கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  களிமண் பதிவுகள் முதல்
கணனிப் பதிவுகள் வரை
 
 

இ. கிருஷ்ணகுமார்

 

களிமண் பதிவுகள் முதல்
கணணிப்பதிவுகள் வரை
நூலக தகவற்சேமிப்பு ஊடகங்களின் வளர்ச்சிப்போக்குஇ. கிருஷ்ணகுமார் B. A. , A. S. L. L. A.
நூலகம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.


அகிலம் வெளியீடு
1995.

++++++++++++++++++++++

Title : Kaliman Pathivukal Muthal Kananip Pathivukal Varai.
(From Cuneiform Records to Computer Records. Developing
Trends in Library Information Storage Media)
Author : Resaratnam Krishnakumar. B. A., A. S. L. L. A.
Address : Medical Faculty Library. University of Jaffna.
First Edition : 1995
Publisher : Akilam Publishers
07, Ratnam Lane,
K. K. S. Road,
Vannarpannai, Jaffna.
Copyright : Publisher
Printer : Mani Osai,
12, St. Patrick’s Road, Jaffna.
Pages : 42
Price : 35/=

++++++++++++++++++++++

முன்னுரை

ஏனைய விலங்குகளிடையே காணப்படுவது போன்று, மனிதர்களிடையேயும் தொடர்பு கொள்ளல் முறைகள் காணப்படுகின்றன.

ஆனால் ஒர் முக்கிய வேறுபாடு மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது. விலங்குகளின் தொடர்பு முறைகள் உடல்சார்ந்தனவாய் அமைகின்றன. மனிதனிடம் மட்டும்தான், உடல் சார்ந்த தொடர்பு முறைகளோடு, உடலைத்தாண்டிய தொடர்பு முறைகளும் காணப்படுகின்றன. இவ்வுண்மையைத்தான், மக்லூகன் என்ற அறிஞர் ‘ஊடகங்கள் மனிதனின் நீட்சியே’ என வலியுறுத்துகின்றார்.

களிமண்தட்டுத்தொடக்கம் கணனிவரை மனிதன் உருவாக்கிய தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியை வரலாற்றுப் பின்னணியில் மிகத் தெளிவாக நண்பர் கிருஷ்ணகுமார் இச்சிறு நூலில் எடுத்துரைக்கிறார். அவரது தொழில் நூலகத்துறையைச் சார்ந்ததாய் இருப்பதனால், இத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியை நூலகங்களின் வளர்ச்சியோடு மிக நேர்த்தியாக இணைக்கிறார்.

‘புதிய தகவல் ஒருங்கமைப்பு’ எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள நாடுகளுக்கு சாதகமாகவும் மூன்றாம் உலக நாடுகளுக்கு பாதகமாகவும் அமையும்மென்பதையும் அவர் கோடிட்டுக்காட்டத்தவற வில்லை.

தொடர்பு சாதனங்களை வெறும் தொழில்நுட்பக் கண்ணோடு நோக்கலானது என்பதனை தனது நூல்களில் காலஞ்சென்ற ரேமண்ட் வில்லியம்ஸ் வலியுறுத்தி வந்துள்ளார். தொடர்பு சாதனங்களாகவும், தொடர்பாடல் ஓர்வகை சமூக உறவாகவும் நோக்கப்படல் வேண்டுமென அவர் அழுத்துகிறார்.

இயந்திரங்களும் அவற்றின் அடிப்படையான தொழில்நுட்பமும் சமூக உறவுகளின் வெளிப்பாடு என்பதற்கு இங்கிலாந்திலே 19ம் நூற்றாண்டில் (1811-16) கைவினைஞர்கள் மேற்கொண்ட ஓர்கிளர்ச்சி சான்றுபகரும். லட்டைட்ஸ் (டுரனனவைநள) என்றழைக்கப்பட்ட இவர்கள் இயந்திரங்களை அடித்து நொருக்கி இயந்திரமயமாக்கலிற்கு தமது எதிர்ப்பை வன்மையாக வெளிப்படுத்தினர். இவர்களுக்கு முன்னோடியாக, 1799இல் நெட்லட் (நேன டுரன) என்பவர் இயந்திரங்களை அழித்தார். இவர் வழிவந்தவர்களே லட்டைட்ஸ் எனப்பட்டனர். இவர்கள் எய்தவனிருக்க அம்பை நொந்தவர்கள்.

ஏ. ஜே. கனகரத்தினா
51/1 சங்கிலியன் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
28-04-95.

++++++++++++++++++++++

முகவுரை

ஒரு சமூகத்தின் அறிவுச் செயற்பாட்டில் இன்றியமையாத பங்கினை வகித்து வருபவை நூலகங்களாகும். ஒரு நாட்டில் நூலகத்துறை சிறப்பாக வளர்ச்சியுற வில்லையெனில் அந்நாட்டின் அறிவுத்துறை சிறப்பாக வளரவில்லை என்று கொள்ள இடமுண்டு, தகவல் யுகமான இன்றைய காலகட்டத்தில் தகவல் விஞ்ஞானம் முன்னெப்போதையும் விட முக்கியமுடையதாய் அமைகிறது.

இலங்கையில், அதிலும் குறிப்பாக தமிழப்பிரதேசங்களில் நூலகவியல், தகவல் விஞ்ஞானம், தொடர்புத்துறை என்பன சிறப்பாக வளர்ச்சியுறாமைக்கு பல்வேறுபட்;ட அரசியல், பொருளாதார, சமூக காரணங்கள் இருந்தாலும் தமிழில் இத்துறைகள் சார்ந்த வெளியீடுகள் அதிகம் வெளிவராமையும் ஒரு காரணமாகக் கொள்ளலாம். இத்துறைகள் பற்றி ஆங்கிலத்தில் அதிக நூல்களும் கட்டுரைகளும் சர்வதேச அளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வெளியீடுகள் மிகச்சிறிய குழுவினராலேயே வாசிக்கப்படுகின்றன. எனவே இத்துறைகள் பற்றிய ஆர்வம் மக்களிடையே ஏற்பட இவை தொடர்பான வெளியீடுகள், தமிழில் அதிக அளவில் வெளிவர வேண்டும். இந்த ஆவலில் உருவாகியதே இச்சிறு பிரசுரமாகும். தொடர்பு ஊடகங்களின் வளர்ச்சிப்போக்கு பற்றிய இக்கட்டுரை நூலகத்தை முதன்மைப்படுத்தினாலும் நூலகத்துறை சாராத பொதுவாசகர்களுக்கும் பயன்படும் வகையிலேயே எழுத முயன்றிருக்கிறேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

கையெழுத்துப் பிரதியாக ஒரு வருடகாலமாக உறங்கிக்கிடந்த இக்கட்டுரையை பிரசுரமாக்க உதவியவர்கள் எனது மதிப்பிற்குரிய ஆசிரியர். திரு. ஏ. ஜே. கனகரத்தினா அவர்களும் எனது அன்பிற்குரிய நண்பர் இரா. சிவச்சந்திரன் அவர்களுமேயாவர். பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில் மனநிறைவோடு இப்பிரசுர உருவாக்கத்திற்கு பல்வேறு வகைகளில் உதவிய இவ்விருவருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டவனாவேன். இவர்களுக்கு என்மனமார்ந்த நன்றியை செலுத்துகின்றேன். மிகக் குறுகிய காலத்தில் இப்பிரசுரத்தை வெயியிட்ட அகிலம் வெளியீட்டாளர்களுக்கும், மிக அழகுற அச்சிட்டுத்தந்த “மணி ஓசை” அச்சக உரிமையாளர் திரு. ஜோசப் பாலா அவர்களுக்கும் எனது அன்பான நன்றி.

மருத்துவபீட நூலகம் இ. கிருஷ்ணகுமார்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்.
30-04-95.

++++++++++++++++++++++

களிமண் பதிவுகள் முதல்
கணனிப் பதிவுகள் வரை


நூலக தகவற் சேமிப்பு ஊடகங்களின் வளர்ச்சிப்போக்கு

“ஒரு புதிய ஊடகம் (Medium) பழைய ஊடகத்தின் ஒரு சேர்கையாக ஒருபோதும் அமையாது. இது பழைய ஊடகத்தை அமைதியாகவும் இருக்க விடாதது மட்டுமன்றி தனது புதிய வடிவத்தையும் உறுதிநிலையையும் அடையும்வரை பழைய ஊடகத்தின் மீதான தனது அழுத்தத்தையும் விடுவதில்லை”
Marshall Mc Luhan (1966)
Understanding Media.

இன்றைய உலகம் தகவல்களால் ஆளப்படுகிறது. தகவல் வெறுமனேசெய்தி என்ற நிலையிலிருந்து “தகவலே அதிகாரம்” என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. பொருளாதாரம், அரசியல், கலாசாரம், கல்வி, இராணுவ வல்லமை எனப்பல நிலைகளில் தகவல்களில் ஆதிக்கம் தவிர்க்கமுடியாதவாறு நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது. தகவல், தொடர்புத் தொழில் நுட்பத்தின் மிக வேகமான வளர்ச்சி நிலையே இதற்கான காரணமாகும். குறிப்பாக கடந்த மூன்று தசாப்தங்களில் தகவல், தொடர்புத் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுவரும் கட்டுப்படுத்தமுடியாத வளர்ச்சி உலக சமூக கட்டுமானத்தில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுவரும் இம் மாறுதல்கள் தேசிய எல்லைகளைக் கடந்து செயற்படத் தொடங்கிவிட்டன. ஒரு சமூகத்தின் தொடர்பு ஊடகங்களையும், அதன் வழிமுறைகளையும் பற்றிய அறிவின்றி அச்சமுகத்தின் சமூக கலாசார மாறுதல்களைப் புரிந்து கொள்ள முடியாது என ஊடகத்துறை நிபுணரான மார்சல் மைக்லுகான் கூறுவதை இங்கு மனங்கொள்ளுதல் அவசியம்.

தகவல், தொடர்புத் தொழில்நுட்பம் துரித வளர்ச்சிநிலையை அடைந்துவரும் இன்றைய காலகட்டத்தில் ‘தகவல் யுகம்’ ‘இலத்திரனியல் யுகம்’ ‘சிலிக்கன் யுகம்’ எனப் பல்வேறு பதங்களால் (குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில்) அழைக்க முற்படுகின்றனர். இலத்திரனியல் தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்கான காரணம். மனித அறிவினைப் பதிவுசெய்து காவிச் செல்லும் ஊடகங்களிலும் புதிய மாறுதல்களை இலத்திரனியல் தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது. பாரம்பரிய இயந்திர அச்சு வெளியீடுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் வெளியீடுகள் (நுடநஉவசழniஉ Pரடிடiளாiபெ) உருவாகத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தகவலும் (ஐகெழசஅயவழைn) தொடர்பும் (ஊழஅஅரniஉயவழைn) ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை. இவையிரண்டும் தொடர்நிகழ்வுகளுக்குட் பட்டவைகள். ஒழுங்கு படுத்தப்படாத தரவுகள் (னுயவய) பாவனைக்குரிய வடிவத்தைப் பெறும் போது தகவல்களாக (ஐகெழசஅயவழைn) உருவெடுக்கின்றன. இந்தத் தகவல்களின் முதிர்ச்சி நிலையே அறிவாகும். (முழெறடநனபந) . “தரவு”, “தகவல்”, “அறிவு” என்பன சாதாரண பொதுமக்கள் தொடக்கம் ஆய்வாளர்கள் வரை வௌ;வேறு அர்த்தப்பயன்பாட்டின் உபயோகிக் கப்பட்டாலும் இக்கட்டுரை இவற்றைப் பொதுமைப்படுத்தி நூலக தகவற் சேமிப்பு ஊடகங்களுடன் தொடர்பு படுத்தியே நோக்குகின்றது.

“எதையாவது தொடர்புறவைக்கும் சாதனம் ஊடகம் எனப்படும்” என்று தகொன்சைஸ் ஒக்ஸ்போட் அகராதி (வுhந ஊழnஉளைந ழுஒகழசன னுiஉவழையெசல ) கூறுகிறது. ஆனால் ஊடகங்கள் என்ற எண்ணக்கருவிற்கு கூடிய பொருத்தமான கருத்தை உலகிற்கு முதலில் தந்தவர் மைக் லுகானே. தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களால் உருவாகும் புதிய ஊடகங்கள் மனிதனது புலனுறுப்புகளினதும், ஏனைய உறுப்புக்களினதும் நீட்சியே எனத் தனது ருனெநசளவயனெiபெ ஆநனயை : நுஒவநரளழைளெ ழக ஆயn (1966) என்ற நூலில் வரையறுத்துக் கூறுகிறார். உதாரணமாக செவி;ப்புலத்தின் நீட்சியாக வானொலி, பார்வைப் புலத்தின் நீட்சியாக புகைப்படம், பாதங்களி (வேகத்தின்) நீட்சியாக சில்லு, அதைத் தொடர்ந்து துவிச்சக்கரவண்டி மேலும் நீட்சியாக ஆகாயவிமானம் எனச் சிந்தனையைத் தூண்டும் வகையில் விளக்கிச் செல்கிறார். மைக் லுகான் கூறும் அடுத்த முக்கியமான கூற்று “உலகக் கிராமம்” (“புடழடியட ஏடைடயபந”) என்ற கருத்தாகும். ஊடகங்களின் விரைவான கட்டுப்படுத்தமுடியாத வளர்ச்சியால், உலகம் கைப்பிடிக்குள் அடங்கும் ஒரு கிராமமாக சுருங்கி வருகிறது எனக் கூறுகிறார். மைக் லுகானின் மேற்கூறிய இரு கருத்துக்களும் ஊடகம் பற்றிய அறிவினைப் பெற முயல்வோருக்கும் வழிகாட்டிகளாக அமைகின்றன.

பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாகவும் மக்களுக்கு தகவல்கள் சென்றடைகின்றன. (உதாரணம்: அச்சு வெளியீடு, ஒலிபரப்பு, ஒளிபரப்பு) சமூகத்திற்கு தகவல் வழங்கும் அமைப்புக்களில் நூலகங்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. அதாவது மனித இனத்தின் தொகுக்கப்பட்ட அறிவினை (பிரதானமாக எழுத்து வடிவ பதிவுகளை) சேகரித்து, ஒழுங்;;குபடுத்தி, பாவனைக்கு வழங்கி வருவனவே நூலகங்களாகும். மனித அறிவினைப் பதிவு செய்து காவிச் செல்லும் ஊடகங்கள் வரலாற்றிற்கு முற்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை பல மாறுதல்களை பெற்றுள்ளமையை நாம் அறிவோம். நூலகங்கள் இவ்வூடகங்களின் வளர்ச்சி நிலைகளை தேவைக்கேற்ப உள்வாங்கி இன்றுவரை இறவாது இயங்கி வருகின்றன.

எனவே நூலக தகவற் சேமிப்பு ஊடகங்களின் இன்று வரையிலான வளர்ச்சி நிலை பற்றியும் புதிய தகவற் சேமிப்பு ஊடகங்களின் வருகை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் பார்வையிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறிவுச் சேர்க்கையின் சுவடுகள்.

மனிதர் பூமியில் தோன்றிப் பல மில்லியன் வருடங்களானாலும், பேச்சு மொழியை அதன் ஆரம்ப நிலையில் (Pசiஅவைiஎந குழசஅ) பயில முயன்றமை சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்புதான் எனக் கருதப்படுகின்றது. மனிதர் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டமையே மனிதரை நாகரீக வளர்ச்சிக்கு இட்டுச் சென்ற முக்கிய நிகழ்வாகும். எனவே மனித அறிவு பற்றிப் பேசப்புகுமுன். மொழிபற்றியும், குறிப்பாக எழுத்துப் பற்றியும் பேசவேண்டியது அவசியமாகும். ஊடகங்களின் வளர்ச்சி அடிப்படையில் மனித அறிவின் வளர்ச்சி நிலைகளைப் பொதுவாக நான்கு காலகட்டப் பிரிவுகளுள் அடக்கலாம். (ளுஉhசயஅஅஇ று. 1981இ P. 205) அவையாவன:

1. அடிப்படைத் தேர்ச்சி நிலை (வுhந டீயளiஉ ளுமடைட).
2. வாசிப்பு யுகம் (யுபந ழக சுநயனiபெ).
3. ஒலியினதும் காட்சியினதும் யுகம் (யுபந ழக ளுழரனெ யனெ ளுநநiபெ)
4. இலத்திரனியல் யுகம் (நுடநஉவசழniஉ யுபந)

அடிப்படைத் தேர்ச்சிநிலை

எழுத்தறிவுக்கு முற்பட்டகால (Pசந-டவைநசயவந) மனிதர் அக்காலத் தேவையை ஒட்டி தமக்குத் தேவையான கருவிகளை உருவாக்கி அவற்றைக் கையாளப் பழகியதோடு பேச்சு மொழியையும் பயிலத் தொடங்கினர். சில மானிடவியலாளர்களின் கருத்துப்படி சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே பேச்சுமொழி அறிவு வளர ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டாலும், இதுபற்றி ஆதாரபூர்வமான சான்றுகள் கி. மு. 4000 வரை எதுவுமில்லை. (னுந குடநரசஇ டு. ஆ. இ ரூ னுநnnளை நு.நு. 1988இ p 33) ஆனால் எழுத்தறிவுக்கு முற்பட்டகால மனிதர் தமது அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் சென்றவைகளில் மிக முக்கியமானவை குகை ஒவியங்களே. வேட்டையாடலுடன் தொடர்புடைய மிருகங்கள், ஆயதங்கள், குறியீடுகள் குறித்த ஓவியங்களாக இவை கலைத்திறனுடன் படைக்கப்பட்டவை. தெற்கு ஐரோப்பாவிலும், ஆசியாவின் பல பாகங்களிலும் வாழ்ந்த குறோ – மக்னோன் (ஊசழ – ஆயபழெn) மக்கள் கூட்டத்தால் வரையப்பட்ட இக்குகை ஓவியங்கள் தென் ஸ்பெயினிலுள்ள அல்டிமிரா (யுடவiஅசைய) பிரான்சிலுள்ள லாஸ்கோ (டுயளஉயரஒ) போன்ற குகைகள் உட்பட 250 குகைகளில் உலகெங்கும் காணப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. ஓவியங்களாகவும் குறியீடுகளாகவும் வரையப்பட்ட இவை 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதன் பற்றிய தகவற் களஞ்சியமாகும். இன்றைய அர்த்த்தில் மொழி ஒரு தகவற் பரிமாற்ற ஊடகம் எனக்கொண்டால், இக்குகை ஒவியங்களுக்கும் அதேபண்பு இருப்பதைக் காணலாம். எனவே வரைதல் மூலம் அடுத்த தலைமுறைக்கு தகவற் பரிமாற்றத்தை ஒவியனே மேற் கொள்ளுகிறான். ஆனால் சுமேரியரின் ஆப்பு எழுத்துக்களின் (ஊழநெகைழசஅ) தோற்றத்துடன் (கி. மு. 5000 – கி. மு. 25000) அசாதாரண ஒவியத்திறமையிலிருந்து நீங்கிச் சாதாரண நிலையில் குறியீட்டினூடாக தகவல் சொல்லப்படும் நிலை உருவாகியது.

ஒளிச்சைகை, ஒலிச்சைகை, உடற்சைகை என்பவற்றினூடாக பேச்சுமொழி வளர முடிந்தாலும், ஒரு நிறைவான எழுத்து வடிவை. அதாவது குறிப்பிட்ட ஒலிவடிவத்திற்கேற்ப அகரவரிசையுடன் கூடிய வரிவடிவத்தைப் பெற பல ஆயிரம் ஆண்டுகள் சென்றன. இந்த வரிவடிவ எழுத்துக்களின் தோற்றமே மனிதவரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாகும். இது குறித்து ஸ்கிராம் (ளுஉhசயஅஅஇ று.இ 1981) என்பவரது கருத்தைக் குறிப்பிடல் இங்கு பொருத்தமானதாக அமையும்.

“மொழி மனிதனின் மிகப்பெரிய சாதனை எனக்கொண்டால் அவனது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அமைவது எழுத்தாகும். எழுத்தின் கண்டுபிடிப்பு சக்கரத்தின் கண்டு பிடிப்பிலும் பார்க்க உயர்வானது மட்டுமன்றி இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சியத்திலும் பார்க்க மேன்மையானது. நிய+ட்டனின் கணித கணிப்புகளை விடவும், தொலைபேசி, சலனப்படம், ஏன் கணனிகளின் கண்டுபிடிப்புகளை விடவும் உயர்வானது. காரணம் மனிதனின் நினைவுகளை எழுத்துக்கள் வெளிப்படுத்தின. இதுவரை காலமும் ஒலிச்சைகை, ஒளிச்சைகை மூலம் மட்டுமே தொடர்பு கொண்ட மனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புச் செயற்பாட்டை எழுத்து அறுத்தெறிந்தது. எழுத்தானது காலத்தையும் வெளியையும் வென்று மொழிக்கும், சித்திரத்திற்கும் பாலமாகியது”

இந்த எழுத்துக்களின் தொகுப்பே நூல்கள். இவ்வெழுத்துக்கள் என்ன வடிவில் அமைந்திருந்தபோதிலும் (பண்டை சுமேரியரின் ஆப்பு எழுத்துப் பதில்கள் தொடக்கம் இன்றைய கணனியின் இலத்திரன் எழுத்துப் பதிவுகள் வரை) இவை பேணப்பட்டு. பண்பாட்டிற்கு வழங்கப்படும் இடங்களே நூலகங்கள். நூலகங்கள் மனித இனத்தின் தொகுக்கப்பட்ட அறிவினைக் காலத்திற்குப் பொருத்தமான ஊடகங்களில் பாதுகாத்துப் பாவனைக்கு வழங்கிவருகின்றன. இச்செயற்பாடு மனித இனத்தில் தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்துள்ளது.

கி. மு. 4000 ஆண்டளவில் சுமேரியர்கள் ஈரமான களிமண்ணைத் தட்டையாக்கி கூரான குச்சியால் முக்கோணவடிவங்களில் குறியீடுகளாகத் தமது செய்திகளை எழுத ஆரம்பித்துவிட்டனர். ஈரமான களிமண்தட்டு வேகவைத்துக் கடினமாக்கப்பட்டது. கல்லின் தமது தகவல்களைப் பதிவு செய்வதிலும் பார்க்க, இம்முறை சுலபமானதாகவும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் காவிச் செல்லப்படக் கூடியதாகவும், அதனால் முன்னேற்றமானதாகவும் இருந்தது. சுமேரியர்களின் பிற்பட்டகால களிமண்தட்டுப் பதிவுகளில் பொருட்களின் அட்டவணைகள், சட்டங்கள், சடங்குகள் பற்றிய பதிவுகள் மட்டுமன்றி, இலக்கியங்கள் எனக் கருதப்படக் கூடிய அரசர்களின் வீர வாழ்;க்கை போன்றனவும் இடம்பெற்றிருந்தன. உலகின் முதற்காவியம் எனக்கருதப்படும் “கில்கமேஷ் காவியம்” (புடைபயஅநளா நுpiஉ) களிமண் தட்டுகளில் பதியப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டிருந்ததை பிற்பட்ட காலத்தில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். அசிரிய மன்னன் அஷர் பனிபல்லினால் (யுளாரசடியnipயட 669 டீ. ஊ. 626 டீ. ஊ) நினவே (Niநெஎநா) என்னுமிடத்திலுள்ள அவனுடைய அரண்மனையிலேயே இவை சேகரித்துப் வேணப்பட்டிருந்தன. இங்கு கிட்டத்தட்ட 22,000 களிமண் தட்டுகள். முறையாக, பாட ஒழுங்குடன் பேணப்பட்டிருந்தன. மனிதவரலாற்றின் முதல் நூலக உருவாக்கம் இது எனக் கருத இடமளிக்கிறது.

கி. மு. 3000 ஆண்டளவில் எகிப்தியரால் புதிய தகவல் சேமிப்பு ஊடகம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நைல்நதிக்கரையோரம் வளர்ந்த பப்பிரஸ் என்ற ஒருவகைக் கோரைப் புற்களை ஒழுங்காக வெட்டி ஒரு புல்லின் ஓரத்தை மற்றப் புல்லின் ஒரத்துடன் இணைத்து ஒட்டினர். பல புற்கள் சேர்ந்து ஒரு தடித்த ஒரத்துடன் இணைத்து ஒட்டினர். பல புற்கள் சேர்ந்து ஒரு தடித்த கடதாசி போன்ற அமைப்பை இது பெற்றது. (பப்பிரஸ் என்ற சொல்லிலிருந்துதான் பேப்பர் என்ற சொல் வந்தது) இவை நீளமானதும், சுருட்டக் கூடியதுமாகும். சுமார் 130 அடி நீளமான பப்பிரஸ் சுருள்களும் பாவனையில் இருந்தன. கோரைப் புற்களாலோ அல்லது தூரிகையாலோ எழுதுவதற்குப் பொருத்தமானதாக இது அமைந்திருந்தது. கி. மு. நான்காம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 700,000 பப்பிரஸ் சுருள்களைக் கொண்ட மிகப் பெரிய நூலகம் கிரேக்க மன்னன் முதலாம் தொலமியால் (கி. மு. 323 – கி. மு. 283) அலெக்ஸான்;திரியாவில் உருவாக்கப்பட்டது. பாடவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்ட நூலகமாக இது அமைந்திருந்தது. எகிப்தின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுள் ஒன்றாக பப்பிரஸ் அமைந்திந்ததும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். கிரேக்கர்களைத் தொடர்ந்து உரோமர்கள் எகிப்தைக் கைப்பற்றியதுடன் பப்பிரஸ் ஏற்றுமதியைத் தடைசெய்தனர். இதனால் எகிப்துக்கு வெளியே புதிய ஊடகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியது.

