தமையனைத் தன் பக்கமாக்கிக் கண்டியரசை அச்சுறுத்திப் பெருந்தொகை திறையாகப் பெற்றான். தமையன் போர்த்துக்கேயர் மீது வெறுப்புக்கொண்டதைப் பயன்படுத்தி அவர்களின் நட்பைப் பெற முயன்றான். இது பயனளிக்காமாற் போனதும் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியுடனும் இந்தியாவிலுள்ள தஞ்சாவூரில் ஆண்ட சேவப்பநாயக்கனுடனும் சேர்ந்து போர்த்துக்கேயரை எதிர்த்தான். தமையன் இறக்க அவன் அரசுக்குத்தானே உரிமையுடையவன் எனக் காரணம் காட்டி அதிற் பெரும் பகுதியைக் கைப்பற்றினான் . வீதியை பண்டாரன் போர்த்துக்கேயரை எதிர்த்த பொழுது தன் மகளின் கணவனாயினும் அவன் கையோங்கினால் தான் கோட்டையரசை அடைய முடியாது எனக்கண்டு போர்த்துக்கேயருடன் ஒத்துழைத்து அவனை வீழ்த்தினான். தர்மபாலன் மதம் மாறியதும் தானே பௌத்த மதத்தின் பாதுகாவலன் எனப் பறைசாற்றிக் கோட்டை மக்களின் விசுவாசத்தைப் பெற்றான்.

இராசசிங்கனின் இளமைக் காலப் போர்கள் :-
இந்நாட்களில் சீதாவாக்கையரசின் வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றத் தொடங்கினான் மாயாதுன்னையின் மகனான இராஜசிங்கன். அவன் இளைஞனாயிருக்கும் போதே அக்கால அரசியற் சதுரங்கத்தில் நல்ல பயிற்சி பெற்றதுடன் ஒப்பற்ற சேனாதிபதியும் விளங்கினான். அவனது புகழ் உச்ச நிலையடையக் காரணமாக விளங்கியது 1562ல் நிகழ்ந்த முல்லேரியாப் போரே. முதலில் ஏகநாயகன் என்ற சேனாதிபதியின் கீழ் குதிரை யானை காலாள் எனும் முப்படைகளும் அடங்கிய பெருஞ்சேனையை முல்லேரியாவில் கூடாரமடித்து நிறுத்தி அதனைத் தளமாகக் கொண்டு கொழும்பு கோட்டை ஆகிய இரு நகரங்களையும் ஒரே சமயத்தில் தாக்கத்திட்டமிட்டான். போர்த்துக்கேயர் தம் திறமையில் அதிக நம்பிக்கை வைத்து சீதாவாக்கைப் படையை அதன் தளத்திலேயே தாக்கி யழிக்க விரைந்தனர். இரு பகுதியாரும் விடாது போரிட்டனர். அகழிகளும் கொத்தளங்களும் அமைத்துப் போரிட்ட ஏகநாயகனது படையும் ஒரு அங்குலமேனும் பின்வாங்கவில்லை. அனால் நீண்ட காலம் அகோரயுத்தம் செய்ய எவ்வளவு பொருட் செலவும் ஆட்பலமும் வேண்டும்? ஒரு முடிவு கட்டத் தீர்மானித்தான் இராஜசிங்கன். புதிய படைகளைக் கொண்டு வந்து போர்த்துக்கேயரின் படையைத் தன் படைக்கும் ஏகநாயகளனது படையணிகளுக்கு மிடையில் சிக்கவைத்தான். பாக்கு வெட்டியின் இடையில் அகப்பட்ட பொருளை நெருங்கி வெட்டுவது போலப் பகைவரது அணிகளைச் சின்னாபின்னமடையச் செய்தான். பீரங்கி துப்பாக்கிகளுடன் போரிட்ட அவர்களால் அவனுக்கு ஏற்பட்ட நட்டம் கொஞ்சமல்ல. ஆனால் கொழும்பு மதிற்சுவருக்குள் ஒளித்தால் மட்டுமே தப்பலாம் எனக்கண்ட போர்த்துக்கேயர் பத்துமணி நேரம் உயிருக்காகப் கோராடிய பின் 125 பேர் வரையில் மட்டுமே தப்பிச் சென்றனர். புறமுதுகிட்டு ஓடும் அவர்களைக் கொழும்பு வரை துரத்திச் சென்று தாக்க அது தக்கதருணமன்று எனக்கண்டு இராஜசிங்கன் நின்று விட்டான்.

கோட்டையைக் கைப்பற்றல் :-
இவ்வாறு பெற்ற வெற்றியைப் பறைசாற்றி மக்களின் மனத்தில் வீர உணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் தூண்டி விரைவில் புதிய படையணிகளைச் சேர்த்துக்கொண்டு பகைவர் புதிய படையணிகளைச் சேர்த்துக்கொண்டு பகைவர் புதிய படைகளைத் திரட்டி ஆயத்தமாகுமுன் கோட்டையை முற்றுகையிட்டான். நகரப்புற மதிலின் மேற்கிலுள்ள வாவியைக் கடந்து தாக்கினான். நகரிலுள்ள போர்த்துக்கேயர் கொழும்பிலிருந்து தோழர்களை உதவிக்கு அழைத்தனர். சிங்களரோ இனித்தர்மபாலனின் நிலை நம்பிக்கையற்றதாகி விட்டதெனக் கண்டு இராஜசிங்கன் பக்கம் சேர்ந்தனர். அரசனின் இரண்டாம் இருக்கையாகிய களனியாகவும் இராஜசிங்கன் கைப்பட்டது. அயற் பிரதேசம் அனைத்தும் அவன் வசமாயின. தார்மபாலன் தன் தலைநகரைக்காக்கப் போர்த்துக்கேயரையே நம்பியிருந்தான். அவர்கள் இராஜசிங்கனை விட்டு நீங்கி வந்த முதலியார் ஒருவனைத் தம் வசமாக்கி அவனை எதிர்த்துத் தாக்கினர். கோவாவிலிருந்து புதிய சேனாதிபதியும் கொழும்புக்கு வந்தான். ஆனால் போர்த்துக்கேயரோ 1564ல் கண்ணனு}ரில் குஞ்ஞாலியின் தாக்குதலால் பல கப்பல்களை இழந்திருந்தனர். கோவாவின் ஆட்சி மன்றம் இரு நகர்களைக் காக்கப் போதிய படையின்மையால் கொட்டை நகரைக் கைவிடும்படி தீர்மானித்து 6ம் பராக்கிரமபாகு காலமுதல் (1415) இலங்கையின் தலைநகராக விளங்கிய ஸ்ரீ ஜயவர்த்தன கோட்டை 1565ல் கைவிடப்பட்டது. இப்போது சீதாவாக்கையரசில் பிரிக்கப்படமுன் கோட்டை இராச்சியத்தில் அடங்கியிருந்த பகுதிகளனைத்தும் சேர்ந்தன. கரையோரப் பகுதியிலும் கொழும்பு மட்டுமே போர்த்துக்கேயரின் ஆணையின் கீழ் இருந்தது.

போர்த்துக்கேயரின் கொடுமைகள் :-
தமது மண்ணாசை நிறைவேறாமற் செய்தவர்கள் மீது பழிவாங்கும் குரோத மனப்பான்மை மீதூரைப் பெற்ற போர்த்துக்கேயர் அடிக்கடி உள்நாட்டுப் பகுதிகளைத் தாக்கி மாபெரும் அழிவு வேலைகளைத் திட்டமிட்டு நடாத்தினர். போர் வீரராக வரத்தக்க வாலிபர் குறையவே போர்த்துக்கல் மன்னன் சிறைக் கைதிகளை விடுவித்துக் கீழ்நாடுகளுக்குப் படை வீரராக அனுப்பினான். அவர்கள் வீரருக்குரிய பண்புகள் சிறிதுமின்றி மிருகத்தனமாக நடந்தனர். கோட்டைககள் துறைமுகங்கள் மட்டுமன்றிக் கோவில்கள் பாமர மக்கள் வசிக்கும் மட்டுமன்றிக் கோவில்கள் பாமர மக்கள் வசிக்கும் பட்டினங்கள் கிராமங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன.

மலையாளத்தாருடன் கூட்டுச் சேர்தல் :-
இராஜசிங்கன் கடற்படையின்மையால் தான் வெற்றிகரமாகக் கொழும்பை முற்றுக்கையிடவோ அந்நகருக்கு வேண்டிய பொருட்கள் போகாமல் தடுக்கவோ இயலாதிருப்பதை உணர்ந்து மீண்டும் மலையாளத்தாரின் உதவியை நாடினான். கோழிக்கோட்டில் சாமுத்திரியாகப்பதவியேற்போர் முதியோரையும் போர் நடத்த விரும்பாதவரையும் இருந்தனர். அடிக்கடி ஏற்பட்ட மரணங்களால் சாமுத்திரி பதவிக்குப் பலர் மாறிவந்தனர். ஆனால் அவர்களது கடற்படைத் தலைவரான குஞ்ஞாலிகள் குலத்திலோ ஒரு நூற்றாண்டில் நால்வரே பதவி வகித்தனர். அவர்களுட் தலைசிறந்த மாவீரன் 3ம் குஞ்ஞாலி ஏறத்தாழ 1543 இல் இருந்து போர்த்துக்கேயரைக் கோழிக்கேதாட்டுக் கரையை அணுகவிடாது பார்த்துக்கொண்டான். அந்நிலையில் முன்னர் மாயாதுன்னையின் துரோகச் செயலால் தம் சேனாதிபதி தலைவெட்டப்பட்டதையும் பொருட்படுத்தாது இராஜசிங்கனுக்கு உதவி டிசய்ய முன்வந்தான். 1560 அளவில் அவன் அனுப்பிய கப்பற்குழு ஒன்று மன்னருக்கு அருகில் போர்த்துக்கேயரால் வெற்றிகொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட அக்கப்பல்களைக் காட்டி இராஜசிங்கனைப் பயமுறுத்த முயன்றனர். இராஜசிங்கனும் முற்றுகையை விட்டுச் சென்றான். ஆனால் மலையாளக் கடற்படை மீண்டும் அகோரமான போர் தொடங்கியது 1565 க்குப் பின் கொழும்பை முற்றுகையிட்டு இராஜசிங்கனுக்கு உதவி செய்தது.

தர்மபாலனைக் கொல்லச் சதி :-
தர்மபாலன் போர்த்துக்கேயரின் கைப்பாவைபோல் ஆடிவருவதையும், சிங்களருட் சிலர் அவன் உரிமையுடைய அரசன் என்பதால் அவனை ஆதரிப்பதையும் கண்ட மாயாதுன்னை அவனைத் தொலைக்கத் திட்டமிட்டான். ஒரு போர்த்துக்கேயனுக்குக் கைக்கூலி கொடுத்து அரசனுக்கு நஞ்சு கலந்த பானம் ஒன்றைக் கொடுப்பித்தான். அப் போர்த்துக்கேயன் நஞ்சை ஊற்றி விட்டு திராட்சை ரசத்தை அக்கோப்பையில் ஊற்றிக் கொடுத்தும், அதன் வேகத்தால் தர்மபாலன் பற்களை இழந்து தத்துவாயனாயினான்.

இராஜசிங்கன் இளவரசுப் பட்டம் பெறல்

வயது முதிர்ந்த மாயாதுன்னை தனக்குப்பின் வளர்ந்தோங்கும் போர்த்துக்கேய சாம்ராச்சியத்தை எதிர்த்துப் போரிடுதற்குப் பலம் வாய்ந்த ஒருவனே அரசனாதல் வேண்டும் எனத் தீர்மானித்தான். அதனால் பலவீனனான மூத்த மகனைப் புறக்கணித்து, ஒரு நடன மாதின் வயிற்றிற் பிறந்தவனென்றும் பாராது ஒப்பற்ற திறமை படைத்த இராஜசிங்கனையே தன் அரசுக்கு உரிமையுடையான் என அறிவித்தான். அவனும் தந்தையின் நம்பிக்கை வீணாகாமல், அவன் கொள்கையைப் பின் பற்றி, இலங்கையைத் தன் ஆட்சியின் கீழ் ஒன்றுபடுத்துதல், அந்நியரைத் துரத்துதல் என்ற இரு இலட்சியங்களையும் அடையப் பெரும் போரிட்டு வந்தான். பீரங்கி, துப்பாக்கி முதலிய நவீன கருவிகளையும் ஏராளமாகச் செய்து படைகளைப் பலப்படுத்தினான்.

கொழும்பு முற்றுக்கை 1579 - 8

கொழும்புக் கோட்டைச் சுவர்கள் கவனிக்கப்படாமையால் பலவீனமுற்று அழிநிலையிலிருந்தன. 300 போர்த்துக்கேயரே அதிலிருந்தனர். இராஜசிங்கனின் படைகள் களனி நதியை இரு செயற்கைப் பாலங்கள் மூலம் தாண்டிக் கோட்டையைத் தாக்கின. அதன் தெற்கிலும் கிழக்கிலும் பரந்து கிடந்த பெய்ரா வாவியின் நீரை இறைத்தேனும் கோட்டையை அணுக முயன்றான். அதிலிருந்து ஒரு கால்வாய் வெட்டி நகரின் கிழக்கிலிருந்த சதுப்பு நிலத்தில் நீரைப்பாய விட்டதும் வாவியிலிருந்த கப்பல்கள் சரிந்தன. ஆனால் போர்த்துக்கேயர் அடிக்கடி கோட்டையினின்றும் வெளிவந்துதாக்கிப் படையணிகளைக் கொள்ளையிட்டுப் பின் மதிற் சுவர்களின் பின்னே மறைந்தனர். கரையோர நகரங்களைத்; தாக்கிக் கொள்ளையடித்து உணவுப் பொருள் பெற்றனர். இந்தியாவிலிருந்தும் உதவி கிடைத்தது. ஒரு வருடமும் பத்து மாசமும் முற்றுக்கை நீடித்தது. இரு பகுதியாரும் களைப்புற்றனர். மத்தியாஸ் டீ அல்புக்கூர்க்கே என்ற புதிய போர்த்துக்கேய சேனாபதி 300 வீரருடன் வந்து பல திசைகளினின்றும் தாக்கி வெற்றி பெற்றான். கடற்படை இல்லாக் குறையால் இராஜசிங்கனது முற்றுக்கை வெற்றி பெறவில்லை.

இராஜசிங்கன் கண்டியைக் கைப்பற்றல் - 1582

மாயாதுன்னை கண்டியைக் கைப்பற்றக் கருதியிருந்தும் அவ்வாசை நிறைவேறவில்லை. விக்கிரமபாகுவின் மகளை இராஜசிங்கனுக்கு மணம் பேசியிருக்கவும், அவன் அவளைத் தர்மபாலனுக்குத் திருக்கோணமலை வழியே கப்பலில் அனுப்பி மணம் செய்வித்தமையால் ஆத்திரமடைந்திருந்தான். ஆனால் கண்டியைப் பிடிக்கும் முயற்சி தொடங்குமுன் இறந்து விட்டான். 1582 - ல் இராஜசிங்கன் இவ்வெண்ணத்தை நிறைவேற்றத் திட்டமிட்டான். அப்போது மலைநாட்டில் சிம்மாசன உரிமைப்பூசல் ஏற்பட்டது. அங்கு சிம்மாசனமேறிய கரலியட்ட பண்டாரன் தர்மபாலனின் மனைவியின் சகோதரன்@ போர்த்துக்கேயரின்உதவி பெற்றவன். அவனது மாற்றாந்தாய் வயிற்றுத் தம்பியும் பதவிபெற முயன்று சீதாவாக்கையரசனின் அதரவை நாடினான். ஆனால் அவன் உயிரிழந்தான். இராஜசிங்கன் இனிக் கண்டியரசனும் போர்த்துக்கேயரது கைப்;பொம்மையாகி விடுவான் என்பதை யுணர்ந்து அதைத் தடுக்கத் தீர்மானித்தான். பேராதனைப் பிரபு வீரசுந்தர பண்டாரன் இவனுக்கு ஆதரவளித்தான். சனங்கள் போர்த்துக்கேயருக்கும் அவர்களது பொம்மையாகி வரும் கரலியட்ட பண்டாரனுக்கும் மாறாகப் போரிடலாயினர். சீதாவக்கைப்படை வல்லணைக் கணவாயில் போர்த்துக்கேய - கண்டிக் கூட்டுப் படையைத் தோற்கடித்தது. கரலியட்;ட பண்டாரனும் குடும்பத்தாரும் போர்த்துக்கேயரால் திருக்கோணமலைக்கு இட்டுச் செல்லப்பட்டனர். மதம் மாறிய அரசன் அம்மை நோயால் இறந்தான். அவனது பெண் குழந்தையையும் மருகன் யமசிங்கனையும் போர்த்துக்கேயர் மன்னாருக்குக் கொண்டு சென்று கிறீஸ்தவர்களாக்கி, டோனா கதரீனா, டொன்பிலிப் எனப்பெயருஞ் சூட்டித் தம் எதிர்கால அரசியற் சூதாட்டத்துக்குப் பயன்படுவர் எனக் கருதிக் கூண்டுக்கிளிகளாக வளர்க்கலாயினர்.

* குசுமானதேவி என்பது இவளுக்குப் பெற்றோரிட்ட பெயர் *

கொழும்புப் பெரு முற்றுக்கை 1587 - 88

இப்போது இராஜசிங்கன் சிங்களவரின் தனிப் பேரரசனாக விளங்கினான். இந்த நூற்றாண்டில் இலங்கை அரசருள் வேறு எவரும் பெற்றிராத பெரு நிலப்பரப்புக்கு உரிமை பூண்டான். கொழும்பினின்றும் அந்நியரை விரட்ட இறுதி முயற்சி செய்யத் தீர்மானித்தான். தன் கீழிருந்த எல்லாப் பகுதிகளிலும் வீரரைச் சேர்த்து யுத்தப்பயிற்சி யளித்தான். ஆயுத உற்பத்தி பெருமளிவிற் பெருகியது. நாடெங்கும் போர் நிலை பிரகடனஞ் செய்யப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் உயிரிழந்தனர். பேராதனை வீரசுந்தர பண்டாரனும் கொல்லப் பட்டான். (அவன் மகன் போர்த்துக்கேயரைச் சார்ந்தான்) வரிகள் உயர்த்தப்பட்டன. இராஜசிங்கன் அயல நாடுகளில் போர்த்துக்கேயரை எதிர்த்து நிற்கும் அரசர்களுக்குத் தூது அனுப்பி அவர்களது ஆதரவையும் நாடினான். மூன்றாம் குஞ்ஞாலி 1569 - ல் 36 போர்த்துக்கேயக் கப்பல்களடங்கிய கடற்படையை வென்று, அதன் தலைவன் மிரான்டாவைக் கொன்ற நாள் முதல் கோழிக்கோட்டுக் கடற்படை போர்த்துக்கேயரை எதிர்த்துத்தாக்கும் பலம் பெற்றுவடக்கே டையூ முதல் கரையோரப் பகுதிகளை அச்சுறுத்தி வந்தது. அக் கடற்படையுதவியுடன் இராஜசிங்கன் கொழும்புக்குக் கோவாவிலிருந்து யாதொரு உதவியும் வராது தடுத்துவிட்டான். உள்நாட்டில் கொழும்பின் அயற் பிரதேசத்திலிருந்து உணவு ஏதும் நகருக்குச் செல்லாது தடுத்தான். தர்மபாலனுக்கு உதவியளித்த கிராமங்களை அழித்தான். இந்தப் போர் முயற்சிகளால் அன்றாட வாழ்க்கையிற் கஷ்டங்கள் அதிகரிக்கவே சனங்களும் ஒரு பகுதியார் இவனை வெறுத்தனர். அவனுக்கு நஞ்சூட்டவும் முனைந்தனர். இச்சதியில் ஈடுபட்டோரனைவரும் - புத்த குருமார் உட்பட - உயிரிழந்தனர். (இக்காலத்தில் இவன் அஹிம்சையைப் போதிக்கும் புத்த மதம் தன்போர் முயற்சிகளுக்குத் தடையாகும் எனக் கருதி இந்த மதத்தின் உட்பிரிவு ஒன்றைப்பின் பற்றலானான். போர்த்துக்கேயரழித்த வைரவ கோவிலையும் புதுக்கியமைத்தான்). அவனது மாபெரும் படை கொழும்பை முற்றுகையிட்டது. அங்கிருந்த 60,000 பேரும் உணவுப் பொருட்களின்றி வாடினர். முதியோர் உட்பட 350 போர்த்துக்கேயரே அதைக்; காத்து நின்றனர். தளபதி அரண்களைப் பலப்படுத்தினான். இராஜசிங்கனது தாக்குதலின் வேகத்தைக் குறைத்து. அவனது கவனத்தை வேறுபக்கம் திருப்பும் பொருட்டுக் கரையோரப் பட்டினங்களைத் தாக்கி அழித்தான். இராஜசிங்கன் நான்கு கப்பல்களில் அயல் நாட்டுப் படையினரும் சிங்கள வீரரும் கொண்ட அணியொன்றை யனுப்பினான். ஆனால் அது வெற்றி பெறவில்லை. போர்த்துக்கேயரோ கோவாவிலிருந்து யாதேனும் உதவி பெறாமையால், கரையோரப் பகுதியை அழித்துக்கொள்ளையடித்தனர். குடிகளின் மனதில் அச்சத்தைப் பெருக்க எண்ணிக் கோவில்களை நாசம் செய்தனர் (அப்போது அழிவுற்றதே இலங்கையின் தென் கோடியிலுள்ள தேவன்துறை விஷ்ணு தேவாலயம்) 1588 - கோவாவிலிருந்து உதவி கிடைத்தது. இராஜசிங்கன் முற்றுக்கையைக் கைவிட்டுப் சென்றான்.

* அந்நியரை எதிர்த்துப் போரிட்டபோது மகாராஷ்டிர நாட்டிலும் வீர சிவாஜி 50 சதவீதம் வரி வசூலித்தான் என்பர். *

கலகங்களும் இராஜசிங்கன் முடிவும்

இராஜசிங்கனது போர்முயற்சிகளால் கஷ்டமடைந்த மக்கள் அவன் முயற்சிகள் பலனளிக்காமையால் வெறுப்புற்றுக் கலகங்களை உண்டாக்கினர். சீதாவாக்கைக்குத் துரத்திலேயுள்ள பகுதிகள் அவன் ஆட்சியினின்றும் விலகமுயன்றன. அந்நியரின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இக்கலகங்களுக்குத் தூண்டுதலளிக்குமன்றோ! ஏழு கோறளையின் திசாவை கலகஞ் செய்து போர்த்துக்கேயரின் உதவியை நாட, அவர்கள் இராஜசிங்கனின் படைகளை ஈர்க்கும் கருத்தில் எல்லைப் பகுதிகளிலிருந்த காவற் கோட்டைகளைத் தாக்கினர். அவற்றைக் கைவிட்ட தளபதிகளை இராஜசிங்கன் கொன்றான். பின் கலகஞ் செய்த திசாவையைத் தாக்க அவன் போர்த்துக்கேயரிடம் சென்றான்.

மலைநாட்டில் விக்கிரமபாகுவின் 2 - ம் மனைவியின் பேரன் ஒருவன் கிறீத்தவனாகி இராஜசிங்கனுக்கு எதிராகக் கலகஞ் செய்தான். தான் சிம்மாசனம் ஏறினால் மக்கள் ஏற்கமாட்டார் எனக் கருதி கரலியட்ட பண்டாரனால் தன்வாரிசு எனக் கருதப்பட்ட யமசிங்கனை அனுப்பும்படி போர்த்துக்கேயருக்குத் தூது அனுப்பினான். அவன் டொன் பிலிப் என்ற பெயருடன் கிறீஸ்தவனாயிருந்தமையால் பிரான்ஸிஸ் சபைக்குருமார் அவனைச் சிம்மாசனமேற்ற விரும்பினர். போர்த்துக்கேய அதிகாரிகள் அவன் நடை முறைகளை விரும்பாவிடினும் குருமாருக்காக அதற்குச் சம்மதித்தனர். வீரசுந்தரனின் மகன் கோணப்பு பண்டாரன் போர்த்துக்கேயருடன் ஒஸ்திரியாவின் டொஸ்ஜுவான் என்ற பெயரில் வாழ்ந்து வந்தான். சிங்களப்படையை நடத்தி;க் கண்டிக்குச் செல்லுமாறு அவனை அனுப்பினர். அவன் நானே அரசனாகும் எண்ணமுடையவன் எனினும் காலம் வரும வரை படைத் தலைவனாயிருக்கக் கருதிச்சென்றான். சீதாவக்கைப்படையை வென்று யமசிங்கனைச் சிம்மாசன மேற்றினான். அவனுடன் வந்த குருமார் கோவில் கட்டி மதம் மாற்றும் முயற்சியில் கடுமையாக ஈடுபடவே மக்கள் அதனை வெறுத்தனர். கோணப்புபண்டாரன் மக்களின் அபிமானத்தைப் பெற்றான். ஓராண்டுக்குள் யமசிங்கன் மர்மமாக (நஞ்சூட்டப்பட்டு?) இறந்தான். கண்ணறுவாயில் கோட்டைகட்டியிருந்த போர்த்துக்கேயர் அவன் மகனை அரசானாக்கினர். ஆனால் கோணப்பு மக்கள் கொண்ட சந்தோசத்தைப் போர்த்துக்கேயருக்கு மாறாகப் பயன்படுத்தித் தானே அரசனெனப் பிரகடனஞ் செய்து ஆட்சியைக் கைப்பற்றினான். இப்புரட்சியைக் கேள்வியுற்ற இராஜசிங்கன் கண்டிக்குப் படை நடத்திச் சென்றான். வல்லணைக் கணவாயில்; அவன் படைகள் தடுத்து நிறுத்தப் பட்டுத், தோல்வியுற்றன. மனமுடைந்த அவன் காலில்மூங்கிற் சிராய் குத்தியதையும் பொருட்படுத்தாமல் சென்று, தோணியிலேயே உயிர் துறந்தான். (1592)

இராஜசிங்கனின் வரலாற்றைச் சூளவம்சத்தில் எழுதிய பௌத்த குருமார் அவனைப் பெரும்பாவியாகச் சித்தரித்துள்ளனர். அவன் இந்துவாக மாறினான் என்ற காரணத்தால் அவன் வயது முதிர்ந்த தந்தையைக் கொன்றான் என்றும், பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளானான் என்றும், அவன் புண்ணுக்கு வைத்தியம் செய்தவர்கள் விஷமூலிகையைக் கட்டியே அவனது மரணத்துக்குக் காலாயினர் என்றும் எழுதி வைத்துள்ளனர். இக்கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. அவனது வீரமும் அஞ்சாது ஆற்றிய போர்களும் பற்றி அவனுக்கு “மகா இராஜசிங்கன்” என்ற பட்டத்தைச் சில சரித்திராசிரியர் சூட்டியுள்ளனர்.

அவனிறந்ததும் சீதாவக்கையரசு சிதைவுற்றது. அவனது பேரன் இராஜசூரியன் சிம்மாசன மேறியதும் கொல்லப்பட்டான். மன்னம்பெருமாள் மொஹொத்தால என்ற இந்தியன் இராஜசிங்கனின் அபிமானம் பெற்ற சேனாதியாகி இப்போது அரசனை ஆக்கவும் அழிக்கவும் வல்லவனாயினான். இராஜசிங்கனின் சகோதரி (வீதியபண்டாரனின் மனைவி) தன் மகன் நிக்கப்பிட்டிய பண்டாரனை அரசனாக்கித் தானே அரச கருமங்களை நடாத்தினான். அவள் மன்னம் பெருமாளைச் சேனாதிபதி யாக்கவே இரு சிங்களத் தளபதிகள் விலகிச் சென்று போர்த்துக்கேயரை யடைந்தனர். போர்த்துக்கேயப்படை சீதாவக்கையைத் தாக்கியது. மன்னம்பெருமாள் அதை வென்று தானே அரசனாக முயன்றான். அவனைப் போர்த்துக்கேயரும் ஆதரித்தனர். பின் அவன் படைகள் அவனைக் கைவிடவே அவன் போர்த்துக்கேயரிடம் சென்றான். ஆறு மாதத்துக்குள் சீதாவக்கைப்படை தோல்வியுற்றது. தர்மபாலன் பெயரால் சீதாவக்கையரசைப் போர்த்துக்கேயர் கைப்ற்றினர்.

எழுபது ஆண்டுகள் இரு தலைசிறந்த மன்னர்களின் ஆட்சியில் வளர்ந்து சீதாவக்கையரசு திடீரென வீழ்ச்சியுற்றது. இலங்கையின் துரதிருஷ்டமே. இரு அரசரும் போரில் ஈடுபட்டிருந்தமையால் நாட்டின் நிர்வாகத்தைப் பத்திரமான அத்திவாரத்தில் அமைத்திலர். இராஜசிங்கன் தனக்குப்பின் ஆட்சியை நடாத்த ஒருனைப் பயிற்றி வைக்காமல் வி;ட்டது பெரிய தவறு எனலாம். இதனால் போர்த்துக்கேயர் கரையோர மாகாணங்களையெல்லாம் கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றனர்.

* இந்த நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசனான கிருஷ்ணதேவராயனும் இப்படிச் செய்தான். (பு. மு. ச. அடங்கன் 1 (முதற் பதிப்பு) பக் 59). ஆனால் இவ்வீர உணர்ச்சியுடன் அன்பும் இரக்கமும் இருந்தமையால் அவனையாரும் பகைத்திலர்.

* அரித்த கீவேந்து பெருமாள் என்ற தென்னிந்தியன் இங்கு வந்தது இராஜசிங்கனின் ஆதரவால் உயர்ந்தது. அவனிறக்க அங்கு முக்கிய அரசியல்வாதியானான். அவப் பெயருக்கும் ஆளானான். பின் விலகிச் சென்று போர்த்துக்கேயரை யடைந்த ஜயவீரன் என்ற பெயருடன் கூலிப் படைத் தலைவனானான். கண்டியில் டீ சௌசாவால் கொல்லப்பட்டான்.

கோட்டையரசின் வம்சாவலி

வினாக்கள்

1. சீதாவாக்கை மன்னர்கள் டொன்ஜுவான் தர்மபாலனுடனும் அவனது போர்த்துக்கேய நண்பர்களுடனும் தொடர்ந்து போராடுவதற்கு அநுகூலமாயிருந்த விடயங்கள் யாவை? அவர்கள் இறதியில் பூரண வெற்றி பெறுதற்குத் தடையாயிருந்த விடயங்கள் யாவை? (1949)
2. மாயாதுன்னையின் வாழ்க்கை வரலாற்றைத் தந்து, அது எங்ஙனம் கோட்டையரசில் போர்த்துக்கேயரின் செல்வாக்குப் பெருகக் காரணமாயிற்று என்பதை விளக்குக. (1953)
3. சீதாவாக்கையரசன் இராஜசிங்கனது அதிகாரத்தின் பெருமையை விளக்கி, அது இறுதியில் வீழ்ச்சியுற்றமைக்குக் காரணங்களைத் தருக.
4. 1560 - க்கும் 1592 - க்குமிடையில் 1 - ம் இராஜசிங்கன் போர்த்துக்கேயரை இலங்கையினின்றும் விரட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்குக. (1947)
5. முதலாம் இராஜசிங்கனுடைய அரசவாழ்க்கையைப் பற்றித் தொடர்பாகக் கூறுக. அவன் போர்த்துக்கேயரை வெளியேற்றத் தவறியதேன்? (1964)

நான்காம் அத்தியாயம்

யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி

16 - ம் நூற்றாண்டுக்கு முந்திய நிலை

13 - ம் நூற்றாண்டுக்கு முன்னமே யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற அரச குடும்பத்தினர் ஆண்டு வந்தனர். அந்த நூற்றாண்டில் மிக்க பலம் பெற்று, அடுத்த நூற்றாண்டில் உச்ச நிலையடைந்த அவர்களின் அரசு கம்பளை யரசர்களிடத்திலும் திறை பெற்றது. ஆனால் அதன் புகழ்மதி 15 - ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மங்கத் தொடங்கியது. 6 - ம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகன் சபுமல் குமரையன் அதைக் கைப்பற்றினான். (1450 - 1467) எனினும் கிரகணத்திலிருந்து விடுபட்ட சந்திரன் போல அது மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியது. கலை, கல்வியனைத்தும் விருத்தியடைந்தன.

சங்கிலி - செகராச சேகரன் ஆட்சி

பரராஜசேகரன் 1478 முதல் 1519 வரை அரசாண்டான். அவனுக்குபின் சங்கிலி என்ற செகராஜசேகரன் சிம்மசேனமேறினான். அக்காலத்தில் புயற்காற்றால் எற்றுண்டு கரைக்கு வந்த கப்பல்கள் அரசனுக்கே சொந்தம் என்ற வழக்கம் இருந்தது. இவ்வழக்கப்படி, இலங்கை இந்தியத் துறைமுகங்களிடையே வியாபாரஞ் செய்து வந்த போர்த்துக்கேயக்கப்பல்கள் சில உடைந்து யாழ்ப்பாணக் கரைக்கு வந்தபோது அரசன் அவற்றைக் கைப்பற்றினான். கடலெல்லாம்தமதே என உரிமை பாராட்டிய போர்த்துக்கேயர் சுதேச சட்டங்களை மதிக்காமல் தம் கப்பல்களைத் திரும்பப் பெற முயன்றனர். அதன் பொருட்டு யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கவும் மனங் கொண்டனர்.

போர்த்துக்கேயர் தலையீடு

ஆனால் யாழ்ப்பாண அரசு பெயரளவிலாயினும் விஜயநகர மன்னரி;ன் ஆட்சிக்கு உட்பட்டது. தொடக்கத்தில் விஜயநகரப் பேரரசுடன் போர்த்துக்கேயர் சண்டையிடாது ஒத்து நடந்து வந்தனர். எனவே, தக்க காரணமின்றிப் படையெடுக்க அஞ்சினர். தெற்கே மாயாதுன்னையின் தொல்லை குறைந்து, புவனேகபாகுவும் பேரனும் லிஸ்பனில் முடிபுனைவித்த பின் உற்சாகமடைந்த போர்த்துக்கேயர் படையெடுக்க ஆயத்தமாயினர் நல்லூரில் அரண்மனைச் சதிகள் சில அவர்கள் காதுக்கு எட்டின. பட்டத்துரிமை தனக்கே என்று கூறிக் கொண்டு ஒரு அரசகுமாரன் போர்த்துக்கேயரை அடைந்தான். இதுவே தருணமெனக் கருதிய போர்த்துக்கேயர் 1543 - ல் மார்ட்டின் அல்ஃபொன்சோ டீ சௌசா தலைமையில் படையனுப்பினர். எதிர்ப்பதற்கு இது தரணமன்று எனக்கண்ட சங்கிலி அவர்களுக்குக் கப்பங்கட்டி ஆளச் சம்மதித்தான். போர்த்துக்கேயரும் திருப்தியடைந்து சென்றனர்.

மதமாற்ற முயற்சிகள்

இக்காலத்தில் போர்த்துக்கேய அரசன் 3 - ம் ஜோனின் கேள்விப்படி இந்தியாவில் கிறீஸ்தவ சமயம் பரப்பும் முயற்சிகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டன என்றும் இலங்கையில் புதிதாகத் தொடங்கப்பட்டன என்றும் அறிந்தோம். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கடற்றொழிலாளரைத் தம் சமயப் பிரசாரத்துக்கு ஏற்றவர்களாகத் தெரிந்தெடுத்து இந்தியாவிலும் இலங்கையிலும் இத்துறையிற் பெரு முயற்சிகளைச் செய்த போர்த்துக்கேயக் குருமார் மன்னாரிலும் மதம் பரப்பும் முயற்ச்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் கண்டனர். கோட்டை இராச்சியத்திலும் தென்னாட்டிலும் நிகழ்ந்தவாறு கோவில்களிலிருந்த இடத்தில் கிறீஸ்தவ தேவாலயங்களைக் கட்டினர். தேவாரப்பாடல் பெற்ற புனித ஸ்தலமாகிய திருக்கேதீஸ்வரமும் எக்கதிக்கு உள்ளாயிற்றோ? பிராமணர்கள் இதனைச் சங்கிலியனுக்கு அறிவித்தனர். மதம்மாறியோரை ஐந்தாம் படையினராகக் கொண்டு, “வங்கம் மலி மாதோட்ட நன்னக” ரைப் போர்த்துக்கேயர் கைப்பற்றுவர் என்பதை யுணர்ந்த சங்கிலியன் படை மன்னாருக்குச் சென்றது. எதிர்பார்த்தவாறே மதம் மாறியோர் அவனது ஆணையை எதிர்த்துப் போரிட்டனர் போலும். கடலுக்கு அப்பாலிருந்தும் அவர்களுக்கு மறைமுகமாக உதவி கிடைத்திருக்கலாம். அரசியலில் தலையிடுவதிற் பின் நிற்காத குருமாரும் அவர்களைத் தூண்டியிருப்பர். இறந்தோர் தொகை அறுநூறுக்கும். எழுநூறுக்கும் இடையில் இருக்கலாம். (1544) மீதிப் பேர் பாக்கு நீரிணையைத் தாண்டி அக்கரைக்குச் சென்றனர்.

1. ரெனன்ற் என்ற ஆங்கில வரலாற்றாசிரியர் போர்த்துக்கேயர் முக்கியமாக மீன் பிடிப்போரை மட்டும் ஏன் கிறீஸ்வர்களாக்கினர் என்பதற்கு விடை கூற முயல்கிறார். உயர் சாதியினர் அவர்களுடன் நெருங்கிப்பழகாமல் கர்வமுடன் நடந்தபோது தங்களுடன் சமமாகப் பழகவல்ல வெள்ளைக்குருமாரை அவர்கள் பின்பற்ற முன்வந்ததில் வியப்பில்லை.
2. கன்னியா குமரியையும் திருச்செந்தூரையும் நன்றாகக் கொள்ளையடித்தனர் என்பதற்குச் சான்றுண்டு.
3. 1950 - ல் மாதோட்டத்தில் புதை பொருளாராய்ச்சி யிலீடுபட்டிருந்தபோது அவ்விலாகாவின் உதவிக் காவலர் திரு. சண்முகநாதன் இக்கருத்தைத் தெரிவித்தார்.

இக்காலத்தில் தென்னாட்டில் நிகழ்ந்தவற்றைக் குறித்துப் பேராசிரியர் கிருஷ்ண சுவாமி ஐயங்கார் கூறுவது சிந்தனைக்குரியது:

“கரையோரப் பகுதியில் போர்த்துக்கேயரின் முயற்சிகள் பெருகின@ தென்னாட்டில் முக்கிய துறைகளில் போர்த்துக்கேய பண்டகசாலைகள் அமைக்கப்பட்டன. வேறு வழிகளிலும் போர்த்துக்கேய வணிக முயற்சிகளுக்கு அவை இடமாயின. இம்முயற்சிகளுடன் போர்த்துக்கேயர் ஓரளவு மதம் பரப்பும் முயற்சிகளையும் மேற்கொண்டனர். பிரான்ஸிஸ் சேவியர் தென்னாட்டுக்கு வந்திருந்து ஒரு புதிய சக்திமிக்க தாக்கம் ஏற்பட்டது@ இக்கால வரலாற்றை ஆராய்ந்தோர் இதன் அரசியல் அம்சங்களைக் குறித்துப் போதிய அளவு கவனம் செலுத்தத் தவறிவிட்டனர். கரையோரப் பகுதியில் வாழ்ந்த பரவர் (மீனவர்) மிக விரைவில் கிறீஸ்தவ மத்துக்கு மாற்றப்பட்டனர். அம் மாற்றத்தால் இப்பகுதியில் வாழ்;ந்தோர் தம் இந்திய அரசர்களுக்குப் பதிலாக போர்த்துக்கேய மன்னனுக்கே விசுவாசமுடையோராகி விட்டனர் எனப் பொருள் கொள்ளப்பட்டது. கரையோரப் பகுதியில் வாழ்ந்த தாழ்மை மிக்க ஒரு வகுப்பார் முத்துக்குளிப்பிலும் ஈடுபட்டோர் - ஒரேயடியாக மதமாற்றப்பட்டு, உண்மையில் போர்த்துக்கல் மன்னனின் குடிகளாயினர். இதன்படி தென்னாட்டின் கரையோரப்பகுதி விஜயநகரப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டிருப்பதற்குப் பதிலாகப் போர்த்துக்கல் மன்னனின் ஆணைக்குட்பட்டது. இத்தனைக்கும் வெற்றிகரமாக் கடமையாற்றிய ஒரு மதப் பிரசாரகரும் அவரது நண்பர் சிலருமே காரணம் என்றால் அதனை ஒரு பேரரசு எச்சந்தர்ப்பத்திலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. (இத்துடன் திருவாங்கூர் அரசம் தன் ஆணையைத் தூத்துக்குடி வரை செலுத்த முற்பட்டது) எனவே, சதாசிவராயன் (1542 - 70) பேரால் நிர்வாகத்தை நடத்திய மூன்று சகோதரரின் உறவினனான இராமராஜ விட்டலன் தென்னாட்டுக்கு அனுப்பப்பட்டான். பரவர் வாழும் கரைப்பகுதி இயல்பாக எவ்வரசனிடத்து விசுவாசம் வைக்க வேண்டுமோ அவ்வரசனிடம் விசுவாசம் வைக்கச் செய்யுமாறு அவனுக்குக் கட்டளை கிடைத்தது. சேவியர் வடுகர் செய்த கொடுமைகள் பற்றி மேலிடத்துக்கு முறையிட்டதும், வடுகர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தனர் என அவர் பிரலாபிப்தும் இதனோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளே. விட்டலன் பெற்ற ஆணைப்படி அவன்இலங்கையிலும் இதே கடமையைச் செய்தான் போலும். அப்போரில் மதுரை இராசப்பிரதிநிதி விஸ்வநாத நாயக்கரின் மகன்;;;;; கிருஷ்ணப்பனும் பங்கு பற்றினான் எனத் தெரிகிறது”

இரு கல்வெட்டுகள் விஜயநகரப்படை இலங்கைக்கு வந்தமை பற்றிக் குறிப்பிடுகின்றன.

* (1537 - ல் முத்துக் குளிக்கும் கரையில் பரதவருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தைப் பயன் படுத்தி, முஸ்லீம்களை அடக்கிப் படைசென்றதும், பின் நான்கு போர்த்துக்கேய குருமார் (ளுநஉரடயச Pசநைளவ) அறுபதினாயிரம் பாரதவர்களை மத மாற்றம் செய்ததும் “போர்த்துக்கேரின் சமயம் பரப்பும் முயற்சிகள்” என்ற பகுதியில் விரிவாகக் கூறப்படும். *

மதத்திலும் பொன்னே முக்கியம்

தம் மதமாற்ற முயற்சிகள் தடைப்பட்டதையறிந்த குருமார், அக்காலத்தில் கோவாவில் புகழ்பெற்ற தம் தலைவராகிய பிரான்ஷிஸ் சேவியருக்கு அறிவித்தனர். அவரது வற்புறுத்தல் காரணமாகவும், போர்த்துக்கல் அரசனின் திருப்திக்காகவும் இராசப் பிரதிநிதி ஒரு படையை ஆயத்தஞ் செய்தனன். ஆனால் அந்நாளில் தெற்கே மாயா துன்னையி;ன் குழப்பங்களும், குஞ்ஞாவி மரைக்காயரின் கப்பற்படையின் தொந்தரவும் இருந்தமையால் பெரும்போரிட அவர்கள் விரும்பவில்லை. அத்துடன் அவர்கள் உள்ளத்தில் சமய வேட்கையிலும், பொருளாசையே தலை தூக்கி நின்றது. பெகுவிலிருந்து வந்த கப்பலொன்று கஷ்டத்துக்குள்ளாகி யாழ்ப்பாணக்கரையில் தரைதட்டி நின்றது, அதிலிருந்த பொன்னையும் பட்டையும் சங்கிலியனிடமிருந்து பெறும் நோக்கத்தால் தம் படையை நாகபட்டினத்தில் நிறுத்தி, அரசனுடன்; சமாதானமாகப் பேசித், தம்வணிகக்கப்பலைப் பெறுவதுடன் திருப்தியடைந்தனர். மதம் பரப்பும் ஆர்வம் பணப்பேய்க்கு அடிமையாயிற்று.

அரசியற் சூழ்ச்சிகள்

கோவாவிலிருந்த இராசப்பிரதிநிதி அக்காலத்திலிருந்த கடும் கத்தோலிக்கனான தன் அரசன் (3 - ம் ஜோண்) குருமாரின் செய்தியைப் பெற்று, மன்னாரில் மீண்டும் கிறீஸ்து சமயத்தை நிலைநாட்டப் படையுதவி செய்யாமைக்குத் தன்னைத் தண்டிப்பானோ என்று அஞ்சினான். யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த அரசியற் சதித்திட்டம் ஒன்றைச் சங்கிலியன் முறியடிக்கவே அதில் ஈடுப்பட்ட சிலர் இந்தியாவுக்குத் தப்பியோடினர். தமக்கு உதவி செய்யும் படி போர்த்துக்கேயரை அணுகினர். புவனேகபாகுவின் மக்களிருவரைக் கிறீஸ்தவர்களாக்கி யாழ்ப்பாணத்திலும் கண்டியிலும் முடிசூட்டுவதாக ஆசைவார்த்தை காட்டியிருந்த போர்த்துக்கேயர், அவ்விருவரும் 1546 தையில் கோவாவில் பரவிய அம்மை நோயினால் இறக்கக்கண்டு, தம் திட்டத்தை மாற்றிக் கண்டியில் விக்கிரமபாகுவையும் யாழ்ப்பாணத்தில் சங்கிலிக்குமாறான அரசகுமாரனையும் ஆதரிக்கத் தீர்மானித்தனர். போர்த்துக்கல் மன்னன் தனது ஆலோசனைச்சபையைக் கூட்டினான்.

1. பிரான்சிஸ் சேவியர் சங்கிலியைத் தண்டிக்கும் படி கேட்கிறார்.
2. முன் புவனேகபாகுவின்மைந்தர் யாழ்ப்பாண அரசைப் பெற விரும்பினர்.
3. புவனேகபாகுவும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொடுத்தால் நாம் கொடுக்க வேண்டிய கடனைக் கேளாமல் விடுவதோடு அதிக திறையும் தரச் சம்மதிக்கிறான்.

எனவே, போரை மேற்கொண்டால் என்ன என்று வினாவினான். சபைதீர ஆலோசித்துப் போதிய படைப் பலமில்லாத தாங்கள் அவசியமற்ற போரை மேற்கொள்ளலாகாது என்றும், அரசனைக் கண்டித்து, அவன் மதப் பிரசாரத்துக்கு இடமளிப்பதாக வாக்குப் பண்ணினால் போரைக் கைவிடுதலே தக்கது என்றும் தீர்மானித்தது. மன்னனின் மதப்பித்து அரசியல் விவேகத்துக்கு அடி பணிந்தது. போரைக் கைவிடுமாறு கோவாவுக்குச் செய்தியனுப்பினான்.

வீதியனுக்கு ஆதரவு

கோட்டையரசன் புவனேகபாகு இறந்ததும் போர்த்துக்கேயரின் கையோங்கியது. இளைஞனான தர்மபாலனின் பாதுகாவலனாயமைந்த வீதியபண்டாரனைத் தொலைக்க முயன்றனர். அவனும் தான் சிம்மாசனமேறினால் அவர்களை எளிதில் வெல்ல முடியும் எனத் திட்டமிட்டான். இதனால் அவன் செல்லுமிடமெல்லாம் வேட்டையாடப்பட்டு, இறுதியில் யாழ்ப்பாணம் வந்தான். சங்கிலி அவனுக்கு உதவி செய்வது போர்த்துக்கேயரை வீழ்த்துவதற்கு வழி எனக்கருதிப் படைதிரட்டினான். ஆனால் துரதிஷ்ருடவசமாக இந்த நட்பு நீடிக்கவில்லை. தற்செயலாக ஏற்பட்ட ஒரு தீவிபத்தின் போது தோன்றிய தெருக் கலகத்தில் வீதியன் உயிர் நீத்தான். அவன் கோட்டையிலிருந்து கொண்டுவந்த திரவியங்கள் சங்கிலியன் வசமிருந்தன.

பழிவாங்கும் படலம்

போர்த்துக்கேயர் தம் பகைவனுக்குப் புகலிடம் அளித்தமைக்காகச் சங்கிலியன் மீது பழிவாங்கக் காத்திருந்தனர். ஆனால் தென்னிலங்கையில் மாயாதுன்னை முழுவலிமையுடன் எதிர்த்தமையாலும், குஞ்ஞாலியின் தளபதி ஒருவன் மலையாளக் கடற்படையுடன் வந்து இந்தியாவுக்குக் கிழக்குக் கரையிலுள்ள புன்னைக்காயல் துறைமுகத்தைத் தாக்கிப் போர்த்துக்கேயரது கோட்டையைக் கைப்பற்றியதாலும், அவர்கள் யாழ்ப்பாணத்தின் மீது தம் கனத்தைத் திருப்ப இயலவில்லை. 1558 - ல் குஞ்ஞாலியின் கடற்படையில் ஒருபகுதியை அழித்தும், மாயாதுன்னையைக் கொழும்பிலிருந்து விரட்டியும் சில வெற்றிகள் பெற்றபின் சங்கிலியைத் தண்டிக்கு முயற்சிகளை 1560 - ல் மேற்கொள்ளலாயினர்.

1560 - ம் ஆண்டுப் போர்

அவர்கள் மூன்று நோக்கங்களைக் கொண்டிருந்தனர்:

1. சங்கிலியை அடக்குதல்
2. கோட்டை ஒன்று கட்டுதல்
3. சாந்தோமில் (சென்னை) குடியேறியிருந்த போர்த்துக்கேயரை யாழ்ப்பாணத்திற் குடியேற்றல்.

அவர்களது படை இராசப் பிரதிநிதி பிறகன்சா தலைமையில் ஊர்காவற்றுறையை அடைய, இதை எதிர்பார்த்த சங்கிலி அங்கு தன் படையுடன் காத்து நின்ற எதிர்த்தான். எனவே பிறகன்சா கொழும்புத்துறையில்; இறங்கி நல்லூரைத் தாக்கத் திட்டமிட்டான். போர்த்துக்கேய அதிகாரிகள் படையில் 4000 போர்வீரர் உளர் எனக் கணக்குக் காட்டிப்பணம் பெற்றனரேயன்றி, உண்மையில் 1200 பேரே போரிடத்தக்கவராய் இருந்தனர் என பிறகன்சா இப்போதுதான் அறிந்தான். எனினும் கோட்டை கொத்தளங்களமைந்த கோநகரைத்தாக்கி நகருட் புகுந்து நாசவேலை செய்தான். அரண்மனையை எரித்தான்@ அரசன்பின் வாங்கி வன்னிபக்கம் சென்றான். அரசன் அங்கிருந்து சமாதானப் பேச்சு நடத்துகையில், படையுடன் வந்த குருமார் குடாநாடு முழுவதும் தம் மதமாற்றும் முயற்சியை முழுவேகத்துடன் தொடங்கினர். போர்த்துக்கேயர், தம் வழக்கத்தை யொட்டிக் கோவில்களை அழித்தனர். போர்வீரர் தமிழ் மகளீர் கற்பைக்கெடுத்தனர். இக் கொடுமைகளால் கொதித்தெழுந்தனர். வீரத் தமிழர் மன்னனும் போர்த்துக்கேயரைக் கொன்று, தலைநகரைக் காவல் செய்து நின்ற சிறுபடையையும் ஓடோடச் சாடினர். படைமிகச் சிறிதாயிருந்தமையால் இராசப்பிரதிநிதி தொடர்ந்து போரை நடாத்தி, இழந்த நகரைப் பிடிக்க இயலவில்லை. பிடித்தாலும் நீண்டகாலம் வைத்துக்காக்க வசதியில்லை@ சென்னை சாந்தோம் வாசிகள் இங்கு குடியேற மறுத்தனர். இறுதியில் பெரும் ஆரவாரத்துடன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற, எடுத்துக்கொண்ட முயற்சி பயனற்றதாகியது. பல நாடுகளில் ஸ்பானியமும் போர்த்துக்கேயரும் செய்தவாறு, இங்கும் இராசப் பிரதிநிதி சமாதானம் பேசும்போது பிணையாக அனுப்பப்பட்ட அரசனது மகனைத் திருப்பிக் கொடாது தன்னுடன் கொண்டு சென்றான். அரசன் எவ்வித முயற்சி செய்தும் அவனைத் திரும்பப் பெற இயலவில்லை. இராசப்பிரதிநிதி மன்னார்த்தீவைக் கைப்பற்றிக், கோட்டைகட்டி, முத்துக் குளிப்புக் கரையிலிருந்து கிறீஸ்தவர்களைக் கொணர்ந்து குடியேற்றிவிட்டுக் கோவாவுக்கு மீண்டான்.

பல போர்களால் அரசன் வரியை அதிகரித்தும் எதிர்த்தோரில் ஐயங்கொண்டும் கொடுமைகளை இழைத்தமையாற் போலும் பொது மக்கள்புரட்சி செய்து, இவனைச் சிம்மாசனத்தினின்றும் நீக்கி, இவன் மகன் புவிராஜ பண்டாரத்தை அரசனாக நியமித்தனர். பின் காசி நயினார் என்பவன் அரச பதவிக்கு வந்தான். அவனை வெறுத்த கட்சியினர் மன்னாரிலிருந்த போர்த்துக்கேயரின் உதவியால் அவனைச் சிறை செய்து வேறொருவனை நியமித்தனர். ஆனால் காசிநயினார் சிறையினின்றும் தப்பி மீண்டும் சிம்மாசனத்தைக் கவர்ந்தான். மன்னார்க் கோட்டைத் தளபதி சூழ்ச்சிக்காரரைத் தூண்டி அவனைக் கொன்று, பெரியபிள்ளை என்பவனை அரசனாக்கினான். அவன் செகராசசேகரன் என்ற பெயருடன் 1570 லிருந்து அரசாண்டான். அவன் போர்த்துக்கேயர் ‘அரசரை ஆக்குவோர் ராய்த்’, தாம் நினைத்தபடி அரசியற் சதுரங்கம் ஆட அனுமதிக்காமல். அவர்களை எதிர்த்தான். தஞ்சை வேந்தன் அச்சுதப்ப நாயக்கன் உதவியுடன் தன் அரசிலுள்ள மன்னாரினின்றும் போர்த்துக்கேயரை விரட்ட முயன்றான்.

1591 - ம் ஆண்டுப் போர்

இவனுக்குப் பின் புவிராஜ பண்டாரம், பரராசசேகரன் என்ற பெயரில் அரசாண்டான். (1582 - 1591) மன்னாரே 1560 முதல் யாழ்ப்பாண அரசருக்கும் போர்த்துக்கேயருக்குமிடையில் போர்விளையக் காரணமாயிருந்தது. அதை மீட்க இருமுறை போர் தொடுத்தான். கோழிக்கோட்டுச் சமுத்திரியின் கப்பற்படையுதவி பெற முயன்றான். ஒன்றுக்கொன்று தூரத்தே தனித்து நிற்கும் போர்த்துக்கேயக் கோட்டைகளைத் தாக்கும் போர் முறையைக் கடைப்பிடித்த 3 - ம் குஞ்ஞாலி மன்னாருக்குப் படையனுப்ப முயன்றான். ஏதோ தடை காரணமாக அவனது உதவிப் படை உரிய காலத்தில் வரவில்லை. அதனால் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணப் படையின் முதல் தாக்குதலை வெற்றிகரமாகச் சமாளித்து, அதனைத் துரத்தினர். அவர்களால் குடியேற்றப்பட்டு அவர்களது ஐந்தாம் படையாக உதவிய அந்நியக் கிறீஸ்தவர்களை மாந்தையில் அரசன் அழித்தான். இதற்கிடையில் கோழிக்கோட்டுக் கடற்படை மன்னாரை நோக்கிச்செல்கிறது என்று அறிந்த இராசப்பிரதிநிதி 1591 - ல் கோவாவிலிருந்து மெடொன்கா என்ற தளபதியைப் பெரும்படையுடன் அனுப்பினான். இவன் போர்த்துக்கல் குடாவில் கோழிக்கோட்டுக் கப்பல்களை எதிர்த்தான். மலையாள வீரர் கரையிலிருக்கும் சமயம்பார்த்துத் தாக்கி அவர்களது கூடாரங்களைக் கைப்பற்றிக் கப்பல்களையும் அழித்து மன்னாரை நோக்கி வந்தான். சுதேசக் கூலிப்படையையும் திரட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தைத் தாக்கினான். நல்லூர் அரண்களைக் காத்து நின்றோர் பெருந்தொகையாக இறந்தனர். பெரியபிள்ளை செகராச சேகரனின் மகன் எதிர்மன்னசிங்கன் போரில் வீழ்ந்தபோது, அவனைத் தன் வாளுக்கு இரையாக்காமல் (தம் கைப்பொம்மையாகப் பயன்படுவான் என்ற நம்பிக்கையால்) அவனுக்கு உயிர்ப் பிச்சையளித்தான். சைமன் பிஞ்ஞாவோ என்ற போர்த்துக்கேய அதிகாரி (இக்காட்சியைப் பின் தான் பதிவி வகித்த சப்ரகமுவாவில் மகா சமன்தேவாலயத்தில் கல்லில் செதுக்குவித்தான்) போர்த்துக்கேயர் புவிராஜபண்டாரத்தைத் தப்பிச் செல்லவிடாது கைப்பற்றிச் சிரச்சேதம் செய்து அவன் உறவினர்களையும் சிறையிட்டனர். அரண்மனைத் திரவியங்கள் அனைத்தையும் கொள்ளையிட்டனர். பணம் பாத்திரம், ஆபரணங்கள் எல்லாம் பகைவர்க்கு உரியனவாயின. அவர்கள் வசப்பட்ட பீரங்கிகள் பலவற்றில் போர்த்துக்கல் அரச சின்னம் இருக்கக் கண்டனர். பண ஆசை பிடித்த போர்த்துக்கேயப் போர்வீரர் இவற்றைத் தம் பகைவருக்கு விற்றிருந்தனர் போலும்@ பல போர்களிற் கைப்பற்றப்பட்டு மிருக்கலாம்.

தலைநகரை வெற்றி கொண்ட போர்த்துக்கேயர் நல்லூரில் பிரபலஸ்தர்கனைக் கூட்டிப் போர்த்துக்கல் அரசனை ஏற்கும்படி கேட்டுக் கொண்டனர் எனச் சரித்திராசிரியர் வண.பிதா பெரேரா குறிப்பிடுகிறார். ஆனால் இது அரசியல் மகாநாடு சொல்லத்தக்க பெருமை யுடையதோ என்பது ஐயத்திற்கிடமானதே. தளபதியின் ஆலோசனையாளர் “சுதேசி ஒருவனைப் பொம்மை போல் சிம்மாசனத்தில் அமர்த்தி ஆள்வதே தற்போது சிறந்த முறை@ நேரடியாக நாம் நிர்வாகப் பொறுப்பேற்பது புத்தியல்ல” என்று கூறினர். எனவே, தளபதி எதிர்மன்ன சிங்கனைப் பரராசசேகரன் என்ற பட்டப்பெயருடன் சிம்மாசனத்திருலித்தினான். அவனைக் காக்கப் போர்த்துக்கேயப்படை ஒன்றும் தலைநகரில் இருந்தது. அவன் போர்த்துக்கேயர் எதிர்பார்த்தவாறு அடங்கி நடந்தான்.

அவமானச் சின்னமாகச் சிம்மாசனத்திலிருந்த அவனை அகற்ற முயன்றனர். தன்மானமிக்க தலைவர்கள். போர்த்துக்கேயரில் மாறாப் பகைகொண்ட முஸ்லிம்கள், வடுகர், மறவர் ஆகியோரைச் சேர்த்துப் படையமைத்தனர். தஞ்சை அச்சுதப்பநாயக்கன் (1580 - 1614), கண்டியரசன் விமலதர்மசூரியன் ஆகியோருடன் தொடர்புகொண்டனர். பொம்மையரசன் இதனால் நடுக்க முற்றுப் போர்த்துக்கேயருக்குச் செய்தியனுப்பினான். மன்னாரை நோக்கி வந்த தஞ்சைப் படையை அவர்கள் காத்து நின்று எதிர்த்துக் கைப்பற்றினர். போர்த்துக்கேயர். அரசனும் கண்டி வேந்தனுடன் கூட்டுறவு கொள்ள முயல்கிறான் என ஐயுற்றனர். எனினும் அவன் பிரான்ஸிஸ் சபைக்குருமார் கோவில்கள் கட்டவும் கிறீஸ்தவ சமயப் பிராசாரஞ் செய்யவும் தாராளமாக அனுமதி வழங்கினான். மன்னார்த் தளபதிகள் அவனை அட்டை போல் உறிஞ்சினர். கோவா இராசப்பிரதிநிதிகளும் அவர்களை அடக்கமுடியவில்லை.

1615ல் அவன் இறக்கும் போது தன் மூன்று வயதுச் சிறுவனை அரசனாயும, தன்தம்பி அரசகேசரியைப் பாதுகாவலனாயும் நியமித்தான். ஆனால் சங்கிலிகுமாரன் என்னும் உறவினன் அரசகேசரியையும் அவனது ஆதரவாளரையும்கொன்று தானே பாதுகாவலனானான். போர்த்துக்கேயர் வெறுப்பைத் தெரிவித்த போது அவர்களுக்கு வேண்டிய திறையும் சமயப் பிரசார உரிமையும் அளிப்பதாக வாக்குப் பண்ணினான். இறந்த அரசனின் அதரவாளர் கலகஞ் செய்து, நாட்டுப் பற்றுடைய கரையார் தலைவனுடன் சேர்ந்து அரண்மனையைத் தாக்க, அரசன் போர்த்துக்கேயரின் ஆதரவை நாடினான். அவர்கள் உதவியால் மீண்டும்பதவி பெற்றான். ஆனால், வளர்ந்துவரும் தேசாபிமானத்தை உதறித்தள்ளி அப்புதிய சக்திக்கு மாறாக நடப்பது புத்தியல்ல என்பதை உணர்ந்து புரட்சிக்காரரைத் தன் பக்கஞ் சேர்த்துப் போர்த்துக்கேயரை எதிர்த்தான். டச்சுக்காரருடனும் கண்டியரசன் சேனரதனுடனும் தொடர்பு கொண்டான். அவனுக்கு உதவிக்குப் போன தெலுங்கர் படைக்கு வழி விட்டான்@ திறை செலுத்;த மறுத்தான்.

சங்கிலி குமாரன் முடிவு

தேசாதிபதி கொன்ஸ்தாந்தின் டீ சா கொழும்பிலிந்து, ஒலிவீரா தலைமையில் ஒருபடையை அனுப்பினான் (1619). மன்னார்ப்படையும் வந்தது. பூநகரி, ஊர்காவற்றுறை வழியே வண்ணார்பண்ணையை அடைந்து அங்கு எதிர்த்த கரையார் படையை வென்ற போர்த்துக்கேயர், இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற அரசனைக் கைதுசெய்து கொழும்புக்கு அனுப்பினர். பின் அவன் கோவாவில் சிரச்சேதம் செய்யப்பட்டான். போர்த்துக்கேயர் இனிப் பொம்மை அரசனை வையாது தாமே நேரடியான ஆட்சியை நடத்தத் தீர்மானித்தனர். கோட்டையரசைக் கைப்பற்றிய அனுபவம் அவர்களுக்கு இருந்தது அன்றோ! ஆனால் பொதுமக்களின் எதிர்ப்புத் தொடர்ந்து இருந்தே வந்தது. இரு வருடங்களுக்குள் ஆறு புரட்சிகள் அந்நியரை எதிர்த்து நடாத்தப்பட்டன. தஞ்சை வடுகர் படையுதவியுடன் கரையார் தலைவன் கலகஞ் செய்தான். ஆனால் கொழும்பிலிருந்து உதவிப்படை வரவே ஒலிவீரா கலகங்களை அடக்கினான். தமிழரின் இறுதி முயற்சியும் பயனின்றி ஓய்ந்தது.

பின் இணைப்பு

“தஞ்சை நாயக்கர் வரலாறு” என்னும் நூலில் விருத் கரீசன் கூறும் செய்திகளின் சாரம் கீழே தரப்பட்டடுள்ளது:-

போர்த்துக்கேயரது சுவடிகளிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்து அரசியல் விவகாரங்களில் தலையிட்டமை பற்றி அறியலாம். அப்பகுதி மன்னன் அவர்களுக்கும் அவர் தம் மதத்துக்கும் எதிரானான். 1597 - ல் தர்மபாலன் இறக்க, அவர்கள் இலங்கையின் அரசுரிமை பெற்றார்கள். யாழ்ப்பாண அரசு தவிர்ந்த ஏனைய பகுதிகள் அவர்களுக்கு ஆயின. 1617 வரை அவர்கள் யாழ்ப்பாண மன்னருடன் போரிட்டு வந்தனர். யக்ஞ நாராயண தீட்சிதர் எழுதிய சாகித்திய ரத்தினாகரம் (ரகுநாத விஜயம்) இராணி ராமபத்திராம்பா எழுதிய “ரகுhநதாப்யுதயம்” என்னும் நூல்கள் யாழ்ப்பாண மன்னரின் பொருட்டுத் தஞ்சை வேந்தன் இரகுநாத நாயக்கன் (1614 - 1632) தலையிட்டுப் போர்த்துக்கேயரை எதிர்த்த வரலாற்றைக் கூறுகின்றன. இவனுக்கு முன் ஆண்ட அச்சுதப்பநாயக்கன் 91580 - 1914) 17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கேயருடன் நிகழ்த்திய போர் பெரும்பாலும் யாழ்ப்பாண மன்னரது சார்பாகத் தொடங்கிய தென்றே கருத வேண்டும். “சாகித்தியரத்தினாகரம்” (ஏ -68) கூறும் நாகபட்டினத்துக்கு அணித்தாக அச்சு தப்ப நாயக்கன் பாரசீகரை (போர்த்துக்கேயரை) வென்றான் என்ற செய்தி நாயக்கருக்கும் போர்த்துக்கேயருக்கு மிடையில் வளர்ந்த பகையின் ஆரம்பம் எனத் தோன்றுகிறது. அவர்கள் அந்நாட்டு மக்களைக் கிறீஸ்தவ சமயத்துக்கு மாற்றக் கைக்கொண்ட முறையும், பொதுவாகச் சுதேசிகளை அவர்கள் நடத்திய விதமும் காணமாக அவர்கள் பொதுஜன வெறுப்புக்கு ஆளாயினர். டச்சுக்காரரின் சுவடிகள் இலங்கையரசரும் தஞ்சை மன்னரும் போர்த்துக்கேயரை விரட்டத் தம் உதவியை நாடினர் எனப் பேசுகின்றன.

அச்சுதப்ப நாயக்கனின் இறுதிக்காலத்தில் கரையோரப்பகுதியிற் குடியேறிய போர்த்துக்கேயரால் சங்கடங்கள் பல எழுந்தன. போர்த்துக்கேயரை எதிர்த்த யாழ்ப்பாண மன்னன் தன் நாட்டினின்றும் விரட்டப்பட்டு, நாயக்க அரசரது அவையில் அடைக்கலம் புகுந்தான்.

தஞ்சை நாயக்கர் குலத்து மணிவிளக்காகிய இரகுநாதன் நேபாள (யாழ்ப்பாண) மன்னரைச் சிம்மாசனத்தில் ஏற்றியவன் என்று சாகித்தியயரத்தினாகரம் (ஐஐ - 71) கூறுகிறது. போர்த்துக்கேய அரசரை வெல்ல, இந்தியக் கரையிலிருந்து யாழ்ப்பாணக் கரைக்குக் கப்பல்களாற் சேது (பாலம்) அமைத்தமையால் நவீன தாசரதி (இராமன்) என அவன் புகழப்படுகிறான்.

இரகுநாதன் அரச பீடம் ஏறியதும் கஷ்டங்கள் பலவற்றை எதிர்நோக்கினான். அவன் மனைவி இராமபத்திராம்பவும், அவன் அவைப் புலவர் யக்ஞநாராயண தீட்சிதரும் சற்று வேறுபட்ட வரலாற்றுப் செய்திகளைத் தருகின்றனர். இராமபத்திராம்பாவின் கூற்றுப்படி நேபாள மன்னனே நேரில் வந்து தன் இராச்சியநிலை பற்றி இரகுநாதனின் போர் ஆலோசனைச் சபையில் எடுத்துக் கூறினான். இரகுநாதன் மூன்று பகைவரை ஒரே சமயத்தில் எதிர்க்க வேண்டியவனானான். முதலில் அவன் வடக்கே கொள்ளிட நதியின் முகத்துவாரத்தை யடைந்தான்@ பின் யாழ்ப்பாணம் வந்தான்@ இறுதியில் தோப்பூருக்கு விரைந்தான்.

யாழ்ப்பாண மன்னன் போர்த்துக்கேயரால் விரட்டப்பட்டுத் தஞ்சை அரச அவையை அடைந்த அரசனிடம் முறையிட்ட பின்னரே போர் ஆலோசனைச் சபை கூட்டப்பட்டது என்ற “சாகித்திய ரத்தினாகரம்” (ஏ1 - 66 - 72) கூறுகிறது. இலங்கை வரலாற்றைக் கூறும் போர்த்துக்கேய ஆசிரியர்கள் 1616 - ம் ஆண்டின் தொடக்கத்தில் தஞ்சைப் படை பெற்ற வெற்றிகளைக் குறிப்பிகின்றனர். இரகுநாதன் தானே தேவிக் கோட்டையிலிருந்து படைகளை நடத்திக் கொண்டு யாழ்ப்பாண அரசன் உடன்வரக், கரையோரமாகச் சென்றான். காவேரிப் பட்டினத்தைத் தாண்டிப், படகுகளைத் தொடர்ச்சியாக வைத்துக் கடலைக் கடந்து, யாழ்ப்பாணக் கரையை அடைந்தான். படைகளும் மர மிதவைகளில் நீரிணையைக் கடந்தன. இரகுநாதன் போர்த்துக்கேயருடன் போரிட்டான். அவர்களது பீரங்கிகள் பயங்கரமாக நெருப்பைக்கக்கின எனினும், அவர்கள் களைப்புற்று உயிரைக் காக்க ஓடினர். பெரும்பாலானோர் சிறு கப்பல்களிற் தப்பிச் சென்றனர். இரகுநாதன் போர்த்துக்கேயருடன் பொருது, மீண்டும் தோல்வியுறச் செய்து, யாழ்ப்பாண அரசனைச் சிம்மாசனமேற்றினான். தேவிக் கோட்டையிலுள்ள அரணைக் கைப்பற்றியபின், தோப்பூர் யுத்தத்துக்கு முன், 1615 - ன் இறுதியிலோ 1616 - ன் தொடக்கத்திலோ இவ்வெற்றி கிடைத்தது எனலாம்.

“சாகித்தியரத்;தினாகரம்” யாழ்ப்பாண அரசியர் மன்னன் இறந்தபின் தஞ்சைக்குச் சென்று முறையிட்டதாகக் கூறுகிறது.

4. தஞ்சை அரசன் இரகுநாத நாயக்கனிடம் அரசன் தேவியார் முறையிட, அவன் உதவிப் படையனுப்பினான் என்றும் அவனே படை நடத்தி வந்தான் என்றும் அக்கால வடமொழி நூல்கள் இரண்டு கூறுகின்றன.
5. 1526 - ல் யேசுசபைக் குரு அந்திரே பல்மேய்றோ சுவைத்து எஉதிய கடிதத்தில், யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போர்த்துக்கேயப் படை “குழந்தைகளை இரண்டாகப்பிளந்தும் மங்கையரின்; மார்பகத்தைத் துண்டித்தும் மக்களுள்ளத்தில் அச்சத்தை விளைவித்தனர்” என்கிறார்.

யாழ்ப்பாண மன்னர் வம்சாவலி

பரராஜ சேகரன் (1478 - 1519)
ஜக ராஜசேகரன் (சங்கிலி) (1519 - 1561)
புவிரரிஜ பண்டாரன்
காசி நயினார்
பெரியபிள்ளை (செகராச சேகரன்)
புவிராஜ பண்டாரன் (பரராச சேகரம்) (1582 - 91)
எதிர்மன்ன சிங்கன் (பரராச சேகரன்) (1501 - 1615)
சங்கிலி குமாரன் (1615 - 1617)

உசாத்துணை நூல்கள்
மாணவருக்குரியவை@

1. நம்முன்னோரளித் அருஞ் செல்வம் - 2 ம் பாகம்
2. இலங்கைச்சரித்திரம் - போர்த்துக்கேயர் காலம் - கு. ஓ. ஊ. நாடகம் - பாடம் ஓ
3. சங்கிலி நாடகம் - முகவுரை - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை

ஆசிரியர்க்குரியவை:

1. யு ர்ளைவழசல ழக ஊநலடழn டில குச. Pநசநசய - ளுநஉவழைn 62 104 -108இ 148 - 150இ 228 - 232.
2. ஊநலடழn ருனெநச றுநளவநசn சுரடந - ர்ழசயஉந Pநசநசந - ஊhயி . 3
3. வுhந யேலயமள ழக வுயதெழசந - ஏசனைனயபசைளையn (P.51)

வினாக்கள்

1. போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப் பகுதிகளைத் தமக்குரிமையாக்க முயன்றதை எதிர்த்துப் போராடியவர்கள் கடைப்படித்த முறைகளை ஒப்பிடுக.
2. போர்த்துக்கேயரின் இந்த சமுத்திர சாம்ராச்சியத்துக்கு யாழ்ப்பாணம் ஏன் இன்றியமையாததாயிருந்தது?
3. யாழ்ப்பாண அரசு தனியுரிமையிழந்து அந்நியர் கைப்பட்டமைக்குக் காரணங்கள் யாவை?
4. இலங்கையின் (அ) வடக்கு (ஆ) கிழக்கு மாகாணங்களில் போர்த்துக்கேயர் ஏன், எவ்வாறு தமது அதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டனர்? (1655)

ஐந்தாம் அத்தியாயம்

கண்டி அரசும் போர்த்துக்கேயரும்

போர்த்துக்கேயர் 1505 முதல் கோட்டையரசுடனும்,1543 முதல் யாழ்ப்;பாண அரசுடனும் தொடர்புற்றனர் எனினும் கண்டியடன் அதுவரை அரசியற்றொடர்பு ஏதும் இ;ன்றியிருந்தனர். மாயாதுன்னையின் இராச்சியவிஸ்தரிப்புக் கொள்கை காரணமாகவே கண்டியரசனும் புவனேகபாகுவைப் போலப் போர்த்துக்கேயரின் வலைக்குள் வீழ்ந்தான்.

மாயாதுன்னையின் தலையீடு

மாயாதுன்னை கோட்டைப் பிரிவைக் கைப்பற்ற முடியாது எனக்கண்டதும் தன்கவனத்தைக் கண்டியரசின் மீது திருப்பினான். தான் அரச பதவி பெறுவதற்கு உதவி செய்த விக்கிரமபாகுவின் அரசையே தான் அபகரிக்கத் திட்டமிட்டான். அதற்குத் தமையனின் ஆதரவையும் பெற்றான். தங்கள் கோட்டையரசைப் பல வீனமுறச் செய்யும் நோக்கமாகவே விக்கிரமபாகு முன்படையுதவி செய்து தம்தந்தையைக் கொல்ல வழி செய்தான்என்றும், தாங்கள் ஒற்றுமையின்றி இருந்தபோது திருக்கோணமலை, மட்டக்களப்பு, வெல்லாச, யால, பாவன ஆகிய பிரிவுகளின் வன்னியர்களையும்; ஏழு கோறளை அதிபனையும் தன் ஆட்சிக்கு அடங்குமாறு செய்து தங்கள் அதிகாரத்தைக் குறைத்தான் என்றும், எடுத்துக்காட்டித் தமையன் புவனேகபாகுவின் சம்மதத்தைப் பெற்றுக் கண்டியரசுடன் போரிட ஆயத்தங்கள் செய்தான்.

போர்த்துக்கேய உதவியை நாடல்

இதை அறிந்த விக்கிரமபாகு ஒரு போர்த்துக்கேயனைத் தன் தலைநகராகிய செங்கடகலைக்கு அழைத்து அவனது இனத்தவர் தனக்கு உதவி செய்வரோ என விசாரித்தான். அவன் கூறிய யோசனைப்படி கோவாவின் இராசப்பிரதிநிதிக்குக் கடிதம் எழுதினான். அதில் திருக்கோணமலையில் பண்டகசாலையமைத்;துக் கண்டியரசுடன் வாணிகத்தைப் nருக்குமாறும்,தான் போர்த்துக்கல் மன்னனுக்குத் திறை செலுத்துவதாகவும் குறிப்பிட்டான். அக்கடிதத்துக்குப் போர்த்துக்கேயரனுப்பிய பதில் புவனேகபாகுவின் கையிற் சிக்கியது. விக்கிரமபாகுவின் மனமாற்ற செயலால் ஒரு பயனும் விளைந்திலது.

சகோதரரிருவரும் மலைநாட்டுக்குச் செல்லும் வழிகளைக் கைப்பற்றிப் போருக்கு ஏற்பாடுகளைச் செய்தனர். கண்டியரசனும் அவன் கீழ்ப்பட்ட மாகாண அதிகாரிகளும் கிறீஸ்தவர்களாய்ச் சம்மதிப்பதாயும் தமக்கு உதவி செய்யுமாறு போர்த்துக்கேயருக்குச் செய்தியனுப்பினர். இராசப்பிரதிநிதி காஸ்ற்றோ கொழும்புக்கு அனுப்பிய தூதுவரிடம் இரகபியமாகத் தம் கருத்தை அறிவித்தனர். அத் தூதுவருக்குப் பதிலாக ஒரு மதகுரு விக்கிரமபாகுவின் கடிதத்துடன் கோவா சென்றார்.

சௌசா வருகை

1546 - சௌசாவும் குருவும் ஐம்பது ஆட்களும் கண்டிக்குப் புறப்பட்டனர். வழியில் கண்டியரசன் கோட்டைக்குச் சகோதரரால் தாக்கப்பட்டு அவர்களுடன் சமாதானஞ் செய்துவிட்டான் என கேள்வியுற்றனர். எனினும் இலங்கைக்கு வந்தனர். புவனேபாகு தடுத்ததும், தென்னிலங்கைக்குப் போய், யால வழியாக சௌசா 38 ஆட்களுடன் சென்று கண்டியை அடைந்தான். அரசன் தான்போர்த்துக்கேயர் உதவி விரைவில் கிடைக்குமென நம்பி மதம் மாறியதையும், அப்படியிருந்தும் உதவி உரிய காலத்தில் கிடைக்காமல் விடவே, தான் 24 லட்சம் பணமும் பிற பொருள்களும் திறையாகக் கொடுத்ததுடன், தன் மகளையும் தர்மபாலனுக்கு விவாகம் செய்யச் சம்மதித்ததையும் கூறினான். சில ஆட்களுடன் வந்த தளபதியை ஏற்க மறுத்தான். இந்தியாவிலிருந்தும் உடனே உதவி வரவில்லை.

பிறேற்றோ வருகை

1547 - ல் 100 பேருடன் பறெற்றோ வந்ததும், கண்டி மன்னன் திருப்தியுறாது அவனுடன் போராடப் படை திரட்டினான். பறெற்றோ சீதாவக்கை இராச்சியத்துள் தப்பிச் சென்றான்.

விக்கிரமபாகுவின் இறுதிக் காலத்தில் இரு மனைவியரின் பிள்ளைகளுக்குள் சிம்மாசனப் போட்டி தொடங்கியது. கரலியட்ட பண்டாரன் என்பவன் தர்மபாலனின் மனைவியின் சகோதரன்@ எனவே போர்த்துக்கேயரின் உதவியை நாடினான். இளைய மனைவியின் மைந்தன் பக்கம் சிதாவக்;கையரச உதவி இருந்தும், அவன் உயிரிழந்தான். போர்த்துக்கேயப்படையுதவியுடன் ஆண்ட மூத்தவனை மக்கள்பலர் வெறுத்தனர். பெரதெனியா அதிகாரி வீரசுந்தரபண்டாரன் இவர்களுக்குத் தலைவனாகி இராசசிங்கனின் உதவியைப் பெற்றான்.1582 - ல் சீதாவக்கைப் படை கண்டிக்குச் சென்று போரிட்டது. கரலியட்ட பண்டாரன் வல்லனைக்கணவாயில் முறியடிக்கப்பட்டான். தன் பெண்குழந்தை குசுமாசனதேவியையும் மருமகன் யமசிங்களையும் கொண்டு திருக்கோணமலைக்கு ஓடினான். அங்கு அம்மை நோயால் இறந்தான். சிறுவர் இருவரும் போர்த்துக்கேயரால் மன்னாரில் சிறைப்பறவைகள் போல வளர்க்கப்பட்னர்.

பத்து ஆண்டுகளுள் அரசியற் கிளர்ச்சி மிகுந்தது. போர்த்துக்கேயர் யமசிங்கனைச் சிம்மாசன மேற்றினர். ஒராண்டுக்;குள் அவன் இறக்க வீரசுந்தரன் மகன் கோணப்பு பண்டாரன் தானே அரசனானான். அவனைத் தண்டிக்க வந்த இராஜசிங்கன் இறந்தான். ஓராண்டுக்குள் சீதாவாக்கை போர்த்துக்கேயர் கைப்பட்டது.

கண்டியைக் கைப்பற்றும் திட்டம்

கோட்டை சீதாவக்கை, யாழ்ப்பாண அரசுகளைத் தம் வசம்படுத்திய போர்த்துக்கேயர் கறுவா விளையும் மலை நாட்டையும் தமதாக்கிக் கொள்ளப் பேரவாவுற்றனர். தம்மிடம் கற்றுப்பின் தமக்குத் துரோகஞ் செய்த விமல தர்ம சூரியன் கிறீஸ்து சமயத்தைப் புறக்கணித்து மீண்டும் பௌத்தனாகியதும் அவர்களுக்கு ஆத்திரத்தை விளைவித்தது. தம்மால் வளர்க்கப்பட்ட டோனோ கதரீனாவைக் கண்டிச் சிம்மாசனத்தில் இருத்தினால்,கண்டி மக்களுக்கு தமது பழைய அரசனின் மகள் என்ற காரணத்தால் விசுவாசம் உடையராவர். தாமும் அவளைப் பொம்மைபோல வைத்து அரச அதிகாரத்தைக் கையேற்று நடத்தலாம் எனத் திட்டமிட்டனர். தேசாதிபதி ஹோமெம் பெரேரா இத்திட்டத்தைத் தன் நண்பன் பேரோ லோப்பெஸ் டீ சௌசா தான் புகழ் பெற விரும்பித் தன்னையே போர்த்தளபதியாக நியமிக்கச் செய்து, 600 போர்த்துக்கேயரைக் கொண்ட படையுடன் வந்து சேர்ந்தான். (மே, 1594) ஹோமெம் பெரேரா பொறாமையால் பேசாதிருந்தான்.

சௌசாவின் படையெடுப்பு, 1594

சௌசா ஏழு கோறளையதிபதி, ஜயவீரபண்டாரன் (மன்னம்பெருமாள்) முதலிய சுதேசிகளின்துணையுடன் செங்கடகல நகரை நோக்கி முன்னேறினான். கண்டி மக்களைத் திருப்தி செய்ய மன்னாரிலிருந்து டோனோ கதரீனாவும் கொண்டு வரப்பட்டாள். விமலதர்ம சூரியன் எதிர்த்துத்; தோல்வியடைந்து, நகரைக் கைவிட்டுக் காடுகளில் மறைந்தான். ஊவா அதிபதி சிரச்சேதம் செய்யப்பட்டான். பிற மகாண அதிபதிகள் எதிர்ப்பைக்கைவிட்டனர். டோனோ கதரீனா உடரட்டை இராணியாகப் பிரகடனஞ் செய்யப்பட்டாள். அவளைச் சுற்றி நின்ற போர்த்துக்கேயர் அவளைத் கண்டி அதிகாரிகள் அணுகாது தடை செய்தனர். ஒரு போர்த்துக்கேயனே அவளை மணஞ் செய்யக்கூடும் என்ற கதையும் பரவியது. ஜயவீரன் அவனது மணாளனாதற்கு முன் வந்தான். அவனது வேண்டுகோளை சௌசா தட்டிக்கழித்தமையால், விமலதர்மன் அவனுடன் தொடர்பு கொண்டபோது அவன் அரசன் பக்கஞ் சார்ந்து, தம் படையணி ஒன்றையும் அவன் கையிற் சிக்கவழி செய்தான். அவன் மீது ஐயங்கொண்ட தளபதி சௌசா சூழ்ச்சியை அறிந்து அவனைக் கொல்லுவித்தான். உடனே கூலிப்படை அரசன் பக்கஞ் சார்ந்தது. போர்த்துக்கேயரது படைக்கு உணவும் கிடைக்கவில்லை. மக்கள் விமலதர்மனை நாடி நின்றனர். தம் சிம்மாசனத்தில் பரம்பரை உரிமையுள்ள பொம்மை அரசியிருப்பதிலும், தம்மைப் பகைவரது சுரண்டுதலினின்றும் காக்க வல்ல ‘அதிபதி மகன்’ இருப்பதே மேல் எனக்கருதினர்.

