கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  அநாதிநம
Caste System
வருண நிலை
 
 

இஃது
சிங்கை ஜ்னனதூதன் பத்திராதிபர்
இ. ம. தைரியர்
Alias
குருகுலசேகர தைரியமுதலியாரவர்களினால்
இயற்றப்பட்டது.
(R. M. Thyriar.)

 

அநாதிநம
Caste System
வருண நிலை

இஃது
சிங்கை ஜ்னனதூதன் பத்திராதிபர்
இ. ம. தைரியர்
Alias
குருகுலசேகர தைரியமுதலியாரவர்களினால்
இயற்றப்பட்டது.
(R. M. Thyriar.)

Published by
James John
Swartz Lane
CHUNDIKULI
JAFFNA
1967

----------------------------------------------------------

அநாதிநம
Caste System
வருண நிலை

இஃது
சிங்கை ஜ்னனதூதன் பத்திராதிபர்
இ. ம. தைரியர்
Alias
குருகுலசேகர தைரியமுதலியாரவர்களினால்
இயற்றப்பட்டது.

விலை சதம் 50.

--------------------------------------------------------------------

அச்சுப் பதிவு:
சிறீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம்.

------------------------------------------------------------------------

அநாதிநம
Caste System

முகவுரை

வருண நிலை

இப்பூவுலகின்கண் னுற்பவித்து அட்டதிசைகளில் பரம்பியிருக்கும் மானிடர் எத்தனையோ கோடானுகோடியென மதிக்கொணாது. காலத்திற்குக் காலம் அவதி மரணத்தினாலும் யுத்த அக்கிரமத்தினாலும் மாண்டு பூமாதேவியின் பாரத்தைச் சாந்தியாக்கினவர்களின் தொகையையும் கணிப்பதரிது. மானிடருள் இரு வகுப்பினருளர். இவரை ஆண் பெண்ணென்றார் சான்றோர். ஆனது பற்றி மானிடருள் இரு சாதிகளின்றி மறுசாதிகளிலரென ஞானிகளுபதேசிக்கின்றனர். இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோரென வேறு சாஸ்திரிகள் சாதிக்கின்றனர். அதாவது, புண்ணிய வழிபாட்டி லொழுகுவோர் மேற்குலத்தவர், துர்மார்க்கத்தில் துடியாட்டஞ் செய்வோர் இழிகுலத்தவரென்றர்த்தமாகும். இன்னும் இந்திய இதிகாசங்களை விரித்துச் சீர்தூக்கி வியாக்கியானஞ் செய்யுங்கால் "சாதியேது காணும் ஆண்டே சைவமேது காணு" மென்ற சூத்திரத்திலடங்கி யிருக்கின்றது. "நாற்பாற் குலத்தில் மேற்பாலொருவன் கற்றிலனாகிற் கீழிருப்பவனே" யெனத் திருவள்ளுவநாயகர் திருவாய் மலர்ந்தருளி யிருக்கின்றனர். இது, கல்விமானகளே யுயர்குலத்தவர், கல்லாத மாந்தரிழிகுலத்தவரெனுந் தாற்பரியத்தை நன்றாய் விளக்கிக் காட்டுகின்றது.

இந்தியாவிற் பல்லாண்டுகளாய் நாம் வசித்தோம். பல வகுப்பினருடன் சகவாசஞ் செய்தோம். வருண நூற்களைக் கற்றுணர்ந்தோம். பேழைதனைப் போல் வயிறு கொண்ட பார்ப்பார் பிழைப்பதற்குச் சாதிபேதத்தைக் கட்டி வைத்தாரென நம்மறிவிற் புலப்படுகின்றது.இச் சாதிபேத விஷயமே இந்திய இலங்கைச் சுதேசிகளைத் தலைகீழாய் விழுத்திவிட்டது. எக்காலமும் பதினாறு பிராய மார்க்கண்டேதர் போலிராமல், சாதிப் பேதத்தினாற் கேடுற்றுப் படாதபாடுற்றுச் சீதேவியாகிய சுதேச நாடிழந்து, மான் வேட்டையாடச் சென்றவன் புலி முகத்தில் தென்பட்ட விதமாய்ப் பரிதாப நிலையிலாகினர். ஐயையோ! எம்பெருமானினி யென்சய்வன்!!

