கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  விமானங்கள் மீண்டும் வரும்
(முதற் பரிசுக் குறுநாவல்)
 
 

நெல்லை க.பேரன்

 

விமானங்கள் மீண்டும் வரும்
(முதற் பரிசுக் குறுநாவல்)
நெல்லை க.பேரன்

என்னுரை....

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் வெள்ளைக் காரர்களுடன் வேலை செய்த பலர் இன்றும் அவர்களுடைய வேலைத்திறமைகளையும் ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடு என்பன பற்றியும் பெருமையாகப் பேசுவதைக் காண முடிகின்றது. இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை 'குவைத்' தில் உள்ள லிபெக்சிம் சர்வதேச சிமெந்துக் கொம்பனி ஒன்றில் இரண்டேகால் வருடங்கள் வேலைபார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் நேரடியாக அறிந்து கொண்டேன். சொந்த ஊரில் சாதிப்பெருமை பேசுகிறவர்கள் இங்கே வந்து செய்கின்ற வேலைகளையும் வெள்ளைக்கார அதிகாரிகளிடம் கேளாத பேச்செல்லாம் கேட்பதையும் இதன் பிறகும் ஊருக்கு வந்து பழைய குலப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பதையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பெரிய மீன் சின்னமீனை விழுங்குகின்றது. மனிதன் மனிதனை விழுங்குகின்றான். நல்ல மனங்களை நோகச் செய்யும் பான்மையும் விட்டுக் கொடுப்புக்கள் இல்லாமல் சமூக அநீதிகளுக்கு உரமூட்டும் செய்கைகளும் மலிந்து சமுதாயம் நலிவடைந்து செல்கின்றது.

குவைத்தில் நான் வாழ்ந்த காலத்தில் பல புதிய அனுபவங்கள் ஏற்பட்டன. எனது சொந்த அனுபவங்ளையும் தொகுத்து நாவல் வடிவி;ல் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ~ஈழநாடு| நிறுவனமும் யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடாத்திய இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டி அதற்கு வித்திட்டது. எனது இந்தக் குறுநாவலுக்கு முதலாவது பரிசும் கிடைத்து ஈழநாடு வார மலரிலும் இது பிரசுரமானது.

இந்தக் கதையை வாசித்த பலர் அங்கு அப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போகாதவர்கள் இல்லை. அவர்களைக் கேட்டால் உண்மை புரியும். எழுத்தாளன் தான் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் மற்றவர்களுக்குச் சொல்லாமல் மறைப்பது என்பது இலக்கிய உலகிற்கு அவன் செய்யும் துரோகமாகும். இந்நாவலுக்கு விமர்சனம் எழுதியள்ள செ.யோகராசா (கருணையோகன்) ஒரு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். மத்திய கிழக்கில் கெட்டுச் சீரழிவது அந்தோனிகளும் சில்வாக்களும் மட்டுந்தானா? ஆறுமுகங்கள் இல்லையா? என்று கேட்டுள்ளார். ஏன் இல்லை? நீங்கள் அந்தோனி என்று வாசிப்பதை ஆறுமுகம் என்றோ அல்லது அஹமது என்றோ கூட வாசிக்கலாம். நான் ஒன்றும் ~ஆறுமுகங்களுக்கு| வக்காலத்து வாங்கவில்லை. என்னோடு கூடுதலாகப் பழகிய சிலரை மட்டும் ஞாபகம் வைத்து அவர்களது பெயர்களில் சிறு மாற்றம் செய்து எழுதியள்ளேன். அவ்வளவு தான்.

ஆனால் ஒன்று. தங்களுடைய சகோதரிகளின் சுகங்களுக்காக ஒவ்வொரு குடும்பத்திலும் இளைஞர்கள் எவ்வளவு து}ரம் கஷ்டப்படுகின்றார்கள் என்பதை இந்த நாவல் ஓரளவிற்காவது உணர்த்தும். இன்று எரிகின்ற பிரச்சினைகளின் மத்தியில் எவ்வளவு கஷ்டங்களுடன் போக்குவரத்துச் செய்து எமது இளைஞர்கள் இங்கு பணம் அனுப்புகின்றார்கள். இதை ஊதாரித்தனமாகச் செலவழித்து விட்டுக் குடும்பத்தைச் சீரழிப்பவர்களும் இருக்கிறார்கள். மத்திய கிழக்கிற்குச் செல்லும் எல்லாப் பெண்களுமே கெட்டவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. சூழ்நிலைகள் பலரை மாற்றி விடுகின்றது. இந்தக் கதையைச் சுவைபட வாசித்த பலர் ஏன் திடீரென முடித்து விட்டீர்கள் என்று கேட்டாhர்கள். சினிமாவில் வருவது போல இது ஒன்றும் உண்மைக்குப் புறம்பான திடீர் முடிவல்லவே. சகோதரிகளுக்காக உழைத்த சங்கர் தனக்கு என்று உழைக்க மறுபடியும் புறப்பட்டுப் போகின்றான். அவனுடைய விமானம் மீண்டும் வரத்தான் போகின்றது. கதையும் பிறகு தொடரத்தான் போகின்றது. கடைசி வரைக்கும் எழுதிக் கொண்டிருந்தால் பிறகு முடிவுதான் ஏது?

கற்பனை உலிகில் சஞ்சரித்துக் கொண்டு காதல் கதைகளை மாத்திரம் எழுதிக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காத விடயம். நான் அன்றாடம் காணும் பொது மக்களையும் அவர்களது சமகாலப் பிரச்சினைகளையும் வாழ்க்கை முறைகளையும் எனது சக்திக்கு உட்பட்டவரை எனது படைப்புக்கள் மூலம் தெரிவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எமது இளைஞர்களின் மத்திய கிழக்கு வாழ்க்கையைப் படம் படித்துக் காட்டும் hPதியில் தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது நாவல் இதுதான் என்று பலர் எனக்குச் சொல்லி இருக்கிறார்கள். இதுபோலவே வேறு நாடுகளில் வாழக்கூடிய தமிழ் எழுத்தாளர்களும் நிச்சயமாகத் தம் அனுபவங்களை எழுத வேண்டும் என்பது என் விருப்பமாகும்.

~ஈழநாட்டில்| இக்கதை தொடராக வந்து கொண்டிருந்த போது என்னை நேரில் கண்டு பாராட்டியவர்களுக்கும் கடிதங்களை எழுதி உற்சாகப்படுத்தியவர்களுக்கும் என் நன்றி உரியது. குவைத்தில் என்னோடு வாழ்ந்த எனது எழுத்துக்களை அறிந்து கொண்ட பல நண்பர்கள் எமது அனுபவங்களை வைத்து ~கதை| எழுதுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அவர்களுடைய கரங்களுக்கும் இப்புத்தகம் கிடைக்கத்தான் போகின்றது. குவைத்தில் என்னோடு மிக அன்பாகப் பழகி ஆதரவழித்த நண்பர்கள் அனைவருக்கும் நாவலுக்குப்ப பரிசு தந்த யாழ் இலக்கிய வட்டம், ஈழநாடு ஆசிரியர் குழுவினர், குறிப்பாக ~சசிபாரதி| ஆகியோருக்கும் என்றம் எனது இலக்கிய முயற்சிகளுக்கு உற்சாகமளித்து வரும் வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஈழநாடு, ஈழமுரசு, மல்லிகை, சிரித்திரன், ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கும், அறிமுக விமர்சனம் எழுதித்தந்த செ.யோகராசா, ஈழநாடு ஓவியர் சபா, நவீன முகப்பு ஓவியத்தை வரைந்த ஓவியர் மாற்கு மற்றும் இந்நாவலை அழகுற அச்சிட்டு உதவிய கலாலய அச்சகத்தினருக்கும் என் நன்றி உரியது. எனது ~ஓரு பட்டதாரி நெசவுக்குப் போகின்றாள்| (சிறுகதைத் தொகுதி), ~வளைவுகளும் நேர்கோடுகளும்| (வீரகேசரி நாவல்) என்பனவற்றைத் தொடர்ந்து இந்தக் குறுநாவலுக்கும் நீங்கள் ஆதரவளிப்பதுடன் உங்ள் விமர்சனங்கiயும் எழுதுவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

நெல்லை. க.பேரன்
நெல்லியடி,
கரவெட்டி,
18-12-85

அறிமுக விமர்சனம்
செ.யோகராசா டீ.யு.ர்ழளெஇ டீ.phடைஇ னுip i நுனர.

ஈழத்துத் தமிழ் உலகில் கடந்த சில மாதங்களாக வித்தியாசமான சில ஆக்கங்கள் நு}லுருப் பெற்று வருவதை அவதானிக்கிறோம். ~~ஊரடங்க வாழ்வு|| (ஈழநாடு - ஆசிரியத் தலையங்கங்கள்), ~தேன்பொழுது| (கலைஞர்களின் செவ்வி), ~அடிமைகள்| (நாவல்), ~ஒளி சிறந்த நாட்டிலே| (பயண அனுபவங்கள்), என்ற வரிசையிலே இப்போது நு}லுருப் பெற்றுள்ள நெல்லை க. பேரனின் ~விமானங்கள் மீண்டும் வரும்| என்ற குறுநாவலையும் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.

~~விமானங்கள் மீண்டும் வரும்|| என்ற தலைப்பிலிருந்து இக்குறுநாவல் எது பற்றி பேசுகின்றது என்பதனை ஊகித்துக் கொள்ள முடிகின்றது. வேலை வாய்ப்பின் நிமித்தம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இக்காலகட்டத்தில் குவைத்திற்குச் சென்ற இளைஞன் ஒருவனின் பல்வேறு அனுபவங்களே இதனு}டு வெளிப்படுகின்றன. ஆனால், இது அனுபவங்களின் தொகுப்பு மட்டுன்று@ அவ்விளைஞன் குவைத்திற்குச் செல்வதற்கான அவனது குடும்ப நிர்பந்தங்களும, இங்கிருந்து செல்லும் கடிதங்கள் கூறும் புதினங்களும், இன்னும் ஆசிரியரது எழுத்தாற்றலும் சேர்ந்து இவ்வனுபவங்களை ஒரு குறுநாவலாகப் பரிணமிக்கச் செய்து விட்டன என்பதே உண்மையாகும். அத்துடன் மத்திய கிழக்கு அனுபவங்கள் உண்மை அனுபவங்களாக, அதுவும் சொந்த அனுபவங்களாகவும் வெளிப்பட்டுள்ளன. இவ்விதங்களில் ஈழத்தின் முதற் குறுநாவலென்ற சிறப்பையும் இது பெற்றுவிடுன்றது எனலாம்.

இக்குறு நாவலினு}டாக வெளிப்படுத்தப்படும் பலவும் புதியனவாகும்@ அவற்றை இங்கு எடுத்துக் காட்டுவதை விட, வாசகர் அவற்றைத் தாமே வாசித்து அறிந்து கொள்வதே பொருத்தமானது. எனவே அவை பற்றி எடுத்துரைக்காமல் அவ்வனுபவங்களிலிருந்து வாசகர் பெற்றுக் கொள்ள யாதேனும் உண்டோ எனப் பார்ப்போம்.

இவ்விதத்தில் ஒன்றை மட்டும் நோக்குவோம். தனது சகோதரிகள் மூவரையும் கரை சேர்க்கச் சங்கர் (கதாநாயகன்.) படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமன்று சீமெந்தைத் து}ளாக கப்பல்களிலிருந்து இறக்கி அவற்றைப் பைக்கற்றுக்களில் அடைக்கும் வேலையைச் செய்து வரும் சங்கர், வீட்டிலிருந்து வரும் கடிதத்தின் து}ண்டுதலால் - அடைவு நகைகளை மீட்பதும், ஊர்ப்புரோக்கர் திலகத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பதும் - ~ஓவர்ரைம்| செய்யத் தொடங்குகின்றான். ~ஓவர்ரைம்| வேலையாக கீழே கொட்டுண்ட சீமெந்தைப் பைக்கெற்றுக்களில் அள்ளிக் கொடுத்தும், கப்பல் அடித்தளத்தின் கரள்களை சுரண்டியும், கிணறு போன்ற ஹச்சுக்குள் இறங்கிக் கட்டிபட்ட சீமெந்தைக் கடப்பரினால் அடித்து நொறுக்கித் து}ளாக்கியும் கஷ்டப்பட்டு வேலை செய்தான். லீவு நாட்களில் கொம்பனி நிர்வாகத்திற்குத் தெரியாமல் கார்கழுவும் வேலையிலும் ஈடுபடுகின்றான். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த வேளையில், புவனத்திற்காக மேலும் உழைக்க வேண்டியதை உணர்கின்றான். எனவே திரும்பிச் சென்ற பின் ~பகல் வேலை முடிந்ததும் இரவில் ஹச் கிளீன் பண்ண ஆட்கள் தேவை என்று அறிந்தால் பாஜ்ஜிலேயே எங்காவது சீமெந்து பைக்கற்றுக்களின் மத்தியில் படுத்து உறங்குவான். தேவையான நேரத்தில் எழுப்பி விடும்படி இரவு எஞ்சினியரிடம் சொல்லி விட்டுப் படுப்பான். ஒரு நாள் இரவு ஒரு மணிக்குப் பாதித் து}க்கத்தில் வேலைக்குச் சென்று ஏணிப்படிகளில் ஏறும்போது கால் தடக்கி வீழ்ந்து கையை முறித்துக் கொள்கிறான். இதன் பின் அவனால் முன்னர்போல் உழைக்க முடியவில்லை. எனவே இவ்வாறெல்லாம் சங்கர் படும் கஷ்டங்கள், மத்திய கிழக்கிலிருந்து வரும் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவு செய்வோருக்கும், அங்கிருந்து உழைத்தனுப்புவது போதாது என்று குறை கூறுவோருக்கும் ஒரு படிப்பினையாக அமைய வேண்டுமன்றோ?

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்லும் பெண்களின் வாழ்க்கை முறையும் விசனிக்கத் தக்கதாகும். வருமானத்தைப் பெருக்கும் அவாவும், சுதந்திரமும், சூழலின் நிரிப்பந்தமும், ஊரிலிருக்கும் ஏனைய உறவினர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணமும் இங்கிருந்து செல்லும் பெரும்பாலான பெண்களை அங்கு முறைகேடான வாழ்வு வாழ வைக்கிறன. ~~வாழ்க்கை|| ஒழுக்கம் என்பனவற்றை இங்கு வாழ்பவர்கள் சர்வ சாதாரணமாகவே கருதுவதைக் காண முடிகின்றது. ~முருகாப்| பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களில் சிங்களத்தில் எமது கோரிக்கைகளைக் காணும்போது சங்ருக்குக் கவலையாக இருக்கும். சங்கருக்கு மட்டுமல்ல, எங்களுக்குமே இவையெல்லாம் ஆழமாகச் சிந்திக்கத் தக்கனவாகும்.

