கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் (1920களில்)  
 

அ. கௌரிகாந்தன்

 

யாழ்ப்பாண
சமூக உருவாக்கமும்
விபுலானந்தரும்
(1920களில்)






அ. கௌரிகாந்தன்









சாளரம் வெளியீடு.


யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்



அ. கௌரிகாந்தன்





முதற்பதிப்பு : பெப்ரவரி 1992






அச்சுப்பதிப்பு: நியூ ஈரா பப்ளிகேசன்ஸ்





சாளரம் வெளியீடு,
வேம்படி வீதி,
யாழ்ப்பாணம்.

பதிப்புரை

சமுதாயத்தின் பிரச்சினைகளிலிருந்து தனி மனிதர்கள் ஒதுங்கி வாழ முடியாது. ஒவ்வொருவரும் சமுதாயத்துடன் இரண்டறக் கலந்தவர்களே.

ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் கருத்துநிலை ஏதோவொரு விதத்தில் சமுதாயத்தின் பிரச்சினைகளையே பிரதிபலிக்கின்றது. சமுதாயத்தின் பிரச்சினைகளை அவர்கள் பார்க்கும் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைகின்றது. கருத்துநிலை முரண்பாடுகளுக்கு இதுவே காரணம்.

எனவே, எங்கள் சமுதாயத்தில் வாழ்ந்து மறைந்த பெரியார்களை மதிப்பீடு செய்யும் போது சமுதாயத்தின் அன்றைய பிரச்சினைகள் பற்றிய அவர்களது அணுகுமுறை, அப் பிரச்சினைகள் அவர்களிடம் ஏற்படுத்திய உணர்வலைகள் என்பவற்றின் அடிப்படையிலேயே அவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.

விபுலானந்த அடிகளாரைத் தமிழ் பேசும் நல்லுலகுக்குத் தெரியும். அவரின் இயற்பெயர் தெரியும். அன்னை தந்தை பெயர் தெரியும். அவரின் கல்விச் சிறப்பைத் தெரியும். அவரின் துறவு பற்றித் தெரியும். தமிழுக்கு அவர் செய்த தொண்டு n;தரியும்.

இல்வளவும் அவரை நாங்கள் புரிந்து கொள்ளப் போதுமானவையல்ல.

ஆறுமுகநாவலர் சைவசமய வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டு செயற்பட்டவர் என்பர். விபுலானந்த அடிகளும் சைவ சமய வளர்ச்சிக்குப் பணி செய்வதற்காகத் துறவறம் பூண்டவர். இதனால் இருவரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது.

நாவலரும் அடிகளாரும் சமுகப் பிரச்சினைகளில் வௌ;வேறு கருத்து நிலைகளைக் கொண்டிருந்தவர்கள். முரண்பட்ட கருத்து நிலைகளைக் கொண்டிருந்தவர்கள். இது சமூகப் பிரச்சினைகளை அவர்கள் அணுகிய விதங்களின் வெளிப்பாடு. சமூகத்தை அவர்கள் பாhத்த கண்ணோட்டத்தின் வேறுபாடு.

விபுலானந்த அடிகளைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர் வாழ்ந்த சமுதாயத்தின் பிரச்சினைகளில் அவர் வகித்த பாத்திரம் என்ன என்பதை அறிய வேண்டும். அன்றைய சமூக உருவாக்கத்தில் அவர் வகித்த பங்கு எவ்வளவு என்பதை அறிய வேண்டும். அன்றைய பிரச்சினைகள் அவரிடம் எத்தகைய உணர்வலைகளை ஏற்படுத்தின என்பதை அறிய வேண்டும்.

இச் சிறு நு}ல் விபுலானந்தர் பற்றிய இந்த வகைப்பட்ட அறிவுத் தேடலுக்கான பாதையில் வாசகர்களை இட்டுச் செல்லும் என நம்புகின்றோம்.

சாளரம் வெளியீட்டகம்.


விபுலானந்தர் தனது 21வது வயதில், 1917ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்தார். அப்போது அவர் டிப்ளோமா பட்டமும் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் சித்தியும் பெற்ற பண்டிதர் மயில்வாகனனாராகவே இருந்தார். அதாவது இவர் துறவறக் கோலம் பூணவில்லை.

1917 – 1920 வரை இவர் அர்ச் - சம்பத்திரியார் (ளுவ Pயவசiஉமள) கல்லு}ரியில் வேதியநு}ல் தலைமையாசிரியராகக் கடமையாற்றினார். இந்த நேரத்திலேயே அவர் வெளிவாரி மாணவனாக இருந்து அறிவியற் பட்டதாரி (லண்டன்) சோதனையில் வெற்றியீட்டினார்.

அதன் பின் 1920 – 1922 வரை மானிப்பாய் இந்துக் கல்லு}ரியின் தலைமை ஆசிரியராக இருந்ததுடன் ஆரிய – திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்திற்குச் சிறந்த தொண்டுகளும் ஆற்றிவந்தார்.

1922ல் யாழ்ப்பாணத்தை விட்டு விலகி இந்தியா சென்றடைந்தார். அங்கு இராமகிருஷ்ண மிஷனில் இறையியல் பயின்று. 1924ல் சித்திரை மாதம் ஞானோபதேசம் பெற்று சுவாமி விபுலானந்தர் என்னும் துறவுத் திருநாமம் சூட்டிக் கொண்டார்.

அங்கிருந்து கிழக்கு மாகாணம் வந்தடைந்த விபுலானந்தர் 1926ம் ஆண்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார். 1926, பெப் 15ல் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயம். அருணோதயா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளை நடத்தும், பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1928ல் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்டு, திருக்கோணமலையை வந்தடைந்தார்.

1917 – 1922 வரையும், பின் 1926ல் இருந்து 1928 வரையும் இவர் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகவல்லாமல் சுமார் 9 வருடங்கள் வாழ்ந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் பாடசாலை ஆசிரியராகவும், அதிபராகவும், ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தில் பிரதான பாத்திரம் ஏற்றும் செயற்பட்டுள்ளார். அத்துடன் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ{டன் இணைந்து இயங்கியும் உள்ளார். அதன் ஆரம்ப அமைப்பாளர்களில் இவரும் ஒருவராவார்.

விபுலானந்தர் காலத்தில் யாழ்ப்பாண அரசியல்

இவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில், சேர். பொன், இராமநாதன் படித்தோரின் சட்டசபைப் பரதிநிதியாக (1911ல் நடந்த தேர்தல் மூலம்) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார். சேர். பொன் இராமநாதன் ஆறுமுகநாவலரைப் பின் தொடர்ந்து அவரின் கொள்ளைப்படியான தேசிய கலாசார மறுமலர்ச்சிக் கொள்கைகளைக் கையாண்டு. கல்வியில் மிஷனரியமாரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் பல சைவப் பாடசாலைகளை உருவாக்கி வந்தார். இலங்கையில் பல்கலைக்கழகம் அமைப்பது சம்பந்தமான கருத்துக்களிலும் இவர் அதிக அக்கறை செலுத்தி வந்தார். பெரும்பாலான்மையான சைவப் பெரியார்களும் அறிஞர்களும் பொன். இராமநாதனைப் பின்பற்றுபவர்களாகவே இருந்தார்கள்.

விபுலானந்தர் யாழ்ப்பாணம் வருவதற்குச் சற்று முற்பட்ட காலம் வரை (19ம் நு}ற்றாண்டின் பின்பிருந்து 20ஆம் நு}ற்றாண்டின் முற்பகுதிவரை) மிஷனரிமார்களுக்கும் சைவப்பெரியளார்களுக்கும் இடையே மத அடிப்படையிலான வாதவிவாதங்கள் மலிந்து காணப்பட்டன. சைவத்தின் எழுச்சியே தேசிய மறுமலர்ச்சி என்று கருதும் போக்கே யாழ்ப்பாண சைவப்பெரியார்களிடம் மலிந்து காணப்பட்டது. ஆறு முகநாவலரின் இக் கொள்கையை வளர்ப்பதில் சேர். பொன். இராமநாதனும் முழு ஒத்துறைப்புக் கொடுத்து வந்தார். படித்தோர் உலகம் மத அடிப்படையில் பிளவுண்டு இருந்தது.

20ஆம் நு}ற்றாண்டின் இந்த ஆரம்பகாலப் பகுதிகள் பிரித்தானிய காலனியல் வாதிகளின் ஆட்சிக்கு காவடி து}க்குவோர்களின் அரசியல் இயக்கங்களே இலங்கை முழுவதும் கையோங்கி இருந்தகாலகட்டமாகும். சுதந்திரத்துக்கான போராட்டமோ, சுதந்திர உணர்வோ எதுவுமே இல்லாதிருந்த நேரம். அன்றைய அரசியல் தலைவர்கள் காலனியல் அரசாங்சகத்திற்கு விசுவாசமான சேவகர்களாக இருக்கவே விரும்பினார்கள். காலனியல் அரசாங்கத்திலும், நிர்வாகத்திலும், “சொந்தநாட்டினர்” அதிகளவு இருக்கவேண்டும் என்பதிலும், பிரித்தானியரால் பின்பற்றப்படும் கொள்கைகள் இலங்கையில் ஏற்கனவே நிலவிவந்த சமூக உறவுகளைப் பாதிக்கக் கூடாதமுறையில் அமையவேண்டும் என்பதிலுமேயே இவர்கள் அதிக கவனம் செலுத்திவந்தார்கள்.

அதேகாலப் பகுதியில் மலைநாட்டில் கண்டிய நில உடைமையாளர்கள் தாம் தொடர்ந்தும் நில உடைமையாளர்களகவே இருக்க விரும்பினார்கள். பௌத்த மதபீடங்களுக்கு சொந்தமானதாய் இருந்த நில உடைமை முறையையும், சமூக அந்தஸ்தையும் அப்படியே பாதுகாக்க விரும்பினார்கள். வறிய கண்டிய விவசாயிகளை அடக்கிவைப்பதற்கு இம் மடாலய நிலவுடைமை முறை நிரம்பவும் உதவியாக இருந்தது. ஆகையால் அதை இழப்பதற்கு கண்டிய “றதலைகள்” (பெரும் நிலவுடமையாளர்கள்) விரும்பவில்லை. இதற்காக கண்டிய தேசவழமை என்ற ஒன்றை பாதுகாத்து வந்தார்கள். மலை நாட்டு நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் மலைநாட்டிற்கெனத் தனியான அரசாங்க நிர்வாகம் வேண்டும் என்று கூட பிரித்தானியர்களிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

கரையோரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை (இலங்கையின் தென்பகுதி) ஐரோப்பியரின் தொடர்பால் இப்பகுதி உயர்வர்க்கங்கள் ஏற்கனவே தேசியத்தன்மை இழந்தவர்களாகியிருந்தார்கள். ஐரோப்பிய சார்புத் தரகர்கள், பெரும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வர்த்தகர்கள், பெருந்தோட்ட பயிர்ச்செய்கை (றப்பர், தென்னை) நில உடைமையாளர்கள் ஆகியோரே இவ்விதம் மாறிப்போயிருந்த கரையோர உயர்வர்க்கங்களாகும். இவர்கள் பிரித்தானிய பொருளாதாரத்தினால் கிடைத்த பலாபலன்கள் அனைத்தையும் தாமே தமதாக்கிக் கொள்ள விரும்பினார்கள். பிரித்தானியர்களுடன் கூட வந்த இந்தியர்களே, ஐரோப்பிய கலப்பர்களான பறங்கியரோ, இலங்கையின் பூர்வீக குடிகளில் ஒருவரான இஸ்லாமியர்களோ, மற்றோர் பூர்வீக குடிகளான இலங்கைத் தமிழர்களோ இதில் பங்கு போட்டுக் கொள்வதை விரும்பவில்லை. இவர்கள் பெரும்பங்கிற்காக ஏங்கினார்கள். ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களாக மாறுவதன் மூலம் இதைச் சாதித்துக் கொள்ள முயன்றார்கள். போட்டி அதிகரித்த நிலையில் இது சாத்தியமில்லாது போகவே பௌத்த தேசியவாதத்தைத் தோற்றுவித்தார்கள். வடக்கின் ஆறுமுகநாவலரை விட பன்மடங்கு “பாரம்பரிய பண்பாடு வீரனாக” திகழ்ந்த அநாகரிக தர்மபாலா தோன்றினார். இவர்களும் சுதந்திரத்துக்காகப் போராடவில்லை. மாறாக காலனியல் அரசின் கீழ் அதிக சலுகைகளுக்காகவே காவடி எடுத்தார்கள்.

வடக்கைப் பொறுத்தவரையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஆதிக்கத்தில், இருந்த உயர் வர்க்கங்களின் நோக்கம் இருவிதமானதாக இருந்தது. ஒன்று சாதி அடிப்டையில் அமைந்த தமது சமூக பொருளாதார மேலாதிக்கத்தைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பது இரண்டாவது பிரித்தானிய பொருளாதாரத்தால் புதிது புதிதாக தோன்றிவந்த பொருளாதார வாய்ப்புகளில் தாமே அதிகமான பங்கினைக் கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்பதாகும். இதற்கு ஒரே வழி கொழும்பில் குடியேறும் வாய்ப்புகளை அதிக அதிகமாக ஏற்படுத்திக் கொள்வதேயாகும் என எண்ணினார்கள். இந்த இரண்டையும் அடைவதை நோக்கியே அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

யாழ்ப்பாணத்தில் சமூக-பொருளாதார மேலாதிக்கம் நிலஉடைமையாளர்களாகவும், அடிமை உடைமையாளர்களாகவும், குடிமைகளின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புடையவர்களாகவும் இருந்த வெள்ளாளர் என்ற சாதிப்பிரிவினரேயாகும். இவர்களே உயர்சாதியினர் என்றும் கருதப்பட்டார்கள். இவர்கள் தமது சாதி ஆதிக்கத்தைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தவே விரும்பினார்கள். அதற்காகவே முயன்றாகள். பிரித்தானியரும் மிஷனரிமாரும் சாதி அமைப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தயாராய் இருக்கவில்லை. அதில் சில சீர் திருத்தங்களை ஏற்படுத்த விரும்பினார்கள். அடிமை வியாபாரத்தையும், அடிமைகளாக வைத்திருப்பதையும் சட்ட விரோதமாக்கினார்கள். அடிமைகளாக இருந்தவர்களில் ஒரு பகுதியினருக்கு சம்பளம் கொடுத்து தம்முடனான கூலியாட்களாக அமர்த்திக் கொண்டார்கள். (நிரந்தரமாகவல்ல) இது மாத்திரமல்ல மிஷனரிகள் தமது பாடசாலைகளிலும், கோவில்களிலும் ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரையும் கூடச் சேர்த்துக் கொண்டார்கள். இவ்விதமான பல சீர்திருத்தங்கள் நடைபெற்றன. இச் சீர்திருத்தங்களை பொறுக்க முடியாத நிலையிலேயே “சைவ தமிழ் மறுமலர்;ச்சி இயக்கம்” ஆரம்பமானது. இதையே சிலர் தமிழ் தேசிய எழுச்சியாக எடுத்துக் காட்டப்படுகிறார். (ஆறுமுக நாவலரா சேர் பொன் இராமாநாதனா இதன் நிஜமான தலைவர் என்பது ஆராயப்பட வேண்டிய தொன்றாகும்) இவ் வியக்கத்தின் சமூக உள்நோக்கத்தைப் பற்றி ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஒரு மதிப்பீட்டைச் செய்தவற்குப் பதிலாக தமிழ் மொழி தொடர்பாகவும், கல்வி தொடர்பாகவும் இவ்வியக்கம் வகித்த, பங்களிப்புகள் மிகப் பிரமாதம் என்று வர்ணிப்பதுடன் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. இவ்விதமானோர் தோற்றத்தை நியாயப்படுத்துவதற்காக 1930கள் வரை கல்வி தொடர்பாக மிஷனரிமார் வகித்த பங்களிப்புகள் யாழ் குடாநாட்டில் தலையாய பங்களிப்புகளாக இருந்து வந்துள்ளன என்பது சிலரால் மறைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் 1920களிலும் அதன் பின்பும், நாவலர் இராமநாதன் கொள்கையுடன் இணங்கிப் போகாத யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸனர் மிஷனரிமாருடன் முரண்பட்டுக் கொள்ளாமலேயே கல்வி தொடர்பாக அளப்பரிய தனித்துவ பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள் என்பதுவும் மறைக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மொழியின் வளர்ச்சி தொடர்பாகவும் கூட மிகைப்படுத்தல்கள் நடைபெற்றுள்ளன. மிஷனரிமார் 20ம் நு}ற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தமிழ்மொழி தொடர்பான அரியபல அறிஞர்களை ஊக்குவித்;துள்ளார்கள். சுவாமி ஞானப்பிரகாசர், தாவீது அடிகளார், தவத் திரு. லோங் அடிகளார் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் சிறந்த உதாரணங்களாகும். தமிழ்நாட்டில் வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சாதாரணமானதல்ல. இச்சாதனைகளை கணக்கில் கொள்ளாது ஒரு பக்கப்பார்வையே பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் அங்கத்தினர் தனிநபர்களாகவும், அமைப்;புரீதியாகவும் தமிழ்மொழியின் வளர்ச்சி தொடர்பாக பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இவைபற்றியும் கூட மறைக்கப்படுகின்றது.