கி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் ஆட்டுத்தோலை நன்கு பதப்படுத்தி அவற்றில் எழுதத் தொடங்கினர். பண்டைய கிரேக்க இராசதானியாக இருந்த பெர்காமம் (Pநசபயஅரஅ) என்னும் இடத்தில் 200,000 தோற்சுருள்களைக் கொண்ட நூலகம்; ஒன்று அமைந்திருந்தது.

எனவே அசையும் தன்மையற்ற கல்லில் தனது நினைவுகளைப் பதியத் தொடங்கிய மனிதர், பின் எடுத்துச் செல்லக் கூடிய, ஒப்பீட்டளவில் சுலபமாக எழுதக்கூடிய, ஆனால் உடையக்கூடிய களிமண் தட்டிற்கு மாறி, பின்பு அவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஒரளவு காகிதத்தை ஒத்த பப்பிரஸ{க்கும் பின் பதனிடப்பட்ட தோலுக்கும் தமது ஊடக மாற்றத்தை ஏற்படுத்தினர். பழைய ஊடகங்களில் குறைபாடுகள் உணரப்படும்போது புதிய ஊடகங்கள் உருவாகுகின்றன. பப்பிரஸ் பாரம் குறைந்த இலகுவான ஊடகமானாலும், அவை சுருட்டப்பட்டே பேணப்பட்டன. தேவையான பகுதிகள் மட்டும் காட்சிக்குத் தெரிய மிகுதியானவை சுருட்டப்பட்ட நிலையில் வாசிக்கப்பட்டன. முன்பு தவறவிட்ட விடயத்தைப் பார்க்க வேண்டுமெனில் திரும்பவும் முழுவதும் குலைக்கப்பட்டு வாசிக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைபாட்டை நீக்க எக்கோடியன் வடிவில் இந்நூல்கள் மடிக்கப்பட்டன. தோல்சுருள்கள் (Pயசஉhஅநவெ) ஒன்றின் மேல் ஒன்றாக இன்றைய காகித நூல்கள் வடிவை ஒத்த (ஊழனநஒ) வகையில் கட்டப்பட்டு வாசிக்கப்பட்டன. இன்றைய நூலை உருவாக்கலில் ஒரு முக்கிய படிநிலையாகும்.

கீழைத்தேய நாடுகளில் மரப்பட்டைகள், ஒலைகள், கல், செம்புத் தகடுகள், பட்டுத்துணிகள் என்பவற்றில் கூரான கருவிகொண்டு எழுதினார். சீனர்கள் மூங்கில் பட்டைகளிலும் மரப்பட்டைகளிலும், பட்டுத்துணிகளிலும் எழுதினர். வடஇந்தியா, தமிழ்நாடு, இலங்கை, பர்மா முதலிய நாடுகளில் ஒலைச்சுவடிகளில் அறிவைப் பதிவு செய்தனர். தமிழர் பனை ஒலைகளையும், சிங்களவர் தலிபத் ஒலைகளையும் தமது பிரதான தகவற் சேமிப்பு ஊடகமாக கொண்டனர். ஓலைகள் ஓழுங்காக நறுக்கப்பட்டு இருபுறமும் மெல்லிய மரப்பலகைகள் பொருத்தப்பட்டு நடுவில் துளையிடப்பட்டு நூலால் ஒழுங்குசேர கட்டப்பட்டு நூலை ஒத்தவடிவில் பாதுகாக்கப்பட்டன. இதைவிட கல்லிலும், செப்புத் தகடுகளிலும் அரசர்கள் தமது செய்திகளைப் பதிவு செய்தனர். கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், செப்பேடுகள் என இவை அழைக்கப்பட்டன.

வாசிப்பு யுகம்

எழுத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து எழுதியவை வாசிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியது. பலரால் வாசிக்கப்பட வேண்டுமெனில், எழுதப்பட்ட விடயங்கள் பிரதி செய்யப்பட வேண்டும்@ முறையாகப் பேணப்படாவிட்டால் இயல்பாகவே அழியும், ஊறுபடும் தன்மையுள்ள ஊடகங்களாக தோல்பப்பிரஸ், மரப்பட்டை, ஒலை போன்றவை அமைந்திருந்தமையும் பிரதி செய்யப்படவேண்டிய அவசியத்தை உருவாக்கின.

பிரதியெடுக்கும் கலை முதலில் வளர்ந்த நாடு சீனா ஆகும். கி. பி 105இல் சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. கி. பி. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் சீனர்கள் மரப்படிமங்களில் எழுத்துக்களையும் தெய்வப் படங்களையும் செதுக்கியமையைக் கொண்டு காகிதத்தில் பிரதி எடுக்கும் நிலையை அடைந்துவிட்;டனர். இதைவிட களிமண், மரம் போன்றவற்றில் தனித்தனியாக அச்சுக்களை உருவாக்கி அசையும் அச்சை (ஆழஎயடிடந வலிந) முதலில் உலகிற்கு வழங்கியவர்களும் சீனர்களே. சீனர்களின் சித்திர எழுத்துகள் அசையும் அச்சுக்குப் பொருத்தமானதாக அமையாதபடியால் இக்கலை மேலும் வளர்த்தெடுக்கப்படாமல் சீனர் சுவர்களுக்கு உள்ளேயே நீண்டகாலம் இருந்தது. ஒருவாறாக காகிதத் தொழில் நுட்பம் 12ம் நூற்றாண்டளவில் அராபியர் ஊடாக ஸ்பெயினை அடைந்து காகிதத் தொழில் ஐரோப்பாவில் வளர ஆரம்பித்தது. இருந்தாலும் மத்தியகால ஐரோப்பாவில் மிருகத் தோலிலிருந்து காகிதத்திற்கு நூல்கள் மாற நீண்டகாலம் எடுத்தது. ஜொகான் குட்டன் பேர்க்கின் (துழாயnn புரவநசnடிநசப) முதல் அச்சுநூல் 1455இல் (42வரி பைபிள்) மிருகத்தோலிலேயே அச்சிடப்பட்டமை இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

வாசிப்பு யுகத்தில் ஏற்பட்ட முக்கிய ஊடக மாற்றம் என்னவெனில் கையெழுத்துப் பிரதி வடிவில் உருவாக்கப்பட்ட நூல்கள் இயந்திரம் மூலம் அச்சிடும் நிலையை அடைந்தது தான். மிருகத்தின் தோல்களில் மிகுந்த மனித உழைப்புடன் மத்தியகால மடாலயங்களில் மதகுருமார் கையாற்செய்து வந்த நூற்பிரதியாக்கற்பணி முடிவுற்று காகிதத்தில் பலநூறு பிரதிகள் செய்யும் நிலைக்கு நூல் உருவாக்கம் வளர்ந்தது. ஜெர்மனியில் மெயின்ஸ் நகரில் ஜொகான் குட்டன் பேர்க்கினால் 1445 -1450 காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட அசையும் அச்சினாலான அச்சுப்பொறியும் (ஆழஎயடிடந வலிந Pசiவெiபெ அயஉhiநெ) அதனைத் தொடர்ந்து அச்சுக்கலையில் ஏற்பட்ட வளர்ச்சியும் மனித நாகரிகத்தின் மற்றுமொரு திருப்பு முனையாகும்.

வாய்மொழி மரபு வாசிப்பும்
எழுத்தறிவு மரபு வாசிப்பும்

இந்தச் சந்தர்ப்பத்தில் வாசிப்பின் தன்மை மாற்றங்கள் பற்றிக் குறிப்பிடுதல் அவசியம். வாசிப்பு அதன் தன்மையில் அச்சு நூல்கள் வருவதற்கு முன்பும் பின்பும் வேறுபட்டிருந்ததை இங்கு நோக்கவேண்டியதவசியம். அச்சு நூல்கள் வருவதற்கு முன்பு சமூகத்தின் பிரதான தொடர்பு முறையாக வாய்மொழி மரபே பேணப்பட்டு வந்தது. எனவே வாசிப்பு என்பது உரத்த வாசிப்பாகவே மத்தியகால ஐரோப்பாவிலும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் இடம் பெற்றன. வரிவடிவத்தை எட்டாத பல பேச்சு மொழிகளைக் கொண்ட ஆபிரிக்க நாடுகளில் வாய்மொழி மரபு இன்றும் கூட செல்வாக்குள்ள தொடர்பு முறையாக அமைந்துள்ளதைக் காணலாம். வாய்மொழிமரபு வாசிப்பு இசையுடனும் அபிநயத்துடனும் கூடியது. மத்தியகால ஐரோப்பாவின் மொழியும் இலக்கியமும் கிட்டத்தட்ட எமது கால திரைப்பட அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒத்ததாகவே அமைந்திருந்தன. இதுபற்றி ஆஉ. டுராயn (1968பக். 87) தனது புரவநnடிநசப புயடயஒல என்ற நூலி;ல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ஒரு ஆசிரியன் தனது படைப்பு நல்லதா கூடாததாக என்பதை பார்வையாளர்கள் மீது பரீட்சித்துப்பார்த்தே அறிந்து கொள்வான். ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது பின்பற்றிச் செய்வோரால் (ஐஅவையவழசள) தொடரப்படும். பார்வையாளனுக்கு வேண்டியது ஒரு கதையே. கதை அக்கால விதிப்படி, குரலாலும் சைகையாலும் கூடிய பாத்திரச் சித்திரிப்பினை கதை சொல்பவனிடமே விட்டுவிட்டது”

வாய்மொழி மரபின் மற்றொரு முக்கிய பண்பு உரத்த வாசிப்புடன் கூடிய மனனம் செய்தலாகும். வாய்மொழி மரபில் வந்த இந்திய மாணவர்களால் பாடநூல்களை மனத்தால் படித்து வார்த்தைக்கு வார்த்தையாக தமது பரீட்சைகளில் வெளிப்படுத்த முடிந்தது. “புனித” சமய நூல்களும் இவ்வாறே மனனம் செய்யப்பட்டன. சிலவேளை இருக்கு வேதத்தின் சகல ஒலைப்பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் தொலைந்து விட்டால் கூட, எதுவித தவறுமின்றி அட்சரசுத்தமாக அதை வாய்மொழி மரபுமூலம் இன்றும் திருப்பிப் பதிப்பிக்க முடியும். புராண படனம், கதாகாலேட்சேபம், நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள், நாட்டுக்கூத்து போன்ற வாய்மொழி மரபு வடிவங்கள் இன்றும்கூட முழுமையாக அழியாது எமது பிரதேசங்களில் பேணப்பட்டு வருதலை இங்கு நினைவுகூருதல் பொருந்தும். “ஒரு முதியவனின் இறப்பு தீக்கிரையாகும் ஒரு நூலகத்தை ஒத்தது” என இன்றுவரை நிலவிவரும் ஆபிரிக்க பழமொழியினூடாக வாய்மொழிக் கலாசாரத்தின் மனித பெறுமதியை புரிந்துகொள்ள முடியும்.

கட்புல செவிப்புல சாதனங்கள் தோன்றும்வரை உலகிலே பல பாகங்களிலும் இறவாது இன்றும் தொடர்ந்துவரும் வாய்மொழி மரபுப் படைப்புகளை தகவற் செயற்பாட்டிற்காக களஞ்சியப்படுத்த முடியாதிருந்தது. கட்புல செவிப்புல சாதனங்களின் வளர்ச்சியின் பின்பே இவற்றை நூலகங்களிலும், ஆய்வுநிறுவனங்களிலும் களஞ்சியப்படுத்தி தகவற் பரவலாக்கம் செய்ய முடிந்தது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறாக மேற்கில் மறுமலர்ச்சிவரை செல்வாக்கு பெற்று விளங்கிய வாய்மொழிக் கலாசாரத்தின் கல்வி அறிவு நடவடிக்கைகள் உரத்த வாசிப்பு, இசை, மனனம் செய்யும் தன்மை, அபிநயம் என்பவற்றைக் கொண்டதுடன் குறுகிய இனக் குழுநிலைப்பயில்வாகவும் அமைந்திருந்தது. வாய்மொழி மரபில் அடிப்படைப் பண்புகளை உற்றுநோக்கின் கீழ்வருவன புலனாகும். அதாவது வாய்மொழி மரபானது செவிப்புலம் சார்ந்ததாகவும், பற்றுள்ளதாகவும், ஆள்நிலைப்பட்டதாகவும். சுட்டிப்பானதாகவும், நெகிழ்ச்சியானதாகவும், சுழல் போக்குள்ளதாகவும், உயர்வு நவிற்சியுள்ளதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆனால் அச்சுயந்திரத்தின் வருகையும் அதனூடாக உருவாகிய எழுத்தறிவு மரபும் மேற்குறிப்பிடப்பட்ட பண்புகளுக்கு முற்றிலும் எதிரான பண்புகளைக் கொண்ட புதிய யதார்த்தத்தைத் தோற்றுவித்தது. இன்று உலகெங்கும் ஆதிக்கம் செலுத்திவரும் அச்சு நூல்களின் வரலாறு 1445-1450 காலப்பகுதியில் ஜொகான் குட்டன் பேர்க் உருவாக்கிய அசையும் அச்சுகளைக் கொண்ட அச்சுப் பொறியிலிருந்தே ஆரம்பமாகியது. இவரால் உருவாக்கப்பட்ட மரத்தினாலான அச்சுயந்திரம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக அடிப்படை மாறுதல்கள் எதுவுமின்றி தொடரப்பட்டது. பதிப்பிக்கப்பட்ட நூல்களும் மத்தியகால கிறிஸ்தவ சமய நூல்களே ஆனால் மின்சாரத்தின் வருகையைத் தொடர்ந்து அச்சுயந்திரத்திலும் அச்சுக்கலையிலும் துரித மாறுதல்கள் ஏற்பட்டன. நீராவி அச்சுப்பொறி, இயந்திரமூலம் நூல்கட்டல், சுழல் அச்சுப்பொறி என்பன 1830 க்குப் பிற்பட்ட காலத்தில் உருவாகிய மாறுதல்களே.

