கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  சந்மார்க்க போதினி  
 

ஸ்ரீலஸ்ரீ. ஆறுமுகநாவலர்

 

சந்மார்க்க போதினி



(ஏழாம் பாகம்)




ஹைஸ்கூல்
நான்காவது வகுப்புக்கு ஏற்றது





ஸ்ரீலஸ்ரீ. ஆறுமுகநாவலர்
வித்தியாநுபாலன் அச்சகம்
சென்னை.
விலை அணா 2
1953

++++++++++++++++++++++++++

முன்னுரை

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் தமிழ்ப் பேராசிரியர்
டாக்டர். அ. சிதம்பரநாதச்செட்டியார். எம். ஏ. எழுதியது.

“சந்மார்க்கபோதினி” என்ற தலைப்பில், திருவாளர். பு. சுப்பிரமணியம் அவர்கள் தொகுத்து, அவரால் பாதுகாக்கப்பட்டு வரும் ஆறுமுகநாவலர் அச்சகத்தின் ஆதரவில் வெளியிட்டிருக்கும் புத்தகத்தைக் கண்டேன். அதனுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன். நாலடியார், நீதிநெறிவிளக்கம், திரிகடுகம் முதலிய நீதிநு}ல்களிலிருந்து பல பகுதிகள் தொகுக்கப்பட்டுப் பொருளுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும் வேறு சில நீதிநு}ல்களின் கருத்துக்களும் திரட்டித்; தரப்பட்டுள.

ஆறுமுகநாவலர்களுடைய பால பாடங்களின் காணப்பட்ட கருத்துக்கள் சிலவும் இத்தொகுதியின்கண் இடம் பெற்றுள.

மக்களை அறவழியிற் செல்லுமாறு அடிக்கடி பணித்து வருதல் தக்கது என நம் ஆன்றோர் கருதினர். அதனால், சிறு வயது முதலே அறம் இன்னதென்று கூறியும் அதன் வழி ஒழுகுக என வற்புறுத்தியும் வந்தனர்.

கல்வியினால் ஆய பயன்களில் தலை சிறந்ததாக மதிக்கத் தக்கது பிறர்க்குத் தீமையின்றி நாம்எப்படி வாழலாம் எனக் கற்றுக்கொள்வது. சமுதாய நலத்தில் எவ்வாறு ஒவ்வொரு தனிப்பட்ட மகனும் மகளும் பங்கு பற்றவேண்டும் என்பதும், அந்நலத்திற்குக் கேடின்றித் தனது நலத்தை எங்ஙனம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம். இப் பாடத்தைக் கற்றுக் கொள்ளாமல் சில பாடல்களை மனப்பாடம் பண்ணிவிடுவதாலோ சில கணக்குக்களைப் போடுவதற்கு கற்றுக்கொண்டு விடுவதாலோ பெரும்பயன் விளையாது. கல்வியினுடைய நோக்கமே மக்களை மாக்களாக இன்றி மக்களாக வாழும்படி து}ண்டுதல் என்பது, மக்கட் பண்பு அமையாதவரைக் கற்றார் எனச் சிறப்பித்துச் சொல்லுதல் பொருந்தாது. மக்கட்பண்பு அமையப் பெற்றவரே, நல்லொழுக்கம் கைவந்தவரே நன்கு கற்றார் எனச் சொல்லத்தக்கவர்.

அதனால், பள்ளிக்கூடங்களில் அறவழிக் கல்வி இன்றியமையாதது என்பது புலனாகும்.