இரண்டாவது விடயம் கொழும்பில், காலனிய அடிமைநாட்டின் தலைநகரில் நிலையான குடித்தனம் நடத்த முன்னெடுக்கப்பட்ட அரசியலாகும். கொழும்பை வளர்ப்பதையும், கொழும்பில் வளர்வதையும் நோக்கமாகக் கொண்டதாகவே இராமநாதனின் தலைமையிலான அன்றைய “தமிழ் தேசிய இயக்கம்” அமைந்திருந்தது.

1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் தோற்றம் பெறும்வரை இலங்கைத் தேசிய நிறுவனமே (ஊநலடழn யேவழையெட யுளளழஉயைவழைn) பிரதான, ஏக இலங்கை அரசியல் ஸ்தாபனமாக இருந்தது. இலங்கைத் தேசிய நிறுவனத்தை ஸ்தாபித்ததுவும், இதற்குத் தலைவராக இருந்ததும் சேர். பொன், இராமநாதன் அவர்களேயாகும். இலங்கைத் தேசியத்தை உருவாக்குவதில் இவர் முன்நின்று உழைத்தார். சிங்களவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் இவர் அபார வெற்றிகளை ஈட்டினார். 1915 ல் கரையோர சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இனத் தாக்குதலைத் தொடுத்தார்கள். இதனால் சிங்களத் தலைவர்கள் பிரித்தானிய எஜமானர்களின் கோபத்துக்கு உள்ளானார்கள். இந்த கோபத்தைத் தணிக்க சிங்களத் தலைவர்களின் சார்பில் சேர். பொன். இராமநாதன் மகாராணியாரிடம் து}து சென்றார். தனது கடமையில் வெற்றியும் பெற்றார். வெற்றியுடன் திரும்பிய இவரை சிங்கள தலைவர்கள் ராஜமரியாதையுடன் வரவேற்றார்கள். அதுமட்டுமல்ல ஹென்றி ஒல் கொட்டினதும், இராமநாதனினதும் முயற்சியாலேயே வெசாக்தினம் பொதுவிடுமுறையாக மாறியது. பௌத்த நிறுவனங்களினதும் புனர் அமைப்பிற்கும் பாதுகாப்பிற்குமான பல சட்டங்களை ஆக்குவதிலும்கூட இவர் துணிவுடன் போராடியுள்ளார். இவர் மேல் பௌத்தர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணத்தால் பௌத்த கல்விக்காக வென்று ஒல்கொட் அவர்களால் சேர்க்கப்பட்ட பிரமாண்டமான நிதிக்கு ஒல்கொட்டும், இராமநாதனும் இணைப் பொருளாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். இந்து – பௌத்த கல்லு}ரி ஒன்று அமைப்பதற்கும் இராமநாதன் எவ்வளவோ முயற்சித்தார். இதற்கான பொது நிறுவனமும் அமைத்தார். ஆனால் பௌத்தர்கள் இவரை ஏமாற்றி, இவரைக் கணக்கெடுக்காது ஆனந்தா கல்லு}ரியை அமைத்தார்கள். அதன் பின்பே இவர் கொழும்பில் சைவக் கல்லு}ரி ஒன்றை நிறுவினார். அந்நிலையிலுங்கூட சிங்களவர்கள் தேசியத் தன்மை இழந்து வருதலை (னநயெவழையெடணையவழைn) யிட்டு கடும் எதிர்ப்புக் காட்டினார்.

1911 ம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் படித்த இலங்கையர் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தார்கள். மிக அதிகப்படியான வாக்குகளால் இராமநாதனே முதலாவது இலங்கைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 664 வாக்குகள் மேலதிகமாகப் பெற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்டது பெர்னாண்டோ என்ற ஒரு சிங்கள கத்தோலிக்கராவர். யாழ்ப்பாணத்தில் மொத்தமாக பதிலான 440 வாக்குகளில் 410 வாக்குகளை இராமநாதனே பெற்றார். இராமநாதனின் இவ்விதமான தேசிய தலைமைப் பாத்திரத்தால் தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்து தமிழர்கள் கொழும்பில் குடியேறுவதும், நிரந்தர வசிப்பிடங்களை அமைப்பதும் எதுவித அரசியல் தடங்கல்களும் அற்றதொரு நிகழ்ச்சியாயிற்று. இந்த இலங்கையின் தமிழ்தலைவர்கள் இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கு எதிர் கருத்து கொண்டவர்களாகவும், தமிழ் பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் நாட்டமற்றவர்களாகவும், தமிழ் இனத்தின் எதிர்கால அரசியல் உரிமைகள் பற்றி எதுவித அக்கறையற்றவர்களாகவுமே இருந்தனர்.

இந்த விதமான ஒரு அரசியல் சூழலில்தான் விபுலானந்தர் யாழ்ப்பாணம் வருகிறார். யாழ்ப்பாணத்தில் அவர் அரசியல் நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடுள்ளவராய் இருந்திரா விட்டாலும் முன்கூறிய அரசியல் போக்குடன் முரண்பட்ட ஒரு நிலைப்பாட்டையே அவர் யாழ்ப்பாணத்தில் எடுத்துள்ளார். அதேநேரத்தில் அரசியலில் காலனியல் வாதிகளுடன் இசைந்து போன மிஷனரிமார்களுடனும் இவர் தன்னை இனங்காட்டிக் கொள்ளவில்லை. காலனியல்வாதிகளிடம் சீர்திருத்தத்தை இரந்து நின்ற இராமநாதன் அணியுடனும் தன்னை இனங்காட்டிக் கொள்ளவில்லை. இவர் மூன்றாவது ஒரு அணியாகவே தன்னை இனங்காட்டிக் கொண்டார்.

எது அந்த மூன்றாவது அணி? அவர்களின் கொள்கைகள் தான் என்ன? அவர்களின் நடவடிக்கைகள் என்ன?

மூன்றாவது அணியும் அதன் வரலாறும், அறிமுகம்

1924ல் இருந்து 1931 வரை யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸே அந்த மூன்றாவது அணியாகும்.

1924 ற்கு முன்பாக யாழ்ப்பாணக் கல்லு}ரியில் ‘யாழ்ப்பாணக் கல்லு}ரியின் வாசகர் வட்டம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பு இயங்கி வந்தது. யாழ்ப்பாணக் கல்லு}ரி 19 ம் நு}ற்றாண்டிலேயே தோற்றுவிக்கப்பட்ட ஒரு மிஷனரி கல்வி நிறுவனமாகும். இக்கல்லு}ரியில் தான் முதல்முதலாக (1910 களில்) எஸ். ஆர். ஜேக்கப் என்ற “தீண்டத்தகாத சாதிப் பிரிவு” மாணவர் ஒருவர் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார். இந் நடவடிக்கையை எதிர்த்து பாடசாலையில் கல்விகற்ற “உயர்சாதி” மாணவர்கள் பாடசாலையைப் பகிஷ்;கரித்தனர். ஆனால் அன்றைய அதிபரின் உறுதியான நடவடிக்கையால் மாணவர்களும் பெற்றோர்களும் அம்மாணவனை ஏற்றுக்கொண்டு தமது பகிஷ்கரிப்பை கைவிட்டனர். இக்கல்லு}ரியிலும் ஏனைய மிஷனரிக் கல்லு}ரிகளிலும் “தீண்டத்தகாத சாதிப்பிரிவினர்” சிற்று}ழியர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

... 1924ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் திகதி சனிக்கிழமை மாணவர் சங்கம் முப்பது படித்த இளைஞர்களுடன் யாழ்ப்பாணத்தில் வை. எம். சி. ஏ மண்டபத்தில் உருவெடுத்தது. ஆசிரியர்கள். சட்டத்தரணிகள். உயர் வகுப்பு மாணவர்கள், அரசியல் அபிமானிகள் ஆகியோருடன் இது உருவாகியது. இதன் ஆரம்ப கால அமைப்பாளர்களுள் சுவாமி விபுலானந்தரும் ஒருவராவார். இதன் ஆரம்பகால அங்கத்தவர்களில் பலர் யாழ்ப்பாணக் கல்லு}ரி உயர் வகுப்பு மாணவர்களாகும். இதே ஆண்டு சித்திரை மாதந்தான் அவர் துறவறப் பட்டம் பூண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாரம்பகால அங்கத்தவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கியவர்களாகவே இருந்தார்கள். மிஷனரி பாடசாலையில்தான் இது கருக்கொண்டிருந்தாலும் கூட எந்த அருட்திரு தந்தைகளும் இதன் ஆரம்பகால அங்கத்தவராக இருந்ததாகத் தெரியவில்லை. விபுலானந்தர் மட்டுமே இதில் அங்கம் வகித்த ஒரே ஒரு துறவியாவர்.

ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் என அழைக்கப்பட்ட இந்தச் சங்கம் பின்னர் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் என்ற பெயரைப் பெற்றது.

வாலிபர் காங்கிரஸ{ம் சாதி அடக்கு முறையும்

1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம், 30ம், 31ம் திகதிகளில் யாழ்ப்பாண றிசர்வ மண்டபத்தில் நடைபெற்ற வாலிபர் காங்கிரஸ் 1வது மாநாடு நிறைவேற்றிய 10 தீர்மானங்களில் மூன்றாவது தீர்மானமாக அமைந்தது தமிழர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் தீண்டாமைக்கு எதிரான குரலாகும். அதை ஒழிப்பதற்கு காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என அத்தீர்மானம் வலியுறுத்தியது. இம் மாநாடு திரு. ஹண்டி பேரின்பநாயகத்தின் தலைமையிலேயே நடைபெற்றது. இக் காங்கிரஸ் உருவாக்கத்திலும் அதைச் செயற்படுத்துவதிலும் இவரே பிரதான பொறுப்பு வகித்தார். “ஹண்டி பேரின்பநாயகமும் அவருடன் இணைந்த நண்பர்கள் சிலரும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லு}ரியில் தொழில் செய்து வந்த தாழ்;த்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று தேநீர் சிற்றுண்டி அருந்தி தீண்டாமைத் திமிர் கொண்டோரின் சவாலை முறியடித்தனர் என்றும் அறிய முடிகிறது ......”

“வருடா வருடம் நடைபெற்று வந்த வாலிபர் காங்கிரஸ் மாநாடுகளில் தீண்டாமைக்கு எதிரான கருத்துக்களும், தீர்மானங்களும் பிரதான இடத்தைக் கொண்டிருந்தன. இதற்குக் காரணம் வாலிபர் காங்கிரஸ் இளைஞர்கள் இந்திய தேசிய இயக்கத்தின் தீவிர கருத்துக்களால் கவரப்பட்டிருந்தமையும் பரந்த கல்வி அறிவைப் பெற்றிருந்தமையுமாகும். விவேகானந்தர், காந்தி, பாரதி போன்றோரது காலனி எதிர்ப்புக் கருத்துக்களும் சமூக சீர்திருத்த சிந்தனைகளும் இவ் இளைஞர்களை அதிகளவு ஆட்கொண்டிருந்தன.”

விவேகானந்தர், பாரதி பற்றிக் கூறும்போது விபுலானந்தருக்கு அவர்கள் மேல் இருந்த ஈடுபாடுபற்றி சிறிது கூறுவது அவசியமானது. இவர் 1922 – 1924 வரை சென்னை மைலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தில் இருந்த போது இராமகிருஷ்ண விஜயம் (தமிழ்) வேதாந்தகேசரி (ஆங்கிலம்) ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். விவேகானந்தர் பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், அவரின் பல நு}ல்களை மொழிபெயர்த்தும் உள்ளார்.

அதேபோல் 1928ல் திருகோணமலை ஆங்கில கலாசாலையில் பாரதியாரின் படத்தை திரைநீக்கம் செய்துவைத்து பாரதியாரை பலருக்கும் அறிமுகப் படுத்தினார். 1931ல் இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த போது, இவர் தமிழ் நாட்டில் பாரதி கழகம் கட்டினார். பாரதி பாடல்களுக்கு இசையமைத்தார். தமிழ் நாட்டில் பாரதியாரை ஜனரஞ்சகப் படுத்துவதில் முன்னெடுப்பாளனாக இருந்துள்ளார்.

இது பற்றி சி. திமிலைத்துமிலன் எழுதிய கவிதை ஒன்றை இங்கே நோக்குவோம்.


கூட்டுக்குட் கோழிக் குஞ்செனத் தமிழைப்
பூட்டிவந்த பண்டிதர்கள் பாரதியின் பாட்டை
நல்ல தமிழல்ல நாங்கள் அனுமதியோம்
மெல்ல அதுசாக மென்றிடுவோம் என்று
பட்டடை நாய்கள் போல் பாதுகாத்த வேளையிலே
அட்டமா இருள்முன் ஆதவனைப் போல்வந்து
இங்கிதமாய்க் கவிச் சிறப்பை ‘இழிசனர்க்கும்’ அறிவித்தும்
சங்கங்கள் தொடங்கியும் சபையினிலே முழங்கியும்
பாரதியின் புகழையவர் பாட்டின் திறமைகளைப்
பாரதத்தின் புத்திரர்க்கும் பாருக்கும் விளக்கியவர்”

இனி யாழ்ப்பாணத்தின் மூன்றாவது அணி பற்றிய யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ். வரலாற்றுக்குள் தொடர்வோம்.

“1927ம் ஆண்ட கார்த்திகையில் மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தார். வாலிபர் காங்கிரஸ் அவரை யாழ்ப்பாணம் அழைத்திருந்தது. காந்திக்கு யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வரவேற்புக் கொடுப்பதற்கான தயாரிப்புக் கூட்டங்களைக் காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வந்தார்கள். சில இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் சாதி வெறியர்கள் தலையிட்டு காந்திக்கு வரவேற்புக் கொடுக்கும் அதேவேளை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதில்சமத்துவம் கொடுக்கக் கூடாது என வாதிட்டனர். இவ்வளவிற்கும் மத்தியிலும் 26-11-1927ல் யாழ் முற்றவெளியில் காந்தி வரவேற்கப்பட்டார். வரவேற்புக் கூட்ட மேடையில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளும் வீற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.” இந்த வரவேற்புக் கூட்டம் விபுலானந்தர் தலைமையிலேயே நடைபெற்றது. 1925ல் நடைபெற்ற இரண்டாவது மாணவர் காங்கிரஸ{ம் இவரின் தலைமையிலேயே நடைபெற்றது. (1925 – ஏப்ரல் - 26).

“1928ல் கீரிமலை வைத்திலிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மாநாடு சமூக ஒருமைப்பாட்டு மாநாடாக நடைபெற்றது. விபுலானந்தர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சுயராச்சியக் கட்சித் துணைத் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி. நாலாந்தாக் கல்லு}ரி அதிபர் ஜி. கே. டபிள்யு. பெரேரா, தொழிற் சங்கவாதி ஏ. ஈ. குண சிங்கா, கௌரவ ஆ. கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை ஓர் நாடளாவிய மாநாடாகக் கொள்ள வைத்தனர்” இந்த மாநாட்டில் சமபந்தி சமபோசனம் என்ற நடவடிக்கையை அமுல்படுத்துவதில் மண்டப உரிமையாளன் பல தடங்கல்களை ஏற்படுத்தினான் என்பது கவனிக்கத்தக்கது.