இவ்வளர்ச்சிநிலையால் காகிதத்தில் பெருந்தொகையான நூல்கள் பல்வேறு துறைகளில் அச்சிடப்பட்டன. அச்சுநூல்களின் வருகைக்கு முன்பிருந்த தகவல் ஊடகங்களின் குறைபாடுகள் பலவற்றை அச்சில் வெளிவந்த நூல்கள் தீர்த்து வைக்கும் வகையில் அமைந்தன. அதுமட்டுமன்றி அச்சு வெளியீடுகளின் தோற்றம் முற்று முழுதான புதிய வரலாற்றை உருவாக்கியது. மத்தியகால கைவினைத் தொழில் நுட்பத்திற்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் இடையிலான பரிநிலைக்கோட்டை உருவாக்கி வைத்தது. அசையும் அச்சின் வருகையேயாகும்.

“முதன் முதலாக எழுத்து காவிச்செல்லக்கூடிய ஒரு பண்டப் பொருளாக அதாவது தொழிற்சாலையில் உருவாகும் ஒரு சீரான மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யப்படக்கூடிய, எல்லோராலும் நுகரப்படக்கூடிய பண்டப் பொருளாக உருவாக்கப்பட்டது”
என மைக் லுகான் (ஆஉ. டுராயnஇ ஆ. 1968 p. 124) கூறுகிறார். இந்த உருவாக்கம் இதுவரை இருந்துவந்த கல்விப்பரப்பை விசாலித்தது. கல்வி யாவருக்குமான நிலையை உருவாக்க வழியமைத்தது. கல்வியில் குறிப்பிட்ட வர்க்கத்தினரிடமிருந்து வந்த ஏகபோகம் நீங்க உதவியது லத்தீன் (இந்தியாவில் சமஸ்கிருதம்) போன்ற உயர்குழாம் மொழிகளிலேயே மட்டும் வெளிவந்த கையெழுத்துப் பிரதி நிலை மறைந்து அகரவரிசையுடன் கூடிய ஒலி வரிவடிவ எழுத்துக்களைக் கொண்ட எல்லா மொழிகளிலும் வெளியீடுகள் பெருக ஆரம்பித்தன. இந்த வளர்ச்சி விஞ்ஞானம், தொழில் நுட்பம், சமூக விஞ்ஞானம், சமயம் என எல்லாத்துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தேசிய மொழிகளிலும் வெளியீடுகள்; வளர்ச்சி பெற அது தேசியவாதத்தின் வளர்ச்சியாகியது.

அச்சுநூல்களின் பெருக்கமும் அதனால் உருவாகிய வாசிப்புப்பழக்கம், எழுதும் பழக்கம், ‘வாசிப்புக் கலாசாரம்’இ ‘எழுத்தறிவுக்கலாசாரம்’ என சமூகமதிப்பைப் பெற்றது.

வாய்மொழி மரபில் செவி;ப்புலம் சார்ந்திருந்த வாசிப்புப் பண்பு எழுத்தறிவு மரபில் கட்புலம் சார்ந்ததாக மாறியது. ‘கற்பனை செய்தல்’ என்பது செவிப்புலத்தில் இருந்து கட்புலத்திற்கு மாற உரத்த வாசிப்பும் அபிநயமும் தேவையற்றதாகி விட்டது. எதுகை, மோனை, சந்தம் என்பவற்றின் முக்கியத்துவம் குறைந்து மௌனவாசிப்பிற்கு உரிய கவிதைகள், கட்டுரைகள், புனைகதைகள் உருவாகத் தொடங்கின. மௌனமாக வாசிக்கும் விடயங்கள் தனித்தனிக் காட்சிகளாக மனத்திரையில் ஓடும் நிகழ்ச்சியின் போது வாசகனின் செய்கை ஒரு திரைப்படக் கருவியின் செய்கையை ஒத்ததாகிறது.

எனவே வாசிப்பு யுகத்தின் முக்கிய ஊடகமான அச்சுநூல்களின் தனிச்சிறப்புகளை கீழ்வருமாறு சுருக்கி;க் கூறலாம்.

1. கட்புலம் சார்ந்த நேர்கோட்டு வாசிப்பு முறைமை
2. மீண்டும் மீண்டும் உருவாக்கப்படக்கூடீயமை
3. ஒருசீர்த்தன்மை
4. சுருங்கக் கூறும் முறைமை
5. நேர்போக்கான தன்மை
6. ஆள்நிலைப்படாத தன்மை
7. அறிவு சார்ந்த தன்மை
8. எங்கும் எடுத்துச் செல்லக்கூடியமை.

இதன் விளைவாக எழுத்து தரப்படுத்தப்பட்டது. மனித மொழி உலகளாவிய ரீதியில் பரவியது. அச்சில் உருவாகிய எழுத்துக்கள் காலத்தையும் வெளியையும் வென்று மனித அறிவின் நிரந்தரப் பதிவுகளாயின. நூல்களின் பெருக்கம் நூலகங்களின் பெருக்கமாயிற்று. அச்சு நூல்கள் சுமார் 500 வருடங்களுக்கு மேலாக எந்த விதமான தடைகளுமின்றி சமூகத்தின் ஆதார சக்தியாக விளங்கி வருவதை நாம் அறிவோம்.

அச்சின் வருகைக்கு பின்பே நூலகங்கள் பாரிய வளர்ச்சி நிலையை அடைந்தன. ஆசிரியன் நூல்வடிவில் நூலகங்களில் பேணப்பட வாசகர்கள் நூலகத்தில் அவனைச் சந்திக்கின்றனர். நூல்களின் பெருக்கம், குறிப்பாக உலக யுத்தங்களின் பின்பு பல்வேறு துறைகளில், நூல்கள் வெளிவந்தமை நூலகத்தின் செயற்பாடுகளின் மாற்றத்தினை ஏற்படுத்தின. பொதுசன நூலகம், பல்கழைக்கழக நூலகம், விசேட நூலகம், தேசிய நூலகம் எனப்பல்வேறு வகை நூலகங்களும் அவற்றின் விசேட சேவைகளும் உருவாகத் தொடங்கின.

ஒலியினதும் காட்சியினதும் யுகம்

ஒலியின் நீட்சி

மிகப் பழமையான ஊடகமான மனிதக்குரலை அடுத்த தளத்திற்கு நீட்சியடையச் செய்த கண்டுபிடிப்புக்களாக தொலைபேசியும் (1876), ஒலிப்பதிவுச் சாதனமும் (1878), வானொலியும் (1895) அமைந்தன. இவை குரலின் வீச்செல்லையை விஸ்தரித்தன. குரல் ஒலி காலத்தையும் வெளியையும் வென்றது. தொமஸ் அல்வா எடிசன் ஒலித் தட்டுக்களை உருவாக்கும் போது அவை பொழுதுபோக்கிற்கான இசைத்தட்டுகளாக உருவாகும் என அவர் எண்ணியிருக்கவில்லை. தொலைபேசி அவருக்கு திருப்தி தரவில்லை. ஒலியை நிரந்தரமாகப் பதிவு செய்யக்கூடியதும், காவிச் செல்லக்கூடியதும், திரும்பத் திரும்பத் உருவாக்கப்படக்கூடியதுமான ஒரு ஊடகத்தின் தேவையை உணர்ந்த கண்டுபிடிப்பே அது வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோணியின் தேவையும் அத்தகையதே. கம்பியுடன் இணைந்த தொலைபேசி அவருக்கு திருப்தி தரவில்லை. ஒலித்தட்டுக்களினதும் வானொலியினதும் பிற்பட்டகால சமூகப்பயன் பாடும் தாக்கங்களும் அவற்றின் வேறு பரிமாணங்களே.

மனித அறிவினைக் களஞ்சியப்படுத்தி மீண்டும் மீண்டும் பாவனைக்குத் தரக்கூடிய எல்லா ஊடகங்களும் அறிவுப்பதிவுகள் என்ற அர்த்தத்தில் நூலகத்தை வந்தடைவதே வரலாற்றுப் போக்காகும். இந்தவகையில் வாய்ப்பாடல்கள், உரையாடல்கள், இசைக்கருவிகளின் இசையொலிகள் களஞ்சியப்படுத்தப்பட்ட அறிவாக, இசைத்தட்டு ஒலிப்பதிவுநாடா என்ற வடிவங்களில் நூலகங்களை வந்தடைகின்றன. ஒலியின் நீட்சிக்கு சமாந்தரமாக காட்சியும் நீட்சி பெறும் வகையில் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் உருவாகின.

காட்சியின் நீட்சி

அச்சுயந்திரத்தின் வருகை கையெழுத்துப் பிரதி செய்வோரைத் (உயடடபைசயிhநசள) துரத்தியது போன்று, புகைப்படக் கருவியின் வருகை ஓவியர்களை புதிய தளத்திற்கு போகுமாறு நிர்ப்பந்தித்தது. புறக்காட்சியை வரைந்த ஓவியர்களை மனக்காட்சியை வரையுமாறு நிர்ப்பந்தித்தது. விளைவுகளாக நவீன ஒவியங்கள் உருவாகின.

1839இல் புகைப்படக் கருவியைக்கண்டுபிடித்த வில்லியம் பொக்ஸ் தல்போ (றுடைடயைஅ குழஒ வுயடடிழவ) தனது கருவி பற்றிய அறிமுகக் கட்டுரையை லண்டன் றோயல் கழகத்தில் வாசித்தார். அக்கட்டுரைக்கான தலைப்பைக் கீழ்வருமாறு எழுதினார்.

“ஓவியனுடைய பென்சிலின் உதவியின்றி இயற்கைப் பொருள்கள் தாமாகவே தம்மை வரையும் முறை அல்லது ஒளிப்பட வரைதற்கலை பற்றிய சில குறிப்புக்கள்’

(“ளுழஅந யஉஉழரவெ ழக வாந யசவ ழக phழவழபநniஉ னசயறiபெ ழச வாந pசழஉநளள டில றாiஉh யெவரசயட ழடிதநஉவள அயல டிந அயனந வழ னநடiநெயவந வாநஅளநடஎநள றiவாழரவ வாந யனை ழக யசவளைவ’ள pநnஉடை”)
ஆஉ. டுராயnஇ ஆ. 1966இ p.171.

இதிலிருந்து புகைப்படக் கலையானது ஒவியனையும் அவனது பென்சிலையும் அவனது வழமையான வேலையிலிருந்து நீக்கி விட்டது என்பதை அறியமுடிகிறது. எனவே ஒவியம் நவீன ஒவியமாக அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சிபெற ஆரம்பித்தது. அடுத்த முக்கிய அம்சம் என்னவெனில் குட்டன்பேர்க்கின் அச்சுயந்திர வருகையால் எழுத்து எவ்வாறு ஒருசீர்த்தன்மையையும், நிலையாக களஞ்சியப்படுத்தக்கூடிய தன்மையையும், மீண்டும் மீண்டும் உருவாக்கப்படக்கூடிய தன்மையையும் பெற்றதோ அதே பண்புகளை புகைப்படக் கருவி காட்சிகளுக்குப் பெற்றுத் தந்தது. ஆனால் இவை அசையாத காட்சிகளே. இக்காட்சிகளுக்கு அசைவுத் தன்மையை உருவாக்கித்தந்தவரும் தொமஸ் அல்வா எடிசன்தான். புகைப்படம் திரைப்படமாக நீட்சி பெற்றது. ஆரம்பத்தில் இவை மௌனப்படங்களாக ஒலியற்று இருந்தன. ஆனால் பார்ப்பவர்கள் மனதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின. சாள்ஸ் சப்ளினின் மௌனத் திரைப்படங்களை இத்தருணத்தில் நினைவுகூர்தல் பொருந்தும். பிற்பட்ட காலத்தில் ஒலி, வர்ணம் ஆகியனவற்றைப் பெற்று பூரண நீட்சியை அடைந்ததுடன் மிகவும் சக்தி வாய்ந்த தொடர்பு ஊடகமாக அது வளர்ந்தது.

