கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  உண்மை நெறி விளக்கம்
மூலமும் உரையும்
 
 

ஸ்ரீ உமாபதிசிவாசாரியார்

 

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்க வெளியீடு: 3




உண்மை நெறி விளக்கம்
மூலமும் உரையும்







வெளியீடு :
அகில இலங்கசை; சைவப்புலவர் சங்கம்
20, ‘சிவம்ஸ்’ ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.




உரிமைப்பதிவு 4-9-1966
விலை சதம் 50

+++++++++++++++++++++


சிவமயம்


கொற்றவன்குடி


ஸ்ரீ உமாபதிசிவாசாரியார்
அருளிச்செய்த


உண்மைநெறி விளக்கம்
மூலமும் உரையும்


உரையாசிரியர் :
சைவப்புலவர், சித்தாந்தபண்டிதர்


திரு. இ. செல்லத்துரை
அவர்கள்


பொருளுதவியாளர்:
எஞ்சினியர்,


புரவலர்: திரு. இ. செல்லத்துரை
அவர்கள்


வெளியீடு :

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்
20, ‘சிவம்ஸ்’ ஸ்ரான்லி வீதி.
யாழ்ப்பாணம்.

உரிமைப்பதிவு 4-9-1966 விலை சதம் 50

+++++++++++++++++++++

பதிப்புரை

சைவசித்தாந்த சாத்திரம் பதினான்கு, அவற்றுள் உமாபதி சிவாசாரியசுவாமிகள் அருளியவை எட்டு. அவ்வெட்டினுள் இவ்வுண்மைநெறி விளக்கமும் ஒன்று.

இந்நு}லாசிரியர், சீர்காழித்தத்துவநாதர் என்பாருமுளர். அவர் தங்கூற்றுக்கு ஆதாரமாக, (சிலப்பதிப்புக்களிற் காணப்படும்)

“எண்ணும் அருணு}ல் எளிதின் அறிவர்ருக்
குண்மை நெறிவிளக்க மோதினான் - வண்ணமிலாத்
தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவநா தன்”

என்னும் (பாயிரமாய் அமைந்த) செய்யுளைக் காட்டுவர். இஃது ஆராய்ந்தறிதற்குரித்து:

ஞானாசாரியரை அதிட்டித்து நின்றருளும் சிவபெருமான். பக்குவான்மாக்களுக்கு அருளுங்கால், அவ்வான்மாக்கள் படிமுறையே பொருந்துந் தசகாரியங்களைத் தெளிவுபடுத்துமுகத்தால், சிவாகமத்திலே உரைக்கப்பட்ட உண்மைநெறியைச் (சுருக்கக்கூறி) விளங்கவைத்தலின் இந்நு}ல் உண்மைநெறி விளக்கம் எனப்பட்டது. இந்நு}லறிவு சிவஞானபோதம் சிவஞானசித்தியார் பயில்வோருக்கு உறுதுணையாகும்.

நமது சங்கப்பணியை நிறைவேற்றுமுகமாகச் சைவப் புலவர் சித்தாந்தபண்டிதர் திரு. இ. செல்லத்துரை அவர்கள் பழையவுரைகள் பலவற்றை ஆராய்ந்து யாவர்க்கும் பயன்படுமாறு தெளிவுபடவெழுதிய உரையுடன் (மூன்றாவது சைவசித்தாந்தநு}ல் வெளியீட்டாக) இந்நு}லை வெளியிடுகின்றோம்.

இவ்வெளியீட்டுக்குப் பொருளுதவிபுரிந்த புரவலர் திரு. இ. வைத்திலிங்கம் டீ. ளஉ அவர்களுக்கும் உரையாசிரியருக்கும், விரைந்தச்சிட்டுதவிய ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகத்தாருக்கும் நன்றிமறவாக் கடப்பாடுடையோம்.

சைவச்சான்றோர் எம்மை ஆசீர்வதித்து, ஊக்கமும் ஆக்கமுந்தந்து எம்பணிக்கு உதவுவார்களாக.


20,’சிவம்ஸ்’ ஸ்ரான்லி வீதி, அ. இ. சை. பு. சங்கத்தினர்
யாழ்ப்பாணம் - 1966.

+++++++++++++++++++++


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

உண்மை நெறி விளக்கம்
முதலாஞ் செய்யுள்

தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி

மண்முதற் சிவம தீறாய்
வடிவுகாண் பதுவே ரூபம்
மண்முதற் சிவம தீறாய்
மலஞ்சட மென்றல் காட்சி
மண்முதற் சிவம தீறாய்
வகையதிற் றானிலாது
கண்ணுத லருளா னீங்கல்
சுத்தியாய்க் கதருதலாமே.