போர்த்துக்கேயர் பேரழிவு

கொழும்புக்குப் பின்வாங்கிச்செல்லத் திட்டமிட்டசௌசாகணறுவை அடைந்ததும்; விமலதர்மன் படை பறங்கிப் படையைச் சூழ்ந்து போரிட்டு அழித்தது. 93 பேர் மட்டும் எஞ்சினர். அவர்களைச்சிறை செய்து இராணியையும் விவாகஞ் செய்தான் விவலதர்மன். இப்போது உரிமையுடன் சிம்மாசனமேறினான். முறைப்படி சிம்மாசனமேறாதவனுக்கு அச்சந்தர்ப்த்தை அளித்தனர். போர்த்துக்கேயர் கைதிகள் அரச மாளிகை கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நல்ல வைத்திய உதவி பெற்றும்சௌசா (தன்மகனை அரசனிடம்ஒப்புவித்து விட்டு) இறந்தான். 40பேர் படுகாயத்துடன் கொழும்புக்கு அனுப்பப்பட்டனர். (நால்வர் குருடாக்கப்பட்டால் ஒருவன் ஒற்றைக் கண்ணுடன் வழிகாட்டிச் செல்வானாம்) ஹோமெம் பெரேரா தன்பெருமையால் படையுதவி அளிக்காமல் விட்டதற்கு மனம்வருந்தினான். பிறகு அவன் செய்த முயற்சிகள் போர்த்துக்கேயக் கைதிகளுக்கு விடுதலை தேடித்தரவில்லை.

தாழ்பூமியிற் புரட்சி

தாழ் பூமி முழுவதும் கலகங்கள் தோன்றின. போர்த்துக்கேயரின் கீழ் இறுதியாக வந்தசீதாவக்கையில் அகரகம அப்புஹாமி ஒரு புரட்சிக்குத் தலைமை தாங்கினான். அரச குடும்பத்தின் நெருங்கிய உறவினனாதலால், இராஜசிங்கனின் இலட்சியத்தை மக்கள் முன்வைத்து, அவர்களைத் தூண்டினான். அதே காலத்தில் ஹேவகம், சீயன்னகோறளைகளிலும், கடும்பளைக்கோறளை, சபரகமுவா, மாத்தறை என்னும் பிரிவுகளிலும் புரட்சித் தீ பரவியது.

அஸெவெடோ வருகை - புரட்சிக்காரரை அடக்குதல்

கோவாவுக்கு இச் செய்தி எட்டியதும் இராசப்பிரதிநிதி அஸெவெடோவை இலங்கைக்கு மகா தளபதியாக அனுப்பினான். அவன் வந்ததும், 1595 தை மாதத்தில்படையுடன் புறப்பட்டு, தர்மபாலனைக் காட்டி மக்களைத் திரட்டிக் கொண்டு, புரட்சிக்காரரைப் பயங்கரமான கொடுமைகள் மூலம் அடக்கினான். விரைவில் ஏழுகோறளையும் மாத்தறையும் அடங்கின. தர்ம பாலனின் மொழி பெயர்ப்பாளனது மகன் எதிரில்ல ரால (டொமிங்கோஸ் கொரேயா) ஏழு கோறளையின் திசாவையாக நியமிக்கப்பட்டபின் கலகத் தலைவனானான். 12000 வீரருடன் போரிட்டான். ஆனால்; மாத்தறைத் திசாவை சமரக்கோனின் விசுவாசத்தால் போர்த்துக்கேயர் தப்பினர். விமல தர்மன் தன்னிடம் ஓடி வந்த கொரேரியாவுக்குச் சகல உதவியும் அளித்தான். தானே நேரில் படை நடத்திச் சென்று தர்மபாலனின் மருமகன் நவரத்தினா தலைமையில் வந்த படையை முறியடித்தான். ஆனால் கோவாவிலிருந்து உதவிப்படை வந்ததும் கண்டிப் படைகள் துரத்தியடிக்கப்பட்டன. சமரக்கோன் மாத்தறைத் திசாவனியைக் கைப்பற்றிச்சென்று டொமிங்கோஸ் கொரேயவை வென்று கைப்பற்றிக் கொழும்பில் சிரச்சேதம் செய்ய அனுப்பினான். (1598) விமலதர்ம சூரியனின் தூண்டுதலால் தமையனின் புரட்சியைத் தொடர்ந்து நடத்தினான் சைமன் கொரேயா. போர்த்துக்கேயர் சீதாவாக்கையில் ஒரு கோட்டை கட்டினர். அதனைக் கைப்பற்ற விமல தர்மன் பெரிதும் முயன்றும் பயன் கிடைக்கவில்லை.

1597 - ல் தர்மபாலன் இறந்ததும் போர்த்துக்கேயர் தம் அரசனை இலங்கையரசனாகப் பிரகடனஞ் செய்தனர். விமலதர்மன் மட்டுமே இப்போது ஒரே சிங்கள அரசனாய் விளங்கினான். மிகுந்த கறுவா வருமானந்தரும் மாத்தறைப் பிரிவைக் கைப்பற்றப்படையைஅனுப்பினான். சமரக்கோன் கண்டிப் படையை வென்று போர்த்துக்கல் மன்னனால் வீரவிருது வழங்கப்பட்டான்.

விமலதர்மன் நாலுகோறளையைக் கைப்பற்றினான். ஆனால் சைமன் கொரேயா அவனைப் பகைத்துக் கொண்டு, போர்த்துக்கேயரையடைந்தான். கோவா சென்று போர்த்துக்கேய மனைவியுடன் வந்தான். விமல தர்மனுக்கு உதவி புரிந்த வடுகர் படை சிலாபப்பகுதியில் போர்த்துக்கேயரால் முறியடிக்கப்பட்டது.

கண்டிமீது படையெடுப்பு

அஸெடோ இப்பொழுது தற்காப்பு நடவடிக்கைகளோடு மட்டும் நில்லாது மலைநாட்டுக்குச் சென்று தாக்குப் போரையும் மேற்கொண்டான். கண்டியரசு சுதந்தரமாயிருக்கும் வரை தாங்கள் போதிய கறுவா, பாக்கு முதலிய சரக்குகளைப் பெறுவதும் கரைநாடுகளை அமைதியாக ஆள்வதும் இயலாத காரியம் எனக் கண்டான். மெனிக்கடவரையில் இராணுவ தலைமைப் பீடத்தை அமைத்துக் கண்டியைத் தாக்கினான். அவனது கவனத்தைத் திருப்பும் பொருட்டு சபரகமுவ பிரதேசத்தை விமலதர்மன் தாக்கினான். அஸெவெடோ அங்குள்ள தேவாலயத்தைத் தாக்கிக் கலகக்காரரை அடக்கினான்.

நாலுகோறளை மக்கள்போர்க்கோலங் கொண்டு போர்த்துக்கேயரின் ஆட்சியைத் தொலைக்கும் பொருட்டு விமலதர்மனின் ஆதரவை நாடினர். அவன் இரு கோட்டைகளைக் கட்டி மக்களைக்கலகஞ் செய்யுமாறு தூண்டினான். போர்த்துக்கேயரின் கூலிப்படையைத் தன் பக்கம் திருப்பினான். பெரும் போர் நிகழ்ந்தது. போர்த்துக்கேயர் பக்கஞ் சார்ந்த ஒருசிங்களத் தலைவனை அரசன் ஆணைப்படி சிங்களவர் தேடிப்பிடித்துக் கொன்றனர்.

ஆயினும் போரில் பலவீனமுற்ற விமலதர்மன் சமாதானத்தை நாடினான். தான் சிறைவைத்திருந்த போர்த்துக்கேயர் சிலரை விடுவித்தான். எனினும் பழைய அவமானத்துக்குப் பழிவாங்க விரும்பிய அஸெவெடோ மலை நாட்டுக்குப் படையெடுக்க வசதியளிக்கும் வீதிகளைத் திறந்தான். உள்நாட்டு மக்கள்இடைவிடாது கலகஞ் செய்தனர். கோட்டைக்குள் ஒளிந்திருந்த போர்த்துக்கேயரை வெளியேறவிடாது தடுத்தனர். ஆனால் உதவிப் படைவந்து அடைக்கப்பட்டுக் கிடந்தோரை விடுவித்ததுடன், நாட்டு மக்களுக்குப்பெருந் துன்பங்களை விளைவித்துக் கோவில்களையும் அழித்தது ஏழுகோறளையிலும் மனுவல் கோமஸ் என்ற இந்திய கிறீஸ்தவன் சுதேச கூலிப்படைத் தலைவனாயிருந்து, அதிருப்தியடைந்து, தன்னை ஒத்த வேறிரு அதிகாரிகளுடன் சேர்ந்து போர்த்துக்கேயரை எதிர்த்தான். கோவில்களையுடைத்துக் குருமாரையும் கொல்லுவித்தான். போர்த்துக்கேயர் பழிவாங்கக்கருதி முன்னேஸ்வரம் கோவிலை அழித்தனர்@ துன்புற்றோருக்கு விமலதர்மன் வேண்டிய உதவி செய்தான்.

1601 - ல் கோவாவிலிருந்து படையுதவி பெற் அஸெவெடோ நான்கு கேறளையில் சொல்லொணாக் கொடுமைகள் புரிந்தான். (மனிதரை முதலைகளுக்கிட்டான். பெண்களைக் கொண்டு அவர் தம்குழந்தைகளை உரலில் துவைப்பித்தான். மலைநாட்டுகுச் செல்லும் பெருவீதியில் கோட்டைகளை யமைத்தான். விமலதர்மனும் தன் படைகளைத் திரட்டி இந்தியாவிலிருந்து வடுகர் படையுதவி பெற்றுப் போரிட்டான். 1602 - ல் அஸெவெடோ மீண்டும் கண்டிமீது படையெடுத்து, வல்லணைக்குன்றைக் கைப்பற்றி மேலே செல்ல ஆயத்தமானான். விமலதர்மன் சுதேசக்கூலிப்படைத் தளபதியான சைமன் பிஞ்ஞாவோவைத் தன் பக்கஞ் சேர்க்க முயன்றான். அவன் இதனை அஸெவெடோவுக்கு அறிவிக்க, அஸெவெடோ அவனைக் கொண்டு அரசனைப் பிடிக்கச் சூழ்ச்சி செய்தான். அரசன் இதனை அறிந்து சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் முறியடித்தான்.

நாலுகோறளை ஏழு கோறளை வாசிகள் 1599 - ல் விமல தர்மனுக்கு எழுதியனுப்பிய இவ் விண்ணப்பம் அவர்கள் துயரங்களை எடுத்துக் காட்டும் :-

“போர்த்துக்கேயரின் கீழுள்ள எல்லைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இவ்விலங்காது வீபத்தின் தனிப் பெரு மன்னரும் வெற்றிச் செம்மலுமாகிய தேவரீர் அறியத் தருவது யாதெனில், எம்மை எப்புறமும் சூழ்ந்திருக்கும் ஆநிரைகவர்வோரும், இரத்தஞ் சிந்துவோரும், உயிருக்கு உறுபகைவரும் சிறைவைப்போரும் ஆகிய பகைவர் எம்மீது பாய்ந்து வந்துள்ளனர். ஆதலால் நாங்கள்ஒன்றில் எமது உடமைகளை அவர்கள்வசம் விட்டு ஓடவேண்டும். அன்றேல், எமது சித்தத்துக்கு மாறாக அவர்களுக்குக் கீழ்படிதல் வேண்டும் என்ற நிலையை அடைந்துள்ளோம். ஆகவே, அநாதைகளாய் அவலமுறும் இம்மக்களுக்குத் தஞ்சமளித்துப் பாதுகாக்கும் தாயநிதியாகிய தேவரீர் எம்மைத் துன்பக் கடலினின்றும்; மீட்டருள்வீராக. இந்நிலையிலுள்ள இந்த மக்களினம் ஒரேயடியாக அழிந்தொழிந்துவிடாது காக்க விரும்பினால், இதன் மீட்போரும், காவலரும், ஆறுதலளிப்போரும், நிச்சயமான பாதுகாவலருமாகிய தாங்கள் எமக்கு உதவியருள்க”
(குவேய்றோஸ் - 540)

டச்சுக்காரர் வருகை

விமலதர்மன் போர்த்துக்கேயரை அவர்களை ஒத்த ஐரோப்பியரது உதவிபெற்றே முறியடிக்க வேண்டும் என உணர்ந்தான். 1602,ஆனி மாதம் டச்சுக்காரர் மட்டக்களப்புக்கு வந்திருப்பதாகச் செய்தி எட்டியது. ஸ்பில் பே(ர்)கன் என்ற தளபதிதான் ஒல்லாந்து தேசவணிகரால் அனுப்பப்பட்டவன் என்று கூறியது இளவரசன் மோரிஸின் இராஜீயத் தூதுவன் என்றும் போர்த்துக்கேயரை முறியடிக்க உதவுவதாகவும் தெரிவித்தான். அரசனின் விருந்துப் பேச்சில் மகிழ்ந்து தான்கைப்பற்றிய சில போர்த்துக்கேயக்கப்பல்களை அரசனிடம் ஒப்புவித்து அரசனளித்த பெருந்தொகைக் கறுவா, மிளகு, பிற பரிசுகளுடன் சென்றான். மூன்று மாதம் கழியுமுன் டச்சுக் கிழக்கிந்திய கம்பனியின் தூதுவனான செபால்ட் டீ வீர்த் செங்கடகல நகரில் மன்னனைச் சந்தித்தான். அரசன் பெருமகிழ்வெய்திப் போருக்கு ஆயத்தமாய் வந்து காலித் துறைமுகத்தை முற்றுகையிடும் படியும், தான் போர்ச் செலவை மிளகு, கறுவா ஆகிய பொருட்களாகத் தருவதாயும் கூறினான்.

அந்தோனியோ பறெற்றோ அரசன் பக்கஞ் சேர்தல்

இச்செய்திகளை யறிந்த அஸெடோ இப் புதிய கூட்டுறவை உடனே களைந்தெறிய எண்ணி மலை நாட்டுக்குப் படையெடுத்துச் சென்றான். வல்லணையைக் கைப்பற்றித் தலைநகர் மீது பாயத் திட்டமிட்டான். விமலதர்மன் தலம்பிட்டியைத் தாக்குவது போலப் பாசாங்கு செய்ய, அங்கு ஒரு படையனுப்பப் பட்டது. சுதேச கூலிப் படை போர்த்துக்கேயரைக் கைவிட்டுச் சிங்கள வேந்தன்பக்கஞ் சார்ந்த பகைவர் சூழ்ந்து கொண்ட பின்னரும், அஞ்சாது அஸெவெடோ பின்வாங்கினான். வழியில் பல கோட்டைகள் சிங்களர் வசமாயிருக்கக் கண்டான். மல்வானையில் அவனது மாளிகை எரிக்கப்பட்டுக் காவலர் தூக்கு மரங்களில் தொங்கினர். கரையோரம் முழுவதும் கலகஞ் செய்தது. அந்தோனியோ பறெற்றோ என்ற சுதேச கூலிப்படை ஊழியன் போர்த்துக்கேயருக்கு மாறாய் எழுந்து படைத் தலைமையேற்றான். சீதா வக்கையை முற்றுகையிட்டான். விமலதர்மனும் பல கோட்டைகளைக் கைப்பற்றிப் போர்த்துக்கேயரைக் கொன்று, உள்நாட்டின் பெரும் பகுதியைத் தனதாக்கினான்.

டச்சுக்காரர் தொடர்பு அறுதல்

டச்சுத்தளபதி டீ வீர்த் சுமாத்திராவிலுள்ள அச்சின் துறைமுகஞ் சென்ற அங்கு நின்ற ஆறு கப்பல்களில் பெருந் தொகையான டச்சு வீரர்களை ஏற்றிக் கொண்டு வந்தான். அவனைக் காலித் துறைமுகத்தை முற்றுகையிடுமாறு அரசன் செய்தியனுப்பினான். அவன் மட்டக்களப்பில் தாமதித்து நின்றதுடன், தான் கைப்பற்றிய போர்த்துக்கேயக் கப்பல்களிலிருந்த ஆட்களையும் அரசன் கேட்டுக் கொண்டபடி அவனிடம் ஒப்புவிக்காமல் விடுதலை செய்தான். அரசன் அவனைச் சந்தித்து விருந்தளித்தபோது, குடிவெறியிலிருந்த டீ வீர்த் அவதூறான மொழி பேசினான். போர்த்துக்கேயரை விடுதலை செய்தமையால் ஐயுற்றிருந்த அரசன், மேலும் ஆத்திரமடைந்து அவனைப் பிடிக்குமாறு கட்டளையிட்டான். அதனை எதிர்த்த டச்சுக்காரர் 47 பேரும் டீ வீர்த்தும் கொலையுண்டனர். ஒரு மாதம் தாமதித்து நின்ற டச்சுக் கப்பல்கள் கறுவா பெற்றன. ஆனால் போர்த்துக்கேயருக்கு மாறாகப் போரிட மறுத்தன. இதனால் இரு பகுதியாருக்கும் போர்த்துக்கேயரை விரட்டலாம் என்ற நம்பிக்கையை இழந்தனர்.

அரசன் சமாதானத்தை நாடி இராசப்பிரதிநிதிக்குச் செய்தியனுப்பினான். ஏதும் விளைந்திலது. எனவே, தெரணியகலையில் பாசறையமைத்துப் போரை நடாத்தினான். மாத்தறைத் திசாவளி தாக்கப்பட்டது. சமரக்கோன் உதவியனுப்புமாறு செய்தி சொல்லி விடுத்துக் காத்து நின்றான். அஸெவெடோ நேரே சென்ற தன் கொடூரச் செயல்களால் சிங்களவரை அடக்கினான். சமரக்கோன் மீது ஐயங்கொண்டு அவனுக்கு விலக்கிட்டுக் கோவாவுக்கு அனுப்பினான். (ஆனால் அங்கு கோவா நகரத் தளபதி என்ற உயர்ந்த பதவியை இராசப்பிரதிநிதி அவளுக்கு அளித்தான்)

விமலதர்மசூரியன் முடிவு

அரசன் கடுஞ் சுரத்துக்கு ஆளாகி 1604 வைகாசியில் இறந்தான். அவனுக்கு ஒரு இளமைந்தனும் இரு பெண்மகவும் இருந்தனர். அவன் மரணம் மலையகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆயிற்று. அவன் 12 ஆண்டுகள் நாட்டை நீதியாக ஆண்டான். தனக்;கு ஒரு அரண்மனை கட்டினான். பழைய கோவில்களைப் புதுக்கியமைத்தான். தலதா மாளிகையைக் கட்டினான். முற்கால மன்னர் போலப் பெரஹர விழாக் கொண்டாடினான். குருத்துவ அபிடேகத்துக்கு வெளி நாடுகளிலிருந்து கல்வியிற் சிறந்த குருமாரை அழைப்பித்து உள்@ர்க் குரு மாணவருக்கு உபசம்பதா அபிடேகம்செய்வித்தான். எல்லாவற்றுக்கும் மேலாகக் கரை நாடுகளுக்கு ஏற்பட்ட கதி மலை நாட்டுக்கும் வராமல் போர்த்துக்கேயரின் எதிர்ப்பைச் சமாளித்து நின்றான். அவனது புகழ் புராணக்கதைகளில் வரும் வீரர்களின் புகழை ஒத்தது. அவன் உடலை எரித்த தீ அவன் வீர இதயத்தை எரிக்கவில்லை என்ற கதையும் நிலவியது. அவன் இறப்பால் கண்டி அரசு பலங்குன்றியது.

சேனரதன் அரச பதவி பெறல்

விமலதர்மன் தன் இளம் மைந்தர் போர்த்துக்கேயரை எதிர்த்து நிற்க மாட்டார் என உணர்ந்து, தன் (மாற்றாந் தாய் வயிற்றுத்) தம்பி சேனரதனை அரசனாக நியமித்தான். விமலதர்மனின் கீழ் ஊவாவிலும் தேனவக்கையிலும் இளவரசராயிருந்த இருவர் அரச பதவி பெற முயன்றனர். ஆனால் சேனரதனோ குசுமாசன தேவியை (டோனா கதறீனாவை)மணந்து சிம்மாசன மேறினான். புத்த குருவாகப் பயிற்சி பெற்றவன் எனினும் அவன் ஒரளவு திறமைமிக்க சேனாபதியாயும், வருங்காலத்தை உற்றுணர வல்ல கூர்மதி படைத்தவனாயும் இருந்தான். எனவே, போர்த்துக்கேயகர் அவன் அரசாளும்வரை மலை நாட்டில் பெரு வெற்றி ஏதும் பெற்றிலர்.

அஸெவெடோவின் போர் வெறி

அஸெவெடோ கரையோரப் பகுதியில் பல இடங்களை மீட்டான். புதிய படையுதவி கிடைக்காமையால் தொடர்ந்து மலை நாட்டிற் போரிட அவனால் முடியவில்லை. அன்றியும் போர்த்துக்கல் மன்னன் கண்டியரசனுடன் சமாதானம்; செய்யும்படியும் டச்சுக்காரர் துறைமுகங்களைக் கைப்பற்றாது கோட்டைகளைக் கட்டுமாறும் கட்டளையிட்டான். கொடூரமான ஆட்சியாலேயே கரையோரம் மக்கள் கலகஞ் செய்வதாக அறிந்து நில உடைமையைப்பற்றி விசாரணை செய்து காணி இடாப்பு ஒன்றை எழுதுமாறு ஒரு அரசிறை அதிகாரியை அனுப்பினான். இந் நற்கருமங்களால் குடிகளைத் திருப்திசெய்தால் கண்டியரசன் அவர்களைக் கலகஞ் செய்யத் தூண்டுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படாது அன்றோ?

ஆனால் அஸெவெடோ சமாதானப் பிரியனான சேனாரதனை வென்று கண்டியைக் கைப்பற்ற முயன்றான். கிழக்குக் கரையில் ஒரு படை அட்டூழியங்கள் புரிந்தது. 1609 - ல் ஊவாவில் ஒரு படை நாசவேலை புரிந்தது. சேனரதன் போர் நடப்பது நிச்சயம் என உணர்ந்து டச்சுக்காரரின் உதவியை நாடினான். கிழக்குக் கரைக்கு வந்த டச்சுக்கப் பற்றலைவனுடன் ஒப்பந்த மெழுதினான். ஆனால் இதனால் பயனேதும் விளையவில்லை. 1610 - ல் போர்த்துக்கேயப் படை மாத்தளை வரை முன்னேறியது. 1611 - ல் மீண்டும் சென்று தலைநகரைத் தாக்கி எரித்துக் கோவில்களை உடைத்துத் திரும்பியது சேனரதன் திறைகொடுக்கச் சம்மதிக்கவே, ஊவா இளவரசன் அந்தோனியா பறெற்றோ தலைமையில் சுதந்திரப்பிரியரான மலை நாட்டு மக்கள் அரசனுக்கு மாறாகக் கலகஞ் செய்தனர்.

அவனது ஆட்சியின் இறுதிக்காலம்

அஸெவெடோ இங்கிருந்து சென்று கோவாவில் இராசப் பிரதிநிதியானான் (1612). இங்கு வந்த போர்த்துக்கேய தேசாதிபதிகளுள் அவனே போரிற் சிறந்தவன். போர்த்துக்கேயர் வெளியேற்றப்படும் நிலையில் அவன்பதவியேற்று, அவர்கள் ஆட்சி தொடர்ந்து இருக்க அரும்பாடுபட்;டான். கொடூரச் செயல்களால் கலகங்களை அடக்கினான். ஆனால் அச் செயல்கள் மீண்டும் கலகங்களையே தோற்றுவித்தன. சிவில் நிர்வாகத்தில் அவன் தோல்வியே கண்டான். குடிகள் போர்வீரராலும் நீதியற்ற அதிகாரிகளாலும் துன்பமடைவதைத் தடுக்க நினைத்திலன். இராசப் பிரதிநிதி ஆகிய பின் வந்த தேசாதிபதிகள் பின் பற்ற வேண்டிய கொள்கையை வகுத்துக் கொடுத்தான். ஆனால் அவன் முடிவு பரிதாபகரமானது. இராசப்பிரதிநிதியாகிய சிறிது காலத்துக்குள் தாய் நாட்டில் நிகழ்ந்த அரசியல்மாற்றங்களால் அவன் பதவி இழந்து, லிஸ்பனுக்குக் கைதியாகக் கொண்ட செல்லப்பட்டான்.

டச்சு - தேனியத் தொடர்பு

சேனதரன் டச்சுக்காரரின் உதவிபெற முயன்றவாறே அவர்களும் இலங்கை வாணிகத்தைக் கைக் கொள்ள அவாவுற்றனர். சோழமண்டலக் கரையிலுள்ள டச்சு அதிகாரிகள் படையுதவி அளிப்பதாகக் கூறி யானைகள் பெற்றனர். மார்செலிஸ் பொஷ{வர் என்பவன் 1612 - ல் தெநர்லாந்துக் குடித்திணைமன்றத்தினதும் இளவரசன் மொரிஸினதும் கடிதங்களுடன் வந்தான். அவற்றின் ஸ்பானிய - போர்த்துக்கேய வல்லரசுடன் டச்சுக்காரர் பன்னிரு வருடப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று எழுதியிருப்பதாகவும், அதனை மீறிப் போர்த்துக்கேயர் தாக்;கினால் கண்டியரசனுக்கு ஒல்லாந்தர் படையுதவி செய்ய முன்வருவர் என்றும் அரசன் அறியலானான். பொஷ{வரின் கேள்விப்படி சேனரதனும் ஓர் ஒப்பந்தம் செய்ய முன்வந்தான். 1612 பங்குனி மாதம் 11-ம் திகதியிடப்பட்ட இவ்வொப்பந்தத்தில் 45ஷரத்துக்கள் இருந்தன. கொட்டியாரத்தில் ஒரு கோட்டை கட்டவும் தீவு முழுதும் வாணிகஞ் செய்யவும் அவர்களுக்கு உரிமையளிக்கப்பட்டது. ஆனால் பொஷ{வர் அளவுக்கு அதிகமாக வாக்குறுதி அளித்தானேயன்றி சோழமண்டலக்கரையிலுள்ள டச்சு அதிகப் படையுதவி செய்யவிரும்பாது வாணிக உரிமை பெறவே விரும்பினர். 1915-ல் பொஷ{வர் பான்ரம் சென்றான். பின் தாய்நாடு சேர்ந்தான். டச்சுக்கிழக்கிந்திய கம்பனி உதவி அளிக்காமையால் டென்மார்க் நாடு சென்று தான் சேனரதனின் தூதுவன் எனப்போலிப் பத்திரங்களைச் சமர்ப்பித்துப் படையுதவி பெற்று வந்தான். ஆனால் வழியில் இறந்தான் (5 கப்பல்களுடன் வந்த தேனியர் 1620 - ல் கொட்டியாரத்தை அடைந்து அரசனின் நல்வரவேற்புப் பெறாமல் இந்தியா சென்றனர்)

அஸெவெடோவுக்குப் பின் வந்தோர்

அஸெவெடோவின் கட்டளையைப் பின்பற்றிய கொழும்புத் தேசாதிபதிகள் ஆண்டுதோறும் கண்டிக்குப் படையெடுத்து அழிவுசெய்தனர். ஹோமெம் (1614 - 1616) நிர்வாக சீர்திருத்தத்தை மேற்கொண்டு அழகிய வண்ணன் என்ற அறிஞரி; உதவியுடன் நில இடாப்பு (தோம்பு)ம் எழுதுவித்தான். அவனுக்குப்பின் வந்த பெரேய்ரா (1616 - 18) சபரகமுவாவில் முன் ஒரு போதும் கண்டிராதபெரும் புரட்சியை எதிர்நோக்கினான். போர்த்துக்கேயரின் கீழ் ஊழியஞ் செய்த ஒருவன் தானே சீதாவக்கை அரசன் நிக்கப்பிட்டிய பண்டாரன் என்று கூறிக் கொண்டு கலகக்காரரை ஒன்று கூட்;டினான். 1616-ல் ஏழு கோறளையில் புரட்சி ஆரம்பமாயது. பின் சபகரகமுவாவிலும் கரையோரமெங்கும் பரவியது. சேனரதன் முதலில் இதற்குத் துணைபுரிந்தான். ஆனால் நிக்கப்பிட்டிய பண்டாரனாக நடித்தவன் தலைதடுமாறி விமலதர்மன் மகளை மணம் புரியக்கேட்டமையால் கோபித்து உதவி புரிவதை நிறுத்தினான். அவன் கையோங்கா விட்டால் ஆபத்து விளையும் என்று எண்ணிப் போர்த்துக்கேயருடன் தான் சமாதானஞ் செய்ய எண்ணினான். வருடம் 2யானைகள் திறையளிக்கச் சம்மதித்தான். (ஆவணி, 1617) இதனால் ஊவா அதிபதியும் புரட்சிக்கார நிக்கப்பிட்டிய பண்டாரன், கங்கார ஆராய்ச்சி ஆகியோருடன் சேர்ந்து கொண்டான். அவர்கள் கிழக்குக் கரையையும் தமமாக்கினர். புதிதாக வந்த போர்த்துக்கேய தேசாதிபதி கொன்ஸ்தந்தீன் டீ சாஅவர்களை வென்று 15 ஆண்டுகள் போர்த்துக்கேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த காங்கர ஆராய்ச்சியைத் தூக்கிலிட்டான். இப்போர்பற்றிய காவியமே அழகிய வண்ணனின் “குஸ்தந்தினு ஹடன” என்பது.

டீ சா

போர்த்துக்கேய தளபதிகளுள் நிர்வாகத் திறமையும் நேர்மையும் படைத்தவன் டீ சா. ஆபிரிக்காவிலும், இந்தியாவிலும் அனுவபம் பெற்றவன். தமது போர் வீரர் ஒழுக்கங்குன்றி மக்களைத் துன்புறுத்தியும் பகைவருக்கு ஆயுதங்களை விற்றும் தமக்குப் பலவீனத்தை உண்டாக்குவதை அறிந்து படையணிகளைச் சீர்திருத்தினான். சேனரதனுடன் சமாதானமாக வாழ்ந்தான். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றப் படையனுப்பி அதைக் கைப்பற்றினான். டச்சுக்காரர் வராது தடுக்கக் காலியில் கோட்டை கட்டினான். அவனது திறமைமிக்க சேவையை மதியாமல் சுயநலமிக்க இந்திய இராசப் பிரதிநிதி தன் மகன் ஜேர்ஜ்டீ அல்பக்கூர்க்கேயை இலங்கைத் தேசாதிபதியாக்கினான் (1620 - 23) விரைவில் திறமையற்ற இவனை நீக்கி, டீசாவையே மீண்டும் நியமித்தனர். அவன் மீண்டும் தன் நிர்வாகச்சீர்திருத்தங்களால் மக்களைத் தன் பக்கமாக்கினான். 1617 - ல் அரசனுடன் செய்த ஒப்பந்தத்தை மீறித் தேவாரப் பாடல் பெற்ற முக்கியஸ்தலங்களுள் ஒன்றாகிய திருக்கோணமலைக் கோவிலை உடைத்து அவ்விடத்தில் கோட்டையொன்றைக் கட்டினான்.

மட்டக்களப்பிலும் கோட்டை கட்டப்பட்டது. இதனால் அச்சமடைந்த சேனரதன் புதிய நண்பரைப் பெறமுயன்றான். தன் மைந்தர் இருவருக்குத் தஞ்சாவூர் நாயக்கமன்னரிடம் வளர்ந்த யாழ்ப்பாணத்துக் கடைசி அரசனின் மகளீர் இருவரை மணமுடித்து வைத்தான். டீசா துரத்தி விட்ட முஸ்லிம்கள் 4000 பேரை மட்டக்களப்பிற் குடியேற்றினான். டீசா தான் அந்நியருடன் தொடர்பு கொள்ளாது தடுத்தற்பொருட்டு வேண்டிய எல்லாவற்றையும் செய்கிறான் என உணர்ந்து கொழும்பிலுள்ள சிங்கள முதலியார்களைத் தூண்டி அவனைத் தன் கையிற் சிக்கவைக்கச் சதி செய்தான். இதனை ஊகித்;த போர்த்துக்கேயர் சிலர் டீசாவுக்கு உணர்த்தியும், அவன் மனத்தாலும் மதத்தாலும் போர்த்துக்கேயருடன் இணைந்த சிங்கள அதிகாரிகளை முற்றாக நம்பினான். இது அவர்களுக்கு வாய்ப்பை அளித்தது. ‘கறுப்பர் அனைவரும் நம்பகைவரே’ என விரைவில் போர்த்துக்கேயர் உணர்த்தினர்.

1627 - ல் போர் மூண்டது. ஊவாவைக் கண்டிப்படை தாக்கியது. டீசா தானே படை நடத்திச் சென்று தாக்கி விட்டுத் திரும்பி மலைநாட்டின்வழியே வந்தான். ஆனால் கடும் எதிர்ப்பு இன்மையால் முதலியார்மார் நம் சதியை நிறைவேற்றவில்லை. சேனரதன் சமாதானத்தை நாடியபோது டீசா புதிய படையணிகளை எதிர்பார்த்திருந்தவனாகையால் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிவிட்டான்.

சேனரதன் தன் மைந்தர் யாழ்ப்பாண கடைசி அரசனின் பெண்களை விவாகம் செய்த காரணத்தால் அவர்களுக்கே யாழ்ப்பாண அரசு உரியது எனக் கூறிப் போர்தொடுத்தான். (1628). அப்பெண்களைக் காப்பாற்றி வளர்த்துமணமுடித்துக் கொடுத்த தஞ்சை நாயக்க மன்னன் இரகுநாத நாயக்கன் படையுதவி செய்தான். இ;ரு படைகளும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. போர்முறைகளை நன்குணர்ந்த டீசா கண்டிக்குப் படைகளையனுப்பினான். மன்னன்ஓடி ஒளித்தபின், அப்படை யாழ்ப்பாணத்தைத் தாக்கிச் சிங்களப் படையை அழித்தது.

1629 - டீசா கண்டிக்கு மீண்;டும் படையெடுத்துச்சென்றான். கண்டிப்படைவீரர் களத்தில் வெளிப்பட்டுப் போர் செய்யாது ஆங்காங்கு மறைந்து நின்று தாக்கினர். டீசா பின்வாங்கி மல்வானைக்கு வந்து வியாதியுற்றுக் கிடந்தான். ஆனால் மரணத்தின் வாயில் நின்று தப்பினான்.

சிங்கள முதலியார்கள் கண்டியரசனைத் தூண்டவே, அவனது மூத்தமகன் சபசகமுவாவின் எல்லைகளிற் போரிட்டு ஊவா மாகாணத்துக்குட் புகுந்தான். அவனைத்; துரத்திச்சென்று தண்டிக்கவேண்டுமெனத் தேசாதிபதியின் ஆலோசனைச் சபை அங்கத்தவர் சிலர் வற்புறுத்தினர். சிலர் தமது படைப்படலம் போதாமையால் சென்ற ஆண்டு பின்வாங்கியது போல், பின் வாங்க வேண்டிவரும் எனப் பகன்றனர். அப்போது கோவாவில் புதிதாகப் பதவியேற்ற இராசப் பிரதிநிதி டீ சாவின் பகைவரது கூற்றை நம்பி, ‘நீ அரச கருமத்தில் ஊக்கஞ் செலுத்தாது உன்சொந்த வியாபாரத்தில் நாட்டஞ் செலுத்துகிறாயோ’ என வன்சொல் வரைந்தான். இதனால் மனம் வருந்திய டீ சா தன்கூர்மதி தடுத்தும் போரிடத் தீர்மானித்தான்.

சுமார் 700 போர்த்துக்கேயரே அவன் படையில் இருந்தனர். சிங்களக்கூலிப் படை முதலியார்களிடன் தலைமையிற் சென்றது. 1630, ஆவணியில் புறப்பட்டபடை இருபது நாளில் பதுளையை அடைந்தது. சேனரதனும் மைந்தர் மூவரும் தமது படைகளை நடத்தினர். சிறு எதிர்ப்புக்குப்பின், பின்வாங்குவது போலப்பாசாங்கு செய்து, டீசா பதுளையுட்புக இடமளித்தனர். போர்த்துக்கேயர் நகரத்துச் கோவில்களையழித்துக், கொள்ளையடித்துப், பின் முதியங்கணை விகாரத்தில் பாசறையமைத்தனர். ஓய்வு அளிக்கப்பட்ட இரு நாட்களில் சதிகாரர் தம் திட்டத்தை நிறைவேற்றினர். அரசனின் கடிதம் ஒன்று டீசாவின் கைக்கு எட்டியது. ஆனால் அதை மொழிபெயர்த்தவன் உண்மையை மறைத்து விட்டான். அரசனின் படைவீரரிடையே போர்த்துக்கேயர் இன்னும், நாளில் உயிர் துறப்பர் என்ற செய்தி பரவியது. டீசாவும் இதனைஅறிந்தான். முதலியார்மாரின் குறைதீர்க்க, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட விதானை வேலையையும் அதற்குரிய நிலங்களையும் திரும்பக் கையளித்தான். தான் பின்வாங்கப் போவதாகஅறிவித்தான். படை ஓர் ஆற்றைக் கடந்ததும், ஒரு சிங்கள முதலியார் போர்த்துக்கேயன் ஒருவனது தலையைக் கொய்து ஈட்டியில் உயர்த்தினான். அவனுடன் வேறு நால்வரும் ஆளுக்கு 500 போர்வீரருடன் அரசன் பக்கஞ் சார்ந்தனர். போர்த்துக்கேயர் ஒரே அணியாகத் திரண்டு பின் வாங்கினர். ஒரு கணவாயில் அரசனது படைவழி மறித்தது. பின்னே துரத்தி வந்தது மற்றொரு படை. தெனிவெல என்னுமிடத்தில் ஆவணி 25 - ந் திகதி எட்டு மணி நேரம் போராடிபின் டீசா வீழ்ந்தான். 2000 பேர் சிறைபிடிக்கப்பட,மீதிப் போர்த்துக்கேயப் படை முற்றாக அழிந்தது.

டீ சா செய்தியனுப்பியபடியால் கொழும்பிலுள்ள போர்த்துக்கேயர் போருக்கு ஆயத்தமாயினர். ஆனால் சேனரதன் மைந்தர் உடனே கொழும்புக்கு வராமையால் அந்நகர் அவர்கள் வரும்போது எதிர்த்து நிற்க வல்லதாயிற்று. ஜேர்ஜ டீ அல்மேய்டா தேசாதிபதியானான். சேனரதன் மகன் இராஜசிங்கனுடன் போரிட்டு மல்வானையை மீட்டான். சேனரதன் பக்கஞ் சென்ற முதலியார்களுள் ஒருவன் மீண்டும் போர்த்துக்கேயரை அடைந்தமையால், அரசன் சமாதானத்தை நாடினான். கோவாவுக்குச் சென்ற தூதுவர் அதிக திறையளித்து, மட்டக்களப்பையும் கையளிக்கச் சம்மதித்தனர். ஆனால் அரசன் அதற்கு இணங்கவில்லை.

அல்மேய்டா பொது மக்களால் வெறுக்கப்பட்டுத் திருப்பியழைக்கப்பட்டான். டீ மெல்லோ டீ காஸ்ட்றோ 1633 - ல் தேசாதிபதியானான். கண்டிக்குப் படையெடுத்தான். சேனரதன் பழவேற்;காட்டு டச்சுத் தேசாதிபதியின் உதவியை நாடினான். உதவி கிடைக்கவில்லை போரினாற் சலித்த சேனரதன் தன் பிரதிநிதிகள் கோவாவில் பேசி முடித்தபடி 1634 -ல் சமாதானஞ் செய்ய உடன்பட்டான்.

சேனரதன் மரணம் : 2-ம் இராஜசிங்கன் ஆட்சி ஆரம்பம் - 1635

1635 - ன் இறுதியிலோ அடுத்த ஆண்டிலோ சேனரதன் இறந்தான். அவன் முதுமைப் பருவத்தில் தன் மலைநாட்டு அரசை மூன்றாகப் பங்கிட்டுக் கண்டியை இளையவனான இராஜசிங்கனுக்கும், ஊவாவை மூத்தவனான குமாரசிங்கனுக்கும் மாத்தளையை விஜயபாலனுக்கும் அளித்தான். மூத்தவன் பலவீனன் ஆதலால் தானே கண்டியரசனாக முயன்றும் வெற்றி பெறாது, பின் இறந்தான். இராஜசிங்கன் ஊவாவைப் பிடித்தான். விஜயாபலன் தம்பியில் வெறுப்புற்று அந்நியருக்கு ஆதரவளித்தான். மகா ஆஸ்தானன் என்னும் இராஜசிங்கன் 1629 முதல் இராச்சிய கருமங்களைக் கவனித்து அனுபவம் பெற்றவன். தன் முன்னோர்பகைவரின் கூலிப்படையைத் தம் பக்கமாக்கியும், சனங்களைக் கலகஞ் செய்யுமாறு தூண்டியும் அதிக பயன் பெறாமையால், தான் அந்நியருதவி பெற்றே போர்த்துக்கேயரை விரட்ட வேண்டும் என முடிவு செய்தான். டச்சுக்கிழக்கிந்திய கம்பனி வணிகத்தனியுரிமைபெற ஆவல் கொண்டிருப்பதால் அதன் உதவியை நாடினான். அதன் பயனாக அந்நியரை அகற்றுவதில் வெற்றியும் கண்டான்.

* இராஜசிங்கன் சேனரதனின் ஏக புத்திரன் என்றும் மற்ற இருவரும் விமலதர்மனின் மைந்தர் என்றும் கூறுவாரும் உளர். *

போர்த்துக்கேயர் கண்டியைக் கைப்பற்ற முடியாமைக்குக் காரணங்கள்

மாயாதுன்னையும் இராஜசிங்கனும் மலைநாட்டைக் கைப்பற்ற முயன்ற காலத்தில் கண்டியர் போர்த்துக்கேயரின் உதவியை நாடினர். எனினும் இராஜசிங்கன் மரணத்துக்குப்பின் நிலைமைமாறியது. தாம் வளர்த்துத் தம் வழிப்படுத்திய யமசிங்கனையும் பின்டோனா கதரீனாவையும் சிம்மாசனத்திலிருத்தித் தாம் உண்மையான அதிகாரத்தைக் கைக்கொள்ளப் போர்த்தக்கேயர் முயன்றமையால், அவர்களது உள்ளக்கிடக்கையை ஊகித்தறிந்த கண்டி மக்கள், அவர்களை ஆதரிக்க முறுத்தனர். அவர்களுடன்பழகிய அவர்களது இராச தந்திரத்தையறிந்த விமலதர்மசூரியன் கண்டியின் தலைவிதியை நிர்ணயிக்கத் தொடங்கிய நாள் முதல் அவர்களது சூழ்ச்சிகள் பலிக்கவில்லை. தர்மபாலன் இறந்தபின் இலங்கையின் ஒரே சிங்கள பௌத்த அரசர் என்ற முறையில் கண்டியரசர் தம்நாடு அந்நியர்கைப்படாமல் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அதன்பின்னர் போர்த்துக்கேயர் மலைநாட்டைக் கைப்பற்ற எத்தனையோ முறை முயன்றும் பயன் கிடைக்கவில்லை.

மக்களின் விடுதலை உணர்ச்சி

மலைப்பிரதேசத்தில் வாழ்வோர் சுதந்தரப் பிரியராய். சமநில மக்களுக்கு அடங்காமல் தம் உரிமையைப் பாதுகாப்பதை உலக வரலாற்றில் பன்முறை காணலாம். கண்டிச் சிங்களவரும் இதற்கு விதி விலக்கானவர்களல்லர். தாம் ஒரு தனி இனம்@ தமக்கென ஒரு கலாசாரம் உண்டு என உணர்ந்தனர். தம் இனத்தவர்களான கரை நாட்டுச் சிங்களவர் போலப் போர்த்துக்கேய ஆட்சியை ஒப்புக்கொண்டு அவர் மதத்தையும் பெயரையும் நடையுடை பாவனைகளையும் ஏற்க மறுத்தனர். அஸெவெடோ காலம் முதல் போர்த்துக்கேயர் இடையறாது ஆண்டுக்கிரு முறை படையெடுத்தும் அவர்களது விடுதலையுணர்ச்சியை அழிக்க முடியவில்லை. குவேய்றோஸ் சுவாமியார் கூறுகிறார்.

“ஆழமான மதியும், கர்வமும். துரோக உணர்வும் சஞ்சல புத்தியும் உடைய சிங்கள இனத்தவரின் விசுவாசமின்மையும் வெறுப்புமே (எம்மவர் பூலோக சுவர்க்கமாகிய இலங்கையை ஆளமுடியாமற் போகக் காரணமாயின) அவர்கள் வீரத்தில் இந்தியாவிலுள்ள மிகப் பெரிய வீரர்க்குச் சற்றும் இளைத்தவர்களல்லர். தம் சுதேச ஆட்சியையே சுமை என வெறுப்பவர்கள். அந்நிய ஆட்சிப் பாரத்தைச்சுமக்க மறுக்கமாட்டார் என எதிர்பார்க்கலாமா? ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நாம் அத்தீவை அவர் தம் சொந்த இரத்தமும், அந்நிய இரத்தமும் நிறைந்த குளமாக்குமாறு அவர்கள் எம்மைத் தூண்டினர்”

இயற்கை அரண்கள்

கண்டியர் தம் மலையகம் இயற்கையன்னையின் அணைப்பில் பத்திரமாயிருக்கும் என்பதை உணர்ந்தனர். மூன்று கோட்டைகள் அவர்களைப் பாதுகாத்தன.

(1) கிரிதுர்க்கம்: நாற் புறமும் மலைகளாற் சூழப்பட்டுப், பகைவர்கள் நுழையாது மதில் கட்டப்பட்ட மாபெரும் கோட்டை போன்றிருந்தது கண்டி இராச்சியம். வல்லணை முதலிய சில கணவாய்கள் மூலமே கண்டியை அணுக முடியும். அவ்வழிகள் எல்லாம் முட் படலைகள் அமைக்கப்பட்டிருக்கும். பொறிக்கிடங்குகள் மூடப்பட்டுச் சாதாரண நிலம் போலிருக்கும். அனுபவமிக்க காவற்காரர் மட்டுமே வணிகருக்கு வழிகாட்டி, இவற்றுள் விழாது இப்புறமும் அப்புறமும் அழைத்துச் செல்ல வல்லவர். பிறர் போனால் தவறி விழுவரேயன்றித் தப்பி வரமாட்டார்கள். முக்கியமாகப் போர்க் காலங்களில் முட்படலைகள் மூடப்பட்டு விடும்.

(2) வனதுர்க்கம் : காடுகள் இயற்கையான பாதுகாப்பை அளித்தன. உஷ்ண வலையக் காடுகளில் வழி காண்பது அரிது. அந்நியருக்கத் திசைமயக்கம் நிச்சயம் ஏற்படும். மரங்களினு}டே மறைந்து நின்று பகைவரைத் தாக்க மிக்க வாய்ப்பு இருந்தது. வழி அறியாத போர்த்துக்கேயர் இவற்றிடையே அகப்பட்டு முன்னேறவோ, பின்வாங்கவோ முடியாமல் அழிந்து போவர்.

(3) ஜலதுர்க்கம் : பல ஆறுகள் ஓடிச் செல்லும் பள்ளத்தாக்குகளின் வழியேதான் படைகள் முன்னேற முடியும். எங்கோ மலையில் மழை பொழிய, இவை சற்றும் எதிர்பாராமல் பெருக்கெடுத்து ஓடும். அகப்பட்டோரை அள்ளிக் கொண்டு போய்விடும். பீரங்கிகள், முதலிய பாரமான போர்க்கருவிகளைக் கண்டிக்குக் கொண்டுசெல்லவது மிகவும் கஷ்டம், அகால மழைபெய்து மருந்து நனைந்து போனால் இக்கருவிகள் பயன்படா. அன்றியும் சமவெளிப் போருக்கே இவை ஏற்றவை. மலைப்பிரதேசத்தில் இவை அதிகம் பயன்படா.

சிங்கள கூலிப்படை பக்கம் மாறுதல்

தொடக்கத்திலிருந்தே போர்த்துக்கேயரின் முக்கிய பலவீனம் அவர்கள் நாட்டில் போதிய சனத்தொகை இன்மையேயாகும். 12 லட்சம் சனத்தொகை மட்டும் உள்ள ஒரு நாடு நீண்ட காலத்துக்குத் தன்னிலும் பல மடங்கு பெரிய சாம்ராட்சியத்தைக் கட்டியாள முடியவில்லை. பிறேசிலில் குடியேற்றம். இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் ஆகிய இரு மாபெரும் பணிகளை ஒரேசமயத்தில் மேற்கொண்ட போர்த்துக்கேயர் போதிய ஆள் கிடையாமல் திண்டாடினர். 1538 அளவிலேயே குற்றவாளிகளை மன்னித்துக் கிழக்கில் சேவை செய்ய அனுப்பினர். இவ்விதமாயும் போதியபடைவீரர் கிடைக்காமையால் உள்@ரவர்களைக் கூலிப்படைகளாக நியமித்துக் கொண்டனர். பல சந்தர்ப்பங்களில் இவர்கள் தொகை போர்த்துக்கேயர் தொகையிலும் கூட இருந்தது. (டீ சாவின் படையில் 2000 சிங்களருக்கு, 700 போர்த்துக்கேயரே இருந்தனர். இங்ஙனமிருந்தும் இவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ அவர்களுக்குப் பிற நன்மைகளைச் செய்து அவர் தம் விசுவாசத்தைப் பெறவோ போர்த்துக்கேயஅதிகாரிகள் யாதும்செய்திலர். (டீ சா போர்க்களத்தில் அவர்கள் குறைதீர்க்க முயன்ற மடைமையை முன்னர் பார்த்தோம்) இக்காரணங்களால். போர்த்துக்கேயர் இவர்களை நம்பி மலைநாட்டுக்குப் படையெடுத்தமை மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயன்ற கதையாயிற்று. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உண்ட வீட்டுக்கு இரண்டகஞ் செய்து தம் இனத்தவர் பக்கஞ் சேர்வதே அவர்கள் வழக்கமாயிற்று. (இதற்கு விதிவிலக்காக முதயார் சமரக்கோன் போன்ற படைத்தலைவர்கள் சிலரை மட்டுமே குறிப்பிடலாம்) கண்டி மன்னரும் அவர்களைத் தம் பக்கஞ் சேர்த்துக் கொள்வதைத் தம் கொள்கையாகக் கொண்டனர். இக் கொள்கை வெற்றியையே அளித்து வந்தது. மிகச் சிறந்த சேனாதிபதிகளாகிய அஸெவெடோ, டீ சா போன்றவர்கள் பின் வாங்கவும் உயிரிழக்கவும் நேரிட்டது இதனாலேயே.

போர்த்துக்கேயரின் வலிமை குன்றல்

ஆரம்ப காலத்தில் வந்த அல்பக்கூர்க்கே போன்ற திறமைசாலிகள் தொகை குறைந்தது. வந்தவர்களுட் பலர் கப்பற் பிரயாணத்திலும் உஷ்ணவலயத்தின் கடுமையான சுவாத்தியம் காரணமாகவும் உயிரிழந்தனர். தலை சிறந்த வாலிபர் கீழ் நாடுகளில் மடிய, அங்கு சிறிய போர்த்துக்கல் இனத்தில் திறமை வாய்ந்தோர் தொகை பெருகவில்லை. பின்வந்தோர் திறமைக் குறைவுடன் கைலஞ்சம் முதலிய குற்றங்களுடையோராயிருந்தனர். போர்த்துக்கல் இராச்சியத்தின் நிர்வாக அமைப்பு ஒரு போதும் கடல் கடந்த குடியேற்ற நாடுகளைப் பரிபாலிப்பதற்கு ஏற்றதாய் அமையவில்லை. எனவே, அதிகாரிகள் கேட்பாரற்றுத் தம் மனம் போனவாறு நடந்தனர். கட்டுப்பாடின்மை எங்கும் தாண்டவமாடியது. போர்க்கருவிகளைக் கூடப் பகைவருக்கு விற்றுத் தம் பையை நிரப்பினர். அவர்களது இவ்விழி நிலை சிங்களருக்கு உற்சாகத்தையளித்தது. ஓர் உயர்ந்த இலட்சியமின்றிப் போராடிய அவர்களுக்குச் சமமாக நிற்க வல்ல நவீன படைப்பயிற்சியற்ற சிங்களருக்கு வரக்காரணம் இவர்கள் தம் மதம், தம் நாடு, தம் கலாசாரம் என்பவற்றைப் பேணுவதற்குக் கங்கணம் கட்டி நின்றமையே.

இக்காரணங்கள் அனைத்தும் சேர்ந்து போர்த்துக்கேயரின் வீழ்ச்சிக்கு வித்திட்டு, அவர்கள் கண்டியைக் கைப்பற்ற இயலாதவாறு செய்தன.

உசாத்துணை நூல்கள்

1. ர்ளைவழசல ழக ஊநலடழn கழச ளுஉhழழட - குச. ளு. பு. Pநசநசய 65 -66; 69-70; 139-142; 147; 154-158 நவஉ
2. ஊநலடழn ருனெநச றுநளவநசn சுரடந - ர்ழசயஉந Pநசநசய - ஊhயிவநசள ஐஏ யனெ ஏ
3. ர்ளைவழசல ழக வாந யேலயமள ழக ஆயனரசய - சு. ளுயவாயையெவாய யுலையச யனெ ளு. முசiளாயௌறயஅi யுலையபெயச ( Pயபநள - 13இ 14இ 91 ழெவந)
4. வுhந யேலயமள ழக வுயதெழசந - ஏசனைனாயபசைளையn
5. வுhந குழரனெயவழைn ழக வாந னுரவஉh Pழறநச in ஊநலடழn மு. று. புழழயெறயசனநநெ.
6. இலங்கைச்சரித்திரம் - போர்த்துக்கேயர் காலம் கு. ஓ. ஊ நடராசா.

வினாக்கள்

1. இலங்கைத் தேசாதிபதியாக 1594 முதல் 1611 வரை கடமையாற்றிய டொன் ஜெரோனி மோ டீ அஸெவெடோவின் வரலாற்றைத்தருக. (1947)
2. 1597 - ல் போர்த்துக்கேயருக்குக் கீழ் இருந்த பகுதிகளை விபரிக்குக. 17 - ம் நூற்றாண்டில் இப்பகுதிகளில் அவர்களின் வலு குறைந்து போனமைக்குக் காரணங்களைத் தருக. (புறவரிப்படத்துக்கு மதிப்புக் கொடுக்கபடும்)
3. தர்மபாலனுக்கப் பின் தமக்க உரித்தான கடற் கரைப் பிரதேசங்களைப் போர்த்துக்கேயர் கொண்டுநடத்த முடியாதிருந்தமைக்குக் காரணமென்ன? (1964)
4. போர்த்துக்கேயர் கண்டியரசைச் கைப்பற்றத் தவறியதற்குரிய காரணங்களை ஆராய்க.

ஆறாம் அத்தியாயம்

இரண்டாம் இராஜசிங்கனும் ஒல்லாந்தரும்

முதற் பருவம்

(அ) 1635 - 1644

ஒல்லாந்தரின் உதவியை நாடல்

இடையறாது நிகழும் தாக்குதல்களைச் சமாளித்து நாட்டைக் காக்க விரும்பிய இவன் இங்குள்ள படைத் தலைவர்கள் கனவான்களாய் உடன்படிக்கைகளை மதிக்காதிருக்கவே போர்த்துக்கேய மன்னனுடன் நேரடித் தொடர்பு கொள்ள விரும்பி ஒரு மதகுருவை யனுப்பினான். ஆனால் அவர் கோவாவில் இராசப் பிரதிநிதியால் தடுக்கப்படவே, மன்னன் வேறு வழியின்றி டச்சுக்காரரது உதவியை நாடலானான். ஓர் அந்நிய குலத்தவரை இன்னொரு இனத்தவரைக் கருவியாகக் கொண்டு விரட்டுவதால் தோன்றக் கூடிய புதிய ஆபத்துக்களை அவன் உணராதவனல்லன். ஆனால் டச்சுக் கிழக்கிந்திய வர்த்தக சங்கம் வணிக முழுவுரிமை பெறவே விரும்புகின்றது@ நாடு கவரும் வேட்கை அதற்கில்லை என நம்பினான். அதனால் 1636-ல் பழவேற்காட்டிலிருந்த டச்சுத் தேசாதிபதிக்கு கடிதமெழுதிக்கீழ் மாகாணத்தில் ஒரு கோட்டையும் போர்ச்செலவும் தருவதாயும் தனக்குப் படையுதவியனுப்பும்படியும் அறிவித்தான். பட்டேவியாவில் ஏற்கனவே இவ்வுதவி செய்யத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. திறமைமிக்க மகா தேசாதிபதி அந்தோனி வான் டீமன் 1636 முதல் ஆண்டு தோறும் கோவாவைத் தாக்கப் படையனுப்பி வந்தான். இப்போது இராஜசிங்கன் வேண்டுகோளை ஏற்றுக் கோவாவை முற்றுக்கையிட்டுக் கொண்டிருந்த தளபதி ஆதாம் வெஸ்டவோல்ற் இலங்கையரசனுடன்ஓர் ஒப்பந்தம் செய்தல் வேண்டுமெனப் பணித்தான்.

போர்த்துக்கேயரின் பெருந்தோல்வி

இத் தொடர் பற்றியறிந்த போர்த்துக்கேயர் கண்டிப் பகுதியைத் தாக்கினர். (1635) போரைத் தடுக்கப் பலவாறு முயன்ற அரசன் இறுதியில் கண்ணறுவாவில் போர்த்துக்கேயப் படையை முற்றாயழித்துப் பெரு வெற்றியீட்டினான். 900 போர்த்துக்கேயரும் தேசாதிபதி டீ மெலோவும் இறந்தனர்.

மட்டக்களப்பு வீழ்ச்சி

டச்சுப் படை கல்முனைக்கு வந்தது@ முதலில் கொஸ்ரர் என்பவன் வந்தான். பின் வெஸ்டர்வோல்ற் தொடர்ந்து வந்தான். மட்டக்களப்பை முற்றுகையிட்டான். அச்சமயத்தில் போர்த்துக்;கேயரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இராஜசிங்கன் தன் படையொன்றை மெனிக்கடவரைக்கு அனுப்பினான். அங்கிருந்த போர்த்துக்கேயர் கோட்டையைக் கைவிட்டுக் கரையோரஞ் சென்றனர். அரசன் 15000 பேருடன் மட்டக்களப்புக் கோட்டையைஅணுகினான். சில மணி நேரம் பீரங்கிப் பிரயோகம் செய்ததும் போர்த்துக்கேயப் படை, கோட்டையைக் கையளித்து விட்டு நாகபட்டினம் சென்றது.

டச்சுக்காரருடன் முதல் ஒப்பந்தம்

மன்னனின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை. அவன் தளபதிகள் வெஸ்டர்வோல்டையும், கொஸ்ரரையும் கண்டு தன் ஆச்சரியத்தை புலப்படுத்தினான். இதுவே தக்க சந்தர்ப்பம் எனக்கண்ட டச்சுத் தளபதி தான் தயார் செய்த ஓர் உடன்படிக்கையின் நகல் ஒன்றைஅரசனிடம் சமர்ப்பித்தான். அரசனும் அவனது பிரதானிகளும்சில நாட்கள் ஆலோசனைபுரிந்த பின், டச்சுக்காரரின் விருப்பத்துக்கு இணங்கினர். 1638, வைகாசி 23 - ல் போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்ட இரு ஒப்பந்தப் பிரதிகளில் அரசனும் இரு தளபதிகளும் கைச் சாத்திட்டனர். ஆளுக்கு ஒரு பிரதியை வைத்துக் கொண்டனர்.

இவ்வொப்பந்தம் டச்சுக்காரருக்குப் பெரும்இலாபமளித்தது. அவர்கள் யானையை விட மற்ற எல்லா முக்கியஏற்றுமதிப் பொருட்களிலும் தனியுரிமைபெற்றனர். யானை வர்த்தகத்திலும் பிறர்க்கு விற்குமளவு யானைகளை டச்சுக்காரருக்குவிற்க வேண்டும். போரால் ஏற்படும் செலவுகளை அரசன் கறுவா, மிளகு. மெழுகு முதலிய பண்டங்களைக் கொடுத்து ஈடு செய்தல் வேண்டும். இவை முன்னரே அரசன் வாக்களித்த விடயங்களே. ஆனால் ஒப்பந்தத்தின் 3 - ம், 4-ம், ஷரத்துகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின. மூன்றாவது ஷரத்தின்படி, டச்சுக்காரர் தாம் பிடித்த கோட்டைகளிற் படை வைப்பர். அவைகள் உரிய முறையில் அரண் செய்யப்படவில்லை என டச்சுக்காரர் கருதினால் அரசன் அவர்கள் கூறும் முறையில் அவற்றை அரண் செய்தல் வேண்டும. நாலாவது ஷரத்தின்படி ஒரு கோட்டையில் டச்சுக்காரர் படை வைத்திருந்தால்; அரசன் அவற்றுக்கு வேண்டியஉணவுப் பொருள்களை அளிப்பதுடன் அவர்களது சம்பளத்தையும் கொடுக்க வேண்டும்.

இவற்றுக்குச் சம்மதித்தல் மூலம் ஓர் அந்நிய வல்லரசுக்குப் பதிலாக இன்னோர் அந்நிய வல்லரசை இங்கு தாபித்து வைக்க இராஜசிங்கன் இடமளித்தான் என்பது விடுவிக்க முடியாத புதிராக உள்ளது. இவற்றின் அபாயத்தை அரசன் உணரத் தவறினான் என்றோ, பராமுகமாயிருந்தான் என்றோ கூறமுடியாது ஏனெனில் அரசனும் பிரதானிகளும் பல நாட்கள் தீர ஆலோசித்தே இவ்வுடன்படிக்கைக்குச் சம்மதித்தனர். ஆனால் அவன் வசமிருந்த பிரதியில் மூன்றாம் ஷரத்து “மாட்சிமை மிக்க மன்னா அது பொருத்தமானதே எனக்; கருதினால்” டச்சுக்காரர் மூலப் பிரதியைத் தொலைத்து விட்டு, ஒரு டச்சுமொழி பெயர்ப்பையே பயன்படுத்தினர். அதில் இவ்வாக்கியம் இல்லை. இங்ஙனம் அவர்கள் ஆரம்ப முதலே அரசனை ஏமாற்றத் திட்டமிட்டனர்.

மூன்று அரசுகள் போட்டி

அடுத்த இருபது ஆண்டுகளாக மூன்று வல்லரசுகள் இத்தீவின் மீது ஆணைசெலுத்தும் பொருட்டுப் போட்டியிட்டன. அரசியற் சூழ்ச்சிகளும் போர்களும் அதிகரித்தன. டச்சுக்காரர் தொடக்கத்திலிருந்தே கீழ்த்திசையிலிருந்து வரும் வாசனைச்சரக்குகள் விளையும் இடங்களைத் தம் அதிகாரத்தின் கீழே கொண்டு வருதலாகிய தம் பரந்த இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையரசியலிற் புகுந்தனர். தம் ஐரோப்பிய சாதியாரான போர்த்துக்கேயரைத் துரத்தி, அவர்களாண்ட நிலப்பரப்பை இராஜசிங்கன் வசம் ஒப்புவிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருந்ததில்லை.

திருகோணலை வீழ்ச்சி

புதிதாக வந்த டச்சுக் கடற்படை 1639 - ல் திருக்கோணமலையைக் கைப்பற்றியது. சில மணி நேரம் கழிந்த பின்னரே இராஜசிங்கன் அனுப்பிய படைவந்து சேர்ந்தது. டச்சுக்காரர் தாம் தனியே போரை நடாத்தி வெற்றி பெறவே விரும்பினர். அவர்கள் கீழ் மாகாணத்தின் இரு முக்கிய துறைமுகங்களையும் கைப்பற்றிப் படைகளை வைத்துக் கொண்டமை இராஜசிங்கனுக்குத் திருப்தியளித்திலது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவும் அவர்கள் மறுத்தனர். தனது உத்தரவின்றிக் கோட்டைகளுக்கு உணவுப் பண்டங்களனுப்பலாகாது என அரசன் குடிகளுக்குக் கட்டளையிட்டான். பட்டேவியாவிலிருந்து 300 ஒல்லாந்தர் அரசனது படையிற் சேர்வதற்கென்று அனுப்பப்பட்டனர். அதன் பின்னரே அரசன் திருப்தியடைந்து கோட்டைக்கு உணவுப் பொருட்கள் அனுப்பினான்.

நீர்கொழும்பு வீழ்ச்சி

லூக்கஸ் என்பவனது தலைமையிற் ஒரு பெரும் படை வந்தது. காலியையோ, கொழும்பையோ தாக்கநினைத்த அவன், பின் நீர்கொழும்பைத் தாக்கத் திட்டமிட்டான். தண்ணீர் பெறும் பொருட்டு கம்மாள என்னுமிடத்தில் படைகளை இறக்கினான். போர்த்துக்கேயர் இராஜசிங்கனது படையுதவி கிடைக்காமல் வழி மறித்திருந்த இடத்தை விட்டுக் கம்மாளத்தில் டச்சுக்காரருடன் போரிட விரைந்தனர். படுதோல்வியடைந்தனர். கண்டிப்படையும் உடன்வந்த 150 டச்சுக்காரரும் தொடர்ந்து வந்தனர். தரைப் பக்கமாக நீர்கொழும்பைத் தாக்கினர். மூன்று நாள் இடைவிடாத பீரங்கிப் பிரயோகத்தின் பின் அதன் கோட்டைவீழ்ச்சியுற்றது. இராஜசிங்கன் அதைத் தரை மட்டமாக்கும்படி கேட்டான். கறுவா விளையும் செழிப்பு மிக அவசியமானது எனக் கருதிய டச்சுக்காரர் இதற்கு மறுத்தனர். தளபதி கொஸ்ரரை மன்னன் அழைத்துப் பேசியதன் பயனாகப்பத்து யானைகள் பெற்றுக் கொண்டு திருக்கோணமலையை அரசனுக்கு அளிக்கவும், போர்த்துக்கேயரைத் துரத்து மட்டும் பிறகோட்டைகளைத் தம் வசம் வைத்திருக்கவும் டச்சுக்காரர் சம்மதித்தனர். யுத்தச் செலவுகளை அரசன் தந்ததும் ஒரேயொரு கோட்டையை மட்டும் தாம் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டனர்.

காலி வீழ்ச்சி

1640 பங்குனியில் காலியையும் டச்சுக்காரர் பெரும் போராடிக் கைப்பற்றினர். அங்கு மிகப்பெரிய கோட்டையிருந்தமையாலும் கிழக்கிந்திய தீவுகளுக்கும் இந்தியாவுக்குமிடையில் வசதியான தானத்தில் அத்துறைமுகம் இருந்தமையாலும் மிகப் பெருமளவிற் கறுவா விளையும் ‘பின்நிலத்’தையுடைமையாலும் காலியே டச்சுக்காரரின் தலைநகரமாயிற்று.

ஒல்லாந்தருடன் பூசல்

போர்த்துக்கேயரை விரட்ட, டச்சுக்காரரை அழைத்தமை ஆகிய தன் திட்டம் படுதோல்வியடைந்து விட்டதை இராஜசிங்கன் விரைவில் உணர்ந்தான். இரு ஐரோப்பிய வல்லரசுகளாகிய ஏகாதிபத்தியப் பேய்களுள் குறைந்த தீமை பயப்பது எது? என்ற வினாவுக்கு ‘டச்சுக்காரரே’ என்ற விடை அவன் மனதில் தோன்றியமையாலேயே அவன் அவர்களையழைத்தான். இடையிடையே அவர்களது செயல்களால் வெறுப்புற்றுப் பொறுமையிழந்தும், அவன் போர்த்துக்கேயரை துரத்தும் தன் ஒரே இலட்சியம் முற்றுப்பெறும் பொருட்டுப் பொறுமையோடிருந்தான். உணவுப் பொருட்களும் வணிகப் பொருட்களும் பெறுதற்கு அனுமதி கோரிக் கண்டிக்குச் சென்ற கொஸ்ரர் திரும்பிச் செல்லும் போது ஒரு வாக்குவாதம் காரணமாகக் கண்டியரது படையொன்றாற் கொல்லப்பட்டான். அரசன் தான் இக் கொலைக்குப் பொறுப்பாளியல்லன் எனக் கூறி வந்தான். போர்த்துக்கேயர் நீர்கொழும்பைத் திரும்பக் கைப்பற்றினர். இராஜசிங்கனின் தமையன் விஜயபாலனை ஆதரித்தனர். அரசன் டச்சுக்காரரின் தயவை நாடலானான். பட்டேவியாவுக்கும் தூதனுப்பினான்.

“போர்த்துக்கேய - ஒல்லாந்த உறவு”

இக்காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த அரசியல் நிகழ்ச்சிகள் இங்குள்ள அரசியற் சமநிலையைப் பாதிக்கலாhயின. 2-ம் பிலிப்பு மன்னனால் சுவீகரிக்கப்பட்ட போர்த்துக்கல், ஸ்பானிய ஆதிக்கத்தை அடியோடு வெறுத்தது. அங்கு நிகழ்ந்த புரட்சியைப் பலவீனமுற்ற ஸ்பானிய மன்னர் அடக்க இயலாதிருந்தனர். 1642-ல் புதிய அரசகுமாரன் ஒருவன் 4-ம் ஜோண் எனப் பெயர் சூடிப் போர்த்துக்கேய சிம்மாசனமேறினான். போர்த்துக்கேயருக்கும் டச்சுக்காரருக்கும் பொது எதிரி ஸ்பெயின்@ எனவே இரு இனத்தாருக்கும் ஓர் ஒற்றுமை தோன்றியது. பத்தாண்டுப் போரோய்வு ஒப்பந்தம் ஒன்று எழுதப்பட்டது. ஆனால் அது இலங்கையில் நடைமுறைக்கு வரக் காலதாமதமாயிற்று. இதற்கிடையில் நீர்கொழும்பை டச்சுக் காரர் மீண்டும் கைப்பற்றினர். 1644 கார்த்திகை 10 - ம் திகதியே கோவாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் எழுதப்பட்டது.

(ஆ) 1644 - 1652

இராஜசிங்கன் ஒல்;லாந்தருடன் போர்

இராஜசிங்கன் இந்நிகழ்ச்சிகளிற் பங்குபற்றாது தனியே நின்றான். தன்னைக் கேட்காமல் இரு அந்நியர்களும் தம் மனம்போனவாறு எல்லைகளை வகுப்பதும் நாட்டைப் பங்குபோடுவதும் அவனுக்கு வெறுப்பையளித்தன. செழிப்பான கறுவா விளையும் பிரதேசத்தின் வருமானத்தை டச்சுக்காரருக்குத்தான் கொடுக்க வேண்டிய யுத்தச் செலவுகளைக் கொடுத்து முடிக்கும்வரை அனுபவிக்கும்படி அளிக்க, அவர்கள் கரையோரப்பகுதி தமக்கே சொந்தமானது எனக் குறிப்பிடுவது நம்பிக்கைத்துரோகமென அவன் கருதினான். ஒல்லாந்தர் ஏழுகோறளையை விட்டு நீங்க வேண்டுமென வற்புறுத்தினான். டச்சுக்காரர் அவனுடைய யானைகளைக் கவர்ந்து போர் தொடுத்தனர். ஆனால் பட்டேவியாவிலுள்ள மேலதிகாரிகள் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. மற்சூய்க்கர் என்ற புதிய தேசாதிபதியை அனுப்பினர். இவன் இராஜசிங்கனைத் திருப்தி செய்யும் பொருட்டுப் போர் தொடுத்த அதிகாரியைப் பதவி நீக்கம் செய்து, அவன் பிடித்த யானைகளையும் தருவதாக வாக்களித்தான். ஆனால் இரண்டையும் செய்திலன். ஏழுகோறளை, காலி, மாத்தறைப் பகுதி ஆகியன அரசன் கைப்பட்டன. டச்சுக்காரர் விரும்பும் கறுவா கிடைத்திலது.

ஒப்பந்தம்திருத்தப்படல்

போர்த்துக்கேயருடன் கண்டியரசன் நட்புறவு கொள்ளக் கூடுமெனக் கருதிய ஒல்லாந்தர் எங்ஙனமாயினும் அவனைச் சமாதானஞ் செய்ய விரும்பினர். மற்சூய்க்கர் அனுப்பிய தூதுவன், அரசனுடன் 1638 - ல் எழுதப்பட்டஒப்பந்தத்தில் ஐயத்துக்கிடமான விடயங்களை விவாதித்துச் சில திருத்தங்களைச் செய்தான். இப்போது கறுவா வாணிபம் மட்டுமே டச்சுக்காரரின் தனியுரிமையாயிற்று. அதுவும் அரசனுக்குச் செய்த சேவைகளுக்குரிய தொகையளிக்கப்படும் வரையிலேயே. டச்சுக்காரர் மாத்தறைப்பிரிவில் சிங்களர் திசாவையாயிருந்தால் தாம் மனம்போனவாறு வரிவசூலிக்கவும் கறுவா சேகரிக்கவுமியலாதெனக் கண்டு, தம் அதிகாரி ஒருவனை நியமிக்க அனுமதி கேட்டனர். மற்சூய்க்கர் பதவியை விட்டுச் செல்லும்போது தனக்குப்பின் வந்த தேசாதிபதிக்கு எழுதிவைத்த குறிப்பிலிருந்து அரசன் போர்ச்செலவு அளிக்கப் போவதுமில்லை@ எனவே நாம் கரையோரப் பகுதியைக் கையளிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது என டச்சுக்காரர் கருதியமை வெளிப்படுகின்றது.

இராஜசிங்கன் டச்சுக்காரருடன் பகைமை பாராட்டுகிறான் என்றறிந்த போர்த்துக்கேயர் அவன் ஆதரவை நாடினர். மூவல்லரசுகளும் ஒருவர்மீது ஒருவர் ஐயமும் அச்சமும் கொண்டு எல்லைகளிற் படைகளைநிறுத்தி வைத்தன. இராஜசிங்கன் இருஐரோப்பிய இனங்களுக்கு மிடையிற் சண்டையைத் தூண்டி விட முயன்றான்.

(இ) 1652 - 1656

1652 - ல் ஐரோப்பாவில் எழுதப்பட்ட பத்து வருடப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கால வரையறை முடிவெய்தியது. போர்த்துக்கேயத்தளபதி போருக்கு ஆயத்தமின்றியிருந்தான். டச்சுக்காரர் களுத்துறையைக் கைப்பற்றியதும் பிற இடங்களிலிருந்த போர்த்துக்கேயப் படைகள்பின்வாங்கிக் கொழும்புக்குச் சென்றன. அரசன் சப்பிரகமுவா மாகாணத்தைக் கைப்பற்றினான். தளபதியின் ஊக்கமின்மையால் அவனை விலக்கிய படைவீரர் புதிய தளபதியைத் தேர்ந்தெடுத்துப் போரை நடாத்தினர். கோவாவிலிருந்து புதிய தளபதியும் படைவிரரும் வந்தனர்.

கொழும்பு வீழ்ச்சி

டச்சுப்படை ஜெராட் ஹல்ஃப்ற் என்பவன் தலைமையில் வீரமாகப் போரிட்டது. பல மாதங்கள் முற்றுக்கை நீடித்தது. போர்த்துக்கேயரும் விட்டுக் கொடுக்காது போரிட்டனர். ஹல்ஃபற் சித்திரை 10, 1656-ல் இறந்தான். இராஜசிங்கனும் படையுடன் வந்து கொழும்பைத் தாக்கினான். போர்த்துக்கேயரின் துரதிருஷ்டத்தால் இங்கு பதிவியிழந்தவனே கோவையில் இராசப் பிரதிநிதி இறக்க அப்பதவியிலமர்ந்தான். அவன் பழிவாங்கும் மனத்தினனாய்ப் படையனுப்பத் தாமதித்தான். டச்சுக்காரர் கோர யுத்தம் செய்து போர்த்துக்கேயரைச் சரணடையச் செய்தனர் (வைகாசி12, 1656)

இராஜசிங்;கன் தடுக்கப்படல்

இராஜசிங்;கனது படை நுழையாமல்; நகர்க்கபாடகங்களை மூடினர். அரசன் கோபித்துப் போர்த்துக்கேயரைத் தன் பகுதியில் குடியேற்றியும் கலகங்களைத் தூண்டியும் டச்சுக்காரருக்கு இடுக்கண் விளைத்தான். டச்சுக்காரர் இக்கலகங்களைச்சமாளிக்க வேண்டியிருந்தமையால் கடைசிப் போர்த்துக்கேய தளங்களான மன்னாரும் யாழ்ப்பாணமும் போருக்கு நன்கு ஆயத்தம் செய்யப்பட்டன. 1658 ல் மன்னார் வீழ்ச்சியுற்றது. மூன்றரை மாத முற்றுக்கையின் பின் யாழ்ப்பாணக் கோட்டையும் சரணடைந்து. அடுத்து நாகபட்டினத்தைக் கைப்பற்றி இலங்கைக்கு ஆபத்து விளையாமல் பார்த்துக் கொண்டனர்.

இரண்டாம் பருவம்

இதன் பிறகு ஒல்லாந்தர் இராஜசிங்கனுடன் கொண்ட தொடர்பில் முக்கிய மாறுதல் ஏற்பட்டது. புதிய கொள்கைகள் கடைப்பிடிக்கப்படலாயின. அவற்றை வகுத்தற்கு றைக்குளோவான் கோயன்ஸ் என்ற அனுபவமும் திறமையும் மிக்க இளம் அதிகாரிவந்தான். வட இலங்கையை மட்டுமன்றித் தென்னிந்தியாவிலிருந்து போர்த்துக்கேயத் துறைமுகங்களையும் கைப்பற்றிய வீரனாகையால் அவன் கம்பனி நிர்வாகத்தில் முக்கிய தானத்தைப் பெற்றான். (சுமார் 15 ஆண்டுகள் வரையில் இலங்கை சம்பந்தமான கொள்கைகளை வகுத்தற்கு இவனே பெரிதும் காரணமானான். தேசாதிபதியோ இரண்டாம் இடத்தை மட்டுமே வகித்தான்

(அ) 1658 - 1664

டச்சுக்காரர் ஆளும் உரிமை பெற முயற்சிகள்

முதலில் டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பிரதேசங்கள் மீதுதமக்குள்ள உரிமையைத் தெளிவுபடுத்த விழைந்தனர். 1638-ல் எழுதப்பட்ட உடன்படிக்கையைத் தள்ளிவைத்துப் புதிய ஒப்பந்தம் ஒன்றையெழுதிப், படைவலியால் தாம் கைப்பற்றிய பிரதேசத்தைத் தமக்கே உரிமையானது என்று அரசின் ஒப்புக்கொள்ளும் படி செய்ய விரும்பினர். ஆனால் அரசன் இதற்கு இடமளித்திலன். இனி டச்சுக்காரர் கரையோரப் பகுதியைத் தனக்குக் கையளிக்கமாட்டார்கள் என்றுணர்ந்தாலும் அவர்களுக்குச் சட்டபூர்வமான உரிமையளிக்க அவன் மனம் ஒப்பவில்லை. கொழும்பும் யாழ்ப்பாணமும் கூடத் தனக்கேரியுமையானவை என வற்புறுத்தி வந்தான். பட்டேவிய அதிகாரிகள் அவனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பாது, அவன் யுத்தச் செலவுத் தொகையைத்தரும்படி அவன் நாட்டைத்தம் வசம் வைத்திருக்கத் தமக்கு முழு உரிமையுண்டு என வாதிட்டனர். அவன் ஒருபோதும் அப் பெருந்தொகையை அளிக்க முடியாது என்பது அவர்தம் திடநம்பிக்கை. அவர்கள் அனுப்பிய கணக்குப் படி மாசி, 1657 வரை போர்ச்செலவு 94 லட்சத்துக்குச் சற்றுக்குறைவு. அவன் நிலத்திலிருந்துவந்த வருமானம் 21 லட்சத்துக்கு சற்று அதிகம்@ அவன் கொடுக்க வேண்டியது 72½ லட்சத்துக்குமேல். இராஜசிங்கன் இக்கோரிக்குப் பதில்தரவில்லை. 1659-ல் கண்டியரசு அயல் நாடுகளுடன் தொடர்புறா வண்ணம் துறைமுகங்களைக் கைப்பற்றிய வாணிகத்தடையும் விதித்தனர். கற்பிட்டியைக் கைப்பற்றினர். போர்ப்பிரகடனமின்றியே பல முனைகளிற் போர் தொடங்கியது. உள்நாட்டுக் கேந்திர ஸ்தானங்களில் போர்த்துக்கேயர் கோட்டைகளிற் படைவைத்தது போல டச்சுக்காரரும் வைத்துக் கறுவா விளையும் நிலங்களை இராஜசிங்கனின் படைகள் அழிக்காமலும் கறுவா சேகரிப்போரைக் கடத்திச் செல்லாமலும் பார்த்துக்கொண்டனர். வான்கோயன்ஸ் மலையாளக்கரையிற் போர்த்துக்கேயரைத் துன்புறுத்தி வெற்றியுடன் மீண்டதும் (தை. 1629) இவ்வாறு அரண் செய்யும் முயற்சியை வெகு சிறப்பாகச்செய்து முடித்தான். இராஜசிங்கன் முன்போலக்கடற் கரைப் பகுதியைத் தாக்க இயலவில்லை.

வான்கோயன்ஸின் புதிய கொள்கை

1659 மாசியிற் கற்பிட்டியைக் கைப்பற்றியதிலிருந்து டச்சுக்காரர் இராஜசிங்கனுடன் கொண்ட தொடர்பு ஒரு புதிய திசையில் திரும்பியது. இதுவரை மன்னனின் நண்பர்களாய் அவன் ஆதரவை கேட்டிருந்தோர் போர்த்துக்கேயரை வென்றதும் தம் பலத்தையுணர்ந்தனர். வான்கோயன்ஸ் இப்பலத்தைக் காட்டி அரசனை அச்சுறுத்தித் தான் நினைத்தபடி புதிய ஒப்பந்தம் எழுதத் திட்டமிட்டான். இலங்கைக் கரையோரப் பகுதிமுழுவதும் தமக்கேயென உரிமை பாராட்டியதோடு மன்னனின் பிரதேசத்திலும் இயன்றவரையிற் கைப்பற்ற மனம் கொண்டான். கற்பிட்டியினு}டாகப் போர்த்துக்கேயருடன் தொடர்பு கொள்வான் என்ற புறக் காரணத்தைக் காட்டினான். உண்மையில் அதனு}டாக நடந்த பாக்கு, சாயம் காய்ச்சும் செடி வாணிகத்தைக் கைப்பற்றவே அவன் திட்டமிட்டான். அதன்வருவாயைமட்டுமன்றி, அதனைத் தன்கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்தால் கண்டியரசனையும் மக்களையும் கட்டுப்படுத்தலாம் என்பதையும் அவன்அறிவான்.

இராஜசிங்கனின் எதிர் முயற்சிகள்

கற்பிட்டியை வசமாக்கிய டச்சுக்காரர் தன்நிலத்தை யெல்லாம் கவரவும் பின்நிற்கமாட்டார்கள் என்றுணர்ந்த இராஜசிங்கன், அவர்களது ஏகாதிபத்திய விஸ்தரிப்புக் கொள்கையைத் தடுக்கத் தன்னாலான மட்டும் முயன்றான். எல்லைகளிற் தாக்குதலும் பயனுள்ள கறுவா நிலத்தையழித்தலும் மக்களைத் தூக்கிச் செல்லலும் முன்போலவே நிகழ்ந்தன. எல்லைப்பிரதேசத்திலுள்ள நிலத்தைப் பாலைவனமாக்கி அவர்களது பேராசைப் பார்வை விழாமற்றடுத்தான். இச்சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்த வான் கோயன்ஸ் பல போர்த்திட்டங்களை வகுத்துத் தரை, கடல் மார்க்கங்களின் மூலம் மன்னனைத் தாக்கலானான். கரையோரக் காவற்றளங்களை உள்நாட்டு எல்லைக்குக் கொண்டுசென்று ஸ்தாபித்தான். தானே நேரிற் சென்று ஸ்தாபித்தான். தானே நேரிற் சென்று ஆங்காங்கு ஒல்லாந்து வீரரை உற்சாகப்படுத்தினான். 400பேர் கொண்ட படையொன்று கலகம் முளைக்குமிடங்களுக்கு விரைந்து சென்று கண்டிய கொரில்லாப் போர் வீரரைச் சாடிவிரட்டியது. இதனால் இராஜசிங்கன் ஒல்லாந்தருக்கு அதிக சேதம் விளைவிக்க முடியவில்லை. அவன் கற்பிட்டியை விடுவிக்கத் தன்னாலான மட்டும்முயன்றான். 4000 க்கும் 9000 க்கு மிடைப்பட்ட போர் வீரரை மூன்று திசாவைமாரது தலைமையில் அனுப்பினான். மன்னனும் போர்க்களம் புகுவான் என்ற பேச்சு உலாவியது. அதனால் டச்சுப் போர்வீரர் சகல தளங்களினின்றும் வருவிக்கப்பட்டனர். அரசன்பின் நிலத்தைப் பாழாக்குவதில் மட்டுமே வெற்றி பெற்றான். வான் கோயன்ஸின் மாபெரும் போர்த்திட்டங்களுக்கு பட்டேவிய அரசாங்கம் வேண்டிய படையுதவியனுப்ப மறுத்தது.