புகைப்படக்கலையின் வளர்ச்சியில் உருவாகியதே நூலகத்தில் பேணப்படும் நுண்வடிவங்கள் ஆகும். (ஆiஉசழகழசஅள) பாடங்களை அல்லது வரைபுகளை நுண்வடிவில் சிறப்பித்து புகைப்படப் படலங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டனவே நூலகங்களில் காணப்படும் நுண்வடிவங்களாகும். இதன் அடிப்படைத் தொழில் நுட்பம் புகைப்படப் பிரதியாக்கம் சம்பந்தப்பட்டதே. மிக நுண்ணிய வடிவில் எழுத்துக்களும், வரைபுகளும் சேமிக்கப்படுவதால் சாதாரண கண்களால் வாசிக்க முடியாது. விசேட வாசிப்புக் கருவிகள் தேவை. நுண்சுருள் வாசிப்புத் கருவி (ஆiஉசழகடைஅ சுநயனநச), பட எறிகருவி (ளுடனைந pசழகநஉவழச) போன்ற சாதனங்களின் உதவியுடனேயே பயன்படுத்தலாம். இதன் விசேட பண்பு அதிக அளவு தகவல்களைத் தன்னகத்தே உள்ளடக்கும் ஆற்றல்தான். இதன் விளைவாக செய்திப் பத்திரிகைகளை மிகச்சிறிய வடிவில் நூலகங்களில் பேணமுடிகிறது. நியூயோர்க் ரைம்ஸ் 1914-1918 ஆண்டு கால பிரதிகள் அனைத்தும் நுண்சுருள் வடிவில் பிரதிசெய்யப்பட்டு 1938 அளவில் நூலகப்பாவனைக்கு அளிக்கப்பட்டதுடன் இது ஒரு புதிய நூலகச் சேர்க்கையாக உருவாகியது. நமது நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன்னர் தான் இச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

நுண்சுருள், நுண் அட்டை, ஒளிபுகா நுண்அட்டை (ழுpயஙரந ஊயசனள)இ தனிப் படலங்கள் (ளுடனைநள) எனப் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு அளவுகளிலும் நுண்வடிவங்கள் இன்று நூலகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. நுண்வடிவங்கள் ஒரு “தொடர்” ஊடகம் (“ளுநசயைட ஆநனரைஅ) ஆகும். ஒரு தகவலைத்தேடும் போது முற்பகுதித்தேடல், பிற்பகுதித்தேடல் வேண்டப்படுகிறது. இது ஒரு குறைபாடாயினும் அதிக அளவு தகவல்களைக் களஞ்சியப்படுத்தும் ஆற்றல், பாரக்குறைவு, தபாற்செலவு குறைவு, நூலகத்தில் பேணுகையில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாமை போன்ற சிறப்பியல்புகளால் உசாத்துணையின்போதும், உடனடித் தகவற் சேவையின் போதும் பயன்படுத்தப்படுகின்றன. இன்று அநேகமான ஆய்வுச் சஞ்சிகைகள், சாராம்ச – சொல்லடைவுப் பருவ இதழ்கள் போன்றவை நுண்வடிவங்களில் வெளிவருகின்றன.

இலத்திரனியற் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இவ்வூடங்களில் மேலும் வளர்ச்சி நிலையை உருவாக்கியது. தொலைக்காட்சிப்பதிவு நாடாவின் அறிமுகமும் கட்புல செவிப்புல சாதனங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றன. தொலைக்காட்சியின் அடிப்படைத் தொழில்நுட்பம் புகைப்படக்கலை சார்ந்ததல்ல. இலத்திரனியக்கம் சார்ந்தது. இலத்திரனியக்கத்தில் உருவாகும் நுண்புள்ளிகளின் குவிப்பில் உருவாகும் காட்சி தொலைக்காட்சித் திரையில் அசையும். கட்புலத்தை முக்கியமாகவும் செவிப்புலத்தை அதற்கு அடுத்த நிலையிலும் கொண்ட சக்திவாய்ந்த ஊடகம் இது. காட்சியுடனும் ஒலியுடனும் கூடிய மனித அறிவுப்பதிவுகள் தொலைக்காட்சி பதிவு நாடாக்களில் இன்று பதிவுசெய்யப்பட்டு நூலகங்களில் பாவனைக்கு வழங்கப்படுகின்றன. விபரணப்படங்கள், செய்முறையுடன் கூடிய கல்வி நடவடிக்கைகள், வாய்மொழி மரபுப் படைப்புகள் மொழி கற்பிக்கும்;;;; நடவடிக்கைகள் போன்ற பல விடயங்களில் தொலைக்காட்சியும் தொலைக்காட்சிப் பதிவு நாடாக்களும் நூலகங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இலத்திரனியல் யுகம்

கணனியின் வருகை

புகைப்படக்கலை அதிக அளவு களஞ்சியப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட நுண்புகைப்படக்கலையாக (ஆiஉசழிhழவழபசயிhல) வளர்ந்தது. நுண்வடிவங்கள் உருவாகின. நூலகங்களில் பேணப்பட்டன. அச்சுக்கலை வளர்ச்சியைத் தொடர்ந்து காகிதத்தில் அச்சிடப்பட்ட வெளியீடுகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் குவிந்தன. இதைத் தகவல் வெடிப்பு (ஐகெழசஅயவழைn நுஒpடழளழைn) என்று கூறினாலும் இப்பதம் உண்மையில் பொருத்தமற்றது. வெடிப்பு (நுஒpடழளழைn) ஒரு கணநிகழ்வு. ஆனால் இந்த வெளியீட்டுப் பெருக்கம் ஒரு தொடர் நிகழ்வு. எண்ணிக்கையில் மலைபோல் குவியும் இவ்வெளியீடுகளைப் பேணுவதற்கும், அதிலுள்ள தகவல்களை விரைவாக மீட்டெடுப்பதற்கும் வேண்டிய ஒரு புதிய ஊடகத்தின் தேவை உருவாகியது. மனித வலுவினைக் கொண்டு பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த தகவல் மீட்பு நடவடிக்கைகள் (அட்டைப் பட்டியல்கள் உருவாக்கம். சொல்லடைவுச் சேவை, சாராம்ச சேவை) போன்றன திருப்திகரமாக அமையவில்லை. இயந்திரவாக்கம், தன்னியக்கம் வேண்டப்பட்டது.

கணனியின் வருகை இவற்றை பூர்த்தி செய்தது. கணனியின் தொடர்ச்சியான தொழில் நுட்ப வளர்ச்சி பல புதிய ஊடகங்களை உருவாக்கியது. புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பொறுத்தவரை இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்த ஆண்டுகள் மிக முக்கியமானவை.

ஆர்தர். சி. கிளார்க் (யுசவாரச ஊ. ஊடயசமந) செய்மதித் தொலைத் தொடர்பு பற்றிய எதிர்வுகூறலைக் கட்டுரையாகவும், விஞ்ஞானக் கதையாகவும் 1945இல் எழுதினார். மிக அதிக அளவான தரவுகளைக் களஞ்சியப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட கணனி உருவாக்கம் பற்றி வொன் நியூமன் (ஏழn நேரஅயn) 1946 இல் கட்டுரை எழுதினார். 1947இல் பெல் ஆய்வுகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டிரான்சிஸ்டரைத் தொடர்ந்து மிகச் சிறிய அளவில் இலத்திரனியல் பாகங்களை உருவாக்கும் நிலை தோன்றியது. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் 1945இல் வன்னெவர் புஷ் (ஏயnநெஎயச டீரளா) என்ற அமெரிக்கர் மெமெக்ஸ் (ஆநஅநஒ) என்ற ஒரு இயந்திரத்தைப் பற்றிக் கற்பனை செய்து (வுhந யுவடயவெiஉ ஆழவொடல) இல் ஒரு கட்டுரை எழுதினார்.

மெமெக்ஸ் என்பது அவரது எதிர்வுகூறலின்படி பின்வருமாறு அமையும். “ஒருவர் தன்னிடமுள்ள நூல்கள் ஆவணங்கள், தனிப்பட்ட உரையாடல்கள் நினைவுகள் போன்றவற்றைக் களஞ்சியப்படுத்தி வைக்கும்வல்லமையும் தேவையான நேரத்தில் தேவையான விடையங்களை மிகவிரைவாக மீட்டெடுக்கும் வகையிலும் உருவாக்கப்படவேண்டிய இயந்திரம் இதுவாகும். இது ஒருவரது அலுவலக மேசையை ஒத்ததாக அமையவேண்டும். தொலை தூரத்தில் இருந்த இயக்கக்கூடீயதாக ஒரு காட்சித் திரையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கு அமைந்த விதத்தில் ஆளிகளும், நெம்புகளும் அமைய வேண்டும். இதன் ஒரு அந்தத்தில் மிக வளர்ச்சி அடைந்த நுண்படலத்தில் விடயங்கள் அனைத்தும் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்” எனக் கூறிச் செல்கிறார். (டீரளாஇ ஏ. 1945. p.14)

புஷ் ஒரு கணனிப் பொறிவடிவமைப்பு நிபுணர். பொறியியலாளர், ஒரு நிர்வாகி. விஞ்ஞான ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் முதலாவது இயக்குனராக அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டால் (சுழழளநஎநடவ) நியமிக்கப்பட்டவர். இந்நிறுவனம் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆராய்ச்சி, போர் நடவடிக்கைகள் என்பன தொடர்பான விஞ்ஞான முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டது என்பது மிகவும் ஆழமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். அமெரிக்காவின் 6000 விஞ்ஞானிகளுக்குத் தலைமை தாங்கி வழிநடத்திய புஷ் இக்கட்டுரையை 1945இல் எழுதினார் என்பதும் முக்கிய விடயம்.

இவருடைய விஞ்ஞானத் தொலைநோக்கின் விளைபொருள்தான், இன்றைய நவீன கணனிகள். இக்கண்டுபிடிப்புகளின் அரசியல், இராணுவ, பொருளாதார நலன்கள், இவற்றின் மீதான அமெரிக்க அல்லது மேற்குலக ஆதிக்கம் என்பன பிறிதாக நோக்கப்பட வேண்டிய விடயங்கள்.

ஆனால் இக்கண்டுபிடிப்புகள் நூல் வெளியீட்டுத்துறையில் பல மாறுதல்களை ஏற்படுத்திவிட்டன. அச்சு யுகத்தை அதனது இறுதிக்காலத்திற்குத் தள்ளியது. அது தகவல் யுகமாக மாறிவரும் நிலை உருவாகியது.

1960 களிலிருந்து நூலகங்கள் கணனித் தொழில் நுட்பத்தை உள்வாங்கத் தொடங்கிவிட்டன. ஏனைய நிறுவனங்களின் நிர்வாகத்தில் கணனிகள் பயன்படுத்தப்படுவது போல நூலக நிர்வாகத்திலும் பயன்படுத்தப்பட்டது. இரவல் வழங்கல் பட்டியலாக்கம், உசாத்துணைசேவை, நூல் ஈட்டல், பருவ இதழ் கட்டுப்பாடு போன்ற செயற்பாடுகளில் கணனிகள் இயங்கின. இதுவரைகாலமும் காகிதத்தில் பதிவு செய்யப்பட்ட நூலக நாளாந்த அலுவல்கள் இலத்திரனியற் பதிவுகளாக தரவுத் தளங்களாக மாறின. நூலக வலய அமைப்பின் விரிவாக்கத்திற்கேற்ப பிரதேச, தேசிய, சர்வதேச அளவுக்கு அவை விரிவடைந்தன. இந்த விரிவாக்கத்தில் உருவாகியதே நேர்முக தகவல் அமைப்பாகும். (ழுடெiநெ ஐகெழசஅயவழைn நேவறழசம)

நேர்முக தகவல் சேவை (ழுடெiநெ ஐகெழசஅயவழைn ளுநசஎiஉந)

பாரிய கணனிகளில் மிகப்பெரிய அளவில் காந்த நாடாக்களில் தரவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டு நீண்டதூர தொலைத் தொடர்புடன் இணைந்த கணனிகளினூடாக பாவனையாளருக்கு வேண்டிய தகவல்களை தொலைவிடங்களிலிருந்து வழங்கும் முறையே நேர்முக தகவல் சேவையாகும். நேர்முக தகவற் செயற்பாட்டிற்கு மூன்று பிரதான அடிப்படை அம்சங்கள் தேவை. முதலாவதாக இலாபநோக்கற்ற துறைசார் வல்லுனர் அமைப்புக்களால் உருவாக்கப்படும் தரவுத் தளங்கள்@ அடுத்ததாக இத்தரவுத் தளங்களைப் பெற்று பாரிய கணனிகளில் களஞ்சியப்படுத்தி அவற்றைப் பெறும் வழிவகைகளை அறிமுகப் படுத்தி, வர்த்தக ரீதியில் தகவல்களை வழங்கி அதற்கான செலவைப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நேர்முக தகவல் விற்பனையாளர்கள் (ழுடெiநெ ஏநனெழசள); மூன்றாவதாக தரவுத்தள வர்த்தகர்களையும் பாவனையாளர்களையும் இணைக்கும் வலய அமைப்புமுறை என்பனவாகும்.

