| கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். | ||
| மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை | ||
|
இலங்கையில் தமிழ்ர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும் |
||
|
இரா. சிவச்சந்திரன். எம். ஏ. |
| இலங்கையில் தமிழ்ர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும் இரா. சிவச்சந்திரன். எம். ஏ. ------------------------------------------------------------- இலங்கையில் தமிழ்ர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும் இரா. சிவச்சந்திரன். எம். ஏ. 'அகிலம்' சமூக அறிவியலாய்வு வெளியீடு - 2 யாழ்ப்பாணம் 1981 --------------------------------------------------------------- Population Characteristics and Economic Resources of the Tamil's Traditional Homelands in Sri Lanka by Ra. Sivachandran, M. A. (Jaf / Sri Lanka), Lecturer, Department of Geography, University of Jaffna, Jaffna. Published by 'Akilam' Social Science Research ublication Series. No: 2 Printed at Chitra Achchakam, 310, Clock Tower Road, Jaffna. First Edition: November, 1981 Price Rs. 5-00 --------------------------------------------------------------- 'தமிழர் பொருளாதாரம்' பற்றியும் சிந்தித்துச் செயற்பட்டதோடு, இதன்பால் பலரது சிந்தனையையும் தூண்டிய யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் புவியியற்றுறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சோ. செல்வநாயகம் B. A. Hons. (Cey), M. A.., Phd., (Lond), F. R. G. S. அவர்கள் பூதவுடல் மறைந்து இரண்டாவது ஆண்டு நினைவுக்கு... --------------------------------------------------------------- 'அகிலம்' சமூக அறிவியலாய்வு வெளியீடு பற்றி... 'அகிலம்' சமூக அறிவியலாய்வு வெளியீடுகள் சிறு நூல்வடிவில் தொடர்ந்து வெளி வருகின்றன. இத் தொடரின் முதலாவது வெளியீடு 'இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தில் நிலச்சீர்திருத்தத்தின் தாக்கம்' என்ற தலைப்பில் ஆகஸ்ட், 1976இல் வெளியிடப்பட்டது. சமூக அறிவியல் சார்ந்த சில சிக்கலான விஷயங்களை, படித்தவர்கள் மட்டுமன்றிச் சாதாரண பொது மக்களும் வாசித்துத் தெளிவு பெற வேண்டுமென்பதற்காக இலகுவான முறையிலே இவ்வகையான நூல்களை ஆக்கி வெளியிடுவதே எமது நோக்கமாகும். நாம் ஆய்வறிவினைக் குறுகிய வட்டத்திலிருந்தும் சிக்கலான முறைகளிலிருந்தும் மீட்டுப் பரவலாக்க விரும்புகின்றோம். தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பற்றிய வரலாற்றியல், புவியியல், பொருளியல், சமூகவியல் சார்பான ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட வேண்டியதும், அவை வெளியிடப்பட வேண்டியதும் இன்றைய காலகட்டத்தின் இன்றியமையாத் தேவையாகும். இத் தேவையை உணர்ந்து முன்னோடியாக வெளிவரும் இந்நூல், இத் தலைப்பிலானதோர் அறிமுக நூலேயாகும். இப் பணி தொடர இம் மண்ணின் அறிஞர்கள் ஆதரவு தரவேண்டும். இந் நூல் வெளிவருவதற்குப் பல வழிகளிலும் உதவிய நண்பர் திரு. மு. நித்தியானந்தன் அவர்கட்கும், படம் வரைந்துதவிய நண்பர் திரு. அ. கணபதிப்பிள்ளை அவர்கட்கும், சித்திரா அச்சக உரிமையாளருக்கும், அச்சகத் தொழிலாளருக்கும் நூலாசிரியரின் நன்றிகள். 'அகிலம்' வெளியீட்டுக் குழு --------------------------------------------------------------- இலங்கையில் தமிழர் குடித்தொகை - அறிமுகம் இலங்கை பல இன மக்கள் வாழும் நாடு. இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான வரலாறும் சமூக- பொருளாதார மதப் பின்னணிகளும் உண்டு. எனினும் மொழியடிப்படையிலே இலங்கை வாழ் மக்கள் தமிழ் மக்களெனவும் பாகுhடுத்தப்படுகின்றனர். இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் இலங்கைச் சோனகர் இந்திய சோனகர் என நான்காக வகைப்படுத்தப்படுகின்றனர். இந்த வகுப்பு முறை 1911 ஆம் ஆண்டிலிருந்து குடித்கொகைப் புள்ளிவிபர அறிக்கைகளில் எடுத்தாளப்பட்டு வருகின்றது. பாரம்பரியமாக ஈழத்திலே வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் இலங்கைத்தமிழர் என்று கருதப்பட்டனர். 19ஆம் 20ஆம் நூற்றண்டுகளில் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் ஜரோப்பியரால் விருத்தி செய்யப்பட்ட கோப்பி தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ் மக்கள் இந்தியத் தமிழர் என்று பாகுபடுத்தப்பட்டனர் அவ்வாறே இந்தியத் தமிழர் என்று பாகுபடுத்தப்பட்டனர். அவ்வாறே இலங்கைச் சோனகர் என்றும் இந்தியச் சோனகர் என்றும் தமிழ் மொழி பேசும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம் மக்களும் வகைப்படுத்தப்பட்டனர். இவர்களைத் தவிரமலாய் இன மக்களும் இங்குள்ள முஸ்லிம்கனுடன் கொண்டகலாசார உறவின் காரணமாக தமிழை மலாய் சொற்கலப்புடன் பேசி வருகின்றனர். இலங்கையில் 1981ஆம் ஆண்டுமார்ச் மாதம் பெறப்பட்டகுடித்தொகை கணிப்பீட்டின்படி இலங்கையில் மொத்தக் குடித்தொகை 14.88மில்லியனகவுள்ளது. இதில் சிங்களம்பேசும் மக்களின் எண்ணிக்கை10.98மில்லியனகவுள்ளது. இதுமொத்தக் துடித்தொகையில் 74 வீதமாகும். தமிழ்பேசும் மக்களின் எண்ணிக்கை 3.75 மில்லியனாதும். இதுமொத்தக் குடித்தொகையில் 25.3 வீதமாக அமைகிறது தமிழ்பேசும் மக்களில் இலங்கைத் தமிழ்ர் 1,871,535 பேராகவும் இந்தியத் தமிழர் 825,233பேராகவும் இலங்கைச் சோனகா ;1,056,972 பேராகவும் காணப்பட்டனர். இவர்களது நூற்று வீதமா முறையே 12.6, 5.6, 7.1(ஆகவுள்ளது. 1911ஆம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பின்படி இங்கையில்மொத்தக் குடித்தொகையில் சிங்கள மக்களின் பங்கு 66வீதமாகக் காணப்பட தமிழ் மக்களின் பங்கு 32.2 வீதமாக அமைந்திருந்தது. (இலங்கைத் தமிழ்12.8 வீதம்,இந்தியத் தமிழ்ர்12.9வீதம்,இலங்கைச் சோனகர் 5.7 வீதம், இந்தியச் சோனகர் 8 வீதம்) 1971ம் ஆண்டு குடித்தொகைக்கணிப்பின்படி இலங்கையின் மொத்தக் குடித்தொகையில் சிங்கள மக்களின் பங்கு 72 வீதமாகவும்,தமிழ் மக்களின் பங்கு 27.2 வீதமாகவும் காணப்பட்டது. (இலங்கைத் தமிழ்ர்11.2 வீதம் . இந்தியத்தமிழர்9.3 வீதம்,இலங்கைச்வோனகர் 6.5 வீதம். இந்தியச் சோனகர்0.4)2 1911ஆம் ஆண்டிலும், 1971ஆம் ஆண்டிலும் பெறப்பட்ட குடித்தொகைத் தரவுகளை 1981ஆம் ஆண்டுத் தரவுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது நூற்றுவீத அடிப்படையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லும் போக்கை அவதானிக்க முடிகின்றது. இதற்கு சில காரணங்கள் உள. முலைநாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் பலதலைமுறையாக இந்தநாடடில் வாழ்ந்துவந்தபோதிலும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தையடுத்து இயற்றப்பட்ட பிரஜா உரிமைச் சட்டங்கள் இம்மக்களை நாடற்றோராக மாற்றின. சில ஆண்டுகளுக்கு முன்புதான் சில ஒப்பந்தங்களின் பேரில் நாடற்றோர் பிரச்சனைகள் ஓரளவுக்குத் தீர்த்துவைக்கப்பட்டன. 1964ஆம் ஆண்டு சிறிமா- சாஸ்திரி -இந்திரா உடக்படிக்கையின்படி இந்திய மக்களில் 5.25.000 பேர் இந்தியா செல்லவும் 3.00.000 பேர் இலங்கை பிரஜா