கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

ஒரு பரிசீலனையும்
சில யோசனைகளும்
 
 

இ. முருகையன்
டீ. ளுஉ. (ஊநல. ). டீ. யு. (டுழனெ.)இ ஆ. யு.(துயககயெ)

 

தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

ஒரு பரிசீலனையும்
சில யோசனைகளும்


இ. முருகையன்
டீ. ளுஉ. (ஊநல. ). டீ. யு. (டுழனெ.)இ ஆ. யு.(துயககயெ)



பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன்
நினைவுப் பேருரை

1993 - 05 - 26

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

-------------------------------------------------------------
தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

சுப்பிரமணியம் வித்தியானந்தன்
நினைவுப் பேருரை
1993

இ . முருகையன்

அச்சுப்பதிவு : மஹாத்மா அச்சகம், ஏழாலை.

---------------------------------------------------------------------------
அறிமுகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவாக ஆண்டு தோறும் பேருரைகள் நடத்துவதற்கு அறக்கட்டளை நிதியம் ஒன்று அண்மையில் நிறுவப்பட்டுள்ளது. அந்த நினைவுப் பேருரை வரிசையில் முதலாவது உரையை திரு. இ. முருகையன் இவ்வாண்டு மே மாதத்திலே நிகழ்த்தினார்.

தமிழ் அறிஞராயும், கலையன்பராயும், பண்பாட்டியல் முனைவராயும், உயர் கல்வி நிறுவன நிருவாகியாயும் விளங்கிய வித்தியானந்தன் அவர்களுக்குப் பொருத்தமான ஒரு நினைவஞ்சலியாக முருகையனின் உரை அமைகிறது.

வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் எழுதிக்காட்ட முற்படும்போது எழும் சில சிக்கல்கள் இந்த உரையிலே பரிசீலிக்கப்பட்டுள்ளன. நடைமுறைத் தமிழின் சுமுகமான இயக்கத்துக்கு இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துகள் துணை நிற்கும் என்று நம்புகிறோம்.

பேராசிரியர் அ. துரைராசா
துணைவேந்தர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
1993 - 06 - 01

------------------------------------------------------------------------------------
பேராசிரியரை நினைவு கூர்ந்து..........


அண்மைக் காலங்களில் பேரும் புகழும் பெற்று விளங்கிய ஈழத் தமிழ் அறிஞர்களுள் மறைந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் முன்வரிசையில் ஒளி வீசிக்கொண்டிருக்கிறார்கள்;. தமிழ்ப் பேராசிரியர் என்ற முறையிலும் அவர் ஆற்றிய பணிகள் நமது மக்களின் மனங்களிலே இன்றும் பசுமையாக உள்ளன.

கல்வி பயிற்றுதல் என்ற நிலையிலே தமிழ் மொழியிலுள்ள இலக்கண இலக்கியங்களைச் சீரிய முறையிலே சுவைபடக் கற்பித்த பேராசானாக அவர் நினைவு கூரப்படுகிறார். தொல்காப்பியத்தின் இலக்கண நுணுக்கங்களும் திருக்கோவையாரின் நயங்களும் நன்கு புலப்பட்டுத் தோன்றுமாறு பாடஞ் சொல்லும் திறன் அவரிடத்தே குடிகொண்டிருந்தது. இதனை அவரிடம் தமிழ் படித்த மாணவர்கள் வியந்து கூறிப் போற்றுவர். துணைவேந்தர் என்னும் பதவிப் பொறுப்பின் சுமைகளுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலுங்;கூட தமிழ் கற்பிப்பதற்குச் சில மணி நேரங்களையாவது ஒதுக்கி, தமக்குப் பிரியமான அந்தப் பணியைச் சோரவிடாது தொடர்ந்து வந்தார். இது அவரின் உள்ளுந்தலாக ஒளிந்த மொழிப்பற்றை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

வித்தியானந்தன் மொழிப்பற்றுடன் மட்டும் நின்றுகொண்ட ஒருவரல்லர். பழமைப் பற்றுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொண்ட ஒருவரும் அல்லர். தமிழரின் கலைகளிலும் பண்பாட்டிலும் சமுக அரசியல் மேம்பாட்டிலும் அவர் அக்கறை கொண்டிருந்தார். உயர் தனிச் செம்மை வாய்ந்தவை என்று பாராட்டப்படும் தொன்மையான செவ்வியற் கலைகளில் மாத்திரமன்றி, நாட்டார் கலைக்கூறுகளிலும், இலக்கியங்களிலும், கூத்துகளிலும், அரங்குகளிலும் அவர் சிறப்பான ஈடுபாடு காட்டினார். அந்தவகையிலே, இன்றைய பண்பாட்டியல் வல்லுநர்களின் ஆய்வுப் போக்குகளை உணர்ந்து இனங்கண்டு கொண்ட விரிவான நோக்கு அவரிடம் காணப்பட்டது. பல்வேறு சமயங்களையும் மொழிகளையும் கோட்பாடுகளையும் சார்ந்த அறிஞர் பெருமக்களின் கருத்துக்களைத் தெரிந்து தெளிந்த விழிப்புணர்வோடு, பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் பரிச்சயம் கொண்டு பயன்பெறும் ஆற்றல் மிக்கவராய் அவர் விளங்கினார். இளமைக் காலத்திலேயே அவர் ஷதமிழர் சால்பு| என்னும் பெருநூலை ஆக்கி அளித்தார். தமிழ் மக்களுடன் வேற்றவர் வந்து கலந்திடாத-அல்லது அந்தக் கலப்பு மிகவும் குறைவாயிருந்த- ஒரு காலகட்டம் பற்றியே அந்த நூல் பேசுகிறது..அதன் உள்ளடக்கம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப்படும் இலக்கியங்கள் தோன்றி வழங்கிய காலத்திலே தமிழகம் இருந்த நிலைமை பற்றியதாய் உள்ளது. இந்த நூலிலே வித்தியானந்தன் வழங்கிய மொழி நடையும் அவர்தம் உணர்வோட்டங்களும் அவரது மொழிப்பற்றையும் இனவுணர்வுச் சார்பையும் வெளிக்காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. இந்தப் பற்றுதலும் உணர்வுச் சார்பும் அவருடைய பிற்பட்ட காலத்து ஆக்கங்களிலே அறிவூட்டமும் உறுதியும் பெற்றுவலிமை அடைகின்றன எனலாம். வேற்றுச் செல்வாக்குகளின் முழூமையான பண்புகளைக் கணக்கிலெடுக்கும் போக்கினை, அவர் காலந்தோறும் எழுதி வெளியிட்டு வந்த ஆய்வுக் கட்டுரைகள் துலக்கமாகப் புலப்படுத்தி நிற்கின்றன. கிறிஸ்தவர்களும், மேற்கு நாட்டறிஞர்களும் இஸ்லாமியர்களும் ஆற்றிய பங்களிப்புகளை அவர் ஆர்வச்செறிவுடன் ஆராய்ந்துள்ளார்.

எது எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களின் வாழ்வும் வளமும் மேம்பாடுமே அவர் நாடிய குறிக்கோள்கள் என்பதில் ஐயமில்லை. தமிழர் வாழ்வின் பழைய கூறுகளைக் கண்டறிவதும், அவற்றைப் பேணுவதும் அவசியம் எனக் கொண்ட வித்தியானந்தன், சிறப்பாக நாட்டுக் கூத்;துக்குப் புதியதோர் உயிர்ப்பினை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டார். இவ்வாறே, உயர் கல்வியிலே தமிழ்மொழி கையாளப்படவேண்டும் என்னும் கோட்பாடு மேலோங்கிய காலத்திலே, பல்கலைக்கழகத்திலே பணியாற்றிய தமிழ்ப்பேராசிரியர் என்ற முறையிலே அந்தக் கோட்பாட்டுக்கு உறுதுணையாகத் தக்க பங்களிப்பைச் செய்யும் வாய்ப்பும்; அவருக்கிருந்தது. பல்கலைக்கழக உயர் நிருவாகி என்ற முறையிலும் நடைமுறைத் தமிழின் செழுமைக்கு உழைக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார். இவை யாவற்றுக்கும் அடிமூலமாக அவரது மொழிப்பற்று அமைந்தது எனலாம்.


இவை ஒரு புறமாக, தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளிற் பங்கு பற்றுவதிலும், ஏற்பாடு செய்வதிலும், நடத்துவதிலும் அவர் பேரார்வம் கொண்டு விளங்கினார். இத்தகைய தமிழ்ப்பெரியாரின் நினைவுச் சொற்பொழிவு, நமது பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் நிகழ்வதற்கான ஒழுங்குகள் இப்போது நிறைவேறியுள்ளன. அதற்கென அறக்கட்டளையொன்று நிறுவப்பட்டுள்ளது. இது நம்மெல்லோருக்கும் பெருமகிழ்ச்சி தருவதாகும். மேற்படி நினைவுப் பேருரை வரிசையிலே முதலாவது சொற்பொழிவை ஆற்றும்பேறு எனக்குக் கிடைத்துள்ளது. இதனையிட்டு நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

ஒரு பரிசீலனையும் சில யோசனைகளும்


இன்றைய உரையின் பொருட்டு, ‘தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள்| என்னும் பொருளைத் தெரிந்தெடுத்துள்ளேன். எழுத்துப் பெயர்ப்பு எi;பது, ஒரு மொழியில் வழங்கும் சொல்லையோ சொற்களையோ வேறொரு மொழிக்குரிய எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டுதல் என்பதாகும். இதனை ஆங்கிலத்தில் வசயளெடவைநசயவழைn என்பர்.