ஒரு தனியாள் கணனியும் (Pநசளழயெட ஊழஅpரவநச) தொலைபேசி இணைப்பும் கணனியிலிருந்து எண்கள் வடிவில் வரும் தரவுகளை தொலைதொடர்புக்கு மாற்றித்தரும் மொடம் (ஆழனநஅ) என்னும் கருவியும் அடிப்படைச் சாதனங்களாக அமையும். கிட்டத்தட்ட எல்லா சாராம்ச சொல்லடைவுப் பருவ இதழ்களும் வளர்ச்சி யடைந்த நாடுகளில் நேர்முக தகவல் சேவையில் இணைந்து விட்டன. வளர்முக நாடுகளில் தொலைதொடர்புக் கட்டணம் உயர்வாக இருப்பதால் நேர்முக தகவல் சேவை சிரமத்தை எதிர் நோக்குகின்றது. இலங்கையில் 1987இல் இலங்கை வர்த்தக அபிவிருத்தி நிலையத்தால் (ளுசi டுயமெய டீரளiநௌள னுநஎநடழிஅநவெ ஊநவெநச) ஆரம்பிக்கப்பட்ட நேர்முக தகவல் சேவை ஒரு நிமிடத்திற்கு 135 ரூபா கட்டணத்தை வசூலி;க்கிறது. மிக உயர்வான தொலைத்தொடர்புக் கட்டணம் வளர்முக நாடுகளில் ஆய்வாளர்களைத் திகைக்க வைக்கின்றது.

ஆனால் வாசிப்பு நினைவக அடர்த்தித் தட்டின் (ஊனு-சுழுஆ : ஊழஅpயஉவ னுளைஉ சுநயன ழுடெல ஆநஅழசல) வருகை பல பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தது. 1985 இல் வளர்ச்சியடைந்த மேற்குலகில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்;வூடகம் பல சிறப்புத் தன்மைகளைக் கொண்டதுடன் அதிக தரவுகளைக் களஞ்சியப் படுத்தும் ஓரு புதிய சக்திவாய்ந்த ஊடகமாக பெயர் பெற்றது.

வாசிப்பு நினைவக அடர்த்தித் தட்டு
ஊனு-சுழுஆ : ஊழஅpயஉவ னுளைஉ சுநயன ழுடெல ஆநஅழசல)

கட்புல செவிப்புல சாதனங்களின் வளர்ச்சிப் போக்கில் இன்றைய காலகட்டத்தில் உருவாகியிருப்பதே ஊனு-சுழுஆ ஆகும். இவ்வளர்ச்சிப் போக்கை கீழ்வரும் விளக்கப்படம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே உருவாகிய சகல கட்புல செவிப்புல ஊடகங்களின் சிறப்பியல்புகள் பலவற்றை உள்வாங்கிய ஊடகமாக ஊனு-சுழுஆ தோற்றம் பெற்றது. ஒலிப்பதிவுகள் முறையின் உயர்வளர்ச்சி ஊடகமாக ஒளியியல் தட்டுகள் (ழுpவiஉயட னுளைஉள) தோற்றம் பெற்றன. ஒலியை கணனி எண்வடிவில் அதாவது 0உம் 1உம் என்ற துவித எண்களாக (டீiயெசல ரேஅடிநசள)பதிவு செய்து லேசர் ஒளிக் கற்றை மூலம் மீண்டும் வாசித்தறியும் அமைப்பில் (டுயளநச ழுpவiஉயட ஆநனரைஅ) ஒலி அடர்த்தித் தட்டுகள் (ஊழஅpயஉவ னுளைஉ – யுரனழை)1982இல் வரத்தொடங்கின. (சுழடிநசவளஇ ளு. 1992இ p.264)இசையொலியை மிகத்துல்லியமாகப் பதிவு செய்து மீண்டும் பாவணைக்குத் தரும் ஊடகங்களில் ஒலி அடர்த்தித் தட்டுகள் (ஊழஅpயஉவ னுளைஉ – யுரனழை) மிக முன்னணியில் நின்றன. அதேபோன்று அசையும் காட்சிகளும் வீடியோ நாடாவில் பதிவு செய்வதற்குப் பதிலாக வீடியோத்தட்டில் (ஏனைநழ னுளைஉ) பதிவு செய்யப்படலாயிற்று. இவையிரண்டினதும்; இணைவாக உருவானதே ஊனு – சுழுஆ ஆகும்.

ஊனு – சுழுஆஇன் சிறப்பியல்புகள்

அச்சு நூல்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக உருவாகிய புதிய இலத்திரனியல் ஊடகமே ஊனு – சுழுஆ ஆகும். இதன் பிரதான சிறப்பியல்பு அதன் தரவுக்கொள்ளளவு சக்தியே. 550 மெகா பைட் (ஆயபய டிலவநள) எண்ணிலக்க (னபைவையட) தரவுகளை உள்ளடக்கும் தன்மை பெற்றது. அதாவது 150,000 அச்சிடப்பட்ட பக்கங்களை (கிட்டத்தட்ட 250 பெரிய நூல்களை) ஒரு ஊனு – சுழுஆஇல் பதிவு செய்யலாம். 4.72 அங்குலம் அல்லது 120 மில்லி மீற்றர் வி;ட்டம் கொண்ட பிளாஸ்டிக் தட்டுக்களான இவை அடிப்படையில் எண் களஞ்சியங்களே. எழுத்து, ஒலி, படம், வரைபு போன்ற எல்லாமே துவித எண்களில் (0உம் 1உம்) பதிவு செய்யப்பட்டுள்ளன. 1200 (1.25அங்குல) குடழிpல னுளைஉ (நெகிழ்தட்டுக்கு) சமனான தரவுகளை ஒரு ஊனு – சுழுஆஇல் களஞ்சியப்படுத்தலாம். தற்போது நூலுக்குச் சவாலாக எழுந்துவரும் ஊடகமாக ஊனு – சுழுஆ மேற்குலகில் செல்வாக்குப் பெற்று வருகின்றது (டுயரிஇ டு. 1986. p. 47.)

1970இன் பின்பு தனியாள் கணனியின் (Pஊ) பாவனை அதிகரித்தது. ஒரு பாரிய கணனியின் செயற்பாட்டை ஒரு தனியாள் கணனி செய்யுமளவிற்கு அதன் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்ததே இதற்கான காரணமாகும். ஒரு தனியாள் கணனியும், ஒரு ஊனு – சுழுஆ னுளைஉ னுசiஎந உம் போதுமான சாதனங்கள். தனியாள் கணனியின் அதிக பாவனையைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவீழ்ச்சியினால் ஊனு – சுழுஆஇன் பாவனை அதிகரித்தது.

இன்று இலங்கை உட்பட அனேகமான வளர்முக நாடுகளில் ஊனு – சுழுஆ வெளியீடுகள் பாவனைக்கு வரத் தொடங்கியுள்ளன. தேசிய நீருயிர் வள முகாமை (யேவழையெட யுஙரயவiஉ சுநளழரசஉந யுபநnஉல – Nயுசுயு) நூலகம் இலங்கையில் முதன் முதலாக 1987இல் ஊனு – சுழுஆ வசதிகளைப் பெற்றது. ஊனு – சுழுஆ இல் வெளிவரும் யுஙரயவiஉ ளுஉநைnஉந யனெ குiளாநசநைள யுடிளவசயஉவள தரவுத் தளம் இங்கு பயன்பாட்டில் உள்ளது. (ளுயஅயசயதறையஇ சு. 1987. p. 48) இலங்கைத் தேசிய நூலகம் உட்பட சில விசேட நூலகங்களும் தற்போது இந்தவசதிகளைப் பெற்றுள்ளன என அறிய முடிகின்றது. நேர்முக தகவல் சேவை (ழுடெiநெ ஐகெழசஅயவழைn) செலவு கூடிய (பிரதானமாக தொலைபேசிச் செலவு) தகவல் மீட்சி முறையாக அமைந்து உள்ளமையால் தற்போது “நேர்முகத்திலிருந்து தட்டுக்கு” (குசழஅ ழுடெiநெ வழ ழn னளைஉ) என்ற வகையில் தரவுதள செயற்பாடுகள் ஊனு – சுழுஆக்கு மாறிவருகின்றன.

30 தொகுதிகளைக் கொண்ட பிரி;ட்டானிக்கா கலைக்களஞ்சியம், 20 தொகுதிகளைக் கொண்ட ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி (ழுநுனு) உட்பட பெரும்பாலான சாராம்ச சொல்லடைவுப் பருவ இதழ்கள் இன்று ஊனு – சுழுஆஇல் வெளிவருகின்றன.

இரண்டாம்நிலை தகவல் மூலகங்களான அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் சாராம்ச சொல்லடைவுப் பருவ இதழ்கள் மட்டுமன்றி பாடம் சார்ந்த நூல்களும் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. உலகப்புகழ் பெற்ற கீழைத்தேய தத்துவமேதை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கங்கள் (2,000 பக்கங்கள்) அனைத்தும் ஊனு – சுழுஆ இல் வெளிவந்துள்ளன. இதைவிட பகவத்கீதை, புத்தரின் வாழ்வும் போதனைகளும், கொன்பூசியசின் போதனைகள், புனித குர்ஆன் என்பனவும் வெளிவந்துள்ளன. ஊனு – சுழுஆ இல் வெளிவந்துள்ள புனித பைபிளை லேசர் பைபிள் அல்லது இலத்திரனியல் பைபிள் என அழைக்கின்றனர் (ளுவழஎநசஇ ஆ. 1992. 690 – 698) ஊனு – சுழுஆ ஒரு நிறைவான இலத்திரனியற் சாதனமல்ல. பல குறைபாடுகள் கொண்டது. பிரதான குறைபாடு இது வாசிப்பதற்கு மட்டுமேயான ஊடகம் என்பது தான் நாம்விரும்பும் தகவல்களைப் பதிவு செய்யவோ அல்லது எழுதவோ முடியாது. நினைவகத்தில் பதிவுசெய்யப்பட்ட தகவல்களை மட்டுமே வாசிக்கலாம். இக்குறைபாடுகள் நீக்கப்பட்ட வேறு ஊடகங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இன்று நூலகத்தில் ஆதிக்கம் செலுத்திவருவது ஊனு – சுழுஆமே யாகும். ஒளியியல் தட்டுக்கள் வரிசையில் றுழுசுஆ (றுசவைந ழுnஉந சுநயன ஆயலெ) என்னும் எழுதக்கூடிய தட்டுக்களும், எண்ணிலக்க வீடியோதட்டுகளும் (னுபைவையட ஏனைநழ னுளைஉ) நூலகப் பாவனைக்கு வந்துகொண்டிருக்கின்றன. இதை விட இலத்திரனியல் யுகத்தில் வேறும் பல தகவல் ஊடகங்கள் பாவனையில் உள்ளன. இலத்திரனியல் தபால்சேவை (நுடநஉவசழniஉ ஆயடை) தொலைப்பிரதியாக்கம் (வுநடநகயஉளiஅடைந) தொலைச்சந்திப்பு (வுநடந ஊழகெநசநnஉiபெ) தொலைக்காட்சிச் சந்திப்பு (ஏனைநழ ஊழகெநசநnஉiபெ) எனப்பட்டியல் நீண்டு செல்லும். ஆனால் நூலுக்கு அடுத்தகட்ட வளர்ச்சியாகக்கொள்ளக்கூடிய வகையில் வளர்ந்து வருவது ஊனு – சுழுஆ தான்.

அச்சுநூல்களும்
இலத்திரனியல் வெளியீடுகளும்

“ஒரு நுண் கணனியின் எந்தவொரு பயன்பாட்டைப் பற்றியாவது ஒரு கட்டுரை எழுதுவதானால் அது சூறைக்காற்றைப் புகைப்படக் கருவியால் படம் எடுப்பது போன்ற தொரு செயலாகும். அதன் இயல்பு பற்றி சிலவிடயங்களைக் கூற முயலலாம். ஆனால் அதிக அசைவியக்க முள்ள ஊடகமான கணனியின் செயற்பாட்டை அசைவியக்கம் அற்ற புகைப்படம் அல்லது எழுத்துவடிவ கட்டுரை மூலம் முழுமையாக வெளிக்கொணர முடியாது” என வலாசும் கிக்கிளியரானோவும் (றுயடடயஉநஇ னு. P. ரூ புபைடநைசயழெஇ து. 1989இ p. 282) குறிப்பிடுகின்றனர். கணனியின் பிரயோகங்கள் முற்றிலும் புதிய பண்புகளைக் கொண்டவை. கணனியூடாக இயக்கப்படும் இலத்திரனியல் வெளியீடுகளும் புதிய பண்புகளைக் கொண்டவை. இவை ஒருபோதும் பாரம்பரிய அச்சு வெளியீடுகளுக்கு மாற்றீடானவை அல்ல.