கொண்டு கூட்டு

(ஆன்மாவாகிய) தான், கண்ணுதல் அருளால், மண்முதல் சிவம் அது ஈறு ஆய் (உள்ள பிரபஞ்சத்தின்) வடிவு காண்பதுவே (தத்துவ) ரூபம் (ஆகும்)@ (கண்ணுதல் அருளால்) மண்முதல் சிவம் அது ஈறு ஆய் (உள்ள பிரபஞ்சமானது) மலம் (என்றலும்) சடம் என்றல் (10உம்) (தத்துவக்) காட்சி (ஆகும்)@ (கண்ணுதல் அருளால்) மண்முதல் சிவம் அது ஈறு ஆய் (உள்ள பிரபஞ்சத்தின்) வகை அதில் (ஆன்மாவாகிய தான்நி(ல்) லாது நீங்கல் (தத்துவ) சுத்தியாய்க் கருதலாம் (10ஏ).

இதன் பொருள்

தான் - ஆன்மாவாகிய தான்.
கண்ணுதல் அருளால் :- நெற்றிக்கண்னையுடைய சிவபெருமான் அதிட்டித்த நின்று அருளும் ஞான குருவின் உபதேச மொழி கொண்டு.
மண் முதல் சிவம் அது ஈறு ஆய்:- பிருதிவிதத்துவம் முதலாக நாத தத்துவம் இறுதியாகவுள்ள பிரபஞ்சத்தின்,
வடிவு காண்பதுவே ழூபம்:- வடிவு குணம் தொழில் என்னும் இயல்புகளைத் தனக்கு வேறாகக் காணுதலே தத்துவ ரூபக்காட்சி ஆகும்@

கண்ணுதல் அரளால் - ....
மண்முதல் சிவம் அது ஈறு ஆய் - பிருதிவிதத்துவ முதல் நாததத்துவம் இறுதியாகவுள்ள பிரபஞ்சமானது.
மலம் சடம் என்றல்:- மாயை ஆகிய மலத்தின் காரியமாகுமென்றும் அஃது உணரும் தன்மை அற்றது என்றும் தன்னறிவிலே விளங்கக்காணுதல்,
காட்சி:- தத்துவ தரிசனம் ஆகும்
கண்ணுதல் அருளால் - ...........
மண்முதல் சிகம் அது ஈறு ஆய் - பிருதிவிதத்துவ முதல் நாததத்துவம் இறுதியாகவுள்ள.
வகை அதில் - முப்பத்தாறு வகைத்தத்துவங்களிலே,
நிலாது நீங்கல் - பொருந்தி நில்லாமல் விலகுதல்.
சுத்தியாய்க்கருதலாம் - தத்துவ சுத்தி என்று சொல்லப்படும்.

இதன் கருத்துரை

ஆன்மா, குருவருளாலே தத்துவப்பதிரபஞ்சங்களின் இயல்புகளைத் தனக்கு வேறாய் அறிதல் தத்தவரூபம் எனப்படும்.

ஆன்மா, குருவருளாலே தத்துவப்பிரபஞ்சங்கள் மலம் என்றும் உணர்வற்றனவென்றும் அறிதல் தத்துவ தரிசனம் எனப்படும்.

ஆன்மா, குருவருளாலே, தத்துவப்பிரபஞ்சங்களின் துணைக்கொண்ட இறைவனை அறியமுடியாதெனக்கண்டு அவற்றினின்றும் விலகுதல் தத்துவ சத்தியாகும்.

இரண்டாஞ் செய்யுள்.

ஆன்மரூபம், ஆன்மதரிசனம், அன்மசுத்தி

பாயிரு ணீங்கி ஞானந்
தனைக்காண்ட லான்ம ரூபம்
நீயுநின் செயலொன் றின்றி
நிற்றலே தரிசனந் தான்
போயிவன் றன்மை கெட்டுப்
பொருளிற்Nபுh யங்குத் தோன்றா
தாயிடி லான்ம சுத்தி
யருணு}லின் விதித்த வாறே

கொண்டு கூட்டு

(ஞானாசாரியரின் அநுக்கிரகத்தினாலே ஆன்மாவானது) பாய் இருள் நீங்கி (ய பின்னர்) ஞானந்தனைக்கண்டல் ஆன்ம ரூபம் (ஆகும்) நீ (யும்) நின் செயல் ஒன்று இன்றி நிற்றல் (10ஏ) (ஆன்ம) தரிசனம் (தான்) (- ஆகும்)@ அங்ஙனம் சிவஞானம் பற்றுக் கோடாகப்) போய் (10அ) இவன் (உடைய) தன்மைகெட்டு, (சிவஞானமாகிய உண்மைப்) பொருளில் போய், அங்கு (ப்பசுஞானம்) தோன்றாதாயிடில், (அந்நிலை) ஆன்மசுத்தி (ஆகும்). இவ்வுண்மைகள் (யாவும்) அருள் நு}லில் விதித்தவாறே (யாம்).