இது குறுநாவலாயினும் பல பாத்திரங்கள் - சங்கர், திலகம், புவனம், கமலம், அந்தோனி, சில்வா, சூரி, தரகர், முருகேசம்மான் முதலாக வந்து போகின்றன. ஆசிரியர் இன்னோரிடத்தில் குறிப்பிட்டதுபோல், ~சமூகத்தில் நேரடியாகப் பார்த்தும் கேட்டும் பழகியும் அனுபவாPதியாகப் உணர்ந்தும் கொண்ட மனிதர்களின் பிரதி மைகளையே பாத்திரங்களாக, இங்கும் படைத்துள்ளார். இவர்களுள் சங்கர், கமலம், அந்தோனி மூவரும் குறிப்பிடத் தக்கோராவர்.

~அம்மான், கனக்கக் கதையாதையுங்கோ... நீங்கள் சாதிக்காரர் எண்டாப்போலை அடிக்காமல் விட்டவங்களே... எத்தனை தரம் அடி, உதை வாங்கியும் உங்களுக்கு இன்னும் அந்தப் பரம்பரைப் பத்தி போகேல்லை|

கமலா மாற்றமுற்றுவரும் உயர் கல்வி பற்றிய சிந்தனைகளின் வடிவமாகவும் உள்ளாள். அதாவது ~முன்னேறிவரும் விஞ்ஞான யுகத்தில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளை விட கொம்பியூட்டர் சயன்ஸ், எக்கவுண்டன்சி போன்ற தொழில் hPதியான படிப்புகள் விரைவான பலனையும் பணம் சம்பாதிக்கும் வழிகளையும் தரும்| என்று நம்பி கம்பியூட்டர் சயன்ஸ் படித்து வருகின்றாள். அவளது காதல் விவகாரமும் புரட்சிகரமானதே. அவளது நேசிப்புக்குரிய சேகர் ஒரு சலவைத் தொழிலாளியின் மகனே. ~நல்ல சிந்தனையாளனும், உழைப்பாளியும் புரட்சிகரமான மனப்போக்குடைவனுமான| சங்கரின் உதவி கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றாள். அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. முக்கியமான சந்தர்ப்பத்தில் சங்கர் தரகர் முருகேசம்மானுக்கு இவ்வாறு கூறுவது குறிப்பிடத்தக்கது:

~என்ரை நோக்கும்போது தங்கச்சிக்கு நான் விரும்பின இடத்திலை செய்வன். சேகரின்ரை படிப்பு உங்கட பிள்ளையள் கூடப் படிக்கேல்லை. ஏன் இந்த ஊரிலையே ஒருதரும் படிக்கேல்லை. நாளைக்கு அவன் வெளிநாடு போனால் முப்பது முப்பத்தையாயிரம் எண்டு சம்பளம் வாங்குவான். பிறகு வந்து காரும் பங்களாவும் எண்டு காசை வீசி எறிஞ்சால் நீங்கள் தான் முதல் தேடிப் போவியள்...|
இவற்றை நோக்கும்போது இக்குறுநாவல் மத்திய கிழக்கு அனுபவங்களை மட்டும் வெளிப்படுத்துன்றதென்று கூறலாமோ? அவ்வாறன்று. ஒரு சமூகச் சீர்திருத்தக் குறுநாவலாகவும் விளங்குகின்றதல்லவா?

அந்தோனி! ~நாங்கள் ரிக்கெற்றுக்கு குடுக்கிற காசுக்கு இதெல்லாம் சும்மாதான் மச்சான் காசில்லை. இதெல்லாம் இலங்கையிலை வாங்கிறதெண்டால் மனம் வராது. நீயும் பாவிச்சுப்பார் சங்கர்| என்று அறிமுகப்படுத்தப்படும் பொழுதே அவன் எத்தகையவன் என்பது புரிந்து விடுகின்றது. இங்கிருந்து செல்லும் விமானத்தில் தன்னுடன் பயணஞ் செய்யும் ஒரு பெண்ணுடன் அப்போதே நெருங்கிப் பழகும் அந்தோனிக்கு மத்தி கிழக்கு வாழ்க்கை முறை சொர்க்கலோகமாக அமைந்ததில் வியப்பில்லை. அத்துடன், அங்கே சிறந்ததொரு குடிகாரனாக மாறி தான் தங்கும் காம்பில் குடிவகைகளைக் கள்ளமாகத் தயாரித்து விற்கும் நிலைக்கு உயர்ந்து விடுகின்றான். இறுதியில் கொம்பனி நிர்வாகமே சீட்டுக்கிழிந்து நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு வருகின்றது. மொத்தத்தி;ல் மத்திய கிழக்கு நாடுகளில் மனம் போனவாறு வாழும் ஆண்களின் உயிர்ச் சித்திரமே அந்தோனி என்பதில் தவறில்லை.

சுவையாகவும், இயல்பாகவும், அனாயாசமாகவும் கதை கூறும் ஆசிரியரது ஆற்றல் குறுநாவலெங்கும் இழையோடுகின்றது. இதற்கோர் எடுத்துக் காட்டு, இப்பகுதி:

~குவைத் போகவென்று மூன்று தடவைகள் ஆயத்தமாகக் கொழும்புக்கு வந்ததும் ஒவ்வொரு தடவையும் ஏஜெண்ட் ஏதாவது சாட்டுக்களைச் சொல்லிச் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினான். ஒரு தடவை விசா வரவில்லை என்றான். இன்னொரு தடவை டிக்கெட் இல்லை என்றான். இன்னொரு தடவை பிளேனில் சீற் இல்லை என்றான். எப்படியோ நாலாவது தடவை மனமிரங்கிப் பிளேன் ஏறச் செய்து விட்டான். இந்தப் பிரச்சினையால் ஒவ்வொரு தடவையும் சங்கர் வீட்டில் இருந்து புறப்படும்போது அலுவலாகக் கொழும்புக்குப் போகிறான். சிலவேளை சரிவந்தால் அப்படியே வெளிநாடு போய்விடுவேன் என்று சொல்லிக் கொண்டுதான் வருவான். முதல் தடவை கொடிகாமம் வரைக்கும் வந்து வழியனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு ஊரில் பஸ் நிலையம் வரைக்குமாவது யாரும் வருவதி;ல்லை.

இவ்வாறே, யாழ்ப்பாணத்தில் கேட்கும் வெடிச்சத்தங்களில் மினிவான்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடும் போது கமலாவைப் பாதுகாக்க வாகனங்களில் ஏற்றி வழியனுப்பும் சந்தர்ப்பங்கள், கமலா சேகரை விரும்ப வாய்ப்பளிக்கின்றதாகக் கூறப்படுவதுமாகும். இவ்வாறே ஊரிலிருந்து வரும் கடிதங்களில் இடம் பெறும் சமகால உண்மை நிகழ்ச்சிகளின் பதிவுமாகும்: ~~ஊரில் அடிக்கடி நடக்கிற பிரச்சினைகளைப் பற்றிப் ப10டகமாக எழுதிய அவள், எங்கட மண் வீட்டையும் சுத்தியுள்ள வாழை பூவரசு மரங்களையும் கிண்டிக்கிண்டி ஆயுதங்கள் ஏதும் தாட்டுக் கிடக்குதோ எண்டு பார்த்தவை எண்டும் அவன்ரை படத்தைக் கொண்டு போட்டு ஏன் வெளிநாடு போனவர் எண்டு விசாரிச்சவை எண்டும் பல புதினங்களை எழுதியிருந்தாள்.|

இனி, இக்குறுநாவலின் தலைப்பும் கவனத்தை ஈர்க்கின்றது ஓரிடத்தில் இவ்வாறு கூறப்படுகின்றது. அக்கா திலகத்திற்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் அவவுக்கு ஏதாவது பணம் அனுப்பினால் நல்லது என்றும் எழுதியிருந்தான். அடப்பாவமே... இரட்டைக் குழந்தைகள். அதுவும் பெண் குழந்தைகளா? சகோதரிகளுக்கு உழைத்துப் பிறகு மருமக்களுக்கும் உழைக்கவேண்டி வருமோ...? என்று சங்கர் பயப்படுவதில் நியாயமுண்டு@ ஏனெனில் அது உண்மையாகக் கூடியதுதான். அது பொய்யாகும் வரையும், சமூக அமைப்பு மாற்றங்காணும் வரையும் ~~விமானங்கள் மீண்டும் வரும்|| மீண்டும் மீண்டும் வரும் என்பது உண்மை தானே!

ஆயினும் இக்குறுநாவலை ஆழ்ந்து படிக்கும் போது ஒரு நியாயமான சந்தேகம் எழாமற் போகாது@ மத்திய கிழக்கு நாடுகளில் முறைகேடாக வாழும் ஆண்கள், அந்தோனிகளும் சில்வாக்களும் மட்டுமா? ஆறுமுகங்கள் இல்லையா? என்பதே அது.

எனினும் இவை எல்லாவற்றையும் விட, இன்னொரு காரணத்திற்காக நெல்லை க.பேரன் பாராட்டுக்குரியவராகின்றார்.
~~சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்||
என்று பாடியவன் பாரதி. இன்று மத்திய கிழக்கு செல்பவர் பலராயிருந்தாலும் கலைச்செல்வம் - கதைச் செல்வம் அளிப்பவர் எத்தனை பேர்? அவ்விதத்தில் ஒரு குறுநாவல் செல்வத்தை இவர் அளித்தாhர். என்பதற்காகவும் பாராட்டுக்குரியவரன்றோ!


விமானங்கள் மீண்டும் வரும்...
விமானம் தரையில் ஓடு பாதையில் மெதுவாக ஊர்ந்து பின்னர் நேராக விரைந்து உறுமிக் கொண்டே மெல்ல மெல்ல உயரக் கிளம்பியது. மூலை ஆசனத்தில் இருந்த சங்கர் ஆழமான வேலைப்பாடுகளுடனான அந்த மெல்லிய திரைச்சீலையை விலக்கி விட்டு வட்டமான கண்ணாடி ஜன்னலு}டே வெளியே எட்டிப் பார்த்தான். கட்டுநாயக்கா விமான நிலையத்தின் அருகே தென்னந்தோப்புக்குள் முள்ளு வேலிகளுக்கும் தடைகளுக்கும் அப்பால் பிரயாணிகளை வழியனுப்ப வந்தவர்கள் இப்போது சிறு பூச்சிகளைப் போலத் தெரிய ஆரம்பித்தார்கள். சாய்வாக உயரப் பறந்த விமானம் இப்போது நேராக மிதக்கத் தொடங்கியது.

சங்கருக்கு விமானப் பயணம் புது அனுபவம். சிவப்பு விளக்குகளினு}டே வந்த சமிக்ஞைகளி;ன் படி இடுப்புப் பெல்டை இறுக்கிப் பூட்டியிருந்த அவன் இப்போது அதை அவிழ்க்கத் தெரியாமல் திண்டாடுவதைக் கண்ட பணிப்பெண் அவனது உதவிக்கு வந்தாள். நீல நிற அமெரிக்கன் ஜோர்ஜட் சாறியில் கரைகளுக்கு அழகான கட்டம் போட்ட ப10 வேலைப்பாடுகளுடன் அப்பெண் தேவலோகத்து அழகிகளைப் போன்று அவனுக்குக் காட்சி அழித்தாள். தேவலோகத்து அழகிகளை அவன் நேரில் கண்டிராவிட்டாலும் கதைகளிலும், சினிமாக்களிலும் நிறை கண்டிருக்கிறான். அவளைப் போன்று இன்னும் ஐந்தாறு பெண்களும் மூன்று ஆண்களும் விமானத்திற்குள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருந்தனர்.

மூன்று பணிப்பெண்கள் சுமார் இருபதடி இடைவெளி து}ரத்தில் நேராக நின்று கொண்டு விபத்து நேர்ந்தால் இருக்கையின் அடியில் உள்ள உயிர்காப்புச் சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்கிக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் ஒரெஞ் ஜுஸ் எல்லோருக்கும் கொடுத்தார்கள். அத்தோடு எல்லோருடைய இருக்கைகளின் முன்பாக உள்ள தற்காலிக மேசைகளில் அழகாக அச்சிட்ட கார்ட் ஒன்றையும் வைத்தார்கள். ஒவ்வொரு இருக்கைகளின் பின்னாலும் மடித்து விரிக்கக் கூடிய சிறு தட்டுக்கள் உள்ளன. சங்கர் ஜி.சி.ஈ அட்வான்ஸ் லெவல் வரைக்கும் படித்திருந்தான். ஆங்கிலம் நன்றாக வாசிப்பான். விமானத்தில் வழங்கப்படும் மேல்நாட்டு; குடிவகைகளின் பெயர்கள்தான் அங்கு காணப்பட்டன. சங்கரோடு குவைத்துக்குப் பயணமான மற்ற யாழ்ப்பாணத்து நண்பர்களைப் பார்த்தான். சிலர் பணிப் பெண்களிடம் பியர், விஸ்கி என்ற ஓடர் செய்து வாங்கிக் குடித்தார்கள். சங்கர் ஊரில் இந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகாதவன். அருகில் இருந்த அந்தோனி உற்சாகப்படுத்தினான்.

~~ நாங்கள் ரிக்கற்றுக்கு குடுக்கிற காசுக்கு இதெல்லாம் சும்மாதான் மச்சான் காசில்லை இதெல்லாம் இலங்கையில் வாங்கிறதெண்டால் மனம் வராது. நீயும் பாவிச்சுப்பார் சங்கர்... ...|| ~ அந்தோனி! தயவு செய்து என்னைக் குழப்பாதை ஒரேஞ் ஜுஸ் போதும் நீ வேணுமெண்டால் வாங்கிக் குடி!||

அந்தோனி அவனைக் கட்டாயப் படுத்தவில்லை. அப்சரஸ் போன்ற அழகான பணிப்பெண் ஒருத்தி அன்னம் போல அவனருகே நடை பயின்று வந்து பூவேலைப்பாடுகள் நிறைந்த மேல் நாட்டுக் கிளாசில் அவனுக்கு விஸ்கி ஊற்றிக் கொடுத்தாள். கூடவே சிறிது ஐஸ் கட்டியையும் போட்டுக் கலக்கிக் கொடுத்தாள்.

~ஓ மை கோட்... இந்த ஒரு கட்டத்திற்கு மட்டும் பத்தாயிரம் குடுக்கலாம் மச்சான். ஏஜன்சிக்கு இருபத்திரண்டு கட்டினாலும் பரவாயில்லை.| அந்தோனி கொஞ்சம் விஸ்கி உள்ளே ஏறியதும் பிதற்ற ஆரம்பித்தான்.