“1929ம் ஆண்டு சித்திரை மாதத்தில் காங்கேசன்துறையில் அமைக்கபட்ட பந்தலில் 4வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து வந்திருந்த தமிழ்த் தென்றல் கல்யாணசுந்தர முதலியார் தலைமை தாங்கினார். இம் மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் பங்கு கொண்டனர். சமபந்தி சம ஆசனம் என்ற வாலிபர் காங்கிரஸின் உறுதியான நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது. இது பற்றி 13-4-1929ல் டெயிலி நியூஸ் பத்திரிகை எழுதுகையில் “யாழ்ப்பாணத்தில் புரட்சிகர நடவடிக்கை” என வர்ணித்தது. இந்த மாநாட்டின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக் குழுவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும், சமூக நலன் விரும்பும் கல்வி கற்ற இளைஞனுமாய் இருந்த திரு, யோவேல் போல் அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த இடத்தில் யோவேல் போல் பற்றி சிறிது கூறுவது அவசியமானது. அப்போதுதான் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் கால சமூக-அரசியற் பின்னணியை நன்கு புரிந்து கொள்ள முடியும். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தீண்டாமைக்கு எதிராக முனைப்புமிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது “தீண்டத்தகாதோரை” பிரதிநிதித்துவம் செய்யும் தனியான ஸ்தாபனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்றது. ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் என்ற பெயருடன் 16-7-1927ல் இது உதித்தது. இது கிறிஸ்துவ பின்னணியிலேயே தோற்றுவிக்கப்பட்டது. “உயர் சமூகத்தை”ச் சேர்ந்த கிறிஸ்தவரான நெவில் செல்லத்துரை என்பவரே இதன் தலைவராக இருந்தார். மிஷனரிக் கல்லு}ரி இளைஞர்களாய் இருந்த திரு. யோவேல் போல், திரு. டி. ஜேம்ஸ் ஆகிய இருவரும் இணைக் காரியதரிசிகளாக இருந்தனர். 1927ல் காந்தியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது யோவேல் போல், தலைமையில் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் ஒரு வரவேற்புப் பந்தல் அமைந்தது. இப் பந்தல் சாதி வெறியர்களால் எரிக்கப்பட்டது. யோவேல் போல் மீண்டும் அதே இடத்தில் பந்தல் அமைத்து காந்திக்கு வரவேற்புக் கொடுத்தார். 1928ம் ஆண்டு இவரின் முன்னெடுப்பில் உடுவில் பெண்கள் பாடசாலையில் சம ஆசன சமபோசன இயக்கம் நடைபெற்றது. வெற்றியும் தந்தது. பாடசாலைகளில் சம ஆசனம், சம போசனம் தொடர்பாக இவர் இருமுறை தேசாதிபதியைக் கண்டுள்ளார். இது நடந்தது 1928, 1929லாகும். இது தொடர்பாக இவர் டொனமூர் ஆணைக் குழுவிடமும் சாட்சிபகன்றார்.

யோவேல் போலின் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும்; நோக்குடனும், இவ்விதமான போராட்டத்தில் ஈடுபடுவதற்காக யோவேல் போலை கௌரவிக்கும் நோக்குடனுமே அவரை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தனது நிர்வாகக் குழு அங்கத்தவராகத் தேர்ந்தெடுத்தது போலும்.

1930ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு, சம ஆசனம், ஆலய பிரவேசம். மிருகபலிநீக்கம் போன்ற சமூகநீதிகளை முன்கொணரும் மாநாடாக இருந்தது. இம்மாநாடு சமூக நீதியை நிலைநாட்டிக் கொடுமைகளைக் களைய முற்படக்கூடிய பல ஆலோசகைகளை முன் வைத்தது.

1930, 1931 களில் அது கூடியளவு அரசியல் குணாம்சம் கொண்டதாக மாறி, பின்னர் தன்னைக் கலைத்துக் கொண்டது. இதன் அங்கத்தவர்கள் பலர் வௌ;வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து கொள்கிறார்கள். அனேகமானோர் இடதுசாரிக் கட்சிகளுடனேயே இணைகிறார்கள். 1930 களிலேயே இடதுசாரிக் கட்சிகள் தோற்றம் பெற ஆரம்பித்தன என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். விபுலானந்தர் 1929 உடன் மீண்டும் மட்டக்களப்பை வந்தடைகிறார்.

இந்த வாலிபர் காங்கிரஸ் சமூக நீதிக்காக மட்டுந்தான் போராடியதா? இல்லை இன்னும் பல விவகாரங்களையும் தனது வேலைத் திட்டத்தில் உள்ளடக்கியிருந்தது. அவை எவை என்று இனிவரும் பந்திகளில் நோக்குவோம்.

இவ்விடயத்துள் புகுமுன்னர், தீண்டாமை ஒழிப்பில் விபுலானந்தர் எவ்வளவு து}ரம் அக்கறையாய் இருந்தார் என்பதைச் சற்று அவதானிப்பது அவசியமானது. 1970 களிலும், 1980களிலும் தீண்டாமைக்கு எதிராகப் பேசுவதும் சமதர்மம் பேசுவதும் ஒரு காலக்கோலமாக (பகஷன்) இருந்தது. மேடைகளிலும், பொது இடங்களிலும், இலக்கியங்களிலும் பலர் சாதிசமத்துவம், சமதர்மம் சீதனஒழிப்பு இவைபற்றி எல்லாம் பகிரங்கமாகப் பேசுவார்கள். முற்போக்குவாதிகளாகத் தம்மை வெளிக்காட்டிக் கொள்வார்கள். ஆனால், நடை முறையில், அதிலும் குறிப்பாக தமது சொந்த வாழ்க்கை நடவடிக்கைகளில் தாம் பேசுவதை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் ஒரு இணைவைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். பேசுவதற்கு எதிர் மாறாகவே நடந்து கொள்வார்கள். “சில நடைமுறைச் சிக்கல்கள்” என்று சாக்குப் போக்கும் கூறிக் கொள்வார்கள்.

ஆனால் 1970 களின் முன்பு அதுவும் குறிப்பாக 1920 களில் சாதி சமத்துவம் பேசுதல் என்பது மிக அருவருக்கத் தக்க தொன்றாகவும், மதத்துரோகமும், தமிழ் பண்பாட்டுத் துரோகமும் மிக்க தொன்றாகவுமே கருதப்பட்டது. சாதி சமத்துவம் பேசியவர்கள் சமூகத்தில் இருந்தே ஓதுக்கப்பட்டார்கள். ஒரு கல்விமானாகவும், கல்லு}ரி அதிபராகவும், இந்து மதத் துறவியாகவும் இருந்த விபுலானந்தர் இவ்வளவு பிரச்சனைக்கும் முகம் கொடுத்தார். இவற்றிற்கு எதிரான போராட்டத்தின் மூலம் அவரது உள்ளம் மிக வைராக்கியமடைந்ததே தவிர தளர்ந்து போய்விடவில்லை என்பதை 1930 களில் தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்கள் மூலம் உணரக்கூடியதாய் உள்ளது.

1931ல் இவர் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த போது தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்புக்களுக்கு (சேரிகளுக்கு)ச் செல்வதை ஒரு விருப்பமான கடமையாகக் கொண்டிருந்தார். அம் மக்களின் பண்பாட்டிலும் கலாசாரத்திலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது. அடிமட்ட மக்களின் தொடர்பினால் அவர் பல விடயங்களைக் கற்றார். அதேவேளையில் அவர்களுக்கு பல விடயங்களைக் கற்பித்தார். சேரிகளும் அவருக்கு பல்கலைக்கழகமாக இருந்தன. திருவேங்கடத்தைச்சுற்றியிருந்த இந்தச் சேரிக் குழந்தைகளை இன்புறுவித்தலில் அவர் ஆத்ம திருப்தி பெற்றார். இவரும் இவரைப் பின்பற்றுபவர்களும் அக் குழந்தைகளைக் குளிப்பாட்டி சட்டையிடுவார்கள். அக் குழந்தைகளுக்கு வடை, சுண்டல் கொடுத்து மகிழ்வூட்டுவார்கள். இவர்கள் தம்முடன் பிற சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளையும் அழைத்துச் செல்வார்கள். சிறுவர், சிறுமியர்களிடம் மனிதனின் இயல்பான குணங்களான மனித நேயந்தானே மேவி இருக்கும். இதனால் சாதி பேத வேறுபாடுகளை மறந்து அக்குழந்தைகள் கூடி விளையாடுவார்கள். விபுலானந்தர் இதை வழி நடத்துவார். இவர்களின் இச் செயலைக் கண்டு பொறுக்காத “பெரியவர்களின்” முயற்சியால் விபுலானந்தர் நல்லநீர்க் கிணற்றில் நீர் அள்ளுவதுகூடத் தடுக்கப்பட்டது. இவர் சிலகாலம் தனது எல்லாத்தேவைகளுக்கும் உப்புநீரையே பயன்படுத்த வேண்டி ஏற்பட்டது.

அவரின் இந்நடவடிக்கை சொல்லுக்கும், செயலுக்கும் இடையில் ஓர் இணைவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர் தொடர்ந்து விடா முயற்சியுடன் இருந்து வந்துள்ளமைக்கான ஓர் உதாரணமாகும்.

காங்கிரஸின் ஏனைய நடவடிக்கைகள்@
தமிழ் மொழிக் கல்வி.

அளவு சமூகமான (ளுழஉயைடணைநன) ஒரு தனிமனிதன் தனது நடவடிக்கைகள் இருவகைகளில் வெளிக் கொணர்கிறார்கள். ஒன்று தனிநபராக அவன் ஆற்றும் கடமைகள். மற்றையது நிறுவனரீதியான நிறுவனமொன்றின் ஊடாக அவன் ஆற்றும் கடமைகள். சமூகவியல் விவகாரங்களில் அதிக நாட்டமுள்ள ஒரு மனிதன் வாய்ப்புக்கிட்டுமானால் நிறுவனரீதியாக நிறுவனமொன்றின் ஊடாக கருமமாற்றுவதையே அதிகம் விரும்புவான். இதன் மூலமே அவனின் எண்ணங்கள், மனப்பாங்குகள், அபிலாசைகள் அதிகளவு சக்தி மிக்கதாக மாற்றமுறும்.

விபுலானந்தர் மிக அதிகளவு சமூகமான ஒரு தனிநபராவார். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது தனிநபர் என்ற முறையில் அவர் ஆற்றிய கருமங்களையும் விட நிறுவனரீதியாக அவர் ஆற்றிய கருமங்களே அதிகமானதும், அதிக வீச்சுக் கொண்டதுவுமாகும். ஆகவே விபுலானந்தரைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர் அதிகளவு தன்னை அர்ப்பணித்த நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுபற்றியும் புரிந்து கொள்ள வேண்டும் இவ்விதம் நோக்கும்போது யாழ்ப்பாணத்தில் அவர் ஈடுபட்ட நிறுவனங்களில் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ{ம், ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கமும் பிரதானமானவை. நாம் இவைபற்றி ஆராய வேண்டியது மிக அவசியமானதாகும்.

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஒரு படித்த வாலிபர் அமைப்பேயாகும். நகர்ப்புற மத்தியவர்க்க இளைஞர்களே இதன் அங்கத்தவர்களாக இருந்தார்கள். கல்வியமைப்பில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே இவ்வமைப்பின் பிரதான, தலையாய குறிக்கோளாக இருந்தது. இது கல்வி மறுமலர்ச்சி என்ற கோணத்தில் இருந்தே அனைத்துச் சமூகப் பிரச்சினைகளையும் அணுகியது. கல்வியில் பாரபட்சமற்ற சமவாய்ப்பு அவசியம் என்பது இதன் கொள்கையில் ஒன்றாக இருந்தது. சாதிபேதம் இச்சமவாய்பை மறுத்து நின்ற பலமிக்க சமூக காரணியாக இருந்தது. இதனாலேயே வாலிபர் காங்கிரஸினர் சாதி பேதத்தையும எதிர்க்க வேண்டிய நிலைக்குள்ளானார்கள். கல்வி மறுமலர்ச்சியே இவர்களது பிரதான குறிக்கோளாகும் என்பதே நாம் இங்கு அவதானிக்க வேண்டிய முக்கிய குறிப்பாகும்.

கல்வி மறுமலர்ச்சிக்குத் தடையாக இருந்த மற்றோர் காரணி தான் அந்நிய மொழிக் கல்வியாகும். இதனால் தான் தாய்மொழிக்கல்வி என்பது இவர்களின் அடுத்த கொள்கையாக இருந்தது. “மூன்று நாட்கள் நடைபெறும் தங்கள் மாநாட்டில் ஒருநாள் தமிழ் மொழியில் நடைபெறுவதும், தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் உரிய, நாளாக அந்நாளைக் கொள்வதுமாக நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தனர்” “தேசிய கல்வித் திட்டத்தில் ஆங்கிலத்துக்கான இடத்தை அன்னை மொழிக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் தேசிய மொழிகளுக்குத் தரும் முக்கிய இடமாகக் காணப்பட்டது.

“இவ் விளைஞர் சங்கத்தின் மற்றுமோர் கல்விப்பணி வடமாகாண ஆசிரியர் சங்கத்தினைத் தமது செல்வாக்கினுள் வைத்திருந்து ஆசிரியர் உலகத்துக்குப் பணியாற்றியதாகும். இப்பெருமக்கள் ஆசிரியர் மத்தியில்நிலவிய வேதன முரண்பாட்டை நீக்குவதற்காக உழைத்தனர். மொழிவாரியாக வேதகன முரண்பாடு காட்டப்படக்கூடாது என்று அரசாங்கத்துடன் வாதிட்டு வந்தனர். மேலும் பள்ளிக்கூடங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றனர். தேசியக் கல்வித்திட்டம், அன்னைமொழிக் கல்வி, கட்டாயக்கல்வி, இலவசக்கல்வி, தொழி;ற்கல்வி, விஞ்ஞானக்கல்வி போன்று கல்வி விரிவடைய அரும்பாடுபட்டனர்”

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் முன்னோடியும், ஆசிரிய தந்தை என்று கருதப்பட வேண்டிய வருமான ஹண்டி பேரின்பநாயகம் அவர்கள் அன்னை மொழிக்கல்வி, தேசியக்கல்வி ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவராவார்.

இக்காங்கிரஸின் அங்கத்தவர்களாக இருந்த பேராசான் நேசையா, சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து 1930ல் வாலிபர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினவருமான சைவப்பெரியார் சிவபாதசுந்தரம் போன்றோர் அன்னை மொழிக் கல்விக்காக உழைத்த முக்கியஸ்தர்களாவர். திரு, நேசையா அன்னை மொழிக்கல்வி தொடர்பாக ஒரு நு}ல் எழுதியுள்ளார். திரு. சிவபாதசுந்தரம் கல்வி ஆலோசனை சபை அங்கத்தவராக இருந்து அச்சபையில் அன்னை மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

20ம் நு}ற்றாண்டின் முதற் காலப்பகுதியில் இருவிதமான தாய்மொழிக்கல்வி இயக்கங்கள் செயற்பட்டன. ஒன்று, இலங்கை மக்களில் மிகப் பெரும்பான்மையினர் கல்வி கற்பதை சாத்தியப்படுத்துவது என்ற நோக்கம்கொண்டது. மற்றையது. ஐரோப்பிய மயமாதலுக்கு தடைகள் இடுவதை நோக்கமாய்க் கொண்டது. இலங்கையின் உயர்வர்க்கங்கள் குறிப்பாக சிங்கள உயர்வர்க்கங்கள் தாய்மொழியையும் பாரம்பரிய மதத்தையும், பண்பாட்டையும் மறந்தே போய்விடும் நிலைமை தோன்றியிருந்தது. அவர்கள் தமது அன்றாட வாழ்க்கைப் பழக்கவழக்கங்களில் ஐரோப்பிய மயமாகி வந்தார்கள். இதைத் தடுத்து நிறுத்தி பாரம்பரிய பண்பாட்டை மீளப் பாதுகாப்பதற்கான வழிவகைகளில் ஒன்றாக கிறிஸ்தவ மத எதிர்ப்பும், தாய் மொழிக் கொள்கையும் பின்பற்றப்பட்டது. சேர். பொன் இராமனாதனே இந்த வகையான தாய்மொழிக் கல்வி இயக்கத்தின் தமிழ்ப்பகுதி முன்னோடியாக இருந்தார். இராமனாதன் குழுவினருக்கு பரவரான மக்கள் கற்கவேண்டும் என்பதுவோ, கற்றல் சலபமாக்கப்பட வேண்டும் என்பதுவோ ஒரு நோக்கமாய் இருக்கவில்லை. மொழியை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதற்கு அப்பால் இவர்களின் தாய்மொழிக் கல்வி இயக்கத்தால் வளரமுடியவில்லை.