இதன் பொருள்

பாய் இருள் நீங்கி - ஞானாசாரியரின் அநுக்கிரகத்தினாலே ஆன்மாவானது விரிந்து பரந்த தத்தவங்களின் உருவம் தரிசனம் சுத்தி ஆகிய காரியங்களைப் பொருந்தி ஆணவம் நீங்கிய பின்னர், ஞானம் தனைக் காண்டல் - சிவஞானமானது தன்னறிவுக் கறிவாய் நின்று உணர்த்தத் தானுணர்தலாகிய தனதியல்பை அறிதல், ஆன்மரூபம் - எனப்படும்@ நீயும் நின செயல் ஒன்று இன்றி நிற்றல் - ஆன்மாவாகிய நீ, உனது முயற்சி ஒன்றும் இல்லாமற் சிவஞானத்தின் செயலே உனது செயலாகமதித்து நிற்றல், தரிசனம் தான் - ஆன்ம தரிசனம் எனப்படும்@ போய இவன் தன்மை கெட்டு - அங்ஙனம் சிவஞானம் பற்றுக்கோடாகச் சென்ற ஆன்மாவின் சுட்டறிவாகிய பசுஞானம் அடங்கி, பொருளில் போய் - சிவஞானத்தை அடைந்து அதன்வசமாய் நிற்குங்கால், அங்கு தோன்றாதாயிடில் - அவ்விடத்திலே, முன்னைப் பயிற்சிவசத்தால் வரக் கடவதாகிய அஞ்ஞானமானது மீளவும் உண்டாகாதிருக்குமானால் - (தற்போதம் நிகழாதிருக்குமானால்), ஆன்ம சுத்தி - அஃது ஆன்ம சுத்தி ஆகும். அருள் நு}லில் விதித்தவாறே - இவ்வுண்மைகள் யாவும் இறைவனருளிய வேதாகமங்களிலே கூறப்பட்ட முறைமையாம்.

‘போய’ என்னும் பெயரெச்சத்தின் அகரங்கெட்டுப் ‘போய்’ எனநின்று ‘போயிவன்’ என வருமொழியோடு புணர்ந்தது.

‘அங்குத் தொன்றாதாயிடில்’ என்னுந் தொடருக்கு, “தன்னை அந்த ஞானமடங்கின் முறைமையுந் தானந்த ஞானத்திலேயடங்கிய முறைமையுமெவ்விடத்திலுந் தோன்றாமல் பெத்தத்தினாலே தேகமேதானாயுந் தானே தேகமாகியு நின்றமுறைமை போலச்சிவமேதானாய் நிற்கவந்ததனால்” எனக் கூறப்படும் பழையவுரை ஈண்டுச் சிந்திக்கற்பாலது.

ஞான வசப்பட்டுச் சீவன் முத்தராயவிடத்தும் மலவாசனை மீளவும் உளதாதல் கூடும் என்பதையும் அதை நீக்குமாற்றையும் சிவஞானபோதப் பன்னிரண்டாஞ் சூத்திரத்தானம் அதன் உரையானுமுணர்க.

இதன் கருத்துரை

ஆன்மா, சிவஞானத்தின் வசத்ததாய்த் தன் இயல்பை அறிதல் ஆன்மரூபம் ஆகும்.

ஆன்மா, ‘நான், எனது’ என்னும் அகங்கார மமகாரங்கள் நீங்கப்பெற்றுத் தன் செயலொழிந்து, சிவஞானத்தோடொத்து அதன் செயலே தன்செயலாய் மதித்து நிற்றல் ஆன்மதரிசனமாகும்.

ஆன்மா பெத்த நிலையில் மலமேதானாய் நின்ற முறைமைபோல, சிவஞானமேதானாய் நிற்குங்கால் அங்கு மீளவும், (முன்னைப்பயிற்சிசிவசத்தால் வரக் கடவதாகிய) அஞ்ஞானம் பற்றாதாயின் அந்நிலை ஆன்மசுத்தியாகும்.