நிகழ்கால வழக்கிலுள்ள தமிழ்மொழியில் பல வேற்று மொழிச் சொற்களை எழுத்துப் பெயர்ப்புச் செய்ய வேண்டிய தேவை தோன்றியுள்ள அதே வேளையில் இவ்வேற்றுமொழிச் சொற்களைத் தமிழுடன் சேர்த்துக்கொள்வது விரும்பத்தக்கதா என்ற கேள்வியும் மற்றொரு புறத்தில் எழுந்துள்ளது. அவ்விதமான கலப்பு தமிழின் தூய்மைக்கும் தனித் தன்மைக்கும் ஊறுசெய்கிறது என்பது சிலரின் கருத்தாகும். அது ஒரு புறமாக, இந்த எழுத்துப் பெயர்ப்புகள் பல குறைபாடுகளை உடையன என்றும், அவற்றை நிவர்த்தி செய்வதற்குப் புதிய பெயர்ப்பு முறைகளைக் கையாளுதல் வேண்டும் என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தகைய புதிய பெயர்ப்பு முறைகளுக்குச் சில குறியீடுகளை அறிமுகஞ் செய்வது நல்லதென்றும் சிலர் கருதுகின்றனர். அவ்வித குறியீட்டு முறைகளைச் சிலர் நடைமுறையிற் பரிசோதித்தும் பார்த்துள்ளனர். எனவே நம்மிடையே ஏற்கெனவே வழக்கில் உள்ள எழுத்துப் பெயர்ப்பு முறைகளை வகைப்படுத்தி விவரிப்பதும், அவற்றின் நன்மைதீமைகளைப் பரிசீலிப்பதும், விமர்சனம் செய்வதும் அவசியம். அந்த விவரணம், பரிசீலனை, விமர்சனம் என்பவற்றின் அடியாகப் புதிய யோசனைகளும் தோன்ற இடமுண்டோ என்பதையும் நாம் பார்க்கலாம்

நடைமுறைத் தமிழில் எழுத்துப் பெயர்ப்பின் இடம்

இந்த விதமான விவரிப்புகளில் இறங்கு முன்பு, எழுத்துப் பெயர்ப்பு என்னும் செயற்பாடு மொழிப் பயன்பாட்டில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்று காணுதல் பொருத்தமாகும். எந்த ஒரு மொழிக்கூட்டத்தினரும், தமது வாழ்வியக்கத்துக்கு வேண்டிய சொற்களை எவ்வாறோ ஆக்கி வழக்கத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்ட மிக நெடிய காலப்பரப்பிலே, மனித குலத்தின் உயிரியற் கூர்ப்புடன் கைகோத்தவாறே, மொழியின் பிறப்பும் நேர்ந்திருத்தல் வேண்டும். மிக நீண்டதான இந்த |உற்பத்திக் காண்டத்தைச்’ சரியாக அநுமானித்துக் கொள்வதோ, ஊகித்து உய்த்தறிவதோ மிக அரிது. ஒரு மொழிக் கூட்டத்தினர் பிறருடன் தொடர்பற்றுத் தனித்து வாழ்ந்த காலமொன்று இருக்குமாயின் அந்தக் காலத்திலே பயன்பாட்டில் இருந்த மொழி கலப்பற்றதாக, தூய்மையானதாக இருந்திருக்கும் என்று கருதலாம்.

ஆனால், குறித்த ஒரு மொழிக் கூட்டம், வேற்று மொழிக்கூட்டமொன்றையோ பலவற்றையோ சந்தித்துத் தொடர்பு கொள்ளும்போது, புதிய வாழ்க்கை அநுபவக்கூறுகளும் பொருள்களும், கருத்துகளும் எதிர்கொள்ளப்படுகின்றன. இவற்றை எடுத்துரைக்க முற்படுகையில், புதிய சொற்சேர்க்கைகள் மட்டுமன்றி, புதிய சொற்களுங்கூடத் தேவைப்படுகின்றன. ஏற்கெனவே பழக்கமில்லாத புதிய சூழலுக்கு மக்கள் போகும் போது, அங்குள்ள புதிய இயற்கைப் பொருள்களுக்கும், செயற்கைப் பொருள்களுக்கும் புதிய சொற்களைத் தேடிக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகிறது.

மனித வாழ்க்கை நாள்தோறும்-ஏன் கணந்தோறும்-மாறியும், விரிந்தும், சிக்கலாகியும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதனால், முன்னில்லாத பொருள்கள் பல உண்டாகின்றன: அல்லது உண்டாக்கப்படுகின்றன. புதியனவாகக் கண்டறியப்படும் பொருள்களுக்குப் புதிய சொற்கள் வேண்டும். புதிய சொற்களை எப்படி ஆக்குகிறோம்? நான்கு முக்கியமான வழிகள் உள்ளன.

ஏற்கெனவே உள்ள சொற்களின் கருத்தை விரிப்பது:
ஏற்கெனவே உள்ள சொற்களின் கருத்தை சுருக்குவது:
ஏற்கெiவே உள்ள சொற்கூறுகளைப் புதிய சேர்மானமாக்கி வரையறை செய்வது:
ஏற்கெனவே வேற்று மொழியில் வழங்கும் சொற்களை வாங்கிக் கொள்வது.

வேற்றுமொழிச் சொல்லிரவல், வரைமுறையற்ற கலப்படத்துக்குக் காலாவதால் அது மொழித்தூய்மையைக் கெடுக்கும் என்பது மொழியன்பர்களில் ஒரு சாராரின் ஆணித்தரமான கோட்பாடாகும். மறைமலையடிகளும் அவரைப் பின்பற்றிய பலரும் இக்கோட்பாட்டின் மீது இறுகிய பற்றுப் பூண்டு உழைத்தனர். வடமொழிச் சொற்கள் தமிழுடன் கலக்கப்பட்டதால் தமிழ்மொழி உருமாறித் திரிந்து கெட்டுச் சிதைந்துவிட்டது என்பதை இந்த அறிஞர்கள் எடுத்துக்காட்டினர்.

ஆனால் இந்த இடத்திலே நாம் ஒர் உண்மையை மறந்துவிடல் ஆகாது. ‘காலங் கடந்த காலத்தே| கலந்து ஒன்றி இரண்டறச் சேர்ந்துவிட்ட சொற்களை முற்று முழுதாகக் களைவதற்கு எடுக்கப்படும் செயற்கையான முயற்சி தமிழ்மொழியிலே ஒரு வகையான சொல் வறுமையையும் அந்தரிப்பையும் உண்டாக்கக்கூடும். காரியம், முக்கியம், சாலை, இலக்கணம், நீதி, நியாயம், விசாரனண, புண்;ணியம், பாவம், தாபனம், பீடம், கணணி-இவையெல்லாம் வடமொழி வாயிலாக நமக்குக்கிடைத்த சொற்கள். இவற்றைப் பயன்படுத்துவதில்லை என்று நாம் சபதமெடுத்தால்,நமது பேச்சும் எழுத்தும் திக்குமுக்காடிப் போகமாட்டாவா? ‘ தேசிய எழுச்சிப் பாதையில் நாம் உன்னதமான சாதனைகளை ஈட்டியுள்ளோம் | என்னும் வாக்கியத்தை நூற்றுக்கு நூறு வீதமான தனித்தமிழிலே எப்படிச் சொல்லலாம்?

சொற்கள் எவ்வாறு உற்பத்தியாயின, எங்கிருந்து வந்தன என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்பதைவிட, நமது மொழியின் நடைமுறைத் தேவைகளையும் வினைத்திறனையும் பற்றிக்கவலைப்படுவதே பிரதானம் என்று தோன்றுகிறது. கலப்படக்குறைப்பு, தூய்மையாக்கம் என்பன ஒரு புறத்தில் நடந்து கொண்டிருக்கட்டும். அதேவேளை, மொழியின் வினைத்திறன்விருத்தி என்பதும் நமது முதன்மையான அக்கறைக்கு அருகதை உள்ள ஒரு காரியமே என்பதை விளங்கிக் கொள்ளுதல் நல்லது.

வினைத்திறன் என்னும் எண்ணக்கரு

ஒரு மொழி உலகியலின் பல துறைகளிலும் துணிவுடன் புகுந்து, கருத்துகள் எவ்வளவு சிக்கலானவையாய் இருந்தாலும், எவ்வளவு நுணுக்கமானவையாய் இருந்தாலும் அவற்றை அப்படியே அச்சொட்டாகத் திரிபின்றி எடுத்துரைக்கும் வல்லமையைப் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறே மனித உணர்வுகளும் மனநிலைகளும் கொள்ளும் பல்வேறு நுணுக்கச்சாயை வேறுபாடுகளையும் மென்மையான விகாரங்களையும் பிறழ்வின்றியும் கொச்சைப்படுத்தாமலும் செப்பமாயும் நுட்பமாயும் திட்பமாயும் வெளிப்படுத்தும் ஆற்றலையும் மொழி பெற்றிருத்தல் வேண்டும். கணிதம், தருக்கம், மெய்யியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம், அரசியல், ஆன்மீகம், வணிகம், ஆட்சியியல், முதலான அனைத்துத் துறைகளையும் அளாவி, அளந்து, அலசி, அணைத்துத் தழுவிச் செல்லும் பன்முகமான திறமை பெற்ற மொழியே வளர்ச்சியடைந்த, அபிவிருத்திபெற்ற, மேம்பாடுற்ற முழுமையான தொடர்புச் சாதனமாகத் திகழும்: மனித நாகரிகத்தின் திறம்பட்ட கருவியாகவும் பண்பாட்டு உயர்ச்சியின் துணைக்காரணமாகவும் தொழிற்;;படும். அந்த வலிமையும் வளமும் வினைத்திறனும் தமிழ் மொழிக்கு வாய்க்கும் வகையில் உழைப்பதுதான் உண்மையான தமிழ் அறிஞர்கள் செய்ய வேண்டிய உயிர்ப்புள்ள பணி ஆகும்.
“ எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பல கழித்தோம் குறை களைந்தோமில்லை
தகத் தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்! ||
என்றான் பாரதிதாசன். தமிழைத் தாபிப்பது என்றால் என்ன? அதைப் படிக்க வேண்டும்: பயன்படுத்த வேண்டும்: புதியசொற்களை ஆக்கவேண்டும்: புதிய தொடர்களையும் பிரயோகங்களையும் கண்டறிய வேண்டும். தமிழிலே இது இல்லை, அது இல்லை என்று இல்லைப் பாட்டுப் பாடுவதை நிறுத்த வேண்டும். இந்த ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ் இல்லை என்று மூக்காலே சிணுங்கும் பழக்கத்தை நிறுத்தவேண்டும். ஓ, அறிஞர் பெருமகனே! தமிழிலே உமது கருத்துக்கு ஏற்ற செப்பமான சொல் இல்லை என்றால், நீர் இன்னும் ஏன் அந்தச் சொல்லை ஆக்கவில்லை? முதல் வேலையாக, உமது கருத்துகளைச் செம்மையாக எடுத்துரைக்கும் வகையிலே நீர் உமது மொழியாற்றலைப் பெருக்கிக் கொள்ளலாமே- அது உமக்கு மட்டுமல்ல, உமது சமூகம் முழுவதற்கும் பயன்படுமே - இப்படி எல்லாம் கேட்கத் தோன்றுகிறதல்லவா? மொழியின் ஆற்றலை, அதன் வினைத்திறனைப் பெருக்குதல் பற்றி எண்ணும்போது இவ்விதமான கேள்விகள் எங்கள் உள்ளத்திலே தோன்றுதல் இயல்பாகும்.

எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

மொழியின் வினைத்திறனை மேம்படுத்தும் பணியில், எழுத்துப் பெயர்ப்பும் ஓர் இடத்தைப் பெறுகிறது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். தமிழ் என்று சொல்லும்போது, எங்கேயோ (தொல்காப்பியத்திலேயோ, திருக்குறளிலேயோ இறையனார் அகப்பொருளிலேயோ சிலப்பதிகாரத்திலேயோ) இருக்கும் மொழியை மாத்திரம் கருத்திற் கொள்வது போதியதன்று. நடைமுறை வாழ்க்கையிலே நாம் பேசுகின்ற, எழுதுகின்ற, கேட்கின்ற, வாசிக்கின்ற தமிழைப் புறக்கணிப்பது புத்தியாகாது. உயிர்ப்புடன் உலவும் நடைமுறைத் தமிழை நாம் எடுத்து நோக்குவோமானால் அதிலே வேற்று மொழி இரவற் சொற்கள் பயின்று வருவது மிகவும் இயல்பானதொரு நிகழ்முறை என்பதை உணர்வோம்.

எடுத்துக்காட்டாக, நமது செய்திப் பத்திரிகைகளிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பயிலும் மொழியையே பார்க்கலாம். வகைமாதிரியான ஒரு செய்தி அறிக்கையிலே, பின்வரும் இரவற் சொற்களை நாம் சந்திக்கிறோம். இவை எழுந்தமானமாக எடுக்கப்பட்ட மாதிரிகள் -

மே, தினம், ஹெலி, ரோந்து, சடலம், நபர், சைக்கிள், ஜனாதிபதி, மத்தி, ஆதரவு, கிரியை, சுதந்திரம், காரணம், பி.பி.ஸி., ஆலோசனை, பதில், வர்ணிக்கப்படும், புக்காரா, ஆகா~;வாணி, ஹெலிக்காப்டர், ஸ்டார்ட், சைலண்ட்,னஹ ஹீல்ஸ், அவார்டு, போஸ்ட் கார்டு, இன்லாண்டு.

செய்தித்தாள், வானொலி, சஞ்சிகை ஆகியவற்றில் இடம்பெறும் வேற்றுச் சொற்களை அவதானிக்கும் நாம், அவற்றுட் சில சொற்களுக்கு இணையான சொந்த மொழிச் சொற்களைத் தேடிக் காண முடியாதா என்று அங்கலாய்க்கிறோம். ரிப்போர்ட், அவார்டு, ஹை ஹீல்ஸ், ஜெனரேட்டர், போஸ்ட்கார்டு, இன்லாண்டு என்ற பிரயோகங்கள் தமிழின் வினைத்திறனைப் பின்னிழுத்து முடங்கவைக்கும் சொல் வழக்குகளே என்று துணிந்து கூறலாம். இவற்றை அப்படியே எழுத்துப் பெயர்க்கும் அறிவிலிகளாக, அல்லது சோம்பேறிகளாக நம்மவர்கள் உள்ளமை பெரிதும் வருந்தத்தக்கதாகும். ‘அந்த அளவுக்கு வறியதாகவா நமது மொழி உள்ளது? | என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய கேடுகெட்ட எழுத்துப் பெயர்ப்புக்கு எடுத்துக்காட்டுகள் நம்மவரின் பேச்சிலும் எழுத்திலும் நிறைய உள்ளன என்பது பொது அநுபவம். இது மிகவும் இரங்கத்தக்க ஒரு நிலையாகும். இப்படிப்பட்டதொரு சனக்கூட்டம் உரிமைப் பெருவாழ்வை எய்தி வாழும் தகுதி உடையதா என்று யாரும் கேட்டால் அது நியாயமானதொரு கேள்வியே ஆகும். ஆரோக்கியமான மொழி வளர்ச்சிக்குச் சொல்லாக்கச் சுயமுயற்சியும் கூச்சமற்ற, தன்னம்பிக்கையுடன் கூடிய மொழிக் கையாட்சியும், முன்முயற்சியும் இன்றியமையாதன ஆகும். இந்த முன்முயற்சிக்கு இடையூறாக நிற்கும் எழுத்துப் பெயர்ப்புகள் எவையாயினும் அவை கைவிடப்படவேண்டியவையே. ஆனால், எவையோ சில சொற்களை எழுத்துப்பெயர்த்துத் தமிழில் வழங்கும் தேவை நமக்கு இருந்தே தீரும் என்பதை நாம் மறந்துவிடல் ஆகாது.

எழுத்துப் பெயர்ப்பின் இயல்புகள்

எந்த எந்தச் சொற்களை இரவல் வாங்குவது, எவ்வெப்போது தனித்தமிழ்க் கூறுகளிலிருந்து சொற்களை ஆக்குவது என்று வரும்போது, அங்கு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். அதுபற்றிய பரிசீலனையில் நாம் இப்பொழுது இறங்கவில்லை. ஆனால், எவையோ சில தருணங்களிலே நாம் சொற்களை எழுத்துப் பெயர்ப்புச் செய்தே தீரவேண்டும். அந்தத் தருணங்களில் அந்த வேலையைத் தமிழர்களாகிய நாம் எவ்வாறு செய்து வந்துள்ளோம்? எழுத்துப் பெயர்ப்பு முறை, தமிழ் மொழியைப் பொறுத்த வரையில் எல்லாக் காலங்களிலும் ஒரே விதமாய் இருந்ததா? அல்லது காலத்துக்கு காலம் வித்தியாசப்பட்டு வந்துள்ளதா? இப்பொழுது, அதாவது நிகழ்காலத்திலே, வழங்கும் எழுத்துப் பெயர்ப்புகள் எவ்வாறு உள்ளன? அவை நமது தேவைகளைத் திருப்திகரமாகப் பூர்த்தி செய்கின்றனவா? தனித்தியங்கும் வல்லமையை வளர்த்துக் கொள்வதற்கு, நம் எழுத்துப் பெயர்ப்பு முறைகளை எவ்வாறு திருத்தி அமைத்துக் கொள்ளலாம்? இப்படி எல்லாம் சிந்திப்பது பயனுள்ள செய்கையாகும் என எண்ணுகிறேன்

பழைய முறை

பழைய காலங்களிலே எழுத்துப் பெயர்ப்புச் செய்ய வேண்டிய வேற்றுச் சொற்களிலே பெரும்பாலானவை, வடமொழி எனப்படும் சங்கத மொழியிலிருந்து, அதாவது, சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்தவை. அதனால், அந்தச் சொற்களை ஒலிப்பதற்கும், எழுதுவதற்குமான வழி வகைகளைப் பழந்தமிழர்கள் ஆக்கிக் கொண்டனர். இது பற்றித் தொல்காப்பியம் இரு நூற்பாக்களை வகுத்துள்ளது.
“ வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே ||

என்பதும்,

“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் ||

என்பதும் அந்த நூற்பாக்களாகும். பிற்காலத்திலே, பவணந்தி முனிவர் சற்றே விரிவாக நன்னுலில் ஐந்து சூத்திரங்களில் வடமொழியாக்கத்துக்குரிய விதிகளைத் தொகுத்துக் கூறினார். ஆறுமுகநாவலர் பதிப்பாய் உள்ள காண்டிகை உரையிலே, இந்த எழுத்துப் பெயர்ப்பு முறைகள் எடுத்துக்காட்டுகளோடு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன.

ஆரியம் என்று சொல்லப்படும் சமஸ்கிருதத்திலே உயிர் பதினாறும், மெய் முப்பத்தேழும் ஆக, முதலெழுத்துகள் ஐம்பத்து மூன்றாகும். தமிழ் மொழியிலே உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக, முதலெழுத்துகள் முப்பதாகும்.

இந்த முப்பது தமிழ் எழுத்துகளின் பல்வேறு வரிசை மாற்றங்களினாலே தமிழ்ச் சொற்களின் வரி வடிவங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

சமஸ்கிருத மொழியிலுள்ள 53 முதலெழுத்துகளிலே இருபத்தைந்து எழுத்துகளுக்குச் சரிசமனான பதிலீடுகள் தமிழில் உண்டு. மிகுதி இருபத்தெட்டும் தமிழில் இல்லாத எழுத்துகள்.

இந்த இருபத்தெட்டு எழுத்துகளும் எவை எவை என்று பார்க்கலாம். உயிர் எழுத்துக்களில் ரி|, ரீ|, ளி|, ளீ|, அம்|, அஃ என்பன தமிழில் இல்லாதவை 2.

மெய் எழுத்துகளில், மூச்சின எழுத்துகளும், அதிர்வின எழுத்துகளும், மூச்சதிர்வின எழுத்துகளும் என்று மூவேறு இனங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக ‘க| என்னும் சாதாரண தமிழ் எழுத்துக்கு இனமாக, மாயஇ பயஇ பாய என்று மூன்று எழுத்துகள் உள்ளன. இவற்றுள் மாய என்பது மூச்சொலி ஆகும். இதனைச் சிங்கள மொழியிலும் பல இந்திய மொழிகளிலும் நாம் காணலாம். சிங்கள நூலாரும் இதனை ‘ மகாப்பிராண | எழுத்தொலி என்று குறிப்பர். தமிழ் இலக்கணகாரர் இதை உரப்பிய ஒலி என்பர். இனி, பய என்பதில் வரும் மெய்யை மொழியியலாளர் ‘ வொயிஸ்ட் | என்பர். இவ்வினத்து மெய்களை ஒலிக்கும்போது, குரல் நாண்கள் ஒன்றை ஒன்று தொட்டும் விட்டும் விரைவாக அதிர்கின்றன. இவ்விதம் உண்டாகும் இவ்வகை எழுத்தொலிகளை ‘அதிர்வின ஒலி | என்று நாம் இங்கு குறிப்பிடுவோம். ஒலிகள் அனைத்தும் பேச்சுறுப்புகளின் அதிர்வினால் உண்டாவனவே. ஆனால், ஷ அதிர்வினம் | என்று சொல்லும்போது, குரல் நாண்களின் மேற்சொன்னவாறான அதிர்வையே குறிக்கும் என்று வைத்துக்கொண்டு ஒரு நுட்பச் சொல்லாக அதனை இங்கு வரையறுத்துக் கொள்வோம். (நன்னு}ல் உரைகாரர்களும் பிறரும் இவ்வித எழுத்தொலியை ஷ எடுப்பொலி | என்பர்.)