இக்கல்வி ஒரு சமயச் சார்பின்றிப் பொதுவாக, எல்லாச் சமயத்தார்க்கும் ஒத்ததாய் அளிக்கப்படவேண்டும் என்பது தான் அரசாங்கத்தின் நோக்கம். பல நாடுகளிலும் பல காலங்களிலும் வாழ்ந்து பெருமையடைந்த ஒழுக்கச் சீலர்களுடைய வரலாறுகளை இனிய முறையிலே, எடுத்து இயம்புதல் வழியாக மாணவரை நல்வழிப் படுத்துதல் இயலும். இதுவே இக்காலத்திற்கு ஏற்ற முறையென மதிக்கப்படுகிறது. என்றாலும் இவ்வாறு உள்ளத்தை உருக்க வல்ல வகையில் எடுத்து உரைக்கும் ஆற்றல் படைத்தவர் சிலரேயுண்டு. ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒவ்வொரு வகுப்பிலும் அத்தகையார் உளரோ என்பது சிந்தித்தற்கு உரியது.

கதை வழியாகவும் வரலாறு வழியாகவும் அறவழி நிற்க என மாணவர்க்கு உணர்த்த முடியாது போயின், இது போன்ற புத்தகங்கள் நேரே அறவழியிற் செல்க எனப் பணிக்கின்ற வகையான் வற்புறுத்தும் ஆற்றல் உடையன எனக் காணலாம். பல நேரங்களில் வயது முதிர்ந்த நிலையிலும் ஒருவர் பிள்ளைப் பருவத்தே மனப்பாடம் பண்ணிய செய்யுட் கருத்துக்கள் நினைவிற்கு வந்து ஒருவரை நல்வழியில் நிறுத்துதல் உண்டு. அக்காரணத்தால், இது போன்ற புத்தகங்கள் மாணவ உலகிற்காக வரவேற்கத் தக்கன.


அ. சிதம்பரநாதன்
அண்ணாமலை நகர்
15-12-53

++++++++++++++

முகவுரை

கல்வியால் மனிதர் பூரண பலனை அடைவதானால் அக்கல்வி ஈசுர ஞானத்தையும் பக்தியையும் பிறப்பிக்கவும் வளர்க்கவும் தக்கதாக அமைக்கப்பட வேண்டுமென்பது உலகெங்கும் பெரும்;பான்மை கற்றோருடைய அபிப்பிராயமாகத் திகழ்கின்றது. ஒரே சமய உணர்ச்சியுள்ள மாணவர் ஒருங்கு சேர்ந்து கற்கும் வித்தியாசாலைகளிலே சமயக் கல்வியை விரும்பியவண்ணம் அமைப்பது இலகு. ஆயினும் இந்நாட்டிலே பல்வேறு சமயத்தினராகிய மாணவர் கற்கும் வித்தியாசாலைகளிலே ஒவ்வொரு சமயத்தவர்க்கும் அவரவருக்கேற்ற சமயக்கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வது இலகுவன்று. ஆதலினால் சமயக் கல்வியை ஊட்ட இயலாத நிலையில், எல்லாச் சமத்தவரும் அங்கீகரிக்கக்கூடிய சந்மார்க்க போதனைக் கல்வியையாயினும் இவ்வித்தியா சாலைகளில் ஊட்டுதல் பொதுவாய், சமூகவாழ்க்கைக்கு ஓரளவிற்கு நற்பயனை அளிக்குமென்ற அபிப்பிராயத்தைப் பெரியோர் ஏற்றுக்கொள்ளுவார்களென நம்புகிறேன். தமிழிலே நீதிநு}ல்கள் மலிந்து பொலிந்திருந்தபோதிலும், தற்கால அரசினர் கல்வித்திட்ட முறைக்கேற்ப, மாணவருடைய வயதுக்கும் வகுப்புக்கும் அறிவுத்தகைமைக்கும் ஏற்றவாறு அவைகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை. ஆதலினால் நீதிநு}ல்களில் சிலவற்றை ஆராய்ந்து, சாதி, சமய, தருக்க சம்பந்தமான பாகங்களை விலக்கி வகுப்பு வளர்ச்சிக்கு ஏற்றவாறு தேர்ந்து வகுப்புமுறையில் தொகுத்துப் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