மூன்றாஞ் செய்யுள்

சிவரூபம்

எவ்வடி வுகளுந் தானா
யெழிற்பரை வடிவ தாகிக்
கவ்விய மலத்தான் மாவைக்
கருதியே யொடுக்கி யாக்கிப்
பவ்வம்விண் டகலப் பண்ணிப்
பாரிப்பா னெருவ னென்று
செவ்வையே யுயிரிற் காண்டல்
சிவரூப மாகு மன்றே

கொண்டு கூட்டு

“கவ்விய மலத்து ஆன்மாவைக் கருதி (10ஏ) (தநு கரண புவன போகங்களை) ஆக்கி, (காத்து) ஒடுக்கி, (கலந்து நின்ற உபகரிக்கும் தன்மையினாலே) எவ்வடிவுகளும் தான் ஆய் (நின்று), எழில் பரை (யேதனக்கு) வடிவது ஆகி (வெளிப்பட்டு) பவ்வம் விண்டு அகலப்பண்ணி, பாரிப்பான் ஒருவன்” என்று (ஆன்மாவானது) செவ்வையே உயிரில் (-தன்னுயிர்க்குயிராய் நின்ற ஞானத்தில்) காண்டல் சிவரூபம் ஆகும்.
‘அன்று, ஏ’ இரண்டும் அசைகள்.

இதன் பொருள்

கவ்விய மலத்து ஆன்மாவை கருதி - “ உண்மையை அறியவிடாமல் மறைக்கும் இயல்பினையுடைய ஆணவமலத்தினாலே கட்டுண்டிருக்கும் ஆன்மாவை (அதன் ஈடேற்றத்தை) க்கருத்திற்கொண்டு, அதற்காக, ஆக்கி ஒடுக்கி - தநு கரண புவன போகங்களைப் படைத்து, அவற்றை அநுபவிக்க வேண்டிய காலபரியந்தங்காத்து ஈற்றில் அழித்து, எவ்வடிவுகளும் தான் ஆய் - யாண்டும் எக்காலத்தும் நீக்க மறக்கலந்து உபகரிக்குந் தன்மையினாலே எல்லாப் பிரபஞ்சங்களும் சிவமாயுள்ளதாமே என்னும் படி வேறறநின்று, எழில் பரை வடிவது ஆகி - நன்மை அழகு பொருந்திய திருவருளே தமது திருமேனியாகக் கொண்டு, பவ்வம் விண்டு அகலப் பண்ணி - பிறவித் துன்பத்தை ஆக்கவல்ல இந்திரியங்களை நீங்கிக் காணும்படி மலபரிபாகஞ் செய்து சத்திநிபாதத்தைத் தந்து, பரிப்பான் - பேரின்பத்துக்கு ஆதாரமாய்ப் பாதுகாத்து நிற்பவர், ஒருவன் - ஒப்பற்ற குருமூர்த்தி ஆவார். என்று செவ்வையே உயிரில் காண்டல் - என்று உயிரானது திருவருளிடமாக நின்று தெளிவாகக் காணுதலர், சிவரூபம் ஆகும் - சிவரூபம் எனப்படும்.

“எவ்வடிவுகளுந் தானாம் எழிற்பரை வடிவதாகி” என்றும் பாடம். இதற்கு, ‘எல்லாப்பிரபஞ்சங்களும் தானேயாய் நின்ற அழகிய திருவருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு எனப் பொருளுரைக்க.

‘பவம்’ என்பது எதுகை நோக்கிப் ‘பவ்வம்’ என்றாயிற்று. பவம் - பிறவித் துன்பமெனினுமாம்.

இதன் கருத்துரை

சிவபெருமான் ஆன்மாவின் ஈடேற்றத்துக்காக யாவுமாய எக்காலத்தும் நீக்கமற நின்று உபகரிக்குந் தன்மையையும், ஞானகுருவாய் எழுந்தருளி வந்து சத்திநிபாதத்தைத் தந்து (இரும்பைக் காந்தம் ஈர்த்தல் போலத்) தன்வசப்படுத்தி நிற்குமியல்பையும் ஆன்மா ஞானவசமாய் நின்ற உணர்தல் சிவரூபம் எனப்படும்.