உரிமை பெறவும் வழியேற்பட்டது. இவ்வாறான ஒப்பந்தங்களின் பேரில் இந்தியத் தமிழர் வெளியேறி வருவதால் இலங்கையின் மொத்தக் குடித்தொகையில் தமிழர் நூற்றுவீதம் குறைவடைந்து செல்கிறது. இலங்கைத் தமிழரில் 35வீதத்தினர் நகரங்களில் வாழ்வதால் இவர்களிடையே குடும்பக் கட்டுப்பாடு அதிகளவில் கடைபிடிக்கபடுவதும் பெண்கள் திருமணம் புரிவதற்குப் பெரும் தொகையாகச் சீதனம் கொடுக்கும் வழக்கம் இவர்களிடையே நிலவுவதால் பெண்களின் சராசரித் திருமண வயது பின்தள்ளப்படுவதும் அண்மைக் காலங்களில் தமிழ் இளைஞர் வேலைவாய்ப்பு நாடி வெளிநாடுகளுக்குச் செல்வதும் தமிழர் குடித்தொகையை எண்ணிக்கையளவில் குறைக்கும் ஏனைய காரணிகளாக அமைகின்றது. தமிழர் குடிப்பரம்பல் தமிழ் பேசும்மக்களில் 55.6 வீதத்தினர் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் 23.83 வீதத்தினர் மலைநாட்டுப் பகுதியாகிய மத்திய ஊவா மாகாணங்களிலும் 11.5 வீதத்தினர் தலைநகர் அமைந்திருக்கும் மேல் மாகணத்திலும் மிகுதி 9.1வீதத்தினரே ஏனைய நான்கு மாகாணங்களிலும் பரந்து வாழ்வதை அவதானிக்க முடிகிறது. தென் இலங்கைப்; பகுதிகளில் தமிழர் பரம்பல் பெருமளவுக்கு நகரப்புறம் சார்ந்தே காணப்படுகின்றது. தமிழ்மக்கள் செறிவாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் பகுதிகள் ஈழத்தின் வடக்குக் கிழக்கு பகுதிகளாகவும் மலைநாட்டுப் பெருந்தேட்ட பகுதிகளாகவும் காணப்படுகின்றன. இந்தியத் தமிழருள் 63.1வீதத்தினர் மலைநாட்டுப ;பகுதியாகிய மத்திய ஊவா மாகாணத்தில் வாழ்வது போன்று இலங்கைத் தமிழரில் 72.6 வீதத்தினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ்மக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அப்பகுதிகளில் வாழ்ந்து வருவதால் அப்பகுதி தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வடக்குக் கிழக்கு மாகாணத்தை விடப் பரந்ததென்றும் இது மேற்கே மாஓயா (வாய்க்கால்ஆறு) தொடக்கம் தெக் கிழக்கே கும்புக்கன் ஆறவரை பரந்துள்ள கரையோர நிலப்பகுதியென்றும் பல குறிப்புக்களிலிருந்து தெரிய வருகின்றது. எனினும் இவ் ஆய்வு வடகிழக்கு மாகணங்களே தமிழர் பாரம்பரியப் பிரதேசமெனக் கொள்கிறது. தமிழர் வரலாறு இலங்கையில் தமிழர் குடியிருப்புகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஏற்பட்டு வந்திருக்கின்றன. இவை தமிழகத்திலிருந்தே ஏற்படுத்தப்பட்டன. சிங்கள மக்களின் மூதாதையெனக் கொள்ளப்படும் வியன் எனும் வங்கத்து இளவரசன் தம்பபண்ணியில் (மாதோட்டம்) கி:மு 483 ஆம் ஆண்டில் வந்திறங்கியபோது இலங்கையில் நபகர் இயக்கர் எனும் ஆதிக்குடிகள் இருந்தமை பற்றியும் தம்பண்ணி துறைமுகமாகவும் தலைநகராகவும் விளங்கியமை பற்றியும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது.இங்கு காணப்பட்ட ஆதிக்குடிகள் திராவிடர்களென்றே கருதப்படுகின்றனர்;. இலங்கையிலே நாகர் என வழங்கப்பட்ட பழந்திராவிட இனத்தினர் மிகவும் முற்பட்ட காலத்திலே இலங்கையை ஆட்சி புரிந்தனரென அறிய முடிகின்றது நாகம் தொட்பான இடப்பெயர் மக்கட்பெயர்கள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் நாகதீவு என்றும் முன்பு வழங்கிற்று. முதற் சங்கப்புலவர்களான முடிநாகராயர் இளநாகர் ஈழத்துப் பூதந்தேவனார் நீலகண்டனார் என்பவர்கள் ஈழநாட்iடுச் சேர்ந்த சங்கப்புலவர்களெனக் கருதப்படுகின்றனர். முதற் சங்க காலம் கி.மு 4ஆம் நூற்றாண்டு முதல் 2ஆம் நூற்றாண்டு வரை நிலவியதென்றும் இக்காலத்தில் குமரிமுனைக்குத் தெற்கில் நெடுந்தொலைவுவரை தமிழக எல்லை பரந்திருந்ததென்றும் அப்படிப் பரவியிருந்த நிலப்பகுதி நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததென்றும் கூறப்படுகின்றது. குறும்பநாடு என வழங்கிய இத் தென்னிலப் பரப்பிற் பெரும்பாகம் கடற்கோள்களினால் அழிவுற்றதென சங்க இலக்கியங்களில் இருந்து அறிகிறோம். இவ்வபரங்களைக் கருத்திற் கொள்ளும் போது முன்னர் இலங்கை தமிழகத்தின் ஒருபகுதியாக விளங்கியிருக்கக்கூடும் எனக் கருதலாம். . புவியல் சார்பாக நோக்குமிடத்து தென்னிந்தியாவிலிருந்து குடிநகர்வு ஏற்படுவதற்குச் சாதகமான பெதிக அமைப்புகளை இலங்கையின் வடபாகம் கொண்டுள்ளது. இலங்கையின் வடமேற்குப் பகுதியும் யாழ்ப்பாணக் குடாநாடும் தென்னிந்தியாவுக்கு மிக அண்மையில் இருப்பதோடு பிரிக்கும் கடலும் ஆழமற்று ஆங்காங்கே தீவுத் தொடர்களைக் கொண்டும் விளங்குகின்றது தென்மேற்கு மொன்;சூன் வடகீழ் மொன்சூன் ஆகியன வீசும் திசையின் வாய்ப்புக் காரணமாக இருநாடுகளுக்குமிடையிலான கடற்பயணம் இலகுவானதாக அமைந்துள்ளது. அத்துடன் வடபகுதியில் குடாக்கள் நிறைந்த பரவைக்கடல் காணப்படுவதும் வடமேற்குப் பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் காணப்படும் தரைகீழ் நீர்வளமும் மீன்பிடி விவசாயக் குடியிருப்புக்கள் ஏற்படுவதற்குரிய சாதகமான பௌதிகக் காரணிகளாக விளங்குகின்றன. இச்சாதகமான அம்சங்கள் மிகப்பழைய காலத்திலிருந்தே தென்னிந்திய தமிழ் மக்கள் இங்குவந்து குடியேறுவதற்கு வழியமைந்திருக்குமென்பதில் ஐயமில்லை இந்தியாவில் காணப்படுவது போன்று இலங்கையிலும் திராவிடப் பண்பாட்டீன் பழமையைக் காட்டும் பெருங்கற் புதைவுகாலப் பண்பாட்டின் தடயங்கள் ஆங்காங்கே காளப்படுவதை தொல்பொருள்இயல்ஆய்வுகள்வெளிப்படுத்துகின்ற.6 புத்தளம், மாதோட்டம்,ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளில் அவை வெளிப்படுத்தப்பட்டுள்ன.7 தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகழ்வாய்வுகளதும் ஏனைய வரலாறு, சமுயவியல், புவியியல், சான்றுகளும் பழந்திராவிடர் குடியேற்றம் பற்றிய அரிய பல உண்மைகளை வெளிக்கொணருமென எதிர்பார்க்கலாம். வுரலாற்றின் ஆரம்ப காலத்தில் இலங்கையை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு சிங்களவரே ஆட்சி புரிந்தனரென கூறப்படுகின்ற போதிலும் சில காலங்களில் இங்கு தமிழ் அரசர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். கி.மு.161ஆம் ஆண்டில் தென்னிலங்கைக் காட்டினுள் ஒழித்திருந்து படைதிரட்டி வந்து அநுராதபுர ராச்சியத்தைக் கைப்பற்றிய துட்டகாமினியின் ஆட்சிக்கு முன்பு தென்னிந்திய சோழ அரசனான எல்லாளன் என்பவன் அநுராதபுரத்தை நாற்பத்திநான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தமை குறிப்பிடத்தக்கது. கி.பி.993முதல் 1071வரை சோழ சாம்ராச்சியத்தின் மும்முடிச்சோழ மண்டலத்தினுள் இலங்கையின் வடபகுதி ராச்சியம் அடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஈழ வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு மாற்றம் கி.பி.13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்டது. கலிங்கமானது படையெடுப்பின் விளைவாக (கி.பி.1215-1236) பொலனறுவையைத் தலைநகராகக் கொண்டு ஈழமனைத்தையும் உள்ளடக்கியிருந்த அரசு அழிவுற்றது. இக்குழப்ப நிலையின் பின்னர் வடக்கே யாழ்ப்பாண அரசும் தெற்கே தம்பதெனிய அரசும் ஏனைய வறண்ட காடடர்ந்த பகுதிகளில் வன்னிக் குறுநில அரசுகளும் தோன்றி நிலைபெற்றன. வடஇலங்கையில் யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்டு தோற்றம் பெற்ற தமிழ் அரசு சபுமல் குமாரன் எனும் சிங்கள இளவரசனின் இடையீடு ஏற்பட்டபதினேழு வருடங்களைத் தவிர (கி.