ஆனால் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பரவலான மக்கள் கற்க வேண்டும் என்பதையும், கற்றல் சுலவமாக்கப்படவேண்டும் என்பதையுமே தனது நோக்கமாய் கொண்டிருந்தது. ஆகவே இது தேசிய கல்விக்காக வாதிட்டதே தவிர, மொழியை “தேசிய இயக்கத்தின்” ஒரு அரசியல் கருவியாக மட்டும் பயன்படுத்தும் கீழ் நிலைக்கு இறங்கிச் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது. இதன் அங்கத்தவர்கள் மொழிவளர்ச்சிக்கு தனிநபர்கள் என்ற முறையிலும், அமைப்பு ரீதியாகவும் பல பங்களிப்புகளை வழங்கினர். விபுலானந்தர் இதில அதிக நாட்டமும், முயற்சியும் உடையவராய் இருந்தார்.

அறிவியற் கல்வி தமிழிலும் போதிக்கப்பட வேண்டும் என்பதில் விபுலானந்தர் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். பல ஆங்கில நு}ல்களை மொழிபெயர்த்தார். இதற்காக 1922 இலேயே யாழ்ப்பாண காங்கிரஸ் அமையுமுன்பாக, மேற்றிசை செல்வம், விஞ்ஞான தீபம் ஆகிய நு}ல்களை இயற்ற ஆரம்பித்தார். விபுலானந்தர்ம1966ல் சென்னை பச்சையப்பன் கல்லு}ரியில் நடைபெற்ற கலைச் சொல்லாக்க மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டார். விஞ்ஞான நு}லாக்க சொல்லாக்குகழகம் ஒன்றை நிறுவி தாமே தலைமையும் தாங்கினார். 1920-1922 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்த போது, இவர் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார். பல்கலைக் கழகம் சம்பந்தமான இவரது கொள்கைகளைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு களமாகவே இச்சங்கம் அமைந்திருந்தது. இதற்கான பாடத்திட்டத்தைத் தயாரிப்பதில் இவர் பிரதான பங்கு வகித்தார். பிற மதத்தினருடனும் இணைந்து செயற்படும் அவரின் பண்பு இங்கும் வெளிப்பட்டது. அருட்திரு. ஞானப்பிரகாசருடன் இவர் இங்கு கூட்டுச் சோந்து செயற்பட்டார். நெருங்கி ஒத்தழைத்தார். தமிழ் மொழியியல் விற்பன்னரான ஞானப்பிரகாசருடன் நட்புப் பூண்டார். அருட்திரு ஞானப்பிரகாசரின் தமிழ் மொழி ஒப்பியல் நு}லே சங்கத்தின் பாட நு}லாகவும் இருந்தது. இப் பாஷா அபிவிருத்திச் சங்கம் பிரவேச பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என்ற முத்தரங் கொண்ட மூன்று தேர்வுகளை நடத்தி வந்தது. விபுலானந்தரே இத்தேர்வுகளின் முன்னோடியாவார். விபுலானந்தர் மட்டக்களப்புக்கு திரும்பி வந்த பின்னரும் 1930ல் ஆரிய பாஷா திராவிடசங்கம் பாலபண்டிதர் பரீட்சை நடத்தும் பொறுப்பை (பரீட்சகர்) விபுலானந்தரிடமே ஒப்படைத்திருந்தது. இவர் எத்தனை வருடம் இந்தப் பொறுப்பில் இருந்தார் என்பது பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை.

காங்கிரஸின் ஏனைய நடவடிக்கைகள்:
அரசியல் சுதந்திரம்.

1920 களில் இருந்த அரசியல் பின்னணிபற்றி முன்னர் குறிப்பிட்டோம். 1919ல் இலங்கை தேசிய காங்கிரஸ் தோற்றம் பெற்றது. சேர், பொன். அருணாசலமே அதன் தலைவராக இருந்தார். இவரே இதை இயக்கினார். தனது அண்ணன் சேர் பொன். இராமனாதனைத் தொடர்ந்து, சேர் பொன் அருணாசலம் “இலங்கைத் தேசியத்தின்” தந்தையாக முயற்சித்தார். அக்காலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் தென்பகுதி சிங்களவர்களுக்கும் இடையில் மிக நெருங்கிய நேசஉறவு நிலவிவந்தது. முன் குறிப்பிட்டது போல கொழும்பில் யாழ்ப்பாணத்தவர்களின் குடியிருப்புகள் பெருகி வந்தன. இலங்கையை ஆள்வதற்காக பிரித்தானியரால் தோற்றுவிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டி இலங்கைத் தேசிய காங்கிரஸ் விண்ணப்பங்கள் அனுப்பியும் சாட்சிகள் அளித்தும் “போராடிக் கொண்டிருந்தது”

இதே இருபதுகளில் கொழும்பு நகரத் தொழிலாளர்கள் மெல்ல மெல்ல அமைப்பு ரீதியாகத் தம்மை அணிதிரட்டி வந்தார்கள். பிரித்தானியருக்கு எதிரான “மலேரியா எதிர்ப்பு” இயக்கமும் “சூரியமல்” இயக்கமும் 12 தெற்கில் தோற்றமெடுத்தன. இடதுசாரி இயக்கத்தின் கருப்பைகளாக இவை விளங்கின. இவை தவிர வேறு எந்த அரசியல் கட்சிகளுமே இலங்கையில் அக்காலத்தில் இருக்கவில்லை.

20களின் முற்பகுதியில் தோற்றம் பெற்ற யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஆரம்பத்தில் ஒரு அரசியல் ஸ்தாபனமாகச் செயற்பட வில்லை. அதற்கோர் அரசியல் நிலைப்பாடு இருந்துள்ளது. ஆனால் அது ஒரு அரசியல் இயக்கமாகச் செயற்படவில்லை. 20களில் தனி ஒரு அரசியல் இயக்கமாக இருந்த இலங்கைத் தேசிய காங்கிரஸ{டன் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் முன்னோடி அமைப்புகள் தம்மை இனங்காட்டிக் கொள்ளவில்லை. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு சிறந்த நிலைப்பாடாகும்.

20 களில் யாழ்ப்பாணத்துள் செயற்பட்ட வர்க்க முரண்பாடுகள் சாதிய முரண்பாடுகளாகவே வெளிப்பட்டன. இதனால் யாழ்ப்பாணத்தின் உயர் வர்க்கங்கள் நில உடைமையாளர்களும். உயர் அதிகாரிகளும், பிரத்தானிய தரகு முதலாளித்துவ வர்க்கங்களும், பெரும் வர்த்தகர்களும் ஊறிப்போன தடித்த சாதிமான்களாகவே இருந்தார்கள். இலங்கை தேசிய காங்கிரஸின் யாழ்ப்பாணப் பகுதியினராக இருந்தவை இதே உயர்வர்கங்களேயாகும். இதனால் இலங்கைத் தேசிய காங்கிரஸின் அரசியல் என்ப யாழ்ப்பாணத்தில் சாதிமான்களின் அரசியலாகவே இருந்தது. இந்நிலையில் கல்வியில் சமவாய்ப்புக்கோரிய யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் முன்னோடிகள் இலங்கை தேசிய காங்கிரஸ{டன் எவ்விதம் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரஸ் படிப்படியாக இலங்கை தேசிய காங்கிரஸ் வழிவந்த தலைவர்களுடன் (தமிழ் மகாஜனசபை) அனைத்து வழிகளிலும் முரண்பட்ட ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்தது. வாலிபர்காங்கிரஸ் மேடைகளில் இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வீரர்களும் தென் இலங்கை தொழிற்சங்க அரசியல் வாதிகளும், இடது சாரி அரசியல் கருத்துள்ளவர்களும் தோன்ற ஆரம்பித்தார்கள். இலங்கை தேசியகாங்கிரஸ் சிங்களமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வாதிகளின் ஸ்தாபனமாகியது. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் சிங்கள ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட பகுதியினருடன் நட்புறவு பூண்டது. இந்திய சுதந்திர இயக்கத்துடன் நட்புறவு கொண்டது.

இவ்விதமாக வளர்ந்து வந்த படிப்படியான அரசியல் முரண்பாடுகள் 1931ல் வெளிப்படையான வடிவமெடுத்து பூதாகரமாக வெடித்தன. 1928 – 1929 ம் ஆண்டுகளில் பிரித்தானிய அரசு டொனமூர் ஆணைக்கமிஷனை அனுப்பிவைத்தது. இலங்கையில் அரசியல், சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான சிபார்சுகளைத் தயாரிப்பதுவே இக் கமிஷனின் நோக்கமாய் இருந்தது. யாழ்ப்பாணத்தின் சாதிப்பிரச்சினையும் ஒரு சமூக சீர்திருத்தத்தை கோரி நிற்கும்ம பிரச்சினையல்லாவா?

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பாடசாலைகளில் சம ஆசனம் சம போசனம் வேண்டி இயக்கம் நடத்தியபோது, “.....மறுபுறத்தில் உயர் குல தமிழர்களின் தலைவரும், இலங்கையின் உயர் கல்விமானும், நிலபிரபுத்துவத்தின் பிரதிநிதியுமாக விளங்கியவரான சேர் பொன்னம்பலம் இராமனாதன் தலைமையில் சம ஆசனம் சம போசனத்திற்கு எதிரான நடைமுறைகள் இயக்கப்பட்டன. 1928ம் ஆண்டில் சேர்.பொன். இராமனாதன் 79 கிராமச் சங்கப் பிரதிநிதிகளுடன் அன்றைய வெள்ளைக்காரத் தேசாதிபதியைப் பேட்டி கண்டு சாதி அமைப்பு முறையிலான பாடசாலை முறைகளை வலியுறுத்தினார். தேச வழமையின்படி தமிழர்களின் பாரம்பரியம் காப்பாற்றப்படுவது அவசியம் என வாதம் புரிந்தார். 4-11-1929ல் நு}ற்றிமுப்பத்தொரு “சைவப் பெரியார்கள்” யாழ்ப்பாணம் றீகல் தியேட்டரில் இந்து மகாசபையின் தலைமையில் ஒன்று கூடி கோப்பாய் அரசினர் பயிற்சிக் கலாசாலையை உயர் சாதியினரின் தனிஸ்தாபனம் ஆக்குமாறு தேசாதிபதிக்கு மனுச்செய்தனர்”

இவ்வனைத்தையும் மீறி டொனமூர் அணைக்குழுவின் சிபார்சின் பெயரில் 1930ம் ஆண்டு சம ஆசனம் சமபோசனம் சட்டமாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரஸ் யார் பக்கம் நின்றதோ சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரானோர் பக்கம் அப்பக்கமே வெற்றி கண்டது.

டொனமூர் ஆணைக்குழுவினரின் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடுத்தவிடயம் சர்வஜன வாக்குரிமை தொடர்புபட்டதாகும். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் மத்தியில் தோன்றிய ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள் சர்வஜன வாக்குரிமை கோரி இயக்கம் நடத்தின. அதேவேளை சேர். பொன். இராமனாதனும் அவரின் ஆதரவாளர்களும் படித்தோர்க்கான வாக்குரிமை மட்டும் போதும் என்று கூறி சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார்கள். சேர். பொன். இராமனாதன் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தார்கள். சேர். பொன். இராமனாதன் சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக ஆணைக்குழு முன்சாட்சியமளித்தார். ஆனால் அவரின் அவாவையும் மீறி 1931ல் சர்வஜன வாக்குரிமை அமூலுக்கு வந்தது. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் சர்வஜன வாக்குரிமையை எதிர்க்கவில்லை. அதை வரவேற்றது. ஆனால், அரசியல் சீர்திருத்தங்களுக்குப் பதிலாக இலங்கைக்கான பூரண சுதந்திரத்தையே அது தனது தேசிய அரசியல் கொள்கையாக வகுத்துக் கொண்டுவிட்டபடியால் டொனமூர் கமிஷனைப்பற்றி அது அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.

1931ல் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தனதுஅரசியல் நடவடிக்கையின் அதி உச்ச நிலைக்குத் தாவியது. “டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையானது முழுமையான இலங்கை மக்களினது தேசிய அபிலாசைகளைப் பூர்;த்தி செய்வில்லை எனக் கூறி சர்வசனவாக்குரிமையினடிப்படையில் இடம்பெற்ற முதலாவது தேர்தலை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் புரட்சிகரமான முறையில் பகிஷ்கரித்தது” 14 பிரித்தானிய காலனியவாதிகளோ தமது காருண்யத்தை பிரபல்யப்படுத்த இத் தேர்தலைப் பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு சர்வஜன வாக்குரிமை மூலம் அமைக்கப்பட்ட சட்டசபையை ஒரு வகைமாதிரியாக பயன் படுத்தவும் எத்தனித்தார்கள். இலங்கையின் பிரித்தானிய காலனி ஆதரவு புத்திஜீவிகள் சகல பிரித்தானிய காலனியல் வாதிகளை வரம்பின்றிப் புகழ் பாடினார்கள். இந்தவிதமான ஒரு சூழலில் இலங்கையின் 1வது சர்வஜன வாக்குரிமையையும். தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபையையும் பகிஷ்கரிப்பது என்பது உண்மையிலேயே ஒரு புரட்சிகரமான நடவடிக்கைதான். இலங்கையில் முதலாளித்துவம் தோன்றிய பின்னர் இலங்கையில் நடந்த முதலாவது தேசிய அரசியல் வெகுஜன எதிர்ப்பு நடவடிக்கை என்று இதைக் கூறினால் அது மிகையாகாது. இ;ப பகிஷ்கரிப்பு வெற்றியும் அளித்தது. இப் பகிஷ்கரிப்பு இலங்கைத் தேசியம் என்பதுள்ளேயே அடங்கியிருந்தது. ஆனாலும் இலங்கைத் தேசிய காங்கிரஸின் தமிழ் தலைவர்களின் தேசியம் போல் இது தமிழீழ மக்ளின் பாரம்பரிய பிரதேசத்தில் ஒன்றான யாழ்ப்பாணத்தில்நின்று விலகி நின்ற ஒரு தேசியமல்ல. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அங்கத்தவர்களின் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே அமைந்திருந்தன. அதன் அங்கத்தவர்களின் சொந்த வாழ்க்கை நடவடிக்கைகள் கூட தமிழ் பாரம்பரிய பிரதேசத்துள்ளேயே அமைந்திருந்தன.

இக் கட்டுரையின் கதாநாயகனான விபுலானந்தர் 1929 உடன் யாழ்ப்பாணத்தை விட்டு அகன்று திருகோணமலையை வந்தடைகிறார். இதனால் 1930 லும் 1931 லும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் நடவடிக்கைகளுடன் அவருக்கு நேரடித் தொடர்பு எதுவும் இருக்கவில்லை. 30, 31 லேயே இக் காங்கிரஸ் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. ஆனால் இது திடீர் என்று ஏற்பட்ட ஒரு மாற்றமல்ல. படிமுறையான வளர்ச்சியின் ஒரு உயர்ந்த கட்டமேயாகும். எவ்வாறேனும் அக்காலகட்ட சூழலில் வாலிபர் காங்கிரஸின் அரசியலானது புரட்சிகர அரசியல் என மதிப்பீடு செய்யப்படக்கூடிய தேயாகும். ஆகவே விபுலானந்தர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது யாழ்ப்பாணத்தின் அன்றைய புரட்சிகர அரசியலுடனேயே தன்னைத் தொடர்பு படுத்திக் கொண்டார் எனத் துணிந்து கூறலாம்.

(ஆலளவiஉளைவள ரூ சயனiஉயடளைவள)
சித்தர்களும் முளைவிடும் இடது சாரிகளும்

யாழ்ப்பாணத்தின் 20ம் ஆண்டுகளை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் ஆண்டுகள் என்று சொன்னால் அது மிகையாகாது. கல்வியில் சமவாய்ப்பு இயக்கத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்பு அலையை யாழ்ப்பாணத்தில் தொடக்கி வைத்ததைப் போல்@ பூரண தேசிய சுதந்திரம் என்ற அரசியல் உணர்வை யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்ததைப்போல்@ மத சார்பற்ற (ளுநஉரடயச) சமூக சீர்திருத்த நிறுவனத்தையும் அரசியல் அமைப்பையும் யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸேயாகும்.