போரின் விளைவுகள்

இங்ஙனம் இரு பகுதியாரும்; போரில் ஈடுபட்டது பற்றி மக்களிடையே எழுந்த கருத்துக்கள் நிகழ்ந்த விளைவுகளை அவதானிப்பது நன்று. கரையோரப் பகுதியில் போர்த்துக்கேயருக்குச் சேவனம் செய்து, பெரும் பதவிக்குயர்ந்த “பெருங்குடி” மக்கள் இப்போது புதிய அந்நிய எஜமானருக்கு ஊழியஞ் செய்து ஆக்கமெய்த விரும்பினர். புரட்டஸ்தாந்துமதத்தையும் டச்சுப் பழக்க வழக்கங்களையும் கைக்கொண்டு தம் விசுவாசத்தை நிலைநாட்டினர். அவர்கள் சுயநலங்காரணமாக இராஜசிங்கன் வீழ்ச்சிக்கு எவ்வௌ; வழிவகைகளைக் கையாள வேண்டுமெனக்காட்டினர். மாத்தறைப் பகுதி உயர் குடிகளோ இராஜசிங்கன்பால் விசுவாசமுடையோராய் அவன் வெற்றிக்கு ஆவன செய்தனர்@ பல குடும்பங்களைடச்சுக்காரர் கோட்டைகளில் அடைத்து வைக்க வேண்டியதாயிற்று. எல்லைப்புறப் பொது மக்கள் இடைவிடாப் போர்களால் நலிவுற்றனர். எவ்வரசின் கீழ் வாழ்ந்தாலும் நிம்மதியின்றியே காலங் கழித்தனர்.

இலங்கை டச்சு அதிகாரிகள் கிழக்குக் கரைத்துறைமுகங்களை மீண்டும் கைப்பற்றக் கருதியும்;. பட்டேவிய அதிகாரிகள் இடங்கொடாமையால் இம்முயற்சியைக் கைவிட்டனர். ஆனால் 1659 - ல் கொட்டியாரக் குடாவிக்கு ஆங்கிலக்கப்பல் ஒன்று வந்தது. முதல் அவர்கள் இராஜசிங்கன் புதிய ஐரோப்பிய வல்லரசுகளுடன் நட்புக் கொள்ளக் கூடு மென்றஞ்சினர். வான்கோயன்ஸ் 1660-ல் திருக்கோணமலையைக் கைப்பற்றப் படையனுப்பினான். ஆனால், அரசனைத் திருப்திப் படுத்த ஆங்கிலேயர் அதைப் பிடிக்காது அரசனுக்காகக் காக்கவே அதைக் கைப்பற்றியதாகத் தூதனுப்பியறிவித்தான். ஆனால் அரசன் படை ஒல்லாந்தரை எதிர்க்கவே அவர்கள் தந்திரமாகப் பின் வாங்கினர். பட்டேவியாவிலிருந்து இராச்சிய விரிவுப்பூட்கையைக் கைவிடுமாறி கட்டளை வந்தது.

ஆங்கிலேயருடன் நட்பு

ஆங்கிலக் கிழக்கிந்திய வர்த்தக சங்கம் கீழ்க்கரையதில்ஒரு பண்டகசாலை நிறுவப் பெரிதும் ஆவல் கொண்டது. ஆங்கிலேயரைத் தூதனுப்பினால் டச்சுக்காரர் கைப்பற்றி விடுவர். அரசனும் திருப்பி அனுப்ப மாட்டான். எனவே, இந்திய வணிகர் மூலம் தொடர்புகொள்ள ஆங்கிலக் கம்பனி முயன்றது. அது அனுப்பிய கடிதமும் பரிசுகளும் இராஜசிங்கன் கைப்படுமுன் டச்சுக்காரர் தடுத்தனர். அரசன் இந்து சமுத்திரத்தில் வளர்ந்தோங்கும் இப்புதிய சக்தியைக் கண்ணுற்றான். தனக்கு வரும் பரிசுகளைத் தடுக்கலாகாதென டச்சுக்காரரைப் பணித்தான். ஆனால் அவர்களோ கடற் காவலை அதிகரித்து அந்நியர் அரசனை யணுகாது கண் விழித்துக் காத்தனர். அவர்களதுபலம் வாய்ந்த கடற்படையை வெல்லத்தக்க சக்தி இன்னும் இந்து மக்கடலில் எழவில்லை. அரசின் இதனை எதிர்த்தும் வான் கோயன்ஸ் இரண்டாம் முறை (தேசாதிபதியாகப் பதவி உயர்ச்சி பெற்று) இங்கு 1664 - ல் வரும் போது கீழ்க் கடற்கரைத் துறைமுகங்களிரண்டையும் கைப்பற்றும் உத்தரவுடனேயே வந்தான்.

(ஆ) 1664 - 1670

கண்டியிற் பூசல்

1664-ன் பிற்பகுதியில் கண்டியில் நிகழ்ந்த கலகம் ஒன்று இரு வல்லரசுகளுக்குமிடையிலிருந்த தொடர்பிற் பெரும் மாறுதல்கள் ஏற்படச் செய்தது. கண்டிப் பகுதியில் அதனால் ஏற்பட்ட விளைவுகள் மிகச் சொற்பமே. ஆனால் இராஜசிங்கனுக்கும் அந்நியரானடச்சுக்காரருக்குமிடையிலிருந்த தொடர்பிற் சற்றும் எதிர்பாராத மாற்றத்தை விளைவித்தமையாலேயே அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆகிறது. 1658 - 64 காலப் பகுதியில் அரசனை அவன் போக்கில் விட வேண்டும். உறங்கும் சிங்கத்தை எழுப்பலாகாது என்ற கொள்கையைக் கடைப்பிடித்த டச்சுக்காரர் துணிந்து புதிய உரிமைகளைக் கேட்கவும் போராடவும் முற்பட்டனர்.

கண்டிக் கலகத்தின் காரணங்கள் தெளிவாகப் புலப்படவில்லை. ஒல்லாந்தரும் அக்காலத்தில் கண்டியில் அரசனால் தடுத்து வைக்கப்பட்டு வாழ்ந்த ளொபேட்நொக்சும் இக்கலகம் மன்னனின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக மக்களால் தொடங்கப்பட்டது எனக் கூறுகின்றனர். ஆனால் ‘அம்பன்வல ராள’ என்ற கண்டி அதிகாரியும் அவனுறவினரான நான்கு அதிகாரிகளும் ஒரு கண்டிப் பௌத்த கோவிற் பிரதம குருவும் சேர்ந்தே இதனைத் தொடங்கினர். 1664 மார்கழி 21-ம் நிலம் பேயில் அரசன் அரண்மணையைத் திடீரெனத் தாக்கி அவனைத் துரத்தி விட்டுக் கண்டியில் அவனது இளம் மகளைச் சிம்மாசனத்திலிருத்தித் தாம் நிருவாகத்தை மேற் கொண்டனர். அரசன் உதவியளிக்குமாறு டச்சுக்காரருக்கு வேண்டுகோள் விடுத்தான். ஆனால் ஒரு மாதத்துக்குள் இளவரசனும் பிற அரச விசுவாசிகளும் கூடிக் கலகக்காரரை பிணித்து டச்சுக்காரர் வசம் ஒப்புவிக்கப்பட்டான். அரசன் வெற்றியோடு கண்டியிற் பிரவேசித்தான். தன்னை எதிர்த்தோரை அழித்தான். இளவரனைத் தனியே வாழச் செய்தான். அவன் கொல்லப்பட்டான் என்ற செய்தி பரவியது. டச்சுக்காரரும் இதனை நம்பி அரசனிறந்தால் சிம்மாசனம் வெறுமையாகும் என்ற திட நம்பிக்கையோடு பிற்காலக் கொள்கைகளை வகுக்கலாயினர்.

டச்சு ஆட்சி விஸ்தரிப்பு

இராஜசிங்கன் அந்நியர் கடற்கரையில் மட்டும் அதிகாரம் வகுத்துக் கொண்டு உள்நாட்டிற் தம்; அதிகாரத்தைப் பரப்பாது காத்து நிற்கவேண்டிய சமயத்தில் உட்பகையால் நலிந்து அவசர புத்தியால் தன் பகைவரின் உதவியை நாடியது அவன் சிறுமையைப் பகைவருக்கு உணர்த்தியது. அரசு வலுச் சமநிலை தடம் புரண்டது. டச்சுக்காரர் நாடு கவரத் திட்டமிடலாயினர். வான்கோயன்ஸ் முதலிய ஏகாதிபத்திய வெறியர் பட்டேவிய அதிகாரிகளுக்குக் கண்டியரசனின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டித் தம் விஸ்தரிப்புக் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றத் தொடங்கினர். ஒல்லாந்திலிருந்த கம்பனி அதிபதிகளும், பட்டேவிய அதிகாரிகளும். இலங்கையதிகாரிகளும் ஒரே மனத்தினராய் இக்கலகம் தேவலோகத்து வரப்பிரசாதம் எனக் கருதினர். அதைத் தமக்கு வாய்ப்பாக உபயோகிக்கலாயினர். அரசன் வேண்டுகோட்படி படையனுப்புவதாகக் கூறிக் கொண்டு சபரகமுவா வரை படைகளை நடத்திச் சென்ற வான்கோயன்ஸ் முன்னர் மன்னன் அழைத்துச்சென்ற குடிகளை மீண்டும் வந்து கரையோரப் பிரதேசத்தில் வசிக்குமாறு ஈர்த்தான். அதில் வெற்றியும் பெற்றான். று}வன்வெல, சப்ரகமுவா, பிபிலேகம என்னுமிடங்களில் அரண்கள் வகுத்துப் படைகளை வைத்ததுடன் அயற் பிரசேங்களையும் கைப்பற்;றினான். மக்கள் விருப்பப்படி அதனைச் செய்வதாகக் கூறினான். நீர்கொழும்பிலிந்து வளவகங்கைவரை டச்சு நிலப்பரப்பு இரண்டு மடங்காயிற்று. 1665 புரட்டாதியில் திருக்கோணமலை மட்டக்களப்பு ஆகியன கைப்பற்றப்பட்டன. பட்டேவிய அரசாங்கத்தின் தலையீடின்றி வான்கோயன்ஸ் இலங்கையில் டச்சுக் கொள்கையின் தனியொரு சிருட்டி கர்த்தாவாய் நின்று பேரரசு வளர்ச்சிக்கு ஆவன செய்தான். அரசன் கேள்விப்படி படையனுப்புவதாக நடிக்காது வெளிப்படையாக நாடு கவரும் முயற்சியிலீடுப்பட்டான். 1667 - ல் நாலு கோறளை, ஏழு கோறளை எல்லாம் அவன் கைப்பட்டன. வரிகளைக் குறைத்தும் இராச காரியத்தை யொழித்தும் இப்பகுதி மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றான். சிங்கள அதிகாரிகளுக்கு உயர் பதவியளித்து அவர்களது விசுவாசத்தைத் தேடினான். இராஜசிங்கனிடம் விசுவாசம் காட்டாதிருக்க எத்தனையோ சலுகைகளை யளித்தான். அதே டச்சுக்காரரைத் தாக்க முயலாது ஆங்கிலேயரின் உதவியை நாடினான். அதனைப் பெறாது தவித்தான். அவன் மௌனமாயிருக்கவே, குடிகள் அவன் பால் நம்பிக்கை யிழந்தனர். கண்டிய சிறு அதிகாரிகளும் உயர் பதவி பெறக் கருதி டச்சுக்காரருக்குச் செய்திகளனுப்பி வந்தனர். ஒல்லாந்தரும்நாடு முழுவதையும் கவரும் எண்ணங் கொண்டனர். 1670 - ல் கீழ் மாகாணத்திற் பல முக்கிய இடங்களிலுள்ள குடிகளும் தலைவர்களும் மேற்பார்வைக்குச் சென்ற டச்சு அதிகாரியொருவனை யணுகித்தம் பிரதேசத்தை டச்சு ஆட்சியிற் சேர்த்து விடுமாறு வேண்டினராம் எனக் கதை கட்டிச்சம்மாந்துறை, அக்கரைப்பற்று, கொட்டியாரம் முதலிய இடங்களை வான் கோயன்ஸ் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்தான். ஆனால் சில மாதங்களுக்கிடையில் இப்பகுதி மக்கள் கலகஞ் செய்தனர். அவர்களை ஒருபோதும் டச்சுக்காரர் முற்றாக அடக்க இயலவில்லை. அதனால் நீண்ட காலம் அப்பகுதி கம்பனிக்கு ஆட்சேதத்தையும் பொருட் சேதத்தையும் விளைவித்துப் ‘புரையோடும் புண்’ எனக் குறிப்பிடப்படலாயிற்று.

இளைய வான்கோயன்ஸ் தலைமையில் ஒருபடை 1669 - ல் காலியிலிருந்து புறப்பட்டு தென்கீழ்க் கடற் கரையைக் கைப்பற்றியது. அங்கு இயற்கையாக விளையும் உப்பைக் கண்டி மக்கள் சேகரித்துச் செல்லாதுதடுக்க டச்சுக்காரர் முயன்றனர். இத்துடன் இராஜசிங்கனைச் சுற்றி வளைத்து மலை நாட்டினுட் ‘சிறை’ப்படுத்தும் திட்டம் முற்றுப் பெற்றது. இதன்வெற்றிக்கு வான்கோயன்ஸின் தனித்திறமையே காரணம் எனத்தகும். அவன் இலங்கையையும் தென்னிந்தியாவையும்; கைப்பற்றி டச்சுக் கீழ்த்திசைப் பேரரசின் மத்திய தனமாக்க வேண்டும். பட்டேவியாவிலும் இலங்கையே எல்லா விதத்திலும் சிறந்தது எனக் கருதினான்.

(ஆ) 1670 - 76

இராஜசிங்கனின் சூழ்ச்சி

இராஜசிங்கன் இங்ஙனம் டச்சுக்காரர் தான் அரும் போராடிப் போர்த்துக்கேயரிடம் கைப்பற்றிய பகுதிகளை அபகரிக்கப் பார்த்துக்கொண்டு வாளா விருந்தான் எனத் தம் மேலதிகாரிகளை நம்பிச் செய்தனர் வான்கோயன்ஸ் முதலியோர். ஆனால் அவனது “ஆண்மை”யை ஆராய்வர் இதனை நம்ப மறுப்பர். பின் நிகழ்ந்த செயல்களும் மன்னன் செயலிழந்து திறனிழந்திருந்தான் அல்லன் என்பதைச் சுட்டும்.

“கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து@ மற்றதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து”
என்றவாறு காலம் பார்த்திருந்தான். மிக நுட்பமான என்றவாறு காலம்பார்த்திருந்தான். மிக நுட்பமான சூழ்ச்சிகளை நிறைவேற்றினான். 1670, ஆடியில் கண்டியில் இறந்தவனும் ஏழாண்டுகள் அவன் சபையில் பொறுப்பான பதவி வகித்தவனுமாகிய ஒரு டச்சு ஸ்தானிகன் பிரேதத்தைச் சகல மரியாதைகளுடனும் கொழும்புக்கு அனுப்பும்போது சூழ்ச்சித்திறன் வாய்ந்த ஐந்து அதிகாரிகளையும் உடன் அனுப்பினான். அவர்கள் கோபால முதலியார் என்பான் தலைமையில் வெகுதந்திரமாக நடித்து மன்னன் ஒரு போதும் படையெடுக்க மாட்டான் என்றும் தாம் அவைக் களத்தில் ஆலோசகராயிருக்கும் வரை அரசன் டச்சுக்காரரை எதிர்க்கும் கொள்கையை மேற் கொள்ள மாட்டான் என்றும் டச்சுக்காரர் நம்பும்படி செய்தனர். கண்டியிற் சில காலம் தடுத்து வைக்கப்;பட்டு இப்போது உடன்வந்த ஒரு டச்சுப் போர் வீரனும் இராஜசிங்கனது கொடுஞ் செயல்களையும் அவனது உடற் பிணிகளையும் மிகவும் மிகைப்படுத்தி வருணித்தான். அவன் மேலதிகாரிகளின் திருப்திக்காகச் சொன்னானா, இராஜசிங்கனால் பயிற்றப்பட்டவனா என ஐயுறும் வண்ணமுள்ளது. அவனது சாட்சியம் சுருங்கக்கூறின், மக்கள் அவன் கொடுங்கோலாட்சியைப் பொறுக்க மாட்டாது எக்கணமேனும் டச்சுக்காரர் வந்து தமக்கு விடுதலை அளிக்கமாட்டாராஎன ஏங்கிக் கிடக்கின்றனர் என்ற தொனியில் அவன் பேசினான். வான்கோயன்சும் டச்சு அதிகாரிகளும் போருக்குச் சற்றும் ஆயத்தமின்றியிருந்தனர்.

போர்

ஆனால், 1670, ஆவணியில் இராஜசிங்கன் பலமுனைகளிற் பெரும் போராட்டத்தை யாரம்பித்தான். வலிய படைகள் மேற்கிலும் தென் மேற்கிலும் தாக்கின. ஆனால் கிழக்கிலும் ஒரே காலத்தில் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இக்கால வரலாற்றுக்கு முக்கிய ஆதாரமெனத் கருதப்படும் நூலை எழுதிய றொபேட் நொக்ஸ் தான் இங்கு வாழ்ந்த பல்லாண்டுகளில் இதனை யொத்த பெரும் போர் நிகழ்ந்திலது என்றார். கண்டிக்கு ஏறக்குறைய 20 அல்லது 25 மைலுக்கப்பாலுள்ள அருந்தொரை என்னுமிடம் கைப்பற்றப்பட்டு அவ்வரணிற் காவல் புரிந்த டச்சுக்காரர் சிறை செய்து கண்டிக்கு இட்டுச்செல்லப்பட்டனர். கொழும்பை டச்சுக்காரர் கைப்பற்றிய பின் இராஜசிங்கன் பெற்ற முதற்பெரு வெற்றி இதுவே. இதனால் அச்சமுற்ற ஒல்லாந்தர் உள்நாட்டுக் காவற்றலங்களைவிட்டு 1665 க்கு முந்திய எல்லைக்குச் சென்றனர். கொழும்பின் மீது தாக்குதல் நடைபெறும் என எதிர்பார்த்தனர். கண்டியிலிருந்து அனுப்பப்பட்ட செல்வாக்குள்ள தலைவர்கள் கோறளை தோறுஞ் சென்று கலகங்களைத் தோற்றுவித்து டச்சு ஆட்சி நடைபெறாமற் செய்தனர். வெளியே சென்றிருந்த வான்கோயன்ஸ் மீண்டும் வந்து படைகளைப் புனரமைப்புச் செய்து, கண்டிப் படைகளைத் துரத்தினான். ஆனால் உள்நாட்டுப் பகுதிகளை ஆட்சி செய்ய அவனால் முடியவில்லை.

திருக்கோணமலையிலும் கலகம் பெருமளவில் நிகழ்ந்தது. கண்டி நிர்வாகத்திலிருந்த இளஞ் சிங்க வன்னி என்ற கிராமாதிகாரி இக் கலகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தினான். உயர்குடியதிகாரிகள் டச்சுக் கோட்டைகளிற் சிறை வைக்கப்பட்டிருந்தும் அயற் பிரதேசமெங்கும் கலகம் பரவியது. ஒரு கூட்டம் டச்சுப் போர் வீரரை ஒரு கிராம மக்கள் சூழ்ந்து கொன்றனர்@ இது புதிய உற்சாகத்தைளித்தது. டச்சுக்காரர் கோட்டைக்கு வெளியே தலைகாட்ட முடியவில்லை. மட்டக்களப்பிலும் கண்டியதிகாரிகள் தோன்றி மக்களைக் கலகஞ் செய்யுமாறுதூண்டினர். சுதேச கூலிப்படை கண்டிக்கு ஓடவே, டச்சுக்காரர் துணையின்றி விடப்பட்டனர். போரிற் பெற இயலாத வெற்றியைப் பொருளாதாரத் துறையிற் பெற முயன்றனர். சகல துறைமுகங்களையும் காவல் புரிந்து வாணிகம் நடைபெறாது தடுத்தனர். இத்தருணத்தைப் பயன்படுத்தித் தீவின் தனி வாணிகஉரிமையைக் கைக்கொள்ளக் கருதினர். வான்கோயன்ஸ் வெகு தந்திரமாகத் தன் பிரதேச விஸ்தரிப்புக் கொள்கையால் இது விளைந்தது என்பதை மேலதிகாரிகளுக்கு மறைத்து விட்டான். அவன் கூறியது போல இப்போர் கண்டியதிகாரிகளின் செயலன்று@ நொக்ஸ் வருணிப்பது போல் அரசனின் திட்டமிட்ட செயலே டச்சுக்காரர் கைவிட்ட நிலங்களை மீண்டும் கைப்பற்ற இயலவில்லை. அரசிறை வருமானத்தில் ஒரு லட்சத்து எண்ணாயிரத்து அறுநூறு கில்டர்கள் கிடைத்தில. புதிய படையனுப்பும்படி இலங்கை டச்சு அதிகாரிகள் கேட்டும் பட்டேவிய அதிகாரிகள் இடமளித்திலர்

டச்சுக்காரர் இராஜசிங்கன்பால் அனுட்டித்த கொள்கைதோல்வியடைந்த இத்தருணத்தில் வேறோரு வெளி அபாயமும் அவர்களையணுகியது. 1660 - க்குப்பின் டச்சுக்காரருடைய தனியுரிமைக்குப் பங்கம் விளைக்கும் வகையில் பிரஞ்சு வணிகக் கப்பல்கள் இந்த சமுத்திரத்திற் பிரவேசித்தன. டச்சுக்காரரிடம்; பணிபுரிந்து பின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பிரஞ்சுக்காரன் மந்திரி கொல்பேட்டை அணுகித் தன் சேவையை ஈந்து பிரஞ்சுக்காரர் கீழ்த்திசை வணிகத்தைக் கைப்பற்றி இலங்கையைத் தலைமைத் தானமாக்கலாம் எனப் புத்தி கூறினான். இராஜசிங்கன் கத்தோலிக்க குருமார் மூலமோ கண்டியில் வாழ்ந்த போர்த்துக்கேயர் மூலமோ பிரஞ்சுக்காரருடன் தொடர்பு கொண்டான். ‘பாரசீகக் கப்பற்குழு’ என்ற பிரஞ்சுக் கப்பற் கூட்டம் 1617-ல் கொட்டியாரக் குடாக்கடலை யடைந்தது. இராஜசிங்கனின் தூதுவர் அதனை வரவேற்றனர். முப்பது போர் வீரருடன் கண்டிக்குச் சென்ற ஒரு படையதிகாரி மீண்டு வந்து அரசன் தம்மைத் திருப்திகரமாக வரவேற்றதாகக் கூறினான். ஆனால் தளங்களமைத்த பிரஞ்சுக்காரர் 3000 அல்லது 4000 பேருக்கு உணவு கிடைப்பது கடினமாயிருந்தது. ஐரோப்பாவில் டச்சுக்காரர் பிரஞ்சுக்காரருடன் போரில் ஈடுபடவில்லையாதலால் இங்கு போர் தொடங்கப் பின் நின்றனர். டச்சுக்காரர் தம் தனியுரிமையை மதிக்க வேண்டுமெனக் கடிதம் எழுதினர். ஆனால் பிரஞ்சுக்காரர் மன்னன் தமக்கு உத்தரவு தந்ததைச் சுட்டிக் காட்டினர். அரசன் அவர்களுக்கு இக் குடாக் கடலைக் கையளித்த உத்தரவைச்; செப்பேட்டில் எழுதிப் பகிரங்கப் படுத்தினர். வான் கோயன்ஸ் சனங்கள் பிரஞ்சுக்காரருக்கு உணவு கொடுக்காமல் அச்சுறுத்த, தம்பலகாமத்தினு}டே படை நடத்திச் சென்றான். ஆனால் கண்டிப் படை அவனை விரட்டிவிட்டது. பிரான்சும் ஒல்லாந்தும் போர்புரிய ஆயத்தமாயின என்ற செய்தி பிரஞ்சுத் தளபதிக்கு எட்டக் கால தாமதமாயிற்று. பொறுமையிழந்த இராஜசிங்கன் பிரஞ்சுக்காரர் எதிர்பார்த்த அளவு உதவி செய்திலன். உணவின்றி வாடிய பிரஞ்சுப்படை சோழமண்டலக் கரைக்குச் சென்றது. வான்கோயன்ஸ் அங்கு சென்று இந்திய அரசருக்குதவியாக நின்று பிரஞ்சுப் படையைத் தோல்வியுறச் செய்தான். இராஜசிங்கனின் அயல் நாட்டுக் கொள்கையைப் பொறுத்த வரையில் பிரஞ்சுக்காரர் வருகை ஒரு பயனற்ற நிகழ்ச்சியாயிற்று.

ஆனால் அவன் வேறு பல திட்டங்களை வகுத்திருந்தான். கறுவா விளையும் பிரதேசமெங்கும் கலகங்களைத் தூண்டினான். தென்னக்கோன் திசாவை, உடபலாத்திசாவை என்போர் பெருஞ் செல்வாக்குடையோர்@ டச்சுக்காரர் நிர்வாகத்தை நடாத்த முடியாமற் கலகங்களைத் தூண்டினர். டச்சுக்காரர் 1672 - ல் சீதாவக்கை, இதங்கொடை முதலிய இடங்களில் மீண்டும் காவலரண்களை ஏற்படுத்திப் படைகளை வைத்தனர். வாணிகத் தடை மூலம் கண்டியரின் மீது பொருளாதாரத் தாக்குதலை இறுகச் செய்தனர். கண்டி மக்கள் பாக்கு விற்கவோ, துணி, உப்பு ஆகிய அவசிய பொருட்களை வாங்கவோ இயலாது பெரும் துன்பமுற்றனர். ஆனால் டச்சுக்காரர் நினைத்த அளவுக்கு வெற்றி கிடைத்திலது@ 1673 - ல் அவர்கள் தாமாகவே வணிகத்தடையை நீக்கிவிட்டனர். இராஜசிங்கன் வெளிப்படையாகப் போரிலீடுபட்டமையால், தாமும் இனி இறுதிப் போரில் ஈடுபடுவதே விலை மதிப்பற்ற கறுவா வாணிகத்தைக் காக்க வழி என்று தருக்கமிட்டனர். 1673-ல் எதிர்ப்பைச் சமாளித்து விட்டதாகத் தற்பெருமை பேசினர். ஆனால் நவீன யுத்த முறைகளால் நேர்யுத்தத்தில் வெற்றி பெற்றனரேயன்றிக் ‘கொரில்லா’ப் போர் முறைகளைப் பின்பற்றிய கண்டியரை அவர்கள் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர்தம் நெல்வயல்கள் எரிக்கப்பட்டன. அவர்களது கால் வருடிகள் கொல்லப்பட்டனர். எல்;லைப் பகுதியில் நிர்வாகம் ஒழிந்தது. கீழ் மாகாணத்தில் அவர்கள் கொடுமைகள் மேலும் அதிகரித்தன. 1674-75-ல் அமைதியை நிலைநாட்டியதாக அவர்கள் எழுதியதெல்லாம் மேலதிகாரிகளை ஏமாற்றச் செய்த சூழ்ச்சியே. இதற்கு நேர்மாறாக இராஜசிங்கது நிலையோ நன்கு உயர்வுற்றது. மக்கள் அவன் தலைமையில் நம்பிக்கை கொண்டனர். டச்சுக்காரரின் கீழ் வாழ்ந்தோர் மூலைதோறும் கலகங்களை உண்டாக்கினர். கண்டியருடன் தொடர்புற்றனர். பட்டேவிய அதிகாரிகள் இப்போது கொழும்பிலுள்ளாரைத் தம் சமாதானக் கொள்கையைப் பின்பற்றும்படி வற்புறுத்தினர்.

1675-ல் மன்னன் மூன்றாம் முறையாக மிகப் பெரும்போர் தொடுத்தான். திட்டமிட்டுக், கோறளை தோறும் அதிகாரிகளையனுப்பி ஒரே காலத்தில் அதிக போர் வீரருடனும் சிறப்பு வாய்ந்த ஆயுதங்களுடனும் போரை நடாத்தினான். முஸ்லிம்கள் பெருவாரியாக அரசனது படையிற் பணியாற்றினர். தென்னக்கோன்அரிப்பு வரை படை நடாத்திச் சென்று வெற்றி ஈட்டினான். மன்னார், யாழ்ப்பாணப் பாதுகாப்புக் குறித்தும் டச்சுக்காரர் பயந்தனர். மாத்தறையதிகாரிகள் கண்டியருடன்தொடர்பு கொண்டனர். கண்டியர் பிடித்த கோட்டைகளைப் பாதுகாத்து நிரந்தரமாகத் தங்கியிருப்பரேல் டச்சுக்காரர் மீண்டும் உள்நாட்டில் தலை காட்ட இயலாதிருக்கும். ஆனால் இராஜ காரியமுறையின் கீழ் போர் வீரர் சொற்ப காலம் சேவை செய்து, பின் தம் நிலங்களுக்கு மீண்டனராகையால் இவ்விதம் செய்திலர். எனவே, அவர்கள் கோட்டைகளை அழித்துச்செல்ல, டச்சுக்காரர் மீண்டும் சீதாவக்கையைக் கைப்பற்றினர். அரசனின் சகோதரன் பிள்ளை என உரிமை பாராட்டிய ஒருவனைச் சிம்மாசனமேற்றிச் சிங்களரது விசுவாசத்தைப் பெற முயன்றனர். ஆனால் இராஜசிங்கன் கைப்பட்டிறந்தான்.

டச்சுக்காரர்பால் இராஜசிங்கன் கடைப்பிடித்த போர்க் கொள்கையால் ஐந்தாண்டுகளில் (1670 - 75) அவர்கள் கரையோரப் பகுதியில் அடைந்த பொருள் நட்டம் மிகப் பெரியது. அவன் இழந்த பூமியைத் திரும்பக் கைப்பற்றத் தவறினான். ஆயினும் அதனால் டச்சுக்காரர் ஒரு பயனும் அடையாமற் செய்ததுடன் பெருநட்டத்தின் சுமையையும் ஏற்குமாறு செய்தான். அவர்கள்போர்ச் செலவு அதிகரித்தது. தாம் புதிதாகக் கைப்பற்றிய பிரதேசத்தை மட்டுமன்றிப் பழைய கரையோர நிலத்தையும் அமைதியாக அரசாண்டு இலாபம் அடைய அவர்களால் இயலவில்லை. இலங்கையில் ஆண்டுதோறும் அரசிறை வருமானத்திலும் செலவு அதிகரித்தது. 1674-75 வருட வரவு செலவுத் திட்டத்தில் 4½ லட்சம் கில்டர் பணம் துண்டு விழுந்தது. 1670 முதல் நான்கு வருடங்கள் இதனினும் பெருந்தொகை துண்டு விழுந்தது. எனவே, ஒல்லாந்திலுள்ள கம்பனியதிகாரிகள் கண் விழித்துப் பட்டேவிய அரசாங்கத்தின் ஆலோசனையை ஏற்றனர். இராஜசிங்கன்பால் கடைப்பிடிக்கும் கொள்கையில் மாறுதல் எற்படுத்தும் அவசியத்தை வற்புறுத்தினர். இதுவரை, ஆராய்ந்து முடிவு கட்டிய ஒரு கொள்கையை வகுத்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வரத் தவறியமைக்கு வருந்தினர். 1672 - 78ல் நிகழ்ந்த பிரஞ்சுப் போர் காரணமாகவும் ஒல்லாந்திலுள்ள அதிபதிகள் ஆசியாவில் சமாதானக் கொள்கையை அனுசரிக்க வேண்டியது அவசியமாயிற்று. வான்கோயன்ஸ் தன் மனதுக்குகந்த திட்டங்களை நிறைவேற்றப் பட்டேவியா அதிகாரிகளுடன் வாதாடினான். ஆனால் அவன் கருத்தை அவர்கள் ஏற்கவில்லை. அவன் மகன் அரசனைச் சமாதானஞ் செய்யச் சிங்கமொன்றை யனுப்பியும் பயன் ஏதும் விளைந்திலது. அவன் தொடர்ந்து டச்சு ஆட்சியில் வாழ்ந்த குடிகளைத் தூண்டிக் கொண்டேயிருந்தான்.

1677 - ல் பட்டேவியாவிற் கூடிய ‘இந்திய ஆலோசனைச் சபை’ 1665 லிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களைத் திரும்பக் கொடுத்து அரசனுடன் தேச உறவைப் பலப்படுத்துமாறு அறிக்கை விடுத்தது. ஆனால் இளைய வான்கோயன்ஸ் தந்தையின் கொள்கையைக் கடைப்பிடித்தமையால் இக்கட்டளையை நேர்மையுடன் நிறைவேற்றத் தவறினான். மூன்று மகாணங்களைத் திருப்பித் தருவதாக இராஜசிங்கனுக்கு எழுதினான். அவை 1665 - க்குப் பின் பிடித்த எல்லாக் கோறளைகளையும் உள்ளடக்கவில்லை. இதுவும் டச்சுக்காரரின் வழக்கமான சூழ்ச்சிகளுள் ஒன்றெனக் கருதிய இராஜசிங்கன் யாதும் பேசாது இருந்தான்.

1678 தொடக்கத்தில் மற்சூய்க்கர் இறக்க, மூத்த வான்கோயன்ஸ் மகாதேசாதிபதி என்ற உச்சப் பதவியைக்கையேற்றான். அது முதல் மீண்டும் இராஜசிங்கனுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்தன. அவன் சமாதானத்துக்கு இணங்கிய பின்பே சில கோறளைகளைத் திருப்பிக்ககொடுக்கலாம் என்ற முடிவு செய்யப்;பட்டது. அதற்கு அவன்இணங்கான் என்பதை இளைய வான்கோயன்ஸ் நன்குணர்வான். இராஜசிங்கன் தன் பிரசைகளையும் அதிகாரிகளையும் தினந்தோறும் கொன்று குவிப்பதாக ஒல்லாந்துக்கு எழுதினான். கண்டியதிகாரிகள் கலகங்களைத் தூண்டுவதைச் சுட்டிக்காட்டித் தாங்கள் சமாதானத்தை விரும்பியும் கண்டியர் இணங்க வில்லை என வருணித்தான். சிலாபத்தைச்சூழ்ந்த நிலத்தைப் பிடிக்க வேண்டுமென்றான். ஆனால் ஒல்லாந்திலுள்ள அதிபதிகள் இணங்காது, செலவு குறைய வழி செய்யுமாறு அவசரப்படுத்தினர். இளைய வான்கோயன்ஸ் இதற்கு எற்றவனல்லன் எனக் கருதி 1679-ல் அவனைப் பட்டேவியாவுக்கு அனுப்பினர். இத்துடன் தந்தையும் மகனும் தாபித்த ‘வான்கோயன்ஸ் யுகம்’ 21 ஆண்டுகளின் பின் முற்றுப்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் தளபதியாயிருந்த லோரன்ஸ் பைல்கொழும்பில் தற்காலிக தேசாதிபதிhயகப் பதவி ஏற்றான். மேலதிகாரிகளைத் திருப்தி செய்தற் பொருட்டு எவ்விதமேனும் சமாதானத்தை நிலை பெறச் செய்ய அரிதில் முயன்றான். இலங்கை நிலையை உள்ளவாறே மேலதிகாரிகளுக்கு எழுதினான். கண்டியரசன் தூண்டுதலால் முன்னாள் டச்சு ஸ்தானீகராயிருந்து அங்கு தடுத்து வைக்கப்பட்ட ஒருவன் அரசன் ஒல்லாந்தரை வரவழைத்தமைக்கு இதுவா பரிசு என ஏசிக் கடிதம் எழுதித் துறைமுகங்களைத் திறந்து, பிடித்த நிலப்பரப்பையும் கொடாவிடில் பெரும்போர் மூளும் என அச்சுறுத்தினான். பட்டேவிய மகாதேசாதிபதி தனித்து நிற்க, ஆலோசனைச்சபையார் இலங்கையின் உண்மையான நிலையை விசாரித்தறிந்தனர். பாக்கு, சீலை வாணிகத்தைக் கைப்பற்ற முயன்று வீண்செலவு ஏற்படுத்தினரேயன்றி இலாபம் தேடவில்லை என்பதைத் தேசாதிபதி பைல் விளக்கினான். பிரதானமாகக் கறுவா நிலங்களை இராஜசிங்கனிடமிருந்து பாதுகாக்க இயலாது என்று கூறினான். அரசனைக் கைவிட்டு டச்சுக்காரரையடைந்த தென்னக்கோன் கூற்றுப்படி கண்டியப் படையில் 37,720 நிரந்தரப் போர் வீரருளர் என்றும், இராஜசிங்கன் மேலும் 44,180 பேரைக் கணப்பொழுதிற் கூட்டுவான் என்றும் பைல் அறிவித்தான். ஆனால் டச்சுக்காரரின் சுதேசிப் படையில் 4688 பேர் மட்டுமேயிருந்தனர். இவர்களுள் வெகு சிலரைத்தான் நம்பமுடியும். 1681 - ல் இராஜசிங்கன்பாற் கடைப் பிடிக்க வேண்டிய கொள்கை பற்றிப் புனராலோசனை செய்த பட்டேவிய ஆலோசனைச்சபை மகாதேசாதிபதியின் முடிவை மறுத்து எதிர் முடிவு செய்தது. விரைவில் வான்கோயன்ஸ் மகாதேசாதிபதி பதவியைத் துறக்க முடிவு செய்தான்.

ஆனால் எண்பது வயதுக்கு மேற்பட்ட இராஜசிங்கன் நீண்டகாலப் போராட்டத்தின் பயனைப் பெறவில்லை. அவனது ஆட்சியின் இறுதி ஐந்து ஆண்டுகள் (1682 - 87) செயலின்மையுடன் கூடியவையாயிருந்தன. புகழ் ஏணியில் ஏறியவன் - மாபெரும் வணிகப் பேரரசு ஒன்றை எதிர்த்து நின்று போராடியவன் - பலனை அடையும் தறுவாயில் செயலற்று ஓய்ந்தான். 1683 - 84லிலிருந்து அவன் அயல் நாட்டுக் கொள்கைகளை வகுப்பதில் சிரத்தையின்றியிருந்தான் எனலாம். தேசாதிபதி பைல் இதனை நன்குணர்ந்து இராசதந்திரத்தால் அருஞ் சாதனைகளை நிலை நாட்டினான். புறக் கௌரவங்களை உரியவாறு கண்டியருக்கு அளித்தும் அவர்கள் மனம் புண்படும் எக்காரியத்தையும் தவிர்த்தும் அவர்களின் ஐயத்தைக் குறைத்தான். அடிக்கடி அரசனுக்குப் பரிசுகளையனுப்பி மரியாதை செய்தான். 1684-ல் மூன்றாண்டு அனுப்பிய பரிசின் பெறுமதி 34000 கில்டருக்கு அதிகம் எனக் கணக்கிடப்பட்டது. ஆனால் தாம் அநீதியாகப் பிடித்த நிலத்தைத் திருப்பிக் கொடுக்கும் போது இராஜசிங்கனிடம் எதைப் பெறலாம் என்ற எண்ணமே முன்னின்றமையால் அவர்கள் சமாதான முயற்சி எதிர்பார்த்த அளவு பயனளித்திலது. இராஜசிங்கன் அங்ஙனம் தன் உரிமையைப் பண்டமாற்றுச் செய்யச் சம்மதியான் என்பதை அவர்கள் உணர்ந்திலர். அவர்கள் அனுப்பிய தூதுவர் எல்லைக்குள் வராது தடுக்கப்படவே, அவர்கள் திரும்;பிச் சென்றனர்.

முதியவயதில் போர் புரிய இயலாமையால் அரசன் நம்பிக்கையான திசாவைமாரை டச்சுப் பிரதேசங்களுக்கு அனுப்பி ஆங்காங்குள்ளவர்கனின் விசுவாசத்தைத் திரட்டுவித்தான். இவ்வாறு விசாலமான பிரதேசங்கள் சபரகமுவா, ஊவா மகாணங்களில் மீண்டும் அவன் வசமாயின. தேசாதிபதி பைல் இப்பொழுது இராஜசிங்கனைக் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை யாதலால் மிக அதிகம் சகாயம் பெறாது புதிதாகப் பிடித்த நிலங்களைக் கையளிப்பதில்லை எனத் தீர்மானித்தான். பட்டேவிய அரசாங்கமும் பிடித்த நிலத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தன் முந்நிய (1681) தீர்மானத்தை வற்புறுத்தாது விட்டது. பைல் பிரதானிகளே இப்போது நிலத்தை மீட்பதில் ஊக்கமுடையோராயிருக்கின்றனர் என்றும், அவர்களும் மக்களும் திருப்தியடையும் பொருட்டு வாணிக உரிமைகள் சிலவற்றை அளித்தாற் போதும் என்றும் மேலதிகாரிகளுக்கும் எழுதினான். ஆனால் துறைமுகங்களைத் திறந்து விடுவதைப் பட்டேவிய அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை. முன்னரே சில சொற்ப வாணிக உரிமையளித்துள்ளனர். அதன் மேலும் உரிமையளிப்பது வாணிகத் தனியுரிமைக் கொள்கைக்கே மாறானது எனத் தள்ளிவிட்டனர். ஆனால் அவர்கள் நிலங்களையும் கையளிக்காது, வாணிக உரிமையும் அளிக்காது, அரசனுடன் சமாதானமாக நடந்து கறுவா சேகரிப்பதையே கொள்கையாகக் கொண்டனர். அரசனும் தனக்குப்பின் தன் மகன் டச்சுக்காரருடன் பகையின்றி வாழ வழி செய்யும் பொருட்டு, பைல் மீது தனக்கு வெறுப்பில்லை எனக் காட்டத் தூதுவர்களை அனுப்பினான். தான் சிறை செய்திருந்த டச்சுக்;காரரை விட்டான் (1687, வைகாசி) இங்ஙனம் நல்ல சூழ்நிலையை உருவாக்கியபின் தான் மறைத்து வைத்து வளர்த்த மகனைக் குடிகளுக்குக் காட்டி, அவ்வாண்டு மார்கழியில் அவனுக்குப் பட்டாபிஷேகமும் செய்வித்தான். சில நாட்களின் பின் அரசன் இறந்தான். அவன் மைந்தன் 2 - ம் விமல தர்ம சூரியன் என்ற பெயருடன் அரசனானான்.

இராஜசிங்கனின் குணாதிசயங்கள்

இலங்கை வரலாற்றில் இரண்டாம் இராஜசிங்கன் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறான். அவனது புகழைப் பாடும் நாட்டுப் பாடல்களும் கதைகளும் சிங்கள மொழியில் பெருந்தொகையாக உண்டு. அவன் இளமையில் போர்த்துக்கேயரோடு புரிந்த வீரப் போர்கள்; அவனை மக்கள் மனத்தில் அழியா ஓவியமாக நிற்கச் செய்துள்ளன. சூளவம்சத்திலும் இவ் வம்சம் பெரிதும் பேசப்படுகிறது. இச் சிறப்பு நிலைக்கு நேர்மாறான சித்திரம் டச்சுக்காரர் விட்டுச் சென்ற குறிப்புக்களிலிருந்து பெறப்படுகிறது. காலந்தோறும் அவர்கள் அவனுடன் கொண்ட தொடர்புக்கேற்ப இதுவும் மாறுபடுகின்றது. தொடக்கத்தில் அவன் போர்த்துக்கேயருடன் போரிட அழைத்தபோது அவனது பெருமை மிகப் புகழ்ந்து பேசப்படுகிறது. போர்த்துக்கேயரை விரட்டிய பின் அவன் வெளிப்படையாகப் பகைமை பாராட்டியதால் அவன் கொடியன் எனச் சித்தரிக்கின்றனர். பின் முதுமைப் பருவத்தில் அவன் பைல் நீட்டிய நட்புக் கரங்களை ஏற்றமையால் மீண்டும் அவனைப் பற்றி நல்ல கருத்துக்கள் காணப்படுகின்றன. எனினும் அவனுனோடு போட்டியிட்ட அந்நிய வல்லரசின் தூண்கள் என நின்றோர் கூறுவதை வைத்துக்கொண்டு அவனது உண்மைக் குண சித்திரத்தை வரைவது மிக்க கஷ்டமான காரியமே. இதனால் தேசீய நோக்கில் சரித்திரம் எழுதியதாகக் கூறிக் கொண்டவர்கள் கூட அவனைக் கொடுங்கோலன் என்றே சித்தரித்துள்ளனர்.

அவனைப்பற்றி அறிய முக்கியமான ஒரு மூலநூலாக விளங்குவது றொபேட் நொக்ஸ் எழுதிய “இலங்கையின் வரலாற்றுத் தொடர்பு” ஆகும். ஆங்கிலேயனான நொக்ஸ் இராஜசிங்;கன் மீது அரசியல் காரணமாகப்பகைமை பாராட்ட வேண்டிய அவசியமில்லை எனினும் கண்டியரது கலாச்சாரச் சூழ்நிலையை விளங்கும் ஆற்றல் அந்நியனான அவனுக்கு இல்லை என்றே கூறவேண்டும். அதனால் அவனது நிர்வாகம் சர்வாதிகாரமுடையது என்று நொக்சும் கூறுகிறான். ஆனால் இராஜசிங்கனின் பலமான ஆட்சி, அவனது ஒழுங்கான வாழ்க்கை முதலியசெய்திகளைத் தருவதால் டச்சுக்காரர் தீட்டிய பிழையான ஓவியம் நம் மனத்தினின்றும் அழிகிறது.

இராஜசிங்கன் மத இனத்துவேஷமற்றவன். அவன் காலத்தில் மத விடயத்தில் பூரண சகிப்புத் தன்மை கண்டி இராச்சியத்தில் நிலவியது. அக்காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போர் போன்ற மிருகத்தனமான நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டால் அவனது அறிவொளி மிக்க சமயக் கொள்கையின் மேன்மை நன்கு புலப்படும். போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் தத்தம் மதமே சத்திய நெறியெனக் கருதி மற்றைய மதங்களை அழிக்க முயன்றபோது, அவன் எம் மதத்தவரும் தன் இராச்சியத்தில் அமைதியாக வாழ வழி செய்தான். டச்சுக்காரர் அரசியல் நோக்கத்துடன், கத்தோலிக்கர் போர்த்துக்கேயருக்கு ஆதரவு காட்டுவர் என்ற நம்பிக்கையில், அவர்களை விரட்டிவிடப்;, பலர் கண்டி இராச்சியத்தில் குடியேறினர். அவர்கள் பூரணமத சுதந்திரத்தை அனுபவித்தனர் என நொக்ஸ் கூறுகிறான். புரட்டஸ்தாந்து மதகுருவான பால்டியஸ் கூட இதனைக் குறிப்பிடுகிறான். டச்சு ஆட்சியை விரும்பாது தன்இராச்சியத்துள் நுழைந்த போர்த்துக்கேய குடும்பங்களை அரசன் றுவன்வலையில் குடியேறினான். இந்தியாவிலிருந்து கத்தோலிக்க குருமார் இங்கு வந்து தம் மதத்தவரின் ஆன்மீக தேவைகளைக் கவனிக்க முயன்ற போது அவர்களுக்குப் புகலிடமளித்தான்.

இஸ்லாமும் இந்;து மதமும் பௌத்த மதத்துடன் சரி சமமான மதிப்புப் பெற்றன எனலாம். அம் மதத்;தவர்கள் இரச்சிய நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகித்தனர். அரச தூதுவர்களாக டச்சுக்காரரிடமும் இந்திய அரசிடமும் சென்றனர். போர்த்துக்கேய மொழியை நன்கு கற்ற அவனுடன் அநேக ஐரோப்பியர் தொடர்பு கொண்டபின் அவனது வசீகரமான போக்கினாற் கவரப்பட்டு அவன் சேவையில் அமர்ந்தனர். பல முக்கிய சம்பவங்கள் நிறைந்த அவனது 50 வருட ஆட்சியில் அவன் எண்ணற்ற கஷ்டங்களைத் தனி ஒருவனாக எதிர்த்து நின்றான்.

பிற்சேர்க்கை

1. றெபேட் நொக்ஸ்

(இளைய) றொபேட் நொக்ஸ் லண்டனில் 1641-ல் பிறந்தான். 19-ம் வயதில் தந்தை (மூத்த) நொக்சுடன் “ஆன்” என்ற வாணிகக் கப்பலில் யாத்திரை செய்து கொட்டியாரத்துக்கு வந்தான். கண்டியரசன் இவர்கள் மூலம் ஆங்கிலக் கிழக்கிந்திய சங்கத்துக்குத் தூதனுப்ப விரும்பி இவர்களை அழைத்தான். ஐயமுற்ற தந்தை உள்நாட்;டுக்குப் போக விரும்பவில்லை. அவனையும் வேறு பதினாறு பேரையும் சிறை செய்து கண்டிக்கு அழைத்துச் சென்றனர் (சித்திரை 1660) அரசன் அவர்களைச் சிங்களவர்களின் வீடுகளில் தங்கவைத்தான். ஒன்பது மாதங்கள் நொக்ஸ் வயோதிபத் தந்தையைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தான். பின் தந்தை இறக்க இவன் அத்துயரத்தில் மூழ்கிக் கிடந்தான். நோயும் அவனை வாட்டியது. அநேக ஆண்டுகளின் பின்னரே சிங்களம் பேசக் கற்றான். ஆயினும் அதில் பூரண தேர்ச்சி பெற்றிலன். பின் அவன் பல ஆண்டுகள் குடியிருந்த கிராமத்தை விட்டு அதிக தூரத்துக்குச் செல்லாத படி தடுக்கப்பட்டிருந்தான். ஆதலால் 19½ ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்தாலும் அவனது அனுபவம் மிக விசாலமான எனக் கூறமுடியாது. அன்றியும் உயர் குலமக்களுடன் பழகவும், அவர்களது பண்பாட்டை அறியவும அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்திலது.

நொக்சும் வேறொரு ஆங்கிலேயனும் 1679 - ல் தப்பிச் சென்று அரிப்பு வழியே பட்டேவியாவை அடைந்து பின் இங்கிலாந்து சென்றனர். வழியில் புயலால் கப்பல் கவிழ்ந்து தான் இறக்கநேரிட்டால் தன் இனத்தவர் தனக்கும் தந்தைக்கும் நேர்ந்த கதி பற்றி அறியவேண்டும் என்ற எண்ணத்தால் நொக்ஸ் தன்வரலாற்றை எழுதினான். அது 1681-ல் லண்டனில் பிரசுரமாயிற்று. விரைவில் விற்பனையாகிப் பிற மொழிகளிலும் வெளிவந்தது. அதை மீண்டும் அச்சியற்றும் நோக்கமாகப்பல திருத்தங்களைச் செய்தான் நொக்ஸ். அதுவும் அவன் பின்னர் எழுதிய சுயசரித்திரமும் அந்நூலிற் சொல்லாத புதிய விடயங்களைக் கொண்டுள்ளன.

“இலங்கைளின் வரலாற்றுத் தொடர்பு”

நான்கு பகுதிகளை உடைய நாடு, அரசனும் அவைக்களமும்@ சமூக அமைப்பு ஆகியவற்றைப்பற்றி முதல் மூன்றும், நொக்சின் சொந்த வாழ்வு பற்றி நான்காம் பகுதியும் கூறுகின்றன. இந்நாட்டின் புவியியற் செய்திகள், ஆறுகள், பருவகாலங்கள், முக்கிய பட்டணங்கள் இங்கு வளரும் மரங்கள், மலர், காய். கனி கிழங்குகள், வீட்டிலும் காட்டிலும் வளரும் விலங்குகள், பறவைகள் இரத்தினங்கள் பற்றிய செய்திகள் விரிவாகக் காணப்படுகின்றன. அரசனைப் பற்றிய வர்ணனையில் அவன் அதிக உயரமுடையவன் அல்லன்@ கரிய நிறத்தினன்@ பெரிய கண்களும், நீண்ட தாடியும், பெரிய வயிறும் உடையவன் என்கிறான். ‘உலகிலுள்ள அரசர்கள் எல்லோரிலும் மிக்க சர்வாதிகாரம் படைத்த அரசன் இவனே’ என்கிறான். அவனது குடும்ப வாழ்வு, உணவு, சமயம், அவனைப் பிறர் வணங்கும் முறை, அவன் வெளியே புறப்படும் ஆடம்பரம், குற்றவாளிகளைத் தண்டிக்கும் முறை நீதி வழங்கும் முறை, அவனது அதிகாரிகள், வரிவசூலித்தல், அவன் டச்சு, பிரஞ்சு இனத்தாருடன் தொடர்பு கொள்ளல், அவனுக்கு விரோதமாக நிகழ்ந்த கலகமும் அதை அவன் அடக்கிய முறையும், அவனது படை, போர்வீரர் நிலை ஆகிய செய்திகளைத் தான் கேள்வியுற்றவாறு எழுதுகிறான். இலங்கையில் வாழ்ந்த இனங்கள் வேடர், கரைநாட்டுச் சிங்களருக்கும் கண்டிச் சிங்களருக்கும் மிடையிலுள்ள வேறுபாடு, சாதிப்பிரிவுகள், உயர்வகுப்பாரும், சாதாரண மக்களும், சனங்களின் பழக்கவழக்கங்கள், விருந்தோம்பல், சமய நம்பிக்கைகள், கோவில்களும் அவற்றுக்கு வருமானம்வரும் வகையும், குருமார் சங்கமும் அதன் அமைப்பும், பேய் அகற்றும் சடங்கு மூலம் பிணிதீர்த்தல், கண்டிப்பெரஹரா, சமயத் துறையில் ஆர்வமின்மை, கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அளிக்கப்படும் சலுகைகள், வீடுகட்டும் முறை, உணவுப் பழக்கங்கள், விவாக, மரணச் சடங்குகள், சிங்களமொழி எண்மானம், நூல்கள், கல்வெட்டுகள் முதலியன பற்றிப் பல பயனுள்ள செய்திகளைக் கூறுகிறான்.

எளிய நடையில் எழுதப்பட்ட இந்நூல் பொதுசனங்களின் கவனத்தைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. “றொபின்சன் குறு}சோ” என்ற பிரசித்தமான கதையை எழுதிய டெஃபோ என்ற ஆங்கில இலக்கிய வல்லுநர் இந்நூலினால் கவரப்பட்டுப் பல கருத்துக்களை அதிலிருந்து எடுத்து கொண்டார்.

இந்நூல் அக்கால நிலையை உணரப் பெரிதும்உதவும் என்பதில் ஐயமில்லை. எனினும் அதை எழுதியவன் கல்விப் பயிற்சி பெரிதும் உடையனல்லன். கற்றோருடன் பழகும் வாய்ப்புப் பெற்றிலன். கறீஸ்தவ மதமே பெரியது. வெள்ளை இனத்தவரே உயர்தனிப் பெருமையுடையர் என்ற நம்பிக்கையுடையவன். அதனால் காய்தல், உவத்தல் அகற்றித் தான் கண்டுகேட்டவற்றைக் கூறுவான் என எதிர்பார்த்தல் இயலாது. ‘அரசன் தன் விருப்பப்படி நடக்கும் கொடியவன்’ என்ற கூற்றுக்கு நேர்மாறாகப் பல விடயங்களை அவனே கூறுகிறான். அரசனை வெகுதூரத்தில் இரு முறை கண்டான் எனினும், தான் நேரே கண்டதாக வாசகர் நம்புமாறு அவனை வர்ணித்துள்ளான். பால்டியஸ்; என்ற டச்சுமதபோதகர் இலங்கை பற்றி எழுதிய நூலை இவன் பார்த்துப் பல விடயங்களை அறிந்துள்ளான். இக்குறைகளை மனதிற் கொண்டு அவனது நூலைச் சரித்திர மாணவர் பயன்படுத்த வேண்டும்.

2. மூத்த றைக்குளோவ் வான்கோயன்ஸ்
(1660 - 61@ 1663@ 1664 - 75)

வான்கோயன்ஸ் 1619, ஆனி 24-ல் ஓர் அரசாங்க ஊழியனின் மகனாக றீஸ் என்னுமிடத்திற் பிறந்தான். இவன் 1628-ல் ஒன்பது வயதுச் சிறுவனாய்த் தன் பெற்றோருடன் கிழக்கிந்திய தீவுகளுக்கு வந்தான். விரைவில் அவர்களிருவருமிருக்க, இவ்விளைஞன் கம்பனியின் சேவையிற் சேர்க்கப்பட்டான். அவனது திறமை அதிவிரைவில் வெளிப்பட்டது. பதவியுயர்வுகள் ஒன்றின் மேலொன்றாய் வந்தன@ பதினைந்து ஆண்டுகளில் அவன் ‘இந்திய விசேட ஆலோசகர்’ பதவியை எட்டினான். 1653-ல் இலங்கையிலும் மலையாளத்திலும் போர்த்துக்கேயருக்கு எதிராகப் போரிட அனுப்பப்பட்ட படைக்குத் தலைமை தாங்கினான். ஐரோப்பாவிற் சிறிதுகாலம் விடுமுறையைக் கழித்தபின் மீண்டுவந்து, 1656-ல் கடற்படைத்தளபதி (அட்மிரல்) பதவிபெற்றுப் போர்த்துக்கேயருடன் போர் புரியலானான். அவன் பதவி சோழமண்டலம் சூரத், இலங்கை, வங்காளம், மலாக்கா என்பவற்றின் கொமிசாரி (பதிற்றலைவன்), சுப்பறின்ரென்டென்ற், அட்மிரல், கொமாண்டர் என்பதாம். இலங்கையிலிருந்து போர்த்துக்கேயரைத் துரத்தியபின், அவன் கொழும்பைத் தளமாகக் கொண்டு அவர்களை முன்னின்று நடாத்தினான். இலங்கையின் தேசாதிபதியான அட்றியான் வான்டேர் மேய்டென் பேரளவுக்கு முதலிடம் வகித்தானேயன்றிக் கோயன்ஸே முழுத்திட்டங்களையும் நடாத்தினான். இருவர் கருமமாற்றும்போது பல சிக்கல்கள் எழுந்தன. 1660-ல் தற்காலிகத் தேசாதிபதி ஆனான். 1663-ல் அவனே மேய்டெனுக்குப் பிறகு இலங்கையின் தேசாதிபதியாயும் ‘டைரக்ட’ராயும் பதவியேற்றான். 1663 மார்கழி 26-ல் இப்பதவியை ஜேக்கப்ஹ{ல் ராட் கையில் ஒப்புவித்த போது அவன் எழுதிய நினைவுக் குறிப்புச் சொற்ப காலத்துள் அவன் பெற்ற அனுபவத்தைக் காட்டுகிறது.

1664-ன் பிற்பகுதியில் பட்டேவியாவினின்றும் மீண்டு வந்து இரண்டாம் முறை தேசாதிபதியாகப் பதவியேற்று 1671 வரை அதை நிர்வகித்தான். அவ்வாண்டு அவன் மகன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டான். தந்தை இங்கு 1765 வரை தங்கியிருந்து, ‘சுப்பறின்ரென்டென்ற்’ பதவி வகித்துத் தன் மகனைத் தன் சிந்தனைப் போக்கிற் பயிற்றித்தான் இங்கிருந்து சென்ற பின்னரும் தன் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுமாறு செய்து வைத்தான். இங்ஙனம் சுமார் 17 ஆண்டுகள் அவனே இலங்கையில் டச்சுக்காரர் அனுட்டித்த கொள்கைகளின்; ஒருமைப்பாட்டுக்குக் காரண புருடனாய் விளங்கினான்.

அக்கொள்கையின் அத்திவாரமான நம்பிக்கைகள் இலட்சியங்கள் சிலவற்றை அவன் இடைவிடாது தன் கண்முன் நிறுத்தியிருந்தான். அவன் கொள்கையின் ஒரே நோக்கம் இலங்கைத்தீவு முழுவதையும் டச்சுக்காரர் கட்டியாள வேண்டும்@ ஓரிருபகுதிகளையன்று என்பதே. அதன் சகல இலாபங்களையும் முற்றாக அனுபவிக்கவும், அங்கு அச்சமின்றி நிரந்தரமாக, அமைதியான வாழ்க்கை நடாத்தவும் அது முழுவதும் அவர்கள் கைப்படல் வேண்டும். அதன் எப்பகுதியேனும் பிறிதொரு ஐரோப்பிய வல்லரசின் கைப்பட்டாலும், அன்றேல் அதன் நடுப்பக்கத்தில் சுதேச மன்னன் ஆணை செலுத்தினாலும் அதனால் டச்சுக்காரர் பெறத்தக்க பூரண பயன் அவர்க்குக் கிட்டமாட்டாது. ஆண்டுதோறும் நாட்டின் வரவு செலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகை அதிகரித்தமையைச் சுட்டிக்காட்டி அவன் தீவின் சகல செல்வங்களையும் பயன்படுத்தி வருவாயைப் பெருக்கினாலேயே இத் துண்டுவிழும் தொகையை நிரப்பலாம் என்றான். முதலில் இராணுவச் செலவு அதிகரிக்குமெனினும், அதனால் உள்நாட்டை அடக்கியாளலாம். அங்கிருந்து பெருவருவாய் கிடைக்கும் என்ற தர்க்கமிட்டான். உள்நாட்டுப் பாக்கு வணிகத்தால் ஒன்பது லட்சம் கில்டர் பணம் கிடைக்கும் அதைச் சீலைவாங்கப் பயன்படுத்தி அதனின்;றும் 60 வீத லாபம் பெறலாம். பிற வாணிகத்தாலும் வரிகளாலும் மொத்தம் 19 லட்சத்து 80 ஆயிரம் கில்டர் ஆண்டு தோறும் வருமானம் பெறலாம் என்று கம்பனி அதிகாரிகளுக்கு ஆசைகாட்டினான்.

அவனது திட்டம் தென்னிந்தியாவையும் தழுவிநின்றது. கிராந்கனு}ர் முதல் நாகபட்டினம் வரை தென்னிந்திய கடற்கரைப்பகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்து இலங்கை வரை நடைபெறும் தனிப்பட்டவர்களின் வணிகத்தைத் தடைசெய்து, கம்பனியே வணிகத் தனியுரிமையை எடுத்துக் கொள்ளவேண்டும். தூரத்துக் குடியில் கோட்டைகட்டி அதற்கும் இலங்கைக்குமிடையில் நடக்கும் வணிகம்அந்நியரால் ஆபத்துக்குள்ளாகாமல் தடுக்க வேண்டும் எனக் கருதினான். அன்றியும் ஐரோப்பாவிலிருந்து டச்சுக்காரரை அழைத்து வந்து இலங்கையிற் குடியேற்ற வேண்டும்@ அதற்கு இத்தீவிலும் நல்ல இடம் கீழ்நாடு முழுவதிலும் வேறில்லை என்றும் நம்பினான். இம்மாபெருந் திட்டங்கள் அவன் இரத்தத்தில் நன்கு ஊறிவிட்டன. அவற்றின் மாண்பை யறியாமற் செலவுபற்றி ஓயாது பேசும் மேலதிகாரிகளைக் குறித்துப் பெரிதும் ஆத்திரங்கொண்டான். ஓர் அரிய சந்தர்ப்பம் அநியாயமாகப் புறக்கணிக்கப்படுகிறதே என ஏங்கினான். அவன் மேலதிகாரிகளுக்கு எழுதிய நிருபங்களில் அவனுக்கு இத்தீவின் மீதிருந்த பெரும் பற்று வெளிப்படுகிறது. அதனால் அவன் அதைப்பற்றி எப்போதும் மிகைபடப் பேசினான். அவன் இத்திட்டங்களுடன் ஐக்கியமுற்று, அவற்றிலுள்ள குறைகளைக் காணும் ஆற்றலற்றவனாய் அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலுள்ள தடைகளைப் பற்றிச் சிறிதும் நினைத்தானல்லன்.

அவனது எழுத்துக்களில் அவனது இடையறா முயற்சியும், ஓயாது பொங்கிப் பெருகும் சக்தியும் வெளிப்படக் காணலாம். போரில் திறமை காட்டியதுடன் நிர்வாகத்திலும் பெருங்காரியங்களைச் சாதித்தான். கோட்டைகளைத் திருத்துவதிலும் நிர்வாகத்துக்குரிய கட்டடங்களைத்திருத்துவதிலும் நிர்வாகத்துக்குரிய கட்டடங்களை அமைப்பதிலும் பேரூக்கங் காட்டினான். மலையாள, சோழமண்டலக் கரை, இலங்கையின் வட, கீழ் கரை, வன்னி என்பவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளான். கற்பிட்டியையும் திருக்கோணமலையையும் இணைத்து இலங்கையின் கிழக்கு மேற்கு வாணிகத்தைப் பெருக்கத் திட்டமிட்டான். (ஆனால் இது நிறைவேறவில்லை) பொருளாதார அரசியலடிப்படையில் முஸ்லிம்கள், போர்த்துக்கேயர், துப்பாசிகள் மீது பெருவெறுப்புக் கொண்டான். அவனது மனத்துக்குகந்த பொழுது போக்கு கமத் தொழிலே. இலங்கையின் நெல் விளைவைப் பெருக்கிச் சுயதேவைப் பூர்த்தி பெற்ற நாடாக்க வேண்டும் என விரும்பினான். இராணுவத்தினர் ஒழுக்கந்தவறி நடப்பதைக் கடுமையாகக் கண்டித்தான். பறங்கியர் சுயமரியாதையும் விடா முயற்சியுடையோராய் முன்னேறி இலங்கையின் பயனுள்ள பிரசைகளாதல் வேண்டும் எனக் கனவு கண்டு அதற்காகப் பலவாறு முயன்றான். கொழும்பில் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தினான். கொழும்பு, காலி, யாழ்ப்பாண நசர நிர்வாகத்தை சீர்திருத்தனான். நகர நிர்வாகத்தினர் தர்மச் செயல்கள் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குவழி காட்டினான். நில உடைமை இடாப்புகளைச் சீர்திருத்தக் கம்பனி புராதனமான நில வரியால் வரும் முழு வருமானத்தையும் பெற ஆவன செய்தான்.

வான்கோயன்ஸ் இரு முறை மணஞ் செய்தான். அவன் 1655-ல் தாயகம் சென்று 1656 கார்த்திகையில் திரும்பி வரும் போது அவனது முதல் மனைவி ஜேக்கோ மினா றோசெகாட்டும், 14 வயது மகன் றைக்குளோவும் உடன் வந்தனர். 1663-ல் அவன் இலங்கைத் தேசாதிபதியாக நியமனம் பெற்ற போது அவன் பட்டேவியாவில் மகா தேசாதிபதியும் ஆலோசனைச்சபையும் கேட்கத் தான் இலங்கைக்குப் போக இயலாது என முறையிட்டாள். ஆனால் வான்கோயன்ஸ்அங்கு சென்று அதிகாரிகளின் மனத்தை மாற்றி இப்பதவிக்குத் தன்னையே நியமிக்கச் செய்து வந்தான். அம்மனைவி இறக்க எஸ்தர் சொலெம் என்பவளை மணந்தான். இவ்விரு மனைவியரினதும் ஒரு குழந்தையினதும் சடலங்கள் புதைத்த நினைவுச் சின்னம் ‘வூல்வென்டால்’ தேவாலயத்தில் உள.

1675-ல் வான்கோயன்ஸ் ரைடக்டர்-ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுப் பட்டோவியாவுக்குச்சென்றான். அப்போது மகளுக்கு வழிகாட்டும் பொருட்டு எழுதி வைத்துச் சென்ற ‘நினைவுக் குறிப்புகள்’ (1675, சித்திரை, 12) அச்சிடப்பட்டுள்ளன. 1678 தையில் மகாதேசாதிபதியாகி, 1680-ல் ஓய்வு பெற்று நெதர்லாந்து சென்று சிறிது காலத்துள் 1682-ல் இறந்தான்.

வரலாற்றுச் சுருக்கமும் கால அட்டவணையும்

1635 - 2ம் இராஜசிங்கன் சிம்மாசனம் எறல்
1636 - டச்சுத் தேசாதிபதிக்குக் கடிதம் எழுதி உதவி வேண்டல்
1638 - போர்த்துக்கேயர் கண்டியை எரியூட்டல் - கண்ணொறுவா போர் - 900
போர்த்துக்கேயரும் டீ மெல்லோவும் இறப்பு - கொஸ்டர், வெஸ்டர்
வோல்ட்வருகை. டச்சுக்காரர் மட்டக்களப்பைக் கைப்பற்றல்.
1639 - வைகாசி 23 இராஜசிங்கனும் டச்சுக்காரரும் ஒப்பந்த மெழுதல்.
1639 - திருக்கோணமலை டச்சுக்காரர் வசமாதல். நீர்கொழும்பு டச்சுக்காரர் இராஜ
சிங்கன் வெறுப்பு.
1640 - பங்குனி காலி டச்சுக்காரர் கொஸ்டர் கண்டி சென்று வருகையில் கொலை
யுண்டு இறத்தல்.
1642 - போர்த்துக்கல் ஸ்பானிய ஆட்சியினின்றும் விடுதலை பெறுதல். 4-ம் ஜோண்
சிம்மாசன மேறல். டச்சுக்காரருடன் 10 ஆண்டுப்போர் ஓய்வு ஒப்பந்தம்.
1644 - கார்த்திகை, 10 கீழ்நாடுகளில் போர் ஓய்வு ஒப்பந்தம் டச்சுக்காரர் இராஜ
சிங்கனது யானைகளைக் கவர்தல் - போர்.
1646 - தேசாதிபதி தைஜன் திருப்பி அழைக்கப்படல். மற்;சூய்க்கர் புதிய தேசாதி
பதியாதல். முந்திய ஒப்பந்தத்திலுள்ள ஐயங்கள் நீக்கப்படல்.
1650 - மற்சூய்க்கர் விலகிச் செல்லல்.
1652 - போர் ஓய்வு ஒப்பந்த காலம் முடிவுறுதல் - களுத்துறை கைப்பற்றப்படல்.
1653 - டீ காஸ்ற்றோ - புதிய போர்த்துக்கேயதளபதியாதல்
1655 - டீ சௌசா குற்றிஞ்;ஞோ போர்த்துக்கேய தளபதியாதல். பாணந்துறை
வீழ்ச்சி.
1656 - வைகாசி, 12, கொழும்பில் போர்த்துக்கேயர் சரணடைதல்.
1658 - மன்னார், யாழ்ப்பாணம் வீழ்ச்சி
1659 - மாசி, டச்சுக்காரர் கற்பிட்டியைக் கைப்பற்றல் - பிரகடனமற்ற போர்.
கொட்டியாரத்துக்கு ஆங்கிலக் கப்பல் வருகை.
1660 - திருக்கோணமலையைக் கைப்பற்றிய தளபதி கோயன்ஸ் முயற்சி இராஜ
சிங்கன் அவனை அகற்றுதல் - றொபேட் நொக்ஸ் கொட்டியாரத்தை
அடைதல் - சிறைப்படல்
1664 - வான்கோயன்ஸ் தேசாதிபதியாதல்
1664 - மார்கழி, 21 - இராஜசிங்கன் அரண்மனை தாக்கப் படல் - கலகக்காரரை
அடக்க டச்சுக்காரரிடம் உதவிபெறல்.
1665 - புரட்டாதி, திருக்கோணமலை, மட்டக்களப்பை டச்சுக்காரர் பிடித்தல்
1667 - கோயன்ஸ் 4கோறளை, 7கோறளையைப் பிடித்தல்
1669 - இளைய வான்கோயன்ஸ் காலி முதல் பனமாவரை பிடித்தல்
1679 - கீழ்மகாணத்தில் நாடு கவரும் முயற்சி தோல்வி கலகம் ‘புரையோடும்
புண்’ இராஜசிங்கன் பல முனைப்போராட்டம் தொடங்குதல் டச்சுக்காரர்
1665 க்குபின் பிடித்தவற்றைக் கைவிடுதல் - திருக்கோணமலையில் இளஞ்
சிங்க வன்னியன் கலகம். இராஜசிங்கன் பிரஞ்சுக்காரருடன் தொடர்பு
கொள்ளல்.
1672 - பிரஞ்சுக் கப்பற் குழு கொட்டியாரத்தை அடைதல்
1675 - இராஜசிங்கன் மூன்றாம் முறை பெரும் போர் இளைய வான்கோயன்ஸ்
தேசாதிபதியாதல்.
1678 - மூத்த வான்கோயன்ஸ் பட்டேவியாவில் மகா தேசாதிபதி.
1679 - இளைய வான்கோயன்ஸ் பதவிதுறத்தல். லோறன்ஸ் பைல் தேசாதிபதி
யாதல். நொக்ஸ் தப்பிச் செல்லல்.
1682 - 87- முதுமையால் இராஜசிங்கன் போரில் ஈடுபடாமை
1687 - மார்கழி - 2-ம் விமல தர்ம சூரியன் சிம்மாசனமேறல் இராஜசிங்கன்
மரணம்.

உசாத்துணை நூல்கள்

மாணவர்க்குரியவை @

1. நம்முன்னோரளித்த அருஞ் செல்வம் - 2-ம் பாகம்
2. சரித்திரம் - ளு. கு. னந சில்வா.
3. இலங்கை ஒரு சுருக்க வரலாறு - கோட்றிங்ரன் - அத் 8,9
4. ஒல்லாந்தர் காலம் - கு. ஓ. ஊ நடராசா

ஆசிரியர்க்குரியவை :

1. யு ர்ளைவழசல ழக ழக ஊநலடழn கழச ளுஉhழழடள - குச. ளு. பு. Pநசநசய - ஊhயிவநசள ஓஐஐ - ஓஏஐ
2. ஊநலடழn ரனெநச றுநளவநசn சரடந - ர்ழசயஉந Pநசநசய ஊhயிவநச ஏஐஐஐ
3. ஊநலடழn யனெ வாந ர்ழடடயனெநசள 1658 - 1796. P. நு. Pநைசளை ஊhயிவநசள ஐ ரூ ஐஐ
4. வுhந குழரனெயவழைn ழக னுரவஉh Pழறநச in ஊநலடழn Pசழக. முயசடழ று. புழழநெறயசனநயெ.
5. னுரவஉh Pழறநச in ஊநலடழn (1658 - 1687) னுச. ளு. யுசயளயசயவயெஅ
6. யு ர்ளைவழசiஉயட சுநடயவழைn ழக ஊநலடழn டில சுழடிநசவ முழெஒ (1966 நுனநவழைn)
7. “ளுழஅந ஊழஅஅநவெள ழn சுழடிநசவ முழெஒ” னுச. மு. று. புழழயெறயசனநயெ ( ருniஎநசளவைல ழக ஊநலடழn சுநஎநைற. துயn. 1958)
8. “ஊநலடழn வாசழரபா Pரnவையn நலநள” - ஊ. சு. டீழணநச (“ர்ளைவழசல வுழனயல” ழுஉவ. 1954 (டுழனெழn))

வினாக்கள்

1. கண்டியரசன் இரண்டாம் இராஜசி;ங்கனின் வரலாற்றைக் கூறி, அவன் காலத்தில் கண்டியரசில் நிலவிய ஆட்சி முறையையும், அது கரையோர மாகாணங்களுடன் கொண்ட வாணிகத் தொடர்பையும் விவரிக்குக. (1649)
2. 2ம் இராஜசிங்கனும் டச்சுக் கிழக்கிந்திய கம்பனியாரும் போர்த்துக்கேயருக்கெதிராக ஒருவரது உதவியை மற்றவர் நாடுவதற்குக் காரணங்கள் யாவை? அவர்கள் எந்த முக்கிய அடிப்படைக் கருத்துக்களில் ஒற்றுமையுற்று ஒத்துழைக்கலாயினர்? (1950)
3. ஏன், எவ்வௌ;வழிகளில் டச்சுக்காரர் வட கீழ் மாகாணங்களில்அதிக ஆர்வங் காட்டினர்? (1951)
4. 1638-ல் டச்சுக்காரருடன் 2-ம்; இராஜசிங்கன் எழுதிய உடன்படிக்கையின் பிரதான அம்சங்கள் யாவை? இவ்வுடன்படிக்கையில் 1647-ல் ஏன், எப்படிப்பட்ட மாற்றங்கள் செய்தனர்? (1952)
5. 1638-ல் போர்த்துக்கேயர் கண்டி அரசைக் கைப்பற்றச் செய்த முயற்சியை விவரிக்குக. இம்முயற்சி இறுதியில் தோல்வியடையக்காரணமென்ன? (1953)
6. 11-ம் இராஜசிங்கனின் வெளிநாட்டுக் கொள்ளையினால் ஏற்பட்ட வெற்றி தோல்விகளைச் சுட்டிக் காட்டுக.(1958)
7. புறவரிப்படத்தின் உதவியுடன் டச்சுக் கிழக்கிந்திய கம்பனிக்கு மன்னார், புத்தளம். மாத்தறை, மட்டக்களப்பு, திருகோணமலை என்பவற்றின் முக்கியத்துவத்தை விவரித்து அதற்குரிய காரணங்களைக் கூறுக.(1962)
8. எமது நாட்டில் ஒல்லாந்தரின் ஆதிக்கம் நிறுவப் பட்டமையைப் பொறுத்தவரையில் பின்வரும் வருடங்களின் சரித்திர முக்கியத்துவத்தைப் பூரணமாக விளக்குக. 1) 1638. (2) 1656. (1963)

ஏழாம் அத்தியாயம்

இரு இறுதிச் சிங்கள மன்னரும் போர்த்துக்கேயரும்

2-ம் விமலதர்ம சூரியன் (1687 - 1706)

2-ம் இராஜசிங்கன் இறக்க அவன்மகன் மகாஸ்தானன், 2-ம் விமலதர்ம சூரியன் என்ற பெயருடன் அரியணை யேறினான். (1687). பௌத்த கோவிற் சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட அவன் அரசியல் அனுபவமற்றிருந்தான். எனவே, கண்டிப் பிரபுக்களின் அரசியலதிகாரம் வளரலாயிற்று. இராஜசிங்கனின் முதுமைப் பருவத்தில் அவர்கள் அரசியலில் கூடிய பங்கு பெறத் தொடங்கினர். இப்போது மேன்மேலும் அதிக பங்கு பற்றினர். குருமாரின் அறிவும் பிரபுக்களின் அனுபவமும் சேரவே ஆட்சி மக்களுக்கு இதம் அளிப்பதாய் அமைந்தது. இறந்த அரசனும் மகனைத் தேசாதிபதி பைலுடன் சமாதானமாக வாழுமாறு கூறினான் என்பர். நடவடிக்கைகளைத் தவிர்த்தனர்@ அனுபவமற்ற மன்னனிடம் இராஜதந்திர முறையில் தமக்கு வேண்டிய உரிமைகளைப் பெறலாம் எனக்கருதினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை.

அரசனது அவைக்களத்தினர் ஒரே குரலில் இலங்கைக் கரையோரப் பகுதியில் பிறநாட்டு வாணிகத்துக்குத் தடையேதும் இருக்கலாகாது. 1655-க்குப் பின் கைப்பற்றிய நிலங்களை ஒல்லாந்தர் உடனே திருப்பித்தரல் வேண்டும் எனக் கேட்டனர். ஒல்லாந்தர் துறைமுகங்களைத் திறந்து விட்டுத் தம்முடன் போட்டியிடும் வணிகருக்கு இடமளிக்க ஒருபோதும் சம்மதித்திலர். அரசனுடன் மோதல் ஏற்படாது தவிர்க்கும் பொருட்டு, நேர் விடைகூறாது, அரசன் புதிய ஒப்பந்தம் ஒன்றுக்குச் சம்மதிக்க வேண்டும் என்றும், தாம் கைப்பற்றிய பிரதேச உரிமைபற்றிய விரிவான பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டு மென்றும் கேட்டனர். புதிய உடன்படிக்கைக்கு அடிப்படையாக, கண்டி இராச்சியத்தின் வாணிகத் தனியுரிமை தமக்கே யளிக்கப்பட வேண்டும் என்றும், கண்டிப்பகுதிக் கறுவாவை அரசன் ஆண்டு தோறும் ஒரு தொகைப் பணம் பெற்றுக்கொண்ட தமக்கே தரல் வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தனர். தூது சென்ற டச்சு அதிகாரிக்குக் கிடைத்த பதில் கம்பனிக்கு அரசன் கடன் ஏதும் தரவேண்டிய தில்லையாதலால் அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை உடனே திருப்பித் தர வேண்டும் என்பதே. டச்சுக்காரரின் நிலை தளர்ந்தது. எல்லைப் பிரதேசத்தையும் மூன்று கோறளையையும் கை விட்டுப் பி;ன் வாங்கினர். கண்டியரசன் நியமித்த திசாவைகள் அவற்றின் பரிபாலனத்தை மேற்கொண்டனர். தேசாதிபதி பைல் பழைய உடன்படிக்கைப் பேச்சை நிறத்திக் கரையோரப் பகுதியைத் தாங்கள் போரில் கைப்பற்றியமையால் அது தங்கட்கே உரியது எனப் புதிய பாணியில் பேசத்தீர்மானித்தான்.

கண்டி நாட்டிற்குத் தேவையானசீலை வாங்கவும், பாக்கை விற்கவும் அரசன் இந்தியாவுடன் வணிகத் தொடர்பு கொள்ளல் கண்டி இராச்சியப் பொருளாதாரத்துக்கும் அவசியமாயிற்று. எனவே, கற்பிட்டி வழியே பாக்கு ஏற்றிய கப்பல் ஒன்று அரசன் கொடியுடன் அனுப்பப்பட்டது. அதை டச்சுக்காரர் தடுத்தனர். அரசன் துறைமுகங்கள் அனைத்தையும் தரும்படி கேட்டான். போர் தொடங்கும் என்ற பேச்சும் எழுந்தது. கம்பனி போரால் ஏற்படும் நட்டத்தைத் தாங்க ஆயத்தமாயுமில்லை. எனவே, அரசனின் கப்பல் ஒன்றுக்கு வெளியே செல்ல உத்தரவு அளிக்கப்பட்டது. ஆனால் பிற கப்பல்கள் தடுக்கப்பட்டன. இப்பூசல்களுக்கிடையிலும் ஆண்டு தோறும் கண்டிக்குப் பெருந்தொகைப் பொருள்கள் பரிசாக அனுப்பப்பட்டன. சில சமயம் அவற்றை அரசன் ஏற்க மறுத்தான். 1690-ல் அவனது பிரதேசத்தில் கறுவா சேகரிக்க இயலவில்லை.

அரசனுடன் வேற்றுமை வளரக் காரணமாயிருந்த மற்றொன்று டச்சுக்காரன் சமயக்கொள்கை. பைல் பிற சமயங்களை அடக்கும் சட்டம்; வைத்தான். அரசன் தனது சிங்களப் பிரசைகள் பௌத்த மதத்தை அனுட்டிக்கத் தடையேதும் இருத்தலாகாது எனக்கருதினான். மாத்தறைக் கண்மையிலுள்ள முல்கிரிகல, களனியா என்னுமிடங்களிலுள்ள பௌத்த கோவில்கள் புனித யாத்திரைத் தலங்களாயிருந்தன. கண்டி மக்கள் அங்கு ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் யாத்திரை செய்வர். அதனைத் தடுத்தால் அரசனும் மகாநாயகதேரரும் பெருங்கோபமடைவர் எனக்கருதிய டச்சு அரசாங்கம் வாளாயிருந்தது. அரசன் தாழ் பூமியிலுள்ள சிதைவுற்ற தாதுகற்பங்களைத் திருத்தவும், அபகரித்த கோவிற் சொத்துக்களைத் திருப்பிக் கொடுக்கவும் கட்டளையிட்டான். கிறீஸ்தவ குருமாருடைய கருத்துக்கு மாறாக அதிகாரிகள் அரசனைப் பகைக்கும் வகையில் சமயத்துறையில் கடும் நடடிவக்கைகளை எடுக்க அஞ்சினர்.