பி 1450- 1467) போர்த்துக்கோயர் கி.பி.1618இல் யாழப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனிடமிருந்து அரசைக் கைப்பற்றும்வரை நிலைத்திருந்தது. யாழ்ப்பாண பட்டினமென வழங்கிய தமிழரசிலே யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதி மாத்திரமனறி பிதான நிலப்பகுதியின் வடக்கு வடகிழக்கு வடமேற்குப் பகுதிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன. காடடர்ந்து காணப்பட்ட இவ்வறண்ட பகுதிகள் வன்னி என அழைக்கப்பட்டன. தமிழிலக்கியங்கள் வன்ய என்ற வடமொழிப் பதத்தைக் காடடர்ந்த நிலங்களில் வாழ்ந்த முல்லை நிலத்து மக்களைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளன. தெற்கே சிங்கள அரசிலும் ஆங்காங்கே வன்னி எனப்பட்ட குறநிலவரசுகள் காணப்பட்டனவெனினும் இலங்கையில் தமிழர் வாழ்ந்த வடக்கு கிழக்குப் பகுதிகளிலேயே இவை அதிகம் பரந்திருந்தன. இவை யாழ்ப்பாண வன்னிமை புத்தளவன்னிமை திருகோணமலை வன்னிமை மட்டக்களப்பு வன்னிமை என வழங்கப்பட்டன. வன்னிப்பிரதேசம் காடடர்ந்த பகுதியாக இருந்தமை ஆட்சிக்கு அரணாக அமைந்தது. இதனால் வன்னிக்குறநில அரசர்கள் பொதுவாக திறை செலுத்திய ஆட்சிப் பிரதானிகளாக விளங்கிய போதிலும் சில சமயங்களில் சுதந்திரமான அரசையும் நிலைநிறுத்த முடிந்தது இலங்கைக்குப் போர்த்துக்கேயர் 1505ம் ஆண்டில் வந்தபோது பலம் பெற்றிருந்தன. போர்த்துக்கேயர் வர்த்தக நோக்கம் கொண்டே வந்தனரெனினும் காலகெதியில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் கொண்டனர். கடல்வலுமிக்க போர்த்துக்கேயர் இயற்கை அரண்களால் சூழப்பட்டிருந்த கண்டி நகரைத் தவிர ஏனைய கரையோரப் பகுதி களில் நிலைபெற்றிருந்த அரசுகளைக் கைப்பற்றிக் கொண்டனர். யாழ்ப்பாணத் தமிழ் அரசும் வன்னிப்பிரசே வன்னிப்பிரதேச குறநில அரசுகளும் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் தமது பாரம்பரியப் பிரதேசத்தின் அரசுரிமையை இழந்தனர். அண்மைய குடித்தொகைப் பண்புகள் தமிழர் பாரம்பரியப் பிரதேசமாகிய வடகீழ் மாகாணம் 7068சதுர மைல் பரப்பை அடக்கியுள்ளது. இலங்கையின் மொத்தநிப்பரப்பில் இது28.3 வீதமாகும். இவை ஏழு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா முல்லைத்தீவு என்பன வட மாகாணத்தினுள்ளும் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன. (அட்டவனை 1 பின்னினைப்பு) தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகை 1981ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பீட்டின்படி 2.087.943 போரகும். இலங்கையில் மொத்தக் குடித்;தொகையில் இது 14.1 வீதமாக அமைகிறது. வடகீழ் பகுதியின் மொத்த குடித்தொகையில் வட மாகாணத்தில் 53.2 வீதமும் கீழ் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களிலும் ஓரளவு சமாமனதாகக் குடித்தொகை அளவு அமைய வட மாகாணத்திலே யாழ்ப்பாணமாவட்டமே கூடிய குடித்தொகையைக் கொண்டு காணப்படுகின்றது. வடமாகாணத்தின் மொத்தக் குடித்தொகையின் 74.8 வீதத்தினர் யாழ்ப்பாண மாவட்டத்திற் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்திலும் யாழ்ப்பாணக் குடாநாடே செறிவான குடித்தொகை கொண்ட பகுதியாகும். தமிழர்பாரம்பரியப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் யாழ்ப்பணக் குடாநாடு 6.1வீதத்தையே கொண்டிருந்த போதிலும் மொத்தக் குடித்தொகையில் 36 வீதத்தினர் குடாநாட்டினுள்ளேயே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். குடியடர்த்தி தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் 1981 ஆம் ஆண்டுக்குரிய சராசரிக் குடியடர்த்தி சதுர மைலுக்கு 295 போராகும். இலங்கையில் சதுர மைலுக்குரிய குடியடர்த்தியான 595 பேருடன் ஒப்பிடின் இது குறைவே. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களிலும் (222-348) வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் சதுர மைலுக்குரிய குடியடர்த்தி 94 பேரிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 1039 பேராக வேறுபட்டுக் காணப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்திலேயும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் சதுர மைலுக்கு 1745 பேர் வாழ்கின்றமையைக் காணலாம். இதனல் அண்மைக் காலத்தில் குடிநெருக்கப்பகுதியில் இருந்து நெருக்கமற்ற பகுதிகளுக்கு மக்கள் நகருவதற்கான ஊக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு தவிர ஏனைய வட மாகாணப் பகுதி கிழக்குமாகாணப் பகுதிகளில் 1946இன் பின் சதுர மைலுக்குரிய குடியடர்த்தி வேகமாக அதிகரித்து வந்துள்ளமைக்கு இப்பகுதிகளில் சுதந்திரத்தின் பின் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்களுக்கு குடிச்செறிவான பகுதிகளிலிருந்து மக்கள் நகர்ந்து வந்தமையே காரணமாக அமைன்கிறது. ஊதாரணமாக 1946இல் வவுனியா மாவட்டத்தில் சதுர மைலுக்கு 16 பேராக இருந்த குடியடர்த்தி 1981இல் 94பேராக அதிகரித்தமையும் மட்டகளப்பு திருகோணமலை மாவட்டங்களில் சதுர மைலுக்கு 70பேராக இருந்த குடியடர்த்தி 1981இல் 250 பேருக்கு மேலாக அதிகரித்தமையும் குறித்துக் காட்டலாம். கிராம நகரப் பண்பு இப் பிரதேசத்தின் 1981ஆம் ஆண்டுக்குரிய நகரக் குடித்தொகை 527213பேராகும். இதன்படி இங்கு வாழ்வோரில் 25.3 வீதத்தினர் நகர வாசிகளாவர்.இலங்கையின் நகரக் குடித்தொமை வீதமான 21.5உடன் ஒப்பிடுகையில் நகராக்கப்பண்பு ஓரளவு இங்கு அதிகமாகவுள்ளதை அவதானிக்கலாம். மொத்த நகராக்கக் குடித்தொகையில் 51.3வீதத்தினர் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காணப்படுகின்றனா. இங்கு காணப்படும் 26நகரங்களில் 13 நகரங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. மொத்த நகரங்களுள் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு எனபன மாநகர அந்தஸ்தையும் சாவகச்சேரி பருத்தித்துறை வல்வெட்டித்துறை வவுனியா அம்பாறை திருகோணமலை என்பன நகரசபை அந்தஸ்தையும் பெற்ற நகரங்களாக உள. வயதமைப்பு இப் பிரதேசத்தின் குடித்தொகை வயதமைப்பை நேக்கும்போது இளம் வயதுப் பிரிவினர் அதிகமாகக் காணப்படும் பண்பினை அவதானிக்கலாம் 1971 ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின் அடிப்படையில் இங்கு 54.5 வீதத்தினர் 19 வயதிற்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 41 வீதத்தினர் தொழில் புரியக்கூடிய 20-59 வயது பிரிவினராவர்.60 வயதிற்கு மேற்பட்டோர் 4.5 வீதத்தினாராக உள்ளனர். இளம் வயதுப்பிரிவினரும் 60 வயதிற்கு மேற்பட்டவப்களும் சார்ந்திருப்போர் தொகையில் அடங்குபவர். தோழில் புரியும் ஒவ்வொரு 100 பேரில் இங்கு 88 பேர் தங்கி வாழ்கின்றர்கள். தேசிய தரவுகள் இலங்கையில் 100 பேரில் தங்கி வாழ்வோர் 76 பேரெனக் காட்டுகின்றன. தேசிய தரவுடன் ஒப்பிடுகையில் இங்கு தங்கி வாழ்வோர் விகிதம் இதிகமாக உள்ளது தங்கிவாழும் வயதுப்பிரிவினர் பெருமளவு சமூக செலவினங்களை ஏற்படுத்துபவர்களாக உள்ளனர். பால்விகிதம் இப்பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் (1971) 1070249 ஆண்களும் 1017694 பெண்களும் காணப்படுகின்றகர். மோத்தக் குடித்தொகையில் 53.1 வீதம் ஆண்களும் 