சங்கருக்கு அவனைக் காண எரிச்சலாக இருந்தது. இருபத்திரண்டாம் கொடுத்ததை எவ்வளவு சாதாரணமாகச் சொல்லி விட்டான். தன்னுடைய மூன்று பெண் சகோதரங்களிலும் இருந்த நகைகளை அடைவு வைத்தல்லவா அவன் காசு புரட்டினான். உரிலே கமஞ் செய்வதற்கக் காணியில்லை என்பதால் தகப்பனாருடன் விஸ்வமடுக் குளத்தில் குத்தகைக்குக் காணி எடுத்துக் கமஞ் செய்யப் போனதும் மழை தண்ணி இல்லாமல் மிளகாய்ச் செடிகள் காய்ந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டதும் வயதான தகப்பனாரைக் கமத்திற்குக் காவல் வைத்து விட்டு ஊருக்கு வந்த போது ஒருநாள் இரவு அவனை கொட்டிலுக்கு யானை வந்து அவரை அடித்துக் கொன்றதும் எல்லா இழப்புக்களையும் ஈடுசெய்வதற்காக அவன் வெளிநாடு செல்வதற்காக இரண்டு வருஷங்களாக நாயாக அலைந்ததும் ஆரம்பத்தில் கொழும்பில் ஒரு ஏஜன்சியிடம் ஐயாயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஏமாந்ததும் பிறகு இப்ப இருபத்திரண்டாயிரம் கொடுத்து ஒருவாறு பிளேன் ஏறியதும் எல்லாம் ஒவ்வொன்றாக அவன் மனத்திரையில் வந்து போயின. குவைத் போகவென்று மூன்று தடவைகள் ஆயத்தமாகக் கொழும்புக்கு வந்தும் ஒவ்வொரு தடவையும் ஏஜன்ட் ஏதாவது சாட்டுக்களைச் சொல்லிச் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினான். ஒரு தடவை ~விசா| வரவில்லை என்றான். இன்னொரு தடவை பிளேனில் சீற் இல்லை என்றான். எப்படியோ நாலாவது தடவை மனமிரங்கிப் பிளேன் ஏறச் செய்து விட்டான். இந்தப் பிரச்சினைகளால் ஒவ்வொரு தடவையும் சங்கர் வீட்டில் இருந்து புறப்படும் பொழுது அலுவலாகக் கொழும்புக்குப் போகிறேன். சிலவேளை சரிவந்தால் அப்படியே வெளிநாடு போய்விடுவேன் என்று சொல்லித் தான் வருவான். முதல் தடவை கொடிகாமம் வரைக்கும் வந்த அவனது தாயாரும் மூன்று சகோதரிகளும் வந்து வழியனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு ஊரில் பஸ் நிலையம் வரைக்கமாவது யாரும் வந்ததில்லை.

அந்தோனிக்குக் கொழும்பில் வேலை பார்க்கும் அவனது மச்சான் பயணமனுப்ப வந்திருத்திருந்தான். அந்தோனி இப்போது விஸ்கியையும் ஜின்னையும் ஒன்றாக ஊற்றிக் குடித்து விட்டு அரை மயக்க நிலையில் இருக்கையில் சாய்ந்திருந்தான். சிறு வண்டிலை நகர்த்திக் கொண்டே இரண்டு பணிப்பெண்கள் பிளாஸ்ரிக் தட்டுக்களில் உணவு பரிமாறிக் கொண்டு வந்தார்கள். கொஞ்சம் சோறும், இறைச்சி, முட்டை, இலைக்கறிகள், தக்காளிப்பழம் என்பன இருந்தன. புறு}ட் சாலட்டும் வைத்தார்கள். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கரண்டிகள், மிளகுத்து}ளும், உப்பும் பக்கற்றுக்களில் வைத்தார்கள். கை, முகம் துடைப்பதற்கு ரிஷ்யூவினால் ஆன ஈரப்பதமையான பேப்பர் ஒன்றையும் மடித்துத் தந்தார்கள். ஆகா! எல்லாவற்றையும் எவ்வளவு அழகாகவும், சுத்தமாவும் செய்கிறார்கள். இதுவல்லவோ உபசரிக்கும் பண்பு என்று சங்கர் மனதுக்குள்ளே வியந்தான்.

உணவு சூடாகவும், சுவையாகவும் போதுமானதாகவும் இருந்தது. ~சாப்பிடு மச்சான்| குடுத்த காசுக்கு நல்லாச் சாப்பிடு. இப்படிச் சாப்பாட்டையும், இப்படிக் குடியையும் நாங்கள் கண்டிருப்பமே.... வீட்டை சம்பலும் சோறும் திண்டிட்டு இஞ்சை வெள்ளைக்காரரின்ரை சாப்பாடு..... ம்.... சாப்பிடு| அந்தோனிதான் பிதற்றினான். கரண்டிகளை வைத்து விட்டு அவன் கையாலேயே எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

விமானத்தின் ஆண்களை விடப் பெண்களே அதிகமாக இருந்தார்கள். எல்லாரும் பணிப்பெண்களாகச் செல்பவர்கள். பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை பெண்கள் இருந்தார்கள். கணவன் மாருடன் கோபித்துக் கொண்டு வெளிநாடு செல்பவர்களும், வாழத் தெரியாமல் வாழ்ந்து விட்டுப் பணத்தையும் அழித்து விட்டுப் பிறகும் பணந்தேடிப் புறப்படுபவர்களும், பல்வேறு நோக்கங்களுக்காக விரும்பியே வந்தவர்களும் பயணம் செய்தனர். எல்லாரும் ஒரே குடும்பத்தினர் போன்று அங்கும் இங்கும் நடந்து தெரிந்தவர்களுடன் நண்பர்களுடனும் அளவளாவினர். ஏற்கனவே அறிமுகமில்லாதவர்களும் சில பெண்களின் அருகே சென்று கதைத்து அறிமுகமாகிக் கொண்டனர். சிலர் விலாசங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

2
அந்தோனிக்கு அருகே இருந்த ஒரு பெண் அவனுடன் சரளமாகக் கதைத்துக் கொண்டு வந்தாள். இருக்கையின் கைப்பிடியோடு பொருத்தப்பட்டிருந்த வானொலி கேட்கும் கருவியின் வெள்ளை வயர்களையும் இயர்போனையும் அவளுடைய காதுகளில் பொருத்தி அவள் சிங்களம் அல்லது ஆங்கிலப் பாடல்களையும் கேட்பதற்கு உதவி செய்தான். காதுகளில் வைத்துக் கேட்கும் அந்த வயர்களைக் குவியாலாக சங்கர் கொழும்பு நடைபாதைக் கடையில் பார்த்திருக்கிறான். விமானங்களில் பாவித்துக் கழிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கோப்பைகள், தட்டுக்கள், வயர்கள் என்பன நடைபாதைக் கடைகளில் விலைபோவதை அடிக்கடி காணமுடியும்.

சிறிது நேரத்தில் விமானத்தின் உள்ளே நடுவில் எல்லோரும் பார்க்கக் கூடியவாறு சிறிய திரை ஒன்ற இறக்கப்பட்டது. புறு}ஸ்லியின் சண்டைப்படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. இந்திரலோகம் போல மின்னிக் கொண்டிருந்த சிறிய பெரிய விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு மங்கலாக ஓரிரண்டு பல்புகள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. சங்கர் அந்தோனியைத் திரும்பிப் பார்த்தான். அவன் அருகிலிருந்த பெண்ணின் தோள்மீது சாய்ந்து என்னவோ செய்து கொண்டிருப்பது போல் தெரிந்தது.

மெதுவாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். தாய் நாட்டோடு சேர்த்துக் தன்மானத்தையும் விட்டு விட்டுப் பிரயாணம் செய்யும் இப்படியான பெண்களை நினைத்தால் அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
அவன் கண்களை மூடிக்கொண்டே வீட்டு நினைவுகளில் ஆழ்ந்து விட்டான்.

மூத்தக்கா திலகம் இருபத்தொன்பது வயதாகியும் இன்னும் மணமுடிக்காமல் இருக்கிறாள். உர் பாடசாலையிலே ஜி.சி.ஈ வரை படித்த அவள் தகப்பனார் இறந்த பிறகு பாPட்சை எடுக்காமலே வீட்டு வேலைகளின் பாரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறாள். தாயாருடன் சேர்ந்து இருவருமாகப் பலகாரம் செய்து கடைகளுக்குக் கொடுத்து வருகிறார்கள். அவனுக்கு இளையவளான புவனம் பக்கத்து}ரில் தொழில் திணைக்களம் நடத்தும் தையல் வகுப்பிற்குப் போய் வருகிறாள். கடைக்குட்டி கமலா இப்ப எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். தான் நன்றாகப் படித்து ஒரு டாக்டராக வந்து குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்று அவள் அடிக்கடி சொல்லுவாள். குவைத் கம்பனியில் மாதம் நாலாயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும் என்று ஏஜன்ட் சொன்னான். அப்படிக் கிடைத்தால் அவனுக்குக் கடன் வாங்கிக் குடுத்த பணத்தையும் வட்டியையும் உழைக்க முதல் ஆறு மாதங்கள செலவாகும். அதற்குக் பிறகு தான் வீட்டிற்காக உழைக்க முடியும். கூடிய விரைவில் புவனத்திற்கு ஒரு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் அவள் அதை வச்சு நாலு காசு சம்பாதிச்சுப் போடுவாள். ஐயா விட்டிட்டுப் போன இந்த மண் வீட்டை இடிச்சுத்தான் மூன்று குமருக்கும் வீடு கட்டிக் குடுக்க வேணும்.

எத்தனையோ முதலாளிமார் ஆறுலட்சம் ஏழுலட்சம் என்று பணத்தை வீசிப் பங்களாக்களை கட்டுகின்றார்கள். எங்களைப் போல வறியதுகளுக்கு ஒரு சின்ன வீடு தன்னும் கட்ட வழியில்லாமல் இருக்கே ... எல்லாரும் இருக்க வீடும் எல்லாருக்கும் வேலையும் வயிறு நிறையச் சாப்பாடும் எப்பதான் கிடைக்கப் போகுதோ என்று சங்கர் மனதுள் அங்கலாய்த்தான்.

எல்லாரும் வெளிநாட்டு உழைப்பைத் தேடிக் கொண்டதால் ஊரில் காணிகளின் விலை எக்கச் சக்கமாக ஏறிவிட்டதை அவனும் உணர்ந்தான். கேட்பாரற்றுக் கிடந்த மலவெட்டை, வடலிக்காணிகளுக்கும், உப்புத் தரவையளுக்கும் திடீரென மார்க்கட் வந்து விட்டது.

நையீரியாவில் பலகாலம் உழைத்து விட்டு ஊருக்கு வந்த டாக்டா ஒருவர் தங்களுடைய ஒன்றரைப் பரப்புக் காணியையும் இரண்டு லட்சம் தருவதாகச் சொல்லிக் கேட்டபோது அதை விற்று விட்டு விஸ்வமடுவில் போய் குடியேறினால் என்ன என்று தாயார் கேட்டதற்கு அவன் பதில் ஒன்றும் சொல்லாமலேயே வந்து விட்டான். தகப்பனும் தனியாகக் காட்டுப் பிரதேசத்தில் குடியமர்த்த அவனுக்கு விருப்பமில்லை. அதுவும் தகப்பனை யானை அடித்துக் கொன்ற பயம் இன்னும் அவனை விட்டு நீங்கவில்லை. எல்லாரையும் போலத் தானும் உழைத்துப் பிறந்த ஊரிலேயே வீடுகட்டிக் கொடுத்து தன் மூன்று சகோதரிகளையும் வாழவைப்பேன் என்ற வைராக்கியத்துடன் அவன் கிளம்பி விட்டான்.

~அபுதாபி| எயார்போட்டில் சுமார் இருபது நிமிடங்கள் தரித்த விமானம் மறுபடியும் உயரக் கிளம்பி மிதக்க ஆரம்பித்தது. பாலைவனப் பிரதேசமும் பள்ளத்தாக்குகளும் சங்கருக்குப் புதிய காட்சிகளாக இருந்தன. இன்னும் அரை மணித்தியாலத்தில் குவைத் வந்து விடும் என்று அறிவிப்புச் செய்தார்கள்.

பெல்டுக்களை இறுக்கிக் கட்டினோம். பிற்பகல் இரண்டு மணிக்கு குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் மெதுவாக ஓடி நிற்கும் வரைக்கும் அவிழ்க்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

விமானத்தில் அருகிலேயே பெரிய பஸ் ஒன்றைக் கொண்டு வந்து எல்லோரையும் ஏற்றினார்கள். எல்லோரும் விமான நிலையத்தின் கட்டிடத்திற்குள்ளே நுழைந்தோம். தலையில் வெள்ளைப் படுதாவும் அதைச் சுற்றிக் கறுப்பு றப்பர் போன்ற வளையமும் அணிந்த அராபியர்களே அங்கு பணிபுரிந்தார்கள். ஒவ்வொரு இளநீல நிற யூனிபோம் அணிந்திருந்தார்கள். ஒவ்வொரு பொலிஸாரின் இடுப்பிலும் றிவோல்வர் தொங்கியது.

அவர்களை குவைத் நாட்டினுள் அனுமதிப்பதற்கான விசாக்களின் பிரதிகளை கம்பனி ஏஜண்டுகள் ஏற்கனவே விமான நிலையத்திற்கு அனுப்பியிருந்ததால் சங்கர் விரைவில் தன் நண்பர்களுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறக் கூடியதாக இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் ஆங்கிலம் தெரியாதவர்கள.; மிகச் சிலருக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும். அராபிய மொழியிலேயே அவர்கள் கதைத்தார்கள்.

பெயர்களை வாசிக்கக் கஷ்டப்பட்ட அதிகாரி ஒருவர் விசாப்பத்திரங்களில் இணைத்திருந்த புகைப்படங்களை வைத்து அடையாளங் காட்டியே பிரயாணிகளை வரிசையாக வெளியேற அனுமதித்தார். சுங்கத் திணை;க்கள உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு பொதிகளையும் பிரித்துப் பார்த்தார்கள். சங்கருடைய சூட்கேசினுள் சில உடுப்புக்களும் அவனது நண்பன் சூரிக்கு அவனது தாயார் தந்துவிட்ட சில எண்ணெய்ப் பலகாரங்களும், புளுக்கொடியல், து}ள், ஊறுகாய் என்பனவும் பொலித்தீன் பையினால் அடைகப்பட்டு வைக்கப்படிருந்தன. சங்கர் கடதாசிப் பெட்டிக்குள் கொண்டு வந்த நல்லெண்ணெய்ப் போத்தலைத் துருவித் துருவி ஆராய்ந்தார்கள். ஒரு அதிகாரி மணந்து பார்த்தார். குவைத்தில் குடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் யாராவது மதுவகை கடத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சங்கர் கேள்விப் பட்டிருந்தான்.