நான்காம் செய்யுள்

சிவதரிசனம்

பரையுயிரில் யானென தென றறறிநின்ற தடியாம்
பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த்
தோன்றலது முகமா
முரையிறந்த சுகமதுவே முடியாகு மென்றிவ்
வுண்மையினை மிகத் தெளிந்து
பொருள்வே றென் றின்றித்
தரைமுதலிற் போகாது நிலையினி னில்லாது
தற்பரையி னின்றழுந்தா
தற்புதமே யாகித்
தெரிவரிய பரமாநந் தத்திற் சேர்தல்
சிவனுண்மைத் தரிசனமாச்
செப்பு நு}லே

கொண்டு கூட்டு

“பரை (ஆனது) உயிரில் ‘யான் எனது’ என்று (கூறப்படும் சுட்டறிவு) அற நின்றது அடியாம்@ பார்ப்பிடம் எங்கும் சிவமாயத் தோன்றலது (சிவபெருமானுடைய) முகமாம்@ உரை இறந்த சுகம் அதுவே (சிவபெருமானது) முடியாம்@” என்று (அறிந்து), இவ்வுண்மையினை மிகத் தெளிந்து, பொருள் வேறு ஒன்று இன்றி, தரை முதலில் போகாது, நிலையினில் நில்லாது, தற்பரையில் நின்று அழுந்தாது, அற்புதமே ஆகி, தெரிவு அரிய பரம ஆனந்தத்திற் சேர்தல் (ஆனது) உண்மைச் சிவன் தரிசனம் ஆ(க) நு}ல் செப்பும்.

இதன் பொருள்

பரை, உயிரில் யான் எனது என்று அற நின்றது - “சிவ சத்தியானது, ஆன்மாவிடத்திலே யானென்றும் எனதென்றும் சுட்டி அறியும் ஏகதேச ஞானம் நீங்கும்படி நிலைபெற்று நிற்றல், அடியாம் - சிவபெருமானது திருப்பதமாகும்@ பார்ப்பிடம் எங்கும் சிவமாய்த் தோன்றலது - அவன் அவள் அது என்று சுட்டிக் காண்கின்ற பிரபஞ்சமெங்கும் சிவமேயாய்த் தோன்றா நிற்றல், முகமாம் - சிவபெருமானது திருமுகமாகும், உரை இறந்த சுகமதுவே - (அறிவுக்கறிவாய்த் தன்னிடத்தே விளங்கும் சிவபெருமானது) சொல்லுக்கடங்காத இன்பமே முடியாம் - சிவபெருமானது திருமுடியாகும்” என்று - எனவறிந்து (கொண்ட), இவ்வுண்மையினை மிகத் தெளிந்து - இவ்வுண்மையைச் சந்தேக விபரீதமற உள்ளபடி விசாரித்து அறிந்து தெளிந்து. பொருள் வேறு ஒன்று இன்றி - உண்மையான பொருள் அவனையன்றி வேறு ஒன்று இல்லை என உணர்ந்து, தரை முதலில் போகாது - பிருதிவி முதல் நாதமீறாய முப்பத்தாறு தத்துவங்களோடுங் கூடுதலாகிய சகாலவத்தையிற் சென்று சேராமலும், நிலையினில் நில்லாது - ஆணவ மாத்திரையே நிற்கும் கேவலாவத்தையிற் பொருந்தாமலும், தற்பரையில் நின்று அழுந்தாது - பசு ஞானத்தால் உளதாகும். ‘நான் பிரமம்’ என்னுஞ் செருக்கில் நிலைபெற்று நில்லாமலும், அற்புதமே ஆகி - ஞானாசாரியரது அநுக்கிரகத்தினாலே அவ்வாசாரிய மூர்த்தமாய் நின்ற சிவத்தைச் சார்ந்து சிவஞானத்தின் வண்ணமாகி, தெரிவு அரிய பரமானந்தத்திற் சேர்தல் - அறிதற்கு அரியராகிய மேலான பேரானந்த சொரூபராம் சிவபெருமானின் அநுக்கிரக ஞானத்தை எவ்விடத்திலுங் காணல், உண்மைச் சிவன் தரிசனமா நு}ல் செப்பும் - உண்மையான சிவதரிசனமாகும் என்று சிவாகமங்கள் உரைக்கும்.

இதன் கருத்துரை

ஞானாசாரியரின் அநுக்கிரகத்தினாலே, ஆன்மாவானது, சிவபெருமானின் திருவடி திருமுகம் திருமுடியாயவற்pறன் செய்தியெல்லாம் அறிந்து, அவனே உண்மையான பொருள் என்பதைத் தெளிந்து, அவத்தைகளினின்று நீங்கித் தம் போதமிழந்து, சிவஞானத்தின் வண்ணமாய், தானே அவன் என்னும்படி ஏகனாகி நின்று யாண்டுன அவனையே தரிசித்தல் சிவதரிசனம் ஆகும்.