இப்பரிதாப மொருபாலிருக்கச் சாதிக் கோட்பாட்டின் நிலை அதிக அநுதாபத்திற் கிடமாயிருக்கின்றது. தற்காலத்தில், கீழ்த்தரமாய் மதிக்கப்படா நிற்கின்றவர்கள் இந்து இதிகாச விதிப்படி அந்நிரையைச் சார்ந்தவர்களல்லர். அன்றியும், சில வருணப் பெயர்கள் நசுங்கித் தேய்ந்து ஒடுங்கி முடங்கியு மிருக்கக் காண்கிறோம். இவ்விஷயத்தை சுருங்கச் சொல்லி விளக்குவதற்கே இந்நூலை யியற்றத் தலையிட்டோம்.

"பொருந்திய குறைகணோக்கிற் புனைந்தமட் கலத்தைப்பாரா
தருந்துய வமுதுந்ன்றே லருத்தியோ டருந்தல் செய்வார்"

இவ்வசன நடையில் யாது குறைகளைக் கற்றோர் கண்டால் ஏந்திய மட்பாத்திரத்தைப் பாராததிலடங்கிய அமிர்தம், உண்பதற் கின்பமாயிருப்பி னதை யாசையோடருந்துவார்களாக.

-----------------------------------------------------

மரபுங் கிளையும்

மனுக்கோட்டின் பிரகாரம் நான்கு வருணங்களுள. அவை: பிரம, சத்திரிய, வைசிய, சூத்திரரேயாம் மனுவென்பவர் பிர்மாவின் புத்திரரென்றும், மானவ நூலை யியற்றினவரென்றும் இந்துக்களின் கொள்கை. இந்நூல் அட்டாதச தரும நூல்களிலொன்று. மேற்கூறிய வருணங்களுள் நானாவித பிரிவுகளுமுள.

பிராமணர்

பிரம வென்பது பிராமணர், பார்ப்பார், இரு பிறப்பாளர் (Twice born). அந்தணரேயாம். இவர்கள் நான்முகக் கடவுளின் முகத்தினின் றுற்பத்தியானபடியால், எற்றமேல்குல முயர்ந்தோரென மனுக்கோட்டிற் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வித யோக திசையில் ஜென்மித்த பிராமணரின் தொழில் யாதெனப் பின்வரும் பா இன்பமாய்க் கூறுகின்றது.

"ஓதலே பிறர்க்குத் தாமே யோதுவித்திடுதல் மிக்க
வேதவேள்விக ளியற்றல் வேட்பித்தல் வேட்டபேர்க்கே
ஈதலீந் திடுவோர் தம்பா லேற்றிட லேற்பதாக
வாதிநான் மறையோர் செய்யுமறு தொழிலாகு மன்றே"

செபதபதானஞ் செய்தல், மற்றோரை யவ்வழிப்பாட்டிலமைத்தல், வேதத்தை விளக்கிக் காட்டல், தருமம் புரிதலென்பனவேயாம். இத் தொழில்களைச் சாதிபேதமின்றியும், வறியோர் சிறியோரென்றும் பாராது, மன்னுயிரைத் தன்னுயிர்போல் பாவித்து வருபவன் அந்தணன் அல்லது குருவென்ற வரிய நாமதேயத்திற்குரியவன். செல்வமின்றித் தொல்லைப்பட்டு வள்ளுவத் தொழிலிலும் பறைசாற்றும் வேலையிலும் அமைக்கப்பெற்ற இனபந்துகளாகிய பறையரை, ஈனரென் றெண்ணியவர்களைக் கண்டவுடன், குண்டியைக் காட்டித் தடல்பிடல் செய்யும் பிராமணர், நான்முகக் கடவுளின் திவ்விய முகத்தினின் றுதித்தாரென்பது இந்தப் பொய் கந்தப்புராணத்திற் கிடையாதென்ற பேச்சுக் கிலக்காயிருக்கின்றது.