அருகில் சென்றதும் தானாகவே திறக்கும் கதவுகளையும் தாண்டி அனைவரும் வெளியே வந்தார்கள். அந்தோனியின் அருகே சல்லாபமிட்டுக் கொண்டு வந்த பெண்ணும் அவனிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்;டு போய்விட்டாள். விமான நிலையத்தில் பல அராபிய எஜமானர்கள் தமக்கு வரவேண்டிய பணிப்பெண்களின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு காவலிருப்பார்கள். ஆளை அடையாளம் கண்டதும் கூட்டிக் கொண்டு போவார்கள். சில வேளைகளில் எஜமானர்களின் சப் ஏஜண்டுகள் அல்லது றைவர்மார் வந்து அடையாளம் கண்டு கூட்டிக் கொண்டு போவார்கள்.

சங்கருக்கு ஆங்கிலம் தெரிந்தபடியால் விமானத்திற்குள் வழங்கப்பட்ட பிரயாணப் பத்திரங்களை நிரப்புவதற்காக பணிப்பெண்கள் அவனைச் சுற்றி முற்றுகையிட்டு;க் கொண்டிருப்பதையும் குவைத் விமா நிலையத்தினுள் அவனுடைய உதவியைப் பெற்று நிரப்ப வேண்டிய பத்திரங்களை நிரப்பியும் தொலைபேசியில் கதைக்க வேண்டிய தங்களுடைய எஜமானர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்தும் விஷயங்களைப் பெறுவதற்காகச் சில பெண்கள் அவனோடு உரசிக் கொண்டும், செல்லமாகச் சிரித்துக் கொண்டும், சிமிட்டிக் கொண்டும் நடந்து கொண்ட விதங்களை நினைத்தால்..... அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

இரும்பையே உருக்குமாப்போல் வெளியே தகித்துக் கொண்டிருந்தது. காற்றுப்பட்டபோது அனல் வெக்கையைப் போன்று உடம்பு கொதித்தது. சங்கருக்கு நினைக்கவே பயமாயிருந்தது. இரண்டு வருடங்களை இந்தப் பாலைவனத்தில் எப்படிக் கழிக்கப் போகிறோம் என்று பயந்தான். இந்த வெக்கையைவிட விஸ்வமடுக் குளக்கமத்தின் வெக்கை பரவாயில்லை என்று நினைத்தான்.

அந்தோனி பொலிகண்டியில் கரவலை போட்டும் வள்ளத்தில் சென்றும் மீன் பிடிப்பவன். அவன் ஒரு கடல் மீன். வெய்யில் குடித்துக் கறுத்துப் போன அவனது கரிய மேனிக்குக் குவைத் வெய்யில் அதிகம் உறைத்ததாகத் தெரியவில்லை.அவர்களை வேலைக்கு அழைத்த கொம்பனியிலிருந்து ஒரு பச்சை வானம் இன்னொரு பஸ் வண்டியும் வந்திருந்தன. இரண்டு வாகனங்களை அராபியர்களே ஓட்டினார்கள். கொம்பனியின் நிர்வாகச் செயலாளர் வந்திருந்தார். அவரோடு இரண்டு ஜேர்மனியர்களும் ஒரு இந்தியரும் வந்திருந்தனர். இந்தியர் உருது;காரர். நன்றாக ஆங்கிலம் பேசினார். ஜேர்மனியர்களும் நன்றாக ஆங்கிலம் பேசினார்கள். நிர்வாகச் செயலாளர் சங்கருடைய பாஸ்போட்டையும் அவனோடு வந்திருந்த மற்ற இலங்கை வாலிபர்களுடைய பாஸ்போட்டுக்களையும் வாங்கிக் கொண்டார். இனிமேல் அவர்கள் விடுமுறையில் திரும்பிச் செல்லும்போது தான் பாஸ்போட்டுக்களை திருப்பிக் கொடுப்பார்களாம். அதுவரை கொம்பனிச் சட்டதிட்டங்களுக்கு அமைந்து நடக்க வேண்டும். தகராறு செய்தால் பொலிசாரின் உதவியுடன் திரும்பவும் இலங்கைக்கே அனுப்பி விடுவார்களாம். பாரது}ரமான குற்றங்களென்றால் குவைத்தில் சிறையும் வைத்து விடுவார்கள்.

அபுகலிகா என்ற இடத்தில் காம்ப் கட்டியிருந்தார்கள். சுமார் இருநு}று தொழிலாளர்களi அங்கு குடீயமர்த்தினார்கள். கீழேயும் மேல்மாடியிலுமாகச் சுமார் இருபத்தைந்து அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஆறுபேர் வீதம் தங்க வைத்தார்கள் கீழேயும் மேலேயுமாகப் பொருத்தப்பட்ட இரட்டை ஸ்பிரிங் கட்டில்கள், சியெஸ்ரா மெத்தைகள், தலையணை, பெட்சீட், ரவல், சோப், சலவை செய்யும் ரைட் பவுடர் எல்லாம் கொடுத்தார்கள். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி எயார்கண்டிசன் பொருத்தப்பட்டடிருந்தது. வெளியே பிரயாணம் செய்து வெக்கையில் வாடிப் போன சங்கருக்குக் குளுகுளுவென்ற எயார்கண்டிசன் இதமாக இருந்தது. வெளிநாட்டுக் கொம்பனிகளைப் பற்றித்தான் கேள்ளிப்பட்டவற்றை மனத்தில் வைத்துப் பயந்த காரணத்தால் வீட்டில் இருந்து தலையணியும் பெட்சீட்டும் கொண்டு வந்த சங்கருக்கு இங்கு கொம்பனியில் வழங்கப்பட்ட வரவேற்பு மிகவும் வியப்பாக இருந்தது.

நாளடைவில் எல்லாக் கொம்பனிகளிலும் இப்படி இல்லை என்பதைத் தெரிந்து கொண்டான்.

~~இப்படி எயார் கண்டிசன் று}மையும், மெத்தையையும் உன்ரை வாழ்க்கையில் கண்டிருப்பியாடா|| என்று அந்தோனி அடிக்கடி கேட்டுக் கொள்வான்.

காம்பில் கீழே டைனிங்ஹோலும் ரி.வி.று}மும், பாத்று}ம்களும் கட்டப்பட்டிருந்தன. மலகூடமும் பாத்று}மும் ஒன்றாகவே கட்டியிருந்தார்கள். சங்கர் அலுப்புத்தீரக் குளிப்பதற்குச் சென்றான். மேலே தகர டாங்கிகளில் சேகரித்த தண்ணீர் வெய்யில் சூட்டில் சூடேறித்தான் இப்படிக் கொதித்தது. அனேகமானவர்கள் இரவில் குளிப்பை வைத்துக் கொண்டார்கள். சிலர் பெரிய வாளிகளில் தண்ணீரை நிரப்பி விட்டுச் சூடு ஆறிய பிறகு குளித்தார்கள்.

குவைத்தில் எல்லா வீடுகளின் மேலும் தண்ணீhத்தாங்கிகள் கட்டப்பட்டிருக்கும். தினமும் பவுசர்களில் தண்ணீர் கொண்டு வந்து ~பம்ப்| செய்வார்கள். ஒரு பவுசர் தண்ணீர் இலங்கைக் காசில் சுமார் நானு}ற்றைம்பது அல்லது ஐநு}று ரூபாய் வரும். காம்பின் கூரைக்கு மேல் மூன்று அலுமினியத் தண்ணீhத் தாங்கிகள் இருந்தன.

மறுநாளே வேலைத்தளத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். வெளிநாடுகளில் இருந்து து}ள் சீமெந்தை கப்பல் கப்பலாக வாங்கி அதைப் பக்கற்றுக்களில் அடைத்து ஈராக்கிற்கு விற்பனை செய்வதுதான் அந்தக் கம்பனியின் முக்கிய வியாபாரமாக இருந்தது. ஈரான் - ஈராக் யுத்தத்தினால் ஈராக்கின் இடிந்து போன கட்டிடங்களைச் சீர்படுத்தவும், புதிய வீதிகளை அமைக்கவும் அதிகமான சீமெந்து தேவைப்பட்டது. இதன் பெரும் பகுதியை வழங்கும் குத்தகை ஒப்பந்தம் சங்கர் தொழிலாளியாக வேலை செய்த அக்கம்பனிக்குக் கிடைத்தது. அந்தோனி கப்பல் தள உதவியாளராகச் ( டெக்ஹாண்ட) சேர்ந்திருந்தான். சங்கருக்கு எண்பது அமெரிக்க டாலர்களும் அந்தோனிக்கு நு}று அமெரிக்க டொலர்களும் சம்பளமாகக் கிடைத்தன். சங்கர் இரவு பகலாக ஓவர் ரைம் செய்து சுமார் நு}ற்றைம்பது டாலர்களை ( ஒரு டாலர் இருபத்தாறு ரூபாய் மட்டில்) உழைத்தான். சில மாதங்களில் ஓவர்ரைம் கிடைக்காது.

குவைத்தின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ~சுஹைபா| துறைமுகத்திலேயே சங்கரும் நண்பர்களும் வேலை செய்ய வேண்டிய தொழிற்சாலை மிதந்து கொண்டிருந்தது. ஆம் அது ஒரு கப்பல். ஆங்கிலத்தில் ~பாஜ்| என்று சொல்வார்கள். சுமார் நு}ற்றைம்பது அடி நீளமும் நாற்பத்தைந்து அடி அகலமும் காண்ட அக்கப்பலில் என்ஜின்று}ம், ஸ்ரோர் ரூம், மனேஜரின் ஒப்பீஸ் ( பாஜ் கப்டனை மனேஜர் என்பார்கள்) றேடியோ ரூமும் கப்டனின் ஒப்பீஸ{ம் பைக்கற் செய்யும் மெஷின்கள் உள்ள பகுதி, தொழிலாளர் கன்hPன், ஒப்பீஸரின் மெஸ் என்று பல பகுதிகள் இருந்தன. சீமெந்துத் து}ளை இருப்பில் வைக்கும் நான்கு பெரிய கிடங்குகள் ( ஹஜ் என்பார்கள்) இருந்தன். இக்கிடங்குகளுக்குள் சீமெந்தை ஹைட்ரோலிக் பவரினால் தானே திறந்து மூடும் இரும்பு வாளிகளைக் து}க்கியும் அங்கும் இங்கும் ஆட்டியும் வேலை செய்யும் நான்கு விஞ்சுகள் ( கப்பிகள்) இருந்தன. இந்தக் கப்பிகளை இயக்குவதற்காக இலங்கையில் துறைமுகங்களில் வேலை செய்த பதினான்கு விஞ்ச் ஒப்பரேட்டர்களும் வந்திருந்தார்கள். இவர்கள் ஏற்கனவே ஈராக்கில் வேலை செய்தவர்கள். இவர்களுக்கு முன்னு}று டொலர் தொடக்கம் முன்னு}ற்றி முப்பதுவரை சம்பளமாக வழங்கப்பட்டது.

சங்கர் அங்கு சேர்ந்த சில தினங்களுக்குள்ளேயே பல விடயங்களை அறிந்து கொண்டான். ஆங்கிலம் நன்கு பேசத் தெரிந்ததால் வெள்ளைக் கார மனேஜரின் நன்மதிப்பைப் பெற்றுக் காண்டு விரைவில் அவருடைய ~~மெஸ்போய்|| ஆக மாறி விட்டான். மனேஜரின் கிளார்க் ஆக ஒரு யாழ்ப்பாணத் தமிழரே வந்திருந்தார். இவர் அரசாங்க திணைக்களம் ஒன்றில் இரண்டு வருடங்கள் சம்பளமற்ற விடுமுறை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். ஆங்கிலத்தில் கடிதங்களை ரைப் செய்யும் மனேஜருக்கு உதவியாக எழுத்து வேலைகளைக் கவனிப்பதும் வயர்சில் கதைத்துக் தகவல்களைச் சேகரிப்பதும் கொடுப்பதும் இவரது கடமைகளாக இருந்தன. சங்கரின் பொறுப்புணர்வும் குடும்பக் கஷ்டங்களும் அமைதியான நடவடிக்கைகளும் கிளாக்கரை மிகவம் கவர்ந்திருந்தன. இருவரும் நேரம் கிடைக்கும் போது தமது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கிளாhக்;கருக்கு நு}று டொலர்களே வழங்கப்பட்டது. ஓவர் ரைமுடன் சேர்ந்து நு}ற்றைம்பது அல்லது நு}ற்றியெழுபது டொலர்களை உழைத்தார். சாப்பாடு தங்குமிட வசதிகளை கொம்பனியே கவனித்துக் கொண்டதால் பரவாயில்லாமல் இருந்தது.
இலங்கை எஞ்சினியர்களும், வெள்ளைக்கார எஞசினியர்களும் கிரேக்க கப்டன் ஒருவரும் அக்கப்பலில் வேலை செய்தனர். இலங்கை எஞ்சினியர்கள் அன்பாக வேலை வாங்குவார்கள். ஒரு சிலர் தொழிலாளர்களுடன் கண்டிப்பாக நடந்து கொண்டாலும் அவர்களுடைய சுகதுக்கங்களில் மிகவும் அக்கறையோடு கலந்து கொள்வார்கள். முதலாளி லெபனானைச் சேர்ந்த அராபியராக இருந்தபடியால் இலங்கைத் தொழிலாளர்களைக் கொண்டு வாங்குவதற்காக வெள்ளைக்காரர்களை எஞ்சினியர்களாக வைத்து நல்ல சம்பளம் கொடுத்தார். ஒரு தடித்த எஞ்சினியர் மட்டும் சற்றுக் கண்டபடி ஏசியும் அதட்டியும் வெருட்டியும் நடந்து கொள்வார். சங்கருக்கு இவரைக் கண்டாலே பயந்தான் வரும். எத்தனை தடவை ~hP| ஊற்றிக் கொடுத்தாலும் ஏதாவது ஒரு குறை கண்டு பிடிப்பார். வெயிலில் களைத்து வேலை கன்hPனில் இருந்து தேனீர் குடிப்பதைக் கண்டால் அவருக்குப் பொறுக்காது. உடனே ~வட் ஆர் யூ ரூயிங் | என்று கேட்டுக் கொண்டே மேய்ப்பவர் போல வந்து நிற்பார். தேனீர் கலந்த பாத்திரத்தை அப்படியே கடலினுள் து}க்கிக் கவிழ்த்து ஊற்றிய சந்தர்ப்பங்களும் உண்டு. நாடுகளை அடக்கியாண்ட ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளின் எச்ச சொச்சங்களின் சின்னமாகவே இந்தப் பருத்த வெள்ளைக்காரரைப் பற்றிச் சங்கர் நினைத்தான். அந்தோனி அவரை வேண்டுமென்றே தமிழில் து}ஷணத்தால் ஏசுவான். அவருக்குத் தமிழ் தெரியாததால் தப்பித்தான். இல்லாவிடில் அன்றைக்கே மனேஜரின் ரிப்போர்ட் பண்ணி ரிக்கற்றை வாங்கிக் கொடுத்திருப்பான்.