அனைத்து நிறுவனங்களுக்கும் மத அடிப்படையில் அமையப்பெற்று வந்த காலத்தில், யாழ்ப்பாணத்தில் வௌ;வேறு மதக் கருத்துக்களிடையே (குறிப்பாக கிறிஸ்துவத்துக்கும் சைவத்திற்கும்) யான வாதவிவாதங்கள் து}ற்றுதல்களாகவும் வசைப்பாடல்களாகவும் வளர்ந்து வந்த நேரத்தில் யாழ்ப்பாண காங்கிரஸ் தோன்றியதானது இருண்ட வானத்துக்கு ஒரு விடிவெள்ளியாகவே இருந்தது. இக் காங்கிரஸின் தோற்றத்துடன் மலினமான மதச்சசரவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவ்வித சச்சரவுகளைக் கண்டித்ததால் மாத்திரம் அந்த வெற்றி கிட்டவில்லை. மதிப்புப் பெற்ற பல படித்தவர்கள் தமது மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் தமக்குள் ஐக்கியப்பட்டு சமூகத்தின் கவனத்தை உண்மையான சமூகப் பிரச்சனைகளின் மீது திருப்பிவிடுவதில் வெற்றி பெற்றதே இதற்கான காரணமாகும்.

பாம்பும் கீரியும் போன்று இருந்த சைவர்களும், கிறிஸ்தவர்களும் ஒரு சமூக நிறுவனத்துள் அதுவும் தன்னார்வு அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு சமூக நிறுவனத்துள் வெற்றிகரமாக ஒன்றிணைந்தார்கள். இத்துடன் மாத்திரம் நிற்கவில்லை. நிமிர்;ந்து நேராக பார்க்கக் கூடத் தகுதியற்றவர்கள் என்று கருதப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களையும் தம்முடன் சேர்த்துக் கொண்டார்கள். இவ்வெற்றியைச் சாத்தியப் படுத்துவதற்காக அவர்களால் எவ்விதமான சிந்தனைமுறை பின்பற்றப்பட்டது என்பது பெரும் ஆய்வுக்குரிய ஒரு விடயமேயாகும்.

தொகுத்த தகவல்களைக் கொண்டு பார்க்கும் போது இவ்வெற்றிக்குக் காரணமான இவ்விதமான சிந்தனா முறைகளை இனங்காணக் கூடியதாய் உள்ளது. ஒன்று ஆரம்பகால இடதுசாரிக் கருத்துக்கள், மற்றையது ஆன்மீகவாத சன்மார்க்கநெறி முன்னையதன் பிரதிநிதிகளாக ஹண்டி பேரின்பநாயகம், சி. சுப்பிரமணியம் (ஓறேட்டர்) ஆ. கனகரத்தினம் போன்றவர்களும். பின்னையதன் பிரதிநிதிகளாக விபுலானந்தர். சிவபாதசுந்தரம் போன்றவர்களும் விளங்கியுள்ளார்கள்.

ஹண்டி பேரின்பநாயகம், சி. சுப்பிரமணியம், ஆ. கனகரத்தினம் போன்றோர் தம்மை சமரசவாதிகள் என்றும், இடதுசாரிகள் என்றும், அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுள்ளார்கள். இலவசக்கல்வி, பாடசாலைகளை அரசுடமையாக்கல் போன்றவற்றை இவர்கள் ஆதரித்தும் வந்துள்ளார்கள். திரு கனகரத்தினம் அவர்கள் 28ம் ஆண்டு நடைபெற்ற வாலிபர் காங்கிரஸ் மாநாட்டில் “எமது பொருளாதாரமும் சமூக பிரச்சினைகளும்” என்ற தலைப்பில் பல சமதர்மக்கருத்துக்களை முன்வைத்தார். 15 இம் மாநாட்டில் இலங்கையின் ஆரம்பகால சமதர்மவாதியான ஏ. ஈ. குணசிங்காவும் கலந்து கொண்டுள்ளார். (இவர் பின்னர் சிங்கள பேரினவாதியாக மாறுகிறார்) வாலிபர் காங்கிரஸின் ஆரம்பகால அங்கத்தவர்களில் பலர் இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சம்சமாஸக் கட்சியிலும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து கொள்கிறார்கள்.

விபுலானந்தரால் பின்பற்றப்பட்ட ஆன்மீகவாத சன்மார்க்க நெறியும் இவ்வெற்றிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. சன்மார்க்க நெறியாளர்களும் அன்றைய ஆரம்பகால இடதுசாரிகளும் (சுயனiஉயடள) நீண்ட நாட்கள் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக ஒன்றுபட்டு இருந்துள்ளார்கள். ஒருமித்துச் செயற்பட்டும் உள்ளார்கள்.

விபுலானந்தரின் சர்மார்க்க நெறியையும், அவரின் வாழ்க்;கை முறையையும் உற்று நோக்கும்போது அவர் ஒருவகைச்சித்தர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. சித்தரின் பொதுவான குணாம்சங்கள் என ஞானியால் ‘மாக்ஸியமும் தமிழ் இலக்கியமும்’ என்ற நு}லில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குணாம்சங்களை விபுலானந்தரிடத்தும் காணக்கூடியதாய் இருந்துள்ளது.

“சாதி சமயச் சடங்குகள் என்று சமூகம் இறுகிவிடக்கூடிய காலங்களில் சாதி சமய சடங்குக் கட்டுகளை உடைத்தெறிந்துவிட்டு சுதந்திர வெளியில் உலவியவர்கள் சித்தர்கள். மக்களுக்கு மிக மிக நெருக்கமானவர்கள் சித்தர்கள். ஆற்றல்கள் பலவற்றை தமக்குள் அடக்கிக் கொண்டு எளிய கோலத்தில் ‘தாவரம் இல்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி’ என்று திரிந்தவர்கள். உண்மை காணத் தேர்ச்சி உடையவர்களாகிய இவர்கள் நன்மங்கையரை தாய்போல் கருதினர்@ அனைவருக்கும் தாய்மை சொல்லி சேய்போல் இருந்தனர். சாத்திரங்கள் கோத்திரங்கள் முதலியவற்றை அவற்றின் இறுதிவரை பார்த்து உதறியவர்கள்@ நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று கண்டவர்கள்@ கோயிலும் மனதுள்ளே குளங்களும் மனதுள்ளே என்றவவர்கள்@ வெட்டவெளியே தெய்வம் என்று கண்டவர்கள்@ அன்பே சிவம் ஆவதை அறிந்தவர்கள்@ தேகமே சிவாலயம் என்று கொண்டாடினவர்கள்@ காசிக்கு ஓடில் வினைபோமா? கங்கை ஆடில் கதிதானுண்டோ? என்று கேள்வியெழுப்பியவர்கள்.

இவ்வகையில் சித்தர்கள் கலகக்காரர்கள், புரட்சிக்காரர்கள், நிறுவனவடிவில் எழுந்த சமயங்களுக்கு சாவுமணி அடிக்கக் கிளம்பியவர்கள். மனிதனைச் சாதிசமயக் கட்டுகளில் தளையிட்ட காலந்தோறும் அத்தளைகளைத் தகர்த்து மனிதனை விடுவிப்பவர்கள் இவர்கள்....... கூர்ந்து பார்த்தால் உலகில் அன்பு நேர்மை மனிதர்களிடையில் சமத்துவம் சமரசம் முதலியவற்றைக் காப்பாற்றத் துணிவு கொண்டவர்கள் இவர்கள் தாம் என்பதை அறியமுடியும். இறைவனை இவர்கள் மறுத்தவரில்லை. இறைவனை எங்கும் கண்டவர்கள். எல்லாவற்றையும் இறை நிலையில் வைத்துக் கண்டவர்கள். இறைவன் மகிழ்ந்துறையும் இடம் தமது இதயம் என்று கண்டவர்கள். இவர்கள் கண்ட தெய்வத்துக்கு உருவம் இல்லை. பெயர் இல்லை. குடும்பம் குழந்தைகள் இல்லை. அன்பே தெய்வம். தங்கள் உள்ளுணர்வே தெய்வம் .....”

சன்மார்க்க சமயம் என்ற தலைப்பில் விபுலானந்தர் கூறியுள்ள சில விஷயங்களை இங்கு கவனிப்போம்.

“நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதுந்தகுதி பெறவேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்க வேண்டும்”

“சன்மார்க்க விதிகளை அனுசரித்து நடத்தல் நமது கடமை ...... சுத்த சன்மார்க்கம் ஆடம்பரத்தை விரும்பும் மனிதர்களால் கடைப்பிடிக்கக் கூடியதன்று”

“தாய் நாட்டுக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகஞ் செய்யும் உத்தம தேச பக்தர்கள் உண்மைச் சன்மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களேயாவார்கள். தேச மக்களின் நன்மைக்காக வேறு துறைகளில் சுயநலமின்றிப் பாடுபடுவோரும் சன்மார்க்க புருஷர் என்பதில் சந்தேகமில்லை”

“உண்மைநெறி எது என்பதை நாம் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். பின்னர், அந்நெறியில், அது பழைய நெறியாயினும் நு}தன நெறியாயினும் அச்சமின்றிச் சொல்லவேண்டும். இவ்வாறு நமக்கு உண்மையென்று தோன்றும் வழியை உறுதியுடன் கடைப்பிடிப்பதே உத்தம சன்மார்க்கமாகும்”

“பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனே தான் நல்ல நிலைமையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும்”

“இடைவிடாது நற்காரியங்களைச் செய்வதில் ஆசையை வளர்க்க வேண்டும். இப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்றுவதற்குச் செய்யப்படும் முயற்சியே உண்மையான சன்மார்க்கமாகும்”

“நீதி நெறிநிற்கவும் நன்மை புரியவும் நாம் வெளியில் இருந்து நன்மை பெற முடியாது. அந்தச் சக்தி நமக்குள்ளேயே நமது ஆத்துமாவில் நிலைபெற்றதிருக்கிறது.”

“சகல நீதிகளையும் ஒன்று திரட்டிக் கடைந்து அவற்றின் சாரத்தை எடுப்போமாயின், மனித குலத்தின் நன்மைக்காக இடைவிடாதுதொண்டு செய்வதே மிக மேலான சன்மார்க்க நியமம் என்பதை அறிந்து கொள்வோம்”

“வழக்கத்தை அனுசரித்து நடத்தலையே சன்மார்க்க வாழ்வு என்ற சொல்லமுடியாது”

“நாம் எண்ணித் துணிந்து செய்யும் கருமங்களையே சன்மார்க்கச் செயல்கள் என்று கூறவேண்டும்”

“இவ்வுலகில் அவ்வப்போது தோன்றும் ஒரு சிலர் பரோபகார நோக்கங் கொண்டு உலகப் போக்குக்கும் பழைய வழக்கத்துக்கும் மாறாகக் காரியம் செய்கின்றனர். இத்தகையோர் உலகின் வீரபுருஷராவார். நாம் அனைவரும் நமது அந்தராத்மா என்ன செய்கிறது என்பதைச் செவிமடுத்துக் கேட்டு அதற்கு இணங்க நடந்தாலன்றி, நீதி மார்க்கத்தை கடைப் பிடிப்பவர்களாக மாட்டோம். சர்வாந்தரியாமியான ஈசுவரன் நாம்செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் சாட்சியாய் இருக்கிறானென்னும் உணர்ச்சி நம் உள்ளத்தில் வேரூன்றும் வரையில் நாம மேறகூறிய நிலை எய்த முடியாது”

“ஒரு காரியத்தைச் சன்மார்க்கத்துக்கு உகந்தது என்று சொல்வதற்கு அது பிறருடைய வலுக்கட்டாயத்தினாலன்றித் தன்னிச்சையினால் செய்யப்படுவதாயிருக்க வேண்டும்”

“விபச்சாரம் சன்மார்க்க சட்டத்தின்படி ஒரு பெரும் குற்றமாகும்”

விபுலானந்தரின் சன்மார்க்க நெறியில் மானுட நேயம் ததும்பி வழிவதைக் காணக்கூடியதாய் உள்ளதல்லவா? முளைவிடும் இடது சாரிக்கருத்தும் மானிட நேயம் மிக்க தொன்றல்வா?

விபுலானந்தரின் சன்மார்க்க நெறியில் பழமைக்கு எதிரான புரட்சிகரத் தன்மையும் உண்டல்லவா? முளைவிடும் இடது சாரிக்கருத்தும் புரட்சிகர தன்மை மிக்கது தானே?

விபுலானந்தரின் சன்மார்க்கத்தில் ஜனநாயகமும் உண்டு. சுய விருப்புடன், சுய சிந்தனையுடன், பிறரின் கட்டாயப்படுத்தலுக்காகவன்றி தானே எண்ணிச் செய்யும் நற்கருமங்களே சன்மார்க்கமாகும். ஒருவனின் சாதி, மத, இன சார்பை வைத்துக்கொண்டு அவனை எடை போடக்கூடாது. அவனின் நோக்கமென்ன, அவன் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்புகள் என்ன என்பதை வைத்தே அவனை எடை போட வேண்டும். இதுவே சன்மார்க்க வழியாகும். முளைவிடும் இடது சாரிகளின் கொள்கையும் இவ்விதமானதே தான்.

இவ்விதமான ஒத்த கருத்துக்கள் இருந்ததனால் தான் நாஸ்திகத்தை நோக்கி வளர்ந்து சென்ற முளைவிடும் இடதுசாரிகளும், ஆஸ்திகத்தில் மிகத் திடமாக ஊன்றி நின்ற சன்மார்க்க சமய வாதிகளும் ஒரே நிறுவனத்தில் ஒற்றுமையாக அணிதிரண்டு ஒப்பற்ற பல காரியங்களைச் சாதித்தார்கள்.

இவ்விரு சாராருடைய சிந்தனைப்பாங்கில் முரண்பாடுகளும் இருந்தன. ஆனால், அவர்கள் என்றுமே பகைமையணிகளாக மாற்ற மடையவில்லை. முளைவிடும் இடதுசாரிகள் காலப்போக்கில் இடது சாரிகளாக வளர்ச்சியுற்றுத் தனியான அரசியலணியானார்கள். சன்மார்க்கவாதிகளோ தனியான அரசியலணியாக வளர்ச்சியுறவில்லை. அவசியத்தைப் பொறுத்து அரசியலுடன் தொடர்புள்ள சன்மார்க்க அணியாகவே தொடர்ந்தும் இருந்தார்கள். இதனால் அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய வாலிபர் காங்கிரஸ் காலப்போக்கில் கலைந்து போயிற்று.

மத சார்பற்ற நிறுவனங்களில் செயற்படுவதிலும், அனைத்து மத நம்பிக்கையாளரையும் சமமாக மதிப்பதிலும் விபுலானந்தர் ஈடு இணையற்ற ஒரு துறவியாக இருந்தார். ஆனால் இதன் அர்த்தம் மதக் கோட்பாடுகளிடையே உள்ள பேதத்தை இவர் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதோ, புரிந்து கொள்ளவில்லை என்பதோவல்ல. இவர் அனைத்து மத தத்துவங்களையும் நன்றாகக் கற்றுத் தேர்ந்திருந்தார். அவற்றிடையே உள்ள வேறுபாடுகளை நன்கு புரிந்திருந்தார். மறுபிறப்பு தத்தவத்தையே இவர் சரியென தேர்ந்தெடுத்திருந்தார். பிறப்பு வாழ்க்கை இறப்பு: உடல் உயிர் கருமவினை ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்பை மறுபிறப்புத் தத்துவத்தின் அடிப்படையிலேயே விளக்கினார். இந்த அடிப்படையில் மதங்களுக்குள் உயர்ந்த மதம் இந்துமதம் என்பதே அவரின் கருத்தாக இருந்தது. ஆனால், இதற்காக உலகியல் விவகாரங்களில் இந்து மதத்தவர்கள் தான் எல்லோரையும் விட மேலானவர்கள் என்று இவர் கருதவில்லை. அனைத்துவகை மத நம்பிக்கை உள்ளவர்களும் உலகியல் விவகாரங்களில் சரிசம உரிமையுள்ளவர்கள் என்பதே இவரின் கருத்தாக இருந்தது. மற்றவர்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தவோ, தோற்கடிக்கவோ, அவர் என்றுமே முயன்றதில்லை.

