கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வரதர் கதை மலர் - 5

சுதந்திரமாய்ப் பாடுவேன்
 
 

திருச்செந்தூரன்

 

வரதர் கதை மலர் - 5

பதினைந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கதை

சுதந்திரமாய்ப் பாடுவேன்

திருச்செந்தூரன்

இந்நூலில் இரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. 1. சுதந்திரமாய்ப் பாடுவேன். 2. ஒளியைத் தேடி - இரண்டும் சீனத்துக் கதைகள். சிறுவர்களுக்கேற்ற கருத்தமைந்த கதைகள்.

-----------------------------------------

வரதர் கதை மலர் - 5

சுதந்திரமாய்ப் பாடுவேன்

"திருச்செந்தூரன்"

சிறுவர்களுக்கு இரண்டு சுவையான கதைகள்

----------------------------------------

வரதர் கதை மலர் - 5
நூல்: சுதந்திரமாய்ப் பாடுவேன்
எழுதியவர்: திருச்செந்தூரன்
வெளியீடு: வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்
முதற் பதிப்பு: மே, 1994
அச்சுப்பதிவு: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறைச் சாலை, யாழ்ப்பாணம்
விலை: ரூபா 12/=

மூலக்கதை: Wild Grapes
கதாசிரியர்: Guo Cuilin
நூல்: Favourite Children's Stories From China

----------------------------------------

சுதந்திரமாய்ப் பாடுவேன்


1 அடைபட்ட வானம்பாடி.

வண்டியில் வைத்;து இழுத்துச் செல்லப்படும் மனிதர்களுக்ள் ஒருவனை வானம்பாடி கூர்ந்து நோக்கியது அவனுடைய உடலின் கீழ்ப்பகுதி உயர்ந்த கம்பளிப் போர்வையால் முடப்படடிருந்தது. அதற்குக் கீழே பளபளக்கும் கறுப்பு நிறத்தில் நவீன வகைச் சப்பாத்துக்கள் அணிந்த இரு கால்கள் நீட்டிக் கொண்டிருப்பதை வானம்பாடி கண்டது.

ஓ! அவனுககுக் கால்கள் உள்ளன என வானம்பாடி தனக்குள்ளே கூறிக்கொண்டது.

வானம்பாடி ஒன்று பொன்னாற் செய்யப்பட்ட கூட்டில் வாழ்ந்து வந்தது. சூரிய ஒளி கூட்டிற் பட்டு பிரகாசமாக மின்னியது. ஆது அரசனின் பொன் மாளிகை போலத் தோன்றியது. கூட்டுக்குள் இருந்த நீர்க்கிண்ணம் பச்சை மரகதக் கல்லாற் செய்யப்பட்டது. கிண்ணத்தின் பச்சை வண்ணத்தினால் நீரும் பச்சை நிறமாகத் தோன்றியது. மழை பெய்த பின் தாமரைக் குளம் எப்படித் தோன்றுமோ அப்படி அது காட்சியளித்தது.

வானம்பாடியின் உணவுத்தட்டு தவிட்டுநிற மணியினால் ஆக்கப்பட்டிருந்தது. அது வந்து இருப்பதற்கு யானைத் தந்தங்களினால் மரக்கிளைகள் போன்ற அமைப்புச் செய்யப்பட்டிருந்தது. இரவில் அதன் கூடு விலை உயர்ந்த பட்டுத் துணியால் மூடிவிடப்பட்டது.

வானம்பாடியின் இறக்கைகள் மிகப் பளபளப்பாகபாகவும் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருந்தன. அதற்கு மிக உயர்ந்த உணவு கொடுக்கப் பட்டது. ஒவ்வொரு நாளும் அது இரண்டு முறை நீராடியது. அது மகிழ்ச்சியோடு வாழ்ந்தது.

ஒவ்வொரு முறையும் உணவுண்டு குளித்த பின் அது கூட்டிற்குள் தத்தித் திரியும். களைத்துப் போனால் அது தந்தத்தால் ஆன கிளையில் இருந்து ஓய்வெடுக்கும். பின் அது தன் சொண்டினால் செட்டைகளைக் கோதிவிடும் உடலைச் சிலிர்க்கும். செட்டை அடிக்கும். சுற்று முற்றும் பார்த்த கூட்டிற்குள் தத்;தித் திரியும்.