48.7 வீதம் பெண்களும் உள்ளனர். ஒவ்வொரு 100 பெண்களுக்கு 105 ஆண்கள் என்ற விதத்தில் பால்விகிதம் இமைந்துள்ளது இது இலங்கைக்குரிய ஆண் பெண் விகிதத்தோடு ஒத்ததாகவே உள்ளது எனினும் மாவட்டாPதியாக இவ்விகிதம் வேறுபடுவதை அவதானிக்க முடிகின்றது. பொதுவாக யாழ்ப்பாண மாவட்டம் தவிர ஏனைய பகுதிகளில் ஆண் பெண் விகிதம் ஆண் சார்பாக அதிகமாக உள்ளது. வவுனியா,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களிலே அண்மைக் காலங்கனில்அதிகளவு விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமையால் பெருமைவு ஆண் சார்பாக மிக ஆதிகமான உள்ளது. உதாரணமாக 100 பெண்களுக்கு வவுனியாவில் 114 ஆண்களும் முல்லைத்தீவில் 123 ஆண்களும் அம்பாறையில் 109 ஆண்களும் திருகோணமலையில் 115 ஆண்களும் காணப்படுகின்றனர்; காடுகளால் சூழப்பட்ட குடியேற்றத்திட்டப் பகுதிகளில் பாதுகாப்பு உறுதியற்று இருப்பதாலு கல்வி சுகாதாரம் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதாலும் குடும்பத் தலைவன் தமது மனைவி பிள்ளைகனை இப்பகுதிகளுக்கு அழைத்து வருவதை விரும்புவதில்லை குடியேற்றத்திட்டப் பகுதிகளில் ஆண்களின் தொகை அதிகமாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம் எனலாம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 100 பெண்களுக்கு 98 ஆண்கள் என்றவாறு ஆண் பெண் விகிதம் அமைந்துள்ளமைக்கு ஆண்கள் வேலை வாய்ப்பு நாடி ஏனைய பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்து சென்றமையே காரணமாகும். மொழியும் இனமும் இப்பிதேசத்தில் தமிழ் மொழி பேசும்;மக்கள் மொத்த குடித்தொகையின் 86.3 வீதமாகவும் சிங்கள மொழி பேசுவோர் 13.2வீதமாகவும் காணப்படுகின்றனர். மாவட்டத்திற்கு மாவட்டம் இதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களின் மொத்தக்குடித் தொகையில் 90 முதல் 99 வீதத்தினர் தமிழ் பேசும் மக்களாவர் வவுனியா மாவட்டத்தில் 83 வீதத்தினர் தமிழ் பேசும் மக்களாக உள்ளனர். வடக்கே வவுனியா மாவட்டமும் கிழக்கே திருகோணமலை அம்பாறை மாவட்டங்களும் சிங்கள மக்கள் குறிப்பிடும் படியாக அதிகம் வாழும் பகுதிகளாக உள. அம்பாறை திருகோணமலை மாட்டங்களில் மொத்தக் குடித்தொகையில் 34 முதல் 38 வீதத்தினர் சிங்கள மக்களாக உள்ளனர். (அட்டவணை2) இப்பகுதிகளின் அண்மைக் காலங்களில் ஏற்படுத்தப்பட்டு வரும் குடியேற்றத் திட்டங்;களில் சிங்கள மக்கள் பெருமளவு குடியேற்றப்பட்டிருப்பதே இம் மாவட்டங்களில் சிங்கள மக்களின் வீதம் அதிகரித்தமைக்குக் காரணமாகும். வவுனியா மாவட்டத்தில் மாமடுவ மடுக்கந்தை ஈரப்பெரியகுளம் உலுக்குளம் ஆகிராம சேவகர் பிரிவுகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் அக்கோபுர சோமபுர கந்தளாய் பறன மதவாச்சி கோமநன் கடவெல ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் அம்பாறை மாவட்டத்தில் வேவகம்பற்று வடக்கு வேவகம் பற்று தெற்கு லாகுகல மாகஓயா படியதலர்வ ஆகிய உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் சிங்களப் பகுதிகளாகவே உள்ளன. தமிழர் சிறுபான்மையோராக மாற்றப்படக்கூடிய ஆபத்து தோன்றியிருப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் குரல்கொடுப்பதற்கு இதுவே காரணமாக அமைகிறது. இப் பிரதேசத்தின் தமிழ் பேசும் மக்களில் 65 வீதத்தினர் இலங்கைத் தமிழராவர்.அம்பாறை திருகோணமலை மாவட்டஙகளைத் தவிர ஏனைய மாவட்டங்களில் இலங்கைத் தமிழரே பெரும்பான்மையோராக உள்ளனர்.யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்தக் குடித்தொகையில் 95 வீதத்தினரும் இலங்கைத் தமிழராகக் காணப்பட வவுனியா முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில் இவைமுறையே 57 76 71 வீதமாக அமைந்துள்ளன. மன்னார் மாவட்டத்தில் 51 வீதத்தினரே இலங்கைத் தமிழராவர். துமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இந்தியத் தமிழர் 3.6 வீதத்தினரேயாகும். வுவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் இந்தியத் தமிழர் முறையே 19.14.13 வீத்தினராகக் காணப்படுகின்றனர். அண்மைக்காலங்களில் பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினை இனப்பாதுகாப்பின்மை போன்ற கராணங்களால் இவர்கள் இப்பகுதிகளுக்கு குடிநகர்ந்து வந்து விவசாயக் கூலித்தொழிலாளர்களாக வாழ்கின்றனர். இப்போக்கு அண்மைக் காலத்தில் மேலும் அதிகரித்து வருகின்றது.இலங்கை இந்திய சோனகர் இப்பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் 18வீதத்தினராக உள்ள போதும் அம்பாறை மாவட்டத்தில் இவர்களே தனத்த பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். (42வீதம்) இதனையடுத்து திருகோணமலை (29வீதம்) மன்னார்(27வீதம்) மட்டக்களப்பு(24வீதம்) ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு செறிவாக வாழ்கின்றனர். (அட்டவனை 3 பன்னிணைப்பு) மதம் தமிழர் பாரமபரியப் பிரதேசத்தில் தமிழர்களது பிரதான மதமான இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மொத்தக் குடித்தொகையில் 59.3 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். மேலும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தோர் 17.6 வீதமாகவும் பௌத்த மதத்தினர் 12.5 வீதமாயும் றோமன் கத்தோலிக்கர் 9.4 வீதமாயும் அமைகின்றனர். யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழும் (6.6வீதத்திற்கு மேல்) மாவட்டங்களாக உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களும் (41.6 விதம்) மன்னார் மாவட்டத்தில் றோமன் கத்தோலிக்கரும் (41.1வீதம்) பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் இந்துக்களும் முஸ்லிங்களும் ஏறத்தாழ சமமாக (33வீதம்) உள்ளனர். பௌத்த மதத்தைச் சேர்ந்தோர் அம்பாறை (37வீதம்) திருகோணமலை (32வீதம்) வவுனியா(16வீதம்) ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு காணப்படுகின்றனர். கல்வியறிவு தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் 10வயதிற்கு மேற்பட்ட குடித்தொகையில் கல்வியறிவு பெற்றோர் 100 பேருக்கு 71 பேராகக்காணப்படுகின்றனர். ஆண்களில்இது78 பேராகவும் பெண்களில் இது 62 பேராகவும் உள்ளது இப்பிரதேசத்தில் யாழ்ப்பாண மாவட்டம் கல்வியறிவில் கூடியவர்களைக்கொண்டதாக அமைந்துள்ளது. இங்கு 100 பேருக்கு 83 பேர் கல்வியறிவு கொண்டவர்களாக உள்ளனர். கல்வியறிவில் குறைந்த குடித்தொமையைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அமைகின்றது. இங்கு 100 பேரில் 51 பேரே கல்வியறிவுகொண்டோரகக் காணப்படுகின்றனர். அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் 100 பேருக்கு 65பேர் கல்வியறிவு கொண்டிருந்தனர். தொழில்; இப்பிரதேசத்தின் குடித்தொகையில் வேலைவாய்ப்புப் பெற்றோரில் 60 வீதத்தினர் விவசாயம் மீன்பிடி ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களாக உள்ளனர். கைத்தொழிலும் அதனோடு தொடர்பான துறைகளில் 8 வீதத்தினரும் வர்த்தகம் போக்குவரத்து சமூக சேவைகள் போன்ற துறைகளில் 32 வீதத்தினரும் வேலைவாய்ப்பினைப் பெற்றுன்ளனர். தொழில்வாய்ப்புப் பெற்றவர்களில் ஆண்களில் பங்கு 93 வீதமாயும் பெண்களின் பங்கு 7 