தனது யாழ்ப்பாண வாழ்க்கையின் போது இவர் கிறிஸ்துவ அடிகளார்களுடன் நன்றே ஒத்துழைத்தார். இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் கல்விச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முன்னின்று உழைத்த ஜனாப் ஏ. எம். ஏ அஸிஸ் கூறியதாவது. “முஸ்லீம் சகாய நிதியை ஆரம்பித்தது, கொழும்பு ஸாஹிரா கல்லு}ரி அதிபர் பதவியை ஏற்றது போன்ற விடயங்களில் விபுலானந்தருடனான உரையாடல் நல்ல பலனைத் தந்தது” 1944 ல் கண்டியில் விபுலானந்தர் அஸிஸ{டன் பன்னிரண்டு நாட்கள் தங்கியிருந்தார். கிழக்கு மாகாணத்தில் விபுலானந்தரால் இயக்கப்பட்ட இராமகிருஷ்ண சங்கத்தின் கல்விச் சேவை தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் பயன் கொடுத்திருந்தது.

சைவமும், வைணவமும் சமணத்துடனும் பௌத்தத்துடனும் சூடான வாதவிவாதங்களில் ஈடுபட்டதும், பலாத்கார நடவடிக்கைகள் நடைபெற்றதும் நாம் அனைவரும் அறிந்த விடயம் (நாயன்மார்காலம் பக்திப் பேரியக்கம்) ஆனால் இந்து துறவியான சுவாமி விபுலானந்தர் பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காக மேடைஏறி பல அரிய பிரசங்கங்கள் செய்த கதை யாருக்கும் தெரியாது.

20ம் நு}ற்றாண்டின் ஈழத் தமிழ் சித்தர்களில் விபுலானந்தரே சித்தருக்குரிய இலக்கணங்களை அதிககூடியளவு பெற்ற சித்தர் என்று கூறினால் அது மிகையாகாது.

வடக்கும் கிழக்கும் விபுலானந்தரும்

விபுலானந்தரின் செயற்பாடு களத்தை பிரதேச ரீதியாகவும் துறை சார் ரீதியாகவும், மனித இனக் குழுமரீதியாகவும், சமூக வர்க்க குழுக்கள் ரீதியாகவும், பிரித்துப் பார்ப்பது அவசியமானது. அப்போது தான் விபுலானந்தரை எம்மால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

பிரதேசரீதியான செயற்படு களம்:

கிழக்குமாகாணம், யாழ்ப்பாணம், தமிழ்நாட்டின் சில நகர்ப்பகுதிகள். இவையே இவரது பிரதான செயற்படு பிரதேசங்களாக இருந்துள்ளன. 1943ல் இருந்து சுமார் இரு வருடங்கள் இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்ததன்மூலம் முழு இலங்கையையும் தனது செயற்படு பிரதேசமாகக் கொண்டிருந்ததைக் காணலாம். அதே போல் 1925 ல் கண்டி, காலி, நாவலப்பிட்டி, மாத்தளை தொப்பிதோட்டம், பதுளை ஆகிய இடங்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஆனால் இங்கு எந்தவித வேலைத்திட்டத்துடனும் அவர் நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகத் தெரியவில்லை. 1937-1941 வரை இமயமலைப் பிரதேசத்தில் தங்கிச் செயற்பட்டுள்ளார்.அவர் அங்கும் சாதாரண மக்களுடன் தொடர்புகள் பைத்திருந்துள்ளார். ஆனாலும். அது அவரது செயற்படு பிரதேசமாக இருக்கவில்லை. இராமகிருஷ்ண மடத்தில் அதன் வளர்ச்சி தொடர்பாகவே அவர் அங்கு செயற்பட்டுள்ளார்.

ஆகவே கிழக்கு மாகாணமும் யாழப்பாணமும், தமிழ் நாட்டின் சில நகர்ப்பகுதிகளும் மாத்திரமே இவரின் நேரடி செயற்படு பிரதேசங்களாக இருந்துள்ளன. தமிழரசுக்கட்சியின் காலத்துக்கு முன்புவரை அதாவது 1940 களின் பிற்பகுதிவரை, விபுலானந்தரைத் தவிர கிழக்கு மாகாணத்தையும், யாழ்ப்பாணத்தையும் தனது நேரடிச் செயற்படு பிரதேசமாகக் கொண்டிருந்த அறிஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் அரசியல் வாதிகள் வேறு எவருமே இல்லை என்று சொல்வது தவறாக மாட்டாது.

இன்று பலர் விபுலானந்தரை கிழக்கின் அறிஞனாகவும், கிழக்கின் நடவடிக்கைகளுடன் மாத்திரம் தொடர்புற்றவராகவும் புரிந்து கொண்டிருப்பது மிகத்தவறானதாகும். யாழ்ப்பாணத்தின் சமூக அரசியல் வரலாற்றின் அடிப்படை அபிவிருத்திகளை ஏற்படுத்திய 1920 கள், ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க தசாப்தமாகும். யாழ்ப்பாணத்தின் சமூக உருவாக்கத்தில் இந்த தசாப்தம் மிக முக்கியத்துவமிக்கதாகும். ஆழ்ந்த செல்வாக்குச் செலுத்திய இந்த 10 வருடங்களின் கதாநாயகர்களுள் விபுலானந்தரும் ஒருவராவர். மட்டக்களப்பில் பிறந்தார் என்ற காரணத்துக்காக இவரை மட்டக்களப்பிற்குள் பூட்டிவைப்பது முட்டாள்தனமும், வரலாற்று துரோகமுமாகும். இவர் தமிழீழ மக்களின் சொத்தாகும்.

துறைரீதியான செறப்படுகளம் :- சமூக சீர்திருத்தம், தமிழ்மொழி வளப்பெருக்கம், முத்தமிழ் வளர்ச்சி, மானுட உளச் செழுமை இவையே இவரின் செயற்படு துறைகளாக இருந்துள்ளன.

சமூக சீர்திருத்தம்:-

சமூக சீர்திருத்தத்தைப் பொறுத்த வரையில் இவர் ஒரு புரட்சிகர சமூக சீர்திருத்த வாதி என்று அப்படியே கூறி விடமுடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாளித்துவ தன்மைபெற்ற பொருளாதாரம் ஒன்று துரிதமாகத் திணிக்கப்பட்டு வந்தது. பொருளாதார பரிணாமம் (படிமலர்ச்சி) ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரித்தானியர்களே இந்த மாற்றத்தைப் புகுத்தி வந்தார்கள். வெளியில் இருந்தே இந்தத் திணிப்பு மேற் கொள்ளப்பட்டது. விபுலானந்தரோ, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸோ, இராமகிருஷ்ண சங்கமோ இந்த மாற்றத்தையிட்டு எதுவும் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. அம்மாற்றத்தை ஏற்றுக்கொண்டது போலவே தென்பட்டது. இந்த மாற்றத்தின் மூலம் புதியதோர் மத்தியதர வர்க்கம் துரிதமாகத் தோன்றி வளரத் தொடங்கியது. அதாவது, சமூகத்தின் ஒரு மிகக் கணிசமான பகுதியினர் மேல் நோக்கிய சமூக அசைவியக்கத்திற்கு உள்ளாகினார்கள். (ருpறயசன ளுழஉயைட அழடிடைவைல) இம் மேல் நோக்கிய சமூக அசைவியக்கத்துக்கான ஏணியாகச் செயற்படக்கூடிய புதிய பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் பரவராகத் தோன்றவில்லை. தென் இலங்கையே இதற்கான களமாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதியைப் பொறுத்து கல்விவாய்ப்பொன்றே இதற்கான ஏணியாக இருந்தது. இதனால்தான் 1920 களிலும் 1930 களிலும் வடக்கு கிழக்கில் தோன்றியசமூக சீர்திருத்த இயக்கங்கள் கல்விச் சீர்திருத்த இயக்கங்களாகவே தம்மை வெளிப்படுத்திக் கொண்டன. கல்வி சீர்திருத்த இயக்கம் மறைமுகமான அரசியல் பொருளாதார இயக்கமாகவும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி அடக்கு முறை கல்வியின் பரவலைத் தடுக்கும் ஒரு பலமிக்க சமூக காரணியாக இருந்ததனால், இக் கல்விச் சீர்திருத்தங்கள் சாதி பேதத்திற்கு எதிராகவும் போர் தொடுத்தன. சம ஆசனம் சமபோசனத்தின் சமூக உள்ளடக்கம் இதுதான். இலசவக்கல்வி, தாயமொழிக்கல்வி, கல்வியை அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளின் சமூக காரணிகளும் இவைதான். ஆகவே விபுலானந்தரின் சமூக சீர்திருத்த நடவடிக்கையும் கல்வி சீர்திருத்தத்தின் ஊடாகவே அமைந்திருந்தது.

கிழக்கு மாகாணத்தால் விபுலானந்தர் இராமகிருஷ்ண சங்கத்தின் ஊடாக 38 பள்ளிக்கூடங்களை நிறுவி செயற்படுத்தினார். கிழக்கு மாகாணத்தில் இராமகிருஷ்ண சங்கத்தின் ஊடாக விபுலானந்தர் முன்னெடுத்துச் சென்ற கல்வி;ச்சீர்திருத்த இயக்கமும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கல்விச் சீர்திருத்த இயக்கமும், ஒரே நோக்கங் கொண்டவையாய் இருந்தாலும், அவற்றின் தன்மை வௌ;வேறானது. கிழக்கிலும் விட சக்திபெற்ற ஒரு நிலவுடமை வர்க்கம் யாழ்ப்பணத்தில் முதலில் பிரித்தானியர்களுடன் ஒட்டிக் கொண்டது. ஆகவே யாழ்ப்பாணக் கல்விச் சீர்திருத்த இயக்கம் காலத்தால் முந்தியது. யாழ்ப்பாண சாதி அமைப்பு மிக இறுக்கமானதாக இருந்ததனால் கல்விச்சீர்திருத்த இயக்கம் அனேக சமூக முரண்பாடுகளை உள்ளடக்கியதாய் இருந்தது. அதிக அரசியல் தன்மை பெற்றதாகவும் இருந்தது.

விபுலானந்தரும், யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ{ம் சமூக நோக்குடைய ஒரு புதிய ஆசிரியர் பரம்பரையையே தோற்றுவித்தனர். 1960கள் வரை வடக்கு கிழக்கு மாகாணங்களின் அநேக பிரதான பாடசாலைகளின் அதிபர்களாக இருந்தது இந்த ஆசிரியா பரம்பரையினரேயாகும்.

விபுலானந்தர் பின்பற்றிய சமூக சீர்திருத்தம் அன்றைய காலகட்டத்திற்கு அவசியமான அனைத்து சமூக பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்று கூறமுடியாவிட்டாலும், அவர் தமிழ் பேசும் மக்களுக்கு அவசியமான ஒரு சமூக சீர்திருத்தத்தைப் பின்பற்றினார். என்பதுவும் அது புரட்சிகரமான கூறுகளைக் கொண்டிருந்தது என்பதுவும் மறுக்க முடியாத உண்மைகள்

தமிழ் மொழி வளப் பெருக்கம்: தாய்மொழிக் கல்வியை நடைமுறைக்குப் கொண்டுவருதல் சம்பந்தமான இவரது பங்களிப்புக்களும் தமிழ் சொல்லாக்கம் தொடர்பாக இவர் எடுத்த நடவடிக்கைகளும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். இவரின் இத்துறை ஆர்வத்தால் 1935ம் ஆண்டில் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தால் தமிழ் ஆராய்ச்சிக் குழுவில் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். இவர் சென்னையில் கலைச் சொல்லாக்க மன்றம் ஒன்றை நிறுவினார். சென்னை தமிழ்ச்சங்கத்தின் உதவியுடனேயே இது நடைபெற்றது. இச்சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற கலைச் சொல்லாக்க மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். மொழிவளர்ச்சி தொடர்பான இவரின் ஏனைய பங்களிப்புகள் முன்னரேயே கூறப்பட்டுவிட்டன.

முத்தமிழ் வளர்ச்சி: ஒரு துறவியாகவும், முத்தமிழ் வித்தகராகவும் அறிமுகமாகியுள்ள விபுலானந்தர் இசைத்தமிழினதும், நாடகத் தமிழினதும் வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்புக்களைப்பற்றி அநேகமான சகலரும் அறிவர். யாழ்நு}லும், மதங்கசூளாமணியும் இவற்றுள் வரலாற்றால் அழியாதவை. ஆகவே இதுபற்றி இங்கு விபரம் கூறுவதைத் தவிர்த்துக் கொள்கிறேன். விபுலானந்தரை முத்தமிழ் வித்தகர் என்ற பரிமாணத்துள் மட்டும் வைத்துப் பார்க்கும் தன்மையைக் களைந்து விடுதல் அவசியம். இவ்விதமாக நோக்கும் தன்மையால் அவர் தரம் இறக்கலுக்கு உள்ளாகிறார். ஆகவே அவரை முழுமையாக இனங்கண்டு கொள்ளக்கூடியதான ஆய்வுகள் தொடரட்டும்.

மானுட உளச் செழுமை: விபுலானந்தர் ஈடுபாடு காட்டிய அனைத்து துறைகளிலும் இதுவே அடிப்படை முக்கியத்துவம் பெற்ற துறையாகும். ஒருவன் தனது உளச் செழுமையை உத்தரவாதப்படுத்திக் கொள்ளாமல் பிறரின் உளச் செழுமைக்கு முயற்சிக்க முடியாது விபுலானந்தரை அளப்பரிய சக்தியும், நிபந்தனையில்லா அர்ப்பணிப்பும் மிக்க திறமைசாலியாகவும், தியாகியாகவும் மாற்றியது இந்த உளச் செழுமையேதான். பின்பற்றுவோர் (குழடடழறநசள) இல்லையானால் எந்த மனிதனாலும் அளப்பரிய காரியங்களைச் செய்யமுடியாது. ஒரு சமூக இயக்கத்தின் கேந்திரமாக தன்னை ஆக்கிக்கொள்ளமுடியாது. விபுலானந்தரின் உளச் செழுமைக் கொள்கையே அவருக்குப் பல அருமையான பின்பற்றுவோர்களையும், செயற்படு சகாக்களையும் உருவாக்கிக் கொடுத்தது. சன்மார்க்க நெறியே இவரின் மானுட உளச் செழுமைக் கோட்பாடாகும். இசைத் தமிழிலும், நடகத்தமிழிலும் இவர் காட்டிய ஆர்வமும், இவர் ஈட்டிய சாதனைகளும் கூட இவரின் உளச் செழுமையின் வெளிப்பாடுகளேயாகும். இசையும் நாடகமும் முருகியல் (அழகியல்) அம்சங்கள் நிறையப் பெற்ற துறைகளாகும். இதன் முருகியல் தன்மைதான் இவற்றை இயற்றமிழில் இருந்து வேறுபடுத்தி வைத்துள்ளது என்று கூடச் சொல்லலாம். உளச் செழுமையற்றவனால் முருகியலைச் சுவைக்கவும், இரசிக்கவும் முடியாது. அதே போல் முருகியலைச் சுவைக்கவும், இரசிக்கவும் பழகிக் கொள்பவனுக்கே உளச் செழுமையும் ஏற்படும். விபுலானந்தர் இசைத்தமிழிலும், நாடகத் தமிழிலும் மாத்திரமல்ல அழகியல் வெளிப்பாடுகள் மிகுந்த சிற்பக்கலையிலும். ஓவியக் கலையிலுங்கூட ஆர்வமுடையவராய் இருந்துள்ளார்.

1936- பெப்ரவரி 28ல் இவர் “பழந்தமிழகத்தின் சிற்பாசிரியர்கள்” என்னும் பொருள்பற்றிய சொற்பொழிவைச் செய்தார். “பாழுங் கல்வியில்; கிடந்த அழகுடைப் பொருளை அனுபவிப்பதோடு அமையாது பிதற்றித் திரியுமாறு ஏவுகிறது” என விபுலானந்தர் தமக்கு முருகியற் கலைகள் மீது இருந்த ஆர்வத்தைத் தாமாகவே வெளியிட்டுள்ளமையைக் காணலாம்.