குவைத்திற்கு வந்து இரண்டு வாரங்களாக பாகீல் நகரத்தில் உள்ள இந்திய, கேரள முதலாளிகளின் உணவுக் கடைகளிலேயே உணவுக்குக் கூட்டிச் சென்றார்கள். சாப்பிட ஆரம்பிக் முதலிலேயே கிரஷ் குடிப்பார்கள். பின்பு சப்பாத்தி, முட்டை, கோழி, இறைச்சி என்று நன்றாகக் கேட்டுச் சாப்பிடுவார்கள். இப்போதைய விலைவாசியில் ஊரில், கடைகளில் இப்படிச் சாப்பிடுவதென்றால் ஒரு ஆளுக்கு வேளைக்கு நு}ற்றைம்பது ரூபாய் முடியும். நாளடைவில் பாகீலில் உள்ள கேரளத்து முதலாளியையே காம்பில் உள்ள கன்hPனை நடத்தும்படி குத்தகை பேசிக் கொடுத்து விட்டார்கள். இதனால் மத்தியானத்தில் சோறும், இரவில் சப்பாத்தி அல்லது பாணும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் தோசையும் கிடைத்தன. தொடர்ந்து ஒரே வகையான சாப்பாடுகளைச் சாப்பிட்டதால் சங்கருக்கு நாக்குச் சப்புக் கொட்டியது. லீவு நாளான வெள்ளிக்கிழமைகளில் பாகீலுக்குப் போய் அந்தோனி இறால், மீன், நண்டு என்றுவாங்கி வருவான். தங்களுடைய அறைக்குள்ளேயே ஹீட்டரைக் பொருத்தி அதில் எதாவது சிறு பாத்திரங்களை வைத்துச் சமைப்பார்கள். வெங்காயம், மிளகாய், பட்டர், ஒலிவ் எண்ணெய் என்பவற்றைக் கேரளத்து அண்ணாச்சியிடமே கேட்டு வாங்கிக் கொள்ளவர்கள். அண்ணாச்சி தமிழ்ப் பொடியளுடன் மிகவும் அனுதாபத்துடன் நடந்து கொள்வார். சங்கரும் அந்தோனியும் சாதி, மத, மொழி வேறுபாடின்றி எல்லோருடனும் அன்பாகவே பழகி வந்தார்கள். சங்கர் எட்டாம் வகுப்பு வரை சிங்களம் படித்திருந்தான். உத்தியோகங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக முன்பு படித்ததால் இப்போது காம்ப்பில் உள்ள சிங்கள நண்பர்களுடன் சேர்ந்து மெல்ல மெல்லச் சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டான். கொம்பனியில் றைவராக இருக்கம் சில்வா நீண்ட காலமாக அங்கு சேலை செய்வதால் ரி.வி., வீடீயோ, டக் எல்லாம் எடுத்து வைத்திருந்தான். பக்கத்து அறை என்பதால் சங்கர் அங்கு அடிக்கடி படம் பார்க்கப் போவதும் கதைப்பதும் வழக்கமாக இருந்தது.


3

அடைவு வைத்த நகைகளை விரைவில் மீண்டு விடவேண்டும் என்றும் ஊர்ப்புறோக்கர் திலகத்திற்கு எங்கேயோ மாப்பிள்ளை பார்த்துத் திரிகிறார் என்றும் அம்மாவின் கடிதம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. சங்கர் ஒவ்வொரு தடவையும் ஊருக்கு எழுதும்போது தான் நன்றாகச் சாப்பிடுவதாகவும் வசதியாக இருப்பதாகவும் மாதா மாதம் அனுப்பும் பணத்தில் சீட்டுக் கட்டி அடைவி நகைகளை மீளும் படியும் எழுதிவான். அதிக பணம் அனுப்ப வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய மெஸ்போய் வேலையை முடித்துக் கொண்டு ஓவர்ரைம் வேலையாகக் கீழே கொட்டுண்ட சீமெந்தைப் பைக்கற்றுக்களில் அள்ளிக் கொடுத்தும், கப்பல் தளத்தின் கறள்களைச் சுரண்டியும், கிணறு போன்ற ஹச்சுகளுக்குள் இறங்கிக் கட்டி பட்ட சீமெந்தைக் கடப்பாரினால் அடித்து நொறுக்கித் து}ளாக்கியும் கஷ்டப்பட்டு வேலை செய்தான். இடுப்பில் பெல்டைக் கட்டிக் கொண்டு அந்தரத்தில் தொங்கிக் கப்பல் தளங்களையும் புறப்பாகங்களையும் சுரண்டும் போது பார்ப்பவர் கண்கள் கலங்கும். ~ஹச் கிளீனிங்| என்றால் கொம்பனியில் தனியான ஸ்பெஷல் ஓவர் ரைம். ஒரு ஹச் கிளீன் பண்ணப் பத்து முதல் பன்னிரண்டு தொழிலாளர்கள் உள்ளே இறங்குவார்கள். முகத்திற்கு மாஸ்க், கண்களுக்குப் பாதுகாப்புக் கண்ணாடி ( கொகிள்ஸ்), தலைப்பாகை எல்லாம் போட்டுக் கொண்டு சுமார் நாற்பத்தைந்து அடி ஆழமான ஹச்சுக்குள் இறங்கிச் சீமெந்துப் புழுதிப் படலம் மூடி மறைக்க வேலை செய்பவர்கள். பொப்காட் இயஙந்திரம் கட்டிச் சீமந்துகளை உடைத்துக் கூட்டித் தள்ளிக் கொண்டிருக்கும். மேலே விஞ்ச் இரும்பு வாளிகள் வேலை செய்து கொண்டிருக்கும். கரணம் தப்பினால் மரணம் என்ற கழைக் கூத்தாடியின் நிலைமையில் தான் இந்த வேளையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

மனேஜரும், உதலி கப்டன்களும், எஞ்சியர்மாரும், கொன்றோல் று}ம் ஒப்பரேட்டரும், விஞ்ச் ஒப்பரேட்டர்களும் துரிதமாக வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

சங்கரோடு சேர்ந்து அந்தோனியும் ஹச்சினுள் இறங்கி விடுவான். சீமெந்து கொண்டு வருகின்ற ஒவ்வொரு கப்பல்களிலும் ஹச் களீனிங் இருக்கும். ஜப்பானியக் கப்பல்களிலும் கிறீக் கப்பல்களிலும் சீமெந்து கொண்டு வருவார்கள். சீமெந்தை அள்ளி மிதக்கும் பாஜ்ஜினுள் போட்டதும் அவர்களுடைய கப்பல்களைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கும், மெக்கானியர்களுக்கும் சில வேளைகளில் கேஸ் கணக்கில் பியர் கொடுப்பார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் அந்தோனி சங்கரின் பங்கையும் சேர்த்து வாங்கி விடுவான். கிறீக் கப்பல்களில் இலங்கை வாலிபர்களும் வருவார்கள். இவர்கள் வந்தால் அன்று கொண்டாட்டந்தான். ஒருவரை ஒருவர் அன்போடு உபசரிப்பார்கள். பாஜ்ஜில் உள்ள தொழிலாளர்கள் சோற்றுப் பார்சலைக் கொடுத்து விட்டுப் பதிலுக்குக் கப்பல்களுக்குள் உள்ள இலங்கையர்களின் கபின்களுக்குச் சென்று வேண்டிய மட்டும் குடிப்பார்கள். புளு பிலிம் பார்ப்பார்கள். கடலுக்குள் நடக்கும் இக்காரியங்களைச் சட்டம் எதுவும் செய்யாமலிருக்கும்.

ஆறுமாதங்களில் சங்கர் நகைகளை அடைவு மீட்பதற்குத் தேவையான பணத்தை அனுப்பி விட்டான். வெள்ளிக் கிழமைகளில் குவைத் சிற்றியான ~சவாத்| தில் உள்ள ஓமான் எக்சேஞ்ச் கொம்பனி அல்லது ஹபீக் எக்சேஞ்ச் கொம்பனியில் சென்று டினார்களைக் கொடுத்து அமெரிக்க டொலர்களாகவோ அல்லது இலங்கை ரூபாயாகவோ டிராப்டுகளை எடுத்துத் தாயாரின் பெயருக்கே பதிவுத் தபாலில் அனுப்பி விடுவான். எக்சேஞ்ச் கொம்பனிகளில் பதிவுத் தபாலுக்கான பணத்தைக் கொடுத்தால் அவர்களே டிராப்ட்களையும் கடிதத்தையும் சேர்த்து உரியவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். பணம் அனுப்புவதற்காகச் சிற்றிக்குப் போகும் நாட்களில் அந்தோனி மிகவும் குது}கலமாக இருப்பான். பாகீலில் இருந்து 101 பஸ் எடுத்து ~முருகாப்| சிற்றி பஸ் நிலையத்திற்குப் போவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் அங்கு கடமையாற்றும் இலங்கைப் பணிப் பெண்களில் அனேகர் முருகாப்பில் உள்ள கனிசாவுக்குப் வருவார்கள். சேர்ச்;சையும் அதைச் சூழவுள்ள பூங்காவும் ~கனிசா| என்று சொல்வார்கள். எல்லாப் பெண்களும் இங்கு வழிபாட்டிற்கு வருவதில்லை. பாகிஸ்தானிய, இந்திய, இலங்கை ஆண்களுடன் நட்புக் கொண்டு பார்க்கிலும் தனிப்பட்ட இரகசிய வீடுகளிலும் கூட்டிச் சென்று சிலர் முறைகேடாகவும் நடந்து கொள்கிறார்கள். இதனால் பெண்களுக்கு நிறையப் பணம் கிடைக்கிறது. இந்த விதமாக மாதமொன்றுக்கு ஐயாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் பெண்களைப் பற்றியும் சங்கர் கேள்விப் பட்டிருக்கிறான். முருகாப் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களில் சிங்களத்தில் எழுதப்பட்ட எமது நாட்டு மானத்தைக் காப்பாற்றுங்கள் என் கோரிக்கைகளைப் பார்க்கும் போது சங்கருக்குக் கவலையாக இருக்கும்.

வரும்போது விமானத்தில் சந்தித்துப் பழகிய பெண்ணை அந்தோனி கனிசாவில் இனங்கண்டு கொண்டான். இவ்வளவு நாளும் யாரோ ஒரு பாகிஸ்தானிய முதியவருடன் தொடர்பு வைத்திருந்த அவள் இப்போது அந்தோனியை இறுகப் பிடித்துக் கொண்டாள். அந்தோனி தன் சம்பளத்தில் பெரும்பகுதியை அவளுக்காகவே செலவழிக்கத் தொடங்கி விட்டான்.

றைவர் சில்வாவையும் வேறு பல சிங்கள, முஸ்லிம் நண்பர்களையும் கனிசாவில் வௌ;வேறு பெண்களுடன் கண்டான். சில்வாவுக்குக் கண்டியில் ஏற்கனவே மனைவியும் இரண்டு குமர்ப் பிள்ளைகளும் உள்ளனர். அப்படியிருந்தும் அவன் குவைத்தில் இன்னொரு பணிப்பெண்ணை மனைவியாக வைத்திருக்கிறான் என்று கேள்விப் பட்டான். ஒருநாள் நாசூக்காக இது பற்றிக் கேட்ட போது இது தன் மனைவிக்குத் தெரியுமென்றும் அதனால் பரவாயில்லை வெளிநாட்டிலிருக்கும் வரை தானே கட்டு நாயக்கா போனால் எல்லாம் மறந்து போகும் என்றான்.

வாழ்க்கை, ஒழுக்கம் என்பவற்றை இங்கு வாழ்பவர்கள் மிகவும் சாதாரணமாகவே கருதுவதைக் காண முடிந்தது. சங்கர் விரும்பினால் தன் மூன்று சகோதரிகளையும் இங்கு வேலைக்குக் கூப்பிட்டிருக்க முடியும் ஒரு ஹஜ்ஜியிடம் அவர்களுடைய படத்தைக் காட்டினால் போதும். அவன் உடனே விசா எடுக்கத் தொடங்கி விடுவான். நல்ல அராபியக் குடும்பங்களில் வேலை செய்யும் எத்தனையோ பணிப்பெண்கள் தமது திறமையினால் தமது எஜமானாகிய ~பபா| வைக் கவர்ந்து அவர்களின் உதவியினால் இலங்கையில் உள்ள தமது தம்பிமாரையும், காதலர்களையும் றைவர்மாராக வேலைக்குச் சேர்த்துக் கொண்ட சம்பவங்களையும் சங்கர் அவதானிக்க முடிந்தது.