வீதமாயும் உள்ளது. மொத்தக் குடித்தொகையில் 48 வீதமாகக் காணப்படும் பெண்களின் உழைப்பு முறையாக பயன்படுத்தப்படாமையை இத்தரவுகள் உணர்த்துகின்றன. விவசாயத்திற்குரிய பௌதிக வளம் நிலவளம் நீர்வளம் மண்வளம் போன்றன விவசாயப் பயன் பாட்டிற்கு இன்றியமையாத பௌதிக வளங்களாகும். தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் தரைத்தோற்றம் அதிக உயர வேறு பாடற்ற சமநிலமாகவே காணப்படுகின்றது. மத்திய மலை நாட்டிலிருந்து படிப்படியாக உயரத்திற்குறைந்து வரும் இலங்கையில் வடசமவெளி கிழக்கு சமவெளிகளிற் பெரும்பாகத்தை இப்பிரதேசம் அடங்கியுள்ளது. பொதுவாக இப்பிரசத்தின் தரைத்தோற்றத்தை கரையோரத்தாழ் நிலமென்றும் உள்ளமைந்த மேட்டுப்பாங்கான நிலமெனறும் பிரிக்கலாம். கரையோரத் தாழ்நிலம் ஏறத்தாழ 100அடிக்குட்பட்ட உயரத்தைக் கொண்டு இப்பிரதேசத்தின் பரந்த பரப்பை அடக்கியுள்ளது. உள்ளமைந்த மேட்டுநிலம் 100 அடிக்கு மேற்பட்டும் 300 அடிக்கு உட்பட்டும் காணப்படுகிறது. இது வடக்கே அகன்றும் கிழக்கே ஒடுங்கியும் உள்ளது. இம் மேட்டு நிலத்தில் குறிப்பிடக்கூடிய மலைகள் இல்லாவிடினும் பல எச்சக் குன்றுகள் வெளியரும்பு பாறைகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. தரைத்தோற்ற அமைப்புக்கேற்ப உயர்ந்த பகுதிகளிலிருந்து உற்பத்தியாகிவரும் ஆறுகள் வடக்மேற்கு வடக்கு வடகிழக்கு கிழக்குத் திசைகளை நேக்கிப் பாய்கின்றன. இங்கு பல ஆறுகள் காணப்பட்ட போதிலும் மகாவலி கங்கையைத்தவிர ஏனையவற்றில் வருடம் முழவதும் நீரோட்டம் இருப்பதில்லை. இங்கு காணப்படும் ஆறகளில் பெரும்பாலானவற்றில் மழைகால நீரோட்டம் காணப்படுவதால்; இவை பருவகால ஆறுகளென வழங்கப்படுகின்றன. இதனாலேயே ஆற்றை மறித்து அணைகட்டி நீர்த்தேக்கங்கள் உருவாக்கி விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பாசனமுறை இப்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகின்றது. அண்மைக்காலங்களில் பழைய குளங்கள் பல புனரமைக்கப்பட்டும் புதிய குளங்கள் பல உருவாக்கப்பட்டும் இப் பகுதிகளில் விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன. இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புக்கள் வவுனியா மன்னார் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் நிறைய உள. இப்பிரதேசத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு உள்ளடங்கிய வடமேற்குப் பாகம் கீழே மயோசீன் கால சுண்ணாம்புப் பாறைப் படையைக் கொண்டுள்ளதால் தரைகீழ் நீர்வளம் மிக்க பகுதியாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடித்தொகை செறிவாக இருப்பதற்கு தரைகீழ் நீர்வளமே காரணமாகும். வுருடம் முழவதும் கிணற்று நீர் பெற்று இங்கு விவசாயம் செய்தல் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. இப் பிரதேசத்தின் கிழக்குக் கரையோர மணற்பாங்கான பகுதிகளிலும் ஒரளவு தரைகீழ் நீர்வளம் காணப்படகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பயிர்செய்கைக்குப் பயன்படுத்துமளவு அதிகளவு கரைகீழ் நீர் இப்பகுதிகளிற் பெறமுடியாது விடினும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு நீ பெற்றுக்கொள்ள முடிகிறது. தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வருடம் 75 அங்குலத்திற்கு குறைந்த மழைவீழ்ச்சி பெறும் வறண்ட வலயத்தின் பெரும் பாகத்தை உள்ளடக்கியுள்ளது. பொதுவாக இங்குவருடம் முழுவதும் உயர்வான வெப்பநிலை (பரனைட்81 பாகை) நிலவுவதோடு வருடத்தின் நான்கு மாதங்களுக்கே குறிப்பிடபக்கூடிய மழை வீழ்ச்சியும் கிடைக்கப்பெறுகின்றது. இப்பிரதேசத்தின் வருட சராசரி மழைவீழ்ச்சி 55அங்குலங்களாகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள. முன்னார் அம்பாறை மாவட்டங்ளின் தென்பகுதிகள் குறைந்தளவான 25 அங்குலம் தொடக்கம் 50 அங்குலம் வரை மழை பெற அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் உயர்ந்தளவான 75 அங்குலத்திற்கு மேற்பட்ட மழையைப் பெறுகின்றன. எனினும் 50 அங்குலம் தொடக்கம் 75 அங்குல மழைபெறும் பரப்பளவே அதிகமாகும். யாழ்ப்பாணம் வவுனியா திருகோணமலை மாவட்டங்கள் முழவதும் மன்னார் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிற் பெரும்பாகமும் 50 அங்குலம் தொடக்கம் 75 அங்குல மழைபெறும் பகுதிகளாகவே அமைகின்றன. இப் பிரதேசம் மொன்சூன் காற்றினாலும் சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70 வீதம் நான்குமாத காலத்தினுள்ளேயே பெறப்படுவது முக்கிய அம்சமாக உள்ளது. இம்மழைவீழ்ச்சியே இப்பிரதேசத்தின் காலபோக விவசாயச் செய்கைக்கு உதவுகின்றது. மார்ச் முதல் மேவரை மேற்காவுகையினாலும் குறைந்தளவு சூறாவளி நடவடிக்கையினாலும் சிறிதளவு மழை வீழ்ச்சி கிடைக்கின்றது. சிறுபோகச் செய்கைக்கு இம்மழைவீழ்ச்சி ஓரளவுக்கு உதவுகின்றது. யூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கு அதிக வறட்சி நிலவுகின்றது இக்காலத்தே வீசும் தென்மேற்கு மொன்சூன் இலங்கையின் ஈரவலயத்திற்கு மழையைக் கொடுத்து இப்பகுதிகளில் வறண்ட காற்றாக வீசுகின்றது. இவ் வறண்ட காற்றை வடக்கே சோளக்காற்று என்றும் கிழக்கே கச்சான் காற்று என்றும் வழங்குவர். இப்பிரதேசத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு தவிர ஏனைய பகுதிகளின் பெரும்பாகத்தில் வறண்ட பிரதேசத்தின் முறையான மண் வகையான செங்கபில நிறமண் பரந்துள்ளது. இம்மண்வகை தொல்காலப் பாறைகளிலிருந்து விருத்தியடைந்ததாகும். விவசாயச் செய்கைக்குப் பொருத்தமான வளமான மண்ணான இது மன்னார் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஓரளவுக்கும் வவுனியா திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் பெருமளவுக்கும் பரந்துள்ளது. மன்னாரிலிருந்து முல்லைத்தீவுவரை கரையோரத்திற்கு சிறிது உள்ளாக சிவந்த மஞசள் லட்டோசல் மண் செங்கபிலநிற மண் பரப்பிற்கும் கரையோரப் பகுதிக்கும் இடையே பரந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்திய பகுதியிலும் பரந்துள்ள இம்மண்வகை செம்மண் என வழங்கப்பட்டு குடாநாட்டில் வளமான மண்ணாகக் கருதப்படுகின்றது. இம்மண் பழைய கரையோர வண்டல் மண்ணிலிருந்து விருத்தியடைந்ததாகும். இரசாயன வளம் குறைந்த இம்மண்வகை விவசாயத்திற்குப் பயன்பட உரப்பயன்பாடு அவசியம். முன்னார் தொட்டு முல்லைத்தீவுக்கு கரையோரமாகவும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரமாகவும் உவர்மண் பரந்துள்ளது. புல்வளருவதற்கே பொருத்தமான இம்மண்வகை விவசாயத்திற்குப் பயன்பட அதிக இரசாயன உரம் பயனபடுத்தப்படவேண்டும். மட்டக்களப்புக்கு வடக்கேயும் திருகோணமலைக்குத் தெற்கேயும் சுண்ணாம்புக் கலப்பற்ற கபிலநிற மண்பரந்துள்ளது. விவசாய வளம்குறைந்த இம்மண் பரந்தளவு புல்வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இவைதவிர வடக்கேயும் கிழக்கேயும் காணப்படும் ஆற்றுப்படுக்கைகளிலும் அவற்றின் வெள்ளச்சமவெளிகளிலும் வளம்மிக்க வண்டல்மண் படிவுகள் பரந்துள. முன்னார்தீவு பூனகரிமுனை யாழ்ப்பாணக் குடா நாட்டின் கிழக்குப்பகுதி முல்லைத்தீவிலிருந்து பொத்துவில் வரையான கிழக்குக் கரையோரப்பகுதி ஆகியவற்றில் அண்மைக்கால மணற்படிவுகள் பரந்துள்ளன. பொங்கு முகப்படிவுகளான இவை தென்னைச் செய்கைக்குப் பொருத்தமானவை. நிலப்பயன்பாடு தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் உழகை;கும் மக்களில் 60 வீதத்தினர் விவசாயத’தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர்.