வாம்பாடியின் பாட்டு மென்மையானது. இனிமையானது. அதன் இசையைக் பேட்டோர் அதன் இனிமையில் தம்மையே மறந்து நிற்பர்.

அந்த வானம்பாடியை பணக்காரர் ஒருவரின் மகன் ஆசையோடு வளர்த்தான். அதன் மீது அவனுக்கு மிகுந்த அன்பு. அவன் ஒவ்வொரு நாளும் மலைக்குச் செல்வான். ஆருவி நீரைக் கொண்டு வந்து அதனை மிகக் கவனமாக வடித்து அதற்குக் கொடுப்பான். நல்ல தினை அரிசியைத் தெரிந்தெடுத்துக் கழுவி அதற்கு பொடுப்பான். எதற்காக அவன் இதனைஅயல்லாம் மயன்று செயதான்? வானம் பாடிக்கு ஏன் அவ்வளவு விலை உயர்ந்த கூட்டைக் கொடுத்தான்? அதன் இனிய பாடலைக் கேட்க விரும்பியே அவன் அவ்வாறெல்லாம் செய்தான்.

வானம்பாடியைத் தவிர வேறு எதுவும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தர முடியாது என்று அவன் எண்ணினான்.

அவன் தன்னை நன்றாக வளர்க்கிறான். தான் பாடுவதை அவன் ஆசையோடு கேட்கிறான் என அது எண்ணியது. எனவே தன்னால் முடிந்தவரை அது அவனுக்காக இனிமையாகப் பாடியது. சோர்ந்து களைத்த நிலையிலும் கூட அது அவனுக்காக கீதம் இசைத்தது. தன்னுடைய இசையில் என்ன கவர்ச்சி இருக்கிறது என்பதை அதனால் புரிந்தது கொள்ள முடியவில்லை. அவனுக்குத் தன் பாடலில் ஏன் அவ்வளவு ஈடுபாடு என்பதும் அதற்கு விளங்க வில்லை. ஆனால் அவன் தனது பாடலைக் கேட்க விரும்புகிறான் தஎன்பதை மட்டும் அது உணர்ந்தது. எனவே அது அவனுக்காக எப்போதும் பாடியது.

அவன் தனது கூட்டாளிகளையும் சகோதரங்களையும் அடிக்கடி கூட்டுக்கு அருகே அழைத்து வருவான். எனது வானம்பாடி அதிசயமானது. அது இனிமையாகப் பாடுகிறது. வாருங்கன் கேட்டுப் பாருங்கள் என்று கூறுவான். அவர்கள் வருவார்கள் பார்பார்கள் கேட்பார்கள். அவர்கள் அதனை வானளாவப் புகழுவார்கள்.

எனது குரலில் என்ன சிறப்பு உள்ளது? அவர்கள் ஏன் எனது குரலைக் கேட்க விரும்புகிறார்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் அவன் அவர்களை அழைத்து வருகிறான். நான் பாடி மகிழ்க்காவிட்டால் அவன் ஏமாந்து போவான் என வானம்பாடி எண்ணியது. எனவே அது தன் சக்தி முழவதையும் சேர்த்துப் பாடியது.

நூட்கள் ஒவ்வென்றாக நகர்ந்தன. வாழ்கை வழக்கம் போல நடந்ததுகொண்டிருந்தது. எல்லாம் நன்றாக அமைந்தன. வானம்பாடி அவனுக்காக பாடியது அவனது சகோதர்களுக்காகப் பாடியது அவனது நண்பர்களுக்காகப் பாடியது. ஆனால் தனது பாடலில் அத்துணை கவர்ச்சி ஏன் என்பதை மட்டும் அதனாற் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவனது விசித்திரமான ஆசைக்கான கரணத்தை அரியாது அது குழம்பியது. காரணத்தை கணடறிய ஆவல் கொண்டது.

ஒரு நாள் அவன் உணவும் நீரும் வைத்தபின் கூட்டின் கதவைப் ப10ட்ட மறந்து விட்டான். கதவு திறந்து படி கிடந்தது. வானம்பாடி தத்தித் தத்தித் கதவருகே வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தது. கூட்டுக்கு வேளியே சென்றது வீட்குக் கூரைவரை பறந்தது. அது தன்னைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்த்தது. அது கண்ட காட்சிகள் அழகாக இருந்தன. இத்தைனை நாட்களும் இந்நக் காட்சிகளைப் பார்க்;காமல் இருந்து விட்டேனே என்று அது ஏங்கியது.