ஐந்தாஞ் செய்யுள்

சிவயோகம்

எப்பொருள் வந் துற்றிடினு மப்பொருளைப் பார்த்தங்
கெங்துமுயிர் தனைக்கண்டிங்
கவ்வுயிர்க்கு மேலா
மொப்பிலருள் கண்டுசிவத்துண்மை கண்டிங்
குற்றதெல்லா மதனாலே
பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானே
தருமுணர்வு புசிப்புமது
தானே யாகு
மெப்பொருறு மசைவில்லை யெனவந்தப் பொருளோ
டிசைவதுவே சிவயோக
மெனுமிறைவன் மொழியே

கொண்டு கூட்டு

(முதல்வனோடு ஏகனாகி நிற்கும் ஆண்மா) இங்கு, எப்பொருள் வந்து உற்றிடினும், அப்பொருளைப் பார்த்து, (அவற்றுடன்) அங்கு எய்தும் உயிர் த(ன்)னைக் கண்டு, (அதன்பின்) அவ்வுயிர்க்கு மேல் ஆம் ஒப்பு இல் அருள் கண்டு, சிவத்து உண்மை கண்டு, அதனாலே. அங்கு கண்டு, சிவத்து உண்மை கண்டு, அதனாலே, இங்கு உற்றது எல்லாம் பற்றி நோக்கி, தப்பினை செய்வதும் அதுவே (எனவும்) நினைப்பும் அது தானே (செய்கின்றது எனவும்) (அவ்வான்மா) தரும் உணர்வு(ம்) புசிப்பும் அது தானே ஆகும். (எனவும்) எப்பொருளும். (அவனையன்றி) அசைவு இல்லை என(வும் உணர்ந்து) அந்தப் பொருளோடு இசைவதுவே, இறைவன் மொழி சிவயோகம் என்னும்.

இதன் பொருள்

இங்கு - இறைவனோடு அத்துவிதமாய் நிற்கும் ஆன்மாவானது அந்நிலையிலே, எப்பொருள் வந்து உற்றிடினும் - மாயா காரியமான எவ்வகைப் பிரபஞ்சங்கள் வந்து தாக்கினாலும், அப்பொருளைப் பார்த்து - அவற்றினியல்பையும் அவற்றால் வரக்கடவதாய கீழ் நிலையையும் உள்ளபடியுணர்ந்து (அவ்வளவிலமையாது), அங்கு எய்தும் உயிர்தனைக் கண்டு - அப்பிரபஞ்சங்களின் வசப்பட்டு நிற்கின்ற ஆன்மாக்களின் இயல்பையும் அவை எய்தும் இடர்பாட்டையும் நன்றே உணர்ந்து, (அதன்பின்) அவ்வுயிர்க்குமேல் ஆம் ஒப்பு இல் அருள் கண்டு - அவ்வான்மாவுக்குப் பெத்தநிலையிலும் திரோதான சத்தியாய் நின்று கன்மத்தைப் புசிப்பித்துக் கழிப்பியா நின்று சுகஞ் செய்தலினாலும் (தன் மாட்டுப் பெரும் பயனீந்து வியாபித்தலினாலும் (மேன்மையுடையதாய் விளங்குகின்ற ஒப்பற்ற திருவருளிலே தான் வியாப்பியாய் அடங்கி, சிவத்து உண்மை கண்டு - அத்திருவருளே தனக்கு வடிவமாய்க் கொண்டு ஞானகுருவை அதிட்டித்து நின்ற சிவபெருமானை உள்ளபடி தரிசித்து, இங்கு உற்றது எல்லாம் - இவ்விடத்திலே வந்து தாக்குகின்ற மாயா கன்மங்களையெல்;லாம், அதனாலே பற்றி நோக்கி - அத்திருவருள் ஞானத்தைச் சேர்ந்து நின்று தரிசித்து அகற்றி, தப்பினை செய்வது அதுவே - பிறர், தனக்கு (இன்ப), துன்பஞ் செய்தலை இறைவனே செய்கின்றான் எனவும், நினைப்பும் அது தானே - தானே பிறருக்குச் செய்யும் (இன்ப), துன்பங்களையும் இறைவனே செய்கின்றான் எனவும், தரும் உணர்வு(ம்) - அங்ஙனம் வரகடவதாகிய (இன்ப) துன்ப நுகர்ச்சியையும், அது தானே ஆகும் - ஏற்றுக் கொள்பவன் அவ்விறைவனே யாவன் எனவும், எப்பொருளும் - எவ்வகைச் சட சித்துக்களும், அசைவு இல்லை என - அவ்விறைவனையின்றி இயங்கமாட்டாவெனவும் உணர்ந்து அந்தப் பொருளோடு இசைவதுவே - அவ்விறைவனோடு கூடி அவன்பணி நிற்றலையே, இறைவன் மொழி - இறைவனருளிய வேதாகமங்கள், சிவயோகம் என்னும் - சிவயோகம் என்று கூறும்.