அச்சுநூல் ஒரு அசைவியக்கமற்ற (ளுவயவiஉ) ஊடகம். ஆனால் ஊனு – சுழுஆ உம் அதையொத்த இலத்திரனியல் வெளியீடுகளும் அசைவியக்கம் (னுலயெஅiஉ) உள்ளவை. நூல் ஒரு தொடர்வாசிப்புக்குரிய ஊடகம், நேர்கோட்டு வாசி;ப்பு, தொடர் வாசிப்பு என்பன நூலின் பௌதீக அமைப்புடன் இரண்டறக்கலந்த அம்சம். இப் பண்புகள் இலத்திரனியல் வெளியீடுகளில் மீறப்படுகின்றன. இலத்திரனியல் வெளியீடுகளை கணனியில் வாசிக்கும் பொழுது ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு நாம் விரும்பிய வகையில் விரைவாக தாவமுடியும். நவீன ஆய்;வு நடவடிக்கைகளில் குறிப்பாக விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு நடவடிக்கைகளில் இப்பண்பு வேண்டப்படுகின்றது. பாரம்பரிய நூல்களால் பூர்த்தி செய்யப்படமுடியாத இத் தேவையை இலத்திரனியல் ஊடாகங்களே பூர்த்தி செய்கின்றன.

இதைவிட ஒலி, வண்ணப்படம், வரைபு, அசைவுத்தன்மை முப்பரிமாணம் போன்ற மேலதிக ஊடகங்களின் உதவியுடன் ஒரு விடயம் புரியவைக்கப்படும். எனவே நூல்களுக்குரிய பல எல்லைகளை புதிய இலத்திரனியல் ஊடகங்கள் மீறுகின்றன. வாசிப்பு என்பது பாரம்பரிய நூல் வாசிப்பு போன்று ஒரு தனியான செயற்பாடாக அமையாமல் இலத்திரனியல் வெளியீடுகளில் “ஒன்றிணைவதாக” அல்லது “பங்கு பற்றுவதாக” “அனுபவம் பெறுவதாக” “மிகைப்படம்” (ர்லிநசவநஒவ)இ “மிகை ஊடகம்” (ர்லிநசஅநனயை) என்ற புதிய விடயங்களாக தனியாக ஆராயப்பட்டு வருகின்றன என்பதையும் இங்கு குறிப்பிடுதல் அவசியம் (டுயnஉயளவநசஇ கு. று. 1989இ pp 320 – 324)

இலத்திரனியல் யுகமும்
புதிய எழுத்தறிவும்

கணனித் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் எழுத்தறிவு புதிய தளத்திற்கு நகர்ந்தது. கணனிகள் ஆட்சி செய்யும் சமுதாயத்திற்குப் பொருத்தமானதாக பாரம்பரிய எழுத்தறிவு அமையவில்லை. கணனியைக் கையாளுதல், பயனைப் பெறுதல் தொடர்பாக கணனி அறிவு வேண்டப்படுகிறது. இது புதிய எழுத்தறிவு (நேற டுவைநசயஉல) அல்லது கணனி எழுத்தறிவு என அழைக்கப்படுகிறது.

கணனி எழுத்தறிவு இல்லாத ஒருவர் எதிர்காலத்தில் எழுத்தறிவு அற்றவராக (ஐடடவைநசயவந) கருதப்படுவர் என்ற கருத்து மேற்குலநாடுகளில் நிலவிவருகின்றது. (ழேடிந னு. 1984) வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சார்பான ஒரு ஆதிக்கக் கூற்றாக இது இருந்தாலும் “உலக மயமாக்கல்” புதிய “பொருளாதார ஒழுங்கு” “புதிய உலக தகவல் தொடர்பு ஒழுங்கு” என்ற அமைப்புப் பின்னணியில் இலகுவாகப் புறந்தள்ள முடியாதவை என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

கணனி எழுத்தறிவு என்பது அடிப்படையில் எண்ணறிவேயாகும் (ரேஅநசயஉல) இன்று பிரயோகத்தில் இருக்கும் இலக்க கணனிகள் (னுபைவையட ஊழஅpரவநசள) தரவுகளைக் களஞ்சியப்படுத்த துவித எண்களையே (0உம் 1உம்) கையாள்கின்றன. எழுத்து, காட்சி, ஒலி, வரைபு போன்ற எல்லாதுமே துவித எண்களாக மறைகுறியில் பதிவு செய்யப்படுகின்றன.

“எண் எழுத்து இகழேல்” என்றார் ஒளவையார்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்றார் வள்ளுவர்.

எழுத்தறிவுக்கு முதன்மை கொடுத்த நிலையில் அன்று வாழ்ந்த இரு தமிழ்ச் சான்றோரும் தமது அறிவுரைகளில் எண்ணை முதலில் வைத்துப் போதித்துள்ளனர். இன்றும் நவீன கணனி யுகத்திலும் எண் முக்கியத்துவத்தைப் பெற்று வருகின்றது.

இதுவரை காலமும் எழுத்தினூடாகச் சொல்லப்பட்ட அல்லது பரவலாக்கப்பட்ட அறிவு இனி எண்ணினூடாக சொல்லப்படப் போகின்றது என்பதை இங்கு மனங்கொள்ளுதல் அவசியம். இத்தளமாற்றம் எழுத்தறிவுப் பரப்பில் பல தொடர் விளைவுகளை உருவாக்கப் போகின்றது. பாரம்பரிய நூல் வெளியீட்டில் ஒருவர் பலருக்கு சொல்;;லுதல் என்ற நிலை இலத்திரனியல் ஊடகங்களில் பலர் பலருக்குச் சொல்லுதல் என்ற நிலைக்கு மாற்றம் அடைகின்றது. அச்சுநூல் வெளியீட்டில் நூலாசிரியனுக்கு இருந்த சமூக மதிப்பு முன்புபோல் இனி இருக்கமாட்டாது. இதுவரை காலமும் வரிசைக்கிரமமான எழுத்துக்களால் சொல்லப்பட்டவைகள் எழுத்து, ஒலி, படம் என்பவற்றால் சொல்லப்பட வாசிப்பு என்பது ஒரு புதிய வகைப் “பார்த்தல்” ஆகின்றது.

முடிவுரை

நூலகங்கள் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை அவை பலவகையான தகவல் ஊடகங்களைத் தேவைக்கேற்ப பேணி வந்துள்ளன. இன்று அவை இலத்திரனியல் ஊடகங்களைச் சந்திக்கின்றன.

இவ்விலத்திரனியல் ஊடகங்கள் அச்சுநூல்களை முற்றாகத் துரத்திவிட்டு ஒரு காகிதமற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடும் என லான்காஸ்ரர் (டுயnஉயளவநசஇ கு. று. நவ யட 1979) போன்றோர் கருதுகின்றனர். இக்கருத்து விவாதத்திற்குரியது. காகிதமற்ற சமூக உருவாக்கம் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஒரளவு பொருந்தினாலும், வளர்முக நாடுகளுக்கு பொருந்தாது. வளர்ச்சியடைந்த நாடுகளின் சமூகத் தேவையாக உருவாகியதே இலத்திரனியல் ஊடகங்களாகும். மிக அதிக அளவில் தகவல் உருவாக்கம் நடைபெற்றமை@ காகிதத்தில் அச்சிடுதல் மிக அதிக செலவை எடுத்தமை@ நடைமுறையில் இருந்த தகவல் உற்பத்தி விநியோகம் திறமையற்றிருந்தமை என்ற காரணங்களால் இலத்திரனியல் ஊடகங்களின் தேவை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஏற்பட்டன. (டுயnஉயளவநச. கு. று. நவ யட 1979. p. 163).

ஆனால் வளர்முக நாடுகளின் சமூக அமைப்பு முற்றிலும் வேறுபட்டது. வறுமை, வேலையின்மை, இறுக்கமான மத, கலாசார பாரம்பரியம், குறைந்த எழுத்தறிவு, பொருளாதார அரசியல் ஸ்திரமின்மை, விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு வளர்ச்சி குறைவாக உள்ளமை போன்ற பல செயற்பாடுகளின் பின்னணியில் நோக்கப்பட வேண்டிய விடயம் இது. வளர்முக நாடுகள் எல்லாம் ஒரே அளவான வளர்ச்சி நிலையிலும் இல்லை.

காகிதத்தில் அச்சிடுதல் வளர்ச்சியடைந்த நாடுகளில் செலவு கூடிய நடவடிக்கையாக இருக்க வளர்முக நாடுகளில் செலவு குறைந்த நடவடிக்கையாக இருக்கின்றது. இருந்தும்கூட பல வளர்முக நாடுகள் உடனடியாகவே புதிய இலத்திரனியல் ஊடகங்களை உள்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. “உலகமயமாக்கல்” “புதிய பொருளாதார ஒழுங்கு” “புதிய உலக தகவல் தொடர்பு ஒழுங்கு” என்பவற்றின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டிய விடயங்கள் இவை.

இலத்திரனியல் ஊடகங்களின் உற்பத்திகளைப் பொறுத்தவரையில் அவை நிலைமாறு கால கட்ட உற்பத்திகளாகவே கொள்ள முடிகின்றது. புதிய கண்டுபிடிப்புகளும், புதிய ஊடகங்களும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அச்சுயந்திரமும் அச்சு வெளியீடுகளும் இதுவரை காலமும் பெற்றிருந்த உறுதித் தன்மையை புதிய இலத்திரனியல் ஊடகங்கள் இன்னமும் பெறவில்லை. தொழில்நுடபம் விரைவாக மாறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த வேகத்திற்கு பாவனையாளர் பழக்க வழக்கத்துடன் இணைந்த தகவல் அமைப்பையும் ஏற்காத பலர் உலகில் கணிசமான அளவில் உள்ளனர்.

ஆனால் மறுபுலத்தில் சமகால உலகில் அறிவுவளர்ச்சியுடனும் தொழில் நுட்ப வளர்ச்சியுடனும் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் வளர்முக நாடுகளின் நூலகங்களுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. மனித சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியை, புதிய கண்டுபிடிப்புகளைப் புறந்தள்ளுவது கால முரண் செயற்பாடாகும்.

எதிர்கால நூலகங்களில் அச்சு நூல்களும் இலத்திரனியல் ஊடகங்களும் இணைந்தே காணப்படும். மனிதன் பேச்சு மொழியிலிருந்து முன்னேறி வரிவடிவ எழுத்துக்களைக் கண்டுபிடித்த பின்பு பேச்சு மொழியை கைவிட்டுவிட்டானா? தட்டச்சு யந்திரமும் அச்சு இயந்திரமும் வந்த பிறகு பேனாவும் பென்சிலும் முற்றாக வழக்கொழிந்து போனதா? அதுபோன்றே இலத்திரனியல் ஊடகங்கள் வந்தாலும் அச்சு நூல்கள் அவற்றின் தனிப்பட்ட சிறப்பியல்புகளுக்காக விரைவாக அழிந்து போகாது. ஆனால் ஊடகங்களுக்கிடையேயான அழுத்தங்கள் தொடர்ந்தும் இருந்து வரும். எதிர்கால நூலகங்கள் புதிய ஊடகங்களின் வருகைக்கேற்ப புதிய செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

இத்தருணத்தில் ஆசியாவின் நூலகவியல் மேதை கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதனின் “நூலகம் வளரும் தன்மையுடையது” என்ற ஐந்தாவது விதியை நினைவுகூர்தல் பொருத்தமாக அமையும்.

பிற்சேர்க்கை

நூலக வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியமான வரலாற்று நிகழ்வுகள்.

காலம் நிகழ்வுகள்

35,000 முதல் 15,000 குகை ஓவியங்கள். மிருகங்களின் உருவங்களை
குகைகளில் செதுக்குதல்.

15,000 முதல் 10,000 பேச்சு மொழி ஆரம்ப நிலை

10,000 முதல் 5,000 கற்பாறை ஒவியங்களும் கல்லில் செதுக்குதலும்.

5,000 முதல் 2,500 சித்திர வடிவ எழுத்துக்கள் நடைமுறைக்கு வருதல்
(களிமண் பதிவுகள்) பப்பிரஸ் நூல்களின் பாவனை.

2,500 முதல் கிறிஸ்து நூலக உருவாக்கம் ஏற்படத் தொடங்கியமை. ஏதென்சு
பிறப்பு நகரில் பொதுசன நூலகங்கள் உருவாக்கம்.
அலெக்சாந்திரிய நூலகம். உரோம நூலகங்கள்.

