கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கதிர்காமம் கந்தன் கோவில்
அன்றும் இன்றும்
 
 

செ. சுந்தரலிங்கம்

 

கதிர்காமம்
கந்தன் கோவில்








அன்றும் - இன்றும்











செ. சுந்தரலிங்கம்


முதற் பதிப்பு - 1982


நன்றி


1. உதவிகள் பல செய்த - ஞானலிங்கம் ஆனந்தலிங்கம்
2. பிரதிகள் ஒப்பிடுதல் - அஞ்சலேந்திரன் செல்வத்துரை
3. தட்டச்சு வேலைகள் - லிங்கமணி ராஜராயன்
4. கையெழுத்தப் பிரதியாக்கம் - பகவதி பொன்னுத்துரை
5. அந்தரங்கக் காரியதரிசி - ளு. அழகராஜா
6. தமிழாக்கமும் நு}ல்வடிவமும் - P. சுப்பிரமணியம் செட்டியார்















விலை ரூபா 12.00












அச்சுப் பதிப்பு:
ஸ்ரீ சண்முகநாத அச்சகம்
யாழ்ப்பாணம்



கதிர்காமம் கந்தன் கோவில்


அன்றும் இன்றும்










சரித்திர புவியியல் தொடர்புகள்

கந்தக்கலியுகம் (க. க) 1 - 5082
புத்தருக்கு முன் (பு. மு) 2559 - பு. பி 2523 வரை
கிறிஸ்துவுக்கு முன் (கி. மு) 3102 - கி; பி. 1980 வரை












செ. சுந்தரலிங்கம்


நு}ன் முகம்

கதிர்காமக் கந்தன் : உலகின் நானாபக்கங்களிலிருந்தும் - முக்கியமாக இலங்கை - இந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாமரர் முதல் பண்டிதரீறாக வந்து வணங்கும் இக்கந்தன் யார்?

புராணங்கள், இதிகாசங்கள், புனைகதைகள், வழிபாட்டு முறைகள் எனப் பல அவனைப்பற்றி எழுந்துள்ளன. வானொலியிலும் சைவ இல்லங்களிலும் அவனுடைய தோத்திரப் பாடல்கள் ஒலிக்கின்றன.

பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த மகோற்சவத்தின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.

கவிஞனின் சொல்லோவியங்களையும் அலங்கார வார்த்தைகளையும் விடுத்து அந்தரங்க உண்மையை விளக்கவேண்டும். அடர்ந்த காட்டின் நடுவே உறையும் கந்தனுக்கு - வணக்கம் செலுத்தி இச்சிறு கைநு}லை பக்தி சிரத்தையுடன் எழுதுகிறேன். நம் அறிவால் அறிய முடியாததை வணங்கி வழிபடுவதே சாலச்சிறந்தது.


விவேகம் செயலற்றவிடத்திலே பக்தி பிறக்கிறது.



‘மகாலிங்க வாசா’
கீரிமலை, செ. சுந்தரலிங்கம்
ஆகஸ்டு, 19, 1980


விதப்புரை

தீக்குளித்தல், செடில் குத்துதல், வேல் பாய்ச்சுதல் முதலாய உடலை வருத்தும் நோன்புகள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் வழிபாடுகள், பக்தர்கள் கண்ட அற்புதங்கள் என்பனபற்றி யெல்லாம் இக்கைந் நு}லிலே நான் விவரிக்கவில்லை. நேரில் கண்டவர்கள் சொல்லியவற்றையும் எழுதியவற்றையும் ரிச்சர்ட் ஸ்பிட்டல் (சுiஉhயசன ளுpவைவநட) என்பவர் எழுதிய குயச ழகக வுhiபௌ (1933 - 1957) என்னும் நு}லில் காணலாம். அந்நு}லின் சில பகுதிகளை மட்டும் இங்கே எடுத்தாண்டிருக்கிறேன்.

(Pயரட றுசைண) போல் வோர்ஸ் என்ற ஜெர்மானியர் எழுதிய “முயவாசையபயஅய - வாந ர்ழடநைளவ Pடயஉந in ஊநலடழn” (1966) என்னும் நு}லில் இன்னும் சிறப்பாக இவற்றைக் காணலாம்.

கோயில் பகுதியில் உள்ள மசூதிபற்றிய வரலாறும் வழிபாட்டு முறையும் ஜனாப் ஸி ஏ ஹசான் ஆச. ஊ. யு. ர்யளளயn எழுதிய “முயவாசையபயஅய : ஆழளஙரந யனெ ளூசiநெ (1968) என்னும் நு}லிலறியப்படும்.

‘லிங்க தோட்டம்’
வவுனியா செ. சுந்தரலிங்கம்
செப்டம்பர் 19, 1980


கதிர்காமத்தின் அன்றைய தோற்றம்

1. கதிரைமலை (வேதகித்திகந்த) மலைகள் ஏழின் நடுநாயகம்
2. மகாதேவாலயம்
3. கணபதி கோயில்
4. பெருமாள் கோவில்
5. தெய்வயானை அம்மன் கோவில்
6. வள்ளியம்மன் கோவில்
7. முத்துலிங்கசாமி கோவில்
8. பள்ளிவாசல் (மசூதி)
9. கண்ணகி அம்மன் கோவில்
10. சிறுகோவில்
11. தாதுகோபுரம்
12. பஸ்ஸநாயக்க நிலாமை இல்லம்
13. மாணிக்க கங்கை

வரைபடம் (கதிர்காமம் அன்று)

1. மகாதேவாலயம் 7. மங்கரதேவி கோவில் 15. பள்ளிவாசல் (மசூதி)
2. கணபதி கோவில் 8. பத்தினி அம்மன் கோவில் 16. வாசனாமேடை
3. பெருமாள் கோவில் 9. புத்தமடம் 17. வள்ளியம்மன் கோவில்
4. மகாதேவாலயத்தின் பின் 10. வாசனாமேடை 18. முத்துலிங்கசாமிகோவில்
னால் உள்ள போதிமரம் 11. பழனி கோவில் 19. பாலம்
5. பெருமாள் கோவிலின் பின் 12. தெய்வானை அம்மன் கோவில் 20. மாணிக்ககங்கை
னால் உள்ள போதிமரம் 13. ஜப்பார் அலிஷா மஹ{பத்சமாதி
6. காளியம்மன் கோவில் 14. மீர்செய்யத் மகம்மது அலிஷி பாவா சமாதி


பொருளடக்கம்

1. ஏழுமலை வாழ் கந்தன்
2. கந்தபுராணத்தில் கதிர்காமம்
3. கதிர்காமமும் கீரிமலையும்
4. தெய்வயானை - முருகன் - வள்ளி
5. புத்தரின் கதிர்காம விஜயம்
6. அநுராதபுரம் போதிமா நாட்டு விழாவும் கதிர்காமப் பிராமண விருந்தினரும்
7. கந்த - முருக வழிபாடு
8. கதிர்காம யாத்திரைக்கு ஆங்கில அரசு விதித்த தடையை நீக்குதல்
9. கதிர்காமத்தைப் பௌத்த சிங்களமயமாக்கும் முயற்சிகள்
10. நு}ற்றாண்டுக்காலமாக
11. கதிர்காமக்கந்தனாலய நிபந்தங்கள்
12. முடிவுரை


சிறப்பு அம்சங்கள் - மேற்கோள்கள்

1. வீரவாகு தேவரும் குமரிக்கண்டமும் (லெமூரியா)
2. கடல் கோளும் குமரிக்கண்டப் பகுதிகள் மறைவும்
3. பேரழிவுகளும் மக்கள் துயரங்களும்
4. கதிர்காமக் கோவில் ஆதிக்கட்டடம்
5. கதிர்காமக் கோவில் வழிபாடு
6. கதிர்காமத்தில் துட்டகைமுனுவின் விரதம்
7. கடவுள் நம்பிக்கையும் அற்புதங்களும்
8. அரசாங்க நில அளவையும் குடியிருப்பாளர் விவரமும்
9. பாரெங்கும் பரவிய கந்த வழிபாடு
10. ஸ்ரீ லங்கா உயர் நீதிமன்றத்தில் கதிர்காமக் கந்தன் கோவில் வழக்குகள்
11. முடிவுரை


பிக்குணி சங்கமித்திரை : இவர் கொண்டு வந்த மகாபோதி யின் கிளைகள் எழில் ஒன்று கதிர்காமக் கந்தன் கோவிலுக்குப் பின்னால் வளர்ந்தோங்கியிருப்பதை இன்றும் காணலாம்.

திவாகர் : கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் இருந்த பிராமணோத்தமர். அநுராதபுரத்திலே போதிமரக் கிளைநாட்டு வைபவத்தில் தேவநம்பியதீசனுடைய அழைப்பின் பேரில் இவரும் பிரசன்னமாயிருந்தார்.

வேட்டுவத் தலைவன் : கந்தன் மணந்த வள்ளியின் மரபில் வந்த வேட்டுவத் தலைவன். புத்தபகவான் தமது மூன்றாவது விஜயத்தின் போது வேடர் குலத்தினருக்கும் ஞானோபதேசம் செய்ததாக ஐதீகம்.

சர். பொன்னம்பலம் அருணாசலம் : கதிர்காமக் கந்தன் ஆலயம் பற்றி இவர் எழுதியதை கட்டுரை 7-ல் பார்க்க.

சர். பொன்னம்பலம் இராமநாதன் : கதிர்காமக் கந்தன் கோவில் வழிபாட்டில் அரசாங்கம் தலையிடுவதைத் தடுத்தவர் (கட்டுரை 7-ல் பார்க்க)

கவர்ணர் சர். ஆர்தர் கோடன் : கதிர்காம ஆலய வருடாந்த உற்சவத்தின்போது விஜயம் செய்து ஒரு வாரகாலம் அங்கே தங்கியும் இருந்திருக்கிறார்.

பிறவுண்றிக் : 1819-இல் கதிர்காம ஆலயத்தையும் ஆசனங்களையும் அடாத்தாக கைப்பற்றிய கப்புறாளைமாரைக் கலைத்துவிட்டு அவற்றை மீண்டும் பிராமணப் பூசகர்களிடம் ஒப்படைத்து ராணுவப் பாதுகாப்பும் அளித்த முதலாவது பிரித்தானிய கவர்ணர்.



கட்டுரை - 1

கந்தன் - ஏழுமலை வாசி - கலியுகத்தை தோற்றுவித்து காப்பவன் - நாகர் பண்பாட்டின் பாதுகாவலன் - முருகன்

கந்தவேளை பல பெயரால் ஆராதிப்பர்@ அவற்றில் இவை ஐந்து. ஒவ்வொரு பெயருக்கும் அர்த்தமுண்டு. அவற்றை அறிந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிவ - பார்வதியின் இரண்டாவது புதல்வன் கந்தன் என்றும், பிள்ளையார் என்று பொதுப்பட வணங்கப்படும் கணேசரின் தம்பியென்றும் புராணங்கள் கூறுகின்றன. ஞானம், கல்வி அறிவின் அதிதேவதை பிள்ளையார். அவனை வழிபடுவோருக்கு உறுதுணையாகவிருந்து வழிகாட்டி அருள் புரிகிறான்.

சிவ - பார்வதியின் இரண்டாவது மகன் கந்தனோ பிஞ்சிலே பழுத்தவன், ஏறுமயில் ஏறி திருவிளையாடல் பல புரிபவன். தந்தைக்கு முன்னம் தனிஞானம் போதித்த தகப்பன் சாமி-

“கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரியக்
கொஞ்சித்தமிழால் பகர்வோனே” - அருணகிரிநாதா

போற்றும் அடியாரின் குறைகளைந்து தஞ்சம் அளிப்பவன். தாயிடமிருந்து குன்றினை யொத்த வேலினைப் பெற்றவன். கொடுங் கோலரை ஒழித்து அனாதைகளை இரட்சிப்பவன் (கொடுங்கோலர் : சூரபத்மன், சிங்கமாசூரன், தாரகா சூரன்)

வேடர் குலக்கன்னி வள்ளியை மணம் புரிந்தவன். ( 1. அருணகிரிநாதர் திருப்புகழிலிருந்து). ஏழுமலைவாசி. தென்னிலங்கையில் (ஐஊ. நுலடழஅ ழக டுயமெயi - ளுசi டுயமெய) உள்ள கதிர்காமத்தில் சங்கிலிக் கோர்வை போன்ற இந்த ஏழுமலைத் தொடர்பை இன்றும் காணலாம். தம்பிரான் பண்ணை - (தமிழ்) தம்பிராப்பிரணி (சமஸ்கிருதம்) தம்பிர பிரண்ணை (கிரேக்க) தப்ரபேன் லத்தீன்) - தம்பாபண்ணை (பாலி) என்று காலப்போக்கில் திரிபுற்ற தென்னிந்திய பிரதேசத்தை கடல் கொண்டதின் காரணமாக துண்டிக்கப்பட்ட பின் தோன்றிய நாட்டை ஈழம் என்று தbpணகைலாச புராணத்தில் முதன் முதலாக குறிப்பிடப்படுகின்றது. மகா அலெக்சான்டரின் கட்டளையின்பேரில் ஈழத்தை வலம் வந்த ஒனிசிகிறிட்டோஸ் (ழுநௌiஉசவைழள) வரைந்த முதன் முதலான பூமத்தியதீர்க்கரேகை நிலப்படத்தில் இத்தீவின் பெயர் தாம்பிரபீரணை (வுhயஅpசயடிசயni) என்றே கிரேக்க எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.

கி. மு. 320 வரை இத்தீவின் பெயர் தாம்பிரபிரணை என்றே வழங்கிவந்ததென்பது தெளிவாகிறது இந்த நிலப்படத்தில் (இனிமேல் ஒனிசிகிறிட்டோஸ் படம் என்றே அழைப்போம்) வரும் பெயர்கள் கிரேக்க எழுத்துக்களில் உள்ளன. “சி. அரகரா” என்னும் சொல்லை தமிழில் சொன்னால் கிரஞ்சீவி அரகரா என்றே பொருள்படும். வேதியரும் ஞானியரும் வாழ்ந்த கதிர்காமத்தையே இச்சொல் குறிக்கிறது. தாரகி என்றசொல் தாரகன் குலத்தை குறிக்கிறது. தேவசேனாதிபதியான கந்தவேள் அசுரர்களை வெற்றி கொண்ட முக்கிய இடத்தை 2,300 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட இந்நிலப்படத்;திலி; காணலாம். இவற்றிலிருந்து கந்தப்பிரானுக்கும் அசுரர்களுக்குமிடையே நிகழ்ந்த போர் தென்னிலங்கையிலுள்ள கதிர்காமத்தில் தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஏழுமலை வாசி

கதிர்காமம் (சிங்களத்தில் கதரகம) என்ற சொல்லுக்கு அர்த்தமுண்டு.

கதிர் என்றால் கதிரோன் கதிர்கள் காமம் என்றால் அன்பின் அரவணைப்பு

ஏழுமலைகளின் மத்தியில் உள்ள மலையை தமிழ் மக்கள் “சுவாமி மலை” என்று அழைப்பர். இதை சிங்களமக்கள் “வேதிகித்திகந்த” என்பர். இம்மலையில்தான் வேதியர் யாக மண்டபம் அமைந்திருந்தது. இம்மண்டபத்திலிருந்தே வேதியர் வேத மோதினர். அக்கினி குண்டத்திலே நைவேத்தியங்களை அர்ப்பணித்து யாகம் செய்விப்போரின் பாரிய முயற்சிகள் வெற்றி பெறுமாறு தேவாதிதேவர்களை வேண்டினர். இதை தமிழில் யாகம் என்பர். பிராமண சிரேஷ்டர்கள் அமர்ந்து வேதம் ஓதும் இடமே யாகமேடை அல்லது யக்ஞ மண்டபம்.