ஆராயப்பட்ட நு}ல்களாவன - ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களால் செய்யப்பட்;ட பாலபாடம் இரண்டாம் புத்தகமும், அவராலே உரை செய்யப்பட்ட ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி, முதலிய நு}ல்களிலமைக்கப்பட்டிருக்குந் தாற்பரியங்களும், இன்னும் நாலடியார், நீதிவெண்பா, நீதிநெறிவிளக்கம், திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம். திருக்குறள் முதலிய நு}ல்களில் சில பாகங்களுமாம். இவைகளைச் சேர்க்கவும் தொகுக்கவும் இவ்வித்தியாசாலையில் கடமையாற்றும் சில தமிழ்ப்பண்டிதர் செய்த உதவிக்கு நன்கு நன்றி பாராட்டுகின்றேன்.

இப்பிரசுரங்கள் ஒவ்வொரு வகுப்புக்குத் தேவையான அளவில் தனிப்பாகங்களாகவும் எல்லாப் பாகங்களுஞ் சேர்த்துக் கட்டபட்ட ஒரே புத்தகமாகவும் இவ்வித்தியாசாலையிலும், சென்னை தங்கசாலைவீதி 300-நெம்பர், புத்தகசாலையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

தனிப்பாகம் விலை அணா2. முழுத்தொகுதி ரூபாய் ஒன்று.

G. சுப்பிரமணியம்.
தருமபரிபாலகர்.

சிதம்பரம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை
நந்தனளு சித்திரை மீ

+++++++++++++++++++++++

சந்மார்க்க போதினி

ஏழாம் பாகம்

பயிர்த்தொழிலினால் சீவித்தல் உத்தமம், வர்த்தகத்தினால் சீவித்தல் மத்திமம், ஊழியஞ் செய்து சீவித்தல் அதமம், திருடிப்பிழைத்தல் அக்கிரமம்.

ஈகையும் இன்சொல்லும், தைரியமும், நன்மைதீமைகளை யறியுமறிவும் ஆகிய இந்நான்கும் தன்னுடன் பிறந்த குணங்களாகவே யிருக்கவேண்டுமேயன்றி கற்றுக்கொண்டு வருபவையல்ல.

தன்னைப் பெற்றவனும், உபநயனஞ் செய்வித்தவனும். அன்னமிட்டுக் காப்பாற்றினவனும், பயத்தை யொழித்தவனும் ஆகிய இந்நால்வரும் பிதாக்களாவார்.

புத்திரனை ஐந்து வயதுமட்டும் ராஜன் போலவும், பதினைந்து வயதுமட்டும் தாசன் போலவும், பதினாறு வயது முதல் சிநேகிதன் போலவும் நடத்துவதே உசிதம்

கடன், யாசகம், வியபிசாரம், திருட்டுத்தனம், ஏழமை, பிணி, புத்தசேஷ போசனமாகிய இவை மரியாதையைக் கோரினோருக்கு இழிவைத்தரும். (புத்த சேஷம் - உண்டு மிகுந்தது)

பொருளில்லாதவனைத் தாய் நிந்திப்பாள்@ தகப்பன் சந்தோஷியான்@ உடன்பிறந்தார் புறக்கணிப்பார்@ வேலைக்காரர்கள் கோபிப்பார்@ மகன் பின் செல்லான்@ மனைவி தழுவாள்@ தன்னைப் பொருள் கேட்பனென்றும் பயத்தால் சிநேகிதன் நல்வார்த்தை சொல்லமாட்டான் ஆகையால் நீ பணத்தைச் சம்பாதித்தாயாகில் எல்லோரும் நன்கு மதிப்பார்கள்.

பரஸ்திரீயைத் தாய்; போலவும், பரதிரவியத்தை மண்ணாங்கட்டியைப் போலவும், மன்னுயிர்க்ளைத் தன்னுயிர் போலவும் எவன் பார்க்கிறானோ அவன் பரமஞானியாவன் என்று நகுலன் சொன்னான்.