‘அவ்வுயிர்க்குமேல் ஆம் ஒப்பு இல் அருள் ‘கண்டு என்பதற்கு’ தன்னைவியாபித்துத் தனக்கு மேலாய் விளங்குகின்ற ஒப்பற்ற திருவருளிலே தான் வியாப்பியமாய் அடங்கி எனப்பொருளுரைப்பினுமமையும்.

இதன் கருத்துரை

சிவ தரிசனஞ் செய்து ஏகனாகி நிற்கும் ஆன்மா அந்நிலையிலுந் தன்னைத் தாக்கும் பிரபஞ்சவிடயங்களினியல்பையும் அவற்றாற் பெத்தான்மாக்கள் படுந்துரையும் கண்டு, அவற்றின் தொடர்பை நீக்கி, (பெத்தம் முத்தியாய இருவேறு நிலையிலும் நன்மை செய்து நிற்கும்) மேலான திருவருளிலே வியாப்பியமாய் அடங்கி, தன்னைத்தாக்கும் கன்மத்தை அத்திருவருள் ஞானத்தாலுணர்ந்து நீக்கி, தன்னாற்பிறருக்கும் பிறராற்றனக்கும் உளவாகும் (இன்ப) துன்பங்களை இறைவனே செய்கின்றான் என்றும் அவற்றால் வரக்கடவதாயபயனை அவனே ஏற்றுக்கொள்கின்றா னென்றும் அவனையன்றிப் பசுபாசமனைத்தும் இயங்க மாட்டாவென்றும் உணர்ந்து, தன்னை இழந்து அவ்விறைவனின் அருள் வழியிலே பொருந்தி, ஞானாசாரியரின் அநுக்கிரகத்தினாலே இறைபணி நிற்றல் சிவயோகம் ஆகும்.

ஆறாஞ் செய்யுள்

சிவபோகம்

பாதகங்கள் செய்திடினுங் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினு நெறியல்லா
நெறிபயிற்றி வரினுஞ்
சாதிநெறி தப்பிடினுந் தவறுகள் வந்திடினுந்
தனக்கெனவோர் செயலற்றுத்
தானதுவாய் நிற்கி
னாதனவ னுடலுயிரா யுண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையுந்
தானாகச் செய்து
பேதமற நின்றவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப்
பேசுநெறி யிதுவே

கொண்டுகூட்டு

(இறைவன் அருள்வழிப் பட்டு இறைபணி நின்றி) தான், (அவனருளாலல்லது) தனக்கு என ஓர் செயல் அற்று, அது ஆய் நிற்கில், (அந்நிலையிலவ்வான்மாவானது) பாதகங்கள் செய்திடினும், கொலை களவு கள்ளு பயின்றிடினும், நெறி அல்லா நெறி பயிற்றி வரினும், சாதி நெறி தப்பிடினும், தவறுகள் செய்திடினும், (அவற்றால் அவ்வான்மாவினிடத்தே சேரவேண்டியதாய கன்மமுழுவதையும்) அவன் உடல் (ஆய்நிற்க) நாதன்உயர் ஆய் (நின்று) உண்டு உறங்கி நடந்து, நானாபோகங்களையும் தான் ஆக செய்து, பேதம் அறநின்று, இவனை தான் ஆக்கிவிடுவேன்@ இதுவே சிவபோகம் எனப்பேசு(ம்) நெறி (ஆகும்)