நீலவானக் கடலில் பஞ்சு போன்ற மேக்க கூட்டங்கள் படகுகள் போல நீந்திச் சென்றன. அழகியது மரக்கிளைகள் காற்றில் அசைந்தாடின. மரங்கள் ப10த்துக் குலங்கின.

தூரத்தில் பனிபடர்ந்த மலை தோன்றியது. தூக்கக் கலக்கம் தெளியாத நிலையில் ஒரு படத்தைப் பார்ப்பது போல அந்த மலைக்காட்ச்சி மங்கலாகத் தெரிந்தது. வானம் பாடி சூழலில் புதிய புதியகாட்சிகளையும் பொருள்களையும் கண்டது. அதன் மகிழ்ச்சி வளர்ந்து சென்றது. அது ஒரே இடத்தில் நின்று நாலா பக்கமும் நீண்டதூரம் பார்த்தது.

அது உயர உயரப்பறந்தது. அதன் உள்ளமும் மேலே மேலே தாவியது. அது எல்லை இல்லாத இன்பத்தில் மிதந்தது. அது கூட்டை மறந்தது. கூட்டில் வாழ்ந்த வாழ்வை மறந்தது. புதமை மயக்கத்தில் எங்கே போகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் அது தொடர்ந்து பறந்தது.

பச்சைப் புல்வெளிகள் விரிந்த மணற் பரப்புக்கள் அலை புரளும் கடல் சேறு நிரம்பிக் கலங்கியிருந்த ஆறுமுதலிய இடங்களையெல்லாம் கடந்து அது பறந்தது பொண்டே இருந்தது.

வானம்பாடி செட்டையை மெதுவாக அடித்துக் கீழ் நோக்கி இறங்கியது. அங்கே ஒரு பெரிய நகரம். நகரத்தின் போபுர வாயிற் கதவில் அது வந்து இருந்தது.

வீதியில் பலர் நடந்து சென்றனர். வண்டிகள் சென்றன. குதிரைகள் ஓடின. இக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு வானம்பாடி ஓய்ந்து போய் இருந்தன.

---------------------------------------------

2. காலில்லாத மனிதர்கள்


வீதியிலே நடப்பவற்றை வானம்பாடி வியப்போடு பார்த்துக்கொண்டிந்தது.

அங்கே இரண்டு சில்லுகள் ப10ட்டிய வண்டியொன்று வந்தது. அதன் வளைந்த இருக்கையில் ஒரு மனிதன் சாய்ந்து கொண்டிருந்தான். வேறொருவன் வண்டியின் சட்டத்தைப் பற்றி இழுத்தபடி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து பல மனிதமாடுகள் மனிதச் சுமைகளை இழுத்துக் கொண்டு வேமாக ஓடின.

இருக்கையில் இருப்பவருக்குக் கால்கள் இல்லைப் போலும்! இல்லா விட்டால் அவர்கள் ஏன் நடந்து போகவில்லை? மற்றவர்கள் ஏன் அவர்களை வண்டியில் வைத்து இழுத்துச் செல்கிறார்கள் என்று வானம்பாடி எண்ணியது.

ஏன் இவனை வண்டியில் வைத்து இழுத்துச் செல்கிறான்? காரியங்கள் இப்படி நடந்தால் நூறு பேரில்
ஐம்பது பேர் பயனற்றவர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா என்று வானம்பாடி. ஏண்ணியது. அது பல முறை எண்ணிப்பார்த்தது ஆனால் அதக்கு ஒன்றும் விளங்கவில்லை.

இழுப்பவர்கள் அதனை மகிழ்ச்சிய10ட்டும் செயலாக நினைக்கிறார்கள் போலும்! என அது எண்ணியது.

வானம்பாடி இழுப்பவர்களைக் கூர்ந்து நோக்கியது. ஆனால் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை அவர்களது சிவந்த முகத்திலிருந்து வியர்வை ஆறாக ஓடியது. அவர்கள் மேலாடையின்றி இருந்தார்கள். அவர்களின் முதுகுப் புறத்தின் வெப்பத்தை அதனால் உணர முடிந்தது. தீக் கோழிகள் உயிர்தப்பத் தாவிப் பாய்ந்து ஓடுமே இது போல அவர்கள் முன்னோக்கி வளைந்து கால்களை அகலவைத்து வேகமாக ஓடினார்கள். ஒரு கால் நிலத்தை தொடுமுன் மற்றக்கால் மேல் எழுந்தது.