சத்திரியர்

சத்திரியர் நான்கு வருணத்தவருள் இரண்டாம் மரபினர். இவர்கள் இராஜீக ராணுவ குலத்தோர். இவ் விஷயத்தைக் குறித்து நிகண்டை விரித்துப் பரிசோதித்துப் பார்த்தால், இவர்கள் குருகுல வேந்தரென்றும், கௌரவர், பௌரவர், பரதரென்றும் அங்கு காணப்பட்டிருக்கின்றது. "பரவுபாரதரேமற்றப் பௌரவரென்னும் நாமங் குருகுல வேந்தர்க்காகுங் கௌரவரென்றுங் கூறும்" கௌரவர் குருராஜனின் வமிசத்தவர்கள். குருராத்தா அல்லது குருநாட்டில் (டெல்ஹி) நடந்த யுத்தத்திற் கௌரவர் தோல்வியடைந்து, மத்திய இந்தியாவி லடைக்கலம் புகுந்தனர். அதன் பின்னர் தென்னிந்தியாவை நோக்கிச் சென்றனர். இவர்கள் இராணுவ சாஸ்திர விற்பன்னரானபடியால் இலங்காபுரியைப் பல்லாண்டுகளாய்ப் பரிபாலனஞ் செய்த பராக்கிரமபாகு வென்பவர் இவர்களை வரவழைத்து, இலங்கைப் பாதுகாப்புக்காகக் கரையடுத்த நாடுகட் கதிபதிகளா யிவர்களை நாட்டினர். இவ் விஷயத்தினாலிவர்கட்குக் கரையாளரென்னுங் காரணப் பெயர் சூட்டப்பட்டது. கரையாளரென்னுந் நாமத்தை ஆங்கிலேயத்தில் பாஷாந்தரஞ் செய்யுங்கால் Naval Forces என்ற அருத்தத்தைத் தரும். மஹா வித்துவான் சைமன் காசிச் செட்டி (Simon Cassie Chetty) அவர்களரங்கேற்றிய அரிய பிரபந்தத்தில், கரையாளர், சத்திரிய வருணத்தைச் சார்ந்தவர்கள்; நாடு நகர்களை யாண்டு பரிபாலனஞ் செய்தவர்களென அவர் கூறியிருக்கின்றனர். ஆனது பற்றி யிவர்கள் குருகுல வமிசத்தவர்கள். "கண்ணுடையரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்." தாஸ் பூஸ் தஞ்சாவூர் ஈஸ்பூ சென்று இதிகாசங்களைக் கற்றுணரா மாந்தரினிரு விழிகளிரு புண்களாம். இப் புண்களையுடையோர், குரங்குக்குந் தன்குட்டி பொன்குட்டி (The monkey praises its own tail) யென்றவாறாய் இதிகாசங்களை வேற்றுமைப் படுத்துவர். சம்பூரண கல்விக் கண்களையுடையோர், யாது மரபினராயினும் சத்தியந் தவறாதவர். இவ்வகுப்பினருள், தெல்லிப்பளை வாசியும் ஞானாந்த புராண ஆசிரியருமாகிய மஹா வித்துவான் தொன்பிலிப்பு அவர்களொருவர். யாழ்ப்பாணக் கௌரவ அல்லது கரையாளர் மரபுதித்த தொதியோகு முதலியாரைக் குறித்து, அவ்வித்துவான் வசனித்த குறிப்பு யாதெனில்:-

"அல்லலுறு மஞ்ஞானத் திமிரந்தேய வருண்ஞான விசுவாச விளக்க முன்னூற், புல்லிய சொற் சிறிதெடுத்து விருத்தப் பாவாய் போர்ந்தவு ரோமாபுரியின் சங்கத்தேற, தொல்லுலகிலுயர்ந்தகுரு குலத்துமன்னன் தொன்தியோ கெனுமுதலி முயற்சியாலே, தெல்லிநகர் வேளாளன் தொம்பிலிப்புச் செந்தமிழிற் காப்பியமாய்ச் செய்தான் மன்னோ."