4

காம்பில் அந்தோனியின் நடவடிக்கைகளினால் சங்கர் நாளுக்கு நாள் கவலைப்பட்டான். குடிப்பது அங்கு தடை என்றாலும் ட்ரக் சாரதிகளின் உதவியினால் ஈராக்கிலிருந்தும் பாஜ்ஜில் வேலை செய்யும் விஞ்ச் தொழிலாளர்கள் மற்றும் சில இளைஞர்களினாலும் வெளிநாட்டுக் குடிவகைகள் பிளாக்கில் விற்பனையாகின்றன. கப்பல்களில் இலங்கை அல்லது வெளிநாட்டு மாலுமிகளினால் களவாக விற்கப்படும் ஸ்கொட்ச், விஸ்கி அல்லது பிராண்டியை ஐந்து டொலர் கொடுத்து வாங்கிச் சுங்கப் பகுதியினரின் கண்களில் மண்ணைத் து}வி விட்டுக் காற்சட்டையால் மூடி வெளியே தெரியாமல் சப்பாத்து, ஷொக்ஸ{க்குள் மறைவாக வைத்துக் கட்டிக் கொண்டு வருவார்கள். அந்தோனிக்கு இது கைபட்ட பாடு. பிளாக்கில் கொண்டு வருவதைக் காட்டிலும் குடித்து மற்றவர்களுக்கும் விற்பான். சில குடிப்பிரியர்கள் இருபது டினார் வரைகொடுத்து ( இலங்கைப்பணத்தில் ரூபா 1500) ஒரு போத்தல் ஸ்கொட்ச்விஸ்கி வாங்கிக் குடிப்பதும் உண்டு. இத்தோடு அந்தோனி வேறு சில நண்பர்களுடன் சேர்ந்து லோக்கலாக் காம்பிலேயே குடிவகை தயாரிக்கவும் களவாக விற்கவும் தொடங்கி விட்டான். சிங்களத்தில் இதை ~அளஹொதி| என்று பிரபல்யப்படுத்தினார்கள். கள்ளின் சுவை இருக்கும். போPச்சம்பழம், திராட்சைப்பழம், அப்பிள் பழம் என்பவற்றைப் பெரிய பாத்திரத்தில் போட்டு இரண்டு வாரங்களுக்கு நீருற்றி ஈஸ்ட்டும் போட்டு நொதிக்க வைப்பார்கள். சிலர் பழைய இரும்புக் கம்பியையும் இதனுள் போடுவதாகக் கேள்வி. பிற நன்றாக வடித்துப் போத்தல்களில் அடைத்து ஒரு போத்தல் ஒரு டினார் என்று ( எழுபத்தைந்து ரூபாய் ) விற்பார்கள். இப்படிச் சம்பாதித்தே ஒரு காவலாளி ஊருக்கு நல்ல காசு அனுப்பி வைக்கிறார். இந்த லோக்கல் தயாரி;ப்பை இரவிரவாக அருந்தி விட்டுக் காம்ப்பில் பாடியும், ஆடியும் சண்டை பிடித்தும் களைத்துப் போகும் சில இளைஞர்கள் மறுநாள் வேலைக்கு ஒழுங்காக வரமாட்டார்கள். இவர்களுள் அந்தோனியும் ஒருவன். இன்னொருநாள் அந்தோனியின் குவைத் காதலியான அந்த விமானச் சினேகிதி அவனைத் தேடிக் கொண்டு வந்து விட்டாள். ஒரு பகல் முழுவதும் அவனுடைய அறையில் தனியாக இருந்தார்கள் என்ற விடயம் கொம்பனி நிர்வாகத்தினருக்குத் தெரிந்து விட்டது. தான் கெட்டதோடு மற்றத் தொழிலாளர்களையும் கெடச் செய்கிறான் என்ற காரணத்தினால் கொம்பனி நிர்வாகம் அந்தோனிக்குச் சீட்டுக் கிழிக்க நடவடிக்கை எடுத்தது. தன்னை அனுப்பப் போகிறார்கள் என்று தெரிந்ததும் ஒரு நாள் பின்நேரம் ~சிற்றிக்கு| என்று போன அந்தோனி பிறகு திரும்பி வரவேயில்லை. ஒரு வாரத்திற்கு முன்புதான் பக்கீர் என்ற ரலிகிளார்க் ஒருத்தன் ஈராக் லொறி ஒன்றில் 15 பைக்கற் சீமெந்தை கூடுதலாக ஏற்றி அனுப்பினான் என்பதற்காகவும் றைவரிடம் பத்து டினார் லஞ்சம் வாங்கினான் என்பதற்காகவும் மனேஜரிடம் பிடிபட்டு விசாரணையில் இருந்தான். ஒரு நாள் இரவு அவனும் காம்ப்பை விட்டு வேறு எங்கோ ஓடிவிட்டான்.

இப்படிக் கொம்பனிகளுடன் பிரச்சினைப்பட்டு வேறு கொம்பனிகளுக்குக் களவாக ஓடுபவர்களது எண்ணிக்கை குவைத்தில் சகஜமாகிவிட்டது. ஆனால் சமீபத்தில் அங்கு கொண்டு வரப்பட்ட தொழிற்சட்டம் இப்படியான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

இப்படி வேறு இடங்களுக்குக் களவாக ஓடுபவர்கள் கூடிய சம்பளத்தில் எங்காவது வேலை செய்து விட்டுத் தமது விசா முடிவடையும் காலத்தில் பொலிசில் பிடிபடுவார்கள். அப்போது பொலிசார் இவர்களை வேலைக்குச் சேர்த்த கொம்பனியிடம் கூட்டி வந்து பாஸ்போட்டையும் ரிக்கற்றையும் வாங்கி உடனே தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்புவார்கள்.

எவ்வளவுதான் குழப்படிகள் செய்தாலும் அந்தோனி சங்கருக்கு மிகவும் உதவியாக இருந்தான். தொழில் செய்யும் போதும் சங்கர் உடல் நோகிறான் என்றால் உடனே அந்த இடத்திற்கு ஓடிவந்து உதவி செய்வான். பாகீலில் மாதத்தில் ஒரு தமிழ்ப்படம் போடுவார்கள். சிலவேளைகளில் மலையாளப் படங்கள் போடுவார்கள. இருவரும் சேர்ந்தே தியேட்டருக்குப் போவார்கள். எப்போதாவது வெள்ளிக்கிழமைகளில் ஹறாஜ்ஜுக்குப் போய் அங்குள்ள மொத்த விற்பனவுச் சந்தையில் விற்பனையாகும் பொருட்களில் தமக்கு வாங்கக் கூடியவற்றை வாங்குவார்கள். பழைய, பாவித்த பொருட்கள் அங்கு மலிவாக விற்பனைக்கு வரும். சங்கருக்கு இந்த ஆவணியில் விடுமுறை என்பதால் ஹறாஜ்ஜில் ஏழு டினார் கொடுத்துக் கறுப்புச் சிவப்புக் கட்டம் போட்ட லெதர் சூட்கேஸ் ஒன்று வாங்கினான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ரவுணுக்குப் போகும் வேளைகளில் சிறிது சிறிதாகப் பொருட்களை வாங்கினான். மூன்று சகோதரிகளுக்கும் பொருத்தமான சாறிகள் வாங்கினான். ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ள குளிர்கால சீசனுக்காக கம்பளி உடுப்புக்கள் வாங்கினான். குளிர்காலம் தாங்க முடியாது என்று எல்லாரும் பயமூட்டினார்கள். தானும் அந்தோனியும் சேர்ந்து திரிந்த இடங்களையும் வாங்கிய பொருட்களையும் சங்கர் ஞாபகப்படுத்திப் பார்ப்பான். ஆமதியில் உள்ள அழகான பூங்காவையும் குவைத் சிற்றிக்கு அண்மையிலுள்ள மூன்று உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட சுழரும் ஹோட்டலையும், றெக்காவின் பிரபலமான அல்அடான் அரசினர் ஆஸ்பத்திரியையும், ஜாராவில் உள்ள பல்கலைக்கழக் கட்டிடங்களையும், அழகான மசூதிகளையும் அவனால் மறக்க முடியாது.

அந்தோனி இல்லாதது அறையில் சப்பென்று இருந்தது. எப்போதாவது சில்வாவின் அறைக்குள் போய் ரி.வி. பார்ப்பான். சில்வாவின் அறை நண்பன் தயாரத்ன இப்போது அரை டினாருக்கு மயிர் வெட்டத் தொடங்கியிருந்தான். பாகீல் ரவுனில் ஒரு டினார் கொடுத்து இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் சலு}ன்களில் மயிர் வெட்ட வேண்டும். தயாரத்னாவிடம் அரை டினாருக்கு அழகாக வெட்டலாம். பாகீல் போறதுக்கு பஸ் செலவும் மிச்சம்.

சில்வாவை அதிகம் அறையில் காணமுடியாது. அவன் லீவு நேரத்தை பெரும்பாலும் தன் காதலியின் அறையிலேயே கழிப்பான். சில சந்தர்ப்பங்களில் வேறு நண்பர்களையும் அங்கு கூட்டிச் செல்வான். அவனது காதலியும் அவ்வாறே தன் சினேகிதிகளை அங்கு வரச் செய்வாள்.

அந்தோனியும் பக்கீரும் வேறு சிலரும் கொம்பனியை விட்டு ஓடியதற்குக் கொம்பனி பத்திரிகைகளில் படங்களைப் போட்டு விளம்பரங் கொடுத்திருந்தது. அதாவது இவர்களை வேறு கொம்பனிகளில் வேலைக்குச் சேர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடு;க்கப்படும் என்பதே...... இதன் பிறகு அவர்களைத் தேடுவார் இல்லை. திடீரென்று ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு அந்தோனி அறைக்கு வந்து தன்னுடைய சில உடுப்புக்களை எடுத்துச் சென்றான். ஜாராவில் உள்ள கராஜ் ஒன்றில் தான் வேலை செய்வதாகவும் நல்ல சம்பளம் என்றும், விரும்பினால் சங்கரை ஓடிவரும்படியும் வற்புறுத்தினான். சங்கர் மறுத்து விட்டான். அவன் வாயில் மதுவாடை வீசியதைச் சங்கர் அவதானித்தான். அவன் போய் விட்டான்.

குளிர்காலம் மெல்ல மெல்ல ஆரம்பித்தது. அபுஹிபா கடற்கரையில் காய்ந்து போய் இருந்த செடிகளில் சில பூக்களைக் காணக் கூடியதாக இருந்தது. ஆங்காங்கே காணப்பட்ட போPச்ச மரங்களிலும் காய்கள் பிடிக்க ஆரம்பித்தன. சங்கர் இப்போது அபுஹலிபா கடற்கரைக்குக் குளிக்கப் போவதை நிறுத்தியிருந்தான். வெள்ளிக் கிழமைகளில் ஊர் நண்பனான சூரியிடம் போக ஆரம்பித்திருந்தான். சூரி அங்கு கிளீனி;ங் கொம்பனி ஒன்றில் தொழிலாளியாக இருக்கிறான். பல்கலைக்கழகங்கள், ஆஸ்பத்திரிகள், பாடசாலைக் கட்டிடங்கள், துறைமுகங்கள் தெருக்களைச் சுத்தப்படுத்துவதே அக்கொம்பனியின் வேலை. நல்ல ஓவர்ரைம் கொடுக்கிறார்கள். அத்தேடு சூரி லீவு நாட்களில் அராபியர்களின் வீட்டுக்குச் சென்று அங்குள்ள சிறு வேலைகளைச் கேட்டுச் செய்வான். ஜன்னல் கண்ணாடிகள், கம்பளங்களைச் சுத்திகரிப்பதற்குத் தனியாகப் பணம் கொடுப்பார்கள். பீச்சிற்கும் ரவுணுக்கும் போனால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களைக் கழுவினால் காருக்கு ஒரு டினார் அல்லது அரை டினார் கொடுப்பார்கள். ஒருவாளி தண்ணீரும் ஒரு துடைக்கும் துணியும் இருந்தால் ஒரே நாளில் ஒன்பது பத்துக் கார்களைக் கழுவலாம். குவைத்தின் சுவாத்தியம் விசித்திரமானது. திடீரென்று காற்று வீசித் து}சி கிளப்பிக் கட்டிடங்களையும் கார்களையும் அழுக்காக்கிவிடும். மழையைச் காண்பதே அருமை.

சூரியுடன் சேர்ந்து தானும் கார் கழுவவும் வீட்டு வேலைகளைச் செய்யவும் போக வேண்டும் என்று சங்கர் விரும்பினான். சூரியும் உதவி செய்ததால் தன்னுடைய கொம்பனி நிர்வாகத்தினருக்குத் தெரியாமல் களவாகச் சூரியுடன் சேர்ந்து லீவு நாட்களில் பிறைவேற் வேலை செய்து சம்பாதித்தான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு புவனத்தின் கடிதம் வந்திருந்தது. தன்னுடைய தையல் வகுப்பு முடிந்து விட்டது என்றும் சங்கர் அனுப்பிய காசில் தையல் மெஷின் ஒன்றுக்கு ஓடர் கொடுத்திருப்பதாகவும் எழுதியிருந்தான். மூத்தக்கா திலகத்தின் கலியாணமும் சரிவரும் போல இருக்கென்றும் ஆவணியில் லீவில் வரும்போது குறைந்தது முப்பதினாயிரமாவது கையில் கொண்டு வந்தால் இருக்கிற காணியையும் நகைநட்டையும் கொடுத்து ஒரு மாதிரி ஒப்பேத்தலாமெண்டும் எழுதியிருந்தான். புறோக்கர் முருகேசர் பேசி வந்த பொடியன் து}ர இடம் என்றும் சின்ன அரசாங்க உத்தியோகம் எண்டாலும் சாதி கொஞ்சம் குறைவுதானாம் எண்டு ஆக்கள் கதைக்கினம் என்பன போன்ற விஷயங்களை நாசூக்காக எழுதியிருந்தாள். ஊரில் அடிக்கடி நடக்கிற பிரச்சினைகளைப் பற்றி பூடகமாக எழுதிய அவள் எங்கடை மண் வீட்டையும் சுத்தியுள்ள வாழை, பூவரசு மரங்களையும் கிண்டிக்கிண்டி ஆயுதங்கள் ஏதும் தாட்டுக் கிடக்கோ எண்டு பாத்தவை எண்டும் அவன்ரை படத்தைக் கண்டு போட்டு ஏன் வெளிநாடு போனவர் எண்டு விசாரிச்சவை எண்டும் பல புதினங்களை எழுதியிருந்தாள். அவளது கடிதத்தில் மாப்பிள்ளை சாதி கொஞ்சும் குறைவு தானாம் என்ற வசனங்கள் அவனுக்குச் சிரிப்பை மூட்டின. தானும் சூரியும் இஞ்சை செய்கிற வேலையளை கண்டால் ஊரிலே துரும்பனும் அந்த வேலையளைச் செய்வானோ எண்டு கேட்பினம். நாங்கள் அனுப்பிகின்ற காசு எல்லாத்தையும் போர்த்து மூடிப்போடு;ம். இஞ்சை கக்கூசு கழுவினாலும் ஊருக்கு வரேக்கை நல்ல வெட்டுப் போட்ட குதிரைப் பவுண் சங்கிலியும் ஹொண்டாவும் ஹெல்மெட்டுமாகத் திரிஞ்சால் அந்தக் கௌரவம் ஒன்றே ~~மாப்பிள்ளை|| அந்தஸ்தைப் பெற்றுத் தந்துவிடும்.

ம்......இந்தச் சனங்கள்....... என்று பெருமூச்சு விட்டான் சங்கர்.

5

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய போது சங்கருக்கு வரவேற்புப் பலமாக இருந்தது. திருமணம் நிச்சயமாக காரணத்தாலோ என்னவோ அக்கா திலகம் கலகலப்பாகக் காணப்பட்டாள். வீட்டில் புதிய தையல் மெஷினில் கடகட சத்தம் காதுக்குக் குளிர்ச்சியாக இருந்தது.

சங்கர் வந்ததைக் கேள்விப் பட்ட தரகர் முருகேசர் விடியற்காலையிலேயே வாயில் சுருட்டு மணக்க வந்து விட்டார்.

~அம்மான் இந்தாருங்கோ.... றாத்மன் சிகரெட்...... உங்களுக்கெண்டு எயார்போட்டிலை டியூட்டி பிறீ ஷொப்பிலை வாங்கிக் கொண்டு வந்தனான்.....|

முருகேசர் மகிழ்ச்சியில் கடைவாய்ப்பல் தெரியச் சிரித்தார்.