துர்பிbகாலத்தில் அன்னதானஞ் செய்பவனும், சுபிbகாலத்தில் தனதானஞ் செய்பவனும், போர்க்களத்தில் தைரியமுள்ளவனும், வாங்கிய கடனை மோசஞ்செய்யாமல் தீர்ப்பவனுமாகிய இந்நால்வரையும் நான் நமஸ்கரிப்பேனென்று ஸ்ரீ கிருஷ்ணபகவான் கூறினார்.

சிங்கங்கள் மும்மூன்றாய்ப் பிறக்கின்றன@ புலிகள் ஐவைந்தாகப் பிறக்கின்றன. ஆனாலும் அவற்றின் அதர்மம் அவற்றின் சந்தானத்தை நாசம் பண்ணுகிறது. பசுக்கள் ஒவ்வொன்றாய்ப் பிறக்கும், ஆனாலும் அவற்றின் தர்மம் அவற்றின் சந்தானத்தை விருத்தி பண்ணுகின்றது. தர்மமே விருத்தியடையும். தர்மமே கடைப்பிடிக்க வேண்டியது.

சூரியன் பகல்காலத்தைப் பிரகாசிப்பிக்கின்றான். சந்திரன் இராக்காலத்தைப் பிரகாசிக்கின்றான். சற்புத்திரன் குலத்தைப் பிரகாசிக்கின்றான். தருமம் ஆன்மா சஞ்சரிக்கும் உலகமெல்லாம் பிரகாசிப்பிக்கும்.

மரணம் வருமுன்னே தருமத்தை விரைந்த அன்புடன் செய்யவேண்டும்.

புகைச்சுருட்டுப் பாவியாதே, அது சீதளதேசத்தவர்க்கு உவப்பாயிருக்கலாம்@ ஆனால் உஷ்ணதேசத்தவர்க்குப் பலவிதமான இடையூறையும் விளைவிக்கும். செந்நிறம் பொருந்திய உதடுகளைக் கருக்கிவிடும். முத்துப்போல் வெண்மையான பற்களைப் பழுப்பாக்கிவிடும். பற்களுடைய வேர்களைச் சுட்டு ஸ்திரத்தைக் குலைத்துவிடும். நாவிலேயுள்ள நுண்ணிய நரம்புகளிலே கொதிப்பேறி தத்தம் தொழிலில் தளர்;சியடைந்து சொற்களை உச்சரிக்கவாவது உணவை உருசிபார்க்கவாவது நாவுக்குள்ள இயல்பான சக்தி பங்கப்படுகின்றது. புகையிலையிலேயுள்ள “நிக்கொற்றையின்” என்னும்; விஷவஸ்தினாலும் புகை வெப்பத்தினாலும் ஈரல் பாதிக்கப்பட்டு “கான்சர்” என்னும் வி;ப்புருதிநோய்க்கு இரையாகின்றது. அற்பமற்பமாய்ப் பணம் விரயமாகின்றது. சுருங்கச் சொல்லுகில் உடலின் பலத்தையும் ஸ்திரத்தையுங் குறைத்து வாழ்நாளைச் சுருக்குகின்றது. உடலுக்கு நேரிடும் நோய்கள் தீமைகளை எதிர்த்துப் போரிடும் வீரியமும் ஆரோக்கியமும் இருக்கும்வரை புகைச்சுருட்டால் விளையுந் தீமைகள் தோற்றாமல் இருக்கலாம். ஆனால் சுருட்டுப்புகை படிப்படியாய் உடம்பை நன்னிக்கொண்டுவந்து ஈற்றில் நோயையும் மனஸ்தாபத்தையும் ஏற்படுத்தி விடும்.

இவ்வுலகத்திலிருக்கையில் நீ என்ன செய்யவேண்டும்? எல்லாவற்றையும் ஈசுவரனுக்கு அர்ப்பணஞ் செய்துவிடு, நீயுமவனைச்சரணடை, அப்பால் உனக்குத் துன்பமேயிராது, எல்லாக் காரியங்களும் அவனுடைய ஆக்ஞைப் பிரகாரமே நடக்கிறதென்பதை நீ தெரிந்துகொள்வாய்.