இவையே இவரின் நாட்டத்துக்குரிய நான்கு பெருந் துறைகளாக இருந்துள்ளன. இவர் எந்தக்கட்டத்திலும் அரசியலையோ, சமூக பொருளாதார மாற்றத்தையோ ஒரு தனித் துறையாகத் தேர்ந்தெடுத்தவரல்ல. அத்துறைகளில் நேரடியாக ஈடுபடுவதில் இருந்து விலகியே வந்துள்ளார். ஆனால் இவரின் நடவடிக்கைகள் அரசியல் தன்மையற்றதாகவோ, சமூக பொருளாதாரத் தன்மையற்றதாகவோ இருந்தது என்ற இதை அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.

தமிழ் மொழி வளப்பெருக்கம், முத்தமிழ் வளர்ச்சி ஆகிய துறைகளில் இவர் பெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க வெற்றிகளுக்கு இவரின் அரசியல் ஈடுபாடற்றதன்மைதான் காரணமாக அமைந்ததா என்பது ஆய்வுக்குரிய ஒரு விடயமாகும். ஏனெனில் இத்துறைகள் அரசியலுக்கு அப்பாற்பட்ட விடயங்கள். அரசியல் நம்பிக்கைகளினதும் கட்சி பக்கச் சார்பினதும் பிடிகளுள் இத்துறைகள் எக்காரணத்தைக் கொண்டும் அகப்பட்டுவிடக்கூடாது. அகப்படுமானால் இத்துறைகளின் வளர்ச்சி பாதிப்படைவது திண்ணம்.

ஆனால் கல்விச் சீர்திருத்தத்தைப் பொறுத்தவரையில் இதன் சில அம்சங்கள் நேரடியாகவே அரசியலுடன் தொடர்புபட்டதாகும். சிலவகை அரசியல் நம்பிக்கைகளின் செல்வாக்கிற்கு உட்பட்டதாகும். இது நிச்சயமாக முழுக்க முழுக்க ஒரு அரசியல் விவகாரமல்ல. ஆனால் அதே நேரத்தில் இது அரசியலுடன் தொடர்பற்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட, ஒரு விடயமுமல்ல, விபுலானந்தரை அடிக்கடி அரசியலுடன் தொடர்புபடவைத்தது இந்த நடவடிக்கையேயாகும். தமிழீழத்தில் கருக்கொள்ள ஆரம்பித்திருக்கும் கல்விச் சீர்திருத்த, தமிழ் மொழி வளர்ப்பு இயக்கங்கள் விபுலானந்தரும் யாழ்ப்பாண காங்கிரஸ{ம் விபுலானந்தரும் இராமகிருஷ்ண மடமும் கால அனுபவங்களை மீள ஆராய்வது மிக அவசியமானது.

மனித குழும ரீதியான செயற்பாடுகள்.

இரு பரிமாணங்கள் இனம். மதம், மொழி. பால்பிரிவுகள், சாதி என பல்வேறு குழுமங்களாக மனிதன் பிரிந்து முரண்பட்டு நிற்கின்றான். மானுடம் பிளவுண்டு கிடக்கின்றது. இவற்றில் சில தவிர்க்க முடியாதவை. இயல்பானது. உதாரணமாக பால்பிரிவுகள், இனம், மொழி, மதம், ஆகியன. வேறு சில அவசியமில்லாதது. மனித சமுகத்தின் நலத்திற்குக் குந்தகமானது. உதாரணமாக சாதி, ஆனால் எப்பிரிவும் மனிதனைப் பிரித்து முரண்பட்டு நிற்கவைப்பதுவும், மானுடத்தைப் பிளந்து நிற்பதுவும் அவசியமில்லாதது. சமூக நலத்திற்குக் குந்தகமானது. மானுடத்திற்கு விரோதமானது.

சன்மார்க்க நெறியரான விபுலானந்தர் இதுவிடயத்தில் எந்தக் களத்தைத் தேர்ந்தெடுத்தார். இங்கு அவர் இரு பரிமாணங்களில் செயற்பட்டுள்ளார். முதலாவது மனிதன் அல்லது மானுடம் என்ற பரிமாணம், இரண்டாவது தமிழன் என்ற பரிமாணம் மனிதன் அல்லது மானுடம் என்ற பரிமாணந்தான் அவரை 20ம் நு}ற்றாண்டின் இலங்கைச் சித்தராக்கியது. உண்மையான சன்மார்க் வாதியாக்கியது. அவர் பிறமதங்களை மதித்தார். அவற்றின் சாதனைகளை ஏற்றுக் கொண்டார். பிற மொழிகளை கௌரவித்தார். அவற்றின் பலம், பலவீனங்களை ஆராய்ந்தார். அவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகளை எடுத்துக் காட்டினார். வேற்று மொழி இலக்கியங்களைச் சுவைத்தார். ஆங்கில மொழி இலக்கியங்கள் பற்றிய தனது கட்டுரைக்கு ‘ஆங்கில வாணி’ என நாமஞ்சூட்டினார். அந்நிய மொழி இலக்கியங்களை தன் தாய்மொழிக்கு அறிமுகப்படுத்தினார். மொழிகளுக்கும், நாகரிகங்களுக்கும் இடையே உள்ள உறவை எடுத்துக் காட்டினர். இவை பரஸ்பரம் ஒன்றில் ஒன்று சார்ந்திருப்பதையும், ஒன்றில் இருந்து மற்றொன்று கற்றுக் கொள்வதையும் அல்லது களவாடிக் கொள்வதையும் எடுத்துக் காட்டினார். நாகரிகத்தைப் படைத்த உலக மொழிகளுள் தமிழ் மொழியே முதலாவது மொழி என்பதை பல ஆதாரங்களுடன் முன்னுக்குப்பின் முரணற்ற முறையில் நிரூபித்தார். இந்தஉண்மையை மிக அடக்கமாக ஆனால் உறுதியாக முன்வைத்தார். தம்பட்டமடிக்கவோ ஏனைய மொழிகளை குறைத்து மதிக்கவோ இல்லை. இவ்வாறாக மனித சமூகத்தில் இயல்பாக எழுந்த போதங்களை ஏற்றுக்கொண்டார். அப் பேதங்களை அல்லது வேறுபாடுகளைப் புரிந்து கொண்டாh. அவற்றில் எவை சரியானவை எவை தவறானவை. எவை முழுநிறைவானவை. எவை குறைபாடுடையவை என்பன தொடர்பாக அவருக்குச் சிற்சில கண்ணோட்டங்களும் இருந்தன இவரின் கண்ணோட்டங்கள் அறிவியல் முடிவுகள் தொடர்புபட்ட விவகாரங்களாகும். அறிவியல் ரீதியில் இவற்றின் சரியான தன்மைகள் இன்னும் இன்னும் பரிசோதிக்கப்படும். அனைத்தையும் சரி என்று உலகம் ஏகமனதாக ஒத்துக் கொள்ளமாட்டாது. அது வேறுவிடயம். ஆனால் அவதானிக்க வேண்டியது என்னவென்றால். இவ்வித கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொண்டது மாத்திரமல்ல. அதை வெளிப்படுத்தியும் வந்த விபுலானந்தர், இயல்பான வேறுபாடுடைய பிரிவுகள் அனைத்தையும் சமமாகவே மதித்தார். இதில் அவர் உயர்வு தாழ்வு பார்க்கவில்லை. யார் பெரியோர் யார் சிறியோர் என்ற வாக்கு வாதத்தில் ஈடுபடவில்லை. இதுதான் உண்மையான சன்மார்க்கமாகும். இதுதான் “எல்லோரும் இன்புற்று இருப்பதல்லால் வேறொன்றும் அறியேன் பராபரமே” என்ற கொள்கையாகும். இதுதான் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்பதாகும். இதுதான் “அன்பே சிவம்” என்பதாகும்.

விபுலானந்தர் ஒரு தமிழன் விபுலானந்தர் ஒரு இலங்கையன், விபுலானந்தர் ஒரு இந்து, இவை எல்லாம் அவருக்கு மிக மிக நன்றாகவே தெரியும். அதே நேரத்தில் விபுலானந்தர் ஒரு மனிதர். என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். அதுவே அடிப்படையானதும் நித்தியமானதும் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இந்த அடிப்டை நிலையிலான ஒற்றுமையை ஆர்வமுடன் வேண்டி நின்றார்.

“கன்ம வினைகள் தீரும்வரை மனிதன் மீண்டும் மீண்டும் மறுபிறப்பெடுப்பான்” “ஆன்மா நித்தியமானது, சாவது உடலே தவிர ஆன்மா வல்ல” என்ற வகையான மதக்கோட்பாட்டின் அடிப்படையில் தான் இவரது சன்மார்க்க நெறி அமைந்திருந்தது. இந்த கோணத்தில் இருந்து தான் அவர் மானுடத்தை நேசித்தார். இவரின் அணுகு முறையுடன் அல்லது இவர் பின்பற்றிய கோட்பாட்டுடன் முரண்படுபவர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள். ஆனால் அவர் வந்து சேர்ந்த “மானுடம் பிளவுபடக்கூடாது” என்ற உயர்ந்த, தொலைதுர அவாவுடன், இலட்சயத்துடன் வெளிப்படையாகவே முரண்படும் ‘மனிதன்’ எவனும் இருக்கமாட்டான் என்றே எண்ணுகிறேன்.

மனித சமூகத்தின் இயல்பான வேறுபாடுகளை ஏற்றுக் கொண்ட விபுலானந்தர், அதே நேரத்தில் மனித சமூக இயல்புகளுக்குப் புறம்பான வேறுபாடுகளை வெறுத்தார். இவ்வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தார். சாதி வேறுபாடுகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை நிராகரித்தார். அதன் மீதான தனது வெறுப்பை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார்.

தமிழன் என்ற பரிமாணம்@

அவர் தான் மானிதத்தின் ஒரு அங்கமாய் இருக்கும் அதேவேளையில், தான் ஒரு தமிழன் என்பதையும் உணர்ந்திருந்தார். தான் வாழும் ஸ்து}லமான (ஊழnஉசநவந) மனித சமூகப் பிரிவை மறுக்கும் அல்லது மறக்கும் ஒரு மனிதராக அவர் வாழவில்லை. மானிதம் என்ற எல்லைக்குள் நின்ற வண்ணம் தான் ஒரு தமிழன் என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். தமிழன் என்ற இன மொழி வழக்குழுமத்தின் வளர்ச்சிக்காக அவர் சளைக்காது உழைத்துவந்தார்.

நாம் இங்கு மிக அழுத்தங் கொடுத்துக்’ கவனிக்க வேண்டிய ஒரு அரசியல் விவகாரம் உண்டு. தமிழ் இனத்தின் வளர்ச்சியைத்தான் அவர் மனதில் கொண்டிருந்தாரே தவிர தமிழ் தேசியத்தின் வளர்ச்சி பற்றியோ சிறுபான்மை தேசிய இனத்தின் வளர்ச்சி பற்றியோ அவர் கவனமெடுக்கவில்லை.
தேச எல்லைகளைக் கடந்து அதைக் கணக்கில் எடுக்காமல் எங்கும் பரந்திருக்கும் அனைத்து தமிழ் மக்களினதும் முழுமையே தமிழ் இனம் என்ற எண்ணக்கருவாகும். இலங்கைத் தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள், கர்நாடக மாநில தமிழர்கள். மலேசிய தமிழர்கள் உலகில் ஏனைய நாடுகளில் நிரந்தர பிரஜைகளாக வாழும் தமிழர்கள்; ஆகிய இவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதே ‘தமிழ்இனம்’ என்ற எண்ணக்கருவாகும். ஆனால் அவர் அவர்கள் வாழும் நாடுகளின் தேசிய எல்லைகளுக்குள் வைத்துக் கொண்டு நோக்கினால் அவர்கள் அவ்வவ்நாடுகளின் தேசிய இனங்கள் எனப்படுவர். தமிழ் இனம் என்ற முறையில் இவர்கள் எல்லோருக்கும் சில பொதுவான நலன்கள் உண்டு ஆனால் தமிழர் வௌ;வெறு நாடுகளின் தேசிய இனங்கள் என்ற முறையில் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனியான நலன்கள் உண்டு. அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும் ஒரே இனத்தினர்@ ஆங்கிலேயர். ஆனால் அதேவேளை அமெரிக்கரும் பிரித்தானியரும் இரு வௌ;வேறு தேசியங்கள். தேசிய எல்லைகளுக்குள் வைத்து நோக்குதலே தேசியம் என்ற எண்ணக்கரு என அழைக்கப்படுகிறது.

19ம் நு}ற்றாண்டின் பிற்பகுதியிலேயே இலங்கைத் தேசியம் என்ற எண்ணக்கரு உருவாகியிருந்தது. இதன் விளைவுதான் சேர் பொன் இராமனாதனின் தலைமையில் அமைக்கப்பட்ட இலங்கை தேசிய சங்கமாகும். ஆனால் 1930ம் ஆண்டுகளின் பிற்பகுதி வரை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தமது தேசிய அந்தஸ்துப் பற்றிய பிரச்சினை எழவேயில்லை. இலங்கைத் தேசிய உணர்வே இலங்கைத் தமிழர்களின் தேசிய உணர்வாகவும் இருந்தது. தமிழர்களின் அன்றைய காலகட்ட இந்த பொதுவான தவறுக்கு விபுலானந்தர் விதிவிலக்கல்லவே. விபுலானந்தரினதும் அவரைப் பின்பற்றியோரினதும் இலங்கைத் தேசிய வாதம் நாம் ஏற்கனவே கவனித்தபடி புரட்சிகரமான தாய் இருந்தது. உண்மை, ஆனால் அது தமிழ் தேசியத்தை, கணக்கெடுக்காது விட்டமை ஒரு வரலாற்றுச் சோகம்தான். 1940களில் இலங்கைத் தமிழ் தேசிய வாதம் மௌ;ள முளைவிடத் தொடங்கியிருந்தது. ஆனால் விபுலானந்தர் இத் தேசிய வாத எண்ணக்கருவை வெளிப்படுத்தியதற்கான சான்றுகள் இதுவரை வெளிப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் ஒரு கள ஆய்;வை மேற் கொள்வதன் மூலமே இது பற்றி மேலும் தெளிவு பெற முடியும்.

விபுலானந்தரும் அவரைப் பின்பற்றியோர்களும் இலங்கைத் தமிழர் மத்தியில் ‘தமிழ் இனத்தின்’ வளர்ச்சிக்காக என்று ஆற்றிய சேவைகள் இலங்கைத் தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்பது உண்மை.

1920ம் ஆண்டுகளின் மூன்றாமணியினரின் அரசியலின் பிற்காலம் என்னவாயிற்று?

1920 களில் பிரித்தானிய காலனி ஆட்சியை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஒத்துழைத்த கிறிஸ்தவ மிஷனரிகளை 1ம் அணியினர் எனவும்,

பிரித்தானிய காலனிய ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில் உள்@ர் விவகாரங்களில் நிலமானிய உறவுகளைப் பாதுகாக்கும் நோக்குடன் செயற்பட்ட இராமனாதன் அணியினரை 2ம் அணியினர் எனவும்,

பிரித்தானிய காலனிய ஆட்சி முறையுடன் முரண்படும் அதேவேளையில், உள்@ர் விவகாரங்களில் நிலமானிய பண்பாடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பி புரட்சிகர சமூக சீர்திருத்தத்தை வேண்டி நின்றோரை 3வது அணியினர் எனவும், முன்னைய அத்தியாயங்களில் வகைப்படுத்தியிருந்தோம். 1920 ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும், 1930ம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் இந்த மூன்றாவது அணியினரே அதிக சமூக பலம் பெற்றவர்களாக விளங்கினார்கள். அவ்வாண்டுகளின் போது யாழ்ப்பாண வரலாறு என்பது அவர்களின் வரலாறாகவே இருந்தது.

இதன் எதிர்காலம் என்னவானது? விபுலானந்தரினதும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸினதும் சமூக அபிலாசைகள் நிறைவேறினவா?

இவர்களின் சமூக அபிலாசைகளை முதலில் அட்டவணைப்படுத்துவோம்.