அவர்கள் ஏன் அவ்வளவு அவசரப்படுகிறார்கள்? அவர்கள் எங்கே போகிறார்கள்? வானம்பாடிக்கு எதுவுமே புரியவில்லை.

வண்டி ஒன்றுக்குள் இருந்த மனிதன் தனது இடக்கையை நீட்டுவதனை வானம்பாடி கண்டது.

வண்டியை இழுத்த மனிதன் உடதன் உடனே தனது வேகத்தைக் குறைத்தான். சில்லுகள்,இருக்கை,அதிலிருந்த மனிதன் ஆகிய எல்லாவற்றையும் அவன் இடப்பக்கமாகத்திருப்பினான். சந்தியில் இடப்பக்கம் நோக்கிச் சென்ற வீதியில் தொடர்ந்து தலை தெறிக்க ஒடினான்.

அவர்கள் பைத்தியக்காரர் போல ஒடிக்கொண்;ருகிறார்கள். பிறரின் நன்மைக்காக வியர்வை சிந்தி உழகை;கிறார்கள். அதனால்தான் அவர்கள் முகத்தில் புன்னகை இல்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு பாடுவதில்லை. அவர்களுக்கு வேலையால் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. அவர்கள் அதனை ஆர்வத்தோடு செய்வதில்லை-என்பதெல்லாம் அப்போதுதான் வானம்பாடிக்கு விளங்கியது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் கால்களாக வேலை செய்து கொண்டிருக்கிறான்.-இதனை எண்ணி அது வருந்தியது. ஆது கவலையாற் சோகமாய்ப் பாடியது.

அவர்கள் கதியில்லாதவர்கள். அவர்கள் பயனும் ஆர்வமும் இல்லாமல் மற்றவர்களுக்காகத் துயரப்கடும் மக்கள். அவர்களுக்கு அனுதாபப்படும் வகையில் அதன் பாடல் அமைந்திருந்தது.
இந்தச் சோகக் காட்சியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க அதனால் முடியவில்லை. அது எங்காவது சென்று ஓய்வெடுக்க விரும்பியது.

அது பறந்தது சென்றது. ஒரு பெரிய வீட்டின் பச்சை நிற மேல் மாடியை அது அடைந்தது.

அங்கே பெரிய விருந்து நடந்து கொண்டிருந்தது.

-----------------------------------

3. விருந்து நடக்கிறது

வானம்பாடி நிலா முற்றத்தில் இருந்தது. நிலா முற்றத்திற்கு முன்னே பெரிய அறை ஒன்று இருந்தது வானம்பாடி அதன் யன்னலினூடாக உள்ளே பார்த்தது. அங்கே பலர் மேசை ஒன்றின் முன்னே சுற்றியிருந்து சாப்பிட்டார்கள்.

மேசை விரிப்புப் பால் வெள்ளையாக இருந்தது. கத்திகள் முள்ளுக் கரண்டிகள் மதுக்கிண்ணங்கள் சீனத்து வடடில்கள் தட்டங்கள் எல்லாம் பளபளத்தன மேசை நடுவே ஒரு ப10ச்சாடி அதில் பல நிறப் ப10க்கள் நிறைந்திருந்தன. அங்கிருந்த மக்களின் முகங்கள் சிவந்து ஒளி வீசின. மதுவின் மயக்கத்தில் அவர்களது கண்கள் பாதி மூடியிருந்தன.

துpடீரெனக் கீழே சத்தம் கேட்டது. வானம்பாடி கீழே பார்த்தது. அங்கே முற்றிலும் வேறான ஒரு காட்சியை அது கண்;டது.

அங்கே ஒரு வட்டப் பலகை அதில் ஒரு கத்தி. கத்திக்கு அருகே வாலும் தலையும் வெட்டப்பட்ட மீன் குவியல். துண்டு துண்டாக வெட்டப்படட் இறைச்சி ஓடு உடைக்கப்பட்ட சில கோழிகட குஞ்சுகள் தாராக்கள் ஆகியன அந்த அறையில் அங்கும்மிங்கும் சிதறிக் கிடந்தன.