மேற்கூறிய உயர் குருகுலமன்னன் தொன்தியோகு முதலியா ரெவரெனப் பலருமறிந்த விஷயமே றோமாபுரி மந்திரி சபையோர்க் (Senators) கிலக்காய்ப் பறங்கிக்கார, டச்சுக்கார, ஆங்கிலேய அரசினர் மத்தியில் இலங்காநின்ற கௌரவ திசவீரசிங்கமுதலியார், புவிராசசிங்கமுதலியார், புவிமன்னசிங்கமுதலியார், அரசுநிலையிட்டமுதலியார், எதிர்மன்னசிங்கமுதலியார் மற்றும் பாரிய பிரபுக்களின் பூர்வ கோத்திரத்தைத் தொன்தியோகுமுதலியார் சார்ந்தவர். சிங்களவர், பறங்கிக்காரர் ராஜீரீக செங்கோல் செலுத்துங் காலங்களிற் கரையாளரென்னுங் கௌரவ காவற்படை வகுப்பினர் திருகோணமலையில் அணிவகுக்கப்பட்டிருந்தனர். பறங்கிக்காரருக் கெதிராய் டச்சுக்காரர் படையெடுத்தார்கள். பறங்கிகளினா லெதிர்த்து யுத்தம் பொருதமுடியாது, கோட்டையின் திறவுகோலைக் கரையாளுஞ் சேனைகளிடம் வாங்கித் திரிகோணமலையை யொப்புக் கொள்ளலாமென்று ஜெயசீல டச்சுக்காரரைக் கெஞ்சினர். கரையாளுங் கௌரவ சேனைக ளிருந்தபடி யிருக்கட்டும். அவர்கள் சுத்த வீரமரபினர். நீங்களூரைவிட்டகல் வேண்டியது. அல்லாவிடில், உங்களையுங் கோட்டை கொத்தளங்களையும் சட்டிப் பீரங்கிகளினால் சுட்டெரிப்போ மென்று டச்சுப் படைத் தலைவன் வற்புறுத்தவே, பறங்கிகள் காய்ச்சலும் பீச்சலுங் கொண்டு ஊரை விட்டுப் பறந்தனரென்றும் கௌரவ சைனியங்கள் முன்போலவே தங்கள் ராணுவ உத்தியோகத்தைப் பார்த்து வந்தார்களென்றும் 1639-ம் வருட டச்சுத் தளாதிபன் விடுத்த நிருபத்தில் வரையப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணக் குருகுலத்தவர்களைப் பற்றி ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் வசித்த அன்னிய முதியோர்க்குத் திண்ணமாய்த் தெரியும். எழுவாய் பயனிலை மற்றும் இலக்கிய இலக்கண நூல்களைச் செப்பறக் கல்லாது, ஐரோப்பியத் தொப்பியையுஞ் சல்லடத்தையும் மாட்டிச் செருமிப் பெருமை பாராட்டி ஞாயசாத்திரத்தைத் தப்பறக் கற்றோமென்றுறுமி வற்புறுத்தும் தம்பிகளுக் கிக்கருமம் கிறீக்குப் போலிருக்கும்.

இது நிற்கக் காலப்பிசகினாற் கௌரவர் யுத்தநிரையை விட்டுப் படிப்படியே விலகி யுத்தியோகம், வர்த்தகம், கமம் முதலிய தொழில்களில் முயன்றனர். சென்னபட்டணம், புதுச்சேரி, காரைக்காலென்னு மிந்திய நகரங்களில் இவர் முதலிப் பட்டத்துடனே கருத்தரித்துப் பிறந்து மரணமடைகின்றனர். நாகபட்டணப் பகுதிகளி லிவர் மரபினருக்குப் பட்டணச் செட்டிகளென்ற பட்டப் பெயர் பிறவியிலேயே சூட்டப்படா நிற்கின்றது.

மன்னராயிருந்தோர் வகை தப்பிப் போயின், சீவனத்திற்காக வேறுந் தொழில்களிலொழுகுவது வழமை. குருகுலத்தவரின் நிரை யவ்வாறிருப்பினும், சிறைத் தொழில் அடிமைத் தொண்டு வேலைகளி லிவர்கள் எக்காலத்திலு மமைந்ததாக யாம் கேள்விப்பட்டதில்லை. மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலுந் தான்மிக்க வெண்மை தருமென்றார் சான்றோரொருவர்.


பௌரவர் - பரதர்

பௌரவர் கௌரவரின் வமிசத்தவர். இவர் குரு அல்லது புருவென்னும் ராஜனின் சந்தானப்பதிகள். (Descendants of the Kuru or Puru dynasty). குருவென்பவர் அங்கிதீரன் புதல்வரி லொருவர். (The name of one of the nine sons of அங்கிதீரன் the first monarch of Jambu Dwipa) ஜம்பு துவிப்பாவென்னும் நாடு சிறிங்கமலைக்கப்பால் வட திசையிலிருக்கின்றது. இதைக் குருவரசன் பல்லாண்டுகளாய் ராச்சிய பரிபாலனஞ் செய்தவர். புருவென்பவர் சந்திரகுலத்தின் ஆறாவது சந்ததி மன்னன். (The name of a King the sixth of the lunar race) இது நிற்கப் பரதரென்னும் மொழியை வேளாள குலத்துதித்த V. விசுவநாதபிள்ளை யியற்றிய தமிழ் ஆங்கிலேய அகராதியிற் பார்வையிட்டால், துரியோதனன் குலத்தோர், நெய்த நிலமாக்கள் (Inhabitants of Maritime districts) என்ற அருத்தங்களங்கு விரிவாய் வரையப்பட்டிருக்கின்றன. கௌரவர்களைப் போலிவர்களும் நாடுநகரிழந்து, அன்னிய அரசரின் இராணுவங்களி லமைக்கப்பெற்று, நெய்த நிலமதாவது கடல் சார்பு நாடுகளின் காப்புச் சேனைகளாய் நியமிக்கப்பட்டனர். "மன்னராயிருந்த பேர்கள் வகைதப்பிப் போவாராகில் பின்னையு மாரோவென்று பேசுவாரேசுவாரே" அப்பிரகாரமே இதிகாசங்களைச் சற்றுங் கற்றறியா முழுமூடர் திங்கள்குலத்துங்க சீலராகிய பௌரவரின் நாமத்தைக் கசக்கி யொடுக்கி நசுக்கிப் பரவரெனும் வன்மொழி கூறித் தூற்றிப் பழிப்பது திங்களைப் பார்த்து நாய் தொங்கிக் குரைப்பதற்குச் சமானமென்றறிக.