கல்லானது தண்ணீரிலே அனேக வருஷங்கள் அழுந்திக் கிடந்தாலும் தண்ணீர் அதனுள் நுழையாது, ஆனால் களிமண்ணோ சல சம்பந்தத்தால் வெகு சீக்கிரத்தில் மிருதுவாகி விடுகிறது. அதுபோல பக்தனுடைய திடமான மனம் இம்சையாலும் சோதனையாலும் தடுமாற்றம் அடைவதில்லை. திடபக்தியில்லாதவனுடைய மனமோ வெகு அற்பமான காரணத்தைக்; கொண்டும் சலனமடையும்.

குறிப்பார்த்துச் சுடுபவன் முதலில் பெரியபொருளைக் குறியாகக் கொண்டு சுடக்கற்றுக் கொள்கின்றான். அனுபவம் பெறப்பெற சிறுகுறிகளை நோக்கிச் சுடுகிறான். அது போல பயிற்சி உண்டானபிறகு உருவமே இராத வஸ்துவினிடம் அது நிலைத்திருப்பது சுலபமாகும்.

பசுவினிடமுள்ள பாலானது வாஸ்தவத்தில், அதன் சரீர முழுவதிலும் இரத்தரூபமாய்ப் பரவியுள்ளது. என்றாலும் அப்பசுவின் காதுகளையோ கொம்புகளையோ பிசைந்தால் பால் வராது. அதன் முலைக்காம்புகளைப் பிடித்துக் கறக்க வேண்டும். அதுபோல ஈசுவரன் இவ்வுலகத்தில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறான். ஆயினும் எல்லா இடத்திலும் அவனை உன்னால் காணமுடியாது. பூர்வபக்தர்களுடைய அன்பு பக்தி வைராக்கியம் நிரம்பிய புண்ணிய ஸ்தலங்களாகிய கோவில்களில் தான் அவன் சுலபமாகத் தோற்றப்படுகிறான்.

பாண்டங்கள் பலவகையாகச் செய்யினும் மண் ஒன்றே@ ஆபரணங்கள் பல ஆனாலும் பொன்ஒன்றே@ பசுக்கள் பல ஆனாலும் பால் ஒன்றே@ அதுபோல் சரீரம் பல ஆனாலும் அதில் அந்தரியாமியாக இருக்கும் பரமாத்மா ஒருவனே. இது சிலருக்கு எளிதே புலப்படினும் சிலருக்கு கால கதியில் அல்லது ஜன்மாந்திரத்தில் புலப்படும்.

வெறுங்கண்ணாடியில் யாதொரு உருவமும் பதிவதில்லை@ தகுந்த வஸ்துக்களை அக்கண்ணாடியின்மேல் பூசியபின் படங்களை எழுதலாம். அதுபோல பக்தியாகிய வஸ்துவை மானிட இருதயத்தின் மீது தடவினால் அங்கு ஈசுவரனுடைய உருவத்;தைப் பதியச்செய்யலாம்.

இராவில் ஆகாயத்தில் அனேக நbத்திரங்களைக் காண்கிறோம். ஆனால் சூரியோதயமானதும் அவைகள் தோற்றப்படுவனவில்லை. ஆதலால் பகற்போதில் நbத்திரங்களே இல்லை என்று சொல்லலாமா? உனது அஞ்ஞான காலத்தில் நீ ஈசவரனைக் காணமுடியாததனால் ஈசுவரனே இல்லையென்று சாதிக்காதே.

ஒருவனுடைய புத்தகமும், ஸ்திரியும். தனமும், பிறர்க்கைக்குப்போனால் போனது போனதேயாம், ஒருக்கால் திரும்பி வருவதாயிருந்தால் புஸ்தகம் ஜீரணமாயும் (கிழிந்தும்) ஸ்திரீ சந்மார்க்கந் தவறினவளாயும் பொருள் கிடையாமலும் அல்லது கண்டங் கண்டமாயும் வரும்.