1. கல்வியில் அனைவர்க்கும் சமவாய்ப்பு
2. தீண்டாமை ஒழிப்பு
3. தாய்மொழிக் கல்விட
4. ஆன்மீக நெறியுடன் இணைந்த கல்வி
5. கல்விக்கூடங்கள் அரசுடமையாதல்
6. மூடப் பழக்கவழக்கங்கள் இல்லாது போதல்
7. தேச நலன் பேணக்கூடிய கல்வி
8. மத வேறுபாடுகளைத கணக்கில் கொள்ளாது மக்கள் ஐக்கியமுறல்
9. இலங்கைக்கு முழுமையான சுயராஜ்யம்

இவையே இவர்களின் பிரதான அபிலாசைகளாகும். 1930 களின் முற்பகுதியிலேயே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் படிப்படியாகக் கலைந்துவிட்டது. இக் காங்கிரஸால் தோற்கடிக்கப்பட்ட பொன். இராமனாதன் அணி மீண்டும் தலைது}க்கி ஜீ. ஜீ பொன்னம்பலம் தலைமையில் அ. இ. தமிழ் காங்கிரஸாக வளர்ந்தது. சிங்களத் தலைவர்களுக்குப் பணிந்தும் பிரித்தானியருடன் இணைந்தும் போகும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. இதுவே ஜீ.ஜீ யின் தமிழ் தேசியமாக இருந்தது. அதே நேரத்தில் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் பெரும பகுதியினர் இடது சாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இவர்கள் தீண்டாமைக்கு எதிராகவும், பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட கோரியும் போராடினார்கள். பிரித்தானியருக்கு எதிரான போராளிகளாகவும் திகழ்ந்தார்கள்.

சாதி அமைப்பையும், பிரித்தானியர் ஆட்சியையும் பாதுகாக்க போராடிய பொன்னம்பலம் அணியினருக்கும் இடது சாரி அணியினருக்கும் இடையேயான முரண்பாடே 1940 கள் வரை யாழ்ப்பாணத்தின் பிரதான அரசியலாக இருந்தது. இந்த முரண்பாட்;டில் விபுலானந்தரால் எந்தப்பக்கமும் நிற்க முடியவில்லை. இடதுசாரிகள் தமிழரின் அரசியல்உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களிலும் கவனம் செலுத்தினார்கள். ஆனாலும் தமிழரின் வளர்ச்சி சம்பந்தபட்ட ஏனைய விவகாரங்களில் அக்கறை காட்டவி;ல்லை. முனைவிடும் இடது சாரிகளுடன் ஒன்றிணைந்திருக்கக் கூடியதாய் இருந்த விபுலானந்தரால் இடதுசாரி இயக்கங்களுடன் ஒரு இணைவைக் காணமுடியவில்லை. மதம், கடவுள் ஆகியன சம்பந்தப்பட்ட முரண்பட்ட நிலைப்பாடுகள், தமிழரின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இடதுசாரிகளின் மிகக் குறைந்த ஈடுபாடு ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

1960 களின் பிற்பகுதியுடன் இடதுசாரி கட்சிகள் யாழ்ப்பாணத்தில் பலவீனப்பட்டு அழிந்தபோக தொடங்குகின்றன. தீண்டாமை ஒழிப்பிலும், பாடசாலைகள் தேசியமயத்திலும், மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்த போராட்டத்திலும் அவர்கள் அளப்பரிய பங்காற்றினார்கள். ஆனால் இது தொடர்பாக அவர்கள் இழைத்த பல தவறுகள் சாதிப்பாகுபாடு இன்னமும் முற்றாக ஒழிக்கப்படாமல் இருப்பதற்கான காரணிகளில் சிலவாக இருக்கின்றன.

அவர்கள் இழைத்த பெருந்தவறு ஒடுக்கப்பட்ட சாதி மக்களை தமிழ் தேசிய இயக்கங்களில் இருந்து ஒதுக்கி வைத்ததேயாகும். 50ம் ஆண்டுகளின் பின் இடதுசாரி கட்சிகள் ஏதோ ஒரு வழியில் சிங்கள பேரின வாதத்துடன் நட்புறவு கொண்டிருந்தார்கள். இதனால் 50ம் ஆண்டுகளின் பின்பிருந்து தெரிந்தோ, தெரியாமலோ தமிழ் தேசிய இயக்கத்தைப் பலவீனப்படுத்துவதே அவர்களின் அரசியல் தந்திரோபாயமாய் இருந்து வந்தது. இதன் விளைவாக 80ம் ஆண்டுகள் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், தமிழ் தேசிய இயக்கத்துக்கும் இடையில் ஒரு முரண்பாடு நிலவியே வந்தது. இந்த முரண்பாடு சாதி பேதம் அற்றுப் போவதற்கு தடையாக இருந்தது மாத்திரமல்ல சாதி பேதத்தை வளர்க்கவும் உதவும் அரசியல் காரணியாகவும் இருந்தது.

80ம் ஆண்டுகள் வரையான தமிழ் தேசிய இயக்கமும் கூட சாதி அமைப்பு முறைக்கு மறைமுகமாகவும் சிற்சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவும் துணைபோய்க் கொண்டேயிருந்தது. இது முன் சொன்ன போக்கை மேலும் ஆழப்படுத்தியது.

80ம் ஆண்டுகளின் முற்கூறில் இருந்து நிலமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சாதி, மத பேதமின்றி அனைத்து தமிழ் பேசும் மக்களையும் ஐக்கியப்படுத்தும் புதியள பேர்க்குணமிக்க தமிழ் தேசிய இயக்கம் தோற்றம் பெறத் தொடங்கியதே இதற்கான காரணமாகும்.

பாடசாலை தேசிய மயம் நிறைவேற்றப்பட்டு விட்டது உண்மை ஆனால் 20 ஆம் ஆண்டுகளின் மூன்றாம் அணியினரின் நோக்கம் இங்கு வெற்றி பெறவில்லை. எமது அரசாங்கத்தின் ஊடாக நாம் எமது பாடசாலைகளை நிர்வகிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கத்தின் சாராம்சமாக இருந்தது. அதன் மூலம் தான் எமது தேசநலனுக்குப்பொருந்திய கல்வியை உருவாக்கலாம் என்றே இவர்கள் கருதினார்கள். ஆனால் இன்று நடந்ததோ வேறுவிடயம். சிங்கள பேரினவாத அரசு தமிழ் பள்ளிக்கூடங்களை தன்வசம் எடுத்துக்கொண்டது. இதன் மூலம் எமது தேசியத்துக்கு எதிரான கல்வித் திட்டத்தையே எம்மீது திணித்துள்ளது. ஆகவே மூன்றாவது அணியினரின் அபிலாசைகள் இன்னமும் நிறைவு பெறவில்லை. பாடசாலைகளை மீளவும் தமிழர்வசம் எடுக்கும் முயற்சி 80களின் முற்கூறில் இருந்து தான் படிப்படியாக மீண்டும் முனைவிடத் தொடங்கியுள்ளது.

கல்வியில் சமவாய்ப்பு என்பது 60 களில் ஓரளவு வெற்றியீட்டப் பட்டு தற்போது சமவாய்ப்பு இன்மை என்ற நிலை மீண்டும் தோன்றி விட்டது. ஆனால் அது தன்மையில் வேறுபட்டதாகவுள்ளது. இன்று சிங்கள மாணாக்கர்களுக்கு உள்ள வாய்ப்புகள் தமிழ் மாணவர்களுக்கு இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. சாதிப்பிரச்சினையாய் இருந்த சம வாய்ப்பின்மை ஒரு தேசிய இனப் பிரச்சினையாக மாறியுள்ளது. எமது நாட்டுக்கு (இலங்கைக்கு) முழுமையான சுயராஜ்யம் என்ற அபிலாசையும் இன்னமும் வெற்றி பெறவில்லை. இவ்வபிலாசை புதிய வடிவு பெற்றுள்ளது. தமிழீழத்திற்கு சுயராஜ்யம் என்ற கோரிக்கையாக பரிணமித்துள்ளது.

தாய்மொழிக் கல்வி என்ற விடயத்தில் கணிசமான முன்னேற்றங்களும், வெற்றிகளும் கிடைத்துள்ளன. ஆனால் கல்வி மொழி அந்தஸ்துப் பெற்று விட்ட தமிழ்மொழி பிறமொழிச் சொற்களின் கலப்பாலும், வளமான கலைச் சொற்பதங்கள் இன்மையாலும் செல்லரித்துப் போய் நிற்கும் நிலைகண்டு தமிழீழ தேசியம் விழித்துக் கொண்டது. 1990ம் ஆண்டில் தமிழ் மொழி சீர்திருத்தப்படவேண்டும். அந்நிய மொழிச் சொற்களைப் பயன்படுத்;துதல் மீள் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். து}ய தமிழ் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் போன்ற அபிலாசைகள் தமிழீழ தேசியத்தின் குணவியல்புகளாயின. ஆனால் 1930 களுக்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் (சுமார் 60 வருடங்கள்) “தமிழ் மொழி வளர்ச்சி என்பது ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டதே தவிர எந்தத் தமிழ் தலைவர்களும் தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எதுவித அக்கறையும் செலத்தவில்லை. படித்த தமிழர்கள் ஆங்கில மோகம் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.

ஆன்மீக நெறியுடன் இணைந்த கல்வி, தேசநலன் பேணக்கூடிய கல்வி, ஆகியவற்றைப் பொறத்தவரை மிக வேதனைக்குரிய சம்பவங்களே நடைபெற்றன. கல்வியின் இந்த உயர் நோக்கம் இழக்கப்பட்டுவிட்டது கல்வி என்பது கற்பவனுக்கும்சரி, கற்பிப்பவனுக்கும் சரி ஒருவர்த்தக பண்டமாக மாறிவிட்டது பணம் சம்பாதிக்க கற்பிப்பது பணம் சம்பாதிக்க கற்பது என்ற நிலை தோன்றி விட்டது.

ஆனால், 1980 களில் இருந்து வளர்ந்துவரும் தமிழீழ தேசியம் இத்துறையிலும் புதிய சிந்தனைகளை உருவாக்கியுள்ளது. ஆன்மீக நெறியுடன் இணைந்த கல்விபற்றி இத்தேசிய வாதம் தனது அக்கறையை செலுத்தவில்லை. ஆனால் தேச நலன் பேணக்கூடிய கல்வி என்ற விடயத்தில் மிகவும் ஆர்வமுள்ளதாயும், தீவிர மாற்றங்களை ஏற்படுத்த அவாவி நிற்பதாயும் இருக்கின்றது.

தமிழ்மொழி வளர்ச்சி, சமூக சீர்திருத்தம். அரசியல் உரிமைக்கான போராட்டம், கல்வி சீர்திருத்தம் ஆகியனவற்றை நோக்கும்போது 1920 களின் பொதுவான தன்மை 1980 களில் மீளவும் உயிர் பெற்றுள்ளது எனக் கூறுலாம். 1920 களின்பின் 1960கள் வரை யாழ்ப்பாணம் பல போராட்டங்களை கொண்டிருந்தது உண்மைதான். ஆனால் அவை மிகக்குறுகிய சமூகபரிமாணம் உடையனவாகவே இருந்துள்ளன. இடதுசாரிகளின் தலைமையில் நடத்தப்பட்ட வீரஞ்செறிந்த தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்கள் ஏனைய சமூக, இன பரிமாணங்;களை புறக்கணித்ததாகவே இருந்தது. அதேபோல் தமிழரசுக் கட்சியின் தலைமையில் நடத்தப்பட்ட தமிழ் மொழியின் அரசியல் உரிமைக்கான போராட்டம், போலித்தனம் பெற்றிருந்ததுடன் ஏனைய சமூக, இன பரிமாணங்களை புறக்கணித்ததாகவுமே இருந்தது. இவைகூட அறுபதுகளுடன் ஓய்ந்துபோய் விட்டன.

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் சகாப்தமான 1920 களையும் 1980 ன் பின்பான இன்றைய தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஒப்பிடுவது அவை இரண்டும் ஒன்றிற்கு ஒன்று சமம் என்பதற்காகவல்ல ஒன்றை ஒன்று ஒத்தது என்பதற்காகவும் அல்ல. 1980ன் பின்பான தேசிய விடுதலைப்போராட்டம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தசாப்தத்தையும்விட சமூக பலத்திலும். சமூக அரசியல் குணாம்சத்திலும் வளர்ச்சி பெற்றதொன்றாகும்.

ஆனால் யாழ் சமூக உருவாக்கத்திற்கு அவசியமான பல்வேறு சமூக, அரசியல் பரிமாணங்களையும் உள்ளடக்கிய சமூக இயக்கம் என்ற முறையிலேயே இவை இரண்டும் ஒப்பிடப்படுகின்றன. இவ்விதமான ஒரு தசாப்தத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு முக்கிய பங்காற்றிய உயர் திரு விபுலானந்திரின் நு}றாவது நினைவாண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட சகாப்தத்தில் அமையப்பெற்றது பெருமைக்குரிய தொன்றேயாகும். விபுலானந்தர் இன்று உயிரோடு இருந்திருந்தால் இச் சகாப்தத்தின் சிற்பிகளைக்கண்டு நிச்சயமாக அவர் பெருமைப்பட்டிருப்பார்.

வரலாறு எப்போதும் அலை அலையாகத்தான் முன்னேறும். ஒரு பெரும் எழுச்சி அலைதோன்றும். அது பெரும் சாதனைகளைப் புரியும். பின்னர் ஒரு தற்காலிக பின்னடைவு. மீளவும் ஒர் எழுச்சி அலை. அது முன்னையதைவிட சக்தி மிக்கதாய் அமையும். அது இன்னும் பெரும் பெரும் சாதனைகளை சாதிக்கும். மீளவும் ஒரு பின்னடைவு. மீளவும் ஒரு எழுச்சி அலை. இவ்விதமே தனது இறுதி வெற்றி வரை வரலாறு முன்னேறும்.

இவ் வரலாற்று நியதிக்கிணங்க இறுதி வெற்றிவரை நாமும் சளையாது போராடி முன்னேறுவோம். இதுவே மறைந்த பெரியார்களுக்கும், தியாக சீலர்களுக்கும், மகான்களுக்கும் நாம் செய்யும் வரலாற்று நன்றிக்கடனாகும்.


பிற்குறிப்பு

1. “கீழைத்தேய கல்வியற் சிந்தனைகள்” பக்கம் 152 என். கே. தர்மலிங்கம் என். ஏ.
2. “சாதியமும் அதற்கெதிரான போராட்டமும்” வெகுஜனன் - இராவணா பக்கம் 51
3. அதே நு}ல் பக்கம்51
4. அதே நு}ல்
5. அதே நு}ல்
6. “சாதியமும் அதற்கெதிரான போராட்டமும்” பக்கம் 52
7. “கீழைத்தேய கல்வியற் சிந்தனைகள்” பக்கம் 153
8. “சாதியமும் அதற்கெதிரான போராட்டமும்” பக்கம் 52
9. “கீழைத்தேய கல்வியியற் சிந்தனைகள்” பக்கம் 152
10. அதே நு}ல் பக்கம் 154
11. மலேரியாசுர தடுப்பியக்கம்:- 1ம் உலக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த பிரித்தானியர் இலங்கையின் உள்நாட்டு சிவில் விவகாரங்களில் எதுவித கவனமும் செலுத்தவில்லை. சுகாதார சேவை மிகவும் சீர்கெட்டு இருந்தது. இதனால் மிக நீண்ட காலமாகவே இலங்;கையில் பரவிக்கிடந்த மலேரியாசுரம் 1920களில் மிக உக்கிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால் இலங்கை எங்கணும் மலேரியா சுர எதிர்ப்பு மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்று வளர்ந்து வந்தன. பிரித்தானிய ஆட்சிக்கு எதிரானவர்களும் இடதுசாரி கருத்தோட்டமுள்ளவர்களுமே இதில் பிரதான பங்குவகித்தார்கள்.
12. “சூரியமல இயக்கம்” இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்த பிரித்தானிய சிப்பாய்களை நினைவுகூரும் முகமாக பிரித்தானியர் இலங்கையில் பொப்மலர் இயக்கத்தை ஆரம்பித்தார்கள். பொப்மலர்களால் நினைவு ஸ்து}பிக்கு அஞ்சலி செய்தலே இதன் நடைமுறையாக இருந்தது. இலங்கையின் இடதுசாரிகள் இதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். பொப்மலர் அஞ்சலியை நிராகரித்தார்கள். அதைக் கிண்டல் செய்தார்கள். இது ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக இருந்தது. இதை இடது சாரி இயக்கங்களின் தொட்டில் என்றும் கூறுவார்கள்.
13. ‘கீழைத்தேய கல்வியற் சிந்தனைகள்” பக்கம் 155
14. அதே நு}ல் பக்கம் 157
15. அதே நு}ல் பக்கம் 154
16. அதே நு}ல் பக்கம் 76