வைசியர்

வைசியர் மூன்றாஞ் சாதி வகுப்பினர். பிர்மாவின் துடையினின்றிவர்க ளுதித்தவர்களாம். இவர்களுக்கு, இப்பர், எட்டியர், மன்னர், பின்னர், வணிகர், வாணிகரெனும் நாமதேயங்களும் சூட்டப்பட்டிருக்கின்றன. இவர்களறு தொழிலோர். அதாவது:-

"மகந்தனைப் புரிதல்மிக்க மறைதனை யோதலீதல்
சகந்தனி லுளமருந்து சரக்கொடு மணிபொன்வெள்ளி
உகந்த வாணியங்கள் செய்தலுழவொடு பசுக்க்ச்ள் காத்தல்
அகந்தனில் வணிகர் தங் களறுதொழி லாகுமன்றே"

கோவைசியர், தனவைசியர், பூவைசிய ரென்றிவர்களுள் மூவகுப்பினருளர். கோமுட்டி, பொன்வாணியர், செக்குவாணியர் மற்றுஞ் செட்டுத்தொழில் புரிவோர் வைசிய குலத்தைச் சார்ந்தவர்களல்லர்.


சூத்திரர்

பிரம, சத்திரிய, வைசியரென்னும் முக்குலத்தோர்க் கேவல்புரிவோர் சூத்திரராம். வேளாளர் சூத்திர வகுப்பினரெனப் பலருஞ் சாதிக்கின்றனர். இந்தியாவிலும் அவ்வாறிவர்கள் வழங்கப்பட்டுப் பிள்ளையென்னும் வர்ணிப்பையுஞ் சிங்காரமா யணிந்திருக்கின்றன்ர். அவ்விதக் கொள்கை நமக்குப் பேதமாய்த் தோன்றுகின்றது. வேளாளர் பூவைசியரென்றே நம்மறிவிற் புலப்படுகின்றது. ஆனால் வீரமாமுனிவரின் சதுரகராதியைத் தடவிப் பார்த்தால், வேளாளர் சூத்திர ரென்றங்கு விசித்திரமாய்க் காணப்பட்டிருக்கின்றது. சூத்திரரெனும் மொழிக்க்வர் அருளும் ஏகார்த்த பதங்கள் யாதெனில்:- அயன்பதத்துதித்தோர், உழவர், களமர், காராளர், வேளாள ரென்பதேயாம். அன்றியும் வேளாளரைப் பற்றி உலகநாத பண்டிதர் அருளிச் செய்த குறிப்பைக் கேண்மின்:-

"உழவொடு பசுக்கள் காத்தலுற்ற வாணிபங்கள் செய்தல்
மொழிதரு மறையோராதி மூவர்க்கு மனுகூலஞ்செய்
தொழில்பல வியற்றநான் குஞ்சூத்திரர் தொழில்ழ்தாகும்
வழிமுறை தவறினன்னோர் வளங்கு சண்டாளராவர்."