வடமொழியில் வரும் தயஇ னயஇ வாநஇ டியஇ என்பவற்றிலே இடம் பெறுவன ஏனைய அதிர்வின மெய்களாகும்.

அடுத்து பாய என்பதில் வரும் மெய்யெழுத்து அதிர்வினத்தைச் சார்ந்துள்ள அதே வேளையில் மூச்சொலியாயும் உள்ளது. (மூச்சதிர்வினத்தைத் தமிழ் இலக்கணகாரர் கனைப்பொலி என்று சுட்டுவர்.)

இப்படியாக, க, ச, ட, த, ப, என்னும் ஒவ்வொன்றுக்கும் இனமாக மும்மூன்று எழுத்துகள் வருவதால், எல்லாமாகப் பதினைந்து மெய்களுக்குச் சரிசமனான தமிழ் எழுத்துகள் இல்லை.

இனி ஸ், ~;,ஹ் போல்வனவற்றை உரசொலிகள் அல்லது சீறொலிகள் என்று கூறலாம். இவற்றை ஆங்கிலத்தில்; கசiஉயவiஎநள என்பர்.

சுருக்கமாகச் சொல்வதானால், உரப்பியும், எடுத்தும், கனைத்தும், உரசியும் உச்சரிக்கப்படும் ஒலிகளுக்குத் தனியான எழுத்துகளைத் தமிழ்மொழி உருவாக்கிக்கொள்ளவில்லை. ஆனால், இந்த ஒலிகள் எல்லாம் தனித் தமிழ்ச் சொற்களிலே வரமாட்டா என்னும் நாம் முடிவுகட்டிவிடக் கூடாது. ஒரெழுத்துக்கு முன்னும் பின்னும் வரும் எழுத்துகள் எவை என்பதைப் பொறுத்து அதிர்வின ஒசைகளும் உரசின ஒசைகளும் தமிழ்ப்பேச்சில் வரும் என்பதை மொழியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக, தங்கம், கொஞ்சம், பண்டம், தந்தம், கம்பம் என்னும் சொற்களில் மெல்லினத்தைத் தொடர்ந்து இடம் பெறுவன, அதிர்வின எழுத்தொலிகளே என்பது ஒரு சாராரின் விளக்கமாகும். எனினும் சிற்சில தமிழர்கள் அவ்விதம் ஒலிப்பதுண்டாயினும், எல்லாரும் அவ்வாறு ஒலிக்கிறார்கள் என்றோ, அத்தகைய ஒலிப்பு ஒரு பொதுவழக்கம் என்றோ சொல்ல முடியாதுள்ளது.

இதுவரை, ஆரிய மொழியிலும், சிற்சில தருணங்களிலே தமிழ்ப் பேச்சிலும் வந்தாலும், தமிழிலே தனியுரிமையான வரி வடிவங்களைப் பெறாத எழுத்துகளை அடையாளம் காட்டினோம்.

இவ்விதமான எழுத்துகள் பிறமொழிச் சொற்களில் வரும் போது, இவற்றுக்கு ஒரளவு கிட்டிய ஒலி உள்ள தமிழ் எழுத்துகளை வழங்குவது மரபாகும். கணபதி என்னுஞ் சொல்லில் வரும் முதலாவது எழுத்து, ஆரிய மொழியில் உள்ள ‘பய| என்னும் அதிர்வின உயிர் மெய்யின் இடத்திலே பதலீடு செய்யப்பட்ட தமிழ் எழுத்தாகும். இவ்வாறே யெமாயஅ என்பதில் வரும் ‘மாய’ தமிழிலே சாதாரணமான ‘க| ஆயிற்று.

இனி சில எழுத்துகளைத் தவிர்த்து விட்டு எழுத்துப் பெயர்ப்புச் செய்யும் வழக்கமும் தமிழில் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘புஸ்தகம்| என்பது புத்தகம் என்றும், நஷ்;டம்| என்பது நட்டம் என்றும் வரும். விபீ~ஷணன் என்று சிலர் வழங்கும் பெயரைக் கம்பன் ‘வீடணன்| என்று சொல்லி அமைந்தான்.

சில சொற்களைப் பொறுத்த வரையில், மூலமொழியில் இல்லாத எழுத்துகள் தமிழிலே கூடுதலாய்ச் சேர்க்கப்படுவது உண்டு. ‘பாத்ரம்| என்பது ‘பாத்திரம்| ஆகும். இப்படி எழுத்துப் பெயர்க்கப்படும் சில சொற்கள் அடையாளம் தெரியாத வகையில் உருமாற்றம் பெற்று விடுவதும் உண்டு. ‘மார்கசீர்ஷ~| என்பது ‘மார்கழி| என்றும் ‘உஷா| என்பது ‘உழை| என்றும் உருமாறின. கச்சியப்ப முனிவரின் விநாயக புராணத்தில் ‘சஹஸ்ரநாமம்|, ‘சகத்திரநாமம்| ஆயிற்று.

பொதுவாகச் சொல்வதானால், முற்காலத்திலே வழங்கிய எழுத்துப் பெயர்ப்புகளில், தமிழ் எழுத்துகள் மாத்திரமே இடம்பெற்றன. அத்துடன் தமிழுக்கே உரிய ஒலி மரபுகளும் பேணப்பட்டன.

ஒலிமரபுகள்

‘ஷ தமிழுக்கே உரிய ஒலி மரபுகள்| என்னும் தொடரை விளக்குவது இவ்விடத்திலே பொருத்தமாகும்.

தமிழ்ச் சொற்களில் வரும் எழுத்துகள் இன்ன இன்னவாறு வரிசைமாற்றம் பெறும் என்பதை ஆராய்ந்து சில விதிகளை இலக்கணகாரர் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, ‘ழ்ழ்|, ‘ர்ர்| என்னும் சேர்க்கைகள் தமிழில் வரமாட்டா. அவ்வாறே, ‘ச்ஞ்|, ‘ட்ண்|, |ற்ன்| போன்ற சேர்க்கைகளும் வருவதில்லை. ‘க்த்|, ‘க்ப்|, ‘ச்த்|, முதலான பல சேர்க்கைகள் வருவதில்லை. இவை எல்லாம் பழைய தனித்தமிழில் வந்து பயிலாத சேர்க்கைகள். இன்ன இன்ன எழுத்துகள் அடுத்தடுத்து வரலாம் என்பதற்கு மரபு வழிப்பட்ட நியதிகள் உண்டு. இவை எழுத்து மயக்க விதிகள் எனப்படும். எழுத்து மயக்கத்தை உடரளவநச கழசஅயவழைn என்று மொழியியலாளர் ஆங்கிலத்திலே சுட்டுவர்.

இனி, சில எழுத்துகள் சொற்களின் தொடக்கத்திலே வருவதில்லை. சில எழுத்துகள் சொற்களின் இறுதியில் வருவதில்லை. இந்தப் பொதுமைப்பாட்டு விதிகள் யாவும் சேர்ந்த தொகுதியே தமிழின் ஒலி மரபை நிருணயிக்கின்றது.

அட்டவணை 1
வடசொல்லாக்கம் - எடுத்துக்காட்டுகள் (எழுமாறானவை)



பழந்தமிழ் முறை பிற்கால முறை இன்றைய விகற்பங்கள்
1. அரதனம் இரத்தினம் 2. பதுமம் 3. இடபம் 4. பாடை 5. விடயம் 6. உழை 7. புத்தகம் 8. புட்பம் ரத்தினம் ரத்நம் பத்மம் விருஷபம், ரிஷபம் பாஷை விஷயம் உஷை புஸ்தகம், பொத்தகம் புஷ்பம் றற்னம், றட்ணம் ரட்ணம் பாசை வியழம், விசயம் உஷா புஸ்பம்

எழுத்துப் பெயர்ப்பின் பழைய நெறிகளின் படி, தழிழுக்கேஉரிய ஒலிமரபுகளும் மிகுந்த சிரத்தையுடன் பேணப்பட்டு வந்தன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, காலத்தால்முற்பட்ட காப்பியங்கள் ஆகிய யாவற்றிலும் இந்த வழக்கங்கள் பக்தி சிரத்தையுடன் காப்பாற்றப்பட்டன.

மாற்றங்கள்

ஆனால் இந்த நிலைமைகள் இன்றுவரை நீடித்து வருகின்றன என்று சொல்வதற்கில்லை. பல்லவராட்சிக் காலப்பகுதியில், கிரந்த எழுத்துகள் மெல்ல மெல்லத் தமிழ்ச் சொற்களில் ஆங்காங்கே புகுந்து கொண்டன. தமிழில் வந்து புகுந்தவற்றுட் பிரதானமானவை ஸ், ஷ~;, ஹ், என்பனவாகும். இந்தக் கிரந்த எழுத்துகள், புலமை மிக்க தமிழறிஞர் என்போரின் எழுத்திலும் பேச்சிலும் புகுந்து கொள்வதற்கு முன்னரே சில நடைமுறை அரசியல் நிர்வாகத் தேவைகளின் பொருட்டும், சமயஞ் சார்ந்த சடங்காசாரச் சம்பிரதாயங்களிலும் இடம்பெறும் மொழியைப் பதிவு செய்வதற்கு உதவின என்று கருதலாம். இவை, தமிழகத்து மன்னர்களின் கல்வெட்டுகளிலும் பிற சாசனங்களிலும் இடம்பெற்றன என்பர். இந்த எழுத்துகளின் பயன்பாட்டுடன் சேர்ந்து, எழுத்து மயக்கம் (அதாவது எந்தெந்த எழுத்துச் சேர்மானங்கள் தமிழ் ஒலி மரபுக்கு ஏற்றவை என்பது), முதனிலை, இறுதிநிலை (அதாவது சொற்களின் தொடக்கத்திலும் இறுதியிலும் என்னென்ன எழுத்துகள் வரலாம் என்பது) பற்றிய நியதிகள் சிறிது சிறிதாகக் கை சோர விடப்பட்டன. வேற்றுச் சொற்களைத் தமிழ்ப்படுத்தும் போது, பல நிலைப்பட்ட நியதிகள் கைக்கொள்ளப்படலாயின. எடுத்துக்காட்டாக, நாம் இன்று இரத்தினம், ரத்தினம், ரட்ணம், றற்னம், அரதனம் என்றெல்லாம் ஒரே அயல்மொழிச் சொல்லைப் பலவாறு தமிழ்ப்படுத்துகிறோம். புத்தகம் என்றும் புஸ்தகம் என்றும் பொத்தகம் என்றும் சொல்லியும் எழுதியும் வருகிறோம். ராஜேஸ்வரன், இராஜேஸ்வரன், இராசேசுவரன் என்று பல்வேறு விகற்பங்களை ஒரே சொல் பெற்று விடுகிறது. இவைகளெல்லாம் மொழியின் இயல்பான பயன்பாட்டின்போது, பல்வேறு தேவைகளின் அடியாகவும், பல்வேறு நோக்கங்களின் அடியாகவும், மக்கள் பலரும் கைக்கொண்டு வரும் நடைமுறை உபாயங்கள் ஆகும்.