ஆயுசு, ஆஸ்தி, மந்திரம், ஒளஷதம். புணர்ச்சி, தானம், மானம், குடும்பவிவகாரம் ஆகிய இவ்வொன்பதும் புத்திமான்களாலே பிறர்க்குத் தெரியாமல் காக்கப்படத்தக்கவைகள்.

செல்வம் வரும்போது தேங்காய்க்குள் இளநீர் சேர்வதுபோல் தானே வரும். அது போகும்போது யானையுண்ட விளங்கனிபோல bPணமாய்ப் போகும். ஆகையால் அதற்காக விசனியாதே.

நாவினாலேயே சம்பத்து உண்டாகும்@
நாவினாலேயே சிநேகிதர்களும் பந்துக்களும் வருவார்@
நாவினாலேயே விலங்கு நேரிடும்@
நாவினாலேயே மரணமும் சம்பவிக்கும்.

“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

தேளுக்குக் கொடுக்கில் விஷம்@
ஈக்குத் தலையில் விஷம்@
பாம்புக்குப் பல்லில் விஷம்@
துர்ச்சனருக்குச் சர்வாங்கங்களிலும் விஷம்.

சத்தியமுண்டாயிருந்தால் வேறே தபசு வேண்டியதில்லை@ நல்ல மனமுண்டாயிருந்தால் தீர்த்தயாத்திரை வேண்டியதில்லை@ சௌசந்நிய முண்டாயிருந்தால் வேறே பலம் வேண்டியதில்லை@ நிறைந்த கல்வியிருந்தால் வேறே பொருள் வேண்டியதில்லை@ ஈசுரபத்தியுண்டானால் வேறு பூஷணம் வேண்டியதில்லை@ அதிக ஆசையுண்டானால் வேறு துர்க்குணம் வேண்டியதில்லை@ கோட்சொல்லுதலுண்டாயினால் வேறு பாவம் வேண்;டியதில்லை@ அபகீர்த்தியுண்டாயினால் வேறு மிருத்தியுவேண்டியதில்லை.

வீட்டு வேலையில் பணிப்பெண்போலவும் (வேலைக்காரி), காரியாலோசனையில் மந்திரிபோலவும், ரூபத்தில் மகாலb{மிபோலவும், சிநேகத்தில் தாய்போலவும் பிரவர்த்திப் பவளே குலஸ்திரீயாவாள்.

கற்ற பெரியோர்கட்கு மனம் நினைத்ததையே வாக்குச் சொல்லும்@ கையுஞ் செய்யும்@ துராத்மாக்களுக்கு மனதில் வாக்கில் மற்றொன்றும் செய்கையில் வேறொன்றும் முடியும்.

ஒன்றை நினைக்கின் அதவொழிந்திட் டொன்றாகும்
அன்றி யதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினு நிற்கு
மெனையாளு மீசன் செயல்

இ - ள் ஒரு பொருளைப்பெற நினைத்தால் அப்பொருள் கிடையாமல் வேறு ஒரு பொருள் கிடைத்தாலுங் கிடைக்கும். அப்படியல்லாமல் அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும். இன்னும் ஒருபொருளை நினையாது இருக்குமுன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும். இவைகளெல்லாம் எனை ஆண்டருளும் கடவுளுடைய செயல்களாகும்.

இளமையு நில்லா யாக்கையு நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமு நில்லா
புத்தே ளுலகம் புதல்வருந் தாரார்
மிக்க வறமே விழுத்துணை யாவது.

இ - ள் இளமை நிலையாது, இவ்வுடம்பு நிலையாது@ வான்போல உயர்ந்திருக்கும் பெருஞ்செல்வமும் நில்லாது, பெற்ற புதல்வர்களும் சுவர்க்லோகத்திற்குப் போவதற்கு நமக்கு உதவமாட்டார்கள். பெரிய தருமமே நமக்குப் பெருந்துணையானது.