இப்பகுதிகளில் பாரம்பரியமாக விவசாயமே முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இருந்து வருகிறது . அண்மைக் காலங்களில் விவசாயத்துறையில் புகுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாக பரவியுள்ளன. இப்பிரதேசம் அடங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். தோட்டச் செய்கையோடு தொடர்பான நிலப்பயன்பாடு எனவும் இவற்றை வகைப்படுத்தலாம். இப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.1 விதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 36 விதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்குவளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக்குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைகீழ் நீர் வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ்மக்கள் வருடம் முழுவதும் பயிர்செய்கின்றார்கள்.மிகவும்சிறிய அளவினதான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிர்ச் செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிர்ச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாகவே யாழ்ப்பாணக்குடாநாட்டுப்பகுதி செறிவான குடித்தொகையைக் கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்டபகுதிகளில் சதுரமைலுக்கு 3000 மேற்பட்டோர் வாழ்கின்றனர். யாழ்ப்பாணக்குடாநாடு ஏறத்தாழ 443 சதுரமையில் பரப்பைக் கொண்டது. இதில் 50 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதிமணல் பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை மக்களுக்குப் பயன்படுகின்ற 60வீதமான நலப்பகுதியில் மூன்றிலொரு பகுதிகுடியிருப்பு நிலங்களாக உள்ளன.பனை தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும் தோட்டப்பயிரும் செய்கைபண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் நெல்வயல் நிலங்கள் தோட்ட நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்டநிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது. இப்பகுதி தோட்டங்களில் புகையிலை மிளகாய் வெங்காயம் உருளைக்கிழங்கு காய்கறிகள் தினைவகைகள் ஆகியன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவுத்தேவையின் கணிசமான பங்கு யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியிலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும் மிளகாய்ச் செய்கைககுட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக்குடா நாடே அடங்கியுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில் நுட்பமுறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச் செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம் செயற்கை உரம் கிருமிநாசினி என்பன பெருமளவு பயன்படுத்தப்பட்டு விவசாய உற்பத்தி அதிகரிகப்பட்டுள்ளது. குடித்தொகையில் அதிகரிப்பும் தோட்டச் செய்கையின் அதிகரிப்பும் தரைகீழ் நீர்வளத்தை மிகையாகப் பய்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன. தரைகீழ் நீரின் மிகையான பயன்பாட்டினால் அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணக்குடாநாட்டின் பல பாகங்களிலும் உவர்நீர் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. தரைகீழ் நீர் வளத்தை பேணுவதற்கு கிடைக்கும் மழைநீரில் பெரும்பகுதி தரையின் கீழ் செல்வதற்கு வழிகாண வேண்டும் இதற்கு இப்பகுதிகளின் நீர்த்தேக்கங்கள் ஆழமாக்கப்படுதலும் புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுதலும் அவசியம். மேலும் இங்கு காணப்படும் பல கடனீரேரிகள் நன்னீர் ஏரிகளாக மாற்றப்படுவதாலும் நற்பயன்விளையும் இந்நடவடிக்கையால் நிலவளம் அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிலப்பயன்பாட்டைத் தாழ் நிலப்பயன்பாடு மேட்டுநிலப்பயன்பாடென வகைப் படுத்தலாம் மேட்டுநலப்பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தியடையவில்லை.தாழ்நிலப்பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்று வடிநிலப்பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண் களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரியக் கிராமிய விவசாய நிலப்பயன்பாடும் புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடு வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார் முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாக பழைய விவசாய நிலப்பரப்புக்கள் பரந்துள. முன்னர் காடு சூழ்ந்திருந்து தற்போது நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன் 1935 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பலநோக்குக் குடியேற்றத்திட்டம் பாரியகுடியேற்றத்திட்டம் கிராம விஸ்தரிப்புத் திட்டம் மத்திய வகுப்பார் குடியேற்றத்திட்டம்; இளைஞர் திட்டம் ஆகிகனவாக இவை அமைக்கப்பட்டு வருகின்றன குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும் நலமற்றோருக்கு நிலமளிக்கவும் வேலையற்றருப்போருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவுக்கு உதவியுள்ளது. அம்பாறையில் கல்லோயத்திட்டம் மட்டக்களப்பில் உன்னிச்சைக் குளத்திட்டம் மன்னாரில் கட்டுக் கரைக் குளத்திட்டம் யாழ்ப்பாண பிரதான நிலப்பகுதியில் இரணைமடுக்குளத்திட்டம் வவுனியாவில் பாவற் குளத்திட்டம் மர்வட்டத்திற்கொன்றன உதாரணங்களாகும். ஆண்மைக்காலங்களில் இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உப உணவுற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டு வருகின்றன முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன்கட்டு இளைஞர் திட்டம் யாழ்ப்பாணமாவட்டவன்னிப்பிரதேசத்திரமைந்த விஸ்வமடு திருவையாறு இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏகைய குடியேற்றத் திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதாராPதியில் திருப்தியை தருவனவாகஇப்பிரதேசத்திலே குளநீர்ப்பாசன அடிப்படையில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள. இந் நடவடிக்கைகள் குடியடர்த்திமிக்க பகுதிகளிலிருந்து இப்பகுதிகளுக்கு மக்களை நகர்த்தவும் உதவும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற் கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 356839 (1975ஃ76) ஏக்கராகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் 31 வீதமாக அமைகின்றது. இப்பிரதேசத்தின் மொத்த நெல் விளைபரப்பில் 68 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கியுள்ளது. மொத்த நெல் விளைநிலத்தில் 44.4 வீதம் பருவகாலமழையை நம்பிய மானவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளனஇ பாசனவசதியுடைய நிலங்களில் வருடத்திற்கு இரு தடவை நெல் விக்கப்படுகிறது. வருடத்திற்குஇரு தடவை நெல் விக்கப்படும் நிலப்பரப்பு 99300 ஏக்கர்களாகும். இது மொத்த