~பேந்தென்ன..... என்னை நினைச்சுப் பொடியன் வாங்கியந்திட்டான்..... ம்...... அதெல்லாம் கிடக்கட்டும்....... பேச்சின்படி மாப்பிள்ளை முப்பதாயிரம் இனாம் குடுக்க வேணும். பொடிச்சி திலகத்திற்கு இந்த ஒண்டரைப் பரப்புக் காணியும் வீடும் குடுக்க வேணும்.... அளவாக நகைநட்டுப் போதும்.....| முருகேசர் தொடர்ந்தார்.

சங்கருக்கு நெஞ்சு திக்கென்றது. இருக்கிற எல்லாக் காணியையும் அக்காவுக்குக் கொடுத்திட்டால் புவனம்..... கமலா இருவருக்கும்......

~என்ன தம்பி யோசிக்கிறாய்...வெளிநாட்டிலை உழைக்கப் போனனி இப்படி யோசிக்காதை.... எல்லாம் கிடைக்கிற காலத்திலை கிடைக்கும் தம்பி..... இப்ப ஓமேண்டு சொல்லும் வாற புதன் கிழமைக்கே முருகையன் கோயிலடியில தாலி கட்டி வைப்பம்.....

சங்கருடைய மௌனத்தைப் புவனம் கலைத்தாள்.

~அண்ணா... அக்காவின்ரை விஷயம் இப்ப முடியட்டும்... நாங்கள் விஸ்வமடுவிலை எண்டாலும் போய் இருப்பம். பாவம் அக்கா.... பலகாரம் சுட்டு இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டவ... அவவை நல்லா வாழ வைக்க வேணும்..|
கமலாவின் குரல் பலமாகவே ஒலித்தது. ~அண்ணா நான் ஏ.எல்.பாஸ் பண்ணிப்போட்டு hPச்சிங்குக்கு போடப் போறன்.... நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்படவேண்டாம்.|

~சரி அம்மான்... எல்லாம் நல்ல படியாய் நடக்கட்டும்| சங்கர் பதில் சொல்லி விட்டான். புதன்கிழமை முருகன் கோயிலில் திலகத்தின் திருமணம் ஆடம்பரமில்லாமல் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்றது.

பதினைந்து நாட்களில் சங்கர் மறுபடியும் குவைத்திற்கு; பயணமாகி விட்டான்.

சங்கான் வாழ்க்கை மறுபடியும் குவைத்தில் சீமெந்துக் கொம்பனியில் உருளத் தொடங்கியது. இவ்வருடம் பெரிய முதலாளி வந்து எல்லாருக்கும் சம்பளம் கூட்டியிருந்தார். சங்கருக்கு நு}ற்றி நாற்பது டொலர் கிடைத்தது.

இம்முறை புவனத்தை மனதில் வைத்துக் கொண்டு சங்கர் கடுமையாக உழைக்கத் தொடங்கினான். பகல் வேலை முடிந்ததும் இரவில் ஹச் கிளீன் பண்ண ஆட்கள் தேவை என்று அறிந்தால் பாஜ்ஜிலேயே எங்காவது சீமெந்துப் பைக்ற்றுக்களின் மத்தியில் படுத்து உறங்குவான். தேவையான நேரத்தில் எழுப்பிவிடும்படி இரவு எஞ்சினியரிடம் சொல்லி விட்டுப் படுப்பான்.

சீமெந்தை இறக்கியதும் எவ்வளவு விரைவாகப் கப்பலைச் சுத்தப்படுத்தி அனுப்புகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு விரைவாக அடுத்த கப்பல் வந்து சேரும். மேலும் இதனால் கொம்பனிக்கும் நிறைய இலாபம் வரும்.

அன்று வியாழக்கிழமை. மறுநாள் லீவு தினம் என்பதால் டுபாயின் ~ராஸல்கைமா| துறைமுகத்தில் ருந்து வந்த சாம் என்ற கப்பலைச் சுத்தப்படுத்தி விரைவாக அனுப்ப வேண்டும். இரவு ஒரு மணிக்குப் பாதித் து}க்கத்துடன் சங்கர் ஹச்சிற்குள் இறக்கப்பட்டான். அரைவாசித் து}ரம் ஏணிப்படிகளில் இறங்கியவன் கால் தடக்கித் திடீரென்று ஐயோ என்ற அலறலுடன் அடித்தளத்தில் போய் விழுந்தான். திடீரென்று மயக்கமுற்றான்.

மற்றத் தொழிலாளர்கள் பரபரப்புடன் ஓடினார்கள். இரவு வேலைக்குப் பொறுப்பான எஞ்சினியரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள். எப்பொழுதும் தயாராகவுள்ள டட்சன் ~பிக்அப்| வாகனத்தில் சாரதி வீரசிங்கம் சங்கரைத் து}க்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். சில தொழிலாளர்களும் எஞ்சினியரும் கூடவே சென்றிருந்தான். சுஹைபா துறைமுக டாக்கடர் பார்த்து விட்டுக் கை எலும்பு முறிந்து என்றும் உடனே ~அல்அடான்| அரசினர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் படியும் துண்டு கொடுத்துவிட்டார்.

~பிக்அப்| அல்அடானை நோக்கிப் பறந்தது. இயல்பாகவே வேகமாக ஓட்டும் சாரதி வீரசிங்கம் இப்போது மணிக்கு நு}ற்றைம்பது மைல் வேகத்தில் பறந்தான்.

அங்கே வெளிநாட்டு வைத்தியர்கள் சங்கரைப் பரிசோதித்தார்கள். கம்பியூட்டர் எக்ஸ்ட்ரே எடுத்துக் தள்ளியது. உடனே சத்திர சிகிச்சை அறைக்கு அனுப்பினார்கள்.

மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால் சக தொழிலாளர்களும் ~காம்ப்| மனேஜரும் பஸ்ஸில் சங்கரைப் பார்க்கச் சென்றார்கள். காம்ப் மனேஜர் ஒரு அராபியர். சங்கர் ஆஸ்பத்திரியில் இருக்கும் வரைக்கும் கொம்பனி றைவரிடம் ஒழுங்காகச் சாப்பாடு கொடுத்து அனுப்பினார். சூப், பழவகைகள் கொடுத்து அனுப்பினார். பாஜ் மனேஜர் மிகவும் கண்டிப்பானவர் என்றாலும் இரக்ககுணம் படைத்தவர். சங்கர் கஷ்டப்பட்டு வேலை செய்வது அவருக்குத் தெரியும். கை முறிவு பொருத்தப்பட்டு நன்கு குணமாகி வரும் வரைக்கும் சம்பளத்துடன் விஷேட லீவு வழங்கினார்.

றைவர் சில்வா, தயாரத்தினா எல்லாரும் சங்கரை அடிக்கடி போய்ப் பார்ப்பார்கள்.

இரண்டு வாரத்தில் சங்கர் ஆஸ்பத்திரியில் இருந்து வந்து விட்;டான். மறுபடியும் காம்ப்பில் ஒரு வாரம் ஓய்வெடுத்தான். காம்ப் வைத்தியர் அதற்கான அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கினார். ஞாயிற்றுக்கிழமைகளில் சிற்றிக்குப் பெண்களைத் தேடிப்போகும் தொழிலாளர்கள் அன்று தமக்குச் சுகமில்லை என்று சாட்டுச் சொல்லிக் காம்ப் வைத்தியரிடம் லீவு கேட்பார்கள். கொம்பனிச் சட்டப்படி வருடத்தில் பதினைந்து நாட்கள் சுகவீன லீவு கிடைக்கும்.

கோம்பனி முதலாளி கிறிஸ்தவர் என்பதால் நத்தாரை முன்னிட்டு எல்லாருக்கும் ஒரு மாதச் சம்பளம் போனஸ் ஆகக் கிடைத்தது. எஞ்சினியருக்கு ஒன்றரை மாதமும் தொழிலாளர்களுக்கு ஒரு மாதமும் கொடுத்தார்கள். காம்ப் கன்hPன் அறையில் கிறிஸ்மஸ் மரம் நாட்டி மின்விளக்குகளாலும் வர்ணக் கடதாசிகளாலும் சோடித்தார்கள். சில கிறிஸ்தவ தொழிலாளர்களுடைய அறைகளும் சோடிக்கப்பட்டன. முதலாளி வந்து எல்லோருக்கும் கேக்கும் வான்கோழி இறைச்சியுடன் பிரியாணிச் சாப்பாடும் வழங்கினார். அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு விஷேட பூஜைகளைக் காண்பதற்காக ஆமதி சேர்ச்சுக்குக் கம்பனி பஸ்களில் எல்லோரும் புறப்பட்டார்கள். அன்றிரவு காம்ப்புக்கு அந்தோனி வருவதாச் சொன்னபடியால் சங்கர் தேவாலயத்திற்கு போகவில்லை. சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அந்தோனி இன்னொரு நண்பனின் காரில் வந்தான். சங்கரைக் காம்ப்புக்கு வெளியே தனியான இடத்தில் கூப்பிட்டு கதைத்தான். காருக்குள் அவனது காதலியும் இருந்தாள். தான் அவளைக் குவைத்தில் திருமணம் செய்யப்போவதாக அந்தோனி தெரிவித்தான். சிறிது நேரம் இருந்து கதைத்துவிட்டு அவன் போய் விட்டான்.

ஊருக்குப் போய் வந்த சங்கரின் குடும்பத்தாரின் புதினங்களையும் வேறு பிரச்சினைகளைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொண்டு அந்தோனி புறப்படான். முதல் ஒரு கொம்பனி விசாவில் வந்தவர்கள் வேறு இடத்தில் களவாக வேலை செய்தால் மூன்று மாதங்களுள் பழைய கொம்பனிக்குத் திரும்பி விட வேண்டும். இல்லாவிடில் சொந்த நாட்டிற்கு அவர்களைக் கூப்பிட்ட கொம்பனியே அனுப்பிவிட வேண்டும். தவறினால் தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் இயற்றப் பட்டுவிட்டது. இதனால் பக்கீரும் அந்தோனியும் வேறு சிலரும் விரைவில் நாடு திரும்ப வேண்டியிருந்தது. அந்தோனி தான் வேலை செய்யும் கறாஜ் முதலாளியுடன் கதைத்து அவர் மூலம் புதிய விசா பெறுவதற்கு ஏற்பாடு செய்து விட்டான்.

எதற்கும் இலங்கை போய்த்தான் திரும்ப வேண்டும். கூடிய விரைவில் தான் இலங்கைத் து}துவராலய அதிகாரிகள் மூலம் கொம்பனிக்கு வந்து பாஸ்போட்டையும் ரிக்கற்றையும் வாங்கிக் கொண்டு ஊர் போகப் போவதாயும் பிறகு வேறு கொம்பனி விசாவில் குவைத்திற்கு வரப்போவதாகவும் அந்தோனி சொல்லியிருந்தான். அவன் மறுபடியும் வர விரும்புவது அந்தக் காதலிக்காகவே தவிர அவனுடைய குடும்பத்திற்காக இல்லை என்று சங்கருக்குப் புரியாமல் இல்லை. சேற்றில் அகப்பட்டவனைக் கரை சேர்க்க முடியாமல் தவித்தான்.

6

சங்கருக்குக் கேரளத்து முதலாளியுடன் சாப்பாடு வெறுக்கும் வேளைகளில் சூரியிடம் போய் வி;டுவான். சூரியின் கொம்பனியில் சாப்பாட்டுக்குத் தனியாகப் பணம் கொடுக்கிறார்கள். அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து பொருட்களை வாங்கிச் சமைக்கிறார்கள். குளிர்ப் பெட்டியில் வைத்த கோழி இறைச்சியை மிகவும் சுவையாகச் சமைப்பார்கள். மசீலா பீச் ஹோட்டலுக்கு அண்மையில் உள்ள கடற்கரைக்கு நடந்து சென்று குளித்துவிட்டு வந்து எல்லோரும் அறைக்குள் வட்டமாக உட்கார்ந்து பசியாறச் சாப்பிடுவார்கள்.

சூரியின் பொறுப்பான போக்கிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஆர்வத்திலும் சங்கருக்கு மிகவும் விருப்பம் இருந்தது. ஒரு நாள் இருவருமாகக் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது சங்கர் தன் சகோதரி புவனத்தை அவன் விரும்புவானா என்று வாய் விட்டே கேட்டு விட்டான். சங்கரின் குடும்ப நிலை சூரிக்கு நன்கு தெரியும். தன்னுடைய தாயார் நியாயமான சீதனத்தை எதிர்பார்ப்பா என்றும் அதற்கு மறுத்தால் இக்கலியாணத்தை விரும்பமாட்டா என்றும் சொன்னான்.

~சென்ற வருட உழைப்பெல்லாம் புவனத்தின் கலியாணத்திற்குத்தான் நீ இம்முறை ஊருக்குப் போகும்போது இரண்டு பேருக்கும் எழுதிப் போட்டாவது வரவேணும். நான் உனக்கு இயன்றதைத் தருவன் என்று சங்கர் நாசூக்காகக் கதைத்துச் சூரியின் மனத்தை மாற்றி விட்டான்.

ஊருக்குக் கடிதம் எழுதினான். திலகம் தன் சேமிப்பின் கொஞ்சப் பணம் கொடுத்து உதவுவதாக எழுதினான். சூரிக்குப் பெண் சகோதரங்கள் இல்லை என்பதால் தகப்பனாரின் வடலி;காணி ஒன்று முதிசமாகக் கிடைத்தது. அக்காணியைத் திருத்தி வீடு கட்டித் தருவதாகச் சங்கர் ஒப்புக் கொண்டான்.

சூரி ஊருக்குப் போனபோது புவனத்திறகும் அவனுக்கும் கலியாண எழுத்து நடந்தது. சூரி திரும்ப வரும்போது படங்களைக் கொண்டு வந்து சங்கரிடம் காட்டினான்.

இந்த வருட உழைப்பு முழுவதும் புவனத்திற்கு வீடு கட்டுவதில் செலவானது. வருடாந்த லீவுக்கு ஊர் போகாது விட்டால் போய்வரும் பிளேனின் ரிக்கற் காசு கிடைக்கும் அதற்காகப் போகாமல் நின்று அந்தப் பணத்தையும் வாங்கிப் புவனத்திற்கு அனுப்பினான்.

காலம் உருண்டு கொண்டிருந்தது. சங்கருக்கு வயது முப்பத்தி மூன்றைத் தாண்டி விட்டது. இளைய சகோதரி கமலாவின் பிரச்சினையும் தீர்த்து விட்டால் பிறகு அவன் தன்னுடைய கலியாணத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்.