பொறைகொடை கருணைதானம் பொய்ம்மொழி யழுக்காறின்மை
யுறையுமுட் கரணங்காத்தல் பயில்புறக் கரணமோம்பல்
குறளைகொல் லாமைநாளு முனிவின்மை யுயிர்கொல்லாமை
பிறர்மனை நயத்தலின்மை நன்மொழி பிறழாவாய்மை.

இ - ள் பொறையும், கொடையும், கருணையும், தானமும், வாய்மையும், அழுக்காற்றின்மையும், ஐம்புலன் உட்கரணங்களையும், ஐம்பொறிகளையுங் காத்தலும். கோள் சொல்லாமையும், எந்நாளுங் கோபமின்மையும். நன்மொழி பேசலும் மாறுபடா உண்மை பேசலும் நல்லொழுக்கமாம்.

இத்தகைய மூவர்களின் மூவருக்கு மிறந்தார்க்கு
மத்தமுத லற்றார்க்கு மாதார மாதலினாம
லுத்தமமா யில்லறமே வாழ்வினுக்கு முயர்கதிக்கும்
வித்துமாந் துறவறத்தின் வேருமா மென்னும்வேதம்.

இ - ள் பிரமசாரி, வானப்பிரஸ்தன். சன்னியாசி, இம்மூவருக்கும் பொருளின்றி, வறுமையடைந்தவர்களுக்கும் துணையாயிருப்பதினாலும், வாழ்க்கைக்கும் உயர்வாகிய மோட்சத்திற்கும் வித்துமாகித் துறவறத்தின் பயனையும் அடைவிக்கும் வேருமாயிருப்பதினாலும் இல்லறமே, எல்லாவற்றிலும் உத்தமமானது.

தாழ்ந்த வருணத் துதித்தவருந் தக்கோர் ரவாhர் ஒழுக்கத்தால்
வீழ்ந்;த வொழுக்கத் தாலிழிவர் மேலாம் வருணத் துதித்திடினுஞ்
சூழ்ந்த துணையாஞ் சிறப்பினின்பஞ் சுரக்கு மதனா லுயிர்தனினும்
வாழ்ந்த வொழுக்க மோம்பிடுக வழுக்கி னிடும்பை யேதருமே.

இ - ள் தாழ்ந்த வருணத்துப் பிறந்தவராயினும் நல்லொழுக்கத்தினால் மேலோராவர். உயர்ந்த வருணத்துப் பிறந்தவராயினும் தீய ஒழுக்கத்தினால் இழிந்தவராவர். நல்லொழுக்கமானது நெருங்கிய துணையாகும் சிறப்பையும் இன்பத்தையுந் தரும். ஆகையால் உயிரினும் நல்லொழுக்கம் மேன்மையடையது@ தீயொழுக்கம் துன்பத்தைக் கொடுக்கும்.

பிறர் மறையின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதி லாரிற் கட்குருட னாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாது
மறங்கூற வேண்டா வவற்கு.

இ - ள் ஒருவன் நல்லொழுகத்தின் வகையை யுணர்ந்த அயலாரது இரகசியங்களைக் கேட்பதில் செவிடனாகியும், அயலாரது மனைவியைக் காதலோடு காண்பதில் குருடனாகியும், ஒருவர்மேல் தீய சொற்களை அவர்களைக் காணாதவிடத்துச் சொல்வதில் ஊமையாகியும் நிற்பானாயின் அவனுக்கு எந்தத் தருமமும் பிறர் உபதேசிக்க வேண்டியதில்லை.