கலியுகத்தை தோற்றுவித்து காப்பவன்

“கந்த”, “கலியுக வரத” என வழங்கும் சகாப்தம் அக்கிரமம் புரிந்த அசுரரை தேவசேனாதிபதி கந்தவேள் சங்காரம் செய்ததிலிருந்தே கலியுகம் பிறந்தது. பௌத்த வருடமும் கீறீஸ்து வருடமும் எப்படி புத்தரும் இயேசுவும் தத்தம் மதங்களை ஸ்தாபித்ததிலிருந்து எழுந்தவையோ அதேபோல் கலியுகமும் கந்தவேளின் வெற்றியை குறிப்பதாகும்.

தமிழ் பஞ்சாங்கம் இவ்வருடமாகிய ரௌத்திரியை கலியுகத்தில் 5082 வருடமென்கிறது. ஆதலால் கந்தனின் வெற்றி 5082 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. வானசாஸ்திரப்படியே பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடப்பிறப்பும் இராசி சக்கரத்தில் கூறப்பட்ட ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு கிரகங்கள் மாறும் பொழுது நிகழ்கிறது.

‘பஞ்சாங்க மலித பொத்த’ எனப்படும் சிங்கள பஞ்சாங்கமும் கிட்டத்தட்ட தமிழ் பஞ்சாங்கம் போன்றதே. அசுரர்களைக்கந்தன் வென்ற வருடம் 5082 கலியுக வருடங்களென்பதை புராண இதிகாசங்களின் உதவியின்றியே நிரூபித்து விடலாம். (1) க. க. 5082 வருடத்திற்கு ஒப்பானவை. (2) பு. மு: 2559 கி. மு. 3102 மூன்று விதமாக வர்ணிக்கப்பட்ட கால கட்டசம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒப்பிடும்போது இத்தீவினதும் கதிர்காமத்தினதுமான வரலாறு தௌ;ளெனத்தெரிகிறது.

நாகர் பண்பாட்டின் பாதுகாவலன்

கந்தப்பிரானைப் பற்றிய திருப்பாடல்கள், தோத்திரங்கள், கீர்த்தனங்கள் எல்லாம், “இவனே தமிழ்! இவனே தமிழ்தந்ததெய்வம்! இவனே தமிழின் சுவை! இவனே முத்தமிழ்ப் புரவலன்! சங்கத் தமிழின் தலைமைப் புதல்வன்! முத்தமிழால் செந்தமிழ் நு}ல்வரித்தோன்! வைதாரையும் வாழவைப்போன்! என்று துதி பாடுகின்றன. தமிழ்;மொழி இன்றும் நிலைத்திருப்பதின் காரணம் கந்தனின் வெற்றியே என்று இத்தீவில் இன்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

முருகன்

தான் மறந்தாலும் நா மறக்காமல் சொல்லும் நாமம் “முருகா” என்பதே. சைவத்தோத்திரப்பாடல்களிலும் திருப்புகழிலும் வரும் அவன் திருநாமங்களில் முருகா என்ற நாமமே அடிக்கடி வருகின்றது. வேடச் சிறுமி வள்ளியை மணம் புரிந்த பிற்பாடே ‘கந்தன்’ ‘முருகன்’ என்ற பெயரால் அவன் அழைக்கப்படுகிறான். அநேகமாக எல்லா திருவிழாக்களிலும் முருகன் பவனி வரும்போது வள்ளி நாயகியும் கூடவே வருகிறாள்.

தஞ்சைப் பெரிய கோயிலில் வள்ளி மணாளகலைக் கூடமேயுண்டு. கி. பி. 13-ம் நு}ற்றாண்டில் இது அமைக்கப்பட்டிருக்கலாம். வருடா வருடம் நிகழும் வள்ளிகாந்தன் விழாக்களுக்கு ஆண்களும் பெண்களும் விழுந்தடித்து செல்வார்கள். முருகன் பெயர் ஒலிக்காத விழாக்களே இல்லை யென்று சொல்லலாம். கந்தன், முருகன் என்ற நாமங்கள் கொண்ட கோயில்கள் பல. உதாரணமாக (நல்லு}ரில் உள்ள கந்த சுவாமி கோயில்) மாவை முருகன் (மாவிட்டபுரக் கந்தசுவாமி கோயில்) ஆகியவை யாழ்ப்பாணத்தில் உள்ளன. தென்னிலங்கை தொட்டு வடகோடிவரை சைவநன்மக்கள் எல்லோரும் யாசிப்பது கந்தன் கருணையையே.

கட்டுரை - 2

கந்தபுராணத்தில் கதிர்காமம்

கந்தப்புராணம் ஒரு மகாகாவியம். கந்தனின் வீரதீரப் பராக்கிரமச் செயல்களை விபரிக்கும் பாரம்பரிய சரித்திர ஏடு.

மூலப்புராணம் கி. மு. ஐந்தாம் நு}ற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழில் அருளிய கந்தப்புராணம் கி. பி. எட்டாம் நு}ற்றாண்டில தோன்றியதாகும். வருடா வருடம் சைவாலயங்களில் தமிழன்பர்கள் அறிந்து கொள்வதற்காக கந்தப்புராணத்தின் சிற்சில பகுதிகள் வாசித்து பயன் சொல்லப்படுவதை இன்றும் காணலாம். அநாதரட்சகனான கந்தன் தன் அடியாரின் குறை நீக்க போர்க்களத்திற்கு புறப்படமுன்னர் செய்யப்பட்ட ஆயத்தங்கள், அநுஷ்டித்த விரதங்கள் ஆகியவை பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளன. கந்தன் சென்ற மார்க்கம், தென்பாரதத்திலுள்ள தாம்பிரபிராணி என்ற பிரதேசத்திலிருந்து இலங்கை சென்ற அவன் திருத்து}தர் வீரவாகு தேவர் போன வழியேயாகும். ஏழுமலைச்சாரலை அடைந்ததும் படையொன்று திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. மத்தியஸ்தானமாகிய வேதிகித்திகந்த (சுவாமிமலை) என்னுமிடத்தில் யாகமண்டபம் அமைத்து வேதியர் வேதமோதி அக்கினி வளர்த்து யாகம் செய்தனர். 21 நாட்கள் இடை விடாது இராப்பகலாக நடந்த இந்த யாகத்தில் வேதியர்கள் சாரிசாரியாக வேதமோதினர். யாகம் முடிந்ததும் அடியார் துயர்களைய போர்வேலன் யுத்தசந்நத்தனான். இன்று கூட இந்த யாகத்தை மிகவும் பக்தி சிரத்தையுடன் மக்கள் அநுஷ்டிக்கின்றனர். எடுத்தகருமம் எப்படி முடியுமோ? ஆண்டவனே நீ தான். அருள்பாலித்து வழி நடத்தவேண்டும். இதன் ஞாபகமாகவே கந்தசஷ்டி விரதம் ஏற்பட்டது. புராணக்கதைகள் ஒரு புறமிருக்க:-

துன்பப்படுவோரின் துயர் துடைக்க வீறு கொண்டெழுந்து போர் புரிந்த ஒரு மகாபுருஷனின் வீரவரலாறே இக்காவியம். தொடுத்த போரில் வெற்றியீட்டும் வரை ஒரு வீரன் வீரனாகவே கணிக்கப்படுகிறான். வெற்றியின் பின்னரோ தெய்வாம்சம் பெற்று ஆற்றல் மிக்க சமயமொன்றின் கர்த்தா ஆகின்றான். உலகிலுள்ள சமயங்களை ஆராயும் பொழுது எல்லா சமயஸ்தாபகர்களும் தலைவர்களும் தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவாகவோ பெரும் இன்னல்களுக்குள்ளாகி மாபெரும் தியாகங்களை செய்திருக்கிறார்களென்பது கண்கூடு. ஒவ்வொரு சமயத்தை சார்ந்தவர்கள் தத்தம் சமயத்தின் யதார்த்தத்தை கருத்திற் கொள்ளாது சமயத்தலைவருக்கு தெய்வீக சக்திகளையும் அர்த்தங்களையும் கற்பித்து அவரைத் தெய்வமாக்கி விடுகின்றனர். இதுவே கந்தபுராணக் கதை - மாவீரன் ஒருவன் தெய்வமாகிய பாரம்பரியக் கதை.

செங்குத்தான வேதிகித்திகந்த மலை (சுவாமி மலை) மீது மூச்சுவாங்க ஏறும் அடியார் கூட்டத்தின் “அரோகரா” (சிவசிவ) சப்தத்தை குன்றங்களே எதிரொலிக்கும். கதிர்காமக்கந்தனின் பிரதான ஆலயத்தில் தினமும் பூசையின் பின் கற்பூர ஆரதி நடந்ததும் பஞ்சாலாத்தி கோயிலுக்கு வெளியே எடுத்துச் சென்று வேதிகித்திகந்த குன்றின் உச்சியில் வீற்றிருக்கும் தெய்வத்திற்கு, குன்றேயான தெய்வத்திற்கு, காட்டப்படும். மலையேறி வணங்க முடியாத வயோதிபர்களும் அங்ககீனர்களும் சுலபமாக வணங்குவதற்கே பிரதான கோயில் ஆதியில் அமைக்கப்பட்டது.

குன்றின் உச்சியிலேயுள்ள ஒரு மாடத்தில் வேல் ஒன்றுண்டு. இதே வேலைத்தான் வேற்படைக் கந்தன் போரில் பிரயோகித்ததாக கர்ணபரம்பரைக் கதையுண்டு. “குன்றுருவ வேல் வாங்கி நின்றமுகமொன்றே” என்கிறது திருப்புகழ். குன்றின் உருவத்தை ஒத்ததாம் வேல்.

போருக்குபின் கதிர்காமப் பிரதேசம் நெற்பயிர் வயல்கள் கொண்ட செழிப்பான கிராமமாயிற்று வேடுவக்கன்னி வள்ளி தினைப்புனைப் பரண்மீது நின்று ஆயலோட்டும் பெண்ணாக காக்கைக்குருவிகளை ஆலோலம் பாடி விரட்டியதாக புராணம் வர்ணிக்கிறது.

“நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல்
காக்கின்ற நீலவள்ளி
முற்றாத்தனத்திற்கினிய பிரான்”

என்கிறார் அருணகிரியார். வள்ளிக்கு துணையாகவும் பொழுது போக்கிற்காகவும் தோழியர் கூட்டத்தை வேடுவர் அனுப்பிவைத்தனர். பட்சிகளை விரட்டும் பொழுது அவர்கள் பாடிய பாட்டுக்கள் அவர்களின் அழகை மேலும் கவர்ச்சியுறச் செய்கின்றன. கந்தன் நிஜ வாழ்வில் மனிதனாகவும், பின்னால் தெய்வீகமாக்கப்பட்டதும் தினைப்புனக் காதல் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கந்தப்புராணப் படலமொன்றில் விசும்பாறாக இலங்கையைச் சேர்ந்த பகுதியுண்டு இலங்கையிலுள்ள கதிர்காமத்தில் கந்த வழிபாடு தோன்றியதை இது குறிக்கிறது. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரத்தில் வேறொரு கர்ணபரம்பரைக்கதையுண்டு ஆனால் இது கந்தப் புராணத்தில் இல்லை. தென்கிழக்கேயுள்ள கதிர்காமத்திலிருந்து வடமேற்கிலுள்ள கீரிமலை வரை கந்த வழிபாடு வியாபித்திருக்கிறது.

கந்தபுராணத்தின் சில சுவராஸ்யமான பகுதிகளின் ரத்தினச் சுருக்கமான வர்ணனை: பனிமண்டலம் மூடிய மலையைச்சுற்றி நின்ற சேனைகள் பலவித பாணங்களை விடுத்தும் அஸ்திரங்களைத் தொடுத்தும் கடுஞ்சமர் புரிந்தனர் எய்த அம்புகளின் சரக்கூடத்தினால் வானமண்டலமே தெரியவில்லை. கண்ட துண்டமாக வெட்டுண்ட உடல்கள்! சிதறிய சிரங்கள்! ரத்தம் ஆறாய்ப்பெருகி கடலில் சங்கமித்து கடலே ரத்தமயமாயிற்று. சூரபத்மனின் சேனை நீர்மூலமாக்கப்பட்டது. அசுரரை வெற்றி கொண்டான் கந்தன். சூர்பத்மனை இரண்டு கூறுகளாகப் பிளந்தான். அவற்றில் ஒன்று மயிலாகவும் மற்றொன்று கோழியாகவும் வடிவெடுத்து நின்றது. சூரசங்காரத்தால் ஏற்பட்ட உயிரழிவிற்கு பிராயச்சித்தமாக மயிலை வாகனமாகவும் கோழியைக் சேவல் கொடியாகவும் கந்தன் ஏற்றக்கொண்டு சூரபத்மனுக்கு கருணைசெய்தான் என்று புராணம் கூறுகிறது.

சூரசங்காரத்தை வெகுவிமரிசையாக கந்தசுவாமி கோயில்களில் வருடந்தோறும் இன்வமும் கொண்டாடுகிறார்கள்.

கட்டுரை - 3

கதிர்காமமும் கீரிமலையும்

சோழராசன் புத்திரியாகிய மாருதப்புரவீகவல்லி தனக்குற்ற குதிரைமுகம் என்னும் நோயினாலே வருந்தும் காலத்தில் கீரிமலையிலுள்ள சிற்றாற்றில் ஸ்நானஞ் செய்யின் அந்நோய் நீங்கும் என்று ஒரு முனிவர் சொல்ல அவ்வாறே தன் பரிவாரங்களோடு சென்று அத்தீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்து அந்நோய் நீங்கப் பெற்றாள். அவளும் அவள் பரிவாரங்களும் அவ்விடத்தில் சிறிது காலம் வசித்தார்கள்.

அப்பொழுது கதிர்காமம் என வழங்கும் கார்த்திகேய கிராமத்தில் அரசு செய்திருந்த உக்கிரசிங்கராஜனும் அச்சிற்றாற்றிலே ஸ்நானஞ் செய்ய அவ்விடம் வந்தான். அவன் அவளைக் கண்டு அவள் மீது தணியாப் பெரும் காதல் உடையவனாகி அவளைப் பெரும்பிரயாசத்தோடு இசைவித்து மணம் முடித்துக் கொண்டு சிறிது காலம் அவ்விடம் தங்கிப் பின் அவளோடு தன் இராஜதானிக்குச் சென்றான்.

கட்டுரை - 4

தெய்வயானை - முருகன் - வள்ளி

போர்வேலன் அசுரருடன் சமர்புரிந்து வென்ற இடம் எதுவென்பது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. பண்டைக்காலந் தொட்டு முருகனுறையும் தலங்களாக பல பிரசித்தி பெற்ற சைவத்தலங்கள் உள. அவற்றுள் சிறந்த திருப்பதிகள் ஆறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், ஆழிசூழ் திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்து}ர்@ திருவாவினன்குடி எனப்படும் பழனி (பழம் நீ) மலை@ திருஏரகம் எனப்படும் சுவாமிமலை@ திருத்தணி@ பழமுதிர்ச்சோலை எனப்படும் அழகர்மலை.