சிவியார்

இந்தியாவைச் சேர்ந்த காரைநகர்க் கருகண்மையில் சிவிகையூரெனு மோர் கிராம மிருந்தது. இவ்வூரை நெறிநீதி தவறாமல் மன்னுயிரைத் தன்னுயிர்போல் பாவித்து அரசாண்டுவந்த அதிபதி சிவிகையரசனென் றழைக்கப்பட்டார். இவரின் மந்திரி தந்திரி மற்றுந் தலமைக்காரர் சிவியாரென்றழைக்கப்பட்டார்கள். ஏனென்றால் இவர்கள் பல்லக்கிலேறி இறைவன் கட்டளையை முறைமையோடு நடாத்தி வந்தவர்கள். சிவிகை நாட்டைப் பறங்கிக்காரர் பிடிக்கவே, அரசன் சிறையிலடைக்கப்பட்டு மாண்டனன். அவரின் மந்திரி தந்திரிகளாகிய சிவியார், தங்கள் குடிபதிகளுடன் யாழ்ப்பாணத் திடல்நாட்டிற் குடியேற்றஞ் செய்தனர். இவர்களின் குணாதிசயங்களை யாங் கண்டுணர்ந்தோம். "தலத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம், குலத்தளவேயாகுங் குணம்." இவர்கள் சிவிகை அல்லது பல்லக்குத் தூக்குஞ் சாதியென்று நகைப்போர், பேர்சிவல் பாதிரியார் (Revd Percival) அரங்கேற்றிய, இந்திய குடியேற்றப் பிரபந்தத்தைச் சற்றுக் கற்றுணர்வார்களாக.


கம்மாளர்

கம்மாளரென்பவர், கருமகாரர், சிற்பகாரர், சித்திர விற்பன்ன நாகரீக வித்தைபுரிபவரேயாம். இவ்வித புனிதவேலை புரிபவர், தட்டார், கொல்லர், கன்னார், தச்சரென் றழைக்கப்படா நிற்கின்றனர். சென்னை மாநகரின் கண்ணே, ஆங்கிலேய தமிழ்ப் பாஷைகளைப் பழுதறக் கற்றுணர்ந்து, தமிழ் ஆங்கிலேய அகராதியை யரங்கேற்றிப் பிரவல்ய கீர்த்திப் பிரதாபம் படைத்த C. விசுவநாதபிள்ளையவர்கள் கம்மாளரை விசுவப்பிராமண ரென்றும், விசுவகரும ரென்றும் தமது நூலிற் சாற்றியிருக்கின்றனர். ஆங்கிலேயத்தில் அவர் வரைந்திருப்பது யாதெனில்:- கம்மாளன் is the son of Brahma and architect of the Gods. கம்மாளன் பிரமாவின் புத்திரனும், தேவர்களின் சிற்பாசாரியு மென்பதேயாம். நான்முகக் கடவுளின் வதனத்தினின்று பிராமண நுற்பத்தியானவன். நான்முகக் கடவுளென்பவர் பிரமா. கம்மாளன் பிரமாவின் புத்திரன். ஆனதுபற்றிப் பிராமணனுக்கும் கம்மாளனுக்குமுள்ள வித்தியாசமென்ன?


நழவ்ர்

நழவரெனும் நாமம் பெருந்தப்பறை. இவர்கள் நழுவிகளென்று காலஞ்சென்ற பிரவல்ய அத்துவக்காத்து பிறிற்றோத்துரையவர்கள் (Britto) தாமியற்றிய, யாழ்ப்பாண வைபோக மாலையில் தெளிவாய்க் காண்பித்திருக்கின்றனர். இவர்கள் தமிழ் இராணுவத்திற் சிப்பாய் வேலை (Sepoys) நடாத்தினவர்கள். உத்தியோகத்திற் கதித்தோர் தங்கள் தத்துவத்தை மிதமிஞ்சிக் காட்டினபடியால், இவர்கள் இராணுவத்தை விட்டு நழுவிச் சான்றோரெனுஞ் சாதியை நம்பி யவர்கள் மத்தியில் வாசஞ் செய்தனர். சான்றோர் மரமேறுஞ்சாதி. உலகநாத பண்டிதர் சான்றோரைப் பற்றிச் சாற்றுவதைக் கேண்மின்:-

"அதுலமாமரர் சாதி யரிவையைப் பெருவெள்ளாளன்
புதுமணம் புணரவந்த புத்திரர் சான்றோராகி
முதுபனையிஞ் சிற்றூக்கு முட்டியில் முட்டியூறு
மதுவினைக் காய்ச்சி விற்றுவரும் பொருள்விரும்பி வாழ்வார்"