பைல் மீது தனக்கு நம்பிக்கையுண்ட என்று தெரிவித்த அரசன் பதிவியினின்றும் ஓய்வுபெற்றுச் செல்ல விரும்பியபோது அவன் தொடர்ந்து இருக்கவேண்டுமென விரும்பினான். அதன்படி பைல் மேலும் இரண்டாண்டு பதவி வகித்து, 1692-ல் விலகிச் சென்றான். அவனுக்குப் பின் தேசாதிபதியாகிய தோமஸ் வான்றீ இங்கு பதவிகள் வகித்து அனுபவம் பெற்றவன். அரசனுடன் முரண்பாடு ஏற்படாது நடந்து, கறுவா சேகரிக்கப் பூரண உரிமை பெற்றான். (மித மிஞ்சிக் கறுவா சேகரிக்கப்பட்டமையால், ஏற்றுமதி போக மீதியை எரிக்க வேண்டியதாயிற்று) சாலியர் கறுவா சேகரிக்க மனமின்றி அரசனின் பிரதேசத்துக்குட் சென்றபோது, அரசன் அவர்களைத்; திருப்பியனுப்பினான். அவர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு இலவச உணவுப் பொருட்கள் முதலிய பல சலுகைகள் வழங்கப்பட்டன. முத்துக் குளிப்பு மூலம் இக்கால முதல் டச்சுக்காரர் பெரும் இலாபம் பெறலாயினர். எனவே, கம்பனியதிகாரிகள் புதிய ஒப்பந்தம் எழுதும் பேச்சைக் கைவிட்டு, நிலவிய சமாதான சூழ்நிலையைப் பயன்படுத்தி வாணிகத்தின் முழு நன்மையையும் பெற்று வந்தனர். ஆனால் 1697 க்கு முன் அரசன் உபயோகித்தற்கு எனக் கற்பிட்டி, கொட்டியாரம், திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய துறைமுகங்களை அவர்கள் திறந்து விட்டனர். அவ்வாண்டு தஞ்சாவூரிலிருந்து அரசாண்ட நாயக்கர் குல மங்கையொருத்தியை அரசன் வதுவை செய்ய விரும்பிய போது, டச்சுக்காரர் அவளையும் பரிவாரங்களையும் கொண்டுவர ஒரு கப்பல் கொடுத்துதவினர் (1706) பெகுவிலிருந்து வந்த குருமாருக்குத் தங்க வசதி அளித்துக் கண்டிக்கு அனுப்பினர்.

ஆனால் கண்டியரசனுக்கு வர்த்தக உரிமையளித்தமையால் கம்பனிக்குரிய துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதி குறையலாயிற்று. கண்டி மக்கள் அரசகட்டளைப்படி புத்தளத்திலேயே தமக்கு வேண்டிய உப்பு, பருத்தி ஆடைகள் முதலியவற்றைப் பெற்றனர். அவர்களது பாக்கு அதனு}டாகவே இந்தியாவுக்குச் சென்றது. எனவே கொழும்பில் பொருட்கள் பெறமுடியவில்லை. டச்சு அதிகாரிகள் தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு காலி, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய தம் துறைமுகங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதிச் சீட்டு வழங்கினர். அரசன் கோபிப்பான் என்று கருதித், தாம் பிரஞ்சுக்காரருடன் போரில்; ஈடுபட்டிருப்பதால்; இக் கொள்கை தற்பாதுகாப்புக்கு அவசியமெனச் செய்தியனுப்பினர்.

2-ம் விமலதர்மசூரியன் இருபது ஆண்டுவரை அரசாண்டு நாட்டு மக்களுக்கு அமைதியையும் செல்வச் செழிப்பையும் அளித்தான். தலைநகரைப் பெரிதாக்கி, தலதா மாளிகையை மூன்று மாடிக் கட்டடமாயமைத்தான். கோவில் நிலங்கள் பரம்பரைச் சொத்தாகாமற் பார்த்துக்கொண்டான். தன் சமயத்துக்கும் பிற மதங்களுக்கும் ஆதரவு நல்கினான். அவனது சமாதானக் கொள்கை காரணமாகவே அவன் துறைமுகங்களைத் திறக்கச் செய்யும் வாய்ப்புக்கிடைத்தது. ஒரு நூற்றாண்டுக்குப்பின், மலை நாடு அந்நியர் படையெடுப்புக்களினின்றும் தப்பி, அமைதியை அனுபவிக்கலாயிற்று. 1706-ல் இம்மன்னன் உயிர் நீத்தான்.

வீர நரேந்திர சிங்கன் (1706 - 1739)

இவனுக்குப்பின் இவனது மகன் வீர நரேந்திர சிங்கன் அரசனானான். குண்டசாலையில் அரண்மனையமைத்து வாழ்ந்தமையால், அப்பெயராலேயே அவன் பலராலும் அழைக்கப்பட்டான். 17 வயதினனான அவனுக்கு மாறாக ஒரு கட்சி எழுந்து பட்டிய பண்டாரன் என்பவனை அரசனாக்க முனைந்தது எனினும் அவனது ஆதரவாளரே வெற்றி பெற்றனர்.

டச்சுக்கம்பனி துறைமுகங்களைத் திறந்துவிட்டமையால் ஏற்பட்ட நட்டத்தைக் கணித்தது. நெதர்லாந்திலுள்ள அதிகாரிகள் ஐந்தாண்டுகட்கு முன்னரே துறைமுகங்களை மூடிவிட வேண்டும் எனக் கட்டளையிட்டனர். ஆனால் தேசாதிபதிகள் அமைதியைக் குலைத்துக், கிடைக்கும் கறுவாவையும் கிடைக்காமற் செய்யவிரும்பாது வாளாயிருந்தனர். இப்போது பழைய அரசனின் சுகவீனமும் புதிய மன்னனின் இளமையும் அவனுக்கு எதிராக எழுந்த கலகமும் அவர்களைத் துணி;ந்து துறைமுகங்களை மூடிவிடச் செய்தன. இதனால் மலையகத்து மக்கள் தமக்கு வேண்டிய இறக்குமதிப் பொருட்களைக் கம்பனியிடமே வாங்க வேண்டியதாயிற்று. முதலில் இதனால் அவர்கள் பாதிக்கப்படாதவாறு முஸ்லிம் வணிகர் கொடுத்த விலைக்கே கம்பனியும் பண்டங்களை விற்றது. ஆனால் நாட்கள் செல்லச்செல்லக் கம்பனி கடும் சட்டங்களைக் கொணர்ந்தது. அன்றியும் எல்லைப் பகுதிப் பிரபுக்களுக்கும் அரசனுக்கும் வாணிகத்தின் மூலம் கிடைக்கும் சுங்கவரி இல்லையாயிற்று. அரசன் தன் அதிகாரம் பலமாக நிலை பெறும் வரை காத்திருந்தான். டச்சுத்தூதுதன் ஒருவன் முரட்டுத்தனமாக நடந்த போதும், அரசன் கம்பனியின் மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டான். வன்னியர் இருவர் டச்சுக்காரருக்கு மாறாக எழுந்து அரசனின் பாதுகாப்பை நாட, அவர்களை டச்சுக்காரர் வசம் ஒப்புவித்து கம்பனி முல்லைத்தீவில் ஒரு கோட்டை கட்டவும் அனுமதித்தான். ஆனால் தருணம் வந்ததும், 1713-ல் தன் குடிகள் டச்சுக்காரருடன் வாணிகம் செய்யாது, மலைநாட்டிலிருந்து கரையோரப் பகுதிகளுக்குச் செல்லும் வழிகளிலுள்ள முட்படலைகளை அடைத்து விட்டான். ஆண்டுதோறும் வரும் தூதுவர் அவற்றை வாணிகத்துக்குத் திறந்து விடும்படி கேட்ட போது, அவர்கள் துறைமுகங்களைத் திறந்து விட்டதும், தான் அவற்றைத் திறப்பதாகக்கூறினான். டச்சு அதிகாரிகள் தாய் நாட்டிலிருந்து வந்த கட்டளையைத்தாம் மீற வியலாது என்றனர்.

அரசன் கீழ்கரை முஸ்லிம் வணிகரைப் புத்தளத்துக்கு வாணிகஞ் செய்யவருமாறு அழைத்தான். அவர்களும் டச்சுகாரின் கட்டளைகளுக்கு மாறாகச் சரக்குகளுடன் வந்திறங்கினர். சிலாபத்தில் அரசன் முத்துக் குளிக்க முயன்றான். அரசன் அதிகாரிகள் பெரும் படையுடன் இப்பகுதியிற் சஞ்சரித்தனர். எனவே, டச்சுக்காரர் கற்பிட்டி, அரிப்பு என்னுமிடங்களில் படைகளைப் பெருக்கினர். கடலில் ஒரு கப்பல் சுற்றித்திரிந்து வியாபாரிகள் வராமல் தடுத்துவந்தது. அரசன் தன் பிரதேசத்துக் கூடாகத் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் டச்சுக்காரர் கடிதம் அனுப்பலாகாது எனத்தடுத்தான். டச்சுக்காரர் நெல் பெறவும் இயலவில்லை. அவர்கள் பாக்கு வாங்க அதிகவிலை கொடுத்தனர் எனினும் அரசன் திருப்தியடைந்திலன்.

டச்சு ஆட்சியிலிருந்த பிரசைகள் கலகஞ் செய்தனர். சாலியர் (கறுவா பதனிடுவோர்) கண்டி இராச்சியத்துக்குட் சென்றனர். அரசன் கட்டளையின்றேல் நாம் கறுவா சேகரிக்க இயலாது எனக் கூறினர். அரசனின் அதிகாரிகளே இக்கலகங்களைத் தூண்டினர் என நம்பிய டச்சுக்காரர் அரசனை வேண்டியும் அவன் தலையிட மறுத்தான். சாலியருக்குச் சகல வசதிகள் அளித்தும், அவர்கள் எதிர்த்துக் கம்பனி ஊழியரைத் தாக்கினர். படையுதவியின்றிக் கறுவா சேகரித்தல் அரிதாயிற்று. 1723-ல் கறுவா சிறிதும் சேகரக்கப்படவில்லை. பட்டேவியாவிலிருந்து படைகள் வந்ததும் பயன் விளையவில்லை. புரட்சிக்காரர் அரசன் கரையோரப் பகுதி ஆட்சியை ஏற்றுக் கொண்டான்@ இனிக் கம்பனிக்கு நாம் ஊழியஞ் செய்யோம் எனப் பறைசாற்றினர். அத்தனகலையில் டச்சுப் படைதோல்வியுற்றது. மல்வானை தரைமட்டமாயிற்று. கொழும்பை அணுகிய புரட்சிக்காரர் டச்சுக்காரருக்குப் பெரும் பொருள் நட்டத்தை ஏற்படுத்தினர். நாலு, ஏழு கோறளைகளின் திசாவைமார் கலகத்தலைவராயினர்.

தேசாதிபதி றம்ப்ஃப் இறந்தான். (1723). 1726-ல் அப்பதவிக்கு வந்த முப்பது வயதினனான பேதுருஸ்வூய்ஸ்ற் அஸெவெடோ ஆற்றிய கொடுஞ் செயல்களுடன் ஒப்பிடத்தக்க கொடுமைகளைப் புரிந்தான். இலங்கையில் டச்சு ஆட்சி வரலாற்றின் இருட்காலம் என இதனைக் குறிப்பிடலாம். குடிகளைக் கொல்லும் பைத்தியம் அதிகார வெறியால் அதிகரித்தது என்று சொல்வதை விட வேறு எவ்விதமாயினும் அவனது கொடுஞ்செயல்களுக்கு விளக்கங் கூறமுடியாது. இறுதியில் அவனைச் சங்கிலியிற் பிணைத்துப் பட்டேவியாவுக்கு கொண்டு போய்;;; விசாரித்து மரண தண்டனையளித்தனர்.

1732-ல் வந்த பிலாத் என்பவன் நிர்வாகக் குறைகளைக் களைந்து சீர்திருத்தத்தை ஏற்படுத்த முயன்றான். ஆனால் அதற்குமுன் சீயனேகோறளைப் பகுதியில் பெருங்கலகங்கள் ஏற்பட்டன. அவனுக்கு அடுத்த தேசாதிபதி காலத்தில் சாலியர்களது வேலை நிறுத்தம் எங்கும் பரவியது. அவர்களது குறைகள் பல நீக்கம் செய்யப்பட்டான். சார்லியர்களேயன்றி விவசாயிகளும் டச்சு ஆட்சியில் பெரு வெறுப்புற்றனர். அவர்கள் சேனைச் செய்கையின் பொருட்டுக் கறுவா வளரும் காடுகளை அழிக்கலாகாது எனச் சட்டமியற்றப்பட்டது. அத்துடன் உறுதியின்றியிருந்த காணிகளைக் கம்பனி தனது என உரிமை பாராட்டியது அதுகுறித்த விலைக்குக் காணிக்காரர் வாங்கவேண்டியிருந்தது. தென்னை மரங்கள் மீது வழக்கமான 1ஃ10 க்கு மேலும் வரி அறவிடப்பட்டது. இத்துன்பங்களிடையே பாடசாலைக்குப் போகாதோர் குற்றப்பணம் கட்டவேண்டியதாயிற்று. அவர்கள் மனச்சான்றுக்கு மாறாகத் தம் மாடாடுகளை இறைச்சிக்கு விற்கமாட்டாராதலால், பலாத்காரமாகவே பறிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பௌத்த இந்துக்ளும் இதனை எதிர்த்தனர். பெரும் புரட்சி ஏற்பட்டது. பேலியகொடையிற் புதிதாக உண்டாக்கிய கோப்பித் தோட்டம் அழிவுற்றது. சாராயத் தொழிற்சாலைகளில் சாராயம் நிலத்திற் பெருக்கெடுத்தோடியது. அதைக் காத்து நின்ற சுதேசப்படைவீரர் கைதியாயினர். பல புரட்சிக்காரர் சுட்டுவீழ்த்தப்பட்டனர். தேசாதிபதியின் ஆலோசனைச் சபை புரட்சிக்காரரின் சகல வேண்டுகோளையும் ஏற்றுப் புதிய வரிகளை நீக்கியது. எனினும் குழப்பமான சூழ்நிலையில் யாது நிகழுமோ என்றஞ்சிப் பட்டேவியாவிலிருந்து படைகளையனுப்புமாறு செய்தியனுப்பியது. காலி, மாத்தளைப் பிரிவுகளிலும் புரட்சி ஓங்கியது. மூன்று, நாலுகோறளைகளின் திசாவையான லெவ்கே றால அத்தனகல வரை வந்த படையைத் துரத்தியடித்துக் கொழும்பு வரை பின்பற்றிச் சென்றான்.

வான் இம்மோவ் 1736-ல் தேசாதிபதியானான். திறமையுடன் நிலைமையைச் சமாளித்தான். சாலியரைத் திருப்திப்படுத்தியும், கலகத்தலைவரை நாடுகடத்தியும், அரசன் புரட்சிக்காரருக்கு ஒருவித ஆதரவும் அளிக்க மாட்டான் என்ற வாக்குறுதியைப் பெற்றுப் பிரசாரஞ் செய்தும், தன் கருமத்தைச் சாதித்தான். கலகக்காரர் கண்டிப்பகுதியில் இடம் பெற்றனர் எனினும், 1738-ல் அவனுக்கு டச்சுக்காரர் அனுப்பிய பரிசுகளை உவந்து ஏற்றான். அவன் உடல் நலம் குன்றியிருந்தமையால் அவர்கள் கொழும்பிலிருந்து வைத்தியன் ஒருவனையனுப்பினர் 1739-ல் அரசனிறந்தான்.

இவ்விரு அரசர்களும் டச்சுக்காரருடன் சமாதானமாக வாழ்ந்து தம் குடிகளுக்கு அமைதியான வாழ்;வை அளித்தனர். ஆனால் பிந்தியவன் காலத்தில் டச்சுக்காரர் துறைமுகங்களை மூடியமையால் வாணிகம் குறைந்தது. கரையோரப் பகுதியில் சுதந்திரக் கனல் கொழுந்து விட்டு எரியலாயிற்று. புரட்சி அலையலையாக நிகழ்ந்தது. ஆயினும் அரசன் நேரடியாகப் புரட்சித் தலைவர்களுடன் சேராமையால் அவர்கள் வெற்றி பெற இயலவில்லை.

உசாத்துணை நூல்கள்

மாணவர்க்குரியன :-
இலங்கைச் சரித்திரம் - விஜயன் விக்ரோறியா

வினாக்கள்

1. 2-ம் இராஜசிங்கனது அயல் நாட்டுக் கொள்கைக்கும்; அவன் மகனது அயல்நாட்டுக் கொள்கைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.
2. வான் இம்மோவ்;; தேசாதிபதி பற்றி ஒரு சரித்திரக் குறிப்பு எழுதுக.

எட்டாம் அத்தியாயம்

கண்டியில் மணத் தொடர்பு
நாயக்கருடன் மணத் தொடர்பு

நரேந்திர சிங்கன் இறந்தபோது, 1594 முதல் கண்டியில் அரசு செலுத்திய சிங்கள அரச குலம் மறைந்தது. சேனாரதன் காலமுதல் இந்திய அரசகுடும்பத்தில் பெண் எடுக்கும் விருப்பு மிகுந்தது. அவன் தன் மகனுக்கும் பேரனுக்கும். மதுரையிலேயே மணஞ் செய்வித்தான். அக்காலத்தில் மதுரையில் அரசு புரிந்த நாயக்கர் குலத்தினர் முன்னர் விஜயநகர வேந்தரின் கீழ் தேசாதிபதியாயிருந்தது. பின்னர் அந்நகரம் அழிவுறச் சுதந்தர மன்னராகியவர்கள் எனவே அவர்கள் தமிழ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட வடுகர் எனப் படும் தெலுங்கர், நரேந்திரசிங்கன் பிட்டிநாயக்கரின் மகள் உடுமலாதேவியை மணந்தான். அவளுக்குப் பிள்ளைகளில்லை. அரசனிறக்கும்போது அவளது சகோதரனையே தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்தான்.

ஸ்ரீ விஜயராஜசிங்கன் (1739 - 1747)

இவன் கண்டிக்குத் தெற்கே ஹங்குரங்கட்டையில் வாழ்ந்தமையால் அப்பெயராலேயே அழைக்கப்பட்டான். 1739-ல் சிம்மாசனமேறியபோது ஸ்ரீ விஜயராஜசிங்கன்என்ற பெயரைச் சூடிக்கொண்டான். நரேந்திரசிங்கனின் இளையமனைவி (சிங்களப் பெண்)யின் பிள்ளை உனம்புவ பண்டாரனை அரசனாக்க ஒரு சாரார் முனைந்தனர். ஆனால் அது கைகூடவில்லை. அவனுக்கு ஒருவித இடுக்கணுஞ் செய்யாது அவனை அரச சபையிலிருக்கவிட்டான் மன்னன்.

ஸ்ரீ விஜயராஜசிங்கன் புகுத்திய புதுமைகள்

புதிய வேந்தன் நாட்டில் இல்லாத புதுவழக்கங்கள் பலவற்றைப் புகுத்தினான். அந்நியர், பிரபுக்கள் உட்பட எவராயினும் அரசன் முன் வீழ்ந்து வணங்கல் வேண்டும்: தலைநகரில் குதிரை, பல்லக்கு முதலிய வாகனங்களிற் செல்லலாகாது என விதித்தான். அரசன் மைந்தரின்றி இறந்தால் அரசனது இரத்தத் தொடர்புள்ள உறவினருக்குப் பதிலாக அவனது மனைவியின் சகோதரன் பட்டமெய்தினான். அரசசபையில் நாயக்கர் குலத்தோரே பொறுப்பான பதவிகளை வகித்தனர். மாகாண நிர்வாகம் பழைய முறையில் சிங்களத் திசாவைமாரின் கீழ் இருந்தது. அவர்கள் டச்சுக்காரரைத் துரத்துவதற்குக் கரைநாடுகளில் கலகங்களைத்; தூண்டவதும், அந்நியருதவியைப் பெறுவதுமாகிய கொள்கையைக் கடைப்பிடித்தனர். நாயக்கரோ டச்சுக்காரருடன் நேரே மோதும் போக்குடையோர். இவ்விருசாரரினதும் அயல் நாட்டுக் கொள்கை வேறுபாட்டால் அரசசபைக் கருமங்கள் இருவேறு திசையிற் செல்லலாயின. இதுவே இறுதியில் நாயக்கர் குல ஆட்சிக்கும்; முடிவை உண்டாக்கியது.

டச்சுக்காரருடன் கொண்ட தொடர்பு

ஸ்ரீ விஜயனின் மாமன் நரேனப்பநாயக்கர் அரச சபையில் பலம் பெற்று டச்;சு அரசியல் விவகாரங்களை நடத்தலானான். இந்தியாவில் பாக்கு முதலிய பொருட்களின் விலையை நன்கு அறிந்த அவன் டச்சுக்காரர் கொடுக்கும் தொகை பாக்கைக் கரையோரப் பகுதிக்கு எற்றிச்செல்லும் செலவுக்கும் காணாமலிருப்பதைப் கண்டான். கறுவாவுக்குத் தரும்சில ஆயிரம் நாணயம் அரச வருமானத்தைச் சற்றும் பெருக்காதாகையால், டச்சக்காரர் ஆண்டுதோறும் அனுப்பும் பரிசுகளையனுப்பி அரசனது பிரதேசத்தில் கறுவா சேகரிக்கவும்;, யானைகளைக் கொண்ட செல்லவும் உரிமை கேட்டபோது மறுத்துவிட்டான். 1740-ல் இலங்கையை விட்டுச்சென்ற கப்பல்கள் வெறுமையுற்றிருந்தன. அக்காலத்திலிருந்த விவேகமிக்க தேசாதிபதி வான் இம்மோவ் அரசனது கேள்விப்படி துறைமுகம் ஒன்றையளிக்க விரும்பியும் பட்டேவிய அரசாங்கம் சம்மதித்திலது. அவன் கூட நாயக்கரது இராஜீய அனுபவத்தைக் கணிக்கத் தவறிவிட்டான். அவர்கள் பரந்த இந்திய உபகண்டத்தின் அரசியல் விவகாரங்களையறிந்தவர்கள். ஐரோப்பிய இனத்தவர் ஆணைசெலுத்தப் போட்டியிடுவதைக் கண்டவர்கள். எனவே துணிவுடன் எதிர்த்துச் சூழ்ச்சி செய்யலாயினர்.

அரசனின் தலையீடு மிகுதல்

டச்சுப் பிரதேசத்தில் அரசனது தலையீடு அதிகமாயிற்று. அத்தனகலையில் அணையொன்று கட்ட முயன்ற டச்சுக்காரரை அவன் தடுத்து விட்டான். டச்சுத்தூதுவன் சபையில் முறையிடவும் அனுமதி மறுத்தான். குடிகள் கம்பனிக்கு வரிகொடாது தடுக்கப் பட்டனர். எல்லைகளில் பூசல்கள் தேன்றின. டச்சுக்காரர் தமது எல்லைக்குள் ஒரு கோவில் கட்ட முயன்ற போது அரசன் அதைத் தடுத்தான். இம்மோவின் கொள்கைப்படி டச்சுக்காரர் இத்தலையீடுகளையும் அவமானத்தையும் சகித்துக் கொண்டனர். சீயன்ன கோறளையில் ஒன்பது கிராமங்கள் கைப்பற்றப்பட்டன. நீர்கொழும்புக்கும் கற்பிட்டிக்குமிடையில் முஸ்லீம்களின் கள்ளக்கடத்தல் வியாபாரம் மிகுந்தது. அரசனின் மாமன் கப்பல்களில் பாக்கு ஏற்றியனுப்ப முயன்ற போது தடுக்கப்பட்டான். அதனால் கோபமடைந்த அவன் டச்சு அதிகாரிகள் சிலரையும் கைதுசெய்து, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட யானைகளையும் கைப்பற்றினான். இறுதியில் அவனது கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

பௌத்த மதப் பணி

நாயக்கர் மன்னர் இலங்கைக்கு ஏற்ப, பௌத்தர்களாகியதுடன் நரேந்திரசிங்கன் காலத்திலிருந்த கீழ்நிலையிலிருந்து பௌத்தமதத்தை உயர்த்தவும் முனைந்தனர். கோவில்கள், விகாரங்கள் பல புதுப்பிக்கப்பட்டன. விழாக்களும், சடங்குகளும் மிகுந்தன. இராணி தனக்கு முன்வந்த விசேட ஊக்கம் கொண்டாள். அரசனும் அரசியும் தூண்டியதால் பல இளைஞர் பௌத்த சங்கத்தில் சாமணேரராய்ச் சேர்ந்தனர். நூல்கள் பிரதி செய்யப்பட்டன.பிரசங்க மண்டபங்கள் பல நாடெங்கும் அமைக்கப்பட்டன. தர்மத்;தை உபதேசிக்க அறிஞர் பலர் தருவிக்கப்பட்டனர். சமய அறிவு சிறிதுமின்றிருந்த மக்களுக்கு அறிவுவிருந்து ஊட்டப்பட்டது. இலங்கையில் பௌத்த சங்கம் அழிந்து விட்டது என்று கூறுமளவுக்குக் குருமார் தொகை குறைந்திருந்தது. டச்சுக்காரர் மூலம் பெகு, அரக்கன், சீயம், தாய்லாந்து ஆசிய நாடுகளில் பௌத்தம் உயர்நிலையிலிருந்ததை அறிந்த மன்னன் அங்கிருந்து குருமாரைத் தருவிக்க முயன்றான். அவனது கடிதத்தைச் சீயம் நாட்டுக்கு எடுத்துச்செல்லும்படி டச்சுத்தேசாதிபதிக்குக் கட்டளையிட்டான். தேசாதிபதி இதனை ஓரளவுக்கு நிறைவேற்றினான். பின் இங்கிருந்து ஒரு தூதுக்குழுவைச் சீயம் நாட்டிலுள்ள அயோத்திக்கு ஏற்றிச் செல்ல ஒரு கப்பல் தரும்படி கேட்க, அதற்கும் உடன்பட்டான். ஆனால் இக்குழு புயலால் துன்புற்றது. ஒரு தூதுவனே அங்கு சென்ற மீட்டான். மனஞ் சோரமல், மன்னன் வேறொரு தூதுக்குழுவை யனுப்பினான். அக்குழு பரிசுப் பொருட்களைப் பட்டேவியாவில் விட்டு சீயம் சேர்ந்து, குருமார் கிடைப்பரோ என விசாரித்துக் கொண்டு பட்டேவியாவிற்கு மீண்டது. அங்கு மன்னன் இறந்ததைக் கேள்வியுற்று இலங்கைக்குத் திரும்பியது. சமயத் துறையில் உதவி செய்ய விரும்பாத டச்சுக்காரர் புது வேந்தனின் கருத்தையறியாது சீயம் நாட்டுக் குருமாரை அழைத்துச் செல்லலாகாது எனக்கூறி, அவர்களைக் கப்பலில் ஏற்றி இங்கு கொணர்ந்தனர். வழியில்ல புயலால் பலர் இறந்தனர். சிலரே மீண்டுவந்து நிகழ்ந்தவற்றை உரைத்தனர்.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 - 1782)

1747 ஆவணி 11-ல் விஜய ராஜசிங்கன் இறக்க, அவனது மைத்துனன் கீர்த்தி ராஜசிங்கன் அரசனானான். 14 வயதுச் சிறுவனான அவன் பெயரால் சிங்கள அதிகாரிகள் ஆட்சியை நடாத்தினர். தும்பர, மாம்பிட்டிய அதிகாரிகளே அக்காலத்தில் தலை சிறந்து விளங்கினர்.

பௌத்த மத மறுமலர்ச்சி

கீர்த்தி ஸ்ரீ அறிவும் திறமையும் உடையவன். குறைகளைக் களைந்து பௌத்த மதத்தைச் சீர்திருத்த முனைந்தான். ஊக்கமுடன் பௌத்த தர்மத்தைக் கற்றான். நாடெங்கும் அதனைப் போதிக்க நடவடிக்கை யெடுத்தான். சமய நூல்கள் பெருகவேண்டுமென்ற ஆர்வம் மிகுந்த அவன் ‘தீக நிக்காயம்’ என்ற பாளிநூலை ஒரே நாளில் (பல எழுதுவோரை வைத்துப்) பிரதி செய்வித்தானாம். அழகாக எழுதப்பட்ட ஏடுகளை விலைக்கு வாங்கி மடங்களுக்கு அளித்தான். அவன் செய்த சேவைகளுள் ‘உபசம்பதா’ (குருத்துவ அபிஷேகம்) இலங்கையில் மீண்டும் ஏற்படுத்தியமையே தலையாயது.

பௌத்த சங்கத்தின் இழிநிலை

அவன் சிம்மாசனமேறிய போது குருத்துவ அபிஷேகம் பெற்ற ஒரு புத்த பிக்குவாயினும் இந்நாட்டில் இல்லை சாமணேரர் எனப்படும் அபிஷேகம் பெறாத இளம் குருமார் பலர் இருந்தனர். நல்லோர் சிலர் இருந்தும், பெரும்பாலான குருமார் தக்கோர் மேற்பார்வையின்றிக் கீழ் நிலையுற்றனர். அக்கால நிலை பற்றி 1770-ல் எழுதப்பட்ட நூலொன்றில் கூறப்பட்டிருப்பது இது:

“தேவானம் பி(ரி)ய தீசன் முதல், அரசரும் தர்மநெறியுணர்ந்த மந்திரிமாரும்; குருமாரது புத்திமதிப்படி சங்கத்துள் தீயநெறிகள் நுழையாது பார்த்துக் கொண்டனர். ஆனால் அப்படிப்பட்ட மன்னர் தற்காலத்தில் தோன்றாமையாலும், பறங்கியரும் தமிழரும் இடர் செய்தமையாலும் குருமாரிடம் நற்செயலும் நற்சிந்தனையும் குன்றிவிட்டன. உயர் குல இளைஞர் குருமாராகியும் திரிபிடகம் கற்க வாய்ப்பின்றி இருக்கின்றனர். அதனால் சங்க நிர்வாக அதிகாரம்; கீழ்க் கலத்திற் பிறந்து தீயநெறிச் செல்லும் குருமார் கையிற் சிக்கியது. அவர்கள் தம் உறவினரையே சங்கத்திற் சேர்த்து மன்னர் மடங்களுக்கும் கோவில்களுக்கும் எழுதி வைத்த சொத்துக்களை அனுபவிக்குமாறு வைத்துச் செல்கின்றனர். முறையான குரு சீட பரம்பரை மறைந்து விட்டது. குருமார் தர்ம, விநய பிடகங்களைக் கற்காமல், சோதிடம், வைத்தியம், பேய்களைத் துரத்தல் முதலியவற்றைப் படிக்கின்றனர். இவற்றின் மூலம் மேலும் செல்வம் சேர்க்கின்றனர். சகோதரரின் பிள்ளைகட்கு உதவுகின்றனர். இத்தீயநெறி எல்லையற்றுப் பரந்து செல்லும்போது, நல்லோர் செய்த புண்ணியத்தால் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் சிம்மாசன மேறினான்”

சீயம் நாட்டுக்குத் தூது

அவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் இலங்கையிலுள்ள குருமாருக்குத் குருத்துவ அபிஷேகம் செய்யவல்ல குருமார் குழாம் ஒன்றை அழைத்து வரும்; பொருட்டுச் சீயம்; நாட்டுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பினான். டச்சுக்காரர் தம் கப்பல் ஒன்றைக் கொடுத்தனர். அப்போது சீயத்தின் அரசனாயிருந்த தம்மிகன் வாழ்நாளனைத்தையும் மதப்பணிக்கே அர்ப்பணித்தவன். சிங்களத் தூதுவர்களை வரவேற்று மகாசங்கத்தைக் கூட்டி, அதிலிருந்து பத்துக் குருமாரைத் தேர்ந்தெடுத்து உபாலி மகா தேரரின் தலைமையில் இங்கு அனுப்பினான். இலங்கையில் இல்லாத தர்ம, விநயநூற் பிரதிகளும் உடன் வந்தன. 1756, ஆட்சியில் அவர்கள் இலங்கையை அடைந்தனர்.

உபசம்பதா மீண்டும் நிறைவேற்றப்படல்

மன்னன் சகல மரியாதைகளுடனும் அவர்களை வரவேற்றான். கண்டியில் உபசம்பதா வைபவம் நிகழ்ந்தது. முக்கியமான சாமணேரர் அனைவரும் உயர்ந்த குருத்துவ அபிஷேகம் செய்யப்பட்டனர். அயோத்தியாவிலிருந்து வந்த குருமார் அவர்களுக்குச் சமய அறிவைப் புகட்டினர். விநயபிடகம் கூறும் ஒழுக்கங்களை வகுத்து எழுதி மன்னன் அவற்றைக் குருமார் கைக் கொள்ளக் கடவர் என விதித்தான்.

கரணங்கரர் வாழ்வும் பணியும்

பௌத்த மகா சங்கத்தின் இருட்காலம் என்று சொல்லத்தக்க அக்காலத்தில் வானில் மின்னும் தாரகையெனத் திகழ்ந்தவர் சரணங்கரர் என்ற துறவி. 1698 அளவில் கண்டிக்கு அண்மையிலுள்ள வெளியிட என்ற குக்கிராமத்திற் பிறந்த அவர், 16 வயதில் சாமணேரராய்ச் சேர்ந்தார். சூரியகொட தேரரின் மாணவரானார். மிகக் கவனமாகப் பாளி மொழியைக் கற்றார். நல்ல இலக்கண நூலோ, ஆசிரியரோ இன்றிப் பெரிதும் வருந்தினர். ஆங்காங்கு திரிந்து அறிவுத் தேனைப் பருகினர். இலக்கணங்கற்ற இல் வாழ்வாரையும், தம்மையொத்த சாமணேரரையும் பணிந்து நின்றார். குருமார் முற்காலத்திலிருந்த உயர் நிலை எய்த வேண்டும் என்ற விருப்பம் அவர் உள்ளத்தில் நிறைந்தது. செல்லுமிடமெல்லாம் இது பற்றியே பேசினர். கேட்போர் உள்ளத்திலும் இவ்வுணர்ச்சியை ஊட்டினர். இளைஞர் பலர் எத்திசையினின்றும் அவர் பால் வந்தனர் தவ விரதங்களால் இளைத்த உடம்பையுடைய அவர் பிக்கு என்ற பெயருக்கேற்ப, தம் வாழ்க்கையைப் பிச்சை ஏற்றே நடத்தினார்.; பிட்சா பாத்திரத்திலிடும் சோற்றுக் கவளம் (பிண்டம்) மட்டுமே அவர் வேண்டிய பொருள். அதனால் அவர் ‘பிண்ட பாதிக சரணங்கரர்’ எனப்பட்டார். இவரது சேவையை நரேந்திர சிங்கனும் பாராட்டி 700 இரத்தினங்கள் இழைத்த தங்கப் பேழையொன்றுடன் சமய நூல்களும் அளித்தான். இவரது வேண்டுகோளின் படியே விஜய இராஜசிங்கன் சீயம் நாட்டுக்கு இரு தூதுக் குழுக்களையனுப்பினான்.

கீர்த்தி ஸ்ரீ அரசனானதும் சரணங்கரரின் தொடர் பால் இலங்கையிற் பௌத்த மதம் புனருத்தாரணஞ் செய்தது பெருவேந்தன் என்னும் மங்காப் புகழைப் பெற்றான். பௌத்த மகா சங்கத்திற் புகுந்திருந்த ஊழல்களைக் களைந்து, அதனை உந்நத நிலைக்கு உயர்த்தினான். சரணங்கரர் எழுதிய பாளி மொழிச் செய்திகளே வேந்தனுக்கும் அந்நாட்டுச் சங்கராஜருக்கும் அனுப்பப்பட்டன. உபசம்பதா வைபவம் நிகழ்ந்தபின், சரணங்கார் உரியமுறையில் கௌரவிக்கப்பட்டார். இரவு பகல் ஓய்வின்றிப் சமயப் பணிசெய்த அவர் இலங்கைப் பௌத்த மகா சங்கராஜா என்ற பதவிக்கு உயர்த்தப்பட்டார். 81 வயது வரை ஓயாப் பணிபுரிந்து 1778-ல் இறந்தார். அவரை அடக்கம்செய்த அம்பிட்டிய விஹாரத்தில் இன்றும் அவரது நினைவுச் சின்னம் உள்ளது.

இலக்கிய மறுமலர்ச்சி

நாடாளும் மன்னனும், சங்சகராஜரும் முன்னின்று வழிகாட்ட, நாட்டில் இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. சரணங்கரர் தாமே பல நூல்களை எழுதினர். பாளிப்பெயர்ப் பகுபத விளக்கமாகிய “ரூபமாலா” இலக்கணங்கற்போருக்கு எளிதாக எழுதப்பட்டது. “அபிசம்போதி அலங்காரம்” என்ற நூலில் புத்தரின் முற்பிறவிகளும் சித்தார்த்தர் வரலாறும 100 செய்யுளில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு செய்யுளினிடையிலும் சிங்கவிளக்கம் உளது. “மகாபோதி வம்சம்” என்ற பாளி நூலைச் சிங்களத்தில் மொழி பெயர்த்தார்@ “மதுரார்த்தப் பிரகாசினி” என்ற இன்நூல் சமஸ்கிருதம் கலந்த சிங்கள நடையில் எழுதப்பட்டது. “சாரார்த்த சங்கிரகம்” பௌத்த மததத்துவங்களை விளக்குவது. “முனிகுணாலங்காரம்” புத்தரைப் போற்றும் செய்யுணு}ல். கீர்த்தி ஸ்ரீ குருமாரின் உடல் நலத்தைப் பேண வேண்டும். என்னும் நோக்கத்துடன் எடுத்த கருமங்களுக்கு ஆதரவாக “பேஸஜ்ஜ மஞ்ஜுஷா” என்ற பாளி வைத்திய நூலுக்குச் சிங்களத்தில் பதவுரை (சன்ன) ஒன்றை எழுதினார். ஒர சிங்களபிக்கு எழுதிய ஒரேயொரு வைத்திய நூலான இதற்கு இவர் விளக்க உரை எழுதியது சாலப் பொருத்தமான செயலே.

சரணங்கரரின் நிழலில் வளர்ந்தோர்.

சரணங்கரர் தொடங்கிய கல்வி மறுமலர்ச்சி அவருடன் வாடி, முடிந்து விடவில்லை. ஒப்பற்ற கல்விமான்கள் பலர் அவர் ஏற்றிய அறிவு விளக்கை எங்கும் கொண்டு சென்று ஒளிபரப்பினர். குருமார் மட்டுமன்றி இல்வாழ்வாரும் அவர்களுள் திகழ்ந்தனர். நாடெங்கும் பரிவேணாக்கள் (கல்விநிலையங்கள்) எழுந்தன. இளம் துறவிகளும், பொதுமக்களும் நற் கல்வி பெற்றனர். அந்நியரது ஆதிக்கத்தால் அழிந்தொழிந்து போக, மீந்திருந்த சிங்கள பௌத்த கலாசாரத்தின் சிறப்பான அம்சங்கள் முற்றாக அழிந்து போகாமல் காத்த பெருமை இந்நிலையங்களுக்கே உரியது.

சரணங்கரரின் மாணவருள் அத்தரகம பண்டார ராஜகுரு என்னும் இல்லற அன்பர் மூன்று பாளி இலக்கண நூல்களை எழுதினார். சிங்களத்தில் விளக்கமும் எழுதிச் சேர்த்தார். (1780). இவரேசாரசங்ஷேபம் என்ற சமஸ்கிருத வைத்திய நூலை எழுதினார் என்றும் சிலர் கூறுவர். தர்மஜோதி என்ற பிக்கு பாலாவதாரம் என்ற பாளி இலக்கண நூலுக்குச் சிங்கள விளக்கம் எழுதினார்.

சரணங்காரரின் மற்றொரு சீடரான திப்பத்துவாவி சித்தார்த்தர் அரசன் வேண்டுகோளின்படி 4-ம் பராக்கிரம பாகு முதல் தம் காலம் வரை நிகழ்ந்த வரலாற்றை சூளவம்சத்தின் இறுதிப்பாகமாக எழுதினார். புத்தரக்கிதர் சீயம் சென்ற தூதுக்குழு குருமாரை அழைத்து வந்த வரலாற்றைப் பாடினார். அரசனது விசேட வேண்டுகோட்படி சமங்ககலதேரர் மிலிந்து பஞ்ஞா என்ற பழைய பாளிநூலைச் சிங்களத்தில் எழுதினார் (1778). இன்னும் எத்தனையோ நூல்கள் பாளியிலிருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டன. நடனத்தில் வரும் எட்டு வகையான சுவைகள் பற்றிய ஒரேயொரு பாளி நூலான சிருங்கார ரஸ ரத்தினமாலா இக்காலத்திலேயே எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி ஸ்ரீ டச்சுக்காரருடன் போரிடல்

நாயக்கர்கள் கரையோரப் பகுதியில் தம் அதிகாரத்தை நிலை நாட்டும் முயற்சியைத் தொடர்ந்து நடாத்தினர். 1748-ல் முத்தும் குதிரைகளும் கேட்க வந்த தூதுவரிடம், டச்சுத் தேசாதிபதி கண்டியிற் புகலிடம் பெற்ற சாலியரைத் தருமாறு கோரினான். இதனை மறுத்ததும். அவன் சீயம் செல்லக் கப்பல் தர இயலாது என்று அச்சுறுத்தினான். இதனால் கோபமுற்ற நாயக்கர் நீர்கொழும்புக்கு அண்மையில் பிடித்த யானைகளைக் கேட்டனர். களனியாவில் புத்த பிக்கு ஒருவர் தமது கூட்டத்துடன் வந்து தங்கினார். அவர் மடம் அமைக்க முயல்வதாக நினைத்த டச்சுக்காரர் அரசனைத் திருப்திப்படுத்த, அவனுக்கு அறிவிக்காமல் தாம் முத்துக் குளிப்பதில்லை என்றனர். இவ்வாறு பலவீனத்தை வெளிப்படுத்தவே அரசன் 1753-ல் யானை வர்த்தக உரிமை கேட்டு, எல்லைகளிற் சிறு போர்களைத் தொடங்கினான். தன் பிரதேசத்தில் கறுவா சேகரித்தோரை விரட்டிச் செடிகளை அழித்தான். கொழும்பு மாத்தறைத்திசாவனிகளில் சாலியா கலகங்களைத் தூண்டினான். நெல்வரி சேரிக்கும் குத்தகை பெற்றோர் அநியாயமாக வரி சேர்த்தமையாலும் தேசாதிபதி ஷ்ரோய்டர் கறுவா நிலங்களை அழித்துத் தென்னை பயிரிடலாகாது என்று சட்டம் வைத்தமையாலும் மக்கள் புரட்சி செய்தனர். கண்டித் திசாவைமார் இம் மக்களைத் தூண்டி டச்சு அரண்களை அழித்தனர். கண்டிப் பிரதேசத்துட் புகுந்த டச்சுப்படை பின் வாங்கியது.

ஆங்கிலேயருடன் தொடர்பு

அரசன் டச்சுக்காரரின் பகைவரை நாடி நட்புக் கொள்ள முயன்றான். மதுரை நவாப் அவனுக்கு உதவி செய்ய மறுத்து, டச்சுக் கம்பனியிடம் பரிசு பெற்றான். ஆங்கிலேயரின் உதவியைத் தன் நாயக்க உறவினர் மூலம் அரசன் நாடவே, ஆங்கிலேயர் கண்டிக்கு பைபஸ் என்பவனைத் தூதனுப்பினர் (1762) அவன் எதுவும் வாக்களிக்க இயலாமையால் தூது பயனற்றதாயிற்று.

வான் என் படையெடுப்பு

கண்டியரசன் ஆங்கிலேயரின் தொடர்பை நாடுவதையறிந்த டச்சுக்காரர் அதனை எதிர்த்துத் தம் ஆற்றலை வெளிப்படுத்த முயன்றனர். புதிதாகப் பதவி ஏற்ற தேசாதிபதி வான் எக் மாத்தறையிற் கோட்டை யமைத்தான். சிலாபத்;தையும் புத்தளத்தையும் கைப்பற்றினான். கண்டியனி; மீது படையெடுத்தான். ஒரு நூற்றாண்டு காலம் கம்பனியதிகாரிகள் எதனைச் செய்யலாகாது எனக் கட்டளையிட்டிருந்தனரோ அதனைச் செய்யத் தீர்மானித்தான். பழக்கமற்ற பிரதேசத்தில் அவனது படைகள் எதிர்நின்று போரிடாத கண்டிப் படைகளால் இடையறாத் துன்பத்துக்குள்ளாயின. முன்னேறிய படை பின் வாங்கிக் கம்பனிக்கு வசையைத் தேடியது.

வான் எக் இதற்குப் பரிகாரமாகப் பெரும்போரிடத் திட்டமிட்டான். பட்டேவியாவிலிருந்து உதவிப் படையையும் வரவழைத்தான். 1765, தையில் கொழும்பிலிருந்து புறப்பட்டுக், கட்டுகஸ்தோட்டைவரை சென்றான். அவனது படை தலைநகருட் புகுந்து சமய நிலையங்களைப் பாழ் செய்வதைத் தடுக்கும் பொருட்டுக் கீர்த்தி ஸ்ரீ டச்சுக்காரருக்கு மிக வாய்ப்பான அம்சங்களுள்ள உடன்பாட்டுக்குச் சம்மதித்தும், கர்வமிக்க தேசாதிபதி உடன்பட்டிலன். அரசன் 2 இலட்சம் பகோடா பணமும், ஆண்டுதோறும் யானைகளும் தருவதுடன், அவனது முடியையும் தனது காலடியில் வைத்துப் பின் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டான். அரசன் இறுதிப் போருக்கு ஆயத்தமாயினான். டச்சுப்படை மகாவலி கங்கையைத் தாண்டியது. கண்டி, குண்டசாலை, அங்குரங்கெத ஆகிய இடங்களில் அரண்மனைகள் சூறையாடி எரிக்கப்பட்டன. அப்படை கண்டிக்கு மீளுமுன்சிங்களர் மூலைமுடுக்கு களிலிருந்து தாக்கினர். வான் எக் தன்னாலியன்ற நாசவேலைகளைச் செய்தான். கோவில்களைப் பாழ் செய்தான். குருமார் ஏடுகளுடன் தப்பிச் சென்றனர். சிங்களரோ சரணடைய மறுத்தனர். நோய் பிடிக்கவே, வான் எக் படையுடன் கொழும்பு செல்லத் திரும்பினான். (பங்குனி, 1765) பல இன்னல்களுக்கிடையில் தசநாயக முதலியாரின் உதவியுடன் தப்பிச் சென்றான். கொழும்பில் திடீரென இறந்தான். (தற்கொலை செய்தான் எனப் பலர் நம்புகின்றனர்)

1766-ம் ஆண்டு உடன்படிக்கை

வான் எக் இறந்ததும் கொழும்புக்குத் தேசாதிபதியாக அனுப்பப்பட்ட ஃபோக் கொழும்பிற் பிறந்தவன். 29 வயதிலேயே தலைசிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றவன். எப் படை கொண்டு சாதிக்க இயலாததை இவன் சூழ்ச்சித்திறனால் சாதிக்க முயன்றான். தசநாயக முதலியார் போன்ற நண்பர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கரையோரப் பகுதி மக்களின் ஒத்துழைப்பைப் பெற முனைந்தான். பழிவாங்கும் போரை மேறகொண்ட மன்னனைச் சிம்மாசனத்தினின்றும் அகற்றப் போவதாகக் கதை கட்டி விட்டான்.

போர் காரணமாகக் கண்டி இராச்சியத்தில் பயிர்ச்செய்கை தடைப்பட்டது. பஞ்சம் தோன்றியது. அரசன் தூதுவரை அனுப்பிச் சமாதானம் பேசினான். மூன்று, நாலு, ஏழு கோறளைகளை அழித்தும் விந்தனைக்குப் படையனுப்பியும், உப்பு முதலிய பொருட்கள் உள்நாட்டுக்குச் செல்லாது தடுத்தும். தேசாதிபதி அரசன் தனக்குச் சாதகமான ஒப்பந்தஞ் செய்யப் பண்ணினான். இரச தந்திரத்துடன் முன்னர் கைப்பற்றிய தலதாமாளிகைப் பொருட்கள் சிலவற்றையனுப்பினான். கொழும்பில் மாசி 1766-ல் கையெழுத்தான உடன்படிக்கை 25 பகுதிகளை (ஷரத்துக்கள்) யுடையதாயிருந்தது.

1. கம்பனி போருக்கு முன் ஆண்டபிரதேசங்கள் அதற்கே உரியன என முதன் முதலாக ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் அரசன் தனக்குச் சொந்தமாயிருந்த கடற்கரைப் பகுதிகளிலும் ஒரு கூப்பிடு தொலைவு கம்பனிக்கு அளித்தான். கம்பனி அங்கு சேகரிக்கும் வரிப்பணத்தை அரசனுக்கு அளிக்க உடன்பட்டது. உள்நாடு முழுவதற்கும் அரசனே ஏக அதிபதி என்பதைக் கம்பனி அங்கீகரித்தது. போரில் தான் பிடித்த பகுதிகளைத் திருப்பிக் கொடுக்கச் சம்மதித்தது.
2. புத்தளம், சிலாபம் ஆகிய இடங்களிலுள்ள உப்பளங்களில் தமக்கு வேண்டிய அளவு உப்பு எடுக்கக் கண்டிப் பிரசைகளுக்கு அனுமதி வழங்கப்படும். கம்பனியார் அரசனுக்குரியனவாகிய (தாழ் பூமியிலுள்ளனவாகிய) சப்ரகமுவ, மூன்று, நாலு, ஏழு கோறளைகளில் வல்லணை வரை கறுவா சேகரிக்கலாம். வல்லாணைக்குக் கிழக்கே வளரும் கறுவாவை அரசனின் குடிகள் சேகரித்துக் கம்பனிக்கு மட்டும் குறித்த விலைக்கு விற்கலாம். மேலும் கம்பனி யானைத் தந்தம். மிளகு, சாதிக்காய், கோப்பி, பாக்கு மெழுகு முதலியவற்;றையும் வாங்கும் தனியுரிமையுடையதாயிருக்கும். இரு பகுதியிலும் வாழும் குடிகள் தடையற்ற வாணிகம் நடத்தலாம். அரசனுக்கு வேண்டிய பொருட்களைக் கம்பனி வாங்கித்தரும். அரசன் திருக்கோணமலை, மட்டக்களப்பிலுள்ள டச்சுக்காரருக்கு வேண்டிய மரங்கள் கொடுக்கவேண்டும்.
3. அரசன் பிற ஐரோப்பிய இனத்தவருடனோ இந்திய அரசனுடனோ உடன்படிக்கை செய்யலாகாது. தன் பிரதேசத்துக்கு வரும் ஐரோப்பியரை டச்சுக்காரரிடம் ஒப்புவிக்க வேண்டும்.
4. அரசன் முன் வீழ்ந்து வணங்குதல் போன்ற அவமான செயல்கள் இனிச் செய்யப்படமாட்டாது.

அரசன் இதற்குக் கையொப்பமிட்டான் எனினும் விரைவில் தான் பட்டேவியாவுடன் தொர்பு கொண்டு தன் கரையோரப் பகுதியை மீண்டும் பெற முயற்சி செய்யப் போவதாக அறிவித்தான். டச்சுக்காரரோ தமது நீண்ட காலக் கனவு நனவானதை எண்ணி மகிழ்;ந்தனர். அரசன் இனி அந்நியருடன் தொடர்பு கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் தம்மில் தங்கியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இவ்வெற்றியால் கம்பனிக்கு ஒரு கோடி ஃபுளோரின் செலவுடன், சில ஆயிரம் உயிர்களும் அழிந்தன. வாணிகம் குன்றியது@ பயிர்த்தொழில் அருகியது. அன்றியும் அரச சபையின் தீராப் பகையைச் சம்பாதித்த டச்சுக்காரர் பெரும் இராணுவத்தை வைத்திருக்க வேண்டியவராயினர். இதனால் வருமானத்தின் பெரும் பகுதி செலவாயிற்று. இங்ஙனம் தமக்கு மாபெரும் வெற்றி எனக் கருதிய இப்போர் முடிவே அவர்கள் இலங்கையிலிருந்து விரட்டப்படுதற்குக் காரணமாயிற்று.

நாயக்கர் எதிர்ப்புக் கோஷ்டி

இவ்வுடன்படிக்கைப் பேச்சுகள் கொழும்பில் நிகழ்ந்த போது அரசசபையிலுள்ள சி;ங்களப்பிரபுக்கள் நாயக்கர் கோஷ்டியின் மீது வெறுப்புற்றிருந்தனர் என்பதை டச்சுக்காரர் உணர்ந்தனர். கம்பனியின் உதவியுடன் அவர்கள் மன்னன் ஆணையைக் கடக்கவும் விரும்பினர். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது, டச்சுத் தூதுவன் மன்னனது அவைக்களத்துப் பிரபுக்களும் கையெழுத்திட வேண்டும் எனக் கேட்டான். அரசன் அதற்கு இணங்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானதும் அரசன் கண்டிக்கு வந்து. உடைந்த கோவில்களைப் புதுக்கி மக்களின் அபிமானத்தைப் பெற்றான். கங்காராம விஹாரம், ரிதீ விஹாரம், மெதெப்பொல விஹாரம் முதலியன புதுக்கப்பட்டன. தன் இனத்தவருக்கு மாறான கண்டி அதிகாரிகளின் பலத்தைக் குறைத்தான். பின் 1772-ல் கொழும்புக்குத் தூதுவரையனுப்பி முத்துக்குளிக்கவும், மூன்று படகுகளை அனுப்பவும் உரிமை கேட்டான். தஞ்சைக்குத் தூதனுப்பி ஆங்கிலேயருடன் தொடர்பு கொள்ள முயன்றான். இது கிடைக்கவில்லை. 1775-ல் அரசன் தான் கொடுத்த கடற்கரைப் பகுதியைத் திருப்பித் தரும்படி கேட்டான். கம்பனி இறுதிவரை ஒருவித சலுகையும் அளிக்க மறுத்துவிட்டது. கீர்த்தி ஸ்ரீ 1782-ம் ஆண்டு மாதம் 2-ம் திகதி இறந்தான்.

இராஜாதி ராஜசிங்கன் (1782 - 1798)

கீர்த்தி ஸ்ரீயுடன் தென்னிந்தியாவிலிருந்து கண்டிக்கு வந்த சிறுவனான இராஜாதி ராஜசிங்கன் சிங்கள பௌத்த சூழ் நிலையில் வளர்க்கப்பட்டான். ஆகவே அவன் எவ்வித எதிர்ப்புமின்றி அரசனானான். அவனது ஆட்சி தொடங்கியவுடன் முக்கிய அயல் நாட்டுத் தொடர்பு ஒன்று பற்றி முடிவு செய்யும் கடமை அவனை எதிர்நோக்கி நின்றது.

அமெரிக்க சுதந்திரப் போரும் ஆங்கிலேயர் தலையீடும்.

அமெரிக்க மாகாணங்கள் பிரிட்டனுக்கு எதிராகப் போரிடத் தொடங்கி. 1778-ல் பிரான்சுடனும் நட்புறவு ஒப்பந்தம் செய்தன. அமெரிக்காவுக்குச் செல்லும் சகல கப்பல்களையும் ஆராயும் உரிமை உண்டென ஆங்கிலேயர் வாதாடியமையால், ஒல்லாந்தரின் பகையைத் தேடினர். இரு வியாபாரக் கம்பனிகளும் இந்திய பிரதேசத்திற் போரிடலாயின. 1781-ல் நாகபட்டினம் ஆங்கிலேயர் கைப்பட்டது. 1782-ல் அரசனிறந்த இரு நாட்களின் பின் வந்த ஆங்கிலேயர் திருக்கோணமலையை ஓரிரு நாட் போரின்பின் கைப்பற்றினர். ஆங்கிலேயர் கொழும்பையும் பிடித்துக் கறுவா உரிமையைப் பெற விரும்பினர்.

போய்ட் தூதும் பிரஞ்சுக்காரர் வருகையும்

ஹியூ போய்ட் திருக்கோணமலையிலிருந்து கண்டிக்குப் புறப்பட்டுச் சென்றான். புதிய அரசன் ஆங்கில அரசனது தூதுவருடன் மட்டுமே உடன்படிக்கை செய்யலாம் என்று கூறி, அவனை அனுப்பிவிட்டான். அவன் பிரஞ்சுக்காரர் கைப்பட்டான். 1882 ஒகஸ்ட், 25-ல் பிரஞ்சுப் படை திருக்கோணமலையை அடைந்து விரைவில் அதனைச் கைப்பற்றி, 1783வரை வைத்திருந்தது. பாரிஸ் உடன்படிக்கையின்போது அதை ஆங்கிலேயர்க்கு அளிக்க அவர்கள் அதை டச்சுகாரர் வசம் ஒப்புவித்தனர்.

டச்சுக்காரருடன் பூசல்

இராஜாதி ராஜசிங்கன் கரையோரப் பகுதியைத் தரும்படி கேட்டான். டச்சுக்காரர் மறுத்தனர். அரசன் காவற் கதவுகளை அடைத்துக் கண்டிப் பொருள்கள் கரைநாட்டுக்குச் செல்லாது தடுத்தான். டச்சுக்காரரும் தம் எல்லைக் காவலை அதிகரித்துக் கரையோரத்திலிருந்து உப்பு உட்பட எப்பண்டங்களும் செல்லாது தடுத்துவிட்டனர். அவர்களை அச்சுறுத்துமாறு எல்லைகளுக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகளுள் ஓரிருவர் அவர்களுக்கு மறைமுகமான ஆதரவளித்தனர். பிலிமத லாவை என்பான் அரண்மனைத் திட்டங்களை அவர்களுக்கு அறிவித்தான். பிரஞ்சுக்காரருடன் அரசன் தொடர்பு கொள்ள முயல்வதை உணர்த்தினான். இதனால் அரசன் அனுப்பிய கடிதங்களை டச்சுக்காரர் இடைமறித்துப் பறித்தனர். புதிய தேசாதிபதி கண்டிக்குப் படையனுப்பவும் திட்டமிட்டான். அரசனும் காவல் முட்;படலைகளைத் திறக்க வேண்டியதாயிற்று. அரசனது கறுவாவை எதிர்பாராது. கரையோரப் பகுதியிலேயே அதனை மிகுதியாகப் பயிரிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆங்கில - டச்சுத் தொடர்புகள்

அமெரிக்க சுதந்திரப்போரில் டச்சுக்காரர் குடியேற்ற வாசிகள் பக்கம் நின்றனர். எனினும் அவர்களது அரசன் 4-ம் வில்லியம் ஆங்கிலேயர்பால் அனுதாபம் உடையவனாயிருந்தான். இதனால் பொது மக்களின் வெறுப்புக்குப் பாத்திரமானான். 1788-ல் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் நட்புறவு உடன்படிக்கை செய்தனர். எனினும் இத்தொடர்பு விரைவில் அற்றுவிட்டது. (1794-ல் பிரஞ்சுப் புரட்சிப் போர்களினிடையில் பிரஞ்சுப்படை ஒல்லாந்துட் புகுந்து பட்டேவிய குடியரசை நிறுவியது. வில்லியம் இங்கிலாந்துக்குச் சென்று மன்னனது விருந்தினனாயிருந்தான். டச்சுக்காரின் கீழ்த்திசைப் பிரதேசங்களை அபகரிக்க இதுவே தருணமெனக் கண்ட ஆங்கிலேயர் அவனிடம் ஒர கடிதம் பெற்றனர். அதில் இலங்கை, தென்னாபிரிக்க கேப் குடியேற்றம் ஆகிய இரு இடங்களிலும் தேசாதிபதிகளாயிருப்போர் ஆங்கிலேயரின் படையுதவியை ஏற்றுப் பிரஞ்சுக்காரரிடமிருந்து தம் நாடுகளைப் பாதுகாக்க வேண்டுமெனக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

கரையோரப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றல்.

சென்னையின் ஆங்கிலத் தேசாதிபதி கொழும்புக்கு இக் கடிதத்தையனுப்பித், தம் படைகளைத் திருக்கோணமலைக்கு அனுப்புவதாக அறிவித்தான். 1795 ஆடி மாதம் கொழும்புத் தேசாதிபதியின் ஆலோசனைச் சபை 800 ஆங்கிலப் போர்வீரரை ஏற்க முடிவு செய்தது. ஆனால் விரைவில் தாயகத்திலிருந்து செய்தி கிடைத்தது. மக்கள் ஆதரவு பெற்ற பட்டேவிய குடியரசுக்கு அடங்கி நடப்பதே முறையெனக்கருதிய ஆலோசனைச்சபை ஆங்கிலேயரை எதிர்க்க முடிவு செய்தது. எனவே திருக்கோணமலையையடைந்த ஆங்கிலப் படை மூன்று நாட்போரின் பின் கோட்டையைக் கைப்பற்றியது. விரைவில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், கற்பிட்டி, நீர்கொழும்பு முதலியவற்றைப் பிடித்துக் கொழும்பின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது. டச்சுக்காரரிடம் சேவை செய்த தன் கூலிப்படையொன்றை டீ மியுரன் ஆங்கிலேயர் பக்கம் சேர்த்தான். 1796 மாசியில் கொழும்பு ஆங்கிலேயர் வசமாயிற்று.


வினாக்கள்

1. வான் எக் ஃபோக் (குயடஉம) என்னுமிரு தேசாதிபதிகளும் கண்டி இராச்சியத்துடன் கொண்ட தொடர்புகளை விவரிக்குக. (1947)
2. கண்டி நாயக்க மன்னர்களுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் இருந்த தொடர்பின் முக்கிய அம்சங்கள் யாவை? (1949)
3. கண்டி நாயக்க மன்னருக்கும்; டச்சுக்காரருக்குமிடையில் நிகழ்ந்த பூசல்களின் காரணங்களையும் பலாபலன்களையும் சுருக்கமாக ஆராய்க. (1951)
4. 1765-ல் கண்டியின்மீது டச்சுக்காரர் தொடுத்த போரின் காரணங்கள் யாவை? அதன் பலாபலன்கள் எவை?
5. சிறு குறிப்பெழுதுக. (அ) நாயக்கர்கள் (ஆ) கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலக் கலாசார மறுமலர்ச்சி. (1953, 1962)
6. “கண்டியரசுடன் தொடர்பு கொண்ட தேசாதிபதிக்குள் வான் இம்மோவ் சமாதானத்தையும். வான் எக் போரையும் விரும்பினர்” இக் கொள்கை வேற்றுமைக்குக் காரணம் என்ன?
7. கண்டி நாயக்க மன்னரின் புகழை உயர்த்தும் சாதனைகளை விளக்குக? (1956)
8. இரண்டாம் இராஜசிங்கனும், கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனும் டச்சுக்காரர் விடயமாக அனுட்டித்த கொள்கைகளிலுள்ள வேற்றுமைகளை ஆராய்க. (1957)
9. எமது நாட்டில் ஒல்லாந்தரின் அதிக்கம் நிறுவப் பட்டமையைப் பொறுத்த வரையில் பின்வரும் வருடங்களுள் இரண்டின் முக்கியத்துவத்தை விளக்குக? (அ) 1638 (ஆ) 1656 (இ) 1766 (ஈ) 1798
10. 1796-ல் இலங்கையில் அரசியல் மாற்றங்களை விளைவித்த (அ) உள்நாட்டு, (ஆ) பிறநாட்டுக் காரணங்களைச் சுருக்கமாக எழுதுக. (1963)
11. கண்டிய மன்னர்களுக்கும் ஒல்லாந்தருக்கும் மிடையில் தீர்க்கப்பட வேண்டியிருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் யாவை? அவற்றைத் தீர்த்து வைப்பதில் 1766-ம் ஆண்டு உடன்படிக்கை எவ்வளவுக்கு வெற்றி பெற்றது?
12. வரலாற்றுக் குறிப்பு எழுதுக :-
(ய) ஒல்லாந்தரின் தோம்பு (டி) வலிவிட்ட சரணங்கர.


இரண்டாம் பாகம்

அரசியல் நிர்வாகம்

பொருளாதாரம்

ஒன்பதாம் அத்தியாயம்

கரையோர மாகாணங்களிற் போர்த்துக்கேய நிர்வாகம்

பழைய ஆட்சி முறையை ஏற்றுக்கொள்ளல்.

தர்மபாலன் இறக்கும் வரை அவன் பெயரால் அரசியல் நிர்வாகத்தை நடத்தி வந்த போர்த்துக்கேயர், 1597 - ல் அவன் இறந்ததும் நிர்வாகப் பொறுப்பு முழுவதையும் எற்றுக்கொள்ள வேண்டியவராயினர். அவர்கள் ஏறக்குறைய அரை நூற்றாண்டு வரையில் பழகிய சிங்கள நிர்வாக அமைப்புப் பழுதின்றி இயங்கிவந்தது. அதைக் கைவிட்டுப் புதியதோர் நிர்வாக முறையை ஏற்படுத்துதல் எளிதான காரியமன்று எனக்கண்ட அவர்கள் அதைக் கைவிடாது பின்பற்றிவந்தனர். அஃதன்றி, அவர்கள் மல்வானையில் வாக்குப் பண்ணியபடி பொது மக்களுக்கு நன்கு பழக்கமான ஆட்சி முறையையே பேணவேண்டும் என்ற பரோபகார சிந்தையாலேயே அதனைக் கொண்டனர் என்று கருதவொண்ணாது, தம் வசதியின் பொருட்டு ஏதாயினும் மாற்றஞ் செய்ய வேண்டியிருந்தால், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் செய்தனரே அன்றி அடிப்படையான மாற்றம் எதையும் செய்திலர்.

படிப்படியான நிறுவனம்

சிங்கள ஆட்சி முறை படிப்படியாக அமைக்கப்பட்ட கூர்நுதிக்கோபுரம் போன்றது. அதன் நுனியில் அரசன் இருப்பான். அவனுக்கக் கீழே பல தரப்பட்ட அதிகாரிகளிருப்பர். மேலதிகாரிகளிலும் கீழதிகாரிகளின் தொகை அதிகமாகும்@ ஆனால் அவர்களது அதிகாரங்கள் குறையும். கோபுரத்தின் அகன்ற அத்திவாரம்; போல் எண்ணற்ற கிராமதிகாரிகள் விளங்கினர். (ஆறாயிரம் கிராமங்களுக்கு ஐம்பதாயிரம் அதிகாரிகள் இருந்தனர் என ஒரு போர்த்துக்கேயன் மதிப்பிடுமளவுக்குப் பெருந்தொகையாயிருந்தனர்)

திசாவைப்பிரிவுகள்

கோட்டை இராச்சியம் நான்கு திசாவைகளாகப் பிரிக்கப்பட்டது. கொழும்பை மத்திய புள்ளிhயகக் கொண்டே நான்கு திசாவைகளின் எல்லைகளுள் வகுக்கப்பட்டன.

1. கொழும்ப முதல் தெற்கே வளவகங்கை வரை மாத்தறைத் திசாவை பரந்திருந்தது. இராச்சியத்தின் செல்வச் செழிப்புக்கு அதுவே காரணமாயிருந்தது.

2. சபரகமுவ திசாவை அதே பெயருள்ள தற்கால மாகாணப் பிரிவுடன், மேல் மாகாணத்தின் ஒரு பகுதியையும், உள்ளடக்கியதாய், தேனவக்கை மலைகளின் அடிவாரம் வரை பரந்து கிடந்தது.

3. நாலுகோறளை கொழும்பின் வடகீழ் விளிம்பில் தொடங்கிக் கண்டிப் மீடபூமிவரை விரிந்திருந்தது.

4. ஏழு கோறளை வடமேல், சமவெளியை உள்ளடக்கி வன்னி வரை பரந்திருந்தது.

பின்னர் கூறிய கோறளைகளில் நான்கும் ஏழுமே சேர்ந்திருந்தன எனக் கருதலாகாது. நான்கு கோறளைப் பிரிவில். சீயன, ஹபிட்டிகம், பெலிகல், ஹந்தபந்துனு, கினிகொட, பரணகுரு, கல்போத என்னும் ஏழு கோறளைகளிருந்தன. ஏழு கோறளையில் அளுத்தகுரு, பி(ட்)டிகல் கடுகம்பொல, தேவமேதி, வட பொல, குருநாகல், ஹரியல, மதுரே, வில்லி, மங்குல் என்னும் பத்துக் கோறளைகளிருந்தன.

2. ‘திசாவனி’ என்றும் சிலர் குறிப்பிடுவர். சிங்கள வழக்கின்படி மாகாணமும் மாகாண அதிபதியும் ‘திசாவை’ என்ற சொல்லாலேயே குறிக்கப்படும்.

நிலையற்ற எல்லைகள்

பெயரளவுக்கு இவ்வெல்லைகள் தர்மபாலனிடமிருந்து போர்த்துக்கேயர் கைப்பட்ட இராச்சியத்தை வரையறுக்குமெனினும், உண்மையில் இவை மாறாதிருந்தன எனக் கூறமுடியாது. காலந்தோறும் கண்டியரசர் பலமுற்றுத் தம் அரசின் எல்லைகளை விஸ்தரிப்பதும் உண்டு. எனினும் பொதுவாக இந்நான்கு மாகாணப் பிரிவுகள் போர்த்துக்கேய ஆட்சியில் நிலைபெற்றிருந்தன எனக் கூறலாம்.

உட்பிரிவுகள்

ஒவ்வொரு திசாவையும் கோறளைகளாயும், கோறளைகள் பற்றுக்களாயும், பற்றுக்கள் கிராமங்களாயும் பிரிக்கப்பட்டிருந்தன.ஆனால் 16 - ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பற்றுக்களோ. கிராமங்களோ நிர்வாகப் பிரிவுகளாக இருந்தன எனக் கூறமுடியாது. கோறளையே மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு எனலாம்.

அதிகாரிகள்

திசாவை, கோறளை என்பவற்றைப் பரிபாலித்த அதிகாரிகளே சகல முக்கிய நிர்வாக கருமங்களையும் நடாத்தி வந்தனர். திசாவை எனப்படும் மாகாணப் பிரிவுக்கு அதிபதியாயிருப்பவன் திசாவை என்று அழைக்கப்பட்டான். கோறளைப் பிரிவின் அதிகாரி கோறளை விதானை என்றோ,விதானை என்றோ பெயர் பெற்றான். அவனுக்க உதவிபுரிய அத்துக்கோறளை,மொஹொத்தால, கணக்கப்பிள்ளை என்போர் அமர்த்தப்பட்டனர். கோறளைகளின் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாக ஒவ்வொரு அத்துக்கோறளை நியமிக்கப்பட்டானோ அன்றோ என நிச்சயிக்கமுடியாது. மொஹொட்டால, கணக்கப்பிள்ளை என்போர் வருமானக் கணக்குகளையும் பிற பாத்திரங்களையும் எழுதுதல் போன்றகருமங்;களைச் செய்தான்.

ஒவ்வொரு கோறளைப் பிரிவிலும் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்ற அநேக கீழதிகாரிகள் இருந்தனர். மாத்தறையில் ஏழுவகையான கீழதிகாரிகள் இருந்தனர். இவர்களுக்குரிய கடமைகள் தனித் தனியே வகுக்கப்பட்டிருந்தன.

3. முன்னாளில் உடபொல, குருநாகல என்னுமிரண்டும் ஒரு கோறளையாகக் கணிக்கப்பட்டன எனச் சில போர்த்துக்கேயக் குறிப்புகள் கூறும்.
4. இன்றும் சிங்களவர் மாகாண அதிபதியை (புழஎநசnஅநவெ யுபநவெ) ‘திசாவை ஹாமத்துருவ’ என்றே அழைப்பர்.

திசாவையின் கடமைகள்

ஒரு திசாவை நிர்வாகப் பொறுப்புகளுடன் இராணுவ கடமைகளும் உடையன். அரசசபைக்குச் செல்லல், தன் நிர்வாகத்திலிருக்கும் மாகாணத்தில் கீழதிகாரிகளை நியமித்தல், ஓரதிகாரிக்குக் கொடுத்த நிலம் அவனிறந்தபின் வாரிசு இன்மையால் முடிக்குரியதாகும் போது அதனை மீண்டும் வேறொருவனுக்கு அளித்தல், போர் ஏற்படும் போது மாகாணத்திற் சேரும் போர்வீரரை அழைத்துத் தலைமைதாங்கிச் செல்லல் முதலிய கடமைகளைச் செய்து வந்தான். தன் பிரதேசத்தில் மிக விஸ்தாரமான நீதிபரிபாலன அதிகாரங்கள் அவனுக்கிருந்தன. பெரும் வழக்குகள் பலவற்றை அவனே விசாரித்துத் தீர்ப்புக் கூறுவான். மாகாணத்தின் மத்திய இடம் ஒன்றில் அவன் வசிப்பான்@ அதுவே மாகாணத்தின் தலைநகராகும்.

கோறளை விதானையின் கடமைகளும் திசாவையின் கடமைகளை ஒத்தனவே@ ஆனால் அவரது நிர்வாகத்திலுள்ள பகுதி சிறிதாயிருப்பது போல அவனது அதிகாரங்களும் குறுகிய எல்லைக்குட்பட்டவையே.

கீழதிகாரிகளின் கடமைகள்

மேற்சொன்ன திசாவை, கோறளை விதானைமாரின் கடமைகளும், அதிகார எல்லையும் வரையறுக்கப்பட்டவாறு கீழதிகாரிகளின் கடமைகளும் பிரதேசமும் வரையறுக்கப்பட்டில. அவர்கள் வௌ;வேறு சேவைகளைப் புரிந்தனரேயன்றி இன்ன இன்ன பகுதியிலேயே சேவை செய்வேண்டுமென விதிக்ப்பட்டிலர்.அரசாங்கத்துக்குக் குடிகள் ஆற்றவேண்டிய சேவைகளைச் செய்வித்தலும்,அரசிறை சேகரித்தலும் அவர்கள் கடன். சில அதிகாரிகள் அரசாங்க அலுவல் காரணமாகச் சுற்றுப் பிரயாணஞ் செய்யும் மேலதிகாரிகளுக்கு உணவும் உறையுளும் அளிக்கும் கடப்பாடுடையர். அவர்களது சேவையைப் போர்த்துக்கேயர் நன்கு பயன்படுத்தினர். சிலர் அரசனது சொந்த நிலங்கள் (கபடாகம்), சொத்துக்களைப் பாதுகாப்பதைக் கடனாக உடையர். அங்ஙனமே திசாவை போன்ற மேலதிகாரிகளின் சொத்தையும் பாதுகாப்பர். வேறு சிலர் உள்@ர்ச் சேவைகளைச் செய்வதற்குவேண்டிய வேலையாட்களை ஏற்படுத்துவர். கிராமத்தின் பொதுக்குளத்தின் கரைகளில் ஏற்படும் உடைப்புகளை அடைத்தல், நீர்த் தூம்புகளைச் சரியாக வைத்திருத்தல், கிராமப் பாதுகாப்புக்கு ஆவன செய்தல் போன்ற கருமங்களை ஆற்றுவர். குற்றஞ் செய்தோரை அரசாங்க அதிகாரிகளுக்கு முன்கொண்டு போய் நிறுத்துவர். மேலதிகாரிகள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவர். அவர்களின் கடமைகள் இருமுகப்பட்டவை@ ஒரு புறம் கிராம மக்களின் தலைவர்களாய், கிராமப் பொது வாழ்வுக்கு அத்தியாவசியமானவற்றைச் செய்வர். மறுபுறம், மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளாய் ஆட்சியாகிய மரத்தின் சத்தூட்டும் வேர்களாய்;;; விளங்குவர்.

‘பத்த’ விதானைமார்

இங்ஙனம் பிரதேசவாரியாக அமைந்த நிர்வாக இயந்திரத்தைவிட, அரசகருமங்;களைத் ‘திணைக்கள’ (இலாகா) வரியாகச் செய்யும் அதிகாரிகளும் இருந்தனர். அக்காலத்தில் சிங்கள சமுதாயத்தில் நிலவி வந்த சாதிப்பிரிவை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு தொழில் செய்வோரும் ஒவ்வொரு ‘பத்த’ என்னும் குழுக்களைச் சார்ந்திருந்தனர். உதாரணமாகக், கொல்லர், வண்ணார் முதலிய தொழிலாளிகள் தனித்தனிக் குழுக்களாயிருந்தனர். 17 - ம் நூற்றாண்டில் கோட்டை இராச்சியத்தில் மிக முக்கியமான ‘பத்த’ இரண்டு: ஒன்று கறுவா சேகரித்தலில் ஈடுபடுவோர் குழு@ இதன் முக்கியத்தைக் கருதி, இதற்கு ‘மகாபத்த’ என்ற பெயர் வழங்கியது. மற்றது, யானை பிடித்தல், பழக்குதல், பாதுகாத்தலில் ஈடுபட்ட குழு, அரசிறை பற்றி நோக்கும்;போது குயவர், வண்ணார், பாயிழைப்போர் குழுக்கள் அத்துணை முக்கியமானவையல்ல. சாதியை அடிப்படையாகக் கொண்ட இக்குழுக்களைவிட, இரத்தினக் கற்கள் தோண்டுவோர், ‘மராள’ வரி சேகரிப்;போர் குழுக்களும் ‘பத்த’ என்ற பெயராலேயே அழைக்கப்படும்.

5. டீயனனய
6. இறந்தோர் விட்டுச்சென்ற அசையும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி. வடமொழிச் சொற்காளன ‘மருத’10 ’ஹார’ என்பன திரிந்து, ‘மலார’ என்றும் பின் ‘மராள’ என்றும் ஆயிற்று.

இப் ‘பத்த’ என்பவற்றின் தலைமைப் பதவி வகிப்போர் விதானைமாராவர். கறுவா பதனிடும் சாலியர் குழு ஒன்றில் நிர்வாக அதிகாரி ‘மகாபத்த விதானை’ யாவன். இப்பத்த விதானைமாரின் கடமை முடிக்குரிய வருமானங்களை அறவிடுதலும், தமது குழுவிலுள்ளவர்களின் சேவையை அரசகருமங்களாற்றுதற்குப் பெற்றுக் கொடுத்தலுமாம். இக்கடமைகளை நிறை வேற்றுதற்கு விதானைமாருக்;கு உதவி புரிவோர் ‘மொஹொட்டால’, கணக்கபிள்;ளை என்போரும் அந்த அந்தச் சாதிக்குரிய தலையாரியுமாம். இத்தலையாரிக்குச் சில சாதிகளிடையே ‘துரை(ய)’ என்றபட்டம் வழங்கும். இவன் நிர்வாகச் சங்கிலியின் முக்கிய இணைப்பு ஆவன். இவன் மூலமே விதானை ‘பத்த’ விலுள்ள ஒவ்வொரு குடும்பத்துடனும் தொடர்பு கொள்வான்.

இந்நிர்வாக அமைப்பின் சிறப்பு

இங்ஙனம் பிரதேச அடிப்படையிலும், ‘பத்த’ அடிப்படையிலும், அமைந்த நிர்வாக நிறுவனம் இராச்சியத்தின் மூலை முடுக்குகளில் வசிக்கும் ஒவ்வொரு குடியையும் அரசசோவையில் இணைத்துவிட வல்லதாயிருந்தது. தலைமை ஸ்தானத்தில் நிறைவேறும் தீர்மானங்களை எல்லாவிடத்திலும் பரப்பி, அவற்றைச் சாதனையிற் கொண்டு வரும் ஆற்றல் படைத்திருந்து. நேரடியான கட்டளைகள் வராதவிடத்தும், அது நிர்வாகம் சீர்குலைந்து விடாமல் உள்@ராட்சியை நடத்திச் செல்லும் திறமை பெற்றிருந்தது.

இராணுவ அமைப்பு

இவ்வாறு நீண்ட காலமாக இலங்கையின் மானிய முறைச் சமுதாய அமைப்புக்கு எற்ற வகையில் அமைந்திருந்த நிர்வாக அமைப்பைப் போர்த்துக்கேயர் கையேற்றினர். சுதேச இராணுவ சேவா முறையும் அவர்களுக்கு வாய்ப்பாயமைந்திருந்தது. இந்நாட்டில் நில உடைமைக்குப் பதிலாக அரசுக்கு இராணுவ சேவை அளிக்கவேண்டியது கடமையாயிருந்தது. ஆனால் பிற நாடுகள் சிலவற்றில் இருந்ததுபோல் சகல குடிகளும் கட்டாய இராணுவ சேவை செய்யவேண்டியதில்லை. அக்கடப்பாடுடைய சில குடும்பங்களே தாம் ஊதிபமாகப் பெற்ற நிலத்தை ஆண்டு அனுபவித்து வருவதற்குப் பதிலாக இராணுவ சேவை செய்தனர். சாதாரண சுதேச போர்வீரர் ‘லாஸ்கரின்’ கள் எனப் போர்த்துக்கேயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு மேலதிகாரிகளாக ஆராய்ச்சி, முதலியார், திசாவை என்போர் கடமையாற்றினர்.

இச்சுதேசிப்படை பிரதேச அடிப்படையில் சேர்க்கப்பட்டது. மாகாண அதிபதியான திசாவை தேவை எற்படும்போது தன் நிர்வாகத்திலுள்ள இடங்கள் தோறும் படை திரட்டுமாறு கட்டளை பிறப்பிப்பான். அவனுக்குக்கீழ்ப் பணிபுரியும் இரு அதிகாரிகளும்; அதனை நிறைவேற்றுவர். ஒரு சிறு கூட்டம் போர் வீரருக்குத் தலைமை தாங்குவோன் ஆராய்ச்சி, முதலியார் இவனுக்கு மேலதிகாரி. போர் வீரர் கடமையாற்ற வரும்போது தம் ஆயுதங்களையும், தமக்கு வேண்டிய உணவையும் கொண்டுவருவர். 15 நாட் போரிட்டபின் திரும்பிச் சென்று 15 நாட்கள் ஓய்வுபெறுவர். மீண்டு வரும் போது உணவுடன் வருவர். போர்த்துக்கேயர் வருமுன் போர்க்காலம் மிகக் குறுகியதாயிருந்தமையால், இம்முறை பயனுடையதாயிருந்தது. அவர்கள் வருகைக்குப்பின் போர்கள் நீடித்தமையால் இவர்கள் சேவைபுரிய வேண்டியகாலமும் நீண்டது. இவர்கள் அதிருப்தியும் அதிகரித்தது. இவர்களைத் திருப்திப் படுத்த அந்நியர் புதுமுறைகளை வகுக்கத் தவறினர்.

போர்த்துக்கேயர் நிர்வாக அமைப்பை மாற்றாமல் விட்ட காரணம்

அங்ஙனம் வழிவழியாக வந்த சிவில், இராணுவ நிர்வாக அமைப்பை போர்த்துக்கேயர் அப்படியே ஏற்றுக்கொள்ளக் காரணமென்ன? ஏன் அவர்கள் ஒரு புதிய நிர்வாக முறையை வகுக்கத் தவறினர்? இதற்குப் பல காரணங்கள் உள.

1. இம்முறை இந்நாட்டுக்கு ஏற்றதாயிருந்ததுடன் போர்த்துக்கேயருக்கும் பரிசயமான மானிய முறையிலமைந்திருந்தது. அவர்கள் நாட்டிலும் மானிய முறையடிப்படையிலேயே நிர்வாகம் நடைபெற்றது. உயர்குடிப் பிறந்தோரே படையிலும் சிவில் சேவையிலும் உயர் பதவி வகித்தனர்.
2. போர்த்துக்கேயர் பெற விரும்பியவற்றை யெல்லாம் இவ்வமைப்பு மூலம் பெறக்கூடியதாயிருந்தது. அவர்கள் ஆசையுடன் நாடிய வர்த்தகப் பொருட்களாகிய கறுவா, யானை, இரத்தினக்கல் முதலியவற்றை இச்சேவா முறைமூலம் எளிதிற் பெற்றனர். இவற்றைக்கடற்கரைத் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லவும் வாய்ப்பிருந்தது.
3. தேசாதிபதி போன்ற அதிகாரிகள் அரசபவனி வரவும் நாட்டைச் சுற்றிப் பார்க்கவும், போரில்களைப்புற்ற போர்த்துக்கேயர் கூடாரத்துக்குத் திரும்பி ஓய்வு கொள்ளவும் விருந்தயரவும் இச்சேவா முறை வசதிகளையளித்தது.
4. இந்நிர்வாகமுறை சில உடைமை, நிலவரி வசூல்முறை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது@ எனவே இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால், நிலவரி முறையிலும் மாறுதல் ஏற்படுத்த வேண்டும். இதற்கு வேண்டிய சிந்தனா சக்தியும், செய்ற்றிறமும் போர்த்துக்கேய நிர்வாக அதிகாரிகளிடம் காணப்பட்டில. அவர்கள் போரிலும் அரசியற் பிரச்சினைகளிலும் மூழ்கியிருந்தமையால், நிர்வாக அமைப்பைச் சீர்திருத்தும் ஆற்றலற்றிருந்தனர்.