மேற்கூறிய திருப்பதிகளில் ஒன்றிலாவது ஏழுமலைத் தொடர் கிடையாது. இருந்தும் திருப்பரங்குன்றமே கந்தனின் உறைவிடமென்று புலவர்களும் புரோகிதர்களும் கருதுகிறார்கள். உலகை வலம்வந்து சிவனிடமிருந்து மாம் பழப் பரிசைப் பெறுவதில் அண்ணன் கணேசனிடம் தோலிவியுற்ற கந்தன் ஆத்திரமும் அவமானமும் கொண்ட பழனியம்பதியை நாடினான். மேற்குறிப்பிட்ட பதிகளில் ஒன்றிலாவது கந்தன் வள்ளியை மணம்புரிந்ததாக சான்றுகளில்லை. கதிர்காமத்தில் மட்டுமே ஏழுமலைத் தொடர் உண்டு@ கதிர்காமத்தில்தான் வள்ளியை கந்தன் காதல் மணம் புரிந்தான் என்பதற்கு அத்தாட்சிகளும் உண்டு.

ஆதிகாலத்தில் இலங்கையும் தென்பாரதமும் ஒன்றாயிருந்தபொழுது - அதாவது கொடுங்கடல் கோளினால் இலங்கை தனிப்பட்ட தீவாகும் வரை - இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து, ஏன் வடமேற்கு எல்லையிருந்துங் கூட முருகபக்தர்கள் கந்தனை வழிபடுவதற்கு கதிர்காமத்திற்கு வந்திருக்கிறார்கள். கடற்பிரிவு ஏற்பட்டபின் கடல்கடந்து யாத்திரை செய்ய முடியாதவர்கள் திருச்செந்து}ரில் கந்த வழிபாடு செய்தனர். பிராமண குலத்தினர் கடல்கடந்து யாத்திரை செய்தால் அவர்கள் து}ய்மையற்று விடுவார்களென்று சாஸ்திர விதியுண்டு. இதன் காரணமாக திருச்செந்து}ர் பரபலமடைந்து காட்டின் மத்தியில் உள்ள கதிர் காமம் கைவிடப்பட்டது.

பூகோள ஆதாரத்துடன் கூடிய கதை வருமாறு:- கதிர்காமத்தில் மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன. அதிமுக்கியமானது கந்தன் எழுந்தருளியிருக்கும் கோயில் சிங்களத்தி;ல் மகாதேவாலே (பெரிய கோயில்) என்பர். நேர்எதிரே ஆயிரம் அடி து}ரத்தில் உள்ளது வள்ளியம்மன் கோயில்@ வடகிழக்கே சுமார் 150 அடி து}ரத்தில் உள்ளது தெய்வயானை அம்மன் கோவில். இம்மூன்று கோவில்களிலும் நித்திய பூசைகள் இன்றும் நடைபெறுகின்றன. தெய்வயானை, வள்ளி, கந்தன் ஆகிய மூவருக்கும் தனித்தனி கோயில்கள் ஒரே இடத்தில் அமைந்திருப்பதை அகில பாரதத்தில் ஓரிடத்திலாவது காணமுடியாது. வெற்றிவாகை சூடிய பின் வள்ளி தெய்வயானையுடன் வாழ்ந்த கந்தன் என்னும் வீரன் பின்னால் கடவுட்டன்மை அடைந்தான் என்பதையே இத்தல அமைப்பினால் ஊகிக்கலாம்.

சாதாரணமாக திருவிழாக் காலங்களில் கந்தன் பவனிவரும்போது வள்ளி - தெய்வயானை சமேதராகவே காட்சியளிக்கிறான். ஆனால் கதிர்காமத்தில் இப்படி நிகழ்வதில்லை. இங்கே வள்ளி திருமணம் நடைபெறுகிறது. இந்த மணச் சடங்கு மிகவும் ருசிகரமானது. வள்ளியைக் கந்தன் மனைவியாக ஏற்பதனால் சீதனம் எவ்வளவு கந்தனுக்கு கொடுக்கப்படும் என்பது பற்றி வேடர்குல உடையணிந்த 12 பெண்கள் மகாதேவாலய கப்புறாளையுடன் (பூசகர்) பேரம் பேசுவார்கள். இந்த தமாஷான நாடகம் கோயில் பிரதான மண்டபத்தில் புத்தாண்டு விழாவின் போது நடைபெறும். (1) பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதும் கந்தன் வள்ளியம்மன் கோயிலுக்கு செல்வான். ஊனக்கண்களால் யாரும் பார்த்தறியாத யந்திரத்தை (தாமிரத்தகட்டில் அட்சரங்கள் எழுதப்பட்ட சக்கரம்) மூடிய பேழையில் வைத்து ஆனைமீது ஆரோகணித்துள்ள கப்புறாளை (2) வள்ளியம்மன் கோயிலுக்கு பக்கதர்கள் புடைசூழ எடுத்துச் செல்வார். பௌர்ணிமைக்கு முதல்நாள் புடைசூழ எடுத்துச் செல்வார். பௌர்ணிமைக்கு முதல்நாள் உற்சவத்தின்போது யந்திரப் பேழை வள்ளியம்மன் பள்ளியறையில் இரசு பூராவும் வைக்கப்படும். அடுத்தநாள் காலை மணமக்கள் இருவரும் மாணிக்ககங்கையில் நீராடுவார்கள். இந்த மாபெரும் நிகழ்ச்சியான தீர்த்தத்துடன் உற்சவம் முடிவுறும். இவ்வைபவத்தை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலிலும் நல்லு}ர்க் கந்தன் கோயிலிலும் திருக்கல்யாண விழாவாக வருடாந்த மகோற்சவ கடைசித் தினத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

கந்தன் காதையின் எஞ்சிய பகுதியை பின்வரும் மேற்கோள் பகுதிகளிலிருந்து எளிதில் அறியலாம். மானுஷ்ய கந்தன் சைவமக்களின் இஷ்டமூர்த்தியான தெய்வீக முருகனாக பரிணமிக்கிறான்.

கட்டுரை - 5

புத்தரின் கத்ரகம விஜயம்

கி. மு ஆறாவது நு}ற்றாண்டின்போது கத்ரமகவில் புராதனக் கோயில் ஒன்று பழைய பாணியிலிருந்தது. ஆதியில் ஒரு கொட்டிலாக இருந்து பின்னால் கற்களால்கட்டப்பட்டு இருக்கலாம். (1) பௌத்தவரலாற்று ஏடுகளின் பிரகாரம் மகாசேன மன்னனும் புத்தரும் கத்ரகமவில் (பாலி மொழியில் ‘கஜரகம’) கி. மு 569-ல் தங்கியதாக சொல்லப்படுகிறது.

கத்ரகமாவின் மிகப் பழைய கட்டடமான கிரி விகார என்னும் தாது கோபுரம் கி. மு 300-ல் துட்டகைமுனு அரசனால் கட்டப்பட்டதாகப் பௌத்த வரலாறு கூறுகிறது.

புத்தர் தமது மூன்றாவது இலங்கை விஜயத்தின் போது வேடர்களுக்கு ஞானோபதேசம் செய்த அதே இடத்தில் கிரி விகார கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. (மாஜயன் கமத்திற்கே (சிங்களத்தில் மஹியங்கன) மூன்றாவது விஜயத்தின் போது புத்தர் வந்தார். இப்பெயரை மூன்றாகப் பிரிக்கலாம். மகா என்றால் பெரிய - ஐயன் என்றால் சைவ மக்கள் வழிபடும் வேளாண்மைத் தெய்வமான ஐயனார்@ கமம் என்றால் நெல்வயல். இவை மூன்றும் சேர்ந்ததே மாஜயன் கமம். இவ்விடத்திலிருந்த பெரிய தாதுகோபுரம் எத்தனையோ நு}ற்றாண்டுகளுக்குப் பிறகு கி. பி. 1921-ம் ஆண்டில்தான் உருக்குலைந்து சிரழிந்தது. ஆனால் பொது மக்களும் அரசாங்கமும் சேர்ந்து அதை மீண்டும் கட்டியுள்ளனர். மாஜயன்கமத்திலிருந்து கதிர்காமத்திற்கு செம்மையான காட்டுப்பாதை ஒன்றுண்டு. கதிர்காமத்தின் கீர்த்தியைக் கேள்விப்பட்ட புத்தர் ‘கந்தகுமரய’னைக் காணத் தவறியிருக்கமாட்டார்.

(1) ஒரு கோயிலும் மடாலயமும் கி. பி; 661-ல் ருகுண தலைவனான அக்காபோதியால் கட்டப்பட்டது. கி. பி. 1059-ல் பொலனறுவையிலிருந்து சோழத்தளபதி ஒருவன் படையெடுத்து கத்ரகம பட்டணத்தை அழித்து விட்டான். (சு. டு. ளுpவைவநட - “குயச ழகக வாiபௌ”)

(2) கதிர்காமத்தில் மூன்று வருடாந்த உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. ஜுலை மாதத்தில் 16 நாட்கள் கொண்டாடப்படும். மகோற்சவத்தை சிங்களத்தில் “ஈசால பெரஹரா” என்பார்கள். நவம்பரில் வரும் 3-நாள் விழாவை “இல்மஹா - காச்சி” என்பர். மூன்றாவதாக ஏப்ரலில் புதுவருடப்பிறப்பன்று நிகழும் விழாவை” “அலுத் அவ்ருத்த” என்பர்.

(3) கப்புறாளை பூசை செய்யும்போது முகவடகம் பூண்டு - அதாவது வாயை துணியால் மூடிக்கட்டிக் கொண்டு - பூசை செய்வார். இதற்கு 3 காரணங்கள் உள்ளன. (1) புனித பேழையின் மேல் எச்சில் படாமலிருக்க (2) ரகஸ்யவழிபாடு (3) ஆதியில் பிராமணர்கள் சமஸ்கிருதத்தில் உச்சரித்த மந்திரங்களை, வேடுவ பூசகர்களுக்கு போதிக்க முடியாமையினால் வாய்புதைத்து (மூடிக்கட்டி) மௌன வழிபாடு நிகழ்கிறது.

கட்டுரை - 6

அநுராதபுரத்தில் அரசங்கன்று நாட்டலும்
கதிர்காம பிராமண விருந்தினரும்

மகாவம்சம் : அரசங்கன்று நாட்டல்

கதிர்காமத்திலிருந்து கௌரவ பிராமண அதிதிகள் “மகாபோதி விருட்சத்தின் கன்று நாட்;டல் விழாவிற்கு புனிதமஹிந்ததேரர், பிக்குனி சங்கமித்திரை தங்களுடைய சங்கத்தினர் பின்தொடர, அரசன் தன்னுடைய பரிவாரங்கள் புடைசூழ வந்திருந்தனர். கஜரகம (1) கனவான்களும் கந்தனகம பிரபுக்களும், பிராமணோத்தமரான திவாகரும் ஏனைய மக்களும் தெய்வ அநுக்கிரகத்தால் விழாவில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்” (2)

யு ஊழniஉளந ர்ளைவழசல ழக ஊநலடழn - ருniஎநசளவைல ழக ஊநலடழn 1961 ஊ.று. Niஉhழடயள ரூ ளு. Pயசயயெஎiவாயயெ.

அரசங்கன்று நாட்டல்

........”மஹிந்ததேரோ, சங்கமித்திரை, பிரபுக்கள், கஜரகம, கந்தனகமாவைச் சேர்ந்த bத்திரியர்கள், பிராமணோத்தமார் திவாக ஆகியோர் முன்னிலையில் மகாபோதிக் கன்று நிலத்தின் மேற்தளத்தில் நடப்பட்டது.

மகாநாதன் மகாகமவில் ஆட்சி செலுத்து முன்னரே கத்ரகமவிற்கு 12 மைல்களுக்கு வடக்கேயுள்ள பிராந்தியத்தில் bத்திரிய குடும்பமொன்று ஆட்சிபுரிந்து வந்தது. இக்குடும்பத்தைச் சேர்ந்த bத்திரியன் ஒருவன் தேவநம்பிய திஸ்ஸவின் அழைப்பின் பேரில் அநுராதபுரத்தில் நடைபெற்ற போதிக்கன்று நாட்டல் விழாவிற்கு சமுகமளித்திருந்தான்.

மகாநாதனின் பேரனான கோதாபய என்பவன் கத்ரகம பிரதேசத்தை ஆண்ட 10 அரசசோதரர்களைக் கொன்றதாகவும் அப்பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்யுமுகமாக மகாவலி கங்கையின் இருகரையோரங்களிலும் பல மடாலயங்களைக் கட்டியதாகவும் சேருவில தாதுகோபுரப் பழங்கதை கூறுகிறது.

10 அரச சகோதரர்களின் இலக்கிய தலைமுறையைக் கத்ரகமவிற்கு 30 மைல் கிழக்கேயுள்ள போவத்தகல என்னுமிடத்திலுள்ள கல்வெட்டு சாசனம் ஊர்ஜிதப்படுத்துகிறது..... பராக்கிரமபந்து இறந்த பிற்பாடு லோகிஸ்ஸராவைச் சேர்ந்த லோகா என்னும் படைத்தலைவன் ருகுண ராஜ்யத்தைக் கைப்பற்றி சுமார் கி. பி. 1050 ஆண்டில் கத்ரகம ஆட்;சியமைத்து அரசாண்டான்.

1. ராணம மாகாணத்திலுள்ள திஸ்ஸமஹாறாமவிற்கு 10 மைல் வடக்கேயுள்ள மாணிக்ககங்கை கரையிலுள்ள புதிய கதரகாம் - பாக்கர் எழுதிய - “புராதன இலங்கை” பக்கம் 114
2. மகாவம்சம் 19வது அத்தியாயம்

கட்டுரை - 7

கந்த - முருக வழிபாடு

பிரிட்டிஷ் ராணுவப் பிரிவுகளின் பாதுகாப்பை யொட்டி கப்புறாளைமாரை விரட்டிவிட்டு பிராமணர்களை நியமித்தமைபற்றி சேர். பொன்னம்பலம் அருணாசலத்தின் குறிப்பு (1)

“கந்த - முருக வழிபாடு. ஸ்ரீகேசபுரி சுவாமி 1898-ம் ஆண்டில் ஜுலை மாதம் முற்றிப் பழுத்தவயதில் கொழும்பில் காலமானார். அவருடைய பூதவுடலை கத்ரகமவிற்கு எடுத்துச் சென்று அதன்மேல் ஒரு சமாதிக் கோயிலை அவரின் சீடர்கள் கட்டினார்கள். அவரின் மாணாக்கரான சூராஜ்பூரி சில மாதங்களே உயிர் வாழ்ந்து 1898-ம் ஆண்டு நவம்பரில் காலமானார்.