அந்த அறையில் பல மனிதர்கள் பல வகையான வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இடுப்புக்குக் கீPழே மட்டும் உடை அணிந்திருந்தார்கள் அதில் எண்ணெய் படிந்து
அழுக்கேறியிருந்தது அறையில் புகையும் நீராவியும் நிறைந்திருந்தது. அடுப்புக்கு அருகே நின்றவன் இரும்புச் சடடியிற் பொரித்துக் கொண்டிருந்தான். சட்டியில் எணிணெயை ஊற்றியதும் அது நான்கு புறமும் சுவாலை விட்டு எரிந்தது. வெப்பத்தால் அவனது முகமும் கைகளும் சிவந்தன.

வெள்ளை ஆடை அணிந்த ஒருவன் அங்கே வந்தான். அவன் சமைக்கப்பட்ட உணவை வண்ணமூட்டப்பட்ட சீனத் தட்டில் வைத்து மேல் மாடிக்குக் கொண்டு சொன்றான்.

சிறிது நேரத்தின் பின் மேல் மாடியிற் சிரிபிபொலி கேட்டது. Nசையைச் சுற்றியிருந்த மனிதர் மீண்மும் கத்திகளையும் முள்ளுக் கரண்டிகளையும் பயன்படுத்திச் சாப்பிடத் தொடங்கினார்கள்.

கீழே உள்ளவர்களுக்கு வருத்தமோ? இல்லா விட்டால் அவர்கள் ஏன் தொடர்ந்து நெருப்புக்கு அருகே நிற்கவேண்டும்? அவர்கள் அங்கே நின்று சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வேலை செய்வதால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிநார்களோ?-வானம்பாடி இவ்வாறு ஐயத்தோடு எண்ணியது.

வானம்பாடி அவர்களைக் கூர்ந்து கவனித்தது. தனது எண்ணம் தவறு என்ற முடிவுக்கு வந்தது.

அவர்னளுக்குத் தடிமன் பிடித்திருந்தால் அவர்கள் ஏன் வீட்டில் ஓய்வெடுக்கவில்லை? வேலை அவர்களுக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தால் அவர்கள் முகத்தில் ஏன் மகிழ்ச்சி கானப்படவில்லை? என்று வானம்பாடி எண்ணிப் பார்த்தது.

வானம்பாடி அவர்களைக் கூர்ந்து நோக்கியது வெள்ளை உடை அணிந்தவர்களின் கட்டளைப்படியே அவர்கள் வேலை ;

செய்கிறார்கள். அதனால்தான் அவர்கள் முகம் சுழிக்கிறார்கள். அவர்கள் விரும்பி வேலை செய்யவில்லை. மற்றவர்கள் உண்ண வேண்டும் என்பதற்காக அவர்கள் வேலை செய்கிறார்கள் என்று அது முடிவு செய்தது.

மற்றவர்களுக்காக உணவு ஆக்கும் எந்த மனிதனும் இயந்திரம் போல ஆகிவிடுகிறார்கள் என்பதை அது கண்டது. அது கவலை கொண்டது. அது சோர்வுடன் பாடத் தொடங்கியது.

பிறருக்காக ஆர்வமும் விருப்பமும் இன்றி உழகை;கும் துரதிட்டம் பிடித்த மனிதர் மீது இரக்கம் கொண்டு அது பாடியது.

மற்றவர்க்காகத் துயரப்படும் அந்த மனிதர்களை அதிக நேரம் பார்த்துக்கொண்டு அதனால் இருக்க முடியவில்லை. அது எங்காவது போய் ஓய்வொடுக்க விரும்பியது. அது தனது செட்டைகளை விருத்துப் பறந்து சென்றது.

---------------------------------------------

4. யாருக்காகப் பாடுகிறார்கள்?

அமைதி நிறைந்த அந்த இடத்தில் மென்மையான தம்ப10ரா இசைக்கேற்பச் சிறுமி ஒருத்தி பாடிக்கொண்டிருந்தாள். வானம்பாடி தாழப் பறந்தது பாட்டு ஒலி வந்த வீட்டுக் கூரையில் இருந்தது. அந்த வீட்டுக் கூரையில் ஒளி உள்ளே செல்லவிடும் யன்னல் இருந்து வானம்பாடி அதனூடாகப் பார்த்தது.