‘பரிவு மிடுக்கணும் பாங்கற நீங்குமின்
றெய்வந் தெளிமின் றெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை யஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமி
னு}னுண் டுறமி னுயிர்க்கொலை நீங்குமின்
றானஞ் செய்மின் தவம் பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன் மின்றீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மி
னறவோ ரவைக்கள மகலா தணுகுமின்
பிறவோ ரவக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை யஞ்சுமின் பிழையுயி ரோம்புமின்
அறமனை காமி னல்லவை கடிமின்
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகி லொழிமி
னிளமையுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
வுளநாள் வரையா தொல்லுவ தொழியாது
செல்லுந் தேகத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென”
- சிலப்பதிகாரம்.

இ - ள் விருப்பத்தையும் அவ்விருப்பத்திலும் உண்டாகும் துன்பத்தையும் விட்டொழியுங்கள், தெய்வமுண்டென்று அறியுங்கள். அறிவுள்ளவரை ஆதரியுங்கள், பொய்யுரைக்குப் பயப்படுங்கள், புறங்கூறலைச் செய்யாது உண்மையைப் போற்றுங்கள், புலால் உண்ணலை யொழியுங்கள், உயிர்க் கொலை செய்யாதீர்கள். தானங்களைச் செய்யுங்கள், தவம்பலவற்றைச் செய்யுங்கள், ஒருவர் செய்த நன்றியை மறக்காதீர்கள், தீய நட்பினரை இகழ்ந்து நீக்குங்கள், பொய்ச்சாட்சிக்குச் செல்லாதீர்கள், பொருளைக் கொடுக்கும் மொழிகளைத் தவிரப் பயனில் சொற்களைப் பேசாதீர்கள், அறிவுடையார் சபைகளை நீங்காது சென்றடையுங்கள், மறவோர் சபையினின்றும் தப்பி நீங்குங்கள், பிறன்மனை விழைதற்கு அஞ்சுங்கள், பிழைக்கக்கூடிய உயிர்களெல்லாவற்றையும் காப்பாற்றுங்கள், பாவங்களை நீக்குங்கள். களவுகள், காமம், பொய், அறிவிலார் சபை இவைகளைத் தந்திரமாக ஒழியுங்கள், இளமை செல்வம் யாக்கை நிலையாதனவாயிருக்கின்றன, நாம் உள்ளநாள் வீணாகாமல் முடிவு மறத்தினைக் கைவிடாது செய்து செல்லும் மேலுலகத்திற்குப் பொருந்திய துணையைத் தேடுங்கள். வளப்பம் பொருந்திய நிலத்தில் வாழ்வீர்காள்.

பிரகடன பத்திரம்
ரூ.அ பை
முதற்பால பாடம் 0 3 0
இரண்டாம்பாலபாடம் 0 5 0
மூன்றாம் பாலபாடம் 0 10 0
நான்காம்பாலபாடம் குறிப்புரையும் அப்பியாச
வினாக்களும் 1 12 0
சூடாமணி நிகண்ட 12-தொகுதியும் உரையுடன்
(முதலிரண்டு தொகுதிகள் சொற்பொருளுடன்) 2 0 0
ஹ 10 - தொகுதியுரை 1 4 0
ஹ 11,12 தொகுதியுரை 0 12 0
முதற்சைவவினாவிடை 0 3 0
இரண்டாஞ் சைவவினாவிடை 0 10 0
பெரியபுராண வசனம் 2 8 0
சிதம்பரமான்மியம் 0 3 0
அபிராமியந்தாதி உரை 0 4 0
திரிகடுகவுரை 0 4 0
நீதிவெண்பாவுரை 0 4 0
நீதிநெறிவிளக்கம் மூலம் 0 2 0
ஆத்திசூடி கொன்றைவேந்தனுரை 0 2 0
நல்வழியுரை 0 2 0
நன்னெறியுரை 0 2 0
வாக்குண்டாமுரை 0 2 0




ஸ்ரீலஸ்ரீ. ஆறுமுகநாவலரவர்கள்,
வித்தியாநுபாலனயந்திரசாலை,
நெ.300, தங்கசாலை வீதி, சென்னை

----