விளைபரப்பில் 28 வீதமாக அமைகின்றது பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல்விளைபரப்பு பருவமழையை நம்பியதாகையால் பருவ மழை பிழைத்துவிடும் காலங்களில் நெல் விளைச்நல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந் நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் சிறு போகத்தின்போது அதிகளவு நெல்லை விலைவிக்கவும் ஏலவேயுள்ள விளைநிலப்பரப்பிற்கு பாசனவசதிகள் அதிகரிக்கப்படுதல் அவசியம். அண்மைக் காலங்களில் இப்பகுதி நெற்செய்கையில் புதிய தொழில் நுட்ப முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இப்பிரதேசங்களில் உழவு இயந்திரப்பாவனை அதிகரித்து வருகின்றது. சிறந்த கலப்பின உயர் விளைச்சல் தரும் நெல் இனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் இரசாயன உரம் கிருமிநாசினி களைகொல்லி என்பனவற்றின் உபயோகம் அதிகரித்துவருகிறது. விவசாயிகளின் நலனை உத்தேசித்து அரசாங்கமும் பல உதவிகளை அளித்துவருகின்றது கடன் உதவி உத்தரவாத விலைத்திட்டம் சந்தைப்படுத்தும் வசதி விவசாய ஆலோசனைபெறக்கூடிய அமைப்புக்களை உருவாக்குதல் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கன. இவை காரணமாக இப்பகுதி;களில் நெல்விளைச்சல் வருடாவருடம் அத்கரித்து வருகின்றது. 1975ஃ76 இல் இப்பகுதியிற் பெறப்பட்ட சராசரி நெல் விளைச்சல் ஏக்கருக்கு 42 புசலேயாகும்.மன்னாரில் ஏக்கருக்கு 60 புசல் வரை கிடைக்கிறது. பொலன்னறுவையில் ஏக்கருக்குரிய சராசரி உற்பத்தி 80 புசலாக உள்ளது. 19 பாசன வசதிகள் அதிகரிக்கப்படுவதாலும் புதிய தொழில் நுட்பமுறைகளைக் கடைப் பிடிப்பதினால் விளையக்கூடிய பயன்களை விவசாயிகளுக்கு உணரவைப்பதாலும் ஏக்கருக்குரிய உற்பத்தியை இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்க இயலும். இப்பிரதேச விவசாயக் செய்கையில் நீர்ப்பற்றாக்குறையே முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனைத் தீர்ப்பதற்கு புதிய நீர்த்தேக்கங்கள் வாய்ப்பான இடங்களில் அமைக்கப்படுதலும் தூர்ந்த நிலையிலுள்ள குளங்களைப் புனரமைத்தலும் ஏலவேயுள்ள குளங்களின் நீர் கொள்ளளவைக் கூட்டுதலும் அவசியம் . மகாவலி திசை திருப்புத்திட்டம் கிழக்கே மதுறுஒயா சார்ந்த பகுதிகளின் விருத்திக்கு வாய்ப்பாக அமையும் . வடக்கே திசை திருப்பப்படும் மகாவலிகங்கை நீர் வடப்பகுதி நிலங்களுக்கும் கிடைக்கக் கூடியதாக அமையுமாயின் இப்பகுதிகளின் விவசாயம் பெருமளவு விருத்தியுறும் என்பதில் ஐயமில்லை. கனிப்பொருள் வளம் இலங்கையில் கனிப்பொருள் வளம் பொதுவாகக் குறைவாகவே காணப்படுகின்றது.இதனைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகளும் குறைவே. தமிழா பாரம்பரியப்; பிரதேசத்தை பொறுத்தவரையில் சில வாய்ப்பான நிலைமைகள் காணப்படுகின்றன இப் பிரதேசத்தில் சுண்ணக்கல் களி உப்பு இல்மனைற் மொனசைற் சிலிக்கா மணல் முதலான கனிப்பொருட்கள் காணப்படுகின்றன நிலநெய் பெறக்கூடிய சாத்தியக்கூறு பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றது. புத்தளம் தொடக்கம் பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடமேற்கேயுள்ள படிவுகளைக் கொண்டு காணப்படுகின்றன. ஏத்தாழ 800 சதுர மைல் பரப்பிற் பரந்துள்ள இபடிவுகள் பல நூறு அடி ஆழம் வரை காணப்படுகின்றன புத்தளம் மன்னா யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குப் பகுதிகளில் இவை மேற்பரப்புப் படிவுகளாக அமைந்துள்ளன. (படம்1) இச்சுண்ணக்கல் படிவுகள் பெருந்தொகையாக இப்பொழுது அகழப்பட்டு காங்கேசன்துறை புத்தளம் ஆகிய இடங்கள்ல் அமைந்துள்ள ஆலைகளில் சீமேந்து உற்பத்திக்குப் பயன்பத்தப்படுகின்றன. நாட்டின் மிகப் பெரிய சீமேந்து ஆலை காங்கேசன்துறையிலேயே அமைந்துள்ளது. சீமேந்து உற்பத்தி தவிர கண்ணடி உற்பத்தி கடுதாசி உற்பத்தி சீனி சுத்திகரிப்பு நீர்ச் சுத்திகரிப்பு தோல்பதனிடுதல் போன்றனவற்றிற்கும் சுண்ணக்கல் பயன்படுகின்றது. இப்பிரதேசத்தில் பெருந்தொகையாகக் காணப்படும் இக்னெரு கனிப்பொருள் களியாகும்இஆற்றுப்பள்ளத்தக்குகள் குளங்களை அண்டிய பகுதிகள் கழிமுகங்கள் ஆகிய பகுதிகளில் களிப்படைகள் பரவலாக உள செங்கட்டி ஓடுமுதலியவற்றை உற்பத்தி வெய்யவும் சீமேந்து உற்பத்திக்குரிய துணைப்பொருளாகவும் களி பயன்பத்தப்படுகின்றது. முல்லைத்தீவு கல்லோயா ஆகிய இடங்களிலமைக்கப்பட்டுள்ள ஈலைகள் செங்கட்டி ஓடு ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றன. களியைப் பயன்படுத்தி மட்பாண்டப் பொருட்களுக்கு குடிசைத் தொழில் அடிப்படையில் பரவலாகப் பல கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்பிரதேசம் நெடிய கடற்கரையையும் பல குடாக்களையும் கடலேரிகளையும் கொண்டிருப்பதோடு வறண்ட பகுதியாயும் விளங்குவதால் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகும் நாட்டின் வேறு எப்பாகத்திலுமில்லாதவாறு பல உப்பளங்கள் இப்பிரதேசத்திற் பரந்துள ஆனையிறவு நிலாவெளி சிவியாதெரு இருபாலை கரணவாய் கல்லுண்டாய் முல்லைத்தீவு முதலிய இடங்களில் உப்புப் பெறப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள உப்பளங்களில் ஆனையிறவு உப்பளமே மிகப் பெரியதாகும். இவ்உப்பள உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றும் இயங்கிவருகின்றது இல்மனைற் படிவுகஞம் ஒரளவு மொனசைற் றூரைல் சேர்க்கன் படிவுக@ம் புல்மோட்டை குதிரைமலை திருக்கோவில் மூதலிய கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்றன.புல்மோட்டையில் நான்குமைல் நீளத்திற்கு 200அடி அகலத்தில் இர்மனைட் படிவுகள் பரந்துள்ளன.இவை அகரப்பட்டு அங்குள்ள ஆலையில் சுத்தம் செய்யப்பட்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.இல்மனைற் படிவுகளோடு சிறிதளவு றூரைல் சேர்க்கன் படிவுகள்கலந்து காணப்படுகின்றன.சிலிக்கா மணல் சாவகச்சேரியிலும் பருத்தித்துறை தொட்டு திருகோணமலை வரை கடற்கரையோரமாகப் பரந்தும் காணப்படுகின்றது. சிலிக்கா மணலைப் பயன்படுத்தி கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று நாகர்கோவிலில் அமைக்கப் படுவதற்கான ஆரம்ப ஆய்வ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவை தவிர கட்டிடத தேவைக்கு வேண்டிய கல் மணல் முதலியன இப்பகுதிகளில் பெருமளவுக்குப் பெறக்கூடிதாக உள்ளது.யாழ்ப்பாணம் மன்னார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட புவிச்சரித ஆய்வுகள் இப்பகுதிகளில் நிலநெய்வளம் இருக்கக்கூடிய சாத்திக் கூநுகள் உண்டெனத் தெரிவிக்கின்றன.அரசாங்கமும் வெளிநாட்டு நிறுவனமொன்றும் சேரந்து இதற்கான அகழ்வாராய்ச்சி முயற்சிகளை அண்மைக்காலத்தில் ஆரம்பித்துள்ளன.இவ் ஆய்வுகள் வெற்றியளிப்பின் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இது அமையக்கூடும். மேலே குறிப்பிட்ட கனிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் சீமேந்துக் கைத்தொழில் இரசாயனக் கைத்தொழில் மட்பாண்டக் கைத்தொழில் கண்ணாடிக் கைத்தொழில் ஆகியவற்றை மேலும் விஸ்தரிப்பதற்கும் இன்னும் பல பகுதிகளில் புதிய ஆலைகள் நிறுவுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இப்பிரதேசத்தில் உள்ளன. இப் பிரதேசத்திலே விவசாய வள அடிப்படையிலான பல கைத்தொழில்களும் நிறுவப்படலாம்.