எனவே, போர்த்துக்கேயர் நாகரிகமுள்ள நாடுகளை ஆளமுற்பட்டபோது ஆங்காங்கு அமைந்திருந்த நிர்வாக சாதனங்களையே பயன்படுத்தினர். பிறேசில் போன்ற பின்தங்கிய நாடுகளில் மட்டும் தம் நாட்டு வழக்கத்தையொட்டிய ஆட்சிமுறையை அமைக்கலாயினர்.

சிகரமற்ற கோபுரம்

கோட்டையரசின் நிர்வாக அமைப்பை அப்படியே எடுத்துக்கொண்ட போர்த்துக்கேயர் அதன் மணிமுடியாகத் திகழ்ந்த அரசனை அதில் அமைக்கத் தவறிவிட்டனர். போர்த்துக்கல் மன்னன் கோட்டையரசனாகப் பிரகடனஞ் செய்யபட்டான். ஆனால் அவன் பெயர் மட்டுமே இங்கு கிடந்தது. அரசனின் நிழலும் இன்றி இப்பழைய நிறுவனத்தை முறையாகப் பயன்படுத்துதல்; அரிதாயிற்று. சிகரம் அற்ற கோபுரம்போல் அழகிழந்து விளங்கியது. இப்பழைய நிர்வாக அமைப்பு சிங்கள மக்கள் தம் நடுவில் வாழ்ந்து கிருபை செய்யும் ஒரு தேவபுருஷனை மன்னனாகப் பெறவிரும்பினர். எங்கோ வெள்ளையுலகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் வாழும் ஒருவனைப் போற்றி, அவனுக்காகச் சேவைசெய்ய அவர்கள் ஒருப்பட்டிலர். அவனது பிரதிநிதியாகத் தம்நடுவில் திகழ்பவரது புன் செயல்களைக்கொண்டு அக்கண்காணா இறையும் தெய்வாம்சமுடையதன்று@ கேவலம் நரகக்கிடங்குக்கே ஏற்றது எனக் கருதியிருப்பர்.

தேசாதிபதியின் அதிகாரங்கள்

அரசனுக்குப் பதிலாக இங்கு கடமையாற்றிய பிரதிநிதி ‘கப்ரின் - ஜெனரல்’ எனப்பட்டான். மல்வானையில் தனக்கென ஒரு மாளிகை அமைத்துக் கொண்டு, சிங்கள மன்னர்களைப்போல வாழ்ந்தான். அவனது மெய்க்காவலர் குழுவில் முப்பது சிங்களரும் முப்பது போர்த்துக்கேயரும் ‘பண்டிகராள’ என்ற அதிகாரியின் கீழ் இருந்தனர். அவன்முன் சாஷ்டாங்கமாக விழுந்து மும்முறை வணங்கவேண்டும். அவன் முன் நிற்குமளவும் உச்சியிற் கூப்பிய கையுடனேயே நிற்பதுடன், “தேவ”, என்றே அழைக்கவேண்டும். முன்னாட் கோட்டையரசரிடம் ஆண்டுதோறும் அதிபதிகள் வந்து. கொடுக்க வேண்டிய திறையை அளித்துச் செல்வது போல இவனிடம் வரல் வேண்டும். (இப்பொருட்களை அவன் தனக்குச் சொந்தமாக்கினான்) அவன் நான்கு பேருக்கும் எட்டுப் பேருக்கும் இடைப்பட்ட தொகையான சிங்கள அதிபதிகளைக் கொண்ட நீதி மன்றத்தை அமைத்துத் தானே தலைவனானான்.

பழைய முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் :

(அ) உயர் பதவிகளைப் போர்த்துக்கேயர் பெறல்.

பழைய சிங்கள நிர்வாக அமைப்பில் சகல அதிகாரிகளும் சிங்களராகவே இருந்தனர். (போர்த்துக்கேயருட் சைமன் பிஞ்ஞாவோ மட்டுமே தர்மபாலன் காலத்தில் சுதேசிப் படைத் தலைமைப் பதவி வகித்தான். ஆனால் போர்த்துக்கேயர் நிர்வாகப் பொறுப்பை

* இது இராணுவ உயர்பதவியைக் குறிக்கும். எனினும் பலர் வழங்கும் முறைபற்றி இங்கு தேசாதிபதி என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. *

ஏற்றுக்கொண்ட பதினாறு ஆண்டுகளுக்கிடையில் உயர்பதவிகள் பெரும்பாலனவற்றைப் போர்த்துக்கேயரே பெற்றனர். தமக்கு விசுவாசமுடன் உழைத்த பழைய சிங்கள உயர் அதிகாரிகளை நீக்கிவிட்டனர். நான்கு திசாவைகளும் போர்த்துக்கேயரே. 1608 - ல் போர்த்துக்கல் அரசனான பிலிப் (ஸ்பானிய 3 -ம் பிலிப்) பின் கட்டளைப்படியே உயர் பதவிகளெல்லாம் போர்த்துக்கேயருக்கென ஒதுக்கப்பட்டன. இலங்கையர் இராஜகாரியத்தைப் பயன்படுத்தித் தம்சொந்த வேலைகளைச் செய்விக்கிறார்கள் என்பதும் அவர்கள் சுதேசிப் படைத் தலைவர்களாதலால் அதிக அதிகாரம் பெற்றிருக்கின்றனர் என்பதுமே அரசன்காட்டிய நியாயங்கள், இதிலிருந்து, அரசன் சிவில் நிர்வாகத்தையும் இராணுவ சேவையையும் வேறுபடுத்தி, அதன் மூலம் சிங்கள அதிகாரிகளின் அதிகாரத்தைக் குறைக்கும் கொள்கையை மேற்கொள்ளலாயினான் என்பது பெறப்படும். (இதே கொள்கையைப் பின்னர் ஆங்கிலத் தேசாதிபதிகளும் கடைப் பிடித்தனர்)

ஆனால் இக்கொள்கையினால் விளையும் பலாபலன்களை அஸெவெடா முதலிய முதற்றேசாதிபதிகள் உணர்ந்தேயிருந்தனர். போர்த்துக்கேய அதிகாரிகள் மக்களின் வாழ்க்கை முறையை அறியார்@ மக்கள் இனம், நடையுடைபாவனைகளை அறியாமல் பரம்பரை வழக்குக்கு மாறாக நடப்பர்@ எனவே அதனால் பாரதூரமான அரசியல் விளைவுகள் ஏற்படும் என்பதை மன்னனுக்கு உணர்த்தினர். எனினும் படிப்படியாக நிர்வாகத்தைப் போர்த்துக்கேயமயமாக்கும் கொள்கை பலம் பெற்றே வந்தது.

(ஆ) அதிகாரிகளின் மீது மத்திய அரசாங்கக் கட்டுப்பாடு குன்றுதல்

இங்ஙனம் தம்மவரை உயர் அதிகாரிகளாக நியமித்த போர்த்துக்கேய ஆட்சியாளர், அவர்கள் மீது அரசன் செலுத்திவந்த கட்டுப்பாட்டையும் காலஞ்செல்லச் செல்லத் தளர்த்தி விட்டனர். அந்நியர் ஒரு நாட்டை ஆளமுற்படும்போது, உயர் அதிகாரிகளை அதிக கட்டுப்பாடின்றி விட்டு, அவர்கள் பல வசதிகளையும் அனுபவிக்க இடமளிப்பதன் மூலம் அவர்கள்தம் ஆட்சிக்குப் பக்கபலமாயிருக்குமாறு செய்வர். இதே நிலை போர்த்துக்கேய ஆட்சியிலும் ஏற்படலாயிற்று. சிங்கள அரசர் காலத்தில் அனுபவிக்காத விசேட சலுகைகள் பலவற்றை அதிகாரிகள் அனுபவிக்கலாயினர். எராளமான நிலத்தைத் திசாவைமார் தம் விரும்பம் போல் வழங்கலாயினர். (முன்னாளில் மன்னர் மட்டுமே இதனைச் செய்தனர்) திசாவைமார் குடிகளுக்கு மரணதண்டனை விதிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இவ்வுரிமை எவ்வளவு தூரம் துஷ்பிரயோகஞ் செய்யப்பட்டிருக்கும் என்பதற்குச் சான்று கூறுகிறான் றிபெய்றோ:

“சட்ட நெறியேதுமின்றிச் சுதேசிகளைக் கோடரியாற் பிளந்தெறியவும், கழுவேற்றவும் திசாவைமார் அதிகாரம் பெற்றனர்”

ஆண்டுகொருமுறை அரசனைக் கண்டு பரிசுகள் (தேகும்) அளிக்கும் வழக்கத்தையும் திசாவைமார் விட்டனர். அரசாங்கத்துக்கும் குடிகளுக்கும் உரிய பொருள்களைத் தமதாக்கினர். இராஜகாரியம் பற்றிய முழு விபரங்களையும் ஆள்வோர் அறியார் ஆகையால் அவர்கள்தம் சொந்த இலாபத்துக்குச் சேவையைப் பயன்படுத்தினர். உதாரணமாக இரும்பு உருக்கும் கொல்லரின் சேவையைக் கொண்டு ஆயுதங்கள்உற்பத்தி செய்து இந்நாட்டுக்கு வெளியே விற்றனர். இது பற்றிப் போர்த்துக்கல் மன்னனும் கேள்வியுற்றுத் தேசாதிபதிக்கு எழுதினான். ஏழு கோறளையில் ஆயக்குத்தகையைச் சைமன் கொரியா அபகரித்தான். பல அரசாங்க அதிகாரிகள் கீழதிகாரிகளை வருத்திப் பல வழிகளிலும் பொருளீட்டினர்@ அரசாங்கத்தைப் பின்பற்றி, அது குறித்த சொற்ப விலைக்குப் பாக்கு விற்குமாறு அவர்கள் வற்புறுத்தினர். போர்த்துக்கல் மன்னன் இவனைக் கேள்வியுற்றுக் குடிகளுக்கு அநீதி செய்தால் அவர்களது அரச விசுவாசம் குன்றும் என்றும், திசாவைமாரின் அதிகாரத்தைக் குறைக்கும்படியும் கருத்துக் தெரிவித்தான். 1636 இலும் அரசனுக்கு இதுபற்றி முறையீடு செய்ப்பட்டது. எனவே போர்த்துக்கேய ஆட்சி முடியும்வரை நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை என்றே கூறலாம்.

(இ) அரசிறைக் கணக்குத் தனிப்பிரிவு

போர்த்துக்கேயரின் நிர்வாக முறைக்கும் பழைய கோட்டையரசனின் நிர்வாக முறைக்கும் இடையிற் காணப்பட்ட முக்கியவேறுபாடு இறைவரிக்கெனத் தனிப் பிரிவொன்று புதிதாய் அமைக்கப்பட்டமையாகும். சிங்கள ஆட்சி முறையில் இராஜகாரியம் இறைவரியினின்றும் பிரிக்கப்படமுடியாத முக்கிய அங்கமாயிருந்தது. ஆனால் போர்த்துக்கேயர் இப்பாரம்பரியத்தை அறியார். தம்நாட்டு வழக்கத்தைப் பின்பற்றிக் குடியேற்ற நாடுகளிலும் இறைவரி அதிகாரி ஒருவனை அரசாங்க வரவு செலவுக்குப் பொறுப்பாளியாக நியமித்தனர்.

இறைவரி அதிகாரியின் கடமைகள்

அவன் இறைவரி வசூலித்தற்கு அடிப்படைக் கொள்கையை வகுத்தான். வரிவசூலிக்கும் உத்தியோகத்தரை மேற்பார்வை செய்தான். அரசாங்கத்தின் செலவினங்களுக்கும் உத்தரவு அளிப்பவன் அவனே. அரசாங்க நிதிச்சாலைக்கு அவனும் அவனது உதவியாளனான ‘பண்டகசாலைத் தலைவ’ னும் பொறுப்பாயிருப்பர். வரிவசூலிக்கும் அன்றாட வேலைகளைப் பழைய ஆட்சி முறையிற் செய்தோரே செய்துவந்தனர்.

முதன் முதலாக இப்பதவியில் நியமிக்கப்பட்டவனுக்குரிய கடமைகளைப் போர்த்துக்கல் மன்னன் வரிவாக வகுத்தான். ஏற்ற இடங்களில் சுங்கச்சாலைகளை அமைத்து அரசாங்கத்துக்குரிய வரிகளைப் பெறல், பொருளாகக் கிடைத்த வரிகளைப் பத்திரப்படுத்தல் அவற்றைக் கோவாவுக்கோ, ஸ்பனுக்கோ அனுப்புதல், மீதியை விற்றுக் காசைப் பாதுகாத்தல், மேலதிக அரசிறை வருமானத்துக்கு வழிதேடல் முதலிய விடயங்கள் பற்றிய கட்டளைகளை அளித்தான். மேல் கடற்கரைத் துறைமுகங்களை அரண் செய்தல். அவற்றுக்கு அண்மையில் நிலம் பெற்றவர்கள் அங்கேயே குடியிருக்கச் செய்தல் முதலிய அரசியற் கருமங்களும் அவனிடம் ஒப்புவிக்கப்பட்டன. தோம்பு எனப்படும் நில இடாப்புகளில் கிராம வருவாய்க்குரிய வழிகள் அனைத்தும் நிலத்தின் விளைபொருள், இராஜகாரியம், அரசாங்க வருமானம் முதலியன எழுதப்படல் வேண்டும் என அவனுக்க உத்தரவு கிடைத்தது.

அவனுக்கும் பிற அதிகாரிகளுக்கும் உரிய அதிகார எல்லை.

இறை வரி வசூலிக்கும் பிரிவுக்கும் மற்ற நிர்வாகத் துறைக்குமிடையில் சுமுகமான தொடர்பு இருத்தற் பொருட்டு ஒவ்வொரு அதிகாரியின் அதிகார எல்லை வரையறுக்கப்பட்டது. சாதாரண செலவுகளுக்குப் பணம் அளிக்கும் பொறுப்பு இறைவரியதிகாரியிடம் அவனது உதியாளனான பண்டகசாலை யதிபனிடமும் இருக்கும். கொழும்பின் தளபதி இறைவரியைச் செலவிடும் விடயத்தில் தலையிடலாகாது. தேசாதிபதி அசாதாரண செலவினங்களுக்குத் தன் அதிகாரத்தின் மீது தொகையை ஒதுக்கலாம். அதாவது இறைவரியதிகாரியிலும் மூன்று பங்கு தொகையை அவன் செலவிடலாம். ஆனால் இவ்வரம்பற்ற அதிகாரம் துஷ்பிரயோகஞ் செய்யப்படாமல் மூன்று தடைகளிடப்பட்டன :

1. தேசாதிபதி குறிப்பிடும் செலவுகளை இறைவரியதிகாரி “பார்வை” யிடல் வேண்டும்;.
2. தனது செலவு விபரங்களைத் தேசாதிபதி இராசப் பிரதிநிதிக்கு அனுப்ப வேண்டும்.
3. தேசாதிபதி சுங்கவரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கோ, வேறு உத்தியோகத்தருக்கோ செலவுக்குப்பணம் கொடுக்கும்படி நேரடியாகக் கட்டளையிடலாகாது@ பண்டகசாலை யதிபனுக்கே இடவேண்டும்.

எனினும் இராணுவ மேலதிகாரியான தேசாதிபதிக்கும், பண்டகசாலை யதிபனுக்கும், இறைவரியதிகாரிக்குமிடையிலுள்ள தொடர்புகள் விளக்கமாக வரையறுக்கப்படாமையால் பல சிக்கல்கள் எழலாயின. பின்னாளில் தியோகு டீ காஸ்ற்றோ (1633 - 35, 36 - 38) என்ற தேசாதிபதி ஒரு அரசாங்கத்திற்கு இரு தலைவர்களிருப் பின் நிர்வாகம் முறையாக நடைபெற மாட்டாது என முறையிடலானான். தொடக்க காலத்திலிருந்தே தேசாதிபதிக்கும் இறைவரி யதிகாரிக்குமிடையில் போட்டியும் பூசலும் ஏற்பட்டன. அஸெவெடோ போன்றவர்கள் தாமே எல்லா அதிகாரத்தையும் கைக்கொண்டனர்.

பண்டகசாலைத்தலைவன் கடமைகள்

ஒரு பண்டகசாலையிருக்கும் துறைமுகத்தின் நிர்வாகத்துக்கு ஒரு பண்டகசாலைத் தலைவன் நியமிக்கப்பட்டான். இலங்கையிற் கொழும்பிலும், காலியிலும் இரு தலைவர்கள் இருந்தனர். சாதாரணமாக அரசிறையும், வாணிகமும் இத்தலைவன் பொறுப்பிலேயே இருக்;கும். இறை வரியதிகாரியும் இவனும் பொக்கிஷத்தின் சாவிகளுக்குப் பொறுப்பாயிருப்பர். கொழும்புப் பண்டகசாலைத் தலைவன் தன்கடமைகளுடன் பிரதம பொலீஸ் அதிகாரி, பொது வேலையதிபன், இறந்தோரின் சொத்துக்குத் தர்ம கர்த்தா என்போரின் கடமைகளையும் செய்ய வேண்டியவனானான். இலிகிதன் ஒருவன் அவனுக்கு உதவி செய்வான். அரசாங்கத்துக்குரிய வருமானங்களைப் பணமாகவும் பண்டங்களாகவும் சேகரித்துப் பாதுகாப்பது அவன் கடமை. செலவு விடயங்களிலும் அவனுக்குச் சிறிது அதிகாரம் இருந்தது. ஆனால் சுயநலமிக்க தேசாதிபதிகள் தாமே இப் பொறுப்புகளை மேற்கொண்டனர்.

வசூலிக்கும் முறை

பழைய முறையைப் பின்பற்றிப் போர்த்துக்கேயர் பணமாயும் பொருளாயும் வரிவசூல் செய்தனர். இதனை நிறைவேற்ற இரு முறைகள் கையாளப்பட்டன: (1) பிரதானமான வரிகளை அரசாங்க அதிகாரிகள் நேரடியாக வசூலித்தனர். (2) முக்கிய மில்லாதவற்றை வசூலிக்கும் உரிமை குத்தகைக்காரரிடம் விடப்பட்டது. முக்கியமான ‘பத்த’ (குழுக்) களிடமிருந்து அதிகாரிகள் வசூலித்தனர். உதாரணமாக மகா பத்த விதானை சாலியரது ‘பத்த’ விடமிருந்து கறுவாவைச் சேகரித்துக் கொழும்புப் பண்டகசாலைத்தலைவனிடம் ஒப்புவித்தான். அரசனுக்குரிய புலத்கமத்தின் விதானை அங்குள்ள வருமானத்தைக் கொழும்பிற் சேர்ப்பான். அரசாங்க யானைகளுக்கு உணவு சேகரித்துக் கொடுக்கும் பண்ணையாரின் விதானை அவர்களது சேவையைப் பெற்றுப் பொருட்களை உரிய இடத்தில் ஒப்புவி;ப்பான். ‘மராள’ வரி சேகரிக்கத் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆண் குழந்தைகளின்றி இறப்போரிடம் முழு அசையும் பொருட்களும், ஆண்வாரிசு இருப்பின் மூன்றில் ஒன்றும் வசூலிக்கப்படும். துறைமுகத்தில் வசூலிக்கப்படும் சுங்கவரி சேகரிக்கும் பொறுப்பு தாளத்தார் என்ற அதிகாரிகளிடமும், சில சமயம் பண்டகசாலைத் தலைவனிடமும் இருக்கும். அதிகாரிகள் சேரிப்பதைப் பண்டகசாலைத் தலைவனிடம் ஒப்புவிக்க வேண்டும். விதானைமார் நிர்வாக அதிகாரிகளே@ ஆனால் அவர்கள் வசம்வரி சேகரிக்கும் கடமையும் ஒப்புவிக்கப்பட்டது.

போர்த்துக்கேய நிர்வாகத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றம் அரசுக்கும் குடிகளுக்குமிடையில் ஏற்படும் பந்தத்தை இல்லாமற் செய்தது. அநேக கிராமங்கள் தனிப்பட்டோருக்குக் கொடுக்கப்பட்டன. அவற்றின் வரியை அவர்கள் காசாகக் கொடுப்பர். 1615 க்குப்பின் அவர்கள் அதனை ஆண்டுக்கு இருமுறை கொடுப்பதுடன், கிராமத்தார் அரசனைக் கண்டு கொடுக்கும் ‘தேகும்’, ‘பிங்கோ’ முதலிய பரிசுகளையும் பெற்றுத் தருமாறு கட்டளையிடப்பட்டனர். இதனால் குடிகள் மன்னனைக் கண்டு அவன் தம்மைக்; காப்பதற்குப் பிரதியுபகாரமாகத் தாம் உற்பத்தி செய்த பண்டங்களில் ஒரு பகுதி யைப் பரிசளிக்கும் வழக்கமும். அதனால் உண்டாகும் பாந்தவ்யமும் இல்லாதொழிந்தன. எனவே, போர்த்துக்கேய ஆட்சி தம் பெருளை அபகரிக்கும் கொள்கைக்கார ஆட்சி என்ற எண்ணம் மக்களிடையே பரவியது.

குத்தகைக்காரரிடம் விடப்பட்ட வரிகள் அதிக வருமான மில்லாதவை. ஆயக்குத்தகை மூலம் களுத்துறையில் தினம் அரை லரினும் அங்குருவத்தோட்டையில் வருடம் 16 லரினும் கிடைத்தன. வண்ணார், தட்டார், சுண்ணாம்புக் காளவாய் எரிப்போர், மீனவர் ஆகியோரிடையே வரி வசூலிப்பதையும் குத்தகையாகக் கொடுப்பதுண்டு.

படையமைப்பு

இலங்கையரை அட்சி புரிவதற்குச் சிங்கள நிர்வாக அமைப்பு ஏற்றதாயிருந்தது. இங்கு குடியேறிய போர்த்துக்கேயரைப் பரிபாலிக்கச் சற்று வேறான முறைகள் புகுத்துதல் அவசியமாயிற்று. வந்து குடியேறியோருட் பெரும்பாலோர் படைவீரர். அவர்கள் பரிபாலனம் இராணுவ நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.

படைகளுக்கு முழுப்பொறுப்புடையவன் கப்ரின் ஜெனரல் (தேசாதிபதி) படையணிகளுட் பெரும்பகுதி மெனிக்கடவரையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் தலைவன் களத்துக் கப்ரின் - மேஜர் எனப்பட்டான். அவனுக்குக் கீழே பல ‘கப்ரின்’மார் கடமையாற்றினர். ஒவ்வொரு ‘கப்ரினுக்கும்’ கீழே ஏறத்தாழ 30 முதல் 38 போர்வீரர் வரையுள்ள படையணி (கம்பனி) கள் இருந்தன. இவற்றில் "என்சைன்’மார், ‘சார்ஜென்ற்’மார் முதலிய கீழதிகாரிகளும் கடமையாற்றினர். வேறு கேந்திரஸ்தானங்களிலும் படையணிகள் வைக்கப்பட்டன. சகல இராணுவ அதிகாரிகளையும் கப்ரின் ஜெனரலே நியமிப்பான். கொழும்பு, காலி நகர்த்தளபதிகள் மட்டுமே போர்த்துக்கேய அரசனால். அன்றேல் கோவா இராசப் பிரதிநிதியால் நியமிக்கப்படுவர்.

12. போர்த்துக்கேயரின் காசுக் கணிப்பு @
4 ரீஸ் ஸ்ரீ 1 பணம்
100 ரீஸ் ஸ்ரீ 1 லரின்
300 ரீஸ் ஸ்ரீ 1 ஸெராஃபிம் பர்தாவோ
400 ரீஸ் ஸ்ரீ 1 குருசாடோ
லிஞ்சோட்டெண் குறிப்புப்படி 1 லரின் ஒரு பசு அல்லது எருதின் விலை.

படைவீரர் மிகக் கடுமையான இராணுவச் சட்டங்களுக்குட்பட்டிருந்தனர். சிறு குற்றம் புரியினும் மரணதண்டனை பெறுவர். எனினும் அவர்கள் பொது மக்களுக்கு இழைத்த கொடுமைகள் சொல்லிடங்கா. போர்த்துக்கேய மறியற் சாலைகளிலிருந்து இராணுவ சேவைக்கு வந்த தீயோர் பலர் இலங்கையில் இடம் பெற்றனர். கோவாவில் குற்றம் செய்தோர் பலரை இராசப் பிரதிநிதி இங்கு மாற்றிவிட்டான். போர்வீரருக்குச் சம்பளம் முறையாகக் கொடுக்கப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில் கொள்ளையிடல் அவர்கள் பையை நிரப்ப வழியாகக் கருதப்பட்டிருந்தமையால், அவர்களது மிகக் கீழான இயல்புகள் எல்லாம் வெளிப்பட்டன.

நகர நிர்வாகம்

போர்த்துக்கல் நாட்டில் நகரசபையமைப்பு முறையிற் பயின்ற குடிகள் தாம் சென்று குடியேறிய இடங்களிலும் இதனை நிலைபெறச் செய்தனர். 158;0 - ஐ அடுத்த ஆண்டுகளில் கொடும்பில் நகராட்சி மன்றம் தோன்றியிருத்தல் வேண்டும். தர்மபாலன் அதற்கு அங்கீகாரம் அளித்தான். போலும் 1584 - ல் அவன் கொழும்பிற் குடியேறிய போர்த்துக்கேயர் தமது வியாபாரப் பண்டங்களின் மீது சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை என விதிவிலக்கு அளித்தான் எனப் பின்னாளிற் கொடும்புக் குடிகள் எடுத்துக் காட்டினர். அவன் நகரமன்றத்துக்கு ஆண்டுதோறும் நாற்பது பஹர் கறுவா அளித்தான். 1585 - ல் போர்த்துக்கல் மன்னன் எழுதிய கடிதமொன்றில் ‘கமரா’ எனப்படும் நகரமன்ற அலுவல்களில் தளபதிகள் தலையிடவதாகத் தனக்குத் கொழும்;புக் குடிகள் முறையிட்டதைக் குறிப்பிடுகிறான்.

இந்த ஸ்தல ஸ்தாபனம் 1660க்கும் 1610 க்கு மிடையிலேயே மாநகர மன்றத்துக்குரிய அந்தஸ்தும் தனியுரிமைகளும் பெற்றது எனக் கருதலாம். போர்த்துக்கல் மன்னன் இலங்கை வேந்தனாகப் பிரகடனஞ் செய்யப்பட்டவுடன் கொடும்பிலுள்ள குடிகள் தமது நகர நிர்வாகத்தைச் சட்டப்படி தம் கையில் வைத்திருக்க எண்ணினர். 1602 - ல் அவர்கள் தம் நகருக்குப் போர்த்துக்கலிலுள்ள எவரோ நகரின் அந்தஸ்தையளிக்கும்படி தம்மன்னனுக்கு விண்ணப்பித்தனர். அக்காலத்தில் கீழ் நாடுகளில் கோவாநகர் ஒன்றே லிஸ்பனை ஒத்த அந்தஸ்துள்ள மாநகர மன்றம் உடையதாயிருந்தது. மக்காவோ, கொச்சி போன்ற நகரங்கள் இரண்டாம் தரஅந்தஸ்து உடைய நகரசபைகளால் நிர்வகிக்கப்பட்டன. அவற்றைப் போலவே கொழும்பிலும் நகர இராசப் பிரதிநிதிக்குக் கட்டளையிட்டான். கொச்சியை ஒத்த உரிமைகளுடன் கூடிய நகரசபை இங்கும் அமைக்கப்பட்டது.

ஏவோரா கொச்சி,மக்காவோ முதலிய நகரசபைகளின் அமைப்பைக் கொண்டு ஊகித்தால், கொழும்பிலும் குடிகள் தம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதை உணரலாம். அப்பிரதிநிதிகள் மூன்று நகராளர்ரைத் தேர்ந்தெடுப்பர். இம்மூவருடன், நகரநீதிபதிகள், நிதியதிகாரி, காரியதரிசி என்போர் சேர்ந்து ‘செனற்’ சபையை அமைப்பர். இதுவே நகரமன்றத்தின் நிர்வாகத்தை நடாத்தும். ஆண்டுக்கொருமுறை தேர்தல்கள் நடக்கும். தேர்தல் உரிமை பெற்றோர் போர்த்துக்கேய குடியேற்றவாசிகள் மட்டுமா, சுதேசிகளுமா என்பது பற்றியாதொன்றும் கூறமுடியாது. கிறிஸ்தவர்களாகிய சிங்கள உயர்குடி மக்களுட் சிலரும் நகரக்குடியுரிமை பெற்றிருக்கலாம்.

1611 அளவில் கொழும்பு நகரசபையின் வருமானம் 150 குருசாடோ என்றும் அதன் வருமானத்தைப் பெருக்கும் பொருட்டுக் களனி கங்கையைத் தாண்டி நகருக்குள் பிரவேசிப்போர் கொடுக்கும் பணத்தின் ஆயக்குத்தகைகள் சில அதற்கு அளிக்கப்பட்டன என்றும் அறிகிறோம். பின்னாட்களில் தேசாதிபதியும், கொழும்புத் தளபதியும் நகரசபை அலுவல்களில் தலையிடுவதாக நகரசபையினர் குற்றஞ் சாட்டி அரசனுக்கு விண்ணப்பஞ் செய்தனர். நகரின் பாதுகாப்புக்கு வேண்டிய அரண்களைப் பலப்படுத்த வேண்டுமென அரசனைக் கேட்டுக் கொண்டனர். போர்க்காலங்களில் தமக்கென ஒரு கப்ரின் - மேஜரைத் தேர்ந்தெடுத்துப் பகைவர் கொழும்பைக் கைப்பற்றாது கடைசிவரை போராடினர்.

போர்த்துக்கேயர் கால நீதிபரிபாலன முறை

அசெவெடோ சிங்களரை அவர்களது பழைய சட்டங்களுக்கு இயைய ஆட்சி செய்வதாக ஒப்புக் கொண்டான் என்பர். ஆனால் அச்சட்டங்கள் யாவை@ அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும்போது எழும் சிக்கல்கள் எவை என்பன போன்ற விடயங்களைப்பற்றி அறியப் போர்த்துக்கேயர் எவ்வித ஆர்வமும் இன்றியிருந்தனர். சட்டங்களை மீறுவோருக்கு எவ்வித தண்டனை அளிக்க வேண்டுமென அவர்கள் அறியார். சிங்கள அரசர் காலத்தில் விதானை, திசாவை முதலிய அதிகாரிகள் எங்ஙனம் தம் நிர்வாகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் சட்டங்களை மீறுவோரை விசாரித்துத் தண்டனை அளித்தனரோ, அவ்வாறே தொடர்ந்து போர்த்துக்கேயர் காலத்திலும் நடைபெற்று வந்தது எனக்கருதலாம். ஆனால் போர்த்துக்கேயரே திசாவை முதலிய உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் சுதேச சட்டங்களை அறியும் வசதிகள் செய்யப்படவில்லை. அவர்கள் மனம் போனவாறு தம் கருமத்தை நடாத்தினர். ஆனால் அதிகாரிகளின் தீர்ப்பில் திருப்தி இல்லையேல் மன்னனுக்கோ, அவனது அவைக்களத்துக்கோ விண்ணப்பித்தல் (அப்பீல் செய்தல்) போன்ற காரியத்தைப் போர்த்துக்கீசர் காலத்தில் செய்ய வசதியிருந்ததா என நாம் அறியோம். ஆனால் போர்த்துக்கேய இனக்குடிகளுக்கு நீதி வழங்குவதற்குத் தலைநகரில், அவர்களது தாய் நாட்டு முறையில் அமைந்த நீதி மன்றம் இருந்தது போலும், ’ஒளவிடோர்’ என்ற அதிகாரி நீதிபதியாகக் கடமையாற்றினான். (ஒளவிர் ஸ்ரீ கேட்டல்)

நீதியைப் பரிபாலிக்கும் இவ்வதிகாரி ‘வேலியே பயிரை மேய்ந்த’ வாறு, எங்ஙனம் அநியாயமாக நடந்தான் என்பது பற்றிக் குவெய்றோஸ் கூறுவது சுவையானது.

“(பண்டகசாலையதிபன் மீது சுமத்தப்பட்ட) அதே குற்றச்சாட்டுகளே ஒளவிடோர் மீதும் சுமத்தப்பட்டன. இவன் கொய்ம்ப்றா நகரில் ஒருபோதும் நீதிபதிக்குரிய அணிகளுடன் நீதி ஆசனத்தில் அமர்ந்திலன் எனினும், இங்கு சகலருக்கும் மேற்பட்ட நீதிபதி அவனே. அவன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இந்தியா முழுவதிலும் நிலைத்திருந்தவை ஆதலால், அவற்றைவிடுத்து, அவன் நீதி வழங்கும் முறையை மட்டும் குறிப்பிடுகிறேன். சுதேசகளின் வழக்குகள் சேனாபதிகளாலேயே விசாரிக்கப்படல் வேண்டும் என்பது உள்@ர் வழக்கமெனினும், அவன் போர்த்துக்கல் வழக்கப்படி தானே விசாரணை செய்யும் உரிமையை அபகரித்தான். ஏனெனில், அதனால் அவனுக்கு வருமானம் மிக அதிகம். சிவில் வழக்குகளை மெல்ல மெல்லவே விசாரிப்பான்: அல்லது ஒரு போதும் விசாரணைக்கு எடுக்க மாட்டான். (தவணை போட்டுக்கொண்டே காலத்தைக் கடத்துவான்) ஆண்டுதோறும் அவன் அசைஸ் நீதி மன்றத்திலிருந்;து விசாரணை செய்தற்கென இடத்துக்கிடம் மாறிச் செல்வான். பல்லக்குகளும் ஆடம்பரமான பவனிகளும் கூடச் செல்லும். கட்டிக்காரரும் இலிகிதரும், சேவகரும் உடன் செல்வர். எல்லோரும் ஏழைகளது செலவில் வாழ்ந்தனர். சேவகர் முன் சென்று இவர்களுக்கு வேண்டிய பலவகைப் பரிசுகளைப் பெற்று வந்து கொடுப்பர்@ இவ்வாறு அவர்கள் செய்த அழிவு கொஞ்சமன்று. வழக்குக்கு வருவோர் அளிக்கும் பரிசுப் பொருட்களது பெறுமதிக்குத் தக்கவாறு தண்டன் கூடியோ குறைந்தோ இருக்கும். அவர்கள் மீது அநீதியும் புன்மைகளும் சுமத்தப்படும். அசைஸ் காலம் முடிந்து மீண்டு வரும்போது அனைவரும் செல்வம் சேகரித்துக்கொண்டே வருவர். ஒரு அதிகாரி ஒரு முறை அநேக வழக்குகள் இருந்தமையால், தான் கொண்டு சென்ற பைகள் கொள்ளாத அளவு பணம் சேர்ந்ததாகக் கூறினான். இவ்வளவு லஞ்ச உழலும் அவர்கள் செய்த சத்தியத்துக்கு மாறானது. எனவே, இது வெளிப்படையான கொள்ளை என்றே கூற வேண்டும். வழக்குத் தீர்ப்புக்கள் எல்லாம் வாய் முறையாகவே அளிக்கப்படும். எழுத்தில் ஒன்றும் இராது. ஆசியா முழுவதும் இவ்வழக்கம் இருந்தது. ஒருமுறை கோவாவில் ஒருமந்திரி தனக்கு நீதித்துறையில் அறிவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவும் விரும்பாது. தனக்குக் கீழுள்ள ஒருவனிடம் அப்பணியை ஒப்புவிக்கவும் நம்பிக்கையின்றி. ஒருபோதும் வழக்கைத் தீர்க்காது தவணை போட்டுக் கொண்nடு வந்தானாம். அவன் சொற்ப காலமே அப் பதவியிலிருந்தான் எனினும் அவன் இறக்கும்போது 160 வழக்குகள் பல வருடங்கள் தவணை போடப்பட்டுக் கிடந்தன” இந் நிலை இலங்கையிலும் சர்வ சாதாரணமாக நிலவி வந்தது.

உசாத்துணை நூல்கள்

ஆசிரியர்க்குரியவை :

Pழசவரபரநளந சுரடந in ஊநலடழn (1594 - 1612)
னுச. வுமைசைi யுடிநலயளiபொந

வினாக்கள்.



1. போர்த்துக்கேயர் தம் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதிகளில் எவ்வித நிர்வாக அமைப்பை ஏற்படுத்தினர்? உமது விடையை விளக்கப்புற உருவப்படம் ஒன்று வரைக? (1949)
2. 16 - ம் நூற்றண்டின் இறுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் போர்த்துக்கேயருக்குச் சொந்தமாயிருந்த பகுதிகளை ஒரு புற உருவப்படத்திற் காட்டுக. சுமார் ஒரு நூற்றாண்டுவரை அவர்கள் இப்பகுதிகளை எவ்வாறு தம் பலமான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்? (1953)
3. டீ அஸெவெடோவின் சிவில், இராணுவ நிர்வாக முறைகளை வருணிக்குக. முந்தையது தோல்வியடையவும் பிந்தியது வெற்றி பெறவும் காரணமென்ன?
4. போர்த்துக்கேயர் தர்மபாலனுக்குப்பின் தமக்கு உரித்தான கடற்கரைப் பிரதேசத்தைத் தொடர்ந்து தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க இயலாமற் போனமைக்குக் காரணமென்ன? (1964)

பத்தாம் அத்தியாயம்
டச்சு அரசியல் நிர்வாக முறை

ஆரம்ப காலம்

1652 அளவில் இலங்கையின் முக்கியமான பகுதிகள் சில டச்சுக்காரரின் ஆட்சியின் கீழ்வந்தன. பெயரளவுக்கு அவர்கள் தாம் இராஜசிங்கனின் ஊழியர் என்றும் அவன் போர்ச்செலவைத் தருமட்டும் இந்நிலங்களை நிர்வகிப்பதாயும் கூறினரேயன்றி உண்மையில் அவர்களே அவற்றை ஆட்சி செய்தனர். தீவின் தென்மேற்கில் பெருந்;தோட்ட கங்கை முதல் வளவ கங்கை வரை, உள்நாட்டில் சில இடங்களில் சுமார் 30 அன்றேல் 40 மைல் தூரம் உள்ள பிரதேசம் அவர்கள் ஆட்சிக்குக் கீழ் வந்தது. 1645 - ல் கொலொன்னாக் கோறளையும், ஏழு கோறளையும் இராஜசிங்கன் வசமாயின. நீர்கொழும்புக் கோட்டையை அடுத்துச் சிறிது நிலப்பரப்பு டச்சுக்காரருக்கு இருந்தது.

கொம்பனிக்குரிய பூமியை ஆள ஒரு தேசாதிபதி (அல்லது ஜனாதிபதி) யும் அவருக்கு உதவி புரிய ஒரு சபையும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மேலதிகாரிகள் பட்டேவியாவிலுள்ள மகாதேசாதிபியும் சபையுமாம். அங்கிருந்து உத்தரவு பெறாது எந்த முக்கிய கருமத்தையும் தேசாதிபதி செய்யலாகாது. இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கை ஒழுங்காக அங்கு அனுப்படல் வேண்டும். தேசாதிபதியின் சபையில் அவரும் காரியதரிசியும், பிரதமவணிகன், பிஸ்கால். நிலவருமான அதிகாரி, படைத்தலைவன். மகாபத்த (கறுவா) அதிபன். கலுகோறளை அதிபன் என்னும் உத்தியோகத்தரும் இருப்பர். சபையில் தேசாதிபதிக்கு அடுத்த கௌரவம் பிரதம வணிகனுக்கே உண்டு.அவன் வாணிகம். நிதி முதலிய கருமங்களுக்குப் பொறுப்பாளியாவன். போர்த்துக்கேயருடன் இறுதிப் போர் இனித்தான் நடைபெற வேண்டியிருந்தும், இடையில் இராஜசிங்கனுடன் சிறு போர்கள் நடந்த வந்தும், டச்சுக்காரர் தம் ஆட்சி முறையை இராணுவ அடிப்படையில் அமைக்காது,சிவில் (குடியியல்) முறையிலேயே அமைக்க விரும்பினர்.

தேசாதிபதி முக்கிய விடயங்களைப் பற்றிச் சபையில் ஆலோசித்து அதன் முடிவைப் பின்பற்றியே கருமம் ஆற்றவேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவன் நடைமுறையில் இவ்விதியைக் கடைப்பிடித்திலன். ஆனால் இப்படி நிகழ்ந்தபோது பட்டேவிய அரசாங்கம் தலையிட்டுக் கடுமையான கட்டளையனுப்பியது. உதாரணமாக, 1651ல் தேசாதிபதி வான் கிற்றின்ஸ்ரீன் சபையைக் கேட்காமல் சில முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டான் என்ற செய்தியை இரகசியமாக அறிந்த பட்டேவிய அதிகாரிகள் அவனுக்கு விளக்கமான கட்டளையொன்றையனுப்பினர்@ அங்கு நடப்பது போலவே இலங்கையிலும் தேசாதிபதி சபையின் சம்மதமின்றி எக்கருமமும் செய்யலாகாது என்றும் அவன் அனுப்பும் அறிக்கைகள் எல்லாவற்றிலும் சபையோரின் கையெழுத்தும் இடம்பெற வேண்டுமென்று பணித்தனர். இதன் பி;ன்னர் இக்கட்டளை பொதுவாகப் பின்பற்றப்பட்டது.

நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பகுதியை ‘ஒப்பர்ஹ{ஃப்’ அல்லது பிரதானி ஒருவன் பரிபாலித்து வந்தான். தொடக்கத்தில் காலியில் தேசாதிபதியிருந்தமையால் இப்பிரதானி ஓரளவு சுதந்திரத்துடன் கருமம் ஆற்றினான். தேசாதிபதி மேற்பார்வைக்கு வருவது மிக அரிதாயிருந்தது.

காலியைச் சுற்றியுள்ள பிரதேசம் தேசாதிபதியினதும் சபையினதும் மேற்பார்வையின் கீழ் நான்க அதிகாரிகளால் பரிபாலிக்கப்பட்டது. அவர்களுள் ‘மகாபத்த’ (கறுவா) இலாகா அதிகாரி குறிப்பிடத்தக்கவன். கறுவா பதனிடும் சாலியர், பண்ணையர் வாழும் கிராமங்கள் அவனது நிர்வாகத்தில் இருந்தன. அவனுக்குக் கீழ் சிங்கள விதானைமார் ஆண்டுக்குரிய கறுவா சேகரிக்கப்பட்டதா எனக் கணக்கெடுக்கும் வேலையைச் செய்வர். டச்சுக் கம்பனியின் நோக்கில் கறுவாவே பிரதான ஏற்றுமதிப் பொருளாகையால் அதற்குப் பொறுப்பான அதிகாரி டச்சு நிர்வாக அமைப்பில் முதலிடம் வகித்தான். செழிப்பு வாய்ந்த கலுகோறளை அதிகாரியின் பொறுப்பு முக்கியமானதா கையால் அவன் காலிக்கோட்டையிலேயே வசித்தான். டச்சு நிர்வாகத்தின் சிறப்பான அம்சம் கீழதிகாரிகளைத் தக்கவாறு மேற்பார்வை செய்தலேயாம். இதனால் அது போர்த்துக்கேய நிர்வாகத்திலும் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்கியது.

அரசிறையின் பெரும்பகுதி கறுவா மூலமே கிடைத்து. சராசரி 800 பாரம் கறுவா ஆண்டுதோறும் பட்டேவியா மூலம் நெதர்லாந்துக்கு அனுப்பப்பட்டது. மிகக் குறைந்த விலை மதித்தாலும், இதன் மூலம் 384,000 .ஃபுளோன் பணம் கிடைக்கும். யானை விற்பனையால் 60 அல்லது 70 ஆயிரம் ஃபுளோரினும்@ பாக்கு மூலம் சில ஆயிரமும், குடிகள் அளிக்கும் வரிகள்;; மூலம் 20 அல்லது 30 ஆயிரமும் கிடைத்தன. படைகளை வைத்திருப்பதால் பெருஞ்செலவு ஏற்படுவதைத் தடுக்க இங்கு டச்சுக்காரரைப் பெருமளவில் குடியேற்றும் திட்டம் உருவாயிற்று. ஆனால் அது பலனளிக்கவில்லை.

1656 - க்குப் பின்

1656 முதல் 1658 வரை மேற்கிலும் வடக்கிலும் விசாலமான பிரதேசம் டச்சு ஆட்சிக்குட்பட்டது. ஆனால் இதை நிர்வகிக்க ஏராளமான டச்சு உத்தியோகத்தரை நியமிக்கக்கம்பனியிடம் பணமில்லை. ஆகவே, உயர்ந்த பதவிகளுக்கு டச்சுக்காரரையும் தாழ்ந்த உள்@ர் உத்தியோகங்களுக்குச் சுதேசிகளையும் நியமிக்கும் முறை ஏற்பட்டது. இந்நாட்டில் பழைய காலமுதல், மரபுகள் பரம்பரை வழக்கங்கள் சமூகத்தில் வேரூன்றியிருந்தன. எழுதப்பட்ட சட்டதிட்டங்கள் மிகக் குறைவாயிருந்தன. மக்கள் இவற்றைப் பின்பற்றி ஒழுகுதல் இயல்பாயமைந்தது. ஆகவே, அவற்றை எழுத்து வடிவில் அமைத்து அச்சட்ட திட்டங்களை மக்கள் பின்பற்ற வேண்டுமென விதித்து, இதை மேற்பார்வை செய்ய உத்தியோகத்தரை நியமிப்பது நடைமுறைக்கேற்ற கருமமாகத் தெரியவில்லை. பிரதேசந் தோறும் வேறுபட்டிருக்கும் இம் மரபுகளைக் கற்று அவற்றை அனுசரித்து ஆட்சி புரிவது அந்நியரான ஐரோப்பியருக்கு அதிக கஷ்டமான காரியமாயிற்று. இதனால் பல பிழைகள் நிகழ்ந்தன. உள்@ரவர் இவற்றால் வெரும் அவதியுற்றனர்.

அவர்களது நிர்வாக அமைப்பை மூன்று பிரிவாக வகுக்கலாம் :

1. வாணிக அமைப்பு
2. ‘சிவில்’ நிர்வாக அமைப்பு
3. இராணுவ நிர்வாக அமைப்பு

தீவின் நிர்வாகமாகிய கோபுரத்தின் உச்சிக்கல் போல் விளங்கியவர் தேசாதிபதியும் அவருக்கு உதவியாயிருந்த யாழ்ப்பாண, கல்விப் பரிவுகளின் “கொமாண்டர்”களுமே. இவ்விரு அதிகாரிகளையும் தேசாதிபதியும் அவரது சபையும் மேற்பார்வையிடலாம் எனினும், அவர்கள் தத்தம் பிரதேசங்களில் பூரண சுதந்தரத்துடன் நிர்வாகம் நடத்தினர்.

வாணிக அமைப்பு

வாணிக அமைப்புத்துறையை நிர்வகித்த அதிகாரிகள் நாட்டின் வியாபாரத்தால் கம்பனி அடையும் இலாபத்தைப் பெருக்குவதில் ஆர்வமுடையோராய்க்கணக்குகளை முறையாக வைத்துக்கொண்டு, வேறு பொறுப்புகள் எதுவுமின்றி இருந்தனர். அவர்களுக்குத் தலைவனாகக் கொழும்பின் மேல் வணிகன் இருந்தான். அவனுக்குக் கீழ் நோக்கிய வரிசையில் வணிகன், கீழ் வணிகன், பேரேடு பதிவோர், உதவியாளர், எழுது வினைஞர் என்போர் ஆங்காங்கு கடமையாற்றினர்.

அரசியல், சிவில் நிர்வாகம்

இவ்வாணிக நிர்வாகத் துறையில் சேவை புரிந்தோருள் தேர்ந்தெடுக்கப்பட்டவரே, அரசியல், குடியியற் (சிவில்) சேவையிலும் அமர்த்தப்பட்டனர். அதனால் மேல் வணிகன். வணிகன் முதலிய பெயர்களே இச்சேவையாயர்க்கும் வழங்கின. ஆனால் இவர்கள் அரசியல், சிவில் சேவைகளையே செய்தனர். திசாவைமாரின் பரிபாலனத்தில் மாகாணங்களிருந்தன. இம்முக்கிய பதவிக்கு டச்சுக்காரரே நியமிக்கப்பட்டனர். கொழும்பு, யாழ்ப்பாணம். காலி ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் ஒவ்வொரு திசாவை இருந்தான். அவனுக்கு கீழ் உபதிசாவைமார் நியமிக்கப்பட்டனர். அவர்களின் எண்ணிக்கை பரிபாலிக்கப்படும் பிரதேசப்பரப்பைப் பொறுத்திருந்தது. டச்சு ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் அவர்களது கருமங்கள் அதிகரிக்கவே இப்பதவிக்கு அதிக முக்கியத்துவம் உண்டாயிற்று.

கண்டி இராச்சிய எல்லைப் பிரதேசங்களில் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தமையால். அப்பகுதிகளின் நிர்வாகம் இராணுவ தளங்களின் தளபதிகளின் கையில் விடப்பட்டன. தளத்தின் முக்கியத்தைப் பொறுத்து ‘சார்ஜன்ட்’இ ‘கொமாண்டர்’ முதலிய இராணுவ அதிகாரிகள் ஆங்காங்கு பதவி வகித்தனர். அவர்கள் இராணுவ கடமைகளுடன் சிவில் நிர்வாகத்தையும் மேற்கொண்டமையால் இரு துறைகளும் ஒருமித்து இயங்க வாய்ப்பு ஏற்பட்டதுடன் கம்பனியின் நிர்வாகச் செலவும் குறைந்தது. நிலவரி வசூலித்தல், இராஜகாரியம் செய்தலை மேற்பார்வையிடல், குடிகளிடையே எழும் சிறு வழக்குகளைத் தீர்த்தல் முதலிய ‘சிவில்’ விவகாரங்களே இவ்வதிகாரிகளிடம் விடப்பட்டன. டச்சு ஆட்சி உள்நாட்டில் விஸ்தரிக்கப்பட்டபோது. இம்முறையே அங்கு பரவியது. 1670 - ன் பின் கண்டியர் கடுமையாக எதிர்த்தபோது உள்நாட்டுப் பகுதிகளில் தீவிர இராணுவ ஆட்சியே ஏற்பட்டது.

சபரகமுவா. நாலுகோறளை என்னும் திசாவைகளில் டச்சுக்காரரின் நேரடியான ஆட்சி நடைபெற முடியவில்லை. அங்கு சிங்களருட் செல்வாக்குடையோரிடமே நிர்வாகம் ஒப்புவிக்கப்பட்டது. பெரும்பாலும் கண்;டி அரசனைப் பகைத்துக் கொண்டு டச்சுக்காரரை அண்டியவர்களே அங்கு பதவியேற்றனர். அப்பகுதிகள் பெயரளவுக்கே டச்சு ஆட்சியிலிருந்தன. அங்கு வரிவசூலிக்கவோ, இராஜகாரியம் செய்விக்கவோ இயலவில்லை. இதுபோலவே வன்னிப்பிரதேசத்திலும் வன்னியர்கள் டச்சு அதிகாரத்தினுள் அடங்கி இருக்கவில்லை. ஆண்டுதோறும் திறையாக 70 யானைகள் கொடுக்க வேண்டுமென அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது எனினும் டச்சு அதிகாரிகள் அவர்களிடம் அத்திறையைப்பெறும் ஆற்றலற்று இருந்தனர். திறை வாங்கச் சென்றால் வன்னியர் உள்நாட்டினுட் புகுந்து விடுவர் படையுடன் செல்வது ஆபத்தில் முடியும். வன்னியர் கண்டியரசனின் பக்கஞ் சார்ந்துவிடுவர் என்ற அச்சத்தால் டச்சுக்காரர் பெயரளவுக்கு அவர்கள் தம் கீழ்ப்பட்டவர்கள் என்ற பெருமையை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களைச்சும்மா விட்டுவிட்டனர்.

டச்சு நிர்வாகத்தில் முக்கிய இடம் பெற்றவர்கள் துப்பாசிகள் எனப்படும் போர்த்துக்கேய சுதேச கலப்பு இனத்தவரும் முன் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப்பட்டு அந்நியரின் அடிவருடிகளாயிருந்தோருமே. இவ்விரு வர்க்கத்தாரும் தமது எஜமானர்களின் மேசையிலிருந்து விழும் எலும்புத்துண்டைக் கௌவக் காத்துக்கிடக்கும் நாய்கள் போல, எவ்வினத்தாராயிருந்தாலும் சேவை செய்து வயிற்றை வளர்க்க ஆயத்தமாயிருந்தனர். இவர்களது உளவியல்பை நன்கு அறிந்த டச்சுக்காரர் இவர்களைப் புரட்டஸ்தாந்து மதத்துக்கு மாற்றித் தம் விசுவாசமிக்க ஊழியர்களாக அமர்த்திக் கொண்டனர். அந்தோனியோ றாபெல், டொன்ஜுவான் டீ கொஸ்தா முதலிய பெயர்கள் அடிக்கடி டச்சுக்காரரின் குறிப்புகளில் அரிய சேவை செய்தவர்கள் வரிசையிற் காணப்படுகின்றனர்.

டச்சு அதிகாரிகளின் அதிகாரம் மிக அதிகமாயிருந்தது. தலைநகருக்கு வெகு தூரத்திலுள்ளார் சர்வாதிகாரமுடையோராயிருந்தனர். அவர்கள் குடிகளைத் துன்புறுத்தப் பல சந்தர்ப்பங்கள் இருந்தன. இதனால் சிக்கல்கள் பல எழுமென உணர்ந்த பட்டேவிய அதிகாரிகள் அவர்களிடம் மிகுதியான அதிகாரங்களை ஒப்புவிக்கலாகாது எனத் தேசாதிபதிக்கு ஆணையிட்டனர். சில உத்தியோகத்தருக்குச் சம்பளத்தோடு நிலமும் கொடுக்கப்பட்டதெனினும் அவர்கள் நிலத்தில் வாழ்வோரை வருத்தா வண்ணம் தடைகள் பல விதிக்கப்பட்டன. 1658 - க்கு முன் நிலவரி வசூலிக்கும் உரிமையை ‘வெந்தீ’ஸில் (கூறி) விற்கும்போது சில அதிகாரிகள் அந்த உரிமையை வாங்கியிருந்தனர். இதன்பின் இவ்வழக்கம் தடைசெய்யப்பட்டது. உயர் அதிகாரிகள் இக்குத்தகை பெற முடியவில்லை. ஆனால் கீழதிகாரிகள் சிலர் தொடர்ந்து இதனைச் செய்து வந்தனர். இக்கட்டுப்பாடுகளிலிருந்தும் பல டச்சு அதிகாரிகள் அளவற்ற அதிகாரமுடையோராய்க் குடிகளை வருத்தினர். தேசாதிபதி திறமையும் ஊக்கமும் உடையவனாயிருந்து, கீழ் அதிகாரிகளின் கருமங்களை இடைவிடாது கண்காணித்தால் மட்டுமே அவர்கள் வரம்புக்குட்பட்டுக் கடமை செய்வர். வான்டர் மெய்டன் காலத்தில் (1657 - 62) அவனது மென்மையான போக்கினால் உத்தியோகத்தரிடையே கைலஞ்சமும் ஊழலும் மலிந்தன. கணக்குகள் பிழையாக எழுதப்பட்டன. இராணுவ அதிகாரிகள் கூட முறை கேடாக நடந்து பணம் திரட்டினர். வான் கோயன்ஸ் இக்கேவல நிலையைத் திருத்தினான். ஆனால் 1665 இன் பின் அரசியல் விவகாரங்களில் அவன் கவனம் முழுவதும் சென்றமையால், அதிகாரிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ஆனால் வான் கோயன்ஸ் தந்தையும் மகனும் கூடப் பெருஞ் செல்வராகத் தாயகம் திரும்பியமையாலும், பணம் வட்டிக்குக் கொடுத்தமையாலும் நேர்மையற்ற முறைகளைக் கையாண்டனர் எனக் கூறுவாருளர்.

நிலவரி முறை

டச்சுக்காரரின் நிர்வாகத்தின் கீழ் நிலம் உடையவர்களுக்கும் ஆட்சி புரியும் கம்பனிக்குமிடையில் எப்படிப்பட்ட தொடர்பு இருத்தல் வேண்டும் என்பது பெருஞ் சிக்கலான பிரச்சினையாயிருந்தது. சில நூற்றாண்டுகளாக நிலவரி முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. குளங்களை மத்தியாகக் கொண்ட வரட்சி மண்டலத்தில் நிலவிய நில உடைமையும் வரிமுறையும் மாறியது. தென் மேல் பகுதியில் ஆற்று வெள்ளப் பெருக்கால் பயிர் செய்யும் முறையும், மலைச்சரிவில் படிவயல்கள் அமைத்துப் பயிர்செய்யும் முறையும் நடைமுறைக்கு வந்த இப்பகுதிகளில் வரட்சி மண்டலத்தில், நிலவரி வசூலித்தது போல் வசூலிக்க முடியுமா? 12 - ம் நூற்றாண்டுக்கும் 17 - ம் நூற்றாண்டுக்குமிடையில் நிலத்தில் விளையும் பொருட்களில் ஒரு பங்கை வாங்கும் வழக்கத்துக்குப் பதிலாக, நிலமுடையவன் சேவை செய்யும் முறை ஏற்பட்டது. நிலம் பலரின் கைக்கு மாறியதால் சிக்கல்கள் மிகுந்தன. சிங்களப் பிரதேசத்தில் ஒரு நிலமுடையவன் எவ்வித சேவை செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அரிதாயிற்று. தமிழ்ப் பிரதேசங்களில் விளைபொருளில் பங்கு கொடுக்கும் வழக்கமே தொடர்ந்து இருந்து வந்தது. நிலங்களை வகைப்படுத்தி, விளைபொருட்களை அறுவடை செய்யுமுன் மதிப்பெடுத்து, வேளாண்மை செய்து, பொருள் கைக்கு வந்ததும் வரி அறவிடப்படும். கட்டாய ஊழியம் சில சாதியாருக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. உயர்சாதியார் அதற்குப்பதிலாகப் பணத்தைக் கொடுக்கலாம். கீழ்மாகாணம் நெல் விளைவு மிகுந்த பகுதியாதலால் அங்கு விளைந்த நெல்லில் ஒருபகுதியை வரியாகக் கொடுக்கும் வழக்கமே மிகுந்தது.

டச்சுக்காரர் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற காலத்தில், நில மதிப்பைக் குறிக்க இயலாதவாறு கொழும்பு முதல் காலிவரை நீண்டு ஒடுங்கிய பகுதி அழிவுற்றது. இராஜசிங்கன் விளைநிலங்களை அழித்து மக்களையும் தன் எல்லைப் பிரதேசத்துக்கு இட்டுச் சென்றான். அதனால் டச்சுக்காரர் அப்பகுதியில் நில உடைமை விபரங்களைத் திரட்ட முடியவில்லை. நகரங்களுக்குத் தானியங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டவர வேண்டியிருந்தது. இவ்வாறு ஏற்படும் செலவைக் குறைக்க அரசாங்கமே கமத்தொழிலில் ஈடுபட்டது. இராஜகாரியத்தைப் பயன்படுத்தித் தரிசாகக் கிடந்த நிலங்களை விளை நிலங்களாக்கியது. ஆனால் போர்க்காலங்களில் ஊழியஞ் செய்வோர் கண்டியரசனின் பிரதேசத்துக்குட் சென்று விடுவர். வழக்கமாகத் தம் நிலத்துக்;கு அயலில் அரசனுக்குச் சொந்தமான நிலத்தில் வேலை செய்வதற்குப் பதிலாக இடம்பெயர்ந்து சென்று மாத்தறைக்கருகிலுள்ள கிரவே பற்றில் தம் மாடுகளைப் பயன்படுத்தி உழுதும், சூடு மிதித்தும் நெல்லைக் கோட்டைக்குள் கொண்டு சென்றும் சுகத்துக்குக் கேடுவிளைக்கும் சூழ்நிலையில் வாழ்;ந்து பலர் உயிர்விட்டனர் . எனவே பழைய இராஜகாரிய முறை புதிய சூழ்நிலையில் கொடுங்கோலாட்சியின் சின்னமாயிற்று.

தோம்புகள்

சிங்கள அரசர் காலத்தில் ஒலைகளில் எழுதப்பட்ட நில இடாப்புகள் (லேகம் மித்திய) இருந்தன. போர்த்துக்கேயர் தோம்புகள் என்ற பெயரில் விவரமான இடாப்புகளை எழுதிவைத்தனர். இவற்றைப்பின் பற்றி டச்சுக்காரரும் இடாப்புகள் எழுதுவித்தனர். இவற்றின் மூலம் புதிது புதிதாக வரும் டச்சு அதிகாரிகள் வரிவசூல் விடயத்தின் உள்@ர்த்தலைமைக்காரரில் தங்கியிருக்கும் அவசியம் அற்றுவிடும். யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரின் தோம்புகள் சில இருந்தன. ஆகையால் அங்கேயே முதலில் நில இடாப்புகள் எழுதப்பட்டன. ஐவர் கொண்ட குழு கிராமந்தோறும் சென்று நிலங்களைப் பார்வையிட்டு, ஒவ்வொரு பங்கு நிலமும் எந்தக் குடும்பத்தைப் பராமரிக்க உதவுகிறது என்பதைக் குறித்தது. தோட்டச் செய்கைக்குரிய நிலம்வேறாகவும், நெற்செய்கைக்குரிய வயல்கள் வேறாகவும் பதியப்பட்டன. (இதனாலேயே நிலப்பரப்பு, நெற்பரப்பு என்ற இருவகை ‘அலகு’கள் இன்றும் வழக்கிலுள்ளன) நெல் வயலின் தன்மை, எல்லையிலுள்ள காணிகள், தோட்டங்களிலுள்ள கனி தரும் மரங்கள், ஒவ்வொரு குடும்பமும் கொடுக்கவேண்டிய தலைவரி, நெற்காணிக்கும் தோட்டத்துக்கும் உரியவரி, குடும்பத்தில் இராஜகாரியம் செய்யவேண்டியவர்களின் எண்ணிக்கையும் நாட்களும் ஆகிய விபரங்களும் குறிக்கப்பட்டன. இங்ஙனம் ஊழியஞ்;செய்ய வேண்டியவர்களின் தொகை முன்னைய தொகையிலும் 12000 கூடியது. வரி வருமானம் 75,000 கில்டர் கூடியது. 1676 - ல் இப்புதிய தோம்பின் அடிப்படையில் வரிவசூலிக்க முயன்றபோது யாழ்ப்பாணத்திற் கலகமுண்டாயிற்று. குடிகள் அதிகரிக்கப்பட்ட தலைவரியைக் கொடுக்க மறுத்தனர். “கொடுங்கோலரசன் வாழும் நாட்டிலும் கடும்புலிவாழும் காடேசிறந்தது” என்று தம் நிலங்களைக் கைவிட்டு வன்னிக்காடுகளில் ஒளித்தனர். கலகங்களை அடக்கப் படை அனுப்பப்பட்டது.

கீழ்மாகாணத்தில் டச்சுக்காரர் கடைப்பிடித்த வரிவசூல் முறை மிகப் பெரிய தீமைகளை விளைவித்தது. வரிகொடுத்தபின் மக்களிடம் அடுத்த விதைப்புக்குக் கூடநெல் இல்லாமற் போயிற்று. மேலதிகமான நெல்;லைப் பறை 1 ½ ஸ்ரூய்வர் விலைக்குக் கம்பனிக்கே விற்க வேண்டுமென்ற விதிக்கப்பட்டது. (ஆனால் மேல் மாகாணத்தில் அதன் விலை 19 ஸ்ரூய்வர் ஆகும்) தனிப்பட்ட வியாபாரம் அனைத்தும் ஒழிக்கப்பட்டது. இதனால் குடியானவர்கள் நெல்லை மலிவாக விற்பதிலும் அழித்து விடுவதே மேல் எனக் கருதினர். கமத்தொழிலைப் பலர் கைவிட்டனர். பைல் தேசாதிபதி கமத்தொழிலைப் பெருக்கச் செய்த முயற்சிகள் எவ்வித பயனை அளிக்க வில்லை@ “நாம் கடைப்பிடிக்கும கொள்கையில் அடிப்படையான மாற்றம் அவசியம்” என்று எழுதினான்.

1757 - ல் தேசாதிபதியாகப் பதவி ஏற்ற ஷ்றோய்டர் கம்பனியின் வரிவசூலைப் பெருக்கக் கங்கணங்கட்டி நின்றான். குடியானவர்கள் காடாய்க் கிடந்த நிலங்களை திருத்தி உணவுக்கு அவசியமான தென்னையை உண்டாக்கினர். அந்நிலங்கள் கம்பனிக்கு உரியனவாகையால் அவற்றின் விளைவில் பாதி தமக்கே உரியதுஎன அவன் உரிமை பாராட்டினான். குடிகள் பல தலைமுறைகளாக ஆண்டு அனுபவித்து வந்த நிலங்களையும் அவற்றிற்கு உறுதி (பதிவு) இல்லை என்ற காரணத்தால் பறிமுதல் செய்ய முனைந்தான். பாமர மக்கள் இந்த அநியாய வரி முறையை எதிர்க்கவே படைகளை அவர்கள் மீது ஏவி விட்டான். 1760 - ல் மக்கள் துன்பச் சுமையைப் பொறுக்கமாட்டாமல் கலகஞ் செய்தனர்.

சுதேச சமுக, பொருளாதார அமைப்பு அந்நியரின் நிர்வாகத்தின் கீழ் மாறுதல்களுக்கு ஆளாயிற்று. அம்மாற்றங்களைக் கருத்துள் வைத்து, அதற்கு ஏற்றபடி நிர்வாக அமைப்பைத் திருத்தும் நோக்கம் கம்பனி அதிகாரிகளுக்கு இல்லை. சுதேசிகளின் நலம் கருதிய அதிகாரிகளுக்கு இல்லை. சுதேசிகளின் நலம் கருதிய நிர்வாகம் எனில் அன்றே அங்ஙனம் மாறும் காலநிலைக்கேற்ப நிர்வாக அமைப்பை மாற்றுவர். டச்சு நிர்வாகம் திறமை மிக்கது எனின், அத்திறமையால் சுதேசிகளின் துயரமே மிகுந்தது. அரை குறையாக நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்களிருப்பின் மக்கள் அவற்றின் துன்பங்களிலிருந்து தப்புவரன்றோ!

டச்சுக்காரர் கால நீதி பரிபாலனம்

ஆரம்ப நிலை

ஒல்லாந்தர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலத்தில் நீதி பரிபாலன சபையொன்றை ஏற்படுத்தினர். நாட்டில் நல்லாட்சி நிலவினாலேயே தமக்குப் பெரும் இலாபம் கிடைக்கும். நல்லாட்சியின் முக்கிய அம்சம் நீதி பரிபாலன அமைப்பு அன்றோ! டச்சுக்காரரின் உள்ளம் இயல்பிலேயே சட்டத்தில் மதிப்பு உடையது. மற்சூய்க்கர் காலியில் பதவி வகித்த பின் பட்டேவியாமகாதேசாதிபதியான போது, ‘பட்டேவியசட்டங்கள்’ என்ற பெயரில் பிரமாணங்களையும், விதிகளையும் தொகுத்து சாரசங்கிரகம் ஒன்றை வெளியிட்டான். அது இலங்கை நீதி மன்றங்களில் பயன்படலாயிற்று. அனுபவமிக்க சிங்களவர் காணி நீதிமன்றங்களில் அமர்ந்து, பழைய வழக்கங்கள் மீறப்படாமல் பார்த்துக் கொண்டனர். திசாவை சிறு வழக்குகளை விசாரித்தான்.

ஒல்லாந்தர் ஆட்சியை ஏற்று ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் நீதிபரிபாலனம் திருப்திகரமான முறையில் அமைக்கப்படவில்லை என்பதை உணர்ந்தனர். அவ்வமைப்பு எவ்வளவு அவசியமானது என்பதை அவர்கள் பூரணமாக அறிந்திருந்தனர். முக்கியமாக வட இலங்கையில் நுண்மதி மிக்க குடிகள் பிடிவாத குணத்துடன் நிலம் பற்றிய வழக்குகளில் தம் சக்தியை விரயம் செய்தனர். போர்த்துக்கேயர் காலத்தில் முடிவு கட்டிய வழக்குகளை மீண்டும் திறப்பதும், ஒரு புதிய சேனாதிபதி பதவி ஏற்றதும் அவனுக்கு முந்திய சேனாதிபதியின் தீர்ப்புக்கு எதிராக இவனிடம் ‘அப்பீல்’ செய்வதும் சர்வ சாதாரணமாயிருந்தன.

நீதிமன்றங்களில் ஏடுகள் சேமித்து வைக்கப்பட்ட கேவல நிலையொன்றே டச்சுக்காரரின் பராமுக நிலையை உணர்த்தும். நாட்டில் வழக்கத்திலிருந்த பிரமாணங்களின் அடிப்படையில் வழக்குக் கொண்டு வருவோருடைய எழும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வேண்டிய விளக்கமான அறிவு ஒல்லாந்த அதிகாரிகளிடம் இருக்கவில்லை. அவர்களுட் சிலர் நன்நோக்கமும் நேர்மையும் உடையோர் எனினும் அவர்கள் கம்பனியின் சேவையில் வணிக அனுபவம் பெற்றனரேயன்றிச் சிறந்த சட்ட வல்லுனராக முடியவில்லை. அன்றியும் நீதிமன்றங்களில் வழங்குவதற்கு உள்@ர் நீதிச் சட்டங்கள் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை. அதனைச் செய்தல் அத்தியாவசியமாயிற்று. கொழும்பிலுள்ள உயர் நீதிமன்றத்தினர் கூட பட்டேவிய சட்டத் தொகுப்புகளையோ, உள்@ரில் வெளியிடப்பட்ட பிரமாணங்களையோ நன்கு அறியாதிருந்தனர். நியாயவாதிகள் நீதிமன்றங்களில் பின்பற்றும் முறை பற்றியும் பல முறையீடுகள் வந்தன.

சீர்திருத்த முயற்சிகள்

இக்குறைகளைத் திருத்தும் நோக்கதுடன் பட்டேவியாவிலுள்ள உயர் நீதிமன்றத்தின் உபதலைராயிருந்த கோர்ணிலிஸ் ஜோன் சைமன்ஸ் இங்கு தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான். நெதர்லாந்தின் சர்வ கலாசாலை ஒன்றில் சட்டக்கல்வி கற்ற இவன் இத்துறையில் கவனம் செலுத்தினான். அவன் கட்டளைப்படி நீதிபரிபாலன விடயமாக நெதர்லாந்திலிருந்தும், பட்டேவியாவிலிருந்தும் வெளியிடப்பட்ட பிரமாணங்களின் இடாப்பு ஒன்று வெகு கவனமாகத் தொகுக்கப்பட்டது. பொதுமக்களுக்குரிய விதிகளின் சுருக்கம் ஒன்று எழுதப்பட்டது. இது ஆண்டுதோறும் பிஸ்காலின் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டப்படும்.

அதேசமயம் 35 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் திசாவையாயிருந்த கிளாஞ் ஐசாக்ஸ் என்பவன் சைமன்ஸின் கட்டளைப்படி தமிழரிடையே வழக்கிலிருந்;த சட்ட திட்டங்களைத் தொகுப்பித்தான். இதற்கு மூன்று ஆண்டுகள் சென்றன. தொகுப்பு வேலைகள் முற்றுப் பெற்றதும், உயர் குடிப்பிறந்தோரும் போர்த்துக்கேய பட்டமான ‘டொம்’ என்பதை முதலிற் கொண்ட பெயர்களையுடையோருமான பன்னிரு தமிழ் முதலியார்களிடம் சரிபார்க்கும் பொருட்டு அத் தொகுப்பு ஒப்புவிக்கப்பட்டது. பின் 1707 ஜுன் 4 - ம் திகதி வெளியிட்ட கட்டடளைப்படி அது பிரமாணமாயிற்று. அதுவே தேசவழமை எனப்படும். யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட கட்டளைகள் எழுபத்தாறும் தொகுக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன.

நெதர்லாந்தின் பெருமைக்கு மாறாக. இலங்கையிலுள்ள டச்சு அதிகாரிகள் சட்டத்துறையில் தம் சிறப்பைக் காட்டத் தவறிவிட்டனர். 1751 இலும் தேசாதிபதி உயர் நீதிமன்றத்தின் உத்தியோகத்தர் சட்ட அறிவு குறைந்தவராகக் காணப்படுகின்றனர் என முறையிட்டான். அக் காரணத்தால் பட்டேவிய அப்பீல் நீதிமன்றத்தில் இவர்களது தீர்ப்புகள் தள்ளப்பட்டன. தரகரும், உத்தரவு பெறாத நியாயவாதிகளும் நீதிமன்றங்களில் பெருந் தொல்லை விளைத்தனர்.

“இலங்கை நிர்வாகத்துறைகளுள் மிகச் சிக்கல் வாய்ந்தவை நிலவுடைமையம் ஈடுவைத்தலும் பற்றிய விடயங்களே” என 1740 - ல் வான் இம்மோவ் குறிப்பிட்டான். இதுவரை எந்த அரசாங்கமும் இத்துறையில்; உரிய சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியது. மாத்தறை தவிர்ந்த ஏனைய இடங்களில் காணி நீதிமன்றங்கள் செயலாற்றத் தவறின. வணிகன் என்ற அதிகாரி தன் நிர்வாக, வர்த்தக கருமங்களுக்கிடையில் திசாவை என்ற முறையில் சிக்கல் நிறைந்த நீதிபரிபாலன கருமங்களையும் ஆற்ற வேண்டியவனானான். அதனால் அவன்காணி வழக்குகளைச் சுதேச அதிகாரி (கமிஷினர்) களிடம் விட்டான். போர்த்துக்கேயர் காலத்தில் நிகழ்ந்தவாறே திசாவையின் மொழிபெயர்ப்பாளனான அத்தபத்து முதலியாரே உண்மையில் வழக்கில் தீர்ப்புக் கூறுபவனானான். திசாவை சுதேச மொழியறியாதவனாதலால் நீதிவழங்குதலில் காலதாமத மேற்பட்டது. வழக்குக்குரிய நிலங்கள் விளைவிக்கப்படாமல் தரிசாய்க் கிடந்தன. எனவே, வான் இம்மோவ் காலியிலும் கொழும்பிலும் காணி நீதிமன்றங்களை ஏற்படுத்துமாறு சிபார்சு செய்தான். அவனது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரு நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன. நிலவழக்குகள் வாரத்தில் இரு நாட்களில் விசாரிக்கப்பட்டன. அரசாங்கம் இவற்றை நடாத்தும் முறைபற்றி விதித்த சட்டங்கள் யாதேனும் தேசத்தில் நடைமுறையிலுள்ள வழக்கங்களுக்கு மாறாகக் காணப்பட்டால் உடனே அதனை அறிவிக்கும்படி கட்டளையிடப்பட்டது.

நீதிமன்றங்களின் வகை

ஒல்லாந்தர் அமைத்த நீதிமன்றங்களுள் மிக உயர்ந்தது கொழும்பிலுள்ள “ராட் வான் ஜஸ்ரிற்றி” எனப்படும். அதில் அமர்ந்திருப்போர் தேசாதிபதிக்கு ஆலோசனை கூறும் அரசியற் சபையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்குத் தலைமை தாங்குபவர் பிரதம நீர்வாகி (கிறிமினல்) குற்றங்கள் அனைத்தும் அதன் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழிருந்தன. மேலும், அது ஐரோப்பிய இனத்தவருக்கும் அவர் சந்ததியாருக்கும் இடையிலும், ஐரோப்பியருக்கும் சுதேசிகளுக்கும் இடையிலும் ஏற்படும் வியவகாரங்களைத் தீர்த்தது. இவ்வழக்குகள் 120 இறைசாலுக்கு அதிகமான பெறுமதியுடைய விஷயம் குறித்து நிகழ்வனவாயிருத்தல் வேண்டும். இவ்வுயர் நீதிமன்றமே அப்பீல் விசாரணை நீதி மன்றமாயும் கடமையாற்றியது.

இதற்கு அடுத்தபடியில் இருந்தது காணி நீதிமன்றம் இலங்கை மக்களிடையே எழும் காணிப் பிரச்சினைகள், 120 இறைசாலுக்கு மேற்பட்ட ஒப்பந்தம், கடன் முதலியன பற்றிய வியவகாரங்கள் இதில் விசாரிக்கப்படும். இதில் தலைமை வகிப்பவன் கொழும்புத் திசாவை@ அவனுடன் பணிபுரிய ஐரோப்பியரும் சுதேசகளும் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் பிஸ்கால், அரசியற் சேவையிலுள்ளோர் ஓரிருவர். முதலாம் மகா முதலியார், அத்தப்பத்து முதலியார், தோம்புக்காவலர் என்போர் நியமனம் பெற்றனர்.

இதற்குக் கீழ்ப்பட்ட நீதி மன்றம் சிவில் ராட் எனப்படும். ஐரோப்பியரதும் சுதேசிகளதும் சிறுவழக்குகள் (120 இறைசாலுக் அதிகப்படாதவை) இங்கு விசாரிக்கப்படும். இதைவிட பிஸ்கால் நீதிமன்றம் ஒன்றிருந்தது. சிறு வழக்குகள் (கிறிமினல், சிவில் இரண்டும்) அங்கு விசாரிக்கபட்டன.

கொழும்பிலுள்ளவாறே காலியிலும் யாழ்ப்பாணத்திலும் நீதிபரிபாலன முறை ஏற்பட்டது. அங்குள்ள சேனாதிபதிகள் உயர் நீதி மன்றத்திலும் தலைமை வகிப்பர். யாழ்ப்பாணத்துக் காணி நீதி மன்றத்தில் திசாவையும், காலி மன்றத்தில் காலிக் கோறளையின் மேலதிகாரியும் தலைமை தாங்கினர். காணி நீதி மன்றங்கள் மாத்தறை. திருக்கோணமலை, மன்னார் முதலிய இடங்களிலும் அமைக்கப்பட்டன.

இவற்றில் தீர்க்கப்படும் வழக்குகள் குறித்துப் பட்டேவிய உயர் நீதிமன்றத்துக்கு (அப்பீல்) விண்ணப்பிக்கலாம். இவற்றில் வழக்கத்திலிருந்த சட்டங்களாவன உள்@ர்ப் பழைய சட்டங்களும், உரோம டச்சுச் சட்டமும், பட்டேவிய சட்டங்களும், உள்நாட்டில் டச்சுக்காரர் வெளியிட்ட கட்டளைகளுமாம்.

தண்டனைகள்

அக்காலத்தில் வழங்கிய தண்டனைகள் மிகக் கொடூரமானவை. 1669 - ல் ஒரு செட்டி செய்த சிறு குற்றம் ஒன்றுக்கு அவனைத் தூக்கிலிட்டுப், பிரேதத்தை ஒரு சாக்கிற் கட்டிக் கடலில் எறியும் படி தீர்ப்புக் கூறப்பட்டது. பின் இரக்கம் காட்டி, அவனுக்குத் தூக்கு மரத்தடியில் சவுக்கடி கொடுத்து, காய்ச்சின இரும்பால் குறிசுட்டு வாழ்நாழ் முழுவதும் நாடுகடத்தினர். 1751 - ல் அடிமை திருடிய பெண் ஒருத்தியை மரத்தில் கட்டிக் கழுத்தைத் திருகிக் கொன்று, அவள் தலையை வெட்டி உடலைத் தூக்கு மரத்தடிக்கு இழுத்துச் சென்ற கழுகுகள் தின்னவிட்டனர். குற்றவாளிகளின் தொடை எலும்புகளை அடித்து முறித்தனர். குற்றவாளி தன் வாயால் ஒப்புக் கொள்ளும் வரையில் அவனைத் தூக்கிலிட முடியாது. ஆகையால், அவனைச்சித்திரவதை செய்து உண்மையைக் கூறும் படி நிர்ப்பந்திப்பர்.

பிஸ்கால் என்ற அதிகாரி சிறைச்சாலைக்குப் பொறுப்பாளி. அவன் தன் மனம் போனவாறு சிலரைச் சிறை செய்து சுதேசப் படை வீரரின் காவற்சாலையில் அடைந்து வந்தான். குற்றப்பணம் அறவிட்டான். கொடாவிடில் கொடிய தண்டனைகளை வழங்கினான். கொழும்பு திசாவையின் கீழ் வாழ்ந்தோர் முக்கியமாகப் பெரும் வெறுப்புக் கொண்டனர். பிலாத் தேசாதிபதி பல சீர்திருத்தம் செய்தல் அவசியமெனக் கண்டான் ஆனால் அவற்றை ஆரம்பிக்குமுன் இந் நாட்டை விட்டகன்றான்.

வினாக்கள்

1. ஒல்லாந்தர் இலங்கையில் நிறுவிய நீதி பரிபாலன அமைப்பையும், கறுவா இலாகாவையும் வருணித்து, இவை கம்பனியின் அரசாங்க அமைப்புக்கு எவ்வாறு முக்கியமானவை என்பதையும் குறிப்பிடுக. (1950)
2. இலங்கையில் டச்சுக்காரர் அமைத்த நிர்வாகப் பிரிவுகளை வருணித்து, ஒவ்வொன்றின் முக்கியத்துவம். அங்குள்ள பிரதான இடங்களை, விளை பொருட்கள் பற்றி விளக்குக. (புற உருவப் படத்துக்குக்; கூடிய புள்ளி அளிக்கப்படும்) (ஆடி, 1951)
3. இலங்கையின் கரையோர மாகாணங்களை டச்சுக் கிழக்கிந்திய கம்பனி எவ்வாறு பரிபாலித்தது என்பதை வருணிக்குக. அக்காலக் கண்டிய ஆட்சி முறையினின்றும் அவர்களது முறை எவ்வகையில் மாறுபட்டிருந்தது? (1953)
4. சிறு குறிப்பு எழுதுக :-
(1) மகாபத்த (2) தேசவழமை
(3) ராட்வான் ஜஸ்ரிற்றீ (உயர் நீதிமன்றம்)
(4) தோம்பு (1953)
5. ட. கி. வ. (ஏ. ழு. ஊ) சங்கத்தின் அமைப்பை வருணிக்குக. அது இலங்கையில் எவ்வகையான நிர்வாக அமைப்பை ஏற்படுத்தியது? ஒருபுற உருவப்படத்தின் மூலம் இலங்கையில் டச்சுக்காரருக்கு இருந்த பகுதிகளைக் காட்டுக. (ஆடி, 1954)
6. இலங்கையின் கரையோர மாகாணங்கள் டச்சு ஆட்சியால் எவ்வௌ;வழிகளில் நன்;மையடையந்தன? (1956)
7. டச்சுக்காரர் பரிபாலகர்களாக வெற்றி ஈட்டிய மைக்குரிய காரணங்களைக் கூறுக. (1958)
8. புறவரிப் பட்டத்தின் உதவியுடன் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு, மன்னர், புத்தளம், மாத்தறை, மட்டக்களப்பு, திரிகோணமலை என்பவற்றின் முக்கியத்துவத்தை விபரித்து, அதற்குரிய காரணங்களைக் கூறுக. (1962)
9. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகள் எழுதுக :- ஒல்லாந்தரின் தோம்பு. (1964_
10. (ய) வருமானம் (சுநஎநரெந) (டி) நீதிமுறை என்ற தலையங்கங்களின் கீழ் ஒல்லாந்தரால் இலங்கையின் கடலோரப்பகுதிகள் பரிபாலனம் செய்யப்பட்ட முறையைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக. அவர்களுடைய பரிபாலனம் எவ்வகையில் எமது நாட்டுக்கு நன்மையளித்தது? (1963)

பதினொராம் அத்தியாயம்.

டச்சுக்காரரின் வணிக முயற்சிகள்

டச்சுக் கிழக்கிந்திய கம்பனியார் கீழ்நாடுகளுக்குக் கப்பல்களை யனுப்பிய முதலாம் ஆண்டிலேயே, ஒரு துறைமுகத்திலிருந்து, மற்றொரு துறைமுகத்துக்குப் பண்டங்களை ஏற்றுமதி செய்யும் வாணிபத்தை அடிப்படையாகக் கொண்டே கீழ்நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குப் பண்டங்களை ஏற்றுமதி செய்யும் வாணிகத்தை விருத்தி செய்யலாம் என்ற உண்மையை அறிந்து கொண்டனர். பட்டோவியாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பற் கூட்டங்கள் ஆண்டு முழுவதும் யப்பான் முதல் பாரசீகம் வரை செய்த வியாபாரத்தின் பயன் முழுவதையும் தாங்கிச் சென்றன. எனவே, கம்பனியின் வாணிக முயற்சிகளை இரு தலையங்கங்களின் கீழ் ஆராயலாம்.