இந்த நோக்கங்களிலே பிரதானமாவை ஒன்று, அயல்மொழிச் சொற்களின் உச்சரிப்புகளை அதிக மாற்றமோ திரிபோ இல்லாமல், தமிழ் எழுத்துகள் கொண்டு எழுதிக்காட்ட வேண்டும் என்னும் எண்ணமாகும்.


திரிபுகளைக் குறைத்துக் கொள்ளல்

வேற்றுச் சொற்களை எழுத்துப் பெயர்க்கும்போது திரிபுகளைக் குறைத்துக்கொள்ளும் தேவை, நமது நிகழ்காலத்திலே அதிகமதிகமாக ஏற்பட்டு வருகிறதென்பதை நாம் கவனித்துக்கொள்வது நல்லது. பழைய காலங்களிலே, இலக்கியங்களிலும் காவியங்களிலுந்தான், தமிழ் வடிவம் பெற்ற அயல்மொழிச் சொற்கள் கையாளப்பட்டன. இன்று பல்வேறு துறைகளிலும் தமிழைக் கையாளும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். பெருந்தொகையான சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டியுள்ளது. மொழிபெயர்க்கத்தக்க சொற்களைப் பொருத்தமான வகையிலே மொழி பெயர்த்துக்கொள்ள வேண்டும். இந்த முயற்சி,புதுச் சொல்லாக்கத்தின்பாற்பட்டது. அந்த வேலை, முழுவீச்சாகத் தொடர்ந்து இடம்பெறுதல் வேண்டும். மறுபுறத்தில் எழுத்துப் பெயர்க்க வேண்டிய தருணங்களும் நிறைய உண்டு. அப்படி எழுத்துப் பெயர்க்கும்போது, மூல உச்சரிப்புடன் மிக நெருங்கிச் செல்லும் வடிவங்களே சிறந்தன. இதற்கு ஒரு காரணம் உண்டு. அயல்மொழிச் சிறப்புப் பெயர்கள் மிகச் சிலவே தமிழில் வழங்கிய காலங்களில் அவற்றை வேறு பிரித்து இனங்கண்டு கொள்வதில் அதிக சிக்கல் இருக்கவில்லை. ஆனால் இன்று நம் மொழியில் நாம் கையாள வேண்டிய ஆட்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் பிறவும் விரைந்து பெருகிவருகின்றன. இவைகளை எல்லாம் குழப்பமில்லாமல் வேறுபிரித்து அடையாளம் காணுவது நமது உடனடி நடைமுறைத் தேவையாகும். புயனொi என்று ஒருவர் இருப்பார். முயவொi என்று ஒருத்தி இருப்பாள். இவர்கள் இருவரையும் ‘காந்தி| என்று கூறினால் யார், எவர் என்ற கேள்வியிலே பிரச்சினைகள் தோன்றும். ‘பூசா முகாம்| என்று பத்திரிகைகளிலே படித்து வருகிறோம். தமிழ்ப் பத்திரிகைகளை மாத்திரம் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, இது Pழழளய வா, அல்லது டீழழளய வா என்பதிலே குழப்பம் ஏற்படலாம். டீடைட என்பவனின் பெயரை நாம் ‘பில்| என்று எழுதி விடுகிறோம். Pடைட என்ற பெயருடன் வேறொருவன் இருந்தால் நாம் தடுமாறிப் போவோம்.

இந்த நிலையில், இயலுமான அளவு திரிபுகளைக் குறைத்துக் கொள்ளக்கூடிய ஏற்பாடுகளை நாம் கண்டறிதல் அவசியமாகிறது. இந்த வகையிலே கிரந்த எழுத்துகள் நமக்கு இன்று உதவி வருகின்றன. என்றாலும், தமிழ் எழுத்துகளிலே தன்னிறைவைக் காண்பதற்குப் மேலும் சிறந்த புதிய முறைகள் சிலவற்றை நாம் வகுத்துக்கொள்ள முடியாதா? முடியும் என்பதே என் கருத்தாகும்.

கைவசமுள்ள உபாயங்களைத் தகுந்த முறையிற் பயன்படுத்துதல்

புதிய எழுத்துகள் பற்றியோ, குறியீடுகள் பற்றியோ சிந்திப்பதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ள எழுத்துகளையே இன்னுஞ் சிறந்த முறையிலே கையாள்வதற்கு இடமுண்டு. ஸ்டோன், சாக்ளெட், ஆரஞ்சு, கேர்ணல், கப்டன், லெப்டினன்ட் என்றெல்லாம் எழுதப்படும் சொற்களை முறையே, ஸ்ற்றோன், சொக்ளெற், ஒறேஞ்ஜ், கேணல், கைப்ற்றின், லெவ்ற்றினன்ற் என்ற எழுதினால், மூல ஒலிப்புக்குக் கிட்டிய வடிவங்கள் நமக்குக் கிடைக்குமே! இந்த இடத்திலே இரண்டொரு விடயங்கள் கவனிக்கத்தக்கன. ஒன்று ‘ட்|, ‘ற்| என்பவற்றின் பிரயோகங்கள். மற்றது சில ஆங்கிலச் சொற்களில் சு என்னும் எழுத்து ஒலிக்கப்படாமல் மவுனமாக வருவது.

ட், ற்

னு என்பதற்கு ‘ட்| என்ற எழுத்தையும் வு என்பதற்கு ‘ற்ற்| என்பதையும் வைத்துக் கொள்ளல் நன்று. இதன்படி, னுநnஅயசம ‘ டென்மாக் | ஆகும். வுநnலௌழn ‘ ற்றெனிசன் | ஆவார். ‘ றெனிசன் | என்பது சுநnலௌழn என வாசிக்கப்படும். ஆதலால், பழைய தமிழ் மரபுக்கு மாறாக ‘ ற் | என்னும் மெய்யெழுத்தைச் சொல்லின் தொடக்க எழுத்தாக நாம் கையாளலாம். இதை ஒரு புதிய சம்பிரதாயமாக நாம் ஏற்றுக் கொள்ளலாம். வுசயin என்பதை ‘ ற் -றெயின் | என்று ஒரு சிறிய இடைக்கோடிட்டு எழுதலாம். னுசலனநn ‘ ட்றைடன் | என்று வரும். pநவநச என்பதைத் தென்னிந்தியர் ‘பீட்டர்| என எழுதுவர். இதைப் ‘ பீற்றர் | என எழுதுவது அதிக பொருத்தமாகும்.

மவுன சு
ஆயசமஇ ஏநசழெn போன்றவற்றை ‘மார்க்| ‘வெர்ணன்| என எழுதுவது தென்னிந்திய முறைமை. இவற்றை முறையே ஷமாக்|, ஷவேணன்| என்று எழுதிக்கொள்வது மூல உச்சரிப்பை நெருக்கமாக அணுகுவதற்கு ஓர் உபாயமாகும்.
மவுன சு சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு சிறுசிக்கல் தோன்றும். ழுடiஎநச என்பதை ‘ஒலிவ| என்று எழுதினாலே போதும். ஒலிவரை, ஒலிவரால், ஒலிவரின் என்றவாறு வேற்றுமை உருபுகளை ஏற்கும்போதோ வேறு உயிர் ஒலிகளைச் சேர்க்கும்போதோ மவுனமாய் நின்ற ‘சு| வெளிப்பட்டுத் தோன்றும். ஆதலால் ழுடiஎநச என்பதை ‘ஒலிவ(ர்)| என்று, அதாவது இறுதியில் வரும் ரகர ஒற்றை ஓர் அடைப்புக்குறியின் உள்ளே எழுதி, இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம்.
(அட்டவணைஐஐ)


அட்டவணை ஐஐ
உள்ள எழுத்துகளை நன்கு பயன்படுத்தல்


ஆங்கிலம் வழக்கிலுள்ள வடிவம் திருந்திய வடிவம்
ஊயிவயin ஊhழஉழடயவந ஊழடழநெட ஊசiஉமநவ னுசயin ழுசயபெந Pநவநச ளுவழநெ வுநnளை வுசயin ஏநசநெn கப்டன் சொக்கிளெட்ஃ சாக்ளெட் கர்ணல் ஃ கேர்ணல் கிரிக்கெட் டிரெயின் ஒரேஞ் ஃ ஆரஞ்சு பீட்டர் ஸ்ரோன் ஃ ஸ்டோன் ரெனிஸ் ஃ டெனிஸ் றெயின் ஃ ட்றெயின் வர்ணன் ஃ வேர்ணன் கைப்ற்றின் சொக்ளெற், ச்சொக்ளெற் கேணல் கிறிக்கெற், க்றிக்கெற் ட்றெயின் ஒறேஞ்ஜ் பீற்ற(ர்) ஸ்ற்றோன் ற்றெனிஸ்ஃ ற் - றெயின் வேணன்



சுருக்கமாகச் சொல்வதானால், மூலச்சொல்லில் வரும் எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் பதிலீடுகளைச் செய்ய முற்படாமல், அச்சொல்லின் முழுமையான உச்சரிப்பை மனத்திற்கொண்டு எழுத்துப் பெயர்ப்பை மேற்கொண்டால் நல்ல பலன்கிட்டும்.