தற்போது இயங்கிவரும் வாழைச்சேனைக் கடதாசி உற்பத்தி ஆலை கந்தலாய் கல்லோயர் சீனி உற்பத்தி ஆலைகள் திருகோணமலை மா அரைக்கும் ஆலை நாட்டின் பல பாகங்களிலும் அமைந்துள்ள நெல் குற்றும் ஆலைகள் என்பன குறிப்பிடத்தக்கன.யாழ்ப்பாணக் குடாநாடு சுருட்டுக் கைத்தொழிலுக்குப் பெயர் பெற்ற இடமாக நீண்ட காலமாக விளங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.இங்கு பனை தென்னை வளங்களைப் பயன்னடுத்தி கிராமங்கள் தோறும் குடிசைக் கைத்தொழிலடிப்படையில் பல்வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் தென்னைச் செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பை 6வீதத்தை வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்குகின்றன.இங்கு 65684 ஏக்கர் பரப்பில் தென்னை காணப்படுகின்றது.யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களும் இப் பிரதோசத்தின் தென்னைச் செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 60 வீதத்தை அடக்கியுள்ளன.பனைவளம் இப்பிரதேசத்தின் முக்கிய வளங்களுள் ஒன்றாக அமைகின்றது.இலங்கையில் மொத்தம் 70000 ஏக்கர் பரப்பில் பனைவளம் உள்ளது.இதில் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் 57500 ஏக்கர்(82வீதம்)பரப்பைக் கொண்டுள்ளது.யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் மாத்திரம் 42000 ஏக்கர் பரப்பில் (60வீதம்)பனைவளம் காணப்படுகிறது.யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதி வாழ் மக்கள் பாரம்பரியமாக பனைவளத்திலிருந்து அதிக பயன் நுகர்ந்து வருகின்றனர்.வளமற்ற நிலங்களில் வளரக்கூடிய இப்பனையில் இருந்து 800 மேற்பட்ட பயன்கள் பெறலாமென தலா விலாசம் கூறும்.அக்கால மக்களின் உணவு குடியானத் தேவைகளில் ஒரு பகுதியை பனைமரம் பூர்த்தி செய்தது. வீடுகட்டுவதற்கு மரமும் ஓலையும் பனைமரத்திலிருந்தே பெறப்பட்டன.விறகாயும் இதுவே பயன்பட்டது.ஆகவே அன்றைய யாழ்ப்பாணத்து கிராம மக்கள் பனையுடன் ஒன்றித்த வாழ்வை மேற்கொண்டிருந்தனர்.பிற்காலத்தில் ஓரளவுக்கே பனைவளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பனைவளப்பயன்பாட்டினை விருத்தி செய்வதற்காக இன்றைய அரசு பணம் பொருள் அபிவிருத்திச் சபை என்றதோர் அமைப்பினைத் தோற்றுவித்துள்ளது. இவ் அமைப்பு பனைவளப்பயன்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதோடு; பல வேலை திட்டங்களைக் கிராமங்கள் தோறும் உருவாக்கி வருகின்றது. பனைவள அடிப்படையிலான குடிசை கைத்தொழில் வளர்ச்சிக்கு இந்த நிறுவனம் பெரும் பணியாற்றுமென எதிர்பார்க்கலாம். பனைவளத்தை பயன்படுத்தி கைவண்ணப்பொருள் உற்பத்தி சீனி உற்பத்தி மதுபான உற்பத்தி போன்றன அண்மை காலத்தில் விருத்தி அடைந்து வருகின்றன. கடல் வளம் கடல் வளத்தை பல்வேறு வகையில் பயன்படுத்தலாமாயினும் இங்கு மீன்பிடித்தலுக்காகவே இவ்வளம் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்காலத்திலே மனிதனின் உணவுத் தேவையில் கணிசமான பங்பினைக் கடல்வளமே அளிக்குமென நம்படுகின்றது. இலங்கையின் மீன்பிடித்தொழிலின் விருத்திக்கு இடிப்pபடையான பெதிக வாய்ப்புகளை வடக்கு கிழக்கு மாகாணங்களே பெருமளவு கொண்டுள்ளன. 1100மைல் நீள நெடிய கடல்கரையோரத்தைக் கொண்ட இலங்கையின் கண்டத்திட்டின் பரப்பளவு 12000 சதுர மைல்களாகும். இதில் 73.4 வீத பரப்பளவு வடகிழக்கு மாகாணம் சார்ந்துள்ளது. தென்னிந்தியாவரை பரந்துள்ள வடபகுதிக் கண்டத்திட்டு மட்டும் நாட்டின் மொத்தக் கண்டத்திட்டுப் பரப்பளவில்57.3 வீதத்தைக் கொண்டுள்ளது. வட கண்டத்திட்டில் அமைந்த பேதுரு கடல்மேடை முத்துக்கடல் மேடை உவாட்ஸ் கடல் மேடை என்பன மீன்வளம் மிக்கனவாகும் ஆழமற்ற இக் னட்ல் மேடைகளில் சூரிய ஒளி அடித்தளம்வரை ஊடுருவிச் செல்ல இயல்வதால் மீனுணவான நுண்ணுயிர்களின் வளர்ச்சி இப்பகுதிகளில் அதிகமாகும். இதுவே மீன்வளம் அதிகளவு காணப்படுவதற்குக் காரணமாய் அமைகின்றது. அப்பிரதேசக் கடங்கரையோரங்கள் குடாக்களையும் கடனீரேரிகளையும் பெருமளவு கொண்டுள்ளதால் மீன்பிடித்துறை முகங்கள் ஏற்படுத்தவும் வசதியை அளிக்கின்றன. தென்மேற்கு மொன்சூன் வேகமாக வீசும் திசைக்கு ஒதுக்குப்புறமாக இப்பிரதேசம் அமைந்துள்ளதாலும் வடகீழ் மொன்சூன் மென்மையாக வீசுவதாலும் வருடம் முழுவதும் இப்பகுதிகளில்மீன் பிடித்தல் இடம்பெறுவதற்குரிய சாதகமான நிலை உண்டு. தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் வருடத்திற்கு 1266980 அந்தர் உடன் மீனும் 110099 அந்தர் பதனிடப்பட்ட மீனும் (1976) பெறப்படுகின்றது இலங்கையில் மொத்த உடன் மீன் உற்பத்தியில் இப்பிரதேசம் 52 வீதத்தையும் பதனிடப்பட்ட மீன் உற்பத்தியில் 90 வீதத்யும் அளிக்கிரது. 21 மீன்பிடித்தொழில் தவிர மன்னரி முத்துக்குளித்துலும் மட்டக்களப்பு பகுதியில்இறல்பிடித்தலும் யாழ்ப்பாணப் பகுதிகளில் கடலட்டை பதனிடுதலும் குறிப்பிடக்கூடியளவு வருமானத்தையளித்து வருகின்றன. கடல் உணவு உற்பத்தியிம் மீன்பிடித் தொழிலுக்கு வேண்டிய உபகரண உற்பத்தியிலும் மீன் பிடித்தொழிலுக்கு வேண்டிய உபகரண உற்பத்தியிலும் காரைநகரில் அமைந்துள்ள சீநோர் நிறுவம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகிறது. இப்பிரதேசத்தில் மீன்பிடித்தொழிலில் புராதன முறைகளே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நவீனமயப்படுத்தப்படின் மீன்பிடித்தொழிலில் பெருமளவு விருத்தியடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இயந்திர வள்ளங்களின் பாவனையை அதிகரித்தல் மீன்பிடித்தலில் புதிய முறைகளை பயிற்றுவித்தல் புதிய மீன்பிடி உபகரணங்களை மீன்பிடியாளர் இலகுவில் பெறவழிவகை செய்தல் மீன்பிடித்துறை முகங்களை அதிகரித்தல் மீனைப் பழுதடையாது பாதுகாக்கும் வசதிகளையும் போக்குவரத்து வசதிகளையும் அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படின் மீன்பிடித்தொழில் இப்பகுதியின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தோர் தொழிலாக அபிவிருத்தியுறுமென்பது திண்ணம் இது தவிர விலங்கு வளர்த்தல் பாற்பண்ணைத்தொழில் ஆகியனவும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அதிகளவு விருத்தியடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. தமிழர் பாரம்பரியப் பிரதேசத்திலே கல்வித்திறன் தொழில்நுட்பத்திறன் கொண்ட பண்பாட்டில் சிறந்து மக்கள் வாழ்கின்றர்கள் இவர்கள் இப்பிரதேசம் கொண்டுள்ள பொருளாதார வளங்களைத் திட்டமிட்ட முறையில் முறையாகப் பயன்படுத்தினல் விவசாயமும் கைத்தொழிலும் பெருமளவு விருத்தியுறும் தமிழர் தம் பிரதேச அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டு உழைப்பபார்களேயாயின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தை மிக விரைவாக சுயநிறைவுப் பொருளாதார வளம் கொண்ட பகுதியாக மாற்றிட முடியும். Footnotes: 1. Department of Census and Statistics-Ministry of Plan Implementation, Census of Populaion amd Housing, Sri Lanka - 1981. Preliminary Release No. 1, Colombo. 1981, p. 3. 2. Statistical Abstract of the Democratic Socialist Republic of Sri Lanka 1977 |