இதன் பொருள்

தான் - இறைவனருள் பற்றுக் கோடாக இறைபணிநின்ற ஆன்மாவானது, தனக்குஎன ஓர் செயல் அற்று - இறைவனருள் வழிப்பட்டல்லது தானே ஒரு செயலையும் செய்யமாட்டாததாய், அது ஆய் நிற்கில் - அவ்விறைவனே தானாய்க்கலந்து அத்துவித சம்பந்தமுற்று நின்றால், பாதகங்கள் செய்திடினும் - அந்நிலையில் அவ்வான்மா, காமம், கோபம், உலேபம் முதலிய பல்வேறு பாவங்களைச் செய்தாலும், கொலை, களவு, கள்ளு பயின்றிடினும் - கொலைசெய்தல், களவெடுத்தல், கள்குடித்தல் முதலிய பஞ்சமா பாதகங்களைச் செய்தாலும் நெறி அல்லா நெறி பயிற்றிவரினும் - நல்லொழுக்கமல்லாத தீய ஒழுக்கங்களைத் தவறாது நடத்தி வந்தாலும், சாதிநெறி தப்பிடினும் - தான்பிறந்த சாதிக்குரிய ஆசார முறைகளினின்றுந் தவறினாலும், தவறுகள் செய்திடினும் - இன்னும் (ஈண்டுக் கூறப்படாத) பல குற்றங்களைச் செய்தாலும், அவற்றால் அவ்வான்மா அனுபவிக்கவேண்டிய கன்ம பலன் முழுவதையும், அவன் உடல் ஆய் நாதன் உயிர் ஆய் - அவ்வான்மாவே உடம்பாய் நிற்க இறைவனே அதன்கண் உயிராய் நின்று. உண்டு உறங்கி நடந்து - புசித்தல் உறங்குதல் நடத்தல் முதலிய செயல்களைப் பொருந்தித் தானே ஏற்றுக்கொண்டு, நானாபோகங்களையும் தான் ஆகச்செய்து - பிராரத்தகன்மபலனாக வருகின்ற எல்லாவிதமான போகங்களையும் சிவபோகமாகிய பேரின்பமாக்கி, பேதம்; அற நின்று - பின்னர்விட்டு நீங்கி வேறுபட்டு நிற்றல் இன்றி, இவனை தான் ஆக்கிவிடுவான் - ஆன்மாவைத் தன் வியாபகத்துள் அடக்கித் தன்மயமே (சிவமயமே) ஆக்கி ஆளுவன்ன, இதுவே, பெருகு சிவபோகம் எனப் பேசுநெறி - இவ்வுண்மையே, அநுபவிக்குந்தோறும் புதிதாய் மிக்குவரும் சிவபோகம் என்று சொல்லப்படும் உயர் நிலையாகும்.

‘தவறுகள்வந்திடினும்’ என்றும் பாடம், இதற்கு, குற்றங்கள் தன்னையறியாது வந்து சேர்ந்தாலும் எனப் பொருள் கொள்க.

“சிவபோகமெனப் பேசுநெறியிதுவே” என்பதற்கு, சிவபோகமென்று சிவாகமங்கள் சொல்லும் வழி இதுவாம் எனப் பொருளுரைப்பினுமமையும்.

இதன்கருத்துரை

இறைபணி நிற்கும் ஆன்மா, தான் உடலாகவும் இறைவன் உயிராகவும் பொருந்த இறைவனே தானாய் (அவன் செயலே தன் செயலாய்) நின்று அவ்விறைவனையே விடயித்து அமைய, அவ்விறைவன் அந்நிலையில் அவ்வான்மாச் செய்கின்ற பாவங்களையும், பிரார்த்தகன்மபலன்களையும் தானே ஏற்றுக்கொண்ட எல்லாப்போகங்களையும் சிவபோகமாம் பேரின்பமாக்கியநுபவிப்பித்துத் தன்வியாப்பியத்துள் அடக்கி, அதனை என்றுஞ் சிவமயமாய நிற்கவருளுதல் சிவப்பேறாகிய சிவயோகம் ஆகும்.

உண்மைநெறிவிளக்கம் மூலமும்
உரையும் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீ உமாபதி சிவாசாரிய சுவாமிகள் திருவடி வாழ்க.

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்’

ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், யாழ்ப்பாணம்.


சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர்
இ. செல்லத்துரை அவர்கள் இயற்றிய

சைவசித்தாந்த உரை நு}ல்கள்

உண்மை விளக்கம் - மூலமும் புத்துரையும்
அகில இலங்கைச் சைவப்புலவர்சங்க வெளியீடு 1
கிடைக்குமிடம்: பரீட்சைக் காரியதரிசி, வாணியகம்
சிறுப்பிட்டி, நீர்வேலி 1-50

வினாவெண்பா - மூலமும் உரையும்
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்க வெளியீடு 2
கிடைக்குமிடம் : பரீட்சைக் காரியதரிசி, வாணியகம்,
சிறுப்பிட்டி, நீர்வேலி -50

உண்மை நெறிவிளக்கம் - மூலமும் உரையும்
அகில இலங்கைச் சைவப்புலவர்சங்க வெளியீடு 3
கிடைக்குமிடம் : பரீட்சைக்காரியதரிசி, வாணியகம்,
சிறுப்பிட்டி. நீர்வேலி. - 50

கொடிக்கவி - மூலமும் விளக்கவுரையும்
வடமாநிலச்சைவ இளைஞர் மாமன்ற வெளியீடு
கிடைக்குமிடம்:
திரு. மு. யோகராசா, கௌரவகாரியதரிசி
12ஃ2, அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம். 1-00