புதிய ஏற்பாடுகள் சில

இனி, இன்று நாம் எழுத்துப் பெயர்ப்புச் செய்ய வேண்டிய சொற்களிற் பல ஆங்கிலத்தின் வாயிலாகப் பெறப்படுவன. ஆகையால், ஆங்கில அரிச்சுவடியில் வரும் எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளுடன் ஒப்பிட்டுக் காண்போம்.


உயிர் எழுத்துகள்

முதலில் உயிர் எழுத்துகளை எடுத்துக்கொள்ளலாம். யஇ நஇ ஐஇ ழஇர , என ஐந்து வரிவடிவங்களே உயிர் எழுத்துகளுக்கு ஆங்கிலத்தில் உள்ளன. ஆயினும் இவற்றைக் கையாண்டு பத்துத் தனி உயிரொலிகளையும், பத்துக் கூட்டுயிர் ஒலிகளையும் அமைத்துக் கொள்கிறார்கள். தமிழில், ஐ, ஒள என்பன கூட்டுயிர் எனக் கொள்வோர் உள்ளனர். (இலக்கண விளக்கத்தில் வைத்தியநாத தேசிகர் இவற்றை அஇ, அஉ என்பவற்றுக்குச் சமன் என எடுத்துக் கொள்கிறார்.) இவற்றைத் தவிர்த்து விட்டால், நம்மிடம் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ என்றவாறு பத்துத் தனி உயிர்கள் உள்ளன. இவற்றுள் ஏ, ஒ, ஓ என்னும் மூன்று எழுத்துகளையும் தவிர ஏனைய ஏழும் ஊரிஇயுசஅஇ ளுவைஇ ளுநநஇ Pரவஇ வுழழஇ வுநn என்னும் சொற்களில் வரும் உயிரொலிகளுக்கு முறையே சமனானவை ஆகும்.

எ, ஏ, ஒ, ஓ என்பவற்றின் சிறப்பு வகைகள்

உயிரெழுத்துகளைப் பொறுத்தவரையில், தமிழிலே 12 வரி வடிவங்கள் உள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் ஆறு வரி வடிவங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு எல்லாமாக இருபது உயிரொலிகளை எழுதிக் காட்டி விடுகிறார்கள் இந்த ஒலி விகற்பங்களை எல்லாம், எழுத்துகளின் வரிவடிவங்களை மாத்திரமே வைத்து வாசகரொருவர் தீர்மானித்துவிட முடியாது. தனித்தனிச் சொற்களின் உச்சரிப்புகளை ஒவ்வொரு சொல்லாகப் புறம்பு புறம்பாக வாசித்துப் பழகித்தான் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஆங்கில வரிவடிவ முறையில் உள்ள ஒரு குறைபாடு என்று சொல்லலாம். ஆனால் தமிழ் உயிரெழுத்துகளில் அவ்வளவு சிரமம் இல்லை. ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில், ஐந்தே ஐந்து உயிரொலிகளுக்குச் சிறப்பான குறியீட்டு முறையொன்றை வகுத்துக் கொண்டால், தமிழ் உயிரெழுத்து முறைமை முற்றிலும் தன்னிறைவு பெற்றதாய் அமையும். அவ்வுயிரொலிகளை இனிக் காண்போம்.

எடு, ஏடு என்னும் சொற்களில் வருவது போன்ற எகரமும் ஏகாரமும். இவை முறையே யபழஇ நயசn என்னும் சொற்களில் வருவன. என், ஏன் என்பவற்றில் வரும் ஒலிகளுடன் ஒப்பிட்டு இவற்றின் வேற்றுமையை உணர்ந்து கொள்க.
பழவஇ ளயற என்னும் சொற்களில் வருவன போன்ற ஒகர ஓகாரங்களும் தனிவிதமானவை.
இங்கு நாம் சுட்டிக்காட்டிய நாலு ஒலிகளுக்கும் அங்காப்பு நிலை அதிகமாக வேண்டப்படும். அங்காப்பு மிகுதியைக் காட்டுவதற்கு ஒரு குறியை நாம் தேடிக் கொண்டால், இங்கு எழும் பிரச்சினை தீர்ந்துவிடும். வழமையான எ, ஏ, ஒ, ஓ என்னும் எழுத்துகளின் வலது கை மேற்புறத்தில் ஒரு கொமாவை இட்டு மேற்படி ஒலிகளை நாம் புலப்படுத்தலாம். இதன்படி எ|, ஏ|, ஒ|, ஓ|, என்னும் வரிவடிவங்கள் நமக்குக்கிடைக்கும். பின்வருமாறு அந்த வரிவடிவங்களைப் பயன்படுத்தலாம் -
யடிழரவ - எ|பஉற்
நசப - ஏ| க்
pழவ - பொ|ற்
pயரட - போ|ல்


ஆ(ய்) : ய (யள in டயனெ)

ஐப்பசி, இளையவள், வரிசை என்னும் சொற்களில் வரும் ஐகாரங்கள் குறுகிய ஓசை உடையன. இவை ‘யவ | என்னும் சொல்லில் வரும் உயிரொலியை உடையன. அந்த ஐகாரக்குறுக்கத்தின் நெடில் போல்வது டயனெ என்னும் சொல்லில் வரும் உயிரொலி. திட்டவட்டமாக இதைக் குறிக்கும் வரி வடிவம் தமிழில் இப்பொழுது இல்லை. இதை ஆஃ (ய்) ஃ எனக் குறிக்கலாம். அவ்வாறு குறித்தால் ஏயn என்பதை ஷ வா(ய்) ன்| என எழுதலாம். இதனை ஒரு குறிமரபாக வைத்துக்கொள்ளல் வேண்டும்.

கூட்டுயிர்கள்
ஆங்கிலத்தில் வரும் கூட்டுயிர் ஒலிகளைக் குறிப்பதற்கு, பொருத்தமான வகையிலே தமிழ் எழுத்துகளைத் தெரிந்தெடுத்து அல்லது கூட்டுச் சேர்த்து எழுத்துப் பெயர்ப்புத் திட்டமொன்றை வகுத்துக்கொள்வது சாத்தியமே. அத்திட்டம் பின்வருமாறு அமைதல் கூடும்

Pயப இல் வரும் ஏகாரம் - எய்
ர்ழஅந இல் வரும் ஓகாரம் - எ|உ
குiஎந இல் வரும் ஐகாரம் - ஐ
ழேற இல் வரும் ஒளகாரம் - ஒள
துழin இல் வரும் கூட்டுயிர் - ஒய்
நேயச இல் வரும் கூட்டுயிர் - இய
ர்யசை இல் வரும் கூட்டுயிர் - எய
Pரசந இல் வரும் கூட்டுயி - இயுஅ

மெய்யொலிகள்

அடுத்து ஆங்கிலத்தில் வரும் மெய்யொலிகளுக்கு வருவோம். ஆங்கிலத்தில் எல்லாமாக இருபத்து நாலு மெய்யொலிகள் உள்ளன என்பர். இவை பின்வருமாறு:

தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் பொது மெய்யொலிகள்

க் -ம்; ச் -உர்; ப் -p; ற் -வ் ங் -பெ; ம் -அ; ன்ஃ ந் - n; ய் -ல்;; ர்ஃற் - ச் ல்ஃள் -ட் வ் -எ

(ஆ) ஆங்கிலத்துக்கே சிறப்பான மெய்யொலிகள்

(ஆ-1) அதிர்வின ஒலிகள்:
பஇ தஇ னஇவாஇயள in வாந) இ டி;

(ஆ-2) உரசொலிகள்;:
h-ஹ், ள -ஸ், ளா - ~;, வா(யள in வாin)இ ன ;

(ஆ-3) அதிர்வின உரசொலிகள்:
ணஇ ளi (யள in எளைழைn).

ஆங்கிலத்துக்கே சிறப்பான மெய்யொலிகளைப் பரிசீலிக்கும் போது ஒர் உண்மையை நாம் அவதானிக்கிறோம். அவற்றுட் சில அதிர்வின ஒலிகளாய் உள்ளன. மற்றும் சில உரசின ஒலியாய் உள்ள அதே வேளையில் அதிர்வினமாயும் உள்ளன. அதிர்வினம் என்பதைக் குறிக்க ஒர் அடையாளத்தையும் நாம் நிச்சயித்துக் கொண்டால் நமது சிக்கலை இலகுவாகத் தீர்த்து விடலாம். உதாரணமாக, அதிர்வினத்தைக் குறிப்பதற்கு ஒரு சுழியையும் (0), உரசினத்தைக் குறிப்பதற்குச் சிறிய நிலைக் குத்துக் கோடொன்றையும் அதாவது (1) என்பதையும் பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது நமது எழுத்துப் பெயர்ப்பு. பின்வருமாறு அமையும்.

(ஆ-1) பஸ்ரீழக்;;; தஸ்ரீழ ச்;; னஸ்ரீழ ட்;; வா (யள in வாந ) ஸ்ரீழ த்;;;;; டிஸ்ரீ ழ ப்;
(ஆ 2) hஸ்ரீ 1க்;; ளஸ்ரீ1ச்;; ளாஸ்ரீ1ழ்;; வா(யள in வாin)ஸ்ரீ 1த் கஸ்ரீ1வ்;
(ஆ-3) ணஸ்ரீ01ச்: ளi(யள in எளைழைn) ஸ்ரீ 01ழ்.

சில குறிப்புகள்

மிகவும் கண்டிப்பாக நோக்கும்போது னஸ்ரீ0ட் என்று குறிப்பதே திட்பநுட்பம் வாய்ந்தது. ஆனால் ன ஐ வெறுமனே ட் என்று குறித்தாலும் அதை நடைமுறைத் தேவைகளுக்குப் போதுமான ஓர் அண்ணளவாக்கமாகக் கொள்ளலாம்.
0ச், 1க், 1ச்,1ட் என்பவற்றுக்குச் சமனாக நாம் ஏற்கெனவே ஜ், ஹ், ஸ், ஷ் என்பவற்றைப் பயன்படுத்தி வருகிறோம்.
று என்னும் எழுத்தொலியை இப்போது ‘ வ் | என்று நாம் எழுத்துப் பெயர்க்கிறோம். இதனை ‘(உ) வ் | என்பதனாற் குறிப்பது நல்லது.