பாலசுந்தரி என்னும் பெண் துறவி அங்கு (கத்ரகம) வாழ்ந்ததாக தபசி ஸ்ரீகேசபுரி சுவாமி என்னிடம் (அருணாசலம்) கூறினார். வடஇந்திய அரசன் ஒருவன் பிள்ளை இல்லாக் குறையைப் போக்குமாறு கதிர்காமக் கந்தனை வேண்டி பிறந்த முதற்பிள்ளையே பாலசுந்தரி. பிள்ளை பிறந்தால் மூத்த பிள்ளையை கந்தனுக்கு சேவைசெய்ய அர்ப்பணிப்பதாக பிரதிக்ஞையை மறந்திருந்த மன்னனுக்கு கந்தன் ஞாபகமூட்டினான். அரசன் தன் சத்தியவாக்கை காப்பாற்றினான். பச்சிளங்குழந்தையான பாலசுந்தரியை தக்க பாதுகாப்புடன் கத்ரகம கடவுளுக்கு தத்தம்பண்ணிக் கொடுத்துவிட்டுச் சென்றான். ஆத்மீக வாழ்வை மேற்கொண்டது அக்குழந்தை. நாளொருவண்ணம் பொழுதொரு மேனியுமாக வளர்ந்த பாலசுந்தரியின் வனப்பும் அழகும் கண்டி மன்னனின் கவனத்தை கவர்ந்தது. தன்னை மணம்புரியுமாறு து}தர்களை அனுப்பினான். அவள் இசைய மறுத்து விட்டாள். மன்னனா விடுவான்! போர்வீரர்களை அனுப்பி அவளைப் பிடித்து வருமாறு ஏவினான். திக்கற்றவருக்கு தெய்வமே துணை. கந்தன் காப்பாற்றினான். பிரிட்டிஷ் துருப்புகள் கண்டிக்கு படையெடுத்து கண்டி மன்னனை கைது செய்து தென்னிந்தியாவிலுள்ள வேலு}ரில் சிறையிலிட்டனர். இது நிகழ்ந்தது 1814-ம் ஆண்டில், காமுக மன்னனிடமிருந்து தப்பித்த அம்மையார் நெடுங்காலம் எல்லோர் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரராகி வாழ்ந்து ஈற்றில் கந்தபதம் அடைந்தார். காலமாகு முன் மங்களபுரி சுவாமியை தனது வாரிசாக நியமித்தார். அவர் 1873-ம் ஆண்டில் சமாதியடைந்தும் எனது (அருணாசலம்) மதிப்புக்குரிய நண்பர் கேசபுரி மடாதிபதியானார்.

கண்டி ஒப்பந்தம் உறுதியளித்த உரிமைகளையும் சலுகைகளையும் பெறமுடியாத கண்டிய பிரதானிகள் கொதித்தெழுந்து 1818-ம் ஆண்டில் பெரும் கலகம் விளைவித்தனர். தயவு தாட்சண்யமின்றி கலகம் அடக்கப்பட்டது. மிகவும் பாதிக்கப்பட்டது. ஊவா மாகாணமே திரு. உவைட், சி. சி. எஸ். (ஆச. றூவைந ஊ. ஊ. ளு) ஊவா குறிப்புகளின் (1893) பிரகாரம் கலகத்தால் விளைந்த பாரது}ரமான கஷ்ட நஷ்டங்கள் இன்னமும் ஊவாவில் முற்றாக மறைந்துவிடவில்லையென்கிறார்.

இத்தகைய ராணுவ நடவடிக்கைகள் முடிவுறுங்காலத்திலே இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் ராணுவத்தின் மருத்துவப் பகுதியில் கடமையாற்றியவரும் பின்னர் கவர்னரின் கத்ரகம விஜயத்தின் போது உடன் சென்றவருமான டாக்டர் ஜோன் டேவி (னுச. துழாn னுயஎல. கு. சு. ளு) “யுஉஉழரவெ ழக ஊநலடழn” என்று அவர் எழுதிய நு}லில் (1821-ல் பிரசுரிக்கப்பட்டது) கவர்னரின் ஊவா, கத்ரகம விஜயம்பற்றி குறிப்பிட்டுள்ளார். 1818-ம் ஆண்டு கலகத்தில் சிங்கள கப்புறாளைமார் தீவிர பங்கு கொண்டார்களென்று நம்பப்படுகின்றது. மகாதேவாலயத்தின் பொறுப்பு அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு இந்து சந்நியாசிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கு ராணுவ பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. சில வருடங்களுக்கு பின் ராணுவ பாதுகாப்பு நீங்கியவுடன் கப்புறாளைமார் மகாதேவாலயத்தை பலாத்காரமாகக் கைப்பற்றினர். டாக்டர் டேவியின் மனசைக் கவர்ந்த இந்து சந்நியாசிகளின் மடாதிபதி தொடர்ந்து தெய்வயானை அம்மன் கோயிலையும் மடாலயத்தையும் பரிபாலித்து வந்தார்.

கவர்னரின் கத்ரகம விஜயத்தைப் பற்றி டேவி கூறுகிறார். “போகும் வழியில் ஒரு குடிமனையையோ அல்லது சமீபகால வேளாண்மைச் சின்னங்களையோ நாம் காணவில்லை@ ஒரு கிராம வாசியைக்கூட காணவில்லை@ ஆங்காங்கே சில பாழடைந்த இருப்பிடங்கள்@ கவனிப்பாரற்ற நெற்காணிகள்@ தெருவோரத்தில் மரத்தின் கீழே ஓர் மண்டையோடு கயிறு சுற்றிய நிலையில் கிடந்தது. இக்காட்சிகள் தத்தம் கதைகளை தெளிவாக எடுத்துக்கூறின்.....” தேசாதிபதி சேர். ஆர்தர் கோர்டன் ஒரு ஈசால விழாவின் போது கதிர்காமம் சென்று கூடாரமடித்து ஒருவாரம் தங்கியிருந்தார்.

கி. மு 244-ல் பிரசித்திபெற்ற போதி விருட்ச கிளை அநுராதபுரத்தில் பல பிரபலஸ்தர்கள் முன்னிலையில் நடப்பட்டபொழுது அங்கு விசேஷ அழைப்பின்மீது சமுகமளித்திருந்த கஜரகம அரசிளங்குமரன் வேடர்குலத் தலைவனாக இருந்திருக்கலாம். போதிவிருட்சக்கிளை முதலாவதாக நடப்பட்ட இடம்தான் அதிமுக்கியமான பௌத்த மடாலயத்தை ஸ்தாபிப்பதற்கு தேவநம்பியதிஸ்ஸ அரசனால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டாக்டர் இ. முல்லர் (னுச. நு. ஆரநடடநச) அழிந்துபோன நிலையில் அங்கே கண்ட ஒரேயொரு கல்வெட்டுக் குறிப்பு கி.பி. நான்காம் நு}ற்றாண்டில் பொறிக்கப்பட்டதாகும்.

திரு. நெவில் ஆச. நேஎடைட நாடோடிக் கதையொன்றைக் குறிப்பிட்டுள்ளார். அக்கதையின்படி கந்தனும் அவன் சேனையும் அசுரர்களை கத்ரகமவில் தோற்கடித்ததாகவும் அங்குதான் வள்ளியம்மையைக் கண்டு, காதல் கொண்டு, மணமுடித்ததாகவும் கூறுகிறார். வேடுவகுடும்பம் ஒன்றின் வளர்ப்பு பிள்ளையான வள்ளியை, ஒரு தெய்வப் பெண்ணாக சிங்களவராலோ அல்லது வேடுவர்களாலோ நடத்தப்பட்டதாக நான் என்றுமே கேள்விப்பட்டதில்லை. தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள சித்திரகூடத்தில் இரு தெய்வங்களின் சித்திரங்கள் அநேகமாக கி.பி. 130-ம் நு}ற்றாண்டில் வரையப்பட்டதாகக் கொள்ளலாம்.

1819-ம் ஆண்டில் டாக்டர் டேவி (னுச. னுயஎல) கத்ரகமாவிற்கு விஜயம் செய்தபோது அங்கே கண்ட இரண்டு சதுக்கங்களைப்பற்றி பின்வருமாறு எழுதுகிறார். பெரிய சதுக்கத்தில் தத்ரகம தேவாலயம், அண்ணனின் கணேசர், கணதேவாலயம், புத்தவிகாரை ஆகியவை கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டன. அழகியபோதி மரமும் பத்தினி தெய்வத்திற்கும் ஐந்து பூதங்களுக்கும் அமைக்கப்பட்ட ஆறு சிறிய கோயில்களும் விக்கிரகங்கள் இல்லாத பீடங்களும் காணப்பட்டன. சிறிய சதுக்கத்தில் ஈஸ்வரனுக்குரிய சிவன் சிறிய பீடம் (கரண்டவ), கல்யாண மடம் (குடிசை) பைரவ கோயில், யாத்திரீகர்களும் அதிகாரிகளும் தங்குவதற்கான வாடிவீடு ஆகியவை காணப்பட்டன.

கட்டுரை - 8

அரசாங்கத் தலையீட்டைத் தடுத்தல்

கதிர்காமக் கந்தன் வழிபாட்டில் அரசாங்கத் தலையீட்டை சேர் பொன்னம்பலம் இராமநாதன் தடுத்தார்.

கி;. பி. 1918-ம் ஆண்டின்போது அரசாங்க அனுமதிப்பத்திரமில்லாமல் யாத்திரீகர்கள் கதிர்காமத்திற்கு போகக் கூடாதென அரசாங்கம் தடையுத்தரவு பிறப்பித்தது.

“அரசாங்க அதிபரின் அனுமதிப்பத்திரம் பெறாமல் கதிர்காமத்தில் நடைபெறும் ஈசால, இல்மஹா விழாக்களுக்கு செல்வோருக்கு 1000 ரூபாய் அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மேற்படாத கடுஞ்சிறைத் தண்டனை விதிக்கப்படும்”

அரசாங்கத் தடையுத்தரவைக் கண்டித்து சேர். பொன்னம்பலம் இராமநாதன் அன்றைய சட்டசபையில் காரசாரமாக பின்வருமாறு பேசினார். “ஐயா! (கவர்னரை நோக்கி நாம் எங்கு வாழ்கிறோம்? சமயமும் தத்துவ ஞானமும் மலிந்த அழகிய இலங்கையில் காட்டுமிராண்டிச் சட்டத்தையும் இதற்கு பொறுப்பாளியான அநாகரீகப் பேர் வழியையும் நான் எங்குமே கண்டதில்லை. இந்தச் சட்ட சபைக்குள்ளும் சரி அல்லது வெளியிலும் சரி இதை நான் அநுமதிக்க முடியாது.....”

தடையுத்தரவு ரத்துச் செய்யப்பட்டு யாத்திரீகர்கள் தம்மிஷ்டம் போல் கதிர்காமத்திற்கு செல்ல அநுமதிக்கப்பட்டனர்.

கட்டுரை - 9

கதிர்காமத்தை சிங்கள பௌத்தமயமாக்க முயற்சிகள்

கதிர்காமக் கந்தன் கோயில் வழிபாட்டு முறையையும் அதன் நிலபுலன்களையும் சிங்கள பௌத்தமயமாக்க எடுத்த முயற்சிகள் :

“ஜனாதிபதி ஜயவர்த்தனா தலையிட்டு ஆதரவு கிடைத்தது. 1978-ம் ஆண்டு ஜனவரி 29-ம் திகதி வெளிவந்த ‘சிலோன் ஒப்சேவர்’ ஞாயிறு இதழில் ‘முதல் நடவடிக்கை’ என்ற தலைப்புடன் பிரசுரிக்கப்பட்ட செய்தி பின்வருமாறு :

(அ)

“பெப்ரவரி 4-ம் திகதியன்று சுபமுகூர்த்தமான காலை 8-58 மணிக்கு விசுவாசப்பிரமாணம் செய்யும் ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் முதலாவது உத்தியோகபூர்வமான நடவடிக்கை, கதிரகமவிலுள்ள வேதிகித்திகந்த என்னும் புனித பகுதியை மகாசங்கத்திற்கு தானம் செய்யும் பட்டயமான ஸ்ரீ சன்னாஸ் பத்திரத்தில் கைச்சாத்திடுவதேயாகும்.

அப்பத்திரத்தின் வாசகம் வருமாறு : “ஸ்ரீ லங்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியான ஜுனியஸ் ரிச்சார்ட் ஜயவர்த்தனா ஆகிய நான், என தலைமையின் கீழ் உள்ள ஸ்ரீலங்கா குடியரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபையின் ஏகோபித்த சம்மதத்திற்கு இணங்க இத்தால் உத்தரவிடுவதாவது, ஊவாமாகாணத்தில் மொனராகல மாவட்டத்திலுள்ள வேதிகித்திகந்த என வழங்கும் 26 ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பையும் அதனுள் அடங்கிய அசையும் அசையா பொருள்களையும் வேதிகித்தி கந்த விகாரையின் பிரதம மடாதிபதியான வணக்கத்துக்குரிய ரத்மலானே ஸ்ரீ சித்தார்த்த தேரோவுக்கும் அவரின் வாரிசுகளுக்கும் புத்தர் பரிநிர்வாணம் எய்திய 2521-ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் நான்காம் நாளான சனிக்கிழமை தினமாகிய இன்று வேதிகித்திகந்த விகாரையின் நன்மை முன்னேற்றம் கருதியும் பௌத்த சாசனத்தை நிலைநிறுத்தவும் உரிமை வழங்கி கையளித்துள்ளேன்”

(ஆ)

ஈழத்தமிழ் நாட்டின் சைவமக்களை மேற்படி புதினச் செய்தி மிகவும் புண்படுத்தி வருகின்றது.

சுந்தரலிங்கம் ஆகிய நான் கதிர்காமத்தைப் பற்றி சேர். பொன்னம்பலம் அருணாசலம் ஏறத்தாழ 1898-ம் ஆண்டில் எழுதியதன் போட்டோ பிரதியை குறிப்பிட விரும்புகிறேன். பிரதியில் உள்ளவற்றை விளக்க வேண்டிய தில்லை@ இருந்தும் சில முக்கிய விஷயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

1. 1819-ம் ஆண்டு இலங்கையின் முதலாவது பிரிட்டிஷ் தேசாதிபதிக்கு கவர்னர் பிறவுன்றிக் சிங்கள கப்புறாளைமார் அடாத்தாக அத்துமீறிக் கைப்பற்றிய கதிர்காமக் கோவிலையும் அதன் சொத்துக்களையும் மீட்டு திரும்பவும் பிராமணர்களிடம் ஒப்படைத்தார்.
2. பிராமணக் குருமாரின் பாதுகாப்பிற்காக ராணுவக் காவலை கவர்னர் அளித்தார்.
3. சிலகாலம் போனபின் கப்புறாளைமார் பலாத்காரத்தின் மூலம் கோயிலை ஆக்கிரமித்து கைப்பற்றினர்.
4. சமீபகாலத்தல் கதிர்காமக் கந்தன் கோயில் படிப்படியாக சிங்கள - பௌத்த மயமாக்கப்பட்டுவருகிறது. விஷ்ணு விக்கிரகம் இருந்த சிறு கோயிலில் விஷ்ணுவுக்கு பதிலாக புத்தர் காட்சியளிக்கிறார். பின்னால் தள்ளப்பட்ட விஷ்ணுவோ சுவருக்கும் புத்தருக்கும் மத்தியில் அமர்ந்திருக்கிறார்.
5. கத்ரகம தெய்வத்திற்கு இதுகாறும் படைக்கப்பட்டபால் அன்ன நைவேத்தியம் இப்பொழுது புத்தருக்கு முதலில் படைக்கப்பட்டு வருகிறது. முட்டியில் எஞ்சியதே கந்தக்குமரனுக்கு (சிங்களத்தில் கந்தக்குமரய) படைத்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பெரும் தெய்வ நிந்தனை.

பாலி மொழியில் உள்ள வரலாற்று ஏடுகளின் பிரகாரம் சங்கமித்திரை கொண்டு வந்த அரசங்கிளையை அநுராதபுரத்தில் நட்டவைபவத்தின் போது கத்ரகம தேவாலயத்தின் பிராமணோத்தமர்கள் விசேஷ அதிதிகளாக உபசரிக்கப்பட்டனர் என்பதை நாம் மறந்து விடலாகாது. போதிவிருட்சத்தின் ஏழு குருத்துக்களில் ஒன்றே கத்ரகம தேவாலயத்தின் அருகேயுள்ள இன்றைய அரசமரமாகும்.