கிறிஸ்த்து பிறப்பு முதல் சீனாவில் காகிதத்தில் பதிவுகள் ஆரம்பம்.
1000 அலெக்சாந்திரிய நூலகம் எரிக்கப்படல். முதலாவது
அச்சுநூல் (சீனா)

1000 முதல் 1500 முதலாவது அசையும் அச்சாலான அச்சு நடவடிக்கை
(சீனா). அங்கிலிக்கசின் (டீ. யுபெடiஉரள) கலைக்களஞ்சியம்
உருவாக்கப்படல். ஐரோப்பாவில் காகித ஆலைகள்
தோற்றம் பெறல். குட்டன் பேர்க்கின் அசையும்
அச்சினாலான அச்சுயந்திரம் உருவாக்கப்படல். வத்திக்கான்
நூலகம் ஆரம்பம்.

1500 முதல் 1800 ஜோண்சனின் ஆங்கில அகராதி உருவாக்கம்.
மரத்தினாலான அச்சியந்திரம் உலோகத்திற்கு மாற்றப்படல்.

1800 முதல் 1900 உருளை அச்சுப் பொறி உருவாக்கம். புகைப்பட தொழில்
நுட்பம் உருவாகல். தந்தி முறை விருத்தி. மின்சாரத்தின்
வருகை. ஒலிப்பதிவு ஆரம்பம். அசையும் படம் தோற்றம்.
கம்பியில்லாத்தந்தி அறிமுகம்.

1900 முதல் 1940 தொலைக்காட்சி அறிமுகம். தொலைக்காட்சித் தொழில்
நுட்பம் அபிவிருத்தியடைதல்.

1940 முதல் 1950 இலக்க கணனிகள் பாவனைக்கு வரல். தொலைக்காட்சி
வர்த்தக ரீதியில் அறிமுகம். புகைப்பட பிரதியாக்கம்
(ஓநசழபசயிhல) விருத்தியடைதல். புகைப்பட அச்சுருவாக்கம்
(Phழவழவலிநளநவவiபெ).

1950 முதல் 1960 வர்த்த ரீதியில் கணனிகள் பாவணைக்கு வரல். கல்வி
நடவடிக்கையில் தொலைக்காட்சி. தொலைக்காட்சிப் பதிவு
நாடாக்கள் உருவாக்கம். முதலாவது செய்மதி பூமிக்கு
தகவலை அனுப்புதல்.

1960 முதல் 1970 கணனிகள் பாவனை அதிகரிப்பு. நூலக வலய தகவற்
சேவையில் கணனிகள் பயன்படல். தரவத்தள முகாமைத்
துவமுறைமை கணினி மூலமான அச்சமைப்பு முறை
(ஊழஅpரவநச வுலிநளநவவiபெ) லேசர் அச்சுக்கலை (டுயளநச
Pசiவெiபெ) ஆரம்பம். தொலைக்காட்சி சமூக ஆதிக்கம்
பெறல். செய்மதித் தொலைத் தொடர்பு வளர்ச்சி. நுண்
வடிவங்கள், (ஆiஉசழகழசஅள) தகவற் சேமிப்பிற்கும்,
பரவலாக்கத்திற்கும் அதிகளவு பயன் படுத்தப்படுதல்.

1970 முதல் 1980 தனியாள் கணனியின் பாவனை அதிகரிப்பு. கணனியின்
கணிமம். (ளுழகவறயசந) அபிவிருத்தியடைதல். பரிமாற்ற
தொலைக்காட்சி முறைமை (ஐவெநசயஉவiஎந வுநடநஎளைழைn
ளுலளவநஅள) அகலத்திரை கொண்ட தொலைக்காட்சி. நூலக
தகவல் வள பகிர்வில் கணனி உபயோகம்.

1980 முதல் 1990 தனியாள் கணனி சமூக ஆதிக்கம் பெறுதல்.
தொலைக்காட்சி தட்டு (ஏனைநழ னளைஉ) ஒலி அடர்த்தித்
தட்டுக்கள் (ஊழஅpயஉவ னுளைஉ – யுரனழை) நேர்முக தகவல்
வலயசேவை. வாசிப்பு நினைவக அடர்த்தித்தட்டுகள்
(ஊனு – சுழுஆ) வருகை. இலத்திரனியல் தபாற்சேவை
(நுடநஉவசழniஉ ஆயடை) தொலைப்பிரதியாக்கம் (வுநடநகயஉளiஅடைந)
தொலைக்காட்சி மாநாடு (வுநடநஉழகெநசநnஉiபெ)
தொலைக்காட்சிச் சந்திப்பு (ஏனைநழ ஊழகெநசநnஉiபெ)
செயற்கை விவேகம் (யுசவகைiஉயைட ஐவெநடடபைநnஉந) தொடர்பான
ஆராய்ச்சிகள். லேசர் தொலைத்தொடர்பு (டுயளநச
ஊழஅஅரniஉயவழைn) நடவடிக்கைகள்.

1990 முதல் மாயை யதார்த்தம் (ஏசைவரசயட சுநயடவைல)

சுநுகுநுசுநுNஊநுளு

1. டீரளாஇ ஏயnநெஎயச. 1945. “யுள றுந ஆயல வுhiமெ”இ சுநிசiவெநன in ஊனு – சுழுஆ: வுhந நேற Pயிலசரள நனவைநன டில ளு. டுயஅடிநசவ யனெ ளு. சுழிநைஙரநவஇ றுயளாiபெவழn: ஆiஉசழளழகவ 1986. pp. 3-20.
2. னுந குடநரசஇ ஆநடஎin டு யனெ னுநnnளைஇ நுஎநசநவவந நு. (நன) 1988 ருனெநசளவயனெiபெ ஆயளள ஊழஅஅரniஉயவழைn. டீழளவழn: ர்ழரபாவ ழn ஆவைவin ஊழ.
3. ர்யசசளைழnஇ ர்நடநn p. 1992. “ஊழளெநசஎயவழைn யனெ Pசநளநசஎயவழைn ழக யுரனழைஎளைரயட ஆயவநசயைடள: சுநயடளைவiஉ ழச ய னுசநயஅ?” ஐகுடுயு துழரசயெடஇ 18(3) pp. 212 – 222.
4. டுயnஉயளவநசஇ கு. று. நவ யட 1979. “வுhந சுழடந ழக வாந டுiடிசயசல in யn நுடநஉவசழniஉ ளுழஉநைவல” ஐn Pசழஉநநனiபௌ ழக வாந 1978 ஊடiniஉ ழn டுiடிசயசல யுppடடைஉயவழைளெ ழக னுயவய Pசழஉநளளiபெஇ நனவைநன டில கு. று. டுயnஉயளவநச. ஐடடiழெளை: ருniஎநசளவைல ழக ஐடடiழெளை. pp. 162 – 191.
5. டுயnஉயளவநசஇ கு. று. 989. “நுடநஉவசழniஉ Pரடிடiளாiபெ” டுiடிசயசல வுசநனௌ. 37(3)இ pp 316 – 325.
6. டுயரிஇ டுநழயெசனஇ 1986இ “றூயவ ளை ஊனு – சுழுஆ?” ஐn ஊனு – சுழுஆ: வுhந நேற Pயிலசரள. நனவைநன டில ளு. டுயஅடிநசவ யனெ ளு. சுழிநைஙரநவ. றுயளாiபெவழn: ஆiஉசழளழகவ. pp 47 – 72.
7. ஆஉ டுராயnஇ ஆயசளாயடட. 1966. ருனெநசளவயனெiபெ ஆநனயை: வுhந நுஒவநளெழைளெ ழக ஆயn. நேற லுழசம: ளுபைநெவ டீழழமள.
8. ஆஉ டுராயnஇ ஆயசளாயடட. 1968. புரவநnடிநசப புயடயஒலஇ வுழசழவெழ: ருniஎநசளவைல ழக வுழசழவெழ Pசநளள.
9. ழேடிடநஇ னுழரபடயள. 1984. “ருனெநசளனைந ழக வாந ஊழஅpரவநச டுவைநசயஉல” ஐn ஆயளள ஊழஅஅரniஉயவழைn சுநஎநைற லுநயச டீழழம 1984. ஏழட. 5. நனவைநன டில ஆ. புரசநறவைஉh யனெ ஆ. சு. டுநஎல. ஊயடகைழசnயை ளுயபந Pரடிடiஉயவழைளெ pp. 585 – 612.
10. சுiஉநஇ சுழயெடன நு. 1984. வுhந நேற ஆநனயை: ஊழஅஅரniஉயவழைnஇ சுநளநயசஉh யனெ வுநஉhழெடழபல. ஊயடகைழசnயை: ளுயபந Pரடிடiஉயவழைளெ.
11. சுழடிநசவஇ ளுவநிhநn. 1992. “வுழறயசனள ய Pழஉமநவ டுiடிசயசல” ஐகுடுயு துழரசயெட: 1கூ (3)இ pp. 258 – 266.
12. ளுயஅயசயதறையஇ சுழாயn. 1987. குசழஅ உழடடநஉவழைளெ வழ யுஉஉநளள: யு Pழடiஉல சுநளநயசஉh சுநிழசவஇ ஊழடழஅடிழ: Nயுசுநுளுயு.
13. ளுஉhசயஅஅஇ றுடைடிரச. 1981. “றூயவ ளை டுழபெ வுiஅந” ஐn ஆயளள ஊழஅஅரniஉயவழைn சுநஎநைற லுநயச டீழழம 1981 ஏழட.2. நனவைநன டில பு. ஊடநஎநடயனெ றுiடாழவை யனெ ர்யசழடன னந டீழஉம ஊயடகைழசnயை: ளுயபந Pரடிடiஉயவழைளெ. pp. 202 – 207.
14. ளுவழஎநசஇ ஆயசம. 1992. “சுநடபைழைரள ளுவரனநைள யனெ நுடநஉவசழniஉ ஐகெழசஅயவழைளெ: யு டுiடிசயசயைn’ள Pநசளிநஉவiஎந” டுiடிசயசல வுசநனௌ 40 (4) pp. 690 – 698
15. றுயடடயஉநஇ னுயnலெ யனெ புபைடநையெசழஇ துழாn. 1989. “ஆiஉசழ ஊழஅpரவநசள in டுiடிசயசநைள” டுiடிசயசல வுசநனௌ. 37 (3) pp. 282 – 301.

அகிலம் வெளியீடு பற்றி........

v ‘அகிலம்’ வெளியீடு: சமூக அறிவியல் சார்ந்த ஆக்கங்களை அவ்வப்போது சிறுநூல்வடிவிலே வெளியிட்டு வருகின்றது. இத் தொடரில் ஏலவே மூன்று நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன@
• சிவசந்திரன், இரா., (1976) இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தில் நிலச்சீர்திருத்தத்தின் தாக்கம்.
• சிவசந்திரன், இரா., (1981) இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும்.
• சத்தியசீலன், ச., (1987) உலக நாகரிகங்கள்.
v சமூக அறிவியல் சார்ந்த புத்தம் புதுவிடயங்களைப் படித்தவர் மட்டுமன்றி சாதாரண பொது மக்களும் வாசித்து தெளிவுபெற வேண்டுமென்பதற்காக இலகு தமிழில் அடக்கவிலையில் இவ்வகையான நூல்களை வெளிக்கொணர்வதே எமது நோக்கம்.
v பாலர் வகுப்புமுதல் பல்கலைக்கழகம்வரை தமிழ்மொழி பயிற்றுமொழியாக்கப்பட்டு நான்கு தசாப்தங்களாகியும் தமிழிலே சமூக அறிவியல் சார்ந்த தரமான நூல்கள் மிகக்குறைந்தளவே இதுவரை வெளிவந்துள்ளன. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாமாயினும் வெளியீட்டு வசதியின்மை என்பதும் குறித்துரைக்கத்தக்க காரணியாகவுள்ளது. இப்பாரிய பணிக்கு எமது இம் முயற்சி சிறுதுளியே.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.
பாரதியின் குரல் எம்மை வழிநடத்துகின்றது.
‘அகிலம்’ வெளியீட்டினர்.

திரு. இராசரத்தினம் கிருஷ்ணகுமார் இலங்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண வளாக நூலகம் (1975 – 1981) யாழ்ப்பாண பொதுசன நூலகம் (1987 – 1994) ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட நூலகத்தில் நூலக உதவியாளராகப் பணி புரிகின்றார்.

ஸ்ரீலங்கா நூலகச் சங்கத்தின் இணைவாளராகிய (Associate of the Sri Lanka Library Association) இவர் ஸ்ரீலங்கா நூலகத்தின் நூலகவியல் விரிவுரையா ளராகவும் சேவையாற்றுகின்றார்.

நூலகவியல் உட்பட தொடர்பியல், ஆக்க இலக்கியம், தமிழாக்கம் திரைப் படரசனை போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
இரா. சிவச்சந்திரன்.

Cover Credit – Nilanthan.

***