கிரந்த எழுத்துகள் பற்றி

அதிர்வினம், உரசினம் என்னும் எழுத்து வகையைக் குறிக்க இரு குறியீடுகளை ஏற்றுக்கொண்ட மாத்திரத்திலே, தமிழ் எழுத்துப் பெயர்ப்புச் சிக்கல்கள் முழுவதும் மாயமாய் மறைவது போல் முற்றாக ஒழிந்து விடுகின்றன. மொழியில் வழி வந்த சிந்தனைகளை முறைமையாகப் பிரயோகிக்கும்போது நிகழும் ஒரு விஞ்ஞான பூர்வமான விளைவே இது என்பதை நாம் கவனித்தல் வேண்டும். முதலாவதாக பஇ னஇ வாஇ (யள in வாந )இ டி ஆகியவற்றுக்கு ஈடான தமிழ் வரிவடிவங்கள் நமக்குக் கிடைக்கின்றன. தமிழ் எழுத்து வரி வடிவ முறையிலுள்ள பெரிய குறையொன்று முற்றாக அற்றுப் போகிறது. தமிழைப் பொறுத்த வரையில் இது ஒரு பெரிய பாய்ச்சலாகும். இந்த முறைமையின் மற்றுமொரு பெறுபேறாக ஜ், ஹ், ஸ், ~;, என்ற கிரந்த எழுத்துகள் தமிழுக்குத் தேவையில்லாமற் போய் விடுகின்றன. இப்பொழுது கூட மாணவரும் பொதுமக்களும், ஆசிரியர்களும் இந்தக் கிரந்த எழுத்துகளின் நுட்பச் செவ்வியை உணர்ந்து பயன்படுத்துகிறார்களா என்பதும் ஐயத்திற்குரியது. ‘சிரேஷ்ட| என வரவேண்டியதைச் ‘சிரேஸ்ட| என்றும் கஷ்டத்தைக் ‘கஸ்டம்| அல்லது ‘கஸ்ரம்| என்றும் பலர் எழுதுவதையும் பேசுவதையும் காண்கிறோம்: கேட்கிறோம். ப ஒலி வரவேண்டிய இடத்தில் ‘ ஹ் | என்னும் எழுத்தைச் சிலர் பிரயோகிப்பதையும் பார்க்கிறோம். | விசேஷ | என்று வரவேண்டியதை ‘ விசேட | என்று பலர் எழுதுகின்றனர்: ‘ புஷ்பம் | என்பதனைப் ‘புஸ்பம் | என்று வழங்குவதையும் நாம் அடிக்கடி காண்கிறோம். இவையெல்லாம் நமக்கு உணர்த்துவதென்ன?

சென்ற சில நூற்றாண்டுகளாகக் கிரந்த எழுத்துக்களைச் சில தமிழ்ச் சொற்களிலே பயன்படுத்தி வந்தோமாயினும், இன்னும் அவற்றின் திட்பநுட்பங்களை நம்மிற் பலர் செப்பமாகக் கிரகித்துக் கொள்ளவில்லை. ஆகையினால் இவற்றைக் கைவிட்டு, இரண்டொரு புதிய குறியீடுகளை ஏற்றுக்கொள்வது இலகுவாகும். வேண்டுமானால் மாற்றங்களை இரண்டு கட்டங்களில் நாம் நிறைவேற்றி வைக்கலாம். முதலாவது கட்டத்தில், கிரந்த எழுத்துகளைக் கைவிடாமல் அவற்றையும் வைத்துக்கொண்டு, அதாவது ஜ், ஸ், ஷ் ஹ் என்பவற்றை வைத்துக்கொண்டு, அதிர்வின ஒலிக் குறியீடாகிய சுழியை மாத்திரம் அறிமுகம் செய்யலாம். இரண்டாம் கட்டத்தின் உரசின ஒலிக் குறியீடாகிய ஸ1’ என்னும் அடையாளத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பொழிப்பு

இதுவரை நாம் செய்த பரிசீலனையைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.

(அ) பிறமொழிச் சொற்களை எழுத்துப் பெயர்ப்பதிலே ஒன்றுக்கு மேற்பட்ட பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன. இவற்றுள் மிகவும் பழைய முறையில், தமிழ் முதலெழுத்துகள் முப்பதும் அவற்றின் வழிவந்த உயிர்மெய் வரி வடிவங்களும் மாத்திரமே பயன்பட்டன. இந்த முறையில், தொல்காப்பியம் நன்னூல் என்பவற்றில் எடுத்துரைக்கப்பட்ட எழுத்து மயக்க விதிகளும், முதனிலை இறுதிநிலை விதிகளும் கடைப்பிடிக்கப்பட்டன.

(ஆ) வடமொழிப் பயில்வு அதிகமாகிய பிற்காலத்தில் ஜ், ஸ், ஷ, ஹ், ச~;, ஆகிய எழுத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் எழுத்து மயக்க விதிகள், முதனிலை, இறுதிநிலை விதிகள் ஆகியனவும் தளர்த்தப்பட்டன.

(இ) ஆங்கில மொழியின் வருகையோடும், பிறமொழித்தொர்புகளின் பெருக்கத்தோடும், எழுத்துப் பெயர்ப்புமுறைகள் மேலும் பன்முகப்பட்டன. ஒருசீரான பெயர்ப்புத்திட்டமொன்றின் அவசியப்பாடு விஞ்ஞானம் முதலான கல்வித்துறை விரிவாக்கத்தின் விளைவாக மேலும் மேலும் உணரப்பட்டு வருகின்றது.
இதுபற்றி அறிஞர்கள் சிலர் ஏற்கெனவே சிந்தித்துள்ளனர். சுப்பிரமணிய பாரதியார், பொன்னம்பலம் இராமநாதன், பொன். கோதண்டராமன், திரு கந்தையா, சி. சிவசேகரம் என்போர் இதனையிட்டுக் கருத்துச் செலுத்தியோருட் சிலர் ஆவர்.

இன்றைய இந்த உரையிலே, ஆங்கிலத்தின் வழி வந்த சொற்களை எழுத்துப் பெயர்ப்பது பற்றிச் சிறப்பாகச் சிந்தித்தோம். அதன் பேறாக, தமிழில் இல்லாது ஆங்கிலத்திற் பயிலும் சிறப்பான மெய்யெழுத்துகள் மூவகைப்பட்டன என்று கண்டோம். அவை அதிர்வினமும் (ஏழiஉநன ஏயசநைவல)இ உரசினமும் (குசiஉயவiஎந ஏயசநைவல)இ அதிர்வுரசினமும் (ஏழiஉநன குசiஉயவiஎந ஏயசநைவல ) ஆகும். அதிர்வின எழுத்துகளை |0| என்னும் அடையாளத்தை, கிட்டிய தமிழ் எழுத்துகளுக்கு இடக்கைப்புறமாக இடுதல் வேண்டும். அதாவது ழப்ஸ்ரீடி; ழ க்ஸ்ரீப என்பன போன்று வரும். உரசின எழுத்துகளுக்கு ‘1 | என்னும் அடையாளத்தை, கிட்டிய தமிழ் எழுத்துக்கு இடக்கைப் புறமாக இடல் வேண்டும். அதிர்வும் உரசலும் உடைய (ண வகைப்பட்ட) எழுத்துகளுக்கு ‘01| என்னும் அடையாளத்தைக் கிட்டிய தமிழ் எழுத்தின் இடக்கைப் புறமாக இடுதல் வேண்டும். (இதன்படி ணுஸ்ரீ 01ச் ஆகும். ‘ணுழழ’- 01சூ என வரும்.) உயிர் எழுத்துகளைப் பொறுத்தவரை, உயர்த்திய கொ’ மா வைப் பயன்படுத்தி அங்காப்பு மிகுதியைக் காட்டலாம்.

சுருக்கத்தின் சுருக்கமாகச் சொல்வதானால், சுழி (0), நிலைக்குத்துக் கீறு (1), உயர்த்திய கொ’மா ( ‘ ) ஆகிய மூன்றுமே நமக்கு வேண்டிய அடையாளங்கள்.

இந்த ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டால், ஆங்கிலம் வழியாக வரும் அனைத்து எழுத்துப் பெயர்ப்புகளுக்கும், தமிழ் எழுத்துகள் முழுமையாக இடம் கொடுக்கும். அதாவது எழுத்துகளின் வரி வடிவத்திலே தமிழ் தன்னிறைவு நிலையை அடையும். தனித்தியங்கல் என்பதை ஓர் இலட்சியமாகக் கருதினால், அந்த இலட்சியத்தின் மிகப் பெரும் பகுதி இந்த ஏற்பாட்டின் மூலம் நிறைவேறும். தேசிய எண்ணங்கள் முதன்மை பெற்று முழுவீச்சடையும் இன்றைய காலகட்டத்தில், மொழியின் வினைத்திறனைக் கூர்மைப்படுத்துவதும் நமது கடமையாகவும் பொறுப்பாகவும் அமைகிறதல்லவா?