அங்கே உயர்ந்த இருண்ட முகமுடைய மனிதன் நாற்காலியில் இருந்தபடி தம்ப10ராவை வாசித்துக் கொண்டிருந்தான். அவன் அருகே பதினான்கு அல்லது பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுமி நின்று பாடிக்கொன்டிருந்தாள்.

மகிழ்ச்சியாக உள்ள மக்களை இப்போது தான் நான் காண்கின்றேன் என்று அது எண்ணியது. அவர்கள் கருவியை இசைத்துப் பாகடிக்கொண்டிருக்கிறார்கள். அவாகள் இசை விரும்பிகள். புhடுவதில் அவர்கள் எவ்வாறு மகிழ்கிறார்கள் என்பதை நான் பார்க்கவேண்டும் என அது நினைத்தது. இசையைக் கேட்டபடி அது அவர்களை அவதானித்தது.

உண்மை அது எதிர்பார்த்தது போல இல்லை என்பதை உணர்ந்து அது ஏமாற்றம் அடைந்தது. மீண்டும் அதன் முடிவு தவறாகிவிட்டது.

அந்தப் பெண் மிகவும் வருத்தத்தோடு பாடிக் கொண்டிருந்தாள் குரல் உயர்ந்து செல்லும் போது அவள் வலிந்து பாடமுயன்றாள். ஆவ்வாறு பாடும் போது அவள் முகம் சிவந்தது இமைகள் இறுக முடிக்கொண்டன. இமைசளிலுள்ள குரதிக் குழாய்கள் புடைத்தன. அவள் நெஞ்சு விம்மித் தணிந்தது அவள் ழுச்சு அடங்கி நின்றாள் இசை படிப்படியாகக் குறைந்தது.

பாடலின் சொற்கள் தண்ணீர் இடைவிடாமல் பாய்வது போல ஒருண்டோடின அவளுக்கு ழுச்சு விடக்கூட நேரம் கிடைக்கவில்லை

அவனுடைய குரல் கரகரத்தது தம்புரா இசையும் பாட்டும் நின்று விட்டன.

தம்புரா வாசித்தவன் அவளை முறைத்துப் பார்த்தான். நீ இப்படிப் பாடினால் நாம் எப்படி மக்களிடம் காசு கேட்கலாம்? மீண்டும்பாடு என்று கூறினான்

அவள் தலை தாழ்ந்தது அவளது கண்களில் கண்ணீர் நிறைந்தது தம்புரா இசைக்கேற்ப அவள் மீண்டும் பாடினாள் அவளது குரல் நடுங்கியது.

வானம்பாடிக்கு உண்மை விளங்கியது. அவள் கூடப் பிறறுக்காகவே பாடுகிறாள் தானே விரும்பித் தனக்காக பாடுவதாக இருந்தால் அவள் தனது வீட்டீல் ஆறதலாக இருந்தல்லவா பாடியிருப்பாள். ஆனால் அவளால் அடிப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் அவள் பிறருக்கு மகிழ்ச்சி தர அல்லவா பாடுகிறாள். பணம்; தேட அவள் வருத்தப்பட்டுப் பாடப் பழகிப் பாடவேண்டியுள்ளது. தம்புரா வாசிப்பவன் கூடப்பிறருக்காகவே அதனைச் செய்கிறான். அதற்காகவே அவன் அவளையும் பாடும்படி கட்டாயப் படுத்துகிறான் இதற்கெல்லாம் என்ன கருத்து? ஆனால் அவர்கள் இவற்றைக் கனவிற்கூடநினைப்பதில்லை. வானம்பாடி இவ்வாறு தனக்குள்ளாகவே சிந்தித்தது.

பிறருடைய இசைக் கருவிகளாகப் பணியாற்றும் மனிதர்களுக்காக அது வருத்தப்பட்டது. அவர்களை நினைத்து அது சோகமாகப் பாடியது இரங்கத் தக்க நிலையில் ஆர்வமும் பயனுமின்றிப் பிறருக்காக உழைப்பவர் மீதான அநுதாபத்தை அதன் பாடல் வெளிப்படுத்தியது.

-------------------------------------------------

5. எனக்காகப் பாடுவேன்

வானம்பாடி கூட்டத்திலிருந்து புறப்பட்டது.முதல் கண்ட காட்சிகளையும் நடந்த நிகழ்ச்சிகளையும் நினைத்துப் பார்த்தது. பிறருக்கு மகிழ்ச்சிய10ட்ட வருந்தி உழகை;கும் மனிதர்களின் அவலங்களை அது எண்ணிப் பார்தத்து.சுதந்திரமற்ற அந்த மனிதர்களின் கவலைகளை நினைத்து வருந்தியது.