இப்பாவின் தாற்பரியம் யாதெனில்:- ராஜகுலத் துதித்த புத்திரியைப் பெரும்வேளாளன் மன்றல் செய்து பெருகின சந்தானத்தார் சான்றோரென் றழைக்கப்பட்டன்ர். ராஜகுலத்திலிவர்கள் கலந்ததாலே, நாடாரென்னும் நாமதேயத்தையு மிவர்கள் சூட்டப் பெற்றனர். யுத்தராணுவத்தை விட்டுவிலகின நழுவிகள், யுத்தவீரவகுப்பினரென்பதற்கு யாதோர் ஆட்சேபனையுங் கிடையாது. சான்றோரை நம்பி அவர்களுடன் சம்மந்தஞ் செய்தபடியால் நழுவிகளுக்கு நம்பிகளென்ற பெயரும் வழங்கி வருகின்றது. மரமேறுந் தொழில் நம்பிகளின் சாதித்தொழிலல்ல. இது நிற்க. மரமேறுந் தொழில் ஈனத்தொழிலோவென்று சற்று வியாக்கியானஞ் செய்வோமாக. யுத்தக்கப்பல்களை நடாத்துவோர் யார்? பாய்மரத்தில் சற்றுப் பழுது நேரிட்டால் அதிலேறி யப்பழுதைச் சீராக்குவது யார்? யுத்த ராணுவ உத்தியோகத்தரே! பிரசண்ட மாருதப் புயலென்றும், கடும்மாரியென்றும், அந்தகாரமென்றும், வெய்யிலென்றுஞ் சிந்தியாமல் அஞ்சா நெஞ்சுடன் பாய்மரத்திலேறி யிறங்குந்தொழில் வீரசூரத்தனமாயிருக்கில், தென்னை பனை முதலிய விருட்சங்களிலேறிப் பிழைக்குந் தொழில் எழிய வேலையா யிருப்ப தெங்கனம்?


பள்ளர்

தமிழ்ப்பாஷையி லுற்பத்தியான அகராதிகளுள் வீரமாமுனிவரியற்றிய சதுரகராதியே நிகண்டுடன் ஐக்கியப்பட்டுத் தமிழ்ப் பாஷையைத் தப்பறையின்றி யிப் புவிமாந்தர்க்குச் செப்புதற்கரிய அற்புதமொழிகளைச் செம்மையாய்க் காண்பிக்கின்றது. இவ் வகராதியில் பள்ளரெனும் மொழியை யுள்ளம்மகிழ வுற்றுப் பார்த்தோம். பள்ளரென்பது உழவரென அங்கு வரையப்பட்டிருக்கின்றது. உழவரென்பது உழுதுண்டு வாழ்பவர். இவர்கள் ஏராளரென்றும் அழைக்கப்படுகின்றார்கள். ஏரென்பது கலப்பை, உழுபடை. உழுகிறவனை, மள்ளன் அல்லது பள்ளன், மேழியனென்று பேர்சிவல் (Revd Percival) பாதிரியின் அகராதியில் காணப்பட்டிருக்கின்றது. இது நிற்கக் காராளரென்பவர் வேளாளர். பூர்வீக இந்திய சரித்திரங்களைப் பரிசோதித்துப் பார்த்தால். ஏராளருங் காராளருங் கிட்டின மரபினரெனச் சொல்லத்தகும். இந்தியாவைச் சேர்ந்த காரைநகர்ச் சமீபத்திலுள்ள மேட்டில் காராளர் வசித்தார்கள். அதைச்சார்ந்த பள்ள நிலத்தில் ஏராளர் குடிபதியாயிருந்தார்கள். ஏழு வருடங்களாய் இடைவிடாது மாரிபொழியவே, மேட்டு நிலத்தில் பயிர்செய்த காராளருக்குக் குருச்சந்திரயோக மடித்தது. பள்ள நிலத்தில் வேளாண்மை செய்த ஏராளரின் பயிர் நாசமாயிற்று. சனிபகவானின் தயவை முன்னிட்டு காராளர் ஏராளரை (பள்ளரை)ப் புறக்கணித்து, கீழ்நிரையிற் தள்ளிவிட்டனர். அவ்வாறிருப்பினும் உண்மைக் கழிவில்லை. அண்ணன் பெருங்குலமாகில் தம்பி இழிகுலமாவதெங்கனம்?