குறிப்புகள்

வடமொழி மந்திரங்களையும் சுலோகங்களையும் தமிழில் அறிமுகப்படுத்த எண்ணியவர்கள் சில முறைகளை வகுக்க முற்பட்டனர். சிலர் தடித்த அச்செழுத்துகளைப் பயன்படுத்தி, பாவம், தர்மம் போன்ற பதங்களைப் புலப்படுத்தினர். அதிர்வினத்தைக் குறிப்பதற்கு இவ்வித முறைகையாளப்பட்டிருப்பதை இராமகிருஷ்ண மிஷன் வெளியீடுகள் சிலவற்றிற் காணலாம். ஒரு சொல் முழுவதையுமோ தொடர் முழுவதையுமோ தடித்த எழுத்தில் அச்சிட முற்படும்போது, இந்த முறை சிரமங்களை உண்டுபண்ணும் என்பது கவனிக்கத்தக்கது.
வடமொழியில் வரும் , , , , , , : ஆகிய எழுத்துக்களையே இவ்வாறு குறித்துள்ளோம்.
வுயுஆஐடு ஊருடுவுருசுநு. ஏழட. ஐஎஇ ழே.1 இல் எழுதிய யு ளுநுNவுர்யுஆஐடுயுN என்பார் வுசயளெடவைநசயவழைn ழக வுயஅடை in சுழஅயn ஊhயசயஉவநசள யனெ ஏiஉந ஏநசளய கட்டுரையில், தமிழிற் பயிலும் அதிர்வின ஒலிகள் பற்றியும் உரசின ஒலிகள் பற்றியும் விளக்கியுள்ளார்.
(i) ற், ட், என்பன முறையே வஇ ன என்பவற்றுக்குச் சமமானவை. இவற்றுள் ட் என்பது பின்வளை (சநவசழகடநஒ) ஒலி எனப்படும் நாமடி ஒலியாகும். நுனி நா மேலண்ணத்தைப் பொருந்துகையில் ல், ற், ன், என்பனவும் ள், ட், ண் என்பனவும் பிறக்கும். இவற்றுள் ல், ற், ன் என்பன பிறக்கும் இடத்துக்குச் சற்றுப் பின்னே (உட்புறமாக) ள்,ட், ண் ஆகியன பிறக்கும். இவற்றைப் பிறப்பிப்பதற்கு நுனி நாவானது சிறிது பின்னோக்கி (உள்நோக்கி) வளைதல் வேண்டும் என்பது கவனித்தற்பாலது. நாமடி ஒலி, நாமடியா ஒலி என்ற பேதம், வடமொழிச் சார்புள்ள இந்திய மொழிகள் பலவற்றில் இல்லை. ஆதலால், ‘ வநய’ என்பதை ‘டீ| என்றே இந்தியர்கள் ஒலிப்பர். தமிழில் ல், ன், ற் ஆகிய நாமடியா ஒலிகள் இருந்தும், பிறமொழிச் செல்வாக்கினாற் போலும் தென்னிந்தியத் தமிழரும் ஃழெவ லநவ |என்பதை ‘னொற் யெற் | என்று ஒலிக்காது ‘ நொட் யெட் | (ழென லநன ) என்றே ஒலிக்கின்றனர் (ஐனெயை வுழனயலஇ 1993 யுpசடை 15; pயபந 141).

(ii;) தென்னிந்தியரிற் சிலர் ‘ சற்று | என்னும் சொல்லை ‘ளயவசர | எனவோ ‘ சட்று | எனவோ ஒலிக்கின்றனர். அந்த வகையில் ‘ற்ற்| என்னும் சேர்மானம் அவர்களைப் பொறுத்தவரை ‘வவ | என்பதற்குச் சமனாகாது, வச என்பதற்குச் சமனாக ஒலிக்கப்படுகிறது. இவ்வாறான ஒலிப்பு எழுத்துத் தமிழை வாசிக்கும்போது, பொது நிகழ்வுகளிலே அல்லது சிறப்பு வைபவங்களின்போது வேண்டுமென்றே செயற்கையாகச் சிலர் பேசுவதற்கு முயலும் போதுந்தான் கேட்கப்படுகிறது எனலாம். ஆனால் இலங்கைத்தமிழரிற் பெரும்பாலோரும் இந்தியத் தமிழரிற் கணிசமான தொகையினரும் ‘ ற்ற்| - ‘வவ |என்றவாறுதான் ஒலிக்கின்றனர்.

ஐகாரக் குறுக்கம் சொல்லின் தொடக்கத்திலும் இடையிலும் இறுதியிலும் வரும். வேற்றுச் சொற்களைப் பொறுத்தவரை ஐகாரம் எப்பொழுது குறுகி ஒலிக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் காட்ட வேண்டிய வேளைகளில் ‘அ(ய்)| என்னும் குறிச்சேர்மானத்தை நாம் கையாளலாம். அதன்படி ஷஆயஉஅடைடயn | என்பது ‘ம(ய்)க்மிலன் | என்று வரும்.
ர்ழசnடிலஇ 1988; iளெனைந கசழவெ உழஎநச.
(i) ழ,1 என்பவை எதேச்சையாகத் தெரிந்தெடுக்கப்பட்ட குறிகளே. இவற்றை ஒத்த குறியீட்டு ஏற்பாடொன்றைப் பேராசிரியர் பொன்.கோதண்டராமன் ஏற்கெனவே முன்வைத்துள்ளார் (கோதண்டராமன், 1974: 49 ). உரசொலிகளைக் குறிப்பதற்கு மெய்யெழுத்துகளின் இடப்புறமாக ஆய்தத்தை (ஃ என்பதை)ப் பயன்படுத்தலாம் என்பது அவரது கருத்து.
(ii) மெய்யெழுத்துகளுக்கு இடப்புறமாக, வரி முழுவதையும் பிடிக்குமாறு இக்குறிகளை இடுதல் வாசிப்போட்டத்துக்குத் தடங்கலாகும் என்பது சிலர் கருத்து. அவ்வாறாயின் வேறு மாற்று வழிகளைக் கையாளலாம்.

(i;) சே’(ர்) பொ. இராமநாதன் தமது ‘பகவத் கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் | என்னும் நூலில் பின்வருமாறு எழுதுகிறார். “ஸம்ஸ்க்ருதத்திலுள்ள க ச ட த ப என்னும் வர்க்கங்களின் பல பேதங்களைத் தமிழிற் காட்டும் பொருட்டு எம்மால் தமிழ் அஷரங்களுக்குக் குறியீடுகள் அமைக்கப்பட்டன. இந்நூலை அச்சிடின், ஸம்ஸ்க்ருதமறியாத நம்மவர்கள் மயங்குவார்கள் எனத் தமிழ்ப் பண்டிதர் சிலர் அபிப்பிராயப்பட்டமையால் அவற்றை விலக்கினோம்.||

(ii;) மேற்கண்டவாறு சே’(ர்) பொன். இராமநாதன் வகுத்த குறியீட்டுத் திட்டம் சீமாட்டி லீலாவதி இராமநாதன் எழுதிய ‘ வுhந சுயஅயலயயெ |என்னும் ஆங்கில நூலிலே தரப்பட்டுள்ளது. அதில் அவர்

க1 , க2 , க3 , க4 , : ச1 , ச2 , ஐ, ச4 : ட1 , ட2 ,ட3 , ட4 , த1 , த2 , த3 , த4 ,
என்றவாறு குறியீடுகளை அமைத்துள்ளார்.

திரு. கந்தையாவும், சி. சிவசேகரமும் வகுத்த முறையில் (ஐனெயைn டுiபெரளைவiஉளஇ ஆயசஉh : னுநஉநஅடிநச இ 1984 ) எல்லாமாக ஆறு ஆங்கில எழுத்துகளையும் சிங்கள மொழியிலிருந்து எடுக்கப்பட்ட குறியீடுகள் இரண்டையும் தமிழ் வரி வடிவைத் தழுவி அமைக்கப்பட்ட நான்கு குறியீடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பின்னிணைப்பு -(ஐ)

சூத்திர வடிவில் புதிய ஏற்பாடுகள்

மெய்யின் இடப்புறம் சுழி வரின் அதிர்வினம்: நிலைக்குத்திட்டால் உரசினம் என்க.
சுழி நிலைக்குத்துகள் தொடர்ந்து முன்னுறின் அதிர்வுடன் உரசல் அமையொலி குறிபடும்.
உயிரின் வலத்துயர் கொ ‘மா இடின் அக்குறி அங்காப்பியல்பின் மிகுதியை உணர்த்துமே.


பின்னிணைப்பு - (ஐஐ)

புதுமுறை எழுத்துப் பெயர்ப்புக்குச் சில வகை மாதிரிகள்

(அ) கிரந்த எழுத்துகளுடன்
டீயளiஉ N0பசிக் டீழழடந ழபூல் ஊயவாழனந க(ய்)N1தாட்
ஊநநகயஒ சீ1ப(ய்)க்ஸ் ஊநடடநெவ செல்நெற் ஊழடிழட கொn0பால்
னுழபெடந டொங்0கிள் டுயளநச லேச(ர்) டுiளி லிஸ்ப்
டுழபழ லொN0கா Nயிநைச நேப்பிய(ர்) Pயளஉயட ப(ய்)ஸ்கால்
Pசழடழப ப்றோலொ0க் ஞரநசவல குவே’ற்றி ஏனைநழவநஒ வீடியோற்றெக்ஸ்

(ஆ) தனித்தமிழ் எழுத்துகளில்
ஊநநகயஒ சீ1வ(ய்)க்1ச் ர்ழஅநச N1காம(ர்) டுiளி லி1ச்ப்
Pயளஉயட ப(ய்)1ச்கால் ளூயமநளிநயசந N1ழக்ச்1பிய(ர்)
ஏனைநழவநஒ - வீடியோற்றெக்1ச்



உசாத்துணை

ஆறுமுகநாவலர், ஸ்ரீலஸ்ரீ, நன்னூற் காண்டிகையுரை, சென்னை, 1931.

கோதண்டராமன், பொன், செந்தமிழ், சென்னை 1974

சிதம்பரம்பிள்ளை, வ. உ.,பதி. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம், சென்னை 1991

ராமநாதன், கௌரவ ஸ்ரீ பொ., பகவத்கீதா தமிழ் மொழி பெயர்ப்பும் விருத்தியுரையும், சென்னை, பெங்க@ர், 1931
வைத்தியநாத தேசிகர், இலக்கண விளக்கம், சென்னை, 1973

யு ளுநுNவுர்யுஆஐடுயுNஇ வுசயளெடவைநசயவழைn ழக வுயஅடை in சுழஅயn ஊhயசயஉவநசள யனெ ஏiஉந ஏநசளயஇ வுயஅடை ஊரடவரசந ஏழட . ஐஏஇ ழே . 1இ ஆயனசயளஇ1955

ர்ழுசுNடீலுஇ யு . ளு .இழுஒகழசன யுனஎயnஉநன டுநயசநெச’ள னுiஉவழையெசல ழக ஊரசசநவெ நுபெடiளாஇ னுநடாiஇ 1988

ஐNனுஐயு வுழுனுயுலுஇ 1993 யுpசடை 15இ னுநடாi.

முயுNனுஐயுர்இ வுர்ஐசுரு ரூ ளுஐஏயுளுநுபுயுசுயுஆஇ ளு.இ வுhந வுயஅடை ளுஉசipவ : ஊhயசயஉவநசளவiஉள யனெ Pசழடிடநஅள யனெ ய Pசழிழளயட கழச சுநகழசஅ ஐனெயைn டுiபெரளைவiஉளஇ ஆயசஉh - னுநஉநஅடிநச 1984இ னுநஉஉயஅn ஊழடடநபநஇ Pரநெ.

சுயுஆயுNயுவுர்யுNஇ டுயுனுலு டு. வுhந சுயஅயலயயெ இ ஊழடழஅடிழஇ 1931.