இன்று ஆங்கில - சிங்கள பெயர் பூண்ட ஜனாதிபதி ஜுனியஸ் ரிச்சார்ட் என்ற ஜயவர்த்தனா கத்ரகம தெய்வத்திற்கு சொந்தமான கோவிற்காணிகளையும் சொத்துக்களையும் ஒரு பௌத்த மகாசங்கத்திற்கு “கைமாற்றி” உரிமை வழங்கப்போகிறார், என்று கதை பரவியுள்ளது. இப்படிச் செய்வதற்கு இவருக்கு தார்மீகரீதியிலோ சட்ட ரீதியிலோ என்ன நியாயம் உண்டென்பதை யாரும் அறியார். 1898-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் திகதி பிரசித்தநொத்தாரிசு (வு. ஊயனநசஅயn) ரி கதிரமன் எழுதிய 2317 நிர் நன்கொடை உறுதியில் காணிகள் விவரிக்கப்பட்டுள்ளன. தரவைக் காணிகள் சட்டத்தின் கீழ் கதிர்காமக்கோயிலையும் அதன் சொத்துக்களையும் பிரிட்டிஷ் அரசாங்கம் சுவீகரிக்கும் அபாயத்திலிருந்து காப்பாற்றிய சேர். பொன்னம்பலம் அருணாசலத்துடன் இக்கட்டுரை ஆசிரியர் (சுந்தரலிங்கம்) பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார். ஆலோசகர் சபையில் ஒரு அங்கத்தவனாக இருக்கும்படி என்னை (சுந்தரலிங்கம்) சேர். அருணாசலமே கேட்டிருந்தார்.

காலசக்கரம் சுழன்றது@ சரித்திரமே மாறியது இன்று சோஷலிஸ ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் இலங்கையின் முதல் ஜனாதிபதிக்கு தம்மிஷ்டம் போல் சைவாலயங்களுள் தலைசிறந்து விளங்கும் ஆலயத்தையும் அதன் சொத்துக்களையும் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் கிடைத்தது பெருந்துர் அதிர்ஷ்டமும் அபச்சாரமுமாகும்.

இக்கட்டுரை ஆசிரியருக்கு ஜனாதிபதி அனுப்பிய கடிதம்

ஜனாதிபதி மாளிகை,
கொழும்பு,
ஸ்ரீ லங்கா,
பெப்ரவரி 9, 1978.

என் அன்புள்ள சுந்தரலிங்கம்,

1978 பெப்ரவரி 3-ம் திகதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கு எனது மனமார்ந்த நன்றி எந்த மனோநோக்குடன் நீங்கள் எழுதினீர்களோ அதே நோக்குடன் நண்பரொருவர் தனிப் பட்ட முறையில் மற்றொரு நண்பருக்கு அனுப்பியதாக ஏற்றுக்கொள்கிறேன்.

வேதிகித்திகந்த சம்பந்தமாக எது நடைபெறுமென்று நீங்கள் எதிர்பார்த்தீர்களோ அது உண்மையில் நடைபெறமாட்டாதென்பதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், மிக அன்பான நல்வாழ்த்துக்கள்;.

தங்கள் அன்புள்ள
ஸ்ரீமான் செ. சுத்தரலிங்கம் ஜே. ஆர். ஜயவர்த்தனா
12, எல்பின்டேல் அவெனியு, (ஒப்பந்தம்) ஜனாதிபதி
பம்பலப்பிட்டி,
கொழும்பு - 4.

கட்டுரை - 10

ஆண்டாண்டு காலமாக மலையுச்சியிலுள்ள மகிமைவாய்ந்த
புனித ஸ்தலத்தில் வழிபாடு

கதிரைமலையில் குடிகொண்டுள்ள கந்தனை, கார்த்திகேயனை வழிபடுவதற்கு பக்தர்கள் செல்வர். மலையின் உச்சியில் ஒரு வேல் து}ரத்திலிருந்து பார்க்கும் போதே தெரியும். இவ்வேலாயுதத்தை அசுரர்களை சூரபத்மன், தாரகன் வென்ற பிற்பாடு கந்தன் மலையுச்சியில் ஊன்றிவிட்டான். மலையேறும் அடியார்கள் அதிகாலையில் எழுந்து மாணிக்க கங்கையில் நீராடி நனைந்த வஸ்திரத்துடனே கதிரைமலை (ஏழுமலைத் தொடரில் மிக உயர்ந்ததே வேதிகித்திகந்த மலை) ஏறுவர்.

(செ. சுந்தரலிங்கத்தின் சொந்த அநுபவத்தைப் போல் உவேர்ஸ் (Pயரட றுசைண) எழுதிய “கத்ரகம - 1966” நு}ல் ஊர்ஜிதம் செய்கிறது. காலாகாலமாக அடியார்கள் மலையேறிய பாதையை, சுமார் 5 வருடங்களுக்குமுன் அங்கு குடியேறிய ஒரு பிக்கு தடைசெய்துள்ளார். மலையுச்சியின் மேல் உள்ள கோயிலை வணங்கச் செல்லும் அடியாரை போகவிடாது தடுப்பதற்கு வன்முறைகளைக் கையாளுகிறார்.)

கட்டுரை - 11

கதிர்காமக் கந்தன் ஆலய ஆதனங்கள்

கத்ரகம கிராமம், அருகாமையில் உள்ளமலைகள், சுற்றிலுமுள்ள நாடு எல்லாம் கோயிலுக்குரிய ஆதனங்களென்றும் கோயிலில் பணிபுரிவோர் ஆதனங்களின் குத்தகையாளர் என்றும் டாக்;டர் கொவிங்டன் கூறுகிறார். எல்லாளனை வெற்றி கொண்ட துட்டகைமுனுவினால் கி. மு 160 ஆண்டளவில் கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பல கிராமங்களையும் நெல்வயல்களையும் அவனும் அவனின் வாரிசுகளும் கோயிலுக்கு அன்பளிப்பு செய்து அவற்றின் வருமானத்தை கோயிலைப் பரிபாலிக்க பயன்படுத்துமாறு பணித்தனரென்றும் நம்பப்படுகிறது. இந்த தர்மச்சொத்துக்களின் வருமானத்தைக் கொண்டு கோயில் நிர்வாகத்தைத் திறம்படச் செய்யவும் நித்திய பூசைகளை காலந்தவறாமல் செய்யவும், தேவையான திருப்பணி வேலைகளைச் செய்யவும், பூசகர்கள் பணியாட்கள் ஆகியோரின் வேதனத்தைக் கொடுக்கவும், திருவிழாக்கள் நடத்தவும் பயன்பட வேண்டுமென்பதே நன்கொடைகளின் நோக்கமாகும்.

கட்டுரை ஆசிரியர் செ. சுந்தரலிங்கத்தின் (1978) குறிப்பு : பிரசித்த நொத்தாரிசு ஜே கதிரமன் 1898 ஆண்டு மார்ச் 9-ம் திகதி எழுதிய 2317 நம்பரைக் கொண்ட உறுதியில் முதல் இரண்டாம் பாகங்கள் ஆலய ஆதனங்களின் பட்;டியலையும் அதற்கு ஆதாரபூர்வமான படங்களையும் கொண்டுள்ளது. எல்லைவரையறைப் படங்களோடு கூடிய (டீ. P. P. ழே. 25) குத்தகையாளர் பட்டியல் ஆலய ஆதனங்களை விவரித்துள்ளது. ஆதனங்களின் மொத்த விஸ்தீரணம் 426 ஏக்கராவாகும்.

கட்டுரை - 12

முடிவு

கதிரைமலைக் கந்தன் கோயிலின் ரத்தினச் சுருக்கமான இவ்வரலாறு கலியுக சகாப்தம் ஆரம்பந்தொட்டு 5082 வருடங்கள் வரை தழுவியுள்ளது. அதாவது பு. மு: 2559 தொட்டு பு. பி. 2523 வரை@ கி. மு : 3102 தொட்டு கி. பி : 1980 வரை கலியுகம் 5082 வரை எடுத்துக் கூறுகிறது. கந்தன் அசுரர்களை வென்றதின் ஞாபகார்த்தமாக எழுந்த கந்தன் கோயிலும் சுமார் 51 நு}ற்றாண்டுக்காலம் எத்தனையோ யுத்தங்களும் சண்டைகளும் நிகழ்ந்துள்ளன. சைவக்கோயில்களில் தலைசிறந்த கோயிலை பௌத்த கோயிலாக்கவும் ஆதியில் தமிழ் பிரதேசமாக விளங்கியதை பௌத்த சிங்கள மயமாக்கவும் இப்பொழுது மீண்டும் பூசல்கள் ஆரம்பித்துள்ளன. கடந்த 150 வருடங்களாக சமயமும் சாந்தியும் நிலவின. ஆயிரக்கணக்கான அடியார்கள் முக்கிய விழாக்களில் கலந்து விழிபடுகின்றனர். இங்கேயா உட்பூசல்கள் ஆரம்பிக்க வேண்டும்? கேளைப் படித்தால் பௌத்த சிங்களபிக்கு ஒருவராலும், பிரதம மந்திரிகளாலும், 1970-ல் இயற்றப்பட்ட நாடு நகர திட்டமிடல் சட்டத்தின்கீழ் கடமையாற்றும் அதிகாரிகளாலும் இழைக்கப்பட்ட நாசத்துரோக வேலைகள் நன்கு புலனாகும். சுப்பிரீம் கோட்டிலும், அப்பீல் கோட்டிலும் இவ்விஷயங்கள் பாரப்படுத்தப்பட்டிருத்தலால் இப்பொழுது இவை பற்றி விமர்சிப்பது முறையல்ல.

கலிகாலத் தெய்வமே!
கதிர்காமத்துறை காவலனே!
காரிருள் கடிந்து நம் கலிதீராயோ!

பொதுவான சிறப்பு அம்சங்கள்

அண்டக் கோளாறும் குமரிகண்ட
(லெமூரியா டுநஅரசயை) தோற்றமும்

கச்சியப்பசிவாச்சாரியார் இயற்றிய கந்தப்புராணத்தில் ‘முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும்;’ முருகனைப் பற்றி, சைவக்கடவுளான கந்தக்குமரனைப்பற்றி, அவனின் படைத்தளபதியான வீரவாகுதேவர் ஆகியோரின் அதிவீரதீர பராக்கிரமங்களைப் பற்றி சொல் ஓவியம் நிறைந்த, கற்பனை கடந்த கவிதாவிலாச வர்ணனைகளுடன் பாடியுள்ளார். வாய்வழி வந்த மரபுக்கதைகளை ஆதாரமாகக் கொண்டே இவ்வரலாற்றுப்படைப்பு மகாகாவியமாக உருப்பெற்றது. இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்துதான் எழுத்துக்கரை மஸிடோனியாவில் (ஆயஉநனழnயை) வழங்கத்தொடங்கிற்று என்பதை நாம் நினைவில் வைத்திருக் வேண்டும் இரண்டாயிரம் வருடங்களுக்குப், பின்னரே தமிழ் எழுத்து வடிவில் நடைமுறைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் கந்தப் புராணத்தில் வரும் சம்பவங்கள், கதைகள், நிகழ்ச்சிகள் கி.மு300 காலத்தியவைகளாக தெரிகின்றன.

கந்தப்புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பகுதிகள் சில விஷயங்களை விளக்குகின்றன.

மேற்கோள் - 1

கச்சியப்பசிவாச்சாரியாரின் கந்தப்புராணத்திலிருந்து மேற்கோள்

அசுரர்களால் இம்சிக்கப்பட்டோரின் முறையீடுகளை விசாரிப்பதற்கு வரவாகுதேவர் மேற்கொண்ட முதல் விஜயம் : கொடுங்கடல் கொண்ட குமரிக்கண்டம் (டுழளவ டுநஅரசயை).

“துஷ்டனான சூரபத்மன் இலங்கையில் செய்யும் அட்டூழியங்களை சகிக்கமுடியாத மக்கள் முறையீடு செய்தனர். கந்தசுவாமியார் முன்னிலையில் மாபெரும் நகரமான திருச்செந்து}ரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. கொடிய வனத்தினால் சூழப்பெற்ற வீரமஹேந்திரபுரிக்கு கால்நடையாக வீரவாகுதேவர் சென்று புலன் விசாரித்து வருமாறு மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. காடுமேடுகளைத் தாண்டி, கரைபுரண்டோடிய காட்டாறுகளையுங் கடந்து கடைசியில் செங்கதிர் தழுவும் செழுந்தளிர்களைக் கொண்ட நவஒளி வீசும் ஏழுமலை நாட்டை வீரவாகுதேவர் அடைந்தார். அங்கிருந்து மஹேந்திரபுரிக்கு சென்ற வீரவாகுதேவர் கடல் கொந்தளித்ததும் ஏழுமலைச் சாரலைக் கொண்ட இலங்கைக்கு மீண்டும் திரும்பினார். மலைமீது அவர் இறங்கியதும் பூமி அதிர்ந்தது@ மலைகள் நடுங்கி பிளவுற்றன. ஏழுமலை வாசற்காப்போரை போரில் ஜயித்து திருச்செந்து}ர் திரும்பினார் வீரவாகுதேவர்”

ஆசிரியர் குறிப்பு : இரு முக்கிய விஷயங்களை அவதானிக்க வேண்டும். வீரவாகுதேவர் மஹேந்திரபுரியிலிருந்து இலங்கை திரும்பிய சமயமே அண்டக்கோளாறு நிகழ்ந்தது முதலாவது. இரண்டாதாக, வீரமஹேந்திரபுரியின் மறைவு கொடுங்கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் (ஏயniளாநன டுநஅரசயை) அஸ்தமனமாக விவரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள் - 2

கடல் கொண்ட பகுதிகள் : குமரிக்கண்ட (டுநஅரசயை) அஸ்தமனம்

“கந்தபுராணத்தின் பிரகாரம் தேவர்களை அடிமைப்படுத்திய அசுரர்களை ரத்தக்களறிபடிந்த நீண்டகால கோரயுத்தத்தில் வெற்றி கொண்ட கந்தன், கீழக்கடற் தீவுப் பகுதிகளில் அசுரரின் கோட்டையாக விளங்கிய மஹேந்திரபுரியை நிர்மூலம் செய்த காலத்தின்போதே லெமூரியா கண்டத்தை கடற்கோள் கபளீகாரம் செய்ததாக கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சி கிறீஸ்து சகாப்தத்திற்கு 24 நு}ற்றாண்டுகளுக்கு முன்னராக, ராம-ராவண காலத்திற்கும் எவ்வளவோ முந்தியதாக கருதப்படுகிறது.

மேற்கோள் - 3

பூமண்டல கோரசம்பவமும் மக்களின் மரணாவஸ்தையும்

வீரவாகுதேவர் இலங்கை திரும்பினார். வீரவாகுதேவரின் பூர்வாங்க புலன் விசாரணை விஜயத்தின் பின் ஏற்பட்ட பிரளயத்தைப்பற்றி கந்தப்புராணத்தில் கூறப்பட்டுள்ளவைகள் ஒருங்குதிரட்டி கீழேதரதப்பட்டுள்ளன.

“மந்தரகிரி (மஹேந்திரபுரி) நிலைதழும்பி தலைகீழாக கடலினுள் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது இலங்கைகூட கடல் கோளினால் பாதிக்கப்பட்டதாகவும் பேரலைகள் மேவிப் பாய்ந்ததாகவும் தெரிகிறது. இந்த ஊழிக் கூத்திலே பெண்கள், பிள்ளைகள், அண்டை அயலவர்கள், அசுரர் குடும்பங்கள் எல்லோருமே கடலுக்கு இரையாயினர். கடலில் மூழ்கி மாண்டோரின் பிணங்கள் குன்றுகள் போல் காட்சியளித்தன. அவற்றை உடம்பு பூரிக்க உண்டு களித்திட படைபடையாக திமிலங்கள் (1) சுறாமீன்கள் மற்றும் பயங்கர கடல்வாழ் ஜந்துக்கள் நரமாமிச பிண்டங்களை கபளீகாரம் செய்த விதத்தை என்னென்று விவரிப்பது! குழந்தைகளின் உடலை கைவேறு, கால்வேறு, தலைவேறாக கூறுபோட்டு பிய்த்து தின்றன. நெஞ்;சைப் பிளந்து குருதியை குடித்தன மண்டையோடுகளை சுக்குநு}றாக்கின.