(1) ஆசிய வாணிகம்
(2) ஆசிய - ஐரோப்பிய வாணிகம்

ஆசிய வாணிகத்தைச் சிறப்புற நடாத்துவதற்கெனக் கம்பனியின் மூலதனத்தில் ஒருபகுதி ஒதுக்கப்பட்டது. பல்வேறு ஐரோப்பிய இனத்தவர் அதனைக் கைப்பற்ற முயன்றமையால் அதில் பெரும் போட்டி ஏற்பட்டது. அதனைச் சரியாக நடத்தினால் மட்டுமே ஐரோப்பிய சந்தைகளுக்குத் தேவையான சரக்குகளைப் பெறமுடியுமாகையால் அது குறைவற நடக்கும் வழிவகைகள் தேடப்பட்டன. 1788 அளவில் பிரான்சுடன் நிகழ்த்திய போர்களால் பணமுடை ஏற்பட்டபோது, கம்பனியார் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் அளவு குறைந்தாலும், ஆசிய “உள்நாட்டு” வாணிகத்தைக் குன்றவிடலாகாது எனக் கட்டளையிட்டனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த ஆசிய வாணிகத்தை விருத்தி செய்வது மிக அவசியமாயிற்று. இந்த விளையும் கறுவா டச்சுக்காரருக்குப் பொன் போன்ற மதிப்புடையதாயிருந்தது. அதை ஒரு செலவுமின்றி ஏற்றுமதி செய்யும்படி மேலதிகாரிகள் கட்டளையிட்டனர். ஆனால் இத்தீவில் நிகழும் போர், படைவைத்தல், நிர்வாகச் செலவு ஆகியன அதிகரித்துக் கொண்டே போயின. அதற்கேற்ப வருமானத்தைப் பெருக்க வேறு வழிதேட வேண்டியிருந்தது. உள்நாட்டில் நிலவரி மூலம் பெறும் தொகையோ மிகச் சொற்பம். எனவே இலங்கை, இந்தியா முதலிய அயல் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற விடயாபாரத்தை விருத்தி செய்வது ஒன்றே அவர்கள் செய்யத்தக்கதாயிருந்தது.

இலங்கையிற் கிடைக்கும் பொருட்களுள் இந்தியாவில் விற்கத் தக்கவை யானை, பாக்கு. சங்கு, முத்து என்பனவாம். இவற்றுள் யானைகள் இலங்கையில் ஏராளமாகக் கிடைத்தன. சனங்கள் நாட்டைவிட்டு ஓடவே காடுகள் படர்ந்தன. அலைந்து திரியும் யானைகளின் தொகை பெருகியது. யானைபிடித்துப் பழக்கும் சாதியார் ஒரு நூதனமான முறையில் ஆண்டுதோறும் அம்மிருகத்தைப்பிடித்தனர். அவற்றை நல்லவிலை கொடுத்து வாங்க இந்திய மன்னர்கள் ஆயத்தமாயிருந்தனர். வங்காளத்திலும், கோல்கொண்டாவிலும் இருந்து வரும் முஸ்லிம் வணிகர் அரிசி, சீனி, பட்டு, அபின் முதலியவற்றைக் கொண்டுவந்து இறக்கியபின், யானைகளை ஏற்றிச் செல்வர். இவ்விருவழி வாணிகத்தால் இலங்கைக்குப் பணமாகவும் வருவாய் கிடைத்தது. டச்சுக்காரர் இந்த வாணிகத்தின் இலாபத்தைத் தொடக்கத்திலேயே அறிந்தனர். காலியைக் கைப்பற்றிய போதே அயலில் பிடித்த யானைகளை அங்கு விற்கலாயினர். 1658 - இல் வடபகுதிவரை எல்;லாத் துறைமுகங்களும், இந்தியக் கரையில் தூத்துக்குடியும், நாகபட்டினமும் அவர்கள் கைப்பட்டமையால் அவர்கள் இலங்கையின் யானை வாணிகத்தில் தனியுரிமை பெற்றனர். அவற்றைத் தமது கப்பல்களில் ஏற்றிச் செல்ல முயன்றனர். வழியில் அவை இறந்தமையால் அவற்றை ஏற்றுமதி செய்யும் உரிமையை வங்காள வணிகரிடமே விட்டுவி;ட்டனர். அவர்கள் காலி, மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களுக்கு வந்து யானைகளை வாங்கினர். அவர்களை வசீகரிக்க டச்சுக்காரர் சகல முயற்சியும் செய்தனர். காசைக் கொண்டு வரும் போது ஏதாயினும் ஆபத்து வருமாகையால் இதை இந்தியாவிலுள்ள எந்த டச்சுப் பண்டகசாலையிலேனும் ஒப்படைத்துப் பற்றுச்சீட்டுப் பெற்றுவரலாம் என வழி வகுத்தனர். மேலும் வங்காள நவாப் யானைகளுக்கென முற்பணமும் கொடுத்து வந்தான். இலங்கை அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் மிகப்பெரும் பகுதி யானை வாணிகத்தாலேயே கிடைத்தது. (1669 - 70 இல் 29மூ) 1668 - 69 இல் யானை விற்ற வருமானம் 215.000 கில்டருக்குச் சற்ற அதிகம். ஆனால் சில ஆண்டுகளின் பின் வங்காள வணிகர் அரக்கன் முதலிய இடங்களிலும் யானை வாங்கத் தொடங்கினர். எனவே, டச்சுக்காரர் யானையின் விலையைக் குறைத்தனர். இலங்கையில் நெல் விளைவைப் பெருக்கி சுயதேவையைப் பூர்த்திபெற முயன்றதால். வங்காளத்து அரிசி இறக்குமதியைக் குறைத்தனர். வெறும் கப்பலில் வந்து யானை ஏற்றிச் செல்ல வங்காள வணிகர் விரும்பவில்;லை. ஆனால் அரிசி இறக்குமதியை முற்றாகத் தடைசெய்யும் நிலை ஒருபோதும் ஏற்படாiமாயல் யானை வியாபாரமும் தொடர்ந்து நடந்தே வந்தது.

* இந்த யானை வாணிகம் யாழ்ப்பாணத்தவர்களுக்குப் பெருந் துன்பம் விளைவித்தது. வன்னியிலிருந்து வரும் யானைகள் ஊர்காவற்றுறைக்கு வருமட்டும் வழியிலுள்ள கிராமத்தவர்கள் அவற்றுக்கு வேண்டிய தென்னோலை வெட்டிக் கொடுக்க வேண்டும். துறைமுகத்தில் அவை விலைகூறி விற்கப்படக் காலதாமதமேற்படலாம். அதுவரை தென்னோலை வெட்டிக்கொடுக்க, அயற்பிரதேசத்துத்தென்னை மரங்கள் பட்டுப்போயின. இதுபற்றி ஒரு டச்சு அதிகாரக்கு முறையீடு செய்தனர்.

யானை வாணிகத்துக்கு அடுத்தபடி முக்கியமானது பாக்கு வாணிகம். இந்தியர் வெற்றிலை பாக்கு உண்ணும் வழக்கமுடையவர்கள். சகல வகுப்பாரும் அதை ஒரு போக்கியப் பொருளாக உபயோகித்தமையால் அதன் வாணிகம் சற்றும் குறைவின்றி நடந்தது. அங்கு தேவையான அளவுக்கு இங்கும் இயற்கையாகக் கிடைத்தது. சிங்களக் கிராமவாசிகள் இதைச் சேகரித்துக் கொடுத்துப் பண்டமாற்றாகத் தமக்கு அவசியம் வேண்டிய ஆடை, உப்பு, கருவாடு முதலியவற்றைப் பெற்றனர். இங்கு குடியேறிய முஸ்லீம்களும் சில செட்டிமாரும் இதனைப் பெற்றுக் கரையோரத் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்வர். அங்கு தம் இனத்தவரிடம் இதைக் கொடுத்து உள்@ரில் விற்கக்கூடிய பொருட்களைப் பெறுவர்.

இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் நடந்த இப்பண்டமாற்று வாணிகமே இலங்கைப் பொருளாதாரத்தின் உயிர்நாடி எனலாம். இவ்விரு பிரதேசங்களும் ஒரே பொருளாதார அமைப்பில் இருந்தன. தஞ்சை மதுரை மாவட்டங்களின் செழிப்பான பிரதேசங்களில் விளையும் உணவுப் பொருட்கள் இலங்கையரின் பசிதணித்தன. எமக்கு அவசியம் வேண்டிய மாடுகள் அங்கிருந்தே வந்தன. எமக்குத் தேவையான எல்லாத் துணிகளும் அங்கேயே நெசவு செய்யப்பட்டன. இவற்றுக்கெல்லாம் ஈடாக இலங்கை பாக்கையே கொடுத்தது. பாக்கு நீரிணை மிகக் குறுகியது. ஆகையால் இவ்விரு நாடுகளுக்குமிடையில் சிறு கப்பல்களில் பெரும் லாபமளிக்கும் வாணிகம் நடைபெற்றது. டச்சுக்காரர் இதனை முற்றாகத் தம் தனியுடமையாக்க முயலவில்லை. ஏனெனில் அவர்களிடம் போதிய கப்பல்களும் ஆட்களும் மூலதனமும் இல்லை. ஆயினும் கடல் மேல் ஆணைசெலுத்தும் நிலை ஏற்பட்டதும் இவ்வாணிகத்தைக்; கட்டுப்படுத்த அவர்கள் முயன்றனர். மதுரைப் பகுதியில் சீலை வாங்கி இலங்கை, பட்டேவியா வரை கொண்டு செல்லும் வாணிகத்தைத் தமது கையில் வைத்துக்கொண்டனர். ஆனால் பாக்கு வியாபாரத்தை இலாபகரமாக நடத்த அவர்களால் இயலவில்லை. ஆங்கிலேயர் முதலிய பிற சாதியாரையும் சுதேசிகளையும் இவ்வாணிகத்தில் பங்குபெறாது தடுக்க முயன்றனர். அதனால் நட்டமடைந்த சுதேசிகள் ஆங்கிலேயரை இதில் பங்கபெறுமாறு வருத்தி அழைத்தனர். டச்சுக்காரர் அவர்களுடன் போர்புரியத், தாய்நாட்டார் சம்மதிக்கவில்லை. எனவே, தென்னிந்தியாவில் ஆண்ட மதுரை, தஞ்சை நாயக்கர்களையும் இராமநாதபுரம் சேதுபதியரசனையும் பகைகொள்ளச் செய்தும், கண்டியரசன் வைத்திருந்த துறைமுகங்களைக் கைப்பற்றியும் தனிப்பட்ட வியாபாரிகளுக்கு ஆதரவு கிடைக்காமற் செய்ய முயன்றனர்.

1665 - ல் உள்நாட்டில் டச்சுக்காரரின் ஆட்சி பரவவே அதிக பாக்குப் பெறவும், அதிக சீலை விற்கவும் வசதியேற்பட்டது. கிழக்குக்கரைத் துறைமுகங்களைக் கைப்பற்றியபோது அங்கு நடந்த பெருமளவு வாணிகத்தின் தன்மையையும் அவர்கள் உணர்ந்தனர். வான்கோயன்ஸ் வணிக ஏகபோக உரிமையை நிலைநாட்ட விரும்பினான். ஆனால் கம்பனியதிகாரிகள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, தனிப்பட்டவர்கள் அதிக சுங்கவரி கொடுக்குமாறு விதித்தனர். தொடக்கத்தில் சீலை மீதும் 5 வீதமும் உப்பு மீது 20 வீதமும் விதித்தனர். 1665 - ல் இவை முறையே 10மூஆகவும் 30மூஆகவும் கூட்டப்பட்டன. ஆயினும் தனிப்பட்ட வர்த்தகருடன் போட்டி போட டச்சுக்காரரால் இயலவில்லை. அதிகரிக்கப்பட்ட சுங்கவரியைக் கொடுத்தும் அவர்கள் இலாபகரமான தம் வாணிகத்தை மேலும் பெருக்கினர். டச்சுக்காரர் பட்டேவியாவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய அளவு சீலை கிடைக்காமையால் யாழ்ப்பாணத்தில் சீலை நெசவுத் தொழிலையும், சாயமிடும் தொழிலையும் வளர்த்தனர்.

1760 - இல் அந்நியர் முற்றாகத் தடுக்கப்பட்டனர். டச்சுக் கம்பனியே வாணிகம் முழுவதையும் பொறுப்பேற்றது. ஆனால் கண்டியரசன் இவர்கள் கைக்குப் பாக்கு போகாது தடுத்தமையால் வர்த்தம் வீழ்ச்சியுற்றது. ஆனால் தமது பிரதேசங்களில் கிடைத்த பாக்கை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி இந்தியக் கரையில் 300மூ, 400மூ அதிகவிலைக்கு விற்றுப் பெருலாபமடைந்தனர். ஆனால் ஏற்றமதி செய்யப்பட்ட பண்டங்களின் அளவு குறைந்தது. இதற்கு இந்திய அரசியற் குழப்பங்களும் காரணமாயின. அத்துடன் பிரஞ்சுக்காரரும், டச்சக்காரரும் போரிட்டமையால் வங்காள வணிகரும் வரத் தயங்கினர்.

டச்சுக்காரர் தென்னிந்திய உட்போர்களைப் பயன்படுத்தி அநேக துறைமுகங்களில் பண்டகசாலைகளை அமைத்தனர். 1673 - ல் இலங்கை அரசாங்கமே நாகபட்டினம் வரை ஆதிக்கம் செலுத்தலாம் என பட்டேவியாவிலிருந்து உத்தரவு வந்தது. தஞ்சை, மதுரை நாயக்கர் குலப்போரில் தலையிட்ட டச்சுக்காரர் இரு பகுதியாரையும் சமாதானப்படுத்தி, அதற்குக் கூலியாக அனேக வர்த்தக உரிமைகள்பெற்றனர். நெசவாளருடன் நேர்த்தொடர்பு கொண்டு, முற்பணம் கொடுத்து அவர்கள் தமக்கே வேலைசெய்யுமாறு பணித்தனர். தூத்துக்குடி, காயல் பட்டினம், நாகபட்டினம் ஆகிய துறைமுகங்களில் இலங்கைப் பாக்கைத் தாம் விரும்பிய விலைக்கு விற்றனர். 1674 - ம் ஆண்டளவில் மலையாளக் களிப்பாக்கு, தமிழ்நாட்டுச் சந்தைகளில் மலிவாக விற்பனையாகி இலங்கைப் பாக்கு வாணிகத்துக்கு இடைஞ்சல் செய்தது. இதைத்தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுத்தால் மலையாளத்து மிளகு வாங்குவதில் தடையேற்படும் என அஞ்சிய மலையாளக்கரை டச்சு அதிகாரிகள் அங்ஙனம் செய்யமறுத்தனர். ஆனால் பாக்கு நீரிணையில் பாக்குடன் வரும் கப்பல்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. ஆனால் அவ்வணிகத்தை முற்றாகத் தடுக் இயலாமையால் பாக்கின் விலையைக் குறைத்தே முழுப்பாக்கையும் விற்கவேண்டியதாயிற்று.

இதனால் வரும் இலாபம் இலங்கை, பட்டேவியா, ஒல்லாந்து ஆகிய இடங்களுக்கு வேண்டிய துணிகள் வாங்கப்;போதாமையால் பட்டேவியாவிலிருந்து செம்பு, தகரம், துத்தநாகம் ஆகியவற்றைத் தென்னிந்தியாவுக்குக் கொண்டு வந்து வருவாயைப் பெருக்கினர். மதுரை அரசியல் ஆத்தூரில் ஒரு நாணயம் செய்யும் சாலை அமைக்க டச்சுக்காரர் உத்தரவு பெற்றனர். இதனால் வர்த்தகப் பிரச்சினைகள் பல தீர்;;ந்தன. ஆனால் 1674 - ல் மராட்டியப்படை தஞ்சையைக் கைப்பற்றியது. நாகபட்டினத்தில் டச்சுக்காரர் அனுபவித்த உரிமைகளை மராட்டியர் பறிக்கலாயினர். மேலும் தரங்கம்பாடி முதலிய துறைமுகங்களில் போர்த்துக்கேய, தேனிய, ஆங்கில, பிரெஞ்சு வணிகர் துணிகளை வாங்கி மலாயதீபகர்ப்பத்தில் விற்றமையால் இலங்கை டச்சு அதிகாரிகளின் சீலை வியாபாரம் குன்றத் தொடங்கியது. பிரெஞ்சுக்காரருடன் நடத்திய போராட்டங்களாலும் டச்சு வணிகம் தேய்ந்தது. வான் கோயன்ஸ் சீலை வியாபாரத்தால் 5 ½ லட்சம் கில்டர் கிடைக்கும் என்று கணக்கிட்டான். ஆனால் உண்மையான இலாபம் 50 ஆயிரமே. அதுபோலவே பாக்கு ஏற்றுமதியும் குறைந்தது. முன்னர் ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் அமுனமே ஏற்றுமதி செய்யப்பட்டது. இலங்கையில் தனிப்பட்ட வியாபாரிகள் தம் தொழிலை விட்டனர். வங்காள வணிகர் இங்கு யானை வாங்கத் தயங்கினர்.

இவ் வணிகத் தனியுரிமையால் நாட்டின் பொருளாதாரம் குன்றியது. பாக்குச் சேகரிப்போர் ஆர்வமின்றி, வீழ்ந்த பாக்குகளை மரங்களுக்குக் கீழேயே அழிந்துபோக விட்டனர். உள்@ர் வர்த்தகர்கள் தொழிலைக்; கைவிடவே, சிறு கைத்தொழில்களும் அழிந்தன. இலங்கைக் கரையோர வாணிகம் தடைப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் தீவுப்பகுதியிலும் இதனால் இலாபம் அடைந்தோர் வறுமையுற்றனர். அங்கு மக்கள் தலைவரிப்பணம் கட்டவும் வழியின்றி வன்னிக்கு ஓடினர். வெள்ளி, தங்கக்காசுகள் மதுரைத் துணி வியாபாரத்தில் முடங்கியதால், இங்கு மதிப்புக் குறைந்த செப்புக் காசுகளே புழக்கத்திலிருந்தன. அவற்றை அயல் நாட்டார் வாங்க மறுத்தனர். நாணயத்தின் மதிப்புக் குறைந்தமையால் பண்டங்களின் விலை பெரிதும் உயர்ந்தது. தேசாதிபதி பைல் வியாபாரத் தனியுரிமையைக் கைவிடும்படி வேண்டினான். எனினும், அதை பட்டேவிய அதிகாரிகள் ஏற்க மறுத்தனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சங்கும் முத்தும் குளிக்கும் தொழில் டச்சுக்காரருக்குப் பெருலாபம் அளித்தது. முத்துக்கள் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பணக்காரரால் விரும்பி வாங்கப்பட்டன. சங்கு வங்காளத்தில் அதிகம் விற்பனையாயிற்று. இராமநாதபுரம் அரசனிடம் சங்கு வாணிகத் தனியுரிமையைப் பெற்ற டச்சுக்காரர் அதன் விலையை மிகக் கூட்டி விற்றனர். வங்காள வியாபாரிகள் அதனை நேரடியாகப் பெற முயன்றும் முடியவில்லை. ஆங்கிலேயர் சேதுபதியிடம் அதனை வாங்கி வங்காளத்தில் மலிவாக விற்கலாயினர். அவர்களுடன் பகைக்கவிரும்பாத டச்சுக்காரர் சேதுபதியிடம் நியாயமான விலை கொடுத்தே வாங்க வேண்டியதாயிற்று. (1681)

கறுவா

இலங்கையை டச்சுக்காரர் ஆண்ட காலப்பகுதியில் அவர்களது பொருளாதாரத்துக்குக் கறுவா எவ்வளவு முக்கியமானது என்பதை மிகைப்படுத்திக் கூற இயலாது. டச்சுக்காரர் கீழ்த்திசைக்கு வர வழிகாட்டியலிஞ்சோட்டென் “இலங்கைக் கறுவாவே மற்றெல்லா நாட்டுக் கறுவா வகைகளிலும் சிறந்ததும் மூன்று மடங்கு விலையானதும் ஆகும்” என்று எழுதினான். டச்சுக்காரர் கீழ்த்திசைக்கு வந்ததும் இலங்கைக் கறுவாவுக்காகப் போர்த்துக்கேயருடன் போரிடலாயினர். சிலாப முதல் மாத்தறை வரை வளர்ந்த கறுவாவின் தரம் தெற்கே செல்லச் செல்லக் குறைந்தது. போர்த்துக்கேயரைப் போலவே டச்சுக்காரரும் கறுவா வாணிகத்தைக் கம்பனியின் தனியுரிமையாக்கி அதைச் சேகரித்தல், வாங்குதல், விற்றல் பற்றிக் கடுமையான கட்டளைகளை விதித்து அவற்றை நடைமுறைக்கும் கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் ஆட்சிக்குட்படாத உள்நாட்டிலும் கறுவா விளைந்தது. கண்டி அரசன் அதனை அயல் நாட்டு வணிகருக்கு விற்றால் அவர்கள் அதனை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்று விற்பர். இதனால் டச்சுக்காரரின் தனியுரிமை பறிபோகும். எனவே, டச்சு அதிகாரிகள் அரசன் தமக்கு மட்டுமே கறுவா விற்றல் வேண்டும் என வாதாடினர். போர்க்காலங்களில் கறுவா நிலங்களையும் அதனை உரிப்போரையும் காக்கப் படைகளை நிறுத்தினர். அரசன் கறுவா விற்றல் வேண்டும் என வாதாடினர். போர்க்காலங்களில் கறுவா நிலங்களையும் அதனை உரிப்போரையும் காக்கப் படைகளை நிறுத்தினர். அரசன் கறுவாத் தொழிலாளரைத் தூக்கிச்சென்று விட்டால் அவர்களது வருமானம் பெரிதும் பாதிக்கப்படுமன்றோ? அரசனுடன் எவ்வகையான தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விடயத்தைத் தீர்மானிப்பதற்கு டச்சுக்காரர் எவ்வகைத் தொடர்பால் கறுவா சேகரித்தல் பாதிக்கப்படமாட்டாது என்பதையே அடிப்படையாகக் கொண்டனர். சமாதான வழியை நாடி அவனைத் திருப்திப் படுத்தினால் அதிக கறுவா கிடைக்குமா? அல்லது அவனிடம் அபகரித்த பிரதேசத்தைப் படைகளை நிறுத்திப் பாதுகாத்து மிகுதியான கறுவா சேகரிக்கலாமா? இந்த இரு வழிகளில் ஒன்றைக் கடைப்பிடிக்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.

கறுவா சேகரித்துக் கப்பலேற்றும் கருமம் அதிமுக்கியமானது எனக் கருதப்பட்டமையால்; அதனை நிர்வகிக்க ஒருதனி இலாகா (மகாபத்த) தேசாதிபதியின் நேரடியான மேற்பார்வையில் இருந்தது. அதனைக் கவனிக்க ஒரு தளபதி நியமிக்கப்பட்டான். அவனது ஆணையின் கீழ் சுதேசிகளான சாலிய இனத்தவர் முழுப்பேரும் அடங்கினர். அவர்கள் தம் குலத்துக்குரிய பழைய வழங்கங்களின்படி அரசாளப்படுவர். முந்திய நிர்வாக அமைப்பு மாற்றப்படவில்லை. டச்சுத் தளபதி ஒருவனின் மேற்பார்வையில் அது இயங்கியது. அவனுக்குக் கீழ் நான்கு பிரதேசங்களில் உள்ள சாலியரையும் நான்கு விதானைமார் மேற்பார்வை செய்வர். காலஞ்செல்லச் செல்ல, டச்சுக்காரர் இக்கீழ் அதிகாரிகளைவிட்டு விட்டுத் தாங்களே நேரடியாகச் சாலியருடன் தொடர்பு கொள்ள முயன்றனர். எனவே, துரையரின் தொகையைக் குறைத்தனர். அன்றியும் சாலியர் வாழும் கிராமங்கள், அவர்கள் வசம் உள்ள நிலங்கள், அவர்கள் செய்ய வேண்டிய இராஜகாரியம் ஆகிய விடயங்களைக் குறிக்கும் இடாப்புகள் பதியப்பட்டன. விதானைமார் சாலியரின் ஊழியத்தைத் தம் சொந்தத் தேவைகளுக்குப்பயன் படுத்துகின்றனர் என்ற ஐயம் உண்டாகியதாலேயே டச்சுக்காரர் இப்பதிவுகளை முறையாகச் செய்தனர். ஆனால் விதானைமார் மட்டுமன்றி, டச்சு அதிகாரிகளும் அவர்களைக்கொண்டு தம் சொந்த வேலைகளைச் செய்வித்தனர்.

இராஜகாரிய முறைப்படி 12 வயது முதல் முதுமை எய்தும் வரை ஒருவன் கறுவா சேகரித்துப் பதனிடும் தொழிலைச் செய்தல் வேண்டும். உடல் நலம் வாய்ந்த ஒரு மனிதன் ஆண்டொன்றுக்கு 12 ‘றோப்’ கறுவா சேகரித்துக்கொடுத்தல் கட்டாயமானது. அவன் மேலதிகமாக ஒரு ‘பாரம்’ கறுவா (சுமார் 660 இறா) சேகரித்துக் கொடுத்தல் வேண்டும்@ இதற்கு 6 லரின் (72 ஸ்ரூய்வா) பணம் கொடுக்கப்படும். ஆனால், இதை அரசாங்கம் தலைவரிப்பணமாகப் பெற்றுவிடும். எனவே. கறுவா பணச் செலவின்றிக் கம்பனிக்குக் கிடைத்தது. ஆனால், வேலை செய்யும் நாட்களில் சாலியருக்கு வேண்டிய அரிசி, உப்பு, மீன் முதலிய உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். கறுவாப்பட்டை சேகரித்தல் ஆண்டுக்கு இருமுறை நிகழும். ஆனி முதல் ஐப்பசிவரை பெரும் போகமும், தை, மாசியில் சிறுபோகமும் பெறப்படும்.

சிங்கள அரசர் காலத்தில் சாலியர் அதிக கடுமையாக வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படவில்லை. ஏற்கனவே போர்த்துக்கேயர் காலத்திலே அவர்கள் கடுமையான வேலை செய்ய வேண்டியிருப்பதாகவும் தங்கள் குறைகளைத் தீர்க்கும் படியும் கொழும்புத் தளபதிக்கு விண்ணப்பம் அனுப்பினர். இப்போது டச்சுக்காரரின் கடுமையான கண்காணிப்பில் அவர்கள் முன்னர் போர்த்துக்கேயர் காலத்திற் சேகரித்ததிலும் 3 அல்லது 4 மடங்கு அதிக கறுவா சேகரிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். சாலியர் தொகை குறைவாயிருந்தமையால், டச்சுக்காரர் சில தலை முறைகளாக வேலை செய்யாது தப்பிய சாலியரைத் தேடிப் பிடித்து வேலை வாங்கினர். கடின உழைப்புக்குப் பயந்து தாம் குடியிருந்த நிலத்தையும் கைவிட்டு ஒடியோர் பலர். முதல் ஐந்து ஆண்டில். டச்சுக்காரர் 4 லட்சம் இறாத்தல் முதல் 4 ½ லட்சம் வரை சேகரித்தார்கள். ஐரோப்பாவில் இன்னும் அதிகம் விற்கலாம் என அறிந்ததும் படிப்படியே 5லட்சம், 6லட்சம், 7லட்சம் வரை மேன்மேலும் சேரிக்கும் அளவைப் பெருக்கினர். சாலியா தம் இல்லங்களை விட்டு, நீண்டதூரம் சென்று காடுகளில் 8 மாதம் வரை குடியிருக்க வேண்டியிருந்தது.

.இவ்வாறு கடுமையாக வேலை செய்யாது தப்பச், சிலர் கண்டியரசனின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்துட் புகுந்தனர். சிலர் தம் பிள்ளைகளை உயர் வகுப்பாருக்கு விற்றனர். அப்பிள்ளைகளாயினும் தம்மைப்போல வேலை செய்ய வேண்டாம் என நினைத்தனர்போலும். இக் கஷ்டங்களை அறிந்த லோறன்ஸ் பைல் தேசாதிபதி மேலதிகாரிகளை வேண்டியமையால் அவர்கள் 640.000 இறாத்தல் அனுப்பினாற்போதும் என அறிவித்தனர். இதனால் சாலியரின் துன்பம் சற்றுக் குறைந்தது.

கறுவாவில் மிகத்திறமையான வகை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இரண்டாந்தரமான பட்டை இந்திய சந்தைகளுக்கு அனுப்பப்பட்டது. கறுவா டச்சுக்காரரின் தனியுரிமையாகிய பின் அதன் விலை மிகக்கூடியது. ஆண்டுதோறும் சராசரி 3 ½ லட்சம் இறாத்தல் அங்கு விற்கப்பட்டது. அதனால் பெற்ற வருமானம் சுமார் பத்து லட்சம் கில்டர். இந்தியச் சந்தைகளில் 1 ½ லட்சம் இறாத்தல் விற்கப்பட்டது. இதனால் கிடைக்கும் பணத்தைக்கொண்டே டச்சுக்காரர் துணிகள் வாங்கிக் கீழ் நாடுகளில் விற்று இலாபமடைந்தனர். இந்தியச் சந்தைகளில் ஒரு இறாத்தல் 8 முதல் 25 ஸ்ரூய்வர் விலைக்கு விற்கப்பட்டமையால்@ பிறஐரோப்பிய சாதியார் இதனை வாங்கி ஐரோப்பாவில் இலாபத்துக்கு விற்கமுடியும். இதனைத் தடுக்க இந்தியாவிலும் கறுவா விலையை மிக அதிகமாகக் கூட்டினர். எனவே. மலையாளத்தில் விளையும் தரங்குறைந்த கறுவாவைப் போர்த்துக்கேயரும் ஆங்கிலேயரும் இந்தியாவில் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் விற்கத் தொடங்கினர். விரைவில் மலையாளக்கரையோரத்திலிருந்த துறைமுகங்களைப் போர்த்துக்கேயரிடமிருந்து டச்சுக்காரர் கைப்பற்றி அங்கு விளையும் கறுவாவையும் சுதேச மன்னரிடம் வாங்கி அழித்துத் தம் ஐரோப்பிய வணிகத்தைக் காத்தனர். ஆனால், இவ்வளவு பெருலாபம் தந்த கறுவா வாணிகம் ஒல்லாந்தின் செல்வத்தைப் பெருக்கியதேயன்றி இலங்கையிலுள்ள டச்சு அரசாங்கம் கூட அதன் இலாபத்தைத் தன் கணக்கிற் சேர்க்க முடியவில்லை.

18 - ம் நூற்றாண்டில் தொடர்ந்து இந்நிலை இருக்க முடியவி;ல்லை. இயல்பாக விளையும் கறுவா போதாமையால் அதை விளைவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கண்டியரின் கறுவாவைப் பெறப் பலதடைகள் இருந்தமையால், ஒல்லாந்தர் தம் நிலத்தில் பயிரிட்டு அதை விளைவிக்க முயன்றனர். மருதானை, கதிரானை, எவெரியத்தை ஆகிய இடங்களில் கறுவாத் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவை, சுமாரான இலாபம் அளித்தன. சிங்களர் இவற்றில் அதிக ஊக்கம் காட்டினர். மிகப் பெருந்தொகையான கறுவாத் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் களை பிடுங்கவும் போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. அபயசிங்கா என்ற சிங்கள அதிகாரியின் யோசனைப்படி, சாலியர் சிறு தோட்டத்துக்குப் பொறுப்பாயிருந்து தாம் ஆண்டு தோறும் கொடுக்கவேண்டிய கறுவாவைச் சேகரித்துக் கொடுக்கலாம் என விதிக்கப்பட்டது. (1791) இந்த முறை பெரும் வெற்றி அளித்தது. எவெரியவத்தைத் தோட்டத்தை உண்டாக்கிய மகாபத்த இலாகாவின் முதலியார் அந்தரிஸ் மெண்டிசும், கதிரானையில் தோட்டம் ஆக்கிய மகாவிதானை தினேஸ் டீ சொய்சாவும் பேருதவி புரிந்து, தேசாதிபதியின் விசேட பாராட்டுதலைப் பெற்றனர். விரைவில் கண்டி அரசிலிருந்து கறுவா வாங்கும் தேவை ஏற்படாது என்ற நிலை எய்தியது. சாலியர் மட்டுமன்றிப் பிறரும் கறுவாத் தோட்டங்கள் உண்டாக்குவதில் ஆர்வம் கொண்டனர். இரண்டாம் மகாமுதலியார் அபயரத்தினா தெமட்டக்கொடையில் கறுவாவும், பிற இடங்களில் கோப்பியும், மிளகும் விளைவித்தான். இவர்களுக்குக் கம்பனி தங்கச் சங்கிலியும் ‘மெட்’லும் அளித்துக் கௌரவித்தது. தென்மாகாணத்தில் முதலியார் பதவி அளிக்கும் போது. அதனைப்பெறுவோன் இத்தனை ஏக்கர் நிலத்தில் கறுவா பயிரிட வேண்டும் எனக் கட்டளை இடப்பட்டான். கறுவாத் தொழில் ஊக்கம் மிகுந்தமையால், நெல் விளைவிப்பதற்கு வேண்டிய தொழிலாளர் கிடைப்பது அரிதாயிற்று.

பின் இணைப்பு

17 - ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாண மக்களின் பொருளாதார நிலை.

1658 - ல் டச்சுக்காரர் வட இலங்கையைத் தமதாக்கி அரசாளத் தொடங்கினர். இலங்கையின் பிற்பகுதிகளினின்றும் வேறுபட்ட தன்மைகள் பல இருந்தமையால். இப் பிரதேசத்தைப் போர்த்துக்கேயர் போலவே டச்சுக்காரரும் தனி நிர்வாகப் பிரிவாகவே வைத்து ஆட்சி செய்து வரலாயினர். இவ்விரு இனத்தவர்களும் இப்பகுதியிலிருந்து பல்வேறு வழிகளால் மிகுந்த வரிபெற வாய்ப்பு உண்டு எனக் கண்டனர். விவசாயத்தை ஆதாரமாக்கொண்ட மக்கள் இங்கு அமைதியாக வாழ்ந்து தம் அரு முயற்சியால் தலைமுறை தலைமுறையாகப் பொருள் தேடி, ஓரளவு செல்லச் செழிப்புடன் விளங்கினர். ஆனால் இதற்கு மாறாகத் தென், தென்மேல் பகுதிகளில் அரசியற் பூசல்கள் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்து சென்றனராகையால், அங்கு அரிதிற் பெறப்படும் வரிகளிலும் அதிகமாக யாழ்ப்பாணத்தில் எளிதிற் பெறக்கூடியதாயிருந்தது. சாதாரண வரிகளுடன் வாணிகம், நிலவரி என்பனவும் அதிக வருவாயை அளித்தன. ஆகவே, கொழும்பு, காலி ஆகிய முக்கிய துறைமுகங்களைப் போலவே யாழ்ப்பாணமும் டச்சுக்காரரின் நிர்வாகப் பிரிவு ஆயிற்று.

1660 - க்கப் பின் வந்த ஆண்டுகளில், இயற்கையின் உற்பாதங்கள் ஏற்பாடாவிடில் யாழ்ப்பாணத்தில் விளையும் நெல் அங்குள்ள குடிகளுக்கும், குடியேறிய டச்சுக்காரருக்கும் போதியதாயிருந்தது. அங்கு யானை. பாக்கு. சீலை, பனை, மரம், கயிறு, புகையிலை முதலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்;பட்டன. இவ்வாணிகம் பெருஞ்செல்வத்தை அளித்தது. பணம் அதிகமாக வழக்கிலிருந்தது. பணம் பெருக்கம் காரணமாக விலைகள் உயர்ந்தன. பத்து ஆண்டுகளுள் நெல் இருமடங்கு விலை கூடியது. உப்புக்கழி நிலத்தை மீட்டுக் குடிகளுக்கு வழங்கினர். எனினும், நிலத்தின் விலையும் மிக உயர்ந்தது. இப்பொருளாதார முன்னேற்றம் காரணமாக டச்சுக்காரின் வருமானமும் மிகுந்தது. 1660 முதல் இருபது ஆண்டுகளில் இரண்டுக்கும் மூன்றுக்கும் இடைப்பட்ட இலட்சம் கில்டர் நிகர லாபம் ஆண்டு தோறும் கிடைத்தது. இது இலங்கையிலும் தென் இந்திய பண்டகசாலைகளிலும் இருந்து கிடைத்த மொத்த வருமானத்தின் மூன்றில் ஒரு பகுதியாகும். இலங்கையின் மூன்று பிரிவுகளில், கொழும்பிலும். காலியிலும் தொடர்ந்து வருவாயிலும் செலவுத்தொகை அதிகமாயிருந்தது. யாழ்ப்பாணப்பிரிவில் மட்டுமே ஆண்டுதோறும் ஓரிரு இலட்சம் கில்டர் மேலதிகமான வருமானம் கிடைத்தது. எனவே, டச்சுக்காரர் யாழ்ப்பாணப் பிரிவு தமது விலைமதிப்பற்ற அரிய உடைமை எனக் கருதி, அதன் வருமானத்தையும் வரியையும் பெருக்கப் பெரு முயற்சி செய்தனர்.

இதன் பயனாகக் கமத்தொழிலையும், வாணிகத்தையும் தீவிரமாக அபிவிருத்தி செய்தனர். காடு மூடிக் கிடந்த நிலங்களைத் திருத்தி. டச்சு அதிகாரிகளுக்கும் குடிகளுக்கும் வழங்கினர். யாழ்ப்பாணக் கடலேரியின் உப்பு நீர் புகுந்து, பெரும் பரப்பு உவர் நிலமாயிற்று@ அதிலிருந்து உப்பு நீரை அகற்றி, நீர் வழிந்து செல்ல வகைசெய்து, அதனை மீண்டும் விளை நிலமாக்கப் பெரும் முயற்சி செய்தனர். இதில் அவர்கள் தம்தாய் நாட்டிற் பெற்ற அனுபவம் பெரிதும் உதவியது.

வாணிக விருத்தியின் பொருட்டு இந்தியாவிலிருந்து வரும் வணிகர்களுக்கு எல்லா வசதிகளும் தந்தனர். யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் பல இடங்களில் சீலை நெசவு, வண்ணவேலை, சாயமிடல் என்பன தொடங்கப்பட்டன. ஒல்லாந்தர் இங்ஙனம் தம் ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தின் பொருளாதாரத்தை விருத்தி செய்து, அரசாங்க வருமானத்தையும் பெருக்கினர்.

நிலவரியையும் பிறவரிகளையும் முறையாகச்சேகரித்தும், நிராஜகாரியம் செய்தலைக் கிரமப்படுத்தியும் அரச வருமானத்தை அதிகரிக்கச் செய்தனர். பண்டைக் காலத்தில் குடிகள் தம்மை ஐம்பகையொழித்துக்காக்கும் வேந்தனுக்குப் பிரதியுபகாரமாகச் சிலவரிகளை யளித்தும் ஊழியஞ்செய்தும் வந்தனர். அவ்வழக்கம் சிக்கல் நிறைந்ததாயும் அன்னியரால் இலகுவில் உணர முடியாததாயும் இருந்தது. டச்சுக்காரர் இதனை ஆரம்பத்திலிருந்தே அவதானித்தனர். இது தென்னிலங்கையில் நிலவி வந்த வரிமுறையிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது. பெருந்தொகைப் பணம் இறைவரியாகக் கிடைப்பதையும், அதனை மேலும் அதிகரிக்க இடமுண்டு என்பதையும் உணர்ந்த டச்சுக்காரர் தென்னிலங்கையில் இத்துறையில் முயற்சியேதுஞ் செய்யுமுன்னரே, யாழ்ப்பாணத்தில் இது பற்றிச் சந்தித்துச்செயலாற்றினர். வடபகுதியில் வழக்கத்திலிருந்த முறை, கிங்கள நாட்டு வரிவசூல் முறையிலும் சிக்கல் குறைந்த நிலையில் காணப்பட்டது. பெருவேந்தர்களாட்சியில் முறைப்படுத்தப்பட்ட வரிவசூல் அமைப்பு யாழ்ப்பாணத்தில் அழியாதிருந்தது. ஆகவே, அந்நியர் அதனை எளிதில் அறிந்து, அதனைத் திறம்பட நடாத்த வாய்ப்புக் கிடைத்தது.

வரிமுறை இருவகைப்படும். ஒன்று தலைவரிப் பணம்@ அதாவது உழைக்கும் ஒவ்வொரு மனிதனும் அளிக்கவேண்டிய தொகை. மற்றது, நிலவரி. ஒருகுடும்பத்தில் உடலால் உழைக்க வல்லவர்கள் அனைவரும் தலைவரிப் பணம் கொடுக்க வேண்டும். நோயாலும் முதுமையாலும், உடலுழைப்புக்கு இயலாதோரே இவ்வரியினின்றும் விலக்குப் பெறுவர். 17 - ம் நூற்றாண்டில் அவ்வரி தலைக்க ஆண்டொன்றுக்கு இரண்டு முதல் ஆறு பணம் வரை வசூலிக்கப்பட்டது. பொருட்களின் விலையேற்றத்துக்கு ஏற்ப இத்தொகை கூடிக் குறையும். (ஒரு பணம் ¼ கில்டர் வரை இருக்கும்) தலைவரிப் பணத்தை முறையாக வசூலிப்பதற்குக் கிராமந்தோறும் இருக்கும் உடல்நலமிக்க ஆண்கள் அனைவரது இடாப்பும் அடிக்கடி புதுப்பிக்கப்படல் வேண்டும்.

நேர்முக வரிகளில் மற்றொன்று கைத்தொழில் வாணிகம் முதலிய தொழில்களால் வாழ்க்கை நடாத்துவோர் கொடுக்கும்வரி. அத்தொழில் செய்வோரது வருவாய்க்கேற்ப வரியும் இரண்டு முதல் எட்டுப் பணம் வரை கூடிக் குறையும். நெசவாளர், சாயமிடுவோர் போன்ற தொழிலாளர் கூட்டமாக வாழுமிடங்களில் இவ்வரியைக் குழு அடிப்படையிலேயே வசூலிப்பர்.

யாழ்ப்பாணத்தில் தமிழரசு நடந்த காலத்தில் அதிகாரிகளது செலவுக்காக உயர் குலத்தார் சிலரிடம் ஒரு வகை வரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இதனை அதிகாரப்பணம் என்பர். ஆண்டுக்கு ஒருபணம் வசூலிக்கப்படும். டச்சுக்காரர் இதனை வசூலிக்கும் போது, இதனைக் கொடுக்கும் மூன்று சாதியார் தமக்கு இது ஒரு கௌரவம் எனக் கருதியதை உணர்ந்தனர். எனவே, அவர்களின் போலிக் கௌரவத்துக்குத் தூபம் இட்டு, அவ்வரியைத் திறமையாக வசூலித்தனர்.

ஒவ்வொரு பிரசையும் மாதத்தில் ஒரு நாள் (அரச) ஊழியம் செய்ய வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. கைத்தொழில்களிள் ஈடுபட்டவர்கள் கொடுக்கும் வரிக்குப் பதிலாக இது இருந்தது. அதனைக்கொடுப்போர் ஊழியம் செய்யவேண்டியதில்லை. பொதுவாக ஆண்டு தோறும் தொடர்ந்து பன்னிரண்டு நாளுக்கு வேலை செய்வர். உயர் வகுப்பார் இதற்குப் பதிலாக ஒரு தொகைப் பணம் கொடுத்து விடுவர். (நாள் ஒன்றுக்கு 2 ஸ்ரூய்வர்@ 12 நாளைக்கு ஒரு இறைசால்) பிறர் கோட்டை கட்டல், வீதியமைத்தல் துறைமுகத்தில் கப்பல்களுக்குச் சரக்கேற்றல் முதலிய வேலைகளைச் செய்யமாறு பணிக்கப்பட்டனர்.

4. ழுககiஉநை - பநடன
ழூ பின்னாளில் டச்சுக்காரரினது ஆங்கிலேயருதும் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த முத்துக்குமார கவி ராசசேகரர் வீதியமைக்கும் பணியில் ஈடுபடுமாறு அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டதை நினைந்து, இறைவனிடம் முறையிட்டதாகவரும் பாடல் ஒன்று உளது. ழூ

நிலவரிகள் பற்றி விபரமாக அறியமுடியவில்லை இவற்றுள் முக்கியமானது நெற்காணிகள் மீது விதிக்கப்பட்டவரி. நிலத்தின் விளைவுக்கும் இடத்துக்கும் ஏற்ப, இது மாறுபடும். இதைவிடச் சூடு மிதித்தவுடன் நெல்லின் ஒரு பகுதியை அரசுக்கு அளிக்கும் வரியும் இருந்தது. டச்சுக்காரர் ஆட்சிக்கு வந்தபோது. இது ஆண்டுக்கு இவ்வளவு நெல் என நிச்சயிக்கப்பட்டு விட்டது. யாழ்ப்பாணத்தில் இது பணமாக வசூலிக்கப்பட்டது. மன்னாரிலும் வன்னியிலும் இதனை நெல்லாகவே சேகரித்தனர். வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தின் மீதும், (கிணற்று நீரை இறைத்து விளைவிப்பதற்கு) வரி செலுத்த வேண்டியிருந்தது. வீட்டைச்சுற்றி ‘வள’வுக்குள் இருக்கும் பனை, தென்னை, கனி மரங்களனைத்தின் மீதும் வரி விதிக்கப்பட்டது.

கீழ்வரும் கணக்கு 1695 - 6 - ல் சேகரிக்கப்பட்ட வரியைக் குறிக்கும்.

கில்டர்
நில, மர, தோட்ட வரிகள் ஸ்ரீ 40, 870
விளைந்த நெல்மீது வரி ஸ்ரீ 21, 580
தலைவரி ஸ்ரீ 14, 995
கைத்தொழிலாளர் வணிகர் வரி ஸ்ரீ 2, 162
அதிகாரி வரி ஸ்ரீ 2, 945
மொத்தம் ஸ்ரீ 82, 552

இவ்வரிகள் வசூலிக்கும் போது அரசுக்கும் குடிகளுக்குமிடையில் அடிக்கடி தொடர்பு ஏற்படலாயிற்று. முறையாக வரி சேர்த்தற்குச். சரியான கணக்கெடுப்பும், இடாப்புகளும் வேண்டியிருந்தன. எனவே தோம்புகள் வரிமதிப்பிடுதற்கும் சேகரிப்பதற்கும் இன்றியமையாத சாதனம் ஆயின. போர்த்துக்கேயர் காலமுதல் இருந்து வந்த இவற்றில் ஆள், நிலம், வரி முதலிய செய்திகள் அடங்கியிருந்தன. 1673 - ல் லோறன்ஸ் பைல் யாழ்ப்பாணத்தின் சேனாதிபதியாக நியமிக்கபட்ட பின், அதன் நான்கு பிரிவுகளிலும் தீவுப்பகுதியிலும் விபரமான தோம்புகள் தயாரிக்கும் பொருட்;டு ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதன் விசாரணைகளுக்குச் சரியான பதில் கொடுக்க விவசாயிகள் கூட்டுவர் என அஞ்சினர். எதிர்ப்பு மிகுந்தது. பலர் வன்னிக்கு ஓடினர். ஒல்லாந்தர் இதை ஒரு புரட்சி என வர்ணித்துக்கடும் நடவடிக்கைகளை எடுத்தனர். 1677 - ன் நடுப்பகுதிக்குள் தோம்பு தயாரிக்கும் பணி முற்றுப் பெற்றது. அதன்படி நிலவரி 36,609 கில்டரும். தலைவரி 35160 கில்டரும், மேலதிகமாகக் கிடைத்தன. இராஜகாரியம் செய்யவேண்டியவரின் தொகை 12,000 கூடியது.

டச்சுக்காரரின் பொருளாதாரக்கொள்கையை மேலதிக வரி விதித்தமையுடன் சேர்த்துச் சிந்தித்தல் நலம். யாழ்ப்பாணத்தில் கமத்தொழிலால் தேவைக்கு மேல் ஏராளமான விளைவு எக்காலமும் கிடைப்பதரிது. அயல் நாட்டு வாணிபம் காரணமாகவே இங்கு வரிவிதிக்கக் கூடிய செல்வம் சேரும். யானை, பாக்கு, புகையிலை என்பன ஓரளவுக்குப் பயனுள்ள வாணிகப் பொருட்களாயிருந்தன. வங்காளம், கோல்கொண்டா, சோழமண்டலக்கரை, மலையாளம் ஆகிய இடங்களிலிருந்து வந்த வணிகர் அதிக பணம் கொடுத்து இவற்றை வாங்கிக் கொண்டனர்;. இப்பணத்தைக் கொண்டு குடிகள் சொற்ப உள்@ர் வாணிபத்தை விருத்தி செய்து கமத்தொழிலால் வரும் சிறு வருமானத்தைச் சற்றுப்பெருக்கினர். தடையற்ற வாணிபத்தால் நிலைபெற்ற இப்பொருளாதார வளம் 1670 முதல் டச்சுக்காரர் தீவு முழுவதும் ஏற்படுத்திய வணிகத் தடைகளாற் குன்றத் தொடங்கியது. ஒல்லாந்தரின் நோக்கம் சீலை, பாக்கு வாணிகத்தைத் தனிப்பட்ட வணிகரிடம் விடாது தாமே கம்பனியின் தனியுரிமையாக்குதலேயாம். இதன் காரணமாக, இங்கு வரும் வணிகர் தொகை குறைந்தது. வங்காள - யாப்பாண வாணிகம் குன்றியது. யாப்பாண வாணிகர் மட்டக்களப்பு, மன்னார், கொழும்பு, காலி ஆகிய இடங்களுக்குச் சென்று வாணிகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டன. 1680 அளவில், நாடெங்கும், விசேடமாக யாழ்ப்பாணத்தில், வறுமை தாண்டவமாடுவதை டச்சு அதிகாரிகள் உணர்ந்தனர். வணிகம் குன்றியது@ சந்தைகள் வெறுமையுற்றன. சனங்கள் முன்னர் விலைக்குப் பெற்ற பண்டங்களுக்குப் பதிலாக, இப்பொழுது தத்தம் வீட்டிலேயே உற்பத்தியாகும் பொருட்களைப் பயன் படுத்தித் திருப்தியடையும் நிலை ஏற்பட்டது.

நிலம் பற்றிய கொள்கையும், வணிகக் கொள்கையும் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கிறது அன்றோ? யாழ்ப்பாணத்தவர் தம் உழைப்பில் பெரும்பகுதியை வரிகளாகக் கொடுத்து வந்தனர். இப்போது வரி கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு புறம் நிலவரி அதிகரித்தது. மறுபுறம் வணிகத் தடைகளால் வருமானம் குறைந்தது. எனவே, வறுமையுற்ற பல கிராமங்களிலிருந்து பலர் வெளியேறி வன்னிப் பகுதியிற் குடியேறினர். 1682 - ல் தேசாதிபதி பைல் யாழ்ப்பாணம் வந்தபோது, சிலசனங்கள் அவன் முன் சென்று, சில வரிகளை நீக்கிவிடுமாறு விண்ணப்பித்தனர். உத்தியோகத்தரும் இவ்விண்ணப்பம் நீதியானது என உணர்ந்து. மேலதிகமாக வசூலிக்கப்பட்ட வரிகளைச் சில ஆண்டுகளுக்குத் தள்ளி வைக்கும் படி கருத்துத் தெரிவித்தனர். பட்டேவியாவுக்கு விண்ணப்பித்து அங்கிருந்து உத்தரவு வந்தபின் 1690 லிருந்து பத்து ஆண்டுகளுக்கு மேலதிக தலைவரியை மட்டும் நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

உசாத்துணை நூல்கள் :

1. னுரவஉh Pழறநச in ஊநலடழn - னுச. ளு. யுசயளயசயவயெஅ
2. வுசயனந யனெ யுபசiஉரடவரசயட நுஉழழெஅல ழக வாந வுயஅடைள ழக துயககயெ - னுச ளு. யுசயளயசயவயயெஅ’ள யசவiஉடந in “வுயஅடை ஊரடவரசந” - ஏழட. ஐஓ - ழே. 4(1961)

வினாக்கள்

1. இலங்கையின் வட, கீழ் பகுதிகளில் ஏன், எவ்வகைகளில் டச்சுக்காரர் ஆர்வங் காட்டினர்? (மார்கழி, 1951)
2. இலங்கைக் கரையோரப் பகுதிகளின் பொருளாதார நிலைமைகளை டச்சுத் தேசாதிபதிகள் எவ்வாறு விருத்தி செய்தனர் என்பதை விளக்குக. (1957)
3. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகள் எழுதுக :-

(ய) டச்சுக்காலத்தில் கறுவா வியாபாரம் (1962)
(டி) மகாபத்த (1963)

பன்னிரண்டாம் அத்தியாயம்

ஒல்லாந்தர் கால விவசாய வளர்ச்சி

விவசாயம் குன்றுதல்

பொலன்னறுவைக் காலத்தின் இறுதியிலிருந்தே குளங்கள் அழிந்து வளம் குன்றிய வரட்சி மண்டலத்தில் விவசாயத்தொழில் கீழ் நிலையுற்று வந்தது. பின் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் தென் மேல் சரிவைப் போர்க்களமாக்கியமையால் அத்தொழில் மேலும் சீர்குலைந்தது. 1656 க்குப் பின்னும் நிலைமை சீர்திருந்த வில்லை. இராஜசிங்கன் கொழும்பைச் சுற்றியுள்ள நிலங்களிலிருந்து ஒரு மணி தானியமும் டச்சுக்காரருக்குக் கிடைக்காமற் செய்யும் கொள்கையைப் பின் பற்றினான். நீர்கொழும்பு முதல் காலி வரை பரந்து கிடந்த நிலப்பரப்புக் குடிசனமற்றதாயும் விளைவு அற்றதாயும் போயிற்று. ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் மனிதன் வயிற்றுக்கு உணவளிக்காது பாழாக் கிடந்தது. நகரங்களில் வாழ்வோர் அயற் கிராமங்களில் உணவு பெற இயலாது. அயல் நாட்டிலிருந்து உணவு இறக்குமதி செய்யத் தொடங்கினர். கொழும்புக்கு மட்டுமன்றிக் காலி, மாத்தறை முதலிய சிறு நகரங்களுக்கும் உணவுத் தானியங்கள் வங்காளம் சோழமண்டலக்கரை, கன்னட தேசம் ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வணிகமும், கைத்தொழில்களும் பெருகவே குடிசனத்செறிவும் மிக விரைவில் அதிகரித்தது. இவர்களுக்கு உணவளித்துக் காக்கும் கடனைச் செய்ய டச்சுக்காரர் பெருந்தொகைப் பணம் செலவிட வேண்டியிருந்தது. பயன்தரும் வாணிகத்தில் ஈடுபட வேண்டிய கப்பல்கள் வயிற்றுக்கு உணவு ஏற்றி வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

முதற் பத்து ஆண்டு முயற்சிகள்.

இதனால் ஏற்பட்ட பெரும் பொருள் நட்டத்தை உணர்ந்த டச்சு ஆட்சியாளர் விவசாய அபிவிருத்தியில் மிக்க கவனம் செலுத்தினர். அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், முதற் பத்;து ஆண்டுகள் கறுவா சேகரித்தற்கு அடுத்தபடியாக அவர்கள் கவனம் முழுவதும் பயிர்த்தொழில் வளர்ச்சியிலேயே சென்றது. இதுவே அவர்களது பொருளாதாரக் கொள்கையின் அத்திவாரமாயமைந்தது. 1661 - ல் தேசாதிபதிக்கு அனுப்பப்பட்ட கட்டளைகளில்,

“இத்தீவில் கம்பனியின் இலட்சியங்கள் நிறைவேறுதற்கு இன்றியமையாத மார்க்கங்களுள் ஒன்று பொதுவான விவசாய விருத்தி என்பதை மனத்துள் வைத்துக் கொள்க,” என்ற வாசகம் காணப்படுகிறது. இதனை டச்சுக்காரரின் பிரதான கருமங்களின் மையமாக அமைந்த பெருமை பெரும்பாலும் வான்கோயன்ஸையே சாரும். அவன் பட்டேவியாவுக்கும், நெதர்லாந்துக்கும் எழுதிய நிருபங்களில் இதனை மிகவும் வற்புறுத்தியுள்ளான். இலங்கையின் நெல் விளைவைச் சுயதேவைப்பூர்த்தி செய்யும் அளவுக்குப் பெருக்கலாம்; என்றும் அதனால் இங்கு டச்சு ஆட்சி பலமடையவும் செல்வம் பெருகவும் வழி பிறக்கும் என்றும் விளக்கினான்.

இதற்குத் தடையாக இருந்தது போதிய ஆட்பலமின்மையே. அக்கால வழக்கப்படி ஒரு நிலத்திற்குரியவன் அதைக் கைவிட்டுச்சென்றால் அரசனே அதற்குரியவனாவான். அவன் அதனைத் தன் விருப்பப்படி எதுவும் செய்யலாம். போர்த்துக்கேயர் பெரும் நிலப்பகுதிகளைத் தமக்கும் தம் சமய ஸ்தாபனங்களுக்கும் எடுத்துக் கொண்டனர். இப்போது அவற்றையெல்லாம் டச்சுக்காரர் அபகரித்தனர். நிலத்தைத் திருத்திப் பாடுபட்டு உழைக்கவேண்டிய ஆட்களும் அவர்களுக்குக் கிடைத்தனர். தென் இந்தியாவில் முஸ்லிம் படையெடுப்புகளால் நலிவுற்று இடம்பெயர்ந்தவர்களை 1659 - 60 - ல் நிகழ்ந்த கொடும் பஞ்சம் மேலும் வாட்டியது. அவர்கள் தமிழகத்துக் கரையோரத் துறைகளில் டச்சுக்காரரிடம் தொழில் பெறக் கருதி வந்தனர். அவர்களுக்குக் கஞ்சி வார்த்து மகிழ்வித்து. முத்தும் மணியும் கொழிக்கும் ஈழவள நாட்டில் தொழில் வசதி செய்து தருவதாக ஆசை காட்டி மோசம் செய்து அழைத்து வந்தனர். பல குடும்பங்கள் அடிமைகளாக விற்கப்பட்டன. ஓராண்டுக்குள் அடிமைகளாக விற்கப்பட்டன. ஓராண்டுக்குள் 2000 அடிமைகள் காய்ச்சிய கோலால் குறி சுடப்பட்டு, கொழும்பைச் சூழ்ந்துள்ள நிலங்களில் வேலை செய்யுமாறு குடியேற்றப்பட்டனர். ஆனால் 1660 - ல் அடிமைச் சந்தை யொழிந்தது. டச்சுக்காரர் மனம் சோர்ந்தனர். ஆனால் தென்னிந்தியாவில் துர்ப்பாக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்த போதெல்லாம் இவ்வாறே டச்சுக்காரர் அடிமைகளைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.

பயிர்த்தொழில் வளர்ச்சிக்கு டச்சுக்காரர் ஆற்றிய பணிகளுள் முதலாவது நிகழ்ந்தது இவ்வடிமைக் குடியேற்றமே. அரசுக்குரிய நிலங்கள் கமத்தொழிலில் ஈடுபட் விரும்பினோருக்குத் தாராளமாக வழங்கப்பட்டன. தம் விரும்பினோருக்குத் தாராளமாக வழங்கப்பட்டன. தம் விருப்பப்படி வந்து குடியேறிய ஒல்லாந்தரும் உத்தியோகத்தரும் கமத்தொழிலில் ஈடுபடுமாறு தூண்டப்பட்டனர். அவர்களுக்குப் பெரும் நிலப்பரப்பு வழங்கப்பட்டது. விவசாயிகள் விளைவிக்கும் நெல் பறை ஒன்றுக்குப் பத்தொன்பது ஸ்ரூய்வர் விலை கொடுத்து வாங்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது. இறக்குமதி செய்யப்பட்ட நெல்லின் விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம் நெல் இறக்குமதியைக் குறைக்க முயற்சிக்கப்பட்டது.

சுதேசப் படைவீரர்களுக்கு டச்சு நெற்களஞ்சியங்களிலிருந்து நெல் வழங்குவதை நிறுத்தி, அவர்களுடைய சேவைக்கு ஊதியமாக நிலம் கொடுக்கப்பட்டது. பழைய சிங்கள அரசர் கால வழக்கப்படி போர் வீரர் அந் நிலத்தை உழுது பயிரிட்டு வயிறு வளர்த்தனர். (ஆனால் பழைய காலப் போர் முறைக்கு இது ஏற்றதாயினும், ஒல்லாந்தர் கால நிலைக்குச் சற்றும் ஒவ்வாததாய், போர் வீரருக்குப் பெருஞ் சுமையாயிற்று.

தனிப்பட்டவர்களைப் பயிர்த்தொழிலில் ஈடுபடச் செய்த முயற்சி பயனளித்திலது. சில டச்சு அதிகாரிகளை விட மற்றையோர் கமத்தொழிலில் ஊக்கம் அற்றவர்கள். அடிமைகளால் பயிரிடப்பட்ட நிலங்களில் ஊதிபம் கிடைத்தது. எனினும் உணவு விடயத்தில் சுயதேவைப் பூர்த்தி என்பது வெறும் பகற் கனவாயிற்று. மழையை நம்பிப் பயிர்த் தொழில் செய்தமையால் பருவமழை தவறும் போது பெருநட்டம் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளில் மும்முறை (1659, 1661, 1664) வரட்சியாலோ வெள்ளப் பெருக்காலோ நெல் விளைவு பாதிக்கப்பட்டது. இலங்கை நெற் செய்கையின் எதிர்காலம் பற்றி டச்சு அதிகாரிகளுட் கருத்து வேற்றமையிருந்தது. வான்டர் மேய்டெனுடைய கருத்துப்படி வான்கோயன்ஸின் முயற்சி வீணாகப் பணத்தையும் காலத்தையும் செலவிடும் வழியாகும். 1664 - ல் தேசாதிபதியாயிருந்த ஜேக்கப் ஹ{ஸ்ராட்டும் இலங்கைக் கமத்தொழிலின் எதிர்காலம் பற்றி ஐயங் கொண்டான். போர்த்துக்கேயரின் அனுபவம் இலங்கை நெல் விளைவில் சுயதேவைப் பூர்த்தி பெற மாட்டாது என்பதே எனச் சுட்டிக் காட்டினான்.

1665 - ல் கண்டியில் கலகம் நிகழ்ந்த பின், டச்சுக்காரரின் ஆதிக்கம் உள்நாட்டில் பரவிய போது நிலைமை சற்றுச் சீர்திருத்தியது. சுமார் பதினாயிரம் குடும்பங்கள் முன்னர் தாம் கைவிட்டுச் சென்ற நிலங்களில் மீண்டும் குடியேற்றப்பட்டன. அவைகளுக்கு ஆரம்பத்தில் டச்சுத் தானியக் களஞ்சியங்களிலிருந்தே உணவு அளிக்க வேண்டியிருந்தது. இது கம்பனிக்குபெரு நட்டமளித்தது எனினும் கமச்செய்கையில் அதன் கவனம் மேலும் செல்ல வழிசெய்தது. ஆட்கள் கிடைக்காத பிரச்சினை ஒருவாறு தீர்ந்தது. மலை நாட்டுடன் தொடர்பு ஏற்பட்டமையால் நகரங்களுக்குப் பலவகை உணவுகள் கிடைக்க வசதி ஏற்பட்டது. வான்கோயன்ஸ் தன் இராச்சிய விஸ்தரிப்புக் கொள்கை சரியானது என்பதற்குக் காட்டிய முக்கிய காரணம் உணவு விளையும் செழிப்பான பகுதிகளைக் கைப்பற்றுவதால் தகரங்களின் செல்வ நிலையுயரும் என்பதே.

பிந்திய நிலை

1665 - க்குப் பின் டச்சுக்காரர் கமத்தொழிலில் வளர்ச்சியில் மிக அதிக கவனம் செலுத்தினர். புதிய முறைகளைக் கடைப்பிடித்தனர். முந்திய ஆண்டுகளிற் பெற்ற அனுபவத்தைக் கொண்டு பயன் பெற்றனர். தனியார் துறையை நம்பியிருக்காது அரசாங்கமே பயர்ச் செய்கையில் முக்கிய இடம் பெறலாயிற்று. இராஜகாரியத்தைப் பயன்படுத்திக் குடிகளைக் கொண்டு வேலை செய்வித்துத், திட்டமிட்ட பயிர்த்தொழில் வளர்ச்சிக்கு வழி செய்தனர். கிராமங்களில் நிலம் வைத்திருந்த குடிகள் அதற்கு வரி கொடுத்தற்குப் பதிலாகக் கம்பனியரசாங்கத்தார் காட்டும் நிலத்தில் கூட்டமாகச் சென்று உழவுத் தொழிலைச் செய்யவேண்டியதாயிற்று. முன்னாளில் தம் கிராமத்துக்கு அருகில் இராஜகாரியம் செய்தவர்கள். இப்போது தூரமான இடங்களில் வேலைசெய்யும் படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். கம்பனி அதிகாரிகள் இப்பெரும் நெற்கழனிகளுக்குப் பொறுப்பாயிருந்தனர். கிராமந்தோறும் இராஜகாரியம் செய்யவேண்டியவர்களைச் சேர்த்து அக்கழனிகளுக்கு இட்டுச் சென்று வேலை செய்வித்தனர்.

பட்டேவிய அரசாங்கம் இவ்வாறு அரசாங்க ஆதரவில் கமத்தொழில் செய்வதை எதிர்த்தது. தனிப்பட்டவர்களை இத்துறையிற் செலுத்துதலே தக்கது எனக் கருதியது. வணிக நோக்குடன் வந்த டச்சுக்காரர் கம்பனியின் கருத்துக்கு மாறாகப் பயிர்த் தொழிலில் ஈடுபட்டு அதிக நிர்வாகச் சுமையை ஏற்கலாகாது என எண்ணியது மேலும், அவர்கள் மக்களை வருத்தவும் தம் செல்வத்தைப் பெருக்கவும் அதனைப் பயன்படுத்துவர். இக்காரணங்களால் பட்டேவிய மேலதிகாரிகள் இந்த நெல் விளையும் நிலங்களைத் தருணம் வரும் போது தகுதியான மக்களிடம் ஒப்புவிக்கும்படி கூறினர். ஆனால் வான்கோயன்ஸ் இதனை ஏற்றுக்கொள்வில்லை. இலங்;கையில் அவ்வித தகுதி வாய்ந்தோர் இன்மையாலேயே அரசாங்கம் பயிர்த்தொழிலை மேற்கொண்டது என்றும்;, அதனை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தோர் சிங்கள அதிகாரிகளேயாயினும் அவர்களை நம்பி இதனை ஒப்புவிக்க முடியாதென்றும், டச்சுக்காரக் குடிகளுள் பணமும் அனுபவமும் உள்ளவர்கள் இலர் என்றும் அறிவித்தான். பட்டேவிய அதிகாரிகளிடம் 1669 - ல் விண்ணப்பித்துத் தன் தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி பெற்றான். சனங்களைக் கட்டாயப்படுத்தி இராஜகாரிய மூலம் பயிர்த்தொழிலை விருத்தி செய்தான். பெரும் பயன் விளைந்தது. 1665 - 70 - ல் அரசியற் பூசலின்றி யிருந்தமையால் கமத்தொழிலும் நன்றாக விருத்தியடைந்தது. நெல் விளைவு பெருகவே விலை இறங்கியது. மக்களின் வாழ்க்கைச் செலவும் குறைந்தது. அரிசி இறக்குமதியும் குறைந்தது. உள்நாட்டிலுள்ள காவல் நிலயங்களிலுள்ளோர்க்குக் கொழும்பிலிருந்து அரிசி அனுப்பும் தேவை ஒழிந்தது. அரிசி இறக்குமதி மிகக் குறைந்தமையால், வங்காளத்திலிருந்து அரிசி கொண்டுவந்து கொடுத்துவிட்டு யானை வாங்கிச் செல்லும் வணிகர் வராது விட்டனர்.

ஆனால் 1670க்குப் பின் கமத்தொழில் குன்றத் தொடங்கியது. அரசியற் பூசல்களால் அதிகாரிகள் போரிற் கவனஞ் செலுத்தினர். இராஜகாரியம் செய்வோர் கண்டி இராச்சியத்துக்குள் ஓடினர். கண்டிப் போர்வீரர் பயிர்களை அழித்தனர். தேவைக்குரிய நெல் விளைவு ஒருபோதும் கிடைத்திலது. வான்கோயன்ஸ் தந்தையும் மகனும் விவசாய விருத்தி பற்றிப் பலவாறு புகழ்ந்து எழுதினர். எனினும் அவை நிரூபிக்க இயலாதவை. இலங்கையின் விளைவு அரசாங்கத் தேவைமுழுவதையும் பூர்த்தி செய்து மீந்திருப்பதால் அதனை மதுரையில் விற்கலாமென இளைய வான்கோயன்ஸ் எழுதி வைத்துச்சென்றான். இது வெற்றுரை என்க. பின் வந்தோர் நெல் போதாமையால் இறக்குமதி செய்து வந்தனர்.

நெல் விளைவைப் பெருக்க டச்சுக்காரர் எவ்வித பலி கொடுத்தனர் என்பதற்கு ஒரிடத்தைப் பற்றி ஊன்றி ஆராய்தல் நலம். பழைய காலத்து இராஜகாரியம் செய்வோர் தத்தம் கிராமத்திலேயே அரசாங்கத்துக்குரிய வேலையையும் செய்வர். இதனால் தமது உணவு, தங்குமிடம் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. ஆனால் டச்சுக்காரரோ ஓரிடத்தில் பெரிய விவசாயப்பண்ணைகளை ஏற்படுத்தித் தூரமான இடங்களிலிருந்து குடிகளைக் கொண்ட வந்து வேலை செய்வித்தனர். உதாரணமாக மாத்தறைக்கு அயலில் கிரவேபற்று என்னுமிடத்திலுள்ள விவசாயப் பண்ணையில் வேலை செய்வோர் தூரமான இடங்களிலிருந்து தம் மாடுகளுடன் வந்து உழுது பயிரிட்டும், பின் சூடு மிதித்து நெல்லை நகரத்திலுள்ள திசாவையிடம் கொண்டு சென்று ஒப்புவித்தும் வருந்தியுழைத்தனர். சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழ்ந்து பலர் வியாதிகளால் மடிந்தனர். சமுதாயத்துக்குப் பயனளித் பழைய இராஜகாரிய முறை அந்நியரது கொடிய முறைகளால் மக்களைக்கொல்லும் ஆயுதமாயிற்று. பலர் மாத்தறைப் பகுதியை விட்டுக் கண்டி இராச்சியத்துக்கு ஓடினர். பல கிராமங்களில் அரைவாசிக் குடிகளும் இல்லை. சில இடங்களில் 1658 - ல் இருந்த சனத்தொகையில் ½ , அல்லது 2ஃ3 பங்கு பேர், 1682 - ல் இல்லாது ஒழிந்தனர். திசாவைகளும் சுதேச அதிகாரிகளும் அரசாங்க நிலங்களுடன் தம் சொந்த நிலங்களையும் இராஜகாரிய முறை கொண்டு பயிரிட்டனர். யாழ்ப்பாணக் குடிகளைத் திருக்கோணமலைக்குக் கொண்டு போய்ப் பயிர்த் தொழில் செய்வித்தனர். லோரன்ஸ் பைல் தேசாதிபதி குடிகளுக்கு இராஜகாரியக் கடமையிலிருந்து சொற்ப விடுதலை யளித்தான். உழவுத் தொழிலை அதிகமாகப் பொறுப்பேற்காது விட்டதுடன், ஊழியஞ் செய்வோரின் வசதிகளையும் கவனித்து வேலை வாங்கினான்.

கீழ்மாகாண விவசாயம் குன்றல்

கீழ்மாகாணத்திலேயே காணிகளைப் பற்றிய டச்சுக்காரரின் கொள்கை மிக்க நட்டத்தை உண்டாக்கியது. அதன் நிலவளத்தை வருணிக்க இயலாது. அப்பகுதியை இலங்கையின் தானியக் களஞ்சியம் எனக் கூறினும் அமையும். அங்குள்ளவர்களிடையே வழங்கிய நிலஉடைமைமுறை அப்பகுதிக்கேயுரியது இலங்கையின் பிற பிரதேசங்களிலுள்ள முறையினின்றும் வேறுபட்டது. குடிகள் அரசுக்குத் தம்விளைவில் ஒரு பாகத்தையளிப்பர்@ அத்துடன் அரசனது நிலங்களில் சில நாட்கள் வேலை செய்வர். ஒவ்வொரு சாதியாருக்கும் ஒவ்வொரு தலைவன் இருப்பான். அத்தலையாரி மூலமே அரசாங்கம் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும். அவன் தன் இனத்தவர் கொடுக்கவேண்டிய வரிகளைச் சேகரித்து மேலதிகாரிகளிடம் ஒப்புவிப்பான். இவ்வாறு வரியாகக் கொடுக்கப்படும் பண்டங்கள் டச்சுக்காரருக்கு உபயோகமானவை. அவை தேன்மெழுகு, மரப்பலகைகள், யானை, சீலை முதலியன. எனவே, அவர்களது பேராசைப் பார்வை கீழ் மாகாணத்தின் மீது விழுந்தது. 1670 - ல் ஒல்லாந்தருக்கும் இக் குல முதல்வர்களுக்குமிடையில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இவர்கள் அரசனுக்கு அளிக்கவேண்டிய பண்டங்களை டச்சுக்காரரிடம் கொடுப்பதோடு அமையாது. நெல் முதலிய விளை பொருட்களையும் குறித்த விலைக்குக் கொடுத்துவிடல் வேண்டும். அவர்கள் வேறு எந்த அன்னியருடனும் வாணிகத் தொடர்பு வைத்தலாகாது. கீழ்கரை வாணிகம் முழுவதும் ஒரேயடியாக நிறுத்தப்பட்டது. இவ்வொப்பந்தம் வாள் முனையில் பெறப்பட்டது என்பதில் ஐயமில்லை. இதனால் உள்நாட்டு பிறநாட்டு வணிகருக்கு மட்டுமன்றி ஒல்லாந்தருக்கும் பெரு நட்டம் ஏற்பட்டது. வாணிகம் குன்றவே வேளாண்மையிலும் ஊக்கம் குறைந்தது. வளமான கழனிகள் வெறுமையுற்றன. அங்கு விளையும் நெல்லை ஒரு பறை ஒன்றரை ஸ்ரூய்வாய்வராகத் தமக்கு விற்கும்படி டச்சுக்காரர் கட்டளையிட்டனர். அதே நெல் மேல் மாகாணத்தில் 19 ஸ்ரூய்வராக விற்கப்பட்டது. முன்னர் இங்கு பெருமளவில் நெல் விளைவிக்கப்பட்டமைக்குக் காரணம் செட்டிமாரும் முஸ்லிம் வணிகரும் அதனை ஊரில் நிலவும் விலைக்கு வாங்கித் தேவையான இடங்களுக்குக் கொண்டு சென்று விற்றமையே. தடையற்ற வணிகத்தால் குடிகள் உற்பத்தியைப் பெருக்க ஊக்கம் பெற்றனர். இப்பொழுது விளைவு எல்லாவற்றையும் அற்பவிலைக்கு விற்க வேண்டியிருந்தமையால். பாடுபட்டு யாருக்கோ பயனை அளிப்பதிலும், விளைந்த நெல்லை நெருப்பு வைத்து அழித்து விடுவதே மேல் எனச் சிலர் கருதி அப்படியே செய்தனர். தம் தேவைக்;கு மேல் விளைவிக்காது விட்டனர். சிலர் நெல்லை மறைத்து வைத்து இரகசியமாக அதிக விலைக்கு விற்க முயன்றனர். இதனைத் தடுக்கும் பொருட்டு நெல் விளைந்தவுடன் அதிகாரிகள் வந்து மதிப்பிடுவர். சூடு மிதித்தவுடன் அம் மதிப்பீட்டின்படி நெல்லைப் பறித்துச்செல்வர். அவர்களது கெடுபிடி மிகக் கடுமையாயிருந்தது. அவர்கள் அநியாயமாக விளைவை அபகரித்துச் சிலரிடம் அடுத்த விதைப்புக்கும் நெல் இல்லாமல் பண்ணினராம். நீர் போதாமலோ வேறு காரணத்தாலோ மதிப்பிட்ட அளவிலும் விளைவு குறைந்தாலும் அதிகாரிகள் அதனை ஒப்புக்கொள்ளாது தாம் மதிப்பிட்ட அளவு தரும்படி கேட்பர். உற்பத்தியைப்பெருக்குமாறு தூண்டுதல்களை அளிக்கும் எண்ணமோ அவர்களிடம் இல்லை. கிழக்குக் கரையில் பணியாற்றிய சில டச்சு அதிகாரிகள் இக் கொள்கையால் கம்பனிக்கு நட்டமே ஏற்பட்டது என்பதை உணர்ந்தனர். 1681 -ல் திருக்கோணமலைத் தளபதியும் சபையும் நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘அவர்கள் தம் விளைவித்த தானியத்தை உரிய விலைக்குப் பிறரிடம் கொடாது, தடுக்கப்பட்டமையால் கொதிப்படைந்துள்ளனர். அதனை அழித்து விட விரும்புகின்றனர். நாம் கூடிய விலைகொடுத்தால். அவர்களிடம் அதிக நெல் வாங்கலாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டச்சுக்காரரின் இப்பிழையான கொள்கையால் கீழ் மாகாணத்துக்கு ஏற்பட்ட நட்டம் கொஞ்சமன்று. இத்தீவின் தானியக் களஞ்சியம் என்ற உயர் நிலையினின்றும் அப்பிரதேசம் வீழ்ச்சியுற்றது. அங்குள்ள கோட்டைகளில் வாழ்ந்த டச்சுக் காவற் படையினர்க்கே போதிய உணவு கிடைக்கவில்லை. குடிகள் உள் நாட்டுக்குச் சென்று அந்நியரது கொடுங் கோலாட்சியினின்றும் தப்பி வாழ முனைந்தனர். பின்னே தங்கி வாழ்ந்தோர் எவ்வகையிலும் பயிர்த்தொழிலில் ஊக்கம் காட்ட மறுத்தனர். அழிவுப் பாதைக்கு வழிவகுத்த கொள்கையை டச்சுக்காரர் மாற்றும் வரை விளைவைப் பெருக்குமாறு அவர்கள் செய்த முயற்சிகள் பயன் அளித்தில. இக்காரணத்தால் அவர்களுக்கு இப்பிரதேசத்தில் ஊக்கம் அற்றுப் போகத் தொடங்கியது. பின்னர் அவர்கள் தம் ஆட்சிக்குட்பட்ட தேந்திர ஸ்தானங்களை ஒவ்வொன்றாகக் கைவிடலாயினர்.

நீர்ப்பாசனத் திட்டங்கள்

நீர்ப்பாசனத் திட்டங்கள் பல தொடங்கப்பட்டன. முற்காலத்தில் வளம் கொழித்த மாதோட்டம், கட்டுக்கரைக் குளங்கள் கரை உடைந்து அழிந்தமையால், வறுமையுற்றிருந்தது. அதன் நீண்ட கரை காரணமாகப் ‘பூதங்குளம்’ என அதற்குப் பெயரிட்ட ஒல்லாந்தர் அதனைத் திருத்த முற்பட்டனர். அதன் நீர்ப்பாசனத்தால் விளையும் நிலங்கள் தரும் நெல் மட்டுமே வட பகுதி முழுவதற்கும் உணவூட்டப் போதும் எனக் கருதினர். முசலி ஆற்றின் மதகுகளைத் திருத்தி நீர் ஒழுங்காகப் பாய்தற்கு வழிசெய்தனர். யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்த குடிகளைப் பூநகரியில் குடியேறுமாறு நிர்ப்பந்தித்தனர். குடா நாட்டின் வற்றா ஊற்றுக்களான கிணறுகளின் மீதும் கவனம் செலுத்தினர்.

கொழும்பு கிறாண்ட் பாஸில் விசாலமான நெல்வயல்களை வெள்ளப் பெருக்கினின்றும் பாதுகாக்க ஆற்றின் கரைகள் உயர்த்திக் கட்டப்பட்டன. அச் செலவை அதனால் இலாபமடைந்த நிலச் சொந்தக்காரரிடம் பெற்றனர். அம்பலத்தலையிலிருந்து பாணந்துறை வரை ஒரு அணையைக் கட்டினால் கொழும்பின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வழி பிறக்கும் எனக் கருதினர். பியாகமத்தில் ஒரு அணையும், பஸ்துன் கோறளையில் ஒரு கால்வாயும் கட்டும் திட்டம் 1742 - ல் ஓவர்பீக் தேசாதிபதி காலத்தில் வகுக்கப்பட்டது. அவன் நெற் செய்கையில் அதிக கவனம் செலுத்தினான்.

ஷ்றோய்டர் தொண்டைமானாற்றினுட் கடல்நீர் புகாதடுத்து அணை கட்டி அதனைப் பயிர்ச் செய்கைக்கு ஏற்றதாகச் செய்யக் கருதினான். அதன் பொருட்டு நிபுணர்களை வருவதித்தான். அவர்களது ஆராய்ச்சியின் பயனாக அத்திட்டத்துக்குச் சாதகமான அபிப்பிராயம் எழவில்லை. எனவே, அது கைவிடப்பட்டது.

டீ தொஸ்தே என்பவன் முத்துராஜவெலத் திட்டத்தை ஆரம்பித்து 6000 ஏக்கர் நிலத்தை உப்பு நீரினின்றும் விடுவித்துப் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்த முயன்றான். கம்பனி சிங்களர் கால முதலிருந்து வந்து கால்வாயைத் திருத்த முயன்றபோது, கடல்நீர் புகுந்து அயலிலுள்ள விளைநிலங்கள் பாழாயின. டீ கொஸ்தே இப்பிரதேசத்தில் கவனம் செலுத்தினான். உப்பு நீரைத் தடுப்பதும், அயலிலுள்ள ஆறுகள் பாய்ந்து சதுப்பு நிலம் ஏற்படாமல் தடுப்பதும் அவசியம் எனக் கண்டு பல அணைகள். மதகுகள், கால்வாய்களை அமைத்தான். 1767 - ல் தன் பணி முற்றுப்பெற்றதாக அறிவித்தான். தேசாதிபதி அப்பிரதேசத்தைத் துண்டுகளாகப் பிரித்துக் கொடுக்கும்படி கட்டளையிட்டான். பயிர்ச் செய்கை அதிபனையும் அவனுக்குக்கீழ் பன்னிரண்ட கோவி (கம) விதானைமாரையும் நியமித்தான். இச்செலவை விளைந்த நெல்லின், மேலதிக வரியொன்றின் மூலம் ஈடு செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கிடையில் இத்திட்டம் தோல்வியுற்றது. நிலங்கள் கைவிடப்பட்டன.

நீர்கொழும்பையும் மகா ஓயாவையும் இணைக்கும் கால்வாய் ஒன்று 1771 - ல் திறக்கப்பட்டது.

வினாக்கள்

1. டச்சுக்காரர் இலங்கையில் கமத்தொழிலில் விசேட ஊக்கம் செலுத்தக் காரணமென்ன? அவர்களது முக்கிய கமத்தொழில் முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுக. (மார்கழி, 1954)

பதின்மூன்றாம் அத்தியாயம்.

ஐ. கண்டி இராச்சிய நிர்வாக முறை

“அவனது அரசாங்கம் எவ்வகையானது எனில், அஃது மிக்க கொடுங்கோன்மையும் தான்தோன்றித்தனமும் நிறைந்தது. ஏனெனில் அவன் சர்வாதிகாரத்துடன் ஆட்சி புரிகிறான். அவன் சித்தம் நிறைவேறும் அவன் மகிழ்வுக்கு எதுவும் செய்யப்படும்;. அவன் மூளையே அவனது ஒரேயொரு ஆலோசகர். நிலம் அனைத்தும் அவனுடையதே உயர்ந்தோரும் இழிந்தோருமாகிய சகல குடிகளும் அவன் அடிமைகளே! அன்றேல், அடிமை போன்றோரே அவர்கள் உடலும் பொருளும் அவன் வாய்ச்சொல்லுக்கு உட்பட்டனவே”
- றொபேட் நொக்ஸ்

அரசன்

கீழ்நாட்டு மன்னர்கள் சர்வாதிகார ஆட்சிபுரிவோர் என்ற கருத்து மிக நீண்ட காலமாக மேல்நாட்டு எழுத்தாளரிடையே நிலைபெற்றுவிட்டது. எடுத்த எடுப்பில் மத்தியகால இலங்கையின் பண்பாடு, வாழ்க்கைமுறை, அனைத்துக்கும் வாரிசான கண்டி இராச்சியம் சர்வாதிகாரமுடைய கொடுங்கோலாட்சிக்கு உட்பட்டது என றொபேட் நொக்ஸ் காலமுதல் இன்றுவரை எழுதி வருகின்றனர். இது ஓரளவுக்கு உண்மையெனலாம்.