இனி நான் மீண்டும் கூட்டுக்குச் செல்லமாட்டேன் என வானம்பாடி முடிவு செய்தது. தான் வாழ்ந்த கூடு அரண்மனை போல வசதிகள் நிறைந்ததாக இருந்த போதிலும் தனது சுதந்திரத்தை இழந்து அடிமையாக அக்கூட்டில் மீண்டும் வாழ அது விரும்பவில்லை.

துன்பப்படும் மனிதர்கள் பலரைக் கண்டபோதுதான் அது தனது பழைய வாழ்வின் அவலத்தை உணர்ந்தது. அதனுடைபாட்ப் பொருளற்றதாகவும் ஆர்வமற்றதாகவும் தோவையற்றதாகவுமே இருந்தது தன்னை வளர்த்தவனுக்கும் அவனது சசோதரர்களுக்கும்
நுண்பர்களுக்கும் ஆக அது ஏன் பாடவேண்டும்.

மனம் குழம்பிய நிலையில் பழைய வாழ்க்கை பழுதில்லை என அது எண்ணும். ஆனால் இரங்கத்தக்க மனிதர்களை எண்ணும் போதுதான் அதற்குத் தனது பழை வாழ்வின் அவலம் புரிந்தது தனது அடிமை வாழ்வுக்காக அதனால் அழாமல் இருக்க முடியவில்லை. அது குயிலைப் போலச் சோகமயமாகப் பாடியது. அதன்; கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. ;;

அலுப்படைந்த மனத்தோடு அது எல்லையற்ற வானவெளியில் பறந்தன.

இரவில் மரங்தளில் தூங்கியது பகலில் அது சிறகுகளை அலக விரித்தும்ப் பறந்தன. விரும்பிய போது பாடியது. பசித்த போது காட்டு மரங்களிலுள்ள இனிய பழங்களைத்தின்றது. உடல் அழுக்காக இருந்த போது நீரோடையிற் குளித்தது.

அது இப்போது கூண்டில் அடைபட்டிருக்கவில்லை. அது விரும்பியவற்றையெல்லாம் செய்ய முடிந்தது. சூழலில் நிகழும் துன்பமான செயல்களைக் கண்டால் அது கவலைப் பட்டது. துயரம் நிறைந்த குரலிலே பாடியது. அவ்வாறு பாடும் போது பகலவனைக் கண்ட பனிபோல அதனது துயரங்கள் பறந்தோடின.

அதனால் பாடாமல் இருக்க முடியவில்லை. அப்போதுதான் பாடுவது கருத்துளதாகவும், ஆர்வம் மிக்கதாகவும் இருப்பதை அது தெரிந்து கொண்டது. அது தனக்காகவே பாடியது. ஒரு சிலரை மட்டும் மகிழ்வூட்ட அது பாடவில்லை. அது உலகத்துக்காகப் பாடியது.

வானம்பாடியின் இனிய குரலிசை காற்றிலே எங்கும் பரந்து சென்றது. ஆலைத் தொழிலாளர், பசிப்பிணி போக்கும் உழவர்கள், மானங்காக்கத் துணி நெய்யும் பெண்கள், மனிதனை வண்டியில் வைத்து இழுக்கும் மனித மாடுகள் முதலியோர் மட்டுமன்றி மனிதனுக்காக உழைக்கும் வானம்பாடிகளும் இனிய கானம் கேட்டு ஆறுதலடைந்தன. கவலையையும் களைப்பையும் மறந்தன.

'வானம்பாடி எவ்வளவு அருமையாகப் பாடுகிறது. அதன் குரல் தேன் போல இனிக்கிறது' என்று எல்லோரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் அதனை நோக்கிக் கூறினார்கள்.

மூலக்கதை:The Thrush
மூலக் கதாசிரியர்: Yeh Sheng ao
மூலநூல் வெளியீடு: Foreign Language Press, Peking, 1973. பக்கம். 8-17
தமிழில் முதல் வெளியீடு: அர்ச்சுனா (சிறுவர் இலக்கிய ஏடு.) 1986-1987
தலைப்பு: வானம்பாடியின் புதிய கீதம்

----------------------------------