தொழிலாளர்கள் யாராவது பாஜ் மனேஜரிடம் தமது கலியாணத்திற்காக லீவு கேட்டு வருவார்கள். அப்போது மனேஜர் பகிடியாக அவனைப் பார்த்து உமது கலியாணம் எப்போது என்று கேட்டார். ஒப்பீசில் இருக்கும் கிளாக்கர் மனேஜருக்குச் சங்கருடைய குடும்ப வரலாறு, தியாகங்கள் எல்லாவற்றையும் சொல்லி யாழ்ப்பாணச் சமூகத்தில் சகோதரிகளுக்காக உழைத்து வாழும் உன்னதமான வாலிபர் சமுதாயத்தைப் பற்றிப் பெரிதாக லெக்சர் அடிக்கத் தொடங்கி விடுவார். வெள்ளைக்காரர் புன் சிரிப்போடு கேட்டு விட்டு எல்லாம் சுத்த அசட்டுத்தனம் என்று கேலி செய்வார்.

சுப்பையா என்றொரு தமிழ்நாட்டு மெக்கானிக் இருந்தார். இவர் தனது சகோதரிக்காக எவ்வளவோ உழைத்துக் கொடுத்தாராம். கடைசியில் தந்தது காணாது என்று அவரை குறை சொல்லத் தொடங்கி விட்டாளாம். போதாக் குறைக்கு அவளுக்கு வாய்ந்த புருஷனும் தனக்குச் சீதனம் காணாது என்று மனம் புழுங்கத் தெடங்கி விட்டாராம். இப்போது சுப்பையன் தமிழ் நாட்டிற்கே போகாமல் குவைத்தில் கேரளப் பணிப்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து ~றெக்கா| வில் வாடகை அறையில் சுகமாகக் குடித்தனம் நடத்துகிறார்.

கமலாவின் கடிதம் இப்போது அடிக்கடி வரத் தொடங்கியது. தான் ஏ.எல் பாPட்சை எழுதி விட்டதாகவும் பலகலைக்கழகப் படிப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் ஆனால் யாழ்ப்பாணத்தில் பிறைவேற்றாக எக்கவுண்டன்சி அல்லது கொம்பியூட்டர் சயன்ஸ் படிக்க எண்ணம் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பணம் அனுப்பும் படியும் எழுதியிருந்தான். அக்கா திலகத்திற்கு இரட்டைப் பெண் கழந்தைகள் பிறந்திருப்பதாகவும் அவவவுக்கு ஏதாவது பணம் அனுப்பினால் நல்லது என்றும் எழுதியிருந்தாள். அடப் பாவமே..... இரட்டைக் குழந்தைகளா? சகோதரிகளுக்காக உழைத்துப் பிறகு மருகமக்களுக்கும் உழைக்க வேண்டி வருமோ... என்று சங்கர் பயந்தான்.

7

கமலா இப்போது யாழ்ப்பாணத்திற்கு தினமும் பஸ் ஏறிப் படிக்கப் போய் வருகிறாள். முன்னேறி வரும் விஞ்ஞான யுகத்தில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்களை விடக் கொம்பியூட்டர் சயன்ஸ், எக்கவுண்டன்சி போன்ற தொழில் hPதியான படிப்புக்கள் விரைவான பலனையும் பணம் சம்பாதிக்கும் வழிகளையும் தரும் என்று கமலா நம்பினாள். சினிமாத் தியேட்டர்களையே மூடிவிடும் அளவிற்கு இலங்கையில் ரி.வி யுகம் வந்து விட்டது. அடுத்தது எலெக்ரோனிக் கொம்பியூட்டர் யுகந்தான். அரசாங்க காரியாலயங்களிலும் தனியார் கம்பனிகளிலும் கொம்பியூட்டர் சாதனங்களை அறிமுகப் படுத்தும் காலம் நெருங்கி விட்டது. மேலும் இந்த விஞ்ஞானத்தைத் தெரி;ந்து கொண்டால் சிங்கப்பூர், மத்திய கிழக்கு, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பல ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் சம்பளமாகப் பெறமுடியும் என்று அவள் தெரிந்து கொண்டாள். ஜி.சி.ஈ (சாதாரணம்) ஆங்கிலத்தில் கிறடிட் எடுத்திருந்தாள்.

ஊரிலுள்ள விஷேட அபிவிருத்திச் சபை நு}லகத்திற்குப் போய் ஆங்கிலப் பத்திரிகைகள், வெளிநாட்டுச் சஞ்சிகைகளை வாசித்து வந்தாள். அழகும் சுறுசுறுப்பும் நிரப்பிய கமலா ஊரில் சராசரிப் பெண்களை விடவும் வித்தியாசமான அறிவு ஜீவியாகவே தென்பட்டாள்.

தன்னோடு பேச்சுக் கொடுக்கும் எவருடனும் அவரவர் அறிவுக்கும் போக்கிற்கும் ஏற்பச் சரளமாகப் பேசத் தெரிந்து கொண்டான். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் கொம்பியூட்டர் சாதனங்களைப் பற்றிப் படிந்து வந்தான்.

தினமும் காலையில் பஸ்ஸிற்காகக் காத்து நின்று இடம் கிடைக்காமல் நெரிபட்டும் இடிபட்டும் கஷ்டமான பிரயாணம் செய்து வந்தாள். சின்ன மினிவான்களில் ஏறி அவள் இடம் கிடைக்காமல் குனிந்து நிற்கும்போது அவள் மேனியை வட்டமிடும் கழுகுக் கண்கள் தான் எத்தனை? தனக்குப் பரிந்து இடம் தருமாப் போல் சற்றே நகர்ந்து ~இப்படி இரும் பிள்ளை| என்று சொல்லும் வயது போனவர்களின் கள்ள மனங்களை அவள் நன்கு அறிவாள். பெண்ணாகப் பிறந்தவள் படிக்கவும், வேலைக்கும் என்று கிளம்பி விட்டால் வீடு வந்து சேரும் வரையில் எத்தனை பேருடைய பார்வைகளுக்கும் அருவருப்பான சிந்தனைகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. இவர்களுக்குப் பயந்து சதா வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க முடியுமா? பாரதி விரும்பிய புதுமைப் பெண்களாக வாழ வேண்டுமா?

யாழ்ப்பாணத்தில் எங்காவது வெடிச்சத்தங்கள் கேட்டால் போதும் - உடனே மினிவான்கள் அலறி;ப் புடைத்துக் கொண்டு ஓடும். பஸ் ஓட்டங்கள் நிறுத்தப்படும். இப்படியான இக்கட்டான தருணங்களில் ஸ்ரான்லி வீதியில் இருந்து அவளைப் பாதுகாப்பகக் கூட்டிக் கொண்டு போய் வாகனங்களில் ஏற்றி ஊருக்கு அனுப்ப ஒரு புண்ணியவாளன் இருந்தான். அவளோடு ஒன்றாகப் படிக்கும் சேகர் தான் அவன். சேகர் யாழ்ப்பாணத்தில் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றில் நம்பிக்கை கொண்ட அந்த ஸ்தாபனம் தனது எதிர்கால வளர்ச்சிக்காகக் கம்பியூட்டர்விஞ்ஞானப் படிப்பை மேற்கொள்வதற்கு என்று ஸ்காலர்ஷிப் வழங்கியிருந்தது.

வகுப்பில் சேகரும் கமலாவும் போட்டி போட்டுத் திறமைசாலிகளாக விளங்கினார்கள். திறமையும் அழகும் ஒருங்கே அமைந்த சேகரைக் கமலாவும் விரும்பினாள். இருவரும் மனம் விட்டுத் தமது பிரச்சினைகளையும் எதிர் காலத் திட்டங்களையும் ஆராய்ந்தனர். சேகரின் தகப்பனார் ஒரு சலவைத் தொழிலாளி. ஆனால் தான் கஷ்டப்பட்டு மகனைப் படிக்க வைத்து முன்னேறச் செய்தார். பரம்பரைத் தொழிலை அவனுக்குப் பழக்கவில்லை.

கமலாவின் குடும்ப நிலையும் கடும் உழைப்பும் சேகருக்கு நன்கு தெரியும். கமலாவுக்குத் தன் அண்ணனின் புரட்சிகரமான மனப்போக்குத் தெரியும். அம்மா தான் பரம்பரை, மானம், மரியாதை என்று பீற்றிக் கொண்டாலும் நல்ல சிந்தனையாளரும் சிறந்த உழைப்பாளியான சங்கர் தன் விருப்பத்தை நிறைவேற்றுவான் என் நம்பிக்கையுடன் கமலா தன் காதல் செடிக்கு நீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தாள்.

கமலா தன் முன்னேற்றங்கள் பற்றி அவ்வப்போது தமையனுக்கு மறைக்காமல் கடித மூலம் தெரிவித்து வந்தாள். சேகரைப் பற்றியும் ஒளிவு மறைவின்றி எழுதியிருந்தாள். கமலாவின் பற்றியும் நேர்மையான போக்கில் விருப்பம் கொண்ட சங்கர் அவளது மனம் நோகாமல் புத்திமதிகளை எழுதினான். காதலுக்குத் தான் எதிர்ப்பில்லை என்றும் ஆனால் ஆண்களைப் பற்றித் தீர ஆராய்;ந்து சந்தேகமற்ற முடிவுக்கு வந்த பிறகே பெண்கள் தம்மை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் எழுதினான். மற்றச் சகோதரிகளைப் போலவே கமலாவுக்கும் வஞ்சனை இல்லாமல் பணம் தருவதாகவும் இம்முறை ஊருக்கு வந்து கமலாவின் திருமணத்தை நிறைவேற்றிவிட்டு மறுபடியும் குவைத் வந்து உழைத்துக் கடைசியாகவே தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எழுதினான்.

கமலா தனக்கும் சேகருக்கும் கம்பியூட்டர் சயன்ஸ் சம்பந்தமாக வேலைகள் வரும்போது விண்ணப்பம் அனுப்பி உதவும் படி எழுதினாள். சங்கர் குவைத் டைம்ஸ், அராப்படைம்ஸ் என்பனவற்றின் விளம்பரப் பகுதிகளை நிரப்பித் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இலவச விளம்பரங்கள் வரச் செய்தான். குவைத் பத்திரிகைகளின் விளம்பரப்பகுதி நல்ல சேவை செய்து வருகிறது. சங்கர் ஒரு தடவை பேனா நண்பர் பகுதிக்கு விளம்பரஞ் செய்து பிலிப்பைன்ஸ், மணிலா, கடிதங்கள் வந்தன. செலவுக்குப் பயந்து தொடர்புகளை இடையில் நிறுத்தி விட்டான்.

இந்த முறை சங்கர் லீவுக்கு யாழ்ப்பாணம் வந்தபோது முருகேசம்பான் அவனை எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்கவில்லை. கமலாவின் காதல் விவகாரம் அவருக்கும் தெரிந்து ~ஆரோ சாதி குறைஞ்சவனோட யாழ்ப்பாணத்திலை சுத்துறாளாம். உன்ரை அருமைத் தங்கச்சி.. இந்தக் காலத்து; குமரியளைப் பஸ் ஏறிப் படிக்க விட்டால் அவை நல்ல சுகமாக மாப்பிள்ளை பிடிக்கினம்.... பிடிச்சவள் ஒரு ஆனவனாகப் பார்த்துப் பிடிக்க வேண்டாமே.| என்று நெளிக்கத் தொடங்கி வி;ட்டார்.

~அம்மான் கனக்கக் கதையாதையுங்கோ... நீங்கள் சாதிக்காரர் எண்டாப்போலை போன ஆடிக்கலவரத்திலை உங்கட பிள்ளைகளுக்கு அவங்கள் அடிக்காமல் விட்டவங்களே.. எத்தனை தரம் அடி, உதை வாங்கியும் உங்களுக்கு இன்னும் அந்தப் பரம்பரைப் புத்தி போகேல்லை. என்ரை தங்கச்சிக்கு நான் விரும்பின இடத்திலை செய்வன். சேகரின்ரை படிப்பு உங்கட பிள்ளைகள் கூடப் படிக்கேல்லை. நாளைக்கு அவன் வெளிநாட்டிலை போனால் முப்பது முப்பத்தைந்தாயிரம் எண்டு காசை வீசி எறிஞ்சால் நீங்கள் தான் முதல் தேடிப்போவியள்... நரம்பில்லாத நாக்காலே எதையும் கதைக்கலாம். கதையளுக்கும் ஒரு நியாயம் இருக்கவேணும்| சங்கர் பொரிந்து தள்ளினான்.

தரகருக்குச் சப்போட்டாகக் கதைக்க கோவலி; வந்த தாய் மகனுடைய கோபத்தைக் கண்டு மெதுவாக உள்ளே போய் விட்டாள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கோவலி ஒன்றில் கமலா - சேகர் திருமணம் அமைதியான முறையில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்த்திலேயே வாடகை வீடொன்றில் கமலாவுடன் வசித்து வருகின்றான்.

சங்கரின் கிராமத்தில் மழை நன்றாகப் பெய்து நிலமும் மரஞ் செடிகளும் நீர் குடித்து அழகாகக் காட்சி தருகின்றன.

கிராமத்துச் சுவர்களில் புதிய புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் புதிய பரம்பரையினரின் வாசகங்கள் சுவரொட்டிகளாகக் காட்சி தருகின்றன.

காலம் மாறிவிட்டது. மக்களும் எவ்வளவோ மாறி விட்டார்கள். பழைய மரபுகளும் மூடக் கொள்கைகளும் மெல்ல மெல்ல கண்மூடிக் கொண்டு போகின்றன.

முருகேசம்மான் பழைய கோபம் தணிந்து சங்கருடன் மெதுவாகப் பேச்சுக் கொடுக்கிறார்.

~தம்பி.. சகோதரங்களுக்காக உழைச்சு உரமேறின உன்னைப் போல பொடியன்கள் இண்டைக்குக் கனபேர் யாழ்ப்பாணத்திலை இருக்கினம். நீங்கள் மனந் தளராமல் உழைச்சுக் கடைசியில் உங்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொள்ள வேணும்... நீ இந்த ஊரிலே உனக்குத் தோதான ஒரு நல்ல பெட்டையாகப் பார்த்து வைக்கிறேன்....|

~நல்லது அம்மான்... நான் கட்டாயம் திரும்பி வருவன்.. சொன்னதை மறந்து போகாதையுங்கோ...|

சங்கர் மறுபடியும் பயணமாகி விட்டான். விமானம் மறுபடியும் ஊர்ந்து, வளைந்து, நேரான பாதையில் ஓடி மெதுவாக மெதுவாக உயர்ந்து உயர்ந்து உறுமிக் கொண்டே வானத்தில் மிதக்கிறது.