அரசன் இந்நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வரும் சட்டதிட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மாறுபாடில்லாத வகையில் ஆட்சி புரியவேண்டும் என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். அவன் தன் மந்திரிமாரது ஆலோசனைக் கேட்டுத் தன் கருமங்களை ஆற்றவேண்டும். சமுதாயத்தைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்களைச் செய்யும் சட்டங்களை இயற்றும்போது, அவன் பிரபுக்கள், மகாசங்கத் தலைவர்கள் (மகா நாயக தேரோ) ஆகியோரின் கருத்தைக்கேட்டறிதல் மரபு.

அதிகாரிகள்.

நாட்டு நிர்வாகத்தை நடாத்த உயர்ந்த உத்தியோகத்தரும் அவர்களுக்குக்கீழ் குறைந்த உத்தியோகத்தரும் வரிசை வரிசையாக அமர்த்தப்பட்டனர். அதிகாரி திசாவை இலிகிதர் (லேகம்), ரட்ட மகாத்மயா போன்ற அதிகாரிகள் தத்தம் கடமைகளைச் செய்து அரசு என்னும் சகடத்தை உருளச் செய்தனர். அரசனது பரிவாரங்களுள், ஆடைஅணிகளுக்குப் பொறுப்பான அதிகாரி, யானைப்பந்தி அதிகாரி முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் இவ்வுத்தியோகத்தர் மாகாணங்கள், கிராமங்கள் முதலிய பிரிவுகளை நிர்வகிப்பர். அன்றேல், சில குறிப்பிட்ட இலாகாக்களுக்குப் பொறுப்பாயிருப்பர். அவர்களுக்கென நிரந்தரமான ஊதிபம் பணமாகக் கிடைக்கவில்லை. தம் கீழதிகாரிகள் அளிக்கும் பரிசுகளுக்கு உரியர். அவர்கள் இவ்வருவாயின் ஒரு பகுதியை அரசனது திறைசேரியில் ஒப்புவிப்பர்.

2 - ம் இராசசிங்கனது முதுமைப் பருவத்திலும் பின் நாயக்க மன்னர்கள் காலத்திலும் கண்டி அதிகாரிகளின் செல்வாக்கு படிப்படியாக வளர்ந்தது. நாயக்கரது அரசசபையில் அவர் தம் உறவினர் செல்வாக்குப் பெற்றனரேனும் மாகாண பரிபாலனம், உள்@ர் ஆட்சி முதலிய கருமங்களில் பிரபுக்களின் செல்வாக்கு மிகுந்தது. முதலாம் அதிகாரி (மகாநிலமே) அரசனது பிரதம மந்திரியாயிருந்து கடமைகளைச்செய்வான். அவனுக்கு உதவியாக 2 -ம் அதிகாரி இருப்பான். இராச்சியத்தில் வட, கீழ்ப் பகுதிகள் முதல்வனின் மேற்பார்வையிலும் தென், மேல் பகுதிகள் இரண்டாமவனது கண்காணிப்பிலும் இருக்கும் அரசனுக்கும் கீழ் உத்தியோகத்தருக்கும் இடையிலுள்ளவராக இவர்கள் பணி புரிவர். அரசகட்டளைகளை வெளிப்படுத்தி நிறைவேற்றுவதும், உத்தியோகத்தரின் கருத்துக்களை அரசனுக்கு அறிவிப்பதும் இவர்கள் கடன். இவர்களுடைய செலவுக்கு அரசன் முழுக் கிராமங்களின் வருவாயை அளித்தான். ஒரு திசாவைப்பிரிவும் இவர்களுடைய நிர்வாகப் பொறுப்பில் விடப்படுவதும் உண்டு.

இவர்களுக்குக்கீழ் திசாவை, ரட்ட மகாத்மயா (காரியாதிகாரி) என்ற உத்தியோகத்தர் இருப்பர். போர்த்துக்கேயர் வரும்போது ஐந்து பிரிவாயிருந்த கண்டியரசு ஒல்லாந்தரின் இறுதிக்காலத்தில் இருபத்தொரு பிரிவுகளுடையதாயிற்று. இவற்றுள் பன்னிரண்டு திசாவை என்று பெயர்பெறும். அவை நாலுகோறளை, ஏழுகோறளை, ஊவா, மாத்தளை, சபரகமுவ, மூன்றுகோறளை, வலபான, ஊடபலாத, நுவரகளாவிய, வெல்லாச, விந்தனை,தமங்கடுவ என்பன. மற்ற ஒன்பதும், ரட்டைகள் எனப்படும். அவையாவன: உடுநுவரை, யடிநுவரை, தும்பன, ஹாரசீயபற்று, தும்பறை, ஹேவாஹெத, கொத்மலை, உட புலத் கம, பாத புலத்கம என்பனவாம். பிந்திய பன்னிரண்டும் திசாவைகளாலும், பிந்திய ஒன்பதும் ரட்ட மகாத்மயாக்களாலும் பரிபாலிக்கப்படும்.

தன் பகுதியில் திசாவைமிக உயர்ந்த அந்தஸ்து உடையவன். அவன் தனக்கெனத் தனிக் கொடியும் மெய் காப்பாளரும் உடையவன். அவன் முதலிரு அதிகாரிகளுக்குக் கீழ்ப்பட்ட நீதி பரிபாலன கடமைகள் புரிவான். தன்மகாணத்தில் அமைதியை நிலை நாட்டல், வரி சேகரித்தல், அரச கட்டளைகளை நிறைவேற்றல், கீழதிகாரிகளை நியமித்தல், தன் மகாணப் பொது நன்மைக்கு உழைத்தல் என்னும் கடமைகளையுடையவன். அவனுக்கெனக் கொடுத்த நிலத்தின் வருமானத்தைவிட அவனுக்குக், குற்றம் புரிவோரிடம் வசூலிக்கும் தண்டப்பணம், அவனைப் பார்க்க வருவோர் கொடுக்கும் முறைப் பணம், பதனிட்ட உணவு வகைகள் முதலியன கிடைக்கும். அதிகாரியோ திசாவையோ ஒரு ஊருக்குப் போனால் அவ்வூரவர்களே அவனுக்கும் பரிவாரங்களுக்கும் உணவளித்தல் வேண்டும். ரட்ட மகாத்மயாக்கள் தத்தம் மாவட்டத்தில் இவை போன்ற கடமைகளைச் சுருக்கிய முறையிற் செய்வர். அவர்களுக்குக் கொடி, பல்லக்கு முதலிய மரியாதைகள் இல்லை.

இவர்களுக்குக் கீழ் கோறளை, அத்துக்கோறளை, விதானை, லியனராள, உண்டியராள என்னும் கீழதிகாரிகள் படிப்படியாக உளர். சிவில் நிர்வாக கருமங்களை இவர்கள் மூலமே நடைபெறும். இராணுவ கருமங்களை நடாத்த முதலியார் (மொஹட்டால) முகாந்திரம், ஆராய்ச்சி, கங்காணி என்போர் உளர். இவர்களுள் மேலதிகாரிகளுக்கு உண்மையான அதிகாரம் இருந்தது.

மாகாணம் முதலிய பிரதேச ஆட்சிப் பொறுப்புடைய உத்தியோகத்தரை விட, இலாகாக்களுக்குப் பொறுப்பானவர்களும் அரச கருமஞ் செய்தனர். அவர்கள் லேகம் (இலிகிதர்) எனப்படுவர். இராணுவசேவை புரிவோருக்கு மேலதிகாரி மடுவலேகம் எனப்படுவான். அரசனது பண்டசாலைக்கு உப்பு, கருவாடு அவற்றையும் நெல்லையும் சுமந்து வரும் மாடுகள் ஆகியவற்றை அளிப்போரை மேற்பார்வை செய்பவன் மடிகலேகம் என்பவன். மகாலேகம், அத்பத்து லேகம. வெடி காரலேகம், கொடித்துவக்கு லேகம், நாணயக்கார லேகம் முதலிய பல உத்தியோகத்தர் அரச கடமைகளை மேற்பார்வை செய்தனர்.

நீதி பரிபாலனம்

அக்காலத்தில் நிர்வாகமும் நீதி பரிபாலனமும் தனித்தனித் துறைகளாகப் பிரிக்கப்படவில்லை. நிர்வாகப் பொறுப்புடைய அதிகாரிகளே நிதி வழங்கும் கருமத்தையும் செய்து வந்தனர். நீதியின் ஊற்றாக விளங்குபவன் மன்னனே, அவனே வழக்கை விசாரிக்கலாம். அன்றேல் கீழதிகாரிகள் விசாரித்ததை (அப்பீலில்) மறுவிசாரணை செய்யலாம். மூன்று வகையான வழக்குகளை அரசன் விசாரிப்பான்.

(1) பிரபுக்கள், பிரதான அதிகாரிகளிடையே எழுபவை
(2) விகாரங்கள், கோவில்களின் சொத்துக்கள் முதலிய விடயங் குறித்துப் பிக்குமாரிடையே எழுபவை.
(3) புரட்சி, சதி, இராசத்துரோகம், கொலை முதலிய கொடிய குற்றங்கள்.

நில உடைமை முதலிய ‘சிவில்’ வழக்குகளின் அப்பீல் விசாரணை அவன் முன் வரும். இவ்வழக்குகளில் அதிகாரிகள் தீர்ப்பில் திருப்தியில்லாவிடில் குடிகள் அரசனிடம் ‘அப்பீல்’ செய்வர். அரசனிடம் விண்ணப்பிப்போர் அரச அவையிலுள்ளான் அல்லது ஒரு பிரதானி மூலம் செய்யலாம். அரசன் முன் வீழ்ந்து வணங்கினாலும், அரசனது அரண்மனை நோக்கி வணங்கினாலும் விண்ணப்பித்தமைக்குச் சரி, பிழை கூறிய நிகழ்ச்சியைக் காண்பவன் எவனும் அரசனுக்கு அறிவிக்கலாம். இதற்கு வசதி பெறாதவன் அரச பண்டசாலையிலோ தலதாமாளிகையிலோ சரண்புகுந்து, தன் குறையையறிவிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, அரண்மனைக்கு அயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறியிருந்து தன்குறையை உரத்த குரலில் முறையிடலாம். ‘அப்பீல்’ விசாரணையை அரசன் தானே நடத்தித் தீர்ப்புக் கூறலாம். அன்றேல் பிரதானிகளின் பேரவை (மகா நடுவர் சபை) யிடம் விட்டு அதன் அறிக்கையை அடிப்டையாக வைத்துத் தீர்ப்புக் கூறலாம். மரண தண்டனை விதிக்கும் உரிமை மன்னன் ஒருவனுக்கே உண்டு.

மகா நடுவர் சபை

அரசனது அவைக்கு அடுத்தபடி முக்கியமான சபை கண்டியிலுள்ள மகா நடுவர் சபையாகும். அதில் அங்கம் வகிப்போர் மகா அதிகாரி, திசாவை, லேகம், முகாந்திரம் என்போர்@ ஆனால் நீதி விசாரணைத் துறையில் அனுபவம் வாய்ந்த எந்தப் பிரதானியும் அதில்சேர்த்துக் கொள்ளப்படுவான். மகா நடுவர் சபை சபா மண்டபத்தின் முகப்பிலோ அரண்மனையின் அயலிலுள்ள வேறு எந்த மண்டபத்திலோ கூடும். அதிகாரி அதன் தலைவனாவன். பிரதானிகள் தம் தரத்துக்கேற்ப வரிசையாக அமர்வர். பெரும்பாலும் வாய் முறையாகவே விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்படும். சில சமயம் எழுத்து மூலமும் வழக்குப் பதியப்படும். அசையும் (ஸ்தாவர) பொருள்களது இடாப்பு, வம்சாவலி (பெயர் அட்டவணை) முதலியனவும் எழுதி வைக்கப்படும். விசாரணை முடிந்தபின் அயலிலுள்ள கோவில் ஒன்றில் விசாரணை செய்தோர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்விக்கப்படும். சாட்சிகள் அனைவரும் பெரும்பாலும் ஒரே நாளில் விசாரிக்கப்படுவர். வராத சாட்சிகளின் சாட்சியம் எழுத்து மூலம் சத்தியப் பிரமாணத்துடன் பெறப்படும். இச்சபையில் சிவில் குற்ற

* எல்லாளனின் அராய்ச்சி மணி கட்டிய வரலாற்றுடன் ஒப்பிடுக. தற்காலத்தில் அப்பீல் வழக்குகளால் ஏற்படும் பெருஞ் செலவுடன் இம்முறையை ஒப்பிடுக. *

விசாரணைகள் ஆகிய இருவகை வழக்குகளும் (முதல் விசாரணையும், அப்பீலும்) நிகழும். பெரும்பான்மையோர் அளித்த சாட்சியத்தின் படி தீர்ப்புக் கூறப்படும். சத்தியத்தை நம்பித் தீர்ப்பு அளிப்பர். (பொய்ச்சத்தியம் செய்தால் தீர்ப்பும் பிழைக்கும்) காய்ச்சின இரும்பைக் கையி;ற் பிடித்தோ, கொதித்த எண்ணெயில் கையைத் தோய்த்தோ சத்தியம் செய்வர். மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். காணி வழக்குகளில் வெற்றி பெற்றோருக்கு ஒரு சீட்டு வழங்கப்படும். ஆனால் நடுவர் சபையில் எழுதப்பட்ட தீர்ப்புகள் இரா. மிகக் கடினமான வழக்குகள் அரசனிடம் விடப்படும்.

இச்; சபையிலுள்ளார் தனித்தனியேயும் நீதி வழங்கும் அதிகாரம் உடையர். மகா அதிகாரிகள் தம் கீழ்ப்பட்ட உத்தியோகத்தர், இலாகாக்கள் பற்றிய விடயங்களிலும், திசாவைமார் தத்தம் மகாணங்களிலும் நீதி வழங்குவர். மகா அதிகாரிகள் எல்லா சிவில் வழக்குகளிலும் தீர்ப்புக் கூறிச் சீட்டு வழங்கும் உரிமையுடையர். குற்ற விசாரணையும் அவர்களதிகாரத்துக்கு உட்பட்டதெனினும் பாரதூரமான குற்றங்கள் பெரும்பாலும் மன்னனது விசாரணைக்கே விடப்படும். அவர்கள் மரண தண்டனை தவிர்ந்த வேறு எத்தண்டனையும் அளிக்கலாம். ஆனால் பரம்பரை வழக்கத்தை ஒட்டிக், குற்றம் புரிந்தோரின் தரம், அளிக்கப்படும் தண்டனை ஆகியவற்றைப் பொறுத்து அவர்களது அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இக்கட்டுப்பாடுகள் பிரதானிகளின் நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் அதிகாரி தண்டனையாகக் குறிப்பிடும் குற்றப் பணத்தொகையும் அவ் வழக்கு முதலில் எப் பிரதானியின் இடத்தில் விசாரிக்கப்பட்டதோ அவனுக்கே செல்லும். மகா அதிகாரியின் தீர்ப்புக்கு எதிராக மகா நடுவர் சபைக்கோ, அரசனுக்கோ விண்ணப்பிக்கலாம்.

திசாவையின் கடமைகள்

திசாவைமார் தத்தம் மாகாணங்களில் நிர்வாக நீதிபரிபாலன கருமங்களை நடாத்தி வந்தனர். அப்பிரிவிலுள்ள நிலங்களுள் அரசனுக்கும், வேறு பிரதானிக்கும் உரிய நிலம் தவிர்ந்த மற்றைய நிலமும் குடிகளும் அவனது ஆணையின் கீழிருக்கும் திசாவை காணி வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புச் சீட்டு வழங்குவான். அதன் செலவு 5 முதல் 50 ரிதி யாகும். திசாவை தன் இல்லத்துமுற்றத்தில் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிப்பான். அன்றேல் தன் கழுள்ள மொஹட்டால, கோறளை போன்ற உத்தியோகத்தரிடம் விசாரணைப் பொறுப்பை விடுவான். பெரிய குற்றவாளிகள் கண்டியிலுள்ள சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவர். சிறு குற்றம் புரிந்தோர் திசாவையின் மாளிகையிலுள்ள அத்த பத்து அல்லது கொடித்துவக்கு மடுவத்தில் சிறையிடப்படுவர். அவன் தீர்ப்பில் திருப்தி இல்லாதோர் மகா அதிகாரிக்கோ. மகா நடுவர் சபைக்கோ, மன்னனுக்கோ விண்ணப்பிக்கலாம்.

லேகம், ரட்ட மகாத்மயா, இலாகா அதிபதிகள் கோவிலதிகாரிகள் போன்றோரும் தத்தம் அதிகாரத்துக்குட்பட்டவர்களின் வழக்குகளை விசாரிப்பர். சிவில் வழக்குகளில் அவர்கள் சீட்டு வழங்க இயலாது. தம் முடிவை ஓர் ஓலையில் (வட்டோருவ) எழுதித் தலைமைக்காரனிடம் அனுப்புவர். கிறிமினல் குற்ற வழக்குகளில் மிகச் சிறியனவற்றையே அவர்கள் விசாரிப்பர். பெரிய வழக்குகள் எல்லாம், திசாவை, மகா அதிகாரி அல்லது அரசனிடமே விடப்படும்.

கீழ் உத்தியோகத்தர் கடமைகள்.

கிராம அதிகாரிகள் முதலியோர் வழக்கு விசாரணை உரிமைகள் சில உடையர். எனினும் மேலதிகாரிகள் இல்லாதபொழுது மட்டுமே அவர்கள் அற்ப சச்சரவுகளைத் தீர்த்து வைப்பர். சேனைச் செய்கை பண்ணும் நிலங்களின் எல்லைத் தகராறு. அடிபிடி சண்டை முதலியன அவர்களால் விசாரிக்கப்படலாம். குற்றவாளிகளுக்கு விலங்கிடல். கள்வரைத் தம் இல்லத்தில் பிடித்து வைத்தல் முதலிய சிறு தண்டனைகளையளிக்க அவர்களுக்கு உரிமையுண்டு. உயர்ந்த கிராமாதிகாரிகள் 10 ரிதிக்குள்ளும் கீழதிகாரிகள் 5 ரிதிக்குள்ளும் குற்றப் பணம் வசூலிக்கலாம். பொலீசாரின் கடமைகள் இவர்களுக்குண்டு. குற்றம் புரிந்தோரைப் பிடித்து உரிய அதிகாரிகளுக்கு முன் சேர்ப்பிக்கும் பொறுப்பு அவர்களுடையதே.

உள்@ராட்சி மன்றங்கள்

இச்சர்வாதிகாரக் கோலாட்சியின் கீழ் ஜனநாயக நிறுவனங்களாக விளங்கிய இருசபைகள் அக்காலத்தில் இருந்தன. ஒன்று ரட்டசபை@ மற்றது கிராமசபை (கன்;சபா) கிராம சபையில் கிராமத்தின் முக்கியமான முதியோர் அங்கம் வகிப்பர். ஒரு கிராமத்துக்கோ, அன்றேல் ஒரு கூட்டம் கிராமங்களுக்கோ ஒரு சபை இருக்கும். கிராம அம்பலம் (மடம்) அச்சபை கூடுமிடமாகும். எல்லைத்தகராறு,கடன், களவு, சிறு சச்சரவுகள் ஆகியவற்றைச் செலவின்றி இச்சபை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும். தண்டனையளிக்கும் நோக்கமின்றிச் சமாதானமாகத் தீர்த்து வைப்பதே அதன் நோக்கமாகும். அதன் தீர்ப்புக்குக் மேல் சட்டசபையிடம் அப்பீல் செய்யலாம். அதில் ஒரு பற்றில் (மாவட்டம்) உள்ள கிராமங்களின் பிரதிநிதிகள் இருப்பர். இரு சபைகளின் நடைமுறையும் ஒரே விதமானதே.

இம்முறையிலுள்ள குறைபாடுகள்

இங்ஙனம் படிப்படியாக அமைந்த நீதிமன்றங்களும், ஒன்றிலிருந்து அங்கு மேற்பட்டதற்கு விண்ணப்பிக்கும் உரிமையும் ஒரு தலைசிறந்த நீதிபரிபாலன அமைப்புக்குச் சான்றாகும். இதில் நீதி பிசகாது எனத் தோன்றும். ஆனால் நிர்வாகப் பொறுப்பும் நீதி வழங்கும் உரிமையும் ஒருவரிடமே யிருந்தமையால், பல குறைகள் ஏற்பட வழியாயிற்று. வழக்காளிகள் பிரதானியிடம் வரும்போது பரிசுகளும் வெற்றிலைச் சுருளும் கொண்டு வரல் வேண்டும். பரிசு பெரியோரிடம் வரும் போது அவர்களைக் கௌரவிக்கும் முகமாக அளிக்கப்படும் கையுறை, வெற்றிலைச்சுருளில் கொடுப்பது நீதிமன்றத்துக்குரிய செலவுத்தொகை. ஆனால், இவ்விரண்டும் மிகத் தீய கைக்கூலிகளாக மாறின. ஒரு பிரதானி கூறிய தீர்ப்புக்குப்பின். வேறெருவன் அப்பதவிக்கு வந்தால்; மீண்டும் வழக்கை எடுக்க வாய்ப்பு இருந்தது. குற்றப்பணம் பிரதானிக்கே உரியது. அவன் அரசனிடம் போகும்போது பரிசு கொண்டு செல்ல வேண்டுமாகையாலும் இவனுக்கெனச்சம்பளம் இன்மையாலும், அவன் அதிக குற்றப்பணம் வசூலிப்பதும். பரிசுகளை எதிர்பார்ப்பதும் வழக்கமாயிற்று. பிரதானியே சட்டத்தைக் கூறுபவனாயும். வழக்கின் நிகழ்ச்சிகளின் உண்மை பொய்மை முடிவு கட்டுபவனாயும் இருந்தான். சீட்டு ஒன்றைத்தவிர வழக்குத் தீர்ப்புகளோ, சட்டமோ எழுத்து வடிவில் இல்லாமையால் பாரம்பரியம் ஒன்றே அவனுக்கு வழிகாட்டும். அப்பீலுக்குச் செல்பவன் கீழ் அதிகாரியின் வெறுப்புக்கு ஆளாகவேண்டுமே என அஞ்சினான். பிரதானி நேர்மையற்றவனாயின் குடிகளைப் பாதுகாக்கச் சட்டப்படியமைந்த பாதுகாப்புகள் இல்லை. காலமும் சூழ்நிலையும் அதிகாரிகள் தீநெறிச் செல்ல வாய்பாய் அமைந்தன.

ஐஐ. கண்டி இராச்சியத்தின் பொருளாதார நிலை

கமத்தொழில்

கண்டி மக்களின் முக்கிய தொழில் விவசாயமே. இலங்கையின்பிற பகுதிகளில் விவசாயம் செய்யும் முறைக்கும் மலைப்பிரதேசத்தில் விவசாயம் செய்யும் முறைக்கும் வேறுபாடுகள் உள. மலைச்சரிவுகளில் படி வயல்களை அமைத்து விவசாயம் செய்தல் மிகக் கடினமான கருமம். நீர்வளம் இருந்தும். நில அமைப்பு நெற்செய்கைக்கு ஏற்றதன்று. தற்காலத்திலுள்ளவாறே மனித உழைப்பாலேயே பயிர் செய்யலாம். நொக்ஸின் கூற்றுப்படி ஆறுமாத நெல் முதல் மூன்று மாத நெல்வரையில் பல இனங்கள் பயிர்செய்ப்பட்டன.

ஆனால், நெல்லுக்குப் பதிலாக குரக்கன், தணவன் முதலிய சிறு தானியங்களும் பயறு முதலியனவும் மலைச் சரிவுகளில் செய்கை பண்ணப்பட்டன. எனினும் மக்கள் தேவைக்குப் போதிய தானியங்கள் விளைவிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் அரிசி உணவுக்குப் பதிலாகக் கிழங்குகள், பலாக்காய்கள். பிற கனிவர்க்கங்கள் ஆகியவற்றை உண்டனர். நீர்வளம் பொருந்திய குறிஞ்சி நிலத்தில் இயற்கை தாராளமாகக் கொடுத்த அருஞ்செல்வத்தை அதிக உழைப்பின்றிப் புசித்துத், திருப்தியுடன் வாழ்ந்த மக்கள் சோம்பலுக்கு ஆளாகி அதிக முயற்சியின்றியிருந்தனர். வாழ்க்கையை இன்பமாகக் கழித்தனர். வரண்ட பிரதேசத்தில் வாழ்க்கைப் போராட்டத்தில் சதா ஈடுபட்டவர்களைப் போல மேன்மேலும் முயற்சி செய்து முன்னேறும் மனப்பான்மை அவர்களிடையே வளர்ந்திலது.

* நொக்ஸ் எழுதிய இலங்கையின் வரலாற்றுத் தொடர்பு - அத்தியாயம் 3,4 ஆகியன கண்டியரது தானியங்கள். விவசாயமுறை, பழங்கள், மரங்கள். பிற தாவரங்கள், மலர்கள் ஆகியன பற்றி விரிவாகக் கூறுகின்றன.

கைத்தொழில்

ஆனால் புவியியற் சூழ்நிலை அவர்கள் கைவண்ணம் மிக்க ஆக்கவேலைகளில் ஈடுபட வழிசெய்தது. மழை அதிகம் பெய்யுமிடமாதலால் வீட்டுக்குள் இருந்து செய்யக்கூடிய கைத்தொழில்களில் அதிக கவனஞ் செலுத்தினர். அழகிய ஆடைகள், இரும்பு ஆயுதங்கள், உலோகத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட அழகிய பாத்திரங்கள், தங்க வெள்ளி நகைகள் முதலியவை வெறும் பொருளுற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர் விலைப் பொருட்டுச் செய்த பண்டங்களாயிராமல். கலைஞரின் கைவண்ணம் விளங்கும் கலைப்படைப்புக்களாயிருந்தன. அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமான பாக்குவெட்டி, வெற்றிலைத் தட்டு, சுண்ணாம்புக் கரண்டகம், தாம்பாளம், தேங்காய் துருவும் துருவலை முதலியன கண்கவர் கவினுடையனவாய் இல்லத்துக்கு எழில் தந்தன. இன்று வரை அக்கலைப் பாரம்பரியம் அழியாது வந்து கொண்டிருக்கின்றது. (இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேல் நாட்டுக் கைத்தொழிற் புரட்சியால் பண்டங்கள் பெருமளவில் உற்பத்தியாகிச் சந்தையைப் பிடிக்கவே, கண்டிய கைத்தொழில் மரபு அவற்றால் தேய்ந்து அழியும் நிலை எய்தியபோது. கலாயோகி ஆனந்தகுமாரசாமி அம்மரபைப் பேணுவதன் அவசியத்தைப்பற்றிக் கண்டிப்பிரபுக்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள் விடுத்தார் என்பத நினைவ கூர்தற்குரியது)

வாணிகம்

மக்கள் தத்தம் கிராமத்தில் உள்ள பண்டங்களை உபயோகித்தனர். சுயதேவையைப் பூர்த்தி பெற்ற எளிய கிராம வாழ்வில் வாணிகம் முக்கிய இடம்பெறமாட்டாது அன்றோ? கிராமவாசிகள் வெளியிலிருந்து பெற வேண்டியவை உப்பு, கருவாடு விசேட ஆடைகள் என்பனவே. இவற்றை வணிகர் மாடுகளில் ஏற்றி (தவலம்)க் கிராமந்தோறும் கொண்டுசென்று விற்பர். பண்டமாற்றாகப் பாக்கு, கறுவா முதலியவற்றைப் பெறுவர். காசுகளும் ஓரளவுக்குப் பயன்பட்டன. போர்த்துக்கேயரது நாணயங்கள் தூண்டில் போன்ற வளைவான வெள்ளிப்பணம் அரசனது இறைசேரி வெளியிடும் நாணயம் முதலியன வழங்கி வந்தன. வணிகர் பெரும்பாலும் தென்னிந்திய செட்டிகளும், முஸ்லிம்களுமே. கறுவா பெரும்பாலும் போர்த்துக்கேயருக்கோ ஒல்லாந்தருக்கோ கொடுக்கப்படும். ஒல்லாந்தர் அதனைப் பெறக் கண்டியரசனுக்குப் பெருந்தொகை செலவிட்டுப் பரிசுகளை அனுப்பி வந்தனர். முத்து இரத்தினங்கள், யானை முதலியனவும் ஓரளவுக்கு வருவாய் தந்தன. பின்னாளில் டச்சுக்காரர் முத்துக்குளிப்பையும் யானை வாணிகத்தையும் கைப்பற்றி விட்டனர். ஆனால் நாயக்கர் மன்னர் காலத்தில் அவர்கள் சிறிய அளவில் தென்னிந்தியாவுடன் வாணிகம் செய்ய முயன்றனர். கற்பிட்டி, கீழ்க்கடற்றுறைகள் ஆகியன அவர்களுக்கு அயல்நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொள்ளும் வாயில்களாமைந்தன. ஆனால் கடற் பாரம் பரியம் இன்மையாலும் கப்பற்படை இன்மையாலும் கண்டியர் வெளிநாட்டு வாணிகத் துறையில் முன்னேறவில்லை.

உசாத்துணை நூல்கள் :

1. யுn ர்ளைவழசiஉயட சுநடயவழைn ழக ஊநலடழn - சுழடிநசவ முழெஒ
2. ஊநலடழn ருனெநச றுநளவநசn சுரடந - ஊhயி ஐஓ
3. ஊநலடழn ருனெநச வாந டீசவைiளா ழுஉஉரியவழைn - னுச. ஊழடஎin சு. னுந ளுடைஎய
4. ஊழளெவவைரவழைn ழக வாந முயனெலயn முiபெனழஅ - னு’ழுலடல.

வினாக்கள்

1. கண்டி இராச்சியத்தின் (ய) அரசியலமைப்பு (டி) பொருளாதார நிலை என்பவற்றை வருணிக்குக. (1951)
2. கண்டி இராச்சிய நிர்வாக அமைப்பிலிருந்து கரையோரப் பகுதியில் டச்சுக்காரர் அமைத்த நிர்வாக முறை எவ்வகையில் வேறுபட்டது? (1953)
3. பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டி இராச்சியத்தின் (ய) அரசாட்சி முறையையும் (டி) பொருளாதார நிலையையும் விவரிக்க. (1964)

மூன்றாம் பாகம்

சமயம், சமூகம்

பதின்னான்காம் அத்தியாயம்

போர்த்துக்கேயரின் சமயம் பரப்பும் முயற்சிகள்

போர்த்துக்கேயர் வருமுன் கிறிஸ்தவ சமய நிலை.

கிறீஸ்தவ சமயம் போர்த்துக்கேயருக்கு முன்னரே கீழ்நாடுகளுக்கு வந்தது. பாரசீகர் இலங்கையுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருபகுதியார் நெஸ்தோரிய கிறீஸ்தவர்களாயிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய 5 - ம் நூற்றாண்டுச் சிலுவையொன்று அனுராதபுரியில் காணப்பட்டது. ஆனால் அது இங்கு வாழ்ந்த பாரசீக வணிகரது வழிபாட்டுக்கே பயன்பட்டது போலும். சுதேச மக்கள் கிறீஸ்தவ மதத்துடன் தொடர்பு கொண்டிலர் இந்தியாவிலும் கிறீஸ்து நாதரின் பன்னிரு சீடர்களில் ஒருவரான அர்ச், தோமஸ் மதபோதனை செய்தார் என்றும் அதன் பயனாக மலையாளக் கரையில் சில கிறிஸ்தவ சமூகங்கள் தோன்றின என்றும் கூறுவர். நெஸ்தோரிய கிறீஸ்தவரும் ஆங்காங்கு காணப்பட்டனர்.

போர்த்துக்கேய அரசரின் மதம் பரப்பும் பணி

போர்த்துக்கேயர் வருகையோடு கிறீஸ்தவ சமயம் பரப்பும் முயற்சி அரசாங்க அதரவில் நடைபெறலாயிற்று. 15 - ம் நூற்றாண்டின் இறுதியில் புதிதாக்கண்டு பிடித்த நாடுகளிலில் அரைவாசியைத் தமக்குத் தனியுரிமையாக அளித்து, மூன்று பாப்பரசர்கள் நிருபம் வெளியிட்டு. அங்கு கிறீஸ்தவ சமயம் பரப்பும் பொறுப்பையும் தம்மிடம் விட்டமையால், போர்த்துக்கேய மன்னர் அக்;கடனைச்சரிவரச் செய்ய முன்வந்தனர். கீழ் நாட்டுக் கிறீஸ்தவ திருச்சபை நிறுவனத்தின் செலவு முழுவதையும் தாமே பொறுத்தனர். வாணிகமும் அரசியல் நிர்வாகமும் மட்டுமன்றி, மதம் மாற்றும் முயற்சியும் அரசாங்கத் தனியுரிமையாயிற்று.

இந்தியாவில் சமயம் பரப்பும் முயற்சி

இந்தியாவில் போர்த்துக்கேயருடைய ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசம் மிகச் சிறிது ஆகையால் அங்கு பெருமளவில் மதம் பரப்பும் முயற்சியைச் செய்ய அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்திலது. கொச்சின் கோட்டைப் பகுதியில் கிறீஸ்தவர்கள் மட்டுமே குடியிருக்கலாம் என விதிக்கப்பட்டது. கோவா நகரில் அரசாங்கத்தின் அதிகாரங்களிலும் கூடிய அதிகாரம் தனக்கு உண்டு எனத் திருச்சபை நிறுவனம் உரிமை பாராட்டியது. 1517 - ல் அங்கு பிரான்சிஸ் சபைக் குருமார் இடம் பெற்றனர். பாப்பரசர் 13 - ம் லியோ எழுதியவாறு, “எங்கும் போர்த்துக்கேயரது கொடிசிலுவையின் நிழலிலேயே இருக்கிறது. போர்த்துக்கல்லின் வெற்றிகள் அவ்வளவும் சமயத்தின் வெற்றிகளே” 1534 - ல் கோவா ஒரு மேற்றிராசனம் ஆயிற்று. அதன் ஆணையின் கீழேயே தூர கிழக்கு நாடுகளும் வைக்கப்பட்டன.

முத்துக்குளிக்கும் கரையில் மதமாற்றம்

குமரி முனை முதல் இராமரணை வரை இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலுள்ள கடல் பண்டைக் கால முதல் முத்துக் குளிப்புக்குப் பேர் பெற்றிருந்தது. இரு கரைகளிலும் வசிக்கும் பர(த)வர் பாண்டியர் காலமுதல் முத்தும் சங்கும் எடுக்கும் தனியுரிமை பெற்றிருந்தனர். வருவாயில் ஒரு பகுதி அரசனுக்கு வரியாகக் கொடுக்கப்படும். முஸ்லீம்;கள் கடலாதிக்க வளர்ச்சி பெற்று அரபியக் குதிரைகளை அரசனுக்கு அளிக்கும் தனியுரிமை பெற்றதோடு முத்துக்குளிக்கும் உரிமையும் பெற்றனர். பர(த)வரைத் தம் கீழ் வேலைக்கு வைத்துக் கொண்டனர். பர(த)வர் பரம்பரையாக முத்துக்குளிக்கும் தொழிலாற் பெற்ற வருவாய் அந்நியருக்குக் கிடைத்தது. பொறாமை வளர்ந்தது. ஒரு முஸ்லிம் ஒரு பர(த)வப் பெண்ணை அவமானப்படுத்தியதுடன், அவன் அவள் கணவனின் காதுக் கடுக்களையும் அறுத்து விட்டானாம். இதனால் ஏற்பட்ட வகுப்புக்கலகம் பெருந்தீமைகளை விளைவித்தது. செல்வம் படைத்த முஸ்லீம்கள் பணம் கொடுத்த மறவ கொலைஞரை ஏவிப் பர(த)வரைக்கொன்று குவித்தனர். இந்த அரசனும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டான். கோழிக்கோட்டிலிருந்து வந்த குருசு என்பவன் பர(த)வர் போர்த்துக்கேயரின் உதவியை நாடும்படி புத்தி கூறினான். 15 பேர் கொச்சினுக்குச் சென்றனர். போர்த்துக்கேயர் பர(த)வர் குலம் முழுவதும் மதம் மாறினால் தாம் உதவி செய்வதாகக் கூறினர். இதனை ஒப்புக்கொள்ள மேலும் 70 பர(த)வர் கொச்சினுக்கு அழைக்கப்பட்டனர். 1535 - ல் இந்த 82 பேரும் மதம்மாற்றம் செய்யப்பட்டனர். (இவர்கள் மூலம் தம்முத்துக் குளிக்கும் உரிமையும் போர்த்துக்கேயர்வசமாகும் என அஞ்சிய முஸ்லீம்கள் கொச்சித் தளபதிக்குக் கைக்கூலி கொடுக்கவும் முயன்றனராம்) அவர்களும், 5 குருமாரும் போர்த்துக்கேயப்படையுடன் சென்றனர். முஸ்லீம்கள் தண்டிக்கப்பட்டனர். பர(த)வர் முத்துக்குளிக்கும் உரிமையை மீண்டும் பெற்றனர். 30 இடங்களிலிருந்த 20.000 பேர் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். ஆண்கள் போர்த்துக்கேயப் படைகளது கூடாரத்திலேயே மத மாற்றம் பெற்றனர். தூத்துக்குடி, வைப்பார், வேம்பார் என்னுமிடங்களிலிருந்தோரும் 1537 - ல் மதம் மாறினர். “ஓர் அறுந்த காதுக்கடுக்கன் மூலம் ஆண்டவர் இத்தனை ஆயிரம் ஆத்மாக்களைக் காப்பாற்றினார்” என ஒரு போர்த்துக்கேயன் எழுதினான்.

பிரான்சிஸ் சேவியர் வருகை

அப்போஸ்தர் புனித தோசுக்குப் பின்மதம் பரப்பும் முயற்சியிற் பெரும் புகழ் பெற்ற பிரான்சிஸ் சேவியர் 1541 - ல் லிஸ்பனில் இருந்து புறப்பட்டார். பாரிசில் கல்வி கற்று, யேசு சபை ஸ்தாபகரான புனித இக்னேஷயஸ் லோயலாவின் கீழ்ப் பயிற்சிபெற்ற அவர் அக்காலக் கத்தோலிக்க மறுமலர்ச்சியின் உன்னத உதாரண புருடராகத்திகழ்ந்தார். மாறா மதப்பற்று எவ்வித துன்பங்களையும் தாங்கும் ஆற்றலும் படைத்த அவர் கிழக்கு நாடுகளைக்கிறீஸ்துவின் உடைமையாக்க முன்வந்தார். கருணையும் ஏழைகள் மீது இரக்கமும் தன் கருமத்தில் பூரண நம்பிக்கையும் கொண்ட அவர்கோவா முதல் யப்பான் வரை மதம் பரப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார். கோவாவில் இறங்கியதும் பல்லக்கில் அத மேற்றிராணியாரது மாளிகைக்குக் செல்லாது குஷ்டரோகிகள் சிகிச்சை நிலையத்துக்கு நடந்து சென்று அவர்களது புண்களைக் கழுவினாராம். 1542 - ல் ஆசிய மதபோதகர்களைப் பயிற்றும் பெரிய கலாசாலையைக் கோவாவில் நிறுவினர். மத நிறுவனங்களைப் பரிபாலிக்கும் பணியில் இன்பங்காணாது, கிறீஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு மலையாளக் கரையோரத்தில் வாழ்ந்த மீனவர்களிடையே சேவை புரியலானார். அங்கு ஓரளவு வெற்றியும் பெற்றார். தமிழ் நாட்டின் கிழக்குக்கரையிலும் வெற்றி பெற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு கிறீஸ்து சமயம் பரப்புவதற்க எற்ற சூழ்நிலை உண்டு என அறிந்து. மூன்று இந்தியக் குருமாருடனும் ஒரு போர்த்துக்கேயக்குருவுடனும் வந்து சமயத்தொண்டில் ஈடுபட்டார். இரண்டாண்டில் மேலும் நான்கு குருமாரின் துணை பெற்றார்.

2. வுநiஒநசைய ஜெங்கின்ஸின் காது அறுந்ததைச் சரக்கிட்டு டச்சுக்காரருடன் போராடித் தம் ஏகாதிபத்தியத்தை விஸ்தரித் ஆங்கிலேயரது செய்கையுடன் இதனை ஒப்பிடுக. (அடங்கன் ஐ - முதற்பதிப்பு, பக். 372 இரண்டாம் பதிப்பு. பக். 293)
3. குசயnஉழளை னந துயளளரல ஓயஎநைச.

அரச அவைகளிற் கிறிஸ்தவ குருமார்

1543 - ல் பிரான்ஸிஸ் சபைக் குருமார் கோட்டைக்கு வந்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டனர் அரசனது ஆதரவு இன்மையால் பெரும் ஏமாற்றமடைந்தனர். அரச குடும்பத்தினரை மதம் மாற்றினாலேயே பொது மக்கள் மாறுவர் என நினைத்துப் புவனேகபாகுவின் இளையமனைவியின் பிள்ளைகளைச் சிம்மாசன மேற்றுவதாக ஆசைகாட்டினர். (அதனால் ஒருமகன் அரசனால் கொல்லப்படவும் காரணமாயினர். )மற்ற மகனையும் அவன் மைத்துனனையும் கோவாவுக்கு இட்டுச் சென்று வளர்த்தனர். (இங்ஙனமே யாழ்பாண அரசகுடும்பத்திலும் பிளவை ஏற்படுத்தினர்) கண்டியரசனையும் போரில் உதவி செய்வதாகக்கூறி மதம் மாற்ற முனைந்தனர். ஆபத்துக்குட்பட்டவர்களுக்கு உதவி புரிவதாக ஆசை காட்டடித் தம் கருமத்தைச் சாதிக்கும் அற்ப முறையை எங்கும் கையாண்டனர்.

மன்னாரில் மதம் பரப்பும் முயற்சி

கிறீஸ்தவ வரலாற்றாசிரியர்கள் இக்கால வரலாற்றை எழுதும் போது போன இடமெல்லாம் போர்த்துக்கேயக் குருமாரை மக்கள் வரவேற்றனர். கிறீஸ்தவ சமயம் சத்திய சமயம் ஆகையால் அதனைப் பின்பற்றினர் எனப் பேசுகின்றனர். ஆனால் உள்@ர் மக்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில்வாழ்ந்தனர். அவர்கள் புதுமதத்தை ஏன் ஏற்றனர் என்ற விடயங்களை விரித்துரைக்கத் தவறிவிட்டனர்.

முத்துக்கரையிலுள்ளவர்கள் காலந்தோறும் பாக்குநீரிணையைக் கடந்து தம் தொழிலுக்காக மன்னார்க்கரைக்கும் வந்து குடியிருப்பர். இருபக்கத்திலும் வாழ்ந்தவர் ஒரே இனத்தவர்களே. எனவே. இந்தியக் கரையில் முஸ்லீம்களுக்கு அஞ்சி மதம் மாறியவர்களின் இனத்தவர் இங்கும் தம் உறவினர்களைப் பின்பற்றி மதம் மாறியிருத்தல் வேண்டும். அவர்கள் தம் விசுவாசத்தைக் காட்ட அங்குள்ள குருமாரை அழைத்திருத்தல்; கூடும். கோவாவைச் சேர்ந்த பிரான்சிஸ் என்னும் குரு பிரான்ஸிஸ் சேவியரால் அனுப்பப்பட்டார். அவரது மதம் மாற்றும் முயற்சிகள் யாழ்ப்பாண அரசனால் தடக்கப்பட்டன. முதல் ஆண்டு போர்த்துக்கேயரின் படை வலிமையை உணர்ந்த அவன்இவர்கள் போர்த்துக்கேய அரசனின் குடிகளாகக் கருதப்படும் நிலை ஏற்படுவதை உணர்ந்தான். அவன் படைகள் அங்கு சென்றன. அவற்றை எதிர்த்தோர் உயிர் துறந்தனர். (இதனைச்செய்வித்தவன் கோட்டையரசன் என்றும் ஒரு யேசுசபைக்கு குரு எழுதியுள்ளார்.)

ஆரம்பத்திலிருந்தே போர்த்துக்கல் அரசாங்கத்தின் அதிகாரபலத்தை நம்பியே குருமார் சமயப் பிரசாரத்தை நடாத்தினார். மன்னார் நிகழ்ச்சியால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் சேவியர் உடனே கப்பலேறிக் கோவாவுக்குச் சென்றுஇராசப் பிரதிநிதி அல்போன் சஸ்டீ சௌசாவைக் கண்டு படையனுப்புமாறு பணித்தார். அவன் படையனப்பும் படி கட்டளையிட்டான். எனினும் வாணிகஇலாபம், அரசியல் நோக்கம் என்னும் காரணத்தால் அரசாங்கத் தலையீடு நிகழவில்லை. பிரான்சிஸ் சேவியர் இந்தியாவை விட்டுத் தூரகிழக்கு நாடுகளுக்குச் சென்றார். போகுமுன் 3 - ம் ஜோண் மன்னனுக்கு எழுதிய கடிதத்தில்,

“உங்கள் பணியாளர் உங்கள் கோபத்தைத் தவிர்க்கவும் உங்கள் ஆதரவைப் பெறவும் ஒரே வழி அவர்கள் ஆட்சி, புரியும் நாடுகளில் எத்தனை பேரைக் கிறீஸ்தவர்களாக்க முடியுமோ அத்தனைபேரை மதமாற்றுவதே என்பதைத் தெளிவாகக் கூறிவிட வேண்;டும்”

என்று குறிப்பிட்டுள்ளார். மதம் மாறியோரைப் போர்த்துக்கேய மன்னரின் பிரசைகள் எனக் குறிப்பிட்டதும் நினைவு கூரத்தக்கது.

அரசாங்க அதிகாரத்தால மதம் பரப்பல்

3 - ம் ஜோண் மன்னன் மதப்பற்று மிகுந்தவன். அஞ்ஞானிகளாகிய சுதேசிகளை அவர்களது நிலைக்கு ஏற்றவாறு கடுமையாக நடத்தவில்லை என அவன் கோபித்தான். இராசப் பிரதிநிதி ஜோண் டீ காஸ்ற்றோவுக்கு அவன் இட்ட கட்டளையில் தம் மதத்தை ஏற்காதவர்களை மிகக் கடுமையாகத்தண்டிக்கும்படி விதித்தான். மதம் மாறியோருக்கு விஷே உரிமைகள் வழங்கப்பட்டன. 1540 - ல் இந்தியாவில் இந்துக்கோவில்கள் அழிக்கப்பட்டன. அவற்றுக்குரிய உடைமைகள் யாவும் கிறீஸ்தவ மத ஸ்தாபனங்களுக்குக்கொடுக்கப்பட்டன. அரசியல் நிர்வாகத்தை நடாத்தியோர் எதிர்த்தும், மதத்தலைவர்கள் மிகக் கொடிய முறைகளைக்கையாண்டனர். மத நீதி மன்றங்கள் தம்மதத்தை மறத்தவர்களைத் தண்டிக்கலாயின. 1560 - ல் சட்டப்படி மதவிசாரணை நிறுவனம் (இங்குயிசிஷன்) அமைக்கப்பட்டது.இதன் கொடுஞ் செயல்களால் மனம் வெதும்பிய போர்த்துக்கேய மகாகவி கமொயன்ஸ் பின்வரும் கடுமையான மொழிகளால் இச் செயல்களைப் புரிந்தோரைக் கண்டித்தார்.

“கடவுளது தூதுவர்கள் என்ற பட்டத்தை அபகரித்துள்ள நீங்கள் புனித தோமாசைப் பின்பற்றுவதாகக்; கருதுகிறீர்களா?”

இலங்கையிலும் 1557 - ல் தர்மபாலன் மதம் மாற்றப் பட்டபின் கிறீஸ்தவ குருமாரின் முயற்சிகள் பெருகின. பன்னிரண்டு கோவில்கள் கட்டப்பட்டன. அவர்களுக்கு வேண்டிய சொத்துக்கள் பௌத்த ஆலயங்களிலிருந்து பறித்துக் கொடுக்கப்பட்டன. இதனை எதிர்த்துக் கலகஞ் செய்தோர் போர்த்துக்கேயப்படைகளால் கொடுமையாக அடக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தை 1560- ல் வெற்றிகொண்டபோதும்பல கோவில்கள் அழிக்கப்ப்பட்டன. அஸெவெடோ காலத்தில் முன்னேஸ்வரமும் வேறு பல கோவில்களும் அழிக்கப்பட்டன. டீசௌசா திருக்கோணமலைக்கோவிலை உடைத்துக் கோட்டை கட்டினான். யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் நேரடியான ஆட்சியின் கீழ் வந்தபின் கோவிலுடைப்பு மேலும் பெருகியது. அங்கு தேசாதிபதியாயிருந்த ஒருவன் இந்த இராச்சியத்தில் மட்டும் தான் 500 இந்து ஆலயங்களை உடைத்ததாகப் பெருமை பாராட்டினான். பல மாதா கோவில்கள் முன்னர் அம்மன் கோவில்களாக இருந்தன என்றும் இன்றும் பலர் கூறுவர். இச்சூழ்நிலையைக் கருத்திற் கொண்டே யாழ்ப்பாணத்தில் தாங்கள் பெருவெற்றி பெற்றதாகக் குருமார் தற்புகழ்ச்சி பேசியதை நாம் அளவிட வேண்டும்.

வெளிப்படையான சமய அனுட்டானங்கள் தடை செய்யப்பட்டன. விரதம் அனுட்டிப்போர் வாழை இலையில் உண்டபின் அதனை வெளியே வீசினால் அதிகாரிகள் தம் சமய அனுட்டானங்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பர் என அஞ்சி இறப்பில் சொருகும் வழக்கத்தைக் கைக்கொண்டனர். (இது சென்ற தலைமுறை வரையிலும் வழிவழியாக வந்தது) பசுவைப் புனிதமாகப் பாராட்டும் சைவர்களைச் சைவ நெறியினின்றும் விலக்;கும் பொருட்டு, நாள்தோறும் ஒரு வீட்டார் ஒரு பசுமாடு தம் உணவுக்குக் கொடுக்க வேண்டுமென யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்த மாகாண அதிபதி கட்டளையிட்டானாம். அப்பாவச் செயலுக்கு உடன்படாது திருநெல்வேலியிலிருந்த ஞானப்பிரகாசர் தமது பசு மாட்டுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார் என்பர். இப்படிப்பட்டகொடுஞ்செயல்களால் இந்நாட்டு மக்களின் ஆத்மீக வாழ்வில் ஒரு வெற்றிடம் உண்டாயிற்று. அதனை நிரப்பி மனிதனுகுள்ளே துடிக்கும் ஆத்மீக தேவையைப் பூர்த்தி செய்ய ஏதாயினும் ஒன்று அவசியமாயிற்று. அந்த இடத்தை நிரப்ப ஏதோ ஒரு மதத்தை மக்கள் பிடிக்க ஆயத்தமாயிருந்தனர். துன்பம் மிக்க லௌகிகச் சூழ்நிலையில் ஆன்மிக திருப்தியாயினும் கிடையாதா என அங்கலாய்த்த மக்களில்; ஒரு சாரார் கிறீஸ்தவ சமயத்தையேனும் கைக்கொண்டால் என்ன என எண்ணத் தொடங்கினர்.

கத்தோலிக்க மதம் இலங்கையிற் பிரபலமடையப் பல காரணங்கள் இருந்தன. சுதேச மதங்களிலுள்ள புறக் கிரியைகளும் சடங்குகளும் கத்தோலிக்க மதத்திலும் இருந்தன. இந்து மதத்திலும், ஓரளவுக்குப் பௌத்த மதத்திலும் சாதாரண மக்களுக்கு ஆத்மீக பாதுகாப்புணர்ச்சியளிக்கக் கூடிய கிரியைகள் விருத்தியடைந்தன. நோய், பிணி, வறுமை, இயற்;கையின் உற்பாதங்கள் ஆகியவற்றால் துன்புறும்போது அவர்கள் அணைத்துக் கொள்ளத்தெய்வங்களுக்கு நேர்த்திசெய்தல் முதலிய கருமங்கள் இருந்தன. அதேபோலக் கத்தோலிக்க சமயத்திலும் பல சமய அனுட்டானங்கள் காணப்பட்டன. 16 - ம் நூற்றாண்டில் இங்கு வந்த கத்தோலிக்க மத குருமார் இவ்வொற்றுமையை உணர்ந்து, தமது அடிப்படைக் கொள்கைகளுக்குப் பாதகமில்லாத வகையில் இந்நாட்டின் பழக்கங்கள் சிலவற்றை ஏற்றுக்கொண்டனர்.

இலங்கையின் கத்தோலிக்க சமய அனுட்டானங்கள் சிலவற்றை அவதானித்தால் இவ்வுண்மை விளங்கும். இந்து மதத்தில் பல தெய்வங்களின் பெயரால் கோவில்களைக் கட்டுவது போலக் கத்தோலிக்கரும் பல அர்ச்சிய சிஷ்டர்களின் பெயரால் கோவில்களை அமைத்தனர். அவர்களது செபமாலை இந்து மதத்தவர்கள் அணியும் உருத்திராக்க மாலையை ஒத்திருந்தது. தமிழரும், சிங்களவரும் தீய ஆவிகளின் சேட்டையை விலக்கும் பொருட்டு இம்மாலையைப்போல மந்திரக் கயிறுகளையும் தாயத்துக்களையும் அணிந்தனர். இந்துக்களின் மாரி, காளி முதலிய அம்மன் வழிபாட்டுக்குப் பதிலாக மாதாகோவில்கள் எழுந்தன. இந்து சமயத்தில் திரிமூர்த்திகள் இருப்பது போலக் கத்தோலிக்கர் திரித்துவம் பற்றிப்; பேசினர். இந்துக்கள் கல்லால் உருவங்களைச் செய்து கோவில்களில் வைப்பதைப்போலக் கத்தோலிக்கரும் கோவில்களில் உருவச்சிலைகளை வைத்தனர். சுதேசிகள் கற்பூரம், விளக்கு, சாம்பிராணித் தூபம் முதலியவற்றை உபயோகித்தனர். தமிழர் தாலி கட்டும் வழக்கத்தைக் கத்தோலிக்கர் ஏற்றுத் தம் கோவிலில் நடக்கும் மணச்சடங்கில் ஓர் அம்சமாக்கினர். (பின்னாளில் வந்த டச்சுக்காரர் கத்தோலிக்கருக்கும் அஞ்ஞானிகளுக்கும் பேதமில்லை என்று கூறும் அளவுக்குப் புற ஒற்றுமை நிலவியது) சுதேசிகளின் சாதி வழக்கங்கள் பலவற்றை அப்படியே விட்டமையால் சுதேசிகள்கத்தோலிக்க சமயத்தைத் தழுவுவதால் தம்மவர் தம்மைப் புறக்கணிப்பாரே என்ற அச்சம் நீங்கப் பெற்றனர். 1623 -ல்; கோவாவிலுள்ள மதநீதிமன்றப் பெருந்தலைவரது முயற்சியால் பாப்பரசர் 15 - ம் கிரெகரி,

“மதம் மாறுவோர் தம் இனம் , சமூக அந்தஸ்து ஆகியவற்றைக்குறிக்கப் பூணு}லும், குடுமியும் அணிவதையும், அலங்காரத்துக்குச் சந்தனம் பூசுவதையும், ஸ்நானம். சௌசம் முதலியவற்றைச் சுகாதாரத்தின் பொருட்டுச் செய்வதையும் நாம் அனுமதிக்கிறோம்.”

எனப் பிரகடனம் செய்தார். (சீனாவிலும் இங்ஙனமே பல கொன்பியூசிய மதக்கிரியைகளை யேசு சபைக் குருமார் ஏற்றுக்கொண்டனர்) தொடக்க காலத்தில் கத்தோலி;க்கர் அனுட்டித்த கொள்கைக்கு இது மாறான. உதாரணமாகக் கோட்டையரசின் இறுதிச் சிங்கள மன்னனான டொன்ஜுவான் தர்மபாலன்மதம் மாறிய போது. தன்பெயரையும் கைவிட்டுக், குடுமியையும் களைந்து. தன் பரம்பரைப் பழக்கவழக்கங்கள் பலவற்றையும், தன் சுதேச உடையையும்;;;;;;; நீக்கிப் போர்த்துக்கேய நடையுடை பாவனைகளைக் கடைப்பிடிக்குமாறு தூண்டப்பட்டான். இதனால் தன் இனத்தவரின் பழிப்புக்கு ஆளானான். இங்ஙனம் இலங்கைத் திருச்சபையைப் போர்த்துக்கல் திருச்சபையின் ஒருஅங்கமாக்கியமை மத மாற்றத்துக்குத் தடையெனப் பிற்காலத்தில் உணர்ந்த கிறீஸ்தவ குருமார் அம்முறையைக் கைவிட்டனர். (அடுத்த அத்தியாயத்தில் வணபிதா ஜோசப், வாஸ் வரலாற்றைப் பார்க்க)

போர்த்துக்கேஆட்சியின் பின் கிறிஸ்தவ மதத்தின் நிலை

போர்த்துக்கேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதி டச்சுக்காரர் வசமானபோது, ஆயிரக்கணக்கான கிறீஸ்தவர்கள் இருந்தனர். டச்சுச்சீர்திருத்த திருச்சபை அரசாங்கமதமாகப் பிரகடனஞ் செய்யப்பட்டது. கத்தோலிக்க சமய அனுட்டானங்கள் தடைசெய்யப்பட்டன. பெயரளவுக்குக்கத்தோலிக்கராக இருந்தவர்கள் இப்பொழுது டச்சுக்காரரைத் திருப்திசெய்து உத்தியோகம் பெற, அவர்கள் மதத்தை ஏற்றனர். சமய அறிவுக்குறைவுள்ள பாமர மக்கள் பலர் இந்து பௌத்த நம்பிக்கைகள், வழக்கங்கள் பலவற்றை விடாது பின்பற்றிவந்தவர்கள். இப்போது மீண்டும் தம் மூதாதையரின் மதங்களைப் பின்பற்றலாயினர். அளுத்காமம் முதல் புத்தளம் வரையில் வாழும் மீனவர்களிடையே டச்சுக்காரர் காலத்தில் கத்தோலிக்க சமயப் புனருத்தாரணப்பணி புரிந்த ஜோஸப் வாஸ் சுவாமியார் முதலியோரின் சேவையால் அம்மதம் நிலைத்திருந்தது. ஆனால் தேவன் துறை முதல் அளுத்தகாமம் வரையுள்ளவர்கள் மீண்டும் புத்த மதத்தை ஏற்றனர். யாழ்ப்பாணத்திலும் இங்ஙனம் நிகழ்ந்தது.

டச்சுக்காரரின் மதக் கொள்கையின் தாக்கம். அதனை வெல்லக் குருமார் ஆற்றிய சேவை முதலியவற்றை அடுத்த பாடத்தில் படிப்போம்.

வினாக்கள்

1. ஏன் போர்த்துக்கேயர் இலங்கையில் தம் சமயத்தைப் பரப்ப முனைந்தனர்? அவர்கள் இதில் அடைந்த வெற்றி யாது? (1949)
2. போர்த்துக்கேயர் சமய தூதுவர்களாக வெற்றியீட்டியமைக்குரிய காரணங்களைக் கூறுக? (1958)

பதினைந்தாம் அத்தியாயம்

டச்சுக்காரரின் சமயம் பரப்பும் முயற்சிகள்

தாங்கள் கைப்பற்றிய நாட்டை நிரந்தரமாகத் தம் கீழ் வைத்திருக்கும் முயற்சிகளுள் ஒன்றாக மத மாற்றத்தை டச்சக்காரர் மேற்கொண்டனர். 1640 - ல் கொஸ்டருக்குப் பட்டேவியஅதிகாரிகள் எழுதிய கடிதத்தில் சிங்களரை உண்மைக் கிறீஸ்தவ மதத்துக்கு மாற்றுதல் மூலம் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறலாம் என்ற குறிப்புக் காணப்படுகிறது. 1644 - ல் இலங்கையில் ஆட்சியுரிமை பெறுமட்டும் அவர்கள் இதனை நடைமுறைக்குக் கொண்டு வர இயலவில்லை. அங்ஙனம் மதமாற்றும் வேலையை ஆரம்பித்தபோது பல சிங்களவர் பின்பற்றிய கத்தோலிக்க மதத்துடன் அதன் போர்த்துக்கேயக் குருமாருடனும் போட்டியிட வேண்டியிருந்தது போர்த்துக்கேயருடன் கோவாவில் எழுதிய தற்காலிக உடன்படிக்கையின்படி டச்சுக்காரர் வசமிருந்த பிரதேசத்திலும் குருமார் நுழைய முழு உரிமையிருந்தது. ஆனால் இவர்கள் தம்குடிகள் ஒழுங்காகக்கோவிலுக்குப் போகவேண்டுமென்றும் தமக்கு உணவு முதலியன அளிக்க வேண்டுமென்றும் கட்டளையிடுமாறு கேட்க மற்சூய்க்கர் மறுத்து விட்டமை அவர்களுக்குப் பேரிடியாயிற்று. அன்றியும் அவன் விதானைமாருக்கு இரகசியமாக இட்ட உத்தரவின்படி அவர்கள் குருமார்க்கு எல்லாவித இடுகண்களையும் விளைவித்தனர். இதனால் பல குருமார் டச்சுப் பிரதேசத்தை விட்டுநீங்கினர். தொடர்ந்து சேவையிலிருந்தோர் 1947 - ல் மற்சூய்க்கரால் வெளியேற்றப்பட்;டனர்.

போர்த்துக்கேயரின் பெயர்களை வைத்துக்கொண்டும் அவர்களின் நடையுடை பாவனைகளைப் பின் பற்றியும்; அரைக் கிறிஸ்தவர் களாயிருந்தோர் இப்போது புதிய எஜமானர்களுக்கு ஊழியஞ் செய்து தாம் உயிர் நிலை அடைய முயன்றனர். ஆனால் அவர்களும் பௌத்த சமயிகளான பெரும்பான்மைச்சி;ங்களவரும் கண்டியரசனிடம் விசுவாசம் வைத்திருந்தமையை டச்சுக்காரர் உணர்ந்தனர். ஆனால் தொடக்கத்தில் அவர்களுடைய மத உரிமைகளில் தலையிட அஞ்சினர். படிப்படியாகப் பௌத்த மத விடயங்களில் தலையிடலாயினர். 1647 - ல் மாத்தறைப் பிரதானிகள் ஒரு கோவில் கட்டத்தொடங்கிய போது அதனைத் தடுத்து விட்டனர். 1658 வரை, ஏற்கனவே கட்டப்பட்ட கோவில்களின் கருமங்களில் தலையிடாதிருந்தனர்.

இந்த ‘எதிர்மறை’க் கருமங்களுடன் நின்று விடாது நேரடியாகத் தம் ‘சீர்திருத்திய திருச்சபை’க்கு ஆட்களைச் சேர்க்க முன் வந்தனர். கரைப்பகுதிகளில் சனத்தொகை கூடிய கிராமங்களில் சமயப்பாடசாலைகளை ஏற்படுத்தி அவவற்றின் மூலம் இம் மதமாற்ற முயற்சியைத் தூண்டினர். தொடக்கத்தில் பட்டேவியாவிலிருந்து சில ‘கறுப்பர்’ ஆசிரியர்களாக இப் பாடசாலைகளிற் சேவை செய்ய அனுப்பப்பட்டனர். விரைவில் உள்@ர்ச்சிங்களவரே நியமிக்கப்பட்டனர் முன்னர் போர்த்துக்கேய பாடசாலைகளில் ஆசிரியர்களாயிருந்தோர் இச் சேவையில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் போதிக்க வேண்டியவற்றைப் போதகர்கள் போர்த்துக்கேய மொழியில் எழுதிக் கொடுத்தனர். ஆசிரியரது வேலையை மேற்பார்க்கும் பொறுப்பு ‘நோயாளரைக் கவனிப்போர்’ என்ற பதவியிலுள்ளாரிடம் விடப்பட்டது. இரண்டு மூன்று மாதத்துக்கு ஒருமுறை இவ்விருபகுதியாரையும் மேற்பார்வை செய்யப் போதகர்கள் கிராமங்களுக்கு விஜயம் செய்வர். அத்தருணம் மொழிபெயர்ப்பாளரி;ன் உதவியுன் இவர்களும் சிறிது போதனை செய்வர். குழந்தைகளுக்கு மதப்பிரவேசம் (ஞானஸ்நானம்) அளிப்பதும், தம்பதிகளுக்கு விவாகக்கிரிகை செய்வதும் இவர்கள் கடன்.

தொடக்கத்தில் மத மாற்ற விடயத்தில் கட்டாயம் எதுவும் இருக்கவில்லை. கத்தோலிக்க மதத்தினரான சிங்களப் பிரதானிகளைத் தமது புரட்டஸ்தாந்து (கல்வினீய)மதத்துக்கு ஈர்க்கும் முயற்சிகளை டச்சுக்காரர் செய்தனர். மதம் மாறியோர்க்குப் பதவிகள் கிடைக்கும் என ஆசை காட்டினர். சிறுவரைப் பாடசாலைக்கு வசீகரிக்கப் பரிசுகளும் சொற்ப பணமும் கொடுத்தனர். இம்மத மாற்ற முயற்சியால் அதிக பயன் கிடைக்கவில்லை. காலி, நீர்கொழும்பு போன்ற நகரங்களில் மட்டும் சிலர் மதம் மாறினர். அவர்களுட் பலர் பெயரளவில் மட்டும் கிறீஸ்தவராயிருந்தனர்.

இங்ஙனம் அற்ப பலன் கிடைத்தற்கு அநேக காரணங்களிருந்தன. சமயப் பணியில் ஈடுபடப் போதிய ஆட்கள் இருக்கவில்லை. தொடக்கத்தில் ஒரு மத போதகரே இங்கு இருந்தார். 1650 அளவில் மூவர் நியமிக்கப்பட்டனர். ‘நோயாளரைப் கவனிப்போர்’ ஆறு, ஏழு பேர் இருந்தனர். டச்சுப் படைவீரரின் தேவைகளைக்கவனித்தபின், சுதேசிகளை மதம் மாற்ற இவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவர்கள் சிங்களம் அறியார்@ போர்த்துக்கேய மொழியைச் சிறிதே அறிவர். எனவே அவர்கள் சுதேசிகளுடன் கலந்து பழக இயலவில்லை. பாடசாலை ஆசிரியர்களோ கத்தோலிக்க மதத்திலிருந்து சடுதியில் மாறியவர்கள்@ அவர்கள் மீதும் அதிக நம்பிக்கைவைக்க இயலவில்லை. மதமாற்ற முயற்சி அவர்களில் பெரிதும் தங்கியிருந்தது. ஒரு முறை தேவன் துறையிலுள்ள ஆசிரியரனைவரையும் ஒழுக்கக்கேடு, உருவ வழிபாடு முதலிய குற்றங்களுக்காக ஒருங்கே பதவி நீக்கம் செய்யவேண்டியிருந்தது. டச்சு மதபோதகர்களே தரங் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர் முறைகேடான நடத்தை காரணமாக நாடுகடத்தப்பட்டனர். ஒருவர் நீர்கொழும்பில் குடிவெறியால் ஏற்பட்ட கலகத்தில் இறந்தார். 1656 - ல் இலங்கைக்கு வந்த பால்டேயஸ் பாதிரியாரும் வேறு நால்வரும் இலங்கையின் புரட்டஸ்தாந்து மதத்தைஸ்தாபிக்கும் பணியை மேற்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் மதம் பரப்பும் முயற்சிக்கு ஏற்ற இடமாகக் கருதப்பட்டது. அங்க 50,000தமிழ்க்கிறீஸ்தவர்களிருந்தனர். 150 கோவில்கள் அவர்கள்வழிபாட்டுக்கு உதவின. இவர்கள் மீண்டும் இந்து மதத்துக்குத்திரும்பினால் தேசபக்தியுடையோராய் டச்சுக்காரரை எதிர்ப்பர்.தம்கத்தோலிக்க மதத்தில் தொடர்ந்து இருந்தால் போர்த்துக்கேயருக்கு உறுதுணையாவர். எனவே, இவர்களைப்புரட்டஸ்தாந்து மதத்துக்குத் திருப்பினால் இவர்களது ஆதரவு தமக்குக் கிடைக்கும் என்ற எண்ணம் டச்ச அதிகாரிகளுக்கு உண்டாயிற்று. பால்டேயசும் வேறோருவரும் யாழ்ப்பாணத்துக்க வந்தனர். காலியில் இரு பாதிரிமாரும் கொழும்பில் ஒருவரும் நியமிக்கப்பட்டனர். மேலதிகமாகப் பாதிரிமாரை நியமித்தால் செலவுஏற்படும் என்று ‘நோயாளரைப் கவனிப்போர்’ என்னும் உபதேசிமார் அமர்த்தபட்டனர். நான்கு திருச்சபைகள் யாழ்ப்பாணம், மன்னார். கொழும்பு, காலி என்னுமிடங்களில் நிறுவப்பட்டன. அவற்றின் ஆலோசனைச்சபையில் குருமாருடன் அரசாங்க அதிகாரிகளும் பொதுமக்களுள் முக்கியமானவர்களும் இடம் பெற்றனர்.

கத்தோலிக்க குருமார் போதித்த மதத்தின் அடிப்டைக் கொள்கைகளை மறுத்துப்புரட்டஸ்தாந்து மதத்தைப் பாமர மக்களிடையே பரப்புவது எங்ஙனம் என்ற பிரச்சினைக்கு டச்சுக்காரர் தீர்வு காண வேண்டியவர்களாயினர். எளிய இனிய முறைகளால் புதிய மதத்தைவிளக்குவது எங்ஙனம் எனப் பால்டேயஸ் சிந்தித்தார். கத்தோலிக்கரைப் பின்பற்றி வினாவிடை மூலம் அதிக அறிவு இல்லாதவர்களுக்கும் மதபோதனை செய்யலாம் என்பதை உணர்ந்து. 1659 - ல் நிகழ்ந்த மத குருமார் மகாநாட்டின் அங்கீகாரத்தையும் பெற்று, அத்தகைய கைநூல்களைத் தமிழில் ஆக்கினார். அவற்றைப் போலச் சிங்களத்திலும் நூல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் வெகு காலம் போர்த்துக்கேய மொழியிலேயே போதனை செய்ய வேண்டியிருந்தது.

தொடக்க காலத்தில் பாலத்கார முறைகளைப் பயன்படுத்தாவிடினும், அரசாங்கம் மதமாற்ற முயற்சிகளில் பாதிரிமாருக்குப் பெரிதும் உதவி புரிந்தது. 1658 - ல் கத்தோலிக்க குருமாருக்குப் புகலிடம் அளித்தால் மரண தண்டணை கிடைக்கும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மதம்மாறுவோருக்கு உலகியலில் வேண்டிய சலுகைகள் அளிக்கப்பட்டன. பட்டினங்களில், கடைக்காரருள்ளும் புரட்டஸ்தாந்தியரே ஆதரவு பெற்றனர். சில தொழில்கள் கிறீஸ்தவருக்கு என்றே ஒருக்கப்பட்டன. பொறுப்புள்ள பதவிகளில் கிறீஸ்தவரல்லாதவருக்கு இடமில்லை என்பது நிச்சயமாயிற்று. எனவே போலிக் கிறீஸ்தவவர் தொகை பெருகியது. முஸ்லிம்கள் மதமாற்றும்முயற்சியில் வெற்றி பெறுவதைத்தடுக்கும்பொருட்டு, அவர்கள் சிங்களவருடன் தொடர்பு கொள்ளலாகாது என வான்கோயன்ஸ் சட்டமியற்றினான். அவர்கள் வியாபாரப் போட்டியை ஒழிக்கவும் இவ்வாறு அவர்களது மதமுயற்சிகளைத் தடுத்தல் அவசியமாயிற்று.

ஆனால் தொடக்க காலத்தில் சமயத்துறையில் கடுஞ் சட்டங்களை இயற்றிப் பொதுமக்களைப் பகைக்க டச்சு அரசினர் விரும்பினாரல்லர். பெயரளவுக்கேனும் கிறீஸ்தவர்களானோரை அவர்கள் சமய கருமங்களை அநுசரிக்கும்படி வற்புறுத்தினரேயன்றிப் பிற மதத்தவரை வற்புறுத்த அஞ்சினா. கத்தோலிக்கரும் தனிப்பட்ட முறையில் தம் மதத்தை அனுசரிக்கலாம். போர்த்துக்கேய குருமார் மட்டும் அவர்களிடையே சேவைபுரியலாகாது. இந்துக்களும் பௌத்தர்களும் நகரங்களுக்கு அருகில் டச்சுக்காரருக்கு இடைஞ்சலாக மதக் கொண்டாட்டங்கள் நடத்துவது தடுக்கப்பட்டதேயன்றி, மூலை முடுக்குகளில் அவர்கள் தம் மத அனுட்டானங்களைத் தடையின்றி நடத்தினர்.

கல்வி சமயத்தின் கைப்பாவையாயிற்று. இளவயதில் பள்ளிச் சிறுவரை மதம் மாற்றிஅவர்களது பிஞ்சு நெஞ்சில் தம்புதிய கொள்கைகளைப் புகுத்த வேண்டும் என்ற எண்ணம் டச்சுக்காரருக்கு ஏற்பட்டது. யாழ்ப்பாணம், மன்னார்ப் பிரிவுகளில் கிராமந்தோறும் கத்தோலிக்க கோவில்களுக்கு அயலில் பாடசாலைகள் இருந்தன. காலியிலும் அவற்றைப் பயன்படுத்திக் கிறீஸ்தவ போதனைசெய்யப்பட்டது. முக்கியமாக ஆரம்ப பாடசாலைகள் மதமாற்றத்துக்கே பயன்பட்டன. அங்கு சமயக் கல்விக்கு முதலிடமும் உலகியற் கல்விக்கு இரண்டாமிடமும் அளிக்கப்பட்டது. உதாரணமாகப். பாடசாலைப் பரிசோதகர் (பாதிரியார்) ஒருவரின் 1718 ஆம் ஆண்டு அறிக்கையில் மாணவர் படித்த சமய பாடத்தைப்பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது.

3. கொழும்பு மாவட்டம் ஸ்ரீ 48 பாடசாலைகள்
யாழ்ப்பாணம் ஸ்ரீ 48 பாடசாலைகள்
காலி ஸ்ரீ 37 பாடசாலைகள்

4. 1718 மாசி 15 - இந்துருவே
36 மாணவர்கள் 7 ஜபமும் 2 சமயவினாவிடையும்அறிவர்
17 மாணவர்கள் 7 ஜபமும் 1 சமயவினாவிடையும்அறிவர்
7 மாணவர்கள் 7 ஜபமும் 1 சமயவினாவிடையும்அறிவர்
3 மாணவர்கள் 5 ஜபமும் 0 சமயவினாவிடையும்அறிவர்
16 மாணவிகள் 7 ஜபமும் 2 சமயவினாவிடையும்அறிவர்
5 மாணவிகள் 7 ஜபமும் 1 சமயவினாவிடையும்அறிவர்
2 மாணவிகள் 5 ஜபமும் 0 சமயவினாவிடையும்அறிவர்

இப்பாடசாலையிகளில் மதக் கல்வி புகட்ட வல்ல ஆசிரியர்களைத் தெரிந்தெடுப்பது பெருஞ் சிக்கல் நிறைந்த காரியமாயிருந்தது. பழைய பள்ளிக்கூட ஆசிரியர்களுக்குப் பாதிரிமார் புரட்டஸ்தாந்து மத போதனைசெய்து, பின் அவர்களைப் பிள்ளைகளுக்குப் போதிக்க விடுத்தனர். நேயாளரைக் கவனிப்போரின் கடமைகளில் இக்கல்விப் பணியும் அடங்கியது. பாதிரிமார் வந்தனர். இவர்களுக்கு மட்டுமே நெதர்லாந்திலிருந்து பணம் கிடைத்தது. பாடசாலை ஆசிரியர்களுக்குக் கம்பனிபணம் கொடுக்கவில்லை.

அரசாங்கத்துக்கும் மதநிறுவனத்துக்கும் எத்தகைய தொடர்பு இருக்கவேண்டும் என்பது பெரும் பிரச்சினையாயிருந்தது. கம்பனி அதிகாரிகள் மதசபைகளில் அங்கம் வகித்து அவற்றைக் கட்டுப்படுத்த முயன்றனர். அதைப் பாதிரிமார் எதிர்த்தனர். முக்கியமாகப் பாடசாலைகளை நடாத்தும் விடயமாகப் பெரும்போட்டி ஏற்பட்டது. அரசாங்க பாதிரிமார் பொதுமக்களுடன் சுதந்திரமாகத் தொடர்பு கொள்ள அநுமதிக்க விரும்பவில்லை@ அவர்கள் தேசாதிபதிக்கு ஊடாக அன்றி நேரடியாகக் தாய்நாட்டுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. இப்பிணக்குகளாலேயே திறமைமிக்க பாதிரியான பால்டேயஸ் ஒருவித மதிப்பும் இன்றித் தாயகம் அனுப்பப்பட்டார். (1665)

ஆரம்பத்தில் மதம் பரப்பும் வேலையில் இருந்த உற்சாகம் விரைவில் மங்கியது. மக்களிடையே சேவை செய்வோர் மிகக் குறைந்த தொகையினரே. அவர்களும் பொதுமக்களிடையே வாழ்ந்து நெருங்கிப் பழகாமல் தூர நின்றனர். பட்டணங்களில் வாழ்ந்த அவர்கள் புரட்டஸ்தாந்து மதத்தைச்சார்ந்த டச்சுக்காரருக்கும் சுதேசிகளுக்கும் வேண்டிய ஆத்மீக சேவை செய்து வந்தனர். கிராமங்களுக்குச் செல்ல அவர்களுக்கு நேரமிருக்கவி;ல்லை. சுதேச மொழிகளை அறியாத அவர்களுட் பெரும்பாலோர் மக்களின் மனதைத் தொடும்; ஆற்றல் அற்றோராயிருந்தனர். அவற்றைப் படிக்க அவர்களுக்கு விரும்பமும் இல்லை. அரசாங்கம் தேசிய மொழியில் அவர்கள்தேர்ச்சி அடைவதைப் பொறுத்து அவர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கத் தீர்மானித்தது. (1675) அப்படியிருந்தும் அவர்கள் அதிக ஆர்வங் கொண்டதாகத் தெரியவில்லை. பாதிரிமார் குடிவெறி, ஒழுக்கக்கேடு, தனிப்பட்ட வியாபாரத்தில் ஈடுபடல் முதலிய குற்றங்கள் புரிந்து நாட்டினின்றும் வெளியேற்றப்பட்டனர். அன்றியும் மதம் பரப்பும் முயற்சிக்குப் போர் மேகங்கள் குமிறிக்கொண்டிருந்த அக்கால நிலையும் இடந்தரவில்லை. 1689 - ல் இலங்கையில் கிறீஸ்தவ சமயம் மிகக் கீழ் நிலையுற்றதாக இங்கு விசாரணைக் கமிஷனராக வந்த வான் றீட் தமது அறிக்கையில் தெரிவித்தான். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் புரட்டஸ்தாந்து சமயம்சற்றும் வேரூன்றவில்லை. கத்தோலிக்க மதம் அசைவின்றியிருந்தது. பௌத்தர்களும் இந்துக்களும் புதிய மதத்தை ஏற்றிலர். சுதேசிகளை மத சேவைக்குப் பயிற்றி அவர்கள் மூலமே மதப் பிரசார இயக்கத்தை வளர்க்க வேண்டும் என அவன் அபிப்பிராயப்பட்டான்.

இவ்வறிக்கையின்படி 1690 - ல் முக்கிய நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து இலங்கையில் கிறீஸ்தவ மதப் பிரசார இயக்கத்தில் ஒரு புதுயுகம் ஆரம்பித்தது எனலாம். நல்லூரில் ஒரு பயிற்சிக் கலாசாலை ஆரம்பிக்கப்ட்டது. அங்கு டச்சுக்காரரும் தமிழரும் ஆசிரியராய் அமர்ந்து இரு மொழிகளையும் கற்பித்தனர். அங்கேயே மாணவர்கள் தங்கினர். சாதி ஆசாரத்திற்கேற்ப உண்டியும் உறையுளும் பெற்றுக் கடுமையான சட்டதிட்டங்களுக்குட்பட்டுக் கற்றனர். அக் கலாசாலைக்கென நிதி ஒதுக்கப்பட்டது. இப்புதிய பரிசோதனை வெற்றி யளித்தமையால், விரைவில் கொழும்பில் சிங்களப்பிள்ளைகளுக்கென ஒருகலாசாலை நிறுவப்பட்டது. இவற்றின் முழுப்பயனையும் பின்னர் 18 - ம் நூற்றாண்டிலேயே காணக்கூடியதாயிருந்தது.

டச்சக்காரரின் மதம் மாற்றும் முயற்சிகளைப் பற்றிப் பிற மதத்தவர் என்ன கருதினர்? எவ்வாறு துன்புற்றனர்? இங்குள்ள கத்தோலிக்கரே டச்சுக்காரரின் தாக்குதலுக்குப் பெரிதும் ஆளாயினர். இலங்கைக் கத்தோலிக்க சமய வரலாற்றின் இருட்காலம் எனஇதனை அழைப்பர். எனினும் அவர்கள் துணிவுடன் அதனைத் தாங்கித் தம் மதத்தை இரகசியமாகப் பேணி வந்தனர். தடுப்புச்சட்டங்கள் காரணமாகப் பிறரறியாமல் சமயக் கிரியைகளும் வழிபாடும் நடைபெறலாயின. 1682- ல் பைல் பட்டேவிடயாவுக்கு எழுதிய கடிதத்தில் சுமார் 30 ஆண்டுகள் சட்டமூலமும் தடைவிதித்தும் மூலைதோறும் கத்தோலிக்க கிரியைகளை அனுட்டிப்போர் கூட்டம் கூட்டமாக வாழ்வதைச் சுட்டிக் காட்டினான். சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டிய வசதிகள் கம்பனியிடம் இல்லை. பெருந்தொகையாகக் கத்தோலிக்கர்வாழ்ந்த இடங்களில் வெளிப்படையாகவே பூசை முதலிய சமயக் கிரியைகள் நடைபெறலாயின.

டச்சுப்படைகள் வெற்றி பெற்றதும் கத்தோலிக்க குருமார் வெளியேற்றப்பட்டனர். எனினும் விரைவில் அவர்கள் இந்தியக் கரையோரத்தில் வாழ்ந்த கத்தோலிக்க பரவ இனத்தாரின் துணிவுடன் கூடிய முயற்சியால் மீண்டும் களவாக இங்கு வந்தனர். கண்டி அரசனின் ஆதரவு பெற்று அங்கு தங்கியிருந்து டச்சுககாரரின் பிரதேசங்களில் இடம்மாறி மாறிச் சமயசேவை செய்தனர். கோவாவிலுள்ள மேற்றிராணியார் உறோமுக்கு எழுதிப் பாப்பரசர் டச்சு அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு இலங்கைக்குக் குருமாரை அனுப்ப அனுமதி பெறவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இவ்வித அனுமதி கொடுக்காவிடினும் 1687 - இன் பின் தடைவிதிக்கும் பிரமாணங்கள் நெகிழ்ந்தன.

அக்காலத்தில் கத்தோலிக்க மதத்துக்குச் சேவை செய்த இரு குருமாரைப்பற்றி இவ்விடத்தில் அறிவது பொருத்தமாயிருக்கும்.

வண, பிதா ஜோஸப் வாஸ்

அக்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை அழியும் நிலை எய்தியது. ஏகாதிபத்தியம் அமைத்த போர்த்துக்கேயரால் நாட்டப்பட்டுத் தேசீய வேர்களற்றிருந்த திருச்சபையாகிய மரம் பிறிதொரு ஏகாதிபத்தியத்தின் தாக்கத்தால் வாடி வதங்கிப், பட்டுப் போகும் காலம் வந்தது. அதன் இடத்தில் புதிய திருச்சபையாகிய மரத்தை நட்டு உள்@ர்ச் சுவாத்தியத்துக்கு ஏற்ற வகையில் அதற்கு எருவும் நீரும வார்த்து வளர்ந்தோங்கச் செய்தவர் ஜோஸப் வாஸ் சுவாமியார். அதனால் அவரைத் கத்தோலிக்கர் இலங்கையின் அப்போஸ்தலர் என்று புகழ்வர்.