அம்பட்டன்

தமிழ் நூல்களையும் அகராதிகளையும் ஆராய்ச்சி செய்யுங்கால் அம்பட்டர், சிற்பத்தொழிலோர் மாதுக்குஞ் செக்கானுக்கும் பிறந்த சந்ததி மரபினர். (The son of an oil presser and a woman of the mechanic caste) இவ்வருண த்தவர்கட்குப் பரிகாரி, பண்டிதன், மஞ்சிகன், மாசுதீர்ப்போனெனும் நாமதேயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரிகாரி, பண்டிதன், மாசுதீர்ப்போனெனும் மொழிகளை யாமிங்கு விபரிக்க வேண்டியதில்லை. சிறுகப் படித்த பெரியோர் சிறியோர் அறிவிலிஃது இலகுவிற் புலப்படும். உலகநாத பண்டிதரியற்றிய சாதிபேத விளக்கத்திற் பின்வரும் விளக்க மிலங்குகின்றது:-

"அந்தணர் வசியர் மாதை யருமறை விதியிற்புல்க
வந்தவன் பண்டிதஞ் செய் மறையவனாகி மிக்க
தந்திர மருந்தினோடு சாஸ்திரத் தொழிலும் பூண்டு
முந்திய மறையோர்க்கென்று முறையினிற் பிணிகடீப்பார்"

பிணிதீர்ப்போர்க்குப் பற்பல தொழில்களுண்டு. மயிர் முளைக்குந் தானங்களில் அடி காயம் புண்ணேரிட்டால் வைத்தியர் புரியுங் கருமம் யாது? காயச்தானங்களிலுள்ள மயிரை வினையஞ்செய்து அங்கண் தைலம், சாந்து, பூச்சு உபநாகம் பிரயோகிப்பர். ஆனதுபற்றியே அம்பட்டரை மயிர்வினையரென்றும், மாசு தீர்ப்போ ரென்றும் தமிழ்நூல்கள் கூறுகின்றன. வெட்டுக் காயங்கள்மேல் படர்ந்திருக்கும் மயிர்களைச் சிரைத்து, வைத்தியம் செய்யும் டாக்டர் சிரோண்மணிகள் உயர்நிலையிலுள்ளவர்களாகில், அம்மாதிரி வேலைகளைச் செப்பனாய்ச் செய்யும் அம்பட்டர் கீழ்நிரையோராய் மதிக்கப்படுவது நீதியோவென்றோர் போதகர் வினாவுகின்றனர்.


பறையன்

பறையன்ர்னுஞ் சொல் பறையறைவோன், வள்ளுவன், வருங்காரியம் சொல்வான், புரோகித னெனும் அர்த்தத்தைத் தருகின்றது. பறையறைதலென்பது அர஽்ற் மகோற்சபங்களில் சமூகமளித்தல், அரசர் வருகையைப் பகிரங்கப்படுத்தல், அரசர் பரிவாரங்களுமுன்னேறுதல், அரசர் சட்டதிட்டங்களைப் பட்டாங்கிலுள்ளோர்க்குத் தட்டி வெளிப்படுத்துதலென்பதேயாம். வள்ளுதலென்பது வருங்காரியங்களை முன்னெடுத்தோதுதல், புரோகிதனென்பது இந்திரனென்ற அருத்தத்தையுங் குலகுருவென்ற கருத்தையுந் தருகின்றது. "மறையவன் மங்கைதன்னை வள்ளுவன் மணந்திட்டானே" யென்றோர் பண்டிதர் விள்ளுகின்றனர். திருவள்ளுவரும், ஔவையும் இம்மணத்தாலுதித்த வித்துவ சிரோண்மணிகள். "பார்ப்பார் குலத்தில் மேற்குலம் பறைக்குலம், கேட்பாரில்லாமல் கீழ்க்குலமாயிற்றந்தோ" வென்ற சுலோகமின்னுமுலகில் வழங்குகின்றது. பார்ப்பானையும் பறையனையுஞ் சீர்தூக்கிப் பார்க்குங்கால், இருதிறத்தவர்களும் ஒரு மரபினரென்று சொல்லத்தகும். இவர்கள் மாமன் மருமகன் நிரையிலிருக்கின்றனர். ஆனால் மாமன் கல்விச் செல்வத்தில் சிறந்து வளர்ந்தோங்கின படியால், வறுமைப் பெரும்பிணியால் பீடிக்கப்பட்ட மருமகனைத் தள்ளிவைத்தனன். இந்த விபரீத மெக்குலத்திலும் எக்குடும்பத்திலும் நடைபெற்றுவருகின்றது. இப்பிணியை மாற்ற வாகடத்தில் மருந்து கிடையாது. தரித்திரமென்னுமோர் மருந்தில் தீருமாம்.

------------------------------------------------------