இலங்கை கரையோர வெள்ளத்தில் திக்குமுக்காட்டிய சிலர் கரையேறியதும் கந்தசுவாமியின் து}தரைக் கண்டனர்@ அஞ்சி நடுங்கினர். “இ;ங்கே இன்னமும் தாமதித்தால் நிச்சயம் இவர் எம்மைக் கொன்றே விடுவார்” என்ற பீதியினால் நானா பக்கங்களிலும் சிதறியோடி ஒளிந்து கொண்டனர். கருங்கடலில் ஆழாமல் தப்பிய காரிகைகள் தத்தம் கண்ணிறைந்த கணவர்களை தேடி அலையும்போது அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை அலைகள் மேலேழுப்பின நிர்வாணமாக நிற்பதைத்தடுக்க கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டனர்.

மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் கடலில் அமிழ்;ந்தியபோது அங்கு வாழ்ந்த மக்கள் சொல்லொணாக் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தனர்.(2)

பூமண்டலகோர சம்பவத்திற்கு பின்னரே சூரபத்மன், சிங்கன், தாரகன் ஆகியோருடன் கந்தசுவாமி போரிட்டு வெற்றிவாகை சூடினார். இந்த வெற்றியைக் கொண்டாடும் முகமாகவே கலியுக சகாப்பதம் ஆரம்பமாயிற்று. வானசாஸ்திரத்தை ஆதாரமாகக் கொண்டு கணிக்கப்பெற்ற தமிழ் பஞ்சாங்கத்தில் கலியுகத்தின் வருட எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. கலியுகம் இன்றைக்கு 5082 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதாகக் கொள்ளலாம். அதாவது இயேசுவுக்கு 3102 (கி. மு. 3102) வருடங்களுக்கு முன்னராகும். (3)

1. இன்று கூட சில காலங்களில் திமிங்கிலங்கள் இலங்கை கரையோரங்களில் வந்தடைகின்றன. போர்த்துக்கீய வர்த்தகப் பிரமுகர் திமிங்கலத்துறையொன்றை ஸ்தாபிக்க முயற்சித்தார். ஆனால் உள்ளுர் வாசிகள் துர்நாற்றம் வீசுமென அஞ்சி தடுத்துவிட்டனர்.
2. கந்தப்புராணம் - இலங்கை வீழ்படலம் பக்கங்கள் : 410-412
3. கந்தப்புராணம் - இலங்கை வீழ்படலம் பக்கங்கள் : 410-412

மேற்கோள் - 4

கதிர்காமத்திற்கு சீதா - ராமர் விஜயம்

“இதிகாச புராணங்களின் படி கதிர்காமத்திற்கும் இராமாயணத்திற்கும் தொடர்புண்டு. ராவணன் சிறையிலிருந்து மீண்ட சீதாபிராட்டியாரை இராமன் முதன் முதலில் சந்தித்த இடம் கதிர்காமம் என்று கருதப்படுகிறது. இராவணனின் கோட்டை இருந்த இடம் தென்கிழக்கு இலங்கையில் உள்ள கிரிந்தை என்னுமிடத்திலிருந்து 9 மைல்களுக்கு அப்பால் உள்ள பாசெஸ் (டீயளளநள) குன்றுகளின் மத்தியில் இருந்திருக்கலாமென்று ஊகிக்கப்படுகிறது.

ராமபாணத்தால் தாக்குண்ட ராவணன் வீழ்ந்து மடிந்த இடத்தை குணசேகராவின் புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நு}லில் உள்ள படத்தில் தெரியும் கற்குவியலே ராவணன் மாண்ட இடம். இந்த இடத்திலிருந்து கிழக்கு நோக்கி புறப்பட்ட இராமன் சீதாதேவியை சிறைமீட்டு கதிர்காமக்கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு போகும் வழியில் உள்ள கிராமத்திற்கு அவன் ஞாபகார்த்தமாக திஸ்ஸமஹாராம என்ற பெயர் ஏற்பட்டு இன்றும் வழக்கில் உள்ளது. இப்பெயரை மூன்று பதங்களாகப் பிரிக்கலாம். திசை என்ற தமிழ்சொல் சிங்களத்தில் திஸ்ஸ என்று திரிபடைந்தது. மஹா என்றால் பெரிய, ராமனின் ஆட்சி, கதிர்காமக் கந்தன் கோயிலை வழிபட்ட பிற்பாடு கிழக்கு நோக்கி சீதா - ராமன் சென்றனர். அவர்கள் கடந்து சென்ற கிராமத்திற்கு, அவர்களின் ஞாபகார்த்தமாக சீதாராமகம என்ற பெயர் ஏற்பட்டது. அரசாங்க ‘சர்வே’ படத்தில் இப்பெயரை காணலாம்.

பின்னர் ராமனும் சீதையும் பக்த அநுமானுடன் வடக்கே சென்றனர். இலங்கைக்கு தீயிட்ட அநுமான் தன் வாலின் தீயை மட்டக்களப்பில் உள்ள மாமாங்கப்பிள்ளையார் கோவில் அமிர்தகளிகுளத்தில் அணைத்தாராம். பிள்ளையாரை வணங்கிவிட்டு மூவரும் திருக்கோணேஸ்வரம் சென்று வானரப்படையுடன் கோணைநாதரை வணங்கினர். அப்புறம் ராமரும் சீதையும் தென்னிந்தியா சென்று பங்களுர் இராணுவ முகாமிற்கு வடக்கேயுள்ள மலைச்சாரலில் சில காலம் வாழ்ந்தனர். இன்றுகூட இவ்விடத்தை சீதா குன்று என்று அழைப்பர்.

மேற்கோள் - 5

கதிர்காமக் கோயிலின் பூர்வீகம்

“அநுராதபுரத்தில் அரசோச்சிய தமிழ் மன்னன் எல்லாளனை போரில் வெல்வதற்கு வரங்கொடுத்த கார்த்திகேயனுக்கு நன்றி செலுத்துமுகமாக மஹாகம அரசனான துட்டகைமுனுவால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதே கதிர்காமக் கோயில் இப்போதுள்ள கோயில் செங்கட்டியால் சமீபகாலத்தில் கட்டப்பட்டது. ஆலய நிர்மாண சாஸ்திர விதிகளின்றி கட்டப்பட்டது. திருவிழாக்காலங்களில் சேர்ந்த பணத்தைக் கொண்டு 1893-ம் ஆண்டு கோயில் சுற்றுமதிலும் சித்திர வேலைப்பாடுடன் கூடிய கோபுரவாசலும் கட்டப்பட்டது.”

மேற்கோள் - 6

கதிர்காமக் கோயில் வழிபாடு

இலங்கையிலே கதிர்காமம் ஓர் புனிதஸ்தலம். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காமயாத்திரை என்பர் மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது. கோயில் சிறிது ஆனால் மகிமை பெரிது . இந்தியக்கோயில்களைப் போல் வானளாவிய கோபுரங்களையும் கலைக்கூடங்களையும் கொண்டதல்ல@ சாதாரண செங்கட்டிக் கோயில்@ 50 அடி நீளம் கொண்ட ஓட்டுக்கூரை@ 20 அடி அகலம், 15 அடி உயரம்@ மூன்று மண்டபங்கள் போன்ற அறைகள். தெற்கு நோக்கிய பெரிய மண்டபத்தில் பக்தர்கள் நின்று வழிபடுவர் தென் திசை நோக்கிய கோயில். கோயில் மூலஸ்தானத்திற்கு மேல்ஸ்து}பியோ, கலசமோ ‘பிரமிட்’ போன்ற அமைப்போ, சிகரமோ கிடையாது. கூரைமுகட்டில் செம்பால் செய்த இரு குவளைகள் உள்ளன. சுவர்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே நிகழ்ந்த யுத்தக்காட்சிகள் பலவித ரூபங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத்திய அறையின் மேற்பாகம் சித்திரத்திரையினால் மூடப்பட்டுள்ளது. ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகஸ்யமான பவித்திரமான இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, அருவமும் உருவமுமாகி, அநாதியாய், ஒன்றாய், பலவாய், பிரம்மமாய் நின்ற சோதி, பிளம்பதோர் மேனியாகி, மருவுகதிர்காமப் பெருமாளாக யந்திரத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு மூலஸ்தானத்திலிருந்து பக்தகோடிகளை ரட்சிக்கிறான். யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது.

முக்கால் ஏக்கரர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கத்ரகமதேவியோவின் (கந்தனின் சிங்களப் பெயர்) அண்ணை கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அழகும் பொலிவுங் கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெய்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில், இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது.(1)

கோயிலுக்கு முன்னால் உள்ள பாதையின் இருமருங்கிலும் சுமார் 15 மண் குடிசைகள் உள்ளன. இவற்றில் சில ஓட்டுக்கூரையுடையவை திருவிழாக் காலங்களில் மண்குடிசைகள் சில்லறை வியாபார ஸ்தலங்களாகிவிடும். கோயிலுக்கு முன்னால் ஒரு ஏக்கரர் விஸ்தீரணமுள்ள சதுரமைதானமுண்டு இப்பகுதியில் சுமார் கால் ஏக்கர் பகுதியில் அழகான செம்மையான செட்டிமார் மடம் செங்கட்டியால் கட்டின சுவருடன் உண்டு.

ஏழுமலைகளில் ஒன்றின் மீது கத்ரகம தேவியோ காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புணர்ந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது.... கத்ரகம தேவியோவிற்கு தமிழ் சமஸ்கிருத மொழிகளில் பல திருநாமங்கள் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும்..... வருடாந்த மகோற்சவம் தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாஸ்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்;ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்”

மேற்கோள் - 7

கதிர்காமத்திற்கு துட்டகைமுனு விஜயம்@
தவமிருந்து எல்லாளனை வெல்லல்

கவன்திஸ்ஸாவின் மகனான துட்டகைமுனு தனது நாட்டை எல்லாள அரசனின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க விரும்பினான். இராப்பகலாக இச்சிந்தனையில் மூழ்கிக் கிடந்த துட்டகைமுனு ஓர் இரவு ஒரு கனாக்கண்டான். போர்தொடுக்க வேண்டாமென்ற தகப்பனின் அறிவுரையை மீறுவது ஆபத்தில் முடியுமென்றும் அப்படி போர் தொடுத்து வெற்றியீட்ட வேண்டுமானால் கதிர்காமம் சென்று போர்க்கடவுளை நோக்கித் தவமிருந்து அவன் ஆசியை பெற வேண்டுமென்று எச்சரிக்கப்பட்டான். கனவ கண்ட அடுத்த நாளே தனது சகாக்கள் பதின்மருடன் (பிற்காலம் இவர்களே துட்டகைமுனுவின் தளபதிகளாகவும் ராணுவ வீரர்களாகவும் விளங்கினர்) தவக்கோலம் பூண்டு துட்டகைமுனு கதிர்காமம் சென்றான். மாணிக்க கங்கையில் நீராடி அதன் கரையில் அன்னபானமின்றி ஏகாக்கிரசித்தனாய் போரில் எல்லாளனை தான் ஜயிக்க அருள் புரியுமாறு போர்க்கடவுளை வேண்டி கண்துஞ்சாது இருவாரங்கள் கடுந்தவமியற்றினான். இப்படியாக தியானத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருக்கும்பொழுது திடீரென ஓர் பண்டார சந்நியாசி அவன் முன் தோன்றினார். அவரைக் கண்ட இளவரசனுக்கு பயபக்தி மேலீட்டினால் மயிர்கூச்செறியத் தன் நினைவிழந்து அருடைய பாதகமலங்களில் வேரற்ற மரம்போல் வீழ்ந்து வணங்கினான். அறிவு தெளிந்ததும் ஆண்டியாகத் தோன்றிய போர்க்கடவுளை நாத்தழுதழுக்க போற்றிப் பரவினான். நடுநடுங்கி நின்ற இளவரசனுக்கு மனித உருவில் காட்சிகொடுத்த போர்க்கடவுள் அபயம் அளித்து வரம் கொடுத்தார். எல்லாளனோடு துவந்துவயுத்தம் புரியுமாறும் அப்போது அவனுடைய ஈட்டியினால் அவன் மாள்வான் என்றும் போர்க்கடவுள் உறுதியளித்தார். கத்ரகமதேவியோவிடமிருந்து வெற்றிவரம்பெற்ற துட்டகைமுனு போரில் தான் வெற்றிவரம் பெற்ற துட்டகைமுனு போரில் தான் வெற்றிபெற்றால் அக்கடவுளுக்கு கோயில்கட்டி அதில் அவரை எழுந்தருளச் செய்வதாக பிரதிஞ்ஞை செய்தான். தேவன் அருளியவாறே அநுராதபுரத்திற்கு படையெடுத்துச் சென்ற துட்டகைமுனு எல்லாளனை நெற்றிக்கு நேராக எதிரிட்டு போரில் வெற்றிவாகை சூடினான்.

இன்றைய கத்ரகம தேவாலயம் எல்லாளனை வெற்றி கொண்ட துட்டகைமுனுவினால் கி. மு. 160 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகவும், அதன் பரிபாலன செலவுகளுக்காக தென்னிலங்கையில் ஏராளமான பிரதேசங்களையும் கிராமங்களையும் அவனும் அவன் சந்ததியாரும் தர்மசாஸனம் செய்ததாகவும் நம்பப்படுகிறது.

மேற்கோள் - 8

பண்டை வரலாறுகளும் புராணங்களும்

போல் உவேர்ஸ் (Pயரட றுசைண) எழுதிய ‘கதரகம’ புத்தகத்தின் பின்வரும் பகுதிகள் சில விஷயங்களை தெளியவைப்பதோடு ருசிகரமானவையுமாகும்.

“வடமொழியில் ஆதியில் இயற்றப்பட்ட வீர மகாகாவியமான கந்தப்புராணத்தில் கதிர்காமப் புராணக்கதை வருகிறது. கி. மு. 5-ம் நு}ற்றாண்டில் சமஸ்கிருதத்திலும் கி. பி. 8-ம் நு}ற்றாண்டில் தமிழிலும் கந்தபுராணம் இயற்றப்பட்டிருக்கலாம். இப்புராணத்தின் கதாநாயகன் கந்தனை, சுப்பிரஹ்மண்யன், சிங்களத்தில் கந்தக்குமர அல்லது கத்;ரகம தேவியோ என்று அழைப்பார்கள். பரமசிவனின் இரண்டாவது புத்திரனான கந்தன் மற்றெல்லாத் தெய்வங்களையும் விட சீர் சிறப்புடன் உலக மக்களிடையே விளங்கினான்.

பேரிலான், குணம் குறியிலானுக்கு மக்கள் பல நாமங்கள் சூட்டினர். ஐந்திணை நிலங்களிலும் ஆங்காங்கே கடைப்பிடிக்கப்படும் வழிபாட்டு முறைகளைத் தழுவிப் பற்பல நாமங்களால் போற்றிப் புகழப்பட்டான். இலங்கையில், பொதுவாக கதிர்காமத்தில், கந்தன் முருகன் எனப் போற்றப்படுகிறான். முருகு என்றால் அழகு, இளமை, மென்மை என்று பொருள்படும். இப்பெயரை உச்சரிக்கலாமே தவிர எழுதக் கூடாதென ஒரு வழக்கம் உண்டு. இதன் காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. குகா! நேத்திரசுதா! (நெற்றிக்கண்ணிலிருந்து பிறந்தவன்) கார்த்திகேயா! (கார்த்திகைப் பெண்களான நட்சத்திரங்களால் போஷித்து வளர்க்கப்பட்டவன்) காங்கேயா! (கங்காபுத்திரன்), அக்கினி - பூ! (அக்கினியில் தோன்றியவன்) சண்முகா! (ஆறுமுகங்களை உடையவன்) ஆகிய இன்னோரன்ன நாமங்களெல்லாம் இத்தெய்வத்தின் பல்வகை தோற்றங்களையும் அம்சங்களையும் குறிப்பனவாகும்.

கந்தனின் திருஅவதாரம் பற்றி புராணக்கதை வருமாறு:-

தேவர்களுக்கும், அசுரர்களுக்குமிடையே நீண்ட காலமாக நிகழ்ந்த போரில் தேவர்கள் ஒருசமயம் தோற்றனர். அடிமைத்தளையை எப்படி அகற்றுவதென தேவேந்திரன் தலைமையில் மந்திராலோசனை செய்தனர். சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். தேவர்களின் பிரலாபத்தைச் செவியுற்ற சிவனாரின் ஐந்து முகங்களிலுமுள்ள 15 நேத்திரங்களும் கோபாக்கினியைக் கக்கின. ஆறாவது முகம் ஒன்று திரிநயனங்களுடன் திடீரென்று தோன்றிற்று. ஆறு நெற்றிக் கண்களிலுமிருந்து ஆறு பொறிகள் உற்பவித்தன. திரிலோகங்களும் கிடுகிடுக்கின்றன. தேவர், அசுரர், சித்தர், கின்னரர், கிம்புருடர், மனிதர் எல்லோரும்; நடுநடுங்கினர். ஆறுபொறிகளையும் தேவேந்திரன் கையேந்தி அவற்றை ஆயுதங்களாகப் பாவித்து அசுரர்களை அழிக்குமாறு அக்கினித்தேவனிடம் ஒப்படைத்தான். அவற்றின் உக்கிரத்தை தாங்கமுடியாத அக்கினித்தேவன் கங்கையிடம் ஒப்படைத்தான். கங்காதேவி சரவணப் பொய்கையில் சேர்த்துவிட்டாள். இங்கே கார்த்திகை கன்னிகைகளான ஆறு நட்சத்திரங்களின் பராமரிப்பில் ஆறுபொறிகளும் ஆறு குழந்தைகளாக பரிணமித்தன. ஒருநாள் சிவபெருமான் உமாதேவியாருடன் சரவணப் பொய்கைக்கு வந்தபொழுது ஆறு குழந்தைகளையும் கண்டனர். “இவர்கள் யாருடைய பிள்ளைகள்?” என்று உமா தனது பதியை கேட்டார். “இவர்கள் நம்முடைய குழந்தைகள்” என்றார் உமாபதி. இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது உமாதேவி ஆறு குழந்தைகளையும் தமது கரங்களால் ஒன்றாக அணைத்தார். உடனே ஆறுமுகங்களும் கொண்ட ஒர் உருவமாக போர்க்கடவுளான கந்தன் உதித்தனன் உலகம் உய்ய.

நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து அழகிலும் ஆண்மையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் விளங்கிய கந்தக்குமரனை தேவர்கள் தம்முடைய சேனாதிபதியாகப் பட்டம் சூட்டினர். ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒரு வேலாயுதத்தை வழங்கி தேவர் இடர் களையப் போர்முனை ஏகினான். கந்தவேள், கந்தனின் சின்னமாக, பிரதிநிதியாக வேலாயுதம் மகிமை பெற்றது. வேலை வணங்குவது கந்தனை வணங்குவதற்கு ஒப்பாகும். போரில் அசுரரை வென்ற கந்தனுக்கு தேவேந்திரன் தனது மகள் தேவசேனாவை மணமுடித்து வைத்தான். தம்பதிகள் இருவரும் கந்தவெற்பு சென்று நீண்டகாலம் இன்புற்ற வாழ்ந்தனர். கந்தனின் பிறப்பு, அமரர் இடர் தீர சமரம் புரிந்த வரலாறு ஆகியவை பற்றி புராணம் இப்படிக் கூறியுள்ளது.

மேற்கோள் - 9

ஆலய நல புலன்கள்

அரசாங்க நில அளவை திணைக்களம் பிரசுரித்துள்ள நில அளவைப் படங்களில் தரப்பட்டுள்ள குடியிருப்பாளர் பட்டியலில் விபரங்கள் பலவற்றைக் காணலாம். முதல் 61 தொகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன. 49-வது இலக்கம் 15035 ஏக்கர் நிலப்பரப்பை குறிக்கிறது. அநேகமாக இந் நிலப்பரப்பு எல்லாளனை (ஈழ ராஜா) வெல்வதற்கு வரம் அருளிய கந்தக்குமரனுக்கு நன்றி செலுத்துமுகமாக துட்டகைமுனுவினால் தர்மசாஸனம் செய்யப்பட்டதாக இருக்கலாம்.

மேற்கோள் - 10

பாரெங்கும் பரவியுள்ள கந்த வழிபாடு

கந்தக்குமரனை வழிபடுவோர் அவனை சேவிப்பதற்காக தென் இந்தியாவில் மாபெரும் ஆலயங்கள் அமைத்துள்ளனர். இவற்றில் தலைசிறந்தவை: நக்கீரர் போற்றிய ஆறுபடை வீடுகள், அவையாவன : (1) வயல் சூழ்ந்த திருப்பரங்குன்றம். தெய்வயானையை முருகன் மணம் முடித்த இடம். (2) திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்து}ர். சூரசங்காரம் செய்த பின் முருகன் சிவலிங்கத்தை வைத்து பிரதிட்டை செய்து பூசித்தான் என்பது கந்தப்புராண வரலாறு. (3) பழனி பழம் கிடைக்காதலால் கோபமுற்ற குமரன் கோவணாண்டியாக தனித்திருந்த ஸ்தலம். (4) திருவேரகம் அல்லது சுவாமிமலை இங்குதான் சுவாமிக்கு பிரணவ உபதேசம் செய்து சுவாமிநாதன் ஆயினான். (5) குன்று தோறாடல் - தொகையாகச் சொன்னால் குன்றுகள் தோறும் எழுந்தருளியுள்ளான் என்றும் சொல்லுவது வழக்கு. முருகப்பிரான் சூரனுடன் போர் புரிந்து அதனாலுண்டான கோபம் தணிந்த இடம். செருத்தணி என்பது திருத்தணி என்ற வழங்கப்பெறுகிறது. இத்தலத்தின் பெருமையை முருகப் பெருமான் வள்ளி நாயகியாருக்கு கூறியருளினார் என்று கந்தப்புராண தட்ச காண்டம் கூறும். (6) பழமுதிர் சோலை எனப்படும் அழகர் மலை. பழங்கள் முதிர்ந்துள்ள சோலைகள் தோறும் முருகன் எழுந்தருளியிருப்பான் என்பதாகும்.

ஈழத்தில் ஆறு பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. அவையாவன : (1) வெருகல் (வெறும்கல்) இங்கே கந்தன் நிற்கும் பாவனையில் உள்ள விக்கிரகம் உள்ளது. (2) உகந்தை (3) செல்லச்சந்நதி (4) கந்தவனக்கடவை (5) மாவிட்டபுரம் (6) நல்லு}ர்க் கந்தசுவாமி கோயில்.

சொற்ப காலத்திற்கு முன் கதிர்காமத்தில் நிலவிய பக்தி விசுவாசமும் நம்பிக்கையால் விளைந்த அற்புதங்களும் ஆனந்த பரவசமும் வேறெங்கணும் காணமுடியாது. மணிவாசகரால் திருப்பள்ளியெழுச்சியில் விவரித்த காட்சி கண்முன் தோன்றுகின்றது :

“இன்னிசை வீணையர் யாழின ரொருபால்!
இருக்கொரு தோத்திரம் இயம்பினர் ஒருபால்!
துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால்!
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்!ட
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்!”........

கந்த வழிபாட்டின் பிறப்பிடம் ஈழ நாட்டில் உள்ள கதிரைமலையே!

புத்தி தடுமாறலாம்!

ஆனால் பக்தி நிலை நின்று தலைகாக்கும்!

மேற்கோள் - 11

ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் கதிர்காமக்கந்தன் கோயில்

கதிர்காமக்கந்தன் கோயில் சம்பந்தமான பின்வரும் விண்ணப்பத்தை மனுதார் (செ. சுந்தரலிங்கம் உயர் நீதி மன்றத்தில் 1977-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார்:-

“பிரசித்த நொத்தாரிசு ஜே. கதிரமான் (து. ஊயனயசயஅயn) 1898-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் திகதி எழுதி கைச்சாத்திட்ட 2317 இலக்க உறுதியின் சட்டதிட்ட நிபந்தனைகளின் பிரகாரம் மேலே சொல்லப்பட்ட கதிர்காமக் கோயில்களின் சில கட்டடங்கள், காணி பூமிகள் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தர்மகர்த்தாவும், அவற்றை நிர்வகித்து நடத்த உரிமை பெற்றவருமான தத்தாரமகிரி சுவாமியை வெளியேற்றி விட்ட மேற்குறிப்பிட்ட கட்டடங்களையும் நிலபுலன்களையும் உரிமைகொண்டாடி தனக்கே சொந்தமாக்கி கொள்ள முதல் பிரதிவாதி (பிக்க சித்தார்த்த தேரோ) முயற்சித்து வருகிறார். மூல உறுதியின் உண்மையான பிரதி P (பி) இலக்கமிட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முதல் பிரதிவாதி சட்டவிரோதமான முறையில், தீய நோக்குடன் சரியானவற்றை செய்யாமலும் பிழையானவற்றை செய்தும் பல தீச்செயல்கள் புரிந்துள்ளார். அவற்றில் சில வருமாறு :-

(1) வேதிகித்திகந்த என்படும் கதிரைமலை உச்சியிலுள்ள கதிர்காமக் கந்தனை வழிபடச் செல்வோர் எத்தனையோ நு}ற்றாண்டு காலமாக மலையேறிய பாதையை தடுத்தும் மறித்தும் பக்தர்களை மேலே செல்லவொட்டாது இடையூறுகள் பல விளைத்துள்ளார்@

(2) 1946-ம் ஆண்டில் தத்தாராமகிரி சுவாமி மலையேறும் வழியில் உள்ள விநாயகர் கோயிலை புதுப்பிக்க முயற்சித்தபொழுது, முதல் பிரதிவாதியும் மற்றும் சில பௌத்த குருமாரும் சில கப்புறாளைகளை ஏவிவிட்டு கட்டவிடாது குந்தகம் செய்தனர். அமைதிக்கு பங்கமேற்பட்டு தத்தாராமகிரி சுவாமி உட்படப் பலர் காயமுற்றனர்!

(3) 1952-ம் ஆண்டில் கொழும்பில் உள்ள இராம கிருஷ்ண மடத்தினர் கதிர்காமக் கந்தன் கோயில் காணி யொன்றில் யாத்திரீகர்கள் தங்கி சுவாமியை வழிபட வசதிகள் செய்து மடம் ஒன்றை நிறுவினர். முதல் பிரதிவாதி பல சூழ்ச்சிகள் செய்து கிராம சேவகனின் இரகசிய ஆதரவுடன் சைவ அன்பர்கள் மடத்தில் தங்கி வழிபாடு செய்வதற்கு பலவித இன்னல்களையும் இடையூறுகளையும் விளைவித்தார்!

(4) 1952-53 வருடத்தில் யாத்திரீகர்கள், அன்பர்களின் வசதிக்காக மேற்கூறிய தத்தாராமகிரி கோயில் கிணற்று நீரை மேலே தொட்டியொன்று கட்டி அதில் சேமித்து வைத்தார். 1972-ம் ஆண்டில் அன்றைய அரசாங்கத்தின் ஆணையின் பேரில் அதன் ஏஜண்டுகளும், அதிகாரிகளும், சேவகர்களும், தண்ணீர் தொட்டியை உடைத்தெறிந்தனர்@

(5) 1970-ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் தத்தாராமகிரி சுவாமி தடு;ப்புக்காவலில் பௌத்தர்களாலும் ராணுவத்தினராலும் வைக்கப்பட்டார். கோயில் கட்டடங்கள் சூறையாடப்பட்டன@ முக்கிய தஸ்தாவேஜுகளும் கணக்கு வழக்குப் புஸ்தகங்களும் கையாடப்பட்டன. தெய்வயானை அம்மன் கோயிலி; இரத்தினாபரணங்கள் கொள்ளையிடப்பட்டன. சொற்ப நகைகளே மீண்டும் கைக்கு வந்தன@

(6) 1970-ம் ஆண்டின்போது வேதிகித்திகந்த எனப்படும் கதிரைமலையிலுள்ள கோயிலை அதன் சட்டரீதியான நிர்வாகியிடமிருந்து முதல் பிரதிவாதியும் அவரின் சகாக்களும் பலவந்தமாகக் கைப்பற்றினர்@

(7) தத்தாராமகிரி சுவாமி சுமார் இரண்டு இலட்சம் ரூபா செலவில் கட்டிய கட்டடங்களையெல்லாம் தகர்த்தெறியும்படி அரசாங்கம் 1972-ம் ஆண்டில் உத்தரவிட்டது. பல நு}ற்றாண்டுகளாக மகாதேவாலயம் இருந்த காணியைக் கூட சுவீகரிக்கப்போவதாக அரசாங்கம் அறிக்கைவிடுத்தது@

(8) தத்தாராமகிரி சுவாமியின் பொறுப்பிலுள்ள கோயில் காணிகளுக்குள் முதல் பிரதிவாதியும் பௌத்த சாமிகளும் அத்துமீறி பிரவேசித்து ஆக்கிரமித்துக் கொண்டனர்@

(9) கதிர்காமக் கந்தன் கோயில் பகுதியிலிருந்து சகல இந்துக்களையும் விரட்டிவிட்டு கதிர்காமத்தில் உள்ள சகல கோயில்களையும் அவற்றின் சொத்துக்களையும் தாம் கைப்பற்றப் போவதாக முதல் பிரதிவாதியும் அவர் கூட்டத்தினரும் ஒளிவு மறைவின்றி வெளிவெளியாக வீம்பு பேசினர்@

(10) விஷ்ணு கோயிலில் உள்ள விஷ்ணு விக்கிரகத்தை நீக்கிவிட்டு புத்தரின் விக்கிரகத்தை அங்கே வைக்குமாறு முதல் பிரதிவாதி கப்புறாளைகளை ஏவிவிட்டு செய்வித்தார்@

(11) தத்தாராமகிரி சுவாமியின் பொறுப்பில் உள்ள சுமார் 346 ஏக்கரா கோயில் காணி நிலங்களில் குடியிருந்தோரையும் பயிர் செய்தோரையும் அவரவர்கள் செலுத்த வேண்டிய வாடகைப் பணத்தையும் கோயில் மான்யத்தையும் கொடுக்கவிடாதவாறு பலாத்கார வழிகளைக் கையாண்டார்@

(12) வேதிகித்திகந்த எனப்படும் கதிரைமலையுள்ள 26 ஏக்கரா காணியையும் அதிலுள்ள அசையும் அசையா பொருட்களையும் தனக்கும் தன் சந்ததிக்கும் ஆட்சியுரிமை வழங்கி 1978-ம் ஆண்டு பெப்ரவரி 4-ம் திகதி - இலங்கை சுதந்திரதினம் - தர்மசாஸனம் செய்து கொடுக்குமாறு முதல் பிரதிவாதி ஜனாதிபதியை து}ண்டி முயற்சி செய்தார். இச்செய்தி 1978-ம் ஆண்டு ஜனவரி 29-ம் திகதி வெளியான “சிலோன் ஒப்சேவர்” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் பிரதிவாதி “வேதிகித்திகந்த பற்றி எது நடைபெறுமென எதிர்பார்த்தாரோ அது உண்மையில் நடைபெறப் போவதில்லை யென்று” ஜனாதிபதி இவ்விண்ணப்பதாரருக்கு (செ. சுந்தரலிங்கம்) அறிவித்துள்ளார்.

முதல் பிரதிவாதியின் கொட்டத்தை அடக்க அவருக்கு தடையுத்தரவு பிறப்பிக்காவிடின் மேற்கூறிய சதிகள், சூழ்ச்சிகள், ஆக்கிரமிப்புகள், வன்செயல்கள் மீண்டும் தலைது}க்கிய வண்ணமே இருக்குமென இவ்விண்ணப்பதாரர் குறிப்பிட விரும்புகிறார்.

1955-ம் ஆண்டளவில் இரண்டாவது பிரதிவாதிக்கு (பிரதமர் ஆர். பிரேமதாசா) முன் பதவிவகித்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயகா, உள்çர் அரசாங்க மந்திரி என்ற ஹோதாவில் கோயிலுக்குரிய காணிகளையும், கட்டடங்களையும், தலங்களையும் பட்;டின அபிவிருத்திக்குட்பட்ட பிரதேசமாக்குவதற்கு உத்தரவிட்டிருந்தார். நாடு நகர திட்டமிடல் சட்டத்தின் கீழ் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டதென கூறப்பட்டாலும், 38வது செக்ஷன் முதலாவது அனுபந்தம் வழங்கும் சட்டபாதுகாப்புகளையும் மீறி ஏஜண்டுகளும், அதிகாரிகளும் மற்றும் சேவர்களும் சட்டத்திற்கு புறம்பான, விரோதமான செயல்களில் ஈடுபட இவ்வுத்தரவுகள் இடமளித்துள்ளன.

1966-ம் ஆண்டு ஜுலை 20-ம் திகதி வெளியான 10,953 இலக்க அரசாங்க கஜெட்டில் நாடு நகர திட்டமிடல் சட்டத்தின் 21-வது செக்ஷன், 6(2) செக்ஷன் ஆகியவற்றில் போர்வையின் கீழ் இரண்டாவது பிரதிவாதி (பிரதமர் பிரேமதாசா) மேற்கூறிய அடாத்தான செயல்களை வன்மத்துடன் புரிந்துள்ளார்.

இரண்டாவது பிரிதிவாதியின் கட்டளையின் பேரிலோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஏஜன்டுகள், அதிகாரிகள், கைக்கூலிகள், சேவகர்கள் ஆகியோரின் து}ண்டுதலின் பேரிலோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ இவ்விண்ணப்பதாரரின் சமய நம்பிக்கைகளும் உரிமைகளும் கதிர்காமத்தில் மறுக்கப்படுவதற்கும் அங்கு இன்று நடைபெறும் அக்கிரமங்களுக்கும் அநீதிகளுக்கும் பிரதம மந்திரி என்ற முறையிலும் உள்çர் ஆட்சி வீடமைப்பு மந்திரி என்ற முறையிலும் அவர் பொறுப்பாளியாவர்@ அவர் பதில் சொல்லி ஆகவேண்டும்.

இவ்விண்ணப்பம் அப்பீல் கோட்டிற்கு வந்துள்ளது. இன்னமும் விசாரணைக்கு வரவில்லை. அரசியல் ரீதியில் பரிகாரம் தேட எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

மேற்கோள் - 12

முடிவுரை

காலசக்கரம் சுழன்றது@ இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன.

ஆஸ்திக தேவநம்பியதிஸ்ஸ புனித குடிசையொன்றை தெய்வம் குடிருக்கும் கோயில் ஆக்கினான். செல்வச் செழிப்பும் சமாதானமும் எங்கும் நிலவியது. ஈழராஜாவான எல்லாளன் இலங்கைத்தீவை கைப்பற்றினான். ஆண்டிப் பண்டாரமாய் காட்சியளித்த கதிர்காமக் கந்தன் ஆசிபெற்ற புரட்சிக்காரன் துட்டக்கைமுனு துவந்துவயுத்தத்தில் எல்லளனை வெற்றி கொள்கிறான். அநுராதபுரத்திலிருந்து திரும்பிய துட்டகைமுனு கத்ரகமதேவியோவிற்கு செய்த பிரதிஞ்ஞையை நிறைவேற்றினான். நன்றிக்கடனாக ஏழுமலை உச்சியிலிருந்து 15,000 ஏக்கரா நிலத்தை கோயிலுக்கு தர்மசாஸனம் செய்தான். கந்தக்குமரனுக்கு காலம் தவறாது பூசைகள், திருவிழாக்கள் ஒழுங்காக நடைபெற்றன. வான்முகில் வழாது பெய்தது@ மலிவளம் சுரந்தது@ மன்னன் கோன்முறை அரசு செய்தான்@ குறைவிலாது உயிர்கள் வாழ்ந்தன.
காலச்சக்கரம் மீண்டும் சுழன்றது. சிங்களவருக்கும் ஈழத்தமிழருக்குமிடையே மீண்டும் சண்டை சச்சரவுகள் தோன்ற ஆரம்பித்தன. நாட்டின் அமைதிகுலைந்தது.

மேற்கேயிருந்து அந்நிய நாட்டினரான போர்த்துக்கீசர், பிரெஞ்சு (சிலகாலம்) ஒல்லாந்தர், கடைசியாக பிரிட்டிஷார் அலை அலையாக வந்து இலங்கையை அடக்கி ஆண்டனர். 1815-ம் ஆண்டில் கண்டிசாஸனம் கைச்சாத்திடப்பட்டது. மூன்று வருடங்கள் கழித்து கண்டிக்கலகம் வெடித்தது. கலகத்தலைவர்களுக்கு கதிர்காமக் கப்புறாளைகள் ஒத்தாசை புரிந்ததாகக் கேள்வியுற்ற கவர்னர் சேர். ரோபர்ட பிரவுண்றிக் கதிர்காமத்திற்கு படையெடுத்தார். கப்புறாளைகளை விரட்டிவிட்டு கோயில் நிர்வாகத்தையும் பூசை உரிமைகளையும் தமிழ் பிராமண பூசகர்களிடம் ஒப்படைத்து அவர்களின் பாதுகாப்பிற்காக பிரிட்டிஷ் காவல் துருப்புகளை அங்குவிட்டுச் சென்றார். தரிசு நிலச்சட்டம் அமுலுக்கு வந்ததும் ஒரு பஸநாயக நிலமே நியமிக்கப்பட்டார். இன்றும் அப்பதவி அமுலில் உள்ளது.

சொற்பகாலம் அமைதி நிலவியது. கதிர்காமத்திலே சுமார் ஒரு வாரம் கவர்னர் சேர். ஆர்தர் கோர்டன் கூடார மடித்து தங்கினார். பிரிட்டிஷ் காவல் நீங்கியதும் தமிழ் பிராமணர்கள் ஓட்டம் பிடித்தனர். கப்புறாளைகள் மீண்டும் கோயிலை கைப்பற்றினர். பெரஹராக்கள், திருவிழாக்கள் பெருகின. அடியார்கள் அதிகரித்தனர். தொற்று நோய்களும் மலேரியாவும் கதிர்காமத்தை சன சந்தடியற்ற கிராமமாக்கிவிட்டது. சில வருடங்கள் கழிந்தன. விவசாயிகள் மீண்டும் சேனைகளுக்கு திரும்பி கமம் செய்ய ஆரம்பித்தனர். கதிர்காமத்தெய்வத்தின் கீர்த்தி உலகெலாம் பரவியது. திருவிழாக்காலத்தில் அடியார் கூட்டம் அதிகரித்தது. ஒரு பூதரும் அறியாத யந்திரப் பேழையை காவிக்கொண்டு வாயையும் சீலையால் மூடிக்கட்டிக்கொண்டு கப்புறாளை யானை மீது அமர்ந்துவரும் காட்சியைப் பார்த்து அடியார் ஆனந்த பரவசம் அடைகின்றனர்@ பக்தி மேலிடுகிறது. தேயிலைத் தோட்டத் தொழிலாள ஆவேசங்கொண்டு ஆடிப்பாடி கந்தசுவாமியாரை வள்ளியம்மையிடம் அழைத்துச் செல்கின்றனர். தீர்த்த திருவிழா கடைசிநாள் நடைபெறுகிறது. பக்தர்கள் பாபவிமோசனமடைந்து புனிதராகின்றனர்.

பிரதமர் சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டார நாயகா நாடு நகர திட்டமிடல் சட்டத்தைக் கொண்டு வருகிறார். கதிர்காமம் “காணிவல்” (களியாட்டு) ஸ்தலமாகிறது. சிங்கள பௌத்த பிக்குகள் கதிரைமலையை (வேதிகித்தி கந்த) கைப்பற்றி ஏழுமலைகளையும் பௌத்த மகாசங்கத்தின் அதிகாரத்திற்குட்படுத்த ஜனாதிபதியின் உதவியை நாடுகின்றனர்.

பிக்குகளின் கோரிக்கைக்கு இணங்க இலங்கையின் முதல் ஜனாதிபதி ஜுனியஸ் ரிச்சார்ட் ஜயவர்த்தனா மறுத்து விடுகிறார். கதிரைமலையை சித்தார்த்ததேரோவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் உறுதியில் கைச்சாத்திடவில்லை. இருந்தும் பிக்குவின் அட்டகாசம் ஓயவில்லை. சைவத்தை அழித்து பௌத்தத்தை நிலைநாட்ட கங்கணங்கட்டிக் கொண்டு சதிகள் பல செய்து வருகிறார். கடைசியாக அவர் செய்த துர்ச்செயல் 1977-ம் ஆண்டில் செல்லக்கதிர்காமத்தை பலவந்தமாகக் கைப்பற்றியதாகும்.

‘கதிர்காமக்கந்தன் கோயில், வழிபாடு, நிலபுலன்கள்’ பற்றி செல்லப்பா சுந்தரலிங்கம் சுப்ரீம் கோட்டில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். பிக்குவின் செயல்களும் அவருடைய சகாக்களின் நட்டாமுட்டித்தனங்களும் சைவத்தமிழ் அன்பர்கள் கதிர்காமம் சென்று கந்;தனை வழிபடுவதற்கும் திருவிழாக்களில் பங்குபற்றுவதற்கும் முடியாமல் மனம் நொந்து வாடுகின்றனர். ஏராளமானோர் அச்சத்தால் அங்கு செல்வதில்லை.

ஆனால் “அரோகரா!” கோஷம் இன்னமும் ஒலிக்கத் தான் செய்கிறது. இன்றோ, நாளையோ, என்றோ ஒருநாள் இருள் நீங்கும்@ ஒளி பிறக்கும்! பக்தர்கள் நம்பிக்கை இழக்கவில்லை@ “கட்டுண்டோம்! பொறுத்திருப்போம்! காலம் மாறும்!”

கந்தா! முருகா!!

கதிர்காமக் கந்தனுக்கு அரோகரா!!!

சர் பி. இராமநாதன் , சர். பி. அருணாசலம், கு. சு. சேனநாயக்க, ஜேம்ஸ் பீரிஸ், வில்லி. நீதி அரசர் அக்பர், னு. ளு சேனநாயக்கா, ளு. று. சு. னு. பண்டாரநாயக்க முதலானவர்களுடன் ஆரம்பகாலம் முதல் இற்றை நாள்வரை இலங்கை அரசியலிலே மக்கள் பிரதிநிதியாகவும் மந்திரியாகவும் அடங்காத் தமிழர் முன்னணியின் தாபகராகவும் புகழ்ச்சி இகழ்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டுத் தனக்குச் சரியெனக் கண்டதை நெஞ்சிலே வஞ்சமின்றி நேர்மைத் திறனோடு பேசியும் செய்தும் களம் பலகண்ட மறத் தமிழனும் வன்னி நாட்டுக் கமக்காரனுமான திருவாளர் செ. சுந்தரலிங்கம் அவர்களே இக்கைந்நு}லின் ஆசிரியராவர்.

சுபாஷ் சந்திரபோஸ், பண்டிதநேரு போன்ற உலகத் தலைவர்களுக்கு உற்ற நண்பராய் விளங்கிய இவர் ஆ. யு. (ழுஒகழசன)இ டீ. ளுஉ (டுழனெ) டீயச-யவ-டயற போன்ற பட்டங்கள் பல பெற்று, இந்திய சிவில் சர்வீஸ், இலங்கை சிவில் சர்வீஸ் முதலானவற்றிலும் சித்தியெய்தியிருந்தார். ஆரம்பத்திலே கொழும்பு ஆனந்தா கல்லு}ரியின் உப அதிபராயும் பின்னர் இலங்கை சர்வகலாசாலையில் கணிதப் பேராசிரியராகவும், கடமையாற்றி இன்று இலங்கையிலே பொது வாழ்விலும் அரசியலிலும் பிரகாசித்துவரும் அநேகரை உருவாக்கி வைத்தவர் இவர்.

அடங்காப்பற்று வன்னியர் வாழ் வவுனியாத் தொகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதியாக 1947 இல் திரு சுந்தரலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கொள்கைகளைத் தனது தொகுதி மக்கள் ஆதரிக்கிறார்கள். என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டத் தமது பதவியை மூன்றுமுறை ராஜினாமாச் செய்து மீண்டும் மீண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அரசியல் சரித்திரம் படைத்தவர் சுந்தரலிங்கம்.

“தமிழ் ஈழம்” என்ற தனிநாட்டுக் கொள்கையின் பிதாவான திரு. சுந்;தரலிங்கம் இலங்கை அரசியல் சம்பந்தமாகப் பல நு}ல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

“நுலழடஅ” டீநபinniபௌ ழக குசநநனழஅ ளுவசரபபடந - னுழணநn னுழஉரஅநவெள டில ஊ. ளுரவொநசயடiபெயஅ றiவா உயனெனை உழஅஅநவெள யனெ உசவைiஉளைஅள டில டுழசன ளுழரடடிரசல”
“புசநைஎயnஉநள ழக நுலடழஅ வுhயஅடைள கசழஅ ஊசயனடந வழ ஊழககin”
“Pடiபாவ ழக நுலடழஅ வுhயஅடைள ரனெநச ஊழடஎin’ள ஊழளெவவைரவழைn”

என்னும் இவை போன்ற பிரசுரங்கள் பலவற்றை அவ்வப்போது வெளியிட்டுத் தமிழ் ஈழத்தின் அவசியத்தை எடுத்து விளக்கியுள்ளார்.

ஆயிரம் பிறைகண்டு தொண்ணு}றாண்டுப் பராயத்தை அண்மித்து நிற்கும் இவ்வேளையிலும் அயராது நின்று ஈழத்தில் தமிழனுக்கிழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதி கேட்கும் நோக்கத்துடனே தமிழ் முருகன் உறையும் கதிர்காமத் திருத்தலம் பௌத்தமதமாக்கப்படுவதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்திலே மனுத்தாக்கல் செய்துள்ளார். திரு. சுந்தரலிங்கம், இது பற்றிய விளக்கங்களைக் கொண்டு வெளிவருகிறது இக்கைந்நு}ல்.