அவர் கோவாவில் கொங்கண தேசப் பிராமண குலத்திற் பிறந்தவர். இலங்கையில் அரசியற் காரணங்களுக்காகக் கத்தோலிக்கரது சமயத்தைத் தடைசெய்து, ஒல்லாந்தர் தம் புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்பும் முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்வதை அறிந்தார். இந்நாட்டைப் பற்றியேனும், இங்குள்ளவர்களின் மொழியையேனும் அறியாத அவர் இங்குள்ளவர்களின் மொழியையேனும் அறியாத அவர் இங்கு தம் சேவையைத் தொடங்கத் தீர்மானித்தார். வெள்ளை நிறக் குருமார் எவரும் இலங்கைக் கரையிற் கால் வைக்க முடியாத காலம் ஆகையால் இந்தியரான இவர் சுதேசிகளிடையே கண்டுபிடிக்கப்படாமல் உலாவலாம் எனக் கருதிய கோவாவிலுள்ள உயர்ந்த குருமார் இவரையே இங்கு அனுப்பினர். 1687 - ல் யாழ்ப்பாணத்துக்கு வந்த அவர் மாறுவேடத்தில் உலாவிக் கத்தோலிக்கருக்குச் சமய போதனை செய்யலானார். 1689- ல் அவர் ஒருவரது இல்லத்தில் பூசைக்கு ஏற்பாடு செய்தபோது, டச்சுத் தளபதி கூட்டத்தைக் கலைத்துப் பலரைச் சிறையிட்டான். வாஸ் புத்தளம் சென்று உள்நாட்டுக்கு ஏகினான். ஒற்றன் எனக் கைது செய்யப்பட்ட அவரை கண்டியரசனின் சபைக்கு இட்டுச் சென்றனர். அவர் அரசனைத் திருப்திப்படுத்தி விடுதலை பெற்றார் கண்டியிலிருந்து கொண்டு கரையோர நகரங்களுக்கு அடிக்கடி சென்ற கத்தோலிக்கரதுமதச் சடங்குகளை நடாத்தி நம்பிக்கை அழியாது பார்த்துவந்தார். தனியே ஒன்பது ஆண்டு அரும்பாடுபட்டபின், அவர் வேண்டுகோட்படி ஏழு குருமார் உதவிக்கு வந்தனர். 2 - ம் விமலதர்ம சூரியனும் மகன் நரேந்திரசிங்கனும் டச்சுக்காரருக்கு மாறானவர்களாதலால் கத்தோலிக்கருக்கு வேண்டிய ஆதரவை அளித்தனர். அவர்கள் ஆதரவும், இந்தியக் குருமாரின்; இடையறா முயற்சியும் சேர்ந்தமையாலேயே இலங்கையில் கத்தோலிக்க மறுமலர்ச்சி ஏற்பட்டது.

கத்தோலிக்கர் தம் உரிமைகளுக்காக வாதாடத் துணிவு பெற்றனர். இருநூறு குடும்பத் தலைவர்கள் டச்சு அரசாங்கத்திடம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துத் தம் மனச் சாட்சிப்படி வழிபட அனுமதி கேட்டனர். ஒரு குருவின் தூண்டுதலாலேயே இது நிகழ்ந்தது போலும் எனக் கருதிய தேசாதிபதி நகரெங்கும் அவரைத் தேடினான். தன் வேட்டை பயனற்றுவிடவே, 1707 - ல் ஆலோசனைச்சபையைக்கூட்டித் தீர்மானித்த. ஐந்து தலைவர்களைச் சிறை வைத்ததுடன் விண்ணப்பமனுப்பிய அனைவருக்கும் ஆளுக்கு 500 இறைசால் குற்றப்பணம் தண்டமிறுக்கும்படி கட்டளையிட்டான். கத்தோலிக்க குருமாருக்குப்புகலிடமளிப்பதும், அச் சமய முறையில் பூசை செய்வதும் குழந்தைகளுக்கு அச்சமய முறையில் ஞானஸ்நானம் செய்விப்பதும் பாரதூரமான குற்றமென அறிக்கை வெளியிட்டான். ஆனால் இக்கட்டளைகளை நிறைவேற்றத்தக்க பொலீஸ், இராணுவம் முதலியன அவனிடம் இல்லை.

வாஸ் சுவாமியாரின் சேவையால் உண்மையான தேசீய திருச்சபை உதயமாயிற்று. ஆள்வோரின் ஆதரவை நம்பியிராது, விசவாசிகளின் ஆதரவை அடிப்படையாகக்கொண்டு வளர்ந்தது. வாஸ் சுவாமிகளின் ஒப்பற்ற சக்தியையும் அவரது அயரா உழைப்பையும் கண்டு ஆச்சரியமுற்ற அக்கால மக்கள் அவரைப் பற்றி அனேககதைகளைக் கூறுத் தொடங்கினர். காட்டுமிருகங்கள் அவரை ஒன்றும் செய்யமாட்டா@ டச்சுப்போர் வீரர்களிடையிற் புகுந்தும் அவர்களாற் கண்டு பிடிக்கப்படாமல் போகும் ஆற்றல் அவருக்கு உண்டு என்றெல்லாம் பல அற்புதங்களைப் பற்றிப் பேசினர். ஆனால் அத்திருச்பைத் தொண்டரோ தம்மைப்பற்றி மிகத் தாழ்வாகவே மதித்தார். ஒரு கடிதமேனும் அவர் சேவையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. யாதும் பேசாது, எழுதாது தன் கடமையிற் கண்ணும் கருத்துமாய் உலாவினார். அவருடன் கூடி வாழ்ந்த இரு குருமார் அவரை ஒரு அர்ச்சிய சிஷ்டர் என்றே கருதினர். அவர்களது கடிதங்கள் முதலியவற்றாலேயே வாஸ் சுவாமியாரது தொண்டுபற்றி நாம் அறியக் கூடியதாயிற்று. அவர் இறந்தபின் அவரது வரலாறு ஒன்று வெளியாயிற்று. பின் அவர் சேவைகளை இலங்கையர் மறந்துவிட்டனர்.

அவர் சமயப் பிரசாரத்துக்குக்கைக் கொண்டமுறைகள் நூதனமானவை. தேசீய வாழ்க்கை முறையும் பண்பாடும் அந்நிய மதம் ஒன்றைக் கடைப்பிடிப்பதால் பாதிக்கப்படமாட்டாதென்ற நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டினார். சுதேச மொழிகளைப்பயின்று தம் போதனையைச் செய்தார். தம் துணைவரான கொன்சால்வெஸ் சுவாமியாரைச் சிங்கள,தமிழ் மொழிகளைக்கற்றுப் பிரார்த்தனை நூல்களையும் மத சாஸ்திரங்களையும் எழுதும்படி தூண்டினார். 1711 - ல் வாஸ் சுவாமியார் இறந்தார்.

பிதா.யாக்கோமே கொன்சால்வெஸ்
(1676 - 1742)

வாஸ் சுவாமியாரைப் போலவே கொன்சால்வெஸ் சுவாமியாரும் கோவாவிற் பிறந்த கொங்கணப் பிராமணர். அங்குள்ள யேசுசபைக் கல்லூரியிற் கற்றுத் தலைசிறந்த மாணாக்கனெனப் புகழ் பெற்றார். அவா குடும்பத்தினர் எதிர்த்தும், அவர் திருச் சபையின் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்தார். பின் தத்துவ சாஸ்திரப் பேராசிரியர் பதவியை உதறித் தள்ளிவிட்டு வாஸ் சுவாமியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கைக்கு வந்தார். பிரயாணஞ் செய்த மூன்ற மாதத்திற்குள் தமிழ் கற்றார். மன்னாரில் சில காலம் சேவை செய்த பின் வாஸ் சுவாமியாரின் விருப்பப்படி கண்டிக்குச் சென்று சிங்கள மொழியை நன்கு கற்றார். அவா இயற்றிய செபங்கள், நல்லுரைகள் முதலியவற்றைச் சிறிது திருத்தினார். இரண்டு ஆண்டுகளின் பின் கம்மள என்னுமிடத்தில் வசித்துக்கொண்டு பன்னிரு சிங்கள இலிகிதர்களின் உதவியுடன் கத்தோலிக்கரின் தினசரி தேவைக்குரிய நூல்களைப் பிரதி செய்வித்தார். எழுதுவித்த ஏடுகளைக்கோவில்களுக்கு அனுப்பினார்.

2 - ம் விமலதர்ம சூரியன் இறந்தபோது, இவர் கண்டிக்கு அழைக்கப்பட்டுக். குருமாரின் தலைமைக் காரியாலயத்தில் வசிக்கலானார். பகலில் நூல்கள் இயற்றுவதும், இரவில் சிங்கள இலக்கியங்களை ஆராய்வதுமாகக் காலங் கழித்தார். கத்தோலிக்க மத உண்மைகளைக் கூறும் “உபதேசம்” என்ற நூலைச்சிங்களத்தில் எழுதினார். 1711 - ல் வாஸ் இறக்க, இவரது பொறுப்புக்கள் அதிகமாயின. மிக அதிக கத்தோலிக்கர் உள்ள நீர்கொழும்பும், கொழும்பும் அவர் பொறுப்பில் விடப்பட்டன. அக்கடமைகளிடையே அவர் பேனா கடினமாக உழைத்தது. “உபதேசம்” சி;ங்களத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டது. (1713) “தேவவேத புராணம்” என்ற விவிலிய வரலாற்றை உரை நடையில் எழுதினார். நானு}று பக்கம் கொண்ட அந்நூல் பின்னர் (1864 - ல்) அச்சிடப்பட்டது.

அக்கால வழக்கப்படி சமயத்தர்க்கங்களில் ஈடுபட்ட அவர் கண்டியிலுள்ள ஒரு அதிகாரியின் இல்லத்தில் ஒரு கல்வினீய (புரட்டஸ்தாந்து) மதத்தவருடன் வாதம் புரிந்தார். லூதர், கல்வின் ஆகியோரின் போதனைகளிலுள்ள குறைகளைச்சுட்டி ஒரு நூல் எழுதினார். அரசன் நரேந்திர சிங்கன் ஹங்குராங் கொடையிலுள்ள தன் அரண்மனையில் வாதம் நிகழ்த்தும்படி அழைத்தான் என்பர்.

கொன்சால்வெஸ் சுவாமியார் இயற்றிய “சுவிஷேவிஸர்ஜனம்” என்ற பைபிள் மொழி பெயர்ப்பை இன்று வரை கோவில்களிற் பயன்படுத்துகின்றனர். அதன் நடை ஒப்பற்றது. ஆனால் கல்லாதோரும் எளிதில் சுவைத்தற்குரியது. அதன் பின் பல மொழிபெயர்ப்புகள் வந்தன எனினும் இலக்கிய நடையில் அவை அதனுடன் ஒப்பிடத்தக்கவை அல்ல. “சிங்கள கத்தோலிக்க இலக்கியத்தின் பிதா” என அவர் புகழப்படுகிறார். அவரது பிற நூல்கள் பின்வருமாறு: (1) செய்யுள் நூல்கள்:- சுகிர்த தர்ப்பணம், ஞானஞ்சனம், துக்பிராப்திப் பிரசங்கம், மங்கன கீதம், பஷன் புத்தகம், வேதகாவியம்@ (2) உரைநடைநூல்கள் ஆனந்தக்களிப்பு, தர்மசரிஞ்ஞ, இரட்சணியம் பிரார்த்தனை மாலை (600 பக்கத்துக்குமேல்) சுகிர்தகுறள், (தமிழில்)

இறுதிவரை இலக்கியப்பணி புரிந்து வந்த கொன்சால்வெஸ் சுவாமியார் 1742 - ல், தமது 66 - ம் வயதில் போளவத்தையில் இறந்தார். அங்குள்ள கோவிலில் அவரது சமாதிக்கல் இன்றும் உளது.

டச்சுக்காரர் வெற்றி பெறாமைக்குக் காரணம்

டச்சுக்காரரின் மதம் இலங்கையிற் பரவமுடியாமைக்கு ஒரு காரணம் அது உருவ வழிபாடு, புறக் கிரியைகள். சடங்குகள் முதலியன சிறிதும் இன்றியிருந்தமையே. பௌத்த, இந்து மதத்தவர்கள் பாமர மக்களும் சமய வாழ்வில் பங்குபற்றும் முறையில் உருவ வழிபாடு, கிரியைகள் ஆகியவற்றைக் கைக்கொண்டனர். நிர்வாணம், குணங்குறியற்ற பரம்பொருள் என்னும் கற்பனைக்கு எட்டாத இலட்சியங்கள் இம்மதங்களின் உயர்ந்த போதனைகளில் காணப்பட்டாலும், அறிவில் கீழ்நிலையிலுள்ளவர்களும் ஆத்மீக நெறியில் படிப்படியாக முன்னேறத்தக்கதாக அவர்களின் சிற்றறிவுக்கு எட்டக்கூடிய குறியீடுகளையும், உட்பொருள் பொதிந்த உருவ வழிபாட்டையும் புறக்கிரியைகளையும் பேணி வந்தனர். கத்தோலிக்க மதத்தினரும் இதனை உணர்ந்து தம் வழிபாட்டிலும் இவற்றுக்கு இடமளித்தனர். ஆனால் கல்வினின் கடுமையான தர்க்கநெறிக்குட்பட்ட புரட்டஸ்தாந்து மதத்தை அநுசரித்த டச்சுக்காரரோ இவற்றைத் தூர விலக்கினர். இங்கு கத்தோலிக்கருக்கும் இந்து பௌத்த மதத்தினருக்கும் வேறுபாடில்லை என இகழ்ந்தனர். எனவே, அவர்களது வெறுங்கோவிலும் விவிலிய நூலும் கத்தோலிக்கரையேனும் இந்து பௌத்தரையேனும் வசீகரிக்க முடியவில்லை.

டச்சுக்காரர் மதமாற்றும் முயற்சிகளுக்குத் தடையாயிருந்த மற்றொரு விடயம் அவர்களுக்கும் சுதேச மக்களுக்குமிடையிலிருந்த தொடர்பாகும். அவர்கள் சுதேச மக்களிலும் தாம் மேம்பட்டவர்கள் என்ற தொனியில் அவர்களுடன் நெருங்கிப்பழகாமல் தனித்து வாழ்ந்தனர். (19 - ம் நூற்றாண்டிலேயே ஆசிய மக்களைக்கறீஸ்தவ சமயத்தில் சேர்த்து நாகரிக வாழ்வு அளித்தல் தம்கடன் என்ற கருத்து ஐரோப்பிய கீறீஸ்தவரிடத்தில் எழுந்தது) அக்காலத்திற்றான் டச்சுக்காரர் ஆசியாவில் அரசியல் ஆதிக்கம் பெறலாயினர். ஆகையால் சமமாகப்பழகும் வாணிகத் தொடர்பு குன்றி, டச்சுக்காரர் ஆள்வோரையும், ஆசியர் ஆளப்படுவோரையும் ஏற்றத்தாழ்வு நிலை ஆண்டான் - அடிமைத் தொடர்பு - ஏற்படலாயிற்று. இம் மாற்றம் காரணமாக, அவர்கள் சுதேசகளுடன் நெருங்கிப்பழகி, அவர்களைத் தம்முடன் மோட்சப் பாதையில் இட்டுச் செல்லத் தவறிவிட்டனர்.

சமயம் பரப்பும் விஷயத்தில் ஒரு நிரந்தரமான கொள்கை இன்மையால் சந்தர்ப்பத்துக்கேற்றபடி, தம் அரசியலுக்குப் பாதகமில்லாத வகையில் டச்சுக்காரர் கரும மாற்றி வந்தனர். சுருக்கக் கூறினால் அவர்களது சமயக்கொள்கை (1) சனங்களின் சமூக வாழ்வில் கூடிய வரை தலையிடாதிருப்பது. (2) அவர்களது பகிரங்க வழிபாட்டைக் கிராமப் புறங்களில் மட்டும் நடைபெற அனுமதிப்பது என்ற இரு விடயங்களை உள்ளடக்கியது. எனவே, டச்சுக் கிறீஸ்தவ நாகரிகத்தின் கோட்டைகளாக விளங்கிய நகரங்களை விட, நாடெங்கிலும் சுதேச சமய விடயங்கள் ஒருவாறு நடைபெற்றே வந்தன. யாழ்ப்பாணத்திலுள்;ள சேணியர் ஒரு இந்து தேவாலயம் கட்ட அனுமதி கேட்ட போது டச்ச அதிகாரிகள் அதை மறுத்தனர். காரணம் பட்டினத்தில் வாழும் கிறீஸ்தவர்கள் அதனால் கவரப் பட்டு விடுவர் என்பதே. இந்து பௌத்த விழா ஒன்று அதிக சத்தத்தை உண்டாக்கினால். அன்றேல் அயற் பக்கத்தில் அதிகமான ஆட்களின் கவனத்தைக் கவர்ந்தால், உடனே அதை நிறுத்திச் சனக் கூட்டத்தைக்கலைத்து விடுவர். சுதேசிகளின் மதம் உயிர்த் துடிப்புள்ளது எனப்பிறர் அறியலாகாது தமக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் அவர்கள் தம் மதத்தை அநுட்டிக்கலாம் என்பதே டச்சக்காரரின் கருத்து.

டச்சுப் பாதிரிமார் தம் மதத்துக்கு மாறானவற்றைத் தடுத்துச் சட்டமியற்றும்படி அரசாங்கத்தைக் கோரிவந்தனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு இணங்கவில்லை. டச்சு ஆட்சி உள்நாட்டில் பரவியபோது, அவர்கள் மேலும் அதிக சமய சகிப்புத்தன்மை காட்ட வேண்;டியதாயிற்று. அங்குள்ளார் பௌத்த சமயத்தில் மிக்க பற்றுடையோராய்ப் பிற மதங்களின் தாக்கத்தை முன் ஒருபோதும் உணராதிருந்தனர். மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பிரதேசத்தைத் தமக்கு உரிமையாக்கிய போது டச்சுகாரர் அங்குள்ளாரது மதத்தையும் கோவில்களையும் காப்பதாக வாக்குறுதியளித்தனர். எனவே, சமய விடயங்களில் வெகு கவனமாக நடக்க வேண்டியிருந்தது. அன்றியும் மறைமுக ஆட்சியிலிருந்த அப்பகுதியில் சமயம் பரப்பும் காரியத்தைத்தொடங்கவே முடியவில்லை.

இந்து - பௌத்த மதத்தவர் இவர்களது மதம் பரப்பும் முயற்சியால் எவ்வாறு பாதிக்கப்பட்டனர். என்ன கருதினர் என்பதை நன்கு அறியும் வாய்ப்பு நமக்கு இல்லை. இம்மதங்கள் ஓரளவு சக்தி வாய்ந்தனவாக இருந்தன என்றே கருதலாம். பௌத்த அரசு மலை நாட்டில் இருந்தமையால் அம்மதம் கௌரவமுடையதாயும் அரச ஆதரவில் வளர்வதாயும் இருந்தது. இந்து மதம் மக்களின் அபிமானத்தால் மட்டுமே வளர்ந்தது. போர்த்துக்கேயரின் இறுதிக்காலச் செயல்கள், முக்கியமாகத் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோணமலைக் கோவிலை டீ சா உடைத்தமை, அவர்களிடையே புத்துணர்ச்சியையும் மத அபிமானத்தையும் தோற்றுவித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பும் போக்குவரவும் இருந்தமையாலும் அங்கு சைவம் வளர்த்த மடங்களின் தொடர்பாலும் ஈழத்தமிழரின் மதவுண்ர்ச்சி மங்காது ஓங்கியது. அவர்கள் கிறீஸ்தவ போதகர்கள் அஞ்ஞானிகளை மனந்திருப்பச்செய்த பிரசங்கங்களில் கடினமான கேள்விகளைக் கேட்டனர் எனப் பால்டேயஸ் குறிப்பிடுகிறார். மாமிச உணவுக்கும் மதுபானத்துக்கும் எதிராகக் கூறப்பட்ட கருத்துக்களை நோக்குமிடத்துப் பல மதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் முறையும் தொடங்கியது என ஊசிக்கலாம். கிறீஸ்தவர்களான பின்பும் சில வகையான மாமிசத்தை உண்ணவும், மது அருந்தவும் விரும்பாதவர்கள் பலரைக் கண்டு கிறீஸ்தவ பாதரியார் அதிசயமடைந்தார்.

அவர்களில் ஓரிருவர் இந்து - பௌத்த மதங்களைப் படிக்க முயன்றனர் எனினும் பாமர மக்களிடையே வழங்கிய புனைகதைகளையும் வழக்கங்களையுமே இச் சமயங்கள்எனக் கருதி ஆராய்ந்தனரேயன்றி இவற்றின் மூலநூல்களையோ தத்துவ ஞான அத்திவாரங்களையோ ஆராயத் தவறிவிட்டனர். அதனால் அவர்களும் அவர்கள் நூல்களை வாசித்தோரும் இம் மதங்களைச்சரியாக உணரத் தவறினர் ஆனால் 18 - ம் நூற்றாண்டில் வலன்ரைன் என்ற பாதிரியார் கீழ் நாடுகள் பற்றித் தாம் எழுதிய 5 பாகமுள்ள பெரு நூலில் பௌத்த ஜாதகக்கதைகள், வடமொழியிலுள்ள சாஸ்திரங்கள், தமிழ் அறநூல்கள் ஆகியவற்றிலிருந்து இந் நாட்டுச்சிறார் படிக்கும் நீதி நெறி பற்றிய கருத்துக்களை மொழி பெயர்த்தார். இதன் பயனாக கருத்துக்களை மொழி பெயர்த்தார். இதன் பயனாக ஐரோப்பிய குருமார் சுதேச சமூகங்களைப் பற்றிக் கொண்ட கீழ்த்தரமான கருத்து மாறத் தொடங்கியது.

வான்கோயன்ஸ் பிற்கால ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகளைப் போலக். கிறீஸ்தவர்களாகிய டச்சுக்காரர் காட்டு மிராண்டிகளான சுதேசிகளைக்கிறீஸ்ததவர்களாக்கி நாகரிகமடையச் செய்யவேண்டிய கடப்பாடு உடையவர்கள் என வாதித்தான். அதன் பொருட்டே கண்டியரசு அழிக்கப்பட வேண்டும் என்றான். ஆனால் இக் கருத்தை மேலதிகாரிகள் ஏற்கவில்லை. அவர்கள் வீண் சங்கடங்களை விலைக்கு வாங்க விரும்பாது சாத ஆசாரம் முதலியவற்றை அப்படியே விட்டு வைத்தனர். அத்துறையில் ஏதாயினும் அற்ப மாறுதல் செய்யினும் மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அதனால் மாறுதல்கள் கைவிடப்பட்டன. ஆனாலும் அந்நியரான ஆட்சியாளர் சாகிக் கட்டுப்பாட்டின் நுட்பமான அம்சங்களைப் பராமுகஞ்செய்து, அதன் வீழ்ச்சிக்கு மறைமுகமாக வழிகோலினர். கிறீஸ்தவ சமயத்தை ஏற்றவர்கள் தமது இனத்தாரிடமிருந்து விலகி டச்சுக்காரர் பக்கம் சார்ந்தனர். அவர்களது வாழ்க்கை முறையும் தம் எஜமானர்களது வாழ்க்கையைப் பின்பற்றி மாறத் தொடங்கியது. ஆயினும் டச்சு ஆட்சியின் கீழ் சமுதாய மாற்றம் பொருளாதார காரணங்களால் ஏற்பட்டதேயன்றி அவர்களது சமயத்தின் தாக்கத்தால் ஏற்பட்டதன்று. கிறீஸ்தவ மதத்தின் தாக்கமோ மிகச் சிறிய அளவிலேயே ஏற்ப்பட்டது. ஏனெனில், சில சமய தத்துவங்களைப் படமாக்கி ஒப்புவிக்கும் அளவிலேயே அவர்களது சமயப் பணி நின்றது. அதனால் மக்கள் வாழ்வில் பெரு மாறுதல்கள் ஏதும் நிகழவில்லை. உயர்தரக்கல்வியளித்து, கற்றறிந்த மக்களின் மனத்திற் புதிய கருத்துக்களை வளர்த்த பின்னரே, அந்நிலை மாறிற்று. அதனால் புதிய கருத்துகள் முளைகொண்டன. 17 - ம் நூற்;;றாண்டின் இறுதியில் இரு கலாசாலைகள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அமைக்கப்பட்டமை முக்கியமான விளைவுகளை உண்டாக்கியது. அதன் பயன் 18 - ம் நூற்றாண்டில் ஏற்பட்டது.

பின் இணைப்பு

வண. பிலிப்ஸ் பால்;டேயஸ்

இலங்கை புரட்டஸ்தாந்து கிறீஸ்தவ மத வரலாற்றில் பால்டேயஸ் ஒரு முக்கிய இடம் வகிக்கிறார். அம்மதத்தை இலங்கையில் வேரூன்றச் செய்தற்குரிய ஆரம்ப வேலைகள் அவர் பொறுப்பேற்றுச் செய்தார்.

அம்ஸ்ரர்டாம் நகரில் சமயக்கல்வி கற்று முடிந்ததும், 1654 - ல் 21 வயதில் ஒரு பாதிரியாராகிய அவர் இரண்ட ஆண்டுகளுக்குள் கம்பனியின் சேவையிற் சேர்ந்து கீழ் நாடுகளுக்கு வந்தார். முதலிம் காலியில் தங்கியிருந்து படை வீரருக்குப் பாதிரியாராயினார். தூத்துக்குடி, நாகபட்டினம், மன்னார், யாழ்ப்பாணம் முதலியன வீழ்ச்சியடைந்த போது, இவரும் படைவீரருடன் சென்று ஆங்காங்குள்ள கத்தோலிக்க தேவாலயங்களைப் பொறுப்பேற்றுப் புரட்டஸ்தாந்து கோவில்களாக்கினார்.

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் அப்போது ஒரு இலட்சம் கத்தோலிக்கர்வரையில் இருந்தனர். அவர்கள் வழிபடுதற்குப் பிரமாண்டமான கோவில்கள் சிலவும், ஓலைக் குடிசைக் கோவில்கள் பலவும் இருந்தன. அவர்கள் மீண்டும் சுதேச மதங்களைத் தழுவாமல் பார்த்துக் கொள்வதோடு, அவர்களது சமய ஸ்தாபனங்களையும் நன்றாகப் பயன்படுத்தல் வேண்டுமன்றோ? இப்பணிகளை நிறைவேற்றும் பொருட்டு 1658- ன் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் முக்கிய பாதிரியாராகப் பால்டேயஸ் நியமிக்கப்பட்டார்.

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுமார் அரை இலட்சம் கத்தோலிக்கரும், 150 கோவில்களும் இருந்தன. இவர்களைப் புரட்டஸ்தாந்து மதக் கொள்கைகளுக்கு மாற்றுவது எளிதன்று. புரட்டஸ்தாந்து வழிபாட்டு முறை சுதேச மதங்களுக்கும் கத்தோலிக்க மதத்துக்கும் முற்றிலும் மாறுபட்டது. கத்தோலிக்க மதத்தைத் தென் ஆசிய நாடுகளிற் பரப்புதற்குப் புனித பிரான்ஸிஸ் சேவியர், டீ நொபிலி போன்றோர் கண்டுபிடித்த புதுப்புது முறைகளைப் போலப் புரட்டஸ்தாந்தியர் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்தியக் கரையோரத்தில் வாழ்ந்தோரிடையிலும் சமயப்பணி செய்யும் பொறுப்பு பால்டேயஸிடமே விடப்பட்டது. அங்கு கத்தோலிக்க குருமாரைத் தடைசெய்ய இயலவில்லை. அதனால் அப்பிரதேச மக்களும் சமயப்பற்று நீங்காது, பால்டேயஸின் சேவைக்குச் சற்றும் இடமின்றிச் செய்தனர். இலங்கையில் குருமார் தடை செய்யப்பட்டமையால் அவரது பணி எளிதாயிற்று.

யாழ்ப்பாணத்துக் கோட்டையில் வசித்த டச்சுக்காரரின் சமயத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு திருப்தியுடன் இருக்க விரும்பாத பால்டேயஸ் தமிழைக் கற்று மக்களுடன் பழகி அவர்களுக்குப் போதிக்க விரும்பினார். போர்த்துக்கேய மொழி மூலம் தமிழ் கற்றார். கத்தோலிக்கரின் சமய அறிவு ஆழமானது அன்று. அவர்களுக்கும் பிறருக்கும் பயன்படுமாறு வினாவிடை வடிவில் தம்மதத்தின் சாரத்தைத் திரட்டினார். பின் இது நாடெங்கும சிங்கள தமிழ் மொமிகளில் வெளியிடப்பட்டது.

ஆயினும் அவரது தமிழறிவு நன்கு வளரவில்லை. அதனால் மக்களுடன் பழகி அவர்களது பழக்க வழக்கங்களை உணரும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிறீஸ்தவர்கள் கூடப் புராதன விவாகச் சடங்குகள் பலவற்;றைப் பின்பற்றுவது (உ-ம் தாலி கட்டும் வழக்கம்) அவருக்குவியப்பை அளித்தது. மக்கள் சைவ உணவை உண்பது ஏன் என அவரால் விளக்கிக் கொள்ள முடியவில்லை.

கல்வித்துறையில் அவர் கவனம் சென்றது. ஒவ்வொரு கோவிலை யடுத்தும் ஒருபாடசாலை இருந்தது. அங்கு எழுத்து. வாசிப்பு, கணக்குடன் சமய போதனையும் செய்து, இளம் உள்ளங்களைக் கிறீஸ்து சமயத்துக்குத் திருப்பப்பெரிதும் முயன்றார். யாழ்ப்பாண இராச்சியத்தில் இருந்த 80 பாடசாலைகளில், 18,000 சிறுவர் கல்வி கற்றனர். இவற்றுக்குக் கம்பனியின் செலவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென அவர் அரசாங்கத்தைக் கேட்டார்.ஆனால் அரசாங்கம் சம்மதத்திலது.

இலங்கை முழுவதிலும் உள்ள பாதிரிமார் சமயப் பிரசார முறை பற்றிக்கூடி யோசித்து ஒரே விதமான கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனக் கண்டார். 1659 - ல் கொழும்பில் பாதிரிமார் அவை ஒன்று கூடியது. அதில் பாதிரிமார் கடமைகள்,திருச்சபை நிர்வாகம் முதலிய விடயங்கள் பற்றிச் சில முடிவுகள் செய்யப்பட்டன. ஆனால் அவற்;றைப் பட்டேவிய அரசாங்கம் அங்கீகரித்திலது. சமய விடயங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரித்தது. இதனை விரும்பாத பால்டேயஸ் தம் பதவியை ஓராண்டுக்குப்பின் துறப்பதாக அறித்தார். ஆனால் தம் கட்டளைக்கு அமையவில்லை என்ற காரணத்தால் தேசாதிபதியும் ஆலோசனைச் சபையினரும் அவரை 1665 இறுதியில் இலங்கையினின்றும் அனுப்பி விட்டனர்.

அவர் எழுதியநூலில் தம் காலத்தில் லௌகிக வாழ்க்கை மிகுந்து, சமய ஆர்வம் குன்றி விட்டதைச் சுட்டியுள்ளார். ஆனால் தாம் வாழ்ந்த பகுதிகளான தென்னிந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள மக்களைப் பற்றி எழுதியவை பூரண அறிவுடனும் அனுதாபத்துடனும் எழுதப்பட்டவை அல்ல. 1672 - ல் டச்சு மொழியில் வெளியிடப்பட்ட அந்நூல் சரித்திரத் தொடர்பு, டச்சுக்காரரின் மதம் பரப்பும் முயற்சிகளை ஆகியவை பற்றி விரிவாகக்கூறுகின்றது. அதில்; இலங்கையைப் பற்றி பகுதி “இலங்கைப் பெருந் தீவின் வருணனை” என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது.

வினாக்கள்

1. மதம் பரப்பும் விடயத்தில் போர்த்துக்கேயர் வெற்றி பெறவும் டச்சுக்காரர் தோல்வியுறவும் காரணமென்ன?

* “யு னுநளஉசipவழைn ழக வாந புசநயவ ஐளடயனெ ழக ஊநலழn” டில சுநஎநசநனெ Phடைippரள டீயடனயநரள.

பதினாறாம் அத்தியாயம்

போர்த்துக்கேயர் காலக் கல்வி நிலை

பிரான்ஸிஸ் சபைக் குருமாரின் சேவை

பழைய கால முதல் பௌத்த குருமார் சமயத்துடன் கல்வியையும் மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தர்மபாலன் கிறீஸ்தவனானபின், அம்மதமே அரசாங்க மதமாயிற்று. பௌத்த கோவில்களுக்குரிய வருமானம் பறிக்கப்பட்டது. கோவிலை ஒட்டியிருந்த கல்வி நிலையங்கள் சோர்வுற்றன. பௌத்த கோவில் வருமானத்தைத் தமதாக்கிக் கொண்ட கிறீஸ்தவ குருமார் கல்விப் பணியிலும் ஈடுபட்டனர்.

தொடக்க காலத்தில் இலங்கையில் மதப் பிரசாரம் செய்த பிரான்சிஸ் சபைக் குருமார் கோட்டை இராச்சியத்தில் கோவில்களை அடுத்துப் பாடசாலைகளை நிறுவினர். யாழ்ப்பாணத்தில் 25 பாடசாலைகள் இருந்தன. கொழும்பு, நவகமுவ, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மூன்று கல்லூரிகளும், ஓர் ஆசிரிய பயிற்சிக்கல்லூரியும், (கொழும்பு) முகத்துவாரத்தில் ஓர் அநாதைச்சாலையும் அமைக்கப்பட்டன. கல்லூரிகள் ஐரோப்பிய மடங்களை ஒத்தவை. சமயம், வாசிப்பு, எழுத்து, இசை. இலத்தீன், நற்பழக்கம் என்பன போதிக்கப்பட்டன. கிறீஸ்தவ சமயப் பெற்றோரின் பிள்ளைகள் இங்கு கல்விபயின்றனர். பிறரும் சில சமயம் இடம் பெற்றனர். கல்வி நிலையங்களுக்கு அரசாங்க ஆதரவு இருந்தது. ஆனால் பௌத்த சமய ஸ்தானங்களின் நிலங்களைப் பறித்து இவற்றுக்குக் கொடுத்தமையால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து பல தொல்லைகளைக் கொடுத்தனர். தர்மபாலனின் மரணத்தின்பின் நிலங்கள் சட்டப்படி கிறீஸ்தவ குருமாருக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் போர்த்துக்கேய அதிகாரிகள் பொருளாசையால் குருமாரிடமிருந்து நிலத்தின் வருவாயை அபகரித்து, அவர்களது கல்விப்பணிக்கு இடையூறு செய்தனர்.

போர்த்துக்கலிலிருந்து இலங்கையின் கல்விப்பணியைத் தீவிரப்படுத்துமாறு கட்டளை வந்தது. ஆனால் பிரான்சிஸ் சபைக் குருமார் இப்பணிக்குத் தகுதியற்றவர்கள் என்ற கருத்து வர்த்தக முறையில் அஸெவெடோ நடந்தான். அவனது நிர்வாகம் திறமையற்றது எனக் குருமார் போர்த்துக்கல்லுக்கு எழுதினமையால் ஆத்திரமடைந்திருப்பான். அவனது சகோதரர் யேசு சபைக் குருவாயிருந்தார். கொச்சின் மேற்றிராணியாரும் யேசு சபையே இலங்கைக்கு வேண்டுமெனக் கருதினார். இந்தியாவில் பல கல்லூரிகளைத் திறம்பட நடத்திய யேசுசபை இலங்கையிலும் நல்ல சேவை புரியும் எனக் கருதப்பட்டது.

யேசு சபைக் குருமாரின் சேவை

1602 - ல் யேசு சபைக் குருமார் இலங்கைக்கு வந்தனர். முதலில் கொழும்பில் ஒரு ஆரம்ப பாடசாலையை ஸ்தாபித்து ஒரு குரு கல்விப்பணிபுரியலானார். இலத்தீன் வகுப்புக்களை நடாத்தினார். இவை மக்களிடையே பிரபலமடைந்தன. 1610 - ல் குருமார் கல்விப் பணிபுரியலாயினர். போர்த்துக்கேய மொழியை எழுதவும் வாசிக்கவும்பயிற்றினர். சமயபோதனை முக்கிய இடம் வகித்தது. கோவில் வழிபாட்டுக்கு அங்கம் என்ற காரணத்தால் மேனாட்டு இசையும் கற்பிக்கப்பட்டது. மேல் வகுப்புக்களில் இலத்தீன் இடம் பெற்றது. 1620 அளவில் உயர்தர சமய சாஸ்திரமும் போதிக்கப்படலாயிற்று. பெரும்பாலும் போர்த்துக்கேயப் பிள்ளைகளே இங்கு கற்றனர்.

கம்மளத்தில் 1612 - ல் தொடங்கிய பாடசாலையில் முற்கூறியவற்றுடன் தமிழும் கற்பித்தனர். சுதேசிகளும் இங்கு கல்வி பெற்றனர். படிப்படியாகக் கோவில்களிருக்கு மிடங்கள் பலவற்றில் பாடசாலைகள் தோன்றின. யாழ்ப்பாணத்தில் 12ம் மன்னாரில் 14ம் எழுந்தன. 1622 அளவில் யாழ்ப்பாணத்திலும் காலியிலும் கலாசாலைகள் அமைக்கப்பட்டன. டொமினிக்சபைக்குருமாரும் ஒரு கலாசாலை நடத்தினர் என அறிகிறோம்.

சமய வகுப்புகள் கோவில்களில் நடாத்தப்பட்டன. வடமொழியும் தமிழ்மொழியும் தமிழ் முதலிய பிற இந்திய மொழிகளும் கற்பிக்கும் உயர் கல்விக்கழகம் ஒன்றை மன்னாரில் தொடங்கும் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. அது அக் கரையில் புன்னைக்காயலில் அமைக்கப்பட்டது. அங்கேயே முதன் முதலில் அச்சுக்கூடம் வைத்துத் தமிழ் நூல்களை யேசுசபைக் குருமார் அச்சிட்டனர்.

இவர்கள் கல்வித்துறையில் நாடகம், இசை ஆகியவை முக்கிய இடம்பெற வேண்டுமெனக் கருதினர். சமயக் கருத்துக்களை இந்த இன்பியற் கலைகள்மூலம் எளிதிற் பரப்பலாம் எனக் கண்டனர். பிரார்த்தனைக் கீதங்கள் கோவில்களிற் பாடப்பட்டன. சமய சம்பந்தமான நாடகங்கள் எழுதப்பட்டன. கோவில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவினிறுதியில் இந்நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. நாட்டுக்கூத்து என்ற வகையைச்சார்ந்த இவை பாமர மக்களிடையே (பொழுதுபோக்குடன்) சமயக் கொள்கைகளைப் பரப்பவும் உதவின. தமிழறிவுடன், கிறீஸ்தவ கதைகளை நன்கு கற்றவர்கள் இவற்றை ஆக்குமாறு தூண்டப்பட்டனர்.

அச்சிற் பதிக்கப்பட்ட புத்தகங்கள் அதிகம் கிடைக்காத காலம் ஆகையால் படித்தவற்றை மனனம் செய்யும் முறை யேசு சபைக் கல்லூரிகளிலும் முக்கிய இடம்பெற்றது.

மேலைநாட்டுக் கல்வி முறையை இலங்கையிற் புகுத்திய போர்த்துக்கேயரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே பின் வந்த இரு ஐரோப்பிய வல்லரசுகளும் தம் கல்வி முறையை வகுத்தன. அதன் முக்கிய அம்சங்கள் மூன்றாகும் :-

1. குருமாரே கல்விக்குப் பொறப்பாளராயிருந்தமை
2. சமயமே கல்வியில் முக்கிய இடம் பெறல்
3. ஆள்வோரது மொழி மூலமே கல்வி போதிக்கப்பட்டமை. (சுதேச மொழிக்குச் சொற்ப இடமே)

இவை கூடியும் குறைந்தும் அடுத்த மூன்று நூற்றாண்டுகள் வரை இலங்கையின் கல்வி முறையில் நிலை பெற்றிருந்தன.

யேசு சபைக் குருமார் சுதேச மொழிகளைக் கற்று, அவற்றுக்கு மேல் நாட்டு ரீதியில் இலக்கணம், அகராதி முதலியவற்றை ஆக்கினர். நவீன சிங்கள இலக்கண நூல்களிரண்டை டீ கொஸ்தா, போர்கோய்ம் என்ற இருகுருமார் இயற்றினர். இவர்களும் புறு}னோ என்பவருமே சிங்கள, தமிழ் நூல்களை எழுதிய முதல் ஐரோப்பியர். ஐரோப்பிய நூல்களை இம்மொழிகளில் மொழிபெயர்த்தனர். சிங்களத்தில் கவிதை எழுதினர். இலங்கையின் புராதனச் சிறப்பை ஆராய்ந்தோரும், அனுராதபுரத்தில் காணப்பட்ட அழிவுகளை அவதானித்தோரும், மகாவம்சம் முதலிய பழைய நூல்களை வரலாற்றுக் கல்விக்காக நோக்கியவரும் குருமாரே. இலங்கைக் குகைக்கல் வெட்டுக்களைப் பற்றி முதலில் எழுதியவர் பிரான்சிஸ் நீகிறோ என்ற பிரான்சிஸ் சபைக் குரு. கீழ் நாட்டுப் பரம்பரைக்கதைகளுக்கும் மேனாட்டுக் கதைகளுக்கும் ஒப்புமை கண்டவர் பேதுரு பிரான்சிஸ்கோ என்ற யேசு சபைக் குரு. போர்த்துக்கேயர் கால வரலாற்றை எழுதி வைத்தவரும் யேசு சபைக் குரவரே. எனவே, இலங்கையர் தம் பழம் பெருமையை உணர்வதற்கும், மேனாட்டார் கீழைத்தேய மொழி, மதம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி மேலும்ஆராயவும் வழி காட்டியவர்கள் குருமாரே.

பிரான்சிஸ் சபைக்குருமார் தர்மபாலனுடைய கல்விக்குப் பொறுப்பாயிருந்தனர் என்பதில் நூதனமில்லை@ அதற்கு அரசியற் காரணங்களிருந்தன எனக்காரணம் கூறலாம். ஆனால் அவர்களது எளிய வாழ்வும் சேவையும் கண்டியரசன் சேனரதனை வசீகரித்தன. 1623 - ல் எழுதிய கடிதமொன்றில் அவர்களுக்குச் சூட்டிய புகழ் மாலையைக் குவேய்றோஸ் பின்வருமாறு தந்துள்ளார் :-

“இக்கிறீஸ்தவமதத்தைப் பரிபாலனம் செய்தற்கு, வறுமையை ஆபரணமாகக் கொண்ட இவர்களே தகுதி வாய்ந்தவர்கள். நாம் “அஞ்ஞானி”கள் எனினும், இவ்வுலகச் செல்வத்தையும், பொருட்களையும் புறக்கணித்தலே (துறவிகளுக்கு) மாண்பு தரும் என நாம் அறிவோம்”

அவன் அவர்களை வாய்ச் சொல்லால் புகழ்ந்ததோடமையாது, போர்த்துக்கேயருடன் சமாதானம் செய்தபின், அவர்களில் ஒரு குரு கண்டியில் வசித்துத் தன் பிள்ளைகளுக்குக் கல்வி போதிக்க வேண்டும் எனக் கேட்டான். பிதா பிரான்சிஸ் நீக்றோ ஒன்பது ஆண்டுகள் கண்டியில் வாழ்ந்து அரசனது ஆண், பெண் குழந்;தைகளுக்குப் போர்த்துக்கேயம், இத்தாலியம், இலத்தீன் ஆகிய மொழிகளையும் அரசகுருமாருக்குரிய விசேட பயிற்சிகளையும் அளித்தான். அக்காலத்தில் அவர் பெற்ற அனுபவமே இலங்கையைப்பற்றிப் பல செய்திகளைச் சேகரித்து எழுத வாய்ப்பளித்தது. அவர் எழுதியவற்றைக் குவேய்றோல் தம் நூலிற் சேர்த்துள்ளார்.

குருமாரின் சமூக சேவை

குருமாரிடம் சமூகத்தின் கல்விப் பொறுப்பு மட்டுமன்றிப் பிற சமூக சேவைகளும் விடப்பட்டன. முகத்துவாரத்தில் நிறுவப்பட்ட அநாதைசாலை பற்றி முன்னர் கண்டோம். 1596 - க்கும் 1599 - க்கும் மிடையில் ஒரு வைத்தியசாலையும் கொழும்பில் தொடங்கப்பட்டது. ஆஸ்பத்திரிக் கட்டடம் கட்டும் வரை பிரான்ஸிஸ் சபை மடத்திலேயே நோயாளர் சிகிச்சை பெற்றனர். பிரான்சிஸ் சபைக் குருமாரே அரசாங்கம் அளிக்கும் நன்கொடையுடன் அதனை நடாத்தினர். யேசுசபைக் குருமாரும் தாம் சமயப் பணியுரியுமிடங்களில் நோயாளர்க்குச்சிகிச்சை செய்தலையும் மேற்கொண்டனர். கற்பிட்டியில் ஒருமுறை வியாதி பரவியபோது மருந்துடன், உணவும், உடையும் கூட வழங்கினர். தானங்களுட் சிறந்த வித்தியா தானத்துடன், மருந்தும்,உணவும் அளித்து உயிர் கொடுத்தமையால் குருமாருக்கு மக்களிடையே செல்வாக்குப் பெருகியது. புத்த சமயத்தவரும் புத்தரின் போதணையான,

“எவன் நோயாளரைப் பேணுகிறானோ
அவன் என்னைப் பேணியவனாவான்”

என்பதை இவ்வந்நியர் செய்கையிற் காட்டுகின்றனரே என இவர்கள்பால் மதிப்பு வைத்தனர். குருமாரின் சமயப் பணிக்கு இவையெல்லாம் கைகொடுத்து உதவின என்பதைக் கூறவும் வேண்டுமா?

பதினேழாம் அத்தியாயம்

டச்சுக்காரர் காலக் கல்வி வளர்ச்சி

போர்த்துக்கேயரிடமிருந்து சிற்சில பகுதிகளைப் பிடித்த காலத்திலேயே டச்சுக்காரர் நம்பிரதேசத்தில் வாழ்வோர் பரம்பரையான மூடக் கொள்கைகளைப் பின் பற்றாது விடவும். கண்டியரசன்மீது விசுவாசம் வைக்காதிருக்கவும், போர்த்துக்கேயர் அளித்த ‘பிழையான’ கறீஸ்தவ நெறியிற் சென்று, அவர்கள் பால் விசுவாசம் வைத்து அவர்களுக்கு அரசியலில் ஆதரவு அளிக்காதிருக்கவும் ஒரே வழி அவர்களைப்புரட்டஸ்தாந்துமதத்திற்கு ஈர்ப்பதே எனக் கண்டனர். மற்சூய்க்கர் இதனை உணர்ந்து, 1650 லேயே 16 பாடசாலைகளை நடாத்த வழி செய்தான்.

1658 - ல் வடபகுதியைக் கைப்பற்றியபின் டச்சுக்காரர் பாடசாலைகள் மூலம் தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதன் அவசியத்தை மேலும் உணர்ந்தனர். மன்னாரில் கலகம் செய்து, போர்த்துக்கேயரை மீண்டும் வரவழைக்கச் செய்த சதி அவர்கள் கண்களைத் திறந்தது. முதியோரின் ‘மூளையைக்கழுவி’த் தம் பக்கம் திருப்புவது கடினம். ஆகையால் வளரும் சந்ததியையாயினும் தம் பக்கம் சாய்க்க வேண்டும் எனத் தீர்மானித்தனர். யாழ்ப்பாணத்தில் 34 பாடசாலைகளும், மன்னாரில் பதினான்கும் நிறுவப்பட்டன. பெற்றோர் பிள்ளைகளைக் கட்டாயம் பாடசாலைக்கு அனுப்புமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அனுப்பாதோர் குற்றப்பணம் கட்டவேண்டும். (இத்தொகையே ஆசிரியர்களுக்கு வேதனமாகும்) இதற்கு அஞ்சிய பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பினர். யாழ்ப்பாணப் பகுதியில் மட்டும் இருபதினாயிரம் சிறுவர்கள் பள்ளிக்கூடம் சென்றனர் என அறிகிறோம். ஆயினும் வாணிக நோக்கம் கொண்ட கம்பனியார் கல்விக்குத் தம் வருமானத்திலிருந்து ஒரு பணமேனும் செலவிட்டிலர். குற்றப்பணம் சேர்த்;தல் பொதுசனங்களுக்குப் பெருந்துன்பத்தை விளைவித்தது. மேலும், அது போதாது ஆகையால், ஆசிரியர்க்கு மேலதிக வருமானம் கிடைக்கும் பொருட்டு அவர்களே தோம் எழுதுபராயும் விவாக, பிறப்பு, இறப்புப் பதிவாளராயும் நியமிக்கப்பட்டனர். இச்சேவைகளாற் கிடைக்கும் ஊதியம் அவர்களுக்கென்று விடப்பட்டது. இக்காலத்திலிருந்தே இலங்கைக் கிராம வாழ்க்கையில் மிகச் சமீப காலம் ஆசிரியர்கள் சகல துறைகளிலுல் முக்கிய இடம் வகித்து வரலாயினர்.

சமய நிறுவனத்து அங்கமாகக் கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகிய பகுதிகளுக்கெனத் தனித்தனி பாடசாலைக் கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசாதிபதி இக்கமிஷனின் அங்கத்தவர்களை நியமித்தான். இதில் அங்கம் வகிப்போருள் திசாவை தலைவனாவன். பாதிரியாரும் மூன்று அல்லது நான்கு சிவில், இராணுவ அதிகாரிகளும் இடம் பெற்றனர். இக் குழுக்கள் பாடசாலைகளை மேற்பார்வை செய்வதுடன் சுதேச கிறீஸ்தவர் சமூகத்தோடு

1750 - ல் நீர்கொழும்பிலுள்ள உறோமன் கத்தோலிக்கப் பெற்றோர் தமிழில் ஒரு விண்ணபம் எழுதி டச்சுக்காரரிடம் சமர்ப்பித்தனர். அதில் இருநூறு ஆண்டுகள் வரையில் தாம் பின்பற்றி வரும் சமயத்தைத் தாம் உயிரினும் மேலாக மதிப்பதாயும் தமது பிள்ளைகளைப் புறமதம் போதிக்கும் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு வற்புறுத்துவதும் பெருந்தொகையைக் குற்றப் பணமாக வசூலிப்பதும் முறையற்ற செயல் என்றும் எழுதினர்.

தொடர்புடைய பல விடயங்களைக் கவனிக்கும்@ தோம்பு எழுதி வைப்போர், ஆசிரியர் ஆகியோரை நியமிக்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் சச்சரவுகளையும் தீர்த்து வைக்கும். இதன் பிரதிநிதிகள் இருவர் ஆண்டுதோறும் பாடசாலைகளைத் தரிசித்துப் பரீட்சைகளை நடாத்துவர். மாணவரின் தராதரத்தை நிர்ணயிப்பர். உள்@ர்க் கிறீஸ்தவரது தேவைகளைப்பற்றி விசாரிப்பர். தம் கருத்துக்களைத் தலைமைக் காரியாலயத்துக்கு அறிவிப்பர். பாடசாலைத் தோம்புகள் முறையாக எழுதப்படுகின்றனவா என்பதை மேற்பார்வையிடுவர். இத் தோம்புகளில் ஒவ்வொருவனது குடும்ப வரலாறு, பெற்றோர், பிறப்பு, ஞானஸ்தானம், மணம், அவன் பெற்ற கல்வி, மரணம், விட்டுச் சென்ற குடும்பம் பற்றிய செய்திகள் எழுதப்பட்டிருக்கும்.

இக்குழு கடமையுணர்ச்சியுடன் பணி புரிந்தது எனக் கூறமுடியாது. 1703 க்கு முதல் ஐந்து ஆண்டுகள் இதுவே கூடவேயில்லை. நாடெங்குமுள்ள பாடசாலைகள் கவனிப்பாரற்று விடப்பட்டன. பல இடங்களில் அவற்றின் கட்டடங்கள் அழிந்தன. கூரை மரங்கள் களவு போயின. பின் சில காலம் பாடசாலைகளைப் புதுக்குவதில் உற்சாகம் காட்டப்பட்டது. பின் 1735 - ல் அச்சுக்கூடம் அமைக்கப்பட்டதிலிருந்து மீண்டும் அவை வளர்ச்சியுறும் எனக்கருதப்பட்டது. பல புத்தகங்களும் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. ஆனால் பாடசாலைகள் சீர்திருத்தம அடைந்தில.

கிராமப் பாடசாலைகளில் சமய வினாவிடை, பிரார்த்தனைகள், தாய் மொழியில் எழுத்து, வாசிப்பு ஆகியவை கற்பிக்கப்பட்டன. மதமாற்றமே பாடசாலைகளின் ஒரே நோக்கம் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அவைகள் உற்பத்தி செய்தவர்கள் போலிக் கிறீஸ்தவர்களாகவே இருந்தனர். (கிறீஸ்தவ பெண்கள் கிறீஸ்தவரல்லாத ஆண்களை விவாகம் செய்தால் சவுக்கடியும், இரும்புக்கோலால் சூடும் பெற்றுச் சங்கிலியில் பிணிக்கப்பட்டு ஆயுள் முழுவதும் வேலைசெய்ய வேண்டும் என்றும், பிள்ளைகள் அடிமைகளிடம் அளிக்கப்படுவர் என்றும் 1760- ல் சட்டமியற்றியும் பயன் ஏதும்விளையவில்லை) மாத்தறையில் உயர் வகுப்பு அப்புஹாமிகளுக்கென விசேஷமாக ஸ்தாபிக்கப்பட்ட நாணயக்கார கலாசாலையில் கிறீஸ்தவ விவாகம் செய்த பெற்றோரின் பிள்ளைகள் போதிய அளவு கிடைக்கவில்லை. அப்பிள்ளைகள் வீடுகளில் பௌத்தசமயம் கற்கப் பெற்றோர் வசதி செய்திருந்தனர். அன்றியும் அடிமைகள் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டமையால் உயர் வகுப்பாரின் இல்லங்களில் பிள்ளைகளை வளர்க்கும் வேலைக்காரா புராதன நெறிகளிற் செல்பவர்களாதலால், பெற்றோர் கிறீஸ்தவரெனினும் பிள்ளைகள் இவர்களிடமிருந்து மூட நம்பிக்கைகளையும் சுதேச மதக் கருத்துக்களையும் பெற்றனர்.

ஐரோப்பியரது பிள்ளைகளுக்குத் தனியாகப் பாடசாலைகளிருந்தன. அவை அநாதைச்சிறுவர் பாடசாலை, கோவிற் பற்றுப் பாடசாலை, தனிப்பட்ட பாடசாலை என்பன. முதலிரு வகைப் பள்ளிகளும் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்தன. எனினும், இவை சிறப்புற அமைந்தன எனக் கூறுமுடியாது. கம்பனி ஊழியர்களுடைய பிள்ளைகளுக்குப் போதிய கல்வி வசதிகள் அளிக்கப்பட வில்லை. கீழ்நாடுகளில் நன்கு அனுபவம் பெற்ற ஜேர்மனியன் ஒருவன் 1784 - ல் இலங்கை பற்றி எழுதிய குறிப்பு ஒன்றில் இக்குறையைச் சுட்டிக்காட்டியுள்ளான். ஐரோப்பியக் குழந்தைகளுக்குக் கீழ்நாடுகள் ஏற்ற சூழ்நிலையுடையன அல்ல. மிகச் சில பெற்றோரே தம்பிள்ளைகளை ஐரோப்பாவுக்குக் கல்வி கற்க அனுப்ப இயலும். பிறர் தம் வீட்டுச் சூழ்நிலையிலேயே அவர்களை வளர்க்கமுடியும். அவர்களைச் சூழ்;ந்துள்ள அடிமைகளிடமிருந்து பிசகான வாழ்க்கைப் போக்கையே அவர்கள் பெறலாம். அவர்கள் எதிர்கால சேவைக்கு ஏற்ற பயிற்சியைப் பெற இயலவில்லை எனக்குறை கூறுகிறான். ஆனால். இதற்குப் புறநடையாக யாழ்;ப்பாணத்திற் பிறந்து, வளர்ந்து கல்வி கற்றுச் சொந்த முயற்சியால் மிக் சிறந்த நிர்வாகியாய் உயர்ந்த பதவி பெற்று வரும் உளர்.

யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ‘செமினாரி’ எனப்படும் குருமார் பயிற்சிக் கல்லூரிகள் நற்குடியிற் பிறந்த சுதேசிகளைப் பாதிரிமாராகப் பயிற்றும் நோக்கத்துடன்; ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்து நிறுவனம் சில ஆண்டுகளில் மூடப்பட்டது. கொழும்புச் செமினரி பல தேசாதிபதிகளின் ‘செல்லப்பிள்ளை’யாய் வளர்ந்தது. அங்கு மிகச் சிலரே கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி பெற்றனர். அவர்களைப் பரீட்சிக்கும்; போது பெரும்பாலும் சேதாதிபதியும் ஆலோசனைச் சபையினரும் சமுகமளித்தனர். வான் இம்மோவ் டச்சுமொழி பேசத் தெரியாத இளைஞர் இலத்தீன் பேசவும் கிரேக்கம் வாசிக்கவும் தெரிந்திருந்தனர்என மகிழ்வுடன் குறித்துள்ளான். கல்லூரி ஆண்;டறிக்கைகள் ஒல்லாந்திலுள்ள பதினெழுவர் சபைக்கு அனுப்பப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர் ஒல்;லாந்திலுள்ள சர்வகலாசாலைகளுக்குச் சென்று கல்வியை முடித்துத் திரும்பினர். உதாரணமாக மகா முதலியார் பண்டிதரத்தினாவின் மகன் ஹென்றிக்கஸ் பிலிப்ஸ் இங்கிருந்து யுற்றெக்ற், அம்ஸ்ரர்டாம் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பயின்று பாதிரியாராகத் திரும்பினார். ஆனால் 1700 - ல் பதினெழுவர் சபை இம்முறையை நிறுத்திவிட்டது. பட்டேவியாவில் இது தோல்வியுற்றமை காரணமாகக் காட்டப்பட்டது.

எக்குறைகளைக்கூறினும், ஒல்லாந்தரது கல்வி முறையால் நாடெங்கும் பாடசாலைகள் விருத்தியடைந்து எழுதப் படிக்க அறிந்தோர் தொகை பெருகியது என்பதில் ஐயமில்லை. கட்டாயக் கல்வி முறையால்எழுத்தறியாதோர் தொகை குறைந்தது. ஆங்கிலேயர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது நாடெங்கும் பரந்திருந்த இவ்வாரம்பக் கல்வி முறையை அழிய விடாது வளர்ப்பதன் அவசியத்தை உணர்ந்தனர். இப்பொழுது இலங்கை பெருமைப்படும் பரந்த இலவசக்கல்வி முறைக்கு டச்சுக்காரரே அத்திவாரம் இட்டனர் எனக் கூறலாம்.

உசாத்துணை நூல்கள் :

1. ஊநலடழn யனெ வாந ர்ழடடயனெநசள - Pயரட நு. Pநசைளை
2. ஊநலடழn ரனெநச டீசவைiளா ழுஉஉரியவழைn - ஊழடஎin சு. னுந. ளுடைஎய

அனுபந்தம் : 1

றோமன் டச்சுச் சட்டம்

“றோமன் டச்சுச் சட்டம்” என்ற சொற்றொடர் 1652 - ல் லெய்டனில் பிரசுரமான சட்ட நூல் ஒன்றின் உப பெயராக முதன் முதலில் உபயோகிக்கப்பட்டது. இச் சட்ட முறை ஒல்லாந்து தேசத்தில் 15 - ம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 19 - ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை வழக்கிலிருந்தது. ஒல்லாந்தர் இதன் முக்கிய அம்சங்களைத் தம் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டு சென்றனர்.

இச் சட்டத்துக்கு மூலமாயமைந்தவை இரண்டு: ஒன்று ஜேர்மனிய பரம்பரை வழக்கு. மற்றது றோமசட்டம். கி. பி. 5 - ம் நூற்றாண்டுக்கு முன்னரே உறோமரது சட்டம் ஜேர்மானிய இனங்களிடையே மெல்ல மெல்லப் பரவி, அவர்களது பரம்பரை வழக்குடன் கலந்து விட்டது. அவ்வினங்கள் வாழ்ந்து ஒல்லாந்து பெல்ஜியத்தில் நிலை பெற்றது. நெப்போலியன் ஒல்லாந்தை வென்றபின். றோமன் டச்சுச்சட்டம் அங்கு முக்கியத்துவத்தை இழந்தது. ஆனால் டச்சுக்காரரின் குடியேற்ற நாடுகளில் கைவிடப்பட்ட இச் சட்ட முறையையே பின்பற்றி வருகின்றன. இவற்றைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் டச்சுக்காரர் நிறுவிய சட்ட முறையை மாற்றாமல் வைத்திருக்கின்றனர்.

றோமன் டச்சுச் சட்டத்தின் மூலகங்கள் எனக் குறிப்பிடத்தக்கவை ஐந்து :-

1. டச்சு சட்டவியலறிஞர் தம்மொழியிலும் இலத்தீனிலும் எழுதிய நூல்கள் (16-ம் - 19-ம் நூற்)
2. நெதர்லாந்து ஐக்கிய மாகாணக் குடித்திணைமன்றம் (ஸ்ரேற்ஸ் - ஜெனரல்), ஒல்லாந்தின் சட்ட சபை ஆகியவை இயற்றிய சட்டங்கள் பட்டேவிய சட்டங்கள் (தொகுப்பு : 1642)
3. நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள்
4. சட்டவியலறிஞரின் அபிப்பிராயங்கள் (உ-ம் குறோஷியஸ் போன்ற தலைசிறந்த நியாயவாதிகளின் கருத்து)
5. பரம்பரை வழக்கு

இவற்றுக்கு அனுசரணையாகக் காலந்தோறும் அந்த நாட்டுச்சட்டசபைகள் இயற்றிய சட்டங்களும், நீதி மன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளும், உள்@ர் வழக்கு என்பவைகளும் குறிப்பிடத்தக்கவை.

ஆங்கில ஆட்சியின் கீழ் இச்சட்டத்தில் ஆங்கிலச் சட்டத்தின்தாக்கம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக 1852லும், 1866லும் இலங்கைச் சட்டசபையில் இயற்றப்பட்ட சட்டங்கள் பலவிடங்களில் மாற்றம் செய்துள்ளன. இலங்கையில் திறமை வாய்ந்த சட்ட நிபுணர் றோமன் டச்சுச் சட்டத்தை நன்கு விளக்கியுள்ளனர். எனினும்@ தாய்நாட்டுத் தொடர்பு இன்மையால் அச்சட்டத்திலுள்ள டச்சு அம்சம் தேய்ந்து மறைந்து வருகின்றது. தென்னாபிரிக்காவில் அச்சட்டம் வளர்ச்சியுற்று வருகின்றது. ஆனால் கயானாவில் 1916 - ல் நிறைவேற்றபபட்ட சிவில் சட்டத்தின் படி அதற்குரிய முக்கிய இத்தை ஆங்கிலப் பொதுச்சட்டமே பிடித்துவிட்டது.

றோமன் - டச்சுச் சட்டத்தில் வரும் முக்கிய விடயங்கள்வருமாறு:- பிறப்பு, பால்வேற்றுமை. சட்ட வரம்புக்குட்பட்ட பிள்ளையா எனத் தீர்மானிக்கும் முறை, பெற்றோர் உரிமையும் கடமையும், உரிய வயது வராத மைனர்ப் பிள்ளை, மணம், மணத்தால் எற்றபடும் சட்டவிளைவுகள். பாதுகாவலர், மூளைக்கோளாறு, சொத்துரிமை, ஈடுவைத்தல், ஒப்பந்தம், உரிமைக்காரர், தத்துவகாரர் முதலியன.

அனுபந்தம் ஐஐ

நெதர்லாந்து, கிழக்கிந்திய தீவுகளின் மகாதேசாதிபதிகள்

1. பீற்றர் போத் - 1609
2. ஜெராட் றெய்ன்ஸ்ற் - 1614
3. லோறன்ஸ் றியால் - 1616
4. ஜான் பீற்றர்சூன் கோயென் - 1618
5. பீற்றர் டீ காப்பென்ரியர் - 1623
6. கோயன் (இரண்டாம் முறை) - 1627
7. ஜாக்கே ஸ்பெக்ஸ் (தற்காலிக) - 1629
8. ஹென்டிறிக் ப்று}வர் - 1632
9. அந்தோனிவான் டீமன் - 1636
10. கோர்ணிலிஸ் வான்டீலிஜ்ன் - 1645
11. கரெல் றெய்னீஸ் - 1650
12. ஜோன் மற்சூய்க்கர் - 1653
13. றைக்குளோவ் வான்கோயன்ஸ் - 1678
14. சோர்ணிலிஸ் ஸ்பீல்மன் - 1681
15. ஜொஹானெஸ் கம்ஃபூஜ்ஸ் - 1684
16. வில்லெம் வான் ஊற்ஹ{ன் - 1691
17. ஜொஹான் வான்றபீக் - 1704
18. ஏபிரஹாம் வான் றபீக் - 1709
19. கிறிஸ்ரோஃபெல்வான்ஸ்வொல் - 1713
20. ஹொன்றிக்ஸ் ஸ்வார்டக்று}ன் - 1718
21. மத்தியஸ் டீ ஹான் - 1725
22. டேர்க் ரூபர் வென் - 1729
23. டேரக் வான் க்@ன் - 1732
24. ஏபிரகாம் பத்திராஸ் - 1735
25. அட்றியான் வல்கெனியர் - 1737
26. ஜொஹானெஸ் தொடன்ஸ் - 1741
27. குஸ்ராவ் றுவான் இம்மொவ் - 1743
28. ஜேக்கப்; மொஸ்ஸஸ் - 1750
29. P. யு. வான் டெர் பர்ரா - 1761
30. ஜெரமியாஸ் வான் ஒவர்ஸ்ட்றாற்றென் - 1775

அனுபந்தம் ஐஐஐ

இலங்கையிற் பதவி வகித்த ஒல்லாந்த தேசாதிபதிகள்

1. வில்லியம் து. கொஸ்ரர் 1640
2. ஜான் தைசூன் பயற் 1640 - 62
3. ஜோண் மற்சூய்க்கர் 1646 - 50
4. ஜேக்கப் வான் கிற்றின்ஸ்ரீன் 1650 - 53
5. அட்றியன் வான்டர் மேய்டென் 1653 - 60
1661 - 63
6. றைக்குளோவ் வான்கோயன்ஸ் 1660 - 64
7. ஜேக்கப் ஹ{ஸ்ராட் 1663 - 64
8. றைக்குளோவ் வான்கோயன்ஸ் 1664 - 74
9. றைக்குளோவ் வான்கோயன்ஸ் (மகன்) 1675 - 79
10. லோறன்ஸ் பைல் 1679 - 92
11. தோமஸ் வான்றீ 1692 - 97
12. ஜெறிற் டீ ஹீர் 1697 - 1702
13. கோர்ணீலிஸ் ஜான் சைமன்ஸ் 1702 - 06
14. ஹென்ட்றீக்பெக்கர் 1706 - 16
15. ஜசக் ஒக்ஸ்ரின் றம்ப் (க) 1716 - 23
16. ஜொஹன்னெஸ் ஹேட்டன்பேக் 1723 - 26
17. பேதுருஸ் வூய்ஸ்ற் 1726 - 29
18. ஸ்டெஃபாணஸ் வேர்ஸ்லூய்ஸ் 1729 - 32
19. ஜேக்கப் கிறிஸ்றியான் பிலாக் 1732 - 34
20. டீடெறிக் வான் டொம்பேர்க் 1734 - 36
21. குஸ்ராவ் வில்ஹெல்ம் பரன்வான் இம்மோவ் 1736 - 39
22. வில்லெ மோறிற்ஸ் புறு}ய்னினெக் 1739 - 42
23. டானியல் ஓவர்பீக் 1742 - 43
24. ஜுலியஸ் ஏ. ளு. வான் கொலன்னஸ் 1743 - 51
25. ஜெராட் ஜோவன் வ்ரீலண்ட் 1751 - 52
26. ஜோஹன் கிடெயன் லோட்டன் 1752 - 57
27. ஜான் ஷ்றோய்டர் 1757 - 62
28. டு. து. பான் வான்எக் 1762 - 65
29. குமான் வில்லெம் ஃபோக் 1765 - 85
30. வில்லெம் து.வான்டீ கிறாஃப் 1785 - 94
31. து. பு. வான் அங்கிள் பீக் 1794 - 96

அனுபந்தம் ஐஏ

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை
டிசெம்பர் 1965

பகுதி - ஐஐ

இலங்;கையும் ஐரோப்பிய தேசங்களும்
(கி.பி. 1453 - கி. பி. 1796)

முதலாம் வினாவுக்கும் வேறு ஐந்து வினாக்களுக்கும் விடை தருக. முதலாம் வினாவுக்குப் புறுவுருவப் படம் ஒன்று கொடுக்கப்படும்.

1. (i) உமக்குக் கொடுக்கப்பட்டுள்;ள ஐரோப்பா, ஆசியாப் படத்தில் பின்வருமனவற்றைக் குறிக்க:- நன்னம்பிக்கைமுனை, கோவா, ஏடின், ஓமஸ், மலாக்கா, அம்ஸ்டர். கொன்ஸ்தாந்திநோப்பில், லிஸ்பொன், கள்ளிக்கோட்டை. ஜிப்றால்ரர்.

(ii) மேற்கூறிய இடங்களில் எவையேனும் ஐந்தினைப்பற்றி வரலாற்றுக்கு குறிப்புக்கள் எழுதுக - ஒவ்வொரு குறிப்பும் 50 சொற்களுக்கு மேற்படலாகாது.

2. போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த காலத்தில் எமது நாட்டின் அரசியல்பொருளாதார நிலைமைகள் யாவை? எமது கரையோர மாகாணங்களை அவர்கள் தமது ஆட்சிக்குட்படுத்துவதற்கு அவை எங்ஙனம் அவர்களக்கு உதவியாயிருந்தன?
3. கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கனுடைய சாதனைகளை மதிப்பிடுக.
4. 17ஆம் நூற்றாண்டில் கிழக்கில் ஒல்லாந்த சக்கராதிபத்தியத்தின் எழுச்சியை ஆராய்க.
5. 16ஆம் நூற்றாண்டில்; ஐரோப்பாவின் மத ஒற்றுமை முறிவுற்றதற்கான காரணங்களைக்கூறுக.
6. அக்பருடைய காலத்தில் முகலாய சக்கராதிபத்தியத்தின் நிலை பற்றி எழுதுக.
7. 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பிரான்ஸியருக்கும் இடையிற் பகை மூண்டதற்கான காரணங்களைக்கூறுக. அதன் விளைவு யாது?
8. பின்பருவனவற்றில் எவையேனும் இரண்டினைப் பற்றி வரலாற்றுக் குறிப்புக்கள் எழுதுக:
(i) ஸ்பானிய ஆர்மடா
(ii) புகழ் வாய்ந்த புரட்சி
(iii) அமெரிக்க சுதத்திரப் போர்
(iஎ) கிழக்கிந்தியக் கொம்பனி

கல்விப் பொது தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை
ஆகஸ்ட் 1966

பகுதி - ஐஐ

இலங்;கையும் ஐரோப்பிய தேசங்களும்
(கி. பி. 1453 - கி. பி 1796)

முதலாவது வினாவுக்கும்வேறு ஐந்து வினாக்களுக்கும் விடை தருக். முதலாவது வினாவுக்கு ஒரு புறவுருவப் படம் கொடுக்கப்படும்.

1. (i) உமக்குக் கொடுக்கப்பட்டுள்ள (ஐரோப்பாவும் ஆசியாவும்) படத்தில் பின்வருவன எல்லாவற்றையும் குறித்துப் பெயர்களை எழுதுக.

அரேபியா, கள்ளிக்கோட்டை, பத்தேவியா. ஸ்பாளியா, ஜெனோவா, வெனிஸ், பிளாஸி, டண்டன், செங்கடல், நெதர்லாந்து

(ii) மேற்கூறியவற்றுள் எவையேனும் ஐந்தினைத் தெரிந்து, ஒவ்வொன்றைப் பற்றியும 50 சொற்களுக்கு மேற்படாமல் சரித்திரக் குறிப்புக்கள் எழுதுக.

2. எமது தேசத்தின் (i) புவியியல் நிலையம். (ii) தரைத்தோற்றமும் அதனுடைய வரலாற்றை எவ்வாறு பாதித்தன என்பதை, 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளிலிருந்து எடுத்த உதாரணங்களோடு காட்டுக.
3. கீழைத்தேசங்களில் போர்த்துக்கேயருடைய ஆட்சி முதலில் பரவியதற்கும் பின்னர் அழிந்தமைக்கும் உரிய காரணங்களைத் தருக. இவை எமது தேசத்துக்கு எவ்வாறு நன்மை தீமைகளை விளைவித்தன?
4. ஒல்லாந்தர் தமது நிர்வாகத்தின் கீழிருந்த பிரதேசங்களில் (i) பொருளாதார அபிவிருத்தி (ii) நீதி பரிபாலனம் (iii) கல்வி என்பன சம்பந்தமாகக் கடைப்பிடித்த கொள்கையினைச்சுருக்கமாக விவரிக்க அவர்கள்; எந்த அளவில் வெற்றி பெற்றனர்?
5. 1638 இல் கன்னொருவா என்னுமிடத்தில் நடைபெற்ற யுத்தத்துக்கு வழிகோலிய சம்பவங்களை ஆராய்ந்து கூறுக. அதன் அரசியல் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
6. 18ஆம் நூற்றாண்டில் கண்டிய இராச்சியத்தினுடைய பொருளாதார, சமூக நிலைமைகளைப் பற்றி எழுதுக.
7. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய வல்லரசுகளுக்கிடையே நிலவிய குடியேற்ற நாட்டப்பகைமையின் இயல்பைச் சுருக்கமாக விவரிக்க அது (i) இந்தியாவின் (ii) எமது தேசத்தின் வரலாற்றை எவ்வாறு பாதித்தது?
8. பின்வருவனவற்றுள் எவையேனும் இரண்டைப் பற்றிச் சரித்திரக் குறிப்புக்கள் எழுதுக:
(i) இங்கிலாந்தில் புரட்டஸ்தாந்துச் சீர்திருத்தம்
(ii) 1766 ஆம் ஆண்டு ஒல்;லாந்த - கண்டிய உடன்படிக்கை
(iii) மொகல்லாய சக்கரவர்த்திகள்
(iஎ) இலங்கையில் கறுவா வியாபாரம்

கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை
டிசெம்பர் 1966

பகுதி - ஐஐ

இலங்;கையும் ஐரோப்பிய தேசங்களும்
(கி. பி. 1453 - கி. பி 1796)

1ஆம் வினாவுக்கும் வேறு ஐந்து வினாக்ளுக்கும் விடையெழுதுக. 1ஆம் வினாவுக்கு ஒரு புறவுருவப் படம் கொடுக்கப்படும்.

1. (i) உமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இலங்கைப் படத்தில் பின்வருவனவற்றைக் குறித்துப் பெயரெழுதுக:-

நல்லூர், கொட்டியாரம், மாத்தறை, பெலந்தை, சீதாவாக்கை, செங்கடகலை, மல்வானை, மட்டக்களப்பு, வேருவளை, சத்கோறாளை

(ii) மேற்கூறியவற்றுள் எவையேனும் ஐந்தைப் பற்றிச் சுருக்கமான வரலாற்றுக் குறிப்புகள் எழுதுக.

(ஒவ்வொரு குறிப்பும் ஐம்பது சொற்களுக்கு மேற்படலாகாது)

2. 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவுக்கும் கீழைத்தேசங்களுக்கும் இடையில் இருந்து வந்த வியாபாரப் பாதைகளை விவரிக்க. வியாபாரச் சரக்குகளைப் பற்றிச் சுருக்கமான ஒரு குறிப்பு எழுதுக. (உமது விடையை விளக்குகின்ற ஒரு புறவுருவப் படத்துக்கு மதிப்புக் கொடுக்கப்படும்)
3. 17ஆம் நூற்றாண்டில் இலங்கையில் போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் பிணக்கு ஏற்படுவதற்கு வழிகோலிய காரணங்கள் எவை? அப்பிணக்கு எவ்வாறு முடிவடைந்தது?
4. “நலன் செய் வல்லாளர்” எனப் பலராலும் புகழ்ந்து கூறப்படும் ஐரோப்பிய அரசர்கள் யாவா? அவர்களில் எவரேனும் ஒருவருடைய ஆட்சியை விவரிக்க.
5. 2ஆம் இராசசிங்கன் அரசனானது வரை கண்டி இராச்சியத்தினுடைய வரலாற்றைக் கிரமமாகக்கூறுக.
6. யோக் டவுணில் ஏற்பட்ட தோல்வி, பரிஸ் ஒப்பந்தத்தில் (1763) பிரித்தானியருக்குக் கிடைத்த இலாபங்களை எவ்வாறு குறைத்தது?
7. புரட்டஸ்தாந்துச் சீர்திருத்தமும், அதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் நடைபெற்ற சமயப் போர்களும் எமது தேசத்தின் வரலாற்றை எவ்வாறு பாதித்தன?
8. பின்வருபவர்களுள் எவரேனும் நால்வரைப் பற்றி வரலாற்றுக் குறிப்புக்கள் எழுது. (ஒவ்வொரு குறிப்பும் 100 சொற்களுக்கு மேற்படலாகாது)

கடலோடி ஹென்றி, மாட்டின் லூதர், றொபேட் வால்போல், டுப்ளே, கொல்பேட், மக்கடம். மௌனி வில்லியம்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரணதர)ப் பரீட்சை ஆகஸ்ட் 1967

சரித்திரம் - ஐஐ

இலங்கையும் ஐரோப்பிய தேசங்களும் (கி. பி. 1453 தொடக்கம் கி. பி. 1796 வரை)

9ஆம் வினாவுக்கும் வேறு நான்கு வினாக்களுக்கும் விடை தருக. 9 ஆம் வினாவுக்கு ஒரு வெளியுருவப்படம் கொடுக்கப்படும்.

9. (அ) உமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இலங்கைப்படத்தில் பின் வருவனவற்றைக் குறித்துப் பெயர்களை எழுதுக.
(i) கொட்டியாரம் (ii) முல்லேரியா
(iii) மன்னார் (iஎ) பெலந்தை
(எ) இராட்சதக்குளம் (எi) நிலம்பை
(எii) இரத்தினபுரி (எiii) களனிகங்கை
(iஒ) வதுளை (ஒ) நல்லூர்.

(ஆ) மேலே உள்வற்றில் எவையேனும் ஐந்தினுடைய சரித்திர முக்கியத்துவம் பற்றிச் சிறு குறிப்புக்கள் எழுதுக.

(ஒவ்வொரு குறிப்பும் 50 சொற்களுக்கு மேற்படலாகாது)

(கவனிக்க :- இடங்களைப் படத்தில் ஒரு புள்ளியினால் அல்லது ஒரு கோட்டினால் குறித்து அவற்றின் பெயர்களைத் துப்பரவாகவும் தெளிவாகவும் எழுதுக. துப்புரவற்ற படவேலைக்குப் புள்ளிகள் குறைக்கப்;படும். ஐம்பது சொற்களுக்கு மேற்படும் குறிப்புகளுக்கும் புள்ளிகள் குறைக்கப்படும்.)

10. வஸ்கோடிகாமாவினுடைய வாழ்க்கையைப் பற்றி ஒரு சரித்திரக்குறிப்பு எழுதுக. அவனுடைய கடல் நடவடிக்கைகள் இலங்கையை எவ்வாறு பாதித்தன என்பதை விபரிக்க.
11. போர்த்துக்கீசர் சிங்கள அரசர்களோடு நடத்திய ஐந்து பிரதான யுத்தங்களை ஒழுங்கு முறைப்படி எழுதுக. ஒவ்வொரு யுத்தத்திலும் இருபக்கங்களிலும் இருந்த தலைவர்களின் பெயர்களைக்கூறுக. போர்த்துக்கீசர் இலங்கையிற் யுத்த முறையினுட் புகுத்திய புதிய இயல்புகள் யாவை?
12. ஒல்லாந்த சுதந்திரப் போரின் வெற்றிக்காண நான்கு காரணங்களைச் சுருக்கமாகக் கூறுக. இந்த யுத்தம் இலங்கையிலேற்படுத்திய விளைவுகள் யாவை?
13. பரன்வான் எக் என்பவனுடைய காலத்தில் கண்டிக் கெதிராக நடைபெற்ற ஒல்லாந்த யுத்தத்துக்கான காரணங்கள் யாவை? இந்த யுத்தத்தின் பெறுபேறுகள் யாவை?
14. புத்த மதத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்காக கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கன் எடுத்த நடவடிக்கைகள் பற்றி எழுதுக?
15. 18 - ம் நூற்றாண்டில் கண்டி இராசசபைக்குச் சென்ற பிரித்தானியத் தூதுக் குழுக்களைப் பற்றிச் சுருக்கமாக விவரிக்க. இத்தூதுக் குழுக்களின் இலட்சியங்கள் யாவை?
16. பின்வருவனவற்றுள் எவையேனும் நான்கினுடைய சரித்திர முக்கியத்துவத்தை விளக்கி குறிப்புகள் எழுதுக. (ஒவ்வொரு குறிப்பும் 100 சொற்களுக்கு மேற்படலாகாது)

(i) பீற்றர்சன் கோவான்
(ii) அக்பார்
(iii) இக்னேஷியஸ் லயொலா
(iஎ) பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி
(எ) கொலம்பஸ்
(எi) மூத்த வில்லியம் பிட்
(எii) கார்டினல் றிச்செல்லோ
(எiii) ஜோர்ஜ் உவாஷிங்டன்


கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை டிசம்பர் 1967இ

சரித்திரம் - ஐஐ

இலங்கையும் ஐரோப்பிய தேசங்களும் (கி. பி. 1453 - கி. பி 1796)

9 ஆம் வினாவிற்கும் வேறு வினாக்களுக்கும் விடை தருக. 9 ஆவது வினாவுக்கு ஒரு புறவுருவப்படம் கொடுக்கப்படும்.

9. (i) கொடுக்கப்பட்ட உலகப் படத்தில் பின்வருவனவற்றைக் குறித்துப் பெயர்களை எழுதுக :-

கொன்ஸ்தாந்தி நோப்பிள். லிஸ்பன், கேவா ஓர்மஸ் அன்ட்வேப், வெனிஸ், நன்னம்பிக்கை முனை, அலெக்ஸாந்திரியா திரிகோணமலை.

(ii) இவற்றுள் எவையேனுமம் ஐந்தைத் தெரிந்து அவையொவ்வொன்றையும் பற்றி 75 சொற்களுக்கு மேற்படாமற் சுருக்கமாகச் சரித்திரக் குறிப்புகள் எழுதுக.

10. தர்மபாலனுடைய வீர வாழ்க்கையைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக. அவனுடைய ஆட்சியின் தனிச்சிறப்பு யாது?
11. தற்பொழுது எமக்குக் கிடைக்கும் சான்றுகளைத் துணைக்கொண்டு, 16 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் (அ) பொருளாதார நிலைமைகள் பற்றி அல்லது (ஆ) சமய அபிவிருத்தி பற்றி எழுதுக.
12. 17ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஒல்லாந்தரின் ஆட்சி நிறுவப் பட்டதற்கான காரணங்க்ளைக் கூறுக.
13. எலிசபெத் ரியூடரின் அல்லது மௌனி வில்லியத்தின் சாதனையை விவரிக்க.
14. 18ஆம் நூற்றாண்டில்;; இந்தியாவில் பிரான்ஸியருக்கும் பிரித்தானியருக்கும் இடைடயில் நிலவிய அரசியற் போட்டியை பற்றி எழுதுக?
15. 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியாவின் எழுச்சிக்கான காரணங்களைத் தருக.
16. பின் வருவனவற்றுள் எவையேனும் நான்கினைப் பற்றிச் சரித்திரக் குறிப்புகள் எழுதுக. (ஒவ்வொரு குறிப்பும 100 சொற்களுக்கு மேற்படலாகாது)

i. பரிசுத்த உரோம இராச்சியம்
ii. ஹியூக்னோஸ்
iii. ஒல்லாந்தக் கிழக்கிந்தியக்கொம்பனி
iஎ. தண்ணளி வல்லாளர்
எ. வெஸ்ற்பேலியா ஒப்பந்தம் (